ஸ்ரீ ஆறாயிரப்படி —
தான் சொன்னபடியே செய்யக் கடவனாகச் சமைந்து கொண்டு தம்முடைய திரு உள்ளத்திலே புகுந்து அருளினை
எம்பெருமான் தம்மோடு கலந்த கலவியாலே தமக்குப் பிறந்த நிரவதிக ப்ரீதி அதிசயத்தாலே –
——
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி —
இப்படி எம்பெருமான் ஆழ்வார் தம் பக்கலிலே அத்யபி நிவிஷ்டனாய் -அவர் விதித்த படியே செய்யக் கடவனாய் இருந்து வைத்து –
தன்னுடைய சாபலதிசயத்தாலே-இவரை இத்தேகத்தோடே கூடத் திரு நாட்டில் கொடு போகையில் மிகவும் அபி நிவிஷ்டனாய் –
இத்தை அறியில் இவர் இசையார் என்று பார்த்து -இவரைக் கொண்டு திருவாய் மொழி பாடுவிப்பாரைப் போலே புகுந்து
இவருடைய திருமேனியிலும் இவர் தம்மோடு கலந்த அத்யபி நிவேசத்தைப் பண்ணி இவ் உடம்போடே கூடத் திருநாடு ஏறக் கொடு போகையிலே
அவன் அபி நிவேசிக்கிற படியை அறிந்து –இவன் இப்படி அபி நிவேசிக்கில் ஒரு நாளும் பிரகிருதி விஸ்லேஷத்துக்கு உபாயம் இல்லை –
ஆனபின்பு அவனுடைய அனுபவத்துக்கு விரோதியான ப்ரக்ருதி சம்பந்தத்தை அவனைவிட்டு இங்கேயே அருப்பித்துக் கொள்ள வேணும் என்று பார்த்து அருளி
சதுர் விம்சதி தத்வாத்மக ப்ரக்ருதி தத்வத்தோடு உள்ள சம்பந்தத்தை அறுத்து என்னைக் கொடு போக வேணும் என்று பிரார்த்திக்க
-உம்முடைய உடம்பு ஒழிய வேறு எனக்கு பிராப்யம் உண்டோ -என்று அவன் நிர்பந்திக்க -என் பக்கல் உண்டான விஷயீ காரத்தாலே
யன்றோ இவ்வுடம்பில் அபி நிவேசம் பண்ணுகிறது -ஆனபின்பு எனக்காக இதில் நசையை விட்டு அருள வேணும் -என்று
இவர் சரணம் புக்கு இரக்க அவனும் அப்படியே செய்கிறோம் -என்று இசைய -அத்யந்த ஹ்ருஷ்டராய்-அவனுடைய ஸுசீலாதி குணங்களில் அழுந்தி -அவனுக்கு அடிமை செய்யப் புகில் அவனுடைய ஸு சீல்யாதி அதிசயத்தாலே பிழைக்க ஒண்ணாது
-ஆனபின்பு தம் தாமை வேண்டி இருப்பார் அவனுடைய குணத்திலே அகப்படாதே
பரிஹரித்து அடிமை செய்யுங்கோள்–என்று ப்ரீதி அதிசயத்தாலே அருளிச் செய்கிறார் –
——
ஸ்ரீ பன்னீராயிரப்படி —
ஏழாம் திருவாய் மொழியில் கீழ் இவர்க்குப் பரமபதத்தைக் கொடுக்கையில் யுத்யோகித்த சர்வேஸ்வரன்
இவர் முடியில் திருவடிகளை வைத்துத் திரு உள்ளத்திலே பூர்ணமாகப் புகுந்து இருந்து –
விரை குழுவு நாறும் துளவம் மெய்ந்நின்று கமழும்என்னும்படி
திருமேனி முழுக்கத் திருத்துழாய் பரிமளமாம்படியாக இவருடைய சரீரத்தோடு அந்த கரணத்தோடு
மற்றும் உள்ள அவயவங்களோடு வாசியற அத்யபி நிவிஷ்டனாய்
ஆதரிக்கிறபடியைக் கண்டு இவ்வாதார அதிசயத்துக்கு ஹேது வான அவனுடைய
ஆச்ரித விஷயமான அபி நிவேசத்தையும்
அதிசயித போக்யத்வத்தையும்
ஆஸ்ரித தேகத்தில் ஆதாரத்தையும்
அதில் அத்யந்த அபி நிவேசத்தையும்
ரசிகத்வத்தையும்
சர்வாதிகத்வத்தையும்
ஆஸ்ரிதார்த்த திவ்ய தேச வாசத்தையும்
சர்வ பிரகார சம்ச்லேஷத்தையும்
ஜகத் ஸ்ருஷ்ட்யாதி ஹேதுத்வத்தையும்
அபேக்ஷ அபராதீனத்வத்தையும்
அனுசந்தித்து ஏவம் விதனான சர்வேஸ்வரன் யுடைய ஆதார அதிசயம் இருந்த படியால் நாம் இனி யாம் உறாமை -என்று
உபேக்ஷித்த தேஹாதிகளையும் விளம்பமறக் கொண்டு போவாரைப் போலே இரா நின்றது –
அஸ்த்திரமாய் தோஷ பூயிஷ்ட்ட்மாகையாலே அ புருஷார்த்தமாய் அனுபவ விரோதி யாகையாலே
இருக்கிற இத்தை நம் பக்கல் ஆதரத்தாலே விரும்பா நின்றான் –
இத்தை அறிவித்தும் நாம் அவனை அர்த்தித்தும்-விடுவித்துக் கொள்ளுவோம் என்று
தெற்கில் திருமலையில் அவனை அபேக்ஷிக்க அதுக்காக அவன் நிவர்த்திப்பிக்கையிலே உத்யுக்தனாம் படியைக் கண்டு ஹ்ருஷ்டராகிறார் –
——————
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி –
விதி வகையே என்கிறபடியே ஆழ்வார் விதித்த படி செய்வானாம் படி இவருக்கு பரதந்த்ரனாம் வைத்து தன்னுடைய சாபல அதிசயத்தாலே –
தலை மேல் தாளிணைகள் என்றும் நறும் துளவம் மெய்ந்நின்று கமழும் -என்றும் சொல்லுகிறபடியே இவருடைய-திரு மேனியை மிகவும் விரும்பி -இத்தேகத்தோடே கூட பரமபதத்தில் கூடக் கொண்டு போகையிலே-அபி நிவேசிக்கிற படியைக் கண்டு -நாம் பொய் நின்ற ஞானத்திலே கழித்துத் தர வேணும் -என்று
அபேக்ஷித்த போதே செய்யாது ஒழிந்தது நம்மைக் கொண்டு பிரபந்தம் தலைக் கட்டுகைக்காக என்று இருந்தோம்-அது ஒரு வியாஜ்யமாய்-சரீரத்தையே விரும்புகிறானாய் இருந்தது -இதுக்கு அடி நம்முடைய சரீரம் என்று
நம் பக்கல் விருப்பத்தால் விரும்புகிறான் அத்தனை -இது தோஷ பிரசுரம் என்று அறிகின்றிலன்-இது நமக்கு அநபிமதம் என்றும் அறிகிறிலன் -உபசயாத்மகம் யாகையாலே அஸ்திரத்தவாதி தோஷ பிரசுரம் என்றும்
–த்வத் அனுபவ விரோதி யாகையாலே அநபிமதம் என்றும் அறிவித்து –இத்தைக் கழித்துத் தர வேணும் என்று பிரார்த்திக்க
-உம்முடைய உடம்பு ஒழிய நமக்கு ப்ராப்யம் யுண்டோ -உம்முடைய உத்தேச்யத்தை நீர் விடா நின்றீரோ என்று அவன் நிர்பந்திக்க-நீ என் பக்கல் உண்டான விருப்பம் இ றே என் சரீரத்தை விரும்புகிறது -இது எனக்கு அத்யந்தம் அநபிமதம்
-எனக்காக இதில் நசையை விட்டருள வேணும் -என்று சரணம் புக்கு இரக்க-
தனக்கு இத்தை விடுகை பிரியம் இன்றிக்கே இருக்கச் செய்தேயும் –இவரைக் குறித்து பர தந்த்ரன் ஆகையால்-அப்படிச் செய்கிறோம் -என்று இசைய-
தனக்கு அபிமதமாய் இருக்க நாம் சொன்ன படி செய்வதே -என்று அத்யந்தம் ஹ்ருஷ்டராய்-இவனுடைய சீலாதி குணங்களில் அழுந்தி இவ்விஷயத்தில் அனுபவிக்க இழிவார் ஐஸ்வர்யத்தில் இழியப் பாருங்கோள்-தம் தாமை வேண்டி இருப்பார் அவனுடைய சீலாதி குணங்களில் அகப்படாதே கொள்ளுங்கோள்-என்று
ப்ரீதி அதிசயத்தாலே உபதேசித்துத் தலைக் கட்டுகிறார் –
—————
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி —
செஞ்சொல் -பிரவேசம் –
விதி வகையே -என்கிறபடியே அவன் தம்மிடத்தில்-பரதந்த்ரனாய் நிற்கிறபடியை அருளிச் செய்தார் –
அவ்வழியாலே-
விரை குழுவு நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே -என்றும்-
தலை மேலே தாள் இணைகள் -என்றும் –
அவன் தன் திரு மேனியோடு புகுந்து கலந்த படியை அருளிச் செய்தார் –
தம்மோடு வந்து கலந்த இடத்தில் தம்மிடத்தில் பரதந்த்ரனாய்-திரு மேனியை விட மாட்டாதே-
அவன் செய்கிற காதல் பெருக்கினை கண்டார் –
கண்டவர் -இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று நாம் அடியிலே வேண்டிக் கொள்ளச் செய்தேயும்-
இங்கு நம்மை வைத்தது ஒரு கார்யத்துக்காக என்று இருந்தோம்-
அதாவது இப்பிரபந்தம் தலைக் கட்டு வித்துக் கொள்ளுகை -என்றபடி
அது அவ்வளவில் அன்றிக்கே-நம் உடம்பினை விரும்பி விட மாட்டாமையாலேயாய் இருந்தது –
இவன் வெற்று உடம்பனாய்-சரீர சபலனாய் – இருந்தான்-கவி பாடுவித்துக் கொள்ளுகை ஒரு வ்யாஜ மாத்ரம்-
அது பிரதானம் அன்று-இதுவே இவனுக்கு நினைவு -என்று நினைந்தார் –
நினைந்தவர் -இவ் உடம்பினை விரும்புகிறது நம் இடத்தில் காதலால் அன்றோ –
இப்படி நம்மை விரும்பின இவ்வளவிலே நம்முடைய விருப்பத்தை முடித்துக் கொள்வோம் என்று பார்த்து –
தேவரீர் திரு உள்ளத்தில் ஓடுகிறது என் -என்றார் –
நான் உடம்பனாயே வேறு ஓன்று அறியாமல் படுகிற பாடு அன்றோ -மற்று உண்டோ -என்றான் –
உம் உயிர் வீடுடையான் -உயிரையும் வீடான சரீரத்தையும் உடையான் -ஆத்மாவை வீடான சரீரமாக உடையான் –
அங்கண் ஒண்ணாது -தேவர் -இச் சரீரத்தில் செய்து அருளும் விருப்பத்தை தவிர வேண்டும் –
மங்க ஒட்டு உன் மா மாயை -என்று விண்ணப்பம் செய்தார் –
இவர் விலக்கினது-அவருடைய காதல் பெருகுவதற்கு உடலாயிற்று –
ஒரு மா நொடியும் பிரியான் –
தந்தாமைக் கொண்டு அருமைப் படுத்துவார்கள் அன்றோ மேல் விழுகைக்காக-அது போலே ஆயிற்று-
இப்படி இவன் இவ் உடம்பிலே செய்கிற ஆதரத்தினைக் கண்டு-இவனுடைய காதல் பெருக்கு இருந்தபடியைக் காணில்-
இவ் உடம்போடு நம்மைக் கொடு போக நினைத்து இருக்கிறான் போலே இருக்கிறது-
அப்படிச் செய்யும் போது இவ் உலக வாழ்க்கை நமக்கு என்றும் உள்ளதாய் விடும்-நித்ய மண்டலம் அன்றோ -சரீரமும் நித்தியமாக இருந்து விடுமே –
இங்கே இருந்து இதற்கு ஒரு முடிவு கண்ட தாமத்தை இழந்தோம் ஆவோம் இத்தனை-இதனைக் கழித்துக் கொள்ள வேண்டும் என்று பார்த்தார்-
பார்த்தவர் –
மங்க ஓட்டே -என்றும்
மங்க ஒட்டு உன் மா மாயம் -என்றும்-
பொங்கு ஐம்புலனும் -பாசுரம்-என்றும்-
மும்முறை விரும்புவதும் மும்முறையும் தவிரச் சொல்லுகையும் அறியலாம்-
தேவரீர் இச் சரீரத்தை விரும்புகைக்கு அடி-
என்னிடத்தில் செலுத்தும் காதல் பெருக்கே அன்றோ-நான் இதனை விரும்பவில்லை
தேவரீரும் இவ் உடம்பில் செய்கிற விருப்பத்தினைத் தவிர வேண்டும் -என்ன
நீர் உம்முடைய விருப்பத்தை விடாதவாறு-நம் விருப்பத்தை விடுவதாமோ -என்றான்
அம் தண் திருமால் இரும் சோலை வாழி மனமே கை விடேல் -பாசுரம் கொண்டு பிரவேசம்
இவன் இப்படி விரும்புகிறது – இவ் உடம்பின் இழிவுகளை காணாமையால் அன்றோ –
இவனுக்கு இவ் உடம்பின் தாழ்வுகளைக் காட்டுவோம் என்று பார்த்து
இவ் உடம்பாகிறது -பருத்தல் சிறுத்தல் வளர்தல் குறைதல் களை உடையதாய் -விடத் தக்கதாய் இருப்பது ஓன்று –
விரும்பப் படும் ஆத்மாவைப் போன்று ஒரே தன்மையதாய்-வேறு பட்ட சிறப்பினை உடையதாய் இருப்பது ஓன்று அன்று
இதனை வெறுத்து அருள வேண்டும் -என்றார்-
அவ்வார்தைகளே இவன் மென்மேலும் விரும்புவதற்கு காரணங்கள் ஆயின –
மனைவினது அழுக்கை உகப்பாரைப் போலே எல்லா காலத்திலும் இவன் விட மாட்டாதவனாய் இருந்தான் –
இவனை கால் கட்டியாகிலும் ‘இக் கால்கட்டினை-அவிழ்த்துக் கொள்வோம் என்று பார்த்து-
இதில் செய்கிற விருப்பத்தினை தேவரீர தவிர வேண்டும்-என்று சரணம் புக்கார் –பிரார்தனாமதி சரணாகதி –
இவர் சொன்னபடியே செய்ய இழிந்தவன் ஆகையாலே
தனக்கு இவ் உடம்பிலே மென்மேலும் விருப்பம் செல்லச் செய்தேயும்
இவர் இதனை விரும்பாத பின்பு நாமும் இதனை வருந்தியாவது வெறுப்போம் -என்று பார்த்தான் –
இவர் இடத்து அவன் காட்டும் பாரதந்த்ர்யத்தாலே
இவ் உடம்பு ஒழிய அவன் கொடு போவானாய் இருந்தான் -மான் ஆங்கார மனம் கெட –
ஆக
இப்படியாலே -அருள் பெறுவார் -திருவாய் மொழியிலே தொடங்கின ஈஸ்வர பாரதந்த்ர்யத்தை முடித்து-
எல்லாப் பொருள்களையும் ஏவுகின்றவனாய்-எல்லா பொருள்களுக்கும் தலைவனான -சர்வேஸ்வரன்-
தனக்கு இவ் உடம்பில் விருப்பம் செல்லா நிற்கச் செய்தே-
நாம் -இதனைத் தவிர வேண்டும் -என்னத் தவிருவதே –என்ன ஒரு சீல குணம் இருக்கும்படியே –
இவ் விஷயத்தில் ஒருவரும் இழியாதீர்கள்-இழிந்து நான் பட்டதுவே அமையும்-என்று மிகுந்த பிரீதியாலே-
உயிர் காத்து ஆட்செய்மின் -என்று – பிறருக்கு சொல்லித் தலைக் கட்டுகிறார் –
த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம் மருள்கள் கடியும் மயல் மிகு பொழிலே தழைக்கும் -சூர்ணிகை -185-
நீராடப் போதுவீர்–அனுபவம் அடியார்கள் முன்னிட்டே -இனியது தனி அருந்தேல் -கரீஷ்மா காலத்தில் மடுவில் -செல்வார் துணை தேட்டம் -மூன்றும்
கல்யாண குணாம்ருத சாகரம் -அன்றோ இவன் -பரத்வம் கணுக்கால் அளவு -ஸுலப்யம் இடுப்பு -வாத்சல்யம் நெஞ்சு -ஸுசீல்யம் முழுகப் பண்ணும்
ஸஹ பதன்யா விசாலாஷ்யா சீதா பிராட்டி கூட்டி அன்றோ பெருமாள் இழிந்தார் –
கவி பாட சரீரம் வேண்டுமே -ஸுசீல்யத்தில் இழியாமல் இருக்க உபதேசிக்கிறார் –
——————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply