ஸ்ரீ ஈட்டில் பிரமாணங்கள் –ஒன்பதாம் பத்து –

த்ரௌபதி தர்மத்திலே தலை நின்றவர்களான கணவன்மார் ஐவரும் வெறும் தரையைக் கீறிக் கொண்டு இருக்க அவர்களை ஒழிய சேயனான கிருஷ்ணனை நினைக்க –
கோவிந்தேதி யத் ஆக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூரவாசினம்
ருணம் பிரவ்ருத்தம் இவ மே ஹ்ருதயாத் ந அபசர்பதி -பாரதம்
-உத்தியோக பர்வதம் -58-22-
அவள் ஆபத்தை அடைந்தவளாய் நம்மை நினைக்க நாம் உதவப் பெற்றிலோம் -என்று
த்ரௌபதி யானவள் தூரத்தில் இருக்கிற என்னை கோவிந்தா என்று அழைத்து அழுதாள் –
எனபது யாது ஓன்று உண்டோ -அது வட்டிக்கு வட்டி ஏறின கடன் போன்று
என் மனத்தின் நின்றும் நீங்க வில்லை என்று புண் பட்டான் அவன் அன்றோ –

த்வம் வயச்ய அஹிஹ்ருத்ய மேஹி ஏகம் துக்கம் சுகம் ச நௌ-சூக்ரீவ ராகவம் வாக்யம் இதி உவாச ப்ரஹ்ருஷ்ட வத் -கிஷ்கிந்தா -5-35-துக்கமும் சுகமும் நம் இருவருக்கும் ஒன்றே-

வருஷ்ணி ப்ரவீரஸ்து குருபிரவீரான் ஆசங்கமான சஹ ரௌ ஹி னேயே
ஜகாமதாம் பார்க்கவா கர்மசாலாம் யத்ர ஆசதே தே புருஷ பிரவீரா
-பாரதம் சம்பவ பர்வம் –பாண்டவர்கள் உடைய வனவாசத்திலே தனிமையிலே முகம் காட்டியும் திரௌபதியை மீட்டுக் கொண்டு-போகும் போது கிருஷ்ணன் பலராமனுடன் அந்த குயவனுடைய தொழில் சாலைக்குச் சென்றான் –

பிபேத ச புன சாலான் சப்த ஏகேன மகே ஷூ ணா-கிரிம் ரசாதலம் சைவ ஜநயன் ப்ரத்யயம் ததா -பால -1-66- –மகாராஜர் தனியருமாய் வெறுவியருமாய்-தமையன் பகையுமாய் –மனித சஞ்சாரம் இல்லாத தனிக் காட்டில் இருக்க பெருமாளையும் இளைய பெருமாளையும் தூரத்தில் கண்டு வாலி வரவிட்டவர்கள் என்று அஞ்சி ஓடித் திருவடியை வரவிட்டு அறிவித்த பின்பு – நாம் உம்முடைய கார்யம் செய்ய வல்லோம் -என்று மழு வேந்திக் கொடுத்தும் அவன் கார்யம் செய்தார் அன்றோ –

ஆதரேண யதாஸ் தௌதி தனவந்தம் தன இச்ச்சயா-ததாசேத் விஸ்வ கர்த்தானாம் கோ ந முச்யதே பந்தநாத் -செல்வம் உள்ளவனை செல்வத்தில் விருப்பத்தால் விருப்பத்தோடு எங்கனம் புகழ்கிறானோ -அங்கனமே உலகத்தைப் படைத்தவனை புகழ்ந்தால் எவன் பிறவிக் கட்டின் நின்றும் விடுபடமாட்டான் –

ஆத்மகாமா சதாசண்டீ க்ரோதனா ப்ராஞ்ஞா மானி நீ-அரோகாசாபி மே மாதா கைகேயி கிம் உவாச ச -அயோத்யா -71-10-வாராய் பிள்ளாய் நீ தான் இவை எல்லாம் சொல்லுகிறது நடுவில் ஆய்ச்சியையே-அப்பா உன்னுடைய நடுத் தாயாரான கைகேயி யானவள் எவ்விதத்திலும் நிந்திக்க தக்கவள் அல்லள்-

ந தேம்பா மத்ய மாதாத கர்ஹிதவ்யா கதஞ்சன-தாமேவ இஷ்வாகு நாதஸ்ய பரதச்ய கதாம் குரு -ஆரண்ய -16-37- ஒருபடியாலும் நீ அவளை இவ்வார்த்தை சொல்லக் கடவை அல்லை-
தாமேவ –வேண்டுமாகில் கை கண்ட மருந்தைச் செய்யப் பாராய்-இஷ்வாகு நாதஸ்ய பரதச்ய –ஐயரோ பொகட்டு முடிந்து போனார்-நாம் போகட்டு போக்க இராச்சியத்தை இக்குடியின் மரியாதை குலையாதபடியாக நோக்கிக் கொண்டு-கிடந்த பிள்ளை பரதன் அன்றோ இக்குடிக்கு நாதன் –-பரதச்ய கதாம் குரு – நாக்கிலே நீர் வரும்படியான வார்த்தை சொல்லப் பாராய் -என்றார் பெருமாள் –

அந்யப் பூர்ணாத் அபாம் கும்பாத் அன்யாத் பாதரவ நேஜநாத்-அந்யத் குசல சம்ப்ரசநாத் நசேச்சதி ஜனார்த்தன -பாரதம் உத்தியோக பர்வம் 89-13
அந்யப் பூர்ணாத்- பாண்டவர்கள் இடத்தில் அன்புள்ளவனான கிருஷ்ணன் வாரா நின்றான்
அவனுக்கு நாட்டையும் கொடுத்து பொன்னையும் கொடுத்து நமக்கு ஆக்கிக் கொள்வோம்
எனபது போன்ற சில வார்த்தைகளை திருதராஷ்ட்ரன் சொல்ல -என்றது-இவற்றால் அவனை படை அறுத்துக் கொள்ளுவோம் என்றபடி-அவன் தான் நெஞ்சாலே நினைப்பது ஒன்றாய் வாயாலே பேசுவது ஒன்றாய் இருப்பது-இதனை அறிந்த சஞ்சயன்
வருகிறவன் அங்கன் ஒத்தவன் அல்லன் காண்-அவனுக்கு வேண்டுவது இவ்வளவு -என்கிறான்-தான் குடிக்கும் தண்ணீரை குடத்திலே இட்டு குளிர வைக்கக் கடவனே
அதனை அவன் வருகிற வழியிலே வாசலிலே வைக்க அமையும்
தன் இல்லத்திலே விருந்து வந்து புகுந்தால் கால் கழுவ கடவதாக சாமான்ய சாஸ்த்ரம் விதித்தது அதற்கு மேற்பட அவனான வேற்றுமைக்கு சிறப்பாக ஒன்றும் செய்ய வேண்டுவது இல்லை
அன்யாத் பாதரவநே ஜநாத்-அந்தக் குடத்திலே நீரைக் கொண்டு அவன் திருவடிகளை விளக்க அமையும் -மற்று வேண்டா –
அந்யத் குசல சம்ப்ரசநாத் –நெடும் தூரம் வந்தவனை -நடந்த கால்கள் நொந்தவோ -என்னத் தக்கதே அன்றோ –
நசேச்சதி –உண்டவனுக்கு உண்ணப் போகாதே அன்றோ-அப்படியே இவன் முயற்சி மாத்ரத்திலே அவன் வயிறு நிறையும்-ஆன பின்பு இவன் செய்யுமவை அடைய அவனுக்கு மிகையாக இருக்கும் –

ப்ரதா தேவேதி கிருஷ்னே தி கோவிந்தேதி ச ஜல்பதாம்-மத்யாஹ்னே ச அபராஹ்னே ச ய அவசாத ச உச்யதாம் -காலை மாலை நடுப்பகல் என்னும் மூன்று வேளையிலும் தேவா என்றும் கிருஷ்ணா என்றும் கோவிந்தா என்றும் சொல்லுகிறவர்களுக்கு யாதேனும் குறை உண்டோ-இருந்தால் கூறுங்கோள்-என்றார்-அன்றிக்கே-இவ் உபாயத்துக்கு பலம் இல்லை யானாலும்-இது தானே பிரயோஜனம் போரும் -என்னுதல் –

நாஹம் தேவோ ந கந்தர்வோ ந யஷோ நாசா தாநவ-அஹம்வோ பாந்தவோ ஜாதோ நைதத் சிந்த்யம் அதோன்யதா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-13-
நான் தேவன் அல்லன் கந்தருவன் அல்லன் யஷன் அல்லன் அசுரன் அல்லன்-உங்கள் பந்துவாய் பிறந்தவன்-ஆதலால் வேறு நினைவு வேண்டா -என்றான் ஸ்ரீ கண்ணபிரான் –

அவதாரத்துக்கு பயன்சாதுக்களை பாதுகாப்பதற்காகவும்--பரித்ராணாய சாதூநாம் விநாசாயா ச துஷ்க்ருதாம்-தர்ம சம்ஸ்தாப நார்த்தாய சம்பவாமி யுகே யுகே -ஸ்ரீ கீதை -4-8-

அற நெறியை விட்டு விலகாததாய் இருக்கிற நம் இருவருவருடைய எவன் படிக்கிறானோ-
அவனால் ஞானமான வேள்வியால் நான் ஆராதிக்கப் பட்டவன் ஆகிறேன் -என்வது என் எண்ணம் –அத்யேஷ்யதே ச ய இமம் தர்ம்யம் சம்வாதம் ஆவயோ-ஜ்ஞான யஜ்ஞ்ஞென தேன அஹம் இஷ்டா ச்யாம் இதி மே மதி -ஸ்ரீ கீதை -16-70-

யத்ர கிருஷ்னௌ ச கிருஷ்ணச சத்யபாமாச பாமி நீ -பாரதம் -உத்தியோக பர்வம் –
எந்த இடத்தில் கிருஷ்ணனும் திரௌபதியும் அர்ஜுனனும்-கோபத் தன்மை உள்ள சத்ய பாமையும்-இருக்கிறார்களோ –

நச அபிமன்யு நயமௌ தம் தேசம் துபிஜக்மது -பாரதம் உத்தியாக பர்வம்
அவர்கள் வீற்று இருந்த அந்த இடத்துக்கு அபிமன்யுவும் சென்றான் இல்லை-
இரட்டையர்களான நகுல சகா தேவர்களும் போனார்கள் இல்லை -என்கிறபடியே-
தாயும் தமப்பனும் சேர இருந்த இடத்தில் குழந்தைகளுக்கு சென்று கிட்ட ஒண்ணாமை இல்லை அன்றோ –அவர்களுக்கும் சென்று கிட்ட ஒண்ணாத படி ஆயிற்று எழுந்து அருளி இருக்கிற இருப்பு-அவ் விருப்பிலே அன்றோ அவனை அழைத்து காட்சி கொடுத்தது –

பண்டை நாளில் நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் -என்பதற்கு
என் அடியார் அது செய்யார் -பெரியாழ்வார் திருமொழி -4-9-2-என்னும் உன் திரு அருளையும் –பாபாநாம் வா ஸூ பாநாம் வா வதார்ஹாணாம் ப்லவங்கம்-
கார்யம் கருணம் ஆர்யேண நகஸ்சின் ந அபராத்யதி
-யுத்தம் -116-44 -என்று குற்றம் செய்யாதவர் யாவர் -என்னும் அவள் திருவருளையும் பெற்று -என்றலுமாம் –அன்றிக்கே –
சதம் நிபபதிம் பூமௌ சரண்ய சரணாகதம்-வதார்ஹமாபி காகுஸ்த க்ருபயா பர்யபாலயத் -சுந்தர -38-34-கொல்லத் தக்கவனாய் இருந்தும் பேரருளால் அந்த காகாசுரனைக் காப்பாற்றினார் -என்கிறபடியே- கிருபைக்கு பரதந்த்ரப் பட்டவனான உன்னுடைய திருவருளையும்- அந்த பரதந்த்ரத்துக்கு காரணமான அவள் திருவருளையும் பெற்று என்றலுமாம் –

ந கிஞ்சித் அபி குர்வாணா விஷ்ணோ ஆயதனே வசேத்-விஷண் வாலயே வசந் நித்யம் குர்யாத் தத்கர்ம சக்தித -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்றபடியே-ஒரு தொழிலையும் செய்யாதானாய் பகவான் எழுந்து அருளி இருக்கின்ற கோயில்களிலே வசிக்கக் கடவன் –
கோயில்களிலே வாசம் செய்து கொண்டு தினமும் தனது ஆற்றலுக்கு ஏற்பப் பகவானுக்கு பணிகளை செய்யக் கடவன்-

பங்க திக் தஸ்து ஜடில பரத த்வரம் ப்ரதீஷதே-பாதுகே தே புரஸ் க்ருத்ய சர்வஜ்ஞ ச குசலம் க்ருஹே -யுத்த -127-5-பரதன் சடை முடியனாய் -அழுக்கு அடைந்த தேகத்தை உடையனாய்-உன் வரவை எதிர் பார்த்து கொண்டு இருக்கிறான்-உன் பாதுகைகளை முன்னிட்டுக் கொண்டு இராச்சிய பாரம் செய்து இருக்கிறான்-எல்லாரும் சௌக்யமாய் இருக்கிறார்கள் -என்றும்
ஜடிலம் சீர வசனம் ப்ராஜ்ஞ்ஞலிம் பதிதம் புவி-ததர்ச ராமோ துர்தர்சம் யுகாந்தே பாஸ்கரம் யதா -அயோத்யா -100-1-ஜடைகளை அணிந்தவனும் -மரவுரி தரித்தவனும் கை கூப்பினவனும் பூமியில் விழுந்தவனும்-பார்க்க முடியாதவனுமான பரதனை ஸ்ரீ ராமன் எவ்வாறு யுகத்தின் முடிவில் சூர்யனை காண்பார்களோ-அவ்வாறு கண்டான் -என்றும்
நஹிதே ராஜபுத்ரம் தம் காஷாயம் பரதாரிணம்-பரிபோக்தம் வ்யவச்யந்தி பௌராவை தர்ம வத்சலம் -யுத்தம் -70-4–நஹிதே ராஜபுத்ரம் தம்– அருகே இருக்கச் செய்தேயும் -இவனை சூழ இருக்கிற நகர மக்கள் இவனை அனுபவிக்கையில் நசை அற்றார்கள் – அதற்கு அடி என் என்னில் –ராஜ புத்ரம் -பெருமாள் பேர நின்ற அநந்தரம் முடிந்தவன் மகன் அன்றோ –இவனோ தான் நமக்காக இருக்கப் புகுகிறான் -என்று இருந்தார்கள் –
தர்ம வத்சலம் –இதற்கும் அந்த சக்கரவர்த்தியோடு ஒப்பான் –தர்மத்துக்காக தன்னை அழிய மாறினான் அன்றோ அவன் -என்றும் வருவன காண்-

ஏபி ச சஸிவை ஸார்த்தம் சிரஸா யாஸிதோ மயா-பிராது சிஷ்யஷ்ய தாசஷ்ய பிரசாதம் கர்த்தும் அர்ஹசி – அயோத்யா -101-12-ஏபி ச சஸிவை ஸார்த்தம்- தான் ஒருவனே போக அமைந்து இருக்க-துன்பம் அற்ற பலரையும் கொண்டு போனான் –அதற்கு அடி –
நாம் ஒருவனுமே அன்றிக்கே பலர் கண்ண நீரை கண்டால் மீளாரோ -என்னுமத்தனைப் பற்ற –போர் செய்யப் போவாரைப் போலே யானை குதிரை அகப்பட திரட்டிக் கொடு போனான் ஆயிற்று-பிரிவில் ஆற்றாமைக்கு தன்னில் குறைந்தார் ஒருவரும் இலர் ஆயிற்று அங்குள்ள சேனைகளில் –-சிரஸா யாஸிதோ மயா-நான் தலையால் இரந்த கார்யத்தையும் மறப்பரோ –
மாம் நிவர்த்தயிதும் ய அசௌ சித்ரகூடம் உபாகதா-சிரஸா யாசத தஸ்ய வசனம் ந க்ருதம் மயா –யுத்தம் -24-19–தலையாலே வணங்கின அந்த பரத ஆழ்வான் உடைய வார்த்தை
என்னால் நிறைவேற்றப் படவில்லை -என்றார் அன்றோ பெருமாள் -என்றது –
அவனும் தனக்கு அடுக்கும்படி செய்தான் –நாமும் நமக்கு அடுக்கும்படி செய்தோம் -என்றார் என்றபடி-அவன் தலையாலே இரந்த கார்யத்தை மறுத்துப் போந்தோம்-என்றே அன்றோ அவர் திரு உள்ளம் புண்பட்டது
பிராது – உடன்பிறந்தவன் தன்னுடைய சரீரம் என்கிறபடியே-
ஆச்சார்யோ ப்ரஹ்மனோ மூர்த்தி பிதா மூர்த்தி பிரஜாபதே
மாதா பிருதிவ்யா மூர்திஸ்து பிராத ஸ்வ மூர்த்தி ராத்மன
-மனு தர்ம சாஸ்திரம் படி –
அவர் தம் திருமேனியாக அன்றோ என்னை நினைத்து இருப்பது
சிஷ்யஷ்ய தாசஷ்ய பிரசாதம் கர்த்தும் அர்ஹசி – இந்த பதங்களுக்கும் முன்பு போலே உரைத்துக் கொள்க–இப்படி இக்குடியில் இல்லாத ஏற்றங்களை செய்து -என்றது
மூத்தார் இருக்க இளையார் முடி சூடக் கடவர் அன்று என்று போந்த இத்தனை முன்பு-
ஆற்றாமையும் கண்ணும் கண்ணநீருமாக-சடையும் புனைந்து வற்கலையும் உடுத்து இருந்தார் இலர் அன்றோ –

ததா சிரஸி க்ருத்வா து பாதுகே பரத ததா-ஆருரோஹா ரதம் ஹ்ருஷ்ட சத்ருக்னேன சமன்வித -அயோத்யா -112-25-நாம் ஐயர்-சொன்ன கார்யத்தை செய்தோமாய் நிறம் பெறலாவது-நீர் பதினால் ஆண்டு இராச்சியத்திலே-இருக்கில் காணும் -என்ன–தன் ஆசையால் நிர்பந்திக்குமதுவும் இன்றிக்கே-அப்போது ஆனந்தம் அடைந்தவனாய்-
சத்ருகன ஆழ்வானோடு கூடினவனாய் தேரில் ஏறினான்

கதா புன சங்க ராதாங்க கல்பக
த்விஜார விந்த அங்குச வஜ்ர லாஞ்சனம்
த்ரிவிக்ரம த்வத் சரணாம்புஜ த்வயம்
மதிய மூர்த்தானம் அலங்கரிஷ்யதி
-ஸ்தோத்ர ரத்னம் -31-குணா குணம் நிரூபணம் பண்ணாதே-எல்லார் தலைகளிலும் வைத்த திருவடிகளை ஆசை உடைய என் தலையிலும் -ஒரு நாள் தலைக்கு அணியாய்

சா ராம சங்கீர்த்தன வீத சோகா
ராமஸ்ய சோகேன சமான சோகா
ஸ்ரன்முகே சாம்புத சேஷ சந்த்ரா
நிசேவ வைதேக சுதா பபூவ
-சுந்தர -36-17-அந்த சீதை யானவள் ஸ்ரீ ராம நாமத்தை கேட்டதனால் துன்பம் நீங்கினவளாய்-ஸ்ரீ ராமனுடைய உண்மையில் ஐயத்தால் ஒரு துன்பத்தை உடையவளாய் சரத் காலத்திலேயே மேகங்களால் மறைக்கப் பட்ட சந்தரன் உடைய-இரவினைப் போலே இருந்தாள்

தே பவ்ராவை தர்ம வத்சலம் ராஜ புத்ரம் தம் காஷாயாம் பரதாரிணம் பரிபோக்தும் ந விவ்யஸ்யந்தி -யுத்த
அந்தப் பட்டணத்து ஜனங்கள் -தர்மத்தில் பெருத்த ஆசை யுடையவனும் சக்கரவர்த்தி பெற்ற பிள்ளை யுமான அந்தப் பரதனை காஷாயாம்பரத்தைத் தரிப்பவனாக அனுபவிப்பதற்கு எண்ணினார்கள் இல்லை –

ஆச்சார்ய ப்ரஹ்மண மூர்த்தி பிதா பிரஜாபதே மூர்த்தி மாதா பிருத்வியா மூர்த்தி பிராதா ஆத்மந ஸ்வா மூர்த்தி -மநு ஸ்ம்ருதி
ஆச்சார்யன் பர ப்ரஹ்ம சரீரம் -பிதா ப்ரம்மாவின் சரீரம் -தாயார் பூமியின் சரீரம் -ஸஹோதரன் தம்முடைய சொந்த சரீரம்

பெருமாள் தமக்கு வேண்டிய கார்யங்களிலே நோக்கு இல்லாமலே இருந்த போதும்-
இவ்வடிமையைக் கொண்டருள வேணும் என்று-அவ்வவ் காலம் தோறும்-
என்னை நியமித்து அருள வேணும் என்று வடிம்பு இட்டு அடிமை செய்தாப் போலே-
அந்தரங்கமான தொண்டுகளை செய்து -என்றபடி –
பரவாநச்மி காகுஸ்த த்வயி வர்ஷசதம் ஸ்திதே-ஸ்வயந்துருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத -ஆரண்ய -15-7-

தொல் அடிமை –ஆத்மாவுக்கு இயற்கையாகவே அமைந்த அடிமை ஆகையாலே-பழையதாய் போருகிற அடிமை-
அகாரார்த்தா யைவ ஸ்வம் அஹம் அத மஹ்யம் ந நிவஹா
நராணாம் நித்யாநாம் அயநம் இதி நாராயண பதம்
யம் ஆஹ அஸ்மி காலம் சகலம் அபி சர்வத்ர சகலாஸூ
அவஸ்தாஸூ ஆவிஸ்யு மம சஹஜ கைங்கர்ய விதய
-அஷ்ட ஸ்லோகி –எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா நிலைகளுளும்- தானாகவே உண்டாகும் கைங்கர்யங்கள் வெளிப்பட வேண்டும்-

அந்தப் புராண புருஷனைப் பற்றி நான் அறிந்த அளவு சொல்லுகிறேன் -என்பது ஸ்ரீ நாராயணீயம்-யதாஜ்ஞ்ஞானம் து வஷ்யாமி புருஷம் தம் சனாதனம் -ஸ்ரீ நாராயணீயம் –பிரம்ம ருத்ர ஸம்வாதம்-அதாவது-ஈஸ்வரன் கடாக்ஷம் பள்ள மடை என்பதால் வித்வத் கோஷ்டி -ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம் விட்டு – –யம்ச்ச ராம பஸ்யதி –இடையர் கோஷ்டியில் புகுந்து -அங்கும் இருந்து -அவர்கள் சொன்ன வார்த்தையும் -இவர் சொன்ன வார்த்தையும் –
நூறு பிராயம் புகுவீர் –பொன்னாலே பூணூல் இடுவர்-பழம் உண்பீர்-பால் உண்பீர் –அழுத்த இரட்டை உடுப்பீர் –என்பன போன்று சொல்லுகை —வங்கி புரத்து நம்பி –விஜயஸ்வ -வெற்றி உண்டாக -என்ன-ஆண்டான் சொன்ன வார்த்தையை நினைவு கூர்வது – அங்கு சென்றாலும் முரட்டு சம்ஸ்க்ருதம் விட்டீர் இல்லீரே-எங்கே இருந்தாலும் நாம் நாமே காணும் இங்கே எழுந்து அருளீர் –

தஸ்ய தத் வசனம் ஸ்ருத்வா ராமோ வசனம் அப்ரவீத்-வசஸா சாந்தயித்வா ஏனம் லோசநாப்யாம் பிபன்னவ-யுத்தம் -21-6-மலர்ந்த மலர் போன்ற மிருதுவான வடிவினை-திருக் கண்களால் பருகுவார் போலக் குளிரக் கடாஷித்து வார்த்தை அருளிச் செய்தார்-

ஆனய ஏனம் ஹரி ஸ்ரேஷ்ட தத்தம் அஸ்ய அபயம் மயா-விபீஷணோ வா சுக்ரீவ யதிவா ராவண ஸ்வயம் -யுத்தம் -18-34-இராவணன் தானே ஆகிலும் இவனை அழைத்துக் கொண்டு வாரும் -என்னுமவன் அன்றோ-

கச்ச அனுஜா நாமி ரனார்த்தி தஸ்த்வம் பிரவிச்ய ராத்ரிம் சர ராஜ லங்காம்
ஆச்வச்ய நிர்யாஹி ரதீ ஸ்தன்வீ தாதா பலம் தாஷ்யசி மே ரத்ஸ்த
-யுத்தம் -59- 144
கடலை அணை செய்து-ஊரை முற்றுகை இட்டு-பின்னை அங்கத பெருமாளையும் புக விட்டு
கையிலே வந்து அகப்பட்டவனை-ராஷேச்வரனான ராவணனே போரில் அடி பட்ட நீ போ-என்று அனுமதி தருகிறேன்-இலங்கைக்குள் சென்று சிரமத்தைப் போக்கிக் கொண்டு-வில்லோடும் தேரோடும் கூடினவனாய் மீண்டும் வா-அப்போது தேரில் இருக்கிற நீ என் வலிமையைப் பார்ப்பாய் –என்று தப்ப விட்டது இன்னும் ஒரு கால் அனுகூலிப்பானோ -என்று-நான் முடிந்தே போம் இத்தனை என்று அதிலே-விரோதத்திலே – முதிர நின்ற பின்பே-கண்ணும் கண்ணநீருமாய் அன்றோ நின்று கொன்றது –

துர்க்க தாவபி ஜாதாயாம் த்வத்கதோ மே மநோ ரத-யதி நாசம் நவிந்தேத தாவதாஸ்மி கருதி சதா -ஜிதந்தா ஸ்தோத்ரம்-உன்னை அடைந்து இருக்கிற என்னுடைய எண்ணமானது கெடாமல் இருந்ததே ஆனால்-அதனால் எல்லா காலத்திலும் விரும்பினவற்றை எல்லாம் பெற்றவனாய் இருக்கிறேன்-மநோ ரதம் தானே புருஷார்த்தம் -என்ற படி –

ஐஸ்வர் யஸ்ய சமக் ரஸ்ய வீர் யஸ்ய யசச ஸ்ரிய-ஜ்ஞான வைராக்யயோ சைவ ஷண்ணாம் பக இதீரணா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-74-நிறைந்த செல்வம் என்ன–வீர்யம் என்ன–கீர்த்தி என்ன–சம்பத்து என்ன-ஜ்ஞானம் என்ன-வைராக்கியம் என்ன–ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் -பகவ -ஆகிய நிருக்தி பேதத்தாலே-பலவகையாக காக்க வல்லதாய் அன்றோ இருப்பது –

தா நஹம் த்விஷத க்ரூரான் சம்சாரேஷு நாரதமான்-ஷிபாமி அஜஸ்ரம் அசூபான் ஆசூரீஷ்வேவ யோநிஷ-ஸ்ரீ கீதை -16-19-இவை செய்த பாவங்களைப் பார்த்து -தள்ளுகிறேன் –

ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன் –-சஹஸ்ராஷ சஹஸ்ராச்ய சஹச்ர சரணோ விபு-சஹச்ர பாஹூ சர்வஞ்ஞ தேவோ நாம சஹஸ்ரவான் -போலே-தேவன் திருப் பெயர்கள் ஆயிரம் உடையவன்-பல பசுக்களை உடையவன் 

ச ப்ரஹ்ம –ச சிவ -ச இந்த்ர -வேதம்-அவனே யவனும் அவனுமவனும் அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே–9-3-2-ஸ அஷர பரம ஸ்வராட் –-அவனே உயர்ந்தவனும்-விகாரம் இல்லாதவனும்-கர்மங்கட்கு வசப் படாதவனான முக்தன் –

நர ஸம்ஸார ஸர்ப சந்தஷ்ட நஷ்ட சேஷ்ட ஏக பேஷஜம் கிருஷ்ணேதி வைஷ்ணவம் மந்த்ரம் ஸ்ருத்வா முக்தோ பவேத்
மனிதன் ஸம்ஸாரமாகிற ஸர்ப்பத்தினாலே நன்றாய் கடிக்கப்பட்டவர்களும் -அதனால் ஒருவித சேஷ்டை யற்றவர்களு மானவர்களுக்கு முக்கியமான மருந்தான கிருஷ்ணா என்ற வைஷ்ணவ மந்த்ரத்தைக் கேட்டவுடன் முக்தனாய் விடுவான் –

ஸ்மா த்வாதச தத்ர அஹம் ராகவச்ய நிவேசனே-புஜ்ஞ்ஞானா மானுஷான் போகான் சர்வ காம சம்ருத்தி நீ -சுந்தர -33-17
நான் அங்கு இராகவனுடைய திரு மாளிகையில் பன்னிரண்டு ஆண்டுகள் முடிய
மனிதர்களுக்கு உரிய இன்பங்களை அனுபவித்தேன் -என்று பிராட்டி திரு அயோத்யையை நினைத்தாப் போலே ஆயிற்று இவர் திரு உள்ளத்துக்கு பரம பதம் சொந்த தேசமாய் இருக்கிறபடி-

நதே மனுஷ்யா தேவா தேய சாரு சுப குண்டலம்-முகம் த்ருஷ்யந்தி ராமஸ்ய வர்ஷே பஞ்ச தசே புன -அயோத்யா -64-69-
ஸ்ரீராமபிரான் உடைய அழகு பொருந்திய குண்டலங்களோடு கூடின திரு முகத்தை பதினைந்தாம் ஆண்டில் மீண்டும் எவர்கள் பார்ப்பார்களோ அவர்கள் மனிதர்கள் அல்லர் அவர்கள் தேவர்கள் -என்று சக்கரவர்த்தி கூறினால் போலே-அவனுடைய சீலம் முதலான குணங்களை நினைத்து சொல்கிறார்-

அந்யத் பூர்ணாத் அபாம் கும்பாத் அந்யத் பாதாவனே ஜநாத்
அந்யத் குசல சம் பிரச்நாத் நசேச்சதி ஜனார்தனா
-பாரதம் உத்தியோக பர்வம் -87-13-சஞ்சயன் கூற்று-நிறைந்து இருக்கிற தண்ணீர் உடைய பூர்ண கும்பத்தைக் காட்டிலும்
வேறு ஒன்றினையும் அவன் விரும்புவதில்லை -எண்ணப் படுமவன் அன்றோ அவன்-

காதலாலே இருவருக்கும் இரண்டும் குறை அற்று இருக்கும்-வரவிட்ட ஆள் -மாருதி -அழியச் செய்யப் புக-பாபாநாம் வா சுபாநாம் வா வதார்ஹானாம் ப்லவங்கம்-கார்யம் கருணம் ஆர்யென ந கச்சித் ந அபராத்யதி -யுத்தம் -116-45-யார் குற்றம் செய்யாதவர் -என்னும் இவள்
என் அடியார் அது செய்யார் -பெரியாழ்வார் திருமொழி -4-9-2–என்று இவளோடு மறுதலிக்கும் படி ஆயிற்று அவன் இருப்பது-

தமஸ பரமோ தாதா சங்க சகர கதா தர-ஸ்ரீ வத்ஸ வஷ நித்ய ஸ்ரீ அஜய சாஸ்வத த்ருவ-யூத -115-15-மண்டோதரி -வார்த்தை-சங்கையும் சக்ரத்தையும் கதையும் தரித்து இருப்பவனே-
பெரிய பிராட்டியாரையும் ஸ்ரீ வத்சத்தையும் மார்பில் உடையவனே–என்கிற உன் வடிவைக் காண ஆசைப் படா நின்றது –

நவை தேவோ அச்நந்தி நபிபந்தி-ஏத தேவாம்ருதம் த்ருஷ்ட்வா த்ருப்யந்தி -சாந்தோக்யம் –3-10-தேவர்கள் உண்பது இல்லை-இந்த அமிர்தத்தை பார்த்தே திருப்தி அடைகிறார்கள்-

சஷூஸ்ச த்ரஷ்டவ்யஞ்ச நாராயண-ஸ்ரோத்ரஞ்ச ஸ்ரோதவ்யஞ்ச நாராயண -சுபால உபநிஷத்-பார்கின்ற கண்களும் பார்க்கப் படுகின்ற பொருள்களும்-நாராயணனே –

யதீஹ சரத அநேகர த்வயா ஸார்த்தம் அநிந்திதே-லஷ்மனேன ச வத்ச்யாமி நமாம் சோக பிரதஷ்யதி -ஆரண்ய -94-15-
குற்றம் இல்லாத சீதையே உன்னோடும் இலக்குமணனோடும்-பல வருடங்கள் இங்கே வசிப்பதனால் என்னை சோகம் வந்து அடையாது -என்றார்-

இதம் புண்யம் இதம் மேத்யம் இதம் பஹூ ம்ருகத்விஜம்-இஹ வத்ச்யாமி சௌமித்ரெ ஸார்த்தம் ஏதேன பஷிணா – ஆரண்ய -15-19-
இலக்குமணா இவ்விடம் புண்யத்தைக் கொடுக்கக் கூடியது-பரிசுத்தமானது-மிருகங்களோடும் பறவைகளோடும் கூடியது-இந்த ஜடாயு பறவை உடன் நான் வசிக்கப் போகிறேன்-என்றும் அருளிச் செய்தார் அன்றோ பெருமாள் -என்றது-ஐயர் கண் வட்டத்திலே வசிக்க வேண்டும் என்று நினைத்து இருந்தோம்-நடுவில் ஆய்ச்சிக்கு பிரியம் செய்ய வேண்டுகையாலே அது செய்யப் பெற்றிலோம்-இனி இவர் சிறகின் கீழே யாகிலும் வசிக்கப் பாரா நின்றோம் -என்கிறார் –

விளங்கும் சுடர்ச் சோதி உயரத்து ஒருத்தா –அத யத்த பரோ திவோ ஜ்யோதி தீப்யதே -சாந்தோக்யம்-இந்த பிரகிருதி மண்டலத்துக்கு மேலே உள்ள பரமபதத்தில் சோதி மயமான பரம் பொருள் விளங்குகிறான் –என்கிறபடியேஎப்போதும் ஒக்க விளங்கா நிற்பதாய்-எல்லை இல்லாத ஒளி மயமாய் இருக்கிற-பரம பதத்தில் எழுந்து அருளி இருக்கிற-ஒப்பற்றவனே –
பிரகாரத்தில் அன்றோ பல வகை உள்ளது-பிரகாரி ஒருவனே ஆம் –

உதாரா சர்வ ஏவ எத ஜ்ஞாநீது ஆத்மா ஏவ மே மதம்-ஆஸ்தித சஹி யுக்தாத்மா மாமேவ அநுத்தமாம் கதிம் – ஸ்ரீ கீதை -7-18–ஞானியானவன் என் உயிர் என்னக் கடவது அன்று –
நரசிம்ம ராகவ யாதவ ரெங்கேந்திர சிம்மம் -ஆத்மா தானே பக்தர்கள் -பிரகலாதன் -விபீஷணன் -அர்ஜுனன் திருப் பாண் ஆழ்வார் -நலிவுப்பட கிளர்ந்த சிங்கங்கள்-

நரசிங்கமதாய வுருவே –-என்றும் ஒரே தன்மையை உடைய உருவம் –-சதைக ரூப ரூபாயா விஷ்ணவே சர்வ ஜிஷ்ணவே-

அதிகம் சோபதேபம்பா விகூஜத்பி விஹங்கமை-தீபயந்தீவ மே காமம் விவிதா முதித த்விஜா -கிஷ்கிந்தா –முதல் சர்க்கம்-பம்பா நதியானது இனிமையாய் பாடுகின்ற பறவைகளால் மிகவும் அழகாக விளங்குகின்றது – பலவிதமான பறவைகளும் களிப்புடன் இருந்து கொண்டு என்னுடைய காமத்தை அதிகப் படுத்துகின்றன போலும் –என்னுமாறு போலே நலியா நின்றது –

தஸ்யா ச ராமோ த்விகுணம் ஹ்ருதயே பரிவர்த்ததே-அந்தர் ஜாதம் அபிவ்யந்தம் ஆக்யாதி ஹ்ருதயம் ஹ்ருதா -பால -77-2-
அந்த பிராட்டி உடைய மனத்தில் ஸ்ரீ ராம பிரான் விருப்பத்தோடு வீற்று இருக்கிறார்-
ஆதாலால் பிராட்டியின் மனத்தின் எண்ணங்களை எல்லாம் நன்றாக அறிகிறார்-

தத் ப்ருஹீ வசனம் தேவி ராஜ்ஞ்ஞோ யதபி காங்ஷிதம்-கரிஷ்யே பிரதிஜானசே ராமோ த்வி நாபி பாஷதே -அயோத்யா -18-30
ஸ்ரீ ராமபிரான் கைகேயியைப் பார்த்து அருளியது இராமன் இரண்டு விதமாக பேசுகிறவன் அல்லன் என்றும் –மித்ர பாவேன சம்ப்ராப்த்தம் நத்யஜேயம் கதஞ்சன-தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் சதாமேதத் அகர்ஹிதம் -யுத்தம்-18-3- அவனை நான் விட மாட்டேன் -என்றும்-சக்ருதேவ பிரபன்னாய தவாஸ் மீதி ச யாசதே-அபயம் சர்வ பூதேப்யோ ததாமி ஏதத் வரதம் மம -அயோத்யா -18-38–அவ்வாறு செய்தல் எனக்கு விரதம் –

ஆண்களோடு கூடத் திரிகின்ற சக்கரவாகப் பேடுகளின்-இனிய குரலைக் கேட்டு நீண்ட கண்களை உடைய இந்த சீதை எப்படி இருப்பாளோ -என்றார் இறே பெருமாள்
நிஸ்வனம் சக்கரவாகானாம் நிசம்ய சஹாசாரினாம்-புண்டரீக விசாலாஷி கதம் ஏஷா பூவிஷ்யதி -கிஷ்கிந்தா -80-10

நைவதம் சரன் நமசகரன் ந கீடான் ந சரீச்ரூபான் -சுந்தர -36-12-
மேலே தங்கி இருக்கிற காட்டு ஈக்கள் கொசுக்கள் முதலான வற்றையும் ஓட்ட மாட்டார்-

குணங்கள் பல ஈடுபடுத்தும் -என்பதற்கு பிரமாணங்கள் மேலே காட்டி அருளுகிறார்-
தே தம் ஊசு மகாத்மானாம் பௌர ஜானபதை சஹ-பகவோ ந்ருப கல்யாணா குணா புத்ரஷ்ய சந்தி தே -அயோத்யா -2-26-
சக்கரவர்த்தி பெருமாளுக்கு திருமுடி சூட வேண்டும் என்று கோலி- நாம் அறுபதினாயிரம் ஆண்டு ஒரு தலை மிதிக்க ஒரு தலை கிளற இப்படி வருந்தி அடிப்படுதின- இராச்சியத்தை-இன்று சிறியவன் தலையில் வைத்தால் இது பொறுக்குமோ-என்று பார்த்து இதை நாட்டோடு சேர விசாரித்து செய்வோம் என்று அரசர்கள் கூட்டத்தை கூட்டின இடத்து-சநிக்தோ நுநாத சஞ்ஜஞ்ஞே நேத்ர ஹர்ஷ சமீரித-ஜனௌ கோத்குஷ்ட சந்நாதோ விமாநம் கம்பயந்நிவ-அயோத்யா -2-18-மக்கள் ஆரவாரித்த ஆரவாரமானது அரண்மனையை கிடு கிடுக்கச் செய்தது சகரவர்த்தி மாளிகையை அளித்து செய்யும்படி ஆரவாரிக்க அதனைக் கேட்டு நாம் நினைத்த கார்யம் பலித்தது -ஆயினும் இவர்கள் நினைவை இவர்கள் வாயால் சொல்லக் கேட்டால் ஆகாதோ என்று நினைத்து –கதம் நு மயி தர்மேன பிருதிவீம் அனுசாசதி-பவந்தோ த்ருஷ்டும் இச்சந்தி யுவராஜம் மமாத்மாஜம் –அயோத்யா -2-25-வாரீர் கோள் -நான் அற நெறியில் தேசத்தை ஆண்டு வரும் போது இளவரசனைப் பார்க்க வேண்டும் என்று எவ்வாறு விரும்புகிறீர்கள் -என்கிறபடியே அறுபதினாயிரம் ஆண்டு சிறியது பெரியதை நலியாதபடியாக-பூமிப் பரப்பை அடைய நோக்கிக் கொண்டு இதம் சரீரம் க்ருத்ச்னச்ய லோகஸ்ய சரதா ஹிதம்-பாண்டரஷ்ய ஆத்பத்ரஷ்ய சாயாயாம் சரிதம் மா -அயோத்யா -2-7-<எல்லா உலகங்கட்கும் நன்மையைச் செய்கிற என்னால் இந்த உடல் வெண் கொற்றக் குடையின் நிழலில் கிலம் ஆக்கப் பட்டது -என்கிறபடியே முத்தின் குடை நிழலிலே திரிந்து -எனக்கு என்று ஒரு சுகம் கோலாதே உங்களைப் பாதுகாக்கும் தர்மத்தையே செய்து கொண்டு போந்தேன்-நான் ஒரு வார்த்தை கேட்ட இடத்து –இப்போது நீ இருக்கச் செய்ய வேண்டாமோ செய்ய வேண்டிய காலத்தில் செய்து கொள்ளுகிறோம் -என்னுதல்-அன்றியே கார்யம் ஆகில் செய்ய லாகாதோ -என்று வார்த்தை சொல்லுதல் அன்றிக்கே –படுகுலை அடித்தவனை தப்ப ஒரு அறவன் கீழே ஒதுங்க நினைப்பாரைப் போலே என்னை விட்டு என் மகனே அமையும் என்று நீங்கள் விரும்புகைக்கு நான்-உங்களுக்கு செய்த தீங்கு என் என்ன –ஜ்ஞான விஞ்ஞான சம்பன்ன நிதசே நிரத பிது-தாதுநாமிவ சைலேந்த்ரோ குணாநாம் ஆக்ரோ மகான் – கிஷ்கிந்தா -13-20-தாரை வாலி இடம் பேசியது நீ எங்களுக்கு செய்த தீங்கு ஒன்றும் இல்லை-உன் மகனுடைய குண அபராதங்கள் கான் இதற்கு அடி –நீ நோக்கிக் கொண்டு போந்த படிகளில் ஒரு குறை இல்லை-குணவானாய் இருப்பான் ஒரு புத்ரினைப் பெற்று நாட்டினை படுகுலை அடித்தாய் காண் –பஹவ -உன் அளவு அன்று காண்-காக்கும் தர்மத்தில் அவர்க்கு உண்டான பாரிப்பு விராஜயன் ராஜ ஸூதா ராஜமார்க்கம் நரை வ்ருதம்-ஹ்ருதயானி ஆமமந்தேவ ஜனச்ய குண வத்தையா -அயோத்யா -26-2-பொன் முதலிய தாதுக்கள் இமய மலையைப் போன்று சௌலப்யம் முதலிய குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமாய் இருப்பவன் -என்கிறபடியே
நாட்டிலே சிலரை குணம் இல்லாதவர் என்று பழித்தும்-சிலரை குணவான்கள் என்று கொண்டாடுகிறதும்-இன்ன ஆகாரத்தின் பொன் -என்று விலை பெறுமா போலே-
இன்னார் இடத்திலே இருக்கிற குணம் -என்று ஆயிற்று புறம்பு விலை போவது
சிறந்த குணம் உள்ளவர் ஆகையாலே மக்களின் மனத்தினைக் கடைந்தவர் போல் ஆனார் 

ஏஷ தத்வா ச வித்தானி ப்ராப்யச அநுத்தமம் யச-லோகநாத புரா பூத்வா சூக்ரீவம் நாதம் இச்சதி -கிஷ்கிந்தா -4-18–சுக்ரீவனை நாதனாக விரும்புகிறார் -என்னக் கடவது அன்றோ –
இச்சித்து -விரும்பி -நாதன் ஆகவுமாம் இல்லையாகவுமாம் -இச்சிக்கலாமே -ஸ்வரூப கர்மாதீன பாரதந்தர்யம் இல்லை -ஸ்வதந்த்ரம் அடியாக அன்றோ –-தாத்தா பேரன் பஞ்சு திருவடியால் கன்னத்தில் அடித்துக் கொள்வது போலே-

வேம் எனது ஆர் உயிர் –மனத்தினை அன்றிக்கே-எரிக்க முடியாத உயிரினையும் எரிக்கின்றது –அச்சேத்ய அயம் அதாஹ்ய அயம் அக்லேத்ய அசோஷ்ய ஏவச-நித்ய சர்வகத ஸ்தாணு அசல அயம் சனாதன -ஸ்ரீ கீதை -2-24-
எல்லாவற்றுக்கும் குளிர்த்தியைப் பண்ணக் கடவதான பனி-தாமரை ஒன்றினையும் கருகப் பண்ணுமாறு போலே எல்லா துக்கங்களையும் போக்கக் கூடியனவான குணங்கள்-என் ஒருவனையும் அழிக்கின்றன –எரிக்கப் படாதது -என்றது நெருப்புக்கு-பகவானுடைய குணங்கள் புக்கு அழிக்க மாட்டாதான இல்லை –

ஏதத் ஆக்யானம் ஆயுஷ்யம் படன் ராமாயணம் நர-சபுத்ர பௌத்ர சகன ப்ரேத்ய ச்வர்க்கே மஹீயதே –பால – 1-99-வாழ் நாளை வளர்க்கும் ஸ்ரீ இராமாயண என்னும் இதிஹாஸத்தை பாடிக்கொண்டு இருக்கிற புருஷன் புத்திர பவ்த்ரர்களுடன் கூடினவனும் கூட்டத்தோடு கூடினனவனுமாகி உடலை விட்டபின்பு ஸ்வர்க்கத்தில் பூஜிக்கப்படுகிறான் –

ஆச்சார்யவத் ஆச்சார்ய தாரே வ்ருத்தி ததா சமாதிஷ்டே
அத்யாபயதி வ்ருத்ததரே ச சப்ரமசாரிணி உச்சிஷ்டாசக
வர்ஜம் ஆச்சார்யவத் ஆச்சார்யபுத்ரே வ்ருத்தி -ஆபஸ்தம்ப தர்மம் –
ஆசார்யனைப் போன்று அவனுடைய மகன் இடமும் நடந்து கொள்க

தத மலின சம்வீதாம் ராஷ ஸீபி சமாவ்ருதாம்-உபவாச க்ருசாம் தீநாம் நிஸ்வசந்தீம் புன புன -சுந்தர -15-19-பின்பு திருவடி அழுக்கடைந்த வஸ்திரத்தினால் சுற்றப்பட்டவளும் ராக்ஷஸ ஸ்த்ரீகளால் நன்கு சூழப்பட்டவளும் உபவாசத்தாலே இளைத்தவளும் தைர்யம் அற்றவளும் அடிக்கடி பெரு மூச்சு விடுகிறவளுமான பிராட்டியைப் பார்த்தார் –யாம் கபீநாம் சஹஸ்ராணி ஸூ பஹுநி அயுதானி ச-திஷூ சர்வாசூ மார்க்கந்தே ஸா இயம் ஆஸாதிதா மயா-சுந்தர -30-3-எந்தப் பிராட்டியை ஆயிரக் கணக்கான குரங்குகள் தேடுகின்றனவோ –

ரூபஸ்ரியா பரமயா பரமேண தாம் நா
சித்ரைச் ச கைச்சித் உசிதைர் பவதச் சரித்ரை
சிஹ்நைர் அநிஹ்நவபரைர் அபரைச் ச கைச்சித்
நிச்சின்வதே த்வயி விபச்சித ஈஸித்ருத்வம்–ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் –28-

எம்பெருமானே மஹா விவேகியாய் உள்ளவர்கள் தேவரீருடைய மிகச் சிறந்த திரு மேனி விளக்கத்தினாலும் –சிறந்த ஸ்தான விசேஷத்தினாலும் -அற்புதமாகும் தகுந்த மிக்கு இருக்கிற சில சரிதைகளினாலும்-பரத்வத்தை ஒளிக்காமல் நிர்ணயிக்கக் கூடிய சில அடையாளங்களாலும் தேவரீர் இடத்திலேயே பாரம்யத்தை நிர்ணயிக்கிறார்கள்

வாசா தர்மம் அவாப்நுஹி சுதரம் -39-10 –வாக்கால் தருமத்தை அடைவாய்

த்வயம் வயச்ய அஸி ஹ்ருதயா மேஹி ஏகம் துக்கம் சுகம்ச நௌ-சுக்ரீவம் ராகவோ வாக்யம் இதி உவாச பிரக்ருஷ்ட வத் -கிஷ்கிந்தா -5-18–இன்பமும் துன்பமும் நம் இருவருக்கும் ஒன்றே -என்று-
அத சம்ஸ்கார சம்பன்ன ஹனுமான் சசிவோத்தமா-உவாச வசனம் ச லஷ்மணம் அர்த்ததவத் மதுரம் லகு -யுத்தம் -148-பின்பு சாஸ்திர பயிற்ச்சியால் உண்டான பழக்கத்தாலே-நிறைந்தவரும் அமைச்சர்களில் சிறந்தவருமான அனுமான்
வந்து அழகாயும்-பொருளோடு கூடினதாயும்-இனிமையாகவும்-சுருக்கமாயும்
உள்ள வார்த்தைகளைச் சொன்னார்-

அத நு கிம் துக்கதாம் ச அஹம் இஷ்வாகு நந்தனம்-இமாம் அவஸ்தாம்ஆபன்ன ந இஹ பஸ்யாமி ராகவம் -அயோத்யா -59-26-தசரதன் புலம்பல்–இந்நிலையை அடைந்த நான் இஷ்வாகு வம்சத்தில் பிறந்த இராமனை-இங்கு காண்கிறேன் இல்லை-

மேரு மந்தா மாத்ரோபி ராசி பாபச்ய கர்மண-கேசவம் வைத்திய மாசாத்ய துர்வியாதி இவ நச்யதி – விஷ்ணு தர்மம் -அத் -78-
பாப கர்மங்களின் கூட்டம் மேரு மலை மந்திர மலை இவைகளைப் போன்று-
உயர்ந்து இருந்தாலும் -வைத்தியனைக் கிட்டிக் கெட்ட வியாதிகள் நாசம் அடைவது போன்று
கேசவனை கிட்டி அவைகள் நாசத்தை அடைகின்றன -என்றும் –
ஏவம் ஹாஸ்ய சர்வே பாப்மான பிர தூயந்தே -சாந்தோக்யம் -5-24-
எல்லா பாபங்களும் நாசத்தை அடைகின்றன என்றும் –
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ-அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி மாசுச -ஸ்ரீ கீதை -18-66-
சர்வ பாபேப்யோ -பிரபன்னனுக்கு -சர்வ -மோக்ஷ விரோதி பாபங்கள் – பக்தி நிஷ்டனுக்கு அங்க பிரபத்தி -பக்தி ஆரம்ப விரோதி பாபங்கள் –எல்லா பாபங்களில் நின்றும் உன்னை விடுவிக்கின்றேன்-என்றும்-கூறப் படுகின்றன படியே ஆகக் கடவன அன்றோ –

பவாமஸ்து சஹ வைதேஹயா கிரிசாநுஷூ ரம்ச்யதே
அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ச்வபதஸ்ஸ தே-அயோத்யா -31-25–வனவாசத்துக்குப் புறப்பட்டுப் பெருமாளும் பிராட்டியுமாக கலக்கும் இடத்தில்-பவாமஸ்து -ஸ்லோகத்தில் கூறியபடியே எல்லா அடிமைகளும் செய்ய இளைய பெருமாள் நேர் பட்டால் போலே ஆயிற்று-

சோஹம் தே தேவ தேவேச நார்ச்ச நாதௌ ச்துதௌ நச-சாமர்த்யவான் க்ருபாமாத்ரா மநோ வ்ருத்தி ப்ரசீத மே-ஸ்ரீ விஷ்ணு பிராணம் -5-7-70-தேவர்களுக்கும் தேவரான ஸ்வாமிந் அந்த நான் தேவரீரை அர்ச்சனாதிகளில் ஸமர்த்தன் அல்லன்-ஆகையால்-கிருபை ஒன்றையே மனத்தின் செயலாக கொண்டு-எனக்கு இரங்க வேண்டும்

நதே மனுஷ்யா தேவா தே எ சாரு சுப குண்டலம்-முகம் த்ரஷ்யந்தி ராமஸ்ய வர்ஷே பஞ்ச தசே புன –அயோத்யா-64-69- தசரதன் புலம்பல் –நான் முடியப் புகா நின்றேன்-இனி பெற இருக்கிறவர் யாரோ-அவர்கள் மனிதர்கள் அல்லர்

ஸா ஸீதா ராக்ஷஸீ மத்யகதா பீரு வாக்பிர் ப்ருசம் ராவண தர்ஜிதாச விஜநே காந்தார மத்யே விஸ்ருஷ்டா பாலா கந்யேவ விலலாப –-ஸூ ந்தர -28-2-
ராக்ஷஸிகளின் மத்யத்தை அடைந்தவளும் பயப்பட்டவளும் வாக்கினால் மிகவும் இராவணனால் மிரட்டப்பட்டவளுமான ஜனமற்ற காட்டின் நடுவிலே விடப்பட்ட இளமைப் பருவமுள்ள பெண் போலே அழுதாள் –

யானி ஸ்ம ரமணீயாநி தயா சஹ சீதயா-தானி ஏவ அரமணி யா நி ஜீவதோ மே தயா விநா-கிஷ்கிந்தா -1-69
அவன் உடன் இருந்த போது இன்பத்தைத் தந்த பொருள்கள்-அனைத்தும் இப்போது துன்பத்தினைத் தருவதாய் இரா நின்றன-

ஏஷ புஷ்ப வஹ வாயு ஸூக ஸ்பர்ச ஹிமாவஹா-தாம் விசிந்தயத் காந்தாம் பாவன ப்ரதிம மம -கிஷ்கிந்தா -1-52–மலர்களின் வாசனை உடன் கூடியதும் இனிமையாக வீசுவதும் குளிர்ச்சி உடன் கூடியதும் ஆன இந்தக் காற்று அந்த சீதையைப் பற்றி நினைத்துக் கொண்டு இருக்கிற எனக்கு-நெருப்புக்கு சமானமாய் இருக்கிறது-

சதா ஸூகம் அஹம் மன்யே யம் புரா சஹ சீதயா-மாருத ச விநா சீதாம் சோக சஞ்சனக மம -கிஷ்கிந்தா -1-104–முன்பு நான் சீதை உடன் இருந்த காலத்தில் எந்த காற்றை சுகம் தரக் கூடியது என்று நினைத்தேனோ அந்த காற்றே சீதையை பிரிந்து இருக்கிற எனக்கு சோகத்தை அதிகப் படுத்துகிறது 

பத்ம  சௌகந்திக வஹம் சிவம் சோக விநாசனம்-தன்யா லஷ்மண சேவந்தே பாம்பு பவன் மாருதம் -கிஷ்கிந்தா -1-103-இலக்குமணா -தாமரை முதலியவற்றின் மனங்களை அரித்துக் கொண்டு வருகின்ற தூயதாய் உள்ள-துன்பத்தை போக்குகின்ற பம்பையின் சோலையின் நின்றும் எழுந்த காற்றை மனைவியோடு கூடி உள்ள மாந்தர் எப்பொழுது வரும் என்ற எதிர் பார்க்கின்றனர்-

பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம் -அயோத்யா -3-28–ஆடவர் பெண்மையை அவாவு தோளினாய் -கம்பர் பால -தாடகை வதைப் படலம்-

ஸ தாம் புஷ்கரிணீம் காத்வா பத்ம உத்பல ஜஷாகுலாம்-ராம சௌமித்ரி சஹித விலலாப ஆகுலேந்த்ரிய -கிஷ்கிந்தா -1-1- இலக்குமணனோடு இருந்த ஸ்ரீ ராமன் -என்று- அவர் தாம் நோவு பட்டு கூப்பிடுகிற போது ஒரு தம்பியார் ஆகிலும் கூட உண்டு நோவு படுகைக்கு
அங்கனம் ஒரு துணை இல்லை எனக்கு -என்பாள் -தமியம் -என்கிறாள்
–பிராட்டியை பிரிந்து நடுவே கபந்தன் கையிலே அகப்பட்டு-நோவு பட்டு நிற்கிற நிலையை சொல்லுகிறது –
தாம்- இப் பிரிவும் ஆற்றாமையும் அழிக்க வற்றாயிற்று
புஷ்கரிணீம் –பரப்பு மாறப் பூத்த பொய்கைகளும் -சோலைகளுமாய்-நீர் விளையாட்டுக்குத் தகுதியான தேசமாயிற்று -என்றது –-பிரிந்து தனி இருப்பார்க்கு கண் கொண்டு காணப் போகாது -என்றபடி –
காத்வா –நினைவு இன்றிக்கே இருக்கச் செய்தே-கூற்றுவனுடைய வாயிலே புகுவாரைப் போலே-வந்து கிட்டிக் கொடு நின்றார் கூற்றுவனாகிற புடை தான் யாது -என்னில் –
பத்ம உத்பல ஜஷாகுலாம் – பிராட்டியினுடைய முகத்துக்கும்-கண்களுக்கும் போலியானவற்றை உடைத்தாய் இருந்தது –-உயர் தாமரை செங்கழுநீர் மாதர்கள் வாண் முகமும் கண்ணும் ஏந்தும் –5-9-7-என்னக் கடவது அன்றோ –
ராம –பிறர் கூப்பீடு தவிர்த்துப் போந்தவர் ஆயிற்று
ராமயதீதி ராம –சௌமித்ரி சஹித –அரச நீதிகளை சொல்லிக் கொண்டும்-தனது வலிமையை கூறிக் கொண்டும்-அந்த ஸ்ரீ ராமனைக் காப்பாற்றினார் -என்கிறபடியே-
தம் மத்த மதாங்க விலாசகாமீ கச்சந்தம்-அவ்யக்ரமனாமகாத்மாஸ லஷ்மனோ ராகவம் அப்ரமத்த ராஷ-தர்தமன பலேனச ஏவ -கிஷ்கிந்தா -1-126–ஏதேனும் அளவிலும் கூட இருந்து நோக்கிக் கொண்டு போந்தவரும் முன்னாக-ஆறு இழியுமவன் தெப்பம் முன்னாக இழியுமாறு போலே-விலலாப ஆகுலேந்த்ரிய –-பல இலக்கணங்கள் உடன் ஆயிற்று கூப்பிட்டது-

கிருஷ்ண ஏவஹி லோகாநாம் உத்பத்தி அபி ஸ அப்யயா
கிருஷ்ண ஸ்யஹி க்ருதே பூதம் இதம் விஸ்வம் சராசரம்-பாரதம் இராயசூயம் – 38
உலகங்கள் உடைய படைப்பும் கிருஷ்ணனே-பிரளயமும் கிருஷ்ணனே-இது பிரசித்தம் –

ப்ரஹ்மா ஸ்வயம்பூ சதுராநோவா ருத்ர த்ரிநேத்ர த்ரி புராந்தகோவா
இந்த்ரோ மகேந்திர சூரநாயகோவா த்ராதும் ந சக்தா யுதி ராம வத்யம் -சுந்தர -51-55-
இராம தண்டத்துக்கு காரணமாய் இருக்கும் ஒருவனை-இந்த்ரன் சிவன் பிரமன் என்னும் இவர்களும் கூட அத் தண்டத்தின் நின்றும் காப்பதற்கு ஆற்றல் உடையார் அல்லர்-

நமாம்சம் ராகவோ புங்க்தே ந சாபி மது சேவதே-வந்யம் சூவிஹிதம் நித்யம் பக்தம் அச்நாதி பஞ்சமம் -சுந்தர 36-41-வரும் துணையும் ஜீவித்துக் கிடக்கும்படி இராகவன்-உணவுகளையும் உண்பது இல்லை என்று சிலர் சொல்லுதல்
கானனானி சூரம்யாணி நதீ பிரச்ரவண நிச-சரன் நரதிம் ஆப்நோதி த்வாம் அபச்யன் நருபாத் மஜே -சுந்தர -35-47-ஜனகராஜன் புத்ரியே உன்னைக் காணாமையால் மிக்க துன்பத்தை அடைகிறார்-

வ்யாஸாய வசிஷ்ட நப்தாரம் ஸக்தே பவ்தாரம் பராசராத்மஜம் ஸூக தாதம் அகல்மஷம் வந்தே-வசிஷ்டருக்குக் கொள்ளுப் பேரனும் சக்திக்குப் பேரனும் பராசரருக்குப் பிள்ளையும் ஸ்ரீ ஸூகருக்குத் தகப்பனாரும் ஒருவித குற்றமும் இல்லாதவரான ஸ்ரீ வ்யாஸ பகவானை ஸேவிக்கிறேன்-

ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோச்மி க்ரீஷ்மே சீதமிவிஹ்ர்தம் -பாரதம் மோஷ தர்மம் -4-50-
நான் வெயில் காலத்தில் குளிர்ந்த மடுவில் படிவது போலே-பரப்ரமத்தை அடைந்தவன் ஆகின்றேன்-இவளோடு கலந்தவன் ஆயிற்று –நீராட்டம் -ஸ்ரீ கிருஷ்ண அனுபவம் -தோய்தல் –க்ரீஷ்மே சீதமிவிஹ்ர்தம் –வேனிற் பருவத்தில் மடுவிலே முழுகிக் கிடப்பாரைப் போலே-
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும் -நீர்ப் பண்டமாகி உருக்கி பின்பு தோய்ந்தான் –

அப்ரமேயம் ஹி தத்தேஜ யஸ்ய ஸா ஜனகாத்மஜா-ந த்வம் ஸ்மர்த தஸ்தாம் ஹர்த்தும் ராம சாபாஸ்ரயம் வனே -ஆரண்ய -37-18-மாரீசன் வார்த்தை –
யாவர் ஒருவருக்கு அந்த ஜனக குலத்தில் பிறந்த பிராட்டி-மனைவியாக இருக்கிறாளோ
அந்த பெருமாள் உடைய பராக்கிரமம் அளவிட்டு அறியக் கூடாததாய் இருக்கிறது –

உபசம்ஹர சர்வாத்மன் ரூபம் ஏதத் சதுர்புஜம்-ஜானாதுமா அவதாரம்தே கம்சோயம் திதி ஜன்மஜே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-12 -தேவகி வார்த்தை –-என்றது கம்சன் முதலானோரை குறித்தே அன்றோ–பெண்களுக்கு நான்காகத் தோன்றும்
சங்க சக்ர கதா பானே த்வாரக நிலய அச்யுத-கோவிந்த புண்டரீகாஷா ரஷமாம் சரணா கதாம் -பாரதம் சபா பர்வம் -75-43- த்ரௌபதி வார்த்தை-சங்கையும் சக்கரத்தையும் கதையையும் தரித்த திருக் கைகளை உடையனே -என்றாளே அன்றோ –

அதீந ரோஷண சண்ட ஸங்க்ராமம் அபி காங்ஷதி ஏஷைவ லங்காம் ஸ்வேந அநீகேந மர்த்திதும் ஆசம்ஸதே -யுத்த -26-20-
தைன்யம் இல்லாதவனும் கோபமுள்ளவனும் பராக்ரமுமுள்ளவனான நீலன் சண்டையை மிகவும் விரும்புகின்றான் -இவன் ஒருவனே இலங்கையை தமது சைன்யத்தினால் நாசப்படுத்துவதற்கு விரும்புகிறவன் –

த்வம் வயச்ய அஸி ஹ்ருதய மே ஹி ஏகம் துக்கம் சுகம் நௌ-சுக்ரீவோ ராகவம் வாக்யம் இதி உவாச ப்ரஹ்ருஷ்டவத் -கிஷ்கிந்தா -5-18-
துக்கமும் சுகமும் நமக்கும் ஒன்றே என்று இருக்குமவர்கள்-

சந்தேசை சாம மதுரை பிரேம கர்ப்பை அகர்விதை-ராமேன ஆஸ்வாசிதா கோபய ஹரிணா ஹ்ருத சேதச – ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-24-20-மனத்திலே உள்ள மறத்தாலே -கிட்டக் கடவோம் அல்லோம் –என்று இருக்கிற-பெண்களுடைய கால்களை சென்று பிடியா நிற்கும் கண்கள்-நம்பி மூத்த பிரான் செய்யவற்றை அடைய செய்யா நிற்கும் ஆயிற்று-பல ராமானால் மணம் தெளிந்தார்கள்-குழல் ஊதுகையிலே மீண்டு மீண்டு வார்த்தை சொல்ல-ஒண்ணாமை யாலே-வாக்கின் செயலை ஏறிட்டு கொள்ளுமாயிற்று பேச்சாலே பிறக்கும் தெளிவு-நோக்காலே பிறக்கையைத் தெரிவித்தபடி –

அதாத்ர மாதலீ சாப தபஸ் தப்த்வா ஸூ துஷ்கரம்
பகவந்தம் பிரபன்னா ஸா பகவந்தம் அவாப ஸா – காருட புராணம் -ஸ்ரீ ரங்க மகாத்மியம் -அத்யா-3-அவள் பகவானைச் சரண் அடைந்தாள்-பகவானை அடைந்தாள் -என்கிறபடியே மாதவி சரணாகதி செய்து மோஷத்தை பெற்றாள் ஆகச் சொல்லப் பட்டுள்ளது அன்றோ-

அவதார ரகஸ்ய ஞானம் உடையவன் இந்த சரீரத்தின் முடிவிலே பேறு பெறக் கடவேன் -என்றே சொல்லா நின்றது அன்றோ –த்யக்த்வாம் தேஹம் புனர் ஜன்ம நைதிமாம் ஏதிச அர்ஜுன –ஸ்ரீ கீதை -4-9-த்யக்த்வா தேஹம்-உபாசனனுக்கு விஷயமானாலும் கிம்புநர் நியாயத்தாலே பிரபன்னனுக்கும் சித்திக்கையாலும் சரீரத்தின் முடிவில் மோஷம் என்பதற்கு பிரமாணம் ஆக குறை இல்லை –-புருஷோத்தம வித்யையையும் அவதார ரகஸ்யமும் அறிந்தால் அந்த தேவ அவசானத்திலே முக்தி என்றானே – சக்தி இருந்தாலும் பிராப்தி இல்லையே பக்திக்கு -பாரதந்த்ர காஷ்டை என்பதாலே பூர்வாச்சார்யர்கள் -பிரபத்தி நிஷ்டர் ஆனார்கள்-பார்த்தாவின் கையை எதிர்பார்க்கும் பார்யை போலே –

சந்தாம் ச யாக் சந்ததே ப்ரஹ்மனைஷ ரமதே தஸ்மின் உத ஜீர்னே-சயாநேன ஏனம் ஜாஹாதி அஹ ஸூ பூர்வயேஷூ-யஜுர் வேதம் ஆருணம்
முதுமை அடைந்த இவன் சரீரத்தை விடாதவன் ஆகி-இறைவன் இச் சரீரத்தில் இன்புற்று வசிக்கிறான் -பிரமாணம்-சரம விமல திருமேனி -அன்றோ –

தத தம் ம்ரியமானம்து காஷ்ட பாஷாண சந்நிபம்-அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதம் –ஸ்ரீ வராக சரம ஸ்லோகம்-அறிவில்லாத பொருளைப் போன்று கிடக்கிறவன் தலையிலே ஒரு தேவை இடேன் –நானே நினைக்கக் கடவேன் -என்று சொல்லி வைத்தானே அன்றோ –இந்த இரண்டு ஸ்லோகங்களும் எம்பெருமானுடைய முழுச் செல்வம் -என்று சொல்லக் கடவது அன்றோ-மனஸி ஸ்திதே – நின்றவா நில்லா நெஞ்சம் -பெரிய திருமொழி -1-1-4-ஓர் இடத்திலே நிற்பது- பட்டி நின்று திரியும் பசு உடையவனுக்கு ஓர் கார்யத்தை செய்யத் தொடங்குவதற்கு முடியாதே அன்றோ – மனத்தினைக் கொண்டு தொடங்க வேண்டும் அன்றோ புருஷார்த்தத்தை பெறும் போதும் –
சஞ்சலம் ஹி மன கிருஷ்ண பிரமாதி பலவத் த்ருடம்-தச்யாஹம் நிக்னஹம் மன்யே வயோரிவ ஸூ துஷ்கரம் -ஸ்ரீ கீதை -6-34- காற்றினைப் போன்று அம் மனத்தினை அடக்குதல் எனபது செய்ய முடியாத கார்யம் என்று நான் நினைக்கிறேன்-என்றான் அன்றோ அவனும்த்ருஷ்ட்வைவச ஊர்வசீம் ப்ராப்தாம் லஜ்ஜாவ்ருத விலோசன-பாதாபி வந்தனம் க்ருத்வா குரு பூஜாம் ப்ரயுக்த வான் -பாரதம் ஸ்லோகம்-ஆரண்ய பர்வம் அர்ஜுனன் தவ நிலை சுருக்கும் -160-உலகத்தார் ஊர்வசியின் உலகத்துக்கு செல்ல விரும்பி அதற்கு வேண்டிய சாதனங்களைச் செய்யா நிற்க அந்த ஊர்வசியே வந்து கிட்டி நிற்க –
நீ என் தாயே அன்றோ -என்று கைகூப்பி வணங்கி கிடக்க வல்ல-விரக்தன் அன்றோ இவ் வார்த்தை சொல்கிறான்- –

பிரதிமாசு அப்ரப்புத்தானாம் -ஞானம் இல்லாதார்க்கு விக்கிரகத்தில் இருக்கிறார் -என்ற இதற்கு-அம்மேட்டிலும் ஏறிப் பாயா நின்றால்-தேசிகருக்கு சொல்ல வேண்டுமோ -என்று-ஆளவந்தார் அருளிச் செய்யும்படி-ப்ரதிமாசு அப்ரப்புத்தானாம்-அபி -சேர்த்து -அப் பிரபுத்திகளுக்கும் சேவை -உம்மைத் தொகை சேர்த்து ஆளவந்தார் –-விப்ரர் அக்னியில் -யோகிகள் இருதயத்தில் –ஸர்வத்ர சம தர்சனம் -நால்வரையும் சொல்லும் ஸ்லோகம் –அக்நோ த்ருஷ்டதி விப்ராணாம் ஹ்ருதி த்ருஷ்டதி யோகிநாம் பிரதிமாசு அப்ரப்புத்தானாம் அபி ஸர்வத்ர சம தர்சனம் –

சம அஹம் சர்வே பூதேஷு ந மே த்வேஷ்யா அசதி ந பிரியா
யே பஜந்தி து மாம் பக்த்யா மயிதே தேஷு சாபி அஹம் -ஸ்ரீ கீதை -9-24–நான் எல்லா பிராணிகளாலும் அடையப் படும் பொழுது-விருப்பு வெறுப்பு இல்லாது -எல்லாருக்கும் ஒத்தவனாய் இருக்கிறேன்-எனக்கு தாழ்வு கருதி விடத் தக்கவனும் இலன் –உயர்வு கருதி கொள்ளத் தக்கவனும் இலன்-

விதித சஹி தர்மஜ்ஞ சரணாகத வத்சல-தேன மைத்ரீபவது தே யதி ஜீவிதம் இச்சசி -சுந்தர -21-20-இராவணன் இடம் பிராட்டி பெருமாள் பற்றி -சரணம் அடைந்தவர்களுக்கு அன்புடையவர்-மித்ர பாவேன சம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன-தோஷோய த்யபி தஸ்ய ஸ்யாத் சதாமேதத் அகர்ஹிதம் -யுத்தம் -18-3- விபீஷணன் இடத்தில் குற்றமானது இருந்தாலும் இருக்கட்டும்-என்பவனே அன்றோ-

கிருஷ்ண ஆஸ்ரையா கிருஷ்ண பலா கிருஷ்ண நாதஸ்ய பாண்டவ-கிருஷ்ண பராயணம் தேஷாம் ஜ்யோதிஷாமிவ சந்த்ரமா -பாரதம் -துரோண பர்வம் -183-24
பாண்டவர்கள் கிருஷ்ணனையே சரணமாக அடைந்தவர்கள்-கிருஷ்ணனையே தங்கட்கு துணையாக உடையவர்கள்-

இதாநீம் மாக்ருதா வீர ஏவம்விதம் அசிந்திதம்-த்வயி கிஞ்சித் சமாபன்னே கிம்கார்யம் சீதய மம –யுத்தம் -41-4-
இன்று அடைந்தது ஒரு குரங்காகிய சுக்ரீவனைக் குறித்து-சீதையால் தான் எனக்கு கார்யம் என்ன இருக்கிறது-கொஞ்சம் அவமரியாதை பண்ணி ராவணன் முகம் திருப்பினால் –கிஞ்சித் –சீதை மட்டும் இல்லை-பர தேன-லஷ்மணனே -தம்மையும் -வைத்து என்ன பலன் -என்ன குணம் –

நாளும் பிணி தணியும் ஏதம் சாரா -என்னும் இது–தததிகம உத்தர பூர்வாகயோ அசலேஷ வினாசௌ தத் வ்யபதேசாத் -சரீர மீம்சம் -அதிகா -130-482=என்னும் ஸூத்ரத்தின் பொருள் என்பர்-பிணி -பூர்வாகம் -ஏதம் -உத்தராகம் என்றுமாம் –போய பிழையும் -புகுதறுவான் நின்றனவும் தீயினில் தூசாகும் — 

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading