வ்யசுகேஷு மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கிதா
உச்த்வேஷு ச சர்வேஷூ பித்தேவ பரிதுஷ்யதி –அயோத்யா 2-40-
ப்ராஜ்ஞ -க்ருதஜ்ஞஸ் ச –ஸாநு குரோஸஸ் ச-ராகவ-சத் வ்ருத்த–க்யாத-நிரநுக்ரோச சங்க–மத் பாக்ய சங்க்ஷயாத் –ஸூந்தர காண்டம் -26-13–ப்ராஜ்ஞ – விரும்பினவற்றை தம்மாலே பெற இருப்பார் அறிவில் குறையாலே இழக்க வேண்டாதபடி தம் அளவையும் அவர்கள் அளவையும் அறிக்கைக்கு தகுதியான அறிவை உடையவர்-க்ருதஜ்ஞஸ் ச – கிட்டுமவன் தன் பக்கல் முகம் பாராமை பண்ணுமது தவிர்ந்து ஓர் அடி வர நின்ற எல்லையும் அறிவர் –
ஸாநு குரோஸஸ் ச- அறிவு கொண்டு கார்யம் கொள்ளவும் அறியாதே இருக்கும் அவர்களுக்கு அவர்கள் இழவை நினைந்து ஐயோ என்று இரங்குமவராய் இருப்பர்-(அநு க்ரோஸம் -தயை)-ராகவ – இது இவர் தம்மைத் தோற்றி -தொற்றி- வந்தது அன்று -குடிப் பிறப்பாலே-சத் வ்ருத்த -பிறருடைய நன்மையே தன் பிரயோஜனமாக கொண்டு இருப்பவர்
க்யாத-இப்படி பகைவர் கோஷ்டியிலும் பிரசித்தமானவர்(க்யாதி புகழ்) நிரநுக்ரோச சங்க-இந்த குணங்களை உடைய பெருமாளை-இந் நிலைமையில் எனக்கு முகம் காட்டக் காணாமையாலே இந்த குணங்களில் ஒன்றும் இல்லாத (ஆன்ரு சம்சயம் இல்லாதவராக)
அருள் அற்றவரைப் போன்றவராக ஐயப்படா நின்றேன் – அவர் குணங்களை உடையவர் அன்றோ-மத் பாக்ய சங்க்ஷயாத்-எனக்கு புண்யம் இல்லாமை யாலேயாம் அத்தனை அன்றோ-அறிவு ஒன்றும் சங்கிப்பேன் -வினையேன் -திருவாய்மொழி -8-1-7-என்றார் அன்றோ இவரும் –இத் திருவாய்மொழிக்கு ஆளவந்தார் அருளிச் செய்யும் ஸ்லோகம் இது–
பாபாநாம்வா சுபாநாம்வா வதார்ஹானாம் ப்லவங்கம்
கார்யம் கருணம் ஆர்யேன நகச்சின்னா பராயதி-யுத்த 116-44-எவன் குற்றம் செய்யாதவன் –
மித்ரம் ஔ பயிகம் கர்த்தும் ராம ஸ்தானம் பரீப்சதா
வதம் தா நிச்சதா கோரம் த்வயா அசௌ புருஷர்ஷப -சுந்த -21-20-சரணாகதன் சொல்லாமல் மித்ரன் -என்றாவது போக ஹிதம் செய்து அருளுகிறாள்– அவர் திருவடிகளிலே சரணம் புகு என்றால் அவன் தாழ்வாக நினைத்து இசையான் என்பதாலே -தோழமை கொள் என்கிறாள் அன்றிக்கே அவர் -தோழைமை -என்ற அளவாலே -என்றார் ஆதலின் -இவள் -தோழமை கொள் -என்கிறாள் என்னுதல் அவ்வருகு போனாலும் பரம சாம்யா பத்தியை தான் அவன் கொடுப்பது-ஸ்த்தானம் பரீப்சதா -கெடுவாய் வழி பரிப்பாருக்கும் தரையிலே கால் பாவி நின்று கொள்ள வேணுமே –ஆதலால் உன் குடி இருப்பை ஆசைப்பட்டாயாகில் இத்தனையும் செய்ய வேண்டும்– எனக்கு ஒரு குடி இருப்பு வேண்டுமோ-ஆகாசத்தில் சஞ்சரிக்கிறவனாய் அன்றோ இருப்பது நான் என்பது–ராவணனுக்கு கருத்தாக அருளிச் செய்கிறாள்-வதம் சா நிச்சதா –கோரம் அவர் அம்புகள் ஆகாசத்தில் நடவாவோ -என்கிறாள்
கோரம் -சிங்க விளக்கை எரித்து கொல்லாதே நற்கொலையாக கொல்லும் போதும்–அவரைப் பற்ற வேண்டும் காண் –-த்வயா-பல சொல்லி என் உனக்கு அவர் வேண்டும்
அசௌ-அவர்படி உனக்கு தோற்றுகிறது இல்லையா-உரு வெளிப்பாட்டிலே முன்னிலை இவளுக்கு–அச்சத்தாலே முன்னிலையாக தோற்றும் அவனுக்கு-தீரக் கழிய அபராதம் செய்து நிற்கும் என்னைக் கை கொள்ளுவாரோ -என்ன-புருஷ ரிஷப –நீ செய்தவற்றை ஒன்றாக நினைத்து இருப்பவர் அல்ல –புருஷோத்தமன் காண் -என்கிறாள்-
பாவான் அஸ்மி காகுஸ்த த்வயி வர்ஷ சதம் ஸ்திதே-ச்வயக்து ருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத-ஆரண்ய -15-7-
அனுரூபா சவை நாதோ லஷ்மீவான் லஷ்மணக்ரஜா
த்ரைலோக்யம் அபி நாதேன யேன ஸுயாத் நாதவத்தரம் -அயோத்யா -2-15-இதனுடைய எந்த நாதனால் இந்த மூன்று உலகங்களும் நல்ல நாதனை உடையவன் ஆகுமோ -மூன்று உலகங்களையும் கை யடைப்பு ஆக்கினாலும் பாதுகாக்க படும் பொருள் சுருங்கி பாது காக்கின்ற தன்மையின் பாரிப்பே விஞ்சி இருக்கும் –
ஸ விலாஸ ஸ்மிதாதாரம் பிப்ராணாம் முக பங்கஜம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-7-21-அழகிய முறுவலைக் கொண்டு உள்ள முகத்தாமரையை தரித்தவனே –
நஹி அர்த்தித்ய கார்யவசாப் யுபேதான்–ககுஸ்த வம்சே விமுகா ப்ராயந்தி -விஷ்ணு புராணம் -4-2-77-ஒரு கார்யத்தை உத்தேசித்து வந்தவர்கள் ககுஸ்த வம்சத்தில் பிறந்த அரசர்கள் இடத்தில் பலன் பெறாதவர்களாய் திரும்புகிறார்கள் இல்லை-
ரூப சம்ஹனனம் -லஷ்மீம் -சௌகுமார்யம்–ஸு வேஷதாம் – தத்ரூஸூ விஸ்மித ஆகார –வனவாசிநாம்–ராமஸ்ய-ஆரண்ய காண்டம் -1-13
ரூப சம்ஹனனம் -திருமேனியை
லஷ்மீம் -சமுதாய சோபையை
சௌகுமார்யம்–அனுகூலருக்கும் அடுத்துப் பார்க்க பொறாது இருக்கை-
ஸு வேஷதாம் -தாபத வேடம்
தத்ரூஸூ விஸ்மித ஆகார –ஆச்சர்யத்தோடு கூடிய அந்தக் கரணங்களை உடையவர்களாயக் கொண்டு கண்டார்கள் –-யார் தாம் என்னில்–வனவாசிநாம்–ராமஸ்ய —
படை வீட்டில் உள்ளார் காணப் பெறாததை–சருகு இலை தின்று தூற்றிலே கிடந்தவர்கள் பெற்றார்கள் –தாஸாம் ஆவிர்பூத் சௌரி ஸ்மயமான முகாம்புஜ–பீதாம்பரதர ச்ரக்வீ சாஷாத் மன்மத மன்மத -ஸ்ரீ பாகவதம் -10-32-2–இருடிகளுக்கே அன்றிக்கே–அப் பெண்களுக்கு நடுவில் வந்து தோற்றினான் -ஆயர்களுக்கும் ஆய்ச்சிகளுக்கும் காட்டிற்று இல்லையோ–
அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் சத்ய பராக்ரமம் -ஜகத்தே ராமனுக்கு கர்ப்பம் -அறிவேன் -உனக்கு கர்ப்பம் என்று நினைக்கிறாய் நீ –
ததர்ச ச ப்ரபுத்தா ச யசோதா ஜாதாம் ஆத்மஜம்–நீலோத்பல தளச்யாமம் ததா அத்யர்த்தம் முதம் யயௌ-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-4-23-தெளிந்தவளான அந்த யசோதை யானவள் நீலோற்பல இதழ் போன்று கரிய நிறத்தோடு பிறந்த அந்த குழந்தையை கண்டாள் –
அக் காலத்திலேயே மிக்க மகிழ்ச்சியை அடைந்தாள்-
யதிசக்நோஷி கச்ச த்வம் அதி சஞ்சல சேஷ்டித-இத்யுக்த்வா அத நிஜம் கர்ம சா சகார குடும்பி நீ -ஸ்ரீ விஷ்ணு புராணம் – -5-6-115
சர்வ சக்தன் ஆற்றல் இல்லாதவன் போலே தோற்ற இருக்கை அன்றோ-இவள் நியமிக்க வல்லள் ஆகிறது-
உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோ முகம்-நருசிம்ஹம் பீஷணம் பத்தாம் ம்ருத்யு மிருத்யும் நமாம் யஹம் -அனுஷ்டுப்பு
பெரிய கிளர்தியோடே வந்து பிரகலாதனுக்கு உதவின அது தம் பேறாய் இருந்த படி-மனித வடிவம் பாதியாகவும் சிங்க வடிவம் பாதியாகவும் கொண்டு அவதரித்தவர் -என்கிறபடியே நர்ச்யார்த்த ததும் க்ருத்வா சிம்ஹச்யார்த்த தனும் ததா -மகா பாரதம் -ஜன்ம ரகசியம் – அவன் வரத்தில் அகப்படாத வடிவைக் கொண்டு -என்னுதல் என்றது – பதற்றத்தாலே ஒன்றின் உடலையும் ஒன்றின் தலையையும் சேர்த்துக் கொண்டு வந்தான் -என்றபடி – அடுத்தது ஓர் உருவாய் ஆயிற்று–கடுத்த போர் அவுணன் உடல் பிளந்தது–
மத்த சர்வம் அஹம் சர்வம் மயி சர்வம் சநாதனே-
அஹம் ஏவ அவ்யய அநந்த பரமாத்மா ஆத்ம சம்ஸ்ரய -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-86-என்னிடம் இருந்தே எல்லாப் பொருள்களும் தோன்றுகின்றன – என்னிடமே எல்லா பொருள்களும் லயம்
யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம் ஸ்ததைவ பஜாம்யஹம்–
மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா பார்த்த ஸர்வஸ—-৷৷4.11৷৷எவர்கள் என்னை எவ் வண்ணம் நினைத்துப் பற்றுகின்றார்களோ அவ் வண்ணமாகவே என்னை ஆக்கிக் கொண்டு அவர்களை அடைகிறேன் -பார்த்தனே -என் தன்மைகளை -அவர்கள் தாம் விரும்பும்
எல்லாப் படியாலும் அனுபவித்து வாழ்கின்றனர்
ராகவா ப்ராஞ்ஞ க்ருதஞ்ஞஸ் ச சாது க்ரோசஸ் ச ஸத்வ்ருத்த க்யாத மத் பாக்ய ஸம் ஷயாத் நிரநுக்கோரச சங்கே -ஸூ ந்தர -26-23-
பெருமாள் தோஷமுடையவர் பக்கலிலும் குணத்தைக் கிரஹிப்பவர் -செய்த நன்றியை உணருகிறவர் -தயையுடன் கூடியவர் –நன்னடத்தை யுடையவர் என்றும் ஜனங்களால் சொல்லப்பட்டவர் ஆயினும் எனது பாக்ய ஷாயத்தாலேயே தயையில்லாதவர் என்றும் எண்ணுகிறேன் –
உரிய சொல் மாலை –வேத வாக்குகள் எந்த ஆனந்த குணத்தின் நின்றும் சொல்ல மாட்டாது மீண்டனவோ -என்கிறபடி-யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹ –என்று தைத்ரியம் -9-1- மீளுகை அன்றிக்கே பகவான் உடைய குணங்களுக்கு நேரே வாசகமாக இருத்தலின் –உரிய சொல் மாலை -என்கிறது-
அசந்நேவ ஸ பவதி அசத் ப்ரஹ்மேதி வேதசேத்–அசதி ப்ரஹ்மேதி சேத் வேத சந்தமேனம் ததோ விது இதி -தைத்ரியம் -6-இல்லாதவன் ஆகிறான்
த்வம் வ்யச்ய அஸி மே ருத்ய ஹி ஏகம் துக்கம் சுகம் ச நௌ-சுக்ரீவோ ராகவம் வாக்யம் இதி உவாச ப்ரக்ருஷ்டவத் -கிஷ்கிந்தா 5-18
அநாதிர் பகவான் கால நான் தோசய –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-23-ந கால தத்ர வை பிரபு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -10-9-யத்ர ச காலம் பஸதே தத்ர கால பிரபு ந-பாஞ்சராத்ரம் –யாதொரு ஸ்தானத்தை எழுந்து அருளி இருக்கிற அந்தப் நாராயணன் மூன்று காலங்களையும் மாறும்படி உண்டு பண்ணி இருக்கிறாரோ அந்த நித்ய விபூதியில் இக்காலமானது மாறுபாடு செய்வதாக ஆகிறதில்லை
என் ந அயம் பகவான் ப்ரஹ்மா ஜாநாதி பரமம் பதம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-59-இந்த பிரமனும் எந்த பரம பதத்தை அறியாது இருக்கிறானோ-ஓர் இடத்திலும் ஒருவனாலும் அறியப் படுகிறான் இல்லை –
இதி உக்த்வா பருஷம் வாக்யம் ராவணம் ராவணானுஜ-ஆஜகாம முஹூர்த்தேன யத்ர ராம ச லஷ்மணா – யுத்த -17-1-வ்விடத்தில் இலக்குவனோடு ராமன் கூட இருந்தானோ-அவ்விடத்தில் சிறிது காலத்தில் வந்து சேர்ந்தான்-சந் யஸ்தம் மயா-போலே-உங்களுக்கு நான் நின்ற நிலை அன்றோ-என் நெஞ்சு எனக்கு அவ்வருகு போனபடி –
கிருதக்ருத்யா ப்ரதீஷ்ந்தே ம்ருத்யும் ப்ரியம் இவாதிதிம் -பாரதம் –இவ் உலகத்தில் செய்ய வேண்டியதை செய்து முடித்தவர்கள்- யமனை எதிர் பார்த்து இருக்கிறார்கள்
பவாம்ச்து சஹ வைதேஹ்யா கிரிசா நுஷூ ரம்ச்யதே-அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத சவபதஸ் தே – அயோத்யா 31-25-நான் எல்லா அடிமைகளும் செய்வேன் –
அமித தேஜஸே பகவதே தஸ்மை வ்யாஸாய நம யஸ்ய ப்ரஸாதாத் இமாம் நாராயண கதாம் வஹ்யாமி -ஸ்ரீ பாரதம்
மஹா தேஜஸ்ஸை யுடையவரும் முக்காலங்களையும் அறிபவரான அந்தப் வ்யாஸ மஹரிஷியின் பொருட்டு நமஸ்காரம் -எவருடைய அனுக்ரஹத்தினால் இந்த நாராயண கதையைச் சொல்லப் போகிறேன் –
ய சர்வஞ்ஞ சர்வவித் -முண்டகம் -1-1-
பராஸ்ய சக்தி விவிதைவ ஸ்ருயதே-ஸ்வாபாவிகீ ஜ்ஞான பல கிரியாச -ஸ்வேஸ்வதார உபநிஷத் -6
சத்துவம் முதலான குணங்களை உடையாரை விஷயமாகக் கொண்ட வேதங்கள் –
த்ரைகுண்ய விஷயா வேதா நிஸ்த்ரைகுண்யோ பவார்ஜுனா-ஸ்ரீ கீதை -2-45-
யோ ஆர்ஷம் தர்ம உபதேசம் ச வேத ஸாஸ்த்ரா விரோதிநா தர்க்கேண அநு சந்தத்தே ஸ தர்மம் வேத ந இதர –
எவன் ரிஷிகளால் செய்யப்பட புராணாதிகளையும் தர்மங்களைக் உபதேசிக்கிற மனு ஸ்ம்ருதி முதலியவைகளையும் வேதங்களாகிற சாஸ்திரங்களுக்கு விரோதமில்லாத யுக்தியினால் விசாரிக்கிறானோ அவன் தான் தர்மங்களை அறிவான் -மற்றவன் அறிய மாட்டான்-
லோகே நாசமுபாகதே வடவ்ருஷஸ்ய ஸாகாயாம் பல்லவே அயம் ஸிஸூ சேதே கதம் து இதி விஸ்மித-உலகங்கள் எல்லாம் நாமம் அடைந்திருக்கும் போது ஆலமரத்தினுடைய கிளையில் ஒரு தளிரிலே இக்குழந்தை படுத்துக் கொண்டு இருந்ததே இது என்ன என்றும் ஆச்சர்யம் அடைந்தனர் –
ஓரடியானும் உளன் என்றே – வேறு பிரயோஜனத்தை கருதாவனாய் இருப்பான் ஒருவன் உளன் என்று -என்றது அந்த மகாத்துமாவானவன் கிடைத்தற்கு மிகவும் அரிது என்றபடியே –
பஹூனாம் ஜன்ம நாமந்தே ஜ்ஞானவான் மாம் பிரபத்யே-வாசுதேவ சர்வம் இதி ஸ மகாத்மா ஸூதுர்லப -ஸ்ரீ கீதை -7-19–ஒருவர் இலர் என்று கை வாங்கி இருப்பர்-அது வேண்டா- ஒருவன் உளன் என்று என் இடையாட்டம் சொல்லுகின்றிலர்கள் -என்கிறார் -என்றபடி –செய்வது என் –-உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்றே இருக்கும் ஒருவன் உளன் என்று சொல்லார் செய்வது என் –
என் திரு வாழ் மார்பற்கு –என் பிராட்டி சந்நிதி ஆகையாலே -சொன்ன வார்த்தை விலை செல்லும் கண்டீர் – ஸ்ரீ பீடம் -ருக் வேதம் ஸ்ரீ நிவாஸன் –ஸ்ரீ பீடஸ்ய -க்ரீம் கச்ச -என்று சொல்லுமே-அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே ஸ்ரீம் பிடஸ்ய சத்த்வபி தேபிஷ்ட்வா ஸாதயாமசி -ருக்கு -8-அஷ்டகம் -8-அத்யாயம் -13-வர்க்கம் –முதல் ருக்கு மந்த்ரம்
த்வயி அராயி சதி –குழந்தாய் நீ இஹ லோக பரலோக ஐஸ்வர்யம் இல்லாமல் இருந்தாயானால் –த்வயி காணே சதி -நீ வெளிக்கண்ணும் உள் கண்ணும் இல்லாதவனாய் இருந்தால்-த்வயி விக்டே சதி -நீ ஆத்யாத்மீகம் -ஆதி பவ்திக்கம் -ஆதி தைவிகம் -தாப த்ரயங்களால் பீடிக்கப் பட்டு இருந்தாயாகில் —கடம் -தாஹம் –த்வயி ஸதான்வே சதி -புருஷார்த்தங்களை பெற முடியாமல் பிரதிபந்தகங்கள் இருந்தால் ஸ்ரீம் பீடஸ்ய -திருமகளுக்கு திரு மார்பினால் பீடமாகிய ஸ்ரீ நிவாசனுடைய-கிரிம் -திருமலையைக் குறித்து-ஸ்ரீம் பிடஸ்ய சத்த்வபி கச்ச -ஸ்ரீ நிவாசனுடைய பக்தர்களோடு சென்று சேர்
தேபி -அவர்கள் மூலமாகவே-த்வா ஸ்ரீம் பீடஸ்ய ஸாதயாமசி -நீ ஸ்ரீ நிவாஸனை வேண்டிக் கொள்ள தகுதி பெற்று இருக்கிறாய்–சமர்பிக்கத் தகுதி பெற்று இருப்பாய் என்றுமாம் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் இராகவனைச் சரணம் அடைந்தவன் ஆகிறேன் -என்று விழுந்த போது-சோஹம் பருஷித தேன தாசவச்ச அவமானித-த்யக்த்வா புத்ராம்ச ஸதாராம்ச ராகவம் சரணம் கத -யுத்த -17-14-மகா ராஜர் பெருமாள் பக்கலில் பிரேமத்தால் கலங்கி துணுக்கு என்று இவன் கூறிய சொல் பெருமாள் திருச் செவியில் படுமாகில் சாலத் தப்பாம் -என்று-நாயந்தே-ராவணனுடைய தம்பி-ராஷச சாதி–அவன் புகுரக் கடவன் அல்லன் -என்ன-இவர் நம் பக்கல் பரிவாலே சொல்லுகிற வார்த்தை நம் மிடுக்கைக் காட்டவே தெளிவர் என்று பார்த்து –
பிசாசான் தானாவான் யஷான் ப்ருதிவ்யாம் ஸ ஏவ ராஷசான்
அங்குள் அக்ரேன தான் ஹன்யம் இச்சன் ஹரி கணேஸ்வர -யுத்த -18-23
வானரக் கூட்டத்துக்கு அரசனான சுக்ரீவர் பிசாசர்களாயும் அசுரர்களையும் யஷர்களாயும் பூமியில் இருக்கிற இராக்கதர்களை விரல் நுனியாலே விரும்பினவனாய்க் கொல்லுவேன் -என்பன போன்ற வார்த்தைகளால் தன் மிடுக்கைக் காட்டக் கண்டு அவர் அச்சம் தீர்ந்து கிம் அத்ரசித்ரம் தர்மஜ்ஞ லோகநாத ஸூகாவஹா-யத் த்வம் ஆர்யம் பிரபாஷேதா சத்வவான் சத்பதே ஸ்தித -18-36–தேவரீர் கூறிய வார்த்தையில் என்ன ஆச்சர்யம் -என்று இனியர் ஆனால் போலேயும்-மல் போரில்-பூமிஸ் தஸ்ய ஸ ராமஸ்ய ரதஸ் தஸ்ய ஸ ராஷச-ந சமம் யுத்தம் இத்யாஹூ தேவ கந்தர்வ தானவ –யுத்த 103-5- தேவர்களும் கந்தர்வர்களும் தானவர்களும் தரையில் இருக்கிற பெருமாளுக்கும் தேரின் மீதே இருக்கும் அரக்கனுக்கும் நடக்கும் இந்த போரானது ஒத்தது அன்று-என்று கூறினார்கள்
கம்ஸேந மல்ல ப்ராக் நிகவர்க்க ச ரங்க மத்ய சமீபக க்ருத கம்ஸோபி துங்க மஞ்ச வ்யவஸ்தித தத கிருஷ்ணேந அவஞ்ஞயா ஹ்தம் மதுரேஸ்வரம் த்ருஷ்ட்வா தத் ரங்க மண்டலம் ஸர்வம் ஹா ஹா க்ருதம் ஆஸீத்
கம்சனால் மல்ல யுத்தத்தின் பரிஷை தெரிந்தவர்களின் கூட்டமானது யுத்த ரெங்கத்தின் மத்யத்தில் சமீபத்தில் உள்ளதாக செய்யப்பட்டது -கம்சனும் உயர்ந்த ஸிம்ஹாஸனத்திலே வீற்றிருந்தான் -பிறகு கிருஷ்ணனால் அவஷ்யமாய் கொல்லப்பட்ட கம்சனைப் பார்த்து அந்தப் யுத்த அரங்கம் முழுமையும் ஹா ஹா என்றும் பெரும் கூச்சல் உள்ளதாக ஆயிற்று
பூமிஸ் தஸ்ய ஸ ராமஸ்ய ரதஸ் தஸ்ய ஸ ராஷச-ந சமம் யுத்தம் இத்யாஹூ தேவ கந்தர்வ தானவ -யுத்த 103-5-
தேவர்களும் கந்தர்வர்களும் தானவர்களும் தரையில் இருக்கிற பெருமாளுக்கும்
தேரின் மீதே இருக்கும் அரக்கனுக்கும் நடக்கும் இந்த போரானது ஒத்தது அன்று–என்று கூறினார்கள்
அபியாதா ப்ரஹர்தாச சேனா நய விசாரத-அப்ர த்ருஷ் யச்ய சன்க்ராமே க்ருத்தைரபி ஸூரா ஸூரை-அயோத்யா 1-29- சேனையை நடத்துவதில் ஆற்றல் வாய்ந்தவன்
க்ருத கம்சேன கம்சோபி துங்க மஞ்சே வ்யவஸ்தித -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-20-26-
உயர்ந்த மாடத்திலே இருக்கிற -என்றது-தனக்கு அச்சம் எத்துணை உண்டு-அத்துணையும் உயர்த்தினான் ஆயிற்று மாடத்தை -என்றபடி
அவஜ்ஞயா ஹதம் த்ருஷ்ட்வா கிருஷ்னேன மதுரேச்வரம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-20-91-என்றும்-கேசேஷூ ஆக்ருஷ்ய விகளத் கிரீடம் அவ நீதலே-ஸ கம்சம் பாதயாமாஸ தஸ்ய உபரி பாபாத ஸ –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-20-86–அந்த கண்ணபிரான் கஞ்சனுடைய கிரீடத்தை கீழே தள்ளி-மயிரைப் பிடித்து இழுத்து அவனைப் பூமியிலே தள்ளினார்-
அவன் மேலே விழுந்தார் -என்றும் வருகின்றபடியே–-இராசத துரோகிகளை கொல்லும் போது இராச சின்னங்களை-வாங்கிக் கொல்லுமாறு போலே- தான் கொடுத்த முடியை வாங்கிக் காண் கொன்றது -என்று-அம்மங்கி அம்மாள் பணிப்பர்-
பராவரேசம் சரணம் வ்ருனுத்வம் அசூரார்தனம்-உத்பத்தி ஸ்திதி நாசானாம் அஹேதும் ஹேதும் ஈஸ்வரம் –-படைத்தல் அளித்தல் அழித்தல் என்னும் மூன்றுக்கும் காரணமானவரும்-தமக்கு ஒரு காரணம் இல்லாதவரும்-சர்வேஸ்வரருமான-பகவானைச் சரணம் அடைமின் ஸ்ரீ விஷ்ணு பிராணம் -1-9-36
ஆத்மாநாம் மாநுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம்-யோஹம் யஸ்ய யதாஸ் சாஹம் பகவான் தத் ப்ரவீது மே-யுத்த -120-11-
ந அஹம் தேவோ ந கந்தர்வோ ந யஷோ ந ச தானவ-அஹம்வோ பாந்தவோ ஜாதோ ந ஏதத் சிந்த்யம் இத அந்யதா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-12-
அத மத்யம கஷ்யாயாம் சமாகம்ய ஸூ ஹ்ருஜ்ஜனை-ஸ சர்வான் அர்த்தின த்ருஷ்ட்வா சமேத்ய பிரதினந்த்ய ச – அயோத்யா -16-27-
அந்த ஸ்ரீ ராம பிரான் பிரார்த்திக்கின்ற எல்லாரையும் கண்டு- அருகில் சென்று ஆனந்தத்தை உண்டாக்கியும் இருந்தார்
பூதாநி விஷ்ணு புவநானி விஷ்ணு வாநானி-ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-12-38-பூதங்கள் எல்லாம் விஷ்ணு -உலகங்கள் எல்லாம் விஷ்ணு -வானங்கள் எல்லாம் விஷ்ணு –
லோகே கந்யா ப்ருத்வீ ஸரஸ்வதீ த்ரீணீ அதிதாநாநி ஏதேஷாம் அதிதாநாநாம் வித்யாதாநம் விசிஷ்யதே
உலகில் கன்யை பூமி வித்யா இந்த மூன்று ஸ்தானங்களும் உயர்ந்த ஸ்தானங்கள் -வித்யாதானம் ரொம்ப உயர்ந்தது என்று சொல்லப்படுகிறது –
ஸர்வதோ புத்தி நிஸ்ஸயாத் விதே சேஷு அபி விக்யாதா ஸந்தி விக்ரஹ தத்வஞ்ஞா ப்ரக்ருதியா ஸம்பதந் விதா -பால-7-15-
இஷ்வாகு வம்சத்த மந்திரிகள் த்ரிகால ஞானமுள்ளவர்களாய் இருந்ததனால் இதரதேசங்களிலும் கூட எங்கும் பிரசித்தமானவர்கள் -சந்தி யுத்தம் என்னுமிவைகளின் உண்மைகளை உணர்ந்தவர்கள் பிறக்கும் பொழுதே செல்வத்தோடு கூடியனர்கள் –
உபவாஸ ஜ்வர தண்ட ப்ருதக்சய பார்யாதண்ட சந்தஸாம் ஆம்நாய தண்ட ஸூ வ்ருத்ததா சத்ரு தண்ட
உபவாசமானது ஜ்வரத்துக்குத் தண்டனை -வேறு படுக்கையில் படுப்பது மனைவிக்குத் தண்டனை -வேதங்களுக்கு ஆவ்ருத்தி சொல்வது தண்டனை-நினைவு சுத்தி ஆகும்- -நன்னடத்தையுடன் இருப்பது சத்ருக்களுக்குத் தண்டனை–ஒழுக்கம் இருந்தால் -சத்ருக்கள் -அழிக்கும்-அதிதி தேவி -காலில் நீண்ட கூந்தல் பட்டதால் ஆசாரக்குற்றம் -7 மருத்துக்கள் கூறு போட்டு 49 மருந்துகள் ஆகி இந்திரனுக்கு அனுகூலமாய் போனார்கள் அன்றோ
அத மத்யம கஷ்யாயாம் சமாகம்ய ஸூ ஹ்ருஜ்ஜனை-ஸ சர்வான் அர்த்தின த்ருஷ்ட்வா சமேத்ய பிரதினந்த்ய ச – அயோத்யா -16-27-
அந்த ஸ்ரீ ராம பிரான் பிரார்த்திக்கின்ற எல்லாரையும் கண்டு- அருகில் சென்று ஆனந்தத்தை உண்டாக்கியும் இருந்தார்
தஸ்ய ஏஷ ஆத்மா விவ்ருணதே தநூம் ஸ்வாம் -முண்டக -2-3-தான் விரும்பிய ஜீவனுக்கு இந்த பரமாத்வாவானவன் தனது திருமேனியைக் காட்டுகிறான்-வாராய் –அத் தலையாலே வரக் காண இருக்குமவர் அல்லீரோ-தாம் கிட்டிக் காணுமது ஸ்வரூப விரோதமாய் இருக்கும்
ப்ரம்மா கமல கர்ப்பாய ருத்ர காலஅக்நி சந்நிப புருஷ புண்டரீகாப பரமாத்மந தத் ரூபம் -ஸ்ரீ வராஹ புராணம்
ப்ரம்மா தாமரையின் மதம் போன்ற நிறமுடையவர் -சிவன் பிரளய கால அக்னி போன்றவர் பரமபுருஷன் தாமரை இதழ் போன்ற வர்ணமுடையவர் பரமாத்மாவுக்கு அது ரூபமாகும் –
நரகே பஸ்யமாநஸ்து யமநே த்வயா கிலேச நாசநா கேசவ தேவ கிம் ந அர்ச்சித பரிபாஷித
நரகத்தை வருத்தப்படுகிறவன் யமனால் -உன்னால் வருத்தத்தைப் போக்கடிப்பவரான கிருஷ்ணபரமாத்மா பூஜிக்கப்பட்ட வில்லையா என்று சொல்லப்பட்டான்–கேசவன் கிலேசத்தை போக்குகிறவன்-நரகே -பரிபாஷிதா -யமன் -பேசி -கேசவன் திருவடிகளில் ஒரு நாளாவது புஷ்பம் போட முடிய வில்லையே –சம்சாரம் வெளி ஏற இதுவே வகை —கேசம் காணாத கிலேசம் போக்கவும் இதே வேணுமே –
நச சீதா த்வயா ஹீ நா நச அஹம் அபி ராகவ-முஹூர்த்தம் அபி ஜீவாவ ஜலாத் மத்ஸ்யாவிவ உத்ரு தௌ-அயோத்யா -53-31-தண்ணீரின் நின்றும் மேலே எடுக்கப் பட்ட மீன்களைப் போன்றவர் -என்னும் இளைய பெருமாள்-பிரியல் இலேன் என்பதற்கு அக்குளத்தில் மீன் இறே இவரும் –
தூம ஜ்யோதி சலில மருதாம் சந்நிபாத கவ மேக -மேக சந்தேசம் -1-5- காளி தாசன் –ஒக்கும் அம்மான் உருவம் என்று –சர்வேஸ்வரன் வடிவு மற்ற பொருள்கள் எல்லா வற்றிலும் வேறு பட்டது –என்று என்னா நிற்கச் செய்தே-புகையும் ஒளியும் தண்ணீரும் காற்றும் ஆகிய இவற்றின்-கூட்டமான மேகத்தை ஒப்பு என்று மயங்குவர் –
சேனையோ உபயோ மத்யே ரதம் ஸ்தாபாய மே அச்யுத – ஸ்ரீ கீதை -1-21-இரண்டு சேனைகளுக்கு நடுவில் என் தேரைக் கொடு போய் நிறுத்து -என்னும்படி கையாளாய்-அவர்கள் தனியரான அன்று –
ந கான்க்ஷே விஜயம் கிருஷ்ண நச ராஜ்ஜியம் ஸூகா நிச
கிம் ந ராஜ்யென கோவிந்த கிம் போகை ஜீவே தேன வா -ஸ்ரீ கீதை – 1-32-கிருஷ்ணா வெற்றியை யாவது-இராச்சியத்தை யாவது-சுகத்தை யாவது நான் விரும்ப வில்லை -என்றவனை சேமம் சாத்தி வைத்து தானே செயலை செய்கையாலே-
ததஸ்த த்வாதஸ மாஸே சைத்ரே நவாமிகே திதௌ-பால -18-10-அதன்பின் பன்னிரண்டாம் மாதத்தில்-
கவாம் அநேன வர்ணானாம் ஷீரச்யது ஏக வர்ணதா–ஷீரவத் பஸ்யதி ஜ்ஞானம் லிங்கி நஸ்து கவாம் யதா
க்ருதமிவ பயஸி நிகூடம் பூதே பூதே ச வசதி விஜ்ஞ்ஞானம்–சத்தம் மந்தே தவ்யம் மனஸா மந்தாந பூதேன
சர்வ பூதாதி வாசம் யத் பூதேஷு ச வசத்யபி–சர்வா நுஹ்ரஹகத்வேன தத் அஸ்மி அஹம் வாசுதேவ இதி -பிரமவித் உபநிஷதம்
வெவ்வேறு நிறமுள்ள பசுக்களுடைய பாலுக்கோ என்றால் ஒரே நிறமாய் இருப்பது -ப்ரஸித்தம் -ஞான ஸ்வரூபனான ஆத்மாவை பால் போல் பார்க்கிறான் -தேவாதி சரீர பேதங்களை யுடையவர்களோ (பசுக்களுக்கு எப்படி வர்ண பேத விஸிஷ்ட சரீர பேதங்கள் -அப்படியே தேவாதி சரீர பேதங்கள் )-பாலில் மறைந்த நெய் போல் பரமாத்மா எல்லா ஜீவன்களிடம் வஸிக்கிறார் -மத்தாக ஆகின்ற மனஸ்ஸால் எப்போதும் கடைய வேண்டும் -எந்த வஸ்துவானது எல்லாப் பிராணிகளுக்கும் இருப்பிடமோ -சர்வ பூதங்களிலும் எந்த வஸ்து வஸிக்கின்றதோ -எல்லாவற்றுக்கும் சக்தியை உண்டு பண்ணுவதால் அந்த வாஸூ தேவனாகிறேன் –காலத்தாலும் கடைதல் முதலிய செயல்களாலும்–மதன பூர்வ பாவி தோய்ப்பதை சொல்லும் -முதலிய என்பதால் – தோற்றுகிற நெய் -கறந்த காலத்தில் தோற்றாதே அன்றோ – ஆதலால் கறந்த பால் -என்று விசேடிக்கிறார் -என்கை
உன் பக்கல் பாரத்தை வைத்தவன் ஆகிற செயலால் –ரஷாபாரத்தை அவன் பக்கலில் வைக்கும் சம்ஸ்காரம் –அல்லது-காண அரியை
உபதிஷ்டந்து மாம் சர்வே வியாதய பூர்வ சஞ்சிதா-அன்ருண அஹம் கமிஷ்யாமி தத் விஷ்ணோ பரமம் பதம் -மகா பாரதம்-எல்லா நோய்களும் என்னை வந்து அடையட்டும்-
நான் விஷ்ணுவினுடைய அந்த பரம பதத்தை கடன் கழிந்தவனாக செல்லப் போகிறேன்-பீஷ்மர் -வசனம் –தனக்கு கிலேசம் உண்டானால் கர்ம பலம் கிருபா பலம் என்றாதல் பிறக்கும் பிரீதியும் -ஸ்ரீ வசன பூஷணம்-சலியாது இருக்கையாலே ஊரும் தழைத்தது-இவ்வாற்றாமைக்கு எல்லாம் ஆடல் கொடுத்த ஆழ்வார் -இடம் கொடுத்த ஆழ்வார் -ஆளவந்தார் நிர்வாஹம்–பிரபன்ன ஜன கூடஸ்தர் -சலியாமல் தரித்து இருந்தாரே -அத்தை நினைத்து -உகந்து-குருகூர் அம் தண் குருகூர் ஆனது என்றவாறு –
ப்ரசீதந்து பவந்தோ மே ஹ்ரீரேஷோ ஹி மமாதுலா-யத் ஈத்ருசை அஹம் விப்ரை உபஸ்த்தேயை உபஸ்தித -ஆரண்ய -10-9-பிற்பாட்டுக்கு உங்களுக்கு வருகையினாலே நான் மிக்க நாணத்தை அடைந்தேன்-மாயக் கூத்தா என்கிற திருவாய் மொழியிலே-இவருக்கு ஓடின விடாய்க்கு உதவப் பெற்றிலோம்-
உபப்லாவ்யாத் இஹ சத்த உபயாதோ ஜனார்த்தன-குசஸ் ச்தலே நிவசதி ச பிராதா இஹ ஏஷ்யதி -உத்தியோக பர்வம் -86-1-பாண்டவர்களுக்காக தூது போகிற போது அன்பினால் பரவசப் பட்டிருக்கிற ஸ்ரீ விதுர ஆழ்வான்- முதலாயினோர்கள் பிரீதியைக் குறைத்து முகம் காட்டுகைக்காக-குசஸ் ஸ்தலத்தில் விட்டுக் கொண்டு இருந்து பிற்றை நாள் அஸ்தினா புரத்துக்கு-எழுந்தருளினாப் போலே-
ஜீவிதம் தாரயிஷ்யாமி மாசம் தசரராத்மஜா-ஊர்த்த்வம் மாசாத் ந ஜீவிஷ்யே சத்யேன அஹம் ப்ரவீமி தே -சுந்த -38-68–சிரம் ஜீவதி வைதேஹீ யதி மாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணமபி விநாதாம் அஸி தேஷணம்-66-10-ஒரு மாதத்துக்கு மேல் உயிர் வாழ மாட்டேன் -என்கிறபடியே- இத் தலையில் விடாய்-ஒரு கண நேரத்துக்கு மேல் உயிர் வாழேன் நான் -என்று அன்றோ அத்தலையில் விடாய் இருப்பது-
சர்வ ப்ரியகர தஸ்ய ராமச்யாபி சரீரத-லஷ்மணோ லஷ்மி சம்பன்ன பஹி பிராணா இவாபர -பால -18-28-லஷ்மணன் கைங்கர்ய இலஷ்மியோடு கூடினவன்-
த்விதா பஜ்யேயம் அப்யேவம் ந நமேயம் து கஸ்ய சித்-ஏஷமே சஹஜ தோஷ ஸ்வபாவ துரதிக்கிரம -யுத்த -36-11-ஒருவரையும் வணங்கேன் –
சின்னம் பின்னம் சரை தக்தம் பிரபக்னம் சஸ்த்ர பீடிதம்-பலம் ராமேண தத்ரு ஸூ ந ராமம் சீக்ர காரிணம்-யூத -94-18-சின்னங்களாகவும் பின்னங்களாகவும் அம்புகளால் கொளுத்தப் பட்டவைகளாக –ததோ ராமோ மகாதேஜோ தநுராதாய வீர்யவான் த்ருஷ்ட்வா ராசாச ச சன்யம் தத் சரவர்ஷம் வவர்ஷ ஹ -யுத்த – 94-18-அம்பு மழையை பெய்தார் அன்றோ-
ராகவேண அபயம் தத்தே ஸன்னத-(நன்று வணங்கினான்) ராவணானுஜ விபீஷண மகா ப்ராஞ்ஞா பூமிம் சமவலோகயன் -யுத்தம் -190-1-இராகவன் அபயத்தைக் கொடுத்த அளவிலே இராவணன் தம்பியான விபீஷணன் வணங்கினான் –
ஏவம் பஹூவிதம் சிந்தாம் சிந்தயித்வா மகாகபி சம்சரவே மதுர வாக்கியம் வைதேஹ்யா வ்யாஜகாரா ஹா -சுந்தர -31-1-இராம குணங்கள் நடையாடாத அசோக வனத்திலே திருவடி சென்று சேர்ந்து கேட்ட போதே- இனிமையான வார்த்தையை வைதேகிக்கு சொன்னார் —கிம் து ஸ்யாத் சித்த மோஹ அயம் பவேத் வாத்கதி து இயம் உன்மாதஜ விகாரோவா ஸ்யாத் இயம் ம்ருகத்ருஷ்ணினா -சுந்தர -34-25-பிராட்டி உள்ளாம்படி இராம நாம சங்கீர்தனத்தை செய்ய –இந்நிலத்தில் இது நடப்பது ஓன்று அன்று – இது மனத்தின் விகாரத்தால் வந்த மயக்கமோ அன்று-காற்றின் செயலால் வந்த மயக்கமோ – அன்று இது பிரிந்தாருக்கு வந்த மயக்கமோ – அன்று அனைவருக்கும் வரும் கானல் நீர் போன்ற மயக்கமோ என்று பல படிகளால் ஐயம் கொண்டு முன்னே நின்று வார்த்தை சொல்லா நின்றான்- இது கேட்டு நாம் வேறுபடுகிற தன்மையும் உண்டு – ஆன பின்பு இது மெய்யாம் இத்தனை -என்று-
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள்-தெளிந்து ஹ்ருஷ்டை யானால் ஆனால் போலே-
பஹூனாம் ஜன்ம நாமந்தே ஜ்ஞானவான் மாம் பிரபத்யதே-வாசுதேவ சர்வம் இதி ஸ மகாத்மா ஸூ துர்லப -ஸ்ரீ கீதை -7-19-மகாத்மாவானான ஒருவன் இவ்வுலகில் கிடைப்பது மிகவும் அரிது -என்று-கை வாங்கி இருக்கும் சம்சாரத்திலே- நம்மை விரும்புவான் ஒருவன் உண்டாவதே -என்று ஆச்சர்யப்பட்டு-வியந்து -இருத்தும்-என்னைத் தன் பொன்னடிக் கீழ்
தத ஸூப்ரீத மனசௌ தௌ உபௌ கபி ராகவென-அன்யோன்யம் அபி வீஷந்தௌ ந த்ருப்திம் உபஜக்மது -கிஷ்கிந்தா -5-18-லோக நாதா புரா ஸூ க்ரீவம் நாதம் இச்சதி -சுக்ரீவனும் ஸ்ரீ ராம பிரானும் ஆகிய இவர்களும் மிகுந்த களித்த மனமுடையவர்களாய்-ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு மன நிறைவு பெற்றார்கள் -என்கிறபடியே-
அங்கு அந்யோன்யம் இருக்க தம்மை சொல்லாதது -சொல்ல எதிர் தலையான தம்மை காண்கின்றிலர்- மொத்தமாக ஆழ்வாரை விழுங்கி -அசத் சமமாக திருவடிக்கு கீழ் சேர்த்துக் கொண்டானே —
நாயமாத்மா ப்ரவசனேனே-யமைவேஷ வ்ருணுதே தேன லப்ய-தஸ்ய ஏஷ ஆத்மா விவ்ருணதே தநூம் ஸ்வாம்-கட உபநிஷத் -2-என்கிறபடியே பரமாத்மா எவனை விரும்புகிறானோ அவனாலேயே அடையத் தக்கவன் அவனுக்கு இந்த பரமாத்மா தன் ஸ்வரூபத்தைக் காட்டுகிறான்-
இமௌ முனீ பார்த்திவ லஷணா ன்விதௌ-குசலீவௌ சாபி மகா தபஸ்வி நௌ
மமாபி தத் பூதி கரம் ப்ரவஷ்யதே-மகாநுபாவம் சரிதம் நிபோதாதா -பால -4-32-
இவர்கள் முநி வேடம் தரித்தவர்கள் ஆயினும்-இராஜ சின்னங்களோடு கூடி உள்ளார்கள்
பாடகர்கள் ஆனாலும் பெரும் தவம் உடையவர்களாய் இருக்கிறார்கள்
அஸ்மின் மயா ஸார்த்தம் உதார சீலா–சிலா தலே பூர்வம் உபோபவிஷ்டா
காந்த ஸ்மீதா லஷ்மண ஜாதஹாசா–த்வாம் ஆஹ சீதா பஹூ வாக்ய ஜாதம் -ஆரண்ய -63-12-காந்த ஸ்மீதா-புன் சிரிப்பை உடையவளான சீதை -என்று பிராட்டியின் இயற்கையைச் சொல்லி-ஜாதஹாசா-சிரித்துக் கொண்டு -என்றதே அன்றோ -அப்போதை உவகையால் உண்டான வேறுபாடு என்னும் இடம் தோற்ற –முகமும் முறுவலும் -ஸ்வரூபம் -அன்று வந்த கன்றை கண்டு சிரிப்பதுக்கும் வாசி உண்டே –
யமே வைஷ வ்ருணுதே -கடவல்லி உபநிஷத் -2-என்கிறபடியே-தான் அங்கீகரிக்க நினைத்தார்க்கு-ஈஸ்வரனுடைய உகப்பே ஆயிற்றுக் காரணம் – விரும்பப் படுவான் அன்றோ பற்றப் படுவான் -ஆகிறான் என்னக் கடவது அன்றோ –பிரியதம ஏவ ஹி வரணீயோ பவதி -ஸ்ரீ பாஷ்யம்-ஜிஜ்ஜாஸூ அதிகரணத்தில் – அவனே எல்லாமாக நினைத்து வேறு ஒன்றையும் கெடுக்காத அநந்ய பிரயோஜனர் பிரிய தமர் -அவர்களை வரிப்பான் –
தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ-சாந்தோக்யம் -1-6-
சூர்யனை கண்டு மலர்கின்ற தாமரை எவ்வண்ணன் இருக்குமோ அவ்வண்ணமே-அந்த பரம் பொருளின் உடைய திருக் கண்கள்-
தைக ரூப ரூபாயா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-1–எப்போதும் ஒருபடிப் பட்ட உருவம் உடையவன்-
பதி சம்யோக சுலபம் வயோ த்ருஷ்ட்வா ச மே பிதா-சிந்தார்ணவகத பாரம் நாசசாத ஆப்லவோ யதா – அயோத்யா -118-34-என்னுடைய தந்தையாரான ஜனக மகராஜர்-கணவனுடைய கல்விக்கு தகுந்த என் வயதைப் பார்த்து-
அப்ரமேயம் ஹி தத் தேஜ யஸ்ய சா ஜனகாத்மஜா-நத்வம் சமர்த ஸ்தாம் ஹர்த்தும் ராம சரபாஸ்ரயம் வனே –ஆரண்ய -37-18-
யாவர் ஒருவருக்கு அந்த ஜனக குலத்தில் பிறந்த பிராட்டி-மனைவி யாக இருக்கிறாளோ
அந்த பெருமாளுடைய பராக்கிரமம் அளவிட்டு அறியக் கூடாததாய் இருக்கிறது
தைத்ய ஸ்த்ரீ கண்ட ரேகாணாம் மதராக விலோபிபி சேதநாவத்பி ஹேதிபி உதரீத ஜயஸ்வநம் –ரகுவம்சம் -10-
அசூரப்பெண்களுடைய கன்னங்களில் எழுதும் மகரிகாபத்திரங்களினுடைய செம்பஞ்சுக் குழம்பின் சிகப்பு வர்ணங்களைப் போக்குவனவும் -அறிவுள்ளவர்களானவுமான ஆயுதங்களைகளால் ஜய விஜயீ பவ என்று சொல்லப்பட்டவருமான பகவானை தேவர்கள் கண்டார்கள்
சத்ரோ பிரத்யாக வீரஸ்யரஞ்சனி யஸ்ய விக்ரமை-பஸ்யத யுத்த லுப்த அஹம் க்ருத கா புருஷ த்வயா -சுந்தர -105-6-பிரசித்தமான வீரத்தை உடையவனும்-பராக்ரமங்களாலே மகிழச் செய்கின்றவனுமான ஸ்ரீ ராம பிரான் -கையும் ஆயுதமுமாய் பொருத்தம் இருந்தபடி என் என்று பகைவர்கள்-புகழும் படியைச் சொல்கிறது என்று எம்பெருமானார் அருளிச் செய்வர் –
சமா த்வாதச தத்ர அஹீம் ராகவச்ய நிவேசதே-புஞ்ஞானா மானுஷான் போகான் சர்வகாம சம்ருத்திநீ -சுந்தர -33-17-பிராட்டி ஸ்ரீ மிதிலையை விட்டு ஸ்ரீ ராகவன் வீட்டிலே என்று-திரு அயோத்யைப் புகழுமாறு போலே –இவள் திரு நகரியை விட்டு திருப் புலியூர் புகழையே புகழா நின்றாள் -என்பாள் வளமே புகழும் -என்கிறாள் –
யதோவாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹ – தைத்ரிய ஆனந்த -9-1-
பேச முடியாமல் வேத வாக்குகள் திரும்பின
அப்ரமேயம் ஹி தத் தேஜ யஸ்ய சா ஜனகாத்மஜா-நத்வம் சமர்த்த தஸ்தாம் ஹர்த்தும் ராம சாபாஸ்ரயம் வனே -ஆரண்ய -37-18-அந்த ஜனக குலத்தில் பிறந்த பிராட்டி எவருக்கு மனைவியாக-இருக்கிறாளோ அவருடைய பராக்கிரமம் அளவிடற்கு அரியது –பரிவ்ருத்தி ச்ரமேண எகா சலத்வலய சாலிநீ-ததௌ பாஹூ லதாம் ச்கந்தே கோபீ மது நிகாதின -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-54-ஒரு ஆயர் மடக்கொடியானவள் மது என்கிற அசுரனைக் கொன்ற கிருஷ்ணனுடைய தோளில் கொடி போன்ற கையைக் கொடுத்தாள் –
ஜனகர் முதலானோர் கர்மங்களைச் செய்ததனாலேயே-சித்தியை அடைந்தவர்கள் -என்னும்படி –கர்மணைவ ஹி சம்சித்திம் ஆஸ்திதா ஜனகாதயா-லோக சங்கரஹ மேவாபி சம்பச்யன் கர்த்தும் அர்ஹசி-ஸ்ரீ கீதை -3-20–அன்றோ இக்குடி இருப்பது –நான் கர்மத்தைச் செய்யேன் ஆயின் இந்த மனிதர்கள் கெட்டுப் போவார்கள் – சங்கர சாதி உண்டாவதற்கும் காரணன் ஆவேன்-இந்த மக்களைக் கொன்றவ னாயும் ஆவேன் –-உத்சீதேயு இமே லோகா ந குர்யாம் கர்மசேத் அஹம்-சங்கரஸ்ய ஸ் கர்த்தா ச்யாம் உபஹன்யாம் இமா பிரஜா –ஸ்ரீ கீதை -3-24- என்பதே அன்றோ அவன்படியும் –
சூரம் ஸத்ய விக்ரமம் ஸர்வ சாஸ்திரேஷு நிஷ்டிதம் வேதேஷு நிஷ்டிதம்-பால-13-20-
ஜனகர் வல்லவர் -உண்மையான பராக்ரமம் யுடையவர் -எல்லா நூல்களையும் ஆராய்ந்தவர் -வேதங்களையும் ஆராய்ந்தவர்-
கச்சதா மாதுல குலம் பரதேன ததா அநக-சத்ருக்னோ நித்ய சத்ருக்னோ நீத ப்ரீதி புரச்க்ருத-அயோத்யா -1-1-
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வானுக்கு ஆதல்-இவ் வாழ்வாருக்கு ஆதல் அன்றோ இவ் வர்த்தங்களில் ருசி உள்ளது –நித்ய சத்ருக்ன -எப்பொழுதும் உட்பகைவர்களாய் உள்ள இந்திரியங்களை வென்றவர் -என்பதால்-பெருமாள் இனியர் -என்று அவன் பக்கல் கண் வையான்-என்று கூறப் பட்டது அன்றோ –
கச்சதா-கச்சதா டேன்கிற வர்த்தமான நிர்தேசத்தாலே தனக்கு ஒரு பிரயோஜனம் உண்டாயாதல் -பூர்வ ஷணத்தில் போகுகைக்கு நினைவு யுண்டாயாதல்
இன்றியே அவனை ஒழிய ஜீவிக்க மாட்டாமையாலே போனான் என்கை –
மாதுல குலம்-யுதாஜித்து அழைத்து வந்ததும் அவனை யாகையாலே போக்கிலும் உத்தேச்யம் அவனுக்கு இவனுக்கு அவன் பின்னே போகை உத்தேச்யமாய்ப் போனான் என்கை
பரதேன –பரத இதி ராஜ்யச்ய பரணாத் -என்கிறபடியே சக்ர வர்த்தியும் துஞ்சி பெருமாளும் ராஜ்யத்தைப் பொகட்டுப் போய் இளைய பெருமாளும் தொடர்ந்து அடிமை செய்ய வேண்டும் என்று போய் ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வானும் தன்னை அல்லது அறியேன் என்று இருக்கிற் தசையிலே ராஜ்யத்தை வஹித்துக் கொண்டு இருந்தான் -என்கை
தத-இருவரும் ராஜ புத்ரர்களாய் நஷத்ர பேதமும் உண்டாய் இருந்தால் முஹூர்த்தம் இட்டுப் போகப் பிராப்தமாய் இருக்க அவன் போனதுவே தனக்கு முஹூர்த்தமாகப் போனான் என்கை-
அநக-அநம் இல்லாதது இவனுக்கு இ றே-அல்லாதார்க்கு ராமபக்தியும் கலாசி இருக்கையாலே பாபமிச்ற ஜீவனம் என்கிறது ராமபக்தியைப் பாப்பம் எண்ணப் போமோ வென்னில் பாபத்தில் புண்யம் நன்றாய் இருக்க மோஷ விரோதி ஆகையாலே புண்யமும்
புண்ய பாபே விதூய என்று கொண்டு பாப சப்த வாச்யமாகா நின்றது -ஆகையாலே பாத அனுவ்ருத்தி யாகிற உத்தேச்யத்துக்கு விரோதி யாகையாலே ராம பக்தியும் பாபமாம் இத்தனை –
சத்ருக்ன-பிள்ளைகளை உடைய சந்நிவேசன்களைப் பார்த்து திரு நாமம் சாத்துக்கிற வசிஷ்ட பகவான் பெருமாள் கண்டாரை அழகாலே துவக்க வல்லார் என்று தோற்றி இருக்கையாலே ராமன் என்றும்-இளைய பெருமாளுக்குக் கைங்கர்யமே நிரூபகமாகத் தோற்றுகையாலே ஸ்ரீ பரதாழ்வான் என்றும் திரு நாமம் சாத்தி இவனுடைய சந்நிவேசத்தைக் காணவே சத்ருக்கள் மண் உண்ணும்படி இருக்கக் காண்கையாலே சத்ருக்னன் என்று திருநாமம் சாத்தினான் –
நித்ய சத்ருக்ன –
பாஹ்ய சத்ருக்களை யன்றிக்கே ஆந்தர சத்ருவான இந்த்ரியங்களையும் ஜெயித்து இருக்கும் என்கை –இந்த்ரிய ஜெயத்துக்கு எல்லை எங்கனம் என்னில் பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரீணம் -என்கிற ராம சௌந்தர்யத்திலும் துவக்கு ஒண்ணாது இருக்கை-
அதாவது பெருமாளைப் பற்றும் போதும் தன உகப்பால் அன்றியே அவன் உகந்த விஷயம் என்று பற்றுகை
நீத
ராஜாக்கள் போம் போது உடைவாள் மற்று ஓன்று கொண்டு போமா போலே அவன் கொண்டு போகப் போனான் –த்ரவ்யத்துக்கு த்ரவ்யாந்தரங்களோட்டை சம்யோகம் உபய நிஷ்ட்டமாய் இருக்கும் -அது போல் அன்றியே ஜாதி குணங்களோ பாதி போனான்
ப்ரீதி புரச்க்ருத
தமையன் பின்னே தம்பி போகக் கடவன் என்கிற முறையால் போனான் அல்லன் -அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்ற இளைய பெருமாளைப் போலே எல்லா வடிமைகளும் போனவிடத்தில் செய்யலாம் என்று பாரித்துக் கொண்டு ப்ரீதி ப்ரேரிதனாய் போனான் படை வீட்டில் இருந்தால் பரத அனுவ்ருத்தி ஒருவர்க்கு இட்ட சோற்றை பகிர்ந்து உண்பாரோ பாதி ஒகஹரியாய் இறே இருப்பது-பாஷ்யகாரர் –அநக –நித்ய சத்ருக்ன -என்ற இதுக்கு ப்ரமேயமாகச் சொற்கட்டிலே-ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் பெருமாளுக்கு நல்லனான படி அவனை அல்லது அறியாத ஸ்ரீ பரதழ்வானை யல்லது அறியாதபடி யானான் என்று அருளிச் செய்வர் இதுவே பிரயோஜனமானால் சொல்லும் மிகை எல்லாம் பொறுக்கும் இறே-அநக -நித்ய சத்ருக்ன -என்று பாவனத்வத்தாலும் போக்யதையாலும் அவனைப் பற்றினான் என்னவுமாம்-இப்படி இவனைப் போல் இருப்பார் ஒருவர் ஸ்ரீ மதுர கவிகள் இனி ததீயர் உத்தேச்யர் என்னும் இடத்தில் -முதல் அடியில் அஜ்ஞ்ஞாத ஜ்ஞாபனத்தாலே பகவத் விஷயத்திலே மூட்டியும் இவன் பகவத் விஷயத்திலே அவகாஹித்து குண அனுசந்தானத்தால் அல்லது செல்லாத படியானால் போத யந்த பரஸ்பரம் என்கிறபடியே போது போக்குகைக்கு உசாத் துணையாயும் பிராப்தி தசையில் வந்தால் யத்ர பூர்வே சாத்யாஸ் சந்நிதேவா -என்கிறபடியே சாத்திய விருத்தி ரூபத்தாலும் புருஷகார பாவத்தாலும் உத்தேச்யராவார்கள் இப்படி சர்வ அவஸ்தையிலும் ததீயரே உத்தேச்யர் என்று அத்யவசித்து தமக்கு உபகாரகரான ஆழ்வார் தம்மையே பற்றுகிறார் –
தத் அஃனவ் ப்ரோதம் இஷீகாதூலம் யதா ப்ரதூயேதே ஏவம் ஹ அஸ்ய ஸர்வே பாப்மாந ப்ரதூயந்தே-ஆகையால் நெருப்பில் இடப்பட்ட த்ருண விசேஷத்தின் பஞ்சானது எப்படி கொளுத்தப்படுகிறதோ அப்படியே இந்த உபாசகனுடைய ஸமஸ்தமான புண்ய பாபங்களும் கொளுத்தப்படுகின்றன-
யாநி அஸ்மாகம் ஸூ சரிதானி-தாநி த்வயா உபாச்யானி நோ இதராணி -தைத்ரியம்-எவை எங்களுடைய நல் ஒழுக்கம் களோ அவை கொள்ளத் தக்கவை -என்று ஆச்சார்யன் சிஷ்யனுக்கு உபதேசிக்கிறார் -என்னக் கடவது அன்றோ –
சுழி பட்டு ஓடும் சுடர்ச் சோதி வெள்ளத்து –-ஆற்றுப் பெருக்கு போலே சுழித்து செல்லுகிற –ஒளி அலைகளை உடைத்தான பரம பதத்திலே –சூர்யன் அக்னி ஆகியவற்றின் ஒளிகளைக் கடந்துள்ள-ஒளியுடன் விளங்குகிற-மாகாத்மாவின் ஸ்ரீ மன நாராயணன் உடைய ஸ்ரீ வைகுண்டம் -என்னக் கடவது -அன்றோ –அத்யர்க்கா நல தீப்தம் தத் ஸ்தானம் விஷ்ணோ மகாதமன-ஸ்வ யைவ ப்ரபயா ராஜன் துஷ்ப்ரேஷம் தேவதா நவை -பாரதம் -ஆரண்ய பர்வம் –ஏஷக்யேவ ஆனந்தயாதி -தைத்ரியம்
உலகத்தை படைத்தல் முதலான தொழில்கள் நீங்கலாக-ஏனையவற்றில் பரமாத்வோடே-
ஒத்தவன் ஆகிறான் முக்தன் -என்கிறபடியே-ஜகத் வியாபார வர்ஜம்-சாரீர மீமாம்சை -4-4-17–
பஹுஸ்யாம் -பலவாக போகிறேன் -இதற்காக-பிரஜாயேய -என்றது போலே தோன்றி முதலில் சொல்லி அப்புறம் முளைப்பித்த –
சத்பிரேவ சஹாசீத சத்பி குர்வித சங்கமம்-சத்பி விவாதம் மைத்ரம்ச ந அசத்பி கிஞ்சித் ஆசரேத் -மார்கண்டேய புராணம் –பெரியோர்களுடன் கூட இருக்க வேண்டும் -சத்துக்களின் பழக்கத்தைச் செய்ய வேண்டும் -பெரியோர்களுடனேயே ஸ்நேஹத்தையும் சண்டையும் செய்ய வேண்டும் -அசத்துக்களுடன் ஒன்றுமே செய்யக்கூடாது –
குருஷ்வம் மாம் அநுசரம் வை தர்ம்யம் ந இஹ வித்யதே
க்ருதார்த்த அஹம் பவிஷ்யாமி தவ சார்த்த பிரகல்பதே -அயோத்யா -31-22-
சதுரா சதுராக்ஷரீ ஏஷா ராமானுஜேதி ந சேத் மாத்ருஸ ஜாந்தவ காம் அவஸ்தாம் பிரபத்யந்தே ஹந்த
ராமானுஜ என்கிற இந்த வேண்டும் பலன்களை எல்லாமே தருவதில் நிபுணமான நான்கு எழுத்துக்கள் மந்திரமானது இல்லாமல் போயிற்றானால் என்னைப் போன்ற உயிர்கள் எவ்வையான கொடிய தசையை அடைவார்களோ அறியேன் -ஆச்சர்யம் –
————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply