தைவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்யயா.–
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே৷৷—7.14৷৷
என்னுடையதான இந்த முக் குண மயமான ப்ரக்ருதி -தேவனான என்னால் படைக்கப் பட்டதாகையாலே – எவராலும் தம் முயற்சியால் மட்டும் -கடக்க அரிதாக உள்ளது – எவர்கள் என்னை சரணம் அடைகிறார்களோ அவர்கள் இந்த மாயையைத் தாண்டுகிறார்கள்-
தேவத்யமாநா: பதிதாக்ரய வீரா: நாநத்யமா நாபய ஸல்ய வித்தா:
ஸாகாம்ருகா ராவண ஸாய கார்த்தா: ஜக்மு: ஸரண்யம் ஸரணம் ஸ்மராமம்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 59 : 45.-ஸாகா ம்ருகா – பூசலிலே புக்கு அங்கு உண்டான பழக்கம் இன்றிக்கே இருக்கை.-பணையோடு பணை தத்தித் திரியுமவை அன்றோ? –‘வாநரா:’ என்னாமல், ‘ஸாகா ம்ருகா:’ என்று விசேடித்ததற்கு பாவம் அருளிச் செய்கிறார்,ராவண ஸாயகார்த்தா; -திசைப் பாலகர்களையுங்கூட அச்சமுறுத்தி வளர்ந்தவன் கையில் அம்புகள்.
ஜக்மு: ஸரண்யம் ஸரணம் ஸ்மராமம் – தங்களுடைய ஆபத்தை அறிந்து போக்கக் கூடியவனையும் பார்த்துப் பற்றினார்கள்.
‘ராக்ஷஸை: வத்யமாநாநாம் வாநராணாம் மஹாசமூ:
ஸரண்யம் ஸரணம் யாதா ராமம் தஸரதா த்மஜம்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 17.-அரக்கர்களால் துன்புறுத்தப்பட்ட வானரங்களுடைய பெரிய கூட்டமானது,
பாதுகாக்கின்றவனும் சக்கரவர்த்தி திருமகனுமான பெருமாளைச் சரணமாக அடைந்தது,
ப்ரியம்ஜநம் அபஸ்யந்தீம் பஸ்யந்தீம் யராக்ஷஸீகணம்
ஸ்வகணேந ம்குகீம் ஹீநாம் ஸ்வகணை; ஆவ்ருதாமிவ’-என்பது, ஸ்ரீராமா. சுந். 15 : 24.-‘பிரியமான ஜனங்களைப் பாராதவளும், அரக்கியர்களின் கூட்டத்தைப் பார்ப்பவளும், தன் கூட்டத்தால் விடப்பட்டதும் நாய்க் கூட்டத்தால் சூழப்பட்டதுமான பெண் மான் போன்றிருப்பவளும்’ -முதலிகள் அடங்கலும் அரக்கர்கள் வாயிலே கிடந்து பெருமாளைச் சரணம் புக்காற்போலே, இவரும் மனம் ஆளும் ஓர் ஐவர் வன்குறும்பரான இந்திரியங்களுக்குப் பயப்பட்டுக் கூப்பிடுகிறார்.
‘யஸ்ய மந்த்ரீச கோப்தாச ஸூஹ்ருஸ்சைவ ஜநார்த்தந:
ஹரி: த்ரைலோக்ய நாத: ஸ: கிந்து தஸ்ய ந நிர்ஜிதம்’என்பது, பாரதம், ராஜ ஸூயம்-எந்தத் தரும புத்திரனுக்கு, மூன்று உலகங்கட்கும் நாதனும் ஜநார்த்தனனுமான கண்ணபிரான்,
மந்திரியாயும் காக்கின்றவனாயும் ஸ்நேகிதனாயும் இருக்கிறான்?’
அஸ்மாத் மாயீ ஏதத் விஸ்வம் ஸ்ருஜதே —ஸ்வேதாஸ் -இத்தினின்றும் ஈஸ்வரன் இவ்வுலகை ஸ்ருஷ்டிக்கிறான்-‘பதிம் விஸ்வஸ்ய’ – ‘உலகத்திற்குத் தலைவன்-தேவாநாம் தாநவாநாஞ்ச ஸாமாந்யம் அதிதைவதம்’-என்பது,ஜிதந்தா. 1 : 2.-‘தேவர்களுக்கும் தானவர்களுக்கும் பொதுவான தெய்வம்’
யாவஜ்ஜீவம் அக்நி ஹோத்ரம் ஜூஹூயாத்’என்பது, யஜூர் வேதம்.-தான் உயிருடன் வாழும் வகையிலும் அக்நி ஹோத்திரம் செய்ய வேண்டும்’
‘ஜலாந் மத்ஸ்யாவி வோத்த்ருதௌ’-என்பது, ஸ்ரீராமா. அயோத். 53 : 31-தண்ணீரின்றும் மேலே எடுக்கப்பட்ட மீனைப் போன்றவர்’ என்கிற இளையபெருமாள்,
‘நீருள வெனின்உள மீனும் நீலமும்
பாருள வெனின்உள யாவும் பார்ப்புறின்
நாருள தனுவுளாய் நானும் சீதையும்
யாருள ரெனின்உளேம்? அருளு வாய்என்றான்’–என்பது, கம்பராமாயணம்.
ஹா ராம ஹா லக்ஷ்மண ஹா ஸூமித்ரே ஹா ராமமாத: ஸஹமே ஜநந்யா’-என்பது, ஸ்ரீராம. சுந். 28:8.-என்று வேணி கொண்டு -முடிக்கப் பார்த்து பிராட்டி தனியே கிடந்து கூப்பிட்டாற் போலே,-விண்ணுளார் பெருமானேயோ–பரமபதத்திலே இருப்பும் அணி கலங்கும்படி கூப்பிடுகிறார்
தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸூதுஷ்கரம்’-என்பது, ஸ்ரீகீதை, 6:34.-அந்த மனத்தினை அடக்குதல் காற்றை அடக்க முடியாதது போலச் செய்ய முடியாத
காரியமாக நான் நினைக்கிறேன்,’ என்றான் அன்றோ?-காற்றை ஓரிடத்தில் கட்டிவைக்கில்,’ அன்றோ மனத்தினை நியமிக்கலாவது?
க்ருஷ்ணாஸ்ரயா: க்ருஷ்ணபலா: க்ருஷ்ண நாதாஸ்ச பாண்டவா;’–என்பது, பாரதம், ஆரண். பர். 18. 3:24.-‘பாண்டவர்கள் கிருஷ்ணனை அடைந்தவர்கள்;கிருஷ்ணனையே பலமாகக் கொண்டவர்கள்; கிருஷ்ணனையே நாதனாகவுமுடையவர்கள்-
தேவி ராஜ்ஜோ யத் அபி காங்ஷிதம் தத் வசனம் ப்ரூஹி கரிஷ்யே ப்ரதிஜாநேச ராம ந த்விபாஷதே -அயோத்யா -18-30-
அம்மா- கைகேயி ராஜாவின் கோரிக்கை எதுவோ அது விஷயமான சொல்லை சொல்லு -செய்கிறேன் ப்ரதிஜ்ஜையும் பண்ணுகிறேன் -ராமன் இரண்டுவிதமாகப் பேசுகிறவன் அன்று-‘ஏதத் விரதம் மம’ என்பது, ஸ்ரீராமா. யுத். 18:33.-இது எனக்கு விரதம்’ என்றதும் தப்பாதே அன்றோ?
விஷயேந்த்ரிய ஸம்யோகாத் யத்த தக்ரே அம்ருதோபமம்–
பரிணாமே விஷமிவ தத் ஸுகம் ராஜஸம் ஸ்ம்ருதம்–৷৷18.38৷৷அன்னம் பானம் முதலான விஷயங்களுக்கு இந்த்ரியங்களோடு சேர்த்தி ஏற்படுக்கையால் -அந்த விஷயங்களை
அனுபவிக்கும் ஆரம்ப காலத்தில் யாதொரு ஸூகம் அமுதம் போல் இருக்கிறதோ –
அந்த விஷய அனுபவத்தின் பலனை அனுபவிக்கும் கடைசிக் காலத்தில் விஷத்தைப் போலே துன்பத்தைத் தருகிறதோ அந்த ஸூகம் ரஜோ குணத்தால் உண்டாவது என்று சொல்லப்படுகிறது –இன் அமுது எனத்தோன்றி-பரிணாமத்தில் விஷமேயன்றோ?
நஹி தர்மவிருத்தேஷூ பஹ்வபாயேஷூ கர்மஸூ
மூலகா திஷூ ஸஜ்ஜந்தே புத்திமந்தோ பவத்விதா:’–என்பது, ஸ்ரீராமா. யுத்.குலம் முதல் அடும் தீவினைக் கொடுவன் குழியினில் வீழ்க்கும் ஐவரை--ஒருவன் செய்த பாவம் அவன்றன்னளவிலே போகை அன்றிக்கே, குலமாக முதலற முடிக்கவற்றான பாவங்களை
விளைக்கக் கடவனவாய், கொடியனவாய்,அனுபவித்து முடிய ஒண்ணாதபடியாய், வலியனவாந்,-கால்வாங்க ஒண்ணாதபடியான ஐம்புலன்களாகிற குழிகளிலே தள்ளுகின்றனவான இந்திரியங்களை. செய்யக்கூடியன அல்லாதனவாய், சொல்லுகிற பலத்தின் அளவல்லாத அபாயங்களையுடையனவாய், குலத்தை முதலற முடிக்கக் கூடியனவான செயல்களிலே, உன் போல்வராயுள்ள அறிஞர்கள் செல்லார்கள் காண்!’ என்றான் அன்றோ மால்யவான், இராவணனுக்கு?-ஹனுமான் வார்த்தையாக ஸ்ரீ ராமாயணத்தில் இருக்கிறது காஞ்சி ஸ்வாமிகள்-ஓலைசுவடியில் தப்பாக பிசகி இருக்கலாம்-
ப்ரஹ்மண: புத்ராயஜயேஷ்டாய ஸ்ரேஷ்டாய’ என்பது சுருதி-நான்முகனை நாரா யணன்படைத்தான் நான்முகனும்தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான்’–என்பது நான்முகன் திருவந்தாதி.
தத் தஸ்ய ஸத்ரு ஸம்பவேத்’ என்பது, ஸ்ரீராமா. சுந். 39;30.. 4–‘அவ்வாறு செய்தல் அவருக்கு ஒத்தாகும்’
’‘அநித்ர: ஸததம் ராம:’ என்பது, ஸ்ரீராமா. சுந். 36:4-பெருமாள் எப்பொழுதும் உறக்கம் இல்லாதவராய் இருக்கிறார்-பரமம் ஸாம்யம் உபைதி’ என்பது, முண்டகோபநிடதம்.–மேலான ஒப்புமையை அடைகிறான்’-என்கிறபடியே, தம்மோடு ஒத்தபடியைக் கொடுத்தபடி.
‘கிமர்த்தம் தவ நேத்ராப்யாம்’ என்பது, ஸ்ரீராமா. சுந். 33 : 4. இது பிராட்டியைப் பார்த்துத் திருவடி கூறியது.-தேவரீர் கண்களிலிருந்து சோகத்தால் உண்டான நீர் எதற்காகப் பெருகுகிறது?’ என்னும்படி காணும் இருக்கிறது.
கிரீடிநம் கதிநம் சக்ர ஹஸ்தமிச்சாமி த்வாம் த்ரஷ்டுமஹம் ததைவ.–
தேநைவ ரூபேண சதுர்புஜேந –ஸஹஸ்ரபாஹோ பவ விஸ்வமூர்தே—৷৷11.46৷৷
எண்ணிறந்த கைகளை யுடையவனே -உலகம் அனைத்தையும் உடலாகக் கொண்டவனே –
முன்னைய வண்ணமே ஒரே கிரீடத்தை யுடையவனாய் -கதையை உடையவனாய் –
சக்கரத்தை கையிலே ஏந்தியவனாய் -உன்னை நான் காண விரும்புகின்றேன் –
முன்பு இருந்ததாக நான்கு திருக்கைகள் உடைய திரு மேனியோடு கூடியவனாக ஆவாயாக
‘ராமம் ரக்தாந்த நயநம் அபஸ்யந்தீ ஸூதுக்கிதா’-என்பது, ஸ்ரீராமா. சுந். 26:37.-கடையில் செந்நிறம் பொருந்திய கண்களை யுடைய ஸ்ரீராம பிரானைப் பாராதவளான காரணத்தால்
மிக்க துக்கமுடையவளானேன்’
ஜலாத் மத்ஸ்யா விவோத்த்ருதௌ’–என்பது, ஸ்ரீராமா, அயோத். 53:31.-‘தண்ணீரினின்றும் எடுக்கப்பட்ட மீன்கள் போன்று கண நேரமே பிழைத்திருப்போம்-இது பெருமாளை நோக்கி இளைய பெருமாள் கூறியது.
‘அவலோகந தாநேந பூயோமாம் பரி பாலய’ என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 1.20:16.-தேவனே! அடைந்தவர்க்கு அருள் செய்பவனே! கேசவனே! அருள் புரிவாய்; அச்சுதனே!
பார்வையாலே மறுபடியும் என்னைக் காப்பாயாக,’
தஹந் தீமிவ நிஸ்வானஸ: வ்ருக்ஷாந் பல்லவ தாரிகை;’-என்பது, ஸ்ரீராமா. சுந். 17:29-‘தளிர்களைத் தரித்திருக்கின்ற மரங்களைத் தன் மூச்சுக் காற்றினால் எரிக்கின்றவளைப் போல இருக்கிறவளை’
‘மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் மஹதஸ்தி ந ஸம்ஸய:’-என்பது, ஸ்ரீராமா. சுந். 38:48.-‘என்னுடைய பாவம் அதிகமாய் இருக்கிறது; சந்தேகம் இல்லை,’ என்றாள் அன்றோ?-‘நன்மை அவனாலே’ என்றும்,‘தீமை தந்தம்மாலே’ என்றுமாயிற்று இருப்பது
தோஷோயத்யபி தஸ்ய ஸ்யாத்’ என்பது, ஸ்ரீராமா:யுத். 18:3-குற்றவாளர் இராம கோஷ்டிக்கு ஆள் அல்லர்
தேவ ப்ரபந்நார்த்தி ஹர கேசவ ப்ரஸாதம் குரு அவ்யய பூய அவலோகந தாநேந மாம் பாலய -விஷ்ணு -1-20-19-
ஓ தேவனே சரணாகதி செய்தவர்களுடைய துக்கத்தைப் போக்கடிக்கிறவனே -கேசவனே அருள் புரிய வேண்டும் -நாசமற்றவனே எப்பொழுதும் இப்படியே ப்ரத்யக்ஷமாக ஸேவை தந்தருளி என்னை ரக்ஷித்தருள வேண்டும் –என் தாமரைக் கண்ணா என்னும் –
‘ஒரு நீர்ச் சாவியான பயிருக்கு ஒரு பாட்டம் மழை பெய்யக் கடவதன்றோ?
‘தஹந் தீமிவ நிஸ்வானஸ: வ்ருக்ஷாந் பல்லவ தாரிகை;’-என்பது, ஸ்ரீராமா. சுந். 17:29-தளிர்களைத் தரித்திருக்கின்ற மரங்களைத் தன் மூச்சுக் காற்றினால் எரிக்கின்றவளைப் போல இருக்கிறவளை’நெடு மூச்சு எறியா நிற்கும்–பெரு மூச்சாலே தன் பகை அறுக்கப் பாரா நின்றாள்.
அத்ருஷ்ட பூர்வ வ்யஸநா ம்ருது ஸீலா மநஸ்விநீ
தேந துக்கேந ருததீ நைவமாம் கிஞ்சித் அப்ரவீத்’-என்பது, ஸ்ரீராமா. ஸூந்தர . 58:35-‘இதற்கு முன் அறியாத துக்கத்தை யுடையவளும் மென்மைக் குணமுடையவளும் ஆழ்ந்த மனமுடையவளுமான பிராட்டி, அந்தத் துக்கத்தாலே அழுது கொண்டு என்னைப் பார்த்து ஒரு வார்த்தையும் சொல்லவில்லை,
‘பரமாபதம் ஆபந்ந;’ என்பது, விஷ்ணு தர்மம், 68.-மிகப் பெரிய ஆபத்தை யடைந்தவன்’-வானமே நோக்கும் –மணி வண்ணா’ என்னும் துயர ஒலி கேட்டிருப்பதற்குச் சத்தன் அல்லன்,-ஸப்த ஸஹ-சஹஸ்ரநாமம் -(ஆர்த்த த்வனி கேட்டு வந்து தோன்றுவான் )
ஒலி வழியே ஸ்ரீகஜேந்திராழ்வானுக்கு வந்து தோன்றினாற் போலே தோன்றி யருள்வான் என்று ஆகாயத்தையே பாரா நிற்கும்.
ஹ்ருதயஸ்த: தத: தஸ்ய தம் வாயும் அதி ஸோஷணம்
பபௌ ஜநார்த்ததா: க்ருத்த: ஸ யயௌ பவந: க்ஷயம்’–என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 1.19:24.-பிறகு அவனுடைய உள்ளத்தில் இருந்து கொண்டிருக்கிற பகவான், கோபமுடையவராய்,
அதி சோஷணம் என்ற அந்தக் காற்றினை விழுங்கி விட்டார்; அந்தக் காற்று நாசமடைந்தது’
‘த்வம் நீசஸஸவத்’-என்பது, ஸ்ரீராமா. சுந்.22:16, இது பிராட்டி கூற்று.-‘பெருமாள் யானைப் போல எண்ணப்படுகிறார்; நீ அற்ப முயலைப் போல எண்ணப் படுகிறாய்’ என்னுமவள் அன்றோ?
ந சக்ஷூஷாபஸ்யதி’ என்பது, தைத். நாரா.-கண்ணால் காண்கிறான் இல்லை’ என்கிறது, தாம் தாமே காண இழிவார்க்கு;
சந்த்ர காந்தாநநம் ராம மதீவ ப்ரிய தர்ஸநம்
ரூப ஒளதார்ய குணை: பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம்’-என்பது, ஸ்ரீராமா, அயோத். 3:29.-ரூபம் ஸம்ஹநநம் லக்ஷ்மீம் ஸௌகுமார்யம் ஸூவேஷதாம்
தத்ரஸூ: விஸ்மித ஆகாரா ராமஸ்ய வந வாஹிந;-என்பது, ஸ்ரீராமா. ஆரண், 1 : 1.-‘வடிவு உதாரத் தன்மை சீலம் ஆகியவற்றால் அனைவருடைய கண்களையும் மனத்தையுங் கவரக் கூடியவனை’ என்கிறபடியே, நகரத்திலுள்ளவர்களுக்கும்,‘பெருமாளுடைய உருவத்தின் அமைப்பையும் அழகினையும் சுகுமாரத் தன்மையையும் அழகிய அலங்காரத்தையும் வனத்தில் வசிக்கின்ற முனிவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்,
தாஸாம் ஆவிரபூத் சௌரி: ஸ்மயமாக முகாம்புஜ:
பீதாம்பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷாத் மந்மத மந்மத;’-என்பது, பாகவதம், 10. 32:2.-ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமியர்களுக்கு உன்னைக் காட்டிற்றிலையோ?
‘தாஸாம் ஆவிரபூத் – ஒரு நீர்ச்சாவியிலே ஒரு பாட்டம் மழை விழுந்தாற்போலே இருக்கை.ஸ்மயமாநமுகாம்புஜ:-அவர்கள் முன்னே தோன்றின பின்பு வடிவில் பிறந்த செவ்வி.-பீதாம்பரதர: ஸ்ரக்வீ -பெண்கள் மனத்தில் மறத்தை மாற்றுவது, பரிவட்ட வாய்ப்பையும் தோள்களில் மாலையையும் காட்டியாயிற்று.
ஸாக்ஷாத் மந்மத மந்மத :-கீழை வீடு காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர் –
த்ரை லோக்ய ராஜ்யம் ஸகலம் ஸீதாயா நாப்நுயாத் கலாம்’-என்பது, ஸ்ரீராமா. சுந்.16:14.மூன்று உலக இராஜ்யமும் உலக சப்தத்திற்குப் பொருளாக வுள்ள
எம்பெருமானும் சீதா பிராட்டியினுடைய ஒரு அம்சத்திற்கும் ஒப்பாக மாட்டார்கள்,’
ஸகீபி ந்யஸ்த ப்ரகீர்ண பரதந்த்ர விபாண்டுர அங்கீ-தோழிகளால் பொகட்டனவும் அப்படியே இருப்பனவும் ஸ்வாதீனம் அற்றனவும் மிக வெளுத்தவுமான அங்கங்களை யுடையவள்-விபாண்டு-விசேஷமான வெளுப்பு-இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும் –-தோழிமார் பொகட்ட இடத்தே கிடக்குமித்தனை.-ஸ்வாதீனம் இல்லாமையாலே தோழிமார் இட்டு வைத்த காலும் கையுமாய் இருக்கும்.
இவள் திறத்து என் சிந்தித்தாயே –-‘கேசவன் அநுகூலர் விஷயத்தில் மேன்மையைச் சிந்திக்கிறான்,’
ஸவிலாஸ -முக பங்கஜம் ஸ்மிதாதாரம் ’ என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 17:21.( அக்ரூரர் வார்த்தை )-தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய் என்னும்- புன்முறுவலில் உண்டாகும் குளிர்த்தியைப் போலாயிற்று ஊரில் குளிர்த்தியும்.-அகவாயில் குளிர்த்தி போலே யாயிற்று இவ் வாயில் குளிர்த்தியும்.–
ரகு நந்தனஸ்ய வந பிரவேஸே மந்தராய ந நிமித்தம் அஸ்யா மாது தோஷ ந நிமித்தம் ராஜ்ஞ தோஷம் ந நிமித்தம் ராகவஸ்ய தோஷம் ந நிமித்தம் ‘மத்பாபமே வாத்ர நிமித்தம் ஆஸீத்’-என்பது, ஸ்ரீராமா, அயோத். இது, ஸ்ரீபரதாழ்வான் கூற்று-என்னுடைய செயலிடத்தது (கர்மம் காரணமாக ) அருளாமைக்கு அடி; என்றது, இவள் பக்கலிலும் குறை இல்லை; உம்முடைய பக்கலிலும் குறை இல்லை; இருவருமான சேர்த்தியைக் காண இருக்கிற என் பாபம் அன்றோ இதற்குக் காரணம்?’
‘தமேவ ஸரணம் கத;’ என்பது, ஸ்ரீராமா, சுந். 38:34-உம்முடைய பக்கல் பற்று அறுத்துக் கொண்ட ஜயந்தன் போல்வார்க்கும் பற்றாய் இருக்குமவர் அன்றோ நீர்!’ அந்தப் பெருமாளையே சரணமாக அடைந்தான்’
ஏஷ நாராயண: ஸ்ரீமாந் க்ஷிரார்ணவ நிகேதந:
நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்யஹி ஆகதோ மதுராம் புரீம்’-என்பது, பாரதம். ஹரி வம்ஸம், 113:62-‘திருவனந்தாழ்வானாகிற கட்டிலைத் தனக்கு முன்னே சென்று அவதரிக்கும்படி போக விட்டு மதுரை என்ற நகரத்திற்கு எழுந்தருளினார் அன்றோ?’ என்கிறபடியே, அந்தக் கிடையை விட்டு இடையிலே வந்து உதவினாய் அன்றோ? அது தப்பிற்றே?’ என்ன,
‘அந்த அவதாரம் பரத்துவம் என்னும்படி அன்றோ கோயிலிலே வந்து சாய்ந்தருளிற்று?’ என்கிறாள்
‘ ‘ஜலாத் மத்ஸ்யாவிவ உத்த்ருதௌ’ என்பது,-ஸ்ரீராமா. அயோத். 53:31.-தண்ணீரில் சஞ்சரிக்கின்ற மீன் முதலான பொருள்கள் தண்ணீரைப் பிரிந்து தரிக்கில் அன்றோ இவள் உம்மைப் பிரிந்து தரிக்க வல்லளாவது?’
‘பதி ஸம்யோக ஸூலபம் வய;’என்பது, ஸ்ரீராமா. அயோந். 118 : 34.-நாயகனுடைய கலவிக்குத் தகுந்த என்னுடைய வயதை’-கொழுந்து – கொள் கொம்பு தேட்டமான அளவிலே தரையிலே படர விடுவதே.
பஹூதா ஸந்தத துக்க வர்ஷிணி’-என்பது, ஸ்தோத்திர ரத்நம், 49.-‘பல விதமாக இடைவிடாமல் துக்கங்களாகிய மழையைப் பெய்கிற என்கிற இதனைத் தடுத்தல் ஆகாதோ-மலையைத் தரித்து ஒரு மழையைத் தடுத்த நீர். இந்த மழையைத் தடுத்தல் ஆகாதோ?’
தீர்க்கம் உஷ்ணஞ்க நிஸ்வஸ்ய’ மேதினீம் உபஸ்திதம் மேக ஸங்காஸம் விபீஷணம் உவாச -என்பது, ஸ்ரீராமா. யுத். 117:6.–பெருமாள் சுடும்படியான பெரு மூச்சு விட்டுக்கொண்டு பூமியைப் பார்த்துக் கொண்டு கிட்டேன் இருக்கிற மேக நிறத்தையுடைய விபீஷணனைப் பார்த்து சொன்னார்
மேக ஸ்யாமம் மஹா பாஹூ’ என்பது, ஸ்ரீராமா. அயோத். 83:8.–மேகம்போல் கருநிறத்தனை’ என்னும் வடிவே அன்றோ?
ஸ்த்திதோஸ்மி கத ஸந்தேஹ:’ என்பது, ஸ்ரீகீதை, 18:73.-‘ஐயங்கள் எல்லாம் நீங்கி நிலை பெற்ற எண்ணமுடையவனானேன்
ரமணீயம் ப்ரஸந்நாம்பு ஸந்மநுஷ்ய மநோ யதா’-என்பது, ஸ்ரீராமா. பால. 2:5.-அழுக்கு அற்ற, தெளிந்த நீரை யுடைய, அழகிய, பெரியோர்களுடைய மனம் போன்ற இந்தத் தீர்த்தத்தைப் பாரும்
இத: பரம் மிருத ஸஞ்ஜீவநீம் ராம வ்ருத்தாந்த கதம் ஆஹ’-என்ற ஸஹஸ்ரநாம பாஷ்யம்-போன உயிரை மீட்கவற்றாயன்றோ குணங்களின் தன்மை இருப்பது?
ஸமா த்வாதஸ தத்ராஹம் ராகவஸ்ய நிவேஸநே
புஞ்ஜாநா மாநுஷாந் போகாந் ஸர்வ காம ஸம்ருத்திநீ’-என்பது, ஸ்ரீராமா. சுந். 33.17-‘நான் அங்கும் இராகவனுடைய வீட்டில் பன்னிரண்டு வருடங்கள் முடிய மனிதர்களுக்குரிய போகத்தை அனுபவித்தேன்,’-ஸமா த்வாதச தத்ர அஹம்- இப்போது ஒருவேளை தரிசனமுங்கூட அரிதாம்படி இருக்கிற நான், முன்பு பல காலம் அவரோடே அனுபவிக்கப் பெற்றேன் காண்!-ராகவஸ்ய நிவேசநே– எங்கள் மாமனாருடைய மாளிகையிலே அவர் தண்ணீர்த் துரும்பு அறுத்துத் தர, நெடுங்காலம் அனுபவித்தேன் புஞ்ஜாநா மாநுஷாந் போகாந் ஸர்வ காம ஸம்ருத்திநீ- ‘எல்லாக் காமங்களையும்’ என்கிறபடியே, ‘சோஸ்னுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்ரஹ்மணா’ என்றது, தைத்.- எல்லாம் அனுபவிக்கப் பெற்றேன்.
அப்படியும் அன்றே இங்கு:பஸவோ ந்ருப கல்யாண குணா:’ என்பது, ஸ்ரீராமா, அயோத். 2:26-‘அரசனே! கல்யாண குணங்கள் பல’ என்கிறபடியே, குணங்கள் இரட்டித்த இடம் அன்றோ இது?
‘.
ஏஷாம் ஹ்ருதயே இந்தீவரஸ்யாம ஸூ ப்ரதிஷ்டித தேஷாம் லாப தேஷாம் ஜய தேஷாம் குதஸ் பராபவ– எவர்களுடைய மனத்திலே கருநெய்தல் போன்ற கறுத்த திருமேனியுடைய பெருமாள் நன்றாய் நிலைபெற்று இருக்கிறாரோ அவர்களுக்கு லாபம் உண்டாகும் -எங்கும் வெற்றியும் உண்டாகும் அவர்களுக்கு எங்கிருந்து அவமானம் நேரிடும் –
கிரீட மாநா பாலா அபி க்ருஹ த்வாரேஷு மித சங்கஸ ராமாபிஷ்டவ ஸம் யுக்தா கதா ஏவ ஸக்ரு-அயோத்யா -6-16-விளையாடும் பாலர்களும் க்ருஹங்களின் வாசல்களில் ஒருவருக்கு ஒருவர் கூட்டம் கூடி ராம ஸ்தோத்ர விஷயமான கதைகளைச் செய்தார்கள் -ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாம் அபவந் கதா: ராமபூதம் ஜகத்அபூத் ராமே ராஜ்யம் ப்ரஸாஸதி’-என்பது, உத்தர ராமாயணம்.-ராமோ ராமோ ராம இதி-சோறு சோறு சோறு என்பாரைப் போலே.-ப்ரஜாநாம பவந் கதா:- -ஜனி தர்ம -பிறந்தவர்களுக்கு எல்லாம் பாசுரம் இதுவே.-ராம பூதம் ஜகத் அபூத்-நாடு அடங்க இராமன் ஒருவன் ஆனபடி.
நிர்குண: பரமாத்மாஸென தேஹம் தே வ்யாப்ய திஷ்ட்டதி’-என்பது, பாரதம், ஆரண்-குற்றம் அற்றவனான அந்தப் பரமாத்துமாவானவன் உன்னுடைய உடலில் நிறைந்து நிற்கின்றான்,’
,குஹாயம்’ தைத். ஆரண். கஹ்வரேஷ்டம் புராணம்’, கடோபநிஷத்.-மனமாகிய குகையில் வசிப்பவர்’ ‘மனத்தில் இருப்பவரும் புராண புருஷரும்’ –தஸ்ய ஏஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்’-என்பது, முண்டகோபிநிடதம்.. 3. 2:3-தன்னால் விரும்பப்படுகிறவனுக்கு
இந்தப் பரமாத்துமா தன் ஸ்வரூபத்தைக் காட்டுகிறான்’
நோபஜனம் ஸ்மரந் இதம் சரீரம்’-சாந்தோக்யம். 8. 12:3..-‘முத்தன் ஜனங்களின் மத்தியில் உள்ள இந்தச் சரீரத்தை நினைப்பது இல்லை,’
‘நசாக்நிஜம் பயம் கிஞ்சித் நாப்ஸூ மஜ்ஜந்தி ஜந்தவ:-என்பது, சங்க்ஷேப ராமாயணம், 1:92.-நெருப்பும் சோறு வேக வேண்டிய உஷ்ணத்துக்கு மேற்பட உடைத்தாவது இல்லை.-கொண்டு ஆழக்கடவ தண்ணீர் தானே கொண்டு மிதக்கப் புக்கது இராம சரத்துக்கு அஞ்சி.
ஏகம் துக்கம் ஸூகஞ்ச நௌ’–என்பது, ஸ்ரீராமா. கிஷ். 5:18.-‘நம் இருவர்க்கும் இன்பமும் துன்பமும் ஒன்றே-
ஸௌமித்ரே பஸ்ய பம்பாயா: சித்ராஸூ வந ராஜிஷூ
கிந்நரா நர ஸார்த்தூல விசரந்தி ததஸ்தத;’–இது. ஸ்ரீராமா. கிஷ்கிந். 1:60-அங்குத்தை இனிமை நெஞ்சிலே படச் செய்தேயும், பெருமாளுக்கு வேற் ஒன்றிலே நோக்கை விளைக்கைக்காக முகத்தை மாற வைத்துக் கொண்டு நின்றார்;-‘பிள்ளாய், பாராய் இது இருந்தபடி!’ என்கிறார்-
ஸாது ராவண ராமேண மாம் ஸமாநய துக்கிதாம்
வநே வாஹிதயா ஸார்த்தம் கரேண் வேவ கஜாதிபம்’-என்பது, ஸ்ரீராமா. சுந். 21:18.-களிறு உடன் பிடியைப் சேர்ப்பாரைப் போல்-துக்கத்தை அடைந்திருக்க என்னை ஸ்ரீராகவனோடு சேர்ப்பாயாக’
ததா குரு தயாம் மயி’ என்பது, ஸ்ரீராமா. சுந்.-அப்படியே என் விஷயத்தில் அருள் செய்
‘வாசா தர்ம மவாப்நுஹி’ என்பது, ஸ்ரீராமா, சுந். 39:10.-‘வாக்கினால் தருமத்தை அடையக் கடவாய்’
தத் தஸ்ய ஸத்ருஸம் பவேத்’ என்பது, ஸ்ரீராமா.சுந், 39:30.-‘அச்செயல் அவருக்குத் தக்கதாம்’
‘குரவ: கிம் கரிஷ்யந்தி தக்தாநாம் விரஹாக்நிநா’என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5.18:22.
ராக்ஷஸநாம் வதே லங்காயா பிரதர்ஷணே ச ஸாஹ்யம் யதா ப்ராணம் கரிஷ்யாமி ப்ரவேஷ்யாமி ச வாஹிநீம்’ என்பது, ஸ்ரீராமா. யுத். 19:23.–ராக்ஷஸர்கள் வதத்திலும் இலங்கையைத் தகைவதிலேயும் ஸஹாயத்தைப் பலத்துக்குத் தக்கபடி செய்கிறேன் தூசித் தலையில் வியாபரிப்பேன் நான்’ என்றான் அன்றோ ஸ்ரீவிபீஷணாழ்வான்?தூசித்தலை – படையின் முன்னிடம்.
யஸ் அசவ் து ஸவ்யம் பக்ஷம் ஆஸ்ரித ரஷோ கண பரிஷிப்த திஷ்டதி -யுத்தம் -28-27-
ஸ்ரீ ராகவனுடைய இடது பக்கத்தை அடைந்த ராஷசக் கூட்டங்களினால் கூடியனவராய் இருக்கிறாரோ இவர் தான் விபீஷண மஹாராஜா-இது, இராவணனைப் பார்த்துச் சாரன் கூறியது-
ஜ்யேஷ்டா கந்யா அநலாநாம விபீஷண ஸூதா கபே
தயா மம இதம் ஆக்யாதம் மாத்ரா ப்ரேஷிதயா ஸ்வயம்’-என்பது, ஸ்ரீராமா. சுந். 37:11. இது, திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.-இங்கே இருந்தே அங்குத்தைக்கு-பெருமாளுக்கு.- ஆவாள் ஒருத்தி காண்!-ஒரோ நிலைகளிலே நீ உதவுமாறு போலே காண் இவளும் ஒரோ நிலைகளிலே உதவ வல்லபடி.-அனலா விபீஷணன் பெண் கூடி இருந்தாள்-இவள் நெஞ்சும் கூடவே இருந்து அவன் இடம் உதவப் போந்ததே –
வேதாநாம் ஸாமவேதோஸ்மி’ என்பது, ஸ்ரீ கீதை, 10 : 22.-‘‘வேதங்களுக்குள்ளே சாம வேதம் நானாகிறேன்
‘சிக்ஷேப் பரணா வூர்த்வம் ஸ்தந்யார்த்தீ ப்ரருரோத ஹ’–என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 6 : 1.-முலைப் பாலை விரும்பினவராய்த் திருவடிகளை மேலே நிமிர்த்தார் அழுதார்’
பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி’-என்பது, ஸ்ரீகீதை, 4 : 5.-என்னுடைய பல பிறவிகள் கடந்தன’
யஸ்மாத் க்ஷரமதீதோஹம் அக்ஷராதபி சோத்தம–
அதோஸ்மி லோகே வேதே ச ப்ரதித புருஷோத்தம-–৷৷15.18৷৷
நான் யாதொரு காரணத்தால் -ஷர புருஷனைக் கடந்து நிற்கிறேனோ -அக்ஷர புருஷனான
முக்தனைக் காட்டிலும் மேலானவனாயும் இருக்கிறேனோ -அக்காரணத்தினாலேயே
ஸ்ருதியிலும் ஸ்ம்ருதியிலும் புருஷோத்தமன் என்று புகழ் பெற்றவனாய் இருக்கிறேன்
யோ மாமேவ ஸம்மூடோ ஜாநாதி புருஷோத்தமம்–
ஸ ஸர்வவித் பஜதி மாம் ஸர்வ பாவேந பாரத–৷৷15.19৷৷
பரத குலத்தில் பிறந்தவனே -எவன் ஒருவன் இம்மாதிரியாக-ஷர அக்ஷர புருஷர்களைக் காட்டிலும் பல காரணங்களால் சிறப்புற்றவனாக -என்னை கலக்கமில்லாமல் அறிகிறானோ – அவன் என்னை அடைவதற்கு உரிய வழி அனைத்தையும் அறிந்தவன் ஆகிறான் — என்னை -என்னை அடையும் வழியான-பக்தி பிரகாரங்கள் அனைத்தாலும் பக்தி செய்தவன் ஆகிறான்
வதாம் உதித பூர்ண’ சுந்த்ரகாந்தம் விமல ஸஸாங்க நிபாநநா ததாஸீத்’ -என்பது, ஸ்ரீராமா, யுத்,. 117 : 36.- எப்போது பெருமாள் முகம் வைக்க ஒண்ணாதபடி கொடியராய் இருந்தார்,அவ்வளவிலும் இவள் மறுவற்ற சந்திர மண்டலம் போலே முகத்தில் குளிர்ச்சி மாறாதே இருந்தாள்.-தீபோ நேத்ரா துரஸ்யேவ ப்ரதி கூலாஸி மே த்ருடம்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 118:17.-கண் நோய் கொண்டவனுக்கு விளக்குப் போன்று எனக்குப் பிரதிகூலமாய் இருக்கிறாய்; நிச்சயம்’ என்பது பெருமாள் திருவார்த்தை-‘வைதேஹீ சத்ரு ஹந்தாரம் மஹரிஷீணாம் ஸூகா வஹம் தம் பர்த்தாரம் திருஷ்ட்வா ஹ்ருஷ்டா பபூவ பரிஷஷ்வஜ-என்பது, ஸ்ரீராமா. ஆரண்ய, 30 : 40--பிராட்டி சத்ருக்களை ஹிம்ஸித்தவரும் பெரிய யோகிகளுக்கு ச்வக்யத்தைப் பண்ணுகிறவருமான அந்தப் பெருமாளைப் பார்த்துக் சந்தோசம் அடைந்தவளாக ஆனாள்-கணவனைத் தழுவிக் கொண்டாள்’-.
தஸ்ய உபவந ஷண்டேஷூ நாநா புஷ்ப ஸூகந்திஷூ
விஹ்ருத்ய ஸலிலக் லிந்நா தவாங்கே ஸமுபாவிஸம்’-என்பது, ஸ்ரீராமா, சுந். 38 : 14.-பலவித மலர்களினுடைய சிறந்த வாசனை நிறைந்த அந்தச் சித்திரகூட மலையில் பல உத்தியானங்களில் விளையாடி அதனால் வியர்வை யடைந்து வாட்டமுடையவளாய்த் தேவரீருடைய மடியில் படுத்துக் கொண்டேன்’ –
அஹம் புந;- ‘அஹம்புந: தேவகுமார ரூபம் அலங்க்ருதம் தம் ஸூதம் ஆவ்ரஜந்தம்
நந்தாமி பஸ்யந்நபி தர்ஸநேந பவாமி த்ருஷ்ட்வா ச புநர்யுவேவ’என்பது, ஸ்ரீராமா. அயோத். 12 : 105.-இது, கைகேகியைப் பார்த்துத் தசரத சக்கரவர்த்தி புலம்பிக் கூறுவது.-அஹம் புந–என் தன்மையை அறிந்து என் வழியே போந்த நீ, ‘பெருமாள் காடு ஏறப்போக’ என்றால்
நான் உயிர் வாழ்வேன் என்று சொன்னாயே!-தேவ குமார ரூபம் – அது கிடக்க; இவரையே நீ தான் ‘காடு ஏறப்போக’ என்கிறது?-இவர்க்கும் அவ்வளவேயோ?’ என்று சிறியத்தான் கேட்க, ‘கண்ணெச்சில் ஆம்’ என்று தரம் போராதாரை ஒப்பாகச் சொல்லி இருடி கரி பூசுகிறான் என்றார்.-அலங்க்ருதம் – அதனாலும் வெறும் புறங்காண் ஒரு போலிச் சொல்லலாவது! ஒப்பித்தால் ஒக்கச் சொல்லலாவார் இல்லை.-தம் ஸூதம் – இவனுக்கு இரண்டு படியும் உத்தேசியமாய் இருக்கிறபடி.-ஆ வ்ரஜந்தம் – மலர் மலரும்போது எங்கும் ஒக்கப் பிறக்கும் மலர்ச்சி போலே. அதுவும் வண்டினை நோக்கி அன்றோ மலர்வது? இவரும் அனுபவிக்கின்றவர்களைக் குறித்தே அன்றோ?-நந்தாமி பஸ்யந்நபி – கண்டபடியே இருக்கச் செய்தே, காணாது கண்டாரைப் போலேயாயிற்று,-நாடோறும் நாடோறும் கணந்தோறும் கணந்தோறும் உகக்கும்படி-தர்ஸநேந – அணைத்தல், வார்த்தை சொல்லுதல் செய்ய வேண்டா; காட்சியே அமையும்.கரை புரண்ட அனுபவம் உள்ள இடத்திற்போலே காணும் பிரயோஜனம்,‘ஸதாபஸ்யந்தி’ அன்றோ?-பவாமி த்ருஷ்ட்வாச புந: யுவேவ-அறுபதினாயிரம் ஆண்டு வயது நிறைந்து கிழவனான சக்கரவர்த்தி,பெருமாளைக் கண்ட பின்பு, பெருமாளுக்கும் தனக்கும் வாசி தெரியாதபடியானான்.’-வா போகு–வந்து ஒரு கால் கண்டு அருளி -ஏசல் கண்டு –‘காமனைப் பயந்த காளை’ என்னுமாறு போலே தன்னை அனுபவிப்பாரையும் தன்னைப் போலே ஆக்கி உஜ்ஜீவிப்பிக்கும் விஷயம் போலே காணும்.
‘மஹோத்ஸவமிவ ஆஸாத்ய புத்ராநந விலோகநம்
யுவேவ வஸூதேவ: அபூத் விஹாய அப்யாகதாம் ஜராம்’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 20 : 52.-ஸ்ரீவசுதேவர்’ பெரிய திருவிழாவை அடைந்தாற்போலே பிள்ளைகளின் திருமுகங்களைப் பார்ப்பதை அடைந்து, தமக்கு உண்டாய் இருந்த முதுமை நீங்கி யௌவனம் உடையவரானார்’ என்னும்படி ஆனாரே அன்றோ ஸ்ரீவசுதேவரும்?
‘ப்ராகேவ து மஹாபாக: ஸௌமித்ரி: மித்ராந்தந:
பூர்வஜஸ்ய அநுயாத்ரார்த்தே த்ருமசீரை: அலங்க்ருத:’- என்பது, ஸ்ரீராமா. சுந். 33 : 28. இது, திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.-‘புண்ணிய சீலரும் சிநேகிதர்களுக்குச் சந்தோஷத்தைச் செய்கிறவரும் சுமித்தரையின் புத்திரருமான இளைய பெருமாள்,
தமையனாருக்குப் பின்னே செல்லும் பொருட்டு முன்னரே மரவுரியினால் தம்மை அலங்கரித்துக் கொண்டார்’ என்கிறபடியே, போக்குக்குத் தகுதியாக முற்கோலி அலங்கரித்துக் கொண்டு நின்றார் அன்றோ?
அத ஹரி வர நாத: ப்ராப்ய ஸங்க்ராம கீர்த்திம்
நிஸி சர பதிம் ஆஜௌ யோஜ யித்வா ஸ்ரமேண,
ககந மதி விஸாலம் லங்கயித்வா அர்க்க ஸூநு:
ஹரிவர கண மத்யே ராமபார்ஸ்வம் ஜகாம.’– என்பது, ஸ்ரீராமா. யுத். 40:29-அத ஹரி வர நாத:-தம்மோடு ஒக்க வினை செய்ய வல்ல பேர் தனித்தனியே பலர் அன்றோ?-ப்ராப்ய ஸங்க்ராம கீர்த்திம் – இவர்களோடு கூடி நின்று ஒத்த போர் ஆக ஒண்ணாது,தூசித் தலையில் ஓர் ஏற்றம் செய்து தரம் பெற வேணும்,’ என்று இருந்தார்.பூசல் தலையிலே பெருமாளுக்கு உண்டான கீர்த்தியையும் தம் தலையிலே ஏறிட்டுக் கொண்டார்.நிசி சர பதிம் – அத் தலையிலும் அவனோடு ஒக்க வினை செய்ய வல்லார் பலர் அன்றோ?‘அவன் கீழ்த் திரியுமவர்கள் தரம் போரார்’ என்று அவனோடே பொருதபடி.ஆஜௌ-அவர்களைப் போலே வழி அல்லா வழியே இளைப்பிக்கை அன்றிக்கே, செவ்வைப் பூசல் செய்து இளைப்பித்தபடி.யோஜ யித்வா ஸ்ரமேண-இதற்கு முன்பு கூடாதது ஒன்றோடோ கூட்டினார்.ககந மதி விசாலம் லங்கயித்வா – பரப்பை யுடைத்தான ஆகாயத்தைத் திறலாலே வருத்தம் அறக் கடந்தார்.அர்க்க ஸூநு:- மீட்சியில் தம் வரவு தெரியாதபடி மீண்டார்.பிறப்புக்கு ஈடாகச் செய்தார். தன் நிலம் அன்றோ? சூரியன் ஓரிடத்தினின்றும் ஓரிடத்து ஏறப் போம் போது தெரியாது அன்றோ? ஹரி வர கண மத்யே-‘இவர்களில் ஒரு வேறுபாடு தோற்ற ஒண்ணாத’ என்று இவர்கள் நடுவே நின்றார்.ராம பார்ஸ்வம் ஜகாம – ‘தூசித் தலையிலே மதிக்க ஒரு வினை செய்தாரன்றோ முன்னிற்கப் பெறுவர்?’என்று பெருமாள் பக்கத்திலே வந்து நின்றார்.
‘ஸம்ஸ்ப்ருசந் ஆஸநம் ஸௌரே: விதுரஸ்ஸ மஹாமதி:’- என்பது, பாரதம், உத்யோக.-மஹாபுத்திமானான அந்த விதுரர் கண்ணனுடைய படுக்கையைத் தடவிப் பார்த்தார்,’
வாமநோ ரக்ஷது ஸதா பவந்தம் ய: க்ஷணாத் அபூத்
த்ரிவிக்ரம: க்ரமாக்ராந்த த்ரைலோக்ய: ஸ்புரதாயுத:’– என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 5.:17-‘மூன்று அடிகளால் முறையே மூன்று உலகங்களையும் ஒரு கண நேரத்திற்குள் ஆக்கிரமித்தவராய் விளங்குகிற திவ்விய ஆயுதங்களையுடையவராய் எந்தத் திரிவிக்கிரமனாக ஆனானோ அந்த வாமனன் உன்னை எப்போதும் காக்கக் கடவன
தேவா ஸ்வஸ் தாநம் ஆயந்தி தைய்த்த தாநவா நிஹதா கிஞ்சித் பயம் ந வித்யதே பகவதா ஜகத் ஜிதம் -தவர்கள் தங்கள் இருப்பிடத்துக்குச் செல்கிறார்கள் -அசுரர்கள் கொல்லப்பட்டார்கள் -கொஞ்சமேனும் பயமே இல்லை -பகவானால் இவ்வுலகம் ஜெயிக்கப்பட்டது -இது, திருவுலகு அளந்தருளின போது ஜாம்பவான் மஹாராஜர் பறையறைந்தபடியாம்.-தனக்கு ஆக்கிக் கொண்ட செயல் அன்றோ?
‘ப்ராகேவ து மஹாபாக: ஸௌமித்ரி: மித்ராந்தந:
பூர்வஜஸ்ய அநுயாத்ரார்த்தே த்ருமசீரை: அலங்க்ருத:’- என்பது,ஸ்ரீராமா. சுந். 33 : 28. இது, திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது-புண்ணிய சீலரும் சிநேகிதர்களுக்குச் சந்தோஷத்தைச் செய்கிறவரும் சுமித்தரையின் புத்திரருமான இளைய பெருமாள்,
தமையனாருக்குப் பின்னே செல்லும் பொருட்டு முன்னரே மரவுரியினால் தம்மை அலங்கரித்துக் கொண்டார்’ என்கிறபடியே, போக்குக்குத் தகுதியாக முற்கோலி அலங்கரித்துக் கொண்டு நின்றார் அன்றோ?
நஅஹ: நராத்ரி: நநப; நபூமி; நஆஸீத்தம; ஜோதி: அபூத்நச அந்யத்
ஸ்ரோத்ராதிபுத்யா அநுப லப்தம்ஏகம் ப்ராதாநிகம் பிரஹ்ம புமாந்ததா ஆஸீத்’–என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா, 1. 2 : 25. இது, மஹா பிரளயத்துக்குப் பிராமணம்.-அக்காலத்தில் பகல் இல்லை; இரவு இல்லை; ஆகாயம் இல்லை; பூமி இல்லை; இருள் இல்லை: சூரிய சந்திரர்கள் இல்லை; வேறு ஒன்றும் இல்லை; பிரஹ்மம் ஒன்றே சமஷ்டி புருஷரூபமாய் இருந்தது,’
ஸபிரஹ்மா ஸஸிவ: ஸேந்த்ர;’ என்பது நாராயண ஸூக்தம்.-அவன் பிரமன்; அவன் சிவன், அவன் இந்திரன்,’ என்று ஒரு கோவையிலே எண்ணலாம்படி இருக்கிறவர்கள்
‘மாம்’ என்று தொடங்கி. ‘கையும் உழவு கோலும், பிடித்த சிறு வாய்க் கயிறும்.
ஸேநா தூளி தூசரிதமான திருக் குழலும், தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளுமாய் நிற்கிற சாரத்ய வேஷத்தை ‘மாம்’ என்று காட்டுகிறான்’என்பது, முமுக்ஷூப்படி சரம ஸ்லோக ப்ரகரணம், சூ. 33.
உத்தரே தாத்மநாத்மாநம் நாத்மாநம வஸாதயேத்—
ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்துராத்மைவ ரிபுராத்மந—৷৷6.5৷৷-விஷயத்தில் பற்று அற்ற மனத்தினால் தன்னை உயர்த்தக் கடவன் – தன்னைக் கீழே தள்ளக் கடவன் அல்லன் –
விஷயப் பற்று அற்ற மனமே தனக்கு உறவினனாய் இருப்பதாகும் – விஷயப் பற்று உள்ள மனமே தனக்கு எதிரியாய் இருப்பதாகும்-எட்டு இடங்களில் ஆத்ம பத பிரயோகம் -இந்த ஸ்லோகத்தில் -நான்கு இடங்களில் மனத்தையும் நான்கு இடங்களில் தன்னையும் சொல்லும்
ஆபூர்யமாணம சல ப்ரதிஷ்டம் -ஸமுத்ரமாப ப்ரவிஸந்தி யத்வத்.–
தத்வத் காமா யம் ப்ரவிஸந்தி ஸர்வே-ஸ ஸாந்திமாப்நோதி ந காமகாமீ—৷৷2.70৷৷எப்படி தானே நிறைந்து இருப்பதாய் ஒரே நிலையில் உள்ள கடலை நதி நீர் அடைகின்றனவோ
அப்படியே சப்தாதி விஷயங்கள் அனைத்தும் இந்திரியங்களை அடக்கிய எவனை அடைகின்றனவோ அவனே சாந்தியை அடைகிறான் -சப்தாதி விஷயங்களை விரும்புவான் சாந்தி அடைவது இல்லை-
சிதா தூமாகுல பதா க்ருத்ர மண்டல ஸங்குலா
அசிரேணைவ லங்கா இயம் ஸ்ஸஸாந ஸத்ருஸூ பவேத்’என்பது, ஸ்ரீராமா, சுந். 26 : 26.-இந்த லங்கை பிணத்தின் புகையால் நிறைந்த வழியுடையதும் கழுகுக் கூட்டத்தினால் வியாபிக்கப் பட்டவனும் சீக்கிரமாகத் தானே சுடுகாட்டுக்கு ஒப்பாக’ என்று சொன்னபடியே, -சாம்பலாகும்படியாக —
‘நபிபேதி குதஸ்சந;’ என்பது, தைத். உப. ஆநந்’.-சர்வேஸ்வரனைப் பற்றி ‘எதினின்றும் அஞ்சுகிறான் அல்லன்’ என்று இருப்பாரைப் போன்று எண்ணினான்
ஸா ஜிஹ்வா யாஹரிம் ஸ்தௌதி தத்சித்தம் யத்ததர்பிதம்
தாவேவ ச கரௌ ஸ்லாக்யௌ யௌ தத் பூஜா கரௌ கரௌ’-என்பது, ஸ்ரீவிஷ்ணு தர்மம்-எந்தக் கைகள் அந்தப் பகவானைப் பூஜிக்கின்றனவோ அவை தாம் கைகள்-விசித்ரா தேஹஸம்பத்தி: ஈஸ்வராய நிவேதிதும்’ என்பது, ஸ்ரீவிஷ்ணு தர்மம்-சர்வேஸ்வரனை வணங்கும் பொருட்டு விசித்திரமான இந்தச் சரீரமானது படைக்கப்பட்டது’
‘கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ’- ‘‘க்ருஷ்ண க்ருஷ்ண மஹாபாஹோ ஜாநேத்வாம் புருஷோத்தமம் பரேஸம் பரமாத்மாநம் அநாதி நிதனம் பரம்’–என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 33-தேவரை உள்ளபடி அறியாதே அம்பை விட்டுக் கொண்டு நின்ற நிலையைக் கண்டு‘இதர ஸஜாதீயனோ!’ என்று இருந்தேன்;‘கழுத்திலே கயிறு இட்ட பின்பு காண் நான் பூனை என்று அறிந்தேன்’ என்பாரைப் போலே :-தோள் வலி கண்ட பின்பு உன்னைச் சர்வேஸ்வரன் என்று அறிந்தேன்’
‘ஸதேவ ஸோம்ய இதமக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்’-என்பது, சாந்தோக்யம். 6. 2 : 1.-பஹூஸ்யாம்’ என்பது, சாந்தோ. 6. 2:3.-நாம ரூபங்களை -‘பெயர் வடிவங்களை இழத்து,
‘‘சத் ஒன்றே’ இருந்தது என்கிற நிலையில்‘பல பொருள்கள் ஆகக் கடவேன்’ என்று நினைத்த அன்று முதல்
‘இது தான் ‘குலந்தரும்’ என்கிறபடியே எல்லா அபேக்ஷிதங்களையும் கொடுக்கும்’;
‘ஐஸ்வர்ய கைவல்ய பகவல் லாபங்களை ஆசைப் பட்டவர்களுக்கு அவற்றைக் கொடுக்கும்’;
‘கர்ம ஞான பத்திகளிலே இழிந்தவர்களுக்கு விரோதியைப் போக்கி அவற்றைத் தலைக் கட்டிக் கொடுக்கும்’;‘பிரபத்தியிலே இழிந்தவர்களுக்கு ஸ்வரூப ஞானத்தைப் பிறப்பித்துக் கால க்ஷேபத்துக்கும் போகத்துக்கும் ஹேதுவாயிருக்கும்’(முமுக்ஷூப்படி. திருமந்திரம். சூ. 18-21.)
‘யத்ர ஸூக்தம் துருக்தம் வாஸமம் ஸ்யாத் மதுசூதந
ந தத்ர ப்ரல்பேத் ப்ராஜ்ஞ: பதிரேஷ்விவ நாயக:’-என்பது, பாரதம், உத்யோகபர். 95.( விதுரர் வாக்கியம் )-மதுசூதனரே! எந்த இடத்திலே நல்ல வார்த்தையும் கெட்ட வார்த்தையும் வாசி இல்லாமல் ஆகின்றதோ, அங்குத் தெரிந்தவன் ஒன்றும் பேசக்கூடாது,’ என்பதே அன்றோ பிரமாணம்?
அபவர்கே ஹிரண்ய நிதிம் நிதாய உபரி சஞ்சரந்த யதா ந த்ரஷ்யந்தி -முற்றத்திலே தங்கநிதி புதைந்திருக்க அதன் மேல் கால் வாங்கும்படி நடவா நிற்கிறவர்கள் எப்படிப் பார்க்க வில்லையோ இச் செல்வம் தங்களுக்காக இருக்கச் சம்சாரிகள் புறம்பே போது போக்குவதே!’ என்று ஆச்சரியப்படுகிறார்.
லோகே ஸத்புருஷ ஸத்ய தர்ம பாரயண ராம தர்மஸ் ச ஸ்ரியாபி ஸஹ ஸாஷாத் ராமாத் விநிர்வ்ருத்த -உலகத்தில் ஸத்புருஷரும் சத்யத்திலும் தர்மத்திலும் நிலை நின்றவரும் பெருமாளே தர்மமும் லஷ்மியுடன் சாஷாத் ராமனிடத்திலிருந்து பிறந்தது
ஞாதி தாஸீ யதோ ஜாதா கைகேய்யா சஹோஷிதா து சந்திர ப்ரகாஸம் ப்ரஸாதம் யாதிருச்சியா ஆரூரோஹ -அயோத்யா -9-1-
கைகேயியின் பந்துக்களுக்கு வேலைக்காரியும் -எங்கேயோ பிறந்தவளும் கைகேயி உடன் கூட வஸிப்பவளும் மந்த்ரம் என்பவள் சந்திரனுக்கு ஒப்பான உப்பரிகையில் மேல் தன்னிஷ்டப்படி ஏறினாள்-இந்த அயோத்தியிலே பிறந்தாளாகில் பெருமாளுக்கு விரோதம் செய்யாள் ஆகையாலே,எங்கேனும் ஓரிடத்தே பிறந்தாள்- ஒரு விழுந்தான் கிடக்கை’ என்றது.-‘யத: குதஸ்சித்ஜாதா – யாதாம் ஓரிடத்தில் பிறந்தாள்’ என்று வியாக்கியானம் செய்தான் உடாலி.‘இந்த நிலத்திற்பிறவாமை இவளுக்குக் கொடுமை விளைந்தது,’ என்கிறான் அன்றோ
ராகவார்த்தே பராக்ராந்தா ந ப்ராணே தயாம் குருதே -ராகவனுக்காக பராக்ரமித்துக் கொண்டிருக்கும் சேனையானது ப்ராணனிடத்தில் தஸ்யைவ வைப்பதில்லை-பிராணன்கள் பழைமையாலே பல் காட்ட, உடையவரும்(ஸ்வாமியான ராமனும் ) நீங்களும் ஒரு தலையானால் உங்களைக் கைக் கொள்ளப் போமோ என்றார்களே அன்றோ?-ஆர்த்தோவா யதிவா த்ருப்த: பரேஷாம் ஸரணாகத;
ஹரி; ப்ரணாந் பரித்யஜ்ய ரக்ஷிதவ்ய: க்ருகாத்மநா’என்பது, ஸ்ரீராமா. உத். 18 : 18.
அபரா வர்த்தி நாம் பூமி ப்ரதாயி நாம் யாசயாச மயா த்வம் அநுத்தமாந் லோகாந் கச்ச-ஆரண் -68-30-முக்தர்களுக்கும் பூ தானம் செய்தவர்களுக்கும் எந்த எந்த உலகங்கள் உண்டோ என்னாலே உத்தரவு கொடுக்கப் பட்டவராய் நீர் அந்தப் உத்தம லோகங்களுக்கு நடவும்
ஸம் ஜ்ஞாயதே யேந தத் அஸ்த தோஷம் ஸூத்தம் பரம் நிர்மலம் ஏக ரூபம்
ஸம் த்ருஷ்யதே வாப் யதிகம்யதே வா தத் ஜ்ஞாநம் அஜ்ஞாநம் அத: அந்யத் உக்தம்’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 6. 5 : 84-அந்த ஞானந்தான் ஞானம் என்று சொல்லத் தக்கது; ஆகையால், மேற்கூறிய ஞானத்திற்கு வேறானது அஞ்ஞானம் என்று சொல்லப்பட்டது’ -தது அந்த ப்ரஹ்மம் -அறியப் படுகிறதோ பார்க்கப் படுகிறதோ அடையப் படுகிறதோ ததேவ ஞானம் –ஸ்ரவண நினைக்க கேட்க -சந்த்ருஷ்யதே கண்ணால் பார்ப்பது -ஸம் ஞாயதே -ஞான தரிசன பிராப்தி அவஸ்தைகள்-பகவானை அடைவதற்கு உடலான ஞானம் ஞானமாகிறது; அல்லாதது அஞ்ஞானம் என்னக் கடவது அன்றோ-
ப்ரியவாதீச பூதாநாம் ஸத்ய வாதீச ராகவ:
பஹூ ஸ்ருதாநாம் வ்ருத்தாநாம் ப்ராஹ்மணாநாம் உபாஹிதா;-என்பது, ஸ்ரீராமா. அயோத். 2. 32.ப்ரிய வாதீச ராகவ – பெருமாள் ஒன்றை அருளிச் செய்தால் அது செவிப்படாது ஒழியில் செய்யலாவது இல்லை;-செவிப்படில் இனியதாய் அன்றி இராது. ‘யார்க்கு?’ என்றால்,
பூதா நாம் – சத்தை யுடையனவான எல்லாப் பொருள்களுக்கும்: அசத்துக்கு வேறுபட்ட தன்மை மாத்திரமே வேண்டுவது.‘நன்று; அப்போது பிரியமாய்ப் பயன் கொடுக்குமிடத்தில் வேறு ஒரு பலனைக் கொடுக்குமோ?’ என்னில்,– ஸத்ய வாதீச ராகவ – அருளிச் செய்யுமது தான் ஆத்மாக்களுக்கு ஹிதமாய் அன்றி இராது என்கிறது. சத்யம் பூத ஹிதம் ப்ரோக்தம்
ஒரு வார்த்தையே இரண்டு ஆகா நின்றால் அல்லாதனவற்றிற்கு – ஸ்வரூபம் ரூபம் குணம் இத்யாதிகள் சொல்ல வேண்டா அன்றோ?‘ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாம் அபவந் கதா;
ராம பூதம் ஜகத்அபூத் ராமே ராஜ்யம் ப்ரஸாஸதி’-என்பது, ஸ்ரீராமா. யுத். 131 : 97-ராம: ஸத் புருஷோ லோகே ஸத்ய தர்ம பராயண: ஸாக்ஷாத் ராமாத் விநிர் வ்ருத்த: தர்மஸ்சாபி ஸ்ரியாஸஹ’-என்பது, ஸ்ரீராமா. அயோத். 2 : 29.-நேரான ஐஸ்வரியத்தோடு கூட நேரான தர்மமும் ஸ்ரீராம பிரானிடத்தினின்றும் உண்டாயிற்று’-‘ஸ்நேஹோ மே பரமோ ராஜந் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித: பக்திஸ்ச நியதா வீர பாவோ ந அந்யத்ர கச்சதி’-என்பது, ஸ்ரீராமா. உத். 40 : 16. இது திருவடி கூற்று.-ஸ்நேஹ: மே பரம:- எழுந்தருளுகிற போது ‘என் வழியே போந்தாலோ?’ என்ன, ‘அவ்வளவு அன்று காணும் எனக்குச் சிநேகம்’, என்கிறான்.
‘என்றன் அளவு அன்றால் யானுடைய அன்பு’-(இரண்டாம் 100 )என்றும்,
‘உயிரின் பரமன்றிப் பெருகுமால் வேட்கையும்’–(9-6-1-) என்றும் சொல்லுமாறு போலே-ராஜந் த்வயி-இது தானும் என்னால் வந்தது அன்று.-‘ரஞ்ஜயதீதி ராஜா’ ஆகையாலே.-நித்யம் ப்ரிதிஷ்டித; –‘இப்போது ஒண்ணாதாகில், மற்றொரு போது கொள்ளுகிறோம்’, என்றால், அது செய்ய ஒண்ணாது,-தர்மியைப் பற்றிக் கிடப்பது ஒன்று ஆகையாலே .-பக்திஸ்ச நியதா –பெருமாளை ஒழியச் செல்லாமை பிறந்து பிரிவில் முடிந்த சக்கரவர்த்தியின் நிலை சினேகம்;-பத்தியாவது, ‘நில்’ என்ன, ‘குருஷ்வ – கொள்க’ என்னும் படியாய், முறை அறிந்து பற்றின இளைய பெருமாள் நிலை.-வீர –உம்முடைய வீரம் கொண்டு புறம்பே வென்றீர் என்னா, இங்கும் வெல்ல முடியாது.-தானும் அவன் ஆகையாலே ( நீயும் வீரன் நானும் வீரன் )தோற்பித்த துறையைப் பிடித்துச் சொல்லுகிறான்,-பாவோ ந அந்யத்ர கச்சதி –என்னை மீட்டீராகிலும் என்னுடைய நெஞ்சினை மீட்கப் போகாது,-‘என்னுடை நல் நெஞ்சந்தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி’ திருவாய். 1. 7 : 8.என்னுமாறு போலே.-‘சர்வ சக்தியான அவனாலும் மீட்கப் போகாது,’ என்கை.-கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணோவே’ என்னுமாறு போலே, ‘அந்யத்ர ந கச்சதி’ என்கிறது.-அந்யத்ர’ என்கிறது,-போகிற இடத்தின் பேரும் சொல்லுகை பொறாதபடி;
‘விஷயே தே மஹாராஜ ராமவ்யஸந கர்ஸிதா;
அபிவ்ருக்ஷா; பரிம்லாநா; ஸபுஷ்பாங்குர கோரகா;-என்பது, ஸ்ரீராமா. அயோத். 59 : 4.-கழுத்தளவு நீரிலே நிற்கிற மரங்கள் அன்றோ வாடி நின்றன,-உபதப்த உதகாநத்ய; பல்பலாநி ஸராம்ஹிச பரிஸூஷ்க பலாஸாதி வநாநி உபவநாநிச’-என்பது, ஸ்ரீராமா. அயோத். 59 : 5.-உப தப்தஉதகா நத்ய: – நீரோடு, அந்நீரில் விழுகிறாரோடு வாசி அற்றபடி.
உபதப்தமாகையாவது, கரையரும் கிட்ட ஒண்ணாதபடியாய் இருக்கை.
பல்வலாநி ஸராம்ஸிச – இதில், சிறுமை பெருமை என்று ஒரு வாசி இல்லை,
‘வனம் என்ன உபவனம் என்ன’ என்பது போலே.
‘பவித்ரம் பரமம் புண்யம் தேஸோயம் ஸர்வ காமதுக்’ என்பது, கருடபுராணம், 11.
இக்ஷ்வாகூணாம் இயம்பூமி; ஸஸைலவநநாநநா
ம்ருக பக்ஷி மநுஷ்யாணாம் நிக்ரஹ ப்ரக்ரஹாவபி’-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 18 : 6. இது வாலியைப் பார்த்து ஸ்ரீராமபிரான் கூறியது.-மலைகளும் வனங்களும் காடுகளும் ஆகிய இவற்றோடு கூடிய இந்தப் பூமி இட்சுவாகு குலத்து அரசர்களைச் சேர்ந்தது
விகித: ஸஹி தர்மஜ்ஞ: ஸரணாகத வத்ஸல:’ என்பது, ஸ்ரீராமா. சுந். 21 : 20. இஃது இராவணனைப் பார்த்துப் பிராட்டி கூறியது.-இராவணா!! பெருமாளுடைய குணங்கள் கேட்டு அறியாயோ?’ என்றாள் அன்றோ?
‘பவாந் நாராயணோ தேவ; ஸ்ரீமான் சக்ராயுதோ விபு:-என்பது, ஸ்ரீராமா. யுத். 120 : 13.-பிரமன் முதலான தேவர்களும், ‘நீவிர் நாராயணரான தேவர் ஆவீர்’ என்றார்களே அன்றோ?
‘ஸ்ருஷ்ட ஸ்தவம் வநவாஸாய’ என்பது, ஸ்ரீராமா. அயோத். 40 : 5. இஃது இளைய பெருமாளைப் பார்த்துச் சுமத்திரா தேவி கூறியது.-பிறந்தவர் ஆள் அன்றி ஆவரோ –
‘நீ காட்டில் வசிப்பதற்காகவே தோற்றுவிக்கப்பட்டாய்’-
ஸஹிதேவை: உதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி;
அர்த்திதோ மாநுஷே லோகே ஜஜ்ஞே விஷ்ணு: ஸநாதந;’-என்பது, ஸ்ரீராமா அயோத். 1 : 7-செருக்கனான இராவணனுடைய வதத்தைப் பிரார்த்திக்கிற தேவர்களால் பிரார்த்திக்கப்பட்டவரும் நித்தியருமான விஷ்ணு மனித உலகத்திலே அவதரித்தார்; இது பிரசித்தம்-‘கர்மங் காரணமான பிறவி இல்லை’ என்று பிரமாண பிரசித்தனானவன் கண்டீர்
கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்கட்கும் இவ்வருகாய் வந்து பிறந்தான்’ என்றபடி.-இப்படிப் பிறப்பதற்குக் காரணம் என்?’ என்னில்,அர்த்தித:’ என்கிறது, அவர்கள் இரந்ததற்காக என்றபடி. இரப்பு தான் இச்சையும் பிறப்பிக்குமே அன்றோ? ‘இச்சையாலே மேற்கொள்ளப்பட்டது’ அன்றோ?-‘இச்சா க்ருஹீத அபிமதோருதேஹ;
ஸம்ஸாதிக அஸேஷ ஜகத்தித: ய;’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 6. 5 : 84-உதீர்ணஸ்ய ராவணஸ்ய –அச்சத்தை உண்டாக்குகின்றவனான பையல், தானே வர பலத்தாலே அழியச் செய்யவேண்டும்படி விஞ்சினவாறு-வத அர்த்திபி:- தாங்கள் பட்ட நலிவாலே திருவுள்ளத்துக்குப் பொருந்தாதனவற்றையும் விண்ணப்பம் செய்தார்கள்.
‘ஒருவனை அழியச் செய்ய ஒரு நாடாகப் பிழைக்குமாதில் ஆகாதோ?’ என்று அழியச் செய்தானைத்தனை.-அர்த்தித:- தன்னுடையச் சோதிக்கு எழுந்தருளுந்தனையும் திருவுள்ளத்திற் பட்டுக் கிடந்து இதுவே அர்த்தித:– உபாசித்தவர் அல்லர்.
‘ததஸ்ச த்வாதஸே மாஸே சைத்ரே நாவமிகே திதௌ’-என்பது, ஸ்ரீராமா. பால. 18 : 10.
பன்னிரு மாதம் மணி வயிறு வாய்த்தவனே-‘‘ஜாதோஹம் யத்தவோதராத்’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 3 : 14.-நான் உன்னுடைய உதரத்தினின்றும் உண்டானேன்’
ததிதம் ந: க்ருதம் கார்யம் த்வயா தர்மப்ருதாம்வர
நிஹதோ ராவணோ ராம ப்ரஹ்ருஷ்சடா திவமாக்ரம’-என்பது, ஸ்ரீராமா. யுத். 120 : 29.-தருமத்தைத் தாங்குகிறவர்களுக்குள் சிறந்தவரே! எங்களுடைய இந்தக் காரியம் தேவரீரால் செய்யப்பட்டது;-இராமரே! இராவணன் கொல்லப்பட்டான்; மகிழ்ச்சியுடையவராய் வைகுண்டத்திற்குச் செல்லும்’
‘ஷடர்த்த நயந: ஸ்ரீமந் மஹாதேவோ வ்ருஷத்வஜ;’-என்பது, ஸ்ரீராமா. யுத். 120 : 3.-அவ்வளவிலே சிவன், ‘நாடு அடையத் தேவரீருடைய பிரிவினாலே அழிந்ததைப் போன்று கிடக்கின்றது;-திருத்தாய்மாரையும் திருத்தம்பிமாரையும் திருப்படை வீட்டிலுள்ள சனங்களையும், மீண்டு புக்குச் சில நாள் எழுந்தருளியிருந்து ஈரக்கையாலே தடவிப் பாதுகாத்து எழுந்தருள வேணும்,’ என்ன,கடல் ஞாலத்து அளி மிக்கான்’ திருவாய்.. 4. 8 : 5.என்னும்படியே, பதினோராயிரம் ஆண்டு எழுந்தருளியிருந்துபாதுகாத்த படியைச் சொல்லுகிறது ‘நாட்டை அளித்து’ என்று.இதற்காக அன்றோ முக் கண்ணனை, ‘ஷடர்த்தநயந: ஸ்ரீமாந் – முக்கண்ணனான ஸ்ரீமாந்’ என்றது? இல்லையாகில், பிக்ஷூகனை ‘ஸ்ரீமாந்’ என்ன விரகு இல்லை அன்றோ
‘திர்யக்யோகிநிகதாஸ்சாபி ஸர்வே ராமம் அநுவ்ரதா:’என்பது, ஸ்ரீராமா. உத்தர காண். 109 : 22.-விலங்கினங்கள் அனைத்தும் இராமனைப் பின் தொடர்ந்தன’
பாதேயம் புண்டரீகாக்ஷ நாம ஸங்கீர்த்தநாம்ருதம்’என்பது, ஜிதந்தா.-தாமரைக் கண்ணனுடைய திருநாம சங்கீர்த்தன அமிருதமே அன்றோ பாதேயம்?
‘ராம: கமல பத்ராக்ஷ: ஸர்வ ஸத்வ மநோஹர: ரூப தாக்ஷிண்ய ஸம்பந்ந: ப்ரஸூதோ ஜநகாத்மஜே’–என்பது, ஸ்ரீராமா. சுந். 35 : 8. இது பிராட்டியைப் பார்த்துத் திருவடி கூறியது.-இராமர் தாமரை மலர் போன்ற கண்களை யுடையவர்’ என்னப்படுவதன்றோ?
பலிபுஜி சிசுபாலே தாத்ருக் ஆகஸ்கரே வா
குண லவ ஸஹ வாஸாத் த்வத் ஷமா சங்கு சந்தீ
மயி குண பரமாணு உதந்த சிந்தா அநபிஜ்ஜே
விஹரது வரத அசவ் ஸர்வதா ஸார்வ பவ்மீ–2-97-வாசா மகோசரமான அபராதங்களைச் செய்த காகாசூரன் இடத்திலும் சிசுபாலன் இடத்திலும் ஸ்வல்ப குணமும் கூட இருந்ததனால் சங்கோசம் உடையதான இந்த தேவரீருடைய பொறுமையானது சத் குண லவலேச பிரசக்தியும் அற்ற அடியேன் திறத்தில்எப்போதும் செங்கோல் செலுத்திக் கொண்டு விளையாடட்டும் தேவரீருடைய ஷமா குணம் அடியேன் திறத்திலே தானே நன்கு வீறு பெரும் –நைச்ய அனுசந்தான காஷ்டை இருக்கும் படி –
,‘வ்யாதிதாஸ்ய: மஹா ரௌத்ர: ஸ. அஸூர: க்ருஷ்ண பாஹூநா
நிபபாத த்விதாபூத: வைத்யுதேந யதா த்ரும:’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 16 : 14.நன்றாகத் திறந்து வாயை யுடைவனும் மஹா பயங்கரமானவனுமான அந்தக் கேசி என்னும் அசுரன்
இடியேறு உண்ட மரம் போன்று கிருஷ்ணனுடைய திருக் கரத்தால் இரண்டாகச் செய்யப்பட்டவனாய்க் கீழே விழுந்தான்,-இந்த ஸ்லோகத்தில், பாஹூப்யாம் என்னாமல்
‘பாஹூநா’ என்றதற்கும், ‘த்விதாபூத;’ என்றதற்கும் கருத்து அருளிச் செய்கிறார்,-கேசியானவன் வாயை அங்காந்து கொண்டு கண்டார் எல்லாரும் நடுங்கும்படி வந்து தோற்ற, இளைஞராய் இருப்பார் துவாரம் கண்ட இடத்தே கை நீட்டக் கடவர்களாய் இருப்பார்கள் அன்றோ? அந்த வாசனையாலே இவன் வாய்க்குள்ளே கையை நீட்ட, புதிதான அனுபவத்தால் கை விம்ம வளர்ந்து கொடுத்தது; அப்போதோ இடியேறு உண்ட மரம் போலே இரு பிளவாய் விழுந்தான்.
‘பரமம் ஸாம்யம் உபைதி’ என்பது, முண்டகோபநிடதம், 3. 1 : 3.-பிரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி’ என்பது, முண்டகோபநிடதம், 3 : 2.-பரம் பொருளை அறிந்தவன் பரம் பொருள் போன்று ஆகிறான்,’ என்றும், மேலான ஒப்புமையைப் பெறுகின்றான்’-ப்ரஹ்மைவ’ என்றவிடத்தில் ஏவகாரம், ‘விஷ்ணுரேவ பூத்வா’ என்ற இடத்திற்போன்று, ‘ஸாம்யம் உபைதி’ என்பது போன்ற வசனங்கட்குத் தகுதியாக, ‘இவ’ என்ற சொல்லின் பொருளைக் காட்டுகிறது.-ஜகத் வியாபார வர்ஜம்,’-‘போக மாத்ர ஸாம்ய லிங்காச் ச’-என்பன, பிரஹ்ம மீமாம்சை
சாயுஜ்யமாகிறது, ‘அவனோடு ஒன்றாம்’ என்கிறது அன்று; அவன் திருவடிகளிலே கைங்கரியம்-‘-ஸாயுஜ்யம் ப்ரதிபந்நா யே தீவ்ர பக்தா: தபஸ்விந: கிங்கரா மம தே நித்யம் பவந்தி நிருபத்ரவா;-யாவர் மிக்க பத்தியை யுடையவர்களாய் உபாசனை செய்கிறவர்களாய்ச் சமானமான உயர்ந்த ஜீவனத்தை அடைந்தார்களோ,
அவர்கள் விரோதி கழிந்தவர்களாய் எப்பொழுதும் என்னுடைய தொண்டர்கள் ஆகிறார்கள்,’
காட்டில் வசிக்கும் பொருட்டே படைக்கப் பட்டாய்’ என்பது போலே.-0‘ஸ்ருஷ்டஸ்த்வம் வநவாஸாய’-என்பது, ஸ்ரீராமா. அயோத். 40 : 5.-இஃது இளைய பெருமாளைப் பார்த்துச் சுமித்திரா தேவி கூறியது.-காரணம் து த்யேய:’ என்பது, சுருதி.-அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா, ஜந்மாத் யஸ்ய யத:’என்பவை, பிரஹ்ம சூத்திரம். 1. 1 : 1, 2.-உலகத்திற்குக் காரணமாக வுள்ள பொருளே உபாசிக்கத் தக்கது என்று அறியுமவர்கள்’ –காரணப் பொருளே தியானம் செய்யத் தக்கது- ‘தண்ணீரையே முதலில் படைத்தான்’ என்கிறபடியே,
‘அப ஏவ ஸஸர்ஜ ஆதௌ’ என்பது, மநு ஸ்மிருதி, 1 : 8.-‘எவனுக்கு ஆத்துமாக்கள் எல்லாம் சரீரமோ,’ ‘எவனுக்கு மண் முதலியவை சரீரமோ’ என்கிறபடியே,-‘யஸ்ய ஆத்மா ஸரீரம்’ ‘யஸ்ய ப்ருதிவீ ஸரீரம்’என்பன, பிருஹதாரண்ய உபநிஷத்.-எவன் பிரமனை முன்பு படைத்தானோ’ என்பது சுருதி. ‘யோ ப்ரஹ்மாணப் விததாதி பூர்வம்’ என்பது, ஸ்வேதாஸ்வ. உப-ஒரு குழமணனைப் -மரப்பாச்சி பொம்மை -பண்ணி என்பாரைப் போலே
‘நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணி’ என்கிறார்.
இதி ப்ரஹ்மணோநாம ஈஸோஹம் ஸர்வ தேஹிநாம்
ஆவாம் தவ அங்கே ஸம்பூதௌ தஸ்மாத் கேஸவ நாமவாந்’-என்பது, பாரதம், ஹரிவம்ஸம், கைலாச யாத்திரை.-பிரமனும் ஈசனுமாகிய நாங்கள் இருவரும் தேவரீருடைய திருமேனியில் உண்டானோம்;-ஆதலால், கேசவன் என்ற பெயரை யுடையரானீர்,’ என்கிறபடியே யாதல்-ப்ரசஸ்த கேசம் -அடர்ந்து நீண்ட மயிர் முடியை யுடையவன் என்ற காரணத்தாலாதல் வந்தது.
விஷ்ணுவை அதிகனாக எண்ணினார்கள்’ என்கிறபடியே, ‘அதிகம் மேநிரே விஷ்ணும்’-என்பது, ஸ்ரீராமா. பால. 75 : 19.
கோ ஸஹஸ்ர ப்ராதாதாரம் உபதாய புஜம் மஹத்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 21:7.-ஆயிரக் கணக்கான பசுக்களைத் தானம் செய்ததான பருத்து நீண்ட கை’-தத்யாத் ந ப்ரதி க்ருஹ்ணீயாத்’-என்பது, ஸ்ரீராமா. சுந். 33 : 25.-சத்திய பராக்கிரமத்தை யுடையவரான பெருமாள் கொடுப்பார்; வாங்க மாட்டார்’
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரத்தி தே’-என்பது, ஸ்ரீ கீதை, 7 : 14.-என்னையே எவர்கள் சரணம் அடைகின்றார்களோ அவர்கள் இந்த மாயையினைத் தாண்டுகின்றார்கள்’ என்னக் கடவ அவன்,‘
உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஹிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்-நாராயணோ ந்ருஹிம்ஹஸ்து ஸக்திஸ்த்வம் அமரேஸ்வரி’-நாராயணனே நரசிங்கன்’ அமரேஸ்வர்யான நீ சத்தி’-இங்கு, ‘ஸக்தி’ என்றது, பிராட்டியை. அவளை ஒழிந்திருப்பது ஒரு போதும் இல்லை அன்றோ?
‘அர்ஜூநாங்க கதௌ பாதௌ கேஸவஸ்ய உபலக்ஷயே
அர்ஜூநஸ்ய து க்ருஷ்ணாயா: ஸூபாயா: ச அங்ககாவுபௌ’-என்பது, பாரதம், உத்யோக பர்.
கண்ணனுடைய திருவடிகள் அருச்சுனனுடைய மடியில் இருப்பதைப் பார்த்தேன்; அருச்சுனனுடைய கால்கள் கற்புக் கரசியாக திரௌபதியினுடைய மடியில் இருப்பதைப் பார்த்தேன்,’-‘பார்த்தம் ரதிநம் ஆத்மாநம் ச ஸாரதிம் ஸர்வ லோக ஸாக்ஷிகம் சகார’-என்பது, கீதா பாஷ்யம்.-அருச்சுனன் ரதியாகவும் தான் சாரதியாகவும் எல்லா உலகத்திலுள்ளவர் கண்களுக்கு இலக்கானான்’ –
க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா: ப்ருதுலோசந:
மோஹயித்வா ஜகத் ஸர்வம் கத: ஸ்வம் ஸ்தாநமுத்தமம்’-என்பது, பாரதம், மௌசல். பர்.-நீண்ட கண்களை யுடைய கண்ண பிரான் பூமியினுடைய பாரத்தைப் போக்கி உலகத்தை எல்லாம் மோஹிக்கச் செய்து மேலான தம் இருப்பிடத்தை அடைந்தார்’
‘ஸர்வ தர்மாத் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்ய; மோக்ஷயிஷ்யாமி மாஸூச:’-என்பது, ஸ்ரீ கீதை, 18 : 66.-மஹாபாரதம் எல்லாவற்றாலும் சொல்லிற்றாயிற்றது ஒரு வார்த்தை அன்றோ?
வார்த்தையாவது, பிரயோஜனத்தோடு கூடி இருப்பது அன்றோ?
‘என் ஒருவனையே சரணமாகப் பற்று,’ என்றதனை அன்றோ இங்கு வார்த்தை என்கிறது?
மேலே சொன்னவை அடங்கலும் கடல் போலே; அதில் அமிருதம் போலே இது.
இமாந் லோகாந் காமாந்நீ காமரூப்யநுஸசஞ்சரந்.’ தைத்திரீ. பிரு.
ஸ்த்திதோஸ்மி’ என்பது, ஸ்ரீ கீதை, 18 : 73.-கரிஷ்யே வசநம் தவ’ என்பது, ஸ்ரீ கீதை, 18 : 72.-‘உன்னுடைய வார்த்தையின்படி செய்கிறேன்-‘அருச்சுனன் தான் எம்பெருமானைப் பெற்றானோ,இல்லையோ?’ என்று நம்பிள்ளை சீயரைக் கேட்க,-உமக்கு அது கொண்டு காரியம் என்? இது சொன்னவன் எல்லார்க்கும் பொதுவானவனாகில்,-பகவானுடைய வார்த்தை என்னுமிடம் நிச்சயமாகில். தங்கள் தங்களுடைய கர்மங்கட்குத் தகுதியாகவும் ருசிக்குத் தகுதியாகவும் பெறுகிறார்கள்; பெற்றவர்களை ஆராய்ந்து பார்த்து அதனாலே அன்றே நாம் பற்றப் பார்க்கிறது?’ என்று அருளிச் செய்தார்.-சேர்ந்து குளிர்ந்த தண்ணீர் இருந்தால், அது குடித்துத் தாகம் கெட்டவனைக் கண்டு அன்றே தாகம் கொண்டவன் தண்ணீர் குடிப்பது?
ஸ்திதே மநஸி ஸூஸ்வஸ்தே சரீரே ஸதி யோநர:
தாதுஸாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வரூபஞ்ச மாமஜம்’
‘ததஸ்தம் ம்ரியமாணந்து காஷ்டபாஷாண ஸந்நிபம்
அஹம் ஸ்மராமி மித்பக்தம் நயாமி பரமாம் கதிம்’-என்பன, வராஹ சரமம்.’-என்பன, வராஹ சரமம்.
அநேக வர்ஷ ஸாஹஸ்ரோ வ்ருத்தஸ்த்வம் அஸி பார்த்திவ
ஸராமம் யுவராஜாநம் அபிஷிஞ்சஸ்வ பார்த்திவம்’-(ஸ்ரீராமா. அயோத். 2 : 21 .)-அறுபதினாயிரம் ஆண்டு ஒரு தலை மிதிக்க ஒரு தலை மேல் எழும்படியான இராச்சியத்தை வருந்தி ஒருபடி அடிப்படுத்தினோம்; இதனை ஒரு சிறு பிள்ளையின் தலையிலே வைத்தால் பொறுக்குமோ, போறாதோ?’ என்று விசாரித்து, இதனை உலகத்தோடே கூட்டிப் பார்ப்போம்’ என்று கோலி, அரசர்கள் எல்லாரையும் திரட்டி,‘நான் இங்ஙனே பெருமாளைத் திருமுடி சூட்டப் பாரா நின்றேன்: உங்களுக்கு இஷ்டமோ, இன்றோ?’ என்று கேட்க, உடனே, ‘கிழவா! போகாய்’ என்ன, கிழவா போகாய்’ என்றது-
இச்சா மோஹி மஹா பாஹூம் ரகுவீரம் மஹா பலம்
கஜேந மஹதா யாந்தம் ராமம் சத்ரா வ்ருதா நநம –அயோத்யா -2-22-இச்சா மோஹி -ஆசைப்படுகிறோம் அன்றோ-மஹா பாஹூம் -நீண்ட திருக் கைகளை யுடையராய்
ரகுவீரம்-ரகு குல ஸ்ரேஷ்டராய்-மஹா பலம் -பெரும் பலத்தை யுடையரான
கஜேந மஹதா -மஹதா கஜேந -பெரிய யானையின் மேலே
யாந்தம் -எழுந்து அருளுமவராயும்
ராமம் –ஸ்ரீ ராமனை
சத்ரா வ்ருதா நநம –குடையால் வெய்யில் படாதபடி மறைக்கப் பட்ட திரு முகத்தை யுடையவராயும்
இச்சா மோஹி –ஆசைப்படுகிறோம் அன்றோ –என்றதனைத் திருவுள்ளம் பற்றி.
கதம்நு மயி தர்மேண ப்ருதிவீம் அநுஸந்ஸதி
பவந்தோ த்ரஷ்டும் இச்சந்தி யுவராஜம் மமாத்மஐம்’-என்பது, ஸ்ரீராமா. அயோத். 2 : 25.நாம் ஒருப்பட்ட காரியம் நன்றாக விழுந்தது; அரசர்கள் கூட்டம் இப்படி விரையப் பெறுவதே!’ என்று அதிலே மிகுந்த உவகையனாய், அந்த உவகையை நெஞ்சிலே இட்டு வைத்து,
‘அதனை இவர்கள் வாயாலே சொல்லக் கேட்கலாகாதோ?’ என்று நினைத்து,-வாரீர்கோள்! அறுபதினாயிரம் ஆண்டு அரசைச் செலுத்துகிற இடத்து. இற்றைவரை எனக்கு என்று ஒரு சுகத்தைக் கோலாதே உங்கள் இரட்சணத்துக்கு ஆமவையே தேடிக்கொடு போந்த நான். ஒரு வார்த்தை சொன்னால்,‘இப்போது நீ இருந்தாயாகில் வீகம் என்? கிரமத்திலே செய்து கொள்ளுகிறோம்,’ என்னதல்:அன்றாகில், ‘உனக்குப் பிரியமாகில் அப்படிச் செய்யலாகாதோ?’ என்று ஒரு வார்த்தை சொல்லி ஆறியிருத்தல் செய்கை ஒழிய,
படுகொலைக்காரர் கையிலே அகப்பட்டார், ‘தப்ப வேணும்’ என்று பார்க்குமாறு போலே
நீங்கள் இங்ஙன் கூப்பிடுகைக்கு நான் செய்த குற்றம் என்?’ என்ன-‘‘தே தம் ஊசு: மஹாத்மாநம் பௌரஜாபதைஸ்ஸஹ பஹவோ ந்ருப கல்யாண குணா: புத்ரஸ்ய ஸந்தி தே’-என்பது, ஸ்ரீராமா. அயோத். 2 : 26.-‘ஓ அரசனே! உன் பிள்ளையான ஸ்ரீராமபிரானுக்கு மங்களகரமான குணங்கள் பல இருக்கின்றன-எதிரிகள் அம்பால் அழியப் பெற்றது இல்லை உன்னுடைய தேசம்; உன் மகனுடைய குணத்தாலே நாட்டைப் படுகொலைக் குத்தினாய் காண் நீ,’ என்றார்கள் ஆயிற்று. என்றது,-‘நாங்கள் குணங்களால் வெல்லப்பட்டவர்களாய் இவ்வார்த்தை சொன்னோமித்தனை அல்லது ஒரு காரியபுத்தியோடு
சொன்னோம் அல்லோங்காண்,’ என்றார்கள் என்றபடி.
ஜ்ஞாந விஜ்ஞான ஸம்பந்நோ நிதேஸே நிரத: பிது:
தாதுநாம் இவ ஸைலேந்த்ரோ குணாநாம் ஆகரோ மஹாந்’-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 15 : 21. தாதுக்களுக்கு இமயமலை போன்று குணங்களுக்குப் பிறப்பிடமாய் இருக்கின்றான்,
ஒருவராலும் அசைக்கக் கூடாத ஆற்றலை யுடையனாயும் இருக்கிறான்-தாதுக்களானவை ‘இன்ன மலையிற்பொன்’ என்றவாறே விலை போமாறு போலே, புறம்பே குணங்கள் சிலவற்றைக் கண்டால், பெருமாள் பக்கல் குணம்’ என்று இட்டாயிற்று அங்கு விலை போவது,-இவ் வடித்தில் குணம்’ என்றாயிற்றுப் புறம்பு விலை போவது;
உபா தத்தே சத்தா ஸ்திதி நியமந ஆத்யை சித் அசிதவ்
ஸ்வம் உத்திஸ்ய ஸ்ரீ மாந் இதி வததி வாக் ஓவ்பநிஷதீ
உபாய உபேயத்வ தத் இஹ தவ தத்வம் ந து குணவ்
அத த்வாம் ஸ்ரீ ரெங்கேசய சரணம் அவ்யாஜம் அபஜம்–87-ஸ்ரீ ரெங்கேசய-உபநிஷத்த்தில் உள்ள வாக்கானது என் சொல்கிறது என்றால் திரு மால் தன்னை நோக்கி தன்னை பலபாகியாக எண்ணிய படி சேதன அசேதனங்களை ஸ்ருஷடி ஸ்திதி நியமனம் முதலிய வியாபாரங்களால் ஸ்வீ கரிக்கிறான் என்று ஒதுகின்றன-அதனால் உபாயத்வமும் உபேயத்வமும் தேவரீருக்கு குணங்கள் அல்ல –இவை ஸ்வரூப நிரூபக தர்மங்கள் –நிரூபித்த ஸ்வரூப விசேஷணங்கள் அல்லவே –சத் சம்ப்ரதாயம் நிஷ்கர்ஷம் பண்ணி அருளுகிறார்–உபாயத்வமும் உபேயத்வமும் தேவரீருக்கு ஸ்வரூபங்களாக இருப்பதனால் தேவரீரை வியாஜ்யம் ஒன்றும் இன்றியே சரணம் புகுகிறேன் –
அவலோகந தாநேந பூயோ மாம் பாலய அவ்யய’-என்றது, ஸ்ரீவிஷ்ணு புரா. 16. 20 : -கடாட்சித்தைத் தருதலாலே மறுபடியும் என்னைக் காப்பாற்றி அருள வேண்டும்,’ ஸோபி ஏநம் த்வஜ வஜ்ராப்ஜ க்ருத சிஹ்நேந பாணிநா ஸம்ஸ்ப்ருஸ்ய ஆக்ருஷ்யச ப்ரீத்யா ஸூகாடம் பரிஷஸ்வஜே’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 18 : 2.-திருக்கையில் அடையாள மித்தனையும் இலச்சினைப்படி அவன் உடம்பிலே காணலாம்படி அவனைத் தீண்டி அவன் ஸ்பரிசத்தாலே செயல் அற்றவனாய் நிற்கையாலே கையைப் பிடித்து ஏறட்டு, பின்னை அணைக்கைக்கு இருவரைக் கண்டது இல்லை-பஸ் பர்ஸ அங்கம் ததா விஷ்ணு: பிஸாசஸ்ய அபி ஸர்வத:’
கரேண ம்ருதுநா தேவ: பாபந் நிர்மோசயந் ஹரி:’-என்பது, ஹரி வம்ஸம்.. 275 : 15.-மிருதுவான கைகளால் கண்டா கர்ணனுடைய சரீரத்தையும் கூட எல்லாவிடத்திலும் தொட்டருளினார்,’
‘பூர்ணே சதுர்த்தஸே வர்ஷே பஞ்சம்யாம்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 127 : 1.-பதினான்கு ஆண்டுகளும் முடிந்த பின் பஞ்சமி திதியில்’ என்று நாள்
‘அத்யர்க்காநல தீப்தம் தத் ஸ்தாநம் விஷ்ணோ: மஹாத்மந:
ஸ்வயைவ ப்ரபயா ராஜந் துஷ்ப்ரேக்ஷம் தேவதாநவை;’-என்பது, பாரதம், ஆரண்ய பர். 163.-ஸூரியன் அக்கினி ஆகிய இவர்களின் ஒளியைக் காட்டிலும் அதிகமாக விளங்குகிற,
மஹாத்துமாவான நாராயணனுடைய வைகுண்டம்’ என்று சொல்லப்படுகிற ஸ்ரீவைகுண்டத்தை இருப்பிடமாக வுடையையாய் இருக்கிற உன்னை, சரீரத்திலும் சரீரத்தோடு சம்பந்தப்பட்ட பொருள்களிலும் உண்டான சம்பந்தம் அற்று நெடுந்தூரம் வழி வந்து அதற்குத் தக்கதாய் இருப்பது ஒரு சரீரத்தை மேற்கொண்டு பரம பதத்தை அடைந்தால் அனுபவிக்க வேண்டி இருந்தது;
பரிஸ்ரமாத் பர்ஸூப்தா ச ராகவாங்கே அஸ்மிஅஹம் சிரம் பர்யாயேண ப்ரஸூப்தஸ்ச
மமஅங்கே பரதாக்ரஜ;’-என்பது, ஸ்ரீராமா, சுந். 38 : 20.-திருப்பாற் கடலிலே நீர் உறுத்தாதபடி திருவனந்தாழ்வானைப் படுக்கையாகக் கொண்டு, அதிலே பலப் பல வர்ணங்களாய் இருப்பது ஒரு மேல் விரியை விரித்தாற்போலே அவன் சாய்ந்தருள, மேல் எழுந்தருளி இருக்கமாயிற்றுப் பிராட்டி. நானும் மிக்க ஆயாசனத்தினால் பெருமாள் மடியில் தூங்கிக் கொண்டிருந்தேன்-
‘விஷ்ணு: ஆத்மா பகவத: பவஸ்ய அமிததேஜஸ;
தஸ்மாத் தநுர்ஜ்யா ஸமஸ்பர்ஸம் சவிஷேஹே மஹேஸ்வர;’-என்பது, பாரதம், கர்ண பர்வம்.
அத்யுத்கடை: புண்யாபாபை: இஹைவபலம் அஸ்நுதே
த்ரிபி: வர்ஷை: த்ரிபி: மாஸை: த்ரிபி: பக்ஷை: த்ரிபி: திநை:’-என்பது, தர்ம சாஸ்திரம்.-‘மிகக் கொடியனவான பாவங்கள், மிக உயர்ந்தனவான புண்ணியங்கள் ஆகிய இவற்றால் உண்டான பலன்களை இப் பிறப்பிலேயே மூன்று வருடங்களில் மூன்று மாதங்களில் மூன்று பக்ஷகளில் மூன்று நாள்களில் அனுபவிக்கிறான்’
கரிஷ்யே மைதிலீ ஹேதோ: அபிஸாசம் அராக்ஷஸம்’-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 64 : 66.-‘ஜனக ராஜன் திருமகள் காரணமாகப் பிசாச ஜாதி அற்றதாயும் அரக்கர் குலம் அற்றதாயும் செய்வேன்’
விபீஷணோ வா ஸூக்ரீவ யதிவா ராவண: ஸ்வயம்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 34.-அவனோடு சம்பந்தமுடையான் ஒருவன் வந்தானாகை அன்றிக்கே, அவன் தானே வரப் பெறுவது காண்’ என்று செவி சீப்பாய்ந்து இருந்தார் அன்றோ?
அநுஜ; ரநவணஸ்ய அஹம் தேநச அஸ்மி அவமாநித:
பவந்தம் ஸர்வ பூதாநாம் ஸரண்யம் ஸரணம் கத:’-என்பது, ஸ்ரீராமா யுத் 19 : 4.-‘நான் இராவணனுக்குப் பின் பிறந்தவன்’ என்று அவன் வர,-இவரும் ‘அவன் தம்பியே’ என்றாயிற்று அவனைக் கைக் கொண்டது.
‘ஆஸ்வாஸ்ய பரதம் தீநம் கௌஸல்யாம்ச யஸஸ்விநீம்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 122 : 4.- ‘வருந்தியிருக்கிற ஸ்ரீபரதாழ்வானையும் பெருமை பொருந்திய ஸ்ரீகௌஸல்யையாரையும் சமாதானம் செய்து’
இளைஞனே! (சிசுபாலனுக்கு) நித்திய ஸூரிகளோடு ஒத்த இன்பத்தை அளித்தவன் ஆனாய்’ என்னக் கடவதன்றோ?-முக்த ஸாயுஜ்யதோபூ:’ என்பது, ஸ்தோத்ர ரத்நம், 63.
கேஸேஷூ ஆக்ருஷ்ய விகளத் கிரீடம் அவநீதலே
ஸ கம்ஸம் பாதயாமாஸ தஸ்ய உபரி பபாத ச’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 20 : 84.-அந்தக் கண்ணபிரான், கிரீடம் கீழே விழும்படி மயிரைப் பிடித்து இழுத்துப் பூமியிலே தள்ளினார்-இராஜத் துரோகிகளைக் கொல்லும் போது இராஜ சிந்நங்களை வாங்கிக் கொல்லுவாரைப் போலே காண்’ என்று அம்மாள் பணிப்பர்.
நாதி ஸ்வஸ்த மநா யயவ் :’ என்பது, பாரதம், உத்யோக.-கைவர்கள்யும் வேரோடே வாங்கிப் பொகட்டு, தரும புத்திரன் தலையிலே முடியையும் வைத்து, இவள் குலைந்த சூழலையும் முடிப்பித்த இடத்திலும், ‘நிலை பெறாத மனத்தை யுடையவனாய் இருக்கிறேன்’ என்றே அன்றே எழுந்தருளினான்?
‘ஸ தவ அதர்ஸநாத் ஆர்யே ராகவ: பரிதப்யதே மஹாத ஜ்வலதா நித்யம் அந்நிநே வாக்நி பர்வத:’-என்பது, ஸ்ரீராமா. சுந். 35 : 44.-நைவ தம்ஸாந் நமஸகாந் ந கீடாந் ந ஸரீஸ்ருபாந்
ராகவோ அபநயேத் காத்ராத் த்வத் கதேநாந்தராத்மநா’-என்பது, ஸ்ரீராமா, சுந். 36 : 42-பூஜிக்கத் தக்க பிராட்டியே! அந்தப் பெருமாள் தேவரீரைப் பார்க்காத காரணத்தால் மிகப் பெரியதாயும் எரிந்து கொண்டு இருக்கிற நெருப்பினாலே சூழப்பட்ட நெருப்பு மாலை போன்று பரிதபிக்கிறார்,-பெருமாள் ஊர்ந்ததும் கடித்ததும் துடைக்க அறியார்’ என்றும் சொல்லப்படும் நிலை அன்றோ அவருடை நிலை?
‘ஆநந்தம் ப்ரஹ்மணோ வித்வாந் நபிபேதி குதஸ்சந’-என்பது, தைத்திரீ.-இறைவனுடைய ஆனந்தத்தை அறிந்தவன் எப்பொருளினின்றும் அஞ்சான்,’
ப்ரபுத்த முக்தாம்புஜ சாருலோசநம்
ஸவிப்ரம ப்ரூலதம் உஜ்ஜ்வலாதரம் |
ஶுசிஸ்மிதம் கோமல கண்டம் உந்நஸம்
லலாடபர்யந்த விலம்பிதாலகம் ||-ஶ்லோகம் 35 –எம்பெருமான் மலர்ந்த, புதிய தாமரை மலரைப் போன்ற திருக்கண்களையும், கொடி போன்று வளைந்த திருப்புருவங்களையும்,
மிகவும் ஒளிவிடும் திருவதரங்களையும், புனிதமான புன்முறுவலையும், அழகிய கன்னங்களையும், நிமிர்ந்த திருமூக்கையும், திருநெற்றி வரை படர்ந்திருக்கும் திருக்குழலையும் (கூந்தலையும்) உடையவன் –திருவாய்மொழி 7.7.8இல் “கோளிழைத் தாமரை”(எம்பெருமானின் திருக்கண்கள் அவற்றின் ஒளியையே ஆபரணமாகக் கொண்டிருக்கின்றன) என்று சொன்னபடி,ஆளவந்தார் எம்பெருமானின் திருமுகமண்டலத்தை ஒவ்வொரு அவயமாக அனுபவிக்கிறார்.
ஸக்ர சாப நிபே சாபே க்ருஹீத்வா ஸத்ரு நாஸநே’–என்பது, ஸ்ரீ ராமா. கிஷ்கிந். 3 : 9.-‘பகைவர்களை அழிக்கத் தக்க, இந்திர வில் போன்ற விற்களைப் பிடித்து’ என்னும் படியே என்றபடி.-இந்திர வில்லுக்கு அபலைகளையே நலிய வேணும் என்னும் நிர்பந்தம் இல்லை அன்றோ?
‘‘கோ கோபீஜந ஸங்குலம், அதீவார்த்தம்’-என்பது, ஸ்ரீவிஷ்ணு. புரா. 5. 11. 13.-மிக்க வருத்தம் அடைந்த பசுக்களின் கோபிமார்களின் கூட்டத்தைப் பார்த்து’ மழையால் வந்த நலிவை மலையை எடுத்து நீக்கி, அவர்கள் துன்பம் எல்லாம் போம் படி புன்முறுவல் செய்து கொண்டாயிற்று நின்றது.
‘ஆயதாஸ்ச ஸூவ்ருத்தாஸ்ச பாஹவ: பரிகோபமா: ஸர்வபூஷண பூஷார்ஹா, கிமர்த்தம் ந விபூஷிதா:’-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 3 : 14.-நீண்டு உருண்டு கணையங்கள் போன்ற அழகிய திருத் தோள்கள் அணிகளால் ஏன் மறைக்கப்படாமல் இருக்கின்றன? என்னும்படியே
திருவடி அகப்பட்ட துறையிலே காணும் இவளும் அகப்பட்டது.
‘யாந ஸக்யா புரா த்ரஷ்டும் பூதை: ஆகாஸகைரபி
தாமத்ய ஸீதாம் பஸ்யந்தி ராஜமார்க்ககதா ஜநா:’-என்பது, ஸ்ரீ ராமா. அயோத். 33 : 7.-‘எவள் முன்பு ஆகாச சாரிகளான பிராணிகளாலும் பார்க்கப்படாதவளாய் இருந்தாளோ,
அத்தகைய சீதையைப் பெருந்தெருவில் செல்லும் மக்களும் கண்டார்கள்,
ஜகத் ஏதத் மஹாஸ்சர்யம் ரூபம் யஸ்ய மஹாத்மந:
தேந ஆஸ்சர்யவரேண அஹம் பவதா க்ருஷ்ண ஸங்கத:’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 19 : 7-ஓ கிருஷ்ணனே! இந்த உலகமானது, மஹாத்துமாவான எவனுடைய மிகப் பெரிய ஆச்சரிய சொரூபமாயிருக்கிறதோ, அப்படிப்பட்ட மிகப் பெரிய ஆச்சரியச் செயலை யுடைய உன்னோடு சேர்ந்தேன்,
‘ஏதம் மே ஸம்ஸயம் க்ருஷ்ண சேத்தும் அர்ஹஸி அஸேஷத;
த்வத் அந்ய: ஸம்ஸயஸ்ய அஸ்ய சேத்தா நஹ்யுப பத்யதே’-என்பது, ஸ்ரீ கீதை, 6 : 39.-ஏ கிருஷ்ணனே! என் சந்தேகத்தை அடியோடு போக்குதற்கு நீ தான் தக்கவன்;
இந்த சந்தேகத்தை நீக்குகின்றவன் உன்னை ஒழிய வேறு ஒருவன் இலன்,’ என்கிறபடியே,
அருச்சுனனுடைய சந்தேகத்தைத் தீர்த்தாற்போலே, என்னுடைய ஐயத்தையும் தீர்த்தருள வேணும்.
‘ஸூர்யாம்ஸூ ஜநிதம் தாபம் நிந்யே தாராபதி: ஸமம்
அஹம் மாநோத்பவம் துக்கம் விவேக: ஸூமஹாந் இவ’-என்பது ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 10 ; 13.-சூரியனுடைய கிரணங்களாற்பிறந்த வெப்பம் எல்லாம் போம்படி குளிர்ச்சியைச் செய்யக்கூடியதான சந்திரனும் அவனால் வந்த குளிர்ச்சியை அறுத்துக்கொடுக்கும் சூரியனுமாய்.
‘புரா பூத்வா ம்ருது: தாந்த: ஸர்வபூத ஹிதேரத:
ந க்ரோத வஸம் ஆபந்ந: ப்ரக்ருதிம் ஹர்தும் அர்ஹஸி’-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 65 : 4.-‘முன்னே இளகின மனத்தை யுடையவரும் புலன்களை அடக்கியவரும் எல்லாப் பிராணிகளுக்கும் நலத்தைச் செய்வதில் விருப்ப முடையவருமாய் இருந்து விட்டு இப்போது சீற்றத்தை அடைந்து இயல்பான தன்மையை விடத் தக்கவர் அல்லர்’
யத்து காலாந்தரேணாபி ந அந்ய ஸம்ஜ்ஞாம் உபைதி வை
பரிணாமாதி ஸம்பூதாம் தத்வஸ்து ந்ருப தச்ச கிம்’-என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 2. 13 : 96.-அரசனே! எது எந்தக் காலத்திலும் வளர்தல் குறைதல் முதலிய வேறுபாடுகளை அடைவது இல்லையோ,அதுதான் வஸ்து; ‘அது எது?’ என்று ஆராயந்து பார்,’
துயரம் செய் காமங்களாய் –பொருளின் தொடர்பினால் அப் பொருளில் விருப்பம் முதலியன உண்டாய்ப் புத்தி கெட்டுக் கெடுகின்றான்’ என்கிறபடியே,
‘ஸங்காத் ஸம்ஜாயதே காம: புத்தி நாஸாத் ப்ரணஸ்யதி’-என்பன, ஸ்ரீகீதை, 2. 62 : 63.
‘ப்ரஹ்மாபி நவேத்தி அல்பம் ப்ரயத்நத:’-‘பிரமனும் அவனுடைய தன்மையை மிக வருந்தியும் சிறிதும் அறிய மாட்டான்,
நாராயணம் அஸேஷாணாம் அணியாம்ஸம் அணீயஸாம்’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 1. 8 : 40.-‘ப்ரஸாஸிதாரம் ஸர்வேஷாம் அணீயாம்ஸம் அணீயஸாம்’-என்பது, மனு தர்மம், 1 : 22.-உலப்பு இல்லை நுணுக்கங்களே –உன் வைலக்ஷண்யங்களுக்கு முடிவு இல்லை, ‘நுண்பொருளாய் உள்ளவனை’ என்கிறபடியே,-‘அசித் வஸ்துவான சரீரத்தில் ஸூஷ்ம ரூபத்தாலே எங்கும் புக்குப் பரந்திருக்கும் ஆத்தும வஸ்து, இவ்விரண்டிலும் சூக்கும ரூபத்தோடு பரந்திருப்பாய் நீ’ என்றபடி.
ஸதேவ ஸோம்ய இதமக்ர ஆஸீத் ஏகமேவாத்விதீயம்’-என்பது, சாந்தோக்யம், 6. 2 : 1.-தொல்லை நன்னூலில் சொன்ன உருவும் அருவும் நீயே –‘முதன்முதலில் ‘சத்’ என்ற ஒன்றே இருந்தது’ என்றது அன்றோ?
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மாஸாஸஹ’-என்பது, தைத்திரீய. ஆனந். 9 : 1.வேதங்களும் மீண்டவனை ஆயிற்றுப் பேசிற்று
‘அஸந்நேவ ஸ பவதி அஸத் ப்ரஹ்மேதி வேத சேத்’என்பது, தைத்திரீய. ஆன. 6.-அசத்தைப் போன்றவனாய் உரு மாய்ந்து போன என்னைக் கொண்டு தனக்குத் தகுதியாகக் கவி பாடுவித்துக் கொள்ளவதாகச் சொன்ன வார்த்தை என்ன வார்த்தை! இது ஒரு நீர்மை இருக்கும்படியே! இது என்ன நீர்மை!’ என்று, சர்வேஸ்வரன் தம் திறத்தில் செய்த உபகாரத்தை அநுசந்தித்து, அதற்கு ஒரு பிரதியுபகாரம் காணாமையாலே தடுமாறிச் சொல்லுகிறது.
தச்ச ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ரூபமத்யத்புதம் ஹரே–
விஸ்மயோ மே மஹாந் ராஜந் ஹ்ருஷ்யாமி ச புந புந–৷৷18.77৷৷
திருதராஷ்ட்ர மஹா ராஜனே-கண்ணனுடைய அந்தப் பேர் ஆச்சர்யமான விஸ்வ ரூபத்தை
நினைக்கும் தோறும் எனக்கு பெரு வியப்பு உண்டாகிறது – மறுபடியும் மறுபடியும் பேர் ஆனந்தம் அடைகிறேன் உயர்ந்த விஸ்வரூபம் ஒன்றையே நினைக்க ஆனந்தம் -எதுவும் பண்ண வேண்டாம் -நினைத்து நினைத்து-
,‘ப்ரஹ்ம தண்ட ப்ரகாசாநாம் வித்யுத் ஸத்ருச வர்ச்சஸாம்
ஸ்மரந் ராகவ பாணாநாம் விவ்யதே ராக்ஷஸேஸ்வர:’-என்பது, ஸ்ரீ ராமா. யுத். 60 : 3.அதி அத்புத ரூபம் -விராட் ஸ்வரூபம் -ஆனந்தப் படுகிறேன்-ஸ்ரீராம பிரானுடைய பாணங்களை நினைத்துக் கொண்டு வருத்தம் உற்றான்-அம்புக்கு இலக்கானார் அலற்றுமாறு போலே யாயிற்று, குணத்துக்கு இலக்கு ஆனாரும் அலற்றும்படி.அம்பு பட்ட புண் மருந்து இட்டு ஆற்றலாம்; குணத்தால் வந்த புண்ணுக்கு மாற்று இல்லை அன்றோ?
‘யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ’-என்பது, தைத்திரீய. ஆன. 9.-அந்த ஆனந்த குணம் ஒன்றினின்றும் எந்த வேத வாக்குகன்
‘யஸ்யாமதம் தஸ்யமதம் அவஜ்ஞாதம் விஜாநதாம்’-என்பது, கௌஷீதகீ உபநிடதம்.-றிந்தேன் என்று இருக்குமவர்கட்கு அறியப்படாதது’ என்கிறபடியே-பிரமாணங்களால் அறிய முடியாமல் இருக்கிற தன்னை.
க்ருஷ்ணத்வைபாயநம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும்
கோஹ்யந்ய: புண்டரீகாக்ஷாத் மஹாபாரத க்ருத் பவேத்’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 3. 4 : 4.-கிருஷ்ண த்வைபாயநர் என்னும் பெயரை யுடைய வியாசரைச் சுவாமியான நாராயணன் என்று தெரிந்து கொள்;-செந்தாமைரக் கண்ணனான அவனைத் தவிர வேறு யார்தான் மஹாபாரதம் செய்தவர் ஆவார்?’
த்யாயதோ விஷயாந் பும்ஸஸ் ஸங்கஸ் தேஷூபஜாயதே.—
ஸங்காத் ஸம் ஜாயதே காம-காமாத் க்ரோதோபி ஜாயதே—৷৷2.62৷৷சப்தம் முதலான ஐந்து புலன்களையும் சிந்திப்பவனாய் -என்னை த்யானிக்காத அதிகாரிக்கு
அப்புலன்களில் பற்று வளர்கிறது -அப் பற்றினால் காமம் ஏற்படுகிறது –
விஷயங்களில் பற்று -கொண்டு -சங்கம் முதிர்ந்த பழுத்த ஆசையே காமம்
இது இல்லாமல் தரிக்காத தசை ஆபன்னன் அடைந்தவன்-காமத்தினால் கோபம் பரவலாக உண்டாகிறது-துயரம் செய் காமங்களாய் –
யோ பிரஹ்மாணம் வி்ததாதி பூர்வம் யோவை
வேதாம்ஸ்ச ப்ரஹிணோதி தஸ்மை’-என்பது, ஸ்வேதாஸ்வதரம்.-‘எந்த ஸ்ரீமந் நாராயணன் உலகங்களைப் படைப்பதற்கு முன்னே நான்முகனைப் படைத்தான்? எவன் அவனுக்கு வேதங்களையும் உபதேசம் செய்தான்?-விஷ்ணுராத்மா பகவதோ பவஸ்ய அமிததேஜஸ:
தஸ்மாத் தநுர்ஜ்யா ஸம்ஸ்பர்ஸம் ஸவிஷேஹே மஹேஸ்வர:’-என்பது, பாரதம், கர்ணபர்வம்.-அளவிட முடியாத ஆற்றலையுடையவனும் பூசிக்கத் தக்கவனுமான சிவனுக்கு விஷ்ணு அந்தராத்துமாவாய் இருக்கிறார்; அப்படி விஷ்ணு சிவனுக்கு அந்தராத்துமாவாய் இருப்பதனாலே அந்தச் சிவன் வில்லை வளைத்து நாண் ஏற்றுதலாகிற அந்தக் காரியத்தைப் பொறுத்துக்கொண்டான்’-தானே காரியம் செய்து பிறர் தலையிலே ஏறிடுதல் அவனுக்குப் பண்டே சுபாவங் கண்டீர்!-
மச் சந்தா தேவ தே ப்ரஹ்மந் ப்ரவ்ருத்தேயம் ஸரஸ்வதீ
ராமஸ்ய சரிதம் ஸர்வம் குரு த்வம் ரிஷிஸத்தம’-என்பது, ஸ்ரீராமா. பால. 2 : 31-என் நா முதல் வந்து புகுந்து – சர்வேஸ்வரன் பிரமனுக்குத் திருவருள் செய்ய, அவன் பின்னர் ‘முனிவரே! இந்தச் சரஸ்வதியானது என்னுடைய அருளாலேயே உமக்கு உண்டாயிற்று; நீர் இராம சரிதம் முழுதினையும் செய்யும்,’
‘ஸந்தம் ஏனம் ததோவிது:’ என்பது, தைத்திரீய. ஆன. 6.-இருக்கிறவன் என்று இவனை அதனால் அறிகிறார்கள்’நதத் ஸமஸ்ச’ என்பது, ச்வேதா. உப. பரமன்-சர்வாதிகள்.-அவனோடு ஒத்தவர் இல்லை’ என்கிற வாக்கியம் கொண்டு இவனுடைய உயர்வு அறிய வேண்டா;-என்னை இடுவித்துக் கவி பாடுவித்துக் கொண்ட இதுவே போரும் அவனுடைய உயர்வு அறிகைக்கு.
ஏஷ தத்வாச வித்தாநி ப்ராப்யச அநுத்தமம் யஸ:
லோகநாத: புரா பூத்வா ஸூக்ரீவம் நாதம் இச்சதி’-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 4 : 18.
இது, திருவடியைப் பார்த்து இளையபெருமாள் கூறியது.-முன்னே உலகங்களுக்கு எல்லாம் நாதனாய் இருந்தும், சுக்கிரீவனைத் தனக்கு நாதனாக இச்சிக்கிறார்,’-ஸ்ரீசுக்கிரீவ மஹாராஜரை நாதராக உடையர் ஆகைக்கு யோக்கியதை சம்பாதித்தபடியாயிற்று, -லோக நாதம் புரா பூத்வா -இதுக்கு தபஸ் போலே முன்பு உலகநாதரானது. பெறுவார், பெறாது ஒழிவார்: முன்னம் இச்சியாநின்றார். கிடையாததிலே அன்றோ இச்சைதான் செல்லுவது? -நாதம் இச்சதி –‘அப்படிப்பட்ட ஸ்ரீராமபிரான் சுக்கிரீவனுடைய அருளை நல்ல மனத்தோடு இச்சிக்கிறார்’ என்றது போலே ஆயிற்று.-யஸ்ய ப்ரஸாதே ஸததம் ப்ரஸீதேயு: இமா: ப்ரஜா:
ஸராமோ வாநரேந்த்ரஸ்ய ப்ரஸாதம் அபிகாங்க்ஷதே’=என்பது, ஸ்ரீராமா, கிஷ். 4 : 21.
தம் ஏதம் வேதாநுவசநேந ப்ராஹ்மணா விவிதிஷந்தி
யஜ்ஞேந தாநேந தபஸா அநாஸகேந’-என்பது, பிருக உபநிடதம், 6 : 4-பிராமணர்கள் இந்தப் பிரமத்தை அறிய விரும்புகிறார்கள்,’ என்னா நிற்கச்செய்தேயும்,‘யாகத்தாலும் தானத்தாலும் தவத்தாலும் உபவாசத்தாலும்’ என்று யோக்கியதையைச் சொல்லிற்றே அன்றோ?
சதுர்விம்ஸத் ஸஹஸ்ராணி ஸ்லோகாநாம் உக்தவாந் ரிஷி:
ததா ஸர்க்க ஸதாந்பஞ்ச ஷட்காண்டாநி ததோத்தரம்’ -என்பது, ஸ்ரீராமா. பாலா. 4 : 2.-வால்மீகி முனிவர் இருபத்து நாலாயிரம் சுலோகங்களையும், ஐந்நூறு சர்க்கங்களையும்,
ஆறு காண்டங்களையும், உத்தர காண்டத்தையும் சொன்னார்,’
வபுராதிஷூ யோபி கோபி வா குணத: அஸாநி யதாததாவித:
ததயம் தவபாத பத்மயோ: அஹம் அத்யைவ மயா ஸமர்ப்பித:’-என்பது, ஸ்ரீ ஆளவந்தார் அருளிச்செய்த தோத்திரரத்நம் 52.-மயங்கி இருக்குங்காலத்தில் ஆத்தும சமர்ப்பணந்தான் வேணும்:-தெளிந்த பின்னர், ‘என்னுடைய பொருளை அவனுக்குக் கொடுத்தேன்’ என்று இருக்கக்கடவன் அல்லன்; ஆத்துமா என்னுடையது என்று பல காலமாக எண்ணிப் போந்த அதிலும் கடையாயிற்று, தெளிந்த பின்னர் ‘நான் என்னுடைய பொருளை அவனுக்குத் தந்தேன்’ என்று இருக்குமாகில். பின்னையும் பழைய அபகாரமே தொடர்ந்தது ஆகுமே! ஞானம் பிறந்தமை பொய் அன்றோ? சர்வமுத்தி பிரசங்கம் வாராமைக்காக ஆத்தும சமர்ப்பணந்தான் வேண்டிவரும்; நெஞ்சிலே வெளிச்சிறப்பு உண்டானால் அவனுடைய பொருளினை அவனதாக இசைந்திருக்கக் கடவன். ‘என்னால் கொடுக்கப் பட்டது அன்றி, உனக்கு யாது கொடுக்கிறேன்?’ என்னாநின்றது அன்றோ?
ஹதே தஸ்மிந் நகுர்யு: ஹி தர்ஜநம் வாநரோத்தம!’-என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 41.-அவன் கொல்லப்பட்ட பின் செய்யமாட்டார்கள்’ என்கிறபடியே, ‘இராவணன் சொல்லுகையாலே அன்று இருந்து நலிந்தார்களாகில், இராவணன் பட்டுப் போன இப்போதும் நலிவார்களோ?’ என்று அவர்கள் பக்கலிலும் குணத்தை ஏறிட்டுச் சொல்லும் நீர்மையையுடையவளாயிற்று.
பேஷஜம் பகவத் ப்ராப்தி:’ என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 6. 5 : 59.-‘பகவானை அடைதல் (பிறவிப் பிணிக்கு) மருந்து’ -‘என்னுடைய மனமானது வேறு ஒன்றிலும் செல்லுவது இல்லை’ என்கிறபடியே.– பாவோ நாந்யத்ர கச்சதி’ என்பது, ஸ்ரீராமா. உத்தர. 40 : 15
ராமஸ்து ஸீதயா ஸார்த்தம் விஜஹார பஹூந் ருதூந் மநஸ்வீ தத் கத: தஸ்யா நித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித:’-என்பது, ஸ்ரீராமா. பால. 77 : 25.-ராம: –ஸ்ரீபரசுராமாழ்வானைச் செருக்கு வாட்டிப் படை வீட்டிலே வந்து புகுந்து சக்கரவர்த்தியையும் மஹரிஷிகளையும் பின் பற்றித் தர்மத்தையே மிகுதியாக நடத்திப் போந்தவர்.-து – தமப்பனுக்குச் செய்ய வேண்டிய குற்றவேல் முதலியவைகளைச் செய்து பின்பு பிராட்டியுடைய ரச தாரையிலே இழிந்த பின்பு-இதற்கு முன்பெல்லாம் வாத்ஸ்யாயநம் கற்றுக் காம தந்திரமே நடத்திப் போந்தா ரித்தானையோ!’ என்னும்படி வேறுபட்டார். என்றது,-முன்பு போருகிற நாளில் ‘இவர் இதற்கு முன்பு காம ரசம் புதியது உண்டு அறியாரோ?’ என்னும்படி போந்த இவர், இப்போது ‘இதற்கு முன்பு தருமத்தின் உண்மையைப் புதியது உண்டு அறியாரோ?’ என்னும்படி வேறுபட்டார்,’ என்றபடி.,-ஸீதயா ஸார்த்தம் – அயோநிஜையாய்ப் பரம பதத்தில் தானும் அவனுமாய் இருந்து கலந்த போதைச் செவ்வியில் ஒன்றும் குறையாமல் இருந்தவள் அன்றோ பிராட்டி? இப்படி இருக்கச் செய்தேயும், தம்மை அழிய மாறி மற்றைச் சாதியினரோடுஒத்தவராக அவதரித்தாரே யாகிலும், போகத்தில் வந்தால் அவளுங்கூடப் பிரதானம் அற்றவளாம்படி அதில் தலை நின்றார்.-அதற்கு அடி என்?’ என்னில், இராச புத்திரரான ரசிகத் தன்மையால் வந்த ஏற்றத்தாலே.-விஜஹார – (அனுபவ பூவ என்னாமல் விளையாட்டு )பாரிப்பே ஒழியப் போகத்தில் இழியப் பெற்றிலர்; தொடக்கத்துக்கே பணி போந்ததித்தனை. என்றது,
‘உபோத்காதத்துக்கே காலம் போந்ததித்தனை’ என்றபடி-பஹூ ந்ருதூந் – ‘ஸமா த்வாதஸ தத்ராஹம’ -ஸ்ரீராமா. சுந். 33 : 17. ‘நான் அங்குப் பன்னிரண்டு வருடங்கள் முடிய’ என்பது இதற்குப் பொருள். இது, பிராட்டியின் வார்த்தை.-பன்னிரண்டு ஆண்டு ஒரு படிப்பட அனுபவிக்கச்செய்தேயும், ‘ருது’ சப்தத்தாலே சொல்லுகிறான் ஆயிற்று, அவ்வவ காலங்களுக்கு அடைத்த மலர் முதலான உபகரணங்களைக் கொண்டு கால அவயவங்கள் தோறும் அனுபவித்துப் போந்தமை தோற்ற. என்றது,‘குளிர் காலத்துக்கு அடைத்தவை கொண்டு பரிமாறியும் வெயில் காலத்துக்கு அடைத்தவை கொண்டு பரிமாறியும்
அனுபவித்தமை தோற்றச் சொல்லுகிறான்’ –மநஸ்வீ –பிரணய தாரையில் வந்தால், அவள் பாரித்த பாரிப்புக்கு எல்லாம் யானைக்குக் குதிரை வைக்கைக்கு ஈடான நெஞ்சில் அகலமுடையவராயிற்று-தத் கத:திரவியம் திரவியத்தோடு சேர்ந்தாற்போல அன்றிக்கே, சாதி குணங்கள் திரவியத்தோடு சேர்ந்தாற்போலே சேர்ந்தார்;-அநந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபா யதா’–நான் பெருமாளோடே கூடியே இருப்பவள்’ என்பது, ஸ்ரீராமா. சுந். 21 : 16. இராவணனைப் பார்த்துப் பிராட்டி கூறியது.-அநந்யா ஹி மயா ஸீதா பாஸ்கரேண ப்ரபா யதா’ ஸ்ரீராமா. யுத். 122 : 19. -சீதை என்னோடு கூடியே உள்ளவளன்றோ?-இது,இராவண வதத்தின் பின் வந்து கூடிய பிரமன் முதலிய தேவர்களைப் பார்த்து ஸ்ரீராமபிரான் கூறியது.–தஸ்யா நித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித: – இதில் இழிவதற்கு முன்பு இவரை அறிந்திருக்குமவளாகையாலே,‘அப்படிப் பெரியவர் இப்போது என் பக்கலிலே தாழ நிற்பதே இப்படி இது ஒரு நீர்மையே!’ என்று எப்போதும் இந்த நினைவே செல்லுகை -அநு சந்தானமே யாத்திரையாக -ஆகையாலே, வேறு ஒன்றும் நெஞ்சிற்படாதே அவள். தன்னைத் தம் பக்கலிலே பொகடும்படி ஆனார்.-தத் கத – என்கையாலே, இவர் தம்மை அவள் பக்கலிலே ஓக்கினபடி-பரதந்தரமாக- சொல்லிற்று-நித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித:’ என்கையாலே அவள், தன்னை இவர் பக்கலிலே ஓக்கினபடி பரதந்தரமாக-சொல்லுகிறது.-இப்படி இருவருமான சேர்த்தியிலே, இதற்கு முன்பு ஆனந்தம் புதியது உண்டு அறியாதான் ஒருவனுக்கு ஆனந்தம் உண்டாமாறு போலே ஆயிற்று, கணந்தோறும் உண்டாம்படி.’
ராகவோர்ஹதி வைதேஹீம்’-என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 5.-எழில் மலர் மாதர்’ என்று பிராட்டி வைலக்ஷண்யமும்,
‘யஸ்ய ஸீதா பவேத் பார்யா’- -எவனுக்குச் சீதை மனைவியாக ஆவாளோ’ என்பது, ஸ்ரீராமா. ஆரண்ய. 34 : 18.
‘யஸ்ய ஸா ஜநகாத்மஜா’—ஜனகனுடைய பெண்ணாகிய சீதை எவனுடைய மனைவியோ’என்பது, ஸ்ரீராமா. ஆரண்ய. 37 : 18.-ராகவோர்ஹதி வைதேஹீம் தஞ்சேய மஸிதேக்ஷணா” என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 15. 5.-‘ராம: ஸீதாம் அநுப்ராய ராஜ்யம் புந: அவாப்தவாந் ப்ரஹ்ருஷ்ட முதிதோ லோக: துஷ்ட: புஷ்ட: ஸூதார்மிக:’–இராமர் சீதையைப் பெற்றுப் பின்னர் இராச்சியத்தை அடைந்தார்; உலகம் மிக்க உவகையை அடைந்தது’ என்பது, சந்க்ஷேப ராமா. 1. : 89. 2- இருவருமான சேர்த்தியாலே தங்களுக்கு ஆனந்தம் உண்டாக, அச் சேர்த்தியைக் காண்கையாலே உலகத்துக்கு ஆனந்தம் உண்டாக,
அதனைக் கண்டு குழந்தை பால் குடிக்கக் கண்டு உகக்கும் தாயைப் போலே
இவர்களுக்கு உண்டான பிரீதியைக் கண்டு அதனாலே தாங்கள் இனியராய் இருப்பர்களாயிற்று.
ஸர்வேஷாம் ஹி ஸ தர்மாத்மா வர்ணாநாம் குருதே தயாம் சதுர்ணாம் ஹி வயஸ்தாநாம்
தேநதே தம் அநுவ்ரதா:’–அதனால் அந்த மக்கள் அவனைப் பின் தொடர்ந்தார்கள் -அவனுக்கு உத்தேசியமான இடமும் இவனுக்கு உத்தேசியமாகக் கடவது அன்றோ?-என்பது, ஸ்ரீராமா. அயோத். 17 : 15..
அபீதாநீம் ஸகால: ஸ்யாத் வநாத் ப்ரத்யாகதம் புந: யத்த்வா புத்ரக பஸ்யேயம் ஜடா மண்டல தாரிணம்’-என்பது, ஸ்ரீராமா. அயோத். 24 : 37.-அந்தக் காலம் இந்த நாளாக வேண்டும்’ என்றாரே ஸ்ரீகௌசல்யையார்.-‘போய் வருகை தவிராராகில் மீண்டு புகுரும் நாள் இன்று ஆயிற்றாகிலோ’ என்றார்போலே,-கை தொழும் நாள்களும் ஆகுங்கொலோ –இந்த எண்ணத்திற்கு அடைத்த காலமே அனுபவத்துக்கு அடைத்த காலமாகப் பெற்றோம் ஆகிலோ?’ என்கிறார்.
ஸிஞ்சந்து வஸூதாம் க்ருத்ஸ்நாம் ஹிம ஸீதேந வாரிணா’-என்பது, ஸ்ரீராமா. யுத். 130. 6.-பூமியை அடங்கலும் பனி போன்ற குளிர் நீரால் நனைக்கட்டும்’ என்று ஸ்ரீ நந்திக் கிராமம் தொடங்கி ஸ்ரீ பரத்துவாச பகவான் ஆஸ்ரமத்தளவும் வர, பனி நீராலே விடுவித்தான் ஸ்ரீசத்துருக்நாழ்வான்
துர்க்கதாவபி ஜாதாயாம் த்வத்கதோ மநோரத:
யதி நாஸம் நவிந்தேத தாவதாஸ்மி க்ருதீ ஸதா’-என்பது, ஜிதந்தா-மரண தசையிலே வருவது ஒரு துர்க்கதி உண்டு, அதனைப் போக்கித் தரவேணும் என்று பிரார்த்திக்கிறேன் அல்லேன்;-அங்குச் சென்று அனுபவிக்க வேண்டா. இங்கே இருந்து நெஞ்சாலே அங்குத்தைப் பரிமாற்றங்களை நினைக்கப்பெற அமையும்.-இந்த எண்ணத்துக்கு அவ்வருகு ஒரு பேறு இல்லை என்று இருக்கிறார் ஆயிற்று இவர்.
‘ப்ரீத்யா ச ரமமாண: அத ராகவ: பரவீரஹா
பஹூமாநேந மஹதா ஹநூமந்தம் அவைக்ஷத’-என்பது, ஸ்ரீராமா. சுந். 64 : 39.-பின்பு ஸ்ரீ ராகவர் சந்தோஷத்தினால் இன்புற்றவராய்க் கொண்டு அனுமானை மிக்க பெருமையோடு பார்த்தார்-பலர் அடியார் முன்பு அருளிய –முதலிகள் எல்லாரும் இருக்கச் செய்தே திருவடி பக்கலிலே விசேஷ கடாட்சம் செய்தாற்போலேயாயிற்று, பலரும் உளராய் இருக்க இவரை அங்கீகரித்தபடி.
‘என் பின்னே போராநின்றால் ‘ஒருவன் பின்னே போகாநின்றேன்’ என்று
தன் நெஞ்சிற்படாதே சாயை போலே என்னைப் பின் செல்வான் ஒருவனாக வேணும்’ என்ன,கச்சதா மாதுல குலம்-உடை வாள்-அனகா- நித்ய சத்ருக்ந ப்ரீதி உடன் போனது போலே –பல முதலிகள் இருக்க, ஆழ்வானைக் கொடுத்தாற்போலே என்றபடி.-
மேரு மந்தர மாத்ரோபி ராஸி: பாபஸ்ய கர்மண
கேஸவம் வைத்யம் ஆஸாத்ய துர் வியாதிரிவ நஸ்யதி’-என்பது, விஷ்ணு தர்மம், 78.-மேரு மந்தரமாத்ரோபி – மேருவையும் அதன் மேலே மந்தரத்தையும் வைத்தாற்போலே இருக்கிற கனத்த பாவங்கள்,
ஸர்வே பாப்மாந: ப்ரதூயந்தே’-என்பது, சாந் உப 5 : 24.-எல்லாப் பாபங்களும் நாசம் அடைகின்றன
‘க்ருஷ்ண க்ருஷ்ண மஹா பாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம்
பரேஸம் பரமாத்மாநம் அநாதி நிதநம் பரம்’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 33 : 41-யானைக்கும் தனக்குத் தக்க வாதம்’ என்னுமாறு போலே,.-தேவதைகளுக்கு நம்மைக் காட்டிலும் அறிவு கேடு விஞ்சியிருக்கும். – ஆரோக்யம் பாஸ்கரன் -ஞானம் சங்கரன் -அவ்வளவு ஞானம் தக்க அஞ்ஞானம் தமஸ் மிக்கு இருப்பதால்-ஒரு வில்லை முறித்த போதாக ‘விஷ்ணுவை அதிகனாக எண்ணினர்’ என்கிறபடியே இருப்பர்களாயிற்று,–தேவ சாதியாக. அதிகம் மேநிரே விஷ்ணும்’-என்பது, ஸ்ரீராமா, பால. 75 : 19.
‘பரமாபதம் ஆபந்ந: மநஸாசிந்தயத் ஹரிம்
ஸது நாகவர: ஸ்ரீமாந் நாராயண பாராயண:’-என்பது, விஷ்ணு தர்மம், 68.-தான் தன்னை இரட்சகமாக நினைத்திருக்குமதுவும் தவிர்ந்து.-‘மனத்தால் எண்ணிற்று’ என்கையாலே, ‘கூப்பிடுங்காரியகரமாம் எல்லையுங்கழிந்தது’
ஆனந்தம் பிரஹ்மணோ வித்வாந் ந பிபேதி,’ என்பது, தைத். உப. ஆனந்.-‘இறைவனுடைய ஆனந்தத்தை அறிந்தவன் அஞ்சுகின்றான் இலன்’-குதஸ்சந’ என்பது, தைத். உப. ஆனந்.–பிரபன்னன் எப்போதும் எதனாலும் பயப்பட வேண்டாம் –பிரமாதிகத்துக்கு அன்றியே புத்தி பூர்வமாகப் பண்ணினதற்கும் அஞ்சவேண்டாத படியாயிருக்கும். ‘
————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply