அவனன்றி ஓர் அணுவும் அசையாது” எனத் தாயுமானாரும்,
“ஆதி பகவன் முதற்றே யுலகு” எனத் தெய்வப் புலவரும்,
“அகர முதல் வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே உலகு:-1-
தமிழெழுத்துக்கே யன்றி வடவெழுத்துற்கும்-மற்றும் எல்லா மொழிகளின் எழுத்துக்களுக்கும் _ முதலாதல் நோக்கி, **எழுத்தெல்லா”’ மென்றார். அ, உ, ம்” என்னும்
மூன்று ஒலிகள் சேர்ந்து இசைப்பதே ஒங்காரமாகும், ௮ம் மூன்றினுள்ளும், அகாரமே முதல் ஒலியாக நின்று உச்சரிப்பை உண்டாக்குவதாலும், அகாரமே மற்ற எழுத்துக்களெல்லாம்
ஆவதற்கு மூல காரண’ மென்பதும், பொருந்தும்.-அகர ஓலியானது ஆதி நாதமென்று,
நூல்கள் புகழ்ந்து கூறுகின்றன.
அக்ஷராணாமகாரோஸ்மி த்வந்த்வஸ் ஸாமாஸி கஸ்ய ச.—-
அஹமேவாக்ஷயஸ் காலோ தாதாஹம் விஸ்வதோமுக-–৷৷10.33৷৷
எழுத்துக்களுக்குள் நான் அகாரம் ஆகிறேன் சமாஜ சமூகத்தின் உள்ளும்–(அவ்யயீபாவ-தத்புருஷ -பஹு வ்ரீஹி த்வந்த ஸமாஸம்) -த்வந்த்வ சமாசம் ஆகிறேன்-அழிவற்ற காலமும் நானே-அசித் தத்வம் இங்கே தான் நாலு புறமும் முகங்களை உடையவனாய் அண்டத்தின் உள் இருக்கும் பொருள்களைப் படைப்பவனான நான்முகனும் நானே
மலர்மிசை யேகிறன் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீதி வாழ்வார் -3-.
மலரின் கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தார், எல்லா உலகிற்கும் மேலாய விட்டுலகின் கண் அழிவின்றி வாழ்வர். அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தில், ௮வர் நினைந்த வடிவோடு விரைந்து சேரலின், “ஏகினான் ” என இறந்த காலத்தாற் கூறினா – பரிமேலழகர்.
மனனக மலமற மலர் மிசை யெழு தரும்
மனனுணர் வளவிலன்”” (திருவாய் மொழி)
ஈஸ்வர ஸர்வ பூதாநாம் ஹ்ருத்தேஸேர்ஜுந திஷ்டதி–
ப்ராமயந் ஸர்வ பூதாநி யந்த்ரா ரூடாநி மாயயா–৷৷18.61৷৷
வாஸூ தேவன் -(ஸர்வேஷ்வரேண-என்றே பாஷ்யம்-காரணத்வம் வியாபகத்வம் நியந்த்ருத்வம் இவன் ஒருவன் இடமே – -)எல்லா உயிர்களுக்கும் அறிவு உதயமாகும் ஹ்ருதயமாகிற இடத்தில் ப்ரக்ருதி கார்யமான சரீரமாகிற யந்திரத்தில் ஏறி நிற்கும் எல்லா உயிர்களையும் சர்வ ரஜஸ் தமோ குண மயமான மாயையால் அந்த குணங்களுக்கு அனுகுணமாக நடக்கச் செய்து கொண்டு நிற்கிறான்-
தமேவ ஸரணம் கச்ச ஸர்வ பாவேந பாரத–
தத் ப்ரஸாதாத் பராம் ஸாந்திம் ஸ்தாநம் ப்ராப்ஸ்யஸி ஸாஸ்வதம்–৷৷18.62৷৷
அர்ஜுனனே-அனைவரையும் நியமிக்கும் பரத குலத்தில் உதித்தவனே -அந்தப் பரமாத்மாவையே எல்லா வகையாலும் பின்பற்றுவாய் – அவனுடைய அருளாலே நிலையான மோக்ஷ ஸ்தானமான பரமபதத்தை அடைவாய் –
வானின் றுலகம் வழங்கி வருதலாற்
றானமிழ்த மென்றுணரற் பாற்று.
மழை இடையறாது நிற்ப. உலகம் நிலை பெற்று வருதலான், ௮ம் மழை தான் உலகத்திற்கு அமிழ்த மென்றுணரும் பான்மை யுடைத்து-அமிழ்த முண்டார் சாவாது நிலை பெறுதலின் உலகத்தை நிலை பெறுத்துகின்றவானை ௮மிழ்தமென்று உணர்க வென்றார்–பரிமேலழகர்,
அந்நாத் பவந்தி பூதாநி பர்ஜந்யாதந்ந ஸம்பவ–
யஜ்ஞாத் பவதி பர்ஜந்யோ யஜ்ஞ கர்ம ஸமுத்பவ—৷৷3.14৷৷
அன்னத்தில் இருந்து தேவர் மனுஷ்யர் முதலான எல்லா ஜீவ ராசிகளும் உண்டாகின்றன –
மழையில் இருந்து அன்னத்தின் உத்பத்தி ஏற்படுகிறது-யஞ்ஞத்தில் இருந்து மழை ஏற்படுகிறது-யஞ்ஞம் கர்மங்களில் இருந்து உண்டாகிறது -அன்னத்தால் பூதங்கள் வாழலாம் –
கர்ம ப்ரஹ்மோத்பவம் வித்தி ப்ரஹ்மாக்ஷர ஸமுத்பவம்–
தஸ்மாத் ஸர்வகதம் ப்ரஹ்ம நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டிதம்—৷৷3.15৷৷
மூல ப்ரக்ருதியும் ப்ரஹ்மம் போல் பெரியதாகவும் இருக்கும் -அன்றோ -நித்ய விபூதியில் பரவி இல்லா விட்டாலும் சூழ்ந்து அகன்று ஆழ்ந்த முடிவில் பெரும் பாழ் அன்றோ-அதில் இருந்து தோன்றிய உடலைக் குறிக்கும் இங்கு –
சுவை யொளி யூறு ஓசை நாற்ற மென்றைத்தின்
வகை தெரிவான் கட்டே யுலகு–27-
சுவையும், ஒளியும், ஊறும், ஓசையும், நாற்றமுமென்ற தன் மாத்திரைகளின் ஐந்து கூறுபாட்டையும், அறிவாலா ராய்வான் கண்ணதே உலகம்.-பூதங்கட்கு முதலாகிய அவைதாமைந்தும், ௮வற்றின் கட்டோன்றிய அப்பூதங்கள் ஐந்தும், அவற்றின் கூறாகிய ஞானேந்திரியங்களைந்தும், கர்மேந்திரியங்களைக்துமாக இருபதுமாம். *வகை தெரிவான்
கட் “டென) உடம்பொடு புணர்த்ததனால், தெரிகின்ற புருடனும்; அவன் தெரிதற் கருவியாகிய மான் அகங்கார மனங்களும், அவற்றிற்கு முதலாகிய மூலப் பகுதியும் பெற்றாம்.-இது, தத்துவ ஆராயச்சியாகும்-பரிமேலழகர்.-நித்திய அநித்தியப் பொருள்களின் விவேகமே”சிறந்த ஞான சாதனமாகக் கூறப்படுகிறது. மனிதன் மேலோனாவதற்கு இந்தச் சாதனமே முதற்படியாக உள்ளது. இதையே தத்துவ ஞான மார்க்க மெனவும், முத்தி நெறிக்கு
வழி யெனவும் நூல்கள் கூறுகின்றன.
மாத்ரா ஸ்பர்ஸாஸ்து கௌந்தேய ஷீதோஷ்ண ஸுக துக்கதா–
ஆகமாபாயிநோ நித்யாஸ்தாம் ஸ்திதிக்ஷஸ்வ பாரத৷৷2.14৷৷
குந்தீ புத்திரனே தந் மாத்ரா கார்யமான -சப்த ஸ்பர்ச ரூப ரஸ கந்தங்களோடும் -அவற்றை உடைய பொருள்களோடும்- இந்திரியங்களின் சேர்க்கைகள் குளிர் வெப்பம் முதலானவற்றால் உண்டான இன்ப துன்பங்களைக் கொடுக்கின்றன – இவை உண்டாகி அழிபவை-மோக்ஷ நிலையில் அடியோடு அழியக் கூடியவை -அவற்றைப் பொறுத்துக் கொள்
நிறை மொழி மாந்தர் பெருமை நிலத்து
மறை மொழி காட்டி விடும்.28-
நிறைந்த’மொழியினையடைய துறந்தாரது “பெருமையை, நில வுலகின் கண் ௮வராணையாகச் சொல்லிய மந்த்ரங்களே கண்கூடாகக் காட்டும்.-நிறைமொழி’ என்பது அருளிக் கூறினும், வெகுண்டு கூறிலும் அவ்வப் பயன்களைப் பயந்தே விடும்மொழி;-காட்டுதல்- பபனானுணர்த்துதல். பரிமேலழகர்.
யத் யதாசரதி ஸ்ரேஷ்டஸ் தத்த தேவேதரோ ஜந–
ஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ் ததநுவர்ததே—৷৷3.21৷৷
சிறந்தவன் எந்த கர்மங்களைச் செய்கிறானோ அந்த அந்த கர்மங்களையே உலகோரும் செய்கின்றனர்-அந்தச் சிறந்தவன் அக் கர்மத்தை எந்த அளவிதானாகச் செய்கிறானோ உலகமும் அந்த அளவினதாகவே செய்கிறது-
மனத்துக்கண் மாசில்னாத லனைத்தற
னாகுல நீர பிற-34-.
அறஞ்செய்வான் தன் மனத்தின் கண் குற்றமுடையன் அல்லனாக, அவ்வளவே அறமாவது-மற்றவை யெல்லாம் ஆரவாரத் தன்மை யுடையன–குற்றம்-தீயன சிந்தித்தல், பிறர் புகழ வேண்டிச் செய்வன வெல்லாம் ஆரவாரத்தின் பாற்பட்டமையின்-ஆகுல நீர’ வென்றார்-பரிமேலழகர்-அற வொழுக்கத்தில் வாழ விருப்பமுடைய அறிஞர்கள் மிக எச்சரிக்கையாக இருந்து தீய சிந்தனைகளை மனதிற் புகவொட்டாமல் நீக்கி, மனம் பரிசுத்த மடைவதுவே சிறந்த அறமாகும்
ஸ்ரீ பகவாநுவாச–
ப்ரஜஹாதி யதா காமாந் ஸர்வாந் பார்த்த மநோ கதாந்.–
ஆத்மந்யே வாத்மநா துஷ்ட ஸ்தித ப்ரஜ்ஞஸ்த தோச்யதே—৷৷2.55৷৷
ஸ்ரீ பகவான் சொன்னான்-அர்ஜுனா ஆத்மாவையே பற்றி நிற்கும் மனத்தினால் ஆனந்த ரூபமான தன் ஆத்மாவிலேயே ப்ரீதி உடையவனாய் மனத்தினில் இருக்கும் மற்ற பலன்களைப் பற்றி இருக்கும் எல்லா விருப்பங்களையும் எப்பொழுது கை விடுகிறானோ
அப்போது ஸ்திதபிரஞ்ஞன் -நிலைத்த ஞானமுடையவன்”-என்று கூறப்படுகிறான்
அழுக்காறு அவா வெகுளி யின்னாச் சொல் நான்கும்
இழுக்கா வியன்ற தறம்–35-
பிறராக்கம் பொறாமையும், புலன் கண் மேற் செல்லுகின்ற அவாவும், ௮வை யேதுவாகப் பிறர் பால் வரும் வெகுளியும், அது பற்றி வரும் கடுஞ் சொல்லுமாகிய இந் நான்கினையும் கடிந்து இடையறாது நடந்தது அறம்”எனப்படும்-பரிமேலழகர்-அற வொழுக்க முடை யவரிடமே நல்ல எண்ணமும், நல்ல சொல்லும், நல்ல செயலும் உண்டாகும்-அதுவே, தெய்விகத் தன்மை பொருக்திய நல்லற வாழ்க்கையை உண்டாக்கும்-
தம்போ தர்போபி மாநஸ்ச க்ரோத பாருஷ்யமேவ ச–
அஜ்ஞாநம் சாபி ஜாதஸ்ய பார்த்த ஸம்பதமாஸுரீம்--৷৷16.4৷৷
குந்தீ புத்திரனே -பகவத் ஆஜ்ஜையை மீறி நடக்கும் அசுரர்க்கு உரிய செல்வத்தை உடையவனுக்கு- தார்மிகன் என்னும் புகழைப் பெற்ற தர்மத்தை அனுஷ்டிப்பது – சப்தாதி விஷயங்களை அனுபவிப்பதால் உண்டாகும் செருக்கு – அதிகமான கர்வம் –இனி யார் உளர் மாறு -இல்லை எனக்கு எதிர் -போன்றவை மானம் உத்தேச்யம் – பிறரைத் துன்புறுத்தும் சினம்- நல்லோர்களை வெறுப்படையச் செய்யும் கடுமை -(அங்கே தலை இருப்பதே கருமம் கண்டாய் என்பது உபாதேயம் தானே ) தத்வ விஷயத்திலும் செய்யத்தக்கது அல்லது தகாதது விஷயத்திலும் அறிவின்மை -ஆகிய இக்குணங்கள் அமைகின்றன –
பயன் றூக்கார் செய்த வுதவி நயன்றூக்கி
னன்மை கடலிற் பெரிது103-
இவர்க்கு இன்னது செய்தால் இன்னது பயக்குமென்று ஆராய்தலிலராய்ச் செய்த ஈரமுடைமையை ஆராயின், அதனன்மை கடலினும் பெரிதாம்–பரிமேலழகர் -இதுவே ‘செய்யாமற்செய்த உதவி’ யென்றும், *காலத்தினாற் செய்த உதவி’ என்றும் தெய்வப் புலவர்குறிப் பிடுகிறார்.
தஸ்மாதஸக்த ஸததம் கார்யம் கர்ம ஸமாசர—
அஸக்தோ ஹ்யாசரந் கர்ம பரமாப்நோதி பூருஷ—৷৷3.19৷৷
இந்த பிரகரணத்தில் ஆத்மாவையே பரம் என்று சொல்கிறான்-கர்ம யோகமே ஆத்ம சாஷாத்காரம் நேராகவே பெற்றுக் கொடுக்கும் என்கிறான் இதில-எனவே பற்று அற்றவனாய் -இடைவிடாமல் அவசியம் செய்ய வேண்டியது என்றே கர்ம யோகத்தைச் செய்வாயாக – பற்று அற்றவனாகக் கர்ம யோகத்தைச் செய்யும் மனிதன் -பிரக்ருதியைக் காட்டிலும் மேலான ஆத்மாவை அடைகிறான் –
கர்மணைவ ஹி ஸம் ஸித்தி மாஸ்திதா ஜநகாதய–.
லோக ஸங்க்ரஹமேவாபி ஸம் பஸ்யந் கர்துமர்ஹஸி—-৷৷3.20৷৷
ஜனகர் முதலானோர் கர்ம யோகத்தாலேயே ஆத்ம பிராப்தி யாகிற பயனை அடைந்தார்கள் அன்றோ –உலகத்தை இசையை வைப்பதில் கருத்தைக் கொண்டும் நீ கர்மத்தைச் செய்வதே தக்கது-ஜனகன் கர்ம யோகத்தால் ஆத்ம சாஷாத்காரம் -மேலையார் செய்வனகள் சிஷ்டாசாரம் உண்டே –
கெடுவல் யா னெள்ப தறிகதன் செஞ்ச
நடு வொரீஇ யல்ல செயின்–116
ஒருவன் தன்னெஞ்சம் நடுவு நிற்றலை யொழித்து நடுவல்லவற்றைச் செய்ய நினைக்குமாயின், அந் நினைவை யான் கெடக் கடவேனென்றுணரும் உற்பாதமாக
(கெடு குறியாக) ௮றிக-நினைத்தலும் செய்தலோ டொக்குமாதலால் *செயின்
என்று கூறினார் — பரிமேலழகர்.
த்யாயதோ விஷயாந் பும்ஸஸ் ஸங்கஸ் தேஷூபஜாயதே.—
ஸங்காத் ஸம் ஜாயதே காம-காமாத் க்ரோதோபி ஜாயதே—৷৷2.62৷৷
சப்தம் முதலான ஐந்து புலன்களையும் சிந்திப்பவனாய் -என்னை த்யானிக்காத அதிகாரிக்கு அப்புலன்களில் பற்று வளர்கிறது -அப் பற்றினால் காமம் ஏற்படுகிறது –
விஷயங்களில் பற்று -கொண்டு -சங்கம் முதிர்ந்த பழுத்த ஆசையே காமம்-இது இல்லாமல் தரிக்காத தசை ஆபன்னன் அடைந்தவன் காமத்தினால் கோபம் பரவலாக உண்டாகிறது
க்ரோதாத்பவதி ஸம்மோஹ ஸம்மோஹாத் ஸ்ம்ருதி விப்ரம—
ஸ்ம்ருதி ப்ரம்ஸாத் புத்திநாஸோ புத்திநாஸாத் ப்ரணஸ்யதி—৷৷2.63৷৷
கோபத்தினால் பகுத்து அறிவின்மை உண்டாகிறது –பகுத்து அறிவின்மையால் நினைவின் அழிவு ஏற்படுகிறது –நினைவின் அழிவினால் அறிவின் அழிவு உண்டாகிறது –அறிவின் அழிவினால் சம்சாரத்தில் மூழ்கி அழிகிறான்
நிலையிற் றிரியா தடங்கி யாள் றோற்ற
மலையினு மாணப் பெரிது-124-
இல்வாழ்க்கையாகிய நன்னெறியினின்று வேறுபடாமல் அடங்கினவனது உயர்ச்சி யானது, மலையினுச்சியினும் மிகப் பெரிது-திரியா தடங்குதல், பொறிகளால் புலன்களை நுகரா நின்றே அடங்குதல். — பரிமேலழகர்.
உதாஸீநவத் ஆஸீநோ குணைர்யோ ந விசால்யதே–
குணா வர்தந்த இத்யேவ யோவதிஷ்டதி நேங்கதே–৷৷14.23৷৷
அச்யுத திருவடிகளில் யுக்ம ருக்ம வ்யாமோஹத்தால் த்ருணமாக நினைப்பது போல் -ஆத்மாவைக் காண்பதில் திருப்தியுற்ற எவன் வேறு விஷயங்களில் கவனமற்று இருக்கிறானோ –சத்வாதி குணங்களால் விருப்பு வெறுப்பு வற்றின் மூலம் அசைக்கப்படாது இருக்கிறானோ –சத்வாதி குணங்கள் அவற்றின் கார்யங்களைச் செய்கின்றன என்றே எண்ணி வாளா இருக்கின்றானா –அவற்றின் செயலுக்குத் தக்கவாறு நடவாமல் இருக்கிறானோ –அவன் முக்குண மாயயைக் கடந்தவனாகப் பேசப் பெறுகிறான்-
ஸம துக்க ஸுக ஸ்வஸ்த ஸமலோஷ்டாஸ்ம காஞ்சந–
துல்ய ப்ரியாப்ரியோ தீரஸ் துல்ய நிந்த ஆத்ம ஸம் ஸ்துதி–৷৷14.24৷৷
ஸூகம் துக்கம் இவற்றில் எது நேர்ந்தாலும் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருப்பவன் –
தன் ஆத்மாவிலேயே நிலைத்து இருப்பவன் -மண்கட்டி கல் ஸ்வர்ணம் இவற்றை சமமாக -அதாவது விடத்தக்க பொருளாக நினைப்பவன் – ஸூகத்துக்கு காரணமான இஷ்டமான வஸ்துவையும் துக்கத்துக்குக் காரணமான அநிஷ்டமான வஸ்துவையும் சமமாகக் கொண்டவன் -ஆத்ம விவேகம் உள்ளவன் – தன்னைப் பழிப்பதையும் புகழ்வதையும் சமமாக நினைப்பவன்
மாநாபமாநயோஸ் துல்யஸ்துல்யோ மித்ராரிபக்ஷயோ–
ஸர்வாரம்ப பரித்யாகீ குணாதீத ஸ உச்யதே৷৷14.25৷৷
பிறர் மதிப்பையும் அவமதிப்பையும் ஒன்றாக நினைக்கிறானோ-நண்பர்கள் எதிரிகள் ஆகிய இரு தரப்பினரையும் ஒன்றாக நினைக்கிறானோ-தேஹ சம்பத்திற்கு அனுகுணமான எல்லாக் காரியங்களையும் கைவிட்டு இருக்கிறானோ-அவன் முக் குணங்களையும் கடந்தவன் என்று சொல்லப்படுகிறான்
ஓருமை யுளாமை போ லைந்தடக்க லாற்றின்
எழுமையுமே மாப் புடைத்து-126-
ஆமைபோல ஒருவன் ஒரு பிறப்பின் கண் ஐம்பொறிகளையு மடக்க வல்லனாயின், ௮வ் வன்மை அவனுக்கு எழு பிறப்பின் கண்ணும் அரணாதலை யுடைத்து-ஆமை ஜந்துறுப்பினையும் இடர் புகுதாமல் அடக்குதல் போல, இவனும் ஐம்பொறிகளையும் பாவம் புகுதாமலடக்க வேண்டுமென்பார் ஆமைபோலென்றார். ஒரு பிறப்பிற் செய்த வினையின் பயன் எழுமையுகம் தொடருமென்பது இதனானறிக, — பரிமேலழகர்-இவ்வாறு புலன்களை வசப்படுத்தும் அறிவுடையவனை, கீதையில் (ஸ்திதப்ரஜ்ஞன்) அறிவு நிலைத்தவன் என்கிறார்-
யதா ஸம் ஹரதே சாயம் கூர்மோங்காநீவ ஸர்வஸ–
இந்த்ரியாணீந்த்ரியார்தேப்யஸ் தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா—-৷৷2.58৷৷
எப்போது இந்த ஞான நிஷ்டன் இந்திரியங்களை ஆமை அவயவங்களை இழுத்துக் கொள்வது போலே எல்லாப் படியாலும் விஷயங்களில் நின்றும் இழுத்துக் கொள்கிறானோ அவனுடைய அறிவு நிலையாக நிற்கிறது-இப்படிச் செய்வது பிரத்தியாகாரம்” எனப்படும்.
புகழ்பட வாழாதார் தந் நோவார் தம்மை
இகழ்வாரை நோவ தெவன் -237
தமக்குப் புகழ் உண்டாகும்படி. வாழ மாட்டாதார் பிறரிகழ்ந்த வழி இவ் விகழ்ச்சி நம்மாட்டாமையின் வந்ததென்று தம்மை நோவாதே தம்மை யிகழ்வாரை
நோவதென்கருதி-புகழ்பட வாழலாயிருக்க, அது மாட்டாத குற்றம் பற்றிப் பிறரிகழ்தல் ஒருதலை யாகலின் இகழ்வாரை” என்றார்-பரிமேலழகர் -உலக மக்களுக்கு உண்டாகிய வறுமை, அறிவின்மை; கொடு நோய் முதலியவற்றை, பொருள் ஈகையால் தீர்ப்பதே சிறந்த புகழ் என பரிமேலழகர் குறிப்பால் தெரிய வருகிறது. -பூதவுடம்பு அழியினும், என்றென்றும் அழியாப் புகழுடம்பைப் பெறுவதே இக வாழ்க்கையின் இலட்சியமாகுமென்பதும், புகழ்பெறாத மனிதர்கள், உலகத்தில் இருப்பதும், இறப்பதும் ஒன்றே எனவும் இவ்வதிகாரத்திலுள்ள பத்துக் குறட்பாக்களாலும் விளக்கமாகின்றன.
பயாத்ரணாது பரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா—
யேஷாம் ச த்வம் பஹுமதோ பூத்வா யாஸ்யஸி லாகவம்—৷৷2.35৷৷
பெரு வீரர்களான எதிரிகள் உன்னை அச்சத்தினால் போரில் புற முதுகு இட்டவனாக நினைக்கப் போகிறார்கள்-எந்தப் பெரு வீரர்களுக்கு நீ இதுவரை மதிக்கத் தக்கவனாக இருந்தாயோ அவர்களுக்கு எளியவனாக ஆகப் போகிறாய்
அவாச்ய வாதாம்ஸ்ச பஹூந் வதிஷ்யந்தி தவாஹிதா–
நிந்தந்தஸ் தவ ஸாமர்த்யம் ததோ துக்க தரம் நு கிம்—৷৷2.36৷৷
உன் எதிரிகள் உன்னுடைய திறமையை நிந்திப்பவர்களாய் பேசத் தகாத பல வகைச் சொற்களையும் சொல்லப் போகிறார்கள் -அவற்றைக் கேட்பதில் காட்டிலும் கொடிய துன்பம் வேறு ஓன்று உண்டோ – வாயாலே பேசிக் கூடாத -கோழை போலே -ஹிதம் விரும்பாதவர்கள் –நீ யோகி அல்ல வீரன் –சகிக்க முடியாதே துக்கம் தரும் -மரணம் விட மோசம் -காண்டீபம் -தர்ம புத்திரர் கேலி பண்ணுவார் –
உற்ற நோய் நோன்ற லுயிர்க் குறுகண் செய்யாமை
யற்றே தவத்திற் கு௫ -261
தவத்திற்கு வடிவு உண்டி. சுருங்கல்” முதலியவற்றால், தம்முயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்தலும், பிற உயிர்க்குத் துன்பம் செய்யாமையுமாகிய ௮வ் வளவிற்று -மற்றுள்ளன எல்லாமே இவற்றில் அடங்கும் என்பதால் அற்றே’ யென தேற்றேகாரங் கொடுத்தார்- பரிமேலழகர்-
ஸக்நோதீஹைவ ய ஸோடும் ப்ராக் ஸரீர விமோக்ஷணாத்.—
காம க்ரோதோத்பவம் வேகம் ஸ யுக்த ஸ ஸுகீ நர—-৷৷5.23৷৷
சரீரம் விடுவதற்கு முன் -சாதன அனுஷ்டான நிலையான இக்காலத்திலேயே காம க்ரோதங்களால் – மநோ வாக் காயங்களால் ஏற்படும் வேகத்தை எந்தக் கர்ம யோகியானவன் பொறுக்க (தடுக்க)வல்லவன் ஆகிறானோ அந்த மனிதனே ஆத்ம அனுபவத்தை அடையத் தக்கவன் – சரீரம் விட்ட பின் ஆத்ம அனுபவ ஸூகத்தை அவன் அடைகிறான்
அத்வேஷ்டா ஸர்வ பூதாநாம் மைத்ரஸ் கருண ஏவ ச.–
நிர்மமோ நிரஹங்காரஸ் ஸம துக்க ஸுகஸ் க்ஷமீ–-৷৷12.13৷৷
ஸந்துஷ்டஸ் ஸததம் யோகீ யதாத்மா த்ருட நிஷஸ்சய—
மய் யர்பித மநோ புத்திர்யோ மத் பக்தஸ் ஸ மே ப்ரிய—৷৷12.14৷৷
எல்லா ஜீவ ராஸிகளையும் வெறுக்காதவனாய் அவர்கள் இடம் நட்புக் கொண்டவனாய் அவர்கள் துன்புறும் போது கருணை காட்டுபவனாய் -மமகாரம் அற்றவனாய் அஹங்காரம் அற்றவனாய்–இன்ப துன்பங்களை ஓக்க நோக்குகின்றவனாய் பொறுமை யுடையவனாய்-திருப்தி பெற்றவனாய்-எப்போதும் ஆத்ம ஸ்வரூபத்தை அனுபவிப்பவனாய்-மனத்தை அடைக்கியவனாய்-ஸாஸ்த்ரங்களில் சொன்ன அர்த்தங்களில் உறுதியான ஞானத்தை யுடையவனாய்-என்னிடம் செலுத்தப்பட்ட நெஞ்சையும் துணிந்த அறிவையும் யுடையவனாய்-எவன் ஒருவன் கர்ம யோகத்தைச் செய்து என்னிடம் அன்பு செலுத்துகிறானோ-அவன் எனக்கு இனியவன் -.ஆத்ம சாஷாத்காரத்தை நான் அளிக்கிறேன் என்று தாத்பர்யம்-
மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந் தொழுகு மாந்தர் பலர்-278-
மாசு தம் மனதின் கண்ணதாக பிறர்க்குத் தவத்தான் மாட்சி யுடையராய் நீரின் மூழ்கிக் காட்டி, தாம் அதன் கண்ணே மறைந்து ஒழுகும் மாந்தர் உலகத்துப் பலர்-மாசு, காம, வெகுளி, மயக்கங்கள், மாண்டாரென்று பிறர் கருதுதற்கு, நீராடுதலால் ௮த்தொழிலை ௮வர் மறைதற்கிடனாக்கினார்- பரிமேலழகர் -பொய்வேடமணிந்து மக்களை ஏமாற்றும் கூடாவொழுக்க முடையவர்களைக் குறித்து இக்குறட் பாவில் சொல்லப்படுகிறது.
நடுங்கின மலைகளு மரனு நாவவிந்
தடங்கன பறவையும் விலங்கு மஞ்சின
படங்குறைக் தொதுங்கின பாம்பும் பாதகக்
கடுந் தொழி லரக்கனைக் காணுங் கண்ணினே.”
இராவணனது (பொய் வேடத்தைக் கண்டு மலைகள் நடுங்கின பறவைகளும் சப்திக்கவில்லை! விலங்குகளும் பீதி யடைந்தன படமெடுத்தாடிய பாம்புகளும், படத்தைச் சுருக்கிப் பயந்தோடின!”’ கூடா வொழுக்க முடைய பாதகர்கள் வாழ்வதை ௮ஃறிணை உயிர்களும் விரும்பவில்லை யென்றால், ஆறறிவு படைத்த மக்களுக்கு யாதாகும்?
கர்மேந்த்ரியாணி ஸம் யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரந்—
இந்த்ரியார்தாந் விமூடாத்மா மித்யாசார ஸ உச்யதே–৷৷3.6৷৷
எவன் ஒருவன் வாக்கு கை கால் முதலிய கர்ம இந்திரியங்களை அடக்கினாலும் ஆத்ம ஞானம் அற்ற நெஞ்சை உடையவனாய் அந்த நெஞ்சால் இந்திரியங்களுக்கு உரிய சப்தாதி விஷயங்களை நினைத்துக் கொண்டு இருக்கிறானோ அவன் பொய் ஒழுக்கம் கொண்டவனாகக் கூறப்படுகிறான்
வாய்மையெனப் படுவதீ யாதெனி ன் யாதொன்றும்
தீமை யிலாத சொலல்.-291-
*மெய்மை’ யென்று சிறப்பித்து சொல்லப் படுவது யாதென் வினவின், ௮.து பிறிதோருயிர்க்கு தீங்கு சிறிதம் பயவாத சொற்களைச் சொல்லுதல்- பரிமேலழகர்-பொய்மையும் வாய்மை யிடத்த புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின்”
அநுத்வேக கரம் வாக்யம் ஸத்யம் ப்ரிய ஹிதம் ச யத்–
ஸ்வாத்யா யாப்யஸநம் சைவ வாங்மயம் தப உச்யதே–৷৷17.15৷৷
பிறருக்கு வெறுப்பை விளைக்காததாகவும் உண்மையானதாகவும் இனியதாகவும் நன்மை விளைவிப்பதாகவும் இருக்கும் வார்த்தையை விடாது ஓதலுமே வாக்கினால் செய்யப்படும் தவம் என்று சொல்லப்படுகிறது-
நில்லாதவற்றை நிலையின வென்றுணரும்
புல்லறி வாண்மை கடை-331-
நிலையுதலில்லாத பொருள்களை நிலையுத லுடையன வென்று கருதுகின்ற புல்லிய வறிவினை யுடையராதல் துறந்தாற்கிழிபு-தோற்றமுடையவற்றைக் கேடிலவென்று கருதும் புல்லறிவான், அவற்றின் மேற் பற்றுச் செய்தல் பிறவித் துன்பத்துக் கேதுவாதலான்’ ௮து வீடெய்துவார்க்கிழுக்கென்பது இதனாற் கூறப்பட்டது- பரிமேலழகர்-
நீரிற் குமிழி யிளமை நிறை செல்வம்
நீரிற் சுருட்டும் நெடுந் திரைகள் — நீர்மே
லெழுத்தாகும் யாக்கை நமரங்கா ளென்னே
வழுத்தாத தெம்பிரான் மன்று” என நீதி நெறியிலும்,
“பெருக்காறொத்தது செல்வம், பெருக்காற் றிடிகரை யொத்த திளமை, இடிகரை வாழ் மரமொத்தது வாழ்நாள், ஆதலின்,
ஒன்றே செய்யவும் வேண்டும், ஒன்றும் நன்றே செய்யவும் வேண்டும், நன்றும் இன்றே செய்யவும் வேண்டும், இன்றும் இன்னே செய்யவும் வேண்டும், இன்னும்
நாளை நாளை என்பீராகில் – ௮து நமனுடை முறை நாளாவது மறியீர் நம்முடை முறை நாளாவது மறியீர்’” என்ற கபிலர் அகவற்பா –
இப் புல்லறிவை நீக்கி, நல்லறிவு பெற்று, பிறவித் துன்பத்தினின்றும் நீங்கி விட்டின்ப மடைவதற்காகவே, நிலையாமை, துறவு, மெய்யுணாதல், அவா வறுத்தல், என்ற நான்கு ௮திகாரத்துள்ளும், ஞான சாதனங்கள் நான்கையும் கூறி யுள்ளார் என்பது விளங்குகிறது.
யயா தர்மமதர்மம் ச கார்யம் சாகார்யமேவ ச–
அயதாவத் ப்ரஜாநாதி புத்திஸ் ஸா பார்த்த ராஜஸீ--৷৷18.31৷৷
குந்தீ புத்திரனே – எந்த அறிவாலே தர்மத்தையும் அதர்மத்தையும் -செய்யத் தக்கத்தையும்-செய்யத் தகாததையும் –தவறாக ஒருவன் அறிகிறானோ -அந்த அறிவு ரஜோ குணத்தால் உண்டானது –
அதர்மம் தர்மமிதி யா மந்யதே தமஸா வ்ருதா–
ஸர்வார்தாந் விபரீதாம்ஸ்ச புத்திஸ் ஸா பார்த்த தாமஸீ–৷৷18.32৷৷
குந்தீ புத்திரனே – எந்த அறிவானது தமோ குணத்தால் சூழப் பட்டதாய் – அதர்மத்தை தர்மம் என்று அறிகிறதோ –சித்தமாயும் சாத்யமாயும் இருக்கும் எல்லாப் பொருள்களையும் நேர் மாறாக அறிகிறதோ –அந்த அறிவு தமோ குணத்தால் உண்டாகும் புத்தியாகும் –
குடம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே
உடம்பொ டுயிரிடை நட்பு–338
முன்றனியாத முட்டை தனித்துக் கிடப்ப அதனுள்ளிருந்த புள் பருவம் வந்துழிப் பறந்து போன தன்மைத்து உடம்பிற்கும் உயிருக்கும் உள்ள நட்பு. தனித்தொழிய வென்றதனால் முன்றனியாமை பெற்றாம். கருவுந் தானும் ஒன்றாய்ப் பிறந்து வேறாம் துணையுந் அதற்காதாரமாய் நிற்றலால், ௮து உடம்பிற்குவமை யாயிற்று. சேதனமாய் அருவாய் நித்தமாய உயிரும், ௮சேதனமாய் அநித்தமாய் உருவாய உடம்பும் தம்முண் மாறாகலின், வினை வயத்தாற் கூடிய தல்லது நட்பிலவென்றறிக. நட்பென்பது ஈண்டுக் குறிப்பு மொழியாய் நட்பின்றிப் போத லுணர்த்திற்று-பரிமேழைகர்-இதில் குடம்பை’ என்பது கூடென்று மணக்குடவரும், முட்டை’ யென்று பரிமேலழகரும் கூறுகிறார்கள். இவற்றுள் ஒன்று பறவை சித்தற்கும், ஒன்று உற்பத்திக்கும் இருப்பிடமானது. இவ்விரண்டினின்றும்
பறவை வெளியேறுகிறது. இது :புட்பறந்தற்றே’ என் உவமை கூறினார்-இவற்றுள் குடம்பை” யென்பது உடம்பிற்கும். புள்ளென்பது உயிருக்கும் உவமை யாயிற்று.
வாஸாம் ஸி ஜீர்ணாநி யதா விஹாய–நவாநி கருஹ்ணாதி நரோபராணி.—
ததா ஷரீராணி விஹாய ஜீர்ணாநி –அந்யாநி ஸம் யாதி நவாநி தேஹீ—৷৷2.22৷৷
மனிதன் எப்படிக் கிழிந்த துணிகளைக் கை விட்டு வேறு புதிய துணிகளைக் கைக் கொள்ளுகிறானோ அப்படியே ஆத்மாவானவன் கட்டுக் குலைந்த உடல்களைக் கை விட்டு வேறு புதிய உடல்களை நன்றாக அடைகிறான் –
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு –339–
ஒருவனுக்குச் சாக்காடு வருதல் உறக்கம் வருதலோடொக்கும். அதன் பின்பு, பிறப்பு வருதல் உறங்கி விழித்தலோ டொக்கும். உறங்குதலும் விழித்தலும் உயிர்கட்கு இயல்பாய்க் கடிதின் மாறி மாறி வருதல் போன்று, சாக்காடும் பிறப்பும் கடிதின் மாறி மாறி வரும் என்பது கருத்து; நிலையாமையே நிலை பெற்றவாற றிவித்ததற்குப் பிறப்பும் உடன் கூறப்பட்டது.-பரிமேலழகர்.
*துறக்கமே முதலவாய தூயன யாவை யேனும்
மறக்குமா நினையலம்மா வரம்பில தோற்று மாக்கள்
இறக்குமா றிது வென்பான் போன் முன்னை நாளிறந்தான்
பின்னாட் பிறக்குமா றிது வென்பான் போற் பிறந்தனன் பிறவா வெய்யோன்.” -கங்கைப்படலம் -கம்பநாட்டாழ்வார்
வரம்பில தோற்று மாக்கள்-எல்லை யில்லாத பிறப்பு இறப்புக்களில் சிக்கி உழலுகின்ற பகுத்தறிவின்றிய – விலங்கை யொத்த மனிதர்கள், துறக்கம். முதலிய போக பூமிகளையும், தூயனவாகிய வைகுண்டமாகிய முத்தி உலகங்களையும் மறந்து விடுகிறார்களே! இது வியப் பல்லவா? அவ்வாறுள்ள நல்ல பதவிகளை அடைய முயலாமல், ௮ற்பமான-பிறந்து நசிக்கின்ற மலவுடலின் இன்பத்தையே பெரிதென விரும்புகின்ற அஞ்ஞானிகள் இறப்பிற்கு உவமை காட்டுவான் போன்று, ‘கதிரவன் முன்னை நாள் மேற்கில் மறைந்தான்’ – பின்பு அவர்களின் பிறப்பிற் குவமை காட்டுவான் போன்று, மறுநாட் காலையில் கிழக்கில் உதயமானான்’ என்பது பொருளாயிற்று.
ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர்த்ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச.–
தஸ்மாதபரிஹார்யேர்த்தே ந த்வம் ஸோசிதுமர்ஹஸி—৷৷2.27৷৷
உண்டாவதற்கு அழிவு தவிர்க்க முடியாதது – அழிந்ததற்கு மறு பிறப்பும் தவிர்க்க முடியாதது –ஆகையால் தவிர்க்க முடியாத இந்த விஷயத்தில் நீ வருந்துவதற்குத் தகுதி உடையவன் அல்லை-சோகிக்க அர்ஹதை இல்லை – பிறந்தது என்றால் இறக்க வேன்டும் – இறந்தவை பிறக்கவும் செய்ய வேன்டும் – பரிகாரம் இல்லாமல் இருக்க எதற்கு சோகிக்க வேன்டும் —
யாதனின் யாதனி னீங்கியா னோத
லதனி னதனி னிலன்-341-
ஒருவன் யாதொரு பொருளின் யாதொரு பொருளின் நீங்கினான்; அவன் அப் பொருளான் ௮ப்பொருளான் வரும் துன்பத்தை அடைவதில்லை. -பரிமேலழகர்-பற்றற்ற கண்ணே
பிறப்பறுக்கும்” அற்றது பற் றெனில் உற்றது வீடு”
“வேத நூற் பிராயம் நூறு மனிதர் தாம் புகுவரேலும்
பாதிய முறங்கிப் போகும் நின்றதிற் பதினை யாண்டு
பேதை பாலகனதாகும் பிணி பசி மூப்புத் துன்பம்
ஆதலாற் பிறவி வேண்டேன் அரங்க மா நகருளானே” ,
பற்றின்றிச் செய்து கொள்வதுடன் மனதைப் பற்றியுள்ள விஷயப் பற்றுக்களை ஒவ்வொன்றாக விட்டு விடுதலே மெய்யறிவு பெற விரும்பும் அறிஞர்களின் கடமை என்பதை,-யாதனின் யாதனின் நீங்கியான்” எனவும், ௮வ்வாறு விஷயப் பற்றுக்கள் நீங்கிய வளவுக்கு உலகத் தொல்லைகள் நீங்கி மனோ சாந்தி யுண்டாகுமென்பதை *நேர்தல் அதனின் அதனின் இலன்” என்றுங் கூறினார் –
பாஹ்ய ஸ்பர்ஸேஷ் வஸக்தாத்மா விந்தத் யாத்மநி யஸ் ஸுகம்.—
ஸ ப்ரஹ்ம யோக யுக்தாத்மா ஸுக மக்ஷய மஸ்நுதே—-৷৷5.21৷৷
எந்த கர்ம யோகியானவன் வெளி விஷய அனுபவங்களில் ஈடுபடாத நெஞ்சை உடையவனாய் –உள்ளே இருக்கும் ஆத்மாவாலேயே இன்பம் அடைகின்றானோ –
அவன் ஆத்மாவைப் பயில்வதிலேயே ஈடுபட்ட மனம் உடையவனாய் ஆத்ம அனுபவம் ஆகிற அழியாத ஸூகத்தைப் பெறுகிறான் –
யே ஹி ஸம் ஸ்பர்ஸஜா போகா துக்கயோநய ஏவ தே.—
ஆத்யந்தவந்த கௌந்தேய ந தேஷு ரமதே புத—–৷৷5.22৷৷
குந்தீ புத்திரனே விஷயங்களோடு இந்திரியங்கள் தொடர்பு கொள்வதால் ஏற்படும் இன்பங்கள் யாவை சில உண்டோ – அவை துன்பத்திற்கே காரணமாய் இருப்பவை அன்றோ -முதலும் முடிவும் உள்ளவை அன்றோ – அவற்றின் இயல்வை அறிபவன் அவற்றில் ஈடுபட மாட்டான்-
அடல் வேண்டு மைந்தன் புலத்தை விடல் வேண்டும்
வேண்டிய வெல்லா மொருங்கு -343-
வீடெய்துவார்க்குச் செவி முதலிய ஐம் பொறிகட்குரியனவாகிய ஓசை முதலிய ஐம்புலன்களையும் கெடுத்தல் வேண்டும். கெடுக்குங்கால் அவற்றை நுகர்தற்
பொருட்டு தாம் படைத்த பொருண் முழுவதையும் ஒருங்கே விடுதல் நல்லது. பகுத்தறிவு பெற்ற மனிதப் பிறவியினர்களுக் குண்டாகும் இவ்வுலக சுகங்களும், ஒன்றுக் கொன்று உயர்வாகவே அமைந்துள்ளன. அவைகள் வரிசைக் கிரமமாக முதலில், ‘தேக சுகம், இந்திரிய சுகம், மனோசுகம், புத்தி சுகம், ஆத்ம சுகம்’ என்பனவாகும். இவைகள் ஒன்றுக் கொன்று ௮திக உயர்வானவை. இதனை இந்தரி யாணி பராண்யாஹு”’ என்ற கீதை 3-42 வது சுலோகம் விளக்கிக் காட்டுகிறது-முத்தி விருப்பமுள்ள அதிகாரிகளை,-உத்தமன், மத்திமன்; அதமன்-மந்த ” என்று மூவகைப் படுத்தி வேதாந்த நூல்கள் கூறுகின்றன-மத்திம அதிகாரிகளைக் குறித்து உபதேசிக்கும் நூலுபதேசங்கள் பலவாக விருப்பினும், புலனடக்கமே ஞான அதிகாரிகளுக்கு முதற் சாதான மாலதால் “அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை ”என தெய்வப் புலவர் விதி முகத்தால் அறிவுரை கூறினார்-முன் அனுபவித்த
பழக்க வாசனை யானது இவனை வலிய இழுத்துச் சென்று,விட்ட பற்றுக்களில் புகுத்திப் பேரின்ப வாழ்வுக்கு இடையூறு உண்டாக்குவதால் விடல்வேண்டும் வேண்டிய வெல்லா மொருங்கு”” என்ற நியமத்தையும் உடன் கூறினா்-
இந்த்ரியாணி பராண்யாஹுரிந்த்ரியேப்ய பரம் மந–
மநஸஸ்து பரா புத்திர்யோ புத்தே பரதஸ்து ஸ—-৷৷3.42৷৷
ஞானத்தை தடை செய்வதில் பத்து இந்திரியங்களும் முக்கியவையாக கூறுகின்றனர்
இந்திரியங்களைக் காட்டிலும் மனத்தை முக்கியமாகக் கூறுகின்றனர்
மனத்தைக் காட்டிலும் விஷய அனுபவத்தில் உறுதியான புத்தி முக்கியமானது
புத்தியைக் காட்டிலும் எது மேலானதோ அது காமமே யாகும் –
ஸங்கல்ப ப்ரபவாந் காமாம் ஸ்த்யக்த்வா ஸர்வாநஷேஷத—
மநஸை வேந்த்ரிய க்ராமம் விநியம்ய ஸமந்தத—-৷৷6.24৷৷
ஸநை ஸநைரு பரமேத் புத்த்யா த்ருதி க்ருஹீதயா—-
ஆத்ம ஸம் ஸ்தம் மந க்ருத்வா ந கிஞ்சிதபி சிந்தயேத்—৷৷6.25৷৷
தன் மமகாரத்தால் ஏற்படும் எல்லா விரும்பத்தக்க பொருள்களையும் அடியோடு மனத்தாலேயே ஸ்வரூப தியாகம் செய்தும் -எல்லா விஷயங்களில் நின்றும் இந்திரிய சமூகத்தை மிகவும் திருப்பி மெள்ள மெள்ள தைர்யத்தினால் நிலை நிறுத்தப்பட்ட அறிவினால் – ஆத்மாவைத் தவிர்ந்த மற்ற விஷயங்களில் நின்றும் கை வாங்கக் கடவன் –
ஆத்மாவிலேயே இருப்பதாக மனத்தைச் செய்து ஆத்மாவைத் தவிர்ந்த எவ் விஷயத்தையும் சிந்திக்கக் கடவன் அல்லன் –
யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த வுலகம் புகும்–346-
தானல்லாதவுடம்பை யானென்றும், தன்னோடியைபில்லாத பொருளை எனதென்றுங் கருதி அவற்றின் கட் பற்றுச் செய்தற் கேதுவாகிய மயக்கத்தைக் கெடுப்பான் வானோர்க்கும் எய்தற்கரிய வீட்டுலகத்தை யெய்தும். இதனான் இவ் விரு வகைப் பற்றைபும் விட்டார்க்கே வீடுள்ளது என்பது கூறப்பட்டது. ஒருவனுக்குக் காமானுசாரத்ததிற்குத் தக்கவாறாகவே உலகப் பொருள்கள் வந்து சேருகின்றன. இது:“”புண்ணியமாம் பாவம் போம் போன நாட் செய்தவை மண்ணிற் பிறந்தாரக்கு வாய்த்த பொருள்”-என்ற பாவின்படி., முன் செய்துள்ள புண்ணிய வினைப்பயனால் ஒருவனுக்குப் பல பொருள்கள் தானே வந்து குவிகின்றன.
விஹாய காமாந் யஸ் ஸர்வாந் புமாம்ஸ்சரதி நிஸ்ப்ருஹ—.
நிர்மமோ நிரஹங்கார ஸ ஸாந்தி மதிகச்சதி–৷৷2.71৷৷
எந்த மனிதன் சப்தாதி விஷயங்கள் அனைத்தையும் விட்டு -அவற்றில் ஆசை அற்றவனாய் –மமகாராம் அஹங்காரம் அற்றவனாய் வாழ்கிறானோ அவன் சாந்தியை அடைகிறான்-
பொருளல் லவற்றைப் பொருல் என்றுணரு
மருளானா மாணாப் பிறப்பு-351-
மெய்ப் பொருளல்லாத வற்றை மெய்ப் பொருளென்று உணரும் விபரீத வுணர்வானே உனதாம்;இன்பமில்லாத பிறப்பு.–விபரீத வுணர்வாவது இருவினைப் பயனும், *கடவுளுமில்லை எனவும் மற்றுமித் தன்மை யெனவுஞ் சொல்லும்
மயக்க நூல் வழக்குகளை மெய் நூல் வழக்கென துணிதல்.
“மருள், மயக்கம், விபரீத வுணர்வு, அவித்யை ”’ என்பன ஒரு பொருட் சொற்கள். நரகர், விலங்கு, மக்கள், தேவ” என்னும் நால்வகை பிறப்பினும் துன்பமே யாதலின்,மாணாப் பிறப்’பென்றார் பிறப்பு துன்பமென்பதும் அதற்கு முதற் காரணம் -அவித்யை ‘ என்பதும் கூறப்பட்டன.–பரிமேலழகர்.- -மெய்யுணர்தல்’ என்ற அதிகாரத்துள்ள பத்துக் குறட் பாக்களிலும் விளக்கி யருளினர்- -கீதை 13-26-ஸ்லோகத்தின் கருத்தாகும்-
அந்யே த்வேவமஜாநந்த ஸ்ருத்வாந்யேப்ய உபாஸதே–
தே அபி சாதி தரந்த்யேவ ம்ருத்யும் ஸ்ருதி பராயணா--৷৷13.26৷৷
இவ்வாறு ஜீவாத்மா ஞானம் இல்லாத மற்றும் சிலரோ என்னில்-ஆச்சார்யர்கள் இடம் ஆத்மாவைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டு உபாசிக்கிறார்கள் குருமுகமாகக் கேட்பதையே முக்கிய லஷ்யமாகக் கொண்ட அந்த பாக்ய சாலிகளும் படிப்படியாக சம்சாரத்தை கடப்பரே யாவர்
நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத-
உபயோரபி த்ருஷ்டோந்த ஸ்த்வநயோஸ் தத்வ தர்ஸிபி–৷৷2.16৷৷
இல்லது எனப்படும் உடலுக்கு உள்ளதின் தன்மையாகிற நித்யத்வம் உண்டாகாது -உடல் அநித்யமானது உள்ளது எனப்படும் ஆத்மாவுக்கு இல்லதின் தன்மையாகிற அநித்யத்வம் உண்டாகாது -ஆத்மா நித்தியமானது உடல் ஆத்மா இவ்விரண்டையும் பற்றிய முடிவானது உண்மை அறிவாளிகளால் இவ்வாறு அறியப் பட்டுள்ளது-
இருள் நீங்கி மின்பம் பயக்கு மருணீங்கி மாசறு காட்சி யவர்க்கு-352-
அவித்தை நீங்கி மெய் யுணர்வுடையராயினார்க்கு, அம் மெய்யுணர்வு பிறப்பினை நீக்கி விட்டினைக் கொடுக்கும். மாசறு காட்சி யென்றது கேவல வுணர்வினை- இதனால்
வீடாவது நிரதசய வின்பமென்பதுவும், அதற்கு நிமித்த காரணம் கேவலப் பொருளென்பதூவும் கொள்க– பரிமேலழகர்.
சாணினு முளனோர் தன்மை யணுவினைச் சத கூறிட்ட
கோணினு முளன் மா மேருக் குன்றினு முளனின்னின்ற
தூணினமுளன் நீ சொன்ன சொல்லினு முளனித் தன்மை காணுதி விரைவில்’” -கம்பநாட்டாழ்வார் –
யஸ்ய ஸர்வே ஸமாரம்பா காம ஸங்கல்ப வர்ஜிதா-
ஜ்ஞாநாக்நி தக்த கர்மாணம் தமாஹு பண்டிதம் புதா—৷৷4.19৷
எவனுக்கு எல்லாக் கர்மங்களையும் பற்றிய முயற்சிகளும் பலன்களில் பற்று அற்றவையாக இருக்கின்றனவோ –அறிவாளியான அவனையே ஞானம் ஆகிய நெருப்பால் எரிக்கப்பட்ட வினைகளை உடையவனாக தத்வம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்-
ஐயத்நீனீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வாள நணிய துடைத்து-353-
ஐயத்தினின்றி நீங்கி மெய்புணர்ந்தார்க்கு எய்தி நின்ற நிலவுலகத்தினும் எய்தக் கடவதாய வீட்டுலகம் கணித்தா தலுடைத்து – ஐயமாவது பலதலையாய வுணர்வு. அஃதாவது மறு பிறப்பும் இருவினைப் பயனும் கடவுளும் உளவோ இலவோவென ஒன்றிற்றுணிவு பெறாது நிற்றல், பேய்த்தேரோ,புனலோ, கயிரோ, அரவோ வெனத் துணியாது நிற்பதும் அது-. ஒருவாற்றார பிற மதம் களைந்து தம்மத நிறுத்தல் எல்லாச் சமய நூல்கட்கும் இயல்பாதலின், ௮வர் கூறுகின்ற பொருள்களுள் யாது மெய்யென நிகழுமையத்தனை யோக முதிர்ச்சி யுடையார் தம்மனுபவத்தால் நீக்கி மெய்யுணர்வார் ஆதலின் அவரை ஐயத்தின் நீங்கித் தெளிக்தாரென்றும், அவர்க்கு ௮வ் வனுபவ வுணர்வு அடிப்பட்டு வரவர பண்டை உலககிய லுணர்வு தூர்ந்து வருமாகலின், அதனைப் பயன் மேலிட்டு ‘வையத்தின் வானம் நணியதுடைத்து”‘ என்றும் கூறினார்- கூறவே, ஐய வுணாவும் பிறப்பிற்குக் காரணமாதல் கூறப்பட்டது.– பரிமேலழகர்.
அஜ்ஞஸ் சாஸ்ரத் ததாநஸ்ச ஸம்ஸயாத்மா விநஸ்யதி—
நாயம் லோகோஸ்தி ந பரோ ந ஸுகம் ஸம்ஸயாத்மந—-৷৷4.40৷৷
ஆத்ம ஞானம் அற்றவனும் அவ்வறிவை வளர்ப்பதில் ஆர்வம் அற்றவனும் ஐயம் உற்றவனுமான மனிதன் அழிந்து விடுவான்- ஐயம் உற்ற நெஞ்சினனுக்கு இவ்வுலகில் புருஷார்த்தங்கள் கிடையாது –பர லோக புருஷார்த்தமான மோக்ஷமும் கிடைக்காது -ஆத்ம விஷயமான சுகமும் கிடைக்காது –
லபந்தே ப்ரஹ்ம நிர்வாணம் ருஷய க்ஷீண கல்மஷா—
சிந்ந த்வைதா யதாத்மாந ஸர்வ பூத ஹிதே ரதா—-৷৷5.25৷৷
சீத உஷ்ணம் முதலிய இரட்டைகளில் இருந்து விடுபட்டவர்களாய் -ஆத்மாவிலேயே ஈடுபட்ட மனத்தை உடையவர்களாய் எல்லா ஜீவ ராசிகள் உடையவும் நன்மையில் ஊற்றம் உடையவர்களாய் ஆத்ம சாஷாத்காரத்தை பயில்கின்றவர்களான கர்ம யோகிகள் ஆத்மாவை அடையத் தடையாய் இருக்கும் எல்லாப் பாபங்களும் நீங்கப் பெற்றவர்களாய்
ஆத்ம அனுபவ ஸூகத்தை அடைகிறார்கள் –
ஐயுணர் வெய்தீயந் கண்ணும் பயமின்றே
மெய்யுணார் வில்லா தவர்க்கு–354-
செல்லப்படுகின்ற புலன்கள் வேறுபாட்டான் ஜந்தாகிய உணர்வு, அவற்றை விட்டுத் தம் வயத்ததாகிய வழியும், அதனாற் பயனில்லையேயாம் மெய்யுணர்வைப் பெறாதார்க்கு-ஐந்தாகிய வுணர்வு மனம். அஃதெய்துதலாவது-மடங்கி ஒருவழிப்பட்டுத் தாரணைக் கண் நிற்றல், அங்கன் நின்ற வழியும் வீடு பயவாமையின் பயமின்றென்றார். சிறப்பும்மை எய்துதற்கருமை விளக்கி நின்றது. இதனால், ‘மெய் யுணர்வுடையார்க்கே வீடுள”தென மெய் யுணர்வின் சிறப்புக் கூறப்பட்டது-பரிமேலழகர்.
விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந–
ரஸவர்ஜம் ரஸோப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்ததே–৷৷2.59৷৷
விஷயங்களில் இருந்து இந்திரியங்களை இழுத்த ஜீவனுக்கு விஷயங்கள் நீங்குகின்றன
ஆனால் விஷயங்களின் ஆசை நீங்குவது இல்லை-ஞான யோக நிஷ்டனுக்கு மேலான ஆத்ம ஸ்வரூபத்தைக் கண்டவுடன் இவ்வாசையும் நீங்குகிறது ஆத்ம தரிசனத்தால் இந்திரியங்கள் அடக்கலாம் –ஏக ஆஸ்ரய தோஷம்-
எப்பொரு ளெத்தன்னைத் தாயினு மப்பொருள்
மெய்ப் பொருள் காண்பதறிவு-355
யாதொரு பொருள் யாதோரியல்பாய்த் தோற்றினும் அத் தோற்றியவற்றைக கண்டொழியாது ௮ப் பொருளின் கணின்று மெய்யாகிய பொருளைக் காண்பதே
மெய்யுணர்வாவது-,பொருள் தோறும் உலகத்தாசர் கற்பித்துக் கொண்டு
வழக்கும் கற்பனைகளை நீக்கி நின்ற உண்மையைக் காணுதலாம்- பரிமேலழகர்-மெய்யுணர்தலுக்கு இலக்கணமாக அமைந்துள்ளது இக்குறட்பா -மரத்தால் செய்த யானையைப் பார்க்கு மிடத்து முதலில் யானை தோன்றுகிறது; மரம் தெரிவதில்லை.-மரம்” என்ற உண்மை தெரிந்தவுடன் யானை தோன்றுவதில்லை-மஞ்சட்காமாலை யுள்ளவன் கண்களுக்கு ஸூர்ய வொளி மஞ்சன் நிறமாகவே தோற்றமளிக்கிறது–“தேகமே நான்’ என்று மாறு பட்டுணர்வது பொய்யுணரவாகும்-
யாவத் ஸஞ்ஜாயதே கிஞ்சித் ஸத்த்வம் ஸ்தாவர ஜங்கமம்–
க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ ஸம் யோகாத் தத் வித்தி பரதர்ஷப–৷৷13.27৷
பரத வம்ச திலகமே ஸ்தாவரமாகவோ ஜங்கமமாகவோ ஏதாவது ஒரு ஐந்து எவ்வளவு உண்டாகிறதோ-அவ்வளவும் ப்ரக்ருதி ஜீவன் இவற்றின் சேர்க்கையால் ஏற்பட்டதே என்று அறிவாயாக-விலங்குகளுக்கும் ஸ்தாவரங்களுக்கும் ஆத்மாக்கள் உண்டு-எந்தப் பொருளும் சேதன அசேதன சேர்க்கையாலேயே உண்டாகின்றன –
ஸமம் ஸர்வேஷு பூதேஷு திஷ்டந்தம் பரமேஸ்வரம்–
விநஸ்யத் ஸ்வ விநஸ்யந்தம் ய பஸ்யதி ஸ பஸ்யதி–৷৷13.28৷৷
ஆத்ம தேஹ பண்புகளை பிரித்து பார்ப்பவன் உண்மையாகப் பார்க்கிறான்-வெவ்வேறு ஆகாரமான எல்லா தேஹங்களிலும் தனித்தனியே தேகம் முதலியவற்றுக்கு முழு ஈஸ்வரனாய் –சேதனனாய் -சமமாக இருப்பவனும் –ஞான ஆகாரத்தால் சமமாகப் பார்க்க வேண்டுமே -அந்த தேகங்கள் அளிக்கின்ற போது என்றும் தான் அழியாமல் இருப்பவனுமாக எவன் காண்கிறானோ அவனே ஆத்ம தர்சனம் செய்பவன் –
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி-356
இம்மக்கட் பிறப்பின் கண்ணே உபதேச மொழிகளை அனுபவமுடைய தேசிகர்பாற் கேட்டு, அதனான் மெய்ப்பொருளை யுணர்ந்தவா் மீண்டு இப் பிறப்பின் கண் வாராத நெறியை யெய்துவர்-விட்டிற்கு நிமித்த காரணமாய் முதற் பொருளை யுணர்தற்குபாயம் மூன்று- அவை -ஸ்ரவணம் -மனனம் -நிதித்யாஸனம்-கேள்வி, விமரிசம், பாவனை, யென்பன,- அவற்றுட் கேள்வி இதனாற் கூறப்பட்டது. -(பரிமேலழகர்).-
யஜ்ஜ்ஞாத்வா ந புநர் மோஹ மேவம் யாஸ்யஸி பாண்டவ.—
யேந பூதாந் யஸேஷேண த்ரக்ஷ்யஸ்யாத் மந்யதோ மயி—৷৷4.35৷৷
எதை அறிந்து மறுபடியும் இவ் வண்ணமாக மயக்கத்தை அடைய மாட்டாயோ –
எந்த அறிவினால் ஜீவ ராசிகள் ஓன்று விடாமல் தனக்கு சமமாகவும் எனக்கும் சமமாகவும் காண்பாயோ –அந்த அறிவைப் பெறுவாயாக –சாஷாத்காரம் அடைந்தால் -மயக்கம் பிரமம் வராது -பார்வை -உன்னை போலே பூதங்களை பார்ப்பாய் – எல்லாரையும் ப்ரஹ்மமாகவே -சரீரம் தானே என்று அறிந்து -கொள்வாய்-
பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்ப தறிவு-358-
-பிறப்பிற்கு முதற் காரணமாகிய அவித்யை கெட வீட்டிற்கு நிமித்த காரணமாகிய செவ்விய பொருளைக் காண்பதே ஒருவர்க்கு மெய்யுணர்வாவது-*பிறப்பென்னும் பேதமை” எனலும், *சிறப்பென்னும்செம் பொருள்” எனவும் காரியத்தைக் காரணமாக உபசரித்தார்-இது எல்லாம் ஈஸ்வர சொருபம்!” என்ற பாவனை நிலை பெற வேண்டும். இது தியான சமாதிகளால் உண்டாகும் ஆத்மானுபவத்தாலாவது- இதனைச் செம் பொருள் காண்பதறிவு” என்று கூறினார். “எய்ப்பென்னை வந்து நலியும் போதங்கேதும் நானுன்னை
நினைக்க மாட்டேன். அப்போதைக் இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளியானே’ -மனதின் இயல்பே மனித உருவமாகிறது. அம்மனதிற் கொத்தபடியே உலக
மும் அவளுக்குக் காட்சி யளிக்கிறது-
ஜ்ஞாநேந து தத் அஜ்ஞாநம் யேஷாம் நாஸிதம் ஆத்மந–
தேஷாம் ஆதித்யவத் ஜ்ஜ்ஞாநம் ப்ரகாஸயதி தத் பரம்—৷৷5.16৷৷
எந்த ஜீவர்களுக்கு ஆத்ம விஷயமான ஞானத்தால் அந்த கர்மம் அழிக்கப் பட்டதோ அவர்களுக்கு மேலான அவ்வாத்மா ஞானம் ஸூர்யனைப் போலே எல்லாவற்றையும் பிரகாசப் படுத்துகிறது-விலக்க உபாயம் -அநாதி பாப கர்ம வாசனை -ஆத்ம யாதாம்யா ஞானம் கொண்டே -வளர்த்து -அப்பியாசம் முக்கியம் – ஆதித்யன் ஒளியால் பொருள்கள் விளங்குவது போலே ஞானம்-மேகம் மூட்டம் போலே அஞ்ஞானம் –
தத்புத்தயஸ் ததாத்மாநஸ் தந்நிஷ்டாஸ் தத்பராயணா—-
கச்சந்தி அபுநராவ்ருத்திம் ஜ்ஞாந நிர்தூத கல்மஷா—৷৷5.17৷৷
முன் கூறிய ஆத்ம தர்சனத்தாலேயே உறுதி பூண்டவர்களாய் -அதிலேயே ஈடுபட்ட நெஞ்சை உடையவர்களாய் –அதின் பயிற்சியிலே ஊன்றி நிற்பவர்களாய் -அதுவே பரம பிரயோஜனம் என்று நினைத்து இருப்பவர்களாய்-இந்த ஆத்ம ஞானத்தாலேயே முன் செய்த வினைகள் அழியப் பெற்றவர்கள் திரும்பி வருதல் இல்லாத ஆத்மாவை அடைகிறார்கள்-
ப₄ஹூநாம் ஜந்மநாமந்தே-ஞாநவாந் மாம் ப்ரபத்யந்தே |–
வாஸுதே₃வஸ் ஸர்வமிதி-ஸ மஹாத்மா ஸுது₃ர்லப₄ ||—7-19-
பல புண்ணியப் பிறவிகள் கழிந்த பின்பு அறிவு முதிர பெற்ற ஞானியானவன் –
வாஸூ தேவனே எனக்குப் பரம ப்ராப்யமாகவும் -ப்ராபகனாகவும் –தாரகம்-போஷகம் -போக்யம் முதலான எல்லாமாகவும் இருக்கிறான் -என்று எண்ணி என்னைச் சரணம் அடைகிறான் – அவன் விசாலமான நெஞ்சை உடையவன் ஆவான் -இவ்வுலகில் எனக்கும் மிகவும் கிடைத்தற்கு அரியவனாவான் -பல புண்ய ஜன்மாக்கள் கழிந்த பின்பே -ஞானம் படைத்தவன் என்னை சரண் அடைகிறான் –
காமம் வெருளி மயக்கமிலை மூன்றன்
நாமந் கெடக் கெடுனோய்-360-
காமம், வெகுளி, மயக்கமெனும் இக் குற்றங்கள் மூன்றும், ஞான யோகப் பயிற்சி யுடையார்க்கு அறவே கெடுதலால், அவற்றின் காரியமாக வினைப் பயன்கள் உண்டாக மாட்டா-ஆகையால், பிறவிப் பிணி அவர்களுக்கு இனி உண்டாகாது-மெய்யுணர்ந்த ஞானிகளுக்கு நிற்பது, எடுத்த உடம்பும் அதற்குள்ள வினைப் பயன்களுமே யென்பது பெற்றாம்-பரிமேலழகர் –
த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாஸநம் ஆத்மந–
காம க்ரோதஸ் ததா லோபஸ் தஸ்மா தேதத் த்ரயம் த்யஜேத்–৷৷16.21৷৷-த்யஜேத்-படர்க்கை –த்யஜ-முன்னிலை பாட பேதம்-
காமம் கோபம் பேராசை என்கிற இது ஆஸூரத் தன்மையாகிற நரகத்திற்கு ஆத்மாவையே அழிக்க வல்ல மூன்று வகைப்பட்ட காரணமாகும் -ஆகையால் இந்த மூன்றையும் கை விட வேண்டும் – மூன்று துவாரம் -ஆத்மாவை அழிக்கும் -காமம் -க்ரோதம் -பேராசை -மூன்றையும் விலக்கி விடுவாய் – தேவைகளை குறைத்து ஆசைப் படாமல் இருந்தால் போதுமே-
அவா வென்ப வெல்லா வுயிர்க்கு மெஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து-361-
எல்லா வுயிர்கட்கும் எக் காலத்தும் கெடாது வருகின்ற பிறப்பினை விளைவிக்கும் வித்து அவா வென்று சொல்லுவர் நூலோர்-*ஆசையுள்ளளவும் பிறப்பும் உண்டு’ என்ற
நிச்சயம் காணப்படுகிறது-தேகமகிய ஏரியில் நிறைந்து ததும்புகின்ற ஆசையாகிய தண்ணீர், பொறிகளாகிய கால்வாய்களில் வழிந்தோடி விஷயங்களிற் சென்று
பாய்ந்து, விஷயங்களில் பற்றுக் கொண்டு நற்கதிக்குச் செல்ல வொட்டாமல் தடைப் படுத்துகிறது.
ஸ்ரீ பகவாநுவாச-
காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோ குண ஸமுத்பவ–
மஹா ஸநோ மஹா பாப்மா வித்த்யேநமிஹ வைரிணம்–৷৷3.37৷৷
பகவான் கூறினான் -நீ கேட்ட விஷய அனுபவ காரணம்-ரஜோ குணத்தால் உண்டாவதாய் –
பெரும் தீனி தின்னும் காமமே யாகும்–நெருப்புக்கு எவ்வளவு விறகு கொடுத்தாலும் அதை எரித்துவிட்டு மேலும் விறகை வேண்டி. நிற்கிறது. அவ்வாறே காமத்துக்கு உணவை ஊட்ட ஊட்ட அது உண்டு வளருகிறது,-இக் காமமே -தடை செய்யப்பட போது -தடை செய்தவர்களைக் குறித்து -பெரும் பாவச் செயல்களையும் புரியும் கோபமாகப் பரிணமிக்கிறது –இக் காமத்தையே இந்த ஞான யோகத்துக்கு விரோதி என்று தெரிந்து கொள்வாயாக-
வேண்டாமை யன்ன விழுச் செல்வ மீண்டில்லை
யாண்டு மஃதொப்பதில் -363-
ஒரு பொருளையும் ஆசைப்படாத விழுமிய செல்வம் காணப்படுகின்ற இவ்வுலகில் இல்லை- அவ்வளவே யன்று, காணப் படாத துறக்க வுலகத்தும் அதனை யொப்பதில்லை. மக்கள் செல்வமும் தேவர் செல்வமும் அதற்கு மேலுள்ள செல்வத்தை நோக்க, இச்செல்வங்கள் கீழாகின்றன–தனக்கு மேல் ஒன்றுமில்லாத வேண்டாமையை விழுச் செல்வமென்றார் — பரிமேலழகர்.
அநபேக்ஷஸ் ஸூசிர் தக்ஷ உதாஸீநோ கத வ்யத–
ஸர்வாரம்ப பரி த்யாகீ யோ மத் பக்தஸ் ஸ மே ப்ரிய–৷৷12.16৷৷
ஆத்ம தவிர்ந்த எல்லா வஸ்துக்களையும் விரும்பாதவனாய் -ஆஹார சுத்தியை உடையவனாய் – சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட கிரியைகளைச் செய்வதில் வல்லவனாய் – மற்ற கிரியைகள் விஷயத்தில் உதா சீனனாய் -சாஸ்திரீய கிரியைகள் செய்வதனால் தவிர்க்க முடியாமல் ஏற்படும் துன்பங்களினால் துன்புறாதவனாய் -சாஸ்திரீய கர்மங்கள் தவிர்ந்த மற்ற கர்மங்கள் அனைத்தையும் தொடங்காமலே விடுபவனாய் -எந்த கர்ம யோக நிஷ்டன் என்னிடம் அன்பு செலுத்துகிறானோ அவன் எனக்கு இனியவன்-
ஆரா வியற்கை யவா நீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும் –370-
ஒருகாலும் நிரம்பாத அவாவினை ஒருவன் நீக்குமாயின் , அந் நீப்பு அவனுக்கு அப்பொழுதே எந் நாளும் ஒரு தன்மையனா மியல்பைக் கொடுக்கும்-களிப்புக் கவர்ச்சிகளும், பிறப்பு இறப்புப் பிணி மூப்புகளும் முதலாயின வின்றி உயிர் நிரதிசய வின்பத்தைப் பெறுதலின் விட்டின்பத்தனைப் (பேரா வியற்கை’ யென்றும், ௮ஃது அவா நீத்த
வழிப் பெறுதல் ஒரு தலையாதலின் அந்நிலையே :த௫’ மென்றும் கூறினார். – பரிமேலழகர்-இவ்வதிகாரத்துள்ள முதல் ஒன்பது பாக்களிலும், அவா” என்னும் ஆசையாலுண்டாகும் தீமைகளை யெல்லாம் பலவாறாக விளக்கக் கூறி, இப் பத்தாவது குறளில் *ஆரா வியற்கை யவா” என்று அவாவினது முழு இலக்கணத்தையும் தெய்வப் புலவர் கூறிமுடித்தார். அத் தன்மையான ஆசையை ஒருவன் நீக்க வல்லவனாயின், அப்பொழுதே அவன் வீட்டின்பத்தினை யடைகிறான்’ என அதன் பலனையும் அடுத்த அடியில் உள்ள வாக்கியத்தின் பொருளால் விளக்கிக் கூறினார் –
தஸ்மாச் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்ய அகார்ய வ்யவஸ்திதௌ–
ஜ்ஞாத்வா ஸாஸ்த்ர விதா நோக்தம் கர்ம கர்துமிஹார்ஹஸி–৷৷16.24৷৷
ஆகையால் உனக்குக் கைக் கொள்ளத் தக்கது இது கைக் கொள்ளத் தகாதது இது என்று நிர்ணயிப்பதில் வேதமே ப்ரமாணமாகும்- ஆகையால் சாஸ்திரங்களில் சொல்லப்படும் தத்துவத்தை உள்ளபடி அறிந்து இக் கர்ம பூமியில் அக் கர்மத்தையும் அந்த தத்வ ஞானத்தையும் நீ கைக் கொள்ளத் தக்கவனாகிறாய் –
ஆபூர்யமாணம சல ப்ரதிஷ்டம் -ஸமுத்ரமாப ப்ரவிஸந்தி யத்வத்.–
தத்வத் காமா யம் ப்ரவிஸந்தி ஸர்வே-ஸ ஸாந்திமாப்நோதி ந காமகாமீ—৷৷2.70৷৷
எப்படி தானே நிறைந்து இருப்பதாய் ஒரே நிலையில் உள்ள கடலை நதி நீர் அடைகின்றனவோ அப்படியே சப்தாதி விஷயங்கள் அனைத்தும் இந்திரியங்களை அடக்கிய எவனை அடைகின்றனவோ அவனே சாந்தியை அடைகிறான் -சப்தாதி விஷயங்களை விரும்புவான் சாந்தி அடைவது இல்லை-
நுண்ணிய தூல்பல கற்பினு மற்றுந்தன் னுண்மை யறிவே மிகும் -373-
பேதைக் குணமுடையானொருவன் நுண்ணிய பொருள்களை யுணர்த்தும் நூல்கள் பலவற்றையுங் கற்றானா யினும் மற்றுந்தன் ஊழானாகிய பேதமை யுணர்வே மேற்படும்-*இயற்கையறிவு, நூலறிவு’ –இயற்கையறிவென்பது சத்துவ, ராஜஸ தாமஸ மாகிய முக்குணக் கலப்பினாலாகியது, அது, *௮வனவன் ஊழ்வினைக்குத் தக்கவாறாக அமைந்துள்ளது” என்பது பரிமேலழகரின் கருத்தாகும்-கீதை 15 -மூன்று குணங்களின் விளக்க அத்தியாயம்” இதைக் கம்பரும், *மூன்று உருவெனக் குண மும்மையா முதற் தோன்றுரு வெவையும்” என வலியுறுத்தினார் –
ஸத்ருஸம் சேஷ்டதே ஸ்வஸ்யா ப்ரக்ருதேர் ஜ்ஞாநவாநபி–
ப்ரக்ருதிம் யாந்தி பூதாநி நிக்ரஹ கிம் கரிஷ்யதி—৷৷3.33৷৷
சாஸ்த்ரங்களினால் ஏற்படும் ஆத்ம தத்வ ஞானத்தை உடையவனும் தன்னுடைய அநாதியான விஷய வாசனைக்குத் தக்கபடி -உலக விஷயங்களிலேயே பழகுகிறான் -ஏன் எனில் – அசேதனத்தோடு சேர்ந்து இருக்கும் சேதனர்கள் அநாதி வாசனையையே பின் செல்கின்றனர் – அவர்களை சாஸ்திரம் செய்யும் நியமனம் என்ன செய்து விட முடியும் –
இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு-374-
உலகத்து ஊழினாலாய வியற்கை இரண்டு கூறு. அவை, செல்வமுடையராதலும் வேறு; அறிவுடையராதலும் வேறு-உலகமென்பது உயர்ந்தோர் மாட்டே என்றபடி, உயர் பிறப்பாகிய மக்கட் பிறவியைக் குறிப்பிடுகிறார் – அம்மக்கட் பிறவியிலுள்ளும், *ஊழ்வினைக்குத் தக்கவாறாக இருவிதக் குறிக் கோளை இயல்பாக வுடையவர்களாக இருக்கிறார்கள்’ எனப் பிரித்துக் கூறினார், அவற்றுள், செல்வத்தை மட்டும் விரும்புவோர், உலகப் பற்றுடையார் பந்தத்தில் கட்டுண்டவர் ‘ என, ஒரு சாரரராகவும், ஞானத்தை விரும்புவோர், தெய்விகப் பற்றுடையவர் முக்தி நெறியின் சார்பு பெற்றவர் ‘ என மற்றொரு சார்பாராகவும் பிரித்து, ‘செல்வமுடையராதலும் வேறு அறிவுடையராதலும் வேறு’ என, இரு விதமாகப் பகுத்துக் கூறினார்-நம் சமய நூல்களில் ஊழ் வலியை வற்புறுத்திக் கூறுவது போன்று,பிற மதங்களில் காணப்படவில்லை, மற்றும், நம் சமய நூல்களில் கண்ணிமைப்பதும், கைகாலசைவதும், காலில் முள் தைப்பதும், கல் இடரி விழுந்து தலை சிதறி உயிர் நீப்பதும்,
*ஊழ்வினையின் விளை’ வென்றே சோதிடம் முதலான எல்லா நூல்களும் ஒரு படித்தாகவே கூறுகின்றன.
நா தத்தே கஸ்யசித் பாபம் ந சைவ ஸுக்ருதம் விபு—
அஜ்ஞாநே நாவ்ருதம் ஜ்ஞாநம் தேந முஹ்யந்தி ஜந்தவ—৷৷5.15৷৷
பல இடங்களில் பரவக் கூடிய இந்த ஜீவன் (தர்ம பூத ஞானத்தால் தான் விபு ஸ்வரூபத்தால் அணு தான் )தனக்கு வேண்டியவனாக நினைக்கப்படும் புத்ரன் முதலான-எவனுடைய துக்கத்தையும் நீக்கி விடுவது இல்லை –தனக்கு வேண்டாதவனாக நினைக்கப்படும் சத்ரு முதலான எவனுடைய ஸூகத்தையும் போக்கடிப்பது இல்லை – இவனுடைய அறிவு -இவ்வறிவுக்கு விரோதியான முன் செய்த வினைகளால் மறைக்கப் பட்டுள்ளது
ஜந்தவ-தேவாதி சரீரங்கள் இருக்கும் ஜீவர்கள் அந்த முன் செய்த வினைகளால் தேஹாத்ம மயக்கம் முதலான வற்றால் மயங்குகின்றனர்
ஸ்ரீ பகவாநுவாச-
லோகேஸ்மிந் த்வி விதா நிஷ்டா புரா ப்ரோக்தா மயாநக—
ஜ்ஞாந யோகேந ஸாங்க்யாநாம் கர்ம யோகேந யோகிநாம்—৷৷3.3৷৷
ஸ்ரீ பகவான் கூறினான்-பாவம் அற்றவனே -இவ்வுலகில் என்னால் அறிவு உடையவர்களுக்கு ஞான யோகத்தில் நிலை கர்ம யோகத்தில் அதிகாரம் உடையவர்களுக்குக் கர்ம யோகத்தில் நிலை ஆகிய இரண்டு விதமான நிஷ்டைகள் முன்னால் கூறப்பட்டது கர்ம யோகம் அநாதி -சாஸ்த்ர ஸம்மதம் -மயா -தன் திரு மார்பை தொட்டு -அருளிச் செய்கிறான்-
சென்ற விடத்தாற் செல்வீடாதீ தொரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு–422-
மனதை, ௮து சென் ற புலத்தின் கட் செல்லவிடாது, அப்புலத்தின் நன்மை தீமைகளை யாராய்ந்து தீயதனினீக்கி , நன்னெறிக் கட் செலுத்துவது அறிவாம்-மாவும் மாக்
களும், ஐயறிவினவே மக்கடாமே ஆறறி வுயிரே”” எனத் தொல்காப்பிய” சூத்திரம் -கடோபநிடதத்தில் *ஆத்மானம் ரதீநம்,-இந்த்ரியாணி ஹயானா’” என்ற இரண்டு மந்திர வாக்கியங்கள் -பொறிகளை அடக்கியாளும் நல்லறிவு பெற்றுள்ளவர்களே பிறப்பின்
பலனை அடைகின்றனர்கள்’
ராக த்வேஷ வியுக்தைஸ்து விஷயாநிந்த்ரியைஸ் சரந்.–
ஆத்ம வஸ்யைர் விதேயாத்மா ப்ரஸாதமதி கச்சதி–৷৷2.64৷৷
ஆசை வெறுப்பு முதலியவை நீங்கப் பெற்றவையாய் தனக்கு வசப்பட்டு இருக்கின்ற இந்த்ரியங்களால் சப்தாதி விஷயங்களைக் கடந்து நிற்பவனாய் மனத்தை அடக்கிய புருஷன் மனத்தெளிவை அடைகிறான் –
இந்த்ரியாணாம் ஹி சரதாம் யந்மநோநுவிதீயதே—
ததஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம் வாயுர் நாவமி வாம்பஸி—৷৷2.67৷৷
விஷயங்களில் ஈடுபடும் இந்திரியங்களை எந்த மனமானது பின்பற்றும்படி
செய்யப்படுகிறதோ அந்த மனம் இவனுடைய அறிவை காற்றானது கப்பலை இழுப்பது போலே விஷயங்களை நோக்கி இழுத்துச் செல்லுகிறது அன்றோ-
தஸ்மாத் யஸ்ய மஹா பாஹோ நிக்ருஹீதாநி ஸர்வஸ–
இந்த்ரியாணீந்த்ரியார்தேப்யஸ் தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா—৷৷2.68৷৷
நீண்ட கைகளை உடையவனே ஆகையால் எவனுடைய இந்திரியங்கள் விஷயங்களில் இருந்து எல்லாப் படியாலும் இழுக்கப் பட்டனவோ அவனுக்கு ஆத்ம விஷயமான அறிவு நிலை நிற்கிறது-
எவ்வ துறைவ துலக முலகத்தோ
டவ்வ துறைவ தறிவு–426-
உலகம் யாதொருவாற்றா னொழுகுவதாயிற்று அவ் வுலகத்தோடு மேவித்தானும் ௮வ்வாற்றா னொழுகுவது அறிஞர்கட்குக் கடமையாகும்.
உலகத்தோ டொட்ட வொழுகல் பல கற்றுங் கல்லா ரறிவிலாதார்–140–
உலகத்தோடு பொருந்த வொழுகு தலைக் கல்லாதார், பல நூல்களையுங் கற்றாராயிலும் *அறிலிலாதார்” என்பதாகும்.-ஞானிகள், இப்படிப்பட்ட அவிவவேககள்” கெட்டுப் போகாமலிருத்தற் பொருட்டு, கர்மத்தில் பற்றுள்ள அவர்கள், கர்மங்களையாவது சரிவரச் செய்து பலனடடைவதற்காகத் தாங்களும் கர்மங்களைச் செய்தும், செய்வித்துக் காட்டியும் அவர்களை முன்னேற்றமடையச் செய்தல் வேண்டும் –
ஸக்தா கர்மண் யவித்வாம் ஸோ யதா குர்வந்தி பாரத—
குர்யாத் வித்வாம் ஸ்ததாஸக்தஸ் சிகீர்ஷுர் லோக ஸங்க்ரஹம்৷৷3.25৷৷
பரத குலத்தில் உதித்தவனே -கர்மத்தில் தொடர்பை உடையவர்களாய் -ஆத்ம ஸ்வரூபத்தைக் குறைவற அறியாதவர்கள் எப்படிக் கர்ம யோகத்தைச் செய்கிறார்களோ அவ் வண்ணமாக கர்மத்தில் பிணைப்பு அற்றவனாய் ஆத்ம ஸ்வரூபத்தைக் குறைவற அறிந்தவனாய் -உலகத்தை இசைய வைப்பதற்கு விரும்பியவன் கர்ம யோகத்தைச் செய்யக் கடவன் –
ந புத்தி பேதம் ஜநயேத ஜ்ஞாநாம் கர்ம ஸங்கிநாம்—
ஜோஷயேத் ஸர்வ கர்மாணி வித்வாந் யுக்த ஸமாசரந்৷৷3.26৷৷
ஆத்மாவைக் குறைவற அறியாதவர்களாய்க் கர்மத்திலேயே பிணைப்பை யுடைய முமுஷுக்களுக்கு கர்ம யோகத்தைக் காட்டிலும் வேறொரு சாதனம் உள்ளது என்னும் புத்தி மாறாட்டத்தை உண்டு பண்ணக் கூடாது –
மனநல மன்னுயிர்க் காக்க மினநல
மெல்லாம் புகழுந் தரும்–457
நிலை பெற்ற வுயிர்கட்கு மனத்தது நன்மை செல்வத்தைக் கொடுக்கும்; இனத்தினது நன்மை, அதனோடு எல்லாப் புகழையுங் கொடுக்கும். “மன்னுயிர்க்கு ஆக்கம்” என்ற வாக்கியம்; *உயிர் இன்பத்தைப் பெறுவது” என்பது பொருளாயினும், உயிரால் ககாக்கப்படுவது ௨டம்பாகலின், “உடம்பும் ஆரோக்கியத்தை அடைகின்றது” என்பதை மன்னுயிர்” என்ற பதம் குறிப்பாலுணர்த்துகிறது -தூய எண்ணங்கள் மனதில் தோன்றுவதற்கு புலனடக்கமே முக்கிய கரரணமாகும். ஆயின், புலனடக்கம் அமைவது மிக அரிது என்பதை நூல்கள் கூறுகின்றன-மனத்தின் நன்மையே மேலானது” என்றவாறு –
மன-ப்ரசாத:ஸவ்ம்யத்வம் மெளனமாத்ம விநிக்ரஹ
பாவஸம் சுத்திரித்யே தத்த போ மானஸ் முச்யதே.
மனத்தின் தெளிவு, அன்புடமை, மெளனம், தன்னடக்கம், பரிசுத்தமான நோக்கம்” என்ற
இவைகள், “மனத்தார் செய்யும் தவம்” என்று கூறப்படும். -சிந்தை யடக்கத்தால் வாயடக்கமும் மெய்யடக்கமும் தானே வந்து விடும்.
பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந் தத்தங் கருமமே கட்டளைக் கல்-505-
பிறப்புக் குணம் அதிவென்பன வற்றுான் மக்களெப்தும் பெருமைக்கும், மற்றைச் இறுமைக்கும் உரை கல்லாவது தாந்தாஞ் செய்யும் கருமமே பிறிதில்லை. –அறிவுடையார் எல்லாமுடையார், அறிவிலார் என்னுடையரேலுமிலர் ‘-43-என்றும் ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தாம்புக் கழுந்துமளறு”‘- 835-பேதையானவன் ஒரு பிறப்பில் செய்த வினையால், எழும் பிறப்புகளிலும் தீராத நிரயத் துன்பத்தைத் தேடிக் கொள்கிறான் -என்றும் -அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தலரிது”-843– ௮றிவில்லாதார் தாங்கள் செய்து கொள்ளும் காரியங்களால் . தாமே தம்மை வருத்திக் கொள்ளும் துன்பங்களை, ‘தமது பகைவர்களாலும் செய்தல் அரிது” என்றும் உண்டு
உத்தரே தாத்மநாத்மாநம் நாத்மாநம வஸாதயேத்—
ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்துராத்மைவ ரிபுராத்மந—৷৷6.5৷৷
விஷயத்தில் பற்று அற்ற மனத்தினால் தன்னை உயர்த்தக் கடவன் – தன்னைக் கீழே தள்ளக் கடவன் அல்லன் – விஷயப் பற்று அற்ற மனமே தனக்கு உறவினனாய் இருப்பதாகும் – விஷயப் பற்று உள்ள மனமே தனக்கு எதிரியாய் இருப்பதாகும்-
பந்துராத்மாத் மநஸ் தஸ்ய யேநாத்மை வாத்மநா ஜித—
அநாத்ம நஸ்து ஸத்ருத்வே வர்தேதாத்மைவ ஸத்ருவத்—৷৷6.6৷৷
எந்த மனிதனால் தன் மனம் தன்னாலேயே விஷயங்களில் செல்லாமல் வெல்லப் பட்டதோ அம் மனிதனுக்கு அம் மனம் உறவினன் ஆகும் -வெல்லப்படாத மனத்தை யுடைய மனிதனுக்கோ எனில் தன் மனமே தன் எதிரியைப் போலே நன்மைக்குத் தடையாய் இருப்பதில் ஈடுபடும்-தன்னை உயர்த்துவது வேறோரு நண்பனுமல்ல- தன்னைக் கெடுப்பது வேறொரு பகைவனுமல்ல, தானே தனக்குப் பெருமையை யுண்டாக்குபவனும், தானே தனக்குச் சிறுமையை உண்டாக்கிக் கொள்பவலும் ஆகின்றான் என்பது புலனாகிறது.
நெடு நீர் மறவி மடி துயி நான்கும்
கெடு நீரார் காமக் கலன்-605-
மடியும் விரைந்து செய்வதனை நீட்டித்துச் செய்யுமியல்பும் மறப்பும் துயிலுமாகிய, இந் நான்கும் இறக்கு மியல்பினை யுடையார் விரும்பி யேறும் மரக்கலமாகும்-காமக் கலன்” என்பதற்கு, ‘விரும்பிப் பூணுமாபரண மென்றுரைத்தார்-மணக் குடவா்.
அயுக்த ப்ராக்ருத ஸ்தப்தஸ் ஸடோ நைஷ்க்ருதி கோலஸ–
விஷாதீ தீர்க்க ஸூத்ரீ ச கர்த்தா தாமஸ உச்யதே–৷৷18.28৷৷
சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட கர்மங்களைச் செய்யத் தகுதி இல்லாதவனாய் -சாஸ்திரங்களைக் கல்லாத சாமான்யனாய் –சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட கர்மங்களைத் தொடங்கும் இயல்வே இல்லாதவனாய் அபிசாரம் முதலான தாழ்ந்த கர்மங்களில் ஈடுபாடு உடையவனாய் -வஞ்சிக்கும் இயல்வு யுடையவனாய் -தொடங்கிய கர்மங்களிலும் மந்தமாகச் செயல்படுபவனாய் – மிகுந்த மன வருத்தத்தை இயல்பாக யுடையவனாய் – நீண்ட காலமாகப் பிறர்க்குத் தீங்கைச் சிந்திக்கும் இயல்பு யுடையவனான செயல் புரிபவன் -தாமச கர்த்தா என்று சொல்லப்படுகிறான் –
தெய்வப் புலவர், 605-வது குறட்பாவில் மக்களுக்குக் கேடு விளைவிக்கும் தன்மை யுள்ள குணங்களை நான்காகக் கூறினார். அதே இயல்புடன் கூடிய குணங்களைப் பின்னும் நான்கினைச் சோத்து, கீதையில் எட்டுவகைப் படுத்திக் கீதாசார்யர் கூறியிருப்பதும் பொருத்தமானதே
முயற்சி திருவினை யாக்கு முயற்றின்மை யின்மை புகுத்தி விடும்–616
ஒருவன் மாட்டுளதாய முயற்சி, செல்வத்தை வளர்க்கும் அம் முயற்சி யில்லாமை வறுமையை அடைவித்து விடும்-பரிமேலழகர்-இதற்கு மாறுபாடாகிய சோம்பலான, வறுமையை உண்டாக்கும் இலக்குமியின் மூத்தாளும்” அவனிடத்தில் குடி புகுவள்.இக் கருத்தை தெய்வப் புலவர், இதற்கடுத்துவரும் பாவிலேயே :மடியுளான் மா:முகடி” என்ப — மடியிலான் தாளுளாள் தாமரையினாள்” ”” எனக் கூறி முடித்தார். மேலும் முயற்சியானது, மக்களுக்கு எல்லா நன்மைகளையும் உண்டாக்கும் ஓர் கற்பகத் தருவுக்குச் சமானமாகும். மனிதனை மனிதனாக வாழச்செய்வதும் அதுவே! இதையே “முயற்சியுடையார் இகழ்ச்சி யடையார்”” என்ற பழமொழியாலும் அறியலாம்.
நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹி அகர்மண–
ஷரீர யாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேத கர்மண—-৷৷3.8৷৷
அநாதி காலமாகப் பழகிப் போந்த கர்ம யோகத்தையே நீ செய்வாயாக – ஏன் எனில் ஞான நிஷ்டையை விட கர்ம யோகமே சிறந்தது எக் கர்மத்தையும் செய்யாத உனக்கு ஞான நிஷ்டைக்கு வேண்டிய தேஹ தாரணமும் கை கூடாது
ஞானாதிகாரியுங்கூட, ஞான. நிஷ்டைக் கனுகூலமான தேகம் நிலைத்திருப்பதின் பொருட்டு, அத்தியாவசியமான கர்மங்களைச் செய்ய வேண்டி யவனாகிறான், ஆகையால், கர்மமானது ஞானத்திற்கு முக்ய சாதனமாயிருப்பதால், கர்மஞ்செய்தலே மேலென்று சொல்லப்பட்டது.-இராமானுஜர் –
தெய்வத்தா னாகா தெனினும் முயற்சி தன்
மெய் வருத்தக் கூலி தரும்–619-
முயன்ற வினை ஊழ் வினையால் கருதிய பயனைத் தராதாயினும் முயற்சி செய்தற்கிடனாகிய உடம்பு வருத்திய வருத்தத்தின் கூலி யளவு தரும்; பாழாகாது.
கர்ம யோகத்தில் தொடங்கியதற்கு அழிவு இல்லை -தொடங்கி விட்டு விட்டாலும் தோஷம் கிடையாது –கர்மயோகம் எனப்படும் இந்த தர்மத்தின் சிறு பகுதியும் பெரிதான சம்சார பயத்தில் இருந்து காப்பாற்றுகிறது –நடுவில் நழுவினாலும்-கர்ம யோகம் – -அடுத்த ஜென்மம் விட்ட இடத்தில் தொடரும் -தப்பானாலும் தோஷம் இல்லை-ஞான யோகம் பக்தி யோகம் அப்படி இல்லையே -கொஞ்சம் பண்ணினாலும் -முடிந்த அளவு செய்து தொடரலாம்-
மதி நுட்பம் நூலோ டுடையார்க் கதிநுட்பம்
யாவுள முள்ளிற் பவை–636
இயற்கையாயே நுண்ணறிவோடு செயற்கையாகிய நூலறிவும் உடையராயனார்க்கு மிக்க சூழ்ச்சிகளாய் முன்னிற்பவை யாவை உள? முன்னிற்றல் மாற்றார் சூழ்ச்சியாயின தஞ்சூழ்ச்சியால் அழியாது நிற்றல்-தங்கள் நுண்ணறிவுடன் நூலறிவுப் பிரமாணமும் உள்ளவர்கள் பகைவர்கள் சூழ்வனவற்றைத் தாமறிந்து நீக்கியும், அவரறிந் தழியாதவாறு தாம் சூழ்வரென்பது கருத்து–பரிமேலழகர்- நூற் பிரமாணத்தைத் தாயகமாகக் கொண்ட நுண்ணறிவுடையோர்க்கே சாலும்” என்ற துணிவு பற்றி, *அதி நுட்பம் யாவுள முன்னிற்பவை”’ எனக் கூறினார்-
ய ஸாஸ்த்ர விதி முத்ஸ்ருஜ்ய வர்ததே காம காரத–
ந ஸ ஸித்தி மவாப்நோதி ந ஸுகம் ந பராம் கதிம்–৷৷16.23৷৷
எவன் ஒருவன் வேதமாகிற எனது ஆணையைக் கை விட்டு தன் விருப்பப்படி செயல் புரிகிறானோ – அவன் மறுமையில் ஸ்வர்க்கம் முதலான பயனையும் இம்மையில் இன்பத்தையும் மேலான கதியையும் அடைவது இல்லை – அத்யாயம் சுருக்கம் -சாஸ்த்ர விதியை தாண்டி தம் மனம் போன படி ஆசைப் பட்டு அனைத்தையும் இழக்கிறார்கள்
ஸ்வர்க்கம் அடைவதும் மாட்டான் -இவ்வுலக இன்பமும் இல்லை -ஸ்ரீ வைகுண்டமும் கிட்டான்-
தஸ்மாச் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்ய அகார்ய வ்யவஸ்திதௌ–
ஜ்ஞாத்வா ஸாஸ்த்ர விதா நோக்தம் கர்ம கர்துமிஹார்ஹஸி–৷৷16.24৷৷
ஆகையால் உனக்குக் கைக் கொள்ளத் தக்கது இது கைக் கொள்ளத் தகாதது இது என்று நிர்ணயிப்பதில் வேதமே ப்ரமாணமாகும்- ஆகையால் சாஸ்திரங்களில் சொல்லப்படும் தத்துவத்தை உள்ளபடி அறிந்து இக் கர்ம பூமியில் அக் கர்மத்தையும் அந்த தத்வ ஞானத்தையும் நீ கைக் கொள்ளத் தக்கவனாகிறாய் –
நுன்பமுற வரினுஞ் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை–669
ஒரு வினையைச் செய்யுமிடத்து முதற் கண் மெய்ம்முயற்சி யாற்றமக்குத் துன்பம் மிக வருமாயினும்,௮து நோக்கித் தளராது முடிவில் இன்பந்தரும் நலமான வினைகளைத் திட்பமுடையராகச் செய்க-இதனையே செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலாதார் ” என-20-வது குறட் பாவாலும் கூறினார்.
யத் தத் அக்ரே விஷமிவ பரிணாமே அம்ருதோபமம்–
தத் ஸுகம் ஸாத்த்விகம் ப்ரோக்தம் ஆத்ம புத்தி ப்ரஸாதஜம்–৷৷18.37৷৷
பரதர் குலத்தலைவனே -இப்போது ஸூகமானது -முக் குணங்களை யிட்டு மூன்று வகைப்பட்ட இருப்பதை என்னிடம் இருந்து கேட்பாயாக – எந்த ஸூகத்தில் நீண்ட நாள் பழகுவதால் ஒப்பற்ற ஆனந்தத்தை அடைகிறானோ -எல்லா சம்சாரத் துன்பங்களின்
முடிவையும் அடைகிறானோ -எந்த ஸூகம் யோகத்தைத் தொடங்கும் காலத்தில் பழகாத ஆத்ம விஷயத்தில் மிகுந்த சிரமப்பட வேண்டி இருக்கையாலே துன்பம் போல் தோன்றுகிறதோ -யோகத்தின் இறுதியில் ஆத்ம ஸ்வரூபத்தை அனுபவிக்கையால் அமுதத்தைப் போலே இனிதாய் இருக்கிறதோ மற்ற விஷயங்களில் இருந்து நீங்கி ஆத்மாவையே அனுபவிக்கையாலே உண்டானதான அந்த ஸூகமானது சத்வ குணத்தால் உண்டானது என்று சொல்லப்படுகிறது –
உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத் தலகையா வைக்கப் படும்–850-
உயர்ந்தோர் பலரும் உண்டென்பதோர் பொருளைத் தன் புல்லறிவானில்லை யென்று சொல்லுவான்;-மகனென்று கருதப்படான்? வையத்துக் காணப்படுவதோர் பேயென்று கருதப்படும்-சான்றோர் உண்டென்று நிச்சயித்துக் கூறும் தெய்வக் கொள்கை, இருவினை, இம்மை மறுமை முதலியவைகளின் தன்மைகளை இல்லை’யென்று மறுத்து, தாங்கள் வேண்டியவாறு கூறலால், ஒப்பும் வடிவால் ஒவ்வாமை யுமுடைமை யிற்றன் யாக்கை கரந்து மக்கள் யாக்கை யிற்றோன்றுதல் வல்ல -அலகை”யென்றும் கூறினார்- பரிமேலழகர்-இக்குறட்பா புல்லறிவாண்மை என்ற அதிகாரத்தின் பத்தாவது குறளாகும். இதற்கு முன்னுள்ள ஒன்பது குறள்களில் புல்லறிவாளர்களின் இயல்புகளைப் பலவாறாக விளக்கிக் கூறி, அதன் கருத்துக்களை யெல்லாம் சேர்த்து, *௮வர்கள் மக்கள் தோற்றம் உடையவராயினும் அவர்கள் *பேய்’க்குச் சமானமானவர்கள்” என முடிவு கூறினார்.
அஸத்யமப்ரதிஷ்டம் தே ஜகதாஹுர நீஸ்வரம்–
அபரஸ்பர ஸம்பூதம் கிமந்யத் காம ஹேதுகம்-–৷৷16.8৷৷
அந்த ஆஸூர ப்ரக்ருதிகள் உலகம் ப்ரஹ்மாத்மகமானது என்றும் ப்ரஹ்மத்தில் நிலை நிற்பது என்றும் ப்ரஹ்மத்தால் நியமிக்கப்படுகிறது என்றும் சொல்லுவது இல்லை -இதுவே அஸத்யம் – ஆண் பெண் சேர்க்கையால் உண்டாகாதது வேறே எந்தப் பொருள் உள்ளது என்று கூறுகிறார்கள் – ஆகையால் உலகு அனைத்தையும் காமத்தையே காரணமாகக் கொண்டது என்றும் கூறுகிறார்கள்-
ஏதாம் த்₃ருஷ்டிம் அவஷ்டப்₄ய நஷ்டாத்மாந: அல்ப பு₃த்₃ே₄ய:
ப்ரப₄வந்த் யுக்₃ர கர்மாண: க்ஷயாய ஜக₃தோ (அ)ஹிதா : ॥–৷৷16.9৷৷ஜகதோஹிதா–ஜகதோ அஸூபா–பாட பேதம் -மங்களத் தன்மை இல்லாமல்-
ஆஸூர ப்ரக்ருதிகள் இந்த விபரீதமான பார்வையை பற்றிக் கொண்டு தேஹத்தைக் காட்டிலும் வேறுபட்டதான ஆத்மாவைக் காணாதவர்களாய் -அறியப்படும் அசித்தான தேகத்தில் அறிவதாகையாலே அதைக் காட்டிலும் வேறுபட்ட ஆத்மா உணரப் படுகிறது என்று பிரித்து அறிய முடியாத அல்ப புத்திக் காரர்களாய் – அனைவருக்கும் தீங்கு இழைக்கும் கொடிய செயல்களைச் செய்பவர்களாய் -அமங்களமானவர்களாய்-
உலகம் அழிவதற்கு காரணம் ஆகிறார்கள் – இந்த த்ருஷ்ட்டியை பண்ணிக் கொண்டு -குத்ருஷ்ட்டி – அல்ப புத்தி -தேஹாத்ம பிரமத்தால் – உலகம் அழிவதற்கு செயல்படுவார்கள்
காமமாஸ்ரித்ய துஷ் பூரம் தம்ப மாந மதாந்விதா–
மோஹாத் க்ருஹீத்வ அஸத் க்ராஹாந் ப்ரவர்தந்தே அஸூசி வ்ரதா–৷৷16.10৷৷
ஆஸூர ப்ரக்ருதிகள் நிறைவேற்ற அரிதான காமத்தை பற்றிக் கொண்டு -அதன் நிறைவேற்றுதற்காக அறிவின்மையாலே அநியாய வழியிலே தேடப்பட்ட பொருள்களை பற்றிக் கொண்டு சாஸ்திரங்களில் விதிக்கப்படாத விரதங்களோடு கூடியவர்களாய் -(பாஷாண்ட ஆகமம் ) டம்பம் துராபிமானம் மதம் ஆகியவற்றோடு கூடியவர்களாய் செயல்படுகிறார்கள் ஆசைப் பட்டு -அடி இல்லா பள்ளம் -தூராக் குழி -டம்பம் -மானம் -மதம் கர்வத்தால் -அறிவின்மையால் – தவறான வழியில் பொருளை ஈட்டி வைத்து -சாஸ்திரம் விதிக்காத வழியில் செயல் படுவார்கள்
அநேக சித்த விப்ராந்தா மோஹ ஜால ஸமாவ்ருதா–
ப்ரஸக்தா காம போகேஷு பதந்தி நரகேஷுசௌ–৷৷16.16৷৷
இவர்கள் பல நினைவுகளால் அலைக் கழிக்கப் படுபவர்களாய் -பல மயக்கங்களால் சூழப்பட்டு புலன் இன்பங்களில் மிகவும் ஈடுபட்டு நடுவில் மரணம் அடைந்து அசுத்தமான நரகத்தில் விழுகிறார்கள் -சிந்தனை கடலில் அலைந்து -மோஹம் மயக்கம் சூழ்ந்து -காமம் அனுபவித்து -நரகில் விழுகிறார்கள் – செம்பினால் இயன்ற பாவையை தழுவி பாவி -நைமிசாரண்ய பாசுரம்-
மயிர் நீப்பின் வாழாக் கவரிமா வன்னா
ருயிர் நீப்பர் மானம் வரின்-969-
தன் மயிர்க் கூட்டத்தினின்று ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழாத கவரிமானை யொப்பார், உயிர் நீக்கத் தான் மானமெய்து மெல்லைவரின், அம்மானத்தைச் சகியாது இறப்பர்-உவமை அது அவர்க்கு இயல்பென்பது விளக்கி நின்றது.-பரிமேலழகர்-கம்பரும் -மந்திரப்படலத்தில் அரிய நூலுங்கற்றவர், மானம் நோக்கிற் கவரிமா வனைய நீரார்” -கவரிமான் தன் மயிர் கற்றை யிலுள்ள ஒரு மயிரைக் தன் உயிரைவிட மேலெனக் கருதி உள்ளது,
அகீர்த்திம் சாபி பூதாநி கதயிஷ்யந்தி தேவ்யயாம்.–
ஸம்பாவிதஸ்ய சாகீர்த்திர் மரணாத ரிச்யதே—৷৷2.34৷৷
எல்லா தேசத்திலும் எல்லாக் காலத்திலும் பரவக் கூடிய பழியை எல்லாரும் உனக்குக் கூறுவார்கள் – வீரம் முதலிய நற் குணங்கள் உடையவனாகக் கொண்டாடப்படும் உன்னைப் போன்றவனுக்கு பழிச் சொல் என்பது மரணத்தைக் காட்டிலும் கொடியதாகிறது
அகீர்த்தி உலகம் எங்கும் பரவும் –இதிஹாச புராணம்-எழுதுவோர்க்கு வாய்ப்பு –
வீர்யம் மிகுந்த நீ -அகீர்த்தி மரணம் விட மோசமாகும் –
பணியுமா மென்றும் பெருமை சிறுமை யணியுமாந் தன்னை வியந்து -978
பெருமை யுடையார் ௮ச் செல்வமுடைய ஞான்றும் தருக்கின்றி அமைந் தொழுகுவர். மற்றுச் சிறுமை யுடையார், அப்பெருமை அவர்க்கு இல்லாத காலத்தும்,தம்மை வியந்து பெருமையாகப் பேசுவர்-பரிமேலழகர்
தம்மைப் பணித்து பேசுபவர்கள் உயர்ந்தோரது தன்மையை அடைவர். தம்மைப் புகழ்ந்து பேசுபவர்கள் இழிந்தோராவார் ” என, உலகியலை வியந்து கூறினார் –மணக்குடவர்.
தேஜ க்ஷமா த்ருதி ஷௌசம த்ரோஹோ நாதிமாநிதா–
பவந்தி ஸம்பதம் தைவீமபி ஜாதஸ்ய பாரத–-৷৷16.3৷৷
தீயவர்களால் வெல்ல ஒண்ணாமை-துன்புறுத்துவர்கள் இடம் பொறுமை -பேர் ஆபத்து வந்தாலும் செய்ய வேண்டியதில் உறுதியாய் இருக்கை – மனோ வாக் காயங்களில் சாஸ்திரங்களில் சொல்லிய பரிசுத்தி யாகிய அனுஷ்டானத் தகுதியை உடையனாய் இருக்கை – பிறர் நற் செயல்களைத் தடுக்காமை -தகாத கர்வமின்மை – ஆகிய குணங்கள் பகவத் ஆஜ்ஜையைப் பின்பற்றி நடக்கும் தெய்வப்பிறவி யாகிற செல்வத்தை உடையவனும் உள்ளன –
ஆத்ம ஸம்பாவிதா ஸ்தப்தா தந மாந மதாந்விதா–
யஜந்தே நாம யஜ்ஞைஸ்தே தம்பேந அவிதி பூர்வகம்–৷৷16.17৷৷
தம்மைத் தாமே பெருமை பேசிக் கொள்கிறவர்களாய் -தம்மைப் பெருக்க மதிக்கையாலே பணிவில்லாமல் நிமிர்ந்து நிற்பவர்களாய் -பணத்தினாலும் கல்வி குடிப்பிறப்பு ஆகியவற்றால் உண்டான அபிமானத்தாலும் விளையும் கர்வத்தை உடையவர்களான அந்த ஆஸூர ப்ரப்ருதிகள் புகழையே பயனாகக் கொண்டு செய்யப்படும் யாகங்களாலே
ஸாஸ்த்ர விதிக்கு முரணாக யாகம் செய்தவன் என்னும் புகழை வெளிப்படுத்திக் கொள்வதற்காக யாகம் செய்கிறார்கள் – தன் பெருமையை பேசி -குலையாமல் -தான மதம் -பெயர் யாகம் -பெயருக்காக புகழுக்காக யாகம் – டம்பம் -சாஸ்திரம் விதிக்காத வகையில்-
நகல் வல்ல் ரல்லார்க்கு மாயிரு ஞாலம்
புகலும் பாற் பட்டன் றிருள் -999
பண்பின்மையான் ஒருவரோடுங் கலந்து அளவளாவி வாழ மாட்டாதார்க்கு, மிகவும் பெரிய உலகம் இருளில்லாத பகற் பொழுதினும் இருளின் கட் கிடந்ததாம்-எல்லாரோடுங் கலந்தறியப் பெறாமையின், பண்பிலார்க்கு உலகியல் தெரியாதென்பார் – உலகமிருளின் கட்பட்டதென்றார்–பரிமேலழகர்-இதற்கு ஸ்ரீ கண்ணபிரான் இவ் வுலகமானது சிலருக்கு
பகல் இரவாகவும், இரவு பகலாகவும் காணப் படுகிறது என்பதன் காரணங்களை உபமானங் காட்டி, ஒரு ஸ்லோகத்தால் விளக்குகிறார் –
யா நிஸா ஸர்வ பூதாநாம் தஸ்யாம் ஜாகர்தி ஸம்யமீ.
யஸ்யாம் ஜாக்ரதி பூதாநி ஸா நிஸா பஸ்யதோ முநே–৷৷2.69৷৷
யாதொரு ஆத்ம விஷயமான அறிவு எல்லா ஜீவ ராசிகளுக்கும் இரவு போலே இருந்து இருக்கிறதோ – அவ் வறிவு விஷயத்தில் இந்திரியங்களை அடக்கியவன் விழிப்புடன் இருக்கின்றான் யாதொரு சப்தாதி விஷயமான அறிவில் உலகோர் விழித்து இருக்கிறார்களோ அவ் வறிவு ஆத்மாவைப் பார்ப்பவனாய் அதையே மனனம் செய்பவனுக்கு இரவு போல் இருந்து கிடக்கின்றது
————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply