மாறன் பராங்கதி தந்தடியேனை மருட்பிறவி
மாறன் பரான குழத்துள் வைப்பான் தொல்லை வல் வினைக்கோர்
மாறன் பராமுகம் செய்யாமல் என் கண் மலர்க்கண் வைத்த
மாறன் பராங்குசன் வாழ்க என் நெஞ்சினும் வாக்கினுமே-–திருவரங்கத்தந்தாதி காப்பு (நம்மாழ்வார்- துதி) பிள்ளைப் பெருமாள் அய்யங்கார்-
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய்; நாரணனே? நீ என்னை அன்றி இலை — நான்முகன் திருவந்தாதி
அகாரந்தான் எழுத்துமுதல் ஆதல் போல
அச்சுதனே அனைத்துயிர்க்கும் அப்பன் ‘ ஆவான் ;
அகாரந்தான் எழுத்தொலிக்க உதவல் போல
அவன்தானே உயிர் வாழக் ‘காப்போன் ‘ ஆவான் ;
அகாரந்தான் இறுதியிலே மறைந்த நான்கன்
உருபால் கைங் கரியம் அறி வித்தலாலே
அகாரந்தான் பெயரானோன் உயிர்கட் கெல்லாம்
ஆண்டை எனும் ‘சேஷி.என அறிகின்றோமே.
ஓங்காரத்து இடையில் எழுத்து உகாரம் ஆகும் ;
ஒருவாத அநந்யம் எனும் தேற்றேகாரம்
பாங்கான உயிர் அனைத்தும் மகளிர் ஆவார் :
பகவன் அவன் பிரிக்க வொண்ணாக் ‘கணவன்’ என்னும்;
நீங்காத உயிர்ப் பெயராம் மகாரந்தானே
‘நினைந்தறியத் தகும் பிரமம் ‘ அவனே என்னும் ;
ஆங்காரம் அழிக்கின்ற நமஸ்ஸினாலே
அவன்’ உடையான் ‘: நாம் ‘ உடைமை’ என்று தேர்வோம்.
நாராய ணாய எனில் சொற்கள் மூன்றாம்;
நாரந்தான் அசித்துச் சித்துஅனைத்தி னுக்கும்
பேராகும் ; அவற்றினையே உடலாய்க் கொண்டு
பிரியாமல் இயக்குதலால் அவன் சரீரி ‘;
வேராகும் அயனம் எனல் இருக்கும் தானம் ;
விருப்பிடமாம் இருப்பிடத்துக்கு அவள்’ஆதாரம்
ஆராயின் எட்டெழுத்தே அதில் அடங்கும்;
ஆழ்பொருளோ அளவிலவாம் வியப்பு ஈதன்றோ?
ஆய எனல் நான்கள் உரு பாகும் ; இங்கே
அவ்வுருபை ‘ பொருட்டு ‘ என்றும் சொல்லு வார்கள்;
தூயன் அவன் அநுபவிக்கும் பொருட்டே, சித்து
தோன்றியுளது எனப் பொருளை விரித்து நோக்கின்
மாயவனே அனுபவிக்க உரியன் ; அந்த
மாண் உரிமை வாய்த்தவன் பேர் போக்தா ‘ ஆகும்;
நேயமொடு ஒன்பது வகையில் உயிர்கட் கெல்லாம்
நீங்காத உறவாகி நின்றான் ஈசன்.
இவ்வுறவை அவன் அறுக்க முனைந்திட் டாலும்
இயலாது ; நாம் அறுக்க இயல்வ துண்டோ?
எவ்வுறவும் அவன் ஆன தாலே அன்றோ
எம்முடனே ஒருவனாய்த் தோன்று கின்றான்?
தவ்வுறவே சேய்குழியில் வீழ்ந்த தென்றால்.
தாய் உடனே அக்குழியில் தாவி மீட்பாள் :
ஒவ்வுறவே பரன் அந்த வண்ணம் நம்முன்
உறவு நினைந்து அர்ச்சை வடி வாயினானே !
ஐந்நிலைகள் தனக்குரிமை யாகக்கொண்ட
அமலனுக்குப் பணிபுரியக் கடன்பட் டுள்ளோம் ;
மெய்நிலைய மாம்அவன் அக் கடனைக்கொள்ள
விழி எதிரே நிற்கின்றான்; நாம் ஒப்போமேல்
நம்நிலையத்தூடுஅவனே அமர்ந்து கேட்பான் ;
நாம் அதற்கும் இசையோமேல் நமை விடாமல்
பைந்நிலையைப் பாயலிலே படுத்துக் கொண்டு
பார் என்பான் என் கடனைத் தீர் என் பானே!
வணிகள் கடல் கடந்துபொருளைத் தேடி)
ஓர் இருப தாண்டின் பின் திரும்பி வந்தான்;
பொருள்களைத் தன் இடத்தினிலே இறக்க லுற்றான்;
போந்தொருவன் இடை மறித்து என்இடம் இது’ என்றான்;
இருவருமே பூசலிட்டார் ; ஆங்கோர் ஆன்றோர்.
“ஏன் பூசல் ‘? ‘ நீர் தந்தை – மகனே ‘ என்றார்
பொருது பெரும் பூசலிட்ட கை தளர்ந்து
பூசல் மறந்து உடல் நழுவிப் புளகுற்றாரே
இப்படித் தான் பவக் கடலில் மூழ்கி மாழ்கி
இறை உறவை மறந்துகயிங் கரியம் விட்டுத்
தப்படி நாம் இருக்கின்றோம் ; ஒரு நல் லாசான்
தனி யுறவு நுமக்குண்டு என்று உபதே சிக்க
மைப்படியும் மேனியன் நம் தலைவன் என்று
வாஞ்சையினால் அறிந்து கொண்டு சரண் அ டைந்தே.
“எப்படியும் பயன்படுத்து கென்போம்” ஆயின்
இப்படியில் பவக்கடல் தான் வற்றிடாதோ?
நவவித சம்பந்தத்தை நாம் அறிந்தால்
ஞாலத்தார் சகோதரத்வம் சமத்வம், கொண்டே
அவ்விதம் ஒன் றில்லாமல் ஒருமைப் பாட்டை
அடைந்திடுவோம் : உயிர்த் தொண்டே அரி தொண்டாகும்
பவவிதனம் பறந்துவிடும் ; வீடு பேறு இப்
பாரினிலே இக் கணமே பலிக்க லாகும் ;
தவஇதம் மிக்கெளிதாகும் ; சமயம் சாதி
சச்சரவாம் நச்சரவம் சாம்பிச் சாகும்.
ஆழ்வார்கள் தாம் அருளிச் செயல் என் கின்ற
அமுதொழுக விட்டனர், நாம் அமரர் ஆக ;
ஏற்பாரும் புகழ் தரும் நம் பிள்ளை ஆதி
எண்ணிலர் நல் உரைஎழுதி உபக ரித்தார்
தாழ்வாதும் இலாத மணிப் பவளமாய்,அத்
தனை உரையும் இருப்பதனால், அதனைத் தேர்ந்தே
வாழ்வார விரும்புவர் பல கால் கற்றும்
மலைமுட்டும் குருவி என மருண்டார் அம்மா!
ஆசார்ய இருதயமாம் மாறன் நெஞ்சை
அருளானராம் இளவல் அருளிச் செய்யத்
தேசார் ஸ்ரீ வசன பூ டணத்தி னோடு
தெய்விக்கல் இரகசியம் ஈரொன் பானும்
நேசானு கூடிமுடன் உலகா சார்யர்
நிலத்து மர்க்குக் கொடையாக நேர்ந்து தந்தார்
வாசம கோசரமாய் அதனுள் நுட்பம்
மன்னுலகில் முடவனுக்குக் கொம்புத்தேனே!
தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்தமாயன்” (திருவாய். 7.9:2) என்னுள்ளே நின்று இந்நூலை எழுத வழி காட்டினான். என்னுள்ளே நிரந்தரமாக எழுந்தருளி விருந்து கொண்டு எனக்கு எல்லா நலங்களையும் ஈந்துவரும் வேங்கடம் மேவிய விளக்கு’ இந்நூல் வெளிவரவும் ஓரளவு துணை செய்தான். அப்பெருமான் திருவடிகளைப் போற்றிச்
சரண் அடைகின்றேன்.
“பிதா ச ரஷக சே பர்த்தா ஜ்ஞேயோ ரமா பதி :
ஸ்வாயாதாரோ மமா மாச போக்தா ச ஆத்யமநூதிநே :” ஆத்ய மநுவாவது மூலமந்திரம். அதில் ப்ரதிபாதிக்கப்பட்ட ரமாபதி :-ஸ்ரீய : பதியானவன் பிதாவாயும் ரக்ஷகனாயும் சேஷியாயும் பர்த்தாவாயும் ஜ்ஞேயனாயும் ஸ்வாமியாயும் ஆதாரனாயும் ஆத்மாவாயும் போக்தாவாயுமுள்ளான்- அவன் பிதாவானால் நாம் புத்திரனாகிறோம். அவன் இரக்ஷகளானால் நாம் இரக்ஷயனாகிறோம். அவன் போக்தாவானால் நாம் போக்யனாகிறோம். ஆக, இவை ஒன்பது வகையான உறவுகள்—
உன் றன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்’ ‘உன்றன்னோடுறவேல் நமக்கிங்கொழிக்க ஒழியாது—பாரார்த்தயம் ஸ்வம் ஸ்ருதி சத ஸிரஸ் ஸித்தம் அத்யாபயந்தீ’
அகாரத்தில்–அகாரோவை ஸர்வா வாக்’” என்றும் “அகரமுதலவெழுத்தெல்லாம்” என்றும் -ஜன்ய-ஜன்க பாவம் அல்லது பிதா – புத்ரபாவம் என்பது பிதா -புத்ர பாவமும்–அவ ரக்ஷணே” என்கிற தாதுவிலிருந்து தேறினதாகையாலே ரக்ஷ்ய -ரக்ஷக பாவமும்,லுப்த சதுர்த்தியாலே அவனுக்கே –தாதர்த்தே சதுர்த்தியாலே சேஷ-சேஷி பாவம் என மூன்று உறவுகளும் தோன்றும்.உகாரமானது அவதாரணப் பொருளதாய் எம்பெருமானுக்கே சேஷப் பட்டது என்று காட்டுதலால் ‘ கொண்டானை யல்லா லறியாக் குலமகள் போல் ” என்கிறபடியே பதி-பத்னீ பாவமாகிய உறவு தேறுகின்றது.மகாரமானது ” மரு ஜ்ஞானே” என்கிற
தாதுவிலிருந்து தேறினதாகையாலே ஜ்ஞாதாவான ஆத்மாவைச் சொல்லுதலால் ஞாத்ரு-ஜ்ஜேய பாவம் என்கிற உறவு தேறிற்று. எம்பெருமான் அறியப்படுபவன்; ஆத்மா
அறிகிறவன் என்றவாறு ” ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்குணர்வு ” என்கிற பொய்கை யாழ்வார் பாசுரம் இங்கு காணத் தக்கது.மகாரத்திற்குப் பிறகு உள்ள நம : பதத்தினால் தன்னை இரக்ஷித்துக் கொள்வதில் தனக்கு எவ்விதமான உரிமையுமில்லை என்று காட்டுவதால் ஆன்மாக்களெல்லாம் எம்பெருமானுடைய ஸொத்து என்று ஏற்படுகிறது. இதனால் ஸ்வ ஸ்வாமி பாவம் என்கிற உறவு தேறுகிறது.எம்பெருமான் ஸ்வாமி; நாம் அவன் சொத்து .நாராணாம் அயனம் என்கிற தத் புருஷ ஸமாஸத்தால் ஆதாராதேய பாவம் என்கிற உறவு தேறுகின்றது-நாராயண சப்தத்தில் நாரங்கள் பகவானிடத்திலே இருக்கின்றன என்பது தத் புருஷனால் ஸித்திக்கிறது. நாரங்களிலே பகவான் உளன் என்பது பஹிர் வ்ரீஹியால் ஏற்படுகிறது. அவற்றிலே இவன் இருப்பதாவது அவற்றை உடலாகக் கொண்டு தான் அவற்றுக்கு உயிராக இருப்பதே யாதலால் சரீர-ஆத்ம பாவம் ஸித்திக்கிறது. ஸகல சேதந அசேதங்களும் சரீரம்; அவன் சரீரி-ஒன்பதாவது உறவு போக்த்ரு – போக்ய பாவம் . இது நாராயண பதத்திலுள்ள நான்காவது வேற்றுமையால் ஏற்படுகிறது. நாராயணனுக்குச் செய்யப்படுகின்ற கைங்கர்யத்தின் போகமும் அவனுக்கே யன்றி இந்த ஜீவனுக்கில்லை. என்று காட்டுதலால் போக்த்ரு – போக்ய பாவம் என்கிற உறவைத் தெரிவிக்கின்றது . எம்பெருமான் போக்தா; ஜீவாத்மா போக்யன். ஜீவாத்மாவை போக்தாவாகவும் எம்பெருமானை போக்யனாகவும் கொள்வதும் ஒருபுடை உண்டெனினும் திருமந்திரத்தில் வடிகட்டின பொருள் முந்துறக் கூறினதேயாரும் என்பர்.
ஆக, திரு மந்திரத்தினால் நவவித (ஒன்பது விதமான) ஸம்பந்தங்கள் தெரிய வந்தன.
வெற்பென்று வேங்கடம் பாடினேன்; வீடு ஆக்கி
நிற்கின்றேன்; நின்றுநினைக் கின்றேன்; கற்கின்ற
நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால்வலையில் பட்டிருந்தேன் காண்!
நின்ற தெந்தை ஊர கத்து இருந்த தெந்தை பாட கத்து
அன்று வெஃக ணைக்கி டந்த து என்னி லாத முன்னெ லாம்
அன்று நான் பிறந்தி லேன் பிறந்த பின் மறந்தி லேன்
நின்ற தும்இ ருந்த தும் கிடந்த தும் என் நெஞ்சுளே–
எம்பெருமான் சம்சாரியான எனக்கு ருசி பிறவாதகாலமெல்லாம் ருசி பிறப்பிப்பதற்காக நின்றான், இருந்தான், கிடந்தான். என்னிடம் ருசி உண்டாக்குகை
அவனுக்குச் சாத்தியம் (பலன்) ; அதற்குச் சாதனம் (வழி முறைகள்) நிற்றல், இருத்தல், கிடத்தல் என்பவை. பலன் கைபுகுந்த மாத்திரத்தில் — என்னிடம் ருசி பிறந்ததும் –
அவன் திவ்விய தேசங்களில் நிற்றல்,இருத்தல், கிடத்தல் களைத் தவிர்த்து,-அரவத்து அமளியி னோடும் அழகிய பாற்கட லோடும் அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து-அந்த விருப்புகளையெல்லாம் என் நெஞ்சிலே செய்தருளினான் ” என்கின்
றார்
அடங்கெழில் சம்பத்து அடங்கக்கண்டு ஈசன்-அடங்கெழில் அஃதென்று அடங்குக உள்ளே.-இறைவனுக்கும் நமக்கும் உள்ள சம்பந்தம், எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்-ஆசாரிய ஹிருதயத்தின்,
ஒன்று கூடின தாய்ப் பற்று அறுக்க மீண்டு ஒழிகையாலே பழவடியேன் என்னுமது ஒன்றுமே
ஒழிக்க ஒழியாது ‘ (12)
இந்த உடல் சம்பந்தம் இடையில் வந்தேறியாய் நல்வினை தீவினை காரணமாக வருவது; இது யாதானும் ஒருகாலத்தில் அழியக் கூடியதாக இருக்கும். நாராயண சம்பந்தம் அநாதியாய் ஒருவித காரணமும் இல்லாமல் வந்ததாகையால், என்றும் உளதாயிருக்கும். இடையில் வந்த சரீர சம்பந்தத்தை அநாதி’ என்று சொல்லுவது பொருந்துமோ? என்ற வினா
எழுகின்றது. அதற்கு மணவாள மாமுனிகள் வந்தேறியான காலத்திற்கு அடி தெரியாமையாலும் அநாதி என்று பிரமாணங்சுகள் சொல்லுவதாலும் இவரும் (அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்) அநாதி’ என்றார். “ஒரு காலவரையில் அஃது இறைவனுடைய திருவருளால் அது மறையக் காண்கையாலே வந்தேறி என்பது
ஒருதலை” என்று கூறுவர்.
நாராயண சப்தார்த்தை அனுசந்திக்கிற திருமங்கை ஆழ்வார் –
எம்பிரான் எந்தை என்னுடை சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாணாள் -பெரிய திருமொழி -1-1-6–என்கையாலேஈஸ்வரனே இவ் ஆத்மாக்களுக்கு சர்வ வித பந்துவும் என்று இப் பதத்திலே சொல்லும்(முமுஷுப்படி-சூரணை -102)(பிரான் – உபகாரகன்; சுற்றம் – சகலவித பந்துவும்;அரசு – ஆண்டவன்; வாழ்நாள் – பிரான பூதன்]என்ற பாசுரத்தில் நான்கு விதமான சம்பந்தத்தைக் கூறி திருமந்திரத்தின் பொருளை விளக்கி மகிழ்கின்றார்.
குலசேகரப் பெருமாள் வித்துவக் கோட்டம்மான் திருப் பதிகத்தில் (5-ஆம் திருமொழி) இந்த நவவித சம்பந்தமும் அடங்கிக் கிடப்பதாக நம் முன்னோர் குறித்துப் போயுள்ளனர்.
தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை
விரை குழுவும் மலர் பொழில் சூழ் வித்துவக் கோட்டு அம்மானே
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள் தன்
அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே -5-1-பிரஜை உறங்குகிற தொட்டில் கீழே கிடக்கும் தாயைப் போலே இங்கே வந்து கிட்டினவனே-தம்முடைய பாரதந்த்ர்யத்தாலே தம்முடைய ரஷணத்துக்கு தமக்கு ஆனவையும் சொன்னார் –
சேஷியாகையாலே தம்முடைய ரஷணத்துக்கு ப்ராப்தன் -அவன் என்கிறார் -இப்போது –
ஒருவன் பேற்றுக்கு ஒருவன் சாதனமாம் போது இத்தனை பிராப்தி உண்டானால் அல்லது ஆகாது இறே-பிரஜை உடைய நோய்க்கு தாய் இறே குடி நீர் குடிப்பாள்-மேல் தாயை நிதர்சனமாகச் சொல்லப் புகுகிறவர் ஆகையால் இப்போது அம்மான் என்று பிராப்தி தோன்றச் சொல்லுகிறார் –வளர்த்த தாய் -என்னாதே-ஈன்ற தாய் -என்றத்தாலே பிராப்தம் சொல்லிற்று-
கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும்
கொண்டானை அல்லால் அறியா குலமகள் போல
விண் தோய் மதிள் புடை சூழ் வித்துவக் கோட்டம்மா! நீ
கொண்டு ஆளாய் ஆகிலும் உன் குரை கழலே கூறுவனே— 5-2-கொண்டானை யல்லால் யறியா -என்கையாலே –பாதி வ்ரத்யம் சொல்லிற்று-குலமகள் -என்கையாலே ஆபி ஜாத்யம் சொல்லிற்று-
மீன் நோக்கும் நீள் வயல் சூழ் வித்துவக் கோட்டு அம்மா ! என்
பால் நோக்காய் ஆகிலும் உன் பற்று அல்லால் பற்றி இலேன்
தான் நோக்காது எத் துயரம் செய்திடினும் தார் வேந்தன்
கோல் நோக்கி வாழும் குடி போன்று இருந்தேனே— 5-3-என் ரஷணத்தில் எனக்கு அந்வயம் அல்லாதாப் போலே சம்பந்தம் உடைய நீயே ரஷிக்கும் அத்தனை – நான் செய்யலாவதும் இல்லை -நீ மாட்டாததும் இல்லை –
வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பல்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளா துயர் தரினும் வித்துவக் கோட்டு அம்மா ! நீ
ஆளா வுனதருளே பார்ப்பன் அடியேனே— 5-4-பெற்ற தாய் பிரஜைக்கு அஹிதம் செய்யில் இறே நீ செய்வது -அப்படி இருக்கிற நீ செய்யிலும் –ஸ்வரூப அனுரூபமான வர்த்தியைப் பெறுகைக்காக-இப்போது தோற்றுகிற வ்யசனங்களை புத்தி பண்ணாதே உன் க்ருபையையே புத்தி பண்ணி இருப்பன் –
வெம் கண் திண் களிறு அடர்த்தாய் ! வித்துவக் கோட்டு அம்மானே !
எங்கு போய் வுய்கேன் ? உன் இணை அடியே அடையல் அல்லால்
எங்கும் போய் கரை காணாது எறி கடல் வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும் மா பறவை போன்றேனே— 5-5–சம்சார சாகரத்தைக் கடக்கும் போது உகந்து அருளின தேசமான திரு வித்துவக் கோட்டை பற்றி அல்லது கடக்கலாம் அத்தனை அல்லது வேறு உபாயம் இல்லை இறே கடக்கைக்கு உகந்து அருளின தேசத்தை ஒழிந்தது எல்லாம் அக் கடல் போலே இறே-
செந் தழலே வந்து அழலை செய்திடினும் செங்கமலம்
அந்தரம் சேர் வெங்கதிரோர்க்கு அல்லால் அலராவால்
வெந்துயர் வீட்டா விடினும் வித்துக் கோட்டு அம்மா ! உன்
அந்தமில் சீர்க்கு அல்லால் அகம் குழைய மாட்டேனே—5-6-கல்யாண உக்தமான உன் குணங்களுக்கு அல்லது என் நெஞ்சு நெகிழாது –
எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைம் கூழ்கள்
மைத்து எழுந்த மா முகிலே பார்த்து இருக்கும் மற்றவை போல்
மெய் துயர் வீட்டா விடினும் வித்துவக் கோட்டு அம்மா! என்
சித்தம் மிக வுன் பாலே வைப்பன் அடியேனே —5-7-அவஸ்யம் அநு போக்தவ்யம் -என்கிற பாபத்தைப் போக்கி சம்சார சம்பந்தம் அறுத்துக் கொடுக்க வந்து இருக்கிற நீ அது செய்திலை யாகிலும் என் ரஷணத்திலே நெகிழ்ந்தாய் என்று தோற்ற ஒருகாலுக்கு ஒருக்கால் உன் பக்கலிலே நெஞ்சு பிரவணமாகா நின்றது –
தொக்கி இலங்கி ஆறெல்லாம் பரந்தோடி தொடு கடலே
புக்கு அன்றி புறம் நிற்க மாட்டாத மற்றவை போல்
மிக்கு இலங்கு முகில் நிறத்தாய் ! வித்துவக் கோட்டு அம்மா ! உன்
புக்கு இலங்கு சீர் அல்லால் புக்கிலன் காண் புண்ணியனே ! —5-8-புண்ணியனே -பிரதம ஸூஹ்ருதம் நீ யாகையாலே –
நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான்
தன்னையே தான் வேண்டும் செல்வம் போல் மாயத்தால்
மின்னையே சேர் திகிரி வித்துவக் கோட்டு அம்மா !
நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே–5-9-எப்போதும் கை கழலா நேமியனாய் ஆசிலே வைத்த கையும் நீயுமாய் என்னுடைய ரஷணத்துக்காக இங்கே வந்திருந்து வைத்து
காற்கடைக் கொண்டாயே யாகிலும் தன்னைக் காற்கடைக் கொண்டவனை ஐஸ்வர்யம் விடாதே போலே நீ என்னை உபேஷிக்க உபேஷிக்க-உன்னையே பற்றி நின்றேன் –
வித்துவக் கோட்டு அம்மா ! நீ வேண்டாயேயா யிடினும்
மற்றாரும் பற்றிலேன் என்று அவனை தாள் நயந்த
கொற்ற வேல் தானை குலசேகரன் சொன்ன
நல் தமிழ் பத்தும் வல்லார் நண்ணார் நரகமே– 5-10-இதுக்கு என்று வந்திருக்கிற நீ என்னை உபேஷித்தாயே யாகிலும்-வேறு ஒரு புகலில்லை-நான் அநந்ய கதி என்று -அவன் திருவடிகளை ஆசைப்பட்டு-பிரதிபஷத்தை பக்க வேரோடு வாங்க வற்றான வென்றியை உடைய வேலையையும் சேனையையும் உடைய ஸ்ரீ பெருமாள் சொன்னவை –
பிரதிபஷத்தை வெல்லுகைக்கு ஈடான பரிகரம் உடையரானார் போலே யாய்த்து –
ஸ்ரீ பகவத் ப்ராப்திக்கு பரிகரமாக-இவருடைய அநந்ய கதித்வத்வமும்-கடல் பேர் ஆழமாய் இருக்கச் செய்தே -உள்ளுள்ள பதார்த்தங்கள் தோற்றும்படியாய் இருக்குமா போலே
அர்த்தம் மிக்கு இருக்குமாய்த்து இத் திருமொழி –சம்சார சம்பந்தத்துக்கு அடியான பாபத்தை பண்ணினார்களே யாகிலும் இஸ் சம்சாரத்திலே வந்து பிரவேசியார்கள் –
ஆழ்வார்பெருமக்கள் எம்பெருமானைத் தந்தை நிலையில் வைத்தெண்ணக்கூடிய இடங்கள் எண்ணற்றவை.-திருவேங்கடத்து என் ஆனை என் அப்பன் (3.9:1)
என்றும், திருக்குறுங்குடி எம்பெருமானை,… குறுங்குடி மெய்யம்மையே உளனாய எந்தையை (3.9:2)-எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானை தண் தாமரைக் கண்ணனை கொம்ப ராவு நுண் ணேரிடை மார்புனை (1.10:3)-எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும் எம்பிரானை”என்று அழகாய்ப் பேச, அதன் இன்பத்தில் திளைத்த எம்பெருமான் ‘இப்படி ஏத்துகின்றவன் ஆர் ?” என்று குளிரக் கடாட்சிக்கின்றான். அக்கடாட்சத்தால் மகிழ்ந்த ஆழ்வார் தண்டாமரைக் கண்ணனை ” என்று மேலும் சிறப்பிக்கின்றார், குற்றமே வடிவான தம்மீது எம்பெருமான் இவ்வளவு சிறப்பாகக் கருணை காட்டக் காரணமில்லையே! என்ன காரணமோ? என்று ஆராய்ந்து பார்த்த ஆழ்வார். கடாட்சிக்கச் செய்யவல்ல பெரிய பிராட்டியார் அருகில் இருப்பதை உணர்ந்து, ‘ கொம்பு அராவு நுண் நேரிடை மார்பனை என்று மேலும் சிறப்பிக்கின்றார். இந்த ஆழ்வாரே திருவிண்ணகர் சேர்ந்த பிரானை – என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என்அப்பனே (6. 3.8)என் அப்பன் எனக்காய் இகுளாய என்னைப் பெற்றவளாய்,பொன் அப்பன் மணி அப்பன்; முத்தப்பன் என்னப்ப னுமாய் தன் ஒப்பார் இல் அப்பன் (6.3:9)(இருளாய்-செவிலியாய் என்று கூறுவதைக் காணலாம்-இந்த ஆழ்வாரே,பொழில்ஏழும் உண்ட எந்தாய் : (2,3:4)எள்கல் தந்த எந்தாய் ! (2.5:4)-எந்தாய் ! தண்திரு வேங்கடத்துள்
நின்றாய் (2:6:9)எக்காலத்தும் எந்தையாய்ப் என்னுள் மன்னில் மற்று எக்கா லத்திலும் யாதொன்றும் வேண்டேன் (2.9:8) எழில்கொள சோதி எந்தை தந்தை தந்தைக்கே ! எந்தை தந்தைதந்தை (3.3:1) தந்தை தந்தைக்கும் முந்தை (3.3:2) ஆதுமில் காலத் தெந்தை அச்சுதன் (3.4:4)வார்ப்புனல் அந்தண் அருவி வடதிரு வேங்கடத் தெந்தை (3.5:8) தாவி ைையம் கொண்ட எந்தாய்! (4.7:3) ஆணி செம்பொன் மேனி எந்தாய் ! (4.7:4) ஏன மாய்நிலம் கீண்டஎன் அப்பனே ! (5.7:6) அகல்கொள் வையம் அளந்த மாயன்என் அப்பன் (6.4:6) புனத்து மாய்முடி மாலை மார்பன்என் அப்பன் (6.4:6) மாணி யாய்நிலம் கொண்ட மாயன்என் அப்பன் (6.4:6)
தூமுதல் பத்தர்க்குத் தான்தன்னைச் சொன்னஎன் | வாய்முதல் அப்பனை (7.9:3)
… என்னால்தன்னை பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு (7.9.10)பதவிய – மதுரமான]
திருக்குறன் அப்பன் (7.10:2)-பாம்பணை அப்பன் (7.10:5)தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் நீயாய்நீ நின்ற வாறு இவைஎன்ன நியாயங்களே (7.8:1) பெரிய அப்பனை, பிரமன் அப்பனை;உருத்திரன் அப்பனை, முனிவர்க்குரிய அப்பனை, அமரர் அப்பனை,உலகுக்கோர் தனியப்பன் தன்னை (8,1:11)என்று எம்பெருமானை அப்பனாகப்-தந்தையாகப்-பாவித்துப் பாசுரங்கள் அருளியுள்ளதைக் காணலாம்.
மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய் விளக்கொளியாய் முளைத்தெழுந்த
திங்கள் தானாய்
பின்னுருவாய், முன்னுருவில் பிணிமூப் பில்லாப் பிறப்பிலியாய், இறப்பதற்கே
எண்ணாது என்றும்
பொன்னுருவாய், மணியுருவில் பூதம் ஐந்தாய்ப் புனலுருவாய், அனலுருவில்
திகழும் சோதி
தன்னுருவாய், என்னுருவில் நின்ற எந்தை
ஒண்மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப ஒரு காலும் காமருசீர் அவுணன் உள்ளத்து
எண்மதியும் கடந்தண்ட மீது போகி இருவிசும்பி லூடுபோய் எழுந்து மேலைத்
தண்மதியும் கதிரவனும் தவிர ஓடித் தாரகையின் புறந்தடவி, அப்பால் மிக்கு
மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை
திருமங்கையாழ்வாரின் திருநாங்கூர்த்திருமணிக் கூடம் திருமொழி ஒன்றின் (4.5) ஒவ்வொரு பாசுரத்திலும் இந்தத் தந்தை- தனயன் உறவு முறை அமைந்திருப்பதைக்
கண்டு அநுபவித்து மகிழலாம்.
காம்புடைக் குன்ற மேந்திக் கடுமழை காத்த எந்தை (1)
வவ்விய இடும்பை கூரக் கடுங்கணை துகந்த எந்தை (2)
வன்தாள் சேத்தொழில் சிதைத்துப் பின்னை செவ்வித்தோள் புணர்ந்த எந்தை (3)
பூங்குருக் கொசித்துப் புள்வாய் பிளந்தெரு து) அடர்ந்த எந்தை (4)
வருமவள் செவியும் மூக்கும் வானினால் தடிந்த எந்தை (5)
அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய எந்தை (6)
நின்றவெஞ் சுடரும் அல்லா நிலைகளும் ஆய எக்தை (7)
பொங்கிய முகிலும் அல்லாப் பொருள்களும் ஆய எந்தை (8)
கோவமும் அருளும் அல்லாக் குணங்களும் ஆய எந்தை (9) என்ற பாசுரப் பகுதிகளைக் காண்க.
நல் வீடு செய்யும் மாதாவினைப் பிதுவை திருமாலை வணங்குவனே (திருவிருத் – 95)
மேலாத் தாய்தந்தையும் அவரே இனி ஆவாரே (திருவாய்.5.1:8)தெளிவிலாக் கலங்கல் நீர்சூழ் திருவரங்கத்துள் ஓங்கும் ஒளியுணர் தாமே யன்றே தந்தையும் தாயும் ஆவா
[ஓங்கும்-விஞ்சியிருக்கும் ஒளிதேசு ] – திருமாலை – 37-அத்தனாகி அன்னையாகி ஆளும் எம்பிரானுமாய்‘ (திருச்சந்.115)தாயும் தந்தையும் ஆய்இவ் வுலகினில் வாயும் ஈசன் மணிவண்ணன், எந்தையே (1-10:6)வாயும் அவதரித்தவன்?எந்தை யே!என்றும், எம்பெரு மான்! என்றும் சிந்தையுள் வைப்பன்; சொல்லுவன் (1-10:7)” என்னைப்பெற்ற
அத்தாயாய்த் தந்தையாய் அறியாதன அறிவித்த அத்தா (2.3 2)தஞ்ச மாகிய தந்தை தாயொடு தானுமாய் (3.6:9)
தாய் நினைந்து கன்றே ஒக்க என்னையும் தன்னையே நினைக்கச் செய்து தான் எனக்கு
ஆய்நினைந்து அருள் செய்யும் அப்பனை (பெரி. திரு.7.3:2)உயிர்க் கெல்லாம்
தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா!- பெரி . திரு. 7:19-பெற்ற தாய் நீயே, பிறப்பித்த தந்தை நீ; மற்றையார் ஆவாரும்நீ; (பெரி .திருவந்- )
———–
இரட்சக – இரட்சய சம்பந்தம்–
பெற்றார் பெற்றொழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு
உற்றானாய் வளர்ந்து என் உயிராகி நின்றானை
முற்றா மாமதிகோள் விடுத்தானை எம்மானை
எத்தால் யான் மறக்கேன் இதுசொல், என் ஏழை நெஞ்சே! (6)
திரு மந்திரத்தில் தேறுகின்ற ஒன்பது வகையான உறவுகளையும் உடையவன் எம்பெருமான் என்பது ”உற்றானாய் நின்று வளர்த்து என் உயிராகி நின்றானை” என்ற அடியால் பெறப்படுகின்றது.
உலகைப் பிரளயத்திலிருந்து எம்பெருமான் உய்வித் தமையைக் கூறும், பெரிய திருமொழியிலுள்ள ‘மை நின்ற (11.6) என்ற பதிகத்தில் திருமங்கையாழ்வாரின் திருவாக்கு
கள் (ஒன்பது பாசுரங்கள்) இரட்சக-இரட்சய உறவினை மிகத் தெளிவாக விளக்குகின்றன. மைந்நின்ற கருங்கடல் வாய் யுலகின்றி வானவரும் யாமும் எல்லாம்
மெய்ந்நின்ற சக்கரத்தன் திரு வயிற்றில் நெடுங்காலம்-11-6-1-
வெம்பெருமான் உண்டு உமிழ்ந்த வெச்சில் தேவர்
அல்லாதார் தாம் உளரே யவன் அருளே யுலகாவது அறியீர் களே –11-6-2-
நெற்றி மேல் கண்ணானும் நிறை மொழி வாய் நான்முகனும் நீண்ட நால்வாய்
ஒற்றைக் கை வெண் பகட்டில் ஒருவனையும் உள்ளிட்ட அமரரோடும்
வெற்றிப் போர் கடல் அரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட
கொற்றப் போராழியான் குணம் பரவாச் சிறு தொண்டர் கொடியவாறே –11-6-3-
பனிப் பரவித் திரை ததும்பப் பார் எல்லாம் நெடும் கடலே யானகாலம்
இனிக் களை கண் இவர்க்கு இல்லை என்று உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி
முனித்தலைவன் முழங்கொளி சேர் திரு வயிற்றில் வைத்து உம்மை யுய்யக் கொண்ட
கனிக்கவளத் திருவுருவத் தொருவனையே கழல் தொழுமா கல்லீர்களே –11-6-4-
பாராரும் காணாமே பரவை மா நெடும் கடலே யான காலம்
ஆரானும் அவனுடைய திரு வயிற்றில் நெடும் காலம் கிடந்தது உள்ளத்து
ஓராத உனர்விலீர் உணருதிரேல் உலகளந்த உம்பர் கோமான்
பேராளான் பேரான பேர்கள் ஆயிரங்களுமே பேசீர்களே -11-6-5-
பேயிருக்கு நெடு வெள்ளம் பெரு விசும்பின் மீதோடிப் பெருகு காலம்
தாயிருக்கும் வண்ணமே யும்மைத் தன் வயிற்றிருத்தி உய்யக் கொண்டான்
போயிருக்க மற்று இங்கோர் புதுத் தெய்வம் கொண்டாடும் தொண்டீர் பெற்ற
தாயிருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ மாட்டாத தகவற்றீரே —11-6-6-
மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றும் எல்லாம்
உண்ணாத பெரு வெள்ளம் உண்ணாமல் தான் விழுங்கி யுய்யக் கொண்ட
கண்ணாளன் கண்ணமங்கை நகராளன் கழல் சூடியவனை உள்ளத்து
எண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனியவாறே –11-6-7-
மறம் கிளர்ந்து கரும் கடல் நீர் உரந்துரந்து பரந்தேறி யண்டத்தப்பால்
புறம் கிளர்ந்த காலத்துப் பொன்னுலகம் ஏழினையும் ஊழில் வாங்கி
அறம் கிளர்ந்த திரு வயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை உய்யக் கொண்ட
நிறம் கிளர்ந்த கருஞ்சோதி நெடும் தகையை நினையாதார் நீசர் தாமே –11-6-8-
அண்டத்தின் முகடு அழுந்த அலை முந்நீர்த் திரை ததும்ப ஆவா வென்று
தொண்டர்க்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் தான் அருளி உலகம் ஏழும்
உண்டு ஒத்த திரு வயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை யுய்யக் கொண்ட
கொண்டற் கைம் மணி வண்ணன் தண் குடந்தை நகர் பாடி யாடீர்களே–11-6-9-
மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வன் (திருமாலை-1)
‘பாரினை உண்டு, பாரினை உமிழ்ந்து’ (பெரி . திரு. 4.10:5)
‘உண்டாய் உலகு ஏழ் முன்னமே உமிழ்ந்து மாயையால் புக்கு(திருவாய்- 1.5:8)
ஓவாத் துயர்ப் பிறவு உட்படமற் றெவ்வவையும்
மூவாத்தனிமுதலாப் மூவுலகும் காவலோன்
மாவாகி ஆமையாய்மீனாகி மானிடமாம்
தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே (2-8-5)
சோம்பாது இப்பல்லுருவையெல்லாம் படர்வித்த வித்தா! ‘ (பெரிய திருவந்.18,
களைவாய் துன்பம்; களையா (து) ஒழிவாய்; களைகண் பற்றிலேன்;
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்த மாமாயா!
தளரா உடலம் என்ன (து) ஆவி சரிந்து போம்போது
இளையா(து) உன்தாள் ஒருங்கப் பிடித்துப் போதஇசை நீயே-5-8-8-
நலந்தான் ஒன்றுமிலேன் நல்ல தோரறஞ் செய்துமிலேன் -பெரி . திரு .1.9:4-ஆகிஞ்சன்னியம்”, அநக்யகதித்துவம்
தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத் தனியொரு தேர்கடவித் தாயொரு கூட்டிய என்
அப்ப!(பெரியாழ். திரு.1.6:7)பிறப்பகத்தேமாண்டொழிந்த பிள்ளைகளை நால்வரையும்
இறைப் பொழுநில் கொணர்ந்து கொடுத்து ஒருப்பகுத்து உறைப்பன்(பெரியாழ். திரு.4.8:2) வேத வாய்மொழி அந்தணன் ஒருவன் எந்தை! நின்சரண் என்னுடை மனைவி
காதல் மக்களைப் பயத்தலும் காணாள் கடியது ஓர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப ஏதலார் முன்னே இன்னருன் அவற்குச் செய்து உன்மக்க மற்றுஇவர் என்று
கொடுத்தாய் (பெரி.திரு. 5.8 8)படர் புகழ் பார்த்தனும் வைதிக னும்உடன் ஏறத்திண் தேர்கடவி சுடரொளி யாய்நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை
உடலொடுங் கொண்டு கொடுத்தவன் (திருவாய்.3.10:5)மாதவத்தோன் புத்திரன்போய்
மறிகடல்வாய் மாண்டானை ஓதுவித்த தக்கணையா உருவுருவே கொடுத்தான்.-பெரியாழ். திரு .4.8:1-ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும் உனக்கு முன் தந்த| அந்தணன் ஒருவன்
‘ காதல் என் மகன் புகலிடங் காணேன் ; கண்டு நீ தரு வாயெனக்கு என்று கோதில் வாய்மையினான் உனை வேண்டிய குறைமு டித்தவன் சிறுவனைக் கொடுத்தாய்-பெரி. திரு. 5.8-7
அல்லற் படாவண்ணம் காக்க வேண்டும் (4-10-3) அற்றைக்கு நீ என்னைக் காக்க வேண்டும் (4-10-4)ஐய! இனிஎன்னைக் காக்க வேண்டும் (5) அண்ணலே! நீ என்னைக் காக்க வேண்டும் (6) அஞ்சலை என்றுஎன்னைக் காக்க வேண்டும் (7)ஆனாய்! நீஎன்னைக் காக்க வேண்டும் (8)
————
4-சேஷீ -சேஷ உறவு-சீவான்மாவுக்கு அவனுடைய கை, கால்கள் முதலான உறுப்புகள் கூடிய உடல் சேஷமாவது போன்று, பரமான் மாவுக்குச் சரீரமாக நிற்கும் இந்தச் சீவான்மா சேஷபூதன் (அடிமை) ஆகின்றான். சர்வேசுவரன் தன்னுடைய திருவுள்ளத்தின் சங்கல்பா குணமாய்த் தனக்கே உரிய விருப்புப் பொருளாய் உரிமையாக்கிக் கொள்ளுகின்றான்.
அதனால் பரமான்மா (ஆண்டான்) ஆகின்றான்.
சென்றால் குடையாம்; இருந்தால்சிங் காசனமாம்
நின்றால் மரவடியாம் ; நீள்கடலுள் என்றும்
புணையாம் ; அணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்,
அணையாம் திருமாற்கு அரவு
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று
திருவேம்கடவா நாயேன் வந்தடைந்தேன் நல்கி யாள் என்னைக் கொண்டருளே—1-9-1-திருவேம்கட மா மலை என் ஆனாய் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-2-குளிர் மா மலை வேங்கடவா அன்றே வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-நெறியார் திருவேங்கடவா அலந்தேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—-1-திருவேங்கட மா மலை என் அப்பா வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—-1-9-5- விரையார் திருவேங்கடவா அண்ணா வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே-1-9-கன மா மலை வேங்கடவா அரியே வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே–1-9-7-சோலை சூழ் வேங்கடவா ஆற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-8-மாயனே எங்கள் மாதவனே கல் தேன் பாய்ந்து ஒழுகும்கமலச் சுனை வேங்கடவா அற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே–1-9-9-பிராட்டி சம்பந்தம் கூறப் பெற்றிருப்பதனால் ‘புருஷகாரம்‘ தெளிவாகின்றது.
விண்ணோர் தொழும் வேங்கடமாமலை மேய அண்ணா வடியேன்இடரைக் களையாயே1 10-விலங்கல் குடுமித் திருவேங்கடம் மேய அலங்கல் துளப முடியாய் அருளாயே–1-10-2-சீரார் திருவேங்கட மா மலை மேய ஆராவமுதே அடியேற்கு அருளாயே–1-10-3-நில மீரடியாலே
விண டோய் சிகரத் திருவேங்கடம் மேய அண்டா வடியேனுக்கு அருள் புரியாயே-1-10-4-சேணார் திருவேங்கட மா மலை மேய கோணா கணை யாய் குறிக்கொள் எனை நீயே-1-10-5-மின்னார் முகில்சேர் திருவேங்கடம் மேய என்னானை என்னப்பன் என் நெஞ்சில் உளானே6-தேனே திருவேங்கட மா மலை மேய கோனே என் மனம் குடி கொண்டு இருந்தாயே–1-10-7-வேய் விண்டுதிர் வேங்கட மா மலை மேய ஆயன் அடி அல்லது மற்று அறியேனே–1-10-8-சிந்தா மணியே திருவேங்கடம் மேய எந்தாய் இனி யான் உன்னை என்றும் விடேனே–1-10-9-
காவளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே –4-6-1-நாங்கை மேய
கண்ணனே காவளந்தண் பாடியாய் களை கண் நீயே -4-6-2-நாங்கைக்
கருத்தனே காவளந்தண் பாடியாய் களை கண் நீயே-4-6-3-நாங்கைக்
கனை கழல் காவளந்தண் பாடியாய் களை கண் நீயே –4-6-4-நாங்கை மேய
கடவுளே காவளந்தண் பாடியாய் களை கண் நீயே -4-6-5-நாங்கை மேய
கல்லரண் காவளந்தண் பாடியே களை கண் நீயே -4-6-6-நாங்கைக்
காத்தேன் காவளந்தண் பாடியாய் களை கண்நீயே –4-6-7-நாங்கைக்
காவளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே -4-6-8-மட மயிலாலு நாங்கைக்
கந்தமார் காவளந்தண் பாடியாய் களை கண் நீயே -4-6-9-
முட்டில்பல் போகத் தொரு தனி நாயகன் மூவுல குக்குரிய
கட்டியைத் தேனை அமுதை நன் பாலைக் கனியைக் கரும்புதன்னை
மட்டவிழ் தண்ணக் துழாமுடி யானை வணங்கி அவன் திறத்துப்
பட்டபின் னைஇறை யாகிலும் யான்என் மனத்துப் பரிவலனே (3-10-3)-தனி நாயகன்- ஒப்பற்ற தலைவன்;பட்டபின்னை–ஆட்பட்ட பிறகு
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத் தொடு வீற்றிருந்தும் மணங்கூடியும்
கண்ட வாற்றால் தனதே உலகென் நின்றான்தன்னை
வண்டமிழ் நூற்க நோற்றேன் அடியார்க் கின்பமாரியே (4-5-10)-தனதே உலகென நின்றான் தன்னை ‘ என்பதால் சேஷித்துவமும் ‘ வண்டமிழ் நூற்க நோற்றேன்’ என்பதால் சேஷத்துவமும் தெளிவாகின்றன.
வாரா வருவாய் வரும்என் மாயா ! மாயா மூர்த்தியாய்!
ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய் ! திருக்குடந்தை
ஊரா ! உனக்காட் பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ? (5-8-10)’ஆண்டாய் ‘ என்பதால்
சேஷித்துவமும், உனக்காட்பட்டும்? என்பதால் சேஷத்துவமும் தெளிவாகின்றன
தெரிதல் நினைதல் எண்ணல் ஆகாத் திருமாலுக்கு உரிய தொண்டர் தொண்டர் தொண்டர் சடகோபன் (6-9-11)-திருமாலுக்கு’ என்பதால் சேஷித்துவமும்,–தொண்டர் தொண்டள்’ என்பதால் சேஷத்துவமும் தெளிவாகின்றன.
புண்ட ரீகக்கொப் பூழ்புனற் பள்ளி அப்பனுக்கே தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் (7-1-11)’புனல் பள்ளி அப்பன் ‘ என்பதால் சேஷித்துவமும் .தொண்டர் தொண்டன்’ என்பதால் சேஷத்துவமும் புலனாகின்றன.
என்அமர் பெருமான் இமையவர் பெருமான் இருநிலம் இடந்தாம் பெருமான்
முன்னைவல் வினைகள் முழுதுடன் மாள என்னை ஆள் கின்ற எம்பெருமான் (8-4-3)’ என் அமர் பெருமான்… இருநிலம் இடந்த எம்பெருமான் ‘ என்பதால் சேஷித்துவமும், என்னை ஆள்கின்ற ‘ என்பதால் சேஷத்துவமும் அறியப்பெறுகின்றன.
செந்தழலே வந்து அழலைச் செய்திடினும் செங்கமலம்
அந்தரம்சேர் வெங்கதிரோற் கல்லால் அலராவால்
வெந்துயர்வீட் டாவிடினும் விற்றுவக் கோட்டம்மா !உன்
அந்தமில் சீர்க்கல்லால் அகம்குழைய மாட்டேனே (5-6)ூரியன் நிலையில் எம்பெருமா
னையும் (சேஷி) தாமரையின் நிலையில் தம்மையும் (சேஷன்) வைத்துக் கூறியதனால் ஆண்டான்- அடிமை உறவு காணப்படும். ஆனால் பிரதிவாதி பயங்கரம் அண்ணசாமி, நாயக. நாயகிபாவனை தொனிக்கும் என்று அருளிச் செய்வர். ஒரு வகையில் நோக்கினால் இதுவும் பண்டைய நிலைப்படி ஆண்டான்-அடிமை உறவு தானே!
5-நாயக-நாயகி சம்பந்தம்
ஞானத்தில் தம் பேச்சு பிரேமத்தில் பெண் பேச்சு-சம்பந்த உபாய பலங்களில் உணர்த்தி துணிவு பதற்றம் ஆகிய பிரஜ்ஞாவஸ்தைகளுக்குத் தோழி, தாயார்.
மகள் என்று பேர் “ஞானாவஸ்தைகள்’ என்னாமல் பிரஜ்ஞாவஸ்தைகள்’-என்றது –அவஸ்தா திரய விருத்தி’-மூன்று விதமான நிலைகளும் அவர்கட்கு எல்லாக் காலங்களிலும் உண்டு என்னுமிடம் தோற்றுகைக்காக.
தீர்ப்பாரை யாமினி -4-5-அநந்யார் சேஷத்துவத்தைத் தோழி வெளிப்படுத்துவது-
சின்மொழி நோயோ கழிபெருந்தெய்வம், இந்நோய் இனது என்று
இன்மொழி கேட்கும் இளந்தெய்வம் அன்று இது வேல! நில்நீ
என்மொழி கேண்மின் என் அம்மனைமீர்! உலகேழும் உண்டான்| சொன்மொழி மாலை அம் தண்ணந் துழாய்கொண்டு சூட்டுமினே (20)
‘துவளில் மணிமாடத்து'(6.5)-தலைவியின் அநந்யார்ஹத்துவம் தோழிக்கு தெரிவித்தவாறு.
‘கருமாணிக்க மலைபோல்’ (8.9)-‘இவளது உடம்பில் அழகிய குளிர்ந்த திருத்துழாயின் மணம் வீசுவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? என் உடம்பிலாவது உங்கள் உடம்பிலாவது திருத்துழாய் மணம் வீசுகின்றதோ? எம்பெருமான் திருமேனியில் அணைந்தாலல்லது இம் மணம் வீசுவதற்குக் காரணம் உண்டோ?” என்கின்றாள் . “இராஜ புத்திரரை அணையாதாற்குக் கோயில் சாந்து நாறுவதற்கு விரகு உண்டோ?” என்பது ஈடு. இதனால் திருப்புலியூரில் நின்ற மாயப் பிரானுடையதிருவருளுக்கே இவள் இலக்காயினாள் என்று கூறும் தோழியின் கருத்தில் தலைவியின் அநந்யார்ஹ சேஷத்துவம்’ பளிச்சிடுகின்றதன்றோ?
‘மண்ணையிருந்து துழாவி (4.4) என்ற திருப்பதிகத்தில்,-தாய்ப்பாசுரம்–தலைவியின் பாரதந்திரியம் வெளி யாகின்றது.
‘உண்ணும் சோறு’ (6.7) என்றபதிகம் தாய்ப் பாசுரம் -எல்லாம் கண்ணன் ‘ என்ற தாய்ப் பாசுரத் தொடர் தலைவியின் பாரதந்திரியத்தையும். உபாயத்தையும் காட்டுகின்றது.
கங்குலும் பகலும்’ (7.2)-பெரிய பெருமாளைத் தாய் வினவுவதில் ஆழ்வாரின் ஈஸ்வர பாரதந்திரியமும் உபாயத்தில் துணிவும் பளிச்சிடுவதைக் காண்லாம்
உடனே பெற வேண்டும் என்ற பதற்றத்தை யுடையவள் மகள்.-
திருக்குறுங்குடி பற்றிய ‘எங்ஙனேயோ’ (5.3)திருவாய்மொழியில்,-தலைவியின்
வாக்கு அவளது பதற்ற நிலையைப் பாங்குடன் தெரிவிக்கின்றது.
‘வெள்ளைச் சுரி சங்கொடு(7 3) என்று தொடங்கும் திருவாய்மொழியிலும் இன்னுயிர்ச் சேவலிலும் (9.5)அவனுடைய திருக் குணங்களை ஒருவாறு நினைத்துத் தரித்தும் நடைபெறுகின்றது -இப் பாசுரங்கள் ஆழ்ந்து ஓதி அனுபவிக்கும் போது தலைவியின் துடிப்பைப்- பதற்றத்தைத்- தெளிவாக உணர முடிகின்றது.
திருமங்கையாழ்வாரின் ‘தவள இளம்பிழை (9.5)என்று தொடங்கும் திருக்குறுங்குடி பற்றிய திருமொழியிலும் என்னுடைய ஆவி இனி தரிக்க விரகில்லை; நான் வேண்டும் என நீங்கள் நினைத்தால்,திருக்குறுங்குடியில் என்னைக் கொண்டு போய்ச் சேர்த்து விடுங்கள் ; அங்கே எழுந்தருளி யிருக்கின்ற கொண்டல் மணி வண்ணரைக் கண்டவுடன் என் வாட்டமெல்லாம் தீரும்;மேகத்தையும் மணியையும் கண்ட பின்னரும் வாட்டம் நிற்குமோ ? ஆகவே, பாதகப் பொருள்களின் வசத்திலே அகப்பட்டு நான் நலிவு படாமல் இவை யெல்லாம் அநுகூலங்களாகப் பெறும் தேசத்தில் என்னைக் கொண்டு போய் விட்டிடுங்கள்” என்கின்றாள்.
நாச்சியார் திருமொழி(12) –
மதுரைப் புறத்து என்னை உய்த்திடுமின் (1)
ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின் (2)
நந்தகோ பாலன் கடைத்தலைக்கே என்னை உய்த்திடுமின் (3)
யமுனைக் கரைக்கு என்னை உய்த்திடுமின் (4)
பொய்கைக் கரைக்கு என்னை உய்த்திடுமின் (5)
பத்தவிலோசனத்து (என்னை) உய்த்திடுமின் (6)
பாண்டி வனத்து என்னை உய்த்திடுமின் (7)
கோவர்த் தனத்து என்னை உய்த்திடுமின் (8)
துவராபதிக்கு என்னை உய்த்திடுமின் (9)-இவற்றிலெல்லாம் “எம்பெருமானைக் கிட்டியல்லது தரியேன்” என்ற பதற்றம் தொனிப்பதைக் காணலாம். ‘சித்தோபாயம்’ நிழலிடுவதைக் கண்டு மகிழலாம்.
6-ஞாதா-ஞேயன் உறவு-அறிவன்- அறியப்படும் பொருள் உறவு-
மகாரம் இருபந்தைந்தாம் அட்சரமாய் ஞானவாசியுமா யிருக்கையாலே, ஆத்மாவைச் சொல்லுகிறது.(முமுட்சுப்படி.-66) -ஆன்மாவிற்கு சேஷத்துவம், ஞானத்துவம், ஞாத்ருத்வம் (அறிவுடையவனாய் இருக்கை) ஆகிய மூன்று தன்மைகள் உண்டு-
பெயரும் கருங்கடலே நோக்கும் ஆறு;ஒண்பூ
உயரும் கதிரவனே நோக்கும் -உயிரும்
தருமனையே நோக்கும்;-ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு-பொய்கை யாழ்வாரின் திரு வாக்கு- 67)–இப் பாசுரத்தில் உணர்வு என்பது ஞான மயனான ஆன்மா திருமாலுக்கு அநந்யார்ஹ சேஷ பூதன் என்பதை உணர்த்தும் –
சிந்தை மற்றொன்றின் திறத்தல்லாத் தன்மை தேவ பிரான் அறியும்
சிந்தையினால் செய்வ தானறியாதன மாயங்கள் ஒன்றுமில்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திரு வாறன்விளையுறை தீர்த்தனுக் கற்ற பின்னே (7-10-10)–எம்பெருமானுக்கு அடிமை என்று அறுதியிட்ட பின்பு என் மனம் வேறு ஒன்றினை உத்தேஸ்யமாக நினைத்திராத தன்மையை எம்பெருமான் அறிவான்; சிந்தையினால் நினைக்கப்படு வனவான வஞ்சனைகள் (மாயங்கள்) அவன் அறியாதன ஒன்றும் இல்லை -“ஆழ்வீர்! இப்போது நீர் திருவாறன்விளையிலே பிராவண்யம் (ஊற்று) முற்றி யிருந்தீராகிலும், பல காலும் பரம பதம், பரம பதம்’ என்று வாய் வெருவிக் கிடந்தீராதலால்,எம்பெருமான் . இதையே கொள்ளும்’ என்று நிர்பந்தித்துக் கொடுத்தானாகில் என் செய்வீர்?” என்று சிலர் உசாவியதாகக் கொண்டு அதற்கு விடை தருகின்றார் இப் பாசுரத்தில்,”அதனை,என் நினைவிற்கு மூலமாக இருக்கின்ற சர்வேஸ்வரனைக் கேட்டுக் கொள்வது” என்று அருளிச் செய்வர் நஞ்சீயர். ”திருவாறன் விளையே பிராப்பியம் என்று இருக்கின்றீர்; ஈஸ்வரன் ஸ்வதந்திரன் அல்லனோ? அவன் பரம பதத்தைத் தரின் என் செய்வீர்!” என்ன, ” அவன் முற்றறிவினன் அல்லனோ? அவன் அறியானோ. என்கின்றார்’என்று பிள்ளான் பணிப்பர். “அவன் புருஷார்த்தப் பிரதன் என்று பிரசித்தி பெற்றவன் அல்லனோ? புருஷன் விரும்பியதை யன்றோ அவன் கொடுத்தருளுவன்! எனது சிந்தை திருவாறன் விளை தவிர மற்றொன்றையும் கணிசியாதிருக்கும் படியை அறிய ஆற்றலற்றவன் அல்லனே; அப்படி அறிந்து கொண்டும் எங்ஙனே மற்றொன்றினைக் கொடுப்பான்?” என்கின்றார். “மற்றொன்று என்கிறது பரம பதத்தின் பெயர் சொல்லுகையும் கூட அஸஹ்யமானபடி” என்பது ஈடு, இதனாலும் ‘ஞாதா -ஞேயன்” உறவு உறுதியாகின்றது.
7-(ஸ்வ-ஸ்வாமி)சொத்து – சொத்துக் குரியவன்
யானே என்னை அறிய கிலாதே
யானே என் தனதே என்று இருந்தேன்
யானே நீ ; என் உடைமையும் நீயே;
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே!(2-9-9)-இதனால் சொத்து-சொத்துக்குரியவன் ‘ என்ற சம்பந்தம் தெளிவாகின்றது.
ஆனந்தமாய் அரங்கற்கே உயிர்கள் |அடிமை என்னும்
ஞானந்தனால் ஐம் பொறி வாசல்! சாத்தி நற்றாளைப் பற்றி
ஈனந் தரும் பற்றும் மற்றென்றும் யான் எனது என்னும் அபி
மானம் தவிர்ந்திருப்பார்க்கு இது | போல் இல்லை மாதவமே.–திருவரங்கக்கலம்பகம்
மாத வங்கள் என்(று) ஓத வங்களின் மருவு சீவன் என்று ஒருவ! நீபெரும்
பூதம் அல்லை; இந் திரியம் அல்லை;ஜம்புலனும் அல்லை;நற் புந்தி அல்லை காண்;
சீத ரன்பரம் தாமன் வாமனன்|திருவ ரங்கனுக் கு) அடிமை; நீயுனக்கு
ஏதும் இல்லை என்றறி; அறிந்தபின் ஈதின் மாதவம் இல்லை எங்குமே-திருவரங்கக் கலம்பகம்
8-சரீர- சரீரி பாவனை-அதாவது சித்தும் அசித்தும் எம்பெருமானுக்கு உடலாக
இருக்கும்-இங்ஙனமாக உடலைப் பற்றி நிற்கும் உயிர் அவ்வுடலுக் கேற்ப இன்ப துன்ப உணர்ச்சிகளும் அறிவின் சுருக்கமும் பெருக்கமும் அடைதல் தெளிவாகும். ஆனால், உடல் உயிர் இரண்டினுள்ளும் கலந்து நிற்கும் இறைவனை இவ்வேறுபாடுகள் சிறிதும் அடைவதில்லை -இதற்குக்காரணம் ‘பிரவேச ஹேது விசேடம்”
திடவிசும்பு எரிவளி நீர்நிலம் இவைமிசைப்
படர் பொருள் முழுவதும் ஆய்அவை அவை தொறும்
உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்.
நீர்ஆய் நிலன்ஆய் தீ ஆய் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டு ஆய் சிவனாய் அயன் ஆனாய்
அடியேன் உள்ளான் உடல் உள்ளான்–அஹம் ‘ அர்த்தத்துக்கு ஞாநாநந்தங்கள் தடஸ்தம் என்னும்படி தாஸ்யமிறே அந்தரங்க நிரூபசும் என்ற ஸ்ரீவசனபூஷன ஸூத்திரத்திற்கு ‘அடியேன் உள்ளான் என்றாறிறே ஆழ்வார் ! திருக்கோட்டியூர் நம்பி ஸ்ரீபாதத்திலே ஆழ்வான் ஆறு மாதம் சேவித்து நின்று மகா நிதியாகப் பெற்ற அர்த்தமிறே இது” என்று மணவாள மாமுனிகள் அருளிச் செய்துள்ளார்
திடவிசும்பு எரிநீர் திங்களும் சுடரும்
செழு நிலத்து உயிர்களும் மற்றும்
படர் பொருள்களுமாய் நின்றவன்-திருமங்கையாழ்வர்
யாவையும் எவரும் தானாய் அவரவர் சமயம் தோறும்
தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும் சொலப்படான்; உணர்வின் மூர்த்தி;
ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதுமோர் பற்றுஇலாத
பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாமே
9-ஆதார-ஆதேய சம்பந்தம்–ஆதாரம்- தாங்குவது-ஆதேயம்- தாங்கப் பெறுவது
நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே
மனஞ்செய் ஞானத்து உன்பெருமை மாசுணாதோ? மாயோனே. (1-5-2)
தனிமாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும் படியாத தான்தோன்றி
முனிமாப் பிரம முதல்வித்தாய், உலகம் மூன்றும் முளைப்பித்த
தனிமாத் தெய்வம் (8-10-7)–‘தோன்ற’ என்பதனால் சமஷ்டி சிருஷ்டியும், இரண்டாவது அடியிலுள்ள முளைப்பித்த என்பதால் வியஷ்டி சிருஷ்டியும் தெரிவிக்கப் பெறுகின்றன.
எங்குவந்துறுகோ, என்னை யாள் வானே ?ஏழுலகங்களும் நீயே;
அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே ;அவற்றவை கருமமும் நீயே ;
பொங்கிய புறம்பால் பொருளுள வேலும் அவையுமோநீ; இன்னே யானால்,
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே; வான் புலன் இறந்ததும் நீயே (8-1-6)-மங்கிய அருவாம்நேர்ப்பம்’ என்பதற்குப் பத்த ஆன்மாக்களின் தொகுதி என்றும், ‘வான் புலன் இறந்தது ‘ என்பதற்கு முக்தாத்மாக்களைச் சொல்லுகிறது என்றும் பிள்ளான் பணிப்பர். அப்போது இல்லாததற்குச் சமமாய் ஸூஷ்மமான ஆன்மாக்களின் தொகுதி என்றும், பரம பதத்தில் கண்களுக்குப் புலப்படாத முக்தாத்ம ஸ்வரூபம் என்றும் பொருள் படும்-இந்தப் பாசுரத்தால் ஆதாரம் எம்பெருமான் என்றும்,ஆதேயம் ஆன்மாக்கள் என்றும் தெளிவாகின்றது.
இறந்ததும் நீயே; எதிர்ந்ததும் கீயே; நிகழ்வதோ நீ இன்னே ஆனால்,
சிறந்ததன் தன்மை அதுஇதுஉது என்று அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன் (7)-பாவியாகிய அடியேன் அந்தச் சம்பந்த ஞானம் ஒன்றிலும் ஐயம் கொள்ளா நின்றேன்?” இதிலும் ஆதார- ஆதேய உறவு தெளிவாகின்றது –
நான்உன்னை யன்றி யிலேன் கண்டாய் நாரணனே! நீஎன்னை அன்றி இலை. (7)-நீ எனக்கு ஆதாரம்; நான் உனக்கு ஆதேயம் ‘–இது தானே உண்மை? ” என்கின்றார் ஆழ்வார்.
போக்தா-போக்கிய சம்பந்தம்
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே;
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே (2-9-4)-அத்தியந்த பாரதந்திரியத்தைப் பயனாக அறுதி யிடுகின்றார் ஆழ்வார்.
நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை
ஈர்மை செய்(து) என்னுயிராய் என் உயிர் உண்டான்
திருவருள் செய்பவன் போல என் உள் புகுந்து
உருவமும் ஆருயிரும் உடனே உண்டான்–அவன் அங்கீகாரத்திற்கு முன்பு இவர்
சரீரத்தையே விரும்பிப் போந்தார். அவன் இவரை அங்கீகரித்த பின்பு இவர் தம் சரீரத்தை வெறுக்க அவன் இவருடைய சரீரத்தை விரும்பிப் புக்கான்.இவருக்கு
அவனுடைய சேர்க்கை ஸ்வரூப ஞானத்திற்கு உடல் ஆயிற்று; அவனுக்கு இவருடைய சேர்க்கை உடலை உயிராக விரும்புவதற்கு உடல் ஆயிற்று’–அணுப் பரிமாணமான இவ் வஸ்துவை விபுவான தான் விளாக்குலை கொண்டு அநுபவித்தா னென்கின்ற இது தனக்கு ஏற்றமாம்படி கௌரவியா நின்றான்”
————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply