ஆசார்ய ஹ்ருத,யஸ்யார்த்த, ஸகலா யேந த,ர்ஸிதா | ஸ்ரீ ஸாநு தாஸ மமலம் தேவ ராஜம் தமாஸ்ரயே ॥
ஆசார்ய ஹ்ருதயத்தின் அர்த்தங்கள் அனைத்தையும் அருளிச் செய்தவராய், ஸ்ரீஸாநுகாஸர், தேவராஜர் என்னும் திருநாமங்களை உடையவரான திருநாராயணபுரத்து ஆயை ஆஸ்ரயிக்கிறேன்
ஆசார்ய ஸ்வாந்த வக்தாரம் அபி ராமவராபிதம்!
ஸ்ரீக்ருஷ்ண தநயம் வந்தே, ஐகத் குருவராநுஜம் ॥
பணவாளரவணைப் பள்ளி பயில் பவர்க்கெவ்வுயிரும்
குண போகமென்று குருகைக் கதிபனுரைத்ததுய்ய
உணர்பாவினுட்பொருள் ஒன்றுமறியா உலகறிய
மணவாளன் மாறன் மனமூரைத்தான் வண்முடும்பை வந்தே.
ஸம்ஸ்ரிதாநாம் ஜநிச்சேதஹேது ஜ்ஞாநத முக்திதம் | யது புர்யாம் ஜநந் யாக்யம் லோகாநா முத்தமம் குரும் |
ஸம் ப்ரதா யார்த்தத நிகம் ஸெளம்ய ஜாமாத்ரு ஸூரயே | நிஸ்சிதார்த்த ப்ரதம் ஸ்ரீமஜ் ஜநநீ குருமாஸ்ரயே
ஆஸூரி சிங்கமாம் ஆதி குரு உலகுக்கே
மாசிலா இளையாழ்வார் மண்ணுலக மாழ்ந்தன்று
தூசரிக்கும் திருப்பாவைத் திருவருளைத் தெளிவித்துப்
பேசினார் பெம்மானைப் பின்போரை வாழ்த்திடவே
மாதவத்தோர் வாழ்த்தும் முடும்பை மணவாளன்
தோதவத்தித் தூய் மறையோரான பெற்றார் தீதற்ற
ஆசார்ய ஹ்ருதயம் பெற்றார் நம்மாயி யிவர்
தேசாரத் தாள்கள் நெஞ்சே காண்
மாதவத்தோன் மாறன் மனங்கூறும் மணவாளன்
தோதவத்தித் தூய் மறையோரான பெற்றார் – நீதியினா
லாங்கவர் தாள் சேர் பெற்றார் ஆயி மணவாளமுனி
பூங்கமலத் தாள்கள் நெஞ்சே போற்று
ஆயி அந்தாதி-ஆயி ப்ரபத்தியில் மாமுநிகளாலும் அவரின் பேரன் ஜீயர் நாயனாராலும் அநுக்ரஹிக்கப் பட்டிருக்கிறதைக் காணலாம் அதில் முதல் இரண்டு ஸ்லோகத்தால் ஆஸூரிப்பெருமாள் வைபவததைக் கூறியுள்ளார்.
ஆஸூரியிலவதரித்த இராமாநுசர்க் கிருவர் தாமாய்
கூசாத நிலையொன்னில் தாய்வயிற்றில் பிறந்தவராய்
மாசாத கூரேசர் குருவருடன் சேர்த்து வைக்க
ஆஸூரிப் பெருமாள் தாம் ஒருவராம் இராமாநுசர்க்கே (1)
இராமாநுசர்க்கே ஸரணாம் எழுபத்து நால்வர் தன்னுள்
இராப்பகலென்னாதே தன் குருவைச் சிந்தித்தேத்தி
இராகமனைத்தையும் தொலைத்து விட்டுப் பெருமாளென்னும்
இராகவனோடெம் பெருமாள் எதுகிரியைச் சென்றார்தாமே (3)
ஆசார்ய ஹ்ருத,யஸ்யார்த்தாஸ் ஸகலா யேந தர்ஸிதா: !
ஸ்ரீஸாநு தாஸ மமலம் தே,வராஜம் தமாஸ்ரயே ॥
த்,ராவிட ஆம்நாய ஹ்ருத.யம் கு,ருபர்வ க்ரமாக,தம் ।
ரம்ய ஜாமாத்ரு தே,வேந தர்ஸிதம் க்ருஷ்ண ஸூநுதா
——
219-பரபரனாய் நின்ற வளவேழ் வைப்பாமவையுள் உம்பர் வானவர் அதிபதி மயர்வற மன்னி மனம் வைக்கத் திருத்தி மறக்குமென்று நல்கி விடாதே மன்ன, அயர்ப்பிலனறுத்தேன் என் சொல்லி மறப்பனோ என்னும்படி தத்தவ ஜ்ஞானரானவர் சுடரடி யெம்பிரானை விடாது கண்டாய் நீயும் நானுமென்கிற ஸஹ்ருதயாநுப,வம் ஸம்ஸாரிகளுக்கமாம்படி வீடுமினென்று தயாஜ்யோபாதேய தோஷ குண பரித்யாக, ஸமர்ப்பண க்ரமத்தை ஸாலம்பந மந்த்ரமாக உபதேஸித்து எளிதாக ௮வதரித்துப் பிழைகளை ஸஹித்துப் புரையறக் கலந்து அல்ப ஸந்துஷ்டனாய் அம்ருதமே ஒளஷதமாக்கி நீர் புரையத் தன்னை நியமித்து போகத்தை ஸாத்மிப்பித்து பக்தி கணனைகளுக்கு ஒக்க வருமவனுடைய ஸேவைக்கு எளிமையும் இனிமையுமுண்டு, தொழுதால் அரும் பயனாயதரும், உத்யோகத்தே வினைகளும் மாளும், ௮வனுரைத்த மார்க்கத்தே நின்று இரு பசை மலமற உணர்வு கொண்டு நலம் செய்வதென்று தாம் மயர்வற மதிநலமருளி பஜநத்திலே சேர்க்கிறார் முதற்பத்தில்.
இதில் முதல் பத்தாலே ஸர்வ ஸ்மாத் பரனான ஸர்வேஸ்வரன் தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையாலே அஜ்ஞாநத்தை வாஸநையோடே போக்கி பத்தி ரூபாபந்ந ஜ்ஞாநத்தைக் கொடுத்து இன்னமும் இவர் நம்மை விஸ்மரிக்கக் கூடுமென்று இவர் பக்கல் தனக்குண்டான ஸ்நேஹத்தாலே விடாதே இவருடைய ஹ்ருதய கமலத்திலே ஸுப்ரதிஷ்டிதனாய்க் கொண்டு நிரந்தர வாஸம் பண்ண இவரும் அத்தாலே ஸம்ஸய விபர்யய விஸ்ம்ருதி ரஹிதமான தத்த்வ ஜ்ஞாநத்தை உடையராய் அவருடைய குணங்களைத் தம்முடைய திருவுள்ளத்தோடே அநுபவித்து இவ் விஷயம் தனியே அநுபவிக்க வொண்ணாமையாலே ஸம்ஸாரிகளையும் பார்த்து த்யாஜ்யமான ஸம்ஸாரத்தினுடைய அல்பாஸ்திரத்வாதி, தோஷங்களையும் அதினுடைய த்யாக ப்ரகாரத்தையும் உபாதேயமான பகவத் விஷயம் நிரதிஸய போக்யமாயிருக்கும் என்னுமத்தையும் அவனுடைய பஐநீயத்வத்தையும் பஐநத்துக்கு ஆலம்பநமான மந்த்ரத்தையும் உபதேஸித்து அந்த பஜநீயனுடைய ஸெளலப்யம் அபராத ஸஹத்வம் ஸீலவத்தை ஸ்வாராததை ஆஸ்ரயண ரஸ்யதை ஆர்ஜவம் ஸாத்ம்ய போக ப்ரதத்வம் பரபக்திக்கும் பரிகணநைக்கும் ஒக்க முகம் காட்டுகிற ஸாம்யம் இப்படிப்பட்ட குணங்களையும் பஐநத்தினுடைய ஸூகரத்வ ரஸ்யதைகளையும் பஜிக்கவே ஸர்வ பலங்களும் ஸித்திக்கும் என்னுமிடத்தையும் பஜநோபக்ரமத்திலே பஜந விரோதி யடைய நஸிக்கும் என்னுமிடத்தையும் அறிவித்து இப்படியான பின்பு ஸ்ரீகீதையில் அவன் அருளிச் செய்த பக்தி மார்கத்திலே நின்று தேவதாந்தரங்கள் பக்கல் பரத்வ ஸங்கா நிவ்ருத்தி பூர்வகமாக அவன் விஷயமான ஜ்ஞாநத்தைக் கொண்டு அவன் பக்கலிலே அநந்ய ப்ரயோஜந பக்தியைப் பண்ணுங்கோள் என்று தமக்கு ஸர்வேஸ்வரன் மயர்வற மதிநலம் அருளினாப் போலே தாம் ஸம்ஸாரிகளுக்கு அஜ்ஞாந நிவ்ருத்தி பூர்வகமாக ஞாந பக்திகளை உபதேஸித்து அவனுடைய பஜநத்திலே மூட்டுகிறார் என்கிறார். (பரபரனாய் நின்ற வளவேழ் வைப்பாமவையுள் உம்பர் வானவரதிபதி) முழுதுண்ட பரபரன்” (திருவாய்மொழி 1-1-8) “ஆய்நின்ற பரபரன்” (திருவாய்மொழி 1-1-14 வளவேழுலகின் முதலாயவா னோரிறை” (திருவாய்மொழி 1-5-1 “வைப்பாம் மருந்தாம் (திருவாய்மொழி 1-7-2) “நலத்தால் உயர்ந்துயர்ந்து அப்பாலவன்” திருவாய்மொழி 1-7-2) “அவையுள் தனிமுதல்” (திருவாய்மொழி 1-9-1 “உம்பர் வானவர் ஆதியஞ்சோதி” (திருவாய்மொழி 1-10-9)”அயர்வறுமமரர்களதிபதி” (திருவாய்மொழி 1-1-1 என்று ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார கர்த்ருத்வத்தாலும் உபய விபூ,தி யோகத்தாலும் உபய விபூதி நாயகத்வத்தாலும் ப்ராப்ய ப்ராபகத்வத்தாலும் அபரிச்சேத்யாநந்த, யுக்ததையாலும் ஸர்வ ஸரீரித்வத்தாலும் ஸர்வ ஸப்த, வாஸ்யத்வத்தாலும் நித்ய ஸூரி நிர்வாஹகத்வத்தாலும் பரத்வ ப்ரதிபாதகமான “உளன் சுடர்மிகு சுருதி” (திருவாய்மொழி 1-1-7) என்கிறபடியே வேதாந்த வேத்யத்வத்தாலும் ”திருவுடையடிகள்” (திருவாய்மொழி 6-8-11) என்று ஸ்ரீய:பதித்வத்தாலும் “என் செய்ய தாமரைக்கண் பெருமானார்‘ (திருவாய்மொழி 1-4-2 என்று புண்டரீகாக்ஷத்வத்தாலும் “ஓடும் புள்ளேறி” (திருவாய்மொழி 1-8-1) என்று கருட, வாஹநத்வத்தாலும் அத ஏவ ஸர்வ ஸ்மாத் பரனான ஸர்வேஸ்வரன் (மயர்வற மன்னி மனம் வைக்கத் திருத்தி) “மயர்வற மதிநலம் அருளினன்” (திருவாய்மொழி 1-1-1 “மயர்வற என் மனத்தே மன்னினான்” (திருவாய்மொழி 1-7-4) என்று ஜீஞாநாநுதய அந்யதாஜ்ஞாந விபரீதஜ்ஞாநமான அஜ்ஞாநத்தை இவர்க்கு வாஸநையோடே போக்கி நிர்ஹேதுக க்ருபையாலே பக்தி ரூபாபந்ந ஜ்ஞாநத்தைக் கொடுத்து இவர் திருவுள்ளத்திலே புகுந்து “சார்ந்த இருவல் வினைகளும் சரித்து மாயப் பற்றறுத்துத் தீர்ந்து தன் பால் மனம் வைக்கத் திருத்தி” (திருவாய்மொழி 1-5-10) என்கிறபடியே இவருடைய புண்ய பாப ரூப கர்மத்தை ஸவாஸநமாகப் போக்கி “அருவினையேன்” (திருவாய்மொழி 1-5-1) என்று அயோக்யதாநுஸந்தாநம் பண்ணி அகன்ற விடத்திலும் தன் ஸீலவத்தையைக் காட்டிச் சேர்த்துக் கொண்டு இவர் தாமே “மாயோன்” (திருவாய்மொழி 1-5-8) என்று தன் பக்கலிலே நெஞ்சை வைக்கும்படி தரிசு கிடந்த நிலத்தைச் செய்காலாகத் திருத்துவாரைப்போலே திருத்தி, (மறக்குமென்று நல்கி விடாதே மன்ன) “ மறக்குமென்று செந்தாமரைக் கண்ணொடு” (திருவாய்மொழி 1-10-10) “நல்கி என்னை விடான்” (திருவாய்மொழி 1-10-8) “மறப்பற என்னுள்ளே மன்னினான்” (திருவாய்மொழி 1-10-10) என்று சொல்லுகிறபடியே இவரின்னம் நம்மை விஸ்மரிக்கக் கூடுமென்று நிரதிஸய வ்யாமோஹத்தைப் பண்ணி இவரை விடாதே இருட்டறையிலே புகுவார் சிலர் விளக்கேற்றிக் கொண்டு புகுருமா போலே அழகிய திருக் கண்களோடே இவர் திருவுள்ளத்தே புக்கு நிரந்தர வாஸம் பண்ண (அயர்ப்பிலன் அறுத்தேன் என் சொல்லி மறப்பனோ என்னும்படி தத்வ ஜ்ஞரானவர்) “பெரு நிலங் கடந்த நல்லடிப் போது அயர்ப்பிலன்” (திருவாய்மொழி 1-3-10) “மாயப்பிறவி மயர்வறுத்தேன்” (திருவாய்மொழி 1-7-3) “எம்பிரானை என் சொல்லி மறப்பனோ” (திருவாய்மொழி 1-10-9) என்று வர்ஷுகவலாஹகம் போலே ஸ்யாமமான திருமேனியை உடையவனுடைய திருவுலகளந்தருளின திருவடிகளை ஒருக்காலும் விஸ்மரியேன், நிரதியய போக்யனான அவனை ஸதா, அநுபவித்து ஆஸ்சர்யமான ஜந்மமடியாக வருகிற வஜ்ஞாநத்தைப் போக்கப் பெற்றேன்; எனக்கு உபகாரகனான அவனை எத்தைச் சொல்லி விஸ்மரிப்பதென்னும்படி ஸம்ஸய விபர்யய விஸ்ம்ருதிகள் இல்லாதபடி தத்வ ஜ்ஞாநத்தை யுடையரான இவர் (சுடரடி எம்பிரானை விடாது கண்டாயே நீயும் நானும் என்கிற ஸஹ்ருதயாநுபவம் ஸம்ஸாரிகளுக்குமாம்படி) “துயரறு சுடரடி தொழுதெழு என் மனனே” (திருவாய்மொழி 1-1-1) “எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே” (திருவாய்மொழி 1-10-3) “மலராள் மணவாளனைத் துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்” (திருவாய்மொழி 1-10-4) “கண்டாயே நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று” (திருவாய்மொழி 1-10-5) “நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர் நோயும் சார்கொடான்” (திருவாய்மொழி 1-10-6) என்று நிரவதிக தேஜோ ரூபமான அவன் திருவடிகளிலே நித்ய கைங்கர்யம் பண்ணி உஜ்ஜீவிக்கப் பார்; எனக்கு பவ்யமான நெஞ்சே, நமக்கு உபகாரகனான அவனைத் தொழப் பாராய்-ஸ்ரீய:பதியான ஸர்வேஸ்வரனை நான் அயோக்யதாநுஸந்தாநம் பண்ணி அகலும்போதும் நீ விடாதே கிடாய், அவனுடைய நிர்ஹேதுக விஷயீகாரம் இருந்தபடி கண்டாயே, நீயும் நானும் அயோக்யதாநுஸந்தாநம் பண்ணி அகலாதிருக்கப் பெறில் அநாதி காலார்ஜிதமான கர்மம் இதர விஷய ப்ராவண்யம் ப்ரயோஜநாந்தர ஸ்ரத்தை. உபாயாந்தர ஸங்கம் அயோக்யதாநுஸந்தாநம் தொடக்கமான விரோதிகள் நம்மைக் கிட்டாதபடி பண்ணுமென்று திருவுள்ளத்தைப் பார்த்து உபதேஸித்துத் தம்முடைய திருவுள்ளமும் தாமும் கூட அவனுடைய குணங்களை அநுபவித்து இப்படித் திருவுள்ளத்தோடே கூட அநுபவித்த அநுபவம் தனி யநுபவிக்க வொண்ணாமையாலும் “ஏக ஸ்வாது ந புஞ்ஜீத” என்று இவர் தனி யநுபவிக்க வல்லரல்லாமையாலும் ஸம்பந்தம் ஸர்வ ஸாதாரணமாகையாலும் இவர் பராநர்த்தம் பொறாத படியான பரம க்ருபாவானாகையாலும் இவ்வநுபவம் ஸம்ஸாரிகளுக்குமாக வேணுமென்று ஸம்ஸாரிகளையும் பார்த்து (வீடுமின் என்று த்யாஜ்யோபாதேய தோஷ குண பரித்யாக ஸமர்ப்பண க்ரமத்தை ஸாலம்பந மந்தரமாக உபதேஸித்து) வீடுமின் முற்றத்திலே “வீடுமின் முற்றவும்” (திருவாய்மொழி 1-2-1 என்று த்யாஜ்ய ஸ்வரூபத்தையும் “மின்னின் நிலையில மன்னுயிராக்கைகள்’ (திருவாய்மொழி 1-2-2) என்று அதினுடைய அல்பாஸ்த்திரத்வாதி தோஷத்தையும் “நீர் நுமதென்றிவை வேர் முதல் மாய்த்து” (திருவாய்மொழி 1-2-3) என்று அவற்றினுடைய பரித்யாக க்ரமத்தையும் “வீடுடையான்” (திருவாய்மொழி 1-2-2) என்று உபாதேயமான பகவத் ஸ்வரூபத்தையும் “எல்லையிலந்நலம்” (திருவாய்மொழி 1-2-5) என்று அவ்வஸ்துவினுடைய குணத்தையும் ‘ வீடுசெய்ம்மின்’ (திருவாய்மொழி 1-2-1 என்றும் “இறை சேர்மின்” (திருவாய்மொழி 1-2-3) என்றும் “ இறை பற்று” (திருவாய்மொழி 1-2-5) என்றும் “திண் கழல் சேரே” (திருவாய்மொழி 1-2-10) என்றும் அவ் விஷயத்திலே ஆத்மாவை சமர்ப்பிக்கும் கிரமத்தையும் “வண்புகழ் நாரணன்” (திருவாய்மொழி1-1-2-10) என்று அந்த ஸமர்ப்பணத்துக்கு ஆலம்பநமான திருமந்த்ரத்தோடே உபதேசித்து – (எளிதாக வந்தவதரித்து) “பல பிறப்பாய் எளிவருமியல்வினன்” (திருவாய்மொழி 1-3-2) என்று அவன் அதீந்த்ரியன் என்று இறாயாதபடி ராம க்ருஷ்ணாதி ரூபேண வந்தவதரித்து ஆஸ்ரயிப்பார்க்கு ஸுலபனாய் அப்படி யவதரித்து ஸூலபனானவன் ஆஸ்ரிதருடைய அபராதங்களைக் கண்டு கை விடுமோ என்னில் அங்ஙனன்று (பிழைகளை ஸஹித்து) “என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு” (திருவாய்மொழி 1-4-7) என்று அபராத ஸஹனாயிருக்கும். (புரையறக் கலந்து) அவன் அபராத ஸஹனானாலும் “அரு வினையேன்” (திருவாய்மொழி 1-5-1 என்று இவன் தான் அயோக்யதாநுஸந்தாநம் பண்ணி யகலிலும் “திசைகளெல்லாம் திருவடியால் தாயோன் தானோர் உருவனே” (திருவாய்மொழி 1-5-3) என்றும் “நெய்யூண் மருந்தோ மாயோனே” (திருவாய்மொழி 1-5-8) என்றும் தன் செல்லாமையையும் இவரோடே புரையறக் கலக்கிற பலத்தையும் காட்டி இவரைச் சேர்த்துக் கொள்ளுந்தனை ஸீலவானாய் இப்படி சேர்த்துக் கொண்டால் ஆஸ்ரயண மரிதாயிருக்குமோ என்னில் (அல்ப ஸந்துஷ்டனாய்) அவன் இவனிட்டது கொண்டு வயிறு வளர்க்க வேண்டாதபடி அவாப்த ஸமஸ்த காமனாய் ஸ்ரீய:பதியாயிருக்கையாலே “புரிவதுவும் புகை பூவே” (திருவாய்மொழி 1-6-1 என்று த்ரவ்ய நியதி அதிகாரி நியதி யில்லாதபடி ஆஸ்ரயணம் ஸுகரமாம்படி அல்ப ஸந்துஷ்டனாய் அவ்வாஸ்ரயணந் தான் தேவையாயிருக்குமோ என்னில் (அம்ருதமே ஒளஷத மாக்கி) “தூயவமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வறுத்தேனே” (திருவாய்மொழி 1-7-3) என்று நிரதிஸய போக்யனான அவனுடைய ஆஸ்ரயணமாகையாலே ஸம்ஸார வ்யாதி பேஷஜமான அவ்வாஸ்ரயணம் தானே இனிதாம்படி பண்ணி அப்படி ஆஸ்ரயிக்குமிடத்தில் இவர்களைத் தன் நினைவுக்கீடாக நியமித்துப் பரிமாறுவித்துக் கொள்ளுமோ என்னில் (நீர் புரையத் தன்னை நியமித்து) “நீடு நின்றவை ஆடுமம்மானே” (திருவாய்மொழி 1-8-1) என்றும் “அம்மானாய்ப் பின்னும் எம்மாண்புமானான்” (திருவாய்மொழி 1-8-2) என்றும் “நீர் புரை வண்ணன்‘ (திருவாய்மொழி 1-8-11) என்றும் சொல்லுகிறபடியே மேட்டிலே நீரை விரகாலே ஏத்துவாரைப் போலே இவர்களுடைய செவ்வைக் கேடு செவ்வையாம்படி தன்னைச் செவ்வியனாக நியமித்து இப்படிப் பரிமாறுமிடத்தில் குளப்படியிலே கடலை மடுத்தாப்போலே நலக்கேடு கெடும்படி பரிமாறுமோ வென்னில் (போகத்தை ஸாத்மிப்பித்து) “சூழலுளானே” (திருவாய்மொழி 1-9-1) என்று தொடங்கி “உச்சியுளானே” திருவாய்மொழி 1-9-10) என்று ஸாத்மிக்க ஸாத்மிக்கத் தன்னை அநுபவிப்பித்து (பக்தி கணனைகளுக்கு ஒக்க வருமவனுடைய ஸேவைக்கு) இப்படி அநுபவிக்குமிடத்தில் “கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில் எண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்” (திருவாய்மொழி 1-10-2) என்று பர பக்திக்கும் பரிகணனைக்கும் ஒக்க முகம் கொடுக்கிற அவனுடைய ஆஸ்ரயணத்துக்கு (எளிமையும் இனிமையுமுண்டு) “ பத்துடை எளியவன்” (திருவாய்மொழி 1-3-1”அமுதிலுமாற்ற இனியன்” (திருவாய்மொழி 1-6-6) என்று ஆஸ்ரயணந்தான் எளிதுமாய் இனிதுமாய் இருக்கும்; இத்தால் அபேஷித்த பலங்கள் ஸித்திக்குமோ என்னில் (தொழுதால் அரும்பயனாய தரும்) அவனைத் தொழுதால் வழிநின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி யாக்கம் தரும்” (திருவாய்மொழி 1-6-8) “தருமவரும்பயனாய” (திருவாய்மொழி 1-6-9) என்று அவனை பஜித்தால் ப்ராப்தி ப்ரதிபந்தகங்களையும் நிஸ் ஸேஷமாகப் போக்கி அழிவில்லாத பெறுதற்கரிய ப்ரயோஜநங்களையும் தரும். பஜித்தாலன்றோ தருவது, பஜந விரோதி, குவாலாகவுண்டே” என்னில் (உத்யோகத்தே வினைகளும் மாளும்) “நாளு நின்றடு நமபழமை அங்கொடு வினையுடனே மாளும்” (திருவாய்மொழி 1-3-8) என்று நாள் தோறும் நின்று இவ்வாத்மாவை முடிக்கிற அநாதி யான அதி க்ரூரமான கர்மங்கள் பஜநோபக்ரமத்திலே நஸிக்கும்; ஆனால் பஜநோபாயமேதென்னில் (அவனுரைத்த மார்க்கத்தே நின்று இருபசை மலமற உணர்வு கொண்டு நலம் செய்வதென்று) பிணக்கற வித்யாதி.. “அம்ப கவன் வணக்குடைத் தவநெறி வழி நின்று” (திருவாய்மொழி 1-3-5) என்று பாஹ்யமான ஷட் ஸமயங்களுக்கும் வைதிக ஸமயத்துக்கும் தன்னில் தானுண்டான பிணக்கறும்படி வேத மார்க்கத்தை யதா, நிரூபணம் பண்ணி யருளிச் செய்தவனுமாய் நிரவதிக வாத்ஸல்யத்தை யுடையனாய் ஜ்ஞாநாதி குண பரிபூர்ணனான க்ருஷ்ணன் திருத் தேர்த் தட்டிலே அர்ஜுந வ்யாஜத்தாலே ஸ்ரீ கீதா முகத்ததாலே “பக்த்யா து அநந்யயா ஸுக்ய:” (கீதை 11-54) என்றும் “ மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு” (கீதை 9-34) என்றும் அருளிச்செய்த பக்தி மார்க்கத்திலே நின்று “நும்மிருபசை யறுத்து” (திருவாய்மொழி 1-3-7) என்றும் “மனனக மலமறக் கழுவி” (திருவாய்மொழி 1-3-8) என்றும் தேவதாந்தரங்களில் பண்ணுகிற பரத்வ ஸங்கை யற்று இவனோ அவர்களோ ஆஸ்ரயணீயரென்று ஸம்ஸயாக்ராந்தராகாதே வாஸநையோடே விட்டு அவனுடை உணர்வு கொண்டு தத் விஷய ஜ்ஞாநத்தைக் கொண்டு “நன்றென நலம் செய்வது” (திருவாய்மொழி 1-3-7) என்று அநந்ய ப்ரயோஜந பக்தியைப் பண்ணுங்கோளென்று. (தாம் மயர்வற மதிநலமருளி பஐநத்திலே சேர்க்கிறார் முதல்பத்தில்) ஸர்வேஸ்வரன் தமக்கு மயர்வற மதிநலமருளினாப் போலே தாம் ஸம்ஸாரிகளுக்குத் தம்முடைய க்ருபையாலே தத்வ ஹித புருஷார்த்த, விஷயமாக அஜ்ஞாநத்தைப் போக்கி ஜ்ஞாந பக்திகளை யுபதேஸித்து பகவத் பஜநத்திலே மூட்டுகிறார்
220-சோராத மூவா வேர் முதலாய் உலகம் படைத்தவனென்கிற சிதசித் த்ரய த்ரிவித, காரணமானவன் அறியாதன அறிவிக்க உள்ளம் தேறித் தூ மனம் மருளிலென்னும் ஜ்ஞாந பலமான ஒளிக் கொண்ட மோக்ஷம் தேடிவாட, உலராமலாவி சேர்ந்து சிக்கனப் புகுந்து ஸம்பந்தி களும் சேர்தல் மாறினரென்ன வாழ்வித்து உபகரிக்கிற நீந்தும் கெடலில் எம்மா வீட்டை உப்யாநுகுண மாக்கினவர் ஆஸ்ரயணீயனுக்குப் பூர்வோக்த பரத்வத்தை ஸ்தாபிக்கிற ஸகலபல ப்ரதத்வ காரணத்வ ஸேஷஸாயித்வ ஸ்ரிய:பதித்வ ஸெளலப்யாதிகளைத் திண்ணன் அணைவதென்று வெளியிட்டு கள்வா -தீர்த்தனென்று வசந ப்ரத்யக்ஷங்களும் காட்டிப் புலனைந்தென்று ஸம்ஸார மோக்ஷ ஸாதந துக்காநந்த ரஸம் முன்னாக விதிக்கிற அந்தர் கத குணோபாஸகத்தை மதித்துப் பெருக்கி முழ்கி அழுந்திக் கீழ்மை வலம் சூதும் செய்து இளமை கெடாமல் செய்யும் க்ஷேத்ர வாஸ ஸங்கீர்த்தந அஞ்ஜலி ப்ரதக்ஷண கதி சிந்தநாத் யங்க யுக்தம் ஆக்குகிறார் இரண்டாம் பத்தில்.
இரண்டாம் பத்தில் ஸர்வ காரண பூதனான ஸர்வேஸ்வரன் கீழிற் பத்திலே இவ்வாழ்வார்க்கு அஜ்ஞாத ஜ்ஞாபநம் பண்ணி அவனாலே தத்த ஜ்ஞாநரான இவர் அந்த ஜ்ஞாநத்துக்குப் பலமான மோக்ஷத்தை அப்போதே பெற வேணுமென்று ஆசைப்பட்டுப் பெறாமையாலே அவஸந்நராக இவருடைய அவஸாதமெல்லாம் தீரும்படி அவன் வந்து ஸம்ஸ்லேஷித்து அந்த ஸம்ஸ்லேஷத்தாலே வந்த ப்ரீதியை உடையராய் அந்த ப்ரீதியை இவரொருவர் அளவில் பர்யவஸியாதே இவரோடு ஸம்பந்த ஸம்பந்த முடையாரளவும் வெள்ளமிட்டு அந்த ப்ரீதியாலே பரம புருஷார்த்த லக்ஷணமான மோக்ஷத்தை இவர்க்கவன் கொடுக்கத் தேட அந்த மோக்ஷத்தை அவனுடைய சேஷித்வத்துக்கும் தம்முடைய ஸேஷத்வத்துக்கும் அநுகுணமாம்படி நிஷ்கர்ஷித்த இவர் ஆஸ்ரயணீயனான அவனுக்கு கீழ் உக்தமான பரத்வத்தை நிலை பெறுத்துவனவான லக்ஷணங்களையும் வெளியிட்டு ஸம்ஸாரிகள் துக்க நிவ்ருத்தி பூர்வகமான மோக்ஷ ஸுக ப்ராப்திக்கு ஸாதநமாக விதிக்கப்பட்ட ஸ்வரூபாந்தர்கதமான குணோபாஸநத்தை நிஷித்தாநுஷ்டானங்களினுடைய த்யாக பூர்வகமாக க்ஷேத்ர வாஸாத் யங்கங்களோடே கூட்டுகிறார் என்கிறார். (சோராத மூவா வேர் முதலாய் உலகம் படைத்தவன்” என்கிற சிதசித் த்ரய த்ரிவித காரணமானவன்) “சோராத எப்பொருட்கும் ஆதியாஞ்சோதி” (திருவாய்மொழி 2-1-11) “மூவாத்தனிமுதலாய்” (திருவாய்மொழி 2-8-5) “எப்பொருட்கும் வேர் முதலாய் வித்தாய்” (திருவாய்மொழி 2-8-10) “பொருளென்றிவ்வுலகம் படைத்தவன்” (திருவாய்மொழி 2-10-11 என்று பத்த முக்த நித்யாத்மகமான சித் த்ரயத்துக்கும் ஸூத்த ஸத்வ மிஸ்ர ஸத்வ ஸத்வ ஸூந்யமென்கிற அசித் த்ரயத்துக்கும் நித்ய விபூதியிலே அப்ராக்ருத த்ரவ்ய விஸிஷ்டனாய்க் கொண்டு உபாதாநமாயும் இச்சா விஸிஷ்ட வேஷத்தாலே நிமித்தமாயும் விநியோக விஸிஷ்ட வேஷத்தாலே ஸஹகாரியாயும் லீலா விபூதியில் ஸுஷ்ம சிதசித் விஸிஷ்ட வேஷத்தாலே உபாதாநமாயும் ஸங்கல்ப விஸிஷ்டனாய்க் கொண்டு நிமித்தமாயும் ஜ்ஞாந சக்த்யாதி, விஸிஷ்டனாய்க் கொண்டு ஸஹ காரியாயும் போருகையாலே ஸர்வத்துக்கும் நிமித்தோபாதாந ஸஹகாரிகளான த்ரிவித காரணமும் தானேயான ஸர்வேஸ்வரன் (அறியாதன வறிவிக்க உள்ளம் தேறி) “அறியாதன அறிவித்த அத்தா”(திருவாய்மொழி 2-3-2) என்று இவர்க்கஜ்ஞாதமான தத்த்வ ஹித புருஷார்த்தங்களை விஸதமாக அறிவிக்க, “அடியை அடைந்துள்ளம் தேறி” (திருவாய்மொழி 2-6-8)-அத்தாலே இவரும் அவனைக் கிட்டி நெஞ்சிலே தெளிவை உடையராய் (தூமனம் மருளிலென்னும் ஞான பலமான) “தூ மனத்தனனாய்’” (திருவாய்மொழி 2-7-8)“மருளில் வண் குருகூர் வண் சடகோபன்” (திருவாய்மொழி 2-10-11) என்று
மோக்ஷ ஏக ஹேதுவாய் பரி ஸூத்தமான அந்தக் கரணத்தை உடையவராய் அவனுடைய கல்யாண குண விஷயமான அஜ்ஞாந கந்த மில்லாதபடி கீழ்ப் பத்தில் பிறந்த தம்முடைய ஜ்ஞானத்துக்குப் பலமான (ஒளிக் கொண்ட மோக்ஷம் தேடி வாட) “களிப்பும் கவர்வுமித்யாதி, ஒளிக் கொண்ட சோதியமாய் அடியார்கள் குழாங்களை யுடன் கூடுவதென்றுகொலோ” (திருவாய்மொழி 2-35-10) என்று ப்ராக்ருத பதார்த்தங்களினுடைய லாபாலாபங்களினால் வருகிற க்லேஸ ஹர்ஷங்களுமற்று ஷட்பாவ விகார ரஹிதமாய் நிரவதிக தேஜோ ரூபமாய அப்ராக்ருதமுமாயிருக்கிற விக்ரஹத்தை யுடையோமுமாய் அவனுடைய ரஷகத்வத்திலே தோற்றிருக்கிற நித்ய ஸூரிகளுடைய திரளோடே கூடப் பெறுவதெப்போதோ என்று அந்த மோக்ஷத்தை ஆசைப்பட்டவர்க்கு அப்போதே கிடையாமையாலே “நாடி நாடி வாடும்” (திருவாய்மொழி 2-4-1 என்று தேடிப் பெறாமையாலே ஆஸ்ரயத்தை இழந்த தளிர் போலே இவர் வாட, (உலராமல் ஆவி சேர்ந்து) “உள்ளுளாவி உலர்ந்துலர்ந்து” (திருவாய்மொழி 2-4-7) என்கிற இவர் தாபமாறும்படி “அந்தாமத் தன்பு செய்து என்னாவி சேரம்மான்” (திருவாய்மொழி 2-5-1 என்கிறபடியே பரமபதத்திலே பண்ணும் வ்யாமோஹத்தை இவர் பக்கலிலே பண்ணி கமர் பிளந்த தறையிலே நீரைப் பாய்ச்சுவாரைப் போலே இவருடைய தாபமாறும்படி இவரோடே நிரதிஸய ஸம்ஸ்லேஷத்தைப் பண்ணி (சிக்கெனப் புகுந்து) சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகளொக்கவே விழுங்கி சிக்கெனப் புகுந்தான்” (திருவாய்மொழி 2-6-2) என்கிறபடியே அத் யல்பமா யிருப்பதொரு பதார்த்தமும் தன் பக்கலிலே நின்றும் பிரி கதிர்ப் பட்டு நோவு படாதபடி ஸர்வ லோகங்களையும் தன்னுடைய ஸங்கல்ப ஸஹஸ்ரைகதேஸத்திலே வைத்து இனி ஒருக்காலும் பேராதபடி புகுந்து (ஸம்பந்தி களையும் சேர்தல் மாற்றினரென்ன வாழ்வித்து) “எமர் ஏழ் மேல் எழு பிறப்பும் விடியா வெந் நரகத்து என்றும் சேர்தல் மாறினர் ‘ (திருவாய்மொழி 2-7-1) என்று இவருடைய ஸம்பந்த ஸம்பந்திகளையும் ஸம்ஸாராந் முக்தராம்படி பண்ணி “எமரேழ் எழு பிறப்பும் மா சதிரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா” (திருவாய்மொழி 2-7-1) என்று என்னுடைய ஸம்பந்தமே ஹேதுவாக என்னோடு ஸம்பந்த ஸம்பந்திகளும் கேசவன் தமராம்படி “நாராயணனாலே” (திருவாய்மொழி 2-7-1) என்கிற மா சதிரைப் பெற்று ஸ்ரீவைஷ்ணவ ஸம்பத்தானது ஊற்று மாறாமல் பெருகா நின்றது என்று இவர் தாமே ஆஸ்சர்யப்படும்படி இவரை வாழ்வித்து, (உபகரிக்கிற நீந்தும் கெடலில் எம்மா வீட்டை உபயாநுகுணமாக்கினவர்) “நீந்தும் துயரில்லா வீடு” (திருவாய்மொழி 2-8-2) “கெடலில் வீடு” (திருவாய்மொழி 2-9-17 “எம்மா வீடு” (திருவாய்மொழி 2-9-1 என்று துக்க கந்த ரஹிதமாய் அநர்த்த கந்த மில்லாததாய் எவ் வகையாலும் விலஷணமான மோக்ஷத்தை இவர்க்கு உபரிக்கத் தேட எனக்கென்று உபகரிக்கில் மோக்ஷம் அஹங்கார கர்ப்ப மாகையாலே ஐஸ்வர்ய கைவல்யங்களோபாதி ஸ்வரூப விருத்த மாகையாலே அது த்யாஜ்யம்; எனக்கு மோக்ஷம் தரப் பார்த்ததாகில் “நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த் தொல்லை அம்மா அடியேன் வேண்டுவதீதே” (திருவாய்மொழி 2-9-1 என்று அகவாய் சிவந்து புறவாய் கறுத்து பரம பூஜ்யமாய் பரம போக்யமாய் ஸேஷியானவனுடைய திருவடிகளை ஸேஷ பூதனானவன் தலையிலே கொக்கு வாயும் படு கண்ணியும் போலே சடக்கெனச் சேர்க்க வேணும்; ஸேஷியான உன் பக்கல் ஸேஷ பூதனான நான் அபேக்ஷித்துப் பெறுவதுமிது; “தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே” (திருவாய்மொழி 2-9-4 என்று உபய ஸ்வரூபத்துக் கநுகுணமாக புருஷார்த்தத்தை நிஷ் கர்ஷித்த இவர்
ஆஸ்ரயணீயனுக்கு பூர்வோக்த பரத்வத்தை ஸ்தாபிக்கிற) ஆஸ்ரயணீயனானவனுக்கு முதற்பத்தில் சொல்லப்பட்ட ஸர்வ ஸ்மாத் பரத்வத்தை நிலை பெறுத்துவனவான (ஸகல பல ப்ரதத்வ காரணத்வ ஸேஷ ஸாயித்வ ஸ்ரீய:பதித்வ ஸெளலப்யாதிகளை திண்ணன் அணைவது என்று வெளியிட்டு) ஸகல பல ப்ரதத்வம் முதலான பரத்வ லக்ஷணங்களை “வீடுமுதல் முழுதுமாய்” (2-2-1) மோக்ஷ ப்ரப்ருத் யஸேஷ புருஷார்த்த ப்ரதனாகையாலே ஸகல பல ப்ரதத்வம் “தேவும் எப்பொருளும்” (திருவாய்மொழி 2-2-4) “கருத்தில் வருத்தித்த மாயப் பிரான்’‘ (திருவாய்மொழி 2-2-8) “ஆக்கினான் தெய்வ உலகுகளே” (திருவாய்மொழி 2-2-9) என்று ஸர்வ காரணத்வம், “ஆழியம்பள்ளியாரே” திருவாய்மொழி 2-2-6) என்று லக்ஷணையாலே அநந்த ஸாயித்வம் “பூ மகள் தன்னை வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து” (திருவாய்மொழி 2-2-3) என்று ஸ்ரிய:பதித்வம், ‘கண்ணன் கண்” (திருவாய்மொழி 2-2-1) “கோபால கோளரி” (திருவாய்மொழி 2-2-2 என்கிற அவதார ஸெளலப் யம் இப்படி இவ்வர்த்தங்களை திண்ணன் வீட்டிலும், அணைவதரவணை மேல்” என்று ஸேஷஸாயித்வம், “பூம்பாவை யாகம் புணர்வது” (திருவாய்மொழி 2-8-1) என்று ஸ்ரீய:பதித்வம், “இருவரவர் முதலும் தானே” (திருவாய்மொழி 2-8-1) என்று காரணத்வம், “இணைவனாம் எப்பொருட்கும்” (திருவாய்மொழி 2-8-1 என்று அவதார ப்ரயுக்தமான ஸெளலப்யம், “வீடு முதலாம்” (திருவாய்மொழி 2-8-1 என்று ஸகல பல ப்ரதத்வம் என்கிற இவற்றை அணைவதரவணையிலும் வெளியிட்டு (கள்வா தீர்த்தன் என்று வசந ப்ரத்யக்ஷங்களும் காட்டி) “கள்வா ‘ (திருவாய்மொழி 2-2-10) என்கிற பாட்டாலே, அவதரித்து உன்னுடைய பரத்வம் தெரியாதபடி நின்றாயே யாகிலும் எங்களுக்குக் காரண பூதனான ஸேஷி நீயே என்று தேவதாந்தரங்களில் தலைவனான ப்ரஹ்மாதிகளே தங்களுக்குக் காக்ஷி கொடுக்கைக்கு பெரிய திருவடியை மேல் கொண்டு புறப்பட்டால் அவனுடைய திருவடிகளிலே விழுந்து கூப்பிடா நிற்பர்கள் என்று இவ்வர்த்தத்துக்கு வசநத்தையும் “தீர்த்தன் உலகளந்த” (திருவாய்மொழி 2-8-6) என்கிறபாட்டிலே ஒரு அஸ்த்ர லாபத்துக்கு ஒரு தேவதையை உபாஸிக்க வேணுமென்று அர்ஜுநன் சொல்ல அப்பூவை என் காலிலே பொகடென்று க்ருஷ்ணன் அருளிச் செய்ய “பார்த்தோ , விஜேதா மது ஸூதநஸ்ய பாதாரவிந்தார்ப்பித சித்ர புஷ்பம் ததேவ கங்கா தர மெளலி மத்யே ததர்ம வீர: க்ருத நிஸ்சயார்த்த :” என்கிறபடியே தீர்த்த பூதனான ஸர்வேஸ்வரனுடைய திருவுலகளந்தருளின திருவடிகளிலே அப் பூவைப் பணிமாறி அவற்றோடு ஸஜாதீய மானவை யன்றிக்கே அவை தன்னையே பாடே பக்கலிலே யன்றிக்கே ருத்ரன் தலை மேலே ஆப்த வாக்யத்தால் அன்றிக்கே தானே ப்ரத்யக்ஷித்துப் பேரளவுடையனான அர்ஜுநன் நிர்ணயித்த பரத்வம் மந்த மதிகளாலே இன்றாராயும்படி இருந்ததோ என்கிற ப்ரத்யக்ஷத்தையும் காட்டி
புலனைந்தென்று ஸம்ஸார மோக்ஷ ஸாதந துக்காநந்த ரஸம் முன்னாக விதிக்கிற அந்தர் குணோபாஸநத்தை) “புலனைந்து மேயும் பொறியைந்து நீங்கி நலமந்தமில்லதோர் நாடு புகுவீர்” (திருவாய்மொழி 2-8-4) என்று பரிச்சிந்ந வஸ்து க்ராஹகமான இந்த்ரிய வஸ்யராகை தவிர்ந்து நன்மைக்கு முடிவில்லாதே யிருக்கிற நாட்டிலே புக வேண்டியிருப்பீர் “அலமந்து வீய அசுரரைச் செற்றான் பலமுந்து சீரில் படிமின்” (திருவாய்மொழி 2-8-4) என்று தடுமாறி முடியும்படி அஸுர வர்க்கத்தை அழியச் செய்தவனுடைய கல்யாண குணங்களிலே அவகாஹியுங்கோளென்று ஸம்ஸார துக்க நிவ்ருத்தி பூர்வகமான மோக்ஷாநந்த ரஸ ப்ராப்திக்கு ஸாதனமாக விதிக்கப் படுவதாயிருக்கிற “தஸ்மிந்யதந்தஸ்த்து, பாஸிதவ்யம்” (தைத்திரீய உபநிஷத் என்று ப்ரஹ்ம ஸ்வரூபாந்தர்கதமான அபஹத பாப்மத்வாதி குண விஸிஷ்ட வஸ்து உபாஸநத்தை (மதித்துப் பெருக்கி மூழ்கி அழுந்திக் கீழ்மை வலம் சூதுஞ் செய்து இளமை கெடாமல்) “சதிரிளமடவார் தாழ்ச்சியை மதியாது” திருவாய்மொழி 2-10-2) “திறமுடை வலத்தால் தீவினை பெருக்கி” (திருவாய்மொழி 210-5) “வல்வினை மூழ்கி” (திருவாய்மொழி 2-10-9) “நரகழுந்தி” (திருவாய்மொழி 2-10-7) “கீழ்மை செய்து” (திருவாய்மொழி 2-10-6) “வலங்கழித்து” (திருவாய்மொழி 2-10-8) “சூதென்று களவும் சூதும் செய்து” (திருவாய்மொழி 2-10-10) “இளரொளி இளமை கெடுவதன் முன்னம்” (திருவாய்மொழி 2-10-12) என்று உபாஸந விரோதியான இதர விஷய ப்ராவண்யத்தாலே பாபங்களைக் கூடு பூரித்து அவற்றிலே மறு நனைய மூழ்கி அழுந்தி தாழ்வு பட்டு பலத்தைப் பாழே போக்கி பற்யதோஹரனாய் க்ருத்ரிமனாய் பஸ்யதோ ஹரனாய் -க்ரித்ரமனாய் பால்யத்தைப் பாழே போக்காதே செய்யும் க்ஷேத்ர வாஸ ஸங்கீர்த்தன அஞ்சலி ப்ரதக்ஷிண கதி சிந்தநாதி அங்க யுக்தமாக்குகிறார் இரண்டாம் பத்தில் –பால்ய ஏவ சரேத் தர்மம் –என்றும் தஸ்மாத் பால்யே விவேகாத்மா யததே ஸ்ரேயஸே ஸதா (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-75) என்றும் சொல்லுகிறபடியே பால்யத்திலே கர்த்தவ்யமான -சார்வது சதிரே (2-10-1)போதவிழ் மலையே புகுவது பொருளே (2-10-10)என்றும் க்ஷேத்ர வாஸம் -பதியதி ஏத்தி எழுவது (2-10-2) என்றும் ஸங்கீர்த்தனம் -தொழக் கருதுவதே (2-10-9) என்றும் அஞ்சலி -வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே (2-10-8) என்று ப்ரதக்ஷிணம் -நெறிப்பட யதுவே நினைவது நலமே (2-10-6) என்று கதி சிந்தனம் என்கிற இவை முதலான உபாசந அங்கத்தோடு சேர்க்கிறார் இரண்டாம் பத்தில் என்கிறார்
221-(1)-முழுதுமாய் எங்கணும் ஒழிவற அருவாகி நின்று தோய்விலனாம் சர்வ வியாபகன் தீர்ந்த அடியார்களை தாளிணைக் கீழ் கொள்ளும் தன் படிக்கும் (2-)நீ தந்த மா மாயப் புணர்வினை பிறப்பு அழுந்தி அலமருகின்றேன் வேரற வரிந்து எந்நாள் எங்கு வந்து தலைப் பெய்வன் என்று கழித்து புகும் தம் காதலுக்கும் சத்ருசமாக கண்டு கொள் என்னும் (3)-ஊனமில் மோஷ பலமான முடிச் சோதியில் அனுபவத்தாலே நித்ய வஸ்து நீடு பெற்று அவச்சேதம் அற்ற அடிமை செய்ய வேண்டும் படி சர்வ ஆத்ம பாவத்தைப் புகழ்ந்து (4)-சொல்லிப் பாடி ஏத்திப் பிதற்றி எழுந்தும் பரந்தும் துள்ளிக் குனித்து தடு குட்டக் கும்பிடு நட்டமிட்டு சிரிக்கக் குழைந்து நையும் ப்ரீதி உகள தம் அடியார் என்ன உடன் கூடும் சாத்யம் வளர (5-)பை கொள் பாம்பு போலே இந்திரிய வ்ருத்தி நியம மற பாடவந்த கவி அன்றிக்கே படைத்தான் ஸ்லோக க்ருத்தாய்-(6 )-குறை முட்டுப் பரி விடர் துயர் துன்பம் அல்லல் துக்கம் தளர்வு கேடுகள் இன்றி அம்ருத ஆனந்த மக்நரானவர் செய்ய தாமரைக் கண்ணன் அமரர் குல முதல் என்று அஞ்சாதபடி எளிவரும் இணைவனாம் என்றவை பரத்வமாம் படி (7-)அவனாகும் சௌலப்ய காஷ்டையை காட்டி வழியைத் தருமவன் நிற்க இழிய கருதுவது என்னாவது வேண்டிற்று எல்லாம் தரும் –தன்னாகவே கொள்ளும் கவி சொல்ல வம்மின் என்று (8 )-முக்த ஐஸ் வர்யத்தை முன்னிட்டு ஸ்வ விருத்தியை மாற்றி ஸ்வ விருத்தியில் மூட்டுகிறார் மூன்றாம் பத்தில் ..
மூன்றாம் பத்தாலே “தத் ஸ்ருஷ்ட்வா ததே வாநுப்ராவிஸத்” (தைத்திரீய உபநிஷத் )என்கிறபடியே கார்யமான சேதநாசேதநங்களை யடைய வியாபித்து தத் கத தோஷை: அஸம்ஸ்ப்ருஷ்டனாய் இருக்கையாலே ஸர்வ வ்யாபகனான ஸர்வேஸ்வரன் கீழ்ப் பத்தாலே இவர் உபயாநுகுணமாக நிஷ்கர்ஷித்த மோக்ஷத்துக்கு பலமான தன்னுடைய விக்ரஹாநுபவத்தை இவரைப் பண்ணுவிப்பிக்க இவரும் அநுபவித்து தரித்து அநுபவ ஜநித ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே ஸர்வ வித, கைங்கர்யங்களும் செய்ய வேண்டும்படியான அபி நிவேஸத்தை யுடையராய்த் தம்முடைய அபிநிவேஸ அநு குணமாக அவன் காட்டிக் கொடுத்த அவனுடைய ஸர்வாத்ம பாவத்தைப் பேசி அத்தாலே வந்த ப்ரீதியை யுடையராய் அது அவனளவில் பர்யவஸியாதே பாகவத ஸேஷத்வத்தில் எல்லை யளவும் சென்று அந்த பாகவதர்களுக்கு நிரூபகமான பகவத் வைலக்ஷண்யா நுஸந்தாநத் தாலே தாமும் தம்முடைய கரண க்ராமங்களும் சேதந ஸமாதியாலே அநுபவிக்க வேண்டும் படியான பெரு விடாயை உடையராய் இதர ஸ்தோத்ரத்துக்கு அநர்ஹ கரணராய் அவ்வளவே யன்றிக்கே பகவத் ஸ்தோத்ரத்துக்கு அர்ஹ கரணராய் பகவதநுப வத்துக்குத் தமக்கொரு ப்ரதிஹதி தொடக்கமானவையுமற்று நிரதிஸய ஆநந்த யுக்தரானவர் புண்டரீகாக்ஷனாய் ஸுரி ஸேவ்யனானவவனை நம்மாலே ஆஸ்ரயிக்கப் போமோ என்று ஸம்ஸாரிகள் அஞ்சிக் கை வாங்காதே மேல் விழுந்து ஆஸ்ரயிக்கும்படி கீழிரண்டு பத்தாலும் உபதேஸித்த அவதார ஸெளலப்யம் பரத்வ ஸ்தாநீயமாம்படி அர்ச்சாவதார ஸெளலப்யத்தை யுமுபதேஸித்து அர்ச்சிராதி மார்க்கத்தாலே தேஸ விஸேஷ ப்ராப்தியைப் பண்ணுவிக்குமவனை யொழிய இதர ஸ்தோத்ரத்திலே தாழ விழிகை நிஷ் ப்ரயோஜநம்; ஆன பின்பு நீங்கள் ஸகல பல ப்ரதனுமாய் ஸாம்யாபத்தியைக் கொடுப்பானுமா யிருக்கிற அவன் விஷயத்திலே வாசிகமான வடிமை செய்யுங்கோளென்று நிஹீநதமமான இதர ஸேவையை நிவர்த்திப்பித்துத் தம்முடைய வ்ருத்தியான வாசிக கைங்கர்யத்திலே மூட்டுகிறார் என்கிறார் –
(முழுதுமாயெங்கணு மொழிவற அருவாகி நின்று தோய்விலனாம் ஸர்வ வ்யாபகன்) முழுதுமாய் முழுதியன்றாய் ‘(திருவாய்மொழி 3-1-8) ‘ஏழ்ச்சிக் கேடின்றி எங்கணும் நிறைந்த வெந்தாய் திருவாய்மொழி 3-2-4) ” எஞ்ஞான்று மெங்கும் ஒழிவற நிறைந்து நின்ற மெய்ஞ்ஞானச் சோதி” (திருவாய்மொழி 3-2-7) “அளவுடை ஐம்புலன்களறியா வகையால் அருவாள் நிற்கும் யாவையும் யாவரும் தானாய் அவரவர் சமயந்தோறும் தோய்விலன் (திருவாய்மொழி 3-10-10) என்று தேஸ கால வஸ்துக்களாலே பரிச்சேதிக்க வொண்ணாதபடி கார்யமான ஸகல சேதநாசேதநங்களையும் வ்யாபித்து “அநஸ்நந்நந்யோ அபி சாகஸீதி” (கடோபநிஷத் என்கிறபடியே தத்கத தோஷைர ஸம் ஸ்ப்ருஷ்டனாய் இப்படி ஸர்வ வ்யாபகனான ஸர்வேஸ்வரன் (தீர்ந்த வடியார்களைத் தாளிணைக் கீழ்க் கொள்ளும் தன்படிக்கும்) “தீர்ந்த வடியவர் தம்மைத் திருத்திப் பணி கொள்ள வல்ல ஆர்ந்த புகழச்சுகனை” (திருவாய்மொழி 3-5-11) என்று தன்னையே உபாயோபேயங்களென்று நிஷ்கர்ஷித்தவர்களை “சன்ம சன்மாந்தரம் காத்தடியார்களைக் கொண்டு போய்த் தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க் கொள்ளுமப்பனை” (திருவாய்மொழி 3-7-7) என்று இனியொரு ஐந்ம பரம்பரைகளிலே போகாதபடி ரக்ஷித்து ஆரப்த ஸரீராவஸாநத்திலே அர்ச்சிராதி மார்க்கத்தாலே தேஸ விஸேஷத்திலே கொடு போய் ஸ்வ ஸ்வரூப ப்ராப்தியைப் பண்ணிக் கொடுத்து தனக்குப் பாதோபதாநமாக விட்டுக் கொள்ளும்படியான ஸேஷியான தன்னுடைய ஒளதார்யத்துக்கும் (நீ தந்த மாமாயப் புணர்வினைப் பிறப்பழுந்தி அலமருகின்றேன் வேரற வரிந்து எந்நாளெங்கு வந்து தலைப் பெய்வன் என்று கழித்துப் புகும் தம் காதலுக்கும்) “அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி யுழல்வேன்” (திருவாய்மொழி 3-2-1 “பன்மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்” (திருவாய்மொழி 3-2-2) “பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கலறா” (திருவாய்மொழி 3-2-3) “வினையியல் பிறப்பழுந்தி கொடுவினைத் தூற்றுள் நின்று பாவியேன் பல காலம் வழிதிகைத் தலமருகின்றேன்” (திருவாய்மொழி 3-2-7) என்று ஸ்ருஷ்டி காலத்திலே உன்னை வழிபடுகைக் குடலாக நீ ஸரீரத்தைக் கொடுக்க நான் அதின் வழியே போய் அநர்த்தத்தைச் சூழ்த்துக் கொண்டு ப்ரக்ருதி கார்யமான தேவ மநுஷ்யாதி, ஸரீரங்களிலே அவகாஹித்து ஹேயமான ஸரீரத்துக்கடியாய் ஒன்றோடொன்று பிணைந்திருக்கிற கர்மமடியாக மீண்டும் பாபத்திலே கொடு போய் மூட்டக் கடவதான ஐந்ம பரம்பரைகளிலே யழுந்தி என்னால் அடி யறுக்க வொண்ணாதே அடி காண வொண்ணாதே புகுர வழி தெரியுமத்தனை யொழிய புறப்பட வழி தெரியாதிருப்பதா யிருக்கிற பாபமாகிற மிடைந்த தூற்றிலே கிடந்து உன்னை ப்ராபிக்கைக்கீடான வழி காணாதே கூப்பிட்டு அலமருவா நின்றேன்; “வினைகளை வேரறப் பாய்ந்து” (திருவாய்மொழி 3-2-1) “தொன்மா வல்வினைத் தொடர்களை முதலரிந்து” (திருவாய்மொழி 3-2-2) என்று அநாதியாய் மஹத்தாய் என்னாலே போக்கிக் கொள்ள வொண்ணாதபடி வலிதாய் ஸ்ருங்கலாஞ்சலமா(?) யிருக்கிற பாப ஸமூஹங்களை உச்சி வேரோடே யரிந்து பொகட்டு “எந்நாள் யானுன்னை இனி வந்து கூடுவனே–திருவாய்மொழி 3-2-1 “எங்கு வந்து அணுகிற்பனே (திருவாய்மொழி 3-2-5) “ எங்கினித் தலைப் பெய்வனே (திருவாய்மொழி 3-2-9) என்று நான் உன்னைக் கிட்டுவதொரு நாள் அறுதியிட்டுத் தர வேணும் நான் உன்னை எங்கே வந்து கிட்டக் கடவேன் இட்டுகை என்று ஒரு பொருளுண்டோ என்று ஸரீர ஸம்பந்தத்துக்கு நொந்து அதிலுண்டான அருசியோடே “காயம் கழித்து அவன் தாளிணைக் கீழ்ப் புகும் காதலன்‘ (திருவாய்மொழி 3-9-8) என்று பகவத் குணாநுபவத்தோடே கால க்ஷேபத்தைப் பண்ணி ஸுரீரத்தை விட்டு அவன் திருவடிகளிலே புக வேணும் என்னும்படியான ஸேஷ பூதரான தம்முடைய ஆசைக்கு (ஸத்ருஸமாகக் கண்டு கொள் என்னும்) உபய ஸ்வரூபத்துக்கும் அநுகுணமாக “வானவர் நாட்டையும் நீ கண்டு கொள்” (திருவாய்மொழி 3-9-9) என்று ஈஸ்வரன் காட்டிக் கொடுக்கிற ( ஊனமில் மோக்ஷ பலமான முடிச் சோதியில் அநுபவத்தாலே நித்ய வஸ்து நீடு பெற்று) “ஊனமில் மோக்கமென்கா” (திருவாய்மொழி 3-4-7) என்று ப்ரகாரமான ஆத்மாநுபவ மாத்ரத்திலன்றிக்கே ப்ரகாரியளவும் செல்ல அநுபவிக்கையாலே ஸ்வரூபாநுரூபமாகக் கீழில் பத்தில் அறுதியிட்ட பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷத்துக்குப் பலமான “முடிச் சோதி’ (திருவாய்மொழி 3-1) என்கிற திருவாய்மொழியில் விக்ரஹ வைலக்ஷண்யத்தையும் ஆபரணங்களினுடைய சேர்த்தியையும் அநுபவித்து அவை பரிச்சேதித் தநுபவிக்க வொண்ணா தொழிய இது கரண ஸங்கோசத்தாலேயோ என்றதிஸங்கை பண்ணின இவருடைய அதி ஸங்கையை வஸ்து வைலக்ஷண்ய நிபந்தந மென்னுமிடத்தைக் காட்டி நிவ்ருத்தமாக்க அவ்வநுபவத்தாலே “பெற்றது நீடுயிர் (திருவாய்மொழி 3-2-10) என்கிறபடியே நித்ய வஸ்து ஸத்தை பெற்று ஸத்தா கார்யமும் பலிக்க வேண்டுகையாலே அவச்சேதமற்று அடிமை செய்ய வேண்டும்படி “ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா வடிமை செய்ய” (திருவாய்மொழி 3-3-1 என்கிற பாட்டின் படியே தேஸ காலாவஸ்த்தா, ப்ரகாரங்களை யிட்டு அவச்சேதியாதபடி ஸர்வ தேஸ ஸர்வ கால ஸர்வாவஸ்த்தைகளிலும் ஸர்வவித, கைங்கர்யங்களும் செய்ய வேண்டும்படியான அபிநிவேஸத்தாலே (ஸர்வாத்ம பாவத்தைப் புகழ்ந்து) புகழு நல்லொருவனிலே (திருவாய்மொழி 3-4) பூதங்கள் பெளதிகங்கள் உஜ்ஜ்வலமான மாணிக்யாதி பதார்த்தங்கள் காநாதி ஸப்த ராஸிகள் மோக்ஷாதி புருஷார்த்தங்கள் ஜகத்துக்கு ப்ரதாநரான ப்ரஹ்ம ருத்ராதிகள் இவற்றுக்கடைய காரணமான ப்ரக்ருதி புருஷார்த்தங்கள் ஆக விவற்றை யடைய விபூதியாக வுடையனாய் இவை தனக்குள்ளே அந்தராத்மதயா வ்யாபித்து தத்கத தோஷை: அஸம்ஸ்ப்ருஷ்டனா யிருக்கிற படியைப் பேசி அநுபவித்து அவ்வநுபவத்தாலே ப்ரீதராய் (சொல்லிப் பாடி யேத்திப் பிதற்றி யெழுந்தும் பறந்தும் துள்ளிக் குனித்துத் தடுகுட்டக் கும்பிடு நட்டமிட்டுச் சிரிக்கக் குழைந்து நையும் ப்ரீதி யுகள) “எம்மானைச் சொல்லிப் பாடி” (திருவாய்மொழி 3-5-1 “பண்கள் தலைக் கொள்ளப் பாடி” (திருவாய்மொழி 3-5-2”முனிவின்றி யேத்தி’ (திருவாய்மொழி 3-5-6 “பேர் பல சொல்லிப் பிதற்றி” (திருவாய்மொழி 3-5-8) ‘ எழுந்தும் பரந்தும் துள்ளாதார்‘திருவாய்மொழி 3-5-1) “ஏத்திக் குனிப்பார்’ (திருவாய்மொழி 3-5-6) தடு குட்டமாய் (திருவாய்மொழி 3-5-3) “கும்பிடு நட்டமிட்டாடி” (திருவாய்மொழி-3-5-4)உலோகர் சிரிக்க நின்றாடி உள்ளங் குழைந்து நைய” (திருவாய்மொழி 3-5-8) என்று வாசிக காயிக மாநஸங்களினாலே களித்து அந்த ப்ரீதி தலை மண்டை யிட்டு (தம்மடியாரென்று உடன் கூடும் ஸாத்யம் வளர) இப்படி யுண்டான ப்ரீதி அவ் வளவில் பர்யவஸியாதே “தம்மடியாரடியார் தமக்கடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே (திருவாய்மொழி 3-7-10) என்று ஸேஷத்வத்தினுடைய எல்லையிலே நிற்கும்படி “அடியார் குழாங்களை உடன் கூடுவதென்று கொலோ” (திருவாய்மொழி 2-3-10) என்று கீழில் பத்திலே ப்ரார்த்தித்த பாகவத ஸேஷத்வமாகிற புருஷார்த்தம் அதினுடைய எல்லை யளவாக வளர (பைகொள் பாம்பு போலே இந்த்ரிய விருத்தி நியமமற) “பைகொள் பாம்பேறி உறை பரனே‘ (திருவாய்மொழி 3-8-4) என்று திருவனந்தாழ்வான் சஷுஸ்ரவா: என்கிறபடியே ஒரு கரணத்தாலே மற்றைக் கரணத்தில் கார்யமும் கொள்ளுமா போலே “நெடியானே என்று கிடக்கு மென் நெஞ்சமே” (திருவாய்மொழி 3-8-1 “வஞ்சனே என்னு மெப்போதும் என் வாசகமே” (திருவாய்மொழி 3-8-2) “ஆனாயர் தாயவனே என்று தடவுமென் கைகளே” (திருவாய்மொழி 3-8-3) என்றித்யாதிகளாலே கரணம் சேதந ஸமாதியாலே கரணாந்தர ப்ரவருத்தியையும் ஆசைப் படும்படியான பெரு விடாயை உடையராய் (பாடவந்த கவி யன்றிக்கே படைத்தான் ஸ்லோக க்ருத்தாய்) “வாய் கொண்டு மானிடம் பாட வந்த கவியேனல்லேன்” (திருவாய்மொழி 3-9-9) என்று இதர ஸ்தோத்ரத்துக்கநர்ஹ கரணராய் “ஒன்றி யொன்றி உலகம் படைத்தான் கவியாயினேற்கு” (திருவாய்மொழி 3-9-10) என்று ஐகத் ஸ்ருஷ்ட்யாதி முகத்தாலே தம்முடைய ஜீவநத்துக்கு க்ருஷி பண்ணின ஸர்வேஸ்வரன் விஷயத்திலே “அஹம் ஸ்லோக க்ருத் அஹம் ஸ்லோக க்ருத்” (தைத்திரீய உபநிஷத்) என்கிற உபநிஷத்தின்படியே கவிபாடுமவருமாய் (குறை முட்டுப் பரிவிடர் துயர் துன்ப மல்லல் துக்கம் தளர்வு கேடுகளின்றி அம்ருதாந்த மக்நரானவர்) தேஸ விஸேஷத்தில் போயநுபவிக்கப் பெற்றிலேனென்கிற குறைவில்லை; இவ்வநுபவத்துக்கு எனக்கொரு ப்ரதிஹதி யில்லை, ஏகதேஸமும் மநோதுக்க, மில்லை; வகுத்த ஸேஷி என்று பற்றுகையாலே எனக்கொரு துக்கமில்லை. ருசி முன்னாக தேஸ விஷேஷ ப்ராப்த பண்ணுகிற எனக்கு வைதிக புத்ரர்களைப் போலே மீளில் செய்வதென் என்கிற துக்கமில்லை; இங்கே அவனுடைய கல்யாண கு ணங்களை நெருங்க புஜித்த எனக்கொரு தேஸ விஸேஷத்திலே போகப் பெற்றிலேன் என்கிற துக்க மில்லை; இவ் விபூதி அவனுடைய லீலை என்றறிந்த வெனக்கு ஒரு தளர்த்தி யில்லை: எனக்காக ஸர்வ வ்யாபகனா யிருக்கிறவனைப் பற்றின எனக்கொரு கேடில்லை. அவனுடைய லீலா விபூத்யந்வயமாகில் செய்வதென் என்கிற அல்லலில்லை; ஆஸ்சர்ய பூதனான க்ருஷ்ணனைப் பற்றின எனக்கொரு கேடில்லை; என்றிப்படித் தாமே சொல்லும்படி அம்ருதரான முக்தர் பகவதநுப வத்தால் ஆநந்திக்குமாபோலே அவ்வாநந்த ஸாக,ரத்திலே மக்நரான இவர் (செய்யதாமரைக் ௧ண்ணன் அமரர் குல முதல் என்று அஞ்சாதபடி) “செய்ய தாமரைக் கண்ணனாய்” (திருவாய்மொழி 3-6-1 “எஞ்சலிலமரர் குல முதல் (திருவாய்மொழி 3-6-9) “அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் (திருவாய்மொழி 3-6) என்று புண்டரீகாஷனான ஸர்வேஸ்வரன் ஜ்ஞாந ஸங்கோசமில்லாத நித்ய ஸூரிகளுடைய திரளுக்கு நிர்வாஹகனன்றோ, ஸம்ஸாரிகளான நம்மாலே அவனை ஆஸ்ரயிக்கப் போமோ என்றஞ்ச வேண்டாதபடி (எளிவரு மிணைவனாம் என்றவை பரத்வமாம்படி) “எளிவரும் இயல்வினன்’ (திருவாய்மொழி 1-3-2) “இணைவனாம் எப்பொருட்கும்” (திருவாய்மொழி 2-8-1 என்று பத்துடை யடியவரிலும் அணைவதரவணையிலும் வெளியிட்ட அவதார ஸெளலப் யம் பரத்வ ஸ்த்தாநீயமாம்படி (அவனாகும் ஸெளலப்ய காஷ்டையைக் காட்டி) “நெஞ்சினால் நினைப்பான் யவன் அவனாகும் கடல் வண்ணனே (திருவாய்மொழி 3-6-9) என்று மநஸ்ஸாலே யாதொன்றைத் திருமேனியாகக் கோலினிகோள் அபரிச்சேத்ய மஹிமனான ஸர்வேஸ்வரன் அதைத் தனக்கு அஸாதாரண விக்ரஹமாக விரும்பும் என்று “யே யதா, மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம் யஹம்’ (கீதை 4-11 என்றும் “அர்ச்யஸ் ஸர்வ ஸ ஹிஷ்ணு: அர்ச்சக பராதநாகிலாத்ம ஸ்த்திதி.” ஸ்ரீரங்கராஜஸ்தவம் 74) என்கிற அர்ச்சாவதார ஸெளலப்யத்தைக் காட்டி (வழியைத் தருமவன் நிற்க இழியக் கருதுவது என்னாவது) ‘ஓழிவொன்றில்லாத இத்யாதி, ஓர் மானிடம் பாடல் என்னாவதே” (திருவாய்மொழி 3-9-3) என்று யாவதாத்ம பாவி பகவதநுபவத்தோடே வர்த்திக்கிற தேஸத்தையும் அவ்வநுபவம் தான் ஒரு சிறாங்கை என்னும்படியான அர்ச்சிராதி, மார்க்கத்தையும் அத்தேஸ விஸேஷத்தையும் ப்ராபிக்கிற உபாயத்தையும் தருகிறவன் நம்மை ஒரு சொல் சொல்லுவாரோ என்று அவஸர ப்ரதீக்ஷனாய் நிற்க அவனை விட்டு ஒரு சொல்லுக்குப் பாத்தம் போராதானாய் அசித் ப்ராயனாய் நீர்க் குமிழி போலே உடைந்து போகிற ஷூத்ர மநுஷ்யனைக் கவிபாடி முன்பு நின்ற நிலையிலுங் காட்டில் தாழவிழிய நினைக்கிற இத்தாலே என்ன ப்ரயோஜநமுண்டு? அத்தால் ஸ்வரூபம் பெற்றிலிகோள், அபிமதம் பெற்றிலிகோள்; (வேண்டிற்றெல்லாம் தரும்) ‘ஸகல பல ப்ரதோ ஹி விஷ்ணு?” (விஷ்ணுதர்மம் என்கிறபடியே ஸர்வாபேக்ஷிதங்களையும் கொடுக்கும் (தன்னாகவே கொள்ளும்) “பரமம் ஸாம்யமுபைத” (முண்டகோபநிஷத் ) என்கிறபடியே தன்னோடு ஸாம்யாபத்தியைக் கொடுக்கும், தனக்கநந்யார்ஹ ஸேஷமாக்கிக் கொள்ளும் (கவி சொல்ல வம்மின் என்று) இதுக்கு நீங்கள் செய்ய வேண்டுவதொன்றும் இல்லை. இதரரை ஸ்தோத்ரம் பண்ணி உங்கள் கரணங்களைப் பாழே போக்காதே வாய் படைத்த ப்ரயோஜநம் போரும்படி இவ் விஷயத்திலே ஸ்தோத்ரம் பண்ண வாருங்கோளென்று (முக்தைஸ்வர்யத்தை முன்னிட்டு) “ஹாவு ஹாவு ஹாவு அஹமந்ந மஹமந்ந மஹமந்நம்’ (தைத்திர்யோபநிஷத்) என்று முக்தருடைய ஐஸ்வர்யமான வாசிக கைங்கர்யத்தை முன்னிட்டு (ஸ்வவ்ருத்தியை மாற்றி ஸ்வ வ்ருத்தியிலே மூட்டுகிறார்) “ஸேவா ஸ்வ வருத்திராக்யாதா தஸ்மாத்தாம் பரிவர்ஜயேத்’ (மநு ஸ்ம்ருதி’ என்று அப்ராப்த விஷயத்திலே ஸேவை நிஹீந தரமாகையாலே அந்த ஸ்வ வ்ருத்தியை மாற்றி சாயாவாஸத்வமநுகச்சேத்”(மூல ஸம்ஹிதை )என்றும் “ஸா கமர்த்தம் ந ஸேவ்யதே” (விஹகேஸ்வர ஸம்ஹிதை 24-14) என்றும் விதிக்கப் படுகிற ப்ராப்த விஷயத்திலே புகழு நல்லொருவனில் படியே தம்முடைய வாசிக வருத்தியிலே மூட்டுகிறார் முன்றாம் பத்தில் -என்கிறார் –
222-(1 )-ஈசனை ஈசனின் ஈசன் பால் என்ன ஏர்கொள் வானத்தும் ஆயே என்கிற வியாப்தி நிறம்பெற தனிக் கோல் செலுத்தும் -சர்வ நியந்தா –ஒழிவில் காலத்துக்கு சேர -பூர்வ போகங்களை ஒதுமால் எய்தின சாபலத்துக்கு சேர -சம காலமாக்கிப்(2-)போதால் வணங்காமை தீர்த்த பிரணயித்வத்தாலே காதல் மையல் ஏறிய பித்தாய் (3)-தேச தூரத்துக்குக் கூவியும் கொள்ளாய் என்றது தீர கண்ட சதிரையும் ஒரு நிலமாகக் காட்ட வீவில் இன்பம் கூட்டினை என்று முக்த போக மானச ப்ராப்தி பலமான தேவதாந்தர ஆத்ம ஆத்மீய லோக யாத்ரை ஐஸ்வர்ய அஷரங்களில் வைராக்கியம் -உன்னித்து உயிர் உடம்பினால் கொடு உலகம் வேட்கை எல்லாம் ஒழிந்தேன் என்ன உடையரானவர் (4)-ஒரு நாயகம் என்று ராஜ்ய ஸ்வர்க்க ஆத்ம அனுபவ அல்ப அஸ்த்ரத்வ சாவாதிகத் வாதிகளையும் (5-)ஆடுகள் இறைச்சி கரும் செஞ்சோறு ஆகிற நிந்த்யங்களாலே இளம் தெய்வத்துக்கு இழைத்தாடும் நிஹீநதையையும் (6)-பேச நின்ற தேவாத ஞான சக்தி சாபேஷத்வாதிகளையும் (7-)இலிங்கத்து விளம்பும் பாஹ்ய குத்ருஷ்டி மத தமோ நிஷ்டததையும் சொல்லி ஓடிக் கண்டீர் (8)-கண்டும் தெளிய கில்லீர் அறிந்து ஓடுமின் ஆட் செய்வதே உறுவது ஆவது என்று விரக்தி பூர்வகமாக ஆச்ரயனத்தை ஆஸ்ரயணத்தை ருசிப்பிக்கிறார் நாலாம் பத்தில்
நாலாம் பத்திலே கீழ்ச் சொன்ன வ்யாப்தி ஆகாஸ வ்யாப்தி போல் அன்றிக்கே-“அந்த: ப்ரவிஷ்டஸ் ஸாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா” (ஆரணம் 3-20) என்றும்-“ஆத்மாநமந்தரோ யமயதி” (ப்ருஹ தாரண்யகம்) என்றும் “ஸாஸ்தா விஷ்ணு:அஸேஷஸ்ய ஐகதோ யோஹ்ருதி.ஸ்திதி .” ஸ்ரீவிஷ்ணுபுராணம் 1-17-20 என்றும் சொல்லுகிறபடியே அந்த வ்யாப்தி நிறம் பெறும்படி ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களினுடையவும் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி தானிட்ட வழக்காம்படி நியமித்துக் கொண்டு போருகையாலே ஸர்வ நியந்தாவான ஸர்வேஸ்வரன் கீழ் ஒழிவில் காலத்தில் கைங்கர்யாபி நிவேஸம் போலே தேஸ கால விப்ரக்ருஷ்டமான அபதாநங்களை தத்தேஸ கால விஸிஷ்டமாக அநுபவிக்க வேணுமென்று இவர்க்குக் காலோபாதியைக் கழித்து ஸம காலமாக்கி யநுபவிப்பித்து இவருடைய இழவைத் தீர்த்து இவருடைய கரண த்ரய வ்யாபாரத்தையும் யோக்யமாக்கிக் கொள்ள அந்த ப்ரணயித்வ குணத்திலே தோற்று ஸத்ருஸ பதார்த்தங்களையும் ஸம்பந்தி பதார்த்தங்களையும் அவனென்று பிச்சேறி தேஸ விஸேஷத்திலே அநுபவத்தை யாசைப்பட்டுக் கூப்பிட்ட இவர்க்கு அவ் விழவும் தீரும்படி “ஸ்ரியா ஸார்த்தம் ஜகத்பதி: ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ” (லைங்கம்) என்கிறபடியே தேஸ விஸேஷத்திலே பெரிய பிராட்டியாரும் தானுமே போக்தாக்களா யிருக்கிற இருப்பை ப்ரத்யக்ஷாநுபவம் போலே அநுபவத்துக்கு விஷயமாக்க இவருமநுபவித்து மாநஸாநுபவமாகையாலே தத் பலமான பகவத் வ்யதிரிக்தங்களான தேவதாந்தரம் முதலானவற்றிலே வைராக்யத்தை உடையராயிருக்கிற இவரை ஐஸ்வர்ய கைவல்யங்களினுடைய அல்பாஸ்திரத்வாதி தோஷங்களையும் நிந்த்ய பதார்த்தங்களைக் கொண்டு ஷுத்ர தேவதா பஜனம் பண்ணுகிற இதினுடைய தண்மையையும் ப்ரஸம்ஸா பரமான வாக்யங்களாலே சொல்லப்பட்டு பகவத் விபூதி பூதராய் இருக்கச் செய்தே இவனோடே விகல்பிக்கலாம்படி அவனாலே தத்தமான ஐஸ்வர்யத்தை உடையராயிருக்கிற ப்ரஹ்ம ருத்ரர்களுடைய அஜ்ஞாந அஸக்தி ஸாபேக்ஷத்வாதிகளையும், பாஹ்ய குத்ருஷ்டி மதங்களினுடைய தமோ நிஷ்டதைகளையும் வெளியிட்டு தேவதாந்தரங்களை ஆஸ்ரயித்து தத்பலமும் பெற்றுப் போனிகோள்; ஸர்வேஸ்வரனுடைய ஜகந் நிகரணாதி ஸர்வ சேஷ்டிதங்களாலும் ஸர்வேஸ்வரனே ரஷகன் அல்லாதாரடைய ரக்ஷ்ய பூதரென்னும் அர்த்தத்தை வ்யாஸ பராஸராதிகளுடைய வசநங்களாலே கண்டு வைத்தும் தேற மாட்டுகிறிகோள்; இப்படி நீங்கள் தேறாதிருக்கைக்கடி அவனிட்ட வழக்கா யிருக்கிற ப்ரக்ருதி ஸம்பந்தம்; தத் விமோசநோபாயம் அவன் திருவடிகளே என்றறிந்து ஆஸ்ரயித்துத் தப்பப் பாருங்கோள், அவன் திருவடிகளில் கைங்கர்யமே உங்களுக்குச் சீரிய புருஷார்த்தம் என்று ப்ரயோஜநாந்தரங்களுடையவும் தேவதாந்தரங்களினுடையவும் விரக்தி முன்னாக பர தேவதை ஸர்வேஸ்வரனே என்றும் தத் விஷய கைங்கர்யமே பரம ப்ரயோஜநமென்றும் உபதேஸித்து பகவத் ஸமாஸ்ரயணத்தை ருசிப்பிக்கிறார் என்கிறார்.
(ஈசனை ஈசன்பாலென்ன ஏர்கொள் வானத்தும் ஆயே என்கிற வ்யாப்தி நிறம் பெறத் தனிக்கோல் செலுத்தும் ஸர்வ நியந்தா ) “மறுகலிலீசனை” (திருவாய்மொழி 4-1-10)’ ஈசன் ஞாலமுண்டுமிழ்ந்த” (திருவாய்மொழி 4-3-2) “ஈசன்பாலோர் அவம் பறைதல்’ (திருவாய்மொழி 4-10-4) என்று நியந்த்ரு வாசகமான ஸப்தத்தாலே சொல்லும்படி ‘ஏர்கொளேழுலகமும் துன்னி முற்றுமாகி நின்ற சோதி ஞான மூர்த்தியாய்” (திருவாய்மொழி 4-3-8) “வானத்தும் வானத்துள்ளும்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த் தானத்தும் எண்டிசையும் தவிராது நின்றான்” (திருவாய்மொழி 4-5-9) “ஆயே இவ்வுலகத்து நிற்பனவும் திரிவனவும் நீயே” (திருவாய்மொழி 4-9-7) என்று கீழ்ப்பத்தில் சொன்ன வ்யாப்தி ஆகாஸ வ்யாப்தி போலன்றிக்கே அது நிறம் பெறும்படி “வீற்றிருந்தேழுலகும் தனிக்கோல் செல்ல” (திருவாய்மொழி 4-5-1) என்னும்படி உபய விபூதியும் தன் நியமனத்திலே யாம்படி தன் ஆஜ்ஞையை நடத்துகிற ஸர்வ நியந்தாவான ஸர்வேஸ்வரன் (ஒழிவில் காலத்துக்குச் சேர பூர்வ போகங்களை ஓதுமாலெய்தின சாபலத்துக்குச் சேர ஸமகாலமாக்கி) “ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி (திருவாய்மொழி 3-3-1) என்று ஸர்வதேஸ ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் அடிமை செய்ய வேணுமென்று கீழ்க் கழிந்த காலத்தில் அடிமையையும் ஆசைப்பட்டதுக்கு ஒக்க தேஸ கால விப்ரக்ருஷ்டங்களாயிருக்கிற அவனுடைய அபதானங்களை “மாதர் மா மண் மடந்தை பொருட்டு இத்யாதி, ஒதும் மால் எய்தினள்” (திருவாய்மொழி 4-2-6) என்று தத் தேஸ கால விஸிஷ்டமாக அநுபவிக்க வேணுமென்று பிச்சேறும்படியான இவருடைய சாபல்யத்துக்குச் சேர காலோபாதியைக் கழித்து வர்த்தமாந காலம் போலே ஸம காலமாக்கி அநுபவிப்பித்து (போதால் வணங்காமை தீர்த்த ப்ரணயித்வத்திலே காதல் மையலேறிய பித்தாய்) “பூவை வீயா நீர் தூவிப் போதால் வணங்கேனேலும் நின் பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே” (திருவாய்மொழி 4-5-1என்று; “பூசுஞ்சாந்தென் நெஞ்சமே இத்யாதி ஏக மூர்த்திக்கே” (திருவாய்மொழி 4-3-2) என்று விரோதி நிரஸநம் பண்ணுகிற அவதார காலங்களிலே உதவி புஷ்பாத் யுபகரணங்களைக் கொண்டு ஸிஸிரோபசாரம் பண்ணப் பெற்றிலேனே யாகிலும் ஸர்வ நியந்தாவாய் ப்ரளயாத்யாபத் ஸகனானவன் தன்னுடைய அத்விதீயமான விக்ரஹத்துக்கு என்னுடைய கரண த்ரய வ்யாபாரத்தையும் தனக்கு போக்யமாகக் கொள்ளுவதே என்று இவர் தாமே ஈடுபடும்படி இவருடைய இழவு தீர்த்த அவனுடைய ப்ரணயித்வ குணத்திலே “காதல் மையலேறினேன்” (திருவாய்மொழி 4-3-9 என்கிறபடியே அவன் பக்கல் உண்டான ப்ராவண்யாதிஸயத்தாலே அறிவழிய அது வெள்ளக் கேடாகாதபடி அவன் அல்பம் பேர நிற்க அவனோடு ஸத்ருஸ பதார்த்தங்களையும் ஸம்பந்தி பதார்தங்களையும் அவனென்று ப்ரமித்து “என் பெண்கொடி ஏறிய பித்தே’‘ (திருவாய்மொழி 4-4-6) என்று பிச்சேறி (தேஸ தூரத்துக்குக் கூவியும் கொள்ளாய் என்றது தீரக் கண்ட சதிரையும் ஒரு நிலமாகக் காட்ட) “கோல மேனி காண வாராய் கூவியும் கொள்ளாயே” (திருவாய்மொழி 4-7-1) என்று உன்னுடைய வடிவழகை வந்தநுபவிப்பித்தருளுதல் அங்கே அருளப்பாடிடுதல் செய்கிறிலை என்று தேஸ விஸேஷத்தில் அநுபவத்தை ஆசைப்பட்டுக் கூப்பிட்ட இவருக்கு “ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்பக் கண்டசதிர் கண்டொழிந்தேன்” (திருவாய்மொழி 4-9-10) என்று நித்ய விபூதியிலே பெரிய பிராட்டியாரும் நீயுமே போக்தாக்களாய் அவ் விபூதி யிலுள்ளாரடைய போகோபகரண கோடியிலேயாம் படி கண்டு வைத்த கட்டளையை நான் கண்டேன் என்று கீழ் காலோபாதியைக் கழித்து ஸம காலமாக்கினாப் போலே அவ் விபூதியிலநுபவத்தை இங்கே யிருந்தே அநுபவிக்கலாம்படி ஒரு போகியாக ப்ரகாஸிப்பிக்க (வீவிலின்பம் கூட்டினை என்று முக்த போகம்) “வீவிலின்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே” (திருவாய்மொழி 4-5-3) என்று அவனைக் கிட்டி நிரதிஸயாநந்தியாகப் பெற்றேன், “கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே” (திருவாய்மொழி 4-9-8) என்று ஸ்வ யத்நத்தாலே கிட்டுவார்க்குக் கிட்ட வரிதாயிருக்கிற திருவடிகளை உன்னருளாலே பெற விருக்கிற நான் பெற்றநுபவிக்கும்படி கூட்டினாய், நானுங்கண்டநுபவிக்கப் பெற்றேன் என்று பேசும்படியான முக்த போகமான இவ்வநுபவம் மாநஸாநுபவமாய் அந்த மாநஸ ப்ராப்திக்குப் பலமான (தேவதாந்தராத்மாத்மீய லோக யாத்ரைஸ்வர்ய அக்ஷரங்களில் வைராக்யம் உன்னித்துயிருடம்பினால் கொடுவுலகம் வேட்கை யெல்லா மொழிந்தேனென்ன உடையரானவர்) “உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள்” (திருவாய்மொழி 4-6-10) என்று தன்னெஞ்சாலே துதித்து ஒரு தேவதைக்கு மூச்சுண்டென்று தொழுதறியாள் என்று தேவதாந்தர விஷயமான வைராக்யத்தையும் “உயிரினால் குறைவிலமே” (திருவாய்மொழி 4- 8-10) “உடம்பினால் குறைவிலமே’ (திருவாய்மொழி 4-8-9 என்று ஆத்மாத்மீயங்களில் வைராக்யத்தையும் “கொடு வுலகம் காட்டேல்’ (திருவாய்மொழி 4-9-7) என்று லோக யாத்ரையில் வைராக்யத்தையும் “வேட்கை யெல்லாம் விடுத்து” (திருவாய்மொழி 4-9-9) என்று ஐஸ்வர்யத்தில் வைராக்யத்தையும் “சிற்றின்பம் ஒழிந்தேன்” (திருவாய்மொழி 4-9-10) என்று அக்ஷரமென்று சொல்லப்படுகிற ஆத்மாநுபவத்தில் வைராக்யத்தையும் உடையரான விவர் (ஒருநாயகம் என்று ராஜ்ய ஸ்வர்காத்மாநுபவ அல்பாஸ்திரத்வ ஸாவதி கத்வாதிகளையும்) ஒரு நாயகத்திலே ‘ஒரு நாயகமாய் ஓட உலகுடனாண்டவர் பெருநாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்” (திருவாய்மொழி 4-1-1 )என்று “ராஜ்யம் நாம மஹா வ்யாதி : அசிகத்ஸ்யோ விநாமந: ப்ராதரம் வா ஸுதம் வாபி த்யஜந்தி கலு பூமிபா:” என்கிறபடியே ராஜ்யைஸ்வர்யத்தினுடைய அல்பதையையும் ‘குடிமன்னுமின்சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள்” (திருவாய்மொழி 4-1-9) என்றும் “ஷீணே புண்யே மர்த்யலோகம் விஸந்தி” (கீதை 9-21 என்று ஸ்வர்க்காநுப வத்தினுடைய ௮ஸ்திரத்வத்தையும் “இறுகலிறப்பு” (திருவாய்மொழி 4-1-10) என்று ஆத்மாநுபவத்தினுடைய ஸாவதிகத்வத்தையும் (ஆடு கள்ளிறைச்சி கருஞ் செஞ்சோறாகிற நிந்த்யங்களாலே இளந் தெய்வத்துக்கு இழைத்தாடும் நிஹீநதையையும்) ‘அணங்குக்கருமருந்தென்று அங்கோராடும் கள்ளும்பராய்” (திருவாய்மொழி 4-6-7) “அங்கோர்கள்ளுமிறைச்சியும் தூவேன்மின்” (திருவாய்மொழி 4-6-3) “கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும்” (திருவாய்மொழி 4-6-4) என்று “த்ரவ்யம் நிந்த்ய ஸூராதி தைவத மதி ஷூத் ரஞ்ச பாஹ்யாக மோ த்ருஷ்டிர் தேவலகாஸ்ச தேஸிகஜநா திக் திக்தி கேஷாம் க்ரமம் வேதா வேதநாஸ்ச தேஸிக ஜநா ஸத்வஞ்ச வேதாந்தகம் ப்ரஹ்ம ஸ்ரீதர மத்ர வேத,விஹிதந் நிஜீவஜீவாதவே” என்கிறபடியே நிந்த்ய பதார்த்தங்களைக் கொண்டு “நீரணங்காடும் இளம் தெய்வம்” (திருவாய்மொழி 4-6-2) என்று ஷூத்ர தேவதைகளுக்கு ‘ ‘கள்ளிழைத்தென் பயன்” (திருவாய்மொழி 4-6-4) என்று அவ்வோ தேவதைகள் ஸந்நிதி பண்ணுகிற ஸ்தலங்களிலே யிடுகிறவிது “நீரணங்காடுதல் கீழ்மையே” (திருவாய்மொழி 4-6-8) என்று நிந்த்ய பதார்த்தங்களைக் கொண்டு ஷூத்ர தேவதா பஜநம் பண்ணுகை நிஹீநமென்னுமத்தையும், (பேச நின்ற தேவதா ஜ்ஞாநா முக்தி ஸாபேக்ஷத்வாதி களையும்) “பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் நாயகனவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்’ (திருவாய்மொழி 4-10-4) என்று ப்ரஸம்ஸா பரமான வாக்யங்களாலும் தாமஸ புராணங்களாலும் பேசப்பட்டு அவற்றுக்கு முட்டுப் பொருத்து நின்ற ப்ரஹ்ம ருத்ராதிகளுடைய “வாமாங்குஷ்டநகாக்ரேண சிந்நம் தஸ்ய ஸிரோ மயா” என்றும் “யஸ்மாத ந பராதஸ்ய ஸிரஸ் சிந்நம் த்வயா மம, தஸ்மாச்சாப ஸமாயுக்த: கபாலீ த்வம் பவிஷ்யஸி த்த்ர நாராயணஸ் ஸ்ரீமாந் மயா பி அசாம் ப்ரயாசித: விஷ்ணு ப்ரஸாதாத் ஸுஸ்ரோணி கபாலம் தத் ஸஹஸ்ரதா ” (மாத்ஸ்ய புராணம் )என்றும் சொல்லுகிற படியே ப்ரஹ்மா ருத்ரனாலே தலை யறுப்புண்டு ஸோச்யனாகையாலும் ருத்ரன் குருவினுடை ஸிரஸ் சேதநத்தாலே பாதகியாய் ஸர்வேஸ்வரன் பக்கலிலே ஸாபேஷனாக, அந்த ஸர்வேஸ்வரன் அந்த ப்ரஹ்மாவினுடைய ஸோகத்தையும் போக்கி ருத்ரனுடைய ஸாபத்தையும் போக்கினான் என்கையாலே இவர்கள் அந்யோந்யம் தங்களுக்கு வருகிற க்லேஸ மறியாமையாலும் வந்த க்லேஸம் தாங்கள் தாங்கள் தவிர்த்துக் கொள்ள மாட்டாத அஸக்தியாலும் (இவை போமிடத்தில் ஸர்வேஸ்வரனே போக்க வேண்டும் படியான ஸாபேக்ஷதையாலும் இப்படி மஹாபாரத வசந ஸித்தமாக அஜ்ஞாநாஸக்தி ஸாபேக்ஷங்களையும். ஆதி-ஸப்த த்தாலே அவர்களுடைய கர்ம வஸ்யதையையையும். (இலிங்கத்து விளம்பும் பாஹ்ய குத்ருஷ்டி தமோ நிஷ்டதையையும் சொல்லி) ” இலிங்கத்திட்ட புராணத்தீரும்” (திருவாய்மொழி 4-10-5) என்றும், “விளம்புமாறு சமயமும்” (திருவாய்மொழி 4-10-9) என்றும் சொல்லுகிறவிவை “யந்மயஞ்ச ஐகத் ஸர்வம்” (ஸ்ரீவிஷ்ணுபுராணம் 1-1-5) என்று ப்ரஸ்நம் பண்ண” விஷ்ணோஸ் ஸகா ஸாதுத்பூதம்’ (ஸ்ரீவிஷ்ணுபுராணம் 1-1-41) என்று கோல் விழுக்காட்டிலே உத்தரமாகை யன்றிக்கே எருமையை யானையாகக் கவிபாடவேணு மென்பாரைப் போலே லிங்க மென்றொரு வ்யக்தியை நிர்தேஸித்து, இதுக்குத்கர்ஷம் தேடிச் சொல்ல வேணுமென்று கேட்கிறவனும் தமோபிபூதனாய்க் கேட்கச் சொல்லுகிறவர்களும் தமோபிபூதராய்ச் சொல்ல லிங்க விஷயமாக உத்கர்ஷம் தேடியிட்ட குத்ருஷ்டி ஸ்ம்ருதிகளென்ன, ப்ரமாணாநுகூலமான தர்க்க மல்லாமையாலே கேவலம் உக்தி ஸாரமான பாஹ்யருடையவும் மதங்களென்ன, இவை “யா வேத பாஹ்யா ஸ்ம்ருதய: யாச்ச காச்ச குத்ருஷ்டய: தாஸ் ஸர்வா நிஷ்ப்பலா: ப்ரேத்ய தமோ நிஷ்டாஹி தா: ஸ்ம்ருதா:” (மநுஸ்ம்ருதி 12-95) என்கிறபடியே தமோ நிஷ்டங்களென்னுமிடத்தையும் சொல்லி, (ஓடிக் கண்டீர்) “ஓடியோடி வழியேறிக் கண்டீர்;” (திருவாய்மொழி 4-10-10) “கதாகதம் காமகாமா லபந்தே” (6. தை 9-21 என்கிறபடியே ஸ்வர்க்க நரகங்களிலே போவது கர்ப்பத்தேற வருவதாய்க் கொண்டு அநேக ஐந்மங்கள் தேவதாந்தரங்களை ஸப்ரகாரமாக த்ரிவித கரணங்களாலும் ஆஸ்ரயித்து அவ்வாஸ்ரயணமும் முடிய நடத்தி தத் பலமும் கண்டிகோள்; (கண்டும் தெளிய கில்லீர்) இவனுடைய ஐகந் நிகரணாதி, திவ்ய சேஷ்டிதங்களை ஸமாஸ்த்ர த்வாரா ப்ரத்யக்ஷித்தும் இவனே ஸர்வ ஸமாஸ்ரயணீயனென்று தெளிய மாட்டுகிறிலிகோள். (அறிந்தறிந்தோடுமின்) உங்களை யிங்ஙனே வைத்தது ஸதஸத்கர்ம காரிகளான ஜந்துக்கள் அவ்வோ கர்மங்களை அநுபவிக்கக் கடவதான ஸாஸ்த்ர மர்யாதை, அழியுமென்று. “மம மாயா துரத்யயா” (கீதை 7-14) என்கிறபடியே இதுவும் அவனுடைய மாயை என்றறிந்தும், மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே” (கீதை 7-14) என்கிறபடியே மாயாதரணோபாயம் அவன் திருவடிகளை யாஸ்ரயிக்கையே என்றறிந்து அவனை யாஸ்ரயித்துத் தப்பப் பாருங்கோள். (ஆட் செய்வதே உறுவதாவதென்று) “நீள்குடக் கூத்தனுக்கா ட் செய்வதே உறுவது” (திருவாய்மொழி 4-10-10)என்று ஆஸ்சர்யமான குண சேஷ்டிதங்களை உடையவனுக்கு அடிமை செய்கையே இவ் வாத்மாவுக்குச் சீரியதும் ஸு-ஸூமும் என்று (விரக்தி பூர்வகமாக ஆஸ்ரயணத்தை ருசிப்பிக்கிறார் நாலாம் பத்தில்) ப்ரயோஜநாந்தரங்கள் க்ஷத்ர தேவதைகள் பாஹ்ய குத்ருஷ்டிகள் என்கிற இவற்றிலுண்டான விரக்தி பூர்வகமாக ஐகத் காரணத்வாதிகளான ப்ரமாணோபபத்திகளாலே பகவத் ஸமாஸ்ரயணத்தை ஸம்ஸாரிகளுக்கு உபதேஸித்து ஸூசிப்பிக்கிறார் என்கிறார் நாலாம் பத்தில் –
223-(1-)ஆவா வென்று தானே தன் அடியார்க்கு செய்யும் தொல் அருள் என்று பரத்வாதிகளை உடையவன் எவ்விடத்தான் என்னும் பாவியர்க்கும் இருகரையும் அழிக்கும் க்ருபா பிரவாஹம் உடையவன் பொய் கூத்து வஞ்சக் களவு தவிர முற்றவும் தானாய் உன்னை விட்டு என்னப் பண்ணின விரக்தி பல பரமாத்ம ராகம் (2)-பேர் அமர் பின்னின்று கழிய மிக்கு யானே என்ன வாய்ந்து ஆற்றகில்லாது நீராய் மெலிய ஊடு புக்கு வளர (3-)விஷ வருஷ பலங்கள் கை கூடினவர் அடிமை புக்காரையும் ஆட் செய்வாரையும் காண லோக த்வீ பாந்தரங்களிலும் நின்றும் போந்த தேவர் குழாம் களைக் கண்டு காப்பிட்டு பிரகலாதர் விபீஷணர் சொல் கேளாத அரக்கர் அசுரர் போல்வாரை தடவி பிடித்து (4-)தேச கால தோஷம் போக எங்கும் இடம் கொண்ட வர்களை மேவித் தொழுது உஜ்ஜீவியும் கோள் நீங்கள் நிறுத்துகிறவர்களை தேவதைகளாக நிறுதினவனை (5)-மேவிப் பரம்பும் அவரோடு ஒக்க தொழில் யுக தோஷம் இல்லையாம் என்று விஷ்ணு பக்தி பரராக்கி கண்ணுக்கு இனியன காட்டலாம் படியானார் கண்ணிலே நோக்கிக் காணும் பக்தி சித்தாஞ்சனத்தை இடுகிறார் ஐஞ்சாம் பத்தில்-
கீழ்ச் சொன்ன பரத்வாதிகளால் வந்த அவனுடைய உத்கர்ஷத்தையும் தம்முடைய நிகர்ஷத்தையு மநுஸந்தித்து அகல்வாரளவிலும் மேல் விழுந்து விஷயீகரிக்கும்படி பரம க்ருபாவானான ஸர்வேஸ்வரன் கீழிவர்க்குப் பிறப்பித்த விரக்தி பலமான ஸ்வ விஷயமான பக்தியை பரம்பரயா அபிவிருத்தமாக்க அந்த பக்தியையும் பாகவத ஸமாகமத்தை யுமுடையரான இவர் திருத்தின தம்மையும் திருந்தின ஸ்ரீவைஷ்ணவர்களையும் காண்கைக்கு வந்த நித்ய ஸூரிகளையும் ஸ்வேத த்வீப வாஸிகளான ஸித்தரையும் கண்டு மங்களாஸாஸநம் பண்ணி திருந்தாத ஆஸுர ப்ரக்ருதிகளையும் பகவத் பாகவத வைபவத்தையும் உபதேஸித்துத் திருத்தி பாகவத ஸமாஜம் தர்ஸநீயமாம்படியான ஜ்ஞாநம் பிறந்தார்க்கும் ப்ராப்ய த்வரைக் கடியான பக்தியையும் உபதேஸித்துத் தலைக் கட்டுகிறார் என்கிறார்-
(ஆவாவித்யாதி,)“ஆவாவென்றருள்செய்து’‘ (திருவாய்மொழி 5-1-9) என்றும், “தானே இன்னருள் செய்து” (திருவாய்மொழி 5-1-10) என்றும் “கலியுக மொன்றுமின்றிக்கே தன்னடியார்க் கருள் செய்யும்”(திருவாய்மொழி 5-2-11 என்றும் “தொல்லருள் நல் வினையால்” (திருவாய்மொழி 5-9-10) என்றும் சொல்லுகையாலே “அம்மானாழிப்பிரான் அவனெவ்விடத்தான் யானார் எம்மா பாவியற்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர் (திருவாய்மொழி 5-1-7) என்று கையும் திருவாழியுமான வழகை நித்ய ஸூரிகளுக்குக் காட்சி கொடுத்துக் கொண்டு அங்குள்ளார் பரிமாற விருக்கிறவன் எவ்வளவிலே, நித்ய ஸம்ஸாரிகளுக்கும் இவ்வருகான நானெவ்வளவிலேன்; கீழ்ச் சொன்ன அவனுடைய பரத்வ காரணத்வ வ்யாபகத்வ நியந்த்ருத்வாதிகளாலே வந்த உத்கர்ஷத்தையும் தங்களுடைய நிகர்ஷத்தையும் அநுஸந்தித்து அகலும்படியான எத்தனையேனும் மஹா பாபிகளளவிலும் ஐயோ ஐயோ வென்று அர்த்தித்வ நிரபேக்ஷமாக தன் பக்கலிலே ந்யஸ்த பரரானார்க்கு கால தோஷம் தட்டாதபடி பண்ணும் ஸ்வாபாவிக க்ருபையை உடையனாகையாலே “விதி வாய்க்கின்று வாய்க்கும்” (திருவாய்மொழி 5-1-7) என்கிறபடியே தன்னுடைய நிரங்குஸ ஸ்வாதந்த்ர்யமாகிற கரையையும் இவனுடைய ஒளபாதிக ஸ்வாதந்த்ர்யமாகிற கரையும் அழியப் பெருகும்படியான க்ருபா ப்ரவாஹத்தை யுடைய ஸர்வேஸ்வரன். (பொய்க் கூத்து வஞ்சக் களவு தவிர) “பொய்யே கைம்மை சொல்லி” (திருவாய்மொழி 5-1-1 என்றும் “என்றென்றே சில கூத்துச் சொல்ல” (திருவாய்மொழி 5-1-2) என்றும் “என்றென்றே உன்னையும் வஞ்சிக்கும் கள்ள மனம் தவிர்ந்தே” (திருவாய்மொழி 5-1-3) என்கிறபடியே மெய் கலவாத பெரும் பொய்களைச் சொல்லி ஸர்வஜ்ஞனாய் ஸர்வாந்தர்யாமியான உன்னையும் பகட்டும் க்ருத்ரிம யுக்தமான மநஸ்ஸைத் தவிர்ந்தே என்று இவர் தவிரும்படி. (முற்றவும் தானாய் உன்னை விட்டென்னப் பண்ணின விரக்தி பல பரமாத்ம ராகம்) “என்னை முற்றவும் தானானான்” (திருவாய்மொழி 5-1-10) என்று எனக்கு ஸர்வ வித போக்யமுமான “உன்னை விட்டென் கொள்வன் ” (திருவாய்மொழி 5-1-3) என்று நான் விட்டவன்றும் விட மாட்டாத உன்னை யொழிய துராராதமாய் ஆராதித்தாலும் கிடைப்ப தொன்றில்லாத விஷயத்தைப் பற்றவோ என்று இவர் தாமே பேசும்படி “கண்ட சதிர் கண்டொழிந்தேன்” (திருவாய்மொழி 4-9-10) என்கிறபடியே தன்னுடைய போக்யதையாலே ஸ்வ வ்யதிரிக்தங்களை யுபேக்ஷிக்கும்படி கீழில் பத்தில் பிறந்த விரக்திக்குப் பலமான ‘ பரமாத்மநி யோரக்த: விரக்த: அபரமாத்மநி” (பார்ஹஸ்பத்ய ஸ்ம்ருதி) என்கிறபடியே அபரமாத்ம விஷயமான விரக்திக்குப் பலமான பரமாத்ம விஷய ராகம். (பேரமர் இத்யாதி, ஊடு புக்கு வளர) “பேரமர் காதல்” (திருவாய்மொழி 5-3-4) “பின்னின்ற காதல்” (திருவாய்மொழி 5-4-6) என்று அபரிச்சேத்யமாய்ப் பொருந்திப் பிடரி பிடித்துக் கொண்டு நின்று நெஞ்சை முடிப்பதாய்க் “கழிய மிக்கதோர் காதலளிவள்” (திருவாய்மொழி 5-5-10) என்று பார்ஸ்வஸ்த்தரும் பேசும்படி மிகவும் கை கழிந்து, (யானே யென்ன வாய்ந்து) “கடல் ஞாலம் செய்தேனும் யானே” (திருவாய்மொழி 5-6-1 என்றும் “வாய்ந்த வழுதி வளநாடன்” (திருவாய்மொழி 5-6-1) என்றும் “துஷ்ட காளிய” இத்யாதி. இப்படி இவனுடைய ஜகத் காரணத்வாதி, அத்புத கர்மங்களை நானே செய்தேன் என்று அநுகார முகத்தாலே அவனை பாவித்துப் பேசும்படி திட்டி (ஆற்றகில்லாது) “உன்னை விட்டொன்றும் ஆற்றகிற்கின்றிலேன்” (திருவாய்மொழி 5-7-1) என்று அவனை யொழிய ஒரு ப்ரகாரத்தாலும் ஆற்ற மாட்டாத படியாய், (நீராய்) “ஆராவமுதே அடியேனுடலம் நீராய்” (திருவாய்மொழி 5-8-1) என்று போக்யதாதிஸயத்தாலே வந்த ப்ராவண்யத்தாலே அநுபவோபகரணமான ஸரீரம் ஸிதிலமாம்படியாய், (மெலிய) “வைகலும் வினையேன் மெலிய-(திருவாய்மொழி 5-9-1 அது தான் ஒருநாளன்றிக்கே ஸர்வ காலமும் மெலியும்படியாய், (ஊடு புக்கு வளர) “நிறந்தனூடுபுக்கெனதாவியை உருக்கி (திருவாய்மொழி 5-10-1) என்று மர்மத்திலே புக்கு ஆத்மாவை த்ரவ த்ரவ்யமாக்கி முடிக்கும்படி அபிவிருத்தமாய் (விஷ வ்ருக்ஷ பலங்கள் கை கூடினவர்) “ஸம்ஸார விஷ வ்ருக்ஸ்ய த்வே பலே ஹ்யம்ருதோபமே கதாசித் கேஸவே பக்திஸ் தத் பக்தைர்வா ஸமாகம:’ என்கிறபடியே ஸம்ஸார விஷ வ்ருக்ஷ பலம் இப்படிப்பட்ட பகவத் பக்தியும் பாகவத ஸமாகமமான இவை இரண்டும் கை புகுந்த விவர். (அடிமை புக்காரையும் ஆட்செய்வாரையுங் காண லோக த்வீபாந்தரங்களில் நின்றும் போந்த தேவர் குழாங்களைக் கண்டு காப்பிட்டு) ஒன்றுந் தேவிலே ‘ பாடியாடிப் பரவிச் செல்மின்கள்” (திருவாய்மொழி 410-9) “தெய்வம் மற்றில்லை” (திருவாய்மொழி 4-10-3) “நாயகனவனே” (திருவாய்மொழி 4-10-4) “ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே” (திருவாய்மொழி 4-10-5) ” அறிந்தோடுமினோ” (திருவாய்மொழி 4-10-6) “ஆடு புட்கொடி ஆதிமூர்த்திக் கடிமை புகுவதுவே” (திருவாய்மொழி 4-10-7) “உளங்கொள் ஞானத்து வைம்மின்” (திருவாய்மொழி 4-10-9)”ஆட்செய்வதே உறுவதாவது” (திருவாய்மொழி 4-10-10) என்று இப்படி உபதேஸிக்கக் கேட்டுத் திருந்தி அடிமை புக்க ஸ்ரீவைஷ்ணவர்களையும் “ஆட்செய்தாழிப் பிரானைச் சேர்ந்தவன்” (திருவாய்மொழி 4-10-11 என்று இப்படித் திருத்துகையாலே அடிமை செய்தாரான தம்மையும் காண்கைக்கு வந்த “வைகுந்தன் பூதங்களேயாய்” (திருவாய்மொழி 5-2-5) “தடங்கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய்” (திருவாய்மொழி 5-2-4) “தேவர்கள் தாமும் புகுந்து குழுமித் தேவர் குழாங்கள்” (திருவாய்மொழி 5-2-3 என்று லோகாந்தரமான ஸ்ரீவைகுண்ட,த்திலே நின்றும் போந்தவர்களுமாய் த்வீபாந்தரமான க்ஷீராப்தியில் நின்றும் போந்தவர்களுமான நித்ய ஸூரிகளான திரள்களை “கண்டோம் கண்டோம் கண்டோம்” (திருவாய்மொழி 5-2-2) என்று கண்ணுக்கினியதா யிருக்கையாலே கண்டோம் என்று பல காலும் சொல்லும்படி கண்டு பொலிக பொலிக பொலிக” (திருவாய்மொழி 5-2-1 என்று அத் திரள் அபிவிருத்த மாயிடுக என்று மங்களாஸாஸநம் பண்ணின விவர்-(ப்ரஹ்லாத விபீஷணர் சொல் கேளாத அரக்கரசுரர் போல்வாரைத் தடவிப் பிடித்து) “அரக்கரசுரர் பிறந்தீர் உள்ளீரேல்” (திருவாய்மொழி 5-2-5) என்று “த்வய்யஸ்தி மய்யஸ்தி” என்று ப்ரஹ்லாதாழ்வான் உபதேஸிக்கக் கேட்டுத் திருந்தாத ஆஸூர ப்ரக்ருதியான ஹிரண்யன் போல்வாரையும், “ப்ரதீயதாம் தாஸரதாய மைதிலீ ” (ராயு. 14-34) என்று ஸ்ரீவிபீஷணப் பெருமாளுடைய உபதேஸம் கேட்டுத் திருந்தாத ராக்ஷஸ ப்ரக்ருதியான ராவணன் போல்வாரையும் தேடிப் பிடித்து. (தேஸ கால தோஷம் போக எங்குமிடங் கொண்டவர்களை மேவித் தொழுது உஜ்ஜீவியுங்கோள்) “கொன்றுயிருண்ணும் விசாதி பகை பசி தீயன வெல்லாம் நின்றிவ் வுலகில் கடிவான் நேமிப் பிரான் தமர் போந்தார் (திருவாய்மொழி 5-2-6) என்றும் “திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து” (திருவாய்மொழி 5-2-3) என்றும் சொல்லுகிறபடியே ஸரீரத்தை முடித்து ப்ராணாபஹாரம் பண்ணக் கடவதான வ்யாதி பகை பசி முதலான தேஹ தோஷமும் “பவிஷ்யத்யத ரோத்தரம்” என்கிறபடியே பதார்த்த ஸ்வபாவங்கள் வேறுபட்டு வரக் கடவதான கலி ப்ரயுக்தமான கால தோஷமும் தங்கள் ஸஞ்சாரத்தாலே போம்படி “திரியப் புகுந்திசை பாடி எங்குமிடங் கொண்டனவே” (திருவாய்மொழி 5-2-3) என்கிறபடியே பகவதநுபவ ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே பெரிய ஆராவாரத்தை யுடைத்தாம்படி விபரீதர்க்கு இடமில்லாதபடி விஸ்ம்ருதராய்க் கொண்டு “மறுத் திருமார்வனவன்தன் பூதங்கள் கீதங்கள்பாடி வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுதுய்ம்மினீரே’ (திருவாய்மொழி 5-2-8) என்று ஸ்ரீய:பதியாய் ஸ்ரீவத்ஸ வக்ஷஸ்தனான ஸர்வேஸ்வரனுடைய குணங்களைத் தங்களுக்கு ஸத்தா தாரகமாக உடையரான ஸ்ரீவைஷ்ணவர்கள் இந்த விபூதி ஸ்வபாவத்தாலே வந்த வெறுப்பற்று எங்கும் விஸ்த்ருதரானார்கள். அவர்களை அநந்ய ப்ரயோஜநராய்க் கொண்டு கட்டி நீங்கள் உஜ்ஜீவியுங்கோள்; அவ்வளவு போகமாட்டாதே தேவதாந்தர ப்ராவண்யத்தாலே பகவத் வைபவமறிகைக்கீடான அளவிலிகளாகில் (நீங்கள் நிறுத்துகிறவர்களை தேவதைகளாக நிறுத்தினவன்) “நிறுத்தி நும்முள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள்” (திருவாய்மொழி 5-2-7) என்றும் அஸதஸ்ய மாகையாலே பிறரறியாதபடி ராஜஸ தாமஸ யுக்தமான உங்கள் நெஞ்சாலே அவற்றுக்கு ஸ்வத:உத்கர்ஷ மில்லாமையாலே நீங்கள் சேமம் சாத்தி நிறுத்தி த்யாநம் பண்ணுகிற தேவதைகளை “நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே” (திருவாய்மொழி 5-2-8) என்று ராஜாவானவன் ஊர் தோறும் விடைச் சேவகரை நிறுத்துமா போலே உங்களுக் காஸ்ரயணீயராக நிறுத்தினான் அந்த ஸர்வேஸ்வரன் தானே; அவனை (மேவிப் பரம்புமவரோ டொக்கத் தொழில் யுக தோஷமில்லையா மென்று) “நக்கபிரானோ டயனு மிந்திரனும் முதலாகத் தொக்க வமரர் குழாங்கள் கண்ணன் திரு மூர்த்தியை மேவி மிக்க உலகுகள் தோறும் எங்கும் பரந்தன ஓக்கத் தொழுக ஒற்றிராகில் கலியுகமொன்றுமில்லை” (திருவாய்மொழி 5-2-10) என்று ப்ரஹ்மேந்த்ர ருத்ராதிகளான தேவதா ஸமூஹங்கள் ஸர்வ ஸுலபனான ஸர்வேஸ்வரனுடைய ஸூபாஸ்ரயமான விக்ரஹத்தை யாஸ்ரயித்துத் தங்கள் லோகங்களிலே விஸ்த்ருதரானார்கள்; அவர்களைப் போலே நீங்களும் அவனை யாஸ்ரயிக்கப் பெறில் விபரீத ப்ரவர்த்தகமான யுக தோஷம் உங்களுக்குத் தட்டாதென்று (விஷ்ணு பக்தி பரராக்கி) என்றிப்படி உபதேஸித்து “விஷ்ணு பத்தி பரோ தேவ: விபரீதஸ் ததா ஸர; என்று பகவத் ப க்தி யுக்தராம்படி திருத்தி, (கண்ணுக்கினியன காட்டலாம்படி யானார் கண்ணிலே நோக்கிக் காணும் பக்தி ஸித்தாஞ்ஜனத்தை இடுகிறார் அஞ்சாம் பத்தில்) “கண்ணுக்கினியன கண்டோம் தொண்டீர் எல்லீரும் வாரீர்” (திருவாய்மொழி 5-2-2) என்று பாகவத ஸமாஜ தர்ஸனம் இனிதாம்படி அவ் விஷயத்தில் சாபலமுடையார்க்கு “என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே” (திருவாய்மொழி 5-5-2) என்று உபாய தஸையிலே நின்று ப்ராப்ய தஸையிலே நிற்கிற தம்மைப் பொடியும்படியான அவர்களுடைய உபாயாத்யவஸாய ஜ்ஞாநத்தின் மேலே “மநஸி விலஸ தாக்ஷ்ணா பக்தி ஸித்தாஞ்ஜநேந” ஸ்ரீகுண ரத்ந கோசம் 12) என்கிறபடியே ப்ராப்ய வைலக்ஷண்யத்தை விஷயீகரித்த பக்தியை உபதேஸிக்கிறார் என்கிறார் அஞ்சாம் பத்தில்
224-(1)என்னையும் யாவர்க்கும் சுரர்க்காய் அடியீர் வாழ்மின் என்று கருணையாலே சர்வ லோக பூதேப்ய -என்றவை கடலோசையும் கழுத்துக்கு மேலுமாகாமல் உபாயத்வம் கல்வெட்டாக்குகிற சரண்யன் (2)அஜ்ஞ்ஞான சக்தி யாதாத்ம்ய ஜ்ஞானங்கள் அளவால் அன்றிக்கே அங்குற்றேன் என்னான் புணராய் என்னும் படி மெய்யமர் பக்தி பூம பலமாகவும் அநந்ய கதித்வம் உடைய தமக்கு (3) பாதமே சரணாக்க அவையே சேமம் கொண்டு ஏக சிந்தையராய் திர்யக்குகளை இட்டு ஸ்வ அபிப்ராயத்தை நிவேதித்து விளம்ப ரோஷம் உபாயத்தாலே அழிய (4) உருகாமல் வரித்ததும் நண்ணி வணங்க பலித்தவாறே சப்ரகாரமாக சக்ருத் கரணீயம் என்று புராண பௌ ராணிகர் த்யாஜ்ய அம்சம் ஆக்கின (5) சித் அசித் பிராப்ய பிராபக ஆபாசங்களைக் கை வலிந்து கை கழலக் கண்டும் எல்லாம் கிடக்க நினையாத கன்றும் ஆளீர் மேவீர் ஊதீர் என்று ததீய சேஷம் ஆக்கியும் -புறத்திட்டு காட்டி என்று பிரசங்கிக்கில் முடியும் படி விட்டு (6) தந்தை தாய் உண்ணும் சோறு மாநிதி பூவை யாவையும் ஒன்றே ஆக்கி (7)தளர்வேனோ திரிவேனோ குறுகாதோ முதல்வாவோ என்னும் ஆர்த்தியோடே (8) திரி விக்ரமனாய்க் குறள் கோலப் பிரானாய் அடியை மூன்றை இரந்த வன் கள்வன் கண் முகப்பே அகல்கொள் திசை வையம் விண்ணும் தட வந்த தடம் தாமரைகளை (9) இணைத் தாமரைகள் காண இமையோரும் வரும் படி சென்று சேர்ந்த உலகத்திலதத்தே கண்டு அகலகில்லேன் என்று பூர்வ வாக்யம் அனுசந்தித்தவர் (10) பிணக்கறத் தொ சசோக சஜாதீயர்க்குத் டங்கி வேத புனித விறுதி சொன்ன சாத்ய உபாய ஸ்ரவண (11)தந்தனன் மற்றோர் களை கண் இலம் புகுந்தேன் என்று ஸ்வ ஸித்த உபாய நிஷ்டையை உக்த்ய அனுஷ்டானங்களாலே காட்டுகிறார் ஆறாம் பத்தில் —
தன்னுடைய பரம க்ருபையாலே ஸர்வரும் வந்தாஸ்ரயிக்கும்படி யிருக்கிற ஸர்வ ஸரண்யனான ஸர்வேஸ்வரன் பக்தி பாரவஸ்யத்தாலே அநந்ய கதிகளான இவர்க்குத் தன் திருவடிகளே நிரபேக்ஷோ பாயமென்னுமிடத்தைக் காட்டிக் கொடுக்க, அந்த உபாயத்திலே விச்சேதமில்லாதபடி வ்யவஸாயத்தை யுடையராய்த் தம்முடைய வ்யவஸாயத்தை ௧டகர் முகத்தாலே யவனுக்கறிவித்துத் தம்முடைய விளம்ப அக்ஷமத்வத்தால் வந்த இன்னாப்பைப் பரிஹரித்தவனுடைய ஸாமர்த்யத்தை அநுஸந்தித்து குணாநுபவத்துக்குப் பண்ணின ப்ரபத்தியும் பலித்தவாறே ப்ராப்திக்குப் ப்ரபத்தி பண்ணுவதாக ஸித்தோபாய ஸ்வீகாரம் இதரோபாய த்யாக பூர்வகமாக வேண்டுகையாலே பெளராணிக வசந ப்ரக்ரியாலே உபாய விரோதி களான த்யாஜ்யங்களை வாஸநையோடே அவற்றினுடைய ப்ரஸங்கமும் அஸஹ்யமாம்படி விட்டு விட்டவை யெல்லாம் தமக்கு ப்ராப்த விஷயமே யாக்கி நிரதிஸயமான பர பக்தியோடே திருவுலகளந்த ஸர்வ ஸுலபமான திருவடிகளை நித்ய ஸூரிகளும் வந்தனுபவிக்கும்படி நிற்கிற திருமலையிலே கண்டு பூர்வ வாக்ய ப்ரக்ரியையாலே ஸரணம் புக்கவர் பத்துடையடியவரிலே தொடங்கி அஞ்சாம் பத்தளவாக உபதேஸித்த பக்த் யுபாயத்தினுடைய துஷ்கரத்வாதி தோஷாநுஸந்தானத்தாலே ஸோகம் ஐநிக்கும்படியான அதிகாரம் பிறந்தவர்களுக்குத் தம்முடைய ப்ரபத்தி நிஷ்டையை ப்ரகாஸிப்பிக்கிறார் என்கிறார் –
(என்னையும் இத்யாதி, சரண்யனென்கிற தளவாக) “ஏறு சேவகனார்க்கு என்னையும் உளளென்மின்௧ளே” (திருவாய்மொழி 6-1-10) “யாவர்க்கும் வன் சரணே” (திருவாய்மொழி 6-3-7) ‘வன் சரண் சுரர்க்காய்” (திருவாய்மொழி 6-3-8) என்று ஆர்த்த ரக்ஷ்ணத்திலே தீக்ஷித்திருக்கிறவனுக்கு ரக்ஷ்ய வர்க்கத்திலே நானுமொருத்தி உளள் என்று சொல்லுங்கோள் என்றும், திருவிண்ணகரிலே நின்றருளினவனுடைய திருவடிகளல்லது ஸர்வர்க்கும் வலிய ரக்ஷை இல்லை; தேவர்களுக்கும் வலிய ரக்ஷ என்று இவர் தாமே பேசும்படி “அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென்றருள் கொடுக்கும்” (திருவாய்மொழி 6-10-11) என்று நமக்கு ஸேஷபூதராயுள்ளா ரெல்லாரும் நம்மடியின் கீழே அநந்ய ப்ரயோஜநராய்ப் புகுந்து உஜ்ஜீவியுங்கோள் என்று அவன் தானே அருளிச் செய்யும்படியான க்ருபையாலே (ஸர்வ லோக பூதேப்ய: என்கிறவை கடலோசையும் கழுத்துக்கு மேலுமாகாமல்) “ஸர்வலோக ஸரண்யாய ராகவாய மஹாத்மநே நிவேதயத மாம் க்ஷிப்ரம் விபீஷணமுபஸ்த்திதம்” ரா.யு. 17-14 என்றும், “ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதிச யாசதே அபயம் ஸர்வ பூதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம் மம” (ரா.யு. 18-33) என்றும் சொல்லுகிற ஸரணாக தனுடையவும் ஸரண்யனுடையவும் உக்தி ஸமுத்ர கோஷம் போலே நிரர்த்தகமாகாத படியாகவும், கண்டாதுபரியாகாத படியாகவும் “வானவர் வானவர் கோனொடும் நமன்றெழும் திருவேங்கடம்” (திருவாய்மொழி 3-3-7 என்றும் “வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடம்” (முதல் திருவந்தாதி 26) என்றும் “வானரமும் வேடுமுடை வேங்கடம்” நான்முகன் திருவந்தாதி 47) என்றும் “கண்டு வணங்கும் களிறு” (மூன்றாம் திருவந்தாதி 70) என்றும் சொல்லுகிறபடியே நித்ய ஸூரிகளோடு நித்ய ஸம்ஸாரிகளோடு திர்யக்குகளோடு வாசியற ஆஸ்ரயிக்கலாம்படி நிற்கையாலே தன்னுடைய ஸமாஸ்ரயணீயத்வம் ஸிலா லிகிதமாம்படி திருமலையிலே யெழுந்தருளி நிற்கிற அநாலோசித விஸேஷ அஸேஷ லோக ஸரண்யனான ஸர்வேஸ்வரன் (அஜ்ஞாந அஸக்தியித்யாதி, அநந்ய கதித்வமுடைய தமக்கு) “அவித்யாதோ தேவே பரிப்ருட தயா வா விதி தயா ஸ்வ பக்தேர் பூம்நா வா ஐகதி கதி மந்யா விதுஷாம் கதிர் கம்யஸ் சாஸெள ஹரிரிதி ஜிதந்தாஹ்வய மநோ : ரஹஸ்யம் வ்யாஜஹ்ரே ஸ கலு பகவாந் சவ்நகமுநி:” (பட்டர் ஸ்ரீஸூக்தி)என்று உபாயாந்தரங்களை அறிகைக்கும் அநுஷ்டிக்கைக்கு மீடான ஜ்ஞாந ஸக்திகளில்லாத அளவால் வந்த அந்த உபாயாந்தரங்களில் அந்வயமே யன்றிக்கே ஸ்வரூப பாரதந்த்ர்யத்தாலே பகவதேக ரஷ்யமாகை யொழிய வ்யதிரிக்தோபாயங்கள் ஸ்வரூப விருத்தங்கள் என்கிற யாதாத்ம்ய ஞானத்தாலே “யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்-(திருவாய் -5-8-3) என்று அவற்றிலுண்டான அநந்வயத் தளவன்றிக்கே அங்குற்றேனல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான எங்குற்றேனுமல்லேன்‘ (திருவாய்மொழி 5-7-2) “என் நான் செய்கேன்” (திருவாய்மொழி 5-8-3) “புணரா நின்ற மரமேழ் அன்றெய்த ஒரு வில் வலவாவோ” திருவாய்மொழி 6-10-5) என்று நித்ய ஸூரிகள் ஸம்ஸாரத்திலே உலாவினாப் போலே ஸித்த ஸாதநம் பண்ணி வர்த்திக்கிறேனல்லேன் ஸாதநாநுஷ்டாநம் பண்ணுகிறவர்களிலே ஒருவனாய் வர்த்திக்கிறேனல்லேன், அன்றிக்கே உன்னை அநுபவிக்கிற நித்ய ஸூரிகளிலே ஒருவனாய் அங்கே வர்த்திக்கிறேனல்லேன் உன்னை யொழிய ஸப்தாதி, விஷயாநுப,வம் பண்ணுகிற ஸம்ஸாரிகளிலேயாய் இங்கே வர்த்திக்கிறேனல்லேன். உன்னுடைய ஸெளந்தர்யாதி களிலே ஈடுபட்டு உன்னைத் தான் வேணுமென்று ஆசையாலே பல ஹீநனாய்த் தளர்ந்து இனி உபாயாநுஷ்டாநம் பண்ண க்ஷமனல்லேன்; உன் திருவடிகளைக் கிட்டுகைக்கு என்னால் செய்யலாவதில்லை; எனக்கும் செயலுக்கும் என்ன சேர்த்தி யுண்டு? உன்னுடைய ரக்ஷணத்திலே அதி ஸங்கை பண்ணின மஹா ராஜருடைய ஸங்கா நிராகரணார்த்தமாக இலக்குக் குறிக்க வொண்ணாதபடி திரண்டு நின்ற மராமரங்கள் ஏழையும் எய்த ஏக வீரனே ஓ என்று கூப்பிடும்படி “மெய் யமர் காதல்” (திருவாய்மொழி 6-8-2) என்று அவனுடைய திருமேனியோடே யமர வேண்டும்படியாய்த் தம்முடம்போடே அவனமர வேண்டும் படியாய் ஸத்யமாய்ப் பொருந்தி ஸ்வரூபாநுபந்தியாய் கீழில் பத்தில் தமக்குப் பிறந்த பக்தி பாரவஸ்யத்தினுடைய பலமாகவுமாம். உபாயாந்தரத்துக் கன்றிக்கே “களை கண் மற்றிலேன்” (திருவாய்மொழி 5-8-8) என்னும்படி அநந்ய கதித்வமுடைய இவர் தமக்கு (பாதமே சரணாக்க அவையே சேமங்கொண்டேக சிந்தையராய் ) “ஆறெனெக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” (திருவாய்மொழி 5-7-10) என்று தன் திருவடிகளே ஸஹாயாந்தர நிரபேஷமான ஸாதநமென்னுமிடத்தைக் காட்டிக் கொடுக்க; “கழல்களவையே சரணாகக் கொண்ட” (திருவாய்மொழி 5-8-11 என்றும், “அடிமேல் சேமங்கொள் தென் குருகூர்ச் சடகோபன்” (திருவாய்மொழி 5-9-11) என்றும், “நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கென்று நாடொறு மேக சிந்தையனாய்” (திருவாய்மொழி 5-10-11 என்றும் சொல்லுகிறபடியே விரோதி நிரஸந ஸீலனாயிருக்கிறவன் திருவடிகளே நிரபேக்ஷோபாய மென்கிற ஏக ரூபமான வ்யவஸாயத்தை யுடையராய் , (திர்யக்குக்களை யிட்டு ஸ்வாபிப்ராயத்தை நிவேதித்து) “வைகல் பூங்கழிவாய் வந்து மேயுங் குருகினங்காள் வினையாட்டியேன் காதன்மை கைகள் கூப்பிச் சொல்லீர் ” (திருவாய்மொழி 6-1-1) என்றும், “சேவகனார்க் கென்னை யுமுளளென்மின்களே’ (திருவாய்மொழி 6-1-10) என்றும் பெற்றல்லது தரியாத அதி மாத்ர ப்ராவண்ய முடையரா யிருக்கச் செய்தேயும், ஸ்வ ரக்ஷணத்தில் அந்வயமில்லாத அத்யந்த பாரதந்த்ர் யத்தினாலே ததேக ரக்ஷ்யமா யிருக்குமென்கிற தம்முடைய கருத்தை, ஸூத்த ஸ்வபா வராய் ஸாகா ஸஞ்சாரிகளாய் மதுகர ப்ரக்ருதிகளாய் பக்ஷபாதிகளாய் ஷட்பத நிஷ்டரான கடகரை யிட்டறிவித்து (விளம்ப ரோஷ முபாயத்தாலே யழிய) இப்படியறிவித்த விடத்திலும் அவன் தாழ்க்க அத்தால் வந்த ப்ரணய ரோஷத்தாலே, அவன் வந்து மேல் விழுந்த வளவிலும், “போகு நம்பீ ” (திருவாய்மொழி 6-2-2) “கழகமேறேல் நம்பீ (திருவாய்மொழி 6-2-6) என்று அவனை உபேஷித்து அவன் முகம் பாராமலிருப்போமென்று சிற்றிலிழைப்பது சிறு சோறடுவதாக, அவனும் தன்னுடைய போக விரோதி யாகையாலே “அழித்தாயுன் திருவடியால்” (திருவாய்மொழி 6-2-9) என்கிறபடியே அந்த அநாதராந்ய பரதைகளை தனக்கும் சரமோபாயமான திருவடிகளாலே உப லக்ஷிதமான விக்ரஹ வைலக்ஷ்ண்யத்தாலே குலைத்த அவனோடே சேர்ந்து. (உருகாமல் வலித்ததும் நண்ணி வணங்க பலித்தவாறே) “உகவையால் நெஞ்சமுள்ளுருகி உன் தாமரைத் தடங்கண் விழிகளின் அகவலைப் படுப்பான் அழித்தாயுன் திருவடியால்” (திருவாய்மொழி 6-2-9) என்றிப்படி அல்லோம் என்ற நம்மைச் சேர்த்துக் கொண்ட தோராஸ்சர்ய மிருந்தபடி யென் என்றுருக, இது தொன்று கண்டோ ஆஸ்சர்யப்படுகிறீர், தன்னில் தான் சேராதபடி விலக்ஷணங்களானவை நம்மோடே சேர்ந்திருக்கிறபடி பாரீர் என்று தன்னுடைய விருத்த விபூதிகத்வத்தை நல்குரவுஞ் செல்விலே காட்டி உருகாதபடி வலிக்கப் பண்ண இவரும் “நல்குரவும்” என்று தொடங்கி “திருவிண்ணகர்க் கண்டேனே” (திருவாய்மொழி 6-3-1) என்று அத்தைக் கண்டு தேறின விதுவும் குரவையாய்ச்சியரிலே “என்ன குறை நமக்கே” (திருவாய்மொழி 6-4-1) என்று தொடங்கி “நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே” (திருவாய்மொழி 6-4-10) என்னும்படி க்ருஷ்ண குண சேஷ்டிதங்களை தரித்து நின்று அநுபவிக்கலாம்படி பலித்தவாறே. ‘உருகாமல் வரித்தும்’ என்று பாடமானபோது பிறந்தவாற்றிலே உன்னைப் பிரிந்த தஸையிலே உன்னுடைய குணாநுஸந்தாநம் பண்ணி தரிக்கலாமோ வென்று பாரா நின்றேன்; “ஊடுபுக்கென தாவியை நின்று நின்றுருக்கி யுண்கின்ற” (திருவாய்மொழி 5-10-10) என்று அவை தானே ஸிதிலமாக்கா நின்றன-தரித்து நின்று குணாநுஸந்தாநம் பண்ணும்படி பண்ணி யருள வேணுமென்றும் “மற்றோர் களை கணிலம் காண்மின்களே” (திருவாய்மொழி 6-3-10) “(நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்” (திருவாய்மொழி 5-10-11 )என்று உபாய வரணம் பண்ணி அந்த வரணமும் என்ன குறை யெனக் கென்று தொடங்கி “விண் மிசைத் தன தாமமே புக மேவிய சோதி தன் தாள் நண்ணி நான் வணங்கப் பெற்றேன் (திருவாய்மொழி 6-4-10) என்று க்ருஷ்ண குண சேஷ்டிதங்களை திவா ராத்ர விபாகமற ப்ரீதி ப்ரேரிதனாய்க் கொண்டு பேசப் பெற்ற எனக்கு என்ன குறையுண்டு, பொய்யாஸநமிடுவார் மல்லரை யிட்டு நெருக்கத் தேடுவார் எதிரம்பு கோர்ப்பாராய்க் கொண்டு இருக்கற இந்த விபூதியிலிராதே “கதஸ் ஸ்வம் ஸ்த்தாந முத்தமம்” என்கிறபடியே பரிவரேயான நிர்பய ஸ்த்தா நத்திலே எழுந்தருளின வ்ருத்தாந்தத்தை அநுஸந்தித்து முறையிலே கிட்டப் பெற்ற வெனக்கு வேறு நிர்வாஹகருண்டோ என்றும்; கர்விக்க வேண்டும்படி பலித்தவாறே என்றுமாம். (ஸப்ரகாரமாக ஸக்ருத் கரணீயமென்று) இதரோபாயத்யாகமாகிற ப்ரகாரத்தோடே ஸித்த ஸாதந ஸ்வீகாரம் “ஸக்ருதேவ” (ராயு. 18-33 என்கிற படியே ஒருக்கால் பண்ண வேணுமென்று பார்த்து. (புராண பெளராணிகர் தயாஜ்யா மஸமாக்கின சித சித் ப்ராப்ய ப்ராபகா பாஸங்களை) புராணேதிஹாஸங்களும் அவற்றை உள்ளபடி யறிகையாலே பெளராணிகரான உடையவரும் –பிதரம் மாதரம் தாராந் புத்ராந் பந்தூந் ஸகீந் குரூந், ரத்நாநி தந தாந்யாநி க்ஷேத்ராணி ச க்ரஹாணிச, ஸர்வ தர்மாம்ஸ்ச ஸந்த்யஜ்ய ஸர்வ காமாம்ஸ்ச ஸாக்ஷராந்” (சரணாகதி கத்யம்) “பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச தநாநி ச பவத் கதம் மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸுகாநிவை த்யக்த்வா புத்ராம்ஸ்ச தாராம் ச ராகவம் ஸரணம் கத: (ரா.யு19-5) என்று த்யாஜ்யாம்ஸமாக்கினவற்றில் பித்ராதிகளான சேதநருடைய ரக்ஷணம் “மாத்ரு தேவோ பவ” (தைத்திர்யோபநிஷத் இத்யாதி ப்படியே ஸாதநாந்தரத்துக்கு உபகாரகமாகையாலே ப்ராபகங்களாயும் அவர்களுடைய வியோகம் அஸஹ்யமாம்படி ப்ரிய விஷயமாகையாலே ப்ராப்யங்களாயு மிருக்கையாலும்; ரத்நாதிகள் உபாயாந்தரத்துக்கு தாநாதி முகத்தாலே ஸஹகாரிகளா யிருக்கையாலே ப்ராபகங்களாயும் தன்னை யழிய மாறியும் இவற்றை ஆர்ஜிக்க வேண்டும்படி ஸ்வயம் ப்ரயோஜநங்க ளாகையாலே ப்ராப்யங்களா யுமிருக்கிற இந்த ப்ராப்ய ப்ராபகாபா ஸங்களை; ஸாக்ஷாத் ப்ராப்ய ப்ராபகங்கள் அல்லாமையாலே ஆபாஸங்களென்கிறது. (கை வலிந்து கை கழலக் கண்டும் எல்லாம் கிடக்க நினையாதகன்றும்) “நம்மைக் கை வலிந்து” (திருவாய்மொழி 6-5-7) “இழந்தது சங்கே” (திருவாய்மொழி 6-6-1) “இதெல்லாம் கடக்க இனிப் போய் எம்மை யொன்றும் நினைத்திலளே” (திருவாய்மொழி 6-7-9) “இன்றெனக்கு உதவாதகன்ற” (திருவாய்மொழி 6-7-6) என்று சிதசித் வர்க்கமான இவற்றைக் கை விட்டும், உறங்கினவன் கையிலே எலுமிச்சம் பழம் போலே ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநத்தாலே தன் கையில் நின்றும் நெகிழும்படி கண்டு “ஸர்வாந் போகாந் பரித்யஜ்ய” என்கிறபடியே இவற்றை மதியாமல் அகன்றும் (ஆளீர் மேவீர் ஊதீர் என்று ததீய ஷோஷமாக்கியும்) “பொன்னுலகாளீரோ” (திருவாய்மொழி 6-8-1 “நெய்யமரின்னடிசல் நிச்சல் பாலொடு மேவீரோ” (திருவாய்மொழி 6-8-2 )“ஓடிவந்தென் குழல்மேலொளி மாமலரூதீரோ” (திருவாய்மொழி 6-8-3) என்று கீழ் தாம் விட்டவிடத்திலும் தம்மை விடாதபடி பற்றிக் கிடக்கிற ஆத்மாத்மீயங்களை பகவத் விஷயத்தில் உபகாரகரானவர்களுக்கு “ஸத் குருப்யோ நிவேதயேத்” என்கிறபடியே ஸமர்ப்பித்து. (புறத்திட்டுக் காட்டி யென்று ப்ரஸங்கிக்கில் முடியும்படி விட்டு) “புறத்திட்டின்னம் கெடுப்பாயோ பல நீ காட்டிப் படுப்பாயோ” (திருவாய்மொழி 6-9-8) என்று ஸம்ஸாரிகளுக்கு போக்யமான ஸப்தாதி, விஷயங்களினுடைய தர்ஸநத்திலே ஸத்தா ஹாநி பிறக்கும்படி அஸஹ்யமாயிருக்கையாலே அவற்றை விட்டு, (தந்தைதாயுண்ணுஞ் சோறு மாநிதி, பூவை யாவை யுமொன்றே யாக்கி) “பவத் கதம் மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸூகாநி வை” ரா.யு என்றும், “த்வமேவ மாதா ச பிதா த்வமேவ, த்வமேவ பந்துஸ் ச குரஸ் த்வமேவ, த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ த்வமேவ ஸர்வம் மம தேவதே வ” என்றும் ‘வாஸுதேவஸ் ஸர்வம்” (கீதை 7-) என்றும் “மாதா பிதா ப்ராதா நிவாஸஸ் ஸரணம் ஸுஹ்ருத் கதிர் நாராயண:” (ஸுபால உபநிஷத் )என்றும் சொல்லுகிறபடியே “தேவபிரானையே தந்தை தாயென்றடைந்த‘” (திருவாய்மொழி 6-5-11) என்று அயர்வறுமமரர்களதிபதியே மாதா பித்ரு ப்ரப்ருதிகளான ஸர்வ வித பந்துவும் என்றும், ‘ உண்ணுஞ் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை யுமெல்லாம் கண்ணன்” (திருவாய்மொழி 6-7-1 என்று தாரக போஷக போக்யங்க ளெல்லாம் ஸர்வ ஸுலபனான கிருஷ்ணனே என்றும், “வைத்த மா நிதியாம் மதுசூதனையே அலற்றி” (திருவாய்மொழி 6-7-11) என்று ஆபத் ரக்ஷகமாகச் சேமித்து வைத்த அக்ஷயமான நிதியும் விரோதி நிரஸந ஸீலனான அவனே யென்றும், “பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம்புட்டில்கள் யாவையும் திருமால் திரு நாமங்களே கூவியெழும்’ (திருவாய்மொழி 6-7-3) என்று லோபகரணங்களால் பிறக்கும் ரஸமெல்லாம் ஸ்ரீயபதியினுடைய திருநாமங்களைச் சொல்லவே யுண்டாகா நின்றதென்றும், இப்படி கீழ் விட்டவை யெல்லாம் பகவத் விஷய மொன்றிலுமே யாக்கி, (தளர்வேனோ திரிவேனோ குறுகாதோ முதல்வாவோ வென்னு மார்த்தியோடே) “கோலத் திருமாமகளோடு உன்னைக் கூடாதே சாலப் பல நாள் அடியேனின்னம் தளர்வேனோ” (திருவாய்மொழி 6-9-10) “தீயோடுடன் சேர் மெழுகா யுலகில் திரிவேனோ” (திருவாய்மொழி 6-9-6) “கூவிக்கொள்ளுங்காலமின்னம் குறுகாதோ” (திருவாய்மொழி 6-9-9) “புணரேய் நின்ற மரமிண்டின் நடுவே போன முதல்வாவோ” (திருவாய்மொழி 6-10-5) என்று ஸர்வ ப்ரகார ரக்ஷகனாய் பெரிய பிராட்டியாரோடே யிருக்கிற உன்னைக் கிட்டப் பெறாதே ஸம்ஸாரத்திலே யிருந்து எத்தனை காலம் இப்படியே அவஸந்நனாகக் கடவேன் என்றும், த்ரிவிக்ரமாபதாநம் பண்ணின வுன்னைக் காண வாசைப்பட்டுக் கிடையாமையாலே அக்நி ஸகாஸத்தில் மெழுகு போலே ஸம்ஸாரத்திலே இப்படி எத்தனை காலம் திரியக் கடவேன் என்றும், ஸர்வ ஸுலபமாய் நிரதிஸய போக்யமான உன் திருவடிகளிலே என்னை அருளப் பாடிடுங்காலம் இன்னமணித்தாகாதோ என்றும், யமளார்ஜுநங்களின் நடுவே போன ஸர்வ காரண பூதனே என்றும் உன் திருவடிகள் மாநஸாநுபவ மாத்ரமன்றிக்கே ப்ரத்யக்ஷமாகக் கிட்டுவதென்றோ என்கிற ஆர்த்தியோடே (ப்ரபத்தி முக்யாதிகாரமான பரமார்த்தியை உடையராய்) (த்ரிவிக்ரமனென்று தொடங்கி தடந் தாமரை யென்கிற தளவாக) “லோக விக்ராந்த சரணெள ஸரணம் தே(அ)வ்ரஜம் விபோ” என்று ஸம்ஸாரிகளுடைய தோஷங்களை போக்யமாகக் கொண்டு அவர்களுடைய தண்மை பாராதே “தலை விளாக் கொண்ட எந்தாய்” என்கிறபடியே ஒரு நீராகவும் அவர்கள் தாங்களே ப்ரத்யக்ஷிக்கும்படி வடிவைக் காட்டி திருவடிகளை எல்லாருடைய தலைகளிலும் வைக்கையாலே ஆஸ்ரயணோபயோகியான வாத்ஸல்ய ஸெளஸீல்ய ஸெளலப்யங்களும், “தே?” என்று தன் பேறாகச் செய்கைக் குறுப்பான ஸ்வாமித்வமும், “விபோ” என்று கார்யோபயோகியான ஜ்ஞாந ஸக்திகளும் த்ரிவிக்ரமாபதாநத்திலே ப்ரகாபபிக்கையாலே “தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன்” “மாண் குறள் கோலப் பிரான்’ (திருவாய்மொழி 5-9-6) “அடியை மூன்றை இரந்தவாறும்” (திருவாய்மொழி 5-10-9) “மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட வன் கள்வன்” (திருவாய்மொழி 6-1-11) என்றும் ஸுூரிபோக்யனாய் ஸர்வ ஸ்வாமி யானவன் த்ரிவிக்ரமாபதாநம் பண்ணுகைக்காகப் பெரு விலையனான அழகைச் சிறாங்கித் தனுபவிக்கலாம்படி வாமந வேஷ பரிக்ரஹம் பண்ணி மஹாபலியுடைய யஜ்ஞ வாடத்திலே சென்று மூன்றடி யென்றிரந்து ப்ரஹ்மசாரி வேஷத்தோடே நிற்கிற மஹா வஞ்சகன்- “காண்மின்களுலகரென்று கண் முகப்பே நிமிர்ந்த” (திருவாய்மொழி 6-3-1 )நோக்கு வித்யை காட்டுவாரைப் போலே லெளகிகர் ப்ரத்யக்ஷிக்கும்படி “அகல் கொள் திசை வையமளந்த மாயன்‘ (திருவாய்மொழி 6-4-6) “திசை ஞாலம் தாவி யளந்ததும்” (திருவாய்மொழி 6-5-3) “வையமளந்த மணாளன்” (திருவாய்மொழி 6-6-1) “மண்ணும் விண்ணும் கொண்ட மாய வம்மான்'” (திருவாய்மொழி 6-9-2) “ஓரடியால் எல்லா வுலகும் தட வந்த” (திருவாய்மொழி 6-9-6) “தாவி வையம் கொண்ட தடந் தாமரைகட்கே” (திருவாய்மொழி 6-9-9) என்று விஸ்த்ருதமாய் திக்குகளோடே கூடின பூமியையும் உபரிதந லோகங்களையும் தென்றலுலாவினாப் போலே ஸுக தரமாம்படி எங்குமொக்கப் பரப்பி யளந்து கொண்ட நிரதிஸய போக்யமாய் அதிஸுகுமாரமான திருவடிகள். (இணைத் தாமரைகள் காண இமையோரும் வரும்படி சென்று சேர்ந்த உலகத்திலதத்தே கண்டு) “எந்நாளே நாம் மண்ணளந்த” (திருவாய்மொழி 6-10-6) இத்யாதி, திருவுலகளந்தருளின ஸர்வ ஸுலபமாய் நிரதிஸய போக் யமாய்ச் சேர்த்தி யழகை யுடைத்தான திருவடிகளை நாம் காண்பதெப்போதோ என்று நித்ய ஸூரிகளும் வந்தநுபவிக்க ஆசைப்பட்டு வரும்படி “அன்று ஞாலம் அளந்த பிரான் பரன் சென்று சேர் திருவேங்கடமாமலை‘ (திருவாய்மொழி 3-3-8) என்று திருவுலகளந்தருளின ஸ்ரமந் தீர அச் செயலாலே ஸர்வ ஸ்மாத் பரனானவன் விடாயர் மடுவிலே சேருமாப் போலே உகந்து நிற்கிற ‘ உலகுக்குத் திலதமாய் நின்ற திருவேங்கடம்” (திருவாய்மொழி 6-10-1 என்று ஸ்ரீபூமிப் பிராட்டிக்கு முக்யமான ஆபரணமாயிருக்கிற திருமலையிலே கண்டு (அகலகில்லேன் என்று பூர்வ வாக்ய ப்ரக்ரியையாலே அநுஸந்தித்தவர்) ‘ “அகலகில்லேன் இறையும்”(திருவாய்மொழி 6-10-10) இத்யாதி புருஷகார பூதையான பெரிய பிராட்டியாரை முன்னிட்டு வாத்ஸல்யாதி, குணங்களை அநுஸந்தித்துக் கொண்டு தம்முடைய அநந்ய கதித்வாநுஸந்தாந பூர்வகமாக பூர்வ வாக்ய ப்ரக்ரியையாலே பூர்ண ப்ரபதநம் பண்ணினவர் (பிணக்கறத் தொடங்கி வேதப் புனித விருக்கை நாவில் கொண்டு) “பூவில் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து ஞான விதி பிழையாமே அச்சுதன் தன்னை மேவித் தொழுதுய்ம்மினீர்கள்’ (திருவாய்மொழி 5-2-9) என்கிறதளவாகக் கீழுபதேஸித்த ஸாத்ய ஸாதந பக்தி ஸ்ரவணத்தாலே அதினுடைய துஷ்கரத்வாதி தோஷாநுஸந்தா நத்தாலும் ஸ்வ பாரதந்த்ர்யா நுஸந்தானத்தாலும் ஸோகம் பிறக்கையாலே தம்முடைய ப்ரபத்தி நிஷ்டை துணையாம் படியான அதிகாரம் பிறந்தவர்களுக்கு (தந்தனன் களை கணிலம் புகுந்தேனென்று ஸ்வ ஸித்தோபாய நிஷ்டையை உக்த் யநுஷ்டாங்களாலே காட்டுகிறார் என்கிறார்) “தந்தனன் தன தாள் நிழலே”(திருவாய்மொழி 6-3-9) “திருவிண்ணகர் மன்னு பிரான் கழல்களன்றி மற்றோர் களை கணிலம் காண்மின்களே‘ (திருவாய்மொழி 6-3-10) என்கிற தம்முடைய உக்தியாலும் “அடிக்கீழ் அமர்ந்து புகுந்து” (திருவாய்மொழி 6-10-11 என்கிற தம்முடைய அநுஷ்டானத்தாலும் தமக்கிந்த ஸித்தோபாயத் திலுண்டான நிஷ்டையை ப்ரகாஸ்ரிப்பிக்கிறார் என்கிறார் ஆறாம் பத்தில்
225-(1-)எண்ணிலா குணங்கள் பால துன்ப வேறவன் மாயாப் பல் யோகு செய்தி என்னும் ஆச்சர்ய சக்தி யோகத்தாலே(2)-தெளி உற்றவருக்கு ஏற்றரும் வைகுந்தத்தை அருளும்
பிராபகத்வம் புல் பா வெறும்பு பகைவனுக்கும் ஆக்கவல்ல சர்வ சக்தி பாதமகலகில்லா தம்மை(3)-அகற்றும் அவற்றின் நடுவே இருத்தக் கண்டு நலிவான் சுமடு தந்தாய் ஒ வென்று சாதன பலமான ஆக்ரோசத்தோடே பழி இட்டுக் (4)-கங்குலும் பகலும் அடைவற்ற ஆர்த்தியை கோவில் திரு வாசலிலே முறை கெட்ட கேள்வி யாக்கித் (5)-தேற்ற ஒண்ணாதபடி தோற்று ஒன்றி நிற்கப் பண்ணின பல தானம் மற்றும் கற்பார் இழவிலே சுவறி(6)-பழைய தனிமைக் கூப்பீடு தலை எடுத்து -சூழவும் பகை முகம் செய்ய -எடுப்பும் சாய்ப்புமான க்லேசம் நடக்க உபாய அதிகார தோஷம் ஒழிய மாயங்கள் செய்து வைத்த வைசித்திரியைக் கேட்க (7)-ஐச்சமாக இருத்தி உறக் கொண்ட ஸ்வ பர பிரயோஜனத்தை அருளிச் செய்ய -என் சொல்லி எந்நாள் பார் விண்ணீர் இறப்பு எதிர் எதுவும் என்கிற உபகார ஸ்ம்ருதியோடே (8)-தன் சரிதை கேள்வி யாகாமல் இன்பம் பயக்க இருந்த நிலத் தேவர் குழுவிலே பாட்டுக் கேட்பிப்பதாக கான கோஷ்டியையும் – தேவ பிரான் அறிய -மறந்தவர் (9)-சரமோ உபாய பரர் ஆனார்க்கு நீள் நகரமது -துணித்தான் சரண் அன்றி மற்று ஓன்று இலம் உள்ளித் தொழுமின் என்று பிராப்ய சாதன அவதியை ப்ரீதியாலே பிரகாசிப்பிகிறார் ஏழாம் பத்தில் —
இப்படி ப்ரபந்நரான இவர்களுடைய அநிஷ்ட நிவருத்தி பூர்வகமாக இஷ்ட ப்ராப்தியை பண்ணுகைக்கீடான ஆஸ்சர்யமான ஜ்ஞாந சக்த்யாதி, யுக்தனாகையாலே யதாஜ்ஞாநம் பிறந்தவர்களுக்குக் கொடுக்கக் கடவதான பரமபதத்தைத் தானே உபாயமாய்க் கொண்டு கொடுக்குமிடத்தில் சத்ருவுக்கும் திர்யக் ஸ்த்தாவரங்களுக்கு முட்படக் கொடுக்க வல்ல ஸர்வ ஸக்தியான ஸர்வேஸ்வரன் தன் திருவடிகளிலே ஸாங்க,ப்ரபதநம் பண்ணின தம்மை விஷயாந்தரங்களிலே மூட்டி நஸிப்பிக்கக் கடவதான இந்த்ரியங்கள் நடையாடுகிற ஸம்ஸாரத்திலே வைக்கக் கண்டு விஷண்ணராய்க் கூப்பிட்டு தம் தமை தாம் பேச மாட்டாதே அபஹ்ருத சித்தராக அவன் தன் விஜயத்தைக் காட்டித் தரிப்பிக்க அந்த தரிப்பும் ஸம்ஸாரிகளிழவை நினைத்துச் சுவறிப் பழைய வார்த்தியே தலை யெடுத்து அநுபாவ்ய விஷயம் ஸ்ம்ருதி விஷயமாய் ஒருமுகஞ்செய்து நலிய நோவு பட்டு இப்படி க்லேஸப்படுகிற இவர் உபாய பூதனாயிருக்கிற உனக்கு ஜ்ஞாந சக்திகளில் குறைவற்றிருக்க எனக்கு ஆகிஞ்சந்ய அநந்யகதித்வங்களிலும் ஆர்த்தியிலும் குறைவற்றிருக்க என்னை ஸம்ஸாரத்திலே வைக்கைக் கடியென் என்று அவனைக் கேட்க அவனும் நமக்கும் நம்மடியார்க்கும் திருவாய்மொழி பாடுகைக்கு வைத்தோங்காணும் என்று தான் இவரை வைத்ததுக்கு ஹேதுவை அருளிச் செய்ய முதலாழ்வார்கள் வ்யாஸாதிகள் கவி பாடுகைக்கு உண்டாயிருக்க நம்மைக் கொண்டு கவிபாடுவித்துக் கொள்ளுவதே என்று அவன் பண்ணின உபகாரத்தை அநுஸந்தித்து அதுக்குப் ப்ரத்யுபகாரம் தேடிக் தாணாமையாலே திருவாறன்விளையிலே அவன் பெரிய பிராட்டியாரோடே கூட எழுந்தருளி யிருக்கிற விருப்பிலே திருவாய்மொழி பாடி அடிமை செய்யப் பாரித்து அங்கே தம்முடைய திருவுள்ளம் ப்ரவணமாகையாலே பரமபதத்திலிருப்பை உபேக்ஷிக்கும்படியான ப்ரகாரத்தை உடையரான இவர் கீழ் தம்முடைய உபாயத்தில் நிஷ்டையை வெளியிடும்படி புகுர நின்றவர்களுக்கு அந்த திருவாறன்விளையில் நின்றருளினவனுடைய திருவடிகளே உபாயம் அத்தேஸமே ப்ராப்யமென்று தாமறுதியிட்ட ப்ராப்ய ப்ராபகங்களினுடைய முடிவைத் தம்முடைய திருவுள்ளத்தில் உகப்பாலே வெளியிடுகிறார் என்கிறார்.
(எண்ணிலாக் கு,ணங்கள் இத்யாதி,) ஆஸ்சர்ய யோக,த்தாலே “எண்ணிலாப் பெரு மாயனே’ (திருவாய்மொழி 7-1-1 “குணங்கள் கொண்ட மூர்த்தியோர் மூவராய்ப் படைத்தளித்துக் கெடுக்கும்” (திருவாய்மொழி 7-1-11 “பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்” (திருவாய்மொழி 7-2-7) “ஊழிதோறாழி உருவும் பேரும் செய்கையும் வேறவன் வையங்காக்கும்” (திருவாய்மொழி 7-3-11) “மாயா வாமனனே’ (திருவாய்மொழி 8-8-1 “உள்ளப் பல் யோகு செய்தி” (திருவாய்மொழி 7-8-4) என்று எண்ணிறந்த கல்யாண குணங்களை யுடையனாய் ஸத்வாதி குண ப்ரசுரமான மூர்த்திகளைக் கொண்டு ஸ்ருஷ்ட்யாதிகளைப் பண்ணுமவனாய் இடமறிந்து ஸுக,துக்கங்களை ஸங்கல்பிக்குமவனாய் ஆஸ்ரித ரக்ஷணார்த்தமாகக் கல்பந்தோறும் திருமேனியும் சேஷ்டிதங்களும் வேறு படக் கொள்ளுமவனுமாய் ஆஸ்சர்ய சேஷ்டிதங்களை உடையவனுமாய் ஸர்வருடையவும் ரக்ஷ்ணோப சிந்தை பண்ணுமவனுமாய் இப்படி உபாய க்ருத்யத்துக்கு அபேஷிதமான ஆஸ்சர்ய சக்தி யோகத்தை உடையவனாகையாலே (தெளிவுற்றவர்க்கு ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் ப்ராபகத்வம் புற்பா வெறும்பு பகைவனுக்குமாக்க வல்ல ஸர்வஸக்தி) “தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக் கதிசெய்யும் தெளிவுற்ற கண்ணன்” (திருவாய்மொழி 7-5-1 “ஏற்றரும் வைகுந்தத்தை அருளும்” (திருவாய்மொழி 7-6-10) என்று ப்ராப்யமும் ப்ராபகமும் தானேயென்று அத்யவஸித்துப் பின்பு நாட்டார் செயல் கண்டாதல் உக்த்யாபாஸங்கள் கண்டாதல் பிற்காலியாதே நின்றவர்களுக்கு நிரதிஸயாநந்தமாய் ஒருவராலும் ஸ்வ யத்நத்தாலே ப்ராபிக்க வொண்ணாதிருக்கிற ஸ்ரீவைகுண்டத்தைத் தன்னருளாலே கொடுக்கைக்குத் தான் உபாயமாமிடத்தில் “புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்றின்றியே நற்பாலுக்குய்த்தனன் ‘ (திருவாய்மொழி 7-5-1) என்றும் “நாட்டை அளித்துய்யச் செய்து” (திருவாய்மொழி 7-5-2 என்றும் “சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி தாட்பாலடைந்த‘ (திருவாய்மொழி 7-5-3) என்றும் முதலிலே ஜ்ஞாந லேஸமில்லாத திர்யக் ஸ்தாவரங்களுக்கும் ப்ராதி கூல்யத்திலே முதிர நின்ற ஸத்ருவுக்கும் கொடுக்க வல்லனாம்படி ஸர்வ ஸக்தி யுக்தனான ஸர்வேஸ்வரன் (பாதமகலகில்லாத தம்மை) “அடியேனுன பாதம் அகலகில்லேனிறையும்” (திருவாய்மொழி 6-10-9)என்று தன் திருவடிகளை க்ஷ்ண காலம் அகல ஸக்தரன்றியிலே “அடிக்கீழமர்ந்து (திருவாய்மொழி 6-10-10) என்று ஸரணம் புகுந்த தம்மை (அகற்றுமவற்றின் நடுவே இருத்தக் கண்டு) “அகற்ற நீ வைத்த மாய வல் ஐம் புலன்கள் ஆமவை (திருவாய்மொழி 5-7-8) என்று பகவத் விஷயத்தைக் கிட்டாத படி அகற்றவற்றான இந்த்ரியங்களின் நடுவே வைக்கக் கண்டு (நலிவான் சுமடு தந்தாய் ஓவென்று சாதன பலமான ஆக்ரஸத்தோடே பழியிட்டு )நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் -(திருவாய் -7-1-1)அன்புருகி நிற்கும் அது நிற்கச் சுமடு தந்தாய் (திருவாய் -7-1-10) விண்ணுளார் பெருமானேயோ (திருவாய் -7-1-5) முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தியேயோ (திருவாய் -7-1-10) என்று வ்யவதான விளம்பம் இல்லாத உபாயத்தைக் கீழே பரிக்ரஹிக்கையாலே – பிரதிகூலமான ஸம்ஸாரத்திலே பொருந்தாமையோடே தம் தலையிலே உள்ளத்தையும் அவன் தலையிலே ஏறிடும்படியான ப்ராப்தியை யுணர்ந்தவராகையாலே –சாகாம்ருகா ராவண சாயகார்த்தா ஜக்முஸ் சரண்யம் சரணம் ச ராமம் -(யுத்த -59-44)என்கிறபடியே இவரும் அவன் பரமபதத்தில் இருப்பும் குலைந்து வந்து விஷயீ கரிக்கும்படி பெரிய ஆக்ரோஸத்தோடே அவன் மேலே பழியாம்படி கூப்பிட்டு
(கங்குலும் பகலும் அடைவற்ற ஆர்த்தியை கோவில் திரு வாசலிலே முறை கெட்ட கேள்வி யாக்கி)கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் (திருவாய்மொழி 7-521)இட்ட கால் இட்ட கைகளாய் இருக்கும் (திருவாய்மொழி 7-2-4)சிந்திக்கும் திசைக்கும் தேறும் கைகூப்பும் (திருவாய்மொழி 7-2-5)என்று திவா ராத்ரி விபாகமற அரதியாயத் துடிக்கும்படி அடைவுக்கெட்ட ஆர்த்தியை திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்கின்றாயே (திருவாய்மொழி 7-2-1)என் செய்திட்டாய் (திருவாய்மொழி 7-2-3) என் சிந்தித்தாயே (திருவாய்மொழி 7-2-4)என் செய்கேன் என் திருமகட்கே (திருவாய்மொழி 7-2-8)என்றும் திரு வாசலிலே பெண் பிள்ளையைப் பொகட்டுக் கூச்சு முறை தவிர்ந்து அவன் தன்னையே கேட்டுக் கூப்பிடும்படியான ஆர்த்தியாலே வந்த அவஸ்தா பேதத்தை யுடையவராய் (தேற்ற ஒண்ணாத தோற்று)அன்னையர்காள் என்னைத் தேற்ற வேண்டா கண்ணபிரானுக்கு என் பெண்மை தோற்றேன் (திருவாய் மொழி -7-3-9)என்று பார்ஸ்வத்தாராலும் தேற்றி தரிப்பிக்க ஒண்ணாதபடி அபஹ்ருத சித்தராய்க் கொண்டு பாரதந்தர்யத்தையும் இழந்து (ஓன்று நிற்கப் பண்ணின பலாதாநம் )இப்படி இருக்கிற இவரைத் தரிப்பிக்கைக்காக ஈஸ்வரன் தன்னுடைய விஜய பரம்பரைகளைக் காட்டிக் கொடுக்கக் கண்டு ப்ரீதராய் –குன்றம் எடுத்த பிரான் அடியாரோடும் ஓன்று நின்ற சடகோபன் (திருவாய் மொழி -7-4-11)என்று அவர் விஜய பரம்பரைகளிலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களோடு ஒரு சேர்த்தியாக நிற்கும்படி பலாதாநம் பண்ணி (மற்றும் கற்பார் இழவிலே சுவறி )கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ” (திருவாய்மொழி 7-5-1) என்று “அபவரகே ஹிரண்ய நித ம் நிதா ய உபரி ஸஞ்சரந் தோ நத் ரஷ்யந்தி” என்கிறபடியே அவதார ப்ரயுக்த ஸெளலப்யத்தை உடையனாய் ப்ரிய பரனுமாய் தான் அங்கீகரிக்க நினைத்தாரை நிர்ஹேதுகமாக மோக்ஷ பர்யந்தம் நடத்துமவனுமா யிருக்குமிவனை ஸம்ஸாரிகள் இழப்பதே -என்று அவர்களுடைய இழவை அநுஸந்தித்து அதிலே அந்த பலாதாநமும் சுவறி (பழைய தனிமைக் கூப்பீடு தலையெடுத்து) “பாமரு மூவுலகும் படைத்த பற்பநாபாவோ” என்று தொடங்கி “தனியேன் தனியாளாவோ” (திருவாய்மொழி 7-6-1 என்று அவனுடைய ஐகத் காரணத்வாதிகளைச் சொல்லிக் கூப்பிடும்படி முன்புற்றை உண்ணிலாவியில் தனிமைக் கூப்பீடே மீண்டும் தலையெடுத்து (சூழவும் பகை முகஞ்செய்ய) “சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் இணைக் கூற்றங்கொலோ அறியேன்” (திருவாய்மொழி 7-7-1) “கண்ணன் கோளிழை வாண்முகமாய்க் கொடியேனுயிர் கொள்கின்றதே” (திருவாய்மொழி 7-7-8 என்று முன்பு அநுபூதமான அவனுடைய முகத்தில் அவயவ ஸோபை யானது விஸத ஸ்ம்ருதி விஷயமாய்க் கொண்டு பாதிக்க நலிவு பட்டு (எடுப்பும் சாய்ப்புமான க்லேஸம் நடக்க) தம்முடைய ஆர்த்தியாலே வருகிற எடுப்பும் அவனுடைய குணாநுஸந்தாநத்தாலே வந்த சாய்ப்புமாய்க் கொண்டு க்லேஸமானது உருவ நடக்க (உபாயாதிகார தோஷமொழிய மாயங்கள் செய்து வைத்த வைசித்ரியைக் கேட்க) உபாய பூதனாயிருக்கிற வுனக்கு அஜ்ஞாந அஸக்திகளாகிற தோஷமின்றிக்கே யிருக்க ஸரணாகதனான எனக்கு ஆகிஞ்சந்ய அநந்ய கதித்வங்களும் ஆர்த்தியும் உண்டாயிருக்கையாலே அதிகாரத்திலே தோஷமின்றிக்கே இருக்க “பாசங்கள் நீக்கி இத்யாதி, மாயங்கள் செய்து வைத்தி” (திருவாய்மொழி 7-7-5) என்று ஸம்ஸாரத்தில் ஸங்கத்தை வாஸநையோடே அறுத்து உனக்கநந்யார்ஹ ஸேஷமாக்கிக் கொண்டு பின்பு என்னை ஸம்ஸாரத்திலே வைத்த ஆஸ்சர்யத்தை அருளிச் செய்ய வேணுமென்று கேட்க (ஐச்சிகமாக இருத்தி யறக்கொண்ட ஸ்வ பர ப்ரயோஜநத்தை அருளிச் செய்ய) அவன் நமக்கும் நம்முடையார்க்கும் உம்மைக் கொண்டு திருவாய்மொழி பாடுவித்துக் கொள்ளுகைக்காக நம்முடைய இச்சையாலே வைத்தோம் காணும் என்று வைத்ததுக்கு ஹேதுவை அருளிச் செய்ய (என் சொல்லி எந்நாள் பார் விண்ணீரிறப்பெதிர் எதுவும் என்கிற உபகார ஸ்ம்ருதியோடே) வ்யாஸ பராசர வால்மீகி ப்ரப்ருதிகள் முதலாழ்வார்களள வுண்டாயிருக்கத் தம்மைக் கொண்டு கவி பாடுவித்துக் கொண்ட உபகாரத்தை அநுஸந்தித்து “என் சொல்லி நிற்பனோ” “எந்நாள் சிந்தித்தார்வனோ” (திருவாய்மொழி 7-9-7) “பார் விண்ணீர் முற்றுங் கலந்து பருகிலுமார்வனோ” (திருவாய்மொழி 7-9-7) “இறப்பெதிர்காலம் பருகிலுமார்வனோ” (திருவாய்மொழி 7-9-9) என்று எங்ஙனே நான் தரையில் கால் பாவுவது அவவுபகாரத்தைக் காலதத்வ முள்ளதனையும் அநுஸந்தித்தாலும் பர்யாப்தனாகிறிலேன். ஸகல ஸ்தலங்களிலு முண்டாயிருக்கிற ஸகல சேதநருடைய வாகாத் யுபகரணங்களை நானொருவனுமே உடையேனுமாய் கால த்ரயத்திலும் பேசி யநுபவித்தாலும் பர்யாப்தனாகிறிலேன். “உதவிக் கைம்மாறு இத்யாதி. எதுவுமொன்று மில்லை செய்வதிங்குமங்கே” (திருவாய்மொழி 7-9-10) இதுக்கு ப்ரத்யுபகாரம் பண்ணுமிடத்தில் ஆத்மாவும் ததீயமா யறிகையாலே உபய விபூதியிலும் செய்யலாவது ஒன்றில்லை என்னும்படியான உபகார ஸ்ம்ருதியை உடையராய் (தன் சரிதை கேள்வி யாகாமல் இன்பம் பயக்க விருந்த நிலத் தேவர் குழுவிலே பாட்டுக் கேட்பிப்பதாக காந கோஷ்ட்டியையும் தேவ பிரானறிய மறந்தவர்) “செம்பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான் (பெருமாள் திருமொழி 10-8) என்று நாச்சியாரை யொழிய பெருமாள் தாமே தனி இருந்த இடத்தே ஸ்ரீராமாயணம் கேட்பித்த குஸ லவர்களைப் போல் அன்றிக்கே -இன்பம் பயக்க வெழில் மலர் மாதரும் தானும் இவ் வேழுலகை இன்பம் பயக்க நிலத் தேவர் குழு வணங்கும் சிந்தை மகிழ் திருவாறன்விளை” (திருவாய்மொழி 7-10-1 என்று ஆநந்த மயனான அவன் தனக்குமாநந்த வர்தகையான பிராட்டியும் ஸர்வேஸ்வரனுமான சேர்த்தியிலே லோகமடங்க வாழும்படி உபய விபூதி நாயகத்வத்தால் வந்த வேறுபாடெல்லாம் தோற்ற எழுந்தருளியிருக்கிற அவனை கரண த்ரயத்தாலும் அநுபவிக்கிற பூ ஸுரரான ஸ்ரீவைஷ்ணவர்களுடைய திரட்சியை யுடைத்தான திருவாறன்விளையிலே ப்ரத்யுபகமாரமாகத் திருவாய்மொழி பாடி அடிமை செய்யப் பாரித்து (காந கோஷ்டியையும் தேவபிரானறிய மறந்தவர்) “சிந்தை மற்றொன்றின் திறத்ததல்லாத் தன்மை தேவபிரானறியும் திருவாறன்விளையுறை தீர்த்தனுக்கற்றபின்” (திருவாய்மொழி 7-10-10) என்று அந்தத் திருவாறன் விளையிலே தம்முடைய நெஞ்சு ப்ரவணமாகையாலே “ஹாவு ஹாவு ஹாவு” (தைத்திரியோபநிஷத்) என்று ஸாமகாநம் பண்ணுகிற பரமபதத்தில் கோஷ்டியையும் அயர்வறுமமரர்கள் அதிபதியாய் ஸர்வருடைய ஹ்ருதயமும் அறியும்படி ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனா யிருக்கிற அவனும் கூட அறியும்படி விஸ்மரித்த இவர் (சரம உபாய பரரானார்க்கு )கீழ் தாமருளிச்செய்யக் கேட்ட (ஸித்த சாதனத்தாலே தத் பரரானார்க்கு நீள் நகரமது -துணித்தான் சரண் அன்றி மற்று ஓன்று இலம் உள்ளித் தொழுமின் என்று பிராப்ய சாதன அவதியை ப்ரீதியாலே பிரகாசிப்பிகிறார்) நீள் நகரமதுவே மலர்ச்சோலைகள் சூழ் திருவாறன்விளை வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரணன்றி மற்று ஒன்றிலம் உள்ளித்தொழுமின் தொண்டீர் (திருவாய் மொழி -7-10-7) என்றும் நிரதிசய போக்யமான திருவாறன்விளை யாகிற மஹா நகரே பரம ப்ராப்யம் -அங்கு எழுந்து அருளி இருக்கிற உஷா நிருத்த கடகனானவனுடைய திருவடிகளே ப்ராபகம் -இவ்வர்த்தத்தில் மாறாட்டமில்லை – ஆகையால் இவ்வர்த்தத்தில் ருசி யுடையராய் புத்தி பண்ணுங்கோள் என்று ப்ராப்யத்தினுடைய அவதி ததீயம் என்றும் பிராபகத்தினுடைய அவதி, அர்ச்சாவதார ஸுலபனானவன் திருவடிகளே என்றும் இவ்வர்த்தத்தைத் தம்முடைய திரு வுள்ளத்தி லுகப்பாலே வெளியிடுகிறார் என்கிறார் –
226-தேவிமார் பணியா நேர்பட்ட நல்ல கோட்பாடு என்னும் படி சக்தியாலே நித்யமாகக் கல்பித்த பத்நீ பரிஜநாதிகளை யுடைய ஸத்ய காமன் கொண்ட வாக் வ்ருத்தியையும் மறப்பிக்கும் கலக்கமும் ஸங்கையும் அச்சமும் தீர, தலைச் சிறப்பத் தந்தவதில் க்ருதஜ்ஞதா பல ப்ரத் யுபகாரமாக வேந்தர் தலைவன் கந்யகாதநம் போலே ஆரத் தழுவி அற விலை செய்த ஆத்ம லாபத்தாலே அதீவ விளங்கிப் பணைத்து ஜந்ம பாஸம் விட்டு ஆத்வாரம் ஆளுமாளாரென்று பரிந்து அநுருபனோடே அமர்ந்து பிரிவில் க்ருபண தசையாகத் துவரும் ஸீதா குணங்களாலே ப்ரீதி வர்த்தித்து தித்திக்க உள்ளே உறைந்து கண்டு கொண்டிருந்து அமாநுஷ போகமாக்கினவன் மூன்று தத்துக்குப் பிழைத்த அரு வினை நோய் மறுவலிடாமல் சிறியேனென்றதின் பெருமையைக் காட்ட தேஹாதிகளில் பரமாய் கன்று நினைக்கில் லக்ஷ்மீ துல்யமாய் அவர்க்கே குடிகளாம் பரதந்த்ர ஸ்வரூபத்தை அநுஸந்தித்தவர் ஸ்வ ஸாதந ஸாத்யஸ்தர் இரு கரையராகாமல் மண்ணவரும் வானவரும் நண்ணுமத்தையே குறிக் கொண்மின் உள்ளத்தென்று ப்ராப்ய ஏக பரராக்குகிறார் எட்டாம் பத்திலே –
இப்படிப்பட்ட ஸக்தி தன்னாலே நித்யமாக கல்பிதமான போக்ய போகோபகரண போக ஸ்தாநங்களை உடையனாகையாலே ஸத்ய காமனான ஸர்வேஸ்வரன் கீழ் தம்மைக் கொண்ட வாசிகமான அடிமையையும் விஸ்மரித்து பகவத லாபத்தாலே கலங்கி அவனுடைய குணங்களிலும் ஸ்வரூபத்திலும் அதிஸங்கை பண்ணி ஸம்ஸார தோஷாநுஸந்தாநத்தாலே அஞ்சின இவரை தரிப்பிக்கைக்காக பூர்வோக்த உபகாரத்தை ஸ்மரிப்பிக்க அத்தாலே க்ருதஜ்ஞராய் அதுக்குப் பலமாக அவர் ஆத்ம ஸமர்ப்பணம் பண்ண அத்தாலே பெறாப் பேறு பெற்றானாய் இவர்க்குண்டான ஆத்ம குணங்களாலே ப்ரீதனாய் இவர் திருவுள்ளத்திலே யிருந்து நிரதிஸயமாக அநுபவிப்பித்து இவர் இனி அயோக்யரென்று அகலாதபடி ஆத்ம ஸ்வரூப வைலக்ஷண்யத்தை ப்ரகாஸிப்பிக்க அதனுடைய யாதாத்ம்யத்தை அநுஸந்தித்த இவர் கீழ் தம்முடைய ப்ராப்ய ப்ராபகங்களைக் கேட்டு உகந்தவர்களுக்கு ப்ராப்ய மொன்றும் ப்ராபக மொன்றுமாகாதபடி ப்ராப்ய மொன்றிலுமே தத்பரராக்குகிறார்.
(தேவிமார் பணியா நேர்பட்ட நல்ல கோட்பாடென்னும்படி ஸக்தியாலே நித்யமாகக் கல்பித்த பத்நீ பரிஜநாதிகளை யுடைய ஸத்யகாமன்) “தேவிமாராவார் திருமகள் பூமி ஏவ மற்றமரர் ஆட்செய்வார்” (திருவாய்மொழி 8-1-1 “பணியாவமரர் பணிவும் பண்பும் தாமேயாம் அணியாராழியும் சங்கமுமேந்துமவர் (திருவாய்மொழி 8-3-6) “நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன்” (திருவாய்மொழி 8-9-111) “நல்லகோட்பாட்டுலகங்கள் மூன்றினுள்ளும் தான் நிறைந்த அல்லிக்கமலக் கண்ணன்” (திருவாய்மொழி 8-10-11) என்று லக்ஷ்மீ ப்ரப்ருதி திவ்ய மஹிஷிகளுக்கு வல்லபனாய், நித்ய ஸூரிகளை அடிமை கொள்ளுமவனுமாய், அவர்களுடைய ஸ்தோத்ராதிகளுக்கு விஷய பூ,தனுமாய், போக்யாதிகளால் குறைவற்றுக் கட்டளைப் பட்ட லோக த்ரயத்துக்கும் நிர்வாஹகனுமாய் இருக்குமென்கையாலே கீழ்ச் சொன்ன ஸக்தி தன்னாலே நித்யமாகக் கல்பிக்கப்பட்ட பத்நீ பரிஜந ஸ்தாந போக்ய போகோபகரணங்களை உடைய ப்ரக்ருதியாலே தனக்கென்று தேட வேண்டாத படி நித்யமான போகத்தை உடையனாகையாலே ஸத்ய காமனான ஸர்வேஸ்வரன். (கொண்ட வாக் வ்ருத்தியை மறப்பிக்கும்) கீமும் கைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ள வைத்தோம் என்று அவன் கொண்ட வாசிகமான அடிமையையும் விஸ்மரிப்பிக்க வற்றான (கலக்கமும் ஸங்கையும் அச்சமும் தீர) “காணுமாறருளாய் என்றென்றே கலங்கி” (திருவாய்மொழி 8-1-2 “அறிவொன்றும் சங்கிப்பன்‘ (திருவாய்மொழி 8-1-7) நரகம் நானடைதல் அன்றும் அஞ்சுவன் (திருவாய்மொழி 8-1-9) என்று பகவதலாபத்தாலே கலங்கி பகவத் குளங்களிலும் ஸ்வரூபத்திலும் அதிஸங்கை பண்ணி ஸம்ஸார தோஷாநுஸந்தானத்தாலே அஞ்சின இவர்க்கு அவையும் நிவ்ருத்தமாம்படி. (தலைச் சிறப்பத் தந்தவதில் க்ருதஜ்ஞதா பல ப்ரத்யுபகாரமாக) “ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்து (திருவாய்மொழி 5-7-10) “தந்தனன் தன தாள் நிழலே” (திருவாய்மொழி 6-3-9) என்று உபாயமாக முன்னிவர்க்கு உபகரித்த தன் திருவடிகளை “தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த” (திருவாய்மொழி 8-1-10) என்று விஸத ஸ்ம்ருதி விஷயமாக்க அத்தை அநுஸந்தித்து அத்தால் வந்த க்ருதஜ்ஞதைக்குப் பலம் ஸத்ருஸ ப்ரத்யுபகாரம் பண்ணுகையாலே “உதவிக் கைமாறு என்னுயிர் என்ன வுற்றெண்ணில் அதுவுமற்றாங்கவன்றன்னது’ (திருவாய்மொழி 7-9-10) என்று கீழ் ப்ரத்புபகாரமாக ஆத்மாவை ஸமர்ப்பிக்கத் தேடி பகவதீயத் வாகார அநுஸந்தானத்தாலே நிவ்ருத்தரானவர் இங்கு உபகார ஸ்ம்ருதியாலே வந்த கலக்கத்தாலே (வேந்தர் தலைவன் கந்யகா தாநம் போலே ஆரத் தழுவி யறவிலை செய்த) “வேந்தர் தலைவன் சனகராசன் தன் வேள்வியில் கண்டாருளர் ‘ (பெரியாழ்வார் திருமொழி 4-1-2) என்கிறபடியே க்ஷத்ரியாக்ரேஸராய் ஜ்ஞாநாதிகனான ஜநக சக்ரவர்த்தி மாஹேஸ்வரமான தநுர்பங்கம் பண்ணின பெருமாளுடைய ஆண் பிள்ளைத் தனத்தைக் கண்டு கலங்கி “விஷ்ணோஞஸ்ரீரநபாயிநீ”’ ஸ்ரீவிஷ்ணு புராணம் 1-17) “அநந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபா யதா,” (ரா) என்கிறபடியே ப்ருதக் ஸித்தி அநர்ஹையாய் ததர்த்தமாக “ராக வத்வே அபவத் ஸீதா” ஸ்ரீவிஷ்ணுபுராணம் 1-9-144) என்றவனுடைய அவதாராநுகூலமாக அவதரித்து நாச்சியாரை “இயம் ஸீதா மம ஸுதா ஸஹ தர்ம சரீதவ ப்ரதீச்ச சைநாம் பத்ரம் தே பாணிம் க்ரஹ்ணீஷ்வ பாணிநா” (ரா.பா. 73-26) என்று கந்யகா தாநமாக ஸமர்ப்பித்தாப் போலே ‘பேருதவிக் கைம்மாறா தோள்களை ஆரத் தழுவி என்னுயிரை அற விலை செய்தனன்” (திருவாய்மொழி 8-1-10) என்று ஸமர்ப்பணோந்முகரான வளவிலே தாளும் தோளுமாகப் பணைத்த வந்த ஆத்ம வஸ்துவை அவனுக்கு ப்ரத்யுபகாரமாக ஸமர்ப்பிக்க ஆ த்ம லாபத்தாலே தன்னதல்லாததொன்றை அதீவ விளங்கிப் பணைத்து அவனும் “அப்ரமேயம் ஹி தத்தேஜோ யஸ்ய ஸா ஐநகாத்மஜா” (ரா.ஆ. 37-18) என்று அவளைப் பெற்று விளங்கினாப் போலே “சோதீ” (திருவாய்மொழி 8-1-10) என்றிவர் பேசும்படி இவருடைய ஆத்ம லாபத்தாலே தன்னதல்லாத தொன்றைப் பெற்றாப் போலே அதீவ உஜ்ஜ்வலனாய் “தோள்களாயிரத்தாய் முடிகளாயிரத்தாய் துணை மலர்க் கண்களாயிரத்தாய் தாள்களாயிரத்தாய் பேர்களாயிரத்தாய்” (திருவாய்மொழி 8-1-10) என்னும்படி அந்த ப்ரீதியாலே ஸதஸாகமாகப் பணைத்து
227-எண்டிசையும் அகல் ஞாலம் எங்கும் அளிக்கின்ற ஆலின் மேலென்னும்படி நித்ய போக பாத லீலோபகரணத்தின் லயாதிகளைப் போக்குமாபத்ஸகன் ஆருயிரென்னப் படுத்தின ஆத்ம தர்ஸந பலாநுபவ பரம்பரையைக் கூவுதல் வருதலென்று முடுகவிட்டு ஏகமெண்ணிக் காணக் கருதி எழ நண்ணி நினை தொறும் உருகி யலற்றிக் கவையில் மனமின்றி, பதினாலாண்டு பத்து மாஸம் ஒருபகல் பொறுத்தவர்கள் ஒரு மாஸ தின ஸந்த்யையில் படுமது க்ஷணத்திலேயாக இரங்குகிற த்வரைக் கீடாக இனிப் பத்திலோன்று தஸம தஸையிலே பேறென்று நாட் கடலாகத் தம்பிக் கிட்டதாகாமல் நாளை வதுவை போலே நாளிடப் பெற்றவர் இம் மடவுலகர் கண்டதோடு பட்ட அபாந்தவ-அரக்ஷக-அபோக்ய-அஸு௧,-அநுபாய ப்ரதி ஸம்பந்தியைக் காட்டி மற்றொன்று கண்ணனல்லால் என்கிற வைகல் வாழ்தலான ஸித்தோபாயம், அதில் துர்பல புத்திகளுக்கு மாலை நண்ணி காலை மாலை விண்டு தேனை வாடாமலரிட்டு அன்பராம் ஸாங்க பக்தி, அதில் அஸக்தர்க்குத் தாளடையும் ப்ரபத்தி அதில் அஸக்தர்க்கு உச்சாரண மாத்ரம், ஸர்வோபாய ஸூந்யர்க்கு இப் பத்தும் பாடியிடும் தண்டனென்று கீதாசார்யனைப் போலே அதிகாராநுகுணம் நெறி யெல்லாம் உரைக்கிறார் ஒன்பதாம் பத்தில்.
இப்படி அவாப்த ஸமஸ்த காமத்வத்தால் வந்த நைரபேக்ஷ்யத்தாலே அபேக்ஷா நிரபேக்ஷமாக ப்ரளயாத்யாபத் தஸைகளிலே உதவி ரக்ஷிக்கும் ஆபத் ஸகனான ஸர்வேஸ்வரன் கீழ் ப்ரகாஸிப்பித்த ஆத்ம தர்ஸநத்துக்கு பலம் ஸ்வ ஸ்வரூபாநுரூபமான ப்ராப்யாநுபவமாய் அவ்வநுபவத்திலுண்டான த்வரையாலே க்ஷண கால விளம்பம் பொறுக்க மாட்டாமல் ஆர்த்தரான இவர்க்கு ஆரப்த ஸரீராவஸாநத்திலே பேறாகக் கடவதென்று நாளிட்டுக் கொடுக்கப் பெற்ற இவர் கீழ்த் தாமுபதேஸித்த ஹித வசநம் கேட்டுத் திருந்தினவர்களை யொழிய அல்லாதாரையும் விடமாட்டாத தம்முடைய க்ருபையாலே யதாதிகாரம் ஸர்வோபாயங்களையும் அருளிச் செய்கிறார் என்கிறார்.
(எண்டிசையும் அகல் ஞாலம் எங்கும் அளிக்கின்ற இத்யாதி,) “எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்” (திருவாய்மொழி 9-1-1 “அவனே அகல் ஞாலம் படைத்திடந்தான் அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்” (திருவாய் மொழி 9-3-2 “அகலிடம் படைத் திடந்துண்டுமிழ்ந் தளந்து எங்கும் அளிக்கின்ற ஆயன்” (திருவாய்மொழி 9-9-2) “ஆலின் மேலாலமர்ந்தான்’ (திருவாய்மொழி 9-10-1) என்று ஸகல லோகங்களையும் ஸஹகாரி நிரபேக்ஷமாக ப்ரளயாத்யாபத்துக்களிலே உதவி ரக்ஷிக்கும் என்கையாலே கீழ்ச் சொன்ன ஸத்ய காமத்வத்தால் வந்த நைரபேக்ஷ்யத்தாலே “பாதோஸ்ய விஸ்வா பூதாநி திரிபாதஸ்யாம்ருதம் திவி (புருஷ ஸூக்தம்) அந்த நித்யவிபூத்யேக தேஸமான லீலா விபூதிக்குண்டான ஆபத்துக்களிலே அபேக்ஷா நிரபேக்ஷமாக உதவித் தன் பேறாக ரக்ஷிக்கும் ஆபத் ஸகத்வனான ஸர்வேஸ்வரன் (ஆருயிரென்னப்படுத்தின இத்யாதி.) “ஆருயிர் பட்டது எனதுயிர் பட்டது” (திருவாய்மொழி 9-6-9) என்று என்னாத்மா பட்டது நித்ய விபூதியிலுள்ளாரா ரேனும் பட்டாருண்டோ என்று இவர் தாமே பேசும்படி அவன் மேல் விழுந்து அநுபவிக்கைக்கு அடியாக கீழில் பத்தில் ஆத்ம ஸ்வரூபத்தை யதாவாகக் கண்டவதுக்குப் பலம் ஸ்வரூபாநுரூபமான ப்ராப்யத்தை யநுபவிக்கையாய், அதிலே த்வரை விளைகையாலே “தாமரைக் கண்களால் நோக்காய்” (திருவாய்மொழி 9-2-1 “பாத பங்கயமே தலைக்கணியாய்” (திருவாய்மொழி 9-2-2 “உன் தாமரை மங்கையும் நீயும் இடங்கொள் மூவுலகும் தொழ இருந்தருளாய்” (திருவாய்மொழி 9-2-3), “கனிவாய் சிவப்ப நீ காண வாராய்” (திருவாய்மொழி 9-2-4) “நின் பன்னிலா முத்தம் தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக் கண் தாமரை தயங்க நின்றருளாய்” (திருவாய்மொழி 9-2-5) என்று என்னார்த்தி தீரத் திருக் கண்களாலே குளிர நோக்கி யருள வேணும், திருவடிகளை என் தலையிலே வைத்தருள வேணும், தேவரீரும் பிராட்டிமாரும் கூட எழுந்தருளி யிருக்கிற இருப்பை எனக்குக் காட்டி யருள வேணும், என் முன்னே நாலடி உலாவி யருள வேணும், அநுகூல தர்ஸனத்திலே பிறக்கும் ஸ்மிதம் நான் காண வேணும், ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும், என்றிப்படி அநுபவ பரம்பரைகளை ஆசைப்பட்டு அது க்ரம ப்ராப்தமாகாமல் கூவுதல் வருதல் செய்யாயே என்று நிரதிஸய போக்யமான உன்னுடைய திருவடிகளிலே நானும் வந்தடிமை செய்யும்படி என்னை அங்கே அழைத்தல் இங்கே வருதல் செய்தருள வேணும் என்று இப்படி முடுக விட்டு (ஏகமெண்ணி இத்யாதி) “கவையில் மனமின்றி” (திருவாய்மொழி 9-8-3) “மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகமெண்ணும் இராப் பகலின்றியே” (திருவாய்மொழி 9-2-7) என்று அவன் நித்ய வாஸம் பண்ணுகிற பரமபதத்தைக் காண்கையிலே ஸர்வ காலமும் ஏக ரூபமாக மநோ ரதித்து -காணாக் கருதும் என் கண்ணே (திருவாய்மொழி 9-4-1) என்று பெரிய பிராட்டியாரோடும் திவ்யாயுதங்களோடும் திவ்ய விக்ரஹத்தோடும் கூடி யிருக்கிற அவனைக் காண வேணுமென்று ஆசைப் பட்டு “எழ நண்ணி நாமும் நம் வானநாடனோடொன்றினோம்” (திருவாய்மொழி 9-5-10) என்று ஸ்மாரக பதார்த்த, தர்ஸநத்திலே நோவு படுகையாலே முடிந்து போகையிலே ஒருப்பட்டு “நினைதொறும் சொல்லுந் தொறும் நெஞ்சிடிந்துகும்” (திருவாய்மொழி 9-6-9) “உருகுமால் நெஞ்சம் உயிரின் பரமன்றி பெருகுமால் வேட்கையும்” (திருவாய்மொழி 9-6-1) என்று, அவனுடைய அனுபவத்தை நினைக்கும் தொறும் அநுபவ உபகரணமான நெஞ்சானது ஸிதிலமாய்க் கரைய “தக்கிலமே கேளீர்கள்” (திருவாய்மொழி 9-7-2 )என்று ஆள் விட்டு “திளிமொழியாளலற்றிய சொல்” (திருவாய்மொழி 9-7-111) என்று ஆற்றாமையாலே அக்ரமமாகக் கூப்பிட்டு “கவையில் மனமின்றிக் கண்ணீர்கள் கலுழ்வன்’ திருவாய்மொழி 9-8-3) என்று இருதலைத்த நெஞ்சின்றிக்கே கண்ணீர் காட்டாறு போலே பெருக (பதினாலாண்டு இத்யாதி, இரங்குகிற த்வரைக்கீடாக) பெருமாளைப் பிரிந்து பதினாலாண்டு பொறுத்திருந்த ஸ்ரீபரதாழ்வான் அந்த அவதி கழிந்த ஒருநாள் பட்ட க்லேஸமும், பத்து மாஸம் பிரிந்து பொறுத்திருந்த பிராட்டி “மாஸாதூரர்த்வம் ந ஜீவிஷ்யே” (ரா.ஸு. 40-10) என்று ஒரு மாஸத்தில் பட்ட க்லேஸமும், க்ருஷ்ணன் பசு மேய்க்கப் போக ஒரு பகலெல்லாம் அவனைப் பிரிந்து பொறுத்திருந்த ஸ்ரீகோபிமார் ஸந்த்யா காலத்திலே பசுக்களின் முற் கொழுந்திலே காணாமல் அவர்கள் பட்ட க்லேஸமுமெல்லாம் அவனை “விட்டகல்வதற்கே யிரங்கி அணி குருகூர்ச் சடகோபன்” என்று ஒரு க்ஷணத்திலே யாம்படி யீடுபடுகிற தம்முடைய த்வரைக்கீடாக (இனிப் பத்திலொன்று தஸம தஸையிலே பேறென்று) “நயந ப்ரீதி: ப்ரதமம் சித்தா போகஸ் ததோநு ஸங்கல்ப: நித்ராச் சேதஸ் தநுதா விஷய விரக்திஸ் த்ரபாநாமா: உந்மாதோ, மூர்ச்சா மரணம் இத்யேதா ஸ்மரதஸா தஸைவ ஸ்யு:, ப்ரதமஸ் த்வபிலாஷ: ஸ்யாத் த்விதீயம் சிந்தநம் பவேத் அநுஸ்ம்ருதிஸ் த்ருதீயந்து சதுர்த்தம் குண கீர்த்தநம் உத்யோக: பஞ்சம: ப்ரோக்த: ப்ரலாப: ஷஷ்ட உச்யதே உந்மாத.ஸ் ஸப்தமோ ஜ்ஞோய: அஷ்டமோ வ்யாதி ருஸ்யதே நவமே ஜடதா சைவ தஸமம் மரணம் ததா,” என்று காமுகராயிருப்பார்க்கு தஸமமாவஸ்தையிலே மரணமாமா போலே நம் பக்கல் பரபக்தி யுக்தரான உமக்கு நம்மைப் பெறா விடில் முடியும்படி பரம பக்தி தஸையான பத்தாம் பத்திலே பெறக் கடவதென்று
(நாட் கடலாகத் தம்பிக்கிட்ட தாகாமல் நாளை வதுவை போலே நாளிடப் பெற்றவர்) “நாட்கடலைக் கழிமினே” (திருவாய்மொழி 1-6-7) என்று ஒரு நாள் ஒரு கடல் போலே விஸ்லேஷ வ்யஸநத்தாலே துஸ்தரமாம்படி ‘பூர்ணே சதுர்தமே வர்ஷே” (ராயு. 127-1 என்று தம்பியான ஸ்ரீ பரதாழ்வானுக்கு நெடுக நாளிட்டுக் கொடுத்தாப் போலே யன்றியே “நாளை வதுவை மணமென்று நாளிட்டு” (நாச்சியார் திருமொழி 6-2) என்று இன்றென்னில் வெள்ளக்கேடாம் சிலநாள் கழித்தென்னில் வறட்கேடாமென்று “நாளை” என்று நாச்சியார்க்கு நாளிட்டாற் போலே “மரணமானால் வைகுந்தம் கொடுக்கும்” (திருவாய்மொழி 9-10-5) என்று ஆரப்த ஸரீராவதியாக அவனாலே நாளிட்டுக் கொடுக்கப் பெற்று ஹ்ருஷ்டரான இவர் (இம் மடவுலகர் கண்டதோடு பட்ட இத்யாதி, ப்ரதி ஸம்பந்தியைக் காட்டி) சரமோபாயோபேய பர்யந்தமாக தாமருளிச் செய்த ஹித வசநம் கேட்டுத் திருந்தனவர்களை யொழிய அல்லாதாரையும் விடமாட்டாத தம்முடைய க்ருபையாலே “இம் மடவுலகர்’ (திருவாய்மொழி 9-2-7 என்று ஸம்ஸாரத்தில் அறிவு கேடரானவர்களையும் பார்த்து, “கொண்ட பெண்டிர்’ (திருவாய்மொழி 9-1-1 என்று தொடங்கி த்ரவ்யாதிகளாலே ஸம்பாதிக்கப் பட்டு ஸந்நிதி யிலே ஸ்நேஹித்திருக்கு மதொழிய காணாத போது ஸ்நேஹமொன்று மின்றிக்கே மிருக்கிற புத்ரதாராதிகள் பந்துக்களன்று ப்ரளயாபத் ஸகனானவனே பரமபந்து வென்று துணையும் சார்வும் (திருவாய்மொழி 9-1-2) இத்யாதி “பொருள் கை” (திருவாய்மொழி 9-1-3) இத்யாதி, “அரணமாவர்” (திருவாய்மொழி 9-1-4) இத்யாதி, அவனை யொழிந்தார் தாங்கள் உபகாரகரைப் போலே ப்ரயோஜநமுள்ள போது பந்துக்களாய்க் கொண்டாடி ஆபத்து வந்தவாறே கண்ணற்று உபேஷிப்பர்கள். ஆகையாலே இவர்கள் ரக்ஷகரல்லர். நிர்ஹேதுகமாக ஆபத் ஸகனான க்ருஷ்ணனை யொழிய வேறு ரக்ஷகரில்லை. “சதிரம்’” (திருவாய்மொழி 9-1-5) இத்யாதி தங்களுக்கு போக்யைகளாக ஸம்பாதித்த ஸ்த்ரீகள் ஆபத்து வந்தவாறே உபேஷிப்பர்கள். ஏக ப்ரகாரமாக ஸ்நிக்தனா யிருப்பானவனே. ஆனபின்பவனே நிரதிஸய போக்யன். “இல்லை கண்டீர் இன்பம்” (திருவாய்மொழி 9-1-5) என்று துக்க மிஸ்ரமான சிலவற்றை ஸுக மென்று ப்ரமிக்கிற வத்தனை போக்கி அவனை யொழிய ஸுக ரூபமாயிருப்ப தொன்றில்லை. “யாதுமில்லை” (திருவாய்மொழி 9-1-9) இத்யாதி. இவனை யொழிய வேறே யொருவனை ரஷகமென்று பற்றினவர்கள் பண்டை நிலையுங் கெட்டு அநர்த்த ப்பட்டுப் போவர்கள்; ஆன பின்பு அவனை யொழிய உபாயமில்லை என்று அவனை யொழிந்த வற்றினுடைய அபாந்துத்வத்தையும், அரக்ஷகத்வத்தையும், அபோக்யத்வத்தையும், அஸுகத்வத்தையும், அநுபாயத்வத்தையும் அவர்களுக்கு உபதேஸித்து (மற்றொன்று கண்ணனல்லால் என்கிற வைகல் வாழ்தலான ஸித்தோபாயம்)”மற்றொன்றில்லை சுருங்கச் சொன்னோம்”திருவாய்மொழி 9-1-7) என்று இதுக்கு மேலொன்று இன்றியிலே யிருப்பதாய் ஸம் ஷேபேண வுபதேஸிக்கலாம் படியுமாய் ஸர்வாதிகாரமுமாய் ஸ்வரூபாநுரூபமுமாய் ஸுகரமுமாய் நிரதிஸய போக்யமுமாய் “கண்ணனல்லா லில்லை கண்டீர் சரண்” (திருவாய்மொழி 9-1-9 என்று “மாமேகம் ஸரணம் வ்ரஜ” (கீதை 18-66) என்று திருத் தேர்த்தட்டிலே நின்றருளிச் செய்த க்ருஷ்ணனை யொழிய வேறு நிரபேக்ஷோபாயமில்லை. இவ்வுபாயந்தான் “வைகல் வாழ்தல் கண்டீர் குணம்” (திருவாய்மொழி 9-1-7) என்று யாவதாத்ம பாவி யநுபவம் என்று ஸித்தோபாயத்தை அவர்களுக்குபதேஸித்தும் (அதில் துர்பல புத்தி களுக்கு) “ஸக்ருதேவஹி ஸமாஸ்த்ரார்த்த,: தப்நாம் பயநா முக: நராணாம் புத்தி தெளர்பல்யாத் உபாயாந்தர மிஷ்யதே” என்று அந்த ஸித்தோ பாயத்தில் மஹா விஸ்வாஸம் பிறக்கைக் கடியான பாக்யமின்றிக்கே ஸாத்யங்களான உபாயாந்தரங்களில் ருசி குலையாமையாலே அவன் பல ப்ரதனாமோ என்று புத்தி தெளர்ப்பல்ய முடையார்க்கு (மாலை நண்ணிக் காலை மாலை விண்டு தேனை வாடா மலரிட்டு அன்பராம் ஸாங்க பக்தி) “மாலை நண்ணித் தொழுதெழுமினோ காலை மாலை கமல மலரிட்டு நீர்” (திருவாய்மொழி 9-10-1) “விண்டு வாடா மலரிட்டு நீரிறைஞ்சுமின்” (திருவாய்மொழி 9-10-3) “தேனை வாடா மலரிட்டு நீரிறைஞ்சுமின்” (திருவாய்மொழி 9-10-4) “தனதன்பர்க்கு” (திருவாய்மொழி 9-10-5) என்று நிரதிஸய ப்ரீதி யுக்தராய்க் கொண்டு ஸர்வ காலமும் புஷ்பாத் யுபகரணங்களைக் கொண்டு அவனை ஸமாராதநம் பண்ணி அவன் பக்கலிலே பக்தியைப் பண்ணுங்கோள் என்று அங்க ஸஹிதையான பக்தியை உபதேஸித்தும் (அதிலஸத்தர்க்குத் தாளடையும் ப்ரபத்தி) அதில் துஷ்கரத்வத்தாலே அநுஷ்டிக்க ஸக்தி இல்லாதார்க்கு “சரணமாகும் தனதாளடைந்தார்க்கெல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும்” (திருவாய்மொழி 9-10-5) என்று ஸர்வாதிகாரமுமாய் ஸரீராவஸாநத்திலே பலமுமான ப்ரபத்தியை வெளியிட்டும் (அதிலஸக்தர்க்கு உச்சாரண மாத்ரம்) உபாய பல்குத்வம் பல கெளரவ விரோதி பூயஸ்த்வங்களாகிற ஸங்கா த்ரயத்தாலே அதில் வ்யவஸாயத்துக் கடியான ஸக்தி யில்லாதார்க்கு “திருக்கண்ணபுரம் சொல்ல நாளும் துயர் பாடு சாராவே” (திருவாய்மொழி 9-10-10) என்று உச்சாரண மாத்ரத்தை வெளியிட்டும் (ஸர்வோபாயர்க்கும் இப்பத்தும் பாடியிடும் தண்டனென்று) கீழ்ச் சொன்ன உபாயாங்க ளெல்லாவற்றிலும் அயோக்யராயிருப்பார்க்கு“இப்பத்தும் பாடியாடிப் பணிமின் அவன் தாள்களே” (திருவாய்மொழி 9-10-11 )என்று இத் திருவாய்மொழியை ப்ரீதி ப்ரேரிதராய்க் கொண்டு பாடி அவன் திருவடிகளிலே விழுங்கோளென்று கீதோபநிஷதா சார்யன் தன் பரம க்ருபையாலே“நெறி யெல்லாம் எடுத்துரைத்த” (திருவாய்மொழி 4-8-6) என்கிறபடியே ருச்யநுகுணமான உபாயங்கள் எல்லாவற்றையும் வெளியிட்டாற் போலே இவர் தமக்கு ப்ராப்தி அணித்தானவாறே ஸம்ஸாரிகள் இழக்க வொண்ணாதென்று பார்த்து அவ்வவருடைய அதிகாராநுகு ணமாந உபாயங்கள் எல்லாவற்றையும் வெளியிடுகிறார் என்கிறார்.
228-சுரிகுழல் அஞ்சனப் புனல் மைந்நீன்ற பொல்லாப் புனக் காயாவென்னும் ஆபத்திற் கொள்ளும் காம ரூப கந்த, ரூபத்தாலே ப்ரபந்நார்த்தி ஹரனானவன் அருள் பெறும் போதணுக விட்டதுக்குப் பலமான வானேறும் ௧திக்கு அண்ட மூவுலகும் முன்னோடிக் கால் விழுந்திடத்தே நிழல் தடங்களாக்கி அமுதமளித்த தயரதன் பெற்ற கோவலனாகையாலே வேடன், வேடுவிச்சி, பஷி , குரங்கு, சராசரம், இடைச்சி, இடையர், தயிர்த் தாழி, கூனி, மாலாகாரர், பிணவிருந்து, வேண்டடிசில் இட்டவர், அவன் மகன், அவன் தம்பி, ஆனை, அரவம், மறையாளன், பெற்ற மைந்தனாகிற பதினெட்டு நாடன் பெருங்கூட்டம் நடத்தும் ஆத்தனை வழித் துணையாக்கி அறியச் சொன்ன ஸுப்ரபாதத்தே துணை பிரியாமல் போக்கொழித்து மீள்கின்றதில்லை யென்று நிச்சித்திருந்தவர் ஸஞ்சிதம் காட்டும் தஸையானவாறே முந்துற்ற நெஞ்சுக்குப் பணி மறவாது மருளொழி நகு கைவிடேலென்று க்ருத்யாக்ருத்யங்களை விதித்து நெஞ்சு போல்வாரைத் தொண்டீரென்றழைத்து, வலம் செய்து எண்ணுமின் பேசுமின் கேண்மின் காண்மின் நடமின் புகுதுமென்று கர்த்தவ்யம் ஸ்மர்த்தவ்யம் வக்தவ்யம் ஸ்ரோதவ்யம் த்ரஷ்டவ்யம் கந்தவ்யம் வஸ்தவ்யமெல்லாம் வெளியிட்டுப் பிணக்கறவைச் சார்வாக நிகமித்து எண்பெருக்கிலெண்ணும் திருநாமத்தின் ஸப்தார்த்தங்களைச் சுருக்கி மாதவனென்று த்வயமாக்கி, கரண த்ரய ப்ரயோக வ்ருத்தி ஸம்ஸாரிகளுக்குக் கையோலை செய்து கொடுத்துச் செஞ்சொற் கவிகளுக்குக் கள்ள வழி காவலிட்டு மனம் திருத்தி வீடு திருத்தப் போய் நாடு திருந்தின வாறே வந்து விண்ணுலகம் தர விரைந்து அத்தை மறந்து குடிகொண்டு தாம் புறப்பட்ட வாக்கையிலே புக்குத் தான நகர்களை அதிலே வகுத்துக் குரவை துவரைகளில் வடிவு கொண்ட சபலனுக்கு தேஹ தோஷம் அறிவித்து மாயையை மடித்து வானே தரக் கருதிக் கருத்தின் கண் பெரியனானவனை இன்று ௮ஹேதுகமாக ஆதரித்த நீ அநாத் யநாதர ஹேது சொல்லென்று மடியைப் பிடிக்க இந்த்ரிய கிங்கரராய்க் குழி தூர்த்துச் சுவைத்தகன்றீர் என்னில், அவை யாவரையும் அகற்ற நீ வைத்தவை யென்பர்; அது தேஹ யோகத்தாலே யென்னில் அந் நாள் நீதந்த சுமடென்பர்: முன் செய்த முழு வினையாலே என்னில், அது துயரமே உற்ற விருவினை உன் கோவமும் அருளுமென்பர் ; ஈவிலாத மதியிலேன் என்னும் உம்மதன்றோ கர்த்ருத்வ போக்த்ருத்வங்களென்னில், ஆங்காரமாய்ப் புக்குச் செய்கைப் பயனுண்பேனும் கருமமும் கரும பலனுமாகிய நீ கர்த்தா போக்தா என்பர்; யானே எஞ்ஞான்றும் என்றத்தாலே யென்னில்; அயர்ப்பாய்ச் சமய மதி கொடுத்து உள்ளம் பேதம் செய்கை உன் தொழிலென்பர்: ஜீவ ப்ரக்ருதி சைதந்யம் நீங்கும் வ்ரத ஹேது; அகமேனியி லழுக்கறுக்கை அபிமாநி க்ருத்யம்; தான் நல்கும் பந்தம் நிருபாதிகம்; ஸெளஹார்தம் எஞ்ஞான்றும் நிற்கும்; பிணக்கிப் பேதியாத ஜஞாநாதி வைகல்யமில்லை; ஏகமூர்த்தியில் அல்லல் மாய்த்த யத்ந பலித்வங்கள் நம்மது; நாம் தனி நின்ற ஸ்வதந்த்ரரென்று அவன அறிந்தனமே யென்னும் ஸர்வஜ்ஞரிவர்; நெறி காட்டி அருகும் சுவடும் போலே இதுவும் நிருத்தரமென்று கவிழ்ந்து நிற்க, அமந்த்ரஜ்ஜோத்ஸவ கோஷம் போலே ஏறப் பெறுகிற எழுச்சியை ஸூசிப்பிக்கிற மேக ஸ்முத்ர பேரீ கீத காஹள ஸங்காஸீஸ் ஸ்துதி கோலாஹலம் செவிப் பட்டவாறே ஸாக்ஷாத்கரித்த பர ப்ராப்திக்குத் தலை மிசையாய் வந்த தாள்களைப் பூண்டு போகாமல் தடுத்துத் திருவாணை யிட்டுக் கூசம் செய்யாத செய்திப் பிழை பற்றுக் கொம்பற்ற கதி கேடு போர விட்ட பெரும்பழி; புறம் போனால் வருமிழவு, உண்டிட்ட முற்றீம்பு, அன்பு வளர்ந்த அடியுரம், உயிருறவு முதலளவு துரக்கைகளாலே பெறா வாணை அல்லவாக்கின பேரவா குளப்படியாம்படி கடல் போன்ற ஆதரத்தோடே சூழ்ந்து தாபங்களை ஹரித்தமையை வெளியிடுகிறார் பத்தாம் பத்தில்.
ஆபத் ஸகனாகையாலே ப்ரபந்நரானவர்களுடைய ஆபத்துக்களிலே ஸூபாஸ்ரயமாய் அஸாதாரணமான திருமேனியோடே வந்துதவி அவர்களுடைய தாபங்களைப் போக்கும் ஆர்த்த ஹரனானவன் கீழில் பத்தில் இவர் த்வரைக்கீடாக அணித்தாக நாளிட்டுக் கொடுத்ததற்குப் பலம் அர்ச்சிராதி, கதியாலே துணை பெற்றுப் போகை யாகையாலே அதுக்கு ஆப்தனானவன் தன்னையே துணையாகப் பற்றி ப்ராப்தி நிஸ்சிதமென்ற போக்கிலே ஒருப்பட்ட இவர் தாம் தஞ்சமாக நினைத்திருந்த வர்த்தமும் பேசியிடும்படியான தஸையானவாறே முற்பட்ட உபதேஸ விஷயமான திருவுள்ளத்துக்கு க்ருத்யாக்ருத்யங்களை விதித்து-அப்படி பவ்யரான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு கர்த்வ்யாதிகளை வெளியிட்டு முதலிலே உபக்ரமித்த பக்தி ப்ரபத்திகளையும் நிகமித்து ஸம்ஸாரிகளுக்கு ஸுகரமாக ஆஸ்ரயணத்தை உபதேஸித்து அநுபவ கைங்கர்யங்களிலே நிற்கிறவர்களுக்கு பல் குணமாகிற ஆழங்காலையும் காட்டித் தம் பக்கல் வ்யாமுக்தனான ஈஸ்வரனுக்குத் தம்முடைய திருமேனியில் தமக்குண்டான உபேக்ஷையை வெளியிட்டு இப்போது தமக்குப் பரதந்த்ரனாய் நிற்கிறவவனை அநாதி காலம் தம்மைக் கைவிட்டதுக்கு ஹேதுவென் னென்று கேட்க அவனும் இந்த்ரிய வஸ்யதை தொடக்கமான ஹேது பரம்பரைகளை யெண்ணி அதுவும் ததாயத்தமென்றறியும் ஸர்வஜ்ஞரான இவர்க்குப் போக்கிடம் சொல்லுகை யரிதென்று நிருத்தரனாய் அர்ச்சிராதி மார்க்கத்தையும் அங்குள்ளாருடைய ஸத்காரத்தையும் காட்டிக் கொடுக்க அத்தை ஸாக்ஷாத்கரித்தவிவர் அதுவும் மாநஸாநுபவமாய் பாஹ்யகரண யோக்ய மல்லாமையாலே அவனுக்கு மறுக்க வொண்ணாத வாணையிட்டுத் தடுத்து அது பெறாவாணை யல்லாமைக்கு ஹேதுக்களைச் சொல்லும்படியான தம்முடைய பரமபக்தி யெல்லாம் குளப்படியாம்படியான அபி நிவேஸத்தோடே வந்து தம்முடைய தாபத்தைப் போக்கிப் பேற்றோடே தலைக் கட்டிக் கொடுத்தபடியை வெளியிடுகிறார் என்கிறார் பத்தாம் பத்தில்.
(சுரிகுழலஞ்சனப்புனலித்யாதி, ப்ரபந்நார்த்த்ஹரனான ஸர்வேஸ்வரன்) “சுரிகுழல் கமலக் கண்கனிவாய்” (திருவாய்மொழி 10-1-1) “அணிக்கொள் நால்தடந்தோள்” (திருவாய்மொழி 10-1-9) “மணிமிகு மார்பு அணிமிகு தாமரைக் கை” (திருவாய்மொழி 10-3-5) “கைகளும் பீதகவாடையும்” (திருவாய்மொழி 10-3-8) “செங்கமலவண்ண மென்மலரடி” (திருவாய்மொழி 10-3-7) “மணிநின்ற சோதி” (திருவாய்மொழி 10-4-7) “அஞ்சன மேனி” (திருவாய்மொழி 10-3-3) “புனல் மைநின்றவரை போலும் திருவுருவம்” (திருவாய்மொழி 10-6-8) “பொல்லாத் தாமரைக்கண் கருமாணிக்கம்” (திருவாய்மொழி 10-10-1 “புனக்காயா நிறத்த” (திருவாய்மொழி 10-10-6) “நீரார் முகில் வண்ணன்” (திருவாய்மொழி 10-5-8) “கார் மேகவண்ணன்” (திருவாய்மொழி 10-4-1 “மெய்ந்நின்று கமழ் துளப விரையேறு திருமுடியன்” (திருவாய்மொழி 10-6-8) “திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை” (திருவாய்மொழி 10-6-9) “அணிநின்ற செம்பொன் அடலாழி” (திருவாய்மொழி 10-4-7) “காமனைப் பயந்த காளை” (திருவாய்மொழி 10-2-8) என்று அவயவங்களோடும் ஒளதார்யம் முதலான குணங்களோடும் ஸ்ரக் வஸ்த்ர ஆபரண ஆயுதங்களோடும் கூடி “காம ரூபங்கொண்டு எழுந்தளிப்பான்” (திருவாய்மொழி 10-1-10) என்று ஆஸ்ரிதருடைய ஆபத் ரக்ஷணத்துக்கு அநுரூபமாகக் கொள்ளும் விக்ரஹங்களுக்கெல்லாம் கந்த மாய் ஸூபாஸ்ரயமான அந்த விக்ரஹத்தை யுடையனாய்க் கொண்டு தன் பக்கல் ந்யஸ்த பரரானவர்களுடைய ஆர்த்தியைத் தீர்க்கையாலே ப்ரபந்நார்த்த ஹரனான ஸர்வேஸ்வரன் (அருள்பெறும்போதணுக விட்டதித்யாதி, தயரதன் பெற்ற கோவலனாகையாலே) “அவனுடையருள்பெறும் போதரிதால் அவனருள் பெருமளவாவி நில்லாது” (திருவாய்மொழி 9-9-6) என்று கீழில் பத்திலே க்ஷண கால விஸ்லேஷம் பொறாமை ஆர்த்தரான இவ்வாழ்வார்க்கு “மரணமானால்’” (திருவாய்மொழி 9-10-5) என்று ஆரப்த ஸரீராவஸாநத்திலே உமக்கு மோக்ஷம் தருகிறோம் என்று அணித்தாக நாளிட்டுக் கொடுத்ததுக்குப் பலம் வானேற வழிதந்த” (திருவாய்மொழி 10-6-5) என்று அவன் காட்டிக் கொடுத்த அர்ச்சிராதி மார்க்கத்துக்குத் துணை பெற்றுப் போகையாலே இவரை இவ் வழியாலே கொடு போவதாக ராஜ குமாரன் போம் போது நிலவரானார் முன்னே போய் நிலம் சோதித்து நிழலாம்படி சோலை செய்து தடாகங்கள் சமைத்து வைத்துப் பின் கொண்டு போவரைப் போலே “அண்டமூவுலகளந்தவன்” (திருவாய்மொழி 10-1-5) என்று திருவுலகளக்க என்றொரு வ்யாஜத்தாலே முன்னோடி நிலம் ஸோதித்து “அவனடி நிழல் தடமன்றி யாமே” திருவாய்மொழி 10-1-2) என்று காளமேகமான தன் கால் விழுந்த விடத்தே நிழலும் தடாகமுமாம்படி பண்ணி அமுதமளித்த பெருமானாகையாலே “பாதேயம் புண்டரீகாக்ஷ நாம ஸங்கீர்த்தநாம்ருதம்” (காருடம்) என்றிவர்க்கு பாதேயமாகத் தன் திவ்ய குணாம்ருதத்தை வர்ஷிக்குமவனாய் “தயரதன் பெற்ற மரதக மணித்தடம்” (திருவாய்மொழி 10-1-8) என்றும் “கூத்தன் கோவலன்” (திருவாய்மொழி 10-1-6 என்றும் சக்ரவர்த்தி திருமகனாயும் க்ருஷ்ணனாயும் வந்தவதரித்தவனாகையாலே. (வேடன் வேடு வச்சி என்று தொடங்கி – ஆத்தனை வழித்துணையாக்கி) “உகந்த தோழன் நீ” (பெரிய திருமொழி 5-8-1) என்று பெருமாளுடைய ஸ்வீகாரத்துக்கு விஷய பூதனான ஸ்ரீகுஹப் பெருமாள், “சஷுஷா தவ ஸெளம்யேந பூதாஸ்மி ரகு நந்தந” (ரா. ஆ. 74-14) என்று அவன் கடாக்ஷ லஷ்ய பூதையான ஸபரீ, “யா கதிர் யஜ்ஞ ஸீலாநாம் ஆஹிதாக் நேசயா க,தி: அபரா வர்த்திநாம் யாச யாச பூமி ப்ரதாயிநாம் மயா த்வம் ஸமநுஜ்ஞாத: கச்ச லோகாதநநுத்தமாந்” (ரா.ஆ. 68-29, 30) என்று விஷயீ கரிக்கும்படியான ஸ்ரீஜடாயு மஹாராஜர், “ராமபாணாஸந ஷிப்தமாவஹத் பரமாங்கதிம்” (ரா. ஸு. 17-8) என்னும்படியான வாலி ஸுக்ரீவ மஹாராஜர் தொடக்கமான வாநர ஸேநைகள் அயோத்தியில் வாழும் சராசரம், “சிந்தயந்தீ ஜகத் ஸூதிம் பரப்ரஹ்ம ஸ்வரூபிணம் நிருச்வாஸ தயா முக்திம் க.தாந்யா கோப கந்யகா” என்னும்படி இடைச்சியான சிந்தயந்தி ததி பாண்டன், அவனுடைய தயிர்த்தாழி, “ஸுகந்த மேதத் ராஜார்ஹம் ரசம் ருசிராநநே ஆவயோர்காத்ர ஸத்ருஸம் தீ,யதா மநுலேபநம்” (ஸ்ரீவிஷ்ணுபுராணம் 5-20-6) என்று விஷயீகரிக்கும்படியான கூனி, “தர்மே மநஸ் ச தே பத்ர ஸர்வ காலம் பவிஷ்யதி யுஷ்மத் ஸந்ததி ஜாதாநாம் தீர்க்க மாயுர் பவிஷ்யதி” ஸ்ரீவிஷ்ணு புராணம் 5-9-26) என்று விஷயீகரிக்கும்படியான ஸ்ரீமாலாகாரர் “நவம் ஸவமிதம் புண்யம் வேத பாரக மச்யுத யஜ்ஞ ஸீல மஹா ப்ராஜ்ஞ ப்ராஹ்மணம் ஸவமுத்தமம்” (ஹரிவம்சம்) என்று பிணவிருந்திட்ட கண்டாகர்ணன், “வேண்டடிசிலுண்ணும்போது ஈதென்று பார்த்திருந்து நெடுநோக்குக் கொள்ளும்” (நாச்சியார் திருமொழி 12-6) பத்த விலோசநத்தில் ருஷி பத்நிகள், “மீளவவன்மகனை” (பெரியாழ்வார் திருமொழி 1-5-2) என்று ஹிரண்ய புத்ரனான ஸ்ரீப்ரஹ்லாதன், “அவன் தம்பிக்கு” (பெருமாள் திருமொழி 10-7) என்று ராவணாநுஜனான ஸ்ரீவிபீஷணப் பெருமாள், ஸ்ரீகஜேந்த்ராழ்வான், “நஞ்சு சோர்வதோர் வெஞ்சினவரவம்” (பெரிய திரு மொழி 5-8-4) எனகிற ஸுமுகன், “மலரடி கண்ட மாமறையாளனான (பெரிய திருமொழி 58-5] கோவிந்த ஸ்வாமி, “மாமுனி பெற்ற மைந்தன்” (பெரிய திருமொழி 5-8-6) என்று ம்ருகண்டு புத்ரனான மார்க்கண்டே,யன் இவர்கள் தொடக்கமான பதினெட்டு நாட்டிலுள்ள அநுகூல வர்க்கமான பெருங்கூட்டத்தை அர்ச்சிராதி மார்க்கத்தாலே தானே துணையாய்க் கொண்டு நடத்துகிறவனாய் “திருமோகூராத்தன் தாமரையடியன்றி மற்றொன்றிலம் அரணே” (திருவாய்மொழி 10-1-6) “காளமேகத்தையன்றி மற்றொன்றிலம் கதியே” (திருவாய்மொழி 10-1-1) என்று பரமாப்தனான காளமேகத்தை வழித் துணையாகப் பெற்று (அறியச் சொன்ன ஸூப்ரபாதத்தே) “நாமுமக்கறியச் சொன்ன நாள்களும் நணியவான” (திருவாய்மொழி 10-2-9) “மரணமானால்” (திருவாய்மொழி 9-10-35) என்று அவனறுதி யிட்டுத் தந்தானாய் நான் உங்களுக்குச் சொன்ன நாள் கிட்டிற்றென்று பிறர்க்கும் பேசும்படியாய் “ஸுப்ரபாதா ச மே நிஸா ” (ஸ்ரீவிஷ்ணுபுரானம் 5-17-3) “ஸுப்ரபா தாத்ய ரஜநீ மது,ராவாஸ யோஷிதாம்” (ஸ்ரீவிஷ்ணுபுராணம் 5-18-24) என்று பகவத் ப்ராப்தி அணித்தான நல்விடிவான நாளிலே (துணை பிரியாமல் போக்கொழிந்து மீள்கின்றதில்லை என்று நிச்சித்திருந்தவிவர்) “துணை பிரிந்தார் துயரமும் நினைகிலை பசுமேய்க்கப் போகேல்” (திருவாய்மொழி 10-3-4) “என் கை கழியேல்” (திருவாய்மொழி 10-3-8) “பசுநிரை மேய்ப்பொழிப்பானுரைத்தன (திருவாய்மொழி 10-3-11) என்று தமக்குத் துணையாக அவனை பசு மேய்க்கப் போகையாகிற அபிமதத்தில் நின்றும் தவிர்த்து “மீள்கின்றதில்லை பிறவித்துயர் கடிந்தோம்” (திருவாய்மொழி 10-4-3 “நிலைபேர்க்கலாகாமை நிச்சித்திருந்தேன்’ (திருவாய்மொழி 10-4-4) என்று ஸம்ஸார துரிதம் மறுவலிடா தென்று “நபி, பேதி குதஸ்சந’ (தைத்திர்யோபநிஷத் என்கிறபடியே ஒன்றுக்கும் அஞ்சாதபடி நிஸ்சித்திருந்த விவர் (ஸஞ்சிதம் காட்டும் தமையானவாறே) மரணாவஸ்தைகளிலே ஸஞ்சிதமாய்ப் புதைத்துக் இடந்த நிதிகளைப் புத்ராதிகளுக்குக் காட்டுவாரைப் போலே தமக்கு ப்ராப்தி யணித்தானவாறே ஒருவரும் இழக்க வொண்ணாது இவ்வளவிலே எல்லார்க்கும் ஹிதாஹிதங்களை அறிவிக்க வேணுமென்று பார்த்து, (முந்துற்ற நெஞ்சுக்குப் பணியித்யாதி க்ருத்யாக்ருத்யங்களை விதித்து) “தொழுதெழென் மனனே” (திருவாய்மொழி 1-1-1) என்று ப்ரதமத்திலே உபதேஸிக்கும்படி பகவத் விஷயத்திலே தம்மிலும் முந்துற்று நிற்கிற தம்முடைய திருவுள்ளத்தைப் பார்த்து, “பணிநெஞ்சே நாளும் பரமபரம்பரனை (திருவாய்மொழி 10-4-7) “வாழியென் நெஞ்சே மறவாது வாழ்கண்டாய்” (திருவாய்மொழி 10-4-8) “மருளொழி நீ மடநெஞ்சே” (திருவாய்மொழி 10-6-1 “நரகத்தை நகு நெஞ்சே” (திருவாய்மொழி 10-6-5 “வாழி மனமே கைவிடேல்” (திருவாய்மொழி 10-7-9 என்று நம் ப்ரதிபந்தகங்களை யெல்லாம் தானே போக்கி அடிமை கொள்ளும் ஸர்வஸ்மாத் பரனை அநுபவிக்கப்பார். உனக்கிந்த ஸம்ருத்தி மாறாதே சென்றிடுக கைபுகுந்ததென்னா இதர விஷயங்களிலே செய்யுமத்தை இவ் விஷயத்திலும் செய்யாதே கிடாய். இன்பம் பயக்கவிலே ‘ திருவாறன்விளையதனை மேவி வலஞ்செய்து கை தொழக்கூடுங்கொலோ” (திருவாய்மொழி 7-10-9)என்று ப்ராப்ய வஸ்து கிட்டிற்றாகில் இங்கே யடிமை செய்ய வமையாதோ வென்று ப்ரமிப்பதொன்றுண்டு; உனக்கு அத்தைத் தவிரப் பார். உத்தேஸ்ய வஸ்து ஸந்நிஹிதமாய்த்தென்று அத்தையே பார்க்குமத்தனையோ, நம்மைப் பார்க்க வேண்டாவோ நான் பரமபதத்தேறப் போகா நின்றேன். நெடுநாள் நம்மைக் குடிமக்களாக்கி எளிவரவு படுத்தின ஸம்ஸாரத்தைப் புரிந்து பார்த்து சிரித்துப் போரு கிடாய்; நமக்கு இந்த ஸம்பத்தெல்லாம் திருமலையாழ்வாராலே வந்ததாய்த்து. அத்திருமலையைக் கைவிடாதேகொள் என்று க்ருத்யாக்ருத்யங்களை அவஸ்ய கரணீயமாம் படி விதித்து (நெஞ்சு போல்வாரைத் தொண்டீரென்றழைத்து) திருவுள்ளம் போலே அந்தரங்கரான ஸ்ரீவைஷ்ணவர்களை “தொண்டீர் வம்மின்” (திருவாய்மொழி 10-1-4) என்று அழைத்து (வலஞ்செய்தித்யாதி நடமின் புகுதுமின் என்று) கொண்ட “கோயிலை வலஞ்செய்திங்காடுதும் கூத்தே” (திருவாய்மொழி 101-5) “எண்ணுமின் எந்தை நாமம்” (திருவாய்மொழி 10-2-5) “பேசுமின் கூசமின்றி” (திருவாய்மொழி 10-2-4) “நமர்களோ சொல்லக் கேண்மின்” (திருவாய்மொழி 10-2-8)பாதம் காண நடமினோ நமர்கள் உள்ளீர் (திருவாய்மொழி 10-2-1)அனந்தநகர் புகுதுமின் (திருவாய்மொழி 10-2-1) என்றும் அவன் எழுந்து அருளி இருக்கிற தேசத்திலே அனுகூல வ்ருத்திகளைப் பண்ணுங்கோள் -ஸ்வாமியுடைய திரு நாமங்களை அநுஸந்தியுங்கோள்; உங்கள் அயோக்யதை பார்த்துக் கூசாதே திருவனந்தபுரத்திலே ஸ்நேஹத்தைப் பண்ணி வர்த்திக்கதிறவனைப் பேசுங்கோள்; என்னோடு ஸம்பந்த முடையரானார் சொன்ன வார்த்தையைக் கேளுங்கோள்: திருவனந்தபுரத்திலே திருக்கண் வளர்ந்தருளுகிற ஸர்வேஸ்வரனுடைய திருவடிகளைக் காணப் போருங்கோள்; இச்சை பிறந்த இன்றே அங்கே போய்ப் புகப் பாருங்கோள் என்று அவர்களுக்குக் கர்த்தவ்யம் ஸ்மர்த்தவ்யம் வக்தவ்யம் ஸ்ரோதவ்யம் த்ரஷ்டவ்யம் கந்தவ்யம் வஸ்தவ்யமெல்லாம் வெளியிட்டு (பிணக்கறவைச் சார்வாக நிகமித்துக் கொண்டு) உக்த நிகமநம் பண்ணுகை ஸாஸ்த்ரமாகையாலே முதலிலே “பிணக்கற” என்கிற பாட்டில் “வணக்குடைத் தவநெறி” (திருவாய்மொழி 1-3-5) என்று உபக்ரமித்த ஸாத்ய ஸித்த ரூபமான பக்தி ப்ரபத்திகளாகிற உபாயத்தையும் சார்வே தவநெறியிலே “சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்” (திருவாய்மொழி 10-4-1 என்றும் “பண்டே பரமன் பணித்த பணி வகையே கண்டேன் கமல மலர்ப்பாதம்” (திருவாய்மொழி 10-4-9) “இருமை வினைகடிந்து இங்கென்னை யாள்கின்றான்” (திருவாய்மொழி 10-4-2) என்று நிகமித்துக் கொண்டு ( எண் பெருக்கில் எண்ணும் திருநாமத்தின் ஸப்தார்த்தங்களைச் சுருக்கி) “எண்பெருக்கந்நலத்து ஒண்பொருள் ஈறில வண்புகழ் நாரணன்” (திருவாய்மொழி 1-2-10) என்றும் “திண்ணம் நாரணமே” (திருவாய்மொழி 10-5-1) என்றும் பக்திக்காலம்பநமாக உபதேஸித்த திருமந்தரத்திலர்த்தத்தையும் ஸப்தத்தையும் பரவாதபடி சுருக்கிக் கொண்டு (மாதவன் என்றென்று த்வயமாக்கி) “ மாதவனென்றென்று ஓத வல்லீரேல்” (திருவாய்மொழி 10-5-7) என்று அந்தத் திருநாமத்தினுடைய விதாநுஸந்தாநமான த்வயத்தையும் வெளியிட்டு (கரண த்ரயமித்யாதி, கையோலை செய்து கொடுத்து )ஈஸ்வரன் தம்மைக் கொண்டு போகையிலே த்வரிக்கிறபடியாலும் கேட்கிறவர்களுக்கு ப்ரதிபத்திக்கு விஷயமாம்படியாகவும் சுருங்கக் கொண்டு அநுஷ்டாநார்த்த ப்ரகாஸகமான ப்ரயோக விருத்தி போலே பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே” நெடியானே” (திருவாய்மொழி 10-5-5) “சுனைநன் மலரிட்டு நினைமின் (திருவாய்மொழி 10-5-10) என்று கரண த்ரயத்தாலுமுண்டான ஆஸ்ரயணத்தை ஸம்ஸாரிகளுக்கு உபதேஸித்து (செஞ்சொற்கவிகளுக்குக் கள்ள வழி காவலிட்டு) “செஞ்சொற்கவிகாள் உயிர்காத்தாட்செய்மின்” (திருவாய்மொழி 10-7-1) என்று அவனுக்கு அடிமை செய்வார் ஸீலாதிகளிலே அகப்படாதே கொள்ளுங்கோள், அநுபவ கைங்கர்யங்களிலே நிற்கிறவர்களுக்கு அரணழியாமல் கள்ள வழி காவலிடுவாரைப் போலே ஸீல குணமாகிற ஆழங்காலிலே இழியாதே கொள்ளுங்கோள் என்று உபதேஸித்து (மனந்திருந்தி யென்று தொடங்கி தேஹதோஷமறிவித்து) “தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு தருத்துவான்’ (திருவாய்மொழி 1-5-10) என்கிறபடியே பரமபதத்தைக் கொடுப்பதாகப் போய் அலங்கரித்து அவன் வரக் கொள்ள “ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போல்” (திருவாய்மொழி 6-7-2) என்று இவருபதேஸத்தாலே லோகமாகத் திருந்த இவரை வைத்த கார்யம் தலைக் கட்டினவாறே “விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான்’ (திருவாய்மொழி 10-6-3) என்று இவரைக் கொண்டு போகையிலே த்வரித்து இவருடைய ஸரீரம் சரம ஸரீரமாகையாலே அதில் தனக்குண்டான வ்யாமோஹத்தாலே இவரைக் கொண்டு போகையையும் மறந்து “கோவிந்தன் குடி கொண்டான்’ (திருவாய்மொழி 10-6-7) என்று ஸபரிகரனாய்க் கொண்டு “என் மாய வாக்கை இதனுள் புக்கு” (திருவாய்மொழி 10-7-3) இன்றிவர் தாம் குந்தியடியிட்டு த்யாஜ்யமென்று சரக்குக் கட்டிப் புறப்பட்டு நிற்கிற இவருடைய தேஹத்திலே தான் புகுந்து “திருமாலிருஞ்சோலை மலையே” (திருவாய்மொழி 10-7-8) என்கிற பாட்டின்படியே ஷீராப்தி தொடக்கமாகத் தனக்கு வாஸஸ்தாந திவ்ய நகரங்களில் பண்ணும் விருப்பத்தை யெல்லாம் ஒரோ அவயவங்களிலே பண்ணி “அங்க நாமங்க நாமந்தரே மாத வவோ மாதவம் மாதவஞ்சாந்தரேணாங்க நா இத்தமா கல்பிதே மண்டலே ஸஞ்சரந் ஸஞ்ஜகெள, வேணுநா தேவகீ நந்த ந: (கர்ணாம்ருதம் என்று திருக் குரவையில் பெண்களோடே அநேக விக்ரஹ பரிக்ரஹம் பண்ணி அநுபவித்தாப் போலவும் ஸ்ரீமத் த்வாரகையிலே தேவிமார்களோடே பதினாறாயிரம் விக்ரஹம் கொண்டு அநுபவித்தாப் போலவும் அநேக விக்ரஹ பரிக்ரஹம் பண்ணி இவருடைய அவயவங்கள் தோறும் அநுபவிக்கும்படி இவருடைய விக்ரஹத்திலே சபலனானவனுக்கு “பொங்கைம்புலனும் பொறியைந்தும் கருமேந்திரியம் ஐம்பூதம் இங்கிவ்வுயிரேய் பிரகிருதி மானாங்கார மனங்களே உன் மாமாயை மங்கவொட்டு” (திருவாய்மொழி 10-8-10) என்று தம்முடைய தேஹத்தில் தோஷத்தை அவனுக்கறிவித்து அத்தை விடுவிக்க வேணுமென்று (மாயையை மடித்து வானே தரக் கருதி கருத்தின் கண் பெரியனானவனை) ‘”மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை” (திருவாய்மொழி 10-8-3) ஸம்ஸாரத்தில் நிற்கைக்கடியான மாயை ப்ரக்ருதி அத்தைத் திரிய விடுத்தேன் என்று இவர் தாமே பேசும்படி அசித் ஸம்பந்தத்தை யறுத்து “வானே தருவான்” (திருவாய்மொழி 10-8-5) என்று பரமபதத்தை இவர்க்குக் கொடுப்பதாக “கருத்தின் கண் பெரியன்” (திருவாய்மொழி 10-8-8 என்று இவருடைய மநோரதத்தினளவல்லா படி இவரைக் கொண்டு போகையிலே த்வரிக்கிற பற்று கண்டு (அநாத்யநாதர ஹேது சொல்லென்று மடியைப் பிடிக்க) “இன்றென்னை’ (திருவாய்மொழி 10-8-9) இத்யாதி, இன்றிப்படி நிர்ஹேதுகமாக விஷயிகரித்த நீ அநாதி காலம் உபேக்ஷித்து வைத்ததுக்கு ஹேதுவை அருளிச் செய்யவேணுமென்று அவன் மடியைப் பிடிக்க, (இந்த்ரிய கிங்கரராய் குழி தூர்த்துச் சுவைத்தகன்றீர் என்னில் அவை யாவரையுமகற்ற நீ வைத்தவை என்பர்) “வயந்து கிங்கரா விஷ்ணோ: யூயமிந்த்ரிய இங்கரா:” (வில்லிபுத்தூர் பகவர் வார்த்தை) என்கிறபடியே அநாதி காலம் இந்த்ரிய வஸ்யராய் “தூராக்குழி தூர்த்து எனை நாளகன்றிருப்பன்” (திருவாய்மொழி 5-8-6) “அற்ப சாரங்களவை சுவைத்தகன்றொழிந்தேன்” (திருவாய்மொழி 3-2-6) என்று துஷ்பூரமான இந்த்ரியங்களுக்கு இரையிட்டு எத்தனை காலம் உன்னை அகன்றிருக்கக் கடவேன் அற்ப சாரமானது அது நமக்குமெட்டாதபடி ஸம்ஸாரத்திலே கைகழிப் போந்தேன் என்று நீர் தாமே பேசும்படியான ஸப்தாதி விஷய ப்ராவண்ய மன்றோ நீர் அநாதி காலம் இழக்கைக்கு ஹேது என்னில், “ஓரைவர் யாவரையும் மயக்க நீ வைத்த” (திருவாய்மொழி 7-1-8) என்றும் “அகற்ற நீ வைத்த மாயவல்லைம்புலன்கள்” (திருவாய்மொழி 5-7-8) என்றும் நீ வேண்டாதாரை அகற்றுகைக்கு வைத்தவை என்று நன்றாக அறிந்தேன் என்பர். (அது தேஹ யோகத்தாலே என்னில் அந்நாள் நீ தந்த சுமடென்பர்) அந்த இந்த்ரிய வஸ்யதைக்கடி ஸரீர ஸம்பந்த மன்றோ என்னில் “அந்நாள் நீ தந்த ஆக்கை” (திருவாய்மொழி 3-2-1) “அது நிற்கச் சுமடு தந்தாய்” (திருவாய்மொழி 7-1-10) என்று அதுவும் உன்னாலே உண்டான (தென்பர்). (முன் செய்த முழு வினையாலே என்னில் அது துயரமே யுற்ற இருவினை உன் கோவமும் அருளுமென்பர்) “முன்செய்த முழு வினையால் திருவடிக்கீழ் குற்றேவல் முன் செய்ய முயலாதே அகல்வதுவோ (திருவாய்மொழி 1-4-2) என்று அந்த தேஹ ஸம்பந்தத்துக்கடி நீர் அநாதியாகச் செய்து போந்த கர்மமன்றோ என்னில் “துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய்” (திருவாய்மொழி 3-6-8) “உற்ற விரு வினையாய்” (திருவாய்மொழி 10-10-8) என்று புண்ய பாப ரூபமான கர்மங்களை அசேதநமுமாய் நஸ்வரமுமாய் இருபசை மலமுமாய்க் கொண்டு உன் கோபமும் அருளுமென்று உன்னுடைய நிக்ரஹாநுக்ரஹ ரூபேண பலிக்குமவை யாகையாலே அந்த கர்மம் நீயிட்ட வழக்கென்பர். (ஈவிலாத மதியிலே னென்னும் உம்மதன்றோ கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் என்னில் ஆங்காரமாய்ப் புக்கு செய்கைப் பயனுண்பேனும் கர்த்ருத்வமும் தத் பலமான போக்த்ருவத்வமும் கருமமும் கரும பலனுமாகிய நீ கர்த்தா போக்தா என்பர்) “ஈவிலாத வினைகள் எத்தனை செய்தனன் கொல்” (திருவாய்மொழி 4-7-3) என்றும் “மதியிலேன் வல்வினையே மாளாதோ” (திருவாய்மொழி 1-4-3) என்றும் அநுபவித்தாலும் மாளாத பாபத்தை எத்தனை பண்ணினேன், நான் பண்ணின பாபமேயோ அநுபவித்தாலும் மாளாதே யிருப்பது என்று நீர் சொல்லுகையாலே அந்த கர்த்ருத்வமும் போக்த்ருத்வமும் உம்மதன்றோ என்று நாம் சொல்லில் தானாங்காரமாய்ப் புக்கு தானே தானே யானான்’ (திருவாய்மொழி 10-7-11 என்று தானபிமாநியாய்ப் புக்கு ஆத்மாத்மீயங்களில் எனக்குண்டான அபிமானத்தைத் தவிர்த்துத் தானே அபிமாநியானானென்று, அந்த கர்த்ருத்வமும் “செய்கைப் பயன் உண்பேனும் யானே” (திருவாய்மொழி 5-6-4) என்றும் கருமமும் கரும பலனுமாகிய காரணன் தன்னை (திருவாய்மொழி 3-5-10) என்று பல போக்தாவும் நாமிட்டவழக்காகையாலே கர்த்தாவும் போக்தாவும் நீயே என்பர். (யானே எஞ்ஞான்றுமென்றத்தாலே என்னில் அயர்ப்பாய்ச் சமய மதி கொடுத்து உள்ளம் பேதம் செய்கை உன் தொழில் என்பர்) “யானே என்னை அறியகிலாதே யானே என்றனதே என்றிருந்தேன்” (திருவாய்மொழி 2-9-9 “எஞ்ஞான்றும் மெய்ஞ்ஞான மின்றி வினையியல் பிறப்பழுந்தி’ (திருவாய்மொழி 3-2-7) என்று நீர் சொல்லுகையாலே அந்த கர்ம கர்த்ருத்வ பல போக்த்ருத்வங்களுக்கடி உம்முடைய அஜ்ஞானமன்றோ என்னில், ‘அயர்ப்பாய்த் தேற்றமுமாய்” (திருவாய்மொழி 7-8-6) “மாட்டாத பல சமய மதி கொடுத்தாய்” (திருவாய்மொழி 3-1-4) “உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்” (திருவாய்மொழி 5-10-4) என்று ஜ்ஞாநாஜ்ஞானங்களிரண்டும் நீயிட்ட வழக்காகையாலே அத்தால் வந்த புத்தி பேதங்களும் உனக்குக் காரியமென்று சொல்லுவர்.
(ஜீவ ப்ரக்ருதி சைதந்யம் நீங்கும் வ்ரத ஹேது அக மேனியில் அழுக்கறுக்கை அபி மாநி க்ருத்யம்) “மூதாவியில் தடுமாறு முயிர் முன்னமே யாதானும் பற்றி நீங்கும் வ்ரதம்” (திருவிருத்தம் 95) என்று ஸுஷ்ம ப்ரக்ருதி விஸிஷ்டனான ஆத்மாவில் இடக்கிற சைதந்யம் ப்ரக்ருதி ப்ராக்ருதங்களைப் பற்றி நம்மை விட்டகலுகை நங்கார்யம். “அகமேனி ஒழியாமே’ (திருவாய்மொழி 9-7-10) என்று நமக்கந்தரங்க ஸரீரமான இவ் வாத்மாவைப் பற்றிக் கிடக்கிற ப்ரக்ருதி ரூபமான மாலிந்யத்தை அறுக்கை அவ்வாத்மாவுக்கு அபிமாநியான நம்முடைய க்ருத்யமாயிருந்ததீ. (தான் நல்கும் பந்தம் நிருபாதிகம்) “நல்கித்தான் காத்தளிக்கும் பொழிலேழும் வினையேற்கே நல்கத் தானாகாதோ நாரணனைக் கண்டக்கால்” (திருவாய்மொழி 1-4-5) என்று நாம் ஸ்நேஹ பூர்வமாக ரக்ஷிக்கைக் கடியான நாராயணத்வ ப்ரயுக்தமான ஸம்பந்தம் நிருபாதிகமாகையால் (ஸெளஹார்த்த,ம் எஞ்ஞான்றும் நிற்கும்) “தனிமாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும்படியாய்த் தான்தோன்றி” (திருவாய்மொழி 8-10-7) என்று அந்த பந்த மடியாக எல்லாருடைய நன்மையை ஆஸாஸிக்கைக்கடியான ஸெளஹார்த்த குணம் ஸர்வாத்மாக்கள் பக்கலிலும் ஸர்வ காலமும் நடக்கையாலே இந்த ஸம்பந்த மடியான ஸ்நேஹமும் இவனுக்குக் கண்ணழிவு சொல்ல வொண்ணாதா யிருந்தது. (பிணக்கிப் பேதியாத ஜ்ஞாந வைகல்யம் இல்லை) “பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாததோர் கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தியினாய்” (திருவாய்மொழி 6-2-8) என்று ஸம்ஹார காலத்தில் மண்ணும் நீரும் கலசுமாப் போலே நன்றாகக் கலசி ஸ்ருஷ்டி காலத்திலே ஒருவருடைய கர்மம் ஒருவருக்குத் தட்டாதபடி பிரித்து ஸ்ருஷ்டிக்கும்படியான நமக்கு ஞான சக்த்யாதிகளிலே குறை சொல்லி கண்ணழிக்க வொண்ணாதாயிருந்தது. [எகமுர்த்தியில் அல்லல் மாய்த்த யத்ன பலித்வங்கள் நம்மது) “ஏகமூர்த்தி யிருமூர்த்தி’ (திருவாய்மொழி-4-3-3) என்கிற பாட்டின்படியே காரணங்களோடு கார்யங்களோடு வாசியற எல்லாவற்றையும் உண்டாக்கி அவற்றினுடைய வஸ்துத்வ நாம பாக்த்வங்களுக்காக அநு ப்ரஸித்து ஸுஷ்மரான சேதநர்க்கு ருசி பிறந்த போது ஆஸ்ரயிக்கைக்காக ஷீராப்தியிலே கண் வளர்ந்தருளுகிற ஸர்வ ஸரீரியான நீ உன்னுடைய திருமேனிக்கு வேண்டும் போகோபகரணங்களை பூசும் சாந்தில் படியே என் பக்கலாக்கி நிர்துக்கனானாயே என்று இவர் பேசும்படி இவரைப் பெறுகைக்கு யத்நம் பண்ணுகையும் பெற்றால் உகக்கைக்கீடாந அறிவுள்ளதொன்றாயிருந்து அத்தாலும் கண்ணழிவு சொல்ல வொண்ணாதா யொழிந்தது. (நாம் தனி நின்ற ஸ்வதந்த்ரரென்று அவனே அறிந்தனமே என்னும் ஸர்வஜ்ஞரிவர்) “தனி நின்ற சார்விலா மூர்த்தி” (பெரிய திருவந்தாதி 71 என்று தான் வேண்டிற்றுச் செய்யும்படி நிரங்குஸ ஸ்வதந்த்ரனும் நீயே. “அவனே அகல் ஞாலம் படைத்திடந்தான் (திருவாய்மொழி 9-3-2) இத்யாதி. “அவனே மற்றெல்லாமுமறிந்தனமே” (திருவாய்மொழி 9-3-2) என்று ஸ்ருஷ்டி முதலான ஸகல ப்ரவ்ருத்திகளையும் ஸஹஜமாகத் தானே செய்ய வல்லனென்று இப்படி நம்மை உள்ளபடி அறியும் ஸர்வஜ்ஞரான இவர்க்கு உத்தரம் சொல்லுகை யறிந்து (நெறி காட்டி அருகும் சுவடும் போலே இதுவும் நிருத்தரம் என்ற கவிழ்ந்து நிற்க) “நெறிகாட்டி நீக்குதியோ” (பெரிய திருவந்தாதி 6) என்கிற பாட்டிலும் “அருகும் சுவடும் தெரிவுணரோம்” (பெரிய திருவந்தாதி 8) என்கிற பாட்டிலும் உபாயாந்தரங்களைக் காட்டி அகற்றப் பார்த்தாயோ -விலக்ஷணமான திருமேனியைக் காட்டி சேர்த்துக் கொள்ளப் பார்த்தாயோ அஜ்ஞரான எங்களை என் செய்வதாக நினைத்தாய் இத்தை அருளிச்செய்ய வேணும் என்றும் கேட்ட விடங்களில் ஒரு ஹேது இல்லாமையாலே இதுக்கும் சொல்லலாவ தொரு ஹேது இல்லாமையாலே நிருத்தரமென்று தரையைக் கீறிக்கவிழ்ந்து நிற்க
(அமந்த்ரோத்ஸவ கோஷம் போலே )உத்சவங்களில் சடங்கு காட்டும் உபாத்யாயன் மந்த்ரம் தோன்றாவிட்டால் கொட்டச் சொல்லுமா போலே இவனும் ( ஏறப்போகிற எழுச்சியை ஸூ சிப்பிக்கிற வென்று )அது கிடக்க உம்மைக் கொண்டு போகிற வழியைப் பாரீர் என்று –நான் ஏறப் பெறுகின்றேன் (திருவாய் மொழி -10-6-5)என்றும் இவர் கீழ்ச் சொன்னபடியே -பரமபதத்திற்குப் போகிற மார்க்கத்தையும் -மார்க்கஸ்தரான புருஷர்களுடைய ஸத்காரத்தையும் காட்டிக் கொடுக்க (மேக ஸ்முத்ர பேரீ கீத காஹள ஸங்காஸீஸ் ஸ்துதி கோலாஹலம் செவிப் பட்டவாறே )சூழ் விசும்பணிமுகில் தூரியம் முழக்கின ஆழ்கடல் அலை திரை கையெடுத்தாடின (திருவாய்மொழி 10-9-1)கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்(திருவாய்மொழி 10-9-5) “காளங்கள் வலம்புரி கலந்தெங்கு மிசைத்தனர் வாளொண் கண் மடந்தையர் வாழ்த்தினர்” (திருவாய்மொழி 10-9-6) “தொடர்ந்தெங்கும் தோத்திரம் சொல்லினர்” (திருவாய்மொழி 10-9-7) என்று ராஜாக்கள் போகிற போது தூர்யாதி, மங்கல கோஷம் பண்ணுவாரைப் போலே போகிறவர்களைக் கண்ட ப்ரீதியாலே உண்டான மேக ஸமுத்ரங்களினுடைய கோஷங்களாகிற தூர்யாதி பேரிகளையும் அங்குள்ளாருடைய கீத காஹள ஸங்கா ஸீஸ்துதி கோலாஹலங்களையும் இவர் செவிப்படுத்த அத்தைக் கேட்டவாறே (ஸாக்ஷாத்கரித்த பர ப்ராப்திக்கு) அந்த அர்ச்சிராதி மார்க்கத்தையும் மார்க்கஸ்தரான ஆதி வாஹிக ஸத்காரத்தையும் திவ்ய தேஸ ப்ராப்தியையும் அங்குள்ளாருடைய பஹுமாநத்தையும் பெற்று ஆநந்த மயமான ஆஸ்தாநத்தில் இருப்பையும் ஸாக்ஷாத்கரித்து, இப்படி ஸாக்ஷாத்கரித்த பர ப்ராப்தி மாநஸாநுபவ மாத்ரமாய் யதா, மநோரத மநுபவமல்லாமையாலே (தலை மிசையாய் வந்த தாள்களைப் பூண்டு) “தலைமிசையாய் வந்திட்டினி நான் போகலொட்டேன்” (திருவாய்மொழி 10-10-1 என்றும் “தலைமேல் புனைந்தேன்” (திருவாய்மொழி 10-4-4) “தலைமேல தாளிணைகள்‘ (திருவாய்மொழி 10-6-6 என்றும் இப்படி பூர்ணமாக வந்து தோன்றின திருவடிகளைக் கட்டிக் கொண்டு போகாமல் தடுத்து (திருவாணையிட்டு) “திருவாணை நின்னாணை கண்டாய்” (திருவாய்மொழி 10-10-2) என்று அவனுக்கு மறுக்க வொண்ணாத ஆணை யிட்டுத் தடுக்க நீர் ஸேஷ பூதரான பின்பு ஸேஷியான நான் செய்தது கண்டிருக்குமத்தனையொழிய நீர் ஆணை யிட்டுத் தடுக்கை உமக்கு ஸ்வரூபமன்று; ஆன பின்பு அது பெறாவாணை காணும்” என்ன, (கூசஞ்செய்யாத செய்திப்பிழை) ‘கூசம் செய்யாது கொண்டாய்” (திருவாய்மொழி 10-10-2) என்று ஸர்வஜ்ஞனான நீ என் பூர்வ வ்ருத்தத்தால் வந்த அயோக்யதையைப் பார்த்துக் கூசி வாசி வையாதே உன்னோடு ஆத்ம பேதமில்லாதபடி என்னைப் பரிக்ரஹித்த உன்னதன்றோ செய்திப் பிழை என்றும். (பற்றுக் கொம்பற்ற கதி கேடு) “ஆவிக்கோர் பற்றுக் கொம்பு நின்னலாலறிகின்றிலேன் நான்” (திருவாய்மொழி 10-10-3 என்று கொடி கொழு கொம்பை ஒழிய நிற்க மாட்டாதாப் போலே என் உஜ்ஜீவந ஹேதுவாயிருப்ப தொன்று உன்னை யொழிய வேறு காண்கிறிலேன் என்னும்படியான அநந்யகதித்வம் என்றும் (போரவிட்ட பெரும்பழி) “எம்பரஞ்சாதிக்கலுற்று என்னைப் போரவிட்டிட்டாயே” (திருவாய்மொழி 10-10-4) என்று என் கார்யம் நீ செய்யக் கடவதாக ஏறிட்டுக் கொண்டு உன் பக்கல் நின்றும் பிரித்து உன் குணங்கள் கால் நடையாடாத ஸம்ஸாரத்திலே தள்ளி உபேக்ஷித்தாய்; இது உனக்கும் பரிஹரிக்க வொண்ணாத பெரும்பழியன்றோ வென்றும் (புறம்போனால் வருமிழவு) “போரவிட்டிட்டென்னை நீ புறம்போக்கலுற்றால் பின்னை யான் ஆரைக் கொண்டெத்தை யந்தோ எனதென்பதென் யானென்பதென்” (திருவாய்மொழி 10-10-5)என்று உன் பக்கல் நின்றும் பிரித்து அநந்ய கதியாய் அஜ்ஞனாய் அஸக்தனான என்னை ஸ்ருஷ்டியே தொடங்கி இவ்வளவு புகுர நிறுத்தி ஸர்வ ரக்ஷகனான நீ என் கார்யம் நான் செய்வேனாகப் பார்த்து என்னை உபேஷித்தால் நான் எந்த உபாயத்தைக் கொண்டு எந்த புருஷார்த்தத்தை ஸாதிப்பது? எனக்கொரு புருஷார்த்தமென்றும் நானென்றும் உண்டா? முடிந்தேன் என்கிற இழவாலும். (உண்டிட்ட முற்றீம்பு] மனக்காராமை மன்ன உண்டிட்டாய் இனி உண்டொழியாய்” (திருவாய்மொழி 10-10-6 )என்று மநஸ்ஸூக்கு பர்யாப்தி பிறவாமல் நிரந்தரமாக புஜித்த நீ தொடங்கின கார்யத்தை குறை கிடவாதே விஷயீகரித்து விடாய்- புக்த ஸேஷமாக்கின உன்னதன்றோ முதல் தீம்பு என்றும் (அன்பு வளர்ந்த அடியுரம்) கோல மலர்ப் பாவைக்கன்பாகிய என் அன்பேயோ” (திருவாய்மொழி 10-10-7) நான் அந்த:புர பரிகரமன்றோ! என்பக்கலுண்டான அன்புக்கடி மில்லையோ! அந்த புருஷகார பலத்தால் வந்த அடியுரமென்றும், (உயிருறவு) “பெற்றினிப் போக்குவனோ உன்னை என் தனிப்பேருயிரை” (திருவாய்மொழி 10-10-8) என்று அத்யந்த விஸஜாதீயனாயிருந்து வைத்து எனக்கு தாரகனான உன்னை விட்டுத் தரிக்கப் போமோ? ப்ராணனை விட்டு ப்ரக்ருதி தரிக்கவற்றோ என்னும்படியான ஸரீர ஸரிர ஸம்பந்தம் என்றிப்படி. (முதலளவு துரக் கைகளாலே) முதலிலே பிடித்து முடியுமளவாக புகலறத் துரந்து பெறாவாணை யல்லாமையை பலிப்பித்துக் கொள்ளும்படியான பேரவா குளப்படியாம்படி யென்னும்படி “அதனில் பெரியவென் னவா வறச் சூழ்ந்தாயே” (திருவாய்மொழி 10-10-10) என்று தத்வ த்ரயங்களையும் விளாக்குலை கொண்டு அவை குளப்படியாம்படியான பரம பக்தியையும் குளப்படியாக்க வற்றான ஸமுத்ரம் போன்றிருக்கிற தன்னபிநிவேஸத்தைக் காட்டி வந்து ஸம்ஸ்லேஷித்து இவருடைய ஸகல தாபத்தையும் வாஸநையோடே போக்கி இவருடைய கூப்பீட்டையும் ஓயப் பண்ணி “அங்கே பரதமாரோப்ய முதித: பரிஷஸ்வஜே” (ராயு. 134-39) என்கிறபடியே மீண்டெழுந்தருளிப் பெருமாள் ஸ்ரீபரதாழ்வானை மடியிலே வைத்தணைத்துக் கொண்டாப் போலே இவர் விடாய் கெடும்படி கலந்து ‘அவா வற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன்” என்று தாமே பேசும்படி இவருடைய ஸகல தாபங்களையும் போக்குகையாலே நிர்துக்கராய் நிரஸ்த ஸமஸ்த ப்ரதிபந்தகராய் பேற்றோடே தலைக் கட்டின படியை வெளியிடுகிறார் பத்தாம் பத்தில்
229-உறாமையோடே உற்றேன் ஆக்காது ஒழிந்தது, நாடு திருந்த நச்சுப் பொய்கை ஆகாமைக்கு, ப்ரபந்தம் தலைக் கட்ட, வேர்சூடுவார் மண் பற்றுப் போலே என்னுமவற்றிலும் இனி இனியென்று இருபதின் கால் கூப்பிடும் ஆர்த்தி அதிகார பூர்த்திக் கென்னுமது முக்யம்.
இனிமேலிவர் ப்ரதமத்திலே ஆர்த்தராய்க் கொண்டு ஸரணம் புக்க போதே விரோதியை விடுவித்து பேற்றோடே தலைக் கட்டிக் கொடாதே இவரை இவ்வளவாக வைக்கைக் கடியேதென்னில் அதுக்கு நாலஞ்சு ஹேதுக்களை அருளிச் செய்து அவை எல்லாவற்றிலும் இவர்க்குப் பிறந்த பரமபக்தியை வெளியிடுகைக்காக வைத்தான் என்கிறார்.
(உறாமையோடே உற்றேனாக்கா தொழிந்தது) “பொய்ந் நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கும் அழுக்குடம்பபும் (இன்னின்ற நீர்மை இனியாமுறாமை” (திருவிருத்தம்-1) என்று முதலிலே அவித்யா கர்ம வாஸநா ருசி ப்ரக்ருதி ஸம்பந்தங்களை விடுவிக்க வேணுமென்று ஆர்த்தராய் ஸரணம் புக்க விவர்க்கு “உற்றேன் உகந்து பணி செய்து உன பாதம் பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவதெந்தாய்” (திருவாய்மொழி 10-8-10)என்று திருவடிகளைக் கட்டி ப்ரீதி பூர்வகமாக அடிமை செய்யப் பெற்றேன் என்று பேசும் படியாகத் தலைக் கட்டிக் கொடாதே இவரை இவ்வளவவும் ஈஸ்வரன் வைக்கைக்கு ஹேதுவென்னென்னில், (நாடு இருந்த) அவன் ஸ்ருஷ்ட் யவதாரங்களாலும் திருத்த வொண்ணாத ஜகத்தை ஊரும் நாடு முலகமும் தன்னைப் போல்” (திருவாய்மொழி 6-7-2) என்னும்படி திருத்துகைக்காகவும், (நச்சுப் பொய்கை யாகாமைக்கு) இவரபேஷித்த போதே) கார்யம் செய்யில் நச்சுப் பொய்கை போலே பகவத் விஷயத்தில் இழிவாரில்லை என்றும் (ப்ரபந்தம் தலைக் கட்ட) தன்னோடு பிறரோடு வாசியற எல்லார்க்கும் போக்யமுமாய் பாவநமுமாய் இருக்கிற இப்ப்ரபந்தங்களை இவரைக் கொண்டு தலைக் கட்டுவித்துக் கொள்ளுகைக்கும், (வேர் சூடுவார் மண் பற்றுப் போலே) வேர் சூடுவார் அதில் மண்பற்றுக் கழற்றதாப் போலே, சரம ஸரீரமான இவருடைய விக்ரஹத்திலுண்டான வ்யாமோஹத்தாலே விட மாட்டாமை யாலும் வைத்தான் என்கிற இந்த ஹேதுக்களெல்லாவற்றிலும் (இனியினி யென்றிருபது கால் கூப்பிடும் ஆர்த்தி) அவித்யாதி துக்கம் “இந்நின்ற நீர்மை இனியாமுறாமை” (திருவிருத்தம் -1) என்று தொடங்கி “இனிநெஞ்சமிங்குக் கவர்வது யாமிலம்” (திருவிருத்தம் 4), “இனி வளை காப்பவரார்’ (திருவிருத்தம் 13),“இனியுன் திருவருளாலன்றிக் காப்பரிதால்” (திருவிருத்தம் 62), “இனியவர் கண்தங்காது” (திருவாய்மொழி 1-4-4),“இனி யுனது வாயலகிலின்னடிசில் வைப்பாரை நாடாயே” (திருவாய்மொழி 1-4-8), “இனி யெம்மைச் சோரேலே” (திருவாய்மொழி-2-1-10), “எந்நாள் யானுன்னை யினி வந்து கூடுவனே” (திருவாய்மொழி 3-2-1),“ஆவி காப்பாரினியார்” (திருவாய்மொழி 5-4-2), “நெஞ்சிடர் தீர்ப்பாரினியார்‘(திருவாய்மொழி 5-4-9), “இனி யுன்னை விட்டொன்று மாற்ற கிற்கின்றிலேன்”(திருவாய்மொழி 5-7-1), “தரியேனி” (திருவாய்மொழி 5-8-7), “உழந்தினியாரைக் கொண்டென்னுசாகோ” (திருவாய்மொழி 7-3-4), “அத்தனையா மினி யென்னுயிரவன் கையதே” (திருவாய்மொழி 9-5-2), “நாரைக் குழாங்கள்காள் பயின்றென்னினி(திருவாய்மொழி 9-5-10),“இனியிருந்தென்னுயிர் காக்குமாறென்” (திருவாய்மொழி-9-9-2), “இனிப் பிறவி யான் வேண்டேன்” (திருவாய்மொழி 10-6-1) “இனி நான்போகலொட்டேன்’ (திருவாய்மொழி 10-10-1), “முடிவிலீயோ” (திருவாய்மொழி
-10-10-9), “சுடர்ஞான இன்பமேயோ” (திருவாய்மொழி 10-10-10) என்னுமளவாக
இருபதின்கால் கூப்பிடும்படியான ஆர்த்தி பரம்பரையை விளைத்து இவருடைய பரம பக்தி பர்யந்தமான அதிகார பூர்த்தியை ப்ரகாஸிப்பிக்கைக்காக வைத்தான் என்கிற விதுவே தாத்பர்யமென்கிறார்–
230-கமலக்கண்ணனென்று தொடங்கிக் கண்ணுள் நின்றிறுதி கண்டேனென்ற பத்தும் உட்கண்ணாலேயாய், காண்பான வாவுதல் அதிலிரட்டி யாகையாலே கண்டு களிப்ப வளவும் பரஜ்ஞாந கர்ப்ப பரபக்தி.
ஆர்த்திக்கடியான பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகளினுடைய தஸைகள் எந்தெந்த திருவாய்மொழிகள் என்ன- அத்தை அருளிச்செய்கிறார் “கமலக் கண்ணன் என்று தொடங்கி பரஜ்ஞாந கர்ப்ப பரபக்தி. “கமலக்கண்ணன் என் கண்ணினுள்ளான் காண்பன்” (திருவாய்மொழி 1-9-9) என்று புண்டரீகாக்ஷ்னானவன் என் கண்ணுக்கு விஷயமானான்; நானுமவனை ஸாக்ஷாத்கரியா நின்றேன் என்று உபக்ரமித்து “கண்ணுள் நின்றகலான்’ (திருவாய்மொழி 10-8-8) என் கண் வட்டத்தை விட்டுப் போகிறிலன் என்றெதளவாக “என் கண்ணனை நான் கண்டேனே”, (திருவாய்மொழி 2-8-10) “கலைப்பல் ஞானத்தென் கண்ணனைக் கண்டு கொண்டு” (திருவாய்மொழி 3-2-10), “நறுந்துழாயின்கண்ணியம்மா நானுன்னைக்கண்டு கொண்டே” (திருவாய்மொழி 4-7-7), “கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே”, (திருவாய்மொழி 4-9-9) “கைதொழவிருந்தாயது நானுங் கண்டேனே (திருவாய்மொழி 5-7-5), “ஏரார் கோலந்திகழக்கிடந்தாய் கண்டேனெம்மானே’ (திருவாய்மொழி 5-8-1), “திருவிண்ணகர்க் கண்டேனே’ (திருவாய்மொழி 6-3-1), “தேவர்கட்கெல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே” (திருவாய்மொழி 9-4-8) என்று இப் பத்து சந்தையாலும் ஸாக்ஷாத்காரமாகச் சொல்லுகிறவிது “நெஞ்சென்னும் உட்கண்” (பெரிய திருவந்தாதி 28) என்கிற ஆந்தர சக்ஷுஸ்ஸான மாநஸ ஸாக்ஷாத்காரமாய் “கைய பொன்னாழி வெண்சங்கொடுங் காண்பான் அவாவுவன் நான் (திருவிருத்தம் 84), “அடியேன் காண்பானலற்றுவன் ‘, (திருவாய்மொழி 1-5-7) “உம்மைக் காணு மாசையுள் நைகின்றாள்” (திருவாய்மொழி 2 -4-2, “கூவுகின்றேன் காண்பான்” (திருவாய்மொழி 3-2-8), “மெய் கொள்ளக் காண விரும்பும் என் கண்களே’ (திருவாய்மொழி 3-8-4), “கூவியுங்காணப் பெறேன் உன கோலமே”, (திருவாய்மொழி 3-8-7) “உன்னை யெந்நாள் கண்டு கொள்வனே’ (திருவாய்மொழி 3-8-8), “கோல மேனி காண வாராய்” (திருவாய்மொழி 4-7-1), “கூவுகின்றேன் காண்பான்” (திருவாய்மொழி 3-2-8) “பாவியேன் காண்கின்றிலேன்” (திருவாய்மொழி 4-7-10), “உன்னைக் காண்பான் நானலப்பாய்” (திருவாய்மொழி 5-8-4), “ஒரு நாள் காணவாராயே” (திருவாய்மொழி 8-5-1) “என்று கொல் கண்கள் காண்பதுவே” (திருவாய்மொழி 5-9-5), “விளங்க ஒருநாள் காண வாராய்” (திருவாய் மொழி 6-9-4), “உன்னைக் காண்பான் வருந்தியெனை நாளும்” (திருவாய் மொழி 6-9-6) “அலைகடல் கடைந்தவப்பனே காணுமாறருளாய்” (திருவாய்மொழி 8-1-1), “தொண்டனேனுன்கழல்காணவொருநாள்வந்து தோன்றாயே” (திருவாய்மொழி 8-5-6), “உன்னையெங்கே காண்கேனோ’ (திருவாய்மொழி 8-5-10), “கனிவாய் சிவப்ப நீ காணவாராயே” (திருவாய்மொழி 9-2-4), “உன்னைக்காணக் கருதுமென்கண்ணே’ (திருவாய்மொழி 9-4-1) என்று அவனைக் காண வாசசைப்பட்டுக் கூப்பிட்ட சந்தைகள் அதிலிரட்டி யாகையாலே “கண்டு களிப்பக் கண்ணுள் நின்றகலான்’ (திருவாய்மொழி 10-8-7) என்று திருமாலிருஞ்சோலையளவும் அநுபவம் செல்லா நிற்கச் செய்தே பெற்றல்லது தரியாதபடியான பாஹ்ய ஸம்ஸ்லேஷாபேஷை நடக்கையாலே பரஜ்ஞாநத்தை கர்ப்பித்துக் கொண்டு பரமபக்தி யாயிருக்கிறது –
231-இருந்தமை யென்றது பூர்ண பரஜ்ஞாநம்.
(இருந்தமையென்றது பூர்ண பரஜ்ஞானம்) ‘ சூழ்விசும்பணிமுகில் தூரியம் முழக்கி” (திருவாய்மொழி 10-9-1 என்று தொடங்கி “அந்தமில் பேரின்பத்தடியரோ டிருந்தமை” (திருவாய்மொழி 10-9-11) என்று அர்ச்சிராதி மார்கத்தையும் மார்கஸ்த்தரான புருஷர்களுடைய ஸத்காரத்தையும் தேஸ விஸேஷ ப்ராப்தியையும் பகவதநுபவத்தையும் பகவத் ஸ்வரூப ரூப குண விபூ,திகளை ஸாக்ஷாத்கரித் தநுபவிக்கிற நித்ய ஸூரிகளோடு ஏக ரஸராய்க் கொண்டிருந்த நுபவிக்கிற ப்ரகாரத்தையும் யதாவாக ஸாக்ஷாத்கரிக்கையாலே சூழ்விசும்பணிமுகில் பூர்ண பரஜ்ஞாநமாய் இருக்கிறது –
232-முடிந்த அவாவென்றது பரமபக்தி.
(முடிந்த அவா என்றது பரமபக்தி) இப்படி ஸாக்ஷாத்கரித்த விது மாநஸாநுபவமாகையாலே யதா மநோரதாநுபவ ஸித்தியாகத் திருவாணை யிட்டுத் தடுத்துப் பெருங் கூப்பீடாகக் கூப்பிட்டுப் பெற்றாலல்லது தரிக்க வொண்ணாத படியாய் “முடிந்த அவாவில் அந்தாதி இப்பத்து” (திருவாய்மொழி 10-10-11) என்கிற “முனியே நான்முகன்” (திருவாய்மொழி 10-10) பரமபக்தி தஸையாயிருக்கிறது –
233-இவை ஜ்ஞாந -தர்ஸந – ப்ராப்தி அவஸ்த்தைகள்.
“ஜ்ஞாதும் த்,ரஷ்டுஞ்ச தத்வேந ப்ரவேஷ்டுஞ்ச பரந்தப” (கீதை 11-54) என்றிந்த பரபக்தி பரஜ்ஞாந பரம பக்திகளை ஜ்ஞாந தர்ஸந ப்ராப்தி அவஸ்தைகள் என்கிறார். எங்ஙனே என்னில் பகவத் ஸம்ஸ்லேஷ விஸ்லேஷைக ஸுகதுக்கராம்படியான ப்ரேம பூர்வகமான பரபக்தி ஜ்ஞாந தஸையாயும், பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை ஸாக்ஷாத்கரிக்கிற பரஜ்ஞாநம் தர்ஸந தஸையாயும் ஸாக்ஷாத்கார ஸமநந்தரம் அப்போதே அநுபவியா விடில் முடியும்படியான பரமபக்தி ப்ராப்தி தஸையாயுமிருக்கிற அவஸ்தா விஸேஷம் என்கிறார்
234-அவித்யா நிவர்த்தக ஜஞாந பூர்த்தி ப்ரத பகவத் ப்ரஸாதாத் மோக்ஷ லாபம் என்கை மயர்வற வீடுபெற்றவென்ற ப்ரபந்த ஏக அர்த்யம்.
” மயர்வற மதிநலமருளினன்” திருவாய்மொழி 1-1-1 என்றும் “அவா வற்று வீடு பெற்ற திருவாய்மொழி 10-10-11-என்றும் சொல்லுகையாலே ஸம்ஸார காரணமான அஜ்ஞாநத்தை நிவர்த்திப்பித்து ஜ்ஞாந பூர்த்தியை நிர்ஹேதுகமாக உபகரித்த ஜ்ஞாநாதி குண பூர்ணனான பகவானுடைய ப்ரஸாதம் பரமபக்தி தஸையான பாகத்தையும் விளைத்து ஸ்வரூபாநுரூபமான மோக்ஷத்தையும் தரும் என்கை- ஒன்றான ப்ரபந்த த்துக்குத் தாத்பர்யமென்கிறார். (மயர்வற வீடுபெற்ற என்ற பிரபந்த ஏக அர்த்யம்) அநிஷ்டமான அஜ்ஞாந நிவ்ருத்தி பூர்வகமாக இஷ்டமான மோக்ஷத்தை ப்ராபிக்கை என்று ஓரர்த்தம்
ஆக, 1-ஸர்வேஸ்வரன் அஜ்ஞரான சேதநர்க்குத் தன் கிருபையாலே புருஷாரத்த ஜஞாநம் உண்டாகைக்கு ஸாஸ்த்ர பிரதானம் பண்ணினமையும்
2-அந்த ஸாஸ்த்ரம் கொண்டு புருஷார்த்த ஞானம் பிறக்கை அரிதென்று தாத்பர்யமான திருமந்த்ரத்தை வெளியிட்டமையும்
3-அந்த ஸாஸ்த்ர தாத்பர்யங்களுக்கு விஷயபேதம் தொடக்கமான ஷைம்யங்களையும்,
4-உபயத்திலும் நிஷ்டரான அதிகாரிகளுடைய பரகாரங்களையும்,
5-அந்த வ்யாஜத்தாலே ப்ரஸக்தமான திருவாய்மொழியினுடைய வைபவத்தையும்,
6-அதுக்கு வக்தாக்களான ஆழ்வார்களுடைய ப்ரபாவத்தையும்
7-அந்த ப்ரபாவத்துக் கடியான பகவந் நிர்ஹேதுக கடாக்ஷத்தையும்,
8-அந்த கடாக்ஷமடியாக இவர்க்குண்டான ஜ்ஞாந பக்திகளையும்,
9-அந்த ஜ்ஞாந பக்தி தஸைகளில் இவர பேசும் பேச்சுக்களையும்,
10-அந்த பக்தி தஸையில் பகவத் ப்ரேம யுக்தர் எல்லாரோடும் இவர்க்குண்டான ஸாம்யத்தையும்,
11-அந்த பக்தி தஸையில் பேசும் அந்யாபதேஸங்களுக்கு ஸ்வாபதேஸங்களையும்,
12-அந்த பக்திக்கு விஷயமான திவ்ய தேஸங்களில் நிற்கிற எம்பெருமான்களுடைய குணங்களையும்,
13-அந்த குண விஸிஷ்ட வஸ்துவிலுண்டான அநுபவ ஜநித ப்ரீதி ப்ரேரிதமாய்க் கொண்டு ப்ரபந்தங்கள் அவதரித்தமையையும்,
14-தத்வார்த்த,ப்ரதி பாதந பரமான திருவாய்மொழி ப்ரபந்தத்துக்கு ஸ்ரீகீதா ஸாம்ய முண்டான படியையும்,
15-அந்த கீதையில் காட்டில் இதுக்குண்டான வ்யாவ்ருத்தியையும்,
16-இதில் இவர் உபதேஸிக்கிற விஷய பேதத்தையும்,
17-அவ்வோ விஷயங்கள் தோறும் உபதேஸிக்கிற அர்த்த விஸேஷங்களையும்,
18-அந்த வ்யாஜத்தாலே உபதேஸ விஷயமான ஸிஷ்ய லக்ஷணத்தையும்,
19-இந்த லக்ஷணமில்லாதார்க்கு உபதேஸிக்கைக் கடியான இவருடைய க்ருபையையும்,
20-இப்படி இவர் க்ருபையாலே உபதேஸிக்கையாலே அவவுபதேஸம் பலித்தபடியையும்,
21-உபதேஸிக்கிற இப் ப்ரபந்தங்கள் தான் தத்வ ஹித புருஷார்த்த ப்ரதிபாதகமான ரஹஸ்ய த்ரயார்த்த மென்னு மிடத்தையும்,
22-அந்த ரஹஸ்ய த்ரயத்திலும் ப்ரதிபாதிக்கப்படுகிற அர்த்த பஞ்சகங்களும் இந்த ப்ரபந்தங்களிலே ஸங்க்ரஹ விஸ்தர ரூபேண சொல்லப்படுகிற ப்ரகாரத்தையும்,
23-ப்ரபந்த ஆரம்பங்களில் உண்டான லக்ஷணங்களில் ப்ரபந்தாதியிலுண்டாயிருக்கிற ப்ரகாரத்தையும்,
24-ஸாது பரித்ராணாதிகளாலே ஜகத் ரக்ஷணார்த்தமான பகவதவதாரம் போலே ஜகத் ரஷணார்த்தமாக இப்ப்ரபந்தம் அவதரித்த தென்னுமிடத்தையும், 25-திருவாய்மொழியில் பத்துப் பத்தாலும் ப்ரதிபாதிக்கப்பட்ட எம்பெருமானுடைய பரத்வாதி குணங்களையும்,
25-அக் குண விஸிஷ்டனான ஸர்வேஸ்வரன் அந்தப் பத்துப் பத்தாலுமிவ் வாழ்வார்க்கு தத்வ ஜ்ஞாநம் முதலாக ப்ராப்தி பர்யந்தமாகப் பிறப்பித்த தஸா விஸேஷங்களையும்,
26-இவர் தாம் பிறரைக் குறித்து உபதேஸித்த ப்ரகாரங்களையும்,
27-இவர் ப்ரதமத்திலே ஆர்த்தி பிறந்திருக்கச் செய்தே ஈஸ்வரனிவரை வைக்கைக்கு ப்ரதாந அப்ரதாந ஹேதுக்களையும்,
28-இவர்க்குப் பிறந்த பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகளாகிற தஸா விஸேஷங்களையும்,
29-அஜ்ஞாந் நிவ்ருத்தி பூர்வகமாக ஜ்ஞாந ப்ரதனான பகவானுடைய ப்ரஸாதமே மோக்ஷ ஹேது என்னுடத்தையும்,
30-அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட மோக் ஷப்ராபணமே பரபந்த தாத்பர்யமென்னுமத்தையும்
அருளிச் செய்து தலைக் கட்டி யருளினார்
————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Leave a Reply