1-காலக்ஷேபமென்பதுபற்றிய விளக்கம்-“முன்னவராம் நம் குரவர் மொழிகளுள்ளப் பெற்றோம், முழு துமக்கவைபொழுது போக்காகப் பெற்றோம்” என்று மணவாளமாமுனிகள் பணித்தபடியே பெரியோர்
களுடைய ஸ்ரீஸூக்திகளைக்கொண்டு போது போக்குவதென்பது ஜன்மாந்தர ஸஹஸ்ர நற்றவப்பயன். * “கரவ்ய சாஸ்த்ரவிநோதே௩ காலோ கச்சதி தீமதாம், அந்யேஷாம் து மநுஷ்யாணாம் நித்ரயா நிந்தயா வா? * என்கிற ச்லோகமொன்று யாவருமறிந்ததே,
திருமழிசையாழ்வார் நான்முகன் திருவற் தாதியில் (69) * தரித்திருர்தேனாகவே ர... தெரித்தெழுதி, வாசித்துங் கேட்டும் வணங்கி வழிபட்டும், பூசித்தும் போக்கினேன்
போது” * என்றருளிய பாசுரம் ஒவ்வொருவரும் ஙிச்சலும் நினைக்கத் தக்கது. போதுபோக்கும் விதத்தை இவரைப்போல் எடுத்துரைத் தவர் மற்றுயாருமில்லை. தெரித்தல், எழுதுதல், வாசித்தல், கேட்டல் வணங்குதல், வழிபடல், பூசித்தல் ஆகிய இவற்றினாலேயே தாம் போதைப் போக்கினதாகவும் இவையில்லையாயின் தம்மால் உயிர் தரிக்க முடியாதாகவும் வ்யக்தமாக விளம்பியுள்ளார். நம்மாழ்வார். அருளிச் செய்வதோ இதனிலும் விலகஷணமானது) அதாவது
பெரிய திருவந்தாதியின் முடிவில் (பா. 86)* கார் கலந்த மேனியான். கைகலந்தவாழியான், பார்கலந்த வல்வயிற்றான் பாம்பணையான்,
சீர்கலந்த சொல் நினைந்து போக்காரேல் சூழ்வினையினாழ் துயரை,
“என்னினைந்து போக்குவரிப்போது,” * என்றுள்ள யாசுரம் சுவை மிக்க பொருளுடைத்து-ஸ்ரீராமாயண
பாரதாதி இதிஹாஸங்களைக்கொண்டும், ஸ்ரீவிஷ்ணு புராணம் முதலிய புராணங்களைக்கொண்டும், அருளிச் செயல்களைக்கொண்டும் பாவத்தைப் போக்கிக்கொள்ளார்களாகில் அதுபற்றி விசாரமில்லை; போதைப் போக்குவதற்கு இவையொழிய வேறு என்ன ஸாதனமுள்ளது! என்று கூறின ஆழ்வாரை வழிபடுகின்ற நாம் நம்முடைய போதை எப்படிப் போக்க ஆசைப்பட வேணுமென்று இன்னமும் விவரிக்கவேணுமோ ? அது நிறைவேறாவிடிலும் அதனை ஆசைப்பட்டாலே போதும்.
வேம்புக்குள்ள கசப்பும் மாதுளைக்குள்ள புளிப்பும், கரும்புக்குள்ள தித்திப்பும் முதலியன எப்படி ஒரு நாளும் மாறுவதில்லையோ, அப் படியே மனிதர்களுக்கும் ஜன்மஸித்தங்களான குணங்கள் (நல்லவையோ தீயவையோ) பேர்க்கவும் பேரா என்றே பெரியார் கூறுவர்.
திருவாய்மொழியில் நம்மாழ்வார் அற்புதமாக ஒரு பாசுரம் அருளிச் செய்கிறார்; அதாவது (5--9--5) *கடியன் கொடியன் நெடியமால் உலகங்கொண்டவடியன், அறிவருமேனி மாயத்தன்*2- -இத்யாதி--*கடியன்”'--தன்காரியத்தை ஸாதித்துக்கொள்வதிலேகனவேக முடையவன். அதாவது, தனக்கு விருப்பமுண்டானால் தானேவக்து மேல் விழுந்து விரைந்து கலக்குமவன் என்கை, “கொடியன்” எதிர்த்தலைபடுகிற கஷ்டங்களைப் பாராதே கல்நெஞ்சனாய்ப் பிரிந்து,போமவன்; ““நெடியமால்” மிகவும் பெரியவன் என்பது இச் சொல்லின் பொருள். இதன் கருத்தாவது, மேல்விழுந்து கலக்கும் போது பிரிய வேணுமென்று நினைப்பன், அப்படி அவன் நினைத்ததை யறிந்து “என்னாயனே! பிரியலாகாது பிரியலாகாது” என்று கால்கட்டி விலக்கப் பார்க்கலாமே, அப்படி விலக்குவதற்குக் கூசி நடுங்கி அஞ்சியிருக்க வேண்டும்படி திடீரென்று பரத்துவம் பாராட்டி நிற்பவனென்கை.' உலகங்கொண்ட வடியன்”-பிறருடைமையைத் தனக்காக்கிக் கொள்ள நினைத்தால் பின்னை அவர்களுக்கு ஒன்றும் மிச்சப்படாதபடி பண்ணி அவர்களைப் பாதாளத்திலே கள்ளுமவன். “அறிவருமேனிமாயத்தன் *வடிவைக்கண்டால் ஸர்வஸ்வதானம் பண்ணவிருக்கிருனோ? அன்றி ஸர்ஸ்வத்தையும் கொள்ளைகொள்ள விருக்கிருனோவென்று தெரிந்து கொள்ளமுடியா தபடி ஆச்சரியமான தன்மையையுடையவன், அடியேன் சிறியேன் குடியேனென்று சில சொல்லி மயக்கிக் கண்ணிலே மணலைத்தூவி யோடிப்போவன். “ஆகிலும் கொடியவென்னெஞ்சம் அவனென்றே கிடக்குமெல்லே” என்கிற மூன்றாமடி அமைந்தது. -ஆக இதனால் பெரியார் திறத்தில் நமது பக்தி. ஸ்வருப ப்ராப்தமா
யிருக்க வேணுமேயல்லது குணப்ரயுக்தமன்று என்றதாயிற்று.
நிறையப் பழங்கள் பழுத்துத் தொங்கப்பெற்ற மரங்களின்மீது கல்லடியும் தடியடியும் விழுமேயல்லது மொட்டை மரத்தையும் மலட்டு மரத்தையும் அடிப்பாரார்? அதுபோல், ஞானானுட்டானங்கள்' நிரம்பியும், பலவகைகளில் 'புகழ்பெற்றும், பலரால் வணங்கப்பட்டும் விளங்குகின்ற மஹான்கள் பேரில்தான் தூஷணைகள் ஏற்படுமே
ஸ்ரீராமாயணத்தில் யுத்தகாண்ட த்தில்-
**மரணாந்தாநி வைராணி நிர்வருத்தம் ௩: ப்ரயோஜறம், க்ரியதாமஸ்ய ஸம்ஸ்கார : மமாப்யேஷ யதா தவ? -என்பது, ஸ்ரீவிபீஷ்ணாழ்வானை நோக்கிப் பெருமாளருளிச் செய்த தொரு சுலோகம்-பெருமாள்மீது இராவணன் பகைபாராட்டி யிருந்தானே யல்லது இராவணன்மீது பெருமாள் சிறிதும் பகை பாராட்டியீருந்த தில்லை.
“ஜிபீஷணோ வா ஸுக்ரீவ! யதிவா ராவணஸ் ஸ்வயம்!” என் றருளிச் செய்த பெருமாளுடைய திருவுள்ளத்திற்கும் இணங்கவல்லதான பொருளன்றோ பணிக்கவேணும். அதை நம்பிள்ளைதானே பணிக்க வல்லவர்.-[“மரணாந்தாநி வைராணி”] ரிஷிகளின் குடியிருப்பை யழித்து மைதிலியைப் பிரித்து, ஈம். உயிர்நிலையிலே நலிந்தாப்போலே ஸ்ரீ ஜடாயு மஹாராஜரை நலிந்தவிவையெல்லாம் செய்ய மாட்டானே இவன் இனி.-[“நிர்வ்ருத்தம் ந: ப்ரயோஜாம்.?] இவன் ஜீவிக்கிற நாளிலே நாம் செய்யும் நன்மை இவன் விலக்காதொழிய வேணுமென்று,
இத்தனையே எண்ணியிருந்தோம் ; அது அந்நாளில் பெற்றிலோம். நாம் தேடியிருந்த அது முந்துறமுன்னம் ஸித்திக்கப் பெற்றோமிறே. [“க்ரியதாம் அஸ்ய ஸம்ஸ்கார :!] இவன், நாம் செய்யும் நன்மை விலக்காதவனானவளவு பிறந்தவின்றும் நாம் இழக்க
வேணுமோ? வேண்டுவன செய்யப் பாரும். [“மமாபி ஏஷ யதா தவ.)':] நீர் இருய்த்திருந்தீராகில், குடல் துடக்குடையாரிலே ஒருவன் செய்யுமித்தனை யன்றோ; நாம் இவனுக்கு வேண்டுவன செய்ய, நீர் பின்னைக் கடக்க நில்லீர்.” என்று -“£வைரம்”” என்று ஏக வசனமாக அன்றிக்கே “வைராணி”' என்று பஹுவசனமாக இருப்பதையே முக்கியமாக நம்பிள்ளை குறிக்கொண்டு ரஸமயமான வியாக்கியானம்
செய்தருளினா ரென்றுணர்க. '*வைராணி” என்றது-வைரகார்யாணி என்றபடி
எம்பெருமானுடைய அவதாரங்களுக்கு என்ன என்ன ப்ரயோஜனங்களோ அவையெல்லாம் திருவாய்மொழியின் திருவவதாரத்தினாலும் ஈன்கு தேறுகின்றன-ஸாதுபரித்ராண துஷ்க்ருத விநாசனங்கள்-*சாதுசனத்தை றலியுங் கஞ்சனைச் சாதிப்பதற்கு ஆதியஞ் சோதியுருவை அங்குவைத்திங்குப் பிறந்த வேத முதல்வன்* *நண்ணாவசுரர் நவிவெய்த ஈல்லவமரர் பொலிவெய்த-பண்ணார் பாடல் இன்கவிகள்
யானாய்த் தன்னைத் தான் பாடி” *நண்ணாவசுரர் நவிவெய்த ஈல்லவமரர் பொலிவெய்த வாய்த்து திருவாய்மொழி தான் அவதரித்தது. ஸ்துத்யனுடைய அவதாரம் போலேயாயிற்று ஸ்துதியினுடைய அவதாரமும்.” -திருவாய்மொழி யென்றும் ஸ்ரீராமாயண மென்றும் இரண்டு வலிய மதிள்கள் என்றுமழியமாட்டா தபடி.
யன்றோ வுள்ளன, அந்த மதிள் களை இவன் அசைக்கவும் முடியாதவனன்றோ, என்று சொன்னானாம். ஆகவே
1. அஜ்ஞாற நிவர்த்தகத்வம், 2. ஜ்ஞாஈப்ரதத்வம். 3. பக்தி ப்ரதத்வம் ஆகிற. இம்மூன்றும் திருவாய்மொழிக்குமுண்டு. எங்ஙனேயென்னில் : தோரிமாறன் சடகோபன் ஒலி புகழாயிரத்திப் பத்து உள்ளத்தை மாசறுக்குமே என்கிற பாசுரத்தினால் அஜ்ஞா௩ நிவர்த்தகத்வமும் “வண்சடகோபன் தெருள்கொள்ளச் சொன்னவோராயிரம்!” என்ற பாசுரத்தினால் ஜ்ஞா௩ ப்ரதத்வமும், “குருகூர்ச் சடகோபன் சொன்ன, தூயவாயிரத்திப்பத்தால் பத்தராவர் துவளின்றியே”' என்ற பாசுரத்தினால் பக்தி ப்ரதத்வமும் திருவாய் மொழிக்கு முண்டென்பது அறியத்தக்கது,
எம்பெருமான் நம்மைத் தனக்கு அநந்யார்ஹற சேஷமாக அங்கீகரிப்பவன் என்பது “வெறித்துளப முடியானே ! வினையேனை உனக்கடிமை அறக்கொண்டாய்'' என்கிற பாசுரத்தினால் விளங்கும். -திருவாய்மொழியும் ஈம்மை எம்பெருமானுக்கு அநந்யார்ஹ
சேஷமாக்கு மென்னுமிடம் “தொண்டன் சடகோபன் தெரியச் சொன்ன ஓராயிரத் துளிப்பத்து உரிய தொண்டராக்கு முலக முண்டாற்கே” என்ற பாசுரத்தினால்விளங்கும்.
எம்பெருமான் ஸம்ஸாரமாகிற வியாதிக்கு மருந்தாயிருப்பவன் என்னுமிடம் அறிக்தனரெல்லாம் அரியை வணங்கி அறிந்தனர் நோய்களறுக்கும் மருந்தே” என்ற பாசுரத்தினால் விளங்கும் -திருவாய்மொழியும் ஸாம்ஸாரிக ஸகல துரிதங்களையும் உகுமாய்ந்து போம்படி பண்ணு மென்னுமிடம் *தென்குருகூர்ச் சடகோபன் மிடைந்த சொல்தொடை ஆயிரத்துளிப்பத்து உடைந்து நோய்களை ஓடுவிக்குமே'” என்ற பாசுரத்தினால் விளங்கும்
எம்பெருமான் பக்தர்கட்குப் பரமப தத்தை யளிப்பன் என்னுமிடம் “ஏுற்றரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு-ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்கவரியே” என்ற பாசுரத்தினால் விளங்கும். திருவாய்மொழியும் பரமபத ப்ராப்தியைப் பண்ணிவைக்கு மென்னுமிடம் “கோனை வண்குருகூர் வண்சடகோபன் சொன்னவாயிரத் துளிப்பத்தும் வானின்மீதேற்றி யருள்செய்து'” என்ற பாசுரத்தினால்
விளங்கும்.
எம்பெருமான் நம்மைத் திருவடிகளின்கீழ்ச் சேர்த்துக் கொள்ளுமென்னுமிடம் “பெருந்துன்பம் வேரற நீக்கித் தன்தாளின் கீழ்ச் சேர்த்து அவன்செய்யும் சேமம்” என்ற பாசுரத்தினால் விளங்கும். திருவாய்மொழியும் அவன் திருவடிகளின்கீழே சேர்த்து
வைக்குமென்னுமிடம் £“திருமாலாலருளப்பட்டசடகோபன் சொல்லாயிரத் துளிப்பத்தால் அருளியடிக்கீழிருத்தும்'? என்ற பாசுரத்தினால் விளங்கும்.
எம்பெருமான் தன்னோடு அந்வயித்தவர்களுக்குத் தன்னுடைய அநுபவமாகிற நிரதிசயாறந்த யுக்தமான ப்ராப்யத்தைக் கொடுப்பன் என்னுமிடம் “தெளிவுற்று விவின்றி நின்றவர்க்கு இன்பக்கதி செய்யும் தெளிவு ற்ற கண்ணன்”? என்கிற பாசுரத்தினால் விளங்கும். திருவாய்மொழியும் தன்பால் அங்வயித்தார்க்கு
பகவதநுபவ ஆனந்தத்தை யுண்டாக்கு. மென்னுமிடம் **வண்குரு. கூர்ச்சடகோபன் இங்ஙனே சொன்னவோராயிரத்துளிப் பத்து எங்ஙனே சொல்லிலுமின் பம் பயக்குமே” என்ற பாசுரத்தினால் விளங்கும்
எம்பெருமான் தன்னை யனுபவிக்க இழிந்தவர்களை த்ரவத்ரவ்யமாம்படி உருக்குவனென்னுமிடம் ““ஊடுபுக்கு எனதாவியை யுருக்கியுண்டிடுகின்ற நின்றன்னை” என்கிற பாசுரத்தினால் விளங்கும். திருவாய்மொழியும் தன்னை யநுபவிக்க இழிந்தாரை நீர்ப்பண்டமாக உருக்குமென்னுமிடம் “தென்குருகூர்ச் சடகோபன் சொல்லாயிரத்துள்ளிவை ஒன்பதோடொன்றுக்கும் மூவுலகுமுருகுமே” என்கிற பாசுரத்தினாலும்' ““டூதா ற்றங்களாயிரத்துள்' இவையுமொருபத்தும் வல்லார் ஊற்றின்கண் நுண்மணல்போல் உருகாநிற்பர் நீராயே!” என்கிற பாசுரத்தினாலும் விளங்கும்,
ஆக இப்படி பத்து ப்ரகாரங்களாலே எம்பெருமானோடு ஸாம்யத்தை யுடைத்தாகையாலே, வாச்யனான அந்த ஸர்வேச்வரனுடைய *பத்தினாய தோற்றம்!” என்கிற பத்து அவதாரம்போலே “டூதாற்றங்களாயிரம்'! என்கிற இதனுடைய பத்துப்பத்தான ஆவிர்ப்பாவமும்-என்று அறியத்தக்கது. எம்பெருமான் லோக ரக்ஷணார்த்தமாக அவதரித்தது போலே திருவாய்மொழியும் லோக ரக்ஷணார்த்தமாகவே அவதரித்த தென்றதாயிற்று.
ஒரு ரத்னத்துக்கே மூன்று தன்மைகள் உண்டாகின்றன. (1) அற்ப விலைக்கு மாறுதல் (2) உள்ள விலைக்கு மாறுதல் (8) விலைக்கு ஆட்படாமல் ஸ்வயம் போக்யமாகக்
கொள்ளப்படுதல் என மூன்று வகைகள். ஒன்றுக்கே அதிகாரி பேதத்தால் கூடுகின்ற படியை பிரபத்தி விஷயத்திலும் தெளிவாகக் காணவேணும். ரத்னத்தின் மதிப்பை அறியமாட்டா து அதனை அற்ப விலைக்கு விற்கும் செம்படவனைப்போல் பிரபத்தியின் சீர்மையை அறிய மாட்டாத சிற்றறிவாளர் ப்ரபத்தியை ஐச்வர்யகைவல்யாதி க்ஷுத்ர பலன்களுக்கு ஸாதனமாக்கினால் அது ஆகியே தீரும். ரத்னத்தைக் குறைந்த விலைக்குக் கொடாதே தகுந்த விலைக்குக் கொடுக்கும்
வியாபாரியைப் போன்ற மத்யமாதிகாரிகள் ப்ரபத்தியை மோக்ஷ ஸாதனமாக அபிமானித்து க்ஷுத்ர பலன்களைக் கொள்ளாதே உயர்ந்த மோக்ஷ பலனையே கொண்டால் உபாயத்வாபிமானம் அவ்யாஹதமா யிருக்கும், ரத்னத்தை ஒன்றுக்கும் ஸாதனமாக்காதே ஸ்வயம் போக்யமாகக் கொள்ளும் மஹாராஜனைப் போன்ற
உத்தமாதிகாரிகள் ப்ரபத்தியை ஒன்றுக்கும் ஸாதனமாகக் கோலாதே ஸ்வயம் புருஷார்த்தமாகக் கொண்டு வர்த்திப்பர்கள்.
ரோமசரென்பவர் சரிரமுழுவதும் கரடிபோல் அடர்ந்த ரோமங்களையுடைய ஒரு மாமுனிவர் தவம் புரிந்தார், “உள்ளுவா ருள்ளிற்றெல்லா முடனிருந்தறியு மெம்பெருமான்” இவருடைய அபிலாஷையை மோக்கி மிகவும் மகிழ்ந்து இவர் முன்னே வந்து ஸேவை தந்தருளி “உம்முடைய விருப்பத்தைக் கூசாதே வேண்டிக்
கொள்ளும்”? என்று சோதிவாய் திறந்து அருளிச் செய்தான். அது கேட்டு உவந்த மாமுனிவர் “பரந்தாமா! பரஞ்சோதி! பரம புருஷா! இவ்வுடம்போடே உன்னை வெகு காலம் வழிபடவேணுமென்று பேராசை கொண்டிருக்கிறேன் கான்; அனேகமாயிரம் ப்ரஹ்மாக்க ூடைய ஆயுளை என்னொருவனுக்குக் கல்பித்தருளினால் மஹா
ப்ரஸாதமாகும்!? என்று ' கைகூப்பி விண்ணப்பஞ் செய்ய, எம்பெருமான் அப்படியே திருவுள்ளமுவந்து “முனிவரே! ப்ரஹ்மாவினுடைய ஆயுளின் அவதி உமக்குத தெரிந்ததே; ஒரு பிரமன் காலஞ்சென்றால் உம்முடைய உடம்பினின்றும் ஒரு ரோமம் இற்று விழக்கடவது; இப்படி ஒவ்வொரு ப்ரஹ்மாவின் முடிவிலும் ஒவ்வொரு மயிராக இற்று விழுந்து “இனி உம்முடைய உடம்பில் ஒரு ரோமமும் இல்லை' என்று சொல்லத்தக்க நிலைமை நேருமளவும் நீர் ஜீவித்திருந்து வழிபாடு செய்வீர்” என்று வரம் தந்தருளி மறைக்திட்டனன். அவர் காழிச்சிராம விண்ணகரம் [சீர்காழி] என்னும்
க்ஷேக்திரத்தில் அவ்வண்ணமா கவே நெடுக ஜீவித்திராந்து வழிபாடு செய்து வருகிறார். இக்கதை மேற்குறித்த திருப்பதியின் பதிகத்தில் இரண்டாவது பாசுரத்தில் “ான்முகனாள் மிகைத்தருக்கை யிருக்கு. வாய்மை நலமிகுசிர் உரோமசனால் (அவித்து) நவிற்றி?! என்று திருமங்கையாழ்வாரால் அறநுஸந்திக்கப்பட்டுள்ளது.
பெரிய திருமொழியில் (6-6-6) “தன்னாலே தன்னுருவம் பயந்த தானாய்!” என்கிற பாசுரத்தின் மூன்றாமடியில் “*மின்னாடு வேலேந்து விளைந்த வேளை?” என்றே பலரும் ஓதிவரக் காண்கிறோம்;“விளந்தை வேளை" என்று திருத்தி ஓதவேணுமென்று பெரியார் சிக்ஷிக்கிறார்கள்.. குடந்தை, அழுந்தை, அயிந்தை என்னுமாபோலே விளந்தை என்பது ஒரு ஊர், அவ்வூரரசனுக்கு “விளந்தைவேள் என்று பெயர்.
வேற்படை. வல்லவனான அவ்வரசனை வென்று உலகமாண்டவனான ஒரு சோழன் சேர்ந்தகோயில் திருநறையூர் என்பது பொருள்.
பெரிய திருமொழியில் (7-4-9) *கள்ளத்தேன் பொய்யகத்தேன் என்கிற பாசுரத்தில் “ஆதலால் போதொருகால்” என்றே ஓதிவருகின் றனர்; பழைய புத்தகப் பதிப்பும் அங்ஙனே காண்கிறது -“போதொருகால்! என்பதற்கு இங்கு அர்த்தம் புலப்படவில்லை. போதருகால்” எனத் திருத்தவேணும். “போதருகால்-நிகமுங்கால
மெல்லாம்” என்றபடி
“இராவணன் கையிற் கொலை யுண்பதைவிட இராம பாணத்தாற் கொலையுண்டு
முடிதல் கன்று! என்கிற எண்ணத்தோடு வந்த மாரிசனுக்கு இராவணன்திறத்தில் உபகாரம் செய்ய வேணுமென்கிற எண்ணமுண்டாக ப்ரஸக்தியில்லை ; நாம் மாண்டொழிவதுபோல் அவனையும் மாண்டொழியச் செய்து விடவேண்டும்' என்ற எண்ணங் கொண்டே இராகவனைப்போல் கூச்சலிட்டிருக்கவேண்டும், மாரிசன் இப்படி.
கூச்சலிடாமல் வெறுமனே செத்திருப்பானாகில் பிராட்டி லக்ஷ்மணனை வெருட்டியனுப்ப நேர்ந்திராது; இராவணன் பிராட்டியைக் கவர்ந்து போகவும் அது நிமித்தமாக அவன் மாண்டு போகவும் நேர்ந்திராது. தேவர்களின் வேண்டுகோள் ஈடேறவும் வழியிராது. மரணகாலத்தில் மாரீசன் போட்ட கூச்சலே ராவண
ஸம்ஹாரத்திற்கு மூலகாரணமாக நின்றமையால் ஸ்ரீராம விஷயத் திலே மாரீசன் உபகாரகனேயன்றி அபகாரகனல்லன் என்று நினைக்கலாமல்லவா ? “அப்ரமேயம் ஹி தத் தேஜோ யஸ்ய ஸா ஐுகாத்மஜா'” என்று வேதாந்த விழுப்பொருளை நிலையிட்டவனுன மாரீசனைப் பரமபாகவதனென்று கொள்ளுவது அநுசிதமுமாகாது.
கம்பராமாயணத்தில் அயோத்தியா காண்டம்-கங்கைப் படலத்தில் ஆறாவது செய்யுள்--*அருப்பேந்திய கலசத்துணை” என்று தொடங்குவது, இதில் மூன்றாமடி. “*கருப்பேந்திர முதலாயின. கண்டாளிடர் காணாள்” என்பது. இராமனோடு காட்டிற் சென்ற பிராட்டி எதைக் கண்டும் அஞ்சவில்லையென்று சொல்லும் பிரகாணத்திலுள்ள செய்யுள் இது, இங்குக் *கருப்பேந்திரம்' என்பதற்குப் பொருள் யாது? என்று ஆராயவேணும். *கரும்பு ஏந்திரம்! என்று பிரித்து “கரும்பாலை” என்று பொருள் எழுதியுள்ளார்கள்; வால்மீகி ராமாயணத்தில்--*கஜம் வா வீக்ஷ்ய ஸிம்ஹம் வா வ்யாக்ரம் வாபி வராங்கநா, நாஹாாயதி ஸம்த்ராஸம் பாஹூ ராமஸ்ய ஸம்ச்ரிதா*” என்றுள்ள ச்லோகத்தை யடியொற்றியே கம்பர் இச்செய்யுளை இயற்றியுள்ளார் என்று பெரியோர் கூறுவர். ஸீதாபிராட்டி காட்டிலே செல்லும்போது யானை, சிங்கம், புலி முதலிய கொடிய விலங்குகளைக் கண்டவிடத்தும் சிறிதும் அஞ்ச வில்லை! புதிய வஸ்துக்களைக் கண்டதனாலுண்டாகும் வியப்பே அவளுக்குத் தோன்றியது; இராமபிரானுடைய திருத்தோள்களை அண்டைகொண்ட மிடுக்குத் தான் இதற்குக் காரணம்--என்பது மேற்குறித்த ச்லோகத்தைக் கூறின வால்மீகி முனிவரின் கருத்தாகும், இக்கருத்துப் படவே கம்பர் இச்செய்யுள் இயற்றினா ரென்றால் மிக்க பொருத்தமா யிருக்கின்றது. வடமொழி நிகண்டு ஒன்றில் “கர்ப்பேந்த்ரஸ் ஸிம்ஹபக்ஷக:? என்று காணப்படுதலால், சிங்கத்தைக் கொன்று தின்ன வல்ல யாளியே இங்குக் கருப்பேந்திர மெனப்பட்டது என்றால் பொருத்தமல்லவா?. கரும்பாலையைக் கண்டால் இடர் காண்கைக்கு [அஞ்சுதற்கு] ப்ரஸக்தி யிருந்தாலன்றோ அதைக் கண்டு இடர்காணாளென்னத் தகுவது.
தர்ப்போதக்ரதசேந்தரியாநநமநோகக்தஞ்சராதிஷ்டிதே
தேஹேஸ்மிக் பவஸிந்துநா பரிகதே தீரம் தசாமாஸ்தித !
அத்யத்வே ஹநுமத்ஸமேஈ குருணா ஸம்போதிதார்த்தஸ்ஸுதீ 3
லங்காருத்தவிதேஹராஜதநயாக்யாயேஈ லாலப்யதே *-என்கிற ச்லோகத்தை முதலியாண்டானது வார்த்தைகள் யடியொற்றி ஸங்கல்பஸூர்யோதயத்திலே பணித்தருளினார், எம்பெருமானோடு இணை பிரியாமல் கூடி.வாழ்வதற்கு இட்டுப் பிறந்த சேதநன் அவனைவிட்டு விலகி ஸம்ஸாரஸாகர த்தினிடையே கிடந்தலற்ற, ஞானமனுட்டான மிவை ஈன்றாகவே உடையனான வொரு ஆசாரியன் வந்து பகவத்
விஷயத்தையுணர்த்தி இருவரையும் ஒன்று சேர்ப்பதான ஸம்பிரதாய விருத்தாந்தம் நினைவுக்கு வரும். திருவடிக்கு ஸ்ரீ ராமாயணத்தில் ஆசாரிய ஸ்தானம் கிடைத்திருக்கின்றது. அந்தத் திருவடியின் தன்மையும் ஆசாரிய லக்ஷணாமும் பக்ஷ ௪ சாகாநிலய: ப்ரஹ்ருஷ்ட : புற : புறச்சோத்தமஸாந்த்வவாதீ ஸுஸ்வாகதாம் வாசமுதீரயா௩ ; புற: புகச் சோதயதீவ ஹ்ருஷ்ட :-இருபத்தேழாவது ஸர்க்கத்தின் முடிவிலுள்ள சுலோகம் -சாகாநிலய: என்பதன் உள்ளுறை --ஞான மனுட்டானமென்னும் இரண்டு ஸாதனங்களினால் உச்சைர் கதியை யடையவல்லவன்
ஆசாரியன்;-'*உபாப்யாமேவ பக்ஷாப்யாம்;ஆகாசே பக்ஷிணாம் கதி:, ததைவ ஜ்ஞாரகர்மப்யாம் ப்ராப்யதே புருஷோத்தம: என்கிற. ப்ரமாண வசனமும், இதையநுஸரித்து அவதரித்த “*சேர்ப்பாரைப்: பக்ஷிகளாக்கி ஜ்ஞானகர்மங்களைச் சிறகென்று குருஸப்ரஹ்மசாரி புத்ர சிஷ்யஸ்தாறே பேசும்!” என்கிற ஆசார்யஹ்ருதய சூர்ணையும் இங்கே அநுஸந்தேயம்.-சாகரநிலய:] சாகையென்று கிளைக்குப் பெயராயிருப்பது போலே வேதத்திற்கும் பெயராயிருக்கும். *யஜாச்சாகாத்யாமீ,
ஸாமசாகாத்யாயீ” என்று வழங்கி வருகிறோமல்லவா-ப்ரஹ்ருஷ்ட :] மிக்க மகிழ்ச்சியையுடையவனென்று பொருள். ஆசாரியன் எப்போதும் ஸந்தோஷமே வடிவெடுத்த சிந்தையை யுடையனாயிருப்பன். ஆறந்தமயனான எம்பெருமானையே அனவரதம் சிந்தை செய்வதனால் இவனும் ஆனந்தமயனாகவே ஆய்விடுவன்.
“திருமாலுருவோடு அவன் சின்னமே பிதற்றாறிற்பதோர் திருமால். தலைக் கொண்டாங்கட்கு எங்கே வரும் தீவினையே” என்கிற திருவிருத்தப் பாசுரமே நித்யாநு ஸ்தானமாக இருக்கப்பெற்றவர்களிடத்தில் ஹர்ஷ ப்ரகர்ஷம்தவிர வேறொன்றுக்கு அவகாச முண்டோ? தேஹ யாத்திரையிலும் ஆத்ம யாத்திரையிலும் கவலை
யற்றிருப்பவர்களே ஆசார்ய பதவிக்கு அர்ஹர்களாதலால் அன்னவர்கட்கு ப்ரஹர்ஷமொழிய வேறில்லை,
உத்தமஸாந்த்வவாதி என்பதன் உள்ளுறை -மிகச்சிறந்த ஹிதோபதேசங்களுக்கு ஸாந்த்வ வாதமென்று பெயர். சிஷ்யர்களின் நிர்ப்பந்தத்திற்காக வன்றிக்கே தன்பேறாக அடுத்தடுத்து ஹிதோயதேசம் பண்ணுமவர் எவரோ அவரே உத்தமரான ஆசாரியர். திருக்கோட்டியூர் நம்பியைவிட எம்பெருமானார்க்குண்டான ஏற்றம் இங்கு அநுஸந்திக்கத்தக்கது. திருத்திப் பணி கொள்ள வல்லாரைச் சொல்லுகிறது, ஸ்வாகதாம் என்றது -ஸ்வஸ்மை ஆகதாம் என்றபடி, ஸுஷ்டு ஸ்வஸ்மை ஆகதாம்-
ஸ்வாகதாம். ஸ்வகபோல கல்பிதமான அர்த்தங்களை மனம்போனபடியே சொல்லுகையன்றிக்கே முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டுப் பின்னோர்ந்து. தாமதனைப் பேசுமவரே உத்தமரான ஆசாரியராதலால் அதைத் தெரிவித்தபடி.
“பணிமானம் பிழைய।மே அடியேனைப்பணிகொண்ட” என்ற திருவாய் மொழிப் பாசுரப்
படிக்கும், “ஸ்காலித்யே சாஸிதாரம்” என்ற ந்யாஸ விம்சதிஸஃத்திப் படிக்கும் தவறுகள் நேருங் காலங்களில் நிர் தாக்ஷிண்யமாக சிக்ஷிப் பவரே உத்தமாசார்யராவர்;அதுவே இங்குப் பொருளாக விவஷிதம்,
ஆக இந்த ச்லோகம் உத்தமாசார்யருடைய படியையே தெரிவிப்ப தாயிற்று, இனி இதற்குச் சார்பான கம்பர் பாசுரங்கேண்மின்,
அஞ்சிலே யொன்று பெற்றான் அஞ்சிலேயொன்றைத்தாவி
அஞ்சிலே யொன்றாறாக ஆரியர்க்காக வேகி
அஞ்சிலே யொன்று பெற்ற அணங்குகண்டயலாருரில்
அஞ்சிலே யொன்று வைத்தானவன் நம்மையளித்துக் காப்பான்.” அஞ்சிலே” என்கிற சொல் ஐந்து தடவை வந்துள்ளதன்றோ. அவ்வைக்து தடவைகளிலும் பஞ்ச பூதங்களாகிற ஐந்து தான் பொருளாகக் கொள்ளப்பட்டது முன்னம் ; உள்ளுறை
பொருளில் அப்படியல்ல;முதலான அஞ்சு-பஞ்சஸம்ஸ்காரம். இரண்டாவதான அஞ்சு-அர்த்தபஞ்சகம், மூன்றாவதான அஞ்சு--உபாயபஞ்சகம். நான்காவதான அஞ்சு--பரத்வாதிபஞ்சகம், ஐந்தாவதான அஞ்சு--லோகபஞ்சகம்,-அஞ்சிலே யொன்று பெற்றான்-பஞ்சஸம்ஸ்காரங்களில் ஒன்றான மந்த்ர ஸம்ஸ்காரத்தினாலே பிறவி பெற்றவனென்ற தாயிற்று. *அர்த்தபஞ்சகம்-அறியவேண்டுமர்த்தமெல்லாம் இதுக குள்ளே யுண்டு; அதாவது அஞ்சர்த்தம்”-ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துச் ௪ ப்ரத்யகாத்மஈ:.. ப்ராப்த்யுபாயம் பலம் ப்ராப்தேஸ் ததா ப்ராப்தி விரோதி ௪. வதந்தி ஸகலாவேதா : ஸேதிஹாஸபுராணகா -மிக்க இறநிலையும் மெய்யாமுயிர்கிலையும் தக்கமெறியும் தடையாகித் தொக்கி யலுமுழ்வினையும் வாழ்வினையுமோதுங் குருகையர்கோன் யாழி னிசை வேதத்தியல்:இவற்றுள் ஒன்றைத் தாவுகையாவது -- அர்த்த பஞ்சகத்தில் ஒன்றான விரோதி ஸ்வரூபத்தைக் கடத்தலாம்.
முமுக்ஷுப்படியில் “விரோதிதான் மூன்று; ஸ்வரூப விரோதியும் உபாய விரோதியும் ப்ராப்ய விரோதியும்!? என்றருளிச் செய்த படியும், பட்டர் அஷ்டச்லோகியில், “மந்த்ரப்ரஹ்மணி மத்யமேஈ ஈமஸா?? என்கிற இரண்டாம் ச்லோகத்திலே நிரூபித்தருளின படியும் அவசியம் களையவேண்டியவையாகத் தேறுகின்ற பிரதிபந்தகங்களைக் களைந்து என்றதாயிற்று. அஹங்காரமமகாரஸ்பர்ச மற்றவராய், ஸ்வரக்ஷணே ஸ்வாற்வயரஹிதராய், எம்பெருமானுடைய போகத்திற்கு ஹாநியை விளைவியாதவராய் இருக்குமிருப்பைச் சொல்லிற்றாயிற்று.
அஞ்சிலே ஒன்று ஆறாக என்றதன் உள்ளுறை உபாய பஞ்சகத்திலே ஆசார்யாபிமானமாகிற ஒன்றையே உபாயமாகக்கொண்டு என்றபடி. ஐந்து உபாயங்கள் எவை யெனில், கருமயோகம், ஞானயோகம், பக்தியோகம், ப்ரபத்தி யோகம், ஆசார்யாபிமானம் என்னுமிவையேயாம்-ரச்வரனைப் பற்றுகை கையைப் பிடித்துக் காரியம் கொள்ளுமோ பாதி; ஆசார்யனைப் பற்றுகை காலைப் பிடித்துக் காரியம் கொள்ளுமோபாதி”-ஸ் வாபிமாநத்தாலே ஈச்வராபி மாநத்தைக் குலைத்துக்கொண்ட இவனுக்கு ஆசார்யாபிமாநமொழிய கதியில்லையென்று பிள்ளை பலகாலுமரு ளிச்செய்யக் கேட்டிருக்கை யாயிருக்கும்!” “பெருவிலையனான ஆபரணத்துக்கு நாயகக் கல் போலேயாயிற்று ஸ்ரீ வச௩ பூஷண த்துக்கு இப் ப்ரதேசம் நாயக ரத்னமாயிருக்கும்படி, இதனையருளிச் செய்கைக்காக அதிஷ்டிகையிட்டுக் கொண்டு வந்தது. கீழடங்கலும்; மேலடங்கலும் இதில் நிஷ்டையை ஸ்தாபிக்கிறது'” என்று: மாமுனிகளருளிச். செய்திருப்பது. குறிக்கொள்ளத்தக்கது-அஞ்சிலே யொன்று பெற்ற அணங்கு-யரம் வியூஹம் விபவம் அந்தர்யாமி அர்ச்சை என்னும்படியான
எம்பெருமானது நிலைகள் ஐந்தினுள்ளே ஒன்றாயிருக்கப் பெற்ற அர்ச்சாவதாரத்தைக் காட்டிக்கொடுத்து என்றபடி, (கண்டு? என்றது பிறவினையில் வந்த தன்வினை; காணச்செய்து என்று பொருளாம். *அணங்கு' என்று தெய்வத்திற்குப் பெயர்; பரமபத
நிலனாயிருக்குமிருப்பாகிய பரத்வமும், திருப்பாற்கடலில் ஸங்கர்ஷணாதி ரூபேண வ்யூஹீபவித்து நிற்கும் நிலையாகிய வ்யூஹமும் தேச விப்ரக்ருஷ்டமாகையாலே இப்போது நமக்குப் பயன்பட, மாட்டா. மத்ஸய கூர்ம வராஹ ராம க்ருஷ்ணாதி ரூபேண அவதரிக்கையாகிற வியவாவதாரம். காலவிப்ரக்ருஷ்ட மாகையாலே.
இதுவும் இப்போது நமக்குப் பயன்பட மாட்டா. “அந்த: ப்ரவிஷ்டச் சாஸ்தா ஜநாறரம் ஸர்வாத்மா” இத்யாதிகளிற் சொல்லுகிறபடியே உள்ளே ப்ரவேசித்து ஸகல ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கும் நியாமகளாயிருக்கு மிருப்பாகிய அந்தர்யாமித்வம் கரண விப்ரக்ருஷ்டமாகையாலே நமக்குப் பயன்பட மாட்டா. *தமருகந்த தெவ்வுருவ
மவ்வுருவமாய்க் கொண்டு கோவில்களிலும் க்ருஹங்களிலு மெழுந்தருளி நிற்கும் நிலையாகிய அர்ச்சாவதாரமொன்றே . இப்போது நம்போல்வார்க்கு உபஜீவ்யமாகையாலே இது தன்னைக் காட்டிக் கொடுப்பதே ஆசார்ய க்ருத்யமாயிருக்குமென்க. அயலாரூரிலஞ்சிலே யொன்று வைத்தான் -ஊரஞ்சிலே ஒன்றில் வைப்பது ஆசார்ய க்ருத்யம். இம்மண்ணுலகம், பாபங்களின் பலாநுபவத்திற்கான நரகலோகம், புண்ய பலாநுபவத்திற்கான ஸ்வர்க்கலோகம், ஆத்மாநுபவ ஸ்தானமாகச் சொல்லப்படுகிற கைவல்யலோகம். *நலமந்தமில்லதோர் நாடெனப்படுகிற பரமபதம் ஆகிய ஐந்து லோகங்களில் ஒன்றான பரம பதத்திற்கு ஆளாக்கித் தீருத்திப் பணிகொள்வது ஆசார்ய க்ருத்யமென்க,
ஆக, பஞ்ச ஸம்ஸ்காரம் பெறுவித்து, ப்ரதிபந்தகங்களைக் கடத்தி, சரமோபா
யத்தை உபதேசித்து, அர்ச்சாவதாரத்தைக் காட்டிக் கொடுத்து ஸம்ஸாராத் உத்தீர்ணனாக்கும் ஸதாசார்யனுடைய படிகளை இச் செய்யுளிலே வெளியிட்டாராயிற்று
———————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Like this:
Like Loading...
Related
This entry was posted on July 26, 2025 at 8:49 pm and is filed under அருளிச் செயலில் அமுத விருந்து -. You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply