ஸ்ரீ ராமானுஜ பத்திரிகைகளில் இருந்து (161-162/181/184/187/193-194/365-366/379-380/388-389)திரட்டிய அமுத ஸ்ரீ ஸூக்திகள்
(161-162) 1-நம்மாழ்வார் விஸ்தரித்தருளிச்செய்த விஷயங்களைத் திருமங்கையாழ்வார் சுருக்கியருளிச் செய்வர்.-2-அவர் சுருக்கியருளிச்செய்ததை இவர் விஸ்தரித்தருளிச் செய்வர்.-3-சில விஷயங்களை இருவரும் ஸமமாக அருளிச்செய்வர்.-4சில விஷயங்களில் கலியன் பரிஷ்காரம் காட்டுவர்.
நம்மாழ்வார் விஸ்தரித்ததைத் திருமங்கையாழ்வார் சுருக்குவது
தூதுவிடுதல்; நம்மாழ்வார் தலைமகள்பாவனையில் தூதுவிட்டது நான்கு திருவாய்மொழிகள். . அஞ்சிறைய மடநாராய். வைகல் பூங்கழிவாய். பொன்னுலகாளீரோ. எங்கானலகங்கழிவாய் ஆக இந்த நான்கு பதிகங்களில்நம்மாழ்வார்தூது மிகவிரிவாக நிகழ்ந்திருக்கின்றது. திருமங்கையாழ்வாரால் இதுமிகவும் ஸம்க்ஷேபிக்கப்பட்டது. பெரிய திருமொழியில் (3-6) தூவிரிய மலருழக்கிப்பதிகத்தில் வயலாலி மணவாளனுக்குத் தூதுவிடத்தொடங்கி நான்கு பாசுரங்களோடு அதனை நிறுத்திவிட்டார். மேலே ஓன்பதாம் பத்தில் (94) * காவார்மடற்பெண்ணை யென்கிற திருப்புல்லாணிப் பதிகத்தில் (2) புள்ளினங்காள்!புல்லாணி அன்னமாய் நூல்பயந்தாற்கு ஆங்கிதனைச் செப்புமினே என்றொருபாசுரத்தில் மட்டுமே தூதுவிடுதல். திருவிருத்தத்திலுள்ள-தூது விடுதலுக்குச் சேரத் திருநெடுந்தாண்டகத்திலுள்ளது. இருவரும் இரண்டு பாசுரங்கள்.
நரஸ்துதி விலக்குதல் -நம்மாழ்வார் திருவாய்மொழியில் (3 – 9) சொன்னால்விரோதமிது என்னுந் திருவாய்மொழியில் சொன்னாவில் வாழ்புலவீர் ! சோறுகூறைக்காக, மன்னாத மானிடரை வாழ்த்துதலாலென்னாகும்? என்ற திருவாய்மொழி நூற்றந்தாதிப்படியே நரஸ்துதியை விலக்கினது விஸ்தாரமாகவுள்ளது.இதனைத் திருமங்கையாழ்வார் ஒரே பாட்டில் சுருக்கினார். பெரியதிருமொழி முதற்பதிகத்தில் (7) இற்பிறப்பறியீர்…… கற்பகம் புலவர் களை ணென்றுலகில் கண்டவா தொண்டரைப்பாடும் சொற்பொருளாளீர்! சொல்லுகேன்வம்மின் சூழ்புனற்குடந்தையே தொழுமின் என்றபாசுரங் காண்க.
அனுகரித்துத் தரித்தல்– திருவாய்மொழியில் (5 – 6) கடல் ஞாலம் செய்தேனும் யானேயென்னும் * என்கிற பதிகத்தில் “கடல் ஞாலத்தீசனைமுன் காணாமல்நொந்தே, உடனாவனுகரிக்கலுற்றுத் திடமாக வாய்ந்தவனாய்த் தான்பேசும்மாறன் * என்ற நூற்றந்தாதியின்படி, யானே யானே யென்றுசொல்லி எம்பெருமாாகவனுகரித்துப் பேசுதல் விஸ்தாரமாகவுள்ளது. திருமங்கையாழ்வார்க்கு இவ் வநுபவம் ஒரே பாசுரத்தில் சுருக்கமாக நிகழ்ந்தது.பெரியதிருமொழியில்(8-2-6) .வடவரை நின்றும் வந்து, இன்று கணபுரமிடவகை கொள்வதுயாமென்று பேசினாள். திருவேங்கடமலையில் நின்றும் திருக்கண்ணபுரத்தேற வந்து சொரிப்பெருமாளாகக் காட்சிதருவது யானே யென்றது இதில். நம்மாழ்வாருடையஅநுகாரம் தாய்பேச்சால் வெளிவந்தது போலவே இவருடைய அநுகாரமும் தாய்பேச்சாலேயே வெளிவந்ததென்பதும் குறிக்கொள்ளத்தக்கது. . கடல் ஞாலப்பதிகம் தெள்ளியீர் பதிகமும் தாய்ப்பேச்சேயன்றே.
நம்மாழ்வார் சுருக்கியதைக் கலியன் விரித்துரைப்பது.
பிரளயத்தில் ஸகல தெய்வங்களும் எம்பெருமானுடைய திருவயிற்றில்புகுந்து ர ைபெறும் விஷயத்தை நம்மாழ்வார் திருவாசிரியத்தில் (7) நளிர்மதிச்சடையனும் நான்முகக் கடவுளும், தளிரொளியிமையவர் தலைவனு முதலாஒருபொருள் புறப்பாடின்றி முதுவதுமகப்படக் கரந்து, ஓராலிலைச் சேர்ந்த எம்பெருமா மாயனையல்லது, ஒருமாதெய்வம் மற்றுடையமோ யாமே! * என்று சுருக்கி யநுஸந்தித்ததைத் திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் (11-6)-மைந்நின்ற கருங்கடல் வாயுலகின்றி என்கிற பதிகத்தில் (10) * தேவரையு மசுரரையும் திசைகளையுங் கடல்களையும் மற்றும் முற்றும், யாவரையு மொழியாமே யெம்பெருமானுண்டுமிழ்ந்த தறிந்து சொன்ன என்ற நிகமனப் பாசுரத்தின்படியே விஸ்தரித்தருளிச்செய்தவாறு காண்க.
திருவாய்மொழியில் (5-3) *மாசறுசோதிப் பதிகத்தில் (9) * குதிரியாய் மடலூர்துமே * என்றும், (10) யாமடலூர்ந்தும் என்றும், மடலூர்வதான ப்ரஸ்தாவத்தை அதிஸம்ஷேபமாகச் செய்தார் நம்மாழ்வார். திருமங்கையாழ்வார் இதனை சிறிய திருமடல் பெரிய திருமடல் என்னும் இரண்டு திவ்வியப் பிரபந்தங்களினால் மிகமிக விஸ்தரித்தருளினார்.
இருவரும் ஸமமாக அருளிச்செய்தது.-நம்மாழ்வார் திருவாய்மொழியில் (3-7) *பயிலுஞ் சுடரொளியிலும், (8-10)நெடுமாற்கடிமையிலும் அநுஸந்தித்த பாகவத சேஷத்வத்தை திருமங்கையாழ்வார் தமது பெரியதிருமொழியில் (2-6) நண்ணாதவாளவுணர் (7-4) கண்சோரவெங்குருதி ஆகிய இரண்டு திருமொழிகளில் அநுஸந்தித்தார்.திருவாய்மொழியில்(6-6) மாலுக்கு வையமளந்த பதிகத்தில் “இழந்தது சங்கே, இழந்தது மாமை நிறமே, இழந்தது பீடே, …. இழந்தது கட்டே” என்று எல்லாமிழந்ததாகத் தாய் பேச்சாலே தெரிவிக்கப்பட்டது. திருமங்கையாழ்வார் தமது திருமொழியில் (8-3)கரையெடுத்த சுரிசங்கு மென்னும் பதிகத்தில் “இழந்தேனென் வரிவளையே,இழந்தேனென் கனவளையே, இழந்தேனென் சரிவளையே ….. இழந்தேனென்பெய்வளையே * என்றுதாமிழந்தவற்றைத் தம் திருவாக்கினாலேயே வெளியிட்டார்.திருவாய்மொழியில் கங்குலும் பகலும் பதிகத்தில் தாய் பேச்சாலே இவள்திறத்து என்செய்கின்றாயே, இவள்திறத்தென் சிந்தித்தாயே.. என்று எம்பெருமான் திருவுள்ள மென்னவென்று கேட்கப்பட்டது, பெரியதிருமொழியில் (2-7) திவளும் வெண்மதிபோல் என்கிற திருவிடவெந்தைப் பதிகத்தில் உன்மனத்தால் என்னினைந்திருந்தாய்? * என்று பாசுரந்தோறும் தாய் பேச்சாலே அந்தக்கேள்வியே நிகழ்ந்தது.
நம்மாழ்வார் செய்தருளின அநுபவங்களில் சிலவற்றில் திருமங்கையாழ்வார் பரிஷ்காரம் செய்திருப்பதுமுண்டு. திருவாய்மொழியில் (4-6) * தீர்ப்பாரையாமினியில் தேவதாந்தரக் கட்டுவிச்சி வந்து குந்தமை சொல்லிற்று.சிறியதிருமடலிலும் திருநெடுந்தாண்டகத்திலும் (1) பகவத்ப்ரவணையான கட்டுவீசியின் பேச்சு வெளியிடப்பட்டது. திருவாய்மொழியில் ( — ) * உண்ணுஞ்சோறுபதிகத்தில் ஆழ்வார்தாமே தனியே திருக்கோளூர்க்கு நடந்தமை சொல்லிற்று. பெரியதிருமொழியில் (3-7) கள்வன்கொல் பதிகத்தில் வயலாலி மணவாளன் வந்துஆழ்வாரைக் கைப்பற்றிக்கொண்டு போனதாகச் சொல்லிற்று-இங்ஙனே பலவகை யநுபவரஸங்கள் சுவைக்கத் தக்கன.
பெரிய திருமொழி வ்யாக்யானத்தில் (5-8-7) ஓதுவாய்மையு முவனியப் பிறப்பு முனக்கு முன் தந்த அந்தண என்ற விடத்து “முற்பட த்வயத்தைக் கேட்டுஇதிஹாஸ புராணங்களையும் அதிகரித்துப் பரபக்ஷ ப்ரதிக்ஷேபத்துக்கு உடலாகயாய மீமாம்ஸைகளுமதிகரித்து, போதுபோக்கும் அருளிச் செயலிலே யாம்-நம்பிள்ளையைப் போலே” என்று பெரியவாச்சான் பிள்ளை யருளிச்செய்துள்ள ஸ்ரீஸக்தி யொன்றே இவருடைய ஞானப்பெருமையை விளக்கக் கூடியது. திவ்ய ப்ரபந்தங்களுக்கும் இதிஹாஸ புராணாதிகளுக்கும் ஆழ்ந்து இன்சுவையே வடிவெடுத்த அர்த்தங்களை யருளிச்செய்வதில் இவர்க்கு ஒத்தாரும் மிக்காருமில்லை.-“துன்னு புகழ்க் கந்தாடைத் தோழப்பர் தம் முகப்பால் என்னவுலகாரியனோ வென்றுரைக்க, பின்னை யுலகாரியனெனும் பேர் நம்பிள்ளைக் கோங்கி, விலகாமல் நின்றதென்றும் மேல்” என்ற உபதேசரத்தினமாலைப் பாசுரம்-பின் பழகராம் பெருமாள் சீயர் பெருந்திவத்தில் அன்பதுவுமற்று மிக்க வாசையினால், நம்பிள்ளைக்கான வடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே! ஊனமற வெப்பொழுது மோர்
“மயா த்வம் ஸமநுஜ் ஜாதோ கச்சலோகாநத்தமாந்” என்று ஜடாயுவுக்கு முத்தி யளித்தது எங்ஙனே பொருந்தும்?”ஸத்யேந லோகாந்ஜயதி” என்கிற லோகத்தைக் கொண்டு நிர்வஹிப்பர்
அஸ்மதாதிகளான சேதனர்கள் பலபல செய்தே ரசைபெறவேண்டும்.-(இது வடகலையாருடைய கொள்கை ) பரமசேதனன்தலையிலேயே ஸகல பாரமுமுள்ளது.
(இது தென்கலையாருடைய கொள்கை.)-இதையாரும் மாற்றிச் சொல்ல முடியாது. ஸ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸாரத்தில் நிதாநம் தத்ராபிஸ்வயமகிலநிர்மாண நிபுண:” என்றும், “த்ராணே ஸ்வாமித்வமௌசித்யம் ந்யாஸாத்யா: ஸஹகாரிண; ப்ரதாநஹேது: ஸ்வாதந்த்ர்யவிசிஷ்டா கருணா விபோ!” என்றுமுள்ள இரண்டு வசனங்களேபோதும் தேசிகளித்தாந்தமறிவதற்கு. ஸர்வமுக்தி ப்ரஸங்கமென்பாருடையவாயை மூடுவிக்க (ஸ்வாதந்த்ர்ய விசிஷ்டா) என விசேஷித்தது.-
“திருக்கேட்டியூர் நம்பிபக்கலிலே ரஹஸ்யார்த்தங்கள் கேட்டார்’-என்றருளிச் செய்ய வேண்டியிருக்க, அங்ஙனமருளிச் செய்யாமல் “ரஹஸ்யார்த்தங்கள் சிக்ஷித்தார்” என்றருளிச் செய்திருப்பதை ஆழ்ந்து நோக்கவேணும். ஸ்வாமி தாம்ஸாக்ஷாதாசார்ய
ரான பெரியநம்பிபக்கலிலே ரஹஸ்யார்த்தங்கள் க்ரஹித்தாயிற்று. அப்போது பெரியநம்பிகள் ஸ்வாமி திருச்செவியிலே “ஆளவந்தார் திருக்கோட்டியூர் நம்பி பக்கலிலே ரஹஸ்யார்த்தநிதி வைத்தருளியிருக்கிறார், அதை அவர் பக்கலிலே சென்று பெறுவீராக” என்று நியமித்தபடி யாலே ‘கோஷ்டீபூர்ண குரூபஸத்தி குசலோ யாம் சச்வதாஸ்ேதிவார்” என்று தொடங்கி-பட்டரருளிச்செய்தபடியே திருக்கோட்டியூர்க்குப்பலகால் நடந்து துவண்டு கேட்டு….எம்பெருமானாரென்று திருநாமம் பெற்றிருக்கிறார் ஸ்வாமி.
ப்ராப்தாவும் ப்ராபகனும் ப்ராப்திக்கு உகப்பானும் அவனே’ “‘அவனை இவன் பற்றும் பற்று அஹங்காரகர்ப்பம் அவத்யகரம், அவனுடைய ஸ்வீகாரமே ரக்ஷகம்” இத்யாதி ஸ்ரீலோகாசார்யஸுக்திகளையும், “கீழை மேலை வடக்கிலவை புறம்பாக, தன்பற்று உள்ளசல்” இத்யாத்யாசார்ய ஹ்ருதய ஸூக்திகளை யும் அதிகரித்தேஸ்வாமி தேசிகன் கீதார்த்த ஸங்க்ரஹராக்ஷை, ந்யாஸத்திவகம் முதலானவை யருளிச்செய்தார். “நிஜகர்மாதி பக்த்யந்தம் குர்யாத் ப்ரீத்வை காரித:, உபாயநாம் பரித்யஜ்ய நீயஸ்யேத் தேவேது தாம் அபீ: ” என்றஆளவந்தார் ஸூக்தியின் ரக்ஷையில் தேசிகன் ஸாதித்தருளின ஒருஸூக்தி ஆயிரம் ஸ்ரீ வசன பூஷணமன்றோ.
இவன்தான் உபாயா நுஷ்டானம் பண்ணிற்றும் வரத!தவ கலுப்ரஸாதாத்ருதே சரணமிதி வசோபி மே நோதியாத் என்று சொல்லுகிறபடியே அவன் கடாக்ஷமடியாக வருகையால் அவனாலே ப்ரேரிதனாய்,அவன் ஸ கரியாதபோது நீட்ட முடக்கமாட்டாதே அவன்கொடுத்த கரணகளே பரங்களைக்கொண்டு அவன் காட்டின வுபாயத்தை அவன் துணைசெய்ய அநுஷ்டித்து அவனால் கொடுக்கப்படுகிற பலத்துக்குசாதகம்போலே அண்ணாந்திருக்கிற இவனை ஸ்வாதீந ஸர்வவிஷய அப்ரதிஹத கர்த்ருத்வமுடையவனோடே துல்யமாக இரண்டாம் ஸித்தோபாயமாக வெண்ணுகை விவேகியான முமுக்ஷவுக்கு உசிதமன்று…. என்னுணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவுமவனதின்னருளே யென்றும் இசைவிததென்னையுன் தாளிணைக் கீழிருத்து மம்மானே யென்றுஞ்சொல்லுகிறபடியே உபாய பூதனான அவன் செய்விக்கச் செய்கிற வ்யாஜமாத்ரத்தை அவனோடொக்க உபாயமாக வெண்ணுகை உ.சிதமன்றென்று ஏகசப்தத்துக்கு தாத்பர்யம்”என்றார் [ஹாஹா ! லோகாசார்யாதிகளும் இவ்வளவு எழுதவில்லையே]இத்தனைக்கும் சிகரம்”அத்யர்த்த ப்ரியம் ஜ்ஞாநி ம் லப்த்வா ?என்கிற ஸ்ரீபாஷ்ய திவ்ய ஸுக்தி
————
181-திருப்பாவை ராமாயணம் “-திருவாயர்பாடிப் பிரானான ஸ்ரீ க்ருஷ்ண பகவானையே இலக்காகக் கொண்டுஅவதரித்த திருப்பாவையில், 4. தாழாதே சாரங்க முதைத்த சராம ழைப்பால். 10. கும்பகாணனும்தோற்று முனக்கே பெருந்துயில்தான் தந்தானோ ? 12. சினத்தினால் தென்னிலங்கைக்கோமானைச் செற்ற.13. பொல்லா வரக்கனைக் கிள்ளிக் கனைந்தானை.24.சென்றங்குத்தென்னிலங்கை செற்றாய். என்றித்தகைய சில பாசுரத் துணுக்கைகளைக் கொண்டுராமாவதாரத்தை யனுபவிக்க முடியுமெனினும் ஸ்ரீராம கதா ரஸ்தரவ கந்தமே யில்லாதமற்றைப் பாசுரங்களிலிருந்து அவ்வனுபவம் எங்ஙனே செய்ய முடியும்? என்று சிலர் நினைக்கக்கூடும். இது அஸம்பாவிதமன்று; பல வழிகளால் ஸம்பாவிதமேயாகும். –
உற்றோமாவோ மென்பதற்கு அவிநா பூதரா யிருப்போமென்பது தாத்பர்யம் -அநயா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபா யதா ” என்பது பிராட்டியின் திருவாக்கு.-அநந்யா ஹி மயா ஸீதா பாஸ்கரேண ப்ரபா யதா.” என்றார்.-பிராட்டியின் வாக்கினால் தனக்கும் பெருமாளுக்கும் அவிநாபாவம் ஸாதிக்கப்பட்டது; பெருமாள் வாக்கினால் தனக்கும் பிராட்டிக்கும் அ நாபாவம் ளாதிக்கப்பட்டது என்னுமிவ்வளவே வாசி–ஜயத் யா ரித ஸம் த்ராஸ த்வாந்த வித்வம்ஸ நோதய :, ப்ரபாவாந்ஸ்தயா தேவ்யா பரம வ்யோம பாஸ்கர: ‘ என்று ரகுவீர கத்ய மங்கள ச்லோகம் அவதரித்ததாயிற்று. உன்றன்னோடுற்றோமே யாவோமென்று ஆய்ச்சிகள் பாரித்ததும் பெற்றதும் இத்தகைய அவி நாபாவமேயாம். மந்தரம்நாட்டியன்று மதுரக்கொழுஞ்சாறு கொண்ட சுந்தரத்தோளுடையான்’-பிராட்டியேதான் மதுரச்கொழுஞ்சாறு என்று கருதப்பட்டாள். அது அடுத்துள்ள கொண்ட என்னும் பெயரெச்சத்தினாலும் விளக்கப்பட்டது.-கொடுத்தது உப்புச் சாறு; கொண்டது அமுதக் கொழுஞ்சாறு. இது தன்னைக் கூரத்தாழ்வான்ஸு ந்தர பா – ஸ்தவத்தில் நன்கு வியாக்கியானித்தருளினார். ‘நன்கு வியாக்கியானித்தருளினார். ‘விண்ணவ
முதுண அமுதில் வரும் பெண்ணமு துண்ட வெம்பெருமானே!” என்றார் திருமங்கை
யாழ்வாரும்.-வங்கக் கடல் கடைந்து-அருமையான காரியத்தைச் செய்து, மாதவன்- ஸீதாபதியாயின னென்றதாகக் கொள்க.-மேலே கேசவனென்றதனால் பாசுாரம பங்க ககை சிதமாகிறத-கேசவ நாமமானது பரம சிவனால் பகவானுக்கு அர்த்த விவரண பூர்வகமாக
அளிக்கப்பட்டது. பிரமனுக்கும் சிவனுக்கும் மேற்பட்டவனென்பது விவரண ஸ்த்தமான
பொருள். பரசுராம பங்கத்தினால் பெருமாளுக்கு ஸித்தித்தது அப்ரமேயமான பரத்வமே
யாதலால் அது கேசவனை யென்பதனால் சிதமென்னக் குறையில்லை.-“திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி” என்பதனால் மேலுள்ள பல காண்டங்களின் கதை ஸசனையாக வன்றிக்கே வ்யக்தமாகவே தெரிவிக்கப் படுகிறது. எங்ஙனே யென்னில் ;சேயிழையார் என்று ஸ்த்ரீகளுக்குப் பெயர். செவ்வியஇழைகளை – ஆபயணங்களை யணிந்துள்ளவர்களென்று காரணப் பெயர். புமான்கள்-ஆபரணங்களை யணிந்திருந்தாலும் அவர்களைச் சேயிழையார் என்பதில்லை. ஆக ஸ்த்ரீகளின் மங்களாசாஸனமும் புகழுரையும் சேயிழையரா ரிறைஞ்சியென்பதனால்சொல்லப்பட்ட
தாகிறது. ஸ்ரீராமாயணத்தில் இராமபிரானுக்குக் கிடைத்த மங்களாசாஸனங்களும்
புகழுரைகளு மெல்லாம் பெரும்பாலும் ஸ்த்ரீகள் மூலமாவே-பெருமாளுக்கு யுவராஜ பட்டாபிஷேகம் செய்வகாகக் கோலினவளவிலே-ஸ்தரியோ வருதாஸ் தருண்யச் ச ஸாயம் ப்ராதஸ் ஸமாஹிதா . ஸர்வாந்தேவாந் நமஸ்யந்தி ராமஸ்யார்த்தே ய ஸ்விந்:” [அயோ. 2-5 ) என்று கிழவிகளும் யுவதிகளுமான ஸ்த்ரீகளே மங்களாசாஸனம் செய்ததாகச் சொல்விற்று-அடுத்தபடியாக ஸீகாபிராட்டி மங்களாசரஸனம் செய்தயடி சொல்லிற்று.-அஸிதேக்ஷணா, ஆத்வார மநு வ ராஜ மங்களாநி அபிதத்யுஷீ” (அயோ.16- 21.) என்று
விந்தா அகல்பயத் புரா, அம்ருதம் ரார்த்தயாநஸ்ய தத்தே பவது மங்களம்.” என்று
அடுத்தபடியாகக் கெளஸல்யாதேவி மங்களாசாஸனம் செய்தபடி சொல்லிற்று.
இதற்கடுத்தபடியாக ஆரண்ய காண்ட உபக்ரமத்தில் மஹர்ஷிகள் மங்களாசாஸனம்
செய்தபடி சொல்லுகிறது. இவர்கள் ஆண்களே யொழியச் சேயிழையாரல்லரே யென்று
நினைக்கக்கூடும். இங்கு ஒரு மருமம் உணர்த்த விரும்புகிறேன்.-தே தம்ஸோம மிவோத் யந்தம் திருஷ்ட்வர வைதாம சாரின :, மங்களரங் ப்ரயுஞ்ஜாநா !” என்னப்பட்ட தண்டகாரண்ய மஹர்ஷிகள்-ரூபஸம்ஹ நம் லக்ஷ்மீம் வௌகுமார்யம் ஸுவேஷதரம், தற்ரு ர் விஸ்மித காரா “என்னப்பட்டார்கள் வால்மீகி மஹர்ஷியினால். இங்கு விஸ்மிதாகாரா : என்ற ஸ்தானத்தில்-விஸ்மருதாகாரா : என்றபாடமும் பல ஸ்ரீகோ ரஹங்களிற் காண்கிறது. அந்த மஹர்ஷிகள் தங்களுடைய ஆண்மையை மறந்து பெண்மையை ஏறிட்டுக் கொண்டதாகப் பொருள்பட நின்றது. “ஆடவர் பெண்மையை அவாவுந் தோளினாய்!” என்ற கம்பர் வாக்குக்கு இது மிகப்பொருந்தும்.-இராமபிரானுடைய வடிவழகி வீடுபட்ட ஆரண்ய மஹர்ஷிகள் மநஸா பெண்மையை யெய்தினதாகவும், அவர்களே க்ருஷ்ணாவதரரத்தில்
கோபிகளாக வந்து பிறந்ததாகவும் புராணங் கூறுதலுமுண்டு. ஆகவே இந்த மஹர்ஷி
களையும் சேயிழையார் கோஷ்டியிலேயே பரிகணநம் செய்துகொள்ளக் குறையில்லை.
ரெள மஹாபலெள,புண்டரீக விசாலாசெக்ஷள சீரக்ருஷ்ணா ஜிநாம்பரௌ.” இத்யாதி-சூர்ப்பணகையின் புகழுரை –அதன் பிறகு தாரையின் புகழுரை.-ிவாஸவ்ருக்ஷஸ் ஸா தூநாம் ஆபந்நாநாம் பரா தி: யா தூநர மிவ சலேந்த்ரோ குணாநாமாகரோ மஹாந்.” இத்யாதிகள் பரோக்ஷத்தில்-தவமப்ரமேயச் ச துராஸதச் ச தேந்திரியச் சோத்தமதார்மிகச்ச, அக்ஷய்யகீர்த்திச்ச விசக்ஷணச் ச கூமாவாந்க்ஷதஜோபமாக்ஷ :” இத்யாதிகள் ப்ரத்யக்ஷத்தில் செய்த ப்ரஸம்ஸை.-வயக்கமேஷ மஹாயோ …. தம : பரமோ
யாதர பரங்க சக்ரதாதர , ஸ்ரீவளவக்ஷா நித்யஸ்ரீ, அஐய்யச் பாச்வதோ தருவ:”இத்யாதி
யாக மந்தோதரி ஓலக்கத்தில் ஓலமிட்டவை ஒருமகர்ஷியின் வரக்கிலும் வந்ததல்ல.-திருப்பாவையில் இறைஞ்சினவர்களும் பறைகொண்டவர்களும் வேறுபட்டவர்களல்லர் ; ஸ்ரீராமாயணத்தில் இறைஞ்சினவர்கன் கீழே விவரித்த மாதர்கள்; பறைகொண்டவர் சக்ரவர்த்திதிருமகனார்.-பறைகொண்டவர் பெருமாள்-விபீஷணஸ் து தர்மாத்மா ந து ராக்ஷஸ சேஷ்டித ” என்றுசொல்லக் கேட்டது முதலாகப் பெருமாளுடைய திருவுள்ளத்தில், அவனிருக்குமிடமேற் வெழுந்தருளி அவனை யனுக்ரஹிக்கவேணுமென்கிற குதூஹலமே மிக்கிருந்தது. அப்படியே அவனை யனுக்ரவிக்கப் பெற்றதுதான் அங்குப் பறைகொண்டவாறு.
”குகனொடுமைவரானேம் முன்பு, பின் குன்று சூழ்வான்
மகனொடு மறுவரானேம், எம்முழை யன் பின் வந்த
அகனமர்காதலைய! நின்னொடு மெழுவரானேம்
என்று. புகலருங்கானம்போக்கிப் புதல்வராற்பொலிந்தானுந்தை.”
பெருமாள்திருவுள்ளத்தால் இதுவே ஸமீஹிதஸித்தி யாதலால் இதனையே பறைகொண்டவாறாகக் கொள்வது பொருந்தும். “‘மன்னுடைய விபீடணற்காய் மதிளிலங்கைத் திசை நோக்கி மலர்கண் வைத்த என்னுடைய திருவரங்கர்” என்ற பெரியாழ்வார் திருமொழியும் இது தனக்குச் சாலவிணங்கும்.
“அணிபு துவை….கோதை சொன்ன “ என்றுள்ள ப்ரபந்த வினேஷணமும்
ஸ்ரீராமாயணத்திற்கு நன்கு இணங்கும்படி ய உபபாதி போம். ஆண்டாளுக்கும வான்
மீகி முனிவர்க்கும் அபலபிக்கவொண்ணாத வொரு ந்திகர்ஷம் கோதாஸ்தியில்-ः –
தச் ரவணதோ வ ராத்மாஸ் தே ஜரதோ ய வ ஸ மு : கவிஸார்வபெளம் கோதே! 9கிமத்புதமிதம் பதமீஸ்வதந்தேவக்ரா விந்தமகரந்தநிபா: ப்ரபந்தா: என்கிற லோகத்
திற்கு அடியேனுடைய வியாக்கியாளத்தின்ஒருபகுதி -நிலததில்தென்படும் புற்றானது பூமிதேவியின்காது-என்றபடி. ஆண்டாள் பூமிப்பிராட்டியின் அம்ஸமா தலால் பூமி என்றேகொள்ளத் தகுதியுடையவள். ஆகவே,புற்று இவளுடைய காதாக ஆயிற்று.புற்றில்நின்றும் தோன்றியவால்மீகி முனிவர்-ஆண்டாளுடையகாதில்நின்றும்தோன்றினவரென்றுசொல்வதற்கு உபபத்திஏற்பட்டுவிட்டது. இங்ஙனம் உமது காதில் நின்றும்தோன்நிய ஒருவர் கவியாசர் என்று உலகமெங்கும் புகழ் பெற்றிருப்பதும், அவருடைய பிரபந்தமாகிய ஸ்ரீராமாயணம் மதுரமென்று புகழ் பெற்றிருப்பதும் அபலபிக் வொண்ணாத விஷயங்களாகும் . உலகத்தில் ஒருவருடைய காதில்நின்றுஉண்டான வஸ்துவுக்கு இவ்வளவு அதிசயம் ஏற்படுவது அப்ரஸித்தம். உம்முடைய காதின் பெருமையோ லோகவிலக்ஷணமாயுள்ளது. காதினுடைய பெருமையே இதுவா னால் திருவாக்கின் பெருமையைப் பற்றிப் பேசத்தானாவதுண்டோ?உமது திரு வாயோ அரவிந்தம்; அரவிந்தத்தில் மகரந்தம் சாவிப்பது ஹஜமே யாதலால்
மகரந்தம் போன்ற திவ்ய ப்ரபந்தங்கள் உமது திருவாக்கில்கின்றும்தோன்ற
வென்பதில் வியப்புஒன்றுமில்லைகிடீர் ஸ்ரீராமாயணத்திற்குஏற்பட்டிருக்கும் பே.யதையைப் பற்றிச் சிறிது வியக்கவேண்டுமே யல்லது உம்முடைய திவ்யப்பந்தன்
ளுக்கு ஏற்பட்டிருக்கின்றபோக்யதையைப் பற்றிச் சிறிதும் வியக்க வேண்டிய
ஸக்தியில்லை என்பது உள்ளுறை இதனால்,வால்மீமி சோகிலத்தின் சொற்களில்
கிளிமொழிக்கோதையின் சொற்களே பாமமது ங்களென்பது பெறுவிக்கப்பட்
”கோதைதமிழ் ஐயைந்துமைந்தும்” என்று ஆறைந்து முப்பதென்றுகாட்டினாப்போலே ஆறு காண்டங்களிலும் ஐந்தைந்து கதைகளைச் சுவைமிக்கனவாகக் கொள்ளலாம். பாலகாண்டத்தில் 1. திருவவதாரம், 2 மாமுனி வேள்வியைக் காத்தல், 3. அஹஸ்யா சாப விமோசனம் .4.வில்வளைத்து வைதேஹி யை மணம்புணர்ந்தது. 5.பாசுராமபங்கம்.(ஆக 5) அயோத்யாகாண்டத்தில்,1.யுரஜபட்டாபிஷேகப்ரயத்னம். 2. கைகேசி சொல்லால் தொன்னகரம் துறந்தது. 3. குகனாடுங்கங்கைதன்னில் சீரணிந்த தோழமைகொண்டது. 4. பாதுகாபட்டாபிஷேகம்.அத்திரிபகவானாச்ரமத்தில் அந யரதேவிக்கும் மீதாதேவிக்கும் னம்வாதம்.(ஆக 5)இங்ஙனேகாண்டங்கள்தோறும் ஸாரமான கதைகனை யைந்தாக வகுத்
தாள்வது.-இப்பரிசு – திருப்பாவைக்கும் ஸ்ரீரரமாயணத்திற்கும் ஐக கண்ட்யமரக; உரைப்பார்-உபந்யளிக்க ல்லவர்கள்.
மால்வரைத் தோள்-பெரிய மலைபோன்றதாகச் சொல்லக்கூடிய பு வலமுடையவனென்றபடி, அன்னவன்பொளர்ய வீர் பராக்ரம புஷ்கலனே யாகக் கடவன் ” ய ய மஹா ! மாயீ
வெளரெய!….. அஸஷாயமா ! அ பாய ஸர ஹஸ் ! என்று போற்ற ன்றபெருமாளுக்
கும் மால்வரைத்தோளுடைமை கன்குபொருந்தும். [ஈரிரண்டு *ஜாதோளி ெவஜெவே !
பாடுங்கசக்க ய ரயா என்னப்பட்ட கண்ணபிரானுக்கு அதுர்வ- ஜத்வண்டேயல்லது இராமபிரானுக்குண்டோ? என்னவேண்டா; பம்பாளரஸ் தீரத்திலே வந்து சண்ட திருவடி “ஆயதாச் ருத்தாச் ச. பா வ : பரிவே ர மா ” என்று ப வசக வூயோ ம்-பண்ணிச்சொன்னதற்கு உபபத்தி காட்டும் ஸ்ரீகேரவிந்தராஜர்-என்று வியாக்கியானித்துள்ளது காண்க. பரமபக்தையானமந்தோதரிக்கு மிங்ஙனே காட்சியளித்ததுண்டே. செங்கண்] “சக்ஷ-ஷாதவ ளெளம்யேந பூதாள்மி
நியாஸதிலகத்தில் வெகு சாதுர்யமாகக் காட்டியருளினார்; எங்ஙனே என்னில்; அதுதன்னிலுள்ள சுலோகமிது –
“ ஆர்த்தேஷு ஆசுபலா ததந்யவிஷயேபி உச்சிந்த தேஹாந்தரா
வஹ்ந்யாதேரநபேக்ஷணாத் த ப்ருதாம் ஸத்யாதிவந் வ்யாபிநீ,
ஸ்ரீரங்கேச்வர! யாவதாத்ம நியத த்வத் பாரதந்த் யோசிதா த்வய்யேவ த்வதுபாயதீ அ தஸ்வோபாயபாவாஸ்து மே.”இதில் ப்ரபத்திக்கு இட்டிருக்கிற விசேஷணங்களத்தனையும் பக்திவேஷ வ்யாவர்த்தகங்கள். விவரித்துக் காட்டுகிறேன் காண்மின்; (ஆர்த்தேஷு ஆசுபலா]பக்தியானது விளம்பித்துப் பலனளிக்கும் ; ப்ரபத்தி அங்ஙனன்றிக்கே விரைவில் பலனளிக்கும் – ஆர்த்தப்ரபந்நர்திறத்தில். [ததந்யவிஷயேபி உச்சிந்த தேஹாந்தரா) பக்தியானது தோஹாந்தர ஸாம்பந்தத்தையறுத்துத் தருவதில் நியதியுடைய தன்று; ப்ரபத்தி நியமேந தேறாந்தர ஸம்பந்தத்தை யறுத்துத் தரும்.(வ ந்யாதே:அநபேக்ஷணாத் த ப்ருதாம் ஸத்யாதிவத் வ்யாபிநீ] பக்தியாகிற உபாயத்தின் அநுஷ்டானத்தில் அ கார்யம் முதலியவை அபேக்ஷிதமாயிருக்கையாலே அது அதிகருதாதிகாரமாயிருக்கும். ப்ரபத்தியில் அவ்வபேக்ஷையில்லாமையாலே ஸத்யம் சொல்வதற்குஎப்படி ஸர்வரும் அதிகாரிகளோ அப்படியே ப்ரபத்தியிலும் ஸர்வரும் அதிகாரிகள். இனி இதற்கு அடுத்த விசேஷணமே ப்ரக்ருத விஷயத்திற்கு உற்று நோக்கத்தக்கது. யாவதாத்ம நியத த்வத் பாரதந்த்ச்யோசிதா] பக்தி ஸ்வரூபவிருத்தம்.ப்ரபத்திஸ்வரூபா நுரூபம் என்கிறது . யாவதாத்மநியதமான அத்யந்த பாரதந்த்ர்யத்துக்கு ப்ரபத்தி உசிதமாயிருக்கு மென்றபோதே ரபத்திப்ரதிகோடியான பக்தியானது அந்த பாரதந்திரியத்திற்கு விருத்தமாயிருக்கு மென்னுமிடம் ஸ்பஷ்டமாகத் தெரிவிக்கப்பட்டதாயிற்றன்றோ; ஆகவே வேதாந்தகுருவின் திருவுள்ளமும் உபாயாந்தரம் ஸ்வரூப விருத்தமென்பதே யென்று தேறி நின்றது. பத்தி முதலாமவற்றில் பதியெனக்குக் கூடாமல் * என்ற செய்யுள் வேதாந்த வாசிரியருடையதாக இருந்தால் பக்தி முதலான உபாயாந்தரங்களில் பதி ஏன்கூட வில்லை? என்று கேட்கவேணும். “உபாயாந்தரங்களை ஸ்வரூப விருத்தமென்ன வொண்ணாது. இவை அகிஞ்சநோநந்யகத்தி என்றிருக்கும் அதிகாரிக்கு ஸ்வாதிகார விருத்தங்களென்ன ப்ராப்தம் “என்றும் ஸ்வாமி ரஹஸ்யத்தில் பேசியிருப்பதுண்டு.ந்யா திலகத்தி லருளிச்செய்தபடியே இவை அத்யந்த பாரதந்தர்ய ஸ்வரூபத்துக்குப் போராதென்கிறஸத்ஸம் ரதாய நிஷ்கர்ஷம் சால்வினிது.
நந்த்ரு நந்த ய பாவோயம் நப்ரயோஜந பூர்வக;, நீசோச்சயோஸ் ஸ்வபாவோயம்
ந திருநந்த யதாத்மக” என்று அஹிர்ப்புத்ந்யஸம்ஹிதையிலுள்ள வசனத்தை வேதாந்தவாசிரியரும் எடுத்துக் காட்டியுள்ளார். பெரியாரைக் கண்டால் சிறியார்,
தங்களுடைய சிறுமைக்கும் எதிர்த்தலையின் பெருமைக்கும் ப்ரதர் சகமாக நமஸ்காரம் செய்யவேணுமென்றது.வேறொரு ப்ரயோஜநமும் இதற்கில்லையென் றும் சொல்லிற்று. ஒருகால் தொழுதமாத்திரத்தினால் ஸ்வநிகர்ஷமும் பரோத்கர்ஷமும் ப்ரதர்சிதமாயிற்று. பலகால் தொழவேணுமென்கிற நிர்ப்பந்தத் திற்குப்ரஸக்தியில்லை.
ாஸ்த்ரங்களில், ஒற்றைக்கையால் நமஸ்கரிப்பது அபசாரம், ஒரு ரதக்ஷிணம் பண்ணுகை அபசாரம் என்று சொல்லியிருப்பதுபோல ஒருமுறை நமஸ்கரிப்பது அபசாரம் என்று சொல்லப்படவில்லை “ஏகேந் பாணிநா யஸ் து ப்ரணமேத் புருஷோத்தமம், ந்யாய்யஸ் தஸ்ய கரச்சேத” என்றும், “ஏகஹஸ்தப்ரணாமச்ச ஏகஞ்சாபி ப்ரதக்ஷிணம்” என்றும் இத்தகைய ப்ரமாணங்களையே ஸ்வாமி ஸ்தோத்ர பாஷ்யாதிகளில்உதாஹரிக்கக் காண்கிறோம்.எம்பெருமானார் ஸ்ரீ வைகுண்ட கத்யத்தில் “‘ ப்ரணம்ய த்தாயோத்தாய புந புநா ப்ரணம் “[தொழுது எழுந்தெழுந்து மீண்டும் மீண்டும் தொழுது என்றரு ளிச்செய்திருக்கும் விஷயத்தில் தெளிவுபிறப்பிக்கிறேன்; இங்கு “ப்ரணம்யஉத்தாயோத் தாய புந புந: ப்ரணம்ய ” என்றது ஓரிடத்திலேயே இருந்துகொண்டு பலமுறை நமஸ்கரிப்பதைச் சொல்லுவதன்று. அந்த வாக்யத்திற்கு முன்னே“தூராதேவ” என்றருளிச் செய்திருப்பதனால், எம்பெருமானைக் கிட்டுமளவும் காலால் நடந்து செல்லாமல் தெண்டனிட்டுக்கொண்டே வழியைக் கடந்து ஸ்ரீமந்நாராயணனை அணுகுவதாகவே அங்குப் பொருள்படும். இக்காலத்தில் இந்நிலத்தில் அஸக்ருத் பரணாமகர்த்தாக்கள் செய்வது போன்ற செயல் அங்கு விவக்ஷிதமன்று.தெண்டன் ஸமர்ப்பித்துக்கொண்டே போய் வழியைக்கடந்து எம்பெருமானைக் கிட்டின்பிறகு அங்குஒரேதடவை நமஸ்கரிப்பதென்னுமது அவ்விடத்திலேயே அடுத்தபடியாகச் சொல்லப் பட்டிருக்கிறது . யாசமாநா ரணம்ய ஆத்மாநம் பகவதே நிவேதயேத்”‘ என்று அந்த வாக்ய ஸமாப்தியுள்ளது காண்க. இங்ஙனல்லாமல் ஓரிடத்திலேயே நின்றுகொண்டு பலமுறைதொழுவதைத்தான் “உத்தாயோத்தாய புந புந* ப்ரணம்ய என்கிற வாக்கியம் சொல்லுகிறதென்று கொண்டாலும் குறையொன்றுமில்லை. “ந சாஸ்த்ரம் நைவ ச ரம?” என்கிற ரீதியிலேநூல்வரம்புக்கு அடங்காத அவ்வி பூதியிலேநிகழும கொண்டு என்ன ஸாதிக்கலாகும் ? இந்நிலத்தில் நம் பூருவா சாரியர்களின் அனுஷ்டானம் ஸக்ருத் ப்ரணாமமே யென்பதை அந்த எம்பெருமானார் தாமே ஸ்பஷ்டமாகக் காட்டியுள்ள படி பாரீர்.-நித்ய கரந்தத்தில் “ஆராதநாபிமுகோ பவேதி மூல மந்த்ரேண ப்ரார்த்த்ய மூலமந்த்ரேண தண்டவத் பரணம்ய உத்தாய ஸ்வாகதம் நிவேத்ய” என்றருளிச் செய்திருப்பது ர த்தமிறே. இதுகொண்டு ஸ்ரீ வைகுண்டகத்ய ஸ்ரீ ஸுக்தியின் பொருளை நாம் விவரித்தபடியே தெளிய ப்ராப்தம். இனி வேதாந்தவாசிரியருடைய திருவுள்ளத்தை உப்பாதிக்கிறேன்-ஸ்தோத்ர ரத்நத்தில் இருபத்தோராம் சலோகத்தில் “நமோ நம நமோ நம.என்று பலகால் அருளிச் செய்திருப்பதை ஸமந்வயப்படுத்தத் திருவுள்ளம் பற்றிய ஸ்வாமி அவ்விடத்து (ஸ்தோத்ர பாஷ்யத்தில், ” ரசம்ஸாயாம் ப்ரதி ஞாயாம் ப்ரலாபே தர்நேபி ச, பயே ச விஜயே சை பௌநயுந்யமலகருதி “‘ என்கிற வொரு ஸ்லோகத்தை யெடுத்துக் கடியுள்ளார். இந்த ஸ்லோகத்தின் பொருளை விவேகிகள் விமர்சிக்கவேண்டும். ஸ்தோத்ரம் செய்தல், ப்ரதிஞை செய்தல்,அழுதல், வெருட்டுதல், அச்சந்தோற்றச்சொல்லுதல் முதலிய ஸந்தர்ப்பங்களில் ஒரு சொல்லையே அடுத்தடுத்துச் சொல்லுவதானது ஒரு வகையான அலங்காரமாகும் என்பது இந்த ச்லோகத்தின் பொருள். உலகத்தில் இதை நாம் நன்றாகக் காண் கிறோம். ”பாம்பு பாம்பு பாம்பு” என்று பலமுறைசொன்னாலும் உள்ளது ஒரு பாம்பே யல்லதுபலபாம்புகள் வந்துவிடமாட்டா, * பல்லாண்டு பல்லாண்டு பல்லா யிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் * என்று நூாயிரந்தடவை சொன்னாலும் விஐயீபவ’ என்று ஒருகால் சொல்வதற்குஎன்னஅர்த்தமோ அந்த அர்த்தமே யன்றோதேறுவது. அப்படியே *நமோ நம: தொழுது தொழுது தொழுது * என்று எத்தனை பரியாயம் சொன்னாலும் அது சப்தாலங்கார மத்தனையென்று ஸ்வாமி நிர்ணயித்தருளினாராயிற்று.
திருவாழி திருச்சங்குகளினால் இலச்சினை பெறுகையாகிற சக்கராங்கனத்தையே ஸமாச்ரயணமென்று உலகம் கரஹித்திருக்கின்றது. உண்மையில் ஸமாசரயண
மென்பது அவ்வளவேயன்று.”ஆசாரயனை ஆச்ரயித்து அவன் மூலமாக எம்பெரு
மானை யடிபணிதல்” என்றும் பொருளதான ஸமாசரயணமென்கிற சொல்லானது
ஆசார்யனால் பெருவிக்கப்படுகிற பேறுகளுக்கெல்லாம் கமாக நிற்கின்றது.
ஆசார்யனால் கருதக்ருத்யனாகச் செய்விக்கப் பெறுகையே ஸமாச்ரயணமெனப்
படுகிறது. பகவதாச்ரயணத்தில் பர்யவளிதமாகிறது. இந்த ஸமாச்ரயணத்தையே
பஞ்ச ஸம்ஸ்காரமென்கிற சொல்லாலும் வழங்கி வருகிறார்கள். “தாப புண்ட்ரஸ் ததா
நாம மந்த்ரோ யாகச்ச பஞ்சம , அமீ பரமஸம்ஸ்காரா: பாரமைகாத்ய ஹேனவு ” என்று
யாவருமறிந்த ச்லோகமானது பஞ்சஸம்ஸ்காரங்கள் இன்னின்னவை யென்பதை விவரித்துக்காட்டுகின்றது .-யாகமாவது ” ய -தேவபூஜாயாம் “-என்கிற தாது விலிருந்து தேறுகிற யாகசப்தம் திருவாராதனத்தைச் சொல்லுகிறதாகையாலே பகவதாராதனத்திற்கு அதிகாரம் பெற்றுகை.
அநாதிகாலம் ஆஜ்ஞாதிலங்கனமடியாகவுண்டான பகவந்நிகரஹத்தாலே ஸமஸரித்துப் போந்த நமக்கு அவஸரப்ரதீ ையான பகவத்க்ருபையடியாக வுண்டான ஸதாசார்ய கடாக்ஷவிஷ காரத்தாலே வந்த த்வயோச்சாரணநூச் சாரணத்தாலே ப்ரபத்திய ஷ்டானம் பிறந்த பின்பு சரண்ய ப்ரஸாத ங்களில் இதுக்குமேல் ஒன்றில்லாமையாலே நிக்ரஹஹேதுக்களை யெல்லாம் க்ஷமித்துத் தீர்ந்தவடியவர் தம்மைத் திருத்திப் பணிகொள்ளவல்ல ஸர்வசக்ஷியான சரிய:பதி தன்பேறாகத் தானே ரக்ஷிக்குமென்று தேறி நிர்ப்பரனாயிரு வென்கை. இது *மாசு : என்கிற சரண்ய வாக்கியத்திலும் தீர்ந்தபொருள்.”மந்த்ரஸம்ஸ்காராஸமயத்தில் தவய மென்னும் மந்திரத்தை ஆசார்யன் சொல்ல அதை சிஷ்யன் பின்சொல்லுவதுண்டே இதுதான் பத்த் யனுஷ்டானமென்று சொன்னதோடு நில்லாமல் இதற்குமேல் வேறொன்று கிடையா தென்றும் வ்யக்தமாக அருளிச் செய்தாராயிற்று.-நம்முடைய குல டஸ்தரான எம்பெருமானார்க்கு ஸ்ரீரங்கநாதனிடமிருந்து விசேஷித்து வரமும் கிடைத்திருக்கிறது. அதையும் ஸ்வாமி தாமே நயாஸ்திலகத்தில் சீருத்வா வரம் தத பந்த மதாவலிப்தே” என்பதனால் நன்கருளிச் செய்துள்ளார். அந்த திவ்ய கரந்தத்தில் * அந்தோநந்தக்ரஹண* என்றும் *உக்த்யா தநஞ்ஜய * என்றுமுள்ள இரண்டு சலோக ரத்னங்கள் நிதியானவை அந்தோநந்த க்ர ணவசகோ யாதி ரங்கேச! யத்வத் பங்குர் நௌகாகுஹரநி தோ நீயதே நாவிகேந், புங்க்தே போகாந் அவிதிதந் பஸ் ஸேவகஸ் யார்ப்பகாதி: த்வத்ஸம்ப்ராப்தௌ ப்ரபவதி ததா தேசிகோ மே த்யாலு:” இந்த சலோகத்தில் ஜ்ஞாநஹீநனான ஒருவன் குருடனுடைய ஸ்தானத்திலும் ஆசார னான வொருவன் நொண்டியினுடைய ஸ்தானத்திலும் கொள்ளப்பட வேண்டியதாகத் தேறும். இப்படிப்பட்ட அதிகாரிகள் ஞானமனுட்டானமிவை நன்றாகவேயுடையனான் குருவையடைந்தே புருஷார்த்த த்திபெறவேண்டுமென்கை
இதற்குமேல் மூன்றாவதானவொரு தருஷ்டாந்தம் (மூன்றாவது பாதத்தில் வெகு அற்புதமாகக் காட்டப்பட்டிருக்கிறது. சுபுங்க்தே போகர்ந் அவிதிதந்ருபஸ் ஸேவகஸ்ய அர்ப்பகாதி: * என்கிற தருஷ்டாந்தம் மிக அற்புதமானது. ராஜஸேவை பண்ணின அமாத்யனுடைய ஸந்ததியார்கள் பலனையனுபவிக்கும்போது அந்த ராஜாவின் முகத்தைப்பார்த்திருக்கவேண்டியதில்லையன்றோ; அந்த ராஜாவைப் பற்றி ஒன்றுமே தெரிந்துகொண்டிருக்க வேண்டியதில்லையே. ‘தாம் அமாத்ய னுடைய ஸந்ததியே’ என்னுமிடத்தை மூதலிக்கவேண்டியதொன்று தவிரவேறொரு க்ருத்யமும் இல்லையன்றோ தத்ஸந்ததியார்க்கு; இதுதான் ‘அவிதிதந் ப:’ என்கிற விசேஷணத்தினால் தெரிவிக்கப்படுகிறது .இதுபோலவே,அமாத்ய ஸ்தாரீயரான எம்பெருமானாருடைய ஸந்ததியான நாமும். ‘நாம் எம்பெருமானாரைச் சேர்ந்தவர்கள்’ என்பதை மூதலிப்பது தவிர பேற்றின்ஸித்திக்காகப் பெருமாளுடைய திருமுகத் தையும் காணவேண்டிய ஆவச்ய தையில்லையென் று ஸ்பஷ்டமாகத் தெரிவித்ததா கிறது. நம்முடைய பூர்வாசார்யர்க ளின் சரிதைகளில் திருவிலச்சினைக்கு மேற்பட்ட வொரு அத்ருஷ்டார்த்தானுஷ்டனமென்பது எங்குங்காணக்கிடைக்காதது.
அத்யந்தம் வ்யவஹித காலவர்த்திகளுக்கும் பேறுதப்பா தென்னுமிடத்தை ஸ்ரீபாஷ்யத்தின்
மங்களச்லோகத்தில் “விந்தவிவித பூதவராத ரக்ஷை தீக்ஷே ”என்றவிடத்து ருத
ப்ரகாசிகையில் உபபாதித்திருப்பதை ஸேவித்த வேதாந்தவாசிரியர் தத்வடீகையில்
அதேயிடத்தில் விபுலமாக நிரூபித்து அதைத் திடப்படுத்தினார்.நியாஸதிலகத்தில்
*உக்த்யா தநஞ்ஜய இத்யாதி சலோகத்தாலே ஒரு அஸாதாரண விஷயமருளிச்
செய்கிறார். அதுதான் உயிரானது. ருத்வா வரம்’ தத பந்த மதாவலிப்தே”
என்கிற மூன்றாம்பாதம் ஜீவநாடியானது.இதில் ஸ்ரீரங்கநாதன் ஸ்ரீபாஷ்யகாரர்க்கு ஒரு வரம் கொடுத்ததாகச்சொல்லப்பட்டுள்ளது. அந்த வரம் இன்னவித் மென்பதை(நியாஸதிலக ஸம்ஸ்க்ருத ராவிட வ்யாக்கயாதாக்கள் நிஸ்ஸந்தேஹமாக எழுதி வைத்துள்ளார்கள். ஸம்ஸ்க்ருத வியாக்கியானம் பலகால் அச்சிடப்பட்டு உலகம் பரவியிருக்கின்றது. பகவத் ராமாநுஜ ஸம்பந்த ஸம்பந்த ஸம்பந்திகளுக் கெல்லாம் ஸ்ரீராமாநுஜ ஸம்பந்தமே ஹேதுவாக முக்தி யுண்டாகக் கடவதென்று வரமளித்ததாக வியாக்கியானங்கள் உண்மையை மறைத்திடாமல் வெளியிட்டுள்ளன.
பரமபத ஸோபாநத்தில்- அஜ்ஞாத யாத்ருச்சிக ஆநுஷங்கிக ராஸங்கிக
ஸாமாந்ய புத்திமூலஸு க்ருத விசேஷங்களை வியாஜ மாகக்கொண்டு விசேஷ கடாக்ஷம் பண்ணி” என்றருளிச்செய்த-இதில் “வ்யாஜமாகக்கொண்டு “ என்றதையும் ஸ்ஹியாமல் அவ்யாஜக்ருபையையுஅருளிச்செய்து போந்தார் .முநிவாஹ போகமென்று பெயரிட்டு ரஹஸ்யகரந்தமாகப் பணித்த அமலனாதிபிரான் வியாக்கி யானத்தின் உபக்ரம ஸ்ரீஸுக்தி இது காணீர்: – “காரண விசேஷம் இன்னதென்று அறுதியிட அரிதாயிருப்பதொரு பகவத்கடாக்ஷத்தாலே அயத்கலப்தமான ……’ என்று. இவ்விஷயத்தில் இவ்வளவேபோதும். ஒரு ஹேதுவில்லாமல் எம்பெரு மான் அருள் செய்யமாட்டானென்கிற வாதம் ஸ்ரீவைஷ்ணவ கோஷ்டிகளில் விலை செல்லுமதன்று. * நாஸௌ புருஷகாரேண நசாபி அந்யே ஹேதுநா, கேவலம் ஸ்வேச்சயைவாஹம் ப்ரக்ஷே கஞ்சித் கதாசந் * என்பதன்றோஎம்பெருமானுடைய திருமுகப்பாசுரம்.
இவ்விஷயத்தை விசேஷித்து “மே மதம்”என்கிறான். இதைப்பற்றி தாத்பர்ய சந்திரிகையில் ஸ்வாமி யருளிச் செய்திருப்பதுகெவினிது; இவ்வர்த்தம் வேதாந்தங்களுக்கு இணங்கின ஸித்தாந்தமாக இருந்தாலிருக்கட்டும்: இல்லாமற்போனால் போகட்டும்; தேர்த்தட்டிலே கண்ணபிரானாக வீற்றிருந்து சொல்லுகிற என்னுடைய ஸித்தாந்தம் இதுவே என்பதாக ஸ்ரீ க்ருஷ்ண ஹ்ருதயத்தை பிவரித்தருளினார் . இதனால், ஸகல சாஸ்த்ரங்களும் ஒரு தட்டாய் “ஜ்ஞாநீது ஆத்மைவ “என்கிற இவ்வசனம் ஒருதட்டாய் இதுவே மேன்மை பெற்றதென்று தேறிற்று. இளையபெருமாளை நோக்கி “த்விதீயம் மேந்தராத்மாநம் த்வாம் “ என்று பெருமாளருளிச் செய்ததைக் கொண்டும் ஆசார்யர்கள் ரஸமயமான அர்த்தத்தை வெளியிட்டுள்ளார்கள்-ஸ்தோத்ர ரத்நத்தில் “மஹாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய க்ஷணேபி தே யத்விர ஹோதி துஸ்ஸஹ: ” என்ற திவ்ய ஸ்ரீ ஸூக்திரத்கத்தில் இவ்வர்த்தவிசேஷங்க ளல்லாம் ஜ்வலிக்கும். பகவான் தன்னிடத்தில் ஸாக்ஷாத் பக்தி செய்யும் அன்பர்களிற் காட்டிலும் “அடியாரடியார் தம்மடியாரடியார் தமக்கடியாரடியார் தம் அடியாரடியோங்களே” என்றும் “த்வத் ப்ருத்ய ப்ருத்ய பரிசாரக ப்ருத்ய ப்ருத்ய ப்ருத்யஸ்ய ப்ருத்ய “ என்றும் இருப்பார் திறத்திலே அளவுகடந்த வாத்ஸல்ய முடையவன் என்றால் இதில் யாருக்காவது விப்ரதிபத்தியுண்டோ? விவாதமுண்டோ? இதுபோலவே, பகவான் தன்னிடத்தில் தீமை செய்யுமவர்களிற் காட்டிலும் தன்னடியாரடியாரடியார் திறத்தில் தீமை செய்யுமவர்களிடத்தில் அதிகமான நிக்ரஹருசியை யுடையவன் என்றால் இதில் பொருந்தாமை யொன்றுமில்லை.
யதிராஜ ஸப்ததியில் “அநுகல்பபூத முரபித்பதம் ஸதாம்…. சரணம் பதீந்த்ர சரணம் வருணீமஹே “ என்கிறார். ஸத்துக்கள் வணங்குவதற்கு எம்பெருமா னுடைய திருவடிகள் கௌண பக்ஷமேயல்லது முக்ய பக்ஷமல்ல வென்றும், ஸ்ரீ பாஷ்ய காந்தடைய திருவடிகளே முக்ய பக்ஷமென்றும் இதனால் நிஸ்ஸந்தேஹமாய் ஸுஸ்பஷ்ட தமாய்க் கிடைக்கிறது.
ஸ்ரீராமாநுஜர் (ராம: கமல பத்ராக்ஷ) என்கிற உபப்ரும்மணவசனத்தைத் துணைகொண்டபடியினால்தான் (கம்பீராம்பஸ்ஸமுத்பூத) இத்யாதியர்த்தம் எழுதினார்-ஸ்ரீ ராமாநுஜர் அருளிச் செய்திருக்கிற கப்யாஸச்ருதி விவரணமான ஸூக்தியில்
முதல், இடை, கடை ஆகிய மூன்றிடங்களிலும் விஷயமிருக்கிறது. (கம்பீராம்:) என்றாரம்பித்து (விகளித) வரையில் முதல் விஷயம். (புண்டரீக) என்னாமல்(புண்டரீகதள ) என்றது இடை விஷயம். அதற்கு மேலும் (அமல, ஆயத) என்றதுகடையான விஷயம்.–(ராம :கமலபத்ராக்ஷ)என்கிற உபப்ரும்ஹண வசனத்தை உதவி கொண்டிருந்தால் “புண்டரீகதள” என்றுஇவ்வளவே யெழுதியிருக்கலாம். வேறொன்றும் எழுதியிருக்க முடியாது.-நீரார் கமலம்போல் செங்கண்மால்* என்று திருமடலில் திருமங் த்யாழ்வாரருளிச் செயல்.இதில் நீரார்என்ற கமல விசேஷணத்திற்குச் சேரவும், திருவிருத்தத்தில் “அழறலர்தாமரைக் கண்ணன் ‘ என்ற சந்தைக்குச் சேரவும் (கம்பீராம்பஸ்ஸமுத்பூத) என்றது. திருவிருத்தத்தில் ” எம்பிரான தடங்கண்கள்-மென்கால் கமலத்தடம்போல் பொலிந்தன” என்ற சந்தைக்குச் சேர (ஸும்ருஷ்டநாள) என்றது செந்தண்கமலக்கண்-நாயிறு அந்தமில்லாக் கதிர்பரப்பி அலர்ந்த தொக்குமம்மானே என்கிற திருவாய்மொழிச் சந்தைக்குச் சேர (ரவிகரவிகஸித) என்றது.
நம்மாழ்வாரை வகுளாபரண: என்றும் வகுளபூஷண: என்றும் வகுளதர; என்றும் வழங்கி வருகிறோம். ஆழ்வார் தாமும் தமது திருவாக்காலே -மகிழ்மாலை மார்பினன்– என்றே யருளிச்செய்துவைத்தார். இதற்கெல்லாஞ்சேர ஆழ்வாரை வகுளாபிராமராகச் சொல்லவன்றோ அடுப்பது; ” ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளோஜ்ஜ்வலஸ்ய ” என்றால் பொருத்தமாயிராதா?அங்ஙனம் சொல்லாமல் ஆழ்வாருடைய திருவடிகள்மகிழம்லர்களால் அழகு பெற்றிருக்குமென்று சொல்லுவதில் என்ன விசேஷம்?-அலங்கார சாஸ்த்ரபத்ததியில் உனக்குப் பரிசயமில்லையென்று நினைக்கிறேன். ஸுதர்சந்சதகமென்கிற திவ்யகரந்தம் ஸேவித்திருந்தாயாகில், இங்ஙனம் கேட்கமாட்டாய். அதில்ஸுதர்சந் புருஷனுக்குச் சொல்லவேண்டிய பெருமைகளையெல்லாம் அவனுடைய ஏகதேசங்களான வாலை, அரம், நாபி, அக்ஷம்,நேமி என்கிற அவயவங்களிலே யேறிட்டுவருணித்திருக்கு ழகு காண வேணும்.எம்பெருமான் திருத்துழாயை யணிந்து கொள்வதுஒரு . அவய்வத்திலன்றே, தோளிணை மலும் நன்மார்பின் மேலும் சுடர்முடிமேலும்,தாளிணைமேலும் புனைந்த தண்ணந்துழாயுடையம்மான்* என்று ஆழ்வார் அருளிச்செய்தபடியே திருத்தோளிலும். ‘திருமார்பிலும் திருமுடியிலும் அணிந்துகொள்வதுபோலத்திருவடியிலும் அணிந்துகொள்ளுகிறன். அப்படியே ஆழ்வாரும். முக்கியமான வார்த்தை-*தன்மன்னு நீ கழல் மேல்தண்டுழாய்நமக்கன்றிகல்கான் என்றபடி அடியில் சாத்துமதுதான் அடியார்களுக்கு உத்தேச்யம்.
மாதாபிதாயுவதய என்கிற சுலோகம் அவதரித்திருக்கிறபடியை உற்று நோக்க வேணும். இதில் சடகோப:, சடரிபு:, சடாரி , பராங்கு:, காரிஸூ : இத்யாதி திருநாமங்
களில் எதுவும் கிடையாது. ” ஆத்யஸய ந: குலபதே ” என்றிருக்கிறது . எம்பெருமானையே ஆத்ய குலபதியாக விவத்தருளினாரென்றும் சொல்லிவிடலாம். ஆனால்
அங்ஙனம் சொல்லவொண்ணாதபடி ” வகுளாபிராமம்” என்றொரு அத்புதமான
ஸ்ரீ ஸ க்தியைப் புகுத்தியிருக்கிறார். திருத்துழாய் சாத்தின தெய்வமன்று,மகிழ்மாலை
யணிந்த தெய்வமே எனக்கு உத்தேசயமென்று காட்டினாராயிற்று. இந்த விசேஷணம் திருவடியிணைக்கு இட்டிருக்கிற படியாலே அந்தத் திருவடியை எம்பெருமானுடைய
திருவடியாகவே திருவுள்ளம்பற்றி அப்பெருமான் வேறு, ஆழ்வார் வேறு என்று நினைக்க வொண்ணாபடி எம்பெருமானோடே ஏகீக்ருத்ய அருளிச் செய்தபடி. எம்பெருமான்
திருவடி நிலைக்கு ஸ்ரீ சடகோபனென்றே அநாதிகாலம் தொடங்கி வ்யபதேசமாதலால் இந்த அவயவம் அவயவியோடே சேர்ந்திருக்க வேணுமென்று திருவுள்ளம் பற்றியே
ஆழ்வார்துதியை எம்பெருமானுடைய துதியோடே அவ்யவஹிதமாக்கினபடி.-பராசரமஹர்ஷியைத் துதித்துவிட்டுப் பிறகு நம்மாழ்வாரைக் துதித்திருக்கின் ார. நாதமுனிகளுக்கும் நம்மாழ்வார்க்குமிடையில் பராசர மஹர்ஷியைப் புகவிட்டது எதனாலே? உபக்ரமத்திலேயே நம்மாழ்வாரைத் துதித்து, பிறகு நாதமுனி களைத்துதித்து, அதன் பிறகு பராசரரைத் துதித்திருக்கலாம். இந்த முறைகளை விட்டு வே ொரு முறையில் ஸ்துதியை அமைத்திருப்பது பற்றி த்ருப்திகரமான ஸமாதானம்
-இது மிகவும் தருப்திகரமான ஸமாதானம். ஆளவந்தார் திருவுள்ளத் திற்கு மிக விணங்கின ஸமாதானம். அடியேனுக்குத் தோன்றுவதொன்றையும் விஜ்ஞா பிக்கிறேன். தவறு இருந்தால் சிக்ஷிக்கவேணும். ” ஆத்யஸ்ய ந: குலபதே:” என்பதனால்
ப்ரபந்நஜந கூடஸ்தரான நம்மாழ்வாரை விவக்ஷிப்பதாக வன்றோ சொல்லப்படுகிறது. அப்படியல்லாமல், நம்முடைய குருபரம்பரைக்கு முதல்வன் எம்பெருமானே யாதலாலும் லக்ஷ்மீநாதஸமாரம்பாம்.. ந்தே குருபரம்பராம்” என்று அநுஸந்தித்து வருதலாலும், ” ஆபகவத்க : ப்ரதிதாம் அநகாம் ஆசார்யஸந்ததிம் வந்தே” என்கிற ஸ்ரீ ஸூக்தியை யநுஸரித்தும் எம்பெருமானையே ஆத்ய குலபதியாகக் கொள்வதில் குறை யொன்றுமில்லை யன்றோ, ஏவஞ்ச, ஆத்யஸ்ய ந: குலபதே ‘ என்பதற்கு ஸர்வேச்வர
னுடைய ன்றே பொருள் கூறிவிட்டு, அந்த ஸர்வே வரனுடைய வகுளாபிராமமான திருவடியிணை- நம்மாழ்வார் என்று கொள்ளலாமன்றோ இதில் ஏதேனும் அநுபபத்தி யுண்டோ? (விடை.) ஒரு அநுப்பத்தியுமில்லை. தாராளமாகக்கொள்ளலாம். ஆனால்
ஆளவந்தார். ஆத்ய குலபதியாக நம்மாழ்வாரைத் தவிர்த்து எம்பெருமானை விவக்ஷித்
திருப்பரென்று தோன்றவில்லை.
இவையுமொருபத்தும்வல்லார், ஊற்றின் கண் நுண் மணல் போல் உருகா நிற்பர் நீராயே”என்கிறாரே, நிகமனப் பாசுரந்தோறும் பலனுரைத்து வருகிற அடைவிலே இங்கும் ஒரு பலன் சொல்லவேண்டியிருக்க, ஒரு பலனும் சொல்லாமல் ‘இப்பதிதழ் வல்லவர்கள்.நீராயுருகுவர்கள் ‘ என்றால் இதுவொரு பலச்ருதியாகுமோ? ஆழ்வார் ஸாதிக்கிறபலன்களுக்குள்ளே இதுதான் உயர்ந்தபலன்- குயில் கூவினாலும்காக்கை கத்தினாலும் வாசியறியாதே நிற்கும் மஹிஷாதிகளைப்போலே உக்திகளிலும் ஸூக்திகளிலும் ஸ்ரீ ஸ- க்திகளிலும் திவ்ய ஸ்ரீ ஸ- க்திகளிலும் ஒரு வாசியுமறியாதே கல்நெஞ்சராயிருப்பார் பலரில்லையா? உருக்கமுண்டாவது ஸாமான்யமா? அருந்தவப்பயனல்லவா? வரப்ரஸாதங்கொண்டு பெறவேண்டிய பேறல்லவா இது. குணவித்தர்கள் என்னும்படியானவர்கள் “மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷ கச்சித்” என்னும்படியாகவன்றோ தேறுவர்கள். “நீராயுருகாநிற்பர்” என்கையாலே இதுவும் ப்ராப்ய பலன்களிலே ஒன்று (அல்லது) சிறந்தது என்று காட்டப்பட்டதாயிற்று. இக்காலத்தில் ஒருவரிருவர்.
விவாஹங்களில் நடக்கும் சீர்பாடலில் “சீர்பாடி களிமண்பாடப்போமே” என்றுநீட்டுகிறார்களே: இது இன்னதென்று புரியவில்லையே. கல்யாணத்தில் களிமண்ணுக்கு என்ன ப்ரஸக்தி ? களிமண்ணுமில்லை, களிமண் பாடுவதுமில்லை;”சீர்பாடிக் களிமின் களிப்போமே” என்பதுதான் உள்ளது. சீர்பாடல்பாடி நீங்கள்ஸந்தோஷியுங்கள், நாங்களும் ஸந்தோஷிக்கக்கடவோம் என்பது பொருள்.
—————-
184-பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஸ்ரீமந் நாதமுனிகள் வட இந்தியாவிற்கெழுந்தருளி கண்பிரானவதரித்தவட மதுரைக்கருகிலுள்ள கோவர்த்தனத்தில் ஒரு ஆசா ர்ய பீடத்தை ஸ்தாபனம் செய்தார். கோவர்த்தன மலையில் இன்றும் அவர் பெயர் கொண்ட ஒரு குகையிருக்கிறது. அதில் அவர் வெகு காலம் யோகத்தில் ஆழ்ந்திருந்ததாகப் பெரியோர் கூறுவர்.154 வருடங்களுக்கு முன்பு காஞ்சீ மண்டலத்தைச் சேர்ந்த தென்னேரி அகரம் என்றகிராமத்தில் வா தூல வம்சத்தில் ரங்காச்சார்யார் என்ற ஒரு மஹான் அவதரித்தார். இவர் பிற்காலத்தில் தன்பாண்டித்தியத்தின் மஹிமையால் கோவர்த்தன பீடத்தில் ஆசார்ய ஸ்தானத்தை அலங்கரிக்கும் கெளரவம் பெற்றார். இவர் உபய வேதாந்த கிரந்தங்களில் உயர்ந்த ஞானம் படைத்தவர். விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை உத்தரபிரதேசத்தில் பரவச்செய்த பெருமை பெரும்பாலும் இவரைச் சார்ந்தது. எல்லாவற்றிற்கும் சிகரம் போல், பிருந்தாவனத்தில் கோதை ரங்கமன்னார் சன்னிதியை நிர்மாணித்து அழியாப்புகழ்பெற்றபரம பாகவதர் இவர்.ஆண்டாள் எம்பெருமானின் விச்லேஷம் பொறுக்க மாட்டாமல் மிகவும் துவண்டுபேசும் பாசுரமொன்றில் திருமாலிருஞ்சோலை நம்பியை நோக்கி நான் நூறு தடாவில் வெண்ணெய்வாய்நேர்ந்து பாராவி வைத்தேன் நூறு தடா நிறைந்த அக்கார வடிசில் சொன்னேன் ” என்றுவாசிகமாகச் சொல்லி,அவ்வெம்பெருமான் இவற்றைத் திருவுள்ளம் பற்றுவானா? என்று ஏங்குகிறாள். குடிக்கொடுத்த நாச்சியாருக்குப் பலபல ஆண்டுகளுக்குப் பின் அவதரித்த எம்பெருமானார் திருமாலிருஞ்சோலை மலைக்கெழுந்தருளி நூறு தடா நிறைந்த வெண்ணெயும், நூறு தடாநிறைந்த அக்காரவடிசிலும் அழகருக்குஅமுது செய்வித்தருளி, பிறகு ஸ்ரீ வில்லிபுத்தூருக்கும் எழுந்தருளி ஆண்டாளை வணங்கிநிற்க, கோதையும் இவர் செய்த மிகப் பெரிய செயலுக்குமனமுகந்து”நம் அண்ணரே” என்று சொல்லி அர்ச்சாவதார ஸமாதியைக் கடந்து தழுவிக்கொண்டாள்என்பர் பெரியோர். ஸ்வாமி எம்பெருமானாருக்கு ஆண்டாளின் இம்மனோரதத்தைப் பூர்த்தி செய்வித்த பாக்யம் கிட்டினாப்போல் அவருக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின் வாழ்ந்த கோவர்த்தனம் ரங்காச்சார்ய ஸ்வாமிக்கும் ஆண்டாளின் மற்றோர் மனோரதத்தைப்பூர்த்தி செய்விக்கும் பெருமை< யும் மஹா பாக்கியமும் வாய்த்தது.“ பட்டி மேய்ந்தோர்” திருமொழியில் கோதாதேவி “விருந்தாவனத்தே கண்டோமே “ என்று மானஸிகமாகக் கண்ணபிரானைச் சேவித்ததை சொல்லு கிறாள்.ளௌலப்ய நிதியான கோபாலனை அவன் அவதரித்த ஸமயத்தில் நேரில் கண்டு அனுபவிக்க முடியவில்லை. என்றாலும் அவன் இந்நிலவுலகில் நடந்த பூமியான விருந்தா வனத்திற்காவது சென்றுஅந்தப் புனித மணலை ஸ்பர்சிக்கலாமென்றால் அதுவும் ஆண்டாள் காலத்தில் ஸாதயமாக வில்லை போலும்! ஸ்ரீவில்லிபுத்தூர் எங்கே?விருந்தாவனம் எங்கே காடு மலைகளைத் தாண்டிப்பல நூறு காதங்களுக்கு அப்பாலுள்ள விருந்தாவனத்திற்கு நடந்து செல்வது ஒரு இளம் பெண்ணுக்குச் சுலபமா? மனத்தினாலும் வாக்கினாலும் பாரிப்பு மட்டுமே வெளிவந்தது.தர்க்க நிபுணர் கோவர்த்தனம் ரங்காசார்ய ஸ்வாமி உத்தராதி ஜைனர்களை வாதத்தில் வென்று,ஸ்ரீ வைஷ்ணவர்களாக்கி ஸமாச்ரயணம் செய்து, அவர்களில் தனிகர்களின் பேருதவியால் யமுனைக் கரையில், “இது காஞ்சி வரதன் ஸன்இங்குகோயில் கொண்டிருக்கும் கோபால கிருஷ்ணன் கோவர்த்தன ரங்காசார்ய ஸ்வாமியின் திருவாராதனத்தில் இருந்த எம்பெருமான். இங்குபூமட்டத்திற்குக் கீழ் கட்டப்பட்டதும் எக்காலத்திலும் ஒரே சீதோஷ்ணநிலையோடு கூடினதுமான ஒரு மண்டபம் இருக்கிறது. அதன் சுவர்களை ஆதி ரங்காச்சார்ய ஸ்வாமி, அவருக்கு முன்னிருந்தவர்களில் சிலருடையவும், அடுத்தாப் போல் வந்த இரண்டு பீடாதிபதி
களுடையவும் உருவப்படங்கள் அலங்கரிக்கின்றன. -து முடிந்தது. டில்லி, ஜெய பூர்,மதறஸ்,பம்பாய் முதலிய மஹாநகரங்களிலிருந்து உத்ஸ்வத்தைகெளரவிக்க வந்த மஹான்களில் ஸ்ரீ அப்பன் வெங்கடாச்சார்ஸ்வாமி திருமாளிகை ஸ்ரீராமானுஜா
சாரியர் ஸ்வாமியின் பெயர் குறிப்பிடத்தக்கது.-இந்த சந்தர்ப்பத்தை யொட்டி, உத்தர தேசத்தில் பல பல வருடங்களா நடத்தப்பட்டு வரும் ஸ்ரீ வைஷ்ண ஸம்மேளனம் நான்கு நாட்கள் நடந்தன.ஸ்ரீஅப்பன் வெங்கடாச்சாரியர் ஸ்வாமி திருமாளிகை ஸ்ரீ ராமானுஜாசார்யர் ஸ்வாமிஸ்ம்மேளனத்துக்குத் தலைமைவஹித்து ஸம்ஸ்கிருதத்தில் ஒரு அழகான உரை நிகழ்த்தினார். பிரதிநிதிகள் ராமானுஜ தர்சனத்தை உத்தர பாரதத்தில் மேன்மேலுங்பிரசாரம் செய்யவேண்டியதின் அவச்யத்தை வற்புறுத்தினர்.
————
———————————————
193-194-நியாய பரிசுத்தியில் தேசிகன் எம்பெருமானாரைப் பற்றிப் பணித்த மங்கள ச்லோகத்தில் [பத்யுஸ் ஸம்யமிநாம் ரணம்ய சரணெள தத்பாதகோடீர
யோஸ் ஸம்பந் தேந ஸமித்யமாநவி வாந்தந்யாம் ததா யாந்குரூந்] என்றுள்ளது.
இதன் பொருளாவது, ஸம்யமிநாம் பத்யு : சரணௌ ப்ரணம்ய – தத்பாத கோ ரயோ ஸம்பந்தேந- அந்த எம்பெருமானாருடைய திருவடி யென்ன திருமுடியென்ன-இவற்றினுடைய ஸம்பந்தத்தினால், ஸமித்யமாநவி வாந்-பெருமை பெற்றவர்களாய், தந்யாந் -கருதார்த்தர்களான,குரூந்ப்ரணம்ய – ஆசாரியர்களை வணங்கியும் … யாயபரிசுத்தி யென்கிற இந்த க்ரந்தம் செய்யப்படுகிறது என்கை. இதில்-“தத்பாத கோடீரயோஸ் ஸம்பந்தே ” என்றது உயிரான வார்த்தை. கோடீர மென்றுதிருமுடிக்குப் பெயர்.-பிற்பட்டவர்களுக்குத் திருவடி ஸம்பந்தம் போல முற்பட்டவர்களுக்குத் திரு முடி ஸம்பந்தம் உத்தாரகமென்று இதனால்நன்கு காட்டப் பட்டதாயிற்று. இந்த ச்லோகமானது ” அர்வாஞ்சோ யத்பதஸரளிஜ த்வந்த்வ மாச்ரித்ய” என்கிற ஆழ்வான் தனியனை யடியொற்றியே தேசிகன் பணித்தது.
அவனடியாரடியே கூடுமிது வல்லால்” இத்யாதிகளாலே பாகவத சேஷத்வத்தின் அதிசயத்தைப் பேசுவதெல்லாம் பகவச் சேஷத்வத்தின் உறைப்பையே பேசின படியாகும்.-திருமந்திரத்தில். அகங்காரமும் மமகாரமும் நீங்கப் பெற்று பகவச் சேஷத்வம் உள்ளபடி ப்ரகாசிக்கிற நமஸ்ஸிலே அந்த பகவச் சேஷத்வத்தின் எல்லை நிலமான பாகவத
சேஷத்வம் அநுஸந்திக்கப்படவேணுமென்பது சாஸ்த்ரார்த்தம்; திருமந்திரத்திற்கு
முக்கியமான பொருள் பாகவதசேஷத்வமேயென்பதை * மாறன் பணித்த தமிழ் மறைக்கு
ஆறங்கங்கூற அவதரித்த மங்கையர்கோன் தமது திருமொழியில்*மற்றெல்லாம் பேசிலும்
நின் திருவெட்டெழுத்துங் கற்று நான்- உற்றது முன்னடியார்க்கடிமை என்ற பாசுரத்தினால் தெளியவைத்தார்.)கீழ் மூன்றாம் பத்தில் ஏழாவது பதிகமான *பயிலுஞ்சுடரொளியென்னுந்
திருவாய்மொழியிலும் இவ்வர்த்தம் வெளியிடப் பட்டுள்ளது அதற்காட்டில் இத்திருவாய்மொழிக்குவாசி என்னென்னில், ஆசார்ய ஹ்ருதயத்தில் (211) * மூன்றில்
சுருக்கிய வைந்தையும் என்று தொடங்கியுள்ள சூர்ணையில் * பயிலுஞ் சுடரொளி
ஸ்வஸ்வரூபப்ரதிபாதநபர மென்றும், நெடு மாற்கடிமை புருஷார்த்த ஸ்வரூபப்ரதி *
பாதா பரமென்றும் வகையிட்டுக் காட்டப்பட்டது. அங்கு வியாக்கியானத்தில் மணவாள
மாமுனிகள் ” பகவச் சேஷத்வத்திலும் தகாஷ்டையான பாகவத சேஷத்வமே
ஆத்மாவுக்கு உத்தேச்ய மென்று ப்ரதிபாதித்த பயிலுஞ்சுடரொளியும்……..பாகவத
கைங்கர்ய பர்யந்தமாக வேணுமென்று மநோரதித்த * நெடுமாற்கடிமையும
என்றருளிச்செய்திருப்பது காண்க. இதனால், பாகவத சேஷத்வம் ஆத்மஸ்வரூபம்
என்பதிலே * பயிலுஞ் சுடரொளிக்கு நோக்கு; பாகவத கைங்கர்யமே புருஷார்த்தம்
என்பதிலே நோக்கு இத்திருவாய் மொழிக்கு என்றதாயிற்று
“நாதோபஜ்ஞம் ப்ரவ்ருத்தம். .இதமகிலதம கர்சநம் தர்சநம் ந என்றுவேதாந்தவாசிரியர் பணித்தபடி ஸ்ரீமந் நாதமுனிகளையே தலைவராகக் கொண்டது நம்தரிசனம். அவர் திருவவதரித்து மஹா ப்ரயாளங்கள் கொள்ளவில்லையென்றால் பின்னை ஆளவந்தார் எம்பெருமானார் போல்வருடைய திருவவதாரமும் அவ்வளவு பயன்பட்டிராதென்றே சொல்ல வேண்டிற்றாகும்-அருள்பெற்ற நாதமுனி ‘.-நாதமுனிகளின் திரு க்ஷத்திரம் ஆனியனுடம். ஆளவந்தாரின் திருநக்ஷத்திரம் ஆடியுத்தராடம். 74 மதகுகளையுடைய வீராணத்தேரி இத்தலத்தின் அருகிலேயே.-ளட கரந்தங்கள். ஸ்தோத்ரரத்மும் கீதார்த்த ஸங்க்ரஹமும் அமுதிலுமினியவை. ஸ்நோத்ரரத்தினத்திற்குத் தனியனிட்டவர்கள்
“ஸ்வா தயந்நிஹ ஸர்வேஷாம் த்ரய்யந்தார்த்தம் ஸு துர்ரஹம். ஸ்தோத்தரயா
மாஸ “ என்றது மிகவும் ஆழ்ந்து பேசியது. இதில் த்ரய்யந்தார்த் சப்தத்தாலே உபய வேதாந்தமும் ஸங்க்ரு தம். ஸம்ஸ்க்ருத வேதாந்தார்த்தம் சிறுபான்மையும், த்ராவிடவேதா கார்த்தம்பெரும்பான்மையும் அமையப் பெற்றது ஸ்தோத்ரரத்னம்.-ஆழ்வார்கள் கீதையைப்பற்றிதிவ்ய ப்ரபந்தங்களில் பலவிடங்களில் ப்ரசம்வித்துள்
66 ளார்கள். ஆசார்ய ஹ்ருதயத்தில் பகவன் ஞானவிதி பணிவகையென்று இவரங்கி காரத்தாலே அதுக்கு (கீகைக்கு) உத்தர்ஷம்’‘ என்கிற சூர்ணையின் மணவாள மாமுனிகள் வியாக்கியானம்: ஸேவிக்கத் தக்கது. ” அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவரறிய, நெறியெல்லா மெடுத்துரைத்த நிறைஞானத் தொருமூர்த்தி” என்கிற திருவாய்மொழிப் பாசுரத்தை *ஆழ்வார்கள் புகழ்ந்த கண்ணனில் (648) நாமெடுத்துக் காட்டியுமிருக்கிறோம். திருமழிசைப்பிரான் நான்முகன் திருவந்தாதியில் ஆயன் துவரைக்கோனாய் நின்றமாயன் அன்றோதிய வாக்கு” என்று ஸ்பஷ்டமாகவேகீதையைப் பேயுெள்ளார்.
நம்மிடத்தில் சில ஆத்மகுணங்கள் இருந்தாலுங்கூட அவற்றை அஸத் கல்பமாக நினைத்து ‘அமர்யாத க்ஷத்ர சலமதிரஸூயாப்ரஸவபூ * ஈவிலாத தீவினைக் ளெத்தனை செய்தனன்கொல்**பாவமே செய்து பாவியானேன் என்று அநுஸந் திக்க வேண்டியதானாப்போலே பகவத்கருபைக்கு உறுப்பாக ஸ்வல்ப ஹேதுக்கள் இருந்தாலுங்கூட அவற்றை நாம் அளத் கல்பமாகவே நினைக்கவும் ‘இவையும் இல்லாமலே அவன் அருள்செய்ய வல்லவன்’ என்று அநுஸந்திக்கவும் ப்ராப்த மாகையாலே நிர்ஹேதுக மென்கிற ஹித்தாந்தமே நிலைநிற்கும்.-*நெறி காட்டி நீக்குதியோ? என்று நம்மாழ்வார் அருளிச்செய்தபடி, தன்னைவிட்டு நீக்குவதற்காக (நம்மை நன்கு சோதிப்பதற்காக) அவன் காட்டின வழிகளிலேநாம் கிடந்து துவளலாகாது; காம்பறத்தலைசிரைத்து உன் கடைத்தலையிருந்து வாழுஞ் சோம்பரை யுகத்திபோலும் சூழ்புனலரங்கத்தானே * என்று தொண்டரடிப்பொடி யாழ்வரருளிச் செய்தபடி திண்ணிதான அத்யவஸாயங் கொண்டிருப்பதே உற்றது- என்கிற உறுதி தென்னாசார்யர்களின் கருவிலேயே
நன்கு ஊறிக்கிடப்பதாகும்.-பிறர்களுக்கு அரிய வித்தகன்+ என்ற விடத்து ஈட்டில்-“நம்முடையவர்கள் எம்பெருமானையே உபாயமாகப் பற்றநிற்க, அல்லாதார் அசேத க்ரியாகலாபங்களைப் பற்றுகிறாப்போ லேயிறே துர்யோதனன் நிலை’‘ என்றுள்ளது. இதனால் நம்முடையவர்கள்படியும் அல்லாதார்படியும் அறியத்தக்கது.மேலே அந்த பதிகத்திற்கு அடுத்த பதிகத்திலே( -4-7) என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்ற விடத்து ஈட்டில் ‘தேவரீர் கருபைக்குத் தண்ணீர்த் துரும்பாக ஏதேனும் ப்ரதக்ஷிண நமஸ்காராதிகள் பண்ணிற்றுண்டோவென்று நம்பிள்ளை யருளிச்செய்யும்படி” என்றுள்ளது.-இப்படி யருளிச் செய்திருக்கிற நம்பிள்ளை பகவத் நிதியில் ப்ரதக்ஷிண நமஸ்காராதிகள் செய்திருக்கமாட்டாரா? செய்திலர் என்றால் இதை யாரேனும் நம்ப முடியுமா? அது சாஸ்த்ரார்த்தந்தானாகுமா? எதற்காக இங்ஙனே நம்பிள்ளை யருளிச்செய்தார்? என்று விவேகிகள் விமர்சிக்க வேண்டு மன்றோ? விமர்சித்தால் அதிகப்ரவ்ருத்தி அவத்யமென்றதாகத் தேறும். இந்த ஸ்ரீஸுக்திக்கு இவ்வளவேதான் கருத்தாகக் கொள்ளத்தக்கது.-சிறிய திருமடலில் ” செங்குறிஞ்சித் தாரார் நறுமாலைச் சாத்தற்குத் தான் பின்னும் நேராதனவொன்றுநேர்ந்தாள்” என்றுள்ளது. இங்கு மூலத்தின் மேல் அர்த்தமென்ன வென்றால், செங்குறிஞ்சி மாலையை யணிகின்ற ‘சாஸ்தா என்கிற தேவதாந்தரத்தை நோக்கி ஓர்அஞ்சலியும் பண்ணிவிட்டாள் என்பதாம்.ஒன்றுநேர்ந்தாள்’ என்ற மூலத்திற்கு ஓர் அஞ்சலி செய்தாளென்று அர்த்தம்.இங்கே “தான் பின்னும் நேராத வொன்று நேர்ந்தாள்” என்ற சொற்சுவையை நோக்கிப் பெரியவாச்சான் பிள்ளை என்ன வியாக்கியானம் செய்தருளியிருக்கிறா ரென்றால்,”தான்)வகுத்த விஷயத்திலே ஓர்அஞ்ஜலி பண்ணினால் அது ஸாதனத்தில் அந்வாதிக்கில் செய்வதென்? என்றிருக்க கடவ தான் என்று அருளிச்செய்துள்ளார். இந்த ஸ்ரீஸுக்தியோடுஞ் சேர்த்து முன்னே காட்டிய நம்பிள்ளைஸ்ரீஸுக்திக்கு அர்த்தம் செய்யுமளவில் தென்னாசார்யர்களின் திருவுள்ளம் புலப்படும். உபாயகோடியில் எள்ளளவும் அந்வயியாமல் ஸ்வரூபத்தளவிலே நிற்கும்படி சில செய்வதே உற்றது; எதையேனும் அதிகப்படியாகச்செய்தால் அது உபாய கோடியிலே அந்வயித்து ஆகிஞ்சயத்தைக் குலைத்து எம்பெருமானுடைய திருவருளுக்கு இடையூறாக நிற்கும்கொல் என்கிற அதிசங்கை இவர்களுக்கு உள்ளதென்னுமிடம் விளங்காநின்றது-எம்பெருமானுடைய நிர்ஹேதுக கருணையை ஆழ்வார் அநுபவித்து ஈடுபடுவதாக நன்கு விளங்குகின்றது. வேதாந்தவாசிரியரும் அவ்விடத்திற்கு அவ்யாஜோதார யாவாத்* என்றுதான் ச்லோகமிட்டருளினார்– பரமபத ஸோபா த்தில் பணிப்பதாவது, ” அஜ்ஞாத யாத்ருச்சிக ஆநுஷங்கிக ப்ராஸங்கிக ஸாமாந்யபுத்தி மூல ஸு க்ருத விசேஷங்களை வ்யா மாகக் கொண்டுவிசேஷ கடாக்ஷம்பண்ணி” என்று அருளினார்…
சேதனர்களை ரக்ஷித்தருள்வதில் இயற்கையாகவே ருசியுடையனான எம்பெருமான் * ஸம்ஸாரதந்த்ர வாஹித்வாத் ரஷ்யாபேக்ஷாம் ப்ரதீ தே * என்கிறபடியே இத்தலையில் சிறிது எதிர் பார்க்கிறானென்று சொல்லிவைத்ததொரு பக்கத்தில்; எம்பெருமானுடைய திருவாககைப் பார்த்தாலோ நாஸௌ புருஷகாரேண நசாப்யந்யேந் ஹேதுநா, கேவலம் ஸ்வேச்சயைவாஹம் ப்ரேக்ஷே கஞ்சித் கதாகநன் என்று காண்கிறது. நான் புருஷ காரத்தைக்கொண்டும் கடாக்ஷிப்பதில்லை, வேறுஎந்த ஹேதுவையிட்டும் கடாதிப்ப தில்லை;என்றைக்கோவொருநாள்யாரோவொரு அதிகாரியை என் இச்சையினாலேயே நான் கடாக்ஷிப்பேன்” என்பது மேலேகாட்டின ச்லோகத்தின் பொருள். இங்ஙனம் பேசுகின்ற எம்பெருமானது திருவருளை ஸஹேதுகமென்று நினைக்க நாமார்? நம்பக்கல் கைம்முதல் கொண்டே எம்பெருமான் நம்மைக் காத்தருள்கின்றானென்று கொள்வது ஹேயமாகும். மருவித்தொழும் மனமே தந்தாய் என்னைத் தீமனங் கெடுத்தாய் என்கிற அநுஸந்தானம் அக்ருதிரிமமாகக்கடவது.
த்வமேவோபாய பூதோமே பவேதி ப்ரார்த்தநாமதி சரணாகதி * என்று சாஸ்த்ரம் சொல்லுகிறது. எம்பெரு மானையே உபாயமாக அத்யவளிக்குமதுவே ப்ரபத்தியென்பது.இத்தகையதான ப்ரபத்தியானது தன்னிடத்தில் உபாயத்வத்தை எங்ஙனே ஸஹிக்கும்? ப்ரபத்தி யென்கிற வஸ்து தேறும்போதே அதன் அநுபாயத்வமும் தெறியே தீரும். இதை வேதாந்தவாசிரியர் வெகு அழகாக நிரூபித்தருளுகிறார் ;ந்யாய ஸித்தாஞ்நத்தில் ஜீவபரிச்சேதத்தில் – இயம் கேவல லக்ஷ்மீ சோபாயத்வ ப்ரத்யயாத்மிகா ஸ்வஹே துத்வதியம் ருந்தே கிம்புநஸ் ஸஹகாரிணம் என்பது அவருடைய ஸ்ரீ க்திகளில் தலையானது.எம்பெருமானொருவனையே உபாயமாகக் கொள்வதாகிற இந்த ப்ரபத்தி யானது தன்னிடத்தில் உபாயத்வ புத்தியைத் தடைசெய்கின்றது; ப்ரபத்திக்கே உபாயத்வ மில்லாதபோது அதன் ஸஹகாரிகளானவற்றுக்கு அது இல்லை யென்மிடம் தனிப்படச் சொல்லவேணுமோ? என்பது இந்த ச்லோகார்த்தம்-மாம் ஏகம் சரணம் வ்ரஜ * என்று விதிக்கப்படுகிற ப்ரபத்திக்கு உபாயத்வம் அநிலார்யம் என்று நினைக்கக்கூடிய துண்டு. இதனையும் ந்யாஸ திலகமென்கிற க்ரந்தத்தில் அவ்வாசிரியரே எடுத்துக்காட்டி அழகாக ஸமாதானமும் வகுத்துள்ளார்;-ஹேதுர் வைதே விமர்கே* என்கிற சலோகம் காண்க. இதன் கருத்தாவது-ப்ரபத்தியானது விதிக்கப்பட்டிருப்பதனால் உபாயமென்று சொல்லவேண்டியிருந்தாலும் இங்கு அப்படி கொள்ளவேண்டா; ஒவ்வொரு வித்யையிலும் எம்பெருமானுக்கு ஒவ்வொரு ரூபம் அறியக்கடவதா யிருக்கிற கணக்கிலே இந்த ப்ரபத்தி வித்யையில் இதராநபேக்ஷ உபாயத்வம் (பிறிதொன்றை எதிர்பாராத உபாயத்வம்)அறியத்தக்க ரூபமாதலால்– என்று இந்த ச்லோகத்தில் நிரூபிக்கப் பட்டிருக்கின்றது.
————–
த்ரமிட உபநிஷத் பிரபாவ ஸர்வஸ்வம்
(388-389)பூர்வாசாரிய ஸ்தோத்ர நூல்களில் ஆழ்வார்களநுபவம்
ஸ்ரீமந்நாதமுனிகளின் முக்தகம்.-(திருவாய்மொழித் தனியன்)
பக்தாம்ருதம் விச்வஜநா நுமோதநம் ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோபவாங்மயம்,
ஸஹஸ்ரசாகோபநிஷத்ஸமாகமம்-நமாம்யஹம் த்ராவிடவேதஸாகரம்.
அஹம் த்ராவிடவேதஸாகரம் நமாமி -தமிழ்மறையென்னுங் கடலை அடியேன வணங்குகிறேன். பக்தாம்ருத மித்யாதி விசேஷணங்கள் திருவாய்மொழிக்குக் கடலோடு ஸாம்யத்தை நிர்வஹிப்பவை. பக்தாம்ருதம்] *அலைகடல் கடைந்து…. விண்ணவரமுதுண
அமுதில்வரும் பெண்ணமுதுண்டவெம்பெருமானே என்றபடி பக்தர்களுக்கு அமுதமளித்தது கடல். (பக்த) என்ற பதத்திற்கு அடைவிக்கப்பட்டவென்று பொருள்கொள்க. திருவாய்மொழி பக்ஷத்தில்-தொண்டர்க்கு அமுதுண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் என்றபடி பக்தர்களுக்கு அம்ருதமாயிருப்பதென்கை (விச்வஜநாநுமோதநம்]கடல் எப்படிப்பட்ட வர்களுக்கும் மகிழ்ச்சியளிக்கும். கடலைக்காண விரும்பாதவர்களில்லை. திருவாய்மொழியானது * பாலேய்தமிழரிசைகாரர் பத்தர்பரவுமாயிரம் என்றும், கேட்டு ஆரார்வானவர்கள் செவிக் கினிய செஞ்சொல்லே என்றும், *பண்ணார் பாடலின்கவிகள் யானாய்த் தன்னைத்தான் பாடித்தென்னாவென்னுமென்னம்மான் என்றும்,ஏர்விலா வென்னைத் தன்னாக்கியென்னால் தன்னைப் பார்பரவின்கவிபாடும் பரமரே என்றும் ஆழ்வார் தாமே பேசும்படி ஸர்வேச்வரனுட்பட உபய விபூதியிலுளார்க்கும் பரம போக்யமானது. (ஸர்வார்த்ததம்] கடல் ரத்நாகரமாகையாலே ஸகலப் பொருள்களையும் கொடுக்கவல்லது. திருவாய்மொழியோ வென்னில் *மிக்கவிறை நிலையும் மெய்யாமுயிர்
நிலையும் தக்கநெறியும் தடையாகித் தொக்கியலுமூழ்வினையும் வாழ் வினையுமோதும் குருகையர் கோன்யாழினிசை வேதத்தியல்* என்ற திருவாய்மொழித் தனியன்படி அறியவேண்டுமர்த்தங்களையெல்லாம்காட்டித்தரவல்லது.
[ஸ்ரீ சடகோபவாங்கயம்] கடலானது விஷ்வகாசாந்தளிந்தோ; கும்பீ ஸூ நோ என்ற பாதுகா ஸஹஸ்ர ஸூக்தி யின்படி அகத்தியமுனிவரின் வாங்மயமானது. திருவாய்மொழியானது குருகூர்ச்சடகோபமுனிவரின் திருவாக்கு. (ஸஹஸ்ர சாகோபநிஷத் ஸமாகமம் கடலானது பற்பல நதிகளுக்குப் புகலிடமாகையாலே வெள்ளத்தினால் பெயர்க்கப்பட்ட பல்லாயிரம் மரங்களின் சாகைகளினுடைய ஸமாகமத்தை யுடையது. திருவாய்மொழியோ வென்னில் ஸஹஸ்ர சாகைகளை யுடைத்தான ஸாமவேதத்திற்கு ஸமமான சாஸ்த்ரமாயிருக்கும். ஆசார்ய ருதயத்தில் சந்தோகனென்று ஸாமா நயமாகாமல். …இத்தைச் சாந்தோக்ய ஸமமென்பர்கள் * என்ற சூர்ணையின் வியாக்கியானம் ஸேவிப்பது.ஆக, இப்படிப்பட்ட த்ராவிட வேத ஸாகரத்தை ஸேவிக்கிறேனென்றதாயிற்று.
ஆளவந்தார் ஸ்தோத்ரசத்தம் சுலோகம்-5.
மாதாபிதா யுவதயஸ் தநயா விபூதி:ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம், ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுலாபிராமம் ஸ்ரீமத் ததங்க்ரியுகலம் ப்ரணமாமி மூர்த்நா.
கீழ்நான்காவது சுலோகத்தில் போற்றப்பட்ட பராசர ருடையகரந்தத்தைவிட பரமபோக்யமும் பரமோஜ்ஜீவநமும் பரமோ காரகமும் பலபடிகளாலும் நிகரற்றதுமான திருவாய்மொழி முதலிய திவ்யப் பிரபந்தங்களை அருளிச்செய்தவரும், ஸ்ரீமந்நாதமுனிகளுக்கும் யோகதசையில் ஸேவை ஸாதித்து நேரில் ஸகலோபநிஷத்ஸாரார்த் தங்களை உபதேசித்தவரும்,ப்ரபந்நஜநகூடஸ்தருமான நம்மாழ்வாரை நமஸ்கரிக்கின்றார் இதில். “சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும்,மேலாத் தாய் தந்தையும் அவரேயினியாவாரே” (திரு வாய்மொழி-5-1-8] என்று ஆழ்வார்க்கு மாதாபிதாக்கள் முதலிய எல்லா உறவு முறையாரும் எம்பெருமானேயானது போல் ஸ்ரீவைஷ்ணவர்கட்கெல்லாம் ஆழ்வார் திருவடிகளே ஸர்வ ஸ்வமாகிறதென்று அருளிச் செய்கிற இவருடைய அத்யவஸாயத்தை என் சொல்வோம்? நம்மாழ்வார்க்குப் பல திருநாமங்களிருக்கவும், அவற்றையெல்லாம் விட்டு ”ஆத்யஸ்ய ந: குலபதே .” என்று – ‘நம்முடைய குலத்துக்குத் தலைவர் என்று அருளிச் செய்யும்படியான திருவுள்ளக் கனிவு விலக்ஷணமானதே. ‘-‘‘விப்ரர்க்குகோத்ரசரண ஸுத்ர கூடஸ்தர் பராசர பாராசர்ய போதாயநாதிகள்; ப்ரபந்ந நகூடஸ்தர் பராங்குச பரகாலயதிவ ராதிகள்” என்ற ஆசார்ய ஹ்ருதய ஸூக்தி இங்கு ஸ்மரிக்கத்தக்க –மதந்வயாநாம் என்கிற பதத்தினால்-தமக்கு முன்னே அவதரித் திருந்த பெரியோர்களும், தமக்குப் பிறகு , ஜனிக்கப் போகிற ஸ்ரீவைஷ்ணவ ஸந்தாநங்களும் விவக்ஷிதம். ஸ்ரீவைஷ்ணவர்களென்று பேர் பெற்ற அனைவர்க்கும் ஆழ்வார் திருவடிகளே ஸர்வஸ்வம் என்றாராயிற்று.
ஆளவந்தார் ஸ்தோத்ரரத்நம்-சுலோ. 26.
நிராஸகஸ்யாபி ந தாவதுத்ஸஹே
மஹேச! ஹாதும் தவ பாதபங்கஜம்,
ருஷா நிரஸ்தோபி சிசு: ஸ்தநந்தய:
ந ஜாது மாதுச் சரணெள ஜிஹாஸதி.
எம்பெருமானே! என்னை நீ விலக்கித் தள்ளினாலும் நான் உன் திருவடிகளை விட்டு அகல்வேனல்லேன்; முலையுண்கிற குழந்தையைத் தாயானவள் முன்கோபத்தினால் சீறித் தள்ளிவிட்டாலும் அக்குழந்தை பின்னையும் தாயின் காலையே கட்டிக்கொண்டு அழுமேயல்லது அகன்று போய்விடமாட்டாது; அது போலவே, என்னை நீ நெறிகாட்டி நீக்கப் பார்த்தாலும் நான் உன் திருவடிகளை விட்டு நீங்குவேனல்லேன்” என்று தம்முடைய திண்ணிய உறுதியை உரைத்தாராயிற்று. ஹாது மிச்சதி – ஜிஹாஸதி, ” தருதுயரம் தடாயேல் உன்சரணல்லால் சரணில்லை….அரிசினத்தாலீன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தனருள்நினைந்தே அழுங்குழவியதுவே போன்றிருந்தேனே” என்ற ஸ்ரீகுலசேகராழ்வார் பாசுரத்தைப் பெரும்பாலும் தழுவி இந்த ச்லோகமருளிச் செய்யப்பட்டது.
கதாபுநச் சங்கரதாங்க கல்பக
த்வஜாரவிந்தாங்குச வஜ்ரலாஞ்சநம்,
த்ரிவிக்ரம! த்வச்சரணாம்புஜத்வயம்
மதீயமூர்த்தாக மலங்கரிஷ்யதி. 31
திருவாய்மொழியில் ஆழ்வார் “நீ ஒரு நாள் படிக்களவாக நிமிர்த்த நின் பாதபங்கயமே தலைக்கணியாய்” என்றும், “கோலமா மென் சென்னிக்கு உன் கமலமன்ன குரைகழலே” என்றும், “அடிச்சியோந்தலைமிசைநீயணியாய் ஆழியங்கண்ணாவுன் கோலப்பாதம்”
என்றும் விரும்பினபடியே உன் திருவடிகளாலே என் தலையை அலங் கரிப்பது எப்போதோவென்கிறார் .
நிவாஸ சய்யாஸநபாதுகாம்சுக
உபதாநவர்ஷாதபவாரணாதிபி:,
சரீரபேதைஸ் தவ சேஷதாம் கதை:
யதோசிதம் சேஷ இதீரிதே ஜநை:-40-
”சென்றாற்குடையாம் இருந்தாற்சிங்காசனமாம், நின் ால் மர
வடியாம் நீள் கடலுள்-என்றும் புணையாமணி விளக்காம் பூம்பட்டாம்
புல்கும், அணையாம் திருமாற்கு அரவு” என்ற முதல் திருவந்தாதிப் பாசுரத்தையே இந்த ச்லோகமாக மொழிபெயர்த்தனர்.
வபுராதி யோபிகோபிவா
குணதோஸாநி யதாததாவித:,
ததயம் தவ பாதபத்மயோ:
அஹமத்யைவ மயாஸமர்ப்பித:.-52-
ஆத்மாவைப் பற்றிப் பலர் பலவகையாகச் சொல்வர்கள்; தேஹமே ஆத்மா என்பர்சிலர் ; மற்றுஞ் சிலர் இந்திரியமே ஆத்மா என்பர்; வேறு சிலர் அந்த: கரணமே ஆத்மா என்பர்; ப்ராணமே ஆத்மா என்பர் சிலர்; புத்தியே ஆத்மா என்பர் மற்றையோர்; இவை ஒன்றுமல்ல; இவற்றிற்காட்டில் அஹமர்த்தமான ஆத்மா வேறுபட்ட வஸ்து என்பதை இவர்தாம் ஸித்தித்ாயமென்னும் திவ்யகரந்தத்திலே நிலைநாட்டியிருந்தாலும் இங்கே அந்த விசாரம் வைத்துக்கொள்ளாமல்,ஆத்மா என்பது தேஹம் முதலரனவற்றுள் எதுவாக இருந்தாலுமிருக்கட்டும் என்று சரக்கறச் சொல்லுகிறார்; எதுக்காகவென்னில்; ஆத்மாவுக்கு சேஷத்வ ஸ்தாபநமொன்றே முக்கியம் என்கிற தற்கால நோக்கத்தை வெளியிடுத்தற்காக. ‘யோஹமஸ்மி ஸஸந் யஜே” என்று வேதபுருஷனும் சொல்லிவைத்தான்; “நான் எவனாகிலுமாகிறேன்; தேஹமாகவோ இந்த்ரியமாகவோ மற்றும் ஏதேனுமாகவோ அஹமர்த்தமாகவோ உண்மையில் எவனாக இருக்கிறேனோ அவனாகவே யிருந்துகொண்டு பகவானை ஆராதிக்கின்றேன்” என்பது அந்த வேத வாக்கியத்தின் பொருள்: அப்படியே இவரும் அருளிச்செய்கிறார்.குணத : யதாததாவித அஸாநி= ஆத்மா அணுவா ஸர்வவ்யாபியா? நித்திய வஸ்துவா நச்வரவஸ்த்துவா? ஏகரூபனா பரிணாமியா? ஜ்ஞாநியா அஜ்ஞனா? என்றிப்படி ஆத்ம குணங்களில் பலவகை விப்ர திபத்திகளுண்டு; இதுதன்னிலும் இப்போது நிஷ்கர்ஷிக்கப் புகுகின்றிலேன் என்கிறார் எம்பெருமானே! உனது திருவுள்ளத்தால் இவ்வாத்ம வஸ்து எப்படிப்பட்ட ஸ்வரூப ஸ்வபாவங்களை யுடையதாகக்கொள்ளப் படுகிறதோ அப்படிப்பட்ட ஸ்வரூபஸ்வபாவ விசிஷ்டமாகவேயுள்ள இவ்வஸ்து உன் திருவடிகளில் அடியேனால் ஸமர்ப்பிக்கப்பட்டதாயிற்றுக் காண் என்றராயிற்று. [மேல் சுலோகத்தோடு முடிவு.
மம நாத! யதஸ்தி யோஸ்ம்யஹம்
ஸகலம் தத்தி தவைவமாதவ,
நியதஸ்லமிதி ப்ரபுத்ததி:
அதவா கிந்து ஸமர்ப்பயாமி தே.–53-
-கீழ் ச்லோகததில் அஹமத்யைவ மயா ஸமர்ப்பித: என்று சொன்னதைத் தாமே மறுபடியும் ஆராய்ந்தார்; ஐயோ! என்ன சொன்னோம்! என்ன சொன்னோம்!!’ என்று நடுங்கி, அதற்குஅநுதபிக்கின்றமைதோற்ற இந்த ச்லோகமருளிச்செய்கிார். “மயா அஹம் ஸமர்ப்பித” என்று சொன்னேனே ; இப்படி சொல்வதற்குஎனக்கு என்ன அதிகாரமுள்ளது? நான் என்கிற வஸ்துவும் என்னுடையதுஎன்கிற ஒரு வஸ்துவும் ஸ்வதந்த்ரமாகவுண்டோ? “யானே நீ என் னுடைமையும் நீயே” என்றபடி எல்லாம் ஏற்கனவே உன்னுடையதாகவே யிருக்கும் போது, இந்த ஆத்மவஸ்து உனக்கு இல்லாதது போலவும் இப்போதுதான் புதிதாக என்னால் ஸமர்ப்பிக்கப்படுவது போலவும் பேசிவிட்டேனே பாவியேன்; ஸமர்ப்பிப்பதற்கு நானார்? ஸமர்ப்பிக்க என்னிடம் என்ன இருக்கிறது! அதிலும் உனக்கு ஸமர்ப் பிக்க என்ன இருக்கிறது? இவ்விஷயங்களை ஆராயாமல்தானே அவிவேகியாய் ‘அஹமத்யைவ மயா ஸமர்ப்பித:‘ என்று பிசகாகப் பேசிவிட்டேனே! என்று அநுதாபங்காட்டி அருளிச் செய்தாராயிற்று.திருவாய்மொழியில் “எனதாவிதந்தொழிந்தேன் இனி மீள்வதென்ப துண்டே” என்று அருளிச்செய்த ஆழ்வார் உடனே ஆராய்ந்துதெளிந்து, ‘‘ எனதாவியாவியும் நீ பொழிலேழுமுண்ட வெந்தாய்!,எனதாவி யார் யானார் தந்த நீ கொண்டாக்கினையே” என்றருளிச்செய்ததை அடியொற்றியதாம் இந்த ச்லோகமிரண்டும்.
ஸக்ருத் வதாகாரவிலோகநாசயா|
த்ருணீக்ருதாநுத்தமபுக்திமுக்திபி,
மஹாத்மபிர்மாமவலோக்யதாம் நய
க்ஷணேபி தே யத்விரஹோதிதுஸ்ஸ :.–56-
சில மஹாத்மாக்களால் அடியேன் கடாக்ஷிக்கப் பெறவேணும்; எந்த மஹாத்மாக்களா லென்னில்; உன்னுடைய திருமேனியை ஒரு காலாகிலும் ஸேவிக்கப்பெற்றால் போதும் என விரும்பி, ‘ஐச்வரியமும் வேண்டா, ஸ்வர்க்கா நுபவாதிகளும் வேண்டா, மோக்ஷஸாம்ராஜ்யமும் வேண்டா, என்று எல்லாவற்றையும் த்ருணமாக நினைத்து உதறித்
தள்ளுபவர்கள் எவரோ, எவர்களை வீட்டுப் பிரிந்து ஒரு நொடிப் பொழுதும் நீ தரிக்கமாட்டாயோ, அப்படிப்பட்ட மஹாத்மாக்களின்கடாக்ஷத்திற்கு நான் இலக்காகும்படி செய்தருளவேணுமென்ரு ராயிற்று. “கூராராழி வெண்சங்கேந்திக் கொடியேன்பால் வாராய்,
ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே” என்றாற்போலே பிரார்த்தியா தொழிந்தது, “இந்திரலோகமாளுமச்சுவை பெறினும் வேண் டேன்”’எம்மா வீட்டுத் திறமும் செப்பம் ”வானாளும் மாமதி போல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம்,கோனாகிவீற்றிருந்து கொண்
டாடுஞ் செல்வறியேன்” “கம்பமதயானைக்கழுத்தகத்தின் மேலிருந்து இன்பமருஞ் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன்” என்றும் புக்திமுக்திகளெல்லாவற்றையும் வெறுத்த ஆழ்வார்களின் கடாக்ஷம்பெறுகைக்கு ஆசைப்பட்டாராயிற்று. ‘க்ஷணேபி தே யத்விரஹோதி துஸ்ஸஹ:” என்ற நான்கா மடிக்குச்சேர, “அருமாமாயத்தென துயிரே மனமே வாக்கே கருமமே, ஒரு மாநொடியும் பிரியான் என்னூழிமுதல்வனொருவனே” என்ற ஆழ்வார்பாசுரம் அநுஸந்தேயம்
ந தேஹம் ந ப்ராணாந் நச ஸு கம சேஷாபிலஷிதம்
ந சாத்மாநம் நாந்யத் கிமபி தவ சேஷத்வவிபவாத், பஹிர்ப்பூதம் நாத! கூணமபி ஸஹே யாது சததா விநாசம் தத் ஸத்யம் மதுமத ! வி. ஞாபநமிதம்.–57-
-திருவாய்மொழியில் “ஏறளுமிறையோனும்” (4-8-) என்கிற திருவாய்மொழியில் “உடம்பினால் குறைவிலமே “உயிரினால் குறைவிலமே” இத்யாதியாகப் பத்துப் பாசுரங்களாலே பரக்கப் பேசின அர்த் தத்தை இந்த ஒரு லோகத்தில் அடக்கி அருளிச் செய்தாராயிற்று.
ஸ்ரீ பாஷ்ய மங்களச்லோகத்தின் பொருள் விளக்கம்
அகிலபுவந ஐந்ம ஸ்தேம பங்காதிலீலே
விந்த விவித பூதவ்ராத ரக்ஷைக க்ஷே,
ச்ருதிசிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே
பவது மம பரஸ்மிந்சேமுஷ் பக்திரூபா.
இந்த ச்லோகத்தினால் ச்ரிய:பதியான எம்பெருமான் பக்கலில்-பக்திரூபாபந்நஜ்ஞானத்தை ஸ்ரீபாஷ்யகாரர் விரும்புவதாக மேலெழக் காணும் பொருள். இதிலுள்ள ஐந்து விசேஷணங்களாலும் நம்மாழ்வாருடைய பெருமைகளை விளக்கி, அவர் திறத்துப் பத்தியுண்டாம்படி பிரார்த்திப்பதாக உள்ளுறை பொருள். எம்பெருமான் ஸகல லோகங்களையும் படைத்தளித்துத் துடைப்பதை லீலையாக வுடையவன்; தன்னை
வணங்கின வெவ்வேறு வகைப்பட்ட ப்ராணி ஸமூஹங்களுக்கு முக்தி யளிப்பதாகிற ரக்ஷணத்தைச் செய்வதையே விரதமாகக் கொண்டவன்; *வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கு என்று பெரியாழ்வார் அருளிச் செய்தபடி வேதாந்தங்களில் மிக விளங்குபவன்; ஸ்வரூபத்தாலும் திருக்குணங்களாலும் மிகப் பெரியவன்; திருமகள் கொழுநன் ; இத்தகைய பெருமை வாய்ந்த பரமபுருஷன்| பக்கலில் மதிநலமுண்டாக வேணுமென்பது எம்பெருமான் பரமான பொருள். இத்தால் சாஸ்த்ரார்த்த ஸூசனமும் பண்ணினபடி.
இனி நம்மாழ்வார் பரமான பொருள்-[அகிலபுவந ஜந்மஸ்தேம பங்காதிலீலே ] இந்த விசேஷணம்-ஆழ்வார்க்கு ஆகும்போது இரண்டுபடியாக யோஜநையாகும். அகில
புவனங்களினுடைய ஜன்மஸ்தேமபங்கங்களுக்கு [ஆதி காரணபூதனான
எம்பெருமானோடே லீலாரஸம் அனுபவிப்பவர் ஆழ்வார். அகிலபுவந ஜந்மஸ்தேம பங்காநாம் ய: ஆதி: (ஸர்வே வர:) தே.ந ஸஹ லீலா யஸ்ய தஸ்மிந் ” என்று கொள்ளக் கடவது. திருவாய்மொழியில் (6-2)-என்னுடை பந்துங்கழலும் தந்து போகுநம்பீ விளையாடப்போதுமி னென்னப்போந்தோமை என்நிவை முதலான பலபல பாசுரங்களினால் ஆழ்வார்க்கும் எம்பெருமானுக்கும் நிகழ்கின்ற லீலைகள் வாசாமகோசம்.
இதுவொரு யோஜனை, மற்ருெரு யோஜநையாவது, அகிலம் -புவந
ஜந்மஸ்தேமபங்கா திலீல: யஸ்ய-என்று கொண்டு. எம்பெருமானையே எல்லாமாக வுடையவர் ஆழ்வார்; (அதாவது) உண்ணுஞ்சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையுமெல்லாம் கண்ணனெம்பெருமான்* என்றி ருந்தவர் நம்மாழ்வார் என்றதாகிறது. இப்படியிருந்தவர் ஆழ்வாரொருவரேயாதலால் இந்த யோஜநையும் மிகப்பொருந்தும். இதுவே முக்கியமான யோஜநை.-
[விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே] விநத விவித பூத வ்ராதரக்ஷகத்வம் எம்பெருமானுக்குச் சொல்லப்பட்டாலும் அநதிக்ரம் ணீயம்ஹி சரணக்ரஹணம்* என்கிற நியாயத்தாலும், மந்தரரத்ந ரக் ரியையாலும் அந்த ரக்ஷண பாரத்தை எம்பெருமானுடைய திருவடிகளே வஹிக்கும். அந்தத் திருவடிகளுக்கு ஸ்ரீ சடகோபனென்றும்
ஸ்ரீ சடாரியென்றும் நம்மாழ்வாருடைய திருநாமமேயாயிற்று. ஆகவே இந்த விசேஷணம் நம்மாழ்வாரிடத்திலே மிகவெளிதாக அந்வயிக்கக்குறையில்லை பாதுகாஸஹஸ்ரத்தில் ப்ரபாவபத்ததியில்(42) ஜகதாம் அபிரக்ஷணே த்ரயாணாமதிகாரம் மணிபாதுகே! வஹந் த்யோ:” என்றச்லோகம் இங்குப் பொருத்தமாக அனுஸந்தேயம்.-இந்த விசேஷணத்தில் ஆழ்வார் விஷயமான யோஜநையில் விவரிக்க வேண்டிய விசேஷங்கள் பலவுண்டு; விஸ்தபயத்தாலே விடு கின்றதத்தனை.
[ச்ருதி சிரஸி விதீப்தே] ச்ருதி சிரஸ்ஸாவது உபநிஷத்து;-அதில் விசேஷேண தீப்தர் ஆழ்வார். எங்ஙனேயென்னில்; தத்-விப்ராஸோ விபந்யவோ ஜாக்ர்வாம்ஸஸ் ஸமிந்ததே இத்யாதிகளான உபநிஷத் வாக்யங்கள் ஆழ்வாரை யன்றோ ஓதுகின்றன. விப்ராஸ: என்றது விப்ரா: என்றபடி.ந சூத்ரா பகவத் பக்த விப்ரா பாகவதாஸ் ஸ்ம்ருதா: என்கிறபடியே விப்ரத்வ ஸித்தி பெற்றவர் ஆழ்வார். (விபந்யவ:) பண ஸ்துதெள என்கிற தாதுவிலிருந்து நிஷ்பந்நமான சொல்லாகையாலே விசேஷித்து ஸ்துதிகர்த்தாக்களென்றபடி. “தேவிற்சிறந்த திருமாற்குத்தக்க தெய்வக் கவிஞன், பாவிற்சிறந்த திருவாய்மொழி பகர் பண்டிதனே” என்றபடி எம்பெருமானுக் குத்தகுந்த ஸ்தோதா ஆழ்வார். (ஜாக்ர்வாம்ஸ:)” கண்ணாரக்கண்டு கழிவதோர் காதலுற்றர்க்கு முண்டோ கண்கள் துஞ்சுதலே” என்று
சொல்லி இந்நிலத்திலே உறக்கமற்றிருப்பவர் ஆழ்வாரே. ‘ஸமிந் ததே’ என்றவிடத்து (ஸம்) என்கிற உபஸர்க்கத்தை நோக்கியே இங்கும் (விதீப்தே) என்று ஸோப ஸர்க்கமாக வருளிச் செய்தது.
இதற்கு மற்ருெரு யோஜநையுமுண்டு; ச்ருத்யாம் தீப்த : ச்ருதிசிரஸி விதீப்த : என்கிறதாகக் கொள்க. ச்ருதி யென்றது திருவாய் மொழி; அதில் தீப்தர் ஆழ்வார்; பதிகந் தோறும் நிகமனப் பாசுரத்திலே குருகூர்ச் சடகோபன்‘ என்று விளங்குபவரென்கை. இனி, சருதி சிரஸ்ஸாவது கண்ணிநுண் சிறுத்தாம்பு திவ்ய ப்ரபந்தம் அது திருவாய்மொழியின் முடிவிலே நியமேந அநுஸந்திக்கப்படுவதால் சருதி சிரஸ்ஸாயிற்று. அதில் விசேஷேண தீப்தர் ஆழ்வார்; அந்த ப்ரபந்தம் முழுவதும் ஆழ்வார் விஷயமேயாதலால் அதில் விதீப்த ரென்னக்குறையில்லையே.
[ப்ரஹ்மணி] “ஸர்வத்ர ப்ருஹத்த்வகுணயோகேந ஹி ப்ரஹ்சப்த :” என்ற ஸ்ரீ பாஷ்யத்தின்படி ப்ரஹ்மமென்றது மிகப் பெரிய வஸ்துவென்றபடி. ஆழ்வார் பெரிய திருவந்தாதியில் “புவியுமிருவிசும்பும் நின்னகத்த, நீ யென்செவியின் வழிபுகுந்து என்னுள்ளாய்,அ வின்றி யான் பெரியன், நீ பெரியை யென்பதனை யாரறிவார்’‘என்கிற பாசுரத்தினால்- மிகப் பெரியவனான எம்பெருமானை யும் தம்முள் ஒரு மூலையிலடக்கியிருக்கையாகிற பெருமை தமக்கேயுள்ளதென்று ஸோபபத்திகமாக நிரூபித்திருப்பதனால் ஆழ்வாரை ப்ரஹ்மமென்னத் தட்டில்லை. ஆழ்வார் தம்முடைய ப்ரஹ்மத்வத்தைத் தாமே உபபாதித்த ருளியிருப்பது விசேஷம். அப்பாசுரத்தின்படி எம்பெருமான் ப்ரஹ்ம மாகவும் ஆழ்வார் பரப்ரஹ்மமாகவும் தேறுதலால் இங்கு ‘பரஸ்மிந்
ப்ரஹ்மணி’ என்றது ஆழ்வார்க்கு மிகவும் பொருந்தும்.
[ஸ்ரீநிவாஸே] *ஸது நாகவர: ஸ்ரீமாந் அந்தரிக்ஷகத, ஸ்ரீமாந் லஷ்மணோ லஷ்மிஸம்பந் : இத்யாதி ஸ்தலங்களில் பகவத் கைங்கர்ய ருசியும் பகவத் பக்தியுமே ஸ்ரீயாகச் சொல்லப்படுகையாலே அந்த ஸ்ரீயானது ஆழ்வார் பக்கலிலே குறையற்றதாகையாலே ஸ்ரீநிவாஸத்வம் ஆழ்வார்க்கும் அநபாயம். ஆக இப்படிப்பட்ட ஆழ்வாரிடத்திலே தமக்கு பக்தியை வேண்டினாராயிற்று,
இந்த மங்கல ச்லோகத்தின் முதற்பாதம் அகிலபுவநஐந்மஸ்தேம பங்காதிலி லே‘ என்பது. இதில் யதோ வா இமா நி பூதாநி ஜாயந்தே” இத்யாத்யுபநிஷத்வாக்ய ஸித்தமாயும் ஜந்மாத்யதிகரணபாஷ்ய ப்ரபஞ்சிதமாயுமுள்ள ஜகஜ்ஜந்ம ஸ்திதிலயங்கள் அருளிச் செய்யப்பட்டன. ஸ்தி தியாவதுரக்ஷணம்; இதுவும் முதல் பாதத்தில் சொல்லியாயிற்றென்பது ஸ்பஷ்டம், இப்படியிருக்க, விந்தவிவித பூதவ்ராதரக்ஷைகதீக்ஷே என்று இரண்டாவது பாதம் எதற்கு? இதில் சொல்லப்படுகிற ரக்ஷணமும் முதல்பாதத்திலே சொல்லப்பட்டிருக்க, ச்லோக பூரணார்த்தமாகவா இந்தத் தனி விசேஷணம்? என்று கேள்வி எழுகின்றது.
இப்படிப்பட்ட க்திவிந்யாஸம் நம் பாஷ்யகாரரிடத்தில் தவிர இதரர்களிடத்தில் காணக்கிடைக்காது. ஸ்வாமி ஆழ்வாரருளிச்செயலை அடியொற்றியே இந்த விசேஷணமிட்டருளினார். எங்ஙனேயென்னில் : ஆழ்வார் திருவாய்மொழியில் (1-3-2). எளிவருமியல் வினன் என்கிற பாட்டில் “ஒளி வருமுழுநலம் முதலில கேடில”என்று அபரிமித கல்யாணகுண முடைமையைச்சொல்லி, உடனே’வீடாந்தெளிதரு நிலைமையது ஒழிவிலன்” என்கிறார், மோக்ஷமாகிற தெளிந்த நிலத்தைத் தருவதான அந்த ஸ்வபாவத்தை அதாவது
மோக்ஷப்ரதத்வத்தைஎப்போது முடையவன் என்பது இதன் பொருள்.
இங்கே நம்ஆசார்யர்கள், ஒளிவருமுழு நலம் என்றதிலேயே மோக்ஷப்ரதத்வமாகிற இந்த குணமு ம் அடங்காதோ? என்று கேட்டுக்கொண்டு ‘மோக்ஷப்ரதத்வம் தனியே சொல்லவேண்டுவதொரு குணமாகையாலே சொல்லுகிறார்” என்றருளிச்செய்கிறார்கள்.[இங்குமுக்கியமாகக் குறிக்கொள்க. இப்படி மோ ப்ரதத்வத்தைத் தனிப்படஅருளிச் செய்தவர் நம்மாழ்வாரேயாவர். இங்கே யருளிச் செய்வது தவிரவும் இரண்டாம்பத்தில் அணை வதரவணைமேல்என்கிற திருவாய் மொழியாலும் மோக்ஷப்ரதத்வத்தை விசேஷேண அருளிச்செய்கிறார்.-தேசிகனும் த்ரமிடோபநிஷத்தாத்பர்யரத்நாவளியிலும் ஸாரத்திலும் அந்தத் திருவாய்மொழிக்குமோக்ஷப்ர தத்வமே அநுபாவ்யகுணமென்று
அறுதியிடுகிறர் ஆக இங்ஙனே மோக்ஷ ரதத்வத்தை ஆழ்வார் தனிப்பட அருளிச் செய்திருப்பது கொண்டே ஸ்வாமி ராமா நுஜரும் விந்த விவித பூதவ்ராதர ைகதீ ே என்பதனால் இதைத் தனிப்பட அருளிச்செய்தார்.
இதற்குமேல் மூன்றாவது பாதத்தில் ‘ஸ்ரீநிவாஸே’ என்றருளிச் செய்ததிலும் விசேஷித்து அவதானம் செல்லவேண்டும். அகில புவநேத்யாதியான இந்த ச்லோகத்தில் பாஷ்யத்திற்கு மூலமான சாரீரகமீமாம்ஸையின் சாஸ்த்ரார்த்த ஸங்க்ரஹம் செய்யப்படுகிறதென்பது முக்கியமான விஷயம். இந்த சாரீரக மீமாம்ஸையில் ஒரு ஸ த்திரத்திலும் லக்ஷ்மீஸம்பந்தம் ப்ரஸ்தாவிக்கப்படவுமில்லை; அப்படியிருக்க ஸ்வாமி எதுகொண்டு ‘ஸ்ரீநிவாஸே’ என்றருளிச்செய்தாரென்று விமர்சிக்கவேணும் ஆழ்வார்கள் கோஷ்டியில் திருவில்லாத்
தேவரைத் தேறேல்மின் தேவு* [ரீஸம்பந்தமில்லாத தெய்வத்தைத்தெய்வமாக நினைக்கவேண்டா] என்கிற உத்கோஷமிருப்பதனாலேஅதையாதரித்தேஸ்வாமி இங்கு ‘ஸ்ரீநிவாஸே‘ என்றருளிச்செய்தது.
இதற்குமேல் நாலாவது பாதத்தில் “பக்திரூபா சேமுஷீ பவது”என்றதும் அவதேயம். மம பக்திர் பவது மம பக்திரஸ்து’ என்றருளிச் செய்தால் போதுமே; ‘பக்திரூபா சேமுஷீ பவது’ என்றது ஏன்? என்று ஆராயவேணும். திருவாய்மொழி முதற்பாசுரத்தில் மதி நலமருளினன்”
என்று ஆழ்வார் பாசுரமுள்ளது. மதியாவது ஞானம்; நலமாவது பக்தி.ஞானமும் பக்தியுமாகிற இரண்டையும் தந்தான்என்று சிலர் நிர்வஹித்தார்கள். நலமான மதியைத் தந்தானென்று கொண்டு, முளைக்கும்போதே வயிரம் பற்றி முளைக்கும் பதார்த்தம்போலே பக்திரூபாபந்மான ஞானத்தைத் தந்தானென்பதே முக்கியமான நிர்வாஹமாகக்
காட்டப்படுகிறது. எம்பெருமானார் இவ்விதமான அர்த்தத்தைத் திருவுள்ளம்பற்றியே “பவது மம பரஸ்மிந் சேமுவீ பக்திரூபா” என்றருளிச்செய்தாரென்பதே இங்கு தலையான விஷயம். “புத்திர்மநீஷாதிஷணா தீ: ப்ரஜ்ஞா சேமுஷீ மதி ” என்பது அமரகோசம். மதியும்சேமுஷியும் பர்யாயமே. பக்தியும் நலமும் பர்யாயமே. ஆழ்வார்க்கு மதிநலமருளினது போல அடியேனுக்கும் மதிநலமருள வேணுமென்று பிரார்த்தித்தாராயிற்று.
சாரீரகமீமாம்ஸையின் முதல் ஸூத்ரம் *அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா‘ என்பது. இதில் ப்ரஹ்ம சப்தத்திற்கு சங்கராசாரியர் பாஷ்யம் ப்ரஹ்ம ச வக்ஷ்யமாண லக்ஷணம் ஜந்மாத்யஸ்ய யத இதி” என்றிவ்வளவே யுள்ளது. ஸ்வாமியின் பாஷ்யஸூக்தியோ வென்னில்“ப்ரஹ்ம சப்தேந ஸ்வபாவதோ நிரஸ்த நிகிலதோஷ : அநவதிகா திசய
அஸங்யேய கல்யாண குணகண: புருஷோத்தம: அபிதீயதே” என்று உள்ளது . ஆழ்வார் திருவாய்மொழி தொடங்கும் போதே உயர்வறவுயர் நலமுடையவன் என்றருளிச் செய்த சந்தையையே ஸ்வாமி நேராக மொழிபெயர்த்திருக்கி ார் உயர்வற- அநவதிகா திசய, உயர்
அஸங்யேய, நலமுடையவன் -கல்யாண குணகண:, யவனவன்-புருஷோத்தம . ஆழ்வார் ஸ்ரீஸூக்திகள் முழுவதும் பகவத் குணமயமேயாதலால் அந்த அம்ருத ஸாகரத்திலேயூறின ஸ்ரீராமாநுஜர் அதற்குத்தகுந்தபடியே அருளிச்செய்கி ர். தமிழில், மால் என்றும் நெடுமால்
என்றுமுள்ள சொற்களுக்குண்டான அர்த்தங்களையே ப்ரஹ்மசப்தார்த்தமாக ஸ்வாமி உப்பாதிக்கும் பரிசு அத்யாச்சர்யம்.
அந்தஸ் தத்தர்மோபைதே சாத் 1-1-21-இங்கு * பேதவ்பபதேசாச்சார்ய: * என்கிற மேல் ஸூத்திரத்தி )விருந்து அந்ய: என்கிற பதம் வருவித்துச்கொள்ளப்படுகிறது. அந்த:-ஆதித்ய மண்டலத்தினுள்ளே உறையும் புருஷன். அந்ய:- ஜீவனைக் காட்டிலும் வேறுபட்ட பரமபுருஷன்; தத்தர்மோபதேசாத்-அந்த பரம புருஷனுக்கேஅஸாதாரணமாகவுரிய தர்மங்களை இங்கு ஓதியிருப்பதனாலே – என்று ஸூத்ரத்திற்குப் பொருள்.-இவ்விடத்து ஸ்ரீபாஷ்யத்தில் உபயவேதாந்த ரஸிகர்களுக்கு ஒரு சிறந்த விஷயம் நினை வூட்ட வேண்டியதுண்டு; ஸ்வாமி யெம்பெருமானார் ஸ்ரீ பாஷ்யமருளிச் செய்யும்போது ஆழ்வார்களின் திவ்யஸூக்திகளை இடைவீடின்றித் திருவுள்ளத்தில் சிந்தனை செய்து ண்டேயிருந்தவரென்று முன்னோர்கள் மொழிந்திருப்பதுண்டே-அது உபயவேதாந்தங்களிலும் ஆழ்ந்த அறிவுபெற்ற மஹான்களுக்கே அறியவெளிது. இதற்குச் சான்றுாக எடுத்துக்காட்டக்கூடிய விடங்கள் பலவுண்டு. ப்ரக்ருதம் இந்த ஸுத்ரத்தின் பாஷ்யத்தில் உள்ளதான அரிய பெரிய விஷயமொன்று இங்கு நிரூபிக்கப்படுகிறது. இவ்விடத்தில் பரம புருஷனுக்கு சரீர ஸம்பந்தம் கிடையாதென்று பூர்வபக்ஷவதத்தில்ப்ரஸக்தமானதை ஸ்வாமி கண்டிக்குமிடத்து ஸ்ரீ ராமகிருஷ்ணாதி விபவாவதாரங்களில் சரீர பரிக்ரஹம் பகவான் செய்தருளுகிறபடியை நிரூபித்து வருகையில் பரித்ராணாய ஸாதூநாம் விநாசாய ச துஷ்க்ருதாம என்கிற கீதா ஸூக்தியை யெடுத்துக்காட்டி, ஸாது பரித்ராணமேவ உத்தேசியம்; ஆ நுஷங்கிகஸ்து துஷ்க்ருதாம் விநாச:; ஸங்கல்பமாத்ரேணாபி ததுபபத்தே. என்றுள்ளது ஸ்ரீபாஷ்யஸக்தி. எம்பெருமான் அவதாரம் செய்தருள்வது ஸாதுக்களை ஸம்ரக்ஷிப்பதற்காகவும் துஷ்டர்களைத் தொலைப்பதற்காகவுமானாலும் ஸாதுக்களை ஸம்ரக்ஷிப்பதொன்றே உத்தேச்பம்; துஷ்டர்களைத் தொலைப்ப தென்பது ஸங்கல்ப மாத்திரத்தினாலும் ஆகக்கூடியதாதலால் அது ஆநுஷங்கிகமேயொழிய ப்ரதானமன்று- என்பது மேலெடுத்துக் காட்டிய ஸ்ரீ பாஷ்ய ஸூக்தியின் கருத்து . “துஷ்டர்கள் தொலையக் கடவர்கள்” என்று ஸங்கல்பிப்பது போல “ஸாதுக்கள் ஸம்ரக்ஷணம் பெறக்கடவர்கள்” என்று ஸங்கல்பிக்க முடியுமன்றோ, ஏன்முடியாது-அப்படியிருக்க, துஷ்டசிக்ஷணமே ஸங்கல்ப ஸாத்யமென்றும் ஸாது ஸம்ரக்ஷணம் ஸங்கல்ப ஸாத்யமன்று என்றும் ஸ்ரீ பாஷ்யகாரர் எது கொண்டு சாதிக்கிறாரென்று ஆராயுமளவில், நம்மாழ்வாருடைய ஸுஸ்பஷ்டமான ஸ்ரீ ஸூக்தியைக் கொண்டே ஸாதிக்கிறாரென்று நன்கு விளங்குகிறது. அதை விவரிப்போம்.
திருவாய்மொழியில் (3-1-9) +மழுங்காத வைந்துதியசக்கர நல்வலத்தையாய், தொழுங்காதல்களிறளிப்பான் புள்ளூர்ந்துதோன்றினையே, மழுங்காத ஞானமே படையாக மலருலகில் தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச்சோதி மறையாதே என்கிற டாசுரம் பரம போக்யமானது. எம்பெருமான் ஸ்ரீ கஜேந்திராழ்வானுடைய கூக்குரலைக் கேட்டு அரைகுலையத் தலைகுலைய மடுவின் கரையிலே டிவந்து விழுந்தானென்கிற இதிஹாஸம் ப்ரஸித்தமானது. எதற்காக வோடிவரவேண்டும்? கருது மிடம் பொருதுவரவல்லதிருவாழியாழ்வானைத் திருநாட்டிலிருந்தே ஏவினால் அவன் ஒரு நொடியில் யானையின் இடரைத்தீர்த்துவரமாட்டானோ ? அவனுக்குத்தான் ச்ரமம் கொடுக்க
வேண்டுமோ? ஸகல ஜகத்ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களுக்குக் கருவியாயுள்ள ஸங்கல்பத்தினால் யானையிடரை அவலீலையாகத் தீர்த்திருக்கலாமே. இவ்விரண்டுபடியுமின்றிக்கே அறப்பதறியோடிவந்தது எதற்காக? என்று நம்மாழ்வார் கேள்வி கேட்டுக்கொண்டு ஸமாதானத்தையும் தாமேயருளிச்செய்துள்ளார். தொழுங்காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே என்கிற இரண்டாமடிதான் ஸமாதானம். கஜேந்திராழ்வான் தன்னெதிரே வந்து நின்ற பகவானை நோக்கி, *நாஹம் களேபரஸ்யாஸ்ய த்ராணார்த்தம் மது தந, கரஸ்த கமலாந்யேவ பாதயோரர்ப்பிதும் தவ’ என்றான். (என்றேனுமொரு நாள் அழிந்தேபோகக் கூடியதான இவ்வுடலுக்காக நான் கரையவில்லை; எம்பெருமானே! உன்னை ஸேவித்து உன் பொற்றமரையடிகளில் இத்
தாமரை மலர்களைப் பணி மாறுவதற்காகவே கரைந்தேன் என்றான் ] இப்படிப்பட்ட ஆவல்கொண்ட பக்த சிகாமணிகளின் ஆசையை ஸங்கல்பத்தினால் தலைக்கட்டினால் அவனுக்கு அவத்யமாமென்பதையும் அப்பாசுரத்தின் பின்னடிகளில் ஆழ்வார் தாமே விவரித்துக் கூறியுள்ளார். நேரில் அவதரித்துத் திருமேனியைக் காட்டியே அன்பர்களைக் காக்க வேண்டும் என்று ஆழ்வாரருளிச்செய்த அர்த்தத்தையே இங்கு ஸ்வாமி உயிராகக் கொண்டு பணித்தாராயிற்று.
திருவாய்மொழியே வடிவெடுத்த ப்ரஹ்ம சூத்ரபாஷ்ய மொன்று.
சாரீரகமீமாம்ஸா-த்விதீயாத்யாய – த்விதீய பாதத்தில் ஸர்வதா நுபபத்தி யதிகரணத்தில் ஸர்வசூந்யவாதிகளான பௌத்த ஏகதேசிகளின் பக்ஷம் நிரஸிக்கப்படுகிறது.பரப்ரஹ்மமே ஜகத்காரண மென்று நன்கு நிலைநாட்டத்தோன்றிய இந்த அத்யாயத்தில் ஸர்வ சூந்யத்வவாதத்தை நிரஸிக்க என்ன ப்ரஸக்தியென்று சிலர் நினைக்கக் கூடும். ஜகத்காரண வஸ்து ப்ரதா நமா ? பரமாணுவா ? பரப்ரஹ்மமா ? என்கிற விசாரம் எப்போது பொருந்து மென்னில்; உண்மையில் ஜகதுத்பத்தி யென்பதொன்று நிரூபிக்க முடியுமானால் அப்போது பொருந்தும். அடியோடு இல்லாதவொரு பிள்ளைக்கு மாதா பிதாக்களைப் பற்றி விசாரம் செய்வதுண்டோ? ஜகதுத்பத்தியே நிரூபிக்கமுடியாததா யிருக்க, எது ஜகத் காரணம் என்கிற சர்ச்சை ஏதுக்கு? உத்பத்தி யானது பாவத்திலிருந்து அங்கீகரிக்கப்படுகிறதா? அபாவத்திலிருந்து அங்கீகரிக்கப்படுகிறதாவென்று கேட்கிறோம். பாவத்திலிருந்து என்பது சேராது; மண்பிண்டத்திலிருந்து பானை முதலியன உண்டா கின்றனவென்றால் மண்பிண்டத்தை உபமர்த்தித்துக் கொண்டுதானே யுண்டாகின்றன. எந்தகாரியப்பொருளும் காரணப்பொருளை உபமர்த்தி யாமல் உண்டாவதில்லை யென்பதைக் காணா நின்றோம். காரணாகாரத் தின் விநாசந்தானே உபமர்த்தமாவது; அதுதான் அபாவமே. ஆக பாவத்தில் நின்றும் உத்பத்தியில்லை யென்று தேறிற்று. அபாவத்தில் நின்றுங்கூட உத்பத்தியில்லையென்பது அநாயாஸமாகத் தெரியவரும். அபாவத்திலிருந்து பாவோத்பத்தி ஸம்பவிக்கமாட்ட தன்றே. ஆக உத்பத்தியே நிரூபிக்க முடியாதிருப்பதால் உத்பத்திக்குப் பிற்பட்டனவான விகாரங்கள் எதுவுமே கிடையாவென்பது ஸித்தம். லோகவ்ய வஹாரமெல்லாம் ப்ரம மூலகமே. [இது ஸர்வசூந்யவாதிகளின் வாத ப்ரக்ரியை.]
இப்படி சூந்யமே தான் தத்துவம் என்பவர்கள் இங்கு நிரஸிக்கப்படுகிறர்கள். (ஸர்வதாநுபபத்தேச்ச] என்பது த்ரம். ப்ரமேயங்களோ ப்ரமாணங்களோ எதுவும் உண்டாகிலுமாம் இல்லை யாகிலுமாம்; பூர்வபக்ஷிக்கு அபிமதமான சூந்யத்வம் ஒரு விதத்திலும் தே தாகையாலே மாத்யமிகதர்ச நம் அஸமஞ்ஜஸ மென்றபடி. ஸர்வம் சூந்யம்’ என்று சொல்லுபவர்கள் தங்களுக்கு அபிமதமான இவ்வர்த் தத்தை ஸாதித்துத் தரும்படியான ப்ரமாணமொன்று உண்டென்று சையும் பக்ஷத்தில் ப்ரமாண ஸத்பாவத்தை யிசைந்தபோதே ஸர்வ சூந்யவாதம் தொலைந்தது. ப்ரமாணமில்லை யென்னும் பக்ஷத்தில்;ப்ரமாணமில்லாமையினாலேயே தங்களுக்கு அபிமதமான அர்த்தம் அளித்தமென்று முடிந்தது. மேலும் ‘ஸர்வம் சூந்யம்’ என்கிற விந்தவார்த்தையினால் நாஸ்தித்வந்தானே விவக்ஷிதமாகவேணும். ஒரு ரூபத்தை விட்டு மற்றெரு ரூபத்தை யடைவதே நாஸ்தி பதார்த்த மாகையாலே ரூபாந்தரத்தாலே அஸ்தித்வமே சொல்லப்பட்டதாக முடிகிறது. மண்ணுண்டையொன்று இருந்தது. பானைதோன்றும் போது அந்தமருத்பிண்டம் நசிக்கிறது. அது நசித்தவளவிலே ம்ருத் பிண்டோ நாஸ்தி’ என்று சொல்லுகிறான். இந்த வ்யவஹாரத்தில் பானை யென்கிற அவஸ்தைதானே விஷயமாகிறது.
உலகில் அஸ்தி நா ஸ்தித்வங்களை வழங்குகிறவர்கள் இப்போது மண்ணுண்டை யிருக்கிறது, இப்போது மண்ணுண்டையில்லை; இங்கு மண்ணுண்டையிருக்கிறது. இங்கு மண்ணுண்டையில்லை; என்றிப்படி இடத்தையும் காலத்தையும் உட்படுத்தியே
வ்யவஹரிக்கிறார்கள் : தேச காலங்களைச் சேர்க்காமல் வெறுமனேமண்ணுண்டை யில்லை ‘ என்கிற ப்ர தீதியோ வ்யவஹாரமோ எங்கும் காண்பதில்லை. இப்போது மருத்பிண்டமிருக்கிறது’ என்றோ ‘ இங்கு மருத்பிண்டமிருக்கிறது’ என்றே ஒருவன் வ்யவஹரித்தால் மண் என்னும் த்ரவ்யத்திற்கு பிண்டத்வாவஸ்தை விஷயம். இப்போது
மருத்பிண்டமில்லை’ என்றே ‘இங்கு மருத்பிண்டமில்லை’ என்றோ வ்யவஹரித்தால் பிண்டத்வாவஸ்தையின் நாசமாகிய கடத்வாவஸ்தைவிஷயம். ஆக நாஸ்தித்வவ்யவஹாரம் பண்ணினாலுங்கூட வேறொரு ஆகாரத்தாலே அஸ்தித்வமே தேறிநிற்கிறதென்பதை ஸர்வாநுபவ ஸாக்ஷிகமாகக்காணலாம். இன்ன வஸ்து இங்கில்லை என்றால் மற்றே ரிடத்திலுள்ளதாகத் தேறியே தீரும். இப்போதில்லை யென்றாலும் மற்றொருபோ தில் உண்டென்றதாகத் தேறியேவிடும். ஆகவே ஒருபடி)
யாலும் ஸர்வசூந்யவாதம் ஸித்தியாது என்றதாயிற்று. ஸூத்ரத்தின் மேலே பொருள் காண்பது எங்ஙனே யென்னில்; ஸர்வதா – ஸர்வ பிரகாரத்தாலும், அநுபபத்தே:-ஸ்வாபிமதமான ஸர்வசூந்யவாதம் உபபந்நமாகாமையினாலே என்றபடி. ஸர்வப்ரகாரத்தாலும்’ என்றதை ஸ்ரீபாஷ்யத்தில் ஸ்வாமி விவரித்தருளும்போது “ஸ்திதி ப்ரதிஜ்ஞா யாம் அஸ்திதி ப்ரதிஜ்ஞாயாஞ் ச” என்றருளிச் செய்கிருர், ஸ்வாமிக்கு இப்பொருள் தோன்றினது எதனாலென்னில்; திருவாய்மொழியில்
(1-1-9)”உளனெனிலுளன் அவனுருவ மிவ்வுருவுகள், உளனலனெனில் அவனருவ மிவ்வருவுகள், உளனென விலனெனவிவைகுண முடைமை யின், உளனிரு தகைமையோடொழிவிலன் பரந்தே என்ற பாசுரங் கொண்டே இந்தஸூத்ரத்தின் பொருளை ஸ்வாமி அறுதியிட்டருளினா ரென்பது நிஸ்ஸந்தேஹம். அப்பாசுரத்தின் ஆருயிரப்படியை ஸேவித் தால் இஃது எளிதிற் புலனாகும். அப்பாட்டிற்குத் தமிழ் மொழியா லெழுதப்பட்டுள்ள பொருள்தான் ஸ்ரீபாஷ்யத்தில் வடமொழியா லெழுதப்பட்டுள்ளதென்பதை விசதமாக நிரூபித்துக்காட்டுகிறேன் காண்மின்;
1-உளனெனில் உளன் அவனுருவம் இவ்வுருவுகள் ;–கிம் பவாந் ஸர்வம் ஸதிதி ப்ரதி ஜா நீதே? (ததாஸத்தி) தவாபிப்ரே தம் துச்சத்வம் நஸம்பவதி ;
2-உளனலனெனில் உளன் ;அவனருவ மிவ்வருவுகள் ;இருதகைமையோடு உளன்.–கிம்பவாந்அஸதி திப்ரதிஜாநீதே?-(ததாபி ) துச்சத்வம் நஸம்பவதி; சூந்யமிதி ப்ரதிஜாந்தா ஸதிதி ப்ரதிஜாநதேவ ஸர்வஸ்ய வித்யமாநஸ்ய அவஸ்த்தாவிசேஷ யோகிதைவப்ரதி ஞாதா பவதீதி. துச்சதா நகுதச்சிதபி ஸித்யதி
கீதாபாஷ்யத்திலோ ஸ்ரீபாஷ்யத்திலோஸ்வாமியருளிச் செய்யும் ஸ்ரீஸு க்திகளில் நெஞ்சையுருக்கும்படியான ஒரு அதிசயம் அடியேனுடைய அனுபவத்தில் காண்கிறது. இவ்வதிசயம் வேறு எந்த பாஷ்யத்திலும் காணமுடியாது. அஃது என்னென்னில், மூலத்தில்
பரம புருஷனுடைய ப்ரஸ்தாவம் வருமிடங்களில் ஆழ்வார்களுடைய திவ்யஸுக்திச் சாயையிலே அவனுடைய ஸ்வரூபரூபகுண விபூதிப் பெருமைகளை விளக்கிப் பல விசேஷணங்களை அருளிச்செய்தாலொழிய ஸ்வாமிக்குத் தரிப்பு உண்டாவதில்லை. ஸ்ரீபாஷ்யத்திலும் ஓரிடம் காட்டுகிறேன். அதில் கடைசியான ஸூத்திரம் [அநாவ்ருத்திச் சப்தாத் அநாவ்ருத்திச் சப்தாத்] என்பது. இங்கு மூலத்தில் பரமபுருஷனுடைய ப்ரஸ்தாவமே யில்லை. பரமபதத்தைச் சென்றடைந்த முக்தர்கள் மீண்டும் இந்நிலத்தில் திரும்பி வருவது உண்டா. இல்லையா? என்கிற சங்கைக்குப் பரிஹாரமாக இந்த ஸூத்ரம் அவதரித்துள்ளது. புநரா வ்ருத்தி கிடையாதென்று சாஸ்த்ரம் சொல்யிருக்கையாலே அது இல்லை’ என்றிவ்வளவே ஸூத்ரம் சொல்லி நின்றது. இதை விவரிக்குமிடத்து ஸ்வாமி யெம்பெருமானார், பகவானோருவனுளனென்று எந்த சாஸ்த்ரம் அறிவிக்கின்றதோ அந்த சாஸ்த்ரமே பகவானை அடைந்த வர்கட்குப் புநராவ்ருத்தியில்லை என்றும் தெரிவிக்கின்றது” என்றருளிச் செய்கிறார். இங்கு ‘யதா பரமபுருஷ: அஸ்தீதிசப்தாத் அவகம்யதே..” என்றிவ்வளவே அருளிச் செய்தால் போதுமானது; ஆயினும் ஸ்வாமி இங்கே அருளிச்செய்வது பாரீர்:
‘யதா நிகிலஹேயப்ரத்ய நீக கல்யாணைகதாந: ஜகஜ்ஜந்மாதி காரணம் ஸமஸ்தவஸ்துவில ண: ஸர்வ ஜ் ஞ: ஸத்யஸங்கல் : ஆச்ரிதவாத்ஸல்யைக ஜலதி நிரஸ்த ஸமாப்யதிக ஸம்பாவந: பரம காருணிக: பரப்ரஹ்மாபிதாந: பரமபுருஷ ………. …” என்று இவ்வளவு
விசேஷணங்களை யருளிச்செய்கிறார். கீதையில் ஒன்பதாமத்யாயத்தில் முடிவு ச்லோகம் மந்மநா பவ மத்பக்க:’ என்பது; இதில் மந்மநா பவ என்பதற்கு என்னிடத்தில் மனத்தை வைத்திடு என்று பொருள். இப்பொருள் யாவர்க்கும் தெரிந்ததே, எளிதில் தெரியக்கூடியதே
என்கிற கருத்தினால் மத்வபாஷ்யகாரர் அடியோடு அர்த்தம் செய்யவே யில்லை. சங்கராசாரியர் “மயி வாஸதேவே மந : யஸ்ய ஸ: த்வம் மந்மநாபவ” என்று உரைத்தார். என்னிடத்தில் என்பதற்கு வாஸுதேவனாகிய என்னிடத்தில் என்று அர்த்தம் என்பதாக
விவரித்தாராயிற்று. இனி ஸ்வாமியின் பாஷ்யத்தையெடுத்துக் கொள்வோம். அவ்விடத்து பங்க்திகளை ஸேவித்தால் கல்நெஞ்சினனுக்கும் கண்ணீர் பெருகும்.
“மந்மநா பவ-ஸர்வேச்வரே நிகிலஹேயப்ரத்ய நீக கல்யாணை கதாநே ஸர்வஜ்ஞே ஸத்யஸங்கல்பே நிகில ஜகதேககாரணே பரஸ்மிந் ப்ரஹ்மணி புருஷோத்தம புண்டரீக தலாமலாயதே ணே ஸ்வச்ச நீலஜீ த ஸங்காசே யுகபதுதித திநகரஸஹஸ்ர ஸத்ருசதேஜஸி
லாவண்யாம்ருதமஹோததௌ உதாரபீவரசதுர்பாஹெள அத்யுஜ்ஜ்வல பீதாம்பரே அமலகிரீட மகர குண்டலஹாரகேயூரகடகபூஷிதே அபார காருண்யஸௌசீல்ய ஸௌந்தர்ய மாதுர்ய காம்பீர்யௌதார்ய வாத்ஸல்ய ஜலதெள அநாலோசித விசேஷாசேஷலோக சரண்யே ஸர்வஸ்வாமிநி தைலதாராவத் அவிச்சேதேந நிவிஷ்டமநா பவ” என்கிற இவ்வளவும் அதிகம்பீரமான ஸ்வாமி ஸ்ரீஸூக்தியாகும்.
இந்த மஹாவாக்யத்தில் எம்பெருமானைப் பற்றின விசேஷணங்கள் பதினெட்டு உள்ளன. இத்தனை விசேஷணங்கள் இங்கு அவசியமோவென்று சிலர் நினைக்கக்கூடும். உண்மையில் அவச்யமன்றென்றும் சொல்லலாம் விஸ்தரத்தில் ருசியில்லாதவ ரான ஸ்வாமி இவ்வளவு ஏன் அருளிச் செய்தாரென்று ஆலோசிக்க வேண்டும். ஸ்வாமி யெம்பருெமானார் ‘பண்டருமாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய்மதமாய் விண்டிட வெங்களிராமானுசமுனி வேழம்‘ என்றும் ‘கலி மிக்க செந்நெற்கழனிக்குறையல் கலைப்பெருமா னொலி மிக்க பாடலையுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால் வலிமிக்க சீயமி ராமானுசன்’ என்றும் நூற்றந்தாதியில் அமுதனார் அருளிச்செய்த படியே ஆழ்வாரருளிச் செயற்கடலில் அநவரதம் அவகாஹித்தவராத லால் அதன் பலனாகவே இப்படிப்பட்ட ஸ்ரீஸூக்திகளை (ஸ்வாமி)’ பலகா லும் அருளிச்செய்ய ப்ராப்தமாகிறது. கண்ணபிரான் தன்னிடத்தில் பக்தி பண்ணும்படி விதிக்கிற இவ்விடத்தில் எம்பெருமான் தன்னுடைய இத்தனை விசேஷங்களை யெடுத்துக் காட்டாவிடில் எங்ஙனே பக்தி யுண்டாகும்? அவனுடைய ஸ்வரூப வைலக்ஷண்யத்தையும் திவ்யமங்கள விக்ரஹ ஸௌந்தர்யத்தையும் திவ்ய பூஷணாதி வைசிஷ்ட்யத்தையும் திருக்கல்யாண குணபௌஷ்கல்யத்தையும் எடுத்துக் காட்டுவதானது கண்ணபிரான் தானே இவற்றையெடுத்துரைத்து இவற்றிலேயீடுபடும் படி சொல்லுவதாகவன்றோவுள்ளது. இதரபாஷ்யகாரர்களுக்கு திவ்ய ப்ரபந்தஜ்ஞான ஸம்பத்து சிறிதுமில்லாமையினாலே அவர்கள் இப்படிப்யாயிற்று. பட்ட விசேஷணங்களை ஓரிடத்தில் கூட எழுதிவைக்க ப்ரஸக் தியில்லை*செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் செங்கமலம் செந்தாமரையடிக்கள் செம்பொன் திரு வுடம்பே என்றும் ‘கைவண்ணம் தாமரைவாய் கமலம்போலும் கண்ணிணையுமரவிந்தமடியுமஃதே’ என்றும் ‘செக்க மலத்தலர்போலும் கண்கைகால் செங்கனிவாய் அக்கமலத்திலை போலுந் திருமேனி யடிகளுக்கே‘ என்றும் வாய்வெருவுகின்ற ஆழ்வார்களின் ஈரச்சொற் களிலே ஆழங்காற்பட்டிருக்கு மாசிரியர்களுக்கே இப்படிப்பட்ட ஸ்ரீஸூக்தி விந்யாஸவைபவம் வாய்க்கின்றது.
திவ்யபூஷண வர்ணன பரமான-*ஸ்லோசித விவித விசித்ராநந்தேத்யாதி வாக்யத்தில் “கிரீடமகுட சூடாவதம்ஸ” என்றுள்ள ஸ்ரீஸூக்தி-திருவபிஷேக மென்றும்,-கொண்டை யென்றும், தொப்பார மென்றும் மூன்று விதமாக வழங்கி வருவதுண்டாதலால் அம்மூவகைத் திருவாபரணங்களுக்கும் வாசகமாகக் கிரீடமென்றும் மகுடமென்றும் சூடாவதம்ஸ மென்றும் மூன்று பதங்கள்இங்கு ப்ரயோகிக்கப்பட்டனவென்னலாம். முக்கியமாயும் உபதேச பரம்பராப்ராப்தமாயுமுள்ள ரஸ்யரஹஸ்யார்த்த மொன்று
இங்கு அறியவேண்டியதுண்டு. நம்மாழ்வாருடைய திவ்ய ஸக்தி யொன்றைத் திருவுள்ளம்பற்றியே “கிரீட மகுடசூடாவதம்ஸ-திருவிருத்தத்தில் பாரளந்த பேரரசே! எம்விசும்பரசே! எம்மை நீத்து வஞ்சித்தோ) ரரசே! *பாரளந்த பேரரசே! என்பதனால், உலகளக்கிற வியாஜத்தினால் எல்லார் தலையிலும் திருவடியை வைக்கையாகிற ஸௌலப்யகுணம் அனுபவிக்கப்பட்டது. விசும்பரசே! என்பதனால் நித்ய ஸூரிநாதத்வமாகிற பரத்வம் அநுபவிக்கப்பட்டது.-எம்மை நீத்து வஞ்சித்தோரரசே! என்பதனால் தம்மோடு ஸம்ச்லேஷ விச்லேஷங்கள் பண்ணிப் போருகையாகிற ப்ரணயித்வகுணம் அநுபவிக்கப்பட்டது. ஆக ஸௌலப்யத்துக்காகக் கவித்த முடியும்,
பாத்வத்துக்காகக் கவித்த முடியும், ப்ரணயித்வத்துக்காகக் க வித்த முடியுமாக மூன்று முடிகள் நம்மாழ்வாரால் எம்பெருமானுக்குச் சூட்டப் பட்டனவாயின. இதை அடியொற்றியதே எம்பெருமானாருடைய ஸ்ரீஸூக்தி.
—————-
(379-380)திருமங்கையாழ்வார் (5-10-8) “ மண்ணிலிது போலு நகரில்லை யென வானவர்கள் தாம் மலர்கள் தூய், நண்ணியுறைகின்ற நகர் நந்திபுர விண்ணகர நண்ணு மனமே ” என்றருளிச் செய்தார். நித்திய விபூதி வாஸிகளான நித்யஸூரிகளும் இத்தலத்தே போந்து ‘இம்மண்ணுலகில் இத்திருப்பதிபோன்றதிருப்பதி வேறில்லை? யென்று புகழ்ந்துகொண்டு
பரிசர்யைகள் பண்ணிஇங்கேயே நித்ய வாஸம் பண்ணிக் கொண்டிருப்ப தாகச் சொல்லப்படுசிறது. அந்த வானவர்களைத் திருமங்கையாழ்வார் கட் கண்ணாலோ உட்கண்ணாலோ காணாமல் இங்ஙனே யருளிச் செய்திருக்க மாட்டார்.-ஸகல திவ்ய
தேசங்களுக்கு முபலக்ஷணமேயென்று கொள்ளக்கடவது.-பட்டர் ஸ்ரீரங்க ராஜஸ்தவத்தில் ” அஹ்ருத ஹஜ தாஸ்யாஸ் ஸூரயஸ் ஸ்ரஸ்தபந்தா விமல சரம தேஹா இத்யமீ ரங்கதாம.மஹித மநுஜ திர்யக் ஸ்தாவரத்வா : ச்ரயந்தே ஸு நியதம் “ என்று நித்ய ஸூரிகளும் முக்தர்களும் முமுக்ஷக்களும் மநுஷ்ய திர்யக்ஸ்தாவர ஜன்மங்களை ஏன்று கொண்டு திருவரங்கம் பெரிய கோயிலில் நித்ய வாஸம் செய்வதாக அருளிச்செய்தார். இதுவும் மற்றுள்ள திவ்ய தேசங்களுக்கு உபலக்ஷணமேயாகும்.-இவற்றை யடியொற்றியே கவிசக்ரவர்த்தியான கம்பரும் தமதுராமாயணத்தில் அயோத்திமா நகரை வருணிக்குமிடத்து “எவ்வுலகத்தோர் யாவரும் தவஞ் செய்தேறுவா னாதரிக்கின்ற. அவ்வுலகத்தோர் இழிவதற்கருத்தி புரிகின்ற தயோத்திமாநகரம்” என்றார். எல்லாவுலகங்களிலுமுள்ள எல்லோராலும் தவம்புரிந்து பெற விரும்பப்படுகின்ற ஸ்ரீ வைகுண்டத்திலுள்ளாரும் இறங்கி வந்து இங்கே வசிக்க விரும்பும் நிலம் திருவயோத்தி யென்றபடி.
அநாவ்ருத்திச் சப்தாதநாவ்ருத்திச் சப்தாத்-மீட்சியின்றி வைகுந்தமாநகர் போயினாற் பின்னையித் திசைக் கென்றும் புணைக் கொடுக்கிலும் போக வொட்டாரே-புநராவ்ருத்தியில்லை யென்றது கர்ம நிபந்தனமான மீட்சியில்லை யென்றபடியத்தனை.-இமாந்லோகாந் காமாந்நீ காமரூப்யநுஸஞ்சரந்–ந்தோக்யத்திலும்
” ஸ ஸ்வராட் பவதி: தஸ்ய ஸர்வேஷு லோகேஷூ காமசாரோ பவதி” என்றோதிற்று. மற்றோருபநிஷத்திலும் யே ந யேந தாதா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி என்றோதிற்று.-காமாந்நீ காமரூபி] என்றதன் பொருளாவது (காமாந்ரீ) என்றவிடத்துக் காமசப்தம் ஸோச்நுதே ஸர்வாந் காமாந்ஸஹ ப்ர மணா விபச்சிதா * என்றவிடத்திற்போல
கல்யாண குணவாசகமாய் “கணைநாணிலோவாத் தொழில் சார்ங்கன்
தொல் சீரை நன்னெஞ்சே! ஓவாதவூணாகவுண்” (பெரிய திருவந்தாதி) என்கிற நம்மாழ்வாரருளிச் செயலின் படியே குணா பவத்தையே ஊணாகக்கொண்டவனாய் என்று [காமாந்நீ] என்பதற்குப் பொருள்.
[காமரூபீ] ஸ்வாபிம தமான உருவத்தைப் பரிக்ரஹித்தவனாகி யென்று பொருள். இங்கே (அநுஸஞ்சரந்) என்றது உயிரான வார்த்தை. பரம புருஷமநுஸ்ருத்ய ஸஞ்சரந் என்றும், பரமபுருஷஸ்ய ஆஜ்ஞாமநுஸ்ருத்ய ஸஞ்சரந் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. ஏவஞ்ச நித்ய முக்தர்களுக்கு லீலா விபூத்யநுபவம் ப்ராப்தமாகக் குறையில்லை யென்பது தேறிற்று.
“பரம புருஷ : ஜ்ஞாநிநம் லப்த்வா”-கீதையில் ஸ மஹாத்மா ஸு துர்லப: “–ாரக போஷக போக்யமானவை எல்லாம் கண்ணனென்றிருக்கிற மஹாத்மா மிகவும் துர்லபன் என்று
பகவான் தன் திருவாக்காலே சொன்னால், அப்படிப்பட்ட வொரு மாஞானியை லபிக்கைக்கு அவன் எவ்வளவோ பாடு படுகிறவன். என்பது விளங்கவில்லையா? ஆகவே சேதந லாபமே ஈச்வரனுக்குப் பேறு என்கிற ஸித்தாந்தம் நன்கு பொலிந்ததாயிற்று.-பேற்றுக்கு த்வரிக்கை கூட நம்மால் விளை வனவல்ல.-“நிதா நம் தத்ராபி ஸ்வயமகில நிர்மாண நிபுண:” என்கிற.வேதாந்த தேசிக ஸூக்தியால் இவ்வுண்மையும் திண்மைபெறும். ஸொத்தைப்
பெற்று அனுபவித்து ஆநந்திக்கவேணுமென்கிற ஆவல் ஸ்வாமிக்கே உரியதாகவும்உள்ள தாகவும் உலகிற் காண்கிறோமாதலால் இந்தநியாயமேயாகும்-ஜீவாத்மாவாகிற இந்தஸொத்து சைதந்ய மாகிற கல்மஷத்தோடும் கூடி யிருக்கையாலே சிறிது தலையாட்டவும் வாலாட்டவும் பெறுகிறது. தன்னை நன்க வுணரும்போது தலை மடிந்து நிற்கிறது. நிலாத் தென்றல் சந்தனம் புஷ்பம் முதலியன போலே ஸர்வாத்மநா பரதந்திரமாயிருக்கவேண்டிய ஜீவாத்மாவுக்கு சைதந்யமே இடையூருக நிற்றலால் இதைக் கல்மஷமென்கிறது.-சேதநன் தான் எம்பெருமானைப் பற்றுவதானது ஸ்வகத ஸ்வீகார மென்றும்,எம்பெருமான் தானே சேதநனை வரிப்பதானது பரகத ஸ்வீகாரமென்றும் சொல்லப்படுகிறது. அடைவே மர்க்கட கிசோர நயாயமென்றும் மார்ஜார கிசோர ந்யாயமென்றும் வழங்குவர். பரகத ஸ்வீகாரமென்பதன் சுவையை அறியப் பெருதவர்கள் இது அஸம்பிர தாயப் பேச்சு’ என்பர்.
அநந்யசேதாஸ் ஸததம் யோ மாம் ஸ்மரதி நித்யச , தஸ்யாஹம் ஸூலப: பார்த்த! நித்யயுக்தஸ்ய யோகி :*-8-14-) ‘ஜ்ஞா நீ து ஆத்மைவ மே மதம்‘ என்று பகவான் தான் தனக்கு உயிர் நிலையாகக் கொண்டா டும் ஞானியானவன் தன்னை உபாளிக்க வேண்டிய படியையும் பேறு பெறும் பரிசையும் இனி யருளிச் செய்கிறான் கண்ணபிரான் என்று அவதாரிகை யிட்டு சுலோகத்தை வெகு அழகாக வியாக்கியானித்தருளி யுள்ளார் ஸ்ரீபாஷ்யகாரர்.-அர்ஜுநா! எவன் இடைவிடாமல் எப்போதும் வேறொன்றிலும் நெஞ்சைச் செலுத்தாதவனாய் என்னையே ஸ்மரிக்கிறானோ, என்னோடு நித்ய ஸம்ச்லேஷத்தை விரும்பி யிருக்கின்ற அந்த பக்தனுக்கு நான்|ஸுலபன்–இதில் (தஸ்யாஹம் ஸுலபு) அவனுக்கு நான் எளியன் என்கிற பகுதிக்கு பாஷ்யம்-என்னோடு எப் போதும் கூடியிருக்க வேணுமென்கிற விருப்பமுடையவனுக்கு அடையத் தகுந்தவன் நானே யாகிறேன். மிக எளிதாக அடையத் தகுந்தவனுமாகிறேன் நான்; (அதாவது) அவனுடைய பிரிவைப் பொறுக்கமாட்டாதவனாய் (அவனைப் பிரிந்து தரித்திருக்கமாட்டாத வனாய்) நானே அவனை வரிக்கிறேன். என்னையடைவதற்கான உபாஸனத்தின் பரிபக்குவ நிலைமையையும் அதற்குற்ற இடையூறுகள் நீங்கு தலையும் என்னிடத்தில் அதிகமான ப்ரீதி முதலியவைகளையும் நானே கொடுக்கிறேன். *நாயமாத்மா ச்ருதியில் இவ்வர்த்தம் ப்ரஸித்தமாயிருப்பதோடு இந்த கீதையிலேயே மேலே பத்தாவது அத்தியாயத்தில் 10, 11 சுலோகங்களாலும் சொல்லப்படுகிறது- என்பதாம். ஸத்ஸம்பிரதாய ஸாரார்த்தம் இங்கே பொதிந்திருக்கு மழகு காண்க.-ஸ்ரீவசநபூஷணத்தில் 142, 143 “இவன் அவனைப் பெற நினைக்கும்போது பா தகமும் விலக்கன்று” என்று அருளிச்செய்த விடத்தில் வியாக்கியானத்தில் மணவாள மாமுனிகள் – “உடைமையை உடையவன் சென்று கைக்கொள்ளுமா போலே ஸ்வாமியான அவன் தானே வந்து அங்கீகரிக்கக் கண்டிருக்கக்கடவ பரதந்த்ரனான இச்சேதநன் தான் பலியாய் தன் ஸ்வீகாரத்தாலே ஸ்வதந்த்ரனான அவனைப்பெற நினைக்கு மளவில், அவன்நினைவு கூடாதாகில் இப்படி விலக்ஷணை யாயிருக்கிற ப்ரபத்தியும் தல்லாபஸாதநமாகாதென்ற படி ஸ்வாமியாய் ஸ்வதந்த்ரனான அவன், ஸ்வம்மாய் பரதந்த்ரனாயிருக்கிற இவனை ஸ்வேச்சையாலே பெற நினைக்குமளவில் பாபங்களில் ப்ரதாநமாக எண்ணப்படும் பாதகமும் ப்ரதிபந்தகமாகமாட்டாதென்கை.
‘தத்வியோகள அஸ் மாந : அஹமேவ தம் வ்ருணே* என்பது கீதாபாஷ்ய ஸுக்தி.
ஞானியான சேதநனைப் பிரிந்திருப்பதை எம்பெருமான் தான் பொறுத்திருக்க மாட்டாதவனாய்த் தானே அந்த சேதநனை வரிப்பதாகக் கூறுகின்றவிதுதான் பரகத ஸ்வீகாரமென்பது. மத் ராபத்ய நுகுணோபாஸந விபாகம் அஹமேவ ததாமீத்யர்த்த: என்கிற அடுத்த வாக்கியமானது ஸ்வகத ஸ்வீகாரப் பற்றசை நன்றாகக் கழிக்கிறது. இத் தலையில் விளைவதெல்லாம் எம்பெருமானுடைய க்ருஷி பலமாக விளைகின்றதே யன்றி இவன் தலையாலே விளைவித்துக் கொள்ளுமது ஒன்றுமில்லை யென்கிற ஸத்ஸம்ப்ரதாய ஸாரார்த்தம் எவ்வகையான சோத்யத்திற்கும் இடமில்லாதபடி தெளிவிக்கப்பட்டது.
இவ்விடத்தில் தாத்பர்ய சந்த்ரிகையில் வேதாந் தவாசிரியர் அருளிச்செய்துள்ள திவ்ய ஸூக்திகளும் தெள்ளியவே.*உக்தஸ்ய அதிவாதமாத்ரத்வசங்காவ்யுதாஸாய சருதி மூலதா மா -யமேவேதி என்றருளிச் செய்திருப்பது ஆழ்ந்து நோக்கத்தக்கது.-த்வத்பாதமூலம் சரணம் ப்ரபத்யே-“புகலொன் றில்லா வடியேன் உன்னடிக் கீழர்ந்து புகுந்தேனே*-‘இது நாம் பற்றின பற்றன்று; எம்பெருமான் தானே பற்றுவித்தானத்தனை ; அவனுடைய க்ருஷி பலித்த தத்தனை’-இதையிட்டே பரகத ஸ்வீகார மென்கிறது. “ஸ்வதத்தஸ்வதியா ஸ்வார்த்தம்
ஸ்வஸ்மித் ந்யஸ் தி மாம் ஸ்வயம் “ என்கிற தேசிக ஸூக்திக்கு அர்த்தமில்லையோ?” “(தே கிம்நு ஸமர்ப்பயாமி] இத்தையுடைய உனக்கு எத்தை ஸமர்ப்பிப்பேன் ? ஸமர்ப்பணீய மேது? ஸமர்ப்பகர் ஆர்? ஸமர்ப்பணீயமாகைக்கு ஸ்வாம்யமில்லை. ஸமர்ப்பிக்கைக்கு ஸ்வாதந்த்ர்யமில்லை; ஸம்ஸார பீதியாலே ஸமர்ப்பிக்கையும் ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநத்தாலே அநுசயிக்கையுமாக இரண்டும் யாவந்மோக்ஷம் அநு வர்த்திக்கக் கடவது” என்று.-பெரியவாச்சான்பிள்ளையருளிச்செய்வது
‘ஸார்வபௌமனை நீசப்பெண் ஆசைப்படுமாபோலே ஐயோ! என்ன ஆசைப்பட்டோம் ! இது தகுமா?’ என்றுஉடனே நெஞ்சாறல் படவும் வேணும் என்று சாஸ்ரார்த்தம் சிக்ஷிதமாகிறது. ஒட்டுரைத் திவ்வுலகுன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும் பட்டுரையாய்ப் புற் கென்றே காட்டுமால் பரஞ்சோதீ (திருவாய்மொழி (3-1-2) என்று, பரஞ்சோதியான எம்பெருமானுக்கு உலகத்திலுள்ள க்ஷணபங்குரமான தாமரை, மேகம் காயாம்பூ முதலானவற்றை ஒப்பாகச் சொல்லுதல் இழிவு என்கிறராழ்வார். இஃது உண்மையா அன்றா? உண்மையாகில்
‘கொண்டல் வண்ணா! கடல் வண்ணா? காயா வண்ணா! என்று பல காலும் ஆழ்வார்கள் கதறுகிறார்களே, இது என்ன? என்று ஆராய வேண்டாவோ? அன்றியும், பெரிய திருவந்தாதியில் புகழ்வோம் பழிப்போம் ‘ என்று எம்பெருமானை நாம் புகழ்வதானது பழிப்பதே யாகுமென்கிறார் நம்மாழ்வார் . இப்படிச்சொல்லிக்கொண்டே மேன் மேலும் எம்பெருமானைப் புகழ்வதற்கே ஒருப்படுகின்றாரே, இது என்ன?என்று இதையும் ஆராயவேண்டாவோ?
ஆறுவார்த்தைகளாவன அஹமேவ பரம்தத்வம் தர்சநம் பேத ஏவச, மோக்ஷோபாய: ப்ரபத்திஸ் ஸ்யாத் பூர்ணாசார்ய ஸமாசரய: தேஹாவஸாநே முக்திஸ் ஸ்யாத் அந்திமஸ்ம்ருதி வர்ஜநம் என்கிற ஸுப்ரஸித்தமான ப்ராசீந ச்லோகத்தினால் விசதம். இதையடியொற்றிப் புராதந கவியாகிய வடிவழகிய நம்பி தாஸர் பணித்த பாசுரங்கள் இரண்டு
செப்புகின்ற பரதத்வம் யானேயென்னச் செப்புதி, வே றொப்பிலாதாய்! தரிசனமும் பேதமென்றே யுரைத்திடுக
தப்பிலாதவுபாயமதும் ப்ரபத்தி யென்றே சாற்றிடுக
அப்ப! புகல்க இவையன்றி நினைவும் வேண்டா அந்திமத்தில்
இந்தச்சரீர அவசானந்தன்னிலிசையும் மோக்கமது
அந்தமில்லாக் குணத்தினனுக்கு ஆசாரியனும் பெரியநம்பி
சிந்தை தன்னுளிவை யெல்லாம் சிந்தித்திருந்தானிளையாழ்வான்
முந்தியிவைநீ மொழியென்று மொழிந்தருள்வா னருளாளன்.
தேனும்பாலுமமுது மொத்த இவ்விரண்டு பாசுரங்களையும் நித்யாநுஸந்தானம் செய்வது ப்ரபந்நர்களுக்கு மிகவும் பாங்கானது.
தண்பொருநல்வருங்குலசேகரன்,-
*நல்லநான்மறையோர் வேள்வியென்னும் பாசுரத்தின் (8-4-5) ஈட்டில் நம்பிள்ளை யருளிச்செய்த ஸ்ரீஸூக்திகள் இவை காண்மின்;- ‘அநந்ய ப்ரயோஜநராகில் இவர்களநுஷ்டானத் துக்ரு ப்ரயோஜன மென்னென்னில்; ஸ்வயம்ப்ரயோஜனமாதல், பகவத் ப்ரதிபக்ஷங்களை யழியச் செய்யும் அபிசாரம் பலமாதல். எம்பெருமானாரைப் போலே யாயிற்று இவ்வூரில் ப்ராஹ்மணரும்”
த்ரைகுண்ய விஷயா வேதா:* என்றவுடனே கீதாசார்யன் * யாவாநர்த்தஉதபாநே ஸர்வதஸ்
ஸம்ப்லுதோதகே, தாவாந் ஸர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜாநத:* என்றருளிச் செய்தான். இங்கு ஸ்வாமியின் பாஷ்யம் –”ஸர்வேஷ ச வேதேஷு வைதிகஸ்ய முமுக்ஷோ: யதேவ மோக்ஷஸாதநம், ததேவ உபாதேயம் நாந்யத்” என்றுள்ளது. ஸ்வாமி தேசிகன் தாத்பர்ய சந்த்ரிகையில் வேதோ தித மபி ந மோக்ஷஸாதநவ்யதிரிக்த முபாதேயம், அநதிக்ருத த்வாத் “ என்று விவரித்தருளினார். புபுக்ஷக்கள் செய்து போருமது க்ஷேபிக்கத்தக்கதன்றென்று முடிந்தது.
(365-366)ஸ்ரீகாஞ்சி மஹாவித்வான் ஸ்ரீஉ வே. P. B. அண்ணங்கராசார்யஸ்வாமி பட்டர் ஸ்வாமி விஷயமாக அநுக்ரஹித்த பஞ்சரத்மாலிகை பொழிப்புரையோடு ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சந பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. மூலம் மட்டும் இங்கு வெளியிடப்படுகிறது.
பஞ்சரத்நமாலிிகை
ஸ்ரீவேதவ்யாஸபட்டாரக குலஜலதே: கௌஸ்துபாபோவதீர்ண:
ஸ்ரீசைலாசார்யவர்ய: ஸகலசுபகு ம்போநிதி: ஸாத்விகாக்ர்ய:
சாந்தோ தாந்தோ நஸூயு: ஸ்வசரணகமலத்வந்தவ ஸேவாரதாநாம்
மந்த்ரம் மந்த்ரார்த்ததத்த்வம் ஸகலமுபதிசந் ஸர்வஸேவ்ய:–1-
வாசாமகோசர மஹாகுண கூசநாத ஸத்வம்சதுக்தநிதிசந்த்ரமஸோஸ்ய ஸூரே
சிஷ்யௌகபாக்யவசதோத்ய சதாபிஷேக – திவ்யோத்ஸவ: ப்ரசலதீதி மஹாந் ப்ரமோத:
அசீத்யப்தபூர்த்திர் யதா போபவீதி
ப்ரஸித்தப்ரபாவஸ்ய ஸூரேரமுஷ்ய,
ததைவ ப்ரபூயாத் சதாப்தீப்பூர்த்தி: திகந்தேஷ ஜேஜேது கீர்த்திச்ச பத்ரா.
முக்க்யா: சடாரிர் முநீந்த்ரோ யதீந்தர: க்குபாளு :
ததா ஸௌம்யஜாமாத்ரு யோகிந்த்ர
ஸதாசார்யவர்யா குஹப்தேரமுஷ்ய
ப்ரசஸ்திம் ப்ரக்ருஷ்டாம் ஸம்ருத்திம்
ஸுபுத்ரபௌத் சிஷ்யவர்க்க ஸம்பதாம் ஸப்ருத்திபாக்[திசந்து.
குரூத்தமோ குணம்புதிர் விசுத்தகீர்த்தி. பூஷண:
ஸ ஏஷ திவ்யமங்களாட்ய ஸூரிரேவமேவ போ:
சகாஸ்து மாத் சே ஐதே திசந் த்ருசம் ஸ்தா முதா
பத்ரம் கர்ணேபிரித்யாதிச்ரௌதவாக்யை குதீரிதாம்
பத்ரஸந்ததிமச்சித்சாம் அச்நுவீத மஹா ஸௌ
இத்தம் வாதிபயங்கர வம்சீயாண்ணங்கரார்ய தாஸேத
வேதவ்யாஸ மஹாகுரு சதாபிஷேகோத்ஸ்வே ந்யவேதி முதா
ஸமந்தே.
ஸ்ரீயதே.]-இதற்கு கர்மணி வ்யுத்பத்தியென்று பெயர்; மற்ற ஐந்தும் கர்த்தரி வ்யுத்பத்திகள்
ஸ்ரீயதே யென்பதற்கு-ஸர்வேச்வரனைத் தவிர்த்து மற்றெல்லாராலும் ஸேவிக்கப்
படுகிறவள் என்று பொருள். * ஈச்வரீம் ஸர்வபூதா நாம் * என்கிறபடியே ஸகல
ப்ராணிகளுக்கும் தஞ்சமாயிருக்கையாலே இவளை எல்லாரும் ஸேவித்துத் தங்கள்
ஸ்வரூபம் நிறம்பெறுகிறார்களென்கை. *லக்ஷ்மீ : புருஷகாரத்வே நிர்திஷ்டா
பரமர்ஷிபி :, மமாபிச மதம் ஹ்யேதத் நாந்யதா லக்ஷணம் பவேத் என்கிற பகவச்
சாஸ்த்ர வசனத்தின்படியே இவள் எம்பெருமான் பக்கலிலே புருஷகாரக்குத்யம்
செய்து அவரவர்களின் அபீஷ்டத்தை நிறைவேற்ற வல்லவளாகையாலும், இதில்
வேறொருவர்க்கும் ஸாமர்த்தியமில்லாமையாலும் இதற்காகவே இவள் அனைவரா
லும் ஆச்ரயிக்கப்படுகிறாளென்க. ஸ்வாமி தேசிகன் சதுச்ச்லோகீ பாஷ்யத்தில்
அஸ்தி கர்மார்ஹபலதே பத்யௌ க்ருத்யத்வயம் சரிய : நிக்ரஹாத்வாரணம்
காலே ஸந்துக்ஷணமநுக்ரஹே. * என்று காரிகை யிட்டருளினார்.-பலன் கொடுப்பவன் எம்பெருமான்; பிராட்டி செய்வதாவது, அவன் நிக்ரஹோந்முகனாயிருக்குமளவில் ஸதுபாயங்களாலே அந்த நிக்ரஹத்தைப் போக்குவள்; அவன் அநுக்ரஹோ முகனாயிருக்கும்போது அதை மேன்மேலும் பெருகச் செய்வள் என்பதாம் இத்தகைய சக்தி விசேஷம் இவளுக்கிருப்பதனால் ஸர்வை: ஸ்ரீயதே என்றதாயிற்று.
[ச்ரயதே.] அநவரதமும் எம்பெருமானைப் பற்றியிருக்கிறாளென்கை. எல்லாரும் இவளையாச்ரயித்து ஸ்வரூபம் நிறம்பெறுவதுபோல, இவள்தானும் அவனையாச்ரயித்து ஸ்வரூபம் நிறம்பெறவேண்டுகையாலே தன்னுடைய சேஷத்வத்திற்கு உசிதமாக அவனைத் தொழுகிறாளென்பதுதவிர, மற்றொரு காரணமும் முக்கியமாக வுண்டு;கர்மா நுபத்த பலதாந் ரதஸ்ய பர்த்து: (கோதாஸ்துதி- 25) என்று தேசிகனருளிச் செய்தபடியே சேதநர்களின்அபராதங்களைப் பத்தும் பத்தாகக் கணக்கிட்டு தண்டிக்கவல்ல எம்பெருமா
னுடைய ஸ்வாதந்திரியத்தையும், காலதத்வமுள்ள தனையும் அனுபவித்தாலும்
தீராத பாவங்களைப்பண்ணிவைக்கும் சேதநர்களின் அபராதபாஹுள்யத்தையுங்
கண்டு எந்த ஸமயத்தில் எந்த சேதநன்வந்து நின்று என்ன அனர்த்தம்விளையுமோ!’ என்கிற பயத்தாலும் எம்பெருமானை ஒரு க்ஷணமும் விட்டு அகலாதே ஸதா ஸேவித்திருப்பள்.
[3. ச்ர்ணோதி.] அடியார்களின் விண்ணப்பங்களைத் திருச்செவிசாத்துகிறளென்கை. எம்பெருமானார் சரணாகதிகத்யத்திலே * பகவந்நாராயணாபிமதாது ரூபேத்யாதி தொடங்கி * அகில ஜகந் மாதரம் அஸ்மந் மாதரம் அசரண்ய சரண்யாம் அநந்ய சரணச் சரணமஹம் ப்ரபத்யே* என்று சொல்லிப் பெரியபிராட்டியாரை சரணம் புகுந்தார். ஸர்வலோக சரண்யனான எனது நாதனிருக்க என்னை எதற்காகச் சரணம்புகுகிறீர்? என்று பிராட்டி திருவுள்ளமாக, இப்போது அடியேன் தேவரீடத்தில் செய்தது புருஷகார ப்ரபத்தியென்று காட்டிக்கொண்டு * பாரமார்த்திக பகவச்சரணாரவிந்த இத்யாதியாக அடுத்த சூர்ணிகையாரம்பித்து“ பகவச்சராரவிந்த சரணாகதி– யதாவஸ்திதா அவிரதா அஸ்து மே.’ என்று விண்ணப்பஞ்செய்தார். இதனால் என்னதேறுகிறது? எம்பெருமான் திருவருளால் ஸித்திக்க வேண்டிய பேற்றை அடுத்தபடியாக அவன் திருவடிவாரத்திலே பிரார்த்திக்கப் போகிறேன்; அந்தப்பேறு உம்முடைய புருஷகாரபலத்தினாலன்றி ப்ராப்தமாகாதென்று “ச்ரேயோ ந ஹ்யரவிந்தலோசந ம : காந்தா ப்ரஸாதாத்ர்தே
இத்யாதி ஸ்ரீஸூக்திகளால் உணருகிறேனாதலால், அதற்குறுப்பாக உம்மைத்
தஞ்சமாகப் பற்றுகிறேனென்று விஜ்ஞாபித்தபடியாயிற்று. இங்ஙனே அவரவர்கள்
பண்ணும் விண்ணப்பங்களை ச்ரத்தையோடு திருச்செவி சாத்துகிறாளென்பது ச்ர்ணோதி. யென்பதன் பொருளாயிற்று
[4 ச்ராவயதி ] பேறுதருபவன் எம்பெருமானாகையாலே அவன் திருச்செவியிலே படுத்தியே காரியம் ஸாதிக்கவேண்டியிருத்தலால் உசித ஸமயம்பார்த்து அவன் திருச்செவிசாத்தும்படி செய்வளென்கை. இப்படி பிராட்டி செய்தருள்வதுண்டென்பதை ஸ்வாமி கோதாஸ்துதி
யில் *ஆர்த்ராபராதிநி ஐநேபி அபிரக்ஷணார்த்தம் ரங்கேச்வரஸ்ய ரமயா விதிவேத்
யமாநே * என்பதனால் ஸ்பஷ்டமாகத் தெரிவித்தருளுகிறார் ரமயா விநிவேத்ய
மாநே என்றது காண்க.-மணவாளமாமுனிகளின் பொன் சொற்களைக் கேளீர்;-
” இச்சேதனனுடைய அபராதங்களைக் கணக்கிட்டு நீரிப்படி தள்ளிக் கதவடைத்தால் இவனுக்கு வேறொரு புகலுண்டோ? உமக்கு மிவனுக்கு முண்டான ஸம்பந்த
விசேஷத்தைப்பார்த்தால்*உறவேல் நமக்கிங்கொழிக்க வொழியாதென்கிறபடியே
குடநீர்வழித்தாலும் போகாததொன்றன்றோ? ஸ்வம்மானவிவனை லபிக்கை ஸ்வாமியான உம்முடைய பேறாயன் ே விருப்பது,* *எதிர்சூழல் புக்குத்திரிகிற உமக்கு
நான் சொல்லவேணுமோ? ரக்ஷணஸாபேக்ஷனாய் வந்தவிவனை ரக்ஷியாதபோது
உம்முடைய ஸர்வ ரக்ஷகத்வம் விகலமாகாதே? அநாதிகாலம் நம்முடைய ஆஜ்
ஞாதிலங்கனம் பண்ணி நம்முடைய சீற்றத்துக்கு இலக்காய்ப் போந்து விவனை
அபராதோசி தண்டம் பண்ணாதே அத்தைப் பொறுத்து அங்கீகரித்தால் சாஸ்த்ர
மர்யரதை குலையாதோ? என்றதன்றோ திருவுள்ளத்திலோடுகிறது. இவனை ரக்ஷி யாதே அபராதா நுகுணமாக நியமித்தால் உம்முடைய க்ருபாதிகுணங்கள் ஜீவிக்
கும்படி என்? அவை ஜீவித்ததாவது இவனை ரக்ஷித்தாலன்றோ நியமியாதபோது
சாஸ்த்ரம்ஜீவியாது ; ரக்ஷியாதபோது க்ருபாதிகள் ஜீவியாது ;என்செய்வோம்?
என்று தளரவேண்டா; சாஸ்த்ரத்தை விமுகர் விஷயமாக்கி க்ருபாதிகளை அபிமுகர் விஷயமாக்கினால் இரண்டும் ஜீவிக்கும். ஆனபின்பு இவனை ரக்ஷக்ஷித்தருளீர் என்று உபதேசிப்பளாயிற்று. –
ஸ்ராவயித்ருத்வம் உபதேச கர்த்ருத்வம் இரண்டும் பர்யாயமாதலால், பிராட்டி எம்பெருமானுக்குப் போலே சேதநனுக்கும் உபதேசிப்பதுண்டாகையாலே அதையுங் கொள்ளலாமிங்கு;-சேதநனை நோக்கி உன் அபராதத்தின் கனத்தைப் பார்த்தால்உனக்கு ஓரிடத்திலும் காலூன்றவிடமில்லை; ஈச்வரனாவான் நிரங்குச ஸ்வதந்திரனாகையாலே அபராதங்களைப் பத்தும்பத்தாகக் கணக்கிட்டு தண்டிக்கலாயிருக்கும், இவ்வனர்த்தத்
தைத் தப்பவேண்டில் அவன் திருவடிகளிலே தலை சாய்க்கையொழிய வேறு வழி
யில்லை; அபராத பரிபூர்ணனான வென்னை அவன் அங்கீகரிக்குமோ? தண்டி
யானோ? என்று அஞ்சவேண்டா.ஆபிமுக்க்யமாத்ரத்திலே அகிலாபராதங்களை
யும் பொறுக்கைக்கும் போக்யமாகக் கொள்ளுகைக்குமீடான குணங்களால் புஷ்கல
னென்று லோகப்ரஸித்தனாயிருப்பானொருவன்; ஆன பின்பு நீ சுகமே வாழ
வேண்டியிருந்தாயாகில் அவனை யாச்ரயிக்கப்பார் ‘ என்று உபதேசிப்பளாயிற்று.
தாடகாதாடகேயவதம்நேர்ந்தபோது பிராட்டியின் பரிணயமேயாகவில்லை. பரசுராமன் தலையறுப்புண்ணும்படி செருக்கி வந்தான்; பாலாநாம் மம புத்ராணாம் அபயம் தாதுமர்ஹஸி * என்று சக்ரவர்த்தி நிலைகலங்கும் படி வந்தான்; அவன் பிராட்டி ஸந்நிதியாலே விபத்தில்லாமே மீண்டான். அயோத்யாகாண்டத்தில் * இவள் ஸந்நிதியாலே காகம் தலை பெற்றது ப்ரஸித்தம். ஆரண்ய காண்டத்தில் சூர்ப்பணகைக்கு தாடகைக்குப் போலே வதம் நேர்ந்திருக்கவேணும்; பிராட்டி அருகேயிருந்ததனால் செவி மூக்கோடேபோயிற்று. விராதவதமும் கரதூஷணாதி சதுர்தச ஸஹஸ்ரராஸ வதமும் நட்ந்த காலத்திலே பிராட்டி அருகில் தானே யிருந்திருக்கிறாள்; எப்படி வதம் நடந்தது?’ என்று சிலர் கேட்பதுண்டு ; மாரீசவத காலத்தில் எப்படி பிராட்டி அருகேயில்லையோ அப்படியே தான் விராத கர தூஷணாதி வத காலத்திலும் அருகேயில்லை என்கிற மருமமுணர வேண்டும்.விராதவத காலத்தில் பிராட்டி அருகேயில்லை; பிராட்டியை ஓரிடத்தில் தனியே விட்டிட்டு விராதன் ராம லக்ஷ்மணர்களை வேறொரு வனத்திற்கொண்டு செல்ல அங்கே தான் யுத்தம் நடந்து முடிந்தனன்.பதினாலாயிரம் அரக்கர்கள் அடர்ந்து வந்தபோது பிராட்டிக்குத் திருமேனிக்காவலாக அப்பால் சென்றிருக்கும்படி லக்ஷ்மணனைப் பெருமாள் நியமித்தது ( ஆர. 20 ஸர்க. சுலோ 4 ல்) வ்யக்தம், வதமெல்லாம் முடிந்த பிறகு * பர்த்தாரம் பரிஸ்வஜே * என்னும்படி பிராட்டி அணைக்க வந்ததைச் சொல்லுமிடத்து (30-37) * ஏதஸ்மிந்நந்தரே வீரோ ல மணஸ் ஸஹ ஸீதயா. கிரிதுர்க்காத் விநிஷ்க்ரம்ய ஸம்விவேசாச்ரமம் ஸு * என்று ஸ் ஷ்டமாகச் சொல்லியிருக்கையாலே பிராட்டியும் லக்ஷ்மணனும் கிரி துர்க்கத்தில் ஏகாந்த வாஸம் செய்து கொண்டிருந்தமை விளங்கிற்று. ஆகவேதான் இந்த கெட்டத்தில் பெருமாள்-அ ஹாயசூ ! * என்றுரகுவீர கத்யத்தில் புகழப்பட்டார். இதற்குப் பிறகு நடந்த வாலி வதாதிகள் பிராட்டியின் அஸமக்ஷத்திலே நடந்தவை யென்பது பற்றிச் சொல்லவேணுமோ ; ஆகவே முன்னம் கூறின வ்யாப்தி வெற்றி பெற்றதாயிற்று.
” கோவியல்தருமமுங்கள் குலத்துதித்தோர்கட் கெல்லாம், ஓவியத்தெழுத வொண்ணாவுரு
வத்தாய்! உடைமையன்றோ, ஆவியைச் சனகன் பெற்ற வன்னத்தை அமிழ்தின் دو வந்த, தேவியைப் பிரிந்த பின்னைத் திகைத்தனை போலுஞ்செய்கை.? என்பதாக.
இந்த கம்பர் பாசுரத்தைக் கேட்டு ரஸித்த அரசாணிபாலை வேங்கடாத்வரி லக்ஷ்மீ
ஸஹஸ்ரத்தில் காருண்யஸ் தபகே (9.) த்வய்யேவாயததே க்ருபா ரகுபதே:-என்கிற சுலோகத்தை யமைத்தார்.
சபரி மோக்ஷ பந்யாஸம்.–ரகுவீரகத்யத்தில் . சபரி மோக்ஷ ஸாக்ஷிபூத!” என்று ஸ்வாமி யருளிச் செய்திருக்கையாலே சபரீமோக்ஷமென்று விஷய நிர்தேசம் பண்ணுவது பொருத்த முடையதே. ஆனால் ஸ்வாமி தாமே ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் ” பகவதி பரத்வாஜே புக்திஸ் ததா சபரீகரே” என்று மிக வியப்புடன் அருளிச் செய்திருக்கையாலும், ஸ்ரீ ராமாயண நித்ய பாராயண முடிவில் மங்களாசாஸனமாக அநு ஸந்திக்கும் சலோகமாலிகையில் “ஸாதரம் சபரீதத்பல மூலாபிலாஷிணே என்دو றிருக்கையாலும் சபரியைப் பற்றிப் பேசும்போது “ சபரீஸபர்யா ?’ என்று விஷயநிர்தேசம் பண்ணுவது பாங்கு, அடியேன் இங்கு இரண்டையும் அநுபவிக்கிறேன்.
பெருமாள் முன்னம் சபரியைப் பற்றித் தெரிந்துகொண்டது த கபந்தனால். அவன் பெருமாளுக்குச் சில விஷயங்களை உள்ளவாறு தெரிவித்தபடியைச் சொல்லுமிடத்து * ஸ சாஸ்ய கதயாமாஸ சபரீம் தர்மசாரி ம்,ச்ரமணீம் தர்மநிபுணாம் அபிகச்சேதி ராகவம்.*என்றது. இங்கு ( தர்மசாரிணீம்) என்றும் (தர்மநிபுணாம்) என்றும் கூறியுள்ளது பற்றிப் பிறகு விமர்சிப்போம் (அபிகச்ச) என்று அவன் சொன்னதும், உடனே மஹர்ஷி வாக்கிலும் ஸோப்ய கச்சந் மஹாதேஜாச் சபரீம் சத்ருஸூத : என்று வந்திருப்பதும் முன்னம் குறிக்கொள்ளத்தக்கது.(ச்ரமணீம் அவேக்ஷஸ்வ) என்றோ(சரமணிம் கடாக்ஷய) என்றோ கபந்தன் சொல்லியிருக்கலாம். மஹர்ஷியும் (சபரீம் ஆஸஸாத) என்றோ (சபரீம் உபஜகாம ) என்றோ சொல்லியிருக்கலாம். (அபிகச்ச) என்று அவன் சொன்னதும், (அப்யகச்சத்) என்று இவர் சொன்னதும் விமர்சிக்கப்படவேண்டும். ஒரு தேவதா விசேஷத்தில் செய்யும் வழிபாடு தன்னையே அபிகமனமென்று சொல்லுவது முறை. அந்தரங்க ப்ரதிபத்தியோடு செய்யும் அணுகுதல் அபிகமன மெனப்படும் அத்தகைய வழிபாட்டுக்குரிய விலக்ஷண வ்யக்தி விசேஷம் சபரி யென்பவளென்று விளங்கிற்று-இங்கு(மஹாதேஜா :)எனறும்(சத்ருஸூதந:) என்றும் இரண்டு விசேஷணங்கள் பெருமாளுக்கிட்டது பாத பூரணார்த்தமன்று: ஸாபிப்ராயம். சபரியின் ஆச்ரமத்துக்கு எழுந்தருளும்போதே பெருமாஞடைய திருமுகமண்டலம் மிகவும் தேஜஸ்வியாயிற்றென்கிறது (மஹாதேஜா 🙂 என்பதனால்.சரம பர்வ நிஷ்டையைக் காணப் பெறுகிறோமென்கிற மகிழ்ச்சி முகத்திலே தெரியலாயிருந்தது, ப்ரதம பர்வ நிஷ்டர்களான பகவத் பக்தர்களைக் காண்பது அரிதன்று: சரம பர்வ நிஷ்டர்களெனப்படுகிற ஆசார்ய சுச்ரூஷ்ா நிரதர்களையும் ஆசார்யாபிமாந பாத்ர பூதர்களையும் காண்பது பெருந்தவப் பயனன்றோ? ஆக இந்த ஸந்தோஷம் முகத்திலே பொலிய நின்றதனால் (மஹாதேஜா) என்றது. இதற்குமேல் (சத்ருஸூதந:)என்றது அந்த சபரிக்கு ப்ராப்தி ப்ரதிபந்தகங்களாய்ச் சில விரோதிகளிருந்தனவாக அவளுடைய வாக்கில் நின்றுமே தெரியவருவதனால் அந்த விரோதி நிரஸநத்தைத் தம்முடைய கடாக்ஷ வீக்ஷணத்தினால் செய்தருள ஸங்கல்பித்தார் பெருமாள் என்று தெரிவிக்கின்றது.
மணவாளமாமுனிகள் “ரகுகுலதிலகராய் ஆசார ப்ரதாநரான பெருமாள் சபர்யா பூஜிதஸ் ஸம்யக்ராமோ தசரதாத்மஜ: என்னும்படி, வேடுவிச்சியாய் வைத்தே குருசுச்ரூஷையிலே பழுத்து ஜ்ஞாநாதிகையாய்த் தன் நாவுக்கு இனிதாயிருந்த பலமூலாதிகளையெல்லாம் இங்குத்தைக்கென்று ஸஞ்சயித்துக்கொண்டு வரவு பார்த்திருந்த ஸ்ரீசபரி, தன் ஆதராநுகுணமாகத் தன் கையாலே அமுது செய்யப்பண்ண, அதிஸந்துஷ்டராய் அமுது செய்தருளினார் என்றருளிச் செய்துள்ள ஸ்ரீஸூக்திகள் விசேஷித்து அநுஸந்திக்கத்
தக்கவை-தன் நாவுக்கு இனிதாயிருந்த” என்கிற வார்த்தையைமணவாளமாமுனிகள் மூலப்ரமா மொன்றின்றி அருளிச்செய்யார்.* பூர்வே பூர்வேப்யோ வச ஏத்தூசு* என்று வேதமோ தின ப்ரபலப்ரமாணமிருந்தே தீரும்.-இதையநுஸரித்தே ப்ரஸித்தப்ரபாவரான கோவிந்த ராஜார்யரும் ராமஸ் ஸமாகமிஷ்யதீதி ஸ்வா தூ நி பலாநி ஆஸ்வாத்யாஸ்வாத்ய பரீ ய நிக்ஷிப்தவதீ இதி ப்ரஸித்தி: என்றெழுதியுள்ளார். இப்பொருளெல்லாம் (ஸம்யக் பூஜித:)என்றதில் அடங்கியேயுள்ள தென்பர் பெரியோர். கீழே சரபங்கமுனிவர் அகஸ்த்ய
முனிவர் முதலானார் செய்தது ஸாமாந்யபூஜை; இதுவே பெருமாள் திருவுள்ளத்தால்
ஸம்யக்பூஜை யென்னலாயிருந்தது.
தயாசதகத்திலே * நிஷாதா நாம் நேதா கபி குலபதி: காபி சபரீ * என்று ஸ்ரீராமாவதாரத்தில் விசேஷா நுக்ரஹ பாத்ர பூதரான வ்யக்திகள் மூவரை யெடுக் கின்ற ஸ்வாமி குஹப் பெருமாளையும் சபரியையும் எடுத்திருக்கின்றார். இவ்விருவர்க்குமுள்ள வாசியைச் சிறிது ஆராய்வோம். குஹன் சில உணவுப் பொருள்களைக் கொணர்ந்து கொடுத்து இவற்றைத் திருவுள்ளம் பற்றி யருள வேணுமென்று வேண்ட, ‘ எனக்கு வேண்டா: (அயோத்திக்கு இன்னும் திரும்பிப் போகாமல்) விடாய்த்திருக்கின்ற குதிரைகளுக்குக் கொடு ‘ என்றார். மனிதர்களின் உணவு வேறு; மிருகங்களின் உணவு வேறு ; புல்லையும் கொள்ளையுமா குஹன் பெருமாளுக்குக் கொடுக்கவந்தான். மதுபர்ககமன்றோ கொடுக்கவந்தது. அதைப் பெற்றுக் கொள்ளவில்லை. * நசவர்த்தே ப்ரதிச்ரஹே என்று ஏதோ சொல்லிக் கழித்து விட்டார். சபரி அந்த குஹனைவிட உயர்ந்த ஜாதியில்தோன்றினவளல்லள். அவன் சபரன், இவள் சபரி. சபரனிடம் மறுத்துவிட்டவர் சபரியிடம் மறுத்துக்கூறாமல் அர்ச்சிதோஸ்மி த்வயா பக்த்யா * என்று சொல்லி உகந்து ஏற்றுக் கொண்டது ஏன்? இது ஆராயத்தக்கதன்றா ?*கீழே அடியேனெடுத்துக் காட்டின ஸ்ரீவசனபூஷண வியாக்கியான ஸ்ரீஸூக்தியில் “குரு சுச்ரூஷையிலே பழுத்து ஜ்ஞாநாதிகையாய்” என்று மணவாளமாமுனிகளருளிச் செய்திருப்பது உயிரான வார்த்தை. சபரியிடம் மிகச்சிறந்ததொரு தருமம் குரு சுச்ரூஷை யென்பதிருந்தது. இதை கபந்தன் பெருமாளுக்குத் தெரிவித்தனன்.
*ச்ரமணீ சபரீ நாம காகுத்ஸ்த! சிரஜீவிநீ த்வாம் து தர்மே ஸ்திதா நித்யம் * என்றும் ; *ச்ரமணீம் தர்மநிபுணாமபிகச்ச என்றுமுள்ள கபந்தனது வார்த்தைகளில் தர்ம சப்தத்தினால் வக்ஷிதம் குருசுச்ஷையேயன்றோ. பெருமாளும் சபரியயைக் கண்டவுடனே க்ஷேமம் வினவுகையில் *கச்சித் தே குருசுச்ரூஷா ஸபலாசாருபாஷிணி!* என்று, உன்னுடைய குருசுச்ரூஷை நிறைவேறியதா? என்று கேட்டிருக்கிறார். சபரி பேசின பேச்சினினிமையைக்கொண்டும் இவள் குருசுச்ரூஷை பண்ணிப் பழுத்தவள் என்று பெருமாள் தாம் கண்டறிந்ததை –சாருபாஷிணி–என்ற விளியினால் விளக்கினர். அவளும் தான் குருசுச்ரூஷை செய்ததை யா நஹம் பர்யசாரிஷம் என்பதனால்தெரிவித்திருக்கிறாள், இத்தகைய உத்தம தருமம் குஹனிடத்திலில்லாமை பற்றியே அவன் தந்த வுணவுகளைத் திருவுள்ளம் பற்றவில்லை. ஆக, சபரீஸபர்யையின் ப்ரகாரமும் ஏற்றமும் விஜ்ஞாபிக்கப்பட்ட
தாயிற்று.
ஸ்ரீவிஷ்ணுபுராணத்தில் பராசரபகவான் முக்திம் கதாந்யா கோபகந்யகா என்று சிந்தயந்தி யென்கிற ஆய்ப்பெண்ணின் முக்தி ப்ராப்தியைச் சொல்லுமிடத்து [ ணபுண்யசயா]என்றும் [வி நாசேஷபாதக ] என்றும் ப்ராப்தி ப்ரதிபந்தகங்கள் கழிந்ததைக் கூறினார்–அவள் தன் வாயினால் ப்ரதிபந்தகங்கள் கழிந்தமையைக் கூறவில்லை. மூச்சடங்கிப் போனவளாகையாலே ப்ராப்யனான கண்ணனையும் ஸேவிக்கப் பெற்றிலள். சபரி அங்ஙனன்றிக்கே சக்ஷஷாதவ ஸௌம்யேந பூதாஸ்மிரகுநந்தந! என்று பெருமாளை ஸாாத்கரித்து ஸம்போதித்து, தன்னுடைய பிரதிபந்தகங்கள் நிவ்ருத்தமான படியை (தவ ஸெளம்யேந சக்ஷஷா பூதாஸ்மியென்று) தன்வாய்விட்டுச் சொல்லி, இதோ மோக்ஷம் போகிறேனென்று சொல்லிக்கொண்டேபோனாள் இங்கே ஒரு அருமையான சாஸ்த்ரார்த்தம் கேளீர். சபரி பெருமாளை ஸாக்ஷாத் நாராயணனாக நன்கறிந்தவள் ; ராமா! உன்னுடைய திருவடி வாரம் செல்லுகிறேன் ; உன்னுடைய லோகம் புகுகிறேன் என்னாமல் இங்கு நான் எந்த ஆசார்யர்களுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தேனே அந்த ஆசார்யர்களின் திருவடிவாரம் சென்று சேருகிறேன்’ என்று சொன்னாள். இதையுட்கொண்டே ஆளவந்தார் ஆசார்ய ஸ்துதியில் அத்ர பரத்ர சாபி நித்யம் யதீயசரணெள சரணம் மதீயம் என்றருளிச்செய்தார். இதில் பரத்ரசாபி என்றதுகாண்க. ஸ்ரீசூர்ண பரிபாலனத்தில் “அடியேனுடைய தகப்பனார் (அல்லது தாயார் ) ஆசாரியன் திருவடியடைந்தார்” என்று சொல்லுவதற்கும் பத்ரிகைகளில் எழுதுவதற்கும் சபரியே வழிகாட்டியென்றுஉணர்க. ப்ரஸங்காத் பாடப்பிறழ்வுபற்றின விண்ணப்பமொன்று கேண்மின். * சக்ஷஷா தவ ஸௌம்யேநேத்யாதி ச்லோகத்தின் உத்தரார்த்தம் ‘ கமிஷ்யாம்யக்ஷயாந் லோகாந் த்வத்ப்ரஸாதாத் அரிந் தம! ’ என்று பல பதிப்புகளிலும் மாறியிருக்கிறது. கோவிந்தராஜரும் மாறின பாடத்தையே வியாக்கியானித்திருப்பதாகக் காண்கிறது; இதுவும் பிறழ்வே அந்த கோவிந்தராஜர் ” சபரீம் தர்மசாரி ம் என்றவிடத்து வியாக்கியானத்தில் பாதமூலம் கமிஷ்யாமி யா ந ம் பர்யசாரிஷம் – இதி வ யமாணத்வாத்’ என்றெழுதியிருப்பதைக் கண்டு தெளிக.
அறுதொழிலந்தணர் வணங்குந்தன்மையை-அறுதொழிலென்பதும் ஷட்கர்மமென்பதும் பரியாயம். அந்தணர்களுக்கு ஷட்கருமங்களாவன – அத்யயனம், அத்யாபனம்யஜநம், யாஜநம், தானம், ப்ரதிக்ரஹம்என்பவை அத்யயனம் வேதமோதுதல். அத்யாயனம்-வேதமோதுவித்தல், யஜனம் வேள்வி செய்தல் (யாகம் செய்தல்: ) யாஐநம்-யாகம் செய்வித்தல். தானம் -ஸத்பாத்திரங்களில் கொடுத்தல். ப்ரதிக்ரஹம் -ஸத்துக்கள் விரும்பிக் கொடுப்பவற்றைப் பெற்றுக்கொள்ளுதல். ஆக இவையாறும் ஷட் கருமங்கள் (அறுதொழில்கள் எனப்படும்.)”யஸ்ய வேதச்ச வேதீ ச விச்சித்யேதே த்ரிபூருஷம், ஸ வை துர்பராஹ்மணோ ஜ்ஞேயஸ் ஸர்வகர்ம பஹிஷ்க்ருத:[யாவனொருவனுக்கு வேதமும் வேள்வியும் மூன்று தலைமுறை இல்லாதபடி விச்சின்னமாய்விடுகிறதோ, அவன் எந்த கருமத்திற்கும் அதிகாரியல்லாதபடி துர்ப்ராஹ்மணனென்று பழிக்கப்படுகிறான் ) என்று பிரமாணமிருப்பதால் நாம் வேத வேள்விகளை ஸர்வாத்மநா வஞ்சித்து விடலாகாது: யதாசக்தி இவற்றில் அந்வயித்தேஆகவேண்டுமென்று விஜ்ஞாபிக்கிறேன். ஆழ்வார்கள் திவ்ய தேச வாஸிகளைவருணிக்கும்போது ” நல்ல வெந்தழல் மூன்று நால்வேதம் ஐவேள்வியோடாறங்கம் வல்லவந்தணர் மல்கிய நாங்கூர் ” என்றும், ‘ அங்காமறைந்து வேள்விநால் வேதமருங்கலைபயின்று, எரி மூன்றும் செங்கையால்வளர்க்கும் துளக்கமில் மனத்தோர் திருக்கண்ணங்குடி’ என்றும், ‘ தெருள்கொள்நான்மறை வல்லவர் பலர்வாழ் சிரீவரமங்கலநகர் “ என்றும் அருளிச்செய்கிறார்கள்.அஷ்டவர்ஷம் ப்ராஹ்ணமூபநயீத என்றபடி கர்ப்பாஷ்டமமாகிய ஏழாவது பிராயத்தில் உபநயனத்தைப்பண்ணி உபாகர்மமான பிறகு வேதமோதத் தொடங்கினால் ஆறேழு வருஷத்தில் க்ரமாந்தம் அத்யயனம் செய்து முடிக்கலாம்.நாற்பத்து நான்கு பிரச்னங்கள் கொண்ட ஸப்தகாண்ட ஸம்ஹிதையும் முப்பத்
தாறு பிரச்னங்கள் கொண்ட ப்ராஹ்மண பாகமுமாகிய எண்பது பிரச்னங்களை ஓதுவதென்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.–ஸம்ஹிதைக்கு மேல், பதம்,க்ரைமம், ஜடை, கனம் என்றிவை ஏற்பட்டிருக்கின்றன. இவற்றுள் ஜடையும் கனமும் ஸபாரஞ்ஜனமாகும் . கரமந்தான் பகவத் கைங்கரியத்திற்குப் பெரும்பான்மையாக உதவுமது. கரமம் திடப்படுவதற்காகப்பதம் ஓதவேண்டியது அவசியமாகிறது.
இதில் உதாத்த ஸ்வரத்தைக்கொண்டு தச் சப்த ரூபமென்றும், அநுதாத்த ஸ்வரத்தைக் கொண்டு யுஷ்மச் சப்த ரூபமென்றும் நிர்ணயிக்கலாகிறது.-யத: என்பது ஒருபதம். இதுவும் வேதத்தில் அடிக்கடி வரும். இதில் முதலெழுத்து உதாத்தமாக விருப்பது பலபல விடங்களில்; அது அநுதாத்தமா யிருப்பது சிற்சில விடங்களில். உதாத்தமாயிருந்தால் (யஸ்மாத்) என்று அர்த்தமுள்ள அவ்யயமாகும். அநுதாத்தமாயிருந்தால் (யந்தம், யந்தெள, யத 🙂 என்று
“இண்-கதௌ’‘ என்கிற தாதுவில் சத்ர்ப்ரத்யயாந்தமாகத் தேறுகிற யச்சப்தத்தின்
த்வி தீயாபஹு வசநாந்தம் ( வர்க்கம் லோகம் யத:)என வருமிடங்களில் ஸ்வர்க்
கத்தை யடைகின்றவர்களை என்று பொருள்படும். (ய 🙂 என்கிறவிது பஞ்சமீஷஷ்டீ
விபக்திகளில் ஏகவச நரூபமாகத் தேறுவதுமுண்டு. (யதாம்) என்று ஷஷ்டீபஹ
வசநரூபமும் வேதத்தில் ஓதப்பட்டு வருகிறது. எனினும் (யத:) என்கிற பதம்
ஸ்வரபேதத்தினால் அர்த்தபேதத்தை யுடையதென்று காட்டுவது இங்கு முக்கியம்.
வேதத்தில் ச்ரத்தயா என்கிற பதமும் தேவ: என்கிற பதமும் ஓரிடத்திலல்ல; பலவிடங்களில் ஓதப்பட்டு வருகின்றன. இவற்றின் ஸ்வரம் எங்கும் ஒரேவிதமாகத்தானுள்ளது. ச்ரத்தயா என்கிற பதத்தில் (யா) என்கிற மூன்றாமக்ஷரமானது எங்கும் ஸ்வரிதமே யொழிய ஓரிடத்திலும் உதாத்தமன்று. இதை ஸம்ஹிதையிலும் பார்க்கலாம், ப்ராஹ்மணத்திலும் பார்க்கலாம். ப்ரக்ருதமான ச்ரத்தயா தேவ: என்கிற வாக்யமுள்ள அநுவாகத்திற்கு அடுத்த அநுவாகத்திலேயே காணலாம். இப்பதம் உதாத்தாந்தமாக நிற்பது எங்குமே கிடையாது
இதற்கடுத்த தேவ:) என்கிற பதத்தையுமெடுத்துக்கொள்வோம். இது வேதத்தில் இரண்டாயிர மிடங்களில் வருவது, எங்கும் முதலெழுத்து அ தாத்தமாயும் இரண்டாமெழுத்து உதாத்தமாயுமேயிருக்கும்.-இப்படி நியதஸ்வரங்களான இவ்விரண்டு பதங்களையும் ப்ரக்ருக ஸ்தலத்தில் பாஷ்யகாரர்கள் விபரீத ஸ்வரமாகக்கொண்டு அர்த்தம் செய்திருப்பது வேதபுருஷனுக்கு ஈஷத்தும் அபிமதமன்று. இங்கு அதேவ: என்பதே உண்மையான பதம்.
ஸ்வரிதாந்தமான ச்ரத்தயாபதமும் உதாத்தாதியான அதேவபதமும் ஸம்ஹிதமாம்
போது இப்போது இங்கு உள்ள ஸ்வர ஸந்நிவேசம் தன்னடையே வந்து நிற்கும்.
வேதமோதினவர்களுக்கு இப்படி நூருயிரமிடங்கள் நினைவுக்கு வரும். ஆக அதேவ:
ச்ரத்தயா தேவத்வமச்துதே என்றுதான் பாஷ்யம் செய்யவேணும்.
நமக்குத் தலையான வேதாந்தசாஸ்த்ரமான சாரீரகமீமாம்ஸையில் (ப்ரஹ்ம
ஸூத்ரத்தில்) சிலபல குறைகளிருப்பதாகக் கண்ட ஆழ்வார்கள் தங்களுடைய
திவ்வியப் பிரபந்தங்களிலே அக்குறைகளைத் தீர்த்தருளினார்கள்.-எம்பெருமான் திருவவதாரங்கள் செய்தருளுகிறானென்பதை அந்த மீமாம்ஸா சாஸ்த்ரம் சொல்லவில்லை. அவன் லக்ஷ்மீபதி யென்பதையும் சொல்லவில்லை அவன் நாராயண விஷ்ணு வாஸுதேவாதி சப்த வாச்யனென்பதையும் சொல்லவில்லை. இவற்றை நம் ஆழ்வார்கள் தமது சிவ்யஸூக்திசுளில் அடுத்தடுத்து அருளிச்செய்துள்ளார்கள்.வேதத்தில் பலவிடங்களில் அவதாரம் ஓதப்பட்டுள்ளது. மூன்றிடங்களை மட்டும் இங்கெடுத்துக் காட்டுகிறேன்.[அஜாயமாநோ பஹுதா விஜாயதே] இது அந்தணர்களனைவருமறிந்த வேதவாக்கியம்.எம்பெருமான் கர்மநிபந்தனமான பிறப்பில்லாதவனாயினும் கருணையினாலே பல அவதாரங்களைச் செய்தருளுகிறானென்று பொருள். மற்றொரு வேதவாக்கியம் (ஸ உ ச்ரேயாத் பவதி ஜாயமா :] அப்பெருமான் பிறக்கப்பிறக்க சாணையிலிட்ட மாணிக்கம் போலே ஒளிமல்கப் பெறுகிறானென்பது பொருள். இதை யடியொற்றியே ஆழ்வார் திருவாய்மொழியில் * எளிவருமியல்வினன் நிலைவரம்பில பல பிறப்பாயொளிவரும் * என்றருளிச் செய்தார். இன்னொரு வேதவாக்கியம் [பிதா புத்ரேணபித்ருமாந் யோநி யோநௌ] * மகனொருவர்க்கல்லாத மாமேனி மாயனான அவன் தனக்குப் புத்ரப்ராயரானவர்களைப் பிதாவாகக்கொண்டு யோனிகள் தோறும் பிறக்கிறனென்கை. இந்த ச்ருதியை யுட்கொண்டே நம்மாழ்வார் திருவாய் திறந்தருளும் போதே * உயிரளிப்பானெந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாயிமையோர் தலைவா!*என்றருளிச் செய்தார். ஆக அவதாரங்கள் வேதத்தில் ஸ்பஷ்டமாகச் சொல்லப்பட்டுள்ளன வென்பது தேறிற்று.
பஹூநி மே வ்யதீதாநி ஐந்மாநி தவ சார்ஐ ந.-தசாவதாரங்களென்று ஒரு ப்ரஸித்தி வந்திருக்கின்றது. *பத்தினாய தோற்றமோடு * என்கிறார்திருமழிசைப்பிரான். மீனாயாமையுமாய் நரசிங்கமுமாய்க்குறளாய்க் கானாரேனமுமாய்க் கற்கியா மின்னங்கார்வண்ணனே * என்கிறார் நம்மாழ்வார் . அன்னமுமீனுருவுமாளரியுங் குறளுமாமையுமானவனே ஆயர்கள் நாயகனே என்கிறார் பெரியாழ்வார். * மீனோடாமை கேழலரி குறளாய் முன்னுமிராமனாய்த்தானாய்ப்பின்னுமிராமனாய்த்தாமோதரனாய்க் கற்கியுமானான் தன்னை என்கிறார் திருமங்கையாழ்வார். கூரத்தாழ்வானும் பட்டரும் தங்கள் தங்சுள் ஸ்தவங்களிலே தசாவதாரஸ்துதியை இயற்றுகிறார்கள். தேசிகனும் ‘ தேவோ நச் சுபமாத நோது தசதா நிர்வர்த்தயந் பூமிகாம் ‘ ‘ என்று தொடங்கி தசாவதார ஸ்தோத்ரமியற்றி யுள்ளார். இவற்றுக்கெல்லாம் சிகரமாக மஹாபாரதத்தில் சாந்திபர்வணி மோக்ஷ தர்மத்திலிருந்து ஒரு அரிய பெரிய விஷயம் விஜ்ஞாபிக்கிறேன்.
அதில் முந்நூற்று முப்பத்தொன்பதாம் அத்யாயத்தில் நாரதமஹர்ஷி ச்வேதத்வீபத்தில் எம்பெருமானைக் கண்டு பல விஷயங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளுகிறார். பவிஷ்யத்தான தசாவதாரங்களையும் சரித்திர வாலாற்றுடன்பகவான் தன் சோதிவாய் திறந்து பணிக்கக்கேட்டுணர்கின் ார். க்ருணு நாரத! தத்வேந ப்ராதுர்ப்பாவாந் மஹாமுநே, மத்ஸ்ய : கூர்மோ வராஹச்ச நரஸிம்ஹச்ச வாமந:, ராமோ ராமச்ச ராமச்சக்ருஷ்ண: கல்கீதி தே தச. பூர்வம் மீநோ وو பவிஷ்யாமீ …. என்று தொடங்கி தசாவதார சரித்திரங்களை அநதிஸம் ேபவிஸ்தரமாகக் கூறுகின்றார் பகவான்; அதைச் சிறிது விஜ்ஞாபயே(1) நான் முதலில் மீனமாக அவதரித்துப் பெரியகடலில் முழுகுகின்ற உலகங்களை வெளிப்படுத்திப் பிரஜைகளை நிலைநிறத்துவேன். (2) ஹேமகூடபர் வதத்துக்கொப்பான கூர்மாவதாரஞ்செய்து அமிருதத்துக்காக மந்தரகிரியைத் தரிப்பேன். (3) பிறகு வரா ரூபத்தைத் தரித்துக்கொண்டு கடலில் மறைந்த பூமியை எல்லாப் பிராணிகளுடையவும் நன்மைக்காகத் தன்னிலையில்கொண்டு வந்து சேர்ப்பேன். அப்போது ஹிரண்யாக்ஷனென்கிற அஸுரனைக் கொல்லப் போகிறேன். (4) பிறகு நரஸிம்ஹாவதாரத்தையெடுத்து ஹிரண்யகசிபுவென்கிற அஸுரனையும் தேவகாரியத்துக்காகக் கொல்வேன் (5) பின்பு விரோசனனுடைய புத்திரனான பலியென்கிற பெரிய அஸுரன் உண்டாவான். அவன் இந்திரனையும் அவனது ராஜ்யத்திலிருந்து நழுவச்செய்வான். அவனால் மூவுலகமும் அபஹரிக்கப்பட்டு இந்திரனும் விலகியிருக்கும்பொழுது காச்யபரிடமிருந்து அதிதியினிடத்தில் பன்னிரண்டாவது புத்திரனாகப் பிறப்பேன் பிரமசாரியாகி யாகசாலையை அடைந்து உத்தமர்களான வேதியர்கள் துதிக்க அவனுடைய யாகத்தைத் துதிப்பேன். அதைக் கேட்டுப் பலியானவன் பிரீதியடைவான். பிறகு அவனிடம் மூன்றடி அளவுள்ளஸ்தலம் கொடுக்கவேண்டுமென்று யாசிப்பேன். அவன் மந்திரிகளால்தடுக்கப்பட்டும் என்னிடம் மிகவும் பிரீதியுடன் கொடுப்பான். பிறகு தானஜலமானது என்கையில் விழுந்தவுடன் மூன்று அடி களுக்குள்ளடங்கியராஜ்யத்தை இந்திரனுக்கு அளிப்பேன். தேவர்களை அவரவர் அதிகாரங்களில் நிலைக்கச்செய்வேன். மஹாபலியைப்பாதாளத்தில் தள்ளுவேன். (6) திரேதாயுகத்தில் பரசுராமனாக அவதரிப்பேன். ஸேனைகளும் வாகனங்களும் நிறைந்த கூத்ரிய ஜாதியை நாசம்ெய்வேன். (7) திரேதாயுகத்துக்கும் த்வா பர யுகத்துக்கும் ஸந்தியாம்போது தசரதபுத்ரராமனாகிப் பூமண்டலாதிபதியாவேன்.ஏகதரும் த்விதரும் த்ரிதருடைய சாபத்தால் தம் உருவமிழந்து வானரத் தன்மையை அடைவார். அந்தவம்சத்தில் பிறக்கும் வானரர்கள் எனக்குத் தேவகாரிய நிமித்தம் துணையாவர்கள். ராவணனைப் பரிவாரத்துடன் கொல்வேன். அவனுடைய ராஜ்யத்தைக் கிரமப்படி விபீஷணனுக்குக் கொடுப்பேன். நான் அயோத் தியில் வஸிக்கின்ற எல்லாரையும் அழிவற்ற லோகத்தை அடையச் செய்வேன்(8) த்வாபரயுகத்துக்கும் கலியுகத்துக்கும் ஸந்தியானது முடியும்பொழுது என்னுடைய அவதாரமானது மதுராபட்டணத்தில் உண்டாகும்.நான் அந்த அவதாரத் தில் தேவகண்டகர்களான அநேகம் அஸரர்களைக் கொன்று குசஸ்தலியென்கிற த்வாரகாநகரத்தை இருப்பிடமாகச் செய்வேன். அந்த நகரத்தில் வஸித்துக் கொண்டு, நரகன்முரன் முதலான அஸ்ரர்களைக் கொல்வேன். ப்ராக்ஜோ திஷ நகரத்திலுள்ள அஸஸுரர்களைக் கொன்று அதன் செல்வங்களைக் குசஸ்தலிக்குக் கொண்டுவருவேன். தவிரவும் ஒணானாகப் பிறந்த ந்ருகனென்பவனை சாபத்தி னின்று விடுவிப்பேன். அந்த அவதாரத்தில் பேரனான அநிருத்தனுக்காகச் சோணிதபுரமென்கிற பாாஸுரனுடைய நகரத்தையடைந்து பெரும்போர்புரிவேன். பாணஸுரனுக்கு நன்மையைச் செய்வதில் பற்றுள்ள சிவனையும் ஸுப்ரமண்தனையும் ஜயிப்பேன். பிறகு பாணனை ஜயித்து உடனே ஸௌபமென்கிறநகரத்தில் வளிப்பவர்களெல்லாரையும் கொல்வேன். காலயவனனுடையவதமும் என்னாலேயே நடக்கும். கம்ஸனையும் கேசியையும் அரிஷ்டனையும் சாணூரனையும் முஷ்டிகனையும் ப்ரலம்பனையும் தேனுகனையும் கொல்வேன். யமுனையின் பெரிய மடுவில் காளியனை வசஞ்செய்வேன். கோகுலத்தில் இந்திரன் வர்ஷிக்க ஏழு ராத்திரிகோவர்த்தன மலையை அநாயா மாகத் தரிப்பேன். பிறகு மழை நின்ற பொழுது பர்வதததின் உச்சியிலிருந்து கொண்டு உடனே இந்திரனோடுகூட ஸம்வாதம்செய்வேன். பௌண்ட்ரக வாஸுதேவனையும் கொல்வேன். கிரிவ்ர ஜத்தில் ஜராஸந்தனென்னும் அஸுரன் அரசனாவான். என்னுடையபுத்தியின் ஆலோசனையினால் அவனுடையவதம் உண்டாகும். தர்மபுத்ரருடைய யாகத்தில் சிசுபாலனைக் கொல்வேன். எனக்கு இந்திர புத்ரனான அர்ஜுனனொருவனே நல்லஸஹாயகனாவான். அப்பொழுது யுதிஷ்டிரரைத் தம்பிகளோடு அவருடைய ராஜ்யத்தில் ஸ்தா பிப்பேன். பூமியின் பாரத்தை இறக்கிவிட்டு ஆத்மஞானத்தை ஆச்ரயித்து துவாரகைக்கும் பிரளயத்தைச்செய்வேன். த்வாரகையை ஸமுத்ரத்தில் முழுகச் செய்வேன்…….இவ்வண்ணமாகக் கதை சென்றுகொண்டேயிருக்கிறது.எம்பெருமான் தானே சோதிவாய் திறந்து அருளிச்செய்த வரலாறுகளுக்கு மிகுந்த ஏற்ற முண்டல்லவா?
உயிர் மருத்துவன் ஒருவனே. அவனைத்தான்-மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணா!* என்று பெரியாழ்வாரழைக்கிறார். வைத்யோ நாராயணோ ஹரி: என்று வைதிகர்கள் சொல்லுவர்கள். ஸஹஸ்ரநாமத்தில்(நிர்வாணம் பேஷஜம் ) பிஷக் * என்று பிஷக்காகச் சொல்லப்படுகிறான்.*மருந்தும் பொருளுமமுதமுந்தானே என்கிறார் பேயாழ்வார்-மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கென்று பெருந் தேவர் குழாங்கள் திருநாட்டிலே பிதற்றிக்கொண்டிருப்பதாக நம்மாழ்வாரருளிச் செய்கிறார். திருநாட்டிலும் மருந்து வேண்டியிருக்கிறது. இதன் மருமத்தை த்வயத்தின் முடிவிலுள்ள நம:பதம் காட்டும்;திருவாய்மொழியில் (7-1-5) *ஆர்மருந்தினியாகுவார்? என்கிறார். ‘ஆர்மருத்துவராகுவார் ” என்றாராகில் பொருத்தமாயிருக்கும். ஆர்மருந்தாகுவாரென்றது விலக்ஷண ப்ரயோகமாகவன்றே வுள்ளது; ஆழ்வார் அசேதனமான மருந்தைக் கொள்பவரல்லர் என்பது இதனால் விளங்கிற்றன்றே. கைகால் முளைத்த மருந்துதான் உயிர்நோயைத் தீர்க்கும் மருந்தாகும். சுடராழி சங்கேந்தியிருக்கும் மருந்தையே நம்மாழ்வார் நாடுகிறார். நம்மாழ்வாரைச் சேர்ந்த நாமும் அதையே நாடுவோம். அந்தமருந்தின் பிரதிநிதிகள் ஆசாரியர்கள். * பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகிவந்து ஸேவை ஸாதிக்கின்றனர்.–எருத்துக்கொடியுடையானும் பிரமனுமிந்திரனும், மற்றுமொருத்தரும் இப்பிறவியென்னும் நோய்க்கு மருந்தறிவாருமில்லை *–போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை பேர்த்துப் பெருந்துன்பம் வேரறநீக்கித் தன்தாளின்கீழ்ச் சேர்த்து அவன் செய்யுஞ்சேமத்தை யெண்ணுவாரில்லையே !
ஒரு பெரிய குரு இருக்கிறார்; அவரிடத்தில் நாங்கள் உபதேசம்பெறுகிறவர்கள்; அவ்வுபதேசத்தின்படியே நடந்துகொண்டும் வருகிறோம்; அதனால் எங்களுக்கு ஒரு நோயும் வருவது கிடையாது. ஆகவே எங்களுக்கு சிகித்ஸாபேக்ஷையே நேருவதில்லை என்றார்கள்.
இங்ஙனம் சொல்லக்கேட்ட டாக்டர் ” அது எவ்விதமான உபதேசம்? நான்அதைத் தெரிந்துகொள்ளலாமோ? என்ன; ஆகா, நன்றாகத் தெரிந்துகொள்ளலாமென்று
கூறி அதைத் தெரிவித்தார்கள்; தினமிரண்டு; வாரமிரண்டு; பக்ஷமிரண்டு; மாஸ
மிரண்டு ; ருது இரண்டு; அயனமிரண்டு; வருஷமிரண்டு- இதுதான் உபதேசம் ?
என்றார்கள் டாக்டருக்கு இது சிறிதும் விளங்கவில்லை. பிறகு ‘இந்த ஸூத்ரங்களை நீங்களே விவரிக்கவேணும்’ என்று அவர்களை வேண்டிக்கொள்ள அவர்களே
விவரித்தார்கள்.
தினமிரண்டு=போஜனமென்பது, தோன்றினபோதெல்லாம் செய்யலாகாது”ருதம் த்ா ஸத்யேந பரிஷிஞ்சாமீதிஸாயம் பரிஷிஞ்சதி, ஸத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமீதி ப்ராத:” என்று மந்த்ரமோதின இரண்டுவேளை மட்டுமே போஜனம் செய்யவேண்டும்; இடைப்பலகாரம், கடைப்பலகாரம் என்பது எதுவும் கூடாது .இதுதான் தினமிரண்டு என்றதன் கருத்து.போஜனமும் நித்திரையுமாகிற விரண்டும் வ்யவஸ்திதமாயிருக்கவேணு மென்பதையும் இதற்குக் கருத்தாகக் கொள்ளலாம் வாரமிரண்டு= வாரத்தில் இரண்டு நாளாவது ஆலயஞ்சென்று தொழுதுவரவேண்டும்;இதனால் தினப்படி சென்று தொழக்கூடா தென்பதில்லை. இரண்டுநாள் தவறவே கூடாதென்றபடி பக்ஷமிரண்டு = இரண்டுவாரங் கூடினால் ஒரு பக்ஷமாகிறது. வாரந் தோறும் ஒரு அப்யஞ்ஜநம் [எண்ணெய்தேய்த்துக் கொள்வது தவறலாகாதென்றபடி. மாஸமிரண்டு=இரண்டு பக்ஷங்கள் கூடினால் ஒரு மாஸமாகிறது; ஏகாதசி தோறும் உபவாஸம் தவறலாகாதென்றபடி. ருது இரண்டு =இரண்டு மாதங்கள் கூடினால்ஒரு ருதுவாகிறது; “மாஸி மாஸி க்ருஹஸ்தா நாம்”‘ என்றபடி. மாதத் திற்கொருமுறை வபனம் செய்வித்துக்கொள்ள வேண்டு மென்றவாறு. இதுவும் தேஹாரோக்யத்திற்குச் சேர்ந்த காரியமேயன்றோ அயனமிரண்டு=ஆறுமா தங்கள் சேர்ந்தால் ஓர் அயனமாகிறது மூன்று மாதங்களுக்கொருமுறை விரேசனங் கொள்ளவேணு மென்றபடி. ஸம்வத்ஸரமிரண்டு =சிலர் நித்யம் தேசாடனமே செய்து கொண்டிருப்பர். சிலர் ஒருநாளும் ஊரைவிட்டுக் கிளம்பாமலே யிருப்பர். இரண்டும் பிசகு. ஆறுமாதத்திற் கொருமுறை திவ்யதேச ஸேவையையோ சிஷ்யாநுக்ரஹத்தையோ வியாஜமாகக்கொண்டு சிலநாள்வெளி ஸஞ்சாரமும் செய்துவர வேண்டு மென்றபடி. ஆக இந்த நியமங்களை விரதமாகக்கொண்டிருப்பவர்களுக்கு நோய் நொடி வாராது; வைத்யாபேக்ஷையிராது என்றதாயிற்று. இந்த ஸதுபதேசம் அவ்வூரில் ஸபலமாயிருப்பதுகண்டு இங்கு நம்மால் ஜீவிக்கஇயலாதென்று வெளியேறிவிட்டார் டாக்டர் ; அவ்விடத்தில் விரைவில் மஹாதனிகராயினர்.
(319-320-)நம்மாழ்வார் திருவாய்மொழிக்கு (1-2-11ல்சீர்த்தொடையாயிரம் என்றுஒரு திருநாமம் சாற்றியுள்ளார்-ஆழ்வார் தமது செந்தமிழ்ச்செஞ்சொல் மாலையை எம்பெருமானது பலவகைத் திருக்கல்யாண குணங்களையிட்டுத் தொடுத்தருளினர். அவை பரத்வ ஸெளலப்யங்கள்.-“நால்வர் கூடி நான்கு பிள்ளைகள் பெற்றனர்; நால்வர்கூடி ஒரு பிள்ளையைப் பெற்றனர்; அறுவர்கூடி ஆயிரமாயிரம் பிள்ளைகளைப் பெற்றனர்” என்றொரு விநோத வசனமுண்டு. (1) நால்வர்கூடி நான்கு பிள்ளைகள் பெற்றது ஸ்ரீராமாவதாரத்தில்.(2) நால்வர்கூடி [ தேவதேவகீ நந்தகோபயசோதைகள்கூடி] ஒரு
பிள்ளையைப் பெற்றது ஸ்ரீ க்ருஷ்ணாவதாரத்தில். இவ்விரண்டும் ப்ரஸித்தம்.
அறுவர்கூடி ஆயிரமாயிரம் பிள்ளைகள் பெற்றதைக் கூரத்தாழ்வா னருளிச்செய்கிர். கப்ரக்ருஷ்டம் விஜ்ஞா நம் * என்று தொடங்கி ப்ரவர குணஷட்கம் ப்ரதமஜம்
குணாநாம் நிஸ்ஸீம் நாம் கணநவிகுணாநாம் ப்ரஸவபூ:* என்று. ஞானம் பலம்
ஐச்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ்ஸஸு என்கிற ஆறு குணங்கள் கூடி தயாக்ஷாந்தி
ஒள தார்யாதிகளான அபரிமித கல்யாண குணங்களை ப்ரஸவித்தன வென்றபடி.
பட்டர் “குணபரீவாஹாத்மநாம் ஜந்ம நாம்-லாசயங்களில் நீர் மிகமிக நிரம்பிவிட்டால் அதற்குப்போக்குவீடுவிட்டு ஜலாசயத்தைத்ரிக்கச்செய்வது வழக்கம். அங்ஙனே நீர் வெளிப்படுவதற்குப் பரீவாஹமென்று பெயர். அதுபோல,பரமபதநாதனுடைய திருக்குணங்கள் அங்கு விலைசெல்லமாட்டாமையாலே பரீவாஹாபேக்ஷைஷ பிறந்து பரன்இந்நிலவுலகில் அவதரிக்கலாகிறது;-இருட்டறையில் விளக்குப்போலே ப்ரகாசிப்பது இங்கேயாம். விபவாவதாரங்களையும் அர்ச்சாவதாரங்களையும் நோக்கி இங்கே என்கிறது. முந்துறமுன்னம் விபவாவதாரங்களைக் கொள்வோம்.மத்ஸ்ய கூர்மாதிகளான விபவாவதாரங்களுள் ஸ்ரீராமாவதாரத்திலும் ஸ்ரீக்ருஷ்ணாவதாரத்திலுமே திருக்குணங்களைக் கொள்ளை கொள்ளையாக அனுபவிக்க ப்ராப்தமாகிறது . முராரி மஹாகவி அநர்க்கராகவ நாடகத்தில் –யதி ண்ணம் பூர்வைரிதி ஜஹதி ராமஸ்ய சரிதம் குணைரேதாவத்பிர் ஜகதி புநரந்யோஜயதி க: ? ஸ்வமாத்மா நம் கதமுபகரிஷ்யந்தி கவய : ?] இதன் கருத்தாவது – முற்காலத்தில் காவ்யநாடக சம்பூப்ரபந்தங்கள் இயற்றும் கலிகளெல்லாரும் ஸ்ரீராமசரித்திரத்தைப் பற்றியே எழுதிக்கொண்டிருந்தபடியால் நாம் அப் பெருமானை விட்டு வேறொரு பெருமானுடைய சரித்திரத்தைத் தொடுக்கலாமென்று பார்த்தால், இவ்வளவு திருக்கல்பாண குணங்களோடுகூடிய வேருெரு பகவத் வ்யக்தி யில்லையே! அது கிடக்க; கவிதாசாதுர்யம் பெற்ற கவிகள் தங்களுடைய வாக்வைபவத்தை ஸார்த்தகமாக்கிக் கொள்ளவேணுமானால் இராமபிரானைத் தவிர்த்துவேறு எந்த வ்யக்தியைக் கொள்ளமுடியும்? என்பது இந்த ச்லோகத்தின் கருத்து. ப்ரஸந்நராகவகர்த்தா இக்கருத்தைச் சிறிது மேம்படுத்திக் கூறுகின்றார். [ ‘ஸ்வஸுக்தீநாம் பாத்ரம் ரகுதிலகம் ஏகம் கலயதாம் கவீ நாம் கோ தோஷ : ஸ து குணகணாநாம் அவகுண ; யதேதைர் நிச்சேஷை : அபரகுணலுப்தை ரிவ ஜகதி அஸாவேகச்சக்ரே ஸதத கஸம்வாஸ வஸதி:] இந்த ச்லோகத்தின் கருத்தாவது:- ( இதில் ‘சக்ரே (அகெ ) என்கிறக்ரியைகர்த்தரிரூபம்அன்று,கர்மணி ரூபம்-செய்யப்பட்டானென்கை). கவிகளாய்ப் பிறந்தவர்களெல்லாரும் தங்கள் தங்கள் ஸூக்திகளுக்கு ஸ்ரீராகவனொருவனையே பாத்திரமாகக் கொள்வதானது கவிகளுடைய தோஷமன்று. ராகவனுடைய திருக்குணங்களின் தோஷமாகும் ஸகல குணங்களும் ஒன்று சேர்ந்து தாங்கள் நல்லதோர் ஆச்ரயம்பெற்று அதனால் மேன்மைபெறவேணுமென்று ஆசைப்பட்டுஸ்ரீ ராகவனிடத்திலே வந்து சேர்ந்து இனிது வாழ்கிறபடியால் ஸ்ரீராகவனொருவனே கவிதாபாத்ரமாகிருனென்றபடி.ஸ்ரீ ராமாயணத்தில் எந்தவிடத்தில் கயிறுபோட்டுப்பார்த்தாலும் இராமபிரானுடைய திருக்குணங்களே மிகமிகக் காணலாக்கும் . ஆரம்பத்திலுள்ள வால்மீகி நாரத ஸம்வாதம் குணப்ரசுரம். பிறகு அயோத்யாவாளி ஜனங்கள் முகமாகவும் சூர்ப்பணகை, தாரை,மந்தோதரி முதலானார் முகமாகவும் வால்மீகி பகவான் வெளியிட்ருள்ள திருக்குணங்கள் அபரிமித்தம். வையவந்த வாயாலே வாழ்த்துகிறபடி.-பெருமாள் இராவணனோடு போர்புரியும்போது ” இன்று போய் நாளைவா ” என்றதில் ஈடுபட்ட கூரத்தாழ்வான், (அதிமா நுவு ஸ்தவத்தில்) ” கோயம் குண: கதரகோடி கத: கியா.வாகஸ்ய ஸ்துதே பதம் அஹோ பத!கஸ்ய பூமி ” என்று வியக்கிர் பட்டர் ஸஹஸ்ரநாம பாஷ்யத்தில் ‘பரர்த்தி: பரமஸ்பஷ்ட” என்பது முதலான பதினாறு திருநாமங்கள் இராம பிரானுடைய திருக்குணங்களைச் சொல்லு கின்றனவென்று வியாக்யானிக்கத்தொடங்குகையில் இத உபரி ம்ருதஸஞ்ஜீவனம்-ராம வருத்தாந்த: ப்ரஸ்தூயதே ‘ என்று அவதாரிகை இட்டருளுகிறார். பல சொல்லி என! திருவடி மோக்ஷ ஸாம்ராஜ்யத்தையும் வெறுத்து ராம குணாநுபவத் திற கென்றே சிரஞ்ஜீவி பட்டம் பெற்று இவ்விபூதியிலேயே விளங்கிவருகிறார்.
திருவாய்மொழியில் (2-7-4) தேவுந்தன்னையும் பாடியாடத் திருத்தி” என்றவிடத்து ஈட்டில் தேவு மென்கிறது ஐச்வர்யத்தை. தன்னை என்கிறது ஆச்ரித பாரதந்த்ர்யத்தை. அதிறே தானான தன்மை. ‘ஆத்மாநம் நாதிவர்த்தேதா”‘ என்றானிறே. ஆத்மபூதம் பரதம் நாதிவர்த்தேதா ‘ எய்கிறானென்று சிலர்சொல்லு வர்கள் ” என்றருளிச் செய்து அதைமறுத்து பட்டர் நிர்வஹித்ததை அற்புத மாக எடுத்துக்காட்டுகிறார் நமபிள்ளை. சித்ரகூடத்தில் பர தாழ்வானுடைய ரார்த்தனையைத் தலைக்கட்டி வைக்க வேணுமென்று கூறுகின்ற வஸிஷ்ட பகவான் ஆத்மாநம் நாதிவர்த்தேதா ‘ என்று கூறுவதானது ஆச்ரித பாரதந்த்ர்யமாகிற ஸ்வஸ்வபாவத்தை இழக்கலாகாது என்று சொல்லுவதாகப் பொருள் செய்தருளி தேவுந்தன்னையும்’ என்ற திருவாய்மொழிப்பாசுரத்தோடு ஸமந்வயம் செய்திருப்ப தானது நம்பூர்வாசாரியர்களுக்கன்றி மற்றெவர்க்கும் நில மன்று. ஸஹஸ்ரநாமத்தில் “விஜிதாத்மா விதேயாத்மா” என்றவிடத்தில் ஆதி சங்கராசாரியர் அவிதேயாத்மா என்று பதம் பிரித்துர பங்கமாக வியாக்கியானம் செய்திருப்பதைத் தள்ளி விதேயாத்மா’ என்றேபதம் பிரித்து பட்டர்செய்தருளியிருக்கிற வியாக்கியானம் இனிமையே வடிவெடுத்தது. அவருடைய திருத்தகப்பனாரான ஆழ்வான் அநந்யாதீநத்வம் தவ கில ஜகுர் வைதிககிர: பராதீநம் த்வாம் து பரணத பரதந்த்ரம் மநுமஹே” என்கிறலோகரத்னத்தினால் எம்பெருமானுக்கு ஆச்ரித பாரதந்த்ர்யமே வடிவு என்பதை நிலைநாட்டியருளினர். பகவத்கீதையின் உள்ளே இறங்கினால் -அஹம் ஸர்வஸ்ய ப்ரபவ: இத்யாதி ச்லோகங்களினால் அவனுடைய பரத்வம் வெளிவரக் கூடும். கீதையின் ஆரம்பத்தை நோக்கினால் அவனது இயற்கையான ஆச்ரித பாரதந்த்ர்யமே வெளியாகும். கீதையின் ஆரம்பம் என்ன?”ஸே நயோருபயோர் மத்யேரதம் ஸ்த்தாபய மேச்யுத” என்று கூசாமல் சொல்லுகிறான் அர்ஜூநன். கண்ணபிரான் என்னை நியமிக்க நீ யார் ?’ என்று கேளாதே அப்படியே ஆஜ்ஞாபரிபாலனம் செய்திருக்கிறான்.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் இரண்டு திருமொழிகளினால் அற்புதமான அநுபவம் காட்டுகி ார். பரத்வத்தை முன்னே அநுபவித்து ஸௌலப் யத்தைப் பின்னே காட்டுவது ஒரு பதிகம். ஸெளப்யத்தை முன்னே காட்டிப் பரத்துவத்தைப் பின்னே காட்டுவது மற்றெருபதிகம். (10-6 எங்கானுமீதொப்ப தோர்மாய முண்டே என்கிற பதிகத்தில் பாசுரந்தோறும் மூன்றேகால் அடிகளால் அவனுடைய பரத்வத்தைப் பேசி ”அவன் காண்மினின்றாய்ச்சியரால் அளை வெண்ணெயுண்டாப்புண்டிருந்தவனே’ என்று ஸௌலப்யத்தைப் பேசித் தலைக்கட்டுகி ார். அந்தப் பெரிய திருமொழி தன்னிலேயே (11-5). மானமருமென்னோக்கிப்பதிகத்தில் ஒருத்தி முன்னடிகளால் ஸௌலப்யத்தையும் மற்றொருத்தி பின்னடிகளால் பரத்வத்தையும் பேசுவதாக வைத்து உபய குணங்களையும் அற்புதமாக அநுபவித்திருப்பது காண்க. இவையன்றோ அனுபவ ரகர்களின் படிகள்
எம்பெருமானார் சரணாகதி கத்யத்தில் திருவாபரண சூர்ணையில் “கிரீட குட
சூடாவதம்ஸ” என்று திருமுடிக்கான திருவாபரணத்தை மூன்றுபடியாகப்பேசி
யுள்ளார். கிரீட மென்றலும் மகுடமென் ாலும் சூடாவதம்ஸ மென் லும் ஒன்
கவே கொள்ளலாம். அதை மூன்றாக்கியருளிச் செய்ததன் கருத்து யாதெனில்;
நம்மாழ்வார் திருவிருத்தத்தில் “பாரளந்த பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து
வஞ்சித்தோரரசேயருளாய்” என்று மூன்று விஷயங்களுக்கு மகுடாபிஷேகம்
செய்து ‘அரசே! அரசே !! அரசே!!! என்று விளிக்கிறார்.
தாயெடுத்த சிறு கேர்லுக்கு உளைந்தோடுங் கண்ணன் ததிபாண்டனைச்
சரணமடைந்து தயிர்த்தாழியிலே மூச்சுத்திணறிக்கிடந்தது ஒருபுறம் = உனக்கும்
உன் தயிர்த்தாழிக்கும் உன்னைச் சார்ந்த இருபது மனைக்காரர்களுக்கும் மோக்ஷ
மளித்தேனென்பது ஒருபுறம்.
அட்டுக்குவி சோற்றுப் பருப்பதமும் தயிர்வாவியும் நெய்யளறுமடங்கப்
பொட்டத்துற்றி மழைவந்தெழு நாள் பெய்வித்துக் கொடியேறு செந்தாமரைக்
கை விரல்கள் கோலமுமழியாதே வாடாதே வடிவேறு திருவுகிர்நோவாமே குன்ற
மொன்றெடுத்தேந்திநிற்பது ஒருபுறம் — தேவோ வா தா நவோ வா த்வம் ய க்ஷோ
வா கந்தர்வ ஏவ வா? என்று வினவினாரைச்சீறி அஹம் வோ பாந்தவோ ஜாத
என்றது மற்றொருபுறம்.
ரதியாயிருக்கவேண்டிய தான் தேரோட்டி யென்னும் ஸாரதியாய் நின்று
குருக்ஷேத்ரத்திற்குத் தேரோட்டிக்கொண்டு செல்லுகிருன்; வழியிடையே பாலை
நிலம் குறுக்கிட்டது; குதிரைகள் விடாய்த்தன; ரதிகளாயிருக்கின்றபாண்டவர்க
ளும்விடாய்த்துக்கத்துகின்றனர். அப்போதுஎன்னநடந்தது? பெரியாழ்வார்ஸாதிக்
கிறார் (பெரியாழ்வார் திருமொழி (4-2-7) மன்னர் மறுக மைத்துனன்மார்க்கொரு
தேரின் மேல், முன்னங்குநின்று மோழை யெழுவித்தவன் மலை -இந்த சரித்திரம்
பெரியாழ்வா ரொருவரே பணித்தது. குருக்ஷேத்திரத்தில் அது…. இற்றைக்கும் காட்டப்படுமிடம். இப்படியாகப் பரத்வமும் ஸெளலப்யமும் கலந்து பரிமாறும் ஸ்ரீ க்ருஷ்ணாவதாரத்தில் எதை விடுவது? எதை யநுபவிப்பது?அது விது வுது என்னலாவனவல்ல என்னை உன்செய்கை நைவிக்கும் * என்றாராழ்வார். இதையே கூரத்தாழ்வான் ஸுந்தரபா ஸ்தவத்தில் இங்கிதம் நிமிஷிதஞ்ச தாவகம் ரம்யமத்புதம் அதிப்ரியங்கரம்*என்று மொழிபெயர்த்தாப்போலருளிச் செய்தனர். ஆழ்வார் பாசுரத்தில்
உன் செய்கை என்றது உயிர். ஆழ்வான் ஸ்ரீ ஸூக்தியில் (தாவகம்) என்றது ஜீவநாடி
ரத ஸப்தமியும்-ஸப்த தேர் அருளிச் செயல்களும் -1-தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத் தனியொரு தேர்கடவித் தாயொடு கூட்டிய. * [பெரியாழ்வார் திருமொழி (1-5-7)-2-உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு. (பெரியாழ்வார்திருமொழி 3-9-3.)-3-“மாதலி தேர் முன்புகோல் கொள்ள மாயனிராவணன் மேல். (நாச்சி யார் திருமொழி (5- 3)-4-களிறொழிந்து தேரொழிந்துமாவொழிந்துவனமே மேவி * [பெருமாள்திருமொழி 9 2)-5-தேரும் போயிற்றுத் திசைகளும் மறைந்தன செய்வதொன்றறியேனே.’ பெரிய திருமொழி 8-5-2]-6-உலக்கத்தேர்கொடு சென்றமாயமு முட்பட மற்றும்பல. [திருவாய்மொழி 6 – 4-9.]-7-ாயனன்று ஐவர் தெய்வத் தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள்தெரியப்பாரினில்சொ ன விராமானுசன் [ இராமா நுசநூற்றந்தாதி – 68]
எம்பெருமான் உபயவிபூதிநாயகனென்பதை சாஸ்த்ரமுகத்தாலறிகின்றோம்.
நம்மாழ்வார். ஆண்டாள் ஆகிய இருவரும் இதைப் பேசியுள்ளனர். நம்மாழ்வார்
திருவிருத்தத்தில் (33) அருளார் திருச்சக்கரத் கால் அகல்விசும்பும் நிலனும் இரு
னார் வினைகெடச்செங்கோல் நடாவுதிர்’ என்று எம்பெருமானுடைய உபயவிபூதி
நாதத்வத்தையருளிச் செய்தார் ஆண்டாள் தனது திருமொழியில் (11-3) பொங்
கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்றவெம்
பெருமா செங்கோலுடைய திருவரங்+ச் செல்வனார்’‘ என்று அருளியது காண்க.
எம் பெருமான் நித்திய விபூதி, லீலா விபூதி ஆகிய இவ்விரண்டையும் தன்னடியா
ரிட்ட வழக்காக்குவன் என்பதை ”பொன்னுலகாளீரோ புவனிமுழுதாளீரோ
தன்னலப்புள்ளினங்கா “ என்ற திருவாய்மொழிப் பாசுரத்தால் இனிதறியலாம்.
9-2-பதிகத்தில்”அச்சோவொருவரழகியவா” என்றே ஒவ்வொரு பாசுரமும் முடிகின்றது.
ஆனால் இப்பதிகம் திருநாகைப் பெருமானுக் கிட்டருளியது எபைதை பக்தர்கள் உணர்வதற்காக நிகமனப் பாசுரத்தில் ‘நாகையழகியாரை’ என்றருளிச்செய்தனர்.-அச்சோவொருவரழகியவா!* என்றே பாசுரந்தோறும் பணித்தது. அப்பெருமா
னுடைய திருநாமம் ஸௌந்தர்யராஜன் என்பதை நன்கு காட்டித்தரும்-இதே போன்று “வெருவாதாள் வாய் வெருவி” என்ற பதிகத்திலும் ஸ்ரீரங்க திவ்ய தேசத்தின் திருநாமத்தைப் பாசுரந்தோறும் அருளிச்செய்யாது நிகமனப் பாசுரத்தில் “திருவரங்கத்தம்மானைச் சிந்தை செய்த” என்பதனால் திருவரங்கனே பதிகத்
திற்கு விஷயபூதனென்றுணர்த்தி யருளினர்.
போய்ப்பாடுடைய * என்னுமிப்பதிகம்(2-2) யசோதைப்பிராட்டி தன் மகனான
கண்ணனைக் காதுகுத்த அழைப்பதாக அமைந்துள்ளது. முதற் பாசுரத்திலேயே
பெரியாழ்வார் தமது முத்திரையைப் பதிக்கின்றார். ”போய்ப்பாடுடைய நின்
தந்தையும் தாழ்த்தான் பொருதிறற் கஞ்சன் கடியன்காப்பாருமில்லைகடல்
வண்ணா வுன்னைத் தனிய போயெங்கும் திரிதி” என்று வயிறுபிடிக்கிறார். கூர்
வேல்கொடுந் தொழிலனான நாயகன் நந்தகோபனும் பசுமேய்ப்பினின்றும் மீண்
டிலன். கம்ஸனோ கடியன். நின்மேல் சுறுக்கொண்ட வன். நீயோ தனியே எங்கும்
திரிந்து விளையாடுகின்றாய். உன்னைக் காப்பார ருளர் ?” என்று பெரியாழ்வார்
அருளிச்செய்தவிது ஆழ்ந்து அநுபவிக்கத்தக்கது.
பெரிய திருவந்தாதியில் முபதாம் பாசுரம் வருமாறு:- இங்கில்லை பண்டு
போல்வீற்றிருத்தல் என்னுடைய செங்கண்மால் சீர்க்கும் சிறிதுள்ளம் அங்கே மடி
யடக்கி நிற்பதனில் வல்வினையார்தாம் ஈண்ட்டியெடுப்பதன்றா வழகு ?” என்று
எம்பெருமானுடைய ஸௌலப்ய குணத்தை அநுஸந்தித்த ஆழ்வார் அவ்வநுபவம்
திருவுள்ளத்தில் தாங்கமுடியாதபடி விஞ்சவே அந்த ஆனந்தத்தினால் பாவங்களை
குறித்துப்பேசுகின்றார்.
அழகர் கலம்பகத்தில்காணும் அழகொழுகும் தமிழ்ப்பாடலொன்று மலைக்கு மேல்’ என்று தொடங்குவதாம். பாடல வருமாறு:-“மலைக்குமேன்மலைவிளக்காம் அழகா வேத வான்குதலை நான்குதலை மகனார் வாளா, தலைக்கு மேல்எழுதுகின்றார் அரியென்றெங்கள் தாலத்தின் மேலெழுதச் சமர்த்திலாரோ, அலைக்குமேல் உடு மலராமிதக்குங்காலம் ஆலமொன்று காயா பூவலர்ந்தாற்போற்பச், சிலைக்குமேற் செங்கண்வளர் அனந்தானந்தா இருக்கிலிருக்கும் பொருளே யெம்பிரானே!” இப் பாடலின் சுவைமிக்க பொருள் கேண்மின். மாலிருஞ்சோலை மேய மணி விளக்காம் அழகனே! (உன்னிடம மறைகளையோது உணர்ந்தவனாகிய) உன் மகனாகிய பிரமதேவனது செயலைச் சொல்லுகிறேன் கேள் . அவனுக்கு ஏதோ எழுத வேண்டுமென்று தோன்றியது. உடனே எங்களது வலிய தலையில் பயனில்லாதவற்றை எழுதிவிட்டான். ( ரஹ்ம லிபி, தலையெழுதது என்பது) மெல்லிய எங்கள் நாவில் ‘அரி’ என்ற இரண்டெழுததை எழுதலாமாயிருக்க, பேதைமை நிறைந்த செயலை அவன் செய்தனனே. ஒரு தலைக்கு நான்கு தலைகளாகப் பெற்றிருந்தும் உன் மகன் இவ்வாறுசெய்தது அவனது குதலைச் சொற்களுக்கு இணங்கியேயுள்ளது என்று. ‘அரி’என்று எம்பெருமான் திருநாமத்தைக்கூறி உஜ்ஜீவித்துப்போகாத எங்கள் விதி இருந்தவாறிது’ என்பதனைச் சம காரமாகக் கூறி<னார் புலவரென்க.
இது அழகர் கலம்பகப் பாடலொன்றின் ஈற்றடியாம். பாடல் வருமாறு:
“இலையும் பசும்புல்லும் செஞ்சூட்டரவும் இடைச்சி மடித்தலையும் சயனங்கொண்டீர்
அடியேன் மனத்தாமரையில் அலையுஞ் செயலொழித்திங்கிருந்தாலென்ன வஞ்ச
னமா மலையுங் கடலும் பொரும் தமிழ்ச்சோலை மலையரசே “. சோலைமலைப் பெரு
மானே! நீர் இராமாவதாரத்தில் வானரஸேனையுடன் இலங்கை செல்லவேண்டிவருணனை வழிவேண்டி கடற்கரையில் தர்ப்பசயனத்தின்மீது இருந்தீர். ஊழிதோழியும் ஆலினிலைய தன்மேல் கண்வளர்ந்தருளினீர். இவ்வாறு புல்லிலும் இலையிலும் பள்ளிகொண்ட நீர் அடியேன் நெஞ்செனும் கஞ்ச மலரிலும் வந்திருந்தால்என்ன குறையுண்டாம்! என்று வினவுமிது இன்சுவையுடைத்து.
திருவேங்கடத்தந்தாதியிலுள்ள பாசுரம் (92) இது. பாசுரம் வருமாறு. ”பாவையிரங்குமசோதைக்குமுத்துப்பது மச்செல்விக் கேவையிரண்டன்ன கண்மணி நீலமிருசரணப்பூவையிரந்தவர்க்கின் பவளம் புல்லசுரர்க்கென்று மாவையிரந் திருவேங்கடத்தோங்கு மரகதமே” திரு வேங்கடமலையில் மரகதமொன்று உள்ளது. அம் மரகதம்ம முத்தாகவும், நீலமணி யாகவும், பவளமாகவும், வைரமாகவும் திகழும் அதிசயத்தை என்னென்பது! நிறத்தாலும் ப்ரகாசத்தாலும் திருவேங்கடவன் மரகதத்தை ஒக்கின்றான். இவனே யசோதைப் பிராட்டியின் நன்மைந்தனாகத் தோன்றியபோது முத்தென அவளால் போற்றப்பட்டனன். திருமாமகளுக்குக் கண்மணி நீலமாவான். (பிராட்டிக்குக் கண்ணின் கருவிழியனையான் என்க) திருவடியிணைகளைப் பிரார்த்திக்கும் அடி யவர்க்கு இன்பவளமாகிறான். (இன் பவளம் ) என்று பிரித்து ‘பவளம்‘ என்ற
பொருளும் இன்ப வளம்’ என்று பிரித்து பேரின்பப்பெருவளம் என்ற பொருளும்
காண்க.அசுரர்க்குவைரமாகிறான். (வைர -(1 ) இரத்தின விசேஷம் (2) பெரும்
பகை என்ற பொருள்கள் காண்க )எனவே மரகதமொன்றே ஒவ்லொருவர்க்கு ஒவ்
வொருவகை இரத்தினமாக விளங்குவதாகக் கூறியவிது சுவைமிக்கது.
“மின்னனையநுண்ணிடையார் விரிகுழல்மேல் நுழைந்த வண்டு இன்னிசைக்கும் வில்லிபுத்தூர்’ -[2-2.6)என்பது பெரியாழ்வார் பாசுரப் பகுதி. வடபெருங்கோயிலுடையான் ஆண்டாளுடைய திருக்குழலிலே படிந்த பூமாலைகளை மிக விரும்பினன் என்பது விசதம் அதனையே இங்கு அருளிச்செய்தனர் பட்டர்பிரான். மின்னனைய நுண்ணிடையார் ஆண்டாள். அவருடைய விரி குழல்மேல் நுழைந்த வண்டு வடபத்சாயி. “தூவியம் புள்ளுடைத்தெய்வ வண்டு என்று எம்பெருமான் வண்டாகக் கூறப்பட்டது காண்க. எனவே ஆண்டாளுடைய பெருமை இதில்காணப்படுவது ரஸிகர்கட்கு அருவிருந்தென்க.
திருவெழுகூற்றிருக்கையில் “நாற்றிசை நடுங்க அஞ்சிறைப் பறவையேறி
நால்வாய் மும்மதத்திருசெவி யொருதனி வேழத்தரந்தையை ஒரு நாளிருநீர்
மடுவுள்தீர்த்தனை”என்பதனால் ஸ்ரீ கஜேந்த்ராழ்வானுடைய கதை அநுஸத்
திக்கப்படுகிறது. நால்வாய்-நாலுதல்- தொங்குதல்,யானைக்கு வாய் தொங்குதல்
இயல்பு. மும்மதம் — இரண்டு கன்னங்களிலும் குறியிலும் ஆகமூவிடங்களில்
யானைக்கு மதப்புனல் சோரும். இருசெவி – இரு என்று பெருமையைச் சொல்
லிற்றாய், பெரிய காதுகளையுடையது என்றுமாம். யானைக்கு வாய் தொங்கு
தலும் மத நீர் பெருகுதலும் காதுக்கள் பெரிதாயிருத்தலும் அதிசயமான விஷய்
லன்றே; இதைச்சொல்லிவருண்ப்பதற்கு ப்ரயோஜனம் என்னெனில்:- ஒரு
குழந்தை கிணற்றில் விழுந்தபோது, அதனையெடுத்துக் கரையிலேபோட்டவர்
கள்’ அந்தோ ! இதொருகாலழகும் இதொரு கையழகும் இதொரு தலையழகும்
இதொரு முகவழகும் என்னே! என்று சொல்லிச் சொல்லி மாய்ந்து போவர்
ளன்றோ; அப்படியே எம்பெருமானும் யானையின் காலை முதலைவாயினின்றும்-விடுவித்த பின் அதனுடைய வாயும் செவியும் முதலிய அவயவங்களின் அழகிலே
ஆழ்ந்து கரைந்தமைதோற்ற அந்த பகவத் ஸமாதியாரல் ஆழ்வார் ஆனையை
வருணிக்கின்றாரென்க. இவ்விடத்தில் வியாக்கியான ஸ்ரீஸூக்தியின் போக்யதை
அனுபவிக்கத்தக்கது :- ” நால்வாய் மும்மதத் திருசெவி என்றாற் போலே சொல்
லுவதுக்குக் கருத்தென்னென்னில்; ப்ரஜை கிணற்றிலே விழுந்தால் காதுங் கண்ட
வாளியும் காலும் தலையும் வடிவும் இருந்தபடி காண்!’ என்பாரைப் போலே இடர்ப்
பட்ட இதினுடைய அவயவங்கள் அவனுக்கு ஆகர்ஷகமாம்படியாலே சொல்லு
கிறது” என்ற ஸ்ரீஸாக்தி காண்க.
பெரிய திருமொழியில் ( 4-6-7 ) பாசுரம் “மூத்தவற்கரசுவேண்டி முன்பு தூதெழுந்தருளி’ என்றுதொ டங்குவதாம். (மூத்தோனாகிய)யுதிஷ்டிரனுக்கு அரசுரிமையைப் பெறுவி தற்பொருட்டுக் கண்ணபிரான் துரியோதனனிடம் தூது சென்ற வரலாறு இதில் அருளிச் செய்யப்பட்டது. ஸ்ரீ குலசேகராழ்வார் இராம பிரானை “இளையவர்கட்கருளுடையாய் இராகவனே தாலேலோ” என்று இளையவர்கட்கருள்பவனாக (இளையவர்கள்- துர்ப்பலராய் இளைத்தவர்கள், தம்பிகள் என இரு வகைப் பொருள்காண்க) அருளிச் செய்கிறார். எனவே கண்ணன் மூத்தோர்க் கருளுடையவன், இராமன் இளையவர்கட்கருளுடையான் என்று இது வொருரஸோக்தியாகக் கொள்க.
நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாசிரியத்தின் முதல் பாசுரம் “மூவுல களந்த சேவடியோயே” என்று முடிவதாம். நம்மாழ்வாருடைய திவ்ய ப்ரபந்தங் களுள் திருவிருத்தம் ருக்வேத ஸாரமென்றும் திருவாய்மொழி ஸாமவேத ஸார மென்றும் திருவாசிரியம் யஜுர்வேத ஸாரமென்றும் பெரிய திருவந்தாதி அதர் வண வேதஸாரமென்றும் கூறுவர். பெரியோர். யஜுர்வேதம் ஸப்த காண்டங்களை யுடையது. திருவசிரியமும் ஏழு பாசுரங்களாலமைந்தது என்னுமி தொன் றினைக்கொண்டே ருவாசிரியத்தை யஜுர்வேதஸார மென்று கொண்டார்களல்லா பூர்வாசாரியர்கள். “மூவுலகளந்த சேவடியோயே” என்ற இவ்வடிதன்னிலே மறையின் நறுமணம் கமழ்தலை யறி “உருக்ரமஸ்ய ஸஹிபந்துரித்தா என்றவேத வாக்யத்தில் உலகளந்த வபதாநம் கூறப்பட்டது. அதனையே “மூவுலகளந்த சேவடியோயே ‘ என்பதனால் ஆழ்வார் அருளிச் செய்தனரென்க .
பெரிய திருவந்தாதியில் 44-ஆம் பாசுரத்தின் ஈற்றடியிது. பாசுரம் வருமாறு: “வகைசேர்ந்த நன்னெஞ்சும் நாவுடைய வாயும் மிகவாய்ந்து வீழா வெனிலும்- மிகவாய்ந்து மாலைத்தாம் வாழ்த்தா திருப்ப ரிதுவன்றே. மேலைத்தாம் செய்யும் வினை’. இப்பாட்டுக்குப் பிள்ளை திருநறையூரரையர் ஒருபடியாகவும் பட்டர் ஒரு படியாகவும் நிர்வஹிப்பராம். அரையர் நிர்வஹித்தபடி எங்ஙனே யென்னில்;எம்பெருமானுடைய ஏதோ வொரு குணத்திலும் ஏதோவொரு சரித்தி ரத்திலும் பொருந்தி நின்ற நல்ல மனமும். அந்த ஒரு குணசேஷ்டி தத்தையே பேசிப் புகழ்ந்துகொண்டிருச்கிற நாவோடு கூடின வாக்கும் அப் பெருமானுடைய எல்லாக் குணங்களிலும் எல்லாச் சரித்திரங்களிலும் பொருந்தி மேல் விழுந்து அனுபவிக்கமாட்டா திருந்தனவேயாகிலும், எப்படியாவது கஷ்டப்பட்டு ஸகல குணங்களிலும்ம்ஸகல சரித்திரங்களிலும், நெஞ்சு பொருந்தும்படி செய்துகொண்டு ஸர்வேச்வரனை அநுபவிச்து மங்களாசாஸநம் பண்ணவேண்டியிருக்க, அங்ஙனே பண்ணா திருக்கிறார்கள் ஸம்ஸாரிகள்; இஃது ஏன்? என்றால், முற்காலத்தில் அவர்கள் செய்த
பாவமே இதற்குக் காரணம்- என்பதாக.இஃது அரையர் நிர்வாஹம்). பட்டர் நிர்வாஹமெங்ஙனே யென்னில்; ஆத்மாவினுடைய ஞானம் வெளியில் ப்ர ஸரிப்பதற்கு வழியாக அமைந்திருக்கின்ற நெஞ்சும், எம்பெருமானைப் பேசு
கைக்கு யோக்யமான நாவோடு கூடிய வாயும் ஏஜோ குணமும் தமோ குணமும்
மிக்கு ஸ்வயமாகவே பகவத் விஷயத்திற்படிந்தனவில்லையே யாகிலும். நம்மை
ஈச்வரன் படைத்தது ஏதுக்கு? நமக்குக்கைகால் முதலிய கரண களேபரங்களைக்
கொடுத்தது ஏதுக்கு?’ என்று ஆராய்ச்சிசெய்து பகவத் விஷயத்திலே பல்
லாண்டுபாட இழிய வேண்டியது ப்ராப்தமாயிருந்தும் பாழும் ஸம்ஸாரிகள்
பகவத் விஷயத்தில் அடியோடு இழியாதிருக்கிறார்களே; இதுவரையில் மாறி மாறிப்பல பிறப்பும்பிறந்து ஸம்ஸாரிகளா யொழிந்தது போராதா ? இனிமேலா
வது நல்வழிபோகத்தேடலாகாதா ? மேலுள்ள காலமும் நித்ய ஸம்ஸாரிகளா யிருப்பதற்கே யன்றோஇப்படி பாபிகளாய்த் திரிகிறார்கள்!-என்பதாம்.
‘தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ யஸ்தேவிதாநம் வயஜநம் த்ரயீமய
உபஸ்த்திதம் தேந புரோ கருத்மதா என்னும் ச்லோகத்தில “விதாநம் ” -(மேற்கட்டி)-என்று
அருளிச் செய்தது ஆண்டாளின்-(14-3) பாசுரத்தின் பின்னடிகள் “மேலால் பரந்த
வெயில் காப்பான் வினதை சிறுவன் சிற்கென்னும் மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே”
“ மையார் கருங்கண்ணி கமல மலர்மேல் செய்யாள் திருமார்வினில்சேர் திருமாலே வெய்யார் சுடராழி சுரிசங்கமேந்து கையா உன்னைக் காணக் கருதுமென் கண்ணே.-திருவாய்மொழீயில் (9-4-1)-பிராட்டி எம்பெருமானைத் தன் அழகா திருத்துவளாதலால் நம்வாழ்ச்சிக்குப் பிராட்டியின் திருக்கண்களே மூலகாரண மென்று அக்கண்ணழகைப் பேசுகின்றாராழ்வார் (மையார் கருங்கண்ணி)என்று. ஸ்ரீராமாயணத்தில் அஸிதேக்ஷணா’ என்று பலகாலுஞ் சொல்லுகிறபடியே பிராட்டி இயற்கையாகவே கருங்கண்ணி. மையிட்டுக்கருமை ஸம்பாதிக்கவேண் டியதில்லை. ஆயினும் மங்களார்த்தமாகவே மையிடுகிறபடி-”இவள் கையில்லீலாரவிந்தம் அவனுக்கு போக்யமா யிருக்குமா போலே யாயிற்று அவன் கையில் திவ்யாயுதங்கள் இவளுக்கு இனிதாயிருக்கும்படி ” என்று. இத்தால் பிராட்டி பூ வேந்தியிருக்குமாபோலே எம்பெருமான் ஆயுத விசேஷங்களைந்தி யிருக்கிறபடி என்றதாயிற்று. ”ஏந்துந்கையா” என்கையாலே வெறுந்ருக்கை களையும் வெறுந் திவ்யாயுதங்களையுமன்றிக்கே இரண்டுஞ் சேர்ந்த சோத்தியையே தாம்காண வாசைப்பட்டிருப்பது தெரிவிக்கப்பட்டதாயிற்று.
திருவாய்மொழியில் (3-5) பதிகம் “மொய்மாம்பூம்பொழிற் பொய்கை“என்று தொடங்குவது. எம்பெருமானுக்கு அன்பாலாட் செய்பவரை ஆதரித்தும் அன் பிலா மூடரை நிந்தித்தும் பாசுரங்கள் அருளிச் செய்கிறாராழ்வார் இப்பதிகத்தில்-இப்பதிகத்தில் முதற்பாசுரத்தில் ஸ்ரீகஜேந்த்ராழ்வானை ரக்ஷித்தருளின எம்பெருமானுடைய ஆச்ரித வாத்ஸல்யத்தை யன்ஸந்தித்தும் விகாரமடையா திருப்பாருடைய பிறப்புவீண் என்கிறார், நம்பிள்ளையீடு கேண்மின்: “‘பட்டர் இவ்விடத்தை அருளிச்செய்யா நிற்கச் செய்தே ‘அவன் நூறாயிரஞ்செய்தாலும் விக்ருதராகாமைக்கு நாமே வேணும், நமக்கொரு ஆபத்து உண்டானால் இருந்தவிடத்திலே யிருக்கமாட்டாதே விக்ருதனாகைக்கும் அவனே வேணும்’ என்றருளிச் செய்தார் என்று. எம்பெருமானைப் போன்ற பரமதயாளு இல்லை; அவனது தயையில் ஈடுபடமாட்டாத நம்மைப்போன்ற வன்னெஞ்சருமில்லை என்றபடி.
——————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply