அம்ருத ரஞ்சனி -17-ரகஸ்ய கிரந்தங்கள்
ஸ்ரீ ஸம்ப்ரதாய பரிசுத்தி ‘
தத்த்வ பதவீ
ரஹஸ்ய பதவீ
தத்த்வ நவநீதம்
ரஹஸ்ய நவநீதம்
தத்வ மாத்ருகை
ரஹஸ்ய மாத்ருகை
தத்த்வ ஸந்தேசம்
ரஹஸ்ய ஸந்தேசம்
ரஹஸய ஸந்தேச விவரணம்
ரஹஸ்ய சிகாமணி
அஞ்சலி வைபவம்
ஸ்ரீ பிரதான சதகம் —
விரோதி பரிக்ரஹம்
தத்வ ரத்னாவளி -தத்வ ரத்னாவளி ப்ரதிபாத்ய ஸங்க்ரஹம்
ரஹஸ்ய ரத்னாவளி
ரஹஸ்ய த்ரய சுகளம்
சார சங்ஷேபம்
உபகார ஸங்க்ரஹம்-சார தீபம்
சுளகம் என்ற சொல்லுக்கு உள்ளங்கை என்று பொருள். அசேதனம் - சேதநன்- ஈச்வரன் என்னும் தத்துவங்களைப் பற்றிய விஷயங்களை உள்ளங்கையில் வைத்தாற்
போல் எளிதில் காட்டுவதால் இந்த ரஹஸ்யத்திற்கு இப்பெயர் வந்தது.
ரஹஸ்ய மாத்ருகை (வடமொழியில் ௮ முதல் க்ஷ வரையில் உள்ள
ஐம்பத்தொன்று எழுத்துக்களுக்கு -மாத்ருகை” எனப் பெயர். இந்த
ரஹஸ்யத்தில் திருமந்த்ரம் - த்வயம் - சரம ஸ்லோகம் என்னும் மூன்று
ரஹஸ்யங்களின் ஸாரார்ததங்களைச் சுருக்கி ஐம்பத்தொன்று
வாக்கியங்களில் அருளிச் செய்வதால் ரஹஸ்ய மாத்ருகை எனத்
திருநாமம் வந்தது
எம்பெருமானுக்கு ஒர் அணி போல போக்யமாய் விளங்கும் ரஹஸ்ய ரத்நாவளி யென்னும் ரஹஸ்யத்தின் தாத்பர்யத்தை என் அறிவுக்கு ஏற்றவாறு அதன் ஹ்ருதயமென்ற பெயரால் இவ்வாறு நானே விளக்கி ஸித்தாந்தத்தை ஸ்தாபித்தேன.-திருமகள் சேர் மார்வனுக்குக் கோல மா மணி யாரமும்' முத்துத் தாமமும் போலே ரஹஸ்ய ரத்நாவளியும் ஹ்ருதயத்துக்கு ஏற்கும் திருவாபரணம்- என்றபடி
வேதார்தத ஸங்க்ரஹம் கடைசி ஸ்லோகம் -ஸாரம் அஸாரம் -இவற்றின்
பாகுபாட்டை அறிபவர்களாய் மிகப் பெரியராய் பொறாமை யற்றவா் களாய் ப்ரமாணங்களுக்குக கட்டுப்பட்ட வர்களாயுள்ள பலர் உலகில் இருக்கின்றார்களென்று கருதியே இநத வேதார்த்த ஸங்கரஹம் என்னால் இயற்றப்பட்டது.
விஷ்ணு புரா. (2-7-28) மரத்தினுள் தீப் போலவும் எள்ளினுள் எண்ணெய் போலவும் ஜீவாத்மா அசேதநமான சரீரத்தினுள் புகுந்து எங்கும் செல்ல வல்லவனாய் ஞானமுடையனாய்த் தானே தன்னை அறிபவனாயுள்ளான்.
பரஹ்ம ஸூ. (3-2-5) * ஜீவனது இயற்கையான ரூபம் ஸம்ஸார தசையில் பரமாத்ம ஸங்கல்பத்தால் மறைந்துள்ளது. அந்த மறைவு ஸ்ருஷ்டி காலத்தில் சரீரமாக மாறுபட்ட அசேதநத்தின் ஸம்பந்தத்தாலும் ப்ரளய தசையில் ஸூக்ஷ்ம நிலையுள்ள அசேதநத்தின் ஸம்பந்தத்தாலும் வருகின்றது.
ப்ரஹ்ம ஸூ. (3-1-4 ப்ரஹ்ம ஜ்ஞாநமின்றி யாகம் தானம் முதலிய புண்ணிய கர்மங்களை மட்டும் செய்பவன் வேறு சரீரத்தைப் பெறும் போது பஞ்ச பூதங்களின் ஸூக்ஷ்மமான அம்சங்களின் தொடர்புடனேயே செல்கின்றான். ஏனெனில் - ஸ்வேதகேதுவை பரவாஹணன் இவ் விஷயங்களைப் பற்றிக் கேட்ட கேள்வியாலும்
ஸ்வேதகேது கூறும் விடையாலும் இவ்வம்சம் தெளிவு படுவதால்.
பாகவதம் (1717-72-75): எல்லா உயிர்களுக்கும் அந்தாயாமியான் என்னை ஒருவனையே எல்லாவகையாலும் சரணமாகப் பற்று. அங்ஙனம் செய்தால் எவரிடமும் பயமற்ற இருப்பைத் தரும் மோக்ஷத்தை அடைவாம். (உத்தவருக்குக் கண்ணன் உபதேசம்).
பாகவதம் ( 11-19-18) * கர்ம பலன்களை அனுபவிககப் பிறந்தவர்களான பிரமன் வரை உள்ள அனைவரும் பிறரின் பாபத்தைப் போக்க வல்லரல்லர் என்பதை உணர்ந்து அவர்களை அணுக விரும்பாதவர்க்கு வாஸுதேவனே அடையப்படும் சிறந்த பலனாவான.
ஸ்ரீ பாஷ்யகாரர் வாக்யம் : ப்ரபத்தியென்பது நம்பிக்கை. அதாவது -
ஒரு தடவை பிரார்த்திப்பதாலேயே வேண்டிய பலனைத் தருவான் என்ற
நம்பிக்கையுடன் பிரார்த்திப்பது
விஷ்ணு புரா. (7-9-78)- எம்பெருமானே! ஸகல பாபங்களையும் ஒழிக்கவல்ல உன்னைச் சரணமடையாத வரையில் தான் மனிதனுக்குத தான் இழந்த ஐச்வர்யத்தை மறுபடி பெற வேண்டுமென்ற கவலையும், புதிய ஜச்வர்யத்தைப் பெற ஆசையும், சரீரததிலும்' வேறுபட்ட ஆத்மாவை அநுபவியாமையும், ஸம்ஸார துக்கமும் இருககும்.
ப்ரஹ்மபு (50)*+ பக்தி யோகம் செய்யமுடியாமல் உன்னிடம் ப்ரபததியைச செய்தவர்களும் ஸம்ஸார மண்டலத்தைக் கடந்து பரமபதததை அடைகின்றனர்
லக்ஷ்மீ தந் (17-76)* நிக்ஷேபம் என்ற வேறு பெயரையுடைய பரநயாஸம் ஐந்து அங்கங்களுடன் கூடியது இதுவே “ஸநநயாஸம், த்யாகம், சரணாகதி' எனற பெயர்களால் வழங்கும்.
லக்ஷ்மீ தந (177-100): பக்தியோகாதிகளில் தெளிவான ஞானமோ,
ப்ரபத்தியிலும் ஸூக்ஷ்மமான விசேஷங்களில் அறிவோ
இல்லாதவர்க்கும் இநத ப்ரபததியே ஏற்ற உபாயம். பகதி யோகாதிகளில்
தெளிவான ஞானமோ, ப்ரபததிககு வேண்டிய சரண்யனுடைய குண
விசேஷங்களில் ஞானமோ உடையவர்க்கும் இநத ப்ரபத்தியே
உபாயமாகும். விரைவில் ஸம்ஸாரததைக கடக்க விரும்புமவாககும்
இதுவே உபாயமாகும். ஸ்ரீவைகுண்டத்தில் விரைவில பரிபூர்ண
பகவதநுபவததைப் பெற விரும்பு மவர்க்கும் இநத ப்ரபததியே
உபாயமாகும்.
ஜிதந்தா (1-18) - மிகவும் கெட்ட புத்தியடையனான நான் எங்கே? என் நன்மையை ஆலோசிதது அறிவது எங்கே? ஆதலின எம்பெருமானே! எனக்கு நன்மையை நீயே கட்டளையிட வேண்டும். உன்னைச் சரணமடைந்தேன். உனக்கு அடியனான எனக்கு வேறு கதியில்லை. இப்பொழுதே என்னை உன் திருவடிக் கமலத்தில் சோத்துக
கொண்டு கைங்கரியம் புரியுமாறு செய்.
விஷ்ணு புராணம் ( 2- 13- 98) - அரசனே! ஜீவன் தேவனல்லன்; மனிதனலலன்; மிருகமல்லன்; மரமல்லன். சரீரங்களின் அமைப்பினால் ஏற்பட்ட இவ்வேற்றுமைகள் கர்மத்தால் வந்த சரீரங்களைப் பற்றியனவேயாகும்.
விஷ்ணு புராணம் (1-1-31) - ப்ரபஞ்சம் எம்பெருமானுடைய ஸங்கலபத்தால் உண்டானது. பிரளயத்தில் அவனிடமே லயத்தை அடைகிறது. இதைக் காப்பவனும் அழிப்பவனும் அவனே. ப்ரபஞ்சமே அவனுக்குச் சரீரம்.
பாரதம் - ஸபா (41-23) - கண்ணன் ஒருவனே உலகங்களுக்கு உத்பத்தி ஸ்தாநம். லயிக்கும் இடமும் அவனே. தாவர ஜங்கமமாகிய இவ்வுலகம் முழுதும் கண்ணனுக்காகவே ஏற்பட்டது.
பாகவதம் ( 11-19-18) * கர்ம பலன்களை அனுபவிககப் பிறந்தவர்களான பிரமன் வரை உள்ள அனைவரும் பிறரின் பாபத்தைப் போக்க வல்லரல்லர் என்பதை உணர்ந்து அவர்களை அணுக விரும்பாதவர்க்கு வாஸுதேவனே அடையப்படும் சிறந்த பலனாவான.
எம்பெருமானுடைய திருவடிகளில் நம்மைச் சேர்க்கின்ற பிராட்டியும்(1),அவனோடு சேர்ந்திருப்பதில் ஸ்திரமான தன்மையும் (2),சீர்மையால் பெரியனான எம்பருமானுக்குத் தக்கனவாகிய குணங்களும்(3),ஆஸ்ரிதர்கள் த்யானிக்க இலக்கான திருமேனியின் பகுதியாகிய இரண்டு திருவடிகளும் (4),சேதநர்களால் ப்ரதாநமாய்க் கருதப்படுகின்ற உபாயமான ஸ்ரீமந் நாராயணனும் (5),உபாயமாகிய எம்பெருமானிடம் மஹா விஸ்வாஸத்துடன் கூடிய பர ந்யாஸமும் (6), வேறு உபாயத்தில் அதிகாரமற்ற நம்முடைய நிலைமையும் (7),நாம் அடைகின்ற ப்ரதாந பலனாகிய ஸ்ரீமந் நாராயணனும் (8),சேதநன் கைக் கொள்கின்ற எல்லைகளாகிய பகவத் பாகவத கைங்கர்யம் முதலியவையும் (9),அஹங்கார மமகாரங்கள் முதலிய எல்லாக் களைகளும் நீங்கப் பெறுதலும் (10)ஆகிய பத்து அர்ததங்களையும் த்வயத்தில் அநுஸந்தித்தோம்.
சிஷ்யன் மோக்ஷம் பெறுதற்கு முதற் காரணம் –சேதநம் – அசேதநம் – ஈஸ்வரன் ஆகிய மூன்று தத்துவங்களில் விளக்கமான அறிவேயாகும். இந்த அறிவு பெறும் முறையை உபநிஷத்துப் பசு – பால் – நெய் என்ற மூன்று உதாஹரணங்களைக் கூறி விளக்கியுள்ளது. அந்த விளக்கம் வருமாரு – பசுக்கள் பல்வேறு நிறமுமையனவாயினும் அவற்றினின்று தோன்றும் பால் ஒரே வகையாயுள்ளது. அவ்வாறே அசேதநமான சரீரங்கள் தேவர் – மனிதர் முதலிய பிரிவை யுடையனவாயினும் அவற்றுள் .இருக்கும் ஜீவாத்மாவின் ஸ்வரூபம் ஒரே வகையதே யாகும்–மறைந்துள்ள நெய் நம் கண்ணுக்குப் புலப்படாதது போல் அந்த ஜீவர்களுக்குள் அந்தர்யாமியாய் நிற்கும் எம்பெருமானும் நம் கண்ணுக்குப் புலப்படுவதில்லை யென்பது. இந்தக் கருத்தையே தமிழ் மறை முடியான திருவாய்மொழியும் கறந்த பாலுள் நெய்யே போல்? என்று பேசியது. இந்த ஸூக்தியில் சேதநம் மட்டுமன்றி அசேதநத்தையும் கூட்டிக் கொண்டு அவனுக்குச் சரீரமான சேதநம் அசேதநம் இரண்டுடினுள்ளும் உட்புகுந்து எம்பெருமான் அந்தர்யாமியாய் நின்றும் நியமித்த அருளுவதை அநுஸந்தித்துக் கொள்ள வேண்டும்.
1-கர்த்தா -2-ப்ரேரகன் (3) அநுமந்தா (4) ஸஹகாரி (5) ஸாக்ஷி! (6) பல ப்ரதன்
(7) பலி (8) உதாஸீநன் என்று அந்த அந்த நிலைகளில்
1-கர்த்தா – வஸ்துவினுள் புகுந்து படைப்பு முதலியவற்றைச் செய்பவன்.
(2) ப்ரேரகன் – ஜீவனுக்கு அறிவைக் கொடுத்து ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுபவன்.
(3) அநுமந்தா – சேதநன் செயலைச் செய்யும் போது அதைச் செய்விப்பவன்.
(4) ஸஹகாரி – சேதநன் செய்யும் செயலில் தான் பெரும் பகுதியை ஏற்றுத் துணை செய்பவன்.
(5) ஸாக்ஷி! சேதனன் செய்யும் செயலை நேரில் பார்த்துக் கொண்டிருப்பவன்.
(6) பல ப்ரதன் – சேதநன் செயல்களுக்குப் பலனை அளிப்பவன்.
(7) பலி -அச்செயலின் பலனை முக்கியமாய்ப் பெறுமவன்.
(8) உதாஸீநன் – சேதநன் செய்யும் செயலில் தான் விசேஷமான தொடர்பற்றுப் பொதுக் காரணமாக இருப்பவன்
பிரணவத்தில் கடை எழுத்தான மகாரத்தால் கூறப்படும் ஜீவன் முதலெழுத்தான அகாரத்தால் கூறப்படும் எம்பெருமானுக்கும் நடு எழுத்தான உகாரத்தால் கூறப்படும் பிராட்டிக்கும் தாஸனாய் நிற்பவன் என்று பொருள் தேறுகின்றது. -ஆனால் இவ்வாறு பொருள் கொண்டால் அவர்கள் இருவருக்கே தாஸன் என்ற வரையறை எவ்வாறு கிடைக்கும் என்று கேட்கலாம். கருத்து வகையில் பெற்று விடலாமென்பது விடை. குறிப்பிட்டு இருவரைக் கூறி அவர்களுக்குச் சேஷமென்றால் வேறு ஒருவருக்கும் சேஷனல்லன் என்று தானாகவே தேறிவிடுமென்றோ?
”ந-ம:” என்பதற்கு எனக்கு நான் உரியனல்லன் ; மற்றவற்றிலும் எனக்கு உரிமை யில்லை? என்று பொருள் தேறுவதால் தன்னைக் காத்துக் கொள்ளத் தனக்குச் சக்தி யற்றமை – வேறு புகலற்றமை முதலிய பொருள்களும் கருத்து வகையில் கிடைக்கின்றன. ந என்பது மறுப்பைக் கூறும் சொல். ம: என்பதால் கூறப்பட்ட விரோதியான அம்சத்தை ந என்பது கூடாதென்று மறுக்கின்றது-இங்கு சேஷித்வம் என்ற ஒரு சொல்லை. வருவித்துக் கொண்டு
“ம: சேஷித்வம் ந” என்று வைத்து எனக்கு என்னைப் பற்றியும் என் உடைமைகளைப் பற்றியும் உரிமை இல்லை யென்றும் பொருள்
நாராயண சப்தம் நார – அயந என்ற இரண்டு பதங்கள் சேர்ந்து உருக்கொண்டதாகும். இதை இரண்டு விதமாய்ப் பிரிக்கலாம். (1) பஹு வ்ரீஹி (அன்மொழித் தொகை) (2) தத் புருஷன்
(வேற்றுமைப் புணர்ச்சி) என்று-பஹு வ்ரீஹி ஸமாஸம் – நார சப்தார்த்தம்-நாரா : அயநம் யஸ்ய – நூராயண:. இது பஹு வ்ரீஹி ஸமாஸம் என்று பெயர் கொண்டது. இதனின்று
நாரங்களை அயநமாக வுடையன் எம்பெருமான் என்று தேறும்.
நர” என்று ஆகும்போது அழியும் பொருளான அசேதநத்திற் காட்டிலும் வேறுபட்ட அழியாப் பொருளான ஜீவாத்மாவைக் கூறும். நார என்னும் சொல்லுக்கு நராணாம் ஸஹூஹா : ௪ நாரா: என்று கூட்டி ஜீவாத்மாக்களின் கூட்டங்கள் என்று யொருள் கொள்ள வேண்டும். நாரா: என்று பன்மையில் இருப்பதால் ஜீவர்களின் கூட்டங்கள் பலவென்று கூறியதாயிறறு. நர என்னும் சொல் அழியாத ஜீவனைக் கூறுவதாக முன் சொல்லிய வழியாலேயே எவ்வகையிலும் அழியாத ஸர்வேஸ்வரனையும் கூறுமன்றோ? ஆகவே ஸர்வேஸ்வரன் நரனாகிறான். மேலும் –நர சப்தம் *ந்ரு’ என்ற வினைப்பகுதியினின்று தேறுவதும் உண்டு. இந்த வினைப்பகுதிக்கு ”ந்ரு- நமே? என்றபடி வழியில் நடததிச செல்லல் பொருளாகும். ஆகவே எல்லாப் பிராணிகளையும் அந்த அந்த வழியில் நடததுமவனான எம்பெருமானை நர” என்ற சொல் கூறுவதில் தடை என்ன? ஆகவே இவ்விரண்டு வழிகளாலும் நர
சப்தம் எம்பெருமானையே கூறி விடுகின்றது. நார சப்தததை-நரஸம்டாந்தி – நாரம் என்று கூட்டிப் பார்த்தால் ஸர்வேஸ்வரனுடன் தொடர்புள்ளவை என்று பொருள் தேறும். அவனோடு தொடர்பற்ற வஸ்து ப்ரபஞ்சத்தில் ஏது? அதலின் ப்ரமாணங்கள் சொல்லுகிறபடி
அவனுக்குச் சேஷமாகவோ சரீரமாகவோ அவனைச் சேர்ந்த சேதநம் அசேதநம் ஆகிய ஸகல வஸ்துக்களுமே நார சப்தத்திற்குப் பொருளாகி விடுகின்றன. இப்படி நார சப்தத்துக்கு முதவில் ஜீவர்களின் கூட்டமென்றும், பின்பு கூறிய முறையில் சேதந அசேதநங்களின் கூட்டமென்றும் பொருள் தேறி நிற்கின்றது.
நாராணாம் அயதநம்” என்ற தத் புருஷ ஸமாஸத்தில் பொருளைப் பார்ப்போம். அயநம் என்ற சொல்லுக்கு “உபாயம் பலன் – ஆதாரம் என்ற மூன்று பொருள்கள் உண்டு. அயநம்
என்ற சொல்லை ?ஈயதே அநேந? என்று விரிததால் ஒன்றை அடையக் காரணமாயிருப்பவன் என்று பொருள் தேறுவதால் உபாயம் என்று கிடைத்துவிடும். ?ஈயதே அஸெள? என்று விளக்கினால் அடையப்படும் பலனாயுள்ளவன் என்று பொருள்
இடைக்கும். *ஈயதே அஸ்மிந் என்று பிரித்தால் ஆதாரம் என்ற பொருள் தேறி விடும்.
பஹுவ்ரிஹி – அயந சப்தார்ததம்-அயநம் என்ற சொல்லுக்கு இருப்பிடம் – சூழ்ந்து நிற்கப் பெறும் வஸ்து என்ற இரண்டு பொருள் உண்டு. நாரங்களை அயநமாக வுடையன் என்னும் போது முதற் பொருளில் சேதத அசேதநங்களைத் தனக்கு இருப்பிடமாக வுடையன் எம்பெருமான் என்றும் இரண்டாம் பொருளில் சேதந அசேதநங்களைத் தான்
சூழ்ந்து நிற்கும் வஸ்துக்களாகக் கொண்டவன் என்றும் பொருள் கிடைக்கின்றது. இங்கு முதற் பொருளில் அவை உள்ளவிடத்தில் தான் இல்லை யென்று சொல்ல முடியாதவாறு கலந்து நிற்பதாகிய அந்தர் வ்யாப்தி கூறப்பட்டதாகின்றது. இரண்டாம் பொருளில் அந்த வஸ்துக்கள் இல்லாதவிடத்திலும் தான் உளன் என்று கூறும்படி திற்றலாகிய பஹிர்வ்யாப்தி சொல்லப் பட்டதாகின்றது. இப்படி அந்த அந்த வஸ்துக்களில் உள்ளும் புறமும் சிறிதும் தப்பாதவாறு பரிபூர்ணமாய் எம்பெருமான் நிற்கின்ற நிலை
வெளியாகின்றது. மேலும் சேதந – அசேதந வஸ்துக்களுள் சாஸ்வதமாகப் புகுந்து நியமித்துக் கொண்டும் சூழ்ந்து கொண்டும் எம்பெருமான் இருப்பதால் அவை இவனுக்குச் சரீரமாயுள்ளமையும் இவன் அவற்றுக்கு ஆத்மாவாய் நிற்பது மாகிய ஸம்பந்தம் விளங்குகின்றது.
நான்கு அத்யாயங்களின் ஸாரார்த்தங்களும் திருமந்திரத்தில் உள்ள நாராயண சப்தத்தில் சுருக்கமாய்க் கூறப்பட்டுள்ளன.எவ்வாறெனில் – நர சப்தத்தால் எம்பெருமானைக் கூறி
அவனிடமிருந்து தோன்றிய சேதந அசேதநங்களை நார சப்தத்துக்குப் பொருளாகக் கூறும்போது ப்ர பஞ்சத்துக்கு அவன் காரணமென்று ஏற்படுவதால் முதல் அத்யாயததின் பொருள் கூறுவதாகக் கொள்ளுதல் பொருந்தும். நரன் என்ற சொல் எம்பெருமானை அழிவு, மாறுபாடு முதலிய குற்றமற்றவனெனக் கூறுவதால் அவனது காரணத் தன்மை தடையற்றதாய் உறுதியாக்கப் பட்டு இரண்டாம் அத்தியாயத்தின் பொருளைக் காட்
டுகின்றது. அயநம் என்ற சொல்லுக்கு உபாயம் என்ற பொருளைக்
கொண்டால் சேதநர்களுக்கு உபாயமாயுள்ளவனென்ற மூன்றாவது அத்யாயத்தின் பொருள் கிடைக்கின்றது. அயந சப்தத்தூக்குப் பலன் என்ற பொருளைக் கொண்டு. சேதநர்களால் அநுபவிக்கப் படும் பலனாகவும் உள்ளானென்று நான்காவது அத்யாயத்தின்
பொருளையும் இங்குக் கண்டுவிடலாம்.
ஸ்ரீமத்ரஹஸ்ய த்ரய ஸாரத்தில் கூறாத -சில விஷயங்களைச் சில்லரை
ரஹஸ்யங்களில் அருளிச் செய்திருப்பதை நன்கு காணப் பெறலாம்-
ஸ்ரீ சப்தத்தின் ஆறு பொருள்கள்
இந்த ஸ்ரீ என்னும் சப்தததுக்கு இலக்கண முறையைத் தழுவி அறு வகைப் பொருள்களைச் சாஸ்தரம் கூறுகின்றது.
அவையாவன -
(1) ஸ்ரீயதே - ஆஸ்ரயிக்கப்படுகின்றாள். நற்கதியைப் பெற
வேண்டுமென்று விரும்பும் எல்லாச் சேதநர்களும்' இவளை வந்து
ஆஸ்ரயிக்கின்றார்கள்.
(2) ஸ்ரயதே - அடைகின்றாள். யாரை? ஸர்வேஸ்வரனை... அவன் அபராதம் செய்த சேதநர்களைத தண்டிக்க முற்படும் போது பிராட்டி அவனை அடைந்து அவன் கொண்ட சீற்றத்தை ஆற்றி அவர்களைக் காக்குமாறு செய்து விடுகின்றாள்.
(3) ஸ்ருணோதி - கேட்கின்றாள் (செவி சாய்க்கின்றாள் )அபராதிகளான சேதநர்கள் இவளிடம் வந்து தங்களை எம்பெருமான் திருவடிகளில் காட்டிக் கொடுத்து ரக்ஷித்தருள வேண்டுமென்று மனம் நொந்து சொல்லும் சொற்களைக். கேட்டுக்
கொள்கின்றாள். .
(4) ஸ்ராவயதி - கேட்கும்படி செய்கின்றாள். அதாவது - எடுத்துச்
சொல்லுகின்றாள். சேதநர்கள் ஈனக்குரலோடு கூறியவற்றைக் கூறி
அவர்களின் துயரம் தீர்க்குமாறு ஸர்வேச்வரனிடம் விண்ணப் பிக்கின்றாள்.
(5) ஸ்ருணாதி - ஒழிக்கின்றாள். அடியார்களின் குற்றங்களை
யெல்லாம் தகர்க்கின்றாள். இதுவரை உபாயத்தைச் செய்யவும்
மோக்ஷ்மாகிய பலனைப் பெறவும் தடையாயிருந்த கர்மங்களை
யெல்லாம் ஒழிக்கின்றாள்.
(6) ஸ்ரீணாதி - பரிபக்குவ நிலையை உண்டாக்குகின்றாள். -தன்னை அடைந்தவர்களுக்குத் தன் அருளால் ஜ்ஞாதம் பக்தி முதலிய நற்குணங்களைப் பரிபக்குவ நிலைக்குக் கொண்டு வருகின்றாள்-
திரும்ந்திரத்திலே பிறத்தல்
திருமந்தரததிலே பிறக்கையாவது – முதல் ரஹஸ்யமான திரு மந்த்ரத்தையும் அதன் அர்த்தங்களையும் ஆசார்யனால் உபதேசிக்கப் பெற்றால் சேதநனுக்குப் புதிய பிறவி உண்டாகின்றது. இதுவரை விவேகம் பெறாமவிருத்தபடியால் முன் தாய் வயிற்றில் பிறந்த பிறவி நேர்மையானதாகாகாகையால் இவனைப் பிறந்தவனாகவே கருத முடியாது. திருமந்திரத்தின் அர்ததத்தை அறிந்த பின் ஜீஸ்வாத்மாவினுடைய ஸ்வரூபம் –
எம்பெருமானுடைய ஸ்வரூபம் – இருவருக்கும் உள்ள ஸம்பந்தம் முதலிய பற்பல முக்கிய விஷயங்களை அறிய முடிவதால் இப்பொழுது தான் அவன் உலகில் பிறந்தவனாகின்றான்.
த்வயததில் வளர்தல்
த்வயத்தில் வளருகையாவது – திருமந்திரம் கூறிய அர்த்தங்களை மிக விளக்கமாகக் கூறுகின்றது த்வயம். உயர்ந்த தததுவமாய் எல்லோரையும் காக்கவல்ல எம்பெருமானை த்வயம் நன்கு தெளிவு படுத்துகின்றது. நமக்குப் பெரிய நன்மையை விளைவிப் பதாய் நமக்குச் செய்ய ஏற்றதான சரணாகதியைத் திருமந்திரததிற் காட்டிலும் விளக்கமாய்க் கூறுகின்றது த்வயம்.-மேலும் மோக்ஷத்தில் அவனுக்குச் செய்யும் கைங்கர்யமாகிய சிறந்த
பலனையும் கூறுகின்றது த்வயம். மேலும் அப் பலனுக்காக ப்ர பத்தியைச் செய்ய வேண்டிய முறையையும் முக்கியமாக வைத்துத் தெளிவாய்க் காட்டுகின்றது இந்த த்வயம்.
இவ வுண்மைகளை அறிந்து சரணாகதியைச் செய்தலே -த்வயத்தினால் சேதநன் பெற்ற வளர்ச்சியாகும்.
த்வயத்திலேயே நிஷ்டை யுடைமை
த்வயத்திலேயே நிஷ்ட்டனாகையாவது – ப்ரபத்திக்குப் பின் அவகாசமுள்ள . போதெல்லாம் த்வயத்தையே அநுஸத்திததுக் கொண்டேயிருந்து வேறு உபாயத்தையும் வேறு பயனையும்
நாடாமல் த்வயம் காட்டிய சரணாகதியிலும் அவன்கைங்கர்யமாகிய பலனிலும் மிக்க ஊற்றத்துடன் நிற்கை.
த்வயத்தின் அமைப்பு
இந்த த்வயம் இரண்டு. பகுதியாயுள்ளது. முற்பகுதி -உபாயமான சரணாகதியையும் பிற்பகுதி பலனான கைங்கர்யத்தையும் ஆக இரண்டையும் தெளிவாய் விளக்குவதால் த்வயம் இரண்டு என்று பெயர்பெற்றது.
Leave a Reply