தமேவ மத்வா பரவா ஸூ தேவம் ரங்கேசயம் ராஜவத் அர்ஹணீயம்
ப்ராபோதீகீம் யோக்ருத ஸூ க்திமாலாம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தம் ஈடே--ஸ்ரீ திருமாலை ஆண்டான்
யக –யார் ஒருத்தர்-ஈடே துதிக்கிறேன்/ஸ்தோத்ரம் பண்ணுகிறேன்
தம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தம் -பகவான் –ஞானம் பக்தி வைராக்கியம் சேஷத்வம்-பாரதந்தர்யம்-குணங்கள் அமைந்த தொண்டர் அடிப்பொடி ஆழ்வாரை
ரங்கேசயம் ராஜவத் அர்ஹணீயம்-ராஜ போல பூஜிக்க தக்க-பெரிய பெருமாளையே –பரவா ஸூ தேவம்-பர வாசுதேவனாக –
மத்வா-நினைத்து கொண்டு-
ஸூ க்திமாலாம்-வார்த்த மாலை–ப்ராபோதிகீம்-திரு மாலை இல்லை-திரு பள்ளி உணர்த்துகிற –
அக்ருத-செய்தாரோ-
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம்
அவதாரிகை
இஸ் ஸ்லோகத்தில்
செய்யும் பசுத்துளபத் தொழில் மாலையும் -செந்தமிழில் பெய்யும் மறைத்தமிழ் மாலையும் பேராத சீர் அரங்கத் தையன் கழற்கு அணியும் பரன் –13-என்னும் படி
தொண்டார் அடிப்பொடி ஆழ்வாரை ஸ்தித் அபி வாதநம் பண்ணும் படி சொல்கிறது
திருமாலை என்னும் திவ்ய பிரபந்தம் அன்றிக்கே திருப்பள்ளி எழுச்சியையும் -ப்ராபோதீகீம் யோக்ருத ஸூ க்திமாலாம்-என்று சொல்மாலையாக விறே சொல்லுவது -இது தான் திருப்பள்ளி எழுச்சிக்குத் தனியனாக இருப்பது -திருமாலை என்ற சொல்ல அது ஒரு பா மாலை என்று காட்டுகிறது -ஆண்டாள் பெரியாழ்வாரைப் போல பா மாலை பூ மாலை இரண்டையும் பெரியபெருமாள் திருவடிகளிலே சமர்ப்பித்ததைக் கூறுகிறது –
ராஜவத் அர்ஹணீயம்-ரங்கேசயம்-பர வாஸூ தேவம்-மத்வா –அதாவது
ராஜவத் பூஜ்யராய் -ரங்க ராஜதானியிலே கண் வளர்ந்து அருளுபவரான -ஸ்ரீ ரங்கராஜரை -ஸ்ருதி ப்ரஸித்தரான பர வாஸூ தேவராகவே பிரதிபத்தி பண்ணி என்றபடி –
ராஜவத் அர்ஹணீயராவது -ராஜவத் பூஜ்யர் என்றபடி -ராஜாதி ராஜரான சக்ரவர்த்தி திருமகனாராலும் ஆராதீயநராய் இருக்கை –
ரங்கேசயம்-அதாவது
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர், அனைத்து உலகங்கள் உய்ய,
செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார்,
மருவிய பெரிய கோயில் மதிள் திருவரங்கம் என்னா
கருவிலே திரு இலாதீர் காலத்தைக் கழிக் கின்றீரே. (திருமாலை 11) -என்றும்
பிரதி ஜலதித வேலா ஸய்யாம் விபீஷண கௌதுகாத் புந இவ புரஸ் கர்த்தும் ஸ்ரீ ரங்கினப் பணி புங்கவே
சமுபததத கஞ்சித் கஞ்சித் ப்ரசாரயத புஜ த்வயம் அபி சதா தாந ஸ்ரத்தாளு தீர்க்கம் உபாசமஹே –1-–106-
பிரதி ஜலதித–கடலுக்கு எதிர்முகமாக
வேலா ஸய்யாம் -கடற்கரையில் பள்ளி கொண்டதை
விபீஷண கௌதுகாத் புந–ஸ்ரீ விபீஷணனுடையய குதூஹலத்தினால் மறுபடியும்
இவ புரஸ் கர்த்தும்–ஆதரித்து அங்கீ கரிப்பதற்குப் போலே-மன்னுடைய விபீடணற்காய் மதில் இலங்கை திசை நோக்கி மலர்க் கண் வைத்த என்னுடைய திருவரங்கன் -அன்றோ
பணி புங்கவே–திரு வநந்த ஆழ்வான் மீது
சமுபததத கஞ்சித் புஜ -ஒரு திருக் கையை தலையணையாக வைத்துக் கொண்டு இருப்பவரும்
கஞ்சித் ப்ரசாரயத புஜ-மற்றொரு திருக் கையை நீட்டிக் கொண்டு இருப்பவருமான
ஸ்ரீ ரங்கின த்வயம் அபி சதா தாந ஸ்ரத்தாளு தீர்க்கம் உபாசமஹே –-ஸ்ரீ பெரிய பெருமாளுடைய நீண்டதும் –
அலம் புரிந்த நெடும் தடக்கை என்றபடி எப்போதும் தானம் பண்ணுவதில் கருத்துடையதுமான இரண்டு திருக் கைகளையும் சிந்திக்கிறோம் –
அலம் புரிந்த நெடும் தடக்கை யமரர் வேந்தன்
அஞ்சிறைப் புள் தனிப்பாகன் அவுணர்க்கு என்றும்
சலம் புரிந்து அங்கு அருள் இல்லா தன்மையாளன்
தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி
நிலம் பரந்து வரும் கலுழிப் பெண்ணை யீர்த்த
நெடு வேய்கள் படு முத்தம் உந்த வுந்திப்
புலம் பரந்து பொன் விளைக்கும் பொய்கை வேலிப்
பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே –திரு நெடும் தாண்டகம்–6-
அரங்கத்து அரவணைப் பள்ளியான் -பெரியாழ்வார் -4-10-என்றும்
அறிவுடையார் பேசும்படி பெரிய பெருமாள் அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொள்ளுகை
இப்படிப் படுக்கை வாய்ப்பாலே பள்ளி கொண்டருளும் பெரிய பெருமாளை-பர வாஸூ தேவம் மத்வா -வாஸூ தேவோ அஸி பூர்ண -ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜஸ்ஸூக்களால் பூரணமான வாஸூ தேவனாய் இருக்கிறீர் -என்று புத்தி பண்ணி-இங்குத்தையில் படியே விசாரியாதே -அங்குத்தையில் படி யாகவே அனுசந்தித்து
(அர்ச்சக பராதீனனாய் அடியார்கள் குற்றங்களைப் பொறுத்திருக்கும் அர்ச்சாவதாரமாக எண்ணாமல் வீற்று இருந்து ஏழுலகும் தனிக்கோல் செலுத்தும் பர வாஸூதேவனாகவே எண்ணி (ஆதி யம் சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த -திருவாய் -3-5-5-என்றும்
நெஞ்சினால் நினைப்பான் யவன் அவனாகும் நீள் கடல் வண்ணனே -3-6-9-என்றும் சொல்லப்படுகிறது அன்றோ –நம்மாழ்வார் பெரியபெருமாளை கடலிடம் கொண்ட கடல் வண்ணா -7-2-7-என்று அனுசந்தித்தார் அன்றோ
ஆகையால் இவரும் அப்பரவாஸூதேவனைப் போலவே பூர்ண ஷாட் குண்யமாய் -ஞான பல ஐஸ்வர்ய சக்தி தேஜஸ் வீர்ய-இவற்றால் பரிபூர்ணனாய்
ஸர்வம் பூர்ணம் -த்வய உபநிஷத் –என்கிறபடியே அர்ச்சாவதாரமே சவ் ஸீல்யாதி நீர்மைக் குணங்களாலும் நிறைந்து இருப்பவர் அன்றோ –
ஆகையால் –யாவரும் வந்து அடி வணங்கி அரங்க நகர் துயின்றவனே -பெருமாள் திருமொழி -8-10-என்கிறபடி ஸர்வ சமாஸ்ரயணீயமாய் யாய்த்து -இவ்விஷயம் இருப்பது
நித்ய ஸூரிகளோடே நித்ய சம்சாரிகளோடே வாசியற அனைவரும் வந்து அடி பணிய நிற்பவர் அன்றோ பெரிய பெருமாள் –
தம் -பர வாஸூ தேவம் ஏவ மத்வா– என்னும் இடத்தில் -அவதாரணத்தாலே-ஏவ கார்த்தாலே -கைங்கர்யம் பண்ணும் இடத்தே –முகப்பே கூவிப் பணி கொள்ளாய் –8-5-7-என்றும்
பரவா நஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷ சதம் ஸ்திதே -ஸ்வயம் து ருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத-ஆரண்ய -1-57-என்று ஏவிக் கொண்டு -அருள்பாடிட்டு அழைத்து
வானாடு அமரும் குளிர் விழிகளாலே -திருவிருத்தம் -63 என்கிறபடியே எதிர் விழி கொடுக்கும் பர வாஸூதேவனாகவே இவரை புத்தி பண்ணி-ஆதி மூர்த்தி அரங்கன் மா நகருளானே –திருமாலை -16 என்றும் இவ்வாழ்வாரே இவரைப் பர வாஸூதேவனாக அருளிச் செய்தார் இறே
இந்திரலோகமாளும் அச்சுவை பெறினேம் வேண்டேன் அரங்க மா நகருளானே -2-என்று பர வாஸூதேவனைக் காட்டிலும் சிறப்புற்றவனாக அன்றோ இவர் இவ்விஷயத்தில் மண்டி இருப்பது
ராஜவத் அர்ஹணீயம் ரங்கேஸேயம்-என்று கூட்டி -இங்குத்தையில் ஸுலப்ய ப்ரஸித்தியைச் சொல்லுகிறது ஆகவுமாம்
பர வாஸூதேவம் என்கையாலே வ்யூஹ வாஸூதேவனைக் காட்டிலும் வ்யாவ்ருத்தி சொல்லுகிறது
ஆத்ம மாயா மயீம் திவ்யாம் யோக நித்ராம் ஸமாஸ்ரித
ஆத்மாநம் வாஸூதேவாக்யம் சிந்தயன் மது ஸூதன -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-4-6-
வாஸூதேவன் என்னும் பெயருள்ள தமது ஸ்வரூபத்தை சிந்தித்துக் கொண்டு தன்னுடைய மூல ப்ரக்ருதிக்கு அபிமான தேவதையான யோக நித்ரையை அறி துயிலை மேற்கொண்டான் -என்னும்படி
இவள் திறத்து என் சிந்தித்தாயே -7-2-4-
உறங்குவான் போல் யோகு செய்த பெருமானை -5-4-11-என்றும் -ஜகத் ரக்ஷண சிந்தையாகிற -வ்யூஹ ஸுஹார்த்தம் உண்டு இறே இங்கு -இவர் பரிபூர்ண அனுபவம் பண்ணும் பர விஷயமாகவே பெரிய பெருமாளைக் ப்ரீதி பண்ணி இருப்பாராய்த்து-
காவேரீ விரஜா சேயம் வைகுண்டம் ரங்க மந்திரம்
ஸ வாஸூதேவோ ரெங்கேச ப்ரத்யக்ஷம் பரமம் பதம் -ஸ்ரீ ரங்க மஹாத்ம்யம் சொல்லப்படுகிறது அன்றோ –
அண்டர் கோன் அணி யரங்கன் -அமலனாதி -10-என்றும்
வடிவுடை வானவர் தலைவனே என்னும் வண் திருவரங்கனே -திருவாய் -7-2-10-என்றும்
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் -நாச்சியார் -11-2- என்றும்
அடி அறிந்தார் அனுசந்தித்தார்கள் அன்றோ
பெரிய பெருமாள் எங்கிருந்து வந்தார் என்றும் திருவடிகளை அறிந்தவர் என்றும் சாடு –
விசேஷித்து கோயில் திரு த்வாதஸ அக்ஷரீ (ஓம் நமோ பகவதே வாஸூதேவாய ) பிரதானமாய் இறே திருவாராதனம் கொண்டு அருளுவது –
த்வாதஸ அக்ஷர மந்த்ரோயம் மந்த்ராணாம் த்ராய உச்யதே –இந்த மந்த்ரம் மற்ற மந்திரங்களுக்கும் ரக்ஷகமாக சொல்லப்படுகிறது -என்ற ப்ரமாணப்படியே
ஸ்ரீ ரங்கநாத ஜகந்நாத -என்னும்படி அர்ச்யரான இவருக்கும் சர்வருக்கு ராஜாவாய் இருப்பர் -இங்கும் ராஜவத் அர்ஹணீயம் -என்றது இறே –
ஆகையால் ராஜாக்களைப் பள்ளி யுணர்த்துமாப் போலே அந்தப் ராஜாக்களுக்கு ராஜாவான ஸ்ரீ ரங்கராஜரைத் திருப்பள்ளி உணர்த்தினபடி சொல்லுகிறது
அர்த்த க்ரமத்தால் கோர்த்து –
ப்ராபோதீகீம் ஸூக்திமாலாம் -யோக்ருத—தம் -பக்தாங்க்ரிரேணும் பகவந்தம் ஈடே-
இங்கும் தம் -சேர்த்து -கீழே அந்த ரெங்கன் -இதில் -பக்தாங்க்ரிரேணும் –
அந்த அந்த விட இவருக்கு இந்த அந்த உகக்குமே
அங்குத்தைக்கு அநுரூபமாய் -ஸ்ராவ்யமாய் -இனிமையாய்-திருப்பள்ளி யுணர்த்துமதான பாமாலையை யாதொருத்தர் பணித்தார் -அப்படிப்பட்ட வைபவத்தை யுடைய ஞானத்திற்கு குண பூர்ணரான தொண்டர் அடிப்பொடி ஆழ்வாரை (தம்-ஆழ்வாருக்கு விசேஷணம்-அவரை விளக்கும் படும் பெருமை)
(ஏற்கும் பெரும் புகழ் -பகவானுக்கு ஆழ்வாருக்கு பாட்டுக்கு சொல்ல வல்லாருக்கும் சாம்யம்-போல் -இங்கும்-பணித்த ஆழ்வாருக்கும் பெருமை-குண பூர்ணர் பகவான் இவருக்கும் –ஆத்மா குணம் நிறைந்து துதித்து தொழுவோம் என்கிறார் அவன் அவன் தான் -நான் நான் தான் -பாட்டு பாட்டு தான் -சொல்வார் சொல்வாரே –ஏற்கும் நால்வருக்கும்)
ஈடே என்கிற பத பிரயோகம் ஸ்துதித்துத் தொழுவோம் -இரண்டையும் வகிக்கக் கடவது –
ராஜவத் அர்ஹணீயானாகையாலே ராஜவத் உபசாரமாம்படி திருப்பள்ளி யுணர்த்த வேணும் இறே
அயோத்தி எம்மரசே அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே -8-என்று இறே இவர் திருப்பள்ளி உணர்த்துவது
ரஷோ கண பரி ஷிப்தோ ராஜா ஹ்யேஷ விபீஷண
ஸ்ரீ மதா ராஜ ராஜேந லங்காயாம் அபி ஷேசித-யுத்த -28-7-
ராக்ஷசர்களால் துரத்தப்பட்டவனாய் அரசனான இந்த விபீஷணன் அரசர்க்கு அரசனாய் ஸ்ரீ மானான ராமபிரானாலே லங்கா ராஜ்யத்தில் அபிஷேகம் செய்விக்கப் பட்டான் -என்றும்
ராஜாதி ராஜஸ் ஸர்வேஷாம் விஷ்ணு ப்ரஹ்ம மயோ மஹான்
ஈஸ்வரம் தம் விஜாநீமஸ் ஸ பிதா ஸ பிரஜாபதி -ஆஸ்வ பர்வம் -43-13
பர ப்ரஹ்ம ஸ்வரூபியும் -பெரியோனும் அரசர்களுக்கு எல்லாமே அரசராயும் இருப்பவன் விஷ்ணு -ஈஸ்வரனாக அவனை அறிவோம் -அவனே தந்தை -அவனே பிரஜாபதி -என்றும்
வீர சவும்ய விபுத்யஸ்ய கௌசல்ய ஆனந்த வர்த்தந
ஜகத்தி ஸர்வம் ஸ்வபிதி த்வயி ஸூப்தே நராதிப -உத்தர -37-4-
கௌசல்யா தேவியி இன்பத்தை வளர்ப்பவனும் -வீரனான அழகனுமான ராமபிரான் பள்ளி உணர்ந்து அருள வேண்டும் -நீ உறங்கினால் உலகம் எல்லாமே உறங்குகிறது-என்றும்
கௌசல்யா ஸூப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நரசார்த்தூல கர்த்தவ்யம் தைவம் ஆஹ்நிகம் -பால-23-2-
என்று வந்திகள் -விச்வாமித்திராதிகள் உணர்த்துமா போலேயும்
அவருக்கும் பெரிய பெருமாளாய் பெரிய பெருமாளான ஸ்ரீ ரங்கராஜரை அன்றோ இவர் திருப்பள்ளி உணர்த்துவது –
இவர் தாம் இப் பிரபந்தத்திலே
கால அதிக்ரமமான படியையும்
ப்ரஹ்மாதி தேவதைகள் ஸாவதாநராய் வந்து திருவாசலில் காத்து நிற்கிற படியையும்
அங்குத்தையில் சம்மர்த்தத்தையும்
திருப்பள்ளி யுணர்ந்தால் கண்டு அருளும்படி மங்கள வஸ்துக்கள் பாரித்த படியையும்
மங்கள வாத்யங்கள் முழங்குகிற படியையும்
மங்கள தீபம் போலே ஆதித்யன் உதித்துத் தோற்ற அதில் அரவிந்தங்கள் தீபிகை -சிறு விளக்குகள் -போலே விகஸித்த படியையும்
அருளிச் செய்து அன்றோ திருப்பள்ளி யுணர்த்துகிறது –
இவை எல்லாமே ராஜவத் அர்ஹணீயதைக்கு ஏற்கும்படியாய்த்து இருப்பது
ரங்கேஸயம் ப்ராபோதி கீம் ஸூக்தி மாலாம் அக்ருத -என்கையாலே -அடிக்கடி அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாய் -என்றும் -விசேஷித்து –இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே –என்றும் இறே அருளிச் செய்தது –
ப்ராபோதி கீம் ஸூக்தி மாலாம்-என்கையாலே திருப்பள்ளி எழுச்சியாகிய சொல் மாலையை இறே இவர் சொல்லிற்று –திருமாலையும் ஸூக்தி மாலை இறே -அதிலும் என்னை-நோக்காது ஒழிவதே -36-என்றும் –அளியல் நம் பையல் என்னார் -37-என்று இறே ஆலோகநாலா பாதிகளை அபேக்ஷித்தது -அபேக்ஷித்து –கிடந்ததோர் கிடைக்கை -23-என்று கிடை அழகை அனுபவித்து நடையழகு தொடக்கமானவற்றைக் கண்டு அனுபவிக்கத் துயில் எழப் பாடுகிறார் -இரண்டுமே பெரிய பெருமாளைப் ப்ரதிபாதித்த பிரபந்தங்கள் இறே -ஆகையால் ஸூக்திமாலாம் -என்றதில் இரண்டுமே அந்தர்பூதம் –
மழைக்கன்று வரை முன் ஏந்தும் மைந்தனே மதுரவாறே
உழைக்கன்றே போல நோக்கம் உடையவர் வலையில் பட்டு
உழைக்கின்றேற்கு என்னை நோக்காது ஒழிவதே யுன்னை என்னே
அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி அரங்க மா நகர் உளானே –36-
தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ் திரு வரங்கத்துள் ஓங்கும்
ஒளி யுளார் தாமே அன்றே தந்தையும் தாயும் ஆவார்
எளியதோர் அருளும் அன்றே என் திறத்து எம்பிரானார்
அளியல் நம் பையல் என்னார் அம்மாவோ கொடியவாறே –37-
கங்கையில் புனிதமாய காவிரி நடுவு பாட்டுப்
பொங்கு நீர் பரந்து பாயும் பூம் பொழில் அரங்கம் தன்னுள்
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்தோர் கிடக்கை கண்டும்
எங்கனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே-23-
பகவந்தம் -என்கையாலே ஞானாதிகளைச் சொல்லி -(ஐஸ்வர்யஸ்ய சமக்ரஸ்ய வீர்யஸ்ய யயஸ ஸ்ரீ ரிய ஞான வைராக்யோஸ் ச ஏவ ஷண்ணாம் பக இதீரணா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-74-)ஞானம் பலம் ததீய சேஷத்வம் என்றது தோற்ற பகவத் அங்க்ரி ரேணும் -என்கிறது
அவரும் –அடியார்க்கு ஆட்படுத்தாய் -என்றும் –துளவத் தொண்டாய சீர்த் தொண்டரடிப்பொடி -என்றும் இறே அருளிச் செய்து தலைக்கட்டிற்று-
தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி என்று திருப்பள்ளி யுணர்த்தி –சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி இத்யாதி -படியே -பகவத் முக உல்லாஸ ஹேதுவான பகவத் கைங்கர்யத்தைப் பிரார்த்தித்த ஆழ்வார் போலவே –ஈடே -என்று இதில் அவர் விஷயத்தில் வாசிக காயிக கைங்கர்யங்களை சொல்லித் தலைக் கட்டுகிறார் – ஸ்ரீ திருமாலை ஆண்டான் இத் தனியனில்-
———
மண்டங்குடி என்பர் மா மறையோர் மன்னிய சீர்
தொண்டர் அடி பொடி தொன் நகரம் வண்டு
திணர்த்த வயல் தென் அரங்கத்தம்மானை பள்ளி
வுணர்த்தும் பிரான் வுதித்த ஊர்–ஸ்ரீ திரு அரங்க பெருமாள் அரையர் அருளிச் செய்தது..
வண்டு–வண்டுகளானவை
திணர்த்த -நெருங்கிப் படிந்து இருக்கப் பெற்ற
வயல் -கழனிகள் சூழ்ந்த
தென் -அழகிய
அரங்கத்தம்மானை-திருவரங்கத்தில் கண் வளர்ந்து அருளும் பெரிய பெருமாளை
பள்ளி வுணர்த்தும்–திருப்பள்ளி யுணர்த்துமவராய்
பிரான் –பரம உபாகரராய்
மண்டங்குடி என்பர் மா மறையோர் மன்னிய சீர்
தொண்டர் அடி பொடி தொன் நகரம்
வுதித்த ஊர்-
தொண்டரடிப்பொடி – “தொண்டரடிப்
பொடி” என்னும் திரு நாமமுடையரான ஆழ்வார்,
உதித்த ஊர் – திருவவதரித்த திவ்ய தேசமாவது,
சீர் மன்னிய–சீர்மையுடைய,
மண்டங்குடி – திருமண்டங்குடி என்கிற,
தொல் நகரம் — அநாதி,யான நகரமாகும்.
என்பர் மறையோர் – என்று வேதம் வல்ல பெரியோர் கூறுவர்
அவ:- (மண்டங்குடியித்யாதி) சேஷேத்வ ஸீமாபூமி யான தொண்டரடிப் பொடியாழ்வார் திருவவதார ஸ்தலம்-மிக்க வேதியராலே -வைதிக ஸ்ரேஷ்டராலே – ஸதா அநுஸந்திக்கப் படுமென்கிறது-
வ்யா:-(மாமறையோர்-வண்டு திணர்த்த வயல் தென் னரங்கத்தம்மானைப் பள்ளி யுணர்த்தும் பிரான்-தொண்டரடிப் பொடி உதித்த வூர் – தொல் நகரமான மண்டங்குடி
யென்பர்.] ‘கண்ணங்குடி குறுங்குடி புள்ளம் பூதங்குடி” என்று உகந்தருளின நிலங்களைச் சொல்லுமா போலே இங்கும் ‘மண்டங்குடி யென்பர் மா மறையோர்” என்கிறது. இவர் மா மறையோராகையாலே மண்டங்குடியைச் சொல்லுமவர்களும் மா மறையோராய்த்து, மா மறையோ ராகிறார்-மிக்க வேதியர் வேதத்தினுட் பொருளான -ததீ,ய வைபவத்தை அறிந்தவர்கள்-(‘மிக்க வேதியர் வேதத்தினுட் பொருள்'(கண்ணி-9) என் று மதுரகவி யாழ்வாரால் வேதத்தின் உட் பொருளாகச் சொல்லப்பட்ட அடியார் பெருமையை அறிந்தவர்களே மா மறையோர் ஆவர்.)
அது தான் தொண்டரடிப்பொடி தொல் நகரமிறே-(தொல் நகரம்) பழையதாய்ப் போருகிற நகரம், நகரங் களிலேயிறே நல்ல வஸ்துக்களுண்டாவது; நல்லார் நவில் குருகூர் நகரான்”(திரு விருத்தம்-100) ” என்னுமா போலே. இது நகரமாகைக்கு ஹேது சொல்லுகிறது (வண்டு திணர்த்த) இத்யாதியால்-(இது நகரமாவதற்குக் காரணம் திருப் பள்ளி யெழுச்சி பாடிய தொண்டரடிப் பொடி யாழ்வார் அவதரித்ததே என்று பாட்டின் எஞ்சிய பகுதியாலே)
வண்டுகள் நெருங்கின வயலை யுடைய, ‘’வயலுள் இரிந்தன சுருப்பினம்‘ என் றருளிச் செய்தாரிறே–பூங்குவளைப போதில் பொறி வண்டு கண் படுப்ப-(திருப்பாவை-3] என்று ஆண்டாளும் அருளினாள் அன்றோ – இப்படி நீர்ப் பூவிலே வண்டுகள் நெருங்கின வயல் சூழ்ந்த கோயிலுக்கு நிர் வாஹகரான பெரிய பெருமாளை-
”வண்டு திணர்த்த வயல் தென்னரங்கத் தம்மானைப் பள்ளி யுணர்த்தும்” என்கையாலே “வயலுள் இரிந்தன சுரும்பினம்-இத்யாதிப்படியே (மஞ்ஜரீஸுப்தப், ருங்கா) என்று பூக்களிலே கண்படுத்த வண்டுகள் உணர்ந்தன.
தரளத தரங்கைர் மந்த மாந்தோள்யமாந ஸ்வதட விட பிராஜீ மஞ்ஜரீ ஸுப்த ப்,ருங்க க்ஷிபது கநக நாம் நீ நிம் நகா நாரிகேௗ- க்ரமுகஜ மகரந்தைர் மாம்ஸ லாபா மதம்ஹ: (ர-ஸ்த 1-24
[அசையும் மெல்லிய அலைகளாலே மெல்ல அலைக்கப் படுகின்ற தன் கரையிலுள்ள சோலைகளினுடைய பூங்கொத்துக்களிலே உறங்குகின்ற வண்டுகளை யுடையதும், தென்னை பாக்கு மரங்களிலிருந்து உண்டான மகரந்தம் நிர்ம்பிய நீரை யுடையதுமான பொன்னியெனும் பெயரை யுடைய காவேரி நதியானது என்னுடைய பாபத்தை அழிக்கட்டும்.] என்கிற படியே பூக்களிலே உறங்கின வண்டுகள் உணர்ந்தன என்று கூறி-ஸ்ரீரங்க ராஜனாகிற வண்டை “அரங்கத்தம்மா பள்ளி யெழுந் தருளாயே” என்று திருப் பள்ளி யுணர்த்துபவர் என்று சொல்லப் படுகிறது.-ஸ்ரீரங்க நாச்சியார் ஸ்தநஸ்தபகத்திலே கண் வளர்ந் தருளுகிற ஸ்ரீரங்காராஜ ப்ருங்கத்தை “அரங்கத்தம்மா பள்ளி யெழுந்தருளாயே” என்று திருப் பள்ளி யுணர்த்துமவர்.(பள்ளியுணர்த்தும் பிரான்) திருப் பள்ளி யுணர்த்தி, பின்புள்ளார்க்கும் இப் பிரபந்த,த்தை யுண்டாக்கி உபகரித் தருளினவர்.
(உதித்த வூர்) அறிவிலா மனிசர்க்கு (திருமாலை 13]அறியாதன அறிவித்து [திருவாய் 2-3-2] என்கிறபடியே அவர்களால் அறியப்படாத நல்ல விஷயங்களை அறிவித்து அஜ்ஞாநத்தைப் போக்குகைக்காக இவர் அவ் வூரிலே உதித்தது. “கதிரவன் குண திசைச் சிகரம்
வந்தணைந்தான் கன விருளகன்றது” [திருப்பள்ளி-1] என்னும்படி யன்றிக்கே -ஸூர்யனைப் போலே வெளி யிருளை மாத்திரம் போக்காமல், –ஆந்தரமான அந்த காரத்தைப் போக்கிற்று-அஞ்ஞாக இருளாகிற உள்ளிருளையே போக்கினாரன்றோ-
ஆகையால் தொண்டரடிப் பொடி தொன்னகரம் மண்டங் குடியென்பர்– என்று முற்பாதியோடே கூட்டிப் பொருள் கொள்வது.
—————-
ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த திருப் பள்ளி யெழுச்சி வ்யாக்யானம்
அவதாரிகை
ஸுப்தோ யதா ஜீவ: ப்ரபு,த் யதே -(அநாதி,மாயயா ஸுப்தோ யதா ஜீவ: ப்ரபு,த் யதே [கௌட பாதகாரிகை]
[அநாதி மாயையினால் உறங்கும் ஜீவன் எப்போது உணருகின்றானோ] என்கிறபடியே
அநாதி காலம் அஜ்ஞாநத்தாலே உறங்குகிற இவரைப் பெரிய பெருமாள் தம்முடைய நிரவதிக க்ருபையாலே (எல்லை யற்ற நிர்ஹேதுக கிருபையாலே மயர் வற மதிநலமருளி)உணர்த்தி யருள-உணர்ந்து, பெரிய பெருமாளே ப்ராப்யரும் ப்ராபகரும் என்னுமிடம் ” ஐம்புலனகத் தடக்கிக் காம்பறத் தலை சிரைத்துன்
கடைத்தலை யிருந்து வாழும் சோம்பரை யுகத்தி -திருமாலை-38” என்று இவரை யிட்டு நிலை யிடுவித்து, இப் பிரபந்த,த்தாலே நாட்டுக்கு வெளிச் செறிப்பைப் பண்ணி வைத்து நிர்ப் பரராய்க் கண் வளர்ந்தருள,அத்தலை யித்தலையாய்ப் பெரிய பெருமாளை யுணர்த்தி அடிமை செய்யப் பாரிக்கிறார்
ப்ராப்ய ப்ராபகங்களிரண்டும் அவனே என்றறுதி யிட்டால்-பின்பு திருப் பள்ளி யுணரும் படியையும், அழகோலக்க மிருக்கும்-படியையும், அருகே திருமாலை யெடுத்து அடிமை செய்யும் படியையும், மநோரதி த்து, இவையே யாத்ரையாய்ச் செல்லுமித்தனை யிறே. (அவன் திருப்பள்ளி யெழுந்திருக்கும் படியையும், சீரிய சிங்காசநத்திலே இருக்கும்படி யையும் கண்டு அநுபவித்து அருகில் பூமாலைகளை எடுத்து அடிமை செய்ய வேண்டுமென்று பாரித்து இதுவே தொழிலாக இருக்க வேண்டி வருமன்றே. )நாய்ச்சியாருக்கு ” மாரி மலை முழைஞ்சில் ; என்கிற பாட்டிலே இதுவே யிறே அநுஸந்தமாநம். நம்மாழ்வாரும், நெடு மாற்கடிமையிலே -(8-10)புருஷார்த்தத்தினுடைய சரமாவதியை நிலையிட்டு. அநந்தரம் கொண்ட பெண்டிரிலே (9-1)நாட்டுக்கு வேண்டும்
ஹிதமருளிச் செய்து, பின்பு “கிடந்த நாள் கிடந்தாய்எத்தனை காலம் கிடத்தி‘ (திருவாய் 9-2-3] என்கிற பாட்டிலே உணர்த்தி யெழுப்பி அடிமை செய்யப் பாரித்தாரிறே.
விச்வாமித்ரனும் –கௌசல்யா ஸுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நரசார் தூல கர்த்தவ்யம் தை,வமாஹ்நிகம்) என்றானிறே;
அப்படியே இவரும் (நம்மாழ்வார், ஆண்டாள், விஸ்வாமித்ரர் ஆகியவர்களைப் போலே )பெரிய பெருமாள் உணர்ந்தருளும் போதை யழகு கண்டு அடிமை செய்ய ஆசைப் பட்டுத் திருப் பள்ளி யுணர்த்துகிறார்.
திருப் பள்ளி யுணர்த்துகைக்கு நிபந்தனம் என் என்னில்: – “ஆம் பரிசறிந்து கொண்டு”
(திருமாலை 38] – எம்பெருமான் உகந்த கைங்கரியமே பேறு” என்னும் உண்மையை அறிந்திவராகையாலே-)என்கிறபடியே – கைங்கர்ய யாதாத்ம்யம் அறியுமவராகையாலே,(பாவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸா நுஷ ரம்ஸ்யதே |
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வபத ச தே!![ரா-அ 31-25]
(நீர் வைதேஹி யுடன் கூட மலைத் தாழ்வரைகளில் விளையாடுவீர்; அடியேன் நீர் விழித்துக் கொண்டிருக்கும் போதும் தூங்குப் போதும் உமக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன்.] என்றும், ) ” ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி ’(திருவாய் 3-3-1)
என்கிறபடியே-ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் ஸர்வ வித,கைங்கர்யத்தையும் பண்ணுமிடத்தில் “தனக்கே யாக வெனைக் கொள்ளுமீதே” –2-9-4-என்று அவனுகந்த கைங்கர்யமாக வேணும்; அதுசெய்யுமிடத்தில் (க்ரியதாமிதி மாம் வத.)என்றும், “எனக்கே யாட் செய்” -2-9-4-என்றும், முகப்பே கூவிப் பணி கொள்ளாய்’’ -8-5-7-என்றும் சொல்லுகிறபடியே – ஏவிக் கொள்ள வேணுமென்றிருக்குமவ ராகையாலே ப்ரபாத ஸூ சகங்களைச் சொல்லித் திருப் பள்ளி யுணர்த்துகிறார்.
————–
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த திருப்பள்ளி யெழுச்சி வ்யாக்யானம்
அவதாரிகை
இவ் வாழ்வாராகிறார் – முதலிலே ஸ்வரூப உபாய புருஷார்த்த, விவேக ஸூந்யராய் தேஹத்தில் ஆத்ம புத்தியைப் பண்ணி தத,நுபந்தி,களான ஸப்தாதி | விஷயங்களிலே மண்டி, தம்மோடு சேர்ந்தாரையும் தத் ஸ்வபாவராக்கிப் போரா நிற்க,
(அதாவது – இவ்வாழ்வார் அநாதி,காலமாக ஸம்ஸாரியாய் இருந்து “மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து” [திருவாய் 2-6-5] என்கிறபடியே பல பிறவிகள் எடுத்து வரும் போது, தம் ஸ்வரூபம் எத்தகையது, தாம் அடைய வேண்டிய பயன் எது, அதற்கு உபாயம் எது என்னும் அறிவு இல்லாதவராய், தேஹத்தையே ஆத்மாவாக எண்ணி இந்த தேஹத்தைக் கொண்டு அநுபவிக்கப்படுகிற ஸப்த ஸ்பர்ஸ ரூப ரஸ கந்தங்களாகிற ப்ராக்ருத விஷயங்களிலே ஈடுபட்டு, தம்மோடு சேர்ந்தவர்களையும் தம்மைப் போலவே ஆக்கிப் போந்தார். )இவ்வாறு போரா நிற்க'(அவர் அநுகூலரான பின்பு உறங்குகிறார் என்கைக்கு, முன்பு உறக்க மில்லையோ வென்ன அருளிச் செய்கிறார்-மாதராரித்யாதி)மாதரார் கயற் கணென்னும் வலையுள் பட்டழுந்துவேனைப் போதரே யென்று சொல்லிப்போதரே யென்று சொல்லிப் புந்தியிற் புகுந்து தன் பாலாதரம் பெருக வைத்த அழகன்” [திருமாலை-16) என்கிறபடியே பெரிய பெருமாள் தம் நிர்ஹேதுக க்ருபையாலே தம் வடிவழகைக் காட்டி, விஷயாந்தர ப்ராவண்யத்தை மாற்றி, ஸ்வரூபாநுரூபமாகத் தம் பக்கலிலே அபி. நிவேசத்தைப் பிறப்பிக்க, இவரும் ப்ரீதி காரிதமான கைங்கர்யத்தைப் பாரித்துக் கொண்டு பெரிய பெருமாள் திருவடிகளிலே சென்ற விடத்திலே, திருக் கண்களாலே குளிர நோக்குதல், கையை நீட்டி அணைத்தல், குசல ப்ரஸ்நம் பண்ணுதல், (<ஸிரஸா தே,வ: ப்ரதி க்ருஹ்ணாதி) என்கிறபடியே (யா: க்ரியா: ஸம் ப்ரயுக்தா: ஸ்யுரேகாந்தக,த புத்தி,பி : |தா: ஸர்வா: ஸிரஸா தே வ: ப்ரதி க்குஹ்ணாதி வை ஸ்வயம்
(பரதம் -மோக்ஷ 171-63)[மறந்தும் புறந்தொழாமையில் நிலை நிற்கும் அறிவை யுடையவர்களாலே யாவை சில கிரியைகள் (கைங்கர்யங்கள்) நன்கு அனுஷ்டிக்கப் படுகின்றனவோ, அவை யெல்லாவற்றையும் தேவன் தானே தலையாலே ஏற்றுக் கொள்கிறான் ]சூட்டு நன் மாலைகளை ஸிரஸா வஹித்தல் செய்யாதே பள்ளி கொண்டருளினார் பெரிய பெருமாள்.
அதற்கு நிபந்தநம் அநாதரம் என்ன ஒண்ணாது -ப்ரிய பூதராகையாலே -உண்டது அறாமையாலே யாதல்(உண்ட உணவு ஜெரிக்காமையாலோ ) -தம அபி பாவத்தாலே யாதல் -என்ன ஒண்ணாது -ஸூத்த ஸத்வமாகையாலே -பின்பு இதற்கு நிபந்தநம் என் என்னில் -ஆதலால் பிறவி வேண்டேன் -திருமாலை -3- என்னும்படி -ப்ரக்ருதி ஸம்பந்தம் அப்ராப்தம் என்னும்படி யான ஞான விசேஷத்தை யுடையவரான படிையும், “போனகஞ்
செய்த சேடந் தருவரேல் புனித தமன்றே”( திருமாலை 41] என்னும்படி அவனடியார்க்கும் ஆட்பட்டிருக்க வேண்டும் என்னுமளவுக்கு ஆழ்வாருக்கு ஸ்வரூப ஜ்ஞநம் பிறந்தபடியையும், )ததீய சேஷத்வ பர்யந்தமாக ஸ்வரூப யாதாம்ய ஜ்ஞாநம் பிறந்த படியையும் “இச் சுவை தவிர அச்சுவை பெறினும் வேண்டேன்”-(திருமாலை-2] என்னும்படி ப்ரக்ருதி புருஷ யாதாத்ம்ய ஜ்ஞாநம் பிறந்த படியையும், “காவலிற் புலனை வைத்து” -திருமாலை 1]என்னும்படி இந்த்ரியங்களை நியமித்தபடியையும், குளித்து மூன்றனலை யோம்புங் குறிகொளந்தணமை தன்னை யொளித்திட்டேன்” -திருமாலை 25)என்னும்படி உபாயாந்தரங்களில் துவக்கற்ற படியையும், “உன்னருளென்னுமாசை தன்னால் பொய்ய னேன் வந்து நின்றேன்” -திருமாலை 33-என்னும்படி- எம்பெருமானுடைய இரக்கமே உபாயம்’ என்னும் – உபாய யாதாத்ம்ய ஜ்ஞாநம் பிறந்தபடியையும் அநுஸந்தித்து, “சோம்பரை யுகத்தி போலும்”-திருமாலை 38] என்கிறபடியே இவரை யிப்படிப் பெறுவோமென்கிற ப்ரீதி ப்ரகர்ஷத்தாலும், –ஆத்மாநம் வாஸுதே வாக்யம் சிந்தயந்) என்கிறபடியே இவரைப் புகுர நிறுத்தின தன் வைபவத்தையும் அநுஸந்தி,த்து. “நாகமிசை த் துயில்வான் போலுலகெல்லாம் நன்கொடுங்க யோகணைவான்” -திருவாய் 4-8-9-என்கிறபடியே-“எல்லாரையும் இவரைப் போலே நம் பக்கலிலே ப்ரவணராக்கும் விரகேதோ?” என்று ததேகாக்ர சித்தராய்க் கொண்டு பள்ளி கொண்டருளினார்.
“‘மாதரார் கயற்கணென்னும் வலையுட்பட்டு-திருமாலை 16” என்கிற படியே இந்த்ரிய வஸ்யராய்க் கைகழிந்தவன்று, (அநித்ரஸ்ஸததம் ராம:) என்கிறபடியே-(அநித்ரஸ் ஸததம் ராம: ஸூப்தோபி ச நரோத்தம: ஸீதேதி மதுராம் வாணீம் வ்யாஹரந் ப்ரதிபுத்யதே||(ரா-ஸு 36-44][(ஸீதையைப் பிரிந்த) ராமன் எப்போதும் தூக்கமற்றவராகவே இருக்கிறார்; நர ஸ்ரேஷ்ட்ட,ரான அவர் தூங்கினாலும் ‘ஸீதே’ என்னும் அழகிய சொல்லை உச்சரித்துக் கொண்டே விழித்தெழுகிறார்) எ-உறங்காதிருந்த பெரியபெருமாள், “அடியரோர்க்ககலலாமே”-திருமாலை 20-என்னும்படி கை புகுந்த பின்பு கரைச்சல் கெட்டு மார்பிலே கை வைத்து உறங்கப் புக்கார். –எம்பிராற்காட் செய்யாதே என் செய்வான் தோன்றினேனே” – திருமாலை 28-என்றிருக்கு மவராகையாலே கைங்கர்ய த்வரையாலே –
(உத்திஷ்ட, நரார்தூல) (ஸ மயா போதி த : ஸ்ரீமாந் -வாயஸேந ததஸ்தேந பலவத் க்லிஸ்யமா நயா | ஸ மயா போதித: ஸ்ரீமாந் ஸுக,ஸுப்த: பாந்தப: !(ரா-ஸூ -38-25 J
[பிறகு அந்தக் காகாஸுரனால் பலாத்காரமாகத் துன்புறுத்தப்பட்ட என்னால், ஸுகமாகக் கண் வளர்ந்தருளியவரும், (அதனாலே) அழகாயிருப்பவரும், எதிரிகளைத் தபிக்கச் செய்பவருமான ஸ்ரீராமபிரான் எழுப்பப்பட்டார் ] என்று ஸீதாப் பிராட்டி எழுப்பியது போலும், ) “உம்பர் கோமானே உறங்காதெழுந்திராய்” -திருப்பாவை 17] என்று ஆண்டாள் எழுப்பியது போலும்– ‘அரங்கத் தம்மா பள்ளி யெழுந் தருளாயே” என்று திருப் பள்ளி யுணர்த்தி, உனக்கே நாமாட் செய்வோம்” – [திருப்பாவை-29) என்று ஆண்டாள் அவன் உகந்த கைங்கர்யத்தை ஆசைப்பட்டது போலே – “தொண்டரடிப் பொடி யென்னு மடியனை அளியனென்றருளி யுன்னடியார்க் காட் படுத்தாய்” -திருப்பள்ளி-10-என்று ததீய பர்யந்தமான கைங்கர்யத்தைக்
கொண்டருள வேணுமென்று ப்ரார்த்திக்கிறரா யிருக்கிறது-அடியார் வரையிலான கைங் கர்யத்தைக் கொண்டருள வேண்டுமென்று பிரார்த்திக்கிறவராய் இப் பிரபந்தத்தைத் தலைக் கட்டுகிறார்.
ஆதித்யன் உதய கிரியிலே வந்து தோற்றினான். திருவாராதநத்துக்கு ஸமுசிதமான ஸகலோபகரணங்களுங் கொண்டு துர்மாநிகளான தேவ ஜாதிகளும், ராஜாக்களும் பக்நாபி மாநராய்த் திருக் கண்ணோக்காகத் தெற்கு திக்கிலே ப்ரதம கடாக்ஷத்துக்காக “நான் முற்பட்டேன் நான் முற்பட்டேன்” என்று முற்கோலிக் கொண்டு வந்து நின்றார்கள்; ஸர்வ ரஷகராய், ஸ்ரீய:பதியாய்-ஆஸ்ரித வத்ஸலராய், ஸர்வ ஸமாரயணீயரான தேவரீர்
அடியேனுக்காக உணர்ந்தருளினீரென்கிற தரத்தை அடியேனுக்குத் தந்தருளித் திருப் பள்ளி யுணர்ந்து அடியோங்களடிமை கொண்டருள வேணுமென்கிறார். ப்ரஜைகளைக் காட்டி ஜீவநம் வேண்டுவாரைப் போலே ஆராத கரான தேவ ஜாதியை முன்னிட்டுக் கொண்டு ஸ்வ ப்ரயோஜனத்தை அபேக்ஷிக்கிறார்.
திருமாலையில் திருப்பள்ளி யெழுச்சிக்கு வாசி யென்னென்னில்;
1-அநாதி மாயயா ஸுப்தரான இவரைப் பெரிய பெருமாளுணர்த்தினார் அதில்;
இவர் தம் பக்கல் வ்யாமோஹத்தாலே ஸுப்தரான அவரைத் திருப் பள்ளி யுணர்த்துகிறார். இதில்
2-“புன் கவிதையேலு மெம்பிராற் கினியவாறே” திருமாலை – 45-என்று வாசிக கைங்கர்யத்தை இனிதாகக் கைக் கொண்டபடி சொல்லிற்று- அதில்;
“தொடை யொத்த துளவமும் கூடை யும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப் பொடி யென்னும் அடியனை அளியனென்றருளி-திருப்பள்ளி 10- என்கையாலே காயிக கைங்கர்யத்தை இனிதாகக் கைக் கொண்டருள வேணு மென்கிறது இதில்.
3-“எம்பிராற்கினியவாறே” என்று பெரிய பெருமாளுக்கினிதான கைங்கர்யத்தைப் பெற்று நின்றார்-அதில்;
‘‘அடியார்க்காட்படுத்தாய்” என்று-ததீயருகந்த கைங்கர்யத்தை அபேக்ஷிக்கிறார் இதில்
4-அதில் பெரிய பெருமாளுடைய க்ருஷியைச் சொல்லிற்று;
இதில் அவருடைய க்ருஷி பலித்த படியைச் சொல்லுகிறது.
5-“’எளியதோரருளுமன்றே யென் திறத்து”- திருமாலை 37]- என்று தம்மை விஷயீகரிக்க வேணுமென்றார் அதில்;
அவர்க்கு நாளோலக்க மருள” -திருப்பள்ளி 9]என்று பர ஸம்ருத்தியை ஆஸாஸிக்கும் படியாகப் பாகம் பிறந்தபடி சொல்லுகிறது இதில்-
பிறரைக் கடாக்ஷிக்க வேண்டுமென்று பிரார்த்திக்கும் படியான பரிபக்குவ நிலை தமக்குப் பிறந்த படியைச் சொல்லுகிறார் ஆழ்வார் இத் திருப்பள்ளியெழுச்சியில்
இவை திருமாலையைக் காட்டிலும் திருப் பள்ளி யெழுச்சிக்குள்ள சிறப்புக்கள்.
————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
Leave a Reply