ஸ்ரீ அருளிச் செயல்களில் -ஸ்ரீ பெரிய திருவடி மஹாத்ம்யம் –புள் -கருட -பத-ப்ரயோகங்களும் வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகளும் —

என்னை வெள்ளுயிராக்க வல்ல பையுடை நாகப் பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே-9-

தன்னோட்டை  ஸ்பர்ச சுகத்தாலே விகஸித பணமான நாகத்தினுடைய பகை உண்டு
பெரிய திருவடி -அவனை கொடியாக உடையவனுக்கு அநந்த சாயியாய் கருடத்வஜனானவனுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறேன் என்கை
தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே திரு வநந்த வாழ்வானோட்டை சேர்த்தியால்
வரும் அழகு நித்ய ஸ்ரீ யாக வேணும் என்றும் ஏதேனும் ஒன்றை அபேஷித்து வந்தவர்களையும் எனக்காக்கிக் கொள்ள வல்லேன் என்று கொடி கட்டி இருக்கிற சக்தி நித்ய ஸ்ரீ யாக செல்ல வேண்டும் என்றும் திருப்பல்லாண்டு பாடுகிறேன் என்கிறார்-

——

உதவ புள் ஊர்ந்து அங்கு உறு துயர் தீர்த்த –2-1-9- நாலாயி:126/3

இந்த ஆர்த்த த்வனி திருச் செவிப்பட்ட போதே திருப் படுக்கையிலும் நின்றும் பதறி எழுந்து இருந்து – அதந்த்ரித்த சமூபதி ப்ரஹித ஹஸ்தம்–(ரங்கராஜ ஸ்தவம் )-இத்யாதிப்படியே
சேனை முதலியார் திருக் கை கொடுக்கவும் -பற்றாமல் – திருவடி நிலை கோத்து எழுந்து அருளுகையும் இன்றிக்கே வெறும் தரையிலே பத்து எட்டு அடி இட்ட பதற்றத்தை கண்டு –இதுக்கடி என் -என்று பயப்பட்டு திவ்ய அந்தபுரம் கை நெரிக்க – பெரிய திருவடியை பண் செய்து ஏறப் பெறாமல் -வெறும் புறத்தில் மேற் கொண்டு – அந்த ஆர்த்திக்கு உதவ வேணும் -என்னும் அதைப் பற்ற அவனை பிரேரித்து விரைய நடத்திக் கொண்டு சென்று – அந்த பொய்கையிலே முதலையின் கையில் அகப்பட்டு – ஸ்ரீ கஜேந்த்திரன் பட்ட அதி மாத்ர துக்கத்தைப் போக்கின –

—————-

பூ மருவி புள் இனங்கள் புள் அரையன் புகழ் குழறும் புனல் அரங்கமே -4-9-5- நாலாயி:416/

நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ  (திரு விருத்தம் )-என்கிற பூக்களின் குளிர்த்தியாலும்
மார்த்வத்தாலும் பரிமளத்தாலும் மதுவாலும்-உண்டான போக்யதையாலே விட மாட்டாதே பொருந்தி –அன்னங்கள் வண்டுகள் முதலான பஷி சமூகங்கள்  ஆனவை தங்கள்
ஜாதிக்கு ராஜாவான ஸ்ரீ பெரிய திருவடி உடைய புகழை அனஷர ரசமாக -பேசா நிற்கும் படியாய் –
அவற்றுக்கு போக்யமான புஷ்பங்கள் மிக உண்டாகைக்கு அடியான ஜல ஸம்ருத்தியை உடைத்தாய் இருக்கிற ஸ்ரீ திருவரங்கமே-

—————–

பறவை அரையா உறகல் பள்ளி யறை குறிக் கொள்மின் -5 -2-9 –

பறவை அரையா உறகல்- இவர்கள் எல்லாம் தாம் தாம் நின்ற இடங்கள் குலையாதே நின்று இறே காப்பது – ஓர் இடத்தில் நில்லாதே எங்கும் வ்யாபரித்து நோக்கும் பெரிய திருவடியை – உறங்காதே கொள் -என்கிறார் நீண்ட அசுரர் உயிர் எல்லாம் தகர்த்து உண்டு உழலும் புள் (8-10 ) இறே –

————

பறவை ஏறும் பரம் புருடா –5-4-2-

பெரிய திருவடியை வாகனமாக உடைய புருஷோத்தமனே – திரு வேம்கடமுடையான் பெரிய திருவடி மேலே எழுந்து அருளி வந்து இவரை பரம பதத்துக்கு கொடு போகையிலே த்வரிக்கிற படி –

————

அனந்தன்-பாலும் கருடன்-பாலும் ஐது நொய்தாக வைத்து என் – நாலாயி:470/1

த்ரிபாத் விபூதியில் உள்ளார் எல்லாரும் ஒத்து இருக்கச் செய்தே -இவர்களுக்கு ஓர் ஏற்றம்
சர்வ காலமும் திரு மேனியோடே ஸ்பர்சிக்கையும்-தர்சநீயத்தின் இனிமையாலே மோம் பழம் போலே முன்னே வைத்து கொண்டு இருக்கும் இறே –இப்படிக்கு ஒத்த இவர்கள் பக்கலிலே சிநேகத்தை அல்பமாக வைத்து – இவ்வளவு தான் வைக்கிறது -இவர்கள் பக்கல் வரும் போதைக்கு-சென்றால் குடையாம் -இருந்தால் சிங்காசனமாய்-நின்றால் மரவடியாகைக்கும்
மணி விளக்காய் ஆகைக்கும்- பூம் பட்டாகைக்கும் –பொறு சிறைப் புள்ளு வந்தேறி   இவர் பக்கல் வரும் போதைக்கு வாஹநம் ஆகைக்கும் சேர விடுகைக்கு ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் வேணும் இறே-பிரதம விவாகத்துக்கு செங்கல் சீரை கட்டி கூப்பிடாமைக்கு சோறு வைப்பாரைப் போலே – த்வதீய விவாகத்திலே இறே போக்கியம் உள்ளது -இவர் தண்மை பாராதே உபகரித்த உபகாரம் இருக்கிறபடி-த்ரிபாத் விபூதியில்  உள்ள எல்லாரோடும்  பரிமாறும் பரிமாற்றம் எல்லாம் இவர் ஒருவரோடும் பரிமாறின உபகாரம் –
கருள புள் கொடி சக்கரம் அடிமை கொண்டாய் -(5-4 ) என்று நித்ய ஸூரிகளை விட்டு
நித்ய சம்சாரிகளுக்கு புறம்பான தம்மை அடிமை கொண்ட உபகாரம் –

————

புள்ளும் சிலம்பின காண் புள் அரையன் கோயிலில் -6- நாலாயி:479/1

மார்கழி நீராட வேணும் என்னும் த்வரையும் இன்றிக்கே- வைகி (காலம் தாழ்ந்து )எழுந்து இருக்கில் ப்ரத்யவாயமும் இன்றிக்கே காலம் உணர்த்த உணருமவை அன்றோ புட்கள் –

போது விடிந்தது-பஷிகள் அகப்படக் கிளம்பி இரை தேடித் போகா நின்றன — காண் -என்ன-
அது விடிந்தமைக்கு அடையாளமோ -என்ன-ஏன் அல்லாவோ என்ன –-ஓம் அல்லவீ என்ன –
ஆவது என் என்ன –நீங்கள் அவற்றை உறங்க ஒட்டாதே கிளப்பின வாறே கிளம்பிற்றன
அல்லது விடிந்தமைக்கு அடையாளமோ -என்ன –இவ்விடத்தில் பிள்ளைப் பிள்ளை யாழ்வான்-பகவத் சமாஸ்ரயணத்துக்கு அனுகூலமான காலத்தை ஸூசிப்பிக்கிற
பஷிகளின் நாதம் அல்லது-இவ்வாத்மாவுக்கு உத்தேச்யம் இல்லை என்று பணிக்கும் —
என்று அருளிச் செய்வர்-நீங்கள் பிறந்த ஊரில் பஷிகளுக்கு உறக்கம் உண்டோ – காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்-மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ -என்று அன்றோ இருப்பது – வேறு அடையாளம் உண்டாகில் சொல்லுங்கோள் -என்று கிடந்தாள் –

நீங்கள் இருந்த வூரில் பக்ஷிகள் உணர்த்தியும் விடிவுக்கு உடல் அன்று –ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே என்று – காலை எழுந்து இருந்து (9-8 )-ப்ரஹ்ம முஹூர்த்தத்தில் எழுந்து இருந்து கரிய குருவிக் கணங்கள் – கிருஷ்ணனுடைய வடிவை ஸ்மரிக்குமவை
மாலின் வரவு சொல்லி -அவன் வியாமுக்தனாய் வரும் படியைச் சொல்லி –
மருள் (இந்தளம் என்னும் பண் ) பாடக் கடவதாம் படி இறே-பண்ணி வைப்பது –ஆண்டாள் பிறந்த ஊரில் பக்ஷிகளுக்குத் தான் உறக்கம் உண்டோ -என்று ஆச்சான் பிள்ளை –இப்போது இவள் புள் என்கிறது –சேர்ப்பாரையில் சொல்லுகிறபடியே ஞான அனுஷ்டங்களாலே-பகவத் சம்பந்தம் கடகரான பாகவதர்களை ஆகையால்
சத்வோத்தரமான காலம் ஆனவாறே சாத்விகரான பாகவதர்கள் – பகவத் குண அனுசந்தான பூர்வகமாக பகவத் கைங்கர்ய ரூபங்களாய்- தத் தத் வர்ண ஆஸ்ரம உசிதங்களான காலிக கர்மங்களை அனுஷ்டிக்கைகாக சர்வவோதிக்கமாக எழுந்து இருந்து புறப்பட்டார்கள் –

புள்ளுக்கு நிர்வாஹகனான பெரிய திருவடி உண்டு – அவனுடைய கோ உண்டு -சர்வேஸ்வரன்-அவனுடைய இல் -என்னுதல்–புள் -என்று பஷியாய்-அத்தாலே பெரிய திருவடியாய் – அவனுக்கு நிர்வாஹகனானவனுடைய கோயில் –என்னுதல் –
திருப் பள்ளி எழுச்சியில் சங்கத் த்வனி கேட்டிலையோ –புள்ளரையன்-அவனுக்கு நிரூபக தர்மம்-ராமானுஜம் லஷ்மணம் பூர்வஜம் ச(சீதா பிராட்டி -இருவரையும் மாய மான் பின் அனுப்பிய பின் )அகஸ்திய ப்ராதரம்–நாராயணன் (நாரங்களை வைத்தே இவனுக்கும் )என்னுமா போலே வழியே இழியுமவர்கள் ஆகையால் பெரிய திருவடியை முன்னிடுகிறார்கள்-அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே (திரு விருத்தம் -3-)-என்னக் கடவது இறே-புள் அரையன் –-என்று கிருஷ்ணனைச் சொல்லிற்று ஆகவுமாம்புள்ளரையன் கோ -பெரியாழ்வார் ஸூசகம்-

—————-

மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகு என்னும்
மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே--14-3-

மேலே பரந்த வெய்யிலை நோக்குகைக்காக வினதை சிறுவன் -என்றபடி – பெரிய உடையார் மேல் வெயிலே படாத படி சம்பாதி மறைத்தால் போலே இவனையும் பெரிய திருவடி சிறகின் கீழே நின்று விளையாடக் கண்டோம் –-அவன் தனக்கும் சேஷபூதன்-என்பது தோற்ற – என் தான் ஆண்டாள் அருளிச் செய்வர் —நஞ்சீயர் -வித்தராய் – சிறகாலே கவித்து தனது தாயாரை -கத்ருவானவள் வெய்யிலிலே வைத்த போது நோக்கி அருளினார் பெரிய திருவடி -என்பதை உள்ளத்தே கொண்டு வினதை சிறுவன் -பத பிரயோகம் என்று வித்தராவார் என்றபடி-அவனுக்கு குடையிடுவான் இவளுக்கு பவ்யனாய் இறே இருப்பது – கர்ப்ப தாசர் -என்னுமா போலே –

————–

கால் ஆர்ந்த கதி கருடன் என்னும் வென்றி கடும் பறவை இவை அனைத்தும் புறம் சூழ் காப்ப -1-8- நாலாயி:654/2

காற்றினுடைய மிக்க வேகம் போலே இருக்கிற கதியை உடையனாய் ஸ்ரீ பெரிய திருவடி என்கிற பேரையும் உடையனாய் இருக்கிற பறவை –கடல் கரை வெளியில் ஸ்ரீ சேனை எல்லாம் குழைச் சரக்காய்- தாமும் தம்பியாருமாய் காக்குமா போலே-ஸ்ரீ பெரிய பெருமாள் கண் வளர்ந்து அருளுகையாலே ஸ்ரீ பெரிய திருவடி முதலாக ஸ்ரீ பஞ்சாயுத ஆழ்வார்கள் சுற்றும் காத்துக் கொண்டாய்த்து நிற்பது-

————

புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய் அதன்றியும்
புள்ளின் வாய் பிளந்து புட் கொடி பிடித்த பின்னரும்
புள்ளை ஊர்தி யாதலால் என் கொல் மின் கொள் நேமியாய்
புள்ளின் மெய்ப் பகைக் கடல் கிடத்தாழ் காதலித்ததே –19-
நாலாயி:770/2

வேதத்தின் உடைய அபௌருஷேயத்வ சித்திக்காக ஸ்வ அசாதாராண விக்ரஹத்தை
திர்யக் சஜாதீயமாக்கிக் கொண்டு –ஹம்சாவதாரத்தைப் பண்ணி -தத்வ ஹிதங்களுக்கு
ஜ்ஞாபகமான நாலு வேதங்களையும் ஜகத்தில் அஞ்ஞான அந்தகாரம் நீங்கும்படி அருளிச் செய்தாய் –மாநம் ப்ரதீப மிவ காருணி கோததாதி -என்னக் கடவது இறே-சஹஜ சத்ருவான அஞ்ஞானத்தை போக்கினதுக்கு போலே-பஹாசுரன் வாயைக் கிழித்து -இத்தால்
பிரமாண ஞானத்தால் அஞ்ஞான  அந்தகாரம் போக்கினாப் போலே பஹாசூரனை நிரசித்து
ப்ரமேய பூதனான தன்னை தந்து ஆஸ்ரிதருக்கு பிராண பிரதிஷ்டை பண்ணின படியைச் சொல்லிற்று-தன் பக்கலிலே ஆர்த்தர் அடங்க வந்து கார்யம் கொள்ளும்படி பெரிய திருவடியை ரஷண தர்மத்துக்கு த்வஜமாகப் பிடித்து -அவ்வளவும் அன்றிக்கே -ஆஸ்ரிதர் இருந்த இடங்களிலே வந்து உதவுகைக்கு அவனை வாகனமாகக் கொண்டு நடவா நின்று———சாமான்ய த்ர்ஷ்டியால் பார்த்தால் திருவடிக்கு சஹஜ சத்ரு என்னலாம் படி இருக்கிற
திருவநந்த ஆழ்வான் மேலே திருப் பாற் கடலிலே இருவரும் கூடி விரும்பி அடிமை செய்யும்படி கண் வளர்ந்து அருளுகிற இது என் கொலோ–சஹஜ சத்ரு என்று புத்தி பண்ணி இருக்கும் சம்சாரத்தில் இருவரையும் ஏக கண்டராக்கி அடிமை கொண்ட இது தேவரீர் உடைய சர்வ சக்தித்வத்தை பிரகாசிப்பிக்கைக்காக அன்றோ என்று கருத்து –அநாதியாய் அஹங்காரத்தை விரும்பிப் போந்த சேதனனை சேஷதைகரசரான
நித்ய ஸூரிகளோடு ஒரு கோவை யாக்குவது இச் சக்தி இறே –

———–

கோடு பற்றி ஆழி ஏந்தி அம் சிறை புள் ஊர்தியால் – நாலாயி:797/2

ஸ்பர்சத்தாலே அழகு பெற்ற திரு சிறகுகளை உடைய பெரிய திருவடியை நடத்தா நிற்றி –
அவனை மேற்கொண்டால் ஈஸ்வரனுக்கு அலங்காரமாய் இருக்கும்படியைச் சொல்லிற்று
ஆகவுமாம் –இத்தால் ஆஸ்ரிதர் இருந்த சம்சாரத்தில் ஆபத் தசைகளில் சென்று
முகம் காட்டி ரஷிக்கும் நீர்மையைச் சொல்லிற்று 

———-

பொய்யர்க்கே பொய்யன் ஆகும் புள் கொடி உடைய கோமான் – 15-நாலாயி:886/2

இப்படி மெய் என்று பேரிடலாவது பொய்யைக் கொண்டு விஷயீ கரிக்கிறவன் தான் ஆள் இல்லாதவான் ஒருவனோ வென்னில் – புட் கொடி யுடைய கோமான் – மெய்யான பரிமாற்றத்தை உடையார் அநேகர் உடைய படிகளை ஒருவன் செய்ய வல்லனாம்படி சமைந்தார் அநேகரை உடையான் ஒருவன் ஆய்த்து-கொடி -என்றது – தாச விதான வாஹனம் -உப லஷணம்-நிவாச சய்யா -என்னக் கடவது இறே-கோமான் – அயர்வறும் அமரர்கள் அதிபதி ஆகையாலே -மேணானிப்பை உடையவனாய் இருக்குமவன் –

———–

குலம் கெட்டு அவர் மாள கொடி புள் திரித்தாய் – 1-10-2-நாலாயி:1039/2

பாதாளத்திலே புக்கு ஒளிப்பாரும் பட்டுப் போவாருமாம் படி த்வஜமான பெரிய திருவடியை சுழற்றிக் கொடு திரிந்த – கீர்த்தி பூதாம் பதாகாம் யோ லோகே ப்ராமயதி ப்ரபு -கீர்த்தி பூதாம் பதாகாம்–வெற்றிக்கொடி 

———-

ஆனையின் துயரம் தீர புள் ஊர்ந்து சென்று நின்று ஆழிதொட்டானை – 2-3-9-நாலாயி:1076/3

ஆனை நெடு நாள் பட்ட இடர் எல்லாம் போம்படியாக பெரிய திருவடியை மேற் கொண்டு வந்து ஆனைக்கு இடர் இன்றிக்கே முதலைக்கே இடர் ஆம்படியாக திரு வாழியை ஏவினான் ஆயிற்று –

——–

பூண் ஆகம் பிளவு எடுத்த போர் வல்லோனை பொரு கடலுள் துயில் அமர்ந்த புள் ஊர்தியை – 2-5-7-நாலாயி:1094/2

திருப் பாற் கடலிலே வந்து கண் வளர்ந்து அருளினவனை –ப்ரஹ்மாதிகள் கூக்குரல் கேட்டு
அங்கு நின்றும் பெரிய திருவடி தோளிலே ஏறி அவர்களுக்கு காட்சி கொடுக்கும் படி சொல்லுகிறது –

——————-

பாறிப்பாறி யசுரர் தம் பல் குழாங்கள் நீர் எழப் பாய் பறவை யொன்று
ஏறி வீற்று இருந்தாய் உன்னை என்னுள் நீக்கல் எந்தாய்
–2-6-8-

அசுர வர்க்கத்தினுடைய பலவகைப் பட்ட குழாங்கள் ஆனவை பாறிப் பாறி நீர் எழுந்து போம் படியாக பிரதிபஷத்தின் மேலே பாயா நின்றுள்ள அத்விதீயமான பறவையை மேற்கொண்டு உன்னுடைய வ்யாவ்ருத்தி தோன்ற இருந்தவனே – பெரிய திருவடிக்கு அத்விதீயம்-அவன் கருத்து அறிந்து நடக்கையிலே தலைவனாகை –காய் சின பறவை அன்றோ –
அவன் பிரதிபஷ நிரசனத்துக்கு பண்ணின வியாபாரம் பெரிய திருவடி திருத் தோளிலே பேராதே இருந்தவனைகொற்றப் புள் ஓன்று ஏறி மன்று ஊடே வருகின்றான் என்கின்றாளால் –

—————————

கன்றின் பின் புள்ளின் தலைவனை  போக்கினேன் எல்லே பாவமே 3-2 -7- – –

கன்றின் பின் புள்ளின் தலைவனை  போக்கினேன்
பசுமை அழிந்து உலரும்படி அத் உஷ்ணமான காட்டு வழியிலே கன்றுகளின் பின்னே –ஸ்ரீ பெரிய திருவடிக்கு நாயகனாய் -அவன் மேல் கொண்டு சஞ்சரிக்கும் அது ஒழிய
ஒரு காலமும் கால் நடை தந்து திரியாதவனைப் போக்கினேன் –

——-

தெய்வ புள் ஏறி வருவான் சித்திரகூடத்து உள்ளானே -3-3-6– நாலாயி:1173/4

பசுக்களும் இடையரும் மலங்கும்படியாக வருகிற மழையைக் காக்கைக்காக அவை உய்யும்படிக்கு ஈடாக பெரிய மலையை எடுத்துக் காத்தான் என்று ஏத்தி பூமியில் உள்ளார் எல்லாரும் ஆஸ்ரயிக்க தேவா விஷ்டமான மலை போலே பெரிய திருவடி மேலே ஏறி வருமவன்-

——————

அரவில் பள்ளி கொண்டு அரவம் துரந்திட்டு அரவப் பகை ஊர்தி அவனுடைய–3-5-1-

அரவம் -என்ற ஜாதிக்கு எல்லாம் பகையான பெரிய திருவடியை வாகனமாக நடத்துகிறவனுடைய-

—————

போர் ஆனை கொம்பு ஒசித்த புள் பாகன் என் அம்மான் -3-6-6- நாலாயி:1203/2

யுத்த உன்முகமான குவலயா பீடத்தின் கொம்பை அநாயாசேன முறித்தவன் –
வரும் இடத்தில் வழியில் பிரதிபந்தகம் தான் உண்டோ – பெரிய திருவடியை வாகனமாக உடையவன்-விரோதி நிரசன ஸ்வா பவனுமாய் தான் வரும் போதே தூரத்தில் கண்டு விடாய் தீரலாம்படியான பரிகரத்தை உடையவன் –சோளேந்திர சிம்ஹனில்-பெருமாள் யானைக்கு திரு நாமம்–இருப்பைக் காட்டி யாயிற்று இவளை அநன்யார்ஹை ஆக்கிற்று –

————–

சிறை ஆர் உவண புள் ஒன்று ஏறி அன்று திசை நான்கும் நான்கும் இரிய செருவில் -–3-8-4- நாலாயி:1221/1

சிறை என்று சிறகு-கமன சாதனமான சிறகு குறைவற்று இருந்துள்ள –உவணமாகிற புள்
உவணம் என்று பெரிய திருவடிக்கு பேர் –புள் என்று பருந்து ஜாதிக்கு பேர் -அத்விதீயமான புள்ளை ஏறி -பரத்வ பிரகாசமான பெரிய திருவடி –கடலாலே சூழப் பட்டு இருப்பதாய்-புற்றுக்கள் பாம்பு அறாதே இருக்குமா போலே-துர்வர்க்கங்கள் சேரும்படியான இலங்கையை கடந்தான் –மாலி சுமாலி மால்யவான் துடக்கமானவரை-பெரிய திருவடிமேலே எழுந்து அருளி நிரசித்தத்தாக சொல்லக் கடவது இறே (உத்தர காண்டத்தில் அகஸ்தியர் பெருமாளுக்கு சொல்லுவார் )

————–

பூ மருவிப் புள்ளினங்கள் புள்ளரையன் புகழ் குழறும் புனல் அரங்கமே–4-9-5-

அன்னங்கள் வண்டுகள் முதலான பஷி சமூகங்கள்  ஆனவை தங்கள்
ஜாதிக்கு ராஜாவான ஸ்ரீ பெரிய திருவடி உடைய புகழை அனஷர ரசமாக -பேசா நிற்கும் படியாய் – அவற்றுக்கு போக்யமான புஷ்பங்கள் மிக உண்டாகைக்கு அடியான
ஜல ஸம்ருத்தியை உடைத்தாய் இருக்கிற ஸ்ரீ திருவரங்கமே

———-

செரு ஆளும் புள் ஆளன் –4-9-10-

யுத்தத்தை ஸ்வயமேவ நிர்வஹியா நிற்கும் ஸ்ரீ பெரிய திருவடியை ஆளுகிறவன் –-ஆஸ்ரித விரோதிகளான அசூர  ராஷசரோடே யுத்தம் பண்ணும் இடத்தில் அந்த யுத்தத்தை ஸ்ரீ பெரிய திருவடி தானே நடத்த – இவன் காண வந்த சோழரோ பாதி – அத்தைக் கண்டு கொண்டு அவன் தோளிலே இருக்கும் அத்தனை ஆய்த்து

————

அம் சிறை புள் பாகனை யான் கண்டது தென் அரங்கத்தே –5-6-6- நாலாயி:1403/4

ருஷபம் வாலை எடுத்துக் கொண்டு ஓட தான் ஜடையை விரித்துக் கொண்டு முதுகு  காட்டி
கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ -என்றாப் போலே சொல்லிக் கொண்டு ஓடும்படி பண்ணின திருவடியை வாகனமாக உடையவனை –இது பாணனை -என்றும் சொல்லுவார்கள் நரகனை என்றும் சொல்லுவார்கள் –

—————–

தூ வாய புள் ஊர்ந்து வந்து துறை வேழம் – –6-8-3-நாலாயி:1520/1

சர்வேஸ்வரன் திருவடியை மேற்கொண்டு தன் திருவடிகளால் தாக்கி நடத்தப் புக்கால்
அந்த ஸ்பர்ச ஸூத்தாலே திமிர்த்து எங்கள் அம்மை  நாயனார் உடைய ஸ்பர்ச ஸூகம் இருந்த படி என் -என்று ஏத்தும் வாயை உடையவாதல் –அன்றிக்கே – நிர் தோஷமான சப்தத்தை வடிவாக உடையவன் -என்னுதல் – வேதாத்மா விஹாகேஸ்வரா -என்னக் கடவது இறே-அவனுடைய ஸ்வாபாவிக வேகம் போராமை நடத்திக் கொண்டு அவன் இடர் பட்ட பொய்கைக் கரையிலே வந்து –

—————

போகார் நான் அவரை பொறுக்ககிலேன் புனிதா புள் கொடியாய் நெடுமாலே -7-7-9- நாலாயி:1616/2

என் விரோதியைப் போக்கி ரஷிக்குமது உன் பேறாக நினைத்து இருக்கும்
சுத்தி யோகத்தை யுடையவனே –இவை எல்லா வற்றுக்கும் கொடி கட்டி இருக்கிறவனே–ஆஸ்ரிதர் பக்கலில் மிக்க வ்யாமோஹத்தை யுடையவனே-ஆஸ்ரித சம்ஸ்லேஷ ஏக ஸ்வ பாவனே-

—————

போர் ஆனை கொம்பு ஒசித்த புள்பாகன் என் அம்மான் என்கின்றாளால் -8-1-4- நாலாயி:1651/2

யுத்தோன் முகமான குவலயா பீடத்தின் உடைய கொம்பை அநாயாசேன பறித்து
அச் செயலாலே என்னை அனந்யார்ஹன் ஆக்கினவன்  -என்னா நின்றாள் –
சக்க்ய பஸ்யத -ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்றவர்களிலே ஒருத்தி போலே காணும் இவள் –
(களிறு தரு புணர்ச்சி புனல் தரு புணர்ச்சி பூ தரு புணர்ச்சி மூன்றும் லௌகிகத்தில் –
தன்னைக் காத்துக் கொடுத்ததுக்கு என்னை நான் சமர்ப்பித்தேன் )பெரிய திருவடி முதுகில் இருந்து இருப்பைக் காட்டி என்னை எனக்கு உரியேன் ஆகாதபடி -பண்ணினவன் –

————

கொற்ற புள் ஒன்று ஏறி மன்றூடே வருகின்றான் என்கின்றாளால் – 8-1-8-நாலாயி:1655/1

சர்வ சதாராணவன் விடாயர் இருந்த இடங்களிலே சாய் கரத்தை கொடு வந்து கொடுப்பாரைப் போலே எல்லார்க்கும் உபகரிக்கும் அத்விதீயனானவன் – வாஹனத்தில் ஏறி சர்வ சாதாரண ஸ்தலத்திலே வாரா நின்றான் –ஆர் இறாஞ்சிக் கொள்ளக் புகுகிறார்
ஆர் கையில் பறி யுண்ணப் புகுகிறான் – என்று அறிகிலேன் என்கின்றாள் –வந்தபடி தெரியாமல் வந்து தன் கண்ணுக்கு உள்ளே இருக்கக் காணும் இவளுக்கு ஓடுகிறது –
வரப் புக்கால் ப்ரதிபந்தகம் இல்லை கிடீர் என்னா நின்றாள் –கருட வாகன உத்சவம் அனுபவித்துப் பாசுரம் இது-வைகாசி -மாசி இரண்டும் ப்ரஹ்ம உத்சவம் -மாசி மகம் தீர்த்தவாரி-காஞ்சி தேவப் பெருமாள் ஆண்டுக்கு மூன்று தடவை –அவர் வீதி ஒரு நாள் என்று -அருளாழி புட் கடவீர் –ராஜாக்கள் அந்தபுரக் கட்டிலே-தெருவிலே –பள்ளி யந்துலாத்திலே-தண்டிகை -பல்லக்கில் – ஏறி உலவா நிற்பர்கள் காண் –பிள்ளை அமுதனார்

———

பொருந்தா அரக்கர் வெம் சமத்து பொன்ற அன்று புள் ஊர்ந்து – 8-6-2–நாலாயி:1699/1

சர்வதா நாம் அனுகூலித்தாலும் பொருந்தாமையிலெ நிலை நின்ற ராஷச ஜாதியானது யுத்தத்திலே முடியும்படியாக திருவடியை மேல் கொண்டு –மிக்க தோள் வலியை உடைய மாலி தலையானது புரளும்படியாக அவனை ஒழிந்த  மற்று உள்ள ராஷசர்கள்
புற்றுப் போலே என்றும் ஒக்க துர் வர்க்கம் மாறாத இலங்கையில் உண்டான ராஷசரையும் கூட்டிக் கொண்டு போக பூமியான பாதாளத்தில் புக்கு மறைய –வயிரம் பற்றித் திண்ணியதான வில்லை கையிலே பிடித்தவனுடைய ஊரான திருக் கண்ண புரத்தை நாம் தொழுவோம் –

—————

பூண் ஆர மார்வனை புள் ஊரும் பொன் மலையை – —11-7-1–நாலாயி:2012/3-

இவர் தம்முடைய -அம்ருதம் –திருமங்கை ஆழ்வாரது ஆரா அமுதம் – திருக்குடந்தையிலே திரு உள்ளம் பேராமல் இருந்து அருளிய படி -சர்வாபரண பூஷிதனாய் பெரிய திருவடி தோளில் இருந்த இருப்பு – ஒரு பொன் மலை மேலே ஒரு பொன் மலை இருந்தாப் போலே –காய்ச்சின வேந்தன் பொன் மலைக்கு மேல் மீமிசைக் கார்முகில் -நம்மாழ்வார்
ஸ்வர்ண வர்ணாம் -இவள் அனைத்தையும் ஸ்வர்ண மயமாக்குவாளே-ஹிரண்ய மய புருஷன் -புருஷ ஸூக்தம்-

————

அலம்புரிந்த நெடும் தட கை அமரர் வேந்தன் அம் சிறை புள் தனி பாகன் அவுணர்க்கு என்றும் – 6-நாலாயி:2057/1

அவன் அடிமை கொள்ளுகையிலே அபிஷிக்தனாய் இருக்கும்–இவர்கள் –அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று தாஸ்யத்திலே அபிஷிக்தர்களாய் இருப்பார்கள் அபிஷேகம் இருவருக்கும் ஒக்கும் – அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசு -என்னக் கடவது இறே–அவர்களை அடிமை கொள்ளும் படிக்கு த்ர்ஷ்டாந்தமாக ஒரு வ்யக்தியைப் பேசுகிறார் –அழகிய சிறையை உடைத்தான பெரிய திருவடிக்கு அத்விதீயனான பாகன் –வினை உள்ள போது அன்றோ வாகன அபேஷை உள்ளது -என்னில் வினை இல்லாத போதும் ராஜாக்கள் அழகு செண்டேறக் கடவதாய் இறே இருப்பது
ஓடும் புள்ளேறி சூடும் தன் துழாய் நீடு நின்று அவை ஆடும் அம்மானே –1-8-1 -என்னக் கடவது இறே –பெரிய திருவடி உடைய செல்லாமையாலும் தன் செல்லாமையாலும் நித்ய ஸூரிகளை அனுபவிப்பிக்காகவும் அழகு செண்டேறக் கடவதே இறே இருப்பது –வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே-நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே-தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை தான் ஏறித் திரிவான் தாளிணை என் தலை மேலே-10-6-5-அம் சிறை – பெரிய திருவடியை மேல் கொண்டால் திரிப் பரியட்டத்தைக் கொய்து சாத்தினாப் போலே அங்குத்தைக்கு அலங்காரமாய் இருக்கை –அழகு செண்டேறும் போதை ஆயாசத்துக்கு ஆலவட்டம் பணி மாறினாப் போலே
இரண்டு திருச் சிறகாலும் ஆஸ்வாச கரனாய்  இருக்கிறபடியைச் சொல்லுகிறது

தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: |
உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்கஶோபிநா ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 41 

வேதங்களையே அங்கங்களாக உடைய அந்த கருடாழ்வார், உனக்கு அடியவனாகவும், நண்பனாகவும், வாஹனமாகவும், ஆஸனமாகவும், கொடியாகவும், விதானமாகவும், சாமரமாகவும் இருக்கிறார்; மேலும் உன்னுடைய திருவடிகள் அவருடைய தோள்களில் அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளாலே ஒளிவிடுகிறார்; உன்னுடைய ஸன்னிதியில் இப்படிப்பட்ட கருடாழ்வாரால் நீ வணங்கப்படுகிறாய்

பரத்வத்தை ஆஸ்ரிதர் உடைய கால் கடையிலே கொண்டு வந்து சேர்க்கைக்கு
அடியான-பரிகரத்தை உடையவன் –புள் –(தர்ம ஸாஸ்த்ரம் -காயிக கைகளால் அபசாரம் -ஞானம் இல்லாத -ஸ்தாவரமாக பிறப்பார்கள் – வாசிக அபசாரத்தால் -பறவை பிறப்பு என்று சொல்லுமே )பாப யோநியான ஜன்மம் அவர்களுக்கு உண்டோ என்னில் –
பிராட்டியும் சர்வேஸ்வரனும் திருத் திரைக்கு உள்ளே இருந்தால்
நிலா தென்றல் சஞ்சரிக்கும் போது பிற்காலிக்க வேண்டும்படி இறே அப்போதை ஐகாந்தம் இருப்பது – அவஸ்தா அனுகுணமாக கூனர் குறளர்(நபுபும்சகர் )சஞ்சரிக்குமா போலே
அந்தரங்க சேவைக்கு அனுகூலமான வடிவை பரிகிரஹிப்பர்கள் -என்கை –
ஸ்ரீ சர்ப்ப ஜாதியோடு பஷி ஜாதியோடு ஸ்தாவர ஜாதியோடு வாசி அற பரிகிரஹிப்பர்கள்
சம்சாரி கர்ம பல அனுகுணமாக சரீர பரிக்ரஹம் பண்ணக் கடவன் –
அவன் அவஸ்தா அனுகுணமாக சரீர பரிக்ரஹம் பண்ணக் கடவன் –

தனிப் பாகன்-பாகன் -என்கையாலே அவனுக்குத் தான் பவ்யனாய் தனக்கு அவன் பவ்யனாய் இருக்கிறபடியும் தோற்றுகிறது – ஆனையைத் தன் நினைவிலே நடத்தக் கடவனாயும் அதுக்கு சேஷனாயும் இறே பாகன் இருப்பது-பெரிய திருவடி முதுகிலே நல் தரிக்க இருந்து அவனை நடத்துகை இறே சர்வாதிக லஷணம் அது புறம்பு இல்லாமையாலே அத்விதியீத்வம்(வேதாத்மா விஹஹேஸ்வரன் –நித்ய ஸூரிகளுக்கு அத்விதீய நிர்வாஹகன் -என்னவுமாம் – அயர்வறும் அமரர்கள் என்னக் கடவது இறே –

—————–

அம் சிறைய புள் கொடியே ஆடும் பாடும் அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும் -12 நாலாயி:2063/3

பாணி க்ரணம் பண்ணி வைக்க கொண்டு வந்த விச்வாமித்ரனை சொல்கிறது –
அழகிய சிறைகை உடைய பெரிய திருவடி ஆகிற த்வஜத்தை அனுகரியா நின்றாள்
வந்தால் பிரியப் படுக்கை அன்றியிலே வருகிறான் என்று தூரத்தில் கண்டால்
விஸ்வசிக்கும்படி இறே பெரிய திருவடி உடைய ஔதார்யம் இருப்பது –
பெரிய திருவடி தூரத்தில் தோற்றி ஆஸ்வசிக்கும் படியை நினைத்துக் கொண்டு இருந்தாள் – அவன் வரக் காணாமையாலே அவனை அனுகரிக்கத் தொடங்கினாள் -(ஆடுகை -அனுகரிக்கை ) விடாய்த்தார் ஹஸ்த முகத்தாலே தண்ணீர் வேண்டுமா போலே அவன் வரவில் தனக்கு உண்டான ஆகாங்க்ஷை தோற்ற அவன் வரும்படியை பாவிக்கத் தொடங்கினாள் –பெரிய திருவடி முதுகில் அவன் தான் வரும்படியை பாவிக்கை அன்றியே
கொடியையே பாவியா நின்றாள் –
அவனை அனுகரிக்கையாலே பிறந்த ஆஸ்வாசத்தாலே வாய் திறக்க வல்லளாய் ஆர்த்தி தோற்ற கூப்பிடத் தொடங்கினாள் –கண்ணும் கண்ணீருமாய் கொண்டு கால் தாழ்ந்து இருக்கும்படியான த்வனி இறே –
அப்படியே இவளும் உரக்க -ஆர்த்த நாதத்தாலே மரங்களும் இரங்கும் வகை -என்கிறபடியே
பிறர் கால் தாழ்ந்து கண்ணும் கண்ணீருமாய் இருக்கையாலே-

———

புள் ஊரும் கள்வா நீ போகேல் என்பன் என்றாலும் இது நமக்கு ஓர் புலவி தானே – நாலாயி:2074/4

பெரிய திருவடியை நடத்துக்கிற க்ரித்ரிமனே- பெரிய திருவடியை பதிப் படையாக வைத்து வந்து புகுந்து கலந்து-இத் தலை அகப்பட்டவாறே -அவன் கடுமை போராது என்று
அசேதனமான தேரை நடத்துமா போலே பெரிய த்வரையோடே பெரிய திருவடியை நடத்துக்கிற கிரித்ரிமனே-வந்த போதே போகையாலே பெரிய திருவடியை பதிப்படையாக கடத்தி வந்த க்ர்த்ரிமனே -என்கிறாள்-வந்த போது –சிலையே துணையாக வந்தானாகில் பெரிய திருவடி வருகை யாவது என் – கொண்டு போகை யாவது என் என்ன
ராஜாக்கள் அபிமத விஷயத்தை பற்ற கறுப்புடுததுப் புறப்பட்டால் மந்த்ரிகள் வரவும் கொண்டு போகவும் கடவதாய் இருக்குமா போலே பெரிய திருவடி வந்து கொண்டு போனான்-வந்த கார்யம் தலைக் கட்டிற்று ஆகில் எழுந்து அருளல் ஆகாதோ -என்று பெரிய திருவடி சொல்ல அவனை மேல் கொண்டு போனான் -தேரூர்ந்தான் -என்னுமா போலே –
அதாகிறது – பெரிய திருவடியும் குழைச் சரக்காம்படி -காண் -போன கடுமை இருந்தபடி என்கிறாள் –பெரிய திருவடி சிறகிலும்-திரு வநந்த ஆழ்வான் மடியிலும் –-சேனை முதலியார் பிரம்பிலும்-பிராட்டி கடாஷத்திலும் வளரும் தத்வம் ஆகையாலே தான் நினைத்தபடி செய்யப் போகாது இறே –வான் இளவரசு வைகுந்தக்  குட்டன்– இறே –

————–

அரன் நாரணன் நாமம் ஆன் விடை புள் ஊர்தி – 5-நாலாயி:2086/1

வாகனங்களையும் ஆராய்ந்தால் அப்படியேயாய் இருக்கும் –அவன் தன க்ரௌர்யத்துக்கு ஈடாக தமஸ் பிரசுரராய் இருப்பார் பரிக்ரஹித்து போரும் ருஷபத்தின் மேலேயாய் இருக்கும்    –சிம்ஹத்தின் பக்கல் போகாமைக்காக ஆன் விடை என்கிறது – வெறும் விடை என்றால் சிம்ஹத்தையும் குறிக்கும் இறே-மற்றையவனுக்குவேதாத்மாவான பெரிய திருவடி வாகனமாய் இருக்கும் – ஐஸ்வர்ய ஸூசகம் இறே –-அறிவு கேட்டுக்கு நிதர்சநமாகச் சொல்லப்படும் ருஷபமே ஒருவனுக்கு வாஹனம் – த்ரயீ மய-என்று சொல்லப்படுகிற பெரிய திருவடி ஒருவனுக்கு வாஹனம் –-அந்த ப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஜநாநாம் சர்வாத்மா என்றால் -சர்வஞ்சாஸ்ய சரீரம் என்று தோற்றுமா போலே ஒருத்தன் சரீரம் என்றால் ஒருத்தன் சரீரி என்று தோற்றும் இறே-ஏஷ ஸர்வ பூதாத்மா- உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்-அவனே அவனும் அவனும் அவனும்-நளிர் மதிச் சடையன் என்கோ-முனியே நான்முகனே முக்கண் அப்பா-

————

ஈர்ந்தான் இரணியனது ஆகம் இரும் சிறை புள் ஊர்ந்தான் உலகு அளந்த நான்று -17- நாலாயி:2098/3,4

கூரிய உகிராலே ஹிரண்யனுடைய மார்வைப் பிளந்தான்(ஆயுதம் தேவையாய் இருக்க வில்லையே -அதுவும் விளையாட்டாகக் கிழித்தவன் -ஈர்ந்தவன் )பெரிய திருவடி முதுகில் இருக்கப் பொறாத மிருதுவான(புஷ்ப ஹாஸ ) திருவடிகளைக் கொண்டு உலகு அளந்த அன்று –பெரிய திருவடியை மேற் கொண்டு ஸ்வைரமாக நடத்தி -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் கூப்பிட மிக த்வரையுடன் ஓடி வந்து–ஓர் இடத்திலே ஓர் அடியானுக்கு விரோதியை அழித்து உபகரித்த ஸ்ரீ நரஸிம்ஹ அவதாரத்தில் இழந்தது வியப்பில்லை-ஸ்ரீ கஜேந்த்ரனுக்குப் புள்ளூர்ந்து காட்சி அளித்து உபகரித்த போது இழந்ததும் வியப்பில்லை- -திருவடிகள் தானே வந்து என் தலை மேல் இருக்க நான் எங்கே புக்குக் கிடந்தேனோ –எல்லார் தலையிலும் திருவடியை வைத்து உபகரித்த திரிவிக்ரம அவதாரத்தில் அன்றோ இழந்தேன் என்கிறார் –

——–

படை ஆழி புள் ஊர்தி பாம்பு அணையான் பாதம் – –21-நாலாயி:2102/3

எப்பொழுதும் கை கழலா நேமியான்  -பெரிய திருவந்தாதி -87-எப்பொழுதும் பரிகரம் ஆயத்து திருவாழி – பெரிய திருவடி வாஹனம்-திரு வநந்த ஆழ்வான் படுக்கை –கையிலே திருவாழி யைப் பேராதே பிடிக்க வல்லனுமாய் திரு வடி முதுகிலே ஏந்தித் தரிக்க வல்லவனும் திரு வநந்த வாழ்வான் ஆகிற படுக்கையிலே சாய வல்லவனும் சர்வேஸ்வரன் -ஆகிறான்-இப்படிப் பட்டவன் திருவடிகளைக் கிட்டி மகா பலியைப் போலே கழஞ்சு மண்ணைக் கொடுத்து விடாதே -உன்னைக் கொடு-

———

ஏற்றான் புள் ஊர்ந்தான் எயில் எரித்தான் மார்வு இடந்தான் – 74-நாலாயி:2155/1

ருஷப வாஹனன் என்று பிரசித்தமாய் இருப்பதொரு எருத்தை வாகனமாக உடையனாய் இருக்கும் அவன் –வேதாத்மாவான பெரிய திருவடியைத் தனக்கு வாகனமாக உடையனாய் இருக்கும் இவன்-அவனும் இவனுக்கு சரீர பூதன் ஆகையால் இவனே ரஷகன்   அவனுடைய பிரகாரங்களைப் பார்த்தால் ரஷ்யமாய்த் தோற்றும்-இவனுடைய பிரகாரங்களைப் பார்த்தால் ரஷகனாய் இருக்கும் -என்கிறார் –

———-

படி கண்டு அறிதியே பாம்பு அணையினான் புள் கொடி கண்டு அறிதியே கூறாய் வடிவில் -–85- நாலாயி:2166/1,2

அவனுடைய பிராகாரங்களைக் கண்டு அறிதியே-அவனுடைய திரு மேனியைக் கண்டு அறிதியே -என்றுமாம்-பாம்பணையினான் கண்டு அறிதியே- புட்கொடி கண்டு அறிதியே-அவன் திருவநந்த ஆழ்வானுக்கு உடம்பு கொடுத்து இருக்கும் படி கண்டு அறிதியே-த்வஜம் முன்னாக அவன் வந்து தோற்றும் தோற்றரவு கண்டு அறிதியே –எல்லாம் கண்டாயாய் இருக்கிற நீ இன்னது கண்டேன் என்று சொல்லிக் காணாய் –

————

படியான் கொடி மேல் புள் கொண்டான் நெடியான்-தன் -92 நாலாயி:2273/2

கம்சன் ஈஸ்வரனை வஞ்சிக்க நினைத்ததை அவனுக்கு முன்னே கோலித் திருவடிகளாலே மார்பிலே ஏறி முடித்தவன் –குடி இருப்பு பெற்றோம் என்று ப்ரஹ்மாதிகள் ஏத்தும் ஸ்வபாவத்தை உடையவன் –ரஷணத்துக்கு கொடி கட்டி இருக்கிறவன்-ஒரு நாள் ஒரு திரு நாமம் சொன்னவனை ஒரு நாளும் மறவாதவனுடைய திரு நாமங்களை ஏத்துங்கோள் –1-பிரதிபந்தகம் போக்குகை–2-ஐஸ்வர்யம் -3-ஆத்ம லாபம்- 4-தன்னைத் தருகை- எல்லாம் கிடைக்கும்-ஸகல பல ப்ரதோ விஷ்ணு அன்றோ-

—————–

பொழில் அளந்த புள் ஊர்தி செல்வன் எழில் அளந்து அங்கு – 7-நாலாயி:2288/2

கடல் சூழ்ந்த பூமியை அளந்து -புள்ளூர்ந்து –அத்தாலே ஸ்ரீ மானாய்–கருட வாஹனான ஸ்ரீ மான்-நிரதிசயமான ஐஸ்வர்யத்தை யுடையவன்எழிலை அளந்து மநோ ரதிக்க ஒண்ணாதவனை–ஸ்வ யத்னத்தால் காண்பாருக்குக் கிட்ட அரியனானவனை – அவர் காட்டக் காண இருக்கிற நாம் திருவடிகளைத் தொழுவோம் போரு –

—————

கருடன் மேல் கொண்ட கரியான் கழலே -57- நாலாயி:2338/3

பெரிய பிராட்டியார் தன் வேண்டப்பாடு தோன்ற எழுந்து அருளி இருக்கும் படியான
மார்வை யுடையவன் –அவளும் தண்ணீர் தண்ணீர் என்று ஆசைப் படா நிற்கும் -பெரிய பிராட்டியாரை உடையவன் என்னும் இடத்துக்கு மேலே வேறே யொரு வேண்டற்பாடு காணும் திருவடி மேல் இருக்கும் அத்தால் – அவ் வழகுக்கு  மேலே ஆரழகு -என்றுமாம்-பெரிய திருவடியை நடத்தா நின்றுள்ள கருத்த நிறத்தை யுடைய சர்வேஸ்வரன்
திருவடிகளே –சம்ருத்த்னான திருவடி என்றுமாம் – மகா மேருவிலே ஓர் அஞ்சன கிரி இருந்தாப் போலே இருக்கை –திருவடி மேரு போலே – எம்பெருமான் அஞ்சன கிரி போலே-ஒன்றுக்கு ஓன்று பரபாகமாய் இருக்கிறபடி –

————–

அம்பு ஆர் களிறு வினவுவது ஐயர் புள் ஊரும் கள்வர் -22 நாலாயி:2499/2

கொம்பிலே செறித்த தழை கைக்குப் பரிகரம் ஆயிற்று-வில் இல்லாமையாலே
சிறிய நாண் ஒலியும் கேட்டிலோம்-வேட்டை கொண்டாடுகை நாட்டுக்கு வார்த்தை-அம்போடே யானை போந்ததோ என்று வினவா நிற்பது-இது உம்முடைய பெருமைக்கு ஈடாய் இராய் நின்றது-பெரிய திருவடியை மேற்கொண்டு எதிரி அறியாமல் ஜகத்தை ரஷித்துக் கொண்டு திரிகிற ஈஸ்வரனுடைய விபூதியிலே எக் காலத்திலும் நடை யாடாததான- தன்னில் தான் சேர்த்தி அற்றன-நிஷ் ப்ரயோஜனமாகக் கேட்ட வார்த்தைகளுக்கு மறு மாற்றம் சொல்லவோ-புள் ளூரும் கள்வர் – வேத மயமான பெரிய திருவடியை நடத்துகையாலே
ப்ராமண கதி ப்ரவர்த்தகனாய் (வேதம் நான்காய் –வேதம் தந்தவனும் வேதத்தால் சொல்லப்படுபவனும் அவனே ) யமாத்மா ந வேத -ப்ருஹதாரண்யம் -5-7-22-என்கிறபடியே
கள்வர்-முகம் தோற்றாமல் நின்று ரக்ஷிக்கிற ஸர்வேஸ்வரனுடைய

———

புயல் வாய் இன நிரை காத்த புள் ஊர்தி கள் ஊரும் துழாய் – 24-நாலாயி:2501/3

கண்டதொரு மலையாலே பெரு மழையில் ஈடுபடாமல் கோகுலங்களைக் காப்பானுமாய்
ஆர்த்த ரக்ஷணத்துக்கு உதவும்படி பெரிய திருவடியை நடத்தும் ஸ்வ பாவனான கிருஷ்ணனுடைய-மதுஸ்யந்தியான திருத் துழாயினுடைய கொயல் வாய்ந்த மலரிலே அபி நிவிஷ்டமான நெஞ்சோடும் கூட – கையும் வளையுமான என் தலைவிக்கு ஏதாய் முடியுமோ

————

மா வியம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர் – நாலாயி:2544/3

விரோதி நிரசன ஸமர்த்தனாய் பெரிய ஆச்சர்யத்தை யுடையவனான பெரிய திருவடியை நடத்த வல்லவனாய்-பொரு சிறைப் புள்ளுவந்து ஏறும் பூ மகளார் தனிக் கேள்வன் –திருவாய் -1-9-3- என்கிற படியே இந்த கருட வாஹனத்வத்துக்குத் தகுதியான ஸ்ரீயபதித் வத்தை யுடையவன்-வெறும் பரத்வத்தால் வந்த மேன்மையோ பசுக்களின் பின்ன போகலாம்பாடி பவ்யனானவன் இந்த பரத்வ ஸுலப்யங்கள் இரண்டும் ப்ரகாசிப்பதான திருமலையில் பொருந்தி வர்த்திக்கிற அழகிய சிறகுகளை யுடைய அன்னப் பேடை போலே இருக்கிற இவளுடைய கண் என்று பேராய் இருக்கிற தன்னில் தான் சேர்ந்த இரண்டு கண்களானவை-அலர் மேல் மங்கையைச் சொல்லி அவளோடே இவருடைய ரூபத்துக்கு ஒப்புச் சொல்லிற்று ஆகவுமாம்(கடி மா மலர்ப்பாவையுடன் ஷாம்ய ஷட்கம் உண்டே )

———–

வெம் சிறை புள் உயர்த்தார்க்கு என் விடு தூதாய் சென்றக்கால் – 1-4-1-நாலாயி:2932/3

அவர்கள் -பரம சாம்யா பன்னராய் -எல்லாவற்றாலும் தன்னை ஒத்தவர்களாக இருக்கையாலே வேறுபாட்டினைக் காட்டும் அறிகுறியாகப்-வ்யாவர்த்தக விசேஷணமாய் – பெரிய திருவடியைக் கொடியிலே உடையவனாக இருப்பான்.
விரோதியைப் போக்கிக்கொண்டு வருகைக்கு நமக்கு அங்கே ஆள் உண்டு என்பாள், ‘வெஞ்சிறைப்புள்’ என்கிறாள்.
அன்றி, தன்னை விட்டு-நிர்த்தயமாக – அருள் இன்றிப் பிரித்துக்கொண்டு போகையாலே,
அக்ரூர க்ரூர ஹ்ருதய ‘தேரை மிக விரைவார் ஓட்டிக்கொண்டு செல்வதனால், அக்குரூரர் அருள் அற்ற மனமுடையவர்,’ என்று ஆய்ப் பெண்கள் கூறியது போன்று கூறுகிறாள் என்றலும் ஒன்று.-புள்ளாலே தாங்கப் பட்டவன் என்னுதல்; அன்றி, புள்ளைக் கொடியிலே உயர்த்தியவன் என்னுதல்

———

அருளாழிப் புட்கடவீர் யவர் வீதி ஒரு நாள் என்று
அருளாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி-1-4-6-

நீங்கள் அறிவிக்கும் அத்தனையே வேண்டுவது:-கொடுவருவாரும் அங்கே உண்டு,’ என்கிறாள்.-அருட்கடலான பறவை.-‘வெஞ்சிறைப்புள்’ என்றாள் முன்னர்க் கொண்டு போனபடியாலே;-இப்போது வரவுக்குக் காரணமாகையாலே -உடல் ஆகையால் -‘அருளாழிப்புள்’ என்கிறாள்.-என்னைப் பற்றி வந்தார் என்னும் நிறக்கேடு தமக்கு பிறவாதபடி-அழகு செண்டேற -என்னுதல்–ஆனைக்கு அருள் செய்ய என்னுதல்
ஒரு வியாஜத்தாலே எங்கள் தெருவே வழி போக அமையும்-நாங்களும் ஜாலகரந்த்ரத்தாலே காண எங்களுக்கு அருளினீர் ஆகவுமாம்அனுகூலர் -‘அன்புள்ளவர்கள் கண்டு வாழுகைக்கும்-ஸூக ஸ்பர்சத்தாலும் -தான் ஊற்றின்பம் உறுகைக்குமாகப் போகாதே பிசுகிச் சுழியா நிற்கும் ஆதலின்,அசேதனமான – அஃறிணைப் பொருளான தேரினைப் போன்று, வடிம்பாலே தாக்கி நடத்த வேண்டும்’ என்பாள்,-‘கடவீர்’ என்கிறாள். ‘எங்கே?’ என்னில்,-அவள் தெருவிலே.‘அங்ஙனம் ஒண்ணுமோ? ஒரு தெருவில் பலகால் போகப் புக்கவாறே ‘இவ்வரவு ஒரு காரணமுடைத்து என்று கூறார்களோ?’ என்னில்,-நாங்கள் பிழைத்து கிடப்பதற்கு ஒரு நாள்-போக அமையும்-அருளாழி அம்மானைக் கண்டக்கால்
பெரிய திருவடி யுடைய கிருபையும் மிகை என்னும் படி என்றோ அவன் நீர்மை இருப்பது
அருள் கடலான சர்வேஸ்வரன் -அவன் பக்கல் அருள் மறுத்தாலும் மறுக்காத திரு வாழி என்று திரு வாழிக்கு விசேஷணம் ஆகவும் –.-இது சொல்லி யருள்- இத்தனையும் சொல்லியருளல் வேண்டும். ‘எது?’ என்னில், ‘அருள் ஆழிப் புட்கடவீர் அவர்வீதி ஒருநாள்’ என்கிற வார்த்தையைச் சொல்லி யருளல் வேண்டும்.

————–

கொடியா அடு புள் உயர்த்த -1-6-10- நாலாயி:2963/3

தூரத்தில் கண்ட அளவில் -பிரதிபக்ஷம் – பகைவர்கள் மண் உண்ணும்படியான பெரிய திருவடியைக் கொடியாக எடுக்கையைச் ஸ்வபாவமாக உடையவர்.

———-

ஓடும் புள் ஏறி – –1-8-1-நாலாயி:2976/1

புள்ளேறி ஓடும் -பெரிய திருவடியை மேற்கொண்டு சஞ்சரியா நிற்கும்
மஹிஷிக்கு ஸ்தன பரிரம்பணம் போலே தன்னை மேற்கொள்ளுகை வாஹனத்துக்கு அபேக்ஷிதமாய் இருக்கை – மேற்கொள்ளும் அது தான் -அங்கு உள்ளார்க்கு காட்சி கொடுக்கைக்கும் – அவனுடைய ஸ்வரூப லாபத்துக்குமாய் இருக்கும்-த்வத் அங்க்ரி சம்மர்த்த கிணங்க ஸோபிநா

————

பொரு சிறை புள் உவந்து ஏறும் பூமகளார் தனி கேள்வன் – –1-9-3–நாலாயி:2989/3

ஸ்ரீ சர்வேஸ்வரன் ஸ்ரீ பெரிய திருவடியை மேல் கொள்ளுவதாக நினைத்து வா என்று அழைத்தால் – அவனுடைய அங்கீகாரத்தால் உண்டான ஹர்ஷத்தாலே பெருக்காறு சுழித்தால் போலே சுழித்துத் தன்னில் தான் பொரா நின்றுள்ள சிறகை யுடையனாய்க் கொண்டு ஆயிற்றுத் தோன்றுவது – அவனும் நாம் இவனை மேல் கொள்ளப் பெற்றோமே என்று திரு உள்ளத்திலே ப்ரீதியுடன் ஆயிற்று மேல் கொள்ளுவது

————–

புள் ஊர்தி கழல் பணிந்து ஏத்துவரே2-2-10- நாலாயி:3029/4

சர்வேஸ்வரன் பெரிய பிராட்டியாரும் தானுமாய் இருக்கிற இருப்பில் புக முடியாமையாலே,
திருப்பாற்கடலுக்கு இவ்வருகே கூப்பிட்டால், இவர்கட்குக் காட்சி கொடுக்கைக்காகத் திருவடி திருத்தோளில் ஏறிப் புறப்படுவான், அப்பொழுது ஆட்டத்து வெளியில் யானைக் காலில் துகை யுண்ணா நிற்பார்கள்-

——————

வலம் கொள் புள் உயர்த்தாய் என்னும் உள்ளம்2-4-4-நாலாயி:3045/2

‘மிடுக்கையடைய புள்ளாலே தாங்கப்பட்டவனே! என்கிறாள்.
‘விடாயர் இருந்த இடத்தே சாய்கரகம் போலே உயர வைத்துக்கொண்டு வந்து காட்டும் பரிகரத்தை யுடையவனே!’ என்கிறாள் என்றபடி.
அன்றி, ‘மிடுக்கையுடைய புள்ளைக் கொடியாக உடையவன்’ என்றுமாம்.

—————

தொழும் காதல் களிறு அளிப்பான் புள் ஊர்ந்து தோன்றினையே – 3-1-9-நாலாயி:3129/2

சதுர் தந்தி என்னுமா போலே காதலே இதுக்கு நிரூபகமாய் இருக்கை-சேஷ பூதனுக்கு காதல் அடையாளம் –சேஷிக்கு அடையாளம் நல் சக்கர வலத்தை புள்ளூர்வது சங்கல்பத்துக்கு முற்பட்டாயிற்று திருவடி வேகம் இருப்பது-அவன் வேகம் போராமல் அவனையும் இடுக்கிக் கொண்டு இறே வந்து விழுந்தது -நினைவுக்கும் அவ்வருகே போக வல்ல வேகம் உடையவனை -குழைச் சரக்காம் படி திருவடிகளாலே ப்ரேரித்து கொண்டு வந்தபடி-ஹூம் ஹூம் -பட்டர் –தோன்றினையே -இடர் பட்டார் தாமாய்-தமக்குத் தோற்றினால் போலே காணும் இருக்கிறது 

——–

அடியானே ஆழ் கடலை கடைந்தாய் புள் ஊர் – 3-8-1-நாலாயி:3198/2

பெரிய திருவடியை வாகனமாகவும் கொடியாகவும் உடையவனே -ஆஸ்ரிதர் இருந்த இடத்தே செல்லுகைக்கு வாகனமாய் தூரத்திலே கண்டு வாரா நின்றான் என்று தரிக்கைக்கு த்வஜமாகை

——–

ஏற மகிழ்ந்து செல் பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்துத் திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே.–3-8-5-

தன்னை மேற் கொள்ள, அத்தாலே வந்த மகிழ்ச்சியின் மிகுதிக்குப் போக்குவிட்டுச் சஞ்சரியா நிற்கை-பண் கொண்ட – வாகனத்தின்மேல் இடுகிற சேணத்தைச் சொல்லுதல்;
அன்றி, கருடன் உருவம் வேதமே ஆகையாலே பிருஹத்ரதந்தரம் முதலிய சாமங்களைச் சொல்லுதல்.-சிறகு ஒலி பாவித்து – திருவடி சிறகின் ஒலியையே பாவித்து.
திண்கொள் ஓர்க்கும் என் செவிகள் – முன்னே நின்று சிலர் வார்த்தை சொன்னால் அதிலே செவி தாழ்கிறது இல்லை;-இதனையே திண்ணிதாகப் புத்திபண்ணாநின்றது. அதன் பக்கல் பக்ஷபாதமன்றோ அதற்கு அடி? பெரிய திருவடியின் மேல் உள்ள ஆசை -இறகின் ஒலி கேட்க ஆசை என்றுமாம் –

————

என்னை ஆள் உடைத் தூவி அம் புள் உடையாய் சுடர் நேமியாய்3-8-7-நாலாயி:3204/2

பெரிய திருவடி திருத்தோளில் இருக்கும் இருப்பைக்காட்டி என்னை எழுதிக்கொண்டவனே!
அன்றிக்கே,‘என்னை ஆளுடை’ என்பதனைப் பெரிய திருவடிக்கு அடையாக்கலுமாம்.
‘ஆயின், திருவடியை ‘என்னை ஆளுடையவன்’ என்று கூறல் என் கருதி?’எனின்,
‘இறைவனோடு சேர்க்குமவர்களுக்குத் தாம் அடிமை என்றே அன்றோ இவர் இருப்பது? இதனால், ‘மற்றை அமுதத்தைக் கொண்டு வருமவனே காணும், இவ்வமுதத்தையும் கொண்டு வருவான்,’ என்கிறார் என்பதும்,-தாரகமுமாய் இனிய பொருளுமாய் இருப்பது ஒன்றைக் கொண்டு வந்து தருவார் உண்டாயிருக்க, ஆறி இருக்க விரகு உண்டோ?’ என்கிறார் என்பதும் பெறுதும்.

————-

புள் வல்லாய் உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே – -3-8-9-நாலாயி:3206/4

சர்வேசுவரனை அடைந்த பிறகு அந்த சீவாத்துமா பயம் இல்லாதவன் ஆகிறான்’ என்கிறபடியே, பகவானுடைய அடியார்கள் இருப்பது போன்று, புன் சிறு தெய்வத்தைப்பற்றி இருந்த வாணனுடைய நெஞ்சுவலி கைமேலே போகும்படியாகப் பெரிய திருவடியின்மேலே ஏறிச் சாரிகை-வையாளி-வந்தவனே!-‘வாள் வல்லாய், தோள் வல்லாய்’ என்பன போன்று ‘புள் வல்லாய்’ என்கிறார்.

————

ஒண்மை உடைய உலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு புள் ஊர்ந்து உலகில் -–3-10-1- நாலாயி:3220/2

புள் ஊர்ந்து – இதுவும் ஒரு சேர்த்தி அழகு; பொன் மலையின் மீமிசைக் கார்முகில் போன்று அன்றோ இருப்பது?-உலகில் – இவ்வழகுதான் ஒரு தேசவிசேஷத்திலே நித்தியசூரிகள் அனுபவிக்குமது அன்றோ? அங்ஙனம் இருக்கவும் அவ்வழகினை இங்கே அனுபவிக்கும்படி செய்தானாதலின், ‘உலகில்’ என்கிறார்.-திவ்விய ஆயுதங்களோடே அழகிய வடிவழகைத் திருவடி திருத்தோளிலே கண்டால், ‘சரணம்’ என்னுதல், எழுத்து வாங்குதல் செய்கை அன்றியே எதிர் இடுவதே பையல்கள்!’ என்று ஆச்சரியப்படுகிறார். ‘அழகுக்கு இலக்காய் வாழமாட்டாது, அம்புக்கு இலக்காய் முடிந்து போவதே!’ என்கிறார் –

————–

கொடி மன்னு புள் உடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ – –4-1-9–நாலாயி:3239/

கொடியாய் மன்னா நின்றுள்ள பறவை. என்றது, தன்னை அடைந்த அடியாரையும் தனக்கு வேறுபடுத்தும் விசேஷணமாகக் கொள்ளுமவன் என்பதனைத் தெரிவித்தபடி. ‘அல்லாதாரைக் காட்டிலும் அவனை வேறுபடுத்தும் விசேஷணமாகக் கொள்ள வேண்டுவான் என்?’ என்னில்,  அவனுடைய மூக்கு வலியும் அவன் பக்கல் பக்ஷபாதமும் அதற்கு அடி.-புள்ளுடை அண்ணல் – ‘திருமகள் கேள்வன்’ என்னுமாறு போலே ஈசுவரனுக்கு நிரூபகமே யன்றோ அவன்? அண்ணல் – தலைவன்.-கழல்கள் குறுகுமின் – உங்கள் பிறவி கழல அவன் கழல்களைக் குறுகுங்கோள்.‘திருநாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ’ என்றார் முதற்பாசுரத்தில்.-இங்கே, ‘புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ’என்கிறார் காணும், அவளோபாதி இவனும் அங்குத்தைக்கு நிரூபக தர்மம் என்று.

———–

தூவி அம் புள் உடையான் அடல் ஆழி அம்மான்-தன்னை -–4-5-4– நாலாயி:3278/2

‘தூவி’ என்ற அடைமொழியால், நினைத்த இடத்திலே கொண்டு ஓடுகைக்கு அடியான கருவியை யுடையவன் என்பதனையும்,-அம் புள்’ என்றதனால், ‘தேவரீர் திருவடிகளாலே நெருக்கி அழுத்தின தழும்பினாலே சோபிக்கிறவன்’ என்கிறபடியே,
சோபிக்கிற அழகையுடையவன் ஆகையாலே வந்த ஏற்றத்தையுடையவன் என்பதனையும் தெரிவித்தபடி.
தூவி – சிறகு. அம் -அழகு. அடல் ஆழி – ‘பரமபதத்திலுங்கூட அவனுக்கு என்வருமோ என்று
அச்சங்கொண்டிருப்பவன் ஆகையாலே, எப்போதும் ஒக்க யுத்த சந்நத்தனாய் இருப்பவன்’ என்பார் அடல் ஆழி’ என்கிறார். அடல் – மிடுக்கு. அம்மான் தன்னை – ‘பெரிய திருவடி திருத்தோளிலே பெயராதிருத்தல்,-திருவாழியைச் சலியாதே பிடித்தல் செய்ய வல்லவனே எல்லார்க்கும் தலைவன்,’ என்பார்,‘-தூவியம் புள்ளுடையான் அடலாழி அம்மான்’ என்று ஒரு சேர அருளிச்செய்கிறார்.-ஆங்கார வார மதுகேட்டு அழலுமிழும் பூங்கா ரரவணையான் பொன்மேனி – யாங்காணவல்லமே யல்லமே மாமலரான் வார்சடையான் வல்லரே யல்லரே? வாழ்த்து.’-பரமபதத்திலுங்கூட அவனுக்கு என்வருமோ என்று அச்சங்கொண்டிருப்பவன்–அஸ்தானே பயசங்கிகள் –

—————

ஆடு புள் கொடி ஆதிமூர்த்திக்கு அடிமைபுகுவதுவே – –4-10-7–நாலாயி:3336/4

வெற்றிப்புள்ளைக் கொடியாகவுடையவன்; அடியார்களுடைய விரோதிகளை அழிக்கும் விஷயத்தில் சர்வேசுவரன் செய்ய வேண்டுவது ஒன்றும் இன்று; திருவடி திருத்தோளிலே சலியாமல் இருக்குமத்தனையே வேண்டுவது,’ என்பார், ‘ஆடுபுள்’ என்கிறார்.
ஆடுபுள் -வெற்றிப்புள்; ஆடு – வெற்றி. புள் – பறவை.
அன்றிக்கே, ‘சர்வேசுவரன் வாஹனம் என்கிற மகிழ்ச்சியின் மிகுதியாலே மதித்து ஆடாநின்ற புள்’ என்றுமாம்.-கருடக் கொடியன், கருட வாஹநன்’ என்று சொல்லப்படுமவனாயிற்று மோக்ஷத்தைக் கொடுக்கக் கூடியவன் ஆவான்.-காரணப் பொருளாக உள்ளவனே தியானிப்பதற்கு உரியன்,’ என்கிறபடியே, உலக காரண வஸ்துவே யன்றோ உபாசிக்கத் தக்கதாவது? ஆக, ‘மோக்ஷத்தைக் கொடுக்கக் கூடியவனுமாய் எல்லாரையும் நியமிக்கின்றவனுமான சர்வேசுவரனுக்கு’ என்றபடி.

————–

கொடியான் இலங்கை செற்றேனே என்னும் கொடிய புள் உடையவன் ஏற-கொலோ5-6-9- நாலாயி:3404/3

தாநஹம் த்விஷத: க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந் க்ஷிபாமி அஜஸ்ரம் அஸுபாந் ஆஸுரீஷ்வேவ யோநிஷு”– என்பது, ஸ்ரீ கீதை. 16. 19.-அடியார்களுடைய பகைவர்களுக்கு யமனை ஒத்தவனான ஸ்ரீ பெரிய திருவடியை வாஹனமாகவுடைய ஸ்ரீ சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ?

———-

கருள புள் கொடி சக்கர படை வான நாட என் கார்முகில் வண்ணா5-7-3-நாலாயி:3409/1

உன்னை அறிந்தோ-மேலும் சொல்ல வேண்டுமோ உன் உயர்த்தி
த்வஜமாக -அருளாழிப் புள் -ஆஸ்ரிதர் இடம் கூட்டி வர பெருமைக்கு நிரபேஷ சாதகம்
மேலே சொல்வது மிகை -நீர்மைக்கு -அருளாழிப் புள்-சக்கரப்படை -அதுவும் வர வேண்டும் படியோ இது இருப்பது அருளார் திருச் சக்கரம் -இதுவும் நீர்மைக்கு – வான நாட -ஓன்று எடுக்கவும் ஓன்று பிடிக்கவும் வேண்டுமோ இருந்தாலே போதுமே -இருப்பிடமே அமையும் வாசச் ஸ்தானம் –சர்வாதிக லஷணம் -மூன்றும் -இவை ஓர் ஒன்றே அமைந்து இருக்க -சர்வ பிரகார பரி பூர்ணன்
கருடன் டகாரம் ளகாரமாய் கருள-கருள் -கறுப்பாய்-சீற்றமாய் -பிரதிபஷம் மேல் சீற்றம்
கருள் உடைய பொழில் மருது -பெரியாழ்வார்-

———–

  வெம் கண் புள் ஊர்ந்து வந்து வினையேனை நெஞ்சம் கவர்ந்த –-6-8-5- நாலாயி:3532/2

வெவ்வியவான கண்களை யுடைத்தான புள்ளை நடத்திக் கொண்டு வந்து.
வருகிற போதே வழியில் விரோதிகளைப் போக்குகையிலே சினத்த கண்களை யுடையவனாதலின் ‘வெம்கண்’ என்கிறது.
அன்றிக்கே,-பிரித்துக் கொண்டு போகிற போது கண் பாராதே பிரித்துக் கொண்டு போனவனாதலின் ‘வெம்கண்’என்கிறது என்னுதல்.
“அங்குரூரன் கொடிய மனமுடையவன்” என்னுமாறு போலே. “அக்ரூர: க்ரூர ஹ்ருதய:” என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 5. 18 : 30.-பட்டம் கட்டின யானையிலே ஏறிக் காதலியைக் கிட்டும் இராஜ புத்திரனைப் போலே, “அருளாழிப் புட் கடவீர் அவர் வீதி ஒருநாள்” திருவாய். 1. 4 : 6.-என்றே அன்றோ அடியிலே தூது விட்டது,-அப்படியே வந்தபடி.

———–

கொடியா அடு புள் உடையானே கோல கனிவாய் பெருமானே -6-10-7– நாலாயி:3556/2

விரோதிகளை அழித்தலையே இயல்பாகவுடைய பெரிய திருவடியைக் கொடியாக உடையவனே!-1-இமையோர் அதிபதியாய், 2-கொடியா அடு புள் உடையானாய், 3-செடியார் வினைகள் தீர் மருந்தாய்,4-திருவேங்கடத்து எம்பெருமானாய், 5-கோலக் கனிவாய்ப் பெருமானாய்,6-அடியேன் மேவி அமர்கின்ற அமுதே? என்கிறார்.-1-பரத்வம் -சொல்லி -2-விரோதி நிரசன பரிகரம் சொல்லி -3-விரோதி நிரசனத்தை சொல்லி – 4–ஸுலப்யம் சொல்லி –5-அழகை சொல்லி 6–போக்யனாய் இருப்பத்தைச் சொல்லுவதே அறு சுவை அமுது-பட்டர், “நித்தியத்திலே, ‘அமுது செய்யப் பண்ணும் போது தோத்திரத்தை விண்ணப்பம் செய்வது’ என்று இருக்கின்றதே, என்ன தோத்திரத்தை விண்ணப்பம் செய்வது?” என்ன, “ ‘அடியேன் மேவி அமர்கின்ற அமுதே’, ‘பச்சை மாமலை போல் மேனி’ என்பன போலே இருக்கும் திருப் பாசுரங்களை விண்ணப்பம் செய்வது” என்று அருளிச் செய்தார்.

————–

குணங்களை உடையாய் அசுரர் வன் கையர் கூற்றமே கொடிய புள் உயர்த்தாய் -8-1-8-நாலாயி:3678/2

உன்னிலும் கண்ட போதே பகைவர்களை மாய்க்க வல்ல பெரிய திருவடியை கொடியாக உடையவனே-பகைவர்களை முடிப்பதற்கு தான் வேண்டா-கொடியை காண அமையும் -ஆதலால் உயர்த்த -என்கிறார் – 

———–

இதுவோ பொருத்தம் மின் ஆழி படையாய் ஏறும் இரும் சிறை புள் அதுவே கொடியா உயர்த்தானே என்று என்று ஏங்கி அழுத-கால் -8-5-9- நாலாயி:3723/1,2

மேகத்திலே மின்னினாப் போலே அடியார்கள் உடைய-விரோதிகளை அழித்தலையே இயல்பாக உடைய திரு ஆழியைப் படையாக உடையவனே -என்றது- அத் திரு ஆழியைக் கொண்டு என்னுடைய தடைகளின் மேலே செலுத்தினால் ஆகாதோ -என்றபடி –-ஏறக் கடவ பெரிய சிறகை உடைய கருடப் பறவை தன்னையே-கொடியாக உடையவனே
அடியார்களை எல்லா அடிமைகளையும் கொள்ளுமவன்-தாஸ ஸஹ ஸ்லோகம் –இப் பாசுரம் மாறாதே பொருமி பொருமி அழா நின்றால் –இக் கூப்பீட்டுக்கு முகம் காட்ட நினைக்கிறானோ–கூப்பிட்டே போவான் என்று இருக்கிறானோ-அன்றிக்கே இக் கூப்பீட்டுக்கு அவன் திரு உள்ளம் எங்கனே புண் படுகிறதோ -என்னுதல் –

——————-

தகர்த்து உண்டு உழலும் புள் பாகன் பெரிய தனி மா புகழே -8-10-6- நாலாயி:3775

பெரிய வடிவை உடையரான அசுரர்கள் உடைய உயிரை எல்லாம்-தகர்த்து உண்டு –
இது தானே இயல்பாக இருக்கிற பெரிய திருவடியைக் கருத்து அறிந்து-நடத்துகின்றவனுடைய-அளவிடற்கு அரியனாய்-உபமானம் இல்லாதவனாய்-
இருந்துள்ள கல்யாண குணங்களை திருவாய் மொழி முகத்தாலே அனுபவிக்கும்-அனுபத்துக்கு ஒக்குமோ -என்றது -திருவாய் மொழி நுகரும் ஆனந்தத்துக்கு-
ஏழ் உலகும் தனிக் கோல் செல்ல வீற்று இருக்கும்-ஆனந்தமும் போராது –என்கிறார் 

————–

தண் திருப் புளிங்குடி கிடந்தாய் கவள மாக் களிற்றின் இடர் கெடத் தடத்துக்
காய்சினப் பறவை ஊர்ந்தானே–9-2-5-

தன் நிலம் அல்லாத பொய்கையிலே மிகச் சிறிய பொருளின் -முதலையின் -கையில் அகப்பட்டு- மாற்று வினை செய்வதற்கு இடம் இன்றிகே இருக்கும்படியான ஆபத்து போம்படியாக – தடம் -என்பது-கரைக்கும் பொய்கைக்கும் பெயர் –பகைவர்களை காயும் சினத்தை உடைய பெரிய திருவடியை – அவன் வேகம் போராமை அவனை நடத்திக் கொண்டு வந்து தோற்றிலையோ–தோள் மேலே திருவடி வைத்து ஹும்காரம் -இப்படியே சில திவ்ய தேசங்களில் சேவை – அவ் யானையின் நிலை காண் – என் நிலை –அதற்க்கு தோற்றினாப் போலே என் முன்னே வந்து- தோற்றி அருள வேண்டும் –

கருமுகில் தாமரைக் காடு பூத்து நீடு
இருசுடர் இருபுறத்து ஏந்தி ஏடு அலர்த்
திருவொடும் பொலிய ஓர் செம் பொன் குன்றின் மேல்
வருவ போல் கலுழுன் மேல் வந்து தோற்றினான் –கம்பர்

————

காய்ச்சினப் பறவை யூர்ந்து பொன்மலையின் மீமிசைக் கார்முகில் போல்–9-2-6-

பகைவர்கள் இடத்து உனக்கு கண்ணோடிலும்-கண் அற்று அழியச் செய்யும் -பெரிய திருவடியை நடத்தி –அப்பொழுது இருக்கும்படி –-மேருவைக் கினியக் -கபளீகரிக்க -காளமேகம் படிந்தாப் போலே ஆயிற்று இருப்பது – இப்பொழுது இது சொல்லுகிறது-பெரிய திருவடி முதுகில் இருப்பை காண்கைக்காக-

———

தூவி அம் புள் உடை தெய்வ வண்டு துதைந்த எம் பெண்மை அம் பூ இது ஆலோ -9-9-4- நாலாயி:3872/3-

பெரிய திருவடியை உடைய-தெய்வம் ஆகிற வண்டாலே எடுப்பப் பட்ட சாரத்தை உடையதான என்னுடைய பெண்மை யாகிற பூ -பெண்மையாம் பூ -பாட பேதமும் உண்டே –இந்த விதமாய் நலிய -நலிவு படா நின்றது – படுக்கை துன்புறுத்தியவாறே புறம்பே புறப்பட்டாள் – உடல் இருக்கும் வரையிலும் இருப்பதான பெண் தன்மையானது கெடத் தொடங்கிற்று- அழகிய சிறகுகளையுடையனாய்-காண்பதற்கு இனியனான் பெரிய திருவடி முதுகிலே வந்து ஆயிற்று – இவளுடைய பெண்மையை அழித்தது-அன்றிக்கே
கருட வாகனத்தை உடையவன் அன்றோ பரம் பொருள் ஆவான் -ஆதலின் –தூவி அம் புள்ளுடைத் தெய்வம் – என்கிறாள் -தன் பெண்மை அழிந்தது பேச்சுக்கு நிலம் இல்லாமையாலே –இது -என்கிறாள் – ஆவியின் பரமல்ல வகைகளாலோ –கலக்கிற போது அவன் செய்த தன்மைகள்-உயிரால் தாங்கக் கூடியன அல்ல –அன்றிக்கே –துன்புறுத்துகின்ற பொருள்களின் பாரிப்பு-ஆன்மாவின் அளவு அன்று -என்னுதல் –

————-

ஊரும் புள் கொடியும் அஃதே உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான் –10-2-2- நாலாயி:3904/1

புள் ஊரும்-பெரிய திருவடியை வாகனமாக கொண்டு நடத்தும் –கொடியும் அந்த திருவடியே –புள்ளினை கூறியது நித்ய ஸூரிகளுக்கும் உப லஷணம் –-அநேக சேஷ வ்ருத்திகள் நித்ய ஸூரிகள் அனைவரும் செய்வதற்கு உப லக்ஷணம் -ஏகதா பவதி இத்யாதி
இவ் உலகில் தொடர்பு சிறிதும் இல்லாத நித்ய ஸூரிகளுக்கு–சென்றால் குடையாம் -முதல் திருவந்தாதி -53- என்கிறபடியே-உண்டாகச் சொல்லுகிற பல வகைப் பட்ட நிலைகள்-
இன்று சென்று கிட்டனவனுக்கும் வாசி அறக் கொடுக்கும்-என்கைக்காக சொல்லுகிறது –
பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா கிரிசானுஷூ ரம்ச்யதே-அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ச்வபதஸ்ச தே -அயோத்யா -31-25–இவன் எல்லா தொண்டுகளும் செய்வேன் என்று இருந்தாலும் பயன் இல்லை அன்றோ–குருஷ்வ மாம் அனுசரம் வைதர்ம்யம் ந இஹ வித்யதே-க்ருதார்த்த அஹம் பவிஷ்யாமி தவசார்த்த பிரகல்ப்யதே -அயோத்யா -31-22-
செய்க -என்று அவன் ஏவிக் கொள்ளாத அன்று- இவன் இறைவனுக்கு தொண்டு செய்யாத அன்று ஆத்மாவுக்கு அடிமைத் தன்மை இல்லை – ஆகையால் ஒன்றிலும் விருப்பு இல்லாதவனான தான் குறைய நின்று-இவனுடைய குறையைத் தீர்க்குமாயிற்று -என்றது
தான் குறை உடையவனாய் நின்று இவனை குறை இல்லாதவனாகச் செய்வான் -என்றபடி –
இவன் தொண்டு செய்து -அடிமைத் தன்மை உடையவனாம்படி இவனைச் செய்வித்து
குறைவற்றவனாக வேண்டும் அன்றோ அவனுக்கு -என்றது
இவன் தொண்டு செய்து அடிமை தன்மை உடையவனாம் பொருட்டு அவன் தன்னை தாழ விட்டான் என்றால்- அது தானே நிறை யுடைமைக்கு உடலாக இருக்கும் அன்றோ -அவனுக்கு –என்றபடி – இன்னார் தூதன் என நின்றான் -பெரிய திருமொழி -2-2-3-என்ற பின்பே அன்றோ சேஷியாம் தன்மை அவனுக்கு உண்டாயிற்று –

——

புகழ் நின்ற புள் ஊர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான் -10-6-9- நாலாயி:3954/3

புகழ்கின்ற புள்ளூர்தி –புகழ் நின்ற புள்ளூர்தி -புகழ் எல்லாம் தன் பக்கலிலே கிடக்கும்படி இருக்கிற பெரிய திருவடியை-வாகனமாக உடையவன்-புகழ் அடங்கலும் கிடப்பதுவும் அவன் பக்கலிலே-அதனை உடையவன் -என்கிற இதுவே இவனுக்கு ஏற்றம் –

 

———————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading