ஸ்ரீ கண்ணி நுண் சிறுத் தாம்பு-ஸ்ரீ தம்பிரான் ஸ்வாமிகள் அருளிச் செய்த வியாக்யானம் –அவதாரிகை —

ஸ்ரீ யபதியாய் -அவாப்த ஸமஸ்த காமனாய் -ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் -ஸர்வ ஸ்வாமியான ஸர்வேஸ்வரன் –
பஞ்ச சக்திமயே திவ்யே ஸூத்த ஸத்வே ஸூக ஆகாரே -என்றும்
த்ரிபாத் விபூதவ் பகவான் ஈஸ்வர்யா பரமேஸ்வர -நித்ய முக்த ஏக போக்யோ அசவ் மோததே ஸததம் ஹரி -என்றும் சொல்லுகிறபடியே
பஞ்ச உபநிஷன் மயமாய் -ஸூத்த ஸத்வாத்மகமாய் -நிரதிசய ஆனந்த மயமான -த்ரிபாத் விபூதியிலே
நித்ய நிர்மல ஞானதி குணகராய் -ஸ்வச் சந்த அநு வ்ருத்தி ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதரான நித்ய ஸூரிகளாலே அநவ்ரத பரிச்சர்யமாண சரண நளின யுகளராய் -நித்ய முக்தரையும் ஸ்வ அனுபவத்தாலே ஆனந்திப்பித்துக் கொண்டு தானம் நிரதிசய ஆனந்த யுக்தனாய்ப் போரா நிற்க-

லீலா விபூதியில் உள்ளார் அவர்களோபாதி தன்னை அனுபவிக்க ப்ராப்தி யுண்டாய் இருக்க-அத்தை இழந்து இருக்கிறபடியைக் கண்டு வியாகுல அந்தக்கரணனாய் -இவர்களை உஜ்ஜீவிப்பிக்கையில் யுண்டான நசையாலே அசித் அவிஸேஷிதராய் -அத ஏவ போக மோக்ஷ சூன்யராய்க் கிடக்கிற தசையிலே
கரண களேபரைர் கடயிதும் தயமான மநா –என்கிறபடியே
தயை குடிகொண்ட திரு உள்ளத்தை யுடையனாய்
ஸ்வ சரண கமல ஸமாஸ்ரயண உபகரணமாக
விசித்ரா தேஹ ஸம்பத்தி -இத்யாதிப்படியே
கரண களேபரங்களைக் கொடுத்து
ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி சக்தியையும் யுண்டாக்கி
ஞான கார்யமான த்யாஜ்ய உபாதேய விவேக பரிகரமாக
மாநம் பிரதீப மிவ காருணிகோ ததாதி -என்கிறபடியே
வேதங்களை ப்ரமாணமாகப் ப்ரவர்த்திப்பித்து

அநந்தரம் மன்வாதிகளுக்கு அந்தர்யாமியாய் நின்று சேதனருடைய விஸிஷ்ட விஷயமான ஸாஸ்த்ரத்தை வெளியிட்டு அருள
அந்த ஸாஸ்த்ர அப்யாஸம் அநேக யோக்யதா ஸா பேஷமாய் -சிரகால ஸாத்யமாய் இருக்கையாலே துஷ்கரமாம் இருக்கும்படியைத் திரு உள்ளம் பற்றி-தாத்ருஸ யோக்யதா நிரபேஷத்வாதிகளாலே ஸூ கரமாய் -சேதன நிஷ்க்ருஷ்ட வேஷ விஷயமான திரு அஷ்டாக்ஷர ப்ரஹ்ம வித்யையை ஸ்வயமேவ ப்ரகாசிப்பித்த அளவிலும் கார்யகர மாகாமையாலே
ஓலைப் புறத்தே செல்லாத ராஜ்யத்தை எடுத்துவிட்டுச் செலுத்திக் கொள்ளும் ராஜாக்களைப் போலே
நாமே சென்று ஸம்ஸாரிகளைத் திருத்தக் கடவோம் -என்று ராம கிருஷ்ணாதி அவதார முகத்தாலே இவர்கள் இருக்கிற இடத்திலே தானே வந்து திருத்தப் பார்த்த இடத்திலும் ஒருவரும் திருந்தக் காணாமையாலே
விஜாதீயரான நம்மால் ஒருபடியாலும் திருத்த ஒண்ணாதபடியாய் இருந்தது
இனி இணக்குப் பார்வையிட்டு மிருகம் பிடிப்பாரைப் போலே
சஜாதீயரைக் கொண்டு கார்யம் கொள்ளவேண்டும் என்றும் அறுதியிட்டுத் தன்னுடைய நிர்ஹேதுக ப்ரஸாதத்துக்கு இலக்கான ஆழ்வார்களை அவதரிப்பித்தான்

அவர்களாகிறார் -சர்வேஸ்வரனாலே மயர்வற மதிநலம் அருளப் பெற்றவராகையாலே ஸகல ஸம்ஸார சேதனரும் த்யாஜ்ய உபாதேய விபாகம் பண்ணி உஜ்ஜீவிக்கும் படிக்கு உடலாக ஸர்வாதிகாரமான திராவிட ரூப பிரபந்தங்களை அருளிச் செய்து ஜகத்தை வாழ்வித்தார் சிலராயிற்று –

இதில் முதலாழ்வார்கள் வ்யாஸாதி பரம ரிஷிகளில் வ்யாவ்ருத்தர்களே யாகிலும் லௌகிக ஞானமும் கலசி கிராம ஏக ராத்ரமாகத் திரிந்தார்கள் என்பது ஓன்று உண்டு –
திருமழிசைப்பிரான் முதலான ஆழ்வார்கள் சிறிது காலம் லௌகிக ஞானம் மேலிட்டுக் காலாந்தரத்திலே பகவன் நிர்ஹேதுக ப்ரஸாதத்துக்கு இலக்கானார்கள் என்பது ஓன்று உண்டு

அக்குறைகள் ஒன்றுமே இன்றிக்கே -நம்மாழ்வார்
உத்பத்யதே யதா லோகே துளஸீ கந்த ஸம் யுதா –என்கிறபடியே
திருத்துழாய் மணத்தோடே அங்குரிக்குமா போலே
கேவலம் ஸ்வச்சயை வாஹம் ப்ரேஷே கஞ்சித் கதாசந –என்கிறபடியே
பகவந் நிர்ஹேதுக ப்ரஸாதத்தாலே கர்ப்பே அபி ஷிக்தராய் லௌகிக ஞான பூர்வகமான ப்ரவ்ருத்தி லேசமும் இன்றியே
பால ஆஷோட ஸாப் தாத்து மூக பாவம் கமிஷ்யதி –என்கிறபடியே
திருவவதாரம் தொடங்கி பதினாறு திரு நக்ஷத்ரத்து அளவும் -ஸ்தந்யாதிகளும் இன்றிக்கே வாக்ய வ்யவஹாராதிகளும் இன்றியே
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை யும் எல்லாம் கண்ணன் –என்கிறபடியே
தாரக போஷக போக்யங்கள் எல்லாமே எம்பெருமானேயாய் -தத் குண அனுபவமே ஸம் வர்த்தகமாக வளர்ந்து போந்தார் ஒருவராய்த்து –

இவர் ப்ரபாவத்தை நரூபிக்கும் போது பிராட்டிமாரிலும் நித்ய ஸூரிகளிலும் உபய விபூதியிலும் வ்யாவ்ருத்தராய் இருப்பர் -எங்கனே என்னில்
பின்னை கொல் நில மா மகள் கொல் திருமகள் கொல் -என்று ஓரோர் ஆகாரத்தாலே அவர்களோடு ஓக்க விகல்பிக்கலாம் படி மூவர் படியையுமாய் இருக்கிற இதற்கும் மேலே
பிறந்திட்டாள் -என்று அந்யாத்ருஸமான வேறுபாட்டை யுடையளான இவள் ஒருத்தி இங்கனே பிறப்பதே
என்ன மாயம் கொலோ இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால் -என்று ஈடுபடும்படிக்கு உடலான ஏற்றத்தையும் யுடையராய்
அடியார் நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலையிடம் –என்கிறபடியே
ஸ்தாந விகல்பத்தாலும் உபய விபூதியிலும் அடங்காத தன்மையாய் இருப்பர் –

யாவர் நிகர் அகல் வானத்தே -என்றும்
மாறுளதோ இம்மண்ணின் மிசையே -என்றும்
முக்தகண்டமாக உபய விபூதியிலும் தம்மோடு ஒப்பார் ஒருவரும் இல்லை -என்றார் இறே
இவ்வாழ்வாருக்கு ஒப்புச் சொல்லலாவார் ஸம்ஸாரத்திலும் இல்லை -நித்ய விபூதியிலும் இல்லை -தம்படி தாமும் அறியார் -ஸம்ஸாரிகளும் அறியார் -ஈஸ்வரனும் அறியான் –
ஒரு ஸாதனத்தைச் சமைய அனுஷ்டித்து இதனாலே நமக்கு இப்படி ஒரு வீறுடைமை வரும் -என்று இருக்க வந்தது அல்லாமையாலே தாமும் அறியார் -இவரைப்போலே சகல இதர விலக்ஷணராய் இருப்பாரை ஸம்ஸார மண்டலத்திலே காணாமையாலே சம்சாரிகளும் அறியார் –
தன்னுடைய ஞான சக்த்யாதி குணங்கள்
அவ்யுச்சிந் நாஸ் ததஸ்த்வேதே ஸ்ருஷ்ட்டி ஸ்திதி அந்த ஸம்யமா-என்கிறபடியே
அநுஸ் யூதமான ஸ்ருஷ்ட்டி பரம்பரையில் ஒரு வ்யக்தியிலே யாகிலும் இப்படிப்பலிக்கக் காணாமையாலே ஈஸ்வரனும் அறியான்
விண்ணுளாரிலும் சீரியர் –என்கிறபடியே நித்யர்களிலும் வ்யாவ்ருத்தரராய் இருக்கும் அளவன்றிக்கே புருஷோத்தமனான சர்வேஸ்வரனுடனும் ஒப்புச் சொல்லலாம் படியான வைபவம் இறே இவரது –

ஸ ச பூஜ்யோ யதாஹ் யஹம் -என்றும்
ஞாநீ த்வாத்மைவ மே மதம் -என்றும் சொல்லுகிறபடியே
சர்வேஸ்வரன் தானே ஞாநாதிக்யத்தை இட்டு ஒரோ வ்யக்திகளைத் தன்னோடு ஓக்கவும் தனக்குத் தாரகமாகவும் சொன்னபடி கண்டால் இவர் விஷயத்தில் சொல்ல வேண்டா விறே
இன்னமும் புவியும் இரு விசும்பும் நின் இத்யாதி
உபய விபூதியும் நின் சங்கல்பத்திலே கிடக்கிறது -ஏவம் பூதனான நீ என்னுடைய ஸ்ரோத்ர இந்திரிய த்வாரா புகுந்து விச்சேதம் இன்றிக்கே என்னுடைய ஹ்ருதயத்திலே உளனாக நின்றாய் -இப்படியான பின்பு விபூதியை யுடைய நீயோ விபூதிமானை யுடைய நானோ பெரியவன் என்றும் அறிவார் இல்லை -அப்ரதிஹத சக்தியான நீ தான் இத்தை நிரூபித்துக் காணாய் என்றுஉபய விபூதியில் யுக்தனுடனே மறு தலைக்கும் படியாக வைபவத்தை யுடையராய்
தெய்வத்தின் இனமோர் அனையீர்களாய் -என்று ஒருவரே இருவர் இன்றிக்கே நித்ய ஸூரிகள் எல்லோரும் கூடினாலும் தமக்கு ஒரோ வகைக்கு ஒப்பாம்படியான பெருமையைக் யுடையராய் இருப்பர்

இப்படி ஸகல இதர வ்யாவ்ருத்தராய் -ஸர்வ பிரகார விலக்ஷணரான இவ்வாழ்வார் அவதரித்தது ஸம்ஸாரி சேதனர் பண்ணின ஸூஹ்ருத பலமாய்த்து
ததோகில ஜகத் பத்ம போதாயாச்யுத பாநுநா தேவகீ பூர்வா சந்த்யாயாம் ஆவிர்ப்பூதம் மஹாத்மநா -என்று
சர்வேஸ்வரன் அவதரித்தால் போலே யாய்த்து இவ்வாழ்வார் அவதரித்தது -அவதார கார்ய பேதத்தாலே அச்யுத பானுவினுடைய ஆவிர்பாவத்திலும் வகுள பூஷண பாஸ்கர உதயம் வ்யாவ்ருத்தமாகும்
யத் கோ ஸஹஸ்ரம் அபஹந்தி தமாம்ஸி பும்ஸாம் நாராயணோ வாஸதி யத்ர ஸ சங்க சக்ர -யந் மண்டலம் ஸ்ருதி கதம் பிரணமந்தி விப்ராஸ் தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய-என்று
அச்யுத பானுக்கு விகஸியாத ஹ்ருத் பத்மங்களும் விகஸித்து ஆதித்ய அநி வார்யமாய் உள்ளிருளான அஞ்ஞான அந்தகாரமும் நீங்கினதும் வகுள பூஷண பாஸ்கர உதயமான பின்பு இறே

இப்படி அஞ்ஞான தமோ நிவர்த்தகராய் -ஊரும் நாடும் உலகும் தன்னைப் போலே –என்கிறபடியே எல்லோரும் தம்மைப் போலவே பகவத் ஏக பரராம்பாடி அவதரித்த இவ்வாழ்வார் விஷயத்திலே தேவு மற்றறியேன் -என்று
சேஷித்வ
சரண்யத்வ
ப்ராப்யத்வங்களை
அறுதியிட்டு தத் ஏக நிஷ்டராய்ப் போருமவராய்த்து ஸ்ரீ மதுரகவியாழ்வார்

இப்படி இவர் ததீய சேஷத்வமே உத்தேச்யம் என்று அறுதியிடுகைக்கு வந்த வழி தான் ஏது என்னில்
நம்மாழ்வாரை பொய் நின்ற ஞானமும் தொடங்கி அவாவற்று வீடு பெற்ற -அளவும் செல்ல அனுபவித்த இடத்திலே அவர் தமக்கு உத்தேச்யமாகத் திருவாய் மொழியில்
பயிலும் சுடர் ஒளி
நெடுமாற்கு அடிமை -யிலே
புருஷார்த்த காஷ்டையாகத் ததீய சேஷத்வத்தையே அறுதியிடுகையாலே
ஸ்வ ஆச்சார்ய ருசி பரிக்ருஹிதமான அர்த்தமே தமக்கு உத்தேச்யம் என்று நினைத்து ததீய அக்ரேஸரான இவ்வாழ்வாரையே தேவு மற்று அறியேன் என்று பற்றுகிறார்

ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதமான அர்த்தமே ஸாத்விகருக்குப் பரிக்ராஹ்யம் என்னும் இடமும் மஹாபாரத சாரமான சஹஸ்ர நாம அத்தியாயத்தில் சொல்லிற்று இறே -ஸ்ரீ பீஷ்மர் பக்கலிலே ஸகல அர்த்தங்களையும் குறைவறக்கேட்ட தர்மபுத்ரன் இவன் தனக்கு உத்தேச்யமாக ஸ்வீ கரித்து தத்வ ஹிதங்களே தனக்கு உத்தேச்யம் என்று நினைத்து
கோ தர்மஸ் ஸர்வ தர்மாணாம் பவத பரமோ மத -என்று கேட்க
ஏஷ மே ஸர்வ தர்மாணாம் தர்மோதிகதமோ மத -என்று தன்னுடைய ருசி பரிக்ருஹீதமான அர்த்தத்தை உபதேசத்தான் இறே

த்ரிபுரா தேவியாரை -பிரமாண ப்ராபல்யத்தாலேயே எம்பெருமானே ஆஸ்ரயணீய தைவம் என்று நீங்கள் பற்றுகிறது என்ன-அஃது ஒன்றும் அன்று எம்பெருமானார் காழிச்சால் மூலையில் தேவதையை ஆஸ்ரயித்தார் யாகில் அதுவே எங்களுக்கும் ஆஸ்ரயணீய வஸ்துவாகக் கடவது -என்றாள் -அந்த நியாயத்தாலே ஆழ்வார் தமக்குத் தஞ்சமாக நினைத்திருந்த ததீய சேஷத்வத்தையே விரும்பித் தமக்குப் புருஷார்த்தமாக அத்ய-வசிக்கிறார்-

இது தான் ஸ்ரீ இராமாயண புருஷர்களில் ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் பக்கல் அனுஷ்டான சேஷமாகக் காணப்பட்டது –
வேத உப ப்ரும்ஹணார்த்தாயா தாவ க்ராஹயத ப்ரபு -என்று வேத உப ப்ரும்ஹண அர்த்தமாக ப்ரவ்ருத்தமான ஸ்ரீ இராமாயண புருஷர்கள் நால்வரும் தர்ம ஸம் ஸ்தாபன அர்த்தமாக அவதரிக்கையாலே நால்வரும் நாலு அர்த்தத்தை அனுஷ்டித்துக் காட்டினார்கள் –
கர்த்தா காரயிதா ச ஸ –என்கிறபடியே அனுஷ்ட்டிப்பிக்கைக்காக -ஒருவன் சொன்னதை ஒருவன் செய்யக்கடவன் -என்கிற முறை நேராக அழிந்து கிடைக்கையாலே பித்ரு வசன பரிபாலனாதி களாலே ஸாமான்ய தர்மத்தை அனுஷ்ட்டித்தார் பெருமாள் –
பிதுர் வசன நிர்தேசாத்
அகஸ்திய வஸனாத்
ஸூக்ரீவ வஸனாத் –என்று இறே இவருடைய அனுஷ்டானம் –

சேஷ பூதன் நிருபாதிக சேஷியைக் குறித்து கிஞ்சித் கரித்துத் தான் உளனாகக் கடவன் -என்கிற விசேஷ தர்மத்தை அநுஷ்டித்தார் இளைய பெருமாள்
குருஷ்வமாம நுசரம் -என்றும் -அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்றும் இறே இவருடைய அனுஷ்டானம் –

ராஜ்யஞ்ச தவ ரஷே பமஹம் வேலேவ சாகரம் பிரதிஜா நாமி தேவீர மாபூவம் வீர லோக பாக் -என்று
ராஜ்யஞ்ச தவ ரஷேபம்
ராஷ தர்மேண பாலேன-என்கிறபடியே உம்முடைய ரஷணம் பண்ணுகை அன்றிக்கே உம்முடைய ராஜ்யத்தையும் ரஷிக்கக் கடவேன்
எனக்கு தார்த்த்யம் ஸ்வரூபம் ஆகையாலும் உம்மால் என்னை மீரா ஒண்ணாது காணும்
மஹம் வேலேவ சாகரம் –
கடலுக்கு கரை சேஷமாய் இருக்கச் செய்தேயும் கரையை அதிகரிக்க மாட்டாது இ றே கடல்
அப்படியே நீர் பெரியீர் ஏன்னா உம்மால் என்னை விஞ்ச ஒண்ணாது காணும்
பிரதிஜா நாமி –
நான் இப்படி பிரதிஜ்ஞ்ஞை பண்ணுகிறேன்
தேவீர –
ஒரு கோழை முன்னேயோ பிரதிஜ்ஞை பண்ணுகிறது
பிரதிஜ்ஞை பண்ணினால் அதைத் தலைக்கட்டித் தரவல்ல ஆண்பிள்ளைத் தனம் உடைய உம்முடைய திரு முன்பே யன்றோ
மாபூவம்
இப்படி செய்திலேன் ஆகில் உம்முடைய சந்நிதியில் வர்த்திக்கப் பெறாது ஒழிகை அன்றிக்கே உம்முடைய ராஜ்யத்திலும் வர்த்திக்கப் பெறாதவன் ஆகிறேன்
வீர லோக பாக்
உம்மை முடி சூடி அனுபவிக்கப் பாரித்து அது பெறாதே போன சக்கரவர்த்தி புக்க லோகம் புகுகிறேன் என்கிறபடியே நிர்பந்தித்து
அடிமை செய்கை அன்றிக்கே சேஷி யுகந்த அடிமை செய்யக் கடவது என்னும் இடத்தை அனுஷ்டித்தான் ஸ்ரீ பரதாழ்வான் –

இப்படி இருக்கிற இவனை யல்லது அறியாதே இருக்கையாலே பகவச் சேஷத்வ காஷ்டையான ததீய சேஷத்வத்தை அனுஷ்டித்தான் ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான்
கச்சதா மாதுல குலம் பரதேன ததா நக சத்ருக்னோ நித்ய சத்ருக்னோ நீத ப்ரீதி புரஸ்க்ருத
கச்சதா
கச்சதா என்கிற வர்த்தமான நிர்தேசத்தாலே தனக்கு ஒரு பிரயோஜனம் உண்டாயாதல் -இங்கு மாதா பிதாக்களைக் கேள்வி கொள்ளுதல் பூர்வஜரான பெருமாளைக் கேள்வி கொள்ளுதல் -பூர்வ ஷணத்தில் போகுகைக்கு நினைவு யுண்டாயாதல்-செய்யும் அளவு
இன்றியே அவனை ஒழிய ஜீவிக்க மாட்டாமையாலே போனான் என்கை –
மாதுல குலம்
யுதாஜித்து அழைத்து வந்ததும் அவனை யாகையாலே போக்கிலும் உத்தேச்யம் அவனுக்கு
இவனுக்கு அவன் பின்னே போகை உத்தேச்யமாய்ப் போனான் என்கை
பரதேன –
பரத இதி ராஜ்யச்ய பரணாத் -என்கிறபடியே சக்ர வர்த்தியும் துஞ்சி பெருமாளும் ராஜ்யத்தைப் பொகட்டுப் போய்
இளைய பெருமாளும் தொடர்ந்து அடிமை செய்ய வேண்டும் என்று போய்
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வானும் தன்னை அல்லது அறியேன் என்று இருக்கிற் தசையிலே ராஜ்யத்தை வஹித்துக் கொண்டு இருந்தான் -என்கை
பரத இதி ராஜ்யஸ்ய பரணாத் -என்றான் இறே சதாநீகன்
தத-
இருவரும் ராஜ புத்ரர்களாய் நஷத்ர பேதமும் உண்டாய் இருந்தால் முஹூர்த்தம் இட்டுப் போகப் பிராப்தமாய் இருக்க
அவன் போனதுவே தனக்கு முஹூர்த்தமாகப் போனான் என்கை-
கச்சதா என்றதிலே அர்த்த ஸித்தம் அன்றோ-ததா என்கிறது என் என்னில் அங்கு மமதா நிவ்ருத்தியைச் சொல்லிற்று -இங்கு அதுக்கு ஆஸ்ரயமான அஹங்கார நிவ்ருத்தியைச் சொல்கிறது -ஆகவே புனர் யுக்தி தோஷம் இல்லை -சேஷத்வ விரோதிகள் அன்றோ இரண்டுமே –
அநக
அநம் இல்லாதது இவனுக்கு இறே-அகமாவது உத்தேச்ய விரோதி -இவ்விடத்தில் ராமபக்தி -அல்லாதார்க்கு ராமபக்தியும் கலசி இருக்கையாலே பாபமிச்ற ஜீவனம் என்கிறது
ராமபக்தியைப் பாபம் என்னப் போமோ வென்னில் பாபத்தில் புண்யம் நன்றாய் இருக்க மோஷ விரோதி ஆகையாலே புண்யமும்
புண்ய பாபே விதூய என்று கொண்டு பாப சப்த வாச்யமாகா நின்றது -அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம் -என்று பாப சப்த வாஸ்யம் -ஆகையாலே பரத அனுவ்ருத்தி யாகிற உத்தேச்யத்துக்கு
விரோதி யாகையாலே ராம சவுந்தர்யத்தில் இழிந்து ராம பக்தியில் கால் தாழுமதுவும் பாபமாம் இத்தனை –ராமே பிரமாதம் மா கார்ஷி புத்ர பிராதரி கச்சதி -என்று ராம அனுவ்ருத்திக்கும் இடைச்சுவராகச் சொல்லிற்று இறே
சத்ருக்ன
பிள்ளைகளை உடைய சந்நிவேசன்களைப் பார்த்து திரு நாமம் சாத்துக்கிற வசிஷ்ட பகவான் பெருமாள் கண்டாரை
அழகாலே துவக்க வல்லார் என்று தோற்றி இருக்கையாலே ராமன் என்றும்
இளைய பெருமாளுக்குக் கைங்கர்யமே நிரூபகமாகத் தோற்றுகையாலே ஸ்ரீ லஷ்மணன் என்றும் ராஜ்யத்தைப் பாரமாக நினைப்பவனாகையாலே பரதாழ்வான் என்றும் திரு நாமம் சாத்தி
இவனுடைய சந்நிவேசத்தைக் காணவே சத்ருக்கள் மண் உண்ணும்படி இருக்கக் காண்கையாலே சத்ருக்னன் என்று திருநாமம் சாத்தினான் –
நித்ய சத்ருக்ன –
பாஹ்ய சத்ருக்களை யன்றிக்கே ஆந்தர சத்ருவான இந்த்ரியங்களையும் ஜெயித்து இருக்கும் என்கை –
இந்த்ரிய ஜெயத்துக்கு எல்லை எங்கனம் என்னில் பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரீணம் -என்கிற ராம சௌந்தர்யத்திலும் துவக்கு ஒண்ணாது இருக்கை-
அதாவது பெருமாளைப் பற்றும் போதும் தன் உகப்பால் அன்றியே அவன் உகந்த விஷயம் என்று பற்றுகை
நீத
ராஜாக்கள் போம் போது உடைவாள் பரிசு மற்று ஓன்று கொண்டு போமா போலே அவன் கொண்டு போகப் போனான் –
த்ரவ்யத்துக்கு த்ரவ்யாந்தரங்களோட்டை சம்யோகம் உபய நிஷ்ட்டமாய் இருக்கும் -அது போல் அன்றியே ஜாதி குணங்களோ பாதி போனான்
ப்ரீதி புரச்க்ருத
தமையன் பின்னே தம்பி போகக் கடவன் என்கிற முறையால் போனான் அல்லன் -அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்ற
இளைய பெருமாளைப் போலே எல்லா வடிமைகளும் போனவிடத்தில் செய்யலாம் என்று பாரித்துக் கொண்டு ப்ரீதி ப்ரேரிதனாய் போனான்
படை வீட்டில் இருந்தால் பலர் உண்டாகையாலே பரத அனுவ்ருத்தி ஒருவர்க்கு இட்ட சோற்றை பகிர்ந்து உண்பாரோ பாதி ஒகஹரியாய் இறே இருப்பது
நீத-என்கையாலே சேஷத்வத்தில் அசித் கல்பனாய் போந்தான்
ப்ரீதி புரஸ்க்ருத என்கையாலே ஸ்வரூப அனுரூபமான விருத்தியலே சைதன்ய ப்ரயுக்தமான தர்மங்கள் உண்டாய் இருக்கை
படியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே என்று இறே அபியுக்தர் வார்த்தை
அநக -நித்ய சத்ருக்ந-என்று பாவனத்வ போக்யதையாலும் அவனையே பற்றினான் என்றுமாம்
இவற்றுக்குப் பிரயோஜனம் என்ன என்னில்
பாஷ்யகாரர் –அநக –நித்ய சத்ருக்ன -என்ற இதுக்கு ப்ரமேயமாகச் சொற்கட்டிலே
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் பெருமாளுக்கு நல்லனான படி அவனை அல்லது அறியாத ஸ்ரீ பரதழ்வானை யல்லது அறியாதபடி யானான் என்று அருளிச் செய்வர்
இதுவே பிரயோஜனமானால் சொல்லும் மிகை எல்லாம் பொறுக்கும் இறே
-இப்படி இவனைப் போல் இருப்பார் ஒருவர் ஸ்ரீ மதுர கவிகள்
இனி ததீயர் உத்தேச்யர் என்னும் இடத்தில் -முதல் அடியில் அஜ்ஞ்ஞாத ஜ்ஞாபனத்தாலே பகவத் விஷயத்திலே மூட்டியும்
இவன் பகவத் விஷயத்திலே அவகாஹித்து குண அனுசந்தானத்தால் அல்லது செல்லாத படியானால் போத யந்த பரஸ்பரம் என்கிறபடியே
போது போக்குகைக்கு உசாத் துணையாயும்
பிராப்தி தசையில் வந்தால் யத்ர பூர்வே சாத்யாஸ் சந்நிதேவா -என்கிறபடியே சாத்திய விருத்தி ரூபத்தாலும் புருஷகார பாவத்தாலும் உத்தேச்யராவார்கள்
இப்படி சர்வ அவஸ்தையிலும் ததீயரே உத்தேச்யர் என்று அத்யவசித்து தமக்கு ஸ்ரீ வைஷ்ணவ விஷயீ காரத்துக்கு முன்னர் அஞ்ஞாத ஞாபன முகத்தாலே பகவத் விஷயத்தில் மூட்டின மஹா உபகாரகரான ஆழ்வார் தம்மையே பற்றுகிறார் –

இப்படி இவர் பரமாச்சார்யரான ஆழ்வார் விஷயத்தில் -தேவு மற்று அறியேன் -என்று தேவதா பிரதிபத்தியைப் பண்ணுகைக்கு அடி என் என்னில்
தேவ மிவ ஆச்சார்யம் உபாஸீத -என்றும்
ஆச்சார்யோ தேவோ பவ -என்றும்
ஆச்சார்யர் விஷயத்தில் தேவதா பிரதிபத்தி பண்ணச்சொல்லி வேதாந்தம் விதிக்கையாலும்
குருர் ஏவ பர ப்ரஹ்ம
ஆச்சார்யஸ் ஸ ஹரிஸ் சாஷாச் சர ரூபி ந சம்சய
ஏஷ வை பகவான் ஸாஷாத் பிரதான புருஷேஸ்வர
யோகீஸ்வரைர் விம்ருக் யாங்க்ரிம் லோகோயம் மநுதே நரம்
சாஷாந் நாராயணோ தேவ க்ருத்வா மரத்தய மயீம் தநும் -மக்நாந் உத்தரதே லோகான் காருண்யாஸ் ஸாஸ்த்ர பாணிநா
இது முதலான ப்ரமாணங்களிலே சர்வேஸ்வரன் தானே ஆச்சார்யனாய் வந்து அவதரித்து ஸம்ஸார ஆர்ணவ மக்நரான ஸம்ஸாரி சேதனரை கேவலம் தன் கிருபையாலே சாஸ்த்ரார்த்தங்களை உபதேசித்து உத்தரிப்பிக்கும் என்று முக்த கண்டமாகச் சொல்லுகையாலும்

க்ருதே அத்ரி ஸூநுர்ப் பகவான் த்ரேதாயாம் ரகு நந்தன -த்வாபரே நந்த ஸூநுச்ச கலவ் தேவ பராங்குச -என்று
ஈஸ்வரன் தானே க்ருத யுகத்திலே ப்ராஹ்மண உத்தமரான அத்ரி பகவானுக்குப் புத்ரனாய் தத்தாத்ரேயனாய் அவதரித்தால் போலவும்
த்ரேதா யுகத்தில் ஷத்ரியனான தசரத சக்கரவர்த்திக்குப் புத்ரனாய் தத்தாத்ரேயனாய் அவதரித்தால் போலவும்
த்வாபர யுகத்தில் கோ ரக்ஷணாதி தர்மத்தை யுடைய சாஷாத் வைஸ்யரான ஸ்ரீ நந்தகோபருக்குப் புத்ரனாய் தத்தாத்ரேயனாய் அவதரித்தால் போலவும்
க்ரூரே கலியுகே ப்ராப்தே நாஸ்திகைஸ் கலு ஷீக்ருதே -விஷ்ணோர் அம்ச ஸம் பூதோ வேத வேதார்த்த தத்வ வித் -ஸ்தோத்ரம் வேதமயம் கர்த்தும் த்ராவீட்யா நிஜபாஷயா -ஜனிஷ்யதி ஸதாம் ஸ்ரேஷ்டோ லோகாநாம் ஹித காம்யயா -என்று
நாஸ்திக ஜநாக்ராந்தமான கலியுகத்தில் சர்வேஸ்வரனுடைய அம்ச அவதாரமாய் -தத்வ வித அக்ரேஸராய் லோக ஹிதார்த்தமாக திராவிட பாஷையாலே வேதாந்த அர்த்தங்களைப் பிரபந்த்தீகரிக்கைக்கு ஸ்ரீ சடகோபர் என்கிற திருநாமத்தை யுடையராய் ஒருவர் திருவவதரிக்கப் போகிறார் என்றும்

கலவ் புந பாபரதா அபி பூதே ஸ உத்பவத் ஆஸ்ரித வத்சலத்வாத் -பக்தாத்மநா விஸ்வ ஜநாந் ஸூ கோப்தும் விச்வாதிகோ விஸ்வமயோ ஹி விஷ்ணு -என்று
கலியுகத்திலும் ஸர்வ ஜன ஸம் ரக்ஷணார்த்தமாக சர்வாதிகனான சர்வேஸ்வரன் பக்த ரூபேண வந்து அவதரிப்பான் என்று சொல்லுகையாலும்

கலவ் கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா க்வசித் க்வசிந் மஹா பாகா த்ரமிடேஷு ச பூரிஸ-தாம்ர பர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயஸ்விநீ காவேரீ ச மஹா பாகா ப்ரதீஸீ ச மஹா நதீ -யே பிபந்தி ஜலம் தாஸாம் மனுஜா மனுஜேஸ்வர -தேஷாம் நாராயணே பக்திர்ப் பூயஸீ நிருபத்ரவா -என்று
ஞானாதிகரான சத்துக்கள் வந்து ஆவிர்பவிக்கும் ஸ்தல விசேஷங்களாலே பிரகாசிப்பித்து
அந்த நதீ விசேஷங்களிலே ஜல பானம் பண்ணுபவர்களுக்கு பக்தி அதிசயிக்கும்படியைச் சொல்லுகையிலே பிரதமத்திலே தாம்ர பர்ணீ நதீ யத்ர-என்று இவர் ஆவிர்பாவ ஸ்தலத்தைச் சொல்லுகையாலே
த்வதீயே பரார்த்தேஸ்மிந் திநே த்வாத்யேத சத்தமே –மந் வந்த்ரே வர்த்தமாநே த்விஷ்டா விம்ஸே சதுர் யுகே -கலே ராதவ்மாஸி ராதே காவ்ய வாரே குளீரகே -பவர்ணமாஸ்யாம் விசாகாக்யே தாரே மஹதி ஸோபநே -ப்ரஜாபதேர் ஜென்ம யோகீ சடகோப இதி ஸ்ம்ருத-மத் பக்தோஹம் பவிஷ்யாமி நேதும் த்ராவிடதாம் ஸ்ருதீ –என்றும்
தாம்ர பர்ணி யுத்தரே தடே தாந்த்ர க்ஷேத்ரே ஜெனிஷ்யதி என்றும்
நிர் நித்ர தீந்த்ரிணீ ஸ த்வம் கத்வாத்ர புஜகாதிப -ஸர்வ அபிலாஷாந்த் ஸர்வேஷாம் நித்யமேவ ப்ரதாஸ்யதி -சடகோப முனீந்திர த்வம் ஸம் ப்ராப்ய த்ரிதஸேஸ்வர –தாம்ரபர்ணீ தடம் ப்ராப்ய ரஷிஷ்யத் யகிலான் ஜனான் -அத்ர வேதாஸ் சமஸ்தாச்ச த்ராவிடத்வம் உபாகத–வேதயிஷ்யந்தி தேவேசம் ஸகலா அபி மாதவம் -என்றும்
அஸ்தி பாண்டிய மஹா தேசே குருகா நகரீ ஸூபா -தாமிரபர்ணீ நதீ தீரே சாஷாத் த்ருஷ்டோ ஹ்யதோஷஜ -என்றும் சொல்லுகிறபடியே
அந்த நதீ தீரத்திலே -நல்லார் நவில் குருகூரில் -யுக வர்ண கிரமத்திலே -அவதரித்த சர்வேஸ்வரன் தானே
குடி குடி வழி வந்து ஆட் செய்யும் தொண்டர் –என்கிறபடியே
ஸப்த புருஷம் பகவத் ஏக பரராம்படியரான காரியார் இடத்திலே வந்து அவதரித்து -காரி மாறன் சடகோபன் என்று பரம ஆப்த தமரான தாமே அருளிச்செய்யும் படி ப்ரக்யாத ப்ரபாவராகையாலே
இவ்வாழ்வாரே ஸகல ஜன ஜீவாதுவாய் -சர்வோத்தரகமான பகவத் அவதாரமே என்று அறுதியிட்டு அவரே பர தேவதை என்று ஸ்ரீ மதுர கவிகள் பற்றினார் யாயிற்று –

அறியாதன அறிவித்த அத்தா -என்று பகவத் விஷயத்தில் ஆச்சார்யத்வ பிரதிபத்தி பண்ணினார் ஆழ்வார்
இவர் ஆச்சார்ய விஷயத்தில் பகவத் பிரதிபத்தி பண்ணுகிறார் தேவு மற்றறியேன் -என்று –
ஈஸ்வர ஆச்சார்யத்வங்களாகிற தர்ம த்வயங்களும் கார்ய பேதத்தாலே வ்யக்தி த்வய சாதாரணமாய்க் காண்கையாலே இருவர் பக்கலிலும் இரண்டு பிரதிபத்தியும் நடக்கக் குறையில்லை
ஸ்ரீதர ஆதி குரவே -என்று ஸ்ரீயப்பதியான ஈஸ்வரன் தானே பிரதம ஆச்சார்யனாய்
ஸ ச ஆச்சார்ய வம்ஸோ ஜேய ஆச்சார்யாணாமஸாவஸா வித்யா பகவத்த –என்கிறபடியே
குரு பரம்பரையும் ஞாதவ்யமாகையாலே தத் பரம்பரா ப்ரவர்த்தாகத்வமும் ஸ்வ நிஷ்டமாகையாலே சரம ஆச்சார்யத்வமும் தன்னை ஒழிய அனுபபன்னமாகையாலே ஆச்சார்ய அவதாரமும் ஈஸ்வர க்ருத்யமாம் அத்தனை –

சம்பவாமி யுகே யுகே -என்று வாயோலை செய்தது ஆச்சார்ய அவதாரத்தை ஒழிய அன்று இரே -ஆகையாலே நம்மாழ்வார் பகவத் அவதார விசேஷமாகையாலே அவர் விஷயத்தில்
சேஷித்வ
சரண்யத்வ
ப்ராப்யத்வங்களை
அறுதியிட்டு ஸ்ரீ மதுரகவிகளும் தத் ஏக நிஷ்டராகக் குறையில்லை

இப்படி ஸ்ரீ மதுரகவி யாழ்வார் பர தேவதையாக பிரதிபத்தி பண்ணின ஆழ்வார் விஷயத்திலே பிரதம பர்வமான ஈஸ்வரன் தானே சரம பர்வமான ஆழ்வாராய் வந்து அவதரித்தார் என்றும் உத்தேச்யத்வ பிரதிபத்தி பண்ணாதே ஸஜாதீயத்வ பிரதிபத்தி பண்ணினவர்கள் யாவதாத்ம பாவி ரௌரவாதி நரகத்தில் அழுந்துவர்கள் அத்தனை –
விஷ்ணோர் அர்ச்சாவதாரேஷு லோஹ பாவம் கரோதி யஸ் -யோ குரவ் மனுஷம் பாவம் உபவ் நரகபாதி நவ் -என்று
ஆச்சார்ய விஷயத்திலே மனுஷ்யத்வ பிரதிபத்தி பண்ணினவனுக்கு நரக பதனமே பலமாக ஸாஸ்த்ரம் சொல்லா நின்றது இறே
நம்மாழ்வார் பகவத் அவதார விசேஷம் பிரதிபத்தி தான் ஆஸ்ரித அக்ரேஸராய் பிரமாண பரதந்த்ரராய் இருக்கும் சில பாக்யாதிகர்க்கு நெஞ்சிலே ஊற்று மாறாமல் எப்போதும் நிலை நிற்கும்-யத் ஸார பூதம் தத் உபாஸி தவ்யம் -என்றும்
பஜேத் ஸார தமம் ஸாஸ்த்ரம் -என்றும்
சொல்லுகிறபடியே ஸகல சாஸ்த்ரா ஸாரார்த்தமாய்
ஸ்ரீ மதுரகவிகள் நாதமுனிகள் தொடக்கமான நம் பூர்வாச்சார்யர்களாலே உபதேச பரம்பரா ப்ராப்தமாய் –ஆத்மாவைப் நேரே வகுத்த விஷயமாய் -ஸ்வா தந்தர்யாதிகள் கலசாதே எப்போதும் காருண்ய ஏக விஷயமாய் -அதி ஸூலபமாய் -மோக்ஷ ஏக ஹேதுவாய் இருந்துள்ள சரம பர்வமான நம்மாழ்வாரையே
உபாய உபேய பாவேந தமேவ சரணம் வ்ரஜேத் –என்கிறபடியே
ப்ராப்யமாகவும் ப்ராபகமாகவும் பற்றி நிர்ப்பரராய் இருக்குமவர்களுக்குப் பேற்றிலே கண்ணழிவு இல்லை-ஸித்திர்ப்பவதி வா நேதி ஸம்சய அச்யுதஸேநாவிம் -ந ஸம்சய அஸ்தி தத் பக்த பரிசர்யார தாத்மநாம் -என்று
பிரதம பர்வமான ஈஸ்வரனைப் பற்றினவர்களுக்குப் பேற்றிலே சம்சயமுண்டு -சரம பர்வமான ஆச்சார்யனைப் பற்றினவர்களுக்குப் பேற்றிலே கண்ணழிவு இல்லை என்னா நின்றது இறே
குரு மூர்த்தயா ஸ்திதஸ் சாஷாத் பகவான் புருஷோத்தம-உத்தாரயதி ஸம்சாராத் தத் உபாய ப்லவேந து -என்று
அவதார விசேஷமான ஆச்சார்யனே ஸம்ஸார உத்தாரகன் என்று சாஸ்த்ரா ஸங்க்ரஹ தாத்பர்யமாகையாலே
பரம ஆச்சார்யரான நம்மாழ்வாரே ஸம்ஸார உத்தாரகர் என்னும் அர்த்தம் ஸூ வ்யக்தம் –

மற்றை யாழ்வார்கள் இவருக்கு கரணவத் பரதந்த்ராகையாலே ஏதத் அந்தர்பூதராம் அத்தனை -இவ்வாழ்வார் தாமீ அர்ச்சாவதார சமாதியாலே பூர்வமேவ கிலங்களான ஸர்வ பிரபந்தங்களையும் நாதமுனிகளுக்குத் திருவாய் மலர்ந்து தாமே அருளிச் செய்கையாலே இதர பிரபந்த வக்தாக்களான ஆழ்வார்கள் இவருக்கு அநந்யார்ஹராய் அவயவ பூதராகக் குறையில்லை -இப்படி ஸகல இதர விலக்ஷணராய் பரமாச்சார்யரான நம்மாழ்வாரே சாஷாத் பகவத் அவதாரமே என்றும்
அவர் திருவடிகளே உபாயம் என்றும்
அவர் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமே புருஷார்த்தமாகவும்
அவருடைய முக உல்லாசமே பரம ப்ரயோஜனமாகவும்
அவர் எழுந்து அருளி இருக்கிற இடமே ப்ராப்ய பூமியாகவும்
அவருடைய விக்ரஹ அனுபவமே உண்ணும் சோற்றில் படியே தாரகாதிகளாகவும்
பிரதிபத்தி பண்ணி விஸ்வஸித்து இருக்கும்
சரம அதிகாரி சேகரராய்த்து ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் –

இப்படி சரம பர்வ ஏக நிஷ்டரான இவர் தாம் ஸ்வ ஆச்சார்யரான நம்மாழ்வார் பகவத் விஷயத்திலே பண்ணும் அனுசந்தான பிரகாரத்தை இவ்வாழ்வார் விஷயத்தில் பண்ணினார் இரே -எங்கனே என்னில்
அவர் -அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாராவமுது -என்றார் -அந்த போக்யதா ப்ரகர்ஷத்தை ஸ்ரீ மதுரகவிகள் தாம் நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -1-என்கிறார்

அவர் மலக்கு நாவுடையேற்கு -என்றார் -இவர் நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -என்றார்
அவர் -அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றார் -இவர் மேவினேன் அவன் பொன்னாடி மெய்மையே -என்றார்
அவர் -கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை -என்றார் -இவர் தேவு மற்றறியேன் -என்றார் –
அவர் பாடி இளைப்பிலம் என்றார் -இவர் பாடித் திரிவனே -என்றார்
அவர் இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்றதென் -என்றார் -இவர் திரி தந்தாகிலும் -என்றார்
அவர் உரிய தொண்டர் தொண்டர் என்றால் -இவர் நம்பிக்கு ஆள் உரியனே என்றார் -அவர் தாயாய் தந்தையாய் என்றார் -இவர் அன்னையாய் அத்தனாய் -என்கிறார்
அவர் -ஆள்கின்றான் ஆழியான் -என்றார் -இவர் என்னையே ஆண்டிடும் தன்மையான் -என்கிறார் –
அவர் கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான்-என்கிறார் -இவர் தக்க சீர் சடகோபன் -என்கிறார்
அவர் யானே என்தனதே என்று இருந்தேன் -என்றார் -இவர் நம்பினேன் பிறர் நன் பொருள் தன்மையும் -என்கிறார் –
அவர் எமர் கீழ் மேல் எழு பிறப்பும் மா சதிர் இது பெற்று -என்றார் -இவர் இன்று தொட்டு எழுமையும் -என்கிறார் –
அவர் -என்னால் தன்னை இன்கவி பாடிய ஈசன் -என்றார் -இவர் நின்று தன் புகழ் ஏத்த அருளினான் -என்கிறார்
அவர் ஒட்டுமோ இனி உன்னை நெகிழ்க்கவே -என்றார் -இவர் என்றும் என்னை இகழ்விலன் காண்மினே -என்கிறார் –
அவர் மயர்வற மதிநலம் அருளினன் -என்றார் -இவர் எண்திசையும் அறிய இயம்புகேன் ஒண் தமிழ் சடகோபன் அருளையே -என்கிறார்
அவர் அருளுடையவன் -என்றார் -இவர் -அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே -என்கிறார்
அவர் -பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -என்றார் -இவர் -நிற்க்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்-என்கிறார் –
அவர் -வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்றார் -இவர் ஆட்ப்புக்க காதல் அடிமைப் பயன் -என்கிறார் –
அவர் -ஆராத காதல் -என்றார் -இவர் -ஆட்ப்புக்க காதல் -என்கிறார்
அவர் -பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய் -என்கிறார் -இவர் -பயனன் றாகிலும் பாங்கலராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்-என்கிறார் –
அவர் கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -என்றார் -இவர் தென் குருகூர் நம்பிக்கு அன்பனாய் -என்கிறார் –
அவர் -உலகம் படைத்தான் கவி -என்றார்-இவர் மதுரகவி -என்கிறார் -அவர் உரைக்க வல்லாருக்கு வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம் -என்றார் -இவர் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -என்று தலைக் கட்டுகிறார் –

இப்படி ஆழ்வார் பகவத் விஷயத்திலே அனுசந்தித்து குண விசேஷங்களைத் தாம் ஆழ்வார் விஷயத்தில் அநுஸந்திக்கும்படிக்கு ஈடாக ஆழ்வார் தம்மை விஷயீ கரித்து சரம பர்வ ஏக நிஷ்டராம் படி பண்ணி அருளின உபகாரத்துக்கு -பிரதியுபகாரம் இல்லாமையாலே தத் குண அனுசந்தானத்தால் அல்லது செல்லாதபடியான தசை விளைந்து
தத் குண அனுபவ ஜெனித ப்ரீதிகளுக்குப் போக்குவீடாக பகவத் விஷயத்திலும் அதிசயிதமான ஆழ்வாருடைய போக்யதா ப்ரகர்ஷத்தையும்
அவருடைய பாசுரமே தேஹ யாத்ரை யாம்படி தாரகமான படியையும்
ஆழ்வார் உகந்த விஷயம் என்றும் தமக்குப் பகவத் விஷயமும் உத்தேச்யமாம் படியையும் –
அப்படி உத்தேசியமாக விரும்புகைக்கு அடி தம்மை ஆழ்வார் விஷயீ கரித்த விஷயீ காரம் என்னும் அத்தையும் –
இதர விஷய ப்ராவண்யத்தை விட்டு பகவத் விஷயத்தில் நில்லாதே ஆழ்வார் அளவும் வரும்படியான சாதுர்யத்தையும்
ஆழ்வார் தம்மை விஷயீகரித்த விஷயீ காரத்தினுடைய தார்ட்யத்தையும்
தம்மை விஷயீ கரிக்கைக்கு ஈடான ஆழ்வாருடைய கிருபா ப்ரகர்ஷ ப்ரகாஸத்தையும்
பகவத் கிருபையிலும் ஆழ்வாருடைய கிருபையே இவ் விபுதியில் விஞ்சி இருக்கும் என்னுமத்தையும் –
இப்படி ஆழ்வாருடைய கிருபை இவ் வுலகில் விஞ்சி இருக்கைக்கு அடி ஸகல வேத ரஹஸ்ய அர்த்த ஞாபகமாய்
தம்முடைய பாசுரமான இப்பிரபந்தத்தை என் நெஞ்சினிலே ஸூ பிரதிஷ்டமாக்கினான் என்னுமத்தையும்
இப்படி ஆழ்வார் தம் பக்கலிலே உபகரித்த உபகாரம் பிரதியுபகார நிரபேஷமாய் இருக்கும் என்னுமத்தையும் –
இப் பத்துப் பாட்டாலே ஸூ க்ரஹமாக அருளிச் செய்து இப்பிரபந்தம் கற்றாருக்குப் பலம் ஸ்ரீ வைகுண்டம் என்றும் சொல்லித் தலைக் கட்டுகிறார்

—————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தம்பிரான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading