ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம்-சூரணை-229 –ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம்-
இனிமேல் இவர் பிரதமத்தில் –
இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை-திரு விருத்தம்-1–என்று ஆர்த்தராய் சரணம் புக்க போதே
விரோதி நிவ்ருத்த பூர்வகையான ஸ்வ பிராப்தியை பண்ணுவியாமல்
இவ்வளவாக இவரை வைக்கைக்கு அடி எது என்னும் ஆ காங்க்ஷையிலே வைக்கைக்கு
ஹேது பல உண்டு என்னும் அத்தையும்
அவை எல்லா வற்றிலும் முக்ய ஹேது இன்னது என்னும் அத்தையும் அருளிச் செய்கிறார் –
உறாமையோடே உற்றேன் ஆக்காது ஒழிந்தது
நாடு திருந்த –
நச்சுப் பொய்கை யாகாமைக்கு –
பிரபந்தம் தலைக் கட்ட –
வேர் சூடுவார் மண் பற்றுப் போலே –
என்னும் அவற்றிலும்
இனி இனி என்று இருபதின் கால் கூப்ப்பிடும்
ஆர்த்த் யதிகார பூர்த்திக்கு என்னுமது முக்யம் .–
அதாவது –
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந் நின்ற நீர்மை
இனி யாம் உறாமை -திரு விருத்தம் -1-என்று
அவித்யா கர்ம வாசன ருசி பிரகிருதி சம்பந்தங்கள் ஆகிற
பிராப்தி பிரதிபந்தங்களை விடுவிக்க வேணும் என்று -ஆர்த்தராய்
திரு அடிகளில் விழுந்து அபேஷித்த போதே அவற்றைப் போக்கி –
உற்றேன் உகந்து பணி செய்து உன பாதம் பெற்றேன்-10-8-10–என்று திரு அடிகளைக் கிட்டி –
ப்ரீதி பூர்வகமாக அடிமை செய்யப் பெற்றேன் என்னும்படி ஆக்காமல் -இவரை வைத்து –
தன்னுடைய சிருஷ்டி அவதாராதிகளாலும் திருந்தாத ஜகத்து –இவருடைய உபதேசத்தால் –
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே -என்னும்படி திருந்துகைக்காகவும் —
பிரபதன அநந்தரம் முக்தராம் படி பண்ணில் -பிரபத்தியை நச்சு பொய்கையோ பாதி நினைத்து
பீதராய் -இழிவார் இல்லை என்று -அது அப்படி ஆகாமைக்காகவும் –
தானும் தன் விபூதியும் வாழும்படி இவரைக் கொண்டு கவி பாடுவிக்க தொடங்கின பிரபந்தம்
பரிசமாப்தம் ஆகைக்காகவும் –
வேர் சூடுமவர்கள் பரிமளத்திலே லோபத்தாலே மண் பற்று கழற்றாதாப் போலே –
ஞானிகளை சரம சரீரதோடே வைத்து அனுபவிக்குமவன் ஆகையாலே –
இவருடைய ஞான பிரேம பரிமளம் எல்லாம் தோற்றும்படி இருக்கிற விக்கிரகத்தில் -தனக்கு உண்டான
விருப்பத்தாலேயும் என்று -சொல்லும் அவற்றில் காட்டிலும்-
1-இனி யாம் உறாமை -திருவிருத்தம் -1–என்று தொடங்கி –
2-இனி வளை காப்பவர் யார் –திருவிருத்தம் -13-என்றும்-
3-இனி உன் திரு அருளால் அன்றி காப்பு அரிதால்-திருவிருத்தம் -62-என்றும்
4-இனி அவர் கண் தங்காது –திருவாய்-1-4-4-
5-இனி உனது வாய் அலகில்–இன் அடிசில் வைப்பாரை நாடாயே –திருவாய்-1-4-8-
6-இனி எம்மைச் சோரேலே –திருவாய்-2-1-10-
7-எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவனே –திருவாய்-3-2-1-
8-எங்கு இனி தலைப் பெய்வேனே –திருவாய்-3-2-9-
9-இனி என் ஆரமுதே கூய் அருளாயே –திருவாய்-4-9-6-
10-ஆவி காப்பார் இனி யார் –திருவாய்-5-4-2-
11-நெஞ்சிடர் தீர்ப்பார் இனி யார்-திருவாய்-5-4-9-
12-இனி உன்னை விட்டு ஓன்றும் ஆற்ற கிற்கின்றிலேன் –திருவாய்-5-7-1-
13-தரியேன் இனி –திருவாய்-5-8-7-
14-இனி யாரைக் கொண்டு என் உசாகோ –திருவாய்-7-3-4-
15-அத்தனை யாம் இனி என் உயிர் அவன் கையதே-9-5-2-
16-நாரை குழாங்காள் பயின்று என் இனி –9-5-10-
17-இனி இருந்து என் உயிர் காக்குமாறு என் –9-9-2-
18-இனி நான் போகல் ஒட்டேன் –10-10-1-
19-உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் –10-10-6-
20-உன்னைப் பெற்று இனி போக்குவனோ -10-10-7-–என்றும்
(ஆறாம் பத்திலும் எட்டாம் பத்திலும் இல்லை
இனி -வேறே இடங்களில் –9-10-10-ஹர்ஷத்தால் பாடியவை போல்வன இங்கு எடுக்கப்பட வில்லை -)
இப்படி இருபதின் கால் கூப்பிடும் படியான ஆர்த்தி பரம்பரையை விளைத்து –
பரம பக்தி பர்யந்தமான அதிகார பூர்த்தியை உண்டாகுகைக்காக என்னும் அதுவே – பிரதானம் என்கை ..
ஆர்த்தி அதிகார பூர்த்திக்கு என்றது -ஆர்த்தியால் வரும் அதிகார பூர்த்திக்கு என்ற படி —
பரம ஆர்த்தியாலே -இறே -பிரபத்தி அதிகாரம் பூரணமாவது –
ஆகையாலே ஹேத்வந்தரங்கள் எல்லாம் அப்ரதானங்கள் –
இவரை வைத்ததுக்கு பிரதான ஹேது இது என்றது ஆய்த்து –
————————————
இனி (142)
இ மகளை பெற்ற தாயர் இனி தரியார் என்னும்-கொலோ – நாலாயி:301/4–3-8-4-
இப் பெண் பிள்ளையை பெற்ற தாயார் ஆனவள் –
இவளைப் பிரிந்த பின்பு – பிராணனோடு தரிக்க மாட்டாளோ என்று சொல்லுவாரோ
அன்றிக்கே அவிகிருதராய் இருப்பாரோ
—–
ஐய இனி என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவுஅணை பள்ளியானே – நாலாயி:427/4–4-10-5-
இனி என்னைக் காக்க வேண்டும் –-அந்த வையத்தில் உள்ளார் படி அன்றிக்கே –
உன்னுடைய அங்கீகார விசேஷத்தாலே வ்யாவர்த்தனாய் – உனக்கு மங்களா சாசனம் பண்ணி அன்றி தரியாதபடியான பின்பு-இப்படி இருக்கிற என்னை –-என்னுடைய புருஷார்தத்துக்கு விரோதியான யமபடரால் வரும் நலிவில் அந்வயம் இன்றி
ரஷித்து அருள வேணும்
(இனி என்னை-திருப்பல்லாண்டில் பரத்வ ஸ்வபாவ அனுகுணம் -பரமேஷ்டியை சூழ்ந்து இருந்து பல்லாண்டு இங்கு யமபடரால் நலிவு பிரகரணம் )
———–
புக்கினில் புக்கு உன்னை கண்டுகொண்டேன் இனி போக விடுவதுண்டோ – நாலாயி:453/2–5-3-1-
புக்கினில் புக்கு உன்னை கண்டு கொண்டேன்-
புக்க இடம் எல்லாம் புக்கு உன்னைக் கண்டு கொண்டேன் –
அந்தர்யாமித்வம் -பரத்வம் -வியூகம் -விபவம் -அர்ச்சாவதாரம் -அளவாக
அறப் பறித்து -என்று அநிஷ்ட நிவ்ருத்தியும்
கண்டு கொண்டேன் -என்று இஷ்ட பிராப்தியும்
பண்ணித் தந்தோம் ஆகில் -இனி போய் வர அமையாதோ -என்ன –
இனிப் போக விடுவது உண்டோ –
அறப் பறித்து -என்றும் -கண்டு கொண்டேன் -என்றும் தாம் செய்தாராய் அருளிச் செய்கைக்கு அடி –
பிதா தேடின அர்த்தத்தை -தன்னது -என்னும் புத்திரனைப் போலே –
இனிப் போய் வர அமையாதோ என்ன -இனி போக விடுவது உண்டே –
1-விரோதியில் சிறிது கிடத்தல் –
2-காட்சியிலே சிறிது கிடத்தல் –
3-இவை இரண்டுக்கும் மூலமான ஸூஹ்ருதம் என் கையில் கிடத்தல் –
செய்யில் அன்றோ நான் போக விடுவது –
(1-அஞ்ஞானாதிகள் இருந்தால்
2-உனது வைலக்ஷண்யத்தில் குறை இருந்தால்
3-சாதனாந்தரம் அன்வயம் இருந்தால்
அன்றோ நான் போக விடுவது -)
உன்னாலே பெற்ற நான் -என்னாலே இழப்பேனோ –
பேறு அவனாலே இழவு இவனாலே –
அவன் பெறுகைக்கு கிருஷி பண்ணும்
இவனுடைய அனுமதி பேற்றுக்கு ஹேது அல்லாதால் போலே
அவனுடைய அனுமதியும் இழவுக்கு ஹேது அன்று –
(கர்மமும் கிருபையும் ஹேதுக்கள் இவற்றுக்கு )
போக விடுவது உண்டே –
இனி நான் போகல் ஒட்டேன் -என்று போக்கும் உண்டாய் –
ஒட்டேன் -என்கை அன்றிக்கே –
போக என்று ஒரு பொருள் உண்டோ என்கிறார் –
உண்டே –
உனக்கு தெரியாதோ போகைக்கு ஹேது உண்டாகில் என்று
அவனைகர்மமும் கிருபையும் ஹேதுக்கள் இவற்றுக்கு கேட்கிறார் ஆகவுமாம்-
————–
வளைத்து வைத்தேன் இனி போகல் ஒட்டேன் உந்தன் இந்திரஞாலங்களால் – நாலாயி:454/1–– 5-3- 2-
வளைத்து வைத்தேன்-உதாரர் வாசலிலே -தரித்தருமாய் -அந்தருமாய் இருப்பார் –
பெற்று அன்றி போகோம்-என்று கிடக்குமா போலே –வளைத்து கிடக்கிறார் –ஸ்ரீ பரத ஆழ்வான் பர்ண சாலை வாசலிலே வளைத்து கிடந்தான் இறே
இனி போகல் ஒட்டேன் –உன் சுவடு அறிந்த நான் பின்பு போக விடுவேனோ
உன் தன் இந்திர ஞாலங்களால் ஒளித்திடில்–அதாவது பொய்யை மெய் என்னும்படி பிரமிக்கை –அபோக்யங்களை போக்கியம் ஆக்குகை- மம மாயா துரத்யயா-
————–
உனக்கு பணிசெய்திருக்கும் தவம் உடையேன் இனி போய் ஒருவன் – நாலாயி:455/1— 5-3-3- –
உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன்-
1-முதலில் சேஷத்வ ஞானம் பிறந்து -(உனக்கு )
2-பின்பு சேஷ விருத்தியிலே ஆசை பிறந்து -(பணி )
3-கைங்கர்யமே யாத்ரையாய் -(பணி செய்து-வர்த்தமானம் )
4-அது செய்யாத போது சத்தை குலையும் படியாய் இருக்கும் (பணி செய்து இருக்கும்)
இவை நாலும் சம்சாரிகளுக்கு இல்லை–நமக்கு உபாயத்வம் அனுசந்தித்து
உபேயத்தில் ஆசையுமே உள்ளது-ஆழ்வார்களுக்கு இவை நாலும் உண்டு
தவம் உடையேன் –உன் பிரசாதம் உடையேன்
இனிப் போய் –-இந்நாலு தசையும் பிறந்த பின்பு –-இவற்றை பொகட்டு புறம்பே போய் –போகை யாவது –இந்திர ஞாலங்கள் காட்டி புறம்பே தள்ளினாய் ஆகிலும்
எத்தனை காலமும் எத்தனை ஊழியும் இன்றோடு நாளை என்றே
யித்தனை காலமும் போய்க் கிறி பட்டேன் இனி உன்னைப் போகல் ஒட்டேன்–5- 3-8 –
இனி
1-கரண களேபரங்களை தந்து
2-அஜ்ஞாத ஸூஹ்ருதத்தைப் பிறப்பித்து –
3-இதர விஷயத்தில் ருசியைக் குலைப்பித்து –
4-உன் பக்கல் ருசியைப் பிறப்பித்து –
5-அபிமதமும் நீயே என்னும் இடமும் -பிறப்பித்த பின்பு
இனி-நான் ஏதும் உன் மாயம் ஓன்று அறியேன் -(பெரியாழ்வார் – 4-10 ) இனி இது உன் மாயம் என்று அறிந்த பின்பு –உன்னை-ரஷகனுமாய் –உபாய பூதனுமாய் – ப்ராப்ய பூதனுமாய் -இருக்கிற -உன்னை–போகல் ஒட்டேன் – பெற்றினி போக்குவேனோ உன்னை -என்கிறபடியே
1-உபாயாந்தரத்தில் அந்வயம் உண்டாதல் –
2-ப்ராப்யாந்தரத்தில் அந்வயம் உண்டாதல் –
3-இரண்டும் நீயானால் பெற்ற போது பெறுகிறோம் -என்று ஆறி இருத்தல் செய்யல்
இறே உன்னைப் போக சம்மதிப்பது –
———–
இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவது உண்டே—5 -3-9 –
இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன்- அன்று நான் பிரார்த்தித்த படியே திரு மலையிலே வந்து-என் விரோதியைப் போக்கி – ஞானத்தைப் பிறப்பித்த உன்னை வந்து கண்டு கொண்டேன் –புக்கினில் புக்கு (பரத்வாதிகளில் புக்கு )-இனிப் போக விடுவது உண்டே – கர்ப்பத்திலே கிலேசப்படுகிற வன்று -அடிமையிலே உற்று இருந்த நான்
அடிமை கொள்ளுகைக்கு சுலபன் ஆன இன்று போக விடுவேனோ-ஸ்வ ஸ்வா தந்த்ர்யத்தையும் – அந்ய சேஷத்வத்தையும் கழித்து கொண்ட படியை மூதலிக்கிறார்
————
என்னையும் என் உடைமையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு
நின்னருளே புரிந்து இருந்தேன் இனி என் திருக் குறிப்பே -5 -4-1 – –
உபாயாந்தரமும் -உபேயாந்தரமும் குலைகை-அனந்யார்ஹ சேஷத்வ ஞானமும் பிறந்து –
விரோதி நிவ்ருத்தியும் பிறந்து – அபேஷிதமும் பெற்றதாகில் – இனி பதறுகிறது என் –
———————
மன்னடங்க மழு வலம் கை கொண்ட விராம நம்பீ
என்னுடை வந்து எம்பெருமான் இனி எங்கு போகின்றதே -5- 4-6 –
என் சேஷத்வத்தையும் –உன் சேஷித்வத்தையும் உருதிப் படுத்த பின்பு உனக்கு போக்கு இனி எவ்விடத்தில் – என் ஸ்வ யத்னத்தாலே வந்ததாகில் இறே உனக்கு போகல் ஆவது –
உன் அருளால் புகுந்த நீ போகக் கடவையோ –இனி உன் கிருஷி பலித்து – திருப் பல்லாண்டு தொடங்கி இவ்வளவும் வந்த பின்பு போக்கு வரத்து உண்டாம் படியோ நாம் இருவரும் கலந்த படி –
————-
இனி தான் எழுந்திராய் ஈது என்ன பேர் உறக்கம் – நாலாயி:485/7
இனித் தான் எழுந்திராய் –எங்கள் ஆற்றாமை அறிவித்த பின்பும் உறங்கக் கடவையோ –
எழுந்திராய் –எங்கள் ஆர்த்திக்கு உணரா விட்டால் உன் பேற்றுக்கு உணர வேண்டாவோ –எங்களுடைய ஆர்த்தியைக் கண்டு எழுந்திரா தொழியில் ஒழி;
மனத்துக்கினியானுடைய பாட்டுக்களைக் கேட்கவாகிலும் உணருதி என்றபடி.-
————–
ஏழைமை ஆற்றவும் பட்டோம் இனி என்றும் பொய்கைக்கு வாரோம்
தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்து அருளாயே—3-1-
இனி என்றும் பொய்கைக்கு வாரோம்- ஊரில் தான் பெண்கள் கிடாய் -கிருஷ்ணன் கிடாய் -என்று நியமிக்கையாலே உனக்குத் தோற்றிற்று செய்ய ஒண்ணாது – பொய்கையில் தானே வாரோம் -இத்தனை யன்றோ என்கிறார்கள் –வாரோம் என்று சொல்லி யன்றோ நீங்கள் வருவது -என்றான் –அத்தைக் கேட்டு என்றும் வாரோம் -என்கிறார்கள் –என்றும் வாரோம் என்று சொல்லி யன்றோ என்றும் வருவது -என்றான் –இனி –என்றும் பொய்கைக்கு வாரோம் –
———–
ஆர்க்கோ வினி நாம் பூசல் இடுவது அணி துழாய்த்
தார்க்கோடும் நெஞ்சம் தன்னைப் படைக்க வல்லேன் அந்தோ–10-1-
அவனோ வந்திலன் –அவன் விபூதியோ நமக்கு பகையாய்த்து
வ்ருத்த கீர்த்தனம் பண்ணித் தரிப்போம் என்றால் போத யந்த பரஸ்பரம் –பண்ணுகைக்கும் ஆள் இல்லை யாய்த்து-இனி நாம் ஆர் வாசலிலே கூப்பிடுவோம்
அவன் நமக்கு பாதகனான அன்றும் அவன் விபூதி ஓர் அகத்தடியாராய் நம் கருத்திலே நிற்கும் என்று இருந்தோம்-அதுவும் அவன் கருத்திலே நின்ற பின்பு நாம் இனி யார் வாசலிலே கூப்பிடுவோம் –
———–
குடமாடு கூத்தன் கோவிந்தன் கோமிறை செய்து எம்மை
யுடைமாடு கொண்டான் உங்களுக்கு இனி ஓன்று போதுமே--10-7-
என்னுடையான தனத்தைக் கொண்டான் என்னுதல்–என்னுடைமையும் தனத்தையும் கொண்டான் என்னுதல்-என்னை சர்வ ஸ்வாபகாரம் பண்ணினான் என்னுதல்-உங்களுக்கு இனி ஓன்று போதுமே – அவன் அல்லாத உங்களுக்கு என் முன்னே ஆடி நாளிகை போருமோ –இனி –அவன் குடக் கூத்தாடுவதற்கு முன்னே ஆடினி கோளாகில் அன்றோ பிரயோஜனம் உள்ளது –சைதன்யம் நடையாடினால் பின் ஆடக் கடவதோ
பெண்ணின் வருத்தம் அறியாத -அவனில் காட்டிலும்-நடமாடித் தோகை விரிக்கின்ற மா மயில்காள்– உங்களுக்கு ஒரு வாசி வேண்டாவோ பிறர் நலிந்தாரையும் நலியக் கடவி கோளோ –
———–
நாணி இனி ஓர் கருமம் இல்லை நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார் – நாலாயி:618/1–12-2-
லஜ்ஜித்து மீள வேண்டுவது –இன்னமும் சில நாள் இருந்து அவ்வஸ்துவை லபிக்க வேணும் என்று இருப்பார்க்கே –லஜ்ஜை போகையாவது முடிகை இறே –இனி -முடியும் அளவானாலும் ஜீவித்து இருப்பார் செய்யுமது செய்யப் போமோ – சத்தை கிடக்கில் இறே லஜ்ஜை நோக்குவது-சத்தை அழியா நிற்கச் செய்தே நோக்குவது ஒரு லஜ்ஜை உண்டோ
தர்மியை அனுபந்தித்தித்றே லஜ்ஜை இருப்பது-தர்மி லோபம் பிறக்கும் அளவானால் இனி நோக்குகை என்ற ஒரு பொருள் உண்டோ—இனி -இவள் தான் ஆம் அளவும் நோக்கிப் பார்த்தாள் போலே காணும் –
————
இம்மைப் பிறவி செய்யாதே யினிப் போய் செய்யும் தவம் தான் என்
செம்மை யுடைய திருமார்வில் சேர்த்தான் ஏலும் ஒரு நான்று
மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடை தான் தருமேல் மிக நன்றே–13-9-
காத்ரைஸ் சோகாபி கர்சிதை –சம்ஸ் ப்ருசேயம் -என்னுமா போலே இவ் வுடம்போடே அணைய ஆசைப் பட்டு பெறாதே-இனி அவ்வருகே போய்-ஒரு சரீர பரிக்ரஹம் பண்ணி பெரும் பேறாகிறது-பஞ்சாக்னி மத்யஸ்தராய் நின்று தபஸ் ஸூ பண்ணுவாரோ பாதி -என்று இருக்கிறாள் -பரம பதனை அனுபவிப்பது இது போலே என்று இருக்கிறாள் –
———
ஒன்றும் கண்டிட பெற்றிலேன் அடியேன்
காணுமாறு இனி வுண்டேனில் அருளே— 7-9–
அடியேன்-இவை காண்கையே பிரயோஜனமாக இருக்கிற நான்-ஒன்றும் காணப் பெற்றிலேன் – காணுமாறு இனி வுண்டேனில் அருளே—நீ நினைத்தக்கால் செய்ய ஒண்ணாதது இல்லை -நான் இவை காணும் படி அருள வேணும் –
—————–
இனி திரை திவலை மோத எறியும் தண் பரவை மீதே – நாலாயி:889/1-திரு மாலை-18-
இனித் திரைத் திவலை மோத –ஒண் சங்கதை வாள் ஆழியான் -என்ற இடம் போலே இவ்விடமும் ஒரு கடைக் குறைத்தலாய் இருக்கிறது யாய்த்து –இனிதாக திரைகளில் உண்டான திவலையானது ஸ்பர்சிக்க –மலை போலே சில பெரும் திரைகள் வந்து முறிந்து சிறு திவலையாய்-துடை குத்தி உறக்குவாரைப் போலே திரு மேனியைப் ஸ்பர்சியா நிற்கும்
————
எனக்கு இனி கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே – நாலாயி:901/4-திரு மாலை-30-
இப்படி தோஷ பிரசுரனான எனக்கு –இனி –என் தோஷத்தை அனுசந்தித்து-நான் எனக்கு ரஷகனாகை தவிர்ந்து -தேவரீர் பக்கலிலே ந்யஸ்த பரனான பின்பு-கதி என் சொல்லாய் –
போக்கடி சொல்லாய் – போக்கடிக்க சூழ்ந்து கொண்டு வைத்து -அவனைச் சொல்லாய் -என்னும்படி இறே பிராப்தியிலும் இருப்பது –
———–
துணிவு இனி உனக்கு சொல்லுவன் மனமே தொழுது எழு தொண்டர்கள் தமக்கு – நாலாயி:981/1–பெரிய திருமொழி-1-4-4-
இப்போது உனக்கு உறுதியாக ஒரு நல் வார்த்தை சொல்லுகிறேன் -நெஞ்சே கேள்
சொல்லச் செய்தே பின்னையும் சொல்லாததின் பலமே யாகாமே நீ அவனைத் தொழுது உஜ்ஜீவிக்கப் பாராய் –
————–
எந்தாய் இனி யான் உனை என்றும் விடேனே – நாலாயி:1046/4–1-10-9-
இனி -இத்யாதி-எனக்காக வந்து நிற்கிற நிலையை விடாய் – ஆன பின்பு நான் உனக்காம் படி பற்றின பற்று விடுவேனோ- (நாம் உனக்காம் படி நீ என் நெஞ்சினில் பற்ற பற்றின பற்று விடுவேனோ என்றபடி-இவர் பற்றவில்லையே )
—————-
சங்கு தங்கு தடம் கடல் கடல் மல்லையுள் கிடந்தாய் அருள் புரிந்து
இங்கு என்னுள் புகுந்தாய் இனிப் போயினால் அறையோ–3-5-8-
உனக்கு வந்த கிருபை மாறாதபடி இருக்கையாலே இனி நீ போவாய் ஆனால் அறையோ அறை – ஹேது மாறில் இறே அதன் கார்யம் மாறுவது-உன்னால் அல்லது செல்லாத என்னை விட்டு நீ இருக்கவுமாய் போகவுமாய் இருப்பார் நெஞ்சில் இருக்க ஒண்ணாது –(விதி வாய்க்கின்றது-அறையோ-என் நெஞ்சை விட்டு வன் நெஞ்சில் இருக்க ஒட்டுவேனோ )
—————-
எண்ணில் நினைவு எய்தி இனி இல்லை இறை என்று முனியாளர் திரு ஆர் – நாலாயி:1445/1
ரஜஸ் தமஸ் ஸூக்களாலே அபிபூதராய் ஆராயாதே சிலர் காலிலே குனியும் இத்தனை போக்கி –எண்ணில் –-ஆராயில்-த்யானத்துக்கு விஷய பூதனான ஈஸ்வரன் இவனை ஒழிய வேறு ஒருவர் இல்லை என்று சனகாதிகள் அழகு மிகு இருந்துள்ள பண்ணிலே மிக கானத்தோடு பாடி –
——–
உய்யும் வகை உணர்ந்தேன் உண்மையால் இனி யாதும் மற்று ஓர் – தெய்வம் பிறிது அறியேன் திருவிண்ணகரானே—6-3-6-–நாலாயி:1473/3–
நெஞ்சாலே அசந்நேவ-என்கிறபடியே அசத் கல்பனாய் உரு மாய்ந்து போன நான்
இப்போது உஜ்ஜீவிக்கும் படி தேவரை அனுவர்த்தித்தேன் – இவ் வாத்மாவுக்கு நீயே சேஷி
உன்னைக் குறித்து இவ்வாத்ம வஸ்து அத்யந்த சேஷம் -என்கிற முறையாலே –இனி யாதும் மற்றோர் தெய்வம் பிறிது அறியேன் – தத்வம் இருந்தபடி அல்லது பிரதிபத்தி பண்ணக் கடவது அல்லாத படியான பின்பு வேறு சிலரை ஆஸ்ரயணீயனாக நினைத்து இரேன் –திருவிண்ணகரானே –
இப்படி திரு விண்ணகரிலே வந்து சந்நிஹிதனான உன்னை ஒழிய பரதத்வமும் அறியேன் –(பர ப்ரஹ்மம் பர தத்வம் பர தேஜஸ் பர ஆத்மா அனைத்தும் நாராயணனே-விண்ணகரானே )
———-
கொங்கார் குழலார் கூடி இருந்து சிரித்து எம்மை
எம் கோலம் ஐயா என் இனிக் காண்பது என்னாத முன்
செங்கோல் வலவன் தான் பணிந்து ஏத்தித் திகழுமூர்
நங்கோன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே–6-4-3-
உம்முடைய பாகம்-( மூப்பு-) ஒன்றையும் புத்தி பண்ணுகிறிலீரோ – எங்களுடைய ஒப்பனையை நீர் இனி ஏத்திக் காண்பது- என்று இங்கனே பண்ணுகிற ஷேப உக்திகள் செவிப் படுவதற்கு முன்பே –
————
மன்னஞ்ச வாயிரம் தோள் மழுவில் துணித்த மைந்தா
எந்நெஞ்சத்து உள்ளிருந்து இங்கு இனிப் போய் பிறர் ஒருவர்
வன்னெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் வளைத்து வைத்தேன்
நன்னெஞ்சம் அன்னம் மன்னும் நறையூர் நின்ற நம்பீயோ–7-2-7-
உன்னை ஒழிய அறியாத படி இருக்கிற என்னுடைய நெஞ்சிலே வந்து புகுந்து இருந்து
இனி இங்கு நின்றும் போயிருக்கவுமாய் -போகவுமாய் – இருப்பார் நெஞ்சில் போய் இருக்க ஒட்டேன் – (போகவுமாய் -இருப்பார் நெஞ்சில் -விஸ்லேஷத்தில் தரிப்பார் நெஞ்சில் )ஒட்டேன் என்றாலும் நாம் தவிரோம் என்றால் – வளைத்து வைத்தேன் – நீ போகில் நான் முடிவன் -என்கிறார் – இத்தலை இழக்க வரும் அளவில் -இட்ட அடி பேர்க்க மாட்டான் –
———–
இனி எப் பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு இம்மையே அருள் பெற்றமையால் அடும்
துனியைத் தீர்த்து இன்பமே தருகின்றதோர் தோற்றத் தொன் நெறியை வையம் தொழப் படும்
முனியை வானவரால் வணங்கப் படும் முத்தினைப் பத்தர் தாம் நுகர்கின்றதோர்
கனியைக் காதல் செய்து என் உள்ளம் கொண்ட கள்வனை இன்று கண்டு கொண்டேனே –7-3-8-
அவனுடைய நிக்ரஹ பலமான பாபங்கள் என்னைக் கிட்ட வற்றோ – அவசியம் அநு போக்தவ்யம் -என்கிற வசனத்தைக் கொண்டு அனுபவித்தால் அல்லது நசியேன் என்று கொண்டு சிலவை நிற்றல்(ந புக்தம் ஷீயதே கர்மம் சஞ்சித கர்மம் ) பிராரப்தம் காண் என்று சிலவை நிற்றல் செய்ய வற்றோ –இனி -என்றது எத்தைக் கொண்டு என் என்ன – இம்மையே அருள் பெற்றமையால் –இஹ லோகத்திலேயே பகவத் பிரசாதத்தைப் பெற்ற படியாலே இனி எப் பாவம் வந்து எய்தும் சொல்லீர் –
————
தீ வாய் நாகஅணையில் துயில்வானே திருமாலே இனி செய்வது ஒன்று அறியேன் – நாலாயி:1616/3
ஆஸ்ரித சம்ஸ்லேஷ ஏக ஸ்வ பாவனே–உனக்கு என் வருகிறதோ என்று அஞ்ச வேண்டாத படி சத்ருக்கள் மேலே நெருப்பை உமிழ்கிற திரு வநந்த ஆழ்வான் மேல் சாய்ந்து அருளினவனே –திரு மாலே –அப் படுக்கையிலே சாய்வது இருவரோடு சேர்த்தியோடு யாயிற்று-இனிச் செய்வது ஓன்று அறியேன் – இனி நான் என்னுடைய ஹித விஷயமாக செய்வது ஓன்று அறியேன்-
————
பாணனார் திண்ணம் இருக்க இனி இவள் நாணுமோ நன்று நன்று நறையூரர்க்கே- நாலாயி:1659/3-–8-2-2-
இப்படி இடைவிடாமல் இருந்து துஸ் சிஷை பண்ணச் செய்தேயும் இவள் மீள என்பது ஓன்று உண்டோ –இனி இவள் நாணுமோ –சம்சர்க்கஜ ப்ராவண்யத்தாலும் மீள மாட்டாள் –
ஸ்வ கத பிராவண்யத்தாலும் மீள மாட்டாள் – உனக்கு இது வாகாது காண்-என்று சொல்லுகிற நான் லஜ்ஜித்து மீளும் இத்தனை போக்கி இவள் மீளுமோ என்கிறாள் –
ஆசார்யனாலும் பசை இல்லை இறே-நாம் அவர் வசப்பட்டு ஸத் ப்ரக்ருதியாக இல்லா விட்டால் இரண்டும் வேண்டி அன்றோ இருப்பது-
———–
விலங்கல் வேயினது ஓசையுமாய் இனி விளைவது ஒன்று அறியேனே – நாலாயி:1694/–8–5-7-
நான் முடியவே அவனைக் கிடையாது –அவன் போகவே அவனால் நோக்கப் படும் விபூதி த்வயமும் இல்லையாம்-ஆன பின்பு இது எவ்வளவாய் தலைக் கட்டும் என்று அறியேன் –(நித்ய விபூதியும் கூட அழியுமாகும் தசை அன்றோ இவளுக்கு இதில் )
————-
பேதை நின்னை பிரியேன் இனி என்று அகன்றான் இடம் -போது நாளும் கமழும் பொழில் சூழ்ந்த புல்லாணியே –9-3-3- நாலாயி:1770/3
வ்யதிரேகத்தில் இவள் உளள் ஆகாள் என்னலாம் படி கலந்து வைத்து தன்னைக் கொண்டு பின்னை அகன்றான் ஆயிற்று –நின்னை கலக்க பொறுப்பாரை அன்றோ பிரிவது – உன் சௌகுமார்யம் கண்டு வைத்துத் தான் பிரிவானோ –பிரியேன் இனி என்று அகன்றான் —
கடுக பிரிந்து கொடு நின்றால் இடி விழுந்தால் போலே இவள் முடிந்து கொடு நிற்கும் என்று பார்த்து பிரிவு சாத்மிக்கைக்காக வ்யதிரேக முகத்தாலே பிரிவை பிரசங்கித்தான் ஆயிற்று –
(போய் வருகிறேன் என்று சொல்லாமல் பிரியேன் -பிரிவை இவள் உணர வியதிரேகத்தில் சொல்லி தயார் படுத்துகிறான் )
அதாகிறது – இவன் அந்த சம்ஸ்லேஷ சமயத்தில் சொன்ன வார்த்தை யாகாதே இது -என்று
பிரத்யபிஜ்ஞ்ஞை ( நினைத்து ) பண்ணித் தரிக்கைக்காக – இங்கன் அன்றாகில் சம்ஸ்லேஷத்துக்கு உறுப்பான பாசுரம் அன்றே இது –
(சம்ஸ்லேஷ தசையில் பொய் சொன்னான்-கலவியில் ஒரு வகை தானே – என்று உணர்ந்து
பிரிந்த பின்பு சமாதானம் பண்ணிக் கொள்ளலாமே-அகலகில்லேன் இறையும் -என்னுமா போல் பிரியேன் என்பது சம்ஸ்லேஷ தசையில் உன்மஸ்த்தக தசையில் சொல்லுவது போல் இல்லை-பிராட்டி அகலாமல் சொல்லும் வார்த்தை போல் அல்லவே இவனது )
பிரியேன் இனி என்று அகன்றான் –-சொலவுக்குச் சேராத செயலைச் செய்தான் –
இப்படி கலந்து வைத்து பிரியுமது ஒரு சைதன்ய க்ருத்யம் அன்று இறே
பாவியேன் என் ஆற்றாமை கண்டால் கூட இருக்க அன்றோ அடுப்பது
இவன் தான் அணைத்த கையை நெகிழ்த்தே வார்த்தை சொல்லுவது –
அப்போது உடம்பில் பிறக்கும் வை வர்ண்யம் காணுமே-இது கண்டால் போகலாமா
இவள் தான் பிரிவு அறியாள் ஆகிலும் -தன் கார்யம் செய்கை தவிராதே தன்னால் தகையலாவது அன்று இறே –
————-
இரவும் நாளும் இனி கண் துயிலாது இருந்து என் பயன் ––9-3-7– நாலாயி:1774/2
இரவும் பகலும் இருந்து இனிக் கண் உறங்காது ஒழிகிற இத்தால் என்ன பிரயோஜனம் உண்டு –அநித்ரஸ் சததம் ராம (ஸூந்தர ) -என்று இவன் இருக்குமது கேட்டு
அதடியாக நாம் -நசமேஸ்தி நித்ரா (ஸூந்தர)-என்று இருக்கும் அன்று அன்றோ அபிமத சித்தி உள்ளது –அவன் ருசி முன்னாக –இத்தலை ருசி பண்ணும் அன்று இறே பலத்தோடே வ்யாப்தம் ஆவது –அவனுடைய ருசி இறே பேற்றுக்கு உடலாக தலைக் கட்டுவது –
இவனுடைய ருசி அவனுடைய விரகத்துக்கு உடலாம் இத்தனை இறே –ஆனால் பின்னை அவனுக்கு இரக்கம் இல்லை என்கிறதோ -என்னில்-ஓம் -அப்படி சொல்லக் குறை இல்லை இறே -இப்போது அவன் வாராமையாலே –இல்லையாகில் வருகைக்கு சக்தி இல்லை -என்னுதல்-சிலருக்கு பர தந்த்ரன் -என்னுதல் -சொல்ல ஒண்ணாது இறே
முறை கெட்டுச் சொல்ல வேண்டும்படியான தசை பிறந்தால் முறை உடைய அவனுக்கு வரக் குறை என்-தொழுதும் எழு -என்று கொண்டு பழி யாகிறதோ –
———–
பரக்க யாம் இன்று உரைத்து என் இராவணன் பட்டனன் இனி யாவர்க்கு உரைக்கோம் – நாலாயி:1858/2
பல சொல்லி என்- தான் செய்த தப்பின் பலம் தானே அனுபவித்தான் –
அன்றிக்கே இன்னார் பட்டார் என்று அறியாமையாலே ராவணன் பட்டான் -என்னவுமாம் –
பிற்பட்ட காலத்திலே சொல்லுகிறார் ஆகையால் இவருக்கு அவன் பட்டான் என்று சொல்லவுமாம்-இனி யாவர்க்கு உரைக்கோம் – இனி இத்தை ஆர்க்கு இருந்து சொல்லுவோம் –
——————
எம் பெருமான் உன்னை பெற்ற வயிறு உடையேன் இனி யான் என் செய்கேன் – –10-7-13–நாலாயி:1920/2
உன்னைப் பெற்ற இதுவே அமையாதோ-வயிறு எரிச்சலுக்கு வேண்டுவது –
நீ ஒரு செயலைச் செய்ய வேணுமோ –
————
வருந்த வாடை வரும் இதற்கு இனி என் செய்கேன் – 11-2-4–நாலாயி:1965/4
நான் வருந்தும் படியாக பலவானாய் இருக்கிற வாடையானது வாரா நின்றது –இதற்கு இனி என் செய்கேன் — ஓர் அபலை இதுக்கு கடகிடவோ -(கடுகு -பரிகாரம் )
————-
நஞ்சு உடலம் துயின்றால் நமக்கு இனி நல்லதே –11-2-8– நாலாயி:1969/4-
இனி இருந்த படியாலே சரீரமானது சிதிலமாய் முடிந்து பிழைக்கும் இத்தனை போக்கி
இனி நமக்கு ஜீவிக்கை என்று ஒரு பொருள் இல்லை யாகாதே –
—————-
இனி களை கண் இவர்க்கு இல்லை என்று உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி – 11-6-4–நாலாயி:2005/2-
இனி இவர்களுக்கு ரஷகர் யாரும் இல்லை -என்று த்ரை லோகத்தையும் முறையாலே
(க்ருத அக்ருதக க்ருதக்ருதக மூன்று வகையில் ஏழும் கொள்ளலாம் )
———–
துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு – 11-8-8–நாலாயி:2029/2-
ஸ்ரமஹரமான தேசத்திலே வந்து சாய்ந்து அருளின நிருபாதிக பந்துவான தேவர்
அவசர ப்ரதீஷராய் வந்து நிற்க நான் வேறு சிலரை அபாஸ்ரயமாக நினைத்திரேன் –
தேவரீருடைய சௌஹார்த்தம் ஒழிய வேறு ஒன்றைத் தஞ்சம் என்று வ்யவசிதனாய் இரேன்
———–
இடைகழியே பற்றி இனி –முதல் திருவந்தாதி-86– நாலாயி:2167/4-
ஸ்ப்ருஹணீயமாய்-அழகியதாய் திருக் கோவல் இடை கழியே பற்றி இப்போது இப்படி நின்றான் -என்னுதல்-இனிமேல் எல்லாம் இப்படி நிற்கும் -என்னுதல்-இனி -என்கையாலே
அநாதி காலம் இழந்தது பெற்றமை யடையத் தோற்றி இருக்கிறது –
இனி இப்பால் பட்டது யாதவங்களும் சேர் கொடேன் -திருவாய் மொழி -2-7-3-என்னக் கடவது இறே-திருக் கோவலூரிலே வந்து நிற்கிறது – தன் கர்ம பல அனுபவம் பண்ணுகைக்காக அன்று இறே – சம்சாரிகள் நரகத்தில் புகாதபடி காக்க விறே –ஆழ்வார்கள் எல்லாரையும் அவதரிப்பிக்கைக்காகப் பொற் கால் பொலிய விட்ட தேசம் இறே –இடை கழிக்கு உள்ளும் புறமும் காட்டுத் தீ போலே இரா நின்றது -(சேஷத்வம் அறியாத சம்சாரிகள் வெளியில் இருக்க -உபாயாந்தர ரிஷிகள் -அசித்வத் பாரதந்தர்யம் அறியாதவர்கள் உள்ளே இருக்க -)
காமுகரானவர்கள் உகந்த விஷயத்தின் யுடைய கண் வட்டம் விட்டுப் போக மாட்டாதாப் போலே(காமுகரானவர்கள்-இங்கு லோக விலக்ஷணமாக மிதுனம் )திரு வாசலுக்கு புறம்பு போக மாட்டாதே உள்ளுப் புக மாட்டாதே ஸ்ப்ருஹணீயமாய் அழகியதாய் திருக் கோவலூர் இடை கழியைப் பற்றி ஆஸ்ரித ரக்ஷணத்தில் முற்பாடனான நீயும் -உன்னிலும் முற்பட்ட திரு மகளாருமாக எங்களோடு கலக்கப் பெற்ற உகப்பின் கனத்தாலே பரந்த கால் பாவி
இப்போது தரித்து நின்றாயே–என்று அனுபவிக்கிறார் –
———–
இனி யார் புகுவார் எழு நரக வாசல் முனியாது மூரித்தாள் கோமின் கனிசாயக்
கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு நன்கு அறிந்த நா வலம் சூழ் நாடு —87– நாலாயி:2168/1
இனி நரக விசேஷங்களும் பாப விசேஷங்களும் கொண்டு கார்யம் யுண்டோ —
ஒருவன் சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்று நிற்கச் செய்தே –எழுகிற நரக வாசல் யுண்டு -எல்லோரும் போய்ப் புகுகிற நரக வாசல் என்னுதல்-
ஆழ்வார்கள் திருவவதாரம் பண்ணின பின்பு பழைய சம்சாரம் அன்று என்கை-
———–
என் பாக்கியத்தால் இனி – –34-நாலாயி:2215/4
சௌந்தர்யத்துக்கும் நீர்மைக்கும் தோற்று ஸ்துதித்து தேவர் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –இதுக்கு அடி-தேவருடைய கடாஷத்தாலே -என்னுதல் —
என்னுடைய விலக்காமை யாகிய பாக்கியத்தாலே -என்னுதல் –
————–
திறம்பிற்று இனி அறிந்தேன் தென் அரங்கத்து எந்தை -88– நாலாயி:2269/1
ஸ்வ யத்னத்தால் பெறுவோம் என்றவர்களுக்குத் தப்பிற்று –இப்போது அறிந்தேன் –அவனாலே அவனைப் பெறுதல் -அவனாலும் தன்னாலுமாக அவனை இழத்தல் -தன்னாலே அவனை இழத்தல் –பிரதிகூலராய் இழப்பாரும்-அனுகூலர் என்று பேரிட்டு கொண்டு பிரதிகூலராய் இழப்பாரும்-ஆக இழக்கை இரண்டு விதம் –
————
எங்கு அணைந்து காண்டும் இனி -–82– நாலாயி:2363/4
இனி நான் எங்கே கிட்டிக் காணக் கடவேனோ-லௌகிகர் படியிலும் காண விரகற்று
அவன் தானே காட்டும் வைதிகர் படியாலும் காண விரகற்ற பின்பு இனி நான் காண்கை என்று ஒரு பொருள் உண்டோ-கிட்டாது ஒழிய மாட்டேன்-கிட்ட மாட்டேன் –
——
இனியவன் மாயன் என வுரைப்பரேலும்
இனியவன் காண்பரியனேலும் -இனியவன்
கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைங்கழலான்
உள்ளத்தின் உள்ளே உளன் ———83-
நிரதிசய போக்யனாய் யுள்ளவன்-தான் கிட்டிக் காண அரியனாய் இருந்தானே யாகிலும்
இப்போது அவன் காண முடியாதான் ஒருவன் ஆகிலும்
அன்றிக்கே-சரீர சம நந்தரத்திலும் காண வரியன் யாகலும்-சர்வேஸ்வரனான தான் செய்தான் என்று தோன்றாதபடி பூமியை அபஹரித்து நெஞ்சுக்கு இனியனாய்
தன்னுடைமையை மகா பலி பக்கலிலே அளந்து கொண்டவன் –ஆகாசத்துக்கு அவ்வருகாம்படி வளர்ந்து சகல லோகங்களையும் தன் கீழே இட்டுக் கொண்ட பரந்த திருவடிகளை யுடையவன் –
அன்றிக்கே-அழகிய திருவடிகளை யுடையவன்
இனி உள்ளத்தின் உள்ளே உளன் – இப்போது என் ஹ்ருதயத்தின் உள்ளே சந்நிஹிதன் ஆனான்-புக்க ஆயுச்சுக்கு மரணம் இல்லை இறே-மேல் செய்த படி செய்கிறான்
பெற்ற வம்சத்தை ஒருவரால் இல்லை செய்ய ஒண்ணாது இறே
இப்படி சந்நிஹிதன் என்றதே யாகிலும் கீழ்ச் சொன்ன அபரிச்சேத்யதையே பலித்து விடுகிறது –
———
இன்று ஆக நாளையே ஆக இனி சிறிதும்
நின்றாக நின்னருள் என்பாலதே -நன்றாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் -நாரணனே
நீ என்னை அன்றி இலை -7- – நாலாயி:2388/1
இன்றாதல் நாளையாதல் சில காலம் கழிந்தாதல் உன்னுடைய கிருபை என் பக்கலிலே –அகதியான எனக்கு நீ போக்கி கதி இல்லை-அப்படியே சர்வ பிரகார பரி பூர்ணனான உன்னுடைய க்ருபைக்கு வேறு சிலரை விஷயமாக உடையை எல்லை –என்றும் ஒக்க இவ்வாத்மா உன் அருளுக்கே விஷயமாய் உன் கடாஷம் ஒழியில் என் சத்தை இல்லையானபடி-மெய்யாய் இருக்கிறபடி கண்டாயே-
———-
ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை
ஆன்றேன் அமரர்க்கு அமராமை –ஆன்றேன்
கடனாடும் மண்ணாடும் கை விட்டு மேலை
இடநாடு காண வினி–95- – நாலாயி:2476/4
இடமுடைத்தான ஸ்ரீ வைகுண்டம் மா நாட்டைக் கண்டு அனுபவிக்கலாம் படி இப்போது பரம பக்தி உக்தனானேன்(கண்ணே உன்னைக் காணாக் கருதி- மாக வைகுந்தம் காண என் மனம் ஏகம் எண்ணும் )புண்ய பலங்களை பூசிக்கும் ஸ்வர்க்காதி லோகங்களையும்
புண்யார் ஜனம் பண்ணும் விபூதியையும் உபேஷித்து விஸ்வதே ப்ருஷ்டேஷூ சர்வத ப்ருஷ்டேஷூ என்னும்படி இடமுடைத்தான ஸ்ரீ வைகுண்டம் காணலாம்படி இப்போது பரபக்தி யுக்தன் ஆனேன்-
————
இனி அறிந்தேன் ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை -இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –96-
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்குத் தெய்வம் நீயே என்னும் இடம் இப்போது அறிந்தேன்-என்னுடைய நாதனான யுன்னை –அவர்களுக்கு நிர்வாஹகனான மாத்ரம் அன்றிக்கே உன்னுடைய அளவெல்லாம் இப்போது அறிந்தேன்-இப்போது அறிந்தேன்-சர்வ காரணமும் நீயே
பிறர் வாழ்வும்-வாழ்வாகிற நல்ல கிரியையும் உடையையாய்-சகல பதார்த்தங்களை யுடையையாய் -இருக்கிறாயும் நீயே –அடியில் பண்ணின பிரதிஜ்ஞ அநு குணமாக அவனுடைய பரத்வத்தை தலைக் கட்டுகிறார் –-இனி யறிந்தேன் -இத்யாதி -யால்-
————–
இ நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான் – நாலாயி:2478/2-
தேவரீர் திருவடிகளை பிடித்த பின்பு நாங்கள் ஸ்பர்சியாத படி சம்சாரிகள் வியசனம் தம்மது என்று நினைப்பவர் ஆகையால் யாம் என்கிறார்-ஆத்மனி பஹு வசனம்-இனி – ஈஸ்வரனும் ஒரு முழம் கை தண்ணீரும் என்று இருந்த காலம் அன்றியே உன்னால் அல்லது செல்லாது என்று இருந்த பின்பு குறைவாளனாய் தேவரீர் திருவடிகளிலே வந்த பின்பு-
——-
இனி நெஞ்சம் இங்கு கவர்வது யாம் இலம் நீ நடுவே-4- – நாலாயி:2481/2
துழாய் தான் விழுங்க வருகிறதே-பாரீர் என்ன தண்ணம் துழாய்க்கு இனி நெஞ்சம் இங்குக் கவர்வது-இனி அந்த அழகிய துழாய் தான் விழுங்குவது எந்தப் பிரதேசத்தை
இந் நெஞ்சத்தில் புள் அயர விழுங்கினதாய் அயர மிக்கதோ
நிர் விசேஷமாக அப் புள்ளே விழுங்கிற்றே இது வேத மார்க்க அநு சாரிகளை -தத் விரோதிகள் பாதிக்க வர உலகு உண்டவனைப் போலே இத்தை -நம்மை நம்பி வந்ததே -என்று உகந்து அபிமானித்துத் தன் திரு வயிற்றிலே வைத்துக் கொள்ளுகை-
இனி வளை காப்பவர் ஆர் எனை ஊழிகள் ஈர்வனவே – நாலாயி:2490/4
ரக்ஷக ஸந்நிதி இன்றியே பாதக ஸந்நிதி யுண்டான பின்பு கை கழலத் தேடுகிற வளையைக் காப்பவர் யார்-எனை வூழிகள் ஈர்வனனே-கல்ப ஆகரைகளான ராத்ரிகள் என்னை ஈரா நின்றன-ஆகையாலே என்னைக் காக்க ஒண்ணாது என்று கருத்து- 1-அஸ்தமித்த ஆதித்யன் காக்கவோ
2-அறிவு அழிக்கிற அந்தகாரம் காக்கவோ
3-வறுத்துகிற வாடை காக்கவோ
4-வருந்துகின்ற நான் காக்கவோ -என்றதாயிற்று –
(ஈஸ்வரனை ஒழிந்தவர் ரக்ஷகர் அல்லர் என்பதை பிரபன்ன பரித்ராணத்திலே சொன்னோம் )
———-
நம் கோன் உகக்கும் துழாய் என் செய்யாது இனி நானிலத்தே -பாசுரம் -25- நாலாயி:2502/4
நிர்வாஹ்யமான விபூதி த்வயத்துக்கும் நிருபாதிக சேஷி யாகையாலே
அகில ஜகத் ஸ்வாமியாய்-அஸ்மத் ஸ்வாமி யானவனுக்கும் அபிமதம் ஆகையிலே
அதிசயித வை லக்ஷண்யத்தை யுடைத்தான போக்யதையினுடைய அதி பிரவிருத்தி யானது இரண்டு விபூதியையும் விளாக்குலை கொள்ளுகையாலே
பிரதான புருஷ வியக்த கால ரூபமான சாதுர்வித்யத்தை யுடைத்தான ஜகத்தில்
இனி ஏது செய்யாது என்று தம்முடைய ஸைதில்யத்தை அருளிச் செய்தாராயிற்று-இவளோ முடியா நின்றாள்-இனி யாரை அழிக்க என்று வத்யம் தேடித் திரியும்-திருத்துழாய் போக்யத்தை குமர் இருந்து போம் அத்தனை-காய்ந்து சருகாய் போக வேண்டுமே
ஹேய மான தேசத்தில் என்ன செய்யாது-உபய விபூதியும் படாத படிகளை எல்லாம் படுத்தாதோ–இவர் ஜீவிக்க மாட்டார் -சம்ஸயம் இல்லை
ஈஸ்வரன் இவரைக் கொண்டு சில பிரபந்தங்கள் தலைக்கட்டுவதாகக் கோரி இருந்தான்
இனி அவன் சங்கல்பமும் அழிந்ததாகாதே என்று நிர்ணயிக்க வேண்டும்படியான
தசை பிறந்த படியைச் சொல்கிறது –
——–
நிறையோ இனி உன் திருவருளால் அன்றி காப்பு அரிதால் – நாலாயி:2539/3
ஈங்கிவள் தன் நிறையோ-இவ்விடத்தில் ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தையான இவளுடைய
ஸ்த்ரீத்வ பூர்த்தி யானது-இனி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்-பிரபல விரோதி யுண்டாய்-ஸ்வ சக்தியும் இல்லாத பின்பு-ப்ராப்தனான உன்னுடைய நிருபாதிகையான கிருபையால் அன்றி ரஷிக்கை சக்யம் அன்று-இத்தால் அநந்த க்லேச பாஜனமாய்
கோரமான ஸம்ஸார ஸாஹரத்தினுடைய கோலாஹலத்தைக் கண்டு ஆழ்வார் ஈடுபாட்டுக்கு அஞ்சின ஸூஹ்ருத்துக்களால் இது பரிஹரிக்க அரிது என்று நினைத்து
ஆழ்வாருடைய ஸ்வரூபம் ஈஸ்வரனுடைய கிருபா ஏக ரஷ்யம் ஆகையால் ரக்ஷகரான பெரிய பெருமாளைக் குறித்துத் தங்கள் ஆர்த்தி தோற்ற விண்ணப்பம் செய்த பாசுரமாய் இருக்கிறது —
———–
தெய்வத்து அடியவர்க்கு இனி நாம் ஆளாகவே -திருவாசிரியம் -4– நாலாயி:2580/8-
அடியவர்க்கு இனி நாமாள் ஆகவே–ப்ரயோஜனாந்தர பரரான தேவதைகளுக்காக தன் உடம்பு நோவ கடலைக் கடைந்து அம்ருதத்தைக் கொடுத்த மஹா உபகாரத்தை அனுசந்தித்து அவன் நீர்மையிலே தோற்று எழுதிக் கொடுத்து இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு–இனி நாம்-ஆத்ம சத்தை உள்ளவன்று தொடங்கி பாகவத சேஷமாய்ப் போருவது பிராப்தமாய் இருக்க கர்மத்தால் நான் என்றும் என்னது என்றும் போந்தோம்-இனி சேஷித்த காலமாகிலும் இவ்வஸ்து பாகவத சேஷம் என்னும் இடத்தை அவன் காட்ட –
அவன் பிரசாதத்தாலே கண்ட நாம் – அவர்களோடே ஒப் பூணாய் ஒத்த தரமாகவோ என்னில்-ஆளாக-சேஷ பூதராக-ஆளாகவே அவர்களுக்கும் ஆளாய் – நான் எனக்கு -என்ற இருப்பும் கலந்து செலவோ என்னில் – ஆளாகவே — ஆளாகும் தரம் அன்றிக்கே சேஷத்வமே வடிவாக-
————–
தமக்கு அவர் தாம் சார்வு அரியர் ஆனால் எமக்கு இனி
யாதானும் ஆகிடு காண் நெஞ்சே அவர் திறத்தே-பெரிய திருவந்தாதி-9- – நாலாயி:2593/2,3
இனி நமக்கு பேறு இழவு இரண்டும் ஒக்கும்-பசித்த போது கிடையாத சோறு என் செய்ய
விஸ்லேஷத்தில் உஜ்ஜீவிப்போமாகில் அன்றோ ஆறி இருக்கலாவது –எமக்கினி யாதானும் ஆகிடு காண் ” என்று எப்படி சொல்லலாம்? என்னில்; அவனுடைய அநுக்ரஹம் போலே அவனுடைய நிக்ரஹமும் நமக்கு அநுஸந்தேயமே.
நம்மைப் பற்றி எம்பெருமான் திருவுள்ளத்தில் பட்டிருக்கு வேண்டுமெத்தனையே அபேக்ஷிதம்.-அது அநுக்ரஹ ரூபமாகவோ நிக்ரஹ ரூபமாகவோ எதுவாகிலுமாகலாம்.-உன்னைக் கைவிட்டேனென்று சொல்லுகிற வார்த்தையையாவது அவன், முகம் நோக்கிச் சொல்லுவனாகில் அப்போதைய ஸேவையாவது கிடைக்குமே என்றும் கண்ணிலே தன் பட்டானாகில் பிறகு அவனை உபாயங்களால் ஸ்வாதீனப்படுத்திக் கொள்ள வழியுண்டாகலா மென்றும் நினைத்துச் சொல்லுகிறபடியிறே இவை.-அவன் திருவுள்ளத்தில் அநுக்ரஹமில்லாமல் நிக்ரஹமே கொண்டிருந்தாலும்
அதை யாகிலும் சிந்தித்துக் கொண்டிரு’ என்றது- நல்ல படியாகவோ தீய படியாகவோ ஏதேனுமொரு விதமாக நம்மைப் பற்றின எண்ணம் அவனது திருவுள்ளத்தே
பட்டிருக்குமாகில் அதுவே போதுமானது.-நல்ல அப்பிராயமோ கெட்ட அபிப்ராயமோ உண்டாகும் போது நம்மை ஒரு வ்யக்தியாக நினைத்தன்றோ உண்டாக வேண்டும்;
அந்த நினைவு தானே நமக்கும் போதுமானது என்கை.
———–
மாலே படிச் சோதி மாற்றேல் இனி உனது பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் -58- நாலாயி:2642/1
மாற்றேல் இனி வைத்த இறையிலியை -அநந்ய போக்யத்வத்தை -மாற்றாதே கொள்
(இறையிலி- வரி இல்லா நிலம் போல் நிர்ஹேதுகமாக )-இறையிலி ஏது என்னில்
உனது பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் –-இவ் விறையிலியை மாற்றாதே கொள்
————–
அடர் பொன் முடியானை ஆயிரம் பேரானை
சுடர் கொள் சுடர் ஆழியானை இடர் கடியும்
மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே
யாதாகில் யாதே யினி–70- – நாலாயி:2654/4
சரீரத்தைப் பூண் கட்டி இடரை விளைக்கும் மாதா பிதாக்கள் இறே அல்லாதார்
இவன் சரீர பரிக்ரஹம் பண்ணுகைக்கு நோன்பு நோற்குமவர்கள் இறே அவர்கள்-இனி பாபம் தன்னை அனுபவிக்கில் எனக்கு வந்தது என் பாப நிமித்தமாக பயம் இல்லை என்றபடி –
——-
இனி நின்று நின் பெருமை யான் உரைப்பது என்னே-71 – நாலாயி:2655/1
உன் ஐஸ்வர்யத்தை நான் தானே சொல்லுவது உண்டோ -என்னவுமாம்
உன்னுடைய நீர்மையை நான் சொல்லுவது உண்டோ என்னவுமாம்
———
இப்போதும் இன்னும் இனி சிறிது நின்றாலும் எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே -எப்போதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் மொய் கழலே ஏத்த முயல்–87— நாலாயி:2671/1
இக்காலத்திலும் வரும் காலத்திலும் மற்றும் எல்லாக் காலத்திலும்
இது தன்னையே சொல்லு-
———–
துதி கற்று உலகில் துவள்கின்றிலேன் இனி தூய் நெறி சேர்-இராமானுஜ நூற்றந்தாதி-21- – நாலாயி:2811/2
இனி-அவர்க்கு அடியேன் ரஷ்ய பூதனாய் விட்ட பின்பு இனி -மேல் உள்ள காலம் எல்லாம்-எம்பெருமானார் என்னைக் காப்பாற்றி விட்டார் -இனி ஏன் நான் துவள வேண்டும்-என்கிறார் அமுதனார் –
நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னருளின் கண் அன்றிப் புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அக்தே புகல் புன்மையிலோர் பகரும் பெருமை இராமானுச இனி நாம் பழுதே யகலும் பொருள் என் பயன் இருவோருக்கும் ஆன பின்னே – -48 —- நாலாயி:2838/3
இப்படி நமக்கு இருவருக்கும் பிரயோசனமான பின்பு-இது அறிந்து இருக்கிற நாம் மேலுள்ள காலம் வ்யர்த்தமே அகலுகைக்கு காரணம் என் –அகலுகைக்கு ஹேது இல்லை என்று கருத்து –இருவர் இடமும் இருவர் தேட்டங்களும் இருக்க இழப்பேனோ-தேவரீரும் அடியேனும்-ஆகிற இருவருக்கும் ஸ்வரூப லாபமும் குண லாபமும் ஆகிற பரம பிரயோஜனம் சித்தித்த பின்பு -இப்படி இருவருக்கும் பிரயோஜமாய் இருக்க –இனி நாம் பழுதே அகலும் பொருள் என் -இது அறிந்து இருக்கிற-நாம் மேல் உள்ள காலம் எல்லாம் வ்யர்த்தமே அகலுக்கைக்கு காரணம் என் -நாம் என்றது தம்மையும் எம்பெருமானாரையும் –அன்றிக்கே -நாம் என்று பஹூ வசன பிரயோகம் பண்ணுகையாலே -எம்பெருமானாரும் -இவருடைய சம்பந்த-சம்பந்திகளுமான எல்லோரும் என்று பொருள் ஆகவுமாம் -நாம் பழுதே அகலும் பொருள் என் -பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய் -என்னைத் தீ மனம் கெடுத்தாய் -மருவி தொழும் மனமே தந்தாய் -அறியாதன அறிவித்த அத்தா நீ-செய்தன அடியேன் அறியேன் -என்கிறபடியே நாம் க்ர்த்ஜ்ஜராய் போம் அது ஒழிய நமக்கு-அகலுகை என்று ஒரு பிரயோஜனம் உண்டோ –பாவத்தால் நான் பிறப்பேன் ஏலும் -இனி எந்தை-எதிராசன் தான் பிறக்கும் என்னை உய்ப்பதா -என்கிறபடியே -கைவிடுகை அவருக்கு அவத்யமாக-தலைக்கட்ட கடவதாகையாலும் -பெறாப் பேறாக அடியோங்களை தேவரீர் விஷயீ கரித்துக்- கொள்ளுகையாலும் -நிழலும் அடி தாறும் போலே அடியோங்களை அனந்யார்ஹராம் படி-அங்கீகரிக்கை ஒழிய தேவரீருக்கு அகலுகை என்ற ஒரு பிரயோஜனம் உண்டோ என்றது ஆய்த்து –
————-
வாக்கு உரையாது என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே–56- – நாலாயி:2846/4
லோகம் எங்கும் வ்யாபிக்கும்படி பண்ணின கீர்த்தியை உடைய எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பின்பு-மேலுள்ள காலம் வேறு ஒரு விஷயத்தை என்னுடைய வாக்கானது கீர்த்தியாது –என்னுடைய மனஸ்சானது-ஸ்ம்ரியாது –-முற் காலத்தில் எல்லாம் அசத்ய பாஷணத்தையும் -அசத் கீர்த்தனத்தையும் –
பண்ணிக் கொண்டு போந்த என் வாக்கானது -எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பின்பு -அவருடைய
திவ்ய குணங்களையே கீர்த்தியாய் நிற்கும் இத்தனை ஒழிய -வேறு ஒன்றை கீர்த்திக்க மாட்டாது –
முற் காலம் எல்லாம் பாப சிந்தனையே பண்ணிக் கொண்டு போந்த என் மனசானது -அவரை
ஆஸ்ரயித்த பின்பு -அவருடைய திவ்ய குணங்களிலே ஈடு பட்டு சர்வவிதா அவை தன்னை மனனம் பண்ணிக்
கொண்டு இருக்கும் இத்தனை ஒழிய வேறு ஒன்றை ஸ்மரிக்க மாட்டாது என்று அருளிச் செய்தார் ஆய்த்து –
த்ர்ணீ க்ரத விரிஞ்சாதி நிரந்குச விபூதய -ராமானுஜ பதாம் போஜ சமாச்ரயண ஸாலிந -என்னக் கடவது இறே –
என் வாக்கு எம்பெருமானாரை விட்டு மற்று ஒன்றை -தென்னரங்கனை -உரையாது
என் மனம் மற்று ஒன்றை நினையாது -என்னலுமாம்
————
வருந்தேன் இனி எம் இராமாநுசன் மன்னு மா மலர் தாள் – நாலாயி:2852/2
அவர்கள் ஸ்வபாவத்துக்கு தோற்று ஸ்தோத்ரம் பண்ணா நின்று உள்ளமகா பிரபாவரானவர்களுடைய திருவடிகளைப் பற்றி-இன்று புண்ய பாப ரூபத்தாலே உபய விதமாய் இருந்துள்ள கர்ம பாச விநிர்முக்தனாய் -க்ருதக்ருத்யனாய் -நிர்ப்பரனாய் இருந்தேன் .–இப்படி இருந்த நான் இனி அத்யல்பமும் துக்கத்தில் அன்வயியேன்.கர்மம் கிடக்கில் இறே துக்கம் வருவது என்று கருத்து-இன்று யான் இறையும் வருந்தேன் இனி -இப்போது நான் ஷண மாத்ரமானாலும்-சம்சார துக்கத்தால் கிலேசப்பட கடவேன் அல்லேன் -அத்சாவ ஸ்ரீ ரெங்கே சுகமாஸ்வ -என்றபடி-சம்சார வெக்காயம் ஒரு ஷண மாத்ரமும் தட்டாதே சர்வதா ஆனந்த ரச அனுபவத்தோடு-இருக்கக் கடவேன் என்றது ஆய்த்து –
பேர்வு இன்றி இன்று பெறுத்தும் இராமாநுச இனி உன் – நாலாயி:2871/3-
பாகவத சேஷத்வ நிஷ்டர்க்கு ஒழிய தம் திருவடிகளை விட்டுப் பேராத நிலை இல்லையாம்படி -இருக்கும் -பெரிய பெருமாளுடைய திரு மேனி நிறத்துக்கு -பரபாகமான சிவப்பையும் சேர்த்தி அழகையும் உடைய திருவடிகளை ஒரு காலமும் விட்டு நீங்காத படியாக இன்று பெறுவித்து அருளினவரே ! இப்படியான பின்பு தேவரீர் உடைய கௌரவ யுக்தையாய் இருந்துள்ள க்ருபைக்கு ஆராயும் அளவில் ஓர் ஒப்பு இல்லை -தென் அரங்கர் சீர் அருளும் இது தனக்கு ஒப்பாக மாட்டாது என்று காணும் இவருடைய திரு உள்ளத்தில் ஓடுகிறது-அரங்கன் கருணையும் -ஒரு கால் ஸ்வா தந்த்ர்யத்தால் பயன் இன்றி போவதாய் இருத்தலின் –என்றும் பயன் குன்றாத எம்பெருமானார் கருணைக்கு ஒப்பாகாது என்கிறார் .
————–
உற்றார் என உழன்று ஓடி நையேன் இனி ஒள்ளிய நூல் – நாலாயி:2876/2-
ஒன்றுக்கும் பற்றாத சூத்திர மனுஷ்யரை ஆஸ்ரயித்து அந்த ஆஸ்ரயணம் விடாதே நிற்கிறவர்களையே பந்துக்கள் என்று -அனுசந்தித்து -அவர்கள் பின்னே திரிந்து -உழன்று – அவர்கள் விஷயமான ப்ராவண்யத்தாலே -அவர்கள் முகத்திலே விழிக்க பெறுவது -எப்போது-என்று ஓடி -அவர்கள் உடைய சம்ச்லேஷ விச்லேஷங்களில் உண்டான ஹர்ஷ சோகங்களாலே -இனி சிதிலன் ஆகேன் –
————-
நடுமே இனி நம் இராமாநுசன் நம்மை நம் வசத்தே – நாலாயி:2888/3-
தம் திருவடிகளைப் பற்றின பின்பும் நரகத்திலே இட்டு வைத்து தபிப்பிப்பரோ – அந்த ஸ்வர்க்க நரக அனுபவத்துக்கு ஈடான கர்மம் ஜென்மத்துக்கு உருப்பாகையாலே – அவற்றை அநுசரித்து கொண்டு இருப்பதாய் -அநாதியாய் -வளைய வளைய வரா நின்றுள்ள-ஜன்மத்திலே நிறுத்துவரோ – மேலுள்ள காலம் நம்மை நம்முடைய ருசி அநு குணமாக விடுவரோ –ஆன பின்பு ப்ராப்தி நிமித்தமாக-நெஞ்சே சிதிலமாகாதே கொள் –
—————
மாந்தகில்லாது இனி மற்று ஒன்று காட்டி மயக்கிடலே – நாலாயி:2890/4
அம்ருதாசிக்குப் புல்லை இட்டால் மிடற்றுக்கு கீழே இழியாதாப் போலே ஈது ஒழிய வேறு ஒன்றையும் புஜிக்க மாட்டாது – தேவரீர் நினைத்தால் அதுவும் செய்விக்கலாம் – இனி வேறொன்றைக் காட்டி மயங்கப் பண்ணாது ஒழிய வேணும் .–பகவத் விஷயத்தை என்று சொல்ல அருவருத்து மற்று ஓன்று காட்டி –என்று சொல்லுகிறார் காணும்-மற்று ஒரு விஷயத்தை பிரசங்கிப்பதும் செய்ய வேண்டா என்கிறார் -பல நீ காட்டிப் படுப்பாயோ இன்னம் கெடுப்பாயோ -நெறி காட்டி நீக்குதியோ-என்று நம் ஆழ்வாரும் இவ்வர்த்தத்தை பிரதம பர்வத்தில் அனுசந்தித்து அருளினார் இறே –
—————-
நன் நீர்மை இனி அவர்-கண் தங்காது என்று ஒரு வாய்ச்சொல் –-–1-4-4- நாலாயி:2935/3-
உனக்கு ஆதரணீயமாம் படி நன்றான அவளுடைய ஸத்பாவம் இனிமேல் அவரிடத்து நிற்க மாட்டாது என்று ஒரு வார்த்தை-ஈண்டு எனச் சென்று சம்ச்லேஷி யீராகில் அவள் கிடையாள் என்று ஒரு வார்த்தை சொல்லி என்னை உஜ்ஜீவிப்பியுங்கோள்-இனி-பாடு ஆற்றலாவது எல்லாம் ஆற்றினாள்-இனித் தாங்க மாட்டாது-இனி–ஆன அளவும் கால் கட்டிப் பார்த்தாளாதலின், ‘இனி’ என்கிறாள்.
—————-
சாயலொடு மணி மாமை தளர்ந்தேன் நான் இனி உனது – நாலாயி:2939/3-
சாயலோடு கூட நல்ல நிறத்தை இழந்தேன் நான் -இனி உன் பிரகிருதி அறிந்து உன்னை வளர்ப்பாரை தேடு –-நான் முடிந்தேன் என்று கருத்து –இப்படி ஈடுபட்ட பின்பு உன்னுடையதான வாய் அலகுக்கு உள்ளே புக மதுரமான அடிசிலை ஊட்டுவாரை புறம்பே போய் ஆராய வேணும் காண்-இனி உனக்கு செய்ய அடுப்பது -உன் பிரகிருதி அறிந்து வளர்ப்பாரைத் தேடுகை காண்–இதனால் ‘அவன் வந்தாலும் போன நிறத்தை மீட்கப் போகாது,’ என்று இருக்கிறாள்.சரம தசையில் தம்முடைய திரு ஆராதனப் பிள்ளையைப் பார்த்து -தமக்கு ஒரு வெண்ணெய்க்காடும் பிள்ளையாயிற்றுத் திருவாராதனம்-அவர் திரு முன்பில் திருத் திரையை வாங்கச் சொல்லி, வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே- என்று அருளிச் செய்தார் பெரிய திருமலை நம்பி –
————-
வான் ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே – 1-7-7–நாலாயி:2971/4-
தானே ஒட்டிக் கொண்டு வந்து தன்னுடைய குண சேஷ்டித ஆவிஷகாரத்தாலே என் நெஞ்சை வஞ்சித்து அகப்படுத்தி இந்த ஹேயமான ப்ரக்ருதியோடே சம்பந்த்தித்து இருக்கிற ஆத்மாவோடு ஸம்ஸ்லேஷித்து வர்த்திக்கிற இவன் -தன்னை விடுவேன் என்றால் என்னை விட ஒட்டுமோ -என்கிறார் –என் ஆத்மாவோடு கலந்து அக்கலவியால் அல்லது செல்லாத தன்மையை உடையவன் –அத்தாலே சத்தை பெற்றானாய் நடக்கிறவன் இனி என்னை நெகிழ்த்துக் கொள்ள ஒட்டுமோ –இப்போது இப்படி நிர்ஹேதுகமாக விஷயீ கரித்தவன் பல தசையில் நான் நெகிழ்ந்து போவேன் என்றால் அவன் சம்வத்திக்குமோ –இப்படிக் காரணம் இல்லாமல்-நிர்ஹேதுகமாக – என்னை அங்கீகரித்தவன்,
நான் தன் பக்கல் நின்று நெகிழ்ந்து போவேன் என்றால் அவன் இசைவானோ?
இனி, ‘எனக்கு ஞானம் பிறத்தற்கு-கிருஷி பண்ணி -முயன்றவன்- பிறந்த ஞானம் பயன் பெறும் அளவாகக் கொண்டு, நான் அகன்று போவேன் என்றால் அவன் சம்வதிக்குமோ உடன்படுவேனோ?’-
———-
தன்னை அகல்விக்க தானும் கில்லான் இனி
பின்னை நெடும் பணை தோள் மகிழ் பீடு உடை – நாலாயி:2972/2,3
ஆஸ்ரித வத்சலனாகையாலே அவன் தானும் என்னை விடான் -என் பக்கல் உள்ள குண ஹானியாலே என்னை விட நினைக்கிலும் – சர்வேஸ்வரன் தன்னாலும் என்னுடைய நெஞ்சை விட முடியாது -நெஞ்சோடு உள்ள சம்பந்தத்தால் என்னையும் விட முடியாது –
நெஞ்சை விட முடியாது ஒழிவான் என் என்னில் அது நப்பின்னைப் பிராட்டி யடிமை-அந்தப்புர பரிகரத்தை ராஜாவாலும் அநாதரிக்க ஒண்ணாது–இனி–தனித்து அகல்விக்க சர்வ சக்தியான தானும் இனி மாட்டான் – முன்பு போலே விஷயாந்தர சக்தம் அன்றே -அவன் தான் -மேன்மையையுடைய பூர்வரான நித்ய ஸூரி களுக்கு தாரகாதி சமஸ்தத்துக்கும் தானே முதல்வனானவன்றோ – ஆதலால் -அவர்களை விடில் அன்றோ என்னையும் என் நெஞ்சையும் விடுவது-எனவே, ‘ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டி புருஷகாரமாக நித்திய ஸூரிகள் ஓலக்கம் இருக்க அடிமை புக்கு அந்தப்புரப் பரிகரமான இவ் வாத்துமாவை அகற்றப் போகாது,’-
————-
அமர தழுவிற்று இனி அகலுமோ – நாலாயி:2973/4-
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் -அர்த்தி கல்பகனாய் –நிரதிசய ஸுந்தர்யத்தை உடையனான எம்பெருமானோடே ப்ருதக் நிர்தேசா அநர்ஹமாம் படி ஸம்ஸ்லேஷிக்கையாலே இனி என்னாலும் அவனை விட முடியாது –இனி யகலுமோ
ப்ருதக் ஸ்திதி யுபலம்பம் இல்லாதபடி ஸ்வரூபம் ஸ்வரூப அனுரூபமாக சம்ச்லேஷித்தும் அகல பிரசங்கம் உண்டோ பிரகார பிரகாரிகளுக்கு ஏகத்துவ புத்தி பிறந்தால் பிரிக்கப் போமோ ஜாதி குணங்களை பிரிக்க ஒண்ணாதாப் போலே த்ரவ்யத்துக்கும் நித்ய தாதாஸ்ரயத்வம் உண்டாகையாலே பிரிக்க ஒண்ணாதாய் இறே இருப்பது-விளக்கு, விளக்கின் ஒளி என்னும் இரண்டும், இரண்டு பொருள்களாய் இருப்பினும்,
‘ஒன்றனை விட்டு ஒன்றைப் பிரிக்க முடியாமல் இருக்குமே –
—————-
எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம் – 1-10-2–நாலாயி:2999/2-
எண்-சிந்திப்பு-சிந்திப்பே அமையும் -9–1–7-என்கிற ப்ரபதன ஸுகர்யம்-
எண்ணிலும் வரும் -என்று நினைவில் காட்டில் மிகவும் கைவரும்-நம்முடைய உண்மையை இசைந்தான் இறே என்று அப்போதே வந்து முகம் காட்டும் -இவன் எண்ணின் அளவுக்கு அவ்வருகே வரும் –என்னினி வேண்டுவம்–சர்வேஸ்வரன் ஸ்வ பாவம் இதுவான பின்பு ஹித அம்சத்தில் நமக்கு ஒரு குறை இல்லை –பரம பத்திக்கும் எண்ணுதற்கும் ஒக்க முகங்காட்டுவானான பின்னர் எனக்கு ஒரு குறை உண்டோ?’ என்கிறார்.
‘இறைவன், இவ் வாத்துமாப் பக்கல் -அப்ரதிஷேதத்துக்கு வெறுப்பின்மைக்குக்-அவசரம் – காலம் பார்த்திருந்து முகங்காட்டுவானான பின்பு, இவனுக்கு நன்மை தரும் காரியங்களில் இவன்-ஹிதாம்சமாக செய்ய வேண்டுவது ஒன்று உண்டோ?’ என்றபடி.
இப்படி இருக்கிற பகவானுடைய ஸ்வரூபத்தைப் புத்தி பண்ணுகையே, இவன் பிரபந்தன் ஆகையாவது. இறைவன், தன்னுடைய ஸ்வரூபத்தை உபதேசித்து, ‘உன்னால் வரும் இழவுக்கு அஞ்ச வேண்டா ‘மாஸூச:’ என்றது போன்று, இவரும் இறைவனுடைய ஸ்வரூபத்தை நினைந்து, ‘என் இனி வேண்டுவம்?’ என்கிறார்.
இவற்றால், அப்ரதி ஷேதமே- வெறுப்பின்மை ஒன்றுமே பேற்றுக்கு வேண்டுவது,
அதற்குப் புறம்பான யோக்கியதை அயோக்கியதைகள் பயன் அற்றவை என்பது பெறுதும்.
———–
என் செய்யோம் இனி என்ன குறைவினம் – நாலாயி:3001/2
பகவத் விஷயம் என்னில்-பிரதி கூலியாதே பாங்காய் இருக்கிற உன்னைப் பெற்றால் இனி நமக்கு சாதிக்க முடியாது உண்டோ நமக்கு இனி என்ன குறை உண்டு-உன்னைப் பெற்றால் என் செய்யோம் என்று சாத்திய அம்சம் உண்டாக சொன்ன இடம் தப்பச் சொன்னோம்
உன் பக்கல் விலக்காத அளவே பற்றாசாக அவன் கார்யம் செய்வானாக இருந்தால் இனி சாத்திய அம்சம் உண்டோ அவன் உபாய பாவம் நித்ய நிரபேஷம் ஆனால் சாத்திய அம்சம் தானுண்டோ-
————
மறப்பனோ இனி யான் என் மணியையே –1-10-10– நாலாயி:3007/4-
மறவாமைக்கு பரிஹாரம் அவன் கையிலே உண்டாய் இருக்க இனி மறக்க உபாயம் உண்டோ-கீழ் அநாதி காலம் நினைக்க விரகு இல்லாதாப் போலே இ றே மேல் உள்ள காலம் எல்லாம் மறக்க விரகு இல்லாத படியும்–பெரு விலையனான ரத்னம் கை புகுந்தால் -அத்தை முடிந்து அனுபவியாதே உதறுவார்களோ-மறவாமைக்குப் பரிகரம் அவன் கையில் உண்டாய் இருக்க இனி மறக்க உபாயம் உண்டோ-கீழ் அநாதி காலம் நினைக்க விரகு இல்லாதப் போலே இறே -மேல் உள்ள காலம் எல்லாம் மறக்க விரகு இல்லாத படியும்-
———–
மூவா முதல்வா இனி எம்மை சோரேலே –2-1-10– நாலாயி:3018/4-
மூவாது ஒழி கை யாவது -இளகி வருகை -அதாகிறது ஒன்றும் செய்யாதானாய் ரக்ஷணைத்தே ஒருப்படுகை–இத்தால் சொல்லிற்று ஆயிற்று -அப்படியே என்னுடைய விரோதிகளை போக்கி இம் மஹா அவசானத்திலே வந்து சம்ச்லேஷித்து என்னை உண்டாக்கினவனே -என்கிறார்
இனி எம்மைச் சோரேலே –-இதுக்கு முன் நீ போய் நின்று பட்டது போறும் இனி நீ என்னை விடாது ஒழிய வேணும் என்கிறார்-கேசி தொடக்கமான விரோதிகளைப் போக்கியது போன்று, தன் விரோதியையும் போக்கி, அவன் வந்து முகங்காட்டச் சொல்லுகிறாள்.
இனி, ‘தம்முடைய ஆபத்தின் மிகுதியாலே ‘வந்து முகங்காட்டும்’ என்னும் விசுவாசத்தலே சொல்லுகிறாள்.-முன்புள்ள காலம் இழந்ததாகிலும், இனி மேலுள்ள காலம் -இவ்வஸ்துவை -இவ்வாத்துமாவைக் கைவிடாது ஒழிய வேண்டும் என்பாள், ‘இனி’ என்கிறாள்.
‘போன காலத்தை மீட்க ஒண்ணாது’ என்று அதற்குச் சோகிக்கிறாள் என்றபடி-
————-
எனது ஆவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பது உண்டே -2-3-4— நாலாயி:3034/2-
எனது ஆவி தந்தொழிந்தேன் – என்னுடைய ஆத்ம வஸ்துவைத் தேவரீருடைய திருவடிகளிலே சமர்ப்பித்தேன்.-அழகிது; இதுதான் எத்தனை குளிக்கு நிற்கும்?’ என்றான் ஈஸ்வரன்.-இனி மீள்வது என்பது உண்டே-சத்யோ தசாஹமாக தந்தேன் -மீள்வு என்றோர் அர்த்தம் தானும் உண்டோ –ஆராய்ந்து பார்த்தவாறே, அவனுடைய பொருளை அவனுக்குக் கொடுத்ததாய் இருந்தது.-இனி மீள என்கிற கதை யுண்டோ -என்று ப்ரீதி யதிசயத்தாலே பிரமித்து ஆத்ம சமர்ப்பணத்தைப் பண்ணி அநந்தரம்-அத்தை நிரூபித்து -என்னுடைய அந்தராத்மாவுக்கும் அந்தராத்மாவும் நீயே — சர்வ லோகங்களையும் திரு வயிற்றில் வைத்து ரக்ஷித்து அருளிய என் ஸ்வாமியே – என்னுடைய ஆத்மா யார் -நான் யார் -ஏதேனும் சம்பந்தம் உண்டோ – கொடுத்த நீ தானே கொண்டாயானாய் என்று அநு சயிக்கிறார் –
———
இனி யார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய் –2-3-5- நாலாயி:3035/1-
திருவடிகளில் அடைவிலர் ஆகில் எத்தனையேனும் அளவுடையாருடைய அறிவுகளாலும் பரிச்சேதிக்க ஒண்ணாத என் நாதனே –அதாகிறது -துரியோதனனால் பரிச்சேதித்தல் ராவணனால் எடுக்கலாய் இருத்தல் செய்ய அரிதாய் இருக்கை–ஹிமவான் -இத்யாதி
வாயு ஸூ நோஸ் ஸூ ஹ்ருத் வேந பக்த்யா பரமயாஸச சத்ருணா மப்ரகம்ப்யோ அபி லகுத்வமகமத் கபே –இனி–உன பாதம் சேர்ந்தேனே-என்பதுடன் அந்வயம்
ஆர் ஞானங்களாலும் எழான் -ஆர் எடுக்கிலும் எழான்-இனி நுன பாதம் சேர்ந்ததேனே –
பிரளயம் கொண்ட பூமியை எடுத்தது போன்று, பிறவிப் பெருங்கடலால் கொள்ளப்பட்ட என்னை எடுத்த போதே தேவர் திருவடிகளை நான் கிட்டினேனே அன்றோ?’
அன்றி, ‘இமையோர் தலைவா ‘இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்னும்படி,
அறிவைத் தந்த போதே உன் திருவடிகளைப் பெற்றேனே அன்றோ?’ என்றுமாம்-(இவருக்கு வாழ்ச்சி பகவத் அனுபவமே இறே –
இனி -என்றதும் மூன்று அர்த்தங்கள்-அறியாதன அறிவித்த பின்பு
பிரளயம் கொண்ட பூமியை எடுத்தால் போல் சம்சார பிரளயத்தில் இருந்து எடுத்த பின்பு
இனி யாம் உறாமை -நிர்ஹேதுக கடாக்ஷ மூலமான ஞான லாபத்தை யுடைய –
உனது அங்கீ கார பலத்தை யுடைய நாங்கள் அணுகாத படி –-வாயும் திரை யுகளில் வியசனம் தீர-ஊனில் வாழ் உயிரில் ஸம்ஸ்லேஷித்த போதே உனபாதம் சேர்ந்தேன் அன்றோ )
——-
முடியாதது என் எனக்கேல் இனி முழு ஏழ்உலகும் உண்டான் உகந்து வந்து – நாலாயி:3070/1
எனக்கு ஆப்தவ்யமாய் இருப்பது ஓன்று உண்டோ-பிரளய காலத்தில் இஜ் ஜகத்தை அடைய திரு வயிற்றிலே வைத்துக் கொண்டவன் ஜகத்துக்கு தன்னை ஒழிய செல்லாதாப் போலே என்னை ஒழிய தனக்கு செல்லாமையாலே அத்யபி நிவிஷ்டனாய் என்னுள் புகுந்தான்
இனி ஒரு காலும் விஸ்லேஷிப்பதும் செய்யான்-எனக்காக்கில் இனி முடியாதது உண்டோ -ஜகத்துக்கு தன்னை ஒழிய செல்லாதாப் போலே என்னை ஒழிய செல்லாதனாய் சம்பந்தத்தைப் பார்த்து உட்ப்புகுந்தான் ஒரு நீராகக் கலந்தான் -தன் பக்கல் ஜகத்து புக்கால் போல் அன்றிக்கே உகந்து புகுந்தான் இவனுக்கும் ஜகத்துக்கும் செல்லாமை ஒக்கும் -உகப்பு ஏற்றம் இவ்விஷயத்தில் இவனுக்கு-உரலுக்கும் கண்ணனுக்கும் ஒரே வாசி அழுகை போலே -மத் சம்பந்திகள் அளவும் கீழ் மேல் ஓடும்படி புகுந்தான் –அந்த பூமிக்கு -பிரளயம் கழிந்த வாறே அகல வேணும் -இவனுக்கு அதுவும் இல்லை -முதலிலே பிரிவை பிரசங்கிக்க ஒட்டுகிறிலன் –
———–
அடியேனுள் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி
செடியார் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்
விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினரே –2-6-7-
ஒரு நாள் வரையிலே கர்ம ஷயம் பிறந்தவாறே விடியுமது இறே யமன் தண்டல் -இது விடியா வென்னகரம் இறே-நரகம் -என்று புத்தி பிறக்கும் அதில் -தண்மை தோற்றாத நரகம் இது
என்றும் சேர்த்தல் மாறினரே – என்றும் கிட்டக் கடவதான தண்மை தவ்ர்ந்தார்கள்
நானும் பிரார்த்திக்க வேண்டிற்று இல்லை-அவனும் நினைப்பிட வேண்டிற்று இல்லை
எத்தாலே என்னில் -என் பக்கல் அவன் பண்ணின பஷபாத ராஜ குலத்தாலே மாறிக் கொண்டு நின்றார்கள்-முடியாதது என் எனக்கேல் இனி -என்று அந்வயம் –மோஷயிஷ்யாமி -தன்னடையே ஓடிப்போமே -கிருஷ்ண சம்பந்தம் -இங்கே கிருஷ்ண த்ருஷ்ண சம்பந்தம் –குலம் -சப்த சப்தச்ச சப்த – -தச பூர்வா தச உத்தர தன்னோடு -அந்தன்-ஒருவன் அநந்தன் ஒருவன் -கூட்டிப் போவது போலே-ஆழ்வார் குருடர்களான நம்மையும் கூட்டிப் போவார் –
————-
கொந்தார் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைந்த வெம்
மைந்தா வானேறே இனி எங்குப் போகின்றதே –2-6-9-
திருமலையில் புகுந்து நின்று அருளின படியையும் -உன்னுடைய திரு வவதாரங்களையும் -உன்னுடைய திவ்ய சேஷ்டிதங்களையும் – உன்னுடைய அழகையும் -ஸ்ரீ வைகுண்ட நாதனாய் இருந்து அருளும் படியையும் -மற்றும் உள்ள படியை யடங்க எனக்கு போக்யமாகக் காட்டி யருளி உன்னை என்னுள்ளே ஒன்றாகக் குழைத்து அருளின நீ இனி எங்கே போவது -போவேன் என்றால் தான் போக முடியுமோ -என்கிறார் –
—————–
மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது
யா தவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்திருந்து
தீதவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரை கட்குன்றம்
கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே –2-7-3-
இனி-போன காலமே போரும் -இனி விடேன் என்னா நின்றான் –
பழுதே பல காலும் போயின -என்று ஈஸ்வரனைக் கிட்டின சேதனர் இருக்கும் இருப்பை தான் இரா நின்றான் –புத்த்வா காலம் அதீ தஞ்ச முமோஹ-என்று இரா நின்றான் ஆயிற்று-
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1-
யான் –உன்னை பெறுகைக்கு தந்த உபகரணத்தை அழித்துக் கொண்ட நான் –
உன்னை-என் பேற்றுக்கு போக்கடி சொல்ல வேணும் -என்று வளைக்கலாம் படி இருக்கிற உன்னை-இனி வந்து கூடுவேன்-நீ தந்த கைம்முதலையும் அழித்துக் கொண்ட பின்பு கிட்டுகைக்குப் போக்கடி உண்டாகில் சொல்ல வேணும் -என்கிறார் –இனி வந்து கிட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ?’ என்று நிராசராகிறார் என்று முன்புள்ள முதலிகள் அருளிச்செய்வர்.-எம்பெருமானார் ‘நிராசர் ஆனால் பின்னை முடிவார் ஒருவர்;
ஒன்பதாம் பாட்டில் – நிராசராக, பத்தாம் பாட்டில் – அவன் வந்து சமாதானம் பண்ணினானாக அமையும்’ என்று அருளிச்செய்வர்.-ஆதலால், இப்பாசுரத்தில் ‘நான் வந்து உன்னைக் கிட்டுவேனாக நீ பார்த்து வைத்த நாளைச் சொல்லாய்,’ என்கிறார் என்றபடியாம்-
—————-
கூவிக் கூவிக் கொடு வினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன்
மேவி அன்று ஆ நிரை காத்தவன் உலகம் எல்லாம்
தாவிய வம்மானை எங்கினித் தலைப் பெய்வனே –3-2-9-
அன்று சேரப் பெறாத நான் என்று சேர இருக்கிறேன் -சேராது ஒழி யில் இவ்வாத்மா முடிகை நிச்சிதம்இனி அவனுடைய ஈச்வரத்வம் விகலமாக வாகாதே புகுகிறது –
இனி ஆத்மாவதிகமாக அவன் திருவடிகளைச் சேருகை என்ற ஒரு பொருள் இல்லை என்று நசை அற்றுக் கூப்பிடுகிறார் –எல்லார் தலையிலும் திருவடிகளாம் படி சர்வ லோகங்களையும் அளந்த அன்று எம்மூலையிலே கிடந்தேன்-வம்மானை எங்கினித் தலைப் பெய்வனே-எல்லாரையும் அடிமை கொண்டவனை அந்த தூளி தானத்திலும் தப்பின நான் இனி எங்கே கிட்ட புகுகிறேன்-அவன் தான் வந்து அபகரித்த அன்று தப்பின நான் சாதன அனுஷ்டானம் பண்ணி எங்கே சென்று கிட்டப் புகுகிறேனோ -என்று நிராசர் ஆகிறார் –இதனால், ‘அவன் தானே வந்து உதவி செய்தவன்று தப்பின யான்,
ஒரு சாதன விசேஷத்தைப்-அனுஷ்டானத்தைப் பண்ணி எங்கே சென்று கிட்டப் புகுகிறேனோ!’ என்று நசையறுகிறார்-
—————–
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–3-9-10-
கால தத்வம் உள்ளதனையும் வேறு சிலருடைய கவியில் எனக்கு அந்வயம் உண்டாக தகுமோ-இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–கவியான எனக்கு இனி காலமுள்ளதனையும் மற்று ஒருவரைக் கவி பாடுகை தகுதியோ –அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத– ஏதத் சாம காயன் நாஸ்தே-என்று பாடப் புகுகிற நான் வேறு சிலர்க்கு தகு வேனோ -கவி ஆயினேற்கு மற்றொருவர் கவி ஏற்குமே?’ என்பதற்கு இரு வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்: முதற்பொருள், ‘இறைவனைப்
பாடுதற்கு அமைந்த புலவனாகிய யான் வேறு சிலரைப் பாடும் புலவனாதல் கூடுமோ?’ என்பது. இப்பொருளில் ‘கவி’ என்பது ஆழ்வாரைக் குறித்தது. இதனையே, ‘அவன் எதிர் சூழல் புக்கு’ என்று தொடங்கிச் சிலரைக் கவி பாடத் தகுமோ?’ என்பது முடிய
அருளிச்செய்கிறார்.இரண்டாவது பொருள், ‘அவனைப் பாடுகின்ற பாடல்களைக் கொண்டு வேறு சிலரைப் பாடுதல் கூடுமோ?’ என்பது. இப்பொருளில் ‘கவி’ என்பது,பாடல் அல்லது பிரபந்தம் என்பதனைக் குறிக்கும். இப்பொருளையே, ‘பலவாக உள்ள காலமெல்லாம்’ என்று
தொடங்கிக் ‘கவி பாடுகை போருமோ?’ என்பது முடிய அருளிச்செய்கிறார்.
————-
வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1-
ஆஸ்ரித விரோதி நிரசன ஏக ஸ்வ பாவனாய் இருந்த எம்பெருமானைத் திருப் பல்லாண்டு பாடிக் கொண்டு என் கைகளினுடைய விடாய் எல்லாம் தீரும் படி தொழுது திருவாய் மொழி படுக்கைக்கு பாக்யம் பண்ணினேன் -எனக்கு இனி ஒரு நாளும் ஒரு குறையில்லை-என்றே -சொல் மாலைகள் ஒருகால் பல்லாண்டு என்று விடுகை அன்றிக்கே-அத்தையே பலகாலும் சொல்லுகை – நம இத்யேவ வாதிந -என்கிறபடியே கைகள் ஆரத் தொழுது- வைகுந்தம் என்று காய் காட்டும் -தாயவனே என்று தடவும் என் கைகள் -என்னும் கைகளின் விடாய் தீர்க்கும்படி தொழுது சொல் மாலைகள் வாடாத மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே-
கிருஷ்ணா தி சிரஸா ஸ்வயம் -என்கிறபடியே சிரஸா வஹிக்கும் படியாக பாக்யம் பண்ணின எனக்கு இவர் கவி பாட்டு ஈஸ்வரனுக்கு அலங்காரமாக இருக்கையாலே மாலை என்கிறது-இவருக்கு நோன்பு ஆகிறது -மண்ணை இருந்து துழாவி -யில் விடாய் ஆதல்
பகவத் பிரசாதம் ஆதல் -தம்முடைய பேற்றுக்கு அடியாக மயர்வற மதி நலம் அருளினான் என்றார் இறே-பூர்வ க்ஷண வர்த்தி இறே ஒன்றுக்கு ஹேது ஆவது –
இனி என்ன குறை எழுமையுமே--இங்கே ஸ்வரூப அனுரூபமான கிஞ்சித் காரம் பண்ணின எனக்கு பின்பு ஒரு நாளும் ஒரு குறை இல்லை தேஹ சம்பந்தம் அற்றதில்லை -ஒரு தேச விசேஷம் சித்தித்தது இல்லை என்கிற குறைகள் ஒன்றும் இல்லை-இது எத்தனை குளிக்கு நிற்கும் என்ன-எழுமையுமே-என்றும் ஓக்க சப்த சப்த ச சப்த ச –தச பூர்வாந்த சாபரான் -என்றது இறே-
———–
கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே?–4-5-6-
ஈஸ்வரோஹம் என்று இருக்கிற சம்சாரத்தில் சேஷத்வம் ரசிக்கப் பெற்று ஸ்வரூப அநு ரூபமாக வாசிகமான அடிமை செய்யப் பெற்று வினை நோய்கள் கரியவே -என்று விரோதியும் கழிக்கப் பெற்ற எனக்கு-இன்று தொட்டும் இனி என்றுமே?– அடிமையை இழிந்த இன்று தொடங்கி-மேல் உள்ள காலம் எல்லாம் -அரியது இல்லை –
தீர்ப்பாரை யாம் இனி அடுத்து நிற்க இறே -இவர் வார்த்தை சொல்லுகிறது-பேற்றில் இழவு தோற்றாத படியான விஷயம் இறே-திருமாலே நானும் உனக்கு பழ அடியேன் -அடிமைத்தனம் அநாதி –இசையாமல் இழக்கிறோம் இசைவித்து தான் தாள் இணை அடிக்கீழ் இருத்தும் அம்மான் அன்றோ )
———–
நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல்மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனியாவர் நிகர் அகல் வானத்தே?–4-5-8-
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் என்று களிக்கிறவர்கள் தான் எனக்கு எதிரோ-த்ரிபாத் விபூதி என்னா-இங்கே இருந்து கவி சொல்ல வல்ல எனக்கு ஒத்தார்களோ
தெளி விசும்பு ஆகையால் அந்நிலம் தானே சொல்லுவிக்கும்-இருள் தரும் மா ஞாலம் ஆகையால் இந்நிலம் அத்தை தவிர்ப்பிக்கும்-சீதனையே தொழுவார் விண்ணுளா ரிலும் சீரியர் என்ன கடவது இறே
இதற்கு, ‘சர்வேசுவரன்,ஆழ்வீர்! நம்மை ஒரு கவி சொல்லும்,’ என்றால்,
அப்போதே கவி சொல்லிச் சமையும்படியாக வல்ல எனக்கு,’-ஆசு கவித்துவம்- என்கிறார் என்று முன்புள்ள முதலிகள் நிர்வஹிக்கும்படி.
அங்ஙனன்றிக்கே, பட்டர், ‘என்னாகியே, தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி’ என்கிறபடியே,-சர்வேசுவரன் கவி பாடினான். ஆகையாலே, கவி பாடத் தட்டு இல்லை;
அவன் அங்கீகரித்துத் திருக்கண்களாலே குளிர நோக்கி,
‘நீர் ஒரு கவி சொல்லும்,’ என்றால் ‘பிரீதியாலே உடை குலைப்படாமல்
தரித்து நின்று சொல்ல வல்லேனான எனக்கு’ என்று அருளிச்செய்வர்.முன்புள்ள முதலிகள் நிர்வாஹத்துக்குக் கருத்து, ‘ஆசு கவியாகக் கவி சொல்லிச் சமைக்க வல்லேனான எனக்கு’ என்பது.-பட்டர் நிர்வாஹத்திற்குக் கருத்து, ‘தரித்து நின்று சொல்ல வல்லேனான எனக்கு’ என்பது.-‘என்னாகியே’ என்ற பாசுரம், திருவாய். 7. 9 : 4.‘உடைகுலைப்படாதே’என்றது ‘பரவசப்படாமல்’ என்றபடி.
——————————-
வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தனை,
கூனற் சங்கத் தடக்கை யவனை, குடமாடியை,
வானக் கோனைக் கவிசொல்ல வல்லேற்கு இனி மாறுஉண்டோ?–4-5-9-
இப்படிப் பட்டவனை கவி சொல்ல வல்லேனுக்கு -அகல் வானம் என்று விசேஷிக்க வேணுமோ -உபய விபூதியிலும் எதிரில்லை-நித்ய ஸூ ரிகளுக்கும் அனுபவிக்கும் மேன்மையை யுடையனானவனை-வியாப்தியோடு அவதாரத்தோடு சேஷ்டிதத்தோடு பரத்வத்தோடு வாசியறக் கபளீ கரித்து-கவிசொல்ல வல்லேற்கு இனி மாறுஉண்டோ?–கவி சொல்ல வல்ல எனக்கு இனி எதிர் உண்டோ ஓர் ஓர் ஆகாரத்தை ஸ்துதிக்கப் புக்குப் பிற்காலிக்கும் உபய விபூதியிலும் எதிர் இல்லை என்று கருத்து –
——-
தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்!
ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்;
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த்
தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றதே.–4-6-1-
நம்மைப் போல் அன்றியே தரித்து நின்று இனி –இனி நோய் தீர்ப்பாரை நாம் எங்கனே தேடுவோம்-இந்நோய் தீர்ப்பாரை -என்னோடு உங்களோடு வாசியற
நோயின் அடி அறியாத எல்லாரும் கூட ஆராய என்றாலும் எங்கனே ஆராய்வோம் -இவள் பரிசரத்தில் பரிஹரிக்கைக்கு ஆள் இல்லை -மோஹிக்கைக்கு ஆள் உண்டு அத்தனை –இனி- கடல் வண்ணார் இது செய்தார் காப்பார் யார் என்று ஒளஷதமே ரோத ஹேதுவானால் பரிஹாரம் உண்டோ –நச்சு மா மருந்தம் இ றே மோஹிக்கப் பண்ணுகிறது-நிர்வாணம் பேஷஜம் பிஷக் –ஆனபின்பு-எங்ஙனம் நாடுதும் —எங்கனே தேடுவோம் –தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் –
இதற்கு, மூன்று படியாக அருளிச்செய்வர்;
‘தீர்ப்பாரை எங்ஙனம் நாடுதும்’ என்கையாலே, ‘நீங்கள் செய்கிறவை பரிஹாரம் அல்ல’ என்று அவற்றை விலக்குவதிலே தாத்பரியம்;
‘என்னை?’ எனின், இவர்கள், நோயினை நீக்குவதற்கு வேண்டிய உபாயங்களைச் செய்து கொண்டிருக்கும் போது
‘தீர்ப்பாரை எங்கே தேடுவோம்’ என்று கூறினால், இவை பரிஹாரம் அல்ல என்பது தானே போதருமே அன்றோ?
அங்ஙன் அன்றிக்கே,
‘இவள் ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போலே ஆக்கிக்கொண்டே அன்றோ இருப்பது?
ஆதலால், இவளோடு ஒக்க மோஹிப்பவர்கள் கிடைப்பார்களத்தனை போக்கித் தீர்ப்பாரை எங்கே தேடுவோம்?’ என்னுதல்;
அன்றிக்கே,
‘தோழியாகிய தானும் இப்போது தீர்ப்பாரை ஆராயா நிற்கிறாள் என்று தோற்றி இருந்தது’ என்னுதல்.
அன்றிக்கே,
‘கடல்வண்ணர் இது செய்தார்; காப்பார் ஆர்?’ என்கிறபடியே, -சொல் என்றே கட்டுவிச்சி சொன்னாள் –
‘மருந்தே நோய் நீங்குதற்குத் தடையாய் இருந்தால், பரிஹாரம் உண்டோ?’ ‘நச்சு மா மருந்த’மேயன்றோ தடையாகிறது?
‘ஆனந்தமாக இருப்பவர், மருந்தாக இருப்பவர், மருத்துவராக இருப்பவர்’–நிர்வாணம் பேஷஜம் பிஷக் –மருந்தே அபத்யம்-
என்கிறவன் ஆயிற்று விரோதி ஆகிறான்’ என்பாள், ‘இனி’ என்கிறாள்,’ என்னுதல்.
———————-
மறுக்கி வல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர்;
அறப் பொருளை அறிந்து ஓரார்; இவை என்ன உலகியற்கை!
வெறித் துளவ முடியானே! வினையேனே உனக்கு அடிமை
அறக் கொண்டாய் இனி என்னாரமுதே!கூய் அருளாயே.–4-9-6-
அடிமை கொண்ட பின்பு.-னக்கு எல்லை இல்லாத இனியன் ஆனவனே!-உனக்கே சேஷமாக்கிக் கொண்ட பின்பு இனி என் என்றுமாம் -அப்போது உன்னைக் காட்டி சம்சாரிகள் நோவை மீட்க ஒண்ணாதான பின்பு இவர்களுக்கு சோகித்து பிரயோஜனம் என் என்கை-என் ஆரமுதே -உன் போக்யதையை எனக்கு காட்டினவனே-நீ நிரதிசய போக்யனாய் இருக்க நான் இவர்கள் நடுவே இருக்கிற இத்தால் என்ன பிரயோஜனம் உண்டு -உன் திருவடிகளிலே அழைத்துக் கொண்டு அருள வேணும் –இனி என் – அவர்கள் ஒரு படியாலும் பேற்றிலே நெஞ்சு வையாரான பின்பு, நான் அவர்கள் கேட்டிற்குக் கரைந்ததற்குப் பிரயோஜனம் என்? அதனை விடலாகாதே?’-என்னை முதல் அங்கே அழைத்துக் கொண்டருள வேண்டும்,’
——–
கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?
ஐயோ! கண்ண பிராஅன்! அறையோ! இனிப் போனாலே.–5-1-1-
ஓர் இடைச்சி கையிலே கட்டுண்ட தசையில் அந்த பந்தத்தை தப்ப விரகு அறியாதே சக்தியும் இன்றிக்கே இருந்த நீயோ போகப் புகுகிறாய்-கண்ணபிரான் என்று சம்புத்தி -இனிப்போனால் அறையோவறை -அனுக்ரஹ சீலனான உனக்கும் -மெய் என்று பேரிடலாவதொரு பொய் என் பக்கலிலே உண்டான பின்பு போகலாமோ-மித்ர பாவம் பெற்றால் -நத்யஜேயம் என்னும் உனக்குப் போகலாமோ -ஸூ க்ரீவ மஹா ராஜரைப் போலே அறை கூவுகிறார் –பகவானுடைய கிருபையைப் பக்க பலமாகக் கொண்டு ஈச்வரனுடைய ஸ்வாதந்தரியத்தை அறைகூவுகிறார்.-
———–
உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே –5-1-3-
இப்படி என்னைத் திருத்துக்கைக்காக ஷீரார்ணவத்திலே கண் வளர்ந்து அருளினவனே உன் கிருஷி பலித்த பின்பு நித்ய அவசர பிரதீஷனாய் நிரதிசய போக்யனான உன்னை விட்டு நச்வரமாய் துராராதமான எத்தைக் கைக் கொள்ளுவேன் –பரமபதத்தை விட்டு ஷீராப்தியிலே என்னுடைய ரக்ஷண அர்த்தமாக -அவசர பிரதீஷனனாய் கொண்டு கண் வளர்ந்து அருளுகிறவனே-சத்ருசமான பரமபதத்தை விட்டு -விசத்ருசமான சம்சாரத்திலே என்னுடைய ரக்ஷணத்திலே அவசர பிரதீஷனான பின்பு-முன்னும் பின்னும் பக்க வாட்டிலும் நின்று -அவசர ப்ரதீஷனனாக நீ இருக்க -நான் விட்ட வன்றும் என்னை விட மாட்டாத உன்னை ஒழிய பச்சை கொண்டு பல வேளையிலே நிஷ் பிரயோஜனமாக விஷயங்களை பற்றவோ -ஆராதிக்கும் இடத்தில் வருந்தி ஆராதித்தாதிலும் கிடைப்பது ஒன்றும் இல்லாதவர்களை-துராரதரைப் பற்றவோ –
———————–
மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித் தொழுஉம்
மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார்
சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே.–5-1-8- – நாலாயி:3348/4
பூர்வ க்ஷணத்தில் அறியாதே இருக்க -இங்கனே பலித்துக் கொடு நின்றேன்
அடியேன் மனத்தே மன்னினார்–சம்பந்தம் அடியாக மனசிலே செறிந்தார்-போக்யைகளான ஸ்த்ரீகளும் -அதுக்கு உறுப்பான நிரவதிக சம்பத்தும் -குணவான்களான புத்திரர்களும் பரிவுடைய தாயும் தந்தையும் ஆவார் அவரே -க்லேசகரமான-அவ்வோ பந்துக்களாலே க்லேசப் பட வேண்டா -மாதா பிதா பிராதா -அஹம்தாவத்-யானோ தசரத சக்கரவர்த்தியிடத்தில் தகப்பன் என்ற முறையைப் பார்க்கிறேன் இல்லை;
எனக்கு ஸ்ரீ ராமபிரானே தமையனும் சுவாமியும் உறவினர்களும் தமப்பனுமாக இருக்கிறார்” என்றார் இளைய பெருமாள்.-அஹம் தாவத் மஹாராஜே பித்ருத்வம் நோபல க்ஷயே பிராதா பர்த்தாச பந்துஸ்ச பிதாச மம ராகவ:”-அயோத். 58 : 31.-நற்றாதை நீ தனிநாயகன் நீ வயிற்றிற் பெற்றாயும் நீயே பிறரில்லை பிறர்க்கு நல்கக்
கற்றா யிது காணுதி இன்றெனக் கை மறித்தான் முற்றா மதியம் மிலைந்தான் முனிந்தானை அனான்.- என்பது கம்ப ராமாயணம்.
————–
என் செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி நம்மை
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறைகொண்டான்
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலி வெய்தி
என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப்பூர்ந்தவே.–5-3-2- நாலாயி:3364/1
இனி -என்று தன் வடிவைக் காட்டுகிறாள் -மேல் அடங்க இனி என்கிற இதன் விவரணம்
தோழீ -இப்படி அவகாஹிப்பதற்கு முன்னே மீட்க வேண்டாவோ –
நம்மை -நிறத்தில் வேறுபாடு அவளுக்கும் ஒத்து இருக்கும் படி -ஏஹம் துக்கம் ஸூ கஞ்ச சவ்-வாயாலே மடல் எடுக்க வேண்டா என்கிறாள் அத்தனை வைவர்ணயம் இருவருக்கும் ஒத்து இருக்கும் –யாமுடைத் துணை என்னும் தோழி மாறும் எம்மின் முன் அவனுக்கு மாய்வராலோ-எனக்கு அவன் வேணும் என்னும் அளவு இறே இவளுக்கு உள்ளது –இவள் நோவு போக வேணும் -என்றும் இருவரும் சேர வேணும் என்றும் இரட்டித்து இறே அவள் நோய் இருப்பது –ததா ஸீன் நிஷ் பிரபோத்த்யர்த்தம் ராஹு க்ரஸ்த இவாம் சுமான்-என்று பெருமாளின் காட்டில் ஒழி மழுங்கினார் இறே மஹா ராஜர்-முதலடியில் உள்ள ‘இனி’ என்ற சொல்லின் பொருளைப் பாசுரத்தில் மேல் உள்ள மூன்று அடிகளும் விரிக்கின்றன.
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான், முன் செய்ய மாமை இழந்து மேனி மெலிவு எய்தி என் செய்ய வாயும் கரும் கண்ணும் பயப்பு ஊர்ந்த; ஊரவர் கவ்வை இனி நம்மை என் செய்யும் தோழீ என்று-
————
அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்!
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே.–5-3-6-
என்னை -தாயார் பிழையாள்-ஊரார் பழி சொல்லுவார்கள் கிடாய் -என்ன மீளாத என்னை –
இனி உமக்கு ஆசை இல்லை-இவ்விஷயத்தில் மூட்டுகை அன்றிக்கே-மீட்கப் பார்க்கில் பின்பு உங்களுக்கு என் பக்கல் நசை இல்லை –இனி-உங்கள் சொல்லும் கேளாதபடி கைகழிந்த பின்-இது பழி’ என்று மீட்கப் பார்க்கிற அளவிலே நிற்கிற உங்களுக்கு.
ஆசை இல்லை-இனி என் பக்கல் உங்களுக்கு நசை அற அமையும்.-
———–
ஆவி காப்பார் இனியார்? ஆழ்கடல் மண் விண் மூடி
மா விகாரமாய் ஓர் வல்லிரவாய் நீண்டதால்
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்
பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங் கல்லையே.–5-4-2-
கண்ணனும் வாரான், நெஞ்சமே! நீயும் பாங்கு அல்லை – இனி-ஆவி காப்பார் யார் –-உதவுமவன் உதவுகிறிலன் -நெஞ்சும் பாங்கு ஆகிறது இல்லை -இனி காப்பார் யார் –
————-
வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–5-4-9–
இனி மநோ துக்கத்தை போக்குவார் யார் -ஆந்தரமான தமஸை போக்கும் போது அவனே வேண்டாவோ -பாஹ்ய தமஸை இறே ஆதித்யன் போக்குவது -அதனைப் போக்கும்போது நிலவனுமாய் அந்தரங்கமானவனுமே வேணுமே.–விலக்ஷண விஷயத்தை பிரிந்தால் உள்ளதொன்று இது -உருகி தர்மி லாபமும் பிறவாதே -தரிக்கவும் பெறாதே யுருகா நிற்கும் அத்தனை –
————
நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன் ஆகிலும் இனி உன்னை விட்டு ஒன்றும் ஆற்ற கிற்கின்றிலேன் –– நாலாயி:3407/1
இங்கனம் இருந்ததே யாகிலும் -சாதனா அனுஷ்டானத்தை பண்ணி பலம் தாழ்ந்தாரை போலே பதறா நின்றேன் -ஆற்றாமை அன்றோ பக்தி யாகிறது –பக்தி இல்லை என்பான் என் என்னில் -கர்ம ஞான ஸஹ க்ருதையாய் சாஸ்திர சித்தையான நூல் பிடித்த பக்தி இல்லை -அவனை ஒழிய செல்லாமை யுண்டு என்கிறார் –அத்தை தாம் சாதனமாக நினைத்து இரார் இறே-இனி -என் பக்கலில் முதல் உண்டான அன்று -அது தலைக் கட்டும் தனையும் ஆறி இருக்கலாம் -அது அன்றிக்கே நீயே உபாயமான பின்பு விளம்ப ஹேது யுண்டாய் ஆறி இருக்கிறேனோ-இனி உன் திருக் குணங்களில் அவகாஹித்த பின்பு ஒரு க்ஷணமும் ஆறி இருக்க ஷமன் ஆகிறிலன் -உன் பக்கல் உபாய பாவம் அசித்தமாய் ஆறி இருக்கிறேனோ -என் பக்கல் ஆகிஞ்சன்யம் அசித்தமாய் ஆறி இருக்கிறேனோ -என் சத்தைக்கு நான் ஹேது பூதனாம் அன்று உபாயத்திலும் எனக்கு அதிகாரம் உண்டு -ஸ்வ ரக்ஷணத்தில் பிராப்தி இல்லாத ஸ்வரூப ஞானமும் புருஷார்த்தத்தில் ருசியும் ஹிதாம்சத்திலே வேண்டுவது -ஆனபின்பு ஆறி இருக்க போமோ என்கை –
இனி-உன்னையும் அறியாதே என்னையும் அறியாதே இருந்த அன்று இழக்க அமையாதோ,
உன் நிறைவும் என் குறைவும் அறிந்த இன்றும் இழக்க வேண்டுமோ?
ஒருவன் கையிலே சோறும் உண்டாய் அவன் இடுவானுமானால்,-காருணிகனாயும் இருந்து –ஒருவனுக்குச் சோறும் இன்றிக்கே பசியனும் ஆனால் இழக்க வேணுமோ?
இனி –என் கையிலேயும் ஒன்று உண்டாய் அது சமையும் தனையும் ஆறி இருக்கிறேனோ.
ஸ்வரூபத்தை உபாயத்திலே செலவு எழுதிக் கைவிடப் பார்க்கில் பார்க்குமித்தனை.
அநாதி காலம் மெய் மறந்து இழந்த காலம் போராதோ, நான் மெய்யாக இசைந்த இன்றும் இழக்க வேண்டுமோ?(உனக்கு சரீரம் என்று அறிந்த பின்பு–மெய் உண்மை என்றும் சரீரம் என்றும் சாடு)
—————
அரியேறே! என்னம் பொற் சுடரே! செங்கட் கருமுகிலே!
எரியேய் பவளக்குன்றே! நால்தோள் எந்தாய்! உனதருளே
பிரியா அடிமை என்னைக் கொண்டாய்! குடந்தைத் திருமாலே!
தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே.–5-8-7-
அடிமை கொள்ளுகைக்காக பிராட்டியோடே கூட திருக் குடந்தையில் வந்து காண் வளர்ந்து அருளுகிறவனே -ஒரு தேச விசேஷத்தில் என்ன வேண்டாத படி -தேசத்தில் குறை இல்லை -ஸ்ரீ யபதி யாகையாலே ப்ராப்யத்தில் குறையில்லை -பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா -என்ற இளைய பெருமாளை போலே பற்றுகிறார் –மாதா பிதாக்கள் சந்நிஹிதரான பின்பு -மாதா பிதாக்கள் அசந்நிதியில் பசி பொறுக்கலாம்-சந்நிதி யுண்டானாலும் பசி பொறுக்கப் போகாது இறே -ஜென்ம சம்பந்தம் அற்று உன் திருவடிகளை பெறப் பற்றாது -முலையைக் கொடுத்து சிகித்சிப்பாரை போலே திருவடிகளைத் தந்து விரோதிகளை போக்க வேணும் –ராஜ புத்திரன் சிறையில் இருந்தால் முடி வைத்து சிறை விடுவிப்பாரைப் போலே-
திருப்பாவை அனுசந்தானம் செய்து கொண்டே சிகிச்சை பண்ணுவார்களாம் பட்டரை-
———–
மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான தஞ்சுவன்
மன்னுடை இலங்கை அரண்காய்ந்த மாயவனே!
உன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனியது கொண்டு செய்வதென்?
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!–6-2-1-
நான் அறிந்த பின்பு அத்தை முன்னிட்டு என் பக்கல் பிரயோஜனம் இல்லை –அபூர்வைகள் பக்கலிலே போ என்ன -கைப் பட்டத்தை செய்யலாவது இல்லை இறே என்று பந்தையும் கழலையும் கொண்டு போகிறோம் என்று போகப் புக்கான்-சாத்தியாம்சத்துக்கு ஒரு பிரயோஜனம் கண்டிலோமே’ என்கிறார்கள். அவனும் ஒன்றை –பந்து கழல் -நினைத்து, ‘ஆகில் எனக்குச் ‘சாத்தியாம்சம் தான் இல்லையோ?’ என்று கைப்பட்ட பந்தையும் கழலையும் போர விரும்பப் புக்கான்-
———————
ஆலி னீளிலை ஏழுலகு முண்டு அன்று நீ கிடந்தாய்; உன்மாயங்கள்
மேலை வானவரும் அறியார்; இனி எம்பரமே?
வேலி னேர்தடங்கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று
காலி மேய்க்க வல்லாய்! எம்மை நீ கழறேலே.–6-2-4-
இப்படி ஒருத்தருக்கும் நிலம் அல்லாத கிரித்ருமத்தை அபலைகளான நாங்கள் அறியவோ -நித்திய ஸூரிகளோடு ஒக்கத் தங்களையும் ஒன்று படுத்திப் பேசுகிறார்கள்.
அவர்களுக்கு நிலம் அல்லாதது எங்களால் அளவிடப் போமோ?
————
நிகரில் மல்லரைச் செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடுங்கைச்
சிகர மாகளிறு அட்டதும் இவைபோல்வனவும் பிறவும்
புகர்கொள் சோதிப் பிரான்தன் செய்கை நினைந்து புலம்பி என்றும்
நுகர வைகல் வைகப்பெற்றேன் எனக் கென்னினி நோவதுவே–6-4-3-
நுகர வைகல் வைகப்பெற்றேன் -அனுபவத்தோடு காலம் கழிய பெற்றேன் என்னுதல்-அனுபவிக்கலாம் படி காலம் நெடுக்கப் பெற்றேன் என்னுதல்
எனக் கென்னினி நோவதுவே--ப்ரீதி பிரேரிதனாய் அனுபவிக்கிற எனக்கு இப்படி காலம் நித்தியமான பின்பு -விஸ்லேஷம் ஆகிற நோவு உண்டோ-காலம் நெடுகுவது குறுகுவது ஆகாத இடந் தேடி அநுபவிக்கப் பெற்றிலேன்’ என்கிற அதிருப்தி யுண்டோ எனக்கு என்கிறார்.
அன்றிக்கே,-அவனுக்கு வரும் நோவன்றோ, இவர்க்கு நோவாவது; அது கழியப் பெற்ற தன்றோ என்னுதல்.-இவர் நோவு போக்கும் அவனுக்கு வரும் நோவன்றோ,-சம்சார ரஷண்ம் -பலிக்காததே அவனது நோவு –ரஷிக்க இசைவதே அவன் நோய்க்கு பரிகாரம் –
இவர்க்கு நோவாவது: அது போகவே இவர்க்கு நோவு போயிற்றதாமன்றோ.
உயிருக்கு வரும் நோவு உடம்புக்கு வரும் நோவாமன்றோ.
——
நோவ ஆய்ச்சி உரலோ டார்க்க இரங்கிற்றும் வஞ்சப்பெண்ணைச்
சாவப் பாலுண்டதும் ஊர் சகட மிறச் சாடியதும்
தேவக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனங்குழைந்து
மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே?–6-4-4-
அவன் சேஷ்டிதங்களை அனுபவித்து நெஞ்சு நெகிழ்ந்து இச் சேஷ்டிதங்களோடே பொருந்தும்படி காலங்களைக் கூடப் பெற்றேன் -இனி எனக்கு வேண்டுவது என்-இவ்வனுபவத்தோடே காலம் செல்லப் பெற்ற எனக்கு அவாப்தவ்யம் உண்டோ –-அவனுடைய செயல்களை நினைத்து அகவாய் உடை குலைப்பட்டு வேறு பிரயோஜனம் இல்லாதவனாய்க் கொண்டு காலம் போக்கப் பெற்றேன்.
நெஞ்சு நெகிழ்ந்து செயல்களோடே பொருந்தும்படி காலங்களைக் கூடப் பெற்றேன்.
எனக்கு என் இனி வேண்டுவது – இனி அடையத் தக்கது ஒன்று இல்லை என்கிறார்.-
மனப்பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான்பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான்தன சீற்றத்தினை முடிக்கும்
புனத்துழாய்முடி மாலை மார்பன்என்னப்பன்தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே.–6-4-7-
இடைவிடாமல் அநுஸந்திக்கும் நெஞ்சு உடையேன் –காரணம் பந்த மோஷாயா -என்கிற பொதுமை தவிர்ந்து அசாதாரணமான நெஞ்சை பெற்றேன் – பஞ்சஸாத் கோடி விஸ்தீரணையான பூமியில் எனக்கு எதிர் யார்-பூமி பரப்பை யுடைத்து என்னா, எனக்கு ஒப்பாவார் உளரோ?-பரமபதத்தை ஒன்றாக நினைக்கின்றிலர்; தம்மைப் போலே கவி பாடி அடிமை செய்வார் இல்லாமையாலே, சம்சாரத்தே இருந்து கவி பாடி அடிமை செய்யப் பெற்ற எனக்கு, பூமியில் ஓர் எதிர் உண்டோ? என்கிறார்.-
—————
நீணிலத்தொடு வான்வியப்ப நிறை பெரும் போர்கள்செய்து
வாண னாயிரம் தோள்துணித்ததும் உட்பட மற்றும்பல
மாணியாய்நிலம் கொண்ட மாயன் என்னப்பன்தன் மாயங்களே
காணும் நெஞ்சுடையேன் எனக்கினி என்ன கலக்க முண்டே?–6-4-8-
அநுஸந்திக்கும் நெஞ்சு -நெஞ்சு என்னும் உட் கண் -என்ன கடவது இறே-
அங்கனம் அன்றியே -முடியானே யில் கரணங்களை யுடையாராகையாலே மனஸ்ஸூ சஷூர் இந்திரிய விருத்தியும் லபிக்க வற்றான படி சொல்லுகிறது -என்று பிள்ளான் பணிக்கும் –இந்த விஷயத்தைக் காணப் பெற்றிலோம்’ என்கிற கலக்கமும்-இதர தேவதைகளை ரக்ஷகர் என்கிற கலக்கமும் -ஈஸ்வரனுடைய ரக்ஷணத்தில் அதி சங்கை பண்ணும் கலக்கமும் -தனக்குத் தானே கடவன் என்கிற கலக்கமும் இல்லை –என் நான் செய்கேன் -யாரே களை கண் -என்னை என் செய்கின்றாய் போலே – உபாய அம்சத்தில் கண் வைக்காமல் பிராப்ய அம்சத்தில் கண் வைத்து கைங்கர்யமே யாத்ரையாக போக வேண்டும் –
————-
துவளில்மா மணி மாடமோங்கு தொலைவில்லி மங்கலம்தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக்காசை இல்லை விடுமினோ;
தவள ஒண்சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண்மலர்க் கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமே.–6-5-1-
தொலைவில்லி மங்கலம்தொழும் இவளை –அழும் தொழும்-இளைய பெருமாளுக்கு சாம்யம் -நாயனார்பர வியூஹ விபவங்களிலே தொழுதவள் அல்லள்-அது தன்னிலும் உள்ளு நிற்கிற அரவிந்த லோசன் அளவாகில் அன்றோ மீட்கலாவது-அவனோடே சம்பந்தம் உள்ள இடம் எங்கும் புக்கு அவகாஹித்தவளை மீட்கப் போமோ -விஷயம் பரோஷமாய்-எட்டாது கான் என்று மீட்கவோ -ப்ரத்யக்ஷ விஷயம் பரிச்சின்னம் என்று மீட்கவோ-தொழும் இவளை -ஞானா நந்தங்களுக்கு முன்னே நிரூபகம் இ றே பாரதந்தர்யம் -தொழுகையே நிரூபகமாய் இருக்கிறவளை -தாஸோஹம் வாஸூ தேவஸ்ய -ப்ராஞ்சலீம் ப்ரஹவமாஸீனம் -ஒன்றை உருகு பதத்தில் பிடித்தால் வலித்தாலும் அப்படியே உருவ நிற்கும் ஆயிற்று
நீர் -இவளுடைய ப்ராவண்யத்தில் சாதனா புத்தி பண்ணுகிற நீங்கள்
இனி -இவளுக்கு இவ் ஊரைக் காட்டின பின்பு
அன்னைமீர்!-ப்ராப்த யவ்வனை யானாலும் -பெற்றோம் என்கிற ப்ராப்தியைக் கொண்டு மீட்கப் போமோ –அவ்வருகு பட்டாலும் நியந்தரு தையைக் கொண்டு மீட்கவோ
தொழுகை தேக யாத்திரை யாதற்கு முன்னே யன்றோ மீட்கப் பார்க்க வேண்டும் என்பாள்
‘இனி’ என்கிறாள்.
—————-
பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம்புட்டில்கள்
யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும்என்
பாவை போய்இனித் தண்பழனத் திருக்கோளூர்க்கே
கோவைவாய் துடிப்ப மழைக்கண்ணொடு என்செய்யுங்கொலோ?–6-7-3-
லீலா உபகரண ரசமும் திரு நாம மேயான இருப்பை விட்டு -அங்கு என்ன ஏற்றகத்துக்குப் போனாள்-என் புத்திக்கு வசமான செயல்களை யுடையவள் கண்டீர் என்னை ஒழியப் புறப்பட்டுப் போனாள்.
அன்றிக்கே,
நிருபாதிகமான பெண்மையை யுடையவள் என்னலுமாம். –
மணி வல்லிப் பேச்சு வந்தேறி அல்ல –
விளையாட்டுப் பொருள்களால் கொள்ளும் காரியமும் அவனே யாம்படியான இந்த ஈடுபாட்டிற்கு மேலே
அங்குப் போய்ப் பெறுவது என்னாகப் போனாளோ? என்பாள் ‘இனிப் போய்’ என்கிறாள்.
———
மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என்சிறுத்
தேவி போய் இனித் தன் திருமால் திருக் கோளூரில்
பூவியல் பொழிலும் தடமும் அவன்கோயிலும் கண்டு
ஆவிஉள் குளிர எங்ஙனே உகக்குங்கொல் இன்றே?–6-7-5-
இதில் காட்டில் அங்கு என்ன -ஏற்றகம் உண்டாய் போனாள் -தத் தஸ்ய சத்ருசம் பவேத் என்று இருக்க மாட்டிற்று இலள் -தனக்கு சர்வ ஸ்வமான ஸ்ரீ யபதி கண் வளர்ந்து அருளுகிற வூரிலே -பிராட்டியோபாதி தன் பக்கல் வ்யாமுக்தனானவன் வர்த்திக்கிற வூரிலே –இனிப் போய் –வேறே சில பொருள்கள் கொண்டு போது போக்க வேண்டும் பருவத்திலே, அவற்றை விடும் படியான பாகம் பிறந்த இதற்கு மேலே ஓர் ஏற்றஃகம்-அதிசயம் உண்டாகப் போனாளோ?-சம்சாரத்தை விட்டுப் பரமபதத்துக்குச் சென்ற முக்தனுக்குப் பிறந்த ஞானம்,
இவளுக்கு இங்கே இருக்கச் செய்தே பிறந்ததானால், இனி அங்கே சென்று அநுபவிப்பது ஒன்று உண்டோ? என்றபடி.-
—————
இன்று எனக்கு உதவாது அகன்ற இளமான் இனி போய் ––6-7-6– நாலாயி:3522/1
பெற்றோரை விடும் படி இவ்விஷயத்தில் அவகாஹித்த இதுக்கு மேலே என்ன ஏற்றம் பெறப் போனாள் -பெற்றோரை விட்டு பற்றுமது இ றே ப்ராவண்யத்துக்கு எல்லை-வந்தேறியைக் கை விட்டால் எப்பொழுதும் சித்தமாயிருப்பதற்குச் செய்ய வேண்டுவது ஒன்று உண்டோ?
ஸ்வதஸ் சித்தம் பகவத் கைங்கர்யம் -தேடித் போக வேண்டாம் என்றபடி –
————–
அல்லும் நன் பகலும் நெடுமால் என்று அழைத்து இனி போய் –6-7-7-– நாலாயி:3523/2-
அஹோராத்ரம் அவன் வ்யாமோஹம் அனுபவிக்கிற இவ்விடத்தை விட்டு என்ன ஏற்றம் பெறப் போனாள் -யயவ்ச காசித் ப்ரேமாந்தா-என்கிறபடியே இருட்சி கை கொடுக்க இறே போயிற்று-அவன் தன் பக்கல் செய்யும் வியாமோகத்தைச் சொல்லிக் கூப்பிடும் இதற்கு மேலே தன் வியாமோகம் காட்டப் போனாளே.
அன்றிக்கே, கண்ணும் தோற்றாமல் நெஞ்சும் பறியுண்டிருக்கும் இதற்கு மேலே, இனிப் போய், வேறே ஒன்று உண்டோ அநுபவிப்பது?
———-
ஈரியாய் இருப்பாள் இது எல்லாம் கிடக்க இனி போய் —6-7-9-– நாலாயி:3525/2-
ஈரியா யிருப்பாள் -கிருஷ்ணனுக்கு என்றால் மேல் ஒன்றும் சொல்ல மாட்டாதே -அவன் குணங்களை அனுசந்தித்து நீராய் இரா நின்றாள் -ஈரித்து இருக்கும் -ஆர்த்த ஹ்ருதையாய் இருக்கும்-இதெல்லாம் கிடக்க-வி லக்ஷண பதார்த்த தரிசனத்தில் அவனுக்கு என்கை -அவன் குண அனுசந்தானத்தாலே விக்ருதியாகை -இவற்றை அளவிறந்த சம்பத்தாக நினைத்து இருக்கிறாள் இவள் -கண்டதை மமேதம் என்று இராதே அவனுக்கு என்று இருக்கை இ றே சம்பத்து –இனிப் போய்ச்-பாவ சுத்தியால் துஷ்டனாம் அவனுக்கு ஓன்று செய்யப் புறப்பட்டு போனாளோ-இத்தலையில் உள்ளது ஓன்று இல்லை -அவனுக்கு வேண்டுவது ஓன்று இல்லை –இனி மேல் –‘தனக்கு’ என்கிற எண்ணத்தின் அளவிலே உண்டறுக்க மாட்டாதவனுக்கு –திருப்தி படுத்தல் –ஒன்று கொடுத்துக் குறை தீரப் போனாளே.“தே பூயிஷ்டாம்-உனக்கு அதிகமான ‘நம’ என்ற சொல்லைச் சொல்லுகிறோம்” என்றே அன்றோ அவன் இருப்பது.அவன் படியை நினைத்தால் இவளுக்கு இங்கே இருக்க அமையாதோ?
———
நினைக்கிலேன் தெய்வங்காள் நெடும் கண் இள_மான் இனி போய் – -6-7-10–நாலாயி:3526/1
புகுந்த விருத்தாந்தத்தை நினைக்கில் ஆழம் காலாய் இரா நின்றது -தன்னோடு ஓக்க உறங்காமையாலே தெய்வங்களைக் கூட்டிக் கொள்கிறாள்-நெடுங்கண்– போக்தாக்கள் அளவில்லாத கண் –இளமான்-தன் கையில் பிரஹ்மாஸ்திரம் என்று அறியாத பருவம்
இனிப்போய்-சர்ப்ப யாகத்தில் போலே அவன் தான் வந்து விழும் படியான கண்ணைப் படைத்த இவள் -தான் போகை மிகை என்கை –விழுக்காடு அறியாமையாலே புறப்பட்டுப் போனாளத்தனை கண்டீர்! இந்தக் கண்ணுக்கு இலக்கானவர்கள் சர்ப்ப யாகத்தில் சர்ப்பங்கள் சுருண்டு வந்து விழுமாறு போலே, தந்தாம் முதன்மையோடே வந்து விழவேணும் கண்டீர்!-இனிப் போய் –-யார் செய்யக் கூடியதை யார் தான் செய்கிறார்?
ஸ்வரூப ஞானம் உடைய -கண் படைப்பாளும் தானாய்ப் -புறப்பட்டுப் போவாளும் தானாவதே!-இத்தலை செல்லாதிருத்தற்குச் ஸ்வரூப ஞானமே அமையுமே யன்றோ.-ததேக உபாயத்வம் – பாரதந்த்ர்ய ஞானம் கண் உடையவள்-போகலாமோ -தாய் –
நெடும் கண் -ஸ்வ யத்ன நிவர்த்தகம் அத்யந்த பாரதந்த்ர்ய ஞானம் -இவள் கண் அழகில் அன்றோ அவன் ஈடுபடுவது
————————
ஆர் மருந்து இனி ஆகுவார் அடல் ஆழி ஏந்தி அசுரர் வன் குலம் – நாலாயி:3565/3
ரக்ஷகனான நீ உபேக்ஷித்தால் யார் மருந்தாகுவார் -பிறர் அல்லாத அற்றைக்கு நீ துணை என்று இருக்கலாம் -நீ கை விட்டால் நோக்கக் கடவார் உண்டோ -மருந்தாவது எது என்னாதே யார் என்கிறது ஒரு பரம சேதனன் மருந்து ஆவான் என்று இருக்கிறார் -நிர்வாணம் -பேஷஜாம் பிஷக்-என் இடையாட்டம் பிறரைக்கொண்டு காரியம் இல்லை: நான் நோவுபடாநின்றேன்.-நீ கை வாங்கினாய். ஆன பின்பு எனக்கு ஒரு இரட்சகர் உளரோ?
நானும் பிறரும் இல்லாத அன்று நீ உண்டு: நீ விட்ட அன்று யார் உண்டு?-மருந்தும் பொருளும் அமுதமும் அவனே அன்றோ இவர்க்கு?-மூன்றாந்திருவந்தாதி, 4.-
அநிஷ்டம் -சம்சாரம் -தொலைக்கும் -இஷ்டமான மோக்ஷம் கொடுக்கும் பொருளும் –போக்யமான அனுபவமும் நீயே-
————-
நிலம் முதல் இனி எ உலகுக்கும் நிற்பன செல்வன என பொருள் –7-1-9- நாலாயி:3569/3-
-பூமி தொடக்கமாக மற்றும் எல்லா லோகங்களுக்கும் ஸ்தாவர ஜங்கமாத்மகமாய் உள்ள அநேக பதார்த்தங்களையும் முதலிலே படைத்தாய் -ஸ்ருஷ்டிக்கு பிரயோஜனம் மோஷமான பின்பு அது தான் பெற வேண்டாவோ என்கை-
———-
உழந்து இனி யாரைக்கொண்டு என் உசாகோ ஓத கடல் ஒலி போல எங்கும் – நாலாயி:3586/2
வருந்தி -இனி என் நெஞ்சை இழந்த பின்பு –வருந்தினால் தான் வார்த்தை கேட்ப்பார் உண்டோ -கேட்ப்பார் உண்டால் தான் என்ன வார்த்தை சொல்லுவது-என் நெஞ்சினை இழந்த பின்பு இனி, துக்கப்பட்டு ஆரோடே கூட எதனைச் சொல்லி நான் காலம்.-
—————
முனிந்து இனி என் செய்தீர் அன்னைமீர்காள் முன்னி அவன் வந்து வீற்றிருந்த – நாலாயி:3587/3
கிருஷ்ணனுடைய பும்ஸத்வத்துக்கு என் ஸ்த்ரீத்வத்தை தோற்றேன் -விரோதி வர்க்கத்தை அழியச் செய்த ஆண் பிள்ளைத் தனத்தை காட்டி ஒரு காலும் அழியாத ஸ்த்ரீத்வத்தை அழித்தான்-அவன் அவ்வபதானம் செய்வதற்கு முன்பே மீட்கப் பார்க்க வேண்டாவோ-
———–
ஆரை இனி இங்கு உடையம் தோழீ என் நெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை – நாலாயி:3589/3
பிடித்தாரைக் கொண்டு வ்ருத்த கீர்த்தனம் பண்ணி தரிக்க வேண்டாவோ என்ன -நீ என் தசையைக் கண்டு சிதிலை ஆகா நின்றாய் -தாய்மார் ஹிதம் சொல்லி மீட்க்கத் தேடா நின்றார்கள் -இனி பழி சொல்லுவாரை கொண்டு போது போக்கும் அத்தனை இறே -போது போக்குகைக்கு என் நெஞ்சை அழைத்து தருவாரும் இல்லை -அத்தை அழைத்து தரும் போது நெஞ்சிலும் அண்ணியராக வேணும் இறே –இனி யாரைக் கொண்டு என்ன புருஷார்த்தத்தை சாதிப்பது –ஆரை இனிக் கொண்டு என் சாதிக்கின்றது- யாரைக் கொண்டு தான் சாதிப்பது? இனிச் சாதிக்க வேண்டுவது தான் ஏது?நெஞ்சும் அவனும் வந்தால் இனி நான் தான் உண்டாக வேணுமே?-இங்கு வெறுந்தரையாய் அன்றோ கிடக்கிறது?
————-
ஞாலம் அறியப் பழி சுமந்தேன் நன்னுதலீர் ! இனி நாணித் தான் என் ?– -8-2-3--நாலாயி:3684/2
யாம் மடலூர்ந்தும் என்று அன்று தொடங்கி பழி சுமந்து போருகிறேன் அன்றோ -ஆனாலும் ஸ்த்ரீத்வ ப்ரயுக்தமான லஜ்ஜையை விடாதே நோக்க வேண்டாவோ என்ன –
நன்னுதலீர் !இனி நாணித் தான் என் ?-ஜகத்து எல்லாம் அடைய பழி சுமந்த பின்பு லஜ்ஜித்து என்ன பிரயோஜனம் உண்டு -நன்னுதலீர்-நுதல் -நெற்றி -உங்கள் முகத்தில் எழில் அழியாது இருக்க என் முகத்தில் எழில் குடி போன படி கண்டி கோளே -இந்த நெடுவாசியை பார்த்து அன்றோ வார்த்தை சொல்லுவது – –
—————-
கூட சென்றேன் இனி என் கொடுக்கேன் கோல் வளை நெஞ்ச தொடக்கம் எல்லாம் – 8-2-4-நாலாயி:3685/1
சம்ச்லேஷ அர்த்தமாக சென்றேன் -ஸ்வரூபத்தை அழிய மாறி யன்றோ நான் சென்றது
இனி என் கொடுக்ககேன்-பண்டே எல்லாம் இழந்த பின்பு இனி எத்தை இழப்பது –கோல் வளை நெஞ்சம் தொடக்கம் எல்லாம் பாடு அற்று ஒழிய இழந்து – அழகிய வளை –நெஞ்சு -தொடக்கமானவற்றை எல்லாம் என்பாடு அற்று வாசனையோடு போம்படியாக இழந்து–
அவன் விபூதியைப் போலே யாகும் இவள் பரிகரத்தின் பரப்பும்–ஆதலின் எல்லாம் என்கிறது-
————-
அல்லி மலர் தண் துழாயும் தாரான் ஆர்க்கு இடுகோ இனி பூசல் சொல்லீர் —8-2-6-– நாலாயி:3687/3-
இப்படி நோவு படுத்தினவன் தான் தன்னோடு ஸ்பர்சம் உள்ளவற்றை தந்து ஆகிலும் என்னை உஜ்ஜீவிப்பிக்கிறிலன் -அபிமதம் கிட்டாது ஒழிந்தால் சத்தையை நோக்க வேண்டாவோ –ஆர்க்கிடுகோ இனிப்பூசல் ?சொல்லீர்-நலிந்த இவனுக்கு கூப்பிடாதே யாருக்கு கூப்பிடுவோம் சொல்லி கோளே -சம்பந்தம் இல்லாதார் வாசலிலே சென்று கூப்பிடவோ-
———-
நாண் கொடுத்தேன் இனி என் கொடுக்கேன் என்னுடை நல் நுதல் நங்கைமீர்காள் – 8-2-9-நாலாயி:3690/4
இந்திரன் ராஜ்யம் பெற்றான் -மஹா பலி உதார குணம் காட்டிப் போந்தான் நான் எனக்கு சர்வ ஸ்வம்மான அடக்கைத்தையும் லஜ்ஜையையும் இழந்தேன்-இனி என் கொடுக்கேன்-இனி எத்தை கொடுப்பேன்-கீழே நாலாம் பாட்டில் இனி என் கொடுக்கேன் என்று சொல்லிற்று -இதுக்கும் அதுக்கும் வாசி என் என்னில் -பெரிய திருவடி முதுகில் இருப்பிலும் கையும் திரு வாழி யுமான சேர்த்தியிலும் தோற்று நாயக் கூத்தனை யாதரித்து கலக்கச் சென்று கிட்டாமையாலே வந்த இழவு அதில் -ஸ்ரீ வாமனனுடைய அழகிலும் சேலத்திலும் தோற்று மஹா பலியைப் போலே சர்வஸ்வத்தையும் இழந்தேன் என்கிறது இதில்-
————
என்னுடை நல் நுதல் நங்கைமீர்காள் யான் இனி செய்வது என் என் நெஞ்சு என்னை – 8-2-10-நாலாயி:3691/1-
என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள்-எனக்கு உறவு முறையாரான நீங்கள் வடிவு அழகிலும் ஸ்த்ரீத்வத்திலும் குறைவற்று இருக்கையாலே நிர் துக்கைகளாய் இருந்தி கோள்
யான்-எல்லாம் இழந்து அவசன்னையாய் இருந்தேன்
இனிச் செய்வதென் -இப்படியான பின்பு எத்தைச் செய்வேன் -இவற்றை மீட்க்கவோ -அவனை நியமிக்கவோ -எல்லா அளவிலும் தரித்து இருக்க வேண்டாவோ -என்கிறாள் –
——–
தரும் தான் அருள் தான் இனி யான் அறியேனே –8-7-2-– நாலாயி:3738/4-
பெரிய தாளுடைய களிற்றுக்கு அருளின சர்வேஸ்வரன் -வடிவில் கனமும்-நோவில் பாடாற்ற ஒண்ணாமைக்கு உடல் என்கை –பெருமான் —தான் தரும் -அருள் -தான் –தரும் அருள் -தந்த அருள் -தரும் என்கிற இது காலத்ரயத்திலும் சொல்லலாய் இருக்கையாலே -ஆஸ்ரிதற்குச் செய்தது தமக்குச் செய்ததாக இ றே இவர் நினைத்து இருப்பது –
இனி யானறியேனே-–எனக்கு உதவின பின்பு நான் அத்தை ஒன்றாக நினைத்து இரேன் -ஆனை நோவு பட்டத்து ஆயிரம் சம்வத்சரம் -அகப்பட்ட பொய்கை பரிச்சின்னம் -முதலை ஓன்று-எனக்கு காலம் அநாதி -அகப்பட்டது சம்சார ஆர்ணவத்திலே -முதலை ஐந்து –
இத்தை மீட்டுக் கொண்ட மஹா குணத்துக்கு அது ஒரு குணமாயற்றதோ -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பக்கலிலே பண்ணின அருளை இட்டு புறம்புள்ளார் பக்கலில் பண்ணின அருளை வ்யாவர்த்தித்தார்-தமக்கு பண்ணின அருளை இட்டு அது தன்னை வ்யாவர்த்திக்கிறார் –
—————–
அருள் தான் இனி யான் அறியேன் அவன் என் உள் இருள் தானற வீற்றிருந்தான் – 8-7-3--நாலாயி:3739/1-
அருள் தான் இனி யான் அறியேன்-என்னுடைய இந்திரிய வஸ்யத்தையை தவிர்த்த இது தன்னையும் நான் ஒன்றாக நினைத்து இருக்கிறிலேன் –எத்தைப் பற்ற -என்னில்
-அவன் என்னுள்-இருள் தானற வீற்றிருந்தான்--அவன் என்னுடைய ஹ்ருதயத்தில் அஞ்ஞானாதிகள் எல்லாம் போம்படி-தன் குறைவு தீர்ந்தானாய் -பெறாப் பேறு பெற்றானாய்-அவ் வேறுபாடு தோற்ற இரா நின்றான்-இனி எனக்கு வேறு ஓன்று தோற்றுமோ–
—————–
அத்தனை ஆம் இனி என் உயிர் அவன் கையதே -9-5-2– நாலாயி:3826/4-
இராமாவதாரத்தில் மெய்யும்- கிருஷ்ணாவதாரத்தில் பொய்யும் அன்றோ அடியார்கட்கு தஞ்சம் –ஆகையாலே அவன் பொய்யன் ஆகில் என் -மெய்யன் ஆகில் என் –
இருந்தபடியே உகப்போம் இத்தனை அன்றோ நாங்கள்-என்று தொடர்ந்த கார்யத்தில் முதிர நின்றன –அத்தனை ஆம் –இனி என் உயிர் அவன் கையதே –இனி அவ்வளவே அன்றோ –
இவற்றின் ஒருப்பாடு இருந்தபடியால் அவன் நினைவே தலைக் கட்டி விட்டதே அன்றோ -என்கிறாள் –என் உயிர் அவன் கைப்பட்ட பின்பு-என்னைப் பாது காப்பதற்கு உங்கள் கால் பிடிக்க வேண்டாவே –
———
பழன நல் நாரை குழாங்கள்காள் பயின்று என் இனி
இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது – நாலாயி:3834/2,3
நீர் நிலங்களிலே வர்த்திப்பதாய் -தொடங்கின கார்யம் முடிக்க வல்ல சாமர்த்தியத்தை யுடைத்தான நாரைக் குழாங்கள்-பயின்று என் இனி-திரண்டு பிரயோஜனம் என் -நான் அவன் கருத்தை பின் செல்ல நினையாத அன்று அன்றோ உங்கள் மந்திரத்துக்கு பிரயோஜனம் உள்ளது -முதலிகள் திரள் திரளாக இருந்து பெருமாளையும் பிராட்டியையும் சேர்க்கைக்கு விரகு பார்த்தால் போலே -இவை திரள் திரளாக இருந்து தன்னையும் அவனையும் பிரிக்கைக்கு விசாரிக்கிறன என்று இருக்கிறாள் -அவன் வேண்டுவரைச் சேர்க்கையும் வேண்டாதாரை முடிக்கையும் திர்யக்குகள் பணி என்று இருக்கும் இறே -ராமாவதார வாசனையால் –
————
யாவர் அணுக பெறுவார் இனி அந்தோ – நாலாயி:3866/4
நான் முடியா நின்றேன் -இனி இப் பேறு பெற இருக்கிறார் யாரோ -நதே மனுஷ்யா -என்கிறபடியே மனுஷ்யர்க்கு கூட்டு அல்லர் அந்தோ –உடைமையான எனக்கு உள்ளது உடையவனுக்கு இன்றிக்கே ஒழி வதே –நதே மனுஷ்யா தேவா தே எ சாரு சுப குண்டலம்-முகம் த்ரஷ்யந்தி ராமஸ்ய வர்ஷே பஞ்ச தசே புன -அயோத்யா-64-69- தசரதன் புலம்பல் –
மனிதர்களுக்கு கூட்டு அல்லர் –-இனி -என்ற சொல்-நான் முடிந்தேன் என்பதனைக் காட்டுகிறது –
—————-
இகலிடத்து அசுரர்கள் கூற்றம் வாரான் இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என் – நாலாயி:3870/4
வரையாதே ரக்ஷிக்குமவனாய் -ப்ராப்தனுமாய் -விரோதி நிரசன ஸ்வபாவனுமானவன் -வாராது இருக்க -ஸ்வ ரக்ஷணத்தில் பிராப்தி இல்லாத எனக்கு ஆறி இருக்கப் போமோ —இனி இருந்து –நமாம்சம் ராகவோ புங்க்தே நசாபி மது சேவதே வன்யம் ஸூ விஹிதம் நித்யம் பக்தமச் நாதி பஞ்சமம் -என்கிறபடியே அத்தலையிலே ஆற்றாமையும் –வாலி மாட்டான் படை கூடிற்று -என்றால் போலே ரக்ஷணத்தில் உத்யோகத்தையும் -சிலர் வந்து சொல்லக் கெட்டு தான் ஆறி இருக்கிறேனோ – இனி இருந்து-அவனுடைய சரக்கு என்று ஆந்தனையும் கை நோக்கிக் கொண்டு இருந்தேன் -இவற்றின் சந்நிதியில் -அவன் வாராது ஒழிந்த பின்பு முடியும் அத்தனை போக்கி இருக்க க்ஷமை அல்லேன்-என்னுயிர் காக்குமாறு என்–பிறர் உயிராகில் காக்கலாம் இ றே -சம்ச்லேஷ அர்த்தமாக பாரித்து கொண்டு இருக்குமது ஒழிய பிராணனை நோக்கிக் கொண்டு இருக்கப் போமோ –இனி இருந்து என் உயிர் காக்குமாறு என் – வரைந்து நோக்குவான் ஒருவனாய் நான் ஆறி இருக்கேனோ-
வரும் இடத்தில் தடை உண்டு என்று ஆறி இருக்கிறேனோ-என்னைப் பாது காத்து கொள்வதில் எனக்கு சம்பந்தம் உண்டாய்த்தான் ஆறி இருக்கிறேனோ
—————
இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என் இணை முலை நமுக நுண் இடை நுடங்க – 9-9-3-நாலாயி:3871
இனி இருந்து என் உயிர் காக்குமாறு என்-எனக்கு தாரகமான அழகு பாதகமானால் எனக்கு பிராணனை நோக்க விரகு உண்டோ-என்னது என்று அபிமானித்த -உடம்பு பகை ஆயிற்று –என்னது -என்று அபிமானித்த அழகு பகை ஆயிற்று –இனி இருந்து என்னுடைய உயிரை பாதுகாப்பாது என்ற-ஒரு பொருள் உண்டோ –
—————–
எவன் இனி புகும் இடம் எவன் செய்கேனோ ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள் – –9-9-6-நாலாயி:3874/4
சர்வ சாதாரணமான உடம்பை இழந்தால் இனி எங்கே போய் தரிப்பது –அவன் உடம்பு கிட்டிற்று இல்லை என்னா ஹிதம் சொல்லுகிற உங்கள் உடம்பைப் பற்றித் தரிக்கவோ -ஆனாள் லோக யாத்ரையைப் பற்றி தரித்தாலோ என்ன
எவன் செய்கேனோ-அவ் அளவில் தரிக்கலாம் விஷயம் அன்றே -தோழிமார் உடன் வ்ருத்த கீர்த்தனம் பண்ணி தரித்தாலோ என்ன –
ஆருக்கு-வடுகருக்கு தமிழர் வார்த்தை போலே சொல்லும் வார்த்தைக்கு அதிகாரிகள் யார் -வ்ருத்த கீர்த்தனம் பண்ணும் தோழிமார் எனக்கு முன்னே அழிந்தார்கள்-
————-
அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம் கண்ணனில் கொடிது இனி அதனில் உம்பர் -9-9-8- நாலாயி:3876/2
கலக்கிற போது நமக்கு ஸ்வம் என்னும் படி இருந்த கிருஷ்ணனுடைய தற்காலத்து பரிமாற்றம் -அவன் தன்னில் காட்டிலும் பாதகமாகா நின்றது -கலக்கிற போது தாழ்வுகள் தோற்ற பரிமாறின பரிமாற்றத்தில் காட்டிலும் அவன் தானே நல்லன் என்கை –
இனியதனிலும்பர்-பின்னையும் அதுக்கு மேலே மதுவையும் மணத்தையும் உடைத்தான-மல்லிகையாலே செறியத் தொடுத்த மாலை-மந்தம் செறிவு —-அழகிய பசும் சாந்து-இவையும் நலியா நின்றன –
———————
ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை – -9-10-9-நாலாயி:3888/2
உத்தராகமானது சேஷியாது -புகுதருவான் நின்ற வினைகளும் -உத்தராகம் -அடைய மாட்டா
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் -போலே ––அவன் திருவடிகளிலே தலை சாய்க்க என்னுடைய சகல துரிதங்களும் போவதான பின்பு எனக்கு ஒரு குறை உண்டோ –
————-
இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை -9-10-10– நாலாயி:3889/1
சகல துக்கங்களும் போம் -இனி எனக்கு என்ன குறை யுண்டு -பகவத் அனுபவ விரோதி துரிதங்கள் போன பின்பு -எனக்கு அனுபவிக்கைக்கு ஒரு தேச விசேஷம் தேடித் போக வேண்டி இருந்ததோ -என்னால் வருவது போவதான பின்பு அவனால் வருவதற்கு ஒரு குறை யுண்டோ -பக்தியில் இழிய பரிகரம் கர்ம ஞான யோகம் இல்லாமல் -பிரபத்தியில் வியவசாயம் இல்லாமல் -யுக்தி மாத்ரத்தால்-அல்லல் -போம் -போக்கிட்டு என்ன -என்றால் -எனக்கேல் இனி என் குறை –-என்கிறார் –
—————
நன்று நாம் இனி நணுகுதும் நமது இடர் கெடவே – 10-1-3–நாலாயி:3893/4-
இன்று நாம் –நன்று நணுகுதும் –அவன் சர்வ ரக்ஷகனான பின்பு -ரக்ஷக அபேக்ஷை யுடைய நாம் -நன்றாகக் கூடுவோம் -ஸ்ரீ மதுரையை காலயவன ஜராசந்தாதிகள்-கிட்டினால் போல் அன்றியே –ப்ரஹ்மாதிகள் ஷீராப்தியை கிட்டினால் போல் அன்றியே –அநந்ய பிரயோஜனராகக் கிட்டுவோம் –ஆவார் ஆர் துணை -திருவாய் மொழி -5-1-9-என்று-இருக்கிற நம்முடைய துன்பம் கெடும்படியாக-
—————-
மிகமிக இனி உன்னை பிரிவை ஆமால் வீவ நின் பசுநிரை மேய்க்க போக்கே –10-3-2- நாலாயி:3914/4
இவ்வளவிலே நீ செய்ய வேண்டுவது -மேன்மேலும் உன்னை பிரிவானத்தை நாங்கள் யுடையோராம் படியாக உன்னுடைய பசு நிரை மேய்க்கப் போக்குக்களானவை தவிர்வனவாக வேணும்-இனி -முன்புத்தை பிரிவுகளுக்கு ஜீவித்து இருந்தேன் ஆகிலும் இனி ஜீவித்து இருக்க மாட்டேன் –
———
இருள் தரு மா ஞாலத்துள் இனி பிறவி யான் வேண்டேன் – 10-6-1-நாலாயி:3946/3
-நான் அவன் வழியே போகப் பார்த்தேன் -இங்கு உகந்து அருளின நிலங்களும் பாகவத ஸஹவாசமும் உண்டாய் இருக்க அவன் வழியே போக வேண்டுகிறது என் -என்ன -அஞ்ஞான அவஹமான ஸம்ஸாரமாகையாலே-ஞானாதிகனான ப்ரஹ்லாதனையும் எதிரிடப் பண்ணிற்று இறே –இனி–அவன் கருத்தை அறிந்த பின்பு –பிறவி யான் வேண்டேன்–வானுயிர் இன்பம் எய்திலென் மற்றை நரகமே எய்திலென் -என்கிற அது நான் வேண்டேன் -இனி ஈஸ்வர அபிப்ராயத்தாலே இருக்கில் இருக்கும் அத்தனை —
——————–
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே –10-10-1- நாலாயி:3990/4
இனி-உன்னைக் காட்டின மாத்ரம் அன்றியே-பரம பதத்தில் சுவட்டினை அறிவித்த பின்பு-நான் –வழிச் சுவடு அறிந்த நான்-போகல் ஒட்டேன் –தம்முடைய செல்லாமையாலும்-சம்பந்தத்தாலும்-தடுக்கவும் வளைக்கவும் உரியர் ஆனபடி –
அநாஹரோ நிராலோகோ ததஹீனா யதாத்விஜா-சேஷ்யே புரஸ்தாத் சாலாய யாவத்மே ந பிரசிதிதி -அயோத்யா -111-14 ஸ்ரீ பரத ஆழ்வான்-உணவு இல்லாதவனும்-ஒளி இழந்த முகத்தை உடையவனும்- செல்வம் இல்லாத பிராமணன் போலே-எத்துணைக் காலம் என்னிடம் இரங்க இல்லையோ-அத்துணைக் காலம் இலைக் குடிலின் முன்பு படுக்கிறேன்- என்றான் இறே-வரும் போது உன் ஸ்வா தந்த்ர்யத்தால் வரலாம் அத்தனை -அல்லது-போம் போது உன் கார்யம் உன்னதோ – இவர்க்கு இப்படி சொல்லல் ஆகிறது -சர்வஞ்ஞன் அறிய தமக்கு உண்டான விரைவாலேயும்- விரும்பிய அளவில் இவர் கார்யம் செய்யப் பெறாத பிற்பாட்டுக்கு-ப்ரசீநந்து பவந்த மீ ஹ்ரீ ஏஷா ஹி மமதுலா-யத் ஈத்ருசை அஹம் விப்ரை உபச்தேயை உபஸ்தித -ஆரண்ய -10-9-நான் அடையத் தக்கவர்களான இப்படிப் பட்ட அந்தணர்களால்-நான் அடையப் பட்டேன் என்னும் இது எனக்கு-மிகவும் நாணமாய் இருக்கிறது -நீங்கள் என்னுடைய தவறினைப் பொறுத்து அருள வேண்டும் -என்று- நாணம் கொள்ளுபவன் ஆகையாலும் அன்றோ –
———–
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் – -10-10-6-நாலாயி:3995/2
மனத்துக்கு அமையாமையாலே-எக்காலத்தும் அனுபவித்தாய் –இனி உண்டு ஒழியாய்-
நீ தொடங்கின கார்யத்தையும்-நடுவே குறை கிடக்க விடாதே-அங்கீ கரித்து அருளாய் -என்றது-நீ இவ்வளவு புகுர நிறுத்துகைக்கு நான் துணை செய்தது உண்டோ –திருவிருத்தம் தொடங்கி அனுபவித்தாயே –உன் கார்யத்துக்கு உன்னை வேண்டிக் கொள்ள வேண்டுமோ-
இவருடைய அமுதத்துக்கு அனுபவிக்கும் தன்மை உண்டு காணும் –போக்த்ருத்வம் உண்டே -இவ்வாத்மாவையும்-இதனுடைய சரீரத்தையும் விரும்புகை உனக்குச் சேருமோ-
நீ உகந்தாருக்குச் சேருமோ –
—————
நீல கடல் கடைந்தாய் உன்னை பெற்று இனி போக்குவனோ – -10-10-7-நாலாயி:3996/4
ஸ்ரீ பூமிப் பிராட்டியை பெறுகைக்கு செய்த செயலையும்-
பிராட்டியை பெறுகைக்கு செய்த செயலையும்-என்னை பெறுகைக்கு செய்து-
என்னைக் கிட்டப் பெற்ற பின்பு-உன்னைப் போக விடுவேனோ-
நீ செய்த செயலின் பலத்தால் சேர்ந்த நான்-கைப்பட்ட செல்வத்தை விடத் தக்கவனோ-நீ கிருஷி பண்ண -பலத்தில் அந்வயித்த நான் -கைப்பட்ட சம்பத்தை விட ஷமனோ–இப்படி புருஷகார பூர்வகமாய் எனக்கு நல்லையாய் -என்னை ரக்ஷிக்குமவனான உன்னை லபித்து வைத்து கை புகுந்த பின்பு நழுவ விடுவேனோ –
————
பெற்று இனி போக்குவனோ உன்னை என் தனி பேருயிரை – 10-10-8–நாலாயி:3997/1-
சிறிதும் அறிய முடியாதவனான உன்னை-பெற்று வைத்து-இனி விட உபாயம் -இல்லை-என்கிறார்-பெற்று இனிப் போக்குவேனோ உன்னை –ஓர் அச்சு இல்லாக் காசாய் போகிற்றாகில் போகிறது-என்று இருக்கிறேனோ–அன்றிக்கே-உன்னை நீ அறியாயோ -என்னுதல்-மிக மிகத் தாழ்ந்தவனாய் இருந்த எனக்கு-மிகவும் தாரகனான உன்னைப் பெற்று வைத்து-இனி நான் உன்னை விடுவேனோ –அத்யந்த விஸஜாதீயனாய் இருந்து எனக்கு மிகவும் சத்தா தாரகனான உன்னைப் பெற்று வைத்து – இனித் தப்ப விடுவேனோ-ஸமஸ்த கல்யாண குணாத் மகனாய் எனக்கு சத்தா ஹேதுவான உன்னை பெற்று வைத்து நான் விடுவேனோ –சர்வஞ்ஞனாய் ஸ்வதந்திரனாய் இருக்கிறவனை விடுவேனோ என்கிறதுக்கு ஹேது -தன்னை ஒழிய ஜீவிக்க மாட்டாமை தோற்ற இருந்தால் அவன் கால் வாங்க மாட்டான் என்னுமத்தாலே -இத்தலையில் நத்யஜேயம் இருக்கிறபடி –
———–
இன்னும் (5)
இப்போதும் இன்னும் இனி சிறிது நின்றாலும் -பெரிய திருவந்தாதி-87- நாலாயி:2671/1
இக்காலத்திலும் வரும் காலத்திலும் மற்றும் எல்லாக் காலத்திலும்
இது தன்னையே சொல்லு
——–
இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னும் நரகில் இட்டு -ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி-98– நாலாயி:2888/1
தம் திருவடிகளைப் பற்றின பின்பும் நரகத்திலே இட்டு வைத்து தபிப்பிப்பரோ –இடுமே-/ சுடுமே / நடுமே –/ விடுமே -பிரி நிலை ஏவகாரம் -இட மாட்டார் –சுடாது -நட மாட்டார் – விட மாட்டார் -என்றபடி –ஆகையால் நைய வேண்டாமே –கர்ம ஜென்ம சூழல் தப்புவோம்
தாய் போலே அன்றோ ஸ்ரீ ஸ்வாமி –அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான –தனக்கே யாக நம்மை கொள்வார் -ஸ்ரீ சர்வேஸ்வரன் இல்லையே கர்ம அனுகுணமாக செய்வதற்கு –நம் வசம் -ருசிக்கு அனுகுணமாக காட்டிக் கொடுக்காமல் – -ரக்ஷணமும் அவர் ஆதீனம் -என்றவாறு –சரணம் என்றால் -ஆல் -சரம பர்வ நிஷ்டை துர்லபம்-அன்றோ -யுக்தி மாத்திரமே அமையும் -மேவினேன் அவன் பொன்னடி -படர்க்கை –
நேராக கூட செல்ல வேண்டாம் -இருந்த இடத்திலே நாவினால் நவின்றாலே போதுமே-
————–
ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே!
கோலத் திருமா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?–6-9-3-
அநாதி காலம் இழந்த நான் அநந்த காலம் இழக்கவோ-முறை அறியாத காலம் இழந்தேன் ஆகில் முறை அறிந்த காலமும் இழக்கவோ -ருசி பிறவாத காலம் இழந்தேன் ஆகில் ருசி பிறந்த பின்பும் இழக்கும் அத்தனையோ –இன்னும் தளர்வேனோ –
“ஒரு மிதுநம் எனக்குப் பேறு” என்று அறிந்த பின்பும் தளருமத்தனையோ?
‘நீ ரக்ஷகன்’ என்று அறியாதொழிதல், ‘வேறு எனக்கு ரக்ஷகமுண்டு’ என்றிருத்தல்,
‘லக்ஷ்மிக்கு நாயகனாயுள்ள வஸ்து பிராப்யம்’ என்று அறியாதொழிதல்,
அனுபவமும் எனக்கு -‘எனக்கு நான் உரியேன்’ என்று இருத்தல் செய்தேனோ இழக்கைக்கு;
ருசி பிறந்த பின்பு இழக்கவோ?
—————–
நண்ணிலா வகையே நலிவான் இன்னும் எண்ணுகின்றாய் -–7-1-1- நாலாயி:3561/2
நண்ணிலா வகையே -நான் கிட்டாத படியே -சிலர் நித்ய சித்தர் ஆனால் போலே நான் நித்ய சம்சாரியாம் படி-காதாசித்கமாகக் கிட்டாது ஒழிகை அன்றிக்கே, கிட்டாது ஒழிதலே ஸ்வபாவமாக. என்றது, ‘இனி நண்ணப் புகா நின்றேமோ?’ என்றிருக்கிறார் என்றபடி.-நலிவான் -அவனைக் கிட்டாமைக்கு மேல்பட தமக்கு நலிவு இல்லை என்று இருக்கிறார்-நண்ணாமை என்றும், நலிவு என்றும் இரண்டு இல்லை இவர்க்கு;-திருவடிகளைக் கிட்டாது ஒழிகையே இவ் வாத்துமாவுக்கு நலிவு. -தொழுகையே எழுகை போலே
இந்தக் கொடுமையான வகையே நலிவான். இன்னம் -இந்திரியங்களுக்கு அலைந்து உன்னைத் சரணம் புக்க பின்பும்-‘அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன்’ என்ற பின்பும்.
எண்ணுகின்றாய்-என்னை நித்ய சம்சாரியாக்கி அகற்றும் விரகு எண்ணுகிறான் என்று இருக்கிறார்-‘ஈஸ்வரனுக்கு வேறு வேலை இல்லை என்றிருக்கிறார்.பாண்டவர்கள் காரியத்தை எண்ணினாற்போலே, இங்குக் காரியம் செல்லா நிற்கச் செய்தே, மந்திரமும் செல்லுகிறபடி.‘இவரை நம் பக்கலினின்றும் பிரித்தோமாம் விரகு என்னோ?’ என்று சிந்திக்கிறான் என்றிருக்கிறார்.
————
இன்னும் போவேனே கொலோ என்-கொல் அம்மான் திருவருளே – 10-7-3--நாலாயி:3959/4-
இன்னும் போவேனே கொலோ–எனக்கு இத்திசைக்கு அவ்வருகே ஒரு போக்கிடமுண்டோ-ஒரு திக்குக்கு உட்பட்ட நான் இனி அவ்வருகு போவேனோ–இவன் இப்படி கிடந்தது படுகைக்கு-இனி அவ்வருகு போகையாவது -திருமலையில் சம்பந்தத்தை அறுத்துக் கொள்ளுகை- அன்றோ –இனி எனக்கு ஒரு கந்தவ்ய பூமி யுண்டோ -சர்வேஸ்வரனுடைய பாரிப்புக்கு அவதி என்னோ –அவனை விரும்பி –அவன் உகந்த தேசத்தை விரும்பி –அத்தோடு சேர்ந்த திக்கை விரும்பும் படி சேஷத்வத்தின் நிலையிலே நிறுத்தினவன்-எனக்கு ஒன்றும் செய்திலேனாய் பரகு பரகு என்கிற இதுக்கு அவதி என்னோ -விஷயம் இன்றியே இருக்க பிரமிக்கவும் ஆமாகாதே-
————-
இன்னம் (17)
இன்னம் உகப்பன் நான் என்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டு போந்து நின்றான் – நாலாயி:208/3
இப்போதும் அப்படியே -எல்லாம் விழுங்கிட்டு –-இத் திருவோணத்துக்கு என்று சமைத்தவை எல்லாம் ஒன்றும் சேஷியாதபடி விழுங்கி-இன்னம் உகப்பன் நான் என்று சொல்லி –
அதிலும் த்ருப்தி பிரவ்பாமல் -இன்னமும் வேண்டி இருப்பன் நான் என்று சொல்லி –போந்து நின்றான் –அந்ய பரரைப் போலே அங்கு நின்றும் விடப் போந்து நில்லா நின்றான் –
—————–
கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில கோவிந்தனோடு இவளை -3-7-3– நாலாயி:288/3
முலையோ முழு முற்றும் போந்தில -என்கிறபடியே -முலைகள் ஆனவை
ஆண் முலைக்கும் பெண் முலைக்கும் வாசி தோற்ற முகம் திரண்டு கிளர்ந்தன இல்லை
இவள் தான் யுவதி யானாலும் தாயாருக்கு அவளுடைய சைசவம் இறே தோற்றுவது-
—————
அற்றம் உரைக்கின்றேன் இன்னம் ஆழ் வினைகாள் உமக்கு இங்கு ஓர் – 5-2-6-நாலாயி:448/3
இன்னம் அற்றம் உரைக்கின்றேன் –-இன்னம்-மீண்டும் உங்களுக்கு அறுதி சொல்கிறேன்-அநாதி காலம் ஈஸ்வரனை விட்டு -தரைப் பட்டு போம் படி பண்ணினவர்களே-துர் அவகாஹமான வினைகளே-போகப் பாருங்கோள்-
————-
எல்லே இளம் கிளியே இன்னம் உறங்குதியோ – நாலாயி:488/1-
இவர்கள் அழைக்கிறது தன் அனுசந்தானத்துக்கு விக்நம் ஆகையாலே பேசாதே கிடக்க –இன்னம் உறங்குதியோ -என்கிறார்கள் – கிருஷ்ண விரஹத்தாலே தளர்ந்து உறக்கம் இன்றிக்கே- உன் கடாஷமே பற்றாசாக நாங்கள் நின்ற பின்பும்-உறங்கும் அத்தனையோ –
கிருஷ்ணானுபவத்துக்கு ஏகாந்தமான காலம் சித்தித்து இருக்க உறங்கக் கடவையோ -என்றுமாம் – உத்தேச்யம் கை புகுந்தாலும் உறங்குவார் உண்டோ -என்ன –நாங்கள் வருவதற்கு முன்பு உறக்கத்தை பொறுத்தோம் ஆகிலும் நாங்கள் வந்தால் உறங்கக் கடவதோ-துவண்ட எங்கள் ஆர்த்த த்வனி கேட்டும் கண் உறங்குவதே உனக்கு-கிருஷ்ண அனுபவத்துக்கு ஏகாந்தம் பெற்றாலும் உறங்கக் கடவதோ-
————–
என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய் இன்னம் அங்கே நட நம்பி நீயே – -பெருமாள் திருமொழி -6-5-நாலாயி:702/4-
அப்பாவி உன்னை -அறியாதவள் ஆகையாலே மெய் என்று இருக்கிறவள் வெறுக்கும் படி
அவளை விட்டு இங்கு என் செய்ய வந்தாய்-அங்கனே சில யுண்டோ எனக்கு -அநந்ய கதி யன்றோ என்று அவன் சொல்ல-இன்னம் அங்கே நட நம்பி ! நீயே— குறைவாளரைப் போலே சில வார்த்தை சொல்லக் கடவீரோ – நீர் பூர்ணர் அல்லீரோ –-அங்கே நடவீர் –
——————–
இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள் வருதியேல் என் சினம் தீர்வன் நானே – 6-8-நாலாயி:705/4-
நீ நியத ஸ்வ பாவன் அல்லாமையாலே என் கையிலேயும் ஒரு நாள் வந்து அகப்படக் கூடும் இறே – அகப்பட்டாயாகில்-என் சினம் தீர்வன் நானே– ஸ்ரீ உஞ்சப் பிள்ளை பாடா நிற்க ஸ்ரீ எம்பார் பார்த்து எழுந்து அருளி இருக்க இவ்விடத்துக்கு அபி நயிக்கிறார்-காலாலே பாய்ந்து தள்ளுவதாகக் காட்ட -அது கைக் கொண்டு அருளி – கெடுவாய் அங்கனே செய்தாள் ஆகில் அவனுக்குப் பொல்லாதோ – அவனுக்கு அது அன்றோ தேட்டம் -அங்கன் அன்று காணும் -என்று கையை இட்டு முகத்தை மறைத்து திரிய வைத்து அருளக் காட்டினார் –
———-
வா போகு வா இன்னம் வந்து ஒருகால் கண்டுபோ மலராள் கூந்தல் –—9-4–- நாலாயி:733/1-
வந்தவாறே இன்னம் போம் போது ஒருக்கால் கண்டு போம் என்னும் –
இப்படி யாகும் இவன் யாத்ரை தான் இருப்பது –
———-
தோற்ற குழி தோற்றுவிப்பாய்-கொல் என்று இன்னம்
ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் – நாலாயி:2022/2,3-
நீ சொன்னவற்றுக்கு மறு மாற்றம் சொன்னாயே யாகிலும் பின்னையும் உன்னை வடிம்பிட்டுக் கேட்க வேணும் என்னும் நிர்பந்தம் இல்லாத மனுஷ்யர்கள் உடைய கர்ப்ப ஸ்தானத்திலே என்னுடைய கர்ம அனுகுணமாக சம்சரிப்பிக்கிறாயோ-என்று
சம்சரிக்கைக்கு கர்மம் பண்ணுவான் அவன் இறே –அதுக்கு ஈடாக பிரவர்த்திக்கும் அது அன்றோ வேண்டுவது ஆனாலும் சரீரத்தோடு இருக்கச் செய்தே அன்றோ உமக்கு ஜ்ஞானம் பிறந்தது -என்ன-நெடு நாள் தேவோஹம் மனுஷ்யோஹம் -என்று அகன்று போந்ததும் இச் சரீரத்தோடு அன்றோ –இன்னம் கழிந்த காலம் அநாதி-மேல் உள்ள காலம் அநந்தம் ஆன பின்பு ச்ம்சரித்த காலம் போராதோ இது தண்ணியது என்றும் அத்தைக் கழித்துத் தருவாய் நீ என்றும் அறிந்த பின்பும் இந்த நோவு பட வேணுமோ –
ஆனாலும் இத்தைக் கழித்துத் தருவோம் நாம் -என்னும் அறிவைப் பிறப்பித்தோமே -என்ன-ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் – ஆகில் நீ பிறப்பித்த ஜ்ஞானத்துக்கு பலம் இதுவோ – சைதன்யத்தால் கொள்ளும் கார்யம் பய ஸ்தானம் -என்கை-ஆறு பெருகித் தன் வேரை அகழ்ந்து பொகடா நின்றால் பேர நிற்றல் பரிஹரித்துக் கொள்ளுதல் கூப்பிடுதல்
செய்வது அறியாது இறே-பயத்தில் வந்தால் சேதனன் ஆகியும் பரிஹாரத்தில் வந்தால் அசித் சமனாகையும்-ஆயிற்று இவனுக்கு ஸ்வரூபம் –-பயமே இறே இவனுக்கு உள்ளது –
அஹம் பீதோஸ்மி -(ஜிதந்தா ஸ்தோத்ரம் )-நன்றும் அஞ்சுவன் -(திருவாய் )-மாஸூச -என்பான் வேறு ஒருவன் இறே – பரிஹரிக்கை -அஹம் -என்கை இறே
உன்னுடைய அஹம் புத்தியை நினைத்து அஞ்சினாய் ஆகில்
என்னுடைய அஹம் புத்தியை அனுசந்தித்து ஆறி இருக்கப் பாராய் -என்றான் இறே –
———-
தூங்கு ஆர் பிறவி-கண் இன்னம் புக பெய்து – -11-8-3–நாலாயி:2024/1
தூங்கார் பிறவிக்கள் – தூங்குதல் -அசைவும் உறங்குதலும் –-அசைவு மிக்க ஜன்மம் -என்னுதல்-தம பிரசுரமான ஜன்மம் -என்னுதல்-இன்னம் புகப் பெய்து –இதுக்கு முன்பு பட்டது போராதோ –வாங்காய் என்று– மீட்க்கைக்கு தாமும் கூட்டு என்னும் இடத்துக்கு
பாசுரம் இட்டுச் சொல்லுகிறிலர் –சிந்தித்து நான் அதற்கு அஞ்சிப் –-பரிஹாரத்தில் வந்தால் தம்மை அசித் சமராக நினைத்தாரே ஆகிலும் சேதனரான வாசிக்கு பயம் அனுவர்த்திக்கையும் தவிராதே –
———
உரு ஆர் பிறவி-கண் இன்னம் புக பெய்து – -11-8-4–நாலாயி:2025/1
இத் தேஹத்தில் அஹம் புத்தி பண்ணலாம் படி பொருந்திப் போந்த ஜன்மங்களிலே
தேஹத்திலே அஹம் புத்தி பண்ணிப் போருகையாலே-அதுவே விஸ்த்ருதமாய்-ஆத்ம வஸ்து தேய்ந்து போம் இறே-தேஹாத்மா அபிமான ஜனகமாய் இருக்கிற ஜன்மங்களிலே
இன்னமும் என்னுடைய கர்மானுகுணமாக பிரவேசிப்பித்து –
——————–
இன்னம் செல்லீரோ இதுவோ தகவு என்று இசை-மின்களே-ஸ்ரீ திரு விருத்தம் -30– – நாலாயி:2507/4
தூது போந்த உமக்கு தூது வந்த பின்பும் போகீரோ —ந காலஸ் தத்ரவை பிரபு-என்று இருந்தீரோ-அவ் இடம் கால க்ருத பரிணாமம் உள்ள தேசம் என்று அறிந்து இலீரோ —
பகலும் இரவுமாய் இருக்கும் காணும் அங்கு-அது தன்னிலும் ஒரு பகல் ஆயிரம் ஊழி யாய் அன்றோ செல்லுகிறது-
——
உண்டு கொண்டேன் இன்னம் உற்றன ஓதில் உலப்பு இல்லையே – ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி -84-நாலாயி:2874/4
இவ்வளவும் சொல்லிப் போந்த இவை அன்றிக்கே இன்னமும் அவர் தம்மாலே நான் பெற்ற பேற்றை சொல்லப் புக்கால் முடிவு இல்லை –நான் பெற்றவற்றுக்கு ஒரு தொகை இல்லாமையாலே கணக்கிட்டு சொல்ல மாட்டிற்று இலேன் என்கிறார் –இனி மேலும் நான் பெற்றவைகளை சொல்லிக் கொண்டே போனால் ஒரு முடிவே இல்லை -என்கிறார் –உலப்பு -முடிவு -எல்லை-
——————–
கான் ஆர் ஏனமுமாய் கற்கி ஆம் இன்னம் கார்_வண்ணனே –-5-1-10– நாலாயி:3350/4
மேல் வரும் விரோதத்தைப் போக்குகைக்கும் இன்னம் கற்கியாக இருந்தான் என்றது,
என் காரியம் சமைந்த பின்பும் “சம்சாரத்தில் நின்றும் கால் வாங்குந்தனையும் இவர்க்கு என் வருகிறதோ?” என்று கொண்ட குதை–எடுத்துக் கொண்ட உத்யோகம் – மாறுகின்றிலன் என்றபடி.-நான் தப்புகைக்குப் பிறந்த பிறவிகளைப் போலவே போரும் அவன்
என்னைக் காப்பாற்றுவதற்காகப் பிறந்த பிறவிகளும்.-நான் கர்மத்தாலே பிறந்த பிறவிகள் அடையத் தானும் அநுக்கிரஹத்தாலே பிறந்தான்.-நீர் கொண்ட மேகம் போலே இருக்கின்றானத்தனை. மழை பெய்தானாய் இருக்கின்றிலன்.-எப்போதும் மழை பெய்யக் காத்து இருக்கும் மேகம்
—————
திருக்குடந்தை ஊராய் உனக்கு ஆள் பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ – 5-8-10-நாலாயி:3427/4
என்னை அடிமை கொள்ளுகைக்குத் திருக்குடந்தையிலே வந்து அண்மையில் இருப்பவனே! என்றது,-நான் கிட்டாத அம்சத்துக்கு நீ கிட்ட வந்து கிடக்கிறவனே! என்றபடி.
நீ இருக்கிற பரமபதத்தே நான் கிட்டவேண்டும்படியாயிருக்க, நான் இருக்கிற இடத்திலே நீ கிட்ட வந்து கிடக்கிறவனே! என்றபடி-ஒரு நத்தம் இல்லாதான் ஒருவனையோ நான் பற்றிற்று. இதனால், பரத்துவம் வியூகம் விபவம் என்னுமிவற்றைக்காட்டிலும்
இதற்கு உண்டான வேறுபாட்டினைத் தெரிவிக்கிறார்.
உனக்கு ஆட்பட்டும் – சம்சாரிகளை அநுபவிப்பிக்க வந்து கிடக்கிற உனக்கு ஆட்பட்டும்.
அடியேன் –யாருடைய வஸ்து இங்ஙனே அலமந்து திரிகிறது.
இன்னம் உழல்வேனோ-என்னுடைய முயற்சிகள் எல்லாவற்றையும் உன் திருவடிகளிலே பொகட்டு, நீ செய்து தலைக்கட்டக் கடவையாக நினைத்திருக்கிற நான், இன்னம் எத்தனை திருப்பதிகள் புக்குத் தட்டித் திரியக்கடவேன் என்கிறார்.-
————-
கிறிசெய்து என்னை புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ – நாலாயி:3546/3
நீ இப்போது உதவாமையாலே, முன்பு செய்தவை யெல்லாம் விரகு அடித்தாய் என்று தோற்றா நின்றது காண்?விரகு அடித்தாய் -வீண் -கிறி செய்து -சம்சாரத்தில் பொருந்தாமல் நீயும் கிடைக்காமல் துடிக்கும் படி செய்தாய் –பிராட்டியை அசோக வனத்திலே வைத்தாற் போலே,பகவத் குணங்கள் நடையாடாதே ஐம்புல இன்பங்கள் நடையாடுகிற சம்சாரத்திலே பொகட்டு இன்னம் கெடுப்பாயோ – முன்பு இழந்தது போராதோ?
“சம்சாரம் தியாஜ்யம்” என்றும், “பகவத் குணங்கள் நன்று” என்றும் அறிந்த பின்பும் கெடுப்பாயோ?-கிறி செய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயே? என்று ஒன்று உண்டோ என்கிறார். என்னை இங்கே வைத்த போதே, குழியைக் கல்லி மண்ணை இட்டு அமுக்கப் பார்த்தாயன்றோ என்கிறார்.
—————-
கூவி கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -6-9-9– நாலாயி:3547/4
அந்நிய பர உக்தியில் -வேறு ஒன்றைக் குறிக்கும் வாக்கியத்திலே வைத்துப் பேற்றினை அறுதியிடுகிறார்.கால அவதி -கேட்க்கும் பிரகரணத்தில் பிராப்ய நிஷ்கரஷம் பண்ணுகிறார் –‘தாவி வையம் கொண்ட தடம் தாமரை’ என்றதனால், நினைத்தது தலைக் கட்ட வல்லன்
என்னும் சத்தி யோகம் கூறியபடி.-பூமிப் பரப்பு அடங்கலும் வருத்தம் இன்றி அளந்து கொண்டபடி.-இனிமை அளவிறந்த திருவடிகளாதலின் ‘தடம் தாமரை’ என்கிறது.
இதனால் பிராப்யம் சொல்லுகிறது.-‘கூவிக் கொள்ளும் காலம்’ என்கையாலே பிராபகத்தின் தன்மை சொல்லுகிறது.
இன்னம் குறுகாதோ’ என்கையாலே, ருசியின் தன்மை சொல்லுகிறது.-இதர விஷயங்களின் காட்சி முடியும்படியாய்,உன் திருவடிகளின் இனிமை அறிந்து விட மாட்டாத அளவு பிறந்து பின்பு – இன்னம் தாழ்க்குமத்தனையோ?பிள்ளானுடைய அந்திம தசையில் நோவு அறிய நஞ்சீயர் புக்கு இருக்க,-கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ?’ என்று பல கால் சொல்ல,-இதனைக் கேட்டுச் சீயர் அழ,-‘சீயரே! நீர் கிடந்து அழுகிறது என்?
அங்குப் போய்ப் பெறப் புகுகிற பேறு இதிலும் தண்ணிது என்று தோற்றி இருந்ததோ?’ என்று பணித்தான்.
————-
உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10-நாலாயி:3977
இது தானே மாறி மாறி உயிர் உள்ள அளவும் செல்லுகையே அன்றோ வேண்டுவது-
மீண்டு வருகை இன்றி ஒழிகை யாவது -மீளாது ஒழிகை-சம்பந்தம் இல்லாததாக இருக்கிறதோ என்னில்-
எந்தாய் – இவ் வநுபவம் ஆத்மாவோடு கூடியது என்கிறது –ஸ்வரூப பிராப்தம் –
இத்தலைக்கு அடிமையும்-தேவர்க்கு ஏவும் தனமையை உடைய தலைமைத் தன்மையும் அன்றோ ஸ்வரூபம்- இவர் விரும்பிய போது அவனும் செய்கிறோம் என்ன-ப்ரீதராய் அருளிச் செய்கிறார் –
--------------------------------------------------------------------
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply