ஸ்ரீ திருப்பாவை-உபன்யாசங்களில் இருந்து சாரம்-

காத்யாயனி மஹாமாயே மஹாயோகி³ன்யதீ⁴ஶ்வரி .
நந்த³கோ³பஸுதம்ʼ தே³வி பதிம்ʼ மே குரு தே நம꞉ .
இதி மந்த்ரம்ʼ ஜபந்த்யஸ்தா꞉ பூஜாம்ʼ சக்ரு꞉ கமாரிகா꞉ .. 4..

ஏவம்ʼ மாஸம்ʼ வ்ரதம்ʼ சேரு꞉ குமார்ய꞉ க்ருʼஷ்ணசேதஸ꞉ .
ப⁴த்³ரகாலீம்ʼ ஸமானர்சுர்பூ⁴யான்னந்த³ஸுத꞉ பதி꞉ .. 5..

உஷஸ்யுத்தா²ய கோ³த்ரை꞉ ஸ்வைரன்யோன்யாப³த்³த⁴பா³ஹவ꞉ .
க்ருʼஷ்ணமுச்சைர்ஜகு³ர்யாந்த்ய꞉ காலிந்த்³யாம்ʼ ஸ்னாதுமன்வஹம் .. 6..

நத்³யாம்ʼ கதா³சிதா³க³த்ய தீரே நிக்ஷிப்ய பூர்வவத் .
வாஸாம்ʼஸி க்ருʼஷ்ணம்ʼ கா³யந்த்யோ விஜஹ்ரு꞉ ஸலிலே முதா³ .. 7..

ப⁴க³வாம்ʼஸ்தத³பி⁴ப்ரேத்ய க்ருʼஷ்ணோ யோகே³ஶ்வரேஶ்வர꞉ .
வயஸ்யைராவ்ருʼதஸ்தத்ர க³தஸ்தத்கர்மஸித்³த⁴யே .. 8..

ஸ்ரீ மத் பாகவதம் -10-22-காத்யாயினீ விரதம் பற்றிச் சொல்லும்

ஸ்ரீ சுகர் , பரீக்ஷித்துக்கு மேலும் சொல்கிறார்.
கிருஷ்ணா….கோபிகைகள் காத்யாயினி வ்ரதம் அனுஷ்டித்ததையும்,
யமுனையில் வஸ்த்ரமில்லாமல் குளித்ததால்,தேவதைகளுக்குச் செய்த அபசாரம் என்று,
நீ, அவர்களுக்கு உணர்த்தி, அந்தப் பாபம் போக, உன்னை வந்து வணங்கி
வஸ்த்ரங்களைப் பெற்றுக்கொள்ளச் சொன்னதையும் விவரிக்கிறார்.

ஹேமந்த ருதுவான மார்கழி மாதம் முதல்வாரத்தில்,
கோபிகைகளான கன்னிகைகள் —–உன்னைப் பதியாக அடைவதற்காக,
காத்யாயினி வ்ரதம் அநுஷ்டித்தார்கள்.
மார்கழி மாசத்தில், விடியற்காலையில் எழுந்து, யமுனையில் நீராடி,
அங்கு களிமண்ணால் காத்யாயினி உருவத்தைச் செய்து, சந்தன, குங்கும
த்ரவ்யங்களை இட்டு, ஆபரணங்களால் அலங்கரித்து,
கந்த புஷ்பங்களைச் சாற்றி, அக்ஷதை, தூப தீபங்களைச் சமர்ப்பித்து,
தேங்காய், பால் போன்றவைகளால் பிரசாதம் செய்து,
அதை -நைவேத்யம் செய்து, அர்ச்சித்து,
“ஹே….காத்யாயினி……மஹாமாயே….ஈஸ்வரி….
நந்தகோப குமாரனான ஸ்ரீ கிருஷ்ணனை, எங்களுக்குப் பதியாக அளிப்பாய் ..
உனக்குப் பல நமஸ்காரங்கள்…..” என்று சொல்லி,
பகல் ஒருவேளை மட்டில் ஸாத்விக ஆகாரமான
அக்னியில் சமர்ப்பிக்கப்படும் “சாரு ” போன்ற கஞ்சிப் பாயசத்தை அருந்தி,
இப்படியே பத்ரகாளியையும் பூஜித்து, தினந்தோறும் இப்படிப் பூஜை செய்து,

மாதக் கடைசியில், ——-மார்கழி நோன்பு எனச் சொல்லப்படும்
இதன் முடிவில், வ்ரதம் முடியும் நாளில், விடியற்காலையில்,
உன்னை ஸ்மரித்துக் கொண்டும், உன் கீதங்களைப் பாடிக் கொண்டும்,
தங்களுடைய வஸ்த்ரங்களை யெல்லாம் யமுனைக் கரையில் வைத்து விட்டு,
யமுனை நதியில் இறங்கி ,கடுமையான குளிரில் தீர்த்தமாடினார்கள்.

இதை அறிந்த நீ, அவர்களுக்கு அநுக்ரஹம் செய்யத் தீர்மானித்தாய்

ஹே மந்தே ப்ரதமே மாசி நந்த வ்ரஜ குமாரிகா சேருர் ஹவிஷ்யம் புர்ஜானா காத்யாயனி யர்ச்சன விரதம்

ஹேமந்தருவின் முதல் மாதத்தில் நந்தனுடைய ஆயர்பாடியில் உள்ள கன்னிகைகள் ஹவிஸ்ஸை
உணவாகக் கொண்டு காத்யாயினியைப் பூஜிக்கும் விரதத்தை அனுஷ்ட்டித்தார்கள்

ஆப் லுத் யாம்ப ஸி காளிந்த்யா ஜலாந்தே சோதயேருணே க்ருத்வா ப்ரதி க்ருதம் தேவீம் ஆனர்ச ந்ருப ஸை கதிம்

அருணோதயத்தில் யமுனை நதியில் நீராடி நீரின் கிட்டே மணலினால் தேவியின் உருவத்தைச் சமைத்து அர்ச்சித்தார்கள்

கந்தர் மால்யை ஸூரபி பிர் பலி பிர் தூப தீபகை உச்சா வசைது சோபஹார ப்ரவாள பல தண்டு லை

மணமுள்ள புஷ்ப சந்தனங்களால் அர்ச்சித்தும் தூப தீபங்கள் காட்டியும் பலிகள் உபகாரங்களாய்
சிவந்த பழங்களும் ரிஷிகளும் கொடுத்தார்கள்

காத்யாயனி மஹா மாயா மஹா யோகின் யதீஸ்வரி நந்த கோப ஸூதம் தேவி பதம் மே குருதே நம

அவர்கள் செய்த ஸ்தோத்ரம் -மஹா மாயையான ஸ்வரூபமாயும் மஹா யோகினியாயும்
எல்லாவற்றுக்கும் மேலான காத்யாயினி தேவியே உனக்கு நமஸ்காரங்கள் -நந்தகோபன் குமரனை எனக்குப் பதியாகச் செய்து அருள்

இதி மந்த்ரம் ஜபந்த்யஸ்தா பூஜாம் சக்ரு குமாரிகா ஏவம் மாஸம் வ்ரதம் சேரு குமார்ய க்ருஷ்ண சேதஸ

இந்த மந்த்ரத்தை ஜெபிப்பவர்களாய் கன்னிகைகள் பூஜை செய்தார்கள் –
இவ்விதம் கிருஷனையே மனதில் உடையவர்களாக பூஜை செய்தார்கள்
ஒரு மாதம் விரதம் அனுஷ்ட்டித்தார்கள்

பத்ர காளீம் ஸமானர்சு பூயான் நந்த ஸூத ப்பகு யுஷஸ் யுத்தாய கோத்ரை ஸ்வைரஸ் யோன்யா பத்த பாஹவஸ்

நந்தகோப குமரன் பதியாக வேண்டும் என்று பத்ரகாளியை ஆராதித்தார்கள்-

தினம் தோறும் யமுனையில் நீராடப் போகும் பொழுது கிருஷ்ண நாமத்தை உரத்த குரலில் பாடிக் கொண்டும்
ஒருவரை ஒருவர் கை கோர்த்துக் கொண்டும் சென்றார்கள் –

கதி -அயன -என்ற இரண்டு பதங்களால் மோக்ஷ மார்க்கங்கள் எவை என்று விசாரிக்கும் கத்யயனர் ரிஷி குலம்

தவத்தைந் நீராடல் என்று நீராட்டம் தபஸ்ஸாகவே பரிபாடல் சொல்லும்
தாய் அருகா நின்று தவத்தைந் நீராடல்
அம்பா வாடலின் ஆய் தொடிக் கன்னியர்

பாவை-காத்யாயினி நோன்பு அழகிய பெண்களால் –பாவை என்பது கொல்லிப் பாவை என்னும் பெண் தெய்வமாக இருக்கலாம்.- விக்ரஹம் வடிவில் வைத்து நோன்பு -கோபிகளின் நோன்பு கண் மணி போல் காப்பான் -இஞ்சி – திருவே பாவையாகி நோன்பு -திருப்பாவை -திருப்பு ஆவை

கார்த்யாயினி என்பது நமது கன்னியாகுமரியில் இருக்கும் சிறு பெண்வடிவில் இருக்கும் கன்னித் தெய்வமே!-இதை “கார்த்தியாயினி வித்மஹே கன்னியகுமாரி தீமஹி தந்நோ துர்கிப் ப்ரசோதயாத் ” என்பதே துர்கா காயத்ரி மந்தரம் மூலம் அறியலாம்

தாத்பர்யம் சந்திரிகை -மாதங்களில் நான் மார்கழி-மூன்று காரணங்கள்
1-ஆகம சாஸ்திரம் படி வர்ஷ முதல் மாதம் மார்கழி -அர்ப்பணிக்க -தை பிறந்தார் வழி பிறக்கும் –
2-முதல் வடிவம் கேசவஸ்ய மாதம் -மார்கழி -கார்த்திகை தாமோதரன் மாதம்
3-விரதம் -இறை வழிப்பாட்டுக்கு ஏற்பட்ட காலம் -தேவர்களுடைய ப்ரஹ்ம முஹூர்த்தம்

சொல்லுதல் இசைத்தல் ஓதுதல் அறைத்தால் பொழிதல்
சாற்றுதல்
சொல்லுதல்
விளம்பரப்படுத்தல்
விற்றல்
நிறைத்தல்
அடித்தல்
உணர்த்துதல்
சாற்றுதல் எனில் சொல்லுதல், முழங்குதல் எனப் பொருள். சாத்துதல் எனில் அணிவித்தல் என்பது பொருள்.
பறை = சொல்
பறைதல் = சொல்லுதல்

With yesterday’s Tiruppavai Kalakshepam Sattrumurai our Swamy has delivered Tiruppavai upanyasam 50 times in the last 33 years .

நம் ஸ்வாமி நமக்கே, நாமும், நாங்கள், நாங்களும், நாம் என்று முதல் 5 பாசுரங்களில் உள்ள பலவிதமான ‘நாம்’ என்பதின் அர்த்தங்களையும் (வித்யாசங்களையும்), நமக்கே பறை தருவான், அறை பறை, பறை தருதியாகில், சாலப் பெரும் பறையே, பாடிப் பறை கொண்டு, நீ தாராய் பறை என்பதில் உள்ள பலவிதமான ‘பறை’ சப்தத்திற்கும் அர்த்தங்களை அருளிச்செய்தது மிகவும் ரஸோக்தியாக அமைந்தது.

கறவைகள் பாசுரத்தின் வ்யாக்யான விளக்கமும் அற்புதம். அதில் இறுதியில், பேற்றின் க4நத்துக்கு கீழ் விளைந்ததெல்லாம் அத்வேஷமாத்ரமாயிருக்குமிறே என்று அருளிச்செய்தது மனத்துக்கு மிகவும் க4னமாக அமைந்தது. கோதோபனிஷதாக உள்ள திருப்பாவையையே அத்வேஷமாத்ரம் என்று கூற வேண்டும் என்றால், அந்த பேற்றின் பெருமையை நாம் அறியவே முடியாதோ என்று தோன்றுகின்றது.

நேற்றைய காலக்ஷேபத்தில் வங்கக்கடல் கடைந்ததின் ஸ்வாபதேசம் மிக அருமை. அதிலும் பிராட்டியிலும் ப்ரேம விஷயமான ஆத்மாவை லபித்தவன் என்பதில் நம் ஸ்வாமி உடனே இராமாயணத்திலிருந்து உதாரணம் அருளிச்செய்தது மிகவும் அற்புதம்.

இந்த அற்புதமான திருப்பாவை காலக்ஷேப அனுபவத்தை திரும்பத் திரும்ப நினைத்தால், மறுபடியும் உடனே மார்கழி திங்கள் முதல் நாளாக அமையக்கூடாதோ என்று தோன்றுகின்றது. திருப்பாவை மார்கழியில் அமைந்ததால் தான் எம்பெருமானும் மாதங்களில் மார்கழியாக உள்ளானோ!

மார்கழி திங்களில்
வையத்தில் உள்ள நம் போல்வார்க்கு
உத்தமனாய்
ஆழிமழைக்கண்ணாவான நம் ஸ்வாமி (பகவத் காருண்ய வர்ஷ நிர்வாஹகன்)
நாம் எம்பெருமானை வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நாளும்,
பிள்ளாய், பேய்ப்பெண், கோதூகலமுடைய பாவாய், மாமான் மகள், நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய், கோவலர் தம் பொற்கொடி, நற்செல்வன் தங்காய், போதரிக்கண்ணினாய் என்று பலவிதமான ஶ்ரோதாக்கள் / பாகவதர்கள் இருக்கும் காலக்ஷேப கூடத்தில் (பாவைக்களம்)
நம்மாழ்வாரை ஒத்த நாவுடையான நம் ஸ்வாமியும்,
இளங்கிளியான இளைய ஸ்வாமியும் இணைந்து
உபகாரக உத்தாரக ஆசார்யனாய் நாயகனாய் நின்று
ஆத்மஸ்வரூபமான ஈஸ்வரமுகவிகாஸமான அம்பரத்தையும், ஸ்வபோக்த்ருத்வபுத்தி நிவ்ருத்தியான தண்ணீரையும், கைங்கர்யமான சோறையும் எவ்வாறு பெருவது எனும் ஜ்ஞான விசேஷத்தை அருளிச்செய்து,
நப்பின்னை பிராட்டியின் புருஷகாரத்தைப் பெற்றுத்தந்து,
ஆற்றப்படைத்தானாகவும் ஆற்றப்படைத்தான் மகனாகவும் நின்று எம்பெருமானிடம் நமக்காக விண்ணப்பம் செய்து,
சிறுச்சிறுதே எம்மேல் விழியாவோ என்பது போல் ஜாயமானம் ஹி புருஷம் யம் பஶ்யேத் மதுஸூதன: ஏன்பதிலிருந்து ஆரம்பித்து ஸ்வபோக்த்ருத்வ புத்தியை தவிர்ப்பிக்கை வரை நம்மை பக்குவப்படுத்தி,
நாம் வந்த காரியத்தை ஆராய்ந்து அருள்வதற்காக,
அடி போற்றி, திறல் போற்றி, புகழ் போற்றி, கழல் போற்றி, குணம் போற்றி, வேல் போற்றி என்று எம்பெருமானை மங்களாசாஶனம் செய்து,
நம் வருத்தமும் தீர்ந்து மகிழ்வதற்காக
ஸாம்யாபத்தி, ஸாயுஜ்ய மோக்ஷத்தைப் தேஹாவஸானே அருள்வதாக உறுதி அளித்து,
குறையொன்றும் இல்லாத நம் ஸ்வாமி
மற்றை நம் காமங்களையும் மாற்றி வழுவிலா அடிமையை அருள்வதாக நமக்கு நிச்சயித்து மார்கழி மாதம் முழுவதும் நீராட்டல் அனுபவத்தை அருளிச்செய்ததற்கு நம் ஸ்வாமிக்கு பல்லாண்டு பாடுவோம். எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் என்றும் ப்ரார்த்திப்போம்.

திருப்பாவையில் தோழிகளை எழுப்பும் பாசுரத்தில் முதன்முதலாக பொய்கையாழ்வாரை !! எங்கனே எனில் பிள்ளாய் எழுந்திரு !! என்னும் முகமாக!! இவ்வாழ்வாரும், கிருஷ்ணானுபவத்தில் ஊற்றம் உள்ளவரென்றும், இவள் சூடிக்கொடுத்த வடிவுக்கு , இவ்வாழ்வாரும், வையம் தகளியாய் !! வார்க்கடலே !! நெய்யென்றும்!! மாலுங்கருங்கடலே !!
எந்நோற்றாய்!! என்று எம்பெருமானின் அங்க செளந்தர்யத்தைப் பேசினதாலும் , சூடிக்கொடுத்த வடிவுக்கு நேரென்று ஒப்புமைப்படுத்தியும், கிருஷ்ண ஷேஷ்டிதங்கள், பலவற்றையும் , இவர் பாடினதாலேயும் , “ஒன்றுமதனை உணரேன் நான் !! என்று மெளக்த்யம் தோன்ற , பிள்ளைப் பெண் ” என்ற ஸ்வாபதேசத்தை ஸ்வாமிவிளக்கியது அருமை !!
மேலும் நாயகனாகத் பெருமானின் வைபவத்தையும் தர்சித்ததாலும், மேலும் ஸ்தீரி ஸ்வபாவமாகவே,
பலப் பல பாசுரம் பாடியவராதலால், ‘பேயாழ்வாரைப் பேய்ப்பெண்ணே !!என்று உணரபட்டவரென்றும்,
“கோதுகலமுடையப்பாவாய்” என பூதத்தாழ்வாரையும்!!
நாலாம் பாட்டில் ” திருமழிசைப்பிரானை ” மாமன்மகளுக்கு ஒப்புமைப்படுத்தி ஸ்வாமி ஸாதித்தது அதிஅத்புதம்!!
பார்க்கவ மகரிஷிக்கு புத்தரர், பார்கவி , மகாலஷ்மிக்கு சகோதரர், எனவே மாமான் மகள் , அனைவருக்குமே !! என்பது ரஸமே !!
நோற்றுச்சுவர்க்கம் புகுகின்ற அம்மானாக குலசேகரர் , எங்ஙனே எனில் , இளம் ஆய்ச்சியராய், எல்லிப்பொழுதில் ஏமத்தூடி என , ஸ்தீரி பாவத்தில் , இங்கு எதற்கு வந்தாய்!! அங்கே நட!! எனவும் ,ரங்கயாத்ரை நித்ய அனுபவமாக நடத்தி காட்டியவராகையாலும் என்பதும்,
பெரியாழ்வாரை கோவலர் தம் பொற்கொடியே !! என கிருஷ்ணானுபவத்தையே நித்தமும் கொண்டிருந்தவரென்பதையும்,
தொண்டரடிப்பொடி ஆழ்வாரை நற்செல்வன் தங்காயென, பெரியாழ்வாரின் பிற்பட்டவராய், அவரைப்போன்றே இவரும் மாலாக்காரர் , ஆதலால் என பல்வேறு கோணத்தில் கூறியது, கேட்கும் பாக்யம் என்னே !!
என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே !! என ஸ்ரீரஙகநாதனிடத்தில் வியாமோகமே வடிவெடுத்த ” திருப்பாணாழ்வாரை , போதரிக்கண்ணினாய் என அழைப்பது பொருத்தமே !! என பலபடிகளாலும் விளக்கியது அருமை !!
வாய் பேசும் நங்கை “சடகோபன்” எனபதனை , அவரின் கிருஷ்ணா அனுபவ பாடல்களின் கனத்த பிரேமம் காதலை, “நாணும் நிறைவும் எனகிங்கில்லை “எனவும் , பங்கயக்கண்ணனையே!! என்ற பல பாசுரங்களாலும் நாவீறுடையப்பிரான் அவரே !! என்பதை பலபடிகளாலும் விளக்கியதை, நாங்கள் அனுபவித்ததைச் சொல்ல ஸத்தையில்லை!! ஸ்வாமி !!
மென்கிளி என மிழற்றும் , “அவன் பின் கெண்டையொன் கண் மிளிரக்கிளி போல் மிழற்றிநடந்து !! செல்லும் பரகாலனே !! இளங்கிளி !! என்பதனை அனுபவ பூர்வமாக ஸ்வாமி விளக்கிய காலட்ஷேபம் இனிது !! இனிது !!
பாசுரங்கள் ,சேவையில் இவ்வாழ்வாரெல்லாம் நினைவில் தோன்றச் செய்த, பெருமையெல்லாம், ஸ்வாமியையே !! சேரும் !! என்பதில் ஜயமில்

கோதை நாச்சியாரின் திருப்பாவைக் காலட்ஷேபம் , ஸூத்த ஸத்வ தொண்டையாச்சாரியரின் வியாக்யானமும் , வானமாமலை ஜீயர் ஸ்வாமிகளின் ஸ்வாபதேசத்துடனும் , ஸ்வாமி அதி அற்புதமாக விளக்கி வருகிறார் !!
மார்கழி நோன்பு , நீராடல் என்பது பிரம்மத்துடனான அனுபவம் , ஆச்சாரியர்களுக்கு , பிரம்மம் என்பதை விட கிருஷ்ணானுபவம் என்பதே , ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் என்பதனையும் , பாசுர விளக்கமாக ஸ்வாமியின் காலட்ஷேபத்தில் , வெகுவாக அனுபவித்து வருகிறோம். ஆண்டாள் காலத்துக்கே சென்று , அவளுடனே ஆயர் பெண்களை எழுப்பி , நந்தகோபன் , யசோதை , பலராமன் , நப்பின்னை கண்ணனை எழுப்பி , படுக்கை பேச்சாக இல்லாது , வீர சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் , வந்த காரியம் கேட்டு அருள் புரிவாயாக !! என அன்புடனும் ஆதரத்துடனும் அவனை எழுப்பி , திருக்கண்கள் மலர விழித்து என்பதில், கண்ணனின் திருக்கண்கள் , கிங்கிணிப்போலவும் , தாமரைப்புஷ்பம் போன்ற , சிவந்த திருக்கண்கள் சிறிது சிறிதே மலர , முதலில் ,தேகமே ஆத்மா என்ற முதல் சாபம் நீங்க , தான் ஸ்வதந்திரன் அல்ல என்பதனை உணர , திருக்கண்கள் கொஞ்சம் மலர , நாம் அவனுக்கு அடிமை என்பதே !! ஸ்வரூபம் என்பதனை உணர்த்த ( இவ்விடத்திலும் மனைவி கணவனுக்கு சேவை செய்வது போன்றதும், அதுவே கணவன் செய்வது ப்ரீத்தியாலே என விளக்கியது ரஸம்) பிறகு மற்றப்பேருக்கன்றி கண்ணனுக்கு !! என உணர , மேலும் மலர , தான் ஜ்ஞாதா என்று உணரும் போதும் , தன்னைத் தான் அனுபவிக்கும் கைவல்யமும், ஒழிந்து , அதுக்கும் இசைந்து வர , தன்னை ரட்ஷிக்க தான், என நினைவு அகல ,அதுக்கு இசைந்த பிறகு , மற்ற உபாயங்களை என்ற நினைவகற்றி, அவனே உபாயம் என்ற நினைவின்படி, தன் காரியத்துக்கு தன்னால் என நினைவகற்றி , , பாராதீனமாக, தான் என நினைவொழிந்து, அவனுக்கே பர தந்திரனாய் , பரதாழ்வான் போல் நின்று , சமஸ்த கல்யாண குணங்களை அனுபவித்து ,அந்த அனுபவத்தின் பிரீத்தியாலே !! கைங்கர்யம் செய்ய புகுந்து , அதுவும் தன் ஆனந்தத்திற்கு அல்ல ஈஸ்வர உகப்பிற்கே !! எனும் நிலையிலே !! முழு கண்ணழகையும் சேவிக்க !! ,என்று , ஸ்வாமி விளக்கினது மிக இனிமை !!
நடந்த திருவடிகளுக்கு போற்றி போற்றி !! என பல்லாண்டு பாடினதையும் , மேலும் இன்றைய பாசுரத்தில், தேவகி பிராட்டியை ஒருத்தி எனவும் , யசோதையையும் ஒருத்தி என விளக்கினதைக் கேட்டதுண்டு. ஆனால் ஓர் இரவு என்று , கண்ணனைப் பெற்றுக் கொடுத்ததும் , அவ்விரவே ,அவன் கோகுலத்துக்கு சென்று , மறைத்து வளரவும் , வழி வகுத்தது என அவ்விருட்டுக்கு ஸ்வாமி , பல்லாண்டு கூறி விளக்கியது அத்புதம்!!
மேலும் ஸ்வாப தேசத்தில் குருபரம்பரையின் விவரணம் என்றும் , பத்து ஆயர்பெண்களின் பிரதிசம்பந்தியாக , பத்து ஆழ்வார்கள் , என அவர்களின் பாசுரமடியாகவே உள்ள விவரணத்தை , ஸ்வாமி மடைத் திறந்தாற் போல் பிரவாகித்தது அருமை.
” கை கரவாத மேகம் !!
எதிர் பொங்கி மீதலிப்ப , மாற்றாதே பால் சொரியும் !! வள்ளல் பெரும் பசுக்கள் !! ஆழிப்போல் மின்னி !! வலம்புரிப் போல் , நின்று அதிர்ந்து!! தாழாதே !! சாரங்கம் உதைத்த சர மழைப் போல், இவ்வுலகம் வாழ !! ஆஸ்ரிதர்கள் வாழ !! நாங்களும் மார்கழி நீராட !! ஸ்வாமியின் காலட்சேபம், தொடர்ந்து , அனைவரும் கேட்டு இன்புற !! என , திருமறுமார்பன் !!அருள் புரிவாராக!!🪷🪷🪷🪷🪷🪷🪷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻⚡⚡

இந்த பாசுரங்கள் ஒவ்வொன்றும் ரஹஸ்ய த்ரயத்தை விளக்க வந்த ஆதாரமாய், ஸ்வருபத்தையும் உபாயத்தையும் புருஷார்த்தத்தையும் கொடுக்க வல்லது. அனன்யார்க சேஷ பூதனான இந்த ஜீவாத்மாவிற்கு வேறு சக்தி ப்ராப்தி இல்லை. ப்ரீதிகாரி த புருஷார்த்தமே என அறிந்து இவையால் ஸ்வஞானம், ப்ராபக ஞானம் ப்ராப்ய ஞானம் என கண்ணனை அடைய படிக்கட்டுக்களாய் மார்கழி நோன்பு நூற்றார்கள். ஸ்வாபதேசமாய் சம்பிரதாய அர்த்தங்கள் சேர்க்கப்பட்டு உள்ளது .இதற்கு விஸஸதமாய் வாக் ஸ்ரீமான் வானமாமலை பொன்னடிகால் ஜீயர், ஸீத்த ஸத்வ தொட்டைய்யா ச்சாரியார் ஆகிய இருவரும் வ்யாக்யானம் அருளியதின் அடியொற்றி வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் அருமையாய் அதன் அர்த்த விசேஷங்களை முன்வைத்தார். திருமந்திரம் த்வயம் சரமஸ்லோகம் சாரார்த்தத்தை உள்ளடக்கி உள்ளது. மந்திர ரத்னமாய் போற்றப்படும் த்வயம் . அவனையே சாக்ஷாத் சித்த புண்ணியமாக கொள்கின்றனர் .அறிவொன்றும் இல்லாத ஆயர் குலத்திற்கு முதல் பாசுரத்திலிருந்து பறை என்ற பேரி வாத்தியததை கண்ணன் கொடுக்க, யதாஸ்ருதக்ராஹியாய் – மேம்போக்கான அர்த்தத்தை கொண்டவனே. தாத்பர்ய ஞானம் இல்லாதவனே. இதை நாங்கள் பிரார்த்தித்து வரவில்லை. புருஷார்த்தமாய் கைங்கர்யத்தை பிரார்த்தித்து வந்தோம். பாகவதர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எல்லே இளங்கிளியே பாசுரத்தில் கூறியுள்ளாள். பகவான்
எப்படி நடக்க வேண்டும் என்பதை சிற்றஞ்சிறு காலே பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளாள்.
29 வது பாசுர விளக்கம் – கண்ணா சிறுகாலே – சிறு விடியல் நேரத்திற்கே வந்து உன்னைப் பணிந்து உன் பொன் தாமரை.-ஸ்பரு ஹீயமான- மதிக்கத்தக்க பாவனமாகவும் பரம் போக்கியமாகவும் உள்ளஉன்திருவடித்தாமரைகளை மங்களாசாசனம்
பண்ணி வாழ்த்தும் பொருளை நீ கேட்டு அருள வேண்டும். பசுக்களை மேய்த்துண்ணும் இடை குலத்தில் பிறந்த உனக்குநாங்கள் அந்தரங்க தொண்டு கைங்கர்யாதை புரிய ப்ரார்த்திக்கிறோம். இந்தக் கொட்டுப் பறையை பெற நாங்கள்
வரவில்லை. காலமுள்ள அளவும்
ஏழேழு பிறவிக்கும் உனக்கே உன் ஒருவனுக்கே நாங்கள் ஆட்செய்வோம். அடிமை செய்யக் கடவோம். எங்களுடைய மற்றைய ஆசைகளையும் ஸ்போக்திருத்வத புத்தியையும்தவிர்த்து அருள வேண்டும்.
வியாக்யானம் – இங்கு ஸத்வம் நிறைந்து காணப்படும் சிற்றஞ்சிறுகாலே என்பதை குறிப்பிட்டு ஆற்றாமையால்( துறை தள்ளி) வந்து எங்கள் வருகையே மிகை – அதிகம் என்று இருக்கும் உன்னை சேவித்து, உன் திருவடி தாமரைக்கே மங்களாசாசனம் பண்ணுகிறோம்.அவன் பறையை கொடுக்க, தாத்பர்ய அர்த்தம் புரியாதவனே எல்லா காலங்களிலும் நாங்கள் லக்ஷ்மணன் ராமனிடம் பிரார்த்தித்து போல் தாஸனின் கைங்கர்யமாய்- போற்றும் பொருள் என்பது கைங்கர்யத்தை பரார்த்தமாய் உன் ஆனந்தத்திற்குபுரிய வந்தோம். நாங்கள் ஆத்ம ஸ்வருபத்திற்கு உகந்ததையே கேட்போம். அதிருஷ்ட பலத்தை நாங்கள் கேட்டதாக இருக்கனும். அவன் கொடுக்க நாங்கள் கொள்வதாய் – போதயந்த பரஸ்பரமாய் இருக்க வேண்டும். த்ருஷ்ட பலத்தை கேட்டதாக சொல்லக்கூடாது என்றாள்.
ஏனைய எங்களுடைய ஆசைகளை தவிர்த்து கைங்கர்ய பேறை கொடுக்க
வேண்டும்.
3௦வது பாசுர விளக்கம் – கப்பல்கள் உடைய திருப்பாற் கடலை தேவர்களுக்காக கடந்த மாதவனை – ஸ்ரிய பதியை சந்திரனை ஒத்த முகமுடைய ஆய்ச்சிகள் வணங்கி பறையாகிய புருஷார்த்தமான உண்மை பொருளை அடைந்தார்கள். ஸ்ரீவில்லிபுத்தூரில் தோன்றிய தாமரை மாலையணிந்த பெரியாழ்வாரின் குமாரத்தியான தன்நிலை பாவஸீத்தியில் ஆண்டாள், இதனையே
30 திவ்ய பாசுரங்களாக அருளினாள். இவற்றை தவறாமல் ஒதுபவர்கள் ஈரிரண்டு பெருக்கமான தோள்களைப் பெற்ற செங்கண் திருமால் அருளால் எங்கும் திருவருள் பெற்று இன்பம் அடைவார்கள்.
வ்யாக்யானம் பாற்கடலில் மந்திரத்தை மத்தாக நாட்டி அதாவது க்ருபை என்ற ஸங்கல்பம் என்ற மந்திர பர்வத்திற்கு கடாக்ஷம் என்ற கைகளால் கடைந்து ஆத்மவஸ்துவான ஜீவாத்மாவை லபித்தவன். பகவான் எந்த உள்ளத்தில் உறைகிறாரோ நாம போக்தா என்றும் நினைக்கும் கேசியை ,அந்த புருஷன் எந்த உள்ளத்தில் உறைகிறாரோ அந்த புருஷன்சந்திரன் போல் ஒளியுடன்
ஆஹ்லாத கரமாய் குளிர்ச்சியுடன் காணப்படுகிறார். நாம் அவரிடத்தில் ஞான பக்தி வைராக்ய பூஷித ராய் அவரைத் தவிர வேறு ஒன்றை கேட்காமல் இருக்க வேண்டும். பெரியாழ்வார் சூட்டின மாலை கோதை அந்த கோதை பாடியது தீந்தமிழ் பாமாலை. பூமாலையை சூட்டிக் கொடுத்த சுடர்கொடி. இதை நாம் தலையால் தரித்து இந்த இனிய திவ்ய ப்ரபந்தத்தை ஒரு பாட்டுக் கூட குறையாமல் எப்போதும் அனுசந்தித்து பல்கி பெருக பெருக கூடிய நாலு திருத் தோள்கள் உடையவனான சிவந்த கண்கள் உடைய மலர்ந்ததிருமுகத்தை உடையவனான உபய விபூதிக்கு நாயகனான திருமாலை –
எல்லா சொத்திற்கும் அவன் தேவதை. அவனுக்கு அவள் தேவதை. காலத்திற்கு பிற்பட்ட நாம் எப்போதும் இந்த லோகத்து ஞானம் அந்த லோகத்து அதிர்ஷ்ட விஷய ஞானம் பெற்று கண்ணனை எப்போதும் அனுபவித்துக் கொண்டு இருக்க வேண்டும்.
மேலும், ஒவ்வொரு பாசுரத்திற்கும் உள்ள சாரத்தை ஒவ்வொரு வரி தோறும் சிறப்பித்து அத்புதமாய் ஸ்ரோத்தாக்களுக்கு பகவத் அனுபவத்தை கொடுத்த ஞான திவாகர் ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என ப்ரார்த்திக்கிறோம். க்ஷ மிக்க பிரார்த்திக்கிறேன்.

“புருஷகார வைபவம்”
பலவகையான நல்விஷயங்களை உள்ளடக்கியது மார்கழி மாதம் என்பதனால் பகவான் “மாதங்களில் நான்மார்கழி”
என்றுரைத்தான். அப்படியான மாதத்தில்
ஸ்ரீ ஆண்டாளருளிய
திருப்பாவையைப் பாடி
அதனுள் சொல்லப்பட்ட
பகவதனுபவமேற்படுவதற்கான விஷயங்களைச் சொல்லவேணுமென்கிற
தாகம் மேலோங்கிட ஸ்வாமி மேற்கொண்ட
இக்காலஷேப வைபவத்தால் அடியேன் கொண்ட அநுபவமானது:
பார்கடலில் பையத்
துயிலும் பரமனடிபாட, குள்ளக்குளிர நீராடி, அக, புற அழுக்குகள்
நீங்கிட அறியாதவற்றைச்
சொல்லும் வேதமும், அதனால் சொல்லப்பட்ட
பகவானின் தன்மையைக் கூறும்வேதாந்தக்கருத்து
களையும் அறிந்ததனால்
ஏற்பட்ட ஜ்ஞாநத்தால் கைக்கொள்ளவேண்டிய
“அர்த்த பஞ்சகம்” மற்றும்
“ரஹஸ்யத்ரய” ஸாரங்கள்
இப்பாசுரங்களிலே மறைப்பொருளாக சொல்லப்பட்டிருப்பதை
மிகவிஸ்தரமாகச் சொல்லி; ஆக, சம்ஸாரயாத்ரையிலிருந்து
சற்றே விலகி பகவதநுபவ
யாத்ரையை மேற்கொள்ள
பகவானின் பொற்தாமரையடி போற்றி,
அது சுவாதீனமாய்க் கிட்ட பிராட்டியைப் புருஷகாரமாகப் பற்றி அவனும், அவளும் இசலி, இசலிப் பரியும் பரிவைக் கொண்டு அவர்களது சேர்த்தியிலே அடிமை செய்வதே முறை என்பதைச்சொல்லி: ஆகையால்
இம்முப்பது பாசுரங்களை நிச்சலும் தப்பாமல் பாடிட “செங்கண்
திருமுகத்துச் செல்வத்திருமாலின் திருவருள் பெறும் இன்பமே
சம்மானம்” என்று ஒரு தாயின் வாத்ஸல்யத்தோடு, கருணைபொங்க, அன்புமேலோங்க தனக்காகவே எனையாட்கொண்ட ஸ்வாமி அருளிப்போந்த
இக்காலஷேபமும் ஒரு
” புருஷகார வைபவமே”!!

பாதகங்கள் தீர்க்கும் பரமனடிபாடும் கோதைத்தமிழின் யதார்த்தத்தை அதியத்புதமாக விளக்கி
அதனுள் சொல்லப்பட்ட
வேத,வேதாந்தக்கருத்துகளையும் அறிந்து கொள்ள வைத்த ஸ்வாமி திருவடிகளிலேயே உழன்று
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றேனாகி,
அன்னவர்க்கே ஆட்செய்யும்
சேவகமும் வேண்டியே பல்லாண்டு
பாடுகிறேன் மகிழ்ந்து!!💐🙌🏻🙏🙏

திரு ஆயர்பாடியில் பஞ்ச லக்ஷ பெண்கள் கிருஷ்ணானுபவத்தை அடைய ஹேமந்த ருதுவில் மார்கழி மாதத்தில் நோன்பு தூற்றார்கள். அதை ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு அனுகாரம் செய்தாள் அவள் பேச்சு, நடை, முடி அனைத்தும் இடைப்பெண் போல் மாறியது. அந்த ஆண்டாள் அனுக்ரஹித்தது திருப்பாவை 30 பாசுரங்கள். கலியுகத்தில் இருந்து கொண்டு இதை நாம் நித்ய அனுசந்திக்கும் போது ஆண்டாளின் பூரண அனுக்ரஹகம் நமக்கும் கிட்டும். வேதம் அனைத்திற்கும் வித்தாகும் ஐயைய்ந்தும் ஐந்தும் ஆன திருப்பாவையை வைஷ்ணவ த்ரயத்தை எம்பெருமானார் சர்வாதிகாரமாய் அனுசந்திக்க- அதை திவ்ய ப்ரபந்தமாய் யாரும் கற்கலாம் என ஸ்வாமி ராமானுஜர் இதை நியமனம் பண்ணி வைத்தார். அதில் விசேஷித்த 30 பாசுரங்கள் – இந்த பாசுரங்கள் ஒவ்வொன்றும் ரஹஸ்ய த்ரயத்தை விளக்க வந்த ஆதாரமாய், ஸ்வருபத்தையும் உபாயத்தையும் புருஷார்த்தத்தையும் கொடுக்க வல்லது. அனன்யார்க சேஷ பூதனான இந்த ஜீவாத்மாவிற்கு வேறு சக்தி ப்ராப்தி இல்லை. ப்ரீதிகாரி த புருஷார்த்தமே என அறிந்து இவையால் ஸ்வஞானம், ப்ராபக ஞானம் ப்ராப்ய ஞானம் என கண்ணனை அடைய படிக்கட்டுக்களாய் மார்கழி நோன்பு நூற்றார்கள். ஸ்வாபதேசமாய் சம்பிரதாய அர்த்தங்கள் சேர்க்கப்பட்டு உள்ளது .இதற்கு விஸஸதமாய் வாக் ஸ்ரீமான் வானமாமலை பொன்னடிகால் ஜீயர், ஸீத்த ஸத்வ தொட்டைய்யா ச்சாரியார் ஆகிய இருவரும் வ்யாக்யானம் அருளியதின் அடியொற்றி வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் அருமையாய் அதன் அர்த்த விசேஷங்களை முன்வைத்தார். திருமந்திரம் த்வயம் சரமஸ்லோகம் சாரார்த்தத்தை உள்ளடக்கி உள்ளது. மந்திர ரத்னமாய் போற்றப்படும் த்வயம் . அவனையே சாக்ஷாத் சித்த புண்ணியமாக கொள்கின்றனர் .அறிவொன்றும் இல்லாத ஆயர் குலத்திற்கு முதல் பாசுரத்திலிருந்து பறை என்ற பேரி வாத்தியததை கண்ணன் கொடுக்க, யதாஸ்ருதக்ராஹியாய் – மேம்போக்கான அர்த்தத்தை கொண்டவனே. தாத்பர்ய ஞானம் இல்லாதவனே. இதை நாங்கள் பிரார்த்தித்து வரவில்லை. புருஷார்த்தமாய் கைங்கர்யத்தை பிரார்த்தித்து வந்தோம். பாகவதர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எல்லே இளங்கிளியே பாசுரத்தில் கூறியுள்ளாள். பகவான்
எப்படி நடக்க வேண்டும் என்பதை சிற்றஞ்சிறு காலே பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளாள்.
29 வது பாசுர விளக்கம் – கண்ணா சிறுகாலே – சிறு விடியல் நேரத்திற்கே வந்து உன்னைப் பணிந்து உன் பொன் தாமரை.-ஸ்பரு ஹீயமான- மதிக்கத்தக்க பாவனமாகவும் பரம் போக்கியமாகவும் உள்ளஉன்திருவடித்தாமரைகளை மங்களாசாசனம்
பண்ணி வாழ்த்தும் பொருளை நீ கேட்டு அருள வேண்டும். பசுக்களை மேய்த்துண்ணும் இடை குலத்தில் பிறந்த உனக்குநாங்கள் அந்தரங்க தொண்டு கைங்கர்யாதை புரிய ப்ரார்த்திக்கிறோம். இந்தக் கொட்டுப் பறையை பெற நாங்கள்
வரவில்லை. காலமுள்ள அளவும்
ஏழேழு பிறவிக்கும் உனக்கே உன் ஒருவனுக்கே நாங்கள் ஆட்செய்வோம். அடிமை செய்யக் கடவோம். எங்களுடைய மற்றைய ஆசைகளையும் ஸ்போக்திருத்வத புத்தியையும்தவிர்த்து அருள வேண்டும்.
வியாக்யானம் – இங்கு ஸத்வம் நிறைந்து காணப்படும் சிற்றஞ்சிறுகாலே என்பதை குறிப்பிட்டு ஆற்றாமையால்( துறை தள்ளி) வந்து எங்கள் வருகையே மிகை – அதிகம் என்று இருக்கும் உன்னை சேவித்து, உன் திருவடி தாமரைக்கே மங்களாசாசனம் பண்ணுகிறோம்.அவன் பறையை கொடுக்க, தாத்பர்ய அர்த்தம் புரியாதவனே எல்லா காலங்களிலும் நாங்கள் லக்ஷ்மணன் ராமனிடம் பிரார்த்தித்து போல் தாஸனின் கைங்கர்யமாய்- போற்றும் பொருள் என்பது கைங்கர்யத்தை பரார்த்தமாய் உன் ஆனந்தத்திற்குபுரிய வந்தோம். நாங்கள் ஆத்ம ஸ்வருபத்திற்கு உகந்ததையே கேட்போம். அதிருஷ்ட பலத்தை நாங்கள் கேட்டதாக இருக்கனும். அவன் கொடுக்க நாங்கள் கொள்வதாய் – போதயந்த பரஸ்பரமாய் இருக்க வேண்டும். த்ருஷ்ட பலத்தை கேட்டதாக சொல்லக்கூடாது என்றாள்.
ஏனைய எங்களுடைய ஆசைகளை தவிர்த்து கைங்கர்ய பேறை கொடுக்க
வேண்டும்.
3௦வது பாசுர விளக்கம் – கப்பல்கள் உடைய திருப்பாற் கடலை தேவர்களுக்காக கடந்த மாதவனை – ஸ்ரிய பதியை சந்திரனை ஒத்த முகமுடைய ஆய்ச்சிகள் வணங்கி பறையாகிய புருஷார்த்தமான உண்மை பொருளை அடைந்தார்கள். ஸ்ரீவில்லிபுத்தூரில் தோன்றிய தாமரை மாலையணிந்த பெரியாழ்வாரின் குமாரத்தியான தன்நிலை பாவஸீத்தியில் ஆண்டாள், இதனையே
30 திவ்ய பாசுரங்களாக அருளினாள். இவற்றை தவறாமல் ஒதுபவர்கள் ஈரிரண்டு பெருக்கமான தோள்களைப் பெற்ற செங்கண் திருமால் அருளால் எங்கும் திருவருள் பெற்று இன்பம் அடைவார்கள்.
வ்யாக்யானம் பாற்கடலில் மந்திரத்தை மத்தாக நாட்டி அதாவது க்ருபை என்ற ஸங்கல்பம் என்ற மந்திர பர்வத்திற்கு கடாக்ஷம் என்ற கைகளால் கடைந்து ஆத்மவஸ்துவான ஜீவாத்மாவை லபித்தவன். பகவான் எந்த உள்ளத்தில் உறைகிறாரோ நாம போக்தா என்றும் நினைக்கும் கேசியை ,அந்த புருஷன் எந்த உள்ளத்தில் உறைகிறாரோ அந்த புருஷன்சந்திரன் போல் ஒளியுடன்
ஆஹ்லாத கரமாய் குளிர்ச்சியுடன் காணப்படுகிறார். நாம் அவரிடத்தில் ஞான பக்தி வைராக்ய பூஷித ராய் அவரைத் தவிர வேறு ஒன்றை கேட்காமல் இருக்க வேண்டும். பெரியாழ்வார் சூட்டின மாலை கோதை அந்த கோதை பாடியது தீந்தமிழ் பாமாலை. பூமாலையை சூட்டிக் கொடுத்த சுடர்கொடி. இதை நாம் தலையால் தரித்து இந்த இனிய திவ்ய ப்ரபந்தத்தை ஒரு பாட்டுக் கூட குறையாமல் எப்போதும் அனுசந்தித்து பல்கி பெருக பெருக கூடிய நாலு திருத் தோள்கள் உடையவனான சிவந்த கண்கள் உடைய மலர்ந்ததிருமுகத்தை உடையவனான உபய விபூதிக்கு நாயகனான திருமாலை –
எல்லா சொத்திற்கும் அவன் தேவதை. அவனுக்கு அவள் தேவதை. காலத்திற்கு பிற்பட்ட நாம் எப்போதும் இந்த லோகத்து ஞானம் அந்த லோகத்து அதிர்ஷ்ட விஷய ஞானம் பெற்று கண்ணனை எப்போதும் அனுபவித்துக் கொண்டு இருக்க வேண்டும்.
மேலும், ஒவ்வொரு பாசுரத்திற்கும் உள்ள சாரத்தை ஒவ்வொரு வரி தோறும் சிறப்பித்து அத்புதமாய் ஸ்ரோத்தாக்களுக்கு பகவத் அனுபவத்தை கொடுத்த ஞான திவாகர் ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என ப்ரார்த்திக்கிறோம். க்ஷ மிக்க பிரார்த்திக்கிறேன்.

ஒரு பெண் புருஷனைக் கண்டு ஸநேஹிக்கை பள்ளமடையாகையாலே,
ஆழ்வார்களுள் பெண்ணான ஆண்டாள்
அருளிய திருப்பாவையைக்
கொண்டு “மாரகழிசுனையாடலை”யும்,அதன் மூலம் நோற்கப்படும் நோன்பு என்று ஒரு வ்யாஜ்யத்தாலே நம்பெருமாள் பக்கலிலே சென்று, அவனுக்கு சேஷமாயிருக்கிற, அநவரதமும் ஸம்ஸார சாகரத்திலே கிடந்துறங்கும்
ஆத்மாக்களாகிய நாம்
அநர்த்தப்படாதபடி, நம்மை
எழுப்பி பகவதநுபவ ப்ரீதிகாரித கைங்கர்யத்தில் ஈடுபட்டுய்ய, சுனையாடலின் செம்மை, மேன்மை, அருமைகளையும் அதிலே
ஆழ்பொருளாய்ச் சொல்லப்பட்டுள்ள வைஷ்ணவ தர்மத்திலுள்ள
சாஸ்ரார்த்தங்களையும் இரு பெரு மஹநீயர்களின்
ஸ்வாபதேச வ்யாக்யானங்களைக் கொண்டு நமக்கு வேண்டுவனவெல்லாம்
ஆந்தனையும் கைகாட்டி, உள்ளுமாறுய்ய அறிவுத்
தொண்டு புரியும் நம் ஸ்வாமி ஸ்ரீ ஆண்டாளுதித்த திருவாடிப்பூரத்தின் முன்
திருநட்சத்திரமாம் ஆடி மகந்தன்னில் உதித்தமையாலே ஆண்டாளுக்கு முன்னானார் என்று போற்றியாம் வந்தோம் புகழ்ந்து,
வடமொழி, தென்மொழிப் புலமையும்,
சமயநுட்பப் புலமையும், சொற்பொழிவுத் திறமையும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற நம் ஸ்வாமி எப்பொழுதும்
அத்திருவருள் கொண்டு
நமக்கு சத்விஷயங்களை
அருளவேணுமென *ஆண்டாளின் திருவடிகளை
வழுத்துவோம் மனமே மகிழ்ந்து!!*

சிற்றஞ்சிறுகாலே , கோபிமார்களின் ஸத்வோர்த்தமான காதலுடனும், அதே அனுகாரத்துடனே தோழிகளையும் அழைத்துக்கொண்டு , தானே !! ஸத்கரித்து, நம்மைப்போன்று திருப்பாவை அனுசந்தானம், என்னும் ,தோல்கன்றே , போல்வாரையும் ,
[ ] வந்தார்களே !! என கலங்கி அருள, கண்ணனே !! முற்பட்டு,
[ ]
[ ] அதீத வாத்ஸல்யத்தாலே, நாங்கள் ஒரு வ்யாஜ்யமாய்க் கேட்ட, தோல் பறையை தர முனைந்ததுப் போலன்றி, எங்களுக்கு புருஷார்த்தமான , இவ்வாயர்பாடியிலே பிறந்தது , எங்களுக்காக ,நீயும் !!வந்துதித்த இங்கேயே , உனக்கு கைங்கர்யம் என்பதே பறை ( இவ்விடத்தில் மங்களாசாசனம் என்பது , பல்லாண்டு பாடுவது மட்டுமன்றி, பூத்தொடுத்தல், தளிகை பண்ணுதலும் அவ்வெம்பெருமானுக்கு மங்களம் பாடுதலுக்கு சமம் என்று விளக்கியது , பெரிய புரிதலுடனான அதி அத்புத அனுபவம்) பிற உறவுகளை விட்டே , உன்னையே எல்லாமாகவும் பற்றின எங்களுக்கு , எல்லா உறவுக்கும், பண்ண வேண்டிய கைங்கர்யங்களை எல்லாம் லஷ்மண, குகனைப் போல நாங்களே !! உனக்குச் செய்து, ஸத்தை , பெறுவதே ப்ராதனம் , என ‘உனக்கே ‘ எனும் பதத்தின் மூலமாக, ஆண்டாளின், வேண்டுகோளை ,விளக்கியது சுகானுபவம் !!
[ ] பெரியாழ்வாரைப் போல கைங்கர்யம் , வைகுண்டதைதிலும் தொடர வேண்டுவதை , நினையாதே, கண்ணனின் பார்வை வட்டத்துக்குள்ளேயே, ஏதேனும் கைங்கர்யம், அதுவும் எங்கள் உகப்புக்குக்கன்றி, கண்ணனின் ஆனந்தத்திற்கே !! ஆக வேண்டும் என ஆயர்குடிப் பெண்ணாகவே கோதை !! வேண்டுவது ,” இங்கே இப்பிறப்பே மகிழ்வர்” எனும்படி கருணையுடன் ஞான ஜென்மாக்களாய் ஆக்கி, இந்த இடத்திலே, திருப்பாவை, ஸாதித்துக் கொடுக்கும் சேவிப்பாற்கு , என ஸ்வாமி , விளக்கியதைக் கேட்டதே !! பெரும் புண்யம்!!
[ ] மேலும் வங்ககடலைக் கடைதல் எனும் வ்யாஜத்தாலே !!
வங்கம் ,ஜீவனின் தேகமே எனவும் , அதற்கு சலனமின்றி, தன் சங்கல்பத்தாலே !! கிருபை என்னும் கயிறு கொண்டு, தன் கடாக்ஷ்ம் , எனும் கையாலே !! கடைந்து , பெறுவது , பிராட்டியை விடவும் , பிரேமமான , நம் போன்ற, ஆத்ம வஸ்து ( இங்கு இராம சுக்ரீவ ஸம்வாதம் அருமை ) எனவும் ,

கடல் கடைந்து ,பிராட்டியைப் பெற்றான், என்றே ,கேட்டுகந்த , நமக்கு , அவன் பெறுவது , நம்மையே !! எனவும் அதுவும் அவனுகப்புக்கே, என தெளிவது , நம் ஸ்வாமியின் கருணையடியான , சொல்லுதலின்றி தரிக்காத பகவானின் வ்ருத்தாதந்தத்தை, நம் போலோற்கு, ஆண்டாளின் , ஸ்ரீஸூக்தியாலே !! என்பது , நாம் பெற்ற பெரும் பேறு !! செல்வத்திருமாலாலே !! என
பல்லாண்டு !! பல்லாண்டு!! ஸ்வாமிக்கு !! பாடி மகிழ்ந்து குளிர்வோம் !!🪷🪷🪷🪷🪷🙏🏻🙏🏻

திருப்பாவையில் முப்பது தீர்த்தங்கள் 🕉️

1️⃣ மார்கழித் திங்கள் –
வ்ரஜா நதி – வைகுண்டம்

2️⃣ வையத்து வாழ்வீர்காள் –
சமுத்திர ராஜன் – திருப்பாற்கடல்

3️⃣ ஓங்கி உலகளந்த –
கங்கை – இமயமலை

4️⃣ ஆழி மழைக் கண்ணா –
வருண தேவன்

5️⃣ மாயனை மன்னு –
யமுனா – விருந்தாவனம்

6️⃣ புள்ளும் சிலம்பின காண் –
சரஸ்வதி – மானா, பத்ரிநாத்

7️⃣ கீசுகீசு என்று –
புண்டரீக புஷ்கரணி – மாமல்லபுரம்

8️⃣ கீழ்வானம் –
தக்ஷிண பிநாகினி (தென்பெண்ணை) – திருக்கோவலூர்

9️⃣ தூமணி மாடத்து – தாமிரபரணி – நெல்லை, தூத்துக்குடி

1️⃣0️⃣ நோற்றுச் சுவர்க்கம் –
பாலாறு – காஞ்சிபுரம்

1️⃣1️⃣ கற்றுக் கறவை –
பாரதபுழா – கேரளா

1️⃣2️⃣ கனைத்து இளம் –
வைகை – மதுரை

1️⃣3️⃣ புள்ளின் வாய் –
சந்திர புஷ்கரணி – ஸ்ரீரங்கம்

1️⃣4️⃣ உங்கள் புழக்கடை –
காவிரி – திருவரங்கம்

1️⃣5️⃣ எல்லே ! இளங்கிளியே –
நம்பி ஆறு – திருக்குறுங்குடி

1️⃣6️⃣ நாயகனாய் நின்ற –
ராதா குண்ட் , ஷியாம் குண்ட் – கோவர்தன்

1️⃣7️⃣ அம்பரமே தண்ணீரே –
யசோதா குண்ட் – நந்தகாவ்

1️⃣8️⃣ உந்துமத களிற்றன் –
அனந்த சரஸ் – காஞ்சிபுரம்

1️⃣9️⃣ குத்து விளக்கெரிய –
லலிதா குண்ட் – நிதிவனம், விருந்தாவனம்

2️⃣0️⃣ முப்பத்து மூவர் –
வேணுகூபம் – பண்டீரவனம்

2️⃣1️⃣ ஏற்ற கலங்கள் – இந்திரத்யும்ன சரோவர் – ஜகன்னாத் புரி

2️⃣2️⃣ அங்கண்மா ஞாலத்து –
பத்மதீர்த்தம் – திருவனந்தபுரம்

2️⃣3️⃣ மாரி மலை முழைஞ்சில் –
பாவநாசினி – அஹோபிலம்

2️⃣4️⃣ அன்று இவ்வுலகம் –
சந்திரபாகா – பண்டரிபுரம்

2️⃣5️⃣ ஒருத்தி மகனாய் –
கோமதி – துவாரகா

2️⃣6️⃣ மாலே ! மணிவண்ணா –
சரயு – அயோத்யா

2️⃣7️⃣ கூடாரை வெல்லும் –
ஸ்வாமி புஷ்கரணி – திருமலை திருப்பதி

2️⃣8️⃣ கறவைகள் பின்சென்று –
ஹரித்ரா நதி – மன்னார்குடி

2️⃣9️⃣ சிற்றம் சிறு காலே –
சக்ர தீர்த்தம், நைமிசாரண்யம்

3️⃣0️⃣ வங்கக்கடல் கடைந்த –
திருமுக்குளம் – ஸ்ரீவில்லிபுத்தூர்.✍🏼🌹

மார்கழி -சரமஸ்லோகார்த்தம் ப்ராப்ய பிரதானம் -ஸ்வரூபம்
வையத்து– த்வயம்–ப்ராப்ய பிராப்தி பரம்-பேற்றுக்கு தவரிக்கவும் வேண்டும் -செய்யும் கிரிசைகள் –திண் என்றும் இருக்கும் திருவடிகளே
ஓங்கி -திருமந்திரம் -பிராப்தி பரம் -பேர் பாடி பொழுது போக்கு -அச்சுவை பெறினேம் வேண்டேன்

ரஹஸ்ய த்ரவ்யம் முதல் மூன்று பாசுரார்த்தம்– -ஆழி மழைக் கண்ணா ததீய சேஷத்வம்-அந்தர்யாமி இதில் அர்ச்சா அடுத்து மன்னு வடமதுரை மைந்தன்

ஆழி மழைக் கண்ணா –11 கட்டளைகள் இடுகிறாள்–11-ழ காரம்

வடமதுரைக்கு மற்ற முக்தி ஷேத்ரங்கள் கைங்கர்யம் -சத்ர சாமரங்கள் பத்னி பாத ஸ்தானங்கள்-ஸப்த புண்ணிய ஷேத்ரங்கள்-முக்தி தரும் மோட்சத் தலங்கள்-7–வடமதுரை–ராஜா -ஸிம்ஹாஸனம்–துவாரகை—அயோத்தி–ராணி ஸ்தானம்–ஹரித்வார்–காசி–உஜ்ஜயினி (அவந்திகா)—காஞ்சி

அங்குஷ்டா கட்டைவிரலையே புருஷ லிங்கம் மற்ற விரல்கள் ஸ்த்ரீ லிங்கம் -அசித் -பத்த முக்த நித்ய -மற்ற விரல்கள் -ஸத்வ ரஜஸ் தமஸ் -விரல்கள் அளவும் ஒரே மாதிரியாக இருக்காவே

திருப்பாவையில் திவ்ய தேசங்கள் >>

  1. மார்கழித் திங்கள் – நாராயணனே நமக்கே பறை தருவான் – பரமபதம்.
  2. வையத்து – பாற்கடலில் பையத் துயின்ற – க்ஷீராப்தி.
  3. ஓங்கி – ஓங்கி உலகளந்த உத்தமன் – திருக்கோவலூர்.
  4. ஆழிமழை – பாழியம் தோளுடை பத்மநாபன் – திரு அனந்தபுரம் .
  5. மாயனை – வடமதுரை மைந்தன் – மதுரா .
  6. புள்ளும் – வெள்ளத்ரவில் அமர்ந்த வித்து – திருவண் வண்டூர்.
  7. கீச்சு கீச்சு – கேசவனைப் பாடவும் – திருவாய்ப்பாடி.
  8. கீழ்வானம் – தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால் – வரதராஜ பெருமாள் கோயில், காஞ்சி.
  9. தூமணி மாடம் – குன்றின்மேல் விளக்கு – திருக் கடிகை.
  10. நோற்று சுவர்க்கம் – நாற்றத் துழாய்முடி நாராயணன் – திருக்காட்கரை.

11 கற்றுக் கறவை – முகில் வண்ணன் பேர் பாட – காளமேகப் பெருமாள் திருமோகூர்.

  1. கனைத்திளம் – தென் இலங்கை கோமானை சேற்ற மனத்துக்கு கினியான்- தில்லை திரு சித்திர கூட்டம்.
  2. புள்ளின்வாய் – பள்ளிக் கிடத்தியோ – திருக்குடந்தை.
  3. உங்கள் புழக்கடை – நாவுடையாய் – செந்தமிழும் வடுக்கலையும் திகழ்ந்த நாவர் – தேரழுந்தூர்.
  4. எல்லே – மாற்றாரை மாற்றழிக்க வல்லான் மாயன் – திருவல்லிக்கேணி.
  5. நாயகனாய் – மாயன் மணிவண்ணன் – திருக்குறுங்குடி.
  6. அம்பரமே – அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமான் – சீர்காழி.
  7. உந்து மத களிறு – பந்தார் விரலி மைத்துனன் – திருநறையூர்.
  8. குத்து விளக்கு – மலர்மார்பா – திருவிடவெந்தை.
  9. முப்பத்து மூவர் – செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலன் – திருப்பாடகம்.
  10. ஏற்ற கலங்கள் – ஊற்றமுடையாய் பெரியாய் – பெரும்புறக் கடல் – திருக்கண்ண மங்கை.
  11. அங்கண்மா ஞாலம் – அரசர் அபிமான பங்கமாய் வந்து தலைப்பெய்து – திருமாலிருஞ் சோலை.
  12. மாரி மலை முழஞ்சில் – பூவை பூ வண்ணா – திருவரங்கம்.
  13. அன்றிவ் உலகம் – குன்று குடையாய் – கோவர்த்தனம்.
  14. ஒருத்தி – கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமால் – திருக்கண்ணபுரம்.
  15. மாலே மணிவண்ணா – ஆலின் இலையாய் – பூரி ஜெகன்நாதர்.

27 கூடாரை வெல்லும் – சீர் கோவிந்தா – (திருவேங்கடம்).

28 கற்றுக் கறவை – குறை ஒன்றுமில்லாத கோவிந்தா – (விருந்தாவனம்)

29 சிற்றம் சிறுகாலை – பறை கொள்வான் கோவிந்தா – (துவாரகை.)

39 வங்கக் கடல் – அணிபுதுவை – (ஸ்ரீவில்லிபுத்தூர்).

(P B அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமி தொகுத்ததில் எடுத்தது)

ஐந்தாம் பட்டு ஆளவந்தார் -யமுனைத் துறைவன்
செல்வ சிறுமியர் -கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் –
செய்யும் கிரிசைகள் -நாதமுனி பெரிய யோகி-
அடுத்து -உய்யக்கொண்டாரும்–உய்யுமாறு எண்ணி– -நாடு எல்லாம் பிணம் கிடைக்க மணம் புரிவார் உண்டோ
அடுத்து -மணக்கால் நம்பியும்–சேறு உகள –சார்ங்கம் உதைத்த -ராம மிஸ்ரர் –

நாராயணனே மாயன் -துயின்ற பரமனும் மாயன் -உத்தமனும் மாயன் -பத்ம நாபனும் மாயன்-ஊழி முதல்வன் -வியஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி பத்ம நாபன் சமஷ்டி ஸ்ருஷ்ட்டி -இரண்டுமே மாயன் -தாமோதரனும் மாயன்

“தூயோமாய்”
ஒரு விளக்கு எப்படி
தனக்கும் பிறர்க்குமாக இருக்குமோ,அதேபோல
ஆண்டாள் அருளிய 30 பாசுரங்களைக் கொண்ட
” திருப்பாவை” யின் மூலம்,
பகவானை அடையும் வழியை அறியாதவர்க்கு,
ஒரு ஒளிவிளக்காக இருந்து கண்ணனை அடைய வேணும் எனும்
ருசி/ ஆசையுடையோர்க்கு பகவத்கைங்கர்ய வழியை ஒரு நோன்பைக் காரணமாகக் கொண்டு அனைவர்க்குமாக காட்டி அருளியத்தை: ஒரு ப்ரபந்நனுக்கு அநவரதம் அநுசந்தேயமான இத்திவ்யப் பாமாலை, ஆக்ஞையில் வாராது;
ஆசைப்படவேண்டும; எனவே, வாருங்கோள்
என்றழைத்து இதனுள் பொதிந்திருக்கும் ஆழ்ந்த கருத்துகளை வ்யாக்யானச் சக்ரவர்த்தியான ஸ் வாமி
பெரியவாச்சான் பிள்ளையின் வ்யாக்யானத்தை கைக்கொண்டு தனக்கே உரிய பாணியில் பல ப்ரமாணங்களையும், மேற்கோள்களையும் கொண்டு கோர்த்து கோர்த்து நம் ஸ்வாமி வழங்கும் பொழிவில் மூழ்கிப் பேரின்பத்தில் திளைப்பது ஒரு சுஹானுபவம். அந்த வகையில் நாமனுபவித்தச் சில இடங்கள்:
“நாராயணனே”என்பது பரவாஸுதேவனையும்(சரமஸ்லோகத்துக்குமானது)
“பையத்துயின்ற பரமனை”
என்பது வ்யூகமென்றும்(த்வயத்துக்கானது)
“உத்தமன் பேர்பாடி” விபவத்தையும்(துருமந்திரத்துக்கானது)
“ஆழிமழைக் கண்ணா”
என்பதன் மூலம் வருணபகவானான
பரஜன்யஸ்வாமி உலகினில் பெய்த மழையால் ஊரார்களைக் குளிப்பாட்டியதைப்போல,
நாங்களும் நீராடக் கடவோம் மகிழ்ந்து என்பதனையும்,
“ஆயர்குலத்தின் அணிவிளக்கை” பரிசுத்தமான மலர்களைக்கொண்டு பூஜித்து, வாயினால்பாடி, மனத்தினால் சிந்திக்க
“சஞ்சித கர்மம் மற்றும் ப்ராரப்தகர்மத்தினால் ஏற்பட்ட அனைத்து பாவங்களும் தீயிலிட்ட பஞ்சைப்போல் பொசுங்கிவிடும் என்று விளக்கியது:
அடுத்து, ” படிந்து”, “உகந்து”, நிறைந்து”, ” “மகிழ்ந்து” மற்றும் “தூயோமாய் வந்து” என்று நவவித பக்திகளை முதல் ஐந்து பாசுரத்திலே சொல்லப்பட்டிருப்பதையும்,
பட்டுத்திருந்தும் வாசிகளான ஒரு முமுஷுவோ (அ) பரமைகாந்தியோ அல்லாதாரும் உய்யுமாறு
பண்ணும் “உந்து” தலில் ஒரு தாய்க்கு தன் சேய்வசம் உள்ள அன்பினை “உச்சிமோந்து”
வெளிப்படுத்தும் விதமாக பகவானின் திருநாமங்களின் ஏற்றத்தைச் சொல்லி நம்மை நல்வழிப்படுத்தும்
ஸ்வாமியை நாமும் ‘”தூயோமாய் வந்து”
தூமலர்த்தூவித் தொழுவோமென ஆண்டாள் காட்டிப்போந்தவாறே முன்னோர் செய்தமுறை தப்பாது செயற்படும் ஸ்வாமியை மனத்தினால் அநுதினம் சிந்தித்து துதிப்போம்

🌺காலை 10 மணி வாக்கில் கிளி கட்ட உக்காருவேன். அதுக்கு முன்னாலேயே இலைகள், நார், பூ, மூங்கில் குச்சி எல்லாம் போய் சேகரிச்சுட்டு வந்து, தயாராக வச்சுக்கிட்டுத்தான் உக்காருவேன். நானேதான் போய் அதை யெல்லாம் சேகரிச்சுட்டு வருவேன். பிளாஸ்டிக் போன்ற எந்த செயற்கைப் பொருளாகவும் இல்லாமல் ரசாயனம், கோந்து போன்று எதுவும் கலக்காமல் இலை, பூ , நார், மூங்கில் மட்டுமே கொண்டு செய்யப்படும் அற்புதம் அது!

“🌹இது ஒரு நுணுக்கமான வேலை. இதை ஆண்கள் தான் செய்யணும். இது வரை எந்தப் பெண்ணும் கிளி கட்டித் தந்ததா தகவல் இல்லை. எங்க விட்டுப் பெண்கள் விருப்பப்பட்டு கட்டி தரோம்’நு சொன்னாக்கூட நாங்க அனுமதிக்கிறதில்லை.

🌹ஆண்டாள் அம்மாவுக்காக தினசரி ஒரு புது கிளி செய்வோம். ஒரு கிளி கட்டுறதுக்கு அஞ்சு, ஆறு மணி நேரமாகும். வேறு யார் உதவியும் இல்லாம, நான் ஒருத்தந்தான் செய்வேன். கிளி செய்ய சில இலைகளும், பூக்களும், வாழை நாரும் மட்டும்தான் பயன்படுத்துவேன்.

வித்தினை உள்ளத்துக்கு கொண்டு –வித்தினை –முதல் இரண்டு அத்தியாயங்கள் -ஜகத் காரணமான ப்ரஹ்மம் -நாராயணனை -பரமனை -உத்தமனை -பத்ம நாதனை -மாயனை -த்யேய வாஸ்து நிர்ணயம் கீழே தியானித்து-உள்ளத்துக்கொண்டு -சாதன அத்யாயம் -மூன்றாம் அத்யாயம் –

திரு அனந்தல் ஸேவை –திருபள்ளி எழுச்சி -ஸூப்ரபாத ஸேவை

பேர் -நாம மகிமை 14 பாசுரங்கள் பூதத்தாழ்வார்
துழாய் -14 பாசுரங்கள் -பேயாழ்வார்

துயில் அணை மேல் கண் வளரும் -9
கோட்டுக் கால் கட்டில் மேல் -பஞ்ச சயனத்தின் மேல் -19
மாடியில் -கட்டிலில் -படுக்கையில் -ஒரே வ்யக்தி கண் வளரும்

கோதுகலமுடைய -வேண்டற்பாடு உடையவால் -பெரியவா ச்சார்யன் பிள்ளையும் மா முனிகளும் -உயர்ந்த குலத்தில் தோன்றிய -திருவாய் மொழிப்பிள்ளை ஸ்வாப தேச வியாக்யானம்

பிஷாசான் -ஹரி கண ஈஸ்வர
மித்ரா பாவேந -விபீஷணன்
சக்ருதேவ -பிரபன்னனுக்கு –
இவ்வாறு ஆராய்ந்து அருள்வாய்
மற்றவர்கள் வரம் கொடுக்கும் பொழுது ஆராயாமல் அருளி பின்பும் இவனை சரணம் அடைந்து தங்களுக்கு வரும் அநர்த்தங்களையும் போக்கிக் கொள்வார்கள்-

ருக்மிணி பொற் கோடி
லஷ்மணன் -நற் செல்வன்
ராமன் -மனத்துக்கு இனியான்

கற்றுக்கறைவை –முத்திறமும் உண்டு -சத்வ குணம் பசு -தமஸ் ரஜஸ் -ஆடு எருமை –கற்று எருமை -பசுப்பால் பகவத் கைங்கர்யம் -எருமைப்பால் -லௌகிக வியாபாரம் –

வியாழன் உறங்கிற்று அஸ்தமித்தது -அமங்கள சொல் அருளிச் செய்யாமல்
பாலில் ஸ்ரீனிவாசன் இருந்தது -ஸ்ரீனி வாசம் எறும்பு

புள்ளின் வாய் கீண்டவன் புள் இன் வாய் -ஜடாயு -ஆயுஷ்மான் -பெரிய உடையார் -இந்து முகூர்த்தம் -தொலைந்த ஓன்று அப்படியே கிட்டும் -ஆஞ்சநேயர் பெருமாள் காதில் ஓதிய மந்த்ரம் -யுத்தம் விற்கவும் படைத்த நினைவு படுத்திய வ்ருத்தாந்தம்

இரா வண்ணன் கருமை நிறம் கொண்ட ராமன்-ராமன் ரா இரவில் சஞ்சரிக்கும் ராக்ஷஸர்களில் மன்னன் -ராவணனை ராமன் கொன்றான் சொன்னாலும் பொருந்தும்

ஆழ்வார்களில் ஆழ்ந்து அருளிச் செயல்களில் ஆழ்ந்து-ஆராவமுதப்பெருமாள் ஆராவமுத ஆழ்வார் திரு நாமம் பெற்றார்-அத்யயன உத்சவம் மார்கழியில் இங்கு நடக்கும் -தைமாதம் ப்ரஹ்ம உத்சவம் நடக்க இடையூறு இல்லாமல் இருப்பதற்காகவே

மண்ணுண்ணி மாப்பிள்ளையே-காவிறையே, கூவிறையே உங்களப்பன் கோவில் பெருச்சாளி, கன்னா பின்னா மன்னா தென்னா சோழங்கப் பெருமானே!”-தமிழ் மொழியில் எதையும்கூறி உரை சொல்ல முடியும்

கன்னா பின்னா மன்னா
கன்னா = வாரி வழங்குவதில் வல்லவனான கர்ணனைப் போன்று விளங்கும் கொடைவள்ளலே ! பின்னா = அவனுக்குப்பின் பிறந்த தர்மபுத்திரனைப் போன்று நீதி வழுவாதவனே ! தென்னா மன்னா = தென்னாடு முழுவதும் ஆளும் மன்னனே ! சோழங்கப் பெருமாளே = சோழ வம்சத்தின் பெருமையை நிலைநாட்ட வந்த தலைவனே !-மண் உண்ணி மா பிள்ளையே -உலகம் உண்ட பெரிய வாயன் -ஸ்ரீ யப்பத்தி-காவிறையே என்றால் கா என்பது கற்பகம் அதற்கு இறைவன் இந்திரன்
கூ என்பது பூமி அதனிறைவன் நம் பெருமான் அதாவது அரசன் உங்கப்பன் கோ என்பது உங்கள் தந்தையும் பெரிய சக்கர வர்த்தி அவர் வில் வித்தையில் பெரிய ஆள் அதையே வில் பெருச்சாளி

ராமனும் கண்ணனும் ஒருவனே என்றார்கள் கீழ் -எவ்வாறு ஒருவரே என்பதை சங்கொடு சக்கரம்ஏந்தும் தடக்கையன் -பங்கய கண்ணன் -என்கிறார்கள்

நான் -நாண் -இரண்டுமே அஹங்காரச் சொற்கள்
புழக்கடை -கடைத்தலை வாழும் சோம்பர் -தலைக்கடை வாசல் புறம்

அரவணைப்பள்ளியானைகேசவனைப் பாடும் ” ஹரி”
எனும் பேச்சரவம், தயிரரவம் கேட்டிலையோ, கண்ணனை துயில் எழுப்ப வா என்றும்;
: நுனிப்புல் மேய நமக்கு முன் செல்லும் கறவையினங்களையும் நிறுத்தி உன் வாசலில் நிற்கிறோம்; கண்ணனைக் கொண்டாட வா என்றும்;
: பகவானின் திருநாமங்களான “மாமாயன், மாதவன், வைகுந்தனில்
மூன்றாவதான “வைகுந்தனை” எங்களுடன் சேர்ந்து பாடவா என்றும்;
: வேதத்தின் சுருக்கான, ஸாரமான, மங்கலத்தைச்
சொல்லும் நாராயணனின் அருள் பெற்றவளே; படுக்கையிலிருந்து எழுந்து வந்து எங்களுடன்
சேர்வாய் என்றும்;
: கோவலர்தம் பொற்கொடியே, மிக்கசெல்வங்களையுடையவளே, இடையனின் தங்கையே நோன்புக்கு நீயும் வருவாய் என்றும்;

: இடைச்சியாய் க்ருஷணாநுபவத்தைப்
பாடினாலும் இடையிடையே ஸ்வரூபத்துக்கநுரூபமான
கைங்கர்யச் செல்வனைப்
பெற்ற”மனத்துக்கினிய”னான ஸ்ரீராமனையும் பாட கோவலர்களின்வாரிசே
நீ எங்களுடன், சேர்வாய் என்றும்;
: ஜ்ஞானத்தின்சீர்மையை
காட்டும் ” கண்ணழகு உடையவளே”, பொல்லா அரக்கனை கொன்ற ஸ்ரீ ராமனைப் பாடி நாம் எல்லாரும் ஒன்றாக அநுபவிப்போம் என்றும்
பாடிப் போந்ததை::
வியாக்யானச் சக்ரவர்த்தியான பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமியின் விரிவுரை, வேதவேதாந்தஙகள்,
இதிகாச புராணாதிகள் மற்றும் ஆழ்வார்களின்
பாசுரங்களிலும் மேலே சொல்லப்பட்ட விஷயங்களுக்கநுகுணமான ஆழ்ந்த கருத்துகள் சொல்லப்பட்டிருக்கும் செயலியையும் ஒரு சங்கிலித்தொடராகச் சேர்த்துச் சொல்லி;
பகவத்விஷயத்தின் சுவடறிந்தும் மறந்து கிடக்கும் அடியேன் போன்றவர்கள் கடைத்தேறவும்,
பரார்த்த
கைங்கர்யம் பகவத் விஷயத்தோடு நில்லாமல்
பாகவதவிஷயமாயும் இருக்கத் தன்னையே ஒரு
கொழுகொம்பாய்ப் பிடித்துக் கொண்டு நோன்பு நோற்க நம்மை அழைத்துச் செல்லும்
“மனத்துக்கினியனான” நம் ஸவாமியின் திருவடிகளைப் பற்றி வீண் பேச்சுக்களைத் தவிர்த்து
எப்பொழுதும் திருமாலின் கதைகளையே பேசியும், உய்யுமாரெண்ணியும்
உகந்தே இருப்போம்!!
” பொலிக, பொலிக, பொலிக!!

பாவைக் களம் -திருவஞ்சிக்களம் -திரு மூழிக் களம் -செல்வம் மறப்பித்த ஸ்தலம்

ஒரு கால் நந்த கோபன் மேலும் மற்ற ஒரு கால் யசோதா பிராட்டி மேலும் பலதேவன் கால் நூபுரம் த்வனி கேட்டு பாசுரம் -அடியை விடாதவர்கள் அன்றோ இவர்கள்

சாலப்பல நாள் இன்னம் தளர்வேனோ – -திருமந்த்ரார்த்தம் –இன்னம் உறங்குதியோ-இன்னம் மூன்று அர்த்தங்களும்-மூன்று பாசுரங்களாலும் அங்கு சர்வ கால ரக்ஷகத்வம் -சர்வ ரக்ஷகத்வம் -சர்வ பிரகார ரக்ஷகத்வம் -அங்கு சொல்லி -புருஷகாரம் -இருக்கவும் ரக்ஷகன் இருந்தாலும் -அடியேன் சம்பந்தம் அறிந்த பின்பும் இன்பம் தளரவனோ -இன்னும் கெடுப்பாயோ- -இன்னும் குறுகாதோ-6-9-திருவாய் மொழியில்7-8-9 பாசுரங்கள் மூன்று இன்னும்-இன்னும் எண்ணுகின்றாய் -7-1- பிராட்டி முன்னாக சரணம் அடைந்த பின்பும்-உற்றேன் உன பாதம் பெற்றேன் உகந்து பணி செய்தேன் -இரண்டுமே ப்ராப்யம் –
இனியும் ஈதே வேண்டுவது -அங்கும் இனியும்–இன்னும் கார் வண்ணமே

செல்வா பலதேவா -நற் செல்வனாகி இருந்து வெறும் செல்வனாகி தூங்கலாமோ -கைங்கர்யம் இழந்தாயே-பிராட்டி மூலம் கைங்கர்யம் செய்ய உபதேசித்து நன்மையை மீண்டும் பெற்றான்–கன்னிகை இல்லாமல் கல்யாணமா -என்று காட்டி அருளினவன்-திருமந்திர சாரமே இவன்-உற்றதும் உன் அடியார்க்கு அடிமை- -கீழ் ஆச்சார்யன் -மந்த்ரம் -பொருள் -இங்கு சாரம்

உந்து மத களிற்றன் -உகாரம் -18-குத்து விளக்க எரிய -க் +உ -19- -முப்பத்து மூவர்-ம் +உ -20-மேல் மூன்று பாசுரங்கள் அவளையும் -அவள் அவன் நாம் சேர்க்கையும் உண்டே

ந பின்னை–பிரிவே இல்லாமல் பின்னால் போகாமல் வஞ்சுள வல்லித்தாயார் போல் -நம்பியைக் கையில் வைத்துக் இருக்கும் நம்பிக்கை நாச்சியார்-கண்ணன் பின் பிறந்தவள் கும்பன் திரு மகள்-மாதவிப்பந்தல் -ஸ்ரீ வில்லி புத்தூரிலும் அழகர் கோயிலிலும் உண்டே-உந்து மத களிற்றன்-கண்ணனே களிறு -பராங்குசன்-

தனிக் கோயில் நாச்சியார் இடம் பிரார்த்தனை -உந்து -உபய நாச்சியார் உடன் கூடிய அவனிடம் சரணாகதி குத்து -திருமார்பு நாச்சியார் சேர்த்தியில் கைங்கர்யம் முப்பத்து மூவர்

நேத்ருத்வம் உந்து -நித்ய யோகம் -குத்து விளக்கு-தத் இங்கித பராதீனன்-

ஏற்ற கலங்கள் -திருப்பாவையில் திருப்பள்ளி எழுச்சி -அன்று –போற்றி -திருப்பல்லாண்டு-ஆர்ய புத்ரா -ஆற்றப் படைத்தான் மகனே -சாஸ்திரம் படி கணவனை அழைக்க வேண்டிய முறையை நப்பின்னை சொல்லிக் கொடுத்த படி –

சூடகமே -ஏவகார சீமாட்டி -அனைத்துமே கண்ணன் -கன்றுக் குட்டிகள் ஆயர் சிறுமியர்கள் போல இவனே முன்பு ஆனான் -உன்னையே அர்த்தித்து வந்தோம் என்றவர்கள் தானே –

நம் காமங்கள் மாற்று -எம் இல்லை -அவனையும் சேர்த்து -விளையாட்டுக்காக -அவன் செய்யலாம் -அவனையும் சேர்த்து அருளிச் செய்கிறார்

28ம் பாசுரத்திற்கு த்வயத்தின் முன்வாக்கியத்தையும் 29ம் பாகரத்தில் பின்வாக்கியத்தையும் சாதித்தாள். இந்த 28ம்மாகரத்தில் இறைவா நீ தாராய் பறை என்று ப்ரார்த்தித்தாள் ( முதல் பாசுரத்தில் நாராயணனே நமக்கே பறை
தருவான் என்றாள்

28ம்பாசுரத்தில் ப்ராபகத்தையும் ௨9ம்பாகரத்தில் முழுமையான ப்ராப்ய ப்ராபக ப்ரார்த்தனை செய்கிறார். இந்த 6 உபாய வர்ணத்தை – த்வயத்தின் முன்பகுதி அர்த்தத்தை சொல்லி 28வது பாசுரத்தில் சரணம் ப்ரபத்யே என கூறுகிறாள். ஆக 18, 19, ௨௦வது பாசுரங்கள் ஸ்ரீமத் சப்தம், 21, 22, நாராயணாய , 23, 24- சரணௌ சப்தரித்தல் 25 – சரணம் விளக்கம் – அநிஷ்டத்தை தொலைத்து . இஷ்டத்தை கொடுக்குமாறு அர்த்தித்தல் ( வருத்தம் தீர்ந்து அருளேலோ) 26 – யார் உபாயம் என்று கூறுவது 27 – கூடியிருந்து குளிர்ந்து ஸாயுஜ்ய மோக்ஷம் – 28வது பாசுரம் சரணாகதியை சொல்வது

18 முதல்20 வது பாசுரம் வரை பிராட்டி சம்பந்தம் சொல்லப்பட்டது. நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே – நாரங்களுக்கு அயனமாய் இருக்கிறார். நாராயண – சேதன அசேதனங்களுக்கு விசிஷ்டனாய், குணவிசிஷ்டனாய், விக்ரஹ விசிஷ்டனாய லஷ்மி விசிஷ்டராய் இருக்கிறார். 21ம் பாகரத்தில் . போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து – என குணத்தை புகழ்கிறாள். 22ம் பாசுரம் – கடாக்ஷத்தை பிரார்த்திப்பது 23 – அவர் திருவடிகளே உபாயம். உபாயமான நீ எங்களை தேடி வர வேண்டும் என பரகத ஸ்வீகார மே ஸ்வீகாரம் என்கிறாள். 24 நடந்த திருவடிகளுக்கு பல்லாண்டு பாடினாள். 25வது பாசுரத்தில் தேவரீரே பறை என்ற புருஷார்த்தம் 26வது பாசுரத்தில் அவரும் நாமும் சேர்ந்து 8 குணங்களில் சாம்யாபத்தி – அவருக்கு நிகரான தன்மை. 26வது பாசுரத்தில் ஆலின்கிலையாய் அருள் – அகடித கடனா சாமர்த்தியத்துடன் கூடிய பரத்துவம் சொல்லப்பட்டுள்ளது. சாம்யாபத்தி மோக்ஷம். பரத்துவம் உடையவர் கொடுத்தால் தான் உயர்ந்த சாம்யாபத்தியாய் இருக்கும். 27வது பாகரத்தில் 8 குணங்களில் பெருமானுக்கு நிகர். ஆனந்தம் எப்படி இருக்கும் அடியார்களுடன் சேர்ந்து பகவானை அனுபவிப்போம். 27. சாயுஜ்ய பதவி கிட்டுவது 28வது பாசுரம் ப்ரபன்னனிற்கு உண்டான நிஷ்டையை ப்ராப்யத்தை இப்பாசுரத்தில் சொல்லப்பட்டுள்ளது. புண்ணியம் யாம் உடையோம் – இங்கு புண்ணியமே பெருமாள்தான் உன் திருவடிகளையே உபாயமாக ளித்த உபாயமாக உன்னையே கொடுத்தாய்.29ம் பாதரம் – ப்ராபகம் . திருப்பாவை ஆகிறது இப்பாசுரம்

ஒருத்தி மகனாய்ப் பிறந்து -திருமந்திரத்தில் பிறந்து
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர -துவாதச அஷரி -ஓம் நமோ பகவத் வாஸூ தேவர் -மகனாய் ஒளித்து வளர-யாதவ ஸிம்ஹம் போலவே நரஸிம்ஹ -வாமன -ராகவ ஸிம்ஹம் -ரெங்கேத்ர ஸிம்ஹம் -ராமானுஜ சீயம் அனைவருக்கும் பொருந்தும்

திருத்தக்க செல்வம் -அவனையே சொன்னவாறு -வருத்தமும் தீர்ந்ததும் அவனுக்கே

ஆ ந ந -இல்லை என்பதை இல்லை -எப்பொழுதும் உண்டு -ஆநநம் முகம் -நம்மோடே உற்றோடே ஆவீர் -நமக்கே ஆட் செய்வீர் என்பவன் -லஷ்மீ கல்யாண வைபோகமே அருளி நிகமனம் -மா தொடங்கி -எங்கும் திரு வருள் பெற்று இன்புறுவர்

அங்கு அப்பறை –பரமன் அடி பாடி -ஒரு பறை -பரம புருஷார்த்தம் -ப்ரீதி காரித ததீய கைங்கர்யம் -ததீயாருக்காகவே-அப்பறையே நீங்காத செல்வம்-குண அனுபவம் -கைங்கர்ய நிஷ்டர் -பறை இரண்டு வகை -முனிவரும் யோகிகளும் -கலந்து பேசின -கூட்டமாக அனுபவம்-

கணுப் பண்டிகை பாடல் :

கணுப் பிடி வெச்சேன்
காக்காப் பிடி வெச்சேன்

கணுப் பிடியும்
காக்காப் பிடியும்
கலந்து நானும் வெச்சேன்

பார்த்து வெச்சேன் பரப்பி வெச்சேன்
பச்சை இலையில் நிரப்பி வெச்சேன்

மஞ்சள் இலையை விரிச்சு வெச்சேன்
மகிழ்ச்சி பொங்க பிரிச்சு வெச்சேன்

காக்கைக்கும் குருவிக்கும்
கல்யாணம்னு சொல்லி வெச்சேன்

கலர் கலரா சாதம் வெச்சேன்
கரும்புத் துண்டும் கலந்து வெச்சேன்

வகை வகையா சாதம் வெச்சேன்
வாழைப்பழம் சேர்த்து வெச்சேன்

அண்ணன் தம்பி குடும்பமெல்லாம்
அமர்க்களமாய் வாழ வெச்சேன்

இனிப்பு புளிப்பு தேங்காய் சாதம்
இன்பமாய் எடுத்து வெச்சேன்

எள் சாதம் எலுமிச்சை சாதம்
ஏகாந்தமாய் நானும் வெச்சேன்

கூட்டு பொரியல் அவியல் வெச்சேன்
கூட்டுக் குடும்பம் கேட்டு வெச்சேன்

தூப தீபம் காட்டி வெச்சேன்
இதயத்தோடு எதுத்து வெச்சேன்

கற்பூரம் ஏத்தி வெச்சேன்
கண்ணனை வணங்கி வெச்சேன்

ஆரத்தி எடுத்து வெச்சேன்
ஆண்டவனை வேண்டி வெச்சேன்

கணுப் பிடி வெச்சேன்
காக்காப் பிடி வெச்சேன்

கணுப் பிடியும் காக்காப் பிடியும்
கலந்து நானும் வெச்சேன்

பிறந்த அகம் ஓங்கி வளர ஆழ்வார் எம்பெருமானாரை வணங்கி வெச்சேன்

——————————————-

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading