ஶ்ரீ ஸரயூ அஷ்டகம்

ஶ்ரீ சக்ரவர்தீ த³ஶரத² உவாச ।

நமஸ்தே ஸரயூ தே³வி வஸிஷ்ட² தநயே ஶுபே⁴ ।
ப்³ரஹ்மாதி³ ஸகலைர்தே³வைர்ரு’ஷிபி⁴ர்நாரதா³தி³பி:⁴ ॥ 1॥

ஸதா³ த்வம் ஸேவிதா தே³வி ததா² ஸுக்ரு’திபி⁴ர்நரை: ।
மாநஸாச்ச ஸமாயாதே ஜக³தாம் பாப ஹாரிணி ॥ 2॥

ஸ்மரதாம் பஶ்யதாம் தே³வி பாபநாஶே படீயஸி ।
யே பிப³ந்தி ஜலம் தே³வி த்வதீ³யம் க³தமத்ஸரா: ॥ 3॥

ஸ்தநபாநம் ந தே மாது: கரிஷ்யந்தி கதா³சந ।
மநு ப்ரப்⁴ரு’திபி⁴ர்மாந்யைமாநிதாஸி ஸதா³ ஶுபே⁴ ॥ 4॥

த்வத்தீர மரணேநைவ த்வந்நாம ரடநேந ச ।
யே த்யஜந்தி தநும் தே³வி தே க்ரு’தார்தா² ந ஸம்ஶய: ॥ 5॥

த்வம் து நேத்ரோத்³ப⁴வா தே³வி ஹரேர்நாராயணஸ்ய ஹி ।
மஹிமா தவ தே³வைஶ்ச கீ³யதே ச முஹுர்முஹு: ॥ 6॥

தத்ர கா ஹி மந: ஶக்தி: ஸ்தவநே மாநுஷஸ்ய ச ।
த்வத்தீரே ஸர்வ தீர்தா²நி நிவஸந்தி சதுர்யுகே³ ॥ 7॥

நமோ தே³வி நமோ தே³வி புநரேவ நமோ நம: ।
ஹே வாஸிஷ்டி² மஹாபா⁴கே³ ப்ரணதம் ரக்ஷ ப³ந்த⁴நாத் ॥ 8॥

இதி ஶ்ரீஸரயூ அஷ்டகம் ஸம்பூர்ணம் ।

————–

அயோத்தியின் அணிகலன் சரயு

சரயு நதிக்கரையிலேயே ஸ்ரீராமர் பிறந்தார். சரயுவில் நீராடியே வளர்ந்தார். சரயுவைக் கடந்தே கானகம் புகுந்தார். சரயுவில் கலந்தே வைகுந்தம் புகுந்தார் என ஸ்ரீராம காவியத்தின் சத்திய சாட்சியாக, அன்றும், இன்றும், என்றும் கம்பீரத்தோடு ஓடிக் கொண்டிருக்கிறாள் சரயு மாதா.

அசுரர்களின் இம்சைகளைத் தாங்க முடியாத தேவர்களும் ரிஷிகளும் ஸ்ரீமந் நாராயணனிடம் வேண்டுகோள் வைத்தனர். துஷ்ட நிக்ரகம் செய்ய ராமாவதாரம் எடுக்க விரும்பிய ஸ்ரீமகாவிஷ்ணு வைகுந்தத்தின் ஒரு பகுதியையே அயோத்தியாக்கினார். அந்த அயோத்தியை மனு, சரயு நதியின் அருகே ஸ்தாபித்தார் என வரலாறு கூறுகிறது. திருமாலோடு மண்ணுலகில் சேர்ந்திருக்க விரும்பிய அவரின் தர்மபத்தினியான நீளாதேவியே சரயுவாகத் தோன்றி அயோத்திக்கு அருகே பிரவாகம் எடுத்தாள் என்கின்றன புராணங்கள். சரத்தைப் போல விரைந்து ஓடுபவள் என்பதால் சரயு என்றானாள்.

இன்றும் சுத்தமான குளிர்ந்த நதியாக ஓடும் சரயு அன்னையின் 14 படித்துறைகள் அயோத்தியில் முக்கியமானவை. அதில் குப்த்வார் காட், கைகேயி காட், கௌசல்யா காட், பாப விமோச்சன் காட், லக்ஷ்மண் காட் போன்றவை சில. ஸ்ரீராம நவமி நாளில் சரயுவில் நீராடினால் மோட்சம் உறுதி என்பது நம்பிக்கை. கங்கைக்கு ஆரத்தி எடுப்பதைப் போல சரயுவுக்கும் ஆரத்தி பூஜை அன்றாடம் நடைபெறுகிறது.

ராமாயணத்தின் தொடக்கம் சரயு நதிக்கரையில் இருந்தே தொடங்குகிறது. நடக்க முடியாத, பார்வை இழந்த பெற்றோர்களைத் தூக்கிச் சுமந்த சிரவணன், சரயுவில் குடுவை ஒன்றில் நீரை எடுத்துக் கொண்டிருந்தார். ஏதோ மிருகம் நீர் குடிக்கிறது என்று எண்ணிய தசரத மன்னர், சப்தம் வந்த திசை பார்த்து அம்பெறிய அது சிரவணனைக் கொன்றது. மகனை இழந்த பெற்றோர், தசரதனும் அவ்வாறே மகனைப் பிரிந்து புத்திர சோகத்தில் வாடவேண்டும் என்று சாபம் பெற்றார். ராம அவதாரத்தின் தொடக்கமாக இந்த நிகழ்வே அமைந்தது எனலாம். தசரதனின் அம்பு சிரவணனைக் கொன்ற பகுதி சர்வாரா என்றும், சிரவணன் பெற்றோரோடு வாழ்ந்த பகுதி சமதா என்றும் அயோத்தியிலேயே உள்ளது. இன்றும் சரயூவில் நீராடினால் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் தொலையும் என்பது நம்பிக்கை.

அயோத்தி திரும்பிய ஸ்ரீராமர் தசரதருக்காகவும் சிரவணனுக்காகவும் சரயுவில் பித்ருக் கடன்களை செய்தார் எனவும் ராமாயண நூல்கள் கூறுகின்றன. உத்தரகண்ட் மாநிலத்தின் சர்முல் என்ற இடத்தில் சரயு அன்னை தோன்றுகிறாள். அவளே அயோத்தியை அழகுற வளர்க்கிறாள். அயோத்தி சென்று ராமநவமி நாளில் சரயுவில் நீராடினால் மோட்சம் பெறலாம் என்பது தொன்றுதொட்ட நம்பிக்கை.

சூரிய வம்ச அரசர்களுடைய வீரமும் துணிவையும் தாண்டி அவர்கள் நல்லொழுக்கதோடு இருப்பதைப்போல அலைபுரண்டு சரயு பாய்ந்தாலும் கரைக்குள் மட்டுமே அடங்கி ஓடுவாள். கோசலை நாட்டில் ஒவ்வொரு ஜீவனும் தழைத்து வளரப் பாலூட்டும் தாயின் தனங்களைப்போன்றது சரயு என்கிறார் கம்ப ராமாயணத்தில் கம்பர். சரயு நதிக்கரையில் அமர்ந்தே துளசி தாசர் ராமாயணம் எழுதினாராம். பல நூறு ரிஷிகளையும் மகான்களையும் தனது கரையில் அமர வைத்து ஞானமும் மோட்சமும் அளித்தவள் சரயு.

ராம அவதார நோக்கம் முடிவடைந்ததும் தம்பி இளைய பெருமாளைத் தொடர்ந்து ஸ்ரீராமர் மூழ்கி வைகுண்டம் அடைந்ததும் சரயு நதியில்தான் என்கிறது வால்மீகி ராமாயணமும் துளசி ராமாயணமும். அவரைத் தொடர்ந்து பரதன், சத்ருக்கனனும் சரயுவில் புகுந்தே சங்கு சக்கரமாக வைகுந்தம் புகுந்தார்கள் என்றும் காவியங்கள் கூறுகின்றன. அதேபோல லக்ஷ்மணனின் மனைவி ஊர்மிளாவும் சரயுவில் மூழ்கி மோக்ஷம் அடைந்தார் என்றும் கூறப்படுகிறது.

சரயு நதிக்கரையிலேயே ஸ்ரீராமர் பிறந்தார். சரயுவில் நீராடியே வளர்ந்தார். சரயுவைக் கடந்தே கானகம் நுழைந்தார். சரயுவில் கலந்தே வைகுந்தம் புகுந்தார் என ஸ்ரீராம காவியத்தின் சத்திய சாட்சியாக, அன்றும், இன்றும், என்றும் கம்பீரத்தோடு ஓடிக் கொண்டிருக்கிறாள் சரயு மாதா. அவளைப் பணிந்து சகல பாவங்களும் நீங்கி உயர்ந்த வாழ்வைப் பெறுவோம்!

—————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading