ஸ்ரீ தாடீபஞ்சகம்-

ஸ்ரீவத்ஸ சிந்ந மிஸ்ரேப்யோ நம உக்திம தீமஹே:
யதுக்தயஸ் த்ரயி கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்:

கூரத்தாழ்வான் அருளிய பஞ்சஸ்தவம் வேதத்திற்கு மங்கள சூத்திரமாக (திருமாங்கல்யம்) உள்ளது (அதாவது இது இல்லாமல் பரதேவதை யார் என்ற தெளிவு நமக்கு கிடைத்திருக்காது), அவரை நான் வணங்குகிறேன்.

அர்வாஞ்சோ யத்பத ஸரஸிஜ த்வந்த்வமாச்ரித்ய பூர்வே
மூர்த்நா யஸ்யாந்வயமுபகதா தேசிகாமுக்திமாபு:
ஸோயம் ராமனுஜமுனிரபி ஸ்வீயமுக்திம் கரஸ்தாம்
யத் ஸம்பந்தாதமநுத கதம் வர்ண்யதே கூரநாத:

கூரத்தாழ்வானுடைய வைபவத்தை எப்படி நாம் வார்த்தையினால் சொல்லி முடிக்க முடியும் (மொழியைக் கடக்கும் பெரும்புகழான் / வாசா மகோசர)? ஒவ்வொருவருக்கும் எம்பெருமானார் மூலமாகவே மோக்ஷம் கிடைக்கிறது. சிலர் (எம்பெருமானாருக்கு முன்புள்ள ஆசார்யர்கள்) அவருடைய திருமுடி சம்பந்தம் மூலமாகவும், மற்றவர்கள் (எம்பெருமானாருக்கு பின்புள்ள ஆசார்யர்கள்) அவருடைய திருவடி சம்பந்தத்தின் மூலமாகவும் மோக்ஷத்தை அடைகிறார்கள். இத்தகைய எம்பெருமானாரே தனக்கு மோக்ஷம் கிடைத்தது கூரத்தாழ்வானாலே என்று கருதினார்.

ஸ்ரீ முதலியாண்டான்

திருநக்ஷத்ரம் : சித்திரை, புனர்பூஸம்

அவதார ஸ்தலம் : பேட்டை

ஆசார்யன்எம்பெருமானார்

பரமபதித்த இடம்: ஸ்ரீரங்கம்

முதலியாண்டான் அருளிச்செய்தவைதாடீ பஞ்சகம்ரஹஸ்ய த்ரயம் (எங்கும் கிடைப்பது இல்லை)

ஆனந்த தீக்ஷிதர், நாச்சியாரம்மன் தம்பதியினருக்கு  திருக்குமாரராய் திருவவதாரம் செய்தவர் தாசரதி. இவர் எம்பெருமானாரின் மருமகனாவார். ராமானுஜன் பொன்னடி, யதிராஜ பாதுகா, ஸ்ரீவைஷ்ணவ தாஸர் , திருமருமார்பன் என்றும் அழைக்கப் படுகிறார். இவர் முதலியாண்டான் என்று மிகவும் பிரசித்தமாய் அறியப்பட்டார் (ஸ்ரீவைஷ்ணவர்களின் தலைவர்). மற்றும்  எம்பெருமானாரின் திருவடித் தாமரை (யதிராஜ பாதுகா), எம்பெருமானாரின்  த்ரிதண்டம் என இவர் அறியப்படுகிறார். குறிப்பு: ஆழ்வானும் ஆண்டானும் எம்பெருமானாருக்கு மிகவும் நெருக்கமுடையவர்கள், பிரிக்க முடியாதவர்கள். எம்பெருமானாரின் த்ரிதண்டம்  முதலியாண்டானும்,  ஜல பவித்ரம் (த்ரிதண்டதில் இணைக்கப்பட்டுள்ள கொடி) கூரத்தாழ்வானும் ஆவார்கள்.

பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா
தஸ்ய தாசரதே: பாதௌ சிரஸா தாரயாம்யஹம்
–தனியன்

1)யாரொருவர், எம்பெருமானாருடைய திருவடிநிலைகளாக (பாதுகைகளாக) அறியப்படுகிறாரோ, அந்த தாசரதி என்னும் திருநாமம் உடையவரான ஸ்ரீ முதலியாண்டானுடைய திருவடியிணைகளை அடியேனுடைய தலையால் தாங்குகிறேன்.

யச் சக்ரே பக்த நகரே தாடி பஞ்சகம் உத்தமம்
ராமாநுஜார்ய ஸச் ஸாத்ரம் வந்தே தாசாரதிம் குரும்

2)யாரொருவர் பக்தநகரமான தொண்டனூரில் (ராமாநுஜருடைய விஜயத்தைப் போற்றும்படி) தாடீபஞ்சகம் என்னும் உத்தமமான ஸ்தோத்ரத்தை அருளிச்செய்தாரோ, அந்த ராமாநுஜருடைய ப்ரியசிஷ்யரும், தாசரதி என்னும் திருநாமம் உடையவருமான ஸ்ரீ முதலியாண்டானை வணங்குகிறேன்.

ஸ்ரீ எம்பெருமானார் உடைய வெற்றிச் செல்வத்தை
பேசுகின்ற ஐந்து ஸ்லோகங்கள்
கூரத் ஆழ்வான் அருளிச் செய்தது என்பர் சிலர்-
ஆழ்வான் ஆண்டான் எம்பார் முதலான ஐவர் அருளிச் செய்தவை என்பார் சிலர் –

————————————————————————————————————————-

பாஷண்ட த்ருமஷண்ட தாவதஹா நச் சார்வாக சைலாச நி
பௌத்தத் வாந்த நிராச வாசரபதிர் ஜை நே பகண்டீரவ
மாயாவாதி புஜங்க பங்க கருடஸ் தரை வித்ய சூடா மணி
ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜோ விஜயதே ராமா நுஜோயம் முநி–1-

1-பாஷண்ட த்ருமஷண்ட தாவதஹா ந-
பாஷண்டர்களாகிற வ்ருஷ சமூஹங்களுக்குக் காட்டுத் தீ போன்றவரும் –

2-சார்வாக சைலாச நி –
சார்வாக மதஸ்தர்களாகிற மலைகளுக்கு இடி போன்றவரும் –

3-பௌத்தத் வாந்த நிராச வாசரபதிர்-
பௌத்தர்கள் ஆகிற இருளுக்கு இரவி போன்றவரும் –

4-ஜைநே பகண்டீரவ –
ஜைனர்கள் ஆகிற யானைகளுக்கு சிங்கம் போன்றவரும் –

5-மாயாவாதி புஜங்க பங்க கருடஸ்-
மாயாவாதிகள் ஆகிற சர்ப்பங்களுக்கு கருடன் போன்றவரும்-

6-த்ரை வித்ய சூடா மணி –
பரம வைதிகர்களுக்கு சிரோமணி யானவரும் –

7-ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜோ விஜயதே ராமா நுஜோயம் முநி –
ஸ்ரீ ரெங்க நாதனுடைய சர்வாதிசயங்களையும் சேமித்து அருளினவருமான
இந்த ஸ்ரீ ராமா னுச முனிவர்
சர்வ உத்கர்ஷ சாலியாக
விளங்குகின்றார் –

ஏழு விசேஷணங்கள்-
அறுசமயச் செடியதனை யடி யறுத்தான் வாழியே
நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன
தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ் சடையோன் சொல் கற்ற சோம்பரும்
சூனிய வாதரும் நான் மறையும்
நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே பொற் கற்பகம் யெம்மிராமானுச முநி போந்த பின்னே –

பரம நாஸ்திகர்கள் -பாஷண்டர்கள்
மேலே விசேஷித்து
சார்வாகர் ஜைனர் மாயாவாதிகள்
சார்வாகர் -கண்ணால் கண்டது ஒன்றே பிரமாணம் -என்பர்
கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான் -என்றவாறே கனவிருள் அகன்றதே
ஸ்வாமி திருவவதரித்த பின்பு பௌத்த மதம் தொலைந்ததே
வலி மிக்க சீயம் -ஜைன மத யானைகளை மாய்த்து ஒழித்தார்

மாயாவாதி –
பிரபஞ்சம் எல்லாம் மாயா விலசிதம் –
த்ருச்யம் மித்தா திருஷ்டி கர்த்தாச மித்தா தோஷா மித்தா –
கருத்மான் நிழல் பட்டு அரவங்கள் மாய்ந்து போம் போலே –
பரம வைதிகர்கள் குலாவும் பெருமான் ராமானுஜர் -பரமை காந்திகளுக்கு சிரோ பூஷணம்
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்றும் வுவந்திடு நாள் –
ஸ்ரீ ரெங்க ஸ்ரீ யை அனுதினம் அனுபத்ரவமாக சேமித்து அருளி
ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜம் என்று விருது சாற்றப் பெற்றவர் –
ஆக இப்படிப் பட்ட பெருமை வாய்ந்த
எம்பெருமானார்
பல்லாண்டு பல்லாண்டாக
வாழ்ந்து அருளா நின்றார் -என்றது ஆயிற்று-

—————————————————————————————————————————————–

பாஷண்ட சண்ட கிரி கண்டந வஜ்ர தண்டா
ப்ரசன்ன பௌத்த மகராலய மந்த தண்டா
வேதாந்த சார ஸூக தர்சந தீப தண்டா
ராமாநுஜச்ய வில ஸந்தி முநேஸ் த்ரிதண்டா —-2-

1-பாஷண்ட சண்ட கிரி கண்டந வஜ்ர தண்டா –
பாஷண்டத் திரள்கள் ஆகிற
மலைகளைக் கண்டிப்பதில்
வஜ்ர தண்டம் போன்றவையும் –

2-ப்ரசன்ன பௌத்த மகராலய மந்த தண்டா –
வைதிக மதஸ்தர்கள் என்று சொல்லிக் கொள்கிற
ப்ரசன்ன பௌத்தர்களாகிற-
கடல்களை கலக்குவதற்கு உரிய-மந்தர மலை போன்ற –
மாத் தடிகள் போன்றவையும் –

3-வேதாந்த சார ஸூக தர்சந தீப தண்டா –
வேதாந்த சாரப் பொருள்களை
எளிதாகக் காட்டும் தீப தண்டங்கள் போன்றவையுமான –

4-ராமாநுஜச்ய வில ஸந்தி முநேஸ் த்ரிதண்டா –
எம்பெருமானாரது த்ரி தண்டங்கள்
அழகியவாய் விளங்குகின்றன –

சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினார்
எம்பெருமானார் பக்கலிலே சொல்ல வேண்டிய
பெருமையையே
த்ரி தண்டத்தின் மேல் ஏற்றிச் சொல்லுகிறது –
சங்கர பாஸ்கர  யாதவ பாட்ட பிரபாக ராதிகள்
ப்ரசன்ன பௌத்தர்கள் எனப் படுகிறார்கள்
அவர்கள் பிரகாச பௌத்தர்கள்
இவர்கள் ப்ரசன்ன பௌத்தர்கள்
சங்கல்ப சூர்யோதத்தில் -யதி பாஸ்கர யாதவ ப்ரகாசௌ-என்று தொடங்கி-
சொன்ன ஸ்லோகம் இங்கே அனுசந்தேயம்
ஸ்வாமி இவர்களை எல்லாம் பாற்றி அருளினார் –

நாராயணனைக் காட்டிய வேதம் களிப்புற்றது-
வேதாந்த தத்வ அர்த்தங்களை எல்லாம்
உள்ளவாறு கண்டு வெளியிட்டு அருளினார்-

பிள்ளை பெருமாள் ஐயங்கார்-ஐங்கோலும் ஒரு கோலும் நீர்க்கோலம் போல் –ஆக்கி
பஞ்ச பாணனுடைய ஆஜ்ஞ்ஞையும்
ஏக தண்டிகளுடைய ஆரவாரத்தையும்
ஒழித்து செங்கோல் செலுத்தி விளங்கா நின்றது
என்றது ஆயிற்று-

—————————————————————————————————————————————–

சாரித்ரா உத்தார தண்டம் சதுர நய பத அலங்கரியா கேது தண்டம்
சத்வித்யா தீப தண்டம் சகல கலிகதா சம்ஹ்ருதே கால தண்டம்
த்ரயந்த ஆலம்ப தண்டம் த்ரிபுவன விஜயச்சத்ர சௌவர்ண தண்டம்
தத்தே ராமா நுஜார்யா ப்ரதிகதக சிரோ வஜ்ர தண்டம் த்ரிதண்டம் –3-

1-சாரித்ரா உத்தார தண்டம் –
நன்னடத்தைகளை உத்தாரம்
செய்ய வல்ல வேத்ர தண்டம் போன்றதும் –
உலகில் உபாத்த்யாயர்கள் சிஷ்யர்களுக்கு
ஞான அனுஷ்டானங்களை சிஷிப்பதற்கு
கையிலே வேத்ர தண்டத்தை வைத்து இருப்பது உண்டே –

2-சதுர நய பத அலங்கரியா கேது தண்டம் –
நல்ல நீதி மார்க்கத்தை
அலங்கரிக்க வல்ல த்வஜ தண்டம்
போன்றதும் –
நியாய மார்க்க பிரதிஷ்டாபகர் –
உபய மீமாம்சை நியாயங்கள் எல்லாம் சிறிதும் நிலை குலையாமல் ஸூ ரஷிதம் ஆக்கி அருளினவர்

3-சத்வித்யா தீப தண்டம் –
சத்வித்யா முதலான -ஆஷி வித்யா -வைச்வா நர வித்யா -உபகோசல வித்யா போன்ற
வேதாந்த வித்யைகளை நன்கு காண்பதற்கு உரிய
தீப தண்டம் போன்றதும்
அன்றிக்கே
சத்வித்யா -மிக வுயர்ந்த வித்யையான உபநிஷத்தை சொன்னதாகவுமாம்
மோஷ சாதனமான வித்யை தானே சத்வித்யை -சா வித்யா யா விமுக்தே –

4-சகல கலிகதா சம்ஹ்ருதே கால தண்டம் –
சகலவித கலி கோலாஹலங்களையும்
சம்ஹரிப்பதற்கு உரிய
யம தண்டம் போன்றதும் —
கலியும் கெடும் கண்டு கொண்மின் –
கடலள்வாய திசை ஏட்டின் உள்ளும் கலி இருளே மிடை தரு காலத்திலேயே
மிக்க நான்மறையின் சுடர் ஒளியால் அவ்விருளைத் துரந்தவர் நம் ஸ்வாமி

5-த்ரயந்த ஆலம்ப தண்டம் –
தளர்ந்த வேதங்களுக்கு கைப்பிடி கொடுக்க வல்ல
தடி போன்றதும்

6-த்ரிபுவன விஜயச்சத்ர சௌவர்ண தண்டம் –
மூ வுலகங்களையும் வென்று
தாங்குகின்ற
கொற்றக் குடைக்கு ஸ்வர்ண தண்டம் போன்றதும் –
மூ வுலகங்களையும் தன திருவடிக் கீழ் இட்டுக் கொண்டமைக்கு ஈடாக
தாங்கி நிற்கும் கொற்றக் குடைக்கு இட்ட மணிக் காம்பு போன்றது
7-ப்ரதிகதக சிரோ வஜ்ர தண்டம்-
பிரதிவாதிகளின் தலை மேலே விழும்
வஜ்ர தண்டம் போன்றதுமான –

தத்தே ராமா நுஜார்யா -த்ரிதண்டம் –
திவ்ய த்ரி தண்டத்தை
ஸ்வாமி தம் திருக் கையிலே ஏந்தி உள்ளார் –
முக்கோல் பிடித்த முநி
ஆக இப்புடைகளில் உல்லேகிக்கும் படி அமைந்த
த்ரிதண்டத்தின் பெருமை கூறிற்று-

—————————————————————————————————————————————–

த்ரய்யா மாங்கல்ய ஸூத்ரம் த்ரியுகபதயுகாரோ ஹணா லம்ப ஸூத்ரம்
சத்வித்யா தீப ஸூத்ரம் சகல கலிகதா சம்ஹ்ருதே கால ஸூத்ரம்
ப்ரஜ்ஞா ஸூத்ரம் புதாநாம் ப்ரசமத நமன பதமிநீ நாள ஸூத்ரம்
ரஷா ஸூத்ரம் முநீநாம் ஜயதி யதிபதேர் வஷஸி ப்ரஹ்ம ஸூத்ரம்–4-

த்ரய்யா மாங்கல்ய ஸூத்ரம் –
1-வேத மாதுக்கு மங்கள ஸூ த்ரம் போன்றதும் –
ஜகத் அநீச்வரம் அன்று அநேகச்வரமும் அன்று ஸ்ரீ மன் நாராயணன் ஒருவனே ஈஸ்வரன் -என்று நிர்ணயித்து அருளினாரே

2-த்ரியுகபதயுகாரோ ஹணா லம்ப ஸூத்ரம்-
ஷாட் குணிய பரி பூர்ணனான பகவானுடைய அடி இணையைச் சென்று
கிட்டுவதற்கான அவலம்ப ஸூ த்ரம் போன்றதும் –
த்ரியுகன் -எம்பெருமான் திரு நாமம் உண்டு இ றே
ஞான சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ்
அவன் பாதாரவிந்தங்கள் அடைய இவரைப் பற்ற வேணும் இ றே
த்ரியுகபத -அர்ச்சிராதி கதி என்னவுமாம்
த்ரியுக யுக பத என்ற பாட பேதம்
த்ரியுக =6
அத்தை இரட்டித்து 12
முக்தோர்ச்சிர் தின பூர்வ பஷ-என்றும்
நடை பெற வாங்கி பகல் ஒளி நாள் -என்றும்
அர்ச்சிராதிகள் 12 உண்டு இ றே –

3-சத்வித்யா தீப ஸூத்ரம் –
உபநிஷத் ஆகிற திரு விளக்கு எரிவதற்கான
திரி நூல் போன்றதும் –

4-சகல கலிகதா சம்ஹ்ருதே கால ஸூத்ரம் –
சகல கலி கோலா ஹங்களையும்
மாய்ப்பதற்க்கான கால பாசம்
போன்றதும் –

5-புதாநாம் ப்ரஜ்ஞா ஸூத்ரம் –
பண்டிதர்கள் உடைய மேதையை வளர்க்கும்
மீமாம்ஸா ஸூத்ரம் போன்றதும் –
முப்புரி நூலும் மார்புமான அழகாய் சேவித்தவாறே
அடியார்களுக்கு ப்ரஜ்ஞா விகாசம் உண்டாகும்
பிரஜ்ஞ்ஞா -என்கிற இடத்தில்
ச்ம்ருதிர் வ்யதீத விஷயா மதிராகாமி கோசரா புத்திஸ் தாத்காலிகீ
ப்ரோக்தா ப்ரஜ்ஞா த்ரைகாலிகீ மாதா -ஸ்லோகம் அனுசந்தேயம்

6-ப்ரசமத நமன பதமிநீ நாள ஸூத்ரம் –
யோகிகளின் உள்ளம் ஆகிற தாமரையோடைக்கு நாள ஸூத்ரம் போன்றதும் –
எம்பார் அருளாள பெருமாள் எம்பெருமானார் போல்வார் –
திரு உள்ளத்தில் சிந்திக்குமது ஸ்வாமியின் யஜ்ஞ ஸூத்ரம் –என்றது ஆயிற்று

7-ரஷா ஸூத்ரம் முநீநாம் ஜயதி யதிபதேர் வஷஸி ப்ரஹ்ம ஸூத்ரம்
யஞ்ஞா ஸூத்ரமானது ஸ்வாமியின் திரு மார்பிலே திகழா நின்றது
உபவீதிந மூர்த்வ புண்ட்ரவந்தம்-என்றும்
விமலோபவீதம் -என்றும்

ஸ்வாமி ப்ரஹ்ம ஸூத்ரம் அணிந்து கொண்டு இருக்கும் அழகைச்
சிந்தித்த மாத்ரத்திலே வீடு பெறுவார்கள் என்றது ஆயிற்று-

—————————————————————————————————————————————–

பாஷண்ட ஸாகர மஹா படபாமுகாக்நி
ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ மூல தாஸ
ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ
ராமா நுஜோ விஜயதே யதிராஜ ராஜ—5

1-பாஷண்ட ஸாகர மஹா படபாமுகாக்நி –
பாஷண்டர்களாகிற கடலின்
கொந்தளிப்பை யடக்கும்
விஷயத்தில்
2-பாடபாக்நி போன்றவரும் –
அவர்களுடைய பொங்குதலை அடக்கி ஒழித்தவர்
படபா –என்று பெண் குதிரைக்கு பெயர்
கடலின் இடையிலே ஒரு பெண் குதிரை இருப்பதையும்
அதன் முகத்திலே நெருப்பு ஒரு காலும் அவியாது இருப்பதையும்
மழை நீர் முதலியவற்றால் கடல் பொங்காத படி
அதிகமாய் வரும் நீரை அது உறிஞ்சி நிற்பதாகவும்
அதுவே பிரளய காலத்துக் கடலில் நின்றும் வெளிப்பட்டு
உலகங்களை எரித்து அளிப்பதாகவும்
புராணங்கள் கூறும் –

3-ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ மூல தாஸ –
ஸ்ரீ ரங்க நாதனுடைய
திருவடித் தாமரைகளிலே
பரம பக்தி யுக்தரும் –

4-ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ-
ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள
திரு மா மணி மண்டபத்தைச் சேரும்
வழியைத் தந்து அருள்பவரும் –

5-ராமா நுஜோ விஜயதே யதிராஜ ராஜ –
யதிகளுள் மிகச் சிறந்தவருமான
எம்பெருமானார்
சர்வ உத்கர்ஷ சாலியாக விளங்கா நின்றார்

தென்னரங்கன் கழல் சென்னி வைத்து
நீசச் சமயங்களை நீக்கி
அடியார்க்கு உஜ்ஜீவன உபாயம் காட்டி
அருளா நின்ற எம்பெருமானார்
சகல வைபவங்களும் பொலிய வாழ்ந்து அருளா நின்றார் என்றது ஆயிற்று –

————————

போம் வழியைத் தரும் என்னும் இன்பமெல்லாம் புசித்து வழிபோய் அமுதவிரசையாற்றில்
நாம் மூழ்கி மலமற்றுத் தெளிவிசும்பை
நண்ணி நலந்திகழ் மேனிதன்னைப்பெற்று
தாம் அமரர் வந்து எதிர்கொண்டு அலங்கரித்துச்
சற்கரிப்ப
மாமணிமண்டபத்துச் சென்று
மாமலராள்கோன்
மடியில்வைத்துகக்கும்
வாழ்வு நமக்கு எதிராசன் அருளும் வாழ்வே…

-🌸ஆர்த்திப்ரபந்தம்
-🌸ஸ்ரீமாமுனிகள்

நாம் இறந்தபின்னர் நமது ஆத்மாவானது
பரமபதத்தை அடையும் சிறந்த வழியான அர்ச்சிராதி மார்க்கமாகச்செல்லுகிறது.அந்த வழியில் உள்ள இன்பம் முழுவதையும் அனுபவிக்கிறது.அமிர்தம் நிறைந்த விரஜாநதியில் நீராடிமகிழ்கிறது.ஸம்ஸாரதுன்பம் அனைத்தும் நீங்கியபடி அனைத்து மாசுகளும் கழித்துவிடுகிறது.அதன்பின்னர் பரமபதத்தையடைந்து தனது இயல்பான ஸ்வரூபம் ரூபம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக ப்ரகாசத்துடன் கூடிய ஸத்வ உடலை(அப்ராக்ருத) எடுத்துக்கொள்கிறது.அதன்பின்னர் நித்யசூரிகளால் வரவேற்கப்பட்டபடி செல்கிறது.நன்கு அலங்கரிகப்பட்ட திருமாமணி மண்டபத்தில் வீற்றுள்ளவனும் தாமரைமலரில் அவதரித்த மஹாலக்ஷ்மியின்
நாயகனுமாகிய ஸ்ரீவைகுண்டநாதனை அடைகிறது.
அவன் அந்த ஆத்மாவையெடுத்து, தனது மடியில்வைத்து உச்சிமுகர்ந்து ஆனந்தம் அடையச்செய்கிறான்.
இப்படிப்பட்ட உயர்ந்த
பேறு என்பது நமக்கு
எம்பெருமானார் ஒருவரால் மட்டுமே அளிக்கக்கூடியது ஆகும்

அடியார்கள் குழாங்கள் அழகோலக்கமிருக்க
ஆனந்தமயமான மாமணி மண்டபத்துப்
படியாதுமில் படுக்கையாயிருக்கும் அனந்தன் பணாமணிகள் தம்மின் ஒளி மண்டலத்தின் இடையில்
வடிவாரும் மாமலராள் வலவருகு மற்றை
மண்மகளும் ஆய்மகளும் இடவருகும் இருக்க
நடுவாக வீற்றிருக்கும் நாரணனைக் கடுக
நான் அனுபவிக்கும் வகை
நல்கு என் எதிராசா!

-🌸ஆர்த்திப்ரபந்தம்
-🌸ஸ்ரீமாமுனிகள்.

எனக்கு ஸ்வாமியாகவுள்ள எம்பெருமானாரே!
ஆதிசேஷன் கருடன் விஷ்வக்சேனர் நம்மாழ்வார் திருமங்கையாழ்வார் போன்ற பலரும் மணிகள் முத்துக்கள் என்று தோன்றுவதுபோல் வரிசையாக நின்று வணங்கியபடி உள்ளனர். அங்குள்ள திருமாமணிமண்டபத்தில் ஆதிசேஷன் என்ற படுக்கைமீது அவனது படங்களில் உள்ள ரத்தினக்கற்கள் ஜொலிக்க எம்பெருமான் சயனித்துள்ளான்.அவனது வலது பக்கத்தில் அவனை எப்போதும் பிரியாத பெரிய பிராட்டியும் இடது பக்கத்தில் பூமாதேவியும் நீளாதேவியும் பொருந்தியுள்ளனர். இப்படிப்பட்ட மூன்று கொடிகளின் நடுவே மலர்ந்துள்ள தாமரை போன்று ஏழு உலகங்களும் ஆட்சி செய்தபடி உள்ள ஸ்ரீவைகுண்டநாதனை நான் விரைந்துசென்று வணங்கும்படி நீயே அருளவேண்டும்.

பெரியபெருமாளால் கூரத்தாழ்வானுக்குப் பெரியவீடு கிடைக்கப்பெற்று
ஆழ்வான் ஸம்பந்தத்தால்
தனக்கும் பேறு கிடைத்ததென்று
ஆனந்தக்கூத்தாடுதல்

பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா/
தஸ்ய தாஸரதே:பாதௌ ஸிரஸா தாரயாம்யஹம்//

எம்பெருமானாருக்குப் பாதுகையாகவும்
த்ரிதண்டமாகவும் விளங்கும்
ஸ்ரீ தாஸரதி என்றழைக்கப்படும்
ஸ்ரீ முதலியாண்டான்.

ஸ்ரீராமானுஜரின் ஸ்ரீவைஷ்ணவ ஸ்வாமிகள் (முதல்வர்கள்), இவரை ஆண்டானாக (ஆளும் பிரானாக) மதித்ததினால், இவர் “முதலியாண்டான்” ஆனார்.

ஆனால் இவரோ, எதிராசருக்கும் அவர்களுக்கும் அடிமையாய் இருப்பதையே விரும்பினார்.

சீதனவெள்ளாட்டி….

ஒரு சமயம் இராமானுசர் இவரைத் தனது ஆசார்யரான பெரியநம்பிகளின் குமாரத்தியான (மகள்) அத்துழாய்க்கு சீதன வெள்ளாட்டியாக (பணிப்பெண்) அனுப்பினார்; இவரும், அத்துழாயின் மாமியார் அகத்தில் ஒரு பணிப்பெண் செய்யும் அடிமைத் தொழில்களை மன நிறைவுடன் செய்தார். இராமானுசரிடம் இவர் கொண்ட ஆசார்ய பக்தி எவ்வளவு மேன்மையானது இதன் மூலம் தெரிகிறது..

அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே
அருட்பச்சை வாரணத்தில் அவதரித்தான் வாழியே
சித்திரையில் புனர்பூசம் சிறக்கவந்தோன் வாழியே
சீபாடியம் ஈடுமுதல் சீர்பெறுவோன் வாழியே உத்தமமாம் வாதூலம் உயரவந்தோன் வாழியே
ஊர்திருந்தச் சீர்பாதம் ஊன்றினான் வாழியே
முத்திரையும் செங்கோலும் முடிபெறுவோன் வாழியே
முதலியாண்டான் பொற்பதங்கள் ஊழிதொறும் வாழியே

பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா/
தஸ்ய தாஸரதே:பாதௌ ஸிரஸா தாரயாம்யஹம்//

எம்பெருமானாருக்குப் பாதுகையாகவும்
த்ரிதண்டமாகவும் விளங்கும்
ஸ்ரீ தாஸரதி என்றழைக்கப்படும்
ஸ்ரீ முதலியாண்டான்.

ஸ்ரீராமானுஜரின் ஸ்ரீவைஷ்ணவ ஸ்வாமிகள் (முதல்வர்கள்), இவரை ஆண்டானாக (ஆளும் பிரானாக) மதித்ததினால், இவர் “முதலியாண்டான்” ஆனார்.

ஆனால் இவரோ, எதிராசருக்கும் அவர்களுக்கும் அடிமையாய் இருப்பதையே விரும்பினார்.

சீதனவெள்ளாட்டி….

ஒரு சமயம் இராமானுசர் இவரைத் தனது ஆசார்யரான பெரியநம்பிகளின் குமாரத்தியான (மகள்) அத்துழாய்க்கு சீதன வெள்ளாட்டியாக (பணிப்பெண்) அனுப்பினார்; இவரும், அத்துழாயின் மாமியார் அகத்தில் ஒரு பணிப்பெண் செய்யும் அடிமைத் தொழில்களை மன நிறைவுடன் செய்தார். இராமானுசரிடம் இவர் கொண்ட ஆசார்ய பக்தி எவ்வளவு மேன்மையானது இதன் மூலம் தெரிகிறது..

அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே
அருட்பச்சை வாரணத்தில் அவதரித்தான் வாழியே
சித்திரையில் புனர்பூசம் சிறக்கவந்தோன் வாழியே
சீபாடியம் ஈடுமுதல் சீர்பெறுவோன் வாழியே உத்தமமாம் வாதூலம் உயரவந்தோன் வாழியே
ஊர்திருந்தச் சீர்பாதம் ஊன்றினான் வாழியே
முத்திரையும் செங்கோலும் முடிபெறுவோன் வாழியே
முதலியாண்டான் பொற்பதங்கள் ஊழிதொறும் வாழியே

———–

பகலோலக்கமிருந்து கறுப்புடுத்துச் சோதித்து காரியம் மந்த்ரித்து வேட்டையாடி ஆராமங்களிலே விளையாடும் ராஜநீதி யாதுஞ்சோராமல் செங்கோல் நடாவுகிற பாரளந்தவென்னும் மூன்று முடிக்குரிய இளவரசு….

-ஆசார்யஹ்ருதயம்
-🌸ஸ்ரீ அழகியமணவாளப்
பெருமாள் நாயனார்🌸

ஸகலபரிஜன சேவ்யனாய்க்கொண்டு தன் வீறுதோற்றப் பகலோலக்கமிருக்கையும்
ராஜ்யத்திலுள்ளார் தோஷகுணங்களறிகைக்காக ராத்ரியிலே பிறரறியாதபடி கறுப்புடுத்து
நகரசோதனம் செய்கையும் ராஜ்யத்தில் சிக்ஷைரக்ஷைகளுக்காகக் கார்யவிசாரம் செய்கையும் பின் துஷ்டஸத்வ நிரஸநார்த்தமாக வேட்டையாடுகையும் அந்த ச்ரமமந் தீரப் பூந்தோப்புக்களிலே அபிமத விஷயங்களோடே விளையாடுகையுமாகிற ராஜநீதியானது உபயவிபூதியிலும் ஏகதேசமும் சேஷியாதபடி தன்னுடைய திவ்யாஜ்ஞையை நடத்துமவன்,பேரரசு விசும்பரசு ஓரரசு ஆகிற சௌலப்ய,பரத்வ,ப்ரணயித்வங்களாலே வந்த மூன்று முடிக்குரிய வான் இளவரசு…(ஸர்வேஸ்வரன்).

-🌺ஸ்ரீ மாமுனிகள் ஸ்ரீஸூக்தி🌸

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ எம்பார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ முதலி ஆண்டான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கூரத் ஆழ்வான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading