ஸ்ரீ ஓங்கி உலகு அளந்த உத்தமன் -ஸ்ரீ அருளிச் செயல்களில் அனுபவம்

சிறியன் என்று என்னிளம் சிங்கத்தை இகழேல் கண்டாய் சிறுமையின் வார்த்தையை மாவலிடைச் சென்று கேள்–சிறுமை பிழை கொள்ளில் நீயும் உன் தேவைக்கு உரியை காண்-1-4-8-

இவனுடைய பால்யத்தினுடைய விசேஷத்தை –
வாமனனாய் சென்று –
தன்னை வசீகரித்து –
மூவடி -என்று இரந்து-
இரண்டு அடியாலே ஜகத்தை அடைய வளந்து –
ஓரடிக்கு தன்னை சிறையிலே வைக்கப் பட்ட மஹா பலி பக்கலிலே சென்று கேட்டுக் கொள் –

சிறுமை பிழை கொள்ளில் நீயும் உன் தேவைக்கு உரியை காண்-இப்படி இருக்கிறவன் விஷயத்தில் சிறுமையை நினைத்த இது –
நமக்கு அபராதம் என்று புத்தி பண்ணுவுதியாகில்-
அப்போது நீயும் அவன் திறத்தில் -அடிமைக்கு ப்ராப்தன் காண் –

—-

தரணி தலைமுழுதும் தாரகையின் உலகும் தடவியதன் புறமும் விம்ம வளர்ந்தவனே--1-5-3-

பூதலம் அடங்கலும் நஷத்திர லோகமும் நிலா தென்றல் போலே திரு வடிகளால் ஸ்பர்சித்து-
அதுக்கு புறம்புள்ள தேசம் எங்கும் ஒக்க பரி பூரணனாம் படி வளர்ந்தவனே –
இத்தால் ஆஸ்ரிதனான இந்த்ரன் உடைய அபேஷித சம்விதானம் தலைக் கட்டுகைகாக செய்த வியாபாரம் சொல்லிற்று –

———–

மிக்க பெரும் புகழ் மாவலி வேள்வியில் தக்கதிதன்று என்று தானம் விலக்கிய சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய சக்கரக் கையனே அச்ச வச்சோ–1-8-7-

ஒவ்தார்யத்தாலே மிகவும் பெரிய புகழை உடையனான மகாபலி
யக்ஜவாடத்திலே இந்திரனுக்காக வாமன வேஷத்தைக் கொண்டு –
சென்று –

கொள்வன் நான்  மாவலி மூவடி தா -(திருவாய் -3-8-)-என்ன –
புலன் கொள் மாணாய்-என்கிறபடியே
சர்வேந்த்ரிய அபஹார ஷமமான இவனுடைய வடிவு அழகாலும்
அனந்விதமாக சொன்ன -முக்தோக்தியாலும்
மகாபலி அபஹ்ருத சித்தனாய்
இவன் அபேஷித்து கொடுப்பதாக  உத்யோக்கிற அளவில் –

குருவான சுக்ரன் –
இவன் வடிவும் வரத்தும் -சொன்ன வார்த்தையும் -அதி மானுஷமாய் இருக்கையாலே நிரூபித்து –
இவன் சர்வேஸ்வரன் -தேவ கார்யம் செய்ய வந்தான் –
உன் சர்வ ஸ்வத்தையும் அபஹரிக்க வந்தான் –
ஆன பின்பு நீ தானம் பண்ணுகிற இது  தகுதி அன்று -என்று
தானத்தை நிரோதிக்க-

அவன் அது கேளாதே
உதகம் பண்ணப் புகுந்த அளவில் –
உதக பாத்திர த்வாரத்திலே சுக்ரன் ப்ரேவேசித்து உதகம் விழாதபடி தகைய –
அந்த த்வார சோதனம் பண்ணுவாரைப் போலே –
திருக் கையில் திருப் பவித்ரத்தின் உடைய அக்ரத்தாலே
அவன் கண்ணைக் கலக்கின திரு ஆழியைக் கையில் உடையவனே –

துரும்பால் கிளறிய சக்கரக் கையன் -என்கையாலே
அந்த பவித்ராக்ரமாய் புகுந்து அவன் கண்ணை கலக்கிற்று –
கருதும் இடம் பொரும் திரு ஆழி -என்று தோற்றுகிறது-

சங்கம் இடத்தானே
ஒரு காலும் திரு ஆழிக்கும் ஸ்ரீ பாஞ்ச சந்யத்துக்கும் பிரிவு இல்லை இறே –
ஆகையால் அவன் வலம் கையிலே தோன்றும் போது-
இவன் இடம் கையிலே தோன்றும் படியாய் இறே இருப்பது –

————

என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன மன்னு நமுசியை வானில் சுழற்றிய மின்னு முடியானே அச்ச வச்சோ வேம்கட வாணனே அச்சோ அச்சோ -1-8-8- –

திருக் கையில் உதகம் விழுந்த அநந்தரம்-திருவடிகளை வளர்த்து அளக்கப் புக்கவாறே –
இத்தைக் கண்ட மகாபலி புத்ரனான -நமுசி ஓடி வந்து –
இது என் -என்று வளருகிற திருவடிகளை தகைய –

நீ தகைகிறது என் -நான் உதகம் ஏற்றது அளந்து கொள்ள வேண்டாவோ -என்ன –
நீ க்ரித்ரிமம் என்பான் என் -என்னுடைய பிரமச்சரிய வேஷத்தையும் -அர்த்திவத்தையும் -கண்டு
உன்னுடைய பிதா -உதக தானம் பண்ணிப் போந்தது பொய்யோ -என்ன –

என்னுடைய பிதாவானவன் உன்னுடைய வஞ்சகத்தில் அகப்பட்டு உன்னுடையபடி ஒன்றும் அறிந்திலேன் -என்ன –
நான் செய்தது வஞ்சனம் என்று நீ சொல்கிறது என் கொண்டு -என்ன –

வஞ்சனம் அன்றாகில் நீ முற்பட்ட வடிவை கொண்டு அளவாய் -என்ன –
முன்னைய வண்ணம் கூடுமோ -விகாரியான சரீரம் அன்றோ -என்ற அளவிலும் –
தான் பிடித்த நிலை விடாதே நின்ற நமுசியை ஆகாயத்திலே சுழற்றி எறிந்து விட்ட
உஜ்ஜ்வலமான திரு அபிஷேகத்தை உடையவனே –

திரு உலகு அளந்த வ்ருத்தாந்த்தாலே சேதனருடைய
அந்ய சேஷத்வ
ஸ்வ ஸ்வாதந்த்ர்யங்களை அறுத்த பின்பு ஆய்த்து
சேஷித்வ பிரகாசமான திரு அபிஷேகம் ஒளி பெற்றது –

வேம்கடம் இத்யாதி –
அன்று ஞாலம் அளந்த பிரான் சென்று சேர் திரு வேம்கட மா மலை -(திருவாய் -3-3-)-என்னும்படி –
அந்த வாமன அவதார சேஷ்டிதம் அடைய தோன்ற
திருமலைக்கு நிர்வாகனாய் நிற்கிறவனே-அச்சோ அச்சோ –

————

மன்னன் தன் தேவிமார் கண்டு மகிழ்வெய்த முன்னிவ்வுலகினை முற்றும் அளந்தவன் பொன்னின் முடியினை–2-5-9-

புலன் கொள் மாணய்-(திருவாய் -1-8-)-என்கிறபடியே –
சர்வேந்திரிய அபஹார ஷமமானவாமன ரூபமும் –
பொங்கு இலங்கு புரி நூலும் -இத்யாதிப் படியே
அவ் அழகுக்கு மேலே கிளர்ந்து விளங்கா நின்றுள்ள யக்ஜோபவீதமும்
க்ருஷ்ணாஜினமும் மூஞ்சியுமான விநீத வேஷமும் கொண்டு –
மகா பலி யக்ஜா வாடத்திலே-
வல்லார் ஆடினாப் போலே பதறி நடந்து சென்று நின்ற நிலையும்

கொள்வான் நான் -இத்யாதிப் படியே சொன்ன –
முக்த ஜல்பத்தையும் கண்டு
அசுர ராஜனான மகா பலி யினுடைய ஸ்திரீகள் ஆனவர்கள் ப்ரீதைகள் ஆம்படி
முந்துற நின்று அர்த்தித்து
கையிலே நீர் விழுந்த சமந்தரம்-
முன்பே தன்னதாய் இருக்கிற  இந்த லோகத்தை எல்லாம்
இப்போது அபூர்வமாக பெற்றால் போலே அளந்து கொண்டவனுடைய

பொன்னின் முடியினை -அழகிய திரு முடியை–திருவிக்ரமன் -சொல்லி முடி -இவனே சர்வேஸ்வரன் –நிவந்த நீள் முடியன் -திருப்பாண் ஆழ்வார்

———-

வருக வருக வருக விங்கே வாமன நம்பீ வருக விங்கே கரிய குழல் செய்யவே முகத்துக் காகுத்த நம்பீ வருக விங்கே-2-9-2

குறள் பிரமச்சாரியாய் கொண்டு -அபிமதம் பெற்று பூரணன் ஆனவனே–அவன் கடுக வருகைக்காக பல காலும் சொல்லுகிறாள் –
இப்படி அழைத்த இடத்திலும் வாராமையாலே –

வாமன நம்பீ வருக இங்கே –
நீ வாமன நம்பீ அன்றோ –
ஆஸ்ரித ரஷணம் செய்யும் குண பூர்த்தியை உடைய நீ இங்கே வாராய் -என்கிறாள் –
அவ்வளவிலும் வாராமையாலே –

கரிய இத்யாதி –
கறுத்த திருக் குழலையும் –
சிவந்த திருப் பவளத்தையும் –
உபமான ரஹிதமாய் கொண்டு இரண்டுக்கும் நடுவே விளங்கா நின்ற திரு முகத்தை உடையவனாய் –
மாதா பிதாக்கள் சொல்லிற்று செய்யும் குண பூர்த்தியை உடைய காகுத்தன் அன்றோ நீ –

——————-

மாவலி வேள்வியில் மாணுருவாய்ச் சென்று மூவடி தா வென்று இரந்த விம் மண்ணினை ஓரடியிட்டு
இரண்டாமடி தன்னிலே தாவடியிட்டானால் இன்று முற்றம் தரணி யளந்தானால் இன்று முற்றும்–2-10-7-

மாவலி வேள்வியில்
இந்திரனுடைய ஐஸ்வர்யத்தை பலத்தாலே அபகரித்து கொண்டு –
கோவாகிய மாவலி -(9-8-)என்கிறபடியே
தன்னரசாய் -அழிக்க ஒண்ணாதபடி -ஒவ்தார்யம் என்பதொரு குணத்தை
உடையனாய் இருந்த மகா பலியினுடைய யாகத்திலே

மாண் உருவாய் சென்று –
கள்ளக் குறளாய்-(திருமொழி) -என்றபடியே
அவனை சர்வ ஸ்வாபஹாரம் பண்ணுகைக்காக வாமன வேஷத்தை கொண்டு
வடிவு அழகாலும் -நடை அழகாலும் -(உருவாய் சென்று-இரண்டுக்கும் வியாக்யானம்)
அவனை அபர்ஹசித்தனாய் தான் சொன்னது மாறாமல் செய்யும்படி சென்று

மூவடி தா என்று இறந்த இம் மண்ணினை
அவன் சடக்கென இசைந்து தருகைக்காகவும் –
பின்பு ஓரடிக்கு அவனை சிறை வைக்காகவும் –
என் காலாலே மூவடி தா – என்று இரந்து பெற்ற இப்பூமியை

மண் என்கிற இது
மற்ற லோகங்களுக்கு எல்லாம் உப லஷணம்

ஓரடி இத்யாதி –
அளக்கிற அளவிலே பூமிப் பரப்பு அடங்கலும் தனக்குள்ளே ஆம்படி
ஓரடி இட்டு இரண்டாம் படி தன்னிலே

தாவடி இத்யாதி –
ஊர்த்த லோகங்கள் அடங்கலும் தனக்கு உள்ளே ஆம்படி
தாவி -அடி -இட்டவனாலே இன்று முடிவுதோம்
(தாவி அன்று உலகம் எல்லாம் -திருமாலை )

தாரணி இத்யாதி
திருவடிகளின் மார்த்தவம் பாராதே ஓர் ஆஸ்ரிதனுக்காக
இப்படி லோகத்தை அளந்தவனாலே இன்று முடிவுதோம்

இத்தால் –
தன்னை அழிய மாறியும் ஆஸ்ரித ரஷணம் செய்யும் அவன்
எங்கள் அபேஷிதம் செய்யாதே  ஈடுபடுத்தா நின்றான் –
ஆன பின்பு அவனாலே நாங்கள் முடிவுதோம் -என்கை

————-

மூன்று எழுத்து அதனை மூன்று எழுத்து அதனால் மூன்று எழுத்தாக்கி மூன்று எழுத்தை 
ஏன்று கொண்டு இருப்பார்க்கு இரக்க நன்குடைய வெம் புருடோத்தமன் இருக்கை
மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்றுரு ஆனான் 
கான் தடம் பொழில் சூழ் கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் கடி நகரே – 4-7-10-

மூன்றடி நிமிர்த்து
இப் ப்ரணவம் தான் –
ஒமித் யக்ரே வ்யாஹரேத்-என்கிறபடியே –
பதத் த்ரயாத்மகமான திருமந்த்ரத்தில் பிரதம பதம் ஆகையாலே –
இத்தோடு கூட –
மேல் இரண்டு பதத்தையும் கூட்டி
மூன்று பதமாக வளர்த்து

மூன்றினில் தோன்றி –
அம் மூன்று பதத்திலும் ஆத்மாவினுடைய
அனந்யார்ஹ சேஷத்வம்
அநந்ய சரணத்வம்
அநந்ய போக்யத்வம் –
ஆகிய ஆகார த்ரயத்தையும் தோன்றுவித்து –

தோன்றி -என்றது
தோன்றுவித்து -என்றபடி

மூன்றினில் மூன்று உரு ஆனான்
பத த்ரய ப்ரதிபாத்யனான சேதனனுடைய ஆகார த்ரயத்தையும் விஷயமாக –
தத் பிரதி சம்பந்தி தயா
தானும்
சேஷித்வ சரண்யத்வ ப்ராப்யத்வங்கள் ஆகிற  ஆகார த்ரயத்தையும் உடையவன் ஆனான்

இம் மந்த்ரத்தை -பத த்ரயாத்மகமாய்
சேதனனுடைய ஆகார த்ரயத்தையும் –
தன்னுடைய ஆகார த்ரயத்தையும் –
பிரதிபாதிக்கும் படி –
அவன் அடியிலே உண்டாக்கி வைத்தான்
ஈஸ்வரன் ஆகையாலே
இவை எல்லாவற்றையும் அவன் செயலாக அருளிச் செய்கிறார்

———

குறள் பிரமசாரியாய்  மாவலியை குறும்பதக்கி அரசு வாங்கி
இறைப் பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்து உகந்த வெம்மான் கோயில்
எறிப்புடைய மணி வரைமேல் இள நாயிறு எழுந்தால் போல் அரவணையின் வாய்ச்
சிறப்புடைய பணங்கள் மிசை செழு மணிகள் விட்டு எறிக்கும் திருவரங்கமே -4 9-7 –

ஸ்ரீ வாமனனாய் மாவலியை குறும்பதக்கி-ராஜ்யத்தை வாங்கி -அவனை
பாதாளத்திலே வைத்தவன் வர்த்திக்கிற தேசம் இது என்கிறார் —

குறள் பிரமசாரியாய்-
வாமன பிரமசாரியாய்

குறள்-
கோடியை காணி ஆக்கினால் போலே –
பெரிய வடிவை கண்ணாலே முகந்து அனுபவிக்கலாம்படி சுருக்கினபடி –

சேர்ப்பால் சுருங்கினதனையும் ரசிக்குமா போலே –
வடிவும் சுருங்கினதனைத்தும் ரசவாஹமாய் இருக்கும் ஆய்த்து –
புலம் கொள் மாணாய் -என்றார் இறே ஆழ்வார்
இவ் வடிவு அழகாலே இறே -மகா பலியை வசீகரித்தது –

பிரமசாரியாய் –
அதுக்கு மேலே ஒரு வசீகர சாதனம் இறே இது –
பொங்கு இலங்கு புரி நூலும் தோளும் தாழ -என்கிறபடியே
யக்ஜோபவீதமும் க்ர்ஷ்ணாஜினமும் மூஞ்சியுமான விநீத வேஷம்

இந்த்ரன்  -என்னுடைய ராஜ்யத்தை இழந்தேன் -அத்தை மீட்டு தர வேணும் என்று
கண்ணும் கண்ணீருமாய் வந்து சரணம் புகுந்து நின்றான்

பிரபலனாய் இருப்பான் ஒருவன் ராஜ்யத்தை பறித்து கொண்டான் –
ராவணாதிகளை போலே அழிய செய்யப் போகாதது ஆய்த்து –
ஒவ்தார்யம் என்ற ஒரு குண லேசத்தை ஏறிட்டுக் கொண்டு இருக்கையாலே –
இனி இரண்டுக்கும் அவிருத்தமாக  செய்வது என் – என்று பார்த்து –

அவன் கொடுக்க உகந்து இருக்குமாகில் –
நாம் சென்று இரக்கக் கடவோம் -என்று இறே
இரப்பில் தகண் ஏறின பிரமசாரியாய்   ஆய்த்து –

மாவலியை –
கோவாகிய மாவலியை ( 9-8 ) -என்றபடி
சர்வேஸ்வரன் இந்தரனுக்கு கொடுத்த திரை லோக்ய
ஐஸ்வர்யத்தை பலத்தாலே பறித்துக் கொண்டு –
ஒருத்தர் கீழ் அடங்காமல் தன்னரசாய் இருந்த மகாபலியை

குறும்பதக்கி
கள்ளர் பள்ளிகள் சாதுக்களுடைய ஸ்வத்தை அடித்து தங்களது ஆக்கிக் கொண்டு
ஒருத்தர் கீழ் அடங்காமல்  -இருக்குமா போலே பரஸ்வாப அபஹாரத்தை பண்ணி அதில்
ஒரு பயம் அற்று -தன் உடைமையை தான் ஜீவிக்குமா போலே ஜீவித்து இருந்த
குறும்பை அடக்கி செருக்கை வாட்டி –

அரசு வாங்கி –
கீழ் சொன்ன வடிவு அழகையும் –
விநீத வேஷத்தையும் முன்னிட்டுக் கொடு சென்று அவனை சித்த அபஹாரம் பண்ணி –

கொள்வன் –நான் –மாவலி –மூவடி –தா –என்று சில அனந்வித பாஷனங்களைப் பண்ணி –
இந்த மௌக்யத்தாலும் அவன் நெஞ்சை இளகப் பண்ணி –
சுக்ராதிகள் -இவன் தேவ கார்யம் செய்ய வந்தான் –
உன் சர்வச்வத்தையும் அபஹரிக்க வந்தான் – என்று சொல்லுகிற வார்த்தையும்
அவன் செவியில்  படாமல் -உதகம் பண்ணி தரும்படி யாக்கி –

பொற்கையில் நீர் ஏற்று -என்கிறபடியே
கொடுத்து வளர்ந்த பொலிவை உடைத்தான கையிலே உதகத்தை ஏற்று –
இந்த்ரன் தன் ராஜ்யத்தை அவன் பக்கல்  நின்றும் வாங்கி

இறைப் பொழுதில் –
இதுதான் செய்கிற அளவில் காலதைர்க்யம் அன்றிக்கே அல்ப காலத்திலேயே செய்து

பாதாளம் கலவிருக்கை கொடுத்து –
மூன்றடி என்று வாங்கி இரண்டடியாலே சர்வ லோகத்தையும் அளந்து கொண்டு
ஒன்றும் தருக என மாவலியை சிறையில் வைத்த (பெரிய திருமொழி -3-4 )-என்கிறபடியே
மற்ற ஓரடியும் தரும் அளவும்
சிறை வைப்பாரைப் போலே பாதாளத்தை அவனுக்கு இருப்பிடம் ஆக்கி –
பாதாளத்தே தள்ளி –

கலவிருக்கை கொடுத்து -என்றது
அவ்விருப்பு சிறை இருப்பாக அன்றிக்கே –
போக பூமியாக கொடுத்த இடம் பற்ற –

கலவிருக்கை யாவது –
நெஞ்சு கலந்திருக்கும் இருப்பு இறே
கலவிருக்கையாக கொடுத்தது -என்றபடி

உகந்த
இவனுக்கு இவ் விருப்பை கொடுத்து –
இந்தரனுக்கு அவன் இழந்த ராஜ்யத்தை கொடுத்து –
சரணாகதன்  அவன் இழவு தீரப் பெற்றோம் -என்று ப்ரீதன் ஆனான்

——————

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்–3-

அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி

அஷ்டாக்ஷரம் -மார்கழி
த்வயம் வையத்து –
சரம ஸ்லோகம் ஓங்கி
புருஷோத்தமன் -பேர் பாடி -திருமந்த்ரார்த்தம் -வெளிப்படுத்திய உத்தமன் –

மகாபலி அதமன்–
இந்த்ரன் மத்யமன்–
இவன் அழிய மாறி உத்தமன்

அது தன் பேறாய் இருக்கையும் –
ஈஸ்வரர்களும் அகப்பட இவன் காலிலே வணங்கப் புகுகையாலே இவனே பரதத்வம்
தன் திருவடிகளை கிருபையால் தன் பேறாகத் தலைகளில் வைக்கையாலே -ப்ராப்யமும் ப்ராபகமும் தானே –

ஜகத் ரஷண அர்த்தமாக திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளின போது
ஆர்த்த ரஷணம் பண்ணப் பெறாமையாலே-
பனிப்பட்டு சாய்ந்த மூங்கில் போலேயாய் அது ஆதித்ய கிரணம் பட்டு கிளம்புமா போலே-
மகா பலியாலே நோவு பட்ட தேவர்கள் ஆர்த்த த்வனி கேட்ட பின்பு பேர்ந்து வளர்ந்தபடி –
பிறர் கார்யம் செய்யப் பெருகையால் வளர்ந்தபடி -என்னவுமாம் –
உவந்த உள்ளத்தனாய் –என்னக் கடவது இறே

உலகு அளந்த-
குணாகுணம் நிரூபணம் பண்ணாதே சர்வ பிராணிகள் பக்கலிலும் திருவடிகளை வைத்த படி –
வ்யாப்தியில் வரைதல் இல்லாதாப் போல் ஆய்த்து இதுவும்-

வ்யாப்திக்கு கருத்து
இவற்றின் உடைய சத்தையை உண்டாக்குகைகாக –
இங்கு இவற்றோட்டை ஸ்பர்சம் தனக்கு தாரகமாக இறே நினைத்து இருப்பது
இவற்றுக்கு அபேஷிதம் இன்றிக்கே இருக்கச் செய்தேயும்-
உறங்குகிற பிரஜையை அணைத்துக் கொண்டு கிடக்கும் மாதாவைப் போலே
இவற்றோடு ஸ்பர்சம் தனக்குத் தான் உகக்கிறான் இறே-

ஓங்கி உலகளந்த உத்தமன் -திருக் கோவலூர் அனுபவம்-
உத் -உத்தர –உத்தமன் –இத்தால் பர வ்யூஹங்களை கழித்து விபவம் –
அதிலும் -திருவிக்ரம -ராம -அவதாரங்களைக் கழித்து -வட மதுரை யில் -ஒருத்தி மகனாய் பிறந்த கோவிந்தன்

உலகளந்த உத்தமன் -பாற் கடல் துயின்ற பரமன் உத்தரன்-நாராயணன் -உத்-தஸ்ய உத் நாம-ஸ்ரீ வைகுண்டம்
உத்தர-தேவர்களுக்கு கருணையால் -வீட்டு மாப்பிள்ளை அவமானம் பொறுத்த உயர்ந்தவன் –
உத்தமன் -விபவம் -உலகு அளந்த -அனைத்து ஜீவ ராசிகளில் தலையிலும் திருவடி ஸ்பர்சம்

நாராயணனே- பரம் தத்வம் -பரம் ஜோதி -பரம் ஆத்மா -பரம் ப்ரஹ்மம் –
இத்தையே நாராயணன் -பையத்துயின்ற பரமன் -உத்தமன் –
உத்க்ருஷ்ட -உத் -விவரணம் திருவாய்மொழி -தாரதம்யம் -தர தமம்

உயர்வற உயர்நலம் உடையவன் -குணங்களில் முதலில் இழிந்தார் நம்மாழ்வார் –
திவ்ய மங்கள விக்ரஹ அழகில் இழிந்தார் திருமங்கை ஆழ்வார்
ஸ்ரீ வால்மீகியும் கோன் வஸ்மி குணவான் என்று உபக்ரமித்து
ஆண்டாளுக்கு ஸ்வரூப ரூப குணம் சேஷ்டிதங்கள் அனைத்தும் வேண்டுமே –

அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய்-என்று ஆசைப்பட்டு மடல் எடுக்க வேண்டும் படியான
அத் திருவடிகளைக் கொண்டு கிடீர் காடும் மோடையும் அளந்தது –

பொல்லாக் குறள் உருவாய் பொற் கையில் நீர் ஏற்று -என்றும் –
நீ அணியாய் -என்றும்
இரந்து பெற வேண்டும் கையைக் கொண்டு கிடீர் இரந்தது –

மந்த்ரத்தை மந்தரத்தால் -என்று மந்தரத்தை சொல்லி
அனந்தரத்தில் —அதில் உக்தமான வ்யாப்த்திக்கு பிஜ்ஞ்ஞாகரமான
த்ரைவிக்ரம அபதானத்தை–அநந்தரம் பாட்டிலே அருளிச் செய்தார் இறே

இப் பாட்டில் தங்கள் நோன்புக்கு அனுமதி தானம் பண்ணினாருக்கு வரக்கடவ-
த்ருஷ்ட பலத்தை சொல்லுகிறார்கள்-

மார்கழி வையத்து ஓங்கி –
பக்தி யோக பிரபத்தி –
ஞான கர்மம் அங்கங்கள் -பக்திக்கு -பிரபத்திக்கு ஐந்து அங்கங்கள் –பிரபத்தியே ஓங்கிய மார்க்கம் –

அஹங்கார க்ரஸ்தர் ஆனவர்களை
மகா பலி அபிமானத்தின் நின்றும் பூமியை மீட்டு தன் திருவடிகளாலே அளந்து
தனக்கு சேஷம் ஆக்கிக் கொண்டால் போலே இத்தால்
தனக்கு சேஷம் ஆக்கிக் கொண்டமையை சொல்லுகிறது-

பிரயோஜனாந்த பரரான தேவர்களுக்காக
ஆகாச அவகாசம் எல்லாம் அடங்க
ஒரு பிரதேச நியதி இல்லாதபடி
ஊடருத்து-விம்ம வளந்த –
இத்தால் நிருபாதிக ரஷகன் ஆகையாலே
ரஷகத்வமே விளை நீராக வளர்ந்த படி –

உலகளந்த
உறங்குகிற பிரஜையை-தழுவிக் கொண்டு கிடக்கும் தாயைப் போலே
இருந்ததே குடியாக எல்லார் தலையிலும்
ஊர் எண்ணெய் வார்த்தாப் போலே
திருவடிகளை குளிர வைத்தபடி –

உம்பர் கோமானே –
அச் செயலாலே தேவர்களை எழுதிக் கொண்ட படி –
நித்ய ஸூரிகளை என்னவுமாம்
அதாவது
நமக்கு சிரோ பூஷணமான திருவடிகளை இட்டு
காடும் ஓடையும் அளப்பதே

திருக் கையில் நீர் விழுந்தவாறே ஆகாசம் அவகாசம் அடைய விம்ம வளர்ந்து வரையாதே எல்லார் தலைகளிலும்
திருவடியை வைத்து பூமியை அளந்து கொண்டு தேவ ஜாதிக்கு குடியிருப்பைக் கொடுத்து
இந்த்ராதிகளை எழுதிக் கொண்டவனே –
இரு விசும்பினூடு போய் இத்யாதி -(திரு நெடும் தாண்டகம் )

அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த-உம்பர் கோமானே
இத்தால் நிருபாதிக ரக்ஷகன் ஆகையால் ரக்ஷகமே விளைநிராக வளர்ந்த படி

இரண்டு விஷம் போக்க -அஹங்காரம் மமகாராம் போக்கினதே உலகு அளந்து காட்டி –
நீர் நுமது -என்று இவை வேர் முதல் மாயத்தால் இறை சேர்மினே -அடி பணிந்தே போக்க வேண்டும் –
உலகம் அளந்த பொன்னடி அடைந்து -லோக விக்ராந்த சரணம்

உலகு அளவாமல் இருந்து இருந்தால் வேதம் உன் திருவடி-சம்பந்தம் பெற்று இருக்க முடியாதே கூரத் ஆழ்வான்-

———————————–

தேசமுன் அளந்தவன் திரிவிக்கிரமன் திருக் கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்–1-7-

வரையாதே எல்லாரையும் அடியிலே விஷயீ கரித்தவன் திருக்கையாலே என்னை ஸ்பர்சிக்கும் படி பண்ணி –
லோகத்திலே சால நிற்பது ஒரு புகழ் இறே-அத்தை நாம் பெரும் படி தர வல்லையே
அவன் திருக்கையாலே தீண்டுகையே நிலை நின்ற புகழ் –

———–

கோவிந்தா முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய்–2-9-

ஒன்றை வாங்கப் புக்கால் கொடுத்தவர்களை குழியிலே தள்ளுமவன் அன்றோ ஷணத்திலே –
இறைப் பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுக்குமவன்-பெரியாழ்வார் திருமொழி -4-9-7- இறே –

—————

கொண்ட கோலக் குறளுருவாய்ச் சென்று பண்டு மாவலி தன் பெரு வேள்வியில் அண்டமும் நிலனும் அடி ஒன்றினால் கொண்டவன் வரில் கூடிடு கூடலே–4-9-

கொண்ட கோலக் குறள் உருவாய்ச் சென்று
யஜ்ஞ்ஞோபவீதமும் -க்ருஷ்ணாஜினமும் -முஞ்சியும் -பவித்ரமும் -தண்டும்
பரமபதத்தில் ஒப்பனையிலும் அழகியதா இருந்தபடி –

பண்டு மா வலி தன் –பெரு வேள்வியில்-
கூடல் தலைக் கட்டியும் பெறாது இருக்க
வேள்வியின் நடுவே இவனைக் காணப் பெற்ற வேள்வி –

அண்டமும் நிலனும் அடி யொன்றினால் கொண்டவன் வரில் கூடிடு கூடலே-
அண்டமும் ஓரடியும்
நிலம் ஓரடியும் –
அவன் தன்னுடைமையை விடான் -நீ கூடுகையே குறை –(ஒவ்வோர் அடியால் என்று பிரித்து வியாக்யானம்  )

த்ரீணி பதா விசக்ரமே –என்றும்
மூன்றடி நிமிர்த்து -பெரியாழ்வார் -4-7-10-என்றும் உண்டாய் இரா நின்றது –

இது-இரண்டு அடிகளாலே அளந்தான் என்ற இது – இருக்கிறபடி ஏன் -என்று நஞ்சீயர் -பட்டரைக் கேட்க –
பரோ மாதரயா தனுவா வருதான ந தே மஹித்வ மன்வஸ் நுவந்தி
உபே தே வித்ம ரஜசீ ப்ருதிவ்யா -விஷ்ணு தேவ தவம் பரமச்ய வித்சே —என்றும்

த்வே இதஸ்ய க்ரமேண ஸ்வர்த்த்ருசோ அபிக்யாய மர்த்யோ புரண்யாதி
த்ருதீயமஸ்தி நகிரா ததர்ஷதி வயஸ்சன பதயந்த பதத்ரிண-என்றும்
வேத புருஷன் தானே -இரண்டடியால் அளந்த இடம் எல்லாரும் அறியும் –
நீ மூன்று அடியால் அளந்த இடம் உனக்கே தெரியும் அத்தனை -என்று காணாமல் விட்டான்-
அவன் அளந்தமை யுண்டு –அவனுக்கே தெரியும் அத்தனை -என்று
அருளிச் செய்தார் என்று ஜீயர் அருளிச் செய்வர் –

(அத்ய த்ருஷ்ட தசாங்குலம் -புருஷ ஸூக்தம் –ஸ்ரீ வைகுண்டத்திலும் மூன்றாவது அடியால் அளந்து கொண்டான்
ரஷ்யத்தின் அளவு அல்லவே ரக்ஷகனின் பாரிப்பு –
அபகரிக்க முடியாத நித்ய விபூதியையும் அளந்தான்
இவர்களும் அவன் குழந்தைகள் தானே -)

————

குயிலே உலகளந்தான் வரக் கூவாய்–5-5-

உலகளந்தான் வரக் கூவாய்
இத்தோடு தோழமை கொள்ளுகையாகிற ஏற்றம் உனக்கு –
பேறு எனக்குக் கைப்படும் –
எல்லாரோடும் வரையாதே பொருந்துமவன் வரக் கூவுகை -உனக்குக் கார்யம் —
குணாகுணம் நிரூபணம் பண்ணாதே –
வசிஷ்ட சண்டாள விபாகம் அற எல்லாரோடும் பொருந்துமவன் வரும்படி கூவப் பாராய்
 –

———-

அன்று உலகம் அளந்தானை யுகந்து அடிமைக் கண் அவன் வலி செய்ய தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியு முறைமை யறியேன்--5-10-

அன்று உலகம் அளந்தானை யுகந்து அடிமைக் கண் அவன் வலி செய்ய
வசிஷ்ட சண்டாள விவாகம் அற வரையாதே –
எல்லார் தலையிலும் திருவடிகளை வைக்குமவனை ஆசைப் பட்டு
உறங்குகிற பிரஜைக்கு முலை கொடுக்கும் தாயைப் போலே
இவை அறியாது இருக்கச் செய்தே –
அவற்றின் தலைகளிலே தனது திருவடிகளை வைத்தவனை உகந்து –

அடிமைக் கண் அவன் வலி செய்ய-
பெறவுமாய் இழக்க்கவுமானத்தையோ நான் ஆசைப் பட்டது –
பெற்று அல்லது சத்தை இல்லாத ப்ராப்திபலமான கைங்கர்யத்தை நான் ஆசைப்பட
அவ்வடிமை இடையாட்டத்திலே அவன் மிறுக்கடிக்க-

———

விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை-5-11-

ஒருவர் பக்கலிலே ஒன்றைக் கொள்ள நினைத்தால்
அவர்களுக்கு பின்னை ஒன்றும் சேஷியாதபடி கொள்ளுகிறவனை-

வேல் கண் மடந்தை விரும்பி-
அவனை இப்பாடு படுத்தும் இப் பரிகரம் உடையவள் தான் ஆதரித்து –
வேல்கள் ஒரு முகம் -ஓன்று கூடி -ஒரு முகத்திலே அமைந்து –செய்து நிற்கச் செய்தே கிடீர்
தான் ஈடுபட்டது அவனுக்கு –

———–

பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில் நீரேற்று எல்லா வுலகும் அளந்து கொண்ட எம்பெருமான்–11-5-

கண் எச்சில் வாராமைக்காக கரி பூசுகிறார் ஆதல் –
அழகிலே விஜாதீயது ஆகையாலே -அழகிது -என்னில் –
நாட்டில் அழகோடு ஒக்க நினைக்கக் கூடும் என்று –பொல்லா -என்கிறார் ஆதல் –
உலகிலே நடையாடாத அழகு என்பதால் –

குறளுருவாய் –
கோடியைக் காணி யாக்கினால் போலே
பெரிய வடிவு அழகை எல்லாம் இவ் வடிவிலே அமைத்து அனுபவிக்கலாம் படி அடக்கின படி –
கோடி த்ரவ்யத்தால் ஒரு மாணிக்கம் வாங்கி மார்பில் இட்டு அனுபவிக்கலாம்படி அன்றோ இந்த மாணி உருவம்

பொற் கையால் நீர் ஏற்று
அழகிய கையில் நீர் ஏற்று
அவனுக்கு பொற் கலத்திலே பிஷை யாய்த்தே –
மகா பலி பெற்ற பாக்யமே -பொற் கலத்தில் பிஷை இடப் பெறுவது என்றவாறு –

எல்லா வுலகும் அளந்து கொண்ட வெம்பெருமான்-
பர ஸ்வா பஹாரத்துக்கு -அடி இடுகிறபடி –
தொடங்குகிற படி -அடியால் அளந்த படி -சாடு
கைப் பொருளும் எய்துவான் ஒத்தும் உளன் -என்றபடி
ஒன்றைக் கொள்ளப் புக்கான் ஆகில் கொடுத்தவர்களுக்கு பாதாளமே கதியாம் படி இறே கொள்ளுவது
இறைப் பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்து உகந்தவன் -பெரியாழ்வார் -4-9-7-இறே
தனக்கு இரப்பிட்டவர்களை குழியிலே தள்ளி ஹ்ருஷ்டனாமவன் இறே
இவன் இல்லாதோம் கைப் பொருளும் எய்துவான் போல் இருப்பது வியப்பு அல்லவே

எம்பெருமான் –
அச் செயலாலே என்னை அனந்யார்ஹை ஆக்கினவன்
மூவடி மண் கொண்டு அளந்த மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன் –பெருமாள் திரு -9-4-2-
என்கிற படியே அச் செயலிலே காணும் இவள் ஈடுபட்டது –

————-

ஊட்டக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று யறக் கூவும்-12-9-

ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும்
இது சோற்றுச் செருக்காலே இறே இப்படிச் சொல்லுகிறது –
அத்தைக் குறைக்கவே தவிருகிறது -என்று பட்டினியே விட்டு வைத்தாள்
ஊண் அடங்க வீண் அடங்கும் -என்று இறே அவள் நினைவு –

விண்ணப்பம் செய்வார்கள் -அத்யயன உத்சவத்தில் -மிடற்றுக்கு எண்ணெய் இட்டு -பட்டினி விட்டு- மிடற்றிலே கணம் மாற்றிப்
பாடுமா போலே உயரப் பாடுகைக்கு உடலாய் விட்டது
அவன் திருவடிகளைப் பரப்பின இடம் எங்கும் இது த்வநியைப் பரப்பா நின்றது
கிருஷ்ணாவதாரத்தை விட்டு அவ்வருகே போந்ததாகில்
அத்தோடு போலியான ஸ்ரீ வாமன அவதாரத்தை சொல்லியாய்த்து நலிவது –

————————————————

ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னி ராமனாய்
மாறு அடர்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி -2-3-

மண் அளந்ததும்-
ஸ்ரீ பிராட்டியோட்டை சம்ச்லேஷ விரோதியை போக்கினாப் போலே
இந்த்ரனோடு விரோதித்த மஹா பலியைக் கைக் கொண்ட பூமியை மீட்டு

———–

எண் கடந்த யோகினோடு இரந்து சென்று மாணியாய் மண் கடந்த வண்ணம் நின்னை யார் மதிக்க வல்லரே–27-

இரந்து சென்ற மாணியாய் –
இரப்பிலே தகண் ஏறினவன் என்று தோற்ற வாமன வேஷத்தைக் கொண்டு அர்த்தியாய்ச் சென்று –

மண் கடந்த வண்ணம் –
பூமியை அளந்து கொண்ட பிரகாரத்தை –
அதாகிறது -இந்தரனுக்கு மகாபலியாலே அபஹ்ர்தமான ராஜ்யத்தை வாங்கிக் கொடுக்க -என்கிற
வ்யாஜத்தாலே வசிஷ்ட சண்டாள விபாகம் அற சதுர்தச புவன அந்தர்கதமான சேதனர்
தலைகளிலும் திருவடிகளை வைக்க –

நின்னை –
சேதன அசேதன விலஷணமாய் -வேதத்தாலும் பரிச்சேதிக்க ஒண்ணாத ஸ்வரூப வைலஷண்ய
வைபவத்தை உடையையாய் -அதுக்கு மேலே குண ப்ரேரிதனாய்க் கொண்டு பூமியை
அளந்து கொண்ட உன்னை –

ஆர் மதிக்க வல்லரே –
பரிச்சேதிக்க வல்லார் ஆர்

வேதங்களாலே பரிச்சேதிக்கலாமோ –
ஜ்ஞாநாதிகரான வைதிகரால் தான் -பரிச்சேதிக்கலாமோ-
அம்மேன்மையை பரிச்சேதிக்கவோ –
அந் நீர்மையை பரிச்சேதிக்கவோ —
எத்தை யார் பரிச்சேதிக்க வல்லார் –

அதவா
விண் கடந்த சோதியாய் –
பரம பதத்துக்கு அவ்வருகாய் ஸ்வயம் பிரகாசமான திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை உடையையாய்
இத்தால் த்ரிபாத் விபூதியும் தனக்குள்ளே யாம்படியான ஸ்வரூபவைபவத்தை சொல்லுகிறது

———-

படைத்த பாரிடந்து பாரளந்து அதுண்டுமிழ்ந்து பௌவநீர் படைத்தடைத்து அதில் கிடந்து முன் கடைந்த பெற்றியோய்–28-

மகாபலியாலே அபஹ்ர்தமான பூமியை -ஸ்ரீ வாமனனாய் எல்லை நடந்து மீட்டுக் கொண்டு –
இதுவும் தன்னுடைமை பெறுகைக்கு தானே அர்த்தியாய் வருமவன் என்று ஆஸ்ரிதர்
விஸ்வசிக்கைகாக

———–

மண்ணளந்து கொண்ட காலனே–43-

மண்ணளந்து கொண்ட காலனே –
பூ பாரமான கம்ச நிரசனம் அன்றிக்கே தன் சேஷித்வத்தை பிரகாசிப்பிக்கைகாக
ப்ரஹ்மாதி சகலஜந்துக்கள்  தலைகள் வாய்த்த திருவடிகளை உடையவனே

காலனே -என்று பிரதிகூலர்க்கு மர்த்யு யானவனே என்றுமாம் –

———-

மண்ணளந்த பாத–58-

ஸ்ரீ வாமனனாய் எல்லார் தலையிலும் வைத்த திருவடிகளை உடையவனே
த்ரிவிக்ரம அபதாநம் -கேசி வத சமநந்தரத்திலே கிருஷ்ணனுடைய சேஷ்டிதமாக பேசலாம்படி
இறே இரண்டு அவதாரத்துக்கும் உண்டான சௌப்ராத்ரம் -அதாகிறது
எல்லாரையும் வரையாது தீண்டுகையும்
எதிரிகளை அழகாலே அழிக்கையும்

———–

அன்று பாரளந்த பாதபோதை ஒன்றி வானின் மேல் சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே–66-

அன்று –
பூமி மஹாபலியாலே அபஹ்ர்தமாய் -அத்தாலே தன்னுடைய
சேஷித்வமும் சேதனருடைய சேஷத்வமும் அழிந்து கிடந்த அன்று –

பாரளந்த பாத போதை –
குணாகுண நிரூபணம் பண்ணாதே பூமி முதலான சகல லோகங்களிலும் உண்டான
சகல சேதனர் தலையிலும் வைத்து முறையை உணர்த்தின சர்வ ஸூலபமான
திருவடித் தாமரைகளை –

பார் –என்று -ஊர்த்தவ லோகங்களுக்கும் உப லஷணம்

தாமரை -என்றது -துர்லபமானாலும் விட ஒண்ணாத போக்யதையாலே –

யொன்றி –
ஆஸ்ரயணம் அநாயாசம் -என்கிறது
சிந்திப்பே அமையும் -என்னக் கடவது இறே

ஆஸ்ரயணத்தில் ஆயாசம் இன்றிக்கே ஒழிந்தால் -பலமும் ஷூத்ர மாய் இருக்குமோ என்னில்
வானின் மேல் சென்று சென்று –
அர்ச்சிராதி மார்க்கத்திலே போய் அபுநா வ்ர்த்தி லஷணமான பரமபதத்திலே சென்று

அதவா
சென்று சென்று –
தேசப் ப்ராப்தியில் காட்டில் வழிப் போக்குக்கு தானே இனிதாய் இருக்கிறபடியை சொல்லிற்று ஆகவுமாம் –
தேவராய் இருக்கிலாத வண்ணமே –என் கொலோ –
நித்ய ஸூரிகளோடே ஒரு கோவையாய் இராதே ஒழிகிற ஹேது என்னோ –
நித்ய ஸூரிகளாய் இருக்கை யாவது -சர்வ தாஸ த்ர்சராய் இருக்கை
அதாகிறது
அசங்கோசத்தாலும் -ரூபத்தாலும் -பேதத்தாலும் -அவர்களோடு சமராய் இருக்கை

என் கொலோ
1-ப்ரத்யஷ சித்தமான சம்சார தோஷத்துக்கு கண் அழிவு உண்டாயோ –
2-சாஸ்திர சித்தமான பகவத் ப்ராப்தியில் நன்மைக்கு கண் அழிவு உண்டாயோ –
3-ஆஸ்ரயணீய வஸ்துவினுடைய சௌலப்யத்துக்கு கண் அழிவு உண்டாயோ –
4-ஆஸ்ரயணீ யத்தில் ஆயாசம் உண்டாயோ –
5-வழிப் போக்கில் அருமை உண்டாயோ –

 ப்ரகர்தி ப்ராக்ர்தங்களில் ப்ராவண்ய ஹேதுவான பாபமும்
பகவத் வைமுக்ய ஹேதுவான பாபமும்
ஒழிய இப் புருஷார்த்தத்தை இழைக்கைக்கு ஒரு ஹேதுவும் கண்டிலோம் -என்கை

—————–

மண்ணை யுண்டு உமிழ்ந்து பின் இரந்து கொண்டு அளந்து--105-

பின்னிரந்து கொண்டு அளந்து  –
ஸ்ர்ஷ்டமான பின்பு -அஜ் ஜகத்தை மஹாபலி அபஹரிக்க -அவன் பக்கலிலே
அர்த்தியாய் சென்று –இரந்து -இந்தரனுக்கு த்ரை லோக்ய சாம்ராஜ்யத்தை கொடுத்து
அவ்வளவுக்கு மேலே சதுர்தச புவநத்தில் உண்டான சகல சேதனர் தலையிலும்
உன் திருவடிகளை வைத்து

இத்தால் –
விமுகரான அளவிலும் -சீலவானுமாய் சுலபனுமாய் இருக்குமவன் -என்கை –
தன்னை அழிய மாறி தாழ நிற்கை இறே –சீலம்
எல்லார் தலையிலும் திருவடிகளை வைக்கை இ றே –சௌலப்யம் –

மண் கண்ணுள் அல்லது இல்லை என்று –
விமுகரான சம்சாரிகளைக் குறித்து இப்படி செய்து அருளுகைக்கு அடி என் -என்னில் –
இஜ் ஜகத்துக்கு நம் கடாஷம் ஒழிய வேறு ஸ்திதி இல்லை என்று –

——————————-

தாவி யன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட வெந்தாய் சேவியேன் உன்னை யல்லால் சிக்கெனச் செங்கண் மாலே–35-

தாவி –
உங்கள் தலையில் நான் கால் வைக்க புகா நின்றோம் என்னில் –
வாசனையாலே சம்வதியாதே ஆணை இடுவர்கள் இறே –

திரு வாணை-நின் ஆணை -என்று சாத்விகர் திருவடிகளை லபிக்கைக்கு
மறுக்க ஒண்ணாத படி இடும் ஆணையை –
திருவடிகளைக் கிட்டாமைக்கு இடுவர்கள் ஆய்த்து –
இவர்கள் அறியாதபடி அநாயாசேன திருவடிகள் எல்லார் தலையிலும் படும்படி நடந்தான் –

தாவுதல்-
கடத்தல்

அன்று –
மகாபலியால் அபஹ்ருத்யமாய்
தம்முடைய சேஷித்வமும்-
சம்சாரிகள் உடைய சேஷத்வமும்
அழிந்து கிடந்த அன்று –

உலகம் எல்லாம் –
மகா பலியாலே அபஹ்ருத்யமான அளவு அன்றிக்கே
ப்ரஹ்ம லோக பர்யந்தமாக
சகல லோகங்களையும்
வசிஷ்ட சண்டாள விபாகம் அற எல்லார் தலையிலும்
திருவடிகள் வளர்ந்த படி

தலை விளாக் கொண்ட-
ரஷ்யத்தின் உடைய அளவு அல்ல வாய்த்து ரஷ்கனுடைய பாரிப்பு
அத்ய திஷ்டத்த சாங்குலம் -என்னக் கடவது இறே –

வெந்தாய் –
அமரர் சென்னிப் பூவினை -என்று
நித்ய ஸூரிகள் சிரஸா வஹிக்கும் திருவடிகளை
விமுகரான சம்சாரிகள் தலையில் வைகைக்கு ஹேது என் என்னில்
அவர்ஜநீய சம்பந்தம் -என்கிறார் –

தம் தலையிலும் திருவடிகளை வைக்கையாலே –
எந்தாய் -என்கிறார் –

உறங்குகிற பிரஜையைக் கட்டிக் கொண்டு கிடக்கும் தாயைப் போலே
அன்று தம் பேறாக விறே ரஷித்தது –

அன்று அறியாத குறை தீர
அறிந்த இன்று -உபகார ஸ்ம்ருதியாலே
எந்தாய் -என்கிறார்

சம்சாரிகள் அன்றும் அறிந்திலர்
இன்றும் அறிந்திலர்
அவர்களுக்குமாக தாம் உகக்கிறார் இறே –

சேவியேன் உன்னை அல்லால்-
‘இப்படிப் பட்ட நம்மை விட்டு புறம்பே போக நினைப்பான் என் என்ன
உம்முடைய நீர்மை அறியாதே நினைத்தேன் இத்தனை –
உன்னை விட்டு புறம்பே போகேன் -என்கிறார் –

உன்னை இழந்தால் நானும் பிறரும் இறே உள்ளது –
இரண்டிலும் அன்வயிக்கப் பார்த்திலேன்

அவை இரண்டும் இறே
பிரணவத்திலும்
மத்திய பதத்திலும் சொல்லுகிறது –

சேஷத்வ வாசனையாலே புறம்பு போனாலும்
சேவிக்கும் அத்தனை யாய்த்து இவர் –

இவை எத்தனை குளிக்கு நிற்கும் என்ன –
சிக்கென –
இது எல்லா குளிக்கும் நிற்கும்
யாவதாத்மாபவி
சர்வேஸ்வரனைக் குறித்து -மாஸூச -என்கிறார் இவர்

செங்கண்மாலே
இது ஸ்வ பாவ கதனம் அன்று
தாத் காலின விசேஷணம்-
இவர் சிக்கென -என்றவாறே
திரு உள்ளம் இவர் பக்கலிலே பிரசன்னமாய்
இவர் பக்கல் வ்யாமோஹம் உள் அடங்காமையாலே
கண் வழியே புறப்பட்டு பிரகாசிக்கிறபடி –

செங்கண் மாலே –
வ்யாமோஹத்தாலே குதறிச் சிவந்த கண்களை உடையவனே –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானைக் குறித்து மகா ராஜர் –
வத்யதாம் -என்ற போது
பெருமாள் திரு உள்ளம் அழிந்தால் போலே ஆய்த்து-

பின்பு திருவடி –அத ராம பிரசன்னாத்மா -என்று
பெருமாள் உளரானால் போலே ஆய்த்து –

திருவடி –
அவதாரத்தில் -மாஸூச -என்றான்
இவர் –
அர்ச்சாவதாரத்தில் -மாஸூச -என்கிறார் –

செங்கண் மாலே –
என் ஸ்வரூப லாபத்துக்கு முகம் வரும்படி வ்யாமுக்தரான
தேவரீரை ஒழிய புறம்பு எங்கே போவேன் –

அவ்வளவேயோ –
ஆவியே –
என் பிராணனை விட்டு புறம்பே போகவோ –

இவருக்கு ஒரு வாயு விசேஷம் அன்று பிராணன் –
என் திருமேகள் சேர் மார்வனே என்னும் என்னுடைய ஆவியே என்னும் -என்கிறபடியே
ஒரு மிதுனம் காணும் இவருக்கு பிராணன் –

அமுதே –
தாரகம் மாத்ரமேயாய் இருக்கை அன்றிக்கே
நிரதிசய போக்யமுமாய்
சாகாமல் காக்கும் மருந்தாய் இருக்குமவன் அல்லையோ –

அவ்வளவேயோ
என் தன் ஆர் உயிர் அனைய –
என் ஆத்மா அன்றோ –
ஆத்மாவை விட்டு சரீரத்துக்கு புறம்பு ஒரு போக்கு உண்டோ –

எந்தாய் –
அயோக்யன் என்று அகலப் புக்க
என்னை நசியாதபடி மீட்ட என் ஸ்வாமி அல்லையோ –

1-வத்சலனை விட்டு புறம்பே போகவோ –
2-பிராணனை விட்டு புறம்பே போகவோ –
3-போக்ய வஸ்துவை விட்டு புறம்பே போகவோ –
4-என்னை நல் வழி போக்கு வித்த என் ஸ்வாமியை விட்டு புறம்பே போகவோ –
என்கிறார் –

த்ரிவிக்ரம அபதானம் கேட்டு அறியீரோ –
வசிஷ்ட சண்டாள விபாகம் அற
எல்லார் தலையிலும் நம் கால் பொருந்தின படி அறியீரோ -வென்று –
சீல ஆதிக்யத்தையும்
தன் செல்லாமையையும்
காட்டி –
சமாதானம் பண்ண
சமாஹிதர் ஆகிறார் –

—————————————-

உவந்த வுள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டமுற நிவந்த நீண் முடியன்–2-

உவந்த உள்ளத்தனாய் –
ஆழ்வாரை அகப்படுத்துகையால் வந்த ப்ரீதி -சர்வேஸ்வரனாய் -ஸ்ரீ ய பதியாய் –
அவாப்த சமஸ்த காமனாய் இருக்கிறவன் -அர்த்தியாய் வந்து -தன் திருவடிகளை
தலையிலே வையா நின்றால் -மதீய மூர்த்தாந மலங்கரிஷ்யதி -என்று உகக்க வேண்டி இருக்க –
அவை அறியாது ஒழிய –
பிரஜை பால் குடிக்கக் கண்டு உகக்கும் மாதாவைப் போலே உகந்த திரு உள்ளதை உடையவனாய் –
இவற்றை பிரிந்தால் வ்யசனமும் தன்னதே இறே
வ்யசநேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி -என்கிறபடியே-

உலகம் அளந்து –
வகுத்த திருவடிகள் தலையிலே வந்து இருந்தாலும் உகக்க அறியாத லோகத்தை
கிடீர் தானும் விடாதே அளந்தது –
உகக்க அறியாமைக்கு -வன் மா வையம் இறே
குணாகுணம் நிரூபணம் பண்ணாதே எல்லார் தலையிலும் ஒக்கத் திருவடிகளை வைத்த
படியாலே பக்திமான்களும் பாதகிகளும் ஒக்க வாழ்ந்து போய்த்து-

அண்டமுற நிவர்ந்த நீண் முடியன் –
அண்ட கடாஹத்திலே சென்று சேர்ந்த திரு வபிஷேகத்தை யுடையவன்
அண்ட கடாஹம் வெடித்து அடி பிடிக்க வேண்டும் படி இறே அபேஷிதம் பெற்று வளர்ந்த படி

அண்டமுற –
அண்டம் மோழை எழ

நிவர்ந்த –
நிமிர்ந்த பூ அலர்ந்தாப் போலே

நீண் முடியன் –
உபய விபூதிக்கும் நிர்வாஹகன் என்று தோற்றும்படி இருக்கிற திரு வபிஷேகத்தை யுடையவன் –
ரஷ்ய வர்க்கத்தை நோக்கினால் இறே ரஷகன் முடி தரிப்பது-

உவந்த உள்ளத்தனாய் –
ஆழ்வாரை அகப்படுதுகையால் வந்த ப்ரீதி –
சர்வேஸ்வரனாய் -ஸ்ரீ ய பதியாய் -அவாப்த சமஸ்த காமனாய் -அவாக்ய அநாதர -என்கிறபடியே
பரிபூர்ணனான தான் –
கதாபுநச் சங்க ரதாங்க கல்பக த்வஜார விந்தாங்குச வஜ்ர லாஞ்சநம்
த்ரி விக்ரம தவச் சரணாம் புஜ த்வயம் மதீய மூர்த்தாந மலங்கரிஷ்யதி -என்றும் –
படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய் -என்றும் சிலர் அபேஷியாது இருக்க –

பாதா ருந்துத மேவ பங்கஜா ஜ -என்னும் சௌகுமார்யத்தை யுடைத்தாய் –
பெரிய பிராட்டியார் திருக் கைகளால் வருடவும் பொறாத அந்த திருவடிகளை
காடு மேடுகள் என்று பாராதே -சேதன அசேதன விபாகம் பாராதே பரப்பினால்
இப்படி உபகரிப்பதே -என்று இவர்கள் உகக்க ப்ராப்தமாய் இருக்க
இவர்கள் அறிவு கேடே ஹேதுவாக விலக்காது ஒழியப் பெற்றோமே என்று
இரட்டிக்க புகுந்த திரு உள்ளத்தை உடையனாய் –

க்ருதக்ருத்யஸ் ததா ராமோ விஜ்வர ப்ரமுமோத ஹ -என்று
தம்மோடும் தம்பியாரோடும் உண்டான வாசனையாலே முடியை விலக்குகிறான் என்று
வெறுத்து இருந்த பெருமாள் -இவன் இசைந்து முடியை வைத்த பின்பு உகந்தாப் போலே
இத்தலையில் அத்வேஷமே ஹேதுவாக திருவடிகளை வைக்கப் பெறுகையாலே
மிகவும் ப்ரீதனாய் –
எதிர்த்தலை அறியாது இருக்க தானே உகக்கிற இது வாத்சல்யம் இறே
உறங்குகிற பிரஜையை தாய் கட்டிக் கொண்டு கிடக்கிறது வாத்சல்யம் அன்றோ –
இவற்றை பிரிந்தால் வ்யசனமும் தன்னதே இறே
வ்யசநேஷூ மனுஷ்யாணாம்

உலகம் அளந்து –
வசிஷ்ட சண்டாள விபாகம் -ஸ்த்ரி பும்ஸ விபாகம் -ஜ்ஞான அஜ்ஞ்ஞான விபாகம் –
என்றவற்றைப் பாராதே எல்லார் தலைகளிலும் திருவடிகளை வைத்த படி –

உலகம் அளந்து –
வைத்த திருவடிகள் தலையிலே வந்து இருந்தாலும் உகக்க அறியாத லோகத்தை
கிடீர் தான் விடாதே யளந்தது
உகக்க அறியாமைக்கு வன்  மா வையம் இறே

வன்மா வையம் அளந்த எம் வாமனா!நின்
பன் மா மாயப் பல்nபிறவியில் படிகின்ற யான்,
தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து,
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ் ஞான்று கொலோ?-3-2-2-

குணாகுணம் நிரூபணம் பண்ணாதே எல்லார் தலையிலும் ஒக்கத் திருவடிகளை வைத்த
படியாலே பக்திமான்களும் பாதகிகளும் ஒக்க வாழ்ந்து போய்த்து-

அண்டமுற நிவர்ந்த நீண் முடியன் –
அண்ட கடாஹத்திலே சென்று சேர்ந்த திரு வபிஷேகத்தை யுடையவன்
அண்ட கடாஹம் வெடித்து அடி பிடிக்க வேண்டும் படி இறே அபேஷிதம் பெற்று வளர்ந்த படி

அண்டமுற –
அண்டம் மோழை எழ

நிவர்ந்த –
நிமிர்ந்த பூ அலர்ந்தாப் போலே

நீண் முடியன் –
முடிக்கு நீட்சி யாவது -உபய விபூதிக்கும் தரித்த முடி என்று தோற்றும்படி யாய் இருக்கை
ஆதி ராஜ்யம் அதிகம் புவநாநா மீசதே பி ஸூ நயந் கில மௌளி -என்னுமா போலே
ரஷ்ய வர்க்கத்தை நோக்கினால் இறே ரஷகன் முடி நல் தரிப்பது-

ஒரு காலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து எண் மதியும் கடந்து -என்று திருவடிகளுக்கு வளர்த்தி
சொல்லப் ப்ராப்தமாய் இருக்க திருமுடிக்கு வளர்த்தி சொல்லுகிறது -இத் திருவடிகள்
அப்ராப்தமான திருவடிகள் அன்று -ப்ராப்தமான திருவடிகள் என்று தோற்றுகைகாக –
தான் அர்த்தியாய் சென்று -அர்த்தித்வத்தை மாறாதே அவன் கொடுத்த படியாலே உவந்த
உள்ளத்தனாய் –
அவன் தான் அறிய உகக்க ஒண்ணாதே
உலகம் இத்யாதி –
திருக்கையில் நீர் விழுந்த அளவிலே அந் நீரே பற்றாசாகக் கொண்டு வளர்ந்து அளந்து கொண்டான்-

உவந்த உள்ளத்தனாய் –
மஹா பலியால் அபஹ்ருதமான ராஜ்யத்தை மீட்டுத் தர வேண்டும் என்று இந்த்ராதிகள் இரக்க –
உதாரா சர்வ எவைதே -என்கிறபடி -இவர்கள் பக்கலிலே ப்ரீதமான திரு உள்ளத்தை உடையனாய்
அசுரனே யாகிலும் ப்ரஹ்லாதனோடு உண்டான குடல் துவக்கும் பாவித்து
ஆநுகூல்ய மிஸ்ரனான மஹா பலியை அழியச் செய்ய நினையாதே அவனுடைய ஔதார்யத்துக்கு
அநுகூலமாக தான் இரப்பாளானாக சென்று -அவன் கொடுக்க வாங்கு கையாலே
அவன் அளவிலும் அனுக்ரஹ உக்தனாய் அபேஷா நிரபேஷமாக எல்லார் தலையிலும்
தன் திருவடிகளை வைக்க விலக்காத அளவாலும் சர்வ விஷயத்திலும் உவந்த உள்ளத்தனாய்

உலகம் அளந்து –
அளவு பட்டுக் கொடுத்தோம் என்று இருக்கிற அசுரன் முன்னே எல்லா லோகங்களையும்
தன் திருவடிகளாலே அளவு படுத்தி –

அண்டமுற நிவர்ந்த நீண் முடியன் –
மேலே கவித்த கநக சத்ரம் போலே இருக்கிற ப்ரஹ்மாண்டத்திலே கிட்டும்படி
விஜ்ரும்பித்த பெரிய திரு அபிஷேகத்தை உடையவன் -அவன் தன்னைப் போலே
திரு அபிஷேகத்துக்கும் அவனோடு ஒக்க வளருகைக்கு ஈடான மஹிமாவும் உண்டு
கர்ம வஸ்யதை தோற்றும்படி பிறவி தொடக்கமாக சடையும் குண்டிகையும் சுமந்து திரிகிற
பரிச்சின்நேஸ்வரர் பார்த்து நிற்க இப்படி முடி சூடி நிற்கையாலே உபய விபூதி நிர்வாஹகத்வமும் அபிவ்யக்தமாய் ஆகிறது

இத் த்ரி விக்ரம அபதானம் சொன்ன இத்தாலே ஈஸ்வர சங்கா விஷயமான
இந்த்ராதிகள் இரப்பாளரான படியும் -குறை கொண்டு நான்முகன் -இத்யாதிகளில் படியே ப்ரஹ்மா
திருவடி விளக்கி ஆராதனானபடியும் -ருத்ரன் தீர்த்த பிரசாதம் பெற்றுப் பூதனான படியும் சொல்லிற்று ஆயிற்று

இத்தால் முன் பாட்டில் சொன்ன இஷ்ட ப்ராபகத்வத்தையும் உதாஹரித்ததாய் -இனி –
அநிஷ்ட நிவர்த்தகத்வத்தையும் உதாஹரிக்கிறார் –

———————-

இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம்
கடந்தானை எம்மானைக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-6-

இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம் கடந்தானை –
பூமி அந்தரிஷ்யாதிகள் போராதபடி யாக வளர்ந்து
லோகத்தை அளந்து கொண்டவனை –

எம்மானைக்-
எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்த
நீர்மையாலே என்னை எழுதிக் கொண்டவனை –

கண்டு கொண்டேன் கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே –
அவன் தானே திருவடிகளை கொண்டு வந்த வைத்த அன்று தப்பின நான்
இன்று
இங்கே
காணப் பெற்றேன்
என்கிறார் –

———

தொண்டையார் தாம் பரவும் அடியினானைப் படி கடந்த தாளற்கு ஆளாய் உய்தல் விண்டானை –2-5-9-

தொண்டாயார் தாம் பரவும் அடியினானைப் –
வழு விலா அடிமை செய்ய வேண்டும் -என்று இருப்பாரைச் சொன்னபடி –
ஆயார் என்றது ஆனார் என்றபடி –
அவர்கள் ஜாமதக் ந்யஸ்ய ஜல்பத-என்கிறபடி
அடைவு கெட்டு ஏத்தும்படியான திருவடிகளை உடையவனை –
(ஜமதக்கினி-பரசுராமர் -நாரதர்- கிருஷ்ண த்வைபாயனர்-இத்யாதிகள் சொல்லக் கேட்டுள்ளோமே )

படி கடந்த தாளாளற்கு ஆளாய் உய்தல்-
நம்முடைமை ஒன்றும் தவர ஒண்ணாது என்று
தான் கொடு வந்து திருவடிகளை தலையிலே
வைத்த ஸ்வபாவத்தை உடைய நீர்மையில் தோற்று –
இனி நாமும் அவன் உகந்த அடிமை செய்து உளோம் ஆவோம் –
என்கிற இவ்வர்த்தத்தில் விண்டவன் உண்டு –
விண்டானை -தென்னிலங்கை யரக்கர் வேந்தை-
ந நமேயம் -என்று இருக்கிறவனை –

—————-

வந்து குறள் உருவாய் நிமிர்ந்து மாவலி வேள்வியில் மண்ணளந்த
அந்தணர் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-2-

மகா பலி யஜ்ஞ வாடத்திலே வாமன வேஷத்தைக் கொண்டு வந்து
திருக் கையிலே நீர் விழுந்தவாறே வளர்ந்து பூமியை அளந்து கொண்ட இந்த வேஷத்தை உடைய –
ஸ்ரீ வாமனை போலேயும் இரா நின்றீர்
சுக்ராதிகள் ஈஸ்வரன் கிடாய் உன்னை வஞ்சிக்கிறான்
என்னச் செய்தேயும் விநீத வேஷத்தை
கண்டு வைத்து எங்கனே விடாது ஒழியும் படி என்றான் இறே –

இவர் ஆர் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றான் இறே –
கழஞ்சு மண் இரந்து வந்தவன் அல்லேன்
உன்னை இரந்து வந்தவன் நான் என்கிறார்
பிறர்க்காக இரந்தவன் அல்லேன்
எனக்காக இரந்தவன் என்கிறார்-

விநீத வேஷத்துடன் இருந்தால் சித்திக்கும் என்று சேவை சாதிக்கிறார் இங்கும் –

—————-

இலகிய நீள் முடி மாவலி தன பெரு வேள்வியில் மாணுருவாய் முன்நாள் சலமொடு நிலம் கொண்டவனுக்கு
இடம் தான் –பரமேச்சுவர விண்ணகரமதுவே–2-9-7-

உஜ்ஜ்வலமாய் ஆதி ராஜ்ய ஸூசகமான முடியை உடைய
மகாபலி உடைய யஞ்ஞ வாடத்திலே
இரப்பிலே தகண் ஏறிய வடிவை உடையவனாய்
முன்பு ஒரு நாளிலே கையிலே நீர் விழுந்த போதே
பரப்பை உடைத்தான பூமியைக் கைக் கொண்டு
அளந்தவனுக்கு

————–

ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் அளந்து –திருவயிந்திரபுரமே–3-1-5-

மகா பலி தானம் பண்ணா நின்றான் என்று கேட்டவாறே அவனுடைய யஞ்ஞவாடத்திலே
தன்னை அர்த்தியாக்கிச் சென்று அவன் கையில் நீர் தன் கையில் விழுந்த அநந்தரம்
அவ்விடம் தன்னிலே நின்றே பூமிப் பரப்பு அடைய அளந்து கொண்டு

————–

மூவராகிய ஒருவனை மூ வுலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை
தேவர் தானவர் சென்று சென்று இறைஞ்சத் தண் திருவயிந்திரபுரத்து
மேவு சோதியை வேல் வலவன் கலி கன்றி விரித்து உரைத்த
பாவு தண் தமிழ் பத்திவை பாடிடப் பாவங்கள் பயிலாவே–3-1-10-

மூவராகிய மூர்த்தி -முதல்வன் தன்னை -நம்மாழ்வார் –

ப்ரஹ்ம ருத்ராதிகள் உடைய சரீரத்துக்கும்
ஆத்மாவுக்கும் அந்தராத்மதயா நின்று
சிருஷ்டி சம்ஹாரங்களைப் பண்ணுகையாலும் –
ஸ்வேன ரூபேண நின்று பாலனத்தைப் பண்ணுகையாலும்
மூவராகிய ஒருவனை
ப்ரஹ்ம விஷ்ணு சிவாத் மிகாம் ஏக ஏவ ஜனார்த்தனன் -ஸ்ரீ விஷ்ணு புராணம் –
ஆக
சர்வ நியந்தாவாய் ஆயிற்று –

மூ வுலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை-
ஆபத் சகனும் ஆயிற்று

தேவர் தானவர்-சென்று சென்று இறைஞ்சத் தண் திருவயிந்திரபுரத்து மேவு சோதியை
தேவானாம் தனவாநாஞ்ச–ஜிதந்தா ஸ்லோகம் -என்கிறபடியே
தன்னாலே ஸ்ருஜ்யரான இவர்கள் இரண்டு திறத்தாருக்கும்
ஒத்து இருக்கையாலே
தம்தாமுடைய அபேஷித சித்திக்காக
தேவர்களும் அசுரர்களும் அடைய சென்று ஆஸ்ரயிக்கலாம் படி
திருவயிந்திரபுரத்தில் நித்ய வாசம் பண்ணி
அத்தாலே
மேவு சோதியை
பரம பதத்தில் காட்டிலும் உஜ்ஜ்வலனாய் இருக்கிறவனை
எல்லாம் இல்லை இறே பரமபதத்தில்
இவர்களுக்கு அபேஷிதம் விதானம் பண்ணுகையால் வந்த
ஏற்றம் உண்டு இறே இங்கு

——

அரு மா நிலம் அன்று அளப்பான் குறளாய் அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த பெருமான் திரு நாமம் பிதற்றி நுந்தம் பிறவித் துயர் நீங்க–3-2-4-

அளக்க அரிதான மகா பிருதிவியை
அளைக்கைக்காக வாமனனாய் அசுரனுடைய
மகா யாகத்திலே சென்று அர்த்தித்த
சர்வேஸ்வரனுடைய திரு நாமத்தை
அடைவு கெட பேசி உங்களுடைய
ஜன்ம துக்கத்தை போக்குவோம் என்று சொல்லி இருப்பீர்
இரண்டு நா உடைய திரு அநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே
கறுத்துப் பெருத்த கடலிலே உகந்து
கண் வளர்ந்து அருளின
ஸ்ரீயபதி பெரிய பிராட்டியாரோடே
கூட விடாதே சஞ்சரிக்கிற தில்லை –

————

ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உலகனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும் தருக வெனா மாவலியைச்
சிறையில் வைத்த தாடாளன் தாளணைவீர்–3-4-1-

ஒரு குறளாய் –
வடிவைக் கண்ட போதே
சொல்லிற்று அடையக் கொடுக்க வேண்டும்படியான
அத்விதீய வாமனனாய்

இரு நிலம் –
பரப்பை உடைத்தான பூமியை

மூவடி மண் வேண்டி-
தனக்கு என கால் பாவுக்கைக்கு
ஓர் இடம் இல்லாதாரைப் போலே
இத்தை அவனுக்காகி -அவன் பக்கலிலே இரந்து

உலகு அனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும் தருக வென –
இந்த லோகங்கள் அடைய இரண்டு அடியாலே அடக்கி
மூன்றடி தருகிறோம் என்றாய்
மற்றை ஓரடியும் தாராயோ -என்று
(இதே திருக்கோலம் இன்றும் நாம் அங்கே சேவிக்கிறோம் )

மாவலியைச் சிறையில் வைத்த-
அநந்தரம் இந்திர பதம் அவன் பெறக் கடவனாக
அவனைப் பாதாளத்தில் வைத்த

தாடாளன் தாள் அணைவீர் –
ஆஸ்ரித அர்த்தமாக தான் இரந்தான்-என்னும்
மேன்மையை உடையவன் திருவடிகளை
கிட்ட வேண்டி இருப்பீர் –

தக்க கீர்த்தி -இத்யாதி
(புருஷோத்தமனுக்குத் தக்க கீர்த்தி )
அபௌருஷேயத்வ நிபந்தனமான
கீர்த்தியை உடைய வேதங்கள் உடைய
திரள்கள் நாலும்
பஞ்ச மகா யஞ்ஞங்களும்-( ப்ரஹ்ம மனுஷ்ய தேவ பித்ரு பூத )
ஆறு அங்கங்களும்
ஏழு இசைகளும்
தெருவிலே மிக்கு இருந்துள்ள உத்சவத்தால் வந்த அழகும்
இவை எல்லாம் அடைய சிறக்கும்படியான
காழியிலே
சீராம விண்ணகரை ஆஸ்ரயிங்கோள்

———–

ஒ மண் அளந்த தாளாளா தண் குடந்தை நகராளா வரை எடுத்த தோளாளா ஏன் தனக்கு ஓர் துணை யாளன் ஆகாயே–3-6-5-

ஒ மண்ணளந்த தாளாளா !
அபேஷை இல்லாதார் தலை மேலே வைத்த திருவடிகள்
இப் பொன் பூத்த முலைகளுக்கு அறிதாவதே –

ஒ மண்ணளந்த தாளாளா ! –
ஆர் அபேஷிக்கத்தான் நீ அன்று எல்லார் தலை மேலும் திருவடிகளை வைத்தது –
ஆர் கண்ணில் கண்ணநீரும்
ஆர் உடம்பில் வைவர்ண்யமும் கண்டு தான்
திருவடிகளை கொண்டு வந்து வைத்தது –
உன்னைப் பெறாத விகிர்தமாய்-விவர்ணமாய் – இருக்கிற இம்முலை மேலே
திருவடிகளை வைத்தால் ஆகாதோ —

திருவடியையும் திருத்தோள்களையும் காட்டினால் போதும்
தோடு இட்ட சுவடு இருக்குமே
இவற்றைக் காட்டி அருள்

——–

கண்டவர் தம் மனம் மகிழ மா வலி தான வேள்விக் களவின் மிகு சிறு குறளாய் மூவடி என்று இரந்திட்டு அண்டமும் இவ்வலை கடலும்
அவனிகளும் எல்லாம் அளந்த பிரான் அமரும் இடம் –நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே-3-10-5-

கண்டவர் தம் மனம் மகிழ-
அனுகூல பிரதிகூல விபாகம் இன்றிக்கே
கண்டவர்கள் நெஞ்சானது மகிழும் படியாக
மகா பலியினுடைய யஞ்ஞ வாடத்திலே
இவன் -தேவ கார்யம் செய்கிறான் -என்று தோற்றாத படியாக
நாட்டில் வாமனர்கள் திரு உலகு அளந்து அருளின இடம் –
என்னும் படியான வாமன வேஷத்தை பரிகரித்து
எனக்கு மூன்றடி வேணும் -என்று அர்த்தித்து
ஆகாசத்தையும் அலை எறியா நின்றுள்ள கடலையும் த்வீபங்களையும் எல்லாம்
அனாயாசேன அளந்து கொண்ட உபகாரகன்
நித்ய வாசம் பண்ணுகிற தேசம்

—————-

அங்கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன் அலர் கொடு தொழுது ஏத்த கங்கை போதரக் கால் நிமிர்த்து அருளிய கண்ணன் வந்துறை கோயில் — வண் புருடோத்தமமே–4-2-6-

அங்கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன் அலர் கொடு தொழுது ஏத்த
கோ சகஸ்ர ப்ரதாதாரம் -யுத்த -21-7-என்கிறபடியே
கொடுத்து வளர்ந்த அழகிய கையைக் கொண்டு
மூவடியை நீர் ஏற்று
திருக் கையிலே நீர் விழுந்த அநந்தரம் வளர்ந்து அருளுகிற போது
ப்ரஹ்ம பதத்து அளவும் சென்று
அவன் கையிலே திருவடிகள் இருக்க
அவன் புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்கும்படி யாகவும்

கங்கை போதரக் கால் நிமிர்த்து அருளிய கண்ணன் வந்து உறை கோயில்
கங்கை புறப் படும் படியாகவும் திருவடிகளை நிமிர்த்து அருளின
சர்வேஸ்வரன் -(ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக )வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்

————-

வசையறு குறளாய் மாவலி வேள்வி மண்ணளந்து விட்டவன் தன்னை அசைவறும் அமரர் அடியினை வணங்க அலை கடல் துயின்ற அம்மானை
—-நாங்கை நன்னடுவுள் செம்பொன் செய் கோயிலினுள்ளே —-கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே–4-3-4-

வாமன வேஷத்தை
பரிக்கிரஹிக்கிற இடத்தில் ஒரு குறை சொல்ல ஒண்ணாத படியான
குறள் வடிவை உடையனாய்
மகா பலியின் உடைய யஞ்ஞ வாடத்திலே
பூமிப் பரப்படைய அளந்தவன் தன்னை –
(ஸ்ரீ யபதியாக இருந்தும் -பிச்சை எடுக்க -அழகிய மாண் உருவாக-
அழகைக் கண்டவர் குறை சொல்ல முடியாதபடி அன்றோ கோலம் )

————

பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப் பொல்லாத குறளுருவாய்ப் பொருந்தா வாணன் மங்கலம் சேர் மறை வேள்வி
யதனுள்புக்கு மண்ணகலம் குறையிரந்த மைந்தன் கண்டீர் –நாங்கூர்த் திருத் தெற்றி யம்பலத்து என் செங்கண் மாலே–4-4-7-

பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப் –
மிக்கு இலங்கா நின்றுள்ள
ஒளி விடா நின்ற திரு யஞ்ஞோ  பவீதமும்
கிருஷ்ணா ஜிநமும் தாழ

பொல்லாத குறள் உருவாய் –
அழகிது என்றால் நாட்டார் கண் எச்சில் படுவர்  என்று
விபரீத லஷணையால் சொல்லிற்று  ஆகவுமாம்

பொருந்தா வாணன்-
ஆஸூரம் பாவம் ஆஸ்ரித என்று
ஹிருதயம் தண்ணியதாகை அன்றிக்கே
ஜன்மமே தண்ணிதானவன்

மங்கலம் சேர் மறை வேள்வி யதனுள் புக்கு
சர்வேஸ்வரன் செல்லும்படியான யாகம் இறே
மங்கலங்கள் சேரத் தட்டு இல்லை இறே

மண்ணகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர்
மகா பலி உடையனாய்
தான் குறைவாளனாய் இரந்த
என்ன பிள்ளை தான்

———–

கெண்டையும்  குறளும் புள்ளும்  கேழலும் அரியும் மாவும்
அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய வெந்தை
ஒண் திறல் தென்னனோடே வடவரசு ஓட்டம் கண்ட
திண் திறலாளர் நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே  –4-5-6-

கெண்டையும்  குறளும் புள்ளும்  கேழலும் அரியும் மாவும்
மத்ஸ்யமும்
ஸ்ரீ வாமனனும்
அன்னமும்
ஸ்ரீ வராஹமும்
ஸ்ரீ நரசிம்ஹமும்
ஸ்ரீ ஹயக்ரீவரும்

அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய வெந்தை
விபூதியும்
அது தனக்கு பிரகாசம் பண்ணக் கடவ சந்திர சூர்யர்களும்
மற்றும்
யத்யத் விபூதி மத் சத்வம் ஸ்ரீ மதூர் ஜிதமேவவா -என்கிற படியே
(ஸ்ரீ கீதை -உயர்ந்த பதார்த்தங்கள் எல்லாம் எனது தேஜஸ்ஸின் சிறு திவலையே )
விபூதியில் உச்சரிதமான பதார்த்தங்களும்
எல்லாம் தான் என்று சொல்லலாம்படி இருக்கிறவன்
வலி  உடைத்தாய்
நித்தியமான பதார்தங்களாய் நின்ற என் ஸ்வாமி-

————–

தா வளந்துலகம் முற்றும் தட மலர்ப் பொய்கை புக்கு
நா வள நவின்று அங்கே ஏத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்
மா வளம் பெருகி  மன்னு மறையவர் வாழும்  நாங்கைக்
கா வளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே -4-6-1-

தா வளந்துலகம் முற்றும் தட மலர்ப் பொய்கை புக்கு
இது தன்னையும் ஆனை தனக்கே யாக்கி
ஓர் இடத்தில் ஒரு பூ மலர் காணாமையாலே
பூமிப் பரப்பு அடங்கலும் தாவித் திரிந்தது -என்னவுமாம்
அன்றிக்கே
திரு உலகளந்து அருளின படியை யாக்கி
பூமிப் பரப்பு அடங்கலும் அநாயாசேன அளந்து கொண்டான் -என்னுதல்

நீ பூமி அளந்து கொள்ளுகைக்கு
அந்த பூமியில் உள்ளார் தாங்கள் ஏதேனும் யத்நிதித்தது உண்டோ
ஒரு பூ மலர் காணலாமோ என்னும் ஆசையாலே பூமிப் பரப்பு அடங்கலும் தட்டித் திரிந்து
பின்பு ஒரு பிரதேசத்திலே பெரிய மலரை உடைத்தாய் இருப்பதொரு
பொய்கைகைக் கண்டு -அதிலே
முதலை உண்டு என்று அறியாதே போய்ப் புக்கு அதின் வாயிலே அகப்பட்டு
ஒரு போக்கடி அறியாதே தடுமாறி

———-

மண் இடந்து ஏனமாகி மாவலி வலி தொலைப்பான்
விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறை இரந்தாய்
துண்ணென மாற்றார் தம்மைத் துலைத்தவர் நாங்கை மேய
கண்ணனே காவளந் தண் பாடியாய் களை கண் நீயே –4-6-2-

மாவலி வலி தொலைப்பான் –
மகாபலி பக்கலிலே ஔதார்யம் என்று ஒரு குணம் கிடைக்கையாலே
ராவணாதிகளைப் போலே தலையை அறுக்க வேண்டிற்று இல்லை
ஆனாலும் தேவர்களை நெருக்குகையாலே
ராவணன் செயல் உண்டாய் இருந்தது
நிரசிக்க வேண்டி இருக்கச் செய்தே மாட்டிற்று இலன்
அவனை அழிக்க மாட்டாதே தன்னை  அழித்தான் ஆய்த்து-
கொடுத்து வளர்ந்த கையைக் கொண்டு தான் இரந்தான் ஆய்த்து
மஹாபலியினுடைய மிடுக்கை அழிக்கைகாக

விண்ணவர் வேண்டச் சென்று –
அவனாலே நோவு பட்ட தேவர்கள் அர்த்திக்க

சென்று –
அவனுடைய யஞ்ஞ வாடத்திலே சென்று

சென்று வேள்வியில் குறை இரந்தாய்-
தனி இருப்பில் அன்றிக்கே
அவாப்த சமஸ்த காமனான தான் குறைப் பட்டு இரந்தான் ஆய்த்து
தேவர்கள் குறை கண்டவாறே
தான் குறைவாளனாய் இரந்தான் ஆய்த்து

துண்ணென மாற்றார் தம்மைத் துலைத்தவர் நாங்கை மேய
அவ் ஊரில்  உள்ளாருக்கு இந்த்ராதிகள் படி இல்லை யாய்த்து-
அவனை இரப்பாளன் ஆக்கி தாங்கள் வயிறு வளரார்கள் ஆய்த்து-
மகா ராஜரைப் போலே தங்களை அழிய மாறி நோக்குவர்கள்-
அத ஹாரி வர நாத ப்ராப்ய சங்க்ராம கீர்த்திம் நிசி சர பதி மாஜௌ யோஜ யித்வா ஸ்ரமேன
அவன் கண்டு அறியாத பயத்தோடே துணுக்கு  என்னும்படி பண்ணி

கண்ணனே காவளந் தண் பாடியாய் களை கண் நீயே
அவ் ஊரில் உள்ளாரில் ஒருவனாய்
புகுந்து இருக்கிற நீயே
எனக்கு ரஷகனாக வேணும்

———-

பேசுகின்றது இதுவே வையம் ஈரடியால் அளந்து மூசி வண்டு முரலும் கண்ணி முடியீர் உம்மைக் காணும் ஆசை என்னும்
கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் அயலாரும் ஏதுகின் றது இதுவே காணும் இந்தளூரிரே-4-9-3-

பேசுகின்றது இதுவே –
உமக்கு வரும் அவத்யத்தை
பரிஹரிக்க வேணும் என்னும் இதுவே நாங்கள் சொல்லுகிறது

வையம் ஈரடியால் அளந்த மூசி வண்டு முரலும் கண்ணி முடியீர்-
நீர் குணார்ஜ்ஜனம் பண்ணுகைக்கு பட்ட பாடு எல்லாம் அறிவீரே
இப்போது ஒரு வ்யக்தியிலே அல்பம் நெகிழ நின்று
அப் பெரிய குணம் எல்லாம் இழக்க அன்றோ புகுகிறீர்-
(நல்கித்தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும் -நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
கௌசல்யா லோக பார்த்தாராம் -லோக பார்த்தாவாக இருக்கவே பெற்றாள் -)

வரையாதே நோக்கின உமக்கு
இப்போது ஒருவனை நெகிழ நின்றீர் என்றால்
குண ஹானி விளையாதோ

——————-

ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்து மா வலி வேள்வியில் புக்கு தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்குற
வளர்ந்தவன் கோயில் –திரு வெள்ளி யங்குடி யதுவே–4-10-7-

ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த மாவலி வேள்வியில் புக்குத்
யாகம் என்ற ஒரு வியாஜ்யத்தை இட்டு
என்னுடைய சர்வ தனத்தையும் பரார்தமாக்க கடவேன்
என்று அனுசந்தித்த மகா பலி உடைய வேள்வியில் புக்கு -என்னுதல்

உணர்ந்து -என்ற பாடமாகில்
என்னை இரந்த இந்த்ரனுக்காக
நான் என்னை இரப்பாளன் ஆக்குவேன் -என்று
மகா பலி யஞ்ஞ வாடத்திலே போய்ப் புக்கு  –

தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்குற வளர்ந்தவன் கோயில்
சுக்ரன் மற்றை யார் -இவன் தேவ கார்யம் செய்ய வந்தான் இத்தனை –
அகப்படாதே கிடாய் -என்று உபதேசித்தால்
நான் கொண்டு அல்லது போகேன்
புக்க கார்யம் தலைக் கட்டாதே மீளுவேனோ -என்னும்
தெண்மையை உடைய வாமனனாய்
அவன் நிரோதித்தாலும்-இவன் கொடேன் -என்றாலும்
நான் கொண்டு அல்லது போகேன் -என்று போய் புக்கான் ஆய்த்து

மூன்று அடி தர வேணும் என்று அபேஷித்து
அநந்தரம்
திக்குகளை அடைய
தன் வடிவாலே பாரித்தான் ஆய்த்து –  –

————–

அறிவதரியான் அனைத்துலகுடையான் என்னையாளுடையான் குறிய மாணியுருவாய் கூத்தன் மன்னி யமரும் இடம் புள்ளம் பூதம் குடி தானே–5-1-1-

அறிவது அரியான் –
ஸ்வ யத்னத்தாலே அறியப் பார்ப்பாருக்கு அப்பால் பட்டவன்
என்றும் ஒக்க அறிய அரியதாம் படி இருக்கும் ஸ்வ பாவன்
அகில ஜகத் ஸ்வாமி அஸ்மின் ஸ்வாமி -உடையான் வேறே ஆளுடையான் வேறே
அடியேன் இடம் கைங்கர்யம் பெற்றுக் கொண்டவன் –

மன்னி யமரும்-
மன்னி உறையும் -அமர்ந்து வர்த்திக்கும்

அனைத்து உலகும் உடையான் –
அறிகையும் அறியாது ஒழிகையும் ஆகிற இவ்வர்த்தம் கிடக்க
சர்வ லோகேஸ்வரனாக
சர்வருக்கும் சம்பிரதி பன்னன்

என்னை யாளுடையான் –
விசேஷித்து என்னை அடிமை கொண்டவன்
அஸ்மத் ஸ்வாமின் –
(தத் தவம் அஸி -அனைத்து உலகும் உடையான் தத் -என்னை ஆளுடையான் -த்வம்
அறிய முடியா விடில் விடலாகாதோ
இங்கும் தொடர்வான் என் என்ன அருளிச் செய்கிறார்
அனைத்து உலகில் தானும் இருந்தாலும் அகில ஜகத் ஸ்வாமின் அஸ்மத் ஸ்வாமின் )

குறிய மாண் உருவாகிய கூத்தன் மன்னி யமரும் இடம்
இப்படி சர்வாதிகன் ஆனவன்
வாமன வேஷத்தை பரிக்ரஹித்து
இரப்பிலே தகண் ஏறின வடிவோடே கூட
மகா பலி யஞ்ஞ வாடத்திலே புக்கு
மநோ ஹாரியான சேஷ்டிதத்தை உடையவன்
மன்னி–நித்ய வாஸம் பண்ணி
யமரும்-விடேன் -என்று வர்த்திக்கிற தேசம் –
யஞ்ஞ வாடத்திலே நடந்த போது
கூத்தன்-வல்லார் ஆடினால் போலே யாய்த்து இருந்தது –

—————-

கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்து பொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதனிடம் புள்ளம் பூதம் குடி தானே–5-1-2-

கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்துப்
இவன் சர்வேஸ்வரன்
தேவர்கள் ஹிதம் செய்ய வந்தான்
அகப்படாதே கிடாய் -என்று சுக்ராதிகள் சொன்ன வார்த்தை
அவன் நெஞ்சில் படாத படியான
வாமன வேஷத்தைப் பரிக்ரஹித்து
தன்னது அல்லாததை தன்னது என்று இருந்தவன் பக்கல் நின்றும்
தன்னதாக்கிக் கொண்டான் ஆய்த்து -( இதனாலே புனிதன் )

———-

கூற்றேருவின் குறளாய் நிலம் நீர் ஏற்றான் எந்தை பெருமானூர் –கூடலூரே-5-2-4-

கூறு ஏர் உருவில் குறளாய் –
மமேதம் என்னும் அபேஷை உடைய வாமன வேஷத்தை பரிகிரஹித்து என்னுதல்-
(மாவலி மூவடி மண் கொடு -கேட்க்கைக்குத் தகுதியான உருவம் )
அன்றிக்கே –
கண்டார் அடங்கலும் -இது ஓர் குறள் வடிவு இருக்கும் படியே
என்று கூறப் பட்ட வடிவை உடையவன் -என்னுதல் –

நில நீர் ஏற்றான் எந்தை பெருமானூர் போல்
தன்னது அல்லாதது ஒன்றை பெற்றால் போலே இருக்கிற
பூமிப் பரப்படைய நீர் ஏற்று
அச் செயலாலே
என்னை எழுதிக் கொண்ட
என் குல நாதன் ஆனவன்
வர்த்திக்கிற தேசம் போலே இருந்தது –

———-

ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் முழுதினையும் பாங்கினால் கொண்ட பரம–5-3-9-

ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் முழுதினையும்
மகாபலியினுடைய யஞ்ஞ வாடமான அவ்விடத்தில்
தன்னை இரப்பாளனாக்கிக் கொண்டு சென்று
பூமிப் பரப்பை அடங்கலும்

பாங்கினில் கொண்ட பரம
அவனது ஆக்கிக் கொண்ட சர்வாதிகனே
ராவணாதிகளைப் போலே தலையை அறுத்துப் பொகட்டு
வாங்கிக் கொள்ளலாய்   இருக்கச் செய்தே
ஔதார்யத்துக்கு சமைந்து இருந்த படியால்
தன்னை இரப்பாளனாக்கி அவனதாக்கிக் கொண்டான் ஆய்த்து –

(அவனதாகவே நம்பிக் கொண்டான் -கொடுப்பவனாக இருந்தால் கொள்வானாக –
ஸ்வாமியாக கொண்டால் தாசனாக துவம் மே அஹம் மே போல் )

நின் பணிந்து எழுவன் எனக்கு அருள் புரியே  –
இந்த்ரன் உடைய ஆஸ்ரயணத்தோ பாதி
போராதோ என்னுடைய ஆஸ்ரயணம் –

————-

பண்டு இவ் வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர்
கொண்ட வாழித் தடக் கை குறளன் இடம் என்பாரால்
வண்டு பாடும் மதுவார் புனல் வந்திழி காவிரி
அண்ட நாறும் பொழில் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே —5-4-3-

பண்டு இவ் வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர் கொண்ட வாழித் தடக் கை குறளன் இடம் என்பாரால்
மகா பலியாலே அபஹ்ருதமான பூமியை
மீட்டுக் கொள்ளுகைக்காக
அவனுடைய யஞ்ஞ வாடத்திலே சென்று
திரு ஆழியைப் பிடிக்கக் கடவ கையாலே
நீரை ஏற்ற ஸ்ரீ வாமனன்
வர்த்திக்கிற தேசம் என்னா நிற்பார்கள் –

———–

ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய்த்
தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால்
வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி வணங்கும் நல்
தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென்னரங்கமே —5-4-8-

கலந்து அன்னவர் -ஏக ரசம் -பஞ்சாம்ருதம் பக்த ஜனங்கள்
அவதாரங்கள் ஐந்தைச் சொல்லி தானுமாய் போல் இங்கும்

ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய்த்
பிரளயம் கொண்ட ஜகத்தை எடுத்துக் கொண்டு  ஏறுகைக்காக
வராஹ வேஷத்தை பரிக்ரஹித்தும்

அப்படிப் பட்ட பிரளயம் தன்னை தன் செலுவிலே அடக்க வற்றான மத்ஸ்யமாயும்

மந்தரம் கீழ் விழாதபடி தரிக்க வல்ல ஆமையாயும்

இப்படி ஒரு வடிவு கொண்டு உதவுகை அன்றிக்கே
சேராத வடிவைச் சேர்த்துக் கொடு வந்து தோற்றின நரசிம்ஹமாயும்

நாட்டில் வாமனர்கள் அடங்கலும் வளர்ந்து அருளின இடம்
என்னும்படி குறள் வடிவைக் கொண்டும் –

தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால் –
முன்னும் இராமனாய் தானாய் பின்னும் இராமனாய் -என்னக் கடவது இறே –

அல்லாத இடங்கள் சக்தி  ஏக தேசம்
அவன் தானே வந்தான் என்னக் கடவது இறே ராமாவதாரத்தை
(பூர்ணனாய் சகல கல்யாண பூர்ணன்
சக்தி அவதாரம் என்றது கல்யாண குணங்கள் எல்லாம் ஸ்பஷ்டம் இங்கேயே என்றவாறு )

——-

தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு அண்டமொட அகலிடம்   அளந்தவனே–6-1-1-

சங்கைஸ் ஸூ ராணாம்-(ஸ்ரீ விஷ்ணு தர்மம் -மங்களங்களை வளர்க்க )-என்கிறபடியே
தேவர்களும்
மற்றும்
திருவடிகளுக்கு நல்லாராய் இருப்பாரும்
ஆஸ்ரயிக்க
நின்று –
அர்த்தித்து நின்று
பெற்ற அவ்விடம் தன்னிலே நின்றே
அண்டங்கள் உடன்  கூட   பூமிப் பரப்பை அளந்து கொண்டவனே –

———–

அன்றுள மூன்றினையும் அளந்து வேறோர் அரியுருவாய் இரணியனதாகம் கீண்டு வென்றவனை விண்ணுலகில் செல வுய்த்தாற்கு விருந்தாவீர்–6-6-5-

அன்று உலகம் மூன்றினையும் அளந்து வேறு ஓர் அரி உருவாய்  இரணியனதாகம் கீண்டு வென்றவனை –
த்ரை லோக்யத்தையும் தன் கால் கீழே இட்டுக் கொண்டு
நாட்டிலே நடை யாடாத  ஒரு  நரசிம்ஹமாய்
ஹிரண்யன் உடைய சரீரத்தைக் கிழித்து வென்று –

———-

இரந்தான் மாவலி மண்–6-7-3-

இரந்தான் மாவலி மண்-
அவ் வம்பு கையிலே இருக்கச் செய்தே
ஓர் இயற்றி இல்லாதாரைப் போலே
மகா பலி பக்கலிலே சென்று மண்ணை இரந்தான்-

சாமத்துக்குச் செல்லாத இடத்தில்  யாய்த்து
பேதத்தில் இழிவது –
(சாம தான பேத தண்டங்களில் )

———-

மான் கொண்ட தோல் மார்வின் மாணியாய் மாவலி மண் தான் கொண்டு தாளால் அளந்த பெருமானை
தேன் கொண்ட சாரல் திரு வேங்கடத்தானை நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே–6-8-1-

தாளால் அளந்த பெருமானை- திரி விக்ரமன் -சொன்ன உடனே திரு வேங்கடம் –
மான் கொண்ட தோல் மார்வில்-வக்ஷஸ்தல மஹா லஷ்மி மறைக்க கிருஷ்ணாஜினம் யவனிகா திரை
அளந்த பெருமானை-சர்வ சேஷி –

மான் கொண்ட தோல் மார்வில் மாணியாய் –
மானுடைத்தான தோலை மார்விலே யுடைய மாணியாய் –
தன்னுடைய விநீத வேஷத்தைக் காட்டி
அவன் நெஞ்சை நெகிழ்த்து
பின்னை யாய்த்து பூமியை வாங்கிற்று –

மாணியாய் –
பூர்வ ஜன்மமும் இரந்தேயோ ஜீவித்தது -என்று தோற்ற இரக்கை –
கொண்டு அல்லது போகேன் -என்று இரப்பிலே
தகண் ஏறின படி  –

மாவலி மண் தான் கொண்டு தாளால் அளந்த பெருமானைத் –
கிடந்த ஆனை கண்டு  ஏறின மகா பலியதான பூமியைத்
தான் அவன் பக்கலிலே இரந்து பெற்றானாய் இருக்கை-
அவன் அல்லாததை அவனதாக்கி
உடைய தான்
தன்னது அல்லாதது ஓன்று அவன் பக்கலிலே பெற்றானாய் இருக்கை –
நமக்கு  ஏதேனுமாக –
பெறும் இத்தனை யன்றோ வேண்டுவது -என்று இருந்தான் –

தாளால் அளந்த பெருமானை- –
கையிலே நீர் விழுந்த அநந்தரம்-
அவன் மறு மனஸ்ஸூ படுவதற்கு முன்பே எல்லை நடந்து கொண்டான் ஆய்த்து –

தாளால்-
பிராட்டி திரு முலைத் தடத்திலும் கண்ணிலும் வைத்துக் கொள்ளுகைக்கு அர்த்திக்கும் படி
ஸூகுமாரமான திருவடிகளாலே யாய்த்து
காடையும் மேடையும் அளந்து கொண்டது –

பெருமானை –
சர்வ சேஷியாய்-
சர்வாதிகனாய் –
இருக்கிறவன் இப்படி  தன்னை தாழ விட்ட இடத்திலும்
தாழ்ந்து தோற்றாமை இறே
தாழ விட வல்லான் ஆய்த்து –

தேன் கொண்ட சாரல்  திரு வேங்கடத்தானை –
தேன் மிக்க பர்யந்தத்தை உடைத்தான
திரு மலையிலே வந்து நிற்கிறவனை –
தாளால் அளந்த போது தப்பினார்க்கும் இழக்க
வேண்டாத  படி திருமலையிலே வந்து நின்றான் ஆய்த்து-

நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே –
அவன் நாடித் திரிகிற போது
வைமுக்யம் பண்ணி இறாய்த்து திரிந்த  நான்
தேடிச் சென்று –

நறையூரில் –
அறுகாத பயணம் போய்
பரம பதத்தில் காண்கை அன்றிக்கே
விடாய்த்த இடத்தில் தண்ணீர் குடிக்கப் பெறுவாரைப் போலே
திரு நறையூரிலே காணப் பெற்றேன் –

———

யுலகை ஈரடியால்
நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-1-

பரப்பை உடைத்தான பூமியை அடைய இரண்டு அடியாலே அளந்த
அத்புத கர்மத்தால் குறைவற்றவன் –

நாமம் சொல்லில் நமோ நாராயணமே –
அவனுடைய பேர் சொல்லில் -நமோ நாராயணமே –

——-

யுலகை ஈரடியால்
நடந்தான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே  –6-10-2-

லோகத்தை இரண்டு அடியாலே அளந்து கொண்டவன் உடைய நாமம் –

——–

மிக்க தாடாளன் இடந்தான் வையம் கேளளாகி உலகை ஈரடியால் நடந்தானுடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே

———

நீண்டாயை வானவர்கள் நினைந்து ஏத்திக் காண்பரிதால் ஆண்டே என்று ஆதரிக்கப் படுவாய்க்கு நான் அடிமை பூண்டேன் –நறையூர் நின்ற நம்பீயோ-7-2-5-

நீண்டாயை-இடம் காலம் வடிவம் -மூன்றாலும் நீண்டு

நீண்டாயை வானவர்கள் நினைந்து ஏத்திக் காண்பது அரிதால் –
உன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை சிலர் பேச என்று புக்கால்
எல்லாம் பேசி தலை கட்ட ஒண்ணாத படி
அபரிச்சேத்யனாய் உள்ள உன்னை
ப்ரஹ்மாதிகள் நெஞ்சால் கூட அனுசந்தித்து ஸ்தோத்ராதிகளைப் பண்ணி
கண்ணாலே காண வேணும் என்று ஆசைப் பட்டால்
காண அரியையாய் –

——–

வானவர் தம் துயர் தீர வந்து தோன்றி மானுருவாய் மூவடி மாவலியை வேண்டி தானமர ஏழுலகும் அளந்த வென்றித் தனி
முதல் சக்கரப் படை என் தலைவன் காண்மின்–7-8-6-

வானவர் தம் துயர் தீர வந்து தோன்றி –
அநந்ய சரண்யராய்
அவனை அல்லாது அறியாத
தொடை யொத்த துளபமும் கூடையும் பொலிந்து  தோன்றுமவர்களுக்குக்காக அன்றிக்கே
கார்யம் செய்து தலைக் கட்டின அநந்தரம்
நான் ஈஸ்வரன் என்னும் தேவர்களுக்கு
அசூரர்களால் வந்த துக்கம் போம்படி வந்து அவதரித்து –

மாண் உருவாய் மூவடி மாவலியை வேண்டித் தானமர வேழலகு மளந்த
அவன் பக்கலிலே பெறா விடில் ஜீவிக்க அரிது -என்று
தோற்றும் இரப்பிலே தகண் ஏறின வடிவை உடையனாய் –
தனக்கு இல்லாதது மூவடியாய் –
அது உடையான் மகா பலியாய் –
அவன் கையில் தான் நீர் ஏற்றுப் பெற்று-
அந்த திருவடிகளின் கீழே ஏழு வகைப் பட்ட லோகங்களும்
அடங்கும்படிக்கு ஈடாக வளர்ந்து –

——–

தொண்டரு மமரரும் முனிவரும் தொழுதெழ
அண்டமொட கலிடமளந்த    வரமர் செய்து
விண்டவர் பட மதிள லங்கை முன்னெரி  யெழக்
கண்டவர் கண புரமடி கள் தமிடமே —8-7-5-

தொண்டரு மமரரும் முனிவரும் தொழுதெழ
ஸ்ரீ வைஷ்ணவர்களும்
ப்ரஹ்மாதிகளும்
சனகாதிகளும்
தொழுது உஜ்ஜீவிக்கும் படியாக –

அண்டமொட கலிடமளந்த    வரமர் செய்து –
அண்டமொடு அகலிடம் அளந்தவர்  அமர் செய்து –
அந்தரிஷத்தோடு
பூமிப் பரப்பை அளந்தவர் –

————–

படிபுல்கும் அடியிணை பலர் தொழ மலர் வைகு கோடி புல்கு தடவரை யகலமதுடையவர்–8-7-8-

படி புல்கு மடி  யிணைப் பலர் தொழ மலர் வைகுகொடி புல்கு  தட வரை யகலமது டையவர் –
படி என்று பூமி
அத்தை புல்கும் அடி இணை உண்டு -பூமிப் பரப்பை அளந்து கொண்ட திருவடிகள்
சங்கைஸ் ஸூராணாம் -என்கிறபடியே
அவற்றை எல்லாரும் ஒக்க இருந்ததே குடியாக ஆஸ்ரயிக்க-
மலர் வைகு கொடி உண்டு -பெரிய பிராட்டியார்
அவள்  விரும்பி அணையா நின்றுள்ள
பெரிய  வரை போன்று இருந்த மார்வை உடையவர் –

——

தொழு நீர் வடிவின் குறளுருவாய் வந்து தோன்றி மாவலிபால்
முழு நீர் வையம் முன் கொண்ட மூவா வுருவின் அம்மானை –கண்ணபுரத்து அடியேன் கண்டு கொண்டேனே–8-8-5-

தொழு நீர் வடிவில் குறள் உருவாய் வந்து தோன்றி மா வலி பால் முழு நீர் வையம் முன் கொண்ட-
அவசா பிரதி பேதிரே-(உத்யோக பர்வம் )என்கிறபடியே-
(எழலுற்று மீண்டும் இருந்தானே துரியோதனனும்
தங்கள் வசம் இழந்து தொழப் பண்ணுமே
ஊராக தீண்டியது அது உலகமாகத் தீண்டியது இது )
கண்டார்க்கு தொழுது அல்லாது நிற்க ஒண்ணாத
வடிவை உடைய வாமன வேஷத்தை உடையவனாய்
வந்து அவதரித்து
கடல் சூழ்ந்த ராஜ்ஜியம் மகா பலியதாய்
அவன் பக்கலிலே தான்  இரந்து
பெற்றானாம் படி பெற்ற –

மூவா வுருவின் அம்மானை –
சதா ஏக ரூபமான விக்ரஹத்தை உடைய சர்வேஸ்வரனை –
தோன்றுகின்ற வாமன வேஷம் அன்று கிடீர் இவனுக்கு
நிலை நின்ற வடிவு -என்கிறார் –

———-

மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த்
தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னை கண்ண புரத் தடியன்  கலியன் ஒலி செய்த
தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே —8-8-10

மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த்
தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும் ஆனான் தன்னை
மத்ஸ்யாதி தசாவதாரங்களையும் பண்ணி
ஜகத் ரஷணம் பண்ணின தன்னை –

(1-வேதம் கொடுத்து ரக்ஷணம் மத்ஸ்யாவதாரம்
2-அமுதம் கொடுத்து ரக்ஷணம் கூர்மாவதாரம்
3-பக்தர் – பூமா தேவியை -இடந்து -சம்சார பிரளயத்தில் இருந்து ரக்ஷணம் வராஹ அவதாரம்
4-பக்த விரோதிகளை அழித்து ரக்ஷணம் நரஸிம்ஹ அவதாரம்
5-சொத்தை -இரந்தும் -ரக்ஷணம் -ஸ்வ ஸ்வா தந்தர்யம் போக்கி ரக்ஷணம் வாமன அவதாரம்
6-ப்ரக்ருதி பிராகிருத பிரதிபந்தங்கள் போக்கி ரக்ஷணம் பரசுராம அவதாரம்
7-மரியாதை ஸ்தாபித்து தர்ம ரக்ஷணம் ராமாவதாரம்
8-துஷ்ட நிரஸனம் பண்ணி ரக்ஷணம் பலராம அவதாரம்
9-பூமி பாரம் போக்கி ரக்ஷணம் தாமோதர அவதாரம்
10-கலி போக்கி கிருத யுகம் நாட்டி ரக்ஷணம் கற்கி அவதாரம் )

———

மாணாகி வையம் அளந்ததுவும் வாளவுணன்
பூணாகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்து இருந்தேன்
பேணாத வல்வினையேன் இடர் எத்தனையும்
காணேன் நான் கண்ண புரத்துறை யம்மானே—8-10-8-

உண்டு என்று இட்ட போதோடு
இல்லை என்று தள்ளிக் கதவடைத்த போதோடு
வாசி அற முகம் மலர்ந்து போம்படி இரப்பிலே
தகண் ஏறின வடிவை உடையனாய்
பூமிப் பரப்பை யடைய அளந்து கொண்டதுவும்
சிறுக்கனுக்காக சாயுதனான ஹிரண்யன் உடைய
ஆபரணங்களால் அலங்க்ருதமான மார்வைக் கிழித்ததுவும் –

ஈண்டு நினைந்து இருந்தேன் –
நீ முற்காலத்திலே செய்த செயலை நான் இப்போது நினைத்து இருந்தேன் –

————-

மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய் மூவடி நீரோடும் கொண்டு பின்னும் ஏழுலகும் ஈரடியாகப் பெரும் திசை யடங்கிட
நிமிர்ந்தோன் –திருக் கண்ணங்குடியுள் நின்றானே–9-1-5-

மகா பலி உடைய
அர்த்தித்தார் அர்த்தித்து எல்லாம் கொடுக்கிற யாகத்திலே
வாமன வேஷத்தை பரிஹரித்துக் கொண்டு போய் புக்கு
அவன் வார்த்த நீரோடு
மூன்றடியும் கொண்டு ஸ்வீகரித்து

(த்ரய சம்ப்ரதாயம் ஆகவே இங்கும் மூன்றடி
மாவலி மூவடி மண்தா -இதுவும் த்ரயம்
கோட்டங்கை வாமனனாய் செய்த கூத்துக்கள்
மான் தோல் போட்டு மூடி -அந்தப்புரத்திரை -கடாக்ஷம் லேசம் இருந்தால் கார்யகரம் ஆகாதே )

பின்னும் ஏழு உலகம் ஈரடியாகப் பெரும் திசை யடங்கிட நிமிர்ந்தோன் –
அநந்தரம்
பூமிப் பரப்பை அடைய
இரண்டடியாலே  அளப்பதாக
பரந்த திக்குகள் அடங்கலும்
திருவடிகளுக்கு உள்ளே அடங்கும் படி வளர்ந்தவன் –

—————

முன்னம் குறளுருவாய் மூவடி மண் கொண்டு அளந்த மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன்-9-4-2-

முன்னம் குறளுருவாய் மூவடி மண் கொண்டளந்த
ஸூலபன் அல்லாதவனை  ஆசைப் பட்டு உடம்பு வெளுத்து இருக்கிறேனோ
அது தான் (அந்த வாமன அவதாரமே ) பரத்வம் என்னும் படி இருக்கிற இடத்தே
என் தசையை அறிவியுங்கள் -என்கிறாள் –
(முன்னம் ரொம்ப முன்னே -சற்று முன்னே -இரண்டும் சொல்லலாமே )

கால விப்ரகர்ஷம் போக்கி
தேச விப்ரகர்ஷம் அல்ல கிடீர் இழைக்கைக்கு –
பாவியேன் -இன்று அன்றே அவ்வடிவு கொள்ள அடுப்பது –
ஒரு நீர்ச் சாவி கிடக்க கடலிலே வர்ஷிப்பதே
ஆறு புகா விட்டாலும்
வர்ஷியா  விட்டாலும்
கடலுக்கு குறை இல்லை இறே-
கால பிரத்யா சத்தியாலே பல்லிலே பட்டுத் தெரித்தது -என்கிறாள்  –

குறளுருவாய்-
அப்ராக்ருத சமஸ்தானத்தை
கண்ணாலே முகக்கலாம் படி யாக்கின படி –

மூவடி மண் கொண்டளந்த
த்ரை லோக்யத்துக்கு அவ்வருகும் நித்ய விபூதியும்
தன்னதாய் இருக்கிறவன்
கிடீர் மூவடியை இரந்தான் –
இரந்ததுவும் -மண் அளந்ததுவும் மிகை காணும் –
அவ்வடிவைக் கண்ட போதே ஆத்மாத்மீயங்களை
இவனதாக்கினான் ஆயிற்று -அவன்
தத்த மச்யாபயம் மயா-என்னுமா போலே –
ராகவம் சரணம் கத -என்றதுக்கு உள்ளே பெருமாள் அங்கீகாரமும் உண்டு –
நடுவு கால ஷேபம் மகா ராஜர் அனுமதி பெறுகைக்காக ஆயிற்று –

(அந்த அபதானம் -நினைவு உள்ளத்தில் நெருக்கமாக -அனுசந்தான வை லக்ஷண்யத்தால் –
தெளிவாக இருப்பதால் பக்கத்தில் நடந்தது போல் தெரிகிறதே
மஹாபலி போல் கண்டதும் அனைத்தையும் கொடுத்த வ்ருத்தாந்தம்
விபீஷண ஆழ்வானுக்கு அனைத்தும் கொடுத்து விட்டேன் என்றால் போல் )

மூவடி மண் கொண்டளந்த மன்னன்-
அவன் பக்கல் இரந்து பெற்று வளர்ந்து அளந்து கொண்டான் ஆயிற்று
அவனுடைய அபிமானத்தோடு சேர்க்கைக் கொள்ளுகைக்காக இரந்தான் ஆயிற்று

மன்னன் –
ராஜாதி ராஜ சர்வேஷாம்
விஷ்ணுர் ப்ரஹ்ம மயோ மகான்  -ஈஸ்வரம்  தம் விஜா நீமஸ் ச விபு ப்ரஜாபதி -என்னுமா போலே –

மன்னன்-சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன்-
அன்யார்தமான செயலிலே நிறம் இழந்தேன் –
இந்த்ரனுக்காக செய்த செயல் என்று தோற்றிற்று இல்லை காணும் இவர்க்கு
அன்று கரு மாணி யாய் இரந்த கள்வனே உன்னைப் பிரமாணித்தார் பெற்றே பேறு-(பூதத்தாழ்வார்-61- )
ஆஸ்ரிதர் எல்லாருக்குமாக செய்த செயல் என்று இருக்கிறார் –
தன் உருக் கெடுத்து  -வேற்று உருக் கொள்ளுவது
இரப்பது
அளப்பதான –
செயலிலே யாய்த்து விவரணை யாயிற்று –

—-

நீணிலா வெண் குடை வாணனார் வேள்வியில் மண்ணிரந்த மாணியார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே–9-7-3-

நிலா பரந்தாப் போலே இருக்கிற வெண் கொற்றக் குடையை
யுடையனான மகா பலியுடைய யாகத்திலே சென்று
தன் அல்லாத ஒன்றை அர்த்திப்பாரைப் போலே பூமியை அபேஷிக்க
இரப்பிலே தகண் ஏறின வடிவை  யுடையவர் –

வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –
தம்முடைய அர்த்தித்வம் தோற்ற வந்து நிற்கிற திரு வல்ல வாழை –

——–

அணி வளர் குறளாய் அகலிடம் முழுதும் அளந்த எம் அடிகள் தம் கோயில் –மாலிரும் சோலை வணங்குதும் வா மட நெஞ்சே–9-8-3-

அழகு மிக்கு இருந்துள்ள ஸ்ரீ வாமன வேஷத்தை பரிஹரித்து
அதி ஸூ குமாரமான திருவடிகளைக் கொண்டு
பூமிப் பரப்பை அடைய அளந்து கொண்டு –
அந்தச் செயலாலே என்னை எழுதிக் கொண்ட ஸ்வாமி யானவன்
பிற்பட்டார்க்கு இழக்க வேண்டாத படி நிற்கிற தேசம் –
(பின்னானார் வணங்கும் சோதி -காலத்தாலும் ஞானத்தாலும் பின்னானார் )

———

தானவன் வேள்வி தன்னில் தனியே குறளாய் நிமிர்ந்து வானமும் மண்ணகமும் அளந்த திரிவிக்கிரமன் –திருமால் இரும் சோலை நின்ற வானவர் கோன்-9-9-5-

தானவன் வேள்வி தன்னில் தனியே குறளாய் நிமிர்ந்து  –
மகா பலியினுடைய யாகத்திலே
ஆசூர பிரக்ருதிகள் நடுவே தனியே
வாமன வேஷத்தைக் கொண்டு போய்ப் புக்கு வளர்ந்து –

வானகமும் மண்ணகமும் அளந்த திரி விக்கிரமன் –
பூமியாந்தரிஷ்யாதிகள் மூன்றடியிலே அடங்கும்படி
அளந்தவன் –

———-

நீண்டான் குறளாய் நெடு வானளவும் அடியார் படும் ஆழ் துயராய வெல்லாம் செல வைத்த பிரான்–10-6-5-

நீண்டான் குறளாய் நெடு வானளவும் –
வாமன வேஷத்தோடு வந்து தோற்றி
பரப்புடைத்தான ஆகாசம் எங்கும்
இடம் அடையும் படி வளர்ந்தான் –

அடியார் படும் ஆழ்  துயராய வெல்லாம் –
தன் திருவடிகளை ஆஸ்ரயித்து இருக்கும் சேஷ பூதருக்கு
அனுபவித்தால் அல்லது நசியாத பாபங்கள் எல்லாம்

தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான் அது வன்றியும் முன் –
அவர்களை ஸ்பர்சியாத படி யாக மநோ ரதித்து
(ஸங்கல்பித்து என்னாமல் மநோ ரதித்து -என்றது ஆசைப்பட்டு தனது பேறாகச் செய்தமை )
விரோதியைப் போக்கிக் கொடுத்து
அவ்வளவே அன்றிக்கே
நித்ய ஸூரிகள் அளவும் செல்லும்படியாக வைத்த உபகாரகன் –

——–

வைத்தார் அடியார் மனத்தினில் வைத்து இன்பம் உற்றார் ஒளி விசும்பில் ஓரடி வைத்து ஓரடிக்கும் எய்தாது மண்
என்று இமையோர் தொழுது இறைஞ்சி கைத்தாமரை குவிக்கும் கண்ணன் என் கண்ணனையே–11-3-6-

ஒளி விசும்பில் ஓரடி வைத்து ஓரடிக்கும் எய்த்தாது மண் யென்று இமையோர் தொழுது ஏத்தி –
அவன் தானே பிரதம ஸூஹ்ருதமாய் நின்று வ்யாபரிக்கை யாலே
பூமி அந்தரிஷாதிகளை அளந்து கொள்ளுகிற இடத்தில்
ஆகாசமானது எட்டுத் தொட்டாய் போந்தது
பூமியானது திருவடிகளுக்கு போராது ஒழிவதே -யென்று
இதிலே வித்தராய் –
ப்ரஹ்மாதிகள் எழுதிக் கொடுத்து –

———

வெந்திறல் வாணன் வேள்வியிடம் எய்தி அங்கு ஓர் குறளாகி மெய்ம்மை உணர செந்தொழில் வேத நாவின் முனியாகி வையம் அடி மூன்று இரந்து
பெறினும் மந்தரமீது போகி மதி நின்று இறைஞ்ச மலரோன் வணங்க வளர் சேர் அந்தரம் ஏழினூடு செல உய்த்த பாதமது நம்மை யாளும் அரசே–11-4-5-

வெந் திறல் வாணன் வேள்வியிடம் எய்தி அங்கோர் குறளாகி மெய்ம்மை உணர –
உதாரன் யென்று பிரசித்தமாய் இருக்கச் செய்தேயும்
தேவர்கள் குடி இருப்பை அழிக்கும் படியான பலம் –
இத்தை உடைய மஹாபலி யஞ்ஞ பூமியிலே சென்று –
கண்டார்க்கு அடைய ஆகர்ஷகமான வாமன வேஷத்தைக் கொண்டு
யதார்த்த ஜ்ஞானத்தை உடையனாய் –

செந் தொழில் வேத நாவின் முனியாகி வையம் அடி மூன்று இரந்து பெறினும்
அனபிசம்ஹித பலமான
அனுஷ்டானத்துக்கு சேஷமாய்
நாட்டார்க்கு ஹிதானுசாசனம் பண்ணும் வேதத்தை
வாயாலே உச்சரியா நின்றுள்ள ருஷியாய்-
ஓரடிக்கு சிறை இட்டு வைப்பானாக
மூன்றடியை வேண்டிப் பெற்றவாறே –

மந்தர மீது போகி மதி நின்று இறைஞ்ச மலரோன் வணங்க வளர் சேர் –
மந்தரத்துக்கு மேல் போய்
சந்த்ராதித்யர்கள் ஸ்தானத்து அளவிலே நின்று ஆதரிக்க
ப்ரஹ்மா-நம் இருப்பில் திருவடிகள்   வந்தது  -யென்று
புறப்பட்டு ஆஸ்ரயிக்கும் படி –
வளரா நிற்பதாய் –

(மேலைத் தண் மதியும் கதிரவனும் தாண்டி -மதி மேல் -ஆதித்யன் கீழ் –
திருவடிக்கு குளிர்ச்சிக்கு தண்மை தர இத்தை முதலில் சொன்னது போல் இங்கும் சந்த்ர ஆதித்யர்கள் –
மேலைத் தண் மதியும் என்றாலே கீழைக் கதிரவனும் என்பது ஸித்தமாமே )

அந்தரம் ஏழினூடு  செல வுய்த்த  பாதமது நம்மை யாளும் அரசே
சேரக் குடி ஏறி இருக்கிற உபரிதன லோகங்கள் ஏழும்
நடுவே போம்படி நடத்தின
திருவடிகள் நமக்கு ரஷகம் –

———–

கண்டார் இரங்கக் கழியக் குறளுருவாய் வண் தாரான் வேள்வியில் மண்ணிரந்தான் காணேடீ
வண் தாரான் வேள்வியில் மண்ணிரந்தான் ஆகிலும் விண்டேழுலகுக்கும் மிக்கான் காண் சாழலே–11-5-9-

(விண்டு-விரிந்து விபூவாய் -விஷ்ணு )

கண்டார் இரங்கக் கழியக் குறள் உருவாய்
1-வடிவு அழகாலும்
2-வரையாதே தீண்டும்படி யாலும்
3-ஆஸ்ரிதர்க்கு தாழ்வு செய்யும்படி யாலும் –
கிருஷணாவதாரத்தோடு போலியாய் இறே ஸ்ரீ வாமன அவதாரம் இருப்பது –

சுக்ராதிகள் வார்த்தைக்கும் கேளாதே இரங்கும்  படியாக
நாட்டில் வாமனர்கள் வளர்ந்த இடத்தோபாதி-என்னும்படி
அறக் குறளாய்-

வண்டாரான் வேள்வியில் மண்ணிரந்தான் காணேடீ    –
ராஜாவாய் மாலை இட்டு
உதாரனாய் இருக்கிற மஹா பலி யஞ்ஞ பூமியிலே
அவன் கண் வட்டத்துக்கு உள்ளே நின்று
மூன்றடி மண் இரந்தான் காண் –

வண்டாரான் வேள்வியில் மண்ணிரந்தான் ஆகிலும்
விண்டு  ஏழ்   உலகுக்கும் மிக்கான் காண் சாழலே –
அவன் கண் வட்டத்தே நின்ற இவனை
நாட்டில் கண்டவர் இல்லை கிடாய் –

————–

கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டளந்தான் வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பாரேல் காணேடீ
வெள்ளத்தான் வேங்கடத்தான் ஆனலும் கலிகன்றி உள்ளத்தின் உள்ளே உளன் கண்டாய் சாழலே–11-5-10-

கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான்
கிரித்ரிம வேஷத்தைக் கொண்டு
சிலருக்குச் சென்று கிட்ட ஒண்ணாத படி

வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ
திருப் பாற் கடலிலே காண் அவன் கிடப்பது –
சடக்கெனெ சென்று காண ஒண்ணாத படி
திருமலையிலே காண் அவன் நிற்பது -என்பார்கள் காண்

வெள்ளத்தான் வேங்கடத்தான் ஏலும் கலி கன்றி-உள்ளத்தின் உள்ளே யுளன் கண்டாய் சாழலே
அப்படி இருக்கிறவன் காண்
ஆழ்வார் ஹிருதயத்தில் நின்றும்
புறப்படத் தள்ளினாலும்
புறப்படாதே கிடக்கிறான் –

(ப்ரீதி பிரகர்ஷத்தால்
உந்மத்தகம்
பலம் சொல்வதை மறந்து
அன்யாப தேசத்தில் அருளிச் செய்கிறார் –
திருப்பாற் காதல் -அவதார கந்தம்
பலம் -திருமலையில் நிற்க
இங்கு இருந்து தபஸ்ஸூ
ஆழ்வார் திரு உள்ளமான கலங்கா பெரு நகரம் பெறுவதற்காகவே
இக்குண ஆதிக்யத்திலே ஈடு படுகிறார் -)

—————

உலகளந்த உம்பர் கோமான்
பேராளான் பேரான பேர்கள் ஆயிரங்களுமே பேசீர்களே —-11-6-5-

சைதன்யம் உண்டாகில்
வரையாதே எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்து
அத்தாலே ப்ரஹ்மாதிகளுக்கு நிர்வாஹகனாய் –

பேராளான் பேரான பேர்கள் ஆயிரங்களுமே பேசீர்களே   –
அளவுடையவனாய் இருந்துள்ளவனுடைய
பெயரான திரு நாமங்களையே
பேசீர்களே –

———-

நீள் வான் குறளுருவாய் நின்று இரந்து மாவலி மண் தாளால் அளவிட்ட தக்கணைக்கும் மிக்கானை
தோளாத மணியைத் தொண்டர்க்கு இனியானை கேளாச் செவிகள் செவியல்ல கேட்டாமே--11-7-2-

(தக்கணைக்கு மிக்கானை-தக்ஷிணை -எவ்வளவு கொடுத்தாலும் உயர்ந்த )

நீள் வான் –
நீளுக்கைக்கு நரிப் பூண் இட்டாப் போலே -நின்றபடி
(நரிப் பூண் கள்ளப் பூணல் )
அன்று செய்த கீர்த்தி கொண்டாட -நீள -என்னுமாம் –

குறளுருவாய் –
சுருங்க நின்றதனையும்
பெருக்க வளருகைக்கு உறுப்பாக –

நின்றிரந்து-
வடிவே அமைந்து இருக்கச் செய்தே
அதுக்கு மேலே
அவனை இரந்த –

மாவலி மண் –
அவன் என்னது என்று அபிமானித்த பூமி

தாளால் அளவிட்ட –
திருவடிகளுக்கு ஈடாக
கீழே இட்டுக் கொண்டு நின்றபடி –

தக்கணைக்கு மிக்கானை –
தஷிணையாக மஹா பலி கொடுத்த கொடை
இன்னம் போராது
என்னும் படி இருந்தவன்-
(கொடை போராமல் மூன்றாவது அடிக்கு இடம் இல்லாதபடி )

தோளாத மா மணியைத் –
துளை பட்டு சிலர் விநியோகம் கொண்டு அன்றிக்கே
அனுபபுக்த்தமாய்
ஒளி மழுங்காதே
ஜாதியான ரத்னத்தை –

தொண்டர்க்கு இனியானை –
உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு –இரண்டாம் திருவந்தாதி -என்று
ஆஸ்ரிதர் ஈடுபட்டு
நெஞ்சிலே எப்போதும் அனுபவித்து இருக்குமவன் –

கேளாச் செவிகள் –
அவனுடைய கீர்த்தி கேட்க வென்றால்
கேளோம் என்னுமவர் செவி -செவி அல்ல –

கேட்டோமே –
ஷேபம் –

———————————————————————————–

மாயமான் மாயச் செற்று மருது இற நடந்து வையம்
தாய மா பரவை பொங்கத் தட வரை திரித்து வானோர்க்கு
ஈயுமால் எம்பிரானார்க்கு என்னுடைச் சொற்கள் என்னும்
தூய மா மாலை கொண்டு சூட்டுவன் தொண்டனேனே -16-

மாயமான் மாயச் செற்று“ என்றதனால் ஸ்ரீராமாவதாரம்;
மருதிறநடந்து“ என்றதனால் ஸ்ரீ க்ருஷ்ணாவதாரம்.
வையம்தாய்“ என்றதனால் ஸ்ரீ திரிவிக்ரமாவதாரம்.
அம்மா பரவைபொங்கத் தடவரை திரித்து வானோர்க்கீயும்“ என்றதனால் ஸ்ரீ கூர்மாவதாரம்.)

வையம் தாய –
முன்புத்தை அது வளர்ந்த பின்பு பண்ணின வியாபாரம் –
நடுவு தவழுகிற போது வியாபாரம்
இது பிறந்த அன்றே பண்ணின வியாபாரம் -இறே –
பூமியை அநாயாசேன அளந்து கொண்டு –

(வையம் தாய் = ‘தாய்‘ என்றது தாவி யென்றபடி.
“பாயோரடி வைத்ததன் கீழ்ப் பரவை நிலம் எல்லாம்
தாய் ஓரடியால் எல்லா வுலகும் தடவந்த
மாயோன் உன்னைக் காண்பான் வருந்தி எனை நாளும்
தீயோடுடன் சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ –6-9-6- என்றதும் காண்க.)

———-

ஒண் மிதியில் புனலுருவி ஒரு கால் நிற்ப ஒரு காலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து எண் மதியும் கடந்து அண்டமீது போகி
இரு விசும்பினூடு போய் எழுந்து மேலைத் தண் மதியும் கதிரவனும் தவிர வோடித் தாரகையின் புறம் தடவி அப்பால் மிக்கு
மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை மலர் புரையும் திருவடி9எ வணங்கினேனே–5-

ஒண் மிதியில் –
சர்வ ஆதாரமான வஸ்து -சேதனர் தலையில் திருவடிகளை வைத்தால் லோகம் தரிக்க வற்றோ –
கம்சன் திருவடிகள் படும் காட்டில் நக்கரைந்து கிடந்தது இலனோ வென்னில் –
அவை தானே யாய்த்து தரிக்கைக்கு ஹேதுவும்-
தாரகமான பதார்த்தம் தார்யமானாலும் தாரகத்வம் நழுவாது இறே –
திருவடிகளுக்கு தான் தாரகன் ஆனவோபாதி
இவர்கள் தலைக்கும் தாரகன் தானே இறே –

(அவன் ஸ்வரூபமே அவனது திவ்ய மங்கள விக்ரஹத்துக்கும் குணங்களுக்கும் ஆஸ்ரயம் தாரகம்)

தார்யம் ஆனது தாரகம் ஆக மாட்டாது –
தாரகம் ஆனது தார்யம் ஆக மாட்டாது –
சரீரம் ஆத்மாவுக்கு அதிஷ்டானமாய் இருந்தாலும் சரீரம் தாரகம் ஆகிறது அன்று –
ஆத்மா தார்யம் ஆகிறது அன்று இறே –
ஆத்மா தாரகம் சரீரம் தார்யம் என்னும் இடம் சரீர ஆத்மா லஷணம்
சொல்லுகிற இடத்தே சொல்லிற்று இறே –

சரீர ஆத்ம லஷணம் ஆவது
யஸ்ய – சேதனஸ்ய- யஸ்ய த்ரவ்யம் -சர்வாத்மனா ஸ்வார்த்தே –
நியந்தும் தாரயிதும் சக்யம்-தத் சேஷை தைக ஸ்வரூப
பஞ்ச தஸ்ய சரீரம் -சர்வாத்மனா –

புனலுருவி –
பூமி அளவாதல்
சப்த சமுத்ரங்கள் அளவாதல்
சப்த த்வீபங்கள் அளவாதல் –
சக்ரவாள கிரி அளவாதல் -(இங்கு தான் ஜாம்பவான் பறை கொட்டி ஆர்ப்பரித்தான் )
மகா ஜலத்து அளவதால் –
அண்டகடாஹத்து அளவாதல் -நிமுருகை அன்றியே –
ஆவரண ஜலத்து அளவும் செல்ல திருவடிகளை நிமிர்த்தபடி –

அண்ட கடாஹத்துக்கு உள்ளே அன்றோ ரஷ்ய வர்க்கம் –
அவ்வருகு போக வேண்டுவான் -என் என்னில்
ரஷ்யத்தின் அளவு அல்ல ரஷகன் உடைய பாரிப்பு -என்கை

அதனில் பெரிய அவா -என்று
இவருடைய அவாவைப் போலே காணும் அவனுடைய அவாவும்
இவருடைய ப்ரேமம் செய்தது செய்ய மாட்டாதோ அவனுடைய வாத்சல்யம் –

(சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-)

திருவடிகள் அண்ட கடாஹத்தையும் ஊடுருவி ஆவரண ஜலத்து அளவும் சென்றால்
அண்டகடாஹம் போகாதோ என்னில் -அது வேண்டுவது இல்லை இறே –

ஸூஷ்ம ஸ்தூலத்தை வியாபிக்கும் போது -ஆகாசம் அண்ட கடாஹத்தை வியாபியா நின்றது –
அதில் காட்டில் ஸூஷ்ம ரூபமான மூலப் பிரக்ருதியிலும்
ஸூஷ்மமாய் இறே திவ்ய மங்கள விக்ரகம் இருப்பது –

மிதியில் –
மதிய மூர்த்த்நாம் அலங்க்ரிஷ்யதே -என்றும்
படிக்களவாக நிமிர்ந்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் -என்றும் –
திருவடிகளை சிரோ பூஷணமாகச் சொல்லுவது
திருவடிகளின் வைலஷண்யத்தையும் அறிந்து
தங்களுக்கும் அதிலே ஆதரம் உண்டானால் இறே –

தேகாத்ம அபிமானிகள் ஆகையாலே வெற்றுக் கால் தங்கள் தலையைத் துகைத்ததாக நினைத்து இருக்கும் இத்தனை இறே –
ஆகையால் அவர்கள் அபிப்ராயத்தால் அருளிச் செய்கிறார் –

(கதா புநஶ் ஶங்க ரதாங்க கல்பக
த்வஜாரவிந்தாங்குஶ வஜ்ரலாஞ்சநம் |
த்ரிவிக்ரம! த்வச் சரணாம்புஜ த்வயம்
மதீய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 31 –

த்ரிவிக்ரமனாக அவதரித்த என் ஸ்வாமியே! சங்கம், சக்ரம், கற்பக மரம், கொடி, தாமரை, அங்குசம், வஜ்ராயுதம்
ஆகிய அடையாளங்கள் பொருந்திய உன்னுடைய திருவடிகள் எப்பொழுது என்னுடை தலையை அலங்கரிக்கும்.)

(குடிக் கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ யொருநாள்
படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்
கொடிக்கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-2-)

(ஒருவருடைய கால் நம் தலையிலே பட்டதே“ என்று வெறுத்திருந்ததத்தனை யொழிய
”கோல மாம் என் சென்னிக்கு உன் கமலமன்ன குரை கழலே” என்றாற் போலே-
அலங்க்ருதமாகவும் அணியாகவும் உகந்து கொண்டார்களில்லையே;
அன்னவரது கருத்தாலே கால் என்றது.)

ஒண் மிதியில் –
நிலா தென்றல் சஞ்சரித்தால் போலே அனுகூலமாக திருவடிகளை வைத்த படி –
அல்லாத போது –திரு வாணை -என்று ஆணை இடுவர்கள் இறே –

அதவா
மேல் ஒரு காலத்தில் ஆபி முக்கியம் பிறந்தால்
தங்கள் பூர்வ வ்ருத்தத்தையும்
ஈஸ்வர வைலஷண்யத்தையும் பார்த்து இறாயாதே
வழக்கு பேசிப் பற்றலாம்படி மிதித்த மிதி யாகையாலே –
ஒண் மிதி -என்கிறது -என்னவுமாம் –
நான் விமுகன் ஆனவன்று என் தலையிலே இருந்த திருவடிகளை
ஆபிமுக்யம் பண்ணின இன்று பற்றக் குறை என் என்னலாம் இறே
லோக விக்ராந்த சரணவ் -என்றால்
ஈஸ்வரனுக்கு மறு மற்றம் இல்லை போல் காணும்-

(“பிதரம் மாதரம் தா³ராந் * புத்ராந் ப³ந்தூ⁴ந் ஸகீ²ந் கு³ரூந் ।
ரத்நாநி த⁴நதா⁴ந்யாநி * க்ஷேத்ராணி ச க்³ருʼஹாணி ச” ॥

“ஸர்வத⁴ர்மாம்ஶ்ச ஸந்த்யஜ்ய * ஸர்வகாமாம்ஶ்ச ஸாக்ஷராந் ।
லோகவிக்ராந்த சரணௌ * ஶரணம் தேঽவ்ரஜம் விபோ⁴!” ॥)

ஒரு கால் நிற்ப –
ஒரு திருவடிகள் நிற்ப
திருவடியே வணங்கினேனே -என்னா நின்றார் மேல்
கீழ் –திருவடி என் தலை மேலேவே -என்றார்-
ஆயிருக்க திருவடிகள் என்னாதே கால் என்கிறது –
சம்சாரிகள் அபிப்ராயத்தாலே
ஒருவன் கால் தம் தலையில் இருந்தது என்று நினைத்ததற்கும் அது ஒழிய
வகுத்ததுமாய் ஸூரி போக்யமுமான திருவடிகள் இறே
நம் தலையில் இருந்தது என்ற முறை அறியார்கள் இறே –

நிற்ப –
திருவடிகள் பூமியை அளக்க என்று உத்யோகித்த உத்யோகத்தே
குசை தாங்கின அருமை எல்லாம் தோற்றுகிறது ஆய்த்து –
இதனுடைய உத்யோகத்தே குசை தாங்கினான் என்று இறே அவன் தனக்கு ஏற்றம்

குசை தாங்குகை -வேகத்தில் ஓடுகிற குதிரையை கடிவாளம் கொண்டு வெட்டி நிறுத்துமா போலே நிறுத்துகை –

ஒரு காலும் –
பூமியை அளந்த திருவடிகளை அனுபவித்தார் கீழ் –
இத்தால் ஊர்த்த்வ லோகங்களை அளந்த திருவடிகளை அனுபவிக்கிறார் —

ஒரு காலும் –
மற்றத் திருவடிகளும்
மற்றக் காலும் என்னாதே –ஒரு காலும் -என்கையாலே
இது ஓன்று இருந்தபடி என் என்கிறார் –
அந்தத் திருவடிகளை அனுபவிக்கிற போது இதுக்கு மேற்பட்ட போக்ய வஸ்து இல்லை யாகாதே என்று இருந்தார் –
இந்தத் திருவடிகளைக் கண்ட வாறே இதுக்கு மேற்பட்ட போகய வஸ்து இல்லை -என்கிறார்-

காமருசீர் அவுணன் உள்ளத்து
மகா பலி யினுடைய மநோரத ரூபமான ஜ்ஞானத்தை அதிக்ரமித்து —
காமரு சீர் அவுணன் –
ஸ்ப்ரஹணீய ஸ்வபாவனான -மகா பலி –
ஜ்ஞாதாக்கள் அடைய இவனை அஹங்கார க்ரஸ்தன் -பகவத் விபூதி அபஹாரி -என்று –
நிந்தியா நிற்க இவர் மகா பாக்யவான் -என்கிறார் –
அதற்கு ஹேது என் என்னில்

பிற்பாடரான நம்மைப் போல் அன்றியே –
ஸ்ரீ வாமனனுடைய வடிவு அழகையையும் சீலத்தையும் கண்ணால் காணப் பெற்றவன் அன்றோ
 –
இவனோபாதி பாக்யவான்கள் உண்டோ -என்கிறார் –
நானும் -அடியேன் -என்று இருக்கிறதை விட்டு –
பகவத் விபூதியை அபஹரித்து
ஔதார்யத்தை ஏறிட்டுக் கொண்டு
யஞ்ஞத்தில் இழியப் பெற்றிலேனே -என்கிறார் –
காமருதல் -விரும்புதல்-

(“ஐயோ! நான் காளிய நாகமாகப் பிறவாதொழிந்தேனே; பிறந்திருந்தேனாகில் கண்ணபிரானுடைய
திருவடியைச் சென்னி மேற் கொண்டிருப்பேனே“ என்று ஸுந்தரபாஹுஸ்தவத்தில் ஆழ்வான் அருளிச் செய்ததை நினைப்பது.)

எண் மதியும் கடந்து –
மூவடி என்றதும் (கொள்வன் நான் மாவலி மூவடி தா )-அத்தை ஒழிந்த இடம் நம்மதன்றோ -என்று இருந்தான் -(எண் மதியும்-நினைவு )
பூமியை அடங்க அளந்தவாறே -ஊர்த்வ லோகங்கள் உண்டு இறே என்று இருந்தான் –
அந்தரிஷத்தை அளந்தவாறே மேல் உள்ளத்து எல்லாம் இழந்தோம் என்று நிவர்தன் ஆனான் –
ஆகையாலே –கடந்து -என்கிறார் –

அண்ட மீது போகி –
ஒரு திருவடிகளே அண்ட பித்திக்கும் அவ் வருகே போய்-
அளந்த க்ரமத்திலெ சொல்லாதே -பிரதமத்திலே –அண்ட மீது போகி -என்பான் என் என்னில் –
ஸ்ரீ வாமனன் உடைய விசயத்திலே தமக்கு உண்டான ஆதர அதிசயத்தாலே
அளக்கும் பிரதேசத்துக்கு கொண்டைக் கால் நாட்டுகிறார் –
ஜிதம் பகவதா ஜகத் -(ஹரி வம்சம் )என்று ஸ்ரீ ஜாம்பவான் மகா ராஜர் அவனுடைய விசயத்திலே
தமக்கு உண்டான ஆதர அதிசயத்தாலே சக்ரவாள கிரியைச் சூழ பறை அடித்துக் கொண்டு திரிந்தால் போலே -(32 தடவை சுற்றி பறை சாற்றினாரே )

மீது போகி
என்றது மீது போகைகாக என்று கொண்டு
அர்த்தத்தோடு சேர சப்தத்தை நியமித்துச் சொல்லப் போக கடவது –
திருவுடை அடிகள் தம் நலம் கழல் வணங்கி -என்றத்தை
வணங்க -என்று அர்த்தத்தை நியமித்துச் சொல்லக் கடவது இறே –
அப் பஷத்திலும் முற்பட சொல்லுகைக்கு ஹேது கொண்டைக்கால் நாட்டுகிறார் -என்கிற இதுவாம் இத்தனை –

(நாளும் நின்று அடும் நம் பழைமை அங்கொடு வினையுடனே
மாளும் ஓர் குறைவில்லை மனனக மலமறக் கழுவி
நாளும் நம் திருவுடை அடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வளமே –1-3-8-)

(காவலில் புலனை வைத்து -திருநாம சங்கீர்தன மஹிமை ன்சொல்ல காவலில் இல்லாமல் புலனை வைத்து
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய் -உறங்கேல் என்று பிரித்தே பிரகரணத்துக்குச் சேரும்
அதே போல் இங்கும் மேல் போகும் இடங்களை சொல்வதால் இங்கும் போவதற்காக என்றே கொள்ள வேண்டும்)

எழுந்து இரு விசும்பினூடு போய் -என்று அந்வயம் –
எழுந்து
கையில் நீர் விழுந்த சமனந்தரம்
மகா பலியினுடைய யஞ்ஞவாடத்தில் நின்றும் கிளம்பி -(உவந்த உள்ளத்தனாய் -மகிழ்ச்சி சிலிர்க்க வைக்க -அத்தாலே உயர்ந்தான் அன்றோ )
இரு விசும்பு -பெரிய ஆகாசம் –

பூமியைப் பற்ற பெரிதாய் இருக்கையாலும்
அவனுடைய வளர்த்தியில் தமக்கு உண்டான ஆதர அதிசயத்தாலும்
அந்தரிஷத்தை –இரு விசும்பு -என்கிறார் –

ஊடு போய் –
பூமிக்கு மேலே -ஸ்வர்க்கத்து கீழே நூறாயிரக் காதமாறு ஒக்கத்தை உடைத்தான –
அந்தரிஷம் இத்தனையும் விம்மும்படியாக திருவடிகளை நிமிர்த்த படி –
அந்தரிஷ ஸ்ருஷ்டி சபலமாய்த்து -என்கிறார் –
திருவடிகள் வ்யாபியாத போது பாழ் போலே காணும் -(குட திசை முடியை வைத்து -திசைகள் ஸ்ருஷ்டித்த பயன் பெற்றதே )

மேலைத் –
அந்தரிஷத்துக்கு மேல் எல்லையாய்
ஸ்வர்க்கத்து கீழ் எல்லையாய்
யாய்த்து ஆதித்ய பதம் இருப்பது –
அதற்கு மேலே நூறு ஆயிர  காதமாறு சந்திர பதம்

ஆனால் ஆதித்ய பதத்தைச் சொல்லி சந்திர பதத்தை சொல்லாது ஒழிவான் என் என்னில் –
அஹங்கார க்ர்ஸ்தராய் -பகவத் விமுகராய் இருப்பவர்கள் தலையிலே
அத்யந்த ஸூகுமாரமான திருவடிகளை வைக்கையாலே
இவர் சிசுரோபசாரம் பண்ணுகிறார் –
அது தோற்ற விறே –தண் மதி- என்கிறார் –
வெங்கதிரோன் -என்றிலரே –
வெறும் கதிரவன் – இறே அங்கு –
மேலைக் கதிரவனும் கீழைத் தண் மதியும் –
மேல் -என்றது –கீழையும் காட்டும் இறே –

தவிர வோடித்
அதுக்கும் மேலே போய் –
ஓடி என்று –
திருவடிகளை அமைக்க வேண்டும்படியான த்வரை இருக்கிறபடி –
தாய் நாடு கன்றே போலே -என்று
சேஷ பூதன் சேஷியை கிட்டுகைக்கு உண்டான த்வரையோ பாதி போரும் இறே –
சேஷிக்கும் சேஷ பூதனை லபிக்கைக்கு உண்டான த்வரையும் –
எல்லார்க்கும் தம் தாம் அபிமத சித்தியிலே த்வரை உண்டாய் இருக்கும் இறே –

(தெளிதாக உள்ளத்தைச் செந்நிறீஇ ஞானத்
தெளிதாக நன்குணர்வார் சிந்தை எளிதாகத்
தாய் நாடு கன்றே போல் தண்  துழாயான் அடிக்கே
போய் நாடிக் கொள்ளும் புரிந்து—முதல் திருவந்தாதி -30-)

தாரகையின் புறம் தடவி –
நஷத்ர பதத்தையும் வியாபித்து -அதுக்கும் மேலே போய்
சந்திர பதத்துக்கு மேலே நூறாயிரக் காதமாறு உண்டு இறே -நஷத்ர பதம் –
நஷத்ர பதத்துக்கு மேல் எல்லை -சிம்சுமார பிரஜாபதி- இறே –
க்ரஹங்களோபாதி நஷத்ரங்களிலே ஒருவன் இறே அவனும் –
பன்னிரண்டு நூறாயிரக் காதமாறு உண்டு இறே –

தடவி –
கெடுத்துத் தேடுவாரைப் போலே -ரஷகனுக்கு ரஷ்ய வர்க்கம் தேட்டமாய் இருக்கிறபடி –
இப்படித் தடவி திரிகிற இடத்திலும் அகப்படாதே –
கடந்து -என்கிறார் –
புடை தான் பெரிதே புவி -என்கிறபடியே
திரிவிக்கிரம அபதானத்திலும் அகப்படாதே கிடப்பதொரு புடை உண்டாவதே –

(என்றும் ஒரு நாள் ஒழியாமை யான் இரந்தால்
ஒன்றும் இரங்கார் உருக்காட்டார் -குன்று
குடையாக ஆ காத்த கோவலனார் நெஞ்சே
புடை தான் பெரிதே புவி –-பெரிய திருவந்தாதி -74-)

தடவி –
அனுகூலமாக திருவடிகளை வைக்கையாலே ஸூக ஸ்பரசமாய் இருந்தபடி -என்னவுமாம்-

அப்பால் மிக்கு –
ப்ரஹ்ம லோகம் அவதியாக வியாபித்து –
மகா பலி அபஹரித்தது த்ரை லோக்யம் அன்றோ –
மேல் உள்ள லோகங்களை அளக்க வேண்டுவான் என் என்னில் –

அந்ய சேஷத்வத்தால் த்ரை லோக்யமும் நசித்தவோபாதி
ஸ்வ ஸ்வாதந்த்ர்யத்தாலே மேல் உள்ள லோகங்களும் நசித்துக் கிடந்ததாய் ஆய்த்து –
ஈஸ்வரோஹம் -என்று இருக்குமவர்கள் ஆகையால்
அந்ய சேஷத்வத்தால் வரும் அநர்த்தம் போல் அன்றே
ஸ்வ ஸ்வாதந்த்ர்யத்தால் வரும் அநர்த்தம் –
சேஷத்வத்தை இசைந்தான் இறே இவன் –

மண் முழுதும் அகப்படுத்து –
சதுர்தச புவனத்தையும் அளந்து கொண்டு –
மண் -என்று பூமியைச் சொல்லி
முழுதும் -என்கையாலே ஊர்த்வ லோகங்களையும் நினைக்கிறார் –

அங்கன் இன்றிக்கே
மண் -என்று ஸ்தலமாய்
மேல் உண்டான ஸ்தலங்களைச் சொல்லுகிறது –
அளந்து -என்னாதே –அகப்படுத்து -என்கையாலே –
இவன் மேல் விழுக்காடும் அவர்கள் இறாய்ப்பும் -தோற்றுகிறது –

நின்ற –
க்ர்தக்ருத்யனாய் நின்ற
சேஷ பூதன் சேஷியை லபித்தது க்ர்த்க்ருத்யனாய் போலே காணும்
சேஷியும் சேஷ பூதனை லபித்தது க்ர்த்க்ருத்யனாய் ஆனபடி -(க்ருத க்ருத்யா ததோ ராம விஜ்வர பிரமுமோத ஹா )

வெந்தை –
ஸ்ரீ வாமனன் உடைய வடிவழகையும் சீலத்தையும் கண்டால்
ராஜ்யத்தை கால் கடைக் கொண்டு மார்பை பிளக்க எழுத்து வாங்கிக் கொடுக்க பிராப்தமாக இருக்க
1-ராஜ்யத்தை கொண்டு போனான் இந்த்ரன் –
2-மகாபலி தன்னை வைத்து ராஜ்யத்தைக் கொடுத்தான் –
3-நான் என்னைக் கொடுத்தேன் -என்கிறார் –

மலர் புரையும் திருவடியே வணங்கினேனே –
நிரதிசய திருவடிகளை அனுபவிக்கப் பெற்றேன் –
கீழே –தளிர் புரையும் திருவடி -என்றார் –
இங்கே –மலர் புரையும் திருவடி -என்கிறார் –

இதுக்கு ஹேது என் என்னில்
ஆழ்வார் உடைய விஸ்லேஷத்தால் வாடினவன் அவருடைய தலையிலே திருவடிகளை வைக்கையாலே
தளிறும் முறியும் ஆன படியைச் சொல்லிற்று -அங்கு
இங்கு -போக்தாக்களாய் அனுபவிக்க இழிந்த வாறே – போக்யமாய் இருக்கிற படியைச் சொல்கிறது –

(தளிர் புரையும் திருவடி-மலர் புரையும் திருவடி-ஒப்பற்ற இனிய உபாய உபேய -இரண்டுக்கும் இணை அடிகள்

திருக்கமல -பாதம் -பொன் தாமரை அடி போற்றும் பொருள் -பேசிற்றே பேசும் ஏக கண்டர்
ஸூர்யன் கண்டு தாமரை மலரும் -அடியார்களைப் பெற்று தாமரை அடிகள் மலரும் அன்றோ )

மலர் புரையும் –
ஆஸ்ரிதர் சந்நிதியிலே அலரும் தாமரை இறே இது –

திருவடி –
அனுபவிக்க இழியும் துறையும் திருவடிகள் இறே

திருவடியே
என்கிற அவதாரணத்தாலே
அவயவாந்தரங்களை வ்யாவர்த்திக்கிறது –
மேன்மையும் நீர்மையும் வடிவழகும் குறைவற்ற விஷயம் இறே –

1-ஈஸ்வரோஹம் -என்று இருப்பார் தலையிலும் திருவடிகளை வைக்கையாலே –
மேன்மையில் குறை இல்லை –

2-தன் உடைமையை லபிக்கைக்கு தான் அர்த்தியாய் செல்லுகையாலே
நீர்மைக்கு குறை இல்லை –

3-துஷ்ப்ரக்ருதியான மகா பலியையும் அகப்பட எழுதிக் கொள்ளுகையாலே
வடிவழகில் குறை இல்லை
 –
ஆகையால் புறம்பு போக வேண்டா விறே –

வணங்கினேன் –
அனுபவிக்கப் பெற்றேன் –
நித்ய பத்தாஞ்சலி -ஸ்புட ஸித்தாந்த -நம இத்யேவ வாதின–ஹ்ருஷ்டா சாந்தி பர்வம் –
ஸ்வேத தீப வாசிகள் முக்கரணங்களால் அனுபவம் -என்று முக்த போக்யத்தை சொல்லக் கடவது இறே –

இவருக்கு ஆஸ்ரயணீயமும் திருவடிகளே
அனுபாவ்யமும் -திருவடிகளே –

உலகம் அளந்த பொன்னடியை அடைந்து உய்ந்தேன் -என்று இறே ஆஸ்ரயண வேளையிலும் அருளிச் செய்தது –

(துளங்கு நீண் முடி யரசர் தம் குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு
உளம் கொள் அன்பினோடு இன்னருள் சுரந்து அங்கோடு நாழிகை ஏழு உடன் இருப்ப
வளம் கொள் மந்திரம் மற்று அவர்க்கு அருளிச் செய்தவாறு அடியேன் அறிந்து உலகம்
அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-9-அடைந்து உய்ந்தேன் -உபாய உபேயம் )

விமுகனான மகா பலிக்கும் ருசியைப் பிறப்பிக்கும் சௌந்தர்யத்தை
உடையவனை ஒழிய ஆஸ்ரயணீயர் உண்டோ –
தன் உடைமையை லபிக்கைக்காக தான் அர்த்தியாக செல்லும் சீலவானை ஒழிய ஆஸ்ரயணீயர் உண்டோ –
அதீந்த்ரியமான விக்ரகத்தை துஷ் பிரக்ருதிகள் கண்ணுக்கும் அகப்பட விஷயமாக்கும் ஸூலபனை ஒழிய ஆஸ்ரயணீயர் உண்டோ –
சதுர்தச புவனத்தையும் அளந்த சர்வ ஸ்மாத் பரனை ஒழிய ஆஸ்ரயணீயர் உண்டோ –

1-சர்வ ஸ்மாத் பரனாய் –
2-ஸீலவானய்
3-ஸூலபனாய்
4-ருசி ஜனகனாய் -இருக்குமவன் இறே -ஆஸ்ரயணீயவானும் போக்யவானும் ஆவான் –

த்ரை விக்கிரம த்வ சரணாம் புஜ த்வயம் மதிய மூர்த்தானம் அலங்க்ரிஷ்யதி –என்றார் ஆளவந்தார் –
லோக விக்ராந்த சரணவ் சரணம் தேவ்ராஜம் விபோ -என்றார் உடையவர்

கதா புநஶ் ஶங்க ரதாங்க கல்பக
த்வஜாரவிந்தாங்குஶ வஜ்ரலாஞ்சநம் |
த்ரிவிக்ரம! த்வச் சரணாம்புஜ த்வயம்
மதீய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி ||-ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 31

பிதரம் மாதரம் தாரான் புத்ரான் பந்தூன் சகீன் குரூன்
ரத் நாதி தந தான்யாநி ஷேத்ராணி ச க்ருஹாணி ச
சர்வ தர்மாமச்ச சந்த்யஜ்ய சர்வ காமாம்ச்ச சாஷரான்
லோக விக்ராந்த சரணு சரணம் தேவராஜம் விபோ -விஹா கேஸ்வர சம்ஹிதை

(ஆஸ்ரயண ஸுகர்ய ஆபாத குணங்கள் -பரத்வ- ஸுலப்ய ஸுசீல்ய -ஸுந்தர்ய -வாத்சல்ய –
பச்சை மா மலை போல் மேனி — –அச்யுதா -அமரர் ஏறே -ஆயர் தம் கொழுந்தே
மாலே மணி வண்ணா ஆலின் இலையாய்)

—————–

மிக்க பாராளன் பாரிடந்து பாரையுண்டு பாருமிழ்ந்து பாரளந்து பாரையாண்ட பேராளன்–20-

பாரளந்து –
அபேஷை இல்லாத அளவன்றிக்கே -இவர்கள் விமுகராய் இருக்க
ஸ்வ ஸ்வாதந்த்ர்யத்தலும்
அந்ய சேஷத்வத்தாலும்
ஸ்வரூபம் நசித்த படியைக் கண்டு
ஸ்வ சம்பந்தமே ஹேதுவாக எல்லார் தலையிலும்
திருவடிகளை வைத்து முறையை உணர்த்தி –

(உலகளக்கிற வியாஜத்தாலே விரும்பாதார் தலையிலும் திருவடியை வைத்து ஸத்தை பெறுவித்தருளினவன்,
விரும்புகின்ற எனக்குத் திருமார்பைத் தாராவிடினும் ஊர்ப் பொதுவான திருவடியையும் தாரா தொழிவதே!
என்ற கருத்தப்படச் சொல்லுகிறபடி.)

————

தென்னிலங்கை யரண் சிதறி அவுணன் மாளச்
சென்றுலகம் மூன்றினையும் திரிந்தோர்–28-

உலகம் மூன்றினையும் திரிந்து –
சதுர தச புவனத்தையும் அளந்து –
ஒரு மத ஹஸ்தி ஸ்வைர சஞ்சாரம் பண்ணுமா போலே
எல்லார் தலைகளிலும் ஸ்வரைமாக திருவடிகளை வைத்த படியாலே –
திரிந்து -என்கிறது –

பிரணயிநிக்கு முகம் கொடுக்கை அன்றிக்கே
அந்ய சேஷத்வத்தாலும்
ஸ்வ ஸ்வாதந்த்ர்யத்தாலும்
விமுகராய் இருப்பார் தலைகளிலும் அகப்படத் திருவடிகளை வைக்கும் ஸ்வபாவன் அன்றோ -என்ன –

அவன் விசேஷஞ்ஞன் காண்
விமுகர் தலையில் திருவடிகளை வைக்குமது ஒழிய
எம்பெருமான் திருவடிக் கீழ் அணைய-என்று
இருப்பார்க்கு முகம் கொடுப்பவன் அன்று காண் -என்கிறாள்-

(“அடிச்சியோந் தலைமிசை நீயணி யாய் ஆழியங்கண்ணா வுன் கோலப் பாதம்“ என்று
பல் பன்னிரண்டும் காட்டி இரப்பவர் கட்கு முகங்கொடுக்கும் தயாளு அல்லர் காண் என்று சொல்லிக் காட்டுகிறபடி.)

———————————-

பாரளவும் ஓரடிவைத்து ஓரடியும் பாருடுத்த நீரளவும் செல்ல நிமிர்ந்ததே சூருருவின் பேயளவு கண்ட பெருமான் அறிகிலேன் நீ யளவு கண்ட நெறி-3-

அப்பூமியை அடைய அளந்தான் என்று -இவனுக்கு ஈஸ்வரத்வம் சொல்ல அளக்கைக்கு விஷயம் யுண்டாகில் அன்றோ -என்கிறார் —
எவ்வுலகம் நீர் ஏற்றது -என்று சொன்ன திரு உலகு அளந்து அருளின திவ்ய சேஷ்டிதத்திலே திரு உள்ளம் சென்று
அத்தை அனுபவிக்கப் புக்க இடத்திலே நிலை கொள்ள மாட்டாமல் அதிலே கிடந்தது அலைகிறார்

மகாபலியாலே பூமியை அளந்து
உன் திருவடிகளிலே இட்டுக் கொண்டால் போலே
என்னையும் உன் திருவடிகளிலே இட்டுக் கொண்டு –
பூதனையைப் போக்கினால் போலே என்னுடைய விரோதியைப் போக்கி என்னை விஷயீ கரித்த படி அறிகிறிலேன்-

பேயளவு கண்ட-என்ற இத்தால் ஸ்வ யத்தனத்தாலே அவனை அறியப் புகில் பூதனை பட்டது படுவர் என்று கருத்து –
அறிகிலேன்-நீயளவு கண்ட நெறி-என்கிறது நீ என் திறத்தில் நினைக்கிற மார்க்கம் என்ன வென்று அறிகிறிலேன் -என்றுமாம் –

———-

பொரு கோட்டோர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று உன் ஒரு கோட்டின் மேல் கிடந்தது அன்றே விரி தோட்ட சேவடியை நீட்டித் திசை
நடுங்க விண் துளங்க மாவடிவில் நீ யளந்த மண்–9-

ஆபத்து வந்தால் ஆஸ்ரித அநாஸ்ரித விபாகம் அறத் தன்னை அழிய மாறியும் காரியம் செய்யும்
ஸ்வபாவங்கள் கிடீர் என்கிறார் –

தலையாலே சுமந்து நோக்கிலும் நோக்கும்
தலையிலே காலை வைத்து நோக்கிலும் நோக்கும் –
ஆஸ்ரிதர் கார்யம் பெரிய வடிவைக் கொண்டு புக்குச் செய்யிலும் செய்யும் –
சிறிய வடிவைக் கொண்டு பெரியனாய்ச் செய்யிலும் செய்யும் –

————-

உலகளந்த மூர்த்தி உருவே முதல்--14-

ஜகத்தை அடையத் தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்ட சர்வேஸ்வரன் உடைய திரு மேனியே பிரதானம் –
சமஸ்ரயிப்பார் தலையிலும்-சமாஸ்ரயணீயர் தலையிலும் ஒக்கத் துகைத்தவன் –ஆஸ்ரயணீயர் தங்களுக்கும் ஆஸ்ரயணீயர் சர்வேஸ்வரனே –என்கிறார்

————-

அடியும் படி கடப்பத் தோள் திசை மேல் செல்ல முடியும் விசும்பு அளந்தது என்பர் –உலகளந்த நான்று–17-

இங்கே வெள்ளம் இட்ட வன்று பெற்றேனோ -என்கிறார் –
சென்று காண வேண்டும் திருவடிகள் தானே வந்து பூமியை அகப்படுத்திக் கொண்டன –
திருத் தோள்கள் ஆனவை திக்குகளின் மேல் செல்ல
பிராட்டியைத் தழுவக் கடவ தோள் கிடீர் திக்குகளை தழுவுகின்றன
பூமியை அளந்து கொள்ளுகிற வன்று ஓர் இடத்திலே விரோதி நிரசனம் பண்ணி
ஓர் இடத்திலே முகம் காட்டும் அளவன்றியே-ஜகத்துக்கு எல்லாம் ஒரு காலத்திலே உதவின அன்று –
திருவடிகள் தானே வந்து என் தலை மேல் இருக்க நான் எங்கே புக்குக் கிடந்தேனோ –
தானே வந்து தலையிலே இருந்த அன்று இழந்து -இன்று -கேட்டார் வாய் கேட்பதே நான் -என்று வெறுக்கிறார்

————

பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய்ச்
செற்றார் படி கடந்த செங்கண் மால்  நற்றா
மரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி
நிரை மலர் கொண்டேத்துவரால் நின்று-20–

துர் மாநிகளான தேவர்களுக்குத் தன்னைக் கொடா நிற்க -நிதி எடுக்கப் பெற்றார் -என்னுமா போலே —
என் பிள்ளை என்று அபிமாநித்தார் தளை கழன்றால்
அடியோம் என்றார் தளை கழலச் சொல்ல வேணுமோ-

———–

நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால் சென்று திசை யளந்த செங்கண் மாற்கு என்றும் படை யாழி புள்ளூர்தி பாம்பணையான் பாதம் அடையாழி நெஞ்சே அறி–21-

பெரிய மேன்மையை யுடையனாய் இருந்து வைத்து அவை ஒன்றும் பாராதே ஆஸ்ரிதர்க்காகத்
தன்னை அழிய மாறியும் கார்யம் செய்யுமவன் கிடீர் என்கிறார்

திரு வடி முதுகிலே ஏந்தித் தரிக்க வல்லவனும்
திரு வநந்த வாழ்வான் ஆகிற படுக்கையிலே சாய வல்லவனும்–சர்வேஸ்வரன் -ஆகிறான்-
இப்படிப் பட்டவன் திருவடிகளைக் கிட்டி மகா பலியைப் போலே கழஞ்சு மண்ணைக் கொடுத்து விடாதே
உன்னைக் கொடு

——–

முரணை வலி தொலைதற்காம் என்றே முன்னம்
தரணி தனதாகத் தானே இரணியனைப்
புண்ணிரந்த வள்ளுகிரால் பொன்னாழிக் கையால் நீ
மண்ணிரந்து கொண்ட வகை –36-

நீ மண் இரந்து கொண்ட வகை–தன்னது என்று தர உகக்குமாகில் –நாம் இன்று பெற்றோமானால் ஆகாதோ என்று –
அநபாயினியான பிராட்டியை ஸ்ரீ ஜனக ராஜன் தரக் கொள்ளுமா போலே –
இரப்புத் தோற்ற நின்ற
ஸுலப்யத்தையும் வடிவு அழகையும் காட்டி நான் எனக்கு என்று இருக்கும் மிறுகுதலை மீட்டு
உனக்கே ஆளாம் படி சேர்த்துக் கொள்ளுகைக்காக வன்றோ என்றபடி –

————

அரிய புலன் ஐந்தடக்கி ஆய்மலர் கொண்டு ஆர்வம்
புரிய பரிசினால் புல்கில் பெரியனாய்
மாற்றாது வீற்றிருந்த மாவலி பால் வண் கை நீர்
ஏற்றானைக் காண்பது எளிது ——50-

புறம்புள்ள அந்ய பரதை போய் அவன் பக்கலிலே சிநேக யுக்தராய்க் கொண்டு
அவனைக் காண்கை சால எளிது என்கிறார்

ஏதேனுமாக ஒன்றைக் கொடுக்கக் கடவோம் என்று இருக்குமவன்
பக்கலிலே தான் அர்த்தியாய்க் கொண்டு சென்று நிற்குமவன் ஆய்த்து –
ஆகையாலே அவனை ஆஸ்ரயிக்கும் இடத்திலே ஒரு அருமை தட்டாது என்கிறார் –

ஸ்நேஹ உத்தரமான பிரகாரத்தாலே -அபிமத விஷயத்தை அணைக்குமா போலே போக ரூபமாக ஆஸ்ரயிக்கில்-

அப்ரதி ஷேதம் யுடையார்க்கு அர்த்தியாய் வரும் என்றவாறு

———

கணம் வெருவ ஏழுலகும் தாயினவும் எண் திசையும் போயினவும் சூழரவப் பொங்கணையான் தோள்-62-

திரு வநந்த வாழ்வான் மேலே திருக் கண் வளர்ந்து அருளக் கடவ சர்வேஸ்வரன் உடைய
திருத் தோள் கிடீர்-அவன் மேலே சாய்ந்தாலும் பொறாத படியான  சுகுமார்யத்தை யுடையவன் கிடீர்
இச் செயல்களைச் செய்தான்-படுக்கையில் கண் வளரப் பெறாதே அலமந்து திரிவதே

——–

மண் தா வென விரந்து மாவலியை ஒண் தாமரை நீரங்கை தோய நிமிர்ந்திலையே நீள் விசும்பில் அங்கை தோய வடுத்து–79-

ஆஸ்ரிதர் ஒருத்தனுக்காகத் தன்னை இரப்பாளன் ஆக்கிக் கார்யம் செய்திலனோ என்கிறார் –நீ செய்த செயலை அனுசந்தித்து நாட்டார்   உன்னைக் கொண்டாடும்படி தான் செய்தாயோ –
குணமே குற்றமாய்க் குற்றமும் குணமாம் கிடீர் சம்சாரம் –
கொடுத்த பின்பும் -தன்னத்தையே கொடுத்ததாக நினைத்து இருந்தான்
கொண்டாரை என்று பாடமான போது-பிரயோஜனத்தைச் சொல்லிற்று ஆகிறது –
ஸ்வரூப ஜ்ஞானம் வேண்டா கிடீர்-இந்தச் செயலைக் காண வமையும் கிடீர் -நமக்கு ஸ்ரோத்ராதிகள் உண்டாகைக்கு –

———

பிரான் உன் பெருமை பிரறார் அறிவார் உராய் உலகளந்த ஞான்று வராகத் தெயிற்று அளவு போதாவாறு என்கொலோ எந்தை அடிக்களவு போந்தபடி–84-

ரஷ்யத்தின் அளவேயோ ரஷகனான உன்னுடைய பாரிப்பு-

உரோஸிக் கொண்டு எல்லார் தலையிலும் பொருந்தும்படி யாக்கிக் கொண்டு-அநாயாசேன அளந்த வன்று –
உன்னுடைய திருவடிகளுக்கு அளவு போந்த பூமியானது இப்போது திரு எயிற்றுக்கு
ஏக தேசத்துக்குப் போராதாய் இருக்கிற இது எங்கனே இருக்கிறதோ

———-

செற்று எழுந்து தீ விளித்துச் சென்ற விந்த வேழுலகும் மற்றிவை ஆ வென்று வாயங்காந்து முற்றும் மறையவர்க்கு
காட்டிய மாயவனை யல்லால் இறையேனும் ஏத்தாது என் நா–94-

தன் பக்கல் உள்ளவை அடங்க இவர்களுக்கு காட்டினான் ஆய்த்து –
இறையேனும் -பர வ்யூஹாதிகளில் போகாது –எனக்கு சங்கல்ப்பிக்க வேண்டா –

———–

பொன் திகழு மேனிப் புரிசடையம் புண்ணியனும் நின்று உலகந்தாய நெடுமாலும் என்றும் இரு வரங்கத்தால் திரிவரேலும் ஒருவன் ஒருவனங்கத்து என்றும் உளன்–98-

அவனுக்கு ஈஸ்வரத்வம் இவனுக்கு சரீர பூதனாகையாலே  வந்தது-அத்தனை போக–ஸ்வத இல்லை -என்கிறார் –-ஒருவன் ஒருவனுக்கு சரீர பூதனாய்க் கொண்டு உளனாய் இருக்கும்
ஒருவன் ஒருவன் திரு மேனியில் ஏக தேசத்தைப் பற்றி லப்த ஸ்வரூபனாய் இருக்கும் –
இத்தால் பரன் திறம் அன்றிப் பல்லுலகீர் தெய்வம் மற்றில்லை -என்கிறார் –

————

ஓரடியும் சாடுதைத்த ஒண் மலர்ச் சேவடியும் ஈரடியும் காணலாம் என்நெஞ்சே ஓரடியின் தாயவனைக் கேசவனைத்
தண் துழாய் மாலை சேர் மாயவனையே மனத்து வை–100-

ஆக –
இப்படிப் பட்டவனைப் பெறுகைக்கு நமக்குச் செய்ய வேண்டுவது -என் என்னில்
பெறுவதும் அவனையே-பெறுகைக்கு சாதனமும்-அவனே என்று -அத்யவசித்துப்   போவாய் -என்கிறார் –

எல்லாரையும் ஈடுபடுத்தி அளந்த கொண்ட ஒரு திருவடிகளும் –
சகடாசூர நிரசனம்  பண்ணின போக்யமான திருவடியும் ஒரு செவ்விப் பூவைக் கொண்டோ தான் அத்தை நிரசித்தது –
அவ்விரண்டு திருவடிகளும் பிராப்யம் -திருவடிகளைத் தருவானும் விரோதியைப் போக்குவானும் அவனே –
இப்படி அத்யவசிக்க-அனந்தரம் பிராப்யமாகச் சொல்லுகிற ஈர் அடிகளையும் காணலாம்
அவற்றை சாஷாத் கரிக்கைக்கு ஒரு தட்டு இல்லை –

வையம் தகளி  -இத்யாதி –
சாஷாத்கார அநந்தரம் பின்னை செய்யுமது என் என்னில்
அவன் திருவடிகளில் நித்யகைங்கர்யத்தைப் பண்ணி வாழும் அத்தனை என்கிறார்  –

——————————————————————————————

அடி மூன்று இவ்வுலகம் அன்று அளந்தாய் போலும் அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் படி நின்ற நீரோத மேனி நெடுமாலே நின்னடியை யாரோத வல்லார் அறிந்து--5-

அவனுடைய உத்கர்ஷம் சிறிது அறியும் அத்தனை அல்லது-சௌலப்யம் ஒருவரும் அறிவார் இல்லை-அழகுக்கு எல்லை காணிலும் வ்யா மோஹத்துக்கு எல்லையைக் காணப் போகாது-

———–

அன்றது கண்டு அஞ்சாத ஆய்ச்சி உனக்கு இரங்கி நின்று முலை தந்த இந்நீர்மைக்கு அன்று வரன் முறையால் நீ யளந்த மா கடல் சூழ் ஞாலம் பெரு முறையால் எய்துமோ பேர்த்து-9-

பூதனையை அனுசந்தித்த நெஞ்சாறல் தீர யசோதைப் பிராட்டியும் ஒருத்தியே -என்று உகக்குகிறார் –-பூமியை அளந்தது இந் நீர்மைக்கு ஒக்குமோ -அவளுடைய நீர்மைக்கு பூமி சத்ருசமோ –
உன்னுடைய அளந்த வியாபாரம் தான் ஒக்குமோ-

——-

பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய் மண்ணிரந்து காத்தனை பல்லுயிரும் காவலனே ஏத்திய நா வுடையேன் பூவுடையேன் நின்னுள்ளி நின்றமையால் கா அடியேன் பட்ட கடை–10-

யசோதைப் பிராட்டியினுடைய பக்தியை முதலிலே தேவர் பக்கலிலே பண்ண வி றே எடுப்பது –
அந்த ச்நேஹம் இன்றிக்கே இருக்கச் செய்தே உன் பக்கலிலே ப்ராவண்யம் உண்டாய்த்து
இனி அநாதி காலம் தேவதாந்த்ரங்கள் கால் கடையிலே துவண்டு பட்ட தண்மை இனி ஒரு காலமும் வாராத படி
தேவர் நோக்கி யருள வேணும்

ரஷை அவனுக்கு ஸ்வரூபம் ஆனால் போலே ரஷ்யத்துக்கு அடிமை செய்வது ஸ்வ பாவம் –
காவலன் ஆவதின் கார்யம் காக்கை -சேஷத்வத்தின் கார்யம் சேஷ வ்ருத்தி-
உன்னை சமாஸ்ரயணீயனாக யுடையேன் ஆகையாலே ஆஸ்ரயிக்கும் கரணங்களையும் த்ரவ்யங்களையும் புஷ்கலமாக உடையேன் ஆனேன் –
ப்ராப்த விஷயத்தை நினைக்கையாலே பரிபூர்ண சமாஸ்ரயணம் பண்ணினேன் ஆனேன் –
அனுசந்திக்கப் படுகிற விஷயம் நீ யாகையாலே எனக்கு ஒரு குறை இல்லை
அடியேன் பட்ட கடை – உனக்கு சேஷ பூதன் ஆகையால் வந்த ராஜ குலத்தை யுடையேனான நான் அநாதி காலம்
அர்வாசீநமான தேவதைகளின் கால் கீழே தலை மடுத்துப் பட்ட தண்மையை இனி வாராத படி தேவரீர் காத்து அருள வேணும் –

———–

கொண்டது உலகம் குறள் உருவாய் கோளரியாய் ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது உண்டதுவும்
தான் கடந்த வேழுலகே தாமரைக் கண் மால் ஒரு நாள் வான் கடந்தான் செய்த வழக்கு–18-

தான் சர்வேஸ்வரனாய்-சர்வ சமாஸ்ரயணீ யனாய் இருந்தானே யாகிலும்
ஆஸ்ரித சம் ரஷணத்தில் வந்தால் தன்னை அழிய மாறியும் நோக்கும் ஸ்வபாவன் என்கிறார் –அபரிச்சேத்யனானவன்- நித்ய சூரிகளுக்கு அவ்வருகு ஆனவன்–ஸ்வாமி யான முறையாலே செய்தான் –
உடையவன் உடைமையை ரஷிக்கை பிராப்தம் இறே –
பிறருக்கு ஒரு கார்யம் செய்தானாய் இருக்கை அன்றிக்கே தனக்கு அடைத்த கார்யம் செய்தானாய் இருக்கை –

———-

தாழ்ந்து வரம் கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் -தாழ்ந்த
விளங்கனிக்கு கன்று எறிந்து வேற்றுருவாய் ஞாலம்
அளந்தடிக்கீழ் கொண்ட வவன்–23-

ஆஸ்ரயணீயன் தானே தன்னை ஆஸ்ரயித்த இவனுடைய ப்ராப்தி விரோதியான பிரபல பிரதி பந்த கங்களையும் போக்கி
ஸூ லபனாய் இவனுக்கு அபிமத சித்தியையும் தானே பண்ணிக் கொடுக்கும்

வத்சாரூரனும் விளவாசூரனும் பட்டது படும் இத்தனை விரோதிகள்-
ஸ்ரீ ய பதியானவன் அர்த்தியாய் நின்றது- உறங்குகிற பிரஜையை தாய் கட்டிக் கொடு கிடக்குமா போலே
ஞாலம் அளந்து அடிக் கீழ் கொண்டவன் வாழ்விக்கும் –
அவ்வவ அதிகாரிகளையும் -அவர்கள் ருசிக்கும் உபாசனத்துக்கும் ஈடான தத் தத் பலன்களைக் கொடுத்து ரஷியா நிற்கும் –

————–

நீ அன்று உலகளந்தாய் நீண்ட திருமாலே
நீ அன்று உலகு இடந்தாய் என்பரால் -நீ யன்று
காரோத முன் கடைந்து பின் அடைத்தாய் மா கடலை
பேரோத மேனிப் பிரான்—30-

இப்படி கிருஷ்ண விஷயமும் ராம விஷயமும் அனுசந்தித்த பிரசங்கத்தில் அவற்றோடே சேர்ந்த
அவதாரங்களையும் பல சேஷ்டிதங்களையும் அனுசந்தித்து ப்ரீதராகிறார் –மேலே எல்லாரோடும் வரையாதே கை தொட்டுப் பரிமாறின அவதாரம் ப்ரஸ்துதம் ஆகையாலே
வரையாதே எல்லார் தலையிலும் ஒக்கத் திருவடிகளை வைத்த அவதாரத்தைச் சொல்லுகிறது –
ஸ்ரீ யபதியான நீ பிச்சை மாணி யாவதே –
கடைகிற போதும் அடைக்கிற போதும் ஒரு கடல் ஒரு கடலை நின்று அலைத்தால் போலே இருக்கை
பேரோத மேனி-கடைந்த கடல் இவ்வடிவைப் பார்க்க குளப்படியாய் இருந்தபடி
பிரான் –கடல் கடைந்து ஆக்க வேண்டாதபடி இவருக்கு கொடுத்த அம்ருதம் இருக்கிறபடி
கடைந்து ஆராவமுதத்தை இவருக்குக் கொடுத்தான்

—-

வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம் புகையால் நறு மலரால் முன்னே மிகவாய்ந்த அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் உனக்கு என்பாக்கியத்தால் இனி-34-

இப்படிப் பட்ட பெரிய பேறு தான் தேவருடைய கடாஷத்தாலே பெற்றேன் -என்கிறார் –
உன் சௌந்தர்யத்துக்கு தோற்று-அடிமைப்படும்படி நீயே முன்னே-கிருஷி பண்ணினாய் என்கிறது-ஔதார்யம் குணம் கிடைக்கையாலே-அவனும் தன்னதாக்கி தருவனாவான் -நாமும் பூமியை அவனதாக்கிக் கொள்வோம்-
ஆஸ்ரயித்த இந்த்ரனும் தன் கார்யம் பெறுவான் என்கிற வகைகளாலே அவனி இரந்து அளந்த உன் திருவடிகளை
மிக வாய்ந்த அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் இஸ் ஸூ க்ருதத்துக்கு அடியாக
முன்பே பூமியை அளந்து கிருஷி பண்ணி வைத்தாய்-
தேவர் என் பக்கல் பண்ணின விசேஷ கடாக்ஷம் ஆகிற பாக்யத்தால் அடிமை செய்யுமவனாய் விட்டேன்
என்னுடைய விலக்காமை யாகிற பாக்யத்தாலே என்னுதல்

—————

சிறியார் பெருமை சிறிதின் கண் எய்தும்
அறியாரும் தாம் அறியார் ஆவர் -அறியாமை
மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று
எண் கொண்டு எண் நெஞ்சே இரு–36-

அனவரதம் அனுசந்தித்து ஸ்வீகார மாத்ரத்தையே பற்றி – மாஸூச -என்ற அனந்தரம் இருக்குமா போலே
நிர்ப்பரமாய்க் கொண்டு இருக்கப் பார்
எத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -திருச்சந்த விருத்தம் -115-
நம் சக்தியைக் கொண்டு போயிருத்தல் -அவன் சக்தியை அறியாதே இருத்தல் -செய்யில் அன்றோ அஞ்ச வேண்டுவது –

—-

ஞாலம் அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால் உளம் கிடந்த வாற்றால் உணர்ந்து–47-

அவன் இப்படி விரும்பின பின்பு நீங்களும் அவன் உகந்த படி பரிமாறப் பாருங்கோள்-என்கிறார் –-ஆஸ்ரிதர்க்காக கொண்ட வடிவே தனக்கு வடிவாக நினைத்து இருக்குமவன் திருவடித் தாமரைகளில் செவ்வி மாலைகளை
அழகு பெறச் சாத்தி சத்வ உத்தரமான ப்ரஹ்ம முஹூர்த்தத்திலே கையைக் கூப்பிக் கொண்டு ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கள் –
நினைத்த வகைகளிலே ஆஸ்ரயிக்கலாம் படி தொழுகைக்கும் அணிகைக்கும் பல முகங்கள் உண்டாக்கி வைத்தான் ஆய்த்து-
அண்ணலை –இவ்வோ செயல்களாலே தானே ஸ்வாமி என்று தோற்றி இருக்கிறவனை -சேதனர்க்கு அனுபாவ்யமான
குணங்களை உடைய சேஷியை-கீழ்ச் சொன்ன வற்றுக்கு அடியான சம்பந்தம் -அரஷகனாலும் விட ஒண்ணாத ப்ராப்தி இருக்கும் படி –

———-

நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள் சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் அன்று கரு மானியை இரந்த கள்வனே
உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு–61-

ஆஸ்ரித பாரதந்த்ர்யம் தன்னை அனுஷ்டித்துக் காட்டின படியைச் சொல்லுகிறார் –
வடிவே அன்று அவனுடைய சேஷ்டிதமும் ஆஸ்ரித பரதந்த்ரம் -என்கிறது –ஒரு நினைவு இன்றிக்கே இருக்கச் செய்தே ஒரு திருவடிகளானது நின்றாப் போலே நின்று –
பூமிப் பரப்பை அடங்க மறைத்துக் கொண்டது –
கையிலே நீர் விழுந்தவாறே அலாப்ய லாபம் போலே வளர்ந்த தோளானது திக்குகள் எல்லாம் அளந்தன –
இன்று இத்தைக் கேட்கைக்கு அன்று எங்கே போனேனோ –-
உன் திருவடிகளிலே ந்யஸ்த பரர் ஆனவர்கள் இச் செயலை அனுசந்தித்து -இனி நமக்கு ஒரு கர்த்தவ்யம் இல்லை என்று
கொண்டு நிர்ப்பரராய் -மார்பிலே கை வைத்துக் கொடு கிடந்தது உறங்குகைக்காக செய்த செயல் இறே-
ஒரு சர்வ சக்தி பக்கலிலே தங்கள் பரத்தை ஏறிட்டுத் தாங்கள் நிர்ப்பரராய் இருப்பர்கள்-
அநந்தரம் அவன் தூது போயும் -சாரத்தியம் பண்ணியும் -தான் அர்த்தியாயும் -இப்படி இவர்கள் கார்யம் நிர்வஹியா நிற்கும்
ஆனபின்பு அவர்களுக்கு ஒரு குறை இல்லை-

————–

இடங்கை வலம்புரி நின்றார்ப்ப எரி கான்று அடங்கார் ஒடுங்குவித்த தாழி விடங்காலும் தீவாய் அரவணை மேல் தோன்றல்
திசை யளப்பான் பூவாரடி நிமித்த போது–71-

சர்வேஸ்வரன் ஆஸ்ரித அர்த்தமாய்ப் போந்து அவதரித்துப் பண்ணும் வியாபாரங்களை அனுசந்தித்து
நித்ய ஸூரிகள் அஸ்தானே பய சங்கி களாய்க் கொண்டு அவர்கள் படும்பாடு சொல்லுகிறது –
ஆக இப்படிப் பரிவர் இல்லாத இடங்களிலே வந்து சந்நிஹிதனானவன் –அங்கு அப்படிப் பரிவரோடே இருக்குமவன் கிடீர் என்கிறார் –
கீழ் இவன் தான் உகந்தபடி சொல்லிற்று -இதில் இவனையே உகக்கும் நித்ய ஸூரிகள் படி சொல்லுகிறது –
அவன் இங்கு வந்தாலும் அங்கு உள்ளாரே பரியும் அத்தனை -இங்குப் பரிவார் இல்லை -அது யார் அறியப் படுகிறார் என்கிறார் –
சர்வ காலத்திலும் ஸூலபமான படியை அனுசந்தித்தார் கீழ்-சர்வ தேசத்திலும் ஸூலபனான படியை அனுசந்திக்கிறார் இதில்-புஷ்பஹாச ஸூ குமாரமான திருவடிகளைப் பரப்பின போது இடங்கை வலம்புரி நின்றார்ப்ப இப்படிப் பட்டார்கள் என்கிறது –
பூவாரடி – வெருமனிருக்கிலும் வயிறு எரிய வேண்டி இருக்கிற படியாலே பிராட்டிமார் பரியும் திருவடிகள் –
பூவைப் பரப்பினால் போலே இருக்கை

—————

தவம் செய்து நான்முகனே பெற்றான் தரணி நிவந்து அளப்ப நீட்டிய பொற்பாதம் சிவந்த தன கை யனைத்தும் ஆரக் கழுவினான்
கங்கை நீர் பெய்தனைத்துப் பேர் மொழிந்து பின்–78-

இப்படிப்பட்ட தபஸ்சை அனுசந்தித்து சர்வேஸ்வரன் திருவடிகளை வருத்தம் அற லபிக்கப் பெற்றான்
சதுர்முகன் ஒருவனுமே கிடீர் -என்கிறார்-பூமியை வளர்ந்து அளக்கைக்காக நீட்டின ஸ்லாக்கியமான திருவடிகள் -எட்டாதபடி பரணிட்டு இருக்கக் கிடீர் பலித்தது என்கை-
தன்னுடைய சிவந்த கைகள் அனைத்தும் ஆரும்படி விளக்கினான் –
அநேகம் கை படைத்ததால் உள்ள லாபம் பெற்றான் –அவனுடைய எல்லா திரு நாமங்களையும் சொல்லி –
வாய் படைத்த பிரயோஜனம் பெற்றான் –
சர்வேஸ்வரன் அந்ய அர்த்தமாகச் செய்த செயல் அவனுடைய தபஸ் ஸூ க்குப் பிரயோஜன ரூபமாகக் கொண்டு தலைக் கட்டப் பெற்றது –
யாரேனுக்கும் கார்யம் செய்ய யாரேனுக்கும் பலித்துப் போவதே

————

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச் சென்று ஆங்கு அளந்த திருவடியை அன்று கருக் கோட்டியுள் கிடந்து கை
தொழுதேன் கண்டேன் திருக் கோட்டிஎந்தை திறம்–87-

உம்முடைய பேற்றுக்கு ஏற்றம் என் என்னில் -நான் கர்ப்ப காலமே தொடங்கி அடிமைச் சுவடோடு கூட
அவன் படியை அனுபவித்துப் போருகிறேன் -என்கிறார் –இப்பேறு இன்று பெற்றேன் அல்லேன் என்கிறார்-இம் மஹா ப்ருதிவியை ஒருவர் இரக்க அன்றியே தானே சென்று அளந்த திருவடியை –
அவன் அளக்கிற இடத்திலே பூமி சென்றதோ -பூமி கிடந்த இடம் எல்லாம் தான் சென்று அளந்தான் அத்தனை அன்றோ –
நீர்மைக்கு எல்லை நிலமான திருக் கோட்டியூரிலே நின்று என்னுடைய கர்ப்ப ஸ்தானத்தில் தய நீயதை கண்டு விஷயீ கரித்தது -என்கை-
திருக் கோட்டி எந்தை –ஸ்ரீ வைகுண்டத்தில் மேன்மை மாத்திரம் கண்டேனோ -முதல் காட்ஷியிலே பூரணமாகக் கண்டேன் –

—————

பாணியால் நீரேற்றுப் பண்டு ஒரு கால் மாவலியை மாணியாய்க் கொண்டிலையே மண்–89-

நீர் இப்படிச் சொல்ல நம்மையே பற்றினாருக்கு உதவினோமோ என்ன -செய்திலையோ -என்கிறார் –
இசைந்தாருக்குச் கர்மம் செய்யும்படி சொல்லுகிறார் –
பிரதிகூல நிரசனம் பண்ணும் படியையும் ஆஸ்ரித கார்யம் செய்யும் படியையும் சொல்லுகிறார் —ஐஸ்வர்யம் தோற்றக் கொண்டாயோ -அர்த்தித்வம் தோற்ற -மாணியாய் அன்றோ கொண்டது –
மாணியாய் – இரப்பிலே தகண் ஏறின படி -ஸ்ரீ வைகுண்டமே தொடங்கி இரப்பிலே மநோ ரதித்தான் –

———

பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர் முன்னால் வணங்க முயன்மினோ பல்நூல் அளந்தானைக் கார்க்கடல் சூழ் ஞாலத்தை எல்லாம் அளந்தானவன் சேவடி–91-

பிரகிருதி வச்யரான பின்பு சரீர விஸ்லேஷ சமனந்தரம் நரகம் ஒருவகை தப்பாது-
ஆன பின்பு அவ்விஷயத்தை வணங்கப் பாருங்கள் என்கிறார் –ஒன்றிலே எல்லாம் உண்டான விஷயம் –
திருவடிகளிலே தலையைச் சாய்த்து யமன் தலையிலே காலை வைத்துத் திரியுங்கள் –பன்னூல் அளந்தான்-எல்லா பிரமாணங்களாலும் அளக்கப் படுபவனை –அஷர ராசியாலே ஜிஜ்ஞாசிக்கப் பட்டவனை –
சாஸ்திரம் தேட வேண்டா -ஆட்சி கொண்டு அறியலாம் –
அளந்தான் –முயல்மினோ என்றவாறே தேவை யுண்டோ என்று இராதே அப்ரதிஷேதமே வேண்டுவது –
சேவடி –பிரஜை ஸ்தனத்திலே வாய் வைக்குமா போலே –முலைப் பாலுக்குக் கூலி கொடுக்க வேணுமோ –
கூலியாவது உண்கை இறே -அல்லாவிடில் சம்பந்தம் பொயயாகாதோ-

————

கொண்டு வளர்க்கக் குழவியாய்த் தான் வளர்ந்தது உண்டது உலகு ஏழும் உள்ளொடுங்க கொண்டு குடமாடிக் கோவலனாய் மேவி
என்நெஞ்சம் இடமாகிக் கொண்ட இறை–98-

தம்மை விஷயீ கரித்தவனுடைய அபதா நங்களை அனுபவிக்கிறார் –
தன் சங்கல்ப்பத்தாலே ஜகத்தை நியமிக்கிறவன் சம்சாரியான என்னோடு கலந்து நின்றபடி –
அகடிதகடனத்தோடே ஒக்கும் -என்கிறார்
ஜகத்துக்கு தன்னால் அல்லது செல்லாதாப் போலே என்னால் அல்லது செல்லாதபடி ஆனான் –இடையனாய் ஜாத்யுசிதமான கூத்தை யாடி என் நெஞ்சிலே பொருந்தி இளகப் பண்ணி
நெஞ்சைக் கோயிலாகக் கொண்ட ஈஸ்வரன்-அந்தக் குடக் கூத்தாடின சுவடோடே இடைவெளி அறப்
பொருந்திக் கொண்டு என் ஹிருதயத்தைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்ட சர்வ ஸ்வாமி

————

இறை எம்பெருமான் அருள் என்று இமையோர் முறை நின்று மொய்ம்மலர்கள் தூவ அறை கழல சேவடியான் செங்கண் நெடியான்
குறள் உருவாய் மாவடிவில் மண் கொண்டான் மால்–99-மா வடிவில் என்றும் –மா வலியை என்றும்-பாட பேதம்-

பிரயோஜனாந்தர பரரான தேவர்களுக்குக் கார்யம் செய்யும்படியைச் சொல்லுகிறார் –ஆஸ்ரித அர்த்தமாக சுருங்கின வடிவை யுடையவனாய் -வடிவு கண்ட போதே பிச்சேறும் படியாய் இருக்கை –
இரந்தார்க்கு இடர் நீக்கிய கோட்டங்கை வாமனன் -திருவாய் -7-5-6-இறே –
மா வடிவு –பூமி அத்யல்பமாம் படி வளர்ந்தான் –

———————————————————————————————–

மருந்தும் பொருளும் அமுதமும் தானே திருந்திய செங்கண் மால் அங்கே நீர் ஏற்றும் மூவடியால் அன்று உலகம் தாயோன் அடி–4-

மருந்தும் பொருளும் அமுதமும் தானே-
அம்ருதம் சாதனம் சாத்தியம் யம் பஸ்யந்தி மநீஷின
ஜஞ்யாக்யம்   பரமாத்மானம் விஷ்ணும் த்யாயன் ந சீததி -என்றும்
சரண்யம் சரணஞ்ச த்வாமாகூர் திவ்யா மகார்ஷய -யுத்த -111-17-
நமுசி பிரக்ருதிகளை பொடிப் படுத்தின படியாலே -மருந்து

அர்தியாய் வருகையாலே பொருளானான்

திருவடிகளைத் தலையிலே வைக்கையாலே அம்ருதமானான்

திரு வுலகு  அளந்து  அருளின எம்பெருமான் திருவடிகளே
சமிதை பாதி சாவித்திரி பாதி யல்ல –

திருந்திய செங்கண் மால் –
இவன் ஈஸ்வரன் என்று அறியலாம்படி
திருந்திச் சிவந்த கண்ணை யுடையனான சர்வேஸ்வரன்

அன்றிக்கே
திருந்திய –
ப்ராப்ய பிராபகங்கள் ஆகை-
ஸ்வரூப பிரயுக்தமாகை -என்றுமாம்

அன்றிக்கே
இவ்வாத்மா திருந்தா விட்டால் -இவற்றைத் திருத்தப் பாராதே
இவற்றுக்கு ஈடாக தன்னைத் திருத்திக் கொண்டு இருக்கும் -என்றுமாம்

இவை திருந்தாதே இருக்குமா போலே
அவன் என்றும் திருத்தி இருக்கும் -என்றுமாம் –

செங்கண்
ஆஸ்ரித வாத்சல்யத்தாலே சிவந்த கண்

மால் –
வ்யாமுக்தன் -என்றுமாம் –
ஆங்கே பொருந்தியும் நின்று –
ஸ்ரீ யபதி வந்து நீர் ஏற்கிறான் என்று
கூச வேண்டாதபடி இரப்பிலே பொருந்தி நின்று  –

பொருந்தியும்
ரஷணத்திலே  பொருந்தப்பட்டு –

நின்று –
அதிலே திரு உள்ளம் மண்டி நின்று

உலகம் உண்டு உமிழ்ந்தும்
லோகத்தை வயிற்றிலே வைத்து காத்தும்
வெளி நாடு காண உமிழ்ந்தும்
நீரேற்றும்
தன்னது அல்லாதது கொள்வாரைப் போலே

நீர்  ஏற்றும்
அலாப்ய லாபம் போலே

மூவடியால் அன்று உலகம் தாயோன் அடி
நீர் ஏற்ற லோகத்தை மூவடியாலே அளந்தவனுடைய திருவடிகள் –

மருந்தும் பொருளும் அமுதமும் தானே
உண்டு -மருந்தான படி
உமிழ்ந்து -பொருளான படி
செங்கண் மால் -அமுதமான படி
என்றுமாம் –

——————

அடி வண்ணம் தாமரை அன்று உலகம் தாயோன் படி வண்ணம் பாற்கடல் நீர் வண்ணம் முடி வண்ணம் ஓராழி
வெய்யோன் ஒளியும் அக்தன்றே ஆராழி கொண்டாற்கு அழகு–5-

திரு வுலகு அளந்து அருளின படி பிரஸ்துதமானவாறே
அதுக்குத் தோற்று அவன் அழகை அனுபவிக்கிறார் –

அவனே மருந்தும் -பொருளும் -அமுதமுமானவாறே
இனி அழகை அனுபவிப்போம் என்கை-

அப்ராக்ருதமான அழகுக்கு வஸ்துக்களை சத்ருசமாக சொல்லுகிறது –
அலமாப்பாலே இறே-

அழகை அனுசந்தித்தாருக்குப் பேசாது இருக்க ஒண்ணாது
பேச ஒண்ணாது –

அடி வண்ணம் தாமரை –
திருவடிகள் உடைய படி தாமரை –

அன்றுலகம் தாயோன் படி வண்ணம் பார்க் கடல் நீர் வண்ணன் –
இஜ் ஜகத்தை அளந்து கொண்டவனுடைய திருமேனி யுடைய நிறம் பார் சூழ்ந்த கடலிலே நிறம் போலே
வெளுப்புப் பேசுகிற விடமாகில்
திருப்பாற் கடலினிடைய நிறம் என்னலாம் –

முடி வண்ணம் ஓராழி வெய்யோன் –
திரு அபிஷேகத்தின் உடைய நிறம் ஆதித்யன் –

ஓராழி வெய்யோன் –
ஒரு சக்ரமான ரதத்தை யுடைய ஆதித்யன் -என்னுதல்
ஆதித்ய மண்டலத்தை சொல்லுதல்  –

ஒளியும் அக்தே அன்றே –
அவனுடைய தேஜஸ்ஸூ
ஆதித்யனுடைய தேஜஸ்சைப் போலே என்றபடி –

ஆராழி கொண்டார்க்கு அழகு –
கையிலே திருவாழி பிடித்தால் வேறோர் ஆபரணம் சாத்த வேண்டாமல்
இருக்கறவனுக்கு
கையிலே ஆர்ந்த திருவாழியைப் பிடித்தவனுக்கு அழகு
இப்படியே அடி வண்ணம் தாமரை -என்றபடி –

———————

அழகன்றே யாழியார்க்கு ஆழி நீர் வண்ணம் அழகன்றே யண்டம் கடத்தல் அழகன்றே அங்கை நீர் ஏற்றாற்கு
அலர் மேலோன் கால் கழுவ கங்கை நீர் கான்ற கழல்-6-

கீழ்ச் சொன்ன அழகையும்
அத்தோடு ஒத்த  சேஷ்டிதங்களையும்
சேர்த்து அனுபவிக்கிறார் –

அழகன்றே ஆழியாற்கு ஆழி நீர் வண்ணம் –
சர்வேஸ்வரனுக்கு கடலின் நீர் உடைய நிறம்  வெறும் நிறம் மாத்ரமேயோ
அழகன்றோ
திருவாழியை உடையவனுக்கு என்றுமாம் –
அப்போது
திருவாழிக்கு பரபாகமான திரு நிறம் என்றபடி

இத்தால்
திருவாழி யோபாதி  நிறமும் சிறந்து இருக்கும் என்றபடி
இந் நிறம் உடையவனுக்கு வேறொரு ஆபரணம் வேணுமோ  –

அழகன்றே அண்டம் கடத்தல் –
செயலோ வழக்கு அன்றியே இருக்கிறது
அதுவும் அரியது செய்தானாய் வருந்திச் செய்ததோ

அழகன்றே –
ஏத்த ஏழு உலகம் கொண்ட கோலக் கூத்தன்-திருவாய் மொழி -2-3-11-

அழகன்றே அங்கை நீர் ஏற்றாற்கு-
நீர் ஏற்று நின்ற நிலை சாலப் பொல்லாததாய் இருந்ததோ –

அங்கை நீர் ஏற்றாற்கு-
கொடுத்து வளர்ந்த அழகிய கையிலே நீர் ஏற்றவர்க்கு
பொல்லாக் குறள் உருவாய்ப் பொற்கையில் நீர் ஏற்று   -நாச்சியார் திரு மொழி -11-5-

அலர் மேலோன் கால் கழுவ –
ப்ரஹ்மா திருவடிகளை விளக்க –

கங்கை நீர் கான்ற கழல்  அழகன்றே –
திருவடிகள் கங்கைக்கு  காரணம் என்று
பாவனமான மாத்ரமேயோ
அழகன்றோ

திருவடிகள் பாவனமானது மாத்ரம் அல்ல
போக்யமும் என்றபடி

அதுவும் ஆச்சர்யம் ஆதல் மேன்மைக்காதல் செய்ததோ
அழகுக்கு அன்றோ -என்கை –

—————–

கண்ணும் கமலம் கமலமே கைத்தலமும் மண்ணளந்த பாதமும் மற்றவையே எண்ணில் கரு மா முகில் வண்ணன்
கார்க்கடல் நீர் வண்ணன் திருமா மணி வண்ணன் தேசு-9-

காண்க நம் கண் என்று
இவர் சொன்னவாறே
அவன் தன்னைக் காட்டக் கண்டு
அவனுடைய அழகை
அனுபவிக்கிறார் –

கண்ணும் கமலம் –
உடம்பு வவ்வலிடும்படி நோக்கி –
ஜிதந்தே  புண்டரீகாஷா -என்னப் பண்ணும் கண் –
முதலுறவு பண்ணும் திருக் கண்கள் –

கமலமே கைத் தலமும்-
அநந்தரம்-
ஸ்பர்சிக்கும் திருக் கைகள் –
கண்ணுக்குத் தோற்று விழா நிற்க அணைக்கும் கை இறே –

மண்ணளந்த பாதமும் –
கண்ணிலும் ஸ்பர்சத்திலும் தோற்று
விழும் திருவடிகள் –

மண்ணளந்த பாதமும் -மற்றவையே –
காடும் ஓடையுமான பூமியை யளந்ததுவும்
பூவைக் கொண்டே –
எண்ணில்-
ஆராய அரிது -என்கை-
எண்ண ஒட்டாதே கலக்குமே அழகு –

வருந்தி இத்தனையும் செய்யில் –
கருமா முகில் வண்ணன்-
கறுத்து-
ஸ்லாக்கியமான-
மேகம் போன்ற வடிவை உடையவன் –

கார்க்கடல் நீர் வண்ணன்-
கறுத்த கடலிலே
நீர் போன்ற நிறத்தை உடையவன் –

திரு மா மணி வண்ணன் –
காந்தி மிகுத்ததான
பெரு விலையனான
ரத்னத்தை உடைய நிறத்தை உடையவன்

ஸ்ரீ மத்தாய் ஸ்லாக்கியமான -ஸ்ரீ மன் நாராயண அர்க்கமான மணி
சர்வதா சாம்யம் காணாமல் கதிர் பொறுக்குகிறார்  இறே

புறம்பு உபமேயம் பொய்யாய் இருக்கும்
இங்கு உபமானம் பொய்யாய் இருக்கும் –

கருமா முகில் வண்ணன்-
ஸ்ரமஹரமாய் இருக்கை –

கார்க்கடல் நீர் வண்ணன்-
கண்ணுக்கு அடங்காதாய் இருக்கை –

திரு மா மணி வண்ணன் –
திரண்டு குளிர்ந்து இருக்கை –

தேசு –
சமுதாயமான எழில்

கரு மா முகில் வண்ணன் கார்க்கடல் நீர் வண்ணன்
திரு மா மணி வண்ணன் தேசு –
எண்ணில் –
தனித் தனி ஆராயும் அன்று
கண்ணும் கமலம் கமலமே கைத் தலமும்
மண்ணளந்த பாதமும் மற்றவையே-

———–

படிவட்டத் தாமரை பண்டுலகம் நீர் ஏற்று அடி வட்டத்தால் அளப்ப நீண்ட முடிவட்டம் ஆகாயமூடறுத்து அண்டம் போய் நீண்டதே மாகாயமாய் நின்ற மாற்கு-13-

இதில்
அவன் தானே வந்து அவதரித்துத் தன்னைக் காட்டில் காணும் அத்தனை
என்கிறார்

படிவட்டத் தாமரை –
பூ வலயம் -என்னக் கடவது இறே –
பத்மாகார சமுத்பூதா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-12-37-என்னக் கடவது இறே –
சர்வேஸ்வரன் சேஷ்டிதத்தைத் தாம் கண்டு அனுபவிக்கும் படியை
அருளிச் செய்கிறார் –

படிவட்டத் தாமரை –
திருவடிகள் பிரவேசிக்கப் பெறுகையாலே வந்த ஸ்லாக்யதை-

பண்டுலகம் நீரேற்று –
படிவட்டத் தாமரை யாகிற லோகத்தை முன்பு நீரேற்று –

அடிவட்டத்தால் அளப்ப –
திருவடிகளாலே அளப்ப
அடி வட்டத்தாலே அளப்ப –

நீண்ட -முடிவட்டம் –
ஓங்கின திரு அபிஷேகமானது
முடி வட்டம் என்று திரு அபிஷேகத்தில் ஜ்யோதிர் மண்டலம் –

நீண்ட முடி வட்டம்
வளர்ந்த திரு அபிஷேகம் –

ஆகாயமூடறுத்து –
ஆகாசத்தை ஊடுருவி –

அண்டம் போய் நீண்டதே –
அண்டபித்தி யளவும் வளர்ந்ததே –

இது ஆருக்குத் தான் என்னில் –
மாகாயமாய் நின்ற மாற்கு –
வ்யாமோஹத்தை யுடையனானவனுக்கு

இத்தால்
இவன் வளரக் கோலித்தது இவ்வளவு அன்று
இடம் போராமை நின்றான் இத்தனை என்று தோற்ற நின்றது ஆய்த்து-
வடிவில் பெருமை –

பண்டு உலகம் நீரேற்று
படி வட்டத் தாமரை அடி வட்டத்தால் அளப்ப
மாகாயமாய் நின்ற மாற்கு
நீண்ட முடிவட்டம் ஆகாயமூடறுத்து
அண்டம் போய் நீண்டது
என்று அந்வயம்-

————-

வாய் மொழிந்து மா வாலிபால் மூவடி மண் நீ யளந்த கொண்ட நெடுமாலே தாவிய நின் எஞ்சா விணை யடிக்கே
யேழ் பிறப்பும் ஆளாகி அஞ்சாது இருக்க அருள்–18-

கால த்ரயத்திலும் இழவு வாராமல் அனுபவிக்கப் பெற்ற
எனக்கு
உன் திருவடிகளிலே அடிமை செய்யுமஅதுவே யாத்ரையாய்
இதுக்கு விரோதமான சம்சார அனுசந்தானத்தாலே வரும் பயம் வாராதபடி
பண்ணி யருள வேணும் -என்கிறார் –

உன் உடைமை யொன்றும் சோர விடாத நீ
என்னைக் கைக் கொண்டு அருள வேணும் –
என்கிறார் –

மறவாது என்றும் நான் நினைத்தால்
லாபம் உண்டோ  –

நீ அஞ்சாது இருக்க அருள்
என்கிறார் –

வாய் மொழிந்து வாமனனாய்-
ஸ்ரீ வாமனனாய்
மூவடி மண் தா வென்று அருளிச் செய்து –
ஸ்ரீ வாமனனாய்க் கொண்டு
ஆசூர பிரக்ருதியானவன் இரங்கும்படி
முக்த ஜல்பிதங்களைப் பண்ணி
மறுக்க மாட்டாத படி பண்ணுகை –

வாய் மொழிந்து
கொள்வன் நான் மாவலி மூவடி தா என்ற கள்வனே -திருவாய்மொழி -3-8-9-
அவாக்ய அநாதர-என்னுமவன் கிடீர்

வாமனனாய் –
வடிவும் அப்படியே பண்ண வேணுமோ –

மாவலி பால் மூவடி மண் நீ யளந்து கொண்ட நெடுமாலே –
மகாபலி பக்கலிலே சென்று மூவடி மண்ணை அபேஷித்து
அவன் தரப் பின்னை அளந்து கொண்ட
சர்வேஸ்வரனே
உன்னது அல்லாததை அளந்து கொண்டாயோ

தாவிய-
அனாயாசேன அளந்து கொண்ட –
நின் எஞ்சா இணை யடிக்கே –
திரு வுலகு அளந்து   அருளின உன்னுடைய கல்யாணமான திருவடிகளிலே –

எஞ்சா இணையடி –
எல்லா சங்கோசங்களும் நீக்கும் திருவடிகள்
அன்றிக்கே
விஸ்த்ருதமான திருவடிகள் -என்றுமாம் –

ஏழ் பிறப்பும் ஆளாகி –
காலம் எல்லாம் அடிமை செய்து

அஞ்சாது இருக்க வருள் –
இவ்வடிமைக்கு இழவு வரில் செய்வது என் என்று நான் அஞ்சாதே இருக்கும் படி
பண்ணி யருள வேணும்

நிர்ப்பயனாம் படி –
என்னுடைமையை நான் விடுவேனோ
மீட்டுக் கொண்ட பின்பு நீ அஞ்ச வேண்டா -என்று
அருளிச் செய்ய வேணும்

இனி
உன் கையிலும் பிறர் கையிலும் காட்டிக் கொடேன் -என்கை-

இந்த்ரன் அபேஷிதம் செய்து தலைக் கட்டினாப் போலே
நானும் இதொன்றும் பெறும்படி பண்ணி யருள வேணும்

ஒரு ஔஷதத்தை சேவித்தான் ஒருத்தன் பயம் இன்றிக்கே
சர்ப்பத்தின் வாயிலே கையைக் கொடா நின்றான் இறே

அவனுடைய அருள் பெற்றவன்று
சம்சாரத்திலே இருந்து பயம் கெட்டு இருக்கத் தட்டில்லை இறே –

———

முன்னுலகம் உண்டு உமிழ்ந்தாய்க்கு அவ்வுலகம் ஈரடியால் பின்னளந்து கோடல் பெரிதொன்றே என்னே திருமாலே
செங்கண் நெடியானே எங்கள் பெருமானே நீ இதனைப் பேசு--20-

அவன் தன்னை அபேஷித்தார்க்குத்
தன்னை அழிய மாறாதேயோ கார்யம் செய்வது
என்கிறார் –

சம்சார பயம் கெட்டார்க்கு யாத்ரை இதுவே இறே –

உன் படியை நீயே சொல்ல வேணும் என்று
எம்பெருமானைக் கேட்கிறார் –

அவ்வுலகம் ஈரடியால் பின்னளந்து கோடல் பெரிதொன்றே –
இப்படி உனக்கு இஷ்ட சேஷ்டா விஷயமாய்ப்
பருத்தி பட்ட பன்னிரண்டும் பட வந்த லோகம்
தன்னையே பின்பொரு நாளிலே
மூன்றடியை இரந்து அளந்து கொண்ட விது
பெரியதொரு செயலாகச் செய்தாயோ
அவனுக்கு மறுக்க மாட்டாத வ்யாமோஹம் இறே –

என்னே  –
இது என்ன ஆச்சர்யம் –
எத்திறம் -என்கிறார்
அன்நீர்மை தம்மை வருத்தின படி

உன்னுடைய மேன்மைக்கும் இத் தாழ்ச்சிக்கும்
எங்கே சேர்த்தி யுண்டு –

திருமாலே செங்கண் நெடியானே-
உன்னை நீ யுணர்ந்து கொண்டு தான் கார்யம் செய்யப் பெற்றாயோ –
ஸ்ரீயபதியாய் -அவளோட்டைச் சேர்த்தியாலே
சிவந்த கண்ணை யுடையவனே
ஸ்ரீயபதியாய் இருப்பதே –

செங்கண் –
புண்டரீ காஷனான சர்வேஸ்வரன்
ஸ்ருதி சித்தமான கண்ணை யுடையவனே –

நெடியானே –
அபரிச்சேத்ய மகிமையை யுடையவனே –
இத்தால்
உனக்கு ஒரு குறை யுன்டாய்ச் செய்தாயோ -என்கை –

எங்கள் பெருமானே நீ யிதனைப் பேசு –
ஸ்வாமி யான நீ
அனந்யார்ஹரான எங்கள் அபேஷிதமும்
உனக்குச் செய்ய வேண்டும் இறே
ஆன பின்பு நீ இத்தை அருளிச் செய்து அருள வேணும் –

நீ இதனைப் பேசு –
இச் செயல்களைச் செய்யும் இத்தனையோ
சொன்னால் ஆகாதோ
இவர் பேச்சுக் கேட்டு இனியனாய் இருந்தான் அவன்
அவன் பேச்சுக் கேட்டு வாழ நினைக்கிறார் இவர்  –

——-

விரும்பி விண் மண் அளந்த அஞ்சிறை வண்டார் சுரும்புதொளையில் சென்றூத அரும்பும் புனம் துழாய் மாலையான்
பொன்னம் கழற்கே மனம் துழாய் மாலாய் வரும்--23-

விரும்பி விண் மண்ணளந்த –
தன்னது அல்லாத ஓன்று பெற்றாப் போலே
ஆதரித்துக் கொண்டு
ஆகாசத்தையும் பூமியையும் அளந்து கொண்டான்
என்கிறார் –

விரும்பி அளந்தான் என்கையாலே காடும் ஓடையும் அளந்தது
தேவைக்கு அன்று என்கை –

அஞ்சிறைய வண்டு-
அழகிய சிறகை யுடைத்தான வண்டு –

ஆர் சுரும்பு –
முகத்துச் சேர்ந்து வர்த்திக்க  கடவ சுரும்பு –

துளையில்  சென்றூத  –
இவை ரசிசிரைகள் அறிந்து
சென்று வாயை வைத்தூத –

அரும்பும் புனந்துழாய் மாலையான் –
அத்தாலே
அரும்பி அலரா நின்றுள்ள
செவ்வித் திருத் துழாய் மாலையை உடையனானவனுடைய –

புனந்துழாய் மாலையான் —
திரு மார்வில் ஸ்பர்சத்தாலே
தன்னிலத்தில் நின்றாப் போலே இருக்கிற
திருத் துழாய் மாலையை யுடையவன்

பொன்னங்கழற்கே –
ஸ்ப்ருஹணீயமான திருவடிகளிலே –

மனந்துழாய் மாலாய் வரும் –
மனம் விரும்பித் துழாய் மாலாய் வரும் என்று
மேலே மனஸ்ஸோடே கூட்டவுமாம்
மனஸ்ஸானது ஹ்ருதயமான துழாய் கலங்கிக் கொண்டு மாலாய் வரும்
பிச்சேறா  நிற்கும்
வ்யாமோஹத்தைப் பண்ணித் துழாவி வாரா நின்றது –
வண்டுகள் பட்டது படா நின்றது –

———-

அன்று இவ்வுலகம் அளந்த வசைவே கொல் நின்று இருந்து வேளுக்கை நீள் நகர் வாய் அன்று கிடந்தானைக் கேடில் சீரானை
முன் கஞ்சைக் கடந்தானை நெஞ்சமே காண்–34-

காஞ்சி புரத்திலே பல திருப்பதிகளிலே
நிற்பது
இருப்பது
கிடப்பதான
இவனுடைய வியாபாரங்களை அனுசந்தித்து
இதுக்கடி
பண்டு திரு உலகு அளந்து அருளின ஸ்ரமத்தாலே வந்தது ஓன்று அன்றோ
என்று கொண்டு அஞ்சுகிறார் –

அவனுடைய சத்தை பரார்த்தமான பின்பு
அவனைக் காண ஆசைப்படாய் என்று
தம்முடைய திரு உள்ளத்தைக் குறித்து
அருளிச் செய்கிறார் –

அன்றிவ்வுலகம் அளந்த அசைவே கொல்-
இந்த லோகத்துக்கு ஒரு நினைவு இன்றிக்கே இருக்கிற அன்று
நின்றாப் போலே நின்று
இஜ் ஜகத்தை அடங்கத் தாவி நின்று
அளந்து கொண்ட அந்த ஆயாசமோ

இருந்து வேளுக்கை-
திரு  வேளுக்கையிலே எழுந்து அருளி இருந்து –

நீணகர்வாய் -அன்று கிடந்தானைக் –
என்று கூட்டவுமாம் –
மகா நகரமான திரு வெக்காவிலே சாய்ந்து அருளினவனை –

திரு உலகு அளந்து அருளி நின்றான்
திருவடிகள் நொந்த வாறே இருந்தான்
அது நொந்தவாறே சாய்ந்தான் –

கேடில் சீரானை –
நித்ய சித்தமான கல்யாண குணங்களை யுடையவனை-

முன் கஞ்சைக் கடந்தானை –
முன் கம்சனால் வந்த விரோதத்தைப் போக்கினவனை –
கம்சன் நினைத்த வஞ்சனையைத் தப்பி
அவன் தன்னோடு முடித்தவனை –

நெஞ்சமே காண்-
நெஞ்சமே நீ அனுசந்தியாயோ
உனக்கு இது ஒழிய வேறு அந்ய பரதை என்
நமக்காகத் தன்னை அழிய மாறினவனை அனுசந்தியாது இருக்க வேணுமோ

பூமியை அடங்கலும் அளந்த வருத்தத் தாலேயோ
திரு வேளுக்கையில் இருக்கிறதுவும்
திரு வெக்காவில் கண் வளர்ந்து அருளுகிறதுவும்
என்று அனுசந்தி
என்றபடி –

———–

கைய கனலாழி கார்க்கடல் வாய் வெண் சங்கம் வெய்ய கதை சார்ங்கம் செஞ்சுடர் வாள் செய்ய படை பரவை பாழி பனி நீருலகம் அடியளந்த மாயரவர்க்கு–36-

கையனலாழி –
பிரதிபஷத்தின் மேலே
கனலா நின்றுள்ள அக்னியை உமிழா நின்றுள்ள
திரு வாழி-

கார்க் கடல் வாய் வெண் சங்கம் –
மேகத்தின் உடைய முழக்கத்தை யுடைத்தாய்
கடலைப் பிறப்பாக யுடைத்தாய்
வெளுத்த நிறத்தை யுடைய
ஸ்ரீ பாஞ்ச ஜன்யம்

அன்றிக்கே
கார் போலேயும்
கடல் போலேயும்
சப்திக்கும் த்வனியை உடைய சங்கம் -என்றுமாம் –

அன்றிக்கே
கருத்த நிறத்தை யுடைத்தான கடலைப் பிறப்பிடமாக உடையவன் -என்றுமாம் –

வெய்யகதை -சார்ங்கம்  வெஞ்சுடர்வாள்
வெவ்விதான   கதை
வெவ்விதான ஸ்ரீ சார்ங்கம் –
வெவ்விதான சுடரை உடைய வாள்
இவை ஆகிற –

செய்ய படை-
செய்ய படை என்கிறது
ஆஸ்ரித விரோதி நிரசனத்துக்கு விதேயமாய் இருக்கை-
ஆபரணமான போது புகரைச் சொல்லுகிறது  –
அப்போது அவனுக்கு என் புகுகிருறதோ என்று அஞ்ச வேண்டா
அவை தனக்கு -திசை வாழி எழ -என்று மங்களா சாசனம் பண்ண அமையும்
சுடர் ஆழியும் அப் பாஞ்ச சன்னியமும் -என்னக் கடவது இறே –

கைய –
கையிலே யுள்ள –

பரவை பாழி-
திருப் பாற் கடல் படுக்கை –

பனி நீருலகம் அடியளந்த மாயரவர்க்கு  –
குளிர்ந்த திரையை உடைத்தான
கடல் சூழ்ந்த பூமியைத்
திருவடிகளாலே அளந்து கொண்ட
ஆச்சர்ய பூதன் ஆனவனுக்கு
அழகிய திவ்யாயுதங்கள் இவை
படுக்கை அது –

———–

மன்னு மணி முடி நீண்டு அண்டம் போய் எண் திசையும் துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே மின்ன உடையாகக் கொண்டு
அன்று உலகு அளந்தான் குன்றம் குடையா ஆ காத்த கோ--41-

திரு வுலகு அளந்து அருளின இடம்
ப்ராப்தமாய்த் திரியட்டும்
அவ்விடம் தன்னிலே அந்த
அபதானத்தைப் பேசி
அனுபவிக்கிறார் –

மன்னு மணி முடி நீண்டு அண்டம் போய்-
அழகிய ரத்னங்களாலே சமயப் பட்டு இருப்பதாய்
அங்குத்தைக்குத் தகுதியான
திரு வபிஷேகமானது
அண்ட பித்தி அளவும் சென்று கிட்டி –

எண்டிசையும் துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே –
எட்டுத் திக்கும்
அங்கு உண்டான த்வீபங்களும்
பரப்பின திருவடிகளே யாம்படி வியாபித்து –

அண்டம் போய்-எண்டிசையும் துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே –
அண்டத்தையும்
எட்டுத் திக்குகளையும்
ஆதி ராஜ்ய ஸூசகமான திரு வபிஷேகம் வ்யாபிக்கவும் –

துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே –
சேதனராலே செறியப் பட்ட பூமி அடங்கலும்
திருவடிகளே யாகவும் –

துன்னு பொழில் –
ஜந்து ஜால நிபடமான பூமி என்றபடி –

மின்னை உடையாகக் கொண்டு –
மேக பதத்துக்கும் அவ்வருகே போக வளர்கையாலே
அவ் விடத்தில் உண்டான
மின்னைப் பீதாம்பரமாகக் கொண்டு –

அன்று உலகு அளந்தான்-
மகாபலி தத்தம் கொடுத்த அன்று ஜகத்தை அடங்க அளந்து கொண்டவன் –

குன்றம் குடையாக ஆ காத்த கோ —–
மலையைக் குடையாகத் தரித்துக் கொண்டு நின்று
பசுக்களை நோக்கின நிர்வாஹகன் –

ஒருக்கால் திருவடிகளை யிட்டு ஜகத்தை மறைத்தான் –
ஒருக்கால் மலையை இட்டுத் தன்னை மறைத்தான் –
பிறந்தவன்றே செய்த காரியமும்
ஏழு பிராயத்தே செய்த காரியமும்
லோகத்தையும்
ஒரு ஊரையும்
நோக்கின படி –-

————–

நின்ற பெருமானே நீர் ஏற்று உலகு எல்லாம் சென்ற பெருமானே செங்கண்ணா–47-

தேவர்கள் உடைய அபேஷிதம் செய்யுமவன் கிடீர்
நம்முடைய விரோதிகளைப் போக்கி
நம்மை அடிமை கொள்ளுவான்
என்கிறார் –

நின்ற பெருமானே நீரேற்று –
அவாப்த சமஸ்த காமன் ஆனவன் தான்
மகா பலி பக்கலிலே சென்று –
உதக ஜலத்துக்கு கை ஏற்று கொண்டு
நின்றான் -ஆய்த்து-

நின்ற பெருமானே –
சேஷித்வம் தோன்றும்படி நின்றவனே –

உலகெல்லாம் சென்ற பெருமானே –
அவன் நீர் வார்த்த அநந்தரம்
ஜகத் அடங்கலும் தானே யாம்படி அளந்து கொண்டான் ஆய்த்து
உடையவன் என்று தோன்றும்படி நின்றவனே –

செங்கண்ணா –
இந்த்ரன் கார்யம் செய்து தலைக் கட்டுகையாலே
உண்டான ப்ரீதி பிரகர்ஷத்தாலே
சிவந்த திருக் கண்களை யுடையவனே –

————

நீ யன்றே நீர் ஏற்று உலகம் அடி அளந்தாய்–48-

நீ யன்றே நீரேற்று உலகம் அடி அளந்தாய் –
உன்னுடைமை பெருகைக்கு
மகா பலி பக்கலிலே அர்த்தியாய்ச் சென்று
நீரேற்று ஜகத்தை யடைய
உன் திருவடிகளாலே அளந்து கொண்டே நீ அன்றோ

நானோ இது செய்தேன்
அன்றியே இந்தரனோ –

———–

சென்று குறள் உருவாய்–52-

சென்று குறளுருவாய்  முன்னிலம் கைக் கொண்டான் முயன்று   –
முன்பு குறளுருவாய் சென்று
முயன்று
பூமியைக் கையிலே கொண்டான் –

முன்னிலம் கைக் கொண்டான் முயன்று   –
லோகத்தை யடங்கக் கைக் கொண்டான் –

முயன்று –
கொள்வன் நான் -திருவாய் -3-8-9-
இத்யாதிகள் செய்தவை

இத்தால்
ப்ராப்தி பண்ணா நின்று கொண்ட படி –ருசி இல்லாதாருக்கு ருசியைப் பிறப்பிக்கும் போதும்
ருசி யுடையாருக்குச் செய்யுமா போலே
செய்யும் -என்றபடி –

———

இனியவன் மாயன் என வுரைப்பரேலும் இனியவன் காண்பரியனேலும்இனியவன் கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்தான்
பைங்கழலான் உள்ளத்தின் உள்ளே உளன்--83-

இனியவன் கள்ளத்தால் மண் கொண்டு-
சர்வேஸ்வரனான தான் செய்தான் என்று
தோன்றாதபடி
பூமியை அபஹரித்து
நெஞ்சுக்கு இனியனாய்
தன்னுடைமையை மகா பலி பக்கலிலே அளந்து கொண்டவன் –

விண் கடந்த பைங்கழலான் –
ஆகாசத்துக்கு அவ்வருகாம்படி வளர்ந்து
சகல லோகங்களையும்
தன் கீழே இட்டுக் கொண்ட
பரந்த திருவடிகளை யுடையவன் –
அன்றிக்கே
அழகிய திருவடிகளை யுடையவன் -என்னவுமாம் –

————

சிலம்பும் செறி கழலும் சென்றிசைப்ப விண்ணாறு அலம்பிய சேவடி போய் அண்டம் புலம்பிய தோள் எண் திசையும்
சூழ இடம் போதாது என் கொலோ வன் துழாய் மால் அளந்த மண்–90-

சிலம்புஞ் செறி கழலும் சென்றிசைப்ப –
திருச் சிலம்பும் –
செறிந்த வீரக் கழலும்
ஒக்கப் போய் த்வனிக்கும் படி –

விண்ணார் அலம்பிய சேவடி போய் –
ஆகாச கங்கையிலே விளக்கப் பட்ட
திருவடிகளானது போய் –
ஆகாச கங்கையிலே ஸ்பர்சிக்கப் பட்ட –
என்றுமாம் –

சேவடி போய் அண்டம் – சென்றிசைப்ப –
அண்ட பித்தி யளவும்
சென்று கிட்டி –

புலம்பிய தோள் எண்டிசையும் சூழ –
சகல லோகங்களும்
இத்தோள் இருக்கிறபடியே என்று
கூப்பிடும்படியான
அழகிய திருத் தோள்கள் ஆனவை
எட்டு திக்கிலும் வியாபிக்க –

சங்கைஸ் ஸூ ராணாம் திவி பூதலஸ் தைஸ் ததா மனுஷ்யர்
கக நே ச கே சரை சத்துத க்ரமான்  ய பிரசகார  சர்வதா
மமாஸ்து மாங்கள்ய வ்ருத்தயே ஹரி -ஸ்ரீ விஷ்ணு ஸ்தோத்ரம் மாங்கள்ய ஸ்தோத்ரம் –
என்று தேவர்களாலே திரள் திரளாக நின்று ஏத்தப் பட்ட
என்றபடி –

வண்டுழாய் மாலளந்த  மண் -இடம் போதாது என் கொலோ –
திருத் துழாய் மாலையாலே
அலங்க்ருதனான
சர்வேஸ்வரன் –
ஐஸ்வர்ய ஸூசகமான திருத் துழாய் மாலையை யுடையவன்

அளந்த பூமி –
இப்படி அளக்கைக்கு இடம் போராத படியாய் இருக்க
இவன் அளந்து கொண்டானபடி எங்கனயோ
என்று
ஆச்சர்யப் படுகிறார் –

நின்று அளக்கைக்கு இடம் போராது-என்ன ஆச்சர்யமோ –
அளக்குமவன் அளக்கப்படுமத்தை உண்டாக்கிக் கொண்டு
அன்றோ அளப்பது –

———-

நினைத்து உலகிலார் தெளிவார் நீண்ட திருமால் அனைத்துலகும் உள் ஒடுக்கியால் மேல் கனைத்துலவு வெள்ளத்தோர்
பிள்ளையாய் மெல்லத் துயின்றானை உள்ளத்தே வை நெஞ்சே உய்த்து–93-

நீண்ட திருமால் –
அபரிச் சேத்யனான ஸ்ரீ யபதியாய் வைத்து
ஸ்வ விசஜாதியர் அடங்கலும்
சேஷ பூதர்களாக உடையவனான சர்வேஸ்வரன்
என்றபடி –

அவனுடைய அபரிச் சேத்யதையைச் சொல்ல  என்று இழிந்து
அதுக்கு உறுப்பாக இங்கே அவனுக்குச் சொல்லக் கடவ
உயர்த்தி அடங்கலும்  சொல்லி
ஏவம் பிரகாரம் -என்கிறது-

—————————————————————————–

பல தேவர் ஏத்தப் படி கடந்தான் பாதம் மலர் ஏற விட்டு இறைஞ்சி வாழ்த்த–15-

ப்ரஹ்மாதிகள் ஏத்த லோகத்தை அளந்து கொண்டவனுடைய திருவடிகளை
புஷ்பாத் யுபகரணங்களைக் கொண்டு வணங்கி ஸ்துதிக்க வல்லராகில்
நீலகண்டனை புருஷகாரமாகக் கொண்டு
மார்க்கண்டேயன் கண்ட பிரகாரத்தை அவ்யவதாநேந காணலாம்

பல தேவர் ஏத்தப் படி கடந்தான் பாதம்
என்கையாலே ஆஸ்ரயணீய வஸ்து இவன் என்று அறுதியிட்டு

(சங்கைஸ் ஸூராணாம் திவி பூதலஸ்தைஸ் ததா மனுஷ்யைர் ககநே ச கேஸரை
ஸ்துத க்ரமான் ய ப்ரஸகார ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி —
ஸ்ரீ விஷ்ணு தர்மம் மங்கள்ய ஸ்தவம் கோஷிக்குமே
குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி
என்னும் போது பல தேவர் ஏத்தச் சொல்ல வேணுமோ
ஈஸ்வரோஹம் என்பவர்களும் ஸ்வரூபத்தை உணர்ந்து ஸ்துதிக்கிறார்கள் திருவடி ஸ்பர்சத்தாலே
அன்று இவ்வுலகு அளந்தான் அடி போற்றி )

மலர் ஏற இட்டு இறைஞ்சி வாழ்த்த -வலர் ஆகில்
என்கையாலே தாங்கள் ஆஸ்ரயணீயராக நினைத்தவர்கள் செய்கிற செயலைத்

————–

ஆல நிழல் கீழ் அற நெறியை நால்வர்க்கு மேலை யுகத்து உரைத்தான் மெய்த் தவத்தோன் -ஞாலம் அளந்தானை
ஆழிக் கிடந்தானை ஆல்மேல் வளர்ந்தானைத் தான் வணங்குமாறு-17-

அவதாரத்துக்கு அடியாக திருப் பாற் கடலிலே வந்து-கண் வளர்ந்து
சிறியார் பெரியார் என்ற வாசி வையாதே
எல்லார் தலைகளிலும் ஒக்கத் திருவடிகளை வரையாதே வைத்து
வரையாதே எல்லாரையும் தன் வயிற்றிலே வைத்து-
பவனாய்  இருப்பதொரு ஆலிலையிலே கண் வளர்ந்து
ரஷிக்குமவனை-
தான் வணங்கும் பிரகாரத்தைச் சொன்னான்-

——–

தாளால் உலகம் அளந்த அசைவே கொல் வாளா கிடந்தது அருளும் வாய் திறவான் நீளோதம் வந்தலைக்கும்
மா மயிலை மா வல்லிக் கேணியான் ஐந்தலை வாய் நாகத்தணை-35-

திரு வல்லிக்கேணியிலே வாய் திறவாதே ஏக ரூபமாய்
கண் வளரக் கண்டு
திரு உலகு அளந்த ஆயாசமோ என்று அஸ்தாநே பய சங்கை பண்ணுகிறார் –

வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி -என்று
பிராட்டிக்கும் கூசித் தொட வேண்டும் திருவடிகளைக் கொண்டு-
காடும் மேடும் அளந்து திருமேனி அலற்றதோ-

மலர் மகள் முதலான பிராட்டிமார்கள் -கூசிப் பிடிக்கும் மெல்லடி – தாளால் அசைவு –
பலம் பொருந்தியதாய் இருந்தாலும் மென்மை
(ஸூ குமாரவ் மஹா பலவ்
உலகம் அளந்த -பலம்
தாளால் -ஸூ குமாரம் )
காடும் மோடையுமான லோகத்தை அளந்த அசைவோ

——————————————————————————————————————————————–

உலகளந்த மால் பால் துழாய்க்கு மனமுடையார்க்கு–திருவிருத்தம் -35-

சர்வேஸ்வரன் பக்கல் உண்டான திரு துழாய் மாலையிலே பிரவணமான
மனசை உடைய இவளுக்கு-உயிர் மட்டும் பாக்கி வைத்து சத்தை மட்டும் இருக்க
வாடை அத்தையும் சஜாதீயமான ப்ராணனைப் பறிக்கத் துழாவ
திருவிக்ரமன் சாத்தி அருளிய திருத்துழாயில் ஆசைப்பட்டு சவுந்தர்யாதிகளை இழந்து
அதுக்கும் மேலே வாடை மர்மத்தில் புக்கு மிகவும் பாதிக்கிறதே என்று
இருவருக்குமாகத் திருத் தாயார் துக்கப்பட்டாள் –

————

கமலத் தடம் போல் பொலிந்தன -மண்ணும் விண்ணும் என் காலக்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்துவான் நிமிர்ந்த
தன் கால் பணிந்த என்பால் எம்பிரான் தடம் கண்களே-42-

திருவிக்ரமனின் திருக்கண்கள்
மண்ணும் விண்ணும் எனது காலுக்குள்ளே லேசம் அடங்கி உள்ளதை நீங்களே பாருங்கோள்
என்று சொல்வதை போல்
வான் நிமிர்ந்த -தற் குறிப்பு ஏற்று அணி –

மண்ணும் விண்ணும் இத்யாதி –
பூமந்தரிஷாதி களடைய என்னுடைய காலுக்கு அளவு போராதே இருக்கிற படி பாருங்கோள்
என்பாரைப் போலே ஆயிற்று
ஆகாச அவகாசத்தை அடைய தன் திரு மேனியாலே நிரப்பிற்று-
(ஒண் மிதியில் இத்யாதி )

பரப்பை உடைத்தான பூமியும் ,
எல்லோருக்கும் அவகாச பிரதானம் பண்ணுகிற ஆகாசமும்
என் காலுக்கு அளவு போராது இருக்கிற படியை பாருங்கோள்
என்பாரை போலே யாற்று அளந்து கொண்டது
ஒண் மிதியில் இத்யாதி

நான் அளக்க புகா நின்றேன் –
உங்கள் தலையிலே என் காலை வைக்க புகா நின்றேன் -என்னில்
ந நமேயம்-என்று ஒட்டோம்-என்று
ஆணை இடுவார்கள் இறே –
அதுக்காக
இது ஓர் ஆஸ்ர்யம் பாருங்கோள் -என்பாரைப் போலே ஆயிற்று அளந்தது –

இப்போ தத் அபதானத்தை சொல்ல வேண்டுவான் என் என்னில் –
இத் தலையில் அபிமுக்யம்  இன்றிக்கே இருக்க –
தானே அவதரித்து வந்து மேல் விழுந்து எல்லார் தலையிலும் திரு அடிகளை வைக்கும் அவன் இறே
இவர்கள் பேற்றுக்கு தான் கிருஷி பண்ணுமவன் ஆயிற்று –

(நான் ஒட்டுவேன் என்னுள் இருத்துவன் என்று இல்லாமல் வெட்டிக் கொண்டு)வான் நிமிர்ந்த தன் பால் பணிந்த என் பால் –
இத்தால் இந்த அனுகூல்யத்துக்கு அடியான மூல ஸூஹ்ருதமும் தானே என்கிறது
தான் முற்பட வணங்கி
பின்னை இத் தலையை வணங்குவித்தான் –
முற் தீமை (முயற்சி)செய்தான் தானே என்கை–இத்தால்
பேறு தன்னது என்று தோற்றும் படி ஆயிற்று
திரு கண்களில் விகாசம்-

——–

இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகு அளந்த திருத் தாளினை நிலத்தேவர் வணங்குவர்–64-

உலகு அளந்த திருத் தாளிணை –
இவை அறியுமாம் -அறியாது ஒழியுமாம்  –
என் உடம்பை நான் விடேன் -என்று
ஸ்வீ கரிக்கும் ஸ்வா பாவனாய்  உள்ளவனை –

இவை அறியாது இருக்கச் செய்தே –
தானே எல்லை நடந்து-மீட்டுக் கொண்டான் இறே –

நிலத் தேவர் வணங்கும் –
சம்சாரத்தில் வர்த்தியா நிற்கச் செய்தே –
விண்ணுளாரிலும் சீரியர் -என்னும்படியான
பூஸூரர்  ஆனவர்கள் –
உலகு அளந்த திருத் தாளினை நெறி இழுக்காமை வணங்குவர் –

————–

பொரு கடல் சூழ் நிலம் தாவிய எம்பெருமான்–68-

அவனுடைய அழியாத நித்ய விபூதியோடு ஒத்து உள்ளவள் அல்லையோ நீ –
அவன் உன்னை அழிய விட்டு இருக்குமோ –
ஆவது அழிவது ஒரு விபூதியும் –
அழியக் கூடாததொரு விபூதியுமாய் இறே இருப்பது –

அழிய விட்டு மீட்டிக் கொள்ளும் லீலா விபூதியை –
முதலிலே அழிகைக்கு சம்பாவனை இல்லாதபடி நோக்கும் நித்ய விபூதியை —

பொரா நின்றுள்ள கடலாலே சூழப்பட்ட பூமியை தாவி அளந்து கொண்டு –
அச் செயலாலே ஆஸ்ரித வர்க்கத்துக்கு அடங்க நாதனானவன் –

புவனி எல்லாம் பீர் ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே-69-

புவனி இத்யாதி –
1-அவன் படியை அறிந்தால் வரும் என்று இருக்க வேண்டாவோ –
2-இந்த்ரன் வ்யாஜ்யமாக எல்லார்-தலையிலும் -நிர்ஹேதுகமாக –
அமரர் சென்னிப் பூவாய் இருக்கிற திருவடித் தாமரைகளை வைக்குமவன் அன்றோ —

3-இப்படி எல்லாருக்கும் உபகாரகனாய் இருக்குமவன் -உன்னை விடுமோ –

4-தாமஸ பிரகிருதிகள்  ஆனவர் மேலிடப் புக்கால் வந்து உதவுமவன் –
தமஸ்ஸூ தான் வந்து அனுபவிக்கப் புக்கால் விட்டு இருக்குமோ –
தன்னுடைமையை பிறர் -என்னது -என்று இருந்தால் –
தன்னை அரத்தி யாக்கி -அவர்கள் பக்கலிலும் வந்து இரந்து கொள்ளுமவன் –
இரக்க வேண்டாதே -தன் உடைமையான உன்னை -விட்டு இருக்குமோ –
(தமோ குணம் இரவு -தமஸ் குணவான் மஹா பலி )

4-காடும் மேடுமான பூமியில் ஒன்றும் விடாதவன்-
உன்னை இங்கனே அறிவு அழிய விடுமோ –

5-மண்ணுக்குப் பதறி இரந்தவன்
பெண் ஒரு தலை யானால் ஆறி- இருக்குமோ –

——–

ஞாலந்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும்   சீரியரே – – -79-

புழுக் குறித்தது எழுத் தாமா  போலே –
ஒருகால் ரஷித்து விடுகை அன்றிக்கே –
ஜகத்தை அடைய வளைந்து கொண்ட திருவடிகளை உடையவனை –

எல்லாம் செய்தாலும் ஒன்றுமே செய்யப் பெற்றிலோம் என்று
இவற்றின் உடைய ரக்ஷண சிந்தனை செய்து கிடக்கிற படி
உன் அடியார்க்கு என் செய்வான் என்றே இருத்தி
இந்திரனுக்கு இழந்தத்தைக் கொடுத்து -(மஹா பலி -அம்ருத மதனம் இரண்டிலும் -)
தான் பேர்ந்து கிடக்கிறபடி யாதல்
தனது படுக்கையாக பாற்கடலையே கடைந்தான் அன்றோ

———

பாரளந்த பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்த வஞ்சித்து ஒரரசே அருளாய்--80-

பார் அளந்த பேர் அரசே –
இருளின் கையில் அகப்பட்ட ஆதித்யனை மீட்கும் போது –
மகா பலி-கையிலே அகப்பட்ட பூமியை மீட்டவனே வேணும் போலே காணும் –

அளந்த –
பூமிப் பரப்படைய அளந்த திருவடிகளைக் கொண்டு இவ்விருளையும் அளந்தால் ஆகாதோ –
இருளார் வினை கெட இறே-(39 ) செங்கோல் நடத்துகிறது –
(அளப்பது ஸ்வ அதீனமாக்குவது )

பேரரசே –
எளிய செயல்கள் செய்யுமவன் அல்லனே –
செய்யுமவை அடங்க பெருத்தாயிற்று இருப்பது –

———-

ஆணிப் பொன்னன்ன சுடுர் படு மாலை -உலகு அளந்த மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரி இல்லா ஆணிப் பொன்னே அடியேனாவி அடைக்கலமே-85-

உலகு அளந்த மாணிக்கமே –
ரஷகரான இந்த்ராதிகளும் (இந்திரன் கிழக்கு திக்பலர் தானே )தங்களால் முடியாமை கை வாங்கின-வன்றும் –
தான் வந்து கைக் கொண்டு -தாமச பிரக்ருதிகளை( மஹா பலியை -நமுசி பிரக்ருதிகளை )தள்ளி நோக்குமவன் இறே –காடும் மலையுமான ஒரு விபூதியை அளந்து கொண்டது ஒரு மாணிக்கத்தை இட்டு காணும் –
மாணிக்கமே –பெரு விலையனாய் இருக்கை -தன்னைப் பாராதே அழிய மாறின படி –

——-

அன்று உலகு ஈரடியால் தாவின வேற்றை எம்மானை எஞ்ஞான்று தலைப் பெய்வனே--89-

அன்று உலகு இத்யாதி-
ஒரூரை ரஷித்தால் போலே இப் பூமியாக ரஷிக்குமவனை –

ஏற்றை –
லோகத்தை அடைய தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொள்ள பெற்ற  படியால்
மேணானித்து இருக்கிறவனை –
இத்தால் வந்த பலமும் தன்னதாய் இருக்கும் படி

எம்மானை –
அவன் வெற்றியாலே மேணானித்து இருக்க வல்லன் ஆனால் போல் ஆயிற்று-
இவர் அவன் செயலுக்கு தோற்க வல்லபடி –

எஞ்ஞான்று தலைப் பெய்வனே –
அவன் படிகள் இவை யான பின்பு-நான்  இழவல்லது பொருள் இழவு இல்லை இறே –
அப் பேறு பெரும் நாள் என்றோ என்கிறார் -(வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே )

அபீதா நீம் சகாலஸ் ஸ்யாத்-பதினாலு ஆண்டு கழித்தால் வரக் கடவது இறே –

அந்நாள் இன்றாகப் பெறுவது -காண் -என்றாப் போலே –

————-

மாவலி மாட்டு இரும் குறளாகி இசையவோர் மூவடி வேண்டிச் சென்ற பெரும் கிறியானை யல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே--91-

மாவலி இத்யாதி –
தான் காவலாக இட்டு வைத்த கடல் -இவ் விபூதியை களவு காணும் அன்று-
தன் வயிற்றிலே இட்டு வைத்துக் கொண்டு நோக்கும் –

நான் என்னது -என்று இருப்பன் ஒருத்தன் இத்தை-அபஹரித்த அன்று
அவனோடு இசைய இருந்து சென்று கொள்ளும் –

மாவலி மாட்டு –
ஆசூர பிரக்ருதி யானவன் பக்கலிலே சென்று கிட்டிற்று –
தன்னை ஒழிய வேறு ஒன்றைப் பேணாத-நெஞ்சு உடைய என் பக்கலிலே அன்றோ கிட்ட அடுப்பது –

இரும் குறளாகி –
பெரிய குறளாகி –
அதாவது
லோகத்திலே வாமனர்கள் அடைய வளர்ந்து அருளின இடத்துக்கு ஒப்பாம்படி ஆயிற்று -இவனுடைய சிறுமை –

இசைய –
இசைவிக்க கிருஷி பண்ணினவன் தானேயாய் –
அவன் இசைவும் தன்னதீனமாம் படியாக-உடையனாய் –

ஆரேனும் வேண்டா என்னிலும்
அவனும் இசைந்து கொடுக்கும் படியும்

ஓர் மூவடி வேண்டிச் சென்ற -இரண்டு அடியை இரந்து –
இரண்டு அடியும் அளந்து விடாதே-
ஓர் அடிக்கு சிறை இடும்படி மூன்று அடியை இரந்தவனை –

வேண்டிச் சென்ற பெரும் கிறியானை யல்லால் –
தான் சர்வ நிரபேஷன் என்று தோற்றாதபடி சென்றவன் –
நாம் கொடுக்கிற வித்தால் அல்லது தரியான் – என்று தோற்றும்படியாக யாயிற்று சென்றது –

தன் ஈஸ்வரத்வத்தைக்  களவு கண்ட படி –
அவாப்த சமஸ்த காமன் ஓர் அபேஷை தோற்ற வந்தான் -என்று இத்தனை தோற்றாமை –
இரப்பாளனாய் சென்றபடி –
அவன் தயை பிறந்து கொடுக்கும் படியான வடிவைக் கொண்டு –

பெரும் கிறியான் –
பெரு விரகன் –

அடியேன் –
மகா பலியைப் போலே ஓன்று கொடுக்க இருக்கிறார் அல்லர் –
இந்த்ரனைப் போலே ஓன்று பெற இருக்கிறார் அல்லர் –
அச் செயலுக்குத் தோற்று எழுதிக் கொடுக்குமவர் இறே இவர் –

நெஞ்சம் பேணலதே –
பரத்வதையும் கொள்ளாது –
பாவோ நான் யத்ர கச்சதி –

ஒருங்கற –
பிறிகதிர் படாமே -ஒரு காலே என்றாய் -நிச்சேஷமாக -என்றபடி –
யானே என் தனதே என்று இருந்த என் நெஞ்சையும் நான் அறியாதபடி அபஹரித்தான் –

——————————————-

தாமரை யுந்தித் தனிப் பெரு நாயக மூவுலகளந்த சேவடியோயே -திருவாசிரியம் -1-

மூ வுலகு அளந்த
தன் பக்கல் வந்து அனுபவிக்க மாட்டாதாருக்கு அவர்கள் இருந்த இடத்திலே சென்று அனுபவிப்பிக்கும்

சேவடியோயே –
இழந்த இழவை மீட்டு ரஷியாதே காதுகனனே யானாலும் விட ஒண்ணாதபடியே யாயிற்று
திருவடிகளின் போக்யதை இருக்கிறபடி-

கண்ணழிவற்ற அழகையும் குணங்களையும் அனுபவித்தார் –

——

மா முதலடி போதொன்று கவிழ்த்து அலர்த்தி மண் முழுதும் அகப்படுத்து ஒன சுடர் அடிப் போது ஓன்று விண் செலீஇ
நான்முகப்புத்த் தேழ் நாடு வியந்து உவப்ப வானவர் முறைமுறை வழி பட நெறிஇ–5-

மா முதல் -பரம காரணனான உன்னுடைய
அடி போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி-திருப் பாதம் ஆகிற ஒரு சிவந்த தாமரைப் பூவை கவிழ்த்துப் பரப்பி
மண் முழுதும் அகப்படுத்து -பூமிப் பரப்பு எல்லாம் கைப் பற்றியும்
ஒண் சுடர் அடி போது ஓன்று-அழகிய தேஜஸ்ஸை யுடைய புஷ்பம் போன்றதான மற்றொரு திருவடியை
நான் முகப் புத்தேள் -பிரமனாகிற தேவதையின்
நாடு வியந்து உவப்ப –லோகமானது அதிசயப்பட்டு மகிழ்ச்சி யுறவும்
வானவர் நெறீ இ முறை -அவ்வுலகத்தில் உள்ள தேவதைகள் -சரியான வழியில் செல்லுகையை முறையிடுகிற
முறை வழி பட -ஸாஸ்த்ர வழிப்பட வணங்கும் படியும்
விண் செலீ இ-ஆகாசத்தில் செலுத்தியும்
தாமரை காடு மலர்க் கண்ணொடு-தாமரைப் பூக்கள் நிறைந்த காடு புஷ்பித்தால் போலே இருக்கிற திருக் கண்களோடே கூட
கனி வாய் உடையதுமாய் -பழம் போன்ற சிவந்த திருப் பவளத்தை யுடையதாய்
இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன-அநேகமான கிரணங்களை உடையதாய் -ஆயிரம் ஸூர்யர்கள் உதித்தால் போலே இருக்கிற
முடி பற்பல-பல க்ரீடங்களையும்
கற்பகக காவு வன்ன-கற்பக வனம் போல் இருக்கிற
தழைத்த ஆயிரம் தோள்-ஓங்கி வளர்ந்துள்ள ஆயிரம் திருத் தோள்களையும் உடையனாய்
நெடியோய்க்கு அல்லதும் -எல்லாருக்கும் மேலானவனாய் விளங்குகிற எம்பெருமானை ஒழிந்த மற்று எவர்க்கும்
அடியதோ வுலகே –இவ் வுலகமானது அடிமைப் பட்டதோ –

மா முதல் அடி போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி-
நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள்
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் அன்று
கரு மாணியாய் இரந்த கள்வனே உன்னைப்
பிரமாணித்தார் பெற்ற பேறு–இரண்டாம் திருவந்தாதி -61-என்கிறபடியே

திரு உலகு அளந்து அருளுவதாக நின்ற போது நின்ற திருவடி அந் நிலையில்
ஒண் மிதியில் புனலுருவி ஒரு கால் நிற்ப–திரு நெடும் தாண்டகம் -5- என்கிறபடியே
ஆவரண ஜலத்துக்கு உட்பட்டத்தை அடைய தன் கீழே இட்டுக் கொண்டது –

வளர்ந்த திருத் தோள்கள்
வியாபித்து திக்குகளை அளந்து கொண்டன

அன்று கரு மாணியாய்
ஸ்ரீ யபதியான நீ –
உண்டு -என்று இட்ட போதொடு -இல்லை என்று மறுத்த போதொடு வாசியற
ப்ரீதியோடே போம்படியான
இரப்பிலே தகண் ஏறின வடிவை உடையையாய்க் கொண்டு இரந்து
உன் படி ஒருவருக்கும் தெரியாதபடி மறைத்து வர்த்திக்கிறவனே
நீ இச் செயல் செய்தது இந்திரன் ஒருவனுடைய அபேக்ஷிதம் செய்கைக்கு அன்று இறே
ஆரேனுமாகத் தன் திருவடிகளில் தலை சாய்த்தார்க்குமாக தன்னை அழிய மாறியும் கார்யம் செய்வான் ஒருவன் என்று
உன் படியை அனுசந்தித்து ஆஸ்ரிதர் மார்விலே கை வைத்து உறங்குகைக்காகச் செய்த செயல் இறே இது
கீழ்ச் சொன்ன படியே –

மா முதல் அடிப் போது -என்று
பரம காரணமானவனுடைய திருவடி என்னுதல் –

அன்றிக்கே
மா முதல் அடிப்போது -என்றது
திருவடி தனக்கேயாய்
சேஷ பூதர் அடைய வந்து சேருவது திருவடிகளில் ஆகையால்
அவர்களுக்குப் பரம ப்ராப்யமான திருவடி என்னுதல்

அடிப்போது -என்றது
அடி யாகிற செவ்விப் பூ -என்றபடி –
அடியாகிய அன்று அலர்ந்த செவ்விப்பூ -என்றபடி
அடி -திருவடி -திருவடி யாகிற செவ்விப் பூவை

கவிழ்த்து அலர்த்தி
திருவடியைப் பரப்பி எல்லாவற்றையும் அளந்து கொள்ளுகிற இடத்தில் சிறியதின் தலையில் பெரியது இருந்தால்
சிறியது நெருக்குண்ணக் கடவது –
அப்படியே திருவடியின் கீழ்ப் பட்ட பதார்த்தங்கள் நெருங்குண்டது இல்லையோ என்னில் –
ஒரு செவ்வித் தாமரைப் பூவை கவிழ்த்து அலர்த்தினால் அதினுள் அல்லிக்கு உள்ள நெருக்கு இறே
திருவடியின் கீழ்ப் பட்ட பதார்த்தங்கள் உள்ளது
ஒண் மிதி என்னக் கடவது இறே

மண் முழுதும் அகப்படுத்து
புனலுருவி என்கிறபடி –
ஆவரண ஜலத்துக்கு உட்பட்டது அடையத் தன் கீழே இட்டுக் கொண்டு –

இது வாகில் இத் திருவடி செய்தது –
மற்றைத் திருவடி செய்தது என் என்னில்

ஒண் சுடர் அடி போது
ஒரு காலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து எண் மதியும் கடந்து அண்டமீது போகி இரு விசும்பினூடு போய்
எழுந்து என்று தொடங்கி –மண் முழுதும் அகப்படுத்து –என்கிறபடியே
மேல் உள்ள லோகங்கள் அடைய அளந்து கொண்டது –

ஒண் சுடர் அடி போது ஓன்று
மநுஷ்யர்களுக்கு எல்லாருக்கும் உள்ள துர்மானம்-இந்த்ராதிகளில் ஓர் ஒருவருக்கும் உண்டாய் இருக்கும் –
அப்படிப்பட்டவர்களை அடைய பக்ந அபிமானர் ஆக்கிக் கொள்ளுகையாலே வந்த புகரை உடைத்தாய் இருக்கை –
அழகிய சுடரை உடைய செவ்விப் பூவாகிய ஒரு திருவடி –

விண் செலீ இ
விண்ணை அடைய வியாபித்தது –
எவ்வளவில் சென்றது என் என்னில்

நான் முகப் புத்தேள் நாடு வியந்து உவப்ப
சதுர்முகன் ஆகிற தேவதையினுடைய லோகமானது இத்தைக் கண்டு வியப்பதும் செய்தது –
அந் நீர்மை ஏறிப் பாயாததொரு மேடு தேடித் போந்தோம் ஆனோம் –
நீர்மை இங்கே வந்து ஏறுவதே –
இஃதோர் ஆச்சர்யம் இருந்தபடி என் -என்று விஸ்மயப்படுவதும் செய்தது
திருவடிகளுக்கு ஆகாதார் இல்லை யாகாதே

அவன் உளனாக்க நாம் அல்லோம் என்று அகலப் பார்த்தாலும் அகல விரகு இன்றிக்கே இருந்ததீ –
இது ஒரு அலாப்ய லாபம் இருந்தபடியே என்று உகப்பதும் செய்து
அவ்வளவில் ப்ரஹ்மா செய்தது என் என்னில் –

குறை கொண்டு நான் முகன் குண்டிகை நீர் பெய்து
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி -கறை கொண்ட
கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான்
அண்டத்தான் சேவடியை அங்கு –ஸ்ரீ நான்முகன் -9-என்கிறபடியே

நினைவு இன்றிக்கே இருக்க திருவடி கையிலே வந்து இருந்தவாறே
அலாப்ய லாபத்தால் தடுமாறிச் சுற்றிலே பார்த்தான் –
அவ்வளவில் தர்ம தத்வம் நீராய்க் குண்டிகையிலே புக்கு இருந்தது –
அத்தைக் கொண்டு திருவடியை விளக்கினான் –
அவ்வளவில் இது நமக்கு நல்ல இடம் -என்று சிவன் தன் தலையை மடுத்தான்-

த்ரவீ பூதஸ் ததா தர்மோ ஹரி பக்த்யா மஹாமுநே
க்ருஹீத்வா தர்மபாநீயம் பதம் நாதஸ்ய துஷ்டயே
ஷாளிதம் பரயா பக்த்யா பாத்யார்க்க்யாதி ரர்ச்சிதம்
ததம்பு பதிதம் த்ருஷ்ட்வா ததார சிரஸா ஹர
பாவநார்த்தம் ஜடா மத்யே யோக்யோஸ் மீதிய வதாரணார்த்
வர்ஷாயுதாந்யத பஹுந் ந முமோச ததா ஹர–ஈஸ்வர சம்ஹிதை —

(மா முனிவரே திரு உலகு அளந்து அருளின அச்சமயம் ஹரியின் இடம் பக்தியால் தர்மம் ஜலம் ஆயிற்று
ஜெகந்நாதானான அவன் சந்தோஷத்துக்காக அந்த ஜலத்தைக் கொண்டு அவன் திருவடிகள்
என்னால் மேலான பக்தியுடன் விளக்கப் பட்டது
பாத்யம் அர்க்யம் முதலானவைகளால் பூஜிக்கப் பட்டது
விழுந்த ஜலத்தைப் பார்த்து நான் பரிசுத்தப்படுத்த தகுந்தவனாய் இருக்கிறேன் என்று நிச்சயத்தில்
சிவன் ஜடையில் நடுவில் தாங்கினான்
பல வருஷங்கள் ருத்ரன் அத்தைத் தாங்கிக் கொண்டே விடாமல் இருந்தான் )–என்று
பாவநார்த்தம் ஜடா மத்யே–சிரஸா ஹர–தன்னுடைய ஸூத்யர்த்தமாக ஜடையில் தரித்தான் –

யோக்யோஸ் மீதிய வதாரணார்த்–
திருவடிகளுக்கு யோக்யர் அல்லாதார் இல்லை என்று பார்த்தான்

வர்ஷாயுதாந்யத பஹுந் ந முமோச ததா ஹர–என்கிறபடியே
நற் சரக்கு வந்தால் விடுவார் இல்லை இறே
கிடையாதது கிடைத்தவாறே விடேன் என்று தலையில் வைத்துத்
திருவடியைக் கட்டிக் கொண்டு நெடுங்காலம் நின்றான்

சது முகன் கையில் சதுப்புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கி –ஸ்ரீ பெரியாழ்வார் -4-7-3-என்று இறே
கங்கைக்கு வரலாறு (வரவாறு ) சொல்லுகிறது

முந்துற ப்ரஹ்மாவின் கையிலே இருந்து
பின்னர் சர்வேஸ்வரன் திருவடிகளில் தங்கி –
அநந்தரம் ருத்ரன் தலையிலே வந்து விழுந்தது –

இத்தால் ப்ரஹ்மா தான் பெற்றது என் என்னில்

தவம் செய்து நான்முகன் பெற்றான் தாரணி
நிவந்து அளப்ப நீட்டிய பொற் பாதம் -சிவந்த தன்
கை யனைத்தும் ஆரக் கழுவினான் -கங்கை நீர்
பெய்து அனைத்துப் பேர் மொழிந்து பின் -ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி -78-என்றபடி

அநேகம் கைகளை படைத்ததால் உள்ள பிரயோஜனம் பெறும்படி திருவடியை விளக்கப் பெற்றான்

குறை கொண்டு –
தன்னுடைய வெறுமையை முன்னிட்டுக் கொண்டு

குண்டிகை நீர் பெய்து மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி –
வேதத்தில் அநந்ய பரமான வாக்யங்களைக் கொண்டு மங்களா சாசனம் பண்ணி

கறை கொண்ட –
இவன் ஆவி விவேகத்தால் விளைவது அறியாமே அநர்த்த ரூபங்களாய் இருக்குமவற்றைச் செய்யா நின்றான் –

இனி இங்கன் ஒத்த அமங்களங்கள் வாராது ஒழிய வேணும் -என்று
விஷம பிரஜைகள் மேலே தீர்த்தைக் கொண்டு விநீதனாக வேணும்-என்று தெளிக்குமா போலே
ருத்ரன் ஜடையில் விழும்படி கழுவினான் –

இதுவாகில் அவன் செயல் –
அவ்வவ லோகத்தில் உள்ள தேவதைகள் செய்தது என் என்னில்

வானவர் முறை முறை வழி பட நெறீ இ
தேவர்கள் நெறி பட்டு
வானவர் நெறீ இ-முறை முறை வழிபட -என்று அந்வயம் –

தேவர்கள் நெறி பட்டு பகவத் சமாஸ்ரயணம் பண்ணும்படியைச் சொல்லுகிற
சாஸ்திரங்களின் வழியே திரளாக ஆஸ்ரயிக்க-
திரு அணுக்கன் திரு வாசலில் திரள் திரளாகப் புக்கு திருவடி தொழுமா போலே
ஸமாராதன விதியின் படி வழிபட்டு ஆஸ்ரயிக்க

அவ்வளவில் அவன் செய்தது என் என்னில்

தாமரை காடு மலர்க் கண்ணொடு கனி வாய் உடையதுமாய்
ஆரேனுமாகத் தன திருவடிகளைத் தலையிலே வைத்தால் ஆதித்ய சந்நிதியில் தாமரை போலே
திருக்கண் செவ்வி பெறுமாயிற்று-
தாமரைக் காடு அலர்ந்தால் போலே இருக்கிற திருக் கண்ணோடே கனிந்த வாயையும் யுடைத்தாய் இருப்பதுமாய் –

இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன
நாம் இங்கு காண்கிற ஆதித்யனைப் போல் அன்றிக்கே
அநேக ஆயிரம் கிரணங்களையும் கீழ்ச் சொன்ன விசேஷங்களையும் உடையராய் இருப்பார்
ஆயிரம் ஆதித்யர்கள் -சேர உதித்தால் போலேயாய்

கற்பகக காவு பற்பல வன்ன –
பலவான கற்பகச் சோலை -போலே –
இப்படி இருக்கிறது எது என்னில்

முடி தோள் ஆயிரம் தழைத்த
ஞாயிறு ஆயிரம் மலர்ந்தால் போலே இருக்கிறது திரு அபிஷேகம்
பலவகைப்பட்ட கற்பகச்சோலை போலே இருக்கிறது –
அநேகம் ஆயிரம் பணைத்த திருத் தோள்கள் –

நெடியோய்
இப்படி தன்னை அழிய மாறி இரந்து-அவன் கார்யம் செய்து -தலைக் கட்டச் செய்தேயும் –
தன்னை விஸ்வசித்து –
உடனே கிடந்தவன் முடி அவிழ்த்தனைப் போலே அநு தபித்து –
மஹா பலி போல்வார் நலிவதற்கு முன்னே
முற்கோலி நோக்கப் பெற்றிலோம் -பறி கொடுத்தோம் -பிற்பாடாரானோம் -என்று நோக்கி
லஜ்ஜித்து ஒன்றும் செய்யாதானாய்த்
தன் குறையை நினைத்து இருக்குமவன் ஆயிற்று –
செய்ய வேண்டிவற்றை நீள நினைப்பவன் -நெடியோன் -என்றபடி

நெடியோய்க் கல்லது அடியதோ வுலகே
இப்படி சர்வ ரக்ஷகனான தன்னை ஒழிய ஜகத்து மற்றும் சிலர் கால் கீழே கிடந்ததோ
மங்களா சாசனம் பண்ண

எல்லாரையும் ஆஸ்ரயிப்பித்துக் கொள்ளுகிறவர்கள் தலை மேலே காலை வைத்த
உனக்கு மங்களா சாணம் பண்ண அடுக்குமோ –
சிலர் கால் கீழே கிடந்தவர்களிலே சிலருக்கு மங்களா சாசனம் பண்ண அடுக்குமோ –
உன் காலின் கீழே துகை உண்டவர்களுக்கு மங்களா சாசனம் பண்ண அடுக்குமோ –
சொல்லிக் காண்

நீ அன்றோ நெடியோன் –
அனைவரிலும் சாலப் பெரியவனான திரிவிக்ரமன்
நீ அன்றோ என்றவாறு

——-

படைத்து உண்டு உமிழ்ந்து அளந்து தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும் கடவுள் நிற்ப–6-

எல்லை நடந்து மீட்டு –
இப்படி சர்வ வித ரக்ஷணங்களையும் பண்ணச் செய்தே

பின்னையும் தன்னை விஸ்வசித்து அருகே கிடந்தவனை –
மடி தடவினவனைப் போலே அநு தபித்து-
ஒன்றும் செய்யாதானாய் மேன்மேல் என ரக்ஷண உபாயங்களை சிந்தித்து –

ஒருவரை இருவரை அன்றிக்கே வரையாதே எல்லாரையும் ஓக்க ரக்ஷிக்கிற அத்விதீய பரதேவதை யானவன் –
ஆரோ வருவார் -என்று

குஹேநே சார்த்தம் தத்ரைவ ஸ்திதோ அஸ்மி திவசாந் பஹுந்
ஆசயா யதிவா ராம புநஸ் சப்தா பயேதி தி -அயோத்யா -59-3-
பெருமாள் மீண்டும் கூப்பிடுவாரோ என்னும் நப்பாசையாலே குஹனுடன் கூட அங்கேயே பல தினங்கள் தங்கினேன் )
என்கிறபடியே அவசர பிரதீஷனாய் நிற்க

இவ்வோ உபகாரங்களை பண்ணிற்றிலனே யாகிலும் ஆஸ்ரயிக்கைக்கு முட்டுப் பொறுக்கும்
அத்விதீய பரதேவதை இவன் அல்லது இல்லை என்கை

——————————–

பருகலாம் பண்புடையீர் பாரளந்தீர் பாவியேம் காண்பரிய நுண்புடையீர்–8-

பருகலாம் பண்புடையீர்
பருகலாம் என்று ஒரு த்ரவ்ய த்ரவ்யத்தைச் சொல்லுமா போலே சொன்னபடி என்
பருகலாம் நீர்மையை யுடையீர் (ஸுலப்யம் நீர் தன்மை உருகும் தன்மை )

பாரளந்தீர்
சொன்ன நீர்மைக்கு உதாஹரணம்

———-

சீரால் பிறந்து சிறப்பால் வளராது
பேர் வாமன் ஆக்காக்கால் பேராளா -மார்பாரப்
புல்கி நீ யுண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பு அரிதே
சொல்லு நீ யாம் அறியச் சூழ்ந்து –16-

அவஸர ப்ரதீஷனாய் இருக்கிற அளவேயோ
இத்தைப் பெறுகைக்கு அர்த்தியாய் அன்றோ நிற்கிறது என்கிறார் –
(நீல நிறத்தோடு நெடும் தகை வந்து அங்கு ஓர் ஆல் அமர் வித்தின் அரும் குறள் ஆனான் -கம்பர்
அதிதி கஸ்யபர் –இந்திரனுக்காகவே பெற்றார்கள் -விஜய முஹூர்த்தம் திருவோண நக்ஷத்ரம்
இந்திரனுக்காக -ராஜ்யம் மீட்டுக் கொடுக்கவே பயோ விரதம் பண்ணி பெற்றாள் )

சீரால் பிறந்து
மஹதா தபஸா ராம மஹதா ஸாபி கர்மணா -(ஆரண்ய -66)
சக்கரவர்த்தி தான் தேடின அர்த்தமும் பண்ணின தபஸ்ஸூம் அழிய மாறிப் பெற்றால் போலே யாதல்
ஸ்ரீ வஸூ தேவர் அநந்த வ்ரதம் அனுஷ்ட்டித்துப் பெற்றால் போலே யாதல் பிறந்தாலாகாதோ

(அநந்த வ்ரதம் -சாடு-பல விரதங்கள் என்றும் அநந்த விரதம் என்று ஒன்றின் பெயர்
ராம ரத்னம் கோபால ரத்னம் வாமன ரத்னம் )

சிறப்பால் வளராது
ஸ்ரீ ஸூ மித்ரையாரும் வசிஷ்டாதிகளும் பேணி வளர்க்க வளர்ந்தால் போலே யாதல்
அனுகூலர் தேடின வெண்ணெயும் பிரதிகூலருடைய உயிரும் மாள வளர்ந்தால் போலே யாதல் வளர்ந்தால் ஆகாதோ

பேர் வாமன் ஆக்காக்கால்
நாட்டில் வாமனர்கள் எல்லாம் வளர்ந்து அருளினவோ பாதியாக வாமனனாக வேணுமோ
ஸ்ரீ யபதி என்ற ஒரு பேர் ஆனால் ஆகாதோ
ஒரு ருஷி பத்னி பக்கலிலே பிறந்து (அதிதி ஆஸ்ரமம் தானே )
பேணுவார் இன்றிக்கே வளர்ந்து
பேரும் வாமனனாகா விட்டால் உன் கையிலே பருத்தி பட்ட பன்னிரண்டும் பட்டு
அணைவது உண்பது உமிழ்வதான இந்த பூமி நீர் ஏற்பதாய் பட்டாயோ

பேராளா –
கார்யம் செய்வதற்கு முன்னே எத் திறம் என்கிறார்
உன்னுடைமையில் உனக்கு கிடக்கிற ஓரத்துக்கு -பக்ஷ பாதத்துக்கு -எல்லை காண்கிறீலோமீ

(உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு எத்திறம் சொல்லாமல்
முன்னமே எத்திறம் சொல்லி ஏங்கி இருந்து எளிவே என்றாரே
அதே போல் இங்கும் பேராளா என்று முன்னம் அருளிச் செய்கிறார் )

மார்பாரப் புல்கி நீ யுண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பு அரிதே சொல்லு நீ யாம் அறியச் சூழ்ந்து
நீ இப்படி எளியையாய்
அது இருக்கைக்கு அடி சூழ்ந்து சொல்லு -புத்தி பண்ணி அருளிச் செய்ய வேணும்

ஸர்வேஸ்வரனும் தன்னுடைய அவதாரத்தைப் போய் புக்கால்
ஜென்ம கர்ம ச மே திவ்யம் –என்னும் அத்தனை

வேதமும் பேசப் புக்கால்
தஸ்ய தீரா பரிஜா நந்தி யோநிம் -என்னும் –
சூழ்ந்து -விசாரித்து

(த்வந் நிர்மிதா ஜடரகா சா தவ த்ரி லோகீ கிம் பிஷனாத் இயம் ருதே பவதோ துராபா
மத்யே கதா து ந விசக்ரமிஷே ஜகச்சேத் த்வத் விக்ரமை கதம் இவ ஸ்ருதிர் அஞ்சிதா ஸ்யாத்—ஸ்ரீ அதி மானுஷ ஸ்தவம் 16-)

(ஹே தேவ
த்வந் நிர்மிதா –தேவரீரால் படைக்கப் பட்டதும்
ஜடரகா சா தவ –ஒரு கால் தேவரீருடைய திரு வயிற்றிலே கிடந்து ரக்ஷை பெற்றதுமான
இயம் த்ரி லோகீ –இந்த மூ உலகும்
பிஷனாத் ருதே –மகா பலி இடத்தில் யாசிப்பது தவிர மற்ற உபாயத்தினால்
பவதோ துராபா கிம் –தேவரீருக்கு கிடைக்க அரிதோ
யாசித்துப் பெறாமல் ஸ்வா தந்த்ரியத்தினாலேயே பெற முடியாததோ
மத்யே கதா து -இடையில் ஒரு காலத்தில்
ந விசக்ரமிஷே ஜகச்சேத் த்வத் –இந்த உலகத்தை பிஷா வ்யாஜத்தினால் மூவடி கொண்டு அளந்து அருளா விடில்
விக்ரமை கதம் இவ ஸ்ருதிர் அஞ்சிதா ஸ்யாத்—வேதமானது தேவரீருடைய விக்ரமங்களினால்
எங்கனம் மேன்மை பெற்றதாகும் )

————-

மாணி யுருவாகிக் கொண்டு உலகம் நீர் ஏற்ற சீரான்–20-

காணப் புகில் அறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம் நாணப்படும் அன்றே நாம் பேசில் –
நாம் அறியாதே காணப் புகுதல்
அர்த்த தத்வம் இருந்த படியே பேசப் புகுதல் செய்தால்
அறிவுக்கு வாய்த் தலையான நெஞ்சுக்கு நாண வேண்டாவோ

மாணி யுருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்
இத்தைத் தீண்டுகைக்கு அவன் ப்ரவர்த்தித்த படி
அவன் செய்த வியாபாரம் ஆகையால்
இதுவும் கூசாமல் தீண்டிற்று என்னவுமாம்

(சர்வ விஷயமாக அவன் ப்ரவர்த்தித்த படி-
ஒருவரைப் பிடிக்க ஊரையே வளைத்த படி )

திருவாகம் தீண்டிற்றுச் சென்று
தன்னை அறிந்தால்
விலக்ஷணமான வடிவைச் சென்று தீண்டக் கடவதோ –

(தன்னை -என்று
தாழ்ந்து இருக்கும் தன்னை என்றும்
பர கத ஸ்வீ காரம் பண்ணும் அவனை என்றுமாம்)

———

அடியால் படி கடந்த முத்தோ அதன்றேல் முடியால் விசும்பு அளந்த முத்தோ நெடியாய் செறி கழல்கள் தாள் நிமிர்த்துச் சென்று
உலகம் எல்லாம் அறிகிலமால் நீ யளந்த வன்று–27-

அடியால் படி கடந்த முத்தோ –
முத்து என்று மவ்க்த்யமாய் -(பிள்ளைத்தனமாய் )
அத்தாலே -லக்ஷணையாலே -அழகாய்
அடியாலே பூமியை அளந்த அழகோ

அது அன்றேல் முடியால் விசும்பு அளந்த முத்தோ –
திரு முடியாலே ஆகாசத்தை அளந்த அழகோ -என்னவுமாம்

ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை விரைந்து நன் தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ கடா கின்று தேன் நவின்ற
விண் முதல் நாயகன் நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய்
மண் முதல் சேர்வுற்று அருவி செய்யா நிற்கும் மா மலைக்கே – திரு விருத்தம்-50-

சிலம்புஞ் செறி கழலும் சென்றிசைப்ப விண்ணார்
அலம்பிய சேவடி போய் அண்டம் -புலம்பிய தோள்
எண்டிசையும் சூழ இடம் போதாது என் கொலோ
வண்டுழாய் மாலளந்த மண் ———மூன்றாம் திருவந்தாதி —90-

செறி கழல் -என்கையாலே
திருவடிகளிலே முத்து உண்டாகையாலும்

நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய் —என்கையாலே
திரு முடியிலே முத்து உண்டாகையாலும்

அடியிலே படியை அளந்தன முத்துக்களோ
முடியாலே விசும்பை அளந்தன முத்துக்களோ

சிலம்பும் செறி கழலும் (மூன்றாம் திரு –90)-என்று
இதுக்கு உள்ளீடான முத்து ப்ரகாசமாதல் –
சாத்தின முத்தாதல்

நெடியாய் நெறி கழல் கோள் தாள் நிமிர்த்திச் சென்று உலகம் எல்லாம்
அறிகிலமால் நீ யளந்த யன்று
அறிகிறி லோம்
ஆல் ஆச்சர்யம்

இப்போது உனக்கு ஓடுகிற ஹர்ஷம்-முத் -வடசொல் -ஹர்ஷமே –
திருவடிகளில் கீழே பூமியை இட்டுக் கொண்ட ஹர்ஷமோ
திரு முடியாலே ஆகாச அவகாசத்தை எல்லாம் வியாபித்த ஹர்ஷமோ -என்றுமாம்

அடியாலும் முடியாலுமோ என்னுதல்
அவற்றில் உண்டான முத்தாலேயே என்னுதல்

முத்து என்றது
அழகாதல்
முத்துத் தான் ஆதல்

நெடியாய் நெறி கழல் கோள் தாள் நிமிர்த்திச் சென்று உலகம் எல்லாம்
நீ யளந்த யன்று
அடியால் படி கடந்த முத்தோ –
அது அன்றேல்
முடியால் விசும்பு அளந்த முத்தோ
அறிகிலமால்
என்று அந்வயம்

———-

நின்றும் இருந்தும் கிடந்தும் திரி தந்தும் ஒன்றும் ஓவா ஆற்றான் என் நெஞ்சு அகலான்–35-

நின்றும் இருந்தும் கிடந்தும் திரி தந்தும்
உகந்து அருளினை தேசங்களிலே
நிற்கிறதும்
இருக்கிறதும்
கண் வளர்ந்து அருளுகிறதும்
உலாவுகிறதும்
எல்லாம் என்னைப் பெருகைக்காகவே

ஒன்றுமோ வாற்றான்
எல்லாம் செய்தும்
ஒன்றுமே செய்யாதானாய் இருக்கும்

ஓ -என்று
ஆச்சர்யத்திலே
அசைச் சொல்லாய்க் கிடக்கவுமாம்

———–

பாரிடந்தான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான் பாரிடம் முன் படைத்தான் என்பரால்–42-

பாருண்டான்
பிரளயம் வருகிறது என்று தன் திரு வயிற்றிலே வைத்து ரஷித்தும்

பாருமிழ்ந்தான்
வெளி நாடு காண உமிழ்ந்தும்

பாரிடந்தான்
அண்ட பித்தியில் நின்றும் பூமியை ஸ்ரீ வராஹ ரூபமாய் ஒட்டு விடுத்தும்

பாரளந்தான்
மஹா பலி அபஹரிக்க எல்லை நடந்தும்

பாரிடம் முன் படைத்தான்
கரண களே பர விதுரமாய்
போக மோக்ஷ ஸூன்யமான இவற்றை ஸ்ருஷ்ட்டித்தும்

என்பரால் –
இப்படி ஆனைத் தொழில்கள் செய்வான் என்று
நிர்த்தோஷ பிரமாணமும்
பிரமாணத்தை அங்கீ கரித்த ருஷிகளும் (பிரமாதாக்கள் )
சொல்லுகையாலே

பாரிடம் ஆவானும் தானானால்
ஜகத்தாகிறான் ஈஸ்வரன்
ரஷ்ய ரக்ஷக பாவாதி ஸம்பந்தங்களாலே ஐக்யம்
ஸ்வரூபத -அன்று

ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம (சாந்தோக்யம் )-என்று (ப்ரதிஜ்ஜை சொன்னால் போலே )
பிரபஞ்சத்துக்கு ப்ரஹ்மத்துக்கும் ஐக்யத்தைச் சொல்லி
தஜ்ஜலாநிதி (தஜ்ஜ -தல்ல -தத்தனு இதி )-என்று ஹேது சொன்னால் போலே –

(கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் கடல் ஞாலம் -ஆவேனும் யானே என்னும் )

ஆனால் ஆரிடமே
இப்படி யானால் இஜ் ஜகத்துக்கு ஆஸ்ரயம் ஆவாரார்

மற்று ஒருவர்க்கு ஆவான் புகவாலவை
ஜகத்தில் இச் சேதனர் வேறே ஒருவனுக்கு சேஷம் ஆவான்

புநா (புகா)
உண்டு உமிழ்ந்த தொழில்கள் வேறே ஒரு வியக்திக்கு ஆகா என்றுமாம் –

அவை -சேதனர் ஆதல்
கீழ்ச் சொன்ன வியாபாரம் ஆதல்

————

மாண் பாவித்து அந்நான்று மண்ணிரந்தான் –காண்பான் நம் கண்ணவா மற்று ஓன்று கண்ணுறா சீர் பரவாது உண்ண வாய் தான் உறுமோ வொன்று–52-

மாண் பாவித்து அந்நான்று மண்ணிரந்தான்
மஹா பலி நான் தருவேனானால் இன்னும் அகல இரக்க மாட்டாயோ என்ன
இரந்ததுக்கு மேலே வேண்டா -என்று இருக்கிற
பால்யம் பாவித்து
அத்தைப் பொய் -என்கிறது அன்று –
அத்தையும் மெய்யாக்குகை-

சீர் பரவாது உண்ண வாய் தானும் உறுமோ ஓன்று
அவனுடைய கல்யாண குணங்களைச் சொல்லாதே வாக்கு
வேறே ஒன்றை உண்ண உறாது –

————

வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வினிதால் எல்லே ஒருவாறு ஒருவன் புகாவாறு — அன்று உலகம் தாயவர் தாம் மாயவர் தாம் காட்டும் வழி--56-

சேயவர் தாம்
அர்ஜுனனுக்குக் கையாளாய் இருக்கச் செய்தேயும்
துர்யோத நாதிகளை அம்புக்கு இரையாக்கி அவர்களுக்குத் தூரியராய் இருக்குமவர்

அன்று உலகம் தாயவர் தாம் மாயவர் தாம் காட்டும் வழி
நினைத்த போது தாமே வந்து கிட்டுமவர்

இப்படி ஆச்சர்ய பூதரானவர் காட்டும் உபாயம்
வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால்

——–

இறை முறையான் சேவடி மேல் மண்ணளந்த வந்நாள் மறை முறையால் வானாடர் கூடி முறைமுறையின் தாதிலகு பூத் தெளித்தால்
ஒவ்வாதே தாழ் விசும்பின் மீதிலகித்தான் கிடக்கும் மீன்–61-

இறை முறையான் சேவடி மேல் மண்ணளந்த வந்நாள்
ஈஸ்வரனான முறையாலே திரு உலகு அளந்து அருளினவனுடைய திருவடிகளிலே

மறை முறையால் வானாடர் கூடி –முறை முறையின்
தேவர்கள் வேதம் சொன்ன முறையாலே திரு உலகு அளந்து அருளின திருவடிகளிலே

முறை முறையின் –
முறை முறையாக -வரிசை யடைவே

தாது இலகு பூத் தெளித்தால் ஒவ்வாதே தாழ் விசும்பின் மீதிலகித் தான் கிடக்கும் மீன்
உஜ்ஜ்வலமான புஷ்பங்கள் தெளித்தால் போலே யன்றோ
ஒத்த விசும்பின் மேல் கிடக்கிற நக்ஷத்திரங்கள் இருக்கிறது
(விசும்பு -விஷ்ணு பதம் ஆகாயம் இடம் திருவடி மூன்றுமே பதார்த்தம் )

இறை முறையான் சேவடி மேல்
வந்நாள்
மறை முறையால் வானாடர் கூடி
முறை முறையின்
தாது இலகு பூத் தெளித்தால் ஒவ்வாதே தாழ் விசும்பின்
மீதிலகித் தான் கிடக்கும் மீன்
என்று அந்வயம் –

———–

மீன் என்னும் கம்பில் வெறி என்னும் வெள்ளி வேய் வான் என்னும் கேடிலா வான் குடைக்கு தானோர் மணிக்காம்பு போல் நிமிர்ந்து
மண்ணளந்தான் நங்கள் பிணிக்காம் பெரு மருந்து பின்--62-

மீன் என்னும் கம்பில் வெறி என்னும் வெள்ளி வேய் வான் என்னும் கேடிலா வான்குடைக்கு
தானோர் மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண்ணளந்தான்
நக்ஷத்திரங்கள் ஆகிற கம்புகளையும்
உடு பதி என்னுமா போலே
நக்ஷத்ரங்களுக்கு ராஜாவான சந்த்ர சுக்ரர்களைக் குழலாக யுடைத்தான
நித்யமாய்ப் பெருத்த ஆகாசமாகிற குடைக்கு
நீல மணியாலே சமைந்த தொரு காம்பு போலே வளர்ந்து
பூமியை அளந்தான்
(நக்ஷத்ராணாம் அஹம் சசி -கீதை )

நங்கள் பிணிக்காம் பெரு மருந்து பின்-
திரு வுலகு அளந்து தேவர்களுடைய துக்கத்தைப் போக்கினால் போலே
நம்முடைய ஸம்ஸாரத்துக்கு பரமான ஒவ்ஷதம்

மண் அளந்த அபதானத்துக்குக் குடையும் காம்புமாக்கி நிரூபிக்கிறார்
வெறி -சந்திரன் -தாராபதி
வெள்ளி -சுக்ரன்
வேய் என்று குடையில் அடியிலே இருக்கிற மூங்கில் குழல்

————–

எல்லாம் ஏதமே என்று அல்லால் எண்ணுவனே மண்ணளந்த பாதமே ஏத்தாப் பகல்–80-

மண்ணளந்தான் –பாதமே ஏத்தாப் பகல்–மறப்பெல்லாம் ஏதமே என்றல்லால் எண்ணுவனே
திரு உலகு அளந்து அருளின நீர்மையை யுடையவன் திருவடிகளை ஏத்தாத
பகலில் மறப்பெல்லாம்
துக்கமே என்று அல்லது மநோ ரதிப்பானோ

—————————————-

மூவடி நானிலம் வேண்டி முப்புரி நூலோடு மானுரியிலங்கு மார்வினன் இரு பிறப்பொரு மாணாகி ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தனை-திரு வெழு கூற்று இருக்கை

மூவடி நானிலம் வேண்டி முப்புரி நூலோடு மானுரியிலங்கு மார்வினன்
இரு பிறப் பொரு மாணாகி-ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தனை-

வியாக்யானம் -1-
அம்பாலே சாதிக்க ஒண்ணாத இடம் அழகாலே சாதித்த படி சொல்கிறது –

மூவடி நானிலம் வேண்டி -நாலுவகைப் பட்ட பூமியிலே -மலை காடு நிலம் கடல் -என்கிற -மூவடியை வேண்டி –

முப்புரி நூலோடு மானுரியிலங்கு மார்வினன் –
ஒரு காளமேகத்தில் மின்னலை ஏறிட்டால் போலே-
திரு யஜ்ஞோபவீதமும் -அத்தோடு கூடின க்ருஷ்ணாஜிநமும் விளங்கா நின்ற திரு மார்பை யுடையையாய் –

இரு பிறப் பொரு மாணாகி-த்வ்ஜனுமாய் -ஒப்பில்லாத ஸ்ரீ வாமனனுமாய்
தானே இன்னும் ஒரு கால் இவ்வடிவு கொள்ள வேணும் என்னிலும் இப்படி வாயாத வடிவுடையையாய்

ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தனை-ஒருகால் இரண்டு அடியாலே மூன்று லோகத்தையும் அளந்து கொண்டாய்-

இத்தால்-
இந்தரனுக்கு ராஜ்யத்தை மீட்டுக் கொடுத்தால் போலே
என்னுடைய சேஷத்வத்தையும் மீட்டுத் தந்து அருள வேணும்-என்கிறார் –

தேவர்கள் சென்று இரந்தார்கட்கு இடர் நீக்கிய -கோட்டங்கை வாமனனாய் -திருவாய்மொழி -7-5-6–என்று
உன்னை இரந்தார்கட்கு நீயும் இரந்து அவர்கள் அபேஷிதம் பார்க்கும் அவன் அல்லையோ –

இசையாதார் தலைகளிலே வைத்த திருவடிகளை இசைந்த என் தலையிலே வைக்கல் ஆகாதோ-

பிரயோஜனாந்தர பரனுடைய இழவு தீர்த்த உனக்கு அநந்ய பிரயோஜனான என்னுடைய இழவு தீர்க்கலாகாதோ

இந்த்ரன் கழஞ்சு மண் அன்றோ இழந்தது -நான் என்னையும் உன்னையும் அன்றோ இழந்தது –

————————————————————————–

வியாக்யானம் -2-
அம்பாலே அழிக்க ஒண்ணாத இடத்தை -அழகாலும் இரப்பாலும் அழியச் செய்த படி –

பிரயோஜனாந்தர பரர்களான இந்த்ராதிகளுடைய கார்யம் செய்த நீ
உன்னையே பிரயோஜனமாக நினைத்து இருக்கிற என் கார்யம் செய்யலாகாதோ –

மூவடி நானிலம் வேண்டி-ஈரடியாலே பூமியை அளந்து
ஓரடிக்கு அவனை சிறையிட்டு வைக்க நினைத்து மூன்றடியை இரந்தான் ஆயிற்று –

நெய்தல் மருதம் முல்லை குறிஞ்சி என்றால் போலே சொல்லுகிற
அன்னலும் துன்னலுமான பூமியை அர்த்தித்தது –
இந்நாலிலும் ருஷீஷாம்சமாக கழித்தது பாலை நிலம் என்றும் சொல்லுவார்கள் –
இவருக்கு அபிமதம் நாலு என்னும் இடம் தோற்றி இருந்தது இறே

முப்புரி நூலோடு மானுரியிலங்கு மார்வினன் இரு பிறப் பொரு மாணாகி-
ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தனை-
மேகத்திலே-மின்னினால் போலே சாத்தின யஜ்ஞோபவீதமும்
கிருஷ்ணாஜிநமும் விளங்கா நின்றுள்ள திரு மார்பை யுடையையாய்
உப நயனம் பண்ணின புதுமை தோற்றும் படி இருப்பாயுமாய் –

இந்த்ரனுடைய அர்த்தித்வம் தலைக் கட்டுகைக்காக இட்ட போதோடு இடாத போதோடு வாசி அற-
முகம் மலர்ந்து போம்படி இறபபிலே தகண் ஏறின வாமன வேஷத்தைப் பரிக்ரஹித்து-
ஒரு கால் த்ரை லோகத்தையும் ஈரடியால் அளந்து கொண்டாய்

ஆசையில்லாதார் தலை மேலேயும் வைக்கும் திருவடிகளை ஆசையுடைய என் தலை மேலேயும் வைக்கலாகாதோ-

இந்த்ரனைப் போலே கழஞ்சு மண் பெறுதல் –
மகா பலியைப் போலே ஔதார்யம் கொண்டாடுதல் செய்ய இருக்கிறேனோ நான் –
உன்னைப் பெற வேணும் என்று அன்றோ நான் அர்த்தித்திக்கிறது-

உன்னை வைத்து வேறு ஒன்றை இரந்தார்க்கோ நீ இரப்பாளனாகக் கார்யம் செய்வது –
உன்னையே இரந்தார் கார்யம் செய்யலாகாதோ –

மதீய மூர்த்தா நமலங்கரிஷ்யதி கதா –ஸ்தோத்ர ரத்னம் -31-என்று இறே நான் இருக்கிறது-

—————————————-
ஆரால் இவ்வையம் அடியளப்புண்டது தான்–சிறிய திருமடல் 

ஆரால் இவ்வையம் அடியளப்புண்டது காண் –
பூமிப் பரப்பைத் தன கால் கீழே இட்டுக் கொண்டவர் ஆர் –
ஆரால் -என்கையாலே
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர் -என்றாள்
அவன் -என்ன வேண்டும் பிரசித்தியை உபஜீவித்து நின்று சொல்லுகிறாள்

இவ்வையம் –
மண்ணை யிருந்து துழாவி வாமனன் மண்ணிது வென்னும் –
பூமிப் பரப்பை அடைய துழாவி யிருந்து அவன் அடிச் சுவடு மோந்தவரைப் போலே சொல்லும் –
விச்வாமித்ர மகரிஷி யாகம் காக்க பெருமாள் எழுந்து அருளுகிற போது –
ருஷியே இங்கே தோற்றுகிற ஆஸ்ரமம் ஏது-என்று கேட்டு அருள
ஸ்ரீ வாமனன் எழுந்து அருளி இருந்து தபஸ் ஸூ பண்ணின சித்தாஸ்ரமம்
அவன் எழுந்து அருளி இருந்து போன இடம் -என்று நான் இம் மண்ணை மோந்து கொண்டு கிடப்பன் -என்றான் இ றே
அப்படியே இவ்வையம் என்று அடிச் சுவடு தோன்றுகிறபடி –

ஆரால் இவ்வையம் அடியளப்புண்டது தான்
இத்தால் -புவனி எல்லாம் நீர் ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே -என்னுமா போலே
தன்னுடைமையை இரந்து பெறுமவன் அன்றோ –
இவளை விட்டு வைக்குமோ -என்றபடி –
மண்ணை இரந்து அளந்து கொள்ளுமவன்
பெண்ணை நோவுபட விட்டு வைக்குமோ –என்றபடி

————

பேர் வாமனாகிய காலத்து மூவடி மண் தாராய் எனக்கு என்று வேண்டிச் சலத்தினால் நீர் ஏற்று உலகெல்லாம் நின்றளந்தான் மாவலியை ஆராத போரில்

அன்றியும் -இத்யாதி –
இப்படி அழியச் செய்ய வேண்டும் பராதி கூல்யமே அன்றியே –
ஆனுகூல்ய லவம் உடையவனாய் இருக்கும் இ றே மஹா பலி
அதாவது -ஔதார்ய குணம் எனபது ஓன்று உடையவன் ஆகையால் அவனைச் சடக்கென அழியச் செய்ய ஒண்ணாமை யாலும்
தேவர்களுக்காக அவனை அழியச் செய்ய வேண்டுகையாலும் –
அவன் கொடுக்க உகப்பன் -என்னுமத்தை நினைத்துத்
தன்னை இரபபாளன் ஆக்கி அவன் பக்கலிலே சென்று நீர் ஏற்று பூமியை வாங்கி இந்த்ரனுக்குக் கொடுத்தபடி சொல்லுகிறது –

அன்றியும் பேர் வாமனாகிய காலத்து –
நாட்டில் வாமனர்கள் எல்லாம் வளர்ந்து அருளின இடம் என்னலாம் படி
சிறுத்து இருக்கும் என்னுதல் –
வடிவே யன்றியே பெரும் வாமனனாகிய காலம் –

மூவடி மண் தாராய் –
மஹா பலி எனக்கு மூவடி மண் தர வேணும் -என்றான்
அவனும் -தருகிறோம் -என்றான் –
அங்ஙகனாக ஒண்ணாது தாராய் -என்றான் –
வளைப்பாரைப் போலே

எனக்கு என்று
ஒன்றையும் எனக்கு எண்ணாதவன் காணும் -எனக்கு -என்றான் –பரார்த்தம் ஆகையாலே
வேண்டிச் சலத்தினால் நீர் ஏற்று உலகுஎல்லாம் நின்றளந்தான் மாவலியை –
வேண்டிக் கையிலே நீர் விழுந்தவாறே சிறுகாலைக் காட்டிப்
பெரிய காலாலே லோகம் அடைய அளந்து கொண்டான் –

மாவலியை மூவடி மண் தாராய் எனக்கென்று
வேண்டிச் சலத்தினால் நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் -என்று அந்வயம்

———————————

நில மங்கை தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல் மன்னிய சேவடியை வானியங்கு தாரகை மீன் என்னும் மலர்ப்பிணை யலேய்ந்த–பெரிய திருமடல்

துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம் என்னும் விதானத்தின் கீழால் –
நெருங்கி இருக்கிற நஷத்ர தாரா கணங்களின் உடைய மிக்க தேஜச்சை யுடைத்தாய் இருந்துள்ள
ஆகாசம் போலே இருக்கிற திரு முத்தின் பந்தற் கீழே -என்னுதல்-
ஆகாசம் ஆகிற திரு முத்தின் பந்தற் கீழே -என்னுதல்
ஆகாசம் போலே என்ற பொதி கட்டின – என்று தோற்றி இருக்கிற படி
ஆகாசத்தை திருஷ்டாந்தமாகச் சொல்லிற்று அச்சமாய் இருக்கையாலே –

இரு  சுடரை மன்னும் விளக்காக வேற்றி –
இவன் போன இடம்  எங்கும்  கூடப் போமவர்கள் இ  றே ஆழ்வார்கள் –
ஆகையாலே திரு வாழி ஆழ்வானையும் -ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வானையும் நித்யமான விளக்காக ஏற்றி
அங்கன் அன்றிக்கே
சந்திர ஸூ ர்யர்களைச் சொல்லிற்று ஆகவுமாம்-
ஏகார்ணததிலே  சிருஷ்டி உன்முகனாய்க் கண்  வளர்ந்து அருளுகிற போதாகக் கார்ய பூதரான இவர்கள் உளரோ எப்போதும் -என்னில்
அதுக்காக இ றே முற்பட ஒரு பொருள் சொல்லிற்று
அன்றியே
கவி பாடுகிற இவர் தாம் பிற்பட்ட காலத்தில் உள்ளார் ஒருவராகையாலே தமக்கு முற்பட்டாரைச் சொல்லத் தட்டில்லை இ றே –

மறி கடலும் பன்னு திரைக் கவரி வீச-
சர்வேஸ்வரன் திரு வநந்த வாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிற போதை அழகைக் கண்ட ஹர்ஷத்தாலே
கீழ் மண் கொண்டு மேல் மண் எறிகிற கடலானது –
தன்னுடைய பரம்பின திரைகள் ஆகிற கவரியை வீச
பெரும் திரையாய் வந்து முறிந்த குறும் திவலையானது
திருவடிகளிலே வந்து உதைத்து அது துடை குத்த உறங்குவாரைப் போலே யாயிற்று கண் வளர்ந்து அருளும் படி –
பன்னு  திரைக் கவரி வீச — என்கிற விடம் –மன்னிய சேவடியை -என்கிற இடத்தில் அந்வயிக்கக் கடவது –
நில மங்கை தன்னை முன நாள்  அளவிட்ட –
முன்னொரு நாள் பூமிப் பிராட்டியை அளந்த

தாமரை போல் மன்னிய சேவடியை –
திருவடித் தாமரையை நோக்கி –மறி கடலும் பன்னு திரை கவரி வீச –
அலை எறிகிற சமுத்திர ராஜன்
பரம்பின அலைகள் ஆகிற சாமரங்களை வீசப் பெற்றும்

வானியங்கு தாரகை மீன் என்னும் –
ஆகாசத்தில் திரியும் நஷத்ரங்கள் ஆகிறது –
பூர்வ ஷணத்திலே போல் தோன்றா நின்றது யாயிற்று இவர்க்கு பாவனா பிரகர்ஷத்தாலே –

அளவிட்ட –தாமரை போல்-
பண்டு திரு வுலகு அளந்து அருளின திருவடிகள் என்று மூதலிக்கலாம்   படி செவ்வித் தாமரைப் பூ போலே இரா நின்றது –

மன்னிய சேவடியை —
சௌகுமார்யத்துக்கு ஒரு போலியாகச் சொன்ன வித்தனை இ றே தாமரையை –
அனந்தர ஷணத்திலே செவ்வி மாறிப் போகையாலே
மாறாச் செவ்வியை  உடைத்தான திருவடிகளை மறி கடலும்
பன்னு திரைக் கவரி வீச -என்று அந்வயம் –

வானியங்கு தாரகை மீன் என்னும் -மலர்ப் பிணைய லேய்ந்த மழைக் கூந்தல் –
ஆகாசத்தில் சஞ்சரியா நின்றுள்ள நஷாத்ரா தாரா கணங்கள் ஆகிற
கலம்பகன் மாலையாலே அலங்க்ருதமாய்-
அத்தை உள்ளே அடக்கும்படி ஸ்ரமஹரமாய் இருந்துள்ள மேகமாகிற அளக பாரத்தை  உடைத்தாய் இருக்கை-
நாயகனாகிற சர்வேஸ்வரன் இவன் ஒரு கால் திருக் குழலை குலைத்து நுழுந்த அக்காலத்திலே சர்வ வித போக்யங்களையும் பெற்றானாய் இருக்கை

————-

மின்னி எரி வீச மேல் எடுத்த சூழ் கழல் கால் பொன்னுலகம் ஏழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப

மட்டிடித்து மாதிரங்கள் மின்னி யெரி வீச மேல் எடுத்த சூழ கழற்கால்-
திக்குகளிலே செல்ல

பொன்னுலகம் எழும் கடந்து உம்பர் மேல் –
திரு வுலகு அளந்து அருளின தேசம் எல்லாம் உபதஹதமான படி –

————

தன்னுருவம் ஆரும் அறியாமல் தானங்கு ஓர் மன்னும் குறள் உருவின் மாணியாய் மாவலி தன பொன்னியலும்
வேள்விக்கண் புக்கிருந்து போர் வேந்தர் மன்னை –மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி என்னுடைய பாதத்தால் யான் அளப்ப
மூவடி மண் மன்னா தருக வென்று வாய் திறப்ப மற்றவனும் என்னால் தரப் பட்டது என்றலுமே அத்துணைக் கண் மின்னார் மணி முடி
போய் விண் தடவ மேலேடுத்த பொன்னார் கனை கழல் கால் ஏழுலகும் போய்க் கடந்து அங்கு ஒன்னா வசுரர் துளங்கச் செல நீட்டி
மன்னு இவ்வகலிடத்தை மாவலியை வஞ்சித்து தன்னுலகம் ஆக்குவித்த தாளானை -தாமரை மேல் மின்னிடையாள் நாயகனை –

தன்னுருவ மாரும் அறியாமல் தான் அங்கோர் –
பெரிய பிராட்டியாரும் நித்ய சூரிகளும் –

மன்னும் குறளுருவின் மாணியாய் மாவலி தன்-
வைத்த கண் வாங்க ஒண்ணாத அழகு –

பொன்னியலும் வேள்விக் கண் புக்கிருந்து –
மகா பலியைப் போலே நானும் யாகம் பண்ணினேன் ஆகில் தானே வரும் இ றே-என்று கருத்து –

போர் வேந்தர் —மன்னை-
மகா ராஜனை-

மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண் மன்னா தருக என்று வாய் திறப்ப மற்றவனும்-
ஸூ க்ர பகவான் உள்ளிட்டார் –
நெஞ்சுருக்கி -புலன் கொள் மாணாய் -திருவாய் மொழி -1-8-6-
ராஜாவே -என்ன
திரியப் பார்க்க
மூவடி -என்ன
என்னன்புது -என்ன
மண் -என்ன
ஆர் காலாலே -என்ன
என் காலாலே -என்ன
பெரியதொரு காலாலே கொண்டாலோ -என்ன
என் அபேஷை அன்றோ நீ செய்யக் கடவது -என்ன
பேசாது இருந்தான்
இவன் பேச்சை கேட்க்கைக்காக
இவனும் ஈண்டென தாராய் -என்று வாய் விட
அவ்வாய் விட்டத்தைக் கண்ட மகா பலியும் இட்டு மாறினால் போலே
வேறு ஒருவன் ஆனபடியாலே -மற்றவனும் -என்கிறது –

என்னால் தரப்பட்ட தென்றலுமே  –
தத்த மச்யாபயம் மா -யுத்த -18-34-என்ற பெருமாளைப் போலே –

அத்துணைக் கண் —
அந்த ஷணத்திலே –

மின்னார் மணி முடி போய் விண் தடவ மேலேடுத்தபொன்னார் கனை கழற்கால் ஏழ்   உலகும் போய்க்  கடந்தங்கு  –
ஸ்ப்ருஹா விஷயமாய் –
ஆஸ்ரித ரஷணத்துக்குப் பின்னை ஒன்றை வேண்டாதபடி
சப்தியா நின்றுள்ள வீரக் கழலை யுடைய திருவடிகள் –

ஒன்னா வசுரர் துளங்கச் செல நீட்டி-
உகவாத நமுசி பிரப்ருதிகள் –

மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்துத் –
அவனுக்கு அடி பட்டிருக்கை –

தன்னுலக மாக்குவித்த –
ஆஸ்ரிதரோடு தன்னோடு வாசி இல்லாமையாலே
இந்தரனுக்கு என்னாது ஒழிகிறது-

தாளானை –
தாள் என்று திருவடிகள் –

————————————————–

பெரு நிலம் கடந்த நல்லடிப் போது அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே–1-3-10-

பரப்பையுடைத்தான பூமியை அளக்கிற இடத்தில் வசிஷ்டர் என்றும், சண்டாளர் என்றும் சொல்லுகிற வேற்றுமை அற எல்லார் தலைகளிலும் ஒக்கத் திருவடிகளை வைத்தான். இவர்கள் நன்மை தீமைபாராமல் தன்னுடைய தூய்மையே இவர்களுக்கும் ஆகும்படி செய்தான் என்றபடி. 1‘படிக்கு அளவாக நிமிர்த்த நின்பாத பங்கயமே தலைக்கு அணியாய்’ என்று ஆசைப்பட வேண்டும்படி இருத்தலின், ‘நல்லடிப்போது’ என்கிறார்.2‘திருவிக்கிரமனே, உத்தம ரேகைகள் பொருந்திய தாமரை போன்ற உனது இரண்டு திருவடிகள் என் தலையினை அலங்காரம் செய்வது எப்போதோ?’ என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும். செவ்விப்பூச்சூட ஆசைப்படுகின்றவர்களைப் போன்று ஆசைப்படுகிறார்கள் என்க.-அயர்ப்பிலன்-மறவேன். அலற்றுவன்-முறை இன்றிப் பேசுவேன். தழுவுவன்-3‘மிகவும் கெட்டியாக ஆலிங்கனம் செய்துகொண்டார்’ என்பது போன்று, தழுவுவேன். வணங்குவன் – செருக்கு அற்றுத் திருவடிகளிலே விழுவேன். அமர்ந்து – வேறு ஒரு பயனையும் கருதாது இப்படிச் செய்வேன்.

———-

மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு மதியிலேன் வல்வினையே மாளாதோ என்று ஒருத்தி மதி எலாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே–1-4-3-

கோடியைக் காணியாக்கினாற்போன்று, பெரிய வடிவழகைக் கண்ணாலே முகந்து அனுபவிக்கலாம்படி சிறுக்கினானாதலின் ‘குறள்’ என்கிறாள். ‘உண்டு’ என்று இட்டபோதொடு

‘இல்லை’ என்று தள்ளிக்கதவு அடைத்தபோதோடு வேற்றுமை அறமுகமலர்ந்து போம்படி இரப்பிலே தழும்பு ஏறின வடிவையுடையனானான் ஆதலின், ‘மாணாய்’ என்கிறாள். உலகு இரந்த கள்வர் என்பதற்குத் தன் சங்கற்பத்தாலே உண்டாக்கின உலகத்தைக் 1‘கொள்வன் மாவலி மூவடி’ என்று இரந்த வஞ்சகர் என்று பொருள் அருளிச்செய்வர்திருமாலையாண்டான். எம்பெருமானார், ‘ஒன்றை நினைந்து ஒன்றைச் செய்தவர்க்கு’ என்று அருளிச்செய்வர். அதாவது, ‘மகாபலியை வஞ்சித்ததும் என்னை வசீகரிக்கைக்காக,’ என்றபடி, ‘ஆயின், இவள் அச்செயலுக்கு வசப்பட்டவளோ?’ எனின், மேல், 2‘பெருநிலம் கடந்த நல் அடிப்போது’ என்று அன்றோ இவள் ஆசைப்பட்டாள்? மேலும்,3‘உலகங் கொண்ட, அடியன அறிவருமேனி மாய்த்தனாகிலும், கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்’ என்றும்,4‘அன்று ஒருகால் வையம் அளந்த பிரான் வாரான் என்று, ஒன்று ஒருகால் சொல்லாது உலகு’ என்றும் அன்றோ இவள் கிடப்பது? திருமங்கையாழ்வாரும், 5‘முன்னங்குறளுருவாய் மூவடிமண் கொண்டு அளந்த, மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன்!’ என்றார். ஆக, இவர்கள் எல்லாரும் ஈடுபடுவது இச்செயலுக்கேயாம்.

———

திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் எல்லா எவ்வுயிர்க்கும் தாயோன் தான் ஒருவனே–1-5-3-

அடியளந்தான், தாஅயது எல்லாம் ஒருங்கு’ (குறள். 610.), ‘மூவுலகும் ஈரடியால் முறைநிறம்பா வகைமுடியத், தாவிய சேவடி’ (சிலப். ஆய்ச்.)

நீர் நம்முடைய மேன்மையைப் பார்த்து அங்ஙனம் நெகிழப்போகாதே, நாம் தாழ நின்று எல்லாரோடும் பொருந்தும் சீலகுணத்தையும் ஒருகால் பாரீர்,’ என்று திரு உலகு அளந்தருளின சீலகுணத்தை காட்டிக்கொடுக்க, அதனை நினைந்து அகலமாட்டாதே, அணுகவுமாட்டாதே, நடுவே நின்று,1அணாவாய்த்துக்காலம் கழிக்கிறார். ‘அவனை ஒழிய அப்படிக் காலம் கழிக்க வல்லரோ?’ என்னில், 2சீர்கலந்த சொல் நினைந்து போக்கும்போது போக்க வல்லரே; சீலகுண அநுசந்தானத்தால் போக்கலாமன்றே?

திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் – திக்குகளோடேகூடப் பூமிப்பரப்பு முழுவதையும் தாவி அளந்து கொண்டவன். இதனால், எத்துணை வியக்கத்தக்க ஞானத்தையுடையவர்களுடைய ஞானத்துக்கும் அப்பாற்பட்டவனாய் இருந்தும், தானே தன்னைக் கொடுவந்து காட்டுமன்று வருத்தம் அறக் கொடு வந்து காட்டுவான் என்பதனைத் தெரிவித்தபடி. ‘நாய்ச்சிமார் தொடும் போதும் பூத்தொடுமாறு போன்று கூசித் தொடும் திருவடிகளைக் கொண்டு அன்றே காடும் ஓடையும் அளந்துகொண்டான்!’ என்று ஆச்சரியப்படுகிறார். ‘நன்மை தீமை பாராதே எல்லார் தலைகளிலும் திருவடிகளைக் கொடு வந்து வைக்கைக்குக் காரணம் என்?’ என்னில், எல்லா எவ்வுயிர்க்கும் தாயோன் – எல்லா உயிர்கட்கும் 2தாயினைப் போன்று அன்புடையனாகை ஈண்டு, ‘எல்லா எவ்வுயிர்’ என்றது, உயர்வு தாழ்வுகள் பொருந்திய பிறவிகளையுடைய எல்லா உயிர்களையும். தான் ஓர் உருவனே – ஒருவர்க்கும் நிலம் அல்லாத மேன்மையினையும் நினைந்தார்; அப்படிப்பட்டவனுடைய நீர்மையினையும் நினைந்தார்; ‘இவனும் ஒரு படியையுடையவனாய் இருக்கிறானே!’ என்று ஈடுபாடு உடையவர் ஆகிறார். 3கடுநடையிட்டு ஓடுகிறவர் இவன் சீல குணத்தை நினைந்து கால் தாழ்க்கிறார்.

—————

கலந்து என்னாவி நலம் கொள் நாதன் புலன் கொள் மாணாய் நிலம் கொண்டானே–1-8-6-

கலந்து என் ஆவி நலம் கொள் நாதன்-என்னோடே ஒரு நீராகக் கலந்து, பின்னர் என் ஆத்துமாவினுடைய இனிமையைக் கொண்டான். நாதன்-அவ்வளவேயோ? 2‘என்னை ஆளும் கொண்டு’ என்கிறபடியே, நான் எனக்கு உரியேனாய் இருக்கிற இருப்பையும் தவிர்த்தான். ‘இப்படி அகப்பட்டார் நீரேயோ?’ என்ன, மகாபலியும் அகப்பட்டான். ஆயின், அவன் ஆவி நலம் கொடுத்திலன்; 3கழஞ்சு மண் கொடுத்தான் இத்தனை. புலன்கொள் மாணாய் நிலம் கொண்டான் – இந்திரியங்கள் அனைத்தையும் கொள்ளை கொள்ளும் வடிவத்தை மேற்கொண்டு, அவன் ‘என்னது’ என்று அபிமானித்து இருக்கிற பூமியைக் கவர்ந்துகொண்டான்.

————-

நாதன் ஞாலம் கொள் பாதன் என்னம்மான் ஓதம் போல் கிளர் வேத நீரனே–1-8-10-

——

பொரு மா நீள் படை ஆழி சங்கத்தோடு திரு மா நீள் கழல் ஏழுலகும் தொழ ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்கரு மாணிக்கம் என் கண்ணுளதாகுமே–1-10-1-

இப்பாசுரத்தில், மகாபலி, தன் வரவை நினையாதே இருக்க, அவன் பக்கலிலே இரப்பாளனாய்ச் சென்று தன்னுடைமையைத் தனது ஆக்கியது போன்று, நான் நினைவு இன்றிக்கே இருக்கத் தானே வந்து தன் வடிவழகை என் கண்ணுக்கு இலக்கு ஆக்கினான் என்று அவன் தன்மையை நினைந்து இனியர் ஆகிறார்.

பொரு – இத்தால், திரு உலகு அளந்தருளுகிற போது, திவ்விய ஆயுதங்கள் நமுசி முதலாயினார்கள் மேலே பொருதபடியைச் சொல்லுகிறார். இனி, திவ்விய ஆயுதங்கள் தாம் ஒருவரை ஒருவர் ஐயங்கொண்டு பொருகிறபடியைச் சொல்லுகிறார் என்று கோடலுமாம். ஆயின், நமுசி முதலாயினார்களோடே பொரும் என்ற பொருள் பொருந்துவதாம்;1‘இடங்கை வலம்புரி நின்றார்ப்ப எரிகான்று, அடங்கார் ஒடுங்குவித்தது ஆழி-விடங்காலும், தீவாய் அரவணைமேல் தோன்றல் திசையளப்பான், பூவார் அடிநிமிர்த்த போது’ என்றார் பூதத்தாழ்வாரும். திவ்விய ஆயுதங்கள் தம்மில் தாம் பொருதல்என்ற போது – 1அஸ்தான பயசங்கையாலே ஒருவரை ஒருவர் ஐயங்கொண்டு பொருகிறார்கள் என்றபடி. 2‘ஸ்ரீராகவனைச் சரணமாக அடைந்தேன்’ என்ற விபீஷணனை அன்றே ‘கொல்லுங்கள்’ என்றார்கள்? 3‘ஸ்ரீபரதனைக் கொல்லுவதில் பாவத்தை நான் பார்க்கின்றேன் இல்லை’ என்றார் இளைய பெருமாள். மா – அவற்றின் வடிவின் பெருமையைச் சொல்லுகிறது. அன்றி, அடியார்கள் திறத்தில் இறைவனைக்காட்டிலும் அவர்களுக்கு உண்டான பக்ஷபாதத்தைச் சொல்லுகிறது என்று கோடலுமாம். ஆக, இதனால், 4‘விஷ்ணுவை வழிபட்டு வணங்குகிற உயிர்களை, ஒன்றாலும் தடுக்கப்படாதவைகளான சக்கரம் முதலிய ஆயுதங்கள் எல்லா ஆபத்துகளினின்றும் காப்பாற்றுகின்றன’ என்கிறபடியே,5சர்வேஸ்வரன் எதிரியானாலும் அவன் கையிலே காட்டிக்கொடாமல் நோக்கும் பெருமையைச் சொல்லுகிறது.

நீள் படை ஆழி சங்கத்தோடு – நீள் படையான ஆழி சங்கத்தோடே கூட. ‘ஆயிரங்காதம் பறப்பதன் குட்டி ஐந்நூறு காதம் சிறகடிக்கொள்ளும்’ என்னுமாறு, படைகள் சர்வேஸ்வரன் அதிகரித்த காரியத்திலே அவன் தன்னிலும் முற்பட்டு இருப்பவை ஆதலின் ‘நீள்படை’ என்கிறார். திரு மா நீள் கழல் ஏழ் உலகும் தொழ – செல்வத்திற்கு அறிகுறியானவையும், சிரமேற்கொள்ளத் தக்கவையும், ஆசை சிறிது உடையார் இருந்த இடம் எல்லையாக வளர்வனவும் ஆன திருவடிகளை ஒரு சாதந அனுஷ்டானம் பண்ணாதாரும் தொழும்படியாக. 6‘நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய்’ என்று ஆசைப்பட்டுக் கிடக்கும் திருவடியையன்றே ஆசைஇல்லாதார் தலைகளிலும் வைத்தான் என்பார், ‘ஏழ்உலகும் தொழ’ என்கிறார். ஒரு – இவன் தானே இவ்வடிவை இன்னம் ஒருகால் கொள்ள வேண்டும் என்னிலும் வாயாதபடி இரண்டாவது இல்லாத தாய் இருக்கை மாணி-திருமகள் கேள்வன் என்று தோன்றாதபடி இரப்பிலே தழும்பு ஏறுகை. குறளாகி-கோடியைக் காணியாக்கியது போன்று, பெரிய வடிவைக் கண்ணாலே முகக்கலாம்படி சுருக்கின படி. நிமிர்ந்த-அடியிலே நீர் வார்த்துக் கொடுத்தவாறே நிமிர்ந்த படி. வாசுதேவ தரு ஆதலின் ‘நிமிர்ந்த’ என்கிறார், நிமிர்ந்த அக்கருமாணிக்கம் – நெய்தற்காடு அலர்ந்தாற்போலே ஆகாயம் முழுதையும் தன் வடிவழகாலே பாரித்தபடி. மயர்வற மதிநலம் அருளப்பெற்ற தம்மாலும் அளவிட்டு அறிய முடியாது இருத்தலின்‘அக்கருமாணிக்கம்’ என்று சுட்டுகிறார். என்கண் உளதாகும்-ஏழ் உலகத்துள்ளார் வாசி அறிந்திலர்; அவ்வாசி அறியுமவராகையாலே ‘என் கண் உளதாகும்’ என்கிறார். கண் என்று இடமாம், என்னிடத்தாகும் என்னவுமாம். மாணிக்கம் என்கையாலே, ‘உளதாகும்’ என்கிறார்.

1. இடங்கை வலம்புரி நின்று ஆர்ப்ப-இடத்திருக்கையில் ஸ்ரீபாஞ்சஜன்யமானது
அப்போது அப்போது பிறந்த வெற்றியை நினைத்து ஆரவாரித்தது; எரி
கான்று அடங்கார் ஒடுங்குவித்தது ஆழி – அங்ஙனம் ஆர்ப்பதற்கு
அவசரமின்றிக்கே, திருவாழி, நெருப்பை உமிழ்ந்து பகைவர்களை ‘வாய், வாய்’
என்று ஒடுங்கப்பண்ணியது; விடங்காலுந் தீவாய் அரவணை-
திருவனந்தாழ்வான் பகைவர்கள் மேலே கிடந்த இடத்தே கிடந்து
நெருப்பை உமிழ்ந்தான்; அவன், ஆங்கு ஆரவாரமது கேட்டு அழலுமிழும்
பூங்கார் அரவணை’யாவன் அன்றே? அப்பரமபதத்திலும் இப்படிச்
செய்யுமவன், பகைவர்கள் நிறைந்திருக்கும் இத்தேசத்தில் இப்படிச்
செய்யச்சொல்ல வேண்டுமோ? ஆங்கு ஆரவாரமாவது, “அஹமந்நம்
அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நாத: அஹமந்நாத: அஹமந்நாத:” என்னும்
ஆரவாரம். அஹமந்நம்-நான் பகவானுக்கு இனியன்; அஹமந்நாத: – நான்
பகவானாகிற இன்பத்தை அனுபவிக்கிறவன். (தைத்திரீய உபநிடதம், பிரு. 10.)
‘அங்கே அது கேட்டு அப்படிப் படுகின்றவர்கள் இத்தேசத்தில் இது
கண்டால் சொல்ல வேண்டுமோ?’ என்றபடி. ‘இவர்கள் இப்படி
அலமருகைக்கு அடி என்?’ என்னில், அரவணைமேல் தோன்றல்
திசையளப்பான் பூவார் அடி நிமிர்த்த போது-திருவனந்தாழ்வானைப்
படுக்கையாகவுடைய சர்வேஸ்வரன் காடும் ஓடையும் அளக்கைக்காகப்
புஷ்பஹாஸ சுகுமாரமான திருவடிகளை நிமிர்த்த போது, எல்லாம்
படவேண்டாவோ அவன் இப்படி வியாபாரியாநின்றால்?’
(இரண்டாந்திருவந். 71.)

——————–

கண்டாயே நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று ஓர் எண் தானும் இன்றியே வந்தியலுமாறு உண்டானை உலகு ஏழும் ஓர் மூவடி
கொண்டானை கண்டு கொண்டனை நீயுமே-1-10-5-

பிரளயம் கொண்ட உலகத்துக்கு ‘இறைவன் நம்மை வயிற்றிலே வைத்து நோக்குவான்’ என்னும் நினைவு உண்டோ? உலகு ஏழும் ஓர் மூன்று அடி கொண்டானை – இறைவன் உலகத்தை முழுதும் அளக்கிற போது ‘நம் தலையிலே திருவடியை வைக்கப்புகாநின்றான்’ என்னும் நினைவு உண்டோ? இதற்கு உதாரணம் தேடிப் போக வேண்டுமோ ஒன்று?கண்டுகொண்டனை நீயும் – விலக்குகைக்குப் பரிகாரமுடைய நீயும் அன்றோ கண்டுகொண்டாய்? பிரளயத்தில் அகப்பட்ட உலகத்திற்குத் தடுப்பதற்கு வழி இல்லை; உலகத்தை அளக்கிற காலத்தில் அறிந்து தடுப்பதற்கு அங்குச் சமயம் இல்லை; அறிந்தால் விலக்கி இருப்பார்கள் அன்றே? 1அசங்கிதமாக வருகையாலே பேசாதிருந்தார்கள் இத்தனை, அவ்வாறு அன்றி விலக்குதற்கு எல்லா வழிகளையும் பெற்றிருந்த நீ விலக்காதிருந்தமையே அருமை’ என்பார், ‘நீயும்’ என உம்மை கொடுத்து ஓதுகின்றார்.

———–

மண்ணளந்த மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே–2-1-10-

மஹாபலி கவர்ந்துகொண்ட பூமியை எல்லை நடந்து மீட்டுக்கொண்டு, இப்படி உதவிகளைச்செய்து, பின்னையும் ஒன்றும் செய்யாதானாய்க் குறைப்பட்டு, இவற்றின் இரக்ஷணத்திலே முயற்சி உள்ளவனாய் இருக்கின்றவனே! இனி, 1‘மூவா முதல்வா’ என்பதற்கு, ‘இப்படி எல்லாம் செய்தும் ஒன்றும் செய்யாதாரைப் போன்று உலகைப் படைத்தல் முதலியவற்றைச் செய்தவனே!’ என்று பொருள் கூறலும் ஒன்று.

—-

ஏறனைப் பூவனைப் பூ மகள் தன்னை வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து மேல் தன்னை மீதிட நிமிர்ந்து
மண் கொண்ட மால் தனில் மிக்கும் ஓர் தேவும் உளதே–2-2-3-

மேலே உள்ள உலகங்களை 5‘அப்பால் மிக்கு’ என்கிறபடியே, விஞ்ச வளர்ந்து,

பூமிப் பரப்பெல்லாம் திருவடிகளின்கீழே இட்டுக்கொண்ட. மால் தனில் – இவ்வதிமா நுஷச் செயல்களையுடைய சர்வேஸ்வரனைக் காட்டிலும் மிக்கும். ஓர் தேவும் உளதே – ஒக்கப் பரிமாறாநிற்க, 1‘கட்டக்குடி’ என்று கழிக்கலாம் தெய்வந்தான் உண்டோ?

    2‘எல்லார் தலைகளிலும் காலை வைத்தவனை ‘ஈஸ்வரன்’ என்னவோ, இவன் காலிலே துகையுண்டவர்களை ‘ஈஸ்வரர்கள்’ என்னவோ?’ என்கிறார்.

————

வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னி வைக்கும் வைகல் தோறும் அமுதாய வானேறே–2-6-1-

என் பொல்லாத் திருக்குறளா – என்னுடைய அழகிய வாமனனே! ‘அழகிது’ என்னில், நாட்டுக்கு ஒப்பாம் என்று கருதி அழகில் 4விஸஜாதீயதையைச் சொல்லுகிறார் ‘பொல்லா’ என்று. இனி, ‘கண்ணெச்சில் வாராமைக்குக் கரி பூசுகிறார்’ எனலுமாம். இதனால், 5மஹாபலி பக்கலிலே இரப்பாளனாய் நின்றது போன்று தம்மைப் பெறுகைக்குச் சிறாம்பி இரப்பாளானாய் நின்ற நிலையைத் தெரிவித்தபடி.  ‘வைகுந்தா’ என்று மேன்மை சொல்லிற்று; ‘மணி வண்ணனே’ என்று வடிவழகு சொல்லிற்று; ‘என் பொல்லாத் திருக்குறளா’ என்று சௌலப்யம் சொல்லிற்று; இம்மூன்றும் கூடினதாயிற்றுப் பரத்துவமாவது.6  என்னுள் மன்னி – என்னுடைய மனத்திலே வந்து நித்திய வாசம் செய்து. இந்திரன் இராஜ்ய லாபம் பெற்றுப் போனான்; மஹாபலி கொடையின் லாபம் பெற்றுப் போனான்; அவ்வடிவழகு ஊற்றிருந்தது இவர் நெஞ்சிலே ஆதலின்,‘குறளா என்னுள் மன்ளி’ என்கிறார். வைகும் வைகல்தோறும் அமுதாய – 1கழிகிற காலந்தோறும் எனக்கு முன்பு 2இல்லாத அமிர்தத்தைப் போன்று இனியன் ஆனான். வான் ஏறே-நித்தியசூரிகளோடே கலந்து அவர்களைத் தோற்பித்து மேனாணித்து இருக்குமாறு போலே ஆயிற்று, இவரோடே கலந்து இவரைத் தோற்பித்து இருந்த இருப்பு. பின்பும் அவன் ஏற்றமே விஞ்சி இருத்தலின், ‘ஏறு’ என்கிறார் எனலுமாம்.

————

ஊழிஊழி தொறும்
எதிர்சூழல் புக்கு,எனைத் தோர்பிறப்பும்
எனக்கே அருள்கள் செய்ய
விதிசூழ்ந்த தால்எனக்கேல் அம்மான்
திரிவிக் கிரமனையே.-
2-7-6-

சர்வேஸ்வரனாய் இருந்தும், ஸ்ரீவாமனனாய் வந்து அவதரித்து, மூன்று அடியாலே மூன்று உலகங்களையும் திருவடிகளின்கீழே இட்டுக்கொண்டு, எல்லாரோடும் பொருந்தின சௌலப்யந்தான் பரத்துவம் என்னும்படி என்னை அங்கீகரிப்பதற்கு ஒரு விதி சூழ்ந்தது. 4‘அம்மான் திரிவிக்கிரமனை எனக்கே அருள்கள் செய்ய எனக்கு என்னவே ஒரு விதி சூழ்ந்தது’ என்க.

———–

திரிவிக்கிரமன் செந்தாமரைக்கண்
எம்மான்என் செங்கனிவாய்
உருவில் பொலிந்த வெள்ளைப் பளிங்கு
நிறத்தனன் என்றுஎன்று உள்ளிப்
பரவிப் பணிந்து பல்ஊழி
ஊழி நின்பாத பங்கயமே
மருவித்தொழும் மனமே தந்தாய்
வல்லை காண்என் வாமனனே!–
2-7-7-

திரிவிக்கிரமன் – மூன்று அடிகளாலே எல்லா உலகங்களையும் தன் காற்கீழே இட்டிக்கொண்டவன். செந்தாமரைக்கண் எம்மான் – நோக்காலே என்னைத் தன் காற்கீழே இட்டுக் கொண்டவன். என் செங்கனி வாய் உருவின் பொலிந்த வெள்ளைப் பளிங்கு நிறத்தனன் -என்னைத் தனக்கே உரியவன் ஆக்குகையாலே சிவந்து கனிந்த திரு அதரத்தின் 2உருவிலே பொலிந்த, பரிசுத்தமான ஸ்படிகம் போலே இருக்கிற திருமுத்து நிரையினுடைய நிறத்தையுடையவன். இதனால்,

இவர் 1‘ஜிதம்’ என்ற பின்பு, அவன் புன்முறுவல் பூத்தமையைத் தெரிவித்தபடி. என்று என்று உள்ளி – இதர விஷயங்களினுடைய புன்முறுவலில் உண்டான நினைவு 2அகவாய் கண்டவாறே விட்டு அல்லது நிற்க ஒண்ணாதாய் இருக்கும்; ‘என்றுஎன்று உள்ளி’ என்று அடுக்குத் தொடராற் கூறுகின்றார்.

பரவிப் பணிந்து – முறை கேடாகக் கூப்பிட்டுச் செருக்கு அற்றவனாய்த் திருவடிகளிலே விழுந்து. இப்பேறுதான், ஒருநாள் உண்டாய் மற்றை நாள் 3மறுக்கை அன்றியே, பல் ஊழி ஊழி நின் பாத பங்கயமே மருவித் தொழும் மனமே தந்தாய் – கல்பந்தோறும் கல்பந்தோறும் பரம போக்யமான உனது திருவடிகளையே 4அநந்யப் பிரயோஜனனாய்க் கொண்டு தொழும் மனத்தினைத் தந்தாய். இனி, மற்றைய விஷயங்கள் நிலையற்றவை ஆகையாலும், இனியன அல்லாதவை ஆகையாலும், ஒன்றையே பற்றி நிற்க விஷயம் இல்லை ஆகையாலே, மனம் 5‘சஞ்சலம் அடைந்துகொண்டே இருக்கும் மனம்’ என்கிறபடியே, சஞ்சலம் அடைந்துகொண்டே அன்றோ இருப்பது? அப்படி இன்றியே நித்தியமுமாய் எல்லை இல்லாத போக்கியமுமாய் இருக்கையாலே ‘மருவித்தொழும் மனமே தந்தாய்’ என்கிறார் எனலுமாம். இனி, ‘பழைய மனத்தினைத் திருத்தினஅளவே அன்றி, 1கருவூலத்திலே ஒரு நெஞ்சைத் தந்தாய்’ எனலுமாம்; 2‘உனக்கு ஞானக் கண்ணைக் கொடுத்தேன்’ என்பது போன்று. ‘பழைய மனம் இது’ என்று 3பிரத்யபிஜ்ஞை பண்ண ஒண்ணாதபடி இராநின்றது என்றபடி. என் வாமனனே வல்லைகாண் – வாமன வேடத்தைக் காட்டி என் மனத்தினைத் திருத்தித் தந்தாய்; அவ்வடிவழகாலே, மஹாபலி ‘என்னது’ என்று இருந்த பூமியை அபகரித்தாய்; ஆதலால், கொள்கைக்கும் கொடுக்கைக்கும் உனக்குப் பரிகரம் ஒன்றேயோ?’ என்கிறார். வல்லைகாண் – உகப்பின் மிகுதி.

———-

வாமனன்,என் மரகத வண்ணன்,
தாமரைக் கண்ணினன்,
காமனைப் பயந்தாய்! என்றுஎன்று
உன்கழல் பாடியே பணிந்து
தூமனத் தனனாய்ப் பிறவித்
துழதி நீங்க, என்னை–
2-7-8-

வாமனன் – வடிவழகைச் சொல்லுகிறது என்னுதல்; அன்றிக்கே, சுகங்களைத் தருமவன் என்னுதல். என் மரகத வண்ணன் – சிரமத்தைப் போக்கக் கூடிய வடிவழகை என்னை அனுபவிப்பித்தவன். தாமரைக் கண்ணினன் – வடிவழகே அன்றி, அகவாயில் தண்ணளிக்குப் பிரகாசமான திருக்கண்களை உடையவன். காமனைப் பயந்தாய்-வடிவழகாலே நாட்டை வெருட்டித் திரிகிற காமனைப் பெற்றவனே! 1அநுசந்தானத்திலே ஒரு தெளிவு பிறந்தவாறே முன்னிலை போலே தோன்றும், அப்படியும் சொல்லிக் கூப்பிடுவர்; அதற்கு மேல் சில பரிமாற்றங்களை ஆசைப்பட்டு அவை கிடையாமையாலே படர்க்கையாகவும் சொல்லிக் கூப்பிடுவர். இவை இரண்டற்கும் அடி அபிநிவேசம்.

என்று என்று பாடியே உன் கழல் பணிந்து – இத்திரு நாமங்களை இப்படி வாயாலே மாறாதே சொல்லாநிற்கத் திருவடிகளிலே விழுந்து. தூ மனத்தனனாய் – பந்த மோக்ஷங்கள் இரண்டற்கும் பொதுவான நெஞ்சாதல் இன்றி, மோக்ஷத்திற்கே ஏகாந்தமான மனத்தினை உடையனாய். பரிசுத்தமான மனத்தினை உடையேனாய் என்றபடி.

————

தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம் சேர்த்தியவையே சிவன் முடி மேல் தான் கண்டு பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயான்
பெருமை பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே-2-8-6-

தீர்த்தன் –1‘தன் தலையிலே தரிக்கப்பட்டிருக்கிற எவருடைய ஸ்ரீபாத தீர்த்தமான கங்கையினால் அச்சிவன் பரிசுத்தன் ஆனான்?’ என்றும், 2‘நான் தக்கோன் ஆனேன்’ என்னும் நிச்சயக் கருத்தால் பரிசுத்தத்திற்காகத் தன் சடைமுடியில் கங்கையைத் தரித்தான் என்றும் சொல்லுகிறபடியே, தன் திருவடிகள் தீண்டுதலாலே அசுத்தரையும் சுத்தர் ஆக்க வல்ல சுத்தியை உடையவன். ‘இது எப்பொழுது செய்தது?’ என்னும் அபேக்ஷையிலே, ‘உலகு அளந்த காலத்திலே’ என்று அதனை நிரூபிக்கிறார் மேல். 3‘குறைகொண்டு’ என்றார் திருமழிசை மன்னனும். உலகு அளந்த சேவடிமேல்பூந்தாமம் சேர்த்தி அவையே சிவன் முடிமேல் தான் கண்டு –1அருச்சுனனுக்கு ஒரு தேவதை பக்கலிலே ஒரு பாணம் பெற வேண்டுவதாய் அவன் அதற்கு முயலுகின்ற காலத்திலே, இவன் சிரமத்தை ஆற்றுகைக்காகப் ‘புஷ்பங்களை நம் காலிலே இட்டு ஜீவி’ என்று அருளிச்செய்ய, அவனும் திருவடிகளிலே இட, அந்தத் தெய்வம் இராத்திரியிலே கனாவிலே அந்த மலர்களைத் தன் தலையிலே தரித்துக்கொண்டு வந்து தோன்றிப் பாணத்தைக் கொடுத்தாகச் சொல்லப்பட்டுள்ளது. அன்றே? அதனை அருளிச்செய்கிறார். பூந் தாமம் -அழகிய மாலை என்னுதல்; பூமாலை என்னுதல். அவற்றோடு ஒத்த மலர்கள் அன்றி அம்மலர்களையே கண்டான் ஆதலின், ‘அவையே’ என்றும், பாடே பார்ஸ்வத்திலே அன்றி அவன் தலை மேலே கண்டானாதலின், ‘சிவன் முடிமேல்’ என்றும், ஆப்தர் சொல்லக் கேட்கை அன்றியே, சுருதி ஸ்மிருதிகளால் ஆதல் அன்றியே, தானே கண்டானாதலின், ‘தான் கண்டு’ என்றும் அருளிச்செய்கிறார். காணுதல் – 2பிரத்யபிஜ்ஞார்ஹமாம்படிகாண்டல். ‘ஆயின், இவ்விடத்தில் கிருஷ்ணனுடைய சரிதை ஆயிற்றுச் சொல்லுகிறது; ஸ்ரீவாமன அவதாரம் என்?’ என்னில், 1கிருஷ்ணாவதாரத்துக்கும், வாமன அவதாரத்துக்கும் வரையாதே எல்லாரோடும் பொருந்துமது உண்டு ஆகையாலே சொல்லுகிறார். பார்த்தன் தெளிந்து ஒழிந்த – இறைவன் சாரதியாய்த் தாழ நிற்கச் செய்தேயும், அவனுடைய இறைமைத்தன்மையில் கலங்காமல், ‘அந்தப் பார்த்தன் பெரிய ஞானத்தையுடையவன்’ என்கிறபடியே பேரறிஞனான அருச்சுனன் நிரூபித்து நிர்ணயித்து, 2‘தேவரீருக்கு முன் பக்கத்திலும் வணக்கம், பின் பக்கத்திலும் வணக்கம்,’ என்று கூறிப் பின் பற்றிய. பைந்துழாயான் பெருமை பேர்த்தும் ஒருவரால் பேசக்கிடந்ததே – அறப்பெரிய முதன்மைக்கு அறிகுறியான திருத்துழாய் மாலையையுடைய சர்வேஸ்வரனுடைய பரத்துவம், இன்று அறிவு கேடர் சிலரால் 3செல்லவிட்டு ஆராயுமளவாய் இருந்ததோ?

———

கிடந்தது இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப்புக்கு இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும் தடம் பெரும் தோள் ஆரத் தழுவும்
பார் என்னும் மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பாரே-2-8-7-

அளந்து – தன்னதான பூமியை மஹாபலி போல்வார் இறாஞ்சிக் கொள்ள, அதனை எல்லை நடந்து மீட்டுக்கொண்டு.-ஸ்ரீ பூமிபிராட்டியை; பூமியைப் பிரகாரமாகவுடையள் ஆகையாலே அதற்குரிய ‘பார்’ என்ற சொல்லால்சொல்லுகிறார். 1தன் விபூதியினுடைய ரக்ஷணம் ஒருதலையானால் அவன் படும் பாட்டை அநுசந்தித்து மகிழ்ந்தவளாய் அதற்கு உரியவளான ஸ்ரீ பூமிப்பிராட்டி அணைக்கும், அதனாலே தானும் மகிழ்ந்தவனாய் அணையாநிற்கும் என்றபடி. மால் – எல்லாரைக்காட்டிலும் உயர்ந்தவனான சர்வேஸ்வரன். செய்கின்ற மால் -அவன் ஏற்றுகிற பிச்சை. ஆர் காண்பாரே – ஒருவராலே இவ்வளவு என்று அளவிடலாய் இருந்ததோ?

——–

முறையால் இவ்வுலகு எல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்-3-1-10-

மஹாபலி போல்வார் பருந்து 2இறாஞ்சினாற்போன்று அபஹரிக்க எல்லை நடந்து மீட்டு, இப்படி எல்லா விதமான ரக்ஷணங்களையும் செய்தவனே! ‘முறையால்’ என்றதற்குப் பொருள், ‘உடையவன் உடைமை என்ற சம்பந்தத்தால்’ என்னுதல்; ‘மாறி மாறி’ என்னுதல். ‘இதனை உபகாரமாகச் சொல்லுகிறது என்? கர்மங்கட்குத் தகுதியாக அன்றோ பல படியாகப் படைத்தல் இருப்பது?’ எனில், படைத்தல் கர்மங்களைக் கடாக்ஷித்தேயாகிலும் ஒரே காலத்தில் ஒரு சேரப்படைத்தல் அநுக்கிரகத்தின் காரியம்.

    பிறை யேறு சடையானும் நான்முகனும் இந்திரனும் இறையாதல் அறிந்து ஏத்த வீற்றிருத்தல் இது வியப்பே – சடை கழற்றாமல் சாதக வேஷத்தோடேயிருந்தும், கலா மாத்திரமான சந்திரனைத் தரித்துக்கொண்டு சுகத்தையே பிரதானமாகக் கொண்டுள்ள முதன்மை பெற்றவனாயிருக்கிற சிவனும், அவனுக்குங்கூடத் தந்தையான பிரமனும், இவர்களோடு ஒக்க எண்ணலாம்படியிருக்கிற இந்திரனும், நீ ஸ்வாமியான முறையறிந்துஏத்த, அதனாலே உன்னுடைய வேறுபாடு தோன்ற இருந்தாய் என்றால் இது உனக்கு ஆச்சரியமோ! அதாவது, ஒருவன் ஒரு 1குழமணனைச் செய்து அதன் கழுத்திலே காக்கைப்பொன்னைத் தொற்றி அதன் தலையிலே காலை வைத்து, ‘இது என்னை வணங்கிற்று’ என்று இறுமாந்திருக்குமாறு போன்று, 2’நன்மைப்புனல் பண்ணி நான்முகனைப் பண்ணி’ என்கிறபடியே, உன்னாலே மனையப்பட்ட பிரமனும், அவனாலே உண்டாக்கப்பட்ட இவர்களும் உன்னையேத்த, அதனாலே இறுமாந்திருந்தாயென்றால் அது உனக்கு ஏற்றமோ! நகையாய் முடியுமத்தனையன்றோ!’ என்றபடி

————–

வன்மா வையம் அளந்த எம் வாமனா-3-2-2-

வன் மா வையம் அளந்த – 2வன்மையையுடைத்தான பெரிய பூமியை அளந்த. 3‘வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை’க்கொண்டு காடும் மலையுமான பூமியை அளந்தானாதலின் ‘வன்வையம் அளந்த’ என்கிறார். வன்மை என்பது ஈண்டு வையத்துக்கு அடை. இனி, வையத்தை ஆகுபெயராக்கி, வன்மையை ஆகுபெயர்ப்பொருளுக்கு அடைமொழியாக்கி, அவன் தானே தன்னைக் கொடுவந்து காட்டின இடத்திலும் நெஞ்சில் நெகிழ்ச்சியின்றியிருந்த சமுசாரிகளுடைய நெஞ்சில் வன்மையைச் சொல்லுகிறார் என்னுதல். இப்பொருளில் ‘அசுரத் தன்மையையுடைய மஹாபலிக்கு உள்ள இரக்கமும் இல்லையே! சுக்கிரன் முதலானோர் விலக்கவும் அவர்கள் வழி போயிற்றிலனே அவன்!’ என்று இவர்கள் மனநெகிழ்ச்சியின்மைக்கு இரங்குகின்றமை தோன்றும். இனி, மஹாபலி

தோள் மிடுக்காலே ஒருவர்க்கும் நுழைவதற்கு அரிதான வன்மையை உடைத்தாயிருந்ததாதலின், ‘வன் மா வையம்’ என்கிறார் என்னுதல். எம் வாமனா – பிறரால் கவர்ந்துகொள்ளப்பட்ட ராஜ்யத்தையுடையவனான இந்திரனுக்காக அன்று, 1வாமனாவதாரமும் தம்பொருட்டு என்றிருக்கிறார். நின் – 2‘எனது மாயையினை ஒருவராலும் தாண்ட முடியாது,’ என்று சொன்ன இது என் ஒருவனுக்கும் பலித்துவிட்டது. பன் மா மாயம் – பல விதமான பெரிய மூலப்பகுதி. 3தேவர்கள் முதலான பல்வகைப் பொருள்களாகிய காரியத்தின் பன்மையைக் காரணத்தின்மேலிட்டு உபசார வழக்கால் ‘பன்மாயம்’ என்கிறார். இனி, ‘மூலப்பகுதி முக்குணங்களுக்கும் இருப்பிடமாயிருக்கையாலே குணபேதங்களை இட்டுப் ‘பன்மாயம்’ என்கிறார்,’ எனலுமாம்.

    சுக்கிரன் தடுத்தமையையும், மஹாபலி அவன் வார்த்தைகளைக் கேளாமையையும் கம்பராமாயணம், பாலகாண்டம், வேள்விப்படலத்தில் 25 முதல் 34 முடிய உள்ள செய்யுள்களிற் காண்க. அவற்றுள்,

‘கண்ட திறத்திது கைதவம் ஐய!
கொண்டல் நிறக்குறள் என்பது கொள்ளேல்;
அண்டமு முற்றும் அகண்டமும் மேனாள்
உண்டவ னாம்இது உணர்ந்துகொள் என்றான்.’

‘வெள்ளியை யாதல் விளம்பினை; மேலோர்
வள்ளிய ராக வழங்குவ தல்லால்
எள்ளுவ என் சில? இன்னுயி ரேனும்
கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்றால்.

—————-

உலகம் எல்லாம் தாவிய வம்மானை எங்கன் இனித் தலைப் பெய்வனே–3-2-9-

உலகமெல்லாம் தாவிய அம்மானை – ஓர் ஊர்க்கு உதவின அளவேயன்றி, எல்லாப் பொருள்களிலும் ஒன்றும் பிரிகதிர்ப்படாதபடி எல்லார் தலைகளிலும் ஒக்கத் திருவடிகளை வைத்துத் தான் ஸ்வாமி என்னுமிடத்தை அறிவித்தனை. எங்கு இனித் தலைப்பெய்வன் – எங்ஙனம் கிட்டப் போகிறேன்? ‘அந்தத் 1தூளி தானத்துக்கும் தப்பின நான், 2பரீட்சை சொல்லிப் பெறப் போகின்றேனோ?’ என்கிறார் என்றபடி. இதனால், ‘அவன் தானே வந்து உதவி செய்தவன்று தப்பின யான், ஒரு சாதன விசேடத்தைப்பண்ணி எங்கே சென்று கிட்டப் புகுகிறேனோ!’ என்று நசையறுகிறார்

———

அன்று ஞாலம் அளந்த பிரான்-3-3-8-

அன்று ஞாலம் அளந்த பிரான் – ஓர் ஊருக்கு உதவினபடி சொல்லிற்று மேல்; இங்கு நாட்டுக்குஉதவினபடி சொல்லுகிறது; விரோதியான மஹாபலியாலே பூமி கவரப்பட்ட அன்று, எல்லை நடந்து மீட்டுக்கொண்ட உபகாரகன். பரன் – எல்லாப் பொருள்கட்கும் உயர்ந்தவன்.

———-

தாள் பரப்பி மண் தாவிய வீசனை–3-3-11-

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை – கடினமான இடத்திலே பூவைப் பரப்பினாற்போலே சுகுமாரமான திருவடிகளைக் கொண்டு காடும் மலையுமான பூமியை வருத்தமின்றி அளந்துகொண்ட சர்வேசுவரனை.

ஆயின், திருவேங்கடமுடையானையன்றோ பாடிற்று இத்திருவாய்மொழியில்? மண்தாவிய ஈசனைப் பாடிற்று என்றல் யாங்ஙனம்?’ எனின், 2’கொண்டாய் குறளாய் நிலம் ஈரடியாலே, விண் தோய் சிகரத் திருவேங்கடம் மேய, அண்டா!’ என்றும், 3’மண் அளந்த இணைத்

தாமரைகள்’ என்றும், 1‘உலகம் அளந்த பொன்னடியேயடைந்து உய்ந்து’ என்றும் 2ஆழ்வார்கள் அருளிச்செய்வர்கள்; அன்றியும், எல்லாரையும் கிரமத்திலே திருவடிகளின் கீழே இட்டுக் கொள்ளுகைக்காக நிற்கிற நிலையாலும், வரையாமல் கானமும் வானரமுமான இவற்றுக்கு முகங்கொடுத்துக்கொண்டு நிற்கிற படியாலும் திருவேங்கடமுடையானை ஸ்ரீவாமனனாகச் சொல்லப்படும்

———-

ஞாலம் கொள்வான் குறளாகிய வஞ்சனே என்னும் எப்போதும் என் வாசகமே–3-8-2-

ஞாலம் கொள்வான் குறளாகிய வஞ்சனே! – மஹாபலியாலே கொள்ளப்பட்ட பூமியை மீட்கும் விரகு அறியுமவனே! இராவணன் தலையை அறுத்தது போன்று அறுக்காமல் விட்டது, கொடை என்பது ஒரு குணம் சிறிது உண்டாகையாலே. வஞ்சனை-விரகு. விரகாவது, ‘இவன் கையிலே தர்மம் ஒரு சிறிது உண்டாய் இருந்தது’ என்று ‘இவனை அழிக்காமல், அறப்பெரியவனான தன்னை இரப்பாளன் ஆக்கி இந்திரனுக்கு இராச்சியத்தை வாங்கிக்கொடுத்தது. இனி, ‘வஞ்சனையையுடையவனே! என்னலுமாம். ஈண்டு வஞ்சனையாவது, கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து, சிறுகாலைக் காட்டி ‘மூவடி’ என்று வேண்டிப் பெரிய காலாலே அளந்து, இரண்டு அடியிலே அடக்கி, ஓரடிக்குச் சிறையிலே இட்டு வைத்தது. இந்திரன் பேறு தன் பேறு ஆகையாலே, 1கொள்வான்’ என்கிறது. என்னும் என் வாசகமே – என் வாக்கானது இவ்வஞ்சனத்தையே சொல்லா நின்றது. ‘இவ்வஞ்சனத்தை அநுசந்தித்த பின்பு 2இராமாவதாரத்தின் செவ்வையிலும் போகிறது இல்லை,’ என்பார், ‘வஞ்சனே என்னும்’ எனப்பிரிநிலை ஏகாரங்கொடுத்து ஓதுகிறார். ‘இராமாவதாரத்திலும் இதற்குப் பெருமை என்?’ எனின், தன் பெருமை அழியாமற்செய்த இடம் அன்றோ இராமாவதாரம்? தன் பெருமை அழிய மாறின இடம் அன்றோ இது? எப்போதும் – 3கலியர் ‘சோறு சோறு’ என்னுமாறு போன்று.

—————

கொள்வன் நான் மாவலி மூவடி தா வென்ற கள்வனே –உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே–3-8-9-

கொள்வாள் – 2மலையாளர் வளைப்புப் போலே கொண்டு அல்லது போகேன் என்றானாயிற்று. அன்றிக்கே, இவனுடைய வாமன வேஷத்தைக் கண்டு ‘இவன் நம் பக்கல் ஒன்று கொள்வதுகாண்’ என்று நினைந்தமை தோன்ற இருந்தான் ஆயிற்று மகாபலி; நினைத்ததை அறிந்து, ‘நான் கொள்வேன் என்கிறான்’ என்னுதல். அன்றிக்கே, இவன் ஒன்றிலும் பற்று இல்லாதவனாய் இருத்தலை வடிவில் கண்டு, ‘இவன் நம் கையில் ஒன்று கொள்ளுமோ?’ என்று இருந்தான் மஹாபலி; ‘நீ அங்ஙன் நினைக்க வேண்டா; நான் விருப்புடையேன்,’ என்கிறான் என்னுதல். நான் – 3உன்பக்கல் பெற்றால் அன்றி ஓர் அடி இடாத நான். மாவலி – 4பிறந்த அன்றே பிக்ஷையிலேஇறங்கினான் ஆகையாலே பிரபுக்களை உபசரித்து வார்த்தை சொல்லி அறியானே! முன்பு சிலர்க்குத் தாழ்வு சொல்லியறியான்; பிறந்த பின்பு வாசனை பண்ணுகைக்கு நாள் இல்லை; அதனாலே, ‘மாவலி’ என்கிறான்.

எல்லோரும் தன்னை உயர்த்திச் சொல்லுமது ஒழிய இப்படிச் சொல்லக் கேட்டு அறியாமையாலே ‘இவன் ஒரு பாலன் தன் முன்பே நின்று சிறு பேரைச் சொல்லி அழைக்கிறான்,’ என்று நினைத்து இனியனாய் முகத்தைப் பார்த்து, ‘உனக்கு வேண்டுவது என்?’ என்றான். ‘மூவடி’ என்கிறான். தன் பக்கல் கொள்ளுமவர்களில் இப்படிச் சிறுக விரும்புகின்றவர்கள் இல்லாமையாலே விருப்பு இன்றியே இருந்தான்; ‘பராமுகம் பண்ணாதே ‘தா’ என்கிறான். என்ற கள்வனே – இந்திரன் சரணம் புக்கு நின்றான்; கொடையாளியாய் இருப்பான் ஒருவன் அவனுடைய இராச்சியத்தைப் பறித்துக்கொண்டான்; ‘இராவணன் முதலியோர்களைப் போன்று அழியச்செய்யப் போயிற்று இல்லை, சிறிது தர்மத்தை ஏறிட்டுக்கொண்டு நிற்கையாலே; இந்திரனோ, சரணம் புக்கு நின்றான்; இனிப் போம் வழி என்?’ என்று பார்த்துத் தன்னை இரப்பாளன் ஆக்கி, சுக்கிரன் முதலியோர், ‘இவன் தேவ காரியம் செய்ய வந்தான்,’ எனச்செய்தேயும், அவ்வார்த்தைகள் அவன் நெஞ்சில் படாதபடி அவனை வடிவழகாலும் பேச்சழகாலும் வாய்மாளப் பண்ணின வஞ்சனங்கள் எல்லாவற்றையும் நினைத்துக் ‘கள்வனே’ என்கிறார்.

—–

குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா குரை கழல் கை கூப்புவார்கள் கூட நின்ற மாயனே விரை கொள்
பூவும் நீரும் கொண்டு ஏத்த மாட்டேநேலும் உன் உரை கொள் சோதித் திரு உருவம் என்னதாவி மேலதே–4-3-7-

குரை கழல்கள் நீட்டி – 2‘மண் முழுதும் அகப்படுத்து நின்ற’ என்கிறபடியே, பூமிப்பரப்பு அடையத் திருவடிக்குள்ளேயாம்படி திருவடியை நிமிர்த்து. குரை – பரப்பு என்னுதல்; ஓசை என்னுதல். மண் கொண்ட கோலவாமனா – 3மண் கொண்ட பின்பும் வாமன வேஷம் இவர் திருவுள்ளத்திலே ஊற்றிருந்தபடி. இந்திரனுக்கு இராச்சியம் கொடுக்கை அன்றிக்கே, தம்மை அனுபவிப்பிக்கைக்காக அவ்வடிவு கொண்டான் என்று இருக்கிறார். இதனால்,பிராப்தியைச் சொல்லிற்று

———-

மண்ணை இருந்து துழாவி,
‘வாமனன் மண்இது’ என்னும்;-
4-4-1-

ஆற்றாமை மீதூர்ந்து, செல்வத்திலே பேராசையுள்ள ஒருவன் கிழிச்சீரையைக் கெடுத்தால் அதனோடு போலியான முடிகளை எல்லாம் அவிழ்த்து அவிழ்த்துப் பார்க்குமாறு போன்று, அவனோடு ஒத்த பொருள்களையும் அவனோடு சம்பந்தப்பட்ட பொருள்களோடு ஒத்த பொருள்களையும் அகப்பட அவனாகக்கொண்டும், சம்பந்தப்பட்ட பொருள்களாகக் கொண்டும் மயங்கிக் கிட்டிப் பார்த்து

அவன் அன்றிக்கே ஒழிந்தால் மீளவும் மாட்டாதே நோவுபட்டுச் செல்லுகிறது. 1‘வைப்பாம் மருந்தாம்’ என்னும்படியே, இவர்க்குச் சேமநிதி அன்றோ அவன்?

மண்ணை இருந்து துழாவி – 2‘மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை’ என்கிறபடியே, அவன் திருவடிகளுக்குஉட்பட்ட பூமிப்பரப்பு அடைய இருந்து துழாவா நிற்கும். அவன் சம்பந்தங்கொண்டே இதனை விரும்புகிறது; 1‘அது ஓரிடத்தில் இருப்பது அன்றே?’ என்றது, ‘எங்கும் இருப்பது’ என்றபடி. ‘முன்பு தோற்றுகின்ற சோலை என் என்பது?’ என்று பெருமாள் கேட்டருள. 2‘பண்டு ‘சித்தாஸ்ரமம்’ என்று ஸ்ரீ வாமனன் எழுந்தருளியிருந்த தேசமாயிற்று; அவன் எழுந்தருளின பின்பு அவன் பக்கல் பத்தியாலே விடமாட்டாமே அம்மண்ணை மோந்துகொண்டு கிடப்பேன்,’ என்றான் அன்றோ விசுவாமித்திரன்? 3‘விஷ்ணு பகவான் மனித உருவத்தோடு சக்கரவர்த்தி திருமகனாய் இராமன் என்ற பெயரோடு இப்பூமியில் சஞ்சரித்தார்,’ என்றான் திருவடி. ஆகையாலே, அவன் பக்கல் ருசியுடையார் விடமாட்டார்கள் அன்றோ? இருந்து – 4இவ்விருப்புக்கு முன் கணத்தில் நிற்றல் நடத்தல்

கிடத்தல் முதலியவற்றில் ஒரு நியதி இன்றிக்கே நோவுபட்டமை தோன்றுகிறது.

    துழாவி – இதனால், பித்தத்தால் பீடிக்கப்பட்டவன் சந்தனக் குழம்பினின்றும் கைவாங்க மாட்டாததைப் போன்று இம்மண்ணை 1விடமாட்டாமையும் தோன்றுகிறது. விட்டுக் கைவாங்கினால் விரஹ அக்நியினாலே வேம். 2தாங்கள் தெளிந்திருந்தார்களாய் ‘இவள் மயங்கினாரைப் போன்று செய்கின்றது என் என்பது?’ என்பர்களே, அவர்களை ‘நீங்கள் மயங்கினீர்களோ?’ என்னுமாயிற்று இவள் என்கிறாள் மேல் : வாமனன் மண் இது என்னும் – ‘வாமனன் மண் அன்றோ இது?’ என்னாநின்றாள். 3‘திருவடியிலே பிறந்ததனால் உண்டான வாசனையையுடைய பூமி அன்றோ?’ என்னாநின்றாள் என்றபடி, 4‘பூமியானது வாசனையையுடையது’ என்றே அன்றோ நாட்டில்

பிரசித்தி? ‘ஸர்வகந்த:’ என்கிற விஷயத்தினுடைய சம்பந்தமே ஆயிற்று இவள் அறிவது. 1‘அவன் இரந்து தனக்கு ஆக்கிக்கொண்டது அன்றோ?’ என்னாநின்றாள்; 2அவனதானால் இந்திரனுக்குக் கொடுத்தது போன்று கொடுக்க வேண்டாகாணும் இவளுக்கு; அவனது ஆனபோதே இவளது ஆயே இருக்கும். 3‘அவனது அன்று காண்’ என்று இவளை மீட்க ஒண்ணாதே? ‘கண்கூடாகப் பார்க்கும்போதும் உங்களுக்குச் சந்தேகம் தொடராநின்றதோ?’ என்கிறாள் என்பாள், ‘இது என்னும்’ என்கிறாள். ‘ஆயின், நேரே காண்கின்றாளாயின், அனுபவிக்கத்தடை என்?’ எனின், இறந்த காலத்தில் உள்ளதும் நிகழ்காலத்தில் உள்ளதைப் போன்று தோன்றுகின்றதித்தனை போக்கி, மண் அளந்தவனை இப்போது காண ஒண்ணாதே?

——

உண்டும்உமிழ்ந் தும்கடந்தும் இடந்தும்கிடந் தும்நின்றும்
-4-5-10-

கடந்தும் – மஹாபலி போல்வார் பருந்து இறாஞ்சினாற் போலே பறித்துக்கொண்டால் எல்லை நடந்து மீட்டும்.

———-

என் வள்ளலேயோ வையம் கொண்ட வாமனாவோ என்று என்று நள்ளிரவும் நன்பகலும் நானிருந்து ஓலமிட்டால்
கள்ள மாயா உன்னை என் கண் காண வந்தீயாயே–4-7-2-

கடந்தும் – மஹாபலி போல்வார் பருந்து இறாஞ்சினாற் போலே பறித்துக்கொண்டால் எல்லை நடந்து மீட்டும்.

————-

தாவி வையம் கொண்ட வெந்தாய் தாமோதரா என்று என்று கூவிக் கூவி நெஞ்சுருகிக் கண் பனி சோர நின்றால்
பாவி நீ என்று ஓன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே–4-7-3-

தாவி வையம் கொண்ட எந்தாய் – அரிய செயல்களையும் வருத்தம் அறச் செய்ய வல்லவன் அன்றோ? அது செய்யுமிடத்தில் வரையாதே எல்லாரையும் காக்குமவன் அன்றோ? அவன் இவற்றைக் காப்பதற்கு அடியிட்டான்; அச்செயலிலே இவரும் தோற்று அவனுக்கு உரியவராய் ‘எந்தாய்!’ என்கிறார்.

———–

குறிய மாணுருவாகிக் கொடும் கோளால் நிலம் கொண்ட கிரி யம்மான் கவராத கிளர் ஒளியால் குறைவிலமே–4-8-6-

குறிய – கோடியைக் காணியாக்கிக்கொண்டாற்போலே, வளர்ந்த போதையிற்காட்டிலும் கவர்ச்சிகரமாய் இருக்கிறபடி. மாண் உருவாகி – 3பிறந்த போதே இரப்பினை மேற்கொண்டு, அதுவே பயிற்சியாய் இருந்தபடியாலே, ‘பிறப்பதற்கு முன்பெல்லாம் இதுவேயோ செயல்?’ என்னும்படிக்குத் தகுதியாக ஆயிற்று, 4‘உண்டு’ என்று இட்ட போதோடு ‘இல்லை’ என்று சொல்லிக் கதவு அடைத்த போதோடு வாசி அற முகமலர்ந்து போகும்படிக்குத் தகுதியாக ஆயிற்று இரப்பிலே தழும்பு ஏறினபடி. ஆக, ‘அறிவிக்கக் கேளாதாரை 5வடுக விடுநகம் இட்டு வடிவழகாலே

தனக்கு ஆக்கிக்கொள்ளுமவன்’ என்பதனைத் தெரிவித்தபடி.

    கொடுங்கோளால் – 1வெட்டிய கோளாலே; என்றது, வடிவழகைக் காட்டி அவனை வாய் மாளப் பண்ணினபடியைத் தெரிவித்தபடி. அன்றிக்கே, ‘கொடு’ என்றதனைக் ‘கோடு’ என்றதனுடைய குறுக்கல் விகாரமாகக் கொண்டு, ‘கோடு’ என்பதற்கு விலங்குதல் என்று பொருள் கூறி, ‘விலங்குதலாவது, செவ்வைக்கேடு’ என்று கொண்டு, ‘செவ்வைக் கேடாவது, மூன்று அடி கேட்டு இரண்டு அடிகளாலே அளப்பது; சிறு காலைக் காட்டிப் பெரிய காலாலே அளப்பது; ஆக, இப்படிகளாலே அவனை வஞ்சித்தபடியைச் சொல்லுகிறது என்னுதல். என்றது, தீய உபாயத்தைப் பிரயோகம் செய்தவர்களுக்கு அதற்குத் தகுதியாக உத்தரம் சொல்லுவாரைப் போலே, அவன் செவ்வைக்கேட்டிற்குத் தகுதியாகத் தானும் செவ்வைக் கேடனாய்க்கொண்டமையைத் தெரிவித்தபடி. கிறி அம்மான் – அவன் தரும் விரகு அறிந்து வாங்க வல்ல பெருவிரகனான சர்வேசுவரன். 2‘பெருங்கிறியான்’ –திருவிருத்தம், 91.-என்னக் கடவதன்றோ? கவராத கிளர் ஒளியால் குறை இலமே – செவ்வை கெடவாகிலும் தன்னுடைமையைத் தனக்கு ஆக்கிக் கொள்ளுமவன், முன்னரே இசைந்து தன்னைப் பெறவேண்டும் என்றிருக்கிற எனக்கு வந்து முகங்காட்டித் தனக்கு ஆக்கிக்கொள்ளாத பின்பு எனக்கு இத்தால் காரியம் உண்டோ? கிளர்ஒளி – மிக்க ஒளி; என்றது, சமுதாய சோபை.

———–

உறுவதாவது –திருக் குருகூர் அதனுள் குறிய மாணுருவாகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே –4-10-10-

குறிய – கோடியைக் காணியாக்கினாற்போலே, கண்களால் முகக்கலாய் இருக்கும்படி வடிவை அமைத்தபடி. மாண் உருவாகிய – இட்டபோதொடு இடாத போதொடு வாசியற முகமலர்ந்து போகும்படியாக இரப்பிலே தழும்பு ஏறினபடி.

——-

மீனாய் ஆமையு மாய் நர சிங்கமு மாய்க்குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கி யாம்இன்னம் கார்வண்ணனே.-
5-1-10-

குறள் ஆய் – கொடுத்து வளர்ந்த கையைக்கொண்டு இரப்பாளன் ஆனான். -நான் தப்புகைக்குப் பிறந்த பிறவிகளைப் போலவே போரும் அவன் என்னைக் காப்பாற்றுவதற்காகப் பிறந்த பிறவிகளும். 4நான் கர்மத்தாலே பிறந்த பிறவிகள் அடையத்தானும் அநுக்கிரஹத்தாலே பிறந்தான். கார் வண்ணனே-நீர்கொண்ட மேகம் போலே இருக்கின்றானத்தனை. மழை பெய்தானாய் இருக்கின்றிலன். வண்ணம் – ஸ்வபாவம். மீ்னாய் என்று தொடங்கி, என்னை முற்றவும் தான் ஆனான் என முடிக்க.

———-

மண்ணை முன் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்து மணந்த மாயங்கள் எண்ணும் தோறும் என்நெஞ்சு எரிவாய் மெழுகு ஒக்கும் நின்றே-5-10-5-

ஆபத்துக்கள் வர இவை நோவுபடாதபடி வயிற்றிலே வைத்து நோக்கி, ‘உள்ளே கிடந்து மறைந்து போக ஒண்ணாது’ என்று பார்த்து வெளிநாடு காணப் புறப்பட விட்டு, பின்பு மஹாபலி போல்வார் கவர்ந்து கொள்ள எல்லை நடந்து மீட்டுக்கொடுத்து, பின்பு 1அவாந்தர பிரளயங்கொண்ட பூமியை மஹாவராஹமாய் எடுத்துக்கொண்டு ஏறி, இவையெல்லாம் பிராட்டிப் படுக்கைப் பற்றாகையாலே அவளுக்குப் பிரயமாகச் செய்து அவளோடே கலந்த ஆச்சரியமான செயல்களை. மணத்தல்-கலத்தல்.

எண்ணுந்தோறும் என் நெஞ்சு எரிவாய் மெழுகு ஒக்கும் நின்றே 2அவனுடைய ரக்ஷணத்திலும் பரப்பு உண்டாகாதே இவருடைய பாரிப்பு. 3எண்ண மாட்டார், எண்ணாதிருக்க மாட்டார்; ரக்ஷணத்திற்கு அவன் சமைந்தாற்போலே காணும் அழிகைக்கு இவர் சமைந்தபடி. 4இதனை நினைத்தே நாட்டார் உண்டு உடுத்துக் காலம் போக்கா நின்றார்களாதலின் ‘என் நெஞ்சு’ என்கிறார். நெருப்பின் அருகில் இருக்கும் மெழுகு போலே உருகா நின்றது என்பார் ‘எரிவாய் மெழுகு ஒக்கும்’ என்கிறார். அது ஒருகாலே உருகுதல் கரிதல் செய்யு

————

அடியை மூன்றை இரந்தவாறும் அங்கே நின்று ஆழ் கடலும் மண்ணும் விண்ணும் முடிய ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும்
நொடியுமாறு அவை கேட்கும் தோறும் என்நெஞ்சம் நின் தனக்கே கரைந்து உருகும் கொடிய வல் வினையேன் உன்னை என்று கொல் கூடுவதே–5-10-9-

அடியை மூன்றை இரந்தவாறும் – 2இவை அபேக்ஷிக்க மாட்டாத அன்றும் இவற்றின் ஹிதத்தைச் சிந்தனை செய்யுமளவேயோ, இவை உண்டானாலும் சிறியதைப் பெரியது நலியாதபடி நோக்குவான் அவன் என்கிறது. 3நேராய்ப் போகாமே மூன்று அடியை இரந்தானாதலின் ‘அடியை மூன்றை’ என்கிறார். 4இரண்டு அடி இரந்தானாகில் அவனைச் சிறை செய்ய விரகு இல்லையே. அங்கே நின்று – கடக்க நான்கு அடி போனானாகில், ‘வஞ்சனை செய்தான்’ என்று அவன் வழக்குப் பேசலாமன்றோ. ஆழ்கடலும் மண்ணும் விண்ணும் ஈரடியால் முடிய முடித்துக்கொண்ட முக்கியமும் – 5இவருடைய நெஞ்சினைக் கரைக்க அடி இட்டபடி. பூமி ஆகாசம் முதலியவைகள் அடங்கலும் இரண்டு அடிகளிலே அடங்கும்படிக்குத் தகுதியாக அளந்து தலைக்கட்டிக்கொண்டபடியும். முக்கியம் – வேண்டற்பாடு. அதாவது, அடியார்கட்காகச் செய்த வஞ்சனையால் வந்த வேண்டற்பாடு இருக்கிறபடி. அன்றிக்கே, தன்னினின்றும் வேறுபட்ட எல்லாப் பொருள்களும் தன் திருவடிகளின் கீழே அகப்படுகையாலே வந்த வேண்டற்பாடு என்னலுமாம். நொடியுமாறு அவை கேட்குந்தோறும் – திருவுலகு அளந்தருளின சரிதையை வியாசர் முதலானார் சொல்லாநிற்பர்கள், அவர்கள் சொல்லும் பிரகாரங்களைக் கேட்குந்தோறும். இதனால்,தாம் சொல்லவேண்டா என்றபடி. நொடிதல்-சொல்லுதல். என்நெஞ்சம் நின்தனக்கே கரைந்துஉகும் – 1மஹாபலியைப் போலே ஒளதார்யம் கொண்டாடுகிறேன் அல்லேன், இந்திரனைப் போலே இராஜ்யம் ஆளுகிறேன் அல்லேன், என்னுடைய மனமானது உன் பக்கலிலே உருக்குலைந்து மங்கா நின்றது.

———-

மின்கொள் சேர்புரி நூல் குறளாய் அகல்ஞாலம்கொண்ட
வன்கள்வ னடிமேல் குருகூர்ச்சடகோபன் சொன்ன
பண்கொள் ஆயிரத்துள்இவை பத்தும் திருவண்வண்டூர்க்கு
இன்கொள் பாடல்வல்லார் மதனர்; மின்னிடையவர்க்கே.–6-1-11-

மின்கொள் சேர் புரிநூல் குறளாய்-மின்னைவென்று, நீலநிறம் பொருந்திய திருமேனிக்குப் 2பரபாகமான சேர்த்தியையுடைய பூணுநூலைத் தரித்த ஸ்ரீவாமனனாய். 3இப்போது இது சொல்லுகிறது, மஹாபலி எல்லாச் செல்வத்தையும் கொடுக்கும்படி பணிவுள்ள வேஷத்தோடே போய்ப் புக்க படியைத் தெரிவிப்பதற்கு. 4“பகற்கண்டேன்” என்கிற தோற்றரவுக்குக் கிழக்கு வெளுக்கிறபடி. தூது விடுகைக்குக்கூடச் சக்தன் அல்லாமை தோற்ற இரப்பாளனாய்,இத்தலையைப் பிரிந்து வந்த சிறாம்புதல் எல்லாம் வடிவிலே தோற்ற நின்றபடி. அகல் ஞாலம் கொண்டவன் கள்வன் அடிமேல்-பூமிப் பரப்பு அடங்கலும் அவனுக்கு ஒன்றும் தொங்காதபடி அபஹரித்த மஹாவஞ்சகன் திருவடிகளிலே. 1மின்னிடை மடவார்க்குக் கிழக்கு வெளுக்கிறபடி. 2அதாவது மஹாபலியினுடைய செருக்கினைப் போக்கி ஒன்று ஒழியாமல் கைக்கொண்டாற்போலே, பிரணயரோஷத்தாலே வந்த இவளுடைய அபிமானத்தைப் போக்கிச் சேரவிட்டுக் கொண்டபடி. 3எதிரியாய் வந்தவனுடைய செருக்கினைப் போக்கினாற் போலே அன்று, காதலியுடைய மானம். 4அது அழிக்கலாம், இது அழிக்க ஒண்ணாதே. 5விஷயமில்லாமலே கோபிக்கின்றவர்கள் இலக்குப் பெற்றால் மிகைப்பர்களத்தனையன்றோ. அவன் சந்நிதியிலும் அழியாதது ஒன்றேயன்றோ இது.

—————-

தன் சரண் நிழல் கீழ் உலகம் வைத்தும் –திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் என் சரண் என் கண்ணன் என்னை யாளுடை என்னப்பனே–6-3-8-

தன்சரண் நிழற்கீழ் உலகம் வைத்தும் வையாதும் – தன்னுடைய பாதங்களின் நிழலிலே, அநுகூலரான அருச்சுனன் முதலாயினோர்களை இட்டுக்கொண்டும். சம்பந்தம் ஒத்திருக்கச்செய்தே, பிரதிகூலரான துரியோதனன் முதலாயினோர்களைப் புறம்பே இட்டும்.

———–

காண்மின்கள் உலகீர் என்று கண் முகப்பே நிமிர்ந்தே தாளிணையன்–6-3-11-

காண்மின்கள் உலகீர் என்று கண்முகப்பே நிமிர்ந்த தாள் இணையன் தன்னை – 4‘உங்கள் தலைகளிலே நான் காலைவைக்கக்

கொடு வாருங்கோள்’ என்றால், இசையார் என்று பார்த்து, நான் காட்டப் புகுவது ஓர் ஆச்சரியத்தைப் பாருங்கோள் என்பாரைப் போலே இவர்கள் கண்முகப்பே நிமிர்ந்த திருவடித் தாமரைகளையுடையவனை. காண்மின்கள் – 1இது ஓர் ஆச்சரியம் என்னவேண்டிற்றுக்காணும் ‘தலைகளிலே அடிபடப் புக்கவாறே இறாய்ப்பர்கள்’ என்று.

——–

அகல் கொள் வையம் அளந்த மாயன் என்னப்பன் தன் மாயங்களே பகல் இராப் பரவப் பெற்றேன் எனக்கு என்ன மனப்பரிப்பே–6-4-6-

அகல் கொள் வையம் அளந்த மாயன் என் அப்பன் தன் மாயங்களே – பரப்பையுடைத்தான பூமியடங்கலும் வருத்தம் இன்றி வளர்ந்து அளந்த ஆச்சரியத்தையுடையனான உபகாரகனுடைய ஆச்சரியமான செயல்களையே. பகல் இராப்பரவப் பெற்றேன் – 1நாட்டார் அபிமத விஷயங்களை அநுபவிப்பதற்குப் ‘பகல் இரா’ என்று கூறிட்ட காலம் இரண்டும் இந்த விஷயத்திலே அநுபவிக்கப்பெற்ற எனக்கு, இரவு பகல் புறம்பே விஷயங்களை அனுபவிப்பாருடைய மனோ துக்கம் உண்டோ? பரிவு – துக்கம். அதிலே ஒரு ஒற்றெழுத்து ஏறினாலும் அந்தப் பொருளையே காட்டக்கடவது.

————–

மாணியாய் நிலம் கொண்ட மாயன் என்னப்பன் தன் மாயங்களே காணும் நெஞ்சுடையேன் எனக்கு இனி என்ன கலக்கம் உண்டே–6-4-8-

மாணியாய் நிலம் கொண்ட மாயன் – பெறில் ஜீவிப்பானாய்ப் பெறாவிடில் முடிவானாய், இரப்பிலே தழும்பு ஏறின வடிவைக்கொண்டு. 1இவர் அந்த அவதாரத்திலே கால்வாங்குகிறார் அல்லர்; கண்ணழிவற்ற அழகாலும், வரையாதே எல்லாரையும் தீண்டுகையாலும், அடியார்கள் விஷயத்தில் ஓரத்தாலும், செய்யும் ஆனைத்தொழில்களாலும் கிருஷ்ணாவதாரத்தோடு ஒத்திருக்கையாலே, ஸ்ரீ வாமனாவதாரத்தை அநுபவிக்கிறார். நிலம் கொண்ட மாயன் என் அப்பன் – ‘திருஉலகு அளக்க’ என்று ஒரு வியாஜத்தை இட்டு அளந்துகொண்டது தம்மை என்று இருக்கிறார். அப்பன் தன் மாயங்களே காணும் நெஞ்சுடையேன் – 2“‘முடியானே’ என்ற திருவாய்மொழியிற் கூறிய கரணங்களையுடைய ஆழ்வார் ஆகையாலே, நெஞ்சுதானே நினைக்கவும் வற்றாய்க் காணவும் வற்றாயிருக்கும் என்று பிள்ளான் பணிப்பர்” என்று அருளிச்செய்வர். அன்றிக்கே, ‘கட்கண்’ என்றும், ‘உட்கண்’ என்றும் சொல்லுகிறபடியே, நெஞ்சு தன்னையும் கண்ணாகச் சொல்லக்கடவதன்றோ; அது ஆகவுமாம்.

கட்கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சென்னும் உட்கண்ணேல் காணும் உணர்ந்து”-(பெரிய திருவந். 28.)– என்பது, ஈண்டு அநுசந்தேயம்–

எனக்கு இனி என்ன கலக்கம் உண்டே – ‘இந்த விஷயத்தைக் காணப்பெற்றிலோம்’ என்கிற கலக்கம் எனக்கு உண்டோ? அன்றிக்கே, 3வேறு தெய்வங்கள் ‘ரக்ஷகர்’ என்று இருக்கிற கலக்கமும், ஈசுவரனுடைய ரக்ஷணத்திலே ஐயப்படும் கலக்கமும், ‘தானே தனக்குக் கடவன்’ என்னும் கலக்கமும் இல்லை என்னலுமாம்.

———

திசை ஞாலம் தாவி யளந்ததுமே பிதற்றி நெடும் கண் நீர் மல்க நிற்குமே-6-5-3-

இவர்கள் துன்பம் கேட்டபின்பு இந்திரன் முதலானோர்கட்குக் குடியிருப்புப் பண்ணிக்கொடுக்க அடியிட்டபடியும். திசை ஞாலம் தாவி அளந்ததும் – திக்குக்களோடே கூடின பூமியை இரப்பாளனாயிருந்து வருத்தமின்றி வளர்ந்து அளந்தபடியும். திசைஞாலம் தாவி அளந்ததும் – 3‘இந்திரன் முதலானோர்களை ரக்ஷிக்கவேணும்’ என்ற ஆசையோடே காணும் பூமியை அளந்தது. ஆசை – திக்கு. ‘இவன் திருவடிகளாலே நம்மைத் தீண்டவேணும்’ என்று ஆசைப்பட்டுக் காணும் கிடக்கிறது பூமி. படுகை – உடைத்தாகை. பூமியினுடைய ஆசையாவது, திக்குப்பட்டு அன்றோ இருப்பது.

——–

மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு நீலக் கருநிற மேக நியாயற்கு கோலச் செந்தாமரைக் கண்ணற்கு என் கொங்கலர் ஏலக் குழலி இழந்தது சங்கே–6-6-1-

வையம் அளந்த மணாளற்கு – 3உகவாதாரையும் கூட விடமாட்டாத வியாமோகம். “அழித்தாய் உன் திருவடியால்” என்று இவளையும் தன் காற் கீழே இட்டுக்கொண்டான் அன்றோ. 4அச்செயலுக்கு எழுதிக்கொடுத்தாள் இவள் ஒருத்தியுமே அன்றோ; 5“மூவடிமண் கொண்டளந்த மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன்” என்கிறாள். பெரிய திருமொழி, 9. 4 : 2. இத் திருப்பாசுரத்துக்கு ரசோக்தியாக, பாவம்
அருளிச்செய்கிறார் ‘அவன் இரந்து’ என்று தொடங்கி. உரை என்று
மாற்றாய், மாற்று ஏறியிருக்கும் என்னுதல்; உரை என்று
கொண்டாட்டத்தைக் கூறுவதாய், உலகத்தாருடைய
கொண்டாட்டத்தையுடைத்தாயிருக்கும் என்னுதல்.

அவன் இரந்து மண் பெற்றான், இவள் உகந்து பொன் பெற்றாள். உகப்பாலே பெறுமது உரைப்பெற்றிருக்குமே. மணாளன் – அநுபவிக்கிறவன்.

————

நிறம் கரியானுக்கு நீடுலகுண்ட திறம் கிளர் வாய்ச் சிறுக் கள்வர்க்கு கறங்கிய சக்கரக் கையவனுக்கு என் பிறங்கு இரும் கூந்தல் இழந்தது பீடே–6-6-3-

சிறுக் கள்வனவர்க்கு – 5சிறுவயிற்றிலே பெரிய உலகங்களை வைத்து, அளவிட முடியாத செயலையுடையவனுக்கு. நீடு உலகு உண்ட திறம் கிளர் வாய் – 1வேறு ஒருவர்வாயாலே கேட்கவேண்டாதே, இவன் வாயாலே சொல்லக் கேட்கலாம்படி. சிறுக்கள்வனவர்க்கு – 2வடிவில் சிறுமையும் ரக்ஷிக்குந் தன்மையில் பாரிப்பும் இருக்கிறபடி. தன்னுடைய ரக்ஷிக்கும் தன்மையையும் அகடிதகடநா சாமர்த்தியத்தையும் காட்டியாயிற்று இவளை அகப்படுத்திற்று.

———

மாடுடை வையம் அளந்த மணாளற்கு –என் பாடுடை அல்குல் இழந்தது பண்பே-6-6-4-

மாடுடை – செல்வம் பொருந்திய என்னுதல்; ‘மாடு’ என்று இடமுடைமையாய், பரப்பையுடைய என்னுதல். நாடுடை மன்னர்க்குத் தூதுசெல் நம்பிக்கு – நாடுடைய இராஜாக்களான பாண்டவர்களுக்குத் தூதுபோய் அதனாலே பூர்ணனானவனுக்கு. 1பகவத் அபிப்பிராயத்தாலே, அவர்களை ‘நாடுடை மன்னர்’ என்கிறார் காணும். 2“இருக்கைக்கு ஒரு குறிச்சியும் கொடோம்” என்று இராச்சியம் செய்கிறவர்கள் துரியோதனா தியர்களாக இருக்க. “ஈ இருக்குமிடமெனினும் இப்புவியில் யானவர்க்கு அரசினிக்கொடேன்”
என்பது, வில்லிபாரதம். (கிருஷ்ணன் தூது.) குறிச்சி – குப்பம்; சிறிய ஊர்.

3“ஸ்ரீராமபிரான், விபீடணனை இராக்கதர்களுக்கு அரசனாக இலங்கையில் முடிசூட்டிச் செய்யத்தக்க செயலைச் செய்து முடித்தவரானார்” அபிஷிச்ய ச லங்காயாம் ராக்ஷஸேந்த்ரம் விபீஷணம்
க்ருதக்ருதயஸ்ததா ராமோ விஜ்வர: ப்ரமுமோத ஹ”-என்பது, சங்க்ஷேப ராமாயணம். 85.

என்றது போன்று. ‘இன்னார் தூதன்’ என நின்ற செயலாலே, இட்ட சட்டை பீறும்படி இருத்தலின் ‘நம்பிக்கு’ என்கிறாள். 4அடியிலே உலகத்தை உண்டாக்கி, அபஹரித்தார் உளராகில் எல்லை நடந்து மீட்டுக்கொண்டு, அதனைத் தன்னை அடைந்தவர்க்கு ஆக்குகைக்கு இழிதொழில் செய்த இந் நீர்மையையுங் காட்டி இவள் நீர்மையைக் கவர்ந்தான்.

———

மாண்பமை கோலத்து எம்மாயக் குறளற்கு சேண் சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு
காண் பெரும் தோற்றத்து எம் காகுத்த நம்பிக்கு என் பூண் புனை மென் முலை தோற்றது பொற்பே-6-6-9-

மாண்பு அமை கோலத்து எம் மாயக் குறளற்கு – 2அழகு சமைந்த ஒப்பனையையுடையனாய், ஆச்சரியமான வேடத்தையுடைய ஸ்ரீ வாமனனுக்கு. மாண்பு – அழகு. மாயம் வஞ்சனையாகவுமாம். சேண் சுடர் குன்று அன்ன செம்சுடர் மூர்த்திக்கு – 3அடியிலே நீர்வார்த்துக் கொடுத்தவாறே வளர்ந்தபடி. ஓங்கிய புகரையுடைய மலைபோலே அழகிய ஒளியையுடைய வடிவினையுடையவனுக்கு. காண் பெரும் 4தோற்றத்து – கண்களுக்கு இனியதாய் அளவிடற்கரியதான இனிமையையுடைய தோற்றத்தையுடைய என்னுதல்; தோற்றம் – அழகு.

———-

மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலம் காட்டி மண்ணும் விண்ணும் கொண்ட மாய வம்மானே
நண்ணி யுனை நான் கண்டு உகந்து கூத்தாட நண்ணி ஒரு நாள் ஞாலத்தூடே நடவாயே--6-9-2-

மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் – 1இவ்வளவில் ஸ்ரீ வாமனனாய் வந்து தோற்றிற்றிலையாகில், உபய விபூதியும் அழியுமாகாதே. ஒரு பாட்டம் மழை விழுந்தால் பொருள்களெல்லாம் செவ்வி பெறுமாறு போலே. அன்றிக்கே, உகவாதாரும் மகிழும்படி யன்றோ வந்து தோற்றிற்று என்னுதல். வலம் காட்டி – 2கொடை என்ற குணம் சிறிது கிடக்கையாலே இராவணன் முதலியோர்களைப் போலே அம்பாலே அழிக்கப்போகாதே; அழகாகிற பலத்தைக் காட்டி வாய்மாளப் பண்ணினபடி. 3சுக்கிரன் முதலானோருடைய தடை உண்டாயிருக்கச்செய்தே அன்றோ, அழகுக்குத் தோற்றுக் கொடுத்துக்கொண்டு நின்றபடி. குறளாய் –

கண்ட திறத்திது கைதவம் ஐய!
கொண்டல் நிறக்குறள் என்பது கொள்ளேல்
அண்டமு முற்றும் அகண்டமு மேனாள்
உண்டவ னாமிது ணர்ந்துகொள் என்றான்.- என்பது, கம்பராமாயணம், வேள்விப் பட. 26.

4கோடியைக் காணி ஆக்கினாற்போலே முகந்து கொள்ளலாயிருக்கை. மண்ணும் விண்ணும் கொண்ட – பூமி ஆகாசம் முதலானவற்றைக் காற்கீழே இட்டுக்கொண்ட. இந்திரனுக்குக் கொடுத்த என்னாமல், ‘கொண்ட’ என்கிறது, அவன் அசுரத்தன்மை வாய்ந்தவனாகையாலே அவன் பக்கல் தானே கொண்டானாகக் கொண்டபடியும், தன்னையடைந்தவனான இந்திரனுடைய வேறுபாடில்லாத ரசத்தாலும் என்க.

மாய அம்மானே – 1திருமகள் கேள்வனானவன் இரப்பவனானபடியும், வடிவழகைக் காட்டி வாய்மாளப் பண்ணினபடியும், “கொள்வன் நான் மாவலி” என்றாற் போலே சில மழலைச் சொற்களைப் பேசினபடியும், சிறுகாலைக் காட்டிப் பெரிய காலாலே அளந்த படியும் தொடக்கமான ஆச்சரியங்களைச் சொல்லுகிறது. 2“தேவர்களுக்கும் தானவர்களுக்கும் பொதுவான தெய்வம்” –“தேவாநாம் தானவாநாஞ் ச ஸாமாந்யம் அதிதைவதம்”

என்பது, ஜிதந்தா. -என்கிற ஸ்வாமித்வமன்றோ அங்ஙன் செய்யவேண்டிற்று என்பார் ‘அம்மானே’ என்கிறார். நான் உனை நண்ணி உகந்து கூத்தாட இந்திரன் 3முதலானோர்களைப் போன்று எனக்கு இராஜ்ய அபேக்ஷை இல்லை காண்; நீ செய்து தந்த ஞானத்தாலே நிறைவு பெற்றவன் ஆகிறிலேன். நான் உன்னைக் கிட்டிக் கண்டு உகந்து கூத்தாடும்படி வரவேணும். வருகைக்கு உண்டான வியாபாரம் அவன் தலையது; வந்தால் உகக்கைதான் இவரது செயல். நான் கண்டு உகந்து கூத்தாட – 4மஹாபலியைப்போலே ஒன்று கொடுக்க இருக்கிறேன் அல்லேன்; இந்திரனைப்போலே ஒன்று கொள்ள இருக்கிறேன் அல்லேன்; ‘எனக்கு’ என்று இருப்பாரோடும், ‘என்னது’ என்று இருப்பாரோடுமோ நீ கொடுத்துக்கொண்டு பரிமாறுவது? உன்னையே கண்டு உகப்பார்க்கு உன்னைக் காட்டலாகாதோ? 5“கிருஷ்ணா!எங்களுடைய பரபரப்பினால் மாத்திரம் சந்தோஷமடையும்; இதுதான் எங்களுக்குப் பெரிய செல்வம்” என்கிற இதிலே அன்றோ இவர்க்குச் சம்பந்தம். நண்ணி-நான் இருந்த இடத்தே நீ வந்து கிட்டி. ஒருநாள் – பின்பு ஒருநாள் 1அச் செயல் செய்யலாகாதோ? மண்ணும் விண்ணும் மகிழ நடக்கலாவது அசுரன் முன்பேயோ? வேறு பிரயோஜனங்களைக் கருதாதவர்கள் முன்பு நடக்கலாகாதோ? ஞாலத்தூடே நடவாய்-நடை அழகில் வாசிகண்டு அதிலே ஈடுபடாதே கொடையைக் கொண்டாடி இருக்கும் அவன் முன்னேயோ நடக்கலாவது? 2நடை அழகில் உள்மானம் புறமானம் கண்டு அதுவே ஜீவனமாயிருக்கிற என்முன்னே நடக்கலாகாதோ?

————-

ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்தும் இருந்தும் சாலப் பல நாள் உகம் தோறு உயிர்கள் காப்பானே
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ–6-9-3-

“ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும் காப்பானே” என்கையாலே, எல்லாவகையாலும் ரக்ஷகத்வம் சொல்லிற்று; “சாலப் பலநாள் யுகந்தோறும்” என்கையாலே, எல்லாக்காலத்திலும் ரக்ஷகத்வம் சொல்லிற்று; “உயிர்கள்” என்கையாலே, சர்வரக்ஷகத்வம் சொல்லிற்று; ‘கோலத் திருமாமகளோடு உன்னைக்கூட’ என்கையாலே, திருமகள்கேள்வனே பிராப்யம் என்றது. அகாரத்தின் விவரணமான திருமந்திரத்தின் பொருளும் சொல்லுகிறது; 3“கோலத் திருமாமகளோடு உன்னை” என்கையாலே பிரஹ்மசொரூபம் சொல்லிற்று; “அடியேன்” என்கையாலே, ஜீவாத்மசொரூபம் சொல்லிற்று; ‘உயிர்கள் காப்பான்’ என்கையாலே, உபாயம் சொல்லிற்று; ‘உன்னைக்கூட’ என்கையாலே, பலம் சொல்லிற்று, ‘உன்னைக்கூடாதே – தளர்வேனோ’ என்கையாலே விரோதி சொரூபம் சொல்லிற்று.

————

பாயோரடி வைத்து அதன் கீழ்ப் பரவை நிலம் எல்லாம் தாய் ஓரடியால் எல்லா வுலகும் தடவந்த மாயோன்
உன்னைக் காண்பான் வருந்தி எனை நாளும் தீயோடுடன் சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ–6-9-6-

ஓர் அடி பாய் வைத்து – 2சேதனர்தலைகளிலே திருவடியை வைக்கிறபோது, அவர்கள் எவ்வளவு வருந்தினார்கள்? 3வசிஷ்ட சண்டாள விபாகம் பாராதே வெறும் உன்கிருபையாலே செய்தருளினாய் அத்தனை அன்றோ. ஓர் அடியைப் பரப்பிவைத்து. அதன் கீழ் – அத் திருவடியின் கீழே. பரவை நிலம் எல்லாம் தாய் – கடல் சூழ்ந்த பூமிப்பரப்படங்கலும் அளந்து. 4சங்கல்பத்தாலே செய்தானல்லனே, திருவடிகளைப் பரப்பிப் பின்பே யன்றோ அளந்துகொண்டது. 5பரக்கவைத்து அளந்துகொண்ட பற்பபாதன் அன்றோ-திருச்சந்தவிருத். 32.-. ஓர் அடியால் எல்லா உலகும் தடவந்த – மற்றைத் திருவடியால் பிரமலோகத்தளவும் சென்று தீண்டிய. ‘எல்லா உலகும்’ என்றது, நடுவே உள்ள உலகங்களை. தென்றல் உலாவினாற் போலே இருத்தலின் ‘தடவந்த’ என்கிறார். மாயோன் – தன்னுடைமையைத் தீண்டுதற்குத் தான்வியாமோகம் செய்யுமவன். உன்னைக் காண்பான் வருந்தி – 1என்னளவில் வந்தவாறே என்னை இரப்பாளன் ஆக்குகிறாயோ? அத்தலை இத்தலை ஆயிற்றோ? எனைநாளும் – அநேக காலம். 2மயர்வற மதிநலம் அருளியபின்பு பேற்றின் அளவும் செல்ல இடையில் உண்டான நான்கு நாள்களும், அவன் எதிர்சூழல் புக்குத் திரிந்த நாள்களைப் போன்று பரப்பாகத் தோற்றுகிறபடி.

———

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம் பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ
தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ--6-9-9-

தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே கூவிக்கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ – 5வேறு ஒன்றைக் குறிக்கும் வாக்கியத்திலே வைத்துப் பேற்றினை அறுதியிடுகிறார். ‘தாவி வையம் கொண்ட தடம் தாமரை’ என்றதனால், நினைத்தது தலைக்கட்டவல்லன்என்னும் சத்தியோகம் கூறியபடி. பூமிப் பரப்பு அடங்கலும் வருத்தம் இன்றி அளந்து கொண்டபடி. இனிமை அளவிறந்த திருவடிகளாதலின் ‘தடம் தாமரை’ என்கிறது. இதனால் பிராப்யம் சொல்லுகிறது. ‘கூவிக்கொள்ளும் காலம்’ என்கையாலே பிராபகத்தின் தன்மை சொல்லுகிறது. ‘இன்னம் குறுகாதோ’ என்கையாலே, ருசியின் தன்மை சொல்லுகிறது. 1இதர விஷயங்களின் கான்சி முடியும்படியாய், உன் திருவடிகளின் இனிமை அறிந்து விடமாட்டாத அளவு பிறந்து பின்பு இன்னம் தாழ்க்குமத்தனையோ? 2பிள்ளானுடைய அந்திம தசையில் நோவு அறிய நஞ்சீயர் புக்கு இருக்க, ‘கூவிக்கொள்ளும்காலம் இன்னம் குறுகாதோ?’ என்று பலகால் சொல்ல, இதனைக்கேட்டுச் சீயர் அழ, ‘சீயரே! நீர் கிடந்து அழுகிறது என்? அங்குப் போய்ப் பெறப் புகுகிற பேறு இதிலும் தண்ணிது என்று தோற்றி இருந்ததோ?’ என்று பணித்தான்.

——

எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு என்று எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனயினமாய்
மெய்நா மனத்தால் வழிபாடு செய்யும் திரு வேங்கடத்தானே மெய்நான் எய்தி எந்நாள் உன்னடிக்கண் அடியேன் மேவுவதே–6-10-6-

எந்நாள்” என்று ஐயுறுகிறது என்? அது ஒரு தேச விசேடத்திலேயே உள்ளது ஒன்று அன்றோ? என்ன, அங்குள்ளாரும் இங்கே வந்து அன்றோ உன்னைப் பெற்று அநுபவிக்கிறது என்கிறார். அங்ஙன் அன்றிக்கே, வேறு பிரயோஜனங்களைக் கருதுகின்ற தேவர்களும்கூட வேறு பிரயோஜனங்களைக் கருதாதவரைப் போன்று வந்து அடையும்படி நிற்கிற இடத்தே நான் இழந்து போவதே! என்கிறாராகவுமாம்.

மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு நாம் எந்நாளேம் என்று – 2“எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவனே” திருவாய். 3. 2 : 1.– என்று இங்குள்ளார் அங்கே சென்று அடிமைசெய்ய ஆசைப்படுமாறு போலேகாணும், அங்குள்ளாரும் இவனுடைய சௌலப்யத்தைக் கண்டு அநுபவிக்கவேணும் என்று ஆசைப்பட்டு வரும்படி. 3எல்லாருக்கும் சுலபமான திருவடிகளை நாம் காணப்பெறுவது என்றோ? பூமியை யடங்கலும் வருத்தம் இன்றி அளந்துகொள்ளக் கண்ட காட்சியிலே தலைமேலே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் படியான இனிமையையுடைய திருவடிகளை. மற்றொருபோது வேறுஒன்றனைப்பற்றிப் போகிறவர்கள் அல்லராதலின் ‘எந்நாளும்’ என்கிறார்

—————–

ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம் மோழை எழ முடி பாதம் எழ அப்பன் ஊழி எழ உலகம் கொண்டவாறே--7-4-1-

திருவுலகு அளந்தருளின பெரிய வெற்றிச்செயலை அருளிச்செய்கிறார்.

2‘தேவர்கள் தங்கள் தங்கள் இருப்பிடத்திற்குச் செல்லுகிறார்கள்; அசுரர்கள் கொல்லப்பட்டார்கள்; அச்சம் என்பது சிறிதும் இல்லை; பகவானால் இவ்வுலகமானது வெல்லப்பட்டது,’ என்கிறபடியே,‘தேவா: ஸ்வஸ்தாநம் ஆயாந்தி நிஹதா தைத்யதாநவா:
நபயம் வித்யதே கிஞ்சித் ஜிதம் பகவதா ஜகத்’-இது, திருவுலகு அளந்தருளின போது ஜாம்பவான் மஹாராஜர்  பறையறைந்தபடியாம்.

தனக்கு ஆக்கிக்கொண்ட செயல் அன்றோ?இராவணனைப்போலே எதிரி ஆக்கிக் கொல்லாதே குணங்கள் சில உண்டாகையாலே நின்ற நிலையிலே தோற்பித்துக் கொண்டபடி. 2நாயகனுக்கு அடியார் அன்றோ வென்று கொடுப்பார்? ஆழி எழ – 3‘மூன்று உலகங்களையும் காற்கீழே இட்டுக்கொள்ள வேணும்’ என்னும் கறுவுதல் உள்ளது சர்வேஸ்வரனுக்கே அன்றோ? அந்த எண்ணம் இன்றிக்கே இருக்கச்செய்தேயும் அவனுக்கு முன்பே பரிகரம் முற்பட்டபடி. 4‘காட்டுக்குப் போம்’ என்று நியமித்தது பெருமாளையேயாயிருக்க. இளையபெருமாள் முற்பட்டாற்போலே.  ‘ப்ராகேவ து மஹாபாக: ஸௌமித்ரி: மித்ராந்தந:
பூர்வஜஸ்ய அநுயாத்ரார்த்தே த்ருமசீரை: அலங்க்ருத:’-  என்பது, ஸ்ரீராமா. சுந். 33 : 28. இது, திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.

‘புண்ணியசீலரும் சிநேகிதர்களுக்குச் சந்தோஷத்தைச் செய்கிறவரும் சுமித்தரையின் புத்திரருமான இளையபெருமாள், தமையனாருக்குப் பின்னே செல்லும்பொருட்டு முன்னரே மரவுரியினால் தம்மை அலங்கரித்துக்கொண்டார்’ என்கிறபடியே, போக்குக்குத் தகுதியாக முற்கோலி அலங்கரித்துக்கொண்டு நின்றார் அன்றோ?ஆழி எழ – 5தோற்றத்திலே அரசு போராயிற்று; 1ஹேதி ராஜன் அன்றோ? திவ்விய ஆயுதங்களுக்கெல்லாம் பிரதானம் அன்றோ திருவாழி? 2பரிகரம் நிற்க மஹாராஜர் இராவணன் மேலே பாய்ந்தாற்போலே; 3‘பையல் முடியுந்தானுமாய்ப் பெருமாள் திருமுன்பே நிற்பதே! ஈர் அரசு ஆயிற்றோ?’ என்று பொறாமையாலே மேல் விழுந்தார் அன்றோ?

4‘அத ஹரிவர நாத:-அத ஹரிவரநாத: ப்ராப்ய ஸங்க்ராம கீர்த்திம்
நிஸிசரபதிம் ஆஜௌ யோஜயித்வா ஸ்ரமேண,
ககநமதிவிஸாலம் லங்கயித்வா அர்க்கஸூநு:
ஹரிவரகணமத்யே ராமபார்ஸ்வம் ஜகாம.’-  என்பது, ஸ்ரீராமா. யுத். 40:29

 5தம்மோடு ஒக்க வினை செய்ய வல்ல பேர் தனித்தனியே பலர் அன்றோ? ப்ராப்ய ஸங்க்ராம கீர்த்திம் – 6இவர்களோடு கூடிநின்று ஒத்த போர் ஆக ஒண்ணாது, தூசித் தலையில் ஓர் ஏற்றம்செய்து தரம் பெற வேணும்,’ என்று இருந்தார். பூசல் தலையிலே பெருமாளுக்கு உண்டான கீர்த்தியையும் தம்தலையிலே ஏறிட்டுக்கொண்டார். நிசிசர பதிம் – 1அத்தலையிலும் அவனோடு ஒக்க வினை செய்ய வல்லார் பலர் அன்றோ? 2‘அவன் கீழ்த் திரியுமவர்கள் தரம் போரார்’ என்று அவனோடே பொருதபடி. ஆஜௌ-அவர்களைப் போலே வழி அல்லா வழியே இளைப்பிக்கை அன்றிக்கே, செவ்வைப் பூசல் செய்து இளைப்பித்தபடி. யோஜயித்வாஸ்ர மேண-இதற்கு முன்பு கூடாதது ஒன்றோடோ கூட்டினார். ககந மதிவிசாலம் லங்கயித்வா – பரப்பையுடைத்தான ஆகாயத்தைத் திறலாலே வருத்தம் அறக் கடந்தார். அர்க்கஸூநு:- மீட்சியில் தம் வரவு தெரியாதபடி மீண்டார். 3பிறப்புக்கு ஈடாகச்செய்தார். 4தன்நிலம் அன்றோ? 6சூரியன் ஓரிடத்தினின்றும் ஓரிடத்து ஏறப்போம் போது தெரியாது அன்றோ? ஹரிவர கணமத்யே-‘இவர்களில் ஒரு வேறுபாடு தோற்ற ஒண்ணாத’ என்று இவர்கள் நடுவே நின்றார். ராம பார்ஸ்வம் ஜகாம – 6‘தூசித்தலையிலே மதிக்க ஒரு வினை செய்தாரன்றோ முன்னிற்கப்பெறுவர்?’ என்று பெருமாள் பக்கத்திலே வந்து நின்றார்.

ஆழி எழ – 7‘ஆயிரக்காதம் பறப்பதன் குட்டி ஐந்நூற்றுக்காதம் சிறகு அடிக்கொள்ளும்’ என்னுமாறு போலே முற்கோலி வளர்ந்தபடி. சிறகடிக்கொள்ளுகையாவது, பின்பு தூரப்பரப்பதற்குத் தகுதியாம்படி இளமையிலே பயிலுதல்.8அச்சங்கொள்ளுதற்கு இடம் அல்லாத இடத்திலும் பயப்படக்கூடியவர்கள், அஞ்சத்தக்கஇடத்தைக் கண்டால் வாளா இரார்களே அன்றோ? 1பயசங்கை இல்லாத இடத்திலும் அஞ்சும்படி செய்கிறது விஷய வைலக்ஷண்யம் அன்றோ? 2துரியோதனன் கோட்டியிலே கிருஷ்ணன் எழுந்தருளின போது அவர்கள் செய்த வஞ்சனத்தைக் கண்டு, அச்சங்கொண்டு, தம்முடைய திருமாளிகையில் படுக்கையையும் தடவிப் பார்த்தாரே அன்றோ ஸ்ரீவிதுராழ்வான்? ‘மஹாபுத்திமானான அந்த விதுரர் கண்ணனுடைய படுக்கையைத் தடவிப் பார்த்தார்,’ என்கிறபடியே, ‘ஸம்ஸ்ப்ருசந் ஆஸநம் ஸௌரே: விதுரஸ்ஸ மஹாமதி:’-  என்பது, பாரதம், உத்யோக.

கடல் கலங்குவது தன்னளவிலே அன்றோ? 3பிள்ளையுறங்காவில்லிதாசர் ‘மஹாமதி என்றது, மதிகேடர் என்றபடியோ?’ என்றார், 4பிள்ளைதாம், ‘பெருமாள் எழுந்தருளும் போது எங்கேனும் ஒரு சலனம் பிறக்கில் நம் பிராணனை விடுமத்தனை’ என்று சொட்டையை உருவிப் பிடித்துக்கொண்டு சேவிப்பாராம். நம்முதலிகள் அதனைக் கண்டு, இவரை ‘மஹாமதிகள்’ என்று அழைப்பார்கள். 5அறிவு உண்டாகையாவது, பகவத் விஷயத்தில் அறிவு கெடுகை அன்றோ?

ஆழி எழ – 1இவன் வளர்ந்தருளுகைக்குக் கணிசித்தபடியைக் கண்டு, ‘தனியாக ஒண்ணாத’ என்று அஞ்சித் திருவாழியாழ்வான் ஒரு கையிலே ஏறினார்.

சங்கும் வில்லும் எழ-தூசி ஏறினவர்கள் பொரப் புக்கவாறே நின்ற 2இளவணி கலங்கி மேலே நடக்குமாறு போலே,இளவணி-காலாள். மற்றை ஆழ்வார்களும் மற்றைக் கைகளிலே ஏறினார்கள். அன்றிக்கே, 3‘இரை பெறாத இடத்தே இருந்து சீறுபாறு என்னக்கூடியவர்கள் இரையுள்ள இடத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடார்கள் அன்றோ?’ என்னுதல்; இனத்திலே ஒருவன் வாழ்வதனைக் கண்டவாறே உறவினர்கள் கூட்டம் வந்து மேல் விழுமாறு போலே, மற்றைத் திவ்விய ஆயுதங்களும் மேல் விழுந்தபடி என்னுதல். 4‘இடங்கை வலம்புரி நின்று ஆர்ப்ப-இரண்டாந். 71.-இவனுடைய வடிவழகினை நினைந்து ஸ்ரீ பாஞ்சஜன்யமானது நின்று ஆர்ப்ப. எரி கான்று அடங்கார் ஒடுங்குவித்தது ஆழி-அவனைப்போல் ஆர்த்துக் கொள்ளுதற்குக் காலம் அற்று நெருப்பினை உமிழ்ந்துகொண்டு நமுசி முதலானவர்களை வாய்வாய் என்றது திருவாழி. விடம் காலும் தீவாய் அரவுகிடந்த இடத்தே கிடந்து பகைவர்கள் மேலே விஷமாகிய நெருப்பினை உமிழுமத்தனை அன்றொ திருவனந்தாழ்வானாலாவது? அரவணைமேல் தோன்றல் -திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடைய பிரதானன். திசை அளப்பான் பூவார் அடி நிமிர்த்தபோது-ஒரு பூவினைக்கொண்டே அன்றோ காடும் ஓடையும் அளந்து.கொண்டது? 1பூவை இட்டுப் பூவை கொண்டான்காணும். 2அப்படுக்கையிலே பொருந்தும் சௌகுமார்யத்தையுடையவன் இக்காடும் ஓடையுமான உலகத்தினை அளக்கப்புக்கால், இவர்களுக்கு இப்படிப்படவேண்டாவோ? அவன் இப்படி அளவாநின்றால் இவர்கள் பேசாது இரார்கள் அன்றோ?’ 3‘மூன்று அடிகளால் முறையே மூன்று உலகங்களையும் ஒரு கணநேரத்திற்குள் ஆக்கிரமித்தவராய் விளங்குகிற திவ்விய ஆயுதங்களையுடையவராய் எந்தத் திரிவிக்கிரமனாக ஆனானோ அந்த வாமனன் உன்னை எப்போதும் காக்கக் கடவன’ என்கிறபடியே.
‘வாமநோ ரக்ஷது ஸதா பவந்தம் ய: க்ஷணாத் அபூத்
த்ரிவிக்ரம: க்ரமாக்ராந்த த்ரைலோக்ய: ஸ்புரதாயுத:’- என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 5.:17
திசை வாழி எழ – 4‘அவனுக்கு என் வருகிறதோ?’ என்று ஆயிற்றுத் திவ்விய ஆயுதங்கள் கிளர்கின்றன! ‘அவைதமக்கு என் வருகிறதோ?’ என்று ‘வடிவார் சோதி வலத்து உறையும் சுடராழியும் பல்லாண்டு, படைபோர்புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே’ என்னாநிற்பார்கள் அன்றோ? ‘நின் கையில் வேல் போற்றி!’ என்று வேல் தனக்கும் பரியவேண்டி இருக்குமன்றோ? அன்றிக்கே, 5திக்குகள்தோறும் அநுகூலருடைய’ வாழிவாழி’ என்கிற மங்களாசாசன ஒலிகள் கிளர என்னுதல். 1திவ்விய ஆயுதங்களிலும் அவனுக்குப் பாதுகாவல் இவர்களுடைய மங்களாசாசனம் என்று இருக்கிறார், திவ்விய ஆயுதங்களின் நடுவே இவற்றைச் சொல்லுகையாலே. ஏத்த ஏழ் உலகும் பொண்ட கோலக் கூத்தன் அல்லனோ? -திருவாய். 2. 2,11.-தண்டும் வாளும் எழ- ‘தூசித்தலையில் அவர்களே 2கை தொடராய்த் தரம் பெற்றுப் போக ஒண்ணாது’ என்று நின்று பேரணியும் குலைந்து மேல் விழுமாறுபோலே; ‘பிற்பட்டோம், கெட்டோம்’ என்று ஒருவருக்கு ஒருவர் படுகிறபடி; ஒருவர்க்கு இட்ட சோற்றைப் பலர் ஆசைப்படுமாறு போலேகாணும் இவர்கள் படுகிற பாடு. 3அநுகூலன் வந்து புகுர, ‘கொல்லத்தக்கவன்’ என்கிறவர்கள் பிரதிகூலர் உள்ள இடத்தில் பேசாது இரார்கள் அன்றோ?’ 4‘என்இது மாயம் என்னப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்ட அளவாய்’- பெரியாழ்வார் திருமொழி. 1. 9 : 8.- என்று நமுசிவந்து, ‘என் தந்தை உன் வஞ்சநம் அறிந்திலன்; நீ முன்பு போலே நின்று அளக்கவேணும்’ என்று திருவடிகளைக் கட்டிக்கொண்டு கிடந்தான் அன்றோ? 5அன்றே பிறந்து அன்றே வளர்ந்தான் ஒருவனுடைய செயல் அன்றோ இவை அடைய? ஆகையாலே, பரிகைக்குக் காரணம் உண்டு என்றபடி. 6‘சீராற்பிறந்து’ என்கிறபடியே, ‘உன்கையிலே பருத்தி பட்ட பன்னிரண்டும் படுகிற பூமியை நீர் ஏற்கும் போது இப்படிப் படவேணுமோ?’ என்கிறார்.பெரிய  திருவந். 16. ‘மார்பாரப் புல்கி நீ உண்டு உமிழ்ந்த’ என்றதனைக் கடாட்சித்துப்
‘பருத்தி பட்ட பன்னிரண்டும் படுகிற பூமியை’ என்கிறார். ‘

அண்டம் மோழை எழ – 1இந்திரனுக்காக மூன்று உலகமித்தனையும் அளந்து கொடுப்பதாக அன்றோ தொடங்கியது? கணிசம் அவ்வளவு அல்லாமையாலே அண்டத்தின் இடமுள்ள அளவும் சென்று அளந்து, அண்டகடாஹத்திலே திருவடி சென்று, ‘ஒண்மிதியிற் புனல் உருவி ஒருகால் நிற்ப’ என்கிறபடியே கீழேயுள்ள அண்டகடாஹத்தை உருவி நிற்க, கீழேயுள்ள ஆவரணஜலம் மேலே எழ. 2ஆவரண ஜலத்துக்கு நடுவே ஒரு கழல்போலே மிதக்குமித்தனை அன்றோ அண்டம்? 3‘இரட்சகமான செயலே பாதகமாகிறதோ?’ என்று அஞ்ச வேண்டும்படி அன்றோ அப்போதைக் கறுவுதல்’ மோழை-குமிழி. முடி பாதம் எழ-திருமுடியளவும் திருவடிகள் கிளர. ‘முடிமேலே பாதம் எழ’ என்றும் சொல்லுவர்கள் நிருத்த லக்ஷணத்துக்காக. அப்பன் ஊழி எழ – 4மஹாபலி தகுதி இல்லாமல் அரசு நடத்துகையால் வந்த பொல்லாக் காலமானது போய், நல்லடிக் காலமாயிற்று; நல்லடிக்காலம் கிளரும்படி.யாகவும். அப்பன் உலகம் 1கொண்டவாறே – ‘மஹேபகாரகனான சர்வேஸ்வரன் உலகத்தைக் கொண்ட ஆச்சரியம் இருந்தபடி என்?’ என்னுதல்: அன்றியே, ‘உலகத்தைக் கொண்ட பிரகாரம் இருந்தபடி என்?’ என்னுதல். அப்பன் அப்பன் என்று உவகை அடைகிறாராகவுமாம். அப்பன் – ‘இந்திரனுக்கு இராயச்சித்தைக் கொடுத்த செயலாலே எனக்கு2ஆத்துமாவைத் தந்தான்’ என்கிறாராகவுமாம்.

————

கேட்டும் உணரந்தவர் கேசவற்கு ஆளன்றி ஆவரோ?
வாட்டமி லாவண்கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு
ஈட்டங்கொள் தேவர்கள் சென்றிரந் தார்க்கிடர் நீக்கிய
கோட்டங்கை வாமன னாய்ச்செய்த கூத்துகள் கண்டுமே.7-5-6

இரந்தார்க்கு இடர் நீக்கிய கோட்டங்கை வாமனன் -மேலே  கூறிய குணங்கள் தாம் ஓர் ஏற்றமோ, அலம் புரிந்த நெடுந்தடக்கையைக் கொண்டு திருநெடுந்தாண்டகம், 6. -கோட்டம் கை வாமனனாய் இந்தப் பூமியைக் காப்பாற்றிய மஹா குணத்துக்கு?’ என்கிறார்.

கொடுத்து மாறக்கடவது அன்றியே, எப்போதும் கொடுக்கையிலே ஒருப்பட்ட கை.6இராவணன் முதலாயினோரைப் போன்று தலை அறுத்துப் போகட ஒண்ணாமைக்குக் காரணம் உண்டாகையாலே அழியச் செய்திலன்.

மாவலி வாதிக்க வாதிப்புண்டு-இது பற்றாசாக அவன் நெருக்க நெருக்குண்டு. ஈட்டம் கொள் தேவர்கள் – 1கிராமணிகளைப் போலே, ஒருவர் உயர்வு ஒருவர் பொறாதே, தலை அறுப்பாரும் தலை அறுப்பு உண்பாருமாய்த் திரியக் கடவ சாதி அன்றோ? 2இப்படிச் சேராச் சேர்த்தியாய் இருக்கிறவர்கள் ஆபத்து மிக்கவாறே தங்கள் தங்கள் செருக்கினைப் போகட்டு. எல்லாரும் ஒரு மிடறாய் வந்து விழுந்தார்கள். ஈட்டம் – திரள். சென்று இரந்தார்க்கு இடர் நீக்கிய – 3கூறு செய்வானும் அம்பலத்தே இருந்தால் ‘ஈஸ்வரனும் நம்பக்கல் வரத் தட்டு என்?’ என்று இருக்குமாறு போலே, ‘எல்லாரும் நம்பக்கல் வரவேணும்’ என்று இருந்தவர்கள் தங்கள் ஆபத்தின் மிகுதியினால் அன்றோ செருக்கு உற்றவர்களாய் இருக்கிறவர்கள் திரள வந்து இரந்தது?’ என்று திருவுள்ளத்தே கொண்டு அவர்கள் இடரைப் போக்கினபடி. (‘பெரியவர் யார்?’ என்ற ஐயத்தினால் விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் போரை மூட்டிவிட விஷ்ணு ஜயித்ததனால் ) 4‘விஷ்ணுவை அதிகனாக எண்ணினார்கள்’  என்கிறபடியே, ‘அதிகம் மேநிரே விஷ்ணும்’-என்பது, ஸ்ரீராமா. பால. 75 : 19.

ஒரு சொத்தை வில்லை முரித்தபோதாக எம்பெருமான் அறப்பெரியன் என்பது; அல்லாது போது ‘ஈஸ்வரோஹம்’ என்பதான தேவசாதி பற்களைக் காட்ட, அவர்கள் இடரை நீக்கினபடி.

கோட்டம் கை வாமனனாய் – நீர் ஏற்கக் குவித்த அழகிய கையையுடையவனாய்; 5‘பொல்லாக் குறள்  உருவாய்ப் பொன்கையில் நீர் ஏற்று’–நாய்ச்சியார் திருமொழி, 11 : 5.-என்கிறபடியே, 1தேவர்களை நெருக்குகையாலே அழியச் செய்ய வேணும்; குண விசேடத்தாலே அழியச்செய்யமாட்டான்; இனி, இரண்டற்கும் தக்கதாக ஒரு வழி இரட்சகனான தான் பார்க்குமித்தனை அன்றோ? பொற்கை – பொலிவு எய்தின கை; ‘அழகிய கை’ என்றபடி. கொடுத்து வளர்ந்த கை; 2‘ஆயிரக்கணக்கான பசுக்களைத் தானம் செய்ததான பருத்து நீண்ட கை’ என்றும், ‘சத்திய பராக்கிரமத்தையுடையவரான பெருமாள் கொடுப்பார்; வாங்கமாட்டார்’ என்றும் சொல்லுகிறபடியே.

கோ ஸஹஸ்ர ப்ராதாதாரம் உபதாய புஜம் மஹத்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 21:7.

‘தத்யாத் ந ப்ரதிக்ருஹ்ணீயாத்’-என்பது, ஸ்ரீராமா. சுந். 33 : 25.

செய்த கூத்துகள் கண்டுமே – 3அன்றே பிறந்து அன்றே வளர்ந்து அன்றே இரப்பிலே மூண்டு, மஹாபலி வேள்வி செய்யும் இடத்தளவும் செல்ல, பூமி நெளியும்படி பதறி நடந்து சென்று புக்கு, மான் தோலும் பூணு நூலும் தருப்பைப் புல்லுமான வணக்கமுள்ள வடிவத்தோடு நின்று ‘கொள்வன் நான்’ திருவாய். 3. 8 : 9.-என்றாற் போலே சொன்ன பிள்ளைப்பேச்சுக்களும் சிறுகாலைக் காட்டிப் பெரிய காலாலே அளந்ததும் ஆகிற இச்செயல்கள் அடங்கலும் இவர்க்கு வல்லார் ஆடினாற்போலே இருக்கிறபடி.

4‘இறைமைத் தன்மைக்குரிய மேன்மையும் கிடக்கச் செய்தே, திருமகள் கேள்வனான தான் இரந்து தன்னை அடைந்தாரைக் காத்த நீர்மைக்குப் பிரளயங்கொண்ட பூமியை எடுத்துக் காத்தது ஒரு குணமாயிற்றதோ?’ என்கிறார்.

————

பாமரு மூவுலகு அளந்த பற்ப பாதாவோ –உன்னை என்று கொல் சேர்வதுவே–7-6-1-

பாமரு மூன்று உலகும் அளந்த பற்ப பாதாவோ – 5இவற்றை உண்டாக்கி ‘மேல் பட்டது படுகிறது’ என்று இருந்தாயாகில்தான் ஆறி இரேனோ? பெற்ற தாய் வளர்க்குமாறு போலே இவற்றைக் கண்களிலே வெண்ணெய் இட்டுக்கொண்டு நோக்குமவன் அல்லையோ? மஹாபலி போன்றவர்கள் இறாஞ்சினாற்போலேஇதனைக் கவர்ந்து கொண்டால் எல்லை நடந்து மீட்டுக்கொள்ளுமவன் அன்றோ நீ? 1‘படிக்கு அளவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய்’ திருவாய். 9. 2 : 2.-என்று ஆசையுடைய நான் இருக்க, இச்சை இல்லாதார் தலைகளிலே திருவடியை வைப்பதே!’

———

மாயா! வாமன னே!-7-8-1-

மாயா – ‘மாயா!’ என்கிற இது, இத்திருவாய்மொழிக்காகச் சுருக்கமாய் இருக்கிறது. வாமனனே – 2‘மாயன் என்கிற பதத்திற் சொல்லுகிற ஆச்சரியத்தினை அறிகிற இடமாய் இருக்கிறது. என்றது, 3அன்றே பிறந்து அன்றே வளர்ந்து –பெரியதிருவந்தாதி.-மஹாபலி பக்கலிலே சென்று. அவன் முன்னே நின்று, தான் சொன்னவை எல்லாம் செய்யவேண்டும்படி வார்த்தை அருளிச்செய்து, சிற்றடியைக் காட்டிப் பெரிய அடியாலே அளந்துகொண்டு, இப்படிச் செய்த செயல்கள் அனைத்தையும் முன்னோட்டுக்கொண்ட வாமனனே!’ என்கிறார் என்றபடி.

———-

மயக்கா! வாமனனே! மதியாம் வண்ணம் ஒன்றருளாய்–7-8-6-

மயக்கா-இன்னார் என்று இன்றிக்கே, யாரேனுமாகக் கிட்டினாரை மயங்கச் செய்யுமவனே! ‘அது எங்கே கண்டோம்?’ என்னில், வாமனனே – காரியம் செய்யப்போந்த நீ, அந்தத் தேவர்களை நெருக்கின மஹாபலி தானே நெஞ்சு நெகிழ்ந்து உன் கையிலே நீரை வார்த்துத் தானே இசைந்து தரும்படி மயங்கச் செய்தவனே! 3‘மன்னை மனங்கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி’ பெரிய திருமடல், 109.-என்கிறபடியே. மதியாம் வண்ணம் ஒன்று அருளாய் – அநுகூலர் பிரதிகூலர் என்ற வேற்றுமை இல்லாமல் மயங்கச் செய்யாதே, நான் தெளிவையுடையேனாம்படி செய்தருளவேணும்.

———

ஆகும் கொல் ஐயம் ஓன்று இன்றி அகலிடம் முற்றவும் ஈரடியால் ஆகும் பரிசு நிமிர்ந்த திருக் குறள் அப்பன் அமர்ந்து உறையும்
–திருவாறன் விளை –வலம் செய்து கை தொழக் கூடும் கொலோ–7-10-2-

ஆகுங்கொல் ஐயம் ஒன்று இன்றி – 2இது அநுபாஷணம் ஆகாநிற்கச் செய்தே, ஆதரத்தின் மிகுதிக்குச் சூசகமாயிருக்கிறது. ஒரு சந்தேகம் இன்றிக்கே நமக்கு இது கூடவற்றோ? 3‘அன்றிக்கே, ஆகுங்கொல் என்ற ஐயமுங்கூட இன்றிக்கே ஈரடியே ஆகும் பரிசு நிமிர்ந்தான்’ என்று மேலே கூட்டவுமாம். 4எல்லாம் செய்தாலும் ‘நமக்கு இது கூடுமோ, கூடாதோ!’ என்று இருந்தானாயிற்றுஇளமைப்பருவத்தாலே. அகல் இடம் முற்றவும் – பரப்பையுடைத்தான பூமியும், புவர்லோகம் முதலானவைகளும் எல்லாம். ஈர் அடியே ஆகும் பரிசு நிமிர்ந்த –  இரண்டு அடியே ஆகும் பரிசு நிமிர்ந்த; என்றது, 1‘இரண்டு அடிகளாலே பூமியையும் மேல் உலகங்களையும் அளந்தானாயிற்று, ஓர் அடிக்கு இவளைச் சிறையிட்டுவைக்க நினைத்து’ என்றதனைத் தெரிவத்தபடி. திருக்குறள் அப்பன் – ஸ்ரீ வாமனனான மஹோபகாரகன். அமர்ந்து உறையும் – இந்திரனுக்கு இராச்சியத்தை வாங்கிக் கொடுத்துத் திருப்பாற்கடலிலே போய்ச் சாய்கை அன்றிக்கே, அவன் வந்து நித்தியவாசம் செய்கிற. மாகம் திகழ் கொடி மாடங்கள் நீடு மதிள் திருவாறன்விளை – அவன் திருவடியால் அளந்த ஆகாசப்பரப்பு அடங்கலும் பரந்துள்ள கொடிகளையுடைத்தான மாடங்களை, ஓங்கியிருந்துள்ள மதிள்களையுமுடைத்தான திருவாறன்விளையை. மா கந்தம் நீர்கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல் – 2‘பூமியை அடங்கலும் பனி போன்ற குளிர் நீரால் நனைக்கட்டும்’ என்று ஸ்ரீ நந்திக்கிராமம் தொடங்கி ஸ்ரீ பரத்துவாச பகவான் ஆஸ்ரமத்தளவும் வர, பனி

நீராலே விடுவித்தான் ஸ்ரீசத்துருக்நாழ்வான் என்றது அன்றோ?

ஸிஞ்சந்து வஸூதாம் க்ருத்ஸ்நாம் ஹிமஸீதே நவாரிணா’-என்பது, ஸ்ரீராமா. யுத். 130. 6.

அப்படியே, மா கந்த நீர் கொண்டு தூவி அநுகூலமான காரியங்களைச் செய்து கைதொழக் கூடவற்றேயோ?

———–

பேணுவார் அமுதே பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா–8-1-2-

———-

ஆருயிரேயோ அகலிடம் முழுதும் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்த பேர் உயிரேயோ –உன்னை நான் எங்கு வந்து உறுகோ–8-1-5-

அகல் இடம் முழுதும் படைத்து-இடந்து -உண்டு -உமிழ்ந்து -அளந்த பெரியரேயோ –
பஹுச்யாம் -தைத்ரியம் –பல பொருள்களாகக் கடவேன் –
என்று பூமிப் பரப்பு அடங்கலும் உண்டாக்கி
பிரளயத்தில் நோவு பட மகா வராஹமாய் எடுத்துக் கொண்டு ஏறி –
மீண்டும் பிரளயம் வர வயிற்றில் வைத்து நோக்கிக் கொண்டு –
உள்ளே கிடந்தது தளராதபடி வெளி நாடு காண உமிழ்ந்து
மகா பலியாலே கவரப்பட்ட நிலையிலே எல்லை கடந்து நடந்து மீட்டு
இப்படி அந்த துர்தசையிலே என்னைக் காப்பாற்ற வேண்டும் என்று விரும்புவார் இல்லாது இருந்தும்
உணர்ந்து நோக்கும் நீயே இது கிட்டும் விரகு பார்க்க வேண்டாமா
பெரியோனே பேரியர் -பெரியோன்

—–

மாண் குறள் கோல வடிவு காட்டி மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த தேவ பிராற்கு
என் நிறைவினோடு நாண் கொடுத்தேன் இனி என் கொடுக்கேன்–8-2-9-

மாயம் தன்னால் கை செய் அப்பாலது ஓர் கோலம் மாண் குறள் வடிவு காட்டி –
மாயத்தால் -கை செய்கைக்கு அப்பாலதான வடிவழகை உடைய வாமன வடிவைக் காட்டி
மாயமாவது -உபய விபூதிகளையும் உடையனான தான் ஒன்றும் இல்லாதவனாய் வருகையும்
திருமகள் கேள்வனான தன்னை இரப்பாளானாக ஆக்கியும்
சிறுகாலைக் காட்டி பெரும் காலால் அளந்து கொள்ளுகையுமாம்
மாயம் -வஞ்சனை
கை செய்கை -எனபது கை செய் -என்று கடை குறைந்து நிற்கிறது
அளவிடற்கு அரிய பெருமை உடைய தான் இரப்பிலே
தகண் ஏறின வாமன வேடத்தைக் கொண்டான்
ஆதலின் மாண் குறள் வடிவு என்கிறார்
இப்படி அழிவுக்கு இட்ட வடிவுக்கு ஆலத்தி வழிக்க வேண்டி
இருத்தலின் -கோல வடிவு -என்கிறார்
மகாபலியை வஞ்சிக்கைக்காக இயற்கையான அழகை உடைய மாண் குறளான வடிவைக் காட்டினான் –
ஆதலின் -காட்டி -என்கிறார் –
இனி மாயம் தன்னால் -என்பதனை -கோலம் -என்பதற்கு அடை மொழி ஆக்குதலுமாம்

இனி கை செயற்பாலது ஒரு கோல வடிவு -என்பதற்கு
சித்திரம் உயிர் பெற எழுதினாப் போலே இருந்துள்ள கோல வடிவு
என்றும் பொருள் கூறலுமாம் –
மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த –
கையிலே நீர் விழுந்த உடனே எல்லா உலகங்களும் விம்ம வளர்ந்த
சேண் சுடர் தோள்கள் பல தழைத்த –
நீண்டு ஒளியை உடைத்தாய் –
கற்பகத் தரு பணைத்தாப் போலே பல தோள்களை உடையவன் –
தேவ பிராற்கு –
இந்த்ரன் இழந்த ராஜ்யத்தைக் கொடுத்து தேவர்களுக்கு உபகாரத்தை செய்தவனுக்கு
என் நிறைவினோடு நாண் கொடுத்தேன் –
நாண் இரண்டு ராஜ்ஜியம் இழந்தேன் –
இந்த்ரன் ராஜ்ஜியம் பெற்றுப் போந்தான்
மகாபலி ஔதார்யம் பண்ணிப் போந்தான்
நாண் எனக்கு எல்லா செல்வமான அடக்கத்தையும் நாணத்தையும் இழந்தேன்
இனி என் கொடுக்கேன் –
இனி எதனைக் கொடுப்பேன்

—-

என்றே என்னை உன்னேரார் கோலத் திருவடிக் கீழ் நின்றே யாட்செய்ய நீ கொண்டருள நினைப்பது தான்
குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழுவேழும் நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே–8-3-8-

ஏழு குல மலைகள் என்ன
ஏழு தீவுகள் என்ன
அவற்றைச் சூழ்ந்து இருந்துள்ள ஏழு கடல்கள் என்ன
இப்படி ஏழு வகைப் பட்ட பூமியை அடைய நின்ற நிலையிலே நின்று அளந்து கொண்டு அருளும்படி
நீண்ட திருவடிகளை உடையையாய்
கையும் திருவாழியுமான திருமகள் கேள்வனே -என்றது –
சங்கு சக்கரம் முதலிய திவ்ய ஆயுதங்கள் உடைய திருமகள் கேள்வனாய் வைத்து
காடும் ஓடையுமான பூமியை முழுதும் நின்ற நிலையிலே
மெல்லிய திருவடிகளைக் கொண்டு
அளந்த சிரமம் தீரக் குளிர்ந்த உபசாரம் செய்யப் பெறும் நாள் என்று -என்றபடி
அன்றிக்கே
அரியன செய்ய வல்ல நீ
நான் உன் திருவடிகளை கிட்டி நின்று அடிமை செய்யும்படி

நினைத்து அருள வேண்டும் -என்கிறார் –

என்றே என்னை உன் ஏரார் கோலத்திருந்து அடிக் கீழ்
நின்றே ஆட்செய்ய நீ கொண்டருள நினைப்பது தான்
குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும்
நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே-8-3-8-

குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும் நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே-
ஏழு குல மலைகள் என்ன – ஏழு தீவுகள் என்ன – அவற்றைச் சூழ்ந்து இருந்துள்ள ஏழு கடல்கள் என்ன-
இப்படி ஏழு வகைப் பட்ட பூமியை அடைய நின்ற நிலையிலே நின்று அளந்து கொண்டு அருளும்படி–
நீண்ட திருவடிகளை உடையையாய்-கையும் திருவாழியுமான திருமகள் கேள்வனே -என்றது –
சங்கு சக்கரம் முதலிய திவ்ய ஆயுதங்கள் உடைய திருமகள் கேள்வனாய் வைத்து-காடும் ஓடையுமான பூமியை முழுதும் நின்ற நிலையிலே–
மெல்லிய திருவடிகளைக் கொண்டு–அளந்த சிரமம் தீரக் குளிர்ந்த உபசாரம் செய்யப் பெறும் நாள் என்று -என்றபடி-
மேலைத் தண் மதியும் -கதிரவனும் தடவவோடு -அங்கும் சிசிரோபசாரம் -கீழே கதிரவன் தோற்றும் மேலைத் தண் மதி என்பதால் –

——–

பிறிதில்லை எனக்குப் பெரிய மூவுலகும் நிறையப் பேருருவமாய் நிமிர்ந்த குறிய மாண எம்மான்
குரை கடல் கடைந்த கோல மாணிக்கம் என்னம்மான் —திருச் செங்குன்றூர் திருச் சிற்றாறு அறிய மெய்ம்மையே நின்ற
எம்பெருமான் அடியிணை அல்லாதோர் அரணே–8-4-4-

பிறிதில்லை எனக்குப் –
எனக்கு பிறிது இல்லை –
அவனை ஒழிய வேறு ரட்ஷகர் எனக்கு வேறு இல்லை –

பெரிய மூ வுலகும் நிறையப் பேருருவமாய் நிமிர்ந்த –
பிரமலோகம் முடிய ஆகாசத்தில் இடம் முழுதும் விம்ம வளர்ந்து -என்றது
தொடங்கின கார்யம் வென்ற பிரீதியால் வளர்ந்த படி

குறிய மாண் எம்மான் –
வளருகுகைக்கு உடலாகக் கொண்ட வாமன வேடத்தையும் -இரப்புத் தன்மையும் காட்டி -என்னை அடிமை கொண்டான்
மகா பலியைக் வெல்லுக்கைக்கு கொண்ட வடிவைக் காட்டி
அச்சத்தைக் கெடுத்தபடி –

—-

வந்து தோன்றாய் யன்றேல் உன் வையம் தாய மலர் அடிக் கீழ் முந்தி வந்து யான் நிற்ப முகப்பே கூவிப் பணி கொள்ளாய்–8-5-7-

உன் வையம் தாய மலரடிக் –
வசிஷ்ட சண்டாள வேறுபாடு பாராத திருவடிகள் –
தாய் மலரடி –
ஒரு செவ்விப் பூவைக் கொண்டாயிற்று காட்டையும் ஓடையும் அளந்தது –

மலரடிக் கீழ் முந்தி வந்து யான் நிற்ப –
தனக்கு மேல் ஒன்றில்லாத இனிய பொருளான
திருவடிக் கீழே
முற்பாடனாய் வந்து நிற்கும்படியாக

முகப்பே –
கண் வட்டத்திலே

கூவிப் பணி கொள்ளாய் –
சோற்றை இட்டுப் பணி கொள்வாய்
திரு மிடற்றின் ஓசை இனிமையாக இருக்கையாலே கூவிப் பணி கொள்ள வேண்டும் என்கிறார்
அன்றிக்கே
பணி செய்வாய் என்று என்னை சொல்வீராக -என்னும் படி
கண் முகப்பே அடிமை கொள்ள வேண்டும் -என்னவுமாம்
குணஞானத்தால் தரித்து இருக்கும் ஸ்ரீ பரத ஆழ்வான் தன்மையன் அல்லன் –
தண்ணீரின் நின்றும் மேலே எடுக்கப் பட்ட மீன்களைப் போன்றவர் -என்னும் இளைய பெருமாள்
தன்மையனான என்னை அடிமை கொள்ள வேணும் என்பார் –
பணி கொள்ளாய் -என்கிறார் –
நச சீதா த்வயா ஹீ நா நச அஹம் அபி ராகவ
முஹூர்த்தம் அபி ஜீவாவ ஜலாத் மத்ஸ்யாவிவ உத்ரு தௌ-அயோத்யா -53-31-
வழு விலா அடிமை செய்ய வேண்டும் -3-3-1–என்றும்
நின்னலால் இல்லை -2-3-7- என்றும்
இட்டு வைத்த இடத்தில் கிடக்க மாட்டேன்
நன்றும் அஞ்சுவன் நரகம் நான் அடைதல் –8-1-9-என்னுமவர் அன்றோ –

மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை –8-5-7-
ஒரு தாமரைப் பூவை கொண்டாயிற்று–பூமியையும் வான் உலகத்தையும் அளந்து கொண்டது –

வந்து தோன்றாயன்றேல் உன் வையம் தாய மலரடிக் கீழ்
முந்தி வந்து யான் நிற்ப முகப்பே கூவிப் பணி கொள்ளாய்–8-5-7-

உன் வையம் தாய மலரடிக் –
வசிஷ்ட சண்டாள வேறுபாடு பாராத திருவடிகள் –சைதன்யம் முக்கியம் இல்லை என்பதால் வையம் -என்கிறார் –
தாய மலரடி –ஒரு செவ்விப் பூவைக் கொண்டாயிற்று காட்டையும் ஓடையும் அளந்தது –

மலரடிக் கீழ் முந்தி வந்து யான் நிற்ப –
தனக்கு மேல் ஒன்றில்லாத இனிய பொருளான-திருவடிக் கீழே-முற்பாடனாய் வந்து நிற்கும்படியாக

முகப்பே –
கண் வட்டத்திலே-

கூவிப் பணி கொள்ளாய் –
சோற்றை இட்டுப் பணி கொள்வாய்-
திரு மிடற்றின் ஓசை இனிமையாக இருக்கையாலே கூவிப் பணி கொள்ள வேண்டும் என்கிறார்-

மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை –8-5-7-
ஒரு தாமரைப் பூவை கொண்டாயிற்று–பூமியையும் வான் உலகத்தையும் அளந்து கொண்டது –

————————-

கொண்மின் இடர்கெட உள்ளத்துக் கோவிந்தன் மண் வின் முழுதும் அளந்த ஒண் தாமரை மன்னவர் தாம் தொழ
வானவர் தாம் வந்து நண்ணு திருக் கடித்தான நகரே–8-6-7-

மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை –
ஒரு தாமரைப் பூவை கொண்டாயிற்று
பூமியையும் வான் உலகத்தையும் அளந்து கொண்டது –

மண்ணவர் தாம் தொழ –
இடக்கை வலக்கை அறியாத பூமியில் உள்ளார் தொழ
பரமபதம் நித்ய சூரிகளுக்கே யாக இருக்குமா போலே
உகந்து அருளின தேசம் சம்சாரிகளுக்கு ஆகவேயாய் இருக்கை

———

இருந்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் என்று அருத்தித்து எனத்தோர் பல நாள் அழைத்தேற்கு
பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என் தன் கருத்தை யுற வீற்று இருந்தான் கண்டு கொண்டே--8-7-1-

பொருத்தமுடை –
இப்படிப் பொருத்தமுடையவனையே-இதுவோ பொருத்தம் -திருவாய்மொழி -8-5-8- என்றது –

வாமனன் –
தன் உடைமை பெருகைக்காக
தான் இரப்பாளன் ஆனவனை
நான் விரும்பிய இடம் என் செய்தேன் ஆனேன் –

தான் புகுந்து –
என்னைத் தான் புகுகைக்கு இரப்பாளனாக வந்து புகுந்து –

என்தன்கருத்தை யுற –
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -2-9-4-என்னும்
என் நினைவைத் தான் கைக் கொண்டான் –

வீற்றிருந்தான் –
இவரைப் பெற்றதால் உண்டான வேறுபாடு வடிவிலே தோற்ற
கிருதக்ருத்தியனாய் இரா நின்றான் –

கண்டு கொண்டே –
பெரிய நோய்க்கு தப்பின புத்திரனை
தாய் தந்தையர்கள் பார்த்துக் கொண்டு இருக்குமா போலே
மாயக் கூத்தா -என்ற திருவாய்மொழி யிலே
விடாய்க்கு தப்பினவர் என்று பார்த்துக் கொண்டே இருந்தான் –

——-

உறுமோ பாவியேனுக்கு
இவ்வுலக மூன்றுமுடன் நிறைய
சிறுமா மேனி நிமிர்ந்த
எம்   செந்தாமரைக் கண் திருக் குறளன்
நறு மா விரை நாள் மலரடிக் கீழ்
புகுதல் அன்றி அவன் அடியார்
சிறுமா மனிசராய் என்னை யாண்டார்
இங்கே திரியவே–8-10-3-

சிறுமா மேனி நிமிர்ந்த –
கண்களாலே முகந்து அனுபவிக்கா லாம்படி சிறுத்து
அழகுக்கு எல்லை இன்றிக்கே இருக்கிற
திரு மேனியை நிமிர்த்த –

எம் –
உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு -இரண்டாம் திருவந்தாதி -61- என்றபடியே
அடியார்கட்காக செய்த செயல் அன்றோ –

செந்தாமரைக் கண் திருக் குறளன் நறு மா விரை நாள் மலரடிக் கீழ் புகுதல் –
மலர்த்து -செவ்வி -குளிர்த்திகளுக்கு
தாமரையை ஒப்பாக சொல்லலாம் படி இருக்கிற
கண் அழகை உடைய ஸ்ரீ வாமனனுடைய
அழகிய மிக்க வாசனையை உடைத்தான
நாட்ப்பூ போலே இருக்கிற திருவடிகளின் கீழே புகுதல் –
நறு மா விரை –
நன்றாய் மிக்க வாசனை –
நறு மா விரை நாண் மலரடி காணும்
இவருக்கு வேப்பங்குடி நீராய்
உறுமோ என்று கழிக்கிறது-என்றது
பகவத் விஷயத்திலே -வெளிறு கழிந்த பாகமான இது ஆயிற்று –
பரத்வம் முதலானவைகளை விட அதி சுலபமானது என்பதால் –
இவருக்கு பாகவத புருஷார்தத்தைப் பற்றிக் கழிக்க
வேண்டியது ஆகிறது –

———

குடிக் கிடந்தது ஆக்கம் செய்து நின் தீர்த்த அடிமைக் குற்றேவல் செய்து உன் பொன்னடிக் கடவாதே வழி வருகின்ற
அடியரோர்கு அருளி நீ ஒரு நாள் படிக்களவாக நிமிர்ந்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் கொடிக் கொள்
பொன் மதிள் சூழ் குளிர் வயல் சோலைத் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-2-

நீ யொருநாள் படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே –
அங்கனம் திருவருள் புரியும் தன்மை ஒரு நாளிலேயாய்
பின்பு வற்றுமதோ –என்கிறார்
தடை இல்லாமல் இருப்பதற்கு மேற்பட ருசி வேண்டற் பாலதோ -என்பார் -படிக்கு -என்கிறார்

பூமியை விளாக்குலை கொள்ள -பரந்து –விஞ்ச வளரும் அதிலும் அரிது போலே காணும்
பூமிக்கு அளவாக திருவடிகளை -குசை தாங்கின அருமையும் -என்பார் -கடிவாளத்தை இழுத்துப் பிடித்து -என்பார் -படிக்கு அளவாக நிமிர்த்த -என்கிறார்
அன்றிக்கே
உனக்கு அரியது ஒன்றாய் நான் வருந்துகிறேனோ -என்னுதல் –

இத்தனை அன்றோ செய்ய வேண்டுவது என்கிறார் மேல் –
நின் பாத பங்கயம் –
ஒரு செவ்விப் பூவினைக் கொண்டு காணும் காடும் ஓடையும் அளந்து கொண்டது
ஏதேனுமாக கொள்ள நினைத்த கார்யத்துக்கு அளவாக்கும் இத்தனையாய் இருந்ததே அன்றோ
பூமிக்கு அளவாக்கின திருவடிகளை
என் தலைக்கு அளவாக்க லாகாதோ –
கோலமாம் என் சென்னிக்கு -4-3-6-என்று இருப்பார் தலைக்கு வைக்கலாகாதோ -என்றது
தேவரீருடைய -அப்போது அலர்ந்த -செவ்வித் தாமரை போன்ற
இரண்டு திருவடிகளும் என் தலையை எப்போது அலங்காரம் செய்யப் போகின்றன -என்கிறார் –
ஆக
குணா குணம் நிரூபணம் பண்ணாதே
எல்லார் தலைகளிலும் வைத்த திருவடிகளை
ஆசை உடைய என் தலையிலும் வைக்கலாகாதோ –
என்கிறார் என்றபடி –
கதா புன சங்க ராதாங்க கல்பக
த்விஜார விந்த அங்குச வஜ்ர லாஞ்சனம்
த்ரிவிக்ரம த்வத் சரணாம்புஜ த்வயம்
மதிய மூர்த்தானம் அலங்கரிஷ்யதி -ஸ்தோத்ர ரத்னம் -31-

—————-

அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான் அவனே யக்துண்டு உமிழ்ந்தான் அளந்தான்-9-3-2-

அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான் அவனே –
பிரளயம் கொள்ளாதபடி பூமியை எடுத்து வயிற்றிலே வைத்து
வெளிநாடு காண உமிழ்ந்து
மகாபலியாலே கவர்ந்து கொள்ளப்பட
எல்லை நடந்து மீட்டுக் கொண்டான் -அவனே
அவனே -என்ற ஏ காரத்தால் ஆபத்துக்கு துணையாதல் முதலான
காப்பாற்றுதல் தொழிலும் வேறு துணை இன்மையை
தெரிவித்தவாறு –

——-

கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய் தேவாசுரம் செற்றவனே திருமாலே நாவாய் உறைகின்ற நாரண நம்பி ஆவா அடியான் இவன் என்று அருளாயே-9-8-7-

கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய் –
சர்வேஸ்வரன் இந்த்ரனை மூன்று உலகங்கட்கும்
அதிபதி யாக்கி வைத்தான் –
அவனைத் தள்ளி அந்த பதத்தைத் தானே ஏறிட்டுக் கொண்டு
நானே அரசு -என்று இருந்தான் ஆயிற்று
நீ கொடுக்க கொள்கை அன்றிக்கே
அவற்றை எல்லாம் தானே நியமிக்கிறவன்
என்று செருக்கு கொண்டு இருந்தான் ஆயிற்று
வெறும் புறத்திலே தன்னது அல்லாதத்தை தன்னது என்று
ஏறிட்டுக் கொண்டு இருக்கக் கூடிய
அவன் கையில் இவ் விஷயமும் கிடக்குமாகில்
நாடு குடி கிடவாது -என்று பார்த்தருளி
இந்த்ரனுடைய உலகத்தை அவன் பக்கலில் நின்றும் வாங்கினான் –

——–

அகலிடம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்–9-9-2-

அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து எங்கும் அளிக்கின்ற –
பரப்புடைத்தான பூமி உருமாய்ந்து கிடக்க உண்டாக்கி
பிரளயம் கொண்டதனை இடந்து எடுத்து
திரியவும் பிரளயம் வர வயிற்றிலே வைத்து நோக்கி
உள்ளே கிடந்தது தளராதபடி வெளிநாடு காண புறப்பட விட்டு
மிடுக்கராய் இருப்பார் இறாஞ்சிக் கொள்ள
எல்லை நடந்து மீட்டுக் கொண்டு
இப்படி வரையாதே நோக்கும் தன்மையன் கண்டீர்
இப்போது வாராது ஒழிகிறான் – என்றது
பொதுவான ஆபத்து வந்தால் வயிற்றிலே வைத்து நோக்குமவன் கண்டீர்
தன் தேவியானவள் இப்படி துன்புறுத்தும் பொருள்களின்
கையிலே நோவு படா நிற்க இப்போது வாராது ஒழிகிறான்
என்றபடி –

————

தொண்டீர் வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன் அண்டம் மூவுலகளந்தவன் அணி திரு மோகூர் –கோயிலை வலம் செய்து இங்காடுதும் கூத்தே–10-1-5-

அண்ட மூ வுலகளந்தவன் –
அண்டத்துக்கு புறம்பே இருக்கிறவன்
மகா பலியால் கவரப் பட்ட
அண்டத்துக்கு உள்ளே இருக்கிற
மூன்று வகைப் பட்ட உலகங்களையும் அளந்து கொண்டவன் –
படைத்தது விடுதலே அன்றி
படைக்கப் பட்ட உலகத்தை வலி உள்ளவர்கள் கவர்ந்து கொண்டால்
எல்லை நடந்து கொண்டு காப்பாற்றுகின்றவன்-என்பார்
அளந்து -என்கிறார் –

—–

அண்ட மூ வுலகளந்தவன் அணி திரு மோகூர்–10-1-5-

அண்ட மூ வுலகளந்தவன் –
அண்டத்துக்கு புறம்பே இருக்கிறவன்
மகா பலியால் கவரப் பட்ட
அண்டத்துக்கு உள்ளே இருக்கிற
மூன்று வகைப் பட்ட உலகங்களையும் அளந்து கொண்டவன் –
படைத்தது விடுதலே அன்றி
படைக்கப் பட்ட உலகத்தை வலி உள்ளவர்கள் கவர்ந்து கொண்டால்
எல்லை நடந்து கொண்டு காப்பாற்றுகின்றவன்-என்பார்
அளந்து -என்கிறார் –

—————-

சேண் சுடர் தோள்கள் பல தழைத்த –
நீண்டு ஒளியை உடைத்தாய் –கற்பகத் தரு பணைத்தாப் போலே பல தோள்களை உடையவன் –

சகஸ்ர சீர்ஷ புருஷ -சகஸ்ராஷா சகஸ்ர பாத் –

——————————-

மடியிலா மன்னவன் எய்தும் -ஒரு குறள் பாடும் குறள் -கலியன் வேல் பெற்ற விருத்தாந்தம்
அணைத்த வேலும் தொழுத கையும்

மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த –8-2-9-
கையிலே நீர் விழுந்த உடனே எல்லா உலகங்களும் விம்ம வளர்ந்த-

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு

(அதிகாரம்:மடியின்மை குறள் எண்:610)

பொழிப்பு (மு வரதராசன்): அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவிய பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒருசேர அடைவான்.

மணக்குடவர் உரை: மடியில்லாத மன்னவன் எய்துவன், அடியினால் அளந்தானால் கடக்கப்பட்ட வுலகமெல்லாம் ஒருங்கே.
இது மடியின்மையால் வரும் பயன் கூறிற்று.

பரிமேலழகர் உரை: அடி அளந்தான் தா அயது எல்லாம் – தன் அடியளவானே எல்லா உலகையும் அளந்த இறைவன் கடந்த பரப்பு முழுதையும்; மடி இலா மன்னவன் ஒருங்கு எய்தும் – மடியிலாத அரசன் முறையானன்றி ஒருங்கே எய்தும்.
(‘அடியளந்தான்’ என்றது வாளா பெயராய் நின்றது. ‘தாவியது’ என்பது இடைக் குறைந்து நின்றது. எப்பொழுதும் வினையின் கண்ணே முயறலின், இடையீடின்றி எய்தும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் மடியிலாதான் எய்தும் பயன் கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: தன் அடியால் எல்லா உலகையும் அளந்த திருமால் நடந்த பரப்பு முழுவதையும் மடியில்லாத அரசன் அடைவான்.

பொருள்கோள் வரிஅமைப்பு:
அடியளந்தான் தாஅயது எல்லாம் மடியிலா மன்னவன் ஒருங்கு எய்தும்.பதவுரை:
மடி-சோம்பல்; இலா-இல்லாத; மன்னவன்-வேந்தன்; எய்தும்-அடைவான்; அடி-தாள்; அளந்தான்-அளந்தவன் (விண், மண், பாதாளம் என்ற மூவுலகையும் அளந்தவன்); தாஅயது-கடந்த பரப்பு; எல்லாம்-அனைத்தும்; ஒருங்கு-ஒருசேர.
மடியிலா மன்னவன் எய்தும்:இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மடியில்லாத மன்னவன் எய்துவன்;
பரிப்பெருமாள்: மடியில்லாத மன்னவன் எய்துவன்;
பரிதி: மடித்த புத்தியில்லாத அரசன் பெறுவன்;
காலிங்கர்: தனது நெஞ்சு ஊக்கத்துக்குத் தக்க முயற்சி உடையனாய்த் தனதிடத்து ஒருநாளும் மடிப்பது ஓர் மடி இல்லாத மன்னவன் யாவன்; அவன் எய்தும்; யாதினை எனின்;
பரிமேலழகர்: மடியிலாத அரசன் முறையானன்றி ஒருங்கே எய்தும்.’மடியில்லாத மன்னவன் எய்துவன்’ என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.இன்றைய ஆசிரியர்கள் ‘சோம்பல் இல்லா மன்னவன் அடைவான்’, ‘சோம்பலில்லாத அரசன் ஒருசேர அடைவான்’, ‘சோம்பல் இல்லாமல் அரசாட்சி செய்கிற மன்னவன் அடைவான்’, ‘சோம்பல் இல்லாத அரசன் அடைவான்’, என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.சோம்பல் இல்லா மன்னவன் அடைவான் என்பது இப்பகுதியின் பொருள்.அடியளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அடியினால் அளந்தானால் கடக்கப்பட்ட வுலகமெல்லாம் ஒருங்கே.
மணக்குடவர் குறிப்புரை: இது மடியின்மையால் வரும் பயன் கூறிற்று.
பரிப்பெருமாள்: அடியினால் அளந்தானால் கடக்கப்பட்ட வுலகமெல்லாம் கூட.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மடியின்மையால் வரும் பயன் கூறிற்று.
பரிதி: மகாவிட்டுணுவின் பாதத்திலே அடங்கின உலகம் என்றவாறு.
காலிங்கர்: முன் ஒரு நாள் அசுரேசனிடத்துச் சென்று மூவடி வேண்டி அளந்தவனாகிய திருமால் அடியில் தாவிக்கொண்ட அனைத்து உலகினையும் ஒருவழிப்படப்பெறும் என்றவாறு. [அசுரேசன் – மாவலி]
பரிமேலழகர்: தன் அடியளவானே எல்லா உலகையும் அளந்த இறைவன் கடந்த பரப்பு முழுதையும்;
பரிமேலழகர் குறிப்புரை: ‘அடியளந்தான்’ என்றது வாளா பெயராய் நின்றது. ‘தாவியது’ என்பது இடைக் குறைந்து நின்றது. எப்பொழுதும் வினையின் கண்ணே முயறலின், இடையீடின்றி எய்தும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் மடியிலாதான் எய்தும் பயன் கூறப்பட்டது.

‘அடியினால் அளந்தானால் கடக்கப்பட்ட வுலகமெல்லாம் ஒருங்கே’ என்றபடி பழைய ஆசிரியர்களில் மணக்குடவர்/பரிப்பெருமாள், பரிதியும் காலிங்கரும் அடியளந்தான் என்றது ‘திருமால்’ என்று குறிப்பிட்டுக் கூறப் பரிமேலழகர் ‘இறைவன்’ என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் ‘திருமால் தாண்டிய உலகம் முழுதும்’, ‘தன் திருவடியாலே உலகை அளந்த திருமால் தாவிய நிலப்பரப்பு முழுவதையும்’, ‘திருமால் அளந்த பூலோகத்தையும் தேவலோகத்தையும் ஏககாலத்தில்’, ‘அடியளந்த திருமால் கடந்த உலகப்பரப்பு முழுவதையும் ஒருங்கே’ என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அடியால் திருமால் கடந்த உலகப்பரப்பு முழுவதையும் ஒருங்கே என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அடியளந்தான் கடந்த உலகப்பரப்பு முழுவதையும் ஒருங்கே சோம்பல் இல்லா மன்னவன் அடைவான் என்பது பாடலின் பொருள்.
‘அடியளந்தான்’ யார்?
சோம்பலில்லாத ஆட்சித்தலைவன் நன் முயற்சிகளால் உலக முழுவதையும் ஒருங்கே அடைந்து ஓங்கி நிற்பான்.
இடையீடில்லாத முயற்சியின் கண்ணே இருக்கும் ஆட்சியாளன், திருவிக்ரமனாகத் தன் ஈரடியால் அளந்த முன்று உலகங்களையும் தனக்கு உரிமையாக்கிக் கொள்ளும் வல்லமை பெறுவான்.
உலக முழுவதையும் ஒருங்கே அடைவான் என்று சொல்லப்பட்டதால் இது நாடாள்வோருக்கான அறிவுரை என்பது எளிதில் பெறப்பட்டது.
மடியினையுடையான் இடித்துரையும் எள்ளல் சொல்லும் கேட்டு, குடியினை யிழந்து குற்றங்களையடைந்து, அடிமையாகிப் பின் அழிந்தே போவான் என்று சோம்பலால் உண்டாகும் கேடுகளை விளக்கியபின், மடியின்மையால் எய்தும் பெரும் பயன் இக்குறளில் உணர்த்தப்படுகிறது. சோம்பல் இல்லாமல், ஊக்கமுடைமை கொண்டு, உலகையே வெல்லலாம் என்று சொல்லப்படுகிறது. மடியிலான் தாள்உளாள் தாமரையி னாள் (ஆள்வினை உடைமை 617 பொருள்;…..சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்) என்று பின்னரும் மற்றொரு பாடலில் சொல்லப்படும்.’தாஅயது’ என்பது தாவியது என்பதன் இடைக்குறை என்பர். தாவியது ‘வி’ கெட்டுத் தாயது என்று வந்ததைத் தொகுத்தல் விகாரம் எனக் குறிப்பிடுவர் இலக்கண ஆசிரியர்கள். ஞால மூன்றடித் தாய முதல்வற்கு… (கலித். 124 பொருள்: உலகமூன்றையும் தன்திருவடியாலே அளந்த எப்பொருட்கும் அடியாயிருக்கின்றவனுக்கு.. ) என்ற கலித்தொகைப் பாடல் வரியிலும் தாய என்ற சொல் தாவிஅளந்த என்ற பொருளில் வருகிறது.
தாஅயது என்ற சொல்லுக்கு கடக்கப்பட்ட, கடந்த, அடங்கின, தாவிக்கொண்ட, தாவியளந்த, காட்டிய, தாண்டிய, தாவிய, தாவிப் பற்றிய எனப் பொருள் கூறப்பட்டது. இவற்றுள் தாவியளந்த என்பது பொருத்தம்.
‘அடியளந்தான்’ யார்?தொன்மங்களில் சொல்லப்பட்டுள்ள திருமால்-மாவலி வரலாற்றை இக்குறள் சுட்டுகிறது என்பது பலரது கருத்து. தேவர்கள், மாவலி என்னும் மன்னனை வீழ்த்த திருமாலிடம் (மகாவிஷ்ணு) சென்று வேண்டினர். மாவலி ஈகையறம் செய்து கொண்டிருந்த சமயத்தில், அங்கு வாமன அவதாரம் எடுத்து வந்த திருமால் தமக்கு மூன்றடி நிலம் வேண்டும் என இரந்தார். மாவலி மன்னன், மூன்றடி நிலத்தைக் கொடுக்க ஒப்புக்கொள்கிறான். குள்ளமாக வாமன வடிவத்தில் வந்த திருமால் முப்பேருருவனாகி, (திரிவிக்கிரமன்) எடுத்து, ஒரு அடியில் பூமியையும், இரண்டாவது அடியில் வானத்தையும் தாவி அளந்து நின்றபின் மூன்றாவது அடிக்கு இடம் கேட்டார். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக மூன்றாவது அடியைத் தனது தலை மேல் வைக்குமாறு மாவலி கூறினான். இதற்காகவே காத்திருந்த திருமால் மாவலியின் தலையில் கால் வைத்து அழுத்தி, அவனைப் பாதாளத்திற்குள் தள்ளினார். இதுதான் திருமால் நெடுமாலாய் உலகளந்த கதை.
இதில் சொல்லப்பட்ட மண்ணுலகம், விண்ணுலகம், பாதாளம் என்ற மூன்று உலகங்களையும் சோம்பலை ஒழித்து முயற்சி செய்யும் மன்னன் ஒரு சேர எய்துவான் என்று மடியின்மையின் சிறப்பு உயர்வு கூறப்பட்டது.

இப்பாடலில் ‘திருமால்’ எனக் குறித்துச் சொல்லப்படவில்லை. இதனால் அடியளந்தான் வாளாபெயராய் (காரணம் குறியாது) இறைவனை உணர்த்திற்று என்பார் பரிமேலழகர். அடியளந்தான் என்பது உலகளந்த வரலாறு குறியாது வறிதே திருமால் என்னும் பெயரளவில் நின்றது என்றார்.
நனந் தலை உலகம் வளைஇ, நேமியொடு வலம்புரி பொறித்த மா தாங்கு தடக் கை நீர் செல, நிமிர்ந்த மாஅல் போல… (பத்துப்பாட்டு, முல்லைப்பாட்டு, 1:3 பொருள்: அகலத்தை இடத்தேயுடைய உலகத்தை வளைத்து, சக்கரத்தோடே வலம்புரியைத்தாங்கும் பெரிய கைகளையுடைய மால், திருமார்பிடத்தே திருமகளைவைத்த மாலை, மாவலி வார்த்த நீர் தன் கையிலே சென்றதாக உயர்ந்த திருமாலைப்போல…) எனவும் …கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை… (பரிபாடல் 3:20 பொருள்: கீழேழுலகமும் ஒருங்கே அளந்த திருவடியினை உடையை, ) எனவும் ஞாலம் மூன்று அடித் தாய முதல்வற்கு… (கலித்தொகை 124:1 பொருள்: உலகமூன்றையும் தன்திருவடியாலே அளந்த எப்பொருட்கும் அடியாயிருக்கின்றவனுக்கு….) எனவும் திருமால் உலகளந்த செய்தியைச் சங்க இலக்கியக்கள் குறிக்கின்றன. இரண்டடியான் மூவுலகும் ஈரடியான் முறை நிரம்பா வகை முடியத் தாவிய சேவடி…. (மதுரைக் காண்டம், ஆய்ச்சியர் குரவை, படர்க்கைப் பரவல், காதை 17:35 பொருள்: முறைப்பட்ட மூன்றுலகங்களும் இரண்டு அடிகட்கு நிரம்புந் தன்மையின்றி முற்றும் வண்ணம் தாவி அளந்த அச்சிவந்த அடிகள்) என சிலப்பதிகாரமும் கூறிற்று.

‘அடியளந்தான்’ என்றது தொன்மங்களில் கூறப்பட்டுள்ள திருமால் ஆகும்.

அடியால் திருமால் கடந்த உலகப்பரப்பு முழுவதையும் ஒருங்கே சோம்பல் இல்லா மன்னவன் அடைவான் என்பது இக்குறட்கருத்து.————–
தாடாளன் கோவில் – திருக்காழிச்சீராம விண்ணகரம்

சிறப்புக்கள்

  1. மஹாபலிச் சக்ரவர்த்தி யாகம் செய்த இடத்தில் தானும் யாகம்
    செய்யவிரும்பி விசுவாமித்திரன் ஒரு இடத்தை தெரிவு
    செய்ததாகவும், யாகம் முடியும் வரை இடையூறுகளைக் களைய
    இராம இலக்குவர்களைத் துணைக் கழைத்ததாகவும் வால்மீகி
    கூறுவார். அவ்விடத்திற்கு சித்தாஸ்ரமம் என்று பெயர். அந்த
    சித்தாஸ்ரமம் என்பது     இவ்விடம்தான் என்றும் சில
    ஆராய்ச்சியாளர்கள் கூறுவர். இவர்களின் ஆதாரத்திற்குத் துணை
    நிற்பது சித்தாஸ்ரமம் பாடலிகவனத்தில் அமைந்திருந்தது
    என்பதேயாகும். இருப்பினும் இது ஆய்வுக்குரிய விஷயமேயன்றி
    முடிவான உண்மையாக ஏற்றுக் கொள்ளுமாறில்லை.
  2. 108 திவ்ய தேசங்களில் ஐந்து திவ்ய தேசங்களை திருமங்கை
    ஆழ்வார் விண்ணகரம் என்று குறிக்கின்றார். விண்ணகரம்
    என்றால் விண்ணில் உள்ள பரமபதத்திற்குச் சமமான ஸ்தலம்
    என்பது பொருள். அந்த விண் நகரங்களுள் இதுவும் ஒன்றாகும்.

    1. பரமேச்சுர விண்ணகரம
    2. காழிச்சீ ராம விண்ணகரம்
    3. அரிமேய விண்ணகரம்
    4. வைகுந்த விண்ணகரம்
    5. நந்திபுர விண்ணகரம்

    ஆனால் விண்ணகர் என்னும் சொல்லை நம்மாழ்வார்தான் முதன்
    முதலாகக் கையாண்டுள்ளார். உப்பிலியப்பன் கோவிலை
    திருவிண்ணகர்     என்றே நம்மாழ்வார்     மங்களாசாசனம்
    செய்துள்ளார். ஆண்டாளும் நாச்சியார் திருமொழியில் மேகவிடு
    தூது பாசுரத்தில் இச்சொல்லைக் கையாண்டுள்ளார்.

    எம்பெருமானின் கைங்கர்யத்திற்காக பொருளைக்கொள்ளையடிக்க
    முயன்ற திருமங்கையாழ்வார், பெருமாளை மங்களாசாசனம்
    செய்வதற்காக இச்சொல்லையும் “இலக்கிய கொள்ளை”
    கொண்டுவிட்டார்.

  3. திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களால் மங்களாசாசனம்
    செய்யப்பட்ட ஸ்தலம், மணவாள மாமுனிகளும் இரண்டுமுறை
    இங்கு எழுந்தருளி மங்களாசாசனம் செய்துள்ளார்.
  4. ஒரு சமயம் இத்தலம் அழிவுற்றபோது உற்சவப் பெருமாளை
    மட்டும் ஒரு மூதாட்டி தவிட்டுப் பானையில் வைத்துக் காத்து
    தினமும் திருவாராதனம் முடித்து மீண்டும் தவிட்டுப்
    பானைக்குள்ளேயே வைத்துக் காத்துவந்தாள். திருமங்கை
    யாழ்வார் இவ்வூருக்கு வந்த சமயம் அந்த மூதாட்டியின் கனவில்
    வந்த எம்பெருமான் தன்னை திருமங்கையிடம் ஒப்புவிக்குமாறு
    கூற அவ்விதமே திருமங்கையிடம் கொடுக்க அவர் இங்கே
    பிரதிஷ்ளடை செய்தார் என்பர். எனவே எம்பெருமானுக்கு
    “தவிட்டுப் பானைத் தாடாளன்” என்ற பெயரும் உண்டு.திருமங்கையாழ்வார் இவ்வூருக்கு வரும்போது ஞானசம்பந்தர்
    வாதுக்கழைத்ததாகவும், அப்போதுதான் சுயமாக கவிபாட
    ஆராதன விக்ரக வேண்டுமென்று திருமங்கையாழ்வார் தெரிவிக்க
    அவரது சீடர்கள் மூதாட்டியிடம் தாடாள விக்ரகப் பெருமாள்
    இருப்பதை அறிந்து அதனைப் பெற்று வந்து கொடுத்ததாகவும்
    கூறுவர்.
  5. ஆற்காடு நவாபின் ஆட்கள் இவ்வூருக்குத் தண்டாலுக்கு (வரி
    வசூலுக்கு) வரும்போது தாடாளப் பெருமாளைத் தூக்கிச் சென்று
    நவாபின் மகளிடம் கொடுக்க அவளும் படுக்கையறையிலும்,
    உப்பரிகையிலும் வைத்து விளையாட, சீர்காழியில் உள்ள சிதம்பர
    படையாச்சி கனவிலும், அர்ச்சகரின் கனவிலும் வந்து தாம்
    இருக்குமிடத்தை தெரிவிக்க, நாங்கள் வந்து எப்படி உம்மைக்
    கொணர்வது என்று கேட்க காவல்கட்டுகளை கடந்து மதிற்சுவர்
    அருகே வந்து வெண்ணெய் உண்ட தாடாளா வா, தவிட்டுப்
    பானைத் தாடாளா வா என்று அழைக்க நான் வந்துவிடுவேன்
    என்று கூறினார். அவ்விதமே அவ்விருவரும் வரும்போது
    காவலர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்க மதிற்சுவரை
    அடைந்து.தாடாளா வா தாடாளா வா
    வெண்ணெய் உண்ட தாடாளா வா
    தாடாளா வா தாடாளா வா
    தவிட்டுப் பானைத் தாடாளா வா என்று கூற
    உப்பரிகையில் நவாபின் மகள் அப்பெருமானைத் தூக்கிப்போட்டு
    விளையாடிக்கொண்டிருக்க சரேலென்று சாளரத்தின் வழியாகப்
    பாய்ந்து இவர்களின் கரத்தில் சேர, ஓட்டமும் நடையுமாகக்
    கொண்டுவந்து அப்பெருமானை ஊர் சேர்த்ததாகக் கூறுவர்.இந்நிகழ்ச்சியின் நினைவாக இன்றும் சிதம்பரப் படையாச்சியின்
    வம்சத்தாருக்கு இக்கோவிலில் தனி மரியாதைகள் உண்டு.
  6. திருக்குறளின் 610ஆம் பாடல் இப்பெருமானையே குறிக்கின்றது
    .மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
    தா(அ)யது எல்லாம் ஒருங்கு – குறள் 610
    தா அயது – தாவிய பரப்பு முழுவதும்
    அடி அளந்தான் – அடியால் உலகளந்த திருமால்
    திருமாலின் காலடிக்கீழ் உலகடங்கியது போல் சோம்பலற்ற
    மன்னனின் கீழ் உலகு தங்கும் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
    உலகளக்கத் திருமால் கொண்ட அவதாரம் த்ரிவிக்ரம
    அவதாரமாகும். இத்தலத்து எம்பெருமானின் திருநாமமும்
    திருவிக்ரமனாகும்.
  7. திருமங்கையாழ்வாரின் மேன்மைக்கும் புகழுக்கும் இத்தலம் ஒரு
    உந்துகோலாக அமைந்தது என்றால் அது மிகையல்ல.
    ஞானசம்பந்தரை வாதில் வென்று     அவரது வேலை
    மங்கையாழ்வார் பரிசாகப் பெற்றது இந்த தலத்தில்தான்.
    திருமங்கையாழ்வார் வடதேச யாத்திரை சென்று இவ்வூரின்
    வழியாகத் திரும்பும் சமயம், அவரின் சீடர்கள் திருமங்கையின்
    பட்டப்பெயர்களை உரக்க கூவிக் கொண்டு வர அங்கு
    நின்றிருந்த சிவனடியார்கள் இப்போது ஞான சம்பந்தர் இங்கு
    எழுந்தருளியிருப்பதால் நீங்கள் யாரும் உங்கள் தலைவரின்
    விருதுப் பெயர்களை இங்கே கூவிக்கொண்டு செல்லலாகாது
    என்று கூற, இவர்கள் அப்படித்தான் சொல்லிக்கொண்டு
    செல்வோம் என்று கூற வாதம் வளர்ந்து, இறுதியில்
    ஞானசம்பந்தரும், மங்கையாழ்வாரும் வாதுக்குத் தயாரானார்கள்திருமங்கையை நோக்கிய ஞான சம்பந்தன் உம்மைப் பெரிய
    வரகவியென்று விருதோதிச் செல்கிறார்களே, உம்மால் ஒரு குறள்
    சொல்ல முடியுமா என்று கேட்க, உடனே மங்கை மன்னன்,
  8. ஒரு குறளாய் இருநிலம் மூவடி மண்வேண்டி
    உலகனைத்தும் ஈரடியா லொடுக்கி – ஒன்றும்
    தருகவெனா மாவலியைச் சிறையில் வைத்த
    தாடாளன் தாளனைவீர் தக்க கீர்த்தி
    அருமறையின் திறன் நான்கும் வேள்வியைந்தும்
    அங்கங்கங்கள வைகளாறும் இசைகளேழும்
    தெருவில் மலிவிழா வளம் சிறக்கும் காழிச்
    சீராம விண்ணகரே சேர்மினீரே
    -என்று அவர் கூறிய குறள்
    என்னும் வார்த்தையையே கவியின் முதலடியாகக் கொண்டு,
    ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என எண்வரிசையிலும் பாடி
    தொடர்ந்து வரும் பத்துப் பாடல்களில் திருமாலின் பத்து
    அவதாரங்களை விளக்கி நிற்க, இத்திறன் கண்டு வியந்த
    ஞானசம்பந்தர் நாலுகவிப்பெருமாள் என்பது உமக்கே செல்லும்,
    விருதோதிச் செல்லும், விருதோதிச் செல்லும் என்று கூறி
    கையிலிருந்த வேலினையும் பரிசாகக் கொடுத்து திருமங்கையின்
    கால்களுக்கு தண்டை அணிவித்து மகிழ்ந்தார்.இதனால்தான் திருமங்கையாழ்வாரும் தாம் பிற ஸ்தலங்களைப்
    பாடிய பாக்களில் தமது ஒன்றிரண்டு பெயர்களை மட்டும்
    இணைத்துப் பாடி, இங்கே தம்மைத் தடுத்து தாம் வெற்றி
    கொண்டமையால் தனது 8 விருதுப் பெயர்களையும் கீழ்வரும்
    பாடலில் ஒருங்கே சொல்கிறார்செங்கமலத்து அயனனைய மறையோர் காழிச்
    சீராம விண்ணகர் என் செங்கண் மாலை
    அங்கமலத் தடவயல் சூழ் ஆலி நாடன்
    அருள்மாரி அரட்ட முக்கி அடையார் சீயம்
    கொங்குமலர்க் குழலியர்வேள் மங்கை வேந்தன்
    கொற்றவேற் பரகலான் கலியன் சொன்ன
    சங்கமுகத் தமிழ் மாலை பத்தும் வல்லார்
    தடங்கடல் சூழலுகுக்குத் தலைவர் தாமே
    – என்றார்.

    திருமங்கை இப்பாடலில் குறித்துள்ள தமது பட்டப் பெயர்கள்
    1. ஆலிநாடன் 2. அருள்மாரி 3. அரட்டமுக்கி 4. அடையார்சீயம்
    5. கொங்குமலர் குழலியர்வேள் 6. மங்கை வேந்தன் 7. பரகலான்
    8. கலியன்.

  9. திருஞான சம்பந்தரும், திருமங்கையாழ்வாரும் சமகாலத்தவர்கள்
    என்பது வரலாறிந்தார் கூற்று. மதத்தால் இருவரும் வேறு
    பட்டவராயினும் மனத்தால் “கற்றானைக் கற்றோனே காமுறுவான்”
    என்பதற்கொப்ப ஒருவரையொருவர் சந்திக்கப் பேராவல்
    பூண்டவராயிருந்தனர் என்பதும்     ஒருவருடன்     ஒருவர்
    கன்னித்தமிழில் கலந்துரையாடக் காலங்கருதிக் காத்து இருந்தனர்
    என்பதும் கீழ்க்கண்ட இரண்டு பாக்களால் விளங்கும்.
  10. கடியுண்ட நெடுவாளை கராவிற் றப்பக்
    கயத்துக்குகள் அடங்காமல் விசும்பில் பாய
    அடியுண்ட உயர் தெங்கின் பழத்தாற் பூதம்
    அலையுண்டு குலைசிதறும் ஆலி நாடா
    படியுண்ட பெருமானைப் பறித்து பாடி
    பதம் பெற்ற பெருமாளே தமியேன் பெற்ற
    கொடி ஒன்று நின்பவனிக்கு எதிரே சென்று
    கும்பிட்டாள் உயிர் ஒன்றுங் கொடு வந்தாயே
    என்பது ஞானசம்பந்தரின் தாய்ப்பேச்சு அதாவது தன்னைத்
    தாயாக நினைத்துக் கொண்டு தன் மகளின் நிலை கூறுகிறார்.ஏ மங்கை மன்னா, பரம்பொருளாம் திருமாலை வழிப்பறி செய்தீர்.
    உமது பவனியைக்காண என் மகள் ஒருநாள் வந்தபோது அவள்
    உள்ளத்தையும் வழிப்பறி செய்தீர். இதுமுறையோ, எனது ஒரே
    மகள் உள்ளமிழந்து உயிர் ஒன்றுடன் வருந்த நிற்கிறாளே, என்று
    கூறும் வகையில் திருமங்கையாழ்வார் தனது உள்ளத்தையும்
    திருடிவிட்டதாய் (வழிப்பறி செய்து விட்டதாய்) ஞானசம்பந்தர்
    கூறினார்.இதனைக் கேட்ட திருமங்கை, தன்னைத் தலைவியாகப் பாவித்துக்
    கொண்டு, தலைவி படும் துயரத்தைச் சொல்லும்முகமாய் தலைவிப்
    பேச்சுப் பேசுகிறார்.திருஞான சம்பந்தர் மயிலையில் அனலில் வெந்த ஒரு பெண்ணை
    உயிர்ப்பித்துக் கொடுத்தார். இச்செய்தியை அடிப்படையாகக்
    கொண்டு தலைவிப் பேச்சில் திருமங்கை கூறுகிறார்.

    ஞானசம்பந்தரே நானும் ஒரு பெண். பெண் என்றால் அபலை
    என்பர் பெரியோர். நான் தங்களையே நினைந்து நினைந்து
    காணாக் காதலுற்று பிரிவாற்றாமையால் வருந்தி நிலவொளி கூட
    அனலாக வேகும்படி நிலவில் வெந்திருக்கிறேன். தாங்கள்
    மயிலாப்பூரில் அனலில் வெந்த ஒரு பெண்ணை பிழைக்கச்
    செய்தீரே அது என்ன விந்தை, சித்து விளையாட்டால் கூட
    இதனைச் செய்ய முடியுமன்றோ, ஆனால் தங்களைக் காண
    விரும்பி நிலவில் வெந்த இந்தப் பெண்ணுடன் கூடி
    உயிர்ப்பித்தாலன்றோ தங்கள் பெருமை நிலைக்கும் என்றார்.
    இதோ அப்பாடல்

    வறுக்கை நுறுங்கணி சிதறிச் செந்தேன் பொங்கி
    மருக்கரையின் குளக்கரையில் மதகிலோடப்
    பெருக்கெடுத்து வண்டோலம் செய்யும் காழிப்
    பிள்ளையார் சம்பந்தப் பெருமாள் கேளீர்
    அருட்குலாவு மயிலை தன்னில் அனலால் வெந்த
    அங்கத்தைப் பூம்பாவை யாக்கினோம் என்று
    இருக்குமது தகவன்று நிலவால் வெந்த
    இவளையும் ஓர் பெண்ணாக்கல் இயல்புதானே
    – என்றார்.

    பக்திச் சோலையிலே திளைத்து பாசுரங்களைத் தமிழன்னைக்கு
    வாரித்தெளித்த இவ்விரு கவி வள்ளல்களும் கண நேரத்தில்
    (தாய்ப்பேச்சு, தலைவிப்பேச்சு என்று) இரண்டு காதற்பூக்களைத்
    தமிழன்னைக்குச் சொருகி விட்டுச்சென்று விட்டனர்.


    ——————————————————–

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading