ஸ்ரீ வராஹ ஷேத்ரமும் ஸ்ரீ திவ்ய தேசங்களும்

ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ வராஹன்- சேர்த்தி அனுபவ -அருளிச் செயல்கள் ஸ்ரீ ஸூ க்திகள்

ஸ்ரீ பெரியாழ்வார் ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ வராஹன்- சேர்த்தி அனுபவம்-

வல் எயிற்று கேழலுமாய் வாள் எயிற்று சீயமுமாய்
எல்லை இல்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர்
எல்லியம்போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி
மல்லிகை வெண் சங்கூதும் மதிள் அரங்கம் என்பதுவே – 4-8-8-

தேவுடைய மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய் குறளாய்
மூவுருவில் ராமனாய் கண்ணனாய் கல்கியாய் முடிப்பான் கோயில்
சேவலோடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி யூசலாடி
பூவணை மேல் துதைந்து எழு செம்பொடியாடி விளையாடும் புனல் அரங்கமே -4-9 9-

———-

ஸ்ரீ ஆண்டாள் -ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ வராஹன்- சேர்த்தி அனுபவம்-

பாசி தூரத்துக் கிடந்த பார் மகட்குப் பண்டு ஒரு நாள்
மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராதே–11-8-

———

ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ வராஹன்- சேர்த்தி அனுபவம்-

ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னி ராமனாய்
மாறு அடர்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர்
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோவில் திரு முற்றம்
சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே -2-3-

————-

ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ வராஹன்- சேர்த்தி அனுபவம்-

ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய்த்
தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால்
வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி வணங்கும் நல்
தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென்னரங்கமே —5-4-8-

ஏனாகி உலகிடந்து அன்று இரு நிலமும் பெரு விசும்பும்
தானாய பெருமானைத் தன் அடியார் மனத்து என்றும்
தேனாகி அமுதாகித் திகழ்ந்தானை மகிழ்ந்து ஒரு கால்
ஆனாயன் ஆனானைக் கண்டது தென்னரங்கத்தே—5-6-3-

————–

ஸ்ரீ நம்மாழ்வார் –ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ வராஹன்- சேர்த்தி அனுபவம்-

‘என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்;
‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட
நிலமகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட
ஆய்மகள் அன்பனே!’ என்னும்;
தென் திரு அரங்கம் கோயில் கொண் டானே!
தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9-

——-

புரிந்து மத வேழம் மாப் பிடியோடூடித்
திரிந்து சினத்தால் பொருது -விரிந்த சீர்
வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே மேலொரு நாள்
மண் கோட்டுக் கொண்டான் மலை ———45-

பண்டு ஒரு நாள் பூமியை ஸ்ரீ வராஹ ரூபியாய் எயிற்றிலே கொண்டவனுடைய மலை –

வேங்கடமே முன்னொரு நாளிலே-ஸ்ரீ வராஹ ரூபியாய்க் கொண்டு பூமியைத் தன் திரு எயிற்றிலே எடுத்து வைத்துக் கொண்டவனுடைய திருமலை –

பரன் சென்று சேர் வேங்கடம் -ஸ்ரீ வராஹ க்ஷேத்ரம் அன்றோ -வேங்கடமே மேலொரு நாள்
மண் கோட்டுக் கொண்டான் மலை-என்கிறார்-மஹா வராஹா ஸ்புட பத்ர லோசனன்

———

ஏனமுனாகி இருநிலம் இடந்து அன்று இணையடி இமையவர் வணங்க —
என் தலைவன் –வதரியாஸ்சிராமத்துள்ளானே –ஸ்ரீ பெரிய திருமொழி–1-4-1-

————-

கிடந்தானைத் தடங்கடலுள் பணங்கள் மேவிக் கிளர் பொறிய மறி திரிய வதனின் பின்னே
படர்ந்தானை படுமதத்த களிற்றின் கொம்பு பறித்தானைப் பாரிடத்தை எயிறு கீற
விடந்தானை வளை மருப்பின் ஏனமாகி இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம்
கடந்தானை எம்மானைக் கண்டு கொண்டேன் கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-6-

————–

இரும் தண் மா நிலம் ஏனமதாய் வளை மருப்பினில் அகத்தொடுக்கி
கரும் தண் மா கடல் கண் துயின்றவன் இடம் திரு வயிந்திர புரமே-3-1-1-

————

வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்றாய் விரி நீர் முது வெள்ளம் உள் புக்கு அழுந்த
வம்புண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான் அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர்
பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து படை மன்னவன் பல்லவர் கோன் பணிந்த
செம் பொன் மணி மாடங்கள் சூழ்ந்த தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே—3-2-3-

————

வையணைந்த நுதிக் கோட்டு வராகம் ஒன்றாய் மண்ணெல்லாம் இடந்து எடுத்து —
தாள் அணைகிற்பீர் காழிச் சீராம விண்ணகரே சேர்மினீரே -3-4-3-

———–

சிலம்பினிடைச் சிறு பரல் போல் பெரிய மேரு திருக்குளம்பில் கண கணப்பத் திருவாகாரம் குலுங்க
நில மடந்தை தனை இடந்து புல்கிக் கோட்டிடை வைத்து அருளிய எங்கோமான் கண்டீர் —
நாங்கூர்த் திருத் தெற்றி யம்பலத்து என் செங்கண் மாலே — –4-4-8-

———-

கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும்
அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய வெந்தை—நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-6-

———-

மண்ணிடந்து ஏனமாகி –நாங்கை மேய கண்ணனே காவளந்தண் பாடியாய் களை கண் நீயே -–4-6-2-

——–

வாராகமதாகி இம்மண்ணை இடந்தாய் நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர்
சீரார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்துள் ஆராவமுதே அடியேற்கு அருளாயே –4-7-8–

———-

பண்டு முன் ஏனமாகி அன்று ஒரு கால் பாரிடந்து எயிற்றினில் கொண்டு
தெண் திரை வருடப் பாற் கடல் துயின்ற திருவெள்ளியங்குடியானை —
தவமுடையார்கள் ஆள்வர் இக்குரை கடலுலகே –4-10-10-

———–

மான வேல் ஒண் கண் மடவரல் மண் மகள் அழுங்க முந்நீர்ப் பரப்பில்
ஏனமாகி அன்று இரு நிலம் இடந்தவனே எனக்கு அருள் புரியே–
திரு வெள்ளறை நின்றானே —5-3-5–

———–

புள்ளாய் ஏனமுமாய் புகுந்து என்னை உள்ளம் கொண்ட
கள்வா என்றலும் என் கண்கள் நீர்கள் சோர் தருமால்
உள்ளே நின்று உருகி நெஞ்சம் உன்னை உள்ளி யக்கால்
நள்ளேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-1-

————-

நரனே நாரணனே திரு நறையூர் நம்பி எம்பெருமான் உம்பராளும்
அரனே ஆதி வராகம் முனனாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே -7-7-4-

——

பாராரளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பில்
ஏரார் உருவத் தேனமாய் எடுத்த வாற்றல் அம்மானை
கூரார் ஆரல் இரை கருதிக் குருகு பாயக் கயல் இரியும்
காரார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-3-

———-

மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த்
தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னை கண்ண புரத் தடியன் கலியன் ஒலி செய்த
தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே —8-8-10-

———–

வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி வெள் எயிற்று ஒள் எரித் தறு கண்
பன்றியாய் அன்று பார்மகள் பயலைத் தீர்த்தவன் பஞ்சவர் பாகன்
ஒன்றலா வுருவத் துலபபில் பல் காலத் துயர் கொடி யொளி வளர் மதியம்
சென்று சேர் சென்னிச் சிகர நன் மாடத் திருக் கண்ணங்குடியுள் நின்றானே—9-1-4-

————

அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை யழகியாரை
கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
வின்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்
மன்னவராய் யுலகாண்டு மீண்டும் வானவராய் மகிழ் எய்துவரே–9-2-10-

—————-

கேழல் செங்கண் மா முகில் வண்ணர் மருவுமூர் –குறுங்குடியே –9-6-3-

————

ஏனமாய் நிலம் கீண்ட என்னப்பனே கண்ணா என்றும் என்னை யாளுடை
வான நாயகனே மணி மாணிக்கச் சுடரே
தேன மாம் பொழில் தண் சிரீவர மங்கலத் தவர் கை தொழ வுறை
வானமா மலையே அடியேன் தொழ வந்தருளே –5-7-6-

———

என்னமர் பெருமான் இமையவர் பெருமான் இருநிலம் இடந்த வெம்பெருமான்
முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள என்னை யாள்கின்ற வெம்பெருமான்
தென் திசைக்கணிகொள் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாங்கரைமீ பால்
நின்ற வெம்பெருமான் அடியல்லால் சரண் நினைப்பிலும் பிறிதில்லை எனக்கே–8-4-3-

—————-

ஆழ்வார் திருநகரிக்கு தாந்தன் க்ஷேத்ரம் -வராஹ க்ஷேத்ரம் -சேஷ க்ஷேத்ரம் தீர்த்த க்ஷேத்ரம் ஆதி க்ஷேத்ரம் போன்ற பல பெயர்கள் உண்டு
வராஹ ஷேத்திரம்-வராஹ அவதாரத்தை காண விரும்பிய சில முனிவர்கள் இத்தலத்தில் வந்து கடுந்தவம் புரியவே அவர்கட்கு வராஹ நாராயணன் மடியில் பூமிப்பிராட்டியுடன் காட்சிகொடுத்த திருத்தலமாதலால் வராஹ ஷேத்திரம் என்ற பெயர் பெற்றது.
ஆதியில் தோன்றியதால் “ஆதி ஷேத்திரம்” என்றும், வராஹ ரூபத்தை காட்டியருளியதால் “வராஹ ஷேத்திரம் என்றும் ஆயிரம் தலை
கொண்ட ஆதிசேடன் உறங்காப் புளியாக அவதரித்தமையால் சேஷ சேஷத்திரமெனவும், தாமிரபரணியாலும், சங்கணித்துறையாலும் வளம்கெழுமிய
ஊராகையால் “தீர்த்த சேஷத்திரம்” எனவும், தாந்தன் என்னும் கீழ்குலத்தானுக்கு மோட்சம் நல்கியதால் தாந்த ஷேத்திரம் எனவும், இந்த
குருகூரை “பஞ்சமஹா ஷேத்திரம்” என்றும் பெரியோர் போற்றிப் புகழ்வார்.

————-———————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading