மூலவர் -பரமபத நாதன் -வீற்று இருந்த திருக் கோலம் -தெற்கே திரு முக மண்டலம்
தாயார் -பெரிய பிராட்டியார்
தீர்த்தம் -ஜரம்மத புஷ்கரிணி -விராஜா நதி
மங்களா சாசனம் -பொய்கையார் -பேயார் -திருமழிசை ஆழ்வார் -நம்மாழ்வார் -குலசேகராழ்வார்
பெரியாழ்வார் -ஆண்டாள் -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -திருப் பாண் ஆழ்வார் -திரு மங்கை ஆழ்வார்
ஸ்ரீ வைகுண்டம் –நித்ய விபூதி –பரமாகாசம் -பரம வ்யோமம் -தெளி விசும்பு திரு நாடு -நலமந்தம் இல்லாத நாடு
விராஜா நதி நித்ய விபூதிக்கும் லீலா விபூதிக்கு நடுவில்
ஞானம்பக்தி குறை இல்லாமல் -கர்மம் தீண்டாமல் -ஆனந்தமே மிக்கு இருக்கும்
ஸ்வரூப விகாசம் அடைந்த ஆத்மாக்கள் ஸ்ரீ யபதியை அனுபவித்து -அபஹத பாப்மாதி குணங்களில் சாம்யம்
நசப்புனராவர்த்ததே-திக்குகள் இல்லாத தேசம் -வைகுந்தம் புகுவது மன்னவர் விதியே –
பரத அக்ரூர மாருதியை ஆலிங்கனம் செய்த திருமார்பால் ஆலிங்கனம் செய்யப் பட்டு திரு மடியில்
-அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத–அம்ருத சாகர ஆனந்த சாகரத்தில் ஆழ்வோம்
இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் –பூத புரீசன் -ஆதி கேசவ பெருமாள் -குடி கொண்ட கோயில் -ஸ்வாமி சேவிக்க அனைவரையும் சேவிப்போமே –
நல் தாதை தம் புதல்வன் -சொத்து நமக்காக சரணாகதி –
மணவாள மா முனி ஜீயர் திருவடிகளே சரணம்
ஆழ்வார்கள் வாழி –செய்ய மறை தன்னுடனே சேர்ந்து
ஆச்சார்யர் திருவடிகளே சரணம்
நித்ய ஸ்ரீ நித்ய மங்களம்-
ஸ்ரீ திருப் பரமபதம்
மூலவர் ஸ்ரீ பரமபத நாதன், ஸ்ரீ வைகுந்த நாதன்
கோலம் வீற்றிருந்த
திருமுக மண்டலம் தெற்கு
தாயார் ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீ நீளாதேவி
தீர்த்தம் ஸ்ரீ விரஜா நதி, ஸ்ரீ ஐரம்மதீய புஷ்கரணி
விமானம் ஸ்ரீ அனந்தாங்க விமானம்
மண்டலம் ஸ்ரீ விண்ணுலகம்
மாநிலம் ஸ்ரீ விண்ணுலகம்
அடிப்படை இடம் ஸ்ரீ விண்ணுலகம்
நாமாவளி ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஸமேத ஸ்ரீ பரம பத நாதாய நமஹ
———-
ஸ்ரீ பெரியாழ்வார் –4-பாசுரங்கள் –
ஸ்ரீ ஆண்டாள் –1–பாசுரம்
ஸ்ரீ திரு மழிசைப் பிரான் –4-பாசுரங்கள்
ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் –1–பாசுரம்
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் –1–பாசுரம்
ஸ்ரீ நம்மாழ்வார் –33-பாசுரங்கள்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் –2-பாசுரங்கள்
ஸ்ரீ பேய் ஆழ்வார் –3-பாசுரங்கள்
——————————————
ஸ்ரீ பெரியாழ்வார் –4-பாசுரங்கள் –
அண்டத் தமரர்கள் சூழ அத்தாணி யுள்ளங் கிருந்தாய்
வானிள வரசு வைகுந்தக் குட்டன் வாசு தேவன் மதுரை மன்னன்
வடதிசை மதுரை சாளக் கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி இடமுடை வதரி யிடவகை யுடைய எம் புருடோத்தமனிருக்கை
வடதடமும் வைகுந்தமும் மதிள் துவராபதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு என் பால் இடவகை கொண்டனையே
———–
ஸ்ரீ ஆண்டாள் –1–பாசுரம்
மா மாயன் மாதவன் வைகுந்த னென்றென்று நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்
———-
ஸ்ரீ திரு மழிசைப் பிரான் –4-பாசுரங்கள்
மண்ணுளாய் கொல்? விண்ணுளாய் கொல்?
வைகுந்தச் செல்வனார் சேவடி மேற் பாட்டு
தம் மெய், குந்தமாக விரும்புவரே தாமும் தம் வைகுந்தம் காண்பார் விரைந்து
ஆன்றேன் கடன் நாடும் மண்ணாடும் கைவிட்டு மேலை இடநாடு காணவினி.
———-
ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் –1–பாசுரம்
அமலனாதி பிரான் அடியார்க் கென்னை யாட்படுத்த விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
————
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் –1–பாசுரம்
அண்டமாய் எண் திசைக்கும் ஆதியாய்! நீதியான பண்டமாம் பரம சோதி! நின்னையே பரவுவேனே
————
ஸ்ரீ நம்மாழ்வார் –33-பாசுரங்கள்
தனது வைகுந்த மன்னாள் கண்ணாய் வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய்! கலந்தார் வர
அடியார் நிலாகின்ற வைகுந்தமோ? வையமோ? நும் நிலையிடமே
கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும் புல்லென்றொழிந்தன கொல்
திண்ணன் வீடு முதல் முழுதுமாய் எண்ணின் மீதியன் எம்பெருமான்
இணைவனா மெப்பொருட்கும், வீடு முதலாம் புணைவன் பிறவிக் கடல் நீந்துவார்க்கே.
துயரில்லா வீடு முதலாம் — என் தனி நாயகன் புணர்ப்பே
புலனைந்து மேயும் பொறியைந்து நீக்கி நலமந்த மில்லது ஓர் நாடு புகுவீர்
சேண் பால வீடோ உயிரோ மற்றெப்பொருட்கும் எண் பாலும் சோரான் பரந்துளனா மெங்குமே
சீர்மை கொள் வீடு சுவர்க்கம் நரகீறா ஈர்மை கொள் தேவர் நடுவா மற்றெப்பொருட்கும் வேர் முதலாய் வித்தாய்
இப்பத்தும் வல்லார் விண் தலையில் வீற்றிருந்தாள்வர் எம்மா வீடே
எம்மா வீட்டுத் திறமும் செப்பம்
சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம் இறப்பி லெய்துக வெய்தற்க
இவை பத்தும் கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே
சுடரொளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை உடலொடும் கொண்டு கொடுத்த
விண்ணைத் தொழுது அவன் மேவு வைகுந்த மென்று கை காட்டும்
வைகுந்த நாதன் என் வல்வினை மாய்ந்தற செய்குந்தன் தன்னை என்னாக்கி என்னால் தன்னை வைகுந்தனாகப் புகழ்
வைகுந்தமும் பாற் கடலும் அஞ்சன வெற்புமவை நணிய கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி அவனவை காண் கொடானே-
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏக மெண்ணும் இராப் பகலின்றியே
தெளி விசும்பு கடிதோடித் தீ வளைத்து மின்னிலகும் ஒளி முகில்காள்! திருமூழிக்களத் துறையு மொண் சுடர்க்கு
தெளி விசும்பு திருநாடாத் தீ வினையேன் மனத்துறையும்
திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனதுடலே
திருப் பேரான் தெளிதாகிய சேண் விசும்பு தருவானே
சூழ் விசும்பணி முகில் தூரியம் முழக்கின
உயர் விண்ணில் நீரணி கடல்கள் நின்றார்த்தன
முனிவர்கள் வழியிது வைகுந்தற்கு என்று வந்தெதிரே
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே
மாதவன் தமரென்று
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமரென்று வாளொண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே
மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும் தொடர்ந் தெங்கும் தோத்திரஞ் சொல்லினர்
வடி வுடை மாதவன் வைகுந்தம் புகவே
வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர் வைகுந்தன் தமர் எமர் எமதிடம் புகுதென்று
வைகுந்தத் தமரரும் முனிவரும் வியந்தனர் வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
விதி வகை புகுந்தனரென்று நல் வேதியர் பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
வந்த வரெதிர் கொள்ள மா மணி மண்டபத்து அந்தமில் பேரின்பத்து அடியரோ டிருந்தமை
————-
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் –2-பாசுரங்கள் –
விண்ணகத்தாய்! மண்ணகத்தாய்! வேங்கடத்தாய்! நால் வேதப் பண்ணகத்தாய்! நீ கிடந்த பால்
வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத பூங் கிடங்கின் நீள் கோவல் பொன்னகரும்
————–
ஸ்ரீ பேய் ஆழ்வார் –3-பாசுரங்கள் –
சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம் நேர்ந்த வென் சிந்தை நிறை விசும்பு
பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும் நூற் கடலும்
பண்டெல்லாம் வேங்கடம் பாற் கடல் வைகுந்தம் கொண்டங்குறைவார்க்குக் கோயில்
———————————————————–
ஸ்ரீ பெரியாழ்வார் –4-பாசுரங்கள் –
அண்டத் தமரர்கள் சூழ அத்தாணி யுள்ளங் கிருந்தாய்
தொண்டர்கள் நெஞ்சிலுறைவாய். தூ மலராள் மணவாளா!
உண்டிட்டு உலகினை யேழும் ஓராலிலையில் துயில் கொண்டாய்!
கண்டு நான்உன்னை யுகக்கக் கருமுகைப் பூச்சூட்ட வாராய்–பெரியாழ்வார் திருமொழி-2-7-9 –
வானிள வரசு வைகுந்தக் குட்டன் வாசு தேவன் மதுரை மன்னன் நந்த
கோனிள வரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழல் கொடு ஊதின போது
வானிளம் படியர் வந்து வந்தீண்டி மனமுருகி மலர்க் கண்கள் பனிப்ப
தேனளவு செறி கூந்தலவிழச் சென்னி வேர்ப்பச் செவி சேர்த்து நின்றனரே. பெரியாழ்வார் திருமொழி -3-6-3–
வடதிசை மதுரை சாளக் கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி
இடமுடை வதரி யிடவகை யுடைய எம் புருடோ த்தமனிருக்கை
தடவரை யதிரத் தரணி விண்டிடியத் தலைப் பற்றிக் கரை மரஞ்சாடி
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்டமென்னும் கடி நகரே. பெரியாழ்வார் திருமொழி -4-7-9-
தடவரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடுங்கொடி போல்
சுடரொளியாய் நெஞ்சினுள்ளே தோன்றும் என் சோதி நம்பி!
வடதடமும் வைகுந்தமும் மதிள் துவராபதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டு என் பால் இடவகை கொண்டனையே –பெரியாழ்வார் திருமொழி -5-4-9–
——–
ஸ்ரீ ஆண்டாள் –1–பாசுரம்
தூ மணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண் வளரும்
மாமான் மகளே! மணிக் கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை யெழுப்பீரோ? உன் மகள் தான்
ஊமையோ? அன்றிச்செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந் துயில் மந்திரப் பட்டாளோ?
மா மாயன் மாதவன் வைகுந்த னென்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.–திருப்பாவை – 9–
————-
ஸ்ரீ திரு மழிசைப் பிரான் –4-பாசுரங்கள்
மண்ணுளாய் கொல்? விண்ணுளாய் கொல்? மண்ணுளே மயங்கி நின்று
எண்ணுமெண் ணகப்படாய் கொல்? என்ன மாயை நின் தமர்
கண்ணுளாய் கொல்? சேயை கொல்? அனந்தன் மேல் கிடந்த எம்
புண்ணியா புனந்துழா யலங்கலம் புனிதனே!–திருச்சந்தவிருத்தம் – 45-
நாக் கொண்டு மானிடம் பாடேன் நலமாகத்
தீக் கொண்ட செஞ்சடையான் சென்று என்றும் – பூக் கொண்டு
வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச்
செல்வனார் சேவடி மேற் பாட்டு. –நான்முகன் திருவந்தாதி – 75
ஆய்ந்து கொண்டு ஆதிப் பெருமானை அன்பினால்
வாய்ந்த மனத்து இருத்த வல்லார்கள் – ஏய்ந்த தம்
மெய், குந்தமாக விரும்புவரே தாமும் தம்
வைகுந்தம் காண்பார் விரைந்து–நான்முகன் திருவந்தாதி – 79
ஏன்றேனடிமை இழிந்தேன் பிறப்பிடும்பை
ஆன்றேனமரர்க் கமராமை – ஆன்றேன்
கடன் நாடும் மண்ணாடும் கைவிட்டு மேலை
இடநாடு காணவினி. –நான்முகன் திருவந்தாதி – 95-
———
ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் –1–பாசுரம்
அமலனாதி பிரான் அடியார்க் கென்னை யாட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள் மதிளரங்கத் தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன வொக்கின்றதே. –அமலனாதிபிரான் – 1–
—————–
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் –1–பாசுரம்
தொண்டெல்லாம் பரவி நின்னைத் தொழுது அடி பணியுமாறு
கண்டு தான் கவலை தீர்ப்பான் ஆவதே? பணியாய் எந்தாய்!
அண்டமாய் எண் திசைக்கும் ஆதியாய்! நீதியான
பண்டமாம் பரம சோதி! நின்னையே பரவுவேனே. –திருக்குறுந்தாண்டகம் – 11-
————
ஸ்ரீ நம்மாழ்வார் –33-பாசுரங்கள் –
உண்ணா துறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிருமியல்வினவாம் எரி நீர் வளி வான்
மண்ணாகிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாள்
கண்ணாய் அருவினையேன் உயிராயின காவிகளே. –திருவிருத்தம் – 66
மலர்ந்தே யொழிந்தில மாலையும் மாலை பொன் வாசிகையும்
புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி பொரு கடல் சூழ்
நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய்!
கலந்தார் வர வெதிர் கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே.–திருவிருத்தம் – 68
உலாகின்ற கெண்டை யொளி யம்பு எம் மாவியை யூடுருவக்
குலாகின்ற வெஞ்சிலை வாள் முகத்தீர்! குனி சங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரி யம் பள்ளி யம்மான் அடியார்
நிலாகின்ற வைகுந்தமோ? வையமோ? நும் நிலையிடமே. –திருவிருத்தம் – 75
கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும்
புல்லென்றொழிந்தன கொல்? ஏ பாவம்! – வெல்ல
நெடியான் நிறங் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேன துள்ளத் தகம். –பெரிய திருவந்தாதி – 68
திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணுமெல்லாம் உடனுண்ட நம்
கண்ணன் கண்ணல்லது இல்லையோர் கண்ணே.–திருவாய்மொழி -2-2-1–
அணைவ தரவணை மேல் பூம் பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனா மெப்பொருட்கும், வீடு முதலாம்
புணைவன் பிறவிக் கடல் நீந்துவார்க்கே. –திருவாய்மொழி -2-8-1-
நீந்தும் துயர்ப் பிறவி உட் பட மற்றெவ்வெவையும்
நீந்தும் துயரில்லா வீடு முதலாம்
பூந் தண் புனற் பொய்கை யானை யிடர்க் கடிந்த
பூந் தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே–திருவாய்மொழி -2-8-2-
புலனைந்து மேயும் பொறியைந்து நீக்கி
நலமந்த மில்லது ஓர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரில் படிமினோவாதே–திருவாய்மொழி -2-8-4-
காண்பாரார்? எம் மீசன் கண்ணனை யென் காணுமாறு?
ஊண் பேசில் எல்லா வுலகுமோர் துற்றாற்றா
சேண் பால வீடோ உயிரோ மற்றெப்பொருட்கும்
எண் பாலும் சோரான் பரந்துளனா மெங்குமே–திருவாய்மொழி -2-8-8-
சீர்மை கொள் வீடு சுவர்க்கம் நரகீறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்றெப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய்ப் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே–திருவாய்மொழி -2-8-10-
கண் தலங்கள் செய்ய கரு மேனி யம்மானை
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்
பண் தலையிற் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
விண் தலையில் வீற்றிருந்தாள்வர் எம்மா வீடே.–திருவாய்மொழி -2-8-11-
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லை
கைம் மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா! அடியேன் வேண்டுவதீதே. –திருவாய்மொழி -2-9-1-
சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம்
இறப்பி லெய்துக வெய்தற்க யானும்
பிறப்பில் பல் பிறவிப் பெருமானை
மறப் பொன்றின்றி என்னும் மகிழ்வேனே–திருவாய்மொழி –2-9-5-
விடலில் சக்கரத் தண்ணலை மேவல்
விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
கெடலி லாயிரத்துள் இவை பத்தும்
கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே. –திருவாய்மொழி -2-9-11-
இடரின்றியே யொரு நாளொரு போழ்தில் எல்லா வுலகும் கழிய
படர்ப் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடனேறத் திண் தேர்க் கடவி
சுடரொளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயரிலனே–திருவாய்மொழி -3-10-5-
மண்ணை யிருந்து துழாவி வாமனன் மண்ணிது வென்னும்
விண்ணைத் தொழுது அவன் மேவு வைகுந்த மென்று கை காட்டும்
கண்ணை யுண்ணீர் மல்க நின்று கடல்வண்ண னென்னும் அன்னே! *என்
பெண்ணைப் பெரு மயல் செய்தார்க்கு என் செய்கேன்? பெய் வளையீரே! –திருவாய்மொழி -4-4-1-
வைகுந்த நாதன் என் வல்வினை மாய்ந்தற
செய்குந்தன் தன்னை என்னாக்கி என்னால் தன்னை
வைகுந்தனாகப் புகழ் வண் தீங்கவி
செய்குந்தன் தன்னை எந்நாள் சிந்தித்தார்வனோ?–திருவாய்மொழி -7-9-7-
இடையில்லை யான் வளர்த்த கிளிகாள்! பூவைகள் காள்! குயில் காள்! மயில் காள்!
உடைய நம்மாமையும் சங்கும் நெஞ்சும் ஒன்று மொழிய வொட்டாது கொண்டான்
அடையும் வைகுந்தமும் பாற் கடலும் அஞ்சன வெற்புமவை நணிய
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி அவனவை காண் கொடானே–திருவாய்மொழி -8-2-8-
ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர்
ஆகம் வள்ளுகிரால் பிளந்தானுறை
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏக மெண்ணும் இராப் பகலின்றியே–திருவாய்மொழி -9-3-7-
தெளி விசும்பு கடிதோடித் தீ வளைத்து மின்னிலகும்
ஒளி முகில்காள்! திருமூழிக்களத் துறையு மொண் சுடர்க்கு
தெளி விசும்பு திருநாடாத் தீ வினையேன் மனத்துறையும்
துளிவார்கட் குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே–திருவாய்மொழி -9-7-5-
திருமாலிருஞ்சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனதுடலே
அரு மா மாயத் தெனதுயிரே மனமே வாக்கே கருமமே
ஒரு மா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வ னொருவனே—திருவாய்மொழி -10-7-8-
எளிதாயினவா றென்று எங்கண்கள் களிப்ப
களிதாகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப் பேரான்
தெளிதாகிய சேண் விசும்பு தருவானே–திருவாய்மொழி -10-8-4-
சூழ் விசும்பணி முகில் தூரியம் முழக்கின
ஆழ் கடலலை திரை கை யெடுத்தாடின
ஏழ் பொழிலும் வளமேந்திய என்னப்பன்
வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டுகந்தே.–திருவாய்மொழி -10-9-1-
நாரணன் தமரைக் கண்டுகந்து நல் நீர் முகில்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடு வரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதன ருலகே—திருவாய்மொழி -10-9-2–
தொழுதன ருலகர்கள் தூப நல் மலர் மழை
பொழி வனர் பூழி யன்றளந்தவன் தமர் முன்னே
எழுமினென்று இரு மருங்கிசைத்தனர் முனிவர்கள்
வழியிது வைகுந்தற்கு என்று வந்தெதிரே–திருவாய்மொழி -10-9-3-
எதிரெதி ரிமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர வரவர் கைந் நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கொத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே–திருவாய்மொழி -10-9-4-
மாதவன் தமரென்று வாசலில் வானவர்
போதுமி னெமதிடம் புகுதுக வென்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–திருவாய்மொழி -10-9-5-
வேள்வியுள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம் புரி கலந்தெங்கு மிசைத்தனர்
ஆண்மிங்கள் வானகம் ஆழியான் தமரென்று
வாளொண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–திருவாய்மொழி -10-9-6-
மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந் தெங்கும் தோத்திரஞ் சொல்லினர் தொடு கடல்
கிடந்த வென் கேசவன் கிளரொளி மணி முடி
குடந்தை யென் கோவலன் குடி யடியார்க்கே–திருவாய்மொழி -10-9-7-
குடி யடியா ரிவர் கோவிந்தன் தனக்கென்று
முடி யுடை வானவர் முறை முறை யெதிர் கொள்ள
கொடி யணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடி வுடை மாதவன் வைகுந்தம் புகவே–திருவாய்மொழி -10-9-8-
வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமதிடம் புகுதென்று
வைகுந்தத் தமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–திருவாய்மொழி -10-9-9-
விதி வகை புகுந்தனரென்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியு நற் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–திருவாய்மொழி -10-9-10-
வந்த வரெதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேரின்பத்து அடியரோ டிருந்தமை
கொந்தலர் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்க ளாயிரத்து இவை வல்லார் முனிவரே—திருவாய்மொழி -10-9-11-
—————-
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் –2-பாசுரங்கள் –
உணர்வாரார் உன் பெருமை? ஊழி தோறூழி
உணர்வாரார் உன்னுருவந் தன்னை? உணர்வாரார்?
விண்ணகத்தாய்! மண்ணகத்தாய்! வேங்கடத்தாய்! நால் வேதப்
பண்ணகத்தாய்! நீ கிடந்த பால்–முதல் திருவந்தாதி – 68
வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத
பூங்கிடங்கின் நீள் கோவல் பொன்னகரும் – நான் கிடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமாம் இடர் –முதல்-திருவந்தாதி – 77
————
ஸ்ரீ பேய் ஆழ்வார் –3-பாசுரங்கள்
சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம்
நேர்ந்த வென் சிந்தை நிறை விசும்பு – வாய்ந்த
மறை பாடக மனந்தன் வண்டுழாய்க் கண்ணி
இறை பாடியாய விவை–மூன்றாம் திருவந்தாதி – 30-
பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூற் கடலும் நுண்ணூல தாமரை மேல் – பாற் பட்
டிருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்தொசித்த கோபாலகன்–மூன்றாம் திருவந்தாதி – 32-
பண்டெல்லாம் வேங்கடம் பாற் கடல் வைகுந்தம்
கொண்டங்குறைவார்க்குக் கோயில் போல் – வண்டு
வளங்கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர்–மூன்றாம் திருவந்தாதி – 61-
விஷ்ணுவின் அடியவர்கட்கு முக்தியில் நாட்டம்கொண்ட முக்தர்கட்கு திவ்யதேசங்களில் ஊறித்திளைத்துப் போன பக்தர்கட்கு திருநாடு மிகவும்
சமீபம். அவனது சாயுஜ்யம் அவர்கட்கு மிகவும் சாமீப்யம். ஆம் இதிலெல்லாம் திளைத்தவர்களை அவனே வந்து தன் திருநாடுக்கு இட்டுச் செல்கிறான்
என்பது ஐதீஹம்.
வைணவ அடியார்கட்கு, அவனன்றி தமக்குப் புகலிடம் யாதுமில என்றெண்ணி அடியவர்கட்கு மோட்சத்தை நல்கும் இந்தப் பரமபதமே
வைணவர்களின் கடைசி இலக்காகும்.
பரமபதத்திலிருந்து தன்னை வ்யூகப்படுத்தி விபவ, அர்ச்சாவதாரங்களில் தன்னைக் காட்டிக்கொடுத்து இவைகளே பரத்தினும் மேலானவை என்று
எண்ணி ஆட்பட்ட அடியவர்களை, பூவுலகில் அவர்களுக்கு விதிக்கப்பட்ட காலம் முடிவுற்றபின் அவனே வந்து அழைத்துச் செல்கிறான்.
மோட்சம் பெறுவதே குறிக்கோள் என்றென்னும் அடியார்கட்கு இந்த பரமபதமே எல்லை நிலமாகும்.
திருநாட்டைப் பற்றிப் புராணங்களாலும் ஆழ்வார் பாசுரங்களாலும் உணரலாம். இராமானுஜர் இயற்றிய வேதாந்த சங்கிரஹம் என்னும் நூல்
திருநாட்டைப் பற்றித் தெளிவாகவும், நேரில் பார்ப்பது போலவும் விளக்கிப் பேசுகிறது. இராமானுஜர் இயற்றிய கத்யத்ரயத்தில் ஒன்றான
வைகுண்டகத்யத்தில் பரமபத வர்ணனை சிறப்பாக இருக்கும், இராமானுஜரின் வரலாற்றைப் பேசும் “ப்ரபந்நாம்ருத தர்ப்பணம்” என்னும் நூலில் பரமபதம்
பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.
“திருவனந்தாழ்வானின் மேல் – தடக்கையனாய் சங்கு சக்ர கதாதாரனாய், காயாம்பூ இதழ்போல் கருத்தவனாய் தாமரை இதழ்போன்ற திருக்கண்களை
உடையவனாய், கோடி மன்மதர்களை ஒத்த அழகு உடையவனாய். உலகை மயக்கும் திருமேனி உடையவனாய், கோடிச்சூர்யப் பிரகாசமுடையவனாய்,
கோமளமான அவயவங்களால் நிற்பவனாய், தோள்வளை, ஹாரம் முன்கைவளை, சதங்கை முதலான திருஆபரணங்களால்
அலங்கரிக்கப்பட்டவனாய், அப்ராக்ருத சந்தனத்தால் பூசப்பெற்ற திருமேனியை உடையவனாய். பீதாம்பரத்தை தரித்தவனாய், நித்யயௌவன முடையவனாய், எப்போதும் ஸ்ரீபூமி, நீளா தேவிகளோடு கூடினவனாய் (ஈஸ்வரர்களுக்கெல்லாம் மேலான) பரமேஸ்வரனாய் நித்தியர்களாலும்
முக்தர்களாலும் சேவிக்கப்படுபவனாய் (அனைவரினும்) பெரியவனாய் ஸர்வவ்வியாபியான பரமபத நாதன் பேரின்பத்துடன் எழுந்தருளியிருக்கிறான்”.
(ப்ரப்பந்நாம்ருத தர்ப்பணம் (23-26)
மூலவர்– பரமபதநாதன், வைகுண்டபதி, தெற்குநோக்கி வீற்றிருந்த திருக்கோலம்.
தாயார்- பெரியபிராட்டியார்
தீர்த்தம்- விரஜா நதி, அயிரமத புஷ்கரிணி
காட்சி கண்டவர்கள்- ஆதிசேடன், கருடன், நித்யசூரிகளும், முக்தர்களும்.
இதற்கு தெளிவிசும்புத் திருநாடு என்று பெயர்.இதற்குமேல் அறிவதற்கு ஒன்றுமில்லையாதலால் இதற்கு எல்லைநிலம்
என்பது பொருள்
இங்கு அடையும் இன்பத்திற்கும் நலத்திற்கும் முடிவே இல்லாததால் நலமந்தமில்லதோர் நாடு என்பதும் இதற்குப் பெயர். இங்கு கிடைக்கும்
இன்பத்திற்கு “அந்தமில் பேரின்பம்” என்று நம்மாழ்வார் பெயர் சூட்டியுள்ளார். அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்தமை என்று தனக்கு
வைகுந்தம் அளிப்பதாக பாடுகிறார். திருப்புளியாழ்வார் அடியிலே இருந்துகொண்டு மற்ற திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்ததுபோல்
வைகுந்தம் சென்றதாகவும் பாடுகிறார்.
வாசுதேவன் வைகும்படியான (வாழும்படியான) இருப்பிடமாதலால் வைகுந்தம் என்றும் பெயருண்டு.
எம்பெருமானின் சகல ரூபங்களுக்கும் ஆதியானதாக, மூலமானதாக, உற்பத்தி ஸ்தானமாய் பரமாய் இருப்பதால் பரமபதம் என்று பெயர்.
திரு நாட்டுத் திருப்பதி -108-
இடருடையேன் சொல்ல எளிதோ பிரமன்
அடரும் விடையோற்கும் அரிதே -தொடரும்
கருவைகும் தம் பிறவிக் கட்டு அறுத்து மீளாத்
திருவைகுந்தம் பெறுவார் சீர் –108-
(இ – ள்.) தொடரும் – (இருவினைப்பயன்காரணமாகத்) தொடர்ந்து வருவதும்,
கரு வைகும் – கர்ப்பத்தினிடத்திற் பிரவேசிப்பதற்குக் காரணமானதுமான,
தம் பிறவி கட்டு – தமது ஜந்மபந்தத்தை,
அறுத்து – (எம்பெரு மானது திருவருளால் அடியோடு) ஒழித்து,
மீளா – (தன்னிடத்துச்சேர்ந்த வர்கள்) திரும்பிவருதலில்லாததாகிய,
திரு வைகுந்தம் – ஸ்ரீவைகுண்ட லோகத்தை,
பெறுவார் – அடையப்பெறுபவர்களது,
சீர் – சிறப்பானது, –
பிரமன் – பிரமதேவனுக்கும்,
அடரும் விடையோற்கும் – போர்செய்யுந்தன்மையுள்ள ருஷபத்தை வாகனமாகவுடைய சிவபெருமானுக்கும்,
அரிது – சொல்லமுடியாதது; (என்றால்), –
இடர் உடையேன் – ஸம்ஸாரத்தில் மிகவும் உழலுகின்ற யான்,
சொல்ல – புகழ்ந்து கூறுதற்கு, எளிதோ – எளியதாகுமோ? (எ – று.)
“முதலாவார் மூவர்” என்றபடி திருமாலோடு சேர்த்து எண்ணப்படு கின்ற பிரமருத்திரராகிற மற்றை
யிருமூர்த்தியராலுமே ஸ்ரீவைகுண்டலோகத்தை யடைந்த முக்தர்களின் பெருமை சொல்லமுடியா தென்றால்,
கேவலம் ஸம்ஸாரத்தில் உழலுகின்ற ஜ்ஞாநஹீநனான என்னால் எவ்வாறு சொல்லப் போகு மென்பதாம்;
இங்குக் கைமுதிகநியாயத்தினால் (கைமுதிகநியாய மாவது – ஓர்எலி தண்டத்தை விழுங்கியதென்றால்
அதிற்கட்டப்பட்டிருந்த அபூபமும் – (பக்ஷணமும்) விழுங்கியமை பெறப்படுவதுபோல்வது.)
பிரமருத்திரர்க்கே திருவைகுந்தம் பெறுவார் சீர் சொல்ல அரிதாயின் என்னால் எவ்வாறு சொல்ல முடியு மெனக் கூறியது –
தொடர்நிலைச் செய்யுட்பொருட் பேறணியாம்.
இது – திருமாலினது ஐவகைநிலையகளுள் பரத்வம் விளங்குந் தானம்.
“பரத்வமாவது – அகால கால்யமான நலமந்தமில்லதோர்நாட்டிலே நித்ய முக்தர்க்குப் போக்யனாய்க்
கொண்டு எழுந்தருளியிருக்கும் இருப்பு.” இதுவே – பரமபதமெனவும், நித்தியவிபூதி யெனவும்படும்.
————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply