மூலவர் -ஹரசாப விமோசனப் பெருமாள் -நின்ற திருக் கோலம் –கிழக்கு திரு முக மண்டலம் –
உத்சவர் -கமல நாதன்
தாயார் -கமல வல்லி
விமானம் -கமலாக்ருதி விமானம்
தீர்த்தம் -பத்ம தீர்த்தம் -குடமுருட்டி நதி -கபால மோக்ஷ புஷ்கரிணி
மங்களா சாசனம் -திரு மங்கை ஆழ்வார் -மண்டினார்க்கு உய்யல் அல்லால் மற்று யாருக்கு உய்யலாகுமே
பரமசிவன் தன்னுடைய சாபம் இங்கு நீங்கப் பெற்றார் -நீல கண்டன் சாபத்தைப் போக்கிய படியால் கண்டியூர் -என்று அழைக்கப் படுகிறது –
இந்த ஷேத்ரத்தில் -கமல நாதன் –கமல வல்லித் தாயார் –கமல புஷ்கரிணி –கமலாக்ருதி விமானம் –
-கமல தீர்த்தம் -இருக்கிற படியால் இதனைப் பஞ்ச கமல க்ஷேத்ரம் என்றும் அழைப்பார்கள் –
தஞ்சை திருவையூறு சாலையில் -தஞ்சையில் இருந்து 10 கிமி தூரம் –
பலி நாத பெருமாள் –மஹா பலி வணங்கிய பெருமாள் -நரஸிம்ஹர் / சுதர்சனர் -சேவை பிரசித்தம்
மூலவர் ஸ்ரீ ஹர சாப விமோசன பெருமாள்
கோலம் நின்ற
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ கமல நாதன்
தாயார் ஸ்ரீ கமல வல்லி நாச்சியார்
தீர்த்தம் கபால மோக்ஷ புஷ்கரணி
விமானம் கமலாக்ருதி விமானம்
மண்டலம் சோழநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் கும்பகோணம்
நாமாவளி ஸ்ரீ கமலவல்லீ ஸமேத ஸ்ரீ அரன்சாபந்தீர்த்த ஸ்வாமிநே நமஹ
—————
பிண்டியார் மண்டை யேந்திப் பிறர் மனை திரி தந்துண்ணும்
முண்டியான் * சாபம் தீர்த்த ஒருவனூர் * உலகமேத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லையென்று
மண்டினார் * உய்யலல்லால் மற்றையார்க்கு உய்யலாமே? திருக்குறுந்தாண்டகம் – 19-
திருக்கரம்பனூர் என்னும் உத்தமர் கோவிலில், மஹாவிஷ்ணு கேட்டுக் கொண்டதற்கிணங்க
மஹாலெட்சுமி (பூர்ணவல்லி தாயார்) பிரம்ம கபாலத்தில் பிச்சையிட்டதும் அது நிறைந்து சிவனின் பசித்துயர் ஓய்ந்தது.
பாத்திரம் (கபாலம்) நிறைந்து பசித்துயர் ஓய்ந்தபோதும் மண்டையோடு மட்டும் கையைவிட்டு நீங்காமலிருக்கவே
அவ்விடத்திலிருந்தே திருமாலை நினைத்து சிவன் வழிபட, அப்போது திருமால் சிவபெருமானைக் கண்டியூர் வந்து
பத்ம தீர்த்தத்தில் நீராடி அங்கே எழுந்தருளியுள்ள கமலவல்லி நாச்சியாரையும், என்னையும் வழி பட்டால் கபாலம் கையைவிட்டு அகலும் என்று சொல்ல, அவ்வண்ணமே கண்டியூர் வந்து தீர்த்தத்தில் நீராடி எழுந்ததும் கபாலம் அகன்றது.
இவ்வாறு அரன் சாபம் தீர்த்ததால் ஹரசாப விமோசனப் பெருமாள் என்றே இங்கு திருமாலுக்கும் பெயர் உண்டாயிற்றென்பது வரலாறு.
சில நாட்கள் இங்குள்ள கபால தீர்த்தத்தில் சிவன் நீராடியதால் கபாலம் நீங்கியதாகவும், சற்றே மாறுபட்ட தொனியிலும் இக்கதை பேசப்படுகிறது.
சிவனுக்கு கண்டீச்சுவரர் என்று ஒரு பெயர் இருப்பதால் அவர் சாபந்தீர்ந்த நினைவாக கண்டியூர் என்றே இத்தலம் அழைக்கப்படுகிறது.
மூலவர்–ஹர சாப விமோசனப் பெருமாள்–. நின்ற திருக்கோலம்.- கிழக்கே திருமுக மண்டலம்- கமல நாதன் என்ற திருப்பெயரும் உண்டு.
உற்சவர்- உற்சவருக்கும் இரண்டு திருநாமங்கள் பிரதானம்.
தாயார்.– கமலவல்லி நாச்சியார்
விமானம்– கமலாக்ருதி விமானம்
தீர்த்தம்1. கோவிலுக்குச் சற்று மேற்கே இருக்கும் கபால மோட்ச புஷ்கரிணி.
2. கோவிலுக்கு எதிரில் இருக்கும் ஹத்யா விமோசன தீர்த்தம் என்ற பத்ம தீர்த்தம். இதற்கு பலி தீர்த்தம் எனவும் பெயர்.
காட்சி கண்டவர்கள் 1. சிவபெருமான். 2. அகத்தியர்
சிவன் தனது கையில் ஒட்டிக்கொண்ட பிரம்ம கபாலம் நீங்கியதற்கு திருமாலுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக
தானும் இவ்விடத்தே கோவில் கொண்டார். எனவே இது ஒரு மும்மூர்த்தி தலம்.
தற்போது இங்குள்ள பிரம்மாவின் கோவில் மூடப்பட்டு
பிரம்மா மற்றும் ஸரஸ்வதிசிலைகள் சிவபெருமானின் தலத்தில் வைக்கப்பட்டுள்ளன.
கண்டன ஷேத்ரமென்றும், பஞ்சகமல ஷேத்ரமென்றும்
அழைக்கப்படும் இங்கு ஐந்து கமலங்கள் உள்ளன. அதாவது
கமலா ஷேத்ரம்,
கமலா புஷ்கரணி,
கமல விமானம்,
கமலநாதன்,
கமலவல்லி நாச்சியார் என ஐந்து.
இத்தலம் ஸ்ரீரங்கத்தைவிட மிகவும் தொன்மைவாய்ந்தது. இத்தலத்தின் முதல் பெருமாள் ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ணனும், நவநீத கிருஷ்ணனும் ஆவார்கள்.
பல சதுர்யுகங்களுக்கு முன்னால் உண்டானது இந்த திவ்ய ஷேத்ரம்.
ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கினி என்ற நூலை எழுதிய ஸ்ரீ நாராயண தீர்த்தர் என்னும் மஹான் கண்டியூருக்கு அருகில் உள்ள திருப்பூந்துருத்தியைச் சார்ந்தவர்.
கண்டியூர் பெருமான் மீது அளவு கடந்த பக்தி பூண்டவர்.
நினைத்த காரியத்தை நிறைவேற்றச் செய்யும் வரப்பிரசாத வடிவமான, ஸ்ரீ லட்சுமி நரசிம்மன், ஸ்ரீ மகா சுதர்சனன், சிலைகள் அழகிலும், அருளிலும் பொலிவுற்று திகழ்பவை.
பேசவரின் தென்னரங்கன் பேரெல்லாம் பேசுக வாய், கேசவனைக் காண்க விழி, கேட்க செவி – ஈசனார்
உண்டியூர் தோறுமுழன் றிரவாமல் தவிர்த்தான்.
கண்டியூர் கூப்புக என்கை – என்று நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி புகலும்.
திருமங்கையாழ்வார் மட்டும் மங்களாசாசனம். ஒரே ஒரு பாடலில் இத் தலத்துப் பெருமை பற்றிக் கூறுகிறார். இத்தலத்தோடு சேர்ந்து ஸ்ரீரங்கம், கச்சி (காஞ்சி) பேர் (திருப்பேர் நகர் என்னும் கோயிலடி) மல்லை என்னும்
திருக்கடன் மல்லை என்னும் நான்கு ஸ்தலங்களையுஞ் சேர்த்து மங்களாசாசனம் செய்கிறார்.
சேக்கிழாரின் பெரியபுராணமும், கந்தபுராணமும் பிரம்மனின் மண்டையோடு சிவபெருமானின் கையில் ஒட்டிக்கொண்டதைப் பற்றிப் பேசுகின்றன.
மைசூர் மன்னன் திப்புசுல்தான் ஒரு சமயம் இக்கோவிலின் முகப்பில் நின்று சண்டையிட வேண்டிய சந்தர்ப்பம் உண்டாக
அப்போது இப்பெருமான் திப்பு சுல்தானை ஆட்கொண்டார் எனவும்.
இப் பெருமான் மீது பக்தி கொண்ட திப்பு, கோவிலை வலம் வந்து போர் முடித்து வென்றார் என்பதும்
கர்ண பரம்பரையான பழங்கால வாய்வழிக் கதையாகும்.
பேசவரின் தென் அரங்கன் பேர் எல்லாம் பேசுக வாய்
கேசவனைக் காண்க விழி கேட்க செவி ஈசனார்
உண்டி ஊர் தோறும் உழன்று இரவாமல் தவிர்த்தான்
கண்டியூர் கூப்புக என்கை –15-
வாய் -எனது வாயானது -பேசவரின்-பேசத் தொடங்கினால் – தென் அரங்கன் பேர் எல்லாம் பேசுக
கேசவனைக் காண்க விழி- கேட்க செவி-
ஈசனார் -சிவ பெருமானை ஊர் தோறும் உழன்று-உண்டி- இரவாமல்-யாசிக்க ஒட்டாமல் -தவிர்த்தான் -அவன் சாபத்தை நீக்கி அருளிய
கண்டியூர் கூப்புக என்கை –திருக் கண்டியூர் திவ்ய தேசத்தை நோக்கி என் கை குவித்து அஞ்சலி செய்யட்டும் –
வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம் தாழ்த்து வணங்கு மின்கள் தண் மலரால்
சூழ்த்த துழாய் மன்னு நீண் முடி என் தொல்லை மால் தன்னை –கை கூப்பி மதித்து -திருமழிசைப்பிரான்
அரன் சாபம் தீர்த்த பெருமாள் -பிண்டியார் மண்டை ஏந்தி -பிறர் மனை திரி தந்து உண்ணும் உண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர் உலகம் ஏத்தும் கண்டியூர்
சிவபிரான் சாபம் கண்டனம் செய்ததால் திருக் கண்டியூர் -திரு நாமம் –
————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply