ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ கோவிலடி என்னும் ஸ்ரீ திருப்பேர் நகர்

அப்பக்குடத்தான் -புஜங்க சயனம் -மேற்கே திரு முக மண்டலம்
தாயார் -இந்திரா தேவி –கமலவல்லி
விமானம் -இந்த்ர விமானம்
தீர்த்தம் -இந்த்ர தீர்த்தம்
மங்களா சாசனம் -திரு மழிசை ஆழ்வார் /நம்மாழ்வார் / பெரியாழ்வார் /திருமங்கை ஆழ்வார்

துர்வாசர் சாபத்திற்கு ஆளான உபமன்யு அரசர் இங்கு வந்து அதை போக்கிக் கொள்ள தினமும் ததீயாராதனம் செய்து வந்தார் –
ஒரு நாள் பகவான் தானே வந்து அனைவரின் பிரசாதத்தை உண்டும் பசி ஆறாமல் அப்பத்தைக் கேட்டு வாங்கி அந்த குடத்துடன் சயனித்து விட்டார் –
அரசனும் சாபம் நீங்கப் பெற்றார் -அன்றிலிருந்து தினமும் மாலை வேளையில் பெருமாளுக்கு அப்பம் அமுது செய்யப் படுகிறது
-நம்மாழ்வார் கடையாக பதிகம் அருளிச் செய்த திருத் தலம் –
திருச்சியில் இருந்து 20 கி மி தூரம் /கல்லணையில் இருந்து 7 கி மி தூரம் –
சாபம் கொடுக்க கொடுக்க துர்வாசர் தப வலிமை அதிகம் ஆகுமே
ஸ்வாமித்வம் -வெளிப்படுத்தி அருளினார் – பேரேன் என்று திரு உள்ளம் நிறைந்து அருளும் பெருமாள்
பிடித்தேன் -பிணி சாரேன் பிறவித துயர் எழுந்தேன் -உன பாதம் உகந்து பெற்றேன்
ஆதி ரெங்கம் -ஸ்ரீ ரெங்க பட்டணம் -அப்பால ரெங்கன் -ஸ்ரீ ரெங்கன் –பரிமள ரெங்கன் –

நாமாவளி ஸ்ரீ கமலவல்லீ (இந்திராதேவி) ஸமேத அப்பக்குடத்தான் ஸ்வாமிநே நமஹ

———–

ஸ்ரீ பெரியாழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -19-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ நம் ஆழ்வார் -11-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திருமழிசைப் பிரான் -1-பாசுரம்
மொத்தம் -33-பாசுரங்கள் மங்களாசாசனம்

——-

ஸ்ரீ பெரியாழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்

கொங்குங் குடந்தையும் கோட்டியூரும் பேரும் எங்கும் திரிந்து விளையாடும் என் மகன்–2-6-2-
தெண் திரை சூழ் திருப்பேர்க் கிடந்த திரு நாரணா! இங்கே போதராயே –2-9-4-

——-

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -19-பாசுரங்கள் மங்களாசாசனம்

செய்யலர் கமலம் ஓங்கு செறி பொழில் தென் திருப் பேர் பையரவணையான் நாமம் பரவி நான் உய்ந்தவாறே-5-9-1-
செறி பொழில் தென் திருப்பேர் எங்கள் மால் இறைவன் நாமம் ஏத்தி நான் உய்ந்தவாறே -5-9-2-
பெருவரை மதிள்கள் சூழ்ந்த பெரு நகர ரவணை மேல் கருவரை வண்ணன் தன் பேர் கருதி நான் உய்ந்தவாறே -5-9-3-
செறி வயல் தென் திருப் பேர் வானவர் தலைவன் நாமம் வாழ்த்தி நான் உய்ந்தவாறே –5-9-4-
நக்கரி யுருவமாகி நகம் கிளர்ந்து இடந்து உகந்த சக்கரச் செல்வன் தென் பேர்த் தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே-5-9-5-
நலங்கொள் நான்மறை வல்லார்கள் ஓத்தொலி யேத்தக் கேட்டு மலங்கு பாய் வயல் திருப்பேர் மருவி நான் வாழ்ந்த வாறே–5-9-6-
திண்ண மா மதிள்கள் சூழ்ந்த தென் திருப் பேருள் வேலை வண்ணனார் நாமம் நாளும் வாய் மொழிந்து உய்ந்தவாறே –5-9-7-
செம்பொனார் மதிள்கள் சூழ்ந்த தென் திருப்பேருள் மேவும் எம்பிரான் நாமம் நாளும் ஏத்தி நான் உய்ந்தவாறே–5-9-8-
சேலுகள் வயல் திருப்பேர் செங்கண் மாலொடும் வாழ்வார் சீல மா தவத்தர் சிந்தையாளி யென் சிந்தையானே–5-9-9-
வண்டறை பொழில் திருப்பேர் வரிவரவு அணையில் பள்ளி கொண்டு உறைகின்ற மாலை–5-9-10-

——–

ஸ்ரீ நம் ஆழ்வார் -19-பாசுரங்கள் மங்களாசாசனம்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால் திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே—10-8-1-
பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்-10-8-2-
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான் அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே–10-8-3-
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப் பேரான் தெளிது ஆகிய சேண் விசிம்பு தருவானே–10-8-4-
வானே தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான் தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே–10-8-5-
திருப் பேர் நகரான் திருமால் இரும் சோலைப் பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே –10-8-6–
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான் கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே–10-8-7-
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான் திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8-
இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான் அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான் ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே–10-8-9-
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10-
நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல் நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன் சொல்லார் தமிழ்-10-8-11-

————–

ஸ்ரீ திருமழிசைப் பிரான் -1-பாசுரம்

நாகத்தணைக் குடந்தை வெஃகா திருவெவ்வுள் நாகத்தணை யரங்கம் பேரன்பில் * – நாகத்தணைப் பாற் கடல்
கிடக்கும் ஆதி நெடு மால் அணைப்பார் கருத்தனாவான். –நான்முகன் திருவந்தாதி – 36

————

ஸ்ரீ பெரியாழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்-

கொங்குங் குடந்தையும் கோட்டியூரும் பேரும் *
எங்கும் திரிந்து விளையாடும் என் மகன் *
சங்கம் பிடிக்கும் தடக்கைக்குத் தக்க * நல்
அங்கமுடையதோர் கோல் கொண்டு வா
அரக்கு வழித்ததோர் கோல் கொண்டு வா. –பெரியாழ்வார் திருமொழி -2-6-2-

கொண்டல் வண்ணா! இங்கே போதராயே
கோயிற் பிள்ளாய்! இங்கே போதராயே *
தெண் திரை சூழ் திருப்பேர்க் கிடந்த
திரு நாரணா! இங்கே போதராயே *
உண்டு வந்தேன் அம்மமென்று சொல்லி
ஓடி அகம் புக ஆய்ச்சி தானும் *
கண்டெதிரே சென்றெடுத்துக் கொள்ளக்
கண்ண பிரான் கற்ற கல்வி தானே. –பெரியாழ்வார் திருமொழி -2-9-4-

——–

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -19-பாசுரங்கள் மங்களாசாசனம் –

கையிலங்கு ஆழி சங்கன் கருமுகில் திரு நிறத்தன்
பொய்யிலன் மெய்யன் தன் தாள் அடைவரேல் அடிமையாக்கும்
செய்யலர் கமலம் ஓங்கு செறி பொழில் தென் திருப் பேர்
பையரவணையான் நாமம் பரவி நான் உய்ந்தவாறே-5-9-1-

வங்கமார் கடல்கள் ஏழும் மலையும் வானகமும் மற்றும்
அங்கண் மா ஞாலம் எல்லாம் அமுது செய்து உமிழ்ந்த வெந்தை
திங்கள் மா முகிலணவு செறி பொழில் தென் திருப்பேர்
எங்கள் மால் இறைவன் நாமம் ஏத்தி நான் உய்ந்தவாறே -5-9-2-

ஒருவனை யுந்திப் பூ மேல் ஓங்குவித் தாகம் தன்னால்
ஒருவனைச் சாபம் நீக்கி உம்பராள் என்று விட்டான்
பெருவரை மதிள்கள் சூழ்ந்த பெரு நகர ரவணை மேல்
கருவரை வண்ணன் தன் பேர் கருதி நான் உய்ந்தவாறே -5-9-3-

ஊனமர் தலை யொன்று ஏந்தி உலகெலாம் திரியும் ஈசன்
ஈனமர் சாபம் நீக்காய் என்ன ஒண் புனலை யீந்தான்
தேனமர் பொழில்கள் சூழ்ந்த செறி வயல் தென் திருப் பேர்
வானவர் தலைவன் நாமம் வாழ்த்தி நான் உய்ந்தவாறே –5-9-4-

வக்கரன் வாய் முன் கீண்ட மாயனே என்று வானோர்
புக்கு அரண் தந்து அருளாய் என்னப் பொன்னாகத் தானை
நக்கரி யுருவமாகி நகம் கிளர்ந்து இடந்து உகந்த
சக்கரச் செல்வன் தென் பேர்த் தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே –5-9-5-

விலங்கலால் கடலடைத்து விளங்கு இழை பொருட்டு வில்லாக்
இலங்கை மா நகர்க்கு இறைவன் இருவது புய்ம் துணிந்தான்
நலங்கொள் நான்மறை வல்லார்கள் ஓத்தொலி யேத்தக் கேட்டு
மலங்கு பாய் வயல் திருப்பேர் மருவி நான் வாழ்ந்த வாறே–5-9-6-

வெண்ணெய் தான் அமுது செய்ய வெகுண்டு மத்தாய்ச்சி ஓச்சிக்
கண்ணியார் குருங்கயிற்றால் கட்ட வெட்டென்று இருந்தான்
திண்ண மா மதிள்கள் சூழ்ந்த தென் திருப் பேருள் வேலை
வண்ணனார் நாமம் நாளும் வாய் மொழிந்து உய்ந்தவாறே –5-9-7-

அம் பொனார் உலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி தன்னுள்
கொம்பனார் பின்னை கோலம் கூடுதற்கு ஏறு கொன்றான்
செம்பொனார் மதிள்கள் சூழ்ந்த தென் திருப்பேருள் மேவும்
எம்பிரான் நாமம் நாளும் ஏத்தி நான் உய்ந்தவாறே–5-9-8-

நால் வகைவேதம் ஐந்து வேள்வி யாறங்கம் வல்லார்
மேலை வானவரில் மிக்க வேதியர் ஆதி காலம்
சேலுகள் வயல் திருப்பேர் செங்கண் மாலொடும் வாழ்வார்
சீல மா தவத்தர் சிந்தையாளி யென் சிந்தையானே–5-9-9-

வண்டறை பொழில் திருப்பேர் வரிவரவு அணையில் பள்ளி
கொண்டு உறைகின்ற மாலைக் கொடி மதிள் மாட மங்கை
திண் திறல் தோள் கலியன் செஞ்சொலால் மொழிந்த மாலை
கொண்டிவை பாடி யாடக் கூடுவர் நீள் விசும்பே-5-9-10-

துளக்கமில் சுடரை அவுணன் உடல்
பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப் போய்
அளப்பில் ஆரமுதை அமரர்க்கு அருள்
விளக்கினைச் சென்று வெள்ளறை காண்டுமே–10-1-4-

பெற்றம் ஆளியைப் பேரில் மணாளனைக்
கற்ற நூல் கலிகன்றி யுரை செய்த
சொல் திறமிவை சொல்லிய தொண்டர்க்கு
அற்றமில்லை அண்டம் அவர்க்கு ஆட்சியே –10-1-10–

பேசினார் பிறவி நீத்தார் பேருளான் பெருமை பேசி *
ஏசினார் உய்ந்து போனார் என்பது இவ்வுலகின் வண்ணம் *
பேசினேன் ஏச மாட்டேன் பேதையேன் பிறவி நீத்தற்கு *
ஆசையோ பெரிது கொள்க அலை கடல் வண்ணர் பாலே. –திருக்குறுந்தாண்டகம் – 17

பிண்டியார் மண்டை யேந்திப் பிறர் மனை திரி தந்துண்ணும்
முண்டியான் * சாபம் தீர்த்த ஒருவனூர் * உலகமேத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லையென்று
மண்டினார் * உய்யலல்லால் மற்றையார்க்கு உய்யலாமே? திருக்குறுந்தாண்டகம் – 19

நீரகத்தாய் நெடுவரையி னுச்சி மேலாய்! நிலாத் திங்கள் துண்டகத்தாய்! நிறைந்த கச்சி
ஊரகத்தாய்! * ஒண் துரை நீர் வெஃகா வுள்ளாய் உள்ளுவாருள்ளத்தாய்! * உலகமேத்தும்
காரகத்தாய்! கார் வானத்துள்ளாய்! கள்வா! காமரு பூங்காவிரியின் தென் பால் மன்னு
பேரகத்தாய்! * பேராது என் நெஞ்சினுள்ளாய்! பெருமான் உன் திருவடியே பேணினேனே.– திருநெடுந்தாண்டகம் – 8

வங்கத்தால் மா மணி வந்துந்து முந்நீர் மல்லையாய்! மதிள் கச்சி யூராய்! பேராய்! *
கொங்கத்தார் வளங்கொன்றை யலங்கல் மார்வன் குலவரையன் மடப்பாவை இடப்பால் கொண்டான்
பங்கத்தாய்! * பாற்கடலாய்! பாரின்மேலாய்! பனிவரையி னுச்சியாய்! பவள வண்ணா! *
எங்குற்றாய்? எம்பெருமான்! உன்னை நாடி ஏழையேன் இங்ஙனமே உழிதருகேனே.–திருநெடுந்தாண்டகம் – 9

முற்றாராவன முலையாள் பாவை மாயன் மொய்யகலத் துள்ளிருப்பாள் அஃதும் கண்டு
அற்றாள் தன் நிறையழிந்தாள் ஆவிக்கின்றாள் அணி யரங்க மாடுதுமோ? தோழீ! என்னும் *
பெற்றேன் வாய்ச் சொல் இறையும் பேசக் கேளாள் பேர்ப் பாடித் தண் குடந்தை நகரும் பாடி *
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் பொரு வற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே.—திருநெடுந்தாண்டகம் – 19

மதிட்கச்சி யூரகமே பேரகமே பேரா மருதிறுத்தான் வெள்ளறையே வெஃகாவே சிறிய திருமடல் – 70

மன்னு மரங்கத்து எம்மா மணியை * – வல்லவாழ் பின்னை மணாளனைப் பேரில் பிறப்பிலியை * பெரிய திருமடல் – 118

———–

ஸ்ரீ நம் ஆழ்வார் -11-பாசுரங்கள் மங்களாசாசனம்

திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே—10-8-1-

பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே–10-8-2-

பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே–10-8-3-

எளிது ஆயினவாறு என்று என் கண்கள் களிப்பக்
களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப் பேரான்
தெளிது ஆகிய சேண் விசிம்பு தருவானே–10-8-4-

வானே தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே–10-8-5-

திருப் பேர் நகரான் திருமால் இரும் சோலைப்
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே –10-8-6–

உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே–10-8-7-

கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8-

இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே–10-8-9-

உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10-

நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள் வது சூழ் பொன் விசும்பே–10-8-11-

————-

ஸ்ரீ திருமழிசைப் பிரான் -1-பாசுரம்

நாகத்தணைக் குடந்தை வெஃகா திருவெவ்வுள் *
நாகத்தணை யரங்கம் பேரன்பில் * – நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடு மால் *
அணைப்பார் கருத்தனாவான். –நான்முகன் திருவந்தாதி – 36-

இத்தலம் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
புராணம் இதனை பலசவனச் ஷேத்திரம் என்று பகர்கிறது. தமிழில் புரசாங்காடு என்பதையே வட வானர் பலசவனம் என்று எடுத்தாண்டுள்ளனர்.
இவ்விடத்து புரசஞ் செடிகள் இன்றும் அளவு கடந்து பல்கிக் கிளைத்து சூழ்ந்து வளர்ந்தோங்கிய காட்சியைக் காணலாம்.

உபமன்யு என்னும் மன்னன் துர்வாச முனிவரின் சாபத்தால் தன்பலமிழந்து போக அதற்கு விமோசனம் வேண்ட
இப்பலசவனம் ஷேத்திரத்தில் லட்சம்பேருக்கு அன்னதானம் அளித்தால் (ததி ஆராதனம்) சாபந்தீரும்
என்று துர்வாசர் தெரிவிக்க இத்தலத்தின் அருகில் ஒரு அரண்மனையெழுப்பி அன்னதானம் செய்யலானார்.

நீண்டகாலமாக அன்னதானம் தொடர்ந்து நடந்து வருகையில் ஒருநாள் ஸ்ரீமந்நாராயணனே
கிழப்பிராமண வேடங்கொண்டு இங்கு வந்து அன்னம் கேட்க அவருக்கும் பரிமாறப்பட்டது.
ஸ்ரீமந்நாராயணன் அன்றைய தினம் தயாரிக்கப்பட்ட உணவு முழுவதையும் உண்டு தீர்க்க
“இதென்ன காரியம்” என்று வியந்த மன்னன் இன்னும் என்ன வேண்டுமென்று கேட்க எனக்கு
ஒரு குடம் அப்பம் வேண்டுமென்று பெருமாள் சொல்ல அப்பம் செய்து கொண்டுவரப்பட்டது.
அந்த அப்பக் குடத்தை பெருமாள் வாங்கியவுடன் உபமன்யு சாபம் தீர்ந்ததென வரலாறு.
இதனால் இப்பெருமானுக்கு “அப்பக்குடத்தான்” என்னும் பெயருண்டாயிற்று.
இப்பெருமானின் வலது கை ஒரு அப்பக் குடத்தை அணைத்தவண்ணம் உள்ளது.
ததி பாண்டனுடன் த்தி பாண்டமும் முக்தி பெற்றதை நேராகவே இங்கு காணலாம் –

மூலவர்–அப்பக்குடத்தான், அப்பால ரெங்கநாதன் புஜங்க சயனம்.
தாயார்–1. இந்திரா தேவி 2. கமலவல்லி
தீர்த்தம்–இந்திர தீர்த்தம்
விமானம்–இந்திர விமானம்
காட்சி கண்டவர்கள்– உபமன்யு, பராசரர்

இத்தலம் மிகவும் தொன்மை வாய்ந்ததென்றும், ஸ்ரீரெங்கத்திற்கு முன்னதாக ஏற்பட்டதென்றும் அதனால் தான் கோயிலடி
அதாவது ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ஆதியாக அடியெடுத்துக் கொடுத்த ஸ்தலமென்பதால் கோவிலடி என பெயர் பெற்றதாக கர்ண பரம்பரை.

அப்பாலரங்கம் ஸ்ரீரங்கத்தைவிட முன்னானது என்னும் கருத்தை ஒப்பலாம்.

பஞ்ச ரங்கம் என்று சொல்லக்கூடிய ஐந்து அரங்கங்களில் இதுவும் ஒன்று.

1. ஆதிரங்கம் – ஸ்ரீரெங்கப்பட்டினம் (மைசூர்)
2. அப்பால ரெங்கம் – திருப்பேர் நகர்
3. மத்தியரங்கம் – ஸ்ரீரெங்கம்
4. சதுர்த்தரங்கம் – கும்பகோணம்
5. பஞ்சரங்கம் – இந்தளூர் (மாயவரம்)

நம்மாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார்,
பெரியாழ்வார் ஆகிய நான்கு ஆழ்வார்களால் 33 பாக்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம்.

நம்மாழ்வார் இப்பெருமானைப் பாடிவிட்டுத்தான் மோட்சத்திற்குச் சென்றார். நம்மாழ்வாரால் கடைசியாக மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம் இது தான்.
பேரேயுறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேனேன்று என்னெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடலேழ் மலையேழ்லுல குண்டும்
ஆராவயிற்றானை அடங்கப் பிடித்தேனே -திருவாய்மொழி 10-8-2
அதனால்தான் பெருமானுக்குள் “அடங்கப் பிடித்தேன்” என்றார் போலும்.

பேர் நகரில் வணங்கிப் போன பின்பும் அப்பக்குடத்தான் திருமங்கை மன்னனை விடாது பின் தொடர்கிறார்
தம்மை விட்டு நீங்காத அந்த அர்ச்சாவதார சோதியை திருவெள்ளறை சென்று கண்டேன் என்று மீண்டும்
மங்களாசாசனம் செய்கிறார்.

துளக்கமில் சுடரை, அவுணணுடல்
பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப் போய்
அளப்பி லாரமு தையம ரர்க்கருள்
விளக்கினை, சென்று வெள்ளறைக் காண்டுமே.

போம்மானை எய்து பொரும் ஆனைக் கொம்பு பறித்து
ஆம் ஆனை மேய்த்து உவந்த அம்மானை தாமச்
செழும் திருப் பேரானை சிறு காலே சிந்தித்து
எழுந்து இருப்பேற்கு உண்டோ இடர் -8-

போம்மானை எய்து -மாயமானை அம்பு கொடு எய்தும்
பொரும் ஆனைக் கொம்பு பறித்து -குவலயாபீடம் யானையின் தந்தங்களை பிடுங்கியும்
ஆம் ஆனை மேய்த்து -மந்தையாகத் திரண்ட பசுக்களை மேய்த்தும்
உவந்த அம்மானை
தாமச் செழும் திருப் பேரானை -செழும் திருப் பேரான் தாமத்தானை – –
சிறு காலே சிந்தித்து எழுந்து இருப்பேற்கு உண்டோ இடர் –

போமானை பெருமானை ஆமானை அம்மானை -சொல் நயம் –

——————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading