ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள் -ஸ்ரீ திரு அன்பில்– 

மூலவர் ஸ்ரீ வடிவழகிய நம்பி
கோலம் சயனம்
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ சுந்தரராஜன்
தாயார் ஸ்ரீ அழகியவல்லி நாச்சியார்
தீர்த்தம் மண்டூக புஷ்கரணி
விமானம் தாரக விமானம்
மண்டலம் சோழநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் திருச்சி
நாமாவளி ஸ்ரீ அழகியவல்லீ ஸமேத திருவடிவழகியநம்பி ஸ்வாமிநே நமஹ

நாகத்தணைக் குடந்தை வெஃகா திருவெவ்வுள் *
நாகத்தணை யரங்கம் பேரன்பில் * – நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால் *
அணைப்பார் கருத்தனாவான்–
நான்முகன் திருவந்தாதி – 36-

மூலவர் -வடிவு அழகிய நம்பி -புஜங்க சயனம் -கிழக்கே திருமுக மண்டலம்
உத்சவர் -ஸ்ரீ ஸூ ந்தர ராஜன்
தாயார் -ஸ்ரீ அழகிய வல்லி நாச்சியார்
விமானம் -தாரக விமானம்
தீர்த்தம் -மண்டூக புஷ்கரிணி
மங்களாசானம் -திரு மழிசை ஆழ்வார்

மண்டூக மஹர்ஷி இங்கு இருக்கும் தீர்த்தத்தில் நீராடி சாபத்தில் இருந்து விடுதலை பெற்றார் –
இவர் பெயரிலே புஷ்கரிணி –
இங்கு தாயார் நின்ற நிலையிலும் -ஆண்டாள் அமர்ந்த திருக் கோலத்திலும் சேவை சாதிப்பது சிறப்பு –
லால்குடிக்கு கிழக்கே 8 கி மி தொலைவில் உள்ள தேசம் –
அப்பக்குடத்தான் சந்நிதியில் இருந்து கொள்ளிடம் கடந்தும் செல்லலாம் –

அன்பை இல்லமாக கொண்டவர் -அன்பே இருப்பிடம் -என்றவாறு
மாசி பவ் ரணமி -கொள்ளிடக் கரைக்கு எழுந்து அருளுவார் –நம் பெருமாளும் எழுந்து அருளுவார் –
அநிருத்த மூர்த்தி இவர் என்பர் -ரஷிக்கும் பொழுது பேர் அழகன் –
மண்டூக -ஜலத்துக்கு உள்ளே இருந்து தபஸ் -துர்வாசர் சாபத்தால் மண்டூகம் ஆனார் –
சிவன் ப்ரம்மா ஊர்வசி மூவருக்கும் ப்ரத்யக்ஷம் –
சம்சாரம் தூண்டுவிக்கும் விமானம் -அதனால் தாரக விமானம் –

ஸ்ரீரங்கத்திற்கு அருகாமையிலேயே அமைந்துள்ளது.
டோல்கேட்டில் இருந்தும், திருச்சியிலிருந்தும், லால்குடியிலிருந்தும் செல்லலாம்.
திருப்பேர் நகர் என்று அழைக்கப்படும் (அப்பக் குடத்தான்)
சன்னிதியிலிருந்து கொள்ளிட நதிக் கரையை கடந்து நடந்தே வந்தால் சுமார் 2 கி.மீ. தூரம் தான் ஆகும்.

புராண நூல்கள் இத்தலத்தைப் பிரம்மபுரி என்று குறிப்பிடுகின்றன.

பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்பட்டு, பிரம்மாவின் கபாலம் (மண்டை ஓடு) சிவபெருமானின் கையில் ஒட்டிக் கொண்டது.
அத்துடன் பல ஸ்தலங்களை தரிசித்து கொண்டு வந்த சிவன் கரம்பனூர் என்னும் உத்தமர் கோவிலுக்கு வந்த
அங்கு மஹா லட்சுமி இட்ட பிச்சையால் கபாலம் நிறையப் பெற்ற பின் கண்டியூர் செல்லும் வழியில் சிவபெருமான்
இத்தலத்தையும் வந்து வழிபட்டு சென்றார். இவ்வரலாறு கந்த புராணத்திலும் கூறப்பட்டுள்ளது.
சிவபெருமான் இத்தலத்திற்கு வந்து சென்ற வரலாறு பல நூல்களில் இல்லாவிட்டாலும் இங்கு கர்ண பரம்பரையாக வழங்கி வரும் செய்தியாகும்.

இத்தலத்தோடு தொடர்பு கொண்ட பலபுராணங்களிலும் பேசப்படும் வரலாறு ஒன்று உண்டு.
ஒருரிஷியானவர் தண்ணீருக்குள் மூழ்கி தவஞ் செய்வதில் பெருஞ் சக்தி பெற்று விளங்கினார். இதனால் அவர் மண்டுக மஹரிஷியென்றே அழைக்கப்பட்டார்.-இவர் ஒரு சமயம் தவத்தில் ஈடுபட்டிருக்கும் போது இவரைக் காண வந்த துர்வாச முனிவர் வெகுநேரம் காத்திருந்தார்.
ஆனால் மண்டுக மஹரிஷியோ தவத்திலிருந்து மீளவில்லை. இதனால் தன்னை அலட்சியப் படுத்துவதாகக் கருதிய
துர்வாசர் சினந்து இம்முனிவரை மண்டூகமாகவே (தவளையாக) போகுமாறு சபித்தார்.
இந்த மண்டுக மஹரிஷி இவ்விடத்தில் தவமிருந்து மஹாவிஷ்ணு பிரத்யட்சமாகி துர்வாச முனிவரின் சாபத்தை நீக்கினார்.
இதனால் இவ்விடத்திற்கு மண்டுக புரி என்ற பெயரும் உண்டு.

மூலவர்–வடிவழகிய நம்பி, கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
உற்சவர்–சுந்தர ராஜன்
தாயார்–அழகிய வல்லி நாச்சியார்
தீர்த்தம்–மண்டுக தீர்த்தம் – கொள்ளிடம்-விமானம்– தாரக விமானம்
காட்சி கண்டவர்கள்–சிவன், பிரம்மா, ஊர்வசி

இவ்விடம் வால்மீகியின் அவதாரஸ்தலம் என்று ஒரு கருத்து நிலவுகிறது. வால்மீகி தமிழ் நாட்டிலிருந்து சென்றவர் என்று கூறும்
ஆராய்சியாளருக்கு இங்குள்ள கல்வெட்டுகள் உதவும். இத்தலத்து எம்பெருமான் வால்மீகிக்கும் காட்சி கொடுத்ததாக அறியும் செய்தியும்
வால்மீகிக்கும் இத்தலத்திற்கும் உள்ள தொடர்பை வலுப்படுத்துகிறது.

போற்றி செய வோர் குடைக் கீழ்ப் பொன்னாடும் இந்நாடும்
நால் திசையும் ஆண்டாலும் நன்கு இல்லை தோற்றம் இலா
எந்தை அன்பில் ஆதி இணைத் தாமரை அடிக்கே
சிந்தை அன்பிலாதார் சிலர் –4-

தோற்றம் இலா எந்தை –அன்பில் ஆதி -முதலாவார் மூவர் யம்மூவருள்ளும் முதலாவான் மூரி நீர் வண்ணன் –
இணைத் தாமரை அடிக்கே -சிந்தை அன்பிலாதார் சிலர் —
போற்றி செய -யாவருக்கும் தமக்கு வாழ்த்து கூற
வோர் குடைக் கீழ்ப் பொன்னாடும் இந்நாடும் நால் திசையும் ஆண்டாலும் நன்கு இல்லை -யாதொரு நன்மையையும் கிட்டாது

————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

————————————————————-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading