மூலவர் -ஸ்ரீ -சார்ங்க பாணி / ஆராவமுதன் /அபர்யாப்தாம்ருதன் /உத்யோக சயனம் / கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -கோமள வல்லி
விமானம் -வைதிக விமானம்
தீர்த்தம் -ஹேம புஷ்கரிணி
மங்களாசாசனம் -பூதத்தாழ்வார் / பேயாழ்வார் / திரு மழிசை ஆழ்வார் /நம்மாழ்வார் / பெரியாழ்வார் /ஆண்டாள் / திரு மங்கை ஆழ்வார் –
திருமங்கை ஆழ்வார் 6 திவ்ய பிரபந்தங்கள் அனைத்திலும் மங்களா சாசனம் –
பிரமன் ஸ்ருஷ்டிக்கு தேவையான வித்துக்களை ஒரு குடத்தில் -கும்பத்தில் வைத்தான் –
அந்த கும்பம் இமயமலையில் இருந்து கங்கா யமுனா கோதாவரி கிருஷ்ணா -பாலாற்றின் வழியாகக் காவிரியை அடைந்தது
இங்கு கும்பத்தின் கோணத்தில் -மூலையில் -இருந்து வித்துக்கள் கீழே விழுந்த படியால் கும்ப கோணம் என்ற பெயர் பெற்றது –
ஹேம மஹர்ஷிக்கு திருமகளாக பிராட்டி பிறக்க -அவளைத் தேருடன் எழுந்து அருளி மகர சங்கராந்தி அன்று
ஸ்ரீ சாரங்க பாணி திருக் கல்யாணம் செய்து கொண்டார்
கர்ப்பகிரகம் தேர் வடிவில் இருக்கும் –
உத்யோக சயனம் -உத்தான சயனம் –கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே -திரு மழிசை பிரான் -ஆராவமுத ஆழ்வார் –
தாயார் -பெருமாள் மாற்றி திருக் கோலம் -குத்து விளக்கு எரிய-அன்று -சேவை யுண்டே –
ஸ்ரீ சார்ங்க பாணி -ஸ்ரீ சக்ர பாணி -ஸ்ரீ ராம ஸ்வாமி திருக் கோயில்கள் பிரசித்தம்
தஷிணாயணம் உத்தராயணம் -இரண்டு வாசல்கள் உள்ளன –
நாலாயிரம் மீண்டும் கிடைக்க ஆராவமுதனே அருள் புரிந்தார் -திராவிட ஸ்ருதி தர்சகாய நம -நாமாவளி –
கோல்ஹா பூரில்-தாயார் –திருமலை -பத்மாவதி –பாதாள ஸ்ரீனிவாசர் கோயில் –
மகா மகம் பிரசித்தம் –பாஸ்கர க்ஷேத்ரம் -ஸூ ர்யனால் பிரசித்தம் -சக்கர படித்துறை பிரசித்தம் –
சுதர்சன வல்லி விஜய வல்லி –ஐஸ்வர்யம் ஆயுசு ஆரோக்யம் -திரு மழிசை -திருச் சக்கர அம்சம் –
தக்ஷிண அயோத்தியை -அதனால் தான் ஸ்ரீ ராமர் கோயில் -அமர்ந்த திருக் கோலம் ஆஞ்சநேயர் -தம்பூரா ஸ்ரீ ராமாயணம் திருக் கைகளில் உடன் சேவை
பட்டாபிஷேகம் திருக் கோலம் -லஷ்மணன் இரண்டு வில்லுடன் சேவை –
தற்போது உள்ள பெயர் ஸ்ரீ கும்ப கோணம்
மூலவர் ஸ்ரீ சாரங்கபாணி, ஸ்ரீ அபர்யாப்தாம்ருதன், ஸ்ரீ உத்தாந சாயீ
கோலம் சயனம்
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ ஆரவாமுதன்
தாயார் ஸ்ரீ கோமளவல்லி
தீர்த்தம் ஸ்ரீ ஹேம புஷ்கரணி
விமானம் ஸ்ரீ வைதிக விமானம்
மண்டலம் சோழநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ கும்ப கோணம்
நாமாவளி ஸ்ரீ கோமளவல்லீ ஸமேத ஸ்ரீ சாரங்கபாணியே நமஹ
————-
ஸ்ரீ பெரியாழ்வார் -3-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ ஆண்டாள் -1-பாசுரம்
ஸ்ரீ திருமழிசைப் பிரான் -7–பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -25-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ நம் ஆழ்வார் -11-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பேயாழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்
மொத்தம் –51-பாசுரங்கள் மங்களாசாசனம்
———-
ஸ்ரீ பெரியாழ்வார் -3-பாசுரங்கள் மங்களாசாசனம்
கொங்குங் குடந்தையும் கோட்டியூரும் பேரும் எங்கும் திரிந்து விளையாடும் என் மகன்
சங்கம் பிடிக்கும் தடக்கைக்குத் தக்க–கோல் கொண்டு வா-2-6-2-
குடந்தைக் கிடந்தார்க்கு ஓர் கோல் கொண்டு வா.-2-6-6-
குடந்தைக் கிடந்த எம் கோவே! குருக்கத்திப் பூச் சூட்ட வாராய்.-2-7-7-
—–
ஸ்ரீ ஆண்டாள் -1-பாசுரம்
கோலால் நிரை மேய்த் தாயனாய்க் குடந்தைக் கிடந்த குடமாடி
நீலார் தண்ணந் துழாய் கொண்டு என் நெறி மென் குழல் மேல் சூட்டீரே–13-2-
———-
ஸ்ரீ திருமழிசைப் பிரான் -7–பாசுரங்கள் மங்களாசாசனம்
வலங் கொளக் குடந்தையுள் கிடந்த மாலு மல்லையே?–திருச்சந்தவிருத்தம் – 56-
பொங்கு தண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே. –திருச்சந்தவிருத்தம் – 57-
வேதியர் வரங் கொளக் குடந்தையுள் கிடந்த மாலுமல்லையே– திருச்சந்தவிருத்தம் – 58-
கோல மாட நீடு தண் குடந்தை மேய கோவலா!–59-
செழுந் தடங் குடந்தையுள் கிடந்த மாலு மல்லையே?–60-
காவிரிக் கரைக் குடந்தையுள் கிடந்தவா றெழுந் திருந்து பேசு வாழி கேசனே–61-
நாகத்தணைக் குடந்தை –கிடக்கும் ஆதி நெடுமால் அணைப்பார் கருத்தனாவான். –நான்முகன் திருவந்தாதி – 36
——–
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -25-பாசுரங்கள் மங்களாசாசனம்
சூழ் புனல் குடந்தையே தொழுது என் நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் –1-1-2-
சூழ் புனல் குடந்தையே தொழுமின் நற்பொருள் காண்மின் பாடி நீர் உய்ய்மின் நாராயணா வென்னும் நாமம் –1-1-7-
ஊரான் குடந்தை யுத்தமன் — தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-4-
நன்றாய புனல் நறையூர் திருவாலி குடந்தை தடந்திகழ் கோவல் நகர்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற் கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-1-
தண் குடந்தை நகராளா ! வரை எடுத்த தோளாளா ! என் தனக்கு ஓர் துணையா ளானாகாயே !–3-6-5-
குயிலாலும் வளர் பொழில் சூழ் தண் குடந்தைக் குடமாடீ ! துயிலாத கண் இணையேன் நின் நினைந்து துயர்வேனோ ! !–3-6-8-
தண் குடந்தை நகராளன் ஐவர் க்காய் அமரில் தேர் உய்த்த தேராளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் செப்புகேனே –5-5-7-
கொங்கேறு சோலைக் குடந்தை கிடந்தானை நங்கோனை நாடி நறையூரில் கண்டேனே-6-8-9-
கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் யுலகை இடந்த நம்பி —நாமம் சொல்லில் நமோ நாராயணமே—6-10-1-
குடந்தைத் தலைக் கோவினைக் குடமாடிய கூத்தனை எந்தையை எந்தை தந்தை தம்மானை எம்பிரானை எத்தால் மறக்கேனே –7-3-3-
பேரானைக் குடந்தை பெருமானை –காரர் கரு முகிலைக் கண்டு கொண்டு களித்தேனே –7-6-9-
கொந்தார் பைம் பொழில் சூழ் குடந்தைக் கிடந்துகந்த மைந்தா வுன்னை என்றும் மறவாமை பெற்றேனே –8-9-5-
தோடவிழ் நீலம் மணம் கொடுக்கும் சூழ் புனல் சூழ் குடந்தைக் கிடந்த சேடர்கோல் என்று தெரிக்க மாட்டேன் –அச்சோ ஒருவர் அழகியவா –9-2-2-
யமரர் தம் கோனை யாம் குடந்தை சென்று காண்டுமே –10-1-6-
கொங்கார் சோலைக் குடந்தை கிடந்த மால் இங்கே போதுங்கொலோ –10-10-8-
குடந்தை மேவிச் சிறியானோர் பிள்ளையாய் மெள்ள நடந்திட்டு உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தார் தம்மையே –11-3-4-
உம்மை யுய்யக் கொண்ட கொண்டற் கைம் மணி வண்ணன் தண் குடந்தை நகர் பாடி யாடீர்களே–11-6-9-
உலகம் கொண்ட கோவினைக் குடந்தைமேய குருமணித்திரளை–என் சொல்லிப் புகழ்வர் தாமே.-திருக்குறுந்தாண்டகம் – 6-
தூவி சேரன்னம் மன்னும் சூழ் புனல் குடந்தையானை பாவியென் பாவியாது பாவியேனாயினேனே.–திருக்குறுந்தாண்டகம் – 14-
தண் காலும் தண் குடந்தை நகரும் பாடித் தண் கோவலூர்ப் பாடி யாடக் கேட்டு –நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே. திருநெடுந்தாண்டகம் – 17-
பேர்ப் பாடித் தண் குடந்தை நகரும் பாடி பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் –திருநெடுந்தாண்டகம் – 19-
தண் குடந்தைக் கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே. –திருநெடுந்தாண்டகம் – 29-
நின்னடியிணை பணிவன் வருமிடரகல மாற்றோ வினையே–பொன்னித் தடங்கொண்ட தாமரை சூழும் மலர்ந்த
தண் பூங்குடந்தை –பாம்பணைப் பள்ளி கொண்டான் திருப் பாதங்களே.–திருவெழுகூற்றிருக்கை
காரார் குடந்தை கடிகை கடல் மல்லை ஏரார் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை –சிறிய திருமடல் – 73
பொன்னி மணி கொழிக்கும் பூங்குடந்தைப் போர் விடையை தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை –பெரிய திருமடல் – 114
———–
ஸ்ரீ நம் ஆழ்வார் -11-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஆரா அமுதே! சீரார் செந்நெல் கவரி வீசும் செழு நீர்த் திருக் குடந்தை ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1-
செம்மா கமலம் செழுநீர் மிசைக் கண் மலரும் திருக் குடந்தை அம்மா மலர்க் கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே?–5-8-2-
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள் செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான் நான் அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே.–5-8-4-
செழு வொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்! செந்தாமரைக் கண்ணா! தொழுவனேனை உன தாள் சேரும் வகையே சூழ் கண்டாய்.–5-8-5-
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்! வானோர் கோமானே! யாழி னிசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே!–5-8-6-
பிரியா அடிமை என்னைக் கொண்டாய்! குடந்தைத் திருமாலே! தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே–5-8-7-
குடந்தைக் கிடந்தாய்! மா மாயா! தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே–5-8-8-
திசைவில் வீசும் செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்! காண வாராயே–5-8-9-
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக் குடந்தை ஊராய்! உனக்காட் பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?–5-8-10-
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும் மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே–5-8-11-
—————–
ஸ்ரீ பூதத்தாழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்
தமருள்ளும் மா மல்லை கோவல் மதிட் குடந்தை யென்பரே ஏவல்ல வெந்தைக் கிடம்.–இரண்டாம் திருவந்தாதி – 70-
பொங்கு படமூக்கி னாயிர வாய்ப் பாம்பணை மேல் சேர்ந்தாய் குட மூக்குக் கோயிலாக் கொண்டு.–இரண்டாம் திருவந்தாதி – 97
——————
ஸ்ரீ பேயாழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம் –
சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம் நேர்ந்த வென் சிந்தை—இறை பாடியாய விவை.–மூன்றாம் திருவந்தாதி – 30-
தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு.– மூன்றாம் திருவந்தாதி – 62
————
ஸ்ரீ பெரியாழ்வார் -3-பாசுரங்கள் மங்களாசாசனம்
கொங்குங் குடந்தையும் கோட்டியூரும் பேரும் *
எங்கும் திரிந்து விளையாடும் என் மகன் *
சங்கம் பிடிக்கும் தடக்கைக்குத் தக்க * நல்
அங்கமுடையதோர் கோல் கொண்டு வா
அரக்கு வழித்ததோர் கோல் கொண்டு வா. –பெரியாழ்வார் திருமொழி -2-6-2-
ஆலத்திலையான் அரவினணை மேலான் *
நீலக்கடலுள் நெடுங்காலம் கண் வளர்ந்தான் *
பாலப் பிராயத்தே பார்த்தர்க்கு அருள் செய்த *
கோலப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா
குடந்தைக் கிடந்தார்க்கு ஓர் கோல் கொண்டு வா. –பெரியாழ்வார் திருமொழி -2-6-6-
குடங்களெடுத் தேற விட்டுக் கூத்தாட வல்ல எம் கோவே! *
மடங்கொள் மதி முகத்தாரை மால் செய்ய வல்ல என் மைந்தா! *
இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவாக முன் கீண்டாய்! *
குடந்தைக் கிடந்த எம் கோவே! குருக்கத்திப் பூச் சூட்ட வாராய். –பெரியாழ்வார் திருமொழி -2-7-7-
——
ஸ்ரீ ஆண்டாள் -1-பாசுரம்
பாலாலிலையில் துயில் கொண்ட பரமன் வலைப் பட்டிருந்தேனை *
வேலால் துன்னம் பெய்தாற் போல் வேண்டிற்றெல்லாம் பேசாதே *
கோலால் நிரை மேய்த் தாயனாய்க் குடந்தைக் கிடந்த குடமாடி *
நீலார் தண்ணந் துழாய் கொண்டு என் நெறி மென் குழல் மேல் சூட்டீரே.–நாச்சியார் திருமொழி -13-2-
———
ஸ்ரீ திருமழிசைப் பிரான் -7–பாசுரங்கள் மங்களாசாசனம்
இலங்கை மன்னனைந் தொடைந்து பைந்தலை நிலத்துக *
கலங்க வன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே! *
விலங்கு நூலர் வேத நாவர் நீதியான கேள்வியார் *
வலங் கொளக் குடந்தையுள் கிடந்த மாலு மல்லையே?–திருச்சந்தவிருத்தம் – 56
சங்கு தங்கு முன்கை நங்கை கொங்கை தங்கலுற்றவன் *
அங்க மங்க வன்று சென்று அடர்த் தெறிந்த வாழியான் *
கொங்கு தங்கு வார் குழல் மடந்தைமார் குடைந்த நீர் *
பொங்கு தண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே. –திருச்சந்தவிருத்தம் – 57
மரங்கெட நடந்தடர்த்து மத்த யானை மத்தகத்து *
உரங்கெடப் புடைத்து ஒர் கொம் பொசித்துகந்த வுத்தமா! *
துரங்கம் வாய் பிளந்து மண்ணளந்த பாத! * வேதியர்
வரங் கொளக் குடந்தையுள் கிடந்த மாலுமல்லையே– திருச்சந்தவிருத்தம் – 58
சாலி வேலி தண் வயல் தடங்கிடங்கு பூம் பொழில் *
கோல மாட நீடு தண் குடந்தை மேய கோவலா! *
காலநேமி வக்கரன் கரன் முரன் சிரமவை *
காலனோடு கூட விற் குனித்த விற்கை வீரனே! —திருச்சந்தவிருத்தம் – 59
செழுங் கொழும் பெரும் பனி பொழிந்திட * உயர்ந்த வேய்
விழுந் துலர்ந் தெழுந்து விண் புடைக்கும் வேங்கடத்துள் நின்று *
எழுந்திருந்து தேன் பொருந்து பூம் பொழில் தழைக்கொழும் *
செழுந் தடங் குடந்தையுள் கிடந்த மாலு மல்லையே?–திருச்சந்தவிருத்தம் – 60
நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்கு ஞால மேனமாய் *
இடந்த மெய் குலுங்கவோ? விலங்கு மால் வரைச் சுரம் *
கடந்த கால் பரந்த காவிரிக் கரைக் குடந்தையுள் *
கிடந்தவா றெழுந் திருந்து பேசு வாழி கேசனே! –திருச்சந்தவிருத்தம் – 61
நாகத்தணைக் குடந்தை வெஃகா திருவெவ்வுள் *
நாகத்தணை யரங்கம் பேரன்பில் * – நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால் *
அணைப்பார் கருத்தனாவான். –நான்முகன் திருவந்தாதி – 36
—————
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -25-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஆவியே அமுதே என நினைந்து உருகி அவரவர் பணை முலை துணையா
பாவியேன் உணராது எத்தனை பகலும் பழுதே யொழிந்தன நாள்கள்
தூவிசேர் அன்னம் துணையோடும் புணரும் சூழ் புனல் குடந்தையே தொழுது என்
நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் –1-1-2-
இற்பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர் இன்னதோர் தன்மை என்று உணரீர்
கற்பகம் புலவர்களைக் கண் என்று வுலகில் கண்டவா தொண்டரைப் பாடும்
சொற் பொருளாளீர் சொல்லுகேன் வம்மின் சூழ் புனல் குடந்தையே தொழுமின்
நற்பொருள் காண்மின் பாடி நீர் உய்ய்மின் நாராயணா வென்னும் நாமம் –1-1-7-
ஊரான் குடந்தை யுத்தமன் ஒரு கால் இரு கால் சிலை வளைய
தேரா வரக்கர் தேர் வெள்ளம் செற்றான் வற்றா வரு புனல் சூழ்
பேரான் பேர் ஆயிரம் உடையான் பிறங்கு சிறை வண்டறைகின்ற
தாரான் தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-4-
அன்றாயர் குலக்கொடியோடு அணி மா மலர் மங்கை யொடன்பாளாவி அவுணர்க்கு
என்றானுமிரக்க மிலாதவனுக்கு உறையுமிடமாவது இரும் பொழில் சூழ்
நன்றாய புனல் நறையூர் திருவாலி குடந்தை தடந்திகழ் கோவல் நகர்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற் கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-1-
வாளாய கண் பனிப்ப மென்முலைகள் பொன் அரும்ப
நாள் நாளும் நின் நினைந்து நைவேற்கு ஒ மண்ணளந்த
தாளாளா ! த ண் குடந்தை நகராளா ! வரை எடுத்த
தோளாளா ! என் தனக்கு ஓர் துணையா ளானாகாயே !–3-6-5-
குயிலாலும் வளர் பொழில் சூழ் தண் குடந்தைக் குடமாடீ !
துயிலாத கண் இணையேன் நின் நினைந்து துயர்வேனோ !
முயலாலும் இள மதிக்கே வளை இழந்தேற்கு இது நடுவே
வயலாலி மணவாளா கொள்வாயோ மணி நிறமே !–3-6-8-
வாராளும் இளம் கொங்கை வண்ணம் வேறாயின வாறு எண்ணாள் எண்ணில்
பேராளன் பேரல்லால் பேசாளிப் பெண் பெற்றேன் என் செய்கேன் நான்
தாராளன் தண் குடந்தை நகராளன் ஐவர் க்காய் அமரில் தேர் உய்த்த
தேராளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் செப்புகேனே –5-5-7-
பொங்கேறு நீள் சோதிப் பொன்னாழி தன்னோடும்
சங்கேறு கோலத் தடக்கை பெருமானைக்
கொங்கேறு சோலைக் குடந்தை கிடந்தானை
நங்கோனை நாடி நறையூரில் கண்டேனே-6-8-9-
கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் யுலகை
இடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரண் அழியக்
கடந்த நம்பி கடியார் இலங்கை யுலகை ஈரடியால்
நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே—6-10-1-
வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான் மற்றோர் நெஞ்சு அறியான் அடியேனுடைச்
சிந்தையாய் வந்து தென் புலர்க்கு என்னைச் சேர் கொடான் இது சிக்கெனப் பெற்றேன்
கொந்துலாம் பொழில் சூழக் குடந்தைத் தலைக் கோவினைக் குடமாடிய கூத்தனை
எந்தையை எந்தை தந்தை தம்மானை எம்பிரானை எத்தால் மறக்கேனே –7-3-3-
பேரானைக் குடந்தை பெருமானை இலங்கொளி சேர்
வாரார் வனமுலையாள் மலர்மங்கை நாயகனை
ஆராவின்னமுதைத் தென் அழுந்தையில் மன்னி நின்ற
காரர் கரு முகிலைக் கண்டு கொண்டு களித்தேனே –7-6-9-
வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை
எந்தாய் போய் அறியாய் யிதுவே யமையாதோ
கொந்தார் பைம் பொழில் சூழ் குடந்தைக் கிடந்துகந்த
மைந்தா வுன்னை என்றும் மறவாமை பெற்றேனே –8-9-5-
தோடவிழ் நீலம் மணம் கொடுக்கும் சூழ் புனல் சூழ் குடந்தைக் கிடந்த
சேடர்கோல் என்று தெரிக்க மாட்டேன் செஞ்சுடராழி யுஞ்சங்குமேந்தி
பாடக மெல்லடியார் வணங்கப் பன் மணி முததொடிலங்கு சோதி
ஆடகம் பூண்டொரு நான்கு தோளும் அச்சோ ஒருவர் அழகியவா –9-2-2-
வானையார் அமுதம் தந்த வள்ளலைத்
தேனை நீள் வயல் சேறையில் கண்டு போய்
ஆனை வாட்டி யருளும் யமரர் தம்
கோனை யாம் குடந்தை சென்று காண்டுமே –10-1-6-
இங்கே போதுங்கொலோ
இனவேல் நெடுங்கண் களிப்பக்
கொங்கார் சோலைக் குடந்தை கிடந்த மால்
இங்கே போதுங்கொலோ –10-10-8-
அறியோமே யென்று உரைக்கலாமே யெமக்கு
வெறியார் பொழில் சூழ் வியன் குடந்தை மேவிச்
சிறியானோர் பிள்ளையாய் மெள்ள நடந்திட்டு
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தார் தம்மையே –11-3-4-
அண்டத்தின் முகடு அழுந்த அலை முந்நீர்த் திரை ததும்ப ஆவா வென்று
தொண்டர்க்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் தான் அருளி உலகம் ஏழும்
உண்டு ஒத்த திரு வயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை யுய்யக் கொண்ட
கொண்டற் கைம் மணி வண்ணன் தண் குடந்தை நகர் பாடி யாடீர்களே–11-6-9-
மூவரில் முதல்வனாய ஒருவனை. உலகம் கொண்ட *
கோவினைக் குடந்தை மேய குரு மணித் திரளை * இன்பப்
பாவினைப் பச்சைத் தேனைப் பைம் பொன்னை யமரர் சென்னிப்
பூவினை * புகழும் தொண்டர் என் சொல்லிப் புகழ்வர் தாமே. –திருக்குறுந்தாண்டகம் – 6
காவியை வென்ற கண்ணார் கலவியே கருதி * நாளும்
பாவியேனாக எண்ணி அதனுள்ளே பழுத்தொழிந்தேன் *
தூவி சேரன்னம் மன்னும் சூழ் புனல் குடந்தையானை *
பாவியென் பாவியாது பாவியே னாயினேனே.–திருக்குறுந்தாண்டகம் – 14
பொங்கார் மெல்லிளங் கொங்கை பொன்னே பூப்பப் பொரு கயல் கண்ணீ ரரும்பப் போந்து நின்று *
செங்கால மடப் புறவம் பெடைக்குப் பேசும் சிறு குரலுக்கு உடலுருகிச் சிந்தித்து * ஆங்கே
தண் காலும் தண் குடந்தை நகரும் பாடித் தண் கோவலூர்ப் பாடி யாடக் கேட்டு *
நங்காய்! நங்குடிக்கு இதுவோ நன்மை? என்ன நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே. –திருநெடுந்தாண்டகம் – 17
முற்றாரா வனமுலையாள் பாவை மாயன் மொய்யகலத் துள்ளிருப்பாள் அஃதும் கண்டு
அற்றாள் * தன் நிறை யழிந்தாள் ஆவிக்கின்றாள் அணி யரங்க மாடுதுமோ? தோழீ! என்னும் *
பெற்றேன் வாய்ச் சொல் இறையும் பேசக் கேளாள் பேர்ப் பாடித் தண் குடந்தை நகரும் பாடி *
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் பொரு வற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே.—திருநெடுந்தாண்டகம் – 19
அன்றாயர் குலமகளுக் கரையன் தன்னை அலை கடலைக் கடைந் தடைத்த அம்மான் தன்னை *
குன்றாத வலி யரக்கர் கோனை மாளக் கொடுஞ்சிலை வாய்ச் சரந்துரந்து குலங் களைந்து
வென்றானை * குன்றெடுத்த தோளினானை விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும்
நின்றானை * தண் குடந்தைக் கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே. –திருநெடுந்தாண்டகம் – 29
ஒரு பேருந்தி யிரு மலர்த் தவிசில் பொன்னித் தடங் கொண்ட தாமரை சூழும் மலர்ந்த தண் பூங் குடந்தை விடங் கொண்ட வெண் பல்
கருந்துத்தி செங்கண் தழலுமிழ் வாய் படங் கொண்ட பாம்பணைப் பள்ளி கொண்டான் திருப் பாதங்களே.–திருவெழுகூற்றிருக்கை–
காரார் குடந்தை கடிகை கடல் மல்லை ஏரார் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை –சிறிய திருமடல் – 73
பொன்னி மணி கொழிக்கும் பூங்குடந்தைப் போர் விடையை தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை –பெரிய திருமடல் – 114
——
ஸ்ரீ நம் ஆழ்வார் -11-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஆரா அமுதே! அடியேன் உடலம் நின் பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழு நீர்த் திருக் குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1-
எம்மானே! என் வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே
எம்மா உருவும் வேண்டு மாற்றால் ஆவாய்! எழிலேறே!
செம்மா கமலம் செழுநீர் மிசைக் கண் மலரும் திருக் குடந்தை
அம்மா மலர்க் கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே?–5-8-2-
என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-
செலக் காண்கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்!
உலப்பிலானே! எல்லா உலகு முடைய ஒருமூர்த்தி!
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான் நான்
அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே.–5-8-4-
அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான் பாடி அலற்றுவன்
தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்
செழு வொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்! செந்தாமரைக் கண்ணா!
தொழுவனேனை உன தாள் சேரும் வகையே சூழ் கண்டாய்.–5-8-5-
சூழ் கண்டாய் என் தொல்லை வினையை அறுத்துன்னடி சேறும்
ஊழ் கண்டிருந்தே தூராக் குழி தூர்த்து எனை நாளகன்றிருப்பன்
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்! வானோர் கோமானே!
யாழி னிசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே!–5-8-6–
அரியேறே! என் னம் பொற் சுடரே! செங்கட் கரு முகிலே!
எரி யேய் பவளக் குன்றே! நால் தோள் எந்தாய்! உன தருளே
பிரியா அடிமை என்னைக் கொண்டாய்! குடந்தைத் திருமாலே!
தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே–5-8-7-
களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மா மாயா!
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே–5-8-8-
இசைவித் தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே!
அசைவில் அமரர் தலைவர் தலைவா! ஆதிப் பெரு மூர்த்தி!
திசைவில் வீசும் செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்! காண வாராயே–5-8-9-
வாரா அருவாய் வரும் என் மாயா! மாயா மூர்த்தியாய்!
ஆரா வமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்!
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக் குடந்தை
ஊராய்! உனக்காட் பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?–5-8-10-
உழலை என்பில் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே–5-8-11-
——————-
ஸ்ரீ பூதத்தாழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்
தமருள்ளம் தஞ்சை தலை யரங்கம் தண் கால் *
தமருள்ளும் தண் பொருப்பு வேலை * – தமருள்ளும்
மா மல்லை கோவல் மதிட் குடந்தை யென்பரே *
ஏவல்ல வெந்தைக் கிடம்.–இரண்டாம் திருவந்தாதி – 70
எங்கள் பெருமான்! இமையோர் தலைமகன்! நீ *
செங்கண் நெடுமால்! திரு மார்பா! * – பொங்கு
படமூக்கி னாயிர வாய்ப் பாம்பணை மேல் சேர்ந்தாய் *
குடமூக்குக் கோயிலாக் கொண்டு.–இரண்டாம் திருவந்தாதி – 97
——————
ஸ்ரீ பேயாழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம் –
சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம்
நேர்ந்த வென் சிந்தை நிறை விசும்பு * – வாய்ந்த
மறை பாடக மனந்தன் வண்டு ழாய்க் கண்ணி *
இறை பாடியாய விவை.–மூன்றாம் திருவந்தாதி – 30
விண்ணகரம் வெஃகா விரி திரை நீர் வேங்கடம் *
மண்ணகரம் மா மாட வேளுக்கை * மண்ணகத்த
தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி *
தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு.–மூன்றாம் திருவந்தாதி – 62-
மும்மூர்த்திகளில் சாந்தம் நிறைந்தவர் யார் என்று அறியச் சென்ற ப்ருகு முனிவர், திருமாலின் நெஞ்சில் உதைக்க இதனால் அவமானம்
அடைந்த லெட்சுமி தன் மணாளனை விட்டுப் பிரிந்து இப்பூவுலகிற்கு வந்து மறைந்திருக்கலானார். ப்ருகு முனிவரும் எம்பெருமானை உதைத்த பாவத்தைப்
போக்கவும், மனம் நொந்த திருமகளை சாந்தி அடையச் செய்யவும், திருமகளே தனக்கு மகளாக வந்து பிறக்க வேண்டுமென்றும், தான் பணிவிடை செய்து
தனது பாவத்தைப் போக்கிக்கொள்ள வேண்டுமென்றும் நினைத்து ஹேம மஹரிஷி என்ற பெயரில் இத்தலத்தில் கடுந்தவம் செய்து வரலாயினர். திரு
இழந்த லோகத்தில் தாமும் இருக்க வொன்னா எம்பெருமான் லட்சுமி தேவியைத் தேடி பூவுலகிற்கு வந்து திருமலையில் (திருப்பதியில்) ஒரு புற்றில்
மறைந்து வசிக்க, பத்மாவதி என்னும் கன்னியைத் திருமணம் செய்து கொண்டார்.
கலியுகத்தில் பத்மாவதியை மணந்துகொள்வதாக எம்பெருமான் இராமாவதாரத்தில் வாக்கு கொடுத்திருந்தார். இந்த பத்மாவதி தேவியே
இராமாவதாரத்தில் வேதவதி என்னும் பெயர் பூண்டிருந்தாள்.
இன்றும் இக்கோவிலில் பாதாளச் சீனிவாசன் என்ற பெயரில் பூமிக்கடியில் ஒரு திருச்சன்னதி உள்ளது. இவ்விதம் வேங்கடநாதன்
இங்கு வந்து சேர்ந்தார்.
ப்ரண வாக்ருதியின் இன்னொரு பிரிவான வைதிக விமானத்துடன் யாம் குடந்தை சென்று ஹேம மஹரிஷிக்கு அருள் புரிந்து லட்சுமி தேவியையும்
மணக்கவிருக்கிறோம் என்று சொல்லி அர்ச்சா ரூபியானான்.
அப்போதே கையில் சார்ங்கம் என்னும் வில்லுடன் மகர சங்கராந்தியன்று வைதீக விமானத்துடன் குடந்தை வந்திறங்கிய எம் பெருமான்
கோமள வல்லியை ஏற்றுக்கொண்டு (மணம் செய்து) ப்ருகு முனிவருக்கும் பேரருள் புரிந்தார். இவ்விதம் ஸ்ரீரங்கநாதனும் இவ்விடம்வந்து சேர்ந்தார்.
மூலவர்–சாரங்க பாணி, ஆராவமுதன் சயனதிருக்கோலம், கிழக்கு நோக்கிய திருக்கோலம்.
தாயார்-கோமளவல்லி
உற்சவர்-பெயர்களே
தீர்த்தம்–ஹேமவல்லி புஷ்கரிணி, காவிரி, அரசலாறு
விமானம்- வைதிக விமானம்
காட்சி கண்டவர்கள்– ஹேம மஹரிஷி
மொத்தம் 52 பாசுரங்களில் முதலாழ்வார்கள் மூவருடன் திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், ஸ்ரீ ஆண்டாள்
ஆகிய ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம்.
இங்கு உள்ள ராஜகோபுரம் உயரத்தில் மூன்றாவதாகும். முதலாவது ஸ்ரீரங்கம் 236 அடி உயரம் ஆகும். இரண்டாவது-ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜகோபுரம் உயரம் 165 அடி ஆகும். 150 அடி உயரமுள்ள இத்தலத்தில் ராஜகோபுரம் மூன்றாவது இடத்தைப் பெறுகிறது.-ராஜகோபுரம் இப்பெருமான் மீது பக்திகொண்ட
லட்சுமி நரசிம்ம சுவாமி என்ற பக்தர் ஒருவரால் கட்டப்பட்டதாகும்.-தீபாவளி அன்று இவருக்கு திருஅத்யயனம் ஆராவமுத ஆழ்வானே கண்டு அருளுகிறார்
108 திவ்ய தேசங்களில் இத்தலத்திற்கு மட்டுமே உபய பிரதான திவ்ய தேசம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. அதாவது மற்ற ஸ்தலங்களைப்
போலன்றி இங்கு மூலவருக்குள்ள சகல மரியாதைகளும் சிறப்புக்களும் உற்சவருக்குமுண்டு. இருவரும் ஒப்பிலா அழகில் திளைத்தவர்கள். உபயமாகப்
பயன்படுவதே இங்கு பிரதானமானதாகவும் ஆவதால் இதற்கு உபயப் பிரதான திவ்ய தேசம் என்று பெயர்.
வடஇந்தியாவில் 12 ஆண்டுகட்கு ஒரு முறை கும்பராசியில் குரு வரும் காலத்தில் கும்பமேளா கொண்டாடப்படுவதைப் போல் 12
ஆண்டுகட்கு ஒருமுறை சிம்மராசியில் உள்ள மக நட்சத்திரத்தில் வியாழன் வரும் காலத்தில் இங்கு மகாமகம் என்னும் நீராடல் விழா
கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் உள்ள புண்ணிய நதிகளான கங்கை, காவேரி, யமுனை, ஸரஸ்வதி, கோதாவரி, நர்மதா, கிருஷ்ணா, சிந்து, சரயு
முதலிய ஒன்பது நதிகளும் இங்குவந்து இந்த மகாமகக் குளத்தில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கி புனிதம் அடைகின்றனவாம். இச்சமயத்தில்
இச்சந்நதியில் உள்ள மகாமகப் பொற்றாமரைக் குளத்தில் நீராடுவது மிகப் பெரிய புண்ணியமாகும். இந்த குளக்கரையில்தான் 9 நதி கன்னிகைகட்கு
அவர்களின் உருவத்திற்கொப்ப 9 சிலைகள் உள்ளன. இவ்வமைப்பு இங்கு மட்டும் உள்ளது.
இத்தலத்தில் அமைந்துள்ள சித்திரைத்தேர் அல்லது சித்திரத்தேர் எனப்படும் தேர் தென்னிந்தியாவில் உள்ள மிகப்பெரிய தேர்களுள் ஒன்றாகும்.
இத்தேரை திருமங்கையாழ்வாரே இப்பெருமானுக்கு அர்ப்பணித்தார். -இத்துடன் திருவெழு கூற்றிருக்கை ரதபந்தமும் சமர்ப்பித்தார்
சாய்ந்தவாறே எழுந்திருக்க முயலும் திருக்கோலத்தில்தான் காட்சி தருகிறார். இந்த நிலைக்குத் தான் உத்தனன் சாயி (சாய்ந்து எழமுயலும் திருக்கோலம்)
என்று திருப்பெயர்.திராவிட பிரபந்தம் மீண்டும் அருளிய பெருமையால் கோயில் திருமலைப்பெருமாள் கோவில் எனப்படும் மூவரில் முதல்வன் இவனே
முகலாயர்கள் படையெடுப்பின்போது இக்கோவிலை கொள்ளையிட்டு அழித்துவிட எத்தனித்துவிடுங்கால் நெய்வாசல் உடையார் என்னும் பக்தர்
தமது பக்தி மேலீட்டால் வைக்கோற்போரால் இப்பெருமானின் இருப்பிடத்தை மூடி மாடுகட்டும் இடம் என்று சொல்லி அவர்களை மருளச் செய்து
திருப்பியனுப்பினார். நெய்வாசல் உடையார் வம்சத்தாருக்கு ஸாசனமும், மரியாதைகளும் இங்கு தொன்றுதொட்டு இருந்து வந்தது.
முன்னொரு யுகத்தின் முடிவு நெருங்கும் வேளையில் பிரளயம்வரப்போவதை உணர்ந்த பிரம்மன் சிருஷ்டிக்கு காரணமான விதையையும்,
வேதங்களையும் அமுதத்தையும் இட்டு நிரப்பி வைத்த ஒரு குடத்தை இமயத்தின் சிகரத்தில் வைக்க பிரளயத்தின் போது ஏற்பட்ட
பெருவெள்ளத்தில் அக்குடம் மிதந்து வந்து சோழநாட்டை அடைய அப்போது தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, பரமசிவன் வேடன் உருக்கொண்டு ஒரு அம்பால் குடத்தின் மூக்கை உடைக்க அக்குட மூக்கின் வழியாக உள்ளிருந்த அமுத வெள்ளம் கீழே பரவி மீண்டும் சிருஷ்டிக்கு வழி வகுத்ததென்றும்,
அது இரு பிரிவுகளாகப் பிரிந்து ஒன்று மகாமகக் குளத்தையும், மற்றொன்று பொற்றாமரைக் குளத்தையும் சார்ந்ததென்று ஸ்தல புராணம் விளக்குகிறது.
அவ்விதம் குட மூக்கின் வழியாக அமுதம் வெளிவந்த இடமாகையால் இவ்வூருக்கு குடமூக்கு (திருக்குடந்தை) அல்லது கும்பகோணம் என்றும்
பெயர் வந்ததாகக் கூறுவர்.
இச்சேத்திரத்தில் இவ்வெம்பெருமான் தவிர ஸ்ரீசக்ரபாணி, ஸ்ரீராமர், ஸ்ரீவராஹர், ஸ்ரீகோபாலன், ஸ்ரீவேத நாராயணன், ஸ்ரீவரதராஜன் போன்ற
எம்பெருமான்களும் எழுந்தருளியுள்ளனர் இதில் ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்தின் திருக்கோலத்தில் உள்ள சந்நிதி பார்ப்பதற்கு பேரழகு பொருந்தியதாகும்.
குடந்தையில் “ஸௌந்தர்யம் பிரஸித்தம்” என்பது வடமொழி. ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் என்பது ஆழ்வார்கள் மொழி.
தூணிலா முற்றம் என்று பெரியாழ்வாரின் பாசுரத்தில் கூறப்படும் இடம் இக்கோவிலின் வடக்குப் பிரகாரமாகும்.
பெருமாளின் கருவறையைச் சுற்றிச் செல்லும் போது அந்த அழகான திருக்காட்சி நம் கண்ணைக் கவர்கிறது. சுவாமியின் கருவறையே
(மூலஸ்தானமே) தேர்வடிவில் அமைந்துள்ளது. மிகவும் பிர்ம்மாண்ட சக்கரங்கள் கொண்ட திருத்தேர். தாயாரைத் திருமணம் செய்ய பெருமாள்
வைகுண்டத்திலிருந்து இறங்கிய தேரின் வடிவம் இது.-உத்ராயண வாசல், தட்சிணாயன வாசல் என்ற இருவாசல்களுண்டு.
தானே படைத்து உலகத் தானே அளித்து நீ
தானே அழிக்கும் தளர்ச்சியோ வானில்
திரு மகுடம் தைக்கச் சிறு குறளாய் நீண்ட
பெரும குடந்தைக் கிடந்தாய் பேசு –14-
திரு மகுடம் தைக்கச் -அழகிய கிரீடம் முட்டும் படி –
நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ இலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக் கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே -திருமழிசைப் பிரான் –
———————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply