மூலவர் -ஸ்ரீ நிவாஸன் /ஒப்பிலியப்பன் / நின்ற திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -பூமா தேவி
விமானம் -சுத்த ஆனந்த விமானம்
தீர்த்தம் -அஹோ ராத்ர புஷ்காரிணி
மங்களாசாசனம் -பேயாழ்வார் -நம்மாழ்வார் –திருமங்கை யாழ்வார்
ம்ருகண்டு முனிவர் -திருமகள் -உப்பையே விட்டு திருக் கல்யாணம் -பிரசாத்தின் உப்பு சேர்ப்பதில்லை –
திருவோணம் ஸ்ரவண தீபம் பிரசித்தம் –
உப்பிலி அப்பன் /ஒப்பிலி அப்பன் /பொன்னப்பன் / முனியப்பன் /முத்தப்பன்/ -என் அப்பன் –
-ஐந்து அப்பன் -திரு நாமங்களுடன் சேவை சாதிக்கிறார் –
ஸ்ரீனிவாசனுக்கு அண்ணன் என்பர் –சுத்த ஆனந்தம் -விமானம் –
மகா லஷ்மி தாயாரே பூமி தேவியாக சேவை இங்கு
பங்குனி ஏகாதசி திருவோணம் –தோன்றி -பேச்சு வார்த்தை -ஐப்பசி திருவோணம் திருக் கல்யாணம் –
தற்போது உள்ள பெயர் ஸ்ரீ ஒப்பிலியப்பன் கோவில்
மூலவர் ஸ்ரீ ஒப்பிலியப்பன்
கோலம் நின்ற
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ ஸ்ரீனிவாசன்
தாயார் ஸ்ரீ பூமி தேவி
தீர்த்தம் ஸ்ரீ அஹோராத்ரா புஷ்கரணி
விமானம் ஸ்ரீ சுத்தானந்த விமானம்
மண்டலம் சோழநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ கும்பகோணம்
நாமாவளி ஸ்ரீ பூமிதேவி ஸமேத ஒப்பிலியப்பன் ஸ்வாமிநே நமஹ
————–
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -34-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ நம் ஆழ்வார் -11-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பேயாழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்
மொத்தம் –47-பாசுரங்கள் மங்களாசாசனம்
————–
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -34-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஆண்டாய் யுன்னைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல் வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே –6-1-1/9
பூ மரு பொழில் அணி விண்ணகர் மேல் காமரு சீர்க் கலிகன்றி சொன்ன பாமரு தமிழ் இவை -6-1-10-
நின் அடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே -6-2-1-
சிறந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே -6-2-2-
என் மனத்து இருந்த தேனே நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-3-
ஐம்புலன்கள் இடர் தீர வெறிந்து வந்து செறிந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே -6-2-4-
மனை வாழ்க்கை தன்னை வேண்டேன் நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-5-
இலங்கை அழித்த வில்லா நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே -6-2-6-
கூறா வைவர் வந்து குமைக்கக் குடி விட்டவரைத் தேறாது உன்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே–6-2-7-
மூவா வானவர்தம் முதல்வா மதி கோள் விடுத்த தேவா நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே -6-2-8-
தூதா தூ மொழியாய் சுடர் போல் என் மனத்து இருந்த வேதா நின்னடைந்தேன் திரு விண்ணகரம் மேயவனே-6-2-9-
தேனார் பூம் புறவில் திரு விண்ணகர் மேயவனை–மங்கையர் கோன் மருவார் –ஊனார் வேல் கலியன் ஒலி செய் தமிழ் மாலை–6-2-10-
பிறப்பேனாக எண்ணேன் பிறவாமை பெற்றது நின் திறத்தேன் ஆ தன்மையால் திரு விண்ணகரானே–6-3-1-
அறந்தானாய்த் திரிவாய் யுன்னை என் மனத்தகத்தே திறம்பாமல் கொண்டேன் திருவிண்ணகரானே -6-3-2-
கோனே குறுங்குடியுள் குழகா திரு நறையூர்த் தேனே வரு புனல் சூழ் திரு விண்ணகரானே–6-3-3-
போந்தேன் புண்ணியனே உன்னை எய்த்து என் தீ வினைகள் தீர்ந்தேன் நின்னடைந்தேன் திருவிண்ணகரானே -6-3-4-
இலங்கை ராவணனைச் செற்றாய் கொற்றவனே திருவிண்ணகரானே–6-3-5-
உய்யும் வகை உணர்ந்தேன் உண்மையால் இனி யாதும் மற்றோர் தெய்வம் பிறிது அறியேன் திருவிண்ணகரானே-6-3-6-
நெஞ்சு தன்னால் குணம் கொண்டு மற்றோர் தெய்வம் தேறேன் உன்னை அல்லால் திருவிண்ணகரானே –6-3-7-
அளிந்தோர்ந்த சிந்தை நின் பால் அடியேற்கு வானுலகம் தெளிந்தே என்று எய்துவது திரு விண்ணகரானே –6-3-8-
மல்லா குடமாடி மதுசூதனே யுலகில் செல்லா நல்லிசையாய் திருவிண்ணகரானே -6-3-9-
திரு விண்ணகரானைக் காரார் புயல் தடக்கைக் கலியன் ஒலி மாலை–6-3-10-
முத்தினை மணியை மணி மாணிக்க வித்தினை * சென்று விண்ணகர்க் காண்டுமே. -பெரிய திருமொழி -10-9-8-
விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும் நின்றானை * தண் குடந்தைக் கிடந்த மாலை நெடியானை
அடி நாயேன் நினைந்திட்டேனே. —திருநெடுந்தாண்டகம் – 29-
காரார் மணி நிற கண்ணனூர் விண்ணகரம் சீரார் கண புரம் சேறை திருவழுந்தூர் –சிறிய திருமடல் – 72
தாமரை மேல் மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன் மலையை –பெரிய திருமடல் – 113
————-
ஸ்ரீ நம் ஆழ்வார் -11-பாசுரங்கள் மங்களாசாசனம் –
என்னை ஆள்வானைச் செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே–6-3-1-
என்னை ஆள்வானூர் தெண் திரைப் புனல் சூழ் திரு விண்ணகர் நன்னகரே–6-3-2-
திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே-6-3-3-
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த பிரான் கண்ணன் இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே–6-3-4-
செய்த திண் மதிள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் பெய்த காவு கண்டீர் பெருந் தேவுடை மூவுலகே–6-3-5-
தேவர் மேவித் தொழும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே–6-3-6-
திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் வரங் கொள் பாத மல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே–6-3-7-
திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே–6-3-8-
மின்னப் பொன் மதிள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்த அப்பன் தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள் நிழலே–6-3-9-
திருவிண்ணகர் மன்னு பிரான் கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலம்; காண்மின்களே–6-3-10-
திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார் கோணை இன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே–6-3-11
————
ஸ்ரீ பேயாழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்
இளங் குமரன் தன் விண்ணகர்.–மூன்றாம் திருவந்தாதி – 61-
விண்ணகரம் வெஃகா விரி திரை நீர் வேங்கடம் மண்ணகரம் மா மாட வேளுக்கை–62-
——————
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -34-பாசுரங்கள் மங்களாசாசனம்
வண்டுண் மலர் இண்டை கொண்டு பண்டை நம் வினை கெட வென்று அடியேன்
தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு அண்டமொடு அகலிடம் அளந்தவனே
ஆண்டாய் யுன்னைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே –6-1-1-
அண்ணல் செய்து அலைகடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே
விண்ணவர் அமுதுண்ண வமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே -6-1-2–
குழல் நிற வண்ண நின் கூறு கொண்ட தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம்
விழ நனி மலை சிலை வளைவு செய்து அங்கு அழல் நிறம் அம்பது வானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே —6-1-3-
நிலவோடு வெயில் நில விருசுடர் உலகமும் உயிர் களும் உண்டு ஒரு கால்
கலை தரு குழவியின் உருவினையாய் அலைகடல் ஆலிலை வளர்ந்தவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-4-
பாரெழு கடலெழு மலை ஏழு மாயச் சீர் கெழும் இவ் உலகு ஏழும் எல்லாம்
ஆர்குழு வயிற்றினில் அடக்கி நின்று அங்கோர் எழுத்து ஓர் உரு வானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே -6-1-5-
கார்கெழு கடல்களும் மலைகளுமாய் ஏர் கெழும் உலகுமுமாகி முத
லார்களும் அறிவரும் நிலையினாய்ச் சீர் கெழு நான்மறை யானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-6-
உருக்கு நறு நெய் கொண்டு ஆர் அழலில் இருக்கு உறும் அந்தணர் சந்தியின் வாய்
பெருக்கமோடு அமரர்கள் அமர நல்கும் இருக்கினில் இன்னிசை யானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே–6-1-7-
காதல் செய்து இளையவர் கலவி தரும் வேதனை வினையது வெருவுதலாம்
ஆதலில் உனது அடியன் அணுகுவன் நான் போதலர் நெடு முடிப் புண்ணியனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே–6-1-8-
சாதலும் பிறத்தலும் என்று இவற்றை காதல் செய்யாது உன் கழல் அடைந்தேன்
ஓதல் செய் நான்மறையாகி யும்பராதல் செய் மூவுருவானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-9-
பூ மரு பொழில் அணி விண்ணகர் மேல்
காமரு சீர்க் கலிகன்றி சொன்ன
பாமரு தமிழ் இவை பாட வல்லார்
வாமனன் அடி இணை மருவுவரே-6-1-10-
பொறுத்தேன் புன் சொல் நெஞ்சில் பொருள் இன்பம் என இரண்டும்
இறுத்தேன் ஐம்புலன் கட்கனாயின வாயிலொட்டி
யறுத்தேன் யார்வச் செற்றமவை தன்னை மனத் தகற்றி
வெறுத்தேன் நின் அடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே -6-2-1-
மறந்தேன் உன்னை முன்னம் மறந்த மதியில் மனத்தால்
இறந்தேன் எத்தனையும் அதனால் இடும்பை குழியில்
பிறந்தே எய்த்து ஒழிந்தேன் பெருமான் திரு மார்பா
சிறந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே -6-2-2-
மானேய் நோக்கியர் தம் வயிற்றுக் குழியில் உழைக்கும்
ஊனேர் ஆக்கை தன்னை யுதவாமை உணர்ந்து உணர்ந்து
வானே மா நிலமே வந்து வந்து என் மனத்து இருந்த
தேனே நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-3-
பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின்னுதவாவது
அறிந்தேன் நீ பணித்த வருள் என்னும் ஒள் வாள் உருவி
எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர வெறிந்து வந்து
செறிந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே -6-2-4-
பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப
ஆண்டார் வையம் எல்லாம் அரசாகி முன் ஆண்டவரே
மாண்டார் என்று வந்தார் அந்தோ மனை வாழ்க்கை தன்னை
வேண்டேன் நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-5-
கல்லா ஐம் புலன்கள் வவை கண்டவாறே செய்ய கில்லென்
மல்லா மல் அமருள் மல்லர் மாள மல்லடர்த்த
மல்லா மல்லல் அஞ்சீர் மதிள் நீர் இலங்கை அழித்த
வில்லா நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே -6-2-6-
வேறாய் யான் இரந்தேன் வெகுளாது மனக்கொள் எந்தாய்
ஆறா வென் நரகத்து அடியேனை இடக்கருதிக்
கூறா வைவர் வந்து குமைக்கக் குடி விட்டவரைத்
தேறாது உன்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே–6-2-7-
தீவாய் வல்வினையார் உடன் நின்று சிறந்தவர் போல்
மேவா வென் நரகத்து இட உற்று விரைந்து வந்தார்
மூவா வானவர்தம் முதல்வா மதி கோள் விடுத்த
தேவா நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே -6-2-8-
போதார் தாமரையாள் புலவிக் குல வானவர்தம்
கோதா கோதில் செங்கோல் குடை மன்னரிடை நடந்த
தூதா தூ மொழியாய் சுடர் போல் என் மனத்து இருந்த
வேதா நின்னடைந்தேன் திரு விண்ணகரம் மேயவனே-6-2-9-
தேனார் பூம் புறவில் திரு விண்ணகர் மேயவனை
வானாரும் மதிள் சூழ் வயல் மங்கையர் கோன் மருவார்
ஊனார் வேல் கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார்
கோனாய் வானவர் தம் கொடி மா நகர் கூடுவரே -6-2-10-
துறப்பேன் அல்லேன் இன்பம் துறவாது நின்னுருவம்
மறப்பேன் அல்லேன் என்றும் மறவாது யானுலகில்
பிறப்பேனாக எண்ணேன் பிறவாமை பெற்றது நின்
திறத்தேன் ஆ தன்மையால் திரு விண்ணகரானே–6-3-1-
துறந்தேன் ஆர்வச் செற்ற சுற்றம் துறந்தமையால்
சிறந்தேன் நின்னடிக்கே யடிமை திருமாலே
அறந்தானாய்த் திரிவாய் யுன்னை என் மனத்தகத்தே
திறம்பாமல் கொண்டேன் திருவிண்ணகரானே -6-3-2-
மானேய் நோக்கு நல்லார் மதி போல் முகத்து உலவும்
ஊனேய் கண் வாளிக்கு உடைந்து ஓட்டந்து உன்னடைந்தேன்
கோனே குறுங்குடியுள் குழகா திரு நறையூர்த்
தேனே வரு புனல் சூழ் திரு விண்ணகரானே–6-3-3-
சாந்தேந்து மென்முலையார் தடந்தோள் புணரின்ப வெள்ளத்து
ஆழ்ந்தேன் அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன்
போந்தேன் புண்ணியனே உன்னை எய்த்து என் தீ வினைகள்
தீர்ந்தேன் நின்னடைந்தேன் திருவிண்ணகரானே -6-3-4-
மற்றோர் தெய்வம் எண்ணேன் உன்னை என் மனத்து வைத்துப்
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை எம்பெருமான்
வற்றா நீள் கடல் சூழ் இலங்கை ராவணனைச்
செற்றாய் கொற்றவனே திருவிண்ணகரானே–6-3-5-
மை ஒள் கருங்கடலும் நிலனும் அணி வரையும்
செய்ய சுடர் இரண்டும் இவையாய நின்னை நெஞ்சில்
உய்யும் வகை உணர்ந்தேன் உண்மையால் இனி யாதும் மற்றோர்
தெய்வம் பிறிது அறியேன் திருவிண்ணகரானே-6-3-6-
வேறே கூறுவது உண்டு அடியேன் விரித்து உரைக்கு
மாறே நீ பணியா தடை நின் திரு மனத்து
கூறேன் நெஞ்சு தன்னால் குணம் கொண்டு மற்றோர் தெய்வம்
தேறேன் உன்னை அல்லால் திருவிண்ணகரானே –6-3-7-
முளிந்தீய்ந்த வெம் கடத்து மூரிப் பெரும் களிற்றால்
விளிந்தீய்ந்த மா மரம் போல் வீழ்ந்தாரை நினையாதே
அளிந்தோர்ந்த சிந்தை நின் பால் அடியேற்கு வானுலகம்
தெளிந்தே என்று எய்துவது திரு விண்ணகரானே –6-3-8-
சொல்லாய் திரு மார்பா உனக்காகித் தொண்டு பட்ட
நல்லேனை வினைகள் நலியாமை நம்பு நம்பீ
மல்லா குடமாடி மதுசூதனே யுலகில்
செல்லா நல்லிசையாய் திருவிண்ணகரானே -6-3-9-
தாரார் மலர்க் கமலத் தடம் சூழ்ந்த தண் புறவில்
சீரார் நெடு மறுகில் திரு விண்ணகரானைக்
காரார் புயல் தடக்கைக் கலியன் ஒலி மாலை
ஆரார் இவை வல்லார் அவர்க்கு அல்லல் நில்லாவே -6-3-10-
பத்தராவியைப் பான் மதியை * அணித் தொத்தை மாலிருஞ்சோலைத் தொழுது போய் *
முத்தினை மணியை மணி மாணிக்க வித்தினை * சென்று விண்ணகர்க் காண்டுமே. -பெரிய திருமொழி -10-9-8-
அன்றாயர் குலமகளுக் கரையன் தன்னை அலை கடலைக் கடைந் தடைத்த அம்மான் தன்னை *
குன்றாத வலி யரக்கர் கோனை மாளக் கொடுஞ்சிலை வாய்ச் சரந் துரந்து குலங் களைந்து
வென்றானை * குன்றெடுத்த தோளினானை விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும்
நின்றானை * தண் குடந்தைக் கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே. —திருநெடுந்தாண்டகம் – 29
காரார் மணி நிற கண்ணனூர் விண்ணகரம் சீரார் கண புரம் சேறை திருவழுந்தூர் –சிறிய திருமடல் – 72
தன்னுலக மாக்குவித்த தாளானை தாமரை மேல் மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன் மலையை * –பெரிய திருமடல் – 113
————-
ஸ்ரீ நம் ஆழ்வார் -11-பாசுரங்கள் மங்களாசாசனம்
நல் குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல் பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல் வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே–6-3-1-
கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்
தெண் திரைப் புனல் சூழ் திரு விண்ணகர் நன்னகரே–6-3-2-
நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய்
நிகரில் சூழ் சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய்ச்
சிகர மாடங்கள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே-6-3-3-
புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய்
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய்
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த பிரான்
கண்ணன் இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே–6-3-4-
கை தவம் செம்மை கருமை வெளுமையுமாய்
மெய் பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய்ச்
செய்த திண் மதிள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
பெய்த காவு கண்டீர் பெருந் தேவுடை மூவுலகே–6-3-5-
மூ வுலகங்களுமாய் அல்லனாய் உகப்பாய் முனிவாய்
பூவில வாழ் மகளாய்த் தவ்வையாய்ப் புகழாய்ப் பழியாய்த்
தேவர் மேவித் தொழும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே–6-3-6-
பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கை தவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
வரங் கொள் பாத மல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே–6-3-7-
வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங் கூற்றமுமாய்த்
தன் சரண் நிழற் கீழ் உலகம் வைத்தும் வையாதும்
தென் சரண் திசைக்குத் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே–6-3-8-
என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப் பொன் மதிள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்த அப்பன்
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள் நிழலே–6-3-9-
நிழல் வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்
மழலை வாய் வண்டு வாழ் திருவிண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலம்; காண்மின்களே–6-3-10-
காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாளிணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணை இன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே–6-3-11-
—————-
ஸ்ரீ பேயாழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்
பண்டெல்லாம் வேங்கடம் பாற் கடல் வைகுந்தம் *
கொண் டங்குறைவார்க்குக் கோயில் போல் * – வண்டு
வளங்கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை *
இளங் குமரன் தன் விண்ணகர்.–மூன்றாம் திருவந்தாதி – 61
விண்ணகரம் வெஃகா விரி திரை நீர் வேங்கடம் *
மண்ணகரம் மா மாட வேளுக்கை * மண்ணகத்த
தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி *
தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு.—மூன்றாம் திருவந்தாதி – 62-
மூலவர்-ஒப்பிலயப்பன் (ஒப்பற்றவன்) உப்பிலியப்பன் உப்பில்லா பண்டம் ஏற்பவன் என்பது திருநாமம்.
திருப்பதி வெங்கடாசலபதியைப் போன்றதோற்றம். நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம்
தாயார்-பூமிதேவி (பூமிநாச்சியார் எனும் திருநாமம்)
உற்சவர்–மூலவருக்கும், தாயாருக்கும் உரிய அதே பெயர்கள்.
இங்கு பெருமாள் மட்டும் தனியே புறப்பாடு ஆவதே இல்லை. எப்போதும் பிராட்டியுடன் சேர்ந்தே செல்வார்.
விமானம்– சுத்தானந்த விமானம் (தரிசிப்பவருக்கு ஆனந்தம் தருவது) விஷ்ணுவிமானம் என்றும் பெயர்.
தீர்த்தம்– அஹோராத்ர புஷ்கரணி (இரவு, பகலென்றில்லாமல் 24 மணி நேரமும்
நீராடலாம் என்பதால் அஹோராத்ர தீர்த்தமாயிற்று)
மற்றும் ஆர்த்தி புஷ்கரிணி, சார்ங்க தீர்த்தம், சூர்ய தீர்த்தம், இந்திர தீர்த்தம்.
காட்சி கண்டவர்கள் — மார்க்கண்டேயர், காவேரி, கருடன்.
சிரவண நட்சத்திரத்தன்று (திருவோண நட்சத்திரம்) சிரவண தீபம் எடுத்துக் குறி சொல்லுவது இங்குவிசேஷம்)
இத்தலத்துப் பெருமான் தானே மிகவும் உகந்து ஆழ்வாரை அணைந்து ஐந்து திருக்கோலங்களில் காட்சி கொடுத்தார்.
அவையாவன. பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என்னப்பன், திருவிண்ணகரப்பன்
இத்தலத்தையும், பெருமானையும் பற்றி நம்மாழ்வார் 11 பாசுரம், திருமங்கையாழ்வார் 34 பாக்கள், பொய்கை யாழ்வார் 1, பேயாழ்வார் 2.
மங்களாசாசனம்
வடமொழியில் இத்தலம் வைகுண்டத்திற்குச் சமமானதாகப் பேசப்படுகிறது. எனவே இதனை ஆகாச நகரி என்றே வடநூல்கள்
கூறுகின்றன. வைகுண்டத்தில் ஓடக்கூடிய விரஜா நதியே நாட்டாரு (தட்சிண கங்கை) என்ற பெயரில் இங்கு ஓடுவதாக ஐதீஹம்.
கையும் உரையும் கருத்தும் -உனக்கே அடிமை
செய்யும் படி நீ திருத்தினாய் ஐயா
திரு விண்ணகராளா சிந்தையிலும் எண்ணேன்
பெரு விண்ணகர் ஆளும் பேறு –16-
கையும் உரையும் கருத்தும் -கைகளும் வாக்கும் எண்ணமும் -முக்கரணங்களையும்-
பெரு விண்ணகர் ஆளும் பேறு –பெருமை பெற்ற தேவ லோகத்தை ஆளும் பேற்றை
சிந்தையிலும் எண்ணேன்–ஒரு பொருட்டாக மனசாலும் நினைக்க மாட்டேன் –
ஆனாத செல்வத்து அரம்பையர்கள் சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன் –
———————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply