மூலவர் -வாழ்வில் இராமன் / புஜங்க சயனம் /கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -பொற்றாமரையாள்
விமானம் -சோபனா விமானம்
தீர்த்தம் -ஜடாயு தீர்த்தம் / க்ருத்ர புஷ்கரிணி
மங்களா சாசனம் -திரு மங்கை ஆழ்வார்
இராவணன் இடம் நடந்த போரில் ஜடாயு மஹா ராஜா அடிபட்டு மரணம் அடைய -ஈமக்கி கடன்களை செய்து பெருமாள்
ஜடாயுவை மோக்ஷ சாம்ராஜ்யத்துக்கு அனுப்பி வைத்து இக்காட்சிகளை இங்கே பக்தர்களுக்கு காட்டி அருளினார்
சோமுகன் என்னும் அரக்கன் பிரமன் இடம் இருந்து வேதங்களை திருட -இங்கே பகவான் பிரமனுக்கு மீண்டும் வேதங்களை உபதேசித்தார் –
திரு மண்டங்குடி இதன் அருகில் -உள்ளது –
தாக்கீது -நாசிக் பஞ்சவடி அருகில் நடந்தது –திருப் புட் குழியிலும் சேவை இங்கே போலே
அஹோபில மேடம் அதீனம் -தேசிகர் சந்நிதி பிரசித்தம் –
ஜடாயு ஹனுமான் லஷ்மணன் பூமி தேவி கர்ப்ப க்ருஹத்துக்குள் சேவை
இரண்டு திருக்கரங்கள் –கண்டு மங்களா சாசனம் பண்ணாமல் போக -சங்கு சக்கரத்துடன் சேவை சாதித்து பாடல் பெற்றாராம்
சயன திருக்கோலம் இங்கும் திருப்புல்லாணியிலும் -இராமனை சேவிக்கலாம் – கம்பரும் பாடி -இவனாகும் அவ்வல் வில் ராமன்
மூலவர் ஸ்ரீ கோல வல் வில் ராமன்
கோலம் சயனம்
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ கோல வல் வில் ராமன்
தாயார் ஸ்ரீ ஹேமாம்புஜவல்லி, ஸ்ரீ பொற்றாமரையாள்
தீர்த்தம் ஸ்ரீ கிருத்ர தீர்த்தம்
விமானம் ஸ்ரீ ஷோபன விமானம்
மண்டலம் சோழநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ கும்பகோணம்
நாமாவளி ஸ்ரீ பொற்றாமரையாள் ஸமேத ஸ்ரீ வல்வில்ராமாய நமஹ
——————-
அறிவது அரியான் அனைத்து உலகும் உடையான் என்னை யாளுடையான்
குறிய மாண் உருவாகிய கூத்தன் மன்னி யமரும் இடம்
நறிய மலர் மேல் சுரும்பார்க்க எழிலார் மஞ்ஞை நடமாடப்
பொறி கொள் சிறை வண்டிசை பாடும் புள்ளம் பூதங்குடி தானே -5-1-1-
கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்துப்
பொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்ந்த புனிதன் இடம்
பள்ளச் செறுவில் கயல் உகள பழனக் கழனி யதனுள் போய்
புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடும் புள்ளம் பூதங்குடி தானே–5-1-2-
மேவா வரக்கர் தென்னிலங்கை வேந்தன் வீயச் சரந்துரந்து
மாவாய் பிளந்து மல்லடர்த்து மருதம் சாய்த்த மாலதிடம்
காவார் தெங்கின் பழம் வீழக் கயல்கள் பாயக் குருகிரியும்
பூவார் கழனி எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே -5-1-3-
வெற்பால் மாரி பழுதாக்கி விறல் வாள் அரக்கர் தலைவன் தன்
வற்பார் திரள் தோள் ஐ நான்கும் துணித்த வல்வில் ராமனிடம்
கற்பார் புரிசை செய் குன்றம் கவினார் கூடம் மாளிகைகள்
பொற்பார் மாடம் எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே -5-1-4-
மையார் தடங்கண் கருங்கூந்தல் யாய்ச்சி மறைய வைத்த தயிர்
நெய்யார் பாலோடு அமுது செய்த நேமி யங்கை மாயனிடம்
செய்யார் ஆரல் இரை கருதிச் செங்கால் நாரை சென்று அணையும்
பொய்யா நாவில் மறை யாளர் புள்ளம் பூதங்குடி தானே –5-1-5-
மின்னின் அன்ன நுண் மருங்குல் வேயேய் தடந்தோள் மெல்லியற்காய்
மன்னு சினத்த மழம் விடைகள் ஏழு அன்று அடர்த்த மாலதிடம்
மன்னு முதுநீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட
புன்னை பொன்னேய் தாது உதிர்க்கும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-6-
குடையா விலங்கல் கொண்டு ஏந்தி மாரி பழுதா நிரை காத்து
சடையானோடே வடல் வாணன் தடந்தோள் துணித்த தலைவனிடம்
குடையா வண்டுகள் உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும்
புடையார் கழனி எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-7-
கறையார் நெடுவேல் மற மன்னர் வீய விசயன் தேர் கடவி
இறையான் கையில் நிறையாத முண்டம் நிறைந்த வெந்தை விடம்
மறையால் முத்தீயை வளர்க்கும் மன்னு புகழால் வண்மையால்
பொறையால் மிக்க வந்தணர் வாழ் புள்ளம் பூதங்குடி தானே–5-1-8-
துன்னி மண்ணும் விண்ணாடும் தோன்றாது இருளாய் மூடிய நாள்
அன்னமாகி அருமறைகள் அருளிச் செய்த அமலன் இடம்
மின்னு சோதி நவ மணியும் வேயின் முத்தும் சாமரையும்
பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-9-
கற்றா மறித்துக் காளியன் தன் சென்னி நடுங்க நடம் பயின்ற
பொற்றாமரையாள் தன் கேள்வன் புள்ளம் பூதங்குடி தன் மேல்
கற்றார் பரவும் மங்கையர் கோன் காரார் புயல் கைக் கலிகன்றி
சொல் தான் ஈரைந்து இவை பாடச் சோரா நில்லா துயர் தானே –5-1-10-
இத்திவ்ய தேசம் திரு ஆதனூர் திவ்ய தேசத்திலிருந்து சுமார் 3 பர்லாங் தூரத்தில் உள்ளது.
ஸ்ரீரங்கத்தைப் போலவே இத்தலமும் காவேரி கொள்ளிடத்திற்கு மத்தியில் உள்ளது. தொண்டரடிப்பொடியாழ்வாரின் அவதாரஸ்தலமான
மண்டங்குடி இங்கிருந்து சமீப தொலைவில் உள்ளது.-
நான்கு கரங்களுடன் சங்கு சக்ரதாரியாக ராமன் சயன திருக்கோலத்தில் உள்ள ஸ்தலம் 108 இல் இது ஒன்றுதான்.
மூலவர்–வல்வில் இராமன், புஜங்க சயனம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார்–பொற்றாமரையாள்
விமானம்– சோபன விமானம்
காட்சி கண்டவர்கள்– க்ருத்ரராஜன்
ஸ்ரீவைணவர்கட்கு) இரண்டு பூதபுரிகள் உண்டு.-ஒன்று ஸ்ரீபெரும்புதூர்.-அது ராமானுஜர் அவதரித்த இடம். இதை ஆழ்வார்கள் அபிமானித்தார்கள்.
அதை ஆச்சார்யார்கள் அபிமானித்தார்கள்.
சூரியனின் மகன்ஜடாயு-ஆதித்தன் மகனன்ன அகன் ஞாலத்தவரோடும்
போதித்த சடாயென்பான்”–உயிர் கிடக்க உடலை விசும்பேற்றினார் உணர்விறந்த கூற்றினாரே”
மறங்கொண்டங்கி ராவணன் தன் வலி கருதி வந்தானை புறங்கொண்ட சடாயென்பான்”
தூய்மையின் இருங்கலைத் துணிந்த கேள்வியன்
வாய்மையின் மறுஇலன் மதியின் கூர்மை
ஆய்மையின் மந்திரத்து அறிஞன் ஆம் எனச்
சேய்மையின்நோக்குறு சிறு கணான்
தூய்மையின் இருங்கலை துணிந்த கேள்வியர் – அதாவது-ஜீவாத்மா, பரமாத்மா என்ற இரண்டு தத்துவங்களை அறிந்தவர்.
வாய்மையின் மறு இலன் – அதாவது வாக்கு மாறாத் தன்மை பெற்றவர்.
மதியின் கூர்மை ஆய்மையின் மந்திரத்து அறிஞன் ஆம் என – அதாவது இவரின் அறிவானது திருமந்திரத்தை அறிந்த கூர்மையுடையது –
சேய்மையின் நோக்குறு சிறு கணான் – அதாவது வெகு தொலைவில் நடப்பதைக் காணக்கூடிய ஆற்றல் பெற்ற சிறிய கண்களை உடையவர் –
ஜடாயு என்ற வட சொல்லுக்கு – பலமயிர்கள் சேர்த்து திரித்த ஜடைபோல பலவாய் மிக்குத் திரண்ட ஆயுள் உடையவரென்றும், சிறகில்
உயிரை உடையவரென்றும் சடை உடையவரென்றும் பொருள்
தகப்பனாருக்குச் ச்ரம பரிஹாரம் பண்ணப் பெறாமையால் உண்டான குறை தீர ஜடாயுவுக்கு அதைச் செய்து அவனுக்கு மோட்சம் தந்து
அம்மகிழ்ச்சியால் பொலிவுறத் திகழ்ந்த இராமனை வல்வில் ராமன் என்றுதமிழில் வர்ணிக்க வடமொழியில் இதே பொருளில் த்ருட தந்வி என்று
வர்ணிக்கின்றனர்.
செந்தாமரைக் கண்ணோடும் செங்கனி வாயினோடும்
சந்தார்ந்த தடந்தோளோடும் தாழ்தடக் கைகளோடும்
அம்தார் அகலத்தோடும் அஞ்சனக் குன்றமென்ன
வந்தான் இவன்ஆகும் அவ்வல்வில் இராமன் என்பான்–சூர்ப்பணகை வார்த்தை
பூத்புரி ஷேத்ர வந்தே புன்னைவந ஸம்ஸ்திதம்
ஸௌமித்ரே சார சாஷ்டாநி நிர்மதிஷ்யாம பாவகம்
க்ருத்ராதம் திஷாஷாமி மத்க்ருதே நிதநம்கரம் – ஸ்ரீ ராமாயணம், ஆரண்யகாண்டம் 68-27
வைம் முத்தவா சிதலம் தீப்தா மரோப்ய பதகேச்வரம்
ததாளைராமோ தர்மாத்மா ஸ்வபந்து பிவ துக்கித்— 68-31
விமாநே ஸோபநே அம்புஜஸ்ரீ ஸீஸ மக்ரதம்
க்ரூத்ராஜண் புஷ்கரணித்தீரே லஷமனோலஷ்மி ஸம்பன்ன”
விரும்பினவை எய்தும் வினை அனைத்தும் தீரும்
அரும்பரம வீடு அடைவீர் பெரும் பொறிகள்
கள்ளம் பூதம் குடி கொள் காயமுடையீர் அடிகள்
புள்ளம் பூதங்குடியில் போம் –7-
பெரும் பொறிகள்-இந்த்ரியங்கள் -பெரும் பொறி என்றவாறு –
கள்ளம் பூதம் குடி கொள் காயமுடையீர் -கள்ளம் -வஞ்சனை குணம் பூதம் -பஞ்ச பூதங்கள் -பொருந்த பெற்ற சரீரத்தை
மண்ணாய் நீர் எரி கால் மஞ்சு உலாவும் ஆகாசமுமாம் புண்ணார் ஆக்கை –
அடிகள் புள்ளம் பூதங்குடியில் போம் -எம்பெருமான் விரும்பி எழுந்து அருளி இருக்கும் இந்த திவ்ய தேசம் சேருமின் -சேர்ந்தால்
விரும்பினவை எய்தும்
வினை அனைத்தும் தீரும்
அரும்பரம வீடு அடைவீர்
ஜடாயு மகா ராஜருக்கு பிரத்யஷமான திவ்ய தேசம் –
————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply