பஞ்ச கிருஷ்ண க்ஷேத்ரங்களில் ஓன்று
மூலவர் -கஜேந்திரன் / புஜங்க சயனம் / கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -ரமாமணி வல்லி / பொற்றாமரையாள்
விமானம் -காகா நாக்ருதி விமானம்
தீர்த்தம் -கஜேந்திர புஷ்கரிணி -கபில தீர்த்தம்
மங்களா சாசனம் -திரு மழிசை ஆழ்வார்
கஜேந்திர மோக்ஷத்தை சேவிக்க வேண்டும் என்று ஆஞ்சநேயர் பிரார்த்திக்க பெருமாள் இந்த ஷேத்ரத்தில் தவம் இயற்றும் படிக் கூறினார்
கபியான ஆஞ்சநேயரின் கோரிக்கைக்கு இணங்க இங்கு கஜேந்திர வரனாக சேவை சாதித்து அருள்கிறார்
இதனால் கபித்தலம் என்ற பெயர் ஏற்பட்டது -இந்த்ரத்யும்ன மஹா ராஜாவுக்கும் பகவான் இதே காட்சியை அளித்ததாகக் கூறப் பட்டது –
ஆற்றங்கரைக்கு கிடக்கும் கண்ணன் –ஏகாந்த ஸ்தலம் -உரை கிடக்கும் உள்ளம் எனக்கு -சரம ஸ்லோகம் உள்ளத்தில் இருக்க கூற்றம் சாராதே
கொள்ளிடம் காவேரி நடுவில் இதுவும்
பாக்ஸர் -சோனிபூர் -பீகார் அருகில் நடந்தது -கிருத யுக கஜேந்திர விருத்தாந்தம் காண திருவடி ஆசைப்பட -சேவை சாதித்து அருளி –
மூலவர் ஸ்ரீ கஜேந்திர வரதன்
கோலம் சயனம்
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ கஜேந்த்ர வரதன்
தாயார் ஸ்ரீ ராமாமணி வல்லி, ஸ்ரீ பொற்றாமரையாள்
தீர்த்தம் ஸ்ரீ கஜேந்திர புஷ்கரணி
விமானம் ஸ்ரீ ககநாக்ருதி விமானம்
மண்டலம் சோழநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ கும்பகோணம்
நாமாவளி ஸ்ரீ ரமாமணிவல்லீ ஸமேத ஸ்ரீ கஜேந்த்ரவரதாய நமஹ
—————-
கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா * தீ
மாற்றமும் சாரா வகை யறிந்தேன் * – ஆற்றங்
கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் * மாயன்
உரைக் கிடக்கு முள்ளத் தெனக்கு.–நான்முகன் திருவந்தாதி – 50
தஞ்சையிலிருந்து திருவையாறு வழியாக கும்பகோணம் செல்லும் பாதையில்
உள்ளது. இவ்வழியில் 4 திவ்ய தேசங்கள் உள்ளன
மூலமே யென்ற கரிமுன் வந்திடர்
தொலைத்து நீலமேகம் போல் நின்றான்”
கூற்றுரல் கராவின் வாயின்றழைத்த
குஞ்சர ராஜன் முன் அன்று –
தோற்றிய படியே தோற்றினான் – முடிவும்
தோற்றமும் இலாத பைந்துழவோன்”–குஞ்சரம் என்றால் யானை, கரா என்றால் முதலை.
மூலவர்–கஜேந்திர வரதன், புஜங்கசயனம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார்–ரமாமணவல்லி (பொற்றாமரையாள்)
விமானம்- ககநாக்ருத விமானம்
காட்சி கண்டவர்கள்–கஜேந்திரன் என்ற இந்திராஜு ம்னன் முதலையாயிருந்த, கூஹூ.
தீர்த்தம்– கஜேந்திர புஷ்கரணி, கபில தீர்த்தம்.
காணியும் இல்லமும் கைப் பொருளும் ஈன்றோரும்
பேணிய வாழ்க்கையும் பேர் உறவும் சேணில்
புவித் தலத்தில் இன்பமும் பொங்கு அரவம் ஏறிக்
கவித் தலத்தில் கண் துயில்வோன் காண் –28-
அடியேனுக்கு
காணியும் இல்லமும் கைப் பொருளும் ஈன்றோரும்
பேணிய வாழ்க்கையும் பேர் உறவும்
சேணில் புவித் தலத்தில் இன்பமும் -மறுமையிலும் இம்மையிலும் உண்டாகக் கூடிய இன்பங்களும்
சேணமேல் உலகம் –
பொங்கு அரவம் ஏறிக் கவித் தலத்தில் கண் துயில்வோன் காண் –
போகய போக உபகரண போக ஸ்தானங்கள் ஆகிய யாவும் எனக்கு எம்பெருமான் திருவடிகளே -என்றபடி –
புஜங்க சயனத்தில் கண் வளர்ந்து அருளுகின்றான் திருக் கபிஸ்தலத்தில்
அஸ்தானே பய சங்கை பண்ணும் -பொங்கு அரவம் –
திருவடிக்கு பிரத்யஷம் என்பதால் திருக் கபிஸ்தலம் -என்ற திரு நாமம் –
———-—————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply