பல்லவி சோபனம் சொல்லவந்தேன் உன் தன் தொண்டன் அனு மந்தன் அதுபல்லவி சோபனம் சானகித்தாயே சுவாமி ராம முந்த முந்த செயம் அந்த காரியமே ( சோப ) சரணங்கள் 1. ராமசாமிவிடும் ஒருகணைபட்டு ராவணன் உயிர் விட்டு - ஒரு மாமலைபோல் தரையின் மேல் வீழ்ந்தானே வைகுந்தம் சேர்ந்தானே இந்த ( சோப ) 2. தேவர் முனிவர்சிறை நீங்கிமுன் போலே செழிப்பாய் உன்னாலே பொல்லாப் பாவியரக்கன் பயங்கரம் விண்டாரே பதவிகள் கொண்டாரே இந்த ( சோப ) 3. இங்கேமுன் மோதிரம் தந்துதானே இரு என்று சொன்னேனே இப்போது அங்கேநீ எழுந்தருள எம்மானே அனுக்கிரகம் செய்தானே இந்த ( சோப ) 4. சந்திரன் இந்திரன் தேவர்க்குஸ்தாபனம் சகலர்க்கும் சோபனம் ஆகும் இந்த அரக்கியரை நான் கொல்லவேணும் எனக்கிது சோபனம் காணும் - இந்த ( சோப ) சீதாதேவி அனுமாரை உபசரித்தல் கனம் மலர்ந்த ராமதூ துவனிது சோபனஞ் சொலக் காதிற் கொண்டாள் தினம்மலர்ந்த சாமிதிரு வடிமலரைத் திசை நோக்கித் தெண்டனிட்டாள் தனம்மலர்ந்தாள் அகம்மலர்ந்தாள் முகம்மலர்ந்தாள் என் அன்னை சனகி முன்னாள் மனமலர்ந்த குறையெல்லாம் மாற்றினாள் அனுமானை வாழ்த்தினாளே . பல்லவி எந்நாளும் வாழிநீ தானே என் தெய்வம் உன்னைப்போல் உண்டோ அனுமானே . ( எந்நா ) அநுபல்லவி தென்னிலங்கை அரக்கன் தன்னைப்பட்சித் தாயே பின்னை மங்களம் சொல்லி என்னை ரட்சித் தாயே ( எந்நா ) சரணங்கள் 1. இருக்கும்சிறை மீட்பேன் என்ற வாக்கியம் என்முன் உரைத்தபடி செய்தாயே என் பாக்கியம் அப்பாஉன் கருத்தில் நீ பிடித்ததேவை ராக்கியம் உனக்குப் பெருத்த மூவுலகும் கொடுத்தென்னசி லாக்கியம் சிரத்தினால் வணக்கம் செய்வதே யோக்கியம் ( எந்நா ) 2. மனத்தில் அடங்கா எனக்கிது நீதந்த னிச்சொல்வ தென்ன தனித்த சாமிக்கும் செய்தாயே உனக்கு நானென்ன செய்வேன் 3. இதமாம் என் சொல்லொன்றும் இவ்வரக் கியர்மேல் உதவி செய் யும்செய்கை எதுவும் தந் தேன் நீ இனிபயப் முதல்வர் மூவருக்கும் முதுகு விசாரம் நீக்கி சரீரம் - அய்யா உபசாரம் - அங்கே ஆதாரம் உபகாரம் ( எந்நா ) தடாதே கோபம் எடாதே இன்னம் விடாதே வரங்கள் படாதே கொடாதே ( எந்நா ) சீதாதேவி அக்கினியில் குளித்து எழுந்தது செவிக்கே சுபம்சொல் அனுமானைத் தேவி இவ்வாழிகள் சொன்னாள் தீரவிபீஷணனும் சென்றான் திருச்சேவைக்குச் சமயமென்றா புவிக்கோர் தாயே வருகென்றான் பூவைபழங்கோலங் கொண்டாள் பூவாகனமேற் சென்றையன் புனை தாள் அம்மை பணித்து நின்றாள் தவத்தோர்க் கருளும்சீராமன் தனது குறிப்பு வேறாகச் சாமி அடியேன் செய்தபிழை சகிப்பாய் என்றாள் தலைமேற்கை குவித்தாள் முக்கால் வலம் வந்தாள் கொழுந்தன் வளர்த்த செழுந்தணலிற் குதித்தாள் அப்போ தெழுந்தமருக் கொழுந்தாய் சீதை எழுந்தாளே . பல்லவி எழுந்தாளே பூங்கோதை எழுந்தாளே சீதை ( எழுந் ) அநுபல்லவி கொழுந்து போல் ஒளிஓங்கி குதித்த செந்தணல் நீங்கி ( எழுந் ) சரணங்கள் பூமேல் ஆரணன் வாணி 1. புரந்தரன் இந்திராணி பூதேசன் சர்வாணி அருந்தவன் உடன் கூட அமரர் சோபனம்பாட அருந்ததியும் கொண்டாட பூமலர் போட ( எழு ) செழுமஞ்சள் ஒளிமின்ன 2. திருமேனி தனில்வன்ன திசையெங் கும்பளபளென்ன தருமம் புகழ்ந்து துள்ள சகலசேனையும் மெள்ள தழைக்கும் எழுபது வெள்ள கவலை தள்ள ( எழு ) 3 மணிக்கூறை மசங்காமல் மலரடி கசங்காமல் மாலைவண்டசங்காமல் கலவைஈரம் வாங்காமல் கண்டோர்கள் ஏங்காமல் கனிவாய் நகை நீங்காமல் க்ஷணம் தாங்காமல் ( எழு ) குழல் மேல்வை மலராமல் 4. குங்குமம் புலராமல் கூந்தற்பூ உலராமல் அங்கே ராமன் முன்னாலே அலர்ந்த தாமரைப் போலே அக்கினிதேவன் கைமேலே மின்னலை போலே ( எழு ) அக்கினி பகவான் முறையிடல் எழுந்ததோர் சீதைதன்னை ஏந்திய அக்கினிதேவன் செழுந்துழாய் மாலை ராமன் திருமுன்னே வைத்து வீழ்ந்தான் புழுங்கினேன் சாமி இந்த பூவைகற் பென்னும் தீயால் அமுங்கினேன் எனத்தன வாய்மேல் அறையிட்டான் முறையிட்டானே .. பல்லவி என்ன பிழை செய்தேன் சாமிநான் அக்கினிதேவன் . ஏது பிழைகள் செய்தேன் சாமி ( என் ) அநுபல்லவி பன்னிச் சீதைதன்னை பதிவிராதாக் கினியாலே என்னில் இடுவித்தாயே என்னைச் சுடுவித்தாயே ( என் ) சரணங்கள் 1. எந்தப் பொருளையும் என்னையும் சுட்டதிந்த சுடுவதெனது சென்மம் அன்னைபத்தினி தன்மம் வேதத்திலும் எனையல்லால் உண்டோ ஒரு கன்மம் மெய்யாய் விளங்குமென்மேல் செய்யலாமோ வன்மம் ( என் ) தாமோ ஆமோ 2. பாலும் பதக்கு மோரும் பதக்கென்றெண்ணப் போமோ பைந்தொடி சீதைக்கிணை எந்தப் பெண்கள் நாலும் தெரிந்தும் இந்தக் கோலம் செய்யல் நங்கை வளாலே என் அங்கம் இப்படி வேமோ ( என் ) 3 , நீதி அனுமான் சொன்ன சேதிக்கும் உண்டோ லோபம் நினைப்பறிந்தும் சோதித்தாய் உனக்கிதில் என்ன லாபம் சோதி அருந்ததிக்கும் சீதைக்குண்டு பிர தாபம் சொன்னேன் சத்தியம் இதற்கென்மேல் என்ன கோபம் ( என் ) ஸ்ரீ ராமர் சீதாதேவியை அங்கீகரித்தல் மாட்சி இவ்வாறு சொல் அக்கினிதேவனை வள்ளல் கண்டான் சாட்சி எல்லாருக்கும் நீயே சனகிக்கும் சத்தியம் சொன்னாய் மீட்சி செய்வார் என்றுவிட்டான் அப்போது மிதிலைவல்லி காட்சி செய்ராகவன்முன்னே யிருந்து களித்தனளே . பிரம்மதேவர் ஸ்ரீராமரைத் தோத்திரம் செய்தல் அனம்போல் இவ்வா றெழுந்தாளை அருளால் நோக்கி ராகவனும் கனம்சேர் கென்றான் சனகிகுணம் கண்டு துதித்தான் பிரம்மாவும் நினைந்தான் சாமிநின்மகிமை நீயே அறிவாய் சீதையின் மேல் சினந்தான் ஏதென்றவள் பெருமை தெரிப்பான் புகழ்ந்து விரிப்பானே . கண்ணிகள் 1. பரராமா ரவி குலராமா புச பலரா மாகோ சலராமா சரராமா மனோ கரராமா சௌந் தரராமா ஆ யிரநாமா ராமராமா 2 . பள்ளமாயை இதற்குள்ளே புகுந்தெவர்க்கும் பரமபதந்தருவாய் என் கோவே கள்ளனுமாய் நின்று விளக்கும் பிடிக்கிறாய் உன் கபட்டை ஆரறிவார் என் கர்த்தாவே ராமராமா 3. முக்காடிட்டபிள்ளை முன்னின்ற பிள்ளையல்லால் முதற்குட்டின பிள்ளையை அறியாதே இக்காரியம் போல ஒன்றையொன்றெதிர் காட்டி இடைநின்ற உனைக்காண்ப தெப்போதே - ராமராமா 4. நீதியா நாலாறு பேருக்குள் ஒருவனை நீக்கி அருளும் வித்தை பூண்டாயே ஆதி மூலம் என்ற நாதத்திற் பதம் வைக்க ஆனைக்கு முன்னேவந் தாண்டாயே ராமராமா 5. கயிற்றைப் பாம்பென்றெண்ணி கலங்கும் வண்ணம் ஒரு கருக்கல் உண்டாகிய வகைபோலே மயக்கத்திலே நாங்கள் மயங்கும் வண்ணமிந்த மயக்கங் காட்டலாமோ நெடுமாலே ராமராமா 6. ஞாலம் தண்ணீர் அனல் வளிவெளி இவற்றைந்து நாலும் மூன்றிரண்டொன்றாம் அதிகாரா கோலம் மானிடங்காட்டி ஆளுக்குள்ளே ஆளாய் குறுகுறுக்கிறதென்ன ரகுவீரா ராமராமா 7 . மாயைதனைப் படைப்பாய் மாயையும் துடைப்பாய்உன் வல்லமை அறியாதல் லோ பூமி மாயைக்குள் திரும்பவும் மயக்கங் காட்டினால் உன் மகிமையை அறிவதெப் படிசாமி ராமராமா 8. நீயும் சீதையும்பெற்ற தாயும் தந்தையும் என்றே நினைக்கிறோம் நாங்கள் ச தாகாலம் தாயிவள் மகிமையைப் புவிக்குக் காட்ட வேண்டிச் சாமிநீ செய்தாயோ இக்கோலம் ராமராமா 9. கனிவினாலே எந்த உயிரும் உயிருக்குள்ளே கருத்தும் நீ தெரிவாயே பெரியோனே சனகி கருத்து மாத்திரம் தெரியாது போலிந்திர சாலம் செய்யலாமோ நீதானே ராமராமா 10. அக்கினியையும் சுடும் அக்கினி சீதை என்று அக்கினி அறிந்ததே இவள் சூட்சி இக்கோலம் ராவணன் தீண்டாமல் நிலத்தோடே எடுத்தானே இதைவிட என்சாட்சி ராமராமா 11. தீயையும் பிழைசொன்ன வாயையும் வடவைச் செந் தீயையும் சுடுமிவள் பிரதாபம் வாய்புளித் ததோமாங் காய்புளித்ததோ என்று மனதில் எண்ணினாலும் வெகுபாபம் ராமராமா 12. எள்ளுக்குள் எண்ணெய்போல் இருக்கிற நீசீதை இடத்தில் இருக்கலையோ பர்த்தாவே உள்ளக் கருத்தை வள்ளல் அறியும் என்ற வார்த்தை உனையல்லவோ சொல்லாய் கர்த்தாவே ராமராமா 13. எதிரரக் கரைக்கொன்றாய் பதியில் எங்களை வைத்தாய் இந்தத் தயவுனக் செங்கே போச்சோ மிதிலை வல்லியை இங்கே சோதித்தாய் எங்களை விருந்திட்டுப் பகைகாண மனதாச்சோ ராமராமா 14. இழுக்காகிய பொன்னைப் புடத்தில்வைத் தெடுப்பார்கள் வளுக் குண்டோ சொல்லாய் விதியாசம் அழுக்கில் லாத்தங்கத்தைப் புடத்தில் வைத்தெடுத்தாயே ஐயா உனக்கு முண்டோ மதிமோசம் ராமராமா மக்களையும் மருமகளையும் சக்கிரவர்த்தி புகழ்தல் ஆராத பிரமனிவ்வா றுரைக்கத் தேவர் அனுமதியாற் றசரதன்தேர் நிலமேற் கொண்டான் காராரும் குழற்சீதைக் குபசரித்தான் கற்பகமே வாழி என்றான் இளையோன் தன்னைச் சோராமல் அண்ணன் தாட் புண்ணும் இந்திரன் தோட்புண்ணும் துடைத்தனையே என்றான் கண்ட மாராபி ராமனைத்தன் மார்பில் கட்டி மகிழுவான் அவன் குணத்தைப் புகழுவானே . பல்லவி ஐயனே இன்றுன்னைக் கண்டேன் ஆனந்தங் கொண்டேன் ( ஐய ) அநுபல்லவி வையம் ஆள் தசரதனாம் என்னை மலடுநீக்கிவிட்டபிள்ளை வானவருக்கும் அந்த நான் முகனுக்கும் எட்டா மாயவன் உலகத்திலேஇரு என்றென்னை வைத்த ( ஐயா ) சரணங்கள் தாளிலே 1. மல்லிகைப்பூ மிதித்தாலும் வருந்தும் உன் தன் வனத்தில் உள்ள கல்லும் முள்ளும் பொறுத்தாய் இந்த நாளிலே எல்லாரும் காணக் கைகேசி சண்டாளி என் தோளிலே இருந்து செவியைக் கடித்தாற்போல் உன்னைப் பிரித்தாளே ஒரு கோளிலே செல்லும் தரித்திரனுக்குத் திரவியம் கண்டெடுத்தாற்போல் சென்மக் குருடனுக்குத் தெய்வம் கண் கொடுத்தாற்போல் ( ஐய ) 2. கைகேசி சொல்லம்புக் காயம் கொஞ்சத்திலே மாறுமோ கட்டிக்கொண்டாறின தல்லால் பின்னை ஒன்றால் ஆறுமோ அய்யாஉன் வாய்முத்தம்போல் அமுர்தமும்சுவை ஊறுமோ ஆர் முகமும் உன்முகம்போல் ஆகுமோ மனம் தேறுமோ கையும்மெய்யும் என் தன் கண்கள் தெரிசித்தது கண்கள் படைத்த பலன் இன்றல்லோ லபித்தது ( ஐய ) 3. பரதனையும் கூட்டிக்கொள்ள வேணுமோ உற் றுரிமைக்கு பாருள்ளோருனக்கொப்பாரோ என் அப்பா உன் தன் அருமைக்கு துருவமாம் அருந்ததி கூட நிகரோ சீதை பெருமைக்கு சோதிக்க வேணுமோ என்ன சொல்வேன் உன் தன் ஒருமைக்கு திருக்கண்ட கண்ணுக்குத் தீங்குண்டோ மென்மேலே தேவாதி தேவர்க்கும் சிறந்தேனே உன்னாலே ( ஐயா ) அனுமார் வசந்தனைக் கொண்டு வருதல் முடிபுனை யுந்தச ரதனுரை இங்கிது முழுதும் மொழிந்துடனே முதல்வர் வரந்தனில் அனைவர் களும்பழ முறையின் எழுந்தபினே இடர்பெரு கும்பர தனையரு ளும்படி வடதிசைப் புட்பகமேல் இரகுபதி யும்சன கியும் ஒரு தம்பியும் எவரும் நிறைந்திடுமுன் - மறு படியும்வசந் தனையொரு நிமிஷம் கொடு வருகென எம்பெருமான் வரை நிரு பந்தனை முடிமிசை கொண்டொரு மறலியின் மண்டலமும் அடுகளி றிந்திரன் உறைதரு மண்டலம் அயனுறை மண்டலமும் அதிரதி ரும்படி விசையனுமந் தனவ் வளவில் கிளம்பினனே . பல்லவி தாவி அனுமன் வந்தானே வசந்தனை ராம சாமிமுன் கொண்டோடிப் பாய்ந்தானே ( தாவி ) அநுபல்லவி காவல் வசந்தனைமுன் போலை காட்டென்று செங்கை ஓலை காகுத்தன் எழதிட எமபுரத் திசைகண்டு வேகத்துடனே அரை நொடியின் விசைகொண்டு ( தாவி ) சரணங்கள் 1. துருவி எமலோகத்தை வாட்டி வசந்தனில்லாமல் சொல்லி அரிகரி என்றுபா ராட்டி காலில் விழுந்த நரகவாசரை அப்பால் ஓட்டி காட்டடா என்று நமனை வாலிற் சுருக்கி மாட்டி எங்கெங்கும் தேடி கெருடவேக . மொடு கந்தர்வ லோகமும் இருகண்ணும் சிமிட்டா முன் இந்திர லோகமும் ( தாவி ) 2 ஐந்தாரு நீழல் எங்கும் பயந்துவந்த அந்தத் தேவரோடுரை யாடி சொர்க்கலோகத்தில் சந்தேகம் உண்டென்றதை நாடி அந்த லோகத்தில் சற்று நேரத்தில் போய்க் கூடி அதற்கப்புறம் பந்துபோல் எழும்பிப் பணைத்தவால் பெருக்கி அந்தக னுடனே ந்திரனையும் சுருக்கி ( தாவி ) தேடி கவலையா பிரம்ம லோகம் நோக்கி வசந்தனை இங்கே காட்டென்று பிரம்மாவுடன் தாக்கி இந்திரன் ஏமனோ டவனையும் வாலிற் கட்டித் தூக்கி சரசரென்று அந்த உலகைவிட்டுப் போக்கி மிகவும் நல்ல தவமிகுந்த பெரும் சத்திய முனிவர் கிட்டும் விவர முத்திதரும் விஷ்ணு பதவி மட்டும் ( தாவி ) ஸ்ரீராமர் இலங்கையில் பலர்பட்ட இடங்களைக் காட்டுதல் ஓகையுட னே அனுமான் இவ் வாறுவசந்தனைத்தான் உடனே கொண்டான் ஆகமது மிகக்களித்தார் வானரர்கள் மானிடர்கள் ஆனார் இப்பால் வாகைபெறு தம்பியுந்தா னும்பழைய புஷ்பகமேல் மகிழ்ந்த ராமன் தோகையெனும் சீதையுடன் சொல்லுவான் இவையிவைகள் சொல்லுவானே . கண்ணிகள் 1 . கன்னிகையே அந்த சனகன் வேள்வியில் வந்த கற்புள்ள மடமானே உன்னிமித்தத்தில் இந்த தென்னிலங்கை போனதை உற்றுப்பார் நீதானே 2. வடிக்கணை ஒன்றாலே நான் ராவணன் உயிர்கொண்ட வடக்கு வாசலைப் பாராய் கெடிபெறும் நீலனந்த பிரகஸ்தன் உயிர்பறித்த கிழக்கு வாசலைப் பாராய் 3. தீரன் அங்கதன் . அந்த வச்சிரத ந்தனைக் கொன்ற தெற்கு வாசலைப் பாராய் வீரன் உன் மைத்துனன் இந்திரசித்தனைக் கொன்ற மேற்கு வாசலைப் பாராய் 4. உறுதி சொல் கும்பகர்ணன் அதிகாயன் முதலானோர் உருண்ட களத்தைப் பாராய் பிறகு மூலபலங்கள் கால்மாடு தலைமாடாய் பிரண்ட களத்தைப் பாராய் 5. அடுபோரில் நமைக் காத்த அனுமான் அகம்பனை அன் றடுகளத்தைப் பாராய் படுபாவி அம்மகோ தரன் என்தன் கையிற்பட்ட படுகளத்தைப் பாராய் வேலை 6. வடிவான பாண்டம் கொட்டித் தட்டிச் செய்யும் குச வனுக்குப் பலநாள் தடிகாரனுக் கரை க்ஷணம் போல் அரக்கர் என்னால் சமைந்ததைப் பார்கண் ணாலை பாராய் 7. இந்திர சந்திர சூரியர் எட்டிப் பார்க்கக் கூடாத ஏழுமதில்கள் அந்தமாம் பாதாள லோகத்தின் கீழும்போல் அகழிகை வை பாராய் 8 . பாராய் சுக்கிரீவன் தங்கிநின்று ராவணன் மேற்பாய்ந்த சுவேலை மலையைப் க்கடல் சேனைப்பட்ட ரத்தக்கடலைக் கொண்ட இந்தக் கடலைப் பாராய் ஸ்ரீராமர் சீதைக்குச் சேதுவைக் காட்டி அதின் மகிமை கூறல் நிறமென் கூந்தற் சானகியே நின்னை அனுமான் கண்டு வந்த பிறகு கவிகள் ஒருநளனால் பெருக்கச் செயும்பே ரணைபாராய் உறுதியாக இதன் மகிமை உரைக்கமுடியா தானாலும் சிறிதுமொழிவேன் எனராமன் செல்வான் எடுத்துச் சொல்வானே . பல்லவி இந்த சேதுவைக் கண்டாற் போமே இகபர சித்தி சனகன் பெண்ணே ( இந்த ) ஆமே அநு பல்லவி சந்ததமும் மனத்திற் பிரியாதே பத்தினிகளும் தொழவரும் மாதே ( இந்த ) சரணங்கள் பசு 1. தந்தை தாயுடனே குருதெய்வ நிந்தனையும் கதிநீஎன்று தஞ்சம் அடைந்தவரைக் கெஞ்ச அடிக்கும் சற்பனையும் - அகதிகளை அந்தணரைப் பசுவை மைந்தரைக் கொல்லும் வேதனையும் பஞ்சகாலத்தில் அன்னமிட்டவரைக் கன்னமிட்டிடும் வஞ்சனையும் - பயப்படாமல் நிந்தையான கள்ளைக் குடிப்பதும் மந்தை உறிஞ்சுகல்லை இடிப்பதும் - நடுச் சந்தி விருட்சங்களை ஒடிப்பதும் பிறர் சொந்தப் பெண்களைக் கை பிடிப்பதும் நொந்தபேர் பொருளைக் கொண்ட தோஷமும் நோன்புகளை நடுவில் விண்ட தோஷமும் வந்தபேர் பசிக்க உண்ட தோஷமும் மடிநழுவும் பெண்களைக் கண்ட தோஷமும் ( இந்த ) 2. கேடுசெய்பவ ரோடுறவாகிய நிலையும் -- வயிற்றினிற்ப கீர் என்றிட வழக்கோரம் சொல்லிய கெடுதலையும் -- பா திசாமத்தில் வீடுகளில் மறைந்தோடி நெருப்பிடும் புலையும் கண்ணிகள் குத்தி விலங்கும் பறவைகளும் கலங்கிடவே செய்யும் கொலையும் ஆணும் பெண்ணும் வழி கூடும் கூட்டுறவைப் பாடுதம்பி நடக்கக் காடுகளிலே வெட்டிப் யாடும் பிள்ளைக் சழுத்தை நடுக் பிரிப்பதும் குறிப்பதும் பறிப்பதும் முறிப்பதும் விளை நாடிக் கொடுப்பவரைத் தடுக்கும் பாவமும் நாணிழந்த பெண்ணுடன் படுக்கும் பாவமும் கோடைக்குளத்தைத் துத்து விடுக்கும் பாவமும் கோட்சொல்லிக் குடிகளைக் கெடுக்கும் பாவமும் ( இந்த ) 3-மாலையிட்டவனை இகழ்ந்து சொல்லும் பாதகமும் வேறொருவனை மருவியதனில்வந்த கருவை யழிக்கும் தோதகமும் - பாலும்தேனும் போல இருப்பவரைக் கலைக்கும் மித்திர பேதகமும் - மாதவிடாய் பூத்த மங்கையரைச் சேர்த்தணைத்த சூதகமும் தருவேன் என்று மேலவர்களை அலைக் கழிப்பதும் - வழிச் சாலைசத்திரங்களை அழிப்பதும் - செய்யும் கால செபதபத்தை ஒழிப்பதும் - இடும் பாலே கவீசரைப் பழிப்பதும் தின்ற ஏலும் இறைச்சிகளைத் இருட்டினில் இடமில்லை என்ற ஆலயங்களிற் புணர் ஆற்றில் அம்மணத்துடன் சென்ற கின்ற தோஷமும் தோஷமும் தோஷமும் தோஷமும் ( இந்த ) ஸ்ரீராமர் சீதைக்கு வந்தவழி அடையாளம் கூறல் திருவணைப் பலன் ஈதென்று சிலையினாற்பகுத்த ராமன் தருமலர்க் குழலியான சானகி வதனம் நோக்கிப் பொருமதில் அயோத்தி விட்டுப் புறப்பட்ட நான் முன்தொட்டு வரும்வழி அடையா ளங்கள் வகுத்திட்டான் தொகுத்திட்டானே . பல்லவி ( சன ) சனகன்மாதே பாராய் - சனகன்மாதே அநுபல்லவி நினைவினுடன் மனம் மகிழப்பாராய்ப் பெண்ணே ( சன ) சரணங்கள் 1 --இலங்கைநகர் மேலே முந்நாள் எழுந்தனுமான் பாயவே இடந்தரும் மயேந்திரம் இது தலம்புகழ வேஎன்னை வருணன் அடைக்கலம் என்று சரண்புகுந்த தானம் இது பெண்ணே ( சன ) தானே தானே 2 மதிகதிர் உள்ளளவும் போம் பொதியமலை இது திவ்ய மகத்துவமுள்ள அகஸ்திய முனி கெதியில் எதிரேநின்ற மலையிது சுக்கிரீவன்வாழ் கிஷ்கிந்தை அவனுக்கா தீனம் - பெண்ணே தானம் (சன ) 3. சந்திரனை நட்சத்திரம்போல் உன் தனை ணங்கவே சகி செனங்கள் ஆகஒருக் இந்தமலை நின்றும் வா னரமாதர் உருமாறி இதோ வருகின்றார்பார் கண் ணாலே - பெண்ணே ( சன ) காலே 4. கிளைக்கும் என் அம்பினாலே ஏழுமரங்களும் வீழ்ந்து கிடக்கிறதைப் பார் நமக்கு நேராய் வளைக்கும் மழைக்காலத்தில் தம்பியுடன் நானிருந்த மாலிய வந்தமலை இதனைப் பாராய் - பெண்ணே ( சன ) 5. துதிசெய்துன் பணிகளைச் சுக்கிரீவன் காட்ட நான் துயருற்ற மதங்கஅடி வாரம் அதிக பயபக்தியா என்னையும் உன்னையும் காத்த அனுமன் கண்டதிவிடம்பம்பை ஓரம் - பெண்ணே ( சன ) 6 -சாலை தயவாக மனந்தேற்றிப் பசியாற்றி எனைப் போற்றி சபரி முத்திபெற்ற திந்த உயிர்போலும் உனைத்தேடி வாடும் வழிமேற்க வந்தன் உயிர்கொண்ட மூலையிந்த மூலை -பெண்ணே ( சன ) 7 . எதிர் தரும் ராவணன் கையில் பழமை பாராட்டி உன்னால் இறந்த தந்தைக் கிங்கே சமஸ் காரம் சதிர் செய்மூன்று வருஷமும் நாமிருக்கத் தம்பி செய்த சாலையிது பஞ்சவடி தீரம் - பெண்ணே ( சன ) 8 -இவிடம் மாரீசன்பட்ட திவிடம் சூர்பநகி கெட்ட திவிடம் கரதூஷணர் வி நாசம் இவிடம் கோதாவிரி அன்னை இவிடம் தம்பி கண்டதென்னை இவிடம் உன்னைராவணன் செய் மோசம் - பெண்ணே ( சன ) 9. தனித்து நீ புலம்பும் நாள் உன்னிமித்தம் உயிர்விடும் சடாயுவனம் இது அவன்என் சாமி அநித்தியம் இல்லா அகஸ்திய முனி எனக்குப் படைகொடுத்த இடம் அறிவையே ஈதல்லோ புண்ணிய பூமி - பெண்ணே ( சன ) 10. இது சுதிஷ்ட முனிவனது இது தண்டகாரணியம் இதுவே முனிவர்கட்கு வாசம் இது சரபங்கமுனி தேவியுடன் முத்திபெற்ற டமிது அதிகப்பிர காசம்- பெண்ணே ( சன ) 11. இங்கே விராதனைக் கொல்ல தேவனாகி எனைப் போற்றி ஏகினான் அல்லவோ வானின் தங்கப் பணிஉனக்கு அது சூசைதர எனை அத்திரி தயவோ டாதரித்த ஸ்தலம் ஈதே - பெண்ணே ( சன ) 12. கன்று பிரிந்தபசுப் போல் நான்பிரியப் பரதன்வந்து கண்டமலை இது சித்திரக் கூடம் அன்றி ளையவன் தள்ள ஏறிவந்த யமுனை இதுக் கடையாளம் பார் மூங்கிலாற் சய் ஓடம் - பெண்ணே ( சன ) மீதே காணி 13. ஈரேழு வருஷமும் நம்மைவரு வழி நோக்கி இருக்கும் பரத்துவனுக் கிது காரெழு குகன் காக்கும் கங்கையிது நம்மை முன்னாள் கரை ஏற்றி விட்டதிந்த தோணி - பெண்ணே ( சன ) 14. சீலமுள்ள தந்தையார்க்கு எள்ளும் நீரும் நான்இறைத்த தீர்த்தமிது கங்கைநதி நேத்தி மூலமுதற் பொருளிருக்கும் ஆலிலையைப் போல் இதோ முன்காணும் நகரம் அ யோத்தி - பெண்ணே ( சன ) ஸ்ரீராமர் வரவில்லையே என்று பரதர் புலம்பல் உரத்தாலே இந்தவிதம் உரைத்த ராமன் உடன் வரும் சேனையுந்தானும் பரத்து வாசன் வரச்சாலை யினிற்புகுந்தான் அயோத்தி தன்னில் மாருதியை அனுப்பஅவன் வரும்போ திங்கே தரத்தாலே எனக்குரைத்த நாளாச் சையோ சாமிவரு வானோவா ரானோ இன்னம் வரக்காணேன் என் ஆவி வைக்கேன் என்று வாடுவான் பரதன் நொந்து தேடு வானே . கண்ணிகள் 1. பதினாலு வருஷம் போய்ப் பரதா நான் வருகிறேன் பாரடா என்றாய் இந்தப் பூமி பதினாலு வருஷத்துக் குள்ளோ வருவது பதினாலும் போயோ என் சாமி - ராமராமா தானோ 2 உண்டான ராமவாக் கொன்றோ ரண்டோ என் தன் ஊழ்வினைப் பயன் இது மண்டையிலே எழுதி மயிரால் மறைத்துவைத்த மலரயன் கபடறி வேனோ ராமராமா 3. முக்கிய பாதுகையே எல்லாத் தெய்வமுமென்று முன்னாளிற் கட்டளையிட் டாயே தெற்குத் திசையே எல்லாத் திசையுமாம் என்றென்னைத் தினம் பார்த்துத் திகைக்கவிட் டாயே 4. வருவான் என் சாமி என்னைப் பிரியாதே என்று நெஞ்சை மடக்க மடக்க மடங் காதே இருபாதம் என்று சொல்லும் கரைகண்டாலல்லாமல் என் கண்ணீர் வெள்ளம் அடங் காதே - ராமராமா 5. உருகிற தாய்மார்க்கும் ஊர்க்கும் எனக்குஞ் சொன்ன ஒருவனைக் காணேன் கண் மீதே வரும்விதி வந்ததென்றால் படும்விதி படவேணும் மாட்டோம் என்றாலும் வி டாதே - ராமராமா றானே 6. அண்னானும் என் சொல்லைச் சத்துருக்கனும் கேளாமல் அரசாள மனம்மங்கி அண்ணன் அழைத்துப் போன லட்சுமணன்போல் என்னையும் அழைத்துப் போ கூட என்கி றானே - ராமராமா 7. பூமிநெருப்பில் விழும் விழவேண்டாம் என்றொரு புத்திமதி சொல்லநில் லாபயா சாமிபின் போனநெஞ்சே வருவானோ வாரானோ சற்றே நீவந்து சொல் லாயோ - ராமராமா 8. பொடித்தவனந்தனிலே எவருடன் சண்டையோ புரோகிதரே சொல்லொ ணா தோ நடுப்படையிற் போனாலும் வடுப்படாமல் திரும்பும் நாயகன் வரத்தடை ஏதோ - ராமராமா 9. பருவங்கள் பதினாலும் தவம்செய்தென்ன கண்டேன் படைத்தேனே இந்த அப வாதம் பெருமாள் சென்றவழியில் புல்லாய் முளைத்தாலும் பெறலாமே ஆண்டவன் பாதம் -ராமராமா 10. அரசனையும் காணேன் அரசுக்கரசாய் நின்ற அண்ணனையும் காணேன் நான்எம் மாத்திரம் பரதன் என்ற பேரை பதர் என்று சொல்லலாம் பாவி நான் அதற்கல்லோ பாத்திரம் - ராமராமா சத்துருக்கன் அரசாட்சிக்கு உடன்படாமை பரதனிந்த விதம்புலம்பிச் சாமிதெரிசனங்காணாப் பாவி நானே சரதமினித் தீப்பாய் வேன் உலகாள்வாய் சத்துருக்கா தம்பி என்றான் விரவியகா திலதுபோய் நெருப்பாகச் சுட அவனும் வீழ்ந்து சோர்ந்தான் நரகமன்றோ உனக்குப்பின் நிலமென்றான் எனகென்ன நலம் என்றானே பல்லவி இதற்கோநான் ஆளானேன் இதற்கோ அண்ணாவே அநுபல்லவி சதிக்குள் சத்துருக்கனா சாமிபரதா என்னைக் வாயென்றழைத்திட்டாயே கைநழுவ விட்டாயே (இத ) சரணங் 1. பூமி ஆளச்சொல்லி என் னைத்தானே விட்டுப் போனால் என்னாகுமோ (கோமானே ராமன் முகமும் உன்முகமும் கண்டுநானே இரண்டாட்டில் ஊட்டின குட்டிபோல் ஆனேனே ( இதற் ) 2. ஒருவன் கானகத்தில் ஏகவும் அவன் உடனொரு தம்பிதுணை போகவும் ஒரு தம்பி யான நீ நெருப்பிலே மூழ்கவும் ஒரு தம்பி எனதுயிர்வல்லுயி ராகவும் ( இதற் ) எனக்கு மாத்திரம் உடல் இருந்துல காளாவிட்டால் உனக்குப்பின் வாராமல் எனக்கொரு உன்னுயிரிலும் என் தன் உயிர்கருப் கெட்டியோ உன்பின் நஷ்டியோ வெட்டியோ பட்டியோ ( இதற் ) அக்கினியில் விழும் பரதனரக் கௌசலை அம்மன் தடுத்துக் கூறுதல் வாடியிவ்வா றழுததம்பிக் கிரங்கான் நான்போய் மாள்வனெனின் இவண்புவியை ஆள்வன் என்று கூடிய மந்திரிமாரும் ஊர்உள் ளாரும் குலைந் தலறப்பரதன் தீ வளர்க்கச் சொன்னான் நாடியதோர் கௌசலையும் கேட்டு வந்தாள் நன்மகனே மகனேஎன் செய்வேன் என்று ஓடியவன் கையிணையைப் பிடித்தாள் புத்தி உரைக் கின்றாள் மகன் மனதைக் கரைக்கின் றாளே பல்லவி என்ன நினைந்தாய் பரதா என்ன நினைந்தாயே ( என் ) அநுபல்லவி அன்னை என்னும் கௌசலையை அகலவிட்டிட நீயே ( என் ) சரணங்கள் 1. முன்மகன் ஆகியராமன் முகம்பாராக் கவலையெல்லாம் உன் முகத்தைக் கண்டு நீங்கி உளங்குளிர்ந்தேன் மகனே நின்முகம் காட்டாமல் நெருப்பின் முகம் நீபார்த்தால் என் முகத்தைப் பார்க்கும் முகம் எந்தமுகம் மகனே ( என் ) 2 . எத்தனை ராமரும்உனக் கிணையாவாரோ நீபோனால் செத்துலகம் போம் எனது சீவனும்போம் மகனே பெற்றமனம் பித்தென்றும் பிள்ளைமனம்கல் என்றும் சுற்றிலும் சொல்லுகிறபடி துணிந்தாயோடா மகனே ( என் ) 3. இதங்கொண்ட ராமன்வர விதோ அதோ என்றிருக்கநீ மதங்கொண்டாற்போலுயிரை மாய்க்கல் ஆமோமகனே சுதந்தரமாத் தவஞ்செய்தும் ககம் தக்கினது மல்ல விரதம் தக்கினதுமல்ல வேண்டாம் அடா மகனே ( என் ) பரதர் கௌசலை அம்மனோடு இரங்கல் பன்னியிது தாய் சொல்லப் பரதனீரேழ் ஆண்டுமண்ணன் சொன்னபடி காத்திருந்தும் சுவாமி தெரி சனம் காணேன் பின்னைஎனக் கார் இருந்தென் ஆர்போய்என் பெருந்தீயில் என்னுயிரை விடுவேனென் றெழுவான் சொல்லி மொழிவானே பல்லவி இனிநான் இருக்கலாமோ தாயே ( இனி ) அநுபல்லவி அனியாயத்தில் அய்யனுக் காகாமற்போய் ( இனி ) சரணங்கள் நானே 1. மறுவில்லா வரங்கொண்டேன் அண்ணன் வழிபார்த்துப் பார்த்தென் தன் விழியும்பூத் தேனே சிறுபிள்ளைப் பருவம் நான் இதிலே சிறகுபறிகொடுத்த பறவையாய்ப் போ னேனே தானே தஞ்சம் 2. வருத்தம் அறியான்சாமி கொஞ்சம் அறிந்தால் வாராமல் இருப்பானோ எனக்குண்டோ நெருக்குதே கவலைப்பிர பஞ்சம் - என்னை நெருப்பிலே போட்டாலும் வேமோஎன் நெஞ்சம் (இனி ) ( இனி ) 3. அரசனுக் குதவாமல் கெடுத்தேன் அண்ணன் அருமந்த முடிக்கும்நான் சடைமுடி சொடுத்தேன் தருமத் துரையைக் காட்டில் விடுத்தேன் பரதன் சாமித்துரோகி என்றே எங்கும் பேர் எடுத்தேன் 4. அய்யர் அன்னை சொல்லை நோ காமல் கேட்க அளிக்கத்தக்கவன் திருவுளத்துக்கா காமல் செய்தேன்வெகு குற்றம்போ காமல் தீட்டுக்கு முழுக்கொன்றா நெருப்பில் மூழ் காமல் ( இனி ) பல ஸ்ரீராமர் வரவை அனுமார் பரதருக்குக் கூறல் தந்தாய் கௌசலை வந்தா ளொடுபர தன்பா டுகளிவை முன்கூறி நொந்தார் அனலை வலஞ்சுழ் பொழுது குழந்தாய் குழியில் அமிழ்ந்தாதே அந்தோ பொறுபொறு மைந்தா பொறு பொறு அன்பாய் உனதுமுகந்தேடி வந்தான் ரகுபதி வந்தான்என அனுமன் தான் இஃதுரை தந்தானே பல்லவி ரகுராமன் வந்தான் வந்தான் பரதா வந்தான் வந்தான் பரதா ( வந் ) அநுபல்லவி வந்தான் வந்தான் மோதிரம் இந்தா இந்தா தீயினில் தந்தான் தந்தான் கைமேல் முந்தா தேமுந் தாதே ( வந் ) சரணங்கள் 1. நாயகன் சொல் மறந்தாய் அண்ணா என்று பேயனைப்போல் பறந்தாய் தாய ையும் துறந்தாய் பழிபோட நீயிதற்கோ பிறந்தாய் சேயின் முகம்பார்க்கும் தாயின் முகம் போலே காயும் புழுவுக்குச் சாயும் நிழல்போலே தீயும் பயிருக்கும் பேயும் மழைபோலே மாயன் கஜேந்திரனுக் காய்வந் தது போலே ( வந் ) 2. பொருந்தாத புத்தி தந்தாய் அலைவாயிற் கரும்புபோல் மெத்த நைந்தாய் துறும்புபோல் வற்றி நொந்தாய் வீழ்வேன் என்று பெருந்தீயைச் சுற்றி வந்தாய் அரும்பதினாலாண்டு ஆச்சென்றதி வருந்தும் தம்பிமடிவான் என்றொருக் காலே பரிந்திதோ சித்திர கூடத்துக்கிப் பாலே பிரிந்த கன்றைத் தேடித் திரும்பும் பசுவைப் போலே னாலே ( வந்த 3. தீமைவினைகள் மண்டு ராவணப் பாமரன் ஆவி உண்டு சேம வெஞ்சேனை கொண்டு பரத்துவாச மாமுனி பூசைகண்டு சாமி ரகுகுல சோமன் இதோ வந்தான் பூமகள் சானகி வாமன் இதோவந்தான் ஓமென்னும் ஆயிர இதோ வந்தான் நீமறவரகு ராமன் இதோ வந்தான் நாமன் ( வந் பரதருக்கு அனுமான் சங்கிரக ராமாயணம் கூறல் இந்த வாறனு மந்தன் ஓதி இடுங்கை மோதிரம் ஈந்துடன் சந்த மா முடி கொண்ட தோர்பர தன்கணார வளர்ந்தனன் உந்த னோடு பிரிந்து ராமன்ஓ ழிந்ததும்பின் நடந்ததும் வந்த வாறும் அறிந்தி டென்றுரு மாறினான் வை கூறினான் பல்லவி ராமன் செய்தி பரதமகா ராசனே கேளாய் பரதமகா ராசனே கேளாம் ( பர ) அநுபல்லவி இரமுலா வியசித்திர திருவடிகள் நீகொண்டு இரகுபதி தண்டகவ ராட்சதவி ராதனை உ கூடத்திலே முன்னே போகியதின் பின்னே னத்திலடி நீட்டினான் பேட்சையற மாட்டினான் ( பர ) சரணங்கள் அவன் நாளிலே 1 அந்தமுனி வர்க்கபயம் ஈந்தான் பிறகு அகஸ்தியமுனி ஆசிரமம் சேர்ந்தான் தந்தபடை முழுவதும் கொண்டான் வந்து சனகியொடு பஞ்சவடி கண்டான் வந்தசூர்ப நகியவள் வாதாடும் வள்ளல் இளையவனங்கை மீதாடும் வாளிலே கந்தமுலை யும்செவியும் நாசியும் நறுக்கினான் கர்தூஷணரையும் அவ ளாலே நொறுக்கினான் 2. பின்னாக மானைவர விடவே அதின் பிறகுகணை ஒன்றிலது படவே ஒரு சந்நியாசி ராவணன் அடுத்தான் தன்னை நில மங்கையோ டெடுத்தான் அந்நிலையி லேவருச டாயுவை வருத்தினான் அம்மை அசோகவனக் காவலில் இருத்தினான் (பரதி ) சீதை மீளவும் வெகு கன்னிகை தனைச்சாமி தேடி மன தேங்கினான் கழுகரசனைக் கண்டுக வந்தனுயிர் வாங்கினான் ( பரத ) 3. சவரிசொல் லியவழி நடந்தான் - என் தனை அடி மையாகவே தொடர்ந்தாள் - பின் கவடுளி மரங்கள் துணி செய்தான் - அந்த காலன்வாலி யையும்விழ எய்தான் அவனியை சுக்கிரீவ னுக்குதவி அடியேன் அறிந்தம்மை நிலைகண்டு மீளவும் தவமுள்ள விபீஷணர்க் கபயம்கொ டுத்தனன் சாமிதிரு அணையொன்று கடல் மேலெடுத்தனன் ( பரத ) 4. பண்டைலங்கை யின் பதில் பிடித்தான் எழு பதுவெள்ள மும் கொண் டடித்தான் கண்டக அரக்கரை மடுத்தான் பயிர்க் களை எடு ததுபோல் எடுத்தான் அண்டர்பணி தம்பியும்நெடுங்கணைகள் தாக்கினான் அதிகாய னையும் இந்திர சித்தையும்மண் ணாக்கினான் கொண்டல்மணி வண்ணனும் சிலகணை முடுக்கினான் கும்பகர்ன னையும்ராவ ணனையும் ஒடுக்கினான் ( பரத ) 5. மதிநுதல் சீதைதனை உற்றான் அங்கே வந்ததச ரதன்வரம் பெற்றான் தனது பதியில் வரவேஉளம் மதித்தான் - புஷ் பகமீதில் சேவடி பதித்தான் எதிர்படும் காடும் நாடும் கண்டு தாண்டினான் இமையவர் புரந்தரா திகள் புகழ் வேண்டினான் திமுனி பரத்துவாசன் ஆசிரமம் மேவினான் அதற்குமுன் உன்னைக்காண அடியேனை ஏவினான் ( பரத ) ஸ்ரீராமர் அனுமானை உடன் உண்ண வேண்டுதல் நீதமுடன் அனுமனிது சொன்னான் இந்த நிமிஷம்லந்து சாமி உனக் கருள்வான் என்றான் போதரவாய் பரத்துவாசன் மடத்திற் பூர்வ போசன வேளையிற்போய் ராகவனைக் கண்டான் பாதமலர் வணங்கினான் பரதன் தன்னை பார்த்ததும் காத் ததும் சொன்னான் அப்போ தையன் காதலனே அனுமானே நீயே என் தன் கண் என்றான் என்னுடன்வா உண் என்றானே பல்லவி என்னுடன் உண்ண வா வா அனுமானே வாவா சீமானே ( வாவா ) அநுபல்லவி ஜீவபயம் ல்லாமல் பரதனையும் தேறத் தேற்றி எனக்குவந்து சொன்னவுன் இளைப்பாற ( வாவா ) சரணங்கள் 1. அங்கே பிரம்மாஸ்திரத்தால் விழுந்த தம்பி பிழைக்க அமுர்த மருந்து தேடிக் கொடுத்தாயே இங்கே அக்கினியில் வீழும் தம்பி பிழைக்க என்வரவைச் சொல்லித் தூக்கி எடுத்தாயே சங்கட வேதனைகள் ஏதேது வந்தாலும் தலையிட்டுக் கொண்டு தீர்க்கத் தொடுத்தாயே பொங்கும் இருப்புக்கோட் டையும்கற் கதவுமே போல எங்களைக்காக்க வாலாயம் எடுத்தாயே ( வாவா ) 2. பூட்டிய தூது நீபோய் அரக்கரைக் கொன்ற ரத்தம் போச்சிலையே இன்னும் லங்கை யில் ஈரம் வாட்டம் இல்லாமற்சீதை தனையும் தந்தாய் நல்ல வாழ்வும் தந்தாய் எனக் கூட்டத்தி னால் என்ன படையிலும் ஒருத்தன் கொடையிலும் ஒருத்தன் உன்ன தேவீரம் தாட்டிகத் தம்பிமார்க்கும் தாய்மார்க்கும் எனனப் பெற்றோன் தனக்கும் உனக்கும் தான் சொல்வதேன் உபசாரம் குபகாரம் ( வாவா ) 3. சுக்கிரீவனுக்கும்வி பீஷணனுக்குந்தங்கள் துரைத்தனம் மேலாசை எந்தாயே எக்கால மும்உன்தன் ஆசைஎன் காரியத்தில் எங்கெங்கும் போய்ச்சுற்றி நொந்தாயே விக்கிரயம் நீ செய்து வருகையாலே நாங்கள் விருந்தமு திருந்துண்ணத் தந்தாயே சர்க்கரைப் பந்தலிலே தேன்மாரி பொழிந்தாற்போல் சந்தோஷ வார்த்தைகொண்டு சமயத்தில் வந்தாயே ( வாவா ) ஸ்ரீராமர் பரத்துவாசர் செய்த விருந்துண்ணல் சுந்தரனும் ராமச்சந்தரன் இந்தவிதம் உபசாரம் சொல்லச்சொல்ல வந்த அனு மான் ஒடுங்கி வணங்கி நின்றான் எல்லாரும் மகிழ்ந்தே உண்ணப் பர்தியிருந்தார் அனுமான் பரதனையே அடிக்கடிக்குப் படித்துப்பேச அந்தஉரை செவிக்கமுதா விருந்தமுது திருந்தினான் அருந்தினானே பல்லவி உண்டானே ராமன் பரத்துவாசன் செய்தவிருந் துண்டே ஆனந்தம் கொண்டானே ( உண் ) அநுபல்லவி சூரனும் வண்டார் குழற்சீதை வானரே சனும் வி கெண்டு டனே அருந்த அண்டமெலாம் இருந்த யும் இளஞ் பீஷண கண்டுமனந் பண்டியிலே வீரனும் திருந்த பொருந்த (உன் ) சரணங்கள் 1. ஓங்கிய பொன்னுல கத்தினுள் பெண்கள் ஓடிக் கொண்டுவந்து நான்கு திசையிலும் உள்ள முனிவர்கள் நாடிக் கொண்டுவந்த வழங்கமுதும் கிழங்கமுதும் மாங்கனியும் கதலிப் பூங்கனியும் பனசத் தேங்கனியும் பலவி ளாங்கனியும் திருத்திப் பாங்காகவே மென்மே லேபடையும் தானும் அன்பாலே ( உண் ) 2. நானி லந்தனில் மாந் லந்தரும் நானாவித முள்ள சூட்டும் வான மங்கையர் தானு கந்தமும் வகைவகை யான அ பூபமும் தேனும் கறிவகைகள் தானும் குளிர்ந்த நல்ல பானகமு சமைத்த போனகமும் கொண்டு சேனை ஆரவாரிக்கத் திருமேனியும் பூரிக்க (உண் ) 3. பவ்விய மான அனு மானைக் கடை க்கண்ணாலே பார்த்துப் பார்த்து மனம் களிப்பூற செவ்வையானதை வேத்தியம் செயக்கண்டு தேவரெல்லாம் சோப னங்கூற இவ்வுல கத்தினிலும் அவ்வுல கத்தினிலும் எவ்வுல கத்தினிலும் அவ்வவ் விடத்திலுள்ள திவ்விய சாரங்கள் பெற்றுச் செவ்வாய்மலரில் வைத்து ( க.ண் ) பரத்துவாசர் முதலானோர்க்கு ஸ்ரீராமர் ராக்ஷதர் மாண்டவகை கூறல் உண்டபின்பு பரிகலத்தை அனுமான் கொண்டான் ஒருசுக்ரீ வனுக்கும்விபீ ஷணர்க்கும் ஈந்தான் கண்டபடை களுக்குமிட்டான் தானும் பாதி கைக்கொண்டான் அவனை அயோத்தியிலே ஏசு அண்டர்பிரான் அனுப்பினனே கடலைத் தாண்டி அரக்கர்குலம் அடியோடே அழிய வில்லால் மண்டமரில் வென்றதெலாம் ராமச்சந்திரன் வகைசொல்வான் முனிவருக்குத் தொகைசொல்வானே பல்லவி இங்கே நாங்கள் லங்கையை வென்றகதை இவ்வாறு காண் முனிவர்களே ( இங்கே ) அநுபல்லவி விடிந்தது தங்கும் குரங்கெல்லாம் அணுப்போல் எதிர்தர சண்டைசெயும் அரக்கர் மலைபோல் வரவர அங்கே நீங்கள் முன் ஆசிர்வா தம்செய்ய அணுவும்மலை யாச்சந்த மலையும் அனுவாச்சையா ( இங்கே ) சரணங்கள் 1. வானரத்தால் அரக்கர் படையெல்லாம் மடிந்தது மாயை எல்லாம் விபீ ஷணனால் ஆனதம்பிமேல் ஒரு நாகாஸ்திரம் படிந்தது அதுவும் கருடனாலே பொடியாப் பொடிந்தது ( இங் ) 2. அந்தப் பிரமாஸ்திரத்தை அரக்கன் விடுத்து மொய்த்தான் அமுர்த மருந்தை அனு மான்கொண்டுவந்து வைத்தான் இந்த அனுமானாலே இளையவன் உயிர் பெற்றான் ளைய வன்கை அம்பாலே இந்திர சித்தனும் செத்தான் (இங் ) 3. மூலபலம் ராவணன் கும்பகர்ணன் சென்மம் முடியவே முடிந்தது ராமபாணி வன்மம் ஏலவே தொலைந்தது எங்களைத் தொட்ட கன்மம் எங்களால் ஒன்றுமில்லை எல்லாம் உங்கள் தன்மம் ( இங் ) குகன் ஸ்ரீராமர் வரவில்லையே என்று வருந்துதல் கரக்காமல் இவ்வாறு சொன்ன ராமன் கானமுனி வரை நிறுத்தி ஆசி கொண்டு பரப்பாம்புஷ் பகங் கொண்டு கங்மை ஆற்றின் பக்கல்வரும் முன்னம்முன்னேவிபரி னோடு தரத்தாலே எனக்குரைத்த நாளும் கண்டேன் சகுனமும் கண்டேன் இன்னம் சாமிஇங்கே வரக்காணேன் என்னாவி வைக்கேன் என்று வாடுவான் குகன் வருந்தித் தேடு வானே . கண்ணிகள் 1 , ஆண்டுபதி , னாலும் போய் வருகிறோம் என்ற ஐயன் வரவு கா ணேனே நீண்ட பனை மரம் போல் வளர்ந்தேனே நிலத்தில் இருக்க நான் ஏனே 2. சாமியும் உன்தாயும் தம்பியும் உன்னைத் தவிக்க விட்டு மறந் பூமியில் தங்களுடன் வாராக்குகன் புலையன் என்று துறந் தரேரா தாரோ 3. இச்சையா லேநான் என்ன பினழ செய்தாலும் ஏழைஎன் றென்னையறி யரேரா நச்சுமா மரமானாலும் வைச்சவர் நன்மரம் என்று குறி யாரோ 4. உண்டாற் பசி தீருமென்றே இந்த உலகம் சொல்லிய மாண் பேனோ கண்டாற் பசிதீரும் என்சாமி முகக் கமலத்தை என்று காண் பேனோ 5. சோராத ஒருதோழன் என்றவர் சொல்லிய சொல் லென்ன பெய்ாயோ கார்மேனியும் கோதண்டமும் என்றன் கண்ணெதிரே நிற்கு தையோ 6. அங்கேமுன் பழகின ஊனர நினைக்காரோ பக வானே எங்கே இருந்தாலும் ராமர் இருந்த இடம் அயோத்தி தானே 7. வலக்கண்ணும் வலத்தோளும் துடிதுடித்து வருகின்ற தென்ன இது கெலிக்கும் ராகவன் தரிசனம் கிடைத்தாலும் கிடைக்குமோ என்ன அறி யேனே தானே நானே 8. இனிமேல் ஒரு தெய்வம் தன்னைக்கை எடுப்பேனோ சற்றும் தனியே ஆனை தழுவும் கையாலே ஆடு தழுவுமோ என் கை தானே பரதருக்கு ஸ்ரீராமர் காட்சி கொடுத்தல் நையுமிந்தக் குகன்பணியச் சாமி வந்தான் நம்பிபர தனும் நீயும் சுகமோ என்றான் துய்ய குகன் சனகிவிபீ ஷணன்சுக் ரீவன் துனணவனொடு புஷ்பகமேல் அயோத்தி சேர்முன் செய்யவசிஷ் டனும்பலபேர் களும் தாய் மாரும் திரண்டுவரும் பரதனுக்குக் கையாலேஉன் அய்யன்வந்தான் என்றனுமான் காட்டக் காட்சி அருளினான் ராமன் எழுந்தருளினானே . பல்லவி சீதா ராமன் எழுந்தருளினான் பர தன்முன் ராமன் எழுந்தருளினான் ( ராம ) அநு பல்லவி ஆமெனும் தேவர்களுக் கமுதம் தந்தாற்போல பூமியில் உள்ளோர்க்கெல்லாம் போனபொருள் வந்தாற்போல (ராம ) சரணங்கள் போல 1. தூயவர்க் கெல்லாம் முத்தித் ஓயும் உடலோர்க்கெல்லாம் துறைகள் சித்தித்தாற் உயிர்புகுத்துற்றாற் போல நேய மாதர்க்கெலாம் கண் தாயர்க்கெல்லாம் அப்போது நிழல்வந்துதித்தாற் போல தான்பிள்ளைப் பெற்றாற்போல ( ராம ) 2 மயமாக கயமாக உத்தமர்கள் நாவுக்கெல்லாம் ஊறும்தேன் மற்றவர்கண் வண்டுக்கெல்லாம் மலர்ந்தபங் அஸ்தசெந்தா மரைக்கெல்லாம் அருஞ்சந்திரோ புத்திரர்க்கெல்லாம் தாயைப் போலே தயமாக வசியமாக ( ராம ) 3 -சரியும் மரவுரியும் சடையும் வருகிற தம்பிவந்த உருகி உருகியவன் திருவும் தம்பியும் கவிச் நடையும் சோர வரவுகண்டு கண்ணார உடைய குறைகள் சேனையம் தானும் சேர ( ராம ) பரதர் ஸ்ரீராமர் திருவடிகளிலே வணங்குதல் யல்புடனிப் படிராமன் வந்த போதில் இதோவந்தான் சாமியென அனுமன் காட்ட வியனுறு தாய்மாரும்ஊராரும் பார்க்க மிடியனுக்குக் கனகமலை கிடைத்தாற் போலத் தயவுளதாய் முகங்கணாம் சவலை போலச் சாமிமுகம் ளையவனும் தானும் கண்டான் உயிர் உருக உளமுருகத் திருத்தாள் மேலே வணங்கினான் பரதன் வந்து வணங்கினானே , பல்லவி வணங்கி நின்றானே பரதன் - சாமி சேவைக்கு இணங்கி நின்றானே பரதன் ( வண ) அநுபல்லவி சணங்கு லாவுதச கண்டசீ ரென்னக் கண்டு ரதன் தன்னை எதிர்ப்பட்டு தெண்டனிட்டு ( வண ) சரணங்கள் 1. அதிகானம் போய் வாழ்ந்தவன் உடம்பும் போற்றி என்றவன் அடிமேல் போய் வீழ்ந்தவன் உடம்பும் கட்டிக்கொள் போதில் அதுவோ அல்லதிதுவோ பின்னை எதுவோ உடல்பொதுவோ என்ன அணைத்து அணைத்து ராமன் கண்ணீர் துள்ளத்துள்ள அய்யனே மகனே என்றுகட்டிக் கொள்ள ( வண ) 2. அடியேன்மேல் திருவுள்ளம் உதித்ததோ அடிமை படைத்தால் ஆளக்கடன் என்பது மதித்தோ - தரிசனம் தந் தாயே தந்தை தாயென்ன நீ வளர்த்தாயே இப்போ சவித்த பயிறு முளைக் கத்தந்தகதை போலே ஆவி நீ தந்தாயே என் றொருக் ( வண ) காலே 3 என்னோடே நீபிறந்த தெல்லாம் - நான்பதராகி இருந்தேனே நீ வாரா நாள் எல்லாம் நானிருந்தாலும் இறந்தேன் இன்றுபிறந்தேன் கண்டுசிறந்தேன் குறை மறந்தேன் - இங்கே இருந்தநாள் இருந்தேனே நிலம் கெல்லி இன்றல்லோ பிழைத்தேன் என்று சொல்லிச் சொல்லி ( வண ) நகரியையும் ஸ்ரீராமரையும் சீதையையும் அலங்கரித்தல் வந்ததம்பி இந்தவகை பணிந்தான்ராமன் மாதாக்கள் மூவரையும் பணிந்தான் பின்னே அந்தலட்சு மணன் பரதன் பதம்பணிந்தான் அவன் பதத்தில் சத்துருக்கன் பணிந்தான் இப்பால் பந்தமுள்ள சீதைநின்ற திசையை நோக்கிப் பரதனும் தம்பியும் பணிந்தார் சமந்திரன் சொல்லால் விந்தை விந்தையா யெவரும் நானா விதம் செய்தார் அயோத்தி அலங் கிருதம் செய்தார் . கண்ணிகள் 1. தேச தேச மகராசனுக்குத் திருமுடி அபிஷேகம் - செய்ய ராசராசர்கள் எல்லாரும் முறைமுறையா எடுத்தனர் வைபோகம் 2. சேனை சேனைமக ராசராசர்களும் திரிந்தனர் ஆனைமேலே நெடு வானமும் அதிர அடித்தனர் சாரியைகள் மகபேரிகைகள் இனி 3. சோதி மணிநேடு வீதியில்மகர தோரணம் தூக்கினார் மீதினிலே பிச காமல் நாலிரு மேருவுண் டாக்கினார் 4. காரும் படிந்திடச் சூரியன் வெயில் மறையக் காவணப் பந்தல் படுத்தார் ஆரும் இங்ஙனே வாரும் என்றழைக்கப் பொன் ஆலவட்டங்கள் தொடுத்தார் 5. முத்துக்குடை பவளச் சித்திரக் குடைகளெங்கும் முறைமுறையா நிரைத்தார் அப்புறம் சுற்றுக்குச் சுற்றிலே வானவர்கள் உள்ள சொர்ண மலர்கள் விரித்தார் 6 . கோலப் பதுமை இந்திர சாலப் பதுமைகட்டிக் கூந்தற் கமுகு நட்டார் சுற்றிலும் மேலுக்கும் கீழுக்கும் கோலக்கண் ணாடிகள் விதம் விதமாக இட்டார் 7 . சூடகவால் வளை கோதையர் கீதங்கள் சோபன முடன் அமைத்தார் அபிநய நாடகசாலையும் பாடக சாலையும் நாலு முகமும் சமைத்தார் 8. முத்தா லாத்தியும் பவளா லாத்தியும் முகந்தோறும் காட்டினார் நல்ல விஸ்தாரத்தெரு வீதியெல்லாம் பனிநீர் வெள்ளங்களாக ஆட்டினார் 9. பூந்துகில் கரித்து மாந்தழை விரித்துப் பூரண கும்பம் பதித்தார் - புவி வேந்தரும் பலமாந்தரும் ஆனந்தம் மேற்கொண்டு குதி குதித்தார் 10. ஆணிமுத்துப்பவளம் மாணிக்கத்தாற் செய்த ஆபரணம் திருத்தினார் - சோபனம் பாணிக்கும் நவரத்தின பாலிகை எங்கெங்கும் பளபளென இருத்தினார் 11 கலவைப் பொடி கதம்பப்பொடி குங்குமப்பொடி கடைத்தலை எங்கும் கொட்டினார் மெத்த விலைபெற்ற பொன்னெழுத்து விசித்திரம் விசித்திரமான மேற்கட்டியும் கட்டினார் அதிலே 12. சந்தனச் சேற்றிலும் அகிற்சேற்றிலும் போவோர் சறுக்கிச் சறுக்கி விழுந்தார் கெந்தப் பொடியிறைத்துக் கெட்டியாக்கிமெள்ளக் கிளம்பிக் கிளம்பி எழுந்தார் 13 . மாலையும் சொர்ண வர்ணச்சேலையும் பந்தலும் வாசற்கு வாசல் விரித்தார் - தெய்வ ஆலயங்களும் மலர்சோலையும் சாலையும் அணிபெற அலங் கரித்தார் 14 . வெகு கொதிகொளும் கதிரவன் மறைபட மாணிக்க கொடிகளாலே மறைத்தார் விதவிதமாகிய முத்துப்பவளங்களும் வெள்ளியும் பொன்னும் இறைத்தார் நல்ல 15. செப்பமுள்ள பளிங்கில் ஒப்பனை செய்கனகத் திண்ணையிற் கோலம் புனைந்தார் முப்பழக் குலைகட்டி அப்புறம் கனிவகை முறைமுறையா வனைந்தார் இதை 16. ஆனநற் சதுரங்க சேனையும் சிவிகையும் அலங்கரித் தேறி வருவார் மாநிலதானமும் கன்னிகாதானமும் வகை வகையாத் தருவார் 17. யாழும் வீணைகளு , கின்னரிகளும் கொண்டு ராக கீதம் படித்தார் - அலை ஆழிபோற் குமுற மேளதாளங்களை அதிர அதிர அடித்தாற் 18. சடைமுடி வள்ளலுக்குக் குடைமுடி தரித்திடத் தக்க அலங்கிருதம் செய்தார் - எங்கும் புடைவரும் தேவரும் மூவரும் யாவரும் புஷ்ப வருஷங்களைப் பெய்தார் 19. மாமன் சனகனும் தாய்மாருங் கண்டு மகிழ்ச்சிக் கண்ணீர் துளித்தார் .. பின்னும் நாமிங்கே செய்த தவமே தவமென்று நகருள்ளோரும் களித்தார் மிகு 20. கற்பனை கடந்த எம் அப்பனைராமனை சாவலர் ஒப்பனை செய்தார் பொற்புள கோதை எம் தாயார் சீதையைப் பூவையர் ஒப்பனை செய்தார் கூட் 21. சந்திரகுலத்தில் வந்த சீதைக்கு நாத னென் சந்திரன் புகழ்ந்தானே இந்தவை போகத்தை ஆயிரங் கண்ணிற்கண்டு இந்திரன் மகிழ்ந்தானே பட்டாபிஷேக மண்டபம் பரதர் சோடித்தல் இங்கிப் படியே அயோத்தியும் சீராமன் தானும் சானகியும் பொங்கத் துடனே சிங்காரம் புனைகின்றளவிற் பரதாழ்வான் அங்கப் போது சாமிமுடிக் கபிஷேகம் செய் மண்டபந்தான் தங்கத் தாலும் மணியாலும் சமைத்தான் நன்றாய் அமைத்தானே பல்லவி சிங்காரம் செய்தானே பரதன் அபிஷேக மண்டபம் சிங்காரம் செய்தானே பரதன் ( சிங் ) அநுபல்லவி துங்க நவமணிகள் சூரியப் பிரபைகள் மேலே இங்குள்ள பேருடன் ரகுராமனுக்குத் துய்ய எங்கும் இருந்து வெய்ய வாரிப்பிரபைகள் பெய்ய அங்குள்ள பேரும் உய்ய மகுடாபிஷேகம் செய்ய (சிங் ) சரணங்கள் 1 விவர நீலத்திலும் கோமேதகத்திலும் வேதிகையும் சிறந்த போதிகையும் அடுக்கி குவியும் உபானமும் பதுமமும் யாளமும் கோமளத்தால் அடுக்கி தவளப் பளிங்குத் தள வரிசை வகுத்ததின் மேலே சாதிமாணிக்கச் சிங்காதனம் பதித்தொழுங் காலே பவளத் தூண்கள் நட்டு மதலை செய் தொரு தகாலே பதம்விரும்பும் தொண்டர் இதயகமலம் போலே (சிங் ) 2. துய்ய மருமலர்ச் சரங்களை நிரைநிரை தூக்கி வகையாய்மேற் கட்டிகள் திருத்தி பையக் கவரிகள் கையினாலசைக்கும் பதுமைகள் சுற்றும் இருத்தி எய்தும் அவர் மனதில் ஐயம் சொல்லச்சொல்ல இதுவோ அயோத்திநகர் இதுவோ அல்ல அல்ல ஐயா இது அந்த வைகுந்தம் என்று சொல்ல ஆணிப்பொன்னாலே எங்கும் வாணித்து நல்லநல்ல (சிங் ) 3. தேடிஉலகங்கள் நாடிக் கும்பிடும் சிகரகும் பங்கள்பல தகதகென்று மின்னவே ஈடுள்ள புவிக்குக்கண் ணாடிபோற் செய்தானே எங்கும் நிகநிக என்னவே பாடிக்கொள் வேதமோ ஆயிரந்தலை நாகப் பாம்பணையோ கடலோ அந்த நாகரிக வேடிக்கை நான் சொல்லக் கூடுமோ தேவலோக விசுவுகர்மாவினாலே உசிதம் உசிதமாக ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம் சித்திரமண் டபத்தினிலே உள்ளங்கொண்டு தேவர்கள்மா னிடர்கள் செய்யும் சேவை கொண்டு சுத்திபெறு குகன்விபீ ஷணன் சுக்கிரீவன் துணைவர்பணி கொண்டுசிங்கா தனமேற்கொண்டு சத்தியமும் நீதியும்மேற் கொண்டு துள்ளச் சகலமும்கைக் கொண்டு செங்கோல் கொண்டராமன் பத்தினிசா னகியுடனே உலகை ஆளும் படிகொண்டான் அபிஷேக முடி கொண்டானே பல்லவி ஸ்ரீராமச்சந்திரன் மகுடாபி ஷேகம்கொண்டானே மகுடாபி ஷேகம் கொண்டானே ( மகு ) அநுபல்லவி சகல ராசர்களும் சகல வேதியரும் சகல மந்திரிகளும் சகல முனிவர்களும் சகல தேசர்களும் சகல சாதியரும் சகல தந்திரிகளும் சகல மனிதர்களும் இந்திராதி தேவர்சளும் சிங்கா தனத்திருந்து சந்திராதி மூவர்களும் சந்தோஷ மாப்பொருந்து ( மகு ) சரணங்கள் 1 . மாதவ முனிவர்கள் புடைகூட பலவேதியர்கள் மறைபாட வானவரானவர் மலர் போட ரம்பை மேனகைர் வசி நடமாட மா தலத்தில் உள்ளதீர்த்தமும் வரிசையுடன் அனுமான் சோதிமிக்க ஆலாத்தி சோபனஞ் சொல்லிக் வானகத்தில் அமுர்தத்தை மகிழ்ந்து மகிழ்ந்தாசிகள் ஞானமிக்க நாரதர் நானா விதம்பாடிக் ஓதுசமுத்திர தீர்த்தமும் கொண்டு வர மீதில் லட்சுமிப்பெண்கள் கொண்டுவர மானமிகு முனிவர்கள் விண்டுவர கானமிக்க வித்தைமுறை கண்டுவர மகதர் குருதர்பலர் வடுகர் குடகர்பலர் வங்கர் கங்கர் பலர் மாளவர் சாளவர்பலர் கவுடயவனர்பலர் துளுவர் சளுவர்பலர் கொங்கணர் தெங்கணர்பலர் லாடர்கள் மாராடர்பலர் வங்கா ளம்பப் பரத்து ளோர்பலர் கொங்கீழங்குச்சரத்து ளோர்பலர் வந்தே சந்தித் திறைஞ்சி முடிபணி யுந்தோறும் பட்டுதிர்ந்த பொடிமணி வைத்த பதத்தில் உறுத்தி மற்றவர் சுற்றிலும் ஒற்றி வரச்சில கொற்றவர் மட்டுவ குத்துவ ரச்சில கட்டியம் உரைத்திடுபட்டர் செலச்செல வாமப ராக்கு வெகு நாமய ராக்கு ரண வீமர்ப ராக்கு ரகு ராமர் ராக்கு என வாசவர்க்கும் கேசவர்க்கும் ஈசுரர்க்கும் மீசுரர்க்கும் வல்லோர் எனப்பிதிர்கள் பல்லோர்சளும் துதிக்க நல்லோர் களும்கதிக்க எல்லோர்சளும் துதிக்க ( மகு ) மிகு வாசன் 2. பூசுர வசிட்டன் நிசு வாசன் கேசவன் குறுமுனிவன் பரத்து வாசன் பூசுத கௌத மனுடன்வி யாசன் காசிபன் கோசிகன் துரு பூந்துகில் சுற்றி நல் மாந்தழைவைத்ததிவ்ய பூரணகும்பம் அவரவரி கொடுக்க ஏந்து நெய்யும் பொரியும் மாந்தி அக்கினிதேவன் எழும்பி எழும்பி வரக்கொழுந் தெடுக்க போந்த முகுர்த்தம்வந்து நேர்ந்ததெனத்திரண்டு புண்ணிய புரோகிதர் கடு கடுக்க சூழ்ந்து பலமுனிவர் சுபந்தரு நவக்கிரக செபம் பாந்திமந்திரஞ்சொல்லி கொடுக்க பூசுரர் உடைகளை வேசியர்கள் உடுக்க வேசியர் உடைகளை பூசுரர்கள் உடுக்க பூசிய பொடிவகை வேசியர் இறைக்க வேசியர் மிசையதை வேதியர்கள் இறைக்க பொன் போலும் சட்டமிட்ட மாலிகை மின் போலும் சுற்றில் வைத்த பாலிகை பொங்காரம் சுற்றிலும் பளபளன் எங்கேயும் சித்திரம் தளதளென புத்தமு தத்தினை நிகர்த்த மொழிச்சியர் அத்திர சாத்திகள் ஒத்த விழிச்சியர் பொற்கடகக்கையில் அப்பி அடிக்கடி கற்பகப் புட்பம் இறைத்து சதிப்படி போராட வேகுயில்கள் நேர்பாடவே மயில்கள் போலாடவே தகவும் கோலாடவே மிகவும் பூமிகளும் பாமிகளும் காமிகளு மேமகிழப் பூதாதி தரும் போக வேதாவுடனே லோக மாதா எனும் வைபோக சீதாசமேதனாக ( மகு ) 3. வீச அங்கதன் அருகிலுடை வாள்பிடிக்க சுக்ரீவன் கைலாகு தந்து தோள்பிடிக்க அஞ்சி அனுமான் சாமி தாள்பிடிக்க வந்தடைப்பம் சுமந்துமத வேள்பிடிக்க அட்சய விவேகி எனும் லட்சுமணன் சத்துருக்கன் அருகினில் நின்று கவரிகள் பட்டமுள்ள சுமந்திரன் எச்சரிக்கை என்று சொல்ல பரதன் குடைபிடித்து நயம் பேச அற்புதக்கு பேரன்வந்து பொற்பணி திருத்த மணி அணிபணி கண்டுசூரியன் கற்பனை கடந்தராமன் ஒப்பனை செய்திருமார்பில் களபச் சந்தனங்கள் சந்திரன் அருள் முகக் கமலமும் அதிலிரு கமலமும் இருகர கமலமும் இருபத கமலமும் கூச அனமிசை வருகிற வனிதை சனகி திரு அயன்வரு கமலமும் மலர்முக கமலமும் பேரிதை அன்பூறும் பச்செனும் சொ ரூபமும் முன்காணும் கைப்பிரசண்ட சாபமும் அங்கேகண் கொண்டுகண்ட இங்கே என் சொல் வோமென வேயதை அந்தர துந்துபி தும்தும் தும்மென முந்திய சங்குகள் பம்பம் பம்மென அந்தைகள் பம்பைகள் திம் திம் திம்மென மொந்தை அதிர்ந்தது தொம் தொம் தொம் மென ஆதாளி கொண்டுவிரி பாதாளமும் திசையும் ஆலோலம் மண்டுகடல் போலே முழங்கிவிட அந்த லோகமும் இந்தலோகமும் எந்தலோகமும் திரியும் அனைத்துயிர் களும் ஒக்க மலர்க்கை குவித்து நிற்க அதிஷ்டம் அயோத்தி தக்க வதிஷ்டமுனிவன் வைக்க ( மகுட ) ஸ்ரீராமர் அரசியல் திருமுடிமேல் மகுடாபி ஷேகம் கொண்டு சீதையுடன் ரத்தின சிம்மா சனமேற்கொண்டு தருமநிலை வசிஷ்டமுனி உரைக்கக் கொண்டு தம்பியர்மன் னவர்வணங்கச் செங்கோல் கொண்டு வருமறையோர் தம்மாசீர் வாதங் கொண்டு மன்னுயிரைத் தன்னுயிர் போல் மனத்துட்கொண்டு கருமுகில் நேர் மேனிரகு ராமன் பூமி காத்திட்டான் ஒருகுடைக்கீழ்ச் சேர்த்திட்டானே பல்லவி காட்சியுடனே ராமன் தாழ்ச்சியில்லாமல் சாட்சி செய் திருந்தானே ( காட் ) அநுபல்லவி மீட்சிசெய்த சீதாச வீறும் சிங்காசனமேல் மாட்சிபெறும் சடையன் மணிமகுடத்தை ஞான மேதனாகவே ஓங்கி மேவிக்கருணை தேங்கி மரபோர் கொடுக்கவாங்கி வசிஷ்டர் தரிக்கத்தாங்கி ( காட் ) சரணங்கள் பகை 1. ஏற்கும் பசுவும் அதைத் இசைந்திருக்கவே ஆர்க்கும் அடங்காததுன் அடையலர் படைகளைப் சேர்க்கும் குடிகள் ஆறில் செழித்திடவே செல்வம் பார்க்குள் உறுதுயரை பரதனை இளவர தார்ப்புயன் லட்சுமணன் சத்துருக்கன் ஞாயாதிபதி கார்க்கடல் வண்ணன்தேவர் கலைவல்ல பலபல ரிஷிகள் தாக்கும் வேங்கையும் ஒன்றா நீக்கி மார்க்கம் உடைய பொல்லா போக்கி ஒருகடமை கொடுத்துச் தேக்கி நீக்கி அருளவல்ல சாக்கி வீற வேற சேனாதிபதியாகி ஆய்நீதி நிறை கண்டுகளிப் பல்லாண்டு பூற கூற ( காட் ) 2 மல்லார் புயச்சுக்கிரீவன் முதலாம் வானரருக்கு மாமணிப் பணிகளும் பாய்ந்து கல்லார்சஞ் சீவி மலை கொண்டுவந்த அனுமார் களிக்கப் பிரமபட்டமும் ஈந்து சொல்லார் விபீஷணனுக் கரங்க விமானந்தந்து துதிகுகன் சாம்பு வந்தனுக் காய்ந்து எல்லார் பலமணிகள் கோர்வை செய்திட்ட கண்டி எழில் பெறக் கழுத்தினில் வேய்ந்து சல்லாப மாகஅவர் தமையும் அனுப்பி விட்டு சாதிசனங்களுடனே எப்பொழுதும் நட்டு வல்லாளன் ஆய்க்கொடுங் கோல் மன்னவரை அட்டு வடிவழகிய மலர்க்கையாற் செங்கோலைத் தொட்டு ( காட் ) 3. நேசமிந்தபரந் திய சூரிசளும்பிர தாமத்திலிருக்கும் நித் காச ராமராச்சியத்துக்கிணை ஆமோ எந்த லோகமும் நாமும் அங்கேபோவோமென் பேச சாம பேத்தான தண்டம் அறிந்தராச சமுகங்கள் எங்கும் வந்து மூச காமராசனும் அந்த திவ்விய மங்கள விக்கிர கத்தைக் கண்டுகண்கள் நேமப்படியே மந்திரி பிரதானிகளும் துய்ய நெறியார் மனுவின்படி உரிய அரசு செய்ய ஏமம் பெற மாதமும் மாரி எங்கெங்கும் பெய்ய இகத்தினில் உள்ளசர் வசீவரத்து மாக்களும் உய்ய கூச ( காட் ) சமாப்தியில் மங்களம் பாயிரத்தில் உள்ள மங்களத்தை அவ்விருத்தத்தோடு இங்கே பாடிக்கொள்க சமாப்கியில் சோபனம் பாலகாண்டத்தில் உள்ள சோபனத்தைமட்டும் இங்கே பாடிக்கொள்க வாழி இரவிகுலம் வாழி Y தாராமர் வாழி ளையவர்மூ வரும் வாழி இவர்பெண்டிர் வாழி குருவசிஷ்டர் சுமந்திரர் அனுமார் சுக்கிரீவர்வாழி குருவாழி குகர்விபீ ஷணர்வாழி இந்தப் பரவியபார் கார்வாழி மும்மூர்த்தி வாழி பல அமரர் முனிவர் மதிகதிர்கள் வாழி தருவளர் காழிஅருணா சலகவி சொல்லியகீர்த் தனைப்படிப் போர் கேட்போரும் வாழி வாழி ! நூற்பயன் ஞானநா யகனாம் ராமன் நாடகம் இசையாற் சொல்லும் கானபா கவதர்உள்ளம் களித்திட இதனைக் கேட்போர் தானமாம் உலகில் உள்ள சௌபாக்கிய மும் பெற்றேநல் வானநாட் டரசனாக வசிகரம் பெறுவர் தாமே . யுத்த காண்டம் முற்றியது சக்கிரவர்த்தித் திருமகனார் திருவடிகளே சரணம் இராம நாடகம் முற்றிற்று ----------------------- ஸ்ரீராமஜெயம் யுத்தகாண்டம் ( கம்பராமாயண ஒப்புமைப் பகுதி ) அனுமார் மீண்டபின் ராவணன் கேட்க மந்திரிகள் ஆலோசனை கூறல் பூவரும் அயனோடும் புகுந்து பொன்னகர் மூவகை உலகினும் அழகு முற்றுற எவின் இயற்றினன் கணத்தின் என்பரால் தேவரும் மருள் கொளத் தெய்வத் தச்சனே பொன்னினும் மணியினும் அமைந்த பொற்புடை நன்னகர் நோக்கினான் நாகம் நோக்கினான் முன்னையின் அழகுடைத்து என்று மொய்கழல் மன்னனும் உவந்து தன் முனிவு மாறினான் தாழ்ச்சிஇங் கிதனின்மேல் தருவது என்இனி மாட்சிஓர் குரங்கினால் மறுகி மாண்டதால் ஆட்சியும் அரசும்என் அமைவும் நன்றுஎனா சூழ்ச்சியின் இழவரை நோக்கிச் சொல்லுவான் சுட்டது குாங்கெரி சூறை யாடிடக் கெட்டது கொடிநகர் கிளையும் நண்பரும் பட்டனர் பரிபவம் பரந்தது எங்கணும் இட்டஇவ் அரியணை இருந்தது என் உடல் என்றவன் இயம்பலும் எழுந்திறைஞ்சினான் கன்றிய கருங்கழற் சேனை காவலன் ஒன்றுளது உணர்த்துவது ஒருங்கு கேள் எனா நின்றனன் நிகழ்த்தினன் புணர்ப்பின் நெஞ்சினான் வஞ்சனை மனிதரை இயற்றி வாள் நுதல் பஞ்சன மெல்லடி மயிலைப் பற்றுதல் அஞ்சினர் தொழில் என அறிவித்தேன் அது தஞ்சென உணர்ந்திலை உணரும் தன்மையோய் போயின குரங்கினைத் தொடர்ந்து போய் இவண் ஏயினர் உயிர்குடித் தெவ்வம் தீர்கிலம் வாயினும் மனத்தினும் வெறுத்து வாழ்துமேல் ஓயும் நம் வலியென உணரக் கூறினான் மற்றவன் பின்னுறு மகோ தரப்பெயர்க் கற்றடந் தோளினான் எரியும் கண்ணினால் முற்றுற நோக்கினான் முடிவும் அன்னதால் கொற்றவ கேள் என இனைய கூறினான் இடுக்கிவண் இயம்புவ தென்னை ஈண்டெனை விடுக்குவை யாமெனின் குரங்கை வேரறுத்து ஒடுக்கரும் மனிதரை உயிருண்டு உன்பகை முடிக்குவென் யான் என முடியக் கூறினான் இச்சிரத் தவன்உரைத் திறுக்கும் எல்லையில் வச்சிரத் தெயிற்றவன் வல்லை கூறுவான் அச்சிரத்தைக் கொருபொருளன்று என்றனன் பச்சிரத் தம்பொழி பருதிக் கண்ணினான் நில் நில் என்றவன் தனை விலக்கி நீயிவண் என்முனும் எளியைபோல் இருந்தியோ எனா மன்முகம் நோக்கினன் வணங்கி வன்மையால் துன்முகன் என்பவன் இனைய சொல்லுவான் ஒல்வது நினையினும் உறுதி ஓரினும் வெல்வது விரும்பினும் விளைவு வேண்டினும் செல்வதங் கவருழைச் சென்று தீர்ந்தறக் கொல்வது கருமம் என்று உணரக் கூறினான் காவலன் கண்ணெதிர் அவனைக் கைகவித்து யாவதுண் டினி நமக்கு என்னச் சொல்லினான் கோவமும் வன்மையும் குரங்குக் கேயெனா மாபெரும் பக்கன் என் றொருவன் வன்மையான் மானுடர் ஏவுவார் குரங்குவந் திவ்வூர் தானெரி மடுப்பது நிருதர் தானவர் ஆனவர் அதுகுறித்து அழுங்குவார் எனின் மேல் நிகழ் தக்கன விளம்ப வேண்டுமோ திசாதிசை போதும் நாம் அரசன் செய்வினை உசாவினன் உட்கினன் ஒழிதும் வாழ்வென்றான் பிசாசன் என் றொரு பெயர் பெற்ற பெய்கழல் நிசாசரன் உருப்புணர் நெருப்பின் நீர்மையான் ஆரியன் தன்மையீ தாயின் ஆய்வுறு காரியம் ஈதெனின் கண்ட வாற்றினான் சீரியர் மனிதரே சிறியம் யாம்எனா சூரியன் பகைஞன் என்றொருவன் சொல்லினான் ஆள்வினை நிலைமையும் அரக்கர் ஆற்றலும் தாழ்வினை இதனின் மேல் பகரத் தக்கதோ சூழ்வினை மனிதரால் தோன்றிற் றாம் எனா வேள்வியின் பகைஞனும் உரைத்து வெள்கினான் தொகைநிலைக் குரங்குடை . மனிதர்ச் சொல்லி என் சிகைநிறச் சூலிதன் திறத்தின் செல்லினும் நகையுடைத் தாமமர் செய்தல் நன்றெனாப் புகைநிறக் கண்ணனும் புகன்று பொங்கினான் ( இராவணன் மந்திரப்படலம் 1 , 2 , 11 -13 , 15 , 16 , 21 , 22 , 27 , 28 , 31 , 37 , 38 , 40, 42-45 ) கும்பகர்னன் ராவணனுக்கு ஆலோசனை கூறல் வெம்பிகல் அரக்கரை விலக்கி வினைதேரா நம்பியர் இருக்கஎன நாயகனை முன்னா எம்பி என கிற்கில் உரை செய்வல் இதம் என்னா கும்பகருணப் பெயரினானிவை குறித்தான் நீ அயன் முதற்குலம் இதற்கொருவன் நின்றாய் ஆயிரம் மறைப்பொருள் உணர்ந்து அறிவமைந்தாய் தீயினை நயப்புறுதல் செய்வினை தெரிந்தாய் ஏயின உறத்தகைய இத்துணைய வேயோ ஓவியம் அமைந்தநகர் தீயுண உளைந்தாய் கோ இயல் அழிந்ததென வேறொரு குலத்தான் தேவியை நயந்து சிறை வைத்த செயல் நன்றோ பாவியர் உறும்பழி இதிற்பழியும் உண்டோ நன்னகர் அழிந்ததென நாணினை நயத்தால் உன்னுயிர் எனத்தகைய தேவியர்கள் உன்மேல் மன்னகை தரத்தா ஒருத்தன் மனையுற்றான் பொன்னடி தொழத் தொழ மறுத்தல் புகழ் போலாம் என்றொருவன் இல்லுறை தவத்தியை இரங்காய் வன்றொழிலி னாய்மறை துறந்து சிறைவைத்தாய் அன்றொழிவ தாயின் அரக்கர் புகழ் ஐய புன்றொழி னாரிசை பொறுத்தல் புல மைத்தோ ஆசில்பர தாரமவை அஞ்சிறை யடைப்போம் மாசில் புகழ்காத லுறுவேம் வளமை கூரப் பேசுவது மானம் இடை பேணுவது பேணுவது காமம் கூசுவது மானுடரை நன்று நம் கொற்றம் சிட்டர்செயல் செய்திலை குலச்சிறுமை செய்தாய் மட்டவிழ் மலர்க்குழலினாளை இனி மன்னா விட்டிடுது மேல் எளியம் ஆதும் அவர் வெல்லட் பட்டிடுதுமேல் அதுவும் நன்று பழியன்றால் மரம்படர் வனத்தொழுவனே சிலை வலத்தால் கரன்படை படுத்தவனை வென்று களைகட்டான் நிரம்பிடுவ தன்றதுவும் நின்றதினி நம்பால் உரம்படுவ தே இதனின் மேல் உறுதி உண்டோ வென்றிடுவர் மானுடவரேனும் அவர் தம்மேல் நின்றிடை விடாது நெறிசென்றுற நெருக்இத் தின்றிடுதல் செய்கிலம் எனின் செறுநரோடும் ஒன்றிடுவர் தேவர் உல கேழும் உடன் ஒன்றாம் ஊறுபடை ஊறுவதன் முன்னம் ஒருநாளே ஏறுகடல் ஏறிநரர் வானரரை எல்லாம் வேறுபெய ராதவகை வேரொடும் அடங்க அறறுவது வேகருமம் என்பது நுவன்றான் ( இராவணன் மந்திரப் படலம் 47 - 56 ] விபீஷணர் இந்திரசித்தை விலக்கி ராவணனுக்கு புத்திகூறல் என்றவன் இ பம்பியிடும் எல்லையினில் வல்லே சென்று படை யோடுசிறு மானுடர் சினப்போர் வென்று பெயர்வாய் அரசநீகொல் எனவீரம் நன்று பெரி தென்றுமகன் நக்கிவை நவின்றான் நீரும் நிலனும் நெடியகாலும் நிமிர்வானும் பேருலகில் யாவுமொரு நாள்புடை பெயர்த்தே யாரும் ஒழியாமை நரர்வானரரை எல்லாம் வேரும் ஒழியாதவகை வென்றலது மீளேன் என்றடி இறைஞ்சினன் எழுந்துவிடை ஈமோ வன் திறலினாய் எனலும் வாளெயிறு வாயில் தின்றனன் முனிந்து நனி தீவினையை எல்லாம் வென்றவரின் நன்றுணரும் வீடணன் விளம்பும் பிள்ளைமை விளம்பினை பேதைநீஎன ஒள்ளிய புதல்வனை உரப்பி என்உரை எள்ளலை யாமெனின் இயம்பல் ஆற்றுவென் தெள்ளிய பொருளென அரசற் செப்பினான் கோ நகர் முழுவதும் நினது கொற்றமும் சானகி எனும் பெயர் உலகின் தம்மனை ஆனவள் கற்பினால் வெந்த தல்லதோர் வானரம் சுட்டதென்று ணர்தல் மாட்சியோ மீனுடை நெடுங்கடல் இலங்கை வேந்தென்பான் தானுடை நெடுந்தவம் தளர்ந்து சாய்வது ஓர் மானுட மடந்தையால் என்னும் வாய்மொழி தேனுடை அலங்கலாய் இன்று தீர்ந்ததோ தீயிடைக் குளித்த அத்தெய்வக் கற்பினாள் வாயிடை மொழிந்த சொல் மறுக்க வல்லமோ நோயுனக்கு யான் என நுவன்றுளாள் அவள் ஆயவள் சீதை பண்டு அமுதின் தோன்றினாள் பொய்யுரைத் துலகினில் சினவினார் குலம் அறப்பொருது தன் மேல் நெய்யுரைத் துறையிலிட்டு அறம் வளர்த் தொருவனாய் நெறியில் நின்றான் மையுரைத் துலவுகண் மனைவிபால் வரம் அளித்து அவைமறாதே மெய்யுரைத் துயிர்கொடுத்து அமரரும் பெறுகலா வீடுபெற்றான் அனையவன் சிறுவர் எம்பெரும உன்பகைஞரால் அவரை அம்மா இனையர் என்றுணர்தியேல் இருவரும் ஒருவரும் எதிரிலாதார் முனைவரும் அமரரும் முழுதுணர்ந் தவர்களும் முற்றும் மற்றும் நினைவருந் தகையர் நம்வினையினால் மனிதராய் எளிது நின்றார் உரம் ஒருங்கியது நீர்கடையும் வாலியதுமார்பு உலகை மூடும் மரம் ஒருங்கிய காரதியார் விராதனது மால்வரைகள் மானும் சிரம் ஒருங்கிய இனிச்செரு ஒருங்கியதெனின் தேவர் என்பார் பரம் ஒருங்குவதலால் பிறிதொருங் காததோர் பகையுமுண்டோ இந்தமாநகரைச் செருமுருக்கிய கான் கதிரிசிரத் தோன் முந்தமானாயினான் வாலியே முதலினோர் முடிவு கண்டால் அந்தமான் இடவனோடு ஆழிமா வலவனும் பிறரும் ஐயா இந்த மானிடவராம் இருவரோ டெண்ணலாம் ஒருவர் யாரே ? ன்னம் ஒன்றுரை செய்கேன் இனிதுகேள் எம்பிரான் இருவராய அன்னவர் தம்மொடும் வானரத்தலைவராய் அணுகி நின்றார் மன்னனும் நம்பகைஞராம் வானுளோர் அவரொடும் மாறுகோடல் கன்மம் அன்றிது நமக்கு றுதி என்றுணர்தலும் கருமம் அன்றால் இசையும் செல்வமும் உயர் குலத்தியற்கையும் எஞ்ச வசையும் கீழ்மையும் மீக்கொள கிளையொடும் மடியாது அசைவில் கற்பினவ் அணங்கை விட்டருளுதி அதன்மேல் விசையம் இல்லெனச் சொல்லினன் அறி.ஞரின் மிக்கான் ( இராவணன் மந்திரப்படலம் 58 , 64 , 65,72.75 , 77.81 , 84 , 85 , 90 . 97 , 98,9 ) . ) விபீஷணரை ராவணன் சீறிக்கூறல் இச்சை அல்லன உறுதிகள் உ.ரைக்குவென் என்றாய் பிச்சர் சொல்லுவ சொல்லினை என்பெரு விறலைக் கொச்சைமா னுடர்வெல்குவர் என்றனை குறித்தது அச்சமோ அவர்க்கு அன்பினோ யாவதோ ஐயா ஈங்கு மானுடப் புழுக்களுக்கு இலைவரம் என்றாய் தீங்கு சொல்லினை திசைகளை உலகொடும் செருக்கால் தாங்கும் யானையைத் தள்ளி அத்தழல் நிறத்தவனை ஓங்கல் ஒன்றொடும் எடுக்க முன்வரங் கொண்டதுண்டோ சொல்லும் மாற்றங்கள் தெரிந்திலை பலமுறை தோற்று வெல்லும் ஆற்றலும் ஒருமுறை பெறுகதாம் விண்ணைக் கல்லும் ஆற்றலேன் கிளையையும் என்னையும் களத்தில் கொல்லும் மாற்றலர் உளர் எனக் கோடலும் கோளே ? அரங்கில் ஆடுவார்க்கு அன்பு பூண்டுடை வரம் அறியேன் இரங்கி யான் நிற்ப என்வலி அவன்வயின் எய்த வரங் கொள் வாலியால் தோற்றனென் மற்றும் வேறுள்ள குரங்கெலாம் எனை வெல்லும் என்று எங்ஙனம் கோடி நீலகண்டனும் நேமியும் நேர் நின்று பொரினும் ஏலும் அன்ன வருடை வலி அவன் வயின்எய்தும் சாலஅன்னது நினைந்து அவன் எதிர்செலல் தவிர்ந்து வாலிதன்னை அம்மனிதனும் மறைந்து நின்றெய்தான் ஊனவில் இறுத்து ஓட்டைமா மரத்துள் அம்புஓட்டி கூனிசூழ்ச்சியால் அரசிழந்து உயர்வனம் குறுகி யான் இழைத்திட இல்லிழந்து உயிர்சுமந்திருந்த மானுடன் வலி நீயலாது யார் உளர் மதித்தார் இந்திரன் தனை இருஞ்சிறை இட்டநாள் இமையோர் தந்தி கோடிறத் தகர்த்த நாள் தன்னையான் முன்னம் வந்தபோர் தொறும் துரந்தநாள் வானவர் உலகைச் சிந்தவென்றநாள் சிறியன் கொல் நீ சொன்ன தேவன் ! ( இராவணன் மந்திரப் படலம் 101 , 102 , 104 , 107 , 108 , 1-9 , 113 ] இரணியன் என்பவன் எம்மனோரினும் முரணியன் அவன் தலை முருக்கி முற்றினான் அரணியன் என்றவற்கு அன்புபூண்டவனை மரணம்என் றொரு பொருள் மாற்றும் வன்மையோய் ஆயவன் வளர்த்ததன் தாதை யாக்கையை மாயவன் பிளந்திட மகிழ்ந்த மைந்தனும் ஏயும் நம் பகைஞனுக் கினிய நண்பு செய் நீயுமே நிகர் பிறர் நிகர்க்க நேர்வரோ டாழீசால் இரணியன் புதல்வன் பண்பென சூழ்வினை முற்றியான் அவர்க்குத் தோற்றபின் ஏழை நீ என்பெரும் செல்வம் எய்திப்பின் வாழவோ கருத்தது வரவற்றாகுமோ பழியினை உணர்ந்தியான் படுக்கிலேன் உனை ஒழிகிலை புகலுதல் ஒல்லை நீங்குதி விழிஎதிர் நிற்றியேல் விளிதி என்றனன் அழிவினை எய்துவான் அறிவு நீங்கினான் [ வீடணன் அடைக்கலப் படலம் 2,3,4.8 ] சரணம் அடைந்த விபீஷணரைக் குறித்து ஸ்ரீ ராமருக்கு அனுமார் கூறுதல் வாழியாய் கேட்டியால் வாழ்வு கைம்மிக ஊழிகாண் குறுநினது உயிரை ஓர்கிலாய் கீழ்மை யோர் சொற்கொடு கெடுதல் நேர்தியோ வாழ்மைதான் அறம்பிழைத்தவர்க்கு வாய்க்குமோ எத்துணை வகையினும் உறுதி எய்தின ஒத்தன உணர்த்தினேன் உணர கிற்றிலை அத்தஎன் பிழைபொறுத் தருளுவாய் என உத்தமன் அந்நகர் ஒழியப் போயினான் தூயவர் துணிதிறன் நன்று தூயதே ஆயினும் ஒருபொருள் உரைப்பென் ஆழியாய் தீயன் என் றிவனையான் அயிர்த்தல் செய்கிலேன் மேயின சிலபொருள் விளம்பக் கேட்டியால் வாலிவிண்பெற அரசு இளையவன்பெற கோலிய வரிசிலை வலியும் கொற்றமும் சீலமும் உணர்ந்து நிற் சேர்ந்து தெள்ளிதின் மேலரசு எய்துவான் விரும்பி மேயினான் கொல்லுமின் இவனை என் வனைஎன் றரக்கன் கூறிய எல்லையில் , தூதரை எறிதல் என்பது புல்லிது பழியொடும் புணரும் , போர்த்தொழில் வெல்லலாம் பின்னர் என்று இடைவிலக்கினான் மாதரைக் கோறலும் மறத்து நீங்கிய ஆதரைக் கோறலும் அழிவு செய்யினும் தூதரைக் கோறலும் தூய்தன் றாம் என ஏதுவில் சிறந்தன எடுத்துக் காட்டினான் அன்னவன் தனிமகள் அலரின் மேலயன் சொன்னதோர் சாபமுண்டு உன்னைத் துன்மதி , நன்னுதல் தீண்டுமேல் நணுகும் கூற்று என என்னுடை இறைவிக்கும் இனிது கூறினாள் தேவர்க்கும் தானவர்க்கும் திசைமுகனே முதலாய தேவதேவர் மூவர்க்கும் முடிப்பரிய காரியத்தை முற்றுவிப்பான் மூண்டுநின்றாய் ஆவத்தின் வந்தபயம் என்றானை அயிர்த்த கல விடுதியாயின் கூவத்தின் சிறுபுனலை கடலயிர்த்தது ஒவ்வாதோ கொற்றவேந்தே ஆதலால் இவன்வரவு நல்வரவே என்றுணர்ந்தேன் அடியேன் உன்றன் வேத நூல் எனத்தகைய திருவுளத்தின் குறிப்பறியேன் என்று விட்டான் காதல் நான் முகனாலும் கணிப் பரிய கலையனைத்தும் கதிரோன் முன்சென்று ஓதினான் ஓதநீர் கடந்து பகைகடிந்து உலகை உய்யச் செய்தான் ( வீடணன் அடைக்கலப் படலம் 10 , 12 , 86 , 89 , 94 , 95 , 98 , 100 , 102 ] விபீஷணர் சரணாகதத்தைக் குறித்து ஸ்ரீராமர் கூறல் மற்றினி உரைப்ப தென்னோ மாருதி வடித்துச் சொன்ன பெற்றியே பெற்றி அன்ன தன்றெனின் பிறிதொன்றானும் வெற்றியே பெறுக தோற்க வீகவீயாது வாழ்க பற்றுதல் அன்றி உண்டோ அடைக்கலம் பகர்கின்றானை பிறந்தநாள் தொடங்கியாரும் துலைபுக்க பெரியோன் பெற்றி மறந்தநாள் உண்டோ என்னைச் சரண் என வாழ்கின்றானை துறந்தநாள் இறந்தநாளாம் துன்னினான் சூழ்ச்சியாலே இறந்தநா ளன்றோ என்றும் இருந்தநாள் ஆவ தென்றான் போதகம் ஒன்றுகன்றி இடங்கர்மாப் பொருத போரின் ஆதியம் பரமேயான் உன் அபயம் என்றழைத்த அந்நாள் வேதமும் முடிவு காணாமெய்ப் பொருள் வெளிவந்தெய்தி மாதுயர் துடைத்த வார்த்தை மறப்பரோ மறப்பிலாதார் ஆதலான் அபயம் என்ற பொழுதத்தே அபய தானம் ஈதலே கடப்பா டென்பது இயம்பினீர் என்பால்வைத்த காதலான் இனிவேறெண்ணக் கடவதென் கதிரோன்மைந்த கோதிலா தவனைநீயே என்வயின் கொணர்தி என்றான் [ வீடணன் அடைக்கலப்படலம் 105 , 107 , 110 , 117 ] சுக்கிரீவன் அழைத்தபோது விபீஷணர் சொல்லிக் கொண்டுவருதல் தழுவினர் நின்ற காலைத் தாமரைக் கண்ணன் தங்கள் முழுமுதற் குலத்திற்கேற்ற முறைமையால் உவகைமூள வழுவலில் அபயம் நின்பால் வழங்கினன் அவன் பொற்பாதம் தொழுதியால் ளிரைவின் என்று கதிரவன்சிறுவன் சொன்னான் சிங்கஏறனையான் சொன்ன வாசகம் செவிபுகா முன் கங்குலின் நிறத்தினான் தன் கண்மழைத் தாரைகான்ற அங்கமும் மனமதென்னக் குளிர்ந்ததவ் அகத்தை மிக்குப் பொங்கிய உவகைஎன்னப் பொடித்தன உரோமப்புள்ளி பஞ்செனச் சிவக்கும் மென்கால் தேவியைப் பிரித்தபாவி வஞ்சனுக் கிளைய என்னை வருக என்றருள் செய்தானோ தஞ்செனக் கருதினானோ தாழ்சடைக் கடவுள்உண்ட நஞ்செனச் சிறந்தேனன்றோ நாயகன் அருளின் நாயேன் துறவியின் உறவுபூண்ட தூயவர் துணைவன் என்னை உறஉவந்தருளி மீளா அடைக்கலம் உதவினானே அறவினை இறையும் இல்லா அறிவிலா அரக்கன் என்னும் பிறவியின் பெயர்ந்தேன் பின்னும் நரகினிற் பிழைப்பதானேன் ( வீடணன் அடைக்கலப்படலம் 121 - 123 , 126 } விபீஷணர் ஸ்ரீராமருடைய தெரிசனம் செய்தல் மார்க்கடம் சூழ்ந்தவைப்பின் இளையவன் மருங்குகாப்ப நாற்கடல் உடுத்தபாரின் நாயகன் புதல்வன் நாமப் பாற்கடல் சுற்றவிற்கை வடவரைபாங்கு நிற்பக் கார்க்கடல் கமலம் பூத்ததெனப் பொலிவானைக் கண்டான் அள்ளிமீதுல்கை வீசும் அரிக்குலச் சேனைநாப்பண் தெள்ளுகன் திரையிற்றாகிப் பிறிதொரு திறனும் சாரா வெள்ளிவெண்கடலுள் மேல்நாள் விண்ணவர் தொழுது வேண்டப் பள்ளிதீர்ந் திருந்தானென்னப் பொலிதரு பண்பினானை படர்மழை சுமந்தகாயம் பகர்வரும் அமரர் கோமான் அடர்சிலை துறந்த தென்ன ஆரந்தீர் மார்பினானைக் கடர் கடைமத்தின் பாம்பு கழற்றிய தேன்னிக் காசின் சுடர்ஒளி வலயம் தீர்ந்த சுந்தரத் தோளினானை கற்றைவெண் நிலவுநீங்கக் கருணையாம் அமிழ்தம் காலும் முற்றுறு கலையிற்றாய முழுமதி முகத்தினானைப் பெற்றவன் அளித்தமோலி இளையவன் பெறத்தான் பெற்ற சிற்றவை பணித்தமோலி பொலிகின்ற சென்னியானை வீரனை நோக்கி அங்கம் மெய்ம் மயிர்சிலிர்ப்பக் கண்ணீர் வார நெஞ்சுருகிச் செங்கண் அஞ்சன மலையன்றாகின் கார்முகில் கமலம் பூத்தது அன்றிவன் கண்ணன் கொல்லாம் ஆரருள் சுரக்கும் நீதி அறநிறம் கரிதோ என்றான் கரங்கள் மீச்சுமந்து செல்லும் கதிர்மணி முடியன்கல்லும் மரங்களும் உருகநோக்கும் காதலன் கருணைவள்ளல் இரங்கினன் நோக்குந் தோறும் இருநிலத்திறைஞ்சு கின்றான் வரங்களின் வாரியன்ன தாளிணை வந்து வீழ்ந்தான் [ வீடணன் அடைக்கலப்படலம் 129, 130 , 132 , 133 , 134 , 137 ] விபீஷணர் ஸ்ரீராமரை சரணடைதல் அழிந்தது பிறவி என்னும் அகத்தியல் முகத்துக்காட்ட வழிந்த சண்ணீரின் மண்ணில் மார்புற வணங்கினானை பொழிந்ததோர் கருணை தன்னால் புல்லினன் என்று தோன்ற எழுந்தினிது இருத்தி என்னா மலர்க்கையால் இருக்கை ஈந்தான் [ வீடணன் அடைக்கலப்படலம் 138 } ஸ்ரீராமர் விபீஷ னருக்கு அபயமும் அரசும் கொடுத்தல் ஆழியான் அவனை நோக்கி அருள்சுரந் துவகை கூர்ந்தே ஏழினோ டேழாய் நின்றஉலகும் என்பெயரும் எந்நாள் வாழும் நாள் அன்று காறும் வாளெயிற்றரக்கர் வைகும் தாழ்கடல் இலங்கைச் செல்வம் நின்னதே தந்தேன் என்றான் உய்ஞ்சனென் அடியேன் என்று ஊழ்முறை வணங்கிநின்ற அஞ்சன மேனியானை அழகனும் அருளின் நோக்கித் தஞ்ச நல் துணைவனான தவறிலாப் புகழான் தன்னைத் துஞ்சலில் நயனத்தைய சூட்டுதிமகுடம் என்றான் விளைவினை அறியும் மேன்மை வீடணன் என்றும் வீயா அளவறு பெருமைச் செல்வம் அளித்தனை ஆயின் ஐய களவியல் அரக்கன்பின்னே தோன்றிய கடமைதீர இளையவற் களித்தமோலி என்னையும் கவித்தி என்றான் குகனொடும் ஐவரானேம் முன்புபின் குன்று சூழ்வான் மகனொடும் அறுவரானேம் எம்முழை அன் பின்வந்த அகனமர் காதல் ஐய நின்னொடும் எழுவரானேம் புகலருங் கானந்தந்து புதல்வராற் பொலிந்தான் நுந்தை [ வீடணன் அடைக்கலப்படலம் 139 , 141 - 143 ] விபீஷணர் ஸ்ரீராமருக்கு ராவணன் பெருமைகூறல் ஆர்கலி இலங்கையின் அரணும் அவ்வழி வார்கெழு கனைகழல் அரக்கர் வன்மையும் தார்கெழு தானையின் அளவும் தன்மையும் நீர்கெழு தன்மையாய் நிகழ்த்து வாய்என்றான் நிலையுடை வடவரைகுலைய நேர்ந்து அதன் தலைஎன விளங்கிய தமனியப் பெரு மலையினை மும்முடி வாங்கி ஓங்குநீர் அலைகடல் இட்டனன் அனுமன் தாதையே ஏழு நூறு யோசனை அகலம் இட்டகீழ் ஆழம் நூறுயோசனை ஆழிமால் வரை வாழியாய் உலகினை வளைந்த வண்ணமே சூழும்மாமதில் அது சுடர்க்கும் மேலதால் மருங்குடை வினையமும் பொறியின் மாட்சியும் இருங்கடி அரணமும் பிறவும் எண்ணினால் சுருங்கிடும் என்பல சொல்லி சுற்றிய கருங்கடல் அகழது நீரும் காண்டிரால் வடதிசை வயங்கொளி வாயில் வைகுவோர் இடையிலர் எண்ணிரு கோடி என்பரால் கடையுக முடிவினில் காலன் என்பதென் விடைவரு பாகனைப் பொருவும் மேன்மையார் இப்படி மதிலொரு மூன்றும் வேறினி ஒப்பரும் பெருமையும் உரைக்கவேண்டுமோ மெய்ப் பெருந்திருநகர் காக்கும் வெய்யவர் முப்பது கோடியின் மும்மை முற்றினார் தேர்பதினாயிரம் பதுமம் , செம்முகக் கார்வரை அவற்றினுக் கிரட்டி , கால்வயத்து ஊர்பரி அவற்றுனுக் கிரட்டி ஒட்டகம் தார்வரு புரவியும் இரட்டி சாலுமே உகம்பல் காலமும் தவம் செய்து பெருவசம் உடையான் சுகம்பல் போரலால் வேறிலன் பொருபடைத் தொகையான் நகம்பல் என்றிவை யில்லதுஓர் நரசிங்கம் அனையான் அகம்பன் என்றுளன் அலைகடல் பருகவும் அமைவான் பொருப்பை மீதிடும் புரவியும் பூட்கையும் தேரும் உருப்ப விற்படை ஒன்பது கோடியும் உடையான் செருப்பெய் வானிடைச் சினைக்கிடாய் கடாய்வந்து செறுத்த நெருப்பை வென்றவன் நிகும்பன் என்றுளன் ஒருநெடியோன் தும்பியீட்டமும் இரதமும் புரவியும் தொடர்ந்த அம்பொன் மாப்படை ஐயிருகோடி கொண்டமைந்தான் செம்பொன் நாட்டுடைச் சித்தரை சிறையிடவைத்தான் கும்பன் என்றுளன் ஊழிவெங்கதிரினும் கொடியான் பேயை யாளியை யானையைக் கழுதையைப் பிணித்தது ஆயதேர்ப்படை ஐயிரு கோடி கொண்ட மைந்தான் தாயை ஆயினும் சலித்திடு வஞ்சனை தவிரா மாயையான் உளன் மகோதரன் என்றொரு மறவோன் குன்றில் வாழ்பவர் கோடி நாலைந்தினுக்கு இறைவன் இன்றுளார் பினை நாளையிலார் என எயிற்றால் தின்றுளான் நெடும் பல்முறை தேவரைச் செருவின் வென்றுளான் உளன்வேள்வியின் பகைஞன் ஓர்வெய்யோன் மண்ணுளாரையும் வானிலுள்ளாரையும் வகுத்தால் உண்ணும் நாளொருநாளின் என்றொளிர் படைத்தானை எண்ணின் நாலிரு கோடியன் எரிஅஞ்ச விழிக்கும் கண்ணினான் உளன் சூரியன்பகை என்றோர் கழலான் தேவரும் தக்கமுனிவரும் திசைமுகன் முதலா மூவரும் பக்கம் நோக்கியே மொழிதர முனிவான் தாவரும் பக்கம் எண்ணிரு கோடியின் தலைவன் மாபெரும் பக்கன் என்றுளன் குன்றினும் வலியான் உச்சிரத் தெரிகதிர் என உருத்தெரி முகத்தன் நச்சிரப்படை நாலிரு கோடிக்கு நாதன் முச்சிரத்தையில் தலைவற்கும் வெலற்கரு மொய்ம்பன் வச்சிரத்து எயிற்றவன் உளன் கூற்றுவன் மாற்றான் அசஞ்சலப்படை ஐயிருகோடியான் அமரின் வசஞ் செயாதவன் தானன்றிப் பிறரிலா வலியான் இசைந்த வெஞ்சமத் தியக்கரை வேரொடும் முன்நாள் பிசைந்து மோந்தவன் பிசாசன் என்றுளன் ஒருபித்தன் சில்லிமாப் பெருந்தேரோடும் கரிபரிசிறந்த வில்லின் மாப்படை ஏழிரு கோடிக்கு வேந்தன் கல்லிமாப்படி கலக்குவான் கனல் எனக் காந்திச் சொல்லும் மாற்றத்தன் துன்முகன் என்றறம் துறந்தோன் லங்கை நாட்டினன் எறிகடல் தீவிடை உறையும் அலங்கல் வேற்படை ஐயிருகோடிக்கும் அரசன் வலங்கொள் வாள் தொழில் விஞ்சையர் பெரும்புகழ் மறைத்தான் விலங்கு நாட்டத்தன் என்றுளன் வெயில்உக விழிப்பான் நாமம் நாட்டிய சவம் எனின் நாள்தொறும் ஒருவர் ஈமநாட்டிடை இடாமல் தன் எயிற்றிடை இடுவான் தாமம் நாட்டிய கொடிப்படைப் பதுமத்தின் தலைவன் தூம நாட்டத்தன் என்றுளன் தேவரைத் துரந்தான் போரின் மத்தனும் பொருவய மத்தனும் புலவர் நீரின் மத்தெனும் பெருமையர் நெடுங்கடற்படையார் ஆரும் அத்தனை வலியுடையாரிலை அமரில் பேரும் அத்தனை எத்தனை உலகமும் பெரியோய் தம்பி முற்பகல் சந்திரர் நால்வரின் தயங்கும் கும்ப மாக்கிரிகோடு இருகைகளால் கழற்றிச் செம்பொன் மால்வரை மதம்பட்டதாம் எனத் திரிந்தான் கும்பகன்னன் என்றுளன் பண்டுதேவரைக் குமைத்தான் கோளிரண்டையும் கொடுஞ்சிறை வைத்த அக்குமரன் மூளு ம் வெஞ்சினத்து இந்திரசித்து என மொழிவர் ஆளும் இந்திரற்கு அன்னவன் பிணித்ததன் பின்னைத் தாளும் மார்பினும் தோளினும் உளஇனம் தழும்பு தன்னையும் தெறும் தருமம் என்றிறை மனம் தாழான் முன்னவன் தரப் பெற்றதோர் முழுவலிச் சிலையான் அன்னவன் தனக் கிளையவன் அப்பெயர் ஒழிந்தான் பின்ஓர் இந்திரன் இலாமையின் பேர் அதிகாயன் தேவராந்தகன் நராந்தகன் திரிசிரா என்னும் மூவராம் தகைமுதல்வராம் தலைவரும் முனையின் போவராம் தகை அழிவராம் எனத் தனிப் பொருவார் ஆவராம் இராவணற்கு அரும்பெரும் புதல்வர் னையதன்மையர் வலியிவை இராவணன் என்னும் அனையவன் திறம்யான் அறியளவு எலாம் அறைவென் தனையன் நான்முகன் தகைமகன் சிறுவற்குத் தவத்தால் முனைவர் கோன்வரம் முக்கணான் வரத்தொடும் உயர்ந்தான் என்னில் ஐம்பெரும் பூதமும் யாவையும் உடைய புள்ளிமான் உரிஉடையன் உமையொடும் பொருந்தும் வெள்ளியம் பெருங்கிரியினை வெரொடும் வாங்கி அள்ளி விண்தொட எடுத்தனன் உலகெலாம் அனுங்க குரண்டம் ஆடு நீர் அளகையின் ஒளித்துறை குபேரன் திரண்ட மாடும் தன்திருவொடு நிதியமும் இழந்து புரண்டுமான் திரள் புலி கண்டதாம் எனப்போனான் ரண்டு மானமும் இலங்கைமா நகரமும் இழந்து என்றுலப்புறச் சொல்லுகேன் இராவணன் என்னு ம் குன்றுலப்பினும் உலப்பிலாத் தோளினான் கொற்றம் இன்றுலப்பினும் நாளையே உலப்பினும் சிலநாள் சென்றுலப்பினும் நினக்கன்றிப் பிறர்க் கென்றும் தீரான் ( ஒன்னார் வலியறிபடம் 15 , 17 - 20 , 26 , 30 , 33 - 45 , 48 - 53 , 56 , 59 ] ஸ்ரீராமர்முன் விபீஷணர் அனுமாரைத் துதித்தல் ஈடுபட்டவர் எண்ணிலர் தோரணத்து எழுவால் பாடுபட்டவர் படுகடல் மண்லினும் பலரால் சூடுபட்டது தொல்நகர் அடுபுலி துரந்த ஆடுபட்டது பட்டனர் அனுமனால் அரக்கர் எம்குலத்தவர் எண்பதினாயிரர் இறைவர் கிங்கரப் பெயர் கிரியன்ன தோற்றத்தர் கிளர்ந்தார் வெங்கரத்தினும் காலினும் வாலினும் வீக்கச் சங்கரற்கழி முப்புரத்தவர் எனச் சமைந்தார் வெம்புமாக்கடற் சேனைகொண்டு எதிர்பொர வெகுண்டான் அம்பும் ஆயிரத்தாயிரம் இவன் புயத்தழுத்தி உம்பர் வானகத்து ஒருதனி நமனைச் சென்றுற்றான் சம்புமாலியும் வில்லினால் சுருக்குண்டு ; தலைவ சேனைக்காவலர் ஓர் ஐவர் உளர் பண்டுதேவர் வானைக்காவலும் மானமும் மாற்றிய மறவர் தானைக் கார்க்கருங் கடலொடும் தமரொடும் தாமும் யானைக் கால்பட்ட செல்லென ஒல்லையின் அவிந்தார் காய்த்த அக்கணத்து அரக்கர் தம் உடல்உகு கறைத்தோல் நீத்த எக்கரின் நிறைந்துள கருங்கடல் நெருப்பின் வாய்த்த அக்கனை வரிசிலை மலையொடும் வாங்கித் தேய்த்த அக்குழம்பு உலர்ந்தில இலங்கையின் தெருவி சொன்ன மா மதில் இலங்கையின் பரப்பினில் துகைத்துச் சின்னம் ஆனவர்கணக்கிலர் யாவரே தெரிப்பார் இன்னர் ஆர்உளர் வீரர் மற்றிவன் சுட எரித்த அன்ன மா நகர் அவிந்தது அக்குருதியால் அன்று விலங்கல் வெந்தவா வேறினி விளம்புவ தெவனோ அலங்கள் மாலையும் சாந்தமும் அன்றுதான் அணிந்த கலங்க ளோடும் அச்சாத்திய துசிலொடும் கதிர்வாள் இலங்கை வேந்தனும் ஏழுநாள் விசும்பிடையிருந்தான் காந்தும் வாளியின் கான் முதல் வீரரும் கவியின் வேந்தும் அன்றிவர் விளிந்தவா கேட்டன்றிவ் விலங்கை தீந்தவா கண்டும் அரக்கரைச் செருவிடை முருக்கிப் போந்தவா கண்டும் நான் இங்குப் புகுந்தது புகழோய் [ ஒன்னார் வலியறிபடலம் 60-66 , 68 ] ஸ்ரீராமர் வருணன்பேரில் அம்புதொடுத்தல் தருணமங்கையை மீட்பதோர் நெறிதருக என்னும் பொருள் நயந்து நன்னூல் நெறி அடுக்கிய புல்லில் கருணையங் கடல்கிடந்தது கருங்கடல் நோக்கி வருணமந்திரம் எண்ணினன் விதிமுறை வணங்கி பூழி சென்று தன் திருவுருப் பொருந்தவும் பொறைதீர் வாழி வெங்கதிர் மணிமுகம் வருடவும் வளர்ந்தான் ஊழிசென்றன ஒப்பன ஒருபல் அவைஓர் ஏழுசென்றன வந்திலன் எறிகட்கு இறைவன் ஊற்றம் மீக்கொண்ட வேலையான் உண்டுஇல்லை என்னும் மாற்றம் ஈக்கவும் பெற்றிலம் யாம்எனும் மனத்தால் ஏற்றம் மீக்கொண்ட புனலிடை எரிமுளைத்தென்னச் சீற்றம் மீக்கொண்டு சிவந்தன தாமரைச் செங்கண் வாங்கி வெஞ்சிலை வாளிபெய் புட்டிலும் மலைபோல் வீங்கு தோள் வலம் வீக்கினன் கோதையை விரலால் தாங்கி நாணினைத் தாக்கினன் தாக்கிய தமரம் ஓங்கு முக்கணான் தேவியைத் தீர்த்துளது ஊடல் பெரிய மால்வரை ஏழினும்பெரு வலிபெற்ற வரிகொள் வெஞ்சிலைவளர் பிறையாம் எனவணங்கித் திரிவன நிற்பன யாவையும் முடிவினில் தீக்கும் எரியின் மும்முடி கொடியன சுடுசரம் எய்தான் மீனும் நாகமும் விண்தொடும் மலைகளும் விறகா ஏனை நிற்பன யாவையும் மேல் எரி எய்த பேன நீர் நெடு நெய்யெனப் பெய்கணை நெருப்பால் கூனை அங்கியின் குண்டடம் ஒத்தது கடற்குட்டம் பாழி வல்நெடும் கொடுஞ்சிலை வழங்கி பகழி ஏழுவேலையும் எரியொடு புகைமடுத்து ஏகி ஊழி வெங்கனல் கொழுந்துகள் உருத்தெழுந்தோடி ஆழிமால் வரைக்கு அப்புறத்து இருளையும் அவித்த மருமதாரையின் ஏரியுண்ட மகரங்கள் மயங்கிச் செருமவானிடைக் கற்பக மரங்களும் தீய நிருமியா விட்டநெடுங் கணைபாய்தலின் நெருப்போடு உருமு வீழ்ந்தெனச் சென்றன கடல்துளி உம்பர் கூடும் வெம்பொறிக் கொடுங்கனல் தொடர்ந்தெனக் கொளுந்த ஓடும் மேகங்கள் பொரிந்திடை உதிர்ந்தன உம்பர் ஆடும் மங்கையர் கருங்குழல் விளர்த்தன அளக்கர்க் கோடு தீந்தெழக் கொழும் புகைப்பிழம்பு மீக்கொள்ள நிமிர்ந்த செஞ்சரம் நிறந்தொறும் படுதலும் நெய்த்தோர் உழிழ்ந் துலந்தன மகரங்கள் உலப்பில உருவத் துமிந்த துண்டமும் பலப்படத் துரந்தன தொடர்ந்து திமிங்கிலங்களும் திமிங்கில கிலங்களும் சிதறி சிந்திஓடிய குருதி வெங்கனலொடு செறிய அந்தி வானகம் கடுத்தது அவ் அளப்பரும் அளக்கர் பந்தி பந்திகளாய் நெடும் கடுங்கணை படர வெந்து தீர்ந்தன பொரிந்தன சிலமீன்கள் அதிரும் வெங்கணை ஒன்றை ஒன்றடர்ந்து எரிஉய்ப்ப வெதிரின் வல்நெடும் கான் என வெந்தன மீனம் பொதுவின் மன்னுயிர்க் குலங்களும் துணிந்தன பொழிந்த உதிரமும் கடல்திரைகளும் பொருவன ஒருபால் தெய்வ நாயகன் தெரிகணை திசைமுகத் தொருவன் வைவுஇது ஆம் என பிழைப்பில் மனத்தினும் கடுக வெய்யவல் நெருப்பிடை இடைபொறித் தெழவெறிநீர்ப் பொய்கை தாமரை பூத்தெனப் பொலிந்தது புணரி செப்பின் மேலவர் சீறினும் அதுசிறப்பாதல் தப்புமே அது கண்டனம் உவரியில் தணியா உப்பு வேலை என்றுலகுறு பெரும்பழி நீங்கி அப்புவேலையாய் நிறைந்தது குறைந்ததோ அளக்கர் ஆழியின் புனலற மணிகள் அட்டிய பேழையிற் பொலிந்தன பரவை பேர்வறப் பூழையின் பொருகணை உருவப்புக்ககன மூழையின் பொலிந்தன முரலும் வெள்வளை இடுக்கின எண்ணுவதில்லை ஈண்டினி முடுக்குவென் வருணனை என்ன மூண்டெதிர் தடுக்கரும் வெகுளியான் சதுமுகன்படை தொடுத்தனன் அமரரும் துணுக்கம் எய்தினார் அண்ட மூலத்துக்கப்பால் ஆழியும் கொதித்தது ஏழு தெண்திரைக் கடலின் செய்கை செப்பிஎன் தேவன் சென்னி பண்டைநாள் இருந்த கங்கை நங்கையும் பதைத்தாள் பார்ப்பான் குண்டிகை இருந்த நீரும்குளுகுளு கொதித்ததன்றே கடல்சீறியபடலம் 2 , 3 , 4 , 13 , 15-20 , 23 , 27 , 29 , 30 , 49 , 56 , 581 ஸ்ரீராமரை வருணன் சரணடைதல் வந்தனன் என்பமன்னோ மறிகடற் கிறைவன் வாயில் சிந்திய மொழியன் தீந்த சென்னியன் திகைத் நெஞ்சன் வெந்தழித் துருகும் மெய்யன் விழுப்புகைப் படலம் விம்ம அந்தரின் அலமந்தஞ்சி துயர் உழந்து அலக்கண் உற்றான் நவையறு உலகிற்கெல்லாம் நாயக நீயேசீறின் கவயம் நின் சரணம் அல்லால் பிறிதொன்று சுண்டதுண்டோ வையுனக் கரியவோதான் எனக்கென வலிவேறுண்டோ அவயம் நின் அவயம் என்னா அடுத்தடுத் தரற்றுகின்றான் ஆழி நீ அனலும் நீயே அல்லவை எல்லாம் நீயே ஊழிநீ உலகும் நீயே அவற்றுறை உயிரும் நீயே யாய் அடியேன் நின்னை மறப்பெனோ வயங்குசெந்தீச் சூழுற உலைந்து போனேன் காத்தருள் சுருதிமூர்த்தி அன்னை நீ அத்தன் நீயே அல்லனவ எல்லாம் நீயே பின்னும் நீ முன்னும் நீயே பேறும் நீ இழவும் நீயே என்னை நீ இகழ்ந்தது என்றது எங்ஙனே ஈசன் ஆய உன்னைநீ உணராய் நாயேன் எங்ஙனம் உணர்வேன் உன்னை பாயிருள் சீய்க்கும் தெய்வப் பகுதியைப் பழிக்கும் மாலை மாயிரும் கரத்தால் மண்மேல் அடியுறை யாகவைத்துத் தீயன சிறியோர் செய்தால் பொறுப்பதே பெரியோர் செய்கை ஆயிர நாமத்து ஐயா சரணம் என்றடியில் வீழ்ந்தான் பார்த்தனில் பொறை பின் மிக்க பத்தினிக் குற்ற பண்பு வார்த்தையின் அறிந்ததல்லால் தேவர்பால் வந்திலேன் நான் தீர்த்தநின் ஆணைஏழாம் செறிதிரைக் கடலில்மினின் போர்த்தொழில் விலக்கப் போனேன் அறிந்திலேன் புகுந்ததொன்றும் கல்லென வலித்து நிற்பின் கணக்கிலா உ பிர்கள் எல்லாம் ஒல்லையின் உலந்து வீயும் இட்டதொன் றொழுகா வண்ணம் எல்லையில் காலமெல்லாம் ஏந்து வென் இனிதின் எந்தாய் செல்லுதி சேது என்று ஒன்று இயற்றிஎன் சிரத்தின் மேலாம் [ வருணன் அடைக்கலப்படலம் 3- 5 , 9 , 10 , 13 , 20 ] வானரவீரர்கள் சேதுபந்தனம் பண்ணுதல் என்றலும் இரங்கிஐயன் இத்திறம் நிற்கஇந்தப் பொன் றலில் பகழிக் கப்பால் இலக்கம் என்புகறி என்ன நன்றென வருணன் தானும் உலகத்து நலிவு தீரக் குன்றென உயர்ந்த தோளாய் கூறுவல் உன்று கூறும் மன்னவ மருகாந்தாரம் என்பதோர் தீவின்வாழ்வார் அன்னவர் சதகோடிக்கு மேலுளார் அவுணர் ஆயோர் தின்னவே உலகம் எல்லாம் தீந்தன எனக்கும் தீயார் மின்னுமிழ் கணையை வெய்யோர் மேற்செலவிடுதி என்றான் மொழி உனக்கபயம் என்றாய் ஆதலான் முனிவு தீர்ந்தேன் பழி எனக் காகும்என்று பாதகர் பரவை என்னும் குழியினைக் கருதிச்செய்த குமண்டையைக் குறித்து நீங்க வழியினைத் தருதி என்றான் வருணனை நோக்கி வள்ளல் [ வருணன் அடைக்கலப்படலம் 14 , 15 , 19 ] கருவரை காதங்கள் கணக்கிலா தன இருகையில் தோள்களில் சென்னி எந்தின ஒருகடல் அடைக்கமற்று ஒழிந்த வேலைகள் வருவனவாம் என வந்தவானரம் பேர்த்தன சிலமலை பேர்க்கப் பேர்க்க நின்று ஈர்த்தன சிலசில சென்னி ஏந்தின தூர்த்தன சிலசில தூர்க்கத் தூர்க்கநின்று ஆர்த்தன சிலசில ஆடிப்பாடின காலிடை ஒருமலையுருட்டிக் கைகளின் மேலிடை ஒருமலை வாங்கி விண்தொடும் சூலுடை மழைமுகில் சூழ்ந்து சுற்றிய வாலிடை ஒருமலை ஈர்த்து வந்தவால் முடுகினன் தருகென மூன்று கோடியர் எடுக்கினும் அம்மலை ஒருகை ஏந்தியிட்டு அடுக்கினம் தன்வலி காட்டி ஆழியை நடுக்கினன் நளன் எனும் நவையில் நீங்கினான் மஞ்சினில் திகழ்தரு மலையை மாக்குரங்கு எஞ்சுறக் கடித்தெடுத் தெறியவே நளன் விஞ்சையில் தாங்கினன் சடையன் வெண்ணெயில் தஞ்சம் என்றோர் களைத்தாங்கும் தன்மை போல் வேரொடும் நெடுங்கிரி தலைவர் வீசின ஓரிடத் தொன்றின் மேல் ஒன்று சென்றுற நீரிடை நிமிர்போறி பிறக்க நீண்டாது ஆருடை நெருப்புஎன வருணன் அஞ்சினான் சிந்துரத் தடவரை எறியச் சேணிடை முந்துறத் தெறித்தெழு முத்தம் தொத்தலால் அந்தரத் தெழுமுகில் ஆடையா அசன் பந்தர் ஒத்தது நெடும் பருதி வானமே நீலனிட்ட நெடுவரை நீந்நில மூலம் முட்டலின் மொய்புனல் கைம்மிக கூலம் இட்டிய ஆர்கலி கோத்தலால் ஓலமிட் டெழுந்து ஓடி உலகெலாம் குமுதன் இட்ட குலவரை கூத்தரின் திமிதம் இட்டுத் திரியும் திரைக்கடல் துமிதம் ஆர்புக வானவர் துள்ளினார் அமுதம் இன்னும் எழுவெனும் ஆசையால் ஆர ஆயிர யோசனை ஆழமும் தீர நீண்டு பரந்த திமிங்கிலம் பார மால்வரை ஏறப் பதைத்துடல் பேரவே குன்றும் வேலையுல் போர்ந்த வால் உற்றதால் அணை ஓங்கல் லங்கையை முற்றமூன்று பகலிடை முற்றலும் பெற்ற ஆர்பு விசும்பு பிளந்ததால் மற்றிவ் வானம் பிறிதொரு வான்கொலோ நாடுகின்ற தென்வேறொன்று நாயகன் தோடு சேர் குழலாள் துயர் நீக்குவான் ஓடும் என்முதுகிட்டென ஓங்கியே சேடன் என்னப் பொலிந்தது சேதுவே [ சேதுபந்தனப்படலம் 5-9 , 11 , 13 , 38 , 42 , 45 , 65 , 66 ] ஸ்ரீராமர் சுகசாரணரோடு கூறுதல் ஊழிமுதல் நாயகன் வியப்பினொடு வந்தான் ஆழியன தாழம் உரை செய்யும் அளவன்றே வாழிஇவ் இலங்கை நெடுவன் திசைய தாமேல் ஏழுகடலும் கடிது அடைப்பர் இவர் என்றான் நீலனை இனிதுநோக்கி நேமியோன் விரைய நீநம் பால்வரு சேனைக்கெல்லாம் பாடிவீடமைத்தீ என்னக் கால்மிசை வணங்கிப் போனான் கல்லினால் கடலைக்கட்டி நூல்வரை வழி செய்தானுக் கந்நிலை நொய்தின் சொன்னான் வில்லினாற் கிருக்கை செய்யும் விரும்பினால் பொருப்பின் வீங்கும் கல்லினால் கல்லைஒக்கக் கடாவினான் கழைகளான நெல்லினால் அளக்கும் காலும் நிரப்பினான் தருப்பை என்னும் புல்லினால் தொடுத்து வாசப்பூவினால் வேய்ந்துவிட்டான் இற்றிது காலமாக இலங்கையர் வேந்தன் ஏவ ஓற்றர்வந் தளவுநோக்கி குரங்கென உழல்கின்றாரைப் பற்றினன் என்பமன்னோ பண்டு தான் பலநாள் செய்த நற்றவப் பயன் தந்துய்ப்ப முந்துறப் போந்ததம்பி அகனுறப் பொலிந்த வள்ளல் கருணையால் அழுதகண்ணன் நகம்நிறை கானில்வைகும் நம்மினத்தவரும் அல்லர் தகைநிறை வில்லா உள்ளத்து இராவணன் தந்த ஒற்றர் சுகன் இவன் அவனும் சாரன் என்பது தெரியச்சொன்னான் எல்லையில் இலங்கைச் செல்வம் இளையவற் கீந்த தன்மை சொல்லுதிர் மகரவேலைக் கவிச்குல வீரர் தூர்த்துக் கல்லினிற் கடந்தவாறும் கழறுதிர் காலந்தாழ்த்த வில்லினர் வந்தார் என்றும் விளம்புதிர் வினையம் மிக்கீர் கொத்துறு தலையான் வைகும் குறும்புடை இலங்கைக் குன்றம் தத்துற தடநீர் வேலை தனில் ஒரு சிறையிற்றாதல் ஒத்துற உணர்ந்திலாமை உயிரொடும் உறவினோடும் இத்துணை இருந்தது என்னும் தன்மையும் இயம்புவீரால் சண்டங்கொள் வேகமாரும் தனிவிடை உவணம் தாங்கும் துண்டங்கொள் பிறையான் மௌலித் துளவினோடும் தொல்லை அண்டங்கள் எவையும் தாங்கிக் காப்பினும் அறம் இலாதாற் கண்டங்கள் பலவும் காண்பென் என்பதும் கழறுவீரால் தீட்டிய மழுவாள் வீரன் தாதையைச் செற்றான் சுற்றம் மாட்டிய வண்ணம் என்ன வருக்கமும் மற்றும் முற்றும் வீட்டி என் தாதைக்காக மெய்ப்பலி விசும்புளோரை ஊட்டுவென் உயிர்கொண்டென்னும் வார்த்தையும் உணர்த்துவீரால் தாழ்விலாத் தவத்தோர் தையல் தனித்தொரு சிறையில் தங்கச் சூழ்விலா வஞ்சம் சூழ்ந்த தன்னைத்தன் சுற்றத்தோடும் வாழ்வெலாம் தம்பி கொள்ள வயங்கெரி நாகம் என்னும் மீள்விலாச் சிறையின் வைப்பேன் என்பதும் விளம்புவீரால் நோக்கினிர் தானை எங்கும் நுழைந்து நீர்இனி வேறொன்றும் ஆக்குவ தில்லையாயின் அஞ்சல் என்று அவரை ஐயன் வாக்கினின் மனத்தின் கையின் மற்றிவர் நலியாவண்ணம் போக்குதி விரைவின் என்றான் உய்ந்தனம் என்று போனார் ( ஒற்றுக் கேள்விப்படலம் 4 , 14 , 16 , 23 , 23 , 33 38 ] ராவணனுக்கு மாலியவான் புத்தி கூறல் வெள்ளவாரி விரிவொடு அவ்வீடணத் தள்ளவாரி நிலைமையும் தாபதர் உள்ளவாறும் உரைமின் என்றான் உயிர் கொள்ளவாய் வெருவும் கொடுங் கூற்றனான் அடியம் அந்நெடுஞ் சேனைனய ஆசையால் முடிய நோக்கலுற்றேம் முதுவேலையின் படியை நோக்கி எப்பாலும் படர்குறும் கடிய வேகக் கழுலனின் கண்டிலம் தார் உலாம் பணிமார்ப நின் தம்பியே தேர்உலாவு கதிரும் திருந்து தன் பேர்உலாவும் அளவினும் பெற்றனன் நீர் உலாவும் இலங்கை நெடுந்திரு சேதுபந்தனம் செய்தனன் என்றதிப் போதுவந்த புதுவலியோ ஒரு தூது வந்தவன் தோள்வலி சொல்லிய ஏது அந்தம் லாதிருக்கவே சரங்கள் இங்கிவற்றால் பண்டுதானுடை வரங்கள் சிந்து வென் என்றனன் மற்றெமைக் குரங்கலாமை தெரிந்தும் அக்கொற்றவன் இரங்க உய்ந்தனம் ஈதெங்கள் ஒற்றென்றார் மதிநெறி அறிவுசான்ற மாலியவான் நல்வாய்மை பொதுநெறி நிலைய தாகப்புணர்த்துதல் புலமைத்தென்னா விதிநெறி நிலையதாக விளம்புகின்றோரும் மீண்டு செதுநெறி நிலையினாரே என்பது தெரியச்செப்பும் பூசற்கு முயன்று நம்பால் பொருதிரைப் புணரிவேலித் தேசத்திறைவனான தெசரதன் சிறுவனாக மாசற்ற சோதிவெள்ளத்து உச்சியின் வரம்பில் தோன்றும் ஈசற்கும் ஈசன் வந்தான் என்பதோர் வார்த்தையிட்டார் அன்னவற்கிளவல் தன்னை அருமறை பரம் என்றோதும் நன்னிலை நின்று தீர்ந்து நவையறு பொருள்கள் தோறும் தென்னிலைப் பிரிந்தான் என்னப்பலவகை நின்றதூயோன் இன்னணை என்னயாரும் இயம்புவர் ஏதுயாதோ அவ்வவர்க் கமைந்த வில்லும் குலவரை அவற்றின் ஆன்ற வெவ்வலி வேறுவாங்கி விரிஞ்சனே விதித்தமேல் நாள் செவ்வழி நாணும் சேடன் , தெரிகணை ஆகச் சேர்த்திக் கவ்வு அயில் காலநேமிக் கணக்கையும் கடந்ததென்பார் வாலிமாமகன் வந்தானை வானவர்க் கிறைவன் என்றார் நீலனை உலகம் உண்ணும் நெருப் பினுக் கரசன் என்றார் காலனை ஒக்கும் தூதன் காற்றெனும் கடவுள் என்றார் மேலும் ஒன்றுரைத்தார் அன்னான் விரிஞ்சனாம் இனிமேல் என்றார் அப்பதம் அவனுக்கீந்தான் அரக்கர்வேர் அறுப்பதாக இப்பதி எய்திநின்ற ராமன் என்றெவரும் சொன்னார் ஒப்பினாள் உரைக்கின்றாரோ உண்மையே உனர்த்தினாரோ செப்பி என் குரங்காய் வந்தார் தனித்தனித் தேவர் என்றார் ஆயது தெரிந்தோ தங்கள் அச்சமோ அறிவோ யார்க்கும் சேயவள் எளியள் என்னா சீதையை இகழல் அம்மா தூயவள் அமிர்தினோடும் தோன்றினாள் என்றும் தோன்றாத் தாயவள் உலகுக்கெல்லாம் என்பதும் சாற்றுகின்றார் கானிடை வந்ததேயும் வானவர்கடாவ வேயாம் மீனுடை அகழிவேலை விலங்கல்மேல் இலங்கை வேந்தன் தானுடை வரத்தை எண்ணித் தருமத்தின் தலைவர் தாமே மானுட வடிவங்கொண்டார் என்பதோர் வார்த்தை இட்டார் ஆயிரம் உற்பாதங்கள் ஈங்குவந்து அடுத்தவென்றார் தாயினும் உயிர்க்கு நல்லாள் இருந்துழி அறியத்தக்கோன் ஏயின தூதன் ஏற்றப்பற்று விட்டிலங்கைத் தெய்வம் போயின தென்றும் சொன்னார் புகுந்தது போரும் என்றார் அம்பினுக் இலக்கமாவார் அரசொடும் அரக்கர் என்ன நம்பரத் தடங்கும் மெய்யன் நாவினிற் பொய்யிலாதான் உம்பர் மந்திரிக்கும் மேலா ஒருமுழம் உயர்ந்த ஞானத் தம்பியே சாற்றிப் போனான் என்பதும் சமையச் சொன்னார் ஈதெலாம் உணர்ந்தேன் யானும் என் குலம் இறுதிஉற்றது ஆதியின் இவனால் என்றும் உன்றன்மேல் அன்பினாலும் வேதனை நெஞ் சின் எய்த வெம்பியான் விளைவ சொன்னேன் சீதையை விடுதியாயின் தீரும் இத்தீமை என்றான் ஒற்றுக் கேள்விப்படலம் 56 , 57 , 60 , 61 , 64 , 7 - 811 மாலியவானை ராவணன நிந்தித்தல் மற்றெலாம் நிற்க அந்த மனிதர் வானரங்கள் வானில் இற்றைநா ளளவும் நின்ற இமையவர் என்னும் தன் சாற்றவா றன்றியேயும் தோற்றி நீ என்றும் சொன்னாய் கற்றவா நன்று போஎன்று னையன கழறலுற்றான் பேதைமா னிடவரோடு குரங்கல பிறவேயாக பூதல வரைப்பின் நாகர்புரத்தின் அப்புறத்ததாக காது வெஞ் செரு வேட்டென்னைக் காந்தினர் கலந்தபோதும் சீதை தன் திறத்தின் ஆயின் அமர்த்தொழில் திறம்புவேனோ ஒன்றல பகழி என் கைக்குரியன உலகமெல்லாம் வென்றன ஒருவன் செய்த வினையினும் வலியவெம்போர் முன் தருக என்றுதேவர் முதுகுழ்க் கமரின் முன்னம் சென்றன இன்றுவந்த குரங்கின்மேல் செல்கலாவோ சூலம் ஏய் தடக்கை அண்ணல் தானும் ஓர் குரங்காய்த் தோன்றி ஏலுமேல் இடைவதல்லால் என்செய வல்லான் என்னை வேலை நீர் கடைந்த மேனாள் உலகெலாம் வெருவவந்த ஆலமோ விழுங்க என்கை அயில்முகப் பகழி அம்மா அறிகிலை போலும் ஐய அமர் எனக்கு அஞ்சிப்போன எறிசுடர் நேமியான்வந் தெதிர்ப்பினும் என்கைவாளி பொறிபடச் சுடர்கள் தீயப்போவன போழ்ந்து முன்நாள் மறிகடல் கடைய வந்த மணிகொலாம் மார்பிற் பூண ? கொற்றவன் இமையோர் கோமான் குரங்கின துருவம் கொண்டால் அற்றை நாள் அவன் தான் விட்ட அயிற்படை அறுத்துமாற்ற இற்றவான் சிறைய ஆகிவிழுந்து மேல் எழுந்து வீங்காப் பொற்றைமால் வரைகளோ என்புயநெடும் பொருப்பும் அம்மா ( ஒற்றுக் கேள்விப்படலம் 82-87 ] சாரன் ராவணனுக்கு ஸ்ரீராமர் முதலோரைக் காட்டல் ஆக ராகவனை அவ்வழி கண்டான் மாகராக நிறை வாளொளி யோனை எகராசியினின் எய்தி எதிர்க்கும் வேகராகு எனவெம்பி வெகுண்டான் ஏனையோன் இவன்ராமன் எனத்தன் மேனியே உரை செய்கின்றது வேறு இச் சேனையோரை அடையத் தெரிஎன்னத் தான்வினாவ எதிர் சாரன் விளம்பும் ங்கிவன் , படை இலங்கையர் மன்னன் தங்கை என்றலும் முதிர்ந்த சலத்தால் அங்கை வாள்கொடு அவள் ஆகம் விளங்கும் கொங்கை நாசிசெவி கொய்து குறைத்தான் கையவன் தொட அமைந்த கரத்தான் ஐய வாலியொடு இவ்வண்டம் நடுங்கச் செய்தவன் செருவினின் திகழ்கின்றான் வெய்யவன் புதல்வன் யாரினும் வெய்யான் நீலன் நின்றவன் நெருப்பின் மகன்திண் சூலமும் கயிறும் இன்மை துணிந்தும் ஆலம் என்னும் நிறமின்மை யறிந்தும் காலன் என்பர் இவனைக் கருதாதார் வேறாக நின்றான் நளன் என்னும் விலங்கல் அன்னான் ஏறாவருணன் வழிதந்திலன் என்று இராமன் சீறாத உள்ளத்தெழும் சீற்றம் உகுத்த செந்தீ ஆறாதமுன்னம் அகன் வேலையை ஆறுசெய்தான் முக்காலமும் மெய்ம்மதியால் முறையின் உணர்வான் புக்கு ஆலம் எனப்புணரிப் புலவோர் கலக்கும் அக்காலன் உள்ளான் கரடிக்கு அரசாகிநின்றான் க்காலம் நின்றும் உலகேழும் எடுக்கவல்லான் உவன்காண் குமுதன் குமுதாக்கனும் ஊங்கவன்காண் இவன்காண் கவயன் கவயாக்கனும் ஊங்கிவன்காண் சிவன்காண் அயன்காண் எனும் தூதனைப் பெற்ற செல்வன் அவன்காண் நெடுங்கேசரி என்பவன் ஆற்றல் மிக்கான் மூரபன் நகுதோளவன் மூரிமடங்கல் என்னக் கரபல்நகம் அன்னவை மின்உகக் காந்துகின்றான் வரபல் நகந்தன்னையும் வேரொடுவேண்டின் வாங்கும் சரபன் அவன் இவன் சதவலியாய தக்கோன் வெதிர் கொள் குன்றெலாம் வேரொடும் வாங்கி மேதினியை முதுநொய்தெனச் செய்தவன் கனலையும் முனிவோன் கதிரவன் மகற்கு இடமருங்கே நின்றகாளை ததிமுகன் அவன் சங்கன் என்றுரைக்கின்ற சிங்கம் ( இராவணன் வானரத்தானை காண்படலம் 19 , 20 , 21 , 23 , 26-28 , 30 , 31 , 331 சுக்கிரீவனுக்கும் ராவணனுக்கும் மல்லுத்தம் என்னும் வேலையின் இராவணற்கிளவலை இராமன் கன்னி மாமதில் நகர்நின்று நம்பலம் காண்பான் முன்னிவானினும் மூடி நின்றார்களை முறையால் இன்ன நாமத்தர் இனையர் என்றியம்பு என்றான் நாறுதன் குலக்கிளையெலாம் நரகத்து நடுவான் சேறுசெய்தவன் , உருப்பசிதிலோத் தமை முதலாக் கூறும் மங்கையர் குழாத்திடைக் கோபுரக் குன்றத்து ஏறிநின்றவன் புன் தொழில் இராவணன் என்றான் கருதிமன்றொன்று கழறுதன் முன்னம் விழிக் கனல்கள் பொருது புக்கன முந்துறச் சூரியன் புதல தி அன்னதாய் சிவந்தநற்கனி என்று சொல்லப் பருதிமேல் பண்டு பாய்ந்தவனாம் எனப்பாய்ந்தான் கால இருள் சிந்துகதி ரோன் மதலை கண்ணுற்று ஏல எதிர் சென்று அடல் இராவணனை எய்தி நீலமலை முன் கயிலை நின்றதென நின்றான் ஆலவிட மன்றிவர நின்ற சிவன் அன்னான் இத்திசையில் வந்தபொருள் என் என இயம்பான் தத்தி எதிர் சென்று திசை வென்றுயர் தடந்தோள் பத்தினொடு பத்துடையவன் உடல்பதைப்பக் குத்தினன் உரத்தில் நிமிர்கைத் துணைகுளிப்ப திருகிய சினத்தொடு செறுத்தெதிர் விழித்தான் ஒருபது திசைக்கணும் ஒலித்தொலி ஒப்பத் தருவனம் எனப்புடை தழைத்துயர் தடக்கை இருபதும் எடுத்து உரும் இடித்தென அடித்தான் அடித்த விரல்பட்ட உடலத்துழி இரத்தம் பொடித்தெழ உறுக்கி எதிர்புக் குடல் பொருந்தி கடுத்த விசையின் கடிதெழுந்து கதிர்வேலான் முடித்தலைகள் பத்தினும் முகத்தினும் உதைத்தான் உதைத்தவன் அடித்துணை பிடித்து ஒருகணத்தில் பதைத்து லைவுறப்பல விதத்திகல் பரப்பி மதக்கரியை உற்று அரிநெரித்தென மயக்கிச் சுதைத் தவனிடைகடிது அடிக்கொடு துகைத்தான் துகைத்தவன் உடற்பொறை சுறுக்கொள இறுக்கித் தகைப்பெரு வலத்தொடு தலத்திடை அமுக்கி வகைப்பிறை நிறத்து எயிறுடைப் பெரியவாய் அம் குகைப்பொழி புதுக்குறுதி கைக்கொடு குடித்தான் கைக்கொடு குடித்தவள் உடல்கனக வெற்பைப் பைக்கொடு வடத்தரவு எனப்பல கைப்பற்றி மைக்கொடு நிறத்தவன் மறத்தொடு புறத்தில் திக்கொடு பொருப்புற நெருப்பொடு திரித்தான் திரித்தவன் உரத்தின் உகிர் செற்றும் வகைகுத்திப் பெருத்துயர் தடக்கைகொடு அடுத்திடை பிடித்துக் கருத்தழிவுறத் திரிதிறத்து எயில் கணத்தன்று எரித்தவனை ஒத்தவன் எடுத்தகழி பட்டான் இட்டவனை இட்டகழில் கடிதின் இட்டான் தட்ட உயரத்தினில் உறும் தச முகத்தான் உடனே அவனும் வந்து இவனை உற்றான் விட்டிலர் புரண்டிருவர் ஓர் அகழின் வீழ்ந்தார் அந்தர அருக்கன் மகன் ஆழியகழாகச் சுந்தர முடைக்கரம் வலிக்கயிற தொப்ப எந்திரம் எனத்திரி இரக்கமில் அரக்கன் மந்தரம் எனக்கடையும் வாலியையும் ஒத்தான் ஒன்றுற விழுந்த உருமைத் தொடரஓடா மின்தெரி எ பிற்றின் ஒரு மேகம் விழும் என்னத் தின்றிடுவென் என்றெழு சினத்திறல் அரக்கன் பின்தொடர வந்து இரு கரத்துணை பிடிந்தான் வந்தவனை நின்றவன் வலிந்தெதிர் மலைந்தான் அந்தகனும் அஞ்சிட நிறத்திடை அறைந்தான் எந்திரம் எனக்கடிது எடுத்தவன் எறிந்தான் கந்துகம் எனக்கடிது எழுந்தெதிர் கலந்தான் செறிந்துழல் கறங்கனையர் மேனிநிலை தோரர் பிறிந்தனர் பொருந்தினர் எனத்தெரிதல் பேணார் எறிந்தனர்கள் எய்தினர்கள் இன்னர் என முன்னின்று அறிந்திலர் அரக்கரும் அமர்த்தொழில் அயர்ந்தார் என்றவன் இரங்குங் காலத்து இருவரும் ஒருவர்தம்மின் வென்றிலர் தோற்றிலாராய் வெஞ்சமம் விளைக்கும் வேலை வன்றிறல் அரக்கன் மேளலி மணிகளை வலியான் வாங்கிப் பொன்றினன் ஆகின் நன்று என்றவன் வெள்கஇவனும் போந்தான் ( மகுடபங்கப்படலம் 1-3 , 7-15 , 17 , 2 , 23 , 25 , 32 ] ஸ்ரீராமர் சுக்கிரீவன் பிறிவைப்பற்றி அவனோடு முறையிடல் இன்னதோர் தன்மை எய்தும் அளவையின் எழிலிவண்ணன் மன்னுயிர் அனையகாதல் துணைவனை வரவு காணான் உன்னிய கருமமெல்லாம் என்னோடு முடிந்த என்னா தன்னுணர்வு அழிந்து சிந்தை அலமந்து தளர்ந்து சாய்ந்தான் ஒன்றிய உணர்வேயாய ஒருயிர்த்துணைவ நின்னை இன்றியான் உளெனாய் நின்று ஒன்றியற்றுவது இயைவதன்றால் அன்றியும் துயரத்திட்டாய் அமரரை அரக்கர்க் கெல்லாம் வென்றியும் கொடுத்தாய் அந்தோ கெடுத்ததுன் வெகுளி என்றான் தெய்வவெம் படையும் தீராமாயமும் வல்லதீயோன் கையிடைப் புக்காய் நீ வேறு வவ் வணம் கடத்திகாவல் வையம்ஓர் ஏழும்பெற்றால் வாழ்வனே வாராயாகில் உய்வனே தமியனேனுக்கு உயிர்தந்த உதவியோனே ஒன்றாகநினைய ஒன்றாய் விளைந்தது என்கருமம் அந்தோ றானும் யானோ வாழேன் நீஇலைஎனவும் கேளேன் றாய பழியும் நிற்கநெடுஞ் செருக்களத்தில் என்னைக் கொன்றாயும் நீயே உன்னைக் கொல்லுமேல் குணங்கள் தீயோன் இறந்தனை என்றபோதும் இருந்துயான் அரக்கர் என்பார் திறந்தனை உலகின் நீக்கிப்பின் உயிர் தீர் வென் என்றால் புறந்தரு பண்பினாய உயிரொடும் பொருந்தினானை மறந்தனன் வலியன் என்பார் ஆதலால் அதுவும் மாட்டேன் அழிவது செய்தாய்ஐய அன்பினால் , அளியத்தேனுக் ஒழிவரும் உதவி செய்த உன்னையான் ஒழிய வாழேன் எழுபது வெள்ளந்தன்னுள் ஈண்டு ஓர்பேர் எஞ்சாதேகிச் செழுநகர் அடைந்த போழ்தும் இத்துயர் தீர்வதுண்டோ கொழுமணிமுடிகள் தோறும் கொண்டநல் மணியின்கூட்டம் அழுதயர்கின்ற அண்ணல் அடித்தலத் தமரச்சூட்டி தொழுதயல் நாணி நின்றான் தூயவர் இருவ ரோடும் எழுபது வெள்ளம் யாக்கைக்கு ஓர்உயிர் எய்திற்றன்றே கல்லினும் வலியதோளாய் நின்னையக் கருணை இல்லோன் கொல்லுதல் செய்தானாகின் கொடுமையால் கொற்றம்பேணி பல்பெரும் பகழிமாரி வேரொடும் பறிய நூறி வெல்லினும் தோற்றேன் யானே அல்லெனோ விளிந்திலா தேன் பெருமையும் வண்மைதானும் பேரெழில் ஆண்மைதானும் ஒருமையும் உணரநோக்கின் பொறையினது ஊற்றம் அன்றே அருமையும் அடர்ந்து நின்ற பழியையும் அயர்ந்தாய் போலும் இருமையும் கெடுக்கலுற்றாய் என் நினைந் தென் செய்தாய்நீ வென்றியன் றென்றும் வென்றி வீரர்க்கு விளம்பத்தக்க நன்றியன் றென்றும் அன்று நானிலம் எயிற்றிற் கொண்ட பன்றியன் றாகின் ஈது ஆர் இயற்றுவார் பரிவின் என்னா இன்றிது வென்றி என்றென்று இராமனும் இரங்கிச் சொன்னான் ( மகுடபங்கப்படலம் 26-31 , 33 , 36 , 37 , 48 ] ஸ்ரீராமர் வான வீரரோடு இலங்கையை வளைத்தல் ன்னனலவும்பன்னி இறைஞ்சிய முடியன் நாணி மன்னவர் மன்னன் முன்னர் வானர மன்னன் நிற்ப அன்னவன் தன்னை நோக்கி ஆழியான் அறிவதாக மின் என விளங்கும் பைம்பூண் வீடணன் விளம்பலுற்றான் தொடிமணி மைக்குந் தோளாய் சொல்லிதின் வேறும் உண்டோ வடிமணி வயிரவென்வாள் சிவன்வயின் வாங்கிக் கொண்டான் முடிமணி பறித்திட்டாயோ இவன்இனி முடிக்கும் வென்றிக்கு அடிமணி இட்டாய் அன்றே அரிக்குலத்து அரச என்றான் ( மகுடபங்கப்படலம் 43 , 47 ] உளைப்புறும் ஓதவேலை ஓங்கலை ஒடுங்கத் தூர்ப்ப அளப்பரும் தூளிச்சுண்ணம் ஆசைகள் அலைக்கப்பூசல் இளைப்பரும் தலைவர் முன்னம் ஏவலின் எயிலைமுற்றும் வளைத்தனர் விடியத்தத்தம் வாயில்கள் தோறும் வந்து லகிலா அரக்கன்சேனை அகப்பட அரியின் தானை வலைகொலாம் என்னச்சுற்றி வளைத்ததற் குவமை கூறின் கலைகுலாம் பரனை ஏழும் கால்கிளர்ந் தெழுந்தகாலத்து உலகெலாம் ஒருங்குகூடி ஒதுங்கினவேயும் ஒக்கும் [ அணிவகுப்புப்படலம் 25 , 28 ] இராவணன் இலங்கைக்கு காவல்வகுத்தல் காட்டிய காலகேயர் கொழுநிணக் கற்றைகாலத் தீட்டிய படைக்கை வீரச்சேனையின் தலைவ , தெள்ளி ஈட்டிய அரக்கர் தானை இருநூறு வெள்ளங்கொண்டு கீட்டிசை வாயில் நிற்றி நின்பெருங் கிளைகளோடும் காலன் தன் களிப்புத்தீர்த்த மகோதர காலையே யோய் மாலொன்றும் மனத்து வீரன் மாபெரும் பக்கனோடும் கூலம் கொள் குரங்கை யெல்லாம் கொல்லுதி வெள்ளமான நாலைம்ப தோடும் சென்று நமன்திசை வாயில் நண்ணி ஏற்றம் என் சொல்லின் என்பால் இந்திரன் பகைஞ! அந்நாள் காற்றினுக் கரசன்மைந்தன் கடுமை நீ கண்ட தன்றோ நூற்றிரண்டாய வெள்ள நுன் பெரும்படைஞர் சுற்ற மேற்றிசை வாயில் சேர்தி - விடிவதன் முன்னம் வீர இந்நெடுங் காலமெல்லாம் இமையவர்க் கிறுதிகண்டாய் புன்னெடும் குரங்கிற்சேரல் புல்லிது புகழும் அன்றால் அந்நெடும் மூலத்தானை அதனொடும் அமைச்சரோடும் தொன்னெடு நகரிகாக்க விருபாக்க என்னச் சொன்னான் கடகரிபுரவி ஆள்தேர் கமலத்தோன் உலகிக்கிப்பால் புடைஉள பொருது கொண்டு போர் பெறாப் பொங்குகின்ற டையிடை மிடைந்தசேனை இருநூறு வெள்ளங்கொண்டு வடதிசை வாயில் காப்பேன் யான் எனவகுத்து விட்டான் [ அணிவகுப்புப்படலம் 18 -22 ] அங்கதன் தூதுபோக அவனோடுராவணன் சொல்லுதல் நெடுந்தகை விடுத்த தூதன் இனையன நிரம்ப எண்ணிக் கடுங்கனல் விடமும் கூற்றும் கரந்துகால் கரமும்காட்டி விடுஞ்சுடர் மகுடம்மின்ன விரிகடல் இருந்ததென்ன கொடுந்தொழில் மடங்கல் அன்னான் எதிர்சென்று குறுகி நின்றான் நின்றவன் தன்னை அன்னான் நெருப்பெழ நிமிரப்பார்த்து இங்கு இன்றிவண் வந்த நீயார் எய்தியகருமம் என்னை கொன்றிவர் தின்னாமுன்னம் கூறுதிதெரிய என்றா வன்றிறல் வாலிசேயும் வாளெயிறு இலங்கநக்கான் பூதநாயகன் நீர் சூழ்ந்த புவிக்கு நாயகன் இப்பூமேல் சீதைநாயகன் வேறுள்ள தெய்வநாயகன் நீ செப்பும் வேதநாயகன் மேல்நின்ற விதிக்குநாயகன் தான் விட்ட தூதன்யான் பணித்தமாற்றம் சொல்லியவந்தேன் என்றான் இந்திரன் செம்மல் பண்டுஓர் இராவணன் என்பான் தன்னை சுந்தரத் தோள்களோடும் வாலிடை தூங்கச் சுற்றிச் சிந்துரக் கிரிகள் தாவித் திரிந்தனன் தேவர் உண்ண மந்தரப் பொருப்பால் வேலைகலக்கினான் மைந்தன் என்றான் உந்தைஎன் துணைவன் அன்றேஓங்கறச் சான்றும் உண்டால் நிந்தனை இதன்மேல் உண்டோ நீயவன் தூதன் ஆதல் தந்தனென் நினக்குநானே வானரத் தலைமை தாழா வந்தனை நன்று செய்தாய் என்னுடை மைந்த என்றான் தாதையைக் கொன்றான் பின்னே தலைசுமந் திருகைநாற்றிப் பேதையன் என்னவாழ்ந்தான் என்பதோர் பிழையும் தீர்ந்தாய் சீதையைப் பெற்றேன் உன்னைச்சிறு வனுமாகப் பெற்றேன் ஏதெனக் கரியதென்றான் இறுதியின் எல்லை கண்டான் அந்நரர் இன்றுநாளை அழிவதற் கையம் இல்லை உன்னரசு உன்க்குத் தந்தேன் ஆளுதி ஊழிக்காலம் பொன்ன ரி சுமந்தபீடத்து இமையவர் போற்றி செய்ய மன்னவனாகயானே சூட்டுவென் மகுடம் என்றான் [ அங்கதன் தூதுப்படலம் 19 , 20 , 21- 25 , 27 ] அங்கதன் ராவணனுக்கு மறுமொழி உரைத்தல் அங்கதன் அதனைக் கேளா அங்கையோ டங்கைதாக்கித் துங்கவன் தோளும் மார்பும் இலங்கையும் துளங்கநக்கான் இங்கு நின் றார்கட்கெல்லாம் இறுதியே என்பதுன்னி உங்கள் பால் நின்றும் எம்பால் போந்தனன் நும்பி என்றான் வாய்தரத்தக்க சொல்லி உன்னை என் வசஞ்செய்வாயேல் ஆய்தரத்தக்க தன்றோ தூதுவந்தரச தாள்கை நீதரக் கொள்வென் யானே இதற்கிது நிகர் வேறெண்ணின் நாய்தரக் கொள்ளும் சீயம்நல்லரசு என்று நக்கான் கூவிஇன்றென்னை நீபோய்த்தன் குலம் முழுதும் கொல்லும் பாவியை அமருக்கஞ்சி அரண்புக்குப் பதுங்கினானைத் தேவியை விடுக அன்றேல் செருக்களத் தெதிர்ந்து தன் கண் ஆவியை விடுகஎன்றான் அருள் இனம் விடுகிலாதான் பருந்துணப் பாட்டியாக்கை படுத்த நாள் படைஞரோடும் மருந்தினும் இனியமாமன் மடிந்தநாள் வனத்துள்வைகி இருந்துழி வந்ததங்கை மூக்கும்வெம் முலையும் எம்பி அரிந்தநாள் வந்திலா தான் இனிச்செய்யும் ஆண்மையுண்டோ நீரிலேபட்ட சூழ்ந்த நெருப்பிலேபட்ட நீண்ட பாரிலேபட்ட வானப்பரப்பிலே பட்ட எல்லாம் போரிலே பட்டுவீழப் பொருத நீ ஒளித்துப்புக்குன் ஊரிலே பட்டாய் என்றால் பழிஎன உளையச் சொன்னான் [ அங்கதன் தூதுப்படலம் 28 , 29 , 31 , 32 , அங்கதன் மீண்டு போர்கலக்கஎன்ன இருபடை களும் கைகாத்சல் சொற்ற வார்த்தையைக் கேட்டலும் தொல்லுயிர் முற்றும் உண்பது போலும் முனிவினான் பற்றுமின் கடிதின் நெடும் பாரிடை எற்றுமின் என நால்வரை ஏவினான் ஏவினார் பிடித்தாரை எடுத்து எழத் தாவினான் அவர் தலை போய் அறக் கூவினான் அவன் கோபுர வாயிலில் தூவினான் துகைத்தான் இவைசொல்லினான் அந்தரத்திடை ஆர்த்தெழுந்தான் அவர் சிந்துரத்தம் துதைந்தெழும் செச்சையான் ந்துவின் நின்று இழிந்துளதாம் என வந்து வீரன் அடியில் வணங்கினான் உற்றபோதவன் உள்ளக் கருத்தெலாம் கொற்றவீரன் உணர்த்தென்று கூறலும் முற்ற ஓதியென் மூர்க்கன் முடித்தலை அற்ற போதன்றி ஆசையறான் என்றான் [ அங்கதன் தூதுப்படலம் 39 , 40 , 42 , பூசலே பிறிது இல்லை எனப்புறத்து ஆசை தோறும் முரசம் அறையுமின் பாசறைப் படையின்னிடம் பற்றிய வாசல் தோறும் முறையின் வகுத்திரால் மற்றும் நின்ற மலையும் மரங்களும் பற்றி வீரர் பரவையின் மும்முறை கற்ற கைகளினால் கடிமாநகர் சுற்றும் நின்ற அகழியைத் தூர்த்திரால் இடு மின் பல்மரம் எங்கும் இயக்கறத் தடுமின் போர்க்கு வருகஎனச் சாற்றுமின் கடுமின் இப்பொழுதே கதிர்மீச் செலாக் கொடுமதிற் குடுமித்தலைக் கொள்க என்றான் தடங்கொள் குன்றும் மரங்களும் தாங்கியே மடங்கலன்ன அவ்வானாமாப் படை இடங்கர்மா இரியப் புனலேறிட தொடங்கி வேலை அகழியைத் தூர்த்ததால் அரக்கர் தொல்குலம் வேரற அல்லவர் வருத்தும் யாவையும் வாழ்வுற வந்ததோர் கருக்கொள் காலம் விதிகொடு காட்டிடத் தடுக்கி உற்றெதிர் தாக்கின தானையே நெருக்கி வந்து நிருதர் நெருங்கலால் குரக்கினப் பெருந்தானை குலைந்து போய் அருக்கன் மாமகன் ஆரமர் ஆசையால் செருக்கி நின்றவன் நின்று ழிச் சென்றவால் களிறும் மாவு மாவும் நிருதரும் காலற ஒளிறு மாமணித் தேரும் உருட்டி வெங் குளிறு சோரி ஒழுக கொதித்திடை வெளிறிலா மரமே கொண்டு வீசினான் நோக்கி வஞ்சன் நொறில் வயமாப்பரி வீக்கு தேரினின் மீதெழப்பாய்ந்து தோள் தூக்கு தூணியும் வில்லும் தொலைத்தவன் யாக்கையும் சிதைத்திட்டு எழுந்தேகினான் எரியின் மைந்தன் இருநிலம் கீழுற விரியநின்ற மராமரம் வேரொடும் திரியவாங்கி நிருதர்வெம் சேனை போய் நெரிய ஊழி நெருப்பென வீசினான் அரக்கர் சேனை அடுகளம் பாழ்பட வெருக்கொண் டோடிட வெம்படைக் காவலர் நெருக்க நேர்ந்து கும்பானும் நெடுஞ்சரம் துரக்க வானரச் சேனை துணிந்தவே கடித்தலத்திரு காலுறக் கைகளால் பிடித்து தோளைப் பிறங்கலின் கோடு நேர் முடித்தலத்தினில் எற்றிட மூளைகள் வெடித்திழிந்திட வீந்தனனாம் அரோ தன்படைத் தலைவன் படத்தன்னெதிர் துன்படைத்த மனத்தன் சுமாலிசேய் முன்படைத்த முகில் அன்ன காட்சியன் வன்படைத்த வரிசிலை வாங்கினான் நூறும் ஆயிரமும் கணைநொய்தினின் வேறுவேறு படுதலின் வெம்பியே ஈறில் வானரமாப்படை எங்கணும் பாறநீலன் வெகுண்டெதிர் பார்ப்புறா குருதிலாய்நின் றொழுகவும் கூசலன் நிருதன் , நீலன் நெடுவரை மார்பினும் நெற்றி மேலும் நெடுங்கரத் தெற்றலும் இற்று மால்வரை என்ன விழுந்தனன் இறந்து வீழ்ந்தனன் பிரகத்தன் என்று அறிந்து வானவர் ஆவலம் கொட்டினார் வெறித்த செம்மயிர் வெள்ளெயிற் றாடவர் முறிந்து தம் தம் முதுநகர் நோக்கினார் தெற்கு வாயிலில் சென்ற நிசாசரர் மற்குலாவு வயப் புயத்து அங்கதன் நிற்கவே எதிர் நின்றிலர் ஓடினார் பொற்குலாவு சுபாரிசன் பொன்றவே நூற்றிரண் டெனும் வெள்ளமும் நோன்கழல் ஆற்றல் சால்துன் முகனும் ஆங்கார்த்தெழ மேற்றின் வாயிலில் மேவினர் வீடினார் காற்றின் மாமகன் கையெனும் காலனால் ஒதருங் கருங்கடற் கொத்த தானையான் தீதுறு சிறு தொழில் அரக்கன் சீற்றத்தால் போதுறு பெருங்களம் புகுந்துளான் எனத் தூதுவர் நாயகற் கறிய சொல்லினார் அவ்வழி இராவணன் அமரர் அஞ்சத்தன் வெவ்விழி நெருப்புக வில்லின் நாணினைச் செவ்வழிக் கோதையின் தெறிக்கச் சிந்தி ஆங்கு எவ்வழி மருங்கினும் இரிந்த வானரம் வீடணன் ஒருவனும் இளைய வீரனும் கோடணை குரங்கினுக் கரசும் கொள்கையால் நாடினர் நின்றனர் நாலுதிக்கிலும் ஓடினர் அல்லவர் ஒளித்தது உம்பரே ஏந்திய சிகரம் ஒன்றங்கு இந்திரன் குலிசம் என்னக் காந்திய உருமின் விட்டான் கவிக்குலத்தரசன் அக்கல் நீந்தரு நெருப்புச்சிந்தி நிமிர்தலும் நிருதர்க்கெல்லாம் வேந்தனும் பகழி ஒன்றால் வெறுந்துகளாக்கி வீழ்த் தான் கலக்கிய அரக்கன் வில்லின் கல்வியும் கவிகள்உற்ற அலக்கணும் தலைவர்செய்த தன்மையும் அமையக் கண்டான் லக்குவன் என்கைவாளிக் கிலக்கிவன் இவனைஇன்று விலக்குவன் என்னவந்தான் வில்லுடை மேருவென்ன காற்றுறழ் கலின மான்தேர் கடிதினின் கடாவி கண்ணுற்று ஏற்றனன் இலங்கை வேந்தன் எரிவிழித்து இராமன் தம்பி கூற்றுமால் கொண்ட தென்னக் கொள்கின்றான் குறுகச் சென்றான் சீற்றமும் தானும் நின்றான் பெயர்ந்திலன் சிறிதும் பாதம் எய்தான் சரம் எய்தா வகை இற்றீக என இடையே வை தாலென் ஐதாயின வடிவாளியின் அறுத்தான் ஐது ஆதலின் அறுத்தாய் இனிஅறுப்பாய் என அழிகார் பெய்தாலெனச் சரமாரிகள் சொரிந்தான் துயில்பிரிந்தான் ஆம்குஞ்சரம் அனையான்விடும் அயில்வாளிகள் அவைதாம் வீங்கும்சர பருவத்தழி மழைபோல் வனவிலக்கா தூங்கும் சர நெடும்புட்டிலின் சுடர்வேலவற் கிளையான் வாங்கும் சரம் வாங்காவகை அறுத்தான் அறம் மறுத்தான் ( முதற்போர் புரிபடலம் 1-4 , 18 , 42 , 45 , 54 , 60 , 62 , 63 , 67, 68 , 70 , 77-81 , 107, 123,126 , 128.141 , 158 , 158 , 159 ) அனுமாரும் இராவணனும் கைக்குத்துக்கு நிற்குதல் பரக்கப்பல உரைத்தென் படர்கயிலைப் பெருவரைக்கும் அரக்குற் றெரிபொறிக் கண்திசைக் கரிக்கும் சிறிதணுங்கா உரக்குப்பையின் உயர்தோள்பல உடையாய் இனிஉடையாக் குரக்குத் தனிக்கரத்தின் தொடப்பொறை யாற்றுவை கொல்லாம் என் தோள் வலி அதனால் எடுத்துயான் ஏற்றவும் இறவா நின்றாய் எனின் நீபின் எனை நின்கைத்தல நிரையால் குன்றே புரைதோளாய் மிடல் கொடு குத்துதிகுத்தப் பொன்றேன் எனின் நின்னோ டெதிர்பொருகின்றி லென் என்றான் முத்தேவர்கள் முதலாயினர் முழுமூன் றுலகிடையே எத்தேவர்கள் எத்தானவர் எதிர்வார் இகல் என்றே பித்தேறினர் அல்லால் இடைபேராது எதிர்மார்பில் குத்தே என நின்றாய் இதுகூறும் தரம் அன்றால றோர் பூணித்திவை உரைசெய்தனை அதனால் உரைபொதுவே பாணித்தது பிறிதென்சில பகர் நின்றது பழியால நாணித்தலை இடு இன்றிலென் நனிவந்துல கெவையும் காணக்கடி தெதிர்குத்துதி என்றான் வினைகடியான் வீரத்திறம் இதுநன்றென வியவா மிகவிளியா தேரின் கடிதிவரா முழுவிழியின் பொறிசிதறா ஆரத்தொடு கவசத்துடல் பொடிபட்டுக அவன்மா மார்பிற் கடிது எதிர்குத்தினன் வயிரக்கரம் அதனால் ( முதற்போர்புரிபடலம் 165, 166 , 169 , 172 , 173 ] ஸ்ரீராமருக்கும் ராவணனுக்கும் முதல் உயுத்தம் கைக்குத்தது படலும் கழல்நிருதர்க்கிறை கறைதீர் மைக்குப்பையின் எழில் கொண்டொளிர் வயிரத்தடமார்பில் திக்கில் சிலமதயானைகள் வயவெம்பணை செருவில் புக்கிற்றன போகாதன புறம்உக்கன புகழின் வலிஎன்பதும் உளதே அது நின்பாலது மறவோய் அலி என்பவர் புறம் நின்றவர் உலகேழையும் அடர்த்தாய் சலி என்றெதிர் மலரோன் உரை தந்தால் இறைசலியேன் மெலிவென்பதும் உணர்ந்தேன் எனைவென்றாய் இனிவிறலோய் ஒன்றுண்டு இனிஉரைநேர்குவது உன்மார்பின் என் ஒருகை குன்றின் மிசை கடைநாள் விழும்உரும் ஏறெனக்குத்த நன்றிந்நிலை தருவாய்எனின் நின்நேர்பிறர் உளரோ ன்றும் உளை என்றும் உளை இலைஓர் பகை என்றான் உறுக்கித்தனி எதிர்நின்றவன் உரத்தில் தனது ஒளிர்பல் இறுக்கிப் பலநெடுவாய் மடித்து எரி கண்தொறும் இழிய முறுக்கிப் பொதிநிமிர்பல்விரல் நெரியத் திசைமுரியக் குறுக்கிக் கரம்நெடுந்தோள் உறநிரைகைக் கொடுகுத்து பள்ளக்கடல் கொள்ளப்படர்படி பேரினும் பதையா வள்ளல் பெரும்வெள்ளத்தெறுழ் வலியாரினும் வலியான் கள்ளக்கறை உள்ளத்ததிர் ( ழல்வெய்யவன் கரத்தால் தள்ளத்தளிர் வெள்ளிப்பெருங் கிரி ஆம் எனச் சலித்தான் அண்ணல் அஞ்சனவண்ணனும் அமர்குறித் தமைந்தான் எண்ணரும் பெரும் தனிவலிச் சிலையை நாண் எறிந்தான் மண்னும் வானமும் மற்றைய பிறவும் தன்வாய் பெய்து எண்ணும் காலத்தவ் உருத்திரன் ஆர்ப்பு ஒத்தது ஓதை வாழி வெங்கனல் ஒப்பன துப்பன உருவ ஆழிநீரையும் குடிப்பன திசைகளை அளப்ப வீழின் மீச்செலின் மண்ணையும் விண்ணையும் தொளைப்ப ஏழுவெஞ்சரம் உடன் தொடுத்து இராவணன் எய்தான் ஒன்று நூற்றினொடு ஆயிரங் கொடுந்தலை உருட்டிச் சென்று தீர்விலஎனப் பலகோடியும் சிந்தி நின்ற தேரொடு இராவணன் ஒருவனும் நிற்கக் கொன்று வீழ்த்தினது இராகவன் சரம் எனும் கூற்றம் தேரும் யானையும் புரவியும் அரக்கரும் தெற்றிப் பேரும் ஓரிடம் இன்றெனத்திசை தொறும் பிறங்கிக் காரும் வானமும் தொடுவன பிணக்குவை கண்டான் மூரிவெஞ்சிலை ராவணன் அராஎன முனிந்தான்
முரண்தொகும் சிலைஇமைப்பினில் முறையுற வாங்கிப் புரண்டு தோளுறப்பொலன் கொள் நாண் வலம்படப் போக்கித் திரண்ட வாளிகள் சேவகன் மரகதச் சிகரத்து இரண்டு தோளினும் இரண்டுபுக் கழுந்திட எய்தான் முறுவல் எய்திய முகத்தினனன் முளரியங் கண்ணன் மறுவிலாததோர் வடிக்கணை தொடுத்துறவாங்கி இறுதி எய்தும் நாள் கால் பொரமந்தரம் இடையிட்டு அறுவதாம் என இராவணன் சிலையினை அறுத்தான் மாற்றுத் தேரவன் வந்தனவந்தன வாரா வீற்று வீற்றுக வெயிலுமிழ் கடுங்கணைவிட்டான் சேற்றுச் செம்புனல் படுகளப்பரப்பிடைச் செங்கண் கூற்றும் கையெடுத்தாடிட இராவணன் கொதித்தான் மின்னும் பன்மணி மௌலிமேல் ஒருகணைவிட்டான் அன்ன காய்கதிர் இரவிமேல் பாய்ந்தபோர் அனுமன் என்னலாயதோர் விசையினின் சென்று அவன் தலையில் பொன்னின் மாமணி மகுடத்தைப் புணரியில் வீழ்த்த ( முதற்போர் புரிபடலம் 176 , 181 , 182 , 184 , 185 , 224 , 226 , 227 , 237-240 , 243 , 244 }
———————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply