ஸ்ரீ முமுஷுப்படி -திருமந்திர பிரகரணம்-ஸூர்ணிகை -22–34-ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் அரும்பத விளக்கம் —

மற்று எல்லாம் பேசிலும் என்கிறபடியே -அறிய வேண்டிய அர்த்தம் எல்லாம்
இதுக்குள்ளே உண்டு –சூரணை -22-

இனி ஞாதவ்ய சகலார்த்த பிரதிபாதகத்வம் ஆகிற இதன் வைபவத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது
நின் திரு எட்டு எழுத்தும் கற்று மற்று எல்லாம் பேசிலும் -பெரிய திரு மொழி -8-10-3-
என்கிறபடியே ஆத்மா உஜ்ஜீவனத்துக்கு உடலாக அறிய வேண்டும் அர்த்த விசேஷங்கள் எல்லாம்
இம் மந்த்ரத்துக்குள்ளே உண்டு என்கை –

மற்றுமோர் தெய்வம்   உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும்
கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே —8-10-3-

மற்றுமோர் தெய்வம்   உளதென்று இருப்பாரோடு உற்றிலேன்
தேவதாந்தர ஸ்பர்சம் உடையாரோடு எனக்கு ஒரு சம்பந்தமும் இல்லை –

உற்றதும் உன் அடியார்க்கு அடிமை மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும் கற்று நான் –
அவர்களை விட்டு உன் அளவில் நின்றவனும் அல்லேன் –

இவ்வனுஷ்டானம் தான் நீர் எங்கே யார் சொல்ல பரிஹரித்தீர் -என்ன-நீ சொன்ன முதல் வார்த்தைக்கு அர்த்தமாக
நான் நினைத்து இருப்பது இது -என்கிறார் –
(நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் தானே முதல் வார்த்தை திரு மந்த்ரம் என்றது ஆயிற்று )

இது பின்னை அநேக அர்த்தங்களை சொல்லுமே –
ஜீவ ஸ்வரூபத்தைச் சொல்லும் –
நம்முடைய ஸ்வரூபத்தை சொல்லும் –
ஜீவ வஸ்துக்களுக்கும்  நமக்கும் உண்டான சம்பந்தத்தை சொல்லும் –
ப்ராப்தி பலமான கைங்கர்யதளவும் வந்திருக்குமே -என்ன

அது அநேக அர்த்தங்களைச் சொல்லிற்றே யாகிலும்
அதில் எங்குமாக நான் அறுதி இட்டு இருக்கும் அர்த்தம் அனந்யார்ஹ சேஷத்வம் – அது தான் ததீய சேஷத்வ பர்யந்தமாய் அல்லது இராது –

(சேஷத்வம் -அநந்யார்ஹத்வம் -பாகவத சேஷத்வம் -ஆய -உகாரார்த்தம்–நமஸ்ஸூ -கீழே பார்த்தோம் –
பகவத் சேஷத்வத்தின் எல்லை நிலம் -அவனது அவயவ பூதங்கள்
மற்று எல்லாம் பேசிலும் -திரு மந்த்ரார்த்தங்கள் பல உண்டே –
முதல் வார்த்தைக்கு -பல அர்த்தங்கள் உண்டே -உன் அடியார்க்கு அடிமை என்று அறிந்தேன்
நான் கண்டு கொண்டேன் நாராயணா -உபக்ரமம்
பிராப்தி -சேஷ சேஷி பாவ சம்பந்த நிபந்தன முறை -உறவின் முறை –
எங்குமாக அறுதி இட்டு இருக்கும் அர்த்தம் -என்றது -அநந்யார்ஹத்வம் -உனது அடியார்க்கு அடிமை –
ததீய சேஷத்வ பர்யந்தமாகப் போனால் தான் பகவத் அநந்யார்ஹத்வம் சித்திக்கும் –
அவன் திரு உள்ளம் உகக்கும் படி நடக்க வேண்டுமே –அவன் திரு உள்ளம் உகப்பே பிரயோஜனம்
ஞாதவ்ய தயா -அறிய வேண்டியதாக அறிந்து
ஜீவ ஸ்வரூபம் ஆஸ்ரய தயா ஞாதவ்யம் -மகாரம் மனா ஞானி மனா அவ போதனை
பகவத் ஸ்வரூபம் விஷய தயா -ஜேயம்
தத் விஷய கைங்கர்யம் -சேஷத்வ கார்யம் -சேஷத்வ பலம் –
கீழே இவ்வளவும் சொன்னதுக்கு தாத்பர்யம் -சேஷத்வம் சித்திக்க -பாகவத சேஷத்வ பர்யந்தமும்
பாகவத பர்யந்த கைங்கர்யம் வரை போனால் தான் நிலை நிற்கும் –
ஆகையால் உன் அடிமை ஆகை ஆயிற்று என்பதே உனது அடியார்க்கு அடிமை என்பது சித்திக்கும் )

——————————————————–

அதாவது ஐஞ்சு அர்த்தம்–சூரணை -23-

அறிய வேண்டிய அர்த்தம் எல்லாம்  ஆகிறது எது ? என்னும் ஆ காங்ஷையிலே அருளிச் செய்கிறார் –
அதாவது
ஸ்வ ஸ்வரூப
பர ஸ்வரூப
புருஷார்த்த ஸ்வரூப
உபாய ஸ்வரூப
விரோதி ஸ்வரூபங்கள் -ஆகிற அர்த்த பஞ்சகமும் என்ற படி –

ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் பிராப்துஶ்ச பிரத்யகாத்மனா பிராப்துபாயம் பலம் பிராப்தேஸ்
ததா ப்ராப்தி விரோதி ஸ் வதந்தி சகலா வேதாஸ் சேதிஹாஸ புராணக முநயச்ச மகாத்மானோ வேதவேதார்த்த வேதின-
என்கிறபடியே சகல வேத சாஸ்திரங்களும் பிரதிபாதிப்பது இவ் அர்த்த பஞ்சகத்தையும் ஆகையாலே –
தத் ஸங்க்ரஹமான இம் மந்த்ரத்துக்கும் பிரதிபாத்யம் இதுவே இறே-

இம் மந்த்ரம் தான்
பிரணவத்தாலே-பிரத்யகாத்ம ஸ்வரூபத்தையும் –
நமஸ்ஸாலே-விரோதுபாய ஸ்வரூபங்களையும் -( ம விரோதி -ந ம -உபாயம் )
நாராயண பதத்தாலே -பர ஸ்வரூபத்தையும் –
அதில் சதுர்த்தியாலே -பல ஸ்வரூபத்தையும் –
பிரதிபாதிக்கக் கடவதாய் இறே இருப்பது –

(ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துஶ்ச ப்ரத்யகாத்மந: |
ப்ராப்துபாயம் பலம் ப்ராப்தேஸ் ததா ப்ராப்திவிரோதி ச ||
வதந்தி ஸகலா வேதாஸ் ஸேதிஹாஸ புராணகா: |
முநயஶ்ச மஹாத்மநோ வேத வேதார்த்த வேதிந: || [ஹாரீத ஸ்ம்ருதி 8-141])

அரும் பதம் அருளிச்செய்த எம்பாவய்யங்கார் ஸ்வாமி
முநயஶ்ச மஹாத்மந: என்பதற்கு மஹாத்மாக்களான முநிகள் என்பதால் –
வாஸுதேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா என்று கீதாசார்யன் அருளிச் செய்தபடி இங்கு ஆழ்வார்களே குறிக்கப்படுகிறார்கள் என்று காட்டியுள்ளார்

மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்தியல்

பர ஸ்வரூபம்:
உயர்வற உயர்நலம்
திண்ணன்வீடு
அணைவதரவணை
ஒன்றுந்தேவும்

ஜீவாத்ம ஸ்வரூபம்:
பயிலுஞ் சுடரொளி (3-7)
ஏறாளும் இறையோனும் (4-8)
கண்கள் சிவந்து (8-8)
கருமாணிக்க மலைமேல் (8-9)

விரோதி ஸ்வரூபம்:
வீடுமின் முற்றவும் (1-2)
சொன்னால் விரோதம் (3-9)
ஒருநாயகமாய் (4-1)
கொண்ட பெண்டிர் (9-1)

உபாயஸ்வரூபம்:
நோற்ற நோன்பிலேன் (5-7)
ஆராவமுதே (5-8)
மானேய் நோக்கு நல்லீர் (5-9)
பிறந்தவாறும் (5-10)

புருஷார்த்த ஸ்வரூபம்:
எம்மாவீட்டுத் திறமும் செப்பம் (2 – 9)
ஒழிவில் காலமெல்லாம் (3 – 1)
நெடுமாற்கடிமை (8-10)
வேய்மருதோளிணை (10 – 3)

மூன்றில் சுருக்கிய ஐந்தினையும்
உயர் திண் அணை ஒன்று
பயில் ஏறு கண் கரு வீடு சொன்னால் ஒருக்கொண்ட
நோற்ற நாலும்
எம்மாவொழிவில் நெடுவேய் என்கிற
இருபதிலே விசதமாக்கி எண்பதிலே பரப்புகையாலே ஐந்தையும்….” (211)

ஸ்ரீ பாஷ்யத்திலும் இவ் வர்த்த பஞ்சகம் சொல்லுகிறது என்று கொள்ள இடமுண்டு.
முதல் இரண்டு அத்யாயங்களான ஸமந்வயம் மற்றும் அவிரோத அத்யாயாங்களாலே எம்பெருமானே ஜகத்காரணன் என்பதை சொல்வதினால் பரஸ்வரூபமும்,
ஆத்மாதிகரணம் முதலானவற்றில் ஜீவாத்மாவின் ஸ்வரூபமும்,
மூன்றாவது அத்யாயத்தில் முதல் பாதமான வைராக்ய பாதத்தினால் விரோதி ஸ்வரூபமும்,
அதற்கு மேல் உபாஸநம் சொல்லுவதால் உபாய ஸ்வரூபமும்,
அதற்கு மேல் புருஷார்த்தமான ப்ரஹ்ம ப்ராப்தியையும் சொல்லுவதால் அர்த்த பஞ்சகம் சொல்லியாயிற்று.

————————————————————-

பூர்வாச்சார்யர்கள் இதில் அர்த்தம் அறிவதற்கு முன்பு -தங்களை பிறந்தார்களாக நினைத்து இரார்கள் –
இதில் அர்த்த ஞானம் பிறந்த பின்பு -பிறந்த பின் மறந்திலேன் -என்கிறபடியே -இத்தை ஒழிய வேறு ஒன்றால்
கால ஷேமம் பண்ணி அறியார்கள்–சூரணை -24

இம்மந்த்ரார்த்த வைபவத்தை அருளிச் செய்கிறார் மேல் –
அதாவது –
நாதயாமுன யதிவராதி களான நம் பூர்வாச்சார்யர்கள் –
அன்று நான் பிறந்திலேன் -திரு சந்த விருத்தம் -64 என்கிறபடியே –
இம்மந்த்ரத்தில் அர்த்தம் அறிவதற்கு முன் தங்களை பிறந்தார்களாக நினைத்து இரார்கள் –

இதில் அர்த்த ஞானம் தங்களுக்கு உண்டான பின்பு –
பிறந்த பின் மறந்திலேன் -என்று
ஆழ்வார் திவ்ய ஸூக்தியில் சொல்லுகிற படி இம்மந்த்ரத்தை-மந்த்ரார்த்தை – ஒழிய
மற்று ஒன்றால் கால ஷேமம் பண்ணி அறியார்கள் என்கை –

வேத சாஸ்திரங்கள் ஆழ்வார் அருளிச் செயல்கள் இவற்றால் போது போக்கும் போதும் –
இம்மந்த்ரத்தை-மந்த்ரார்த்தை – உள் கொண்டே அனுசந்திக்கையாலே –
இத்தை ஒழிய வேறு ஒன்றால் கால ஷேமம் பண்ணி அறியார்கள் என்னத்  தட்டில்லை

நாதயாமுன யதிவராதி களான நம் பூர்வாச்சார்யர்கள் –ஆதி ஸப்தத்தாலே எம்பார் தொடங்கி திருவாய் மொழிப்பிள்ளை மணவாள மா முனிகள் பர்யந்தமானவர்கள்

———————————————————-

வாஸகத்தில் காட்டில் வாஸ்யத்தில் ஊன்றுக்கைக்கு அடி -ஈஸ்வரனே உபாயம் உபேயம் என்று
நினைத்து இருக்கை –சூரணை -25-

வாஸக சக்தி சர்வத்தையும் சாதித்து கொடுக்க வற்றாய் இருக்க -இதனுடைய வாஸ்யத்திலே இவர்கள்
ஊன்றுகைக்கு ஹேது  ஏது என்ன அருளி செய்கிறார் –

அதாவது –
சர்வ பலத்துக்கும் ஸ்வயம் சாதனமாயும் சாதனாந்தரங்களுக்கும் சஹ காரியாய் நின்று தலைக் கட்டி கொடுத்தும் போருகிற
இதனுடைய வாஸக சக்தி -தானே அமைந்து இருக்கச் செய்தே –
அதிலும் காட்டில் கீழ் சொன்ன படி இம் மந்த்ரத்தினுடைய வாஸ்யத்திலே பூர்வாச்சார்யர்கள் ஊன்றுகைக்கு அடி –
உபேயாந்த்ர பரராய் இத்தை சஹ  காரியாய் கொள்ளுதல் செய்யும் அவர்களை போல் அன்றிக்கே –
உபாய உபேயங்கள் இரண்டும் ஈஸ்வரனே என்று பிரதிபத்தி பண்ணி இருக்கை என்ற படி –
(அத்தைத் தின்று அங்கேயே கிடக்குமே )

ஆக
திரு மந்த்ரத்தின் உடைய சீர்மைக்கு போரும்படி என்று -சூரணை -3 -தொடங்கி-
இவ்வளவும் வாய் வந்தபடி அனுசந்திக்க ஒண்ணாத படியான இதனுடைய கௌரவத்தையும் –
ஈஸ்வரனே தானே சிஷ்யனுமாய் -ஆச்சார்யனுமாய் நின்று வெளி இட்டு அருளுகையாலே -வந்த ஏற்றத்தையும் –
சகல சாஸ்திரங்களிலும் -சகல மந்த்ரங்களிலும் -வாஸ்யம் தன்னிலும் காட்டில் இதனுக்கு உண்டான பெருமையையும் –
அக்ரமமாக தன் கார்யம் செய்யும் ஆதிக்யத்தையும் –
அபேஷித சகல பல ப்ரதத்வ ரூப மகாத்யத்தையும் –
கர்மாத் உபாய சக காரித்வ  ரூபமான உத்கர்ஷத்தையும் –
ஞாதவ்ய சகல அர்த்த பிரதிபாதகதயா வந்த மகாத்ம்யத்தையும் –
ஏதத் பிரதிபாதித்ய அர்த்த கௌரவ விசேஷத்தையும் -அருளிச் செய்கையாலே –
இம் மந்த்ரத்தின் உடைய வைபவத்தை எல்லாரும் அறியும் படி தர்சிபித்து அருளினார் ஆயிற்று –

———————————————

இது தன்னில் சொல்லுகிற அர்த்தம் –
ஸ்வரூபமும்–ஸ்வரூப அனுரூபமான ப்ராப்யமும்
ஸ்வரூபமும் உபாயமும் பலமும்
என்னவுமாம் –சூரணை -26-

(ஓம் நம ஸ்வரூபம் — நாராயணாயா ப்ராப்யம் –சேஷத்வம் ஓம் பாரதந்தர்யம் நம என்றபடி
பரன் யாருக்கு தந்திரமாக பிரதானமாக பிரயோஜனமாக கொள்கிறானோ அவனே பரதந்த்ரன் –
ஓம் ஸ்வரூபம் – நம உபாயம் — பலம் நாராயணாயா
இரண்டு படியாக அருளிச் செய்கிறார் )

இனிமேல் இம் மந்த்ரத்துக்கு வாக்யார்த்தம் இரண்டு படியாக அருளிச் செய்கிறார் –
அதாவது
இம்மந்த்ரம் தன்னில் சொல்லுகிற அர்த்தம் –
இவ் ஆத்மாவினுடைய சேஷத்வ பாரதந்தர்யங்கள் ஆகிற ஸ்வரூபமும் –
அந்த ஸ்வரூப அனுரூபமாய் இருந்துள்ள கைங்கர்யம் ஆகிற ப்ராப்யமும் –

அன்றிக்கே –
சேஷத்வம் ஆகிற ஸ்வரூபமும்
அந்த ஸ்வரூப அனுரூபமான உபாயமும்
உபாய லப்யமான  பலமும்–என்று சொல்லவுமாம் என்கை –

இதில் பிரதம யோஜனையில்-
பிரணவ நமஸ்ஸுகளால் ஸ்வரூபமும்
நாராயண பதத்தாலே ப்ராப்யமும் சொல்லுகிறது –

அனந்தர யோஜனையில் –
பிரணவத்தாலே-சேஷத்வமும்
நமஸ்ஸாலே -உபாயமும் –
நாராயண பதத்தாலே பலமும் –
சொல்லுகிறது –

(பிரணவத்தாலே-சேஷத்வமும்–ப்ரணவத்தாலே பகவத் அநந்யார்ஹ சேஷத்வமாகிற ஸ்வரூபமும்
நமஸாலே -உபாயமும் –பாரதந்தருமாகிற ஸ்வரூபமும் என்றபடி)

(சேஷத்வ போக்த்ருத்வங்கள் போல் அன்றே பாரதந்தர்ய போக்யதைகள்
சேஷத்வமாவது -இஷ்ட விநியோக அர்ஹதா மாத்ரம்
பாரதந்தர்யம் -சேஷிக்கு இஷ்டமானபடியே விநியோகப்படுக்கை
போக்த்ருத்வமாவது -ஞாதவ்ய பலத்தாலே போக தசையில் வளர்கிற ரசங்களுக்கு தானே போக்தாவாய் இருக்கை
போக்யதையாவது பதார்த்த கதமான ரஸ வர்ணாதிகள்
போக்தாவுக்கே போக்யமாய் இருக்குமா போல் ஆத்மகதமான ஞானாதிகளும் ஈஸ்வரனுக்குப் போக்யமாய் இருக்கை)

———————————————

பலம் இருக்கும் படி ப்ரமேய சேகரத்திலும் -அர்ச்சிராதி கதியிலும் சொன்னோம் –சூரணை -27-

பல வேஷம் தான் இருக்கும் படி எங்கனே ? என்ன அருளிச் செய்கிறார் –

அதாவது –
இவ் ஆத்மாவுக்கு ப்ராப்யமான பலம் தான்
அர்ச்சிராதி மர்க்கத்தாலே பரம பதத்திலே போய்
பரிபூர்ண பகவத் அனுபவத்தைப் பண்ணி –
அவ் அனுபவ ஜனித ப்ரீதி ப்ரேரிதனாய் கொண்டு பண்ணும்
அசேஷ சேஷ விருத்தி ஆகையாலே –

அது இருக்கும் படியை ஸங்க்ரஹேன
ப்ரமேய சேகரம் ஆகிற பிரபந்தத்திலும் –
விஸ்தரேன அர்சிராதி கதி ஆகிற பிரபந்தத்திலும் விசதமாக சொன்னோம் —
அவற்றிலே கண்டு கொள்க என்கை –

(ப்ரமேய சேகரம்–பகவத் கடாஷம் அடியாக அஜ்ஞாத ஸூக்ருதம்  யுண்டாம் –
அதடியாக அத்வேஷம் யுண்டாம் –
அதடியாக பகவத் பாகவத விஷயங்களில் ஆபிமுக்யம் யுண்டாம் –
ஆபிமுக்யம் யுண்டானவாறே -த்யாஜ்ய உபாதேய விபாக ஜ்ஞானத்தில் கௌதுகம் யுண்டாம் –
அத்தாலே சாத்விக சம்பாஷணம் யுண்டாம் –
அத்தாலே சதாசார்ய சமாஸ்ரயணம் யுண்டாம் –
அது யுண்டானவாறே த்யாஜ்ய உபாதேய நிச்சயம் யுண்டாம் –
அது யுண்டானவாறே -ப்ராப்யாந்தரத்தில் வைராக்யமும் -பரம பிராப்யத்தில் அபி நிவேசமும் யுண்டாம் —
அநந்தரம்-ப்ராப்யாந்தர நிவ்ருத்திக்கும் -பரம ப்ராப்ய சித்திக்கும் அடியான சித்த உபாய ச்வீகாரம் யுண்டாம் –
அநந்தரம் -பகவத் ப்ராப்தியிலே த்வரை யுண்டாம்
அநந்தரம் -அஹம் ஸ்மராமி -என்கிறபடியே -ஈஸ்வர ஸ்ம்ருதிக்கு விஷய பூதானாம்
அநந்தரம் பூத ஸூ ஷ்ம சரீர பரிஷ்வங்கம் யுண்டாம் –
அநந்தரம் -பரமார்த்த சம்சர்க்கம் யுண்டாம்
பின்பு ஹாரத்த  மார்க்க விசேஷ பிரகாசம் யுண்டாம் –
பின்பு ஹ்ருதய குஹா நிர்க்கமனம் யுண்டாம் –
அநந்தரம் -மூர்த்தன்ய நாடீ நிஷ்க்ரமணம் யுண்டாம் –
அநந்தரம் -அர்ச்சிராதி மார்க்க கமனம் யுண்டாம் –
அநந்தரம் -ஆதிவாஹிக சத்காரம் யுண்டாம் –
அநந்தரம் -ஆவரணாதி க்ரமணம் யுண்டாம் –
அநந்தரம் -ப்ரக்ருத் யதி லங்கனம் யுண்டாம் –
அநந்தரம் விரஜா ஸ்நானம் யுண்டாம் –
அநந்தரம் -ஸூ ஷ்ம சரீர விச்லேஷம் யுண்டாம் —
அநந்தரம் -அபஹத பாப்மத்வாதி குணகண ப்ராதுர்பாவம் யுண்டாம் –
அநந்தரம் -அமா நவ கர ஸ்பர்சம் யுண்டாம் –
அநந்தரம் -பகவத் சங்கல்ப கல்பிதமான திவ்ய தேக ப்ராப்தி யுண்டாம் —
அநந்தரம் அகால கால்ய திவ்ய தேச ப்ராப்தி யுண்டாம் –
அநந்தரம் -அரம்ஹ்ரத தட ஸ்நானம் யுண்டாம் –
பின்பு திவ்ய அலங்காரம் யுண்டாம் –
பின்பு திவ்ய விமான ஆரோஹணம் யுண்டாம் –
பின்பு திவ்ய காந்தார பிரவேசம் யுண்டாம் –
அநந்தரம் திவ்ய அப்சரஸ் சத்காரம் யுண்டாம்
அநந்தரம் -திவ்ய கந்த பிரவேசம் யுண்டாம் –
அநந்தரம் ப்ரஹ்ம கந்த பிரவேசம் யுண்டாம் –
அநந்தரம் அப்ராக்ருத கோபுர ப்ராப்தி யுண்டாம் –
அநந்தரம் திவ்ய நகர ப்ராப்தி யுண்டாம்
அநந்தரம் ஸூ ரி பரிஷத் பிரத்யுத் கமனம் யுண்டாம் —
அநந்தரம் -ராஜ மார்க்க கமனம் யுண்டாம் –
அநந்தரம் -ப்ரஹ்ம தேஜ பிரவேசம் யுண்டாம் –
அநந்தரம் -திவ்ய கோபுர பிராப்தி யுண்டாம்
அநந்தரம் ப்ரஹ்ம வேச்மப்ரவேசம் யுண்டாம் –
அநந்தரம் -திவ்ய மண்டப ப்ராப்தி யுண்டாம் –
அநந்தரம் திவ்ய பரிஷித் ப்ராப்தி யுண்டாம் –
அநந்தரம் – ஸபத் நீக சர்வேஸ்வர தர்சனம் யுண்டாம் –
அநந்தரம் -ஸ்துதி ப்ரணாம அஞ்ஜலிபிரமுக சம்ப்ரம அனுவர்த்தனம் யுண்டாம்
அநந்தரம் பரமாத்மா சமீப ப்ராப்தி யுண்டாம்
அநந்தரம் பாத பீட பர்யங்கா ரோஹணம்  யுண்டாம்
அநந்தரம் -பகவத் உத்சங்களங்கம் யுண்டாம் –
அநந்தரம் -ஆலோக நாலா பாத்ய நுபவம் யுண்டாம் –
அநந்தரம் -ஆலிங்க நாத்ய அனுபவம் யுண்டாம் —
அநந்தரம் -ஸ்வ ரூப ரூப குண விக்ரஹாத்ய நுபவம் யுண்டாம் —
அநந்தரம் -அநுபவ ஜனித ப்ரீதி பிரகர்ஷம் யுண்டாம்
அநந்தரம் -நாநாவித விக்ரஹ பரிக்ரஹம் யுண்டாம் –
அநந்தரம் -சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்த உசிதமான  சர்வ பிரகார கைங்கர்யம் யுண்டாம் —)

—————————————

இது தான் எட்டு திரு அஷரமாய் மூன்று பதமாய் இருக்கும் –சூரணை -28-

இனி இம் மந்த்ரத்துக்கு பிரதிபதம், அர்த்தம் அருளிச் செய்வதாக திரு உள்ளம் பற்றி
ப்ரதமம் இதனுடைய அஷர சங்க்யையையும் -பத சங்க்யையையும் அருளிச் செய்கிறார் –

அதாவது
இம் மந்த்ரம் தான் –
ஒமித்யேகாஷரம்-நாம இதி தவே அஷரே -நாராயணா யேதி பஞ்ச அஷ ராணி –
இதி அஷ்டாஷரம் சநதசா காயத்ரீ சேதி ஒமித்யக்ரே வியாஹரேத் நம இதி பச்சாத்
நாராயணா எத்யுபரிஷடாத்-என்கிறபடியே
எட்டு திரு அஷரமாய் -மூன்று பதமாய் இருக்கும் என்கை –

இதனுடைய அஷ்டாஷரத்வம்    சொல்லுகிற இடத்தில்
ஒமித்யே காஷரம் -என்று பிரணவத்தை ஓர் அஷரமாகவும்
நம இதி த்வ அஷரே -என்று நமஸ் இரண்டு அஷரமாகவும் –
நாராயணா யேதி பஞ்சாஷராணி -என்று நாராயணா பதத்தை அஞ்சு அஷரமாகவும்
ஸ்ருதி சொல்லுகையாலே –

சமஸ்த பதமான நாராயணா பதத்தில் நார பதத்தை பிரித்து ஷட் அஷரமாக்கி
பிரணவத்தை ஒழிய அஷ்டாஷரத்வம் சொல்லும் அவர்களுடைய பஷம் அவைதிகம் ஆகையாலே –
அநாத ரணீயமாக கடவது

(நாராயணாய -நார -அயனாய -என்று ஷட் அக்ஷரம் ஆக்குவது வைதிகம் அல்லாமையாளர் அநாதாரணீயம்)

———————————————————

மூன்று பதமும் மூன்று அர்த்தத்தைச் சொல்லுகிறது–சூரணை -29-

இதி பத த்ரயமும் எவ் அர்த்தத்தைச் சொல்லுகிறது என்னும் ஆ காங்ஷையிலே
மூன்று பதமும் மூன்று அர்த்தத்தைச் சொல்லுகிறது என்கிறார்

—————————————————

அதாவது சேஷத்வமும் -பாரதந்த்யமும் -கைங்கர்யமும்–சூரணை -30-

அவ் வர்த்தங்கள் தம்மை விசதமாக அருளிச் செய்கிறார்
அதாவது சேஷத்வமும் -பாரதந்த்யமும் -கைங்கர்யமும் -என்று

ஸ்வரூபமும் ஸ்வரூப அனுரூபமான ப்ராப்யமும் என்று
முதல் சொன்ன வாக்ய அர்த்தம் இத்தை நினைத்து  இறே

(சேஷத்வமாவது -யதேஷ்ட விநியோக அர்ஹத்வம்
பாரதந்தர்யமாவது -யதேஷ்ட விநியுஜ்ய மாநத்வம்
கைங்கர்யம் -பகவத் முக விகாஸ ஹேதுவான விருத்தி விசேஷம்)

—————————————————–

இதில் முதல் பதம் பிரணவம்-சூரணை -31-

பிரதம பதம் ஏது என்ன
ஒமித்யக்ரே வியாஹரேத் -என்று இறே ஸ்ருதி சொல்லிற்று –

ஸ்ம்ருதியும் -பிரணவாத்யம் நமோ  மத்யம் நாராயணா பதாந்திமம் மந்த்ரம் அஷ்டாஷரம் வித்யாத்
சர்வ சித்தி கரம் ந்ருணாம் என்றது இறே

————————————

இது அ என்றும் -உ என்றும் -ம என்றும் மூன்று திரு அஷரம்-சூரணை-32-

இனி பிரணவத்துக்கு அர்த்தம் அருளிச் செய்வதாக இதனுடைய அஷய த்ரய ஆத்மகதையை
அருளிச் செய்கிறார் –

அதாவது –
இப் பிரணவம் தான் அசம்ஹிதாகாரத்தாலே –
மூன்று அஷரமாய்-
மூன்று பதமாய் -மூன்று அர்த்த பிரகாசமாய் –

(அசம்ஹிதாகாரத்தாலே–பிரிந்து இருக்கையாலே -மூன்று அர்த்த பிரகாசமாய் இருக்கை
லுப்த சதுர்த்தி விபக்தி ஸஹிதமான அகாரம் -பகவத் சேஷத்வ ரூப அர்த்த ப்ரகாசகமாயும்
உகாரம் -அநந்யார்ஹ ஸம்பந்த அர்த்த ப்ரகாசகமாயும்
மகாரம் -அந்த சேஷத்வ ஆஸ்ரமாய் ஞாதாவாய் இருக்கிற ஜீவாத்ம ஸ்வரூப அர்த்த ப்ரகாசகமாயும் -என்றபடி)

சம்ஹிதாகாரத்தாலே –
ஏக அஷரமாய்-
ஏக பதமாய் –
ஏக பிரகாசமாய் -இறே இருப்பது –

(ஏகார்த்த ப்ரகாசகமாய் -ஜீவ ஸ்வரூப ஏக அர்த்த ப்ரகாசகமாய்)

——————————————-

மூன்று தாழி யிலே   தயிரை நிறைத்து கடைந்து வெண்ணெய் திரட்டினால் போல்
மூன்று வேதத்திலும் மூன்று அஷரத்தையும் எடுத்தது –சூரணை -33-

இந்த அஷர த்ரயத்தின் உடையவும் உத்பத்தி க்ரமத்தை ச த்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார்

அதாவது –
பூரிதி ருக்வேதா தஜாயாத புவ இதி யஜுர்வேதாத் ஸூவரிதி சாமவேதாத்
தானி சுக்ரான் யப்யதபத் தேப்யோ அபிதப்  தேப்யஸ் த்ரயோ வர்ணா
அஜாயந்த அகார உகார மகார இதி தானே கதா சமபரத்த தேததோமிதி-என்றும் –

அகாரஞ்சாப் யுகாரஞ்ச மகாரஞ்ச பிரஜாபதி
வேத த்ரயான் நிரப்ருஹத் பூர்புவஸ் ஸ்வரிதீதி ச -என்றும் –

ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லுகிறபடியே -ருக் யஜுர் சாம ரூபமான வேத த்ரயத்திலும் நின்றும் –
பூ புவ ஸூவ என்கிற வியாஹுதி த்ரயத்தையும் தோற்றுவித்து –
அந்த வியாஹுதி த்ரயத்தையும்
பொன்னோடு வைக்குமா போலே தன் சங்கல்பத்தாலே ஓட வைத்து –
அவற்றில் நின்றும் அகார உகார மகாரங்கள் ஆகிற அஷரங்கள் மூன்றும் அடைவே தோன்றும் படி பண்ணி –

இப்படி
சர்வேஸ்வரன் சமுத்தரித்த படியை திரு உள்ளம் பற்றி –
பாத்ர த்ரய கதமான தயிரை தனித் தனியே கடைந்து –
தத் சாரமான வெண்ணெயை வாங்கி திரட்டினால் போலே –
மூன்று வேதத்திலும் மூன்று அஷரத்தையும் எடுத்தது -என்கிறார்

(அந்த வியாஹுதி த்ரயத்தையும் தனித் தனியே இடையீடாகக் கொண்டு வேத த்ரயத்தில் நின்றும் ஸங்க்ரஹித்தான்
இடையீடாவது -வேத த்ரயத்தையும் ஒரு தட்டாகவும் இந்த அக்ஷர த்ரயத்தையும் ஒரு தட்டாகவும் நிறுத்துகை)

————————————–

ஆகையால் இது சகல வேத சாரம் –சூரணை -34-

இத்தால் பலித்ததை அருளிச் செய்கிறார் –
அதாவது –
அஷர த்ரயமும் ஒரோ வேதத்தின் உடைய சாரமாக சமுத்ரதம் ஆகையாலே
இவ் அஷர த்ரய யாத்மகமான பிரணவம் சகல வேத சாரம்-என்ற படி –

ஆக -இது தன்னில் சொல்லுகிற அர்த்தம் -என்று தொடங்கி-
இவ்வளவும்
இம்மந்த்ரத்தினுடைய வாக்யர்த்தத்தையும்
அஷர சங்க்யையையும்
பத சங்க்யையையும்
பத த்ரயமும்
அர்த்த த்ரய பிரதிபாதிகத்வம் என்னுமத்தையும்
அதில் பிரதம பதம் இன்னது என்னுமத்தையும்
அது தான் அஷர த்ரயாத்மகமாய் இருக்கும் என்னுமத்தையும்
அவ் வஷர த்ரயமும் வேத த்ரய சாரமாக உத்பன்னம் ஆகையாலே
தத் சமுதாயமான பிரணவம் சகல வேத சாரம் என்னுமத்தையும்
அருளிச் செய்தார் ஆயிற்று –

——————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading