ஸ்ரீ முமுஷுப்படி -திருமந்திர பிரகரணம்-ஸூர்ணிகை -35–57-ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் அரும்பத விளக்கம் —

இதில் அகாரம் சகல சப்தத்துக்கும் காரணமாய்
நாராயண பதத்துக்கு ஸங்க்ரஹமாய் இருக்கையாலே
சகல ஜகத்துக்கும் காரணமாய்
சர்வ ரஷகனான எம்பெருமானைச் சொல்லுகிறது –சூரணை-35–
(அகர முதல எழுத்து எல்லாம் ஆதி பகவான் முதற்றே உலகு )

இனி இவ் அஷய த்ரயத்துக்கும் அடைவே அர்த்தம் அருளிச் செய்வதாக திரு உள்ளம் பற்றி
பிரதமம் அகார அர்த்தத்தை அருளிச் செய்கிறார்
அதாவது –

இவ் அஷர த்ரயத்திலும் வைத்து கொண்டு பிரதம அஷரமான அகாரம்
நாம ரூபஞ்ச பூதாநாம் க்ருத்யா நாஞ்ச பிரபஞ்சம் வேத சப்தேப்ய எவாதவ் தேவாதீநாஞ் சகர ச -என்கிறபடியே
லௌகிக சகல சப்தங்களுக்கும் வேதம் காரணமாய்

பிரணவாத்யா சதத வேதா ஓங்கார பிரபவா வேதா -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
அந்த வேதங்களுக்கும் பிரணவம் காரணமாய் –

தஸ்ய பிரக்ருதி லீநஸ்ய -என்கிறபடியே
அந்த பிரணவம் தனக்கும் தான் காரணமாய் இருக்கையாலே –

அகாரோ வை சர்வா வாக் சமஸ்த சப்த மூலாத்வாத காரஸ்ய ஸ்வபாவாத -என்கிறபடியே
சகல சப்தத்துக்கும் காரணமாய்

சர்வேஸ்வரன் சமஸ்த வஸ்து சரீர தயா சர்வ ரஷகனாய் இருக்கும் படியை பிரதி பாதிக்கிற
நாராயண பதத்துக்கு ஸங்க்ரஹமாய் இருக்கையாலே –

யதோ வா இமானி பூதாநி ஜாயந்தி யே
ந ஜாதானி ஜீவந்தி ச ஏவ ஸ்ருஜ்யஸ் ச ச சரக்க கர்த்தா
ச ஏவ பாத்யத்தி ச பால்யதே ச -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே

எல்லா ஜகத்துக்கும் காரணமாய்
எல்லாருக்கும் ரஷகனாய் இருக்கும் எம்பெருமானைச் சொல்லுகிறது என்கை-

இத்தால்
இவ் அஷரத்தில் -பிரக்ருத் யர்த்தமான-காரணத்வமும்
தாத்வர்த்தமான ரஷகத்வமும் சொல்லிற்று ஆயிற்று –

(பிரக்ருத் யர்த்தமான-ப்ரணவ ஸம் ஜிக அகாரார்த்தமான
காரணத்வமும்-நிமித்த ஸஹகாரி உபாதான ரூப த்ரிவித காரணமாய்
தாத்வர்த்தமான –-அவ ரக்ஷணே -அவ் என்கிற தாது அர்த்தமான ரஷகத்வமும் சொல்லிற்று ஆயிற்று)

இவ் அகாரத்துக்கு நாராயண பத ஸங்க்ரஹ தயா ரஷக வாசித்வம் சொல்லும் போதும்
தாது சித்த வேஷத்தை அவலம்பித்தே சொல்ல வேணும் இறே

——————————————–

ரஷிக்கை யாவது
விரோதியை போக்குகையும்-
அபேஷிதத்தைக் கொடுக்கையும் –சூரணை-36

ரஷிக்கை யாவது தானெது என்னும் ஆ காங்க்ஷையில் அருளிச் செய்கிறார்

அதாவது
ரஷகவம் தான் அநிஷ்ட நிவர்த்தகத்வ இஷ்ட பிராபகத்வ ரூபேண த்விவிதமாகையாலே
ஈஸ்வரன் சேதனரை ரஷிக்கையாவது
அவர்களுக்கு துக்க அவஹமான விரோதியைப் போக்குகையும்
ஸூக அவஹமான அபேஷித்ததைக் கொடுக்கையும் என்கை-

——————————————

இவை இரண்டும் சேதனர் நின்ற நின்ற அளவுக்கு ஈடாய் இருக்கும்-சூரணை -37

இவர்களுக்கு இவன் போக்கும் விரோதி எது –
கொடுக்கும் அபேஷிதம் எது என்ன அருளிச் செய்கிறார் –

அதாவது
சேதனர் நின்ற நின்ற அளவுக்கு ஈடாய் இருக்கும் -என்றது
தத் தத் அதிகார அனுகுணமாக இருக்கும்-

(இவை இரண்டும் -போக்கும் விரோதியும் கொடுக்கும் அபேக்ஷிதமும் ஆகிய இவை இரண்டும்)

—————————————–

சம்சாரிகளுக்கு விரோதி சத்ரு பீடாதிகள் -அபேஷிதம் அன்ன பாநாதிகள் –
முமுஷுகளுக்கு விரோதி -சம்சார சம்பந்தம் -அபேஷிதம் பரம பத ப்ராப்தி
முக்தருக்கும் நித்யருக்கும் விரோதி -கைங்கர்ய ஹானி -அபேஷிதம் -கைங்கர்ய விருத்தி –சூரணை -38

இது தன்னை வியக்தமாக அருளிச் செய்கிறார் மேல் –

அதாவது
தேக ஆத்மா அபிமாநாதிகளும்-சப்தாதி விஷய அனுபவமே யாத்ரையாய் இருக்கும் சம்சாரிகளுக்கு –
நிவர்த்யமான விரோதி
சத்ருக்களால் வரும் நலிவு தொடக்க மானவை –
பிராப்யமான அபேஷிதம்
சோறு தண்ணீர் முதலானவை என்கை –

(தேக ஆத்மா அபிமாநாதிகளும்–ஆதி ஸப்தத்தாலே ஸ்வ ஸ்வா தந்தர்ய அபிமானத்தைச் சொல்கிறது)

சத்ரு பீடாதிகள் என்ற  இடத்தில்  ஆதி சப்தத்தாலே
தேக மனோ வியாதி முதலானவற்றால் வரும் பீடைகளைச் சொல்லுகிறது –
அன்ன பாநாதிகள் என்கிற  இடத்தில் -ஆதி சப்தத்தாலே
ஸ்ரக் வஸ்த்ர ஆபரண அங்கராக அங்கந ஆலிங்க நாதிகளைச் சொல்லுகிறது –

(ஆதி யாவது மானஸீக துக்கம்
வியாதி யாவது -தேஹஜமான ஜ்வராதிகள்)

முமுஷுகளுக்கு இத்யாதி –

அதாவது
சம்சாரத்தில் அடிக் கொதித்து -பரம பதத்தில் ஆசைப் படா நிற்கும் முமுஷுகளுக்கு – நிவர்த்யமான  விரோதி –
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்புமாய்க் கொண்டு –
இவ் விபூதியில் இருக்கை -ஆகிற சம்சார சம்பந்தம்-
ப்ராப்யமான அபேஷிதம் –
பகவத் அனுபவாதிகளுக்கு அனுகூலமான பரம பதத்தைப் பிராபிக்கை என்கை –

(சம்சாரத்தில் அடிக் கொதித்து-கால் கொதித்து -அதாவது விரோதி ஞானம் தலை எடுக்கை
பொய் நின்ற -உத்பத்தி விநாஸாதி யோகத்தாலே அசத்திய ஸப்த வாஸ்யமான அசேதன விஷயத்தில்
ஞானமும் –ஆத்ம ஞானமும்
பொல்லா ஒழுக்கும் –அந்த தேஹ ஆத்ம அபிமானம் அடியான ஸம்ஸார துஷ் காம ப்ரவ்ருத்தியும்
அழுக்கு உடம்புமாய்க் கொண்டு –இக்கர்மம் அடியாக வரக்கடவதுமான மாம்ஸ ஸ்ரக்காதி மல ரூப தேஹ சம்பந்தமும்
இந்நின்ற நீர்மை -இவற்றிலே நிலை நின்று போந்த வாஸனா ருசிகள் ஆகிற ஸ்வ பாவ விசேஷத்தை
இனி யாம் உறாமை -நிர்ஹேதுக கடாக்ஷ மூலமான ஞான லாபத்தை யுடையவர்களாய்
இன்று அங்கீ கார பலத்தை யுடைய நாங்கள் அணுகாதபடி
உயிர் அளிப்பான் -ப்ராணி பதார்த்தங்களுடைய அநிஷ்ட நிவ்ருத்தியையும் இஷ்ட ப்ராப்தியையும் பண்ணிக் கொடுக்கைக்காக
எந்நின்ற யோனியுமாய் பிறந்தாய் –ரூப ப்ரகார வியவஸ்திங்களான ஸகல ஜாதிகளிலும் அவதீர்ணன் ஆனவனே
இமையோர் தலைவா -ஏவம் வித ஸுலப்ய விஸிஷ்டனான யுன்னை ஆஸ்ரிதரை ஸதா அனுபவிப்பிக்கைக்காக
ஸதா ஸ்தான பரரான அயர்வரும் பாமரர்களுக்கு அதிபதி யானவனே
அடியேன் செய்யும் விண்ணப்பம் மெய் நின்று கேட்டருளாய் -உனது திருவடிகளில் நிருபாதிக சேஷத்வத்தையே ஸ்வரூபமாக யுடைய நான் செய்கிற
மெய்யான விண்ணப்பத்தை -ஜகத் வியாபாரத்தில் பறக்கற்று நின்று கேட்டு அருள வேண்டும்
மெய் நின்று கேட்டருளாய்-அபரோஷிக்கும் படி நின்று என்னவுமாம்
கேட்டருளாய்–கேட்க்கை தானே அருள் என்று கருத்து
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை –அடியேன் செய்யும் விண்ணப்பம் -என்று அன்வயம்
யாம் உறாமை என்று பன்மையாய் இருக்க அடியேன் என்ற ஒருமையாலே -விஞ்ஞாபிப்பார் தாம் ஒருவராய் பல லாபம் சம்பந்தி பரம்பரைக்கும் ஒக்கும் என்று கருத்து)

முக்தருக்கும் இத்யாதி –
அதாவது –
நிவ்ருத்த சம்சாரராயும் -அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தராயும் -பகவத் அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்ய பரராய் இருக்கும்
முக்தருக்கும் நித்யருக்கும் விரோதி –
வகுத்த சேஷியான சர்வேஸ்வரன் திரு அடிகளிலே
ஸ்வரூப அனுரூபமாக பண்ணிக் கொண்டு போகும் கைங்கர்யத்துக்கு வரும் விச்சேதம்
அபேஷிதம் -உத்தரோத்தரம் அடிமை செய்து செல்லுகை யாகிற கைங்கர்ய விருத்தி என்கை-

(நிவ்ருத்த சம்சாரராயும் –என்கிற விசேஷணம் முக்தருக்கும்
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தராயும்–என்கிற விசேஷணம் நித்யருக்கும் –
பகவத் அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்ய பரராய் இருக்கும்-என்கிற விசேஷணம் இருவருக்குமாக யோஜிக்கவுமாம்
ஸ்வரூப அனுரூபமாக-சேஷத்வ பாரதந்தர்ய ஸ்வரூப அனுரூபமாக)

ஆக இப்படி அதிகார அனுகுணம் விரோதியைப் போக்கி
அபேஷிதத்தைக் கொடுக்கை யாகையாலே
ஈஸ்வரனே சர்வ ரஷகன் என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று-

————————————–

ஈஸ்வரனை ஒழிந்தவர்கள் ரஷகர் அல்லர் என்னும் இடம்
பிரபந்த பரித்ரானத்திலே  சொன்னோம் –சூரணை -39

இப்படி ஈஸ்வரனேயோ பின்னை எல்லாரையும் ரஷிக்கிறவன்-
லோகத்திலே மாதா பிதா பிரகிருதி தேவதாந்திர பர்யந்தமாக ரஷகராய் போகிறவர்கள்
பலரும் இல்லையோ -என்ன அருளிச் செய்கிறார் –
அதாவது –

நிருபாதிக  பந்துவாய் -சர்வகாலமும் கைவிடாதே நோக்கி கொண்டு போரும் சர்வேஸ்வரனை
ஒழிந்த ஔபாதிக பந்துகளான மாதா பித்ராதிகளும் அர்வாசீ நரான தேவதாந்த்ரங்களும் –
ரஷகர் அல்லர் என்னும் இடம் –
ச ஹேதுகமாக பிரபன்ன பரித்ரானம் என்கிற பிரபந்தத்திலே சொன்னோம் –
அதில் கண்டு கொள்வது என்கை-

(அர்வாசீ நரான தேவதாந்த்ரங்களும்–தங்களுடைய ரக்ஷணத்தில் தங்களுக்கு சக்தி இல்லாதவர்களான)

(முமுஷூவாய் -மோஷார்த்தமாக-சர்வேஸ்வரனைப் -பற்றி இருக்குமவனுக்கு
அநந்ய கதித்வமும் -ஆகிஞ்சன்யமும் வேணும் –
அநந்ய கதித்வம் ஆவது –களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -திருவாய் -5-8-8-என்கிறபடியே
சர்வேஸ்வரனை ஒழிய வேறு ஒரு ரஷகர் இல்லை என்று இருக்கை-
ப்ராதாக்கள் புத்ரர்கள் மாதா பிதாக்கள் ப்ரஹ்ம ருத்ராதிகள் தொடக்கமானவர்கள் ரஷகராகக் குறை என் என்னில்
ப்ராதாக்கள் ரஷகர் அல்லர் -வாலி பக்கலிலும் -ராவணன் பக்கலிலும் காணலாம் –
புத்ரர்கள் ரஷகர் அல்லர் என்னும் இடம் ருத்ரன் பக்கலிலும் கம்சன் பக்கலிலும் காணலாம் —
மாதா பிதாக்கள் ரஷகர் அல்லர் என்னும் இடம் கைகேயி பக்கலிலும் ஹிரண்யன் பக்கலிலும் காணலாம் –

மாதா பிதாக்கள் யௌவன விரோதி என்று உபேஷித்தல்-ஷாம காலம் வந்தவாறே ஆள்பார்த்து தூற்றிலே பொகடுதல்-
விலை கூறி விற்றல் -ஆபத்து வந்தவாறே நெகிழ நினைத்தல்
அர்த்த ஷேத்ராதி களுக்காக எதிரிட்டுக் கொல்லுதல்-முடியும் அவஸ்தையிலே
சோர்வினால் பொருள் வைத்தது யுண்டாகில் சொல்லு சொல்லு என்று சுற்றும் இருந்து -பெரியாழ்வார் -4-5-3-என்கிறபடியே
ஈஸ்வரனை ஸ்மரித்துக் கரை மரம் சேர ஒட்டாதபடி அலைத்தல் முடித்தல் செய்யா நிற்பர்கள்-
ஸ்திரீகளுக்கு பர்த்தாக்கள் ரஷகர் அல்லர் என்னும் இடம் தர்ம புத்ராதிகள் பக்கலிலும் நளன் பக்கலிலும் காணலாம் –
இவர்கள் ரஷகர் அல்லரோ யாகிலும் நாட்டாருக்குக் கண் காட்டியாய்ப் போருகிற சந்திர ஆதித்யர்கள் ரஷகராகக் குறை என் -என்னில்
அவர்களும் ஈஸ்வர ஆஜ்ஞைக்கு அஞ்சி தாங்கள் நினைத்த படி சஞ்சரிக்கப் பெறாதே
நாழிகை கூறிட்டு -பெரியாழ்வார் -4-1-8-உதிப்பது அச்தமிப்பதாய்க் கொண்டு போருகையாலும்
ஹிரண்ய ராவணாதிகள் கையிலே அகப்பட்டு அவர்களுக்கு இழி தொழில் செய்து திரிவார் சிலராகையாலும் ரஷகராக மாட்டார்கள்

த்ரை லோக்யத்துக்கும் பாலகனான இந்த்ரனும் எப்போதோ நம்பதம் நழுவப் புகுகிறது என்று அஞ்சி சபோபஹதனாய்
இந்த்ரஜித்தின் கையிலே அகப்பட்டுக் கட்டுண்டு
மகாபலி போல்வார் கையிலே ஐஸ்வர் யத்தைப்  பறி கொடுத்து
கண்ணும் கண்ணீருமாய் கழுத்தும் கப்படமுமாய்க் -எளிவரவைக் காட்டும் வஸ்த்ரம் -கொண்டு திரிவான் ஒருவன் ஆகையாலே அவனும் ரஷகனாக மாட்டான் –
ப்ரஹ்மாவும் -மது கைடபர்கள் கையிலே அகப்பட்டு வேதங்களைப் பறி கொடுத்து -கண் இழந்தேன் -தனம் இழந்தேன் -என்று நிலம் துழாவு கையாலும்
ருத்ரன் கையிலே தலை அறுப்பு உண்கையாலும் ரஷகன் ஆகமாட்டான் –

ருத்ரனும் -சகல பிராணிகளையும் சம்ஹரிக்கையே தொழிலாக யுடையனாய்
விடாயர் முகத்திலே நெருப்பைச் சொரிந்தால் போலே இருக்கத்   தழல் நிற வண்ணனாய்-பெரிய திரு -6-1-3- தன்னை ஆஸ்ரயித்தவர்களை
அறுத்துத் தா பொரித்துத் தா –என்று கொடும் தொழிலைச் செய்வித்துக் கொள்ளுகையாலும்
தன்னை  ஆஸ்ரயித்த வாணனை -தலையிலே பூ வாடாதே நோக்குகிறேன் -என்று பிரதிஜ்ஞை பண்ணி
தன்னைத் தொழுத கைகளை கள்ளிக் காடு சீய்த்தால் போல்சீய்க்கக் கண்டு
உயிர் யுண்டாகில் உப்பு மாறி யுண்ணலாம் என்று நெற்றியிலே கண்ணைப் புதைத்துக் கொண்டு நழுவினன்   ஆகையாலும்
லோக குருவாய் தனக்குப் பிதாவான ப்ரஹ்மாவின் தலையைத் திருகிப் பாதகியாய் கூறு செய்த ஊரிலே குறும்பு செய்து கைத்தளையுமாய் கொண்டு
திரிவாரைப் போலே கையும் கபாலமுமாய் திறந்து கிடந்த வாசல்கள் தோறும் புக்கு தன்னை வெளியிட்டுக் கொண்டு திருவான் ஒருவன் ஆகையாலும் ரஷகன் ஆக மாட்டான் –
இனி அர்த்தம் ஆமோ என்று நிரூபித்தால் -கள்ளர் கொள்ளுதல் -காமம் கொள்ளுதல் -கோமுற்றார் கொள்ளுதல் –
ஜ்ஞாதி கொள்ளுதல் -வியாதி கொள்ளுதல் -பிறரோடு எதிரிட்டு விஷ பஷணம் பண்ணி தன்னைத் தானே முடித்துக் கொள்ளும்படி
பண்ணுதல் செய்கையாலே அர்த்தமும் ரஷகம் ஆக மாட்டாது –

ஈஸ்வரன் -மாதாபிதாக்கள் கைவிட்ட அவஸ்தையிலும் -பின்னு நின்று அடியேனுக்கு உற்றானாய் வளர்த்து என்னுயிராகி நின்றான் -பெரிய திருமொழி -8-9-7-என்றபடி
தன்னுருக் கெடுத்து வேற்றுருக் கொண்டு தாய் முகம் காட்டியும்
இன் சொல்லுச் சொல்லியும் ப்ராதாக்களும் பர்த்தாக்களும் நெகிழ நின்ற வன்று தான் ஏறிட்டுக் கொண்டு
கழுத்திலே ஓலை கட்டித் தூது போயும் புருவம் நெரித்த உடத்திலே தேரை நடத்தியும் மார்விலே அம்பேற்றும்
சாவாமல் நோக்கியும் செத்தாரை மீட்டும்  நாராயணத்வ பிரயுக்தமான உதரத் தரிப்பாலே அகவையிலே நின்று
சத்தையை நோக்கிக் கொண்டு போருகையாலே இவனே எல்லார்க்கும் ரஷகன் –

இனி -ஆகிஞ்சன்யம் ஆவது -கர்ம ஜ்ஞான பக்திகளிலும்
அவற்றுக்கு ஹேதுவான ஆத்ம குணங்களிலும் -அந்வயம் இன்றிக்கே
அவற்றுக்கு விபரீதங்களான வற்றாலே தான் பரிபூர்ணனாய் இருக்கிற இருப்பையும்
தன்னுடைய ஸ்வரூபம் சர்வ பிரகாரத்தாலும் ஈஸ்வரனுக்கு அத்யந்த பரதந்த்ரமாய் இருக்கிற இருப்பையும் அனுசந்தித்து
நம்  கார்யத்துக்கு நாம் கடவோம் அல்லோம் -என்று இருக்கை-

இவை இரண்டையும்   யுடையனாய் ஈஸ்வரனையே உபாயமாகப் பற்றுகையாலே நிர்ப்பரனாய் இருக்குமவனுக்கு
சரீர அவசான காலத்திலேயே ப்ராப்தி அணித்த வாறே -ந யாமி -என்று அருளிச் செய்த படியே –
ஈஸ்வரன் தானே சரக்காளாய் வந்து -அர்ச்சிராதி மார்க்கத்தாலே பரம பதத்தேறக் கொண்டு போய்
நித்ய முக்தரோடே ஒரு கோவையாக்கி நித்ய கைங்கர்யத்தையும் கொடுத்து அருளும் —)

————————————-

ரஷிக்கும் போது பிராட்டி  சந்நிதி வேண்டுகையாலே -இதிலே ஸ்ரீ சம்பந்தமும் அனுசந்தேயம் –சூரணை -40

அநந்தரம் அர்த்த பலத்தாலே -இப்பதத்தில் அனுசந்திக்கப் படும் ஸ்ரீ யபதித்வத்தை அருளிச் செய்கிறார்
அதாவது

லஷ்ம்யா சஹா ஹ்ருஷிகேசா தேவ்யா காருண்யா ரூபயா ரஷகஸ் சர்வ சித்தாந்தே வேதாந்தேபி ச கீயதே -என்கிறபடி
ரஷகனான சர்வேஸ்வரன் சேதனரை ரஷிக்கும் தசையிலே –
இவர்களுடைய அபராதங்களை கண்டாதல் –
தன் ஸ்வாதந்த்ர்யத்தாலே யாதல் –
உபேஷியாமல் செய்கைக்கும் உறுப்பான கிருபையை ஜனிப்பிக்கும்
புருஷகார பூதையான பிராட்டி ஸந்நிதி அவஸ்ய அபேஷிதம் ஆகையாலே
ரஷகனான அவனைச் சொல்லுகிற இவ் அவகாரத்திலே அவனுடைய லஷ்மி சம்பந்தமும்
அனுசந்தேயம் என்கை –

(சாலப் பல நாள் உகந்து உயிர்கள் காப்பான் கோலத் திரு மா மகளோடு கூட
அவளே கருணை ரூபம் -இவனது கருணையை கிளப்பி விடுகிறாள் -)

(கோலத் திரு மா மகளோடு ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்தும் இருந்தும் சாலப் பல நாள் உகந்து ஓர் உயிர்கள் காப்பானே –6-9-3-
ஓர் உயிர் காப்பானே
ஓர் உயிர்கள் காப்பானே
பல நாள் ஓர் உயிர்கள் காப்பானே
பல நாள் உகந்து ஓர் உயிர்கள் காப்பானே
ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்தும் இருந்தும் சாலப்
பல நாள் உகந்து ஓர் உயிர்கள் காப்பானே
கோலத் திரு மா மகளோடு ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்தும் இருந்தும் சாலப் பல நாள் உகந்து ஓர் உயிர்கள் காப்பானே)

லஷ்மி என்னாதே ஸ்ரீ என்றது –
ஸ்ரயத இதி ஸ்ரீ -என்கிறபடி அவனை நித்ய சேவை பண்ணுகையாலே -அவனோடு இவளுக்கு உண்டான
அவிநாபாவமும்-
ஸ்ரீ யத இதி ஸ்ரீ -என்கிறபடி
சேதனருக்கு இவள் நித்ய சேவ்யயாய்  இருக்கும் என்னும் அதுவும் தோற்றுகைக்காக-

——————————————————-

அத்ர பகவத் சேநாபதி மிஸ்ரர் வாக்யம்-
அவன் மார்பு விட்டு பிரியில்
இவ் அஷரம் விட்டு பிரிவது –சூரணை -41

இன்னும் இவ் அவகாரத்தில் ஈஸ்வரனுடைய லஷ்மி சம்பந்தம் நியமேன தோற்றும்
என்னுமத்தை ஆப்த வசநத்தாலே தர்சிப்பிக்கிறார்-
அதாவது –

இவ்விடத்தில் ஞாநாதிகரான ஸ்ரீ சேனாபதி சீயர் அருளி செய்யும் வார்த்தை –
அகலகில்லேன் இறையும் என்று அவன் திரு மார்பில் நித்ய வாசம் பண்ணும் இவள்
அவன் மார்பை விட்டு பிரியல் ஆயிற்று -அவனுக்கு பிரதிபாதகமான இவ் அஷரத்தை விட்டு பிரிவது என்று -என்கை –

என்று -என்கிற
இத்தனையும் கூட்டாத போது கீழோடு இவ் வாக்யம் அந்வயியாது-

இத்தால் அவன் திரு மார்பில் சம்பந்தம் இவளுக்கு நித்யம் ஆகையாலே –
அவன் தோற்றும் இடத்தில் இவளும் தோற்றுகை நிச்சிதம் ஆகையால் –
அவன் திருமார்பில் அந்வயித்தோ பாதி
அவனுக்கு வாசகமான அகாரத்தில் அந்வயமும் இவளுக்கு நித்யம் என்றது ஆயிற்று-

—————————————–

பர்த்தாவினுடைய படுக்கையையும் பிரஜையினுடைய தொட்டிலையும்
விடாதே இருக்கும் மாதாவைப் போலே
பிரதம சரம பதங்களை விடாதே இருக்கும் இருப்பு –சூரணை -42-

இன்னும் இவ் அர்த்தத்தை ஸ்த்ரீகரிக்கைகாக -ஈஸ்வர சேதன வாசகங்களான
அகார மகாரங்கள் இரண்டிலும் -இவளுக்கு உண்டான அநவரத அந்வயத்தை
ச த்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் –
அதாவது

சேஷ பூதையான தன் ஸ்வரூபத்துக்கு சேரும்படி அவனை ரஸிப்பிக்கைக்காக
பர்த்தாவினுடைய படுக்கையையும் விடாதே –
ரஷகையான தன் ஸ்வரூபதுக்கும் போரும்படி தத் ரஷணம் பண்ணுகைக்காக
பிரஜையினுடைய தொட்டிலையும் விடாதே
இருக்கும் மாதாவானவளைப் போல் -இவளும்

பர்த்ரு பூதனான ஈஸ்வரனுக்கு பிரதிபாதகமாய் இருந்துள்ள
பிரதம பதமான அகாரத்தையும்-
பிரஜா பூதரான  சேதனருக்கு பிரதிபாதகமாய் இருந்துள்ள
சரம பதமான மகாரத்தையும்
தத் தத் விஷயத்திலே தனக்கு உண்டான சம்பந்தத்துக்கு ஈடாக
ரஸிப்பிக்கை ரஷிக்கை ஆகிற இவற்றைப்   பற்ற
விடாதே இருக்கும் இருப்பு என்கை

(க ம லா லாதேன ஆதேன-ஒருவரை ஒருவர் இடம் சேர்ப்பிக்கிறாள் )

(ரஷிக்கை யாவது –சைதன்யமாகிற ஸ்தநயத்தைக் கொடுத்து ரஷிக்கை
சைதன்யமாவது பகவத் ஆபீமுக்ய ஞானம் -சேஷத்வ பாரதந்தர்ய ஞானம் என்னவுமாம்
அபகாரத்துக்கு த்ருஷ்டாந்தம் -படுக்கை – பத்நீத் வேந -படுக்கையில் சம்பந்தம்
மகாரத்துக்கு த்ருஷ்டாந்தம் -தொட்டில் –மாத்ருத்வேந -தொட்டிலிலே சம்பந்தம்)

—————————————

ஸ்ரீ நந்த கோபரையும் கிருஷ்ணனையும் விடாத யசோதைப் பிராட்டியைப் போலே–சூரணை -43

கீழ் சொன்ன த்ருஷ்டாந்தத்தை ஒரு விசேஷ நிஷ்டமாக்கி அருளிச் செய்கிறார்
அதாவது

பார்யையான தன் ஸ்வரூப அனுகுணமாக ரஸிப்பைக்கக்கு பர்த்தாவான ஸ்ரீ நந்த கோபரையும் விடாதே –
மாதாவான தன் ஸ்வரூப அனுகுணமாக ரஷிப்பிக்கைக்கு தன் புத்ரனான கிருஷ்ணனையும் விடாதே –
அம்பரமே -என்கிற பாட்டில் சொல்லுகிறபடியே
மத்யே வர்த்திக்கும் யசோதை பிராட்டியைப் போலே
பிரதம சரம வாச்யரான ஈஸ்வர சேதனர்கள் இருவரையும் விடாதே இவளும் வர்த்திக்கும் படி என்கை-

(விசேஷ நிஷ்டமாக்கி-ஒரு விரக்தி விசேஷ நிஷ்டமாக்கி)

————————————-

ஒருவன் அடிமை கொள்ளும் போது க்ருஹிணிக்கு என்று அன்றே ஆவண ஓலை எழுதுவது –
ஆகிலும் பணி செய்வது க்ருஹிணிக்கு இறே-சூரணை-44

அது போலே நாம் பிராட்டி அடிமையாய் இருக்கும் படி –
ஈஸ்வர  சேஷத்வ மாத்ரம் ஒழிய பிராட்டிக்கும் சேஷம் என்னும் இடம்
இவ்வாசகத்தில் இன்றிக்கே இருக்க செய்தேயும் இவளுக்கும் சேஷம் என்று
நாம் கொள்ளுகிற  படி எங்கனே -என்ன அருளிச் செய்கிறார் –
அதாவது –

லோகத்தில் ஒருவன் தாஸ தாஸிகள் முதலான அடிமையை
கொள்ளும் போது -தனக்கு என்றே எழுதிக் கொள்ளும் அது ஒழிய தன் க்ருஹிணிக்கு என்று அன்று
விலையோலை எழுதி கொள்வது –
ஆயிருக்க செய்தேயும் அடிமைத் தொழில் செய்வது க்ருஹிணிக்கு இறே –

அது போலே ஈஸ்வர சேஷம் என்னும் அளவை இவ் அகாரம் சொல்லிற்றே ஆகிலும் –
நாம் பிராட்டிக்கு அடிமையாய் இருக்கும் படி என்கை

(அடிமையை -சேஷ வஸ்துவை
கொள்ளும் போது-கிரமாகக் கொள்ளும் போது
ஆவண ஓலை-விலை ஓலை -விக்ரிய பத்ரம் -அடிமைச் சீட்டு
பிரஸ்துதமான அர்த்தம் -பிராட்டிக்கு அகாரத்தில் அந்வயம்)

(க்ருஹிணிக்கு இறே-க்ருஹிணிக்கு உகப்பாக அன்றோ
பதிக்கு சேஷமாவை எல்லாம் பத்னிக்கும் சேஷமாய் இருக்கும் என்கிற நியாயத்தாலே
நாமும் பிராட்டிக்கு சேஷமாய் இருக்கும்

அகாரத்திலே அர்த்த பலத்தாலே ஸ்ரீ சம்பந்தம் தோற்றுமா போலே
லுப்த சதுர்த்தியிலும் அர்த்த பலத்தால் ஸ்ரீ சேஷத்வம் தோற்றும் என்றதாயிற்று
அப்ரதாநேநயேந அந்வயிக்கை யாவது -ஈஸ்வரனைக் கொண்டு சேதனனுடைய இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிஹாரங்களைப் பண்ணி வைக்கை
ப்ரதாநேநயேந அந்வயிக்கை யாவது-ஸ்வயமேவ பண்ணுகை
ஆகையால் விஷ்ணு பத்நீத்தவ நிபந்தனம் பிராட்டி சேஷத்வம் என்னக் குறையில்லை)

——————————————-

ஆக பிரித்து நிலை இல்லை –சூரணை -45-

கீழ் சொன்ன ஹேதுக்களை எல்லாம் அனுவதித்து கொண்டு ஈஸ்வரனுக்கும் பிராட்டிக்கும்
ஒருகாலும் ப்ருதக்  ஸ்திதி இல்லாமையை அருளிச் செய்கிறார்-

————————————

பிரபையையும் பிரபாவையையும்-பிரபாவானையும்-
புஷ்பத்தையும் மணத்தையும் போலே –சூரணை -46

அந்த ப்ருதக் ஸ்திதி அத்யபாவத்துக்கு இரண்டு திருஷ்டாந்தம் அருளிச் செய்கிறார் –
அதாவது
பிரபைக்கும் பிரபாவானுக்கும் ப்ருதக் ஸ்திதி இல்லாதாப் போலேயும்
புஷ்பத்துக்கும் பரிமளத்துக்கும் ப்ருதக் ஸ்திதி இல்லாதாப் போலேயும் -என்கை –

அனந்யா ராக வேணாஹம் பாஸ்கரேன பிரபா யதா –
அனந்யா ஹி மயா சீதா பாஸ்கரேன பிரபா யதா -என்று
பிரபா பிரபாவான்களை போலே இருவருக்கும் பிருதக் ஸ்திதி இல்லை என்னும் இடம்
இருவர் வாக்காலும் சொல்லப் பட்டது இறே-

(உன்னுடைய ஐஸ்வர்யத்தாலும் தனத்தாலும் அந்நிய ஸ்த்ரீகள் போல் நான் ஒன்றாலே வஞ்சிக்காய்க்கு சக்யை அன்று காண்
பாஸ்கரனோடு பிரபை போல் ராகவனோடு நான் அநன்யயையாய் இருப்பேன்)

பிர ஸூநம் புஷ்யந்தீமபி பரிமளர்த்திம் ஜிகதிஷூ-என்கிற இடத்தில்
ஈஸ்வரனை புஷ்பத் ஸ்தாநேயாகவும்-பிராட்டியை பரிமள ஸ்தானே யாகவும் பட்டர் அருளிச்
செய்கையாலே புஷ்ப பரிமளங்களைப் போலே -இருவருக்கும் ப்ருதக் ஸ்திதி இல்லை
என்னும் இடம் அர்த்தாசித்தம்-

———————————–

ஆக இச் சேர்த்தி உத்தேச்யமாய் விட்டது-சூரணை -47

இந்த ப்ருதக் ஸ்திதி அத்யபாவத்தை அனுவதித்துக் கொண்டு -இச் சேர்த்தியே சேதனருக்கு
உத்தேச்யமாய் தலைக் கட்டின படியை அருளிச் செய்கிறார்
அதாவது –

இச் சேர்த்தி உத்தேச்யம் என்கையாலே –
இவர்களை தனித் தனியே விரும்புகை உத்தேச்யம் அன்று என்ற படி –
இருவரையும் பிரித்து விரும்பினால் -ராவண சூர்பணகைகளைப் போலே அனர்த்தமே பலிக்கும் அத்தனை –

இருவரையும் பற்றினால் இறே ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப்   போலே வாழல் ஆவது-
(தானே வலிய சிறை புகுந்தாள்-ஸ்ரீ விபீஷணனை சரணாகதன் ஆக்கவும் ராவணனை திருத்தவும் – )

————————————-

இதில் சதுர்த்தி ஏறிக் கழியும்–சூரணை -48

இனிமேல் இதில் விபக்த்யர்த்தம் அருளி செய்வதாக பிரதமம் விபக்தி தன்னை நிர்தேசிக்கிறார் –
அதாவது
இவ் அகாரத்தில் சதுர்த்தி ஏறி -சூபாம் சூலுக் -இத்யாதி சூத்ரத்தாலே லுப்தமாய் போம் என்கை-
(சப்தம் கழிந்தாலும் அர்த்தம் சித்திக்கும் )

————————————————–

சதுர்த்தி ஏறின படி என் ? என்னில்–சூரணை -49

விபக்த்யந்தரம் எல்லாம் கிடக்க இவ் அகாரத்திலே சதுர்த்தி ஏறின படி தான் எங்கனே -என்கிற
சங்கையை அனுவதிக்கிறார்

——————————————————-

நாராயண பதத்துக்கு ஸங்க்ரஹமாய் இருக்கையாலே–சூரணை -50

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார்

அதாவது
இவ் அகாரம் சதுர்த்யந்தமான நாராயண பதத்துக்கு ஸங்க்ரஹம் ஆகையாலே –
இதிலும் சதுர்த்தி ஏறிற்று -என்கை –
இங்கன் அன்றாகில் இரண்டுக்கும் ஸங்க்ரஹ விவரணத்வம் சித்தியாது இறே

————————————————–

இத்தால் ஈஸ்வரனுக்கு சேஷம் என்கிறது–சூரணை -51

இத்தால் சொல்லுகிற அர்த்தம் தான் எது -என்ன அருளிச் செய்கிறார் –
அதாவது –
இது தான் தாதர்த்யே சதுர்த்தீ-ஆகையாலே இச் சதுர்த்தியால்
ஈஸ்வரனுக்கு சேஷம் என்னும் இடம் சொல்லுகிறது -என்கை-
( தத் அர்த்தம் அவனே பிரதானம் பிரயோஜனம் -)

சேஷமாகையாவது சந்தன குஸூம தாம்பூலஅதிகளைப் போல் அவனுக்கு இஷ்ட விநியோக அர்ஹமாய் இருக்கை

————————————–

சேஷத்வம் துக்க ரூபமாக வன்றோ நாட்டில் காண்கிறது என்னில் –சூரணை -52

சர்வம் பரவசம் துக்கம்-ஸூ வசம் ஸூகம் – சேவா ஸ்வ வ்ருத்தி-என்கிற லௌகிக நியாயத்தைக் கொண்டு
சேஷத்வத்தை துக்க ரூபமாக நினைத்து இருக்கும் அவர்கள் பண்ணும் பிரஸ்னத்தை அனுவதிக்கிறார் –

————————————————

அந்த நியமம் இல்லை –
உகந்த விஷயத்துக்கு சேஷமாய் இருக்கும் இருப்பு
ஸூகமாக காண்கையாலே–சூரணை -53

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார்
அதாவது
நாடு தன்னிலே -பணிமின் திருவருள் -திருவாய்மொழி –4-1-5-இத்யாதி படியே
அபிமத விஷயத்துக்கு சேஷமாய் இருக்கும் இருப்பு ஸூகமாக காண்கையாலே –
சேஷத்வம் ஆகில் துக்க ரூபமாய் இருக்கும் என்கிற நியமம் இல்லை -என்கை-

(பணிமின் திருவருள் என்னும்அம் சீதப்பைம் பூம்பள்ளி
அணிமென் குழலார் இன்பக் கலவி அமுதுஉண்டார்
துணிமுன்பு நாலப் பல்ஏழையர் தாம்இழிப்பச் செல்வர்
மணிமின்னு மேனிநம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ.)

—————————————–

அகாரத்தாலே கல்யாண குணங்களை சொல்லுகையாலே இந்த சேஷத்வமும் குணத்தாலே வந்தது–சூரணை -54

அபிமத விஷயத்தில் சேஷத்வம் ஸூகமாகிறது –
அவ் விஷயத்தில் குணம் அடியாக வந்ததாகை யாலே அன்றோ -என்ன
அருளிச் செய்கிறார் –
அதாவது –

ஈஸ்வரனுடைய ரஷகத்வ பிரதிபாதகமான அகாரத்திலே -அந்த ரஷண உபயோகியான
கல்யாண குணங்களைச் சொல்லுகை ஆகையாலே –
ஈஸ்வர விஷயமான இந்த சேஷத்வமும் –
அந்த குணங்கள் அடியாக வந்தது என்கை –
ஆகையால் இதுவும் ஸூக ரூபமாக இருக்கக் குறை இல்லை என்று கருத்து-

(அகாரத்தால் ஜகத் காரணத்வமும் ரக்ஷகத்வத்வமும் சேஷித்வமும் உண்டே
குண க்ருத தாஸ்யம்
ஸ்வரூப பிரகிருத தாஸ்யம்
ஸ்ரீ சீதா பிராட்டி அநஸூயை சம்வாதம்
குணைர் தாஸ்யம் உபாகத-லஷ்மணன் -குணங்களை பெருமாள் இடம் இருந்து பிரிக்க முடியாதே )

(அபிமத விஷயத்தில் குணங்களாவன -அநு நய சம்ஸ்லேஷாதிகள்
ரக்ஷண உபயோகியான கல்யாண குணங்களாவன -காருண்ய வாத்சல்ய ஸ்வாமித்வ ஞான சக்தியாதிகள்)

——————————————-

சேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபம் –சூரணை-55

ஆனால் ஔபாதிகமான இது ஸ்வரூபம் அன்றோ ?-என்ன அருளிச் செய்கிறார் –

அதாவது –
உகந்த விஷயத்தில் இதன் ஸூக ரூபத்துக்கு குண க்ருதவத்தை ஹேதுவாகச் சொல்லுகையாலே –
அந்த குண க்ருத்வத்வம் இங்கும்  உண்டு  என்னும் இடத்துக்கு சொன்ன இத்தனை ஒழிய –
அர்த்த ஸ்திதியை நிரூபித்தால்

ஸ்வத்வ மாத்மனி சஞ்சாதம் ஸ்வாமித்வம் பிராமணி ஸ்திதம் –
ஆத்ம தாஸ்யம் ஹரேஸ் ஸ்வாம்யம் ஸ்வபாவம் ச சதா ஸ்மார-
தாச பூதாஸ் ஸ்வதஸ் சர்வே  ஹ்யாத்மனா பரமாத்மன-
நான்யதா லஷணம் தேஷாம் பந்தே மோஷே ததைவ ச -இத்யாதிகளில் இத்தை
ஆத்மாவுக்கு ஸ்வாபாவிகமாக சொல்லுகையாலே -சேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபம் -என்கை-

(ஸ்வத்வம் ஆத்மாவின் இடத்தில் உண்டாகா நின்றது
ஸ்வாமித்வம் ப்ரஹ்மத்தின் இடத்தில் உண்டாகா நின்றது
இருவருக்கும் சம்பந்தம் இதுவே -மற்ற ஓன்று எனக்கு அபிமதம் அன்று
உஜ்ஜீவனத்தில் உனக்கு ஆசை யுண்டானாலும் -உன் சத்தை தான் அழியாமல் கிடக்க வேண்டும் என்ற ஆசை யுண்டாகிலும்
ஆத்மாவினுடைய தாஸ்யத்தையும் ஹரியினுடைய ஸ்வாமித்வத்தையும் ஸ்வ பாவமாக நினை )

(சமஸ்தமான ஆத்மாக்களும் பரமாத்மாவுக்கு ஸ்வத தாஸ பூதராய் இருப்பார்கள்
அவர்களுக்கு பத்த தசையிலும் மோக்ஷ தசையிலும் வேறொரு ஸ்வரூபம் இல்லை)

————————————

சேஷத்வம் இல்லாத போது ஸ்வரூபம் இல்லை –சூரணை -56

சேஷத்வமே என்று அவதரிப்பான் என் ?-ஞான ஆனந்த ஸ்வரூபமான ஆத்ம வஸ்துவுக்கு
இல்லாத போதும் ஸ்வரூபம் இல்லையோ ?-என்ன அருளிச் செய்கிறார் –

அதாவது –
சேஷத்வம் இல்லாத போது ஆத்மா அபஹார ரூபமான ஸ்வாதந்த்ர்யா புத்தி நடக்கையாலே –
ஸ்வரூபம் அழிந்து விடும் என்னுமத்தை தர்சிப்பிக்கிறார் மேல் இரண்டு வாக்யத்தாலே –

(ஞானியான ஆத்மா சேஷம் என்று சொல்லாமல் சேஷனான ஜீவனே ஞான ஆனந்த ஸ்வரூபம் –
சேஷத்வம் இல்லாத போது ஸ்வரூபம் இல்லை யாகுமே)

(அவதரிப்பான் என்—சேஷத்வமே என்று ஏவகார விஸிஷ்டமாகச் சொல்லுவான் என் என்றவாறு
இல்லாத போதும் ஸ்வரூபம் இல்லையோ–ஆத்மா எம்பெருமானுக்கு சேஷம் ஆகாத போது -ஞானத்தவ ஆனந்தத்வ ஸ்வரூபம் இல்லையோ
சேஷத்வம் இல்லாத போது-ஸ்வ விஷய பகவத் சேஹத்வ ஞானம் இல்லாத போது
ஆத்மா அபஹார ரூபமான –அஹம் -மம என்கிற
ஸ்வரூபம் அழிந்து விடும்-ஞானத்தவ ஆனந்தத்வ ஸ்வரூபம் அழிந்து விடும்)

—————————————

ஆத்மா அபஹாரமாவது ஸ்வதந்த்ரம் என்கிற நினைவு –
ஸ்வதந்த்ரமாம் போது இல்லையே விடும் –சூரணை -57

யோ அன்யதா சந்தமாத்மா நமன்யதா பிரதிபத்தி கிம்  தேன ந க்ருதம் பாபம் சோரேன் ஆத்மாபஹாரினா –
என்று சர்வ பாப மூலமாக சொன்ன ஆத்மா அபஹாரமாவது தன் ஸ்வரூபம் ஸ்வதந்த்ரம் என்கிற பிரபத்தி –
ஸ்வதந்த்ரமாம் அளவில் -அசந்நேவ-என்கிறபடியே ஸ்வரூபம் இல்லையாம் விடும் என்கை –

ஆகையால் சேஷத்வம் இல்லாத போது ஸ்வரூபம் இல்லை என்னத் தட்டில்லை என்று   கருத்து

ஆக பிரக்ருத்யர்த்தமான ஈஸ்வரனுடைய
காரணத்வமும்
தாத்வர்த்தமான ரஷகத்வமும்
அர்த்த பலத்தால் வந்த ஸ்ரீ யபதித்வமும்
பிரத்யய சித்தமான சேதன சேஷத்வ பிரதிசம்பந்தியான சேஷத்வமும்
ஆகிற அகார அர்த்தத்தை அருளிச் செய்தார் ஆயிற்று –

—————————————————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading