கிளரொளியிளமை’ என்ற திருவாய்மொழியின் பொருளைத் தன்னகத்துக் கொண்டிருக்கின்ற பரிபாடலில் உள்ள பாடல் ஒன்றையும் அதன் உரையையும், அழகர் திருமலையின் சிறப்பைக் கூறுகின்ற சிலப்பதிகாரத்தில் உள்ள பகுதியையும் அதன் உரையையும் இங்கு, அவ்விரண்டும் ஒருதலையாகப் படித்து உணர்ந்துகோடற்குரியவை.
பரிபாடல்–பதினைந்தாம் பாடல்-திருமால்
புலவரை யறியாப் புகழொடு பொலிந்து
நிலவரை தாங்கிய நிலைமையிற் பெயராத்
தொலையா நேமிமுத றொல்லிசை யமையும்
புலவராய் புரைத்த புனைநெடுங் குன்றம்
5. பலவெனின் ஆங்கவை பலவே; பலவினும்
நிலவரை யாற்றி நிறைபய னொருங்குடன்
நின்றுபெற நிகழுங் குன்றவை சிலவே;
சிலவினுஞ் சிறந்தன, தெய்வம் பெட்புறும்
மலரகன் மார்பின் மைபடி குடிமிய
10. குலவரை சிலவே; குலவரை சிலவினும்
1-5. அறிவெல்லையால் அறியப்படாத புகழுடனே பொலிந்து நில வெல்லையைத் தாங்கிய நிலைமை நீங்காத கெடாத சக்கரவாளமுதலாகத் தொல்லிசைப் புலவர் ஆராய்ந்துரைத்த கொண்டாடப்படும் நெடிய குன்றங்களைச் சிறப்பு வகையாற்கூறாது பொது வகையாற் பல வென்றுரைக்கின். ஆங்கு; அசை.
5-10. அப்பலவற்றுள்ளும் நிலத்துள்ளோரைப் பசி வெம்மை ஆற்றி நிறை பயன்களெல்லாவற்றையும் எப்பொழுதும் அவர் பெறப் பயன்படும் குன்று சில; அச்சிலவற்றுள்ளும் தெய்வங்கள் தாமாக விரும்பும் மலரையுடைய அகன்ற தடங்களுடனே மேகங்கள் படியும் சிகரத்தையுடையவாகிய குலவரைகள் சில சிறந்தன.
சிறந்தது, கல்லறை கடலுங் கானலும் போலவும்
புல்லிய சொல்லும் பொருளும் போலவும்
எல்லாம், வேறுவே றுருவி னொருதொழி லிருவர்த்
தாங்கு நீணிலை யோங்கிருங் குன்றம்;
15. நாறிணர்த் துழாயோ னல்கி னல்லதை
ஏறுத லெளிதோ வீறுபெறு துறக்கம்?
அரிதிற்பெறு துறக்க மாலிருங் குன்றம்
எளிதிற்பெற லுரிமை யேத்துகஞ் சிலம்ப!
அராவணர் கயந்தலைத் தம்முன் மார்பின்
20. மராமலர்த் தாரின் மாண்வரத் தோன்றி
அலங்கு மருவி யார்த்திமிழ் பிழியச்
சிலம்பா றணிந்த சீர்கெழு திருவிற்
சோலையொடு தொடர்மொழி மாலிருங் குன்றம்
தாம்வீழ் காமம் வித்துபு விளைக்கும்
25. நாமத் தன்மை நன்கனம் படியெழ
10-14. அக்குலவரைகள் சிலவற்றிலும் கல்லென அறையும் கடலும் கானலும் போல வேறு வேறாகிய நிறத்தினையும், பிரிவில்லாத சொல்லும் பொருளும் போல வேறுபடாத தொழிலினையுமுடைய மாயோனையும் தம் முன்னோனையுந் தாங்கும் நீண்ட நிலைமையினையுடைய புகழான் உயர்ந்த இருங்குன்றம் சிறந்தது. ‘புகழான்’ என்பது வருவிக்கப்பட்டது.
15. நல்கினல்லது – வெளிப்பட்டுக் கொடுப்பினல்லது.
17-8. அவ்வரிதிற்பெறு துறக்கத்தை எளிதிற்பெறுதலுரிமை யான் மாலிருங்குன்றத்தை எல்லோருங் கேட்க ஏத்தக் கடவோம்,’ என்று ஏத்துகின்றார்.
19. அரவின் மெல்லிய தலையாற்கவிக்கப்பட்ட தம்முன்.
20. மராம் – வெண்கடம்பு.
21-2. அசையும் அருவி மிக ஆர்த்து இழிதலாற் சிலம்பாறு அழகு செய்த இவ்வியக்கத்தக்க இருங்குன்றத்து (26)
22-6. ‘அழகு பொருந்திய ‘திரு’ என்னுஞ் சொல்லொடும் சோலை யென்னும் சொல்லொடும் மாலிருங்குன்றம் என்னுஞ் சொல் தொடர்ந்த மொழியாகிய திருமாலிருஞ்சோலைமலையென்னும் நாமத்தினது பெருந்தன்மை நன்றாகப் பூமியின்கட்பரக்க, மகளிரும் மைந்தரும் தாம் வீழ்காமத்தை வித்தி விளைக்கும் யாமத்தியல்பையுடைய இவ்வையிருங் குன்றத்து’ எனக் கூட்டுக.
யாமத் தன்மையிவ் வையிருங் குன்றத்து
மன்புன லிளவெயில் வளாவவிருள் வளர்வெனப்
பொன்புனை யுடுக்கையோன் புணர்ந்தமர் நிலையே
நினைமின் மாந்தீர்! கேண்மின் கமழ்சீர்
30. சுனையெலா நீல மலரச் சுனைசூழ்
சினையெலாஞ் செயலை மலரக் காய்கனி
உறழ நனைவேங்கை யொள்ளிணர் மலர
மாயோ னொத்தவின் னிலைத்தே
சென்றுதொழு கல்லீர்! கண்டுபணி மின்னே
35. இருங்குன் றென்னும் பெயர்பரந் ததுவே
பெருங்கலி ஞாலத்துத் தொன்றியல் புகழது
கண்டுமய ரறுக்குங் காமக் கடவுள்
மகமுயங்கு மந்தி வரைவரை பாய
முகிழ்மயங்கு முல்லை முறைநிகழ்வு காட்ட
26. குறிஞ்சிக்குச் சிறுபொழுதாகலான் யாமங் கூறினார்.
27-8. நிலை பெற்ற குளிர்ச்சியையுடைய இளவெயில் சூழ அதனிடையே இருள் வளர்தலையொக்கப் பீதாம்பரத்தையுடையோன் தம்முன்னொடு கூடி அமர்ந்து நிற்கும் நிலையை.
29. மாந்தீர்! நினைமின்; இனி, அம்மலையது சிறப்பைக் கேண்மின்.
30-33. சுனையெல்லாம் நீலமலர அச்சுனை சூழ்ந்த செயலை சினையிடமெல்லாம் மலர்தலானும் காய்கனிகளொடு நிறம் மாறுபட வேங்கை இணர் மலர்தலானும் மாயோனையொத்த இனிய நிலைமையையுடைத்து.
நீலமலரைச் சூழ்ந்த செயலை மலர் அவன் பொன்புனை உடுக்கைக்கு ஒப்பு; குன்றத்துக் காய்கனியுறழ மலர்ந்த வேங்கை அவன் மணி முடிக்கு ஒப்பு.
34-7. பெருங்கலி ஞாலத்து இருங்குன்றென்னும் பெயர் பரந்த அத்துணையே பழைதாய் இயல்கின்ற புகழையுடைய அது காணமயரை அறுப்பதொரு வழிபடு தெய்வம்; அதனால், சென்று அவனைத் தொழமாட்டாதீர்! அதனைக் கண்டு பணிமின்.
38. மகவால் முயங்கப்பட்ட மந்தி ஒரு சிகரத்தினின்று ஒரு சிகரத்திற்பாய
39. முகிழ் நெருங்கின முல்லை, மகளிர் கற்பு நிகழ்ச்சியைக்காட்ட
40. மணிமருணன் னீர்ச்சினை மடமயி லகவக்
குருகிலை யுதிரக் குயிலினங் கூவப்
பகர்குழல் பாண்டி லியம்ப வகவுநர்
நாநவில் பாடன் முழவெதிர்ந் தன்ன
சிலம்பிற் சிலம்பிசை யோவா தொன்னார்க்
45. கடந்தட்டான் கேழிருங் குன்று
தைய லவரொடுந் தந்தா ரவரொடும்
கைம்மக வோடுங் காத லவரொடும்
தெய்வம் பேணித் திசைதொழுதனிர் சென்மின்;
புவ்வத் தாமரை புரையுங் கண்ணன்
50. வவ்வற் காரிருண் மயங்குமணி மேனியன்
எவ்வயி னுலகத்துந் தோன்றி யவ்வயின்
மன்பது மறுக்கத் துன்பங் களைவோன்
அன்பது மேஎ யிருங்குன் றத்தான்
40-45. சினையிடத்தவாகிய மணிமருள் மயில்கள் அகவவும், குருக்கத்தி இலையுதிர அதன்கணிருந்து குயிலினம் கூவவும், முழைக்கட் சிலம்புகின்ற எதிரொலி ஓவாது, அவுணரை நேரே பொருது கொன்றானது நிறத்தையுடைய குன்றத்தின்கண்.
42-3. சுருதியையுணர்த்துகின்ற குழலும் தாளமும் இயம்ப அவற்றைப் பாடுவாரது மிடற்றுப்பாடலும் முழவோசையும் எதிர்ந்தாற்போன்ற
இசையென்ற வழி, குழலொலியும் மிடற்றுப்பாடலும் குயிலினத்தது கூவற்கும் அதன் எதிரொலிக்கும் உவமை. தாள ஒலியும் முழவொலியும் மயிலது அகவற்கும் அதன் எதிரொலிக்கும் உவமை.
மந்தி பாய (38) முல்லை காட்ட (39) என நின்ற செயவெனெச்சங்கள், இசையோவாதென்னும் (44) பிற வினை கொண்டன.
46-8. அதனை நும் மனைவியரொடும் இருமுதுகுரவரொடும் குழவிகளோடும் சுற்றத்தோடுங்கூடத் தெய்வமாக மதித்துத் திசை நோக்கித் தொழுது சென்மின்.
49-53. தன் நாபிகமலத்தையொக்கும் கண்ணையுடையனாய், நீரை வௌவுதலையுடைய மேகமும் இருளும் நீலமணியும் போலுமேனியனாய், எல்லா உலகினும் வெளிப்பட்டு அவ்விடத்து உயிர்ப்பன்மையது மறுக்கத்தைச் செய்யும் பிறவித்துன்பத்தைக் களைவோன் அன்பு பட்டு இருங்குன்றத்தின்கண்ணான் ஆதலால்
புவ்வமென்பது (49) பாகதச் சிதைவு.
கள்ளணி பசுந்துளவினவை கருங்குன் றனையவை
55. ஒள்ளொளியவை யொருகுழையவை
புள்ளணி பொலங்கொடியவை
வள்ளணி வளைநாஞ்சிலவை
சலம்புரி தண்டேந்தினவை
வலம்புரி வயநேமியவை
60. வரிசிலை வயவம்பினவை
புகரிணர்சூழ் வட்டத்தவை புகர்வாளவை
எனவாங்கு,
நலம்புரீஇ யஞ்சீர் நாம வாய்மொழி
இதுவென வுரைத்தலினெ முள்ளமர்ந் திசைத்திறை
65. இருங்குன்றத் தடியுறை யியைகெனப்
பெரும்பெய ரிருவரைப் பரவுதுந் தொழுதே.
கடவுள் வாழ்த்து
இளம்பெருவழுதியார் பாட்டு.
மருத்துவன் நல்லச்சுதனார் இசை.
பண் நோதிறம்.
இவ்வளவும் குன்றத்தையேத்திக் கண்டார்க்கும் அதன் சிறப்புக் கூறி மேல் அதன்கண் நின்ற இருவரையும் வாழ்த்தி வேண்டிக் கொள்கின்றார்:
57. கூர்மையணிந்த வளைநாஞ்சிலையுடையை.
58. கோபமிக்க தண்டினையேந்தினை.
59. வலம்புரியொடு வெற்றி நேமியையுடையை.
60. வரிசிலையோடு வெற்றி அம்பினையுடையை.
61. புகரொழுங்கு சூழ்ந்த பாராவளையினையுடையை.
இவ்வாழ்த்துக்களுள், ஒள்ளொளியவை, ஒரு குழையவை, (55) வள்ளணி வளைநாஞ்சிலவை, (57) சலம்புரி தண்டேந்தினவை, (58) என வந்தன
பலதேவன்; ஏனைய வாசுதேவன்.
63-6. அழகிய சீரையும் அஞ்சப்படுதலையுமுடைய வேதம் தனக்கு
நன்மையை விரும்பி அவர் பெருமை ஈதென்று சொல்லுதலால், யாமும் உள்ளம்
மேவி அச்சொற்களுள் அறிந்தவற்றைக் கூட்டி உரைத்தேமாய்ப்
பெரும்புகழையுடைய இருவரையும் தொழுது வேண்டுதும், ‘எமக்கு
இவ்விருங்குன்றத்து அடியின்கண் உறைதல் எய்துக என்று,’ என்றவாறு.
——————————————————
சிலப்பதிகாரம்
மதுரைக்காண்டம்
11. காடு காண் காதை
திருமால் குன்றத்துச் செல்குவி ராயின்,
பெருமால் கெடுக்கும் பிலமுண்டு; ஆங்கு
விண்ணோ ரேத்தும் வியத்தகு மரபிற்
புண்ணிய சரவணம் பவகா ரணியொ
95. டிட்ட சித்தி யெனும்பெயர் போகி
விட்டு நீங்கா விளங்கிய பொய்கை
முட்டாச் சிறப்பின் மூன்றுள; ஆங்குப்
புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின்
விண்ணவர் கோமான் விழுநூ லெய்துவிர்;
100. பவகா ரணிபடிந் தாடுவி ராயின்,
பவகா ரணத்திற் பழம்பிறப் பெய்துவிர்;
திருமால் குன்றத்துச் செல்லக்கடவீராயின், அவ்விடத்தே மிக்க
மயக்கத்தைக் கெடுக்கும் பிலத்து நெறியுண்டு’ என்றான் என்க.
திருமால் குன்றம் – அழகர் திருமலை.
92. ஆங்கு – அப்பிலத்துக்குள்ளே.
93-7. விண்ணோரேத்தும் மூன்றுள.
‘தேவர்களாலேத்தப்படுதலின், யாவரும் வியக்கத்தகும் மரபினையுடைய
‘புண்ணிய சரவணம், பவகாரணி, இட்டசித்தி’ என்னும் பெயர் எங்கும்
பரக்கப்பட்டு இடையறாத சிறப்பினையுடையவாய்த் தம்மிற் சேர்ந்திருக்கின்ற
மூன்று பொய்கைகள் உள’ என்றான் என்க.
97. ஆங்கு – அவற்றுள்.
98-9. புண்ணிய சரவணம் எய்துவிர்.
‘புண்ணிய சரவணமென்னாநின்ற பொய்கையில் ஆடுவிராயின்,
இந்திரனாற்செய்யப்பட்ட ஐந்திரவியாகரணமென்னும் இலக்கணத்தை உணர்வீர்,’
என்றானென்க.
இது நினைவின்றிப் பெறும் பேறு.
பொருந்துதல் – ஆடுதல். எய்துதல் – உணர்தல்.
100-101. பவகாரணி . . . . . . . . . . . எய்துவிர்.
‘அதுவன்றிப் பவகாரணியென்னும் பொய்கைக்கண் ஆடுவீராயின்,
இப்பிறப்பிற்குக் காரணமாகிய பழம்பிறப்பையுணர்வீர்’ என்றானென்க.
இட்ட சித்தி யெய்துவி ராயின்,
இட்ட சித்தி யெய்துவிர் நீரே;
ஆங்குப் பிலம்புக வேண்டுதி ராயின்,
105. ஓங்குயர் மலையத் துயர்ந்தோற் றொழுது
சிந்தையி லவன்றன் சேவடி வைத்து
வந்தனை மும்முறை மலைவலஞ் செய்தால்
நிலம்பக வீழ்ந்த சிலம்பாற் றகன்றலைப்
பொலங்கொடி மின்னிற் புயலைங் கூந்தற்
110. கடிமல ரவிழ்ந்த கன்னிகா ரத்துத்
தொடிவளைத் தொளி யொருத்தி தோன்றி
முன்னும் பின்னுமாகிய இரு பிறப்பையும் உய்த்துணர்தற்குக் காரணமாகிய
இப்பிறப்பிலே எப்பிறப்பையும் எய்த வுணர்வீர்’ என்றானெனினுமமையும், இனிப்
பவமென்பதனை விகாரமாக்கிப் ‘பாவத்தான் வரும் பிறப்புகளை’ எனலுமாம்.
102-3. இட்டசித்தி நீரே.
‘அதுவன்றி இட்டசித்தியென்னும் பொய்கையில் ஆடுவீராயின், நீர் நினைத்தவெல்லாம் எய்துதலையுடையீர்,’ என்றானென்க.
இனி, ‘எண்வகைச் சித்திகளையும் தவம் செய்து வருந்திப் பெறாமல்
நினைத்துழிப் பெறுவீர்,’ என்றான் எனினும் அமையும்.
104. ஆங்குப் பிலம்புக வேண்டுதிராயின் – ‘அங்ஙனமாகிய அப்பிலத்துக்கட்புகுதலை விரும்புவீராயின்’ என்றானென்க.
105-7. ஓங்குயர் மலையத்து மலை வலஞ்செய்தால்
‘மிகவுமுயர்ந்த அத்திருமலைக்கணுள்ள பெரியோன் சேவடிகளைக்
கையாற்றொழுது மனத்தானினைந்து வாக்காற்றுதித்தலுடனே அம்மலையை
மும்முறை வலஞ்செய்தால்’ என்க.
அத்து – சாரியை, வைத்தல் – நினைத்தல், தியானம். வந்தனை -ஈண்டுத்
துதித்தல். ‘தொழுது வைத்து வந்தனைநோடு வலஞ்செய்தால்’ என்க.
108-11. நிலம்பக வீழ்ந்த ஒருத்தி தோன்றி
‘பாதாள கங்கைக்கு மேலுள்ள நிலம் கூறுபடும்படி அறுத்துத் தாழ்ந்த
*சிலம்பாறென்னும் ( சிலம்பாற்றினை ‘நூபுரங்கை’ என்பர்.)அகற்சியையுடைய ஆற்றினது கரைக்
இம்மைக் கின்பமு மறுமைக் கின்பமும்
இம்மையு மறுமையு மிரண்டு மின்றியோர்
செம்மையி னிற்பதுஞ் செப்புமி னீயிரிவ்
115. வரைத்தாள் வாழ்வேன் வரோத்தமை என்பேன்
உரைத்தார்க் குரியே னுரைத்தீ ராயின்
திருத்தக் கீர்க்குத் திறந்தேன் கதவெனும்
கண்ணதாகிய விளக்கத்தையுடைய முகைகள் அவிழ்ந்த மலரையுடையதோர்
கோங்கின் நிழற்கண்ணே ஒரு பொற்கொடி போலவும் மின் போலவும் புயல்
போலவும் ஐவகைக் கூந்தலையும் வளைந்த தொடி புனைந்த
தோளினையுமுடையாளொருத்தி தோன்றி’ என்க.
சிலம்பாறு – அவ்வியாற்றின் பெயர், தலை – இடம், இன் – உவமவுருபு,
கன்னிகாரம் – கொங்கு, தொடி – வளைவு, ஒருத்தி -ஓர் இயக்கி.
112-7. இம்மைக் கின்பமும் . கதவெனும்.
‘அங்ஙனம் தோன்றினவள், ‘இப்பிறப்பிற்கு இன்பமும் மறுபிறப்பிற்கு
இன்பமும் இவையிரண்டு மொழிந்து எக்காலத்தும் ஒன்றாந் தன்மையாய்க்
கோட்டமின்றி அழிவற நிற்கும் இன்பமுமாகிய பொருள்கள் யாவை? அவற்றை
நீயிர் உரைமின்; யான் 1இத்தாள் வரைக் கண்ணே வாழ்வேன்;
வரோத்தமையென்று கூறப்படுவேன்; யான் வினாய இவற்றை உரைத்தார்
உளராயின், அவர்க்கு எத்தொழிற்குமுரியேன்; ஆதலின், திருத்தக்கீர்!
உரைத்தீராயின், உமக்கு இப்பொழுதே இப்பிலவாயிற்கதவம் திறந்து தருவேன்
என்று சொல்லும்’ என்றான் என்க.
இம்மைக் கின்பம் – புகழ், மறுமைக் கின்பம் – புண்ணியம், செம்மையில்
நிற்பது – மோக்கம். இனி, ஒருவர்க்கு இம்மை மறுமைகட்கு இன்பத்தைத் தந்து
பூமியுள்ளளவும் நிற்பது புகழெனலுமாம்; 2‘ஒன்றாவுலகத தொன்றில்’ (திருக். 233.)எனவும்,
3‘இவணிசை யுடையோர்க் கல்லதவண, துயர்நிலை யுலகத் துறையு ளின்மை,
விளங்கக் கேட்ட மாறுகொல்’ (புறநா. 50.)எனவுங் கூறினாராகலின். ‘கதவந்
திறத்தற்குரியேன்’ எனவுமாம். திறந்தேன் – காலமயக்கம்; விரைபொருட்கண்
வந்தது.
கதவந் திறந்தவள் காட்டிய நன்னெறிப்
புதவம் பலவுள போகிடை கழியன
120. வொட்டுப் புதவமொன் றுண்டத னும்பர்
வட்டிகைப் பூங்கொடி வந்து தோன்றி,
‘இறுதியி லின்ப மெனக்கீங் குரைத்தாற்
பெறுதிர் போலுநீர் பேணிய பொருள்’ எனும்;
‘உரையீ ராயினு முறுகண் செய்யேன்
125. நெடுவழிப் புறத்து நீக்குவ னும்’எனும்;
உரைத்தா ருளரெனி னுரைத்த மூன்றின்
கரைப்படுத் தாங்குக் காட்டினள் பெயரும்;
118-23. கதவந் திறந்தவள் பேணிய பொருளெனும்.
‘அவருரைப்பின், அவள் கதவைத் திறந்து இதுவென்று காட்டிய நல்ல
வழியில் நீண்ட இடைகழி வாயில்கள் பல உள; அவை கழிந்தால், இரட்டைக்
கதவையுடைய வாயிலொன்று உண்டு; அதற்கு மேலாகச் சென்றால்
வட்டிகையிலே எழுதின பாவை போல்வாளொருத்தி வெளிப்பட்டு, ‘ஈறில்லாத
இன்பம் யாது? அதனை உரைத்தீராயின் நீயிர் இம் முப்பொருளிலும் விரும்பிய
பொருளைப் பெறுவீர்’ என்னும் என்றாளென்க.
புதவம் – வாயில், போகு – நெடுமை, ஒட்டுப்புதவம் – இரட்டைக் கதவம்,
உம்பர் – மேல், பூங்கொடி-உவமப்பெயர்; அன்றித் ‘துவார
வட்டிகையிற்பூங்கொடி அங்ஙனம் கேட்கும்’ எனவுமாம். இறுதியில் இன்பம் –
வீடு. பெறுதிர்- முன்னிலைப் பன்மை. போலி – ஒப்பில் போலி.
124-5. உரையீராயினும் நீக்குவன நும்மெனும்.
வினாயவள், ‘யான் வினாயதனை நும் பேதைமையான் உரையீராயினும் நும்மை
லருத்தஞ்செய்யேன்; நீர் போகக் கடவ நெடுநெறிக் கண்ணே நும்மைப்
போக்குவன்’ என்னும் என்றான் என்க.
126-7. உரைத்தாருளர் பெயரும்.
‘அவள் அங்ஙனங் கேட்ட பொருளை உரைத்தாருளராயின், முற்கூறப்பட்ட
பொய்கை மூன்றின் கரைக்கட்செலுத்தி அவை இவையென்று காட்டி மீளும்,’
என்றானென்க.
ஆங்கு -அசை.
அருமுறை மருங்கி னைந்தினு மெட்டினும்
வருமுறை யெழுத்தின் மந்திர மிரண்டும்
130. ஒருமுறை யாக வுளங்கொண் டோதி
வேண்டிய தொன்றின் விரும்பினி ராடின்
காண்டகு மரபின வல்ல மற்றவை
மற்றவை நினையாது மலைமிசை நின்றோன்
பொற்றா மரைத்தா ளுள்ளம் பொருந்துமின்;
135. உள்ளம் பொருந்துவி ராயின், மற்றவன்
புள்ளணி நீள்கொடி புணர்நிலை தோன்றும்;
128-32. அருமறை மருங்கின் . . . . . . . . . . மற்றவை
‘ஓதவும் உணரவுமரிய மறையிடத்தனவாகிய ஐந்தானும் எட்டானும்
வருமுறைப்பட்ட எழுத்தினையுடைய மந்திரமிரண்டையும் ஒரு தன்மையாக
மனத்தானினைந்து வாக்காற்றுதித்து, அவற்றுள் வேண்டியது யாதொன்று,
அதனில் விரும்பினீராயாடின், அவற்றின் பயனாயவை, தவங்களைச்
செய்தோர்க்கும் காணத் தகும் மரபினையுடைய வல்ல’ என்றானென்க.
இனி, ‘அங்ஙனமாகிய பொய்கைகளின் பயனை விரும்பினீராய்
ஒன்றினாடின், அதன் பயனை நுகர்ந்த நெஞ்சம் பிறிதொன்றனையும்
காதலியாது,’ எனலுமாம். இன்னும், ‘மற்றவை காண்டகு மரபினவல்ல’ என்பதற்கு,
‘இவையொழிந்த தீர்த்தங்கள் இவை போலக் கைமேற்காணத் தகும்
மரபினையுடையவல்ல,’ எனினும் அமையும்.
138-8. மற்றைவை நினையாது துயர் கெடுக்கும்.
‘அங்ஙனமாகிய பொய்கைகளின் பயனை விரும்பீராயின், அவற்றை
நினையாதே அம்மலைமீது நின்றோனுடைய பொலிவு பொருந்திய தாமரை மலர்
போலும் தாள்களை நினைமின்கள்; அங்ஙனம் நினைப்பீராயின், அப்பொழுதே
அவனது கருடப்புள் எழுதிய கொடித் தண்டு பொருந்தி நிற்கும் நிலையிடத்தைக்
காண்பீர்; கண்டவளவிலே அவன் திருவடி நிலை நும்மை எடுத்துக்கொண்டு
பிறவித் துன்பத்தைக் கெடுக்கும்,’ என்றான் என்க.
‘நீயிர் ஆண்டுச் சென்று அது காண்பீர்’ என்பான், ‘தோன்றும்’
என்றான். கெடுக்கும் – முற்று.
தோன்றிய பின்னவன் றுணைமலர்த் தாளிணை
ஏன்றுதுயர் கெடுக்கு மின்ப மெய்தி
மாண்புடை மரபின் மதுரைக் கேகுமின்.
38-9. இன்பமெய்த ஏகுமின்.
‘அங்ஙனம் அது காண்டலிற் பின்னர்ப் பரமபதத்திற்குச் சேறலும் மெய்யென்று
இன்பமெய்தி, மாட்சிமை பொருந்திய மரபினையுடைய மதுரைக்குச்
சென்மின்கள்,’ என்றானென்க.
பெருந்தேவனார் பாரதம்
‘தேனோங்கு நீழல் திருவேங் கடம்என்றும்
வானோங்கு சோலை மலைஎன்றும் – தானோங்கு
தென்னரங்கம் என்றும் திருஅத்தி யூர்என்றும்
சொன்னவர்க்கும் உண்டோ துயர்?’
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply