ப்ரமிதி பரிஷ் க்ருதி முத்ரா ஸஹ்ருதயஹ்ருதயே ஸமர்ப்பிதா கவிபி: | –
பவதி ஸுபாஷித நீவீ பர குணசோரைரஹார்யார்த்தா ||-2-
(ப-ரை)
ப்ரமிதி பரிஷ்க்ருதி முத்ரா –
(1) மொத்த ஸ்லோகக் கணக்கு, பத்ததிக் கணக்கு, பத்ததி ஸ்லோகக் கணக்கு, இவற்றை முறையே 144. 12-12- என்று
கணக்குப் பண்ணி முத்திரை போடப்பட்டு, ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் உள்ள உண்மையான பல ரஸப் பொருள்களைச் சொல்லிக் கொடுத்து
ஸம்ப்ரதாயத்திற்கு வெளிப்பட்ட அஸூயாளுக்களுக்கு விளக்கக் கூடாதென்று ஸங்கேத முத்திரை ஏற்படுத்தின..
(2) கணக்கனிடம் ஒப்புவிக்கையில் நன்றாகப் பணத்தை எண்ணித் தெரியாத
எழுத்துக்களால் முத்திரைப் போட்டுப் பெட்டியிலோ, பையிலோ வைக்கப்பட்ட,
(3) ஸ்ரீபாஷ்யம் ஆகிய மூல கோசத்தின் உட்பொருள்களை ஸம்ப்ரதாயஸ்தருக்கு நன்றாக உபதேசித்துப்
பிறருக்கு விளக்கக் கூடாதென்று முத்திரையுடன் அமைத்து,
ஸஹ்ருதயற்ருதயே – ரஸிகரும் விஶ்வாஸத்திற்கு யோக்யருமான புத்திமான்கள் மனதில்,
கவிபி – கவிகளாலே, (விவேகிகளான முதலா ளிகளாலே, ஸூஷ்மதர்சிகளான ஆசாரியர்களாலே),
ஸமர்ப்பிதா – ரக்ஷிக்கும்படி நன்றாய் ஒப்புவிக்கப் பட்டிருக்கிற,
ஸுபாஷிதநீவீ) – செஞ் சொற்களின் மூலதனமும்,
பாண்டமும், முடிப்புமான (இந்தக்கிரந்தம்)
ஸ்ரீபகவத்ராமாநுஜரின் ஸுபாஷிதமான ஸ்ரீ பாஷ்யமென்னும் மூலதனம்,
பரகுண சோரை: – பிறர் குணத்தை அபஹரிக்கும் கவித்திருடரால்,
(யஜமானன் பொருளைத் திருடும் கணக்கரால், பரனென்னும் ஈஸ்வரனுடைய கல்யாணகுணங்களை அபஹரிப்பவரால் ,)
அஹார்யார்த்தா – உள்ளேயிருக்கும் பொருள்களைத் திருடுவதற்கு அஸாத்தியமாக,
பவதி – ஆகிறது. (ஆகும்)
அவதாரிகைகளுடன் தாத்பர்யங்கள் –
(1)-பெருமாளுடைய உடமையான நம்மையே நாம் திருடுகிறோம் என்பது முன் ஸ்லோகத்தில் ஸூசிக்கப் பட்டது.
“நான் எனக்கே உரியன்” என்பதால் நாம் ஆத்மாபஹாரிகளான சோரர்கள்.
ஈஸ்வானுடைய சேஷித்வத்தை நன்றாய் விளக்கி நாம் அவரது உடமை யென்பதைத் தெளியச் செய்வது
ஸ்ரீபாஷ்யமென்னும் ஸுபாஷிதமான மூலதனம்.
அந்த மூலதனத்தை ஸம்ப்ரதாயமாகக் கிரஹித்து ரக்ஷித்து வந்து,
அதிலிருந்து மேன் மேலும் அதன் உண்மைப் பொருள்களைப் பரவச் செய்ய வேணும்.
ஸ்ரீபாஷ்பம் நமக்கு ஓர் ஸுபாஷிதநீவீ.
அதை ரக்ஷித்து வைத்தால், பெருமாளுடைய ஸொத்தாகிய நம்மையே நாம் திருடாமற் செய்து
நம்மைக் காப்பாற்றுவதுமன்றியில், பெருமாளுக்குக் குணங்களேயில்லை, விபூதியில்லை என்னும் வாதத்தைத் தள்ளி,
பெருமாளுடைய மங்கள குணங்களையும் விபூதிகளையும் பிறர் அபஹரிக்காமல் காக்கக்கூடும்.
“’பர”’ என்பது ஈஸ்வரனைச் சொல்லும். ப்ரபஞ்சம் பொய் என்று சொல்லிப் பெருமாள் விபூதியை அபஹரிப்பதையும் தடுக்கும்.
ப்ரபஞ்சம் பெருமாளுக்கு விசேஷணமான குணம். பர குணங்கள் ஈஸ்வர விசேஷணங்கள்
(2) பர்த்ருஹரி மூன்று சதகங்களியற்றினார். -ஸ்ருங்காரம், நீதி, வைராக்யமென்று மூன்று .
ஸ்வாமி ஸ்ருங்காரத்தில் இறங்கவில்லை. நீதி ஸ்லோகங்களையே வைராக்யத்தையும் வேதாந்தத்தையும் அறிவிப்பதாக அமைத்தார்.
சார்ங்க தரபத்ததி என்று ஓர் அரசன் சேர்த்த ஸுபாஷித கோசம். க்ரந்தம் முழுவதற்கும் “பத்ததி” என்று பெயர்.
பெரும் பான்மையாகப் பிறர் ஸ்லோகங்களையும் தானும் சில ஸ்லோகங்கள் ஸ்வந்தமாகச் செய்தும் சேர்த்து அந்தக் கிரந்தமேற்பட்டது.
அதில் காமப்பால் விசேஷமாக உண்டு. மற்ற ஸுபாஷித பாண்டாகாரம் முதலிய க்ரந்தம் பிறர் ஸ்லோகங்களையே சேர்த்தது.
பர்த்ருஹரி நீதிசதகத்தில் “கவிகாள்! ஜாக்ரதை யாயிருங்கள் . ஸாஹித்ய ஸமுத்திரத்தில்
நீங்கள் கஷ்டப்பட்டுக் கடைந்தெடுத்த கர்ணாம் ருதங்களை, காவ்யார்த்தங்களைத் திருடும் சோரர்கள் களவு கொண்டு
தங்களுடையதென்று சொல்லிக்கொள்ள இடங்கொடாமல் ரக்ஷியுங்கோள் ” என்று சொல்லுகிறார்.
ரக்ஷிக்கும் வழி சொல்லவில்லை. அவர் சதகத்தில் நான்கு ஸ்லோகங்கள் சாகுந்தளம் முத்ராராக்ஷஸம் முதலிய
மற்ற பூர்வகவிகளின் காவ்யங்களிலுள்ளள, அதைப் பற்றி எங்கிருந்து யாரெடுத்தது என்பது தகரார்..
முன்பே வழங்கிவந்த அனாதிஸுபாஷிதங்களை எல்லோரும் கையாடினார்களென்று ஓர் கக்ஷி. .
சதகங்களென்று பெயரே யொழிய ஸ்லோகக் கணக்கு நூறன்று, அதற்குக்கிட்டியதுமன்று.
‘ “ப்ரசம்ஸை”களென்று சில விபாகங்கள்; ஓர் பிரிவுக்குமட்டும் பத்ததி’ என்று பெயர்.
பிரிவுகளிலும் ஸ்லோகக் கணக்கு வ்யவஸ்தையில்லை.
இங்கே பரிஷ்க்ருதி’ என்று 12-ஐயும், இந்த ச்லோகத்திலும், கடைசி ஸ்லோகத்தில் ‘ பாவுக’ என்பதால் 144-ஐயும்
‘ப்ரியபத்ததி’ என் பதால் 12- என்னும் பத்ததிக் கணக்கையும் குறிக்கிறார்.
உயர்ந்த கவிகளின் ஸ்லோகங்கள் ஓர்விதமான ரீதிமுத்ரையோடு கூடியதாயிருக்கும்,
அப்படி ஸ்வாமியினுடைய கவி ரீதி முத்ரை யுள்ள ஸ்லோகங்களைப் பிறர் திருடமுடியாது.
திருடினால் தெரிந்து விடும். ஸ்லோக சப்தங்களைத் திருடினாலும் திருட்டு வெளிப்பட்டு விடும்.
ஸ்லோகம் உன்னதாயின் அர்த்தம் சொல்லு என்று கேட்டால், தட்டுக்கிடுவான். திருட்டு வெளியாகும்.
பிறர் காவ்யங்களிலிருந்து திருடுகிறவன், தான் நிபுணன் – கெட்டிக்காரனென்று நினைக்கிறான்.
அவன் அசடனே. திருட்டு ஜரிக்காது; திருடன் என்னும் பட்டம்தான் மிகும்.
ஸ்ரீபாஷ்யம் முதலிய ஸம்ப்ரதாய மூல தன க்ரந்தங்களை முறைப்படி கேட்காமல்,
புத்தகம் படித்தும் திருட்டுத்தனமாயும் அறியப் பார்ப்பவரும் அசடரே.
(3) வால்மீகி முதலிய உயர்ந்த கவிகளின் காவ்யங்களை மூலதனமாகக் கொண்டு அவர்களிடம் க்ருதஜ்நதை
வெகுமதிகளைக் காட்டி விட்டு அவர்கள் ரீதிகளை அனுசரிப்பது திருட்டன்று.
அது அவர்கள் பெருமையைப் பிரகாசப்படுத்துவதேயாகும். அந்த மூலதனத்திலிருந்து ஏதோ வட்டி பெருக்குவது போல வ்ருத்தி செய்வதாகும்.
மூலதனம் மூலதனமாகவேயிருக்கும். காளிதாஸர், வால்மீகி ஏற்படுத்திய த்வாரத்தின் வழியாக நூலைப் போல தன் நூல் செல்கின்றதென்றார்.
வால்மீகியின் வாக்கே உத்தர ராமசரிதமாகப் பரிணமித்தது என்று பவபூதி பேசினார்.
வால்மீகியின் வாகமிர்தமான ஊற்றுக்கிணற்றின் பக்கத்தில் கசிவுஜலம் போன்றது தன்னுடைய காவ்யம் என்று முராரிகவி பேசினார்.
தன்னை ஓர் குட்டி வால்மீகி என்றும் பேசினார். ஸ்வாமி அப் படியே வால்மீகி, வ்யாஸர், காளிதாஸர், முராரி முதலிய
பூர்வகவிகளைப் புகழ்ந்து, அவர்கள் ரீதிகளை யனுஸரிப்பதுண்டு.
இங்கும் 11-வது பத்ததியான ஸத்கவிபத்ததியின் முடிவில் மனுவ்யாஸ ப்ராசேதஸபரிஷதர்ஹா’ என்று புராதன மஹாகவிகளைப் புகழ் கிறார் .
ஸ்ரீபட்டப்பா ஸ்வாமி ஸாதித்த பொருள்கள்:-
(1) ‘நீவீ’ என்பது மூலதனத்தையும், அவிழ்ப்பது கஷ்டமான க்ரந்த முடிச்சுகளையும், திருடர்களை யடைக்கும் காராக்ருஹத்தையும் சொல்லும்.
‘ப்ரமிதி’ என்பது ப்ரத்யக்ஷம் முதலிய ப்ரமாணங்களால் தீர்மானிப்பதைச் சொல்லும்.
இன்ன ப்ரமாணங்கள் இப்படித்தான் ப்ரஸரிக்குமென்று பரிஷ்காரத்தைச் செய்து ஸ்ரீபாஷ்யத்தில் ப்ரமாண
முத்ரைகளை ஏற்படுத்திவிட்டதால், ப்ரத்யக்ஷத்தால் ஸித்திக்கும் ப்ரபஞ்சமென்னும் ஈச்வர விபூதியையும்,
நியாயங்களால் ஸித்திக்கும் ஈஸ்வர குணங்களையும் பிறர் அபஹரிக்க முடியாது.
“பகவல் லஷ்மணாசார்யருடைய முத்ரையை, ஸதா சார்ய பரம்பரை வழியாக முறைப்படி
க்ரஹித்த என்னிலும் பிறறறிவரோ” என்று தத்துவ முக்தா கலாபத்தின் முடிவில் ஸாதித்தார்.
“அப்ரமத்தாத் ந மத்த:”, ஸம்ப்ரதாயத்திலுள்ள யோக்யர்களாள சிஷ்யர்கள் ஹ்ருதயத்தில்
ஸ்ரீபாஷ்ய ஸுபாஷித மூல தனம் ப்ரமாண பரிஷ்காரங்களோடு பதிய வைத்து முத்ரை போட்டிருக்கிறதைப் பிறர் திருட முடியாது.
வித்யையைப் பிறர் சோரம் பண்னப் பார்த்தாலும், பாபம் வருமேயொழிய, திருட்டுப் பலிக்காது.
வித்பையைத் திருடிக் கடைத்தேறப் பார்ப்பவர் பாபத்தை அடைந்து கெடுவர்.. காவ்யத் திருட்டும் வித்யைத் திருட்டும் நிபுணமன்று.
ப்ரமிதி’ என்பது நன்றாகக் கணக்குப் பண்ணி இலக்கம் குறிப்பதைச் சொல்லும். (க. ட, ப,யாதி அக்ஷர இலக்கத்தால் கணக்கிடுகிறது).
‘பரிஷ்க்ருதி’ 12-ஐக் குறிக்கும். ‘முத்ரை’ என்பது ஓர் வ்யவஸ்தையைச் சொல்லும்,
‘ஸமர்ப்பிதா’ என்னும் பதத்தில் ‘ஸ’ என்பது 7-ஐயும், ‘ம’ என்பது 5-ஐயும் காட்டும்.
நற்குணத்தோரின் வர்ணனம் 7-பத்ததிகள்; தீயோரின் வர்னனம் 5 பத்ததிகள்.
‘ அநார்ய ‘ என்பதற்கு வகுக்கக் கூடாதது’ என்பது பொருள்.
144-ஐ 12-ஆல் வகுத்து 12- ஆகுமே பொழிய, வேறு விதமாக வகுக்க இயலாது.
எந்தப் பத்ததியிலிருந்து எந்த ஸ்லோகத்தைத் திருடமுடியும்.
‘ஸுபா’ என்பது 74-ஐயும், ‘ஷித’ என்பது 60-ஐபும், நீவீ’ என்பது 4 ஐயும் காட்டும். கூட்டினால் 144 ‘
பர குண’ என்பது பர வாஸுதேவருடைய ஆறு குணங்களைக் குறிப்பதால், 6-ஐச் சொல் லும்.
சோரர்கள்’ காம க்ரோதம் முதலிய ஆறு திருடர்கள். இப்படிக்கும் 12-கணக்காகிறது.
(2) “இரவில் வீட்டிற்குள் நுழைந்து திருடுகிறவரும், வழிப் போக்கர்களை மறித்துக் கொள்ளையடிப்பவரும் திருடரல்லர்;
கணக்குகளில் இலக்கங்களை மாற்றி யஜமானனுடைய பொருள்களை அபஹரிக்கும் கார்யஸ்தரான
கணக்கர்களே பெருந் திருடர்கள்” என்று விஸ்வகுணாதர்சம்.
அந்தரங்கருடைய மனத்திற்கு மட்டும் தெரியும்படி, கணக்குகள் போட்டுக்கூட்டி முத்திரை போட்டுவைத்தால், அந்தத் திருட்டையும் தடுக்கலாம்.
இப்படி ரஹஸ்பமான முறைகளில் முத்திரை போட்டுவைக்கும் இருப்புத் தொகைகளைத் திருட்டுக் கணக்கர் அபஹரிக்க முடியாது.
(3) ‘ப்ரமிதி, என்பது உயர்ந்த பரிமாணத்தைச் சொல்லும்.
மிக உயாமாய் அவர்களால் பரிஷ்கரித்துக் கட்டியிருக்கும் சிறைச் சாலையிலிருந்து அங்கே அடைக்கப் பட்டிருக்கும்
திருடர்களான கைதிகள் ஏறிக் குதித்துத் தப்பியோட முடியாது..
ஒடினாலும் திருடருக்கும் உடம்பில் அடையாள முத்திரை போடப் பட்டிருப்பதால், அகப்பட்டுக் கொள்ளுவர்.
(4) மஹா மந்த்ரங்களைக் கொண்டு தத்துவோபதேசத்துடன், சங்க சக்ர முத்திரைகள் பெற்றவரின்
விவேகத்தைக் காமக்ரோதாதிகளான திருடர்கள் அபஹரிக்கமுடியாது; அவர்கள் மனதை மதாந்தரஸ்தர்கள் அபஹரிக்கமுடியாது.
(5) ‘முஸல முத்திரை’ (உலக்கை முத்திரை) என்கிற ஓர் முத்ரையின் மந்த்ர சக்தியால் திருடர்கள்
உள்ளே நுழையப் பயந்து ஓடிப் போவார்கள் என்று ப்ருஹத் தந்த்ரத்தில் கூறப்பட்டது.
————–
பஸ்யதி பரேஷு தோஷாந் அஸதோபி ஜந: ஸதோபி நைவ குணாந்|
விபரீதமிதம் ஸ்வஸ்மிந் மஹிமா மோஹாஞ் ஜநஸ்யைஷ:|| (3)
(ப-ரை)
பரேஷு – பிறரிடத்தில்,
(அஸத: அபி] – இல்லாததேயான,
தோஷாந் – தோஷங்களை,
ஜந: – ஓர் மனுஷ்யன், (துர்ஜநன் என்பவன்),
பஸ்யதி – பார்க்கிறான்.
பரேஷு – பிறரிடத்தில்,
ஸதோபி குணாந் – உள்ளதேயான குணங்களையும்,
நைவ பஶ்யதி – பார்க்கிறதேயில்லை.
ஸ்வஸ்மிந் – தன்விஷயத்தில்,
இதம் – இது,
விபரீதம். நேர் தலைகீழ். :
ஏஷ: – இது,
மோஹாஞ்ஜாஸ்ய – மோஹமென்னும் மையின்,
மஹிமா- மஹிமை |
அவதாரிகைகளுடன் தாத்பர்யங்கள் –
(1) முன் ஸ்லோகத்தில் ப்ரஸ்தாவித்த காவ்யத் திருடர்கள், பிறரான கவிகளின் காவ்யங்களில் குணங்களிருப்பதைப் பார்த்து,
அதைப் போல் அழகாய்த் தங்களுக்குக் கவனம் செய்யச் சக்தியில்லை யென்பதையும் தெரிந்துகொண்டு
பிறர் காவ்யங்களிலிருந்து திருடுபவர்; பிறர் குணத்தையும், தங்கள் குணக் குறைவையும்
தோஷத்தையும் நன்கு அறிந்தவர். இங்கே பேசப்படுகிறவர்கள்
பிறவி மோஹத்தால் புத்திக் கண் ஸரியாகத் தெரியாமல் பிறரிடமில்லாத தோஷங்களை இருப்பதாகப் பார்ப்பவர்;
பிறரிடமிருக்கும் குணங்களை ஒருகாலும் பாராதவர்; தங்கள் ஸொந்த விஷயத்திலோ வென்றால்
இதற்கு நேர் தலைகீழாக இல்லாத குணங்களை இருப்பதாகப் பார்த்தும், இருக்கும் தோஷங்களைப் பாராமலுமே யிருப்பவர்.
இது மோஹமென்னும் மையினால் கண் மூடப் பட்டிருப்பதின் ப்ரபாவம்.
ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் விவேக மஹாராஜர் இந்த ஸ்லோகத்தை உபயோகிக்கிறார்.
(2) ஸுஜச்ரேஷ்டரான ராமனை ‘ஸ்வ தோஷ பரதோஷவித்’ ‘தன் தோஷங்களையும் பிறர் தோஷங்களையுமறிந்தவர்’ என்று வால்மீகி வர்ணித்தார்.
முதலில் தன் தோஷங்களை வித்வானாயிருப்பவன் அறிய வேணும் என்பதைக் காட்ட ‘ஸ்வதோஷ’ என்பதை முதலில் ருஷி வைத்தார்.
பிறர் தோஷங்களும் தெரிந்திருக்கவேணும். ஆயினும் அதை அதிகமாக ப்ரகடனம் செய்யக்கூடாது.
ரஹஸ்யத்தில் உபதேசத்தால் திருத்தலாம். தண்டிக்க அதிகாரமுள்ள விடத்தில் ப்ரகாசமாய் தண்டித்துத் திருத்தலாம்.
துர்யோதனனிடம் ‘ராஜாவே, பிறரிடத்தில் கடுகு அளவும் இருக்கக் கூடிய தோஷங்களைப் பார்க்கிறாய்;
உன்னிடமுள்ள யானை ப்ரமாணமான தோஷங்களையும் நீ பார்க்கிறாயில்லை’ என்றார் விதுரர்.
இந்த ஸ்லோகத்தில் ப்ரஸ்தாவிக்கும் துர்ஜனன் துர்யோதனனிலும் பெரியவனென்று
வைகித்ரியம், அடியோடு இல்லாத தோஷத்தையும் பார்க்கிறவன்.
(3) தன் தோஷம் தெரிந்தால், அதை மாற்றிக் கொண்டு கடைத்தேறலாம்.
பிறர் குணங்களைப் பார்த்தால், அவர்களோடு பழகி அந்தக் குணங்களையும் பழகலாம்.
குணவான்களைத் தூஷித்தால் அவர்கள் பாபத்தை இவன் கட்டிக் கொண்டு தன் பூர்வ புண்யத்தை
அவர்களடையும்படி செய்கிறான். இப்படிப் பலவிதமாக அசட்டுத் தனம். இப்படி நடப்பவன் நிபுணனல்லன்.
(4) ‘பரன்’ என்னும் ப்ரஹ்மத்தினிடம் எண்ணிறந்த கல்யாண குணங்களுள்ளன.
ஸுஜநோத்தமரான ராமனிடம் அநேக கல்யாண குணங்கள் இருக்கின்றன வென்று கோஸல நாட்டுக் குடிகள் அவர் தகப்பனாருக்கு எடுத்துக் காட்டினார்கள்.-பரனிடத்தில் தோஷமென்பதேயில்லை. இப்படிக்கிருந்தும் பரனுக்கு குணங்களேயில்லையென்றும்,
பரனுக்கே அக்ஞானம், ப்ரமம் முதலிய தோஷங்களுள்ளன வென்றும், இப்படிப் பார்க்கும் நாம் தான்
தோஷமற்றவரும் உண்மையறிவுள்ளவரென்றும் பார்க்கலாகாது.
ப்ரஹ்மத்திற்கு அவித்யை சொன்னால், சொல்லுகிறவருக்குத் தான் அவித்யை தோஷம் ஒட்டும்’ என்று தத்வ முக்த கலாபத்தில் ஸாதிக்கப் பட்டது.
(5) இல்லவே இல்லாததை உள்ளது போல் ப்ரமித்துப் பார்ப்பது அலத்திற்கு க்யாதியைக் கைப்பற்றுவதால் ஸர்வ சூன்யவாதத்தில் முடியும்.
(6) தமஸ்ஸ, மோஹம், மஹாமோஹம், தாமிஸ்ரம், அந்தம் என்று அவித்யைக்கு 5-பர்வங்களென்பர்.
இல்லாததைக் காட்டுவதும் இருப்பதை மறைப்பதும் அவித்யையின் சக்திகளென்பர்.
இந்த விஷயத்தில் இது உண்மை யாயிருக்கிறது,
ஸ்ரீபட்டப்பா ஸ்வாமி ஸாதித்த பொருள்கள் –
(1) ‘ஜந :’ என்பதால் பிறவியினாலேயே இப்படி விபரீதமான துர்ஜன ஸ்வபாவமமைந்ததென்று ஸுசிக்கப்படுகிறது.
அவன் என்ன செய்வான்; அவன் பிறவிக் குணத்தை அவன் மாற்ற முடிய வில்லை யென்று பரிதாபம்.
(2) பிறர் குணங்களைப் பார்ப்பதே யில்லை! என்றதற்கு பிறர் தோஷங்களைப் பார்க்கா மலிருந்தாலும்,
பிறர் குணங்களை ஒரு காலும் கண்ணெடுத்துப் பார்க்க மாட்டானென்று பொருள்.
(3) ‘ அமோஹாஞ்ஜனம்’ என்றும் பிரிக்கலாம். அமா’ என்று அமாவாஸ்யைக்குப் பெயர்.
அன்று இருட்டில் சின்ன எழுத்துக்களை விளக்கில்லாமல் ஊஹித்துப்படிக்கும்படி செய்யும் சக்தியுடைய அஞ்சனம் (மை).
கோட்டான் மண்டையிலிருந்து இறக்கும் மையைத் தடவிக்கொண்டு இரவில் இருட்டில்
புத்தகம் படிக்கலாமென்று தத்தாத்ரேய தந்தரத்தில் சொல்லி யிருக்கிறது.
தோஷா’ என்றும் ‘ந ஸதோபி என்றும் பதம் பிரிக்கலாம். ‘தோஷா’ என்பதற்கு ‘இரவில்’ என்று பொருள்.
இருட்டில் மிகச் சின்ன எழுத்தைப் படிக்கலாமே யொழிய, லத்’ என்று சொல்லப்படும்
தேஜஸான நக்ஷத்ரங்களை அந்தக் கண்ணைக் கொண்டு பார்க்க முடியாது.
இருட்டில் நக்ஷத்ரங்கள் நன்றாய் ப்ரகாசித்தாலும் அதைப் பார்க்க முடியாது.
இருட்டில் மிக ஸூக்ஷ்மமான எழுத்தையும் படிக்க உதவும். இதெல்லாம்
அந்த அஞ்ஜனத்தின் ஓர் விசித்ரமான விபரீத மஹிமை. ‘ அஸத் ‘ என்பதற்கு ‘மிக ஸூஷ்மமான’ என்று பொருள்.
(4) மோஹத்தால் மூடப்பட்ட புத்தியை யுடைய அரசன் தன்னுடைய பலக் குறைவை அறியாமலும், எதிரியின் பலத்தை அறியாமலும் ஏமாந்து போவான்.
‘பரேஷு தோஷார்’ என்று ஒரே பதம். பிறருடைய இஷூ’ என்னும் பாணங்களுடைய இல்லாத குற்றங்களையும் பார்க்கிறான்.
அவர்கள் இஷூக்களின் குணாந்’ சிறந்த நாண் கயிறு முதலிய வலிமைகளைப் பார்க்கிறதில்லை.
தன் பாணங்களுக்குள்ள துர்பலங்களைப் பார்ப்பதில்லை; இல்லாத குணங்களைப் பார்க்கிறான்.
(5) ப்ரஹ்மத்தினிடத்தில் இல்லாத அவித்யா தோஷத்தைப் பார்க்கிறான்; உள்ள குணங்களைப் பார்ப்பதில்லை. தன் அக்ஞானத்தைப் பார்ப்பதில்லை; தன்னிடமில்லாத குணங்களைப் பார்க்கிறான்.
———–
————
ஹரிகர புஷ்கர ஹம்ஸம் ஹாரமணீநாம் ப்ரஸூதிமிவ லக்ஷ்ம்யா: |
பித்தேந பாஞ்சஜந்யம் பீதம் பஶ்யந் பிஷஜ்யதி கம் ||–5–
(ப-ரை)
ஹரிகர புஷ்கர ஹம்ஸம் – பகவானுடைய தாமரைத் திருக் கையில் ஹம்ஸம் போல் விளங்குவதும்,
லக்ஷ்ம்யா :-லக்ஷ்மியினுடைய,
ஹார மணீநாம் – முக்தாஹாரத்திலுள்ள முத்துக்களுக்கு, (முக்தர்களுக்கு,)
ப்ரஸுதிமிவ. காரணம் போன்றதுமான,
பாஞ்சஜந்யம் – (வெண்) சங்கை,
பித்தேந – தன்னுடைய பித்த தோஷத்தால் (மஞ்சள்காமாலை தோஷத்தால்),
பீதம் மஞ்சள் நிறமாக,
பஶ்யந் – பார்க்கிறவன்,.
கம் யாரை (யாருக்கு),
பிஷஜ்யதி – வைத்தியம் செய்யலாம் (எவரைத்தன் உபதேசத்தாலே திருத்தப் பார்க்கலாம் ?)
அவதாரிகைகளுடன் தாத்பர்யங்கள்:-
(1) இல்லாத தோஷங்களைப் பார்ப்பவரையும், இருக்கும் தோஷங்களைப் பாராதவரையும் பற்றி 3-வது ச்லோகம்.
இங்கே வஸ்துவைப் பார்த்தும் அதை வேறு குணங்களோடு கூடியதாகப் பார்ப்பவரைப் பற்றி பேசுகிறது.
3-வதில் அஸத்க்யாதியும், அக்யாதியும். அதாவது இல்லாதது தோன்றுவதும், இருப்பது கண்களுக்குப் படாமையும் பேசப்பட்டது.
இங்கே இருக்கும் பொருள் கிரஹிக்கப்படுகிறது. ஆனால் அதன் தர்மங்கள் (குணங்கள்) நேர் விபரீதமாக க்ரஹிக்கப்படுகிறது .
ப்ரஹ்மமென்னும் வஸ்து புத்திக்குத் தோன்றியும் அனந்த நற்குணங்களுள்ள அவ்வஸ்துவைக் குணமற்றதென கிரஹிக்கலாமோ?
வெண் சங்கை மஞ்சள் வர்ணமானது என்று பார்ப்பது ப்ராந்தி. அதற்கு மூலம் கண்ணிலுள்ள மஞ்சள் காமாலை தோஷம்.
தன் கண்தோஷமான மஞ்சளால் வெண் சங்கு பூசப்பட்டு, அது மஞ்சள் வர்ணமென்று ப்ராந்தி உண்டாகிறது.
இப்படி மஞ்சள் காமாலை தோஷமுடையவன் சங்கின் உண்மைக் குணத்தைப் பிறருக்கு உபதேசிக்கக்கூடுமோ?
தானே ப்ராந்தியால் வ்யாதிக் கண்னால் தடுமாறுகிறவன் பிறர் அஜ்ஞானத்தைப் போக்குகிறேன் என்று
அவருக்குக் கண் வைத்தியம் செய்து அவர் தோஷத்தைத் தீர்க்க முடியுமோ?
(2) ப்ரத்யக்ஷமென்னும் ப்ரமாணமே தோஷமுடையது, அதை நம்பக்கூடாது.
அது ஒரு பொருளையுள்ளதாகக் காட்டினால், அது காட்டும் பொருள் பொய்யென்று தீர்மானிக்க வேண்டும் என்பர்.
ப்ரத்யக்ஷக்காக்ஷி ‘உளது’ என்று காட்டினால், ‘அதை இலது’ என்று நிச்சயிக்கலாமோ ?
சங்கு “வெண்மையானது என்று காட்டும் நல்ல ப்ரத்யக்ஷத்திற்கு விரோதமாகத் தன் கண் தோஷத்தினால் மஞ்சள்’வர்ணம் ஸத்யமான தர்மமாகுமோ ?
யாதொரு தோஷமுமில்லாதிருக்கையில், கண் பார்க்கும் பொருள் பொய்யென்று கக்ஷி செய்வது தம்முடைய புத்தி தோஷமேயாகும்.
தோஷமுள்ள கண், சங்கை மஞ்சள் வர்ணமென்று காட்டுவது ப்ராந்தியே யொழிய,
தோஷமில்லாத கண் ‘வெண்மையானது என்று காட்டுவதும் ப்ராந்தியோ?
தம் புத்தி தோஷத்தால் தோஷமற்ற ப்ரத்யக்ஷத்தை மறுதளிப்பவர், பிறர் அஜ்ஞானத்தைத் தீர்க்க உபதேசம் செய்யவல்லவரோ?
‘வைத்யரே உமக்கு முதலில் வைத்யம் செய்து கொண்டு உம் வியாதியையே தீர்த்துக்சொள்ளும்’ என்று ஓர் பழமொழி யுண்டு.
(3) லக்ஷ்மீ பர்த்தாவான ‘ஹரி’ ஓர் உந்நதமான பச்சைமாமலை.
அந் நீலமலையின் ஓர் சிகரத்தில் சந்த்ர பிம்பம் போல் அவர் கரத்தின் உச்சியில் பாஞ்சஜந்யம் வாஸம் செய்து விளங்குகிறது.
அப் பாஞ்சஜந்யம் நம்மைக் காப்பாற்றட்டும்’ என்று ஹரிஸ்தோத்திரத்தை ஸ்ரீசங்கராசாரியர் ஆரம்பித்தார்.
வெண்மையான ஒளியால் சந்த்ரனைப்போல் வியாபித்திருக்கும் ஹரிகரத்திலுள்ள பாஞ்சஜந்யத்தை
மஞ்சள் வர்ணமென்று ப்ரமிப்பவர்கள் கண் வியாதி எத்தனை பலமாயிருக்க வேணும்?
(4) வெண் சங்கான பாஞ்ச ஜன்யத்தை ஹம்ஸமென்று வர்ணிக்கிறார்.
வெண்மையோடு கூட தன் சப்தத்தால் அஜ்ஞான இருளைப் போக்கி ஜ்ஞானத்தை யளிக்கும்
பரம ஹம்ஸரான உடையவர் முதலிய ஆசிரியர்களையும் காட்டும்.
திருக்கையில் சங்கத்தை வைத்துக் கொண்டு அதன் நுனியால் (ஹரி) த்ருவரின் கன்னத்தைத் தடவி
அக் குழந்தை பெரிய ஸ்தோத்திரம் செய்ய யோக்யதை பெற்றான்.
‘ப்ரணவ மஹிமை யுடைய பாஞ்ச ஜன்யத்தைக் கோஷிப்பது போல் என் முகமாக
ஸாராவளியை ரங்கநாதன் கோஷித்தார்’ என்று ஸாராவளி முடிவில் ஸாதித்தார்.
ஜ்ஞான ஹேதுவான அப் பாஞ்சஜந்யமே இங்கே ப்ரமத்திற்கு விஷயமாயிற்று.
ஹம்ஸரான ஆசிரியர் அநேகரை முக்தி யோக்யராக்கி லக்ஷ்மி பதிக்கு ஸமர்ப்பிப்பர்,
அந்த முக்தர்கள் பெருமாள் திருமார்பில் அலங்கார ரத்னமாவார்.
லக்ஷ்மியின் முத்துக்கள் வெண்மையாயிருக்கும். ‘சந்த்ரனைப் போல் உஜ்வலமான ஹாரம் என்று
பர்த்ருஹரி. ‘சங்கம் என்பது வெண்மையாகவே இருக்கும்’, ‘சங்க: பாண்டர ஏவ’ என்று எல்லோரும் சபதம் செய்வர்.
அப்படி ஸர்வ லோக ப்ரஸித்தமான விஷயத்திலும், காமாலை தோஷத்தால் அந்யதா ஜ்ஞானமுண்டாகிறது.
‘பகவான்’ என்பவர் ஷாட் குண்ய பரிபூர்ணரென்பது ஸர்வ சாஸ்த்ர ப்ரஸித்தம். அவர் “ நிர்குணர்’ என்பது கூடுமோ?
(5) ‘பராத்பரரான பெருமாளைத் தர்சிக்கவே, எல்லா ஸம்சயங்களும் சோதிக்கப்படும்’ என்று உபநிஷத்து.
பெருமாளையும் பார்த்து அவர் திவ்வியமங்கள விக்ரஹத்திலுள்ள திருக்கையையும் பார்த்து,
அங்குள்ள பாஞ்சஜன்யத்தையும் பார்த்து சங்கம் வெண்மையே என்று ஸர்வலோகமும் அறிந்த உணர்வுக்கு விரோதமாக,
அப் பாஞ்சஜந்யம் மஞ்சள் என்று விபரீத உணர்வுடையவன் யாருக்குத் தத்துவோபதேசம் செய்யத் தக்கவன்?
(6) உயர்ந்த காவ்யங்களை நன்றாய்ப் படித்து, காவ்யமறிந்தவர்களிடம் சிக்ஷை பெற்றுக் கவனம் செய்ய வேணும்.
உயர்ந்த பழைய காவ்யங்களை வீணாகப் பழித்துத் தானாக அநிபுணமாகக் கவனம் செய்பவரின் க்ரந்தங்களால் உலகுக்கு என்ன பயன் ?
பிரியமான காந்தையின் உபதேசத்தை யொக்கும் காவ்யம் என்பர், இவர்கள் கிரந்தம் யாருக்கு உபதேசம் செய்ய வல்லது?
ஸ்ரீ பட்டப்பா ஸ்வாமி ஸாதித்த பொருள்கள்-
(1) திருக் கையைத் தாமரையாகவும், சங்கை வம்ஸமாகவும் ரூபணம்
சந்திரனைப்போல வெண்மை. சங்கத்திலிருந்து முத்துக்கள் உண்டாகுமென்பர்.
(2) ஹம்ஸத்திற்கு ‘மௌக்திகாசனன்’ என்று பெயர். முத்தைத் தின்னுமென்பர்.
தன்னால் பீடிக்கப்படும் முத்துக்களுக்கு ஹம்ஸம் காரணமாகிறது என்கிற விசித்திரம்’
(3) ‘பாஞ்சஜந்யம் என்பதற்கு ஐந்து சிதிகளில் உண்டாக்கின அக்னி’ என்றும் ஓர் பொருள்.
‘பஞ்சசிதீகமான அக்னி பாஞ்ச ஜந்யாக்னியாகும்’ என்று வேதவசனம்.
ஐந்து இஷ்டகைகளில் (செங்கல்களில்) கூட்டப்படுகிறது.
‘ஹரி’என்பது பச்சை வர்ணத்தைச் சொல்லும். ‘கர’ என்பதற்கு ‘காந்தி’ என்று பொருள்.
‘புஷ்கர’ என்பது தாமரை இலை. பசுமையான தாமரை இலைகளின் பேரில் இந்த பாஞ்சஜந்யாக்னி கடையப்படும்.
“ஓ அக்நியே உம்மைத் தாமரை இலையின் பேரில் கடைந்தார்’” என்று அக்னி காண்டத்திலுளது.
இந்த அக்னியினால் ‘பொருள்’ ‘வஸ்த்ரம்’ ஹாரம், ரத்னம் முதலியவையெல்லாம் கிடைக்கும்’ என்று வேதம்.
இந்த அக்னி நஷ்டமாய்விட்டால் (அணைந்து போனால்) அதற்கு ஒரு ப்ராயச்சித்தமும் (மருந்தும்) இல்லை.
திரும்பவும் அக்னியைப் புதியதாய்க் கூட்ட வேண்டியது தான்.
(4) மேலே சொன்ன ‘அக்னிப் பொருளில்’ ‘ஹா ரமணீனாம்’ என்று பதம் பிரித்தால்,
‘அப்ஸரஸ்ஸுக்களுடைய லபியை விருத்தி செய்யும்’ என்று பொருள் கிடைக்கும்.
” இந்தப் பாஞ்சஜந்யாக்னியில் ஐந்து இஷ்டகைகளும் (செங்கல்களும்) ஸ்வர்க்க லோகத்தில் ஐந்து அப்ஸரஸ்ஸுக்களாகி
இந்த யஜமானனுக்கு உபசரிப்பார்கள் ” என்று பலம் சொல்லப்பட்டுளது.
(5) ‘பாஞ்சஜந்யம்’ என்பதால் ஜாடராக்னியையும் சொல்லலாம்.
வயிற்று அக்னியை மந்தமாக்கும் பித்தரோகத்தால் பீடிக்கப்பட்டு அதனால் வருந்துகிறவன் வேறு யாருக்கு வைத்தியம் செய்வான்.
(6) கண் முதலிய ஐந்து இந்திரியங்களை ‘பஞ்சஜநங்கள் ‘ என்று உபநிஷத்தில் சொல்லி யிருக்கிறது.
இந்த இந்த்ரியங்களுக்கெல்லாம் ஆதாரமான ஹ்ருதயத்திற்கு ஆதாரமானவர் அந்தர்யாமீ .
‘பாஞ்சஜந்யம்’ என்பது அந்தர்யாமியைச் சொல்லும். ஹ்ருதயம்’ என்பது தாமரை’ போன்றது.
ஸுர்யகிரணங்களால் மலர்ந்த தாமரை போன்றது. ஹ்ருதயகமலத்தில் ப்ரகாசிக்கும் பரமாத்மா, எவனுக்குத் தன் தோஷத்தால் மறைத்திருக்கிறாரோ,
அவன் எப்படி பிறருக்கு உபதேசித்து அவர்களைக் கரையேற்றுவது?
இப்படி அபூர்வமான பல பொருள்கள் இந்த க்ரந்தம் முழுவதிலும் சொருகி யிருக்குமென்பது திண்ணம்.
யார் கண்டுபிடிப்பது? வ்யாக்யானத்தை இனி சுருக்கமாகவே முடித்து விட்டுப் பிறகு உட்பொருள்கள்
எப்படியாவது அகப்பட்டால் க்ரந்தம் முடிந்தபிறகு சேர்த்தெழுதுவோம்.
ஸ்ரீபட்டப்பாஸ்வாமி க்ரந்தம் எத்தனை ஸ்லோகங்களுக்கு எழுதப்பட்டிருக்குமோ, அதுவரையில் அப் பொருள்களை
அந்த க்ரந்தம் அச்சிடப்பட்ட பின் கடைசியில் சுருக்கமாகச் சேர்ப்போம்.
இத்தனை பொருள்களை மிக லளிதமான ஸ்லோகங்களில் சேர்ப்பது ஸ்ரீதேசிகனைத் தவிர
மற்றொருவருக்கும் ஸாத்யமல்ல என்பதை வித்வல்லோகமறியும்.
———
ஸ்படிக : ஸ்வபாவ சுத்த: ஸ ஏவ ஸந் ஸஹதி ஸர்வமாரோபம் |
பவதி ந தத்ரானாஸ்த்தா ததுபாதிஷு வா பவத்யாஸ்த்தா || (6)
(ப-ரை)
ஸ்வபாவசுத்த: – இயற்கையாலேயே சுத்தமான,
ஸ்படிக: – ஸ்படிகக்கல்,
ஸ ஏவ ஸந் – தானாகவே இருந்துகொண்டு,
ஆரோபம் – இல்லாததை யிருப்பதுபோல் ஏறிடுவதை,
ஸர்வம் – எல்லாம்,
ஸஹதி – பொறுக்கிறது. (அதனால்)
தத்ர அதன் விஷயத்தில்,
அனாஸ்த்தா – வெகுமதிக் குறைவு,
ந பவதி – உண்டாவதில்லை.
ததுபாதிஷு வா – அதுவிஷயத்தில் தப்புத் தோற்றங்களைச் செய்விக்கும் காரணங்களான உபாதிகளிலாவது,
ஆஸ்த்தா – பஹுமானம், (ஆதரம்),
ந பவதி – உண்டாவதுமில்லை.
அவதாரிகைகளுடன் தாத்பர்யங்கள்
ஹரியின் கைத் தாமரையிலுள்ள சங்கத்தை மஞ்சள் நிறமாகத் தன் கண்ணிலுள்ள மஞ்சள் தோஷத்தால் ப்ரமிப்பதைப் பேசினார்.
இங்கே ஹரியையே ஜகத்து முதலியதாகப் பிறர் ப்ரமிப்பதை ஸுசிக்கிறார்.
சுத்தப் படிக மலை போலிருப்பவர் ஹயக்ரீவரென்னும் ஹரி. அவர் வெண்மை ஒளிமயர்; ஜ்ஞாநாநந்த மயர்.
அந்த ப்ரகாச ஸ்வரூபரிடம் துக்க ஸம்ஸாரமென்னும் இருட்டை ஆரோபிக்கலாகாது.
நரி கண்ணை மூடிக்கொண்டால் உலகம் அஸ்தமிக்காது. தெரியாதவர் தங்கள் அஜ்ஞானத்தால் அவ் வொளியை
என்ன இளப்பமாகப் பார்த்தாலும், பேசினாலும், அவர்கள் இளப்ப த்ருஷ்டியும் பேச்சும் அந்த ஒளியில் ஒட்டாது,
ஸ்படிகக் கல்லின் பேரில் சிகப்புப் பூக்களை வைத்தால் படிகம் சிவப்பென்று தோன்றும்.
நெருங்கிச் சேர்ந்துள்ள சிவப்புப் பூ தன்னிடமுள்ள சிவப்பு வர்ணத்தைப் படிகத்தில் இருப்பது போல் காட்டும்.
இப்படித் தப்புத் தோற்றத்துக்குக் காரணமாயிருப்பதை ‘உபாதி’ என்பர். பொய்யாக ஒருவர் ஸ்படிகத்தைச் சிவப்பென்றாலும்,
ஸ்படிகம் சிவப்பாகித் தன் இயற்கை வெண்மையை இழக்காது. ஸ்படிகம் சுத்த வெண்மையன்று,
சிவப்பே என்று அதன் ஸ்வபாவத்தை மாற்றிப் பேசினாலும், அதைக் கேட்டு ஸ்படிகக் கல்லில் விருப்பத்தை விடுவாருமில்லை.
உபாதிகளான சிகப்புப் பூக்களை விரும்புவாருமில்லை.
ஹரியை நற்குணமற்றவர் குணசூந்யரென்று எவ்வளவு சொன்னாலும் ஹரியைப் பஜிப்பதை விடுவாரில்லை;
நிர்குணமென்று சொல்லும் வஸ்துவையோ, அதன் விஷயமாய்ச் சொல்லும் உபாதிகளையோ நம்புவாரில்லை.
ஈஸ்வரனே ஜீவனென்று ஈஸ்வரனிடத்தில் ஜீவத் தன்மையையோ, ஜீவனிடத்தில் ஈஸ்வரத் தன்மையையோ
ஆரோபித்தாலும் ஈஸ்வரனைத் தொழுவதை விடுவாரில்லை; தன்னையே தொழுவாருமில்லை.
ஸர்வமுக்தி வரையிலும் (எல்லா ஜீவர்களும் முக்தி யடையும் வரையிலும்) முக்தருக்கெல்லாம் ஸகுணமான
ப்ரஹ்மத்தின் அனுபவமே யல்லாது நிர்குணமான ப்ரஹ்மத்தோடொன்றாவது என்பதே யில்லை என்பது அத்வைத க்ரந்தங்களின் தீர்மானம்.
அதுவரையில் ஸ குண ப்ரஹ்மாநுபவமேதானுள்ளது . நிர்குண ப்ரஹ்மம் என்று பேசுவதோடு ஸரி.
அவர்களும் அதை ஆதரிப்பதில்லை . ஸ குண ப்ரஹ்ம பஜனத்தை விடுவதுமில்லை.
கோவிந்தனைப் பஜனம் செய் என்று பாடுகிறார்கள். யாவதாயுஷம் பஜிக்கிறார்கள்.
நானே ப்ரஹ்மம்’ என்று ஏட்டில் பேசுவதோடு ஸரி. ஈஸ்வர பக்தி தான் கடைசிவரையில் தஞ்சமாக அனுஷ்டிப்பது.
அனுஷ்டானத்திற்கு விரோதமாய் ஏட்டில் ஒரோரிடத்தில் பேசி, அதற்காகத் தூஷிக்கப் பெறுவது நிபுணமன்று.
நிர்குணத்தில் அவர்களுக்கும் ஆஸ்தையில்லை.
‘கண்ணனுக்கு மேற்பட்ட தத்துவத்தை நானறியேன்’ ‘நிர்க்குண வஸ்து எனக்கு வேண்டாம்.
யமுனை மணல்களில் ஓடும் அத்புத க்ருஷ்ண தேஜஸ் ஒன்றே என் கண் முன்னே ஆனந்த கரமாயிருக்க வேணும்’ என்றார் அத்வைத ஸித்திக்காரர்.
சான்றோரை என்ன தூஷணம் பேசினாலும் சான்றோர் சான்றோரே.
அவர்கள் தம்மைத் தூஷிப்பதை அடியோடு உபேக்ஷித்து ஸஹித்தாலும், அந்தத் தூஷணங்களைக் கேட்டு அவர்களை ஒருவரும் அனாதரிக்கமாட்டார்.
ஸ்படிகம் போன்ற மாசற்ற சுத்த காவ்யங்களை அஸூயையால் என்ன தூஷித்தாலும், அந்தக் காவ்யங்களில் ஆதரவு குறையாது.
அந்தத் தூஷணங்களில் ஒருவருக்கும் ஆதரமுண்டாகாது. ‘தேஹமே நான்’ என்று சேர்க்கையின் பலத்தால் தோன்றி, நான் சிகப்பு, நான் பருத்தவன் என்று உபாதியான தேஹத்தின் தர்மங்களை நம்மிடம் எத்தனை ஆரோபித்தாலும், தேஹத்தைக் காட்டிலும் ஆத்மா வேறு என்று
விவேகமுள்ளவர் உபாதியான தேஹத்தை விரும்பி ஆதரிக்க மாட்டார், ஸ்வரூபத்தையும் தேஹஸ்வபாவமுடையதாக நம்பவும் மாட்டார்.
———
ஸ்தல பரி சேஷித ஜலதே:ஸவிதே ஸஞ்ஜாத டம்பரம் ஜலதம்|
ப்ரஹஸந்தி பாண்ட்யநத்ய சுக்தி முகைர் மௌக்திகஸ் த்யாகை: ||–7-
(ப-ரை)
ஸ்தல பரிசேஷித ஜலதே – கடல் நீர் முழுவதையும் (ஒர் ஆசமனத்தால் உறிஞ்சித் தரையை மட்டும் மிச்சம் வைத்த (அகஸ்த்யமுனிவருடைய )
ஸவிதே – ஸமீபத்தில்,
ஸஞ்ஜாத டம்பரம் — (கொஞ்சம் ஸமுத்ர ஜலத்தைப் பானம் செய்து கர்வத்துடன்) இடி முழக்கி ஆடம்பரம் செய்யும், .
ஜலதம் – ஜலத்தை வர்ஷிக்கிறேனென்று உயரக் கிளம்பி நிற்கும் மேகத்தைப் பார்த்து,
பாண்டியநத்ய: – பாண்டிய நாட்டு நதிகள், (தாம்பிர பரணீ நதீ முதலியன),
மௌக்திகஸ் த்யாகை: – உள்ளே அடர்த்தியான முத்துக்களை உடைய (அதனால் சிரிப்பைப் போன்ற வெண்மை ஒளியுடைய),
சுக்தி முகை: – சிப்பிகளென்னும் முகங்களாலே,
ப்ரஹஸந்தி – சிரிக்கின்றன. (பரிஹாஸம் செய்கின்றன).
அவதாரிகைகளுடன் தாத்பர்யங்கள்:-
ரஸஸமுத்ரம் முழுவதையும் பானஞ்செய்து இனிய தமிழ் பாஷையை ஏற்படுத்தியவர் அகத்திய முனிவர்.
அந்தப் பாஷைக்கு ஏற்பட்டுள்ள ஸாரஸ்வதஸாரமும், முத்துக்களைப் பெறுவதும், மாயையென்னும் பவக் கடலை
உறிஞ்சிவிடுவதுமான தாம்பிரபர்ணீ நதீவெள்ளம் போன்ற குளிர்ச்சியையும் சுத்தியையுமுடைய
திவ்யப்ரபந்தங்களென்னும் பக்தி வெள்ளங்களான பாண்ட்ய தேச நதிகள் அந்த அகஸ்த்ய பாஷையைப் பழிப்பவரைப் பார்த்து சிரிக்கின்றன.
தமிழ் ப்ரபந்தங்களைப் பழிப்பவர் “எங்கள் ஸம்ஸ்க்ருத காவ்யங்கள் தான் ரஸத்தை வர்ஷிக்கும் மேகங்கள்.
தமிழ் ப்ரபந்தங்களில் ரஸமேது? அந்த ப்ரபந்தங்களை ஓதி ஜ்ஞானம் பெற்று முக்தி பெற்று முக்தராகக் கூடுமோ” என்று உரக்க கோஷிக்கிறார்கள்.
அகஸ்த்தியர் ஸமுத்திரத்தை உறிஞ்சியது போல, இவரால் ஏற்படுத்திய இனிய தமிழ் பாஷையை வரித்த
திராவிடப்ரபந்தங்கள் நம் ஸம்ஸாரக்கடலை முழுதும் உறிஞ்சி விட்டு, நம்மை ப்ரஹ்மரஸவெள்ளத்தில் முழுகச் செய்து
நம்மை முக்தரென்னும் முத்துக்களாக்குகின்றன.
தாம்பிர பரணீ நதி வெள்ளம் கணக்கற்ற முத்துக்களைப் பெறுவது போல அப்படியே அதன் தடத்திலவதரித்து எழுந்தருளியிருந்த
ஆழ்வார் ஸரஸ்வதிநதியும். தமிழ் ப்ரபந்தங்களை இகழ்வதைப் பாண்டிய நாட்டுச் சங்கப் புலவரும் ஸஹிக்கமாட்டார்.
அவை தமிழ்ச் சங்கங்கள் புகழும் நூல்கள். மேகம், நான் ஸமுத்திர ஜலத்தைப் பானம் செய்திருக்கிறேன்,
நான் ரஸத்தை வர்ஷிக்கிறேனென்று ஆகாயத்தில் உச்சிக்கு நேராய் கர்ஜிக்கிறது.
அது போல் சில மிதஜ்ஞரான கவிகள் உயரக் கிளம்பி உத்கோஷிப்பர்.
மேகநீர்த் திவிலை ஸ்வாதீ நக்ஷத்திரத்தில் சிப்பி நடுவில் விழுந்தால் ஓர் முத்தாகும் என்பர்.
இங்கே குழாம் குழாமாக அடியார்கள் ஆழ்வார்கள் கடாக்ஷம் பெற்று முக்தராகிறார்கள்.
தாம்பிரபர்ணிநதியை “முக்தாப்ரஸுதிர்ந்தீ’ என்று ஸர்யோதயத்தில் வர்ணிக்கப்பட் டது.
‘தெளியாத மறைநிலங்களைத் தெளியச் செய்யும்’ தமிழ் மறைகளைத் தமிழென்று அனாதரிப்பவர் நிபுணரல்லர்.
பூர்ணபண்டிதர்களிருக்கையில், அல்பஜ்ஞர் வீண் ஆடம்பரம் செய்வது நிபுணமன்று,அவர்கள் பரிஹாஸத்திற்கே இடமாவர்.
ஸமுத்ரத்தை முழுதுமோர் ஆசமனத்தால் உறிஞ்சி(ப்ரளயம் செய்து) தரையை மிச்சம் வைத்ததில் மற்றோர் ஆச்சரியம்.
மஹாப்ரளயத்தில் தரையெல்லாம் ஜலத்திற்குள் ப்ரளயமடையும்; தரையெல்லாம் ஜலமாகும்.
இந்த ஆசமன ப்ரளயத்தில் ஜலத்திற்கு ப்ரளயம். தரைக்குப் பரிசேஷம்.
இங்கே முத்துக்களின் ஒளி முறுவலுக்கு உவமை. சான்றோர் இடியிடியென்று சிரிக்கமாட்டார்.
சப்தமேயில்லாமல் மந்தஹாஸம் மட்டுமே.
—————
ப்ரதிபந்ந வாம த்ருஷ்டி: ஸ்தந இவ கச்சித் ஸமுந்நதோப் யதிகம் |
பதநமதி கம்ய ஸமயே பரிஹாஸ ரஸாவஹோ பவதி || .8.
(ப-ரை)
ஸ்தா இவ – தனத்தைப்போல,
ப்ரதிபந்தவாமத்ருஷ்டி : – ஸ்த்ரீயை ஆச்ரயித்த, (வக்ர த்ருஷ்டியை, வக்ர புத்தியையுடைய),
கச்சித் – ஒருவன்,
அதிகம் – மிகவும்,
ஸமுந்ததோzபி – உயர்த்தியை அடைந்தாலும்,
ஸமயே – ஓர் காலத்தில், (வாதப்போரில், தர்சனத்தில், அதாவது. மதத்தில்)
பதநம் – பதனத்தை , (வீழ்க்கையை),
அதிகம்ய- அடைந்து,
பரிஹாஸரஸாவஹோ பவதி-சிரிப்பிற்கு ஆளாவான்.
அவதாரிகைகளுடன் தாத்பர்யங்கள் –
தத்துவங்களை ருஜுவாகப் பாராமல் குத்ருஷ்டியால் வக்ரமாகப் பார்த்து, குதர்க்கங்களால் சப்தாடம்பரம் செய்து,
தன் தப்பு ஸமயத்தை (தர்சனத்தை)ஸாதிக்கத் தொடங்கி தன் கக்ஷியை உயரமாக ஓங்கச் செய்தது போல
கர்வப்பட்டவன் தன் குதர்க்கங்கள் வீணாகித் தன் கக்ஷி கீழே நிஸ்லாரமென்று விழுந்தவுடன், சிரிப்புக்கு இடமாவான்.
அல்ப ஸ்வபாவனாயிருப்பவ னொருவன் ஏதோ ஓர் அத்ருஷ்டத்தால் (லக்ஷ்மீ கடாக்ஷத்தால்) ஐச்வர்யத்தைப் பெற்றதும்
மதமேறி கர்வித்திருக்கையில், ஐச்வர்யம் நழுவிக் கீழே விழுந்ததும் சிரிப்புக்கு இடமாவான்,
” ஒரு நாயகமாய் ஓட உலகுடனாண்டவர் கருநாய் கவர்ந்த காலர் சிக்கிய பானையர் பெருநாடு காண இம்மையிலே பிச்சைதாம் புகுவர் ”.
ஐச்வர்யம் வந்த காலத்திலும் அடக்கமாக ஒரே சீராயிருந்தால், அது நழுவினாலும் சிரிப்புக்கு இடமாகார்.
‘அதிகமான உச்ராயம் (உயர்த்தி) பதனத்திற்கு ஹேது’வென்பர். ‘பதநாந்தா: ஸமூச்ரயா:’ என்றார்
பரதனிடம் ராமன், இங்கே ஸ்த்ரியின் ஸ்தனத்தை த்ருஷ்டாந்தமாக எடுத்தது மிகவழகு. ‘வாமத்ருஷ்டி’ என்று ஸ்த்ரீக்குப் பெயர்.
ஓர் ஸ்த்ரீயை ஆஸ்ரயித்த தனமென்பது யௌவனத்தில் மிக்க உயர்த்தியையும், காடிந்யத்தையும் அடையும்.
‘துங்கஸ்தனம்’ (உந்ததமான ஸ்தனம்), ‘பர்வதஸ்தனம்’ என்று வர்ணிப்பர். அதனால் மிகக் கர்வமிருக்கும்.
வயதானதும் விழுகையை அடையும் போது, கொண்ட கர்வமெல்லாம் போகும் ; பரிஹஸிக்கவிடமாகும்.-காற்றுப்பை போல்’ என்பர்
உண்மையான ஸாரமில்லாதவரை. மாம்ஸ சோணித மயமான ஸ்தன பரத்தைப் பார்த்து மோஹமடையாதே, என்றார் ‘ பஜகோவிந்தத்தில் ‘,
“புஜிக்கைக்கீடான யோக்யதை குன்றினவாறே மிகவும் பரிபவிக்கப்படுவர்” என்று “கொண்ட பெண்டிரில்” பிள்ளானருளிச்செய்ததை நினைக்கவும்.
தர்ம பத்னியிடம் மிக்க அன்பிருப்பது உசிதமே. அந்த அன்பு உடம்பைப்பற்றிய தாகவிராமல், ஆத்மாவைப்பற்றியிருப்பது ரஸம்.
ஆத்மாவுக்கு ஜரையில்லை. விகாரமில்லை. ‘ஜாஸா யஸ்மித்அஹார்யோரஸ.’ என்றார் ராமன்
ஸீதைக்கும் தமக்குமுள்ள தாம்பத்ய ஸ்நேகத்தைப்பற்றி. முக்யமாக பரஸ்பரம் ஆத்மாவைப் பற்றியதாயுள்ள தாம்பத்ய ஸ்தேஹாஸம் மூப்பினால் குறையாது;-விகாரமடையும் உடலைப்பற்றியும் உடம்பு அழகு என்பதைப்பற்றியுமிருந்தால், முன்னிருந்த போக ரஸம் போய் மற்றோர் ரஸம் வருமென்கிறார்.
அதென்ன ரஸமென்றால், ‘பரிஹாஸரஸம்’ என்பது அழகு. தன்னையும் தான் பரிஹஸிக்க நேரிடும்.-பர்த்தா வுள்பட பிறரும் பரிஹஸிக்க நேரிடும்.
தர்மானுஷ்டானத்தில் தோழி என்றும், ஸந்தானத்தின் பொருட்டு ப்ரணய ஸம்போகா நுபவம் என்றும்,
தர்ம ப்ரதானமாக கரமரஸமிருந்தால், இப்படிச் சிரிப்புக்கிடமே வராது. மற்றோர் ஹாஸ்யரஸம் வராது.
‘ஸமயம்’ என்பது வாதஸமயத்தையும், தர்சனமென்னும் ஸமயத்தையும் சொல்லும்.
இங்கே குத்ருஷ்டிகளாயிருப்பவருடைய ஸமயங்கள் ஸபையில் வாதத்தில் கீழே விழவே விவேகிகளுக்குப் பரிஹாஸத்திற்கு இடமாகும் என்பது கருத்து.
————–
புஹு வித தத் யுபகாராந் குப்த்யா துரிதம் ப்ரகாச்ய பிதததி ச|
ஸுஹ்ருதி விஹிதா ஹித மதி: யந்த ப்ரத் யுபகரோதி ந தத் || (9)
(ப-ரை)
உபகாராந் – உபகாரங்களை;
பஹு – அநேகக் கணக்காக;,
குப்த்யா – தெரியாமல்,; (மறைவாக),
விதததி – செய்து கொண்டும்;,
பஹு – அநேக;,
துரிதம் – அபராதத்தை;, (பாபத்தை),
குப்த்யா – ரஹஸ்யமாய்;,
ப்ரகாச்ய – தெரியப்படுத்தி;,
பிதததி ச – மறைப்பவருமான;,
ஸுஹ்ருதி – ஸ்வபாவ ஸுஹ்ருத்தான ஈஶ்வரனிடமும் (குருவினிடமும்) (தோழனி டமும்);,
விஹிதா- செய்யப்பட்ட;,
ஹித மதி – ஹித புத்தியானது;,
ந ப்ர த்யுபகரோதியத் — பிரத் யுபகாரத்தைச் செய்யாமலிருப்ப தென்பதற்குக் காரணம்;,
ந தத் – (தக்க பிரத்யுபகாரம் என்பது இல்லாததே. அல்லது,
விஹி தாஹிதமதி: — (சிஹித அஹி தமதி:) – பிரதிகூலமென்கிற புத்தியைப் பண்ணி;,
ந ப்ரத்யுபகரோதியத் – பிரத்யுபகாரம் செய்கிறதில்லை என்பது;,
ந தத் – அது நிபுணமன்று, அல்லது,
விஹிதா ஹிதமதி: யந்த ப்ரத்யுபக ரோதி) – பிரத்யுபகாரம் செய்ய நினைத்தால் அவருக்குக் கஷ்டம் வருவதை அபேக்ஷிப்பதால்
அவருக்கு அஹிதமென்று எண்ணி ப்ரத் யுபகார சிந்தை செய்யா விடில், அது ப்ரத் யுபகாரம் செய்யாமை என்றும் குற்றமாகாது.
அவதாரிகைளுடன் தாத்பர்யங்கள் :-
ஈஸ்வரன் தன்னுடைய ஸஹஜமான கருணையினால் நமக்குத் தெரியாமல் எத்தனையோ உபகாரங்களைச் செய்து கொண்டே வருகிறான்.
நாம் பாபங்களைப் பண்ணும் பொழுது உள்ளே அந்தராத்மாவாக இருந்து கொண்டு பிறருக்குத் தெரியாமல்
ஏகாந்தமாக நமக்கு மட்டும் பாபமென்று தெரியும்படி பிரகாசிப்பித்து, இதைச் செய்யாதே என்று எச்சரிக்கிறான்.
ஆனால் அப் பாபங்களைப் பிறர்களுக்குப் பிரகாசப்படுத்தாமல் மறைத்து வைத்து
இவன் அநுதாபப்படும் காலத்தில் அடியோடு அவற்றை மன்னித்து மறையச் செய்கிறான்.
இவ்வளவு ஸுஹ்ருத்தான ஈஸ்வரனிடம் அநுகூல புத்தி பண்ணும் ஆஸ்ரிதன் அவனுக்கு ப்ரத்யுபகாரம் என்னதான் செய்யக்கூடும்?
எது செய்யினும் அவ்வுபகாரங்களுக்குக் கைம்மாறாகா தென்று கை வாங்குவதைத் தவிர வேறென்ன நாம் செய்யக்கூடும் என்று எண்ணலாம்.
இப்படியே ஆசிரியர்களும் நமக்கு எல்லையற்ற உபகாரங்களைச் செய்து கொண்டு,
நம்முடைய அநேக குற்றங்களையும் வெளியில் பிறருக்குப் பிரகாசப் படுத்தாமல் மறைத்து நமக்கு மட்டும் ஏகாந்தமாகப் பிரகாசப்படுத்தி நம்மைத் திருத்துகிறார்கள்.
குருக்கள் ஏதாவது தவறினால் ரஹஸ்யத்தில் அவர்களுக்கு அதை விஜ்ஞாபிக்க வேண்டியது போல,
எல்லையற்ற கருணையினால் சிஷ்யரான நம்மை ஏகாந்தமாகத் திருத்துகிறார்கள்.
இப்படிக்கொத்த பரம ஸுஹ்ருத்துக்களான ஆசிரியர்களுக்கு நாம் என்ன கைம்மாறு செய்யக்கூடும் ?
அவருக்கு “ ஒரு கைம்மாறு மாயனும் காணகில்லான் ” என்று நினைத்து அவர் விஷயத்தில்
( போற்றி உகப்பதும் புந்தியிற்கொள்வதும் பொங்கு புகழ்ச் சாற்றிவளர்ப்பதுஞ் சற்றல்லவோ முன்னம் பெற்றதற்கே” என்றபடி இருக்கப் பிராப்தம்.
இப்படி உபகரிக்கும் ஈஸ்வரனிடமும் ஆசிரியர்களிடமும் பிரதிகூல புத்தியைப் பண்ணி அவர்களிடம் கிருதஜ்ஞதை பாராட்டாதவர்
ஒரு பொருளல்லர். ஒரு பொருளாக மதிக்கத் தக்கவரல்லர். முன் பாதியில் சொன்னபடி ஆசிரியர்களுக்கு உபகரிக்கும் ஸுஹ்ருத்தான சிஷ்யரிடத்தில்
பிரதிகூலபுத்தி பண்ணி அவனுக்கு உபகாரம் செய்யாத ஆசிரியரும் ஒரு பொருளாக மதிக்கத் தக்கவரல்லர்.
ஹநுமாரே நீர் எனக்குச் செய்த உபகாரம் என்னுள்ளேயே ஜரித்து விடட்டும். (உபகாரம் செய்தவருக்கும்) ப்ரத்யுபகாரம் செய்ய எண்ணுகிறவன்
அவ் வுபகாரிக்கு விபத்து வர வேண்டும் என்று ப்ரார்த்திப்பவனாவான்’ என்று
ராமன் வார்த்தையை நினைத்துப் பொருள் கொள்ளுவதும் ஸ்வ ரஸம்.
————
தாந் க்நந்தி ஹந்த சாந்தம் யேப்ய: ஸித்யே யுரஸித வர்த்மாந: |
அகணித நிஜ ப்ரணாசை: கிமாச்ரயாசை: அனாச்யமிஹ || (10)
(ப – ரை)
யேப்ய: – எவரிடமிருந்து (எங்கிருந்து);
அஸிதவர்த்மாந: – கெட்ட மார்க்கத்தில் செல்லுமவர்; (கருப்பான புகையை யுடைய நெருப்புகள்);
ஸித்யேயு: – உண்டாகின்றனரோ (ஸித்தியைப் பெருகின்றனரோ);
தாந் – அந்த (தங்களுக்கே மூலமான) ஆச்ரயங்களை;
க்நந்தி ஹந்த – அநியாய மாய் அழிக்கிறார்கள்;
சாந்தம் . இவர்கள் கொடிய செய்கையைப் பேசுவது கூட பாபமென்று பேசாமல் இருப்பது உசிதம்.
இவர்களைப்பற்றிப் பேசிய பாபம் ஈஸ்வர கிருபையால் சாந்தி அடைய வேண்டும்,
அகணித நிஜ ப்ரணாசை: – தங்களுக்கே நாசம் வருவதையும் சுவனியாமல்;
ஆஸ்ரயாசை: – தங்களுக்கு மூலமான ஆஸ்ரயங்களையே த்வம்ஸம் செய்பவர்களால் (பக்ஷிப்பவர்களால்);
இஹ – இங்கே ,
கிம் அநாஶ்யம்– எது தான் நாசம் செய்யப்படமாட்டாது (எது தான் பக்ஷிக்கப் பட மாட்டாது).
அவதாரிகைகளுடன் தாத்பர்யங்கள் –
உபகாரம் பெற்றவர்களிடம் ப்ரத் யுபகாரம் செய்யாதவர் ஒரு பொருளாகா ரென்றார்.
தன்னையே ஒரு ஆளாக்கி தன் ஸித்திக்கே மூலமான உபஜீவ்யர்களுக்கு (ஆச்ரயமானவர்களுக்கு) தாங்களே
த்ரோஹியாகி அவர்களைக் கொல்லும் கொடியவர்களை என்னென்று சொல்லலாம்.
நெருப்பு இப்படி தன் ஸித்திக்குக் காரணமான ஆச்ரயத்தையே பக்ஷித்து த்வம்ஸம் செய்து, அதோடு தானும் நாசம் அடைகிறது.
மரங்கள் ஒன்றோடொன்று உரசி அதிலிருந்து நெருப்புண்டாகும். அந்நெருப்புக்கு மூலகாரணமும் அது எரிவதற்கு ஆச்ரயமும் மரங்கள்.
அம்மரங்களையே விறகாகக்கொண்டு நெருப்பு எரியும். விறகன்றியில் எரியாது.
தனக்கு உபஜீவ்யமான மரங்களையே அது பக்ஷித்து மரங்களையும் நாசம் செய்து விறகு இல்லாததினால் தானும் நாசம் அடைகிறது.
நெருப்பிற்குப் புகையும் இருப்பதால் நெருப்பை கருப்புமார்க்கமுள்ளது
(கிருஷ்ணவர்த்மா, அஸிதவர்த்மா ) என்று சொல்லுவர். ‘ஸித’ என்றால் ‘வெளுப்பு’ ‘அஸித’ என்றால் ‘கருப்பு’.
அந்த நெருப்பின் கிருஷ்ண மார்க்கத்தையே மூலாச்ரயத்திற்கே சத்ருவாகும் கொடியவர்கள் அனுஸரித்தவர்.
நெருப்பு எப்படி தன்னுடைய ஆச்ரயபக்ஷணம் என்னும் கொடிய செய்கையால் தானும் உடனே தத்க்ஷணமே
அக் கொடிய செய்கையின் பயனாக நாசத்தை அடைகிறதோ, அப்படியே உபஜீவ்யருக்கு விரோதம் செய்பவர் உடனே தாமும் நாசமடைவார்.
அத்யுத் கடமான பாபங்களுக்கு உடனே தண்டனை கிடைக்கும்; இங்கேயே கிடைக்கும்.
விஷ விருக்ஷமாயினும் அதை வளர்த்தவர், அதை தானே வெட்டலாகாதென்பர்.
ஒருவரால் வளர்க்கப்பட்டவர் வளர்த்தவரையே த்வம்ஸம் செய்வதென்பது நியாயமாகுமோ ?
உபஜீவ்யமான பிரமாணங்களை நாசம் செய்வது உசிதமல்ல என்பதும் இங்கே ஓர் கருத்து.
கல்யாண குணங்களுடைய ஈஸ்வரனை உபாஸித்து அவரனுக்ரஹத்தைப் பெறுவதாலும்,
வேதங்களையோதி தத்வஜ்ஞானத்தைப் பெறுவதாலும் மோக்ஷத்தை அடைய விரும்புகிறவர்
உயஜீவ்யமான வேதங்களை அஸத்யமென்று மறுதளிப்பதும்,
தமக்கு அநுக்ரஹம் செய்யும் கல்யாணகுணங்களுடைய ஈஸ்வரன் உண்மையில் இல்லையென்று மறுதளிப்பதும்
உபஜீவ்யவிரோதமென்னும் கொடிய தோஷமென்பது கருத்து.
அஹமர்த்தமென்கிற தன்னுடைய நாசத்தையும் எண்ணுகிறார்களில்லை. இதெல்லாம் நிபுணமல்ல.
——————-
நவதளபுடே கல்ப்யா யஸ்ய ப்ரபோரபி தல்பதீ:
நடபரிப்ருடோ யஸ்யா தஸ்தாத் ச்ரமம் சமயிஷ்யதே |
வடவிடபிகஸ்தஸ்யாங்கூராநநுத்கடபல்லவாந்
ஸ்தபுட சடகாபேக்ஷீ பிக்ஷு;ப்ரதிக்ஷண மீக்ஷதே|| (11)
(ப-ரை)
யஸ்ய வடவிடபிந – எந்த ஆலமரத்தினுடைய;
நவதளபுடே இளம் இலையில்,;
ப்ரபோரபி– ஜகத் பிரபுவான ஈஸ்வானுக்கும்,;
தல்பதீ – படுக்கை என்கிற புத்தி;
கல்ப்யா – ஏற்படக் கூடியதோ ,;
யஸ்ய – எதனுடைய;
அதஸ்தாத் – கீழே;
நடபரிப்ருட – நடராஜரென்னும் பிரபு;
ச்ரமம் – சிரமத்தை,;
சமயிஷ்யதே – போக்கிக் கொள்ளுவரோ;
தஸ்ய வட விடபிந: – அந்த ஆலமரத்தினுடைய,;
அதுத்கடபல்லவாந் —இளங்கொழுந்துகளையுடைய,;
அங்கூராந் – இலை முளைகளை,;
பிக்ஷு – ஸந்யாலியாயிருப்பவர்;
ஸ்தபுடசடகாபேக்ஷீ – நடுவில் பள்ளமுள்ள தொன்னையாக உதவும் இலையாகுமோவென்று,;
ப்ரதி க்ஷணம் – ஒவ்வொரு கூணமும்;
ஈஷதே — பார்த்துக் கொண்டே கார்க்கிறார்.
ஆலிலை வர்ஜ்யம் – நிஷித்த மென்பதையும் கவனிப்பதில்லை-.
அவதாரிகைகளுடன் தாத்பர்யங்கள் –
குடும்பத்தையும் வீடு வாசலையும் விட்டு விட்டு ஸந்யாஸாஸ்ரமத்தைக் கைப்பற்றி கிராமைகராத்ரமாகத் திரிந்து
பிக்ஷாடனம் செய்ய வேண்டியவரும் ஈஸ்வரனை ஸர்வதா த்யானித்துக்கொண்டும் அவன் நாமங்களை உச்சரித்துக்கொண்டும்,
சாஸ்த்ர நிஷித்தங்களைச் செய்யாமலும் ஸ்வ ப்ரயோஜனத்தை அடியோடு சுருதாதவராயும் இருக்கவேண்டியது கடமை.
ஸந்யாஸிகள் கூட எப்பொழுதும் தனத்தை மேல் மேலும் சேகரிக்கவே யத்தினப்படுகிறார்களென்று ஸங்கல்ப ஸுரியோதயத்தில் ஸ்வாமி சோகத்தைக் காட்டினார்.
வடவிருக்ஷத்தையும் பசுமையாய் தழைத்திருக்கும் அதன் இலைகளையும் பார்த்தால் வைஷ்ணவ ஸந்யாஸிகளுக்கு,
பாலனாய் ஏழுலகுமுண்டு ஆலிலை மேல் அன்னவசம் செய்யும் அண்ணலாரான ‘ பகவானுடைய ஞாபகம் வந்து
கண்ணும் கண்ணீருமாக அந்த ஆனந்த நினைப்பிலேயே முழுகவேணும்.
சைவ ஸந்யாஸியாக இருந்தால் ‘ தாக்ஷிணாம்ய ரம்யா கிரிஶஸ்ய மூர்த்தி”’ என்றபடி அழகிய தக்ஷிணாமூர்த்தி
வடவிருக்ஷத்தினடியில் குளிர்ந்த நிழலில் தம் சிரமத்தைப் பரிஹரித்துக் கொண்டு சிஷ்யர்களுக்கு ஞானோபதேசம்
செய்ததை நினைத்தும் தக்ஷிணாமூர்த்யஷ்டகத்தை யநுஸந்தித்தும் ஆனந்தப்படுவதும் உசிதம்.
ஆலிலையைப் பறித்து சாப்பிடுவதற்குப் பாத்ரமாக்கி எச்சலாக்க ஆஸ்திகர் நினைப்பரோ?
ஈஸ்வரன் விஷயமான சிந்தையை செய்ய வேண்டியது உசிதமாயிருக்க எல்லாவற்றையும் துறந்து விட்டேன்
என்னும் துறவியும் தொன்னைக்குதவக்கூடிய இலையாக ஆலந்துளிர் வளருமோவென்று முளை விடுவது முதல்
அங்குரங்களைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கிறார்களே என்கிற சோகம்.
ஈஸ்வரனை நினைக்க வேண்டிய ஸாமக்ரிகளைப் பூர்ணமாகப் பார்த்தும் சாஸ்திர நிஷேதம் தெரிந்தும்
நாஸ்திக்யத்தைப் பற்றி ஸ்வார்த்த பரராகவே இருக்கிறார்கள். துறவிக்கு நாஸ்திகத்வம் நிபுணமாகுமோ?
சாஸ்திர நிஷித்த போகத்திலாசையிருந்தால் ஏன் இப் பக்ஷத்திலேயே இருக்கக்கூடாது ?
இரண்டு கைகளையும் கூட்டி அஞ்சலியால் தண்ணீர் அருந்துவது ஸுலபமாயிருக்க ஏன் பாத்திரங்களைத் தேட வேண்டுமென்றார் சுகர்.
ஒரு பிரஸிருதி (கையளவு) ஜலம் போதாதா தாஹத்தை சமநம் செய்ய என்று வைராக்ய பஞ்சகம்.
“பாணி த்வயத்தை உண்ணும் பாத்திரமாக அமைத்துக் கொண்டு கௌபீநம் மட்டும் தரிப்பவர் பாக்யவான்கள்’
என்று யதிபஞ்சகம். ஸந்யாஸிகளாகியும் இப்படியிருப்பது அநிபுணமே.
கவலையின் நீட்டத்தைக் காட்ட ‘அங்கூர’ என்ற நீட்டிய ப்ரயோகம்.
காவ்யங்களில் வாசிக்கும் ரஸிகரொருவருக்கும் உத்வேகம் இல்லாமல் கூடிய மட்டும் தாடஸ்த்யத்தைக் கைப்பற்ற வேண்டுமென்று நியமமுண்டு.
‘யத்ரோத்வேகோ ந தீமதாம்’ என்று நியமம். ஸ்வ மதத்தை விட வேண்டியதில்லை; பிறருக்கு வீணே உத்வேகமுண்டாக்கக்கூடாது.
இந்த நியமம் ஹம்ஸஸந்தேசாதி காவ்யங்களில் காப்பாற்றப்படுகிறது.
இந்தக் காவ்யத்திலுமப்படியே. நடராஜருடைய ஸந்த்யா நர்த்தனத்தை ஸ்வாமி வர்ணித்திருப்பது போல் வேறெங்கும் பார்க்கமுடியாது.
‘தக்ஷிணா மூர்த்தியின் ரம்யதையில் ரஸமுள்ளதே; ஆனால் அந்த ரம்யதைக்கும் மூலமொன்றுண்டு’ என்று ஹயக்ரீவ ஸ்தோத்ரம்,
நடராஜர் நர்த்தனம் செய்த ஸ்ரமத்தை வட வ்ருக்ஷ மூலத்தில் ரம்யமான தக்ஷிணா மூர்த்தியாக இளைப்பாறிப் போக்கிக் கொள்ளுகிறார்,
உலகத்தின் ஸம்ஸார ஸ்ரமத்தையும் சமனம் செய்கிறார் என்று நிரூபணம்.–
———-
நிரவதி குண க்ராமே ராமே நிராகஸி வாகஸி
ஸ்புரண முஷிதாலோகா லோகா வதந்தி ஸதந்திகே|
வரதநுஹதிம் வாலி த்ரோஹம் மனாகப ஸர்ப்பணம்
பரிமித குணே ஸ்பஷ்டாவத்யே முதா கிமுதாஸதே ||–12-
(ப–ரை)
நிராகஸி – தோஷமற்றவரும்,
நிரவதிகுணக்ராமே – எண்ணற்ற குணங்களுக்கிருப்பிட மானவருமான,
ராமே – (எல்லோரையும் ஆநந்திக்கும்) ராமன் விஷயத்தில்,
ஸதந்திகே – பெரியோரான ஸத்துக்கள் காது கேட்க,
வாகஸிஸ்புரணமுஷிதாலோகா: – நாக்கென்னும் கத்தியை அசக்குவதால் (வீசுவதால்) இருட்டடைந்த புத்தியையுடைய,
லோகா: – ஜனங்கள்,
வரததுஹதிம் – ஸ்திரீயை (தாடகையை)க் கொன்றதையும்,
வாலித்ரோஹம் – வாலிவதத்தையும்,
மனாகபஸர்ப்பணம்– (கரயுத்தத்தில்) கொஞ்சம் விலகினதையும்,
வதந்தி – பேசுகிறார்கள்.
ஸ்பஷ்டாவத்யே – ஸ்பஷ்டமான குற்றங்களையுடைய,
பரிமிதகுணே – ஸ்வல்ப குணமுடையவன் விஷயத்தில்,
கிமிதி – என்ன காரணத்தினால்,
முதா – வீணே,
உதாஸதே – வாயை மூடிக் கொள்ளுகிறார்களோ?
அவதாரிகைகளுடன் தாத்பர்யங்கள் –
ஸுஜன ஸார்வபௌமரான ராமனை நிர்தோஷ கல்யாணகுணாகரரென்று இப்பத்ததி முடிவில் பாடுவதற்காக,
ராமன் கதையாகிய ராமாயணத்தைக் கேட்டும், ராமனைத் தூஷிக்கும் துர்ஜனருடைய தௌர்ஜந்யத்தையும், அசட்டுத்தனத்தையும் காட்டுகிறார்.
ராமாயணம் கேட்கப் பாக்யம் பெற்றும், ராமன் திருவடிகளில் விச்வாஸம் வைத்து ஒரு தரம் அடைக்கலம் புகுந்து
எளிதில் பேரின்பம் பெறும் பாக்யத்தை இழப்பதுமன்னியில், ராமனையே தூஷித்து
வீணே பாபச்சுமையை ஸம்பாதிப்பதெத்தனை அநிபுணமென்று காட்டி இப்பத்தியை முடிக்கிறார்.
சத்ருக்களாலும் ‘வடிவெடுத்த தர்மம்’ ‘விக்ரஹவான் தர்ம:’ என்றும், ‘ப்ரக்யாதவீர்யரான சத்ரு’ என்றும் புகழப்பட்டவரைத் தூஷிக்கிறார்கள்.
ஸமானகாலத்து சத்ருக்கள் புகழ்கிறார்கள். இப்பொழுது இவர்கள் இகழ்கிறார்கள்.
சாமாந்யரையும் தூஷிக்கலாகாது, புருஷோத்தமனாகிய ராமனைத் தூஷிப்பவருக்கு நற்கதி கூடுமோ?.
அபிஜாத புருஷருக்கு அடையாளம் அநபிபவகந்தர: பரகதா:’ என்றார் பர்த்ருஹரி.
பரரை (பிறரைப் பற்றிப் பேசுவதில் இழ்ச்சி லேசமுமிருக்கலாகாது; உத்தமபுருஷனான
‘பரன்’விஷயத்திலேயே இம் மஹாபுருஷர்களிப்படிப் பேசுகிறார்களே.
‘ராமனிலும் ராவணனே சிறந்தவன்’ என்று ப்ரபலமாகக் கக்ஷி சொல்லி புத்தகங்களெழுதப்பட்டுள. வேடிக்கையாய்
குழந்தைகள் செய்த தர்க்கத்தில் ஓர் நாடகத்தில் லவன் பேசின மூன்று தூஷணங்களை இங்கே குறிக்கிறார்.
அதில் தாடகையைக் கொன்றது ஒன்று. அவள் பிள்ளை ‘ ‘மாரீசன் ‘. அவன் ராவணனிடத்தில் ‘ராமோ விக்ரஹவாந் தர்ம.’ என்று புகழ்ந்தான்.
தன் தாயைக் கொன்றது அதர்மமென்று அவன் தூஷிக்கவில்லை. ஆண்பிசாசைத் தானோட்டலாம், பெண் பிசாசை ஒட்டினால் பெண்பாவம் என்பரோ?
‘வரதநு’ என்று ஸத்ரீக்குப் பெயர். ‘அழகான வடிவையுடையவள்’ என்றும் பொருள்.
தாடகையின் கோர ரூபமும், மனுஷ்யர்களைக் கொன்று தின்னும் புருஷாதியான சீலமும் ப்ரஸித்தம்.
‘ வரதநு ‘ என்பது விபரீதப் பெயெரன்பது ரஸம், தன் தாயைக் கொன்ற ராமனை மாரீசன் தர்மமூர்த்தி என்று புகழ்ந்தான்.
இதைத் தூஷணமாகச் சொல்லுவது எப்படிப் பொருந்தும்?
வாலிவதத்தைத் தோஷமென்று தூஷிப்பதும் வீணே. ஸீதையை ராவணன் அபஹரித்ததையும், ராமன் கதறி சோகஸாகரத்தில் மூழ்கியிருந்ததையும் வாலி அறிந்தவனே.
சத்ரு இருக்குமிடம் தெரியாமல் ராமன் கஷ்டப்படுகிறார். ஒரு நாட்பொழுதில் உம்மிடம் மைதிலியைக் கொண்டு
வந்திருப்பேனே; ராவணனைக் கொல்லாமல் கழுத்தில் கட்டி உம்மிடம் கொண்டுவந்து கொடுத்திருப்பேனே’ என்று பின்னால் பேசினான்.
ஈஷத்தேனும் கிஞ்சித்காரம் செய்யத் தோன்றவில்லை. சரணாகத ரக்ஷணத்திற்கும் கனிஷ்ட ப்ராதாக்களை லாலனம் செய்யவும் அவதாரம்.
வாலி இதற்கெல்லாம் நேர் விரோதி. ராமனுக்கு முக்ய தர்மம் ஆந்ருசம்ஸ்யம்; வாலியின் சீலம் ந்ருசம்ஸதை. சரணாகதனான
தம்பியைக் கடுமையாய் ஹிம்ஸிப்பவன். தண்டகாரண்யத்தில் ருஷிகள் ஹிம்ஸிக்கப்பட்ட விஷயத்தில் வாலியின் பலத்தால் என்ன ப்ரயோஜனமிருந்தது?
லோகத்ரய கண்டகனான ராவணனிடமிருந்து வாலி லோகத்தை ரக்ஷிக்க முயன்றானா ?
எதிரில் யார் அவனேடு யுத்தம் செய்தாலும் அவர் பலத்தில் பாதி அவனுக்குச் சென்று விடுமென்று வரம் வாங்கினான்.
அந்த சக்தி ‘அத்ருஷ்டசக்தி; த்ருஷ்டமான இவன் சக்தியில்லை. எதிரியின் பாதி சக்தி குறைந்து போவதும் எதிரியின் வீர்யக்குறைவன்று.
‘எதிரி யுத்தத்தில் குறைந்தான். இந்த்ரபுத்ரன் விருத்தி யடைந்தான்’ என்று துந்துபி யுத்தத்திலும் ஸுக்ரீவயுத்தத்திலும் காண்கிறோம்.
அது வரத்தின் அத்ருஷ்ட மஹிமை. இப்படி வரம் பெற்றவன் தன்னுடைய எதிரி எதிர் நின்று த்ருஷ்டமாய் யுத்தம் செய்ய
வேண்டுமென்று வீர வ்ரதமுறையை அபேக்ஷிக்க ந்யாயமில்லை. எதிரியின் பலத்தில் பாதியை வரமஹிமையால்
பிடுங்கிக்கொண்டு உண்மையில் தன்னிலும் பலிஷ்டனோடு செய்யும் யுத்தம் தர்மயுத்தமாகாது.
ப்ரஹ்மா கொடுத்த வரத்தைப் பொய்யாக்குவது உசிதமன்று. ஏன் ஸந்த்யையில் ந்ருஸிம்ஹன் ஹிரண்யனோடு போர் புரிந்தார்?
பகலில் யுத்தம் செய்யக்கூடாதா ? அவர் வீரனாவரோ என்று கேட்கலாமோ?
உலகத்திற்கு ராமவாலிகளின் பலதாரதம்யத்தையும் அவர்கள் பாணங்களின் சக்தி தாரதம்யத்தையும் தெரியச் செய்ய
பரோக்ஷத்தில் ஸுக்ரீவன் செய்த இரண்டு பரீக்ஷைகளாலே ராமன் பலமதிகம் என்று மூதலிக்கப்பட்டது.
வாலி பெற்ற வரத்தை உத்தேசித்து பரோக்ஷத்தில் தான் பரீக்ஷிக்கலாம்.
தாத்பர்ய சந்த்ரிகையில் ஸப்த ஸாலங்களை ‘நிஷ்பத்ரீகரணம் பண்ணின வ்ருத்தாந்தத்தை அழகாக நிரூபித்துளது.
ஸுக்ரீவனுக்கு ஸந்தேஹம் தெளிந்தும் நாம் ஸந்தேஹப்படலாமோ?
ராமனுடைய ஸமாதானங்களை வாலி முழுவதுமேற்றுக் கொண்டு, தான் தூஷித்தது தப்பென்று நன்றாய்
மனந்தெளிந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டான்,
ந தோஷம் ராகவே தத்யௌ தர்மேZதி கதநிச்சய:’ தர்மத்தில் நிச்சயத்தை அறிந்து ராகவனிடம் தோஷத்தை எண்ணவில்லை’.
உன் ஹ்ருதயத்திலும் (ஸர்வபூதங்கள் ஹ்ருதயத்திலும்) உள்ள அந்தராத்மா தர்மாதர்மங்களை அறிவார் ,
உன் அந்தராத்மாவை நீ ஸாக்ஷியாகக் கேள் என்றார். அவன் அப்படியே தன் ஹ்ருதயத்தையே சோதித்துக்கொண்டு த்ருப்தி அடைந்தான்.
அவன் குற்றம் அவனுக்குத் தெரியுமா, நமக்குத் தெரியுமா? ‘தாரை தடுத்தும் உம்மிடம் பதம் பெற விரும்பியே நான் தம்பியோடு சண்டைக்கு வந்தேன்’ என்றான் வாவி
முடிவில். ‘மனுஷ்ய ரூபமாய் தேவர்கள் பூதலத்தில் ஸஞ்சரிக்கிறார்கள்’ என்று பெருமாள் அவனுக்குத் தாம் தேவன் என்பதை வ்யஞ்ஜனம் செய்தார்.
இந்த்ர புத்ரனான அர்ஜுனன் விஸ்வரூப அத்யாயத்தில் ‘உன் மஹிமையை அறியாத (அஜாநதா) என்னாலே
உம்மைச் செய்த அவமதிப்பையெல்லாம் மன்னித்தருள வேண்டும்’ என்று ப்ரஸாதனம் செய்தான்.
இந்த்ர புத்ரனாகிய வாலியும் அறியாத என்னாலே (அஜாநதா மயா) நீர் தூஷிக்கப்பட்ட இக்குற்றத்தை ப்ரபுவே
நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளுவதை ஒப்பி க்ஷமித்தருளவேண்டும்’ என்றான்.
வாலி ஒப்புக் கொண்டும் நாம் ஒப்புக் கொள்ள வில்லை யென்பது உசிதமோ ?
விபீஷணனுக்கு அபயமளித்தேன் பயத்தை விடு’ என்றார். அர் ஜுனன் சோகத்தாலும் மோஹத்தாலும் பீடிக்கப்பட்டு சரணம் புகுந்தான்.
சோகப்படாதே’ என்றார் சரமச்லோகத்தில், நஷ்டோ மோஹ’ (மோஹம் போயிற்று) என்றான் அர்ஜுனன் முடிவில்
அதைக் கேட்டு. வாலிக்கு அநுக்ரஹித்த சரம ஸ்லோகங்களில், பத்யஜ சோகம் சமோஹம் ச பயம் ச ஹ்ருதயஸ்திதம்’ என்று
ஹ்ருதயத்திலுள்ள சோகம் மோஹம் பயம் எல்லாவற்றையும் விடு’ என்று அருள்புரிந்து அபயமளித்து,
‘கத: ஸ்வாம் ப்ரக்ருதிம் தர்ம்யாம்’ என்றும் அவனுக்கு ஸ்வ ஸ்வரூபாவிர்பாவத்தைத் தந்த அழகைக் கவனிக்க வேணும்.
கரயுத்தத்தில் ‘கரன் பாணங்களால் துளைபட்டு ரக்தலீச்சு துர்கந்தம் வீச மத்தனாக மேலே விழவருகையில்
வில்லை வளைத்து பாணத்தைத் தொடுக்க, இரண்டு மூன்றடி ஒதுங்கினார், பின்வாங்கவில்லை.
‘அபாஸர்ப்பத் த்வித்ரிபதம்’ என்றார் ருஷி. இங்கே மனாக்’ என்பதற்கு ஈஷத்து’ என்று பொருள் .
ருஷியே மிகக் கொஞ்சமென்பதைக் காட்ட இரண்டு மூன்று என்றார்.
ராமாயணம் வாசித்து இவன் தூஷிக்கிறானா என்பதைக் கேட்க அங்குள்ள அபாஸர்ப்பண’ பதத்தையே ப்ரயோகிக்கிறார்.
மத்ய கந்தமும் ரத்தவீச்சும் துர்வாஸனையல்லவோ. திடீரென்று துர்கந்தம் வீசும்போது ஓர் ராஜபுத்ரர் சற்று ஒதுங்காரா?
ரத்தத்தோடு மேலே விழவந்தால் சற்று ஒதுங்கலாகாதா? இதுவும் நரஸிம்மாவதாரமா! மனுஷ்யாவதாரம் மட்டும்தானே.
ராமாயணம் படித்தவன் இப்படி தூஷிப்பனோ? கூட இருந்து பார்த்துப் புடவை யுடுத்தி ராம பாணத்திற்குத் தப்பித்து ஓடின அகம்பனன்
ராவணனிடம் கரயுத்தத்தை வர்ணித்ததைப் பார்த்தும் தூஷிப்பரோ? மூன்று தூஷணங்களுமப்படியே.
தர்மமான ஆசாரத்தை வ்ரதமாகக் கொள்ளுவதை ‘அஸி தாராவ்ரதம்’ ‘கத்திமுனை வ்ரதம்’ என்பர்.
பிறரைப் பழியாத நாக்கு ‘அஸிதாராவ்ரதம்’ இருப்பதாகச் சொல்லலாம்.
இங்கே பரமபுருஷனைப் பழிக்கும் நாக்கை ‘வாகஸி’ ‘கத்திவாக்கு’ என் றார்.
‘வாக்ஸாயகம்’ ‘வாக் சல்யம்’ வாக் கண்டகம்’ என்று விதுர ப்ரஜாகரத்தில் காண்கிறோம்.
இங்கே வாக்கு கத்தி’ என்பதற்கு வாக்கால் வெட்டுவதை விடு, கத்தியால் வெட்டுவது தயையாகும் என்றோர் அழகு.
பிறரைத் தூஷிப்பது தன் நாக்கையே கத்தியால் அறுக்குமென்றும் ஸூசனம்.
பாணங்களைக் கண்ணன் பேரில் எறிந்து அசக்யமென்றோய்ந்து சொல்லம்புகளை எறிய ஆரம்பித்தான்’ என்றார் மஹாகவி.
வாக்கென்னும் கருங்கத்தியின் கருப்பு ப்ரபை புத்திக்குள் கூட உண்டாகும் என்கிறார்.
ராமன் காட்டுக்குப் போனதும் ‘லோகமெல்லாம் இருண்டது. நிராலோகமாயிற்று’ என்றார் பாதுகையில்.
ராமனை இப்படி தூஷிக்கவே லோகத்தில் ஆலோகம் களவு போய்விடுமென்கிறார்.
முதலாவது அநிபுண பத்ததி முற்றிற்று.
————–
த்ருப்தபத்ததி (கர்விஷ்டபத்ததி.)
ததேவ க்ருஹ்யதாம் நாம சாக மண்டூகராஸபை: |
த்ரயாணாம் தாவதா ஹந்த மூர்த்தீனாம் கிமிஹாகதம் || (1)
(ப-ரை)
சாக மண்டூகரஸபை:– ஆடு, தப்பளை, கழுதை இம் மூன்றாலும்,
ததேவ நாம — அவர்கள் பெயரே,(த்ரிமூர்த்திகளின் பெயரே)
க்ருஹ்யதாம் – வைத்துக் கொள்ளப் படட்டும்..
ஹந்த– நல்லது.
தாவதா – அதனால்,
த்ரயாணாம் – இம் மூன்றுக்கும்,
இய – இங்கே,,
கிமாகதம் – என்ன (உயர்த்தி வந்து விட்டது),
தாவதா – அதனால்,
த்ரயா மூர்த்தீனாம்– த்ரிமூர்த்திகளுக்கும்,
இஹ — இங்கே,
கிமாகதம் — என்ன குறைவு வந்து விட்டது.
அவதாரிகைகளுடன் தாத்பர்யங்கள்-
உயர்ந்தவரைப் போலத் தாமும் அவர்கள் பெயரையோ, நடை, உடை, பாவனைகளையோ
வைத்துக் கொள்ளுவதனால், அவர்கள் உயர்த்தியைத் தாழ்ந்தவர் பெறமுடியுமோ?
அவர்கள் உயர்த்தி தான் குறைந்து விடுமோ. வீண் டம்பம் செய்வதாலென்ன பயன். பரிஹாஸந்தான் மிகும்.
‘அஜ’ என்று ப்ரஹ்மாவுக்கும் பெயர், ஆட்டுக்கும் பெயர்.
‘ஹரி’ என்று விஷ்ணுவுக்கும் தப்பளைக்கும் பெயர்.
‘கர்தப’ என்று ஈஸ்வரனுக்கும் கழுதைக்கும் பெயர்.
பெயர் ஒன்றாயிருந்தால் ஒன்று மற்றொன்றாய் விடுமா?
த்ரிமூர்த்திகள் உயர்ந்தவர்கள் . தாழ்மையில் ஆடு, தப்பளை, கழுதை மிக இளப்பம்.
உயர்ந்தவரைப் பார்த்து டம்பமாய் அவர்களைப் போலப் பெயரை வைத்துக் கொண்டதால் ஒன்றும் கை கூடாது.
ஒர் சிற்றரசன் அகண்ட பூ மண்டல சக்ரவர்த்தி என்று பெயர் வைத்துக் கொண்டதால் என்ன ஸித்திக்கும்?
கண்ணனைப் போல் ஒருவன் தானும் வாஸு தேவனெனப் பெயர் வைத்துக் கொண்டதையும் நினைக்க வேண்டும்.
நன்றாய் நெஞ்சில் படும்படியான உபமானங்களாகக் காட்டுகிறார்.
பக்தியோடு அவர்களுக்குத் தொண்டரென்னு மெண்ணத்தோடு அவர்கள் பெயரை தரித்தால்
அவர்களுடைய ஸாலோக்ய, ஸாமீப்ய ஸாரூப்ய ஸாயுஜ்யங்களை அடையலாம்.
டம்பத்தால் பயனில்லை. ‘ப்ரஹ்மம்’ என்னும் பெயரை பரமாத்மாவுக்கும், ஜீவனுக்கும், மூல ப்ரக்ருதிக்கும் உபயோகிப்பதுண்டு.
ஜீவன் ப்ரஹ்மமாகவே ஆகிறான் என்று சொன்னாலும் , ப்ரஹமமென்று பேசினாலும் அவன் பர ப்ரஹ்மமாகி விட மாட்டான்.
—————–
அண்டஜா: புண்டரீகேஷு ஸமுத்ரேஷு ஜநார்தநா: |
நீல கண்டாச்ச சைலேஷு நிவஸந்தி ந தேக தே || (2)
(ப-ரை)
(புண்டரீ கேஷு) – தாமரைப் பூக்களில்,
(அண்டஜா – அண்ட ஜங்களான பக்ஷிகளும், –
ஸமுத்ரேஷு – கடல்களில்,
ஜனார்தனா] – ஜனார்தனம் என்னும் முதலைகளும்
சைலேஷுே –மலைகளில்,
(நீலகண்டா:) – நீலகண்டமென்னும் மயில்களும் , வஸிக்கின்றன.
தே ந – அதனால்,
(நதே) – அந்தப் பெயரை உடையவரும் அதே இடத்தில் வஸிப்பவருமான ப்ரஹ்ம விஷ்ணு ருத்ரர்களாக மாட்டா..
அவதாரிகைளுடன் தாத்பர்யங்கள்:-
முன்பு பெயர் ஒற்றுமையால் மட்டும் பயனில்லை என்றார்.
பேரொற்றுமையோடு வஸிக்குமிடமும் ஒன்றாயிருந்தாலும், டம்பக்காரருக்கு அதனால் மட்டும் பயனில்லை என்கிறார்.
‘அண்டஜ’ என்பது ப்ரஹ்மாவையும், முட்டையிற் பிறக்கும் பக்ஷியையும் சொல்லும்.
பகவானு டைய நாபிகமலத்தில் உதித்தவர் ப்ரஹ்மா .
ஸமுத்ரத்தில் ஜனார்தனரென்னும் விஷ்ணு வஸிப்பவர்; அப்பெயரையுடைய முதலைளும் அங்கே வஸிப்பன.
நீலகண்டரென்னும் ஈச்வரன் கைலாஸ கிரியில் வஸிப்பவர்; நீலகண்டமென்னும் மயிலும் மலையில் வஸிக்கும்.
கர்வத்துடன் போட்டி போடப் பார்த்தால் ஒன்றும் கிடைக்காது. அவர்களுக்குத் தாஸராக அவர்கள் திருநாமத்தை வஹித்து
அவர்கள் இருக்கும் க்ஷேத்ரங்களில் தொண்டர்களாக வஸித்தால் அவர்களுடைய ஸாலோக்யாதிகளை யடையலாம்.
க்ஷேத்ர வாஸம் செய்து அவர்களை வணங்கினால் (நதேந – வணங்கு வதால்) ஸாலோக்யாதிகளைப் பெறலாம்.
ஆனால் அவர்களே ஆகார். ஸாயுஜ்யமென்பது ஐக்யமன்று.
‘விஷ்ணுரேவ பூத்வா’ என்று ‘விஷ்ணுவாகவே ஆகிறான்’ என்பதற்கு ‘விஷ்ணுபோல ஆகிறானென்று பொருள்.
‘தாத்ருகேவ பவதி’ என்று கடோபநிஷத்து, ‘ஏவ’ என்பதற்கு இவ்’ என்று பொருள் என்று விளக்கு கிறது.
‘அஸந்நேவ ஸ பவதி’ என்கிற தைத்திரீய ஸ்ருதியில் அஸத் இவ பவதி’ என்று அத்வைத வ்யாக்யானத்தைக் கவனிக்க வேணும்.
‘இவ, ஏவ, வா’ இவற்றிற்கு ஒரே பொருளென்பர்.
————-
காமம் லிகது ஸம்ஸ்தானம் கச்சித் ரூபஞ்ச பாஸ்வத: |
அபித்தி விஹிதாலம்பமாலோகம் விலிகேத் கதம் || (3)
(ப-ரை)
கஶ்சித் – ஒருவன், (சித்திரமெழுதுபவன்),
(பாஸ்வத:) – ஸுர்யனுடைய,
ஸம்ஸ்தானம் – பிம்பத்தையும்,
ரூபம்)- வெண்மையான ரூபத்தையும்,
காமம் – வேண்டிய மட்டும்,
லிகது. எழுதட்டும்.
அபித்தி விஹி தாலம்பம் – சுவற்றிலடங்காத, (திகந்தவ்யாப்தமான)
ஆலோகம் – ஒளியை,
கதம் விலி கேத் – எப்படி எழுதுவன்.
அவதாரிகைகளுடன் தாத்பர்யங்கள்-
மனமெனும் சித்திரப் பலகையில் பகவானுடைய திவ்ய விக்ரஹத்துடனும் குணங்களோடும் கூடிய அவரை ஒருவாறு எழுதி த்யானித்து,
ஜ்ஞாநாநந்தம் போன்ற ஸ்வரூப ப்ரகாசத்தையும், அவருடைய குணாஷ்டகங்களையும் அவர் அநுக்ரஹத்தால் அடையலாம்.
ஸுர்யனுக்கு எப்படி ஆலோகமெனும் ஒளி உலகெங்கும் வ்யாபித்திருக்கிறதோ, அப்படி ப்ரபஞ்சம் முழுவதும் ஈஸ்வரனுடைய ப்ரபையின் விஸ்தாரமென்பர்..
ஸூர்யனுடைய ப்ரபையைப் போன்றது ஈஸ்வரனுடைய ப்ரபையான ப்ரபஞ்சம்.
மனமெனும் சுவற்றில் ஈஸ்வரனை யெழுதி பஜித்து தன் ஜ்ஞானாந்த ஸ்வரூபம், குணாஷ்டகங்கள் இவற்றின்
ஆவிர்ப் பாவத்தைப் பெறலாமே யல்லாது, ஸுர்யன் ப்ரபை போன்ற அவருடைய ஜகதைச்வர்யத்தை அடைய முடியாது.
அவருக்கு ப்ரபஞ்சம் முழுவதும் சரீரமாகும்; அதுபோல் நமக்கு ஆகாது.
ஐகத்தைக் குறித்து நாம் ஆத்மாவல்லாததால், சரீரமென்னும் சுவரில்லாமல்
ஜகதைஸ்வர்யம் என்னும் உருவத்தை நாம் எழுதிக் கொண்டு அடை ய முடியாது.
பெரியோரைப்போல சில அம்சங்களில் கர்வத்தால் ஆகப் பார்த்தாலும், அவர்களுக்கு அஸாதாரணமான மேன்மை விஸ்தாரங்களை நாம் அடைய முடியாது.
உயர்ந்த காவ்ய கர்த்தாக்களைப் போல அநுஸரித்துச் சப்த அமைப்புகளைச் செய்யலாம்;
அந்தக் காவ்யங்களின் களையையும் த்வங்களையும், ரஸங்களையும் நாம் காவ்யங்களில் அநுஸரிக்க முடியுமோ ?
———–
அபி ஸத்பத நிஷ்டானாமாசா: பூரயதாமபி |
அகஸ்த்ய வ்ருத்திர் மேகானாம் ஹந்த மாலிந்ய காரணம் ||–4-
(ப-ரை)
ஸத்பத நிஷ்டானாம்பி — நல்ல மார்க்கத்திலிருப்பவராயினும், (நக்ஷத்திரங்கள் நிறைந்த ஆகாசத்திலிருந்தாலும்,)
ஆசா: – ஆசைகளை, (திக்குகளை,)
பூாயதாமபி – பூரித்தாலும்,
மேகானாம் – மேகங்களுக்கு,
அகஸ்த்ய வ்ருத்தி: – அகஸ்த்யர் செய்த அத்புத கார்யங்களை அநுஸரிக்கப் பார்ப்பது
ஹந்த – ஐயோ,
மாலிந்ய காரணம் – கருப்பு வர்ணம் என்கிற தோஷத்திற்குக் காரணமாகும்.
அவதாரிகைகளுடன் தாத்பர்யங்கள் –
நல் மார்க்கத்தில் நடந்து வந்தாலும், தங்களிடம் வரும் யாசகர்கள் மனோ ரதங்களைப் பூர்ணம் செய்து வந்தாலும்,
தங்களுக்கு அஸாத்யமான பெரிய கார்டங்களை யாரோ பெரியவர் செய்தாரே என்று தானும் டம்ப மாய்
அநுஸரிப்பதற்கு முயன்றால், தோஷமே வரும்; ப்ரயத்னமும் வீணாகும்.
அகஸ்த்யமுனி ஸத் பதம் என்னும் ஆகாசத்தில் (நக்ஷத்ர மண்டலத்தில்) இருப்பவர். அவரும் ஓர் நக்ஷத்ரம். ஸந் மார்க்கத்தில் நிலை நிற்பவர்.
மேகங்களும் அவரைப் போல ஆகாசத்தில் இருக்கின்றன. அவர் தென் திக்கைப் பூரிப்பவர்; கோறுபவருக்கு வேண்டியவைகளைக் கொடுப்பவர்
மேகங்கள் திக் குகளைப் பூரிக்கின்றன; ஜனங்கள் மனோரதங்களை வழங்குகின்றன.
ஆயினும், அகஸ்த்யர் செய்த ஓர் அத்புத கார்யமான ஸமுத் திர பானத்தைத் தாங்களும் செய்து அகஸ்த்யரைப் போல ஆகப் பார்க்கின்றன.
கொஞ்சம் ஸமுத்ர ஜலத்தைப் பானம் செய்து விட்டு, நாமும் அகஸ்த்ய வ்ருத்தியை அதுஸரித்தோம் என்று கர்வமாய் உயரக் கிளம்புகின்றன; உருமுகின்றன.
மேகங்கள் முன்பு வெண்மையாயிருந்தவை; அகஸ்த்ய வ்ருத்தியை அநுஸரிக்க வெண்ணி, ஸமுத்ர ஜலத்தைப்
பானம் செய்ததும் கருத்துப் போகின்றன; மலினமாகின்றன.
பர ப்ரஹ்மத்தோடு ஸாதர்ம்யம் வருமானாலும், ப்ரஹ்மத்திற்கு அஸாதாரணமஹிமையான ஜகத் ஸ்ருஷ் ட்யாதி
வியாபாரங்கள் முக்தருக்கு ஸித்திக்காது, முழு அம்சங்களி லும் ஸாதர்ம்யம்: வராது; ப்ரஹ்மமே யாகவும் முடியாது.
—————————————————-—————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply