ஸ்ரீ ஸூபாஷித நீவி–முதல் பத்ததி–அநிபுண பத்ததி–த்ருப்தபத்ததி (கர்விஷ்டபத்ததி.)

ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய: கவிதார்க்கிக கேஸரீ |
வேதாந்தா சார்ய வர்யோ மே ஸந்நி தத்தாம் ஸதா ஹ்ருதி ||

க்ரந்தத்தின் அவதாரிகை –
இந்த க்ரந்தம் 144-ச்லோகங்கள் அடங்கியது. 12- பத்ததிகள் அடங்கியது. 12- ச்லோகங்கள் ஓர் பத்ததி.
பத்ததி என்பது நடக்கவேண்டிய மார்க்கத்தில் ஒரோர் விஷயத்தைப் பற்றினது. 12 என்பது ஸுர்யர்களின் ” கணக்கு. 12-ஸூர்யர்கள் உளர்.
அவர்களில் விஷ்ணு என் னும் ஆதித்யன் நான் என்றார் கீதையில் வாஸுதேவன், ஸூர் யன் எப்படி இருட்டைப்போக்கி வஸ்துக்களை ப்ரகாசப்படுத்துவரோ,
அறியாமல் தூங்குபவருக்கு ப்ரபோதத்தைக் கொடுப்பரோ, கச்மலங்களை நீக்கிச் சுத்தியைச் செய்வரோ, வ்யாதிகளை நீக்கி ஆரோக்யத்தை அளிப்பரோ,
அப்படியே அஹங்காரம் அக்ஞானம், தௌர்ஜந்யம், அஸூயை முதலிய இருட்டுக்களைப் போக்கி, ஆத்மாவின் அசுத்திகளை நீக்கி அதைச் சுத்தமாக்கி,
ஆத்மாவின் வ்யாதிகளைத் தீர்த்து ஸ்வரூபத்தில் விழிப்பைத் தந்து இந்த க்ரந்தம் மோக்ஷமார்க்கத்திற்கு உபகாரமாகவேண்டு மென்று நோக்கு.
12-அஷரங்கள் கொண்ட வாஸுதேவமந்த்ரத்தின் கணக்கையும் இங்கே ஸூசிக்கிறார்.

ஸ்வாமி திருவடிகளில் மிகுந்த ப்ரதிபத்தியை யுடைய அவிஜ்ஞரான ஸிஹ்ம நாயக ரென்னும்
வேங்கடகிரி ராஜ்யத்து அரசரொருவரின் ப்ரார்த்தனைக்கு இணங்கி இந்த க்ரந்தம் நிர்மாணம் செய்யப்பட்டது.
ராஜமஹேந்திரத்து ராஜாவையும் அவ்வரசர் ஜயித்து அந்தாட்டையும் சேர்த்து ஆண்டாரென்பர்.
வேங்கடேசன் கண்டாவதாரமான கவிஸிம்ஹத்தினிடத்தில் மஹாபண்டிதரும் கவியுமான அந்த வேங்கடகிரி அரசருக்கு
பக்தி கௌரவங்கள் ஏற்படுவதும், திரு வேங்கடநாட்டுக்கு அரசரும் திருவேங்கடமுடையான் பக்தருமான
அவரிடம் ஸ்வாமிக்கு க்ரூபாதாக்ஷிண்யங்கள் இருப்பதும் ஸஹஜங்களே.
ராஜஸபையைப் பெண்பாம்பென்று அறுதியிட்டு ஸபைகளிலிருந்து ஒதுங்கியிருப்பவராயி னும்,
திருவேங்கடமுடை,யான் பக்தராகிய ராஜாவின் வேண்டுகோளை அங்கீகரித்தது உசிதமே.

ராஜா ஸ்வயம் கவியானதாலும் அவர் ஸதஸ்ஸில் அநேக வித்வான்களும் கவிகளும் இருந்திருக்கவேண்டுமாதலாலும்,
அவர்கள் எல்லோரும் ஆச்சர்யப்படும்படி இக்காவ்யம் அமைக்கப் பட்டு, அவர்கள் ச்லாகையைப் பெற்றது.
ஒரு பதமேனும் இக் காவ்யத்தில் அகராதி பார்க்க அவசியமுள்ள தன்று. ஸ்ரீமத்ராமா யணத்தைப் போல மிக லளிதமான ச்லோகங்களால் அமைந்தது.
கடைசியில் ‘கடோசலளிதம்’ என்று தாமே வர்ணிக்கிறார். ராமாயணத்தைப் போலவே த்வநிமய மானது ;
ஸமுத்ரத்தில் போல் த்வனிரத்தங்கள் ஆழ்ந்து கிடக்கும். முராரி கவி ராமாயணத்தை ஸர்வகவி ஸமூஹங்களுக்கும் பொதுவான “ஸுபாஷிதநீவி என்று வர்ணித்தார்.
கவிகளுக்கெல்லாம் மூலமான ஆதாரம் என்று வால்மீகிக்கே விஸ்மயத்தையுண்டாக்கின அவருடைய ஆதிகாவ்யத்திற்கு
முராரிகவி சாற்றின ஸுபாஷிதநீவி என் னும் திருநாமத்தையே இந்தக் காவ்யத்திற்கு ஸ்வாமி சாற்றியிருப்பதால்,
ஸமுத்ரத்தைப்போல் ராமாயணம் ரத்தங்களால் ஆட்யம், எல்லோர் செவிகளுக்கும் மனோஹரம்” என்பதுபோல்
இதுவும் த்வநியினால் காட்டப்படும் தாத்பர்யரத்னங்களால் பூர்ணமாய், பின்வரும் கவிகளுக்கு ஓர் மூலாதாரமாய் இருக்க வேண்டுமென்பது நோக்கு.
நீவி என்பது மூலதனத்தையும், வஸ்த்ரத்தின் முடிப்பையும் சொல்லும். இந்த மூலதனத்தை நன்றாய் ஹ்ருதயத்தில் ஓர் கவி ரக்ஷித்துவைத்தால்,
இதிலிருந்து அனேக அழகான சாடுச்லோகங்களை வருத்தி( )செய்துகொள்ளலாம்.

வஸ்த்ர முடிப்பு என்ற பொருளைக்கொண்டு, மஹாபாரதத்திலும் நைஷதத்திலும் பெரியோரிடம் கேட்காமல்
அறியக் கூடாத க்ரந்தக்ரந்திகள் என்னும் முடிச்சுகள் இருப்பது போல, இந்த க்ரந்தத்திலும் அநேக தாத்பர்பாத்னங்கள் முடிப்புக்கட்டி முத்ரை போடப் பட்டிருக்கின்றன;
ஸம்ப்ரதாயமாகப் பெரியோரிடம் கேட்டே அவற்றை அறியவேண்டுமென்று அடுத்த ச்லோகத்தில் ஸாதிக்கிறார்.
‘முடிச்சவிழ்ப்பவர்’ என்னும் திருடர்கள் ச்லோக சப்தங்களைத் திருடினாலும் அவ்வபூர்வக் கருத்துக்களை
அவிழ்த்துக் கைப்பற்றமுடியாதென்றும் அங்கே ஸாதிக்கிறார்.

ஸிஹ்மராஜாவின் தெளிவுக்காக நீதிகளையும் வேதாந்ததத்துவங்களையும் கவிகளுக்கும் வித்வான்களுக்கும்
பரிஹாஸ மாய் மிகவும் ரஞ்ஜகமான முறையில் ஸ்வாபதேச அந்யாபதேசங்களாலும், ச்லேஷை ஸமாஸோக்தி வ்யாஜஸ்துதி
முதலிய அலங்காரங்களாலும் பல அபூர்வ த்வநிகளாலும் நெஞ்சில் தைக்கும்படி கவி ஸிஹ்மத்தால் ரசனை செய்யப்பட்ட
இந்த க்ரந்தத்தின் உட்கருத்துக்களையெல்லாம் “64-கலை களையும் கசடறக்கற்ற மஹா மேதாவிகள் தான் அறியக்கூடும்” என்று
சது::சாஸ்திரபண்டிதரான காஞ்சி – ஸ்ரீபட்டப்பாஸ்வாமி தாம் ஆரம்பித்துச் சில ச்லோகங்களுக்கு மட்டிலும் செய்துள்ள வ்யாக்யானத்தில் ஸாதித்தார்.
ஸ்ரீவைஷ்ணவ உலகத்தின் அபாக்யத்தால் சில ச்லோகங்களின் வ்யாக்யா னத்துடனேயே அந்த ஸ்வாமியின் காலம் சென்றுவிட்டது.
அதிலுள்ள அபூர்வக் கருத்துக்களை அந்தந்த ச்லோகத்தின் முடிவில் தனியாக ஸங்க்ரஹிப்போம்

ப்ரதம ஸுஜநாய பும்ஸே மஹ்யமபி ப்ரதம துர் ஜநாய நம: |
ஸர்வம் ஹத: க்ருதம் யௌ ஸக்ருதுபகார அபகாராப்யாம் || (1)–இந்த க்ரந்தத்திற்கே இது மங்கள ச்லோகம்,

(ப-ரை) ப்ரதம ஸுஜநாய – (எல்லாருக்கும்) முதலான அதாவது மேற்பட்ட (அல்லது முந்தி தானே வலுவில் நெருங்கும்) அனுகூலபுத்தி என்னும் ஸௌஜந்யத்தையுடைய,
பும்ஸே – புருஷன் பொருட்டு, :
நம: – நமஸ்காரம் (நமஸ்கரிக்கிறேன் ) (மனத்தாலும் வாக்கினாலும் உடலினாலும்)
ப்ரதமதுர் ஜனாய (எல்லோருக்கும் மேற்பட்ட (நிஷ்காரணமாய் முன்யே தீங்கைச் செய்யும்) துஷ்ட மனுஷ்பனான,
(மஹ்ய மபி) – என்பொருட்டும்,
ந88 [su:) – நமஸ்காரம் (நமஸ்கரிக்கிறேன்),
யௌ எவ்விருவரும், (எவரும் நானும்.),
ஸக்ருதுபகார அபகாராப்யாம்] – ஒரு தடவை உபகாரத்தாலும் ஒரு தடவை அபகாரத்தாலும்,
க்ருதம்] – முன் செய்யப்பட்டுள்ள,
ஸர்வம்] – எல்லாவற்றையும்,
ஹத:) – அழிக்கிறார்களோ?

அன்பில் ஸ்வாமி வ்யாக்யான‌ம் தொட‌ர்கிற‌து
தாத்பர்யங்கள் –
பெருமாளுடைய ஸௌஜந்யம், தயை, ஸம்ஸார விமோசனம் அளிப்பது முதலிய மங்கள குணங்களையும்,
ஆஸ்ரிதருடைய விரோதி நிரஸனத்தையும் அனுஸந்தித்து அவரை நமஸ்கரிப்ப தாகிய மங்களம்.
பெருமாள் ஹனனம் செய்வதாகப் பேசுவது ஆஸ்ரிதர்கள் பாபக் கூட்டத்தின் விஷயமானதால் அதுவும் மங்களமாகத் தட்டில்லை.
ஆஸ்ரித பாபக்னன், ஸந்தாபக்னன், அபஹத பாப்மா, அகிலஹேய ப்ரத்யநீகன் என்று தொடங்கும் அவை எல்லாம் மங்களமேயாகும்.
பூர்வ பாபங்களின் விநாசம்’ பக்தி என்னும் உபாயத்தின் ‘பலம்’ என்றார் ஸூத்ரகாரர்.
“ஸர்வ பாபங்களிலிருந்தும் உன்னை விடுவிக்கிறேன்; நீ சோகியாதே’ என்று கீதையின் முடிவு ச்லோகத்தையும் இங்கே ஸூசிப்பது மங்களமே.
வஸிஷ்டர் கௌஸல்யையின் குழந்தைக்குச் சாற்றிய “ராமன் என்னும் திருநாமம் ஜகத்திற்கு ப்ரதம மங்களம்” என்றார் காளிதாஸர்.
இந்த ஸ்லோகத்தில் முதல் ஸுஜனர்’ என்று ராமனை’ நினைப்பதுமன்றி இந்தப் பத்ததியின் முடிவில்
எல்லையற்ற குணக் கூட்டங்களையுடைய ராமனை’ ஸ்பஷ்ட மாகக் குறிக்கிறார்.

இந்த முதல் பத்ததிக்கு ‘அநிபுணமார்க்கம்’ என்று பெயர்.
வித்வான்களைத் திருத்துவதில் இக்காவ்யத்திற்கு முக்கிய நோக்கு.
வித்யை என்னும் தாய், ஞானமென்னும் பாலைக் கொடுத்தும் சிலருக்கு அவிநயம் என்னும் அஹங்கார விஷத்தையும் கலந்து கொடுத்து விடுகிறாள்.
அஹங்காரம், டம்பம், மதம், அஸூயை, க்ருதக்னதை முதலிய கொடிய தோஷங்களுக்கு நாம் இடங் கொடுப்பது ஸுபுணமல்ல, சமர்த்தல்ல.
எல்லா உத்கர்ஷமும் ஈச்வரன் கொடுத்த பிச்சையாயிருக்க, அவனை மறந்து அஹங்காரப்படுவது தௌர்ஜந்யம்.
ஈஸ்வர னுடைய ஸர்வ கர்த்ருத்வத்தை மறந்து தன் செய்கை என்று அபிமானிப்பதினால் எல்லாக் குணங்களும் கெடுகின்றன.
ஈஸ்வரன் கொடாமல் நமக்கு எது கிடைக்கும் என்கிற இந்தத் தெளிவு இல்லாமல் தன் ஸ்வாதந்தரியத்தைப் பற்றுவதால் மற்ற பல குணங்கள் இருப்பினும் வீணாகும்.

தன் வினைப்பயனாக ஈஸ்வரன் ஓர் கஷ்டத்தை ஹிதத்னத எண்ணிக் கொடுக்தால் அநிபுணர் அதைப் பற்றி
அவனை நிந்தித்து அவன் முன் செய்த நன்றிகளை எல்லாம் மறந்து அதனால் க்ருதக்னராவார்.
க்ருதக்னதையிலும் கொடிய தோஷமில்லை. அதற்கு ப்ராயச்சித்தம் இல்லை.
அந்தக் கொடிய அதர்மம் முன் செய்த தர்மங்களை நாசம் செய்துவிடும். க்ருதஜ்ஞரில் உத்தமன் ஈச்வரன்.
க்ருதக்னரில் ப்ரதமர் நாம். அவர் ப்ரதம புமான், புருஷோத்தமன்.
நமக்கு ஸர்வவிதபந்துவும் அதிஸுலபருமான அவரைச் சரணம் புகாத நாம் நராதமர்.
அவர் ஸுஜனலார்வபௌமர், நாம் துர்ஜனஸார்வபௌமர்.

அவர் நம்முடைய ஏதோ ஒரு ப்ரகாரமான வணங்குதல் என்னும் அல்ப உபகாரத்திற்கு ஸந்தோஷித்துக்
கோடிக்கணக்கான நம் முன் பாபங்களை மன்னித்துத் தனக்கு ஸமானமான பேரின்பத்தை நமக்கு அளிப்பவர். நாம் நமக்கு ஈஷத்துக் கஷ்டம் வரும்போது
ஈஸ்வரனை நிந்தித்தும், ஈஸ்வரன் நமக்குப் பிரதி க்ஷணமும் அளிக்கும் ஸர்வவித உபகாரங்களையும் தெளர்ஜந்யத்தால் மறந்தும்,
‘அஹம்மே’ என்று ஸ்வாதந்தரியத்தைப் பற்றுவதால், முன் செய்த நல்வினைகளை வீணாக்குகிறோம்.
அவர் ஓர் அல்ப உபகாரத்தால் நம்முடைய எல்லாத் தீவினை களையும் போக்கும் விசித்திரமான க்ருதஜ்ஞர், ஸுஜனர்.-
நமக்கு ஓர் அபகாரம் செய்யப்பட்டதாக நம்முடைய நினைப்பினால் மட்டும் நாம் கோபத்தையும் விரோதத் தையும்பற்றி
முன் செய்த நல்வினைகளையெல்லாம் அழித்து வீணாக்குகிறோம்.
பிறர் நமக்கு எத்தனையோ உபகாரங்கள் செய்திருந்தாலும், ஓர் அபகாரம் நேர்ந்ததும்
அத்தனை முன் உபகாரங்களையும் மறந்து கொடிய விரோதியாகிறோம்.

நாம் சிரகாலமாக ஸம்பாதித்த தர்மத்தை ஒரு நொடிப்பொழுதில் தொலைத்துவிட்டு, நம்மை நாம் நிபுணர் என்று நினைக்கிறோம்.
உண்மையில் நாம் மிகவும் அதிபுணரே என்று அநிபுண’ சப்தத்தின் தாத்பர்யம்.
நாம் நிபுணரென்று நாம் எண்ணுவதை விலக்குவதில் கருத்து.
பிறரை ஏமாற்றுவதால், தம்மைச் சமத்தாக நினைப்பவர் உண்மையில் தம்மையே வஞ்சித்துக்கொள்ளுவதால் அநிபுணரே.
தானேல் எம்பெருமான் அவனென்னாகி யொழிந்தான்” என்று முதல் ஸுஜனரான ஆழ்வார்
ஈஸ்வானுடைய ஸௌஜந்யத்தில் ஆழங்கால்பட்ட படிக்கும், சாக்கடைக் குழி போன்றதும், இருட்டறை போன்றதுமான ஹ்ருதய குகைக்குள்
ஸர்வபூதங் களுக்கும் ஈஸனனான பரமபுருஷன் ஜீவனென்னும் பக்ஷியோடு கூடத் தானும் ஒரு பக்ஷிபோல்
எக் காலத்திலும் இணை பிரியாத் தோழனாய்க் கூடவே இருக்கிறான் என்று
வேதபுருஷன் ஆழங்கால் பட்ட படிக்கும்,

முன் பாதியால் ஈஸ்வரனையும் தம்மையும் ஏகரூபமாக ஒன்றாக நமஸ்காரத்திற்கு உத்தேச்யமாகவும்,
பின் பாதியாலிருவரையும் சேர்த்து ஒரு ஜோடியாகவும் வைசித்ரியத்தை விளக்கிப் பேசுகிறார்.
அவர் தன்னுடைய ஸஹஜஸௌஜந்யத்தால் என்னுள் பிரவேசித்து, என்னுள்ளே மன்னியும் நிற்க,
நான் அவனை மறந்தும், உபேக்ஷித்தும், திரஸ்கரித்தும் அபராதம் செய்கிறேன்.
அவன் ‘ த்வம் மே ‘ என்று என்னைத் தன்னதாக்கி என் பாரத்தைச் சுமந்து என்னைக் காப்பாற்றப் பேசினால்
நான் அதை மறுத்து ‘ அஹம் மே ‘- ‘ நான் எனக்கே உரியேன் உனக்குரியேனல்லேன் ‘ என்று அஹங்காரத்தையும் ஸ்வாதந்திரியத்தையும் பாராட்டுகிறேன்.

‘பிரதமஸுஜன்’ என்பதால் அவன் முன்பே வலுவில்’ தன் ஸௌஜன்யத்தைக் காட்டுகிறவன் என்றும் பொருள் .
ராகவன் முதலில் வலுவில் அழைத்துப் பேசுபவன், முறுவலோடு குளிர்ந்து பேசுபவன்’ என்றார் ருஷி.
பிரத்யுபகாரத்தை அபேக்ஷிக்காமல் உபகாரம் செய்யும் ஸ்வபாவம் அவனுடையது.
அபகாரிகள் விஷயத்திலும் அவன் ஸாதுவாய் ஸுஜனனாயிருப்பவன்.
“மஹ்யம் நமோஸ்து கவயே நிர பத்ரபாய ” வெட்கமற்ற கவியாகிய எனக்கு நமஸ்காரம் இருக்கட்டும்’ என்று
ஆளவந்தார் ஸ்தோத்திர ரத்னத்தில் முதலில் ஸாதித்ததை அனுஸரித்து இங்கும் முதலில் ‘மஹ்யம் நம” என்று ஸாதிக்கிறார்.

இருவரையும் தராசில் நிறுப்பது போல் நிறுத்து “எல்லாம் ஸமம்; ஆனால் அவர் விஷயத்தில் ஸு என்றும் என் விஷயத்தில் துர் என்றும் விசேஷிக்க வேணும்.-இருவர் செய்வதும் ஸர்வத்தையும் ஹனனம்; அவருக்கு நிமித்தம் ஒருகால் உபகாரம், எனக்கு நிமித்தம் ஒருகால் அபகாரம்.
அங்கும் உப, அப என்றுதான் பேதம். அனேக பாகங்கள் ஒற்றுமையென்றும் ஈஷத்தே பேதமென்றும் இவர்களை
துல்யயோகிதையாலே சேர்ப்பது உசிதமே யென்றும் ரஸமாய்க் காட்டுகிறார்.

முதலான புமான்’ என்பதால் ‘புருஷோத்தமன்’ என்றும் கிடைக்கிறது.
ஆந்ருச்ம்ஸ்யம், தயை முதலிய ஆறு குணங்கள் ராகவனென்னும் புருஷோத்தமனைப் பூஷிக்கின்றன என்றார் ருஷி.
‘உலகத்திலும் வேதத்திலும் நான் புருஷோத்தமனென்று பிர ஸித்தமானவன்’ என்றார் கண்ணன் கீதையில்.
‘ஹரி ஒருவன் தான் புருஷோத்த மனென்று எப்படி ருஷிகளால் ஸ்மிருதிகளில் ப்ரஸித்தமாய் பேசப் படுகிறானோ’ என்றார் காளிதாஸர்.
‘புருஷோத்தமன் யார்’ என்று ஆளவந்தார் கேட்டதற்கு காளிதாஸரே பணித்த பிரஸித்தியையும் காட்டுவதில் திருவுள்ளம்.
‘எனக்கும்’ (மஹ்யமபி) என்னுமிடத்தில் ‘அபி’ என்பதற்கு நிந்தை என்னும் பொருளையும் கொள்ளலாம்.
பெருமாளோடு கூட்டிப் பேசுவதாகவும் பேசலாம்.
‘தயை, குணங் களுக்குள் பட்ட மஹிஷி; நான் அபராதி களுக்குள் சக்ரவர்த்தி’ என்பதைப் போல் இங்கு நம்மையே பரிஹஸிக்கத் திருவுள்ளம் .
இப்படித் தம்மை யிகழ்ந்து பேசுவதெல்லாம் நம் அநுஸந்தானத்தின் பொருட்டு என்பதை மறக்கக் கூடாது.
நீசனேன், அமர்யாத.’ என்பதைப்போல.
கிருதக்னதைக்கு பயந்து சாணக்ய – சந்திர குப்தர்களுக்குச் சாத்ருவான ராக்ஷஸன் அவர்கள் சேவகத்தில் அமர இணங்கி சந்தன தாஸனென்னும் ஸ்னேஹிதரை விடுவித்தான்;
குளிர் காலத்தில் குளிர்தேசத்தில் பொறுக்கக்கூடாதபடி குளிர் காற்று வீசுகையில், ‘வீசு வீசு குளிர்காற்றே மனுஷ்யர் களின் கிருதக்னதையைப் போல
நீ அத்தனை துஸ்ஸஹமோ’ என்று ஓர் கவி பேசுவதும் இதன் ப்ரஸித்தியைக் காட்டும்.
(ஸ்வபாவத்தாலேயே நீர் கிருதக்ஞர்’ என்று முதலில் பெருமாளையும் மேலே “நான் கிருதக்னன், துர்மானி’ என்று
தம்மையும் ஆளவந்தார் ஸாதித்ததை அனுஸரித்து ஸ்வாமி இங்கே ஸாதிக்கிறார்.
கிருதக்னனாகிய துர்ஜனனுக்கு பிராயச்சித்தமே கிடையாதே,
அவனைப் பெரியோர் என்ன பிராயச்சித்தம் செய்தாலும் தம்மோடு சேர்த்துக்கொள்ளமாட்டாரே,
கிருதக்னதா தோஷத்தை எப்படித் தொலைத்து பெருமாளோடு சேரக்கூடும், எப்படி மோக்ஷம் அடையக்கூடும்
என்கிற சங்கைகள், ஒருகால் வணங்குவதென்னுமுபகாரத்தால் முன் செய்த தீவினைகளெல்லா வற்றையும்
நாசம் செய்கிறானென்று பின்பாதியால் பரிஹரிக்கப் பட்டன. எல்லாமென்பதில் கிருதக்னதையும் அடங்கும்.
“முன்பு தூராசாரனும், கிருதக்னனும், நாஸ்திகனுமாய் இருந்தாலும் ஆதிதேவனை (ப்ரதமனை) சிரத்தையோடு
ஸமாஸ்ரயித்தால் பரமாத்மாவின் பிரபாவத்தாலவனை நிர்தோஷனென்று அறி” என்கிற வசனத்தையும் இங்கே நினைத்து
கிருதக்னதை என்னும் தெளர்ஜன்யம் உள்பட எல்லாத் தோஷங்களும் ஓர் வணக்கினால் தொலையும் என்று ஸாதிக்கிறார்.
ஈஸ்வர தத்துவத்தையும், மற்ற ஸாதுக்களையும் தூஷிப்பதில் ருசியாகிய தௌர்ஜன்யத்தையும்
இங்கேயுள்ள துர்ஜனசப்தத்தால் கொள்ளவேணும்.
ராமனைத் தூஷிக்கும் தெளர்ஜன்பத்தை பன்னிரண்டாவது சுலோகத்தில் ஸாதிக்கிறார்.
ஸீதை விஷயத்திலும் ஜனங்கள் அபவாதம் பேசியதால் அவர்கள் “அதிதுர்ஜனர்” என்று சொல்லவேண்டுமென்று
பவபூதி பேசியதையும் ஸ்வாமி நினைத்து இங்கே ப்ரதமதுர்ஜனர்’ என் கிறார்.
நீதிசதகத்தில் பர்த்ருஹரி ஐஸ்வர்யத்திற்கு ஸுஜனதை விபூஷணமாகும்’ என்றதையும் நினைத்து
இந்த நீதி காவ்யத்தில் இங்கே ஸர்வஸ்வரன் விஷயத்தில் ‘ஸுஜன சப்தத்தை பிரயோகிக் கிறார்.
முதலடியில் பெருமாளை நமஸ்கரித்தவுடனே தௌர்ஜன்யம் நீங்கி அவர் தாஸனாகி அவர் சரீரமாகத்
தமக்குமுபாஸ்யத்வம் கூடலாமென்பது ‘ப்ரதமதுர்ஜன’ என்பதின் ஓர் த்வநிப் பொருள்.
‘முன்பு துர்ஜனன்’ என்றதால் இப்பொழுது ஸுஜகனாகி பெருமாளுக்கு ஸ்வஜனமானதை ஸூசிக்கும்.

ஸ்ரீபட்டப்பாஸ்வாமி ஸாதித்த பொருள்கள் :-

(1) தைவ ஸம்பத்து மோஷத்திற்கு அனுகூலம்; ஆஸுரஸ்வபாவம் மோகத்திற்கு ப்ரதிகூலம்.
ஆஸுரஸ்வபாவங்களை வெறுக்கும்படி செய்ய நிபுணமான பரிஹாஸ வசனங்களால் நம் தெளர்ஜந்யத்தை
நாமே பரிஹஶித்து வெட்கச் செய்து அவற்றை ஒழிக்கும்படி உபதேசிப்பது இந்தச் சாடு ஸ்லோகங்களின் ப்ரயோஜனம்.

(2) ஒரே அஞ்ஜலிக்கு வசப்படும் ஸர்வோத்கிருஷ்ட ஸுஜனனான ஈஸ்வரனை ஒருகால் வணங்கி
ஸர்வ துக்கமும் தீர்ந்து சாஸ்வதமான பேரின்பத்தை அடைவதல்லவா சமத்தர் காரியம்.
செய்நன்றி மறப்பதால் பாதகியாகி முன் ஸம்பாதித்த புண்யத்தை அழிப்பவர் நிபுணராவரோ?

(3) ” நாராயணனென்பவர் ஸர்வஸ்ய சரணம் ஸஹ்ருத்” என்று உபநிஷத்து ஓதிற்று, ‘
ஸர்வபூதங்களுக்கும் ஸுஹ்ருத்தாக என்னைத் தெரிந்துகொள்பவன் சாந்தியை அடைவான்’ என்று கீதோபநிஷத் பணித்தது.
பிரத்யுபகாரத்தை எதிர்பாராமல் உபகரிப்பவர் ஸுஹ்ருத்தென்னும் ஸூ ஜனர். அபகாரம் செய்யாதவரிடமும் அபகாரம் செய்பவர் துர்ஜனர்.

(4) ‘முதல்வன்’ என்பதற்கு இந்தக் குணத்தில் எல்லோரையும் அதிசயித்தவன் என்பது பொருள்.
”உயர்வற உயர்” ஸௌஜந்ய நலமுடையவன்.-நாம் இயற்கையில் அவனுக்குத் தாஸர்கள்.
ஸ்வாமிக்கு ஓர் வேலைக்காரன் எப்பொழுதும் ஆஜ்ஞையை மீறுதல்,  த்ரோஹம் பண்ணுதல் முதலிய அபராதங்களைச் செய்து கொண்டேயிருந்தால்,
இவ்வுலகத்திலுள்ள யஜமானர் அவனை வேலையில் வைத்துக்கொள்வரோ?
இத்தனை ஆஜ்ஞாத்ரோஹங்களும் செய்து கொண்டேயிருந்து ஓர் நாள் அவர் திருவடியைப் பிடித்துக் கொண்டு
“இத்தனை கொடிய அபராதங்களையும் மன்னிக்கவேண்டும்” என்று ஒருதரம் ப்ரார்த்தித்தால்
அதைக் கேட்டு எல்லாக் குற்றங்களையும் மன்னித்து உடனே உத்யோகத்தைக் கொடுத்துச் சேர்த்துக் கொள்வரோ?

(5) நமக்கு ஈஸ்வரன் ராஜா. ராஜா எப்படி யிருக்கிறானோ, ப்ரஜைகளும் அப்படியே யிருக்க வேண்டியது உசிதம்.
அவர் ப்ரதம ஸுஜனராயிருக்க, நாம் ப்ரதம துர்ஜனராயிருப்பதழகோ?
நாமும் ஸுஜனராகவே இருக்கவேண்டாவோ ? ராஜாவின் ஸ்வபாவத்துக்கு நேர் எதிராகவுமிருக்க வேண்டுமோ ?
அவர் ஸௌஜந்யத்தின் எல்லையாயிருக்க, நாம் தௌர்ஜயத்தின் எல்லையாயிருக்க வேண்டுமோ ?

(6) இங்கே நம: என்கிற சப்தத்தினால் பிரபத்தியைச் சொல்லலாம்.
நமஸ்காரம் என்பது ஒருவனுக்கு மற்றொருவனைக் குறித்து உயர்ந்தவன் என்றே அபிப்பிராயத்தை
உண்டு பண்னும் காரியமாகையால், தன்னையே தான் நமஸ்கரித்துக் கொள்ளுவது என்பது பொருந்தாது.
என்னுடைய ஸ்வபாவமான தெளர்ஜயத்துக்கு நமஸ்காரமென்பது கொள்ளல் வேண்டும். “
துரீச்வரர்களின் வீட்டுத் திண்ணையில் யாசகராய் உட்காரும் துராஸிகைக்கு (துக்கமான இருப்புக்கு) அஞ்ஜலி செய்கிறேன் ”
என்ற இடத்தில் போல் தௌர்ஜந்யம் என்னை அணுகாமல் தூரத்தில் இருக்கவேண்டும் என்று அபிப்பிராயத்தைக் காட்டுகிறது.
இங்கு தெளர்ஜந்யம் என்பது அஹந்தை, அஹந்தையே! நீ என்னை அபேக்ஷிக்கக்கூடாது, என்னை விலக்க வேண்டும்,
அம்மா ஆசையே உனக்கு நமஸ்காரம்” என்று விலகியிருப்பதைப் பிரார்த்திப்பது உண்டு.

{7) பிரதமஜைனரான பெருமாளை நமஸ்கரித்து அவரை ஹிருதயத்தில் எழுந்தருளப் பண்ணுகையில்
அவருக்கு நேர் விரோதியான அஹந்தை’ என்னும் ப்ரதம தெளர்ஜயத்தையும்’ அங்கே கூடவிருக்க விடலாமோ ?
பெருமாள் எழுந்தருளி விட்டார் . அவருக்கு எதிரியான நீ தயவு செய்து வெளியே போய் ஒதுங்கி யிருக்க வேண்டும். ‘அஹந்தே நாஹந்தே’.

(8) நம: என்பதற்கு, பெருமாள் விஷயத்திலும்,  தௌர்ஜந்யத்தின் விஷயத்திலும்
‘நமஸ்காரம்’ என்றே ஒரே விதமான பொருளையே ஸ்வ ரஸமாய்க் கொள்ளலாம்.
“ருத்ரரே! உமக்கு நமஸ்காரம். நீர் என்னை ஹிம்ஸியாதிருக்கவேண்டும்” என்று பேசுமிடத்தில் போல
‘அஹந்தை என்னும் தெளர்ஜந்யமே உனக்கு நமஸ்காரம், நீ என்னை ஹிம்ஸியாதே’ என்பது பொருள்.

(9) ‘ஸூ ஜன’ என்பது ஸௌஜந்யத்தில் ஸ்வபாவமான ருசியைக் காட்டும்;
துர்ஜன என்பது தெளர்ஜந்யத்தில் ஸ்வபாவமான ருசியைக் காட்டும்.

(10) பெருமாள் சேஷியாகவும், தான் சேஷனாகவும் ரஸித்து ரஸம் ஓடுகிறது.
அஹந்தை என்னும் பானகத் துரும்பினால் அந்த ரஸ பானத்தில் ரஸ பங்கம் வரும்.

(11) ஹத;- என்பதற்கு வீணாக்குகின்றார்கள் என்பது பொருள்.

(12) இங்கே உபகாரம் என்பதற்கு உண்மையில் உபகாரம் என்று எண்ணி நாம் செய்யாவிடினும்
ஈஸ்வரன் புத்தியால் உபகாரமென்று கிரஹிக்கப் படுவது என்பது பொருள்.
“கதஞ்சிதுபகாரேண” என்பதை நினைக்க வேண்டும்.
அதைப் போலவே அபகாரம் என்பதற்கும் அபகாரம் என்று நாம் நினைப்பது என்றும் பொருள்.
ராவணனும் சரணம் புக வந்திருக்கலாமென்கிற எண்ணத்தினால் இங்கு சரணமடைய வந்திருக்கிறவன்
ராவணனாகவிருந்தாலும் அழைத்து வா என்கிற வார்த்தையை உண்டு பண்ணுகிற
பரமோதாரமான அநுகூல எண்ணமானது ஸௌஜந்யம்.
ஆநயைனம் ஹரிச்ரேஷ்ட” என்றார். இன்னாரை என்று குறிப்பிடவில்லை.
யாரேயாகிலுமாகுக. ராவணனேயாகிலும் ஸரி .

(13) முதல் ஸுஜனர் ராமர். முதல் துர்ஜனன் ராவணன் போன்ற பத்துத்தலையுடைய என் மனது.
அவன் வணங்க மாட்டேனென்றது போல என் மனதும் அவரை வணங்காது.
அவரை நமஸ்கரித்து என் அஹங்காரமாகிய ராவணனைத் தலையறுத்து எனக்கு அபயமளித்து
என்னை ஸுஜனராக்க வேண்டுமென்று மனோரதம்.

(14) அலங்காரம் முதலிய பல விஷயங்களில் காட்டப்பட்டிருக்கும் ஆச்சர்யமான ரஸங்கள் பலவுள.

————-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading