கடபயாதி ஸங்க்யை–

கடபயாதி ஸங்க்யை-ங்கறதா, ஒவ்வொரு நம்பருக்கு, எழுத்துக்கள் மூலமா ஸங்கேதம் குடுத்தா. அந்த அக்ஷரங்களை சேத்து, ஒரு வார்த்தையை சொல்லிட்டா….. வெளில பாத்தா…. அது வார்த்தையா இருக்கும்; உள்ளுக்குள்ள அது பல digit-களை கொண்ட ஒரு நம்பரா இருக்கும்!

க, ட, ப, ய-ங்கற எழுத்துக்கள்லேர்ந்து ஆரம்பிச்சு, இப்டி எண்ணிக்கை ஸங்கேதம் குடுத்திருக்கறதால… அதுக்கு ‘கடபயாதி ஸங்க்யை’ன்னு பேர்!

காதி நவ; டாதி நவ; பாதி பஞ்ச; யாத்யஷ்ட’...ன்னு அதுக்கு விதி வகுத்து வெச்சிருக்கா.

காதி நவ-ன்னா….. க-லேர்ந்து ஆரம்பிச்சு…. 9 [நவ] எழுத்துக்கள்;

ஸம்ஸ்க்ருதத்ல, தமிழ் மாதிரி ஒரே ஒரு ‘க’ கெடையாது.

ka, kha, ga, gha-ன்னு நாலு. அப்றம் ‘‘.

அதே மாதிரி, அப்றம் ச; cha, chha, ja, jha !

இப்போ, ‘க’ வரிஸை-ல நாலு, அதோட ‘ங’.

அப்றம், ‘ச’ வரிஸைல நாலு…. ஆக மொத்தம் 4+1+4 = 9

காதி நவ…….. க-லேர்ந்து ஒவ்வொரு எழுத்துக்கும் வரிஸையா நம்பர் குடுக்கணும்.

ka-1, kha-2, ga-3, gha-4, ங-5, cha-6, chha-7, ja-8, jha-9.

ka-லேர்ந்து jha வரைக்கும் ‘காதி நவ’ அதாவுது ஒண்ணுலேர்ந்து ஒம்பது வரை!

அடுத்தது….. ‘டாதி நவ’

ta [ட]-1, tta-2, da-3, dha-4, ண-5

tha [த] -6, thha-7, dha-8, dhha-9

அடுத்தது……. ‘பாதி பஞ்ச

pa-1, pha-2, ba-3, bha-4, ம-5

கடஸீல… ‘யாத்யஷ்ட‘……

யாதி-அஷ்ட அப்டீன்னா….. ய-லேர்ந்து எட்டு எழுத்துக்கள்.

ய-ர-ல-வ--ஷ-ஸ-ஹ… 8

இப்போ இன்னும் புரியற மாதிரி உதாரணம் சொல்றேன்……

ஜய‘ -ங்கற வார்த்தையை எடுத்துக்குவோம். ஐய ஶப்தம் எப்பவுமே….. மங்களமானது, ஆச்சார்யாளோட அது விஸேஷமா பொருந்தறது அப்டீங்கறதோட, அது [ஐய] ஒரு எண்ணிக்கையா…. கடபயாதி ஸங்க்யை-ல சொல்லப்படறதுனால, அதை example-ஆ வெச்சுப்போம்.

ஐய- ங்கறதுல…….

ஜ….. காதி நவ, டாதி நவ….. இதுல எங்க வருது? அதுக்கு என்ன value?ன்னு பாத்தா……

…. அக்ஷரம், காதி நவத்துல, 8-வது நம்பரை குறிக்கறது.

…..ங்கறது, ‘யாத்யஷ்ட’த்துல, மொதல் எழுத்து. அதுனால, 1-ஐ குறிக்கறது.

இப்போ பாத்தா….. ஜ – ய….ன்னா, 8ம்-1ம்-ன்னு வருது.

ஆனா….. இந்த ஸங்க்யை-ல இன்னொரு ரூல் இருக்கு. அதும்படி, எண்களை தலைகீழா…. மாத்தி சொல்லணும். ‘அங்காநாம் வாமதோ கதி:’

அங்க[anka] -எண்ணிக்கை;
வாம – எதிர்ப்பக்கம், reverse

அதாவுது, கடபயாதிப்படி வரும் பல digit எண்ணிக்கையை, தலைகீழா மாத்தி reverse-ல சொல்லணும்.

1-2-3-ன்னு வந்தா….. அதை 3-2-1 அப்டீன்னு திருப்பிப் போடணும்……

பகவத்கீதைல….. த்யானத்துக்கு ஆஸனம் போட்டுண்டு ஜபம் பண்றதை சொல்லும்போது…… ‘சைலாஜிந-குஶோத்தரம்-ன்னு பகவான் சொல்றார். [6-11]

சைலம், சேலம்...ன்னா துணி. சேலை-ங்கற வார்த்தை இதுலேர்ந்துதான் வந்தது.

அஜினம்..ன்னா, தோல். அதாவுது, மான்தோல், புலித்தோல்….

குஶம்…ன்னா, தர்ப்பை.

சைலாஜினகுஶம்-ன்னு அதே order-ல வெச்சிண்டா… ஆஸனமா மொதல்ல பூமில துணியையும், அதுக்கு மேல தோலையும், எல்லாத்துக்கும் மேல தர்ப்பையையும் போட்டுண்டு ஒக்காரணும்-ன்னு அர்த்தமாகும்.

இப்டி ஒக்காந்துண்டா…. என்ன ஆகும்?

தர்ப்பை குத்தி அறுக்கும்! தோல் வேற…. உறுத்தும்! அப்றம் த்யானம் பண்றதுலயா… மனஸு நிக்கும்?

அதுனால, இங்க….. ஆச்சார்யாள் பாஷ்யம் பண்றச்சே, order-ஐ தலைகீழா மாத்தி, பூமிக்கு மேல தர்ப்பையை பரத்தி, அப்றம் அதுக்கு மேல மான்தோலோ, புலித்தோலோ போட்டு, கடஸியா ஒரு வஸ்த்ரத்தை எல்லாத்துக்கும் மேல விரிச்சிண்டு ஒக்காரணும்-ன்னு reverse பண்ணி குடுத்திருக்கார்.

இங்க…. தலைகீழா அர்த்தம் பண்ணவேண்டியிருக்கற மாதிரிதான், அந்த ஸங்க்யை-ல, எண்களை மாத்திப் போடணும்.

அப்டி பண்றச்சே…. ஜய-ன்னா 8-1ன்னு சொன்னது, 1-8-ன்னு reverse ஆகும்!

ஜய’ன்னா….. பதினெட்டு!

18 ஜயப்ரதமான [வெற்றி கொள்ளும்] எண்ணிக்கை! அதுனால அந்த உதாரணம் காட்டினேன்…..

ஆச்சார்யாளோட அவதாரம் கி.மு. 509-ல!

ஒத்தர் பொறக்கற மாஸம், பக்ஷம், திதி எல்லாத்தையும் கடபயாதி ஸங்க்யை-ல சொல்லியே…. அவருக்கு நாம கரணம் செய்யறதா… மலையாளத்துல ஒரு வழக்கம் உண்டு! அங்க…… ராஜாக்களுக்கு அவாளோட ஜன்ம நக்ஷத்ரத்தையே பேரா சொல்றதுண்டு-ன்னு தெரிஞ்சிருக்கலாம்.

இப்போ…. [1960-ல்] இருக்கற மஹாராஜாவோட பேரு…. சித்திரைத் திருநாள். அதாவுது, அவர் சித்ரா நக்ஷத்ரத்துல பொறந்தவர். இவருக்கு முந்தி இருந்தவர், மூலத் திருநாள். அதுக்கும் முன்னாடி, விஶாகத் திருநாள் இருந்தார். ஸ்வாதி திருநாளோட பேர்…. செம்மங்குடி சீனுவால [ஸ்ரீநிவாஸ ஐயர்]…. எல்லாருக்கும் தெரிஞ்சுது! அந்த ராஜா…. ஸ்வாதி நக்ஷத்ரத்துல பொறந்தவர். திருவனந்தபுரம் மஹாராஜாவா இருந்ததோட, ஸாஹித்ய கர்த்தாவாவும் இருந்தார். இதெல்லாம் நக்ஷத்ரத்தை மாத்ரம் அப்டியே சொல்லி, வெச்ச பேரு!

இப்போ….. நா, சொன்னது… ஸங்கேதமா… மாஸம்-பக்ஷம்-திதிகளை வெச்சு, நாம கரணம் பண்றது.

ஆச்சார்யாளுக்கு இந்த மொறைல பேர் வெக்கறதுக்கு, அப்பாவும் இன்னும் ஊர் பெரியவாளுக்கு நெனச்சா.

அவர் பொறந்தது வைகாஸி. அதாவுது, ரெண்டாவது மாஸம்.

அதுல, ஶுக்ல பக்ஷம்.

பக்ஷங்கள் ரெண்டு. ஒண்ணு… ஶுக்லபக்ஷம், ரெண்டாவுது….க்ருஷ்ணபக்ஷம்.

ஆச்சார்யாளோட ஜனன திதி….. பஞ்சமி. அதாவுது…… அஞ்சு!

வைகாஸி மாஸம் 2

ஶுக்லபக்ஷம் 1

திதி 5

ஆக…… 2-1-5

அதுனால, இதையே தலைகீழா பாத்தா…… 5-1-2. இதை கடபயாதி ஸங்க்யைப்படி சொல்லப்பட்ட அக்ஷரங்களை சேத்து, அவருக்கு பேரா.. வெச்சிடணும்-னு நெனச்சா.

2-ம் மாஸம், 1-ம் பக்ஷம், 5-ம் திதி இதோட….. reverse 5-1-2-ன்னு வெச்சிண்டுதானே ‘ஶங்கர’ங்கற பேரை வெச்சதா சொன்னேன்? அது எப்படி-ன்னு பாக்கலாம்……

ஶங்கர‘-ங்கறதுல, மெய்யெழுத்தா வர, ங்-கை நீக்கிடணும். இந்த ஸங்க்யை-ல, மெய்யெழுத்துக்கு எப்பவுமே value கெடையாது.

அப்போ…. ஶ-க-ர…..ங்கற இந்த மூணு எழுத்துத்தான் நிக்கறது.

ஶ.… ‘யாத்யஷ்ட’ ப்ரகாரம் ய-ர-ல-வ-… இதுல 5-ஐ குறிக்கறது. அதுவே பஞ்சமி திதி!

….. ‘காதிநவ’ ப்ரகாரம் மொதலாவுது அக்ஷரம். அதுவே 1-வது பக்ஷமான ஶுக்லபக்ஷம்!

….. ‘யாத்யஷ்ட’ ப்ரகாரம் ய-ர….. 2. அதுவே 2-வது மாஸமான வைகாஸி மாஸம்!

இப்டியொரு ஸமயத்ல போயி பொறந்ததுனால, தான்…. லோக ஶங்கரனா விளங்கப் போறதுக்கு பொருத்தமா பேர் வெப்பா-ன்னு திட்டம் போட்டே….. அவதார தினத்தை ஸ்வாமி அமைச்சிண்டிருக்கான்!

————

க-ட-ப-யா-தி எண் முறை என்றால் என்ன?

எழுத்துக்களுக்கு சில எண்களை ஒதுக்கும் முறையாகும்.

தமிழில் கூட ‘க’ என்பது ஒன்றையும் ‘அ’ என்பது எட்டையும் குறிக்கிறது.

இது போல சம்ஸ்க்ருத எழுத்துக்களுக்கு எண்களை ஒதுக்கும் முறை ‘க-ட-ப-யாதி’ எண் முறை எனப்படுகிறது.

ஏன் இதற்க்கு இப்படி ‘கட முட’ சப்தம்?

தமிழில் 18 மெய் எழுத்துக்களையும்

கசடதபற,

ஙஞணநமன,

யரலவழள

—வல்லினம், மெல்லினம், இடையினம் என்று சொல்லுவோம்

அதில் முதலில் உள்ள வல்லின எழுத்துக்களின் பெயரில் அமைந்தது இது. க, ட , ப , ய  என்ற வரிசைக்கு ‘எண்  1’- என்று சொல்லிக்கொண்டே போகும் . கீழே அட்டவணையில் முழு விவரம் உளது.

கடபயாதி முறையால் நமக்குக் கிடைக்கும் அதிசயச் செய்திகள் என்ன? வரருசி என்பவர் இதை உருவாக்கியதாக ஒரு கருத்து உளது. அவரது காலம் 2500 ஆண்டுகளுக்கு முந்தையது. சிலர் 2000 ஆண்டு என்றும் சொல்லுவார்கள். இவர் “ழ” சிறப்பு தமிழ் எழுத்தையும் இந்த முறையில் புகுத்தி அதற்கு எண் / நம்பர் கொடுத்துள்ளார். “ழ” என்னும் வளை நாமடி ஒலி (Retroflex) தமிழில் மட்டுமே உண்டு. ஆகையால் இவர் தமிழராகவோ, தென்னிந்தியாவைச் சேர்ந்தவராகவோதான் இருக்க வேண்டும். இதற்கு சில இடங்களில் 3 என்றும் இன்னும் சில இடங்களில் 9 என்ற மதிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

மற்றொரு அதிசயச் செய்தி

இந்த முறையில் எழுத்தைக் கண்டுபிடிக்க, வலமிருந்து இடமாகப் படிக்க வேண்டும் . இதே முறையில்தான் மக்கள் சிந்து- சரஸ்வதி நதி தீரத்தில் எழுத்துக்களை எழுதினர். ஒரு காலத்தில் அதை நாம் படிக்க இந்த எண்களும் உதவலாம்.

மூன்றாவது அதிசயச் செய்தி

இது 2500 ஆண்டுக்கும் முந்தைய பழமையுடைத்து.சாம வேதத்திலேயே இப்படிப்பட்ட முறை உளது. அதை பரப்பும் பணியை ஜைமினி என்னும் மகரிஷியிடம் ஒப்படைத்தார் வியாச முனிவர். அந்த ஜைமினிக்கும் வரருசிக்கும் தொடர்பு உண்டு.

நாலாவது அதிசயச் செய்தி

உலகிலேயே 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்கள் கல்விக்கு சிலபஸ் syllabus  / பாடத்திட்டம் போட்டுக்கொடுத்தவர் வாத்ஸ்யாயன மகரிஷி. அவர் எழுதிய காம சூத்திரம் உலகின் முதல் sex செக்ஸ் புஸ்தகமாகும். அதில் பெண்கள் கற்கவேண்டிய 64 கலைகளைப் பட்டியல் போட்டுக் கொடுத்தார் ( இந்தப் பட்டியல் இந்த பிளாக்கில் இரு முறை புதிய தவல்களுடன் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது) . இந்த 64 கலைகளில் ஒன்று ரகசியக் குறியீடு. அதாவது சங்கேத மொழியில் (coded language)  செய்தி அனுப்ப எண்களைப் பயன்படுத்துவது . இதையும் அவர் பெண்கள் பாடத்திட்டத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சேர்த்துவிட்டார்.

ஐந்தாவது அதிசயச் செய்தி

எண் ஜோதிடம் என்னும் நியூமெராலஜிக்கும் (numerology) இந்துக்களே வித்திட்டனர் . இதற்கு எடுத்துக்காட்டு மகாபாரதத்தின் மற்றொரு பெயர் ‘ஜய’ . இதை கடபயாதி முறையில் எண் ஆக்கினால்  கிடைப்பது 18. மஹாபாரத யுத்தம் 18 நாள் நடந்ததும், 18 டிவிஷன்/ அக்ஷவ்ணி  (11+7) படைகள் பங்கேற்றதும், மஹாபாரதம் 18 பிரிவுகளாக (பர்வம்) பிரிக்கப்பட்டதும், மாபாரதத்திலுள்ள பகவத்கீதை 18 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டதும் 18-ன் மஹிமையை உணர்த்தும். யாருடைய பெயரின் கூட்டுத் தொகையாவது 18 (நியூமராலஜி) என்று வந்தால், மிகப்பெரிய போராட்டத்துக்குப் பின்னரே வெற்றி கிட்டும் என்பது வெளிப்படை.

மற்றோர் அதிசயச் செய்தி தமிழர்களும் ஸம்ஸ்ருத முறையைப் பின்பற்றியதாகும். நீளத்திற்கு ஏற்ப செய்யுட்களை ‘குறு’ந்தொகை, ‘நெடு’ந்தொகை என்று வகைப்படுத்துவது. இதை வேதத்திலும் காண்கிறோம் .

அதே போல 4, 40, 400, 4000 என்று செய்யுட்கள் செய்தது தமிழர்களின் புதுமை.

சம்ஸ்க்ருதம் போலவே தமிழர்களும் பஞ்சகம் (5 செய்யுள்), அஷ்டகம் (8), பதிகம்/தசகம் (10), சதகம் (100) சஹஸ்ரம் (1000) என்று நூல் செய்தனர்.

அகனானூறு புஸ்தகத்தைத் தொகுத்தவர் ஒவ்வொரு திணைக்கும் எண்வரியாக பாடல்களை ஒதுக்கியது புதுமையிலும் புதுமை (இணைப்பைக் காண்க).

பெரிய எண்களை குறிப்பிடுவதற்கு தமிழர்கள் சம்ஸ்க்ருத எண்களை அப்படியே எடுத்துக்கொண்டனர் . யஜுர் வேதத்திலேயே இப்படி பெரிய எண்கள் வந்து விடுவதால் உலகில் முதல் முதலில் பெரிய எண் களை உருவாக்கிய பெருமை வேத கால இந்துக்களுக்குக் கிடைத்துவிடுகிறது. சங்கம், பதுமம், சமுத்திரம், ஆயிரம் முதலிய சம்ஸ்க்ருத எண்கள் இதற்கு எடுத்துக் காட்டு  (ஆயிரம் என்பது சஹஸ்ரம் என்பதன் மருவு என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை)

டெசிமல் முறையை  DECIMAL SYSTEM  (10, 100, 1000,100,000) இந்துக்கள் உலகிற்கு கற்பித்ததாலும் பூஜ்யம் ZERO என்னும் எண்ணைக் கண்டுபிடித்ததாலும் இந்துக்கள் உலக விஞ்ஞான முன்னேற்றத்துக்கு வித்திட்டனர். இது நிகழ்ந்திராவிடில் இன்று நமக்கு கம்பியூட்டர் , இன்டெர்நெட் , விண்கோள், ராக்கெட் , விண்வெளிப் பயணம் ஆகியன கிடைத்திரா.

ஒரு சில எடுத்துக் காட்டுகள்

ஜய =18 (ஜ =8; ய= 1);

18 என்று ஒருவர் எழுதினால் அதை வலமிருந்து இடமாகப் படித்தால் ஜய என்று படிப்பர்.

ஏனைய எழுத்துக்களுக்கு உள்ள எண்களை  இணைப்பில் காண்க ‘.ஜய ‘ என்றால் வெற்றி.

இது தவிர எல்லோருக்கும் தெரிந்த வேதத்திலுள்ள கடவுளர் எண்ணிக்கையையும் பயன்படுத்துவர்

(ஏகாதச) ருத்ரர் – ஆகையால் ருத்ர என்று சொன்னாலேயே 11 என்ற எண்ணைத் தான் குறிக்கும்.

(அஷ்ட) வசு =8, (த்வாதஸ ) ஆதித்ய =12,

கடபயாதி முறையில் குழப்பத்தைத் தவிர்க்க சில விதிகளையும் இயற்றினார்.

பொதுவான தகவல்

சம்ஸ்க்ருதத்தில் 4 க, 4 ச, 4 த, , 4 ப உண்டு. தமிழில் 3 ல, ள ,ழ இருப்பது போல ஸம்ஸ்க்ருத்ஸத்தில் ஸ , ஷ ச உண்டு.

க- ட -ப- ய = 1

க்க -த் த- ப்ப – ர = 2

 

உயிர் எழுத்துக்கள் அனைத்தும் = 0

CONSONANTS  (மெய் எழுத்துக்கள் )           NUMERALS

Ka ta pa ya                               1

Kha tha pha ra                          2

Ga da ba la                               3

Gha dha bha va                        4

Na na ma sa                              5

Ca  ta         sa                               6

Cha  tha      sa                              7

Ja   da           ha                             8

Jha        dha      la                        9

Na   na                                         0

Vowels                                         0

(Sanskrit has three different ‘s’ and two different ‘n’ sounds and two different ‘l’ sounds)

எழுத்துக்களின்  முன்னால்  என்ன இருக்கிறது பின்னால் என்ன இருக்கிறது என்பது  தொடர்பான விதிகளையும் அறிந்து கொள்ளுவன கொண்டு, தள்ளுவன  தள்ள வேண்டும்.

மேளகர்த்தா ராகங்கள் என்று கேள்விபட்டிருக்கலாம். ஸம்பூர்ணமாக ஸப்த ஸ்வரங்களையும் ஆரோஹண அவரோஹணங்களில் கொண்ட 72 ராகங்களுக்கு அப்படிப் பேர். அடுத்தடுத்த ராகங்களுக்கிடையில் ஒரே ஒரு ஸ்வரம் வித்யாஸப்படும் விதத்தில் அந்த 72 ராகங்களையும் வரிசைப்படுத்தியிருக்கிறது. வேங்கடமகி என்ற பெரியவர் அப்படி வரிசைபடுத்தினார். அவர் யாரென்றால் தஞ்சாவூர் நாயக்ராஜ்யம் ஏற்பட மூல புருஷராயிருந்தவரும், அநேக தர்மங்களையும் மஹாதானங்களையும் செய்தவரும், அத்வைத வித்யாசார்யர்களில் ஒருவருமான கோவிந்த தீக்ஷிதர் என்பவரின் புத்ரர்.

மேளகர்த்தா ராகங்கள் 72-ல் எந்த ராகம் எத்தனாவது என்று கண்டுபிடிக்க வசதியாக அந்த ராகங்களின் பெயர் ஆரம்பத்தில் கடபயாதி ஸங்க்யைப்படிதான் இரண்டு எழுத்துக்கள் இருக்கும். இப்படி ஸரியாய் வரவேண்டுமென்றே சங்கராபரணம், கல்யாணி என்பது போலுள்ள பெயர்களை ‘தீர’ சங்கராபரணம், ‘மேச’ கல்யாணி என்றெல்லாம் முதலில் இரண்டு எழுத்துச் சேர்த்துச் சொல்லியிருக்கும். ‘தீ-ர’ என்பது சங்கராபரணம் எத்தனாவது மேளமோ அந்த நம்பரைக் குறிப்பிடும். ‘மே-ச’ என்பது கல்யாணியின் மேள நம்பரைக் குறிப்பிடும்2.

தீ (dhhee) ர” என்பதில் “தீ” என்பது “த” dhha-வின் அடியாக வருவது. Dhha என்பது ‘டாதி நவ’ வில் 9-ஐக் குறிக்கும். ‘ர’ என்பது ‘யாத்யஷ்ட’ப்படி 2. எனவே தீ-ர என்பது 9-2, தலைகீழாக்கினால் 29. சங்கராபரணம் 29-வது மேளம்.
‘மேச’ என்பதில் ‘மே’ என்பதில் ‘ம’வில் பிறப்பது. ‘ம’ என்பது ‘பாதிபஞ்ச’வில் 5. ‘ச’ (cha) என்பது ‘காதி நவ’வில் 6. மே-ச என்பது 5-6. முன்பின்னாக மாற்ற 65 அதுவே கல்யாணியின் மேள எண்.

————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading