ஸ்ரீ மகர நெடுங் குழைக்காதர்‌ பிள்ளைத் தமிழ்‌ பாமாலை–ஸ்ரீ திருமேனி கவிராசர்‌ –முத்தப்பருவம்‌–வாரானைப்‌ பருவம்‌ –அம்புலிப்‌ பருவம்‌ –சிற்றில்‌ பருவம்‌ –சிறுபறைப்‌ பருவம்‌ -சிறுதேர்ப்‌ பருவம்‌ —

சொற்றநான்‌ மறைபுக்‌ கிருக்குமிட மாதலாற்‌
சுரிசங்‌ கிடம்புரிவதால்‌
துய்யமலர்‌ மாளிகைச்‌ செல்விபே ரமுதந்‌
துளிக்குமென்‌ நின்புறுதலான்‌
மற்றுலகின்‌ வாழ்பல்‌ லுயிர்க்கிரங்‌ குஞ்சத்திய
வாய்மைகுடி கொண்டுறைதலான்‌
மங்கலப்‌ புனிதமாஞ்‌ சகலமுந்‌ திருவுள
மகிழ்த்திரங்‌ கிச்சிறிதுநீ
முற்றுமதி யோடர வறுகெருக்‌ கம்பூவும்‌
மொய்க்குஞ்‌ செழுங்கொன்றையும்‌
மூரித்‌ திரைப்பாய்‌ சுருட்டித்‌ தருங்கங்கை
முதுநீரும்‌ விரவுசோதிக்‌
கற்றைவார்‌ சடைமுடிச்‌ சிவனுமய ஸனுந்தொழக்‌
கனிவாயின்‌ முத்தமருளே
காவுரூழ்‌ தென்பேரை யாழிநீர்‌ வண்ண! நின்‌
கனிவாயின்‌ முத்தமருளே.–45-

சொற்ற நான் மறை புக்கு இருக்கும்‌ இடம்‌ ஆதலால்‌ .-சிறப்பித்துப் பேசப்படுகின்ற நான்குவேதங்களும்‌ தங்கியிருக்கும்‌ இடம்‌ நுமது கனிவாய்‌ ஆதலாலும்‌,
சுரி சங்கு இடம்‌ ‘ புரிவதால்‌ – சுழிந்த பாஞ்சன்னியம்‌ என்னும்‌ வலம்புரிச்சங்கு (நுமதுவாயிடத்து) விரும்பி இடங்கொண்டு சுவைத்தலாலும்‌,
துய்ய மலர்‌ மாளிகைச்‌ செல்வி – பரிசுத்தமான செந்தாமரை வீட்டில்‌ எழுந்தருளியிருக்கும்‌ இலக்குமிதேவி,
பேரமுதம்‌ துளிக்கும்‌ என்று இன்‌ புறுதலால்‌ – (நுமது வாயினிடத்து) மிக்க அதரவமுதம்‌ ஊற்றெடுக்கும்‌ என்று மகிழ்வதனாலும்‌,
மற்று – மேலும்‌,
உலகின்‌ வாழ்‌ பல்‌ உயிர்க்கு – நிலவுலகத்தில்‌ வாழ்கின்ற பல ஜீவராசிகளுக்கும்‌,
இரங்கும்‌ – கருணை கொண்டு இரக்‌கப் படும்‌,
சத்திய வாய்மை குடி கொண்டு உறைதலால்‌ – உண்மையான சத்தியம்‌ (நுமது வாயினிடத்து) நிலைபெறப்‌ பயிலுவதாலும்‌,
சகலமும்‌ மங்கலப்‌ புனிதமாம்‌ – அனைத்தும்‌ மங்களகரமான பவித்திர முடையனவாகும்‌
(அத்தகைய சிறப்புக்களையுடைய) நீ– , திருவுளம்‌ மகிழ்ந்து – மனமகிழ்ச்சியோடு,
சிறிது இரங்கி – கொஞ்சம்‌(இந்த எளியனுக்கு) இரக்கமுற்று, (கனி வாயின்‌ முத்தம்‌ அருள்‌ எனமேலியையும்‌) .

(இளி), முற்று மதியோடு – வளர்ந்துவரும்‌ பிறைச்‌ சந்திரறோடு,
அரவு அறுகு எருக்கம்பூவும்‌ – பாம்பும்‌ அறுகம்புல்லும்‌ எருக்கம்பூவும்‌,
மொய்க்கும்‌ செழுங்கொன்றையும்‌ – அடர்ந்து வளவிய கொன்றைப்பூவும்‌,
மூரி – வலிமையையுடைய,
திரைப்பாய்‌ -அலைகளாகிய பாயினை,
சுருட்டித்தரும்‌ – சுருட்டி வழங்கும்‌ (அலைகளாவீசும்‌ என்றபடி),
கங்கை முது நீரும்‌ .- கங்கையினுடையதொன்றுதொட்டுப்‌ பெருகும்‌ நீரும்‌,
விரவு – சேர்ந்து (அளிக்கின்ற)
சோதி . பேரொளியினையுடைய,
கற்றை வார்‌ சடை முடி – தொகுதிப்‌பட்ட நீண்டசுடைமுடியையுடைய,
சிவனும்‌ – சிவபெருமானும்‌,
அயனும்‌ – பிரமதேவனும்‌,
தொழ – வணங்கி வழிபட,
காவு சூழ்‌ -சோலைகள்‌ சூழ்ந்த,
தென்திருப்பேரை – தென்திருப்பேரை நகரில்‌ எழுந்தருளியுள்ள,
ஆழிநீர்‌ வண்ண !- கடல்நீர்போல்‌ நீலநிற வண்ணனே
கனிவாயின்‌ முத்தம்‌ அருள்‌ – கொவ்வை கனிபோற்‌ சிவந்த வாயிடத்து முத்தம்‌ கொடுப்பாயாக ;
நின்‌ – உன்னுடைய, கனிவாயின்‌ முத்தம்‌ அருள்‌-

தழைமடற்‌ பச்சைப்‌ பசும்பூக மணிமிடறு
த௲ளையவிழ்க்‌ கும்பாளைவாய்‌
குருமுத்த மும்பச்‌ செனக்கிரண மடகுமுது
தாற்றிளங்‌ கதலிவாழை
உழைமுத்து முடலிழுக்‌ குண்டுரியு மென்கரும்‌ :
பொளிர்முத்து மாலைவாயிட்‌
‘டஇடனெருக்‌ கும்பொழுது கணுவினில்‌ வெடித்துதிரும்‌
மூத்தும்வான்‌ முகடுதூங்கும்‌
மழைமுத்த முந்துளி படும்போது செவ்வுக்கு
வாராத வடிவுதரும்‌
வளர்புண்ட ரீகப்‌ பொகுட்டுமுத்‌ துஞ்சிறைய
வண்டுகால்‌ கொடுதுவைக்குங்‌
கழைமுத்த முங்கதிர்‌ வெதுப்புண்டு வீனுமொரு
கதிர்முத்து நிகரல்லவே
காவுசூழ்‌ தென்பேரை யாழிநீர்‌ வண்ண! நின்‌
கனிவாயின்‌ முத்தமருளே.’–46

தழைமடல்‌ பச்சைப்‌ பசும்‌ பூகம்‌ – தழைந்த மடலைக்‌
கொண்ட பசுநிறம்‌ மிக்குப்‌ பொருந்திய கமுகின்‌,
மணி மிடறு – அழ கிய கழுத்து,
தளை அவிழ்க்கும்‌ – குலையின்கட்டு விரிக்கும்‌,
பாளை வாய்‌ தரு முத்தமும்‌ -பாளையிடத்து உண்டாகும்‌ முத்தும்‌,
பச்செனக்‌கிரணம்‌ அட .- பளிச்செனச்‌ சந்திரகிரணங்கள்‌ பட,
குமுது (உழைமுத்தும்‌) – ஆம்பலிடத்துண்டாகும்‌ முத்தும்‌,
இளங்கதலஸி வாழைதாற்று உழை முத்தும்‌ . இளைய வாழைக்குலையினிடத்து உண்‌டாகும்‌ முத்தும்‌,
உடல்‌ இழுக்குண்டு உரியும்‌ மென்கரும்பு ஒளிர்‌ முத்தும்‌ – (தன்‌) தண்டுப்பகுதிகள்‌ தளர்வுற்று உரிந்து “போகும்‌ மெல்லியகரும்பு வெளிவிடும்‌ ஒளிவிளங்கும்‌ முத்தும்‌,
ஆலைவாய்‌ இட்டு உடல்‌ நெருக்கும்‌ பொழுது –ஆலையிலிட்டுத்தண்டுகளை“நெருக்கிப்பிழியும்போது,
கணுவினில்‌ வெடித்து உதிரும்‌ முத்தும்‌ -(அதன்‌) கணுக்களினின்று வெடித்துப்புறமேயுதிரும்‌ முத்தும்‌,
வான்‌ முகடு தூங்கும்‌ மழை முத்தமும்‌ – ஆகாயத்தின்‌ உச்சியில்‌ தவழும்‌ மேகத்தினின்று உண்டாகும்‌ முத்தும்‌,
துளி படும்போது .. மழைத்‌ துளி நேரே விழும்போது,
செவ்வுக்கு வாராத வடிவு தரும்‌ – அளவுக்குட்படாத வடிவத்தைக்கொடுக்கும்படி,
வளர்‌ – வளர்கின்ற,
புண்டரீகப்‌ பொகுட்டு முத்தும்‌ – தாமரையின்‌ கொட்டையில்‌ தோன்றுகின்ற முத்தும்‌,
சிறைய வண்டு – சிறகுகளைக்கொண்ட வண்டுகள்‌,
கால்கொடு துவைக்கும்‌ – தமது ஆறுகால்களைக்‌கொண்டு மிதிக்கின்ற
கழை முத்தமும்‌ – மூங்கிலில்‌ உண்டாகும்‌ முத்தும்‌,
கதிர்‌ வெதுப்புண்டு ஈனும்‌ ஒரு கதிர்‌ முத்தும்‌ – சூரிய னால்‌ வெம்மையாகி அதணொளியுண்டாக்கும்‌ பிரகாசம்பொருந்தியதோர்‌ முத்தும்‌,
நிகரல்ல – உன்வாய்முத்துக்கு ஒப்பாகாது
(ஆகவே) காவு சூழ்‌ தென்பேரை ஆழிநீர்‌ வண்ண –, நின்‌ கனி வாயின்‌ முத்தம்‌ அருள்‌

கமுகு, சந்திரன்‌, வாழை, கரும்பு, மேகம்‌, தாமரை, மூங்கில்‌, சூரியன்‌ என்னும்‌ எட்டு இடங்களிற்பிறக்கின்ற முத்துக்களும்‌ உன்‌
கனிவாயினின்று வழங்கும்‌ முத்துக்கு (முத்தத்துக்கு) நிகரில்லை யென்றார்‌.

முத்துப்‌ பிறக்கும்‌ இடங்கள்‌: இருபது என்பர்‌. இதனை **தந்தி வராகமருப்பிப்பி பூகந்தனிக்கதலி, நந்து சலஞ்சலமீன்றலைகொக்கு
ஒளினன்மின்னார்‌, கந்தரஞ்சாலி கழைக்கன்னலாவின்பல்‌ கட்செவி கார்‌, இந்துவுடும்புகரா முத்தமினும்‌ இருபதுமே’” என்றதனாலறிக.

ஆம்பல்‌ சந்திரனைக்‌ கண்டால்‌ மலரும்பூவா தலின்‌ அதன்மூலம்‌ முத்தீனும்‌ எனக்‌ கொள்க.

முனியுமிள வலுமுடன்‌ வரத்தன்‌ நிருத்தாளின்‌
மூளரித்‌ துகட்கருங்கல்‌
முனியிட்ட சாபந்‌ தவிர்த்துமூன்‌ ஸனுூருவெய்த
முதுகருணை யோடனலஸித்துச்‌
சனகன்மிதி லாபுரிச்‌ சிலைவளைத்‌ துச்சீதை
தனைமணம்‌ புணர்தண்டுழாய்ச்‌
சக்கரா யுதக்கடவுள்‌ ! குலநந்தீன முத்தொடலை
தத்துந்‌ தடம்பொருநையான்‌ !
இனியசதுர்‌ மாமறைக்‌ கொருமுதல்வன்‌ !
வருணன்வநீ
தெக்கால மும்பரவுவோன்‌ !
இலகுகொடி மணிமாட வழுதிவள pre ! spr
றெண்மரொடும்‌ விளையாடுமால்‌ !
கனியுமமு தும்பாகு மூறிக்‌ கலந்தசொற்‌
-கனிவாயின்‌ முத்தமருளே
காவுசூழ்‌ தென்பேரை யாழிநீர்‌ வண்ண ! நின்‌
கனிவாயிண்‌ முத்தமருளே.--47-

முனியும்‌-விசுவாமித்திரமுனிவனும்‌,
இளவலும்‌ – தம்பியாகிய இலக்குமணனும்‌,
உடன்‌ வர – கூட வர,
தன்‌ முளரித்திருத்‌தாளின்‌ துகள்‌ – தனது தாமரைமலர்போன்ற அழகிய பாதங்களினின்று எழுந்த புழுதிப்பொடி,
கருங்கல்‌-கரியகல்லுருவாய்‌ இருந்த அகலிகைக்கு,
முனியிட்ட சாபம்‌ தவிர்த்து – (அவள்‌ கணவனாகிய) கெளதமமுனிவரிட்ட சாபத்தை நீக்கி,
முன்‌ உரு எய்த – முன்னாலே யிருந்த பெண்‌ வடிவத்தையே அடையும்படி,
முதுகருணையோடு அளித்து – மிக்க அருளோடு வழங்கி,
(பின்னர்‌) சனகன்‌ மிதிலாபுரிச்‌ சிலை வளைத்து –ஜனகமகாராஜனின்‌ [தலைநகராகிய] மிதிலை
நகரில்‌ [கந்யா சுல்கமாக வைத்த[ வில்லை வளைத்து,
சீதைதனை மணம்‌ புணர்‌ – சீதாதேவியைத்‌ திருமணஞ்செய்து கொண்ட,
தண்‌ துழாய்‌ சக்கராயுதக்கடவுள்‌ ! – குளிர்ந்த திருத்துழாய்‌ மாலையைத்‌ தரித்த சக்கரப்படையையுடைய கடவுளாகிய [திருமாலின்‌ அவதார மான ] இராமபிரானே !
குல நந்து ஈன .- சிறந்த சங்குப்பூச்சிகள்‌ பெற்ற,
முத்தொடு – முத்துக்களோடு,
அலைதத்தும்‌ – அலைகள்‌ தத்திப்பாய்கின்ற
தடம்‌ பொருநையான்‌ – அகலமான தாமிரபரணி நதியையுடையவனே |
இனிய சதுர்மா மறைக்கு ஒரு முதல்வன்‌ -(காதுக்கு) இனிமையான நான்கு சிறந்த வேதங்களுக்கு ஏற்ற ஒப்‌பற்ற முதற்கடவுளே
வருணன்‌ வந்து எக்காலமும்‌ பரவுவோன்‌ -வருணபகவான்‌ வந்து எப்போதும்‌ போற்றித்துதிக்கும்படியுள்ளவனே !
இலகு கொடி மணி மாடம்‌ – விளங்குகின்ற கொடிகள்‌ -நாட்‌டிய அழகிய மாடங்களைாக்கொண்ட,
வழுதி வள நாடன்‌ | -பாண்டிய வள நாட்டுக்குத்தலைவனே |
நூற்றெண்மரொடும்‌ விளையாடும்‌ மால்‌ ! – நூற்றெட்டுப்‌ பக்தர்களோடும்‌ திருவிளையாடல்புரியும்‌ திருமாலே /
கனியும்‌ அமுதும்‌ பாகும்‌ ஊறி கலந்த சொல்‌ – பழமும்‌ பாலும்‌ வெல்லப்பாகும்‌ சேர்ந்து ஊறித்தம்முள்‌ கலப்புற்றுச்சுவைக்கும்‌ சொற்களைப்பேசும்‌,
கனிவாயின்‌ முத்தம்‌ அருள்‌ — ; காவு சூழ்தென்‌பேரை ஆழிநீர்‌ வண்ண –, நின்‌ கனிவாயின்‌ முத்தம்‌ அருள்‌ –

*குலநந்து” என்றதால்‌ அவனது பாஞ்சசன்னியம்‌ போன்ற சங்கு என்னவுமாம்‌. -இனி, குலம்‌ – கூட்டம்‌ எனினுமாம்‌.

——

பொருதிரை சுரூட்டுமணி மகரசல ராசிதரு
புதுமுத்த முங்கைதொடேம்‌
புலவுநா றிச்சுற வெறிந்துடல முவரிப்‌
புனற்பங்க மூடெழுதலாற்‌
பருகமது ரித்தபா கூற்றிருந்‌ தொழுகும்‌
பசுங்கரும்‌ பீன்றமுத்தும்‌
பலமொழிக்‌ கவடுபடு மாதலா லதனையும்‌
படுபழி யறிந்துவேண் டேம்‌
இருநிலத்‌ துச்சிவத்துக்‌ கண்டமுங்‌ கறுப்‌
பென்றுவேய்‌ முத்தந்தொடேம்‌
இனிமேலு நினதுகனி வாய்முத்தி னுக்குவமை
ஏதெடுத்‌ துக்கூறுவேன்‌
கருதுமுது நான்மறைக்‌ கொருமுதல்வ னே !.செழுங்‌
கனிவாயின்‌ முத்தமருளே
காவுசூழ்‌ தென்பேரை யாழிநீர்‌ வண்ண ! நின்‌
கனிவாயின்‌ முத்தமருளே.–48-

புலவு நாறி- புலால்‌ நாற்றம்‌ வீசி,
சுறவு எறிந்து -சுருமீனினால்‌. ஒதுக்கப்பட்டு,
உடலம்‌ – அதன்‌ உடம்பு,
உவரிப்‌புனல்‌ பங்கம்‌ ஊடு எழுதலால்‌ – கடல்நீரின்‌ சேற்றினின்று தோன்றி யெழுதலால்‌,
பொரு திரை சுருட்டும்‌ அணி மகர சலராசி – மோதுகின்ற அலைகளைச்‌ சுருளவரச்செய்யும்‌ அழகியமீன்களையுடைய கடலானது,
தரு – கொடுக்கின்ற,
புது முத்தமும்‌ …. புதிய முத்துக்களையும்‌,
கை தொடேம்‌ – கையால்‌ தொடமாட்டோம்‌ :
பருக . உண்பதற்கு,
மதுரித்த – ருசியாகச்‌ செய்த,
பாகு – வெல்லப்பாகு,
ஊற்றிருந்து ஒழுகும்‌ – உள்ளே ஊறியிருந்து பெருகும்‌,
பசும்‌ கரும்பு ஈன்ற முத்தும்‌ – வளமுள்ள கரும்பு பெற்ற முத்தும்‌,
பல மொழி – பல கணுக்‌களிலிருந்து,
கவடுபடும்‌ ஆதலால்‌ .பிரிவுபட்டுச்‌ சிதறுகின்றனவாதலால்‌,
அதனையும்‌ – அந்தக்‌ கரும்புஎன்ற முத்தினையும்‌,
படுபழிஅறிந்து – அது உண்டாகும்‌ பிறப்பிடத்தின்‌ இழிவு தெரிந்து,
வேண்‌டேம்‌ – விரும்பமாட்டோம்‌ :
(இனி) இரு நிலத்து – தாங்கள்‌ இருக்‌கும்‌ தரையில்‌,
சிவத்து . (அடிப்பக்கம்‌) சிவந்து,
கண்டமும்‌ கறுப்புஎன்று – கழுத்தும்‌ (மேல்பாகமும்‌) கறுப்பு நிறம்‌ பொருந்தியதென்‌ று,
வேய்‌ முத்தம்‌ – மூங்கிலீன்ற முத்துக்களை,
தொடேம்‌ – (கையினாலும்‌)தொடமாட்டோம்‌ ;
இனி மேலும்‌ – இவைகளுக்கு மேலே,
நினது கனிவாய்‌ முத்தினுக்கு . உன்னுடைய கோவைக்கனிபோற்‌ சிவந்த வாயினாற்‌ கொடுக்கும்‌ முத்தத்திற்கு,
உவமை ஏது எடுத்துக்‌ கூறுவேன்‌ – ஒப்பாகசொல்லுதற்கு எதனைச் சிறப்புறவெடுத்துக்‌ கூறமாட்‌டுவேன்‌ ; (எதுவும்‌ இல்லையே) :
(ஆகவே) கருதும்‌ முது நான்‌மறைக்கு ஒரு முதல்வனே -[யாவராலும்‌] சிறப்பாக நினைக்கப்‌படுகின்ற பழைய நான்குவேதங்களுக்கு ஏற்ற ஒப்பற்ற முதற்‌கடவுளே !
செழும்‌ கனிவாயின்‌ . பழுத்துச்‌ சுவைமுதிர்ந்தபழம்‌ போன்றவாயினால்‌,
முத்தம்‌ அருள்‌ –; காவு சூழ்‌ தென்பேரை ஆழி நீர்‌ வண்ண –, நின்‌ கனிவாயின்‌ முத்தம்‌ அருள்‌

—-

உலைவளைக்‌ குங்கொழுங்‌ கனல்வாய்‌ துருத்திவைத்‌
தூதவெம்‌ பொறிசிந்தவெந்‌
துருகுங்‌ கருங்கல்‌ லுருக்கொ டிரும்புவைத்‌
தொன்றா யடித்துநீட்டித்‌
தலைமடுத்‌ ததைமுனைப்‌ படுத்திக்‌ குணக்கறத்‌
தட்டியர மிட்டராவிச்‌
சமைந்தொப்ப மிட்டுக்‌ கடைந்தவடி வேல்டொரு
தடங்கட்‌ செழுங்குமுதவாய்‌
மலைவளைக்‌ குஞ்செழுங்‌ களபகுங்‌ குமமுலை
மடந்தைதெய்‌ வீகமோக
மடமயிற்‌ சீதைப்‌ பிராட்டியை மணம்புணர
வளமருவு மிதிலாபுரிச்‌
சிலைவளைக்‌ கும்பசுந்‌ தண்டுமாய்‌ மேகமே !
திருவாயின்‌ முத்தமருளே
தென்றிருப்‌ பேரைவரு நங்குழைக்‌ காத! நின்‌
திருவாயின்‌ முத்தமருளே.–49-

உலை வளைக்கும்‌ கொழுங்கனல்‌ வாய்‌ – கொல்லனது உலை சூழஎரியும்‌ பெருத்த நெருப்பினிடத்து,
துருத்திவைத்து – உலைத்துருத்திப்பையை வைத்து,
ஊத – (அதன்‌ வாயினால்‌) ஊது,

வெம்‌ பொறி சிந்த – வெப்பமான நெருப்புப்பொறி சிதற,
வெந்து உருகும்‌ கருங்கல்‌ உருக்கொடு – கொதிப்படைந்து உருகுகின்ற கருங்கல்லில்‌ [உளியாற்‌ செய்த] சித்திரவேலையோடு,
இரும்பு வைத்து ஒன்றாய்‌ அடித்து – எஃகிரும்பினை வைத்து [இணையும்‌ படி] ஒரு சேர ஒன்ற (சம்மட்டியால்‌) அடித்து,
நீட்டி – நீளச்‌ செய்து,
தலை மடுத்து – தலைசேர்த்து,
அதை முனைப்‌ படுத்தி- அதனைக்‌ கூராக முனையுண்டாக்கி,
குணக்கு அற. கோணல்‌ நீங்க,
தட்டி – சுத்தியால்‌ தட்டி,
அரமிட்டு அராவி – அரத்தினாலே உரசி,
சமைந்து – பொருத்தமுறச்செய்து,
ஒப்பம்‌ இட்டு – துலங்கவைத்து,
கடைந்த – நன்குமுடிவுறச்செய்த,
வடிவேல்‌ – கூரிய வேலாயுதத்தை,
பொரு – ஒத்திருக்கின்ற,
தட கண்‌ – விசாலமான பெரிய கண்களையும்‌,
செழுங்‌ குமுத வாய்‌ – வளமுள்ள ஆம்பல்‌ மலர்‌ போன்ற வாயினையும்‌,
மலைவளைக்கும்‌ – மலையைப்‌ போல்‌ கனத்துப்பருத்த,
செழும்‌ களபம்‌ குங்குமம்‌ முலை – இனிமையான சந்தனக் கலவையும்‌ குங்குமக்‌ குழம்பும்‌ பூசிய முலையினையும்‌உடைய,
மடந்தை . பெண்ணாகிய,
தெய்வீக மோக மடமயில்‌ சீதை பிராட்‌டியை – தெய்வத் தன்மை பொருந்திய (கண்டார்க்கு ஆசையை விளைவிக்கின்ற மடப்பம் பொருந்திய மயில் போன்ற சாயலினை யுடைய சீதாப் பிராட்டியை,
மணம்‌ புணர – திருமணஞ்செய்து கொள்வதற்காக,
வளம்‌ மருவு மிதிலாபுரி – வளப்பம்‌ பொருந்திய மிதிலை மாநகரில்‌,
சிலை வளைக்கும்‌ – (கந்யாசுல்கமாகவைத்த) வில்லை வளைத்த,
பசும்‌ தண்‌ துழாய்‌ மேகமே ! – பச்சையாயுள்ள குளிர்ந்த திருத்துழாய்‌ மாலையையணிந்த மேகம்‌ போன்றவனே /(இராமாவதாரம்‌ செய்த திருமாலே!)
திருவாயின்‌ – (உனது) அழகிய வாயினது,
முத்தம்‌ அருள்‌–;
தென்திருப்பேரை வரு நம்‌ குழைக்‌காத ! . தென்திருப்பேரை நகரில்‌ எழுந்தருளியிருக்கின்ற– நமது மகரகுழைக்காதராம்‌ இறைவனே |!
நின்‌ திருவாயின்‌ முத்தம்‌ அருள்‌–;

——–

பம்புதிரை வாரிதி வடிம்பலம்‌ பத்துளி
பறுங்கன முகடுகோத்துப்‌
பரக்கும்‌ படிக்குமுன்‌ பெய்தகன மாரியிற்‌
பதறியா னிரைகெடாமல்‌
தம்பமற்‌ றிடையர்மடி யாதேழு நாளுமுது
தடவரை யெடுத்தேந்துமென்‌
தாமரைச்‌ செங்கைத்‌ தடங்குரிசி லே / சங்கு
சக்கரா யுதக்கடவுளே !
கம்பமத மால்யானை மூலமென்‌ றோதவொரு
கருடன்‌ பிடர்த்தலைவருங்‌
காராழி மணிவண்ண ! பேராயி ரம்பெற்ற
கர௫ணாக ரக்குரிசிலே !
செம்பவள முங்குமுத முங்கவிரு மொத்தநின்‌
திரூுவாயின்‌ முத்தமருளே
தென்றிருப்‌ பேரைவரு நங்குழைக்‌ காத! நின்‌
திருவாயின்‌ முத்தமருளே.–50-

பம்பு திரை வாரிதி வடிம்பு அலம்ப -தத்திப்‌ பாய்‌கின்ற அலைகளையுடைய கடல்‌ தன்‌ திருவடிகளைவிளக்கும்படி இராமபிரானாய்‌ நின்று, (
பின்‌) துளிபடும்‌ கனம்‌ – மழையையுண்டாக்கும்‌ மேகம்‌,
முகடு கோத்து பரக்கும்‌ படிக்கு – ஆகாச வுச்சியிற்‌ பின்னிப்‌
பரவிநிற்கும்படிக்கு,
முன்‌ பெய்த கன்‌ மாரியில்‌ – முற்பட்டுப்‌ பெய்த சோனைமழையில்‌,
ஆனிரை பதறி கெடாமல்‌ – பசுக்கூட்டங்கள்‌ நடுக்கமடைந்து அழிந்து போகாமல்‌,
தம்பம்‌ அற்று – பற்றுக்கோடு இன்றி,
இடையர்‌ – [கோகுலத்து ஆய்ப்பாடி] ஆயர்‌,
மடியாது -இறந்து போகாமல்‌,
ஏழு நாளும்‌-(இந்திரன்‌ மழையைப்‌ பெய்வித்த) ஏழுநாட்களிலும்‌,
முது தட வரை எடுத்து ஏந்தும்‌ . பழைய பெரிய கோவர்த்தன கிரியைக்‌ குடையாகத்தூக்கியெடுத்து விரலில்‌ ஏந்தி நின்ற,
மெல்‌ தாமரை செங்கைத்தடம்‌ குரிசிலே ! – மென்மையான செந்தாமரை போற்‌ சிவந்த கைத்தலங்களையுடைய சிறந்த கிருஷ்ணை பகவானே !
சங்கு சக்கராயுதக்கடவுளே ! – சங்கு சக்கரங்களை ஆயுதமாக ஏந்தியுள்ள இறைவனாகிய திருமாலே !
கம்ப மத மால்‌ யானை – கட்டுத்தறியிற்‌ கட்டப்படுகின்ற மதம்‌ பிடித்த பெரிய கஜேந்திரனென்னும்‌ யானை [முதலைவாயினிலகப்‌பட்டு]
மூலம்‌! என்று ஓத . ஆதிமூலமே ! என்று அலறிக்‌ கூப்பிட,
ஒரு கருடன்‌ பிடர்த்தலை வரும்‌ – ஒப்பற்ற கருடனின்‌ கழுத்தின்‌ மேலமர்ந்து விரைந்து வந்த,
கார்‌ ஆழி மணிவண்ண ! — மேகத்‌ தையும்‌ கடலினீரையும்‌ கருமணியையும்‌ ஒத்த சியாமளரூபனே !
பேர்‌ ஆயிரம்‌ பெற்ற கருணாகரக்‌ குரிசிலே ! –சகஸ்ரநாமங்களையும்‌ கொண்ட தயைக்கிருப்பிடமாகிச்‌ சிறந்தோனே
செம்‌ பவளமும்‌ குமுதமும்‌ கவிரும்‌ ஒத்த – சிவந்த பவளத்‌
தையும்‌ செவ்வல்லி மலரையும்‌ முண்முறுக்கம்‌ பூவையும்‌ஒத்திருக்‌கின்ற,
நின்திருவாயின்‌ முத்தம்‌ அருள்‌ — ; தென்திருப்பேரை வருநம்‌ குழைக்காத!–, நின்‌ திருவாயின்‌ முத்தம்‌ அருள்‌

இந்திரனுக்கென்று ஆயர்கள்‌ எடுத்த எழில்விழவில்‌ பழநடைசெய்‌, மந்திரவிதியில்‌ பூசனை பெறாது மழைபொழிந்திடத்‌ தளர்ந்து ஆயர்‌, எந்தம்மோடு இனவாநிரை தளராமல்‌ எம்பெருமான்‌ ! அருளென்ன, அந்தமில்‌ வரையால்‌ மழைதடுத்தானைத்‌ திருவல்லிக்கேணிக்‌ கண்டேனே”

——-

பொங்குவெண்‌ டிங்களங்‌ கவிகைவரு மிரணியன்‌
புகலவன்‌ மதலைபெயர்‌
புகலாம லெந்தைநா ராயண -ஸனெனப்பெயர்‌
புகன்‌ றதி லெழுந்துகோபித்‌
தங்கைமலர்‌ மீதுசங்‌ காழியேந்‌ தியுமயன்‌
அவிர்சடைப்‌ பெருமானும்‌
அஞ்சிப்‌ பதுங்கித்‌ திரிந்தனர்‌ மறந்தனைகொல்‌
அரியெங்‌ கெனப்புடைப்பப்‌
பங்கமுறு மக்கனகன்‌ மார்பம்‌ பிளந்திழி
பசுங்குடர்‌ பிடுங்கிரத்த
பானம்‌ பணித்தடந்‌ தோள்மாலை சூடவே
பண்டுகளி கொண்டொர்தூணிற்‌
சிங்கவடி வாய்வந்த வெங்கள்குல நாத! நின்‌
திருவாயின்‌ முத்தமருளே
தென்றிருப்‌ பேரைவரு நங்குழைக்‌ காத! நின்‌
திருவாயின்‌ முத்தமருளே.–51-

பொங்கு வெண்‌ திங்கள்‌ அம்‌ கவிகை வரும்‌ இரணியன்‌ – ஒளிமிகுகின்ற வெள்ளிய சந்திரனை அழகிய குடையாகப்‌ பிடித்து வருகின்ற இரணியாசுரன்‌,
புகல. கட்டளையிட்டுச்‌ சொல்லவும்‌,
அவன்‌ மதலை – அவனது மகனாகிய பிரகலாதாழ்வான்‌,
பெயர்‌ புகலாமல்‌ – (ஹிரண்யாய நம: என்று) அவன்‌ பெயரைச்‌ சொல்லாமல்‌,
“எந்தை நாராயணன்‌” என பெயர்‌ புகன்றதில்‌ – என்தந்தை
நாராயணன்‌ [அவனுக்கு நம : ] என்று அவன்‌ திருநாமத்தைச்‌ சொன்ன மாத்திரத்தில்‌,
[அதாவது, நாராயணாய நம: என்று சொல்லவே],
கோபித்து எழுந்து . மிக்கசினங்கொண்டு இருக்கை விட்டெழுந்து,
“அங்கை மலர்‌ மீது சங்கு ஆழி ஏந்தியும்‌ – அழகிய
தாமரை மலர்‌ போன்ற கைகளில்‌ சங்கு சக்கரங்களை யேந்தியுள்ள அந்த நாராயணனும்‌,
அயன்‌ – பிரமனும்‌,
அவிர்‌ சடைப்‌ பெருமானும்‌ – விளங்குகின்ற ஜடாபாரத்தினையுடைய சிவபெருமானும்‌ ,
(எனக்கு) அஞ்சிப்‌ பதுங்கித்‌ திரிந்தனர்‌ – பயந்து நடுங்கி
யொளித்து(என்கண்ணில்படாது) திரியலாயினரென்பதை,
மறந்தனைகொல்‌ – நீமறந்துவிட்டாயா?
“அரி எங்கு ? – அந்த நாராயணனுகிய பகைவன்‌ எங்கேயுளான்‌ ? (சொல்லு),
என – என்று
அதட்டி,புடைப்ப- (அப்‌ பிரகலாதன்‌ காட்டிய தூணைக்‌ கையால்‌ அறைந்து தட்ட,
(அப்போதே) அத்‌ தூணினின்று வெளிப்பட்டு
பங்கம்‌ உறு – (தான்‌ பொய்த்ததையெண்ணி) நாணமுற்ற, ௮ கனகன்‌ – அந்த இரணியனுடைய,-கனகன்‌ – இரணியன்‌ என்பதன்‌ பரி
யாயப்‌ பெயர்‌:–மார்பம் பிளந்து – உரத்தைக்கீறிப்‌பிளவுபடச்‌ செய்து,:
இழி பசுங்‌ குடர்‌ பிடுங்கி – கீழ்த்தொங்கிய பச்சைக்குடலைக்‌ கைகளால்‌ அளைந்து பிடுங்கியெடுத்து,
ரத்தபானம்‌ ப(ண்)ணி – [அங்கு இழிந்த] இரத்தத்தையும்‌ குடித்து
(அக்குடலை) தட.ந்‌ தோள்‌ மாலை சூடவே- விசாலமான திருத்‌தோள்களில்‌ மாலையாகச்‌ சூழவரும்படி சூடுதற்காக,
பண்டு -அக்காலத்து,
களிகொண்டு- வெறிகொண்டு,
ஒர்‌ தூணில்‌ சிங்கவடிவாய்‌ வந்த – ஒரு கம்பத்தில்‌ சிங்கத்தின்‌ வடிவெடுத்து [ நரசிங்கமாய்‌] வந்த,
எங்கள்‌ குல நாத | – எங்களுடையகுல நாதனே !
நின்‌ திருவாயின்‌ முத்தம்‌ அருள்‌– : தென்திருப்பேரை வரு நம்‌ குழைக்காத :; நின்‌ திருவாயின்‌ முத்தம்‌ அருள்‌ –

புடைப்பத்‌ தூணில்‌ வந்த” என்றதால்‌ எங்கும்‌ உளன்‌ நாராயணன்‌ என்று காட்டியபடி :*: அந்தர்‌ பஹிஸ்ச தத்சர்வம்‌ வியாப்ய நாராயணஸ்தித :?:” என்றது சுருதியும்‌.

———

மூவா மூதலா யுலகமொரு
மூன்றும்‌ பரவ வங்கூரித்து
முத்திக்‌ கொருவித்‌ தாகவந்த
முதுநான்‌ மறையின்‌ குலக்கொழுந்தே |!
“கோவா வொளிரு மரகதமே!
கொடும்போ ரரக்கர்‌ குலக்கூற்றே |
கோவேத்‌ தியர ரளக்கமலங்‌
குடி.புக்‌ கிருக்கும்‌ பெருமாளே /
தாவா வளமைக்‌ கோசலைக்கோர்‌
தவமே ! தவத்தின்‌ பயனே ! யச்‌
சனகன்‌ றருசா னகிவேட்ட
தடங்கைக்‌ களிறே 1! போரேறே !
தேவா ! வமிர்தங்‌ கனிபவளத்‌
திருவாய்‌ முத்தந்‌ தருகவே
தெள்ளிப்‌ பயிலுந்‌ தமிழ்ப்பேரைச்‌
செல்வா ! முத்தந்‌ தருகவே.–52-

மூவா முதலா உலகம்‌ ஒரு மூன்றும்‌ – அந்தமும்‌ஆதியுமில்லாத [ஆன்மாக்கள்‌ பயிலும்‌ ] சுவர்க்கம்‌, மத்திமம்‌, பாதலம்‌ என்று மூன்று லோகங்களூம்‌,
பரவ – போற்றும்படி,
அங்குரித்து-முளையாகத்‌ தோன்றி
[மூலமாகி], முத்திக்கு ஒரு வித்தாக வந்தமுக்திக்கு விதையாக [முதற்காரணமாக ] வந்த,
முது நான்மறையின்‌ குலக்கொழுந்தே – பழைதாக வருகின்ற நான்கு வேதங்களிற்‌ பயிலும்‌ சிறந்தகொழுந்து போன்றவனே
கோவா ஒளிரும்‌ மரகதமே ! – கோக்கப்படாது விளங்குகின்றபச்சை மரகதரத்தினமே /!
கொடும்‌ போர்‌ அரக்கர்‌ – கொடியயுத்தத்‌தைச்செய்கின்ற அரக்கர்களின்‌,
குலக்கூற்றே ! – குலங்கட்கு யமன்‌ போண்றவனே !
கோ – இந்திரன்‌,
வேத்தி [வேதி] – பிரமன்‌,
அரர்‌ – சிவபெருமான்‌ (இவர்களது),
உளக்கமலம்‌ – மனத்தாமரையில்‌,
குடிபுக்கிருக்‌கும்‌ பெருமாளே – தங்கிவசிக்கும்‌ இறைவனே !
தாவா – கெடாத,
வளமை . ஐசுவரியங்களையுடைய,
கோசலைக்கு – கெளசல்யாதேவிக்கு,
ஓர்‌ தவமே? – ஒப்பற்ற தவமே !
தவத்தின்‌ பயனே ! – அந்தத்தவத்தின்‌ பயனானவனே /
௮ சனகன்‌ தரு சானகி – அந்தப் பிரசித்த பெற்ற ஜனக மகாராஜன்‌ வளர்த்துத்‌ தந்த சீதாபிராட்டி,
வேட்ட – திருமணஞ்செய்து கொண்ட,
தடகை களிறே ! .. பெரிய கைகளையுடைய ஆண்யானை போன்றவனே:
போர்‌ ஏறே ! – போரில்‌ சிங்கம்போன்றவனே !
தேவா ! – தேவனே!
அமிர்தம்‌ கனி – தேவாமிர்தம்‌ போல்‌ சுவைபழுத்த,
பவளத்‌ திருவாய்‌ – சிவந்த திருவாயினால்‌,
முத்தம்‌ தருக – ;
தெள்ளிப்‌ பயிலும்‌ தமிழ்ப்‌ பேரைச்‌ செல்வா! ‘* தெளிந்து வழங்குகின்ற தமிழ்மொழி யினையுடைய திருப்பேரைநகரின்‌ செல்வனே ! முத்தம்‌ தருக- ;

——

துளிக்குந்‌ திரைப்பாற்‌ கடன்முகட்டுத்‌
தூய தரங்கத்‌ தனந்தபுரத்‌
தொருவா விருகண்‌ டுயில்கூருஞ்‌
சோதிச்‌ சுடரே ! பேரின்பம்‌
அளிக்குங்‌ கருணைக்‌ கருங்கடலே !
அழியா வீட்டுக்‌ கொருவிளக்கே !
அமுதங்‌ கடைந்து திரட்டியெடுத்‌
தமரர்க்‌ குதவும்‌ பெருமானே !
களிக்குஞ்‌ சுரும்பர்‌ துதைந்துழத்தேன்‌
கக்குங்‌ கமல முறுக்குடையுங்‌
கன்னித்‌ தடஞ்சூழ்‌ திருநாடா !
கண்ணா !வரி!கே சவ! முகுந்தா !
தெளிக்கும்‌ பொருநைத்‌ தடந்துறைவா !
திருவாய்‌ முத்தந்‌ தருகவே
தெள்ளிப்‌ பயிலுந்‌ தமிழ்ப்பேரைச்‌
செல்வா ! முத்தந்‌ தருகவே.–53-

துளிக்கும்‌-திவலைகளைத்‌ தெளிக்கும்‌,
திரை பாற்கடல்‌ -அலைவீசும்‌ திருப்பாற்கடலின்‌,
முகட்டு – மேற்‌ பகுதியிலும்‌,
தூயதரங்கத்து – பரிசுத்தமான கடலிலும்‌,
அனந்தபுரத்து – திருவனந்தபுரத்திலும்‌,
ஒருவா – நீங்காதபடி (என்றைக்கும்‌),
இரு கண்‌ துயில்‌கூரும்‌ சோதிச்‌ ௬டரே !-இரண்டுகண்களையம்‌ மூடி யோகநித்திரை செய்யும்‌ பரஞ்சோதியே
பேரின்பம்‌ அளிக்கும்‌ கருணைக்‌ கருங்‌ கடலே ! – பேரானந்த
மாகிய முத்தியைக்‌ கொடுக்கும்‌ தயாசமுத்திரமே !
அழியா வீட்டுக்குஒரு விளக்கே :! – அழிவில்லாத்‌ மோட்சலோகத்திற்கு ஒப்பற்ற விளக்‌குப்போன்று சுயம்பிரகாசனே !
அமுதம்‌ கடைந்து திரட்டி எடுத்து-தேவாமிருதத்தை (த்திருப்பாற்கடலிலிருந்து) கடைந்தெடுத்துத்‌திரளவைத்து,
அமரர்க்கு – தேவர்களுக்கு (மட்டும்‌)
உதவும்‌ – வழங்‌கிய, பெருமானே !-
களிக்கும்‌ சுரும்பர்‌ – (தேனுண்டு) வெறி கொள்ளும்‌ வண்டுகள்‌,
துதைந்து உழ – (தம்‌ கால்களால்‌) மிதித்துத்துகைத்தலால்‌,
தேன்‌ கக்கும்‌ கமலம்‌ .. (தம்மிடத்திள்ள) தேனை வெளியே சொரியும்‌ தாமரை மலர்‌,
முறுக்கு உடையும்‌ – தமதுகட்டு நெகிழ்ந்து பிரியும்‌,
தடம்‌ சூழ்‌- தடாகங்கள்‌ சூழ்ந்த,
கன்னித்‌ திருநாடா ! – பாண்டியநாட்டுக்குரியவனே :!
கண்ணா !- கண்ணனே !
அரி – விஷ்ணுவே |, கேசவ முகுந்தா -,
தெளிக்கும்‌ பொருநைத்‌ தடம்‌ துறைவா . நீர்த்துளிகளை [க்காற்றில்‌] வீசும்‌ தாமிரபர்ணியின்‌ நீர் துறைகளை யுடையவனே?
திரு வாய்‌ முத்தம்‌ தருக -; தெள்ளிப்‌ பயிலும்‌ தமிழ்ப்‌ பேரைச்செல்வா -; முத்தம்‌ தருக –

* பாலாழி நீ கிடக்கும்‌ பண்பு ?* (பெரிய திருவந்தாதி, 34)
* கண்ணன்‌ நின்பால்‌ திருநெடுங்கண்‌ வளர்தற்கு, அருமாதவம்‌ என்ன செய்தாய்‌ பணியெனக்கு அம்புதியே “(திருவேங்கடத்தந்‌தாதி, 10)
, “எழிலணி அனந்தபுரம்‌, படமுடையரவில்‌ பள்ளி பயின்ற வன்‌ ”” (திருவாய்மொழி – 10 – 2 – 8) முதலியன ஈண்டு முதலடியில்‌ அநுசந்திக்கவும்‌.
பாண்டி நாட்டுக்குக்‌ **கன்னிநாடு ‘” என்றும்‌ பெயருண்டு : தடாதகைப் பிராட்டியாண்டமையால்‌ என்பர்‌, இனி,கன்னி – அழியாத என்றுமாம்‌.

——

சந்தா டவியும்‌ பாதிரியுந்‌
தடந்தா மரையும்‌ விளைவயலுஞ்‌
சதுரா மறையும்‌ விழாவொலியுந்‌
தழைக்கும்‌ பிள்‌௯க்‌ குழாவொலியும்‌
நற்தா வளமைத்‌ திருவழுதி
நாடா ! பரம பதவீடா !
நறுந்தா தளையும்‌ பசுந்துளவ
நாரா யண !சீ தர! முகுந்தா !
கொந்தார்‌ மலர்ப்பூங்‌ கரியகுழற்‌
கொவ்வைக்‌ கனிவாய்‌ மணிமுறுவற்‌
கொடிபோ ஸுடங்குந்‌ துடியிடைக்கோ
மளக்கோ குலக்கோ சலையளித்த
சிந்தா மணியே மரகதமே /
திருவாய்‌ முத்தந்‌ தருகவே
தெள்ளிப்‌ பயிலுந்‌ தமிழ்ப்பேரைச்‌
செல்வா / முத்தந்‌ தருகவே.–54-

சந்து அடவியும்‌ – சந்தனமரக்காடுகளும்‌,
பரதிரியும்‌ -பாதிரிமரங்களும்‌,
தடம்‌ தாமரையும்‌ – தடாகங்களில்‌ தாமரைக்‌ கொடிகளும்‌, விளை வயலும்‌ – (நெல்‌) விளைகின்ற கழனிகளும்‌
(இவைகளோடு) சதுராம்‌ மறையும்‌ – நான்கு வேத கோஷங்களும்‌,
விழா ஒலியும்‌ – திருவிழாக்களில் எழும் ஒலிகளும்‌,
பிள்ளைக்குழாம்‌ ஒலியும்‌ – சிறுவர்களின்‌ கூட்டொலியும்‌,
தழைக்கும்‌ – மிகுதியாகச்‌ செழித்துக் காணப்படுகின்ற,
நந்தா வளமை-(என்றும்‌) குறைவுபடாத வளப்பத்தையுடைய,
திருவழுதி நாடா – பாண்டியநாட்டுக்கு உரியவனே
பரமபத வீடா – வைகுந்த வாசனே ! ,
நறும்‌ தாது அளையும்‌ பசும்‌ துளவ நாராயண –வாசனையுடைய மகரந்தங்கள்‌ செறியும்‌ பச்சைத் திருத்துழாய்‌ மாலையை யணிந்த நாராயணா,
சீதர – இலக்குமியை (மார்பில்‌) தாங்குபவனே ! –
முகுந்தா !.,
கொந்து ஆர்‌ மலர்‌ – கொத்துக்களாகவுள்ளபூக்களைச்சூடிய,
பூங்‌ கரிய குழல்‌ – (அழகிய) மென்மையான கரிய கூந்தலினையும்‌,
கொவ்வைக்‌ கனிவாய்‌ – கோவைக்கனி போற்‌ சிவந்த வாயினையும்‌,
மணி முறுவல்‌ – முத்துப்போன்ற பற்களையும்‌,
கொடி போல்‌ நுடங்கும்‌ துடி இடை. – வல்லிக்‌ கொடிபோல்‌ அசைகின்ற உடுக்கையை’ யொத்த நுண்ணிய இடுப்பினையும்‌ உடைய,
கோமளம்‌ – இளமைஅழகு படைத்த,
கோகுலக்‌ கோசலை – ஆயர்பாடியிலுள்ள யசோதை,
அளித்த – வளர்த்துக்‌ கொடுத்த,
சிந்தாமணியே – ! மரகதமே ! –, திருவாய்‌ முத்தம்‌ தருக –; தெள்ளிப்‌ பயிலும்‌ தமிழ்ப்‌ திருபேரைச்‌ செல்வா ! –, முத்தம்‌ தருக-

————–

வாரானைப்‌ பருவம்‌

விதுரன்‌ மனையி லடிசில்‌ நுகரும்‌ விரதன்‌ வருக
வருகவே
விதர ணிகமு மறிவு மூடைய விமலன்‌ வருக
வருகவே
அதிரு மணியு மரையின்‌ வடமு மசைய வருக
வருகவே
அழகு கரிய குழல்கள்‌ சரிய வபிமன்‌ வருக
வருகவே
புதிய மதியின்‌ வதன வெயர்வு பொலிய வருக
வருகவே
பொழியு நறவு விரவு துளவு புனையூ மனகன்‌
வருகவே
மதுர முறுசெவ்‌ வதர வமுத மூதரம்‌ வழிய வருகவே
வருணன்‌ வருடு முபய சரண: வரதன்‌ வருக
வருகவே.--55-

விதுரன்‌ மனையில்‌ அடிசில்‌ நுகரும்‌ – விதுரனது வீட்டில்‌ உணவு விரும்பிப்‌ புசித்த,
விரதன்‌ – சங்கற்பங்கொண்டோனே ! வருக வருக – :
விதரணிகமும்‌ – சாமர்த்தியமும்‌,
அறிவும்‌ உடைய – ஞானமும்‌ உடைய,
விமலன்‌ . புனிதனே ! வருக வருக -;
அதிரும்‌ மணியும்‌ – ஒலிக்கின்ற [அரைஞாணில்‌ கட்டிய] சிறுமணியும்‌,
அரையின்‌ வடமும்‌ – அரைஞாண்கயிறும்‌,
அசைய – மெலிய அசை யும்படி, வருக வருக – :
கரிய அழகு குழல்கள்‌ சரிய – கருநிறம்‌ பொருத்தி அழகாயுள்ள தலைமயிர்‌ தாழ்ந்துவிழும்படி ,
அபி மன்‌ – அன்புமிக்கோனே –வருக வருக – :
புதிய மதியின்‌ வதனம்‌ வெயர்வு – புதிய சந்திரன்போன்ற நெற்றியில்‌ [ துளிக்கும்‌]வெயர்வை,
பொலிய_ _ விளங்கும்படி, வருக வருக – :
பொழி:பும்‌ நறவு விரவு துளவு – செரரிகின்ற தேன்‌ பொருந்தியுள்ள திருத்துழாய்‌ மாலையை,
புனையும்‌ -சூட்டிக்கொண்ட,
அனகன்‌ – அழகுள்ளவனே ! வருக வருக – ;
மதுரம்‌ உறு செவ்‌ அதர அமுதம்‌ – சுவை மிக்க சிவந்த உதடுகளில்‌
ஊறும்‌ தேறல்நீர்‌, உதரம்‌ வழிய வருக – வயிற்றில்‌ ஒழுகும்படி வருக;
வருணன்‌ வருடும்‌ உபய சரண வரதன்‌ – வருணபகவான்‌ [தனது]கைகளால்‌ பிடிக்கும்‌ இரு திருவடிகளையுடைய வரதனே ! வருக வருக .

இச்செய்யுளுக்குச்‌ சந்தக்குழிப்பு தனன தனன தனன தனன தனன தனன தனனன என்பது.

———–

எரியூமனல்‌ கதுவும்விழி நிருதரடு சமர்புரியும்‌
. இகல்‌ தொலைய விடுகணையினான்‌
இருவினையு மொருசிறிது தொடரவரி தெனவருடும்‌
எவர்தமையு மடிமைகொளுமால்‌
முரிபுருவ நுதல்வனிதை சனகிமுலை மூகடுழுத
முகலளித விரணமுமூளோன்‌
முருகுவிரி தருதுளவு மணமலிய நெடியமணி
முடியினணி பெறவனைகுவோன்‌
உரியசது மறையுமுனி வரருமய னொடுபரவும்‌
உபயபரி புரசரண! நீ
டுலகமுழு வதுமுதர மமையவொரு தனிநுகரும்‌
ஒளிரும்ரவி குலமரபினோன்‌ !
நெரியமரு தமுமுதிய சகடுமுதை விதரணிகன்‌ !
நிமலனர வணைதுயிலுமால்‌!
நெறியுமகி மையுமளவில்‌ குணனும்வடி வழகு
முடை
நிகரில்‌ முகில்‌ வணன்‌ வருகவே.--56-

எரியும்‌ அனல்‌ கதுவும்‌ விழி நிருதர்‌ – சுவலிக்கின்ற நெருப்புப்‌ பற்றியதுபோற்‌ (சினத்தால்‌) சிவந்தகண்களையுடைய, அரக்கர்கள்‌,
அடு சமர்புரியும்‌ இகல்‌ தொலைய – கொல்லும்‌ போரைச்‌
செய்கின்ற பகைமை யொழியும்படி, (அவர்களையழிக்க)
விடு கணையினான்‌ – தொடுக்கின்ற அம்புகளை யுடையவனும்‌,
இருவினையும்‌ – நல்வினை தீவினையாகிய இரண்டும்‌,
ஒரு சிறிது தொடர அரிது, என – சிறிதேனும்‌ விடாது பின்வருவது இனிமுடியாது என்னும்‌ துணிபோடு,
வருடும்‌ எவர்தமையும்‌ – (திருப்பாதங்களைத்‌) தடவும்‌ அனைவரையும்‌,-தெண்ணீர்‌ பொன்னி திரைக்கையால்‌ அடிவருடப்‌ பள்ளி
கொள்ளும்‌: என்றது போல,
அடிமை கொளும்‌ மால்‌ – ஆட்கொண்டு கைங்‌கரியபரர்களாக ஆக்கிக்‌ கொள்ளும்‌ திருமாலும்‌,
முரிபுருவம்‌ -வளைந்த புருவத்தையுடைய,
நுதல்‌ – நெற்றியைக்‌ கொண்ட
வனிதை சனகி – பெண்ணாகிய சீதையின்‌,
முலை முகடு உழுதமுகம்‌ – கொங்கைகளின்‌ காம்பு அழுந்தப்பட்ட மார்பிடத்து,
லளிதவிரணமும்‌ உளோன்‌ – லாவண்யமான காயம்‌ வடு உள்ளவனும்‌
முருகு விரிதரு துளவு – அழகு விரிகின்ற திருத்துழாயை,
மணம்‌ மலிய – வாசனை மிகும்படி,
நெடிய மணி முடியில்‌ – நீண்ட அழகிய துலைமயிரில்‌,
அணி பெற வனைகுவோன்‌ – ஆபரணமாம்படி அழகுறச்‌ சூடுபவனும்‌, (ஆகிய உபயபரிபுரசண ! எனமேலியையும்‌) :
உரிய சதுமறையும்‌ – ஓதுதற்கு உரிய நான்கு வேதங்களும்‌,
முனிவரரும்‌ – இருடிச்சிரேட்டர்களும்‌,
அயணொடு பரவும்‌ – பிரமதேவனோடு துதிக்கின்ற,
உபய பரிபுர சரண ! . இரண்டு நூபுரங்களையுடைய பாதங்களை யுடையவனே !
நீடு உலகம்‌ முழுவதும்‌ –
பெரிய உலகத்திலுள்ள அனைத்துப்பொருள்களும்‌,
உதரம்‌ அமையஉமது வயிற்றினுள்‌ அடங்கும்படி,
ஒரு தனி நுகரும்‌ – (மகாபிரளய காலத்தில்‌) ஒப்பற்றவனாய்‌ உண்ட,
ஒளிரும்‌ ரவிகுல மரபினோன்‌ – விளக்கமுற்ற சூரியகுலத்திலுதித்தவனே !
மருதமும்‌ – இரண்டு மருதமரங்களும்‌,
முதிய சகடும்‌.- பழைய வண்டியின்‌ சக்கரமும்‌,
நெரிய – முறிந்து விழும்படி,
உதை-(கால்களால்‌) உதைத்த,
விதரணிகன்‌ – சாமர்த்திய முடையவனே?
நிமலன்‌ 1- தோஷமற்றவனே !
அரவணை துயிலும்‌ மால்‌ | – பாம்‌ பணைமேல்‌ யோகநித்திரை பயிலும்‌ திருமாலே |!
நெறியும்‌ – ஒழுக்கமும்‌,
மகிமையும்‌ – மேன்மையும்‌,
அளவு இல்‌ குணனும்‌ – எண்ணற்ற நற்குணங்களும்‌,
வடிவழகும்‌ – நல்ல உருவழகும்‌,
உடை. – உடைய,
நிகரில்‌ . ஒப்பற்ற முகில்‌ வணன்‌ – முகில்வண்ணன்‌ என்னும்‌ திருநாமம்‌ உடையவனே ! வருக–

————

புலருஞ்சது மறையருந்தவர்‌ புலவர்பண்டிதர்‌ மலர்‌
கொடே
புதியபங்கய சரண்வணங்கிய புனித!வெண்டிரை
யுததிசூழ்‌
செகமடங்கலு நொடியினுண்‌ டுபிழ்‌ திருமண ந்
தொளிர்‌ மரும! வோர்‌
-திரிபுரந்தழல்‌ படமுனிந்தருள்‌ சிவனயன்‌ தொழ
வருகவே
தகரமுங்கிய பரிமளங்கமழ்‌ தருதடம்புய சயதர !
சமர்முகந்தனி னிருதர்வெம்படை சரியடுஞ்சிலை
யபிம !னீள்‌
மகரகுண்டல மசையவிங்கெதிர்‌ மகரவண்குழை !
வருகவே
வருணன்வந்திரு சரண்வணங்கிட மனமகிழ்ந்‌
இதெதிர்‌ வருகவே.–57-

புகல்‌ அரும்‌ சதுமறை . பேசுதற்கரிய (புகழையுடைய) தான்கு வேதங்களிலும்‌ வல்ல,
அருந்தவர்‌ – சிறந்த தபசியரும்‌,
புலவர்‌ – கவிபாடுபவரும்‌,
பண்டிதர்‌ . அறிவாளிகளும்‌,
மலர்‌ கொடு .(தத்தம்‌) கையிலே பூக்களைக் கொண்டு (அர்ச்சித்து),
புதிய பங்கய சரண்‌ வணங்கிய – புதிதாக (அப்போது) மலர்ந்த தாமரை பூப்‌போன்ற திருவடிகளைப் பணியும் படியுள்ள,
புனித-பவித்திரனே!
வெண்திரை உததி சூழ்‌ – வெண்மையான அலைகளை யுடைய கடல்‌ சூழ்ந்த,
செகம்‌ அடங்கலும்‌ -,நிலவுலகம்‌ முழுவதும்‌,
தொடியின்‌ உண்டு – ஒருகணத்தில்‌ புசித்து,
உமிழ்‌ -(மறு கணத்தில்‌) வெளியுமிழ்‌கின்ற, –
திரு மணந்து ஒளிர்‌ மரும ! . இலக்குமிதேவி பொருந்தி விளங்குகின்ற மார்பனே 7
ஓர்‌ திரிபுரம்‌ தழல்‌ பட முனிந்தருள்‌ சிவன்‌ – முப்புரங்களும்‌ நெருப்புப்‌ பற்றி யெரியும்படி கோபித்த சிவபெருமானும்‌,
அயன்‌ – பிரமனும்‌,
தொழ – கை கூப்பித்‌ தொழும்படி,–வருக –
தகரம்‌ – மயிர்ச்சாந்து,
முங்கிய – நிறையப்‌ பூசியதால்‌,
பரிமளம்‌ கமழ் தரு – வாசனை வீசுகின்ற,
தடம்‌ புயம்‌ – பரந்த தோள்‌களையுடைய,
சயதர – வெற்றி வீரனே !
சமர்‌ முகம்‌ தனில்‌ – போரினிடத்து,
நிருதர்‌ வெம்படை சரிய. அரக்கர்களுடைய: கொடிய சேனைகள்‌ அழிந்து போகும்படி,
அடும்‌ – கொல்லுகின்ற,
சிலை – வில்‌லினையுடைய,
அபிமன்‌ ! – பயமில்லாதவனே :
நீள்‌ மகர குண்டலம்‌ அசைய – நீண்ட மகரகுண்டலங்கள்‌ (இரு காதுகளிலும்‌) [மெல்ல] அசையும்படி,
இங்கு எதிர்‌ வருக – ; மகரவண்குழை ! – மகரநெடுங்‌
குழைக்காதரே !
வருணன்‌ வந்து இரு சரண்‌ வணங்கிட – வருணபகவான்‌ வந்து [உம்முடைய] இரண்டு திருப்பாதங்களையும்‌வணங்க:
(அதனால்‌), மனம்‌ மகிழ்ந்து . உள்ளக்களிப்போடு, எதிர்‌ வருக-

———

கலைமண ந்தொளிர்‌ தவளவெண்பிறை கதுவிடுஞ்சிலை
நுதலிஷள்‌
கவினலந்தரு சனகிசம்பிரம கனதனம்பொரு
துழுதமால்‌
உலைமகந்தனி லடிபடும்பொழு தொளிருமொண்‌ சுடர்‌
வயிரவா
ளொடுமுனிந்தட ரவுணர்பொன் றிட உயிரடுஞ்‌
சமன்‌ ! வருகவே
திலகமஞ்சரி துளவசைந்தொளி திகழவண்டின
முூரலவே
செழுநறுந்துகள்‌ முகைவிரிந்தலர்‌ சிறிய பங்கய
மெனு
மலர்மடந்தையு நிலமடந்தையு மருவுதிண்டிறல்‌
வரத ! நீள்‌
மகரகுண்டல மசையவிங்கெதிர்‌ மகரவண்குழை !
வருகவே,–58–

கலை மணந்து ஒளிர்‌ – கலைகள்‌ பொருந்தி விளங்குகின்ற,
தவள வெண்பிறை – மிக்க வெண்மையையுடைய பிறைச்‌ சந்திரனை
கதுவிடும்‌ – பற்றியிருக்கின்‌ற,
சிலை _-வில்போன்று வளைந்த,
நுதலினாள்‌ -புருவங்களைக்‌ கொண்டவளாகிய,
கவின்‌ நலம்‌ தருசனகி – அழகினினிமை வழங்கும்‌ சீதையின்‌,
சம்பிரமம்‌ கன தனம்‌ -களிப்புமிகுந்த பருத்த கொங்கைகளோடு,
பொருது உழுத மால்‌ – போரிட்டு (மார்பினால்‌) கிண்டிய இராமபிரானாகிய திருமாலே !
உலைமுகம்‌ தனில்‌ அடிபடும்‌ பொழுது – கொல்லனது உலைக்‌ கூடத்தில்‌ [சம்மட்டியினால்‌] ஓங்கி அடிக்கும்‌ பொழுது,
ஒளிரும்‌ – பிரகாசிக்கின்ற,
ஒண்சுடர்‌ – ஒளிக்கதிர்ப்‌ பொறிகளை யுடைய,
வயிர வாளொடு – உறுதியான [வலிய] வாளைக்‌ கையிலே கொண்டு,
முனிந்து – சினந்து,
அடர்‌ அவுணர்‌ – தாக்குகின்ற அசுரர்கள்‌,
பொன்றிட -இறந்தொழியும்படி,
உயிர்‌ அடும்‌ சமன்‌ -உயிரைக் கொண்டு செல்லும்‌ யமன்‌ போன்றவனே ! வருக-
வண்டினம்‌ முரல . வண்டுக்‌ கூட்டங்கள்‌ ஒலித்துத்‌ துகைத்தலால்‌,
செழு நறும்‌ துகள்‌ முகை – செழித்த பரிமளமுள்ள மகரந்தப்‌ பொடிகளைக்‌ கொண்ட மொட்டு,
விரிந்து அலர்‌ – அகன்று மலர்ந்த,
சிறிய பங்கயம்‌ எனும்‌ நரு மலர்‌ – சிறிய (செந்‌) தாமரை யென்கின்ற தேன்‌ சொரியும்‌ மலரில்‌,
மடந்தையும்‌ – எழுந்தருளியிருக்கின்ற இலக்குமி தேவியையும்‌,
நில மடந்தையும்‌ – பூமிதேவியையும்‌,
திலகம்‌ – சிறந்த,
மஞ்சரி – கொத்துக்களைக்‌ கொண்ட, துளவு
அசைந்து ஒளி திகழ – துளவ மாலையசைந்து பிரகாசிக்க,
மருவு திண்‌ திறல்‌ வரத- தழுவுகின்ற மிக்க வலிமையை யுடைய வரதனே !
நீள்‌ மகர குண்டலம்‌ அசைய – நீண்ட மகரகுண்டலங்‌கள்‌ (இரு காதுகளிலும்‌ மெல்ல) அசையும்படி,
மகரவண்குழை !.-மகரநெடுங்குழைக்காதரே ! இங்கு எதிர்‌ வருக–

——–

உளநெ கிழ்ந்திரு பொழுதும்‌ வந்தனை யொடுமுவநீ
தெதிர்‌ பரவவே
உபயசெஞ்சரண்‌ முடிபு னைந்தொளி ரூயர்ப
தந்தரு கருணையால்‌
அளைக வர்ந்திடை மகளிர்‌ தங்குடி லணை தருங்கயி
றதுகொடே
அடிபடும்பொழு துடல்குழைந்தழு தழுதுநின்ற
வன்‌ 1 வரூகவே
கு ஈநி ரம்பிய புனலினுங்கரை யருகுவண்டலு மதகு
நீள்‌
குவளையம்படு கருநெருங்கிய குளிர்‌ நறும்பொழி
விடையும்‌ வால்‌
வளமுழங்கிய குருகையம்பதி மருவுநங்கைகண்‌
மணி நன்னா
வலவனிங்கித கவிதை கொண்டருள்‌ மகரவண்‌
சூழை ! வருகவே.--59-

உளம்‌ நெகிழ்ந்து – மனமுருகி,
இரு பொழுதும்‌ -காலைமாலையென்ற இரண்டுபொழுதும்‌,
வந்தனையொடு உவந்து -வழிபாட்டோடு மனமகிழ்ந்து,
எதிர்‌ பரவ – எதிர்‌ நின்று துதிக்க,
உபய செஞ்‌ சரண்‌ . இரண்டுசெவ்வியபா தங்களையும்‌,
முடிபுனை ந்து – (பரவுவோரின்‌) சிரசிலே சூட்டி,
ஒளிர்‌ உயர்பதம்‌ தரு கருணையால்‌ -(எப்போதும்‌) பிரகாசிக்கின்ற மேலான பரமபதத்தைக்‌ கொடுக்கின்ற தயையினால்‌,
அளை கவர்ந்து – வெண்ணெயைக்களவுகண்டு,
இடைமகளிர்தம்‌ குடில்‌ – இடைச்சியரது குடிசையில்‌,
அணை தரும்‌ – பிணித்‌திருக்கின்ற,
கயிறது கொடு – கடைகயிற்றினால்‌,
அடிபடும்‌ பொழுது -அடிவாங்கும்போது,
உடல்‌ குழைந்து – உடல்‌ நெளிந்து,
அழுதுஅழுது நின்றவன்‌ – விம்மி அழுகை ஓயாது நின்ற கண்ணனே !
குளம்‌ நிரம்பிய புனலினும்‌ .. நிரம்பியுள்ள குளத்தின்‌ நீரிலும்‌,
கரை அருகு வண்டலும்‌ – (அதன்‌) கரையில்‌ தெருங்கியுள்ள வண்‌டல் நீரிலும்‌,
மதகு – மதகில்தங்கியுள்ள நீரிலும்‌,
நீள்‌ ரூவகா அம்‌படுகரும்‌ – நீண்ட குவளைப்பூக்கள்‌ மலர்ந்துள்ள அழகிய நீர்நிலைகளிலும்‌,
நெருங்கிய குளிர்‌ நறும்‌ பொழிலிடையும்‌ – செறிந்த குளிர்ச்சி பொருந்தி வாசனையோடு கூடிய சோலைகளினிடத்திலும்‌,
வால்‌ வளை முழங்கிய – வெள்ளிய சங்குப்பூச்சிகள்‌ ஒலிக்கின்ற
[வளம்மிக்க].குருகை அம்பதி மருவும்‌ – திருக்குருகடர்‌ என்னும்‌ – ஆழ்வார்‌ திரு நகரியில்‌ வசிக்கும்‌,
நங்கை -உடையநங்கையாரின்‌,
கண்மணி.கண்‌ணின்‌ மணியபோன்றவனும்‌,
நல்‌ நாவலவன்‌ – நல்ல நாவீறுடைய பிரானும்‌ ஆகிய நம்மாழ்வாரின்‌,
இங்கித கவிதை கொண்டருள்‌ -(தத்துவக்‌) கருத்துக்களைக்‌ கொண்ட பாசுரங்களைக்கேட்டருள்‌ கின்ற,
’ மகரவண்‌ குழை ! – மகரநெடுங்குழைக்கா தரே. வருக –

ஒரு நாள்‌ பிரமன்‌ “எங்குத்‌ தவஞ்செய்வது ? என்று சிந்தை கொண்டிருக்கையில்‌ “*கர -பிரமனே ! குரு – (இங்குத்‌ தவஞ்‌) செய்‌ ?” என்று இத்தலத்தைச்‌
சுட்டி ஆகாயவாணி மொழிந்ததனால்‌, இதற்குக்‌ *குருகாபுரி’” என்று பெயர்வந்த தென்பர்‌.

நங்கை-உடைய நங்கையார்‌. இவர்‌ நம்மாழ்வாரின்‌ தாய்‌, இவர்‌ மலையாள நாட்டில்‌, திருவண்பரிசாரம்‌ என்னும்‌ திருப்பதியிலுள்ள திருவாழ்‌மார்பர்‌ என்னும்‌ பகவத் பக்தரது தனயையாவர்‌. இவர்‌ குருகூரில்‌ பொற்காரியார்‌ என்பவர்க்குப்‌ புதல்வராய்த்‌ தோன்றிய காரி யாரை மணந்தார்‌. (இவர்களுக்குப்‌ பிறந்த மாறன்‌ என்னும்‌ நாமம்‌ பெற்ற தம்மாழ்வாரைத்‌ திருக்குறுங்குடி எம்பெருமானே அவதரித்துள்ளார்‌ என்பது துணிபு)

நன்னாவலவன்‌ – **நன்‌ மதுரகவி வணங்கும்‌ நாவீறன்‌ வாழியே” என்றது இவரது வாழிதிருநாமப்‌ பாட்டு.

“*பெருமாள்‌ மகுடம்‌ சாய்க்கும்படி கவிபாடிய ஞானத்‌ தமிழ்க்கடலே””

———

முடிமீ தொளிர்சூ ழியத்தொகையின்‌
முழுவெண்‌ டிங்கட்‌ கற்றைநிலா
மூரிக்‌ கடல்ளூழ்‌ தருபுவனம்‌
முற்றுந்‌ தழைய வடர்ந்தவள்ளைக்‌
கொடிபோ லொசியுங்‌ குழையுமணிக்‌
குழையுங்‌ குழைய வுடல்குழையக்‌ |
குழைத்து நுதலி ஸிடுந்திலகக்‌
குறுவேர்‌ வழிய விடைகழியின்‌
அடிமே லடிவைத்‌ திருகைசுவர்‌
அதனைப்‌ பிடித்து வருதலிற்றள்‌
ளாடி விழதத்‌ தளிப்பின் மலர்‌
அங்கை பதித்துத்‌ தவழ்ந்தெனது மடிமீ திருந்து களபமுலை
வள்ளத்‌ தமுதுண்‌ டிடவருக
மகரக்‌ குழையே ! யென்னிருகண்‌
மணியே ! வருக வருகவே,--60-

முடிமீது – தலையின்மேல்‌,
ஒளிர்‌ சூழியம்‌ தொகையின்‌ .விளங்குகின்ற உச்சிக்கொண்டையின்‌ கூட்டினால்‌,
முழு வெண்‌திங்கள்‌ கற்றை நிலா . பூர்ணசந்திரனது தொகுதிப்பட்ட நிலவொளி போன்ற ஒளியானது,
மூரிக்கடல்‌ சூழ்தரு புவனம்‌ முற்றும்‌ தழைய வலிமைபொருந்திய சமுத்திரம்‌ சூழ்ந்த உலகம்‌ முழுவதும்‌ பரவித்தங்கும்படியும்‌,
அடர்ந்த வள்ளைக்‌ கொடிபோல்‌ .- செறிந்துள்ள வள்ளைக்கொடி போல,
ஒசியும்‌ குழையும்‌ – (மெல்ல) அசைந்து துவளும்‌,
மணிக்‌குழையும்‌ – மகரகுண்டலங்களும்‌,
குழைய – தளர்ந்து தாழ்ந்து அசையும்படியும்‌,
உடல்‌ குழைய – திருமேனி துவளும்படியும்‌,
குழைத்து – கத்தாரியில்‌ கலந்துகுழையச்செய்து,
நுதலில்‌ இடும்‌திலகம்‌ – நெற்றியில்‌ இட்ட திலகமானது,
குறுவேர்வு அழிய -துளிக்கும்‌ வேர்வையினால்‌ (தெளிவுறத்‌ தெரியாது) அழியும்படியும்‌.
இடைகழியில்‌ – (மனையின்‌) இடைக்கட்டில்‌ (ரேழியில்‌) ,
அடிமேல்‌ அடிவைத்து – மெதுவாகக்குறுநடையிட்டு,
இருகை – இரண்டு கைகளாலும்‌,
சுவர்‌ அதனைப்பிடித்து – சுற்றுச்சுவரைப்‌ பிடித்துக்‌ கொண்டு,
வருதலின்‌ – வரும்போது,
தள்ளாடி விழ தத்தளிப்பின்‌ -தடுமாறித்‌ தரையில்விழும்படி திகைக்கும்போது,
மலர்‌ அங்கைபதித்து – பூப்போல்‌ மெல்லிய அழகிய உள்ளங்கைகளைத் தரையில்‌ பதிய வைத்து,
தவழ்ந்து – தவழ்ந்து வந்து,
எனது மடி மீது இருந்து – எனது மடியின்மேலே உட்கார்ந்து,
களப முலைவள்ளத்து- சந்தனம்‌ பூசப்படும்‌ கிண்ணம்போலுள்ள கொங்கைகளில்‌ (சுரக்கும்‌),
அமுது உண்டிட – பாலை (ச்சுவைத்து) உண்ண, வருக – மகரக்‌ குழையே ! – மகரநெடுங்‌ குழைக்காதரே |
என்‌ இரு கண்மணியே 7- எனது இரண்டு கண்மணிகளைப்போல்‌ பாதுகாக்கத்தக்கவனே l,
வருக வருக–;

———-

பண்டா லிலையி னரங்கத்தும்‌
பாலா ழமியிற்கண்‌ டுயில்கூரும்‌
பச்சைப்‌ புயலே ! பணாமகுடப்‌
படப்பாந்‌ தளின்கண்‌ பிதுங்கநறுந்‌
தண்டா மரைச்செஞ்‌ சரண்பெயர்த்துத்‌
தள்ளிக்‌ கடைவால்‌ பிடிக்கநெறி
தழைக்கும்‌ படிக்கு நடம்புரிந்த
தலைவா ! கடல்சூ முலகமுழு
துண்டா தரவோ டமிழ்ந்தளந்த
ஒளியே 1! யொளிரு மரகதமே !
ஒருவா ணுதல்பண்‌ டுளங்களிப்ப
உயர்வான்‌ முகடு கிழித்தெழுந்து
வண்டார்‌ தருவின்‌ மலார்கொணர்ந்த
மாலே ! வருக வருகவே
மகரக்‌ குழையே / யென்னிருகண்‌
மணியே ! வருக வருகவே.–61-

பண்டு. மஹாபிரளயகாலத்து,
ஆலிலையின்‌ -(பச்சை) ஆலிலையிலும்‌,
அரங்கத்தும்‌ . திருவரங்கத்திலும்‌,
பாலாழியில்‌ – திருப்பாற்கடலிலும்‌,
கண்‌ துயில்‌ கூரும்‌ – கண்ணைமூடி யோகநித்திரை செய்யும்‌,
பச்சைப்புயலே | – கருநிறமேகமே !
பணாமகுடம்‌ படம்‌ பாந்தளின்‌ – தலையில்‌ பல படங்களைக்‌ கொண்ட காளியனென்னும்‌ விஷநாகத்தின்‌,
கண்‌ பிதுங்க – கண்கள்‌ வெளி வரும்படி,
நறும்‌ தண்‌ தாமரை செஞ்சரண்‌ பெயர்த்து – பரிமள முள்ள குளிர்ந்த தாமரை மலர்போன்ற செவ்விய திருவடிகளைத்‌ தூக்கித்‌ தூக்கிமாறவைத்து,
தள்ளி- அந்‌ நாகத்தைச்‌ சற்றுக்‌ கையினால்‌ தள்ளி,
கடை வால்‌ பிடிக்க – அதனது வாலின்‌ நுனியைக்‌ கையினால்‌ பிடித்துக்‌ கொள்ள, (பின்னர்‌)
நெறி தழைக்‌கும்படிக்கு – தருமதெறி ஓங்கும்பொருட்டு,
நடம்‌ புரிந்த -(அதனைக்கொல்லாமல்‌) அதன்‌ தலைகளில்‌ நடனம்செய்த, தலைவா .
எம்பெருமானே !
கடல்‌ சூழ்‌ உலகம்‌ முழுது உண்டு – கடலாலே சூழப்பட்ட நில
வுலகம்‌ முழுவதையும்‌ புசித்து,
ஆதரவோடு – அன்போடு,
உமிழ்ந்து- மீண்டும்‌ வெளிப்படுத்தி,
அளந்த ஒளியே – அதனைச் சிறு காலால்‌ அளந்திட்ட பிராசமானவனே
ஒளிரும்‌ மரகதமே – விளங்குகின்ற பச்சைரத்தினமே !பண்டு – நரகாசுரனையழித்தபின்பு,
ஒரு வாள்‌நுதல்‌ – ஒளிபொருந்திய நெற்றியையுடைய சத்தியபாமையானவள்‌,
உளம்‌ களிப்ப – மனம்‌ மகிழும்படி,
உயர்‌ வான்‌ முகடு கிழித்து, எழுந்து – ஒங்கியவானத்தின்‌ உச்சியினைக்கீண்டி , மேலும்‌ எழுந்து (தேவலோகத்துக்குச்‌ சென்று ஆங்கிருந்த)
வண்டு ஆர்‌ தரவின்‌ மலர்‌ – வண்டுகள்‌ ஆரவாரிக்கின்ற பரரிஜாதமரத்தில்‌ பூத்த மலரை,
கொணர்ந்த – துவாரகைக்குக்‌ கொண்டுவந்த,
மாலே -கண்ணபிரானாகிய திருமாலே ! வருக வருக .. ; மகரக்குழையே ! -என்‌ இரு கண்மணியே 1 -, வருக வருக .

——–

சிந்தா மணியே ! மரகதமே !
தேவே ! தேவர்‌ பெருமானே /
தேடும்‌ பொருளே ! நாடோறுஞ்‌
செய்யுந்‌ தவமே ! தவப்பயனே !
எந்தாய்‌ 1! நந்தா விளக்கொளியே /
எங்கட்‌ குயிரே 1! பரகதியே !
எழுதா மறையின்‌ வடிவே / சொல்‌
எழுத்தெட்‌ டினுக்கு மொருமயமே !
கொந்தார்‌ துளவப்‌ பசுந்தாமக்‌
கோவே 7 நிருதர்‌ குலக்கூற்றே !
கூடும்‌ புனனி ராடிவலங்‌
கொண்டு திருமஞ்‌ சனக்கொலுவில்‌
வந்தா தரித்து வருணனடி
வணங்கும்‌ புயலே ! வருகவே
மகரக்‌ குழையே /? யென்னிருகண்‌
மணியே ! வருக வருகவே,–62-

சிந்தாமணியே – (தேவலோகத்துள்ள) சிறந்தமணிபோன்றரத்தினமே ! மரகதமே -,
தேவே – தேவனே |,
தேவர்‌பெருமானே !-தேவர்களுக்கெல்லாம்‌ தலைவனே
தேடும்‌ பொருளே?-(அனைவராலும்‌) தேடப்படுகின்ற செல்வமே
நாள்தோறும்‌ செய்‌யும்‌ தவமே ? -, தவப்பயனே ! – அத்‌ தவத்தின்‌ பயனாய்‌ விளங்குபவனே !
எந்தாய்‌ – எனக்குத்‌ தந்தையே
நந்தா விளக்கொளியே !தூண்டப்படாத தீபப்பிரகாசமே !(சுயம்பிரகாசமானவனே )-விளக்கொளியை, மரதகத்தை ?: என்றார்‌ கலியனும்‌.
எங்‌கட்கு உயிரே | – அடியராகிய எங்களுக்குப்‌ பிராணனாயிருப்பவனே 7
பரகதியே : – (நாங்கள்‌ அடையவேண்டிய) மேலான கதியாயிருப்‌பவனே ! [உபேயமானவனே :]
எழுதா மறையின்‌ வடிவே !-அபெளருஷேயமான வேதத்தின்‌ சொரூபமானவனே |“வேதத்தை வேதத்தின்‌ சுவைப்பயனை” என்ற திருமங்கை
மன்னன்‌ வாக்கு நினைக, 

சொல்‌ எட்‌டெழுத்தினுக்கும்‌ ஒரு மயமே . -அஷ்டாக்ஷரத்தினுலாகும்‌ மந்திரச்‌ சொல்லினுக்கு ஒப்பற்றமையமாயிருப்பவனே !
கொந்து ஆர்‌ துளவப்‌பசுந்தாமம்‌ கோவே ! – கொத்துக்கள்‌ நிறைந்த துளசியினாலாகிய பச்சைமாலையைத்‌ தரிக்கும்‌ தலைவா !
நிருதர்குலக்‌ கூற்றே – அரக்கர்‌ குலத்திற்கு யமனாகுபவனே !
வருணன்‌ – வருண பகவான்‌,
கூடும்‌ -(அருகிலோடும்‌) தாமிரபரணியின்‌ நீர்த்துறையில்‌ “சேர்ந்திருக்கும்‌,
புனல்‌ நீர்‌ ஆடி – புனிதமான தண்ணீரில்‌ ஸ்நானஞ்‌ செய்து,
வலங்‌கொண்டு-கோயிலைப்‌ பிரதட்சிணஞ்செய்து,(பின்னர்‌ உட்புகுந்து)
திருமஞ்சனக்‌ கொலுவில்‌ வந்து ஆதரித்து அபிஷேகமண்டபத்தில்‌ எழுந்தருளியிருக்கும்‌ கொலுவினில்‌ வந்து பக்தியோடு விரும்பி,
அடிவணங்கும்‌- திருவடிகளில்‌ தலைவைத்து வணங்குகின்ற,
புயலே -மேகமே .(நிகரில்முகில்வண்ணனே ), வருக .; மகரக்குழையே ! -, என்‌ இரு கண்மணியே 1! -, வருக வருக –

——–

ஆரா வமுதொத்‌ திலவிதழின்‌
அமுதத்‌ திவலை மார்பொழுக
அரை நாண்‌ வடமு மணியுமருங்
கசையக்‌ குழையுங்‌ குண்டலமுஞ்‌
சீரார்‌ திருவிற்‌ பொலியுநுதல்‌
தீட்டுங்‌ குறுவேர்‌ வரும்பவருள்‌
செய்யுங்‌ கமல முகமிலங்கத்‌
திருந்தாட்‌ டுணைப்பொற்‌ றண்டையொலி
பார்மீ தெங்கள்‌ செவிகுளிரப்‌
பழகு நெறிநா டொறும்வளர்க
பசுந்தார்த்‌ துளவு மணங்கமழும்‌
படிநீ நடந்துன்‌ னடிபெயர்த்தெண்
வாரார்‌ களபக்‌ குரும்பைமுலை
வள்ளத்‌ தமுதுண்‌ டிடவருக
மகரக்‌ குழையே ! யென்னிருகண்‌
மணியே வருக / வருகவே. –63-.

ஆரா அமுது ஒத்து – (எவ்வளவு பருகினாலும்‌) திருப்திபிறவாத தேவாமிரு தத்தையொத்து,
இலவு இதழின்‌ அமுதத்திவலை – இலவம்பூப்போற்சிவந்தஉதடுகளிலூறும்‌ தேறல்நீரின்‌ துளிகள்‌,
மார்பு ஒழுக – மார்பிடத்திலே பெருகிவர,
அரை நாண்‌ வடமும்‌ மணியும்‌ மருங்கு அசைய – அரை நாண்கயிறும்‌ சிறுமணியும்‌ இடுப்‌பின்‌ பக்கத்தில்‌ அசைந்து (மெல்லென) ஒலிக்க,
குழையும்‌ குண்டலமும்‌- காதுகளில்‌ அணிந்துள்ள காதணியும்‌ (தொங்குகின்ற) குண்டலங்களும்‌, [
அசைய – அசைந்தாட,
சீர்‌ ஆர்‌ சிறப்புப்‌ பொருந்திய,
திருவில்‌ பொலியும்‌ நுதல்‌ – அழகிய வில்போல்‌ வளைத்த புருவங்களை யுடைய நெற்றியில்‌,
தீட்டும்‌ – எழுதியதுபோல,
குறுவேர்வு அரும்பசிறுவேர்வைத்துளிகள்‌ (இலேசாகத்‌) தோன்ற,
அருள்‌ செய்யும்‌ கமலமுகம்‌ இலங்க – கருணை பொழிந்து நன்மை செய்யும்‌ தாமரைமலர்‌ போல்‌ அழகிய திருமுகம்‌ ஒளிவிட,
திரு தாள்‌ துணை – அழகிய உனது இரண்டு பாதங்களிலும்‌, (அணிந்துள்ள),
பொன்‌ தண்டை ஒலி – பொன்னாலாகிய தண்டையின்‌ சப்தமானது,
எங்கள்‌ செவி குளிர – எங்களுடைய இருகாதுகளும்கேட்டு ரசிக்கும்படி,
பார்மீது – தரையின்‌ மேல்‌,
பழகும்‌ நெறி- நடைபழகுகின்‌ ற முறைமையின்‌ அழகு,
நாடோறும்‌ வளர்க – தினந்தோறும்‌ ஓங்கட்டும்‌ : (ஆகவே)
பசும்‌ தார்‌ துளவு மணம்‌ கமமும்படி ..பச்சைத்துளசிமாலைவாசனைவீசும்‌படி,
நீ நடந்து _ நீ தளர்நடையிட்டு,
உன்‌ அடி பெயர்த்து உனதுபாதங்களை மாறி மாறித் தூக்கி வைத்து,
என்‌ – என்னுடைய,
வார்‌ஆர்‌ -கச்சுப்பொருந்திய,
களபம்‌ குரும்பை முலைவள்ளத்து -சுந்துனம்‌ பூசப்படும்‌ தென்னங்குரும்பை போன்ற கொங்கைகளாகிய கிண்ணத்‌ தில்‌ [வட்டிலில்‌] (கரக்கும்‌)
அமுது உண்டிட – பாலைச்சுவைத்து உண்ண, வருக -; மகரக்குழையே! -, என்‌ இரு கண்மணியே – !, வருக வருக – ;

அருமைப்‌ பெருமான்‌ பிறவியொழித்‌
தருளும்‌ பெருமான்‌ கரதலஞ்சங்‌
காழிப்‌ பெருமான்‌ வானவர்க்கும்‌
அருநான்‌ மறைக்கு மெட்டாத
தரமப்‌ பெருமான்‌ பசுந்துளவத்‌
காமப்‌ பெருமா னேழுலகுநீ
தழைக்கும்‌ படிக்கன்‌ றளந்தநெடுஞ்‌
சரணப்‌ பெருமான்‌ மன்னுயிர்க்குங்‌
கருமப்‌ பெருமான்‌ முத்திவழி
காட்டும்‌ பெருமான்‌ பூம்பொகுட்டுக்‌
கமலா சனத்து வீற்றிருக்குங்‌
கன்னிப்‌ பெருமான்‌ றமிழ்க்குருகும்‌
பெருமைப்‌ பெருமா னென்னருமைப்‌
பிள்‌ப்‌ பெருமான்‌ வருகவே
பேரா யிரம்பெற்‌ றுயர்ந்ததிருப்‌
பேரைப்‌ பெருமான்‌ வருகவே.–64-

அருமைப்‌ பெருமான்‌ – கிடைத்தற்கரிய பெருமானும்‌, பிறவி ஒழித்து அருளும்‌ பெருமான்‌ – பிறவிப்பிணியை அகற்றிக்‌கருணைபுரியும்‌ பெருமானும்‌,
கரதலம்‌ – கைகளிடத்து,
சங்கு ஆழிபெருமான்‌ – சங்கினையும்‌ சக்கரப்படையினையும்‌ ஏந்திய பெருமானும்‌,
வானவர்க்கும்‌ – தேவர்களுக்கும்‌,
அருநான்மறைக்கும்‌ – பயிலுதற்கரிய நான்கு வேதங்களுக்கும்‌,
எட்டாத தருமப்‌ பெருமான்‌ – காண முடியாத அப்பாற்பட்ட (சாக்ஷத்‌) தருமமாகிய பெருமானும்‌,
பசும்‌ துளவத்‌ தாமம்‌ பெருமான்‌ – பச்சைத்‌திருத்துழாய்மாலையைத்‌தரித்த பெருமானும்‌,
ஏழ்‌ உலகும்‌ தழைக்கும்படிக்கு – மேலேழுலகங்களும்‌ நல்வாழ்வு வாழும்படிக்கு,
அன்று – திரிவிக்ரமனாய்‌ வளர்ந்தகாலத்து,
அளந்த – [தனது பெருங்‌ காலால்‌] அளந்து கொண்ட,
நெடும்‌ சரணப்‌ பெருமான்‌ – நீண்ட திருப்பாதங்களை யுடைய பெருமானும்‌,
மன்னுயிர்க்கும்‌ கருமப்‌ பெருமான்‌ -நிலை பெற்ற ஜீவன்களுக்கும்‌ [ அவையவையநுபவிக்கவேண்டிய]
கருமபலன்‌களை விதிக்கின்ற பெருமானும்‌,(கருமபலன்களையநுபவித்தபின்பு அவைகளுக்கு) முத்தி வழி காட்டும்‌ பெருமான்‌ – மோட்ச நெறியை யடைவதற்கான உபாயங்களைக்‌ காட்டித் தருகின்ற பெருமானும்‌,
பூம்‌ பொகுட்டுக்‌ கமலாசனத்து – கொட்டையினை உள்ளிட்ட.
தாமரைப்பூவினைத்‌ தவிசாகக்‌ கொண்டு அதனிடத்து,
வீற்றிருக்கும்‌ -தனிச்சிறப்போடு எழுந்தருளியிருக்கும்‌,
கன்னிப்‌ பெருமான்‌ -இலக்குமி தேவிக்குக்கணவனாகிய பெருமானும்‌,-கன்னி – என்றும்‌ அழியாதவன்
தமிழ்க்கு உருகும்‌பெருமைப்‌ பெருமான்‌ – ஆழ்வார்களின்‌ செஞ்சொல்லாகிய திவ்வியதமிழ்ப்‌ பாசுரங்ககாக்கேட்டு உள்ளம்‌ உருகியநுபவிக்கும்‌ பெருமையினையுடைய பெருமானும்‌,
என்‌ அருமை பிள்ளைப்‌ பெருமான்‌ -என்னுடையஅருமந்தன்ன குழந்தையாகிய பெருமானும்‌ (ஆகிய நீ) வருக .
பேர்‌ ஆயிரம்‌ பெற்று உயர்ந்த – சகஸ்ரநாமங்களைப்‌ பெற்று மேலோங்கிய, திருப்பேரை பெருமான்‌ –
தென்திரப்பேரையிலெழுந்தருளியிருக்கும்‌ மகரநெடுங்குழைக்காதரே | வருக

‘தருமப்‌ பெருமான்‌” என்றவிடத்து – கிருஷ்ணன்‌ தர்மம்‌ ஸநாதநம்‌, “சாக்ஷாத்‌ புண்ணியத்துக்குப்‌ பாலும்‌ சோறும்‌ இட்டன்றோ வளர்க்கிறோம்‌ ‘*(ஆருயிரப்படி – திருப்‌ பாவை” செ: 28) என்ற வாக்கியங்களை நோக்குக.

*கருமப்‌ பெருமான்‌” என்றது .. ‘*கர்மண்யேவ அதிகாரஸ்தே மாபலேஷு காதாசந”” என்றபடி (கீதை : சாங்கிய யோகம்‌ 47) :

முத்திவழிகாட்டும்‌ பெருமான்‌ என்றது “ஸர்வதர்மான்‌ பரித்யஜ்ய மாமேகம்‌ சரணம்‌ வ்ரஜ அஹம்த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸூச: என்றபடி

————-

அம்புலிப்‌ பருவம்‌–(சாம தான பேத தண்ட உபாயங்களால் சந்திரனை விளையாட அழைக்கின்றார் )

மதியுடைத்‌ தாயமண்‌ டலம்பெற்று வானமுழு
மதிக்கடவு ளெனவருதலால்‌
வடியிட்ட தெள்ளமுத மயமாகி யானந்த
மகரால யத்தெழுதலால்‌
, நதியோடர வறுகெருக்‌ கணியுஞ்‌ சடைக்காட்டு
நம்பனுக்‌ கொருகண்ண தாய்‌
நாடொறுமுயிர்ப்பயிர்‌ தழைப்பவருள்பொழிவதால்‌
நற்றுணை யுனக்கிவன்்‌ காண்‌
முதிரவிளை யுங்கொழும்‌ பவளக்‌ குலைசாலி
மூடுதொறும்‌ வாய்மடைதொறும்‌
மூரிப்‌ பகட்டுவரி வாளைவெடி தரவியலை
மோதும்‌ புனற்கேணியும்‌
அதிருமணி மதகும்வளை யுகள்வழுதி நாடனுடன்‌
அம்புலீ யாடவாவே
ஆழிநீர்‌ வண்ணனெனும்‌ வாழிமா தவனுடன்‌
அம்புலீ யாடவாவே.–65-(சிலேடையணி )

மதியுடைத்தாய மண்டலம்‌ பெற்று – சந்திர மண்டலம்‌ என்னும்‌ பெயர்‌ வழங்கப்‌ பெற்று,
வானம்‌ முழுவதும்‌ – ஆகாச முற்றிலும்‌.
மதிக்கடவுள்‌ என வருதலால்‌ – சந்திரனாகியகடவுள்‌என்று சொல்லும்படி நீ வருதலால்‌, ்‌

[இக்‌ குழைக்காதன்‌ ] மதியுடைத்தாய மண்டலம்‌பெற்று – ஞானம்‌ முதிர்ந்த நித்யஸூரிகள்‌ உடைத்தாய வைகுண்டலோகத்தைப்‌பெற்று,
வானம்‌ – தேவர்‌ அனைவரும்‌,
முழுமதிக்கடவுள்‌  என வருதலால்‌ – பூர்ண ஞான முடைய தெய்வமென்று சொல்லும்படிவருதலால்‌,

வடியிட்ட தெள்ளமுத மயமாகி – வடிக்கட்டித்‌ தெளிந்த அமிருத மயமாகி,
ஆனந்த மகராலயத்து எழுதலால்‌ .-மகிழ்ச்சியாகிய கடலில்‌ தோய்ந்து தோன்றுவதால்‌,

[ இக்‌ குழையன்‌ ] வடியிட்ட தெள்ளமுத மயமாகி – சாரமாக வெடுத்த தெள்ளிய அமிருதமயமாகி,
ஆனந்த மகராலயத்து எழுதலால்‌ -பேரானந்தக் கடலாகிய வைகுண்டத்தில்‌ [நித்யவாசஞ்செய்யத்‌] தோன்றுவதால்‌,

நதியோடு – கங்கையோடு,
அரவு அறுகு எருக்குஅணியும்‌ – பாம்பு அறுகம்புல்‌ வெள்ளெருக்கம்பூ இவற்றைஅணியாகச்‌ சூடும்‌,
சடைக்காட்டு நம்பனுக்கு – சடாபாரத்‌தொகுதியையுடைய சிவபிரானுக்கு,
ஒரு கண்ணதாய்‌ – (மூன்றுகண்களில்‌) ஒரு கண்ணாய்‌(இடக்கண்ணாய்‌) இருத்தலால்‌,

[இக்‌குழையன்‌ ] நதியோடு……… நம்பனுக்கு — , ஒரு கண்ணதாய்‌ – ஒப்‌பற்ற கண்போன்றவனாய்‌ இருத்தலால்‌,

நாள்தோறும்‌ உயிர்ப்பயிர்‌ தழைப்ப அருள்‌ பொழிவதால்‌ -தினந்தோறும்‌ உயிருடைய பயிர்கள்‌ செழிக்கும்படி
(நிலவாகிய)கருணையை (நீ) சொரிதலால்‌,

[இக்குழையன்‌ ] நாள்தோறும்‌………பொழிவதால்‌ –தினந்தோறும ஆன்மாக்களாகிய பயிர்கள்‌ ஈடேறுதற்குக்‌ கருணையாகிய மழையைச்‌ சொரிதலால்‌,

உனக்கு -[ மேற்‌ கூறிய பண்புகளையுடைய] உனக்கு,
இவன்‌ — (உன்னிடமுள்ள அதே பண்புகளையுடைய) இந்த மகர குழைக்காதன்‌,
நல்‌துணை . உற்ற சினேகிதனாவன்‌ :;
(ஆதலால்‌, அவனோடு அம்புலீ விளையாடவா என மேல்‌ இயைத்துப் பொருள் கொள்ள வேணும்‌) ,
முதிர விளையும்‌ – நன்கு முதிர்ந்து விளைந்திருக்கின்ற,
கொழும்‌ – செழித்த,
பவளக்குலை சாலி .. செந்நிறக்‌ கதிர்களைக்‌ கொண்ட நெற் பயிர்களின்‌,
மூடுதொறும்‌ . வேரினிடத்திலும்‌ (அடிப்பாகத்‌திலும்‌),
வாய்‌ – கால்வாய்களின்‌,
மடைதொறும்‌ – நீரணையினிடத்‌திலும்‌,
மூரி பகடு வரி வாளை – வலிமை பொருந்திய பருத்த உடற்‌கோடுகளை யுடைய வாளைமீன்‌,
வெடிதர – தாவிப் பாய, (அதனால்‌அஞ்சி)
வளை – சங்குப் பூச்சிகள்‌,
வியலை மோதும்‌ – அகன்ற இடத்தைத் தாக்குகின்ற,
புனல்‌ . சிற்றலைகளைக்‌ கொண்ட நீர்‌ நிரம்பிய,
கேணியும்‌ – கிணறுகளிலும்‌,
அதிரும்‌ அணி மதகும்‌ – ஒலிக்கின்ற அழகிய மதகினிடங்களிலும்‌,
உகள்‌ – நழுவி விழுகின்ற,
வழுதி நாடனுடன்‌ – பாண்டிய நாட்டுத்தலைவனாகிய மகரக்குழைக்‌ காதனுடன்‌,
அம்புலீ – சந்திரனே !
ஆட வா – விளையாட வருவாய்‌ :
ஆழிநீர்வண்ணன்‌ எனும்‌ .. கடலினீர்‌ வண்ணன்‌ என்னும்படியுள்ள,
மாதவனுடன்‌ . இலக்குமிகணவனாகிய மகரநெடுங்குழைக்காதனுடன்‌,
அம்புலீ . சந்திரனே
ஆடவா – விளையாட வருவாய்‌ ; வாழி – முன்னிலை யசை

மாதவனுடன்‌” என்று பாடபிருப்பின்‌, “சக்கரப்படையை யுடைய மாதவன்‌” எனப்‌ பொருள்‌ பட்டுச்‌ சிறக்கும்‌.
அம்புலி . அழகு புல்லப்‌ பெற்றிருப்பது என்ற காரணம்‌ பற்றிச்‌ சந்திரனுக்கு வந்த பெயர்‌,

———-

இருவினைச்‌ செனனவலைக்‌ கட்டறுத்‌ தழியாத
இன்பவீ டெய்தும்‌ பொருட்‌
டிணைமலர்ச்‌ சேவடி யடைந்தவர்க்‌ குதவிடுவன்‌
இவன்‌ வருணஞாதரிக்குந்‌
திருசந்திச்‌ சமுகதீர்த்‌ தத்துறைத்‌ தீம்புனல்‌
திவலையொரு சிறிதுபடிலோ
செகமண்ட லத்துன்‌ முகமண்டல முயற்கறை
சிதைத்துவண்‌ டடைகிடப்ப
முருகுவிரி தருநறுங்‌ குமுதவாய்‌ மடமங்கை
முகிண்முலை மணம்புணர்ந்து
மூன்னுங்‌ களங்கமற்‌ றப்பாலும்‌ வைகுண்ட
முத்திமண்‌ டபமெய்தலாம்‌
அருமறைக்‌ குரியவொரு பொருளா யிருப்பனவன்‌
அம்புலீ யாடவாவே
ஆழிநீர்‌ வண்ணனெனும்‌ வாழிமா தவனுடன்‌
அம்புலீ யாடவாவே.--66-

இருவினை செனனவலை கட்டறுத்து – நல்வினை தீவி னையாகிய பிறப்புவலையிலகப்பட்டு உழலுதலைப்போக்கி,
அழியாத இன்பவீடு எய்தும்‌ பொருட்டு – (என்றைக்கும்‌) சிதையாத மோட்‌ சத்தை அடையும்பொருட்டு,
இணைமலர்ச்சேவடி – இரண்டு திருப்‌ பாதகமலங்களை,
அடைந்தவர்க்கு – (நம்பி) சரண்புகுந்தவர்க்கு,
உதவிடுவன்‌-(அவர்விரும்பியபடி ) மோட்சத்தைக்‌ கொடுத்திடுவான்‌:
வருணன்‌ ஆதரிக்கும்‌ . வருணபகவான்‌ விரும்பி நீராடும்‌,
திரு சந்திச்‌சமுகதீர்த்தத்துறை .[சகலதீர்த்தங்களும்‌ கூடும்‌ புனற்றுறையாகிய முச்சந்திச்‌ சமூகதீர்த்தம்‌ என்னும்‌துறையிலுள்ள,
தீம்புனல்‌ – தெளிவான நீரின்‌,
திவலை ஒருசிறிது படில்‌ – துளி சிறிதுமேனிமேல்பட்டாலும்‌,
(நீ) செகமண்டலத்து – இந்தநிலவுலகத்தில்‌ தெரியும்படியுள்ள
உன்‌ முகமண்டல முயற்கறை . உனது முகப்பரப்பிலுள்ள முயல்‌ போன்ற களங்கம்‌,
சிதைத்து – இல்லாது ஒழியச்செய்து, (மேலும்‌)
வண்டு அடை கிடப்ப .. வண்டுகள்‌ நெருங்கித் தங்கி யிருக்கும்படி,
முருகு விரிதரு . தேன்பெருகுகின்ற,
நறும்‌ குமுதவாய்‌ மடமங்கை – வாசனையுள்ள வாயையுடைய ஆம்பலாகிய மடப்பம்‌ பொருந்திய பெண்ணின்‌,
முகிழ்‌ முலைமணம்‌ புணர்ந்து – அரும்புகின்ற (பொகுட்டாகிய) கொங்கையினைச்சேர்ந்து திருமணம்‌ புரிந்து,
(அதனால்‌) முன்னும்‌ களங்கம்‌ அற்று – முன்னினும்‌ களங்கம்‌அற நீங்கப்பெற்று,
அப்பாலும்‌ . அதற்குமேலும்‌,
வைகுண்ட முத்திமண்டபம்‌ எய்தலாம்‌ – பரமபதத்திலுள்ள திருமாமணி மண்டபத்தையடையலாம்‌ :
அருமறைக்கு உரிய – ஓதுதற்கு அரிய வேதங்களுக்குப்‌ பொருந்திய,
ஒருபொருளாய்‌ – ஒப்பற்ற செல்வமாய்‌, அவன்‌ இருப்பன்‌ .. அந்தக்குழைக்காதன்‌ இருப்பான்‌
[அப்படிப்பட்டவணோடு ] அம்புலீ -, ஆட வா – விளையாட வருவாய்‌ :
ஆழிநீர்‌ வண்ணனெனும்‌ மாதவனுடன்‌ -, அம்புலீ -, ஆட வா –
விளையாட வருவாய்‌ ; வாழி – அசை,

————-

வெவ்வரா விடமொழுகு கறையனற்‌ பகுவாய்‌
விழுங்கிமீ ளவுமுமிழ்தரும்‌
மிச்சிலென்‌ றுலகிலுரை செய்வரத னாலுனுடல்‌
வெளுத்தற மெலித்துகுப்புற்‌
றெவ்வுலக முந்திரிந்‌ தாவதென்‌ பெரியோரை
எளியோர்‌ துணைக்கோடனன்‌
றிருகனற்‌ கட்செவி பகையுடித்‌ தற்குவணன்‌
; இவனிட்ட வேவல்கடவான்‌
செவ்வுபட வெட்டிரட்‌ டித்தகலை யுடையனீ
சிந்திப்ப தற்கரியவாந்‌
திகழருங்‌ கலைகளறு பத்துநா லுடையவொரு
செம்மலிவன்‌ வைகுண்டமாம்‌
அவ்வுலக முந்தாகத்‌ தருவ னஃதறிந்‌
கும்புலீ யாடவாவே
ஆழிநீர்‌ வண்ணனெனும்‌ வாழிமா தவனுடன்‌
அம்புல்‌ீ யாடவாவே.–67-

வெவ்‌ அரா – கொடிய இராகுகேதுக்கள்‌ என்ற பாம்புகளின்‌,
விடம்‌ ஒழுகு கறை அனல்‌ – விஷம்பெருகிக்கறையாகி வெதுப்‌புகின்ற,
பகுவாய்‌ – பிளவுண்ட வாயினால்‌,
விழுங்கி – [கிரகணகாலங்‌களில்‌] விழுங்கி,
மீளவும்‌ உமிழ்தரும்‌ மிச்சில்‌ – மறுபடியும்‌ வெளி கக்‌குகின்ற எச்சில்‌,என்று -,
உலகில்‌ உரை செய்வர்‌ – உலக மக்கள்‌ பழிச்சொல்‌ கூறுவர்‌ ;
அதனால்‌ – அதனால்‌ நாணி,
உன்‌ உடல்‌ வெளுத்து – உன்னுடைய மேனி வெளிறி,
அற மெலிந்து – மிகவும்‌ மெலிவுற்று,
குப்புற்று . தலைகவிழ்ந்து,
எ உலகமும்‌ – எல்லாவுலகங்‌களிலும்‌,
திரிந்து – சஞ்சரித்து,
ஆவது – ஆகும் பயன்‌,
என்‌ – என்ன(எதுவும்‌ இல்லை): [ஆகவே நான்‌ சொல்வதைக் கேட்பாயாக]
பெரியோரை – தம்மினும்‌ மிக்க சான்றோரை,
எளியோர்‌ – அவரினும்‌ தாழ்ந்தோர்‌,
துணைக்கோடல்‌ நன்று – தமக்குச் சகாயமாகக்‌ கொள்ளுதல்‌ நல்லது :
கனல்‌ இரு கட்செவி – விஷத்தினால்‌ வெதுப்புகின்ற இரண்டு பாம்புகளின்‌ (இராகு கேதுக்களின்‌),
பகை முடி.த்தற்கு -விரோதத்தை நீக்குவதற்கு,
உவணன்‌ -கருடன்‌ (இருக்கிறான்‌) :
இவனிட்ட ஏவல்‌ கடவான்‌ – அவனுக்குத்தலைவனாகிய இவன்‌ சொன்ன கட்டளையை அவன்‌ மீறமாட்டான்‌ :
நீ – நீயோ,
செவ்வு பட – தேர்‌மையுண்டாக,
எட்டு இரட்டித்த கலை உடையன்‌ -பதினாறு கலைகளை யுடையவன்‌ :
இவன்‌-இவனோ (இக்குழைக்காதனோ),
சிந்திப்பதற்குஅரியவாம்‌ – நினைத்தற்கும்‌ அரியவாகிய,
திகழ்‌ அருங்‌ கலைகள்‌ – விளங்குகின்ற அரிய கலைகள்‌,
அறுபத்துநாலுடைய – அறுபத்து நான்கினையுடைய,
ஒரு செம்மல்‌ – ஒரு பெருமையன்‌ ;
வைகுண்டமாம்‌ ௮ உலகம்‌ . வைகுந்தமாகிய பரமபத லோகத்தையும்‌,
முந்தாகதருவன்‌ – (தான்‌) முற்பட்டுக்கொடுப்பன்‌ :
அஃது அறிந்து – அந்தப்‌ பண்பினையறிந்து,
அம்புலீ -, ஆட வா – ;
ஆழிநீர்வண்ணனெனும்‌ மாதவனுடன்‌ -, அம்புலீ ,, ஆட வா .. ,- வாழி – அசை.

சந்திரன்‌ பதினாறு கலைகளையுடையவன்‌, அந்தப்‌ பதினாறு கலைகளில்‌ கிருஷ்ணபட்சத்தில்‌ முதற்கலையை அக்கினியும்‌,
இரண்டாங்கலையைச்‌ சூரியனும்‌, மூன்றாங்கலையை விச்வேதேவரும்‌, நான்காங்கலையை வருணபகவானும்‌, ஐந்தாங்கலையை வஷட்காரக்‌
கடவுளும்‌, ஆறாங்கலையை இந்திரனும்‌, ஏழாங்கலையைத்‌ தேவரிஷி களும்‌, எட்டாங்கலையை ஒற்றைத்தாளனான அஜனென்‌ பவனும்‌,
ஒன்‌ பதாங்கலையை எமனும்‌, பத்தாங்கலையை வாயுவும்‌, பதினோராங்‌ கலையை உமையும்‌, பன்னிரண்டாங்கலையைப்‌ பித்ருதேதேவதைகளும்‌,
பதின்மூன்றாங்கலையைக்‌ குபேரனும்‌, பதினான்‌ காங்கலையைப்‌ பசுபதி யும்‌, பதினைந்தாம்கலையைப்‌ பிரஜாபதியும்‌ உண்ண

ஒற்றைக்‌ கலையஞன சந்திரன்‌ அமாவாசையினன்‌று சூரியன்‌ ஜலம்‌ ஓஷதிகள்‌ பசுக்கள்‌ என்ற இவற்றில்‌ வசித்து, ஓஷதியில்வசிக்கும்‌ தன்னை
உண்ட பசுக்களின்‌ பாலிலிருந்து தோன்றிய நெய்யினால்‌ யஜ்ஞங்‌ களில்‌ அக்கினியில்‌ ஓமஞ்செய்யப்படுவதனால்‌ ஆப்யாயனமடைந்து,
(திருப்தியுற்று) புதிது புதிதாகக்கலைவளர்ந்துவரச்‌ சுக்கில பட்சத்‌ தில்‌ வளர்ந்து வருகின்றனன்‌ என்பதறியவேண்டுவது.

——–

பைத்தலை நெடுஞ்சுடிகை விடமொழுகு கட்செவிப்‌
படவரவு தொடரினு நீ
படரொளி மழுங்கிவான்‌ முகடொளிக்‌ குவைபெரும்‌
பாம்புதீண்‌ டிக்கிடந்த
நித்திரை மயக்கத்து மொளிமழுங்‌ கானிவன்‌
நெடியவா னிடைநுழைந்து
நிலையிலா தோடித்‌ திரிந்துழல்வை நீயிவன்‌
நீடுழி யடிபெயர்ந்து
மூத்தவா ணகைவிமலை யடிவருட வானவர்கள்‌
முனிவரஞ்‌ சலிசெய்யநீள்‌
முத்திதரும்‌ வைகுந்தம்‌ வீற்றிருப்ப வனந்த
முறைமுறை தெதரிந்துபார்க்கில்‌
அத்தகைமை தோறுமுன்‌ ஸிலுமுயர்ந்‌ தவனிவன்‌
அம்புலீ யாடவாவே
ஆழிநீர்‌ வண்ணனெனும்‌ வாழிமா தவனுடன்‌
அம்புலீ யாடவாவே.–68-

பைத்தலை . படமுடைய தலையையும்‌,
நெடும்‌ சுடிகை -பெரிய உச்சியையும்‌,
விடம்‌ ஒழுகும்‌ – விஷத்தைக்‌ கக்கும்‌,
கட்‌செவிப்‌ பட அரவு – (தமது) கண்ணையே காதாகக்‌ கொண்ட பெரிய (இராகுகேது என்னும்‌) பாம்புகள்‌,
தொடரினும்‌ – உன்னைப்‌ பீடிக்‌கத்தொடர்ந்து வந்தாலே,
நீ- , (அஞ்சி) படரொளி மழுங்கி _மிக்க வொளி மங்கிப்போய்‌,
வான்‌ முகடு ஒளிக்குவை – ஆகாயவுச்சியிலே (மறைந்து) ஒளிந்து கொள்வாய்‌ ;
இவன்‌ – இந்தக்‌குழைக்காதனோ,
பெரும்‌ பாம்பு தீண்டி – ஆதிசேடனாகிய பெரிய பாம்பு பற்றி,
கிடந்த நித்திரைமயக்கத்தும்‌ – படுத்துக்கிடந்த மயக்‌கத்தூக்கத்திலும்‌,
ஒளி மழுங்கான்‌ – (தனது) பொலிவாகிய ஒளி மங்கிப்போகமாட்டான்‌ :
[மேலும்‌] நீ–, நெடிய வானிடை நுழைந்து – பெரிய ஆகாயத்திடத்து புகுந்து,
நிலையிலாது ஓடித்‌ திரிந்து – ஒரிடத்திலும்‌ நிலைத்து நிற்காமல்‌ ஓடிக்‌ கொண்டே
(எங்கும்‌) அலைந்து, உழல்வை – வருந்துவாய்‌ :
இவன்‌ – இக்‌ குழைக்காதன்‌,
நீடுழி – நீண்ட விண்ணில்‌,
அடி பெயர்ந்து – (தன்‌) திருவடியால்‌ (அளக்க) அதனைத்தூக்கிவைத்து,
(அதனாலேற்பட்ட தோவுதீர) முத்தம்‌ வாள்‌ நகை விமலை . முத்துப்போல்‌ ஒளி விடு கின்ற பற்களையுடைய இலக்குமிதேவி,
அடி வருட – (திருப்பாதங்‌களைத்‌) தடவிக்‌ [கைகளால்‌] பிடித்துவிட,
வானவர்கள்‌ முனிவர்‌ அஞ்சலி செய்ய – தேவர்களும்‌ இருடிகளும்‌ கைகூப்பி வணங்க,
முத்திதரும்‌ நீள்‌ வைகுந்தம்‌ வீற்றிருப்பவன்‌ – மோட்சத்தைக்‌ கொடுக்கும்‌ சாசுவதமான வைகுண்ட லோகத்தில்‌ தனிச்சிறப்‌ போடு எழுந்தருளியிருப்பவன்‌ :
அந்த முறை – அந்த ரீதியை (வகையை),
முறை தெரிந்து பார்க்கில்‌ – முறைமைப்படி ஆராய்ந்து பார்த்த்தால்‌,
அ தகைமை தோறும்‌ – அந்தப்‌ பண்புகளிலெல்லாம்‌, உன்னிலும்‌ உயர்ந்தவன்‌ இவன்‌ .. உன்னைக்‌ காட்டிலும்‌ மேலானவன்‌ இந்தக்‌ குழைக்காதன்‌ :
(ஆகவே) அம்புலீ !-, ஆட வா -(இப்படிப்பட்ட மேலானவணனோடு) விளையாட வருவாயாக :
ஆழி நீர்‌வண்ணனெனும்‌ மாதவனுடன்‌ -, அம்புலீ1-, ஆட வா-,-வாழி. அசை,

““பள்ளிகொள்ளுமிடத்தடி கொட்டிட”” என்றாள்‌ ஆண்டாள்‌ ; *வடிவிணையில்லா மலர்‌ மகள் மற்றை நிலமகள்‌ பிடிக்கும்‌ மெல்லடியைக்‌ கெரடுவினையேனும்‌
பிடிக்க”? என்றார்‌ நம்மாழ்வார்‌ (திருவாய்‌ 9-2 -10)

——–

செங்குருதி யலைமண்டி யாறெடுத்‌ தோடச்‌
சிஸலக்கால்‌ வளைத்துவிசயன்‌
தேற்றரச னைக்கொன்று கூற்றருந்‌ தும்படி
சினத்திடும்‌ போர்முகத்துப்‌
பொங்குகதி ராயிரந்‌ தங்குசெஞ்‌ சுடரவன்‌
பொழுதுகா ணாமலொளிர்செம்‌
பொன்னிறத்‌ திகிரியா லிவன்மறைத்‌ தனனன்று
போதாக்‌ குறைக்கொளிரும்வெண்
சங்குகொண் டுன்னயு மறைத்திடா மற்கலை
தளர்ந்துமெலி வெய்துறாமல்‌
தாதள வெருப்பொடித்‌ தெறியாமல்‌ முன்னில்‌
தவழ்ந்துவிகா யர்டவாவென்
றங்கைமலர்‌ விரல்குனித்‌ துனையழைத்‌ தனனிவன்‌
அம்புலீ யாடவாவே
ஆழிநீர்‌ வண்ணனெனும்‌ வாழிமா தவனுடன்‌
அம்புலீ யாடவாவே.--69-

செங்குருதி – சிவந்தஇரத்தமானது,
அலைமண்டி -அலைகளாக நெருங்கி,
ஆறு எடுத்து ஓட – ஆறாகப்பெருகியோடும்படி,
விசயன்‌ – அருச்சுனன்‌,
சிலை கால்‌ வளைத்து – தன்‌ வில்‌லின்‌ தண்டினை நன்றாக வளைத்து,
தேற்று அரசனைக்‌ கொன்று -உடலை நன்குதேற்றி வளர்த்த சகஸ்ரபாஹு என்ற அரசனைக் கொன்று,
(மேலும்‌) கூற்று அருந்தும்படி சினந்திடும்‌ -யமனுண்ணும்படி (பகைவரைக்‌) கோபிக்கும்‌,
போர்‌ முகத்து -போர்க்களத்தில்‌,
பொங்கு கதிர்‌ஆயிரம்‌ தங்கு செஞ்‌ சுடரவன்‌-சொலிக்கின்ற ஆயிரம்‌ கிரணங்களைத்‌ தன்னிடத்துக்‌ கொண்ட செவ்விய சூரியனுடைய,
பொழுது காணாமல்‌ – பகற்பொழுது காண முடியாதபடி,(எங்கும்‌ இருள்‌ பரவும்படி)
ஒளிர்‌ செம்பொன்‌ நிறத்திகிரியால்‌ – (தன்‌ கையில்‌)பொலிகின்ற சிவந்த பொன்னின்‌ நிறத்தைக்‌ கொண்ட திருவாழியினால்‌,
இவன்‌ -இந்த எம்பெருமான்‌ (கண்ணன்‌),
அன்று – அந்தப்‌ பாரதயுத்தத்‌தில்‌ [பதினான்காம்‌ நாள்போரில்‌],
மறைத்தனன்‌ – (அந்தச்சூரியனை )மறைத்து விட்டான்‌ :
போதாக்குறைக்கு-(தனக்கு இன்னும்‌) திருப்தி பிறவாத குறைதீர, ஒளிரும்‌ வெண்சங்குகொண்டு – விளங்குகின்ற வெள்ளிய பாஞ்சசன்னியத்தைக்‌ கொண்டு,
(இப்போது) உன்னையும்‌ -, மறைத்திடாமல்‌ – மறையச்‌ செய்து விடாமல்‌,
கலை தளர்ந்து மெலிவு எய்துறாமல்‌ – உன்னுடைய ஒளிக்கலைகள்‌ மழுங்கி மெலிந்து போகாமல்‌,
தாது அளவு எரு- புழுதிகலந்த எருவை, பொடித்து – மேலும்‌ துகளாக்கி,
எறியாமல்‌ – உன்மீது வீசியெறியாமல்‌,
முன்‌னில்‌ – (எனக்கு) முன்பாக,
தவழ்ந்து – மெதுவாக நகர்ந்து,
விளை யாட வா என்று – (என்னோடு) விளையாடுதற்கு வருவாயாக என்று,
இவன்‌ -, அம்‌ கை மலர்‌ விரல்‌ குனித்து – அழகியகையில்‌ உள்ள பூப்‌போல்மெல்லிய விரலைவளைத்து,
உனை அழைத்தனன்‌ – உன்னை அழைக்கின்றுன்‌ :
(ஆகவே) அம்புலீ /-, ஆட வா- ; ஆழி நீர்‌ வண்ணனேனும்‌ மாதவனுடன்‌ -, அம்புலீ-, ஆடவா -;வாழி – அசை.

———

கூறருந்‌ துதியைநீ யுடையவ னிவனமரர்‌
கூறருந்‌ துதியையுடையான்‌
குறைபடு தடங்கலை களுடையனீ யிவனுமோ
குறையா த கலைகஞுடையான்‌
வீறுதரு முருவிஸி மதிக்குடைய னீயிவன்‌
விதரண மதிக்குடையவன்‌
விண்ணிடை கரந்தொளி யொளித்திடுவை
நீயிவன்‌
வேதநுட்‌ பொருளினொளியான்‌
ஊறுபட வோடித்‌ திரிந்திகாத்‌ திடுவைநீ
ஒருநாளு மிளையானிவன்‌
உவரிப்‌ புனற்பங்க மூடுதிப்‌ பாயிவனும்‌
உம்பரா மியினுதிப்போன்‌
ஆறலைபுரட்டு பொருனா நெடுந்துறைவன்‌
அம்புலீ யாடவாவே
ஆழிநீர்‌ வண்ணனெனும்‌ வாழிமா தவனுடன்‌
அம்புலீ யாடவாவே.–70-

நீ–, கூறு அரும்‌ துதியை- சொல்லுதற்கரிய (இல்லாத) துதிகளை, உடையவன்‌ .- :
இவன்‌ – இக்குழைக்காதன்‌,
அமரர்‌ – தேவர்களும்‌,
கூறு அரும்‌. சொல்லுதற்கு அருமையான (மேன்மையான),
துதியை .- துதிகளை,
உடையான்‌ -,கொண்டவனா யிருக்கிறான்‌ :
நீ -, குறைபடு தட கலைகள்‌ உடையன்‌ – குறைந்து கொண்டே வருகின்ற நல்ல கலையொளிகளை யுடையவன்‌ :
இவனு மோ – இவனோ, குறையாத கலைகளுடையான்‌ _பரிபூரணமான கலைகளனைத்தையும்‌ உடையவனுரயிருக்கிறான்‌ :
நீ-, வீறு தரும்‌ – பெருமையையுடைய,
உருவிவி – மன்மதனுடைய,
மதி குடையன்‌ _ ( சந்திர] வட்டக்குடையரயிருக்கிறாய்‌ :
இவன்‌ – இவனோ,
விதரண மதிக்கு – சாமர்த்தியமுள்ள அறிவினுக்கு,
உடையவன்‌ – உரியவன்‌
நீ, விண்ணிடை கரந்து – ஆகாயத்திலே மறைந்து,
ஓளி ஓளித்‌ திடுவை – பிரகாசத்தை வெளிவிடாது செய்கின்றாய்‌ :
இவன்‌ – இவனோ,
வேத நுண்‌ பொருளின்‌ ஒளியான்‌ – வேதங்களின்‌ நுட்பமா கிய விடயங்களில்‌ பிரகாசிப்பவன்‌ : [ அவைகளுக்குப்‌ பிரகாசம்‌ அளிப்பவன்‌ ] :
நீ -, ஊறுபட – காயமுண்டாகும்படி,
ஓடித்திரிந்து – ஆகாயவிடமெங்கும்‌ ஓடிச்சஞ்சரித்து,
இளைத்திடுவை – (உடல்‌) தேய்ந்து மெலிந்து போகிறாய்‌ :
இவன்‌ – இக்குழையணோ,
ஒருநாளும்‌ இளையான்‌ – என்றைக்கும்‌ மெலிவடையான்‌
(நீ) உவரிப்புனல்‌பங்கம்‌ ஊடு – கடல்நீரின்‌ சேற்றிலிருந்து,
உதிப்பாய்‌ – தோன்றுகின்‌றாய் :
இவனும்‌ -, உம்பர்‌ ஆழியின்‌ – மேலிடத்திலுள்ள திருப்பாற்‌ கடலில்‌,
உதிப்போன்‌ – தோன்றுவான்‌ :
(மேலும்‌ இவன்‌) ஆறு அலை புரட்டும்‌ பொருனாநதி தெடும்‌ துறைவன்‌ . (பாயும்‌) வழியிலே அலை களைப்‌ புரட்டிக்கொண்டு வருகின்ற தாமிரபரணியாற்றின்‌ [கரையி லுள்ள ]பெரியநீர்த்துறைகளுக்குத்‌ தலைவன்‌ :
(எனவே) அம்புலீ /-, ஆட வா .) ஆழி நீர்வண்ணனெனும்‌ மாதவனுடன்‌ அம்புலீ ! _ ஆட வா? — வாழி – அசை,

——–

சந்தப்‌ படாமுலைத்‌ தார்குழற்‌ கோமளத்‌
தையல்சா னகிபொருட்டுத்‌
தடமதி லிலங்கா புரம்பொடி படுத்தித்‌
தகர்த்துமுடி பத்துமண் மேற்‌
சிந்தச்‌ சரந்தொட்டச்‌ சிலைவீர ராகவன்‌
சிறுகுழந்‌ தைப்பிள்‌காயாத்‌
திருவிரற்‌ றலைசுட்டி யுனையழைத்‌ தால்வரச்‌
செய்யா திருக்கமுறையோ
முந்தப்‌ பெருந்தக்கன்‌ வேள்வியிற்‌ றேவர்கள்‌
முறிந்துதிசை கெட்டோடுநாள்‌
முழுமதிக்‌ கடவுணீ பரிபவப்‌ பட்டகதை
மொழியக்‌ கணக்குமுண்டோ
அந்தக்‌ கணக்கின்று வந்திருக்‌ கின்றதினி
அம்புலீ யாடவாவே
ஆழிநீர்‌ வண்ணனெனும்‌ வாழிமா தவனுடன்‌
அம்புலீ யாடவாவே.--71-

சந்தம்‌ – அழகு பொருந்திய,
படாம்‌ – சீலைபோர்த்த,முலை – கொங்கைகளையும்‌,
தார்‌ . பூமாலையையணிந்த,
சுழல்‌ – கூந்‌தலையுமுடைய,
கோமளம்‌ தையல்‌ – இளமையழகு பொருந்திய பெண்‌ணாகிய,
சானகி பொருட்டு-சீதாபிராட்டியின்‌ நிமித்தமாக, (அவளைச்‌சிறைமீட்டற்பொருட்டு),
தட மதில்‌ இலங்காபுரம்‌ பொடிபடுத்தி .-பெரியமதில்களைக் கொண்ட இலங்கைமாநகரைத்‌ துகளாக்கி யழித்து,
(அதன்‌ அரசனாகிய இராவணனது) முடிபத்தும்‌ தகர்த்து – பத்துத்‌ தலைகளையும்‌ சிதறவடித்து,
மண்‌ மேல்‌ சிந்த – தரையின்‌ மேல்‌ (புழுதிபட) விழும்படி,
சரம்‌ தொட்ட – அம்பு தொடுத்த,
௮ சிலை வீரராகவன்‌ – வில்லையேந்திய அந்தஇராமபிரான்‌,
(இப்போது மகரநெடுங்‌குழைக்காதனாய்‌) சிறு குழந்தைப்பிள்ளையா – சிறிய ஆண்குழந்தையாகி,
திரு விரல்தலை சுட்டி – அழகிய விரலின்‌ நுனியினால்‌ சுட்‌டிக்காட்டி,
உனை அழைத்தால்‌ – உன்னை (விளயாட)க்‌ கூப்பிட்‌டால்‌,
வரச்செய்யாதிருக்க முறையோ – (நீ) வாராதிருத்தல்‌ தகுதியாகுமா (ஆகாது);
முந்த – முன்னொரு சமயம்‌,
பெருந்‌ தக்கன்‌ வேள்‌வியில்‌ – பெரிய தக்ஷப்பிரஜாபதியின்‌ யாகத்தில்‌,
தேவர்கள்‌ முறிந்து திசைகெட்டு ஓடும்‌ நாள்‌ – தேவர்கள்‌ முறியடிக்கப்பட்டுத்‌ திசை தெரியாமல்‌ சிதறியோடிய காலத்து,
முழுமதிக்கடவுள்‌ நீ – பூர்ணசந்‌திரனாயிருந்த நீ,
பரிபவப்பட்ட கதை – அவமானமடைந்த நிகழ்ச்‌ சியை, (தேய்ந்து போனதை),
மொழிய . (நான்‌) சொல்லவேண்டிய,கணக்கும்‌ உண்டோ ? –
நியாயமும்‌ உளதோ? (அனைவர்க்கும்‌ தெரியுமே) :
அந்தக்‌ கணக்கு – அந்தநாள்‌ நியாயம்‌ [நீ பட்டபாடு],
இன்று வந்திருக்கின்றது – இந்த நாளிலும்‌ [உனக்கு] ஏற்படவிருக்‌ கின்றது :
[ஆகவே] இனி – இனிமேல்‌ தாமதிக்காமல்‌, அம்புலீ -,ஆட வா -: ஆழி நீர்வண்ணனெனும்‌ மாதவனுடன்‌ –, அம்புலி !ஆடவா–வாழி -அசை

——

தவநெறிக்‌ கவுதமன்‌ பன்னியக லிகைபுரந்‌
தரனொடு மணந்தவதனால்‌
தவமூனி யறைந்தசா பத்திலவள்‌ கல்லுருத்‌
தாங்கிய தொழித்ததெங்கோன்‌
புவனமொரு மூன்றுமீ ரடியா லளக்கின்ற
பொற்கழற்‌ றுகளுனக்கும்‌
புனிதபூ ரணசெவ்வி முகமண்ட லக்கறைப்‌
புரைதீர வரமளிக்குஞ்‌
சிவனுமய னும்வெள்களா யயிரா பதத்தனுஞ்‌
செஞ்சுடர்க்‌ கடவுளோனுந்
தேவர்முப்‌ பத்துமுக்‌ கோடியு மறுமுகச்‌
செம்மலுங்‌ கைம்மலைக்கோட்‌
டவனுமூறை முறைபரவு நிகரில்முகில்‌
வண்ணனுடன்‌
அம்புலீ யாடவாவே
ஆழிநீர்‌ வண்ணனெனும்‌ வாழிமா தவனுடன்‌
அம்புலீ யாடவாவே.,--72-

தவ நெறி கவுதமன்‌ -தவவொழுக்கத்தை மேற்‌ கொண்டிருந்த கெளதம முனிவனின்‌,
பன்னி அகலிகை – பத்தினி யாகிய அகலிகை,
புரந்தரணொடு – தேவேந்திரனோடு,
மணந்த அதனால்‌ – புணர்ந்த காரணத்தினால்‌,
தவமுனி – அந்தக்கெள தமன்‌,
அறைந்த – சொன்ன.
சாபத்தில்‌ – சாபத்தினால்‌,
அவள்‌ – அந்தஅகலிகை,
கல்லுரு தாங்கியது ஒழித்தது – கல்லாய்‌ உருவந்தாங்கிக்‌ கிடந்ததை நீக்கியது,
எம்கோன்‌ … எமது தலைவனாகிய இவ்வெம்‌பெருமான்‌ [இராமபிரான்‌ :]
[அதுபோல] புவனம்‌ ஒரு மூன்றும்‌ – -மூவுலகங்களையும்‌.
ஈரடியால்‌ அளக்கின்ற பொன்கழல்‌ துகள்‌ – இரண்டடிகளைக்‌ கொண்டு அளந்த திவ்யபாதங்களின்‌ புழுதி,
உனக்கும்‌ – (மாசுடைய) உனக்கும்‌,
புனித பூரண செவ்வி முக மண்டலம்‌ கறை – தூய முழுமையான அழகுடைய முகவட்டத்தி லுள்ள கறையின்‌,
புரை தீர – களங்கம்‌ நன்கு நீங்கும்படி,
வரம்‌ அளிக்கும்‌ – வரங்கொடுக்கும்‌ :
[ஆகவே ] சிவனும்‌ – சிவபெருமானும்‌,
அயனும்‌ – பிரமதேவனும்‌,
வெள்ளை அயிராபதத்தனும்‌ – வெள்ளை யானையாகிய ஐராவதத்தையேறிச்‌ செலுத்துபவனாய இந்திரனும்‌,
செஞ்சுடர்க்‌ கடவுளோனும்‌ – சூரியனும்‌, -முப்பத்துமுக்கோடி தேவரும்‌–,
அறுமுகச்‌ செம்மலும்‌ – முருகக்கடவுளும்‌,
கைம்மலைக்‌ கோட்டவனும்‌ – (முகத்தில்‌, யானைக்கொம்பினையுடைய விநாயகனும்‌,
முறைமுறை பரவும்‌ – தங்கள்‌ முறைதவராதபடி துதிக்கும்‌,
நிகரில்‌ (முகில்வண்ணனுடன்‌ – மகரக்குழைக்கா தனுடன்‌, அம்புலீ -ஆட வா . ; ஆழி நீர்வண்ணனெனும்‌ மாதவனுடன்‌ -, அம்புலீ -,ஆடவா -; வாழி – அசை.

:மூவுலகும்‌ ஈரடியால்‌ முறைநிரம்பாவகை முடிய, தாவிய சேவடி” என்றார்‌ இளங்கோவடிகளும்‌,

———-

விண்டட.வி முகமா யிரங்களு மொளித்துநெடு
வெளியின்வந்‌ தொருமுகமதாய்‌
வெண்டிரைக்‌ கங்கைப்‌ பெரும்புனல்‌ பரந்தென
விரிந்தவவ்‌ வெள்ளத்தின்‌ மேல்‌
தண்டரள மணியுமிழ்ந்‌ தாகாய நள்ளிடை
தயங்கிய சலஞ்சலமென த்‌
தாரகைக்‌ குலமொடு தவழ்ந்து மேன்மேல்நீ
தலைப்பட்ட வாரறானும்‌
புண்டரிக மலா்முகை முறுக்குடைந்‌ தலருமொரு
பூவெனப்‌ பொலிவுபெற்றாய்‌
புகலரிய மதிவள முரைக்கில்முழு மதியெனப்‌
புகல்கின்ற துண்மைகண்டாய்‌
அண்டபகி ரண்டமு நிரம்பிய விவனுடன்‌
அம்புலீ யாடவாவே
ஆழிநீர்‌ வண்ணனெனும்‌ வாழிமா தவனுடன்‌
அம்புலீ யாடவாவே.–73-

விண்‌ தடவி- ஆகாயத்தை முற்றும்‌ அளாவி,

ஆயிரம்‌ முகங்களும்‌ ஒளித்து – (இழியும்‌) பல வாயில்களையும்‌ மறையச்செய்து,
நெடு வெளியில்‌ வந்து . பெரிய வெட்டவெளி யிடத்துவந்து,
ஒருமுகமதாய்‌ – ஏகமுகமாய்‌ (ஒருவாயிலைக்‌ கொண்டு)
வெண்திரைக்கங்கை பெரும்‌ புனல்‌ – வெள்ளிய அலை களைக்கொண்ட ஆகாச கங்கையாகிய பேராறு,
பரந்தென விரிந்தபரந்து பாய்வதென்னும்படி பரவிய,
வெள்ளத்தின்‌ மேல்‌ – நீர்ப்‌பெருக்கில்‌,
தண்‌ தரளமணி உமிழ்ந்து – குளிர்ந்த முத்துக்களை யீன்று,
ஆகாய நள்‌ இடை தயங்கிய – ஆகாசமாகிய நடுவிடத்தே விளங்கிய,
சலஞ்சலம்‌ என – வலம்புரிச்‌ சங்கினைப்‌ போல, .
தாரகைக்‌ குலமோடு தவழ்ந்து – நட்சத்திரக்‌ கூட்டங்‌ களோடு மெல்ல நகர்ந்து,
நீ. மேன்மேல்‌ தலைப்பட்டவாறானும்‌ – மிக்க(மேலிடத்துத்தலைதூக்கிச்‌ சிறப்புற்ற வகையாலும்‌,
புண்டரிக மலர்‌ முகை – வெண்டாமரையாகிய மலரின்மொட்டு, முறுக்கு
உடைந்து அலரும்‌ – கட்டவிழ்ந்து நன்கு மலர்கின்ற,
ஒரு பூஎன – ஒப்பற்றதோர்‌ பூ என்று சொல்லும்படி,
பொலிவு பெற்றாய்‌- விளக்கம்‌ பெற்றுள்ளாய்‌ ;(அவ்வகையாலும்‌).
புகல்‌ அரிய மதிவளம்‌ உரைக்கில்‌ – பேசுதற்கரிய அறிவுவளத்‌ தைப்பற்றிச்‌ சொல்லப்போனால்‌,
(உன்னை) முழுமதி எனப்புகல்‌கின்றது உண்மை .-பூர்ணஅறிவுடையவன்‌ என்று சொல்லுவது மெய்ம்மையாகும்‌ :
(அவ்வகையாலும்‌) [நீ எங்கும்‌ எல்லாம்‌ நிரம்‌ பியவனாக இருக்கின்றாய்‌ :
ஆகையால்‌ உன்னைப்போலே] அண்ட பகிர்‌ அண்டமும்‌ நிரம்பிய இவனுடன்‌ . இந்தப்பூவுலல உருண்‌ டையிலும்‌ பிற வெளிவுருண்டைகளிலும்‌ (பரிபூரணமாக) நிரம்பி யுள்ள
இந்த மகரநெடுங்‌ குழைக்காதனுடன்‌, அம்புலீ /- ஆட
வா ? ஆழி நீர்‌ வண்ணனெனும்‌ மாதவனுடன்‌ – , அம்புலீ-,.ஆடவா – வாழி – அசை,

மூழுமதி -பூர்ணசந்திரன்‌, பூர்ணஅறிவு : இந்த இருபொருளையும்‌ காட்டுவதாக அமைந்துள்ள நயம்‌ காண்க,-இச்செய்யுள்‌ சாமம்‌ என்ற உபாயத்தால்‌ வந்தது.

——-

என்னென்று நிகராவை யிருளன்றி நீயன்பர்‌
இதயவிரு ணீக்கவறியாய்‌
இருவிசம்‌ பிற்பொலிகு வாயிவன்‌ புவனங்கள்‌
எங்கணும்‌ பொலிவதோராய்‌
பொன்னந்‌ தகட்டிதழ்க்‌ குமுதமல்‌ லாலுளப்‌
புதுமலர்‌ திறக்கவறியாய்‌
போலியல்‌ லாவுனைப்‌ போலியென்‌ (move BSI
புதுநிலா மணிமுன்‌ நில்வாய்‌
மன்னுஞ்‌ சரோருகப்‌ படுகரும்‌ புளினவெண்
மண ற்குன்ற முஞ்சோலையும்‌
மடவனப்‌ பேடையொடு கூடிப்‌ புணர்ந்தகம்‌
மகிழ்ந்துபிரி யாதுசெஞ்சூட்‌
டன்னங்கள்‌ விகாயாடு தென்பேரை மாயனுடன்‌
அம்புலீ யாடவாவே
ஆழிநீர்‌ வண்ணனெனும்‌ வாழிமா தவனுடன்‌
அம்புலீ யாடவாடவ,--74-(இச்‌ செய்யுள்‌ பேதோபாயத்தினால்‌ வந்தது, )

என்‌ – இது என்ன ?
என்று – என்றைக்கு,
நிகராவை -(இம்மாயனுக்கு) ஒப்பாவது (நீ) :
நீ – , இருளன்றி – (இந்தப்‌) புறவிருட்டையல்லது,
அன்பர்‌ இதய இருள்‌ – பக்தர்கசூுடைய [அஞ்‌ஞான ] மனவிருளை,
நீக்க அறியாய்‌ .. போக்குதற்குத்‌ தெரியாதவனா யிருக்கிறாய்‌
இரு விசும்பில்‌ – பெரிய ஆகாயத்தில்‌, (மட்டும்‌),
பொலிகுவாய்‌ – விளங்கிடுவாய்‌ ;
இவன்‌ – இம்‌ மாயன்‌,
புவனங்கள்‌ எங்கணும்‌ – எல்லாவுலகங்களிலும்‌,
பொலிவது – விளங்குவது,
ஓராய்‌ – அறியமாட்டாய்‌ :
பொன்‌ ௮ம்‌ தகடு இதழ்‌ குமுதம்‌ அல்‌லால்‌ – பொன்போல்‌ அழகிய புறவிதழ்ககாக்‌ கொண்ட ஆம்பல்‌ மலரன்றி,
உளம்‌ புதுமலர்‌ – மனமாகிய புதியமலரை,
திறக்க அறியாய்‌ -விகசிக்கச்‌ செய்யத்‌ தெரியா தவனாயிருக்கிறாய்‌ :
(இப்படி)போலி அல்லா உனை .. (ஒருபடியும்‌) நிகரல்லாத உன்னை,
போலி என்றால்‌ – நிகராவாய்‌ என்று (நாங்கள்‌ உன்னைத்‌ தூக்கிவைத்துச்‌) சொல்வோமானால்‌,
(அதுகேட்டு உகந்து) புது நிலா மணிமுன்றில்‌ வாய்‌ வந்து –புதிய அழகிய நிலாமுற்றத்தினிடத்து வந்து (இவனுடன்விளாயாட வரவேண்டாவோ ?)
மன்னும்‌ – நிலைபெற்ற,
சரோருகப்‌ படுகரும்‌ – தாமரைபூத்த நீர்‌ நிலைகளிலும்‌,
புளினம்‌ வெண்மணல்‌ குன்றமும்‌ – திட்டுக்களாக வுள்ள வெள்ளிய மணற்‌ குன்றுகளிலும்‌,
சோலையும்‌ – பொழில்களிலும்‌,
செஞ்சூட்டு அன்னங்கள்‌ – சிவந்த உச்சிக்கொண்டையை யுடைய ஆணன்னங்கள்‌,
மட அனப்பேடையொடு கூடி புணர்ந்து -மென்மையான பெட்டையன்னங்களோடு கலந்து சேர்ந்து,
அகம்‌மகிழ்ந்து பிரியாது .. மனங்களிப்புற்றுப்‌ பிரியாதபடி, விளையாடும்‌ – ,“மென்‌னடையன்னம்‌ பரந்து விளையாடும்‌ வில்லிபுத்தூர்‌” என்றதும்‌ நினைக,
தென்பேரை மாயனுடன்‌ – தென்பேரையில்‌ [நித்தியவாசஞ்‌ செய்யும்‌ ]மகரநெடுங்குழைக்கா தனாகிய மாயனோடு, அம்புலீ ;-, ஆடவா –
ஆழி நீர்வண்ணனெனும்‌ மாதவனுடன்‌ -, அம்புலீ – !, ஆட வா – வாழி. அசை,

————-

சிற்றில்‌ பருவம்‌

களிக்குஞ்‌ சுரும்பர்‌ துதைந்துழுது
கணைக்கா லசைத்துச்‌ சில்லோசை
கனிந்தூற்‌ றிருப்ப மிழற்றுதொறுங்‌
கக்குங்‌ கலுழி நறவுபரி |
மளிக்கும்‌ பசுந்தார்ச்‌ செழுந்துளவு
மணக்குங்‌ குழகா 1! கார்மேக
வண்ணா 1? கருணை மடைதிறந்து
வழியும்‌ புயலே 1! பேரின்பம்‌
அளிக்கும்‌ பெரிய திருவீதி
அணுகை வழிக்கும்‌ புறம்பாக
அறியாப்‌ பருவப்‌ பெண்களெடுத்‌
“தமைக்கும்‌ வண்ட லிதுகண்டாய்‌
தெளிக்கும்‌ தமிழ்த்தென்‌ நிருப்பேரைச்‌
செல்வா 7 சிற்றில்‌ சிதையேலே .
திரையார்‌ பொருநைத்‌ தடந்துறைவா !
சிறியேஞ்‌ சிற்றில்‌ சிதையேலே,–75-

களிக்கும்‌ சுரும்பர்‌ – தேனுண்டு செருக்கும்‌ வண்டுகள்‌,
துதைந்து – நெருங்கி,
கணைக்கால்‌ அசைத்து – , உழுது -கிண்டுதலால்‌,
கனிந்து – இளகி,
ஊற்றிருப்ப – துளித்திருப்ப, (அப்‌போது)
சில்லோசை மிழற்றுதொறும்‌ – மிக மெல்லென ஒலியை எழுப்‌புந்தோறும்‌,
கக்கும்‌ கலுழி நறவு – வெளியுமிழும்‌ கலங்கிய தேன்‌,
பரிமளிக்கும்‌ – கமழும்‌,
பசுந்தார்‌ செழும்‌ துளவு – அழகிய பச்சைத்‌ திருத்துழாய்‌ மாலை, மணக்கும்‌-(மார்பில்‌) பொருந்தியுள்ள,
குழகா ! -அழகனே /!
கார்மேக வண்ணா – மேகநிறத்தவனே !
கருணை மடைதிறந்து வழியும்‌ புயலே – தயை பெருகி வழியும்‌ மேகமே ,
பேரின்‌பம்‌ அளிக்கும்‌ பெரிய திருவீதி – மிக்க ஆனந்தம்‌ கொடுக்கும்‌ பெரிய திருவீதியை,
அணுகு – நெறுங்குகின்ற,
வழிக்கும்‌ – மார்க்கத்திற்கும்‌,
புறம்பாக – வெளிப்புறமாக இருக்கும்படி,
அறியாப்பருவப்பெண்கள்‌ -ஒன்றும்‌ தெரியாத சிறு பெண்களாகிய நாங்கள்‌,
எடுத்து அமைக்கும்‌ மண்ணெடுத்து (விளையாட்டில்‌) இழைத்துள்ள, வண்டல்‌ இது – சிற்‌றில்‌ இதுவாகும்‌ :
(ஆகவே) தெளிக்கும்‌ தமிழ்த்‌ தென்திருப்பேரை செல்வா -சாரமான தமிழ் வழங்கும்‌ தென்திருப்பேரை நகரிலுள்ள செல்வனே
சிற்றில்‌ சிதையேல்‌ – (எங்களுடைய) சிற்றிலைச்‌ சிதைக்‌ காதே ;
திரை ஆர்‌ பொருநை – அலைகளை வீசுகின்ற தாமிரபரணி நதியின்‌,
தடம்‌ துறைவா – பெரிய நீர்த்துறைகளையுடையவனே
சிறியேம்‌ – சிறுவராகிய எங்களுடைய,
சிற்றில்‌ சிதையேல்‌ – சிற்றிலைச்‌ சிதைக்காதே ;

———–

வேண்டக்‌ கிடையா வாரமுதம்‌
விரைதெண்‌ டிரைநீர்க்‌ கடன்முகட்டின்‌
வெற்பைப்‌ பிடுங்கி மத்தாக
விடவா எளரவுக்‌ கயிறுசுற்றிப்‌
பூண்டக்‌ கணமே சுவைமதுரம்‌
பொங்கிப்‌ பெருகக்‌ கடைந்தெடுத்துப்‌
புலவர்க்‌ களிக்கும்‌ பெருமானே !
பொருந்தா நிருதர்‌ போரேறே!
காண்டற்‌ கரிய கொழுங்கிரணங்
கக்கும்‌ பசிய மரகதமே!
கதிரா மியிற்செங்‌ கதிர்மறைத்த
கருணைப்‌ புயலே ! பூமகள்கை
கீண்டச்‌ சிவக்கும்‌ புலனருளாற்
சிறியேஞ்‌ சிற்றில்‌ சிதையேலேதிரையார்‌ பொருநைத்‌ தடந்துறைவா !
சிறியேஞ்‌ சிற்றில்‌ சிதையேலே, -76-

வெற்பைப்‌ பிடுங்கி- மந்தரைமலையையெடுத்து,
மத்தாக – கடையும்‌ மத்தாக நாட்டி,
விடம்‌ வாள்‌ அரவு கயிறுசுற்றி – விஷத்தையுடைய கொடிய வாசுகியாகியபாம்பைக்‌ கடை கயிறாகச்‌ சுற்றி,
பூண்ட ௮ கணமே – (கடையுந்‌ தொழிலை) மேற்‌கொண்ட அந்த க்ஷ்ணீத்திலேயே (உடனே),
விரை தெண்‌ திரை நீர்‌ கடல்‌ முகட்டில்‌ – (கரையை நோக்கி) விரைகின்ற தெளிந்த அலைகளையுடைய நீரைக்‌ கொண்ட,கடலின்‌ மேற்பகுதியில்‌,
வேண்‌டக்கிடையா ஆரமுதம்‌ – விரும்பினாலும்‌ கிடைத்தற்கரிய தேவாமிருதம்‌,
சுவைமதுரம்‌ பொங்கி பெருக – இனிமையான சுவையோடு கிளர்ந்தெழுந்து பெருக,
கடைந்து எடுத்து, புலவர்க்கு – தேவர்‌ களுக்கு, அளிக்கும்‌ – வழங்கிய பெருமானே -,
பொருந்தா – மனம்‌ பொருந்தாத (பகைவராகிய)
நிருதர்‌ போர்‌ ஏறே !/ – அரக்கரோடு போரிடுஞ்சிங்கமே /;
காண்டற்கு அரிய – பார்த்தற்கு முடியாத,
கொழும்‌ கிரணம்‌ – (ஒளிமிக்குச்‌) செழித்த கதிர்க்கிரணங்களை,
கக்கும்‌ – வெளியுமிழும்‌,
பசிய மரகதமே ! – பச்சை மரகதரத்தினமே
கதிர்‌ ஆழியின்‌ – ஜவலிக்கின்ற சக்கரப்‌ படையினால்‌,
செங்கதிர்‌ மறைத்த – சிவந்த கிரணங்களைக்‌ கொண்ட சூரியனை மறைத்த,
கருணைப்‌ புயலே ! – தயைபொழியும்‌ மேகமே !
புலன்‌ – உன்திருவடி,
பூமகள்‌ கைதீண்ட சிவக்கும்‌ – இலக்குமி (தன்‌ மென்மையான) கையால்‌ பிடிக்கச்‌ சிவந்து காட்டும்‌ :(அவ்வளவு மிருதுவானது : அதனால்‌)
அருளால்‌ – (எங்கள்‌ மேல்‌) கிருபைவைத்து,
சிறியேம்‌ – சிறுமியராகிய எங்களுடைய,
சிற்றில்‌ சிதையேல்‌ .: திரை ஆர்‌ பொருநை தடம்‌ துறைவா ! -, சிறியேம்‌ சிற்றில்‌ சிதையேல்‌ – ;

*விஞ்சை வானவர்‌ சாரணர்‌ சித்தர்‌ வியந்துதி செய்யப்‌ பெண்ணுருவாகி, அஞ்சுவையமுதம்‌ அன்று அளித்தான்‌”? என்றார்‌ திருமங்கைமன்னனும்‌.

*வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்‌ கடல்‌ வண்ணன்‌ ! பண்டொருநாள்‌ கடல்‌ வயிறு கலக்கினையே”” என்றார்‌ இளங்கோவடிகளும்‌

*நாச்சிமாரும்‌ கூசிப்‌ பிடிக்கும்‌ திருவடிகள்‌?” என்பது சம்‌ பிரதாயம்‌, பஞ்செனச்‌ சிவக்கும்‌ மென்கால்‌ தேவியாகிய? பூமகளின்‌ கைதீண்டச்சிவக்கும்‌ என்றது நயம்‌,

———–

வள்்‌சளாக்‌ குழைவே ஸனெடுங்கருங்கண்‌
மதிவா ணுதற்கோ மளப்புளக
வனமா முலைக்குங்‌ குமச்சுவடு
மடவா ரொடும்போய்‌ விளையாட
அள்ளிக்‌ குடிக்குந்‌ தடம்பொருநை
ஆற்றிற்‌ கூடு புனற்றுறையின்‌
அருகிற்‌ சிறுபே தையர்களெடுத்‌
தடங்கா விருப்ப மீதூர்ந்து
குள்ளிப்‌ பால்மாற்‌ றரும்பசும்பொன்‌
தகட்டின்‌ வயீடூ ரியங்குயிற்றிச்‌
சமைக்குந்‌ “திருமா மணிமுறத்துத்‌
தருதா மரைக்கை சேப்பமணல்‌
தெள்ளிக்‌ கொணர்ந்து தரவிகளைத்த
சிறியேஞ்‌ சிற்றில்‌ சிதையேலே
திரையார்‌ பொருநைத்‌ தடந்துறைவா !
சிறியேஞ்‌ சிற்றில்‌ சிதையேலே.–77-

வள்ளைக்குழை – வள்‌ளைக்கொடிபோன்ற காதும்‌,
வேல்‌ நெடும்‌ கருங்‌ கண்‌ – வேலாயுதம்‌ போல்‌ கூரிய நீண்ட கரிய கண்‌களும்‌,
மதிவாள்‌ நுதல்‌ – சந்திரன்‌ போல்‌ ஒளிபொருந்திய நெற்றியும்‌,
கோமளம்‌ புளகம்‌ வனம்‌ மா முலை. இளமையோடு மயிர்க்‌
கூச்செறியும்‌ அழகிய பருத்தமுலைகளும்‌,
குங்குமச்சுவடு-(அவற்றின்‌மேல்‌) பூசியகுங்குமக்குழம்பின்‌ அடையாளங்களும்‌ கொண்ட,
மடவாரொடுபோய்‌ – பெண்டிரோடும்‌ சென்று,
சிறுபேதையர்கள்‌ -சிறுமியர்கள்‌,
விளையாட – விளையாடுதற்கு (முன்னதாக),
அள்ளிக்‌ குடிக்கும்‌ – கைகளால்‌ முகந்து குடிக்கின்ற
தடம்‌ பொருநையாற்‌நின்‌ கூடு புனல்துறையின்‌ அருகில்‌ – விசாலமான தாமிரபரணிநதியின்‌ கூடுபுனற்றுறையின்‌ (சமூகதீர்த்தம்‌ என்னும்‌ திருமஞ்சனத்துறை, )பலர்கூடும்‌ நீர்த்துறையின்‌ ]சமீபத்தில்‌,
அடங்கா விருப்பம்‌ மீதூர்ந்து – மிக்க ஆதரத்தோடு, எடுத்து –
(மணலை) வாரியெடுத்து,
தள்ளி – (அதிகமாக அள்ளவே) மிகுதியைத்தரையில்‌ தள்ளி,
பால்மாற்று அரும்‌ – பின்வாங்காமல்‌,
பசும்‌பொன்தகட்டில்‌ – பசியபொன்னாலாகிய தட்டில்‌, வயிடூரியம்‌ குயிற்‌றிச்‌ சமைக்கும்‌ – (மஞ்சள்நிறவொளி வீசும்‌) வயடூரிய மணிகளைப்‌ பதியவைத்துப்‌ பண்ணிய,
திருமாமணி முறத்து . சிறந்த பிற மணிகளுமழுத்திய முறத்தினால்‌,
தரு தாமரைக்கை சேப்ப – வழங்குகின்றதாமரைப்பூப்‌ போன்‌ றகைகள்‌ சிவக்கும்படி,
மணல்‌ தெள்ளி- (வாரியஅந்த) மணலைக்கொழித்தெடுத்து,
கொணர்ந்து தர – பிரியமோடுகொண்டுவந்து கொடுப்ப,
(அதனைக்கொண்டு) சிறியேம்‌ – சிறுமியராகிய நாங்கள்‌,
விளைத்த – உண்டாக்கிய (கட்டிய),
சிற்றில்‌ – சிற்‌நிலை,
சிதையேல்‌ – சிதைக்காதே:
திரை ஆர்‌ பொருநை தடம்‌துறைவா – ! சிறியேம்‌ சிற்றில்‌ சிதையேல்‌

——-

தருக்கா மலர்ப்பூம்‌ பொழிலும்‌ வயல்‌
தடமுந்‌ தருதென்‌ நிருப்பேரை
தழைக்கும்‌ படிநூற்‌ றெண்மர்தொழுந்
தாமோ தர!சீ தர [முகுந்தா !
ஒருக்கா லெணுமவ்‌ விருக்காலும்‌
உணராப்‌ பொருளே ! பரஞ்சுடரே !
ஒருவா ணுதல்பண்‌ டுளங்களிப்ப
உயர்வான்‌. முகடு கிழித்தெழுந்து
மருக்கால்‌ நறுமென்‌ மலர்கொணர்ந்த
மதமோ பதினா யிரங்கோப
மங்கை யர்கள்‌ புளகமுலை
மணந்து கனிவா யமுதுண்ட
செருக்கோ வுனக்கீ தியல்பன்று
சிறியேஞ்‌ சிற்றில்‌ சிதையேலே
திரையார்‌ பொருநைத்‌ தடந்துறைவா 
சிறியேஞ்‌ சிற்றில்‌ சிதையேலே.–78-

தரு கா (வும்‌) – மரங்களையுடைய சோலைகளையும்‌,
மலர்‌ பூம்பொழிலும்‌ – பூக்களையுடைய அழகிய சோலைகளையும்‌,
வயல்‌ தடமும்‌ – கழனியிடங்களையும்‌,
தரு – கொண்டுள்ள,
தென்‌ திருப்பேரை – தென்திருப்பேரைநகர்‌, தழைக்கும்படி .- செழித்துச்‌ சிறக்கும்படி,
நூற்று எண்மர்‌ .- நூற்றெட்டு ஜைமிநீயதலவகார,ஸாமவேதிகள்‌,
தொழும்‌ – வழிபடுகின்ற,
தாமோதர ! ..- முகுந்தா – ,
ஒருக்கால்‌ – ஒருசமயம்‌,
எணும்‌ – உன்னையறிய வேண்டும்‌ ‘ என்று எண்ணிய, ௮
இருக்காலும்‌ – அந்த வேதத்‌ தாலும்‌,
உணரா – அறியமுடியாத,
பொருளே – பரம்பொருளே !
பரஞ்சுடரே ! – மேலான சோதியே,
பண்டு – முன்‌ துவாபரயுகத்தில்‌ (கிருஷ்ணாவதாரத்தில்‌)
ஒரு வாணுதல்‌-ஒரு பெண்‌ [ஒப்பற்ற சத்திய பாமை]
உளம்‌ களிப்ப – மனம்‌ மகிழும்படி,
உயர்‌ வான்‌ முகடு கிழித்து எழுந்து – ஓங்கிய ஆகாய வுச்சியினை வபூடுருவிச்சென்று,
மரு கால்‌ – வாசனையை வெளியிடுகின்ற,
நறு மென்மலர்‌ – நல்லமெல்லிய பாரிஜாத மலர்பூக்கும்‌ தருவை,
கொணர்ந்த – (இந்திரலோகத்திலிருந்து கருடன்மேலேற்றிக்‌) கொண்டு வந்த,
மதமோ – செருக்கோ ?:
பதினாயிரம்‌ கோப மங்கையர்கள்‌ – பதினாயிரம்‌ கோப ஸ்திரீகளின்‌,
புளகம்‌ முலை மணந்து – மயிர்க்கூச்செறிந்த கொங்கைகளைத்‌ தழுவியிருந்து,
(மேலும்‌ அவர்களது) கனிவாய்‌ அமுதுஉண்ட – கொவ்வைக்கனிபோற்‌ சிவந்தவாயினிடத்து அமுதநீரைப்‌ பருகியதனாலான,
செருக்கோ – அகந்தையோ ?:
உனக்கு – , ஈது – இச்‌ செயல்‌ செய்தல்‌, இயல்பு அன்று -தகாதது :
சிறியேம்‌ சிற்‌நில்‌ சிதையேல்‌ -; திரை ஆர்‌ பொருநைத்தடம்‌ துறைவா -, சிறியேம்‌ சிற்றில்‌ சிதையேல்‌ —

மதமோ, செருக்கோ”” எ்ன்று வினவுவதிலே சிறுமியர்‌ செருக்குத்‌ தொனித்தல்‌ சுவைக்க,

*பதினாறாமாயிரவர்‌ தேவிமார்‌ பார்த்‌திருப்ப”? என்றாள்‌ ஆண்டாள்‌ (நாச்‌ : திரு : 7-9)

அவர்‌ தந்‌தையார்‌ :“பதினாறாமாயிரவர்‌ தேவிமார்‌ பணிசெய்ய”? என்றார்‌. (4-9-4),

——–

கோவே ! கோவா மரகதமே !
கொடும்போ ரரக்கர்‌ குலக்கூ ற்றே !
குளிர்பூந்‌ துளவத்‌ திருத்தொங்கல்‌
குவவுத்‌ தடந்தோட்‌ காயாவாம்‌
பூவே ! பூவின்‌ பொலன்பொகுட்டுப்‌
புதுமென்‌ மணமே ! யருள்சுரந்து
பொங்கிப்‌ பெருகி யுவட்டெறிந்து
பொழியும்‌ புயலே ! கற்பகப்பூங்‌
காவே ! முதுகோ சலைதவமே !
கண்ணே ! கண்ணி னுண்மணியே !
கதிர்நித்‌ திலவெண்‌ மணல்நினது
காலி னுறுத்தல்‌ கடனன்றே
தேவே ! தேவப்‌ பெருமானே !
சிறியேஞ்‌ சிற்றில்‌ சிதையேலே
திரையார்‌ பொருநைத்‌ தடந்துறைவா 7
சிறியேஞ்‌ சிற்றில்‌ சிதையேலே.–79-

கோவே – ! மன்னனே
கோவா மரகதமே | . கோக்கப்‌படாத பச்சைரத்தினமே |
கொடும்‌ போர்‌ அரக்கர்‌ குலக்‌கூற்றே !–கொடிய யுத்தத்தைச் செய்கின்ற ராட்சசர்களின்‌ குல காலனே !
குளிர்பூழ்‌ துளவம்‌ திரு தொங்கல்‌ – குளிர்ந்த அழகிய துளசி மாலையைத் தரித்த,
குவவு தட தோள்‌ – திரண்ட பெரிய தோள்‌களை யுடைய,
காயாவாம்‌ பூவே!-காயாம்‌ பூப்போல்‌ கருநிறம்‌ படைத்தவனே?
பூவின்‌ – தாமரைப்பூவின்‌,
பொலன்‌ பொகுட்டு – அழகிய கொட்டையினின்று எழும்‌,
புது மென்‌ மணமே!.புதியமென்மையான பரிமளமே !
அருள்‌ சுரந்து – கருணையூறி,
பொங்கி – மேல்வந்து,
பெருகி – ஒழுகி,
உவட்டு எறிந்து – வெள்ளமிட்டு,
பொழியும்‌ – சொரியும்‌,
புயலே . மேகமே !
கற்பகப்பூங்‌ காவே?! – கற்பகச்‌சோலையே !
முது கோசலை தவமே – (தசரதரின்‌) மூத்தமனைவியாகிய கெளசல்யா தேவியின்‌ தவப் புதல்வனே !
கண்ணே . (எங்கள்‌) கண்‌போன்றவனே !
கண்ணின்‌ நுண்‌ மணியே ! – கண்ணுக்குள்ளிருக்‌கும்‌ நுண்ணிய மணிபோன்றவனே !
கதிர்‌ நித்திலம்‌ வெண்‌மணல்‌ – ஒளிருகின்ற முத்துக்களாக் கொண்ட வெள்ளிய மணல்‌,
நினது காலின்‌ உறுத்தல்‌ – உன்னுடைய (மென்மையான) அடிகளில்‌ குத்துதல்‌,
கடன்‌ அன்று – முறையன்று :
தேவே – இறைவனே
தேவப்‌ பெருமானே ! – தேவர்களுக்குத்‌ தலைவனே !
சிறியேம்‌ சிற்றில்‌ சிதையேல்‌-; திரை ஆர்‌ பொருநைத்தடம்‌
துறைவா -, சிறியேம்‌ சிற்றில்‌ சிதையேல்‌ -;

காயா வண்ணன்‌”*’ (நாச்‌: திரு. 1-6), “காயா மலர்காள்‌ ! திருமால்‌ உருவொளி காட்டுகின்றீர்‌?? (9-3)

—————–

வன்னக்‌ களபப்‌ புளகமுலை
மடவா ரெனுங்கோ வியர்கள்‌ திரு
வாய்ப்பா டியிற் புக்கு அளை கவர்ந்த
மணிவாய்க்‌ கள்வ னென்றுகட்டி
உன்னிப்‌ பொருமி யழவடித்த
துண்டே லவர்கள்‌ விளையாடும்‌
ஒளிர்நித்‌ திலவெண்‌ மணற்சிற்றில்‌
உனக்கின்‌ றழிக்க முறைகண்டாய்‌
கன்னிக்‌ கமுக மிடறொடியக்‌
காய்க்கும்‌ பசுங்காய்க்‌ குலைசிதறக்‌
கதலிக்‌ குலங்க ளடிசாயக்‌
கயல்பாய்ந்‌ துளைந்து வாலறையுஞ்‌
செந்நெற்‌ பழனத்‌ திருப்பேரைச்‌
செல்வா ! சிற்றில்‌ சிதையேலே
திரையார்‌ பொருநைத்‌ தடந்துறைவா !
சிறியேஞ்‌ சிற்றில்‌ சிதையேலே,–80-

வன்னம்‌ களபம்‌ புளகம்‌ முலை . அழகிய சந்தனம்‌ பூசப்பட்டு மயிர்கூச்செறியும்‌ கொங்கைகளைக்‌ கொண்ட,
மடவார்‌ எனும்‌ கோவியர்கள்‌ – பெண்கள்‌ என்று பேசப்படும்‌ கோபியர்களின்‌,
திருவாய்ப்பாடியில்‌ புக்கு . கோகுலத்திற்புகுந்து,
அளை கவர்ந்த -வெண்ணெயைத்‌ திருடிய,
மணிவாய்‌ – அழகிய வாயினையுடைய,
கள்வன்‌ என்று கட்டி – திருட்டுப்‌ பையன்‌ என்று தாம்பினால்‌ பிணித்து;
உன்னி – உற்று (உன்னை) உருத்துப்பார்க்க, (நீ)
பொருமி அழ – விம்மி யழும்படி,
அடித்தது உண்டேல்‌ – (மத்தினால்‌) அடித்தது உண்மையானால்‌,
அவர்கள்‌ விளையாடும்‌ – அவர்கள்‌ [வண்டலிழைத்து] விளையாடுகின்ற [இடத்திலுள்ள],
ஒளிர்‌ நித்திலம்‌ வெண்மணல்‌ சிற்றில்‌ – பிரகாசிக்கின்ற முத்துக்களைக்‌ கொண்ட வெள்ளிய மணலாலாகிய சிறு வீடுகளை,
இன்று.இப்போது,
அழிக்க – சிதைக்க,
உனக்கு முறை – உனக்குத்‌ தகுதியாகும்‌ :
கன்னிக்‌ கமுகு மிடறு ஓடிய – இளைய கமுகமரத்தின்‌ கழுத்து தாழும்படி,
காய்க்கும்‌ பசுங்காய்‌ குலை – காய்த்திருக்கின்ற பச்சைப்‌ பாக்கின்‌ குலைகள்‌,
சிதற – சிதறிவிழும்படியும்‌,
கதலிக்குலங்கள்‌ -வாழைமரங்கள்‌,
அடி சாய – கீழ்ப்பகுதி சாயும்படியும்‌,
கயல்‌ பாய்ந்து உளைந்து – கயல்‌ மீன்கள்‌ தாவியொலித்து,
வால்‌ அறையும்‌ -(தங்களது) வாலை அக்‌ குலைகளின்‌ மீதும்‌ அடிப்பகுதிமீதும்‌ [ விசையோடு] அடிக்கும்‌,
செந்நெல்‌ பழனம்‌ திருப்பேரை – செந்நெற்பயிர்‌கள்‌ விளையும்‌ வயல்களைக்‌ கொண்ட திருப்பேரைநகரின்‌,
செல்வா -,சிற்றில்‌ சிதையேல்‌ – : திரை ஆர்‌ பொருநைத்தடம்‌ துறைவா-,சிறியேம்‌ சிற்றில்‌ சிதையேல்‌ –;

தீராத வெகுளியளாய்ச்‌ சிக்கென ஆர்த்தடிப்ப‘? என்றவிடத்து (சிறிய திரூமடல்‌, கண்ணி – 86),
“இது அபிநயமாத்திரம்‌’” என்று வியாக்யாதமிட்டார்‌ பெரிய வாச்சாச்சான்பிள்ளே  அதுபோலே ஈண்டும்‌ “அடி அடித்ததுண்டேல்‌‘* என்கிறார்கள்‌ எனக்கொள்க:

“கள்வன்‌ என்றுகட்டி”” என்ற விடத்து அறியவேண்டுவதொன்றுண்டு : அஃதாவது –
வெண்ணெய்‌ கொள்ளுதல்‌ முதலிய தொழில்களைச்‌ செய்தலால்‌ இந்தப்‌ பட்டப்‌ பெயர்‌ பெற்றானா பினும்‌, அவனைக்‌ கள்வன்‌” என்றால்‌
தகாது என்றார்‌ திவ்யகவி தமது நூற்றெட்டுத்திரப்பதியந்தாதி’?யில்‌ (85) அஃது வருமாறு ::
பண்டேயுன்‌ பழவுயிரை யென்னதென்று, கொண்டேனைக்‌ கள்வனென்று கூறாதே — மண்டலத்தோர்‌, புள்வாய்‌ பிளந்த புயலே யுனைக்கச்சிக்‌
கள்வாவென்‌ றோதுவதென்‌ கண்டு” என்பது.

———–

பண்ணே நியமென்‌ சூதலைமொழிப்‌
பவளக்‌ கனிவாய்க்‌ குறுநகையும்‌
பாரித்‌ தோங்கிப்‌ பூரித்த
பைம்பொற்்‌ புயமுங்‌ கண்டழகு
கண்ணே றெளியேம்‌ பட்டனமென்‌
றெண்ணிக்‌ கருத்து வேறுபடக்‌
கணக்கன்‌ றுலகில்‌ மன்னுயிர்க்குக்‌
காவற்‌ கடவுள்‌ நீயன்றோ
மண்ணே மழையுமுண்‌ இமிழ்ந்தளந்த
மாலே ! வேலைப்‌ புனல்‌ சுவறி
மறுகக்‌ கணதொட்‌ டிடுமுகுந்தா !
வருணன்‌ நினமா ராதனைசெய்‌
தெண்ணீர்ப்‌ பொருநைத்‌ தடந்துறைவா !
சிறியேஞ்‌ சிற்றில்‌ சிதையேலே தெளிக்குத்‌ தமிழ்த்தென்‌ நிருப்பேரைச்‌
செல்வா [! சிற்றில்‌ சிதையேலே.--81-

பண்‌ ஏறிய மென்‌ குதலை மொழி – இராகம்‌ போல்‌ சுவையுள்ள மெல்லிய இனிய பேச்சினையும்‌,
பவளக்‌ கனிவாய்‌ – பவளம்‌ போற்சிவந்த இனிய வாயினையும்‌,
குறு நகையும்‌ – புன்சிரப்பினையும்‌,
பாரித்து ஓங்கிப்‌ பூரித்த பைம்பொன்‌ புயமும்‌ தோன்றி உயர்ந்து பருத்த அழகிய தோள்களினையும்‌,
கண்டு – (நீ) பார்த்து, (அதனால்‌)
எளியேம்‌ – சிறுமியராகிய நாங்கள்‌,
அழகு – எங்களது அழகினால்‌,
கண்ணேறு பட்டனம்‌ என்று- (உன்னுடைய)திருஷ்டிதோஷம்‌ அடைந்து விட்டோம்‌ என்று,
எண்ணி – நினைத்து,
கருத்து – (உன்மேல்‌ வைத்துள்ள) மனம்‌,
வேறுபடக்‌ கணக்கன்று – மாறுபட நியாயமில்லை :
(ஏனெனில்‌) உலகில்‌ – இந்திலவுலகத்தி லுள்ள,
மன்னுயிர்க்கு – நிலைபெற்ற ஜீவன்களுக்கு,
காவற்‌ கடவுள்‌ நீ அன்றோ ! – பாதுகாப்பளிக்குந்‌ தெய்வம்‌ நீயல்லவா? (நீயேதான்‌) : [
ஆகவே]. மண்‌ ஏழையும்‌ உண்டு உமிழ்ந்து அளந்த மாலே _ஏழு தீவுகளையும்‌ புசித்துப்‌ பின்னர்‌ வெளியே உமிழ்ந்து அவற்றை அளவிட்ட திருமாலே!
வேலை – கடல்‌,
புனல்‌ சுவறி- நீர்‌ வற்றி,
மறுக .- வருந்தும்படி,
கணை தொட்டிடு – ஆக்னேயாஸ்திரத்தைத்‌ தொடுத்த,
முகுந்தா – முகுந்தனே !
வருணன்‌ தினம்‌ ஆராதனை செய்‌ – வருணபகவான்‌ நாடோறும்‌ பூஜை செய்கின்ற,
தெள்‌ நீர்‌ பொருநை தடம்‌ துறைவா! _ தெளிந்த நீரையுடைய தாமிரபரணி யின்‌ விசாலமான துறைகளுக்குத்‌ தலைவனே
சிறியேம்‌ சிற்றில்‌ சிதையேல்‌ – :
தெளிக்கும்‌ தமிழ்த்‌ தென்திருப்பேரை ~ ஆராய்ந்‌ தெடுத்த சாரமான தமிழ்பயிலும்‌ தென்திருப்பேரை நகரின்‌, செல்வா! , சிற்றில்‌ சிதையேல்‌ –

——-

தடிக்குஞ்‌ சிகரப்‌ படாம்பொதிந்த
தடமா முலைக்குங்‌ குமச்சுவட்டுத்‌
தழைக்குங்‌ குறுங்கண்‌ சாந்தொழுகித்‌
்‌ தருபா லசோதை மகிழ்ந்தூட்டக்‌
குடிக்கும்‌ புயலே ! யிலங்கையில்வெங்‌
கொடும்போ ரரக்கர்‌ குலக்கூற்றே /
குனிக்குஞ்‌ சிலைக்கைத்‌ தடக்களிறே !
கோவே ! பசுந்தண்‌ டுழாய்மாலை
முடிக்கும்‌ பொருளே ! முத்தொழிற்கும்‌
மூவா முதலே 1! யழியாத
முத்திக்‌ கொருவித்‌ தாகவந்து
முளைக்கும்‌ பொருளே ! பாகுபெற
வடிக்குந்‌ தமிழ்த்தென்‌ றிருப்பேரை
மாலே ! சிற்றில்‌ சிதையேலே
மகரக்‌ குழையே ! நூற்றெண்மர்‌
வாழ்வே ! சிற்றில்‌ சிதையேலே.–82-

தடிக்கும்‌ சிகரம்‌ – திரண்ட உச்சிமேல்‌,
படாம்‌ பொதிந்த – சீலையையிட்டு மூடிய,
தட மா முலை-பருத்த பெரிய முலையில்‌,
குங்குமச்சுவடு தழைக்கும்‌ – பூசிய குங்குமச்‌ சாந்தின்‌ அடை யாளம்‌ நன்கு தெரிகின்ற,
குறுங்கண்‌ – சிறிய முலைக்காம்பினிடத்து,
சாந்து ஒழுகி – சந்தனம்‌ [கலைந்து] இலேசாக ஒழுக,
தரு-கொடுத்த,
பால்‌ – முலைப்பாலை,
அசோதை – யசோதை,
மகிழ்ந்து ஊட்ட – சந்தோஷமாக ஊட்ட,
குடிக்கும்‌ . (அதனை) உறிஞ்சிப்‌ பருகும்‌,
புயலே – மேகமே!
இலங்கையில்‌ – இலங்கை மாநகரில்‌,
வெம்‌ கொடும்‌ போர்‌ அரக்கர்‌ குலம்‌ கூற்றே! – கடிய கொடிய போரைச்‌ செய்த அரக்கர்களின்‌ குலத்திற்கு யமன்‌ போன்றவனே!
சிலை குனிக்கும்‌ கை – வில்லை (நன்கு) வளைத்துத்‌ (துட்டர்களை)(யொழிக்கும்‌) கையையுடைய,
தடக்‌ களிநே! – பெரிய யானை போன்றவனே!
கோவே. . தலைவனே!
பசும்‌ தண்‌ துழாய்‌ மாலை முடிக்கும்‌ பொருளே! – பச்சை நிறமுள்ள குளிர்ந்த திருத்துழாய்‌ மாலையைச்‌ சூடும்‌ பரம்பொருளே!
முத்தொழிற்கும்‌ . படைத்தல்‌, காத்தல்‌, அழித்தல்‌ என்ற மூன்று தொழில்களைச்‌ செய்து வரும்‌,
மூவா – (என்றைக்கும்‌) கெடாத.
முதலே! -முதற்கடவுளே!
அழியாத முத்திக்கு – (என்றைக்கும்‌) அழிவில்லாத முக்திக்கு,
ஒரு வித்தாக வந்து – ஒப்பற்ற முதற்காரணமாக வந்து,
முளைக்கும்‌ – அவதரிக்‌கின்ற,
பொருளே! . மூலப்பொருளே!
பாகு பெற வடிக்கும்‌ தமிழ்‌ – வெல்லப்பாகு போல இனிமை பெறச்‌ சாரமாகப்பிழியும்‌ தமிழ்‌
பயிலும்‌, – தென்திருப்பேரை மாலே-?, சிற்றில்‌ – சிதையேல்‌ -:
மகரக்‌குழையே! – மகரநெடுங்குழைக்காதரே!,
நூற்றெண்மர்‌ வாழ்வே! – ஜைமீ நீயதலவகார சாமவேதிகள்‌ நூற்றெட்டுப்பேருக்கும்‌ நல்‌ வாழ்வளிப்பவனே?
சிற்றில்‌ சிதையேல்‌–

——-

கொத்தோ டசையப்‌ பசுந்துளவங்‌
குடக்கூ டரும்பி முகரத்தெழுந்து
கொழிக்குந்‌ தவளப்‌ பிறைநுதலிற்‌
குறுவேர்‌ வொழுக வணிந்தசுட்டி
முத்தா னதுவெண்‌ ணிலவெறிப்ப
முகத்தா மரையி னகையிலங்க
முதுகுண்‌ டலமும்‌ வார்காது
முழுமா மணிப்பொற்‌ சோ திவிட
அத்தா 1 வருணன்‌ நினம்பரவும்‌
அரி!கேசவ! நாரண ! முகுந்தா !
அடல்வா எரவிற்‌ கண்டுயிலும்‌
ஆழிப்‌ புயலே ! யாய்ச்சியர்கை
மத்தா லடிப்ப வெண்ணெயுண்ட
வாயா ! சிற்றில்‌ சிதையேலே
மகரக்‌ குழையே ! நூற்றெண்மர்‌
வாழ்வே ! சிற்றில்‌ சிதையேலே.–83-

பசும்‌ துவளம்‌ கொத்தோடு அசைய – கொத்தாக இடப்பட்ட பச்சைத்துளவமாலை மார்பில்‌ அசைந்தாடவும்‌,
குடக்கு ஊடு அரும்பி – மேற்குத்திசையில்‌ கீற்றாக அரும்பி,
முளைத்து எழுந்து – சற்று நன்கு தெரியும்படி மேலெழுந்து,
கொழிக்‌கும்‌ – நிலவை உமிழும்‌,
தவளம்‌ பிறை – வெள்ளிய பிறைச்‌சந்திரன்போல்‌
(வளைந்த), நுதலில்‌ – நெற்றியில்‌,
குறு வேர்வுஒழுக – சிறுதுளியாக வேர்வையொழுக,
அணிந்த: சுட்டிமுத்தானது – சூட்டியசுட்டியிலுள்ள முத்தானது,
வெள்‌ நிலவு எறிப்ப -வெண்மையான ஒளியை வீசவும்‌;
முகத்தாமரையில்‌ .- தாமரை மலர்போன்ற முகத்தில்‌,
நகை இலங்க – பற்கள்‌ (அழகாக) விளங்‌கவும்‌ ;
முது குண்டலமும்‌ – பெரிய குண்டலமும்‌, .
வார்‌ காது -நீண்ட காதினில்‌ (அணிந்துள்ள),
முழு மாமணி – முற்றும்சிறந்தமணிகளால்‌
அமைந்து-குழையும்‌,
பொன்‌ சோதி விட .. பொன்‌ போல்‌ ஒளிவிடவும்‌ ; (நீ வந்து) சிற்றில்சிதையேல்‌ எனமேல்‌ இயையும்‌,
(இனி) அத்தா ! மேலோனாகிய விட்டுணுவே !
வருணன்‌ தினம்‌ பரவும்‌ அரி – வருணபகவான்‌ தினந்தோறும்‌ துதிக்‌கின்ற ஹரியே !
கேசவ !-, நாரண !-, முகுந்தா ! -,
அடல்‌ வாள்‌ அரவில்‌ – வலிய ஒளியுள்ள ஆதிசேடன்மேல்‌,
கண்துயிலும்‌ -யோகநித்திரை கொள்ளும்‌,
ஆழிப்‌ புயலே ! .. பாற்கடல்‌ மேகமே !
ஆய்ச்சியர்‌ – (கோகுலத்து) இடைச்சியர்‌,
கைமத்தால்‌ அடிப்ப -கையிற்கொண்ட மத்தினால்‌ அடிக்கும்படி,
வெண்ணெய்‌ உண்ட வாயா – (அவர்கள்‌ மனையிலுள்ள) வெண்ணெயைக்‌ களவாடித்‌ தின்ற வாயையுடையவனே
சிற்றில்‌ சிதையேல்‌-: மகரக்‌குழையே. – நூற்றெண்மர்‌ வாழ்வே ! -, சிற்றில்‌ சிதையேல்‌-;

———

அன்போ டணைத்து முலைகொடுத்தின்‌
னமுதூற்றிருக்கும்‌ புனலாட்டி
அருங்கட்‌ கடைக்கஞ்‌ சனமெழுதி
ஆரந்‌ திருத்திப்‌ பட்டுடுத்தி
உன்பே ரிடுவே னென்குழவிக்‌
குள்ள தயவாற்‌ றனிசமைத்த
உயர்மா ளிகையு மாடரங்கும்‌
ஒளிர்‌ வே திகையு நீயழிக்க
வன்பா லோடி வரவுனக்கு
வழக்கன்‌ றுலகிற்‌ சிறுபேதை
மகளி ரிருந்து விளையாடும்‌
வண்டற்‌ றுகள்சே வடிபடுமே
தென்பே ரையினங்‌ குலநாத !
சிறியேஞ்‌ சிற்றில்‌ சிதையேலே
திரையார்‌ பொருநைத்‌ தடந்துறைவா /
சிறியேஞ்‌ சிற்றில்‌ சிதையேலே.--84-

அன்போடு அணைத்து – ஆசையோடு கட்டித்‌ தழுவி யணைத்து,
இன்‌ அமுது ஊற்றிருக்கும்‌ முலை கொடுத்து – இனிய பால்‌ சுரந்து நிறைந்திருக்கும்‌ முலை யூட்டி,
(பின்னர்‌) புனல்‌ ஆட்டி -[கடாரத்தில்‌ பூரித்து வைத்த] நீரில்‌ குளிப்பாட்டி,
அரும்‌ கண்‌கடைக்கு – அழகிய கடைக்கண்ணுக்கு,
அஞ்சனம்‌ எழுதி -மையிட்டு-
ஆரம்‌ திருத்தி – முத்து மாலையைச்‌ சரிசெய்து,
பட்டு உடுத்தி(அரையில்‌) வெண்பட்டினையடுத்தி,
என்‌ குழவிக்கு- என்‌குழந்தைக்கு (என்வண்டற்‌ பாவைக்கு),
உன்‌ பேர்‌ இடுவேன்‌ – உன்‌னுடைய (நல்ல) பேரை வைப்பேன்‌ :
(எனவே) உள்ளம்‌ தயவால்‌ -மனத்துக்‌ கருணையினால்‌,
தனி சமைத்த – தனியாக நான்‌ (வண்டலிழைத்துக்‌) கட்டியுள்ள,
உயர்‌ மாளிகையும்‌ – உயர்ந்த மாளிகையையும்‌,
ஆடு அரங்கும்‌ – நடன சாலையையும்‌,
ஒளிர்‌ வேதிகையும்‌ -விளங்குகின்ற திண்ணையையும்‌,
நீ அழிக்க – நீ சிதைக்க,
வன்பால்‌ -பலாத்காரத்தோடு,
ஓடி வர- வேகமாக ஓடிவருதல்‌,
உனக்கு உலகில்‌ வழக்கன்று – உனக்கு இவ்வுலகில்‌ நியாயமாகாது: (உலகு பழிக்கும்‌):
(இதுகிடப்ப)சிறு பேதை மகளிர்‌-மடச்சிறுமியராகிய நாங்கள்‌,
இருந்து(முதுகு நோவ) இருந்து,
விளையாடும்‌ – இழைத்து விளையாடுகின்ற:
வண்டல்‌ துகள்‌ – வண்டல்‌ புழுதி,
சேவடி படுமே- உன்‌ சிவந்த பாதங்களில்‌ பட்டு மாசு படுத்துமே :
(ஆகையால்‌) தென்பேரையில்‌ நம்‌ குலநாத -தென்திருப்பேரையிலுள்ள எங்கள்‌ குலத்துக்கு முதல்‌வனே?
சிறியேம்‌ சிற்றில்‌ சிதையேல்‌ -, திரை ஆர்‌ பொருநைத்தடம்‌ துறைவா–, சிறியேம்‌ சிற்றில்‌ சிதையேல்‌-;

—————-

சிறுபறைப்‌ பருவம்‌

வானாடர்‌ முப்பத்து முக்கோடி யுஞ்சது
மறைக்கடவு ணனை்முகவனும்‌
மழுவலா ளனுமறு முகச்செம்ம லுங்கைம்‌
மலைக்கோட்டு வேழமுகனும்‌
ஏனோரும்‌ வச்சிரக்‌ குலிசபதி யுமகிழ்நீ
தெண்டிசா முகப்பாலரும்‌
இருவிழியு மிருசெவியு மிதயதா மரைமலர்நீ
தெக்கால முந்தழையவே
கானூறு பச்சைப்‌ பசும்பூக மடல்விண்டு
கக்குங்‌ கொழும்பிரசமுங்‌
கதலிக்‌ கொழுங்கனி யுடைந்துவழி . மதுவுங்‌
கலந்தோடி யலைமண்டியத்‌
தேனாறு பாயும்வயல்‌ சூழ்வழுதி நாடனொரு
சிறுபறை முழக்கியருளே
தென்றிருப்‌ பேரைவரு நங்குழைக்‌ காதமுகில்‌ 1!
சிறுபறை முழக்கியருளே.–85-

முப்பத்துமுக்கோடி வானாடரும்‌ -முப்பத்துமூன்று கோடிதேவர்களும்‌,
சதுமறைக்கடவுள்‌ நான்முகவனும்‌ . நான்கு வேதங்களையோதும்‌ இறைவனாகிய பிரமனும்‌,
மழுவலாளனும்‌ – மழுப்படையையேந்திய சிவபெருமானும்‌,
அறுமுகச்‌ செம்மலும்‌ -ஆறுமுகக்கடவுளாகிய முருகனும்‌,
கைம்மலைக்கோட்டு வேழமுகனும்‌ – யானைத்தந்தத்தோடு யானை முகத்தையுடைய விநாயகனும்‌,
வச்சிரக்குலிசபதியும்‌ . உறுதியான வச்சிராயுதத்தையுடைய இந்திரனும்‌,
மகிழ்ந்து எண்திசாமுகப்பாலரும்‌ – களிப்புற்று எட்டுத்‌ திக்குப்பாலகர்களும்‌,
ஏனோரும்‌ – மற்றைத்‌ தேவதைகளும்‌,
இருவிழியும்‌ இருசெவியும்‌ இதயதாமரை (யும்‌) மலர்ந்து – (தங்களது)இரண்டுகண்களும்‌ இரண்டு காதுகளும்‌ மனத்தாமரையும்‌ விகசித்து,
எக்காலமும்‌ தழைய – எப்போதும்‌ (அவர்களுக்கு) நல்‌ வாழ்வுசெழிக்கும்படி,
(சிறுபறைமுழக்கியருளன்‌ என மேலவியையும்‌),
கான்‌ ஊறும்‌ – வாசனைபூறிவீசுகின்ற,
பச்சைப்‌ பசும்‌ பூகம்‌ -மிகப்பசுமையாயுள்ள கழுகங்குலை,
மடல்‌ விண்டு – (தனது) மடல்‌கள்‌ விரிந்து,
கக்கும்‌ கொழும்‌ பிரசமும்‌ – வெளியேசொரியும்‌செழித்த தேனும்‌,
கதலிக்‌ கொழும்‌ கனி உடைந்து – வாழையினது கொழுத்துப்பருத்த பழங்கள்‌ சிதைந்து,
வழி மதுவும்‌ – வழிகின்ற தேனும்‌,
கலந்து ஓடி – ஒன்றாகச்‌ சேர்ந்து (ஆறாக) ஓடி,
அலைமண்டி – அலைகளை நெருங்கவெறிந்து,
தேனாறு பாயும்‌ -(பெரிய) தேனாறாகப்‌ பாய்கின்ற,
வயல்‌ சூழ்‌ வழுதிநரடன்‌ ! -கழனிகள்‌ சூழ்ந்த பாண்டிநாட்டுக்குரியவனே /
ஒரு சிறுபறை முழக்கியருள்‌ – ஒப்பற்ற சிறிய பறையை(க்கொட்டி) முழக்குவாயாக:
தென்‌ திருப்பேரை வரு – தென்திருப்பேரைநகரில்‌ வந்து கோயில்கொண்டுள்ள,
நம்‌ குழைக்காத முகில்‌ . நம்‌ மகர நெடுங்குழைக்காதராகிய (நிகரில்‌) முகில்வண்ணனே : சிறுபறைமுழக்கியருள்‌–;

அஷ்டதிக்குப்பாலகர்‌, அவராவார்‌– இந்திரன்‌, அக்கினி,யமன்‌, நிருதி, வருணன்‌, வாயு, குபேரன்‌, ஈசானன்‌ என்பவர்‌.

————-

பூவாருங்‌ கொன்றைச்‌ செழுஞ்சடா டவிமுமப்
புனிதபூ ரணனிரட்டும்‌
பொற்றுடி யெனச்சொற்‌ நிறம்பாத கனகவிப்‌.
புலவர்‌ திண்‌ டி மமென்னவும்‌
மேவுகதிர்‌ மணிமகுட  கோடி நிபுடஞ்செயும்‌’
விருதரசர்‌ மணிவாசலின்‌
‘விதரணக்‌ கொடைவெற்றி மணவொலி கறங்கு
தெரு
வீதிழமம்‌ முரசமெனவுந்‌
தாவுசீ ரிட்டுடன்‌ விசித்திறுக்‌ கித்தொனி
தமைத்ததொண்‌ டகமென்னவுநீ
தவறாது சதிமுறையி னண்டகோ ளகைமுகடு
தடவியது செவிடுபடவோர்‌
தேவதுந்‌ துபியெனத்‌ திருவழுதி வளநாட !
சிறுபறை முழக்கியருளே
தென்றிருப்‌ பேரைவரு நங்குழைக்‌ காதமுகில்‌ !
சிறுபறை முழக்கியருளே.–86-

ஆரும்‌ கொன்றை – பூக்கள்‌ நிறைந்த கொன்றை மாலையை,
செழும்‌ சடா அடவி முடி – தொகுதிப்பட்ட சடைக்‌காட்டிலே சூடியுள்ள,
புனித பூரணன்‌ – தூய நிறைவுடையனாகியசிவபிரான்‌,
இரட்டும்‌ – மாறி, மாறி அடித்து ஒலிக்கச்‌ செய்கின்ற,
பொன்‌ துடி என – அழகிய உடுக்கையென்று சொல்லும்படியும்‌ ;
சொல்‌ திறம்பாத- சொன்ன சொல்‌ மாறாத,
கன கவிப்‌புலவர்‌ – மாண்பு மிக்க வாதஞ்‌ செய்யும்‌ புலவர்கள்‌, (முழக்கும்‌)
திண்டிமம்‌ என்னவும்‌ திண்டிமப்பறையென்று சொல்லும்படியும்‌ ;
மேவு கதிர்‌ மணி மகுடம்‌ கோடி – பொருந்திய ஒளி விடு கின்ற மணிகள்‌ பதித்த கிரீடங்கள்‌ ,
பல, நிபுடம்‌ செய்யும்‌ -நெருக்கத்தையுண்டாக்குகின்ற,
விருது அரசர்‌ மணிவாசலில்‌ -சிறப்புடைய மன்னரின்‌ அழகிய அரண்மனை வாசலில்‌,
விதரணம்‌“கொடை – தயாள குணத்தோடு கொடுக்கும்‌ தானம்‌,
வெற்றி -பெற்றுள்ள வெற்றிகள்‌,
மணம்‌ – நிகழும்‌ திருமணம்‌ போன்ற மங்கலநிகழ்ச்சிகள்‌இவற்றைப்‌ பற்றிய,
ஒலி- முழக்கமானது,
தெரு -குறுந்தெருக்களிலும்‌,
வீதி – பெருந்‌ தெருக்களிலும்‌,
கறங்கு . ஒலிக்கச்‌செய்கின்ற,
மும்முரசம்‌ எனவும்‌ – மூன்று முரசங்கள்‌ என்று சொல்லும்படியும்‌ ;
தாவு – பாய்ந்து குதித்தல்‌ போன்ற துரிதத்தில்‌,
சீர்‌ இட்டு -தாளத்தையமைத்து,
உடல்‌ விசித்து – பறையின்‌ (ஓரம்‌ தவிர்த்தமுக்கிய) நடுப்பகுதியைத்‌ தோல்‌ வாரினால்‌ இறுகக்கட்டி,
இறுக்கி -மேலும்‌ அழுத்தமாக இறுக்கி,
தொனி தழைத்த . முழக்கவொலி(மேன்மேலும்‌) விருத்தியாகும்‌,
தொண்டகம்‌ என்னவும்‌-தொண்டகப்‌ பறை என்று சொல்லும்படியும்‌ ;
சதி முறை தவருது – தாளவொத்து பிழையுறாமல்‌,
அண்டகோளகை முகடு – உலகவுருண்டையின்‌ மேலுச்சியை, தடவியது –
எட்டிய ஒலி முழக்கமானது, செவிடுபட – (கேட்காதபடி)கீழாகுமாறு, [பேரொலி செய்த]
ஓர்‌ தேவந்துபி என..ஒப்பற்ற தேவதுந்துபி என்று சொல்லும்படியும்‌,
திருவழுதிவள நாட! — பாண்டிய நாட்டுக்குத்தலைவனே !
சிறுபறை முழக்கியருள்‌ – உன்னுடைய சிறுபறையைக்‌ கொட்டுவாயாக :
தென்திருப்பேரை வரு தம்‌ குழைக்காத முகில்‌–, சிறுபறை முழக்கியருள்‌ –

——–

கறைகொளுஞ்‌ சமரில்வடி வாளொடு இராவணன்‌
கைகளிரு பதும்விழுதுபோ றீ
காறுடர்மண்‌ ஸணில்விள்ளிக்‌ குப்புற்று நிற்குநிலை
கண்டுதிரு வுளமிரங்கி
உறுதிபட வின்றுபோய்‌ நாகக்கு வாவென்‌
றுரைத்தரா கவ ! வெருவியன்‌
றோராண மூலமென்‌ றோதாமுன்‌ ணோடிவந்‌
துதவுமா தவ ! சீதரா !
நறையொழுக மடன்முகை முறுக்கவிழ்ந்‌ தலரு
மொரு
தளினப்‌ பொகுட்டாசன
நள்ளிடை. பதிந்துபைந்‌ தாதளைந்‌ திசைபாடி,
நாகிளம்‌ பேடையோடுஞ்‌
சிறைவண்டு கண்படுக்‌ கும்வழுதி நன்டை !
சிறுபறை முழக்கியருளே
தென்றிருப்‌ பேரைவரு நங்குழைக்‌ காதமுகில்‌ !
சிறுபறை முழக்கியருளே.--87-

கறைகொளும்‌ சமரில்‌ – இரத்தக்கறை படியும்‌ போரில்‌,
வடிவாளொடு – கூரியவாளோரடு,
இராவணன்‌–, கைகள்‌ இரு பதும்‌ – இருபதுகைகளும்‌,
விழுதுபோல்‌ – ஆலம்விழுதுபோல,
கால்‌ துடர்‌ . காலைத்தொடர்ந்து தொங்கி,
மண்ணில்‌ விள்ளி – தரையில்‌ பரவலாகவிழுந்துதழுவி,
குப்புற்று – தலைகவிழ்ந்து, நிற்கும்‌ நிலை கண்டு – (நாணி)
நிராயுதபாணியாய்‌ நிற்கின்ற பரிதாபமான நிலை யைப்பார்த்து,
திருவுளம்‌ இரங்கி – மனவிரக்கமுற்று,
உறுதிபட( அவ்விராவணனுக்குத்‌) துணிவு ஏற்பட,
“இன்று போய்‌ தாளைக்குவா” என்று உரைத்த – “இன்று மனைபோய்‌ போர்க்கு தாளைவா” என்று கருணையோடு கூறி விடுத்த,
இராகவா – ரகுகுல உத்தமனே ? (இராமனே ),
அன்று – (முதலைவாயிலகப்‌ பட்ட) அன்று,
ஓர்‌ ஆனை . கஜேந்திரனென்ற ஒரு யானை,
வெருவி – பயந்து,
மூலமென்று ஓதாமுன்‌ – ஆதிமூலமே என்று கூப்பிடுவதற்குமுன்னே (கூப்பிட்டவுடனே),
ஓடி வந்து உதவும்‌ . புள்ளேறி மடுக்கரைக்கு) விரைந்துவந்து உதவிபுரிந்து அதனுயி ரைக்‌ காப்பாற்றிய, மாதவ ! -, சீதரா ! -,
நறை ஒழுக – தேன் ஓழுகும்படி,
மடல்முகை முறுக்கு அவிழ்ந்து – இதழோடுகூடிய மொக்கு கட்டுவிட்டுதெகிழ்ந்து,
அலரும்‌ – மலருகின்ற,
ஒரு நளினம்‌பொகுட்டு ஆசனம்‌ – ஒருதாமரையின்‌ கொட்டையாகிய பிடத்தின்‌,
நள்ளிடை பதிந்து – நடுவிடத்தில்‌ தங்கி,
பைந்தாது அளைந்து – பசிய மகரந்தங்களையுண்டு,
இசை பாடி – பண்ணிசைத்து,
நாகுஇளம்‌ பேடையோடும்‌ – மிக்கஇளமையினையுடைய (தனது) பெண்‌வண்டோடும்‌,
சிறைவண்டு கண்படுக்கும்‌ – சிறகுகளையுடைய ஆண்‌வண்டு (கவலையின்றி யின்பமாகத்‌) துயிலும்‌,
வழுதி நன்நாட -நல்ல பாண்டியநாட்டவனே !
சிறுபறை முழக்கியருள்‌ – : தென்‌ திருப்பேரை வரு நம்‌ குழைக்காதமுகில்‌ -, சிறுபறை முழக்கியருள்‌–;:

கம்பரும்‌*-இன்றுபோய்‌ போர்க்கு நாளைவா*’ என்றார்‌. (போரிடுவதாயின்‌ நாளைக்குவா ; சரணம்புகுவதாயின்‌ இக்கணமே சாலும்‌ *:என்பது
. சாரமானகருத்து.

———-

அண்டபகி ரண்டமு மதிர்ந்துகுல வரையெட்டும்‌
அசையாம லெண்டிசைதொறும்‌
அளிகவுள கம்பக்‌ கடாக்களிறு நிலைபெயர்த்‌
தடிச்சுவ டெடுத்திடாமற்‌
கொண்டவட வைக்கனற்‌ கண்பிதுங்‌ கக்கொடுங்‌
கோளரா முடியிற்படங்‌
குலுங்காம லாமைநெடு முதுகுகுளுக்‌ காவண்ட
கோளகையின்‌ முகடுவெடியா
விண்டட வு தாரகைக்‌ குலமடங்‌ கலுமண்ணில்‌
வீழாம லுயாசெழும்‌ பொன்‌
மேருகிரி சாயாம லோடியிரு கரைதோறும்‌
வெண்ணிலா வுமிழுமுத்தந்‌
தெண்‌ டிரை சுருட்டுபொரு னாநதி நெடுந்துறைவ !
சிறுபறை முழக்கியருளே
தென்றிருப்‌ பேரைவரு நங்குழைக்‌ காதமுகில்‌ !
சிறுபறை முழக்கியருளே.–88-

அண்ட பகிரண்டமும்‌ அதிர்ந்து . இந்த உலகமும்‌ புறவுலகங்களும்‌ அதிர்ச்சி யடைந்து நடுங்கி,
குலவரை எட்டும்‌ அசையாமல்‌ அஷ்டகுலபர்வதங்களும்‌ நடுக்கமுறாமல்‌,
எண் திசை தொறும்‌ . எட்டுத்திக்குக்களிலுமுள்ள,
அளிகவுள – வண்டுகள்‌ மொய்க்கின்ற கன்னத்தையுடைய,
கம்பம்‌ கடாம்‌ களிறு – கட்டுத்தறிகளில்‌ கட்டப்படுகின்ற மதஜலம்‌ பெருக்குகின்ற ஆண்‌ யானைகள்‌ (அட்டதிக்குக்கஜங்கள்‌),
நிலை பெயர்ந்து – தாங்கள்‌ நிலை பெற்றுத்தங்கியுள்ள திக்கினிடங்களிலிருந்து மாறி,
அடிச்சுவடு எடுத்திடாமல்‌ – (தங்கள்‌) கால்களைப்‌ பெயர்த்து வைக்காமல்‌ ;
கொடும்‌ கோள்‌ அரா – கொடிய பற்றுந்‌தன்மையுள்ள பாம்பாகிய ஆதிசேடன்‌,
கொண்ட – கொண்டுள்ள,
வடவைக்கனல்‌ கண்‌ பிதுங்க – வடவாமுகாக்னிபோன்று சொலிக்‌ கின்ற கண்கள்‌ வெளிவரும்படி,
முடியில்‌ படம்‌ குலுங்காமல்‌ -தலையிலுள்ள படங்கள்‌ நடுங்காமல்‌,
ஆமை நெடு முதுகு குலுக்‌கா(மல்‌) – மகாகூர்மத்தின்‌ பெரிய முதுகு அசைந்து குலுங்காமல்‌,
அண்டகோளகையின்‌ முகடு வெடியா(மல்‌) உலகவுருண்டையின்‌ மேலுச்சி பிளவுபடாமல்‌,
விண்தடவு தாரகைக்குலம்‌ அடங்கலும்‌ மண்ணில்‌ வீழாமல்‌ – ஆகாயத்திலுள்ள நட்சத்திரக்‌ கூட்டமனைத்‌ தும்‌ (உதிர்ந்து) பூவுலகில்‌ தரையின்மேல்‌ விழாமல்‌,
உயர்‌ செழும்‌ பொன்‌ மேருகிரி சாயாமல்‌ .- ஓங்கியுள்ள சிறந்த பொன்மலையாகிய மேரு சாய்ந்து போகாமல்‌,(இருக்கும்படி சிறு பறைமுழக்கியருள்‌ எனப்பொருள்‌ முடிக்கவும்‌).
இரு கரைதோறும்‌ வெண்‌ நிலா உமிழும்‌ முத்தம்‌ – இரண்டுகரைகளிலும்‌ வெள்ளிய சந்திரன்‌ வெளியிட்ட முத்துக்களை,
தெண்திரை ஓடி சுருட்டும்‌-தெள்ளிய அலைகள்‌ (கரையின்‌ மேல்‌) பாய்ந்து ஓடிச் சுருளப் புரட்டி வரும்‌,
பொருனா நதி – தாமிரபரணி நதியின்‌,
நெடும்‌ துறைவ |! – பெரிய நீர்த் துறைகளுக்குத்‌ தலைவனே !
சிறுபறை முழக்கியருள்‌–: தென்திருப்பேரை வரு நம்‌ குழைக்காத முகில்‌ –, சிறுபறை முழக்கியருள்‌ –

அஷ்டகுல பர்வதம்‌– இமயம்‌, மந்தரம்‌, கைலாசம்‌, விந்தியம்‌, நிடதம்‌, ஏம கூடம்‌, நீலம்‌, கந்தமாதனம்‌ என்பன.

ஆங்காரவாரமது கேட்டு அழலுமிழும்‌ பூங்கார்‌ அரவு” என்றார்‌ திருமழிசைப்பிரானும்‌. (நான்முகன்‌ : திரு : 19).

————-

கங்கா நதிச்செழும்‌ புனல்யமுனை சரசோதி
கற்புரச்‌ சுவைமணக்குங்‌
காவிரி யென த்தேவர்‌ வடியிட்ட வமுதேகக்‌
கமழுந்‌ திரைப்பொருநையும்‌
மங்காத சதுமறைக்‌ குரியவேள்‌ வியும்விழா :
வணியுமக வொலியுநாளும்‌
வளமைபெறு குலநாத! பரமபத வீடாள!
வயல்கடொறும்‌ வாய்மடைதொறுஞ்‌
சங்கார வாரஞ்செய்‌ தகடுளைந்‌ தலறித்‌
தவழ்ந்தேறி முத்துயிர்க்குந்‌
தண்ணந்‌ தடந்தா மரைப்பொகுட்‌ டாசனத்‌
தமனியப்‌ பொற்கோவிலிற்‌
செங்கா லனந்துயிலும்‌ வழுதிவள நன்ளுட!
சிறுபறை முழக்கியருளே
தென்றிருப்‌ பேரைவரு நங்குழைக்‌ காதமூகில்‌!
சிறுபறை முழக்கிடருளே. –89-

தேவர்‌ வடியிட்ட அமுது – தேவர்கள்‌ வடித்தெடுத்த அமிருதம்‌.
கங்காநதி (என) – கங்காநதியாகவும்‌,
செழும்புனல்‌ யமுனை (என) செழித்த நீரையுடைய யமுனை நதியாகவும்‌,
சரசோதி(என) – சரசுவதி நதியாகவும்‌,
கற்பூரச்‌ சுவை மணக்கும்‌ காவிரி என . கற்பூரவாசனை வீசும்‌ காவீரி நதியாகவும்‌,
ஏக – பெருக்கெடுத்‌ துப்போக, (அவ்வமுதின்‌ மணம்‌)
கமழும்‌ – பரிமளிக்கும்‌,
திரைப்‌ பொருநையும்‌- அலை வீசும்‌ தாமிரபரணியாறும்‌,
மங்காத சதுமறைக்‌ குரிய வேள்வியும்‌ – பெருமை குறையாத நான்கு வேதங்கட்கும்‌ உரித்தாய யஜ்ஞங்களும்‌,
விழா அணியும்‌ – விழாக்கோலங்களும்‌,
மக ஒலியும்‌ – குழந்தைகளின்‌ விளையாட்டொலியும்‌,
நாளும்‌ வளமை பெறு குலநாத! .. தினந்தோறும்‌ மாட்சிமை மிகும்படி செய்யும்‌ கோயிலில்‌ எழுந்தருளியிருக்கும்‌ இறைவனே !
பரமபத வீடாள | _ பரமபதமாகிய மோட்சவீட்டிற்குரியவனே (சிறுபறை முழக்கியருள்‌ என மேல்‌ இயையும்‌),
வயல்கள்‌ தொறும்‌ – கழனிகளிலெல்லாம்‌,
மடைவாய்‌ தொறும்‌ – மடைத்தலைகளிலெல்லாம்‌,
சங்கு . [கருக்கொண்ட ] சங்குப்‌ பூச்சிகள்‌,
ஆரவாரம்‌ செய்து-பேரொலியெழுப்பி,
அகடு உளைந்து அலறி-வயிற்று வேதனையோடு கதறி,
தவழ்ந்து ஏறி-வரப்புகளில்‌ மெல்லநகர்ந்தேறி,
முத்து உயிர்க்கும்‌ – முத்துக்களை யீனும்‌ ;
(மற்றும்‌) தண்‌ அம்‌ தடம்‌ தாமரை பொகுட்டு ஆசனம்‌ .குளிர்ந்த அழகிய விசாலமான தாமரை மலரின்‌கொட்டையாகிய (நடுப்பகுதியாகிய) தவிசினை யுடைய,
பொன்‌ – இலஷ்மியின்‌,
தமனியம்‌ கோவிலில்‌ . பொன்‌போலிலங்கும்‌ உறையுளில்‌,
செங்கால்‌ அன்னம்‌ துயிலும்‌ – சிவந்த கால்களையுடைய அன்னப்‌ பறவைகள்‌,
துயிலும்‌ – (சுகமாகத்‌) தூங்‌கும்‌ ;
(அப்படிப்பட்ட) வழுதி வள நன்னாட! – வளப்பமுடைய பாண்டிய தாட்டுக்குத்‌ தலைவனே ! சிறுபறை முழக்கியருள்‌–:
தென்‌திருப்பேரை வரு நம்‌ குழைக்காத முகில்‌! –, சிறு பறை முழக்கி யருள்‌ –

கோவில்‌ என்றதாலே பொன்‌” இலக்குமியைக்காட்டும்‌ : அவள்‌ உறையுள்‌ பொற்றாமரையாகும்‌.–தமனியம்‌ – பொன்‌,

வேத வொலியும்‌ விழவொலியும்‌ பிள்ளைக்குழா விளையாட்‌ டொலியும்‌ அறாத்‌ திருப்பேரை”? என்றார்‌ நம்மாழ்வார்‌, (திருவாய்‌-7-3-1)

எங்கும்‌ எழுந்த நல்வேதத்‌ தொலி நின்றோங்கும்‌ தென்திருப்பேரை”? (7-8-4)

———–

நீறுபடு தவளவெண் பொடியாட வார்சடை
நெடுந்திரைக்‌ கங்கையாட
நிலவாட முகைமூறுக்‌ கவிழ்ந்தும்பை யாடவரன்‌
நின்றாட வமரராடப்‌
பாறுபடு நெட்டிலைச்‌ சுடர்வேல்‌ விடுங்கொடும்‌
படையிரா வணன்‌ மகுடமோர்‌
பத்துந்‌ தகர்ந்தாட வெம்பேய்‌ குறும்பேய்‌
பறந்தலை கவந்தமாடத்‌
தாறுபடு கதலிக்‌ கொழுங்கனி யுடைந்துவழி
சாறுமாங்‌ கனியினறவுந்
தருமுடப்‌ பலவீனற்‌ கனியுடைத்‌ துப்பெருகு
தண்ணறவு மாலைமண் டியே
சேறுபடு பள்ளவயல்‌ சூழ்வழுதி நாடனொரு
சிறுபறை முழக்கியருளே
தென்றிருப்‌ பேரைவரு நங்குழைக்‌ கா தமூகில்‌ !
சிறுபறை முழக்கியருளே.–90-

நீறுபடு தவளம்‌ வெண்பொடி ஆட – திருநீறாகிய மிக வெண்மையான துகள்‌ மேலெழ,
வார்‌ சடை – நீண்ட சடை மேலுள்ள,
நெடும்‌ திரை கங்கை ஆட – பெரிய அலைகளை வீசும்‌ கங்கையாறு பெருக,
நிலவு ஆட – பிறைச்சந்திரன்‌ அசைய,
முறுக்கு அவிழ்ந்து தும்பை ஆட – கட்டவிழ்ந்து தும்பை மாலை அசைய, (இப்படியாக)
அரன்‌ நின்றாட – சிவபிரான்‌ அம்பலத்தில்‌ நின்று ஆடவும்‌,(நர்த்தனம்‌ புரியவும்‌),
அமரர்‌ ஆட – தேவர்கள்‌ ஆடவும்‌ (நடனமிடவும்‌),
பாறு படு – பருந்துகள்‌ (ஒட்டியுள்ளதசைகளையுண்ணத் )தொடர்கின்ற,
நெடு இலை சுடர்‌ வேல்‌ .. பெரிய இலை வடிவாயமைந்துள்ள ஒளிரும்‌ வேலாயுதத்தை
விடும்‌ – எறியும்‌,
கொடும்படை இராவணன்‌ – கொடிய சேனைகளையுடைய இராவணனது,
மகுடம்‌ ஓர்‌ பத்தும்‌ தகர்ந்து ஆட – கிரீடங்கள்‌ பத்தும்‌ உடைந்து கிதறி (த்தலைகள்‌) ஆடவும்‌ (தடுங்கவும்‌)
பறந்தலை -போர்க்களத்து,
வெம்பேய்‌ குறும்பேய்‌- கொடிய பெரிய பேயும்‌ சிறிய பேயும்‌,
கவந்தம்‌ ஆட – உடற்குறையோடு ஒருசேரக்‌ கூத்தாடவும்‌; (சிறுபறை முழக்கியருள்‌ என இயையும்‌),
படு தாறு – குலையாகவிருந்த,
கதலிக்கொழுங்கனி உடைந்து-வாழையின்‌ செழித்த பழங்கள்‌ விண்டு,
வழி சாறும்‌ – வழிகின்ற ரசமும்‌,
மாங்கனியின்‌ நறவும்‌-மாம்பழத்திலிருந்து வருகின்ற தேனும்‌,
குரு முடப்‌ பலவின்‌ – வளைத்து பலா மரத்திலுள்ள,
நல்‌ கனிஉடைத்து – நன்கு பழுத்த பழம்‌ பிளந்து,
பெருகு தண்நறவும்‌ -ஒழுகுகின்ற இனியதேனும்‌, (சேர்ந்து)
அலை மண்டி – அலையாகச்‌ செறிந்து,
சேறுபடு பன்ளம்‌ வயல்‌ – சேடையாகிற தாழ்நிலங்கள்‌,
சூழ்‌ – சுற்றியுள்ள –
வழுதி நாடன்‌! – பாண்டியநாட்டவனே ! ஓரு சிறுபறை முழக்கி யருள்‌ –:
தென்றிருப்பேரை வரு நம்‌ குழைக்காத முகில்‌ ! — சிறுபறை முழக்கி யருள்‌-

————

பொருதிரை யெறிசல ராசி யுடுக்கும்‌
புவனத்‌ திருமாதும்‌
பொங்கு சினந்தலை மண்ட வடுஞ்சமர்‌
புக்கெதிர்‌ வருவோர்செங்‌
குருதி படும்படி பொருது மணம்புணர்‌
கொற்றக்‌ குூலமாதுங்‌
கோதறு வண்புகழ்‌ சேரனுகூலக்‌
கோமள மாமாதும்‌
மருமலி சததள மண்டபமீது
மகிழ்ந்துறை பூமாதும்‌
வடகலை தென்கலை முழுதுமு ணர்ந்தசொன்்‌
மங்கையு நாடோறுந்
திருவுள மகிழ்தர வழுதிநன்‌ னாடா 1
சிறுபறை கொட்டுகவே
தென்பே ரையில்வரு நங்குல நாதா !
சிறுபறை கொட்டுகவே.--91-

பொரு திரைஎறி சலராசி.மோதுகின்ற அலைகளை வீசுகின்ற கடலை,
உடுக்கும்‌ – ஆடையாகக்‌ சுற்றியிருக்கும்‌, புவனம்‌
திருமாதும்‌ பூதேவியும்‌;
பொங்கு சினம்‌ தலை மண்ட – கிளர்ந்தெழுகின்ற கோபம்‌ தலைக்கேற (மிகச்சினந்து)
அடும்‌ சமர்புக்கு – கொல்லுகின்ற போரிற்புகுந்து,
எதிர்வருவோர்‌ செங்குருதி படும்படி பொருது – எதிர்த்து வரும்‌ பகைவர்களின்‌ சிவந்த இரத்தம்‌ தரையில்‌ தோயும்‌படி போரிட்டுக்‌ கொன்று,
மணம்‌ புணர்‌ – வெற்றியைத்‌ தழுவுகின்ற,
கொற்றக்‌ குலமாதும்‌ . கொற்றவையும்‌ (துர்க்காதேவியும்‌);
கோது அறு வண்‌ புகழ்‌ சேர்‌ குற்றமற்ற வளமைபொருந்திய புகழைக்‌ கொடுத்து,
அனுகூலக் கோமள மாமாதும்‌ – நன்மை செய்யும்‌ அழகிய கீர்த்தி லக்ஷ்மியும்‌;
மரு மலி சத தளம்‌ மண்டபம்‌ மீது . வாசனை செறிந்த நூற்றிதழ் தாமரையாகிய அலங்காரப்‌ பந்தலில்‌,
மகிழ்ந்துறை பூமாதும்‌ – களிப்புற்று வாழும்‌ இலக்குமி தேவியும்‌;
வடகலை தென்கலை முழுதும்‌ உணர்ந்த சொல்மங்கையும்‌ –
வடமொழி தமிழ்மொழியிரண்டிலும்‌ உள்ள கலைகள்‌ முற்றும்‌ அறிந்த (கலைமகளாகிய) சரசுவதி தேவியும்‌,
நாள் தோறும்‌ – தினந்தோறும்‌,
திருவுளம்‌ மகிழ்தர – மனமகிழும்படி,
வழுதி நல்‌ நாடா? – பாண்‌டிய நாட்டுக்குத்‌ தலைவனே ! சிறுபறை கொட்டுக – சிறிய பறையை முழக்குவாயாக :
தென்பேரையில்வரு–, நம்‌ குலநாதா!– நம்கோயிலில்‌ எழுந்தருளியிருக்கும்‌ இறைவனே !
சிறுபறை கொட்டுக -சிறிய பறையை முழக்குவாயாக;

*போர் மகளைக்‌ கலை மகளைப்‌ புகழ் மகளைத்‌ தழுவியகை பொறாமை கூரச்‌, சீர்மகளைத்‌ திரு மகளைத்‌
தழுவுவான்‌ உயிர் கொடுத்துப்‌ பழி கொண்ட பித்தா 7 “பின்னைப்‌ பார் மகளைத்‌ தழுவினையோ?”” என்ற விபீடணனின்‌ புலம்பலில்‌ இந்த : வழக்கினைக்‌ கம்பர்பெருமான்‌ அழகுறக்‌ காட்டியுள்ளார்‌,

———-

உழுதுழு திசைபயி லளியொரு கோடி
உதைந்து துதைந்தாட
ஒளிர்மடன்‌ முகையவிழ்‌ துளவணி மால்குரு
கூர னுவந்தோதும்‌
பழுதறு முதுதிரு வாய்மொழி நூல்செவி
பற்பல புகுநேயன்‌
பண்டுல கங்களை பயுண்டுபி னளவு
படுத்துந்‌ திருமாமால்‌
முழுமறை முறையிடு மிருசர ணாலயன்‌
மூரிக்‌ கவடூடு
முதுபுன லோடையு மகழியும்‌ வால்வளை
மொய்க்குங்‌ கழனியிலுஞ்‌
செழுமலர்‌ மணமலி வழுதிநன்‌ னாடா /
சிறுபறை கொட்டுகவே
அதன்‌ பே ரையில்வரு நங்குல நாதா !
சிறுபறை கொட்டுகவே.–92-

உழுது உழுது-
(கால்களால்‌) கிண்டி கிண்டி,
இசை பயில்‌ – ரீங்காரஞ்‌ செய்கின்ற,
ஒரு கோடி அளி — மிகப்பலவாகிய வண்டுகள்‌.
துதைந்து – நெருங்கி,
உதைந்து – (கால்களால்‌) மிதித்து,
ஆட – அசைய, (அதனால்‌)
ஒளிர்‌ மடல்‌ முகை அவிழ்‌ துளவு – விளங்குகின்ற இதழோடு மொட்டுக்கள்‌ மலர்கின்ற திருத்துழாயை,
அணி . (மாலையாகத்‌) தரித்துள்ள,
மால்‌ -திருமாலும்‌ ;
குருகூரன்‌ – நம்மாழ்வார்‌,
உவந்து ஒதும்‌ – மகிழ்ந்து திருவாய்‌ மலர்ந்தருளிய,
பழுது அறு – குற்றமற்ற,
முது – பழமையான,
திருவாய்மொழிநூல்‌ . திருவாய்மொழிப்பாடல்கள்‌,
பற்பல செவி -பலருடைய காதுகளில்‌,
புகு – புகுதற்குக்‌ காரணமாகிய,
நேயன்‌ -நண்பனாகுபவனும்‌ ;
பண்டு . மகாபிரளய காலத்தில்‌,
உலகங்களை உண்டு – எல்லா வுலகங்களையும்‌ புசித்து,
பின்‌ – பிரளயம்‌ நீங்கிய பின்‌,
அளவு படுத்தும்‌ – (உமிழ்ந்து) சீர்‌ செய்து அமைக்கும்‌,
திருமாலால்‌ .. லக்ஷ்மீ நாராயணனணும்‌ ;
முழுமறை முறையிடும்‌ – பூர்ணமாயுள்ள வேதங்கள்‌ (கண்‌ டறிய முடியாது) ஓலமிடும்‌,
இரு சரணாலயன்‌ . உபய பாதங்களை யுடையவனும்‌ ;(ஆகிய **வழுதி நன்னாடா”” என மேலியையும்‌).
இனி)
மூரிக்‌ கவடு ஊடும்‌ – வலிய மரக்கிகாகளின்‌ நடுவிலும்‌,
முது புனல்‌ ஓடையும்‌ – பழைய நீரோடைகளிலும்‌,
அகழியும்‌ – அகழிகளிலும்‌,
வால்‌ வளை மொய்க்கும்‌ கழனியிலும்‌ – வெள்ளிய சங்குப்‌ பூச்சிகள்‌ நெருங்கியிருக்கும்‌ வயல்களிலும்‌,
செழு மலர்‌ மணம்‌ மலி – செழித்து [ ப்பூத்துள்ள ] மலர்கள்‌ வாசனையை மிகுதியாக வீசுகின்ற,
வழுதி நல்‌ நாடா . பாண்டிய தாட்டுக்குத்‌ தலைவனே !சிறு பறை கொட்டுக–;
தென்பேரையில்‌ வரு நம்‌ குல நாதா–,சிறுபறை கொட்டுக–;

நேயன்‌ .. ஸுஹ்ருத்‌ என்றது ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ரநாமமும்‌, “சுருதி நான்கும்‌ தேடுகின்ற பதம்‌‘” என்றார்‌ வில்லியும்‌.

———

புவனமு மண்ட கடாகமும்‌ வேலைப்‌
புணரித்‌ திசையெட்டும்‌
பொங்கழல்‌ கதுவிய கண்களி யானைப்‌
புகர்முக மலையெட்டுங்‌
குவடு படும்பொலன்‌ வடவரை முதலாங்‌
குலகிரி யோரெட்டுங்‌
கொடுவிட முடவுப்‌ பஃறலை மகுடக்‌
கோளர வோரெட்டுந்‌
தவமுனி வர்சுரர்‌ மகபதி முக்கட்‌
சடைமுடி யுடையோனுஞ்்‌
சதுமுக னறுமுக னொருகொம்‌ பேந்திய
தந்திமு கத்தோனுஞ்‌
செவிகுளி ரத்திரு வழுதிநன்‌ னாடா !
சிறுபறை கொட்டுகவே
தென்பே ரையில்வரு நங்குல நாதா !
சிறுபறை கொட்டுகவே.–93-

புவனமும்‌ – நிலவுலகமும்‌,
அண்ட கடாகமும்‌ – அண்டகோளகையும்‌,
வேலைப்‌ புணரி திசையெட்டும்‌ . கரையையுடைய கடலொடு பட்ட எட்டுத்திக்குக்களும்‌,
குவடுபடும்‌ – சிகரங்களைக்‌ கொண்ட,
பொலன்‌ வடவரை முதலாம்‌ குலகிரி ஓர்‌ எட்டும்‌ -வடக்கிலுள்ள பொன்மலையாகிய மேருமலை முதலாகிய சிறந்த எட்டு மலைகளும்‌,
பொங்கு அழல்‌ கதுவிய கண்கள்‌ – கிளர்ந்‌தெழும்‌ நெருப்புப்‌ பற்றியது போலச்‌ (சினத்தினால்‌) சிவந்த கண்‌களையுடைய,
புகர்‌ முக மலை – புள்ளிகளோடு கூடிய நெற்றியைக்‌ கொண்ட மலை போன்றுள்ள.
யானை எட்டும்‌ – அட்டதிக்குக்கஜங்‌களும்‌,
கொடு விடம்‌ – கொடிய விஷத்தையும்‌,
முடவு – வளைந்த,
பல்‌ தலை மகுடம்‌ – பல தலைகளையுடைய உச்சியையும்‌ கொண்ட,
கோள்‌ அரா ஓர்‌ எட்டும்‌ – பற்றுந்தன்மையுள்ள அட்டமாநாகங்‌ களும்‌, (மற்றும்‌)
தவமுனிவர்‌ – தவவிருடிகளும்‌,
சுரர்‌ – தேவர்‌களும்‌,
மகபதி – இந்திரனும்‌,
முக்கண்‌ சடைமுடி உடையோனும்‌ – மூன்றுகண்களையும்‌ சடைமுடியையும்‌ கொண்ட சிவபெருமானும்‌ ,
சதுமுகன்‌ – நான்கு முகங்ககாக்‌ கொண்ட பிரமனும்‌,
அறுமுகன்‌ -ஆறு முகங்களைக்‌ கொண்ட முருகனும்‌,
ஒரு கொம்பு ஏந்திய தறந்திமுகத்தோணும்‌ . ஒற்றைக்‌ கொம்பினடைய யானைமுகளனாகிய விநாயகனும்‌,
செவி குளிர – காதுகள்‌ (கேட்டு) இன்புறும்படி,
திருவழுதி நல்‌ நாடா — சிறு பறை கொட்டுக — :
தென்பேரை யில்‌ வரு நம்‌ குலநாதா –, சிறு பறை கொட்டுக–

அட்டதிக்கும்‌ கஜங்களும்‌ – கிழக்கில்‌ ஐராவதம்‌, தென்கிழக்கில்‌ புண்டரீகம்‌, தெற்கில்‌ வாமனம்‌,
தென்‌ மேற்கில்‌ குமுதம்‌, மேற்கில்‌ அஞ்சனம்‌, வடமேற்கில்‌ புட்பதந்தம்‌, வடக்கில்‌ சார்வபெளமம்‌ , வடகிழக்கில்‌ சுப்பிரதீகம்‌ என்பன.

அவற்றின்‌ பிடிகள்‌ — இந்த அட்டதிக்கஜங்‌களின்‌ துணைவியான பிடிகள்‌ முறையே அப்பிரமை, கபிலை, பிங்களை,
அனுபமை, தாமிரபருணி; சுதந்தி, அஞ்சனை, அஞ்சனாவதி என்பன.

அட்டதிக்குப்பாலகர்‌ – முறையே இந்திரன்‌, அக்கினி, யமன்‌, நிருதி, வருணன்‌, வாயு, குபேரன்‌, ஈசானன்‌ என்பவர்‌.
குலகிரிஎட்டு :- இம௰ம்‌, மந்தரம்‌, கைலாசம்‌, விந்தியம்‌, நிடதம்‌, ஏமகூடம்‌, நீலம்‌, கந்தமாதனம்‌ என்பன,

அட்டமா நாகங்கள்‌ – வாசுகி, அனந்தன்‌, தக்கன்‌, சங்கபாலன்‌, குளிகன்‌, பதுமன்‌, மகாபதுமன்‌, கார்க்கோடகன்‌ என்பன.

———

அளிசகற்‌ றியதண்‌ டலப்பொதியத்‌
தஞ்சா ரவிற்பைங்‌ கிழங்கெடுக்கும்‌
அம்பொற்‌ குழியில்‌ சுடர்விரிக்கு
மங்கால்‌ வயிரங்‌ கிடந்திமைப்பத்‌
துளிபட்‌ டொழுகும்‌ வரையருவி
சுழிக்குற்‌ தொறும்பொன்‌ னொழுக்கெறியச்‌
சுவையூற்‌ நிருக்கும்‌ புனுற்பொருதை
சுருட்டுந்‌ திரைசெம்‌ மணிகொழிப்பத்‌
தளைவிட்‌ டலரும்‌ பசும்பாளைத்‌
தலைப்பூங்‌ கமுக மணிமிடற்றுத்‌
தாங்கும்‌ பவளக்‌ குலைகவிப்பத்‌
தடஞ்சால்‌ வழியூர்ந்‌ தகடுகந்து
வளைமுத்‌ துதிர்க்கும்‌ வயற்பேரை
மாலே ! சிறுபறை கொட்டுகவே
வருணன்‌ பரவு மிருசரண
மாலே ! சிறுபறை கொட்டுகவே.--94-

அளி சுற்றிய தண்‌ தலம்‌ பொதியத்து ௮ம்‌ சாரலில்‌-வண்டுகள்‌ சுழலும்‌ : குளிர்ந்த சோலையிடங்களைக்‌ கொண்ட பொதியமலையின்‌ அழகிய பக்கங்களில்‌,
பைங்‌ கிழங்கு எடுக்கும்‌ அம்‌ பொன்‌ குழியில்‌ . பசிய [வள்ளிபோன்ற] கிழங்குகளைக்‌ கல்லி யெடுக்கின்ற அழகிய குழிகளில்‌,
௬டர்‌ விரிக்கும்‌ அம்‌ கால்‌ வயிரம்‌ கிடந்து இமைப்ப – ஒளியைப்‌ பரப்பும்‌ அழகிய கிரணங்களை யுடைய வயிரக்கற்கள்‌ கிடந்து பிராகாசிக்க,
துளிபட்டு ஒழுகும்‌ வரை அருவி – பாழை பெய்தலால்‌ பெருகும்‌ மலையருவி,
சுழிக்கும்‌ தொறும்‌ -சுழலிடும்போதெல்லாம்‌,
பொன்‌ ஒழுக்கு எறிய.–பொன்னை ஒழுகவிட்டாற்போல்‌ வீச;
சுவை ஊற்றிருக்கும்‌ புனல்‌ பொருநை – இனிய -: நீரூற்றுக்களைக்கொண்ட தாமிரபர்ணிததி
சுருட்டும்‌ திரை – மடித்துவீசும்‌ அலைகள்‌,
செம்மணி கொழிப்ப -சிவந்தரத்தினங்களைத்‌ தெள்ளியொதுக்க;
தளைவிட்டு அலரும்‌ பசும்‌பாளை . கட்டு நெகிழ்ந்து மலர்கின்ற பசிய பாளைகளை,
தலைபூங்‌கமூகம்‌ – உச்சியிற்கொண்டுள்ள இளைய கமுகமரங்கள்‌,
மணி மிடற்றுத்‌ தாங்கும்‌ பவளக்குலை – (தமது) அழகிய கழுத்திடத்துத்‌ தாங்கியுள்‌ள பவளம்போன்ற செவ்விய பாக்குக் குலைகளை,
கவிப்ப – வளையத்தொங்கவிட்டு மூட, (இங்ஙனம்‌ சிறப்புப்பெற்று மேலும்‌)
தடம்‌ சால்‌ வழி ஊர்ந்து – பெரிய கலப்பை சென்ற வழி
யிலேயே நகர்ந்து சென்று, (அதனால்‌)
அகடு உளைந்து – (கரக்‌கொண்டிருக்கும்‌) வயிறு நொந்து,
வளை . சங்குப்பூச்சிகள்‌,
முத்து உதிர்க்கும்‌ . (வெண்‌) முத்துக்களை ஈனும்‌,
வயல்‌ பேரை மாலே ! -கழனிகளைக் கொண்ட தென்திருப்பேரையில்‌ கோயில்கொண்டுள்ள
திருமாலே சிறுபறை கொட்டுக– ;:
வருணன்‌ பரவும்‌ இருசரணமாலே!– வருணபகவான்‌ தோத்தரிக்கின்ற உபய பாதங்களையுடைய
திருமாலே சிறுபறை கொட்டுக.

இச்செய்யுளில்‌, வயிரம்‌, பொன்‌, செம்மணி, பவளம்‌ முதலிய வந்துள்ள நயம்‌ காண்க,

——————-

சிறுதேர்ப்பருவம்‌

உரைக்குஞ்‌ சதுமா மறைதனக்கும்‌ ©
– உயர்வா னவர்க்கு மெட்டாத
உண்மைப்‌ பொருளே ! கன்றொடுகுன்‌
_ றுருகும்‌ படிவேய்ங்‌ குழலூதி
நிரைக்குப்‌ பின்னே நடந்தருளும்‌
நீலப்‌ புயலே 1! போரேறே
நிலமா சமரா டிடுங்கொடிய
நிருதர்‌ குலத்துக்‌ கொருகூற்றே !
வரைச்சந்‌ தகிலுஞ்‌ செம்மணியும்‌
மதவா ரணக்கிம்‌ புரிமருப்பும்‌
மயிற்பீ லியும்வெண்‌ ணித்திலமும்‌
வாரிச்‌ சுருட்டிக்‌ கரைபொருது
திரைக்குந்‌ திரைத்தண்‌ பொருநைநதிச்‌
| செல்வா ! தடந்தே ர௬ுருட்டுகவே
தென்பே ரையினங்‌ குலநாதா !
செம்பொற்‌ நடந்தே ருருட்டுகவே.–95-

உரைக்கும்‌ சதுமாமறைதனக்கும்‌ – ஓதுகின்ற நால்‌ வேதங்களுக்கும்‌,
உயர்‌ வானவர்க்கும்‌ . மேலான தேவர்களுக்கும்‌,
எட்டாத – காணமுடியாது
அப்பாற்பட்ட, உண்மைப்‌பொருளே ! – சத்தியமான பரம்பொருளே !
கன்றொடு – (தான்‌ மேய்க்கும்‌) பசுங்கன்றுகளோடு,
குன்று உருகும்படி-கற்களும்‌( இசைகேட்டு) மனமுருகி நெகிழும்படி,
வேய்ங்குழல்‌ ஊதி – புல்லாங்‌குழலை யிசைத்து,:
நிரைக்குப்‌ பின்னே நடந்தருளும்‌ – பசுக்கூட்டங்‌களுக்குப்‌ பின்னே (அவற்றின்‌ வாலுருவி) நடந்துசெல்லும்‌,
நீலப்‌ புயலே – நீலமேகம்‌ போன்றவனே ,
போர்‌ ஏறே! போர்க்‌களத்துச்‌ சிங்கம்போன்றவனே !
நிமலா ! – தோஷமற்றவனே
சமர்‌ ஆடிடும்‌ – போரிடுகின்ற
கொடிய நிருதர்‌ குலத்துக்கு -கொடிய அரக்கரின த்திற்கு,
ஒரு கூற்றே | – ஓப்பற்ற காலனே |
வரை சுந்து அகிலும்‌ – மலையிடத்துள்ள சந்தனக்‌கட்டையினையும்‌ அகிற்கட்டையினையும்‌,
செம்‌ மணியும்‌ . சிவந்த இரத்தினங்‌களையும்‌,
மத வாரணம்‌ கிம்புரி மருப்பும்‌ – மதயானை களின்‌ பூணிட்ட தந்தங்களையும்‌,
மயில்‌ பீலியும்‌ – மயிற்றோகையின்‌ இறகு களையும்‌,
வெள்‌ நித்திலமும்‌ – வெண்மையான முத்துக்களையும்‌,
வாரிச்சுருட்டி – (பாயும்‌ வழியில்‌) வாரிக்கொண்டு சுருட்டிவந்து,
கரை பொருது . கரைகளில்‌ மோதி,
திரைக்கும்‌ – நுரைத்திடும்‌,
திரை தண்‌ பொருநை நதி .. அலைகளையுடைய குளிர்ந்த தாமிர பர்ணியாற்றின்‌,
செல்வா !–, தடம்‌ தேர்‌ . அகலமான தேரை,உருட்டுக -உருட்டுவாயாக ;
தென்பேரையின்‌ நம்‌ குல நாதா -தென்‌பேரையிலெழுந்தருளியுள்ள எங்கள்‌ குலத்தலைவனே !
செம்‌ பொன்‌ தடம்‌ தேர்‌ – சிவந்த பொன்னினாலாகிய அகலமான தேரை,
உருட்டுக – உருட்டுவாயாக ;

*நிரைக்குப்‌ பின்னே நடந்தருளும்‌? என்றவிடத்து, “காலடி தோவக் கன்றின் பின்‌, கொடியேன்‌ என் பிள்ளையைப்‌ போக்கினேன்‌”? என்ற பெரியாழ்வார்‌ வாக்கு நினைக, (:3-2-9),

——–

உருவா யுயிரா யுணர்வாகி
உள்ளும்‌ புறனு முளனாகி
உரைக்குஞ்‌ சமய மாநினுக்கும்‌
ஒன்று பலவு மாயடங்கி
அருவாய்‌ நிறையு நின்‌ பெருமை
யார்க்குந்‌ தெரிய வசமன்றே
ஆழிப்‌ புயலே ! யருட்கடலே !
அரி ! கே சவ! சீ தர ! முகுந்தா !
மருவார்‌ பொழிலிற்‌ கேணியில்வாய்‌
மடையிற்‌ சுழியிற்‌ படுவரம்பில்‌
வளைமுத்‌ துயிர்க்குந்‌ திருவழுதி
வள நாட்‌ டுறையெம்‌ பெருமாளே 7/7
தெருவீ தியினூற்‌ றெண்மர்தொழச்‌
செம்பொற்‌ நடந்தே ர௬ுருட்டுகவே
தென்பே ரையினங்‌ குலநாதா !
செம்பொற்‌ றடந்தே ருருட்டுகவே.--96-

உருவாய்‌ உயிராய்‌ உணர்வாகி – உடம்புடையனவாய்‌ உயிருடையனவாய்‌ உணர்வுடையனவாய்‌ இருக்கும்‌ பொருள்களனைத்துமாகி,
(அவற்றுள்‌ ) உள்ளும்‌ புறனும்‌ உளனாகி-
உள்ளுக்குள்ளும்‌ வெளியிலும்‌ இருப்பவனாகி, (மேலும்‌)
உரைக்கும்‌ சமயம்‌ ஆறினுக்கும்‌ – (சிறப்பித்துப்‌) பேசப்படும்‌ ஆறு மதங்களுக்‌கும்‌,
ஒன்றும்‌ பலவும்‌ ஆய்‌ அடங்கி – (பொதுப்பட்ட) ஓரே தெய்வமாய்‌ ஏகனாகியும்‌ (அதற்கு ஏற்ற வடிவினனாய்ப்‌)பல தெய்வமாகியும்‌ அனைத்திலும்‌ தங்கி,
(மற்றும்‌) அருவாய்‌ . கண்ணுக்குப்‌ புலப்படாத உருக்கரந்த அந்தர்யாமியாய்‌,
நிறையும்‌ – (யாண்டும்‌நீக்கமற) நிறைந்திருக்கும்‌,
நின்‌ பெருமை – உன்னுடைய மேன்மை,
யார்க்கும்‌ தெரிய வசமன்று .. எவர்க்கும்‌ (அளவிட்டு) அறியும்‌ தரத்ததன்று :
ஆழிப்புயலே ! – (பாற்‌) கடலிலுள்ள மேகமே !
அருள்‌ கடலே – கருணா சமுத்திரமே
அரி! ஹரியே,
கேசவ- கேசவனே ,
சீதர – சீதரனே |,
முகுந்தா | – முகுந்தனே
மரு ஆர்‌ பொழிலில்‌ – வாசனை நிறைந்த சோலைகளிலும்‌,
கேணியில்‌ – கிணறுகளிலும்‌,
வாய்மடையில்‌ – மடைத்தலைகளிலும்‌,
சுழியில்‌ – நீர்ச்சுழியிடங்களிலும்‌,
படுவரம்பில்‌ – இருக்கின்ற வரப்புக்‌களிலும்‌,
வளை – சங்குப்பூச்சிகள்‌,
முத்து உயிர்க்கும்‌ – முத்துக்களை யீனுகின்ற,
திருவழுதிவள நாட்டு – பாண்டியநாட்டில்‌, உறை நித்யவாசஞ்செய்கின்ற,
எம்‌ பெருமாளே .- எங்கள்‌ இறையவனே !
தெருவீதியில்‌ – பெரியதெருவழியே,
நூற்றெண்மர்‌ தொழ -ஜைமீநீயதலவகாரசாம வேதிகள்‌ நூற்றெட்டுப்பேரும்‌ (கண்டு)தொழும்படி,
செம்பொன்‌ தடம்‌ தேர்‌ உருட்டுக–: தென்பேரை யில்‌ நம்‌ குலநாதா –, செம்பொன்‌ தடம்‌ தேர்‌ உருட்டுக-

“உருவாய்‌ உயிராய்‌ உணர்வாகி உள்ளும்‌ புறனும்‌ உளனுகி‘” என்னுமிடத்து
திடவிசும்பெரிவளி நீர்நிலமிவைமிசைப்‌,படர்‌ பொருண்முழுவதுமாய்‌ அவையவைதொறும்‌, உடன்மிசையுயிரெனக்‌ கரந்தெங்கும்‌ பரந்‌ துளன்‌?”’ என்னும்‌ பாசுரத்தின்‌ விசேஷார்த்தங்கள்‌

உள்ளேயிருப்பதற்கு உடலுக்குள்‌ உயிரிருப்பதும்‌, வெளிப்பட்டும்‌ இருப்பதற்கு உயிரில்‌ உணர்வு இருப்பதும்‌ எடுத்‌துக்காட்டுகளாகும்‌.

கம்பர் பெருமானும்‌ :*ஊனுமுயிரும்‌ உணர்வும்‌ போலுள்ளும்‌ புறனுமுளனென்ப”? என்றார்‌.

*ஓன்‌றெனப்‌ பலவென வறிவரும்‌ வடிவினுள்நின்ற நன்றெழில்‌ நாரணன்‌”? எனறு நம்மாழ்வார்‌

கம்பர்பெருமானும்‌ :“’ஒன்றேயென்னின்‌ ஒன்றேயாம்‌ பலவென்்‌ றுரைக்கிற்‌பலவேயாம்‌”” என்றார்‌.

அருவாய்‌ நிறையும்‌”* என்றவிடத்து உளனலனெனில்‌ அவனருவம்‌ இவ்வருவுகள்‌’*? எண்ற நம்மாழ்வார்‌பாசுரம்‌

கேசவன்‌ – பிரமனையும்‌ உருத்திரனையும்‌ தன்‌ அங்கத்திற்கொண்டவனென்று பொருள்படும்‌ : க- பிரமன்‌, ஈச – சிவன்‌ : ““பிறைதங்கு சடையானை வலத்தேவைத்துப்‌ பிரம னைத்தன்னுந்தியிலே தோற்றுவித்து”’என்ரார்‌ திருமங்கையாழ்வாரும்‌.
இனி இதற்கு- அழகிய மயிர்முடியையுடையவனென்றும்‌, கேசியென்‌ னும்‌ அசுரனைக்கொன்றவனென்றும்‌ பொருள்கள்‌ உண்டு,

———–

மேல்பால்‌ முளைக்கும்‌ பிறையெயிற்று
வெங்கட்‌ கொடிய நிருதர்குழாம்‌
வெல்லுந்‌ தடக்கைச்‌ சிலையிராமன்‌ 1
விரிதெண்‌ டிரைநீர்க்‌ கடன்முகட்டின்‌
பாலா டரவிற்‌ கண்டுயிலும்‌
பசுந்தார்க்‌ குழகன்‌ 1! கஞ்சன்விடு
பாரச்‌ சகடு மருதுமொடி
படத்தா னெரிக்கு மொருமுகுந்தண்‌ !
கால்வாய்ப்‌ புனலிற்‌ கேணியினிற்‌
கழுநீர்க்‌ குழியில்‌ வாய்மடையிற்‌
கருஞ்சேற்‌ றினினல்‌ லருங்கயத்திற்‌
கழம்பூந்‌ துறையில்‌ வெகுண்டெழுந்து
சேல்பாய்‌ வழுதித்‌ திருநாடா !
செம்பொற்‌ றடந்தே ருருட்டுகவே
தென்பே ரையினங்‌ குலநாதா !
செம்பொற்‌ றடந்தே ருருட்டுகவே.–97-

மேல்பால்‌ முளைக்கும்‌ -மேற்குத்திக்கில்‌ தோன்றுகின்ற,
பிறை எயிறு – பிறைச்சந்திரன்போல்‌ வளைந்த கூரிய பற்‌களையும்‌,
வெங்கண்‌ – (கோபத்தினால்‌) சிவந்த கண்களையும்‌உடைய,
கொடிய நிருதர்குழாம்‌ – கொடிய அரக்கர்கூட்டத்தை,
வெல்லும்‌ தட கை சிலை இராமன்‌ ! – செயித்த பெரிய கைகளில்‌ வில்லைப்பிடித்த இராமபிரானே ,
விரி தெள்‌ திரைநீர்‌ கடல்‌ முகட்‌டின்பால்‌ – பரந்த தெளிந்த அலைகள் வீசும்‌ திருப்பாற்கடலின்‌ மேலிடத்து,
ஆடு அரவில்‌ கண்‌ துயிலும்‌ . படமெடுத்தாடுகின்ற ஆதிசேடனாகிய பாம்பின்மேல்‌ பள்ளிகொண்டு யோகநித்திரை செய்யும்‌,
பசும்‌ தார்‌ குழகன்‌ ! .. பச்சைத்திருத்துழாய்‌ மாலையைத்‌ தரித்த அழகனே;
கஞ்சன்‌ விடு பாரம்‌ சகடும்‌ – கம்சனாகிய மாமன்‌ (தன்னைக்‌ கொல்லுமாறு) நிறுவிய பெருத்த வலிய வண்‌டியையும்‌,
மருதும்‌ . [நாரத முனிவன்‌ சாபத்தால்‌ குபேரபுத்திரர்‌ இருவர்‌ மாறிய] இரட்டை மருத மரங்களையும்‌,
ஓடிபட – முறிந்து விழும்படி,
எரிக்கும்‌ – [அடியோடு] அழித்த,
ஒரு முகுந்தன்‌ -ஒப்பற்ற முகுந்தனே !
கால்வாய்‌ புனலில்‌ – வாய்க்கால்‌ நீரிலும்‌,
கேணியினில்‌ – கிணறுகளிலும்‌,
கழுநீர்க்குழியில்‌ – செங்கழுநீர்பூத்த பள்ளங்களிலும்‌,
வாய்மடையில்‌ – மடைவாயிடங்களிலும்‌,
கரும்‌ சேற்றினில்‌ – கரிய சேற்றிடங்களிலும்‌,
நல்‌ அரும்‌ கயத்தில்‌ – நல்ல சிறந்த குளங்‌களிலும்‌,
கமழ்‌ பூந்துறையில்‌ – பரிமளிக்கின்ற பூக்கள்‌ நிறைந்த நீர்த்துறைகளிலும்‌,
சேல்‌ – சேல்மீன்கள்‌,
வெகுண்டு எழுந்து பாய்‌.சினந்து மேலெழுந்து தாவிப் பாய்கின்ற
வழுதித் திருநாடா -பாண்டியநாட்டிற்குரியவனே , செம்பொன்‌ தடம்‌ தேர்‌ உருட்டுக–
தென்பேரையில்‌ நம்‌ குலநாதா –!, செம்பொன்‌ தடம்‌ தேர்‌ உருட்‌.டுக–;

——————-

தந்தா னெனக்கு வரமிரண்டு
தலைநா ளுரைத்த சொற்படிக்குன்‌
தகப்பன்‌ புரந்த முறைதருமத்‌
தழைப்ப வொருகோ லோச்சியெங்கும்‌
நந்தா வளமைப்‌ பரதனிந்த
நாடா Ghost காடாள
நடவென்‌ றுரைத்த சிற்றவைசொல்‌
நலமேற்‌ றலைக்கொண் டொருப்பட்டு
கொந்தார்‌ குழலி சனகியொடுங்‌
கூடப்‌ பிறந்த விளவலொடுங்்‌
கொதிக்கும்‌ பரல்வெங்‌ கொடுங்கானங்்‌
குறுகும்‌ பொழுதுங்‌ குளிர்ந்தலர்ந்த
செந்தா மரைப்பொற்‌ நிருமுகத்துச்‌
செல்வா 1! தடந்தே ருருட்டுகவே
தென்பே ரையினங்‌ குலநாதா !
செம்பொற்‌ றடந்தே ௬ுருட்டுகவே.--98-

“தலைநாள்‌ உரைத்த சொற்படிக்கு – முன்‌ னொருதாள்‌ சொன்ன சொல்தவருதபடியிருக்க,
உன்‌ தகப்பன்‌ – உனது தந்‌தை யாகிய தசரதன்‌,
எனக்கு இரண்டு வரம்‌ தந்தான்‌ – (கைகேயியாகிய) எனக்கு இருவரங்கள்‌ இப்போது தந்துள்ளான்‌ :
புரந்த-பாதுகாக்கப்‌பட வேண்டிய,
முறை – முறைமைப்படி,
தருமம்‌ தழைப்ப – அறம்‌ செழிக்கும்படி,
ஒரு கோல்‌ ஓச்சி . ஒப்பற்ற செங்கோலினைச்‌ செலுத்தி, எங்கும்‌ நந்தா வளமை இந்த நாடு – எவ்விடத்திலும்‌ ‘குறையாத வளப்பதை(ப்பெறும்படி)இந்தக்‌ கோசலதேசத்தை,
பரதன்‌ ஆளுவன்‌ – (என்மகன்‌) பரதன்‌ ஆட்சி புரிவான்‌.
நீ–, காடாள நட-காட்டிற்குச்‌ செல்வாய்‌””என்று உரைத்த
சிற்றவை சொல்‌-என்றுகூறிய சிறிய தாயாகிய கைகேயின்‌ கட்டளை வார்த்தைகளை,
நலம்‌-நன்மையுடையனவே, (என)
ஒருப்பட்டு – உடன்பட்டு,
தலை மேல்‌ கொண்டு – சிரசாவகித்து,
கொந்து ஆர்‌ குழலி சனகியொடும்‌ – பூங்கொத்துக்கள்‌ நிறைந்த கூந்தலையுடைய சீதாபிராட்டியோடும்‌,
கூடப்‌ பிறந்த இளவலொடும்‌ – தன்னுடன்‌ பிறந்த தம்பியாகிய இலக்குமணணோடும்‌,
பரல்‌ கொதிக்கும்‌ – பருக்கைக்கற்கள்‌ (வெப்‌பத்தால்‌) கொதிப்படைந்திருக்கும்‌,
வெம்‌ கொடும்‌ கானம்‌ -மிகக்‌கொடுமையான ஆரணியம்‌,
குறுகும்‌ பொழுதும்‌ – செல்லும்‌ போதும்‌
(கவலையின்றி), குளிர்ந்து அலர்ந்த செந்தாமரை பொன்‌ திருமுகத்‌துச்‌ செல்வா |– குளிர்ச்சியாயிருக்கும்படி மலர்ந்த செந்தாமரைப்‌ பூப்‌ போன்ற அழகிய திருமுக மண்டலத்தையுடைய செல்வனே?
தடம்‌ தேர்‌ உருட்டுக . அகன்ற தேரை உருட்டுவாயாக :
தென்‌பேரையில்‌ நம்‌ குலநாத! செம்பொன்‌ தடம்‌ தேர்‌ உருட்டுக–

பொருந்தார்கை வேல்நுதிபோல்‌ பால்பாய மெல்லடிக்கள்‌ குருதி சோர, விரும்பாத கான்‌?” என்ற குலசேகரர்‌ கூற்றும்‌ நினைக,

அப்பொழுதலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா”?

——–

தருநீழ லிடையினிது வீற்றிருக்‌ கும்புரந்‌
தரனுமுனி வரருமுளரிச்‌
சதுமுகக்‌ கடவுளு முக்கட்‌ கொழுங்கனிச்‌
சடைமுடிச்‌ சிவனும்வெஞ்சூர்ப்‌ ‘
பொருகிரண வேலுடைய பரமன்மூுரு கேசனும்‌
புகர்முகத்‌ தவனுமதியும்‌
பொங்குளைப்‌ பச்சைப்‌ பசும்புரவி யேழ்கட்டு
பொற்றடந்‌ தேரிரவியும்‌
பெருவா சலிற்புக நெருக்குண்டு சந்நிதிப்‌
பேறுண்டு கிட்டுமென்றே
பிறங்குபொற்‌ கருடக்‌ கொடிக்கம்பம்‌ வலம்வந்து
பெருகவஞ்‌ சலிசெய்திடத்‌
திருமேனி மண்டபத்‌ தரசிருக்‌ குங்கடவுள்‌ !
சிறுதே ருருட்டியருளே
தென்‌ றிருப்‌ பேரைவரு நங்குவழக்‌ காதமுகில்‌ /
-சிறுதே ருருட்டியருளே.–99-

தரு நீழலிடை இனிது வீற்றிருக்கும்‌ புரந்தரனும்‌ –கற்பக விருட்சத்தின்‌ நிழலில்‌ இணனிமையாகத்‌ தங்கியிருக்கும்‌ தேவேந்திரனும்‌,
முனிவரரும்‌ – இருடிச்சிரேட்டர்களும்‌,
முளரிச்‌ சதுமுகக்‌ கடவுளும்‌ – (திருமாலின்‌ உந்தியாகிய) தாமரை மலரில்‌ எழுந்தருளியிருக்கின்ற நான்முகனும்‌,
முக்கண்‌ கொழும்கனி சடைமுடி சிவனும்‌ – மூன்று கண்களையும்‌ பழுத்தகனி போற்‌ சிவந்த சடைத்‌ தொகுதியையும்‌ உடைய சிவபெருமானும்‌,
வெஞ்‌ சூர்‌பொரு – கொடிய சூரபதுமனோடு போரிட்ட,
கிரண வேலுடைய-ஒளிவிடும்‌ சக்தி வேலையேந்திய,
பரமன்‌ முருகேசனும்‌ – மேலானவனாகிய கந்தனும்‌,
புகர்முகத்தவனும்‌ – யானை முகத்தவனாகிய விநாயகனும்‌,
மதியும்‌ – சந்திரனும்‌,
பொங்கு உளை பச்சைப்பசும்‌ புரவி – கிளர்ந்‌தெழுகின்ற பிடரிமயிரினையுடைய மிகுந்த பச்சை நிறமுடைய குதிரைகள்‌,
ஏழ்கட்டு-ஏழு கட்டப்பட்ட,
பொன்‌ தட தேர்‌ – அழகிய விசாலமான பெரியதேரினையுடைய,
இரவியும்‌ – சூரியனும்‌,
பெரு வாசலில்‌ புக – பெரிய கோபுரவாசல்‌ மூலம்‌ புகும்போது,
நெருக்‌குண்டு – நெருக்கப்பட்டு, (உட்புகுந்தபின்‌ )
*சந்நிதிப்‌ பேறு உண்டுகிட்டும்‌, – எம்பெருமான்‌ திருவோலக்கசேவை நிச்சயம்‌ கிடைக்கும்‌; என்று – என்று குதூகலித்து,
பிறங்கு பொன்‌ கருடக்கொடிக்‌ கம்பம்‌ வலம்‌ வந்து -விளங்குகின்ற பொன்னாலாகிய அழகிய கருடத்‌துவசம்‌ கொண்ட தம்பத்தைப்‌ பிரதட்சிணஞ்‌ செய்து,
பெருக அஞ்சலி செய்திட – பெருத்தகும்பீடு போடும்படி,
திருமேனி மண்டபத்து–திருமேனிமண்டபத்திலே,
அரசிருக்கும்‌ – வீறுடன்‌ கொலுவிலெழுந்தருளியிருக்கும்‌,
கடவுள்‌ – இறையவனே ;
சிறுதேர்‌ உருட்டியருள்‌ தென்திருப்பேரை வரு-: தென்திருப்பேரை நகரில்‌ வந்து கோயில்‌ கொண்டுள்ள,
நம்‌ குழைக்காத முகில்‌ – நம்‌ மகர நெடுங்குழைக்காதராகிய [நிகரில்‌] முகில்‌ வண்ணனே ! சிறுதேர்‌ உருட்டியருள்‌ ;

*நெருக்குண்டு’ என்ற விடத்து *உன்கோயிலின்‌ வாசல்‌ சுந்தரர்நெருக்க விச்சாதரர்‌ நூக்கஇயக்கரும்‌ மயங்கினர்‌” என்ற திருப்பள்ளியெழுச்சி ஒப்புக்‌ காண்க.
** நின்‌ கோயிலின்‌ வாசல்‌, அடியாரும்‌ வானவரும்‌ அரம்பையரும்‌ கிடந்தியங்கும்‌” என்றார்‌ குலசேகரரும்‌,

முருகேசன்‌ புககுமரதண்டம்புகுந்து” என்றார்‌ தொண்டரடிப்பொடியும்‌.

———-

அன்பாய்ப்‌ பணிந்து தினம்வருணன்‌
ஆரா தனைகொண்்‌ டருள்முகுந்தா !
அடியா ராசைப்‌ புரிமுறுக்கி.
அம்பொற்‌ கயிற்று வடம்பூட்டி
வன்பால்‌ விடுத்து நெகிழ்ந்தநெஞ்சம்‌
மணிவீ தீயினள்‌ ளிடை நினைந்து
வந்துத்‌ தியரா யிருமருங்கு
மகிழ்ந்து முறையே பிடித்திழுப்பப்‌
பொன்பாற்‌ பொருந்துஞ்‌ செழுந்திலதம்‌
புவனத்‌ திருவா ணுதற்றிலதம்‌
பொங்கிப்‌ பரந்த சலராசி
புடைசுற்‌ றியபூ லோகத்துத்‌
தென்பாற்‌ நிலத மெனும்‌ பேரைச்‌
செல்வா! தடந்தே ருருட்டுகவே
செழுந்தார்த்‌ துளவு மணங்கமழுந்‌்
தேவே/ தடந்தே ருருட்டுகவே.–100-

பொங்கி – கொந்தளித்து,
பரந்த . பரவிய,
சலராசி -சமுத்திரமானது,
புடைசுற்றிய – பக்கங்களில்‌ சூழ்ந்துள்ள,
பூலோகத்து – நிலவுலகத்து, !
பொன்பால்‌ – இலக்குமியிடத்து,
பொருந்தும்‌ – நெற்றியில்‌ இடப்‌பட்டிருக்கும்‌,
செழும்‌ திலதம்‌ – செவ்வியதிலகம்‌ (என்றும்‌))
புவனதிரு – பூதேவியின்‌,
வாள்‌ நுதல்‌ திலதம்‌ – ஒளியுள்ள நெற்றியில்‌ இடப்பட்டிருக்கும்‌ திலகம்‌ (என்றும்‌),
தென்பால்‌ – தெற்குத்திக்குக்கு,
திலகம்‌ எனும்‌”- திலகம்‌ என்றும்‌ சிறப்பிக்கப்படுகின்ற
பேரை -திருப்பேரை நகரின்‌, செல்வா–!,
வருணன்‌ – வருணபகவான்‌,
தினம்‌ – நாடோறும்‌,
அன்பாய்‌ பணிந்து-பக்தியோடு வணங்கி, (செய்யும்‌)
ஆராதனை-வழிபாட்டினை
கொண்டு அருள்‌ – ஏற்றுக்கொண்டு அவனுக்கு அருள்புரிகின்ற,
முகுந்தா–!
அடியார்‌ . (உன்‌) அடியவர்களாகிய நாங்கள்‌,
ஆசை புரி முறுக்கி – (எங்கள்‌) ஆர்வத்தைச்‌ சுருளாக முறுக்கி,
அம்‌ பொன்‌ கயிறு வடம்‌ பூட்டி – ( அதனை) அழகிய பொன்னாலாகிய கயிற்று வடமாகப் பூட்டி,
வன்பால்‌ விடுத்து . கடினமான முரட்டுத்‌ தனத்தைவிட்டு,
நெகிழ்ந்த நெஞ்சம்‌ – உருகிய மனத்தினால்‌,
மணிவீதியின்‌ நள்‌ இடை நினைந்துவந்து -அழகியதெருவின்‌ நடு விடத்தில்‌ (நீ தடந்தேதேரோடு வருதலை) எண்ணி வந்து,
உத்தியராய்‌ – இருதரப்பிலும்‌ நின்று உனக்குத்துணைவராய்‌,
இருமருங்கு –வலம்‌ இடமாகிய இருபக்கங்களிலும்‌ நின்று,
மகிழ்ந்து – சந்தோஷத்தோடு,
முறையே பிடித்து :
இழுப்ப – நேரேவரும்படி கயிற்றினைப்பிடித்து வலிக்குமாறு, தடம்‌ தேர்‌ உருட்டுக-:
செழும்‌ துளவுத்‌ தார்‌ மணம்‌ கமழும்‌ தேவே
தழைத்த திருத்துழாய்மாலை நறுமணம்‌ வீசும்‌ இறைவா!, தடம்‌ தேர்‌ உருட்டுக–;

திருமகள்‌ திலகம்‌, நிலமகள்‌ திலகம்‌, தென்திசைத்‌ திலகம்‌ என மூன்றும்‌ திருப்பேரைக்குச்சேர்ந்து அதன்பெருமையைச்‌ சிறப்பித்‌தது
இனி, திருமகள்‌ திலகம்‌, நிலமகள்‌ திலகம்‌ என்ற இரண்டும்‌ பொங்கி (பெருகி) ப்பூலோகத்துத்‌ தென்பால்‌ திருப்பேரைத்திலகமாய்‌ இலங்கிற்று என்னவுமாம்‌.

———

மத்தா லடிப்ப வுரல்மிதித்து
மலர்த்தாள்‌ குந்திட்‌ டுறியில்‌ வெண்ணெய்‌
வாரிக்‌ களவி னுண்டமணி |
வாயா ! பரம பதந்தனக்கோர்‌
வித்தா கவும்வந்‌ தங்குரிக்கும்‌
வேதப்‌ பொருளே ! யருட்கடலே |
விரை நா றியபூம்‌ பசுந்துளவ
மெய்யா ! பொருவெங்‌ கரிமருப்பு
முத்தோ டகிலுஞ்‌ :செம்மணியும்‌
மூரித்‌ திரைப்பாய்‌ சுருட்டிமிக
முழங்கூ டும்பு னற்றுறைவா !
முதுவா ளரக்கன்‌ றலைகள்பத்துங்‌
கொத்தோ டடிவந்‌ துறவாளி
தொடுத்தோய்‌ ! தடந்தே ௬ருட்டுகவே
கொழிக்குந்‌ தமிழ்த்தென்‌ நிருப்பேரைக்‌
கோவே ! தடந்தே ருருட்டுகவே.--101-

மத்தால்‌ அடிப்ப – (கோபியர்‌ கடையும்‌) மத்தினாலே யடி.ப்பவும்‌, (பொருட்படுத்தாது)
உரல்‌ மிதித்து – உரலின்‌மேலேறி,
மலர்த்தாள்‌. குந்திட்டு . காலைமடக்கிக்குந்தியுட்கார்ந்து கொண்டு,
உறியில்‌ வெண்ணெய்‌ – உறியில்‌ வைத்‌திருந்த வெண்ணெயை .
களவின்‌ வாரி உண்ட – திருடியளைந்து தின்ற,
மணி வாயா – அழகிய வாயையுடையவனே !
பரமபதம்‌ தனக்கு ஓர்‌ வித்தாகவும்‌ – மேலான வைகுந்தம்‌ தமக்கு ஒரு உற்‌பத்தி ஸ்தானமாகவும்‌, வந்து -(அவ்விடத்தினின்று) பாற்கடலுக்கு
எழுந்தருளி வந்து, அங்குரிக்கும்‌ – அவதரிக்கின்ற,
வேதப்‌பொருளே !–,
அருட்கடலே / – கருணாசமுத்திரமே !
பூம்‌ பசும்‌துளவ விரை நாறிய மெய்யா . பூத்த பச்சைத்‌துழாய்‌ வாசனை மணக்கும்‌ திருமேனியையுடையவனே !
பொரு . (ஒன்றோடொன்று)சண்டையிடுகின்ற,
வெம்‌ கரி மருப்பு முத்தோடு – கொடிய யானை களின்‌ தந்தங்களீன்ற முத்துக்களோடு,
அகிலும்‌ – அகிற்கட்டைகளையும்‌,
செம்‌ மணியும்‌ சிவந்த இரத்தினங்களையும்‌,
மூரித்‌ திரை-வலிய அலைகள்‌,
பாய்சுருட்டி – வீசிப்பாய்போலச்சுருட்டி,
மிகமுழங்கு – மிகவும்‌ சப்திக்கின்ற,
கூடும்புனல்துறைவா ! – “கூடுபுனற்‌றுறை’ என்ற திருமஞ்சனத் துறையையுடையவனே !
முது வாள்‌அரக்கன்‌ தலைகள்‌ பத்தும்‌ – பழையகொடிய இராவணனாுகிய இராட்சசனின்‌ பத்துத்தலைகளையும்‌, கொத்தோடு
அடி வந்து உற – ஒருசேரத்தொகுதியாக (க்குலைபோல்‌) தன்‌ அடியில் வந்து விழும்‌படி,
வாளி தொடுத்தோய்‌ ! – பிரமாத்திரத்தை விடுத்தவனே !
தடம்‌ தேர்‌ உருட்டுக– :
கொழிக்கும்‌ தமிழ்‌ – தெளிந்தெடுத்த தமிழ்‌ மொழி பயிலுகின்ற,
தென்திருப்பேரை – தென்‌ திருப்பேரையில்‌ கோயில்கொண்டுள்ள,
கோவே – மன்னனே ! தடம்‌ தேர்‌ உருட்‌ டுக–;

₹கூடுபுனல்‌ திருப்பேரையிற்கே என்‌னைக் காட்டுமின்கள்‌?” என்றார்‌ நம்மாழ்வாரும்‌ (7-3-6).

வாளரக்கன்‌ நீள்முடியைப்‌, பாதமத்தால்‌ எண்ணினான்‌ பண்பு” (முதல்‌ திருவந்‌ :45);

வாளரக்கன்‌ ஏய்ந்த முடிப்போது மூன்றேழென்‌ றெண்ணினான்‌, ஆர்ந்த அடிப்போது நங்கட்கரண்‌ “(மூன்றாந்‌ ;திரு : 77);

தண்டவரக்கன்‌ தலைதாளால்‌ — பண்டெண்ணிப்‌, போம்‌குமரன்‌ நிற்கும்‌ பொழில்‌ வேங்கடமலை”? (நான்முகன்‌ : திருவந்‌ீ 44)

———–

புழைத்திண்‌ டிறற்கை மதசலதி
பொழியும்‌ பிறைக்கிம்‌ புரிக்கோட்டுப்‌
புகர்மா விடங்கர்க்‌ குடைந்துவெரீ இப்‌
புதுப்பூங்‌ கேணித்‌ தடம்புனனின்‌
ற்ழைக்கும்‌ புயலே ! நெட்டரவி
னாடுங்‌ குழகா ! வொருநாளும்‌
அறியாப்‌ பரம பதந்ததியர்க்‌
கருள்சீ தர1!மா தவ ! முகுந்தா !
மழைக்கொந்‌ தளகக்‌ குரும்பைமுலை
மதிவா ணுதற்சா னகிபொருட்டு
மதில்சூ ழிலங்கை யரக்கன்‌ மணி
மகுடஞ்‌ சிதறக்‌ கோதண்டங்்‌
குழைக்குந்‌ தடக்கை ரெகுராமா !
கொடிஞ்சித்‌ தடந்தே ருருட்டுகவே
கொழிக்குந்‌ தமிழ்த்தென்‌ நிருப்பேரைக்‌
கோவே 1! தடந்தே ருருட்டுகவே.–102-

புழை திண்‌ திறல்‌ கை. துவாரமுள்ள திண்ணிய வலியதும்பிக்கையினையும்‌,
மத சலதி .. மதநீர்ப்பெருக்கை,
பொழியும்‌.மிகுதியாகச்‌ சொரியும்‌,
பிறை கிம்புரி கோடு – பிறைபோல்வளைந்து பூணிடப்பட்ட தந்தத்தினையும்‌ உடைய,
புகர்மா – யானையாகிய கஜேந்திரன்‌,
இடங்கர்க்கு உடைந்து – முதலைக்குத்தளர்ந்து,
வெரீஇ – அஞ்சி,
புது பூம்‌ கேணித்தடம்‌ புனல்‌ நின்று – புதிய
அழகிய உட்கிணற்றினைக்கொண்ட தடாகத்தின்‌ நீரில்‌நின்று
கொண்டு, அழைக்கும்‌ – ஆதிமூலமே என்று ஓலமிட்டு அழைத்த:
புயலே! – மேக வண்ணனே
நெடு அரவின்‌ ஆடும்‌ – பெரிய (காளியனென்னும்‌) பரம்பின்‌மேல்‌ நடித்த,
குழகா | – அழகனே ?
ஒரு நாளும்‌ அறியா பரமபதம்‌ – என்றைக்கும்‌ (இப்படித்தென்று) அறிய முடியாத மேலான வைகுந்தத்தை
ததியர்க்கு – அடியார்க்கு,
அருள்‌ – கொடுக்கின்ற,
சீதர – ஸ்ரீதரனே , மாதவ | -மாதவனே
முகுந்தா ! – முகுந்தனே !,
மழை கொந்து அளகம்‌ . மேகம்போற்‌கறுத்துத்‌ தொகுதியாகத் தழைத்த கூந்தலிளையும்‌,
குரும்பை முலை -தென்னங்குரும்பைபோற்‌ கொங்கைகளையும்‌,
மதிவாள்‌ நுதல்‌ -சந்திரனைப்போல்‌ ஒளிரும்‌ நெற்றியினையும்‌ உடைய,
சானகிபொருட்டு – சீதாபிராட்டியின்பொருட்டு,
மதில்‌ சூழ்‌ இலங்கை அரக்கன்‌ – மதில்களால்‌ சூழப்பட்ட இலங்கைத் தீவின்‌ அரசனாகியஅரக்கன்‌ இராவணனது,
மணி மகுடம்‌ சிதற- மணிகள்‌ பதித்த கிரீடங்கள்‌ சிதைவுற்றழிய,
கோதண்டம்‌ குழைக்கும்‌ – கோதண்ட மென்னும்‌ தமது வில்லை வளைக்கும்‌,
தட கை-பெரிய நீண்ட கைகளையுடைய,
ரெகுராமா – ரகுகுலதிலகனுகிய ராமா
கொடிஞ்சி தடம்‌ தேர்‌ – தேர்மொட்டினையுடைய அகலமான தேரை, உருட்‌டு௧ –
கொழிக்கும்‌ தமிழ்‌ தென்திருப்பேரைக்‌ கோவே ! –, தடம்‌ தேர்‌ உருட்டுக–;

*தமிழ்வேதம்‌ ததியர்பாட”” (அஷ்‌டப்ர : ஸ்ரீரங்கநாயகர்‌ ; ஊசல்‌ 6)

“சரணமாகுந்‌ தனதாளடைநீதார்க்கெல்லாம்‌, மரணமானால்‌ வைகுந்தம்‌ கொடுக்கும்‌ பிரான்‌”?என்றார்‌ நம்மாழ்வாரும்‌. (திருவாய்‌ : 9-10-5),

—-

வாலப்‌ பிறைவா ணுதன்‌ மடவார்‌
மலர்க்கை வளைாகை விழத்தொழுவோர்‌
மாறாப்‌ பிறவி வேரொடற
வானத்‌ தமரர்‌ களிகூரச்‌
சாலப்‌ பொரும்வா ளசுரர்படத்‌
தருமா கதர்கள்‌ கொண்டாடத்‌
தருமந்‌ தழையக்‌ கனகவிதைத்‌
தமிழ்நா வலவ ரீடேற
ஏலக்‌ குழல்சா னகிகழுத்தின்‌
இடுமங்‌ கலநாண்‌ வாழ்வேற
எக்கா லமுநூற்‌ றெண்மர்குழாம்‌
இதயத்‌ திருந்து மகிழ்கூர்ந்து
கோலத்‌ தெருவில்‌ விளையாடிக்‌ —
கொடிஞ்சித்‌ தடந்தே ருருட்டுகவே
கொழிக்குந்‌ தமிழ்த்தென்‌ நிருப்பேரைக்‌
கோவே / தடந்தே ருருட்டுகவே.–103-

வாலம்‌ பிறை வாள்‌ நுதல்‌ மடவார்‌ . வெண்மையான பிறைச் சந்திரன் போல்‌ ஒளிருகின்ற நெற்றியினை யுடைய பெண்டிர்‌,
மலர்க்கை . தாமரைமலர்போன்ற கையிலணிந்துள்ள,
வளை கை விழ தொழுவோ – வளைகள்‌ முன்கையினின்று நழுவிவிழும்படி அஞ்சலிசெய்வோரது,
மாறா பிறவி வேரொடு அற. நீங்காது,–தொடரவருகின்ற பிறப்பும்‌ அடியோடு அறும்படியும்‌ ;
வானத்து அமரர்‌ களிகூர – தேவலோகத்துத்‌ தேவர்கள்‌ மகிழ்ச்சி மிகுதியாகக்‌ கொள்ளும்படியும்‌ ;
சால பொரும்‌ . மிகுதியாகப்போரைச்‌ செய்‌கின்ற,
வாள்‌ அசுரர்‌ பட… கொடிய அரக்கர்கள்‌ அழியும்படியும்‌ ;
தரு மாகதர்கள்‌ -தரு என்ற இசைப்பாட்டை
இருந்துபாடும்‌ துதி பாடகர்கள்‌, கொண்டாட – பாராட்டும்படியும்‌ ;
தருமம்‌ தழைய -அறம்‌ செழித்தோங்கும்படியும்‌ ;
கன கவிதை தமிழ்நாவலர்‌ -மேன்மைமிக்க கவிகளைப்பாடும்‌ தமிழ்ப்புலவர்கள்‌,
ஈடேற – பெருமைபெறும்படியும்‌ ;
ஏலம்‌ குழல்‌ சானகி – வாசனைச்சாந்து பூசப்பட்ட கூந்தலினையுடைய சீதாபிராட்டியின்‌,
கழுத்தின்‌ இடு மங்கல நாண்‌ – கழுத்தில்‌ தரித்த திருமாங்கல்யம்‌,
வாழ்வு ஏற – (என்றும்‌) மங்கள வாழ்ச்சி பெற்று யரும்படியும்‌ ;
(நீ) எக்காலமும்‌ – என்றென்‌றைக்கும்‌,
நூற்றெண்மர்‌ குழாம்‌ இதயத்து இருந்து – ஜைமிநீய தலவகாரசாமவேதிகள்‌ நூற்றெட்டுப்பேர்‌ உள்ளத்திலும்‌ (நீங்காது)கோயில்கொண்டிருந்து,
மகிழ்‌ கூர்ந்து – மகிழ்ச்சிமிக்கு,
கோலத்‌தெருவில்‌ விளையாடி – அழகிய நேர்த்தியான வீதியில்‌ விளையாடி,
கொடிஞ்சித்‌ தடம்‌ தேர்‌ உருட்டுக–; கொழிக்கும்‌ தமிழ்‌ தென்‌திருப்பேரைக்கோவே !–, தடம்‌ தேர்‌ உருட்டுக -;

———-

மருவார்‌ நறுமென்‌ மலர்கொணர்ந்து
வழிபட்‌ டிருசே வடிசொரிந்து
மயங்கும்‌ புலன்க சேந்துமொன்றாய்‌
வருணன்‌ செயும்பூ சனையுவந்த
திருமா முகிலே ! தமிழ்க்குருகுஞ்‌
செல்வக்‌ குழகா ! பாட்டயர்ந்து
சிறைவண்‌ டலம்பிக்‌ கண்படுக்குஞ்‌
செழுந்தார்த்‌ துளவப்‌ புயமுகுந்தா !
அருநான்‌ மாறைநாற்‌ றெண்மரும்வநீ
தங்கீ கரித்து வடம்பிடிப்ப
அம்போ ருகப்பூந்‌ திருவுமு (ந்‌) நீர்‌
அவனித்‌ திருவு மருங்கிருப்பக்‌
குருமா மணிப்பொன்‌ மறுகினெடுங்‌
கொடிஞ்சித்‌ தடந்தே ருருட்டுகவே
கொழிக்குந்‌ தமிழ்த்தென்‌ நிருப்பேரைக்‌
கோவே ! தடந்தே ர௬ுருட்டுகவே.--104-

மரு ஆர்‌ நறுமபென்‌ மலர்‌ கொணர்ந்து – வாசனை பொருந்திய மெல்லியபூக்களைக்‌ கொண்டுவந்து,
வழிபட்டு – பூசனைபுரிந்து,
சேவடி சொரிந்து – திருவடிகளில்‌ சமர்ப்பித்து,
மயங்கும்‌புலன்கள்‌ ஐந்தும்‌ ஒன்றாய்‌ … மருளச்செய்யும்‌ பஞ்சேந்திரியங்களும்‌ ஒருமுகமாக்கி (ஏகாக்கிரசித்தத்தோடு),
வருணன்‌ செயும்‌ பூசனை -வருணபகவான்‌ செய்கின்ற அர்ச்சனையை
உவந்த – மனமகிழ்ந்து ஏற்றுக்கொள்ளும்‌,
திருமா முகிலே – இலக்குமியோடு கூடிய மேக வண்ணனே !
தமிழ்க்கு உருகும்‌ – (திருவாய்மொழி போன்ற) தமிழ்‌ வேதத்திற்கும்‌ ஏனைய திவ்ய பிரபந்தங்களுக்கும்‌ மனம் நெகிழும்‌,
செல்வக்‌ குழகா ! – சகல ஐசுவரியங்களையும்‌ கொண்ட அழகனே !
சிறை வண்டு – சிறகுகளையுடைய வண்டு,
அலம்பி – ஓலித்து,
பாட்டு அயர்ந்து – இசைப்பாட்டுக்களைப்பாடி,
கண்படுக்கும்‌ – (இனிது)உறங்கும்‌,
செழும்‌ துவளத்‌ தார்‌ புயம்‌ முகுந்தா – செழித்த திருத்‌ துழாய்மாலையைத்‌ தோளில்தரித்த முகுந்தனே
அரு நான்மறை நூற்றெண்மரும்‌ வந்து – (அறிதற்கரிய) நான்கு வேதங்களிலும் வல்ல அந்தணராகிய நூற்றெட்டுச்‌ சாமவேதிகளும்‌ ஒருசேரவந்து,
அங்கீகரித்து – மனமொருப்பட்டு,
வடம்‌ பிடிப்ப – தேர்வடத்தைப்பிடித்து இழுக்க,
அம்போருகம்‌ பூ திருவும்‌ – தாமரைமலரில்‌ எழுந்தருளியிருக்கின்ற இலக்குமியும்‌ (ஸ்ரீதேவியும்‌),
மூ (தீ) நீர்‌ அவனித்திருவும்‌ – கடலாற்சூழப்பட்ட பூமியின்‌ தேவி யும்‌ (பூதேவியும்‌),
மருங்கிருப்ப – இருபக்கத்திலும்‌ தங்கியிருப்ப,
குரு மா மணி பொன்‌ மறுகில்‌ – நிறனுடையசிறந்த மணிகளும்‌ பொன்னும்‌ கிடக்கும்‌ தெருவில்‌,
நெடும்‌ கொடிஞ்சி – பெரிய மொட்டினையுடைய ,
தடம்‌ தேர்‌ உருட்டுக – அகலமான தேரை உருட்டுவாயாக:
கொழிக்கும்‌ தமிழ்‌ தென்திருப்பேரைக்‌ கோவே — தடம்‌ தேர்‌ உருட்டுக –

அக்ஷய வருஷம் பங்குனி மாதம் 22 தேதி மக நஷத்திரமும்‌ புந்தி வாரமுங்கூடின சுபதினத்தில்‌ பிள்ளைத்தமிழ்‌ எழுதி முடிந்தது,

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமேனி கவிராசர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading