பூமிதேவியானவள் அஷ்டாக்ஷர மந்திரத்தை ஜபித்துக் கொண்டு ‘ (ஸரீபேரை’ என்னும் பெயரைத் தரித்துக் கொண்டு
பங்குனிப் பெளர்ணமியில் சுக்கிர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடும் போது மீன் போன்ற வடிவமுடைய இரண்டு குண்டலங்கள்
கிடைக்கவே, இவை திருமாலின் காதுகளுக்கே தகுதியுடையனவாகும் என்று நினைத்த மாத்திரத்தில் திருமால் அவள் மூன்
தோன்றி, அன்புள்ளவளே இந்த மகர குண்டலங்களைத் தரவேண்டும் என்று கேட்க, பூமிதேவியும் பெருமகிழ்ச்சியுடன் கொடுத்தாள்,
திருமால் அவற்றை வாங்கித் தமது காதுகளில் அணிந்து கொண்டார். வானுலகிலிருந்து பூமாரி பொழிந்தது. தேவதுந்துபிகள்
முழங்கின. தேவர்கள் பூமிதேவியால் கொடுக்கப்பட்ட மகர குண்டலங்களைக் காதுகளில் அணிந்து கொண்டமையால் இன்று
முதல் உமக்கு மகரநெடுங்குழைக்காதர் என்ற திருப்பெயர் விளங்கட்டும். தீர்த்தமும் மகர தீர்த்தம் என்ற நாமத்துடன்
வழங்கப்படவேண்டும் என்று சொல்ல, திருமாலும் சம்மதித்தார்.
அன்று முதற்கொண்டு அந்தத் திருப்பதி ஸ்ரீ பேரை என வழங்கலாயிற்று,
பெருமாள் : மகரநெடுங்குழைக்காதர் (நிகரில் முகில் வண்ணன்)
தாயார் : குழைக்காதுவல்லி
விமானம் : பத்திர விமானம்–புஷ்கர விமானம்
தீர்த்தம் : சுக்கிரபுஷ்கரணி
கிழக்கே பார்த்த சந்நிதி
வீற்றிருக்கும் திருக்கோலம்.
திருப்பேரைப் பெம்மானே இருமகரக் குழையானை கருவறுக்குங் கோமானை மருவி நிதம் பணிவோமே.
நம்மாழ்வார் திருவாய்மொழி 7 ஆம்பத்து 8-ஆம் திருப் பதிகப்பாசுரங்களுக்கு உரை வகுத்து பெரியோர்களில் சிலர்
‘திருப்பேரெயில்” என்பேத இத்திருப்பதியின் திருநாமம்,
இது 5, 6, 7, 9 பாட்டுக்களினின்று விளங்கும். பெரியபிராகாரமுடையது என்றது பொருள். நாளடைவில் பேரை என்று மருவி
வழங்கலாயிற்று.*? என்று அபிப்பிராயம் தெரிவித்துள்ளார்கள்.
மேற்குறித்த எண்ணுள்ள பாட்டுக்களில் —
**திருப்பேரையிற்கே என்னைக் காட்டுமின் ?” (5)
““திருப்பேரையிற்கே என்னைக் காட்டுமின்கள்”?” (6)
**பேரையிற்கே புக்கு”? (7) *
[*இந்த ஏழாம் பாடலில் மூன்று நான் காமடிகளின் முதலில் ஒ*ஆரை” என வைத்திருப்பதற்கேற்ப இரண்டாமடியில் பேரை” என்பது
பெரிதும் பொருந்துவதாகும். ]
*’தென்திருப்பேரையின் மாநகரே சேர்வன்”? (9) என்று தொடர்கள் காணப்படுகின்றன.
திருப்பேரையில்”? என்பதற்குப் பதிலாகத் “*திருப்பேரெயில்?* என்று கொள்ள வேணும் என்பது இவர்கள் அபிப்பிராயம்.
மணவாளமாமுனிகள் தமது திருவாய்மொழி நூற்றந்தாதியில் “தெள்ளியமால் தென் திருப்பேர் சென்றுபுக””என்று
அருளிச்செய்துள்ளார்.
“தென்திருப்பேரைப் பதியான் சீர்கேட்டு நாவிலவன், றன் திருப்பேரைப் பதியாதார்.”? (இன்பக்
கரைசாரமாட்டார்கள் )என்றுகூ றியிருப்பதை நோக்குமிடத்து *தென்திருப்பேரை’ என்பதுதான் அத்தலத்தின் பெயர் எனத் தேறுகிறது.
பூர்வத்தில் இத்தலத்திற்கு *ஹரிபத க்ஷேத்திரம்? என்று பெயர்.
ஆண்பாற் பிள்ளைத்தமிழ் — காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம்,வாரானை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்னும் பத்துப்
பருவங்களையும் கூறுவதாம். (இந்தப் பத்தில் இறுதி மூன்றை யொழித்து அவற்றிற்குப் பதிலாக, அம்மானை, நீராடல், ஊசல்
என்பனவற்றைச் சேர்த்துக் கூறுவது –பெண்பாற் பிள்ளைத்தமிழாம்) ,
இந்த மகரநெடுங்குழைக்காதர் பிள்ளைத்தமிழ் நம்மாழ்வார் துதி தொடக்கமாக, ஆழ்வார் பன்னிருவர், ஆசார்யசார்வபெளமர்
உடையவர் இவர்களைக் காப்பாகக் கொண்டு காப்புப்பருவம் அமைய, மேலேவரும் பருவங்கள் ஒன்பதினுக்கும் பப்பத்துச்
செய்யுள் கொண்டு, பத்துப்பருவங்களாக இயன்ற நூற்றுநான்கு செய்யுட்களையுடையது, இந்நாலையியற்றியவர் திருமேனி கவிராசர்
என்பவர்,
———–
காப்புப் பருவம்
பூமாது குடிகொண்டு வீற்றிருந் தரசுபுரி
பொற்புலவு பதுமா சனப்
பொழிகருணை யொடுபெருகு ஞானவெள் ளத்தலை
புரட்டுதிரு முத்திரைக்கைக்
கோமானை யெழுதரிய சதுர்மறையு மள்ளிக்
கொழித்துவண் டமிழ்ப்படுத்திக்
கூறுதிரு வாய்மொழியோர் நாலா யிரஞ்செய்த
குருகைமுனி யைப்பரவுதும்
பூமாது – இலக்குமிதேவி,
குடிகொண்டு – வாசத்தானமாகவிரும்பி யேற்றுக்கொண்டு,
வீற்றிருந்து – (பிறரொருவர்க்கில்லாத) தனிச்சிறப்போடு எழுந்தருளியிருந்து,
அரசுபுரி – ஆட்சிசெய்கின்ற,
பொற்பு உலவு – விளக்கம் பொருந்திய,
பதுமாசனம் – தாமரையாகிய தவிர,
பொழி – மிகுதியாக வெளிப்படுத்துகின்ற
கருணையொடு – கிருபையோடு,
பெருகு – (கூடிப்) பெருகுகின்ற ஞான வெள்ளத்து அலை – அறிவாகிய (தத்துவஞானமாகிய) வெள்ளத்
தின் அலை ( யெழுந்து),
புரட்டு – (முன்பின்னாகத்) திருப்பி விட்ட,
திருமுத்திரக் கை-அழகிய ஞான சின்னத்தைக் காட்டுகின்ற கையை யுடைய,
கோமானை – தலைவனை,
எழுதரிய – ஏடுபடுத்துதற்கு இயலாத,
சதுர்மறையும் – நான்கு வேதங்களையும்,
அள்ளிக் கொழித்து – வாரித்தெள்ளியெடுத்து ஆராய்ந்து,
வண் தமிழ்ப் படுத்தி – வளப்பம் பொருந்திய தமிழில் ஆக்கி, கூறும் திருவாய்“மொழி – சிறப்பித்துப் பேசப்படுகின்ற திருவாய்மொழி உள்ளிட்டு,
ஓர் நாலாயிரம் செய்த – ஒப்பற்ற நாலாயிரம் பாசுரங்களையும் (பிரபந்தமாக நாதமுனிகள் மூலம்) செய்வித்த,
குருகை முனியை .. திருக் குருகூரில் அவதரித்த நம்மாழ்வாரை,
பரவதும் – போற்று வோம்; (எ. று),
*புரட்டு‘ என்றது – என் மனனே ? என்று மனத்தைக் குறித்து விளித்தமை நோக்கி ; “தொழுதெழு என்மனனே? . (திருவாய்மொழி 1-1-1), இன்றும்
புரட்டு திருமுத்திரைக்கை’யைக் கச்சியில் பேரருளாளன் கோயிலின் பிராகாரத்தில் கோயில் கொண்டிருக்கும் நம்மாழ்வாரின் அர்ச்சாவிக்கிரகத்துக் காணலாம்.
தேமா நறுங்கனித் தேன்மதகி னூடுபாய்
திருவழுதி வளநாடனைத்
தென்றிருப் பேரைநகர்க் காவலனை நூற்றெண்மர்
சிந்தைகுடி கொண்டிருக்கும்
மாமாலை வருணன்வந் தடி.பரவு மாழிநீர்
வண்ணனைப் புயல்வண்ணனை
வானப் பிரானைநங் குலநா தனைப்புகழும்
வண்டமிழ்ச் சொற்றழையவே,–1-
தேமா நறுங் கனித்தேன் – இனிய மணமுள்ள மாம்பழச்சாறு, (பெருக்கெடுத்து)
மதகின் ஊடு பாய் – மதகுகளின் மூலமாகப் பாய்ந்திடுகின்ற,
திருவழுதிவள நாடனை . அழகிய வளமுள்ள பாண்டியநாட்டில் எழுந்தருளியுள்ளவனை,
தென்திருப் பேர் நகர்க் காவலனை – தென்திருப்பேரைநகரின் காத்தற்கடவுளாகியவனை,
நூற்றெண்மர் சிந்தை குடி கொண்டிருக்கும் மா மாலை – தலவகார சாமவேதிகளாகிய நூற்றெட்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் மனத்தில் நித்ய வாசம் செய்து கொண்டிருக்கும் சிறந்த திருமாலை,
வருணன் வந்து அடி பரவும்.- வருணதேவன் (தவம் புரிய) வந்து திருவடிகளைத் தோத்தரிக்கின்ற,
ஆழிநீர்வண்ணனை – கடலின் நீர்- போன்ற நீலநிறத்தனை,
புயல் வண்ணனை – மேகநிறத்தவனை ,
வானப் பிரானை – தேவர்கள் தலைவனை, நம் குலநாதனை – நம்முடைய தொண்டக் குலத்துக்கு நாதனாகிய மகரநெடுங்குழைக் காதரை,
புகழும் – போற்றிப் பாடுகின்ற,
வண் தமிழ்ச் சொல் தழைய -(பிள்ளைத் தமிழ் நூலில்) வளப்பம் பொருந்திய தமிழ்ச் சொற்கள் சிறந்து நிற்கும்படி –
(குருகை முனியைப் பரவுதும் என முடியும்).
நூற்றெண்மர் –ஜைமிநீய தலவகாரஸாம வேதிகள், காவிரி தீரத்திலுள்ள பதினெட்டுகிராமங்களிலிருந்து ஸாம்வேதிகள் நூற்
றெண்மரைச் சுந்தரபாண்டியவழுதி தென் திருப்பேரையில் குடியேற வைத்து நூற்றெட்டுக்கிரஹ தானமும் செய்தான் என்பது,
தலவகாரம் என்பது சாமவேதத்தின் சாகைகளுள் ஒன்று,
“ஓதக் கடலொலிபோல எங்கும்எழுந்த ஈநல்வேதத்தொலி நின் றோங்கு தென்திருப்பேரை?” என்று நம்மாழ்வார் மங்களாசாசன
மாதலின், ஸாமவேதிகளைக் குடியேற்றியது. நல்வேதம் — ஸாம வேதம் என்றது ஈடு,
நூற்றெண்மர்-இராவணாதியரை வென்று இலங்கையினின்று திரும்பிய கொற்றவல்விலிராமன் சோழநாட்டில் காவிரிப்
பக்கத்தில் பதினெட்டு ஊர்களை * ஜைமிநீயதலவகார ஸாமவேதி களுக்குத்* தானம் பண்ணினான்* அவற்றில் வாழ்ந்து வந்தவர்
களிலே நூற்றெண்மர் சுந்தரபாண்டிய வழுதி வேண்டுகோளுக் கிணங்கித் தென்திருப்பேரைக்கு வந்து குடியேறினர், அவர்களுக்கு
அவ்வழுதி நூற்றெட்டு கிரஹதானம் செய்யுங்காலத்தில் அவர் களுள் ஒருவர் காணாமற்போகவே அவ்வரசன் பெருமாள்ப் பிரார்த்
திக்க, பெருமாள் நாம் கருடனோரு அரசாழ்வார் அடியில் உள் ளோம்’” என்றார். அதுகொண்டு பெருமாகாயே நூற்றெட்டாவது
நபராகக் கொண்டனர் சிலர்,
பெருமாளின் நியமனப்படி கருடாழ்வாரே நூற்றெண்மரில் ஒருவராய்த்தானம் ஏற்றுத் தமது
கருடாழ்வார் ஸந்நிதியில் பெருமாளோடு சமபீடத்தில் எழுந்தருளி யிருக்கிறார் என்பது வரலாறு.
ஆகவே, பிற விஷ்ணு ஆலயங்களிற்போல, தென்திருப்பேரையில் மகரநெடுங்குழைக்காதர் கேஷேத்திரத் தின் நேரே முன்பக்கத்தில் ஸந்நிதிக்கருடன் எழுந்தருளியில்லாமல்-ஸந்நிதிக்குள்ளேயே நுழைவாயிலிடத்துப் பெருமாளுக்கு இடப்புறமாகும்படி விலகியெழுந்தருளியிருக்கிறார்.
அந்தப் பதினெட்டு ஊர்களாவன : காவிரிக்கு வடகரையில் எட்டும், தெல் கரையில் பத்தும் ஆகும். அவற்றின் பெயர்களைப்
பின்வரும் வெண்பாக்களால் அறியலாம்.
திட்டைகுடி அன்பில் திருநறையூர் ஆதனூர் மட்டவிழ்பூந் தோகூர் வயலாலி – சிட்டர்திருக்
குன்ற மருதூர் குறைதீர்த்தார் அப்பனூர் –. என்று வடகரையில் எட்டு”,
இடையாற்றி னங்குடிசீர் எப்போதும் வாழூர் மிடைமணலூர் ஈரைந்தாம் வேலி – இடைமருதூர்
நாணமங்கை பிள்ளைமங்கை நல்லபெரு மாள்மங்கை பாணமங்கை தென்கரையிற் பத்து”,
—————
அஞ்சிறைய வரிவண் டுழக்கிக் கணைக்கால்
அசைத்துப் பொலன்றாதளைந்தடைகிடந் தாலித்து வாய்மடுத் துத்துதைந்
தளிநறவு கூட்டுண்ணமென்்
பிஞ்சுமடன் முகைமுறுக் கவிழும்வெண் டாமரைப்
பீடத்தி னினிதிருக்கும்
பெடையோதி மஞ்செஞ்சொன் மடமாது வெண்ணிறப்
பெண்ணினிரு தாடுதிப்பாம்
அம்சிறைய வரி வண்டு .. அழகிய சிறகுகளோடு கோடுகளையும் கொண்ட வண்டானது,
உழக்கி – கலக்கி,
கணைக் கால் அசைத்து -திரண்ட நாளத்தை யாட்டி,
பொலன் தாது அளைந்து – பொன்னிறமான மகரந்தங்களைத் துழாவி,
அடை கிடந்து ஆலித்து – தாமரை யிலையிலே தங்கி ஆரவாரித்து,
வாய் மடுத்துத் துதைந்து – வாய் வைத்துப் படிந்து,
அளிநறவு கூட்டுண்ண – மிக்கதேனை க்கொள்ளை கொண்டு நுகர்தலாலே,
மெல் பிஞ்சு மடல் முகை – மெல்லிய இளை தான பூவிதழின்,
முறுக்கு அவிழும் – அரும்பு கட்டுநெகிழும்,
வெண் தாமரைப் பீடத்தின் – வெண்மையான தாமரை மலராகிய ஆசனத்தில்,
இனிது இருக்கும் – நன்றாக எழுந்தருளி யிருக்கும்,
பெடைஒதிமம் . அன்னப் பேடு போன்ற,
செஞ்சொல் மடமாது – இனியசொற்களின் கிழத்தியாகிய,
வெண்ணிறப் பெண்ணின் – வெள்ளிய நிறம் பொருந்திய கலை மகளின்,
இரு தாள் துதிப்பாம் . உபய பாதங்களையும் போற்றிப் பணிவேன் ; (எ. று.).
பஞ்சளைய பரிபுரத் தளிரடித் துடியிடைப்
பணைமுலைக் கனிவாய்மொழிப்
பைந்தொடிச் சீதையை மணம்புணர மிதிலையம்
பதிபுகுந் தாதிசனகன்
செஞ்சிலை யிறுத்தமக ரக்குழைக் கடவுளைத்
திருவழுதி வளநாடனைத்
தென்றிருப் பேரைநகர்க் காவலனை வாழ்த்துமென்
செந்தமிழ்ச் சொற்றழையவே.–2-
பஞ்சு அனைய பரிபுரம் – பஞ்சுபோல் வெள்ளிய சிலம் பினையும்,
தளிர் அடி – மாந் தளிர் போன்ற மென் மையான திருவடி களையும்,
துடி இடை – உடுக்கைபோல் சிறுத்த இடுப்பினையும்,
பணை முலை – பருத்த கொங்கையினையும்,
கனி வாய் – கொவ்வைக் கனி போன்று சிவந்த வாயினையும்,
(கனி) மொழி – இனிய பேச்சினையும் (உடைய),
பைந்தொடி சீதையை – பசிய வளையல்களையணிந்த சீதாபிராட்டியை,
மணம் புணர . விவாகஞ்செய்துகொள்ள,
மிதிலை அம் பதி புகுந்து – மிதிலாபுரியாகிய அழகிய நகரத்தில் புகுந்து,
சனகன் .. (மிதிலைமன்னனாகிய) சனகனது,
ஆதி செஞ்சிலை இறுத்த – (குலத்தில்) தொன்று தொட்டு வருகின்ற செவ்விய சிவ தனுசை முறித்த,
மகரக்குழைக் கடவுளை – மகர நெடுங் குழைக்கா தர் என்னும் திருநாமம்படைத்த மூர்த்தியை,
திருவழுதி வளநாடனை – பாண்டியநாட்டிற்குரியவனை,
தென்திருப்பேரை நகர் காவலனை _ தென் திருப்பேரையென்னும் நகர்க்குத் தலைவனை,
வாழ்த்தும்-போற்று கின்ற,
என் செந்தமிழ்ச்சொல் – என்னுடைய செவ்விய தமிழின் சொற்கள், (இப்பிள்ளைத் தமிழ் நூலில்)
தழைய – சிறந்து நிந்கும்படி
(வெண்ணிறப்பெண்ணின் இருதாள் துதிப்பாம் என மூடியும்)
———-
மண்மகளு மாய்ப்பின்னை மடமகளு மாய்மிதிலை
வருசனக னுக்குமகளாய் மங்கலச் சொற்றிருப் பல்லாண்டு செம்பவள
வாய்திறந் தோதினோன்றன்
பெண்மகளு மாய்வந் தரங்கேசன் முதலைந்து
பேருக்கு மொருதேவியாய்ப்
பேர்பெற்று மாலைசூ டிக்கொடுத் தருளிய
பிராட்டியை வணங்கல் செய்வாம்
மண் மகளுமாய் – பூமிதேவியுமாய்,
பின்னை மட மகளுமாய் – மடப்பம் பொருந்திய நப்பின்னைபிராட்டியுமாய்,
மிதிலைவரு சனகனுக்கு மகளாய் – மிதிலாபுரியில் அரசாயிருந்த ஜனகமகாராஜனுக்குப் புத்திரியுமாய் (சீதாபிராட்டியுமாய்),
மங்கலச்சொல் திருப்பல்லாண்டு ~சுபத்தை யளிக்கும் சொற்களாலாகிய திருப்பல்லாண்டு என்னும் பிரபந்தத்தை,
செம்பவளவாய் திறந்து – செவ்விய பவளம் போன்ற புனித வாயினை த் திறந்து,
ஓதினான் தன் – பாடியவனாகிய விஷ்ணு சித்தனென்னும் பெரியாழ்வாருடைய,
பெண் மகளுமாய் -புத்திரியுமாய், வந்து – (இவ்வகையால் நாற்பட) அவதரித்து, (பிறகு)
அரங்கேசன் முதல் ஐந்து பேருக்கும் – திருவரங்கன் முதலாய கடவுளர் ஐந்துபேருக்கும்,
ஒருதேவியாய்ப் பேர்பெற்று -. (ஒப்பற்ற) ஒரே மனைவியாய்ப் புகழ்பெற்று,
மாலை சூடிக்கொடுத்தருளிய பிராட்டியை – தான் சூட்டிக் கொண்ட மாலையைத் தரிக்கும்படி (வடபத்ர
சாயிக்குக்) கொடுத்த கோதைபிராட்டியாகிய ஸ்ரீ ஆண்டாளை,
வணங்கல் செய்வாம் – தலையால் வணங்கிப் பணிவேன் ; (எ று.).
நான்கு மகளாய் வந்து ஐந்து பேரை மணந்து ஒருதேவி யானாள் * என்ற நயம்
தண்மதியி னகடுதொடு மாடமா ளிகைநெடிய
தமனியப் பொற்குன்றமுஞ்
சதுமறைக் குரியவேள் வியும்யாக சாலையுஞ்
சந்நிதியி னூற்றெண்மருங்
கண்மணி யெனத்தகைய பிள்ளைக் குழாமுமலி
காவுஞ்சூழ் பேரையூரன்
கருணையொடு வருணனடி பரவுமக ரக்குழைக்
கடவுள்சொற் றழையவென் றே. –3-
தண் மதியின் – குளிர்ந்த சந்திரனின்,
அகடு தொடு – நடுவிடம் தொடும்படியுயர்ந்துள்ள,
மாட மாளிகை – மாடங்களோடு கூடிய மாளிகைகளாகிய,
நெடிய தமனியப் பொன் குன்றமும் -ஓங்கிய: பொன்மலையாம் மேருவும்,
சதுமறைக்குரிய வேள்வியும் –தான்கு வேதங்களும் கோஷப்பதற்குரிய ஓமகுண்டங்களும்,
யாக சாலையும் – யாகஞ் செய்தற்குரிய மண்டபங்களும்,
சந்நிதியின் நூற்றெண்மரும் – சந்நிதியில் சேவைக்கு எழுந்தருளியுள்ள நூற்றெட்டு சாமவேதிகளும்,
கண்மணி எனத் தகைய பிள்ளைக்குழாமும் – கண்ணின் மணி போலக் காத்தற்குரிய சிறுவர் கூட்டங்களும்,
மலி காவும் – மிகுந்த சோலைகளும்,
சூழ் – சுற்றலும் பரந்துள்ள,
பேரை ஊரன் _ தென்திருப்பேரை நகருடையானும்,
கருணையொடு வருணன் அடி பரவும் – (நன்றிக்கடன் தோன்றக்) கிருபையை வேண்டி நின்று வருண தேவன் திருவடிகளைத் துதிக்கின்ற,
மகரக்குழைக் கடவுள் – மகரநெடுங்குழைக் காதரைப் பற்றிய,
சொல் – சொற்கள் (இப் பிள்ளைத் தமிழ் நூலில்)
தழைய என்று – சிறந்து நிற்க வேண்டு மென்று (பிராட்டியை வணங்கல் செய்வாம் என முடியும்) .
“பிள்ளைக்குழாம்‘ என்றவிடத்து,பிள்ளைக்குழா விளையாட்டொலியும் அருத் திருப்பேரை,” ( 7 – 3 -1))என்ற நம்மாழ்வார் வாக்கு நினைக.
இந்தப் பிள்ளைக்குழாம் காண்பதற்கன்றோ கருடனை விலகியிருக்கச் சொன்னது என்பர், முதலடியில், “பின்னை கொல்?
நில மா மகள் கொல் ? திருமகள் கொல்? பிறந்திட்டாள்”” (9- 5- 10).என்ற திருவாய்மொழியின் கருத்துக் காண்க.
ஐந்து பேருக்கும் ஒருதேவி என்றது –
ஆண்டாள் திருவரங்கன், சோலைமலையழகன், திருவேங்கடமுடையான், வட மதுரைக் கண்ணண், வடபத்ரசாயி என்ற
ஐவரையும் தனது நாச்சியார் திருமொழியில் காதல் விஞ்சிக் குறித்திருத்தல் நோக்கியென்க”?,
ஆங்குவந்துள்ள
“:திருவரங்கச் செல்வனார் என்மெய்ப்பொருளும் கொண்டாரே”,
““திருமாலிருஞ் சோலை நம்பி வரிவளையில் புகுந்து வந்திபற்றும் வழக்குளதே” ;
“*வேங்கடவற்கென்னை விதிக்கிற்றியே’” ;
கண்ணனெைன்னும் கருந்தெய்வம் காட்சிப் பழகிக்கிடப் பேனை ””
“கைத்தலம்பற்றக் கனாக் கண்டேன் தோழீநான்”” ;
“மென்னடை யன்னம் பரந்து விளையாடும் வில்லிபுத்தூாருறைவான்றன்,
பொன்னடி காண்பதோராசையினால் என் பொருகயற் கண்ணிணை துஞ்சா?” முதலியன கொண்டு தெளியலாம்.
————-
பாரரா வணனேெனும் படுபழிக் கஞ்சாத
பாவிகொலை களவுகபடம்
பழகுபா தகண்மவுலி யொருபதுந் துகள்படப்
பண்டுகோ தண்டம்வாங்கும்
வீரமே கந்திருக் கோவலூ ரிடைகழியின்
வெைளிநிந்ப வொவ்வொருவர்மேல்
மிகுநெருக் குண்டபுகழ் மூவரிற் பொய்கை
மென்சரண மஞ்சலிசெய்வாம்
படுபழிக்கு அஞ்சாத – மிக்க பழிச் செயல்களைச் செய்வதற்குப் பயப்படாத(நாணமில்லாத),
பார ராவணனெனும் பாவி – கொடுமை மிகுந்த இராவணனெனும் பாவி,
கொலை களவு கபடம் பழகு பாதகன். -கொலை திருடு வஞ்சனை முதலிய இழி செயல்களில் பயின்று பழகிய
பாதகனாவன் : (அப்படிப்பட்ட அவனது)
மவுலி ஒருபதும் துகள் பட- தலைகள் பத்தும் புழுதியில் உருளும்படி,
பண்டு . முன் திரேதாயுகத்தில்,
கோதண்டம் வாங்கும் வீரமேகம் – கோதண்டமென்னும் (பேர்படைத்த) தன் வில்லை’.வளைத்த மேகம்போற் கரியசெம்மலாகிய
இராமபிரான்; (திருமாலானவன்)
திருக்கோவலூர் இடைகழியில்,வெளிநிற்ப .. திருக்கோவலூரென்னும் (நடுநாட்டுத்) திருப்பதியில்
(மிருகண்டு மகாமுனிவரது திருமாளிகையின்) இடைக்கட்டுக்கு வெளியே (மழையில் இருளில்) நின்று கொண்டிருப்ப, (அதே சமயத் தில்)
ஒவ்வொருவர் மேல் மிக நெருக்குண்ட புகழ் மூவரில் ஒருத்தர்க் கொருத்தரிடை மிகவும் நெருக்கமுறும்படியான புகழைப் பெற்ற மூவர்க்குள்ளே,
பொய்கையார் – (முதலவராகிய) பொய்கையாழ்வா ரின்,
மெல் சரணம்-மென்மையான திருவடிகளை,
அஞ்சலி செய்வாம் கைகூப்பி வணங்குவேன்
தாரைவேல் விழிபாய் வாலிமார் புருவவொரு
சரம்விடுத் துக்கொன்றவன்
தம்பிக்கு மகுடங் கவித்தர சளிக்கின்ற
தாமோ தரக்குழகனைப்
பேரையா திபனைநங் குலநாத ஊைத்துழாய்ப்
பெம்மானை யம்மானையே
பேசுஞ் செழுந்தமிழ்ப் பிள்ளைக் கவிக்குள் ள
பேதைமை பொறுத்தருளவே,–4-
தாரை-(தன்-மனையாளாகிய) தாரையின்,
வேல் விழிபாய் வாலி – வேலாயுதம்போல் கூரிய கண்கள் விரைந்து பார்க் கின்ற வாலியின்,
மார்பு உருவ – (உறுதியான) மார்பில் ஊடுருவும்படி,
ஒரு சரம் விடுத்துக் கொன்று – ஒரு அம்பினைச் செலுத்தி உயிர்(போக்கி,
அவன் தம்பிக்கு மகுடம் கவித்து-அந்த வாலியின் தம்பியாக
ஸூக்ரீவனுக்குக் கிரீடத்தைத் சூட்டி,
அரசு அளிக்கின்ற . கிட்கிந்தா ராஜ்யத்தின் அரசாட்சியைக் கொடுத்தளித்த,
தாமோதரக் குழகனை- தாமோதரன் என்ற திருநாமத்தை(ப்பின்னர்க் கிருஷ்ணாவதாரத்தில்) பெறப்போகின்ற அழகனாகிய இராமபிரானை,
பேரை ஆதிபனை-தென் திருப்பேரையின் தலைவனை,
நம் குலநாதனை – நமது குலத்துக்குத்தலைவனாகுபவனை
துழாய்ப் பெம்மானை – துளசி மாலையைத் தரித் துள்ள பெருமானை,
அம்மானை – கடவுளாகுபவனை, (அதாவது மகர நெடுங் குழைக்காதனை)
பேசும் – குழந்தையாகப் பாவித்துப் பாடப்போகின்ற,
செழுந்தமிழ்ப் பிள்ளைக்கவிக்கு – செவ்விய தமிழி லான பிள்ளைத்தமிழ்ச் செய்யுட்களுக்கு,
உள்ள – ஏற்படக்கூடிய,
பேதைமை – அறியாமையாகிய குற்றத்தை,
பொறுத்தருள – மன்னிக்கும்படி வேண்டி (அஞ்சலி செய்வாம் என முடியும்) :
“பாவருந் தமிழாற் பேர் பெறு பனுவல் பாவலர் பாதிநாளிரவில், மூவரு நெருக்கி மொழி
விளக்கேற்றி முகுந்தனைத் தொழுத நன்னாடு”
“*தராதலத்தினுள்ள தமிழ்க் குற்றமெல்லாம், அராவும் அரமாயிற்றன்றே.… கம்பநாட்டாழ்வான்
—————
ஆரணப் பொருணான்கும் யோகமோ ரெட்டுநூல்
ஐந்தொடைந் தெட்டுநியம
மாறுதொண் ஸணூற்றாறு தத்துவஞ் சித்தியெட்
டைம்புல னடக்கிஞானக்
காரணச் சுடர் விளக் கொளிகொண்டு பரவுமொரு
கரைகண்டு புகழ்கொண்டசொற்
கருணா கரக்குரிசி லுயர்பூத வாழ்வார்
கழற்கால் வணங்கல் செய்வாம்
ஆரணப்பொருள் நான்கும் – வேதப் பொருள்களாகிய நான்கு புருஷார்த்தங்களும்,
யோகம் ஓர் எட்டும் – இயமம் முதலாகிய அஷ்டாங்க யோகமும்,
ஐந்தொடைந்து எட்டு நூல் (௨ம்) – பதினெட்டுப் புராணங்களும் ( அஷ்டா தசபுராணங்களும்) ,
ஆறு நியமம் (உம்)-செய்கடன்கள் ஆறும்,
தொண்ணூற்றாறு தத்துவம் (உம்) – தொண்ணூற்றாறு உண்மைப்பொருள்களும், சித்தி எட்டு (உ௨ம்)- எண்வகைச்சித்திகளும் (அஷ்டசித்திகளும்), [கைவரப்பெற்று] (மேலும்)
ஐம்புலன் அடக்கி – பஞ்சேந்திரியங்களையும் அடங்கச் செய்து,
ஞானச்சுடர் விளக்கொளி காரணம் கொண்டு .-ஞானமாகிய ஒளி விளக்கினை யேற்றி அதனை மூலமாகக் கொண்டு,
பரவும் ஒரு கரை கண்டு -துதிக் கின்ற வகையினைச் செவ்வன் அறிந்து (அதன் எல்லை கண்டு),
புகழ் சொல் கொண்ட – புகழப்படுகின்ற வார்த்தைகளை (த்தமக்குரித்தாக)க் கொண்ட,
கருணாகரக் குரிசில் உயர் பூத ஆழ்வார் _தயைக் கிருப்பிடமாய்ச் சிறந்துயர்ந்த பூதத்தாழ்வாரின்,
கழற்கால்-அணிகலன் பூண்ட திருப் பாதங்களை
வணங்கல் செய்வாம் – (வீழ்ந்து) வணங்குவேன்
பூரணக் கலைமதியி னிலவொழுக வாம்பன்மென்
புரிமுறுக் கவிழ்வாவியம்
புனல்படியும் வன்கரா வதுவந் திழுக்கவப்
பொழுதாதி மூலமென்றே
வாரணப் பகடலறி வீரிடக் காத்தருள்செய்
மையாழி நீர்வண்ணனை
வானப் பிரானைநங் குலநாத ஸஊனைப்புகழும்
வண்டமிழ்ச் சொற்றழையவே.–5-
பூரணக்கலை மதியின் – பதினாறுகலைகளூம் நிரம்பியுள்ள முழுச்சந்திரனின்,
நிலவு ஒழுக – நிலாவெளிச்சம் விழுதலால்,
(அதற்கு) ஆம்பல் மென்புரி முறுக்கு அவிழ் . ஆம்பலினது மெல்லி யதான மொட்டு நன்குமலர்ந்த,
வாவி அம் புனல் படியும் – தடாகத்தின் அழகிய நீரிற் றங்கியிருந்த,
வன் கரா அது – வலிய முதலையானது,
வந்து இழுக்க – கரைக்குவந்து பற்றியீர்க்க,
அப்பொழுதுஆதிமூலம் என்று – அந்தச்சமயத்தில் ஆதிமூலமே ! என்று [எடுத்து],
வாரணம் பகடு அலறி வீரிட- [கஜேந்திரனென்னும்)ஆண் யானை கதறியோலமிட,
காத்து அருள்செய் மை ஆழிநீர் வண்ணனை – [முதலையைக் கொன்று] (அதனைப்) பாதுகாத்துத்
திருவருள் புரிந்த கரியகடலினீர் போன்ற நிறத்தவனை,
வானப் பிரானை – தேவர்களின் தலைவனை,
நம் குலநாதனை -நமது குலத்துக்குத் தலைவனாகுபவனை, [அதாவது மகரநெடு குழைக்காதனை ]
புகழும்- போற்றுகின்ற,
வண்தமிழ்ச் சொல் -வளப்பம் பொருந்திய தமிழ்ச் சொற்கள் [இப் பிள்ளைத் தமிழ் நூலில் ]
தழைய – சிறந்து நிற்க வேண்டி [வணங்கல் செய்வாம் என முடியும்]
பூதத்தாழ்வாரும்
தொடரெடுத்த மால்யானை சூழ்நயம்புக் கஞ்சி,
படரெடுத்த பைங்கமலங்கொண்டன்- நிடரடுக்க
ஆழியான் பாதம் பணிந்தன்றே வானவர் கோன்,
பாழிதா னெய்திற்றுப் பண்டு‘ என்று அருளிச் செய்துள்ளார்.
நான்கு ஆரணப்பொருள் _ தர்மார்த்தகாம மோட்சம் : (அறம் பொருளின்பம் வீடு).
யோகம் எட்டு – இமயம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பன.
பதினெண் புராணங்களாவன- சிவபிரானைப்பற்றிய பத்து, திருமாலைப்பற்றிய நான்கு, பிரமனைப் பற்றிய இரண்டு,
அக்னியைப்பற்றிய ஒன்று, சூரியனைப்பற்றிய ஒன்று ஆக பதினெட்டுத் தலைமைப் புராணங்கள் (ஐந்தொடு ஐந்து எட்டு_ 5+5+-8=18)
நியமம் ஆறு – தவம், விரதம், தூய்மை, தத்துவ மோதல், மனமுவந்திருத்தல் (Contentment), தெய்வவழிபாடு என்பன.
தொண்ணூற்றாறு தத்துவம் – உட்கருவிகள் 56 புறக்கருவிகள் 60 ஆக 96ஆம்.
( விவரம் :- உட்கருவிகள் 36 :- பூதம் 5, ஞானேந்திரியம் 5, தன்மாத்திரை 8, கன்மேந்திரியம் 5, அந்தக் கரணம் 4, வித்யாதத்துவம் 7, சுத்த தத்துவம் 5.
புறக்கநபிகள் 60:- பிருத்வியின் கூறு 5, அப்புவின் கூறு 5, தேயுவின் கூறு 5, வாயுவின் கூறுக ஆகாயத்தின் கூறு5,
பிருதிவியின் வழி நாடி 10, வாயுவின் வழிநாடி 10. ஆகாயத்வழி ஏடணை, 3, வாக்காதியின் வழி தொழில் 5
பிரகிருதியின் வழி குணம் 3, விந்துவின் வழி வாக்கு 4. ஆக தத்துவங்கள் 98) இவற்றின் முழு விவரம் வல்லார் வாய்க்கேட்டுணர்க.
சித்தி எட்டு-அணிமா,மகிமா, கரிமா, லகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்து வம் என்பன.
புலனடக்குதல் – இந்திரிய நிக்கிரஹம் செய்தல்,
“கடல் வண்ணன் பூதம்”, “*மறுத்திருமார்பன வன்றன் பூதம்:” என்றவாறு எம்பெருமானை அறிதலாலே தமது
உளனணாகையையுடையவராதலால், இவருக்குப் பூதத்தாழ்வார் என்றுதிருநாமம்.
பூதத்தாழ்வார் “*பெருந்தமிழன்‘? , அவர் கழற்காலில் வணங்குகிறார்.
—————–
தெளிக்குங் கொழும்பிரச மூற்றிகுக் குங்கலுழி
திரைமண்டி மடுநிறையவே
தேக்கெறியும் வெள்ளப் பெருக்கிற் பொலன்ருது
சிந்தக் குடைந்துபம்பிக்
களிக்குஞ் சிறைச்சுரும் பிசைமுரல் முகைவிண்ட
கடிகமழ் பசுந்தண்டுழாய்க்
– கடவுடிரு வந்தாதி புகலுமயி லையர்கோன்
கழற்கால் வணங்கல்செய்வாம்
தெளிக்கும் (கொழும் பிரசம் ஊற்று – கொப்புளித்தெழும்படி மிகுதியான தேனைக் கொண்ட ஊற்றானது,
இகுக்கும்- பெருக்குகின்ற,
கலுழிதிரை மண்டி -கலங்கலின் அலைகள் நெருங்கி,
மடுநிறைய தேக்கு எறியும் வெள்ளப்பெருக்கில் – மடுக்கள் உள் நிறையும்படி செய்து வெளிவருகின்ற வெள்ளத்தின் ஒழுக்கினிலே,
பொலன் தாது சிந்த – பொன்னிற மகரந்தங்கள் சிந்தும்படி,
குடைந்து – மலர்களினுட்புகுந்து கிண்டி,
பம்பிக்களிக்கும் – செறிந்து மகிழும்,
சிறைசுரும்பு – இறகுகளைக் கொண்ட வண்டுகள்,
இசை முரல .. ரீங்காரஞ்செய்ய,
முகைவிண்ட – முறுக்கு அவிழ்ந்த,
கடிகமழ் பசுந் தண் துழாய் – மிக்கவாசனை வீசுகின்ற பச்சைநிறமுடைய குளிர்ந்த துளசிமாலையைத்தரித்த,
கடவுள் – திருமாலைப்பற்றி,
திருவந்தாதி புகலும் – மூன்றாந்திருவந்தாதி என்ற பிரபந்தத்தை யருளிச்செய்த,
மயிலையர் கோன் . திருமயிலையில் [மயிலாப்பூரில்] அவதரித்த தலைவராகிய பேயாழ்வாரின்,
கழற்கால் – அணிகலன் பூண்டபாதங்களை,
வணங்கல் செய்வாம் . (வீழ்ந்து) வணங்குவேன் ;
துளிக்குந் திரைப்பொருநை மதகீலனெலி யும்டபஞ்
சுருதிமறை யவர்களொலியுஞ்
சொல்லரிய பிள்௯ளக் குழாவொலியு மங்கலத்
தூயமுர சத்தொடுபரீஇ
மளிக்குந் திருப்பேரை மணிவண்ண ஸஊைப்புயல்
மகரக் குழைக்கடவுளை
வானப் பிரானைநங் குல நாத னைப்புகழும்
வண்டமிழ்ச் சொற்றழையவே. –6-
துளிக்கும் திரைப் பொருநை – தோன்றுகின்ற அலைகளை
யுடைய தாமிரபர்ணி நதியின் நீர் பாயும்,
மதகின் ஒலியும் – மதகுகளினின்று எழும் ஆரவாரமும்,
பழஞ்சுருதி– மறையவர்கள் ஒலியும் -பழையவேதங்களை யோதும் பிராம்மணர்களின் வாயொலியும்,
சொல்லரிய பிள்ளைக் குழாம் ஒலியும் – (இப்படித்தென) சொல்லு தற்கியலாத சிறுவர் கூட்டங்களின் ஆரவாரமும்,
தூய மங்கலம் முரசத்தொடு – பரிசுத்தமான மங்கல முரசத்தினொலியொடும் கூடி,
பரீமளிக்கும் – சிறப்பையடையச் செய்யும்
திருப்பேரை – தென்திருப்பேரை நகரிலுள்ள,
மணிவண்ணனை . நீலமணிபோன்ற நிறத்தவனை,
வானப்பிரானை – தேவர்களின் தலைவனை,
நம் குல நாதனை – நமது குலத்துக்குத் தலைவனாகுபவனை,
புயல் மகரக்குழைக் கடவுளை – மேகத்தையொத்த மகரநெடுங்குழைக்கா தனை ,
புகழும் – போற்றுகின்ற
வண் தமிழ்ச் சொல் – வளப்பம் பொருந்திய தமிழ்ச் சொற்கள் [இப்பிள்ளைத்தமிழ் நூலில்]
தழைய .-. சிறந்துநிற்கவேண்டி,. [வணங்கல் செய்வாம் என முடியும்]:
பிள்ளைக்குழா விளையாட்டொலியும் ,அறுத்திருப்பேரை”? என்றார் நம்மாழ்வாரும் (திருவாய் : 7-3-1)
பேயாழ்வார் திருமயிலையில் ஆதிகேசவப்பெருமாள் கிணற்றிலே யுண்டானதொரு செவ்வல்லிப்பூவிலே நந்தகமென்கிற
வாட்படையின் அம்சமாய் ஐப்பசிமாதத்துச் சதயநட்சத்திரத்தில் திருவவதரித்தார்
———–
கொந்தார் பசுந்துளவு பழுதுதள் ளிச்செழுங்
குளிர்நறுந் தொடையல் சேர்த்து
குலவுமணி முடிமீது கைபுனைந் தாழிமால்
குரைகழலி னங்கத்திரு
அந்தாதி யொடுதிருச் சந்த நூற் றிருபதையும்
அமுதூறு திருவிருத்தம்
ஆகச்சொன் மாலையணி யோகப் பிரான் மழிசை
ஆதிபனை யேபரவுதும்
கொந்து ஆர் பசும் துளவு பழுது தள்ளி -கொத்துக்களைக்கொண்ட பச்சைத் துழாய்மலர்களில் கோதுகளை நீக்கி,
செழும் குளிர் நறும் தொடையல் சேர்த்து – தழைத்துக் குளிர்ந்த வாசனையுள்ள மாலையாகக்கட் டி,
குலவு மணி முடிமீது -விளங்குகின்ற அழகிய சிரசின்மேல், கைபுனைந்து – நன்றாக சூட்டி
ஆழி மால் குரை கழலில் .. சக்கரத்தையேந்திய கையையுடைய திருமாலின் ஒலிக்கின்ற கழலணிந்த பாதங்களில்,
அங்கத் திருவந்தாதி யொடு – அழகுமிகுந்த *நான்முகன் திருவந்தாதி” யென்னும் பிரபந் தத்துடன்,
திருச்சந்தம் நூற்றிருபதையும் – திருச்சந்தவிருத்தம் என் னும் பிரபந்தத்தின் நூற்றிருபது செய்யுட்களையும்,
அமுது ஊறும் திரு விருத்தம் ஆக – தேவாமிர்தம் போல் இனிமைசுரக்கும் திருச்சந்த விருத்தப்பாக்களாக,
சொல் – அருளிச்செய்த,
மாலை பாமாலை யையும்,
அணி . சூட்டியலங்கரித்த,
யோகப்பிரான் மழிசை ஆதி பனை – யோகியர்க்கெல்லாம் தலைவனாகிய திருமழிசைப் பிரானை,
பரவுதும் – துதிப்பபன் ;
நந்தா வளம்பெற்ற திருவழுதி நாடும்வளர்
தகரமு முரியகோமான்
நாரணன் பூலோக காரண னச்சுதன்
நந்தகோ விந்தன்முற்றும்
வந்தா தரித்துவரு ணன்பரவு மாழிநீர்
வண்ணனிகர் முகில்வண்ணனை
வானப் பிரானதிர் வளைக்கைமக ரக்குழை
. மாதவன் சொற்றழையவே.–7-
நந்தா வளம் பெற்ற . குறையாத வளப்பத்தை
யுடைய,
திருவழுதிநாடும் – பாண்டியநாடும்,
வளர்நகரமும் – (அதற்குள் சிறந்ததாக) வளர்ந்துபரந்துபட்ட திருப்பேரைநகரமும்,
உரியகோமான் – (தனக்கே) சொந்தமாகக்கொண்ட தலைவனும்,
நாரணன் – நாராயணன் என்று நாமம்பெற்றவனும்,
பூலோக காரணன்.உலகசிருஷ்டிக்கு மூலபுருஷனானவனும்,
அச்சுதன் – ஆஸ்ரிதர்களை நழுவவிடாதவனும்,
நந்த கோவிந்தன் – நந்தகோபனுடைய குமார னாய்க் கோவிந்தனென்னும் நாமம் பெற்றவனும்,
வருணன் – வருணபகவான்,
முற்றும் வந்து – முழுக்க ஓடிவந்து,
ஆதரித்து – விரும்பி,
பரவும் – துதிக்கின் ற,
ஆழி நீர்வண்ணன் – கடல்நீரின் நிறங்கொண்டவனும்,
வானப்பிரான் – தேவர்களுக்குத் தலைவனும்,
அதிர் வளழ கை .. முழங்குகின்ற சங்கையேந்திய கையையுடைய,
மகரக்குகை,மாதவன் – மகரக்குழைக்காதர் என்னும் திருநாமம் படைத்து இலக்குமிக்குக் கணவனாகுபவனும் ஆகிய,
நிகர்முகில் வண்ணணை -நிகரில் முகில்வண்ணன் என்று திருநாமம் பூண்டவளைப்
பற்றிய சொல் – சொற்கள் (இப்பிள்ளைத்தமிழ்நூலில்)
தழைய – சிறந்துநிற்கும்படி (மழிசையாதிபனையே பர
வுதும் என முடியும்)
அங்கம் – அழகு ,-திருவந்தாதி. நான்முகன் திருவந்தாதி: 96 வெண்பாக்களாலாகியது.
இனி, அங்கம் – என்பதை உடலங்கம் எனக்கொண்டு, அங்கத்திருவந்தாதி என்றவிடத்து, பின்வரும் அந்தாதிப் பாடலை யறுசந்கக்கவும்,
வாழ்த்துகவாய் காண்ககண் கேட்க செவிமகுடம்
தாழ்த்தி வணங்குமின்கள் தண்மலரால் . சூழ்த்த
துழாய் மன்னு நீள்முடி என்தொல்லைமால் தன்னை
வழாவண்கை கூப்பி மதித்து” (நான்முகன் திருவந்தாதி–செ : 11)
எழிற் சந்தவிருத்தம் நூற்றிருபதீந்தான் வாழியே‘” என்றது இவரது வாழிதிருநாமமும்.
அந்தாதி வெண்பாவாலாகியது. திருச்சந்தம் விருத்தத்தாலாகியது.
கோமான் நாரணன், காரணன், அச்சுதன், கோவிந்தன், ஆழிநீர் வண்ணன், வானப்பிரான். மாதவன் என்று பல பெயர்கள் ஒரு பொருண்மேல்
அடுக்கி வந்து “நிகர் முகில் வண்ணன்” என்பதோடு முடிந்தன.
————–
வள்ளைவாய் நெகிழத் துளிக்கும் பசுந்தேறன்
மலர்மங்கை திகழ்வஞ்சியும்
வளமைதரு குடநாடும் ஆன்பொருநை
யுங்கொல்லி
வரையுமுரி மைச்சேரர்கோன்
புள்ளவா வுறுநீல மாலிகை கிடந்தபுய
பூதான் குலசேகரன்
பொருசிலையை நெடியவட வரைமிசை
பொறித்தவன்
புகழ்வேந்த னினிதுகாக்க
வள்ளை வாய்நெகிழ வள்ளைக்கொடியில் மலர்கள் மலர்தலால்
பசும் தேறல் – இனிய தேன்,
துளிக்கும் – துளிதுளியாத்க தோன்றுகின்றது :(அப்படிப்பட்ட வளப்பத்தைக் கொண்டதாய்),
மலர்மங்கை திகழ் வஞ்சியும் – (செல்வத்திற்கு அதிதேவதையாகிய) இலக்குமிதேவி விளங்குகின்ற வஞ்சிமா நகரையும்,
வளமை தரு குடநாடும் . செழிப்பைக்கொண்ட சேரதாட்டையும்,-சேரநாடு . குடநாடு எனப்படும்.(குடக்கு – மேற்கு)
ஆன்பொருதையும் – ஆன்பொருந்தம் என்னும் நதியையும்,
கொல்லி வரையும் – கொல்லிமலையையும்,
உரிமை – தனக்கே சொந்தமாகக்கொண்ட,
சேரர் கோன் – சேரநாட்டுக்கு அரசனும்,
புள் அவாவுறு நீல மாலிகை – வண்டுகள் (தேனை) விரும்பி மொய்க்கின்ற கருங்குவளை மாலை,
கிடந்த புயம் .. தரிக்கப்பட்டுள்ள தோள்களையுடைய,
பூதரன் – பூவுலகத்துக்கே அரசனும்,
பொருசிலையை – போர்செய்யும்வில்லின் குறியை,
நெடிய வடவரைமிசை .- நீண்டுள்ள இமயமலை யின்மீது, பொறித்தவன் – (தன்வெற்றிக்கு அடையாளமாக)இலாஞ்சனையிட்டவனும், (ஆகிய)
புகழ்வேந்தன் குலசேகரன் -கீர்த்திபடைத்த மன்னனாகிய குலசேகரப்பெருமாள்,
இனிதுகாக்க -நன்மை:புறக் காப்பாற்றுவாராக;
அள்ளல்வாய்ப் பழனத் தடந்தொறுஞ் சுரிசங்கம்
அகடுகைந் தீன்றமுத்தும்
அம்பொற் பசும்பாளை தளையவிழ் கருங்கமுகின்
அணிமுத்தும் நிலவுகாலக்.
கள்ளரு நறுமலர்க் குமுதம்விரி பேரைவரு
கருணா கரக்குரிசிலைக்
கடவுளைக் குலநா தனைப்புகழ்ந் தேத்துமென்
கவிதையின் சொற்றழையவே. –8-
அள்ளல் வாய் பழனத் தடம் தொறும் – சேறு பொருத்திய வயலிடங்களிலெல்லாம்,
சுரிசங்கம் – சுழிதலைக் கொண்ட சங்குப் பூச்சிகள்(கருக்கொண்டு)
அகடு உளைந்து – வயிறு நொந்து,
ஈன்ற முத்தும் – பெற்ற முத்துக்களும்,
௮ம் பொற் பசும் பாளை தளை அவிழ்- அழகிய பொலிவு பெற்ற பசிய நிறம் படைத்த பாளையின் கட்டு விரிந்த,
கரும் கமுகின் – கரிய கமுகங்களின் (உண்டாகிய),
அணி முத்தும் – அழகிய முத்துக்களும்.–(சூல்கொண்ட சங்கினிடத்தும் கமுகினிடத்தும் முத்துப்பிறக்கும்என்பர், )
நிலவுகால – நிலாப்போன்ற வெளிச் சத்தைக் கொடுக்க, (அதனால்)
கள் அறு நறுமலர்க் குமுதம் – தேன் தீங்கப்பெறாத வாசனை பொருந்திய ஆம்பல்மலர்கள் ,
விரி . மலர் கின்ற,
பேரை – தென்திருப்பேரை நகரில்,
வரு . கோயில் கொண்டெழுந்தருளியுள்ள,
கருணாகரக் குரிசிலை . தயைக்கிருப்பிடமாகிய சிறந்தோனை,
கடவுளை – தெய்வமாகுபவனை,
குலநாதனை – (நம்) குலத்துக்குத் தலைவனாகுபவனை , (அதாவது மகரநெடுங்குழைக் காதனை),
புகழ்ந்து ஏத்தும் – தோத்தரித்துப்பாடுகின்ற,
என் கவி தையின் சொல் – என்பாடல்களின் சொற்கள்,(இப்பிள்ளைத்தமிழ் நூலில்)
தழைய – சிறந்து நிற்க வேண்டி (வேந்தன் இனிதுகாக்க என முடியும்)
———-
விடங்காலும் வாளரா வரசுக்கு முணர்வரிய
மிக்கசங் கத்தமிழினான்
மீனவன் மதிப்பவரி யாசன மிருந்தினிது
வென்றுமூ தூர்மதுரையின்
அடங்காத பரசமய மதமறுத் துக்கிழி
அறுத்துவே ழப்பிடரிருந்
தாழிமா லைக்கண்டு வாழிபா டும்பெரிய
ஆழ்வார் தமைத்துதிப்பாம்
விடம் காலும் வாள் அரா அரசுக்கும்.-விஷத்தைக்கக்குகின்ற கொடிய பாம்புகட்கரசனாகிய ஆதிசேடனுக்கும்,
உணர்வு அரிய .. (செவ்வன்) அறிதற்கு இயலாத,
மிக்க சங்கத் தமிழினால் – சிறப்புமிகுந்த செந் தமிழ்ப்புலமையினால்,
மீனவன் மதிப்ப அரியாசனம் இருந்து -பாண்டியன் கொண்டாடச் சிம்மாசனத்தில் (ஒக்க) வீற்றிருந்து,
இனிது வென்று – (வாதிட்ட) சமயவாதிகளை ஜெயித்து,
மூதூர் மதுரையில் – பழமையான நகரமாகிய மதுரையில்,
அடங்காத பரசமய மதம் அறுத்து – வரம்புமீறிய புறச்சமயங்களின் செருக்கினை யடக்கி யொழித்து,
கிழி அறுத்து – (பாண்டியன் கட்டிவைத்த)பொற்பொதியை (வாதில்வென்று) தனதாக்கிக்கொண்டு,
வேழம்பிடர் இருந்து – யானையின் கழுத்திலேறியிருந்து, (ஊர்வலமாகவந்து),
ஆழிமாலைக்கண்டு – சக்கரப்படையேந்திய திருமாலின் திவ்யமங்களவிக்ரஹத்தைக் கண்டு,
வாழி பாடும் . மங்களாசாசனமாகப் பல்லாண்டுபாடிய,
பெரிய ஆழ்வார்தமை – (பட்டர்பிரான்என்னும்) பெரியாழ்வாரை,
துதிப்பாம்-போற்றிவணங்குவே
தடங்கா வடுக்கிடக் கின்றகல் லுருத்தவிர
தவமுனிவன் பின்னடந்து
சரணபங் கேருகத் துகளளிக் கும்பசுந்
தண்டுழாய்க் கொண்டல்கேணிக்
கிடங்கான திற்பகட் டிளவாளை துள்ளமைக்
கெண்டைவிசை யாடுபுனல்சூழ்
கெழுதகைய தென்பேரை வளமலி தருந்தூய
கேசவன் சொற்றழையவே.–9-
தட கா… விசாலமான சோலையிடத்து,
வடு கிடக்கின்ற கல் – பழிபட்டுக் கிடக்கின்றதோர் கருங்கல்லை,
உரு தவிர -கல்லுருநீங்கும்படி(நீங்கிப்பெண்ணுருவாகும்படி)
தவமுனிவன் பின்நடந்து – தவத்திற்சிறந்த விசுவாமித்திரமுனிவன் பின்னே நடந்துசென்று,
சரணம் பங்கேருகம் துகள் – தாமரைமலர் போன்ற
மெல்லிய திருவடிகளினின்று எழுந்த தூளி,
அளிக்கும் – சாப நீக்கஞ்செய்து கருணைசெய்யும்,
பசும் தண் துழாய்க் கொண்டல் : பசியகுளிர்ந்த துளசிமாலையைத்தரித்த மேகம்போன்றவனும்,
கேணிகிடங்கானதில் – சிறுகுளமே அகழியைப்போல் ஆழ்ந்திருத்தலில் (ஆழமான அகழியில்),
பகட்டு இள வாளை துள்ள – பருத்த இளைய வாளை மீன்கள் துள்ளிக்குதிக்கும்படி,
மை கெண்டை விளையாடுபுனல் சூழ் – கறுத்த கெண்டைமீன்கள் (மகிழ்ச்சியோடு) விளையாடும்படியான நீர் சூழ்ந்து,
கெழுதகைய . விளங்குகின்ற,
தென்பேரை . தென்திருப்பேரை நகரின்,
வளம் மலிதரும் – செழிப்பு மிகும்படி யருள்செய்யும்,
தூய கேசவன் – பரிசுத்தனான திருமாலும், (ஆகிய மகரநெடுங் குழைக்காதரைப்பற்றிய இப் பிள்ளைத்தமிழ்
நூலில்)
சொல் – பயிலும் என் சொற்கள்,
தழைய – சிறந்து நிற்க வேண்டி, (பெரிய ஆழ்வார்தமைத் துதிப்பாம் என முடியும்)
கேசவன் – பிரமனையும் உருத்திரனையும் தன் அங்கத்திற் கொண்டவ னென்று பொருள்படும் : ௧ – பிரமன், ஈச – சிவன் ; **பிறைதங்கு சடையானை வலத்தே வைத்துப் பிரமனைத்தன்னுந்தியிலே தோற்றுவித்து”? என்றார் திருமங்கையாழ்வாரும். இனி, இதற்கு – அழகிய மயிர்முடியை யுடையவனென்றும், கேசியென்னும் அசுரனைக் கொன்றவ னென்றும் பொருள்கள் உண்டு,
*வைநதேயம் ௪ ஸம்பூதம் விஷ்ணு சித்தம் அஹம் பஜே”
“பரண்டியன் கொண்டாட” “வேண்டிய வேதங்களோதி விரைந்து கிழியறுத்தான்’? என்றது தனியன்,
“மங்களாசாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள், தங்களார்வத்தளவு தானன்றி – பொங்கும், பரிவாலே வில்லிபுத்தூர்ப் பட்டர்பிரான்
பெற்றான், பெரியாழ்வாரென்னும் பெயர்’” என்றார் மாமுனிகளும்
—————-
பண்டா லிலையிற் கண்டுயில் ஞான
பராபரர் காவிரிநீர்
படியு மரங்கர்க் குச்சொன் மாலை
பணிந்தடி. யிற்சூட்டி
வண்டார் துளவத் தொடைமுடி. சூட்டி
வணங்குத் தவராசன்
மண்டங் குடிவாழ் தொண்ட ரடிப்பொடி
வரமுனி யைத்தொழுவாம்
பண்டு – முற்காலத்தில் (மகாபிரளயத்தின் போது)
ஆலிலையில் கண்துயில் ஞானபராபரர் – இளம் ஆலந்தளிரில் பள்ளி கொள்ளும் தத்துவஞானப் பரம்பொருளாயிருக்கும்,
காவிரிநீர்படியும் அரங்கர்க்கு – காவிரியின் நீர் அடிவருடப் பள்ளிகொள்ளும்ஸ்ரீரங்கநாதனுக்கு,
சொல் மாலை – சொற்களாலாகிய பாமாலையை(ப்பாடி),
பணிந்து – (சாஷ்டாங்கமாக) வீழ்ந்துவணங்கி,
அடியில் சூட்டி – திருவடிகளில் சமர்ப்பித்து அணிவித்து, (மேலும்) வண்டுஆர் துளவத்தொடை. – வண்டுகள் மொங்த்து நிறைந்த திருத்துழாய் மாலையை,
முடி சூட்டி – (அரங்கனது) திருமுடியில் மகுடமாக அணிவித்து,
வணங்கும் தவராசன் – தண்டனிட்டு வணங்கும் தவச்சிரேட்டனாகிய,
மண்டங்குடி வாழ் -திருமண்டங்குடியென்னுந் திருப்பதியில் வாழ்கின்ற,
தொண்டரடிப் பொடி வரமுனியை – தொண்டரடிப்பொடி யென்னும் பெயர்பெற்ற சிறந்த ஆழ்வாரை,
தொழுவாம் .. (கைகூப்பி) வணங்குவேன்-*மண்டங்குடியதனில் வாழவந்தோன்வாழியே”? என்பது வாழிதிருநாமம்,
குண்டா ருத்திப் புனலனல் குமிறக்
கோதண் டம்வாங்கிக்
குழைய வளைத்தொரு பகழி தொடுத்தருள்
கோமே தகநீலந்
துண்டா மரைமல ரும்பே ரையில்வரு
தாமோ தரதூயர்
தமிழ்தெரி பிள்க£க் கவிவழு வாதெழு
தரணியி னிலைபெறவே.–10-
குண்டு ஆர் உததிப்புனல் – ஆழம் பொருந்திய சமுத்திரநீரானது,
அனல் குமிற- நெருப்புப்பற்றி யொலிக்க,கோதண்டம் வாங்கி- கோதண்டமென்னும் தமது வில்லினைக் கையிலெடுத்து,
குழைய வளைத்து – நன்குவளையவைத்து,
ஒரு பகழி தொடுத்தருள் – ஒருஅம்பு (ஆக்நேயாஸ்திரத்தைத்) தொடுத்துவிடுத்த,
கோமேதகம் – கோமேதகமணிபோன்றவனும், ( இராமபிரானாகுபவனும்)
நீலம் தண் தாமரை மலரும்பேரையில் – கருங்குவளையும் குளிர்ந்த தாமரைப்பூவும் (ஒருங்கே)மலர்கின்ற தென்திருப்பேரைநகரில்,
வரு தாமோதர தூயர் – எழுந்தருளியிருக்கின்ற தாமோதரனென்னும் திருநாமம்படைத்த புனிதரும் (ஆகிய மகரநெடுங்குழைக்காதரைப்) பற்றிய,
தமிழ் தெரிபிள்ளைக்கவி – தமிழிலெழுதும பிள் ளைத்தமிழ்ப்பாடல்கள்,
வழுவாது-பிழைபடாமல்,
எழு தரணியில் நிலைபெற – தோன்றிய இப்பூமியில்-ஏழுபுவனங்களிலும் எனினுமாம். (மங்காது என்றும்) நிலைத்து திற்கும்படி, (வரமுனியைத் தொழுவாம் என முடியும்).
“பாவையர்கள் கலவிதன்னைப் பழித்த செல்வன்?” ஆதலின், *தவராசன்” என்றும்*வரமுனி” என்றும் பாராட்டப்பட்டார்.
“சுடராழி யான் அடிக்கே சூட்டினேன் சொன்மாலை”? என்றார் பொய்கையாரும்;
———-
வச்சிரக் குலிசபதி முனிவரிமை யவர்சது
மறைக்கடவுள் மழுவலாளன்
வந்தடி பணிந்துதொழு மெந்தைக்கு முத்திதரு
வைகுண்டப் பதவியானுக்
கச்சுதப் பச்சைமா லுக்கரு மறைப்பொருட்
கருமணிக் கண்மலர்புடைத்
தமலனா திப்பொரு ளுரைக்கின்ற குரிசில்பா
ணாழ்வாரை யேபரவுதும்:
கச்சு அற பொருமி – இரவிக்கையறும்படி பூரித்து,
புடைத்து – பருத்து,
சினத்துக் கனத்து – ‘வீங்கிச் சிவந்து கடிமையாகி,
அடி. பரந்து விம்மி – கீழ்ப்பாகம் அகலவெழுந்து,
கண்கறுத்து – முலைக்கண்கள் கருநிற மடைந்து,
அமிர்தம் பொதிந்த -பால் கட்டியுள்ள,
குங்குமமுலை . செஞ்சாந்து பூசிய கொங்கைகளையுடைய,
கற்புடைச் சீதையாளை – கற்பினுக்கணியாகீய சீதாபிராட்டியை,
நச்சி. (மணக்க) விரும்பி,
நற்சிலைவளைக்கும் -நல்லசிவதனுசை வளைத்து நாணேற்றிய,
பசும் தண் துழாய் ராமாவதார தீரன் – பச்சைநிறத்ததான குளிர்ந்த திருத்துழாய்மாலையையணிந்த இராமபிரானாய் அவதரித்த வீரனும்,
நாராயணன் -நாராயணன் என்ற திருநாமம் படைத்தவனும்,
வழுதி நாடன் -பாண்டியநாட்டுக்குத்தலைவனும்,
தம் குல நாதன் – நமது குலத்துக்குத்தலைவனாகுபவனும் (ஆகிய மகரநெடுங்குழைக் காதனைப்,பற்றிய இப்பிள்ளைத்தமிழ் நூலில்)
நல் தமிழ்ச்சொல் – நல்ல(செவ்விய) தமிழ்ச்சொற்கள்,
தழைய – சிறந்து நிற்க வேண்டி[பாணாழ்வாரையே பரவுதும் எனமுடியும்]
கச்சறப் பொருமிப் புடை த்துச் சினத்துக்
கனத்தடி பர ந்துவிம்மிக்
கண்கறுத் தமிர்தம் பொதிந்தகுங் குமமுலைக்
கற்புடைச் சீதையாளை
நச்சிநற் சிலைவளைக் கும்பசுந் தண்டுழாய்
ராமாவ தாரதீரன்
நாராய ணன்வழுதி நாடனங் குலதநாதன்
நற்றமிழ்ச் சொற்றழைவே.–11-
வச்சிரக் குலிச பதி-உறுதியான வச்சிரப்படையையுடைய இந்திரன்,
முனிவர் – இருடிகள்,
இமையவர் – தேவர்கள்,
சதுமறைக்கடவுள் – நான்கு வேதங்களையும் ஓதும் பிரமதேவன்,
மழுவலாளன் – மழுப்படையையேந்திய சிவபிரான் (ஆகிய இன்னோர்)
வந்து அடிபணிந்து தொழும்எந்தைக்கு – ஒருங்கு வந்து திருவடிகளை வணங்கித் துதிக்கும் என் தந்தையாகும் கடவுளுக்கு,
முத்தி தரு வைகுண்டப்பதவியானுக்கு –மோட்சத்தை யளிக்கின்ற வைகுண்ட வாசனுக்கு,
அச்சுதப் பச்சை மாலுக்கு – ஆஸ்ரிதர்களை நமுவவிடாத பச்சைவண்ணத் திருமாலுக்கு,
அருமறைப்பொருட்கு – வேதங்கள் காண்டற்கரிய பரம்பொருளுக்கு,
அருமணிக் கண்மலர் புடைத்து – பெறுதற்கரியகருமணியைக்கொண்ட மலர்போன்ற கண்களை அகல விரித்துக் காட்டி,
அமலனாதிப்பொருள் உரைக்கின்ற-அமலனாதிபிரான் என்று தொடங்கும் திவ்யபிரபந்தத்தில் அடங்கிய பழமறையின் பொருளை யெடுத்துச்சொல்லிய,
குரிசில் – மிகச்சிறந்தோராகிய,
பாணாழ்வாரையே – திருப்பாணாழ்வாரையே,
பரவுதும் – தோத்தரிப்பேன் ;
சரணமாகுந்தன தாளடைந்தார்க்கெல்லாம், மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் : நம்மாழ்வாரும் (திருவாய் ;9 – 10-5)
*பச்சைமாமலை போல்மேனி‘ என்றார் தொண்டரடிப்பொடியாழ்வாரும்,
கரிய வாகிப்புடைபரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட. அப், பெரிய வாய கண்கள்”? என அகல விரித்துக் கூறியபடி,
இதன் “பொருள்? என்றது- இப்பிரபந்தத்தினிறுதியில் “அணியரங்கனென்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே
என்று துணிந்து கூறியதை, மறைமுடித்தேசிகனாரும் *“காண்பனவுமுரைப்பனவும் மற்றொன்றின்றிக் கண்ணனையே கண்டுரைத்த கடிய
காதற், பாண்பெழுமாள் செய்த பாடல்பத்தும் பழமறையின் பொருளென்று பரவுமின்கள்?” என்றருளியுள்ளமை நஇனைக, (அமிருதாசுவாதினி, செ : 37).
———-
சிறியதிரு மடல்பெரிய திருமடற் றிருமொழி
செழுந்தமிழ் நெடுந்தாண்டகஞ்
சிறக்கின்ற சொற்குறுந் தாண்டகம் விதிமுறை
தெளித்தவெழு கூற்றிருக்கை
நறியதுள வணியுமுகி லுக்குரைக்கு மங்கை
நாற்கவிப் பெருமானைமுன்
நான்மறைப் பொருளுக்கு மெட்டா வரும்பொரு
நற்பொருட் கவர்கள்வனைப் னன்
பறிமுதல் திரும்பக் கொடாதழைத் துந்திருப்
பணிசெயும் புகழ்வேந்தனைப்
பலகாலு நெஞ்சில்வைத் தவனடிக் கமலமலர்
பரிவொடு பணிந்தேத்துதும்
சிறிய திருமடல் . சிறிய திருமடல் என்னும் பிரபந்தத்தையும், (அதனோடு)
பெரிய திருமடல்–, திருமொழி . -பெரிய திருமொழி, செழுந்தமிழ் நெடுந்தாண்டகம்-வளமுள்ள தமிழில் திருநெடுந்தாண்டகம்,
சொல் சிறக்கின்ற குறுந்தாண்டகம் – சொற்கள் சிறப்புறும்படி யமைந்துள்ள திருக்குறுந்தாண்டகம்,
விதிமுறை தெளித்தஎழுகூற்றிருக்கை – யாப்பிலக்கண விதிமுறைக்கேற்ப அமைந்து தெளிவுறுத்திய திருஎழுகூற்றிருக்கை என்னும் பிரபந்தங்களையும்,
நறியதுளவு அணியும் முகிலுக்கு – வாசனை வீசுகின்ற திருத் துழாயைத்தரித்த மேகம்போன்ற திருமாலுக்கு, உரைக்கும் – (உரித் தாம்படி) பாடியருளிய,
மங்கை நாற்கவிப் பெருமானை – மங்கைநாட்டுக்குத் தலைவனாய் நாலுவகைக் கவிகளைப்பாடுதலில் வல்ல வனுமான பெருமை யுடையவனை,
முன் – முன்னொருகால்,
நான் மறைப் பொருளுக்கும் எட்டா அரும்பொருளின்–நால்வேதங்களின் விஷயங்களுக்கும் உணரமுடியாத அரிய பரம்பொருளாகிய மகா விஷ்ணுவின்,
நற்பொருள் கவர் கள்வனை – நல்ல செல்வங்களை (வாள்வலிகாட்டிக்) கொள்ளையடித்த திருடனை,
பறிமுதல் -தான் கொள்ளையடித்துக் கவர்ந்த செல்வங்களை,
அழைத்தும் – உரிய வனைக்கூவியழைத்தும்,
திரும்பக்கொடாது..திருப்பி (உரியவனிடமே) கொடுக்காமல்,
திருப்பணி செயும் புகழ் வேந்தனை – கோயில் கைங்கரியங்களைச் செய்து -புகழ்சம்பாதித்த (மங்கை) மன்னனை,
பலகாலும் நெஞ்சில் வைத்து – எப்போதும் மனத்தினால் தியா னித்து,
அவனடிக் கமலமலர் . அவனது திருவடித்தாமரைகளை,
பரிவொடு .. அன்போடு (பக்தியோடு),
பணிந்து ஏத்துதும் – வணங் கித் தோத்தரிப்பேன்
உறிமிசை யிருந்தவளை களவினால் வாரியென்
ஜொருதிவலை சிந்தாதுணும்
உயர்புகழ்ப் பேரைவரு குலநாதன் முதுகவிதை
உலகெங் கணுந்தழையவே.–12-
உறிமிசை இருந்த அளை – உறியின்மேல் வைத் திருந்த வெண்ணெயை,
களவினால் – திருட்டுத் தொழிலினால்,
வாரி என்று – செல்வம் கிடைத்தது என்று (மகிழ்ந்து) ,
ஒரு திவலை சிந்தாது உணும் – ஒருதுளிகூடக் கீழே சிந்தாதபடி முழுவதையும் விழுங்கும்,
உயர் புகழ் பேரை வரு குலநாதன் – மிக்க புகழை யுடைய திருப்பேரை நகரில் எழுந்தருளியுள்ள நம்குலத்துக்குத்
தலைவனாகுபவனைப்பற்றிய,
முதுகவிதை – செவ்வி முதிர்ந்த பிள் த்தமிழ்ப் பாடல்கள்,
உலகு எங்கணும் தழைய – பூவுலக மெங்கும் சிறந்து நிற்கவேண்டி, (பணிந்தேத்துதும் என முடியும்.)
“மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர்கோன், ஆறங்கம் கூற அவதரித்த”? என்றார் மாமுனிகளும் (உபதேசரத்தினமாலை, 9).
ஆசு, மதுரம், சித்திரம், விஸ்தாரம் என்பன, இவை நான்கிலும் வல்லவராதலின் திருமங்கையாழ்வார்”நாலுகவிப்பெரு மாள்!” எனப்படுவர், (வேதப்பொருளுக்கும் எட்டா அரும்பொருள்”என்றவிடத்து “யதோ வாசே நிவர்த்தந்தேதே அப்ராப்ய மனஸாஸஹ”” என்றது வேதமும்.
———-
முடிக்கும் பசுந்துழாய்ச் சக்கிரா யுதக்கடவுள்
முளரியங் கண்ணனுக்கு
முதுமறை தெரிந்துதிரு வந்தாதி யாசிரிய
மூறைவழா வடிதொறுஞ்சொல்
வடிக்குஞ் செழுந்தமிழ்ப் பாடலா யிரமுமகிழ்
மாறனுறை செய்தருளவே
வரிசையொடு பட்டோலை யெழுதுமொரு மதுரகவி
வரமுனிவனைப்பரவுதும்
பசுந்துழாய் முடிக்கும் . பச்சைத்திருத்துழாய்மாலையைச் சூடும்,
சக்கிராயுதக்கடவுள் . சுதரிசனம் என்னும் சக்கரப்படையை [வலக்கையில் ] ஏந்தியுள்ள திருமாலாம்,
முளரியங் கண்ணனுக்கு- தாமரைமலர்போன்ற திருக்கண்களை யுடைய கண்ணனுக்கு (புண்டரீகாக்ஷனுக்கு) ஏற்குமென்று,
முதுமறை தெரிந்து – பழைய வேதங்களை யாராய்ந்தறிந்து,
திருவந்தாதி.பெரியதிருவந்தாதியையும்,
ஆசிரியம்-திருவாசிரியத்தையும்,
முறைவழமா அடிதொறும் சொல் வடிக்கும் –(யாப்பு) நெறி தவறாதபடி அடியொவ்வொன்றிலும் தக்க சொற்களைச் சாரமாகப் பெய்தமைக்கும்,
செழுந்தமிழ்ப் பாடல் ஆயிரமும் : செவ்விய தமிழ்ச்செய்யுட்கள் ஆயிரமேற்கொண்டதிருவாய்மொழியையும்,
மகிழ் மாறன் உரைசெய்தருள – மகிழமாலையைத்தரித்த நம்மாழ்வார் உபதேசித் தருள; (அப் பிரபந்தங்களை)
வரிசையொடு -சிறப்போடு,
பட்டோலை எழுதும் – ஓலையிலே எழுதிக் கொண்ட,
ஒரு – ஒப்பற்ற,
மதுரகவி வர முனிவனை – மதுரகவியென்று பேர்படைத்த சிறந்த ஆழ்வாரை,-மதுரகவி அந்தணராதலின் *வரமுனிவன்’ எனப்பட்பார்.
பரவுதும் . தோத்தரிப்பேன்
குடிபுகுந் தடந்திரைப் புனல்யாவு மொருமுகங்
கொண்டுவரு ணன்படியவே
கூடுபொரு அநத்துறைக் குலநாத னுயர்மாட
கூடங்க டோறுநெடுவான்
இடிக்குங் கருங்கொண்டல் கண்படுக் கும்பேரை
எம்பிரான் வானப்பிரான்
இருசரண மலா்சூடு மெனதுதண் கவிதையுல
கெங்கணுந் தழையவென்றே,–13
குடிபுகும் தட திரை புனல் யாவும் – (எல்லாவுலகங்களினின்றும் புறச்சூழல்களினின்றும்) வந்துசேருகின்ற பெரிய அலைகளின் நீரெல்லாம்
ஒருமுகம் கொண்டு – ஒருங்குதிரண்டு ஓருபெருக்காய் வந்து,
வருணன் படியவே – (கடலரசனாகிய) வருணபகவான் தன்னிடத்தில் நீராடும்படி,
கூடு பொருநைத்துறை – இணையும் கூடுபுனற்றுறை என்றுபெயர் பெற்ற தாமிரபர்ணி நதித் துறையிலெழுந்தருளியிருக்கும்,
குலநாதன் – நம்குலத்துக்குத் தலைவணனாகுபவனும்,
உயர் மாட கூடங்கள் தோறும் – ஓங்கியுயர்ந்துள்ள உபரிகைகள் ஒவ்வொன்றினிடத்தும்,
நெடு வான் இடிக்கும் கருங்கொண்டல் – பெரிய ஆகாயத்தில் முழங்கும் கரிய மேகங்கள்,
கண்படுக்கும் – தங்கி யுறங்கும்படியான
பேரை . திருப்பேரை நகருக்கு
எம்பிரான் – தலைவனாகுபவனும்,
வானப்பிரான் – தேவர்களுக்குத்;குலைவனாகுபவனும், (ஆகிய மகரநெடுங்குழைக்கா தரின்)
இரு சரணமலர் சூடும் எனது – இரண்டு பாததாமரைகளையும் (தலைக்கணியாக்)கொள்ளும் என்னுடைய,
தண் கவிதை – இனிய பாட்டுக்கள்,
உலகுஎங்கணும் தழைய என்று-இந்நிலவுலகு முழுதும் சிறந்துநிற்கவேண்டுமென்று வேண்டி, [மதுரகவி வரமுனிவனைப் பரவுதும் என முடியும் ]
ஒரு காலத்தில் அசுரர் வருணபாசத்தைக்கவர்ந்து போயினர், அதனைத்திரும்பப்பெறவேண்டுமென்று வருணன், பொருநையாற்றங்கரையையடைந்து
மகரநெடுங்குழைக்காதரை நோக்கித் தவம் புரிந்தான் : அப்பெருமானருளால் திரும்பவும் பாசம் கிடைக்கப்பெற்றான் அந்நன்றிக்
காக வருணன், தான்நின்று தவம்செய்தஅத்தீர்த்தத்தில் **எல்லாவுலகங்களிலுமுள்ளசகலதீர்த்தங்களின் மகிமையும் கூடுவதாக?” என்று
அருள்செய்தமையால், இத்தலத்திலுள்ள அத்திருமஞ்சனத்துறை “கூடுபுனற்றுறை”” (ஸமூகதீர்த்தம்) எனப்பெயர்பெற்றது இத்துறை யில் பெருமாள் உகந்த அற்புத மகரகுண்டலம் அகய்பட்டமையால்இஃது மாகரிக (ஸமூக) தீர்த்தமெனவும் வழங்கப்படும். நம்மாழ்வாரும் ‘”கூடுபுனல் திருப்பேரையிற்கே காலம்பெற என்னைக்காட்டு மின்கள்? என்று விதந்தெடுத்துப் பேசியுள்ளார். (திருவாய் ; 7+3-6)
முதியகவி நாவலவர் தம்பிரான் றிருஞான
முத்திரைக் கடவுள்திருவாய்
மொழிதனக் குரைவிரித் தெழுதும்பிர புடவாக்கி
முழுதுமன் பர்க்குவாழ்வு
புதுநறவு கக்கித் துளிக்குஞ் சரோருகப்
பொற்கழற் கருணாகரன்
புகலரிய பரசமய திமிராரி வண்புகழ்ப்
பூதூர ஸஊைப்பரவுதும்
முதியகவி நாவலவர் தம்பிரான் – செவ்விமுதிர்ந்த பாடல்களைப் பாடவல்லநாவீறுபடைத்தவர்களின் தலைவராகுபவரும்,
திருஞான முத்திரைகடவுள் – அழகிய ஞானமுத்திரையைக் கொண்ட தெய்வமாகுபவரும்,
திருவாய்மொழிதனக்கு .. (சாமவேதசாரமாகிய) திருவாய் மொழி பிரபந்தத்துக்கு,
உரை விரித்து – விரிவுரை செய்து (பரக்க வியாக்கியானித்து),
எழுதும் – (திருக்குருகைப்பிரான்பிள்ளானைக்கொண்டு) எழுதுவிக்கும்,
பிரபுட வாக்கி – கம்பீரமான வாக்கினை யுடையவரும்,
அன்பர்க்கு . தன்பக்தர்களுக்கு,
முழுதும் வாழ்வு -முற்றும் பாதுகாப்பாய் இருப்பிடமாகுபவரும் (ரட்சகராகுபவரும்)
புது நறவு கக்கித் துளிக்கும் – புதிய தேன் கசிந்து சொட்டுகின்ற,
சரோருகம் – தாமரைமலர் போன்ற,
பொற் கழல் கருணாகரன் -அழகிய பாதங்களையுடைய தயைக்கிருப்பிடமாகுபவரும்,
புகலரிய பரசமய திமிர அரி – சொல்லுதற்கும் வாய் கூசுகின்ற புறச்சமயங் களாகிய இருட்டினை அழித்தவரும், (ஆகிய)
வண்புகழ் பூதூரனை -வளப்பத்தில் புகழ்பெற்ற ஸ்ரீபெரும்பூதாரில் அவரித்தவராகியஇராமநுசரை,
பரவுதும் . தோத்தரிப்பேன் ;
சதுமறையு மறிவரிய குலநாத னமுதொடலை
தத்துந் தடம்பொருநையான்
தருமதநெறி தவருத திருவழுதி வளநாடு
கதுழையவரு கருணைமேகம்
விதியுறையி னொடுதொழுது வருணனா ரா தனைசெய்
விமலன் மக ரக்குழையன்மால்
விரவுஞ் செழுந்தமிழ்ப் பிள்ளைக் கவிக்குள்ளம்
மிக்கசொற் றழையவென்றே,–14-
சதுமறையும் அறிவரிய குலநாதன் . நான்குவேதங்
களாலும் அறிதற்கு அரிய நமது குலத்துக்குத் தலைவனாகுபவனும்,அமுதொடு அலை தத்தும் தடம் பொருநையான் -தேவாமிர்தம் போல் இனிய நீர்கொண்டு அலைகள் பாயும் பரந்த தாமிரபர்ணிதீரத்தில் எழுந்தருளியிருப்பவனும், தருமநெறி தவருத திருவழுதிவளநாடு – தருமமார்க்கத்தினின்று (சிறிதும்) பிறழாத பாண்டியநாடு,
தழைய வரு – செழிப்புறுமாறு அவதரித்துள்ள,
கருணைமேகம் – தயைபொழியும் மேகம் போன்றவனும்,
வருணன் – (கடல்தெய்வமாகிய) வருணன்,
விதிமுறையினொடு தொழுது – வழிபடுங்கிரமத்தோடு வணங்கி,
ஆராதனை செய் விமலன் – ஆராதிக்கும் புனிதனும் (ஆகிய)
மகரக்குழையன்மால் .. திருமாலாம்மகரக்குழைக்காதன்,
விரவும் – பிரபந்தத்தலைவனாகப் (பொருந்திவருகின்ற,
செழுந்தமிழ்ப் பிள்ளைக்கவிக்கு – செவ்வியதமிழில்எழுதும்பிள்ளைத் தமிழ்ப்பாடல்களுக்கு (ஏற்ற)
உள்ளம் மிக்க சொல் – மனப்பரிவு மிகுந்த சொற்கள்,
தழைய என்று – சிறந்து நிற்கவேண்டுமென்று வேண்டி, (பூதுரனைப்பரவுதும் என முடியும்),
நாவலவர் தம்பிரான் ? என்றவிடத்து ”’பல்கலையோர்தாம் மன்னவந்த இராமாநுசன் ‘**என்றதும் காண்க. (இராமா:நூற்றந் : 1)
ஞானமுத்திரை – சின்முத்திரை : உபதேசக்குறியாகச் சுட்டுவிரல் நுனியைப்பெருவிரல்நுனியுடன் சேர்த்துக்காட்டும்
ஞானமுத்திரை : இராமாநுசரை ஞானமுத்திரை திருக் கோலத்துடன் திருமலையில் திருவேங்கடமுடையான் சந்நிதியில் இன்றும் ஸேவிக்கலாம்,
“முந்துறவேபிள்ளான் முதலானோர் செய்தருளும், அந்த வியாக்கியைகளன்றாகில் . அந்தோ ! திருவாய்
மொழிப்பொருளைத்தேர்ந்துரைக்கவல்ல,குருவார் இக்காலம் நெஞ்சே! கூறு ”? (உபதேசரத் : 40) **
தெள்ளாரும் ஞானத் திருக்குருகைப்பிரான், பிள்ளான் எதிராசர் பேரருளால் – உள்ளாரும், அன்புடனே
மாறன்மறைப்பொருளை அன்றுரைத்தது, இன்பமிகும் ஆறாயிரம்?”(உபதேசரத் : 41)
சாருவாகமதம் நீறுசெய்து சமணச்செடிக்கனல் கொளுத்தியே சாக்கி யக்கடலை வற்றுவித்து மிகுசாங்கி யக்கிரி முறித்திட,
மாறு செய்திடு, கணாுதவாதியர்கள் வாய்தகர்த்தறமிகுத்துமேல் வந்தபாசுபதர்சிந்தி யோடும்வகை வாதுசெய்தஎதிராசனார்,
கூறுமாகுருமதத்தொடோங்கியகுமாரிலன் மதமவற்றின்மேல் கொடியதர்க்கசரம் விட்ட பின் குறுகிமாயவாதியரைவென்றிட,
மீறிவர்தில்வருபாற்கரன் மதவிலக் கடிக்கொடியெறிந்து போய் மிக்கயா தவமதத்தைமாய்த்தபெருவீரர்”* என்றும்,
சங்கரபாற்கரயாதவபாட்டப்ரபாகரர்தங்கள்மதம் சாய்வுற வாதியர்மாய்குவரென்று சதுமறைவாழ்ந்திடுதாள்?‘
என்றும் மா முனிகள் அருளிச் செய்தவை அநுசந்தேயம் (ஆர்த்திப்ரந்தம், 29, 52).
———
செங்கீரைப்பருவம்
வானாட ரும்பொற் பொகுட்டா சனப்பற்ப
மண்டபத் : தரசிருக்கும்
மறைக்கிழவ னுஞ்சடை முடிக்கடவு ஞுங்குலிச
வச்சிரா யுதத்தலைவனும்
பூநாறு வெட்சியந் ெரியல்புனை குமரனும்
புகர்முகத் தவனுமதியும்
பொங்குசுட ரிரவியுந் துங்கமுனி’ வருநெடும்
பொற்கோயில் வலம்வந்துநம்
கோனாகும் வருணனா ராதனைசெய் மஞ்சனக்
கொலுவில்வந் தடிவணங்கிக்
கும்பிட்டு நின்றுசே விப்பநற் சேவைபுரி
கோசலைக் கிருகண்மணியே!
தேனாறு பச்சைப் பசுந்துழாய் மேகமே!
செங்கீரை யாடியருளே
செல்வத் திருப்பேரை வல்லிக்கு மணவாள!
செங்கீரை யாடியருளே. –15.
வான் – தேவலோகத்திலும்,
நாடு அரும் – தேடிக்காண்பதற்கரிய,
பொன் பொகுட்டு – அழகிய கொட்டையையுடைய,
பற்ப- ஆசன மண்டபத்து – தாமரையாகிய தவிசினையிட்ட கொலுமண்டபத்தில்,
அரசு இருக்கும் – மன்னனாய் வீற்றிருக்கும்,
மறைக்கிழவனும் – பிரமதேவனும்,
சடைமுடிக் கடவுளும் – கபர்த்த மென்னும் சடாபாரத்தையுடைய சிவபெருமானும்,
குலிச வச்சிராயுதத்துலைவனும் – வயிரம் போலுறுதி கொண்ட வச்சிரப்படையை யேந்திய இந்திரனும்,
வெட்சி பூ நாறு அம் தெரியல் .. வெட்சிப்பூவின்வாசனை வீசுகின்ற அழகிய மாலையை,
புனை – தரித்துள்ள,
குமரனும் – முருகனும்,
புகர் முகத்தவனும் – புள்ளிகளையுடைய யானையின் முகத்தைக் கொண்ட விநாயகனும்,
மதியும் – சத்திரனும்,
சுடர் பொங்கு இரவியும் – ஒளிமிக்க சூரியனும்,
துங்க முனிவரும் -தூய இருடிகளும்,
நெடும் பொற் கோயில் வலம் வந்து – நீண்டபெரிய அழகிய கோயிலைப் பிரதட்சிணமாக வந்து, (மேலும்)
நம்கோனாகும் வருணன் – நமக்கெல்லாம் தலைவனாகும் (மழைக்கடவுளான) வருணபகவான்,
ஆராதனைசெய் . திருவர்ராதனம் செய்து வழிபடுகின்ற,
மஞ்சனக் கொலுவில் வந்து – திருமஞ்சனமண்டபத்தில் (சூழ) வந்திருந்து,
அடி வணங்கி – பாதங்களில் பணிந்து.
கும்பிட்டு நின்று சேவிப்ப – கைகூப்பி நின்று சேவிக்கும்படி,
நல்சேவை புரி – நன்றாகத்தரிசனம் கொடுக்கின்ற,
கோசலைக்கு இருகண்மணியே – கெளசல்யாதேவிக்கு இருகண்களிலுள்ள மணிபோல் போற்றக் கூடிய மகரநெடுங்குழைக்காதரே
தேன் நாறு பச்சைப்பசுந்துழாய் மேகமே – தேன்வாசனைவீசுகின்ற பசிய இளைய திருத்துழாய்மாலையை யணிந்துள்ள புயல் வண்ணனே
செங்கீரைஆடியருள் – முழந்தாளிட்டு முகமசைத்து ஆடுவாயாக ;
செல்வத்திருப்பேரை வல்லிக்கு மணவாள – சகல செளபாக்யங்களுக்கும் உரிய தென்திருப்பேரை நாச்சியாருக்குக் கணவனாகுபவனே ;
செங்கீரை ஆடியருள்–
———
மூருகொழுகு பங்கயத் தடமுநீள் குளனுமலை
மோதும் புனற்சுழியினும்
முதிராத விளமணலு நடைவரம் புஞ்செய்ய
முதுகுரம் புங்கரும்பும்
அருகுநெட் டிலைமுடத் தாழைநீ ழலும்வேலி
அடருஞ் செழுஞ்சோலையும்
அம்பொற் பசும்பாளை தகாயவிழ்க் குங்கமுகின்
அணிவனமூ மதகினூடுஞ்
சொருகுகுழல் மகளிர்குட முலையசைய நுணுகிடை
சுமக்கின்ற பொற்குடத்துஞ்
சுடர்மணிப் பொற்றடந் தேரோடும் வீதியும்
சுரிமுகச் சங்கமூரும்
திருவழதி நாடாள ! பரமபத வீடாளா
செங்கீரை யாடியருளே
செல்வத் திருப்பேரை வல்லிக்கு மணவாள!
செங்கீரை யாடியருளே.–16-
முருகு ஒழுகும்-தேன் பெருகுகின்ற,
பங்கயத் தடமும்-தாமரைத்தடாகங்களிலும்,
நீள் குளனும் – நீண்டகுளங்களிலும்,
அலைமோதும் புனல் சுழியினும் – சிற்றலைகள் வீசுகின்ற தண்ணீர்ச்சுழிகளிலும்,
முதிராத இள மணலும் – கெட்டிப்பட்டிராத இளையமணல்மேடுகளிலும் (வாலுகங்களிலும்) ,
நடை வரம்பும்- நடக்கின் ற (கழனி)வரப்புகளிலும்,
செய்ய முது குரம்பும் – செவ்விய பழைமையான நீர்ப்பாசனஅணைக்கட்டுகளிலும்,
கரும்பும் – கருப்பந்தோட்டங்களிலும்,
அருகு – (அவற்றின்) சமீபத்திலுள்ள,
நெடு இலை முடத் தாழை நீழலும் – நீண்டஓலைகளையுடைய வளைந்த தென்னைமரங்களின் நிழலிலும்,
வேலி அடரும் செழும் சோலையும் – வேலிகள் நெருங்கச்சூழ்ந்துள்ள செழிப்பான சோலைகளிலும்,
அம் பொன் பசும் பாளை தளைஅவிழ்க்கும் – அழகிய பொன்போலொளிரும் இளைய குலைகள் முறுக்கவிழ்ந்துநிற்கும்,
கமுகின் அணிவனமும் – பாக்குமரங்களின் அழகிய சோலைகளிலும்,
மதகின் – மதகுகளிற்பாயும் நீர்போல,
ஊடும் -புலக்கின்ற,
சொருகு குழல் மகளிர் -கூந்தலையெடுத்துச் செருகிமுடிக்கின்ற பெண்டிரின்,
குடமுலை அசைய . குடம்போல்பருத்தகொங்கைகள் அசையும்படி,
நுணுகு இடை சுமக்கின்ற – மிகநுண்ணிதாகியஇடுப்பிலே தாங்கியுள்ள,
பொன் குடத்தும் – (நீர்முகந்து கொண்டுவரும்) பொன்போல் ஒளிரும் குடங்களிலும்,
சுடர் மணிப் பொன்தடம் தேரோடும் வீதியும் -ஒளிவிடுகின்ற மணிககாக்கொண்டஅழகிய விசாலமானதேர்கள் ஓடும்படியான பெரிய தெருக்களிலும்,
சுரிமுகச் சங்கம் ஊரும் . சுழிந்தமுகத்தைக் கொண்ட சங்குப்பூச்சிகள் மெல்ல நகர்ந்து செல்லுகின்ற,
திருவழுதிநாடு ஆள? – பாண்டியநாட்டின் தலைவனாய மன்னனே !
பரமபத வீடாளா . பரமபதமென்கின்ற மோட்சத்தையாள்கின்ற கடவுளே ! –
செங்கீரை ஆடியருள் –;
செல்வத் திருப்பேரை வல்லிக்கு மணவாள? சகலசெளபாக்
யங்களுக்கும் உரிய தென்திருப்பேரை நாச்சியாருக்குக் கணவனாகுபவனே .
செங்கீரை ஆடியருள் –
சுழியாரும் கனசங்கம் கலந்தெங்கும் நிறைந்தேறி, வழியாரமுத்தீன்று வளம் கொடுக்கும் திருநறையூர்”என்றார் திருமங்கைமன்னனும். (பெரியதிரு ; 6-9-2) “மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்? ஆதலின், *பரமபத வீடாள !* என்றார்.
——
அறுகால் வரிச்சுரும் படைகிடக் குங்குழல்
அரக்கிமண் டோதரிகழுத்
தழகுதா லிச்சரடு தரையில்வீ ழப்பருந்
தாயவெண்் கழுகுமொய்ப்ப
மறுகா னெடுஞ்சிகர மாடமா எளிகையிடிய
வலதுகட் கடைதுடிப்ப
வா்சறொறும் நெய்தலம் பறைகொட் டலங்கை
யழன்
மண்டிவான் மூகடுதாவக்
குறுகாத வல்லசுரர் செவியடைப் பக்கொழுங்
குருதிவாய் கொப்பளிப்பக்
கொடியரா வணன்மகுட முடிசிதறவரி சிலை
குழைத்துவெஞ் சமர்முகத்துச்
சிறுநா ணொலிக்கொண்டு விளையாடு மேகமே!
செங்கீரை யாடியருளே
செல்வத் திருப்பேரை வல்லிக்கு மணவாள!
செங்கீரை யாடியருளே.-17-
அறுகால் வரிச் சுரும்பு – ஆறுகால்களையும்புள்ளிகளையும் கொண்டுள்ள வண்டுகள்,
அடை கிடக்கும்-நெருங்கிப்படிந்திருக்கும்,
குழல் – கூந்தலினையுடைய,
அரக்கி மண்டோதரி – ராட்சசியாகிய மண்டோதரியின்,
கழுத்து அழகு தாலிச்சரடு – கழுத்திலே அழகுற அணிந்திருந்த தாலிவடம்,
தரையில் வீழ – பூமியில் அறுந்து விழும்படியும்,
பருந்தாய வெண்கழுகு மொய்ப்ப– பருந்துமுதலாய வெள்ளியகழுகுகள் நெருங்கிச் சூழும்படியும்,
மறுகால் – தெருக்கள்தோறும்,
நெடும் – நீண்ட,
சிகரம் – உச்சிகளைக்கொண்ட,
மாடமாளிகைகள் இடிய – மாடங்களோடு கூடிய பெருமனைகள் இடிந்து விழும் படியும்,
வலது கண் கடை துடிப்ப – (மண்டோதரியின்) வலக்கண்ணின் ஓரம் துடிக்கும்படியும்,
வாசல் தொறும் – ஒவ்வொருவீட்டுமுன்நிலிடந்தோறும்,
நெய்தல் அம் பறை கொட்ட – சாப்பறை யடிக்கும் படியும்,
லங்கை அழல் மண்டி-இலங்கா நகரில் நெருப்புப்பற்றியெழுந்து
வான் முகடு தாவ . ஆகாயஉச்சிவரை பாயும்படியும், (அதனால்)
குறுகாத . (இலங்கையை) நெருங்கமுடியாத,
வல் அசுரர் – கொடிய,அரக்கர்கள்,
செவி அடைப்ப -(அழலொலிதாங்காமல்) தங்கள் காதுகளைப்பொத்திக்கொள்ளும்படியும்,
வாய் கொழுங் குருதி கொப்பளிப்ப -வாயிலிருந்து பெருத்த இரத்தம் பீறிடும்படி,
கொடிய ராவணன்மகுடமுடி சிதற – துஷ்டனான இராவணனின் தலையிலணிந்துள்ள கிரீடம் துகளாகும்படியும்,
வரிசிலை குழைத்து – வரிந்துகட்டப்பட்ட வில்லினை வளைத்து,
வெஞ்சமர் முகத்து – கொடிய போரினிடத்து, சிறுநாணொலிக்கொண்டு –
மெல்லிதாக டங்காரத் தொனியை யெழுப் பிக் கொண்டு,
விளையாடும் மேகமே ! – [பெரும்போரினை] ஓர் விளையாட்டைப்போலச்செய்த மாரிபோன்றவனே
செங்கீரை ஆடியருள்–;
செல்வத் திருப்பேரை வல்லிக்கு மணவாள–, செங்கீரைஆடியருள்–;
————
இருகுழையு மணிகுதம் பையுமாட வெயில்விரிந்
திலங்குறு முறுவலாட
இணை திருக் கையிலணி வளையாட மென்சுரும்
பிசைபயில்செய் துளவமாடப்
பொருவுமிரு சிலைநுதலில் வேர்வாட வேபொங்கு
– புழுதிதிரு மேனியாடப்
புழூகொழுகுங் கரியகுழல் சரியவரை வடமுநூ
புரமுந் தயங்கியாட
முருகுவிரி தருநறுங் கமலமதி முகவட்ட
முழுநிலா வீசியாட
முதியவானவர் முனிவரமரர்கோன் வாலவள
முறையொடுங் காணவந்தார்
திருவரையின் மணியசைந் தாடக் குழைந்தினிது
செங்கீரை யாடியருளே
செல்வத் திருப்பேரை வல்லிக்கு மணவாள?!
செங்கீரை யாடியருளே.–18-
இருகுழையும் – இரண்டு குண்டலங்களும்,
மணி குதம்பையும் – மணியாலாகிய காதுபெருக்குஞ்சுறாளும்,–குதம்பை – காதுபெருக்குவதற்காக இடும் ஓலைசீலைமுதலியவற்றின் சுருள்,
ஆட -(மெதுவாக அசைந்து) ஆடவும்,
வெயில் விரிந்து இலங்குறு முறுவல்ஆட – ஒளிபரந்து விளங்குகின்ற புன்சிரிப்பு தெரியும்படி வாய் அசையவும்,
இணை திரு கையில் அணி வளை ஆட – அழகிய இரண்டு கைகளிலும் தரித்துள்ள காப்புகள் ஆடவும்,
மெல்சுரும்பு இசை பயில்செய் துளவம் ஆட – மென்மையான வண்டுகள் தங்கி ரீங்காரஞ் செய்கின்ற திருத்துழாய்மாலையாடவும்,
பொருவும்இரு சிலை நுதலில் வேர்வு ஆட – ஒன்றற்கொன்று ஓத்துள்ள இரண்டு புருவங்களைக் கொண்டுள்ள நெற்றியில் குறு வேர்வை துளித்துச் சொட்டவும்,
பொங்கு புழுதி திருமேனி ஆட – படிந்துள்ள மிகுதியான தெருமண்துகள் அழகிய உடம்பினின்று உதிரவும்,
புழுகு ஒழுகும் கரிய குழல் சரிய – புனுகு பூசப்பட்டு வாசனை வீசுகின்ற கருமையான தலைமயிர் கலையும்படி,
அரைவடமும் . அரை ஞாணும்,
நூபுரமும் – காற்சிலம்பும்,
தயங்கி ஆட – மெல்லொலியொடு விளங்கியாடவும்,
முருகு ‘விரிதரு நறுங்கமலம் -அழகு பரவி பரிமளம் வீசுகின்ற தாமரை மலர்போன்று,
மதிமுகவட்டம் – பூர்ண சந்திரன் போல் வட்டமாயுள்ள முகம்,
முழு நிலா வீசி ஆட – முற்றும் ஒளிபரப்பும்படி அசைந்து ஆடவும், (இவற்றால் ஏற்படுகின்ற)
வாலவளம் இளமையழகின் செழுமையை,
காண – பார்த்து ரசிப்பதற்காக,
முதிய வானவர் -(அறிவு) முதிர்ந்த தேவர்களும்,
முனிவர் – இருடிகளும்,
அமரர் கோன் – தேவேந்திரனும்,
முறையொடும் – வரிசையாக,
வந்தார்–வந்து சேர்ந்துள்ளார்கள் (ஆகவே)
திரு அரையின் மணிஅசைந்து ஆட – அழகிய இடுப்பில் கட்டியுள்ள மணிவடம்அசைந்து ஆடும்படி,
குழைந்து – வளைந்து,
இனிது – (கண்ணுக்கு)இனிமையாக, ;
செங்கீரை ஆடியருள் ;–
செல்வத் திருப்பேரை வல்லிக்கு மணவாள?–, செங்கீரை ஆடியருள் –
வாலவளம் – இளமை யழகின் செழுமை ; அதாவது குழந்தை ஐந்தாம் மாதத்தில் முகமசைத்து
செங்கீரையாடுமா தலின், அந்த அழகினைக் காட்ட வந்தது. :*ஐந்தாந் திங்களிற் செங்கீரையாடலும்?” என்பது பிங்கலந்தை.
——–
சந்தன கதம்பப் படீரகுங் குமமுலைத்
தையல்மர கதவல்லிசெஞ்’
சடிலேசர் வாமத் திருப்பநான் மறைபரவு
சதுரமுகப்’ பிர மனாவில்
இந்துநுதல் வாணி சந்ததமி ருப்பப்பணிந்
திருசரண மலர்சூடுவோர்
இதயதா மரைமலரின் நூற்றெண்மர் சிந்தையினும்
இசைபாடி வண்டுகிண்டக்கொந்தவிழ் நறுங்கமல் மலராச னக்கோவில்
குடி யிருக் கும்பரிமளக்
கோமளக் கொடிவல்லி மாமதுர வாயாள்
குழைக்காத ணாயகியெனுஞ்
சிந்துரப் பிடியொடும் விளாயாடு மழகளிறு !
செங்கீரை யாடியருளே
செல்வத் திருப்பேரை வல்லிக்கு மணவாள !
செங்கீரை யாடியருளே.–19-
சந்தனம் கதம்பம் படீர குங்குமம்” –சந்தனத்தையும் கதம்பமாலையையும் சிவப்புகுங்குமத்தையும் அணிந்துள்ள,
முலைத் தையல் மரகதவல்லி-கொங்கைகளையுடைய அழகிய பார்வதி தேவி,
செஞ்சடில ஈசர் – சிவந்த சடாபாரத்தையுடைய சிவ பிரானின்,
வாமத்து இருப்ப – இடப்பக்கத்தில் எழுந்தருளியிருப்ப,
நான்மறை பரவும் சதுர்முகப்பிரமன் நாவில் -நான்கு வேதங்களையும் ஓதிக்கொண்டிருக்கும் நான்குமுகங்களைக்கொண்டுள்ள பிரமதேவனின் நாக்கினில்,
இந்துநுதல்வாணி – சந்திரன்போல் ஒளிவிடும்நெற்றியையுடைய – சரசுவதிதேவி,
சந்ததம் இருப்ப – நிரந்தரமாக எழுந்தருளியிருப்ப,–
(இக் குழைக்காதர்மட்டும்) பணிந்து -தம்மை வணங்கி,
இரு சரணமலர் சூடுவோர் – இரண்டு திருவடித் தாமரைகளையும் (தமதுசிரசில்) தரிப்பபருடைய,
இதய தாமரைமலரின் (உம்)- ஹ்ருதயகமலங்களிலும்,
நூற்றெண்மர் சிந்தையினும் – நூற்றெட்டுப் பக்தர்களுடைய மனத்திலும்,
(தமது நாயகியொடு விளையாடுகின்ற மழகளிறாவன் என மேல் இயையும்) .
வண்டு இசை பாடி கிண்ட – வண்டுகள் ரீங்காரஞ்செய்து கிளர்தலாலே,
கொந்து அவிழ் – இதழாகிய கொத்துக்கள் கட்டுவிடுகின்ற,
நறுங்கமல மலராசனக் கோவில் – பரிமளம் மிக்க செந்தாமரை மலராகிய தவிசினைக் கொண்ட மனையில்,
குடியிருக்கும் -தங்கியிருக்கின்ற,
பரிமளக் கோமளக் கொடி வல்லி – வாசனை வீசும் அழகுடன் கூடிய வல்லிக்கொடிபோன்றவளும்,
மா மதுரவாயாள்… சிறந்த இனிப்பான வாயினையுடையவளும்,
குழைக்கா தன்நாயகி எனும் – குழைக்காதனாச்சியார் என்னும் பெயரினையுடையவளும் (ஆகிய),
சிந்துரப் பிடியொடும் விளையாடும் – சிந்தாரமென் னும் ஒருவகைச் செம்பொடியாலாகிய திலகத்தை யணிந்துள்ளபெண்யானையோடும், விளையாடும்,
மழ களிறு -(மகிழ்ந்து) விளையாடுகின்ற இளமையுள்ள ஆண் யானை போன்றவனே
செங்கீரை ஆடி யருள் –;செல்வத் திருப்பேரை வல்லிக்கு மணவாள -; செங்கீரைஆடியருள் –
———–
ஓள்ளொளி விரித்தசெறு கிண்கிணிய நூபுரமும்
உபயசர ணத்தினாட
ஒளிர்மணிப் பட்டாடை யாடவரை வடமாட்
உச்சியின் மிலைச்சுபரிதி
நள்ளிடை வயங்குபொற் சூழியத் தொகையாட
நகுநிலா முறுவலாட
நவமணிச் சுட்டியொடு கட்டுபொற் பட்டமு
நன்னுதற் பொட்டுமாடத்
துள்ளியெறி திரைமகர சலராசி படுசெழுந்
துய்யசெம் பவளமேனி
தொய்யக் குழைந்தாடு பண்டியுந் தொந்தியுந்
துணைநெடுங் குழையுமாடத்
தெள்ளமுத மணிவாயி னுள்ளொழுகி வழியவே
. செங்கீரை யாடியருளே
“செல்வத் திருப்பேரை வல்லிக்கு மணவாள!
செங்கீரை யாடியருளே.–20-
ஒள் ஒளி விரித்த – மிக்கவொளிபரவவிடுத்த,
செறு கிண்கிணிய – நெருங்கிய கிண்கிணிச் சதங்கையோடுகூடிய,
நூபுரமும் – சிலம்பும்,
உபய சரணத்தின் ஆட . இருபாதங்களிலும் ஆடி யொலிக்கவும்,
ஒளிர்மணிப் பட்டாடை ஆட – விளங்குகின்ற அழகிய வெண்பட்டாடை இடுப்பில் விளங்கவும்,
அரை வடம் ஆட. அரையிற்கட்டிய ஞாண்கயிறு அசையவும்,
உச்சியின் மிலைச்சு -தலையின்மேல் சூட்டியுள்ள,
பரிதி . வட்டவடிவமாய் உள்ளதும்,
நள்ளிடை வயங்கு பொன் . நடுநிசியில் மிக்கு ஒளிர்கின்ற பொன்போல உள்ளதுமான,
சூழியத்தொகை . உச்சிக் கொண்டையிலணிந்துள்ள ஆபரணத்தின் சேர்க்கை,
ஆட – ஒருங்கு அசைந்துஆடவும்,
நகு நிலா முறுவல் ஆட – விளங்குகின்ற நிலவுபோன்றபுன்சிரிப்பு தோன்றி ஒளிரவும்,
நவமணிச் சுட்டியொடு – ஒன்பது வகை மணிகளும் பதித்த சுட்டியென்னும் ஆபரணத்தோடு,
கட்டு பொன் பட்டமும் – நெற்றியில் (அழகுறக்) கட்டியுள்ள பொன்னாலாகிய தகடும்,
நன்னுதல் பொட்டும் ஆட . நல்லநெற்றியில் இட்டுள்ள திலகமும் ஒளிரவும்,
துள்ளி எறி திரை – பொங்கிவந்து கரையின் மேலெறிகின்ற அலைகளையும்,
மகரம் – மீன்களையும் கொண்ட,
சலராசி – சமுத்திரத்தில்,
படு – உண்டாகின்ற.
செழும்துய்ய செம் பவளம் – செழிப்பான பரிசுத்தமான சிவநீத பவளம் போன்ற,
மேனி – உடம்பு,
தொய்ய . தளர்வுபடும்படி,
குழைந்துஆடும் – நெகிழ்ந்து அசைகின்ற,
பண்டியும்- வயிறும்,
தொந்தியும் -தசைடடிப்பும்,
துணைநெடுந் குழையும் ஆட – இரண்டுநீண்ட காதணிகளோடும் ஆடியசையவும்,
தெள் அமுதம் – தெளிந்ததேவாமிர்தம் போல் இனிய
சொள்ளுநீர், மணி வாயினுள் ஒழுகிவழிய – அழகிய வாயினின்று பெருகி வழியும்படியும்,
செங்கீரை ஆடியருள்–; செல்வத் திருப்பேரை வல்லிக்கு மணவாள -; செங்கீரைஆடியருள்
நவமணிகளாவன –
கோமேதகம், நீலம், பவளம், மரகதம், மாணிக்கம், முத்து, புருட ராகம், வைடூரியம், வயிரம் ஆகிய ஒன்பதுவகை ரத்தினங்கள்,
———-
நிரையும்ப சும்பொனணி மாடகூ டமூமேடை
நிழன் மணிச். சாளரத்து
தெடுநிலா முற்றத்தும் வாவிதொறு நீராடி
நிறைநறுத் தாதுபூசி
வருமந்த மாருதத் திராயமென் காலசைய
மாவிளங் குயில்கள்கூவ
மயிலாட வளிபாட வேனில்வே எரசுபுரி
வழுதிவள நாடுதழைய
விரையுந் தடம்புனல் பெருக்கா றெடுத்தோட
வெழின் மயிற் றழைபீலியும்
இணையிலா மணியு மாரமும்யானை வெண் கோடும்
எற்றியெற் நிச்சுருட்டித்
திரைவந்து தரைமோது பொருநையந் தண் ௫றைவ !
செங்கீரை யாடியரூளே
செல்வத் திருபேரை வல்லிக்கு மணிவாள!
செங்கீரை யாடியருளே.–21-
பசும் பொன் அணிமாட நிரையும் . பைம்பொன்றாலழகு பெற்ற மாடங்களின் “வரிசையிலும்,
கூடமும் – மேலிடங்களிலும்,
மேடை – வேதிகைகளிலும்,
மணி நிழல் சாளரத்தும் -(பதித்துள்ள) மணிகளினொளியைப் பிரதிபலிக்கின்ற பலகணிகளிலும்,
நெடு நிலா முற்றத்தும் – நீண்டநிலா வெளிச்சம் பயிலும்
முற்றங்களிலும், (தங்கி வந்து பின்பு)
வாவி தொறும் நீராடி – நீர் நிலைகளொவ்வொன்றிலும் படிந்து,
நிறை – (தன்மேனி) நிறைய,
நறுந் தாது பூசி – பரிமளம் மிகுந்த மகரந்தத் துகள்களைப்பூசிக் கொண்டு,
வரும் – மெல்ல (நடையிட்டு) வரும்,
மந்த மாருதத்து இளைய மென் கால் அசைய – மெல்லிய தென்றலின் முதிராத மென்மையான சிறுகாற்று வீச, (இளவேனில் வருதல்கண்டு) மாஇளங் குயில்கள் கூவ -(துளிர்த்த) மாமரங்களில் இளைய குயிற்பறவைகள் இனிமையாகக் கூவ,
(அதனிசைகேட்டு) மயில் ஆடமயிற்பறவைகள் (தமது தோகைகளை விரித்து) ஆட,
அளி பாட -(அவற்றின் ஆட்டத்திற்கேற்ப) வண்டுகள் பண்களைப்பாட,
(இங்ஙனம்) வேனில் வேள் ஆசு புரி இளவேனிற்பருவத்தின் தலைவனாகிய மன்மதன் அரசாட்சி செய்கின்ற,
வழுதிவள நாடு தழைய -பாண்டி வளநாடு செழிக்கும்படி,
விரையும் . வேகமாகப் பாய்ந்து வருகின்ற,
தடம் புனல் பெருக்காறு – மிக்கநீரைக் கொண்டு பெருகும் ஆறானது,
எடுத்து ஓட – அடித்துக்கொண்டு ஓடி வர, (அதனால்)
எழில் மயில்தழை பீலியும் – அழகுமிக்க மயிலினது பீலித்தொகுதிகளும்,
இணையிலா மணியும் – ஒப்பற்ற இரத்தினங்களும்,
ஆரமும்-சந்தனக்கட்டைகளும்,
யானை வெண்கோடும் . யானையினுடைய வெள்ளிய தந்தங்களும்,
எற்றி எற்றிச் சுருட்டி – மோதிமோதிச் சுருட்டிக் கொண்டு,
திரை – அலைகள்,
வந்து – வீசிவந்து,
தரைமோதும் – கரையிலே தாக்கி ‘யொதுக்கும்,
பொருதை – தாமிரபர்ணி நதியின்,
அம் தண்துறைவ ! அழகிய குளிர்ந்த நீர்த் துறைகளை -யுடையவனே?
செங்கீரை ஆடியருள்–; செல்வத் திருப்பேரை வல்லிக்கு மணவாள ! –, செங்கீரை ஆடியருள்–;
———–
எத்திக்கும் வண்புகழ் தழைத்ததிரு வாய்ப்பாடி
இடையர்தம் குடில்கடோறும்
இடுகயிற் றுநியடுக் கியமணி கலசத்
திருக்குமந் தயிர்க்கட்டிகண்
டொத்திக்கை யிட்டுரல் மிதித்தேறி யடிகுந்தி
ஒருதிவலை சிந்தாமலே |
ஒண்பவள வாய்மடுத் துண்டிடுங் கள்வனென்
றுரலொடு கட்டி யவர்கை
மத்திட் டடிப்பவிரு கண்பிசைந் தழுதரையின்
மணிபொத்தி யோடிமறுகால்
வாயூறி யச்சுவை கனிந்தாச்சி யாடைபட
வற்றக் கறந்துகாய்ச்சுந்
தித்தித்த பாலுக்கு மிச்சித்து நின்றவா!
செங்கீரை யாடியருளே
செல்வத் திருப்பேரை வல்லிக்கு மணவாள!
செங்கீரை யாடியருளே,–22-
௭த்திக்கும் – எல்லா விடங்களிலும்,
வண்புகழ் தழைத்த வளப்பம்பொருந்திய புகழ் பரவும்படி செழித்த,
திருவாய்ப்பாடி இடையர் – கோகுலத்திலிருந்த ஆயர்கள்,
தம் குடில்கள்தோறும் – தமது குடிசைகள் ஒவ்வொன்றிலும்,
இடு-கட்டிவைத்துள்ள,
கயிற்றுஉறி – கயிற்றிறாலாகிய உறிகளில்,
அடுக்கிய – ஒன்றன் மேலொன்றாகஅடுக்கியுள்ள,
மணி கலசத்து . அழகியபானைகளில்,
இருக்கும் .தோய்ந்திருக்கும்,
அம் தயிர் கட்டி கண்டு . நேர்த்தியான கட்டித்தயிர்களைப் பார்த்து
ஒத்தி – தொட்டு,
கை இட்டு . (தன்) கைகளைஉள்ளே வைத்து (அது முற்றும் எட்டாமல் இருப்பவே),
உரல்மிதித்து ஏறி – (அங்கிருந்த பொத்தை)உரலைக்கவிழ்த்து அதன் மேலே மிதித்து ஏறி,
அடி குந்தி -பாதங்களைக்கொண்டு உட்கார்ந்து,
ஓரு திவலை சிந்தாமலே – ஒருதுளி தயிர்கூடக் கீழே சிந்தாதபடி(சாமர்த்தியமாக),
ஒண் பவள வாய்மடுத்து – அழகிய பவளம் போன்ற இதழ்களையுடைய வாயினை நெருங்கவைத்து,
உண்டிடும்கள்வன் என்று – சுவைத்துண்ணும் திருடனென்று (பட்டங்கட்டி),
உரலோடு கட்டி – (ஆங்கிருற்த) உரலோடு (கண்ணிநுண் சிறுத்தாம்பினால்) பிணித்து,
அவர் -அந்தஇடையர்கள்,
கைமத்திட்டு அடிப்ப–(தமது) கைகளால் மத்தினைக்கொண்டு அடிப்பதுபோல் மிரட்ட
(அதனைக்கண்டு அஞ்சியவன்போல) இருகண் பிசைந்து அழுது -(தனது) இரண்டு கண்களையும் (தனது கைகளால்)
கசக்கி யழுது,
அரையின் மணி பொத்தி – (தனது) இடுப்பில் அரைஞாணில் கட்டியிருந்த சிறுமணியின் நாக்கினை (அது ஒலிசெய்யாதவாறு) பிடித்துக்கொண்டு,
ஓடி – தெருவிலே ஓடிப்போய்,
(சிறிதுநேரம் கழித்துத்திரும்பிவந்து)– மறுகால் – மறுபடியும்,
ஆச்சி – ஆயர்மகள் (யசோதை),
வற்றக் கறந்து – (பசுவின்மடியில் சிறிதுபாலும் இல்லாதவாறு) முற்றக்கறந்து,
ஆடை படக் காய்ச்சும் – பாலேடுஉண்டாகும்படி நன்கு காய்ச்சுகின்ற,
தித்தித்த பாலுக்கும் . இனிப்பான(ஆவின்) பாலுக்கும்,
வாய் ஊறி – வாயில் (பருகும் அருத்தியினால்)நீர்சுரந்து,
அ சுவை கனிந்து – அந்த நீரின் சுவை முற்றி. (அந்தப் பாலுக்கும்) இச்சித்து
நின்றவா ! – விரும்பி நின்ற கள்வனே !
செங்கீரை ஆடியருள்–; செல்வத் திருப்பேரை வல்லிக்கு மணவாள !—,
செங்கீரை ஆடியருள்–;
“வெண்தயிர்தோய்ந்த செவ்வாயும்”*, “மோரார்குடமுருட்டி’”, தாயெடுத்த சிறு கோலுக்குளைந்தோடித் தயிருண்ட, வாய்துடைத்த மைந்தனுக்கு
இழந்தேன் என் வரிவளையே —அஞ்சவுரப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டிருக்கும்? என்றது ஆண்டாள் வாக்கு.
இதனைப்பாடவந்த நம்மாழ்வார் ‘‘மத்துறுகடை வெண்ணெய்களவினில் உரவிடை யாப்புண்டு, எத்திறம்
உரலிணொடிணைந்திருந்தேங்கிய எனிவே?” என்று வாய்வெரீஇ ஆறுமாதம் மோஹித்துக் கிடந்தார்,
“தித்தித்த பாலுந் தடாவினில் வெண்ணெயும், மெத்தத் திருவயிரார விழுங்கிய அத்தன்”? என்று ஈடுபட்டார் பெரியாழ்வார்.
தாதவிழ் பசுந்துளவ மாலையா டச்சிறிய
தமனியச் சுட்டியாடத்
தருணமர கதவயிர வலயமா டப்பொற்
றடந்திருத் தோள்களாடக்
காதுதரு மணிமகர குண்டலமு மாடக்
கவின் பொலிய மேனியாடக்
கதிர்முத்து வடமாட மதுரித செந்தமிழ்க்
கற்றவர்கள் கொண்டாடவே
வாதுபுரி கொடியசே னாபதி யிராவணன்
மனவலிகள் திண்டாடநீள்
வானத் திருந்துதுந் துபியாட மலர்மாரி
வானவர் பொழிந்தாடவோர்
சீதர முகுந்தபே ராயிர முகந்தவா !
செங்கீரை யாடியருளே
செல்வத் திருப்பேரை வல்லிக்கு மணவாள !
செங்கீரை யாடியருளே.--23-
தாது அவிழ் பசும் துளவமாலை ஆட – புறவிதழ்கள்
விரிந்து பசிய திருத்துழாய்மாலை மார்பினில் ஆட,
தமனிய சிறியசுட்டி ஆட – பொன்னாலாகிய சிறிய சுட்டியென்னும் தலையுச்சி யாபரணம் ஆட,
தருண மரகத வயிர வலயம் ஆட – ஏற்ற அழகு பொருந்திய மரகதம் வயிரம் இவற்றாலாகிய கைவளையங்கள் ஆட,
பொன் தட திரு தோள்கள் (வலயம்) ஆட – அழகிய பரந்த சிறந்த தோள்களில் வளையங்கள் ஆட,
காது தரு மணி மகர குண்டலமும் ஆட . காதுகளில் தொங்குகின்ற மணிகளாலாகிய மகரகுண்டலகளும் ஆட,
கவின் பொலியும் மேனி ஆட – அழகு விளங்குகின்றஉடம்பும் ஆட,
கதிர் முத்து வடம் ஆட – ஒளி வீசும் முத்துச்சரம் மார்பில் ஆட,
மதுரித செந்தமிழ் – இனிமையான செவ்விய தமிழ் மொழியை,
கற்றவர்கள் – பயின்றமகான்கள்,
கொண்டாட.(நும்மைப்)பாராட்ட,
வாதுபுரி – (விதண்டா) வாதஞ் செய்தலில் வல்ல,
கொடிய சேனாபதி -. கொடுமையையுடைய சேனைத்தலைவனாகிய பிரகஸ்தன்,
இராவணன் – அவனுக்கும் தலைவனாகிய இராவணன்
(இவர்களது),மன வலிகள் திண்டாட .- மனோதிடங்கள் சிதறுண்டு , அலைய,
(அதுகண்டு) நீள் வானத்திருந்து துந்துபி ஆட – நீண்ட ஆகாசத்திலிருந்து துந்துபியென்ற தேவ வாத்தியம் முழங்க,
வானவர் மலர்மாரி பொழிந்து ஆட – தேவர்கள் பூமழை சொரிந்து (ஆனந்தத்தால்) கூத்தாட,
ஒர் பேர் ஆயிரம் உகந்தவா – ஒப்பற்ற ஆயிரநாமங்களை (சகஸ்ரநாமங்களை) விரும்பி யேற்றுக் கொண்டவனே
ஸ்ரீ தர . திருமகளை மார்பில் தரித்தவனே.
முகுந்த – முகுந்தனே !
செங்கீரைஆடியருள்–;செல்வத் திருப்பேரை வல்லிக்கு மணவாள ।!— செங்கீரை ஆடியருள்
முகுந்தன் என்பதற்கு – முத்தியுலகவின்பத்தையும் இவ்வுலகவின் பத்தையும் (தன். அடியார்க்குத்) தருபவனென்று பொருள் ; மு- முக்தி, கு- பூமி, த- கொடுப்பவன்.
————
அலைஉளைக் குங்கருங் கடலும்வான் முகடுதொடும்
அம்பொற் கொடிக்குழாமொய்த்
தாதவன் பொற்றடந் தேர்தடுக் குஞ்செம்பொன்
அணிமாட கூடங்களும்
நிலைவளைக் கும்புக பிலங்கா புரத்திறைவன்
நெடியரா வணன் மகுடமும்
நீலிதா டகைமார்பும் மாரீச னும்பார
நெட்டூர வதிகாயனுங்
கொலைவளைக் குங்கும்ப கன்னனு நிகும்பனும்
குறுகாத வல்லசுரரும்
கொடியவா லியுமரா மரமேழு முருவக்
குழைத்துவடி வாளிதொடவெஞ்்
சிலைவக௯சக் குந்திருக் கைத்தா மரைக்கொண்டல் !
செங்கீரை யாடியருளே
செல்வத் திருப்பேரை வல்லிக்கு மணவாள !
செங்கீரை யாடியருளே.–24-
அலை வளைக்கும் கருங்கடலும் – அலைகள் சூழ்ந்துவரும் கரிய கடலும் ;
வான்முகடு தொடும் அம் பொன் கொடிக்குழாம் மொய்த்து – ஆகாயமுகட்டினை யெட்டும் அழகிய பொன் போல் ஒளிரும் துவசத் தொகுதிகள் நெருங்கி,
ஆதவன் பொன்தேர் தடுக்கும் – சூரியனின் அழகிய தேரினைச் செல்லவிடாது தடைசெய்யும்,
செம் பொன் அணி மாட கூடங்களும் – சிறந்த பொன்னினாலாகிய அழகிய உபரிகைகளும் கோபுரங்களும் ;
நிலைவளைக்கும் புகழ் – பூமிமுற்றும் பரவியுள்ள கீர்த்தியையுடைய,
லங்கா புரத்து இறைவன் – இலங்கை நகரின் அரசனாகிய
நெடிய ராவணன் மகுடமும் . உயரமான இராவணனின் கிரீடத் தையும் ;
நீலி தாடகை மார்பும் – கரிய தாடகையின் உரத்தினையும்;
மாரீசனும் – (மாயமானாகவந்த) மாரீசனையும் ;
பார நெட்டூர அதிகா யனும் – பருத்தகொடிய அதிகாயனையும் ?
கொலை வளைக்கும் கும்ப கன்னனும் -கொலைகளைமிகுதியாகச்செய்யும் கும்பகர்ணனையும் ;
நிகும்பனும் – (அவன் மகனாகிய) நிகும்பனையும் ;
குறுகாத வல்லசுர ரும் – போர்க்களத்துவாராத கொடிய அசுரர்களையும் ;
கொடிய.வாலியும் – கொடிய வாலியையும் ;
மராமரம் ஏழும் – ஏழுஆச்சா மரங்களையும் ;
உருவ – ஊடுருவிச்சென்று பாயும்படி,
வடி வாளி – கூர்மையான அம்பினை,
குழைத்து தொட – தழையச் செய்து விடுப்பதற்கு,
‘ வெம் சிலை வளைக்கும் – கொடிய கோதண்டம் என்னும் வில்லை வளைக்கும்,
தாமரை திருக்கை – தாமரை போன்ற அழகிய கைகளையுடைய,
கொண்டல் – மேகம்போன்றவனே
செங் கீரை ஆடியருள்–; செல்வத் திருப்பேரை வல்லிக்கு மணவாள — செங்கீரை ஆடியருள்–;
———–
தாலப் பருவம்
கயங்கொண்டலம்பித் திரையெறியுங்:
கடல் சூழ் உலக முழுவதும்வெண்
கவிகை நிழற்கீ மினிதடக்கிக்
கரூணை புரிந்து நாடொறுநின்
நியங்குஞ் சரங்க ளனைத்தையுமற்
றெல்லா வுயிருந் தன்னுயிர்போல்
இரங்கிக் காக்கு மரசர்பிரான்
எங்கோன் றசர தப்பெருமான்
முயங்கும் பிராட்டி மாமூவர்
அவர்க்குண் முதன்மைத் தலைவியெனும்
முற்று முலைக்கோ சலைவயிற்றில்
முளைத்து மடிமேற் கிடந்துதனி
வயங்குங் கிரண மரகதமா
மணியே! தாலோ தாலேலோ
மகரக் குழைய! யென்னிருகண்
மணியே! தாலோ தாலேலோ. –25-
கயம் கொண்டு – யானைச்சேனையைக் கொண்டு,அலம்பி – (பகையரசர்களைக்) களைந்துவென்று,
திரை எறியும் கடல்சூழ் உலகம் முழுவதும் – அலைகள் வீசுகின்ற கடல் சூழ்ந்த நிலவுலகம் முழுவதையும்,
வெண் கவிகை நிழற்கீழ் இனிது அடக்கி -(ஒற்றை) வெண்கொற்றக்குடையின் திழலின்கீழே தங்குமாறு (ஏக சக்ராதிபதியாய்) சுகம்பெறப் பணியவைத்து,
கருணை புரிந்து -அருள்கொண்டு ஆட்சிசெய்து,
நாள்தோறும் – தினந்தோறும்,
நின்று – நிமிர்ந்து நின்று,
இயங்கும் . சஞ்சரிக்கின்ற,
சரங்கள்அனைத்தையும் – மக்கள்போன்று நடமாடும் ஜீவன்களெல்லாவற்றையும்,
மற்று – மேலும்,
எல்லா உயிரும் . ஏனைய விலங்குபோல்(குறுக்காக வளரும்) பிராணிகளையும்,
தன்னுயிர்போல் இரங்கிக்காக்கும் – தனக்குரித்தாய உயிர்போல் கருணையொடு பாதுகாக் கின்ற,
அரசர் பிரான் – மன்னர்மன்னனும்,
எம் கோன் _ எங்கட்குத்தலைவனுமாகிய,
தசரதப்பெருமான் – தசரதமகாசக்கரவர்த்தி,
முயங்கும் – தழுவும்,
பிராட்டி – தேவியர்,
மா மூவர் – சிறந்த மூன்றுபேராவர் :
அவர்க்குள் – அம் மூவர்க்குள்,
முதன்மைத் தலைவி யெனும் – முதல் பட்டமகிஷியென்று வழங்கப்பெறும்,
முற்றா முலைக் கோசலை வயிற்றில் – முதிராத(இளையவாய) கொங்கைகளைக்கொண்ட கெளசல்யா தேவி திருவுதரத்தில்,
முளைத்து – தோன்றி,
மடிமேல் கிடந்து – (அவளது) மடியின்மேல் படுத்து வளர்ந்து,
தனி வயங்கும் – தனிப்பட (ஏனையோர்க்கில்லாதபடி) விளங்குகின்ற,
கிரணம் – பொலிவுடன் கூடிய,
மரகத மா மணியே – (பச்சை நிறம்படைத்த) சிறந்த மரகத மணியைப் போன்றவனே .
தாலோ தாலேலோ–;
மகரக்குழையே !-மகரக்குழைக்காதனே ,
என் இரு கண்மணியே – என்னுடைய இரண்டு கண்ணுள் மணிபோல் போற் றத்தக்கவனே !
தாலோ தாலேலோ–;
பண்ணார் மதுரம் பழுத்தொழுகிப்
பாகூற் ழிருந்து கனிந்தமொழி
பவளத் திருவாய் மணிமுறுவற்
பங்கே ருகக்குங் குமச்சுவட்டுப்
பெண்ணா ரமுதத் திருமடந்தை
பிரியா மருமத் தினிதிருக்கும்
பேரா யிரம்பெற் றுடையதிருப்
பேரைப் பிரானே ! முறுக்கவிழ்பூந்
தண்ணார் துளவப் புயசயில
தாமோ தர! சீதர/ முகுந்த!
குமரக் கடலிற் புனல்முகந்து
தழைக்குங் கமஞ்சூற் கார்மேக
வண்ணா 1! வுலகன் றளந்தநெடு
மாலே ! தாலோ தாலேலோ
மகரக் குழையே ! நூற்றெண்மர்
வாழ்வே ! தாலோ தாலேலோ,–26-
பண் ஆர் மதுரம் பழுத்து ஒழுகி – இராகம் பொருந்திஇனிமைமுதிர்ந்து பெருகி,
பாகு ஊற்றிருந்து – வெல்லப்பாகினில் ஊறியிருந்தது போல் சுவையொடுகூடி,
கனிந்த மொழி – கொஞ்சும்மொழியினையுடைய,
பவளத்திருவாய் – பவளம் போற்சிவந்த இதழ்களைக்கொண்ட அழகிய வாயினிற்றோன்றும்,
மணி முறுவல் _அழகிய புன் சிரிப்பினை க்கொண்ட,
குங்குமச் சுவட்டுப் பங்கேருகம் -குங்குமக்குழம்பு பூசப்பட்டகுறிகளையுடைய தாமரைமொட்டினையும்
கொண்ட, பெண்ணார் அமுதத் திருமடந்தை – பெண்ணுக்குரிய நற்பண்புகள் அனைத்தும் நிறைந்த தேவாமிர் தம்போன்ற இலக்குமிதேவி,
பிரியா – (இறையேனும்) விட்டுப்பிரியாதபடி,
மருமத்து- மார்பினில்,
இனிது இருக்கும் – சுகமாக எழுந்தருளியிருக்கும், பேராயிரம் .பெற்றுடைய – சகஸ்ர நாமங்களைக்கொண்ட,
திருபேரைப்பிரானே -தென் திருப்பேரை நகர்க்குத் தலைவனே
முறுக்கு அவிழ் பூந் தண்ணார் துளவம் – கட்டவிழ்ந்த பூந்தாதுகளைக்கொண்டு குளிர்ச்சிபொருந்திய திருத்துழாய்மாலையைத்தரித்த,
சயிலபுய – மலைபோன்றதோள்களையுடைய,
தாமோதர ! – தாமோதரனே !
சீதர… சீதரனே !
முகுந்த – முகுந்தனே !
தமரக்கடவில் – (எப்போதும்) ஒலிக்கின்றகடலினின்று,
புனல்முகந்து . நீரை மொண்டு கொண்டு,
தழைக்கும் -செழிக்கும்,
கமம் சூல்-நிறைந்த கருப்பத்தைக் கொண்ட,
கார்மேகம் -கருநிறங்கொண்ட மேகத்தைப்போன்ற,
வண்ணா ! – நிறம் படைத்தவனே
அன்று உலகு அளந்த நெடுமாலே – திரிவிக்ரம அவதாரம்
எடுத்த போது மூவுலகங்களையும் ஈரடியால் அளந்திட்ட நீண்ட திருமாலே !
தாலோ தாலேலோ — ;
மகரக்குழையே .
நூற்றெண்மர் வாழ்வே : – நூற்றெட்டுச் சாமவேதிகசுடைய நல் வாழ்ச்சிக்குக் காரணமாகுபவனே :!
தாலோ தாலேலோ –
முளைக்குந் தவளக் கற்றைநிலா
மூழுவெண் டிங்கட் டிருவதன
முற்றா முலைக்கோட் டரமகளிர்
முதுபே ராயத் தவர்மருங்கிற்
கிலாக்குங் கொடிபோற் கொடிநுடங்க
வெழின்மா மணிச்சூளி கைமுகட்டி
னிணக்கும் பசிய மரகதங்கான்
நெறிக்குங் கிரணக் கொழுந்தோடிக்
கிளாக்குந் துணர்க்கற் பகச்சோலைக்
கிடையே தகைய வாகாச
கெங்கைக் கரையிற் பசும்புல்லெனக்
கிட்டிச் சுரபி மணிநாவால்
வளைக்கும் பசும்பொற் றலங்கள்மலி
வளஞ்சேர் நாடா ! தாலேலோ
மகரக் குழையே ! நூற்றெண்மர்
வாழ்வே 1! தாலோ தாலேலோ,–27-
முளைக்கும் தவளக் கற்றை நிலா – உதிக்கின்ற வெண்
மையான நிலாத்தொகுதியைக்கொண்ட,
முழு வெண் திங்கள் -வெள்ளிய பூர்ணசந்திரன் போன்ற,
திரு வதனம்-அழகிய முகத்தினையும்,
முற்றா முலைக்கோட்டு-முதிராத (இளைய)கொங்கையுச்சிகளையும்உடைய,
அரமகளிர் – தேவமாதரின்,
முது பேராயத்தவர் – பழகிப்பயின்ற பெரியதோழியர்கூட்டத்தினரின்,
மருங்கிற்கு – (சிறிய)இடைக்கு,
இளைக்கும் . தோற்றுப்போன;
கொடிபோல் – பூங்கொடிபோல் (வெட்கி),
கொடி நுடங்க. (மாளிகைகளின்மேல் நாட்டியுள்ள)துவசங்கள் அசைய,
எழில் மா மணி சூளிகை முகட்டின் – அழகு பொருந்திய பெரிய பளிங்குமணிகள்பதித்த உச்சியறைகளின் மேற்பகுதியில்,
இணக்கும் – இசைவுறப் பதித்திருக்கும்,
பசிய மரகதம்பச்சை மரகதமணிகள்,
கான்று – கக்கி,
எறிக்கும் . வெளிச்சொரியும்,
கிரணக்கொழுந்து ஓடி – ஒளியின்கீற்றுக்கள் பரவியோடி,
கிளைக்கும்-முளைத்துள்ள,
துணர் – கொத்துக்களைக்கொண்ட,
கற்பகச்சோலைக்குஇடையே – கற்பகக் காவினுக்கு நடுவிலே,
தளைய – தடைபட்டுநிற்க [அவற்றை]
ஆகாசகங்கைக் கரையில் பசும்புல்லென – ஆகாய
கங்கையின் கரையிலேமுளைத்துள்ள பச்சைப்புல்லென்றுமயங்கி,
சுரபி கிட்டி – காமதேனுவாகிய பசு நெருங்கி,
மணி நாவால் வளைக்கும் -(அதனையுண்ணத் தனது) அழகிய நாக்கினால் வளைக்கும்படியான,
பசும்பொன் தலங்கள் மலி – பசியபொன்னிடங்கள் (பலவாகச்) செறிந்துள்ள,
வளம்சேர் நாடா — வளப்பம் பொருந்திய பாண்டி நாட்டுக்குத் தலைவனே —
தாலேலோ–; மகரக் குழையே !–, நூற்றெண்மர் வாழ்வே –, தாலோ தாலேலோ–
———
இடிக்குங் கடுஞ்சொற் கொடும்பாவி
இழைக்குந் தறுகட் கஞ்சன்விடுத்
திடுகோக் களிற்றின் புகர்முகத்தின்
ஏந்தும் பிறைக்கிம் புரிமருப்பை
ஒடிக்குந் தடக்கைச் செழும்புயலே!
உணர்வுக் குணர்வே!யென்னுயிரே!
ஒழியாப் பிறவிக் கடல்சுவற்றி
உயர்வீ டளிக்கும் பெருமானே!
முடிக்கும் பசுந்தண் டுழாய்மாலை
முடிக்குங் குழகா! வானவர்க்கும்
முதுநான் மறைக்கு மெட்டாத
மூலப் பொருளே! பாகுபெற
வடிக்குந் தமிழ்த்தென் நிருப்பேரை
மாலே! தாலோ தாலேலோ
மகரக் குழையே! நூற்றெண்மர்
வாழ்வே! தாலோ தாலேலோ.--28-
இடிக்கும் கடுஞ்சொல் – (கேட்போர்) காதில்வந்து மோதும்படி கொடிய சொற்களைப் பேசுகின்ற
கொடும் பாவி- துஷ்டனணான பாவி,
தறுகண் இழைக்கும் கஞ்சன் – கொலைகளைச் செய்யும் கம்சன்,
விடுத்திடு – (தன்னைக் கொல்லும்படி) ஏவிய,
கோகளிற்றின் – பட்டத்து யானையாகிய குவலயாபீடத்தின்.
புகர்முகத்தின் – புள்ளிகளையுடைய முகத்திலே,
ஏந்தும் – தாங்கியுள்ள(முளைத்துள்ள),
கிம்புரி பிறை மருப்பை – பூணிட்ட பிறைச்சந்திரன்போல் வளைந்துள்ள தந்தத்தை,
ஒடிக்கும் – முறித்த,
தட கை செழும்புயலே – நீண்ட (வலிய) கைகளையுடைய செழித்த மேகம் போன்றவனே ?
உணர்வுக்கு உணர்வே – ஆன்மாவுக்கு ஆன்மா போன்றவனே !
என் உயிரே – எனது (அரிய) உயிர் போன்றவனே
ஒழியாபிறவிக்கடல் சுவற்றி – நீங்காத பிறவிகளாகிய கடலையும் வற்றச்செய்து,
உயர் வீடு அளிக்கும் பெருமானே – மேலான பரமபத்தை
வழங்கும் இறைவனே :
முடிக்கும் – சிரசுக்கும்,
பசும் தண் துழரய்மாலை – பசுமையான குளிர்ந்ததிருத்துழாய்மாலையையே,
முடிக்கும் -சூடும்,
குழகா – அழகனே !
வானவர்க்கும் – தேவர்களுக்கும்,
முது நான்மறைக்கும் – பழைய நான்கு வேதங்களுக்கும்,
எட்டாத -அறிய, மூடியாத,
மூலப்பொருளே ! – முதற்காரணனே ,
பாகுபெற- இனிமையுண்டாகும்படி,
வடிக்கும் – திருத்தமாகச் செய்த,
தமிழ் – தமிழ்மொழி பயில்கின்ற,
தென்திருப்பேரை மாலே! –தாலோ தாலேலோ–; மகரக்குழையே –, நூற்றெண்மர் வாழ்வே |- தாலோ தாலேலோ
உணர்வு – ஆன்மா :“ஒண்டாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு”(திவ்ய : முதல்திரு : 67) உணர்வுக்கு உணர்வு – பரமான்மா
என்றபடி.
———–
கருதுஞ் சமய மோராறுங்
களிக்கும் பொருளே ! யுவட்டெறியுங்
கருணைக் கடலே ! செழுங்கமலக்
கண்ணா ! கண்ணி னுண்மணியே!
திருக்குஞ் சின வா ளவுணர்பட
சிலைக்கால் வளைத்துப் போர்முகத்துச்
செல்லும் புயலே! யுறியில்வெண்ணெய்
திருடுங் குழகா! பேய்முலைப்பால்
பருகும் பவளக் கனிவாயா!
பசுந்தார்த் துளவ மணிமுகுந்த!
பங்கே ருகச்செஞ் சரண! நெடும்
படப்பாந் தளின்மே னடித்துநெட்டை
மருதந் தவழ்ந்து சகடுதைத்த
மாலே! தாலோ தாலேலோ —
மகரக் குழையே! நூற்றெண்மார்
வாழ்வே! தாலோ தாலேலோ,--29-
கருதும் சமயம் ஓர் ஆறும் – (யாவராலும்) எண்ணப்படு
கின்ற ஆறுவகைப்பட்ட மதங்களும்,
களிக்கும் பொருளே –மகிழ்ந்து (ஏற்றுக்) கொள்ளும் பரம்பொருளே !
உவட்டு எறியும் ௧ருணைக் கடலே : – பெருக்கெடுத்து வீசும் தயாசமுத்திரமே
செழுங்கமலக் கண்ணா — வளமுள்ளசெந்தாமரைமலர்போன்ற கண்களை யுடையவனே !
கண்ணின் உள் மணியே !-கண்களுக்குள்ளிருக்கும்மணிபோன்றவனே !,
திருக்கும் – மாறுபாடுடைய,
சின வாள் அவுணர் – கோயிக்குந்தன்மையுள்ள கொடிய அரக்கர்கள்,
பட – அழியும்படி,
சிலைக்கால்வளைத்து – வில்லின் தண்டத்தை (நாணேற்றி) வளைத்து,
போர்முகத்துச் செல்லும் – போர்க்களத்துக்குச் செல்லும், புயலே – மேகம்போன்றவனே ,
உறியில் வெண்ணெய் திருடும் குழகா ! – உறியின் மேல் (நன்கமைய வைத்த) வெண்ணெயைத் திருடியுண்ணும் இளை யோனே ,
பேய் முலைப்பால் பருகும் பவளக் கனிவாயா | – (தாய் போல்வந்த) பூதனையென்னும் பேயின் முலைப்பாலை(அவளுயிரோடு ஒருசேர)ப்பருகிய சிவந்த கனிபோன்ற வாயினையுடையவனே |
பசும்தார் துளவம் அணி முகுந்த !– பச்சைத்திருத்துழாய் மாலையைத்தரித்த முகுந்தனே 1,
பங்கேருகம் செஞ் சரண — தாமரை மலர் போன்ற செவ்விய பாதங்களையுடையவனே
நெடும் படப் பாந்த ளின்மேல் நடித்து – பெரியபடத்தையுடைய காளியனென்னும் நாகத்தின் தலையின்மேல் நடனஞ்செய்து,
நெட்டை மருதம் தவழ்ந்து – உயர்ந்து வளர்ந்திருந்த இரண்டு மருதமரங்களினிடையே தவழ்ந்துசென்று,
(பின்பு) சகடு உதைத்த .. சகடாசுரனை யழியும்படிஉதைத்த,
மாலே ! – திருமாலே
தாலோ தாலேலோ–; மகரக்குழையே -, நூற்றெண்மர் வாழ்வே !–, தாலோ தாலேலோ,
சமயம் ஆறு என்றது – ஒன்றோடொன்று மாறுபட்ட வைஷ்ணவம், சைவம், சாக்தம், செளரம், காணபதம், கெளமாரம் என்னும்
ஆறு வைதிகமென்னலாம் ; இனி, கபிலமதம், கணாதமதம், பதஞ்சலிமதம், அக்ஷபாதமதம், வியாசமதம் ஜைமிநிமதம் என்னும் ஆறு
வேதாந்தமதங்களையும் ; பெளத்தம், ஜைநம், பைரவம், காளாமுகம், லோகாயதம், சூநியவாதம் என்னும் ஆறு புறச்சமயங்களையும் குறிக்
கும் என்னலாம் ; இவற்றிற்கெல்லாம் ஏற்ற அந்தந்தத் தெய்வமாய்திருமால் வீற்றிருக்குந் தன்மையை **சமயமோராறும் களிக்கும்
பொருளே !*: என்பதால் பெறவைத்தார், *’இறைஞ்சுவாரிறைஞ்சப்பற்பல் தேவருமாகி”” என்றார் வில்லியாரும்.
——–
சொல்லற் கரிய கிரணநெடுஞ்
சுடரா மியினாற் கதிர்மறைத்த
சுருதிப் பொருளே! குருகூரன்
சொற்பா வமிரீதங் கனிந்தசெவிச்
செல்வக் குழகா! பாட்டயர்ந்து
சிறைவண் டலம்பிக் கண்படுக்குஞ்
செழுந்தார்த் துளவு மணங்கமழுஞ்
சிகரப் புய! பூ தர! முகுந்த!
அல்லிக் கமலப் பொகுட்டுமட
அனஞ்சேர் வழுதித் திருநாடா!
அடிவைத் தொருமூ வுலகமுமன்
றளக்கும் புயலே! சேறுடைக்கு
மல்லற் பழனத் திருப்பேரை
மாலே! தாலோ தரலேலோ
மகரக் குழையே! நூற்றெண்மர்
வாழ்வே! தாலோ தாலேலோ, –30-
சொல்லற்கு அரிய – பேச்சுக்கு நிலமல்லாத,
கிரணநெடும் சுடர் ஆழியினால்–ஓளிக்கற்றைகளை வெளிவிடுகின்ற பேரொளியைக் கொண்ட சக்கரப் படையினால்,
கதிர் மறைத்த – சூரியனை மறையவைத்த,
சுருதிப் பொருளே – வேத முதல்வனே !
குரு கூரன் – நம்மாழ்வாரின்,
சொற் பா அமிர்தம் கனிந்த – நல்ல சொற் களாலாகிய திருவாய்மொழிப் பாசுரங்களாகிய அமிர்தத்தைக்
கேட்டுக் கேட்டுச் சுவைத்துப் பழுத்த,
செவிச் செல்வக் குழகா – செவிச்செல்வத்தையுடைய அழகனே
சிறை வண்டு – இறகுகளை யுடைய வண்டுகள்,
அலம்பி – ஒலித்து,
பாட்டயர்ந்து – இசைப் பாட்டுக்களைப்பாடி,
கண்படுக்கும் – (பின்னர்) உறங்குகின்ற,
துளவுச் செழுந்தார் மணம் கமழும்-செழித்த திருத்துழாய் மாலையின் வாசனை வீசும்,
சிகரப் புய — உயர்ந்த தோள்களையுடைவனே
பூதர : – பூமியைத் தாங்குபவனே !
முகுந்த – முகுந்தனே
அல்லிக் கமலப் பொகுட்டு – புறவிதழ்களைக் கொண்ட தாமரைக் கொட்டையில்,
மட அனம் சேர் . மென்மையான அன்னப் பறவைகள் தங்கும், வழுதித் திருநாடா !–
பாண்டி நாட்டுக் குரிய வனே !
அன்று – (மாவலிபாற் சென்ற) அன்றையதினம்,
அடிவைத்து . உன்சிறுகாலடியைக்காட்டிவைத்து,
ஒரு மூவுலகமும் – ஒப்பற்ற மேல் கீழ் நாடு என்ற மூவுலகங்களையும்,
அளக்கும் புயலே | – [திரிவிக்கிரமனாகி] அளந்து கெரண்டமேகவண்ணனே |
சேறு உடைக்கும் – சேரறாகக் குழையும்படி உழுது மண்ணுண்டைகளை யுடைக்கும்படியுள்ள,
மல்லல் – வளப்பத்தையுடைய,
பழனம் -கழனிக&ாக் கொண்ட,
திருப்பேரை மாலே | — ; தாலோ தாலேலோ — ; மகரக் குழையே ! –, நூற்றெண்மர் வாழ்வே | –, தாலோதாலேலோ
“பெருமாள் மகுடம் சாய்க்கும்படி கவி பாடிய ஞானத் தமிழ்க்கடலே:”
இடையிற் ரொடியக் கனத்தடிகொண்
டிளகித் ததும்பிப் பணைத்திறுமாந்
தேந்துங் களபப் புளகமுலை
இலவத் துவர்வா யம்புயப்பொற்
பெடையைத் தழுவி யனுதினமும்
பிரியா திருக்குந் திருமார்பா!
பெருவா ரிதிசூழ் நிலவலயப்
பெண்ணுக் கிணங்கும் புயசயில!
படையிற் சுமந்த கொழுநுழைந்த
பழனக் கொழுஞ்சேற் றினில்வரம்பிற்
பாகு படுநெட் டிலைக்கரும்பிற்
பசும்பூங் காவில் மணலினில்வாய்
மடையிற் பணிலந் தவழ்பேரை
மாலே! தாலோ தாலேலோ
மகரக் குழையே! நூற்றெண் மர்
வாழ்வே! தாலோ தாலேலோ.--31-
இடை இற்று ஒடிய – இடுப்பு கட்டுவிட்டு ஒடியும்படி,
கனத்து பாரமாகி,
அடி கொண்டு- அடி புடைத்து, இளகி -(அதனால்) நெகிழ்ந்து, பணைத்து – பருத்து,
இறுமாந்து – செருக்கி,ஏந்தும் – நிமிர்ந்து நிற்கும்,
களபம் புளகம் முலை – சந்தனம் பூசப்பட்டு மயிர்க்கூச்செரியும் கொங்கைகளையும்,
இலவம் துவர் வாய் -இலவம் பூப்போலச்சிவந்த பவளம்போன்ற வாயினையும் உடைய,
அம்புயப்பொன் பெடையைத்தழுவி – இலக்குமியைத் தழுவி,
அனுதினமும் – தினந்தோறும் (எப்போதும்),
பிரியாதிருக்கும் – (அவளைவிட்டு) – நீங்காதிருக்கும்,
திருமார்பா | . அழகிய மார்பினையுடையவனே
பெரு. வாரிதி சூழ் நிலவலயப் பெண்ணுக்கு – பெரியகடல்
சூழ்ந்த பூமிதேவிக்கு,
இணங்கும் – தழுவுதற்குப் பொருத்தமா யிருக்கிற,
சயில புய! மலைபோன்ற தோள்களையுடையவனே |
படையில் சுமந்த கொழு – உழுபடைக்கலப்பையில் பொருத்தப் பட்ட கொழுமுனை,
நுழைந்த – ஊடுருவிச்சென்ற,
பழனக் கொழும்சேற்றினில் – வயலிலுள்ள குழைந்த சேற்றினிலும்,
வரம்பில் – வரப்புகளிலும்,
பாகு படு நெடு இலை கரும்பில் – வெல்லப்பாகு உண்டாக்குகின்ற நீண்டஇலைகளையுடைய கரும்புகளிலும்,
பசும் பூங்காவில் -பசுமையான பூஞ்சோலைகளிலும்,
மணலினில் – மணலிலும்,
வாய்மடையில் – மதகினிடங்களிலும்,
பணிலம் தவழ் – சங்குப்பூச்சிகள் தவழ்கின்ற
(வளப்பமுடைய), பேரை . தென்திருப்பேரையென்ற
நகரில் எழுந்தருளியுள்ள,
மாலே !–திருமாலே !
தாலோ தாலேலோ–; மகரக்குழையே !–, நூற்றெண்மர் வாழவே !–,தாலோ தாலேலோ–;
*அகலகில்லேன் இறையுமென்று அலர் மேல்மங்கையுறைகின்றனளாதலின், **அனுதினமும் பிரியாதிருக்குந்
திருமார்பா !?* என்றார். மார்பிற்கு அணி ஸ்ரீதேவியும், தோளுக்கு அணி பூதேவியும் ஆவள் என்றபடி. “*இன்துணைபதுமத்தலர்மகள்
தனக்கு இன்பன், நற்புவிதனக்கு இறைவன்”? என்றார் கலிகன்றியும்,
—–
அடியார் பிறவிக் கடல்சுவற்றி
அழியாப் பரம பதங்கொடுக்கும்
ஆழிப் புயலே! பணாமகுடத்
தடல்வா ளரவின் கண்பிதுங்க
நடியா நிற்கு மொருகுழக!
நாரா யண?!சீ தர! முகுந்த!
நண்ணும் புலவன் கணிகணன்பின்
நற்பாய் சுருட்டிச் சொற்றமிழ்க்குப்
படிமே னடக்கு மிரு சரண
பங்கே ௬க1வன் றனல்கொளுந்தப்
பாவைக் கொருகாய் கணைதொடுத்த
பாரப் புய। பூ தரத்திலங்கும்
வடிவார் திகிரிப் படைசுமந்த
மாலே / தாலோ தாலேலோ
மகரக் குழையே / நூற்றெண்மர்
வாழ்வே / தாலேலோ.–32-
அடியார் பிறவிக்கடல் சுவற்றி – (தனது) பக்தர்களது
பிறவியாகிய சாகரத்தை வற்றச்செய்து,
அழியாப்பரம பதம் கொடுக்கும் . என்றைக்கும் அழிவில்லாத மேலான மோட்சபதவியைக்
கொடுக்கும்,
ஆழிப்புயலே ! – திருப்பாற்கடலில் படிந்துள்ள மேகமே !
பணா மகுடத்து அடல் வாள் அரவின் – படங்கள் (ஐந்தினைத்) தலையிற் கொண்ட வலிய கொடிய காளியனென்னும் பாம்பின்,
கண்பிதுங்க – கண்கள் வெளிவந்துவிடும்படி (துரிதமாகவும் அழுத்த மாகவும்) நடியாநிற்கும் – (அதன் தலைகளின் மேல் கால்களால்)நடனஞ்செய்யும்,
ஒரு குழக – ஓப்பற்ற அழகுடையவனே |
நாராயண–।, ஸ்ரீதர–, முகுந்த–!,
நண்ணும் புலவன் கணிகணன் பின்(உன்னை நம்பிக்கச்சி) சேர்ந்த கணிகண்ணன் என்னும் புலவனுக்குப் பின்னாலே,
சொல் தமிழ்க்கு – அவன் ஆசிரியர் திருமழிசையாழ்வார் சொன்ன தமிழ்ப்பாடலுக்காக,
நல்பாய் சுருட்டி – தல்ல’பாயாகிய ஆதிசேடனைச்சுருட்டி (த்தலைமேல் வைத்துக்கொண்டுஎருத்து அலைப்ப) ,
படிமேல் நடக்கும் . தரையில் நடந்துசென்ற,
பங்கேருக இரு சரண ! .-தாமரைமலர்போன்ற உபய பாதங்களை யுடையவனே !
பாவைக்கு – சீதாபிராட்டிக்காக,
அன்று . (அணை கட்டிச்செல்ல நினைத்த) அன்றைத்தினம்,
அனல் கொளுத்த -நெருப்புப்பற்றியெரியும்படி,
ஒருகாய் கணை தொடுத்த – ஓப்பற்ற (ஆக்னேயாஸ்திரமாகிய) சடுசரத்தைத் தொடுக்கச் சித்தமாயிருந்த,
பாரப் புய ! . வலிய தோள்களையுடையவனே !
பூதரத்து இலங்கும் -மலையைப்போல விளங்குகின்ற,
வடிவார் – வலியவுருக்கொண்டுள்ள,
திகிரிப்படை – சுதரிசனம் என்னும் சக்ராயுதத்தை, ௬மந்த – வலக்கையில் தாங்கியுள்ள,
மாலே !– திருமாலே | தாலோ தாலேலோ– மகரக்குழையே :!–,. நூற்றெண்மர் வாழ்வே !–, தாலோதாலேலோ–;
கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி, மணிவண்ணா நீ கிடக்கவேண்டா — துணிவுடைய,
செந்நாப்புலவனும் போகின்றேன் நீயுமுன்றன், பைந்நாகப் பாய் சுருட்டிக்கொள்”?”
பாலாற்றங்கரையில் உள்ள 😕*ஓரிருக்கை”?
*கணிவண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி, மணிவண்ணாநீகிடக்கவேண்டும்-
துணிவுடைய, செந்தாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன், பைந்தாகப்பாய் படுத்துக் கொள்”?
குமர குருபரரும் இவ்வரலாற்றை?” பணிகொண்ட முடவுப் படப்பாய்ச் சுருட்டுப் பணைத்தேள் எருத்தலைப்பப், பழமறைகள் முறையிடப்
பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப் பசுங்கொண்டலே’” என்று பாராட்டுகின்றார். (மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் : காப்பு : 1 😉
——–
கருணை பெருகி யுவட்டெறியுங்
கண்ணு! நிரையின் பின்னடந்து
கானந் தழைப்பத் துணைக்கமல
கழற்கால் பின்னிக் கன்றொடுகுன்
றுருகும் படிவேய்ங் குழல்வாய்வைத்
தூதும் புயலே! அடியவர்தம்
ஒழியாப் பிறவித் துயரகற்றி
உள்ளத் திருக்குந் திருக்கறுத்து
நிருதர் குலமும் வேரறுத்த
நிமலா! சமரார்த் திடுந்திகிரி ‘
நீலக் குழகா ! மண நாற
நிறைக்கும் பசுந்தண் டுழாய்முகுந்த !
வருணன் பரவு மிருசரண !
மாலே [தாலோ தாலேலோ
மகரக் குழையே ! நூற்றெண்மர்
வாழ்வே ! தாலோ தாலேலோ.–33-
கருணை பெருகி உவட்டு எறியும் கண்ணா ! . தயை
மிகுந்து வெள்ளமிடும் கண்ணா !
நிரையின் பின் நடந்து – பசுக்கூட்டங்களின்பின்றால் நடந்து சென்று,
கானம் குழைப்ப -(அவைகள்) மேயும் காடுகள் செழிக்கும்படி,
துணைக் கமலக் கழல்கால்பின்னி-இரு தாமரைமலர் போல் மெல்லிய கழலணிந்த பாதங்கள்மாறவைத்து,
கன்றொடு குன்று உருகும்படி – பசுங்கன்றுகளும்
(கடினமான) குன்றுகளும் (கேட்டு) நெகிழ்ந்து நீராகும்படி,
வேய்ங்குழல் வாய்வைத்து ஊதும் புயலே ! -புல்லாங்குழலை வாயிதழிலே (யிட்டு இசைக்கும் மேகமே !
அடியவர்தம் – பக்தர்களுடைய,
ஒழியாப் பிறவித்துயர் அகற்றி – நீங்காத பிறவித்துன்பத்தைப் போக்கடித்து,
உள்ளத்து இருக்கும் திருக்கு அறுத்து – மனத்திலே யிருக்கும் மாறுபாட்டினை நீக்கி,
நிருதர் குலமும் வேர் அறுத்த -அரக்கர் குலத்தையும் அடியோடு தொலைத்த,
நிமலா | –புனிதனே !
சமர் – போரில்,
ஆர்த்திடும் – ஆரவாரித்திடும்,
திகிரி -சக்கரப் படையையுடைய,
நீலக் குழகா ! – நீலரத்தினம் போன்ற நிறமுடைய அழகனே
மணம் நாற நிறைக்கும் . வாசனை வீசும் படிசெய்து எங்கும் பரப்பும்,
பசும் தண் துழாய் முகுந்த! பச்சை நிறமுடைய குளிர்ந்த திருத்துழாய் மாலையையணிந்துள்ள முகுந்தனே |
வருணன் பரவும் இரு சரண ! — வருணபகவான் துதிக்கும் உபயபாதங்களையுடையவனே —
மாலே – திருமாலே !
தாலோ தாலேலேோ– ; மகரக்குழையே! — , நூற்றெண்மர் வாழ்வே –, தாலோ தாலேலோ ;
*இடவணரை இடத் தோளொடு சாய்த்து இருகைகூடப் புருவம் நெரிந்தேதற, குடவயிறுபட வாய் கடைகூட “என்ற பெரியாழ்வார்
“கறவையின் கணங்கள் கால்பரப்பிட்டுக் கவிழ்ந்திறங்கிச் செவியாட்டகில்லாவே””
சமர் ஆர்த்திடும் திகிரி என்றவிடத்து . “மாயவன் தீயவரைக் கூராழி கொண்டு குறைப்பது” (இராமாநுச : நூற்: 74)
———
விடவா எளரவக் கயிறுசுற்றி
வெற்பிற் பிணித்து விசித்திறுக்கி
விரைதெண் டிரைநீர்க் கடன்முகட்டின்
விண்ணோ ரமுதங் கடைந்தவந்நாள்
அடருங் கிரணக் கவுத்துவமும்
அருமைத் திருவுந் தடமார்புக்
கமைத்துத் திருப்பா லாழியினும்
அரங்கத் தினுங்கண் டுயில்பெறுங்
குடவால் வளைசூ லுசைந்துசெந்தேன்
கொழிக்கும் பொலன்றா மரைப்பொகுட்டிற்
குளிர்முத் துயிர்ப்பக் கருவென்னக்
கொணர்ந்தஞ் சிறைய விளம்பேட்டு
மடநா ரைகள்கூண் டடைசெறிக்கும்
வளஞ்சேர் நாடா! தாலேலோ
மகரக் குழையே! நூற்றெண்மர்
வாழ்வே! தாலோ தாலேலோ.--34-
விடம் வாள் அரவும் கயிறு சுற்றி . விஷத்தைக்கொண்ட கொடிய வாசுகி யென்னும் பாம்பைக் கடைகயிருகச்சுற்றி,
வெற்பில் பிணித்து – மந்தரமலையில் (அதனை மத்தாகக்கொண்டு) பூட்டி,
இறுக்கி விசித்து – நெருக்கியிழுத்து,
விண்ணோர் – தேவர்கள்,
விரை தெண் திரை நீர்க் கடல் முகட்டில் -(கொந்தளித்து) விரைகின்ற தெள்ளிய அலைகளையுடைய கடலின் மேலிடத்து,
அமுதம் கடைந்த அந்நாள் – அமுதமெழும்படிகடைந்த அக்காலத்து,
அடரும் கிரணம் கவுத்துவமும் – செறிந்த ஒளிக்கற்றைகளைக் கொண்ட கெளஸ்துப மணியையும்,
அருமைத்திருவும் – (பெறுதற்கு) அரிய இலக்குமியையும்,
தட மார்புக்கு அமைத்து – விசாலமான மார்பினுக்கு அணியாக வைத்து,
திருப் பாலாழியினும் அரங்கத்தினும் கண் துயில் பெறும் -திருப்பாற்கடலிலும் திருவரங்கத்திலும் யோகநித்திரை செய்கின்ற, (
நாடா |என மேலியைத்துப் பொருள்கொள்ள வேணும்.). (இனி),
குட வால்வளை – குடம்போல் சுழிந்த வாலினைக்கொண்ட சங்குப்பூச்சிகள்,
சூல்உளைந்து – கருக்கொண்டு வருந்தி,
செந்தேன் கொழிக்கும்பொலன் தாமரைப் யபோகுட்டில் – நல்லதேனைப் பெருக்குகின்ற அழகிய தாமரைக்கொட்டையில்,
குளிர் முத்து உயிர்ப்ப – குளிர்ச்சிபொருந்திய முத்துக்களை யீன, (அவற்றை)
அம் சிறைய இளம்பேட்டு மட நாரைகள் – அழகிய சிறகுகளைக்கொண்ட இளையமென்மை பொருந்திய பெண்நாரைகள்,
கரு என்னக்கொணர்ந்து -(தமது) கருமுட்டைகள் என எண்ணிக் கொண்டுவந்து,
கூண்டுஅடை செறிக்கும் . தமதுகூடுகளில் அடைகாக்கும்படியான,
வளம்சேர் நாடா – வளப்பமுடைய பாண்டி நாட்டுக்குத் தலைவனே
தாலேலோ–; மகரக்குழையே — [,நுற்றெண்மர் வாழ்வே !–,
தாலோ தாலேலோ–;
“*பாலாழி நீகிடக்கும் பண்பையாம் கேட்டேயும் காலாழும்:’ என்றார் நம்மாழ்வார்.
———
சப்பாணிப் பருவம்
அரமகளிர் தங்கழுத் தணியுநா ணகலாமல்
ஐ.ந்தரு வடிக்கொடாமல்
அயிரா பதப்பெரும் பகடொளித் தோடிநீள்
அலைகடற் புக்கிடாமல்
திரளவடி கொண்டதெள் எளமுதமது கொள்ளா
போய்த்
தேவர்கள் நடுக்குறாமல்
தேவேந்தி ரனுக்கரசு மகுடபங் கம்வந்து
சிறைச்சாலை யுட்புகாமற்
கரதூற டணனிறிரி சிரர்நிகும் பன்கும்ப
கன்னனிந் திரசித்து
கலங்காத ராவணன் மடியலங் காபுரங்
கனல்கொளுந்் தப்பெருவிரற்
சரடுபூட் டிச்சிலைக் கடைகுழைக் குங்கொண்டல்!
சப்பாணி. கொட்டியருளே
சந்தனச் சோலைசெறி தென்றிருப் பேரைமுகில்!
சப்பாணி கொட்டியருளே.–35-
அரமகளிர் – தேவமாதர்கள்,
தம் கழுத்து அணியும் நாண்: – தங்களது கழுத்துகளில் பூண்டுள்ள மங்கலநாண்,
அகலா மல் – நீங்காதபடியும் ;
ஐந் தரு அடிக்கொடாமல் – பஞ்சுதருக்களும்
வேரொடு சாயாதபடியும் ;
அயராப தம் பெரும் பகடு – பெரிய ஐராவ தமென்னும் யானை,
ஒளித்து ஓடி – மறையவோடி,
நீள் அலைகடல் புக்கிடாமல் – நீண்ட அலைகளையுடைய பாற்கடலில் புகுத்திடாத படியும் ;
திரள வடிகொண்ட தெள் அமுதம் அது .. நன்கு திரளும் படி. வடிக்கட்டிய தெளிந்த தேவாமிர்தமானது,
கொள்ளை போய் . கொள்ளையடிக்கப்பட்டு,
தேவர்கள் தடுக்குறாமல் – தேவர்கள் பயப் படாமலிருக்கும்படியும் ;
தேவேந்திரனுக்கு –, அரசு மகுட பங்கம் வந்து – அரசுக்குரிய கிரீடத்திற்குக்கேடு விளைந்து, (சிறைபிடிக்கப் பட்டு)
சிறைச்சாலையுள் புகாமல் – சிறைச்சாலையுள் செல்லாதபடியும்;
(ராவணன் மடிய சிலைக்கடைக் குழைக்கும் கொண்டல்! எனமேலியைத்துப் பொருள் கொள்ளவேணும்)
இனி- கரன் தூடணன்திரிசிரர் நிகும்பன் ரும்பகன்னன் இந்திரசித்து கலங்காத ராவணன்–, (இவர்கள் )
மடிய – இறந்துபோக,
லங்காபுரம் கனல் கொளுந்த -இலங்கை நகரம் அனல்பற்றியழிய,
பெருவிரல் சரடு பூட்டி – பெருவிரலினைக்கொண்டு (வில்லின்) நாணினைப்பூட்டி,
சிலைக்கடைகுழைக்கும் . வில்லினை நன்கு வளையச் செய்துவிடும்,
கொண்டல் -மேகமே :
சப்பாணி கொட்டியருள் – ஒரு கையுடனே மற்றொரு கை
யைச்சேர்த்துத் தட்டுவாயாக ;
சந்தனச்சோலை செறி தென் திருப் பேரைமுகில் . சந்தனமரங்களைக்கொண்ட பொழில்கள் அடர்ந்த
தென்திருப்பேரையில் தங்கியிருக்கும் மேகமே !
சப்பாணி கொட்டியருள் –;
தென் திருப்பேரை முகில் என்றது – அத்தலத்துத் திருமாலின்பெயர்களுள்-நிகரில் முகில்வண்ணன் என்பதும் பிரசித்தமானதொன்றாகும்.
மேலும் கீழும் பாட்டுக்களில் – புயலே , முகிலே, மேகமே, மழையே, காளமேகமே, கரியமேகவண்ணனே முதலாக விளி
அடிக்கடி யமைத்திருப்பதும் இதுபற்றியென்பது அறிக].
———-
அமரர்கின் னரர்முனிவர் கிம்புருட ரும்பரவும்
அயிரா பதப்பாகனும்
அம்பரத் திடையுலவு கங்கைப் பெரும்பாவு
அலையெறநிய விட்டசடிலத்
துமையையொரு பங்குடைக் கடவுளுந் தொழுதுளம்
உவப்பவம ராடுசுடர் வேல்
ஊறுபடு நயனப் படீரகுங் குமமுலைக்
கொல்குமொரு நுண்மருங்குற்
குமுதவாய் மடமங்கை தேவகிக் குள்ளங்
குழைந்துகண்: களிகூரவே
கோசலைக் கினியகைக் கோமளக் குழவியே /
கோதிலா மழைவள்ளலே /
தமரவரி வண்டடை கிடந்தமுள ரிக்கைகொடு
சப்பாணி கொட்டியருளே
சந்தனச் சோலைசெறி தென்நிருப் பேரைமுகில் !
சப்பாணி கொட்டியருளே.--36-
அமரர் . தேவர்கள்,
கின்னரர் – கின்னரசாதியினர்,முனிவர் .. இருடிகள்,
கிம்புருடரும் – கிம்புருடர்களும்,
பரவும் – ஸ்துதிக்கின்ற ,
அயிராபதப்பாகனும் – தேவேந்திரனும்,
அம்பரத்திடை -ஆகாசத்திலே,
உலவு – ஓடுகின்ற,
கங்கை – கங்கையாற்றினது[ஆகாசகங்கையினது],
பெரும் பாவு அலை எறிய விட்ட – பெரிதும் பரவிவருகின்ற அலையை; [த்தன்சிரசில்] வீசும்படி விட்டுக்,
கொண்ட, சடிலத்து [ க்கடவுளும்] – ஜடாபாரத்தையுடைய இறைவனும்,
உமையை ஒரு பங்கு உடை கடவுளும் – உமாதேவியை வாம பாகத்தில் உடையவனாகிய இறைவனும் [ஆகிய]சிவபெருமானும்;
தொழுது உளம் உவப்ப – வணங்கி மனங்களிக்கும்படி உள்ள,
கோதிலா $மழை வள்ளலே ! — மொய்த்தலில்லாதமழைபோன்ற வண்மையுடைய திருமாலே !
அமர் ஆடு ௬டர்வேல் ஊறுபடு நயனம் – போரில் பயன்படுகின்ற ஒளிரும் வேலாயுதமும் புண்பட்டு வருந்தும்படியுள்ள கண்களையும்,
படீரம் குங்கும முலைக்கு ஒல்கும் – சிவப்புநிறம்பொருந்திய குங்குமக்குழம்பு பூசப்பட்ட கொங்கைகளின்பாரத்தைத் தாங்கமாட்டாது
நுடங்கியசைகின்ற ஒரு நுண்மருங்குல் – நுண்ணியதோர் இடையினையும்,
குமுத வாய் – ஆம்பல்போல் குளிர்ந்த வாயினையும் உடைய,
மடமங்கை தேவகிக்கு -மென்மை பொருந்திய தேவகிப் பிராட்டிக்கு,
உள்ளம் குழைந்துட கண் களி கூர – மனம்நெகிழ்ந்து இருகண்களும் கண்டு மகிழும்படி, (சேஷ்டிதங்கள் செய்த)
கோதிலா மழை வள்ளலே!–,
(மேலும்) கோசலைக்கு இனிய கைக்கோமளக் குழவியே ! .கெளசல்யாதேவிக்கு இனிய அழகு பொருந்திய கைக்குழந்தையாயிருப்பவனே ! (இராமபிரானே 1)
தமரம் வரி வண்டு – ஒலிக்கின்ற கோடுகளையுடைய கைவயல்கள்,
அடைகிடந்த – செறிய இடப்பட்டுள்ள,
முளிரிக் கைகொடு -தாமரைப் பூப் போல் மெல்லிய கைகளைக் கொண்டு,
சப்பாணிகொட்டியருள் –;
சந்தனச் சோலை செறி தென்திருப்பேரை முகில் ! –, சப்பாணி கொட்டியருள் –
———
வேதங்க ளோடைந்து பூதங்க ளுமயன்
விதிக்கின்ற பல்லுயிர்களும்
மிக்கவைம் பொறிகளு மெட்டெழுத்துநின்று
விளையாடு மொருகுழவியே!
ஏதங்க ௯ரந்தடிய ரிருவினை தணந்துபே
ரின்பத் திருத்துமொளியே!
இலகு௬டர் வேல்விழி துரோபதை தனைச்சிறிதும்
எண்ணாது துகிலுரிதரும்
போதந்த வேளைவந் துதவுசீ தர! துழாய்
பூதரப் புயமுகுந்தா/
பொருவரிய வண்டகோ எளகைமுகடு கீறியப்
பொன்னுலகு மேவுபாரி
சாதங் கொணர்ந்தருட் பின்னைக் களித்தவன் /
சப்பாணி கொட்டியருளே |
சந்தனச் சோலைசெறி தென்றிருப் பேரைமுகில்!
சப்பாணி கொட்டியருளே.–37-
வேதங்களோடு – நான்கு வேதங்களோடு,
ஐந்து பூதங் களும் – பஞ்சபூதங்களும்,
அயன் – பிரமதேவன்,
விதிக்கின்ற – படைக்கின்ற,
பல் உயிர்களும் . பல ஜீவராசிகளும்,
மிக்க ஐம்பொறிகளும் – (அடக்கமுடியாது) மிகுந்த பஞ்சேந்திரியங்களும்,
எட்டு எழுத்து நின்று – அஷ்டாக்ஷர மகாமந்திரமாகிய ‘*ஓம் நமோ நாராயணாய* என்றதில் நிலைத்து நிற்கும்படிசெய்து,
விளையாடும் – (இந்த லீலா விபூதியிலே) விளையாடுகின்ற,
ஒரு குழவியே / – ஒப்பற்ற குழந்தைவடிவினனே !
அடியர் – (தனது) பக்தர்களின்,
ஏதம் களைந்து – துன்பங்களை நீக்கி,
இருவினை தணந்து … (அவர்களது) நல்வினை தீவினைகளையும் நீக்கி,
பேரின்பத்து இருத்தும் – ஆனந்தமய மாகிய மோட்சத்திலே நிலைபெறவைக்கும்,
ஒளியே ! – பிரகாசமானவனே !
இலகு ௬டர் வேல்விழி துரோபதை தனை -விளங்கியொளிரும் வேலாயுதம்போன்ற கண்களையுடைய திரெளபதியை,
சிறிதும் எண் ணாது – இறையேனும் மைத்துனியாயிற்றே என்று உறவுமுறையும் பாராதே,
துகிலுரிதரும் போது – (பாவி துச்சாதனன்) ஆடையைக் களைந்தபோது,
அந்த வேளை வந்து உதவும் சீதர [| – அந்தச்சமயத்திலே (தோன்றாத்துணையாக) வந்து ஆடைவளரும்படி உதவிசெய்த சீதரனே !
துழாய் -திருத்துழாய் மாலையை,
பூதரப்புயம்.மலைபோன்ற தோள்களிலே
தரித்திருக்கும், முகுந்தா ! – முகுந்தனே !
பொருவு அரிய – ஒப்பற்ற
அண்டகோளகை முகடு கீறி – ஆகாயமேல்வட்டத்தின் உச்சியைப்பிளந்து,
௮ பொன் உலகு மேவு – அந்த இந்திரலோகத்து இருந்த,
பாரிசாதம் கொணர்ந்து – பாரிஜாத தருவை எடுத்து வந்து,
அருள் – கருணையோடு,
பின்வனைக்கு அளித்தவன் ! – சத்தியபாமைக்குக் கொடுத்தவனே !
சப்பாணி கொட்டியருள்–; சந்தனச்சோலைசெறி தென்திருப்பேரை முகில்!–, சப்பாணி கொட்டியருள்–
———-
அடங்காத வெழுபது வெள்ளஞ்சே னையுங்கை
அமைக்கும் படைத்தலைவரும்
அநுமன் முதலாய சுக்கிரீப ஸுஞ்சென்றுகடல்
அணைகட்டி லங்காபுரந்
தொடர்ந்தேறி யொருசிலைக் கடைகுழைத் தடுகணை
துரந்திரா வணன் மகுடமுந்
துகள்படுத் திச்சனகி சிறைமீட்ட தண்ணந்
துழாய்க்காள மேகம்்/கொ௫ு .,
விடந்தாவு பஃறலைக் கட்செவி கிடந்தாட
விரிதிரைக் கங்கையாட
வேணியா டக்காளி தன்னுடன் வாதாடும்
வெள்ளிப் பொருப்பன்னபா ந்தள்
தடத்தாரு வேரோடு புறந்தாளக் கொணர்ந்தமால்!
சப்பாணி கொட்டியருளே
சந்தனச் சோலைசெறி தென்றிருப் பேரைமுகில்!
சப்பாணி கொட்டியருளே.–38-
அடங்காத எழுபது வெள்ளம் சேனையும் – அடக்க
முடியாது கிளர்ந்தெழும் எழுபது வெள்ளம் வாநர சேனையும்,
கை அமைக்கும் படைத் தலைவரும் – கையைச்சைகை காட்டி (அவற்றை)அடக்கியாளும் சேனைத்தலைவர்களும்,
அனுமன் முதலாய சுக்கிரீபனும் சென்று – அனுமனையுள்ளிட்ட சுக்கிரீவமகாராஜனும் போய்,
கடல் அணை கட்டி – சமுத்திரத்தில் சேதுபந்தனஞ்செய்து,
லங்காபுரம் தொடர்ந்து ஏறி . இலங்கை நகருக்குள் வரிசையாக ஏறிச் சென்று, (இராமபிரான் )
ஒரு சிலை கடை குழைத்து – ஒப்பற்ற (தன்)வில்லை நன்குவளைத்து,
அடுகண துரந்து – கொல்லும் பிரமாத் கதிரத்தைத் தொடுத்து,
இராவணன் மகுடமும் துகள்படுத்தி இராவணனுடைய கிரீடத்தையும் தூளாக்கி,
சனகி சிறை மீட்ட -ஜானகிப் பிராட்டியைச் சிறையினின்று விடுவித்து மீட்டுவந்த,
தண் அம் துழாய்க் காளமேகம் – குளிர்ச்சி பொருந்திய அழகிய திருத்துழாய் மாலையைத் தரித்த கரியமேகம் போன்றவனே !
கொடு விடம்தாவு – கொடிய விஷம் கக்குகின்ற
பல்தலைக் கட்செவி – பல தலைகளையுடைய பாம்புகள்,
கிடந்து ஆட -திருமேனியில் தங்கியிருந்து ஆடவும்,
விரிதிரைக் கங்கை ஆட – பரந்த அலைகளயுடைய கங்காநதி ஆடவும்,
வேணி ஆட. (கமர்த்தம்என்னும்) சடாபாரம் ஆடவும்,
(அப்போது) காளிதன்னுடன்வாதாடும் . (சிவனுக்கு எதிராகப் போட்டியிட்டு நடனமாடும்) காளிதேவியோடு வாதிடுகின்ற,
வெள்ளிப் பொருப்பன்ன பாந்தள்.-கைலாய மலையைப் போன்ற (சிவனது) பாம்பு,
தட தாரு- பெரியமரத்தை,
வேரோடு – அடியிலுள்ள வேருடனே,
புறம் தாள.(தரையினின்று பெயர்த்து) முதுகிலே பொறுத்து வர
(அதனைக்)கொணர்ந்த மால் !- கொண்டுவந்த திருமாலே !
சப்பாணி கொட்டி.யருள் –; சந்தனச் சோலை செறி தென்திருப்பேரை முகில்– | சப்பாணி கொட்டியருள் —
———
மண்டுதிரை யெறிமகர சலராசி யேழுநெடு
வரையேழு மகிலமேழும்
வானகமு முயர்திசையும் வயிறடங் கப்பவள
வாய்மடுத் தங்காந்துமுன்
உண்டுமிழு நீனிறக் குழவி ! நெடு வாலிமார்
புருவவொரு சரம்விடுக்கும் ஒண்டிறச் செங்கைத் தடங்குரிசில் ! வேதாந்த
உபநிடத ஞானதிீபம் !
புண்டரிக மலர்முகை முறுக்கவிழு மோடையிற்
புக்கிடங் கர்க்குவெருவிப்
போரான் மூலமென் றோதாமுன் னோடியொரு
புள்ளரசு மீதுவருபைந்
– தண்டுழாய் புனகொண்ட லண்டரீநா யகனினிது
சப்பாணி கொட்டியருளே
சந்தனச் சோலைசெறி தென்றிருப் பேரைமுகில் !
சப்பாணி கொட்டியருளே.–39-
மண்டு திரை எறி – நெருங்கி வருகின்ற அலைகள் வீசுகின்ற,
மகர சல ராசி ஏழும் – மீன்களைக் கொண்ட கடல்கள் ஏழும்
நெடுவரை ஏழும் . பெரிய மலைகளேழும்,
அகிலம் ஏழும்;புவனங்களேழும்,
வானகமும் – ஆகாசத்தினிடமும்,
உயர் திசையும் -உயர்ந்த அட்டதிக்குக்களும்,
வயிறு அடங்க .. தன் வயிற்றிலே(மகாபிரளயத்தின்போது) அடங்கும்படி,
பவளவாய் மடுத்து –பவளம்போற் சிவந்த வாயினிலிட்டு,
அங்காந்து – வாய்திறந்து,
முன் உண்டு – முன்னர் புசித்து,
உமிழும் . (பின்னர்) உமிழ்ந்த
நீல் நிறக் குழவி ! – கருநிறம் பொருந்திய குழந்தையே !
தெடு வாலி மார்பு உருவ- பெரிய வாலியினுடைய மார்பு ஊடுருவும்படி,
ஒரு சரம் விடுக்கும் – ஒப்பற்ற (இராம) பாணத்தை விடும்,
ஒண் திறம் செங்கைத் தடம் – மிக்க சாமர்த்தியம் பொருந்திய சிவந்த கைகளை யுடைய,
குரிசில் !- சிறந்தோனே !
வேதாந்த உப நிடத ஞான தீபம் – வேதாந்தங்களாகிய உபநிடதங்களாலே பிரதி பாதிக்கப்பட்ட ஞானவொளி விளக்கே !
புண்டரிகம் மலர் முகை- தாமரையாகிய பூவின் அரும்பு,
முறுக்கு அவிழும் – தன்கட்டவிழ்ந்து மலரும்
ஓடையில் புக்கு, -தடாகத்தில் புகுந்து இறங்கி,
இடங்கர்க்கு வெருவி – (ஆங்கிருந்த) முதலைக்குப் பயந்து,
போரானை – (அதனோடு போராடும்) கஜேந்திரனாகிய யானை,
மூலம் என்று ஒதா முன்-ஆதி மூலமே யென்று கதறி ஓலமிட்டவுடனே,
ஒரு புள் அரசு மீது ஓடிவரு – ஒப்பற்ற ௧ருடனின் மேலேறி ஓடி வந்த,
பைந்தண் துழாய் புனை கொண்டல் ! .பசிய குளிர்ந்த திருத்துழாய் மாலையை யணிந்த மேகமே !
அண்டர் நாயகன் – தேவர்களின் தலைவனே !
இனிது-இனிமைபட,
சப்பாணி கொட்டியருள் –;
சந்தனச் சோலை செறி தென் திருப்பேரை முகில்–! ,
சப்பாணி கொட்டியருள் –
ஏழு கடல்கள் – உவர்நீர், கருப்பஞ்சாறு, கள், நெய், தயிர், பால்,நன்னீர் என இவற்றின் மயமானவை.
வரை ஏழு .. கைலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், நீலகிரி என்பன.
அகிலம் ஏழு – ஜம்பூ, பிலட்சம், குசம், கிரெளஞ்சம், சாகம், சால்மலி, புஷ்கரம் என்னும் ஏழுதீவுகளாகவுள்ளவை.
———
வண்ணந் தளைந்தகட லுலகமுழு தும்பரதன்
மணிமுடி கவிப்பநீவெவ்
– வனமேகெ ஸனுஞ்சிறியதாய்சொற் றலைக்கொண்டு
மணிநெடுஞ் சீரைசுற்றிப்
பெண்ணென்ற சீதையொடு மிகாயவன் றன்னொடும்
பெருங்கான கத்திற்புகும்
பெம்மா னறுந்துளவ மாலிகா பரணன்முது
பேரின்ப வீடளிக்குங்
கண்ணன் சிலைக்கடை குழைத்திலங் காபுரங்
கட்டழிக் குந்தேவர்கோன்
கருணைப் பெருக்கா றுவட்டெடுத் தலைமண்டு
காளமே கந்துளிபடுந்
தண்ணந் தடந்திரைப் பொருநையந் தண்டுறைவ !
சப்பாணி கொட்டியருளே
சந்தனச் சோலைசெறி தென்றிருப் பேரைமுகில் !
சப்பாணி கொட்டியருளே.--40-
வள் நந்து அளைந்த – வளப்பம் பொருந்திய
சங்குப்பூச்சிகள் துழாவுகின்ற
கடல் உலக முழுவதும் – கடல் சூழ்ந்த நிலவுலக முழுவதையும்,
பரதன் மணிமுடி கவிப்ப – (என்)மகன் பரதன் இரத்தினங்கள் பதித்த கிரீடத்தைச் சூடிட,
நீ -(இராமனாகிய) நீ,
வெவ் வனம் ஏகு- கொடிய கானகம் செல்வாய்?” எனும் – என்று ஆணையிட்ட,
சிறிய தாய் சொல் தலைக்கொண்டு – சிற்றன்னை கைகேயின் சொற்களைச் சிரசாவஹித்து,
மணி நெடும் சீரை சுற்றி – அழகிய பெரிய மரவுரியை இடுப்பில் கட்டி,
பெண்ணென்ற சீதையொடும் – பெண்மைக்குரிய குணங்க ளோடு கூடிய சீதையாகிய மனைவியோடும்,
இளையவன் தன்னொடும் – தம்பியாகிய இலக்குவணோடும்,
பெரும் கானத்தில் புகும் -பெரிய காட்டினுள் (நடந்து) செல்லும்,
பெம்மான் – பெருமானும்,
துளவ மாலிக ஆபரணன் – திருத்துழாய் மாலையை அணியாகக் கொண்டவனும்,
முது பேரின்ப வீடு அளிக்கும் கண்ணன் பழயதாகி வரும் பேரின்பந்தரும் மோட்சத்தைக் கொடுக்கும்கண் போலினியவனும்,
சிலைக் கடை குழைத்து – (தனது) வில்லின் முனைகளைச் சேர்த்து வளைத்து,
லங்காபுரம் கட்டவிழ்க்கும் தேவர்கோன் – பகைவனான [இராவணனின்] இலங்காநகரினைச் சிதைத் தொழிக்கும் தெய்வத் தலைவனும்,
கருணைப் பெருக்காறு உவட்டு எடுத்து . தயையாகிய பேராறு வெள்ளமிட்டு,
அலை மண்டு காளமேகம் – ‘கருணாகாகுஸ்த:”-என்னும்படி
——–
உடுக்குந் திரைக்கருங் கடலாடை நிலவலயம்
உதரத்தி னுள்ளடக்கி
ஒருசிறிய குறளுருவ மைந்தநெடு நேமிமால்”
உபயசர ணாரைவிந்தத்
தெடுக்கும் பனிக்குறுந் திவலைபடு மலரிட்
டிறைஞ்சிவரு ணன்பரவுவோன்
இசைபாடி யொருகோடி யறுகாலு தைந்தாடும்
ஈர்ந்துழாய்ப் படலைமாயன்
மடுக்குங் கொழுஞ்சுடர்ப் பரிதிவா னவனுதய
வரைபசும் புரவிபூட்டி
வருமணிப் பொற்றடந் தேருக்கி டுஞ்சித்திர
வட்டாழி யெட்டிமுட்டித்
தடுக்கும் பொலம்புரிசை சூழ்வழுதி நாட / னெரு
சப்பாணி கொட்டியருளே
சந்தனச் சோலைசெறி தென்றிருப் பேரைமூகில் !
சப்பாணி கொட்டியருளே, அலைவீசும் கரிய மேகம் போன்றவனும்,
[ஆகிய] துளிபடும் – மழை துளித்தலால் தோன்றும்,
தண் ௮ம் தடந் திரைப் பொருநை . குளிர்ந்த அழகிய பெரிய அலைகளைக் கொண்ட தாமிரபரணி ததியின்,
அம் தண் துறைவ ! – அழகிய குளிர்ச்சி பொருந்திய நீர்த்துறைகளுக்கு உரியவனே |!
சப்பாணி கொட்டியருள் –; சந்தனச் சோலை செறி தென்திருப்பேரை முகில் ! — , சப்பாணிகொட்டியருள்–;–41-
திரைக் கருங்கடல் ஆடை. உடுக்கும் . அலைகளையுடைய
கரியகடலை ஆடையாகச் சுற்றியுடுக்கும்,
நிலவலயம் – நிலவுலகத்தை,
உதரத்தினுள் அடக்கி – வயிற்றினுள் அடங்க வைத்து,
ஒரு சிறிய குறளுரு அமைந்த – ஒருசிறிய குள்ள உருவம் (வாமனாய்) எடுத்த.
நேமி நெடு மால் – சக்கரப்படையேந்தி திரிவிக்கிரமனாக வளர்ந்த திருமாலின்,
உபய சரண அரவிந்தத்து – இரண்டு பாததாமரை களில்,
எடுக்கும் – பறித்தெடுக்கும்,
பனி குறுந் திவலைபடு மலர் இட்டு – குளிர்ந்த சிறிய பனித்துளி பட்டுள்ள பூவினையிட்டு
அருச்சித்து, வணங்கி-இறைஞ்சி,
வருணன் – வருண பகவானால்,
பரவுவோன் -தொழப்பட்டுத்துதிக்கப்படுவோனும்,
ஒரு கோடி அறுகால்-ஒருகோடி வண்டுகள்,
இசைபாடி, உதைநீது ஆடும் – ரீங்காரம் செய்து கால்
களால் துவைத்து அசைகின்ற,
ஈர்ந்துழாய் படலை மாயன் – ஈரமா யுள்ள (குளிர்ந்த) திருத் துழாைய் மாலையை யுடைய மாயனும், (ஆகிய)
கொழும் சுடர் மடுக்கும் பரிதி வானன் – பரவிய ஒளியை மிகுவிக்கும் சூரியனாகிய தேவன்,
பசும் புரவி பூட்டி – பச்சைக்குதிரைகள் (ஏழினைப்) பூட்டி,
உதய வரை .. உதயகிரியிலே,
வரு – வருகின்ற
மணி பொன் தட தேருக்கு -அழகிய பொன்போல் ஒளிர்கின்ற பெரிய தேரினுக்கு,
இடும் சித்திர வட்டாழி – மாட்டியுள்ள வேலைப்பாடு அமைந்த வட்டமாகிய சக்கரங்கள்,
எட்டி – தமக்கு எட்டி,
முட்டி -(தம்மோடு) மோதி
(அதனால்) தடுக்கும் – தடைப்பட்டுப்போகும்,
பொலம் புரிசை சூழ் – பொலிவு பெற்ற (உயர்ந்த) மதில்கள் சூழ்ந்த.
வழுதி நாடன் ..்் பாண்டிய நாட்டுக்கு உரியவனே !
ஒரு சப்பாணி கொட்டியருள்–; சந்தனச் சோலை செறி தென் திருப்பேரைமுகில் சப்பாணி கொட்டியருள்–
——–
மானவே லரசர்தொழு. மிதிலா புரிச்சனகன்
மாதேவி மணிமுன் கைமேல்
வைத்துமுத் தாடும் பசுங்கிளி யெனத்தூம
மஞ்சனஞ் செய்துசெம்பொன்
மேனிமுழு வதுநலங் கிடுசெய்து கொங்கைக்கு
மென்களப மனள்ளவியப்பி
விரைநறுந் தார்குழலின் மீதணிந் :தஞ்சனம்
விளங்குகட் கடையினெழுகிக்
கூனிளம் பிறைநுதற் கத்தூரி தீட்டிதற்
குளிர்மணிச் சுடிகைநாற்றிக்
கோலவளை திருத்திமணி மேகலை மருங்கினிற்
கொய்துகோ தினிதுடுக்குஞ்
சானகி பெருங்காம வெள்ளத் திளைத்தவன்
சப்பாணி கொட்டியருளே
சந்தனச் சோலைசெறி தென்றிருப் பேரைமுகில் !
சப்பாணி கொட்டியருளே.–42-
மானம் வேல் அரசர் தொழும் – பெருமை பொருந்திய
வேலாயுதத்தையேந்திய அரசர்கள் வணங்கும்,
மிதிலாபுரிச் சனகன் -மிதிலைநகர்க்குப் பேரரசனாகிய சனகமகாராசனுடைய,
மா தேவி -முதற் பட்டமஹிஷி,
மணி முன்கை மேல் வைத்து- (தனது) அழகிய
முன்னங்கையின் மேலே தூக்கிவைத்துகொண்டு,
முத்தாடும்பசுங்கிளி – முத்தங்கொடுத்துக் கொஞ்சும் பச்சைக் கிளியாவள் என்று சொல்லும்படி,
தூய மஞ்சனம் செய்து. பரிசுத்தமான நீரிலே ஸ்நானம் செய்வித்து,
செம் பொன் மேனி முழுவதும்நலங்கிடு செய்து – சிவந்த பொன் போன்ற உடல் முற்றும் நலங்கு பூசுஞ் சடங்கு செய்து,
கொங்கைக்கு மென் களபம் அள்ளி அப்பி -முலைகளுக்கு மென்மையான சந்தனக்குழம்பை நிறைய யப்பிவைத்து
(தொய்யிலெழுதி) விரை நறும் தார் – மிக்க வாசனை வீசுகின்ற மாலையை,
குழலின்மீது அணிந்து – கூந்தலின் மேல் சூட்டி யணிவித்து,
விளங்கு கண்கடையின் அஞ்சனம் எழுதி – ஒளிர்கின்ற கடைக்கண்களில் மைதீட்டி,
கூன் இளம் பிறை நுதல் கத்தூரி தீட்டி – வளைந்து இளம்பிறை போலிருக்கின்ற நெற்றியில் கஸ்தூரித் திலகம் இட்டு,
நல் குளிர் மணிச்சுடிகை நாற்றி – நல்ல குளிர்ச்சியை யளிக்கின்ற முத்தினாலாகிய சுட்டியைத் தொங்கவிட்டு,
கோலம் வளை திருத்தி-அழகிய வளையல்களைத்திருத்தமுற அணிவித்து,
மருங்கினில் – இடுப்பினில்,
மணிமேகலை -மணிகள் கோத்த புடைவையை,
கோதி – சிக்கின்றியெடுத்து,
கொய்து – கொசுவி,
இனிது உடுக்கும்- அழகுற உடுத்திக்கொண்டிருக்கும்,
சானகி – சீதாபிராட்டியுடன்,
பெரும் காம வெள்ளம் திளைத்தவன்- மிக்க காமவிளையாட்டுப் பெருக் கில் மூழ்கியநுபவித்தவனே !
சப்பாணி கொட்டியருள் —; சந்தனச்சோலை செறி தென்திருப்பேரை முகில் !–, சப்பாணி கொட்டியருள் —
———
கக்கக் கொழுங்குருதி நரிபிடுங் கத்தசை
கவர்ந்துயிர் குடிப்பமறலி
கருநிறத் தாடகையை வதைபடுத் தச்சிலைக்
கடைகுழைத் தடுகணைதொடுத்
தொக்கிற் பெருந்தவக் கவுசிகன் வேள்வியுஞ்
சுருதிநூன் முறைமுடித்துச்
சொல்லரிய மிதிலா புரிச்சனகன் விற்கண்ட
துண்டப் படுத்துமெங்கோன்!
செக்கச் சிவக்குங் கொழும்பவள வார்கதிர்
செஞ்சடா டவிமணிமுடிச்
சிவசங் கரக்கடவுள் கண்களி கூரச்
சிறந்தருள் புரிந்துசங்கு
சக்கர துணைச்செங்கை யொக்கச் சிவப்பவொரு
சப்பாணி கொட்டியருளே
சந்தனச் சோலைசெறி தென்றிருப் பேரைமுகில் !
சப்பாணி கொட்டியருளே.–43-
கொழுங் குருதி கக்க: மிகுதியாக இரத்தம் பீறிட்டுவர,
நரி தசை பிடுங்க – நரிகள் சதையைப் (பற்களால்) பிடுங்கியிழுக்க,
மறலி – யமனானவன்,
கவர்ந்து உயிர் குடிப்ப . உயிரைப்போக்கும்படி,
கருநிற தாடகையை வதைபடுத்த – கருநிறம் பொருந்திய தாடகையரக்கியைக் கொன்றொழிக்க,
சிலை கடை குழைத்து -வில்லை முனைசேர வளைத்து,
அடுகணை தொடுத்து – கொல்லும் அம்பினை விடுத்து,
ஒக்கு இல் -, ஒப்பில்லாத
பெருந்தவக் கெளசிகன் வேள்வியும் – பெரிய தவத்தைச்செய்த விசுவாமித் திரனது யாகத்தையும், சுருதி
நூல்முறை – வேத நூலில் கூறியுள்ளபடியே,
முடித்து . நிறைவேறவைத்து, (பின்னர்)
சொல்லரிய – பேச்சுக்கு நிலமல்லாது சிறப்புற்ற
மிதிலாபுரிச் சனகன் -மிதிலைமா நகரின் மன்னனாகிய ஜனகனின்,
வில் கண்ட துண்டப்படுத்தும் – சிவதனுசைத் துண்டு துண்டாகச் சிதையும்படி செய்யும்,
எம்கோன் – எமது தலைவனான இராமபிரானே !.
செக்கச் சிவக்கும் கொழும் பவளம் வார் கதிர் – மிகச்சிவப்பு நிறம் பொருந்திய செழித்த பவளம்போல் நீண்ட ஓளிக் கற்றைகளை யுடைய,
செஞ்சடா அடவி – சிவந்த ஜடாபாரத் தொகுதியை,
மணிமுடி – அழகிய சிரசில்கொண்ட,
சிவசங்கரக் கடவுள் – சங்காரக்கடவுளாகிய சிவபெருமான்,
கண் களி கூர – கண்களும் மகிழ்ச்சி மிகும்படி,
சிறந்து அருள்புரிந்து – சிறப்புறக் கருணைசெய்து,
சங்கு சக்கரம் துணைச்செங்கை – சங்கினையும் சக்கரத்தையும் ஏந்திய இரண்டு செவ்விய கைகளும்,
ஓக்கச் சிவப்ப — தம்முள் ஒத்திருக்கும்படி சிவக்குமாறு,
ஒரு சப்பாணி கொட்டியருள் — ; சந்தனச் சோலை
செறி தென்திருப்பேரை முகில் ! –, சப்பாணி கொட்டியருள்
ஒருவில்வளைத்துத் தாடகையைக்கொன்று கெளசிகன் வேள்வி முடித்தது மற்றொருவில்வளைத்திறுத்துச் சீதையை மணவேள்வி
செய்து கொண்டது என்க.
————
படநடுங் கக்கண் பிதுங்கப் பணாமுடிப்
பஃறலைக் கட்செவியின்மேற்
பதறிமுறு கித்திருகி நடனஞ் செயுஞ்சரண
பங்கேரு கக்குழகன் வெவ்
விடரகற் றிச்செனன வலையறுத் துத்தொண்டர்
ஈடேறி வீடுகுடிபுக்
கெக்கால முமர சிருப்பக் கடைக்கண்நோக்
கின்னருள் புரிந்தநெடுமால் !
_ மடமயிற் சாயற் பசுங்கிள்ளை யங்குதலை
மணிவல்லி கூரயவல்லி
வளருந் திருப்பேரை வல்லிகுங் குமமிருக
மதசந்த னப்பாளிதத்
தடமுலைச் சுவடுபொரு துழுதமணி மார்ப! Deny
சப்பாணி கொட்டியருளே
சந்தனச் சோலைசெறி தென்றிருப் பேரைமுகில் 1
சப்பாணி கொட்டியருளே.--44-
பணுமூடிக் கட்செவியின் மேல் – படங்களையுச்சியிற் கொண்ட காளியனென்னும் பாம்பின் மேல்,
படம் நடுங்க .. (அதன்)படங்கள் நடுக்க முறும்படியும்,
கண் பிதுங்க – கண்கள் வெளிவந்து விடும்படியும்,
பதறி – கலங்கச் செய்து,
முறுகி கடுமையான விசையோடு,
திருகி – முறுக்கி,
நடனம் செய். நர்த்தனம் செய்கின்ற,
சரணபங்கேருகம் – திருவடித் தாமரைகளை யுடைய,
குழகன் !-அழகனே
வெவ் இடர் அகற்றி – கொடிய பாபங்களைப் போக்கி,
செனனம் வலை அறுத்து – பிறவியாகிய வலையை யறுத்துப் போக்கி,
தொண்டர் – (தனது) அடியவர்கள்,
ஈடேறி – (சம்சாரத்திலிருந்து) உய்ந்து தப்பித்து,
வீடு குடி. புக்கு – மோட்சலோகத்தில் சென்று புகுந்து தங்கி,
எக்காலமும் அரசு இருப்ப – எப்போதும்”மன்னராய்ச் சுகத்தோடு வீற்றிருக்கும்படி,
கடைக்கண் நோக்கு இன் அருள்-புரிந்த கடைக் கண் பார்வையினால் இனிய கருணையைச் செய்கின்ற,
நெடுமால் – ஓங்கியதிருமாலே !
மடமயில் சாயல் – மடப்பம் பொருந்திய மயில் போன்ற மென்மையினையும்,
பசும் கிள்ள அம் குதலை பச்சைக்கிளியின் அழகிய பேச்சினிமையையும் கொண்ட,
மணி வல்லி – மணிக்கொடி போன்றவளும்,
தூய வல்லி – பரிசுத்தமான வல்லிக்கொடி போன் றவளும்
(ஆகிய), வளரும் திருப்பேரை வல்லி – என்றும் ஓங்கித் திகழும் திருப்பேரைநாச்சியாரின்,
குங்குமம் மிருகமதம் சந்தனம் பாளிதம்- குங்குமம் கஸ்தூரி சந்தனம் இவற்றைக் குழம்பாகப் பூசி யுள்ள,
தட முலைச் சுவடு – பெரிய முலையின் அடையாளங்கள்
(பதியும்படி), பொருது – கலவிப்போர்செய்து,
உழுத – அழுந்த வைத்த,
மணி மார்பன் – அழகிய மார்பை யுடையவனே |
ஒரு சப்பாணி கொட்டியருள் — ; சந்தனச்சோலை செறி தென்திருப்பேரைமுகில் ! -, சப்பாணி கொட்டியருள்
—————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply