பாணர் குலம் -- மதங்கர் குலம். பாணர், பரையர், துடியர், கடம்பர் இவை நான்கல்லாது வேறு குடிகள் இல்லை . இசைக்கு அதிபதிகள் என்றால் அது பாணர்களே. அவர்களில் சிலர் அரசர்களாகவும் இருந்துள்ளார்கள். மதங்க முனிவர். ராமாயண காலத்தில், ராமரின் வரவுக்காகக் காத்திருந்த சபரியின் குருநாதர் இவரே. மதங்க முனிவரின் தந்தை சக்தியை வழிபடுபவர். நாத சைவத்தில் சிவ வவழிபாட்டிற்கு இணையாக சக்தியையும் வழிபடுவர். சிவம் - இரண்டையும் வேறாக நினைப்பவரில்லை. மதங்க முனிவர் தன் தந்தையிடமே மந்திர உபதேசம் பெற்று பிறகு கடும் தவம் மேற்கொண்டார். அன்னையின் அருள் தரிசனத்தைப் பெற்றார். மதங்கர் முன் தோன்றிய அன்னையிடம் அவர் எதையும் வேண்டவில்லை. அன்னையும் விடவில்லை. “”தவம் செய்து தரிசித்தவர்களுக்கு வரம் ஈவது மரபு. எனவே நான் வரம் தந்தேயாக வேண்டும். நீ பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றாள். மதங்கர் உடனே தாயே தாங்களின் அம்சமாக எனக்கு மகளாகப் பிறக்க வேண்டும். அந்த பாக்கியத்தை அருளவேண்டும்” என்றார். அன்னையும் இணங்கினாள். சக்தியின் ஆசியினால் மதங்கர்- சித்திமதி தம்பதிக்குத் சக்தியின் அம்சமாக மாதங்கி பிறந்தாள். மதங்கரின் மகள் என்பதால் மாதங்கி எனப்பட்டாள். அவளுடன் பல தேவகன்னியர் மதங்க கன்னிகைகள் என உதித்தனர் என்றும் அனைவரும் கடம்ப மரங்கள் நிறைந்த வனத்தில் வீணை மீட்டி இன்புற்றிருந்தனர் என்றும் கூறப்பபடுவர். பாணர்களின் இசை ஞானத்திற்கு அஸ்திவாரமாக இருந்தவள் மாதங்கியே. பாணர்கள் ஓதியதே சாம வேதத்தம். சாம வேதத்திலிருந்து பிறந்தது என கூறபடுகிறது.இன்று கர்நாடக இசை எனப் பெயர் கொண்டு உலவுவது தமிழிசையே திருவாய்மொழிக்குப் பண் சொல்லப்பட்டது என்று குறிப்பிட்டோம். அவ்வாறு சொல்லப்பட்ட பண்கள் 20. இவற்றுள் செருந்தி, நாட்டம், பாலையாழ், முதிர்ந்தகுறிஞ்சி, வியந்தம் என்ற ஐந்து பண்கள் தேவாரத்துள் வரவில்லை. (பிரபந்தத்தில் பழஞ்சுரம் என்று ஒரு பண் குறிப்பிடப்பட்டிருப்பது பழம்பஞ்சுரமாகவே இருக்கும். மற்றும் இரு பண்களின் தலைப்பில் காந்தாரம் - குறிஞ்சி என்றும் இந்தளம் - பழந்தக்கராகம் என்றும் இரட்டையாகப் பெயரிடப்பட்டுள்ளன;. நட்டபாடை, நட்டராகம், நாட்டராகம் என்ற பண்களுக்கும் அதிகமாக நாட்டம் என்ற பெயரில் மிகுதியான பாசுரங்கள் அமைந்திருக்கக் காண்கிறோம். கைசிகம் என்ற பண் ஓன்று தனியே காணப்படுகிறது. திருக்குறுங்குடியில் நம்பாடுவான் என்ற பாணன் 'கைசிகப்பண் பாடிவந்த செய்தியும், அவன் ஒரு பிரமராக்கதனால் பீடிக்கப்பட்டு, பின்சென்று பாடி, மீண்டு தன்பாடலால் விளைந்த புண்ணியவசத்தால் அப்பிரமராக்கத வடிவு நீங்கி, அவன் தேவவடி.வுகொண்டு தேவலோகம் சென்றதும், கைசிகபுராணம் என்ற வடமொழி நூலில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. இவ்வரலாற்றைச் சிறப்பிக்குமுகமாக, பாணன் கைசிகப்பண் பாடிய நாளாகிய கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி “கைசிக ஏகாதசி” என்ற பெயரால் தமிழ்நாடெங்கும் விஷ்ணுவாலயங்களிலும் வைஷ்ணவர் இல்லங்களிலும் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது மக்கட்சமூகம் ஒரு பண்ணுக்கு அளித்திருந்த ஏற்றத்தைக் காட்டும்
பண்களில் அதிகமான பதிகங்கள் கொண்டவை: இந்தளம் 10; நாட்டம் 11; நட்டபாடை, 9, சீகாமரம் 8. ஒரே பதிகம் உடைய பண்கள் கைசிகம், செருந்தி, இனி, ஆழ்வார் பிரபந்தங்களில் காணும் இசைக்குறிப்புக்களை அவர்கள் காலமுறைப்படி, தொகுத்துக் கூறலாம். --------------- முதலாழ்வார் பொய்கையார், பூதத்தார், பேயார் என்று முதலாழ்வார் பாடல்களிலும் இசைச்செய்திகள் எவையும் இல்லை. பொய்கையாருடைய முதல் திருவந்தாதி 46ஆம் பாடல் “பண்புரிந்த நான்மறையோன்' என்று தொடங்குகிறது. 'பண்புரிந்த' என்ற தொடரை மறைக்கு அடையாகக் கொண்டு, இசையோடு பொருந்திய வேதம் என்று பொருள் செய்வார்கள் அவ்வளவே. இதற்கு ஆதாரமாக இதே அந்தாதியில், “நால்வேதப் பண்ணசைத்தாய்” (68) என்றுள்ள குறிப்பைக் காட்டமுடியும். இம்மூவர் அந்தாதித் தனியன்களில்கூட யாரும் இசையைச் சொல்லவில்லை... இவர்கள் பெருமாளுடைய கல்யாண குணங்களிலே முழுமையும் ஈடுபட்டவர்கள் ஆதலால், வேறு எக்கருத்தும் இவர்களுக்கு எழவில்லை. அதுவன்றியும், இவர்கள் தொண்டை நாட்டில் தோன்றியிருந்துங்கூட, மதுரையில் வேற்றுக் கூட்டத்தாராகிய களப்பிரர் பாண்டியரைத் துரத்திவிட்டு நாட்டைக் கைப்பற்றியதன் விளைவு, நாடு எங்குமே இருந்தது; இவர்களையும் பாதித்தது. ௮க்களப்பிரர் இசையை ஒடுக்கி அழித்துவிட்டார்கள். காலம் சுமார் கி. பி. 250 முதல் 575 வரை. நீண்டகாலமானபடியால் மக்கள் வாழ்க்கையில் இசைக்கிருந்த சிறப்புக் குறைந்துவிட்டது. மதுரையில் மட்டுமில்லாமல் தமிழ்நாடு முழுமையிலும் இந்தநிலை. ஆகவே, ஆழ்வார் இசை உணர்ந்து குறிப்பிடும் சூழ்நிலை இல்லை. (எனினும், குழந்தை மனமுடைய காரைக்கால் அம்மையார், ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றியிருந்தும்கூட,, இரு இசைப்பதிகங்கள் பாடினார். இவர் களப்பிரரின் ஆட்சியில் மதுரைக்கே சென்றார் என்பது மறுக்க முடியாது. இவர் வரலாறு பாசுரகாலம் - 1 - சைவப்பகுதியில் உள்ளது. பேயாழ்வார் 'பெருந்தமிழன் நல்லேன் பெரிது' என்று உரைப்பது காணத்தக்கது. --------- திருமழிசையாழ்வார் தொண்டைமண்டலத்தில் திருமழிசையில் பிறந்த இவ்வாழ்வார் செய்த நூல்கள் இரண்டு ஆயிரத்துள் உள்ளன. ஓன்று திருச்சந்தவிருத்தம், 120 பாடல் இசைப்பாவாகக் கொள்ளப்பெற்று முதலாயிரத்தில் உள்ளது. மற்றது, நான்முகன் திருவந்தாதி இயற்பாவாகக் கொள்ளப்பெற்று மூன்றாவதாயிரமாகிய இயற்பாத் தொகுப்பில் உள்ளது. இரண்டிலும் சிறப்பான இசைச்செய்திகள் எவையும் இல்லை. திருச்சந்த விருத்தத்தில், (பண்ணை வென்ற இன்சொல் மங்கை' (105) என்கிறார். பின்னும் 'பண்ணுலாவு மென்மொழி: (97) என்பர். திருமாலைச் சொல்லும்போது, 'பண்கடந்த தேசமேவு பாவநாச நாதனே: (27) என்கிறார். இங்குப் பொருளாவது, பண்ணால் அமைந்த வேதத்தால் அறியமுடியாத பிரமபதத்தில் உள்ளவனே என்பது. மற்றோரிடம் 'சாமவேத கீதனே' (14) என்பது. இரண்டும் தமிழைக் குறிப்பிடவில்லை. நான்முகன் திருவந்தாதியில் எந்த இசைக்குறிப்பும் இல்லை. இவ்வந்தாதியை இவர் மூழுமையும் முதலாழ்வார் அந்தாதிகளைப் பின்பற்றிச் செய்துள்ளமையால், இதனுள் எந்த இசைக்குறிப்பும் அமையவில்லை. திருச்சந்த விருத்தத்தில் பத்துப் பாடல்களுக்கொருமுறை இராகமும் தாளமும் மாற்றிச் சொல்வது மரபு. இவ்வாறு சொல்லப்பட்டவை மூறையே யமூனா கல்யாணி - ரூபகம்; அபுரூவம் - ரூபகம், அடாணா - ஆதி; பியாகடை - திரிபுடை; ஆஸி - ரூபகம், தோடி - அதி; கல்யாணி - ரூபகம்; சாவேரி - திரிபுடை; சுருட்டி - திரிபுடை; சங்கராபரணம் - ரூபகம்; செஞ்சுருட்டி - ரூபகம்; மோகனம் - ரூபகம்; ஆக 120 பாடல்களுக்கும் 12 இராகங்கள். பண் சொல்வதில்லை. ஆனால் இராகக்குறிப்பு மிகவும் பிற்காலம், சென்ற நூற்றாண்டு என்பது வெளிப்படை. ------------- திருப்பாணாழ்வார் பாணர் குலத்தைச் சேர்ந்தவரான இவ்வாழ்வாருடைய வரலாறு பாணர் வரலாறு என்ற அத்தியாயத்தில் விளங்கச் சொல்லப்பட்டது. மேல் சாதியினருடைய சாதி இறுமாப்பை அடக்க, திருவரங்கத் தெம்பெருமான், லோகசாரங்க முனிவரை, இவரைத் தோளில் சுமந்து வரும்படிக் கட்டளையிட்டான். இவர் “அரங்கநாதனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே” என்று பாடி, அரங்கன் சந்நிதியடைந்து அவனோடு கலந்துவிட்டார். முனிவாகனர் என்று இவர் சொல்லப்பெறுவார், முனிவாகனராய்த் திருமாலின் திருமேனியைப் “பாட்டினால் கண்டு வாழும் பாணர்” என்று இவரைத் திருமலை நம்பிகள் பாடுகிறார் பாணர் ஆடலுக்கும் பாடலுக்கும் என்றே தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் இவர்கள் கீழ்ச்சாதி என்பது மரபு. பாணர் புலையர் என்றே சங்கநூல்களில் சொல்லப்படுகின்றனர் இவ்வாழ்வார். அரங்கநாதன் திருக்கோயிலின் முன் சந்நிதிக்கு எதிரே காவிரியின் மறுகரையில் நின்று யாழ்த்தொண்டு புரிந்த யாழ்ப்பாணர். இவருடைய யாழ்த்தொண்டை எம்பெருமான் அங்கீகரித்து, இவரைத் தோளில் சுமந்து வருமாறு லோகசாரங்க முனிவருக்குக் கட்டளையிட்டான். அவரும் அவ்வாறே சந்நிதிக்குள் செல்லும்போது 'அரங்களைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே' என்று அவன் திருமேனியில் பாதகமலம் சிவந்த ஆடை. உந்தி உதரபந்தனம் மார்பு கண்டம் செய்யவாய் பெரியவாய கண்கள் நீலமேனி என்று ஓவ்வோரங்கமாய் அனுபவித்து அமலனாதிபிரான் என்ற பத்துப்பாசுரம் பாடி அவனோடு கலந்தார் இப்பாசுரம் இன்று வைணவருடைய நித்தியானுஸந்தா னத்துக்குரியது. இவர் யாழ்ப்பாணராயிருப்பினும் இவருடைய பாடல்களில் இசைச்செய்தி எதுவும் இல்லை. நாலாம் பாடலில் “மதுரமா வண்டுபாட மாமயிலாடு அரங்கத்தம்மான்” என்று வண்டின் பாட்டைக் குறிப்பிட்ட இடத்தில்கூட அவருக்கு வேறு இசைச்செய்திகள் தோன்றவில்லை. இவர் பாடியது அமலனாதிபிரான் என்று தொடங்கும் முதல் பாடலைக் கொண்ட பத்தே பாடல்கள்: அமல னாதிபிரான் அடியார்க் கென்னை ஆட்படுத்த விமலன் விண்ணவர்கோன் விரையார்பொழில் வேங்கடவன் ... நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதி எரங்கத் தம்மான் திருக் கமல பாதம் வந்தென் கண்ணினுள்ளன ஒக்கின்றதே (1) இதற்கு இராகம் யமுனா கல்யாணி, திரிபுடை..தாளம் என்று சொல்லப்படும். வடகலை ஆசார்யரான வேதாந்ததேசிகர், இந்த ஒரு.திருமொழிக்கு மட்டும் வியாக்கியானம் எழுதியிருக்கிறார். வேறு எதற்கும் எழுதவில்லை. அவ்வுரை முனிவாகனபோகம் என்றே பெயர்பெறும். அவருடைய திருவாராதன மூர்த்தியே திருப்பாணாழ்வார். ஆழ்வாருடைய திருமொழியானமையால் இது நாதமுனிகளால் முதலாயிரத்துள் தொகுக்கப்பெற்றுள்ளது. ---------- தொண்டரடிப்பொடியாழ்வார் விப்ரநாராயணன் என்ற பெயருடைய இவர், திருமாலுக்குத் திருமாலை கட்டித் தரும் தொண்டில் இருந்தபோது, தேவதேவி என்ற தாசியின் மாயவலையிற் சிக்கி உழன்றகாலை, திருவரங்கப் பெருமானால் தடுத்தாட் கொள்ளப்பெற்று, மீண்டும் அரங்கனுக்கே பணிசெய்து, பெயரைத் தொண்டரடிப்பொடி என்று மாற்றிக்கொண்டு, அரங்களையன்றி வேறுயாரையும் சேவிக்காதவராய் இரு பிரபந்தங்கள் பாடி, அவன் திருவடிப் பேறுபெற்றார். பாடிய இருநூல்களும் இசை நூல்கள், முதலாயிரத்துள் சேர்க்கப்பெற்றுள்ளன. இரண்டினுள் முதற்பிரபந்தம் திருமாலை என்ற பெயருடையது,; மலர்மாலை தொடுத்த இவர் இந்தச் சொல்மாலை செய்து அரங்கனுக்குச் சாத்தினார். மற்றப் பாடல்கள் போலவே இவர் பாடல்களுக்கும் பண் ஆதியில் சொல்லப்படவில்லை. ஆனால் கிருஷ்ணமாசாரியர் பதிப்பு முதலிய சில பதிப்புக்களில் இப்பிரபந்தம் முழுமைக்கும் சகானா இராகம் ரூபகதாளம் என்ற குறிப்பு உள்ளது. இதன் பாடல்கள் 45. இதன் பாடல்களிற் பல பிரசித்தமாய்த் தெரிந்தவை, இவை அறுசீர்விருத்தம். சொல்நயமும் பொருட்பொலிவும் கொண்ட பாடல்கள் பல. 'கங்கையைவிடக் காவிரி புனிதமானது" (23) என்று இவர் சொல்வது கொண்டு இவரது திருவரங்கப் பக்தியின் ஆழத்தை நன்குணரலாம். 'பச்சைமா மலைபோல் மேனி: (2) என்ற பாடல் தெரியாத தமிழர் இருக்கமாட்டார்கள். 'வண்டின முரலும் சோலை' (14), “குடதிசை முடியை வைத்து" (19), 'ஊரிலேன் காணியில்லை' (29) முதலான பாடல்கள் மிக்க சிறப்புடையன. எனினும் இவ்வளவு நீண்ட இந்நூலில் இசைச்செய்திகள் எவையும் இல்லை. இவர் பாடிய மற்றொரு நூல் திருப்பள்ளியெழுச்சி என்பது. பத்துப்பாடல் கொண்டது. பள்ளியெழுச்சியென்பது அதிகாலையில் இறைவனைத் துயிலுணர்த்தும் (துயிலிலிருந்து எழுப்பும்) ' பாசுரம், பத்துப்பாடல்கள் எண்டர் விருத்தம். இது வைணவர்களுக்குத் தினமும் சேவிக்கவேண்டி௰ பாசுரம் (நித்தியானுஸந்தானம்), இதற்கும் பண்ணில்லை. ஆனால் பள்ளியெழுச்சிக்கு உரிய பண் புறநீர்மை; இதற்கு நேரான இராகம் பூபாளம். பிற்காலப் பதிப்பில் இதற்கு இராகம் பூபாளம், அடதாளம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எல்லாப் பாடல்களிலும் காலைநேர வருணனை, திருமாலைத் தரிசிக்க எல்லோரும் வந்தீண்டியுள்ளனர். அவர்க்கு நாளோலக்கம் அருள, “அரங்கத்தம் மா பள்ளி எழுந்தருளாயே' என்று மகுடமாகவுள்ளது. ஒன்பதாவது பாடலில் கின்னரர் முதலியோர் உனது நாளோலக்கம் காணவந்தனர் என்று கூறுமிடத்து, அவர்களுடைய இசைக்கருவிகளைக் கூறுகிறார்; ஏதமில் தண்ணுமை எக்கம்மத் தளியாழ் குழல் முழவமோ டிசைதிசை கெழுமிக் கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் கந்தருவரவர் கங்குலுள் எல்லாம் மாதவர் வானவர் சாரணர் இயக்கர் சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான் ஆதலின் அவர்க்கு நாளோலக்கம் அருள அரங்கத்தம் மா பள்ளி எழுந்தருளாயே (9) இங்கு ஆறு கருவிகளைச் சொல்லுகிறார். இவற்றுள் குழல் துளைக்கருவி, யாழ் நரம்புக்கருவி, ஏனைய நான்கும் தோற்கருவிகள். வேறு இசைக்குறிப்புக்கள் இதிலும் இல்லை. இப்பாசுரமே இசைப்பாடல். ----------- குலசேகராழ்வார் இவர் சேர மன்னர், இதுகாரணமாக குலசேகரப் பெருமாள் எனப்படுவார். அதுபற்றி இவருடைய பாசுரங்கள் பெருமாள் திருமொழி எனப்படும். 105 பாடல்கள் உள்ளன. யாவும் இசைப்பாடல்கள். ஆகவே இவை முதலாயிரத்துள் தொகுக்கப்பெற்றுள்ளன. இவர் சேரமரபில் அவதரித்து, திருமாலுக்கடிமை பூண்டு, பாகவதர்களுக்குப் பேருதவி செய்து வந்ததைப் பொருத அரசசேவகர் முன் பாம்புக்குடத்தில் கையிட்டு, 'பாகவதர் தவறற்றவராயின் இப்பாம்பு என்னைத் தீண்டாது ஆகுக' எனக்கூறி, பாகவதர் ஒரு தவறும் புரியார் என்று நிரூபித்து, ஆட்சியில் விருப்பமின்றி மகனுக்கு முடிசூட்டிவிட்டு, திருவரங்கத்திலேயே சென்று வாழ்ந்து பரமபதம் பெற்றார். இவர் பாடல்கள் 105தும் பத்துத் திருமொழிகளாயுள்ளன. அவற்றுக்குப் பண் குறிப்பில்லை. ஆயினும் பண்டைப் பதிப்பாசிரியர் பத்துக்கும் பத்து இராக தாளங்களைக் குறிப்பிட்டுள்ளனர். அவை முறையே; பந்துவராளி - ஆதி, ஸ்ரீராகம் - ரூபகம், செளராஷ் டிரம் - அடதாளம், தன்யாசி - திரிபுடை, சங்கராபரணம் - ரூபகம், செஞ்சுருட்டி - ஆதி, கேதாரகெளளம் - அடதாளம், நீலாம்பரி - திரிபுடை, காம்போதி - ஆதி, கல்யாணி - ஆதி ஆகும். இவருடைய பாடல்களிலும் அதிக இசைச்செய்திகள் இல்லை. தம்முடைய பாடல் இன்னிசை, நல்லிசை; பண்பகரும் வண்டினங்கள்; வண்டுகள் பண்பாடும்; வண்டினம் காமரங்கள் (சீகாமரப்பண்) இசைபாடும்; பரவை முழவினோசை காட்டும்; இன்னிசையாழ் கெழுமுகின்றது. இறைவனே அந்தமிழினின்பப் பாவாக உள்ளான் - என்பன இவர் கூறும் இசைச்செய்திகளுள் சில. இவையொரு புறமிருக்க, குலசேகரர் தாம் “இன்னிசையில் மேவிச் சொல்லிய இன்தமிழே' என்கிறாரேயன்றி, தாம் பண் பாடுவதாக எங்கும் சொல்லவில்லை. “நல்லியல் இன்தமிழ் மாலை பத்து என்று இவர் தம் பாடல்களைப் பொதுவாக இயற்றமிழ் என்றுதான் கொண்டாரோ என்றே கருதவேண்டியுள்ளது. குலசேகராழ்வார் அகத்துறைப் பாடலாக, கோபியர் வாய்மொழியாய்ப் பாடிய பாசுரம் இங்குச் சிறப்பாய்க் குறிப்பிடத்தக்கது. கண்ணன் கோபியருக்கு அருள் செய்ததே தனிநிலை அகத்துறை. அது பாகவதர் மரபில் ராஸக்கிரீடை எனப்பெறும். பெருமாள் திருமொழி ஆறாம்பத்தில் பாடல்கள் 3, 4, 5, 6, 7, 8 ஆகியவை இத்தன்மை பொருந்தியன. இவற்றை இங்கே ஒரு தொகுப்பாய்த் தருவதன் நோக்கம். பிற்காலத்தில் (16ஆம் நூற்றாண்டு) பக்தி சிருங்காரப் பதங்களைத் தெலுங்கு இசைவாணராகிய க்ஷேத்ரையர் மிக்க விரசமாய்ப் பாடியதற்கு இப்பாசுரங்கள் வழிகாட்டின என்று அன்றோர் சொல்வர். அவ் ஆறு பாடல்களையும் சீழே காண்க. கருமலர்க் கூந்தல் ஒருத்தி தன்னைக் கடைக்கணித் தாங்கே ஒருத்தி தன்பால் மருவி மனம்வைத்து மற்றொ ருத்திக்கு உரைத்தொரு பேதைக்குப் பொய் குறித்துப் புரிகுழல் மங்கை ஒருத்தி தன்னைப் புணர்தி அவளுக்கும் மெய்யன் அல்லை ம்ருதிறுத் தாய் உன் வளர்த்தி யூடே வளர்கின்ற தாலுன்றன் மாயை தானே (3) தாய்முலைப் பாலில் அழுதிருக்கத் தவழ்ந்து தளர்நடை யிட்டுச்சென்று பேய்முலை வாய்வைத்து நஞ்சையுண்டு பித்தனென்றே பிறர் ஏசநின்றாய் ஆய்மிகு காதலோடு யானிருப்ப யான்விட வந்தஎன் தூதியோடே நீமிகு போகத்தை நன்குகந்தாய் அதுவுமுன் கோரம்புக் கேற்குமன்றே (4) மின்னொத்த நுண்ணிடையாளைக் கொண்டு வீங்கிருள் வாய்என்றன் வீதியூடே பொன்னொத்த வாடைகுக் கூடலிட்டுப் போகின்ற போதுநான் கண்டுநின்றேன் கண் ற்றவளை நீ கண்ணாலிட்டுக் கை விளிக்கின்றதும் கண்டே நின்றேன் என்னுக் கவளைவிட் டிங்குவந்தாய் இன்னம் அங்கேநட நம்பி நீயே (5) மற்பொரு தோளுடை வாசுதேவா வல்வினை யேன் துயில் கொண்டவாறே இற்றை யிரவிடை ஏமத்தென்னை இன்னணை மேலிட் டகன்று நீபோய் அற்றை இரவுமோர் பிற்றைநாளும் அரிவையரோடும் அணைந்து வந்தாய் எற்றுக்கு நீஎன் மருங்கில் வந்தாய் ப எம்பெருமான் நீ எழுந்தருளே | (6) பையர வின்னனைப் பள்ளியினாய் பண்டையோம் அல்லோம்நாம் நீஉகக்கும் மையரி யொண்கண்ணி னாருமல்லோம் வைகியெம் சேரி வரவொழிநீ செய்ய வுடையும் திருமுகமும் செங்கனி வாயும் குழலும் கண்டு. பொய்யொரு நாள்பட்டதே யமையும் புள்ளுவம் பேசாதே போகுநம்பி (7) என்னை வருகஎனக் குறித்திட்டு இனமலர் முல்லையின் பந்தர்நீழல் மன்னி யவளைப் புணரப்புக்கு மற்றென்னைக் கண்டுழறா நெகிழ்ந்தாய், பொன்னிற ஆடையைக் கையில்தாங்கிப் பொய்யச்சங் காட்டிநீ போதியேலும் இன்னமென் கையகத் தீங்கொருநாள் வருதியேல் என்சினம் தீர்வன்நானே (8) இத்தன்மை ஒருபுறமிருக்க, இவ்வாழ்வார் பாடல்கள் பல தம்மிசையாலே மிக்க சிறப்புப் பெற்றிருக்கின்றன; சில காட்டுவோம். திருவேங்கடமுடையான் விஷயமாகப் பாடிய “ஊனேறு செல்வத்து' என்று தொடங்கும் பாசுரம் சிறப்பானது. வேங்கடவனுடைய திருமலைமேல் தாம் குருகு, மீன், செண்பகம் இப்படிப் பிறக்கவேண்டும் என்ற ஆசையைக் கூறுகிறார். இசையில் பாட இது மிக்க இனிமையுடைய பாசுரம். “எம்பெருமான் மலைமேல் ஏதேனும் ஆவேனே” என்பது உச்சநிலை. “மன்னுபுகழ்க் கெளசலை' என்ற பாசுரம் உண்மையிலேயே ஒரு தாலாட்டுப் பாசுரம். முதல் தாலாட்டுப் பாசுரம் எனக் கருதத்தக்கது. இதுவே தமிழ்மொழியில் மற்ற தாலாட்டு தநூல்களுக்குத் தோற்றுவாய். நீலாம்பரி இராகத்துக்கென்றே இப்பாசுரம் அருமையாய் அமைந்தது. இவ்வாறாக, இவ்வாழ்வார் தமிழ் மார்க்கதர்சிகளில் ஒருவர். இசையிலும் (இத்நீலாம்பரி) இசைப்பொருளிலும் (க்ஷேத்ரையருக்குப் பதம்பாட வழிகாட்டியது) சிறப்புற்று விளங்குகிறார். ------------- பெரியாழ்வார் ஆழ்வார் அனைவருடைய வாழ்க்கை வரலாறுகளும் சுவையுடையன. அவற்றுள்ளும் பெரியாழ்வார் வரலாறும் திருமங்கையாழ்வார் வரலாறும் அதிகம் சுவையுடையன. பெரியாழ்வார் பாண்டிநாட்டு சீவில்லிபுத்தூரில் பிராம்மணர் குலத்தில் பிறந்தவர். விஷ்ணுசித்தர் என்பது இயற்பெயர். இவ்வூர்த் திருமாலாகிய வடபெருங்கோயிலுடை யானுக்குப் பூவெடுத்துத் திருமாலைகட்டும் தொண்டே புரிந்துவந்தார். அச்சமயம் மதுரையில் அரசுபுரிந்த பாண்டியன் தன் குரு செல்வநம்பிகள் அறிவுரைப்படி, ஒரு பொற்கிழி தூக்கி; சமயவாதிகள் வந்து தங்கள் சமயத்தை நிறுவிப் பொற்கிழி பெறதலாமென்று மக்களுக்கு அறிவித்தான். வடபெருங்கோயிலுடையான் தூண்டுதலால் இவரும் சென்று நாராயணனே பரனென்று நிறுவ, கிழி இவர் முன்னே தானே தாழ, இவர் அதைப்பெற்று அரசனால் சிறப்பும் பெற்று நகர்வலம் வரும் காலத்தில் தமக்கு முன்னே பிராட்டியோடு வந்து சேவை சாதித்த பெருமாளுடைய செளந்தர்யாதிகள் நிலைபெற்றிருக்கும் பொருட்டு ஒரு திருப்பல்லாண்டு பாடினார். பின்பு பொற்கிழியோடு தம்மூர் சென்று வாழுங்காலத்தில், கண்ணனுடைய பால்ய லீலைகளில் ஆழ்ந்து ஈடுபட்டு அனேகப் பாசுரங்கள பாடினார். இவைகளே பெரியாழ்வார் திருமொழி என்ற பெயரால் வழங்கும். பின்னர் இவர் ஆண்டாளைக் கண்டெடுத்து வளர்த்துத் திருவரங்கநாதனுக்கு மணம்செய்து கொடுத்த வரலாறு ஆண்டாள் வரலாற்றிலே சொல்லப்பெறும். இவர் தாய்த்தன்மை பூண்டு, திருமாலுக்குக் கண்ணேறு கழிக்கத் திருப்பல்லாண்டு பாடியமை யாலும், ஆண்டாளை மணம் செய்துகொடுத்த காரணத்தால் எம்பெருமாளாலேயே “நீர் நமக்கு மாமனார்” என்று சொல்லப் பெற்றமையாலும், இவர் பெரியாழ்வார் என்று பிறர் எவருக்குமில்லாத சிறப்புப்பெயர் பெற்றார். இவருடைய பாடல்கள் 473. யாவும் இசைப்பாடல்கள். முதலாயிரம் என்றே பெயர் அமைக்கப்பெற்ற நாலாயிரப் பிரபந்தத்தின் முதற்பகுதி இவருடைய பாடல்களைக் கொண்டே தொடங்குகிறது. முதல் பதிகம் திருப்பல்லாண்டு என்று பெயர்பெறும்; 12 பாடல்கள். ஏனைய பகுதிதான் பெரியாழ்வார் திருமொழி என்று வழங்கும். இதுமட்டும் 461 பாடல்கள். இப்பாடல்களுக்குப் பழமையாக வழங்கிய பண்ணோ இராகமோ இல்லை. நாதமுனிகள் பண் வகுத்திருக்கலாம். பின்னால் அது வழங்கவில்லை. ஆனால் எல்லாவற்றுக்கும் பிற்காலத்தில் இராகங்கள் சொல்லப்பெறுகின்றன. திருப்பல்லாண்டில் முதல்பாட்டு இரண்டடி; நாட்டை இராகம் - ஜம்பை தாளம்; மற்றவை நாட்டை இராகம் - அடதாளம் என்று சொல்லப்படும். பல்லாண்டோடும் பெரியாழ்வார் பாடல்களோடும் நாலாயிரம் தொடங்குவது மிக்க மங்கலமான தொடக்கம். பெரியாழ்வார் பாசுரங்கள் வைணவருக்கு மட்டுமல்ல, தமிழ் மக்கள் அனைவருக்குமே பெருஞ்சிறப்புத் தரவல்ல அருமைப் பாடல்கள். பறவையின் கணங்கள் கூடுதுறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக் கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக் கவிழ்ந்திறங்கிச் செவியாட்டகில் லாவே (3:6:8) உந்திபறத்தல் என்றதோர் பதிகம் பின் திருமங்கையாழ்வாருக்கும் மாணிக்கவாசகருக்கும் முன்மாதிரியா யிருந்திருக்கக்கூடும். சீதையை அசோகவனத்தில் அனுமன் கண்டு இராமனிடம் தான் கேட்டுவந்த அடையாளங்களைச் சொல்வது ஒரு சிறப்பான பதிகம் (3:10). அடுத்த சில பதிகங்கள் சில தலங்களைக் குறித்தவை. ஒரு பாடல், நம்பி பிம்பி என்று பிள்ளைக்குப் பெயரிடாதீர்கள், கண்ணன் பெயரிட்டழையுங்கள் (4:6:8) என்று சொல்வது, ஒவ்வொரு பாசுரத்தின் இறுதியிலும் இவர் தம் பெயர் சொல்லப் பலசுருதி கூறுகிறார். பாதாதிகேசப் பாசுரம் மட்டும் 21 பாடல். பாடல்கள் யாவும் சிறப்பான தமிழ், சிறப்பான பொருள், சிறப்பான பாவம், சிறப்பான இசை. பிற்காலத்தில் பாடல்களுக்குச் சொல்லப்பட்ட இராகங்கள் - அபுரூபம், தன்யாசி நீலாம்பரி, மோகனம், முகாரி, யமுனகல்யாணி, அடாணா தேகிராகம், உசேனி, பந்துவராளி, புன்னாகவராளி, அசாவேரி, பிலகரி, மத்யமாவதி, தோடி, கேதாரகெளளம், நாதநாமக்கிரியை, ஆரபி, சங்கராபரணம், சுருட்டி, பைரவி, சாவேரி, கானடா, ஸ்ரீராகம் என்பன. சில இராகங்கள் இரண்டு மூன்று திருமொழிகளுக்கும் சொல்லப்பட்டுள்ளன. பல இராகங்கள் இந்துஸ்தானித் தொடர்புடையன. ஆகவே இவ்விராகங்களை அமைத்த காலம் மிகவும் பிற்காலம் என்பது தெளிவு. 'யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே' (4:8:6) என்கிறார். வண்டினங்கள் வந்து இராக ஆலாபனம் செய்கின்றனவாம். ஆளம் வைத்தல் - அளத்தி, ஆலாபனம், “அளத்தியாவது கானத்துக்குப் பூர்வாங்கமான ஆலாபம்” என்பது உரை. திருமாலிருஞ்சோலை மலையில் குறமாதர் பண்குறிஞ்சிப் பாவொலி பாடி நடம் பயில்கிறார்கள் (4:3:4). மலைக்குப் பொருத்தமாக ஆழ்வார் குறத்தியரையும் குறிஞ்சிப் பண்ணையும் கூறுவது மிக்க சிறப்புடையது. தமிழ் மரபை நன்கு பின்பற்றியே ஆழ்வார் பாடல் செய்கிறார். இவர் பாடல்களில் இசைக்கருவிச் செய்திகள், குழல் ஒன்று நீங்க,இல்லை. யாழிசை என்று இவர் சொல்லுமிடத்து, ஒரு சிறப்பான கருத்தைக் குறிப்பிடலாம். பண்டைத் தமிழகத்தில், யாழ் தமிழ்ப்பெயர்; வீணை வடமொழிப்பெயர்; இரண்டும் ஓரே கருவி என்று வேறிடங்களில் விளக்கியிருக்கிறோம். எல்லா ஆழ்வாரும் யாழைச் சொல்கிறார்களேயன்றி, வீணையைச் சொல்லவில்லை. தொண்டரடிப்பொடியாழ்வாரும் தம் திருப்பள்ளி எழுச்சிப் பாடலில் பலகருவிகளைச் சொல்லுமிடத்து யாழ் குழல் முழவம் என்றே சொல்கிறார். எவருமே வீணை என்ற வடமொழிப்பெயர், அக்காலத்து இருந்தபோதிலும் சொல்வதில்லை. அடுத்த பாசுரம் கண்ணன் திரு அவதாரத்தோடு தொடங்குகிறது. தொடர்ந்து தொட்டிலில் கிடக்கும் குழந்தையைக் கண்டு மகிழ்தல், தாலாட்டுதல், அம்புலியழைத்தல், செங்கீரை, சப்பாணி என்ற தலைப்புக்கள். இவையும் பின்வரும் சில பாசுரங்களும் சேர்ந்து தமிழ்மொழியில் 12ஆம் நூற்றாண்டு தொடங்கிப் பிள்ளைத்தமிழ் என்ற புதிய இனிய ' பிரபந்த வடிவத்தை உருவாக்கியிருக்கின்றன. பின்னால் ஆழ்வார் தாமே யசோதையாக மாறிக் கண்ணனைப் பலவகையாலும் கொண்டாடுகிறார். எல்லாப் பாடல்களும் சுவையான பாடல்களே. தமிழுக்கு வாழ்வளிக்கின்ற பாடல்கள். இவற்றுள் கண்ணன் குழலூதற் சிறப்பு என்ற பதிகம் தனியே எடுத்துக்காட்டுதற்கு உரியது. ஒரு பாடல்; சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச் செங்கண்கோடச் செய்யவாய் கொப்பளிப்பக் ப குறுவெயர்ப்புருவம் கூடலிப்பக் கோவிந்தன் குழல் கொடூதினபோது (3:6:8) ஆழ்வார் தாம் தமிழ் பாடுவதைப் பல இடங்களில் சிறப்பாய்க் குறிப்பிட்டுப் பாடுகிறார். எல்லா ஆழ்வாருமே தம்முடைய தமிழை விதந்து பேசுகிறார்கள். இது வடமொழி ஆதிக்கம் வளர்ந்துகொண்டு வந்த சூழ்நிலையில் இவர்களுக்கிருந்த பெருந்தமிழார்வத்தையே புலப்படுத்துகிறது. ஆனால் அருமையான இசைப்பாடல்களும் வடிவங்களும் பாடிய இவ்வாழ்வார் தாம் இசைபாடுவதாகச் சொல்லிய இடங்கள் மிகவும் குறைவு. தமிழ் இன்னிசை மாலைகள், இம்மாலை பண்புக். . . பட்டர்பிரான் சொன்ன பத்தே, பண்ணின்பம் வரப்பாடும் பத்தருள்ளார், குழல் முழவம் விளம்பும் புத்தார்க்கோன் என்பனவே இவர் பாடலில் காணும் குறிப்புக்கள். --------- ஆண்டான் பாண்டிநாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூரில் விஷ்ணுசித்தர் என்ற பெரியாழ்வார் தாம் செய்துவந்த திருமாலைப் பெரும்பணிக்காக நந்தவனத்திலே திருத்துழாயடியில் மண்வெட்டிகொண்டு கொத்தியபோது, துழாயடியில் ஆடிப்பூரத்தில் பூமிப்பிராட்டி ஒரு பெண்குழந்தை வடிவிலே அவதரித்தருள, ஆழ்வார் குழந்தையை எடுத்துக்கொண்டு போய்க் கோதை என்று பெயரிட்டு வளர்த்துவந்தார். வளர்ந்துவந்த கோதை திருவரங்கப் பெருமாள் மீது காதலுற்று, ஆழ்வார் கட்டிவைத்த திருமாலைகளைத் தானே சூடிப் பார்த்துக் கண்ணாடியில் தன் அழகு பெருமாளுக்கு ௨வப்பாயிருக்குமா என்று பார்த்து வரும் நாளையில் பகவான் திருவருளால் பந்தாய்ச் சுருட்டிய மாலையில் ஓஒருகுழல் இருக்கக் கண்டு, பெண்ணின் செய்கைகண்டு இதுதகாது என்று அவளைக் கண்டித்து, வேறுமாலை கட்டிப் பெருமாளுக்குச் சமர்ப்பித்தார். பெருமாள் இவர் கனவிலே வந்து அவள் சூடிக் கொடுத்த மாலைதான் தமக்கு விருப்பமான மாலை என்று கூறக்கேட்ட ஆழ்வார் மிக்க அதிசயமடைந்து, பின் ௮வள் சூடிக்கொடுத்த மாலையையே சமரா்ப்பிப்பாராயினர். அதுமுதல் கோதை, சூடிக்கொடுத்த நாச்சியாராயினார். பின், ஆழ்வார் இவருக்குத் திருமணம் செய்விக்க எண்ணியபோது, இவள் அரங்கநாதனுக்கன்றிப் பிறருக்கு வாழ்க்கைப்படமாட்டேன் எனலும், இவர் கவலையடைய பெருமாளே இவளைத் தம் சந்நிதிக்குக் கொண்டுவரும்படியும் அங்குத் தாம் இவளை மணம் புரிவதாயும் ஆழ்வாருக்குச் சொன்னார். ௮வரும் அவ்வாறே கோதையைப் பரிவாரங்களோடு திருவரங்கன் சந்நிதிக்குக் கொண்டுசென்றார். கோ தையும் கருவறையுள் புகுந்து நாதனை மிதித்தேறி, திருவரங்கநாதனிடத்து மறைந்துவிட்டாள் பெருமாளும் ஆழ்வாரை நீர் நமக்கு மாமனார்' என்று கொண்டாடினார். அதுமுதல் கோதை ஆண்டாள் என வழங்கப்பெற்றார். ஆண்டாள் பாடிய பாசுரங்கள் திருப்பாவை என்ற முப்பது பாடலும் பிறபாடல்களாகிய நாச்சியார் திருமொழி என்ற 14 பதிகங்கள்கொண்ட 743 பாடல்களும், யாவும் இசைப்பாடல்கள். இசைத்தன்மையால் இவை முழுமையும் நாலாயிரத்தில் முதலாயிரத்துள் தொகுக்கப்பெற்றுள்ளன. இவை அங்கு இயல்பாகப் பெரியாழ்வார் பாடலை அடுத்து வைக்கப்பட்டுள்ளன. திருப்பாவை ஆண்டாள் திருப்பாவையானது, தோன்றிய காலந்தொடங்கி ஸ்ரீவைஷ்ண சமூகத்தை வழிகாத்திருக்கிறது. வைணவ சமயதத்துவம் முழுமையுமே இதனுள் அமைத்துள்ளது என்று பெரியோர் கூறுவர். இராமானுசருக்கு இதனிடத்திருந்த ஈடுபாடும் அவர் எடுத்தோதிவந்த தன்மையும் காரணமாக அவருக்குத் 'திருப்பாவை ஜீயர்' என்றொரு பெயரும் வழங்கும். இந்நூலுக்குப் பெரியவாச்சான்பிள்ளை செய்த மூவாயிரப்படி வியாக்கியானமும் பிள்ளைலோகாசாரியர் தம்பியான அழகியமணவாளப்பெருமான் நாயனார் செய்த அறாயிரப்படி வியாக்கியானமும், சுத்தசத்துவம் தொட்டாசாரியர் செய்த ஸ்லாபதேசம், வானமாலை ஜீயர் செய்த ஸ்லாபதேசம் - நான்கு வியாக்கியானங்கள் பண்டைக்காலத்தே எழுந்துள்ளன. இப்பாசுரங்களின் அருமைபற்றி இவை வைணவர் தினமும் ஓதுதற்குரிய நித்தியானுஸந்தானப் பாசுரங்களாகவும் விதிக்கப் பெற்றுள்ளன. ஆழ்வார்கள் பாடல் பாடிய காலத்தில் அவர்களுடைய பாசுரங்களுக்கு எந்தப் பண்ணும் குறிப்பிடப்பட்டதில்லை, மிகவும் பிற்பட்ட காலத்தில்தான் நாதமுனிகள் தம் மருமகப் பிள்ளைகளைக் கொண்டு பண்கள் வகுத்தார் என்று பலவிடங்களில் குறிப்பிட்டோம். அப்பண்களும் ஆட்சியில் இல்லை, பிற்காலத்தில் பாடல்களுக்கு இசைக்குறிப்புக்கள் சொல்லப்பட்டன. ஆண்டாள் பாசுரங்களுக்குப் பண்வகுப்பு இல்லை, இராகங்கள் சொல்லப்பட்டன. அவை பின்வருவன: பிலகரி - பாடல் 1; பந்துவராளி 2, 3; காம்போதி 4, 21; தோடி 5; பூபாளம் 6, 7, 8; மோகனம் 9; அசாவேரி 10; சகானா 17, கேதாரகெளளம் 12: அடாணா 13, 23; சாரங்கா 14, செளராஷ்டிரம் 15; யமுனாகல்யாணி 16, 17; சாவேரி 18; ஸ்ரீராகம் 19; தேசி 20; பைரவி 22; பியாகடை 24: சங்கராபரணம் 25; ஆரபி 26: ஆனந்தபைரவி 27; தன்யாசி 28; கல்யாணி 29; சுருட்டி. 30. ஆக, 24 இராகங்கள். இவை பண்ணல்ல; சமீபகாலத்தில் பாடல்களைப் பக்தர்கள் பாடி வந்த இராகங்கள் என்ற அளவே இவற்றுக்குள்ளஆட்சி. இவற்றுக்குப் பழமையான ஆட்சி இல்லை. அன்றி, திருப்பாவை முழுமையிலும் எந்த இசைக்குறிப்பும் இல்லை. கடைசிப் பாடலில் ஆண்டாள் தமது பாசுரத்தைச் “சங்கத்தமிழ் மாலை முப்பது” என்று சொல்வது வரலாற்றுப் பொருளுடையது. திருப்பாவையைச் சிறப்பித்த பழைய தனியன் பாடல்கள் மிக்க பொருள் பொதிந்தவை. அன்ன வயற்புதுவை ஆண்டாள், அரங்கற்குப் பன்னு திருப்பாவை பல்பதியம் - இன்னிசையால் பாடிக் கொடுத்தாள்நற் பாமாலை, பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு. பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும் வேதம் அனைத்திற்கும் வித்தாகும் - கோதைதமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதூஉம் வம்பு. வேதம் அனைத்திற்கும் வித்தாகும் என்று இத்தனியனில் கூறியிருப்பது நோக்கத்தக்கது. நாச்சியார் இருமொழி இது பதினான்கு திருமொழிகளில் 143 பாசுரங்கள் கொண்ட அரிய இசைநூல். சூடிக்கொடுத்த நாச்சியார் பாடிய பாசுரங்களாதலால் இப்பெயர் பெற்றது. முந்திய திருப்பாவைபோலவே இதுவும் வைணவர் வாழ்க்கையில் சிறப்பிடம் பெற்றிருக்கிறது. வைணவர் திருமணங்களில் ஆண்டாள் பாடிய கனவுத் திருமணப்பாடல் இன்றியமையாத ஒரு சடங்காக அன்றுதொட்டு இன்றுவரை அமைந்திருக்கிறது. ஆறாம் திருமொழி முழுமையும் இக்கனவைப் பாடுவது, கல்யாணி இராகம் ரூபகதாளம் இத்திருமொழிபோலவே பிற திருமொழிகள் எல்லாமும் எளிய சொற்களும் சிறப்பான பொருட்சுவையும் பூரண இசைப்பொலிவும் பெற்று விளங்குவன. எடுத்துக் சாட்டாகச் சில காட்டுவோம். மிக்க பிரசித்தியுடையமையால் ஏழாம் பத்து முதற்பாடல், வராளி இராகம்; கருப்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ, திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ, மருப்பொசித்த மாயவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கின்றேன், சொல்லாழி வெண்சங்கே. ஆவ லன்புடை யார்தம் மனத்தன்றி மேவ லன்விரை சூழ்துவ ராபதிக் காவ லன்கன்று மேய்த்து விளையாடும் கோவ லன்வரிற் கூடிடு கூடலே (4:8) இது கேதார இராகம், அடதாளம். பின்வருவது கல்யாணி இராகம் ரூபகம்; இறுதித் திருமொழி (14), எட்டாம் பாடல்; வெளிய சங்கொன் றுடையானைப் பீதக வாடை யுடையானை அளிநன் குடைய திருமாலை ஆழி யானைக் கண்டீரே? களிவண் டெங்கும் கலந்தாற்போல் கமழ்பூங் குழல்கள் தடந்தோள்மேல் மிளிர நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோமே. திருப்பாவையில் இசைக்குறிப்புக்கள் இல்லை. ஆனால் நாச்சியார் திருமொழியில் சில உள்ளன. 'இன்னிசை' (3:10, 12:10), “காமரம்' (5:3), ' பண்ணுற நான்மறை' (5:11), 'பண்பல செய்கின்றாய் பாஞ்ச சன்னியமே' (7:8), 'மருள்' (9:8). இவற்றைப் பார்க்கும்போது, ஆண்டாள் இசையில் பெருவிருப்புக் கொள்ளவில்லை என்று கூறுவது தவறாகாது. இவருடைய பாடல்களுக்கு இங்குக் குறிப்பிடப்பட்டுள்ள இராகங்கள் பின்வருவன. சாவேரி, யமுனா கல்யாணி, செஞ்சுருட்டி, கேதாரம், அனந்தபைரவி, கல்யாணி, வராளி, துசாவந்தி, காம்போதி, நாதநாமக்கிரியை, பைரவி - ஆக 7, ------------ திருமங்கையாழ்வார் இவர் சீகாழிக்கு அருகிலுள்ள குறையலூர் என்ற சிற்றூரில் அவதரித்து நீலன் என்ற பெயர்தாங்கி சோழனுடைய சேனாபதியாக வாழ்ந்தார். குலம் கள்ளர் குலம். ஒரு வைத்தியன் வளர்த்து வந்த குமுதவல்லி என்ற பெண்ணை இவர் மணக்க விரும்பவும், திருவிலச்சினையும் திருநாமமும் தரித்து, ஓராண்டு காலத்திற்கு, தினம் 1008 வைணவருக்கு அமுது செய்வித்து வந்தால் மணப்பதாய்க் கூற; அவர் அவ்வாறே செய்துமுடித்து அவளை மணம் புரிந்தார். வைணவருக்கு அமுது செய்விக்கும் தொண்டில் இவர் தமது சொத்தெல்லாம் இழக்க, அரசன் இவரைத் திறை கொடுக்காமையால் சிறையிட்டான். இவர் பகவானிடம் முறையிட, பகவான் காஞ்சிக்கு வருமாறு அழைத்தார். இவரும் அப்படியே சென்று மிகுந்த பணம்பெற்று அரசனுக்குச் சேர வேண்டியதைக் கொடுத்து விட்டுப் பின் வழக்கம்போல் வைணவர் அழுது படையல் நடத்தி வந்தார். சிலநாள் சென்று பொருள் முட்டுப்பாடு வரவே இவர் சாலையில் வழிப்பறி செய்து பொருள் தேடி வந்தார். இவருக்கு அருள்செய்யத் திருவளம்கொண்ட பெருமாள் மணவாளக்் கோலத்தில் பத்தினி சகிதமாக வரவும், இவர் அனைத்துடைமைகளையும் பறித்துக் காலாழியைக் கழற்ற முடியாமல் பல்லால் கடித்து எடுத்தார். பெருமாள் “நம் கலியனோ எனவும், இவர் பொருட்சுமையை அசைக்க முடியாதது கண்டு, “நீ மந்திரம் பண்ணினாயோ என, பெருமாள் 'ஆம்' என்று சொல்லி இவருடைய வலச்செவியில் அட்டாசாரத்தை உபதேசித்து தமது திவ்விய சொரூபத்தைக் காட்டியருளினார். இவரும் ஞானக்கண்ணாலே கண்டு தரிசித்து, “வாடினேன் வாடி வருந்தினேன். . . நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்” என்று பாடினார். பெரியதிருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருஎழுகூற்றிருக்கை, சிறியதிருமடல், பெரியதிருமடல் என்கிற ஆறு பிரபந்தங்களையும் நாற்கவிகளால் பாடினார். பின்னர் எல்லாத் திவ்வியதேசங்களும் தரிசித்து மங்களாசாசனம் செய்துகொண்டு திருவாலிநாடு அடைந்தார். திருவரங்கம் பெரியகோயில் திருப்பணி செய்யத் திருவுளங்கொண்டு, அதற்குப் பொருள் தேடாது நாகையிலிருந்த பெளத்தக்கோயிலை இடித்து புத்தவிக்கிரகத்துப் பொன்னை திருமதில் கட்டப் பயன்படுத்திக் கொண்டார். திருமதில் கட்டும்போது மதிலிடையே தொண்டரடிப்பொடி திருமாலை கட்டிய இடம் நேர்பட அதை ஒதுக்கி மதில் அமைத்தார். இவ்வாறு திருவரங்கத்து எல்லாத் திருப்பணிகளையும் முற்றுவித்து நெடுநாள் வாழ்ந்து உலகத்தை வாழ்வித்தருளினார். இவருடைய திருமொழிகளில் “திருத்தாய் செம்போத்தே” என்று தொடங்கும் 10ஆம் பத்து 10ஆம் திருமொழி தனியே இங்குக் குறிப்பிடத்தக்கது. இது அப்பர் சுவாமிகளுடைய “தலையே நீ வணங்காய்' என்ற பதிகத்தை அடியொற்றி வந்தது. அங்கு அப்பர் பெருமான் தம் உடலுறுப்புக்கள் ஒவ்வொன்றாய் விளித்து சிவனுக்கே பணிசெய்யுமாறு உபதேசிக்கிறார். அதையடியொற்றி அதே யாப்பில் வந்த இப்பாட்டில் ஆழ்வார் செம்போத்து காக்கை குயில் கிளி கோழி போன்றவற்றை விளித்துக் காதல்வசப்பட்ட பெண்ணின்நிலையில் திருமாமகள் கணவன் தனக்கு அருள்செய்ய வருமாறு அழைக்கச் சொல்கிறார். அப்பர் பாடிய சாதாரிப் பண்ணிலேயே இதையும் பாடலாம். இவருடைய இசைப்பாச்கள் முழுமையும் பெரியதிருமொழி என்ற பெயரால் இரண்டாவது ஆயிரமாக உள்ளன. மொத்தப் பாடல் 1084. இதனோடு சேர்ந்த திருக்கு றுந்தாண்டகம் 20; திருநெடுந்தாண்டகம் 30 பாடல்கள். மற்றும் இயற்பாவில் எழுகூற்றிக்கை 46 அடிகள். சிறியதிருமடல் 772 கண்ணிகள். பெரியதிருமடல் 148 கண்ணிகள். இவ்வளவு அதிகமான பாடல்களுள் இவர் கூறும் இசைச்செய்திகள் குறைவு. தாளம் பண் இன்னிசை' என்பன பலகால் சொல்லப்படுகின்றன.
மருள்: “குறவர் மாதர்களோடு வண்டு குறிஞ்சி மருளிசை பாடும் வேங்கடம்' (2:1:2); 'குறப்பெண்டிரோடே வண்டுகளானவை குறிஞ்சி இந்தளம் என்னும் பண்ணைப் பாடாநிற்கிற” என்பது உரை. “மருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம்” (2:1:7); “மருள் இந்தளம் என்கிற பண்ணை வண்டுகள் பாடாநின்ற திருமலை" என்பது உரை. குறிஞ்சி என்பது பெரும்பண். இந்தளம் - மருதயாழ்த் திறத்தினுள் ஒன்று. மருள் - குறிஞ்சி யாழ்த்திறத்தினுள் ஒன்று. மருள் என்றே ஒரு திறத்தின் பெயராகவும் சொல்லப்படும். காந்தாரம்: “காந்தாரம் (3:8:1); “நைவளம்' (5:10:2 திருநெடுந்தாண்டகம் 22), “பாலையாழ்': பாலையாழைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “பண்ணின் இன்மொழி யாழ்நரம்பில் பெற்ற பாலையாகி இங்கே புகுந்து”(7:3:7), இதற்குப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானம்; “பண் வர்க்கத்திலே இனிய பேச்சையுடைய யாழ் நரம்பிலே யாழிலே பிறக்கப்பட்ட பாலையாகிய பண்ணாம். அப்பண்போலே போகியனாய்க் கொண்டுவந்து புகுந்து” என்பது. ஏழிசையைப் பல இடங்களிற் கூறுகிறார். “இசையேழ்' (2:10:2), “இசைகளேமழும்' (3:4:1); “ஏழினிசையோர்' (3:8:4) இசையேழ் (6:7:7). கருவிகளில் முழவொலி, சங்கினொலி, கடுவாய்ப்பறை (பல்லவனுக்குரியது). வண்டு பாடுவதைச் சொல்லும்போது, “தென்னவென்று வண்டு இன்னிசை முரல்தரும்” (3:1:2, 5:3:8); “வரிவண்டு தேதெனவென் றிசைபாடும்' (4:1:1) என்று இலக்கணத்துக்குப் பொருத்தமாகவே சொல்கிறார். பெரியதிருமொழி 108 பதிகங்கள் (திருமொழிகளைக்) கொண்டது. ஒவ்வொரு திருமொழிக்கும் தனித்தனி இராகம் சொல்லப்பட்டுள்ளது. அனைத்தையும் இங்கே சொல்வது இயலாதாயினும் முன் குறிப்பிடாத இராகங்களை மட்டும் குறிப்பிடுகிறோம். கமாஸ், தர்பார், பிலகரி, மத்யமாவதி (காம்பூஜி), சைந்தவி, யதுகுலகாம்போதி, சாரங்கா, பரசு, கானடா, கெளளிபந்து, மாஞ்சி, திருக்குறுந்தாண்டகம் முழுமைக்கும் - தோடி, ரூபகம். திருநெடுந்தாண்டகம்:- இரண்டு - மூன்று - நான்கு பாசுரங்களுக்கு ஓர் இராகமாக 12 இராகங்கள் உள்ளன. குறிப்பு: குலசேகரர் பாசுரத்திலும் திருநெடுந்தாண்டகத்திலும், “சொன்ன பன்னிய நூல் தமிழ்மாலை” என்று வருமிடங்கள், “சொன்ன பண்ணியல் நூல் தமிழ்மாலை” என்றிருக்கவேண்டும் என்று மு. ராகவையங்காரவர்கள் எழுதியிருப்பது மிகவும் பொருத்தமாகவே உள்ளது. உதாரணம்; பெருமாள் திருமொழி - 4:11, 8:11, திருநெடுந்தாண்டகம் - 30. பதிப்பித்தோர் யாரும் திருத்தப்பாடம் கொள்ளவில்லை. இவருடைய பாடல்களுக்கு எடுத்துக்காட்டாக, இவருடைய முதல் திருமொழியில் ஒரு பாடலும் திருநெடுந்தாண்டகத்தில் ஒரு பாடலும் பின்னே தருகிறோம். பெரிய திருமொழி முதல்பாசுரம் - சங்கராபரணம், திரிபுடை, வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெருந்துய ரிடும்பையில் பிறந்து கூடினேன் கூடி இளையவர் தம்மோடு அவர்தரும் கலவியே கருதி ஓடினேன் ஒடி உய்வதோர் பொருளால் உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து ” நாடினேன் நாடி நான்கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம். திருநெடுந்தாண்டகம் 27, கல்யாணி இராகம் அ/டதாளம் மைவண்ண நறுங்குஞ்சிக் குழல்பின் தாழ மகரம்சேர் குழையிருபாடு இலங்கி யாட எய்வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தாரென் முன்னே நின்றார் கைவண்ணம் தாமரைவாய் கமலம் போலும் கண்ணிணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத் தவர்நிலைமை கண்டும் தோழீ அவரைநாம் தேவரென்று அஞ்சி னோமே. வேறெந்தப் பாசுரத்துக்கும் இல்லாத ஒரு பெருமை மேற்காட்டிய “மைவண்ண நறுங்குஞ்சி' என்ற பாசுரத்துக்கு உண்டு. ஸ்ரீவைஷ்ணவ ஆசாரியரான ஸ்ரீபட்டர் இவ்வொரு பாசுரத்துக்கு மட்டும் வியாக்கியானம் செய்திருக்கிறார். வேறெந்தப் பாசுரத்துக்கும் அவர் வியாக்கியானம் செய்யவில்லை. பின்னால் நஞ்சீயராக மாறிய அத்வைதியை இவர் காணச்சென்றபோது தம்மை அறிமுகப்படுத்தியவர்களி௨ம் வேதங்களையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு “நாம் திருநெடுந்தாண்டகம் வல்லோம்' என்று குறிப்பிடுமாறு சொல்லியது அவருக்கு இப்பாடல்களில் இருந்தஅதனால் வந்த பெருமித உணர்ச்சியையும் காட்டுவதாகும். தொடக்கத்தில் ஆழ்வார் நூல்கள் அகல் சிறுகுறிப்பு தரப்பட்டது. இங்குச் சில சொற்கள் விரிவாகக் கூறலாம். ஆழ்வாருடைய பெரியதிருமொழி என்பது அதன் பாசுரப்பெருமையால் இப்பெயர் பெற்றது. இதுவே இரண்டாவது ஆயிரம். இவை மட்டும் 1084 பாடல்கள். வழக்கம்போல் இவை 10 பாடல்கொண்ட திருமொழியாகவும், 10 திருமொழிகொண்ட ஒரு பத் துமாகவும் மொத்தம் 1/ பத்துக்களாக உள்ளன. 11/ஆவது பத்தில் 7 திருமொழிகளும் ௪ஆம் திருமொழிகள் சாற்றுப் பாட்டுக்கள் என்று தனியே 8 பாட்டுக்களும் உள்ளன. பெரிய: திருமொழியில் முதல் திருமொழி “வாடினேன் வாடி' என்று தொடங்குவது. ஆழ்வார் தம் காதில் பகவானால் உபதேசிக்கப்பெற்றபோது பாடியது இது. இதன் 9ஆம் பாடல் 'குலந்தரும் செல்வம் தந்திடும்' என்ற பாசுரம் மிக்க பிரசித்தமானது. திருவேங்கடத்தைக் குறித்த 9ஆம் திருமொழி “தாயே தந்தை என்றும்' என்று தொடங்குவதும் அதன் 7ஆம் பாசுரமாகிய “தெரியேன் பாலகனாய்ப் பல தீமைகள் செய்துமிட்டேன்' என்ற பாடல்கள் நன்கு தெரிந்தவை. இவர் தம்பாடல் *சங்கமுகத் தமிழ்மாலை' (3:4:10) என்று சொல்வது காணத்தக்கது. குகனுக்கு இராமன் அருள்செய்த திறத்தைக் கூறும் பாடல் சிறப்புடையது; ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது இரங்கி மற்றவற் கின்னருள் சுரந்து மாழை மான்மட நோக்கியுன் தோழி உம்பி எம்பி என் றொழிந்திலை உகந்து தோழன் நீஎனக் கிங்கொழி என்ற சொற்கள் வந்தடி யேன்மனத் திருந்திட ஆழி வண்ண நின் அடியினை அடைந்தேன் அணிபொ ழில்திரு அரங்கத்தம் மானே (5:8:1) பெரியாழ்வார் பாடிய பாசுரங்கள்போல இவரும் சில திருமொழிகளில் மகளிர் விளையாட்டுக்களை அமைத்துப் பாடியிருக்கிறார். பெரியதிருமொழி 70:5 முழுதும் “ஒளிமணி வண்ணனே சப்பாணி” என்று கண்ணனைச் சப்பாணிகொட்ட அழைப்பது. “காதில் கடிப்பு' என்ற பெரியதிருமொழி 10:8 முழுமையும் ஆய்ச்சியர் ஊடல், குலசேகராழ்வார் பாடலை ஓத்திருக்கவல்லது. பெரியதிருமொழி 10:10 “திருத்தாய் செம்போத்தே' என்பது, அப்பருடைய 'தலையே நீ வணங்காய்' என்ற பதிகத்தின் சந்தத்தில் அமைந்தது. செம்போத்து குயில் முதலான பிராணிகளை வைத்து 'மாயனை அமை' என்று கூறுவது. பெரியதிருமொழி 11:5 முழுமையும் “சாழல்' பாசுரம். இதில் 8ஆம் திருமொழி பழமொழிகளாயுள்ளது. ஆழ்வார் பல பாசுரங்களை இங்கு அப்பர் சுவாமிகள் பாடலின் யாப்பும் சொல்லும் பொருளும் தொடையும் அமையப் பாடியிருப்பது நோக்கத்தக்கது. அப்பர் பாடல்களில் மிகுதியான ஈடுபாடுடையவர்போலும். “'பொங்கத்தம் பொங்கோ, குழமணிதாரமே' என்பனபோன்ற விளையாட்டுக்கள் இன்று அறியப்பெறவில்லை. அடுத்த இரண்டும், இரண்டாந்திருவாயிரத்துள் சேர்க்கப்பெற்ற திருக்குறுந் தாண்டகம், திருநெடுந்தாண்டகம் என்பனவாகும். திருமங்கையாழ்வார் பாடிய திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் இரண்டும் இசைப்பாடல்களாகக் கருதப்பட்டு, பெரிய திருமொழியைத் தொடர்ந்து, இரண்டாம் ஆயிரத்தில் அமைக்கப் பட்டுள்ளன. குறுந்தாண்டகம் 20 பாடல், அப்பருடைய திருநேரிசையையொத்தது. அறுசீர்விருத்தம் நெடுந்தாண்டகம் முன்னமே சொல்லப்பட்டது. 30 தீண்டபாடல் எண்சீர் விருத்தம் அப்பருடைய திருத்தாண்டகம்போல, செந்திறத்த தமிழோசை என்று (பாடல் 4) சொல்லுமிடத்தில் செந்திறம் என்ற பண்ணாகிய செரந்துருத்திப் பண்ணுக்குரிய தமிழோசை என்று பொருள்செய்யும்படியும் அமைந்துள்ளது. ஒரு பாடலில் நற்றாய் தன்மகள் திருவரங்கப்பெருமாள் புகழை வீணையில் இசைக்கிறாள் என்று சொல்வதாக உள்ளது; சொல்லுயர்ந்த நெடுவீணை முலைமேல் தாங்கித் தூமுறுவல் நகையிறையே தோன்ற நக்கு மெல்விரல்கள் சிவப்பெய்தத் தடவி யாங்கே மென்கிளிபோல் மிகமிழற்றும் என்பே தையே (15) மேற்குறிப்பிட்ட தாண்டகங்கள் இரண்டும் இசைப்பாடல்கள், பெரியதிருமொழி போலவே. மற்ற திருஎழுகூற்றிக்கை, சிறியதிருமடல், பெரியதிருமடல் மூன்றும் இசைக்குரியனவல்ல. அவற்றுள் எந்த இசைக்குறிப்பும் காணப்படவும் இல்லை. --------- நாலாயிர பிரபந்த வியாக்கியானங்களில் ஆங்காங்கு சுவையான இசைக்குறிப்புக்கள் உள்ளன. ஒன்று” பெரியவாச்சான்பிள்ளையின் உரை, பெரியதிருமொழியில் இருபதாம் பாடலுக்குரியது. பாடல் பின்வருவது: கரிய மாமுகில் படலங்கள் கிடந்தவை முழங்கிடக் களிறென்று பெரிய மாசுணம் வரைஎனப் பெயர்தரு': பிரிதிஎம் பெருமானை லரிகொள்் வண்டறை பைம்பொழில் மங்கையர் கலியன தொலிமாலை அரிய இன்னிசை பாடுநல் அடியவர்க்கு அருவினை அடையாவே (12:10) “இங்கு அரிய இன்னிசை என்று பாடியதைக் குறிப்பிட்டு அருமை பெருமை சுவைபாட்டையும் உடைத்தாய் இருப்பது அரிய இன்னிசை. இதுபற்றி ஒரு வரலாறு உண்டு. திருமங்கையாழ்வார் தம் திருவாயாலே அரிய இன்னிசை என்று கூறியதன்றோ இத்திருமொழி என்று வியந்து கூறுவார்கள். மேலும் ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் என்பவர் ஆசாரியர் வரிசையில் ஒருவர். இவருக்கும் மற்றொருவருக்கும் இசை சம்பந்தமான கருத்து வேற்றுமை எழுந்தது. அப்போது அரையர் மற்றவர்களோடு பிணங்கித் தம் கையிலிருந்த தாளத்தைத் தட்டியவாறு “வாலி மாவலத்து' என்னும் இத்திருமொழியை (21ஆம் திருமொழியின் முதல் பாடல் தொடக்கம்) என்னோடு பாடமுடியுமானால் பாடுங்கள் பார்க்கலாம் என்று சூளுரைத்தாராம். இஃது இசைப் போட்டிகளின்போது பாடுவதற்கு முன்வைக்கப்படும் திருமொழி. அஃதாவது இது பலருக்கும் இசையூட்டிப் பாடுவதற்கு அரிய திருமொழி என்பது பொருள். ஒருவர் இத்திருமொழியின் சொற்சிறப்பினைக் காணலாம்; பொருட்சிறப்பினை அறியலாம்; ஆனால், இதனுள் அமிழ்ந்து இதன் இசைச்சிறப்பினை அறிய இயலாது என்பது கருத்து.” இவ்வுரைக் கூற்றால் ஆழ்வார் பாசுரங்கள் பண்ணோடு பாடியநிலை இருந்தது என்பது நன்குணரப்படும். --------- நம்மாழ்வார் ஆழ்வார் அனைவரையும் அவயவ பூதராகவுடைய நம்மாழ்வார், பாண்டிநாட்டின் தென்கோடியில் உள்ள திருக்குருகூரில் பரம்பரை வேளாள வைணவக் குடும்பத்தில் காரியார் உடைய நங்கை என்பார் புதல்வராகப் பிறந்தார். வைகாசி விசாகம். குழந்தை பிறந்ததுமுதல் மூச்சு அசைவு எதுவும் இல்லாமை கண்ட பெற்றோர் குழந்தையைக் கோயில் திருப்புளியாழ்வாரடியில் கண்வளரச் செய்தார்கள். 16 ஆண்டுகள் சென்றன திருக்கோளூரில் பிறந்த மதுரகவிகள் என்ற பிராமணர் வடக்கே திவ்வியதேசங்களைச் சேவிக்கச் சென்றவர், தென்திசையிலே ஓர் அபூர்வமான ஒளியைக் கண்டு, அதைநோக்கி வந்தார். ஒளி திருக்குருகூர்ப் புளியினடியில் மறைந்தது. மதுரகவிகள் அங்கு புளியினடியில் இருந்த இளைஞர் பேச்சில்லாமல் இருந்தது கண்டு, ஒரு கல்லைப்போட்டு சத்தம் உண்டாக்க, இளைஞர் கண் விழித்தார். அவரைப் பரீட்சித்து, அவரைத் தம் குருவாகக் கொண்டார். அக்குழந்தையே நம்மாழ்வார் என்று பிற்காலம் சொல்லப்பெற்றார். எம்பெருமான் எல்லாக் கருவிகளாலும் பூரணமாய் அனுபவித்து ஆழ்வார் தம் அனுபவத்தை நான்கு நூல்களாக வெளியிட்டார். அவை திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி எனப் பெயர்பெறும். நான்கும் முறையே நான்கு வேதங்கள். திருவாய்மொழி சாமவேதம். ஆக, அது பூரணமாய் 1102 பாட்டும் இசைப் பாட்டே. பின்னர் அவர் மதுரகவிகளுக்குக் குறைவின்றி அனுக்கிரகம் செய்து 32 ஆண்டுகள் புளிநிழலைவிட்டகலாமலே இருந்து பரமபதம் அடைந்தார். நம்மாழ்வார் சேனைமுதலிகள் அம்சம். அவருக்கு நிழல் கொடுத்த புளி, திருப்புளியாழ்வார், அதிசேஷனது அம்சம். இவருடைய திருவாய்மொழி முழுமையும் நாலாவது ஆயிரம், இசைப்பா. திருவாய்மொழிக்குப் பலவான வியாக்கியானங்கள் எழுந்துள்ளன. இயலாக உள்ள திருவிருத்தம் (100 பாடல்), திருவாசிரியம் (7 பாடல்), பெரிய திருவந்தாதி (87 பாடல்) ஒன்றும் இசையல்லாது இயற்பாடல்களே ஆனபடியால், அவை மூன்றாவது ஆயிரமாகிய இயற்பாடவில் சேர்க்கப்பட்டுள்ளன. திருவாய்மொழியில் இசைச் செய்திகள் மிகவும் குறைவு. திருவாய்மொழி சாமவேதத்துக்கு இணையானது என்பது வைணவர் நம்பிக்கை. வண்டு முரல்வதை மரபையொட்டி “தென்னாதனா என்று வண்டு முரல் திருவேங்கடம்” என்றே பாடுகிறார். விளரி என்ற பண்ணை “விளரிக்குரல் அன்றில்” (திருவிருத்தம்: 83) என்ற தொடரால் உணர்த்துகிறார். திருமாலை, “நல்யாழ் பயில் நூல் நரம்பின் முதிர்கலையே' என்று பாடுகிறார். ஆனால் பண்ணையும் திருமாலையும் இணைத்துச் சொல்ல இவருக்குப் பல சந்தர்ப்பங்கள் பாடலில் உள்ளன. சிறப்பாக, “புகழும் நல்லொருவன் என்கோ” (3:4) என்ற பதிகமும் “கடல்ஞாலம் செய்தேனும் யானே' என்னும் பதிகம் முழுமையும் அகிய இரண்டிலும், அவனே யாவும் என்று சொல்கிற இடங்களில் பண்ணையும் யாழையும் இசைக்கருவிகளையும் இங்கெல்லாம் எவ்வளவோ சொல்லலாம். இவர் சொல்லவில்லை. எனினும் தனியன் ஒருபாடல் “குருகையர்கோன் யாழினிசை வேதத்தியல்” என்று சொல்லுகிறது. முன்னமே கூறியபடி, நம்மாழ்வார் பாடல்களுக்கு மட்டும் பண்ணும் ஒத்தும் இராகமும் தாளமும் சொல்லப்பட்டுள்ளன. இங்குள்ள இராகங்களில் குண்டக்ரியை சோகவராளி என இரு இராகங்கள் முன்வராதவை. பண்கள் 23 சொல்லப்பட்டுள்ளன இவற்றுள் முன் குறிப்பிட்டவாறு; முதிர்ந்தகுறிஞ்சி, நாட்டம், என அறு என்பன தேவாரத்துட் பயிலாதன. நம்மாழ்வாரையே பாடி, உய்திபெற்ற மதுரகவியின் சண்ணிநுண் சிறுத்தாம்பு பத்துப்பாட்டிலும் சிறப்புச் செய்திகள் இல்லை. இது ஆரபி இராகம், அதிதாளம் என்று சொல்லப்படும். நாலாயிர திவ்விய பிரபந்தமும் நாதமுனிகள் மூலம் வெளிப்படுவதற்குக் காரணமாயிருந்த திருக்குடந்தைப் பாசுரம், பண் காந்தாரம்; தன்யாசி இராகம் ஆகிதாளம் ஆரா அமுதே அடியே னுடலம் நின்பால் அன்பாலே நீராய லைந்து கரைய வுருக்கு கின்ற நெடுமாலே சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர் திருக்குடந்தை ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டே னெம்மானே (5:8:1) நாரைவிடுதூதுப் பாசுரம், நட்டபாடைப் பண்; கண்டா இராகம், ஆதீதாளம்; அஞ்சிறைய மடநாராய் அளியத்தாய், நீயும்நின் அஞ்சிறைய சேவலுமாய் ஆவாவென் றெனக்கருளி வெஞ்சிறைப்புள் ளுயர்த்தாற்கென் விடுதூதாய்ச் சென்றக்கால் வன்சிறையில் அவன்வைக்கில் வைப்புண்டா லென்செய்யுமோ (1:4:1) முடிச்சோதி பாசுரம், பண் இந்தளம், குண்டக்கிரியை, ஏகம், முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ, அடிச்சோதி நீநின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ, படிச்சோதி யாடையொடும் பல்கலனாய் நின்பைம்பொன் கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே, கட்டுரையே! (3:1:1) “பண்கள் தலைக்கொள்ளப் பாடாதார்' மண்ணின்மேல் வினை மோதவந்து பிறப்பர்” என்கிறார் (திருவாய்மொழி-3:5:2). பொருளாவது பண்கள், என்னைக் கொள், என்னைச் கொள் என்று தாமே வந்து தலைக்கட்டிப் பாடி. திருவிருத்தம்: 100 பாசுரங்கள், கட்டளைக் கலித்துறை, முழுமையும் அகப்பாட்டுக்கள். 94ஆம் பாட்டில் விளரி என்ற ஒருபண்ணைப் பற்றிய ஒரு குறிப்பு தவிர இங்கு வேறெந்த இசைக்குறிப்பும் இல்லை. விளரி உச்சமான த்வனி - ஷட் ஜாதி ஸ்வரத்தில் அறாவதான தைவதத்துக்கு விளரி என்று தமிழ்ப்பெயர். அது ஒருபண் என்று வாதிகேசரி கூறுவர். இனி, ஒன்பதாம் பத்தின் ஒன்பதாம் திருமொழி பண் பஞ்சமம் என்று சொல்லப்படும். அதில் பஞ்சமம் என்ற பெயர் இருமுறை (2, 7) சொல்லப்படுகிறது. குறிஞ்சி என்ற பண் முதல் பாடலில் சொல்லப்படுகிறது. திருவாசிரியம்: ஏழு பாடல்கள் 15 அடிப் பெருமையும் ஒன்பதடிச் சிறுமையும்; இசைக்குறிப்பு எதுவும் இல்லை. பெரியதிருவந்தாதி: 82 வெண்பாப் பாடல்கள்; எந்த இசைக்குறிப்பும் இல்லை. திருவாய்மொழி: வைணவத்தில் இது சாமவேதசாரம். இசைக்குரியது என்பதும் இதன் பொருள். நூறு இடங்களில் பலகருதிப் பாடல் திருமொழிதோறும் பாடி, அங்குத் தம்மைக் குறிப்பிட்டுக் கொள்ளும் ஆழ்வார் அபூர்வமாய்ச் சில இடங்களில்தான் தம்பாடலை இசை என்று குறிப்பிடுகிறார். “பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்துள்”, “நல்யாழ் பயிர் நரம்பின் முதிர்சுவையே”, “செயிரில் சொல்லிசைமாலை”, 'சொல்லிசைமாலை ", “சொல்லால் இசைமாலைகள்”, “நுடங்கு கேள்வி இசையென்கோ”, “பண்ணார் தமிழ் ஆயிரம்”, “பண்ணார் பாடல் இன்கவிகள் யானாய்த் தன்னைத் தான்பாடித் தென்னா என்னும் என் அம்மான்”, “ஏழிசையின் சுவைதானே திருப்பேரான்' என்பன திருவாய்மொழியில் காணப்படும் தொடர்கள். திருவரங்கத்தமுதனார், 'பண்தரு மாறன் பகர்ந்த தமிழ்' என்று பாராட்டுகிறார். “மிக்க இறைநிலையும்” என்ற தனியன், “குருகையாரகோன் யாழினிசை வேதத்தியல்' என்று போற்றுகின்றது. இவையெல்லாம் இருப்பினும், ஆழ்வார் இசையோடு பாடினார் என்று எந்த வரலாறும் இல்லை. சிறிது பிற்காலத்தில் இவர் சந்நிதிக்கு வந்த நாதமுனிகள் நாலாயிரமும்பெற்று வீரநாராயண புரத்துக்குத் திரும்பிவந்து மன்னனார் சந்நிதியில் பாடியகாலத்து, அவர், “நீர் இவற்றை இயலும் இசையுமாக்கும்” என்று அர்ச்சகமுகேந நியமித்தருளினார். அவரும் அப்படியே தம்மருமக்கள் இருவரையுங் கொண்டு ஸ்ரீவேதவியாச பகவான் வேதங்களை உதாத்த அனுதாத்த ஸ்வரித ப்ரசய யுக்தங்களாக உச்சரிக்கும்படி பண்ணினாற்போல நாதமுனிகளும் இத்திவ்வியப் பிரபந்தங்களைத் திவ்விய கானத்திலே அமைத்து, இயலும் இசையுமாகப் பாடுவித்தருள, இது லோகத்திலே பிரசித்தமாயிற்று.” இந்தமுறையை இன்றும் பெருமாள் கோயில்களிலே கேட்கலாம். இதுவே வேத அத்தியயனம்போல் வடமொழிக்குத் தமிழ்மொழி தாழ்வில்லை என்று சொல்லக் காட்டுவதுபோல் இருக்கும். வேதகானம் பண்ணுகிறவர்கள் ஒருகால் இதைக் கேட்டுக் கொண்டிருக்க முடியும் போலும். சாதாரணத் தமிழறிந்த காது கேட்டுக் கொண்டிருக்கவே இருக்காது. இதனால்தான்போலும் பிற்காலத்தில் ஏட்டுச்சுவடிகளில் திவ்விய பிரபந்தங்களில் “பண்ணுந் தாளமும்” குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இவை தமிழ்ப் பண்ணும் தாளமும். வேதவியாச பகவான் வகுத்த உதாத்த அனுதாத்த ஸ்வரிதங்கள் அல்ல. இப்பண் குறிப்பு தேவாரத் துக்கு உள்ளது போன்றது. இப்பண்ணும் தாளமும் பண்டைய பதிப்புக்களிலும் அச்சிடப்பட்டி ௬ுந்தன. ஆனால் பிற்காலத்தில், பழக்கமின்மையால் பண் விளங்காமையால், புதுமுறையான இராக தாளமே அமைக்கப்பட்டது. பார்த்தசாரதி ஐயங்கார் பதிப்பு முதலான பதிப்புக்களில் இவ்விராகங்களே காணப்படும். ஆனால் கிருஷ்ணமாசாரியர் பதிப்பில் பண்ணும், தாளவொத்தும், இராகதாளமும் ஆகிய இரண்டுமே தரப்பட்டுள்ளன. எஸ். ராஜம் பதிப்பில் இராக தாளத்தைப் புதுமை என்று விலக்கி, பண்ணும் தாளவொத்தும் மட்டுமே தரப்பட்டுள்ளன. திருவாய்மொழிக்குக் கூறப்படும் பண் தாளவொத்து போன்றன 'பண்ணும் இராகமும்' என்ற அத்தியாயத்தில் (தொகுதி - 2; 349) விளக்கமாய்த் தரப்பட்டுள்ளன். -------- மதுரகவியாழ்வார் இவர் நம்மாழ்வாரைப் பிரகாசிக்கச் செய்வதற்கென்றே அவதரித்தவர். இவர் பிராமணகுலத்தில் திருக்கோளூரில் அவருக்கு முன்பிறந்து அயோத்தி சென்றார். அங்குத் தென்திசையில் தோன்றிய ஓர் அபூர்வ சோதியைக் கண்டு அதைத்தொடர்ந்து திருக்குருகூர் சென்று, அச்சோதி நம்மாழ்வாரே என்றுணர்ந்து, அவரது மெளனநிலையில் காது கேட்குமோ என்று சோதிக்க எண்ணி, எதிரில் ஒரு குண்டுக் கல்லைப்போட, அவர் கண்விழிக்க, இவர் “செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்” என்று கேட்கவும், “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்' என்று மறுமொழி கிடைத்தது. இவர் நம்மாழ்வாரைப் போற்றிக் “கண்ணிநுண் சிறுத்தாம்பு' என்ற பத்துப்பாட்டுப் பாடினார். திருமால் காட்சியருளி நம்மாழ்வாருக்கு “மயர்வற மதிநலம்" அருளினார். பின்னர் இவர் நம்மாழ்வாருக்குத் திருவுருவம் அமைத்து உற்சவம் முதலியன நடத்திச் சிலகாலம் இருந்து பரமபதம் அடைந்தார். இவ்வாழ்வார் நம்மாழ்வார் புகழைப் பாடினாரேயன்றித் திருமாலைப் பாடவில்லை. பாடியது இவ்வொரே பாசுரம். இதற்குரியது ஆரபி இராகம், ஆதிதாளம் என்பார்கள். “குருகூர்நம்பி பாவின் இன்னிசை பாடித்திரிவன்' என்கிறார். இவருடைய சீடர், நாதமுனிகளுக்கு நம்மாழ்வார் அருளுக்குப் பவித்திரமாக வழிகாட்டிய பராங்குசதாசர். இவர் பாசுரத்தில் இரண்டாம் பாடல் பின்வருவது: நாவி னால்நவிற் றின்ப மெய்தினேன் மேவி னேனவன் பொன்னடி மெய்ம்மையே தேவு மற்றறி யேன்குரு கூர்நம்பி பாவி னின்னிசை பாடித் திரிவனே (9389) சில கருத்துக்களைச் சொல்லி இப்பகுதியை முடிப்போம். பொதுவான கருத்து, ஆழ்வார்கள் இறையனுபவமே போதுமென்றிருந்து விட்டார்கள். அதைப் பாடலில் சொன்னார்கள், ஆனால் இசையில் அதிகக் கவனம் செலுத்தவில்லை என்பது தெளிவு. இத்தனைக்கும், திருமால் அடியார் மரபில் இரு கருத்துக்கள் இதுபற்றிச் சிந்திக்கத்தக்கன. ஒன்று, கண்ணன் குழலூதுகிறான் என்பது. இது சமயத்துறையில் மட்டுமல்லாமல் இசைத்துறையிலும் மிக்க பொருளுடைய செய்தி. மற்றொன்று, அழ்வார் காலத்துக்கு நெடுங்காலம் முன்னே, நம்பாடுவான் என்ற ஒரு பாணர்குலப் பக்தன் திருக்குறுங்குடி. நம்பியின் கோயில் திருமுன் பண் வாசித்தான் என்பது. அப்பாணன் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் காரணமாக வைணவ உலகெங்கும் கோயிலிலும் வீட்டிலும் கைசிக ஏகாதசி கார்த்திகை மாதத்தில் மிக்க சிறப்பாய்க் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வளவு இருந்தும், பாசுரங்களில் பண்ணுக்கு ஆட்சியில்லை. அன்றியும் பண்பாடுகின்ற ஒரு பாணர் ஆழ்வாராகவே போற்றப்பெறுகிறார்; திருப்பாணாழ்வார். அவர் பாடலிலும் இசைச்செய்திகள் இல்லை. இவற்றையெல்லாம் நன்குணர்ந்த நாதமுனிகள் நாடெங்கும் சைவர்கள் பண்ணோடு பாடல் இசைப்பதைக் கண்டும் கேட்டும் தம் மருமக்கள் இருவரைக் கொண்டு நாலாயிரத்துக்கும் பண் அமைத்துப் பாடச்செய்தார். . பின்னொரு காலத்தில் வைணவச் சான்றோரால் திருவாய்மொழி முழுமைக்கும் பெரியதிருமொழியில் 65 பாசுரங்கள் வரையிலும் பண் அமைத்துத் தாளமும் குறிப்பிட்டி ருக்கிறார்கள். (தேவாரப் பாடல்களுக்குத் தாளம் குறிப்பிடப்படவில்லை;. இப்பண் வரிசையில் தேவாரத்தில் இல்லாத சில பண்களும் காணப்படுகின்றன. இப்பண் குறிப்பிட்டோர் இசைவல்லோர் என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்தப் பண்முறை இசையும் ஆட்சியில் இல்லை. யாருக்கும் தெரியவில்லை. நாலாயிரத்தில் குறிப்பிட்ட பகுதிகளுக்குச் சொல்லியுள்ள பண்களை இங்குப் பேசவில்லை. அது பண்ணும் இராகமும் என்ற அத்தியாயத்தில் விரிவாய்ச் சொல்லப்படுகிறது. ------- அரையர் நாதமுனிகள் தம் மருமக்கள் இருவரைப் பண்களைக் கற்கச்செய்து, அவர்கள் மூலம் கோயில்களில் நாலாயிரப் பிரபந்தங்களைப் பண்ணோடு பாடும்படிப் பழக்கினார். அவர்கள் இசையில் மூழ்கிய மன்னர் அதலால் அவர்களுக்கு 'அரையர்' என்ற பெயர் அமைந்தது; அரையர் - அரசர். இதற்கு அடையாளமாகப் பாடும்போது அவர்களுக்குத் தொப்பியும் (கிரீடத்தின் சின்னமாக) தொங்கல் பரிவட்டமும் தரப்பட்டன. இவை அவர்களை ஏனைய பாகவதர் அல்லது பட்டர்களிலிருந்துப் பிரித்துக் காட்டின. அவர்களுக்குப் பிறகு கோயில்களில் இதே தொண்டு செய்வோருக்கும் 'அரையர்' என்ற பட்டம் அமைந்தது. அவர்கள் பாடல் 'அரையர் சேவை' எனப்பட்டது. அரையர் சேவை என்பது உற்சவ மூர்த்தியின் திருமுன் நின்று ஆழ்வார் பாசுரங்களைப் பண்ணுடன் பாடி அபிநயித்து உரையையும் அழகாக எடுத்து விளக்கி நடிக்கிற முத்தமிழ்க்கலை. பாடலோடு அவர்கள் ஆடலும் உண்டு. அடலில் பாட்டுக்கு ஏற்ற அபிநயம் பிடிப்பார்கள். இந்த அபிநயத்தில் காட்டும் முத்திரைகள் பரதநாட்டியத்தின் முத்திரைகளினின்றும் சிவபூஜா முத்திரை களினின்றும் வேறானவை என்று இவற்றை ஆய்ந்தோர் சொல்வர்; தெளிவில்லை. இப்போது இத்தகைய அரையர் சேவை திருவரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், நம்மாழ்வார் தலமாகிய ஆழ்வார் திருநகரி ஆகிய இடங்களில்தான் நடைபெறுகிறது. சிவாலயங்களில் தளிப்பெண்டுகள் ஆடுபவராயும், ஓதுவார் பண் பாடுபவராயும் இருந்த நிலைமைக்கு மாறாக, நாதமுனிகள் திருமால் ஆலயங்களில் பிராமணகுலத்து ஆடவரையே பாடி ஆடுபவராக அமைத்தது இங்கு சிந்திக்கத்தக்கது. சிவாலயங்களில் பாடுபவரும் ஆடுபவரும் பிராமணரல்லாதார். பாடுபவர் ஓதுவார் (பிடாரர்). வாத்தியம் வாசிப்பவர் மேளக்காரர். ஆடுபவர் தளிப்பெண்டுகள். முற்காலத்தில் அரையர் நன்கு கற்றவர்கள். மதுரகவியாழ்வார் பாசுரமாகிய கண்ணிநுண் சிறுத்தாம்புக்குத் தம்பிரான்படி (ஆறாயிரப்படி என்பதுபோல) என்றொரு வியாக்கியானம் உண்டு. (தம்பிரான் - அரையருக்கு ஒரு பெயா்). அரையர் சேவை குறித்த பலசெய்திகள் திவ்விய பிரபந்த வியாக்கியானங்களில் காணப்படும். கைசிக ஏகாதசியன்றும், மார்கழி மாதத்திலும், வேறுசில சிறப்பு நாட்களிலும் கிருஷ்ணலீலைகள் போன்றவற்றுக்கான ஆடலும் பாடலுமாக இப்போது நடப்பில் உள்ளது. நாதமுனிகள் நோக்கம் இதுவன்று. மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு முன்பும் பின்பும் வைணவக் கோயில்களில் “அத்யயன உத்ஸவம் என்னும் இலக்கியப் பெருவிழா நடைபெறுகிறது. இவ்விழா நாட்களில் நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் பகுதிகளை முறைப்படி, நாள்தோறும் அரையர் சேவிப்பதுண்டு. சில பாசுரங்களுக்குப் பெரியோர் அருளிய உரையை அநுசந்தித்தும், சில பாசுரங்களுக்கு அபிநயம் பிடித்தும், பாசுரங்களில் கூறப்பட்ட சில செய்திகளை நாடகமாக நடித்தும், அரையர் தாம் உருகுவதுடன் கூடியிருக்கும் மக்களையும் உருக்குவார். சிறப்பாக, முற்கூறிய திருஅரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆழ்வார் திருநகரி ஆகிய தலங்களில் இவ்விழா பெருமளவில் நீண்டகாலமாக நடைபெறுகிறது. கீழையகத்து ஆழ்வானும் மேலையகத்து ஆழ்வானும் ஸ்ரீமந்நாதமுனிகள் கட்டளைப்படி சேவித்துவரும் நாளில். ஓர்நாள் அழகிய மணவாளன் உந்து, அவர்களுக்கு “மணவாளப் பெருமாள் அரையர்', “நானா விநோத அரையர்' என்ற திருநாமங்களைச் சாதித்து, குல்லாவும், தொங்கல் பரிவட்டமாகப் பட்டுப் பருத்தியும், சாத்திக் களைந்த திருமாலைகளும் பிரசாதங்களும் அருளினார். நம்மாழ்வாரைப் போலவே, அரையர்களுக்கும் குடை, சாமாம், விசிறிகளுடன் “நம்பாடுவாரை வீட்டிலே விட்டுவா” எனத் தம் சேனைத்தலைவனுக்கு ஆணையிட்டார். அவர்களுடைய இசையில் மயங்கி, “காயக ஸார்வபெளமர்' என்ற விருதும் தந்தார். நாதமூனிக்குப் பின், ஓர் அரையர் இத்திருநாளில் பாசுரங்களுக்கு ஒப்பத் திருக்கோலம் கொண்டு நாடகம் நடித்தும், அபிநயம் பிடித்தும் காட்டினார். பெருமாள் அவருக்கும் “கோயில் உடைய பெருமாள் அரையர்' என்ற பட்டப்பெயர் தந்தார். அரைபர் பாசுரங்களை உணர்ச்சியோடு சேவிப்பார். அப்போது அவர் தம்மை ஆழ்வாராகவே கருதுவார். தாய் வாக்காகவோ, தோழி வாக்காகவோ, ஏனையோர் வாக்காகவோ வரும் துறைகளில் அரையரே தாய், தோழி, ஏனையோர் பாத்திரங்களோடும், கூறப்படும் நிகழ்ச்சிகளோடும், அரையர் மனம், மொழி உடல்களில் ஒன்றிவிடுவார். அரையர் சேவை சேவிப்போரும் அவ்வாறே, அரையரை ஆழ்வாராகவும் தாயாகவும், தோழியாகவும் பிற ஆண் பெண் பாத்திரங்களாகவும் கருதுவார்கள்.* பிற்காலத்தில் ஓர் அரையர் கூடா ஓழுக்கத்தால் ஊரிலிருந்து வெளியேற்றப்பட்டு பறைச்சேரியில் வாழ்ந்து கொண்டிருந்தார். அங்கிருந்தே அவர் பள்ளும், பறையும் சூழ இசையுடன் பாடுவதைத் திருஅர ங்கப் பெருமாள் கேட்டு உகந்து, அவரை வரவழைத்து, 'வரம்தரும் பெருமாள் அரையர்' என்ற பட்டப்பெயர் சாதித்து, ஆண்டுதோ றும் திருகடல் - உற்சவத்தில் ௮வர் பாடினவாறே கேட்டருளுகிறார். இந்த உற்சவத்தை இன்றும் பெருமாளைக் காவேரிக்கரையிலிருந்துக் கோயிலுக்கு அழைத்துவரும் விழாவாக நடத்துகிறார்கள். வரும்போது பெருமாள் திருமுன் அரையர் கையில் தாளமேந்தி அடிக்கொண்டு வருகிறார். கேட்டபோது, இது பள்ளு உற்சவமென்று சொல்கிறார்கள். வரந்தரும் பெருமாளரையர் தொடர்பான பள்ளும், பறையும் அரங்கநாதன் இசையுடனே கேட்டருளியதை அக்காலத்தில் நாட்டியத்தின்மூலம் காட்டினார்கள். இது பள்ளுப்பாட்டு என்பதில் ஐயமில்லை. பிற்காலத்தில் பிராமணர் என்ற சாதியுணர்வு மேலோங்கவே, பள்ளுப்பாட்டு தாழ்வு என்று அரையர் அதை விலக்கிவிட்டார்கள்.* ஆனால் பெருமாள் அதைக்கேட்டார் என்பது உற்சவப் பொருளாதலால், பாட்டில்லாமல் ஆடலை மட்டும் நிகழ்த்தி வருகிறார்கள். நாதமுனிகள், தாம் நம்மாழ்வாருடைய அனுக்கிரகத்தால் பெற்ற நாலாயிரப் பிரபந்தங்களுள், இயற்பா நீங்கலாக மற்ற முதலாயிரம், பெரியதிருமொழி, திருவாய்மொழி ஆகிய மூன்றைப் பண்ணோடு பாடுவிக்க எண்ணி, தம் மருமக்களான மேலையகத்தாழ்வான், கீழையகத் தாழ்வான் ஆகிய இருவரையும் பண் கற்கச்செய்து அவர்களைக்கொண்டு எம்பெருமாள் சந்நிதியில் பிரபந்தங்களைப் பண்ணோடு பாடச்செய்தார் என்பது வரலாறு. எனினும் இங்கு இரண்டு செய்திகள் முக்கியமானவை. ஓன்று, ஆழ்வார்கள் பாடல்களை நாதமுனிகளே புதிதாகப் பண்ணில் பாடச்செய்தார் என்பது. .
——————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply