மூலவர் திருவடிகளில் தாயார் இங்கும்
உத்சவர் திருவடிகளில் தாயார் இல்லை
ஆய் ஸ்வாமிகள் பரம்பரையில் வந்தவர் தீர்த்தக்காரர்கள்
கோயில் திருமலை பெருமாள் கோயில் திரு நாராயண புரம் நான்கு திவ்ய தேசங்களுடன் தொடர்பு
உகாதி -நான்கு நாள்கள் உத்சவம் -கல்யாண உத்சவமம் நடைபெறும்
வைகுண்ட வாசல் சங்கராந்தி அன்றும் மூன்று நாள்கள் திறப்பார்களாம்-மாலைகள் எங்கும் காணும் படி சேவை உண்டாம்
திரு வெள்ளறை அர்ச்சகர்கள் இங்கு வந்து அர்ச்சனை பண்ணுகிறார்களாம்
திரு ஆடிப்பூரம் -தாயார் இங்கு -13 நாள்கள் உத்சவம் -மூன்று நாள்கள் சேர்த்தி சேவை உண்டாம்
வைகாசி விசாகம் கருட சேவை இங்கும் உண்டு
அடுத்த மூன்றாம் நாளும் திருவரங்கம் போல் இங்கும் கருட சேவை உண்டாம்
செய்ய தாமரை -பதிகம் -தஞ்சமாகிய தந்தை -பாசுரம்-பதிகம் இந்த திவ்ய தேசத்துக்கே சமர்ப்பித்தார்கள் -அர்ச்சையின் எல்லை யான திவ்ய தேசம் என்பதால்
Sri U Ve KS Narayanan Swami || || (Abhimana Sthala Dharshanam) ” Denkanikottai” ||
வேட்டையாடி வருவானை
வேங்கடத்துக்கு உய்த்திடுமின்
நாச்சியார் மங்களா சாசனம் -இதற்கு என்று அவனே இவன் என்பார்-ஏகாந்தமான திவ்ய தேசம்
வேட்டையாடிய பிரான் கோயில் அல்லது பேட்ராய சாமி கோயில் (பேட்டே என்ற கன்னட சொல்லுக்கு வேட்டை என்று பொருள்) என்பது
கிருட்டிணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் உள்ள கோயிலாகும். இக்கோயில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது.
இந்த கோவிலை பற்றிய சிறப்புகளை ஸ்கந்த புராணம் எனும் நூலில் 8-ஆம் அத்தியாத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
தலவரலாறு
சுமார் 3000 வருடங்களுக்கு முன்பு கண்வ முனிவர் தவம் செய்தபோது தேவகண்டன் என்ற அரக்கன் புலியுருவில் வந்து அவர் தவத்துக்கு இடையூறு செய்தான். அப்போது கண்வ முனிவர் பெருமாளை வேண்டினார். பெருமாள் கண்வ முனிவர் முன் தோன்றி “டெங்கனி” என்ற கட்கத்தை கொண்டு தேவகண்டன் என்ற அரக்கனை வேட்டையாடி கொன்றதால் இங்குள்ள பெருமாளுக்கு ‘வேட்டையாடிய பிரான்’ எனப் பெயர் பெற்றதாக தலவரலாறு கூறுகிறது.
தேன்கனிக்கோட்டை என பெயர் வரக் காரணம் பெருமாள் ‘டெங்கனி’ என்ற கட்கத்தை கொண்டு வதம் செய்ததால் டெங்கனிபுரம் என்ற பெயர் வந்ததாகவும் பின் டெங்கனிபுரத்தில் இருந்த தரை கோட்டையால் டெங்கனிக்கோட்டை என்ற பெயர் பெற்றதாகவும் அதன் பின் அந்த பெயர் மருவி தேன்கனிக்கோட்டை என்று தற்போது அழைக்கப்படுகிறது.
மங்கலாசாசனம்
இத்திருப்பதிக்கு ஏற்றம் செய்து உபந்யாச ரத்னேயாதி அநேகபிருதாந்திகரான வித்வான் பூவராஹாச்சார்ய சுவாமிகள் மங்களாசாசனம் செய்திள்ளார்.
கோயிலின் அமைப்பு
வேட்டையாடிய பிரான் ஸ்ரீதேவி, பூதேவி உடன் காணப்படுகிறார். இராமர், லட்சுமணன், சீதை, அனுமான் ஆகியோருக்கும் தனிச்சந்நிதி அமைந்துள்ளது. ஆனுமாருக்கு தனிச் சன்னதியும் உள்ளது.
வேணுகோபாலன், ருக்மிணி, சத்யபாமா உடன்சந்நிதியில் காணப்படுகின்றார். ஆழ்வார்கள் சன்னதியும், இராமானுசருக்கு ஒரு தனி சன்னதியும் உள்து.
திருவிழா
இக்கோயிலில் கன்னட பஞ்சாங்கத்தின்படி திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. ஆண்டுதோறும் தமிழ் மாதமான சித்திரையில் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு, கர்நாடக, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிர என பல்வேறு மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் விழாவில் கூடுகின்றனர். கிருஷ்ண ஜெயந்தியன்று திருமஞ்சன உற்சவம் நடக்கிறது.மறுநாள் உறியடி உற்சவம் நடக்கிறது.
|
மூலவர் |
– |
|
பேட்டைராயசுவாமி |
|
உற்சவர் |
– |
|
தேவபெருமாள் |
|
தாயார் |
– |
|
சௌந்தர்யவல்லி |
|
தல விருட்சம் |
– |
|
இலந்தை மரம் |
|
தீர்த்தம் |
– |
|
சுவாமி புஷ்கரணி |
|
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
|
புராணப் பெயர் |
– |
|
டென்கனிக்கோட்டை |
|
ஊர் |
– |
|
தென்கனிக்கோட்டை |
|
மாவட்டம் |
– |
|
தர்மபுரி |
|
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
கோயில் அமைந்துள்ள இடத்திற்கு அந்த காலத்தில் அத்திரி வனம் என்று பெயர். அந்த காட்டில் கண்வர் (சகுந்தலையின் வளர்ப்புத் தந்தை) தவம் செய்ய வந்தார். தவம் செய்து கொண்டிருக்கும் போது தேவகண்டகவன் என்ற யக்ஷன் சாபம் ஏற்பட்டு புலித் தலை, மனித உடம்போடு அலைந்த கொண்டிருந்ததால் கண்வர் ரிஷியின் தவத்திற்கு இடையூறு ஏற்பட்டது. அதனால் துன்பம் ஏற்பட்ட கண்வ ரிஷி திருவேங்கட மலையானை நினைத்து வழிபட்டு தன்னை காக்க வேண்டுமென்று வேண்டிக்கொண்டான். திருவேங்கடமலையானும் இவன் புலித் தலையோடு இருந்ததால் வேட்டைக்கார ரூபத்தில் வந்து போரிட்டு டெங்கினி என்ற கதையால்(ஆயுதத்தால்) அவரை அடித்து சம்காரம் செய்து, முனிவரின் தவத்தை காப்பாற்றினார். முனிவரின் பிரார்த்தனையின் பேரில் பேட்டைராய சுவாமி என்ற பெயரில் பூதேவி ஸ்ரீதேவியோடு இங்கு எழுந்தருளியதாக வரலாறு கூறுகிறது.
விஷ்ணு கார்த்திகை அன்று சுவாமி புது வஸ்திரத்தை நெய்யால் துவைத்து தீபாராதனை காட்டி, கோபுரத்தின் உச்சியிலிருந்து கம்பால் தொங்க வைத்து கற்பூரத்தால் கொளுத்துவார்கள். இவ்வாறு செய்வதால் தீமைகள் அழிக்கப்படுகின்றன என்பது ஐதீகம். எல்லா ஜீயர்களும் ஆச்சார்யார்களும் மங்களாசாசனம் செய்த தலம். வானமாமலை தற்போது முன்பிருக்கும் பட்டம், திருமலை பெரிய ஜீயர், திருப்பெரும்புதூர் எம்பார் ஜீயர், வரத எத்திராஜ ஜீயர், காஞ்சி அழகிய மணவாள ஜீயர், தற்போது இருக்கும் ஆண்டவன் சுவாமி மேல்கோட்டை (கர்நாடகா) எதிகிரி எத்திராய ஜீயர் இவர்களால் மங்களாசாசனம் செய்யப் பட்டது. பழமை வாய்ந்த கோயில் இது. திருப்பதியில் உள்ளபடியே நின்று சேவை சாதிக்கும் மூல மூர்த்தியின் திருக்கோலம் மிக அழகாக உள்ளது.
மூலவர் பூ தேவி, ஸ்ரீதேவியோடு ஒருசேர மூலஸ்தானத்தில் இருப்பது விசேசம். இருமருங்கிலும் உள்ள பிராட்டிமார்கள் முகபாவங்களும் வேறுபட்டது. ஸ்ரீதேவியினுடைய முகபாவம் கூம்பிய தாமரை போலவும், பூதேவியுனுடைய முகபாவம் அலர்ந்த தாமரைப் போலவும் உள்ளது. நின்றிருக்கும் மூலவரை வைகுண்ட ஏகாதசியன்று பரமபத நாதனைப்போல் உட்கார்ந்த திருக்கோலத்தில் அலங்கரித்து பூஜை செய்கிறார்கள். தாயார் வீரலட்சுமி உட்கார்ந்திருக்கிறார். ஆடிப்பூரம் அன்று அமர்ந்திருக்கும் மூலவர் தாயாருக்கு நின்ற கோலத்தில் மடிசார் புடவை கட்டி ஆண்டாள் திருக்கோலம் சாத்தப்படுகிறது. இக்கோயிலின் தேர் 30 அடி உடையதே. ஆனால் அதன்மேல் 4 பக்கமும் 4 வாசல் வைத்து இருக்கிறது. மூலவர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
கஜினி முகமது படையெடுப்பின்போது கோயிலில் இருந்த மூலமூர்த்தியை கட்திரைக்குள் மறைத்து வைத்து, உற்சவமூர்த்தியை முதுகினில் ஏற்றிக்கொண்டு காட்டில் மறைந்திருந்து பிறகு இந்து அரசர் காலத்தில் திரும்பி உற்சவமூர்த்தியை பிரதிஷ்டை செய்த புகழ் வேங்கடபதி தாசர் என்பவரைச்சாரும். இவ்வழிவந்தவர்களே கிராமதிகாரிகளாக இருந்து வருகின்றனர். திருப்பதி கோயிலைப் போன்று இக்கோயிலில் ஆனந்த விமானம் அமைந்துள்ளது.
திருவிழா:
பங்குனி – சித்திரை கல்யாண உற்சவம் – தெலுங்கு உகாதியிலிருந்து ஆரம்பித்து 15 நாட்கள் மிக விமரிசையாக கல்யாண உற்சவம் நடக்கும். பிரம்மோற்சவம் – 9 நாட்கள் திருவிழா – தீர்த்தவாரி, பூர்ணாகுதியோடு முடியும். காலை மாலை வாகனங்களில் சுவாமி புறப்பாடு இருக்கும். – இராம பாணம் விசேஷம், பூப்பல்லக்கு வாண வேடிக்கை ஆகியவை மிக சிறப்பாக நடக்கும். மார்கழி மாதம் – காலை உச்சிகால பூஜை – பகல் பத்து இராப்பத்து உற்சவம் திருவாடிபூரம் உற்சவம் – சயன உற்சவம் – 10 நாட்கள் வைகுண்ட ஏகாதசி – திருவரங்க பெருமாள் கோயிலில் நடக்கும் பூஜைகளைப் போலவே இங்கும் பூஜைகள் நடக்கும். புரட்டாசி சனிக்கிழமைகள் இத்தலத்தில் மிகவும் விசேஷமானவை.
கோரிக்கைகள்:
இங்குள்ள பெருமாளை வழிபடுவோர்க்கு உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது.
குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் வழிபட வருகிறார்கள்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தேரடி பிரசாதம் (சர்க்கரை பொங்கல்) பெற்று சாப்பிட்டால் தீர்வு கிடைக்கிறது.
தாயாரை 18 நாட்கள் பூஜித்து சுலோகம் சொன்னால் கல்யாண வரம் கை கூடப் பெறலாம்.
நேர்த்திக்கடன்:
பூணூல் உற்சவம் கல்யாண உற்சவம் நடத்துகிறார்கள். தவிர மொட்டை அடித்தல், சுவாமி புறப்பாடு செய்தல், தோமாலை செலுத்தல், வஸ்த்திரம் சாத்துதல் ஆகியவற்றையும் பக்தர்கள் நேர்த்திகடன்களாக செய்கிறார்கள். நெய், பால், மஞ்சள், இளநீர், சர்க்கரை, பஞ்சாமிர்தம் ஆகியவற்றை அபிஷேகம் நடத்துகிறார்கள். கார்த்திகை தீபத்தன்று நெய்விளக்கு போடுகிறார்கள்.
———-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply