வநமாலீ கதி சார்ங்கி சங்கீ சக்ரீ ச நந்தகீ
ஸ்ரீ மான் நாராயணோ விஷ்ணு வாஸூ தேவோபி ரஷது- | ஸ்ரீ வாசுதேவோ’பிரக்ஷது ஓம் நம இதி |
“வனமாலீ கதீ சார்ங்கீ சங்கீ சக்ரீ ச நந்தகீ, ஸ்ரீமான் நாராயணோ விஷ்ணுர் வாசுதேவோ அபிரக்ஷது.”என்ற ஆதிசங்கரரின் ஸ்லோகம்
இங்கு ஆதிசங்கரர் விஷ்ணுவின் வியாபக நாமங்களான நாராயண, விஷ்ணு மற்றும் வாசுதேவ என்ற மூன்றையும் குறிப்பிட்டு உள்ளார்.
வனமாலையைத் தரித்தவரும், கௌமோதகீ என்னும் கதையைத் தரித்தவரும், சார்ங்கம் என்னும் வில்லுடையவரும்,
சங்கம் சக்ரத்தைத் தரித்தவரும், நந்தகீ என்னும் ஒள்வாள் தரித்தவரும் ஆன திருமால் ஆகிய
ஸ்ரீமாந் நாராயணர், விஷ்ணு, வாஸுதேவர் நம்மைக் காப்பாற்றட்டும்.
‘வனமாலி என்ற மாலையை அணிந்து–வனமாலா விராஜிதனாய் இருந்து அனுபவம் கொடுத்து ரக்ஷிக்கட்டும் –
கௌமோதகி என்னும் கதை,
பாஞ்சசன்னியம் என்னும் சங்கு,
சுதர்சன என்னும் சக்கரம்,
சார்ங்கம் என்னும் வில்,
நந்தகம் என்னும் வாள்
ஆகியவற்றுடன் விளங்கும் நாராயண, விஷ்ணு, வாசுதேவன் என்ற நாமங்களைக் கொண்ட
தேவ -விளையாட்டாகச் செய்து திருமால் –அபி ரஷது-என்னைக் காக்க வேண்டும்’ என்பது இதன் பொருள்.
ஸ்ரீ சங்கரர், ஸ்ரீ பட்டர் மற்றும் பலர் இந்த ஸ்லோகத்தைப் பற்றி கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், பாரம்பரியமாக இது சஹஸ்ரநாமம் பாராயணத்தின் இன்றியமையாத பகுதியாகும். இந்த நாமங்களின் அர்த்தத்தைப் பார்ப்போம்:
- வனமாலி என்றால் வன மலர்களின் மாலையை அலங்கரிப்பவள் என்று பொருள். இந்த மாலையை வைஜெயந்தி என்றும் அழைப்பர். இந்த நாமத்தை நாம் ஸ்லோகம் 60 ‘பகவான் பகஹாநந்தி வானமாலி ஹலாயுதா’வில் பார்த்தோம்.
- கதீ என்றால் சூலாயுதத்தை ஏந்துபவர் என்று பொருள், கௌமோதகி புத்தியைக் குறிக்கும்.
- ஷார்ங்கி என்றால் ஷார்ங்கம் என்று அழைக்கப்படும் வில் ஏந்தியவர் (தென்னிந்தியாவில் பெரும்பாலும் சாரங்கம் என்று குறிப்பிடப்படுகிறது மற்றும் கும்பகோணத்தில் சாரங்கபாணி என்று அழைக்கப்படும் ஒரு கோயில் உள்ளது, இது உண்மையில் ஸ்ரீ விஷ்ணுவின் ஷார்ங்க வில்லைக் குறிக்கிறது, எனவே சாரங்கபாணி என்று அழைக்கப்படுகிறது). வில் என்பது ராஜசிக் குணங்களைக் குறிக்கிறது.
- சங்கி என்றால் சங்கு தாங்குபவர் என்று பொருள். ஸ்ரீ கிருஷ்ணர் பாஞ்சஜன்யம் என்ற சங்கு ஏந்தி இருக்கிறார். சங்கு ஊதுவது பயத்தை உண்டாக்கும். சங்கு தாமசி குணங்களைக் குறிக்கிறது.
- சக்ரி என்றால் டிஸ்கஸ் அல்லது சக்கரத்தை ஆயுதமாக தாங்குபவர் என்று பொருள். பகவானின் சக்கரம் சுத்ராசனம் என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது மனதின் குணங்களைக் குறிக்கிறது, ஏனெனில் மனம் ஒரு சக்கரத்தைப் போல தொடர்ந்து பல்வேறு எண்ணங்களைச் சுற்றி வருகிறது.
- நந்தகி என்றால் அவனது ஐந்து ஆயுதங்களில் ஒன்றான நந்தகா என்ற வாளை ஏந்தியவள் என்று பொருள். நந்தகா என்பது அறிவு அல்லது வித்யா. போரில் வாள் எதிரியை வெட்டுவது போல் கற்றல் வாள் ஒருவனுடைய அறியாமையை அறுத்துவிடும்.
- ஸ்ரீமான் என்றால் ‘ஸ்ரீ’ உடையவன் என்று பொருள். ‘ஸ்ரீ’ என்ற சொல்லுக்கு அழகு, செல்வம் போன்ற பல அர்த்தங்கள் உள்ளன மேலும் லட்சுமி தேவியைக் குறிக்கிறது. பகவானிடம் இவை அனைத்தும் இருப்பதால், ஸ்ரீமான் என்று மிகச் சரியாக அழைக்கப்படுகிறார்.
- நாராயணா – ‘ நர’ என்றால் ஆத்மா மற்றும் ‘அயனம்’ என்றால் பயணம் அல்லது தங்குமிடம். எனவே நாராயணன் எல்லா உயிர்களிலும் வசிக்கும் ஒருவர். இந்த நமதான் ‘ஓம் நமோ நாராயணாய’ எனும் சக்தி வாய்ந்த அஷ்டாக்ஷரி மந்திரத்தின் அடிப்படை.
- விஷ்ணு என்றால் அகிலம் முழுவதையும் வியாபித்திருப்பவர் என்று பொருள்.
- வாசுதேவா என்றால் பிரபஞ்சம் முழுவதையும் மாயாவால் மறைக்கும் தெய்வீகம். இதற்கு வசுதேவரின் மகன் என்றும், வசு மற்றும் தேவன் இருவருமாக இருப்பவர் என்றும் பொருள்படும்.
- அபிரக்ஷது பக்தர்களைக் காக்க அவனது ஆசிகளைப் பெற முயல்கிறான். இது சஹஸ்ரநாமத்திற்குப் பொருத்தமான முடிவாகும், மேலும் இதைப் பாராயணம் செய்பவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பிற்காக இறைவனிடம் வேண்டுதலுடன் இது முடிவடைகிறது.
வன மலர் மாலையை அணிந்தவனும், சூலாயுதம், சங்கு, வட்டு, வாள் ஆகியவற்றை உடையவனும், விஷ்ணு என்றும் வாசுதேவன் என்றும் அழைக்கப்படுபவனே, எங்களைக் காக்கும் நாராயணனே.
————–————-
இவ்வாறே எப்போதும் பாடப்பட வேண்டிய, மகிமை பொருந்திய உயர் ஆன்ம கேசவனின் சிறப்பான ஆயிரம் பெயர்களை
எந்த எதிர்பார்ப்புமின்றி உனக்கு உரைத்தேன்.(121)
ஒவ்வொரு நாளும் இந்தப் பெயர்களைக் கேட்பவனோ, உரைப்பவனோ இம்மையிலும், மறுமையிலும் ஒருபோதும்
எந்தத் தீங்கையும் சந்திக்க மாட்டான்.(122)
இஃதை ஒரு பிராமணன் செய்தால் அவன் வேதாந்தத் திறன் பெறுவதில் வெல்வான்;
ஒரு க்ஷத்திரியன் செய்தால் அவன் எப்போதும் போர்க்களத்தில் வெற்றியாளனாக இருப்பான்.
ஒரு வைசியன் செய்தால் அவன் செழிப்படைவான். அதே வேளையில் ஒரு சூத்திரன் பெரும் மகிழ்ச்சியை அடைவான்.(123)
ஒருவன் அறத்தகுதியீட்ட விரும்பினால் (இந்தப் பெயர்களைக் கேட்பதாலோ, உரைப்பதாலோ) அஃதை ஈட்டுவதில் வெல்கிறான்.
ஒருவன் செல்வத்தை விரும்பினால், அவன் (இவ்வழியில் செயல்பட்டு) செல்வத்தை ஈட்டுவதில் வெல்வான்.
புலனின்பங்களில் ஆசை கொண்ட மனிதனும் கூட, ஆனைத்து வகை இன்பங்களையும் அனுபவிப்பதில் வெல்கிறான்.
சந்ததியை விரும்பும் மனிதன் (இவ்வொழுக்கத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம்) சந்ததியை அடைகிறான்.(124)
எந்த மனிதன், அவனிடம் முழுமையாகத் திருப்பப்பட்ட இதயத்துடன் தன்னைத் தூய்மை செய்து கொண்டு, பக்தியுடனும்,
விடாமுயற்சியுடனும், ஒவ்வொரு நாளும் வாசுதேவனின் இந்த ஆயிரம் பெயர்களையும் சொல்வானோ(125)
அவன் பெரும்புகழ், உற்றார் உறவினருக்கு மத்தியில் திறன்மிக்க நிலை, நீடித்த செழிப்பு ஆகியவற்றையும்,
இறுதியாக அவனுக்கான உயர்ந்த நன்மையை (அவனுக்கான உயர்ந்த நன்மையான முக்தியையே) அடைவதிலும் வெல்கிறான்.(126)
அத்தகைய மனிதன் எந்நேரத்திலும் அச்சமடையாதவனாகப் பேராற்றலையும் பெரும் சக்தியையும் கொண்டிருப்பான்.
நோய் ஒருபோதும் அவனைப் பீடிக்காது; நிறத்தில் காந்தி, பலம், அழகு, சாதனைகள் ஆகியன அவனுடையவையாகின்றன.(127)
நோயாளி சுகம்பெறுவான்; துன்பங்களில் பீடிக்கப்படுபவன் அவற்றில் இருந்து விடுபடுவான், பேரிடரில் மூழ்கியவன் அதனிலிருந்து விடுபடுவான்.(128)
அந்த முதன்மையானவனின் ஆயிரம் பெயர்களை உரைப்பதன் மூலம், அவனது புகழை பக்தியுடன் பாடும் மனிதன்,
சிரமங்கள் அனைத்தையும் விரைவாகக் கடப்பதில் வெல்கிறான்.(129)
வாசுதேவனைப் புகலிடமாகக் கொண்டவனும், அவனிடம் பக்தி கொண்டவனுமான மனிதன் தன் பாவங்கள்
அனைத்தில் இருந்தும் விடுபட்டு, நித்திய பிரம்மத்தை அடைகிறான்.(130)
வாசுதேவனிடம் பக்தி கொண்டோர் ஒருபோதும் எத்தீங்கையும் அடைய மாட்டார்கள். அவர்கள், பிறப்பு, இறப்பு, முதுமை
மற்றும் நோய் ஆகிய அச்சங்களில் இருந்து விடுபடுகிறார்கள்.(131)
பக்தியுடனும், நம்பிக்கையுடனும் (வாசுதேவனின் ஆயிரம் பெயர்கள் அடங்கிய) இந்தப் பாடலைப் பாடுவதன் மூலம்
ஒரு மனிதன் ஆன்ம இன்பம், மன்னிக்கும் இயல்பு, செழிப்பு, புத்தி, நினைவு மற்றும் புகழ் ஆகியவற்றை அடைவதில் வெல்கிறான்.(132)
அறம் சார்ந்த முதன்மையான மனிதர்களான அவர்களிடம் கோபமோ, பொறாமையோ, பேராசையோ, தீய புத்தியோ ஒருபோதும் தோன்றாது.(133)
சூரியன், நிலவு, நட்சத்திரங்கள் வானம், திசைப்புள்ளிகள், பூமி, பெருங்கடல் ஆகியவற்றுடன் கூடிய வெளியானது
உயர் ஆன்ம வாசுதேவனின் ஆற்றலாலேயே ஆதரவடைந்து நிலைநிறுத்தப்படுகிறது.(134)
தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், உரகர்கள், ராட்சசர்கள் ஆகியோருடனும், அசையும் மற்றும் அசையாதவற்றுடனும்
கூடிய மொத்த அண்டமும் கிருஷ்ணனின் ஆளுகையின் கீழே இருக்கிறது.(135)
புலன்கள், மனம், புத்தி, உயிர் {சத்வ குணம்}, சக்தி {வன்மை}, பலம் மற்றும் நினைவு ஆகியன வாசுதேவனையே
தங்கள் ஆன்மாவாகக் கொண்டுள்ளன. உண்மையில், க்ஷேத்திரம் என்றழைக்கப்படும் இவ்வுடலும், க்ஷேத்திரத்தை அறிபவன்
என்றழைக்கப்படும் புத்தியுடன் கூடிய ஆன்மா ஆகியவையும் வாசுதேவனையே தங்கள் ஆன்மாவாகக் கொண்டுள்ளன.(136)
சாத்திரங்களில் உள்ள காரியங்கள் அனைத்திலும் (நடைமுறைகள் உள்ளடங்கிய) ஒழுக்கமே முதன்மையானது எனச் சொல்லப்படுகிறது.
அறம் ஒழுக்கத்தையே தன் அடிப்படையாகக் கொண்டுள்ளது. மங்கா புகழ் கொண்ட வாசுதேவன் அறத்தின் தலைவனாகச் சொல்லப்படுகிறான்.(137)
முனிவர்கள், பித்ருக்கள், தேவர்கள், (அடிப்படை) பெரும்பூதங்கள், உலோகங்கள், உண்மையில், அசையும் மற்றும் அசையாதனவற்றைக்
கொண்ட அண்டம் முழுவதும் நாராயணனிலிருந்தே உதித்தது.(138)
யோகம், சாங்கிய தத்துவம், ஞானம், அனைத்து வகை இயந்திரக் கலைகள், வேதங்கள், பல்வேறு வகைச் சாத்திரங்கள்
என அனைத்தும் ஜனார்த்தனனிலிருந்தே உண்டாகின.(139)
விஷ்ணு, பல்வேறு வடிவங்களில் பரவியிருக்கும் ஒரே பெரும்பொருளாக இருக்கிறான். மூவுலகங்களையும் மறைப்பவனும்,
அனைத்துப் பொருட்களின் ஆன்மாவுமான அவன் அவை அனைத்தையும் அனுபவிக்கிறான்.
அவனது மகிமை குறைவறியாதது, அவன் (அண்டத்தின் உயர்ந்த தலைவனாக) அதை அனுபவிக்கிறான்.(140)
சிறப்புமிக்க விஷ்ணுவைப் புகழ்வதும், வியாசரால் தொகுக்கப்பட்டதுமான இந்தப் பாடல், உயர்ந்த மகிழ்ச்சியையும்,
உயர்ந்த நன்மையையும் (முக்தியையும்) அடைய விரும்பும் மனிதனால் பாடப்பட வேண்டும்.(141)
பிறப்பற்ற தேவனும், சுடர்மிக்கப் பிரகாசம் கொண்டவனும், அண்டத்திற்கு மூலமாகவோ, காரணமாகவோ இருப்பவனும்,
சிதைவறியாதவனும், பெரியவையும், தாமரை இதழ்களைப் போன்றவையுமான கண்களைக் கொண்டவனுமான
அந்த அண்டத் தலைவனை வழிபட்டுத் துதிப்பவர்கள் எந்த ஏமாற்றத்தையும் ஒருபோதும் சந்திப்பதில்லை” என்றார் {பீஷ்மர்}.(142)
ந வாஸுதேவ பக்தாநாம் அசுபம் வித்யதே க்வசித் |
ஜன்மம்ருத்யு ஜரா வ்யாதிபயம் வாப்யுபஜாயதே ||
வாஸுதேவனின் பக்தர்கள் அசுபம் என்றால் என்ன என்றே அறியார்கள். அவர்களுக்கு பிறப்பால் பயம், இறப்பால் பயம்,
முதுமையால் பயம், வியாதியினால் பயம் என்பவை ஒரு நாளும் உண்டாகா.
காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா
புத்யாSSத்மனாவா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் |
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||
உடலால், வாக்கால், மனத்தால், இந்திரியங்களால், புத்தியால், என்னால் நானாகவோ அல்லது பிரகிருதியின்
சுபாவத்தாலோ எதை எதைச் செய்கிறேனோ அனைத்தையும் நாராயணனுக்கே பரமாகச் சமர்ப்பித்து விடுகிறேன்.
——————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply