ஸ்ரீ பகவத் குண தர்ப்பணம்–ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம வியாக்கியானங்கள் — ஸ்லோகம் –39–

அதுலஸ் சரபோ பீமஸ் சமயஜ்ஞோ ஹவிர்ஹரி
சர்வ லஷண லஷண்யோ லஷ்மீ வான் சமிதிஜ்ஞய –39

இந்த முப்பத்து ஒன்பதாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

357-அதுல:, 358. ஶரப:, 359. பீம: (அபீம:), 360. ஸமயஜ்ஞய:, 361. ஹவிர்ஹரி: |

362-ஸர்வலக்ஷணலக்ஷண்ய:, 363. லக்ஷ்மீவான், 364. ஸமிதிஞ்ஜய:||

அதுல: — ஸமம் என்று யாரும் எவையும் இல்லாதவர்
சரப: — எல்லா சரீரங்களிலும் அந்தராத்மாவாய் இருப்பவர் (ஸ்ரீஆதிசங்கரர்)
நெறி தவறுவோரைத் தண்டித்து நல்வழிக்குக் கொணர்பவர் (ஸ்ரீபட்டர்)
பீம: — தம்மீதுள்ள பயத்தால் தேவர்கள் அனைவரும் முறைதிறம்பாமல் இருக்கும்படித் திகழ்பவர்
ஸமஜக்ஞ: — அனைவரையும் ஸமமாகக் கருதுதலாகிய உயர்ந்த பூஜையை விரும்புபவர்
ஹவிர்ஹரி: — யக்ஞத்தில் படைக்கப்படும் ஹவிஸ் ரூபமானவர்; பக்தர்களின் பாபங்களைப் போக்கும் ஹரி ஆனவர்.
ஸர்வலக்ஷணலக்ஷண்ய: — அறியப்படுகின்ற, அனுபவத்திற்கு வருகின்ற அனைத்தின் தன்மைகளும் அவரையே அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அனைத்து அறிவும் அனுபவமும் சென்று முடியும் நிலை அவரே
லக்ஷ்மீவாந் — அகலகில்லேன் என்று திருமகள் உறையும் மார்பர்; நித்யயோகமாக அவருடன் அன்னையாகிய ஸ்ரீ திகழ்கிறாள்
ஸமிதிஞ்ஜய: — ஜீவனுக்கும் அவருக்கும் உண்டாகும் வழக்கில் ஸ்ரீ இருவருக்கும் இடையில் திகழ்ந்து தயாரூபமாய் பகவானுக்கே வெற்றியைத் தருகிறாள்

ஒப்பற்றவன் {அதுலன்},
(சிங்கத்தைக் கொல்லும் விலங்கான} சரபன், தீயோரைப் பயங்கரமாகத் தாக்குபவன் {பீமன்},
காலத்தில் நேர்ந்தவை அனைத்தையும் அறிந்தவன் {ஸமயஜ்ஞன்},
வேள்வி நெருப்பில் ஊற்றப்படும் நெய்யாக இருப்பவன் {ஹவிஸ்},
அவ்வாறு ஊற்றப்படும் நெய்யை தேவர்களின் வடிவில் ஏற்பவன் {ஹரி},
அனைத்து வகைச் சான்றுகளாலும் அறியப்படுபவன் {ஸர்வ லக்ஷண லக்ஷண்யன்},
எப்போதும் செழிப்பு அமர்ந்திருக்கும் மார்பைக் கொண்டவன் {லக்ஷமீவாந்},
போர்கள் அனைத்திலும் வெல்பவன் {ஸமிதிஞ்சயன்};(52)

ஸ்ரீ பர வாஸூ தேவனின் – செல்வம் –

357-அதுல -நிகர் அற்றவர் ஒப்பிலியப்பன் –
358-சரப -வேத வரம்புகளை மீறினவர்களை அழிப்பவர் –
359-பீம-ஆணையை மீறுபவர்களுக்கு பயத்தைக் கொடுப்பவர் -தேவர்களும் பெருமானின் ஆணைக்கு உட்பட்டே கடைமையை ஆற்றுபவர் –
360-சமயஜ்ஞ- பக்தர்களைக் காப்பதற்கு வேண்டிய தக்க தருணத்தை உடையவர் –
361-ஹவிர்ஹாரி -யாகங்களில் கொடுக்கப் படும் ஹவிர்பாகத்தைப் பெற்றுக் கொள்பவர் –
பக்தர்களுக்குத் தன்னையே கொடுப்பவர் -அடியார்களின் பாபத்தை போக்குபவர்

ஸ்ரீ பர வாஸூ தேவன் -ஸ்ரீ யபதி -திருமகள் கேள்வன் –

362-சர்வ லஷண லஷண்ய-திருமகள் நாதனான படியால் மஹா புருஷணன் லஷணம் பொருந்தியவன் –
363-லஷ்மீ வான் -விட்டுப் பிரியாத திருமகளை உடையவன் –
364-சமிதிஜ்ஞய -அடியார்களின் குழப்பத்தை வென்று தெளிவு கொடுப்பவர் –

3-18-ஐஸ்வர்ய வாசக திரு நாமங்கள் -352-361-திரு நாமங்கள்
3-19-ஸ்ரீ லஷ்மி சம்பந்தம் திரு நாமங்கள் -362-380-திரு நாமங்கள்

357-அதுல –

ஏவம் அதுல꞉ அநுபம꞉ ।
* ந தஸ்ய ப்ரதிமா அஸ்தீதி
ஒப்பில்லாதவன் -தன் ஒப்பார் இல்லப்பன் -6-3-9-
ஒத்தாரும் மிக்காரும் இல்லாத மா மாயன் -3-2-2-

இவ்வாறு ஒப்பற்றவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

உவமை இல்லாதவர் – -ஸ்ரீ சங்கரர் –

ஒப்பற்றவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

  1. ஓம்அதுலாயநம:

துலோபமானமஸ்ய ந அவருக்கு ஈடிணையானவர் எவரும்

வித்யத இதி இல்லை

அதுல: எனவே, பகவான் ‘அதுல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுக்கு ஈடிணையானவர் எவருமில்லை. எனவே அவர் ‘அதுல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ந தஸ்ய ப்ரதிமாஸ்தி யஸ்ய நாம மஹத்யஶ:’ (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 4.19)

ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

புகழ்பெற்ற திருநாமங்களை உடைய அந்த பரப்ரஹ்மத்திற்கு ஈடானவர் எவரும் இல்லை.

‘ந த்வத்ஸமோSஸ்த்யப்யதிக: குதோSன்ய:’ (ஸ்ரீமத் பகவத் கீதை 11.43)

ஸ்ரீமத் பகவத் கீதையில் பார்த்தன் பகவானைப் பார்த்துக் கூறுகிறான்: உனக்கு நிகர் யாருமில்லை. எனில், உனக்கு மேல் வேறுயாவர்?

——————

அதுலா – அவர் சமமற்றவர்

‘துலா’ என்றால் சமநிலை அல்லது ஒப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் அளவு. அதுல என்றால் சமம் இல்லாதவர் அல்லது அளவிட முடியாதவர். ஆதி சங்கரர் சொல்வது போல் ‘துலோபமானம் அஸ்ய ந வித்யதே இதி – அவருக்கு எந்த ஒப்பீடும் இல்லை, அதனால் அவர் அதுலஹ்’ என்று அழைக்கப்படுகிறார்.

ஸ்வேதஸ்வர உபநிஷத் 4.19 கூறுகிறது “ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி யஸ்ய நாம மஹாத்யஷா” – யாருடைய பெயர் பெரிய மகிமை மற்றும் எந்த உருவமும் இல்லை.

பகவத் கீதை, அத்தியாயம் 11 வசனம் 43 இல், அர்ஜுனன் கிருஷ்ணரின் பிரபஞ்ச வடிவத்தைப் பார்த்ததும், ‘ந த்வத்ஸமோ அஸ்தி அப்யதிகா குடோன்யஹ் – உனக்கு நிகர் யாருமில்லை, உன்னை மீறுகிற ஒருவன் கேள்வி எங்கே?’

திருவள்ளுவர் (திருக்குறள் 1.7) ‘தனக்கு உவமை இல்லாதன் தாள் சேர்ந்தார்க்கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது – ஒப்பற்ற இறைவனின் திருவடிகளைச் சரணடைவதே வாழ்வின் கவலைகளைப் போக்க ஒரே வழி’ என்கிறார்.

ஸ்ரீ வி.வி. ராமானுஜம் திருவாய் மொழி (6-3-9) – ‘தன் ஒப்பார் இல் அப்பன்‘ அதாவது ‘ஒப்பற்ற இறைவன்’ என்று குறிப்பிடுகிறார்.


358-சரப
அழிப்பவன்–வரம்பு மீறுபவர்களை அழிப்பவன்-ஸ்ரீ -ஆஸ்ரிதர் கஷ்டங்களை போக்கி அவனுடன் சேர்ப்பிக்கிறாள் அங்கும்-ஶ்ருணாதீதி

ஸ்வ மர்யாதா₃தி வர்திந ꞉ ஶ்ருணாதீதி
ஶரப₄꞉
* க்ருஶ்ருஶலி கலிக₃ர்தி₃ப்₄யோ (அ)ப₄ச், இத்யப₄ச் ॥
மாறில் போர் அரக்கர் மதிள் நீர் எழச் செற்று உகந்த ஏறு சேவகனார் -6-1-10
பின்னும் ஆள் உயர் குன்றங்கள் பெய்து அடர்த்தான் -7-6-8-

அன்று நேர்ந்த நிசாசரை -பேராசை வைத்து வரும் அசுரர்கள்

க்ருச்ரு சலி கலி கர்திப்யோ அபச் —
சிதைப்பது என்னும் பொருள் கொண்ட க்ரு
அழிப்பது என்னும் பொருள் கொண்ட ச்ரு
அசைதல் என்னும் பொருள் கொண்ட சலி
ஒலிப்பது என்னும் பொருள் கொண்ட கல்
ஆகியவற்றுடன் அபச் என்பது சேர்கிறது –

வரம்பு மீறுபவர்களை அழிப்பவர்–ஸ்ரீ பராசர பட்டர் –

அழியும் உடல்கள் தோறும் ஆத்மாவாகப் பிரகாசிப்பவர் – -ஸ்ரீ சங்கரர் –

பிரளய ஜலத்தில் பிரகாசிப்பவர் -முப்புரம் எரித்த அம்பில் பிரகாசிப்பவர் என்றும் கூறுவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

  1. ஓம்ஶரபாயநம:

ஶரா: ஶரீராணி உடலை “ஶரா” என்று அழைக்கின்றனர்

ஶீர்யமாணத்வாத்தேஶு அழியக்கூடியதால்

ப்ரத்யகாத்மதயா (அனைவரையும் காக்க வேண்டும் என்ற) தன்னலத்தோடு

பாதீதி அதனுட்புகுந்து (அனைத்து உடல்களுக்குள்ளும் புகுந்து) உறைவதால்

ஶரப: பகவான் ‘ஶரப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து உயிரினங்களின் உடல்களுமே அழியக்கூடியவை. எனவே அவற்றை ‘ஶர’ என்று அழைக்கின்றனர். அந்த ‘ஶரங்களுக்குள்’ புகுந்து ஆன்மாவாக உறைவதால் பகவான் ‘ஶரப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

ஷரபா – அழிப்பவர் (நெறிமுறைகளின் எல்லைகளை மீறுபவர்கள்)

‘ஸ்ரு’ என்ற வினைச்சொல்லின் அடிப்படையில் ‘காயப்படுத்துதல், அழித்தல்’ என்று பொருள்படும் வகையில் விளக்கம் அமைந்துள்ளது. ஸ்ரீ பராசர பட்டர் ‘ஸ்ருணாதி இதி சரபஹ்‘ என்று கூறுகிறார், அதாவது நெறிமுறைகளின் வரம்புகளை மீறுபவர்களை அழிக்கிறார், எனவே அவர் ஷரபஹ் என்று அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீஆதிசங்கரர் இதை விளக்குகிறார் ‘ஷராஹ் ஷரீராணி ஷீரியமானத்வாத் தேஷு ப்ரத்யகாத்மதாயா பதி இதி ஷரபஹ் – உடல் அழிந்துபோவதால் ஷரா என்று அழைக்கப்படுகிறது; பிஏ என்றால் பிரகாசித்தல் என்று பொருள். உடலில் பிரகாசிப்பதால் ஷரபா என்று அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீ ராதாகிருஷ்ண சாஸ்திரி ஷரபோபநிஷத்தை (30) குறிப்பிடுகிறார்:
‘சரா ஜீவாஸ்-ததங்கேஷு பாதி நித்யம் ஹரிஹ் ஸ்வயம் |
ப்ரஹ்மைவ ஷரப ஸாக்ஷாத் ||
எங்கும் நிறைந்திருக்கும் பிரம்மனைப் போன்று பகவானைத் தவிர வேறு யாரும் நம் உடலில் பிரகாசிக்கவில்லை. ஸ்ரீ சாஸ்திரியும் ஒரு மாற்று விளக்கத்தை தருகிறார் – ஷர என்பது அம்புக்குறி, ஆனால் இந்த உடல் பகவானை குறிவைத்தால், அழியக்கூடிய உடலும் பிரகாசிக்கிறது, ஏனென்றால் அவர் அந்த உடலில் பிரகாசிக்கிறது.

புராணத்தின் படி, சரபா ஒரு எட்டு கால் மிருகம், சிங்கம் அல்லது யானையை விட வலிமையானது. இது சிவபெருமானின் அவதாரம் என்று கூறப்படுகிறது மற்றும் பெயர் பொதுவாக சிவனைக் குறிக்கிறது. சனாதன தர்மம் முழுவதையும் உள்ளடக்கிய விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் உலகளாவிய தன்மையைக் காட்டும் ஷம்பு, ஷிவா, ஸ்தானு மற்றும் புரந்தர போன்ற நாமங்களை நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம்.

——–

359-பீமா –
பயமூட்டுபவன்

அதஸ்தே தஸ்மாத்₃விப்₄யதீதி
பீ₄ம꞉ ।
* பி₄ய꞉ ஷுக்₃வா, இதி மக் ப்ரத்யய꞉ ।
* பீ₄மாத₃யோ (அ)பாதா₃நே இதி ।
தத்₃பீ₄தா ஹி வாய் வாத₃யோ தே ₃வா꞉ ஸ்வ மர்யாதா₃ம் நாதி வர்தந்தே । யதா₂

பீஷா அஸ்மாத் வாத பவதே –தைத்ரியம் ஆனந்த வல்லி
அவனிடம் உள்ள பயம் காரணமாகவே வாயு பகவான் காற்று வீசுகிறான்

யதிதம் கிஞ்ச ஜகத் சர்வம் பிராண ஏஜதி நிஸ் ஸ்ருதம் மஹத் பயம் வஜ்ரம் உத்யதம்–கட 2-6-2-
எங்கும் வீசுகின்ற ப்ராண வாயு அனைத்தையும் வாழும்படி செய்கிறது
இப்படி செய்யா விட்டால் காப்பதற்காக வஜ்ராயுதம் ஓங்கிய படி உள்ளது

பயாத் ஏவ அக்னி ஸ்தபதி பயாத் தபதி ஸூர்ய பயாத் இந்த்ரச்ச வாயுச்ச ம்ருத்யுர் தாவதி பஞ்சம –கட
அவனிடம் உள்ள பயம் காரணமாகவே அக்னி ஸூர்யன் இந்த்ரன் வாயு யமன் ஆகியோர்
தங்கள் கடைமைகளைச் சரிவரச் செய்கின்றரனர்

கம்ப நாத் —ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -1-3-40–சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டதைச் செய்ய வில்லை என்றால்
பகவானால் தண்டனை உண்டாகும் என்ற எண்ணம் காரணமாகவே உலகம் நடுங்கிய படி உள்ளது –

அரி கான் நரியாய் அரக்கர் ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம்புக்கு ஒளிப்ப -7-6-8
அத்த எம்பெருமான் எம்மைக் கொள்ளேல் அஞ்சினோம் -பெரிய திருமொழி -10-2-2-
பீஷாச்மாத்வத பவதே பீஷோ தேதி சூர்ய –

அஞ்சினோம் தடம் புக்கத்தங்கோ

ஆஜ்ஜையைக் கடந்தவர்களுக்கு -வரம்பு மீறுபவர்க்கு பயத்தைக் கொடுப்பவர் -இவரிடத்தில் பயத்தால் அன்றோ வாயு முதலிய தேவர்கள்
தம் தம் அதிகாரங்களை மீறாது இருக்கிறார்கள் –ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லோரும் பயப்படும்படி இருப்பவர் -அபீம -நல்வழியில் செல்பவர்களுக்கு பயப்பட வேண்டாதவர் – -ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களுடைய பயங்களைப் போக்குபவர் -வியாசர் முதலான ரூபங்களில் பிரமாணங்களைத் தரித்து இருப்பவர் –
தம்மிடம் ஜனங்கள் அச்சம் கொள்ளும்படி இருப்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

  1. ஓம்பீமாயநம:

பிபேத்யஸ்மாத்ஸர்வமிதி அனைவரும் பகவானிடம் அச்சம் கொண்டுள்ளனர்

பீம: எனவே பகவான் ‘பீம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரும் பகவானிடம் (அவரது பராக்ரமம் மற்றும் மேன்மையினால்) அச்சம் கொண்டுள்ளனர். எனவே, பகவான் ‘பீம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘பீமாதயோSபாதானே’ (பாணினி ஸூத்ரம் 3.4.74)

இதி பாணினிஸ்ம்ருதே: இந்த பாணினி ஸூத்ரத்தை நினைவில் கொள்ளவேண்டும் (பீம என்ற பெயர் காரணத்தை விளக்க)

ஸன்மார்கவர்த்தினாம் நன்னெறியில் நடப்போர்

அபீம: அவரிடம் அச்சம் கொள்ளத் தேவையில்லை. எனவே, அவர் ‘அபீம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, நன்னெறியில் நடப்போருக்கு அவர் அச்சம் அளிப்பதில்லை. எனவே, அவர் ‘அபீம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இவ்வாறு இருவகையாய் பொருளுரைத்திருந்தாலும், ‘பீம:’ என்பதே ஆன்றோரால் திருநாம வரிசையில் கணக்கிடப்பட்டுள்ளது.

———-

பீமா – வலிமைமிக்கது

பீமா என்றால் மற்றவர்களின் இதயத்தில் பயத்தை ஏற்படுத்துபவர் என்று பொருள். ஸ்ரீ ஆதிசங்கரர் கூறுகிறார் ‘பிபேதி அஸ்மாத் சர்வம் இதி பீமா – ஒவ்வொருவரும் அவருக்குப் பயப்படுகிறார்கள், எனவே அவர் பீமா என்று அழைக்கப்படுகிறார். பிப்யதி இதி பீமா – இந்த நாமம் ‘பீ’ என்ற வினைச்சொல்லில் இருந்து பெறப்பட்டது, அதாவது ‘அஞ்சுதல்’. தம்முடைய விருப்பத்தை மீறுவதால் ஏற்படும் பின்விளைவுகளுக்குப் பயந்து உலகம் முழுவதும் ஒழுங்காக இயங்குகிறது என்கிறார் ஸ்ரீ பட்டர்.

தைத்ரேய ஆரண்யகர் கூறுகிறார், ‘பிஷா ஸ்மாத் வதஹ் பவதே – காற்று கூட அவருக்குப் பயந்து தன் கடமையைச் செய்கிறது’.

ஸ்ரீ ருத்ரத்தின் 8 வது அனுவாகத்தில், ‘நமோ உக்ராய ச பீமாய ச – மூர்க்கமான மற்றும் பயமுறுத்தும் ஒருவருக்கு வணக்கம்’ என்று நாம் பரமாத்மாவைக் குறிப்பிடுகிறோம்.

கதா உபநிஷத் கூறுகிறது:
பயதேவ அக்னிஸ் தபதி பயயாத் தபதி சூர்யஹ் |
பயயாத் இந்த்ரஶ்ச வாயுஶ்ச மிருத்யுர்-தாவதி பஞ்சமஹ் || (2.6.3)
அவருக்குப் பயந்துதான் நெருப்பு எரிகிறது, சூரியன் பிரகாசிக்கிறார், வாயு, இந்திரன் மற்றும் யமன், மரணத்தின் கடவுள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுகிறார்கள். இதே கருத்தை பிரம்மசூத்திரம் 1.3.40ல் கூறப்பட்டுள்ளது.

பகவத் கீதை அத்தியாயம் 11 வது வசனம் 21 இல் பகவானின் வல்லமைமிக்க இயல்பைப் பற்றிய குறிப்புகள் உள்ளன:
அமி ஹி த்வம் ஸுர-சங்க விசந்தி கேசித் பீதாஹ் ப்ராஞ்சலயோ க்ரநந்தி ஸ்வஸ்திதி உக்த்வா மஹர்சி 
-சித்த-சங்கஹ் ஸ்துவந்தித் த்வம் –
செய்ய வேண்டும் நீங்களும் உங்களுக்குள் நுழைவதும். அவர்களில் சிலர், மிகவும் பயந்து, உங்கள் மகிமையைப் பாடி, கூப்பிய கைகளுடன் பிரார்த்தனை செய்கிறார்கள். பெரிய முனிவர்களும் அறிவொளி பெற்றவர்களும் வேத சாஸ்திரங்களிலிருந்து பாடல்களைப் பாடி வழிபடுகிறார்கள்.

இறைவனை உணராத உயிர்கள் இருக்கும் வரை பயம் மட்டுமே, அவனை உணர்ந்து விட்டால் பயப்பட வேண்டியதில்லை என்று தர்ம சக்கரம் எழுத்தாளர் குறிப்பிடுகிறார்.

சங்கரர் இந்த நாமத்தின் மாற்று வடிவத்தை ‘அபீமா’ என்று தருகிறார் – தர்மத்தைப் பின்பற்றும் போது கடவுளுக்கு பயப்படத் தேவையில்லை என்பதை வலியுறுத்தி, நேர்மையான வழியில் செல்பவர்களுக்கு பயம் இல்லாதவர்.


360-சமயஜ்ஞ-
காலம் அறிந்தவன்–சமயம் -அதிகார நியதமாம் -மரபு -நெருப்பு மேல் நோக்கியே எரியும்

அதஸ் தேஷா மக்₃ந்யாதீ₃நா மூர்த்₄வஜ்வலநாதி₃ஸமயம் – அதி₄கார நியம ஜாநாதீதி
ஸமயஜ்ஞ꞉।
ஸூர்ய சந்த்ரமசவ் தாதா யதா பூர்வம் அகல்பயத்  இதி । யத்₃வா,
ப₄க்தேப்₄ய꞉ ஸ்வ ஆத்மதா₃ந அவஸர꞉ ஸமய꞉, தத்₃அப₄ய தா₃ந வ்ரதம் வா இதி —

மீண்டும் ஸ்ருஷ்டிக்கும் பொழுது ஸூர்ய ஸந்த்ரர்களை முன்பு இருந்த ஒளியுடனே ஸ்ருஷ்ட்டித்தான்
சரணாகத ரக்ஷண விரதம் பூண்டவன்-ஆஸ்ரிதற்குத் தன்னையே கொடுக்கும் சங்கல்பம் கொண்டவன்

இரணியன் தூண் புடைப்ப அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப் பிரான் -2-8-9-
அபயம் சர்வ பூதேப்யோ ததாமி –ஏதத் வரதம் மம -அளித்த அபயத்தை மறவாதவன் –

பக்தர்களுக்குத் தம்மைத் தவறாமல் தரும் காலம் அறிபவர் -நெருப்பு முதலியவை மேல் நோக்கியே எரிய
வேண்டும் எனபது போன்ற அதிகார நியமத்தைக் கண்டறிந்தவர்-ப்ரளயத்துக்குப் பின் மநு ஸ்ருஷ்டியிலும் முன் போலவே அவ்வதிகாரங்களை அந்த அந்த தேவதைகளுக்குத் தவறாமல் அறிந்து கொடுப்பவர்
ஈஸ்வரன் முன் போலவே ஸூர்ய சந்த்ராதிகளை உண்டாக்குகிறார் என்று தைத்ரியம் சொல்கிறது
பக்தர்களுக்குத் தம்மைத் தவறாமல் தருவதற்குக் காலம் அறிபவர்
அவர்களுக்கு அபயம் கொடுப்பதாகிய விரதத்தை மறவாதவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சிருஷ்டி ஸ்திதி சம்ஹார காலங்களை அறிபவர் -ஆறு சமயங்களை அறிந்தவர் -எல்லா பூதங்களிலும்
சமமாக இருத்தலையே யஜ்ஞமாக உடையவர் – -ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களுக்கு சுபம் தரும் முறையை அறிந்தவர் – ஸ்ரீ லஷ்மியுடன் சேர்ந்து இருப்பவராய் எல்லாம் அறிந்தவர் -பக்தர்கள்
வேண்டுமவற்றைக் கொடுப்பதற்கு உரிய காலம் அறிந்தவர் -சாஸ்த்ரங்களை அறிந்தவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————

  1. ஓம்ஸமயஜ்ஞாயநம:

ஸ்ருஶ்டிஸ்திதிஸம்ஹாரஸமயவித் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் புரிவதற்கான சரியான சமயத்தை (நேரத்தை) அறிந்துள்ளார்

ஸமயஜ்ஞய: எனவே பகவான் ‘ஸமயஜ்ஞய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முத்தொழில்களான படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் ஆகியவற்றை புரிவதற்கான சரியான நேரத்தை அறிந்துள்ளபடியால் பகவான் ‘ஸமயஜ்ஞய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஶட்ஸமயாஜ்ஜானாதீதி வா ஆறு காலங்களையும் (இளவேனில், முதுவேனில், கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம் மற்றும் பின்பனிக்காலம்) சரிவர அறிந்துள்ளபடியால்

ஸமயஜ்ஞய: எனவே பகவான் ‘ஸமயஜ்ஞய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஆறு ருதுக்களை (ஆறு காலங்களை) சரிவர அறிந்துள்ள படியால் ‘ஸமயஜ்ஞய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு ஆறு காலங்களை அறிதல் மட்டுமே பொருளன்று. ஆச்சார்யாள் நேரடியாய் குறிப்பிடாவிடினும் அந்த ஆறு காலங்களை தக்க நேரத்தில் வரும்படி செய்பவரும் பகவான்தான் என்ற உட்பொருளிலேயே இந்த விளக்கம் அளித்திருப்பார் என்று எண்ணுகிறேன்..

ஸர்வபூதேஶு அனைத்து உயிர்களிடத்தும்

ஸமத்வம் ஏற்றத்தாழ்வின்றி ஒரு நோக்கில் இருப்பது

யஜனம் பகவானின் வழிபாடு

ஸாத்வஸ்யேதி வா மிகச்சிறந்த

ஸமயஜ்ஞய: எனவே பகவான் ‘ஸமயஜ்ஞய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுக்கு செய்யப்படும் வழிபாடுகளில் மிகச்சிறந்தது எதுவெனில், அனைத்து உயிர்களிடத்தும் ஏற்றத்தாழ்வு பாராட்டாது ஒரு நோக்கில் அவை அனைத்தையும் சமமாக நடுத்துவதேயாகும். எனவே பகவான் ‘ஸமயஜ்ஞய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்தையும் ‘ஸமமாக’ நடத்துவதே அவருக்கு செய்யப்படும் ‘யஜ்ஞம்’.

‘ஸமத்வமாராதனமச்யுதம்’ (ஸ்ரீவிஶ்ணு புராணம் 1.17.90)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: சமத்துவமே (அனைத்து உயிரினங்களையும், மனிதர்களையும் ஒன்றாக நடத்துவதே) பகவான் அச்சுதருக்கு செய்யப்படும் சிறந்த வழிபாடாகும்.

இதி ப்ரஹலாதவசனாத் | இது ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் பக்த ப்ரஹ்லாதனின் கூற்றாகும்.

——–

சமயஜ்ஞா – மரபுகளை அறிந்தவர்

இந்த நாமத்தை சமய + ஜ்ஞா அல்லது சாம + யக்ஞம் என 2 வழிகளில் அலசலாம். ஸ்ரீ ஆதிசங்கரர் விளக்கிய முதல் அர்த்தம், ‘ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹார சமயவித், ஷட் சமயன் ஜானாதி இதி வா சமயஜ்ஞா – பிரபஞ்சத்தை உருவாக்குவதற்கும், காப்பதற்கும் அல்லது கலைப்பதற்கும் பொருத்தமான நேரத்தை அவர் அறிவார் அல்லது ஆறு பருவங்களுக்கான சரியான நேரத்தை அவர் அறிந்திருக்கிறார். சமயஜ்ஞா’ எனப்படும்.

‘ஸர்வபூதேஷு சமத்வம் யஜனம் ஸாத்வஸ்ய இதி சமயஜ்ஞாஹ் – அவர் எந்த விருப்பமும் காட்டாமல் அனைவரையும் சமமாகவும் சமமாகவும் நடத்துகிறார்’ என்பது மாற்று பொருள். விஷ்ணு புராணம் (1.17.90) கூறுகிறது ‘சமத்வம் ஆராதனம் அச்யுதஸ்ய – அவர் எல்லா உயிரினங்களிலும் சமத்துவம் என்ற கொள்கையைப் பின்பற்றுகிறார்’.

ஸ்ரீ பராசர பட்டர் ஒரு மாற்று விளக்கத்தை அளிக்கிறார் – பகவான் தனது பக்தர்களுக்கு தனது அருளை வழங்குவதற்கான சரியான நேரத்தை அறிந்திருக்கிறார், அல்லது அவர் எடுத்த பாதுகாப்பு சபதத்தை நிறைவேற்ற சரியான நேரம்.

அவர் விதிகளை நிறுவுவதால் அவர் சமயக்ஞர் ஆவார், எ.கா. நெருப்பு எரியும் போது, ​​சுடர் மேல்நோக்கிச் செல்கிறது, மேலும் பிரளயம் அல்லது பிரளயத்திற்குப் பிறகு படைப்பின் போது, ​​அவர் பிரபஞ்சத்தில் விதிகளையும் முறையான ஒழுங்கையும் நிறுவுகிறார். அவர் சூரியன், சந்திரன் மற்றும் கிரகங்களின் பாதையை நிறுவுகிறார் – சூரிய-சந்திரமாசோ தாதா யதாபூர்வம் அகல்பயாத்’. 

ஸ்ரீ வி.வி.ஆர் ராமானுஜன் நரசிம்ம அவதாரத்தின் நிகழ்வைக் குறிப்பிடுகிறார், அங்கு பகவான் தூணில் எப்போது தோன்றுவார் என்பதைத் துல்லியமாக அறிந்திருந்தார் – ‘இரணியன் தூண் புடைப்ப அங்கு அப்போழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப்-பிரான்‘ – திருவாய் மொழி – 2.8.9.

எப்போது போரிடுவது, எப்போது சமரசம் செய்துகொள்வது, மற்றவரின் உதவியை நாடுவது, இரு எதிரிகளை எப்போது மோதவிட்டு தங்களைத் தாங்களே பலவீனப்படுத்திக் கொள்வது, எப்போது தாக்குவது என ஆறு வகையான போர் உத்திகளை ஸ்ரீ ராதாகிருஷ்ண சாஸ்திரிகள் விவரிக்கிறார். , மற்றும் தாக்குதலுக்கு எப்போது காத்திருக்க வேண்டும். கௌரவர்களுடனான போரில் பாண்டவர்களை வழிநடத்தியபோது, ​​பகவான் கிருஷ்ணர் இந்த வித்தியாசமான நுட்பங்களை போதுமான அளவில் வெளிப்படுத்தினார் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். இந்த நாமாவிற்கு இது ஒரு விளக்கம்.

கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம், காலநிலை மாற்றங்கள், கோள்களின் பாதை, உயிரினங்கள் எப்போது பிறக்கும், எந்த உடலில், இந்த உடல் எப்போது இறக்கும் போன்றவற்றை அறிந்தவர் பகவான் ஒருவரே என்று ஸ்ரீ சத்யதேவோ வசிஷ்டர் விளக்கம் தருகிறார்.

தர்ம சக்கரம் எழுத்தாளர், பகவான் தனது அவதாரங்களில் (தர்ம சம்ஸ்தாபனார்தாய சம்பவாமி யுகே யுகே) நம்மிடையே எப்போது தோன்ற வேண்டும் என்பதை அறிவார் என்று சுட்டிக் காட்டுவதன் மூலம் இந்த நாமத்தின் முக்கியத்துவத்திற்கு மேலும் பரிமாணத்தை சேர்க்கிறார். அர்ஜுனனைத் தவிர வேறு யாரையும் பாண்டவனைக் கொல்ல முயற்சிக்க மாட்டேன் என்ற வாக்குறுதியைப் பெற குந்தியை கர்ணனிடம் எப்போது அனுப்ப வேண்டும் என்பதையும் அவர் அறிந்திருந்தார்.


361-ஹவிர்ஹரி –
ஹவிஸ் ஹரிப்பவன்-ஹவிஸ் ஏற்றுக் கொண்டு ஆபத்து போக்கி அருள்பவன்

தஸ்ய தாவத் ஏவ சிரம் யாவந்ந விமோஷ்யே அத சம்பத்ஸ்யே –சாந்தோக்யம் -6-14-2-
ஒருவன் எம்பெருமானை அடைவதில் கால தாமதம் என்பது அவனது கர்மங்கள் முடியும் வரை மட்டுமே -ஆகும்
அதன் பின்னர் என்னை வந்து அடைகிறான்
ஸ்ருதியில் ஒருவன் எந்தக் காலம் முடிய உலகில் வாழ வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதை ஸர்வேஸ்வரன் அறிவான்
அப்பொழுது அவனை கர்மங்களில் இருந்து மீட்டு தன்னிடம் சேர்த்துக் கொள்ளுகிறான்
ஹரி-பாபங்களை அகற்றி அருளுபவர் என்றவாறு –

இதி ஶ்ருதி ஸித்₃த₄ம் ஸமயம் ஜ்ஞாத்வா, தேப்₄யோ தீ₃யதே தைர ஆதீ₃யதே சேதி
ஹவி꞉ ।
ஹு தா₃ந ஆதா₃நயோ ꞉ ;
*அர்சி ஶுசி ஹு ஸ்ருபிசா₂ தி₃ச் ச₂ர்தி₃ப்₄ய இஸி꞉ இதீஸி꞉ । தத்₃விக்₄நம் அபஹரதீதி
ஹரி꞉ ;
* ஸர்வதா₄துப்₄ய இன் இதி ஹரதேரின் । யதா₂

ஹரீர் ஹரதி பாபாநி த்ருஷ்ட சித்ரைபி ஸ்ம்ருதா அனிச்சயா அபி ஸம் ஸ்பிருஷ்டோ தஹத் யேவ ஹி பாவக–ஹரி அஷ்டகம்
தீய மனம் கொண்டவர்களாக இருந்தாலும் ஸ்ரீ ஹரியை அண்டும் போது அவர்கள் பாபங்களை அவன் நீக்குகிறான்
தன்னை விருப்பத்துடன் தொட்டாலும் அக்னி சுட்டுகின்றது அல்லவோ

இங்கு ஹரிர் ஹரி ஒரே திரு நாமம்

இட அப ஹுதம் கேஹேஷு ஹரே பாகம் க்ரதுஷு அஹம் வர்ணச் ச மே ஹரி ஸ்ரஷ்ட தஸ்மாத் ஹரி அஹம் ஸ்ம்ருத –சாந்தி பர்வம் –
யாகங்கள் செய்யும் பொழுது இட் என்னும் மந்த்ரத்தை உச்சரித்து அக்னியில் ஹோமம் செய்யும் பொழுது
ஹவிர்பாகம் தனக்கு அளிக்கப் பட்டதாகவே ஹரி கொள்கிறான் –

ஹரித் வர்ணம் -பச்சை வர்ணம்

ஹரி -என்னும் அக்ஷரங்கள் எனக்கு பிரியமானவை–இதனால் தான் ஹரி என்று நினைக்கப்படுகிறேன் –

அடியார்களை தான் அனுபவிக்கிறான் -தன்னை அடியார்கள் அனுபவிக்கும் படி கொடுக்கிறான்
மரணமானால் வைகுந்தம் தரும் பிரான் -9-10-5
கொடிய வினை தீர்ப்பேனும் நானே என்னும் -5-6-9-

பக்தர்களுக்குத் தம்மைக் கொடுப்பவர் -யாகங்களில் கொடுக்கப்பட்ட ஹவிர்பாகத்தைப் பெறுகிறவர்
பக்தர்களால் பக்தி செய்த மாத்திரத்தினால் அவர்கள் ஸ்வதந்த்ரமாக எடுத்துக் கொள்ளும்படி உட்படுகிறவர் -அவர்களால் எடுத்துக் கொல்லப்படுகிறார்
பக்தி செய்கிறவனுக்குச் சரீர முதலிய ஸம்ஸாரப் பற்றுகளை விடுவது தான் தாமதம் விட்டவுடன் அவன் பரமாத்மாவுடன் கலந்து போவான் -என்பது ஸ்ருதி -அதற்குள்ள தடைகளைப் போக்குபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

யஜ்ஞத்தில் ஹவிர் பாகத்தைப் பெறுபவர் -ஹவிஸினால் ஹோமம் செய்யப் படுபவர் -தம்மை நினைத்த மாத்ரத்தில் அனைவருடைய
பாவங்கள் அவித்யை அதன் கார்யமான சம்சாரம் ஆகியவற்றைப் போக்குபவர் -மஞ்சள் நிறம் உள்ளவர் – -ஸ்ரீ சங்கரர் –

யஜ்ஞத்தில் வழங்கப்படும் ஹவிஸ்சைப் பெறுபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

  1. ஓம்ஹவிர்ஹரயேநம:

யஜ்ஞேஶு வேள்விகளில்

ஹவிர்பாகம் ஆகுதி செய்யப்படும் பொருட்களை ஹரதீதி ஏற்றுக்கொள்வதால்

ஹவிர்ஹரி: பகவான் ‘ஹவிர்ஹரி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து வேள்விகளும் பகவானைக் குறித்தே செய்யப்படுகின்றன. அவர் அனைத்து வேள்விகளிலும் ஆகுதி செய்யப்படும் பொருட்களை ஏற்றுக்கொள்கிறார். எனவே அவர் ‘ஹவிர்ஹரி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘அஹம் ஹி ஸர்வ யஜ்ஞானாம் போக்தா ச ப்ரபுரேவ ச’ (ஸ்ரீமத் பகவத் கீதை 9.24)

ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்: நானே வேள்விகளில் எல்லாம் உணவு உண்பவன்; நானே (வேள்விகளின்) தலைவன்.

ஹர என்ற சொல்லிற்கு கவர்தல், பெற்றுக்கொள்ளுதல் போன்ற பல பொருட்கள் உண்டு. இங்கு, கவர்கிறார் என்பதை விட வேள்வியின் நாயகனாய் இருந்து ஆகுதிகளைப் பெறுகிறார் என்பதே சிறந்த பொருளாக இருக்கும்.

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீ பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும் 

இனி ஆச்சார்யாள், இந்த இரண்டு சொற்களையும் (ஹவி:, ஹரி:) தனித்தனியே பிரித்தும் பொருளுரைக்கிறார். இவ்வாறு, விளக்கியிருந்தாலும் திருநாமக் கணக்கில் ‘ஹவிர்ஹரி:’ என்று ஒரு திருநாமமாகவே ஆச்சார்யாள் கணக்கிட்டுள்ளார்.

அதவா அல்லது

ஹூயதே ஹவிஶேதி வேள்விகளில் ஆகுதி கொடுக்கப்படுவது

ஹவி: ‘ஹவிஸ்’ எனப்படும்.

அல்லது, பகவானே ஆகுதிப் பொருளாக இருப்பதால் அவர் ‘ஹவி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘அபத்னன் புருஶம் பஶும்’ (புருஶ ஸூக்தம் 1)

புருஶ ஸூக்தத்தில் கூறியுள்ளபடி:

(வேள்வியில்) புருஶ ரூபமான பசுவை (ஆகுதிப் பொருளை) கட்டி வைத்தனர்

இதி ஹவிஶ்டம் ஶ்ரூயதே இந்த புருஶ ஸூக்தத்தில் பரமபுருஶனே ஆகுதிப் பொருளாக கூறப்பட்டுள்ளது.

ஸ்ம்ருதி மாத்ரேண அவரை நினைத்த அளவிலேயே

பும்ஸாம் மனிதர்களின் பாபம் பாவங்களையும்

ஸம்ஸாரம் வா பிறவிச்சுழல்களையும்

ஹரதீதி அழிப்பதால்

ஹரி: பகவான் ‘ஹரி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவரை நினைத்த அளவிலேயே மனிதர்களின் பாவங்களையும், பிறவிச்சுழல்களையும் நீக்குகிறார். எனவே பகவான் ‘ஹரி’ என்று அழைக்கப்படுகிறார்.

ஹரித்வர்ணத்வாத் வா பச்சை நிற மேனியனாய் இருப்பதால்

ஹரி: பகவான் ‘ஹரி’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பச்சை நிற மேனியனாய் இருப்பதால் பகவான் ‘ஹரி’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஹராம்யகம் ச ஸ்மர்த்ருணாம் ஹவிர்பாகம் க்ரதுஶ்வஹம் |

வர்ணஸ்ச மே ஹரி: ஶ்ரேஶ்டஸ்தஸ்மாத் ஹரிர் அஹம் ஸ்ம்ருத: ||

என்னையே எண்ணுவோரின் பாபங்களை அழைக்கிறேன், வேள்விகளில் வழங்கப்படும் ஆகுதிகளை ஏற்கிறேன்,  மிகச்சிறந்த பச்சை வண்ணனாக இருக்கிறேன். எனவே, என்னை அனைவரும் ‘ஹரி’ என்று அழைக்கின்றனர்.

இதி பகவத்வசனாத் | இவ்வாறு பகவான் கூறியுள்ளார் (இந்த ஸ்லோகம் மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் இருப்பதாக கூறுகின்றனர்).

பச்சை மா மலைபோல் மேனி….(தொண்டரடிப்பொடி ஆழ்வார்)

ஹரிர் ஹரதி பாபானி (ப்ரஹலாதன் அருளிய ஹர்யஶ்டகம்)

————

ஹவிர்-ஹரிஹ் – யக்ஞத்தில் காணிக்கைகளைப் பெறுபவர் ஹரி.

இதை ஒரே நாமமாகவோ அல்லது ஹவிஹ் மற்றும் ஹரி என்ற இரண்டு நமஸ்ஸாகவோ கருதலாம். முதல் அணுகுமுறையில் ஸ்ரீ ஆதி சங்கரர் இதை ‘யஜ்நேஷு ஹவிர்பாகம் ஹரதி இதி ஹவிர்ஹரிஹ் – அவர் யாகங்கள் அல்லது யாகங்களில் காணிக்கைகளை உச்சபட்சமாக ஏற்றுக்கொள்பவர், எனவே அவர் ஹவிர்ஹரிஹ்’ என்று அழைக்கப்படுகிறார்.

பகவத் கீதையில் (அத்தியாயம் 9 வசனம் 24) ‘அஹம் ஹி ஸர்வயஜ்ஞானம் போக்தா ச ப்ரபுரேவ ச – நான் எல்லா யக்ஞங்களையும் அனுபவிப்பவன் மற்றும் இறைவன்’ என்று பகவான் கூறுகிறார். யக்ஞத்துடன் பகவானின் அடையாளத்தின் முழு அளவும், நாம் பின்னர் விவாதிக்கும் சஹஸ்ரநாமத்தில் 104-105 ஸ்லோகங்களில் விவரிக்கப்படும்.

இந்த நாமத்தின் இரண்டாவது விளக்கத்தில், ஹவியும் ஹரியும் தனித்தனியாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. சங்கரர் ‘ஹூயதே ஹவிஷா இதி ஹவிஹ் – தியாகச் சடங்குகளில் மதிக்கப்படுபவர்’ என்கிறார். ஹரியைப் பற்றி சங்கரர் கூறுகிறார் ‘ஸ்மிருதிமாத்ரேண பும்ஸாம் பாவம் ஸம்ஸாரம் வா ஹரதி இதி, ஹரித்வர்ணத்வாத் வா ஹரிஹ் – ஒருவருடைய பாவங்களை (சம்சாரத்தின் பந்தத்தை) அழிப்பதால் ஹரி என்று அழைக்கப்படுகிறார் அல்லது அவர் கருநீல நிறத்தில் இருக்கிறார்.

இது மகாபாரதத்தில் பின்வரும் வசனத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது:
ஹரம்யகம் ச ஸ்மார்த்ரூணாம் ஹவிர்பாகம் க்ரதுஷ்வஹம் |
வர்ணஶ்ச மே ஹரிஷ்ரேஷ்டாஹ் தஸ்மாத் ஹரிரஹம் ஸ்மிருதஹ் || (சாந்தி பர்வா 330.3)
“என்னை நினைவு செய்பவர்களின் பாவங்களை நான் அழிப்பேன், மேலும் நான் யாகங்களில் காணிக்கைகளைப் பெறுகிறேன்; என் நிறமும் நீலமானது; எனக்கு ஹரி என்று பெயர்.

ஹவிஸ் என்ற வார்த்தை ஹூ என்ற மூலத்திலிருந்து பெறப்பட்டது, அதாவது “ஏற்றுக்கொள்வது” மற்றும் “வழங்குவது”. அவர் இருவரும் தனது பக்தர்களின் அன்பை அனுபவிக்கிறார், மேலும் அவரது பக்தர்களால் அனுபவிக்கும் பொருளாகவும் இருக்கிறார், எனவே அவர் ஹவிர்-ஹரிஹ். “ஹரிஹ்” என்ற சொல் ‘ஹர்*’ என்ற மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது, அதாவது ‘பெறுவது’. ஹவிஸ் பிரசாதம் மூலம் பெறப்படும் ஒரு ஹவிர்-ஹரிஹ். ஹரிஹ் என்றால் தடைகளை நீக்குபவர் என்றும் அர்த்தம் – ஹரிர் ஹரதி பாபானி. 362 முதல் 379 வரையிலான நாமங்கள், பகவான் பர-வாசுதேவரின் லக்ஷ்மி-பதித்வம் (லக்ஷ்மியின் மனைவியாக விஷ்ணு) பின்னணியில் ஸ்ரீ பராசர பட்டரால் விளக்கப்படுகிறது. 


3-19-ஸ்ரீ லஷ்மி சம்பந்தம் திரு நாமங்கள் -362-380-

362-சர்வ லஷண லஷண்ய –
திருமகள் கேள்வன் -திருவின் மணாளன் -1-9-1

அத₂ லக்ஷ்மீ பதி மூர்தி꞉ । ஸாக்ஷால் லக்ஷ்மீ ஸதத ஆலிங்க₃ந ஸௌபா₄க்₃ய ஸூசகை ꞉
ஸர்வைர் லக்ஷணைர் லக்ஷணே ஜ்ஞாநே ஸாது₄꞉
ஸர்வ லக்ஷண லக்ஷண்ய꞉ ।
* தத்ர ஸாது₄ரிதி யத் । தாநி லக்ஷணாநி யதா₂ *

த்யாயேத் கமல கர்ப்பாபம் தேவம் லஷ்மீ பதிம் தத கமலாலய ஹேதீச விபூஷித கர த்வயம் –
தாயின் கர்ப்பத்தை விட்டு அகலாமல் ஒரு சிசு எவ்விதம் தாய்க்கு தாய்மை என்னும் தேஜஸ்ஸை அளிக்குமோ
அதே போன்று எம்பெருமான் எப்போதும் மஹா லஷ்மியுடனே உள்ளான் என்று தியானிக்க வேண்டும்
ஒரு திருக் கரத்தில் தனது இருப்பிடமான தாமரை மலரையும்
மற்றொரு திருக் கரத்தில் சக்கரத்தாழ்வானையும் ஏந்தியவனாகவே தியானிக்க வேண்டும்

தந் மநவ் ச புண்டரீகாக்ஷ சகல ஸூக ஸுவ்பாக்ய வாரிதே
தாமரை போன்ற கண்களும் கொண்டவனே
அனைத்து விதமான ஸுபாக்யங்களுக்கும் கடல் போன்றவனே

திருமகள் எப்போதும் ஆலிங்கனம் செய்யும் சௌபாக்யத்திற்கான எல்லா லஷணங்களும் உடையவர் -மஹா புருஷ லக்ஷணங்கள் எல்லாவற்றினாலும் ஸ்ரீ யபதி என்று அறியத்தக்கவர்-திரு மார்பில் திருமகள் திருவடிப் பாதிப்புகள் ஆகிய அடையாளங்களினால் பர தத்வம் என்று அறியக் கூடியவர் என்பது நிருக்தி –ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாப் பிரமாணங்களாலும் அறியப் படுபவர் -அவர் ஒருவரே உண்மைப் பொருள் – -ஸ்ரீ சங்கரர் –

உலகப் படைப்பிற்கும் காரணம் முதலிய எல்லா வித லஷணங்களும் பொருந்தியவர் –
மிகச் சிறந்தவர் -என்று அறியத் தக்கவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————

  1. ஓம்ஸர்வலக்ஷணலக்ஷண்யாயநம:

ஸர்வைர்லக்ஷணை: அனைத்து குறியீடுகளிலும் (விளக்கங்கள்)

ப்ரமாணைர்லக்ஷணம் ஞானம் ஜாயதே மிகச்சிறந்தது ப்ரமாணங்களை (வேதங்கள் மற்றும் வேதாந்தங்கள்) அறிவதனால் பிறக்கும் உண்மையறிவாகும்

யத்தத்வினிர்திஶ்டம் அந்த அறிவால் விளக்கப்படும்

ஸர்வலக்ஷணலக்ஷணம் தத்ர ஸாது:  மேன்மையான பரம்பொருளே (பரமாத்மாவே) ‘ஸர்வலக்ஷணலக்ஷணம்’ ஆகும்

ஸர்வலக்ஷணலக்ஷண்ய: எனவே பகவான் ‘ஸர்வலக்ஷணலக்ஷண்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தஸ்யைவ பரமார்த்தத்வாத் ஏனெனில், பகவான் ஒருவரே அறியப்படுபொருளாவர்.

இந்தப் ப்ரபஞ்சத்திலுள்ள அனைத்து இலக்கணைகள் மற்றும் குறியீடுகளில், வேதங்கள் மற்றும் வேதாந்தங்களைக் கற்று அதன் விளைவான அறிவால் விளங்கும் பொருளே மிகச்சிறந்ததாகும். அவ்வாறு, நமது உண்மையறிவால் அறியப்படும் பொருட்களிலேயும் பரம்பொருளான பகவானே மிகச்சிறந்தவராவார். எனவே, அவர் ‘ஸர்வலக்ஷணலக்ஷண்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

  1. ஸர்வ லக்ஷனாலக்ஷண்யாஹ் – எல்லா மங்கள குணங்களுக்கும் உறைவிடமாக இருப்பவர்

ஸ்ரீஆதிசங்கரர் இதை ‘ஸர்வ லக்ஷனைஹ் ப்ரமாணை: லக்ஷணம் ஞானம் ஜாயதே யத்தத் விநிர்திஷ்டம் ஸர்வலக்ஷணலக்ஷணம் தத்ர ஸதுஹ் ஸர்வலக்ஷணலக்ஷண்யாஹ் – எல்லாவிதமான விசாரணைகளும் இறுதியில் அவரையே உச்ச ஞானம் அல்லது இறுதியான உண்மை’ என்று விளக்குகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பகுத்தறிவின் ஒவ்வொரு வரியும் இறுதியில் அவரை இறுதி மற்றும் முழுமையான உண்மை என்று சுட்டிக்காட்டுகிறது. நமது தேடல் கருவிகள் இயற்பியல், வானியல், உயிரியல், கணிதம் அல்லது அறிவின் பிற கிளைகளைப் பயன்படுத்தினாலும் எல்லா காரணங்களுக்கும் அவரே காரணம்.

லக்ஷணம் அழகின் சின்னம். ஸ்ரீ பராசர பட்டர் அழகின் அனைத்து உயர்ந்த சின்னங்களாலும் அலங்கரிக்கப்பட்டதாகக் கருதுகிறார். அவர் பின்வரும் தியான ஸ்லோகத்தை கொடுக்கிறார், இது இந்த தனித்துவமான குறிகளில் சிலவற்றை அடையாளம் காட்டுகிறது.

“த்யாயேத் கமலா-கர்பாபம் தேவம் லக்ஷ்மீ-பதிம் ததா|
கமலாலயா ஹேதீஷா விபூஷிதா கர-த்வயம் ||”

லக்ஷ்மியின் துணைவியும், தாமரையின் உள்பகுதியின் சிறப்பை உடையவரும், லட்சுமி மற்றும் சக்கரத்தின் இருப்பிடமான தாமரையால் அலங்கரிக்கப்பட்ட இரண்டு கைகளும் உள்ள அந்த தெய்வத்தை ஒருவர் தியானிக்க வேண்டும். ஆயுதங்கள்”.

“புண்டரீகாக்ஷா! சகலா-சுக சௌபாக்ய வாரிதே! – ஓ தாமரைக் கண்களையுடைய இறைவனே! நீயே பேரின்பம் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் கடல்”.

ஸ்ரீ ராதாகிருஷ்ண சாஸ்திரி, பகவான் ஒவ்வொரு லக்ஷணத்திற்கும் அல்லது பண்புக்கும் இறுதி வரையறை என்றும், அதனால் அவர் சர்வ லக்ஷண லக்ஷண்யா என்றும் சுட்டிக்காட்டுகிறார்.

தர்ம சக்கரம் எழுத்தாளர் நான்கு வகையான பிரமாணங்களைச் சுட்டிக்காட்டுகிறார், அவை எதையாவது அங்கீகரிக்கப் பயன்படுகின்றன. இவை:

  • பிரக்யக்ஷ பிரமானா (சுவை, தொடுதல் போன்ற நமது புலன்கள் மூலம் அறிதல்)
  • யுக்தி பிரமாணா (மறைமுக சான்றுகள் மூலம் அங்கீகாரம் – புகை மூலம் நெருப்பை அங்கீகரிப்பது போன்றவை)
  • சாஸ்திர பிரமாணம் (வேதங்களில் கூறப்பட்டுள்ளவை)
  • அனுபவ பிரமாணா (நாம் அனுபவிக்கும் விஷயங்கள்)

பல்வேறு பிரமாணங்கள் மூலம் கடவுளை ஒரே உண்மை என்று அங்கீகரித்த ராமகிருஷ்ண பரமஹம்சரின் உதாரணத்தை அவர் தருகிறார். அவரால் கடவுளுடன் பேச முடியும், காற்றின்றி வாழ முடியாது என்பது போல் கடவுளின் சிந்தனை இல்லாமல் வாழ முடியாது, சாஸ்திரங்கள் மூலம் அவரை அடையாளம் கண்டுகொண்டார், மேலும் சாராம்சத்தில் அனைத்து பிரமாணங்களின் மூலமும் கடவுளை இறுதி உண்மையாக அங்கீகரித்தார்.

ஸ்ரீ சத்யதேவோ வசிஷ்டர் இந்த நாமத்தின் முக்கியத்துவத்தை விவரிக்கிறார், ஏனெனில் அவர் சர்வலக்ஷனலக்ஷண்யாஹ் என்று சுட்டிக்காட்டுகிறார், ஏனெனில் நாம் காணும் அனைத்தும் அவரைப் பின்னணியாகக் கொண்டுள்ளன. நாம் காணக்கூடிய அல்லது வேறுவிதமாக அடையாளம் காணக்கூடிய எல்லாவற்றிலும் அவர் தன்னை வரையறுக்கிறார்.


363-லஷ்மி வான் –
ஸ்ரீ மான் -பூ மகளார் தனிக் கேள்வன் -1-9-3-

ததா₂ ச லக்ஷ்மீவாந்— ததை₂வ லக்ஷ்ம்யா நித்ய யோக₃வான் । யதா
த்வயம் தேவீ பரிணயோ லீலயைவ சமர்ப்பயன் ப்ரகாஸயன் அநாதித்வம் ஆத்மநா ப்ரக்ருதே ஸஹ
மத்கரை அநு வித்தேயம் ப்ரக்ருதி பிராக்ருதே அஹம் யத அம் ஆஸ்ரிதச்ச அஸ்யா மூர்த்தி மயி யேதத்தாத் மிகா -இதி । ப்ரக்ருதி꞉ — ஜக₃தாம் மாதா ஸ்ரீ-
எம்பெருமான் பிராட்டியைத் திருக் கல்யாணம் செய்யும் பொழுது இரண்டு சீர் வரிசைகளை அளித்தான்
நீலமேகம் போன்ற நிறம் கொண்ட எம்பெருமான் யாருக்கும் கூறாத தனது தத்துவத்தை வெளியிட்டு அருளினான்
எனக்கு முடிவும் முதலும் இல்லை -நான் அநாதி
இதே போல் ஆத்மா பிரகிருதி தத்வங்கள் இரண்டுமே அநாதி -அந்தமும் இல்லாதவை என்ற ரஹஸ்யத்தை வெளியிட்டு அருளினான்

மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் -1-3-1-

எப்போதும் திருமகளுடன் கூடி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

எப்போதும் திருமகள் மார்வில் தங்கப் பெற்றவர் – -ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களை நன்கு பார்ப்பவர் -லஷ்மீ செல்வம் பிரகாசம் ஆகியவற்றை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————-

  1. ஓம்லக்ஷ்மீவதேநம:

லக்ஷ்மீரஸ்ய திருமகள்

வக்ஷஸி அவரது திருமார்பில்

நித்யம் வஸதீதி என்றும் இணைபிரியாது வசிப்பதால்

லக்ஷ்மீவான் பகவான் ‘லக்ஷ்மீவான்’ என்ற திருநாமதால் அழைக்கப்படுகிறார்.

திருமகள் பகவானது திருமார்பில் என்றும் இணைபிரியாது வசிப்பதால் அவர் ‘லக்ஷ்மீவான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

லக்ஷ்மிவான் – அவர் எப்போதும் லட்சுமியுடன் இருக்கிறார்

ஸ்ரீ ஆதிசங்கரர் இதை ‘லக்ஷ்மீஹ் அஸ்ய வக்ஷஸி நித்யம் வசதி இதி லக்ஷ்மீவான் – லட்சுமி தேவி அவரது மார்பில் நிரந்தரமாக வாசம் செய்வதால் அவர் லக்ஷ்மிவான்’ என்று அழைக்கப்படுகிறார். இருப்பினும், இந்த உறவில் ஒரு ஆழமான குறியீடு உள்ளது. நித்தியமான மற்றும் எப்போதும் இருக்கும் மற்றும் எப்போதும் இருக்கும், ஆரம்பம் அல்லது முடிவு இல்லாமல் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒருவர் பகவான். மற்றொன்று பிரகிருதி, இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருட்களும் உருவாக்கப்பட்ட மூலப்பொருளாகும். இந்த முதன்மையான விஷயம் லக்ஷ்மியை குறிக்கிறது, உலகளாவிய தாய். லக்ஷ்மியும் இறைவனும் இணைந்ததன் விளைவுதான் பிரபஞ்சம். மற்றொன்று இல்லாமல் இல்லை.

மூன்று குணங்களின் விகிதத்தைப் பொறுத்து பிரகிருதியின் ஸ்வரூபத்தில் மாற்றம் உள்ளது. சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ், ஆனால் பிரகிருதி பிரளயம் அல்லது பிரளயத்தின் போது முடிவடையாது, அதற்கு ஒரு தொடக்கமும் இல்லை, இதனால் நித்தியமானது. மூல-பிரகிருதி என்பது ஆரம்பம் இல்லாதது மற்றும் பகவானைப் போலவே முடிவில்லாதது, இது லட்சுமியைத் தவிர வேறு யாருமில்லை. ஸ்ரீ பராசர பட்டர், ஆரம்பமும் முடிவும் இல்லாத மூல பிரகிருதி பகவானைப் போன்றது, அவர் லட்சுமியைத் தவிர வேறு யாரும் இல்லை என்று கூறி இதை வலியுறுத்துகிறார்.

ஸ்ரீ பட்டர் ஆதரவாக பின்வரும் ஸ்லோகத்தை அளித்துள்ளார் –
“த்வயம் தேவ்I-பரிணயே லீலாயைவ சமர்பயன் |
பிரகாசயன் அன்ஆதித்வம் ஆத்மனா ப்ரகிருதே ஸஹ ||
மத்-கரைஹ் அனுவித்தேயம் ப்ரகிருதிஹ் ப்ராகிருதைஹ் அஹம் |
யதோ’ஹம் அஷ்ரிதஶ்ச அஸ்யா மூர்த்திஹ் மயி ஏதத் ஆத்மிகா” ||
லக்ஷ்மியை நான் திருமணம் செய்து கொண்ட சமயத்தில், ஒரு உற்சாகமான மனநிலையில், பரம உண்மை ஒரு ஜோடிதான், நாராயணன் மட்டும் அல்ல, லட்சுமி மட்டும் அல்ல என்ற ரகசியத்தை அனைவருக்கும் வெளிப்படுத்தினேன். என்னைப் போலவே லக்ஷ்மியும் ஆரம்பம் இல்லாதவள் (அதாவது நித்தியமானவள்) என்பதையும் நான் வெளிப்படுத்தினேன். இந்த பிரகிருதி என் கைகளால் தழுவப்பட்டது, நான் அவள் கைகளால் தழுவப்பட்டேன்; அதனால் நான் அவளை நாடினேன், அவளும் என்னை நாடினாள். எனவே நாங்கள் எப்போதும் ஒன்றாக இருக்கிறோம்.

பேராசிரியர் ஸ்ரீநிவாச ராகவன், ஸ்ரீ பட்டரின் வியாக்கியானத்தின் மொழிபெயர்ப்பில், இந்த தத்துவம், விஜ். பகவானுக்கும் லக்ஷ்மிக்கும் உள்ள தொடர்பை ஒரு ஆச்சார்யா மூலம் அறிந்து கொள்ள வேண்டும்.

ஸ்வாமி சின்மயாஆனந்தா பின்வரும் வார்த்தைகளின் மூலம் அதே உணர்வை எதிரொலிக்கிறார்: “அவர் முழு உலகப் பொருளின் (பிரகிருதி) சிலிர்க்க வைக்கும் ஆவி (புருஷன்). ஆவியுடன் சிலிர்க்கப்படும் விஷயம் நாம் சுற்றி பார்க்கும் மாறும் உலகம். இவ்வாறு, வெளிப்படுத்தப்பட்ட இறைவன் எப்போதும் லட்சுமியை மணந்தார்.

எல்லாவிதமான செல்வங்களையும் குறிக்கவும், பகவானின் துணைவியாகவும் லக்ஷ்மி என்பதன் பரந்த அர்த்தத்தை எடுத்துக்கொள்ளலாம். வால்மீகி ராமாயணத்தில் (1 – 1 – 11) நமக்கு ஒரு பகுதி உள்ளது:

ஸமஸ்ஸம விபக்த அங்கஹ் ஸ்நிக்த வர்ணஹ் பிரதாபவான் |
பீன வக்ஷா விசால அக்ஷா லக்ஷ்மிவான் சுப லக்ஷணஹ் ||

இளம் இராமனின் அழகு அவர் உடல் ரீதியாக நடுத்தர அளவு, சமச்சீரற்ற கைகால்களுடன், பரந்த மார்பு, பரந்த கண்கள் மற்றும் கவர்ச்சிகரமானதாக விவரிக்கப்படுகிறது. அவர் அனைத்து வழங்கல் அம்சங்களையும் கொண்ட ஒரு செழிப்பான ஆளுமை, இதனால் அவர் சுயமாக பிரகாசிக்கிறார். இங்கு லக்ஷ்மிவான் அனைத்து நேர்மறை குணங்களையும் கொண்ட வளமான ஆளுமை என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது.

—————-

364-சமித்ஜ்ஞய-
விஷய ஸ்ரீ யை உடையவன் –

தயா ஜக₃த் பிதா பித்ருவந் நிர்வ்ருதிகரோ (அ)யம் ஜீவாநாம் ஸ்வ தா₃ஸ்ய விவாத₃க்லேஶம் ஜயதீதி
ஸமிதிஞ்ஜய꞉ ।
* ஸஞ்ஜ்ஞாயாம் ப்₄ருத்ருவ்ருஜி, இத்யாதி₃நா க₂ச் ।
* அகி₂ல து₃꞉க₂ஜய꞉ இதி மந்த்ர வர்ணாத் ॥

அகில துக்க ஜய –துயரங்களை விலக்கி ஜெயசீலனாக விளங்குகிறான்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் –மருவித் தொழும் மனமே தந்தாய் –

பிதாவான தமக்கு அடிமை செய்வதில் விவாதம் செய்யும் ஜீவர்களை தாயான லஷ்மியைக் கொண்டு வசப்படுத்துபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஜீவர்கள் தமக்குத் தாஸர்களாய் இருப்பதை விட்டுச் சுதந்ததிரர்களாக நினைத்து விவாதப்படுவதாகிய கலகத்தை ஜெயிப்பவர்
ஜீவாத்மாக்களுக்குத் தமது மஹிமையைத் தெரிவித்து அவர்கள் நாம் பகவானுக்கு அடிமையே யன்றி சுதந்திரர்கள் அல்லோம் என்று அறிந்து பக்தி செய்து உஜ்ஜீவிக்கச் செய்பவர் என்பது-எல்லாத் துன்பங்களையும் ஜெயிப்பவர் என்பது மந்த்ர வர்ணம்

போர்களில் வெல்பவர் – -ஸ்ரீ சங்கரர் –

போர்களில் வெல்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

  1. ஓம்ஸமிதிஞ்ஜயாயநம:

ஸமிதிம் யுத்தம் ‘ஸமிதி’ அதாவது போரில் (போர்களில்​)

ஜயதீதி என்றும் வெற்றி பெருவதால்

ஸமிதிஞ்ஜய: பகவான் ‘ஸமிதிஞ்ஜய:’ என்ற திருநாமதால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்து போர்களிலும் வெல்கிறார். எனவே அவர் ‘ஸமிதிஞ்ஜய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————-

சமிதிஞ்ஜய – போர்களில் வெற்றி பெற்றவர்

சமிதி என்றால் போர் என்றும் ஜயா என்றால் வெற்றி பெற்றவன் என்றும் பொருள். இந்த அடிப்படையில் ஸ்ரீஆதிசங்கரர் இதை ‘சமிதிம் யுத்தம் ஜயதி இதி சமிதிஞ்ஜயஹ் – அவர் எல்லாப் போர்களிலும் அல்லது போர்களிலும் வெற்றி பெறுகிறார், எனவே அவர் சமிதிஞ்ஜயஹ்’ என்று அழைக்கப்படுகிறார். அடிப்படையில் அவரது ஒவ்வொரு அவதாரத்திலும் அவர் தீய சக்திகளுடன் போரில் ஈடுபட்டுள்ளார், மேலும் அவர் ஒவ்வொரு முறையும் வெற்றி பெறுகிறார்.

ஸ்ரீ பராசர பட்டர் தனது பக்தர்களின் வேதனையை அழிப்பவர் என்று விளக்குகிறார். அவரிடமிருந்து சுதந்திர உணர்வை வெல்ல அவர் உதவுகிறார், இதனால் அவர்களின் மனதை வெல்வதன் மூலம் அவர்களுக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தருகிறார்.

ஸ்ரீ ராதாகிருஷ்ண சாஸ்திரிகள் சமிதி என்ற சொல்லுக்கு “கூட்டம்” அல்லது “கூட்டம்” என்ற பொருளைப் பயன்படுத்துகிறார், மேலும் சமிதி எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அல்லது அவருக்கு எதிராகக் கூடியிருந்தாலும் பகவான் வெற்றி பெறுகிறார் என்று பொருள் தருகிறார். அசுரர்களின் பெரும் படைகள் கூட எந்தச் சந்திப்பிலும் அவருக்கு இணையாக இல்லை.

—————

அதுல –
இவ்வாறு ஒப்பற்றவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

உவமை இல்லாதவர் – -ஸ்ரீ சங்கரர் –

ஒப்பற்றவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————–

357-சரப –
வரம்பு  மீறுபவர்களை அழிப்பவர்–ஸ்ரீ பராசர பட்டர் –

அழியும் உடல்கள் தோறும் ஆத்மாவாகப் பிரகாசிப்பவர் – -ஸ்ரீ சங்கரர் –

பிரளய ஜலத்தில் பிரகாசிப்பவர் -முப்புரம் எரித்த அம்பில் பிரகாசிப்பவர் என்றும் கூறுவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

358-பீம-
வரம்பு மீறுபவர்க்கு பயத்தைக் கொடுப்பவர் -இவரிடத்தில் பயத்தால் அன்றோ வாயு முதலிய தேவர்கள்
தம் தம் அதிகாரங்களை மீறாது இருக்கிறார்கள் –ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லோரும் பயப்படும்படி இருப்பவர் -நல்வழியில் செல்பவர்களுக்கு பயப்பட வேண்டாதவர் – -ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களுடைய பயங்களைப் போக்குபவர் -வியாசர் முதலான ரூபங்களில் பிரமாணங்களைத் தரித்து இருப்பவர் –
தம்மிடம் ஜனங்கள் அச்சம் கொள்ளும்படி இருப்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

359-சமயஜ்ஞ-
பக்தர்களுக்குத் தம்மைத் தவறாமல் தரும் காலம் அறிபவர் -நெருப்பு முதலியவை மேல் நோக்கியே எரிய
வேண்டும் எனபது போன்ற  அதிகார நியமத்தைக் கண்டறிந்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சிருஷ்டி ஸ்திதி சம்ஹார காலங்களை அறிபவர் -ஆறு சமயங்களை அறிந்தவர் -எல்லா பூதங்களிலும்
சமமாக இருத்தலையே யஜ்ஞமாக உடையவர் – -ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களுக்கு சுபம் தரும் முறையை அறிந்தவர் – ஸ்ரீ லஷ்மியுடன் சேர்ந்து இருப்பவராய் எல்லாம் அறிந்தவர் -பக்தர்கள்
வேண்டுமவற்றைக் கொடுப்பதற்கு உரிய காலம் அறிந்தவர் -சாஸ்த்ரங்களை அறிந்தவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————–

360-ஹவிர்ஹரி –
பக்தர்களுக்குத் தம்மைக் கொடுப்பவர் -அதற்குள்ள தடைகளைப் போக்குபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

யஜ்ஞத்தில் ஹவிர் பாகத்தைப் பெறுபவர் -ஹவிஸினால் ஹோமம் செய்யப் படுபவர் -தம்மை நினைத்த மாதரத்தில் அனைவருடைய
பாவங்கள் அவித்யை அதன் கார்யமான சம்சாரம் ஆகியவற்றைப் போக்குபவர் -மஞ்சள் நிறம் உள்ளவர் – -ஸ்ரீ சங்கரர் –

யஜ்ஞத்தில் வழங்கப்படும் ஹவிஸ்சைப் பெறுபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————–

361-சர்வ லஷண லஷண்ய-
திருமகள் எப்போதும் ஆலிங்கனம் செய்யும் சௌபாக்யத்திற்கான எல்லா லஷணங்களும் உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாப் பிரமாணங்களாலும் அறியப் படுபவர் -அவர் ஒருவரே உண்மைப் பொருள் – -ஸ்ரீ சங்கரர் –

உலகப் படைப்பிற்கும் காரணம் முதலிய எல்லா வித லஷணங்களும் பொருந்தியவர் –
மிகச் சிறந்தவர் -என்று அறியத் தக்கவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————–

362-லஷ்மீவான் –
எப்போதும் திருமகளுடன் கூடி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

எப்போதும் திருமகள் மார்வில் தங்கப் பெற்றவர் – -ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களை நன்கு பார்ப்பவர் -லஷ்மீ செல்வம் பிரகாசம் ஆகியவற்றை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————

சமிதிஞ்ஜய –
பிதாவான தமக்கு அடிமை செய்வதில் விவாதம் செய்யும் ஜீவர்களை தாயான லஷ்மியைக் கொண்டு வசப்படுத்துபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

போர்களில் வெல்பவர் – -ஸ்ரீ சங்கரர் –

போர்களில் வெல்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply