விஷரோ ரோஹிதோ மார்கோ ஹேதுர் தாமோதரஸ் சஹ
மஹீ தரோ மஹா பாகோ வேகவா நமிதாசன –40
இந்த நாற்பதாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
365-விக்ஷர:, 366. ரோஹித:, 367. மார்க்க:, 368. ஹேது:, 369. தாமோதர:, 370. ஸஹ: |
371-மஹீதர:, 372. மஹாபாக:, 373. வேகவான், 374 அமிதாஶன: ||
விக்ஷர: — தம் பக்தர்களிடத்தில் எத்துணையும் குறையாத அன்புடையவர்
ரோஹித: — தம் பக்தர்களை ஸம்ஸாரத்திலிருந்து காப்பாற்றியதும் மகிழ்ச்சியில் சிவக்கும் திருமுகம் கொண்டவர்
மார்க: — அடியார்களால் உயர்வுக்கான மார்க்கமாய் விரும்பப்படும் பாதையானவர்
ஹேது: — அத்தகைய பக்தி மார்க்கத்திற்கான அடிப்படை ஹேதுவாகவும் அமைந்திருப்பவர்
தாமோதர: — கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய திருவயிறு உடையவர்
ஸஹ: — ஆய்ச்சிக் கைத்தாம்பிற்கும், கோபியரின் ஏச்சுக்கும் மகிழ்ச்சியுடன் சகிக்கும் பண்பினர்
மஹீதர: — உலகத்தைத் தாங்கும் உத்தமர்
மஹாபாக: — ஆயர் குவித்த பேரன்னத்தை விரும்பி உண்டவர்; நாயகிபாவத்தில் பக்தர்களைத் துய்க்கும் நாயகர்
வேகவாந் — அதிவேகத்தில் சாகசங்களை இயற்றும் அவதார மஹிமை கொண்டவர்
அமிதாசந: — உலகையுண்டும் அமையாது ஆயர் குவித்த அன்னமலையையும் உண்ட ஆச்சரியர்
அழிவைக் கடந்தவன் {விக்ஷரன்},
செவ்வண்ணம் ஏற்பவன் (அல்லது, தன்னை வழிபடுபவர்களின் எதிரிகளிடம் கோபம் நிறைந்தவன்) {ரோஹிதன்},
அறவோர் தேடும் பொருளாக இருப்பவன் {மார்க்கன்},
அனைத்துக்கும் வேராக இருப்பவன் {ஹேது},
(குழந்தையாக இருக்கும்போது யசோதனையால் கட்டப்பட்டதால்) வயிற்றைச் சுற்றிலும் கயிற்றின் தடத்தைக் கொண்டவன் {தாமோதரன்},
தீங்குகள் அனைத்தையும் பொறுத்துக் கொள்பவன் அல்லது தாங்கிக் கொள்பவன் {ஸஹன்},
மலைகளின் வடிவில் பூமியைத் தாங்குபவன் {மஹீதரன்},
வழி படத் தகுந்தவை அனைத்திலும் முதன்மையானவன் {மஹாபாகன்},
பெரும் வேகம் கொண்டவன் {வேகவாந்},
பெரும் அளவிலான உணவை விழுங்குபவன் {அமிதாசநன்};(53)
ஸ்ரீ பர வாஸூ தேவன் -ஸ்ரீ யபதி -திருமகள் கேள்வன்
364-சமிதிஜ்ஞய -அடியார்களின் குழப்பத்தை வென்று தெளிவு கொடுப்பவர் –
365-விஷர-தன்னை அடைந்தவர்கள் இடம் குறையாத அன்புடையவர் –
366-ரோஹித -தான் கறுத்தவர் –ஆனால் தாமரையின் உட்புறம் போன்ற சிவந்த கண் கை கால் உடையவர் –
மேகத்தைப் போல் பகவான் -அதில் மின்னலைப் போல் மஹா லஷ்மீ –
367-மார்க-பக்தர்களால் எப்போதும் தேடப்படுபவர் –
368-ஹேது -பக்தர்களின் வேண்டுகோள்கள் பயன் பெறக் காரணமாய் இருப்பவர் –
369-தாமோதர -தாமம் என்று பெயர் பெற்ற உலகங்களை வயற்றில் கொண்டவர் -யசோதையின் தாம்பினால் கட்டுண்டவர் –
370-சஹ -திருமகள் கேள்வனாக இருந்தாலும் அவதாரத்தில் கட்டுண்டு எளிமையைக் காட்டுபவர் –
371-மஹீதர -பூமியின் சுமையைத் தாங்குபவர் –
372-மஹாபாக -கோபிகள் மற்றும் ருக்மணீ சத்யபாமா ஆகியோரால் விரும்பப்படும் பெருமையை உடையவர் –
373-வேகவான் -மனிதக் குழந்தையாக விளையாடும் போதும் பரம் பொருளான வேகம் குறையாதவர் –
374-அமிதாசன -ஆயர்கள் இந்தரனுக்கு படைத்த அட்டுக்குவி சோற்றை விழுங்கியவர் –
3-19-ஸ்ரீ லஷ்மி சம்பந்தம் திரு நாமங்கள் -362-380-திரு நாமங்கள்
365-விஷர-
குறைவற்றவன் -நீங்காத அன்பு உள்ளவன்
யதோ₂க்த (கீழே சொல்லப்பட்ட )ப₄க்த ப்ரணய அக்ஷரணாத்
விக்ஷர꞉ ॥
அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன் -1-9-10-
என் அடியார் அது செய்யார் -அவளிடமே மன்றாடுபவன்-கிம் கார்யம் மம ஸீதையா சுக்ரீவன் இடம் சொல்லுமவன்
அடியவர்களிடம் நீங்காத அன்புடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
அழிவு இல்லாதவர் – -ஸ்ரீ சங்கரர் –
பக்தர்கள் வேண்டுவதை விசேஷமாக கொடுப்பவர் -அழிவற்றவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –
—————-
- ஓம்விக்ஷராயநம:
விகத: இல்லை
க்ஷரோ நாஶோ ‘க்ஷரம்’ அதாவது அழிவு (அல்லது தேய்வு)
யஸ்யாஸௌ எவருக்கு
விக்ஷர: (அந்த) பகவான் ‘விக்ஷர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானுக்கு அழிவோ, தேய்வோ கிடையாதோ. எனவே அவர் ‘விக்ஷர’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————
விக்ஷரஹ் – ஒருபோதும் குறையாதவர்
‘க்ஷர’ என்ற சொல்லுக்கு சிதைவு அல்லது அழிவு என்று பொருள். இதன் அடிப்படையில் ஸ்ரீஆதிசங்கரர் இந்த நாமத்தை ‘விகத க்ஷர நாஷோ யஸ்யாஸௌ விக்ஷரஹ்’ அதாவது ‘அழியாதவர்’ என்று வரையறுக்கிறார். அவர் எப்போதும் புதியவர், எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கிறார், எனவே அவர் விக்ரஹ் என்று அழைக்கப்படுகிறார். இதே இறக்குமதியுடன் இதே ‘அவ்யயா’வை முன்பு பார்த்தோம்.
ஸ்ரீ பராசர பட்டர், பகவான் தனது பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் என்றும், பக்தர்களின் மீது கொண்ட அன்பு எல்லையற்றது என்றும், அதனால் அவர் விக்ரஹர் என்றும் விளக்கம் தருகிறார். அவர் பக்தர்களின் மீது கொண்ட அன்பில் உறுதியானவர். சக்குபாய் (பூட்டிய அறையில் தூணில் கட்டப்பட்டிருந்தாள்) அவளது இறைவனான பந்தர்பூர் விட்டலாவை தரிசிக்க அனுமதிப்பதற்காக அவர் இடங்களை மாற்றிக் கொண்டார்.
366-ரோஹித
சிவந்தவன் –
கமல க₃ர்பா₄ப₄த்வாத்
ரோஹித꞉
திருச் செய்ய –கமலக் கண்ணும் செவ் வாயும் செவ் வடியும் செய்ய கையும்
திருச் செய்ய கமல வுந்தியும் செய்ய கமல மார்வும் திகழ என் சிந்தை யுளானே -8-4-7-
தாமரையின் உட்புறம் போல் சிவந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
தம் விருப்பத்தினால் சிவந்த மத்ஸ்ய மீன் வடிவைக் கொண்டவர் –ஸ்ரீ சங்கரர் –
சிவந்த நிறம் உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
——————
- ஓம்ரோஹிதாயநம:
ஸ்வச்சந்ததயா தன்னிச்சையால்
ரோஹிதாம் மூர்த்தி: சிவந்த வடிவானவராய்
மத்ஸ்யவிஶேஶமூர்த்தி: வா வஹன் ரோஹிதம் எனப்படும் ஒருவகை மீனாக அவதரித்ததால்
ரோஹித: பகவான் ‘ரோஹித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் தன்னிச்சையால் சிவந்த வடிவினராய் ரோஹிதம் என்ற ஒரு வகை மீனாக (தனது மச்சாவதாரத்தில்) தோன்றியமையால் அவர் ‘ரோஹித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ரோஹிதம் என்றால் சிவப்பு என்றும் பொருள், ஒரு வகை மீன் என்றும் பொருள். இதை இரண்டு அர்த்தங்களாகவும் கொள்ளலாம் (சிவந்த வடிவினர் மற்றும் மீனாய்த் தோன்றியவர்). அல்லது இரண்டையும் ஒன்றிணைத்து சிவந்த வடிவான மீனாய்த் தோன்றியவர் என்றும் கொள்ளலாம்.
————-
ரோஹிதா – சிவந்த நிறமுடையவன்
ஸ்ரீ ஆதி சங்கரர், ‘ஸ்வச்சந்தாத்ய ரோஹிதாம் மூர்த்தி மத்ஸ்யமூர்த்தி வா வாகன ரோஹிதா‘ என்று கூறுகிறார், அவருடைய மத்ஸ்ய அவதாரம், ரோஹிதா என்று அழைக்கப்படும் சிவப்பு நிற மீன், அவர் தனது விருப்பப்படி கருதினார்.
மஹாவிஷ்ணு அடர் நீல நிறத்தில் இருந்தாலும், சில அவதாரங்கள் உள்ளன, அங்கு அவர் தனது விருப்பப்படி வாமன அவதாரம் அல்லது பலராம அவதாரம் போன்ற சிவப்பு அல்லது லேசான நிறத்தை எடுத்துக் கொண்டார்.
ஸ்ரீ பராசர பட்டர் ‘கமலா கர்ப்பபத்வாத் ரோஹிதா – தாமரையின் உட்புறம் சிவப்பு நிறத்தை உடையவர்’ என்கிறார். பகவன் வெவ்வேறு யுகங்களில் வெவ்வேறு வண்ணங்களையும் வடிவங்களையும் ஏற்றுக்கொண்டார் .
ஸ்ரீ சத்யதேவோ வசிஷ்டர் ‘ரூஹ் – பீஜ ஜன்மனி ப்ரஅதுர்பாவே ச‘ என்ற மூலத்திலிருந்து பொருள் பெறுகிறார் – வளர, அதிகரிக்க, உயர, அடைய, மேலும் “பிராதுர்பவதி இதி ரோஹிதாஹ்” என்று விளக்கம் தருகிறார். – தன்னை வெளிப்படுத்துபவன் அல்லது அனைத்து உயிரினங்களும் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளச் செய்பவன் ரோஹிதா.
367-மார்க்க
தேடப்படுபவன் –
உபாஸகைர் மார்க்₃யத இதி
மார்க₃꞉ ।
வாஞ்சித சித்தி பிரத இதி மந்த்ர வர்ணாத்–அடியார்களின் அபீஷ்டங்களை உடனே அளிப்பவன்
திரு மோகூர் காள மேகத்தை அன்றி மற்று ஓன்று இலம் கதியே -10-1-1-
தாள் அடைந்தார் தங்கட்கு தானே வழித் துணையாம் காளமேகம்
தாயான படியால் பக்தி வளர்த்தி ஸ்ரீ யதே–ஸ்ராயவதி ஸ்ருணோதி-இத்யாதி -இவன் மார்க்க -மார்க்க சீர்ஷம் -ஆச்சார்யர்-
உபாசகர்களால் தேடப் பெறுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
மோஷத்தை விரும்புவர்களால் தேடப்படுபவர் -பரமானந்தத்தை அடைவதற்கு வழியாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
ஞானிகளால் சாஸ்திர விசாரங்களில் தேடப்படுபவர் -லிங்க சரீரத்தை அழித்து மோஷம் தருபவர் என்றும் கூறுவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –
———————
- ஓம்மார்க்காயநம:
முமுக்ஷவஸ்தம் முக்தியை விழைவோர்
தேவம் பரமாத்மாவை (பகவானை)
மார்கயந்தி இதி தேடுகின்றனர்
மார்க்க: எனவே, பகவான் ‘மார்க்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பரமாத்மாவான பகவான் முக்தியை விழைவோரால் தேடப்படுகிறார். எனவே, அவர் ‘மார்க்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பரமானந்தோ மிக உயர்ந்ததான இன்பத்தை
யேன ப்ராப்யதே தரவல்லதான
ஸ மார்க்க இதி வா மார்க்கமாய் (வழியாக) இருப்பதால்
மார்க்க: பகவான் ‘மார்க்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, மிக உயர்ந்த இன்பத்தை (முக்தியை) தரவல்ல மார்க்கமாய் தானே இருப்பதால் பகவான் ‘மார்க்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————-
மார்க – தேடப்படுபவர்
ஸ்ரீ ஆதிசங்கரர் பரம பேரின்பத்தை அடைவதற்கான வழியைக் காட்டுவதால் அவர் மார்கா என்று விளக்கம் தருகிறார் – ‘முமுக்ஷவஹ் தம் தேவம் மார்கயந்தி இதி மார்கா’.
பரமானந்த யேன ப்ராப்யதே ச மார்க இதி வா – விடுதலையை விரும்புபவர்கள் எப்போதும் அவரைத் தேடுகிறார்கள், எனவே அவர் மார்கா என்று அழைக்கப்படுகிறார் அல்லது உண்மையான மகிழ்ச்சியைத் தரும் கருவியாக இருக்கிறார், எனவே அவர் மார்கா என்று அழைக்கப்படுகிறார்.
மார்கயதே இதி மார்கஹ் – அவர் மார்கஹ், ஏனென்றால் அவர் எப்போதும் அவரை வணங்குபவர்களால் தேடப்படுகிறார்.
ஸ்ரீ வி.வி.ராமானுஜன் அவர்கள் திருவாய் மொழி நுற்றந்தாடி 91-ல் குறிப்பிடுகிறார் – “தாள் அடைந்தார் தங்கட்கு தானே வழித் துணையாம் காள மேகத்தை” – தம்மைச் சரணடைந்தவர்களுக்குத் துணையாகச் சென்று வழி காட்டுகிறார்.
ஸ்ரீ ராதாகிருஷ்ண சாஸ்திரி மற்றொரு அம்சத்தைக் கூறுகிறார் – பிரளயம் அல்லது பிரளயத்தின் போது பிரபஞ்சம் மறைந்த பிறகு, அவர் தான் உலகம் மீண்டும் தோன்றுவதற்கு வழி வகுக்கிறார்.
368-ஹேது
காரணம் -அடியார் ஆசைகள் நிறைவு பெற காரணன்
த த்₃தே ₄து꞉ ஹேது꞉ ।
” ஹி க₃ததௌ ”
* கமிமநி இத்யாதி₃நா து꞉ ॥
ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை ஆன்றேன் -நான் திரு -95-
இசைவித்து நின் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான்
பக்தர்களுக்குப் பயன் கிடைக்கக் காரணம் ஆனவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
உபாதான நிமித்த காரணங்களாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
உலகிற்குக் காரணமாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
———
- ஓம்ஹேதவேநம:
உபாதானம் (இந்த ப்ரபஞ்சத்தின்) மூலப்பொருளாகவும்
நிமித்தம் ச காரணம் (அதை படைக்கவேண்டும் என்று எண்ணும்) நிமித்த காரணமாயும்
ஸ ஏவேதி அவரே இருப்பதால்
ஹேது: பகவான் ‘ஹேது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்தப் ப்ரபஞ்சத்தை உருவாக்கும் மூலப்பொருளாயும், உருவாக்குபவராயும் தானே இருப்பதால் பகவான் ‘ஹேது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மூலப்பொருள் உபாதான காரணமென்றும், அதை உருவாக்குபவர் நிமித்த காரணம் என்றும் அழைக்கப்படுவர். உதாரணமாக, மண், தங்கம், நூல், இரும்பு ஆகியவை உபாதான காரணங்கள். அதைக் கொண்டு பானை, சங்கிலி, சேலை, சுத்தியல் ஆகியவற்றை உருவாக்கவேண்டும் என்று எண்ணி (உழைக்கும்) குயவர், பொற்கொல்லர், நெசவாளி, கருமார் ஆகியோர் நிமித்த காரணங்கள். இந்தப் ப்ரபஞ்சத்திற்கு இரண்டுமே பகவான் தான்.
————-
ஹேது – காரணம்
ஸ்ரீ ஆதிசங்கரர் இதை ‘உபாதானம் நிமித்தம் ச கரணம் ச ஏவ இதி ஹேது: எல்லாவற்றுக்கும் முதன்மையான மற்றும் இரண்டாம் காரணமானவர், எனவே அவர் ஹேது’ என்று அழைக்கப்படுகிறார். உலகில் நாம் பார்க்கும் எல்லாவற்றிற்கும் ஒரு பொருள் (முதன்மை) மற்றும் ஒரு கருவி (இரண்டாம்) காரணம் உள்ளது.
பாரம்பரிய தர்க்கம் அல்லது தர்க்க சாஸ்திரத்தில், “காரணங்கள்” அல்லது “கரணங்கள்” இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன, அதாவது: “நிமித்த” மற்றும் “உபாதான”. ஒரு பானை செய்ய பூமி அல்லது களிமண் ஒரு பொருளாக வேண்டும். எனவே பானைக்கு பூமியே உபாதனம். ஆனால் அது எப்படி பானையாக மாறும்? அது தானே பானையாக மாறுமா? அது ஒரு குயவனால் வடிவமைக்கப்பட வேண்டும். எனவே குயவன் கருவிக் காரணம்- அவன் நிமித்தம். நாம் பிரபஞ்சத்தை ஒரு பொருளாக எடுத்துக் கொள்ளும்போது அது பகவானால் ஆனது மற்றும் பகவானால் ஆனது, எனவே அவர் உண்மையிலேயே ஹேது, பிரபஞ்சத்தின் காரணமாக இருக்கிறார்.
தர்மச் சக்கரம் எழுத்தாளர் பகவான் காரணத்தையும், பகவான் விளைவையும் நன்றாக வேறுபடுத்திக் காட்டுகிறார். பொதுவாக, நாம் விளைவுகளைப் பார்க்கிறோம், ஆனால் காரணத்தை அவ்வளவு எளிதில் பார்க்க முடியாது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். இது வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் உண்மை – நாம் பிரபஞ்சத்தைப் பயன்படுத்துகிறோம், ஆனால் பிரபஞ்சத்தின் காரணமான பகவானை நாம் புரிந்து கொள்ளவில்லை. நாம் உடலைப் பார்க்கிறோம், ஆனால் இந்த உடலின் அங்கங்களான ஐந்து கூறுகளை நாம் பார்ப்பதில்லை. பிரபஞ்சத்தின் காரணகர்த்தாவாக யோகிகளுக்கும் ஞானிகளுக்கும் மட்டுமே தெரியும்.
————-
369-தாமோதர –
தாமம் -உலகம் கயிறு உலகங்களை வயிற்றில் தாங்குபவன்
உத₃ரே தா₃மாந்யஸ்மயதி
தா₃மோத₃ர꞉
தாமாநி லோக நாமாநி பந்தி யஸ்ய உதராந்தரே தேந தாமோதரோ தேவ
யாருடைய திரு வயிற்றில் தாம எனப்படும் லோகங்கள் அனைத்தும் ப்ரகாசமாக உள்ளானவோ
அந்தத் தேவனே தாமோதரன் எனப்படுபவன்–வயிற்றில் உலகங்கள் இருப்பதால் தாமோதரம் தாமம் உலகம்
தேவாநாம் ஸூக ஸம்ஸித்வாத் தாமாத் தாமோதரம் விது இதி வா–உத்யோக பர்வம் -71-9-
தேவர்களுக்கு –தாம -ஸூகம் அளிப்பதால் தாமோதரன் எனப்படுகிறான்
தத ச தாமோதரதாம் ப்ரயயவ் தாம பந்த நாத் இதி வா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-6-20-
யசோதையால் வயிற்றில் தாமம் கயிறு கொண்டு திரு வயிற்றில் கட்டப்பட்டதால் தாமோதரன் எனப்படுகிறான் –
ஏவம் லக்ஷ்ம்யா அபி ஸ்ப்ருஹணீய சாதுர்யோ (அ)பி ஸன் யஸோதா₃தா₃மநி க₃லித ஜல꞉
ஸம்ஶ்ரித வாத்ஸல்யாத்₃ப₃பூ₄வேத் யர்த₂
வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி கண்ணிக் கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான் -மூன்றாம் திரு
மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் மத்துறு கடை வெண்ணெய் களவினில்
உரவிடை யாப்புண்டு உரலினோடு இணைந்து இருந்தான் –
யசோதை கட்டிய கயிற்றை வயிற்றிலுடையவர்-எம்பெருமானுடைய சாதுர்யமானது லஷ்மியாலும் கொண்டாடப் படுவதாக இருந்த போதிலும்-யசோதையினால் உரலில் கட்டப் பட்ட போது-அவள் மீது உள்ள அன்பால் கட்டை அவிழ்த்துக் கொள்ளாமல்
கண்ணீர் விட்டு அழுது கொண்டு நின்றானே -ஸ்ரீ பராசர பட்டர் –
தம உதார என்பது தாம உதர ஆயிற்று -என்று கொண்டு இந்திரிய ஜலத்தினால் -உயர்ந்த மதியினால் அறியப் படுபவர் -யசோதையினால் வயிற்றில் கயிற்றினால் கட்டப் பெற்றவர் -தாம -என்று
கூறப்படும் உலகங்களை தம் வயிற்றிலே கொண்டவர் -என்று வியாசர் கூறின படியால் தாமோதரர் –ஸ்ரீ சங்கரர் –
வள்ளல்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பவர்-பிரளய ஜலத்தில் விளையாடி மகிழ்பவர் -இந்த்ரியங்களை அடக்கிய முனிவர்களிடம் மகிழ்பவர் –
துன்பத்தை விளைக்கும் அசுரர்களுக்குத் துன்பம் தருபவர் -கிருஷ்ணாவதாரத்தில் யசோதை வயிற்றில்
கட்டிய கயிற்றை யுடையவர் -பொறுமை யுள்ள ஜீவர்களிடம் மகிழ்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
——————–
- ஓம்தாமோதராயநம:
தமாதிஸாதனேனோதாரோத்க்ருஶ்டா புலனடக்கம் முதலிய முயற்சிகளால் ‘உதாரமாகும்’ அதாவது நமக்குள் தோன்றும்
மதிர்யா தயா அறிவால்
கம்யத இதி அறியப்படுவதால்
தாமோதர: பகவான் ‘தாமோதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘தமம்’ என்ற புலனடக்கம் முதலிய முயற்சிகளால் நம்முள்ளே தோன்றும் அறிவால் (ஞானத்தால்) அறியப்படுவதால் பகவான் ‘தாமோதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘தாம’ – தமத்தால் முதலான முயற்சிகள் + உதர – அவற்றால் மேலெழும் அறிவு. இதனால் அறியப்படுபவர் தாமோதரன்.
‘தமாத்தாமோதரோ விபு:’ (மஹாபாரதம் உத்யோக பர்வம் 70.8)
மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் சஞ்சயன் த்ருதராஷ்ட்ரரிடம் கூறியது:
புலனடக்கமும், பெரும் ஒளியும் கொண்டிருப்பதால் பகவான் தாமோதரன் என்று அழைக்கப்படுகிறார்.
இதி மஹாபாரதே – இவ்வாறு மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.
யஶோதயா யசோதையால்
தாம்னோதரே கயிற்றால் வயிற்றுப் பகுதியில்
பத்த இதி வா கட்டப்பட்டதால்
தாமோதர: பகவான் ‘தாமோதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘ததர்ஶ சால்பதந்தாஸ்யம் ஸ்மிதஹாஸம் சா பாலகம் |(வெண்ணையைக் களவாடி பிடிபட்ட பொழுது, அவரது தாய்) யசோதை பகவானின் வயிற்றை சுற்றி கயிறால் கட்டி வைத்தாள். எனவே, பகவான் ‘தாமோதரன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
தயோர்மத்யகதம் பத்தம் தாம்னா காடம் ததோதரே |
ததஸ்ச தாமோதரதாம் ஸ யயௌ தாமபந்தனாத் ||’ (ப்ரஹ்ம புராணம் 13-14)
ப்ரஹ்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது:
ஆயர்குல மக்கள், தனது தெற்றுப்பல் தெரியும் புன்சிரிப்புடனும், இடையில் உரலுடன் கட்டிய கயிற்றுடனும் அந்த பாலகன் (பாலகிருஷ்ணன்) இரு மருத மரங்களுக்கிடையில் தவழ்ந்து செல்வதைக் கண்டனர். இடையில் கயிற்றால் கட்டப்பட்டிருந்ததால் பகவான் ‘தாமோதரன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்பண்ணிய பெருமாயன்…
‘தாமானி லோகநாமானி தானி யஸ்யோதராந்தரே |
தேன தாமோதரோ தேவ: ஸ்ரீதர: ஸ்ரீஸமாஶ்ரரித: ||’
அனைத்தும் உலகங்களையும் ‘தாமம்’ என்று அழைப்பர். அவை பகவானின் திருவயிற்றில் (உதரத்தில், ப்ரளய காலத்தில்) இருக்கின்றது. எனவே, ஸ்ரீதரன், திருமாமகள் கேள்வனான பகவான் ‘தாமோதரன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இதி வ்யாஸவசனாத்வா தாமோதர: |
ஸ்ரீவ்யாஸ பகவானின் இந்தக் கூற்றின்படி பகவான் ‘தாமோதரன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———-
தாமோதர – தன் பக்தர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பவர்
தாம என்ற சொல்லுக்கு சக்தி, வலிமை, வெற்றி, மகிழ்ச்சி, சுயக்கட்டுப்பாடு போன்ற பொருள்கள் உண்டு.உதரம் என்றால் தொப்பை என்று பொருள். இவற்றின் அடிப்படையில் ஸ்ரீஆதிசங்கரர் பின்வரும் விளக்கங்களைத் தருகிறார்.
1. உதாரே தாமானி அஸ்ய இதி தாமோதரஹ் – அனைத்து உலகங்களையும் தனது வயிற்றில் வைத்திருப்பவர்.
“தாமானி லோக நாமானி தானி யஸ்ய உதார அந்தரே |
தேன தாமோதரோ தேவா ஶ்ரீதரஹ் ஸ்ரீ-ஸமாஶ்ரிதஹ்” ||
2. தமனா உதாரே பத்த இதி தாமோதரஹ் – இடுப்பில் கயிற்றால் கட்டப்பட்டவர். இந்த விளக்கத்தை பிரம்ம புராணத்தின் இந்த வசனம் ஆதரிக்கிறது:
“தயோர் மத்ய-கதம் பத்தம் தாம்னா காதம் தயோதரே |
ததஶ்ச தாமோதரதாம் ச யயௌ தாம பந்தநாத் || [பிரம்ம புராணம் 184.41-42]
தாயார் யசோதையால் வயிற்றில் கயிற்றால் கட்டப்பட்டதால் தாமோதரன் என்ற பெயரால் பிரபலமானார்.
3. தாமாதி சாதனேன உதாரா (உத்கிருஷ்டா) மதி (யா தயா கம்யதா) இதி தாமோதரஹ் – சுய கட்டுப்பாடு (தாமா) மற்றும் பிற குணங்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட (உதாரா அல்லது உத்கிருஷ்ட) மனதின் மூலம் அறியப்பட்டவர். யோகிகள் தங்கள் மனதை பகவானிடம் அழைத்துச் செல்ல பயிற்சி அளிக்கிறார்கள், எனவே இந்த நாமம் என்பது தாமத்தை பயிற்சி செய்வதன் மூலம் அடையப்பட்டவர். ‘தமாத் தாமோதரோ விபுஹ் – தாமத்தின் மூலம் தாமோதரன் என்று அழைக்கப்படுகிறார்’ (உத்யோக பர்வா 5.69.8) என்று மகாபாரதத்திலிருந்து அவர் ஆதரவளிக்கிறார்.
ஸ்ரீ வி வி ராமானுஜன் திவ்ய பிரபந்தத்தில் சந்திரன் திருவந்தாதியை குறிப்பிடுகிறார் –
மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டு மாற்றாதாய்,
வெண்ணெய் விழுங்க வெகுண்டு, ஆய்ச்சி – கண்ணைக்
கயிற்றினால் கட்டத்தான் கட்டுண்டிருந்தான்,
வயிற்றினோ டாற்றா மகன். [2372]
ஸ்ரீ ஏ. ஸ்ரீநிவாச ராகவாஆச்சார்ய ஸ்வாமிகள், பகவான் விருப்பத்துடன் தன்னை ஒரு கயிற்றால் கட்டிக்கொண்ட செயல், அவர் பக்த-பர-தந்திரனாக மாறுகிறார் என்பதையே காட்டுகிறது, அதாவது அவர் பக்தர்களின் விருப்பத்திற்கு அடிபணிகிறார். இந்நிலையில், யசோதாவின் விருப்பத்திற்கு அவர் தன்னைக் கயிற்றால் கட்டுப்படுத்திக் கொண்டார். அவளை மகிழ்விப்பதற்காக கட்டியணைக்கும்போது அவன் அப்பாவியாக கண்ணீர் வடித்தான்.
ஸ்ரீ பராசர பட்டர் தனது விளக்கத்தை “தேவானாம் சுக சம்ஷித்வாத் தாமாத் தாமோதரம் விதுஹ்” (உத்யோக பர்வா 5.71.9) என்பதன் அடிப்படையில் விளக்குகிறார், அதாவது தேவர்கள் அவரை தாமோதரன் என்று அறிவார்கள், ஏனெனில் அவர் அவர்களை காப்பாற்ற வருவதன் மூலம் அவர்களுக்கு “தாமா” (மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சி) தருகிறார். அசுரர்களால் துன்புறுத்தப்படுகிறார்கள்.
ஐந்து புலன்களை (அல்லது இந்திரியங்கள்) வென்று முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒருவர் தாமோதரன்.
இந்த நாமத்தில் உள்ள முரண்பாடுகளை ஸ்ரீ ராதாகிருஷ்ண சாஸ்திரிகள் சுட்டிக்காட்டுகிறார். பகவான் முழு பிரபஞ்சத்தையும் தன்னுள் வைத்திருக்கும் மகத்துவத்தை இது கொண்டுள்ளது, அதே நேரத்தில் அது ஒரு கயிற்றால் கட்டப்பட்டு அவரது பக்தனால் அடக்கப்படுவதற்கு அடிபணிவதில் அவரது பணிவைக் காட்டுகிறது.
——————
370-சஹ
பொறுமை உள்ளவன் –
ஏவம் தத்₃ப₃ந்த₄ந தர்ஜந ப₄ர்த்ஸநாதி₃கம் ஸஹத இதி
ஸஹ꞉
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே -1-3-9-
தாம்புகளால் புடைப்ப அலர்ந்தான் அன்றோ–அழுகையும் அஞ்சு நோக்கும் –தொல்லை இன்பம் இறுதி கண்டாள் அன்றோ
இப்படிக் கட்டுவது -மிரட்டுவது அடிப்பது முதலிய வற்றைப் பொறுத்துக் கொள்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லா வற்றையும் வெல்பவர் –ஸ்ரீ சங்கரர் –
எல்லா வற்றையும் பொறுத்துக் கொள்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
—————–
- ஓம்ஸஹாயநம:
ஸர்வானபிபவதி அனைவரையும் அடக்கி, தனக்குக் கீழ்படியுமாறு வைக்கிறார்
க்ஷமத இதி வா அனைவரையும் (அவர்களின் செய்கைகளை) பொறுத்துக் கொள்கிறார்
ஸஹ: எனவே, பகவான் ‘ஸஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் அனைவரையும் அடக்கி தனக்குக் கீழ்படியுமாறு வைக்கிறார். அனைவரின் (தவறான) செய்கைகளைப் பொறுத்துக் கொள்கிறார். எனவே அவர் ‘ஸஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———–
சஹா – பொறுமை உள்ளவன்
ஸ்ரீஆதிசங்கரர் இந்த நாமத்தை ‘ஸர்வான் அபிபவதி க்ஷமதே இதி வா ஸஹஹ்‘ என்று இரண்டு விதமாக விளக்குகிறார். முதல் பொருள் என்னவென்றால், அவர் மீதான எந்தத் தாக்குதலையும் அவர் தாங்கி முறியடிக்க முடியும். இங்கு ‘ஸஹ்’ என்ற சொல் தாங்கு என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. இரண்டாவது பொருள் என்னவென்றால், குற்றம் செய்தவர் மனந்திரும்பி மன்னிப்புக் கோரினால், அவர் எவ்வளவு குற்றங்களையும் மன்னித்து மறக்க முடியும். இங்கு ‘ஸாஹ்’ என்ற சொல் ‘மன்னிப்பது’ என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது.
ஸ்ரீ பராசர பட்டர் இந்த நாமத்தை முந்தைய நாமத்துடன் இணைக்கிறார், ‘ஸஹ்’ என்பது செயலற்ற ஏற்பு என்றும் பொருள்படும் என்றும், தாமோதரனாக கயிற்றால் கட்டப்படுவதற்கு பொறுமையாக அடிபணிந்தார் என்றும் சுட்டிக்காட்டுகிறார்.
ஸ்ரீ வி.வி. ராமானுஜன் நம்மாழ்வாரின் திருவாய் மொழியிலிருந்து (1.3.1) கிருஷ்ணரின் பொறுமையை விளக்குகிறார் – பத்துடை யடியவர்க் கெளியவன், பிறர்களுக் கரிய வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும்பெற லடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரித்தெண்ணெய் யாப்புண்டு எத்திறம். [ 2921]
————-
371-மஹீ தர –
பூமியைத் தாங்குபவன்
ஸ ஏவ பூ₄பா₄ர ஹரணேந
மஹீ த₄ர꞉ ॥
எயிற்று இடை மண் கொண்ட வெந்தை –
அவரே பூமியைத் தாங்குபவராக இருப்பவர் -பூ பாரத்தைப் போக்கி பூமியை நிலை நிறுத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பூமியை மலை வடிவில் தாங்குபவர் –ஸ்ரீ சங்கரர் –
பூமியைத் தாங்குபவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –
——————
- ஓம்மஹீதராயநம:
மஹீம் இந்த பூமியை
கிரிரூபேண மலைகளின் வடிவில்
தரதீதி தாங்குவதால்
மஹீதர: பகவான் ‘மஹீதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் இந்த பூமியை மலைகளின் வடிவில் தாங்குகிறார். எனவே, அவர் ‘மஹீதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஆச்சார்யர், முன்பு மஹீதரா என்ற 317வது திருநாமத்தில் பூமிக்கும், பூஜைக்கும் ஆதாரமாக இருந்து தாங்குகிறார் என்று பொருளுரைத்திருந்தார்.
‘வனானி விஶ்ணுர்கிரயோ திஸஸ்ச’ (ஸ்ரீவிஶ்ணு புராணம் 2.12.38)
ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: காடுகள், மலைகள் மற்றும் திசைகளெல்லாம் பகவான் விஶ்ணுவே.
இதி பராஶரோக்தே | இது ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் பராசர மஹரிஷியின் கூற்றாகும்.
———–
மஹீதரா – பூமியின் ஆதரவாளர்
இந்த நாமம் 319 என முன்னர் நிகழ்ந்தது. பூமியை தீயவர்களை ஒழிப்பதன் மூலம் அவர் ஆதரிக்கிறார் மற்றும் அவர் தனது பக்தர்களிடமிருந்து பூஜையை ஏற்றுக்கொள்கிறார் என்பது முன்னர் கொடுக்கப்பட்ட அர்த்தங்கள். ஸ்ரீஆதிசங்கரர் இம்முறை பூமியை மலை வடிவில் தாங்குகிறார் என்று சற்று வித்தியாசமான விளக்கம் தருகிறார். ‘மஹீம் கிரிரூபேண தரதி இதி மஹீதரா – மலைகளின் வடிவில் பூமியின் பாரத்தைத் தாங்குகிறார்’ என்கிறார்.
அவர் விஷ்ணு புராணத்தை மேற்கோள் காட்டுகிறார் – ‘வனனி விஷ்ணுர் கிரியோ திஷாஸ்கா’ – (2.12.37) – காடுகள், மலைகள் மற்றும் திசைகள் அனைத்தும் மகாவிஷ்ணுவின் பகுதி, ‘சர்வம் விஷ்ணு மயம் ஜகத்‘. அவர் பூமியை மலைகளின் வடிவத்தில் முட்டுக் கொடுத்து தாங்குகிறார். பூமியை நிலைநிறுத்துவதில் மலைகள் கணிசமான பங்கு வகிக்கின்றன, அந்த வகையில் அவை பூமியை நிலைநிறுத்துகின்றன. இறுதியில் விஷ்ணு தான் இந்த துணை வேடத்தில் நடிக்கிறார்.
ஸ்ரீ வி.வி. ராமானுஜன் பெரியாழ்வாரின் திருமொழியை (5.2.3) மேற்கோள் காட்டுகிறார் –
‘எயிற்றிடை மண் கொண்ட எந்தை ‘-அவர் தனது வராஹ அவதாரத்தில் தனது தந்தங்களுக்கு இடையில் பூமியை ஆதரித்தார், எனவே அவர் ‘மஹீதரர்‘.
372-மஹா பாக
மகா பாக்கியம் உடையவன்
வல்லவீ நீலா ஷோட₃ஶ ஸஹஸ்ர தி₃வ்ய கந்யகா ருக்மிணீ ஸத்ய பா₄மா ஜாம்ப₃வதீ-
ப்ரப்₄ருதீநாம் ஸ்வயம்வர ஸௌபா₄க்₃ய வத்த்வாத்
மஹா பா₄க₃꞉ ॥
மலர்மகள் ஆயர் மடமகள் 16000 மகிஷிமார்கள் விரும்பி ஏற்ற சௌபாக்யம்
வடிவிணை இல்லா மலர் மகள் மற்றும் மண் மகள் பிடிக்கும் மெல்லடியான் -9-2-10-
ஆயர் குலப் பெண்கள் -பதினாறாயிரம் பெண்கள் நப்பின்னை ருக்மிணி சத்ய பாமை ஜாம்பவதீ முதலியோர்
தாமே விரும்பி வந்து அடையும் வடிவழகு யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
தமக்கு விருப்பமான உடலைக் கொண்டு உயர்ந்த உணவுகளை உண்பவர் –
அவதாரங்களில் சிறந்த போகங்களை அனுபவிப்பவர் —ஸ்ரீ சங்கரர் –
யஜ்ஞங்களில் உயர்ந்த ஹவிர்ப்பாகம் உள்ளவர் -உயர்ந்த ஒளியுள்ள கோவர்த்தன மந்தர மலைகள் உடையவர் –
ஐஸ்வர்யம் முதலிய ஆறு குணங்களுக்கு ஆதாரமாக உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
—————
- ஓம்மஹாபாகாயநம:
ஸ்வேச்சயா தன்னிச்சைப்படி
தாரயன் தேஹம் பல்வேறு உடல்களை எடுத்துக்கொண்டு
மஹாந்தி உத்க்ருஶ்டானி ‘மஹா’ அதாவது மிகச்சிறந்ததான
போஜனானி பாகஜன்யானி உணவுவகைகளை
புங்க்தே இதி உண்கிறார்
மஹாபாக: எனவே, பகவான் ‘மஹாபாக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் தன்னிச்சைப்படி வெவ்வேறு உடல்களை எடுத்துக்கொண்டு (அவருக்குப் படைக்கப்படும்) பல்வேறு சிறந்த உணவுகளை உட்கொள்கிறார். எனவே, அவர் ‘மஹாபாக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மஹான் மிகவும்
பாக: பாக்யம் ‘பாக’ அதாவது சிறந்ததான
அஸ்ய அவதாரேஶு அவரது அவதாரங்கள்
இதி வா மஹாபாக: எனவே பகவான் ‘மஹாபாக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் மிகச்சிறந்த (பெரும் பாக்கியம் படைத்த) அவதாரங்களை எடுக்கிறார். எனவே, அவர் ‘மஹாபாக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———-
மஹீபாகா – அவர் மிகவும் அதிர்ஷ்டசாலி மற்றும் அவரது விருப்பப்படி எந்த வடிவத்தையும் எடுக்க முடியும்
ஸ்ரீ ஆதி சங்கரரின் கூற்றுப்படி, ‘ஸ்வேச்சயா தாராயண் தேஹம் மஹாந்தி உத்கிருஷ்டானி போஜனானி பகஜன்யாநி பூங்தே இதி மஹாபாகா – தனது சொந்த விருப்பத்தின் பல்வேறு அவதாரங்களை எடுத்து, அந்த அவதாரங்களில் அவர் நடித்த பாத்திரங்களின் மூலம் அவருக்கு வழங்கப்பட்ட பல பிரசாதங்களை அவர் அனுபவிக்கிறார். உதாரணமாக, கிருஷ்ண அவதாரத்தில், பாண்டவர்கள் நடத்திய ராஜசூய யாகத்தின் போது அவர் முக்கிய பலியை அனுபவித்தார்.
ஸ்ரீ சங்கரரின் இரண்டாவது விளக்கம், ‘மஹான் பாக பாக்யம் அஸ்ய அவதாரேஷு இதி வா மஹாபாகா – அவர் தனது அவதாரங்களின் போது எல்லாவற்றிலும் சிறந்ததைப் பெறுகிறார், எனவே அவர் மகாபாகா’ என்று அழைக்கப்படுகிறார்.
நீளா தேவி, ருக்மிணி, சத்யபாமா, ஜாம்பவதி, பதினாறாயிரம் தேவதைகள் மற்றும் பிறரால் தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டம் (மகா பாக்யம்) கிருஷ்ணருக்கு உண்டு என்று ஸ்ரீ பராசர பட்டர் விளக்குகிறார்.
ஸ்ரீ ராதாகிருஷ்ண சாஸ்திரிகள் அவர் மஹாபாகா என்று சுட்டிக்காட்டுகிறார், ஏனென்றால் அவர் விரும்பியபடி எந்த பிரசாதத்திலும் பெரும் (மஹா) பகுதியை (பாகா) பெறுகிறார். கிருஷ்ணரின் வற்புறுத்தலின் பேரில் இந்திரனுக்குக் கொடுக்காமல், கோவர்த்தன கிரிக்கு கோபர்கள் அளித்த காணிக்கையை அவர் குறிப்பிடுகிறார். கிருஷ்ணர் கோவராதன மலையின் உச்சியில் தோன்றி அனைத்து பிரசாதங்களையும் ஏற்றுக்கொண்டார்.
———
373-வேகவான்
வேகம் உள்ளவன் –
மநுஷ்ய த₄ர்ம லீலே பா₃ல்யே (அ)பி து₃ர்வார பரம ஐஶ்வர்ய ப்ரஸரத்வாத்
வேக வான் ।
அதிஶாயநே மதுப்
குரவை யாய்ச்சியர் யெழ கோத்தததும் குன்றம் ஓன்று ஏந்தியதும் –இவை போல்வனவும்
பிறவும் –என்னப்பன் தன் மாயங்கள் –
மெய் ஞான சிறு குழவி-
மனிதக் குழந்தையாக விளையாடும் போதும் தமது பரமேஸ்வர சக்தியின் வேகம் குறையாதவர்-அந்த சக்தி தடைபடாமல் எல்லா விஷயங்களிலும் வியாபிக்கும் படி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
வேகத்தை யுடையவர் —ஸ்ரீ சங்கரர் –
கஜேந்த்திரன் முதலிய பக்தர்களைக் காப்பதில் வேகம் உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
—————–
- ஓம்வேகவதேநம:
வேகோ ‘வேக’ என்றால்
ஜவ்ஸதத்வான் விரைவாகச் செல்பவர்
வேகவான் எனவே, பகவான் ‘வேகவான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மிக விரைவாகச் செல்பவராதலால் பகவான் ‘வேகவான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘அனேஜதேகம் மனஸோ ஜவீய:’ (ஈசாவாஸ்ய உபநிஶத் 4)
ஈசாவாஸ்ய உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த ஆத்மாவானது சலனமற்றது. எனினும், மனதைக் காட்டிலும் விரைவாகச் செல்லக்கூடியது.
————
வேகவன் – அபார வேகம் கொண்டவன்
வேக என்றால் வேகம், வேகவன் என்றால் எந்த சூழ்நிலையிலும் வேகத்துடன் செயல்படுபவர். சங்கரர் சொல்வது போல் ‘வேகோ ஜவஹ் தத்வான் வேகவான் – வேகம் என்றால் வேகம் மற்றும் வேகவன் தனது எல்லா செயல்களிலும் வேகத்தைக் காட்டுபவர்’.
ஸ்ரீ சங்கரர் நாமாவை ஈஸாவாஸ்ய உபநிஷத் மந்திரத்தின் அடிப்படையில் விளக்குகிறார்: “அனேஜதேகம் மன்ஸோ ஜவீயஹ் – அவர் அசையாதவர், ஆனால் அதே நேரத்தில் மனதை விட வேகமானவர்”. இங்குள்ள சூழல் என்னவென்றால், அவர் நமக்குள் இருந்தாலும், நம் மனதுடன் எவ்வளவு தர்க்கம் செய்தாலும், நாம் அவரைப் புரிந்துகொள்ளவோ அல்லது கண்டுபிடிக்கவோ முடியாது. மின்னலை விட வேகமான மனதுடன் வாழ்நாள் முழுவதும் தர்க்கம் செய்தாலும் அவரை உணர முடியாது என்பதால், தர்க்கத்தாலும், பகுத்தறிவாலும் மட்டும் அவரைப் புரிந்து கொள்ள முடியாது.
ஸ்ரீ பராசர பட்டர், அவர் குழந்தையாக இருந்தபோதும், கிருஷ்ணரின் செயல்கள் அவரது தவிர்க்க முடியாத மேலாதிக்கத்தையும், இறையாண்மையையும் வெளிப்படுத்துவதாகக் குறிப்பிடுகிறார்.
ஸ்ரீ வி.வி.ராமானுஜன் பூதனை, சகடாசுரன், கோவர்த்தன கிரியை சுண்டு விரல் நுனியில் தூக்குதல் போன்ற சம்பவங்களை குறிப்பிடுகிறார். திருவாய் மொழி 6.4 இந்த சம்பவங்களை விவரிக்கிறது.
ஸ்ரீ ராதாகிருஷ்ண சாஸ்திரிகள் ருக்மணி ஸ்வயம்வரம் சம்பவத்தை அவரது விரைவு விளையாட்டிற்கு உதாரணமாகக் குறிப்பிடுகிறார்.
ஸ்வாமி சின்மயாஆனந்தா அவர் எங்கும் நிறைந்து வியாபித்திருப்பதால், தம் பக்தர்களை உடனடியாக அதாவது அவர்கள் அவரை நினைக்கும் தருணத்தில் சென்றடைகிறார் என்று விளக்கம் தருகிறார். கஜேந்திரன் (கஜேந்திர மோக்ஷம்) மற்றும் திரௌபதி (வஸ்த்ர ஹரன்) ஆகியோரின் துன்ப அழைப்புகளுக்கு இறைவனின் விரைவான பதிலைக் கண்டோம்.
————————–
374-அமிதாசன
பெரும் தீனி உண்பவன்
கத₂ம் ?
அமிதாஶந ;
அபரிமிதம் கோபைர் இந்த்₃ராய பரிகல்பித- மஶநமஸ்யேதி ।
தஸ்மிந் விஸ்மிதா ஹி கோ₃பாஸ்த மதிஶ ஶங்கிரே । யதா₂
* தேவோ வா தா₃நவோ வா த்வம்,–அஹம் வோ பாந்தவ ஜாத இத்யாதி₃ ॥–ஸ்ரீ விஷ்ணு புராணம்–5-13-121
நீ தேவனா அல்லது அசுரனா
வயிற்றினொடு ஆற்றா மகன் -மூன்றாம் திரு -91
அட்டுக்குவி சோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய்யளரும் அடங்கப் பொட்டத் துற்று -பெரியாழ்வார் -3-5-1
கார் ஏழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகுண்டும் ஆரா வயிற்றான் -10-9-2–முன்பே 304 பார்த்தோம்-
ஆயர்கள் இந்திரனுக்கு என்று வைத்து இருந்த அளவற்ற சோற்றை உண்டவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
சம்ஹார காலத்தில் அளவற்ற உலகங்களை உண்பவர் —ஸ்ரீ சங்கரர் –
அளவுபட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ஜீவர்களைக் காட்டிலும் மாறுபட்டவர் –
பிரளயத்தில் அளவில்லாமல் உண்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
———
- ஓம்அமிதாஶணாய நம:
ஸம்ஹாரஸமயே அழிக்கும் காலத்தில்
விஶ்வமஶ்னாதீதி இந்தப் ப்ரபஞ்சத்தை உண்கிறார்
அமிதாஶன: எனவே பகவான் ‘அமிதாஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
(ப்ரளயத்தின் பொழுது) அழிக்கும் காலத்தில் இந்தப் ப்ரபஞ்சத்தை உண்கிறார். எனவே பகவான் ‘அமிதாஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———–
அமிதாஷனா – வயிற்றை உண்பவர்
அமிதா என்றால் மகத்தானது அல்லது வரம்பற்றது மற்றும் ஆஷானா என்றால் உணவு என்று பொருள், எனவே அமிதாஷனா என்றால் அதிக அளவு உணவை உட்கொள்பவர் என்று பொருள். ஸ்ரீஆதிசங்கரர் இதை ‘சம்ஹார சமயே விஸ்வம் அஷ்னாதி இதி அமிதாஷனாஹ் – கலைக்கும் நேரத்தில் அவர் பிரபஞ்சம் முழுவதையும் உட்கொள்கிறார், எனவே அவர் அமிதாஷனா’ என்று அழைக்கப்படுகிறார்.
ஸ்ரீ பராசர பட்டர், ‘அமிதம் அஸ்னாதி இதி அமிதாஸனஹ்‘ அதாவது அதிக அளவு உண்பவர் என்கிறார். கோவர்த்தன கிரிக்கு அளிக்கப்பட்ட அளப்பரிய உணவை விழுங்கி, “தேவோ வா தானவோ வா த்வம்” – “நீ யார் – தேவா அல்லது அசுரன்” என்று வியப்புடன் கூச்சலிடச் செய்ததன் மூலம், பகவான் கிருஷ்ணர் மற்ற செயல்களில், தனது மகத்துவத்தை வெளிப்படுத்தினார். – விஷ்ணு புராணம் 5.13.121.
ஸ்ரீ ராதாகிருஷ்ண சாஸ்திரி பகவத் கீதையை (அத்தியாயம் 15 வசனம் 14) குறிப்பிடுவதன் மூலம் இதை விளக்குகிறார் :
அஹம் வைஸ்வானாரோ பூத்வா ப்ராணிநாம் தேஹம் ஆஸ்ரிதஹ்
ப்ராணபனா-ஸமாயுக்தஹ் பசமி அன்னம் சதுர்-விதம்
ஒவ்வொரு உயிருள்ள உடலிலும் நான் ஜீரண நெருப்பாக இருக்கிறேன், நான் காற்றாகவும் இருக்கிறேன். வாழ்க்கையின் (உள்ளிழுத்தல் மற்றும் வெளியேற்றுதல்), இதன் மூலம் நான் நான்கு வகையான உணவுப் பொருட்களை ஜீரணிக்கிறேன்.
ஸ்ரீ சத்யதேவோ வசிஷ்டர் மேற்கண்ட விளக்கத்தையும், ஒரு மாற்று விளக்கத்தையும் தருகிறார் – அமிதான் ப்ராணினஹ் அஷாயதி போஜயதி இதி அமிதாஷனா – அவர் அமிதாஷனா, ஏனெனில் அவர் தனது படைப்புக்கு அளவற்ற உணவை வழங்குகிறார், அதுவும் அளவிட முடியாதது.
உண்ணாமல் வாழவோ (வளரவோ) முடியாது, உண்ணும் உணவை ஜீரணிக்காமல் வாழவோ முடியாது, இரண்டும் அவனால் சாத்தியப்பட்டதே, இதை இந்த நாமம் உணர்த்துவதாக தர்மச் சக்கரம் எழுத்தாளர் சுட்டிக் காட்டுகிறார்.
364-விஷர-
அடியவர்களிடம் நீங்காத அன்புடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
அழிவு இல்லாதவர் – -ஸ்ரீ சங்கரர் –
பக்தர்கள் வேண்டுவதை விசேஷமாக கொடுப்பவர் -அழிவற்றவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –
—————————————————————————
365-ரோஹித –
தாமரையின் உட்புறம் போல் சிவந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
தம் விருப்பத்தினால் சிவந்த மத்ஸ்ய மீன் வடிவைக் கொண்டவர் –ஸ்ரீ சங்கரர் –
சிவந்த நிறம் உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
———————————————————————–
366-மார்க்க –
உபாசகர்களால் தேடப் பெறுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
மோஷத்தை விரும்புவர்களால் தேடப்படுபவர் -பரமானந்தத்தை அடைவதற்கு வழியாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
ஞானிகளால் சாஸ்திர விசாரங்களில் தேடப்படுபவர் -லிங்க சரீரத்தை அழித்து மோஷம் தருபவர் என்றும் கூறுவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –
—————————————————————————
367-ஹேது –
பக்தர்களுக்குப் பயன் கிடைக்கக் காரணம் ஆனவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
உபாதான நிமித்த காரணங்களாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
உலகிற்குக் காரணமாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
———————————————————————
368-தாமோதர –
யசோதை கட்டிய கயிற்றை வயிற்றிலுடையவர்-எம்பெருமானுடைய சாதுர்யமானது லஷ்மியாலும் கொண்டாடப் படுவதாக இருந்த போதிலும்
யசோதையினால் உரலில் கட்டப் பட்ட போது-அவள் மீது உள்ள அன்பால் கட்டை அவிழ்த்துக் கொள்ளாமல்
கண்ணீர் விட்டு அழுது கொண்டு நின்றானே -ஸ்ரீ பராசர பட்டர் –
உயர்ந்த மதியினால் அறியப் படுபவர் -யசோதையினால் வயிற்றில் கயிற்றினால் கட்டப் பெற்றவர் -தாம -என்று
கூறப்படும் உலகங்களை தம் வயிற்றிலே கொண்டவர் -என்று வியாசர் கூறின படியால் தாமோதரர் –ஸ்ரீ சங்கரர் –
வள்ளல்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பவர்-பிரளய ஜலத்தில் விளையாடி மகிழ்பவர் -இந்த்ரியங்களை அடக்கிய முனிவர்களிடம் மகிழ்பவர் –
துன்பத்தை விளைக்கும் அசுரர்களுக்குத் துன்பம் தருபவர் -கிருஷ்ணாவதாரத்தில் யசோதை வயிற்றில்
கட்டிய கயிற்றை யுடையவர் -பொறுமை யுள்ள ஜீவர்களிடம் மகிழ்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
———————————————————————————–
369-சஹ –
இப்படிக் கட்டுவது -மிரட்டுவது அடிப்பது முதலிய வற்றைப் பொறுத்துக் கொள்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லா வற்றையும் வெல்பவர் –ஸ்ரீ சங்கரர் –
எல்லா வற்றையும் பொறுத்துக் கொள்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
——————————————————————————
370-மஹீதர-
அவரே பூமியைத் தாங்குபவராக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பூமியை மலை வடிவில் தாங்குபவர் –ஸ்ரீ சங்கரர் –
பூமியைத் தாங்குபவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –
—————————————————————————–
371-மஹா பாக-
ஆயர்குலப் பெண்கள் -பதினாறாயிரம் பெண்கள் நப்பின்னை ருக்மிணி சத்யபாமை ஜாம்பவதீ முதலியோர்
தாமே விரும்பி வந்து அடையும் வடிவழகு யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
தமக்கு விருப்பமான உடலைக் கொண்டு உயர்ந்த உணவுகளை உண்பவர் –
அவதாரங்களில் சிறந்த போகங்களை அனுபவிப்பவர் —ஸ்ரீ சங்கரர் –
யஜ்ஞங்களில் உயர்ந்த ஹவிர்ப்பாகம் உள்ளவர் -உயர்ந்த ஒளியுள்ள கோவர்த்தன மந்தர மலைகள் உடையவர் –
ஐஸ்வர்யம் முதலிய ஆறு குணங்களுக்கு ஆதாரமாக உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
——————————————————————————-
372-வேகவான்
மனிதக் குழந்தையாக விளையாடும் போதும் தமது பரமேஸ்வர சக்தியின் வேகம் குறையாதவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
வேகத்தை யுடையவர் —ஸ்ரீ சங்கரர் –
கஜேந்த்திரன் முதலிய பக்தர்களைக் காப்பதில் வேகம் உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
———————————————————————–
373-அமிதாசந-
ஆயர்கள் இந்திரனுக்கு என்று வைத்து இருந்த அளவற்ற சோற்றை உண்டவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
சம்ஹார காலத்தில் அளவற்ற உலகங்களை உண்பவர் —ஸ்ரீ சங்கரர் –
அளவுபட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ஜீவர்களைக் காட்டிலும் மாறுபட்டவர் –
பிரளயத்தில் அளவில்லாமல் உண்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
———–
திருமார்பில் உள்ள மகாலட்சுமியின் பொன் நிற ஒளிபட்டு, பொன் போல் சிவந்து விளங்குவதால்,
‘ரோஹித:’ என்று திருமால் அழைக்கப் படுகிறார். ‘ரோஹித:’ என்றால் சிவந்திருப்பவர் என்று பொருள்.
இக்காலத்தில் ரோஹித் என்று சூட்டப்படும் பெயர்களெல்லாம் இதன் திரிபே ஆகும்.
‘ரோஹித:’ என்பது விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 366-வது திருநாமம்.
“ரோஹிதாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் பொன் போன்ற மனத்துடன்
பொன் மனச் செம்மல்களாக விளங்கும்படித் திருமால் அருள்புரிவார்.
அடியார்கள் என்ன வரத்தை வேண்டி வந்தாலும், அவற்றைக் குறைவில்லாமல் அருளி விடுகிறார் திருமால்.
தாங்கள் வேண்டும் வரங்களைப் பெறுவதற்காக அடியார்களால் நாடப்படுவதால் திருமால் ‘மார்க:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘மார்க:’ என்றால் நாடப்படுபவர். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 367-வது திருநாமம்.
“மார்காய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நாடிய பொருள்கள் கைகூடும்.
அடியார்கள் விரும்பும் பலன்களைப் பெறுவதற்கும், வாழ்வில் அவர்களுக்கு வெற்றி கிடைப்பதற்கும் காரணமாக இருப்பவர் திருமால்.
அதனால் தான் திருமால் ‘ஹேது:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘ஹேது:’ என்றால் பக்தர்கள் விரும்பும் பலன்களைப் பெறக் காரணமாக இருப்பவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 368-வது திருநாமம்.
“ஹேதவே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் விரும்பும் அனைத்துப் பலன்களையும்
குறைவறப் பெறுவதற்குத் திருமால் அருள் புரிவார்.
தாமம் என்றால் கயிறு, உதரம் என்றால் வயிறு.
வயிற்றில் கயிற்றால் கட்டப்பட்டதால் கண்ணன் ‘தாமோதரன்’ என்று அழைக்கப்படுகிறான்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 369-வது திருநாமமாக அமைந்துள்ளது.
“தாமோதராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் பக்திக்கும் கண்ணன் கட்டுப்படுவான்
————————————————————-————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply