ஸ்ரீ பகவத் குண தர்ப்பணம்–ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம வியாக்கியானங்கள் — ஸ்லோகம் –33–

யுகாதி க்ருத் யுகாவர்த்த நைகமாயோ மஹாஸந
அத்ருச்யோ வ்யக்த ரூபஸ்ஸ சஹஸ்ர ஜித் அநந்த ஜித் –33-

இந்த முப்பத்து மூன்றாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

301-யுகாதிக்ருத், 302. யுகாவர்த்த:, 303. நைகமாய:, 304. மஹாஶன:|

305-அத்ருஶ்ய, 306. வ்யக்தரூப:, ச, 307. ஸஹஸ்ரஜித், 308. அனந்தஜித் ||

ஆலிலைமேல் மாயனின் ஆச்சரியமான ரூபம் தியானிக்கப் படுகிறது.
யுகாதிக்ருத் – பிரளயத்தில் அனைத்தும் முடிந்து அதனால் ஒரு நஷ்டமும் நேராதபடி மீண்டும் யுகங்களைத் தொடங்கி நடத்துகிறவர் ஆகையால் யுகாதிக்ருத்
யுகாவர்த்த: – யுகங்கள் அவற்றின் கால க்ரமங்கள், தன்மைகள் எதுவும் முறையாகத் தொடரும்படி சுழற்றுகிறவர் ஆகையால் யுகாவர்த்த:
நைகமாய: – ஆலிலைமேல் வளரும் குழந்தையாய் அநேகமான மாயைகளையும், அற்புதங்களையும் உடையவர்
மஹாசந: – பெருந்தீனிக்காரர். இவரை விட பெருந்தீனி உண்பவர்கள் இருக்க முடியாது என்னும் படி பிரளயத்தில் உலகனைத்தையும் தம் வயிற்றில் ஒடுக்குபவர்.
அத்ருச்ய: – உலகெலாம் அழிந்த பிறகு பிரளய ஜலத்தில் ஓர் ஆலிலையும், அதன் மேல் ஒரு குழந்தையும் மட்டும் எப்படி இருக்க முடியும் என்று மார்க்கண்டேயர் போன்ற மகரிஷிகளுக்கும் உண்மை புலப்படாதவர்.
வ்யக்தரூப: – ‘காயம்பூ நிறமும் திருமார்பில் ஸ்ரீவத்ஸம் என்னும் அடையாளமும் கொண்டு திருமகள் உறையும் திருமார்பனாக எப்பொழுதும் காட்சி தருகிறார்’ என்று மார்கண்டேயரே சொல்லும் அளவிற்கு திவ்ய மங்கள திருமேனி கொண்டவர். யோகிகளுக்குப் புலப்படும் இதயவெளி உருவர்.
ஸஹஸ்ரஜித் – அளவற்ற விதங்களில் வெற்றி திகழ்பவர்
அநந்தஜித் – எல்லையற்ற வெற்றி உருவராய்த் திகழ்பவர்

நான்கு யுகங்களையும் நடைமுறையில் தொடங்கச் செய்பவன் {யுகாதிக்ருத்},
யுகங்களைத் தொடர்ச்சியாகச் சக்கரமாகச் சுழலச் செய்பவன் {யுகாவர்த்தன்},
பல்வேறு வகை மாயைகளுடன் கூடியவன் (அதன் மூலம், பல்வேறு யுகங்களைப் பல்வேறு வகைச் செயல்களின் மூலம்
வேறுபடுத்திக் காட்டும் காரணமாக இருப்பவன்) {நைகமாயன்},
(ஒவ்வொரு கல்பத்தின் முடிவிலும் அனைத்தையும் விழுங்குவதன் விளைவால்) உண்பவர்களில் பெரியவன் {மஹாசநன்},
(பக்தர்கள் அல்லாதோருக்குப்) பிடிபட இயலாதவன் {அத்ருஸ்யன்},
(மிகப்பெரிய) வெளிப்படு வடிவத்துடன் கூடியவன் {வ்யக்தரூபன்},
(தேவர்களின்) ஆயிரம் பகைவர்களை அடக்கியவன் {ஸஹஸ்ரஜித்},
எண்ணற்ற பகைவர்களை அடக்கியவன் {அநந்தஜித்};(46)

ஆலமா மரத்தின் இல்லை மேல் ஒரு பாலகன் –

301-யுகாதிக்ருத் -பிரளயத்தின் போது உலகத்தை தன் வயிற்றில் வைத்துக் காத்து பின் யுகங்களுக்குத் தொடக்கமான சிருஷ்டியைச் செய்பவர் –
302-யுகாவக்த -நான்கு யுகங்களையும் அதன் அதன் தர்மங்களோடு திரும்ப திரும்ப வரச் செய்பவர் –
303-நைக மாய -சிறு குழந்தையாக உலகை விழுங்குவது -ஆலிலையில் துயில்வது முதலான பல வியப்புகளை உடையவர் –
304-மஹாசன-உலகையே விழுங்கும் பெரும் தீனி உள்ளவர்
305-அத்ருச்ய-மார்கண்டேயர் முதலிய ரிஷிகளுக்கும் எட்டாதவர்
306-வ்யக்தரூப -ஆனால் மார்க்கண்டேயர் வேண்டிய போது தன் திருமேனியைப் புலப்படுத்துபவர் –
307-சஹஸ்ரஜித் -ஆயிரம் யுகங்கள் உள்ள பிரளயத்தை யோக உறக்கத்தாலே ஜெயிப்பவர்
308-அனந்தஜித் -தன் பெருமையின் எல்லையை யாராலும் காண முடியாதவர்

3-13-ஆலிலை மேல் துயின்ற –வட பத்ர சாயி -301-313–(314)திரு நாமங்கள்

301-யுகாதி க்ருத் –
யுக ஆரம்ப சிருஷ்டி கர்த்தா –அவாந்தர பிரளயம் -மூன்று லோகங்கள் அழிந்து இவன் திருவயிற்றில் வைத்து ரக்ஷித்து அருளினான் அன்றோ

நித்ய நைமித்திக பிராகிருத ஆத்யந்திக-நான்கும் உண்டே
பிராகிருத மொத்தமாக அழியும்
நைமித்திக அவாந்தர -ஆயிரம் சதுர் யுகங்களுக்குப் பின்னர் -மூன்று லோகங்கள் அழியும்

அத₂ (பிரகரணம் மாற அத பத பிரயோகம்)அமர்யாதா₃ஶ்சர்யத்வம் । தத்ர ந்யக்₃ரோத₄ஶாய்யவதார உதா₃ஹரணம் (பல ஆச்சார்யமான அவதாரங்களில் முதலில் ஆலிலை துயின்றவன் )।
யுக₃ஸ் யாந்தே (அ)ப்யாதி₃ம் கரோதீதி
யுகா₃தி₃க்ருத் ।
ஸ க₂லு ஸம்வர்த்தே (அ)பி ப்ரலயா-
த₃நுபப்லுதம் ஜக₃த் ப்ரவர்திதவான் ॥

பாலன் தனதுருவாய் ஏழு உலகுண்டு ஆலிலையின் மேல் அன்று நீ வளர்ந்த மெய் என்பர் -ஆல் அன்று
வேலை நீருள்ளதோ விண்ணதோ மண்ணதோ சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு -முதல் திரு -69

அகடிதகடந சாமர்த்யம் -உள்ளவன் -உதாரணம் -ஆலினிலைப் பள்ளியானாகவும் -பிரளயத்தின் போதும் யுகங்களுக்கு
ஆதியான சிருஷ்டியைச் செய்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
யுக ஆதி க்ருத் -யுக ஆரம்பத்தில் செய்த க்ருத்யம்

யுகம் முதலிய கால பேதங்களைத் தொடங்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

யுகங்கள் முதலிய கால வேறுபாடுகளைப் படைப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

  1. ஓம் யுகாதிக்ருதே நம:

யுகாதே: காலபேதஸ்ய யுகங்கள் முதலிய கால வேறுபாடுகளை

கர்த்ருத்வாத் உருவாக்குவதால்

யுகாதிக்ருத் பகவான் ‘யுகாதிக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யுகங்கள் முதலிய கால வேறுபாடுகளை உருவாக்குவதால் பகவான் ‘யுகாதிக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யுகானாம் யுகங்களை

ஆதிம் தொடக்கத்தில்

ஆரம்பம் கரோதீதி வா துவங்கிவைக்கிறார்

யுகாதிக்ருத் எனவே பகவான் ‘யுகாதிக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, கல்பத்தின் தொடக்கத்தில் யுகங்களின் சுழற்சியைத் தொடங்கி வைக்கிறார். எனவே, பகவான் ‘யுகாதிக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இதி நாம்னாம் த்ருதீயம் ஶதம் விவ்ருதம் | இத்துடன் (யுகாதிக்ருத் என்னும் இந்த திருநாமம் வரையில்) முன்னூறு திருநாமங்களின் விவரணம் முற்று பெறுகிறது.

—————–

  1. யுகாதிக்ரித் – காலப் பிரிவுகளை உருவாக்கியவர்

யுகாதே காலபேதஸ்ய கர்த்ரித்வாத், யுகாநாம் ஆதிம் ஆரம்பம் கரோதி இதி வா என ஸ்ரீ ஆதிசங்கரர் இதை வரையறுத்துள்ளார் – ஒரு யுகத்திலிருந்து தொடங்கும் காலப் பிரிவுகளை உருவாக்குவதால் யுகாதிக்ரித் என்று அழைக்கப்படுகிறார்.

யுகம் போன்ற காலங்களுக்கு காரணமானவர் என்பதால் அவர் யுகாதிக்ரித் என்று அழைக்கப்படுகிறார் என்பதை முதல் பொருள் குறிக்கிறது.

சங்கரரால் வழங்கப்பட்ட மற்றொரு பொருள், அவர் நான்கு யுகங்களின் நிறுவனர் என்பதை குறிக்கிறது – சத்ய, திரேதா, துவாபர மற்றும் கலியுகம் மற்றும் இந்த காலப் பிரிவை அமைக்கிறது.

சுவாமி சின்மயாஆனந்தாவின் கூற்றுப்படி, இந்த நாமம் நூற்றாண்டுகள், ஆண்டுகள், மாதங்கள், நாட்கள் போன்ற காலப் பிரிவுகளைக் குறிக்கிறது.

ஸ்ரீ ராதாகிருஷ்ண சாஸ்திரி, இந்த நேரப் பிரிவுகளின் மூலம், இரவும் பகலும் ஒன்றையொன்று பின்தொடர்வது போல, அவர் காலத்திற்கு ஒரு தொடர்ச்சியைக் கொடுக்கிறார், இல்லையெனில் அது முடிவில்லாத சக்கரம் அல்லது தொடக்கமும் முடிவும் இல்லாத வட்டம்.

யுகா என்ற சொல் ‘யுஜ் – யோகே’ என்ற மூலத்திலிருந்து பெறப்பட்டது, அதாவது ஒன்றிணைத்தல். ஒரு யுகத்திற்கும் அடுத்த யுகத்திற்கும் இடையிலான தொடர்ச்சி அல்லது தொடர்பை அவர் உருவாக்குகிறார், அதன் மூலம் வாழ்க்கை வடிவங்கள் அவற்றின் கர்மாவின் படி மீண்டும் உருவாக்கப்படுகின்றன.

ஸ்ரீ பராசர பட்டர், “யுகஸ்ய அந்தேபி ஆதிம் கரோதி” – ஒரு யுகத்தின் முடிவில் கூட, இன்னொரு யுகத்தைத் தொடங்குகிறார். பிரபஞ்சம் கலைந்தாலும், மீண்டும் மற்றொரு பிரபஞ்சத்தை உருவாக்கத் தொடங்குவதன் மூலம் அவர் அதை பிரளயத்தின் துயரத்திலிருந்து காப்பாற்றுகிறார்.

ஸ்ரீ சத்யதேவோ வசிஷ்டர் யுகத்தை கால-சக்கரம் என்றும், ஆதி ஆரம்பம் என்றும், யுகாதி என்ற சொல் சூரியனைக் குறிக்கிறது, இரவும் பகலும் என நேரத்தைப் பிரிக்கக் காரணமானவர். அவர் யுகாதிகிருதத்தை சூரியனைப் படைத்தவர் அல்லது காலா சக்ரா.

தர்ம சக்கரத்தில் உள்ள எழுத்தாளர், இந்த மிகப்பெரிய, அளவிட முடியாத மற்றும் முடிவில்லாத, கால அல்லது காலத்தின் பின்னணியில் நமது உடலின் மற்றும் இந்த உலகில் நம் வாழ்வின் வரையறுக்கப்பட்ட தன்மையை சுட்டிக்காட்டுகிறார். அற்ப இலக்குகளில் அதை வீணடிப்பதற்குப் பதிலாக, கடந்த காலத்தைப் பற்றி கவலைப்படுவதற்குப் பதிலாக, கடந்த காலத்தைப் பற்றியோ அல்லது நம் கட்டுப்பாட்டில் இல்லாத எதிர்காலத்தைப் பற்றியோ கவலைப்படாமல், நம் கட்டுப்பாட்டில் இருக்கும் நிகழ்காலத்தில் அவரைப் பற்றி தியானிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.


302-யுக ஆவர்த்த –
யுகங்களை திரும்பச் செய்பவன் –சம்பவாமி யுகே யுகே

ஸ்வ த₄ர்ம வ்யவஸ்த₂யா க்ருதாதி₃யுகா₃நாம் பௌந ꞉புந்யேந ஆவர்தநாத்₃
யுகா₃வர்த꞉ ॥

சாலப் பல நாள் உகந்து ஓர் உயிர் காப்பானே -6-9-3
கிருத த்ரேத துவாபர கலி யுகம் நான்கும் ஆனாய் -பெரிய திருமொழி -7-7-6-

ஜகத் சக்கரம் கால சக்கரம் யுக சக்கரம்

நான்கு யுகங்களையும் அவற்றின் தர்மங்களோடு மீண்டும் மீண்டும் படைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கால ரூபியாக யுகங்களைத் திருப்புபவர் -ஸ்ரீ சங்கரர் –

கிருத யுகம் முதலியவற்றை மீண்டும் சுழற்றுபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———

  1. ஓம் யுகாவர்த்தாய நம:

யுகானி க்ருதாதீனி ‘க்ருதயுகம்’ (முதலாம் யுகமான ஸத்ய அல்லது க்ருத யுகம்) தொடக்கமாக நான்கு யுகங்களை

ஆவர்த்தயதி மீண்டும், மீண்டும் வரிசை மாறாமல் சுழல விடுகிறார்

காலாத்மனேதி காலத்தின் வடிவாய்

யுகாவர்த்த: எனவே பகவான் ‘யுகாவர்த்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

காலத்தின் வடிவினரான பகவான், க்ருதயுகம் முதலிய நான்கு யுகங்களை மீண்டும், மீண்டும் வரிசை மாறாமல் சுழல விடுகிறார். எனவே, பகவான் ‘யுகாவர்த்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. யுகாவர்தா – காலங்களை மீண்டும் மீண்டும் வரச் செய்பவர்

ஸ்ரீ ஆதி சங்கரர், ‘யுகானி கிருதாதீனி ஆவர்தயதி காலாத்மனா இதி‘ என்று கூறுகிறார், அதாவது ‘காலத்தின் கட்டமைப்பின் தன்மையுடன், அவர் சத்ய யுகம் முதல் கலியுகம் வரை யுகங்களைத் தொடர்ந்து சுழற்சி செய்கிறார்’.

அவர்தா என்பது புரட்சி அல்லது சுழற்சியைக் குறிக்கிறது. ஸ்ரீ பராசர பட்டர் சத்ய மற்றும் பிற யுகங்களை அந்தந்த தர்மங்களால் மீண்டும் மீண்டும் சுற்றுவதால் அவர் யுகாவர்தா என்று விளக்குகிறார்.

சத்ய யுகத்தில் சமுதாயத்தில் தர்மத்தின் அளவு 100% என்றும், திரேதா யுகத்தில் 75% என்றும், துவாபர யுகத்தில் 50% என்றும், கலியுகத்தில் 25% என்றும் கூறப்படுகிறது. இந்த சுழற்சி ஒரு பரிமாணத்தில் காணப்படுகிறது, அங்கு நாம் பகல் மற்றும் இரவு வடிவத்தில் எளிதில் தொடர்புபடுத்த முடியும், நான்கு பருவங்கள் அவற்றின் நிலையான பண்புகளுடன் மீண்டும் மீண்டும் மீண்டும் வருகின்றன. அவர் முந்தைய நாமத்தில் பார்த்தது போல் காலத்தை படைத்தவர் மட்டுமல்ல, இந்த நாமத்தில் நாம் பார்க்கும் காலத்தின் நிர்வாகியும் கூட.


303-நைக மாய –(ந ஏக மாய –ந ஏக ரூபம் பிருஹத் ரூபம் முன்பே பார்த்தோம் )
பல மாயங்களை உடையவன் -மாயம் ஆச்சர்யம் ஞானம் சங்கல்பம் –சம்பவாம் யாத்ம மாயயா –

முக்₃த₄ ஶிஶு ரூப (பேதைக் குழவி–கராவிந்தம் இத்யாதி )அபரிமித ஜக₃ந் நிக₃ரண நிராலம்ப₃ந ஏகோத₃க வடத₃ல ஶய நாத்₃யந—
நஏகா தக்ர்ய  ஆஶ்சர்யோ
நைகமாய꞉ ।
ந ச மித்₂யா வசநோ (அ)யம் மாயா ஶப்₃த₃꞉,
தத்₂யே (அ)பி ப்ரயோக₃ பூ₄யஸ்த்வாத் । ததா₂ஹி-

மாயம் து பிரக்ருதிம் வித்யாத் இத் யநேகார்த₂க்ரியா காரிண்யாம் ப்ரக்ருதௌ-ஸ்வேதாஸ்வரம்
ப்ரக்ருதி என்பதே மாயா பதம் மூலம் கூறப்படுகிறது
அனைத்துக்கும் காரணமான பிரக்ருதியை-திரோதானகரமாய் இருப்பதால் மாயை என்கிறது –

மாயா வயுனும் ஞானம் -நிருக்தம் —
மாயா வயுனும் ஞானம் -மூன்றும் அறிவு என்னும் பொருள்

சங்க்யாதா தேவ மாயயா-யஜுர் அஷ்டகம் –-பகவானின் ஞானத்துக்கு ஒப்பு

விஸ்வாநி தேவ வயுநாநி வித்வான் இதி ச ஜ்ஞாநே -ஈசாவாஸ்ய-18-
அக்னியை சரீரமாக யுடைய எம்பெருமானே
உன்னை அடையும் விதமான செல்வத்தை நாங்கள் பெறும் விதம் முழுவதுமே நீ அறிவாய்

தேந மாயா சஹஸ்ரம் தத் சம்பரஸ்ய ஆசுகாமிநா பாலஸ்ய ரக்ஷதா தேகம் ஏகை கஸ்யேந ஸூதிதிம் இதி தத்த்வ ஜ்ஞாந அபா₃த்₄யே (அ)ஸ்த்ர நாஶ்யே । ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-20-
சாம்பன் அசுரன் பிரஹலாதன் மீது ஆயிரக் கணக்கான ஆயுதம் பிரயோகம் செய்ய சக்கரத்தாழ்வான் அவற்றைத் தூளாக்கி ரஷித்தது

வாராஹே மாயாத்₄யாயாதி₃நா —

மேகோ தய சாகர சந் நிவ்ருத்தி இந்தோர் விபாக ஸ்புரிதாநி வாயோ வித்யுத் விபங்க கதிர் உஷ்ண ரஸ்மே விஷ்ணோர்
விசித்ரா ப்ரபவந்தி மாயா –வராஹ புராணம் –
மேகங்கள் உண்டாவது -கடலின் அலைகள் மேலே எழும்பாமல் கடலுக்குத் திரும்புவது -சந்திரன் வளர்வது தேய்வது
காற்று வீசுவது மின்னல் உண்டாவது -ஸூர்யன் தஷிணாயின உத்தராயண கதிகளில் மாறி மாறிச் செல்வது
போன்ற அனைத்தும் விஷ்ணுவின் வியக்கவைக்கும் -மாயா ஆச்சர்ய செயல்கள் ஆகும்

இத் யபி₄யுக்தைஶ்ச மஹாஶ்சர்யே , ஆரண்ய பர்வணி மார்கண்டே ₃யேந வட த₃ல ஶயநாத்₃யாஶ்சர்யம் உக்த்வா–ஆரண்ய பர்வம் ததோ மே ப்ருத்வீ பால விஸ்மய ஸூகஹாந் அபூத் த்ருஷ்ட்வா லோகம் சமஸ்தம் ச –இத் யுக்த்வா அந்தர் ஹித தாத ச தேவ பரமாத்₃பு₄த꞉। ஆஶ்சர்யம் ப₄ரத ஶ்ரேஷ்ட₂, இதி தத்₃விஷயே நிர் தோ ₃ஷ ப்ரத்யக்ஷ ஸித்₃தே ₄ ப₃ஹ் வாஶ்சர்ய பர்யாய ப்ரயோக₃ஶ்ச பூ₄யிஷ்ட₂ உபலப்₄யதே ॥
மார்க்கண்டேய மகரிஷி தர்ம புத்ரனிடம் –
அந்த ஆலிலைக் குழந்தை வயிற்றிலே நான் அனைத்து உலகங்களையும் கண்டேன்
என்ன வியப்பாக அந்தக் குழந்தை ஏதும் அறியாதவன் போல் உறங்கிக் கொண்டு இருந்தது –
பரமாத்புத ஆச்சர்ய பரத ஸ்ரேஷ்ட –ஆரண்ய பர்வம் -மார்க்கண்டேய மஹ ரிஷி தர்மபுத்ரன் இடம்
ஆலிலை கண் வளர்ந்தவன் திரு வயிற்றிலே கண்டதை சொல்வது

சிறு குழந்தையாக உலகங்களை விழுங்குவது -ஒரே நீரில் பிடிப்பில்லாத ஆலிலையிலே படுப்பது முதலிய
அகடி கடிதந செயல்களை உடையவர் -மாயா என்று பொய் எனபது இல்லை -உண்மையான விஷயங்களிலும் மாயா என்ற சொல்
அதிகமாகப் பயன்படுத்தப் பட்டுள்ளதால் -ஸ்ரீ பராசர பட்டர் –

பெரு மாயை அல்லாமல் பல மாயைகளைத் தரிப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

பலவிதமான இச்சைகள் உள்ளவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

  1. ஓம் நைகமாயாய நம:

ஏகா மாயா ந வித்யதே ஒன்றல்ல அவரது மாயைகள்

பஹ்வீர்மாயா எண்ணற்ற மாயைகளை

வஹதீதி உருவாக்குகிறார்

நைகமாய:  எனவே, பகவான் ‘நைகமாய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் மாயைகள் ஒன்றிரண்டல்ல. எண்ணிலடங்கா மாயைகளை உருவாக்குவதால் அவர் ‘நைகமாய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ந லோபோ நஞ:’ (பாணினி ஸூத்ரம் 6.3.73)

இதி நகாரலோபோ ந பவதி இந்த பாணினியின் ஸூத்ரத்தின்படி, எதிர்மறையைக் குறிக்கும் ‘நஞ’ விலிருந்து ‘ந’காரம் நீக்கப்படுவதில்லை

ஞகாரானுபந்தஸ்யாபி ‘ஞ‘காரத்தை தவிர்த்து தனியே இருப்பினும் 

‘ந’காரஸ்ய ப்ரதிபோதவாசினோ வித்யமானத்வாத் ‘ந‘காரம் எதிர்மறையான பொருளையே குறிக்கும் என்று (நாம்) அறியவேண்டும்.

நைகமாய: என்ற திருநாமத்தை ந+ஏக+மாய என்று பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். இங்கு ‘ந’காரம், ஒன்றல்ல (ந ஏக:) (ஒன்றின் எதிர்மறையான) பல என்ற பொருள் தருகிறது.

———–

நைகமயா – பல மாயைகளை உருவாக்குபவர்

ஸ்ரீ ஆதிசங்கரர் தனது அத்வைத தத்துவத்தின் அடிப்படையில் இதை ‘ஏக மாயா ந வித்யாதே பஹ்வீர் மாயா வஹதி இதி நைகமாயா – உலகின் பல மாயைகள் அல்லது தவறான கருத்துக்களை உருவாக்கியவர் என்பதால் அவர் நைகமாயா‘ என்று விளக்குகிறார். புத்திசாலித்தனமான ஒரு மனிதனால் மட்டுமே தவறான தோற்றங்களின் மூலம் பார்க்க முடியும் மற்றும் பிரபஞ்சத்தின் அடிப்படை ஒற்றுமையைப் பாராட்ட முடியும்.

ஸ்ரீ பராசர பட்டர் தனது விசிஷ்டாத்வைத தத்துவத்தின் அடிப்படையில் இந்த நாமத்தை வேறு விதமாக விளக்குகிறார். அவரைப் பொறுத்தவரை, மாயா என்பது அறிவை அல்லது அற்புதமான உண்மைகளைக் குறிக்கிறது, மேலும் மாயை என்று பொருள் கொள்ளக்கூடாது. அவரது எண்ணற்ற அற்புதமான சுரண்டல்களால் அவர் நைகமயா ஆவார். இந்த வார்த்தையை மாயையாக அல்ல, உண்மை, அறிவு போன்றவற்றைப் பயன்படுத்துவதைச் சுட்டிக்காட்ட அவர் பல எடுத்துக்காட்டுகளைத் தருகிறார்.

“மாயாம் து பிரகிருதிம் வித்யாத்” – மாயா என்பது பிரகிருதி அல்லது ஆதிப் பொருள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். விஷ்ணு புராணத்தில், சம்பராசுரனின் ஆயிரக்கணக்கான மாயாக்களை விஷ்ணு தனது வட்டத்தால் அழித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கே மாயா என்பது மாயையைக் குறிக்கிறது என்றால், அதை அழிக்க ஒரு டிஸ்கஸ் தேவையில்லை; எனவே இங்கு மாயா என்பது உண்மையான பொருட்களைக் குறிக்கிறது.

ஸ்ரீ சத்யதேவோ வசிஷ்டர் ‘மா-மானே’ என்ற மூலத்திலிருந்து பொருள் பெறுகிறார் – அளக்க, மேலும் இந்த நாமம் என்பது அவருக்கு எண்ணற்ற பரிமாணங்களைக் கொண்டுள்ளது என்று விளக்கம் தருகிறார்.


304-மகாசந –
பெரும் வயிற்றன்-உலகம் உண்ட பெரு வாயன்-ஆரா வயிற்றான்

நிகி₂ல ஜக₃ந் நிக₃ரண மஸ்யேதி
மஹாஶந ꞉
யச்ச கிஞ்சித் மயா லோகே த்ருஷ்டம் ஸ்தாவர ஜங்கமம் தத பஸ்யன் அஹம் சர்வம் தஸ்ய குஷவ் மஹாத்மந –வனபர்வம் -191-122-
மார்க்கண்டேயர் திரு வயிற்றில் -இந்த உலகில் உள்ள அசையும் பொருள்கள் அசையாத பொருள்கள்
அனைத்தையும் அந்தக் குழந்தையின் வயிற்றிலே தான் கண்டத்தைச் சொல்கிறார்

கார் யெழ் கடல் யெழ் மலை யெழ் உலகுண்டும் ஆரா வயிற்றான் -10-8-2-

வெள்ளி மலை ஒத்த வெண்ணெய் உண்டவன்-ஆரா வயிற்றோடு ஆற்றாதன்

உலகு அனைத்தையும் விழுங்கியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கல்பத்தின் முடிவில் எல்லாவற்றையும் உண்பவர் -ஸ்ரீ சங்கரர்-

மிக அதிகமான உணவு உண்பவர் -அதிக உணவில் ஆசையுள்ள துர்வாச முனிவருக்கு உணவு அளித்தவர் –
யஜ்ஞத்தில் ஆசை உள்ளவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

————

  1. ஓம் மஹாஶனாய நம:

மஹத் அஶனம் அஸ்யேதி அளவிடமுடியாத அளவு உணவை உட்கொள்கிறார்

மஹாஶன: எனவே, பகவான் ‘மஹாஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்

கல்பாந்தே கல்பத்தின் முடிவில்

ஸர்வக்ரஸனாத் அனைத்தையும் உண்கிறார்.

பகவான் மஹாகல்பத்தின் முடிவில் இந்தப் ப்ரபஞ்சம் அனைத்தையும் உண்கிறார். எனவே, அவர் ‘மஹாஶன:’ (அளவிடமுடியாத உணவை உண்பவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரஹ்மாவின் ஒரு பகல் பொழுது 1000 சதுர்யுகங்களால் ஆனது (மனிதர்களின் காலக்கணக்கின்படி 432,00,00,000 (432 கோடி) வருடங்கள். அவரது ஒரு பகல் முடியும்பொழுது பூமி, புவர்லோகம், ஸ்வர்கலோகம் (தேவர்கள் வாழும் ஸ்வர்கம்) ஆகியவை அழிகின்றன. அவரது ஒரு இரவு நேரமும் 432 கோடி வருடங்களாகும் (ஆக, ப்ரஹ்மாவின் ஒரு நாள் என்பது நம் கணக்கில் 864 கோடி வருடங்கள்). இவ்வாறான 360 நாட்கள் அவரது ஒரு ஆண்டு. அவ்வாறு 100 ஆண்டுகள் ப்ரஹ்மாவின் ஆயுட்காலம் (31104000,00,00,000 ஆண்டுகள்). ப்ரஹ்மாவின் ஆயுட்காலம் முடிந்ததும் ஈரேழு பதினான்கு உலகங்களும் (இந்தப் ப்ரபஞ்சம் முழுவதும்) பகவானால் உட்கொள்ளப்படுகின்றன (அழிக்கப்படுகின்றன). பின்னர் 31104000,00,00,000 ஆண்டுகள் ஒன்றுமில்லாத வெறுமையில், பரப்ரஹ்மம் மட்டுமே இருக்கிறார். பின்னர் ப்ரஹ்மாவையும், ஈரேழு பதினான்கு உலகங்களோடு ப்ரபஞ்சத்தையும் மீண்டும் முன்போலவே படைக்கிறார். இந்த சுழற்சி ஆரம்பம், முடிவு ஏதுமின்றி இடைவிடாது நடைபெறுகிறது (this cycle is eternal).

————

  1. மஹாஷனா – பிரளய காலத்தில் அதிகமாக உண்பவர்

ஸ்ரீ ஆதி சங்கரர், ‘மஹத் ஆஷனம் அஸ்ய அஸ்தி கல்பாந்தே ஸர்வக்ரஸனாத் இதி மஹாஷனாஹ் – உலக முடிவில் எதை உட்கொள்கிறாரோ அதைக் கொண்டு நிரூபித்துக் காட்டும் அதீத பசியுடையவர்’ என்று கூறுகிறார். ஆசனம் என்பது உணவைக் குறிக்கிறது. பிரளய காலத்தில் அனைத்து படைப்புகளும் மறைந்து விடுவதால், அந்த நேரத்தில் பகவானின் அபரிமிதமான பசியைப் போக்க அவை உணவாகின்றன.

ஸ்ரீ சத்யதேவோ வசிஷ்டர் இந்த நாமத்திற்கு மற்றொரு கூடுதல் வழித்தோன்றலை அஷ் – வ்யாப்தௌ சங்கதே ச என்ற பொருளின் அடிப்படையில் தருகிறார், வியாபித்தல், குவித்தல். எனவே அவரது பசியின்மை பெரியது என்ற பொருளுடன், அவரது பரவல் அல்லது வியாப்தி பெரியது மற்றும் விரிவானது என்று மாற்று விளக்கத்தையும் தருகிறார்.


305-அத்ருஶ்ய –
காண முடியாதவன்-அடுத்தது வியக்த ரூபன் -ஆச்சார்யம் அகடி கடநா சமர்த்தன்

அத்₃ருஶ்ய꞉ ।
* ருது₃பதா₄ச் சாக்ல்ருபி ச்ருத்தே ꞉ இதி க்யப் | அதக்ரய வ்ருத்தாந்த꞉யதா(வாதம் பண்ண முடியாத விருத்தாந்தம் உடையவன் )

கதம் நு அயம் சிசு சேதே லோகே நாசு முபாகதே தபஸா சிந்த யம்ச்சாபி தம் சிசும் நோப லக்ஷயே -வனபர்வம் -191-94-
இந்த உலகம் அனைத்தும் அழிந்த பின்பும் இந்தக் குழந்தை மட்டும் எவ்வாறு இப்படி உள்ளது என்று
தனது தப வலிமையால் ஆராய்ந்த போதிலும் குழந்தையின் ஸ்வரூபம் பற்றி அறிய முடியவில்லை -என்றார் மார்க்கண்டேயர்

கட்கிலி உன்னைக் காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணனே -7-2-3-

நினைவிற்கு எட்டாத செய்கை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லோருடையவும் புத்தி இந்த்ரியங்களுக்கு புலப்படாதவர் -ஸ்ரீ சங்கரர்-

தம் தயை இன்றிக் காண முடியாதவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

  1. ஓம் அத்ருஶ்யாய நம:

ஸர்வேஶாம் அனைத்து

புத்தீந்த்ரியாணாம் அறிவுப்புலன்களால் (கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தோல்)

அகம்ய: அணுக இயலாதவராதலால்

அத்ருஶ்ய: பகவான் ‘அத்ருஶ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்து அறிவுப் புலன்களாலும் அறிய முடியாதவராய், அவற்றால் அணுக இயலாதவராய் இருக்கிறார். எனவே, அவர் ‘அத்ருஶ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

  1. அத்ரிஷ்ய – கண்ணுக்குத் தெரியாதவன்

த்ரிஷ் என்றால் தெரியும், எனவே அத்ரிஷ்யா என்றால் கண்ணுக்கு தெரியாத ஒருவர். ஸ்ரீ ஆதிசங்கரர் கூறுகிறார், ‘ஸர்வேஷாம் புத்தீந்த்ரியானாம் ஆகம்யஹ் அத்ரிஷ்யஹ் அதாவது நமது எந்த அறிவு உறுப்புகளாலும் அவர் உணரப்படுவதில்லை’. எனவே அத்ரிஷ்யா என்பது கண்ணுக்குத் தெரியாதது மட்டுமல்ல, காது, நாக்கு, மூக்கு மற்றும் தோல் போன்ற பிற புலன்களுக்குப் புலப்படாது.

நம்மிடம் உள்ள உபநிடதங்களில்-“அத்ரிஷ்யம் ஆக்ராஹ்யம் அகோத்ரம்….” (முண்டக உபநிஷத் 1.1.6)

“அத்ரிஷ்யம் அவ்யவஹார்யம் ஆக்ராஹிம் அலக்ஷணம்…சாந்தம் சிவம் அத்வைதம்….” (மாண்டோக்ய உபநிஷத் 1.7)

பகவத் கீதையில் (அத்தியாயம் 2 வசனம் 25) கிருஷ்ணர் கூறுகிறார்:
அவ்யக்தோ யாம் அசிந்த்யோ யாம் அவிகார்யோ யாம் உச்யதே 
தஸ்மாத் ஏவம் விதித்வைனம் நானுசோசிதும் அர்ஹசி.–சுயமானது புலன்களால் அறிய முடியாதது, மனத்தால் சிந்திக்க முடியாதது மற்றும் எந்த வித மாற்றத்திற்கும் உட்பட்டது அல்ல. ஆன்மா கண்ணுக்குத் தெரியாதது, நினைத்துப் பார்க்க முடியாதது, மாறாதது, மாறாதது என்பதை அறிந்து, நீங்கள் வருத்தப்படக்கூடாது.

தர்ம சக்கரத்தில் எழுதுபவர், அவர் அத்ரிஷ்யா என்று சுட்டிக்காட்டுகிறார், ஏனென்றால் ஐந்து புலன்கள் மூலமாகவோ அல்லது தர்க்கரீதியான பகுப்பாய்வு மூலமாகவோ அவரை அடையாளம் காண முடியாது. அந்த வகையில், அவரது பக்தர்களை உணர்ந்து கொள்ள அவரது அருள் ஒன்றே உதவுகிறது.

பகவானின் செயல்கள் புரியாதவை. மகாபாரதத்தில்,
‘கதம் நு அயம் சிஸுஹ் சேதே லோகே நாசம் அப் ஆகதே |
தபசா சிந்தயன்ScApi தம் சிஸும் நோபலக்ஷயே || (வன பர்வ -191-94)
“உலகம் முழுவதும் அழிவைச் சந்தித்திருக்கும்போது, ​​இந்தக் குழந்தை எப்படி உயிருடன் (இலையில்) கிடக்கிறது? எனது துறவறத்தின் மூலம் இதைப் புரிந்துகொள்ள முயன்றாலும் இந்தக் குழந்தையின் உண்மைத் தன்மையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை”.

ஸ்ரீ வி.வி. ராமானுஜன் நம்மாழ்வாரின் பாசுரத்தை குறிப்பிடுகிறார் – “கட் கிலி உன்னைக் காணுமாறு அருளாய் ”  திருவாய் மொழி (7.2.3) அதாவது நமது இயல்பான பார்வையால் பார்க்க முடியாதவர்.    


306-வ்யக்த ரூப-
தெளிவாகத் தெரியும் திருமேனி உடையவன்-

அத₂ச, அபி₄க₃ச்ச₂தோ (அபிமுக்யம் அனுகூலருக்கு )மார்கண்டே ₃யாதே ₃꞉
வ்யக்த ரூப꞉ –
ஸுக்₃ரஹ தி₃வ்ய – விக்₃ரஹ꞉ ।யதா₂

பக்தாநாம் த்வம் பிரகாசசே-பூவைப் பூ வண்ணன்-சேவடி என் சென்னிக்கு அணி ஆக்கினான் –

அதஸீ புஷ்ப ஸங்காச ஸ்ரீ வத்ஸ க்ருத லக்ஷண சாஷாத் லஷ்ம்யா இவ ஆவாஸ ச சதா ப்ரதிபாதி மே –வன பர்வம் -191-96-
கண்ட காட்சியை மார்க்கண்டேயர்–காயாம்பூ போன்ற நிறம் கொண்டவனும்
ஸ்ரீ வத்ஸம் என்னும் மருவினால் அலங்கரிக்கப் பட்ட திரு மார்பை யுடையவனும்
ஆகிய மஹா விஷ்ணு தனது திரு மார்பில் மஹா லஷ்மியைத் தரித்தவனாக காட்சி அளித்ததான்

தஸ்ய தாம்ர தலவ் தாத சரணவ் ஸூ பிரதிஷ்டதோ ஸூ ஜாத ம்ருத்ரு ரக்தாபி அங்குலீபி அலங்குருதவ்
பிரணதேந  (பிரயதேன )மயா மூர்த்நா க்ருஹீத்வா ஹி அபி வந்திதவ்–வன பர்வம் -191-13-
பிரியமான தர்மரே –சிவந்த நிறத்தில் உள்ளவையும்
அழகு மென்மை சிவந்த நிறம் ஆகியவற்றுடன் கூடிய கால் விரல்களால் நன்றாக அலங்காரம் செய்யப்பட்டவையுமாகிய
எம்பெருமான் திருவடிகள் மனசில் நிலையாக நின்றன –
அவை எனது தலையால் வணங்கப்பட்டன -என்கிறார் மார்க்கண்டேயர்

தம்மை அடைந்த மார்க்கண்டேயர் முதலிய வர்களுக்குத் தெளிவாகக் காட்டிய திரு மேனி யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கண்ணுக்குப் புலப்படும் பிரபஞ்ச ரூபம் யுடையவர் -ஸ்வயம் பிரகாசமானவர் -யோகிகளுக்கு பிரகாசிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

தம் தயை இன்றி காண முடியா உருவம் உடையவர் -அவ்யக்த ரூபம் -என்ற பாடம் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

  1. ஓம் வ்யக்தரூபாய நம:

ஸ்தூலரூபேண மிகப் பெரிய தனது வடிவால்

வ்யக்தம் ஸ்வரூபமஸ்யேதி அவரது உருவம் நன்றாக புலப்படும் வகையில் இருப்பதால்

வ்யக்தரூப: பகவான் ‘வ்யக்தரூப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நம் புலன்களுக்கு விஷயமாகாத இறைவன், அனைத்துமாய் விரிந்து பரந்திருக்கும் வடிவில் அனைவருக்கும் புலப்படும் வகையில் இருக்கிறார். எனவே அவர் ‘வ்யக்தரூப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்வயம்ப்ரகாஶமானத்வாத் ஒளியாய் சுடர்விடுகிறார்

யோகினாம் யோகிகளுக்குள்

வ்யக்தரூப இதி வா தனது உருவில்

வ்யக்தரூப: பகவான் ‘வ்யக்தரூப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஞானிகள் மற்றும் யோகிகளுக்குள் பகவான் ஒளியாய் தனது இயற்கை வடிவத்தில் சுடர்விடுகிறார். எனவே, அவர் ‘வ்யக்தரூப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. வ்யக்தரூப – தெளிவாகத் தெரிந்தவர் (யோகிகளுக்கு)

அவர் 5 புலன்களுக்குப் புலப்படாதவராக இருந்தாலும், அவரது தீவிர பக்தர்கள் மற்றும் யோகிகளின் தியானத்தில் அவர் உணரக்கூடியவர். ஸ்ரீஆதிசங்கரர் சொல்வது போல், ‘ஸ்தூலரூபேண வ்யக்தம் ஸ்வரூபம் அஸ்ய இதி வ்யக்தரூபஹ் அதாவது அவரது வடிவம் நன்கு வரையறுக்கப்பட்டு உணரக்கூடியது’.

ஒவ்வொருவருக்கும் அவரவர் பார்வையும், பகவானின் பதிப்பும் இருக்க வாய்ப்புள்ளது. ஒரு பக்தருக்கு வெளிப்படுத்தப்பட்ட வ்யக்தரூபம் மற்றொரு பக்தருக்கு வெளிப்படுத்தப்பட்ட வ்யக்தரூபத்திலிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கும்.

வ்யக்தரூபத்தின் இந்த மாற்று அர்த்தத்தை சங்கரர் தெளிவுபடுத்துகிறார், அங்கு அவர் ‘ஸ்வயம்ப்ரகாஷமானத்வாத் யோகினாம் வ்யக்தரூப இதி வா’ அதாவது யோகிகளுக்கு அவரது சொந்த பிரகாசத்தால் அவர் தெளிவான வடிவத்தில் இருக்கிறார்’ என்று கூறுகிறார். அடிப்படையில் பகவான் யோகிகளின் தியானத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதைத் தேர்வு செய்கிறார். தியான ஸ்லோகத்தில், ‘யோகிபிர் தியான காம்யம் – யோகிகளின் தியானத்தில் அவர் உணரக்கூடியவர்’ என்று ஏற்கனவே பார்த்தோம்.

முந்தைய நாமத்தில் நாம் அவரை அத்ரிஷ்யா என்று குறிப்பிட்டோம், இப்போது நாம் அவரை வ்யக்தரூபமாக சந்திக்கிறோம். வித்தியாசம் என்னவென்றால், முந்தைய நாமாவில் அவரை சாதாரண புலன் மூலம் பார்க்க முடியாது என்று விளக்கினோம். ஐந்து புலன்களின் செல்வாக்கைக் கடந்த அவரது பக்தர்களால் அவர் எளிதில் உணரப்படுகிறார் என்பதை தற்போதைய நாமத்தில் நாம் கவனிக்கிறோம்.

ஸ்ரீ ராதாகிருஷ்ண சாஸ்திரிகள், ஸ்லோகத்தில் உள்ள சா – வ்யக்தரூபஷ்சா – அத்ரிஷ்யமாக இருக்கும்போது கூட, பல அவதாரங்கள் மூலம் அவர் விகடரூபம் அல்லது அவரது பக்தர்களுக்கு வெளிப்படையான வடிவமாக இருப்பதைக் குறிக்கிறது என்று சுட்டிக் காட்டுகிறார்.

 அதஸ்I-புஷ்ப சம்காஶ் ஸ்ரீ-வத்ஸ கிருத லக்ஷ்ணஹ் |
ஸாஷாத் லஷ்ம்யா இவ ஆவாஸ ஸதா ப்ரதிபாதி மே || (பாரதம் – வன 188.96)
“நீல அல்லி மலர் போன்ற நிறமும், ஸ்ரீவத்ச மச்சத்தால் அலங்கரிக்கப்பட்டவருமான அவர், எனக்கு எப்போதும் லட்சுமியின் இருப்பிடமாகத் தோன்றுகிறார்”.
தஸ்ய தாம்ர-தலௌ தாதா! சரணவ் ஸூப்ரதிஷ் திதவ்
ஸுஜாத ம்ருது ரக்தாபி அங்குல் பிர் அலங்க்ருது ப்ராணதேந மாயா மூர்த்நா க்ரஹீத்வ ஹ்யபி வந்திதவ்  || (பாரதம் – வன 188.13)
“ஓ அன்பே! அழகான மென்மையான மற்றும் சிவப்பு கால்விரல்களால் அலங்கரிக்கப்பட்ட சிவப்பு மேற்பரப்புடன், நான் குனிந்த தலையுடன் அவரை வணங்கிய போது, ​​​​அவரது இரண்டு பாதங்கள் என் தலையில் உறுதியாக வைக்கப்பட்டன. 

தர்ம சக்கரம் எழுத்தாளர், முந்தைய நாமம் விஷ்ணுவின் பண்பை வெளிப்படுத்தியதாகக் குறிப்பிடுகிறார், அது நம் கருத்துக்கு அப்பாற்பட்டது, தற்போதைய நாமம் எல்லாவற்றிலும் அந்தர்யாமி (உள்ளே உள்ளவர்) என்று அவரது பண்பை வெளிப்படுத்துகிறது.

———

307-ஸஹஸ்ர ஜித் –
காலங்களை ஜெயிப்பவன் -பல பல சதுர் யுகங்களை யோகத்தால் ஜெயிப்பவன்

ஸஹஸ்ர யுக₃ஸங்க்₂யம் கல்பாந்தம் ஶயாநோ ஜயதீதி
ஸஹஸ்ர ஜித் ।

யாவத் யுகா நாம் விப்ரர்ஷே ஸஹஸ்ரம் பரிவர்த்ததே தாவத் ஸ்வபிமி –வன பர்வம் -192-40-
ஆயிரம் (சதுர் )யுகங்களின் காலம் யோக நித்திரையில் இருந்தேன் என்று எம்பெருமான்
மார்க்கண்டேயர் இடம் சொன்னதையும் தர்ம புத்திரனுக்கு சொல்கிறார்

ஆயிரம் யுகங்களாக எண்ணப்படும் பிரளய காலத்தை சயனித்துக் கொண்டே -யோக நித்ரையாலேயே -வெல்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆயிரக் கணக்கான அசுரர்களை வெல்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஆயிரக் கணக்கான அசுரர்களை வெல்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

————

  1. ஓம் ஸஹஸ்ரஜிதே நம:

ஸுராரீனாம் தேவர்களின் (மற்றும் நல்லோரின்) எதிரிகளான அஸுரர்களை

ஸஹஸ்ராணி ஆயிரக்கணக்கான

யுத்தே ஜயதீதி போர்க்களத்தில் வெல்பவராதலால்

ஸஹஸ்ரஜித் பகவான் ‘ஸஹஸ்ரஜித்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தேவர்களின் (மற்றும் நல்லோரின்) எதிரிகளான ஆயிரக்கணக்கான அஸுரர்களை போர்க்களத்தில் வெற்றி கொள்கிறார். எனவே, அவர் ‘ஸஹஸ்ரஜித்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

  1. சஹஸ்ரஜித் – ஆயிரக் கணக்கானவர்களை வென்றவர்

ஸ்ரீ ஆதிசங்கரர், ‘ஸுராரீணாம் சஹஸ்ராணி யுத்தே ஜயதி இதி ஷஸ்ரஜித் – ஆயிரக்கணக்கான அசுரர்களை போர்களில் வென்றதால், சஹஸ்ரஜித் என்று அழைக்கப்படுகிறார்’ என்கிறார். சஹஸ்ரம் என்றால் ஆயிரம் என்று பொருள் கொண்டாலும் அது எண்ணிலடங்கா என்று பொருள் கொள்ள வேண்டும், இது அடுத்த நாமத்தில் தெளிவுபடுத்தப்படுகிறது.

ஸ்ரீ பராசர பட்டர் இங்கு ‘ஆயிரம்’ என்பதை ஆயிரக்கணக்கான யுகங்கள் அல்லது காலங்களைக் குறிப்பிடுவதாக விளக்குகிறார், மற்ற அனைத்தும் பிரளயத்தில் அல்லது பிரளயத்தில் கரைந்திருக்கும் போது யோக-நித்ராவில் இருந்து அவர் வெற்றி பெறுகிறார்.


308-அநந்த ஜித்
எல்லை காண முடியாத திருமேனி -மார்கண்டேயர் வசனம்

பரிமித ஶிஶு ரூபஸ் யாப் யஸ்ய கஶ்சித் கதா₃சித் கத₂ஞ்சித₃பி மஹிமா வதி₄ப்ரகர்ஷோ
(ப்ரத₄ர்ஷகோ ) நாஸ்தீதி
அநந்த ஜித் ।

அந்தச் சரீரே தஸ்யாஹம் வர்ஷானாம் அதிகம் சதம் ந ஹி பச்யாமி தஸ்யாஹம் அந்தம் தேவஸ்ய
கர்ஹிசித் ஆஸாதயாமி நைவாந்தம் தஸ்ய ராஜன் மஹாத்மந–வனபர்வம் -192-25-
மார்க்கண்டேய மகரிஷி தர்மர் இடம்
அந்தக் குழந்தையின் திரு வயிற்றிலே நூறு ஆண்டுகள் இருந்தாலும் அவனது மேன்மையின் எல்லையைக் காண இயல வில்லை
அவனது எல்லையை நான் பெறாதவனாகவே இருந்தேன்

நந்தா விளக்கே அளத்ததற்கு அரியாய்

சிறு குழந்தையாக இருக்கின்ற போதும் யாரும் எப்போதும் எப்படியும் தமது மகிமையை அறிய முடியாதபடி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தம் அளப்பரிய சக்தியினால் எல்லோரையும் போர் முதலியவற்றில் வெல்பவர் –ஸ்ரீ சங்கரர் –

எண்ணற்ற பொருள்களை அடைந்து இருப்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

——–

  1. ஓம் அனந்தஜிதே நம:

ஸர்வாணி பூதானி அனைத்து ஜீவராசிகளையும்

யுத்தக்ரீடாதிஶு போர்க்களம் மற்றும் விளையாட்டுகளில்

ஸர்வத்ராசிந்த்யஶக்திதயா சிந்தனைக்கு எட்டாத தமது சக்தியால்

ஜயதீதி வெல்கிறார்

அனந்தஜித் எனவே, பகவான் ‘அனந்தஜித்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் (தேவாதி தேவர்கள் உட்பட) அனைத்து ஜீவராசிகளையும் போர்க்களம், மற்றும் விளையாட்டுக்களில் நம் சிந்தனைக்கு எட்டாத தமது சக்தியால் வெற்றி கொள்கிறார். எனவே, அவர் ‘அனந்தஜித்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———————

—————

301-யுகாதிக்ருத் –
அகடுகடந சாமர்த்யம் -உள்ளவன் -உதாரணம் -ஆலினிலைப் பள்ளியானாகவும் -பிரளயத்தின் போதும் யுகங்களுக்கு
ஆதியான சிருஷ்டியைச் செய்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

யுகம் முதலிய கால பேதங்களைத் தொடங்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

யுகங்கள் முதலிய கால வேறுபாடுகளைப் படைப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————

302-யுகாவர்த்த –
நான்கு யுகங்களையும் அவற்றின் தர்மங்களோடு மீண்டும் மீண்டும் படைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கால ரூபியாக யுகங்களைத் திருப்புபவர் -ஸ்ரீ சங்கரர் –

கிருத யுகம் முதலியவற்றை மீண்டும் சுழற்றுபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————-

303-நைகமாய-
சிறு குழந்தையாக உலகங்களை விழுங்குவது -ஒரே நீரில் பிடிப்பில்லாத ஆலிலையிலே படுப்பது முதலிய
அகத்கடிதந செயல்களை உடையவர் -மாயா என்று பொய் எனபது இல்லை -உண்மையான விஷயங்களிலும் மாயா என்ற சொல்
அதிகமாகப் பயன்படுத்தப் பட்டுள்ளதால் -ஸ்ரீ பராசர பட்டர் –

பெரு மாயை அல்லாமல் பல மாயைகளைத் தரிப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

பலவிதமான இச்சைகள் உள்ளவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————

304-மஹாசந-
உலகு அனைத்தையும் விழுங்கியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கல்பத்தின் முடிவில் எல்லாவற்றையும் உண்பவர் -ஸ்ரீ சங்கரர்-

மிக அதிகமான உணவு உண்பவர் -அதிக உணவில் ஆசையுள்ள துர்வாச முனிவருக்கு உணவு அளித்தவர் –
யஜ்ஞத்தில் ஆசை உள்ளவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————–

305-அத்ருச்ய-
நினைவிற்கு எட்டாத செய்கை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லோருடையவும் புத்தி இந்த்ரியங்களுக்கு புலப்படாதவர் -ஸ்ரீ சங்கரர்-

தம் தயை இன்றிக் காண முடியாதவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————–

306-வ்யக்தரூப –
தம்மை அடைந்த மார்க்கண்டேயர் முதலிய வர்களுக்குத் தெளிவாகக் காட்டிய திரு மேனி யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கண்ணுக்குப் புலப்படும் பிரபஞ்ச ரூபம் யுடையவர் -ஸ்வயம் பிரகாசமானவர் -யோகிகளுக்கு பிரகாசிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

தம் தயை இன்றி காண முடியா உருவம் உடையவர் -அவ்யக்த ரூபம் -என்ற பாடம் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————————-

307-சஹஸ்ரஜித் –
ஆயிரம் யுகங்களாக எண்ணப்படும் பிரளய காலத்தை சயனித்துக் கொண்டே வெல்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆயிரக் கணக்கான அசுரர்களை வெல்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஆயிரக் கணக்கான அசுரர்களை வெல்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

308-அனந்தஜித்-
சிறு குழந்தையாக இருக்கின்ற  போதும் யாரும் எப்போதும் எப்படியும் தமது மகிமையை அறிய முடியாதபடி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தம் அளப்பரிய சக்தியினால் எல்லோரையும் போர் முதலியவற்றில் வெல்பவர் –ஸ்ரீ சங்கரர் –

எண்ணற்ற பொருள்களை அடைந்து இருப்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

———–

‘யுகாதி’ என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். ‘க்ருத்’ என்றால் உருவாக்குபவர் என்று பொருள்.
ஆயிரம் சதுர்யுகங்களின் முடிவில், ஊழிக்காலத்தில், ஆலிலைக் கண்ணனாக அனைத்துலகங்களையும் உண்ட திருமால்,
உலகைப் படைக்கும் காலம் வரும்போது, தான் உண்ட உலகங்களை வெளிப்படுத்தி மீண்டும் யுகங்களின்
சுழற்சியைத் தொடங்கி வைக்கிறார். எனவே தான் திருமால் ‘யுகாதிக்ருத்’ என்றழைக்கப்படுகிறார்.
‘யுகாதிக்ருத்’ என்றால் யுகங்களை உலகில் மீண்டும் தொடங்கி வைப்பவர் என்று பொருள்.
அதுவே விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் 301-வது திருநாமம்.
நல்லதொரு தொடக்கம் பாதி வெற்றிக்குச் சமம். “யுகாதிக்ருதே நமஹ” என்று தினமும் சொல்லி வரும்
அன்பர்கள் வாழ்வில் செய்யும் அனைத்துச் செயல்களுக்கும் நல்ல தொடக்கம் ஏற்படும்படித் திருமால் அருள்புரிவார்.

‘ஆவர்த்த’ என்றால் சுழற்சி என்று பொருள். ‘யுக’ என்பது நான்கு யுகங்களைக் குறிக்கிறது.
‘யுகாவர்த்த:’ என்றால் யுகங்களைச் சுழற்றுபவர் என்று பொருள். யுகங்களோடு சேர்த்து,
அவற்றுக்குரிய தருமங்களையும் சுழலச் செய்வதால், ‘யுகாவர்த்த:’ என்று திருமால் அழைக்கப்படு
கிறார். அதுவே விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் 302-வது திருநாமம்.

“யுகாவர்த்தாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்க்கையில்
பல புதிய, நல்ல திருப்பங்கள் ஏற்படும்படித் திருமால் அருள்புரிவார்.

பல மாயங்களைச் செய்தபடியால் தான் ஆலிலைக் கண்ணனுக்கு ‘நைகமாய:’ என்று திருநாமம்.

‘மாய’ என்றால் வியப்பான செயல் என்று பொருள். ‘ஏக’ என்றால் ஒன்று. ‘நைக’ (ந+ஏக=நைக) என்றால் பல.
‘நைகமாய:’ என்றால் பலப்பல வியப்பான செயல்களைச் செய்பவர் என்று பொருள்.
அதுவே சஹஸ்ரநாமத்தின் 303-வது திருநாமம்.
“நைகமாயாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் தீராத துன்பங்களும் தீரும்படித் திருமால் அருள்புரிவார்.

‘அசன’ என்றால் உணவு என்று பொருள். ‘மஹாசன:’ என்றால் பெரிய உணவு என்று பொருள்.
ஊழிக் காலத்தில் ஆலிலைக் கண்ணனாக வந்து ஒட்டு மொத்த உலகங்களையுமே தனக்கு உணவாகக் கொண்டு உண்டபடியால்,
திருமால் ‘மஹாசன:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே சஹஸ்ரநாமத்தின் 304-வது திருநாமம்.
இங்கே ‘மஹாசன:’ என்பதற்கு மிகப்பெரிய உணவை உண்டவர் என்று பொருள்.
“மஹாசனாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் பசி நோயால் துன்புறாதபடித் திருமால் காத்தருள்வார்.

சாதாரண மனிதர்களாலோ அல்லது
மார்க்கண்டேயர் தவம் மிக்கவர்களாலோ கூட அறியமுடியாத மேன்மை பெற்றவராகத் திருமால் திகழ்வதால்,
அவர் ‘அத்ருச்ய:’ என்றழைக்கப்படுகிறார்.
‘த்ருச்ய’ என்றால் (இவ்விடத்தில்) அறியப்படுபவர் என்று பொருள். ‘அத்ருச்ய:’ என்றால் அறிவதற்கு அரியவர் என்று பொருள்.
அதுவே சஹஸ்ரநாமத்தின் 305-வது திருநாமம்.
“அத்ருச்யாய நம:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு அறியாததை அறிவிக்கும்
குருவாகத் திருமால் இருந்து, நல்லறிவை அருள்வார்.

‘வ்யக்த’ என்றால் வெளிப்படுத்தப்பட்ட என்று பொருள். ‘ரூப’ என்றால் வடிவம்.
‘வ்யக்தரூப:’ என்றால் வடிவத்தை வெளிப்படுத்துபவர் என்று பொருள்.
தனது கருணையால் தன் பக்தர்களுக்குத் தன் வடிவத்தைத் திருமால் வெளிப்படுத்திக் காட்டுவதால்,
‘வ்யக்தரூப:’ என்று திருமால் அழைக்கப்படுகிறார். அதுவே சஹஸ்ரநாமத்தின் 306-வது திருநாமம்.
“வ்யக்தரூபாய நம:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் தன் வடிவையும் மேன்மைகளையும்
திருமால் நன்கு வெளிப்படுத்திக் காட்டுவார்.

ஜித்’ என்றால் வென்றவர். ‘ஸஹஸ்ர’ என்றால் ஆயிரம். ஆயிரம் சதுர்யுகங்கள் அளவுகொண்ட ஊழிக் காலத்தை
ஆலிலையில் படுத்திருந்த படியே வென்று, காலத்தை வென்றவராகத் திருமால் திகழ்வதால்
அவர் ‘ஸஹஸ்ரஜித்’ என்றழைக்கப்படுகிறார். ‘ஸஹஸ்ரஜித்’ என்றால் ஆயிரம் சதுர்யுகக் காலத்தை வென்றவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 307-வது திருநாமம்.

“ஸஹஸ்ரஜிதே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் காலத்தை வென்று
காவியம் ஆகி வேதனை தீர்க்கும் வெற்றித் திருமகன்களாகத் திகழ்வார்கள்.

‘அந்தம்’ என்றால் எல்லை என்று பொருள். ‘அனந்தம்’ என்றால் எல்லையற்றது என்று பொருள்.
யாராலும் எல்லை காண முடியாத படியான உயர்ந்த மகிமை கொண்டவராகத் திருமால் திகழ்வதால்,
‘அனந்தஜித்’ என்று அவர் போற்றப்படுகிறார். ‘அனந்தஜித்’ என்றால் எல்லையில்லாத மகிமை பெற்றவர் என்று பொருள்.
அதுவே சஹஸ்ரநாமத்தின் 308-வது திருநாமம்.

“அனந்தஜிதே நம:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் சிறந்த
மகிமைகளும் திறமைகளும் பெருமைகளும் கிடைக்கும்படி திருமால் அருள்புரிவார்.

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply