ஸ்ரீ பகவத் குண தர்ப்பணம்–ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம வியாக்கியானங்கள் — ஸ்லோகம் –32–

பூத பவ்ய பவன் னாத பவன பாவநோ அநல
காமகா காம க்ருத் காந்த காம காம ப்ரத ப்ரபு–32-

இந்த முப்பத்திரண்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

291-பூதபவ்யபவன்னாத:, 292.பவன:, 293. பாவன:, 294. அனல: |

295-காமஹா, 296.காமக்ருத், 297. காந்த:, 298. காம:, 299. காமப்ரத:, 300. ப்ரபு: ||

பூதபவ்யபவந்நாத: – கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலத்தும் உள்ள அனைத்துக்கும் நாதர் ஆகையாலே பூதபவ்யபவந்நாத:
பவந: – எங்கும் சென்று தூய்மையை உண்டாக்குபவர் ஆகையாலே பவந:
பாவந: – தம்மால் தூய்மை அடைந்தோர் தாம் பிறரைத் தூய்மைப் படுத்தும் அளவிற்குச் செய்பவர் ஆகையாலே பாவந:
அநல: – தம் பக்தர்களுக்கு எத்தனை அருள் செய்த போதும் போதாமையால் பரபரப்பு கொண்டவர் ஆகையாலே அநல:
காமஹா – தம்மிலும், தம் குணங்களிலும் ஈடுபட்டவர்களை மற்றை காமங்கள் அனைத்தையும் அறவே மாற்றும் இயல்பினர் ஆகையாலே காமஹா
காந்த: – ரசிக்கத் தெரிந்தவர்களுக்குத் தம் வடிவழகைக் காட்டியே உய்யக் கொள்கிறவர் ஆகையாலே காந்த:
காம: – விரும்பப் படும் அனைத்தினும் சிறந்த காமமாக, குணங்கள் நிறைந்தவர் ஆகையாலே காம:
காமப்ரத: – தம்மை அண்டினோர் வேண்டுவன தந்தருளும், தம்மை வேண்டுவோருக்குத் தம்மையே தந்தருளும் இயல்பினர் ஆகையாலெ காமப்ரத:
ப்ரபு: – அவ்வாறு தம்மையே தந்து அவர்களைத் தமக்கே எழுதி வாங்கிக் கொள்பவர் ஆகையாலே ப்ரபு:

கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலமென அனைத்துக் காலங்களிலும் உயிரினங்கள் அனைத்தாலும் வேண்டப்படுபவன் {பூதபவ்யபவந்நாதன்},
தன்னை வழிபடுபவர்களிடம் கருணைப் பார்வையைச் செலுத்தி அவர்களை மீட்பவன் {பவன்},
புனிதமானவர்களை மேலும் புனிதப்படுத்துபவன் {பாவநன்},
ஆன்மாவில் உயிர் மூச்சைக் கலக்கச் செய்பவன் (அல்லது, விடுதலையடைந்தவர்களையும் {முக்தி பெற்றவர்களையும்},
விடுதலை யடையாதவர்களையும் பல்வேறு வடிவங்களை ஏற்றுக் காப்பவன்) {அநலன்},
விடுதலையடைந்தோரின் {முக்தி அடைந்தோரின்} ஆசைகளைக் கொல்பவன் (அல்லது, தன்னை வழிபடுபவர்களின்
மனங்களில் தீய ஆசைகள் எழாமல் தடுப்பவன்) {காமஹா},
காமனின் தந்தை (ஆசை அல்லது காமத்தின் கோட்பாடு) {காமக்ருத்},
மிக இனிமையானவன் {காந்தன்},
அனைத்து உயிரினங்களாலும் விரும்பப்படுபவன் {காமன்},
அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை அருள்பவன் {காமப்ரதன்},
அனைத்துச் செயல்களையும் நிறைவேற்றும் திறன் கொண்டவன் {ப்ரபு};(45)

பெருமைகளை வெளிப்படுத்தும் விஸ்வரூபம் –

291-பூத பவ்ய பவன் நாத –மேற்கண்ட பெருமையை முக்காலத்திலும் உடையவர் –
292-பவன -காற்று போலே எங்கும் செல்பவர் –
293-பாவன -தூய்மை அளிக்கும் கங்கைக்கும் தூய்மை அளிப்பவர் –
294-அநல -தன் அடியார்க்கு எத்தனை கொடுத்தாலும் போதும் என்ற மனம் இல்லாதவர் –
295-காமஹா -தன்னையே வேண்டுபவர்களுக்கு உலக இன்ப ஆசையை ஒழிப்பவர் –
296-காமக்ருத்-அவரவர் விருப்பப்பட்ட பலனைக் கொடுப்பவர் –
297-காந்த -தன் மென்மையான திருமேனி அழகாலே காண்பவரை ஈர்ப்பவர் –
298-காம -வண்மை எளிமை ஆகிய குணங்களால் அனைவராலும் விரும்பப் படுவார்
299-காமப்ரத -நிலையற்ற செல்வத்தையும் நிலையான தன்னையும் வேண்டியவற்றை அளிப்பவர் –
300-ப்ரபு -மேற்சொன்ன சிறப்புகளால் காண்பவர்களின் கண்ணையும் மனத்தையும் பறிப்பவர் –

3-12-விஸ்வ ரூபம் —272-300-திரு நாமங்கள் -29-திரு நாமங்கள்

291-பூத பவ்ய பவன் நாத –

ஏவம் ப்ராயம் ஸ்வாம்யம் ஐஶ்வர்யம் வா ந கேவலம் அத்₃ய, கிந்து த்ரி காலே விதி
பூ₄த ப₄வ்ய ப₄வந் நாத₂꞉। யதா
பூத பவ்ய பவந் நாத கேசவ கேசி ஸூதந பிரகாரா (தஞ்சம் )சர்வ வ்ருஷ்ணீ நாம் -ஆபத் ஸூ அபயதோ -அரிஹா –சபா பர்வம்-31-11-
அனைத்துக் காலங்களிலும் உள்ள அனைத்துக்கும் கிருஷ்ணனே ரக்ஷகன்
அவனே கேசி என்னும் அசுரனை அழித்தவன்
வ்ருஷ்ணி வம்சத்தில் ஆபத்து உண்டான காலங்கள் அனைத்திலும் இவனே அபயம் அளித்தவன் –

போகின்ற காலங்கள் போய காலங்கள் போகு காலங்கள் தாய் தந்தை யுயிர் ஆகின்றாய் உன்னை அடைந்தேன் விடுவேனோ

மூ வுலகுக்கும் நாதனே பரமா -2-6-10-

இப் பெருமைகள் இக் காலத்தில் மட்டும் இல்லாமல் முக் காலங்களிலும் உள்ளவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

முக் காலங்களிலும் உள்ளவர்களால் யாசிக்கப் படுபவர் அவர்களைக் கட்டுப் படுத்துபவர் -ஆசீர்வதிப்பவர் –ஆள்பவர்-ஸ்ரீ சங்கரர் –

நித்ய சம்சாரிகள் -அறிவீனர்கள் -பக்தர்கள் இவர்களால் வேண்டப்படுபவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

—————

  1. ஓம் பூதபவ்யபவன்னாதாய நம:

பூதபவ்யபவதாம் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் (ஆகிய முக்காலங்களிலும்)

பூதக்ராமாணாம் உயிர்த்தொகுதிகளுக்கு

நாத: எஜமானனாய் இருக்கிறார்

தைர்யாச்யதே அவர்களால் வணங்கப்படுகிறார் (அர்ச்சிக்கப்படுகிறார்)

தானுபதபதி (நல்வழியில் அவர்கள் நடவாதபொழுது) அவர்களை அல்லலுக்கு உட்படுத்துகிறார்

தேஶாமீஶ்டே ஶாஶதீதி வா அவர்களை ஆணையிட்டு ஆள்கிறார்

பூதபவ்யபவன்னாத: எனவே, பகவான் ‘பூதபவ்யபவன்னாத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் முக்காலங்களிலுமுள்ள உயிர்த்தொகுதிகளால் (உயிரினங்களால்) வணங்கப்படுகிறார். தவறான வழியில் நடக்கும் பொழுது அல்லல்களுக்கு உட்படுத்துகிறார். அனைவருக்கும் எஜமானனாய் ஆணையிட்டு ஆள்கிறார். எனவே, அவர் ‘பூதபவ்யபவன்னாத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. பூத-பவ்ய-பவன்-நாதா – அவர் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தின் இறைவன்.

இது போன்ற ஒரு நாமத்தை நாம் ஏற்கனவே ஸ்லோகம் 1 இல் பார்த்திருக்கிறோம். ‘பூத-பவ்ய-பவத்-பிரபுஹ்’. பகவான் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தின் இறைவன் அல்லது அவர் காலத்தின் மீது முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டவர், காலமற்றவர்

தற்போதைய நாம ஸ்ரீ ஆதிசங்கரர், ‘பூதபவ்யபவதாம் பூதக்ரமாணாம் நாதா, தைஹ் யாச்யதே தான் உபதபதி தேஷாம் ஈஷ்டே சாஸ்தி இதி வா பூத-பவ்ய-பவன்-நாதா’ என்று விளக்கம் தருகிறார், அதாவது அவர் கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்காலத்தில் வணங்கப்படுபவர். அனைத்தையும், அவர் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறார் மற்றும் நிர்வகிக்கிறார்.

இரண்டு நாமங்களும் ஒன்றாக எடுத்துக்கொண்டால், பகவான் காலமற்றவர் என்றும், அவர் எல்லாக் காலங்களிலும் எல்லா உயிர்களுக்கும் இறைவன் என்றும் சித்தரிக்கிறது.


292-பவந-
சஞ்சரிப்பவன் -காற்று போலே
மீண்டும் 817-தானே வந்து பாபம் தாபம் தீர்த்து அருளி

ஏவம் ஸர்வதா₃ ஸர்வத்ர ஸ்வபா₄வா தே₃வ புநாதீதி(சஞ்சரித்துக் கொண்டே இருக்கும் )
பவந ꞉ । பவிர் க₃த் யர்த₂꞉ ।
ஏதத்₃க₃ந்தேந (அவன் இடம் உள்ள வாசனையால் ஏக தேச சக்தியால் )க₃ந்த₄வாஹஸ்யாபி ஸதத க₃தித்வம்

பவி கத் யர்த்த –செல்லுதல் என்ற பொருள் தருகின்ற பூ என்பதில் இருந்து
செல்பவன் என்ற பொருள் கொண்ட பவந என்ற பதம் உண்டாகிறது

காண்கின்ற இக் காற்று எல்லாம் நானே என்னும் -5-6-3-

வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் -பெரிய திருமொழி -1-10-9-
வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்து -5-7-7-
அமலங்களாக விளிக்கும் கமலக் கண்ணன் -1-9-9-

எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் இயற்கையாகவே செல்பவர் —
அனைத்தையும் தூய்மையாக்கும் இக் குணத்தின் லேசம் இருப்பதால் தான்-பவன எனப்படும்
காற்றும் எங்கும் சஞ்சரிக்கின்ற்றது—காற்று-ஸதத க₃தி—ஸ்ரீ பராசர பட்டர் –

பரிசுத்தப் படுத்துபவர் -ஸ்ரீ சங்கரர் –

அரசர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்து காப்பவர்- ஸ்ரீ சத்ய சந்தர்-

—————

  1. ஓம் பவனாய நம:

பவத தூய்மையாக்குகிறார்

இதி எனவே

பவன: பகவான் ‘பவன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரையும் தூய்மையாக்குகிறார். எனவே பகவான் ‘பவன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘பவன: பவதாமஸ்மி’ (ஸ்ரீமத் பகவத்கீதை 15.13)

ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: தூய்மை செய்வனவற்றுள்ளே காற்று நான்

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

————

  1. பவனா – காற்றைப் போல் அலைபவன்

இந்த நாமத்திற்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. மூலச் சொல் ‘பவி’ என்பது ‘சுத்திகரிப்பு’ மற்றும் ‘பயணம்’ ஆகிய இரண்டையும் குறிக்கும். ஸ்ரீ ஆதிசங்கரர், ‘பவதே இதி பவனாஹ் அதாவது தன்னை அணுகுபவர்களை தூய்மைப்படுத்துகிறார்’ என்று முதல் பொருள் கொள்கிறார்.

ஸ்ரீ பராசர பட்டர் அதே சொற்றொடரை ‘பவதே இதி பவனா’ என்று வழங்குகிறார், ஆனால் நடமாடுபவர் என்ற பொருளில். அவர் எல்லா இடங்களிலும் எந்த தடையும் இல்லாமல் எல்லா நேரங்களிலும் சுற்றி வருகிறார். இதைச் செய்வதற்கான காற்றின் திறன் இந்த விஷயத்தில் அவரது திறனின் ஒரு பகுதியே.

இருவரும் பகவத் கீதை அத்தியாயம் 10 வது வசனம் 31 ஐக் குறிப்பிடுகின்றனர், இது ‘பவனா பவதாம் அஸ்மி’ என்று கூறுகிறது, இது ‘சுத்திகரிப்பவர்களில் நான் காற்று அல்லது நடமாடுபவர்களில் நான் காற்று’ என்று பொருள் கொள்ளலாம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், சுத்திகரிப்பு பாத்திரத்தில் அல்லது சுற்றிச் செல்லும் பாத்திரத்தில் பகவானை காற்றுடன் அடையாளப்படுத்துவதை பொருள் குறிக்கிறது.

ஸ்ரீ சத்யதேவோ வசிஷ்டர் இந்த பெயருக்கு ‘தூய்மையானவர்’ என்று பொருள் தருகிறார், மேலும் அடுத்த பெயருக்கு அவர் தூய்மையானவர் (பாவனா), அவர் மற்ற அனைத்தையும் (பாவனா) தூய்மைப்படுத்துகிறார் என்று விளக்கம் தருகிறார்.


  1. பாவனா – அனைத்தையும் தூய்மைப்படுத்துபவர்

முந்தைய நாமத்தைப் போலவே இந்த நாமத்திற்கும் 2 விளக்கங்கள் உள்ளன. ஸ்ரீ ஆதிசங்கரர், ‘பாவாயதி இதி பாவனா – அனைவரையும் அசையச் செய்பவர்’ என்ற கருத்தை எடுத்துக் கொள்கிறார். அவர் நகரும் அனைத்திற்கும் சக்தியைக் கொடுக்கிறார். தைத்ரிய உபநிஷதம், ‘பீஷா அஸ்மாத் வாத பவதே – உண்மையாகவே காற்று கூட அவனது கட்டளைக்கு பயந்து நகர்கிறது’ என்று கூறுகிறது.

ஸ்ரீ பராசர பட்டர் பாவாயதி என்றால் சிறந்த சுத்திகரிப்பாளர் என்று கருதுகிறார். பிரார்த்தனை, வழிபாடு, அவரது பெயர்களை உச்சரித்தல் அல்லது அவரை தியானம் செய்வதன் மூலம் அவருடன் தொடர்பு கொள்ளும் எவரையும் அவர் தூய்மைப்படுத்துகிறார்.

பிரபலமான வசனம் -: ‘கோவிந்தேதி சதா ஸ்நானம் கோவிந்தேதி சதா ஜபம் கோவிந்தேதி சதா தியானம் சதா கோவிந்தகீர்த்தனம்’–கோவிந்தரின் நாமத்தை உச்சரிப்பதால் அகமும் புறமும் தூய்மை அடையும்.

மற்றொரு பிரபலமான வசனம் செல்கிறது – ‘மானசம் வாச்சிகம் பாவம் கர்மணா ஸமுபார்ஜிதம் ஸ்ரீராம ஸ்மரனேனைவ வ்யபோஹயதி ந சம்ஷயஹ்’–ராமனை நினைத்தாலே நம் எண்ணம், பேச்சு, செயல் ஆகிய பாவங்கள் அனைத்தும் கழுவப்படுகின்றன.

விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் பூர்வாங்க ஸ்லோகங்களில் “பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களனாம் ச மங்களம்”, அதாவது அவர் தூய்மையானவர்களில் தூய்மையானவர், மேலும் மங்களகரமானவர்களில் மிகவும் மங்களகரமானவர்.

ஒவ்வொரு விழாவுக்கும் முன்பும் ‘அபவித்ரஹ பவித்ரோ வா ஸர்வாவஸ்தாந் கதோபி வா யஹ ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ச பாஹ்யாப்யந்தரஸ் ஶுசிஹ்’ என்ற மந்திரத்தை உச்சரிப்போம்.–எவரேனும் தூய்மையற்றவராகவோ அல்லது கெட்டுப் போனவராகவோ இருந்தாலும், தாமரைக்கண்ணான விஷ்ணுவை நினைத்து அவர் தூய்மையடைகிறார்.

————-

293-பாவந-
தூய்மை அளிப்பவன் -பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களாநாம் ச மங்களம் –

ததா₂ ஸ்வ ஸம்ப₃ந்தி₄நோ க₃ங்கா₃தீ₃ன் ஜக₃த் புநாநான் ப்ரயோ ஜயதீதி
பாவந ꞉ ।யதா-

பாவந சர்வ லோகாநாம் த்வமேவ ரகு நந்தன -உத்தர -32-9-
அகஸ்தியர்-வார்த்தை -அனைத்து உலகங்களுக்கும் தூய்மையை அளிப்பவன் நீ மட்டுமே ஆவாய்

தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே -(ஸூ ரேஸ்வரன் பாவனன் )2-8-5-
திரு வாறன் விளை யுறை தீர்த்தன் -7-10-10
கரம் நான்குடையான் பேரோதி தீர்த்த கரராமின் -இரண்டாம் திரு -14-

பூதாஸ்மி ரகு நந்தன சபரி வார்த்தை

உலகைத் தூய்மை யாக்கும் கங்கை முதலியவற்றுக்கும் அத் தூய்மை தம் தொடர்பால் உண்டாகும்படி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

காற்றை வீசும்படி செய்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அரசர்கள் காப்பதற்கு காரணமாக இருப்பவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

————

  1. ஓம் பாவனாய நம:

பாவயதீதி அனைவரையும் செலுத்துகிறார்

பாவன: எனவே, பகவான் ‘பாவன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரையும் செலுத்துவதால் (காற்றையும் வீசும்படி செய்வதால்) பகவான் ‘பாவன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பீஷாஸ்மாத்வாத: பவதே (தைத்ரிய உபநிஶத் 2.8)

தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இவரிடம் உள்ள பயத்தினாலேயே (இவரது ஆணைக்குக் கட்டுபட்டே) காற்று வீசுகிறது,

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————

294-அநல-திருப்தி பிறவாதவன்

ஏவம் ப₃ஹு முக₂முப க்ருத்ய ச, நாலம் ந பர்யாப்தம் அஸ்ய அநுக்₃ரஹ மஹிம இதி
அநல꞉ ।
அதந்த்₃ரோ தே₃வ꞉ । ஈத்₃ருக்ச் ச₂க்தி ஶீகர அநுவேதா₄ல் லௌகிக அலஸ்யாப் யநலத்வம் ;

பக்தர்களுக்கு எல்லாம் செய்தாலும் போதும் என்று இருக்காமல் என் செய்வன் என்றே இருப்பவன்
சோம்பாது பல்லுலகம் படைத்து-அலம் புரிந்த நெடும் தடக்கை அமரர் வேந்தன் –
அவன் சக்தியால் அக்னியும் போதும் என்று இல்லாமல் மேல் மேல் எரிந்து கொண்டே இருக்கும்

ஹவிஷா க்ருஷ்ண வர்த்மா பூய ஏவ அபி வர்த்ததே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -4-10-3-
யாகத்தில் உள்ள அக்னியானது அப்படி அனைத்தையும் எரித்து ஓங்கியபடி உள்ளதோ
அதே போன்று சிற்றின்பம் என்னும் தீயானது அனுபவிக்க அனுபவிக்க ஓங்கியபடியே உள்ளது –

உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி -பெரிய திருவந்தாதி -53
ருணம் ப்ரவ்ருத்த மிவமே ஹ்ருதயான் நாப சர்ப்பதி-

பல வகைகளால் அடியவர்க்கு அனுக்ரஹித்தும் அது போதாது என்று நினைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அநல் -நெருப்பு -அவன் அனைத்தும் செய்து அளித்தாலும் போதாது என்று இருக்குமா போலே
அவன் சம்பந்தத்தால் நெருப்புக்கு இந்த பெயர்

அனம் எனப்படும் பிராணனை அலங்கரிக்கும் ஜீவாத்மாவே இருப்பவர் -அளவிட முடியாதவர் -உயிர்களைக் கிரஹிப்பவர் -நலம் என்னப்படும் மணம் இல்லாதவர் -போதும் என்பது இல்லாதவர் –
அனுபவிக்க அனுபவிக்காத தெவிட்டாதவர் -உலகங்களை ஜீவிக்கச் செய்பவர் –ஸ்ரீ சங்கரர் –

தடுக்க முடியாதவர் -முக்ய பிராணனை பக்தனாகக் கொண்டவர் -உலகப் படைப்பு முதலியவகைகளில்
போதும் என்ற நினைவு இல்லாதவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

————

  1. ஓம் அனலாய நம:

அனான் ப்ராணான் ‘அன’ என்றால் ப்ராணனை (மூச்சுக்காற்றைக்) குறிக்கும்

ஆத்மவத்வேன லாதீதி உள்ளுறை ஆத்மாவாக அதை உள்ளிழுப்பதால்

ஜீவ: ஜீவாத்மாவை

அனல: ‘அனல’ என்று அழைப்பார்கள். (பரமாத்மாவும் ஜீவாத்மாவும் வேறல்ல என்பதால்) பகவான் ‘அனல’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், ஜீவாத்மாவின் வடிவில் மூச்சுக்காற்றை (ப்ராணனை) உள்ளிழுக்கிறார் (அனைவரையும் வாழவைக்கிறார்). எனவே, அவர் ‘அனல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அத்வைதத்தின் படி ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்றே. ஆச்சார்யாள் இதை முன்னுரை பகுதியில் பல ஶ்ருதி, ஸ்ம்ரிதி, புராண வாக்கியங்களை மேற்கோள் காட்டி விரிவாக விளக்கியுள்ளார்.

னலதேர் கந்தவாசினோ ‘னல’ என்றால் மணத்தைக் குறிக்கும்

‘நஞ்’பூர்வாத்வா அதற்கு எதிர்மறையாய் (‘அ’ என்ற சொல் சேர்வதன் மூலம்)

அனல: பகவான் ‘அனல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘னல’ என்றால் மணத்தைக் (வாசனை) குறிக்கும். எவ்வித மணமும் அற்றவர் என்பதால் பகவான் ‘அனல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எதிர்மறைப் பொருளைக் குறிக்க ‘னல’த்தின் முன் ‘அ’ சேர்ந்து, ‘அனல:’ என்று உருவாகிறது.

‘அகந்தம் அரசம்’ (பரப்ரஹ்மம்) மணமற்றது, சுவையற்றது.,

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

பரப்ரஹ்மத்தை சுவைத்தோ, முகர்ந்தோ உணர இயலாது என்பதே இதன் உட்பொருளாகும்.

ந அலம் பர்யாப்தமஸ்ய வித்யத இதி வா அவருக்கு முடிவு, எல்லைநிலம் என்பதே கிடையாது (அலம், பர்யாப்தம் என்றால் முடிவு என்று பொருள்)

அனல: எனவே பகவான் ‘அனல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுக்கு முடிவோ, எல்லை என்பதோ கிடையாது. எனவே, அவர் ‘அனல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

  1. அனலா – தனது கருணையால் ஒருபோதும் திருப்தி அடையாதவர்

‘அலம்’ என்ற சொல்லுக்கு ‘திருப்தி’ என்று பொருள், ‘அனலம்’ என்பது ஒருபோதும் திருப்தி அடையாத நிலை.

ஸ்ரீ ஆதி சங்கரர் சொல்வது போல் ‘ந அலம் பர்யாப்தம் அஸ்ய வித்யதே இதி அனலஹ் – எதிலும் திருப்தி இல்லை, எ.கா. நெருப்பு, ஏனென்றால் அது எவ்வளவு எரிபொருளைச் செலவழிக்கிறதோ, அவ்வளவு அதிகமாக தேவைப்படுகிறது.

பகவான் அக்கினியின் குறியீடாக இருக்கிறார். உடல் தொடர்ந்து உயிர் வாழ உடலில் ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பம் அவசியம். உடம்பில் உள்ள உயிர்களைத் தாங்கும் நெருப்பாக இருப்பதால், அனலை என்று அழைக்கப்படுகிறார்.

பகவத் கீதை அத்தியாயம் 15 வது 14வது வசனத்தில் பகவான் கிருஷ்ணர் கூறுகிறார் –

‘அஹம் வைஷ்வாணரோ பூத்வா ப்ராணிநாம் தேஹம் ஆஷ்ரிதஹ் – நான் ஒவ்வொரு உயிரிலும் வசிக்கும் வைஷ்வாணரா என்ற நெருப்பு’. நம் பாவங்கள் அனைத்தையும் எரிக்கும் நெருப்பாகவும் அவர் இருக்கிறார், எனவே அவர் இந்த அர்த்தத்திலும் அனலா இருக்கிறார்.

மற்ற பொருள் ‘ஆனான் பிராணன் ஆத்மாத்வேன லதி இதி ஜீவஹ அனலஹ் – ஜீவா ஜீவனுடன் உறுதியாக இணைந்திருப்பதால் அவர் அனலா என்று அழைக்கப்படுகிறார்.’ இதுவும் ‘அகந்தம் அரசம் – மணமோ சுவையோ இல்லாமல்’ என்ற விளக்கத்துடன் ஒத்துப்போகிறது.

நாம் எவ்வளவு பெரிய பாவங்களைச் செய்தாலும், பக்தியுடனும், மனப்பூர்வமாகவும் அவரிடம் சரணடையும் போது, ​​அவருடைய தயா, அந்த பாவங்களையெல்லாம் நுகர்ந்து (மன்னிக்கும்) என்று தயாசதகத்தில் ஸ்ரீ தேசிகரால் அவரது தயாவின் தீராத தன்மை பாடப்பட்டுள்ளது. சரணாகதி என்ற எளிய செயலை அவருக்குச் செய்தால் (தயா ஷதகத்தின் ஸ்லோகம் 29) அவர் இவற்றையெல்லாம் மன்னிப்பார்.

ஸ்ரீ வி.வி. ராமானுஜன் பெரிய திருவந்தாதியைப் பற்றிக் குறிப்பிடுகிறார் – “உன் அடியார்க்கு என் செய்வான் என்ற இருத்தி” அதாவது “உன் பக்தர்களுக்கு அடுத்து என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருக்கிறாயே “.


295-காமஹா-
ஆசைகளைக் களைபவன்–இப்படிப்பட்ட குண அனுபவத்தால் காமம் ஹந்தா

ஏவம் ப்ரகார ஸ்வ கு₃ண த₃ர்ஶிநாம் விஷயாந்தர விஷய ஸ்ப்ருஹாம் ஹந்தீதி
காமஹா

ந காம கலுஷம் சித்தம் மம தே பாதயோ ஸ்திதம் –ஜிதந்தே -13-
உன் திருவடிகளில் ஈடுபட்ட மனஸ் அலை பாயாமல் உள்ளது

ஸ்ரேரத்ரி யஸ்ய ச அகாமஹதஸ்ய –தைத்ரியம் -8–
சிற்றின்பத்தால் கவரப்படாமல் முக்தன் அனுபவிக்கும் ஆனந்தம் அடைகிறான்

யதிச் சந்தோ ப்ரஹ்ம சர்யம் சரந்தி –கடவல்லி -2-15- அடையப்பட வேண்டிய வஸ்து குறித்து ப்ரஹ்மசர்யம் கைக் கொள்கின்றனர்

சோலை மலை இனக் குறவர்கள் புது ஆவி காட்டி நின் பொன்னடி வாழி -என்ன வைப்பான்

சர்வ ஜென்மங்களிலும் ஸ்ரீ வைஷ்ணவனாக அடியார் அடியார் ஆக்க வேண்டும் பிரார்த்தனை
வேறே இடம் செல்வது நின் சாயை அழிவு கண்டாய்
மற்றை நம் காமங்கள் மாற்று

தம் குணங்களில் ஈடுபட்டவர்க்குப் பிற விஷயங்களில் ஆசையைத் தவிர்ப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

மோஷத்தை விரும்பும் பக்தர்களுக்கு பிற விஷயங்களில் ஆசையைத் தவிர்ப்பவர் -விரோதிகளை அழிப்பவர் –ஸ்ரீ சங்கரர்-

காமத்தை அழிப்பவர் -நல்லோர்களின் ரோகங்களைப் போக்குபவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

—————

  1. ஓம் காமக்னே நம:

காமான் ஹந்தி அனைத்து ஆசைகளையும் வேரறுக்கிறார்

முமுக்ஷூணாம் முக்தியை விழைவோருக்கும்

பக்தானாம் பக்தர்களுக்கும்

ஹிம்ஸகானாம் துன்பங்களைத் தரவல்ல (எதிரியான)

சேதி காமஹா எனவே, பகவான் ‘காமஹா:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பக்தர்கள், மற்றும் முக்தியை விழைவோர்களுக்கு, அவர்களுக்குத் தடங்கலாய், எதிரியாய் உள்ள காமங்களை (ஆசைகளை) வேரறுக்கிறார். எனவே, பகவான் ‘காமஹா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

  1. காமஹா – ஆசைகளை அழிப்பவர்

காமம் என்பது உலகப் பொருட்களின் மீது ஆசை மற்றும் ஹா என்பது அழிப்பவர். ‘காமான் ஹந்தி இதி காமஹா – தனது பக்தர்களின் மனதில் உள்ள பொருள் ஆசைகளை அழிப்பவர்’.

பொருள் ஆசைகளை அழித்து விடுதலை ஆசையை நிறைவேற்றுகிறார். சுவாமி சின்மயாஆனந்தா குறிப்பிடுவது போல் இந்த இரண்டு வகையான ஆசைகளும் ஒன்றாக இருக்க முடியாது. ஆன்மிக ஆசையை நிறைவேற்றுவதற்கு முன், வெளிப்புற பொருள் மற்றும் சிற்றின்பத்தின் மீதான ஆசைகள் அழிக்கப்பட வேண்டும். ஆசை எழும்போது, ​​​​இரண்டு சாத்தியங்கள் உள்ளன – ஒன்று ஆசை நிறைவேறும், அல்லது அது இல்லை. அது நிறைவேறினால், அதன் விளைவு மேலும் ஆசை – பேராசை. அது நிறைவேறவில்லை என்றால், விளைவு கோபமும் விரக்தியும்தான். எனவே உள் அமைதிக்கு, ஆசை அழிக்கப்பட வேண்டும், அவருடைய கருணை மட்டுமே இது நிகழும்.

இந்த நாமத்திற்கு ஸ்ரீ சத்யதேவோ வசிஷ்டர் மிக அருமையான விளக்கம் தருகிறார். ஒரு பெரிய மலையை வெற்றிகரமாக ஏறிய ஒருவர் சிறிய மலையை வெல்ல விரும்பமாட்டார். அதுபோலவே பரமாத்மாவின் மீது ஆழ்ந்த ஆசையை வளர்த்துக் கொண்டவன் எதையும் குறைவாகவோ அல்லது வேறு எதையும் விரும்ப மாட்டான். அவனில் உள்ள ஆசை தானாக குறைந்த பொருட்களில் உள்ள ஆசையை அழித்துவிடும் என்ற பொருளில் அவன் கமஹா.


296-காம க்ருத்
விரும்பக் கூடியவைகளை உண்டாக்குபவன்

அந்யத₃பி (மேலும் )போ₄க₃மோக்ஷாதி₃கம் ஸ்வயமேவ காம்யம் கரோதீதி
காம க்ருத் ॥

காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் -5-3-3- –

மன்னவராய் உலகு ஆண்டு மீண்டும் வானவராய் மகிழ்வு எய்துவர்

தனது விஷய காமம் வளர்த்து –பய க்ருத பய நாசன போல் காம ஹார காம க்ருத

அவரவர் விருப்பப்படி போகம் மோஷம் முதலியவற்றைத் தருபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சாதுக்கள் விரும்பியவற்றைக் கொடுப்பவர் -பிரத்யும்னனாகப் பிறந்த மன்மதனின் தந்தையே கண்ணபிரான் -ஸ்ரீ சங்கரர் –

பக்தர்கள் விரும்பியவற்றைக் கொடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

————

  1. ஓம் காமக்ருதே நம:

ஸாத்விகானாம் ஸத்வ குணமுடையோரின்

காமான் (நியாயமான) ஆசைகளை

கரோதீதி நிறைவேற்றுகிறார் (பூர்த்தி செய்கிறார்)

காமக்ருத் எனவே, பகவான் ‘காமக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(பக்தர்களின் முன்னேற்றப் பாதைக்கு இடையூறாய் இருக்கும் ஆசைகளை வேரறுக்கும் அந்த பகவானே) ஸத்வ குணமுடையோரின் நியாயமான ஆசைகளை நிறைவேற்றுகிறார். எனவே, (காமஹந்தாவான) பகவான் ‘காமக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

காம: ப்ரத்யும்ன: காமனின் மறு அவதாரமான ப்ரத்யும்னனை

தஸ்ய ஜனகத்வாத்வா பிறப்பித்த தந்தையாதலால்

காமக்ருத் பகவான் ‘காமக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, காமனின் மறு அவதாரமான ப்ரத்யும்னனை பிறப்பித்த தந்தையாதலால் பகவான் ‘காமக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

காமனின் மறு அவதாரம்: மன்மதன் (காமன்), தேவர்களுக்காக, சிவபெருமானின் தவத்தைக் கலைத்தான். இதனால் வெகுண்ட சிவன் தனது நெற்றிக்கண்ணால் அவனை எரித்தார். அவ்வாறு எரிந்த காமன், பகவான் கிருஷ்ணாவதாரம் எடுத்த பொழுது அவருக்கும், ருக்மிணிக்கும் மகனாகப் (ப்ரத்யும்னனாகப்) பிறந்தான். அவனால் தனக்கு மரணமேற்படும் என்றறிந்த ஸம்பராஸுரன் என்ற அஸுரன் ப்ரத்யும்னனை அவன் பத்து நாள் குழந்தையாக இருந்த பொழுதே துவாரகையிலிருந்து தூக்கி சென்றான். அங்கு, மாயாவதி (அதாவது முற்பிறப்பில் மன்மதனின் மனைவி ரதி) என்னும் தனது பணிப்பெண்ணிடம் அக்குழந்தையைக் கொடுத்து வளர்க்கச் செய்தான். அக்குழந்தையைப் பார்த்ததும் தன் முற்பிறப்பு நினைவு பெற்ற மாயாவதி அக்குழந்தையை வளர்த்தாள். தக்க வயதடைந்ததும் ப்ரத்யும்னனைக் கொண்டு ஸம்பராஸுரனை வதம் செய்வித்து, பின்னர் ப்ரத்யும்னனையே மணந்தாள் மாயாவதி. அனைவரும் பின்னர் துவாரகைக்குத் திரும்பினர். இந்த சரித்திரம் ஸ்ரீமத் பாகவதம் 10-வது ஸ்கந்தம் 55-வது அத்தியாயத்தில் விரிவாக .கூறப்பட்டுள்ளது.

 கடுவினைக் களையலாகும் காமனைப் பயந்த காளை

இடவகைக் கொண்டதென்பர் எழிலணி அனந்தபுரம் (திருவாய்மொழி 10.2.7)

———

  1. காமக்ரித் – விரும்பத்தக்க விஷயங்களை உருவாக்குபவர், மேலும் ஆசைகளை நிறைவேற்றுபவர்

ஸ்ரீ ஆதிசங்கரர் இரண்டு அர்த்தங்களைத் தருகிறார். முதலாவது, ‘சாத்விகாநாம் காமான் கரோதி இதி காமக்ரித்‘ அதாவது ‘பக்தர்களின் மனதில் உன்னதமான ஆசைகளை உருவாக்கி, அவற்றை நிறைவேற்றுகிறார்; எனவே அவர் காமக்ரித் என்று அழைக்கப்படுகிறார். அவர் விரும்பத்தகாத ஆசைகளை (காமஹா) அழிப்பது போல, நல்ல ஆசைகளை உருவாக்குகிறார்.

ஸ்ரீ சங்கரர் ‘காம ப்ரத்யும்னஹ் தஸ்ய ஜனகத்வாத் வா காமக்ரித் – காமா என்று அழைக்கப்படும் பிரத்யும்னனின் தந்தை’ என்று ஒரு மாற்றுப் பொருளைத் தருகிறார்.

இந்தச் சூழலில் தர்ம சக்கரத்தில் எழுத்தாளர் மாணிக்கவாசகர் முனிவரிடமிருந்து மேற்கோள் காட்டுகிறார் – ‘வேண்டத்தக்காடு அறிவோய் நீ, வேண்டா முழங்கும் தருவோய் நீ வேண்டும் பரிசு ஒன்று உண்டு எனில் அதுவும் உண்டுவிருப்பான்ரே.-பெறத் தகுந்த பொருள் ஏதேனும் இருந்தால், அதை நீ அறிந்து, அதை நீயே தருவாய்; நான் பெறுவது முற்றிலும் உங்கள் விருப்பம்.

ஸ்ரீ சத்யதேவோ வசிஷ்டர் விளக்கம் தருகிறார் – காமன் கரோதி புரயதி இதி காம-கிருத் – ஆசைகளை நிறைவேற்றுபவர். எவருடைய ஆசைகளையும் இறுதியில் நிறைவேற்றக்கூடியவர் அனைத்தையும் கொண்டவர், அதாவது விஷ்ணு காமகிருதம்.   

————–

297-காந்த
விரும்பப் படுபவன்-காந்தஸ்யே தே புருஷோத்தமன் -இரும்பு போல் வலிய நெஞ்சம் ஈர்க்க காந்தன்

ஸ்வயம் ஸௌந்த₃ர்ய ஸௌகுமார்யாதி₃ரூப கு₃ணை ꞉
காந்த꞉ ।
கமேர் நிஷ்டா₂யாம்
* அநுநாஸி கஸ்ய க்விஜ₂லோ : க்ஙிதி, இதி தீ₃ர்க₄꞉

எந்தாய் கொடியேன் பருகும் இன்னமுதே -7-1-7-

பும்ஸாம் திருஷ்ட்டி ஸித்த அபஹாரிணாம்-அச்சோ ஒருவர் அழகிய வா -அழகியான தானே

தமது அழகு மேன்மை முதலிய குணங்களால் யாவராலும் விரும்பப் படுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

மிகவும் அழகியவர் -ஸ்ரீ சங்கரர் –

பிரம்மாதிகளுக்கு சுகத்தைக் கொடுப்பவர் -அசுரர்களின் சுகத்தை அழிப்பவர் –
ஸ்ரீ ராமாவதாரத்தில் அணை கட்டியவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

———-
  1. ஓம் காந்தாய நம:

அபிரூப அழகிய வடிவு படைத்தோருக்குள்

தம: மிகச்சிறந்தவராதலால்

காந்த: பகவான் ‘காந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பேரழகு படைத்தோர் பலர். அவர்கள் அனைவரைக் காட்டிலும் சிறந்த பேரழகு கொண்டவராதலால் பகவான் ‘காந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

  1. காந்தா – வசீகரமானவர்

ஸ்ரீ ஆதிசங்கரர் கூறுகிறார், “அபிரூபதமா காந்தா, அதாவது அவர் மிகவும் அழகாக இருப்பதால் அவர் காந்தா“.

தர்ம சக்கரம் எழுத்தாளர் ஐந்து புலன்களை உள்ளடக்கிய பல்வேறு வகையான ஈர்ப்புகளை விவரிக்கிறார், அதே போல் சிந்தனையை உள்ளடக்கிய ஈர்ப்பு மற்றும் நல்ல நடத்தை அல்லது தன்மையை உள்ளடக்கியது. பகவான் காந்தாவாக இருக்கிறார், ஏனென்றால் எல்லா வகையான கவர்ச்சிகளுக்கும் அவரே பொறுப்பு, மேலும் இவை ஒவ்வொன்றிலும் அவர் கவர்ச்சிகரமானவர்.

ஸ்வாமி சின்மயானதா, ‘சாந்தம் சிவம் சுந்தரம் – அமைதி, உன்னதம் மற்றும் அழகு’ என்ற உபநிடதப் பகுதியிலிருந்து சுயத்தின் தன்மையை விவரிக்கிறார்.


298-காம –
ஆசைப் படத் தகுந்தவன்

ஶீல ஒவ்தா₃ர்யத₃யாதி₃பி₄ராத்ம கு₃ணைஶ் ச நிகாம கமநீயத்வாத்
காம꞉ ।(கீழ் ரூப குணம் இதில் ஆத்ம குணங்கள் )
ஏதத்₃கு₃ண பி₃ந்து₃ நா ஹி மத₃நோ (அ)பி ஜக₃து₃ந்மாத₃யதி ॥

காமனைப் பயந்த காளை
பேய்ச்சி முலை சுவைத்தார்க்கு என் பெண் கொடி ஏறிய பித்தே -4-4-5

சீலம் ஔதார்யம் தயை முதலிய குணங்களாலும் யாவராலும் விரும்பப் படுபவர் –
இதன் லவ லேசம் உள்ளதால் மன்மதனும் -காமனும் -உலகை மயக்குகிறான் -ஸ்ரீ பராசர பட்டர் –

புருஷார்த்தங்களை விரும்புபவர்களால் விரும்பப் பட்டவர் -ஸ்ரீ சங்கரர் –

ஜனங்களால் விரும்பப் படுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————-

  1. ஓம் காமாய நம:

காம்யதே விரும்பப்படுகிறார்

புருஶார்த்த அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நால்வகை குறிக்கோள்களை

அபிகாங்க்ஷிபிர் (அடைய) விரும்போவோராலும்

இதி எனவே

காம: பகவான் ‘காம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நால்வகை குறிக்கோள்களை அடைய விரும்புவோராலும் (அவற்றை வழங்கக்கூடியவர் பகவான் ஒருவரே என்பதால்) விரும்பப்படுகிறார். எனவே, பகவான் ‘காம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. காமா – அன்பிற்குரியது

ஸ்ரீ ஆதிசங்கரர் ‘காங்க்ஷ்யதே புருஷார்த்தாபிகாங்க்ஷிபிஹ் இதி – மோட்சத்தை விரும்புபவர்களால் அல்லது இந்த சம்சாரத்திலிருந்து விடுதலை பெற விரும்புபவர்களால் அவர் காமஹ்’ என்று விளக்குகிறார்.

தர்மத்தையோ, அர்த்தத்தையோ, காமத்தையோ அல்லது மோட்சத்தையோ நாடுவோருக்கு அவர் வழி, எனவே அவர் தேடப்படுபவர்.

தர்ம சக்கரம் எழுத்தாளர், செல்வம் அல்லது உடல் பொருள்களை விரும்பி, புலன் ஈர்ப்பு கொண்டவர்கள் தங்களைத் தாழ்த்திக் கொள்கிறார்கள், அதேசமயம் பகவானை விரும்புபவர்கள் தங்களை உயர்த்திக் கொள்கிறார்கள். இறுதியான விடுதலையை விரும்புபவர்கள் மிகவும் விரும்பத்தக்கவர் பகவான் விஷ்ணு என்பதை அறிவார்கள். காமா என்பது ஆசையின் கடவுளாகக் கருதப்படும் மன்மதாவையும் (மன்மதன்) குறிக்கிறது. ஆனால் மன்மதனின் விரும்பத்தக்க திறன் பகவானின் ஒரு பகுதியே.


299-காம ப்ரத-
இஷ்டங்களைக் கொடுப்பவன் –

ஸ்வ காமேப்₄ய꞉ க்ஷுத்₃ர காமேப்₄யஶ்ச யதா₂ர்ஹ காம்யம் ப்ர த₃தா₃தீதி(நன்கு கொடுப்பவர் -அர்த்திதார்த்த பரிஜான தீஷிதம் )
காம ப்ரத₃꞉ ।
* ப்ரே தா₃ஜ்ஞ꞉ இதி க꞉ । வஸு ப்ரத₃ இத்யாத₃யோ (அ)பி । யதா₂
*நித்யோ நித்யா நாம் ஏகோ ப₃ஹூநாம் யோ வித₃தா₄தி காமான், இதி

எனக்கே தன்னைத் தந்த கற்பகம்
வஸூ ப்ரத -698-699-தன்னைத் தேவகிக்கு பிள்ளையாக அளித்து வாசு தேவனுக்கு கண்ணன் தந்தை பெருமை அளித்தவன்
எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே –
முழுதும் வெண்ணெய் அளைந்து–தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே-

தம்மை விரும்புபவர்க்கும் தாழ்ந்த பயன்களை விரும்புபவர்க்கும் அவரவர் விரும்பியபடி கொடுப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பக்தர்கள் விரும்பியவற்றை விசேஷமாகக் கொடுப்பவர்-ஸ்ரீ சங்கரர் –

பக்தர்கள் விரும்புவற்றை நன்கு கொடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————

  1. ஓம் காமப்ரதாய நம:

பக்தேப்ய: தன் அடியவர்களின்

காமான் (நியாயமான) ஆசைகளை

ப்ரகர்ஶேண அவர்கள் விரும்பியதை விட பல மடங்கு உயர்ந்த அளவில்

ததாதீதி வழங்குவதால்

காமப்ரத: பகவான் ‘காமப்ரத:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தனது அடியவர்களின் நியாயமான விருப்பங்களை, அவர்கள் வேண்டியதை விட பல மடங்கு உயர்ந்த அளவில், பகவான் நிறைவேற்றுகிறார். எனவே, அவர் ‘காமப்ரத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. காமபிரதா – விருப்பங்களை வழங்குபவர்

ஸ்ரீ ஆதி சங்கரர் சொல்வது போல், ‘பக்தேப்யா காமான் ப்ரகர்ஷேண ததாதி இதி காமப்ரத் – பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் மிகுதியாக அளிப்பதால் அவர் காமபிரதா’. தம்மை விரும்புவோர் மற்றும் அற்ப விஷயங்களைப் பின்பற்றுபவர்களின் விருப்பங்களை அவர் நிறைவேற்றுகிறார். அவரைத் தவிர வேறெதையும் விரும்பாதவர்களுக்கு, அவர் அவர்களின் மனதில் தொடர்ந்து இருந்து அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுகிறார். அவர் விரும்பிய எந்த வடிவத்திலும் தன்னைக் கிடைக்கச் செய்கிறார். கதா உபநிஷத்தில் நாம் “ஏகோ பஹூநம் யோ விததாதி காமன் (2.5)” – பலரின் ஆசைகளை நிறைவேற்றுபவர்.

பகவத் கீதை அத்தியாயம் 4 வது 11வது வசனத்தில் கிருஷ்ணர் கூறுகிறார், ‘யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ் ததைவ பஜாம்யஹம், அதாவது அவர்கள் என்னிடம் சரணடையும் போது நான் அவர்களின் விருப்பம் அல்லது விருப்பப்படி அவர்களுக்குத் தருகிறேன்’. ஞானமுள்ள பக்தன் பௌதிகப் பொருட்களை விட பகவானைப் பெற விரும்ப வேண்டும் என்பது தெளிவாகிறது.


300-பிரபு –

அநயா நிதாந்த காந்த தயா (அளவில்லாத அழகால் )ஸர்வ ஹ்ருத₃ய ஹரணே ப்ரப₄வதீதி
ப்ரபு₄꞉ ।யதா

ராம கமல பத்ராஷ சர்வ சத்வ மநோ ஹர–ஸூந்தர-35-8-
தாமரை போன்ற கண்கள் கொண்ட இராமன் அனைவர் மனத்தையும் தன் பால் ஈர்க்க வல்லவன்

ஈசன் மாயன் என் நெஞ்சில் உள்ளான் -என் நெற்றி யுளானே நெற்றியுள் நின்று என்னை ஆளும் நிறை மலர்ப் பாதங்கள் -1-9-10

என்னை மனம் கவர்ந்த ஈசன் -அஷ்டபுஜக்கரத்தன்

இக் குணங்களினால் -ரூபம் உதார குணம் இவற்றால் -அனைவருடைய மனங்களையும் கவரும் சக்தியுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உயர்ந்தவராக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்தவராக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——–

  1. ஓம் ப்ரபவே நம:

ப்ரகர்ஶேண மிகச் சிறந்தவராய்

பவனாத் இருப்பதால்

ப்ரபு: பகவான் ‘ப்ரபு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகச்சிறந்தவராய் (சிறந்த தேவனாய்) இருப்பதால் பகவான் ‘ப்ரபு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

  1. பிரபு – அனைத்தையும் மிஞ்சியவர்

ஸ்ரீ ஆதி சங்கரர் இதை ‘பிரகர்ஷேண பாவனாத் பிரபுஹ் – அவர் அசாதாரணமான அல்லது அற்புதமான சக்திகளைக் கொண்டிருப்பதால் அவர் பிரபு’ என்று வரையறுக்கிறார் . எல்லாவற்றிலும் எல்லாவற்றையும் மிஞ்சியவர்.

பகவான் எப்படி எல்லாவற்றையும் மிஞ்சுகிறார் என்பதற்கு தர்மச் சக்கரம் எழுத்தாளர் உதாரணங்களைத் தருகிறார்; சரியான பாதையில் இருந்து நழுவாமல் (அச்யுதா), எப்பொழுதும் இந்திரியங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் (ஹ்ரிஷீ-கேஷா), தனது பல்வேறு அவதாரங்களில் அதர்மத்தின் மீது தர்மத்தை நிலைநாட்டுவதன் மூலம் மற்றும் தீய அசுரர்களை (மது-சூதனன், கேஷி-சூதனன்) அழிப்பதன் மூலம் , கம்சா சானூரா மர்தானா, முதலியன).

ஸ்ரீ பராசர பட்டர் தனது அதீத அழகின் மூலம் அனைவரது மனதையும் தம் பக்கம் ஈர்க்கும் ஆற்றல் கொண்டவர் என்பதால் அவர் பிரபு என்று வியாக்கியானம் செய்கிறார்.


இப்படியாக ஹாரீத குலத்துக்குத் திலகம் போன்ற ஸ்ரீ வத்சாங்கர் -என்னும் கூரத்தாழ்வானின் திருக்குமாரரும்
ஸ்ரீ பெரிய பெருமாள் திவ்ய ஆஜ்ஜையாலே ஸ்ரீ பராசர பட்டர் என்ற திரு நாமம் சாற்றப் பெற்றவருமான
ஸ்ரீ ரெங்க நாதன் என்னும் இயல் பெயர் கொண்டவர்
அருளிச் செய்த பகவத் குண தர்ப்பணம் என்னும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாஷ்யத்தில்
மூன்றாம்   நூறு திரு நாமங்கள் வியாக்யானம் ஸம் பூர்ணம்

மூன்றாம்   சதகம் முடிந்தது-

————-

291-பூத பவ்ய பவன் நாத-
இப் பெருமைகள் இக் காலத்தில் மட்டும் இல்லாமல் முக் காலங்களிலும் உள்ளவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

முக் காலங்களிலும் உள்ளவர்களால் யாசிக்கப் படுபவர் அவர்களைக் கட்டுப் படுத்துபவர் -ஆசீர்வதிப்பவர் –ஆள்பவர்-ஸ்ரீ சங்கரர் –

நித்ய சம்சாரிகள் -அறிவீனர்கள் -பக்தர்கள் இவர்களால் வேண்டப்படுபவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————-

292-பவன –
எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் இயற்கையாகவே செல்பவர் —
அனைத்தையும் தூய்மையாக்கும் இக் குணத்தின் லேசம் இருப்பதால் தான்-பவன எனப்படும் காற்றும் எங்கும் சஞ்சரிக்கின்ற்றது-ஸ்ரீ பராசர பட்டர் –

பரிசுத்தப் படுத்துபவர் -ஸ்ரீ சங்கரர் –

அரசர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்து காப்பவர்- ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————————-

293-பாவன-
உலகைத் தூய்மை யாக்கும் கங்கை முதலியவற்றுக்கும் அத் தூய்மை தம் தொடர்பால் உண்டாகும்படி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

காற்றை வீசும்படி செய்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அரசர்கள் காப்பதற்கு காரணமாக இருப்பவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————-

294-அநல –
பல வகைகளால் அடியவர்க்கு அனுக்ரஹித்தும் அது போதாது என்று நினைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அனம் எனப்படும் பிராணனை அலங்கரிக்கும் ஜீவாத்மாவே இருப்பவர் -அளவிட முடியாதவர் –ஸ்ரீ சங்கரர் –

தடுக்க முடியாதவர் -முக்ய பிராணனை  பக்தனாகக்  கொண்டவர் -உலகப் படைப்பு முதலியவகைகளில்
போதும் என்ற நினைவு இல்லாதவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————-

295-காமஹா –
தம் குணங்களில் ஈடுபட்டவர்க்குப் பிற விஷயங்களில் ஆசையைத் தவிர்ப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

மோஷத்தை விரும்பும் பக்தர்களுக்கு பிற விஷயங்களில் ஆசையைத் தவிர்ப்பவர் -விரோதிகளை அழிப்பவர் –ஸ்ரீ சங்கரர்-

காமத்தை அழிப்பவர் -நல்லோர்களின் ரோகங்களைப் போக்குபவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————————–

296-காமக்ருத்-
அவரவர் விருப்பப்படி போகம் மோஷம் முதலியவற்றைத் தருபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சாதுக்கள் விரும்பியவற்றைக் கொடுப்பவர் -பிரத்யும்னனாகப் பிறந்த மன்மதனின் தந்தையே கண்ணபிரான் -ஸ்ரீ சங்கரர் –

பக்தர்கள் விரும்பியவற்றைக் கொடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————————–

297-காந்த –
தமது அழகு மென்மை முதலிய குணங்களால் யாவராலும் விரும்பப் படுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

மிகவும் அழகியவர் -ஸ்ரீ சங்கரர் –

பிரம்மாதிகளுக்கு சுகத்தைக் கொடுப்பவர் -அசுரர்களின் சுகத்தை அழிப்பவர் -ஸ்ரீ ராமாவதாரத்தில் அணை கட்டியவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————–

298-காம –
சீலம் ஔதார்யம் தயை முதலிய குணங்களாலும்  யாவராலும் விரும்பப் படுபவர் –
இதன் லவலேசம் உள்ளதால் மன்மதனும் -காமனும்  -உலகை மயக்குகிறான் -ஸ்ரீ பராசர பட்டர் –

புருஷார்த்தங்களை விரும்புபவர்களால் விரும்பப் பட்டவர் -ஸ்ரீ சங்கரர் –

ஜனங்களால் விரும்பப் படுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————

299-காமப்ரத –
தம்மை விரும்புபவர்க்கும் தாழ்ந்த பயன்களை விரும்புபவர்க்கும் அவரவர் விரும்பியபடி கொடுப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பக்தர்கள் விரும்பியவற்றை விசேஷமாகக் கொடுப்பவர்-ஸ்ரீ சங்கரர் –

பக்தர்கள் விரும்புவற்றை நன்கு கொடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————-

300-பிரபு –
இக் குணங்களினால் அனைவருடைய மனங்களையும் கவரும் சக்தியுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உயர்ந்தவராக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்தவராக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——–

கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்காலத்தையும் திருமால் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.
‘பூத’ என்றால் கடந்த காலம், ‘பவ்ய’ என்றால் நிகழ்காலம், ‘பவத்’ என்றால் எதிர்காலம்.
‘நாத:’ என்றால் தலைவர். ‘பூத – பவ்ய – பவந் – நாத:’ என்றால் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்
ஆகிய மூன்றுக்கும் தலைவர் என்று பொருள். முக்காலத்துக்கும் நாதனானபடியால் ‘பூத-பவ்ய-பவந்-நாத:’ என்று
திருமால் அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 291-வது திருநாமம்.
“பூத-பவ்ய-பவந்-நாதாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில்
எக்காலத்திலும் நன்மைகள் கிட்டும்படித் திருமால் அருள்புரிவார்.

‘பவி’ என்றால் பயணித்தல் என்று பொருள். நினைத்த இடங்களுக்கெல்லாம் நொடிப் பொழுது காலமும் எடுத்துக் கொள்ளாது
பயணிக்க வல்லவராகத் திருமால் திகழ்வதால் ‘பவன:’ என்று அழைக்கப்படுகிறார்.
(காற்றும் எல்லா இடத்துக்கும் பயணிக்க வல்லதாக இருப்பதால் தான், காற்றுக்கும் ‘பவன:’ என்று வடமொழியில் பெயர்.)
‘பவன:’ என்றால் எங்கும் எப்போதும் பயணிப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 292-வது திருநாமம்.
“பவனாய நமஹ” என்று தினமும் சொல்லி வருவோர் மேற்கொள்ளும் பயணங்கள் அனைத்தும் வெற்றி காணும்படித் திருமால் அருள்புரிவார்.

‘பாவன:’ என்றால் தூய்மைப் படுத்துதல் என்று பொருள். தன்னைச் சார்ந்தோரைத் தூய்மை ஆக்குவதோடு மட்டுமின்றி,
பிறரைத் தூய்மைப் படுத்தும் ஆற்றலையும் தன்னைச் சார்ந்தவர்களுக்கு அருள்வதால்
திருமால் ‘பாவன:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 293-வது திருநாமம்.
“பாவனாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குக் கங்கையில் நீராடிய
புண்ணியம் கிட்டும் என்பதில் ஐயமில்லை.

‘அலம்’ என்றால் போதும் என்று பொருள். ‘அனல:’ என்றால் போதும் என்று எண்ணாதவர்.
அலம் (போதும்) என்று எண்ணாமல் அடியார்களுக்கு மீண்டும் மீண்டும் அருளை வாரி வழங்கிக் கொண்டே இருப்பதால்,
திருமால் ‘அனல:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 294-வது திருநாமம்.

“அனலாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் திருமால் மேன்மேலும்
அநுக்கிரகத்தைப் பொழிந்து கொண்டே இருப்பார்.

தனது அழகையும் குணங்களையும் காட்டி, அடியார்களின் மற்ற ஆசைகளைப் போக்குவதால்,
திருமால் ‘காமஹா’ என்றழைக்கப்படுகிறார்.
‘காம’ என்றால் ஆசை என்று பொருள். ‘காமஹா’ என்றால் ‘தன்னைத் தவிர்ந்த பிற விஷயங்களில்
உள்ள ஆசைகளைப் போக்குபவர்’ என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 295-வது திருநாமம்.
“காமக்னே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் மனத்தில் உள்ள உலகியல்
ஆசைகளைத் திருமால் நீக்கி அருள்வார்.

காம’ என்றால் அநுபவித்து மகிழத் தக்க பொருட்கள் என்று பொருள். ‘க்ருத்’ என்றால் உருவாக்கியவர்.
நாம் இவ்வுலகில் வாழும் காலத்தில் நாம் அநுபவித்து மகிழக் கூடிய திருத்தலங்களையும் திவ்ய தேசங்களையும்
உருவாக்கி, அவ்வுலகான வைகுண்டத்தை அடைந்தபின் அங்கே அநுபவித்து மகிழக்கூடிய பொருட்களையும்
உருவாக்கியிருப்பதால், திருமால் ‘காமக்ருத்’ என்று அழைக்கப்படுகிறார்.

‘காமக்ருத்’ என்றால் இவ்வுலகிலும் அவ்வுலகிலும் அநுபவித்து மகிழ்வதற்குரிய பொருள்களைப் படைத்தவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 296-வது திருநாமமாகும்.
“காமக்ருதே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் விரும்பும் நல்ல பொருட்கள்
அனைத்தும் அவர்களை வந்தடையும்படித் திருமால் அருள்புரிவார்.

காயத்திரி மந்திரம் கூறுவது போல் தனது அழகு மற்றும் திருமேனி ஒளியினால், அடியார்களின் மனங்களைத் தன்பால்
ஈர்ப்பவராகத் திருமால் திகழ்வதால், அவர் ‘காந்த:’ என்றழைக்கப்படுகிறார்.
‘காந்த:’ என்றால் அனைவரையும் ஈர்க்கவல்ல அழகை உடையவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 297வது திருநாமம்.

“காந்தாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் உடலாலும் உள்ளத்தாலும் பேரழகர்களாக
விளங்கும் படித் திருமால் அருள்புரிவார்.

தனது அழகால் உலகனைத்தையும் மயக்கி விடுவதால், திருமால் ‘காம:’ என்று அழைக்கப்படுகிறார்.

‘காம:’ என்றால் தன் அழகால் அனைவரையும் மயக்குபவன் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 297-வது திருநாமம்.
(குறிப்பு: திருமாலின் பேரழகில் இருந்து ஒரு துளியைப் பெற்றதால் தான் மன்மதனும் பிறரை மயக்கும் ஆற்றலைப் பெற்றான்.
மயக்கும் ஆற்றல் பெற்றதால் மன்மதனுக்கும் ‘காம:’ என்று பெயர் உண்டு. எனினும், அந்த மன்மதனுக்கும்
அத்தன்மையை அளித்தவராக, மன்மத மன்மதனாகத் திருமால் திகழ்கிறார் என்பதையே ‘காம:’ என்ற இத்திருநாமம் உணர்த்துகிறது.)
“காமாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் திருமாலின் அழகில் மயங்கி, உயர்ந்த பக்தியில் ஈடுபடும்படி திருமால் அருள்புரிவார்.

‘காம’ என்றால் விருப்பம் என்று பொருள். ‘ப்ரத:’ என்றால் அருள்பவர்.
விருப்பங்களை அருள்வதோடு மட்டுமின்றி, அந்த விருப்பங்களை விடவும் அதிகமான நற்பலன்களையும் சேர்த்து
அருள்வதால் திருமால் ‘காமப்ரத:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 299-வது திருநாமம்.
“காமப்ரதாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் விரும்பும் பலன்களை விடவும்
அதிகமாகத் திருமால் அனுக்கிரகம் புரிவார்.

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 35-வது திருநாமமும் ‘ப்ரபு:’ ஆகும்.
அங்கே உரையாசிரியரான பராசர பட்டர், ‘ப்ரபு:’ என்ற சொல்லுக்குப் பூமியில் அவதரித்தாலும்
மேன்மை குன்றாதவர் என்று பொருள் உரைத்துள்ளார். 300-வது திருநாமமான ‘ப்ரபு:’ என்பதற்கு,
நம் மனங்களை ஈர்ப்பவர் என்று பொருள் உரைத்துள்ளார். எனவே ஒரே திருப்பெயர் இரண்டு இடங்களில் வந்தாலும்,
இடத்துக்குத் தக்கபடி பொருளிலே மாற்றம் உண்டு.)

“ப்ரபவே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குப் பிறரை ஈர்க்கவல்ல
நற்குணங்கள் உண்டாகும்படி திருமால் அருள்புரிவார்.

————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply