ஸுரேஶ: ஶரணம் ஶர்ம விஶ்வரேதா: ப்ரஜாபவ: |
அஹ: ஸம்வத்ஸரோ வ்யால: ப்ரத்யய: ஸர்வதர்ஶன: ||
இந்த பத்தாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:
86-ஸுரேஶ:, 87.ஶரணம், 88. ஶர்ம, 89. விஶ்வரேதா:, 90. ப்ரஜாபவ: |
91-அஹ:, 92.ஸம்வத்ஸர:, 93. வ்யால:, 94. ப்ரத்யய:, 95. ஸர்வதர்ஶன: ||
தம்மிடம் சரணடைபவர்கள் மீது மிகுந்த இரக்கம் கொண்ட இறைவன், அவர்களின் நித்திய பேரின்பத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் உயர்ந்த தளபதி. அவர் பிரபஞ்சத்தின் மூலகாரணம் மற்றும் அனைத்து உயிரினங்களையும் படைத்தவர். அவர் தனது பக்தர்களைக் காக்கிறார், அவரே நேரம். பிசாசுகளால் பிடிப்பதும் கடினம், பக்தர்கள் முழு நம்பிக்கையுடன் தங்கியிருக்கக்கூடியவர். அவர் அனைத்தையும் பார்ப்பவர், எங்கும் நிறைந்தவர், எல்லாம் அறிந்தவர் மற்றும் தனது பக்தர்களின் மீது தனது அருளைப் பொழிவதற்கு எப்போதும் தயாராக இருக்கிறார். ஹரி ஓம்!
ஸுரேச: — தேவர்கள் அதிபதி
சரணம் — அனைவர்க்கும் உற்ற புகலும் காப்பும் ஆனவர்
சர்ம — புகலடைந்தோர்க்குப் பொன்றா பேரின்பம்
விச்வரேதா: — அனைத்திற்கும் அனைத்து காரணமுமாய் ஆனவர்
ப்ரஜாபவ: — உயிர்க்குல முழுமைக்கும் உற்ற நிலையம்
அஹ: — இருளேயற்ற ஒரு பெரும் பகலாய் ஒளிர்பவர்
ஸம்வத்ஸர: — கால வடிவாய் உயிர்களுக்குள் இருந்து கைதூக்கி விடுபவர்
வ்யால: — பக்தியுடன் உற்றோரை ஒரு பொழுதும் விலக்காது அணைத்துக் கொள்ளும் பரந்த அருள் கைகளை உடையவர்
ப்ரத்யய: — உணர்வும் நம்பிக்கையும் ஆனவர்
ஸர்வதர்சந: — பக்தர்களுக்குத் தம் மகிமை அனைத்தையும் ஒளிக்காது காட்டுபவர்
தேவர்கள் அனைவரின் தலைவன் {ஸுரேசன்},
அனைத்தின் புகலிடமாக இருப்பவன் {சரணன்},
உயர்ந்த இன்பத்தின் உடல் வடிவம் {சர்ம},
அண்டத்தின் வித்தாக இருப்பவன் {விஸ்வரேதஸ்},
அனைத்துப் பொருட்களின் பிறப்பிடமாக இருப்பவன் {ப்ரஜாபவன்},
(அறியாமை உறக்கத்தில் மூழ்கியிருக்கும் ஜீவனை விழிப்படையச் செய்பவனாக இருக்கும் விளைவால்) பகலாக இருப்பவன் {அஹஸ்},
ஆண்டாக இருப்பவன் {ஸவம்த்ஸரன்},
(பிடிக்கப்பட முடியாதவனாக இருப்பதால்) பாம்பாக இருப்பவன் {வியாளன்},
திட நம்பிக்கையின் உடல்வடிவமாக இருப்பவன் {ப்ரத்யயன்},
அனைத்தையும் காண்பவன் {ஸர்வதர்சநன்};(23)
86-சூரேச -தேவர்களுக்குத் தலைவர் -ப்ரஹ்மாதிகளையும் ஆட்சி செய்பவர்
ஆறும் பேறும் அவனே -மருந்தும் விருந்தும் அவனே –
87-சரணம் -அனைவருக்கும் உபாயம் –தன்னை அடைய தானே வழியாய் இருப்பவர் –
88-சர்ம -ஸுக ரூபமானவர் –
89-விச்வரேதா-பிரபஞ்சத்துக்கு முதல் காரணமாக இருப்பவர் -உடலையும் புலன்களையும் தன் தொண்டுக்காகவே படைப்பவர் –
90-பிரஜாபவ -அவர் கொடுத்த உடலையும் புலன்களையும் கருவிகளாகக் கொண்டு அவரைச் சேரும்படி இருப்பிடமானவர்
91-அஹ-அவர்கள் தன்னைக் கிட்டுவதற்காக இடையூறாக இருக்குமவற்றை தானே விலக்குபவர் –
92-சம்வத்சர-அடியார்களைக் கை தூக்கி விட அவர்கள் உள்ளத்திலேயே
1-8-த்ரிவித சேதன வ்யதிரிக்த -நியாமகன் -66-88-திரு நாமங்கள்
1-9-உபாய ஸ்வரூபி -உபேய ஸூக ஸ்வரூபி –89-100 திரு நாமங்கள்
——————————–
86- ஸூரேச –ப்ரஹ்மாதி தேவர்களுக்கு ஈஸ்வரன் –
பல்கு பத லிப்ஸூநாம் ப்ரஹ்மாதீநாம் அபி ஸம் விதாதா
ஸூரேஸ
யதா ப்ரஹ்மா
யஸ்ய ப்ரஸாதாத் அஹம் அச்யுதஸ்ய பூத பிரஜா சர்க்கர அண்டகாரீ க்ரோதாச்ச ருத்ர ஸ்திதி ஹேது பூத -இத்யாதி-ஸ்ரீ விஷ்ணு புராணம் -4-1-85-
நான்முகன் கூறுகிறான் –
அடியார்களைக் கை விடாத அச்யுதனின் அனுக்ரஹம் காரணமாக நான் அனைத்தையும் படைக்கும் கர்மம் இயற்றுபவனாக உள்ளேன்
எம்பெருமானின் கோபத்தால் தோன்றியதால் அனைத்தையும் அழிக்கும் கர்மத்தை ருத்ரன் செய்கிறான்
அனைத்தையும் காத்து நிற்பவனாக எம்பெருமான் உள்ளான் –
நிறுத்தினான் தெய்வங்களாக அத்தெய்வ நாயகன் தானே -5-2-8-
பிரமன் முதலானவர்க்கு ஐஸ்வர்யங்கள் அதிகாரங்கள் கொடுப்பவன்
அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்து -1-7-9-
முமுஷுக்களுக்கு பெரிய மோக்ஷ பதவி அளிக்கும் இவனே
ப்ரஹ்மாதிகளுக்கு அவர்கள் அபேக்ஷிக்கும் சிறிய பலன்களை அளிப்பவன்
பிரம்மா முதலிய தேவர்களையும் அவரவர் அதிகாரங்களில் நியமிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
தேவர்களுக்குத் தலைவர் -நன்மையைக் கொடுப்பவர்களுக்குத் தலைவர் -ஸ்ரீ சங்கரர் —
தேவர்களுக்குத் தலைவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
ஓம் ஸூரேசா நம
தேவாதி ராஜன் -மனிசர்க்குத் தேவர் போலே தேவர்களுக்கும் தேவாவோ
—————
ஸுரானாம் தேவானாம் ஸுரர்கள் என்றால் தேவர்கள்
ஈஶ: அவர்களை ஆள்பவர்
ஸுரேஶ: பகவான் ‘ஸுரேஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸுரர்கள் என்றழைக்கப்படும் தேவர்களையும் ஆள்பவராக இருப்பதால் பகவான் ‘ஸுரேஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸூபபதோ வா (நன்மை என்ற பொருள்படும்) ‘ஸு’ என்ற பதத்தின் பின்னே
ராதாது: (வழங்குதல் என்ற பொருள்படும்) ‘ரா’ என்ற விகுதி சேர்ந்து
ஷோபனதாத்ருணாம் நன்மைகளைத் தருபவர்களுள்
ஈஶ: தலைசிறந்தவர்
ஸுரேஶ: (ஆதலால்) பகவான் ‘ஸுரேஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, நன்மைகளை வாரி வழங்குபவர்களுக்குள் தலைசிறந்தவராக இருப்பதால் பகவான் ‘ஸுரேஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
——-
சுரேஷா – தேவர்களின் இறைவன்
ஸ்ரீ ஆதி சங்கரர் இந்தப் பெயருக்கு இரண்டு விளக்கங்களைக் கூறுகிறார்.
- ‘ஸுராணாம் தேவானாம் ஈஷா சுரேஷ்ஹ‘ – அனைத்து தேவர்களுக்கும் இறைவன்.
- ‘ஷோபநதாத்ரூணாம் ஈஷா சுரேஷ்ஹ‘ – தன்னைப் பின்பற்றுபவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவர்களில் முதன்மையானவர்.
மேலும் அவர் சுரேஷா – ஆசீர்வாதங்களை வழங்கக் கூடியவர்களில் சிறந்தவர். ஸ்ரீமன் நாராயணர், பக்தர்களின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றக்கூடியவர் – அதுவே ‘ மோட்சம்’ .
87-சரணம் –
உபாயமாய் இருப்பவன் –நிரபேஷ -நிருபாதிக ரஷகன் –
அவிஸேஷேண ஸர்வேஷாம் சரணம்
ஸ்ருணாதே -ரக்ஷணார்த்த –ல் லயுட்
ஏவம் கரணம் காரணம் பிரமாணம் பாவன இத்யாதயோ அபி
நிருபாதிக ப்ராபக
யதா
தம் ஹ தேவம் ஆத்ம புத்தி பிரசாதம் முமுஷுர்வை சரணம் அஹம் பிரபத்யே -ஸ்வேதாஸ்வரம் -6-18-
தன்னைப் பற்றிய ஞானம் உண்டாகும்படி எம்பெருமான் செய்து அருளினான்
மோக்ஷத்தை விரும்பும் நான் அவனைச் சரண் அடைகிறேன்
நிவாஸ சரணம் ஸூஹ்ருத் கதி நாராயண –ஸூ பால-3-
நாம் அடைய வேண்டிய இடம்
சரணம் புக்கத் தக்கவன்
நண்பன்
கதி-ஆகியவை ஸ்ரீ மன் நாராயணனாகவே உள்ளான்
சரண்யம் சரணம் ச த்வாம் அஹூ திவ்யா மஹர்ஷய -இத்யாதி -யுத்த -120-18-
அனைவரையும் ரக்ஷிப்பதில் வல்லவன்
அனைவராலும் அடையப்பட வேண்டியவன் நீயே
என்று திவ்ய ஞானம் கொண்ட பல மஹ ரிஷிகளும் கூறுகின்றனர் –
நாரங்களுக்கு ஆஸ்ரயம் -உபாயம் -உபேயம் -ப்ராப்யமாகவும் ப்ராபகமாகவும் -இருப்பிடமாகவும் இருப்பவன்
நாரா நித்ய வஸ்துக்கள் திரள்
ஆத்மாக்கள் என்று சங்கோசம் பண்ணி சைதன்யம் உள்ளவர்களுக்கு ப்ராப்யம்
ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் -5-8-10-
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -5-10-8-
எல்லோருக்கும் அடையும் சரணமாகவும் -தம்மை அடைவதற்கு உபாயமாகவும் இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
இனி இனி இருப்பதின் கால் கூப்பிட்ட -ஆர்த்தி ஹரத்வம் -பத்தாம் பத்தின் ப்ரமேயம்
ரஷிக்கும் கிரியை ச்ரு என்ற வினைப்பகுதியுடன் +ல்யுட் சேர்ந்து சரணம்
இதே போலே கரணம் -380-/ காரணம் -381-/பிரமாணம் -432-959-திரு நாமங்கள்
துன்பப் படுபவர்களின் துன்பத்தைப் போக்குபவர் –ஸ்ரீ சங்கரர் –
எல்லோருக்கும் அடைக்கலமாகவும் காப்பாற்றுவராகவும் இருப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
ஓம் சரணாயா நம
பரம பாராயணம் -ஒரே உபாயம் -ஒரே உபேயம்
———
ஓம் ஶரணாய நம:
ஆர்த்தானாம் துன்புற்றிருப்போரின்
ஆர்த்தி ஹரணத்வாத் துன்பங்களைத் தீர்ப்பதால்
ஶரணம் பகவான் ‘ஶரணம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
துன்புற்றிருப்போரின் துன்பங்களைத் தீர்ப்பதால் பகவான் ‘ஶரணம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இங்கு ஆதிசங்கர பகவத்பாதர் ‘பக்தர்களின் துயர்களைக் களைபவர்’ என்று கூறாது ‘துன்புற்றோரின் துன்பங்களைக் களைபவர் என்று கூறியுள்ளார்’. இதன் தாத்பர்யம் என்னவெனில், பக்தர்களோ, அல்லவோ, பகவான் அனைவரது துயரங்களையும் களைகிறார். அனைவரின் துயரங்களையும் போக்கும் அவர், தன் அடியவர்களுக்கு என்னவெல்லாம் செய்வார் என்று நாமே சற்று சிந்தித்துப் பார்த்து, பகவானிடம் தூய பக்தியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
——
சரணம் – அடைக்கலம் கொடுப்பவர்
சரணம் என்றால் துன்பத்தில் இருப்பவர்களுக்கு அடைக்கலம் அல்லது பாதுகாப்பான புகலிடம் கொடுப்பவர். அடைக்கலம் தேடும் எவரையும் அவர்களின் அந்தஸ்து அல்லது தகுதியைப் பொருட்படுத்தாமல் அவர் பாதுகாக்கிறார். துன்பத்தில் இருப்பவர்களுக்கு பகவானே ‘இறுதி அடைக்கலம்’.
ஆதிசங்கரர் சொல்வது போல் ‘ஆற்றானாம் ஆரத்திஹரணத் சரணம் – தன்னை நாடி வருபவர்களின் துன்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதால் அவர் சரணம் என்று அழைக்கப்படுகிறார்.
கஜேந்திரன், பிரஹலாதா அல்லது திரௌபதி போன்ற தம்மிடம் சரணடைந்தவர்களின் விருப்பங்களை அவர் நிறைவேற்றுகிறார்-
மய் ஏவ மன அதத்ஸ்வா, மயி புத்திம் நிவேசய
நிவசிஷ்யஸி மய் ஏவ, அத ஊர்த்வம் ந சம்ஷயஹ் –12-8-
உன் மனதை என்னில் நிலைநிறுத்து; உன் புத்தியை என் மீது ஈடுபடுத்து; அதன்பின், நீங்கள் சந்தேகமில்லாமல் என்னில் வாழ்வீர்கள்.
தன்னை உணர்ந்தவர்களுக்கு இல்லம் மட்டுமல்ல, பிரளயத்தில் எல்லா உயிர்களுக்கும் வீடு
அவர் இறுதி இலக்கு அல்லது ‘பரமகதி’ மற்றும் மோட்சம் அல்லது விடுதலையை அடைவதற்கான இறுதி அடைக்கலம்.
88- சர்ம –
உயர்ந்த பலனாய் இருப்பவன் –ஸூக ரூபமாய் இருப்பவன்
ஸூகம் பரம ப்ராப்யம் சேதி
ஸர்ம
தஸ்மா தேவ ஸூகர்த்தாந் மநின்
யதா
ஆனந்தோ ப்ரஹ்ம–தைத்ரியம் –ஆனந்த மயமானது ப்ரஹ்மம்
சர்வ கந்த சர்வ ரஸ -சாந்தோக்யம் -3-14-2-அனைத்து நறு மணங்களாகவும் சுவைகளாகவும் உள்ளான்
கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம -ஆனந்தோ ப்ரஹ்ம-சாந்தோக்யம் -4-10-5-பர ப்ரஹ்மமான அவனே அளவற்ற ஆனந்த மயமாக உள்ளான் –
கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம –ஆகாசம் போல் அபரிமிதம் ஸூக ரூபம் –
அக்னி பகவான் -ஆச்சார்யர் இடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லிய வ்ருத்தாந்தம்
வானவர் தெய்வம் என்கோ வானவர் போகம் என்கோ -3-4-7-
எனக்குத் தேனே பாலே கன்னலே அமுதே -10-7-2-
அமுதாகித் தித்தித்து -ஆராவமுதே
கறந்த பால் நெய்யே நெய்யின் சுவையே கடலினுள் அமுதமே அமுதில் பிறந்த இன் சுவையே -8-1-7-
ஸூக ரூபமாகவும் பயனாகவும் இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
ஸூகம் என்ற பொருளில் -ச்ரு +ம நின் இணைந்து –சர்ம–ஆகிறது -ஆனந்த மயன் -என்றவாறு
பரமானந்த ரூபமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
அஸூபங்களைப் போக்குபவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
ஓம் சரமே நம
நிரவதிக ஆனந்த மயன் -ஒரே உபேயம்
—————
ஓம் ஶர்மணே நம:
பரமானந்தரூபத்வாத் அளவிடற்கரியா, உயர்ந்த ஆனந்த வடிவினராய் இருப்பதால்-
ஶர்ம: பகவான் ‘ஶர்ம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் ஆனந்தமே வடிவானவர். தன் அடியவர்களுக்கும் அளவிடற்கரியா ஆனந்தமாகிய முக்தியை அளிப்பவர். எனவே, அவர் ‘ஶர்ம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
——
ஷர்மா – அவர் முழுமையான பேரின்பம்
பகவான் தூய்மையான மற்றும் கலப்படமற்ற மகிழ்ச்சி அல்லது முழுமையான பேரின்பத்தின் உருவகம், ஷர்மா என்பது இந்த உயர்ந்த மகிழ்ச்சியின் நிலையைக் குறிக்கிறது. பராசர பட்டர் மற்றும் ஸ்ரீ ஆதி சங்கரர் இருவரும் ஒரே பொருளைத் தருகிறார்கள். ‘பரமானந்த ரூபத்வாத் சர்மா – அவர் மிக உயர்ந்த பேரின்ப நிலையை வெளிப்படுத்துவதால் அவர் சர்மா என்று அழைக்கப்படுகிறார்’.
89-விஸ்வரேதா –
அகில உலகங்களுக்கும் காரணமாக உள்ளவனான அவனே
உபாயமாகவும்
அடையத்தக்க பயனாகவும்
எவ்வாறு உள்ளான் என்பது இப்போது கூறப்படுகிறது
ஸரண ஸர்ம ப்ரகாராந் விவஷதி
விஸ்வ ரேதா
விஸ்வம் கார்ய மஸ்யேதி
ஸ ஹி ஸ்வ ஞான ஸ்தான பரி கரணை தமர்த்யேந ப்ரஜாநாம் ஞான கர்மேந்திரியாதிகம் விஸ்வம் கரோதி
யதா
ஏதஸ்மாஜ் ஜாயதே ப்ராணோ மனஸ் சர்வ இந்திரியாணி ச கம் வாயு ஜ்யோதி ஆப பிருதிவோ விஸ்வஸ்ய தாரீணீ–முண்டக -2-1-3-
பிராணன் மனம் பத்து இந்திரியங்கள் ஆகாசம் வாயு அக்னி நீர் அனைத்தையும் தாங்கும் பூமி
போன்ற அனைத்துமே அவன் இடம் இருந்து தோன்றுகின்றன
சப்த பிராணா ப்ரபவந்தி தஸ்மாத் –முண்டக -2-1-8—
ஏழு இந்திரியங்கள் அவன் இடம் இருந்து உண்டாகின்றன
இங்கு ஏழு என்றது -2-கண்கள் -2-காதுகள் -2-மூக்குத் துவாராம் -1-நாக்கு
பவந்தி பாவா பூதா நாம் மத்தஸ் ஏவ ப்ருதக் விதா–ஸ்ரீ கீதை -10-5-
அனைத்து உயிர்களின் நிலைகளும் என்னிடசம் இருந்து உண்டாகின்றன
விசித்ரா தேஹ சம்பந்தி ஈஸ்வராய நிவேதிதும் பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மந் ஹஸ்த பாதாதி ஸம் யுதா –இதி–ஸ்ரீ விஷ்ணு தத்வம்
உடல் என்று இந்த வியக்கத்தக்க உயர்ந்த செல்வம் ஈஸ்வரனிடம் ஸமர்ப்பணம் செய்யப்பட வேண்டியது
என்பதற்காகவே என்னால் உண்டாக்கப் பட்டது –
சரணம் சரம -திரு நாமங்களுக்கு தோற்றுவாய் இத் திரு நாமம்
ரேதஸ் -தன்னை அறிய ஞான இந்த்ரியங்களையும்
கைங்கர்யம் பண்ணி உஜ்ஜீவிக்கும் படி கர்மேந்த்ரியங்களையும் உண்டாக்குகிறான்
கருமமும் கரும பலனுமாகிய காரணன் -3-5-10-
ஆற்ற நல் வகை காட்டும் அம்மான் -4-5-5-
மாயவன் தன்னை வணங்க வைத்த கரணங்கள்
பொருள் என்று உலகம் படைத்தவன் -சோம்பாது மீண்டும் மீண்டும் என்றாவது பொருள் ஆவதற்க்கவே செய்கிறான்
உலகங்கட்கு எல்லாம் மூல காரணமாய் இருப்பவர் -அவனே உபாயமாகவும் உபேயமாகவும் இருப்பவர் –
தானே சர்வ காரணம் என்று அறிந்து தனது திருவடிகளிலே கைங்கர்யம் செய்யவே
ஞான கர்ம இந்த்ரியங்களை கொடுத்து அருளினவன் -ஸ்ரீ பராசர பட்டர் —
உலகங்கங்களுக்கு எல்லாம் காரணமாய் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
உலகுக்குக் காரணமானவர் -வாயுவிற்கு காரணம் ஆனவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
ஓம் விஸ்வரேதோ நம
அனைத்துக்கும் விதை -காரணம் –
இதே நாமாவளி மீண்டும் -118-/151–இரண்டு தடவை மேலும் வரும்
———
ஓம் விஶ்வரேதஸே நம:
விஶ்வஸ்ய இந்தப் ப்ரபஞ்சம் உருவாவதற்கு
காரணத்வாத் காரணமாய் இருப்பதால்
விஶ்வரேதா: பகவான் ‘விஶ்வரேதா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்தப் ப்ரபஞ்சம் உருவாவதற்கு காரணமாய் இருப்பதால் பகவான் ‘விஶ்வரேதா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
எவ்வாறு ஒரு குழந்தை தந்தையின் ரேதஸிலிருந்து (வீர்யத்திலிருந்து) உருவாகிறதோ, அவ்வாறே, இந்தப் ப்ரபஞ்சம் முழுவதும், பகவானின் சக்தியிலிருந்து தோன்றுகிறது. எனவே, பகவான், விஶ்வரேதா என்று அழைக்கப்படுகிறார்.
———
விஸ்வரேதா – அவர் பிரபஞ்சத்தின் விதை
விஷ்வா என்றால் பிரபஞ்சம், ரேதஸ் என்றால் விதை. அவர் பிரபஞ்சத்திற்கான விதை மற்றும் உலகளாவிய காரணமும் ஆவார்.
வார்த்தை அடிப்படையை ‘விஷ்வம் காரியம் அஸ்ய அஸ்தி இதி’ அல்லது ‘விஷ்வஸ்ய காரணத்வாத்‘ என்று விளக்கலாம். அவரே காரணம் மற்றும் பிரபஞ்சம் விளைவு. பிரபஞ்சத்தை ஒரு மரத்துடன் ஒப்பிட முடியுமானால், அந்த மரத்திற்கான விதை அவனே!
பூர்ணஸ்ய பூர்ணம் ஆதாய பூர்ணமேவ அவசிஷ்யதே – பரிபூரண பிரபஞ்சத்தைப் படைத்த பிறகும் அவர் பரிபூரணமாக இருக்கிறார்’ என்று உபநிடதங்கள் கூறுவதால், படைப்பானது பகவானின் பலத்தை எந்த வகையிலும் குறைக்காது என்று சொல்லத் தேவையில்லை.
ஸ்ரீ பராசர பட்டர் தனது படைப்பின் (அல்லது புருஷார்த்தத்தின்) நோக்கம் அவரது சேவை மட்டுமே என்று குறிப்பிடுகிறார்.
90-பிரஜாபவ –
பிரஜைகளுக்கு இடமாய் -உய்யும் படி அவைகளில் இருப்பவன்
ஆபிமுக்யம் உண்டாகி அவனை அடைய வழி ஏற்பட
ஸர்வா ப்ரஜாஸ் தத் ததைஸ் தைரேவ உப கரணைஸ் தஸ்மிந் பவந்தி -தத் அபி முக்ய யோக்யா பவந்தீதி(தகுதி உடையவையாய் ஆகவே )
ப்ரஜா பவ
அதி கரணே
பும்ஸி ஸஞ்சாயாம் கஸ் பிராயேண–அஷ்டாத்யாயீ –இருப்பிடம் என்ற பொருளைக் கொண்ட க என்பது-வினையுடன் இணையும் போது
அங்கு ஆண்பால் உள்ள பெயர்ச் சொல் உண்டாகும்–இடம் கருவி இரண்டு அர்த்தங்கள் வரலாம்
இதே போல் ஆஸ்ரம -856–நியம -163-869-யம -164-870 போன்ற திரு நாமங்களும் உண்டு
பந்தம் அறுப்பதோர் மருந்தும் பான்மையும் பல் உயிர்க்கு எல்லாம் அந்தமும் வாழ்வுமாய எம்பெருமான் -பெரிய திருமொழி -5-7-2-
எல்லா பிரஜைகளும் தாம் கொடுத்த சாதனங்களைக் கொண்டே தம்மைச் சேரும்படி
அவைகளுக்கு இடமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
எல்லா பிரஜைகளின் உற்பத்திக்கும் காரணமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் —
தம்மை நினைப்பூட்டும் ஞானிகளுக்கு ஸ்ரீ வைகுண்டம் முதலிய வற்றைத் தருபவர் -பிரஜைகளைப் படைப்பவர் –
பிரஜைகளையும் நஷத்ரங்களையும் நடத்துபவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
ஓம் பிரஜாபவாய நம
பிரஜைகளை உண்டாக்கியவன் -முதலில் தானே அஹங்காராதிகள் உண்டாக்கி நான்முகனை ஸ்ருஷ்டித்து
அவனுக்கு அந்தராத்மாவாக இருந்து மற்ற ஸ்ருஷ்ட்டி
சரண மடைந்த தருமனுக்காப் பண்டு நூற்றுவரை
மரண மடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த
கரண மிவை வுமக் கன்று என்று இராமானுசன் உயிர் கட்
கரணங்கு அமைத்திலனேல் அரணார் மற்று இவ் வார் உயிர்க்கே – 67-
—————
ஓம் ப்ரஜாபவாய நம:
ஸர்வா: ப்ரஜா அனைத்து ஜீவராசிகளும்
யத்ஸகாஶாதுத்பவந்தி அவரிடமிருந்தே உருவாகின்றதால்
ஸ ப்ரஜாபவ: பகவான் ‘ப்ரஜாபவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்து ஜீவராசிகளும் அவரிடமிருந்தே உருவாகின்றதால் பகவான் ‘ப்ரஜாபவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
——
பிரஜாபாவா – எல்லா உயிரினங்களும் தோன்றியவர்
ஆதி சங்கரர் சொல்வது போல் ‘ஸர்வா ப்ரஜா யட்சகாஷாத் உத்பவந்தி ச ப்ரஜாபாவா – எல்லா உயிரினங்களிலிருந்தும் தோன்றியவன்’.
முந்தைய நாமம் எல்லாப் பொருட்களையும் தழுவுகிறது ஆனால் இங்கு பிரஜா என்பது உயிருள்ள பொருட்களையும், குறிப்பாக உள்ளுக்குள் வளர்ந்த உணர்வுடன் கூடிய உயர்ந்த வாழ்க்கை வடிவங்களையும் மட்டுமே குறிக்கிறது.
91-அஹ –
பகல் போலே குறைவற்று விளங்குபவன்
ந ஹீநோ அஸ்ய அஸ்தீதி
அஹ
அஹர் அஹீநம் இதி மவ்லம் நிருக்தம் -(பழைய நிகண்டு) -யாரையும் கை விடாதவன்
அஹ -பகல் போன்றவன்
ந ஹி கல்யாண க்ருத கச்சித் துர்கதிம் தாத கச்சதி –ஸ்ரீ கீதை -6-40-
அர்ஜுனா மங்களகரமான செயலைச் செய்யும் யாருமே துர்கதி அடைய மாட்டான்
அநாதி அவித்யா நித்ரா வதவ் ஸ்வ அவ போத ஹேதுத்வாத் வா அஹரி வேதி அஹ
எல்லையற்ற காலமாக அறியாமையில் உள்ள ஒருவன் விழித்துக் கொள்வது போலே
ஞானம் பெரும் போது அவனுக்கு எம்பெருமான் தன்னைப் பற்றி ஞானம் அளித்து பகல் போல் நிற்கிறான் -பகலைப் போன்றவன் -அந்தி போல் நிறத்தாடை -கால சந்தி என்றே அர்த்தம் அங்கு
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -இரண்டாம் திரு -82
அல்லல் இன்பம் அளவிறந்து எங்கும் அழகு அமர் சூழ் ஒளியன்-3-10-8-
அநாதி மாயையினால் உறங்கி-அவித்யையில் இருந்து – எழுந்தவனுக்கு முதலில் தம் ஸ்வரூபத்தைக் காட்டுவதால்
பகல் போன்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
ஒளி மயமாய் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் —
ஜீவனைக் காட்டிலும் வேறுபட்டவர் -விடத் தகாதவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
ஓம் அஹசாய நம
யாரையும் விட்டுக் கொடுக்காதவன்
———
ஓம் அஹ்னே நம:
ப்ரகாஶரூபத்வாத் மிகுந்த ஒளி படைத்தவராக இருப்பதால்
அஹ: பகவான் ‘அஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மிகுந்த ஒளி படைத்தவராக இருப்பதால் பகவான் ‘அஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
——-
ஆஹா – அவர் ஒளிரும்
இந்த நாமத்திற்கு மூன்று அர்த்தங்கள் உள்ளன.
- யாரையும் கைவிடாதவர்.
- அறியாமையிலிருந்து மக்களை எழுப்பும் நாள் போன்றவர்.
- தன் பக்தர்களை அழிய விடாதவர்.
முதல் விளக்கம் “ந ஹினஹ் அஸ்ய அஸ்தி இதி அஹஹ் -அவரால் கைவிடப்பட்டவர்கள் யாரும் இல்லை.
இரண்டாவது விளக்கம் ஆஹா – நாள் என்ற வார்த்தையின் பாரம்பரிய அர்த்தத்தை அடிப்படையாகக் கொண்டது. அதிலிருந்து ப்ரத்யஹம் என்றால் ஒவ்வொரு நாளும் என்றும் அஹர்நிஷம் என்றால் இரவும் பகலும் என்று அர்த்தம். எனவே ஸ்ரீ ஆதி சங்கரர் கூறுகிறார் ‘பிரகாச ரூபத்வாத் ஆஹா – அவர் பகல் போல் பிரகாசமாக இருப்பதால் ஆஹா’ என்று அழைக்கப்படுகிறார். அவரது பிரகாசம் வெறும் உடல் மட்டுமல்ல, அறிவாற்றல் மற்றும் அறிவின் பிரகாசமும் கூட.
மூன்றாவது விளக்கம் ஆஹா என்பதன் மூலம் பெறப்பட்டது, இங்கு ஹா என்றால் அழித்தல்; அழிக்காதவன் அ-ஹா; மாறாக தனது பக்தர்களைக் காப்பவர்.
92-சம்வத்சர –
சேதனர் இடம் நன்றாக வசிப்பவன்
ஏவம் ப்ரபுத்தேஷு சமுத்தரணாய ஸம் வச தீதி
ஸம் வத்ஸர
வஸே
அஷ்டாத்யாயீ –ஸம் பூர்வாத் சித் -இதி ஸரந் ப்ரத்யய -ஸம்ஸ் யார்த்த தாதுகே இதி தகார
வாழ்வது என்ற பொருளை அளிக்கிற வஸ் என்பதுடன் ஸர என்பது சேர்ந்து வத்ஸர என்றாகி
இத்துடன் ஸம் இணைந்து சித் என்ற பொருள் ஆகிறது
யதா –
ததாமி புத்தி யோகம் தம் யேந மாம் உபயாந்தி தே –-ஸ்ரீ கீதை -10-10-
யார் என்னை அடைய வேண்டும் என்னும் ஆசை கொண்டு உபாஸிக்கிறார்களோ
அவர்களுக்கு என்னை அடைவதற்கான புத்தியை நானே அன்புடன் அளிக்கிறேன்
தேஷாம் அஹம் சமுத்தர்த்தா இதி–ஸ்ரீ கீதை –12-7-
பிறப்பு மற்றும் இறப்புடன் கூடிய இந்த ஸம்ஸாரம் என்ற கடலில் இருந்து
அவர்களை நான் விரைவாக கரை ஏற்றுகிறேன்
என்னுடைச் சூழல் உளானே -1-9-1-ஆறுகள் இலானே -ஒழிவிலன் என்னுடன் உடனே -1-9-3
அல்லும் பகலும் இடைவீடு இன்றி மன்னி என்னை விடான் -நம்பி நம்பியே -1-10-8-
மீண்டும் 423-பொருந்தி வசிப்பவன்
கல்கியாக அவதரிக்கும் காலம் எதிர் நோக்கி திருவநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளி
அநந்த சயநாரூடம் -சாத்விஹ சம்ஹிதை
அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணன்-
அப்படி எழுந்தவர்களின் அறிவில் சேர்ந்து வசிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
கால ரூபியாய் இருத்தலால் வருடமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் —
காலத்தை நியமிப்பவராக வருடத்தில் இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
ஓம் சம்வத்சராய நம
அடியார்களை உஜ்ஜீவிப்பித்து அருளுபவர் —மீண்டும் -423-நாமாவளி வரும் -வருஷத்துக்கு இதே பெயர்
————
ஓம் ஸம்வத்ஸராய நம:
———–
ப்ரத்யயா – நம்பக்கூடியவர்
ஸ்ரீ ஆதி சங்கரரின் கூற்றுப்படிபிரத்யயா என்பது பிரதீதி பிரஜ்ஞானம் அதாவது பிரபஞ்ச உணர்வைக் குறிக்கிறது. உபநிடதத்தின்படி ‘பிரஜ்ஞானம் ப்ரஹ்மம் – உணர்வுதான் பிரம்மன்’.
ஸ்ரீ பராசர பட்டர் ‘நம்பிக்கை கொள்ளக்கூடியவர்’ என்று பொருள் தருகிறார். இதை அவர் ‘பிரதீயதே அஸ்மிந் இதி ப்ரத்யயஹ் – யாரில் நாம் நம்பிக்கை வைக்க முடியும்’ என்று பகுப்பாய்வு செய்கிறார்.
95- சர்வ தர்சன –
தன் மகிமைகள் எல்லாம் பூரணமாக காட்டி அருளுபவன்
தேஷாம் ஸர்வம் ஸ்வ மஹிமாநம் தர்சயதீதி
யதா
தம் அக்ரதும் பஸ்யதி வீத சோக தாது ப்ரஸாதாத் மஹிமாநம் ஈஸாம்–ஸ்வேதாஸ்வரம்–3-20-
ஸர்வேஸ்வரன் கர்ம தொடர்பு இல்லாதவன் -மிகவும் மேன்மை யுடையவன் என்று
யார் ஒருவன் எப்போது காண்கின்றானோ -அப்போதே அவன் துக்கம் இல்லாதவனாகின்றான்
நாயமாத்மா — தஸ்ய ஏஷா ஆத்மா விவ்ருணதே தநூம் ஸ்வாம் –முண்டகம்–3-2-3-
யாரை பரமாத்மா ஏற்பது என்று முடிவு முடிவு செய்கிறானோ அவனால் பரமாத்மா அடையப்படுகிறான்
அவனுக்கு பரமாத்மா தனது ஸ்வரூபத்தைக் காட்டி அருளுகிறான்
காட்டவே கண்ட பாதம் –
காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த எம்பெருமான் -10-6-1-
அவர்கள் தம்மிடத்தில் உள்ளது எல்லாம் காணும்படி செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லாவற்றையும் கண்களாக யுடையவர்-எல்லாவற்றையும் அறிபவர் -ஸ்ரீ சங்கரர் —
சம்ஹாரம் செய்யும் ருத்ரனுக்கு ஞானத்தைக் கொடுப்பவர் -அனைத்தையும் பிரத்யஷமாக காண்பவர் –
எல்லா தர்ச புண்ய காலங்களிலும் அமாவாச்யைகளிலும் ஹவிஸ்சை எடுத்துச் செல்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
ஓம் சர்வ தர்சநாய நம
அடியாருக்கு சர்வ ஸ்வ தானம் பண்ணி அருளுபவர் –
அனைத்தையும் காண்பவர்
—————
ஓம் ஸர்வதர்ஶனாய நம:
ஸர்வாணி அனைவரும்
தர்ஶனாத்மகானி அக்ஷிணி அவருடைய பார்ப்பதற்குரிய கண்களாக இருப்பதால்
யஸ்ய ஸ பகவான்
ஸர்வதர்ஶன: ‘ஸர்வதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்
ஸர்வாத்மகத்வாத் அவர் அனைவருக்குள்ளும் உறையும் அந்தராத்மாவானபடியால்.
பகவான் அனைவருக்குள்ளும் உறையும் அந்தராத்மாவாக இருக்கிறார். எனவே, அனைத்து ஜீவராசிகளின் மூலமாக அவர் அனைத்தையும் காண்கிறார். இவ்வாறு, அனைத்தும், அனைவரும் அவருக்கு கண்களாக இருப்பதால் பகவான் ‘ஸர்வதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘விஸ்வதஸ்சக்ஷு:’ (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 4.4.19)
ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்த பரப்ரஹ்மத்திற்கு) எங்கும் கண்கள் இருக்கின்றன.
‘விஶ்வாக்ஷம்’ (நாராயண உபநிஶத் 13.1)
நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அனைத்துமே அவரது கண்கள்
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
——
சர்வதர்ஷனா – அவர் எங்கும் நிறைந்தவர்
ஸ்ரீஆதிசங்கரர் இதை ‘ஸர்வாணி தர்ஷனாத்மகானி அக்ஷீணி யஸ்ய சஹ் – அனைத்தையும் பார்க்கும் கண்களை உடையவர்’ என்று விளக்குகிறார். சங்கரர் ஸ்ருதியில் இருந்து பின்வரும் குறிப்பைக் கொடுக்கிறார் – “விஷ்வதாஷ் சக்ஷுர் விஸ்வக்ஷம் – எல்லாப் பக்கங்களிலும் கண்களை உடையவர் – உலகளாவிய கண் கொண்டவர்”. (தைத்திரிய ஆரண்யகா 10.1, 11).
ஸ்ரீ பராசர பட்டர் சர்வதர்ஷனா என்பதற்கு ‘எல்லாவற்றையும் காட்டுகிறார்’ என்று பொருள்படுகிறார் அல்லது தம் பக்தர்களுக்கு பல வடிவங்களிலும் பரிமாணங்களிலும் தன்னை முன்னிறுத்துகிறார்.
சர்வதோக்ஷி ஷிரோ முகம்’ -13-14- எங்கும் கண்களையும் தலைகளையும் கொண்டவர்.
பகவான் எங்கும் நிறைந்தவர், அனைத்தையும் பார்ப்பவர், தனது பக்தர்களின் மீது தனது அருளைப் பொழிவதற்கு எப்போதும் தயாராக இருக்கிறார்.
———————–
86- ஸூரேஸ-
பிரம்மா முதலிய தேவர்களையும் அவரவர் அதிகாரங்களில் நியமிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
தேவர்களுக்குத் தலைவர் -நன்மையைக் கொடுப்பவர்களுக்குத் தலைவர் -ஸ்ரீ சங்கரர் —
தேவர்களுக்குத் தலைவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
—————————————————————-
87-சரணம் –
எல்லோருக்கும் அடையும் சரணமாகவும் -தம்மை அடைவதற்கு உபாயமாகவும் இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
துன்பப் படுபவர்களின் துன்பத்தைப் போக்குபவர் –ஸ்ரீ சங்கரர் –
எல்லோருக்கும் அடைக்கலமாகவும் காப்பாற்றுவராகவும் இருப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
——————————
88-ஸர்ம-
ஸூக ரூபமாகவும் பயனாகவும் இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
பரமானந்த ரூபமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
அசுபங்களைப் போக்குபவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
—————————————————————–
89-விஸ்வரேத-
உலகங்கட்கு எல்லாம் மூல காரணமாய் இருப்பவர் -அவனே உபாயமாகவும் உபேயமாகவும் இருப்பவர் –
தானே சர்வ காரணம் என்று அறிந்து தனது திருவடிகளிலே கைங்கர்யம் செய்யவே
ஞான கர்ம இந்த்ரியங்களை கொடுத்து அருளினவன் -ஸ்ரீ பராசர பட்டர் —
உலகங்கங்களுக்கு எல்லாம் காரணமாய் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
உலகுக்குக் காரணமானவர் -வாயுவிற்கு காரணம் ஆனவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
—————————————————————–
90-பிரஜாபவ –
எல்லா பிரஜைகளும் தாம் கொடுத்த சாதனங்களைக் கொண்டே தம்மைச் சேரும்படி அவைகளுக்கு இடமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
எல்லா பிரஜைகளின் உற்பத்திக்கும் காரணமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் —
தம்மை நினைப்பூட்டும் ஞானிகளுக்கு ஸ்ரீ வைகுண்டம் முதலிய வற்றைத் தருபவர் -பிரஜைகளைப் படைப்பவர் –
பிரஜைகளையும் நஷத்ரங்களையும் நடத்துபவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
————————————————————————————
91-அஹ-
அநாதி மாயையினால் உறங்கி-அவித்யையில் இருந்து – எழுந்தவனுக்கு முதலில் தம் ஸ்வரூபத்தைக் காட்டுவதால்
பகல் போன்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
ஒளிமயமாய் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் —
ஜீவனைக் காட்டிலும் வேறுபட்டவர் -விடத் தகாதவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
——————————————————————————-
92-சம்வத்சர –
அப்படி எழுந்தவர்களின் அறிவில் சேர்ந்து வசிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
கால ரூபியாய் இருத்தலால் வருடமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் —
காலத்தை நியமிப்பவராக வருடத்தில் இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
————————————————————————————
93-வ்யால-
அவர்களை அங்கீ கரித்துத் தமக்கு உட்படுத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பாம்பைப் போல் யானையைப் போல் எவராலும் பிடிக்க முடியாதவர் -ஸ்ரீ சங்கரர் —
கௌஸ்துபம் முதலிய விசேஷமான அணிகலன்களை யுடையவர் -பக்தர்களுக்காகவே அனைத்தையும் அளிக்க முயல்பவர் –
ஸ்ருஷ்டியாதிகளுக்கு தாம் ஒருவரே -பகைவர்களை அழிப்பவர்-அனைத்து காரணமானவர் –
விசேஷமாக பிரகாசிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
—————————————————————————–
94-ப்ரத்யய –
அவர்களுக்குத் தம்மிடத்தில் நம்பிக்கை யுண்டாக்குபவர்-ஸ்ரீ பராசர பட்டர் –
ஞானமே வடிவானவர் -ஸ்ரீ சங்கரர் —
அனைத்தையும் அறிந்தவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
—————————————————————————-
95-சர்வ தர்சன –
அவர்கள் தம்மிடத்தில் உள்ளது எல்லாம் காணும்படி செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லாவற்றையும் கண்களாக யுடையவர்-எல்லாவற்றையும் அறிபவர் -ஸ்ரீ சங்கரர் —
சம்ஹாரம் செய்யும் ருத்ரனுக்கு ஞானத்தைக் கொடுப்பவர் -அனைத்தையும் பிரத்யஷமாக காண்பவர் –
எல்லா தர்ச புண்ய காலங்களிலும் அமாவாச்யைகளிலும் ஹவிஸ்சை எடுத்துச் செல்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
——–
பிரம்மாவுக்குக் குருவாக இருந்து திருமால் வழிகாட்டினார். இவ்வாறு தேவர்களைப் படைத்ததோடு,
அவர்களுக்கு வழிகாட்டியாகவும் விளங்கி அவர்களின் உஜ்ஜீவனத்துக்கு உதவுவதால் ‘ஸுரேச:’ என்று திருமால் அழைக்கப்படுகிறார்.
‘ஸுர:’ என்றால் தேவர் என்று பொருள். ‘ஈச:’ என்றால் படைத்து வளர்ப்பவன் என்று பொருள்.
‘ஸுரேசஹ’ என்பதே ஸஹஸ்ரநாமத்தின் 86வது திருநாமம்.
“ஸுரேசாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் மனங்களை எப்போதும் திருமால் ஆட்சி செய்வார்.
(குறிப்பு: ‘ஸுரேசஹ’ என்ற திருநாமத்தில் உள்ள ‘ச’ என்னும் எழுத்து ‘श’ என்ற வடமொழி எழுத்தின் உச்சரிப்பில் வந்துள்ளது.
அது ஸ, ஷ இரண்டுக்கும் இடைப்பட்ட ஒலி. கசடு, பிசகு உள்ளிட்ட வார்த்தைகளில் ‘ச’ வை உச்சரிப்பது போல,
ஸுரேச: வில் உள்ள ‘ச’ வை உச்சரிக்க வேண்டும்.)
தஞ்சம் அடைந்தவர்கள் யாராக இருப்பினும்,
வேறுபாடோ ஏற்றத்தாழ்வோ பாராமல் அவர்களை ரக்ஷித்தே தீர வேண்டுமென்ற உறுதியுடன் இருப்பதால்,
அனைவருக்கும் புகலிடமான திருமால் ‘சரணம்’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 87வது திருநாமம்.
“சரணாய நமஹ” என்று தினமும் சொல்லிப் பெரும்புறக்கடலான பக்தவத்சலின் திருவடிகளைச் சரண்புகுந்து அவன் அருளைப் பெறுவோம்.
எல்லையில்லாத ஆனந்தமே வடிவெடுத்தவராகத் திருமால் விளங்குவதால் ‘சர்ம’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 88வது திருநாமமாக அமைந்துள்ளது.
“சர்மணே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் வாழ்வில் ஆனந்தம் பொங்கும்படித் திருமால் அருள் புரிவார்.
விச்வம் என்றால் உலகம்.
விச்வத்தில் உள்ள அனைத்தும் அவரை உசுப்பிக்கவே ஏற்பட்டபடியால் திருமால் ‘விச்வரேதஸ்’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 89வது திருநாமம்.
“விச்வரேதஸே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் திருமாலுக்கு வழுவிலாத் தொண்டு செய்யும் பேறு பெறுவார்கள்.
தன் பிரஜைகளுக்கு ஏற்ற இருப்பிடமாகத் திருமால் இருப்பதால் ‘ப்ரஜாபவஹ’ என்று விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 90வது
திருநாமத்தில் வியாசர் திருமாலை அழைக்கிறார்.
“ப்ரஜாபவாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்படித் திருமால் அருள் புரிவார்.
ஒருபோதும் தன் அடியார்களைக் கைவிடாமல் காத்தருள்வதால் திருமால் ‘அஹ:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 91-வது திருநாமம்.
“அஹ்நே நமஹ” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களை என்றும் திருமால் கைவிடமாட்டார்.
நம் வருகைக்காகவும், நாம் வந்தவுடன் நமக்கு அருள் புரிவதற்காகவும் காத்திருக்கும் ஸ்ரீ திருமால்
‘ஸம்வத்ஸரஹ’ என்று ஸ்ரீ ஸஹஸ்ரநாமத்தின் 92-வது திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
“ஸம்வத்ஸராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் பக்தர்கள் செய்யும் அனைத்து நற்செயல்களையும் தனக்குச் செய்யப்பட்ட
தொண்டாக ஏற்று அதில் வெற்றி காணும்படித் திருமால் அருள்புரிவார்.
தன்னைச் சரண் புகுந்த அடியவர்களை யானை கரும்பைப் பிடித்துக் கொள்வது போல இறுகப் பிடித்துக் கொண்டு
கைவிடாமல் காத்தருளுவதால் திருமால் ‘வ்யாலஹ’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 93-வது திருநாமம்.
வ்யாலாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் நல்ல பிரார்த்தனைகள் அனைத்தையும்
திருமால் நிச்சயம் நிறைவேற்றித் தருவார்.
பலவிதமான சாகசங்களைப் புரிந்து தன் பக்தர்களுக்குத் தன் மேல் நம்பிக்கையை உண்டாக்கி
அதை வளர்ப்பவராகத் திருமால் திகழ்வதால் ‘ப்ரத்யய:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 94-வது திருநாமம்.
தன்நம்பிக்கையை நாம் இழக்கும் போதெல்லாம் “ப்ரத்யயாய நமஹ:” என்ற திருநாமத்தைச் சொல்லித் திருமாலை வணங்கினால்,
அவர் அருளால் நமக்குத் தன்னம்பிக்கையும் தெய்வநம்பிக்கையும் புத்தணர்ச்சியும் உண்டாகும்.
இறை நம்பிக்கை இல்லாத முன்ரோ போன்றவர்களுக்கும் தனது மேன்மைகளைக் காட்டி அவர்களையும்
வசீகரிப்பதால் திருமால் ‘ஸர்வதர்சனஹ’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 95-வது திருநாமம். “ஸர்வதர்சனாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு
எம்பெருமான் தனது அனைத்து மேன்மைகளையும் நன்கு காட்டி அவர்கள் வாழ்வில் மேன்மை அடைய அருள்புரிவார்.
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply