ஸ்ரீ பகவத் குண தர்ப்பணம்–ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம வியாக்கியானங்கள் — ஸ்லோகம் –9–

9. ஈஶ்வரோ விக்ரமீ தன்வீ மேதாவீ விக்ரம: க்ரம: |

அனுத்தமோ துராதர்ஶ: க்ருதஞ்ய: க்ருதிராத்மவான் ||

இந்த ஒன்பதாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:

75-ஈஶ்வர:, 76. விக்ரமீ, 77. தன்வீ, 78. மேதாவீ, 79. விக்ரம:, 80. க்ரம: |

81-அனுத்தம:, 82. துராதர்ஶ:, 83. க்ருதஞ்ய:, 84. க்ருதி:, 85. ஆத்மவான் ||

இறைவன் பிரபஞ்சத்தின் கட்டுப்பாட்டாளர், அவர் தனது விருப்பப்படி விஷயங்களைச் செய்கிறார். அவர் மாபெரும் முன்னேற்றங்களைக் கொண்டவர் மற்றும் எப்போதும் மிகவும் தைரியமானவர், அவர் ‘வில்’ கைப்பிடிப்பவர்களில் ராமர் ஆவார். அவர் ஒரு ‘மேதாவி’ அல்லது அனைத்து பாடங்களிலும் அறிவின் ஊற்றுமுனை மற்றும் ஒரு மாபெரும் நினைவாற்றல் கொண்டவர். அவர் பறவைகளின் ராஜாவான கருட வாகனத்தில் உலகம் முழுவதும் பயணம் செய்கிறார், மேலும் அவர் அனைத்து இயக்கங்களுக்கும் பின்னால் உள்ள சக்தி. அவர் இணையற்றவர் மற்றும் சிறந்து விளங்காதவர், மேலும் வெல்ல முடியாதவர், ஆனாலும் தனது இரக்கத்தையும் கருணையையும் பொழியும் தீவிர பக்தர்களுக்கு அவர் நன்றியுள்ளவர். அவர் நம் அனைவரிடத்திலும் வசிக்கிறார் மற்றும் எங்கும் நிறைந்தவர்.

ஈச்வர: — உலகை ஆள்வதைப் போல முக்தியிலும் ஆளும் ஈச்வரர்
விக்ரமீ — தடைப்படாத சங்கல்பம் உடையவர்
தந்வீ – குறித்த இலக்கைத் தவறாது எய்யும் வில் உடையவர்
மேதாவீ — பல அறிவுகளையும் ஒரே நேரத்தில் கிரகிப்பவர்
விக்ரம: — வேதவடிவான கருடன் மீது எங்கும் தடையின்றிச் செல்பவர்
க்ரம: — எதையும் அளந்து அகப்படுத்தும் விரிவுடையவர்
அநுத்தம: — உயர்வற உயர்ந்தவர்
துராதர்ஷ: — எதனாலும் எட்டாத நிலையுடையவர்
க்ருதக்ஞ: — அடியார் செய்யும் மிகச்சிறு முனைப்பையும் மிகவும் போற்றுபவர்
க்ருதி: — நாம் செய்யும் எந்த நற்செயலும் அவர் செய்ய வைப்பதுவே
ஆத்மவாந் — நற்செயல் புரிபவரைத் தம் உயிர்போல் கருதுபவர்

எல்லாம் வல்லவன்{ஈஸ்வரன்},
பேராற்றல் கொண்டவன் {விக்ரமீ},
வில் தரித்தவன் {தந்வீ},
ஆய்வுகள் அனைத்தின் உள்ளடக்கத்தையும் மனத்தில் கொள்ளவல்லவன் {மேதாவீ},
கருடனைச் செலுத்திக் கொண்டு அண்டத்தில் திரிபவன் {விக்ரமன்},
தனக்கு அளிக்கப்படும் காணிக்கைகளுக்குத் தகுந்தவனாகவும் அவற்றை முறையாக அனுபவிக்கும் சக்தி கொண்டவனாகவும் இருப்பவன் {க்ரமன்},
ஒப்பற்றவன் {அநுத்தமன்},
குழப்பமடையாதவன் {துராதர்ஷன்},
செய்யப்படும் அனைத்துச் செயல்களையும் அறிந்தவன் {க்ருதஜ்ஞன்},
அனைத்துச் செயல்களுடன் அடையாளங்காணப் படுபவன் {க்ருதி},
தன் உண்மையான சுயத்தையே சார்ந்திருப்பவன் {ஆத்மவாந்};(22)

அனைத்தும் தானே –ஆனால் அவற்றிலும் உயர்ந்தவன் –

75-ஈஸ்வர -தடங்கல் அற்ற ஆட்சி புரிபவர் -அனைத்து சங்கல்பங்களையும் முடிப்பவர் –
76-விக்ரமீ-மிக்க திறல் உடையவர் -எதிர்க்கும் அனைவரையும் ஒழிக்க வல்லவர் –
77-தன்வீ -சார்ங்கம் என்னும் வில்லைப் பிடித்த தன்னிகர் அற்றவர் —
78-மேதாவீ-தன் பெருமைக்குத் தக்க சர்வஜ்ஞ்ஞர் -சர்வஜ்ஞ்ஞர் –
79-விக்ரம-வேத வடிவமான கருடனை வாகனமாகக் கொண்டு தன் விருப்பப்படி செய்பவர் –
80-க்ரம-பரமபதத்தில் செழிப்பானவர் -எங்கும் நிறைந்து இருப்பவர் –

81- அநுத்தம–தனக்கு மேற்படி யாரும் அற்றவர் –
82-துராதர்ஷ -கடல் போலே ஆழமானவர் -ஆகையால் கடக்கவோ கலக்கவோ வெற்றி கொள்ளவோ முடியாதவர் –
83-க்ருதஜ்ஞ-செய் நன்றி அறிபவர் -நாம் செய்யும் சிறு பூசையையும் நினைவில் கொள்பவர் –
84-க்ருதி – அடியார்களை தர்மத்தில் தூண்டும் சக்தியாய் இருப்பவர் –
85-ஆத்மவான் -தர்மம் செய்யும் ஆத்மாக்களை தனக்குச் சொத்தாகக் கொண்டவர் –

1-8-த்ரிவித சேதன வ்யதிரிக்த -நியாமகன் -66-88-திரு நாமங்கள்

—————

75-ஈஸ்வர
சர்வ ஸ்வாமி -சர்வேஸ்வரேஸ்வரன்

அபாரே அபி பர போக பூமவ் அப்ரதிஹதஸ் வேச்ச
ஈஸ்வர
யதா

ஸத்ய காம ஸத்ய ஸங்கல்ப –சாந்தோக்யம் -8-1-5–அவனுடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறுகிறது-தடையற்ற உறுதி உள்ளவன்

யத்ர காம அகமோ வசீ இத்யாதி–தான் விரும்பும் இடங்கள் எங்கும் செல்ல வல்லவன் -அனைத்தையும்-அனைவரையும் தம் வசம் வைத்துள்ளவன்

ஸர்வஸ்ய வஸ ரமணாத் –ஆனந்தமாக செய்பவன்

சத்ய காம சத்ய சங்கல்ப -இச்சிப்பதும் நினைப்பதும் உண்மையாகும் -நடக்கும் –
எண்ணில் தொல் புகழ் வானவர் ஈசனே -3-3-3-
வானோர் பெருமான் மா மாயன் வைகுந்தன் எம்பெருமான் -1-5-4-

அளவில்லாத நித்ய விபூதியிலும் தடையில்லாத சங்கல்பம் உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

எல்லாம் வல்லவர் ஆதலால் ஈஸ்வரர் -ஸ்ரீ சங்கரர் –

ஈச எனப்படும் பிரம்மா முதலியவர்களைக் காட்டிலும் மேம்பட்டவர் –
லஷ்மீ தேவியையும் வாயுவையும் பிரகாசிக்கச் செய்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

ஓம் ஈஸ்வராய நம
தனது சங்கல்பத்தாலே அனைத்தையும் ஆள்பவன்
கீழே -36-நாமாவளியாகவும் பார்த்தோம்
சர்வ சக்தன் -கிரியா இச்சா ஞான சக்திகளை ஆள்பவன்

—————

ஓம் ஈஶ்வராய நம:

ஸர்வ ஶக்தி மத்தயா மிகுந்த சக்தி படைத்தவராக இருப்பதால் ஈஶ்வர: பகவான் ‘ஈஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் சக்திகளுக்கு எல்லைகளே கிடையாது. அவ்வாறு, மிகுந்த சக்தி படைத்தவராக இருப்பதால் பகவான் ‘ஈஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முன்பு 36-வது திருநாமத்தில் ‘ஈஶ்வர:’ என்பதற்கு ஐஸ்வர்யம் உடையவர் என்று பொருள். இங்கு, சக்திமிக்கவர் என்று பொருள்.

————

ஈஸ்வர – அவர் சர்வ வல்லமை படைத்தவர்

இந்த நாமம் முதலில் 4வது ஸ்லோகத்தில் தோன்றியது. “ஸம்பவோ பாவனோ பர்தா பிரபவஹ் ப்ரபுர் ஈஸ்வரஹ்….” 36 வது நாமமாக .   _

தற்போதைய நிகழ்வை ஸ்ரீ ஆதி சங்கரர் ‘ஸர்வ சக்திமத்தாயா ஈஸ்வரஹ் – அவர் ஈஸ்வரர், ஏனெனில் அவர் அனைத்து சக்தி வாய்ந்தவர். இந்தச் செய்யுளில் ஈஸ்வரன் என விளக்கப்பட்டுள்ளது – மகத்தான சுயக்கட்டுப்பாட்டுடன் வரம்பற்ற சக்திகளைக் கொண்டவர் மற்றும் அவருக்கு என்ன துன்பம் வந்தாலும் அதைப் பெறுபவர் .

ஈஸ்வரனின் சித்தம் அல்லது சங்கல்பம் இல்லாமல், கர்மா என்பது வெற்று சடங்கு. இந்த நாமாவில், பகவான் சக்தியின் உண்மையான ஆதாரமாக காட்டப்படுகிறார்,

————-

76-விக்ரமீ –
பராக்கிரமம் உடையவன் –

இச்சா ப்ரதி ஹந்த்ரு ப்ரஸக்தி (பேச்சுக்கே இடமில்லை )பரிபந்தி ஸ்வ பாவம் ஸ ஆஹ
விக்ரமீ -இதி
பூம ப்ரஸம்ஸா நித்ய யோகாத் யர்த்த இநி
யதா

மனசா ஏவ ஜகத் ஸ்ருஷ்டிம் சம்ஹாரம் கரோதி ய தஸ்ய அரி பக்ஷே ஷபணே கியாந் உத்யம விஸ்தர-இத்யாதி -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-22-15-
சங்கல்பத்தாலே அனைத்தையும்-படைத்து அழிக்கவும் செய்ய வல்லவன்
விரோதிகளை நிரசிக்க அவன் வேறே என்ன முயற்சி செய்ய வேண்டும்-நினைத்த உடனே அழிந்து விடுவார்களே

நினைவாலே நடக்கும் -சுண்டு விரல் நுனியாலேயே நினைத்தால் முடித்து விடுவேன்

பிறந்தவாறும் வளர்ந்தவாறும் -5-10-திருவாய் மொழி முழுதும் அவன் விக்கிரமம் பேசும்

சார்ந்த இரு வல் வினைகளும் சரிந்து-மாயப்பற்று அறுத்து –தீர்த்த தன் பால் மனம் வைக்காத திருத்தி -வீடு நிறுத்துவான் -இதுவே மஹா விக்ரம செயல்

நினைத்தது தடைபடும் வாய்ப்பே இல்லாமல் நினைத்ததை முடிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

அனைவராலும் போற்றப்படும் விக்ரம் -நித்தியமாக இனி சேர்ந்து விக்ரமீ

சௌர்யத்தை யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

தனது அவதாரங்களில் ஏற்றத் தாழ்வு இல்லாதவர் -பராக்ரமத்தை யுடையவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

ஓம் விக்ரமீ நம
வீர தீர பராக்ரமங்களில் ஒப்பற்றவன்

—————

ஓம் விக்ரமிணே நம:

விக்ரம: ‘விக்ரம’ என்றால் ஸௌர்யம் சூரத்தனம் என்று பொருள் தத்யோகாத் அத்தகைய சூரத்தனம் உடையவராதலால் விக்ரமீ பகவான் ‘விக்ரமீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகுந்த சூரத்தனம் படைத்தவராக இருப்பதால் பகவான் ‘விக்ரமீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நாம் பொதுவாக வீர, தீர, சூரன் என்று கூறுவது உண்டு. இவற்றின் பொருள் என்ன? வீரம் மிக்கவன் வீரன்; எதிரிகளிலும் வீரர்கள் இருப்பார்கள்; அவ்வாறு பல வீரர்கள் ஒன்றே திரண்டு வந்து எதிர்த்தாலும் தன் தைர்யத்தை இழக்காதவன் தீரன். அத்தகைய எதிரிகள் பலர் எதிர்ப்பினும், அவர்கள் அனைவரையும் வெல்பவன் சூரன். பகவான் சூரர்கள் அனைவரிலும் மிகச் சிறந்தவர்.

——

விக்ரமி – அவர் தைரியமானவர்

விக்ரமி என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன.

  1. எப்போதும் தைரியசாலியாக இருப்பவன் விக்ரமி. ஸ்ரீ பராசர பட்டர் இந்த பெயர் அவரது இயல்பைக் குறிக்கிறது மற்றும் அவரது விருப்பத்திற்கு அல்லது விருப்பத்திற்கு எதிராக நடக்கும் அனைத்து சாத்தியக் கூறுகளையும் நீக்குகிறது என்று சுட்டிக்காட்டுகிறார்.
  2. விக்ரமி என்பது பகவானின் வாமன அவதாரத்தையும் குறிக்கிறது. விக்ரமி குள்ள வாமனனிலிருந்து பிரமாண்டமான திரிவிக்ரமனாக மாறியதைக் குறிக்கும் “சிறப்பு” அடிச்சுவடுகளைக் கொண்டவர்.
  3. ஸ்ரீ ஆதிசங்கரர், ‘விக்ரமஹ ஷௌர்யம் தத்யோகாத் விக்ரமி – அவரது அபார வீரத்தால் விக்ரமி என்று அழைக்கப்படுகிறார்’ என்கிறார்.15. சாக்ஷீ – எல்லாவற்றையும் சாட்சியாகக் காண்பவர்ஸ்ரீ பராசர பட்டர் இந்த நாமத்தை, முக்தர்கள் அல்லது முக்தி பெற்ற ஆத்மாக்களுக்கு அவர் அளிக்கும் பேரின்பத்தை இறைவன் சாட்சியாகக் காண்கிறார், அதனால் தானும் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று விளக்குகிறார்.சாக்ஷாத் அவ்யவதானேன ஸ்வரூபபோதேன ஈக்ஷதே பஷ்யதி ஸர்வம் இதி சாக்ஷீ – அனைத்தையும் அறிந்தவர், எல்லாம் அறிந்த பகவான், எந்த ஒரு கருவியும் இல்லாமல் (உணர்வு உறுப்புகள் போன்ற) அனைத்தையும் தனது சொந்த உணர்வால் நேரடியாகக் காண்கிறார்’ என்று ஸ்ரீ ஆதி சங்கரர் கூறுகிறார்.——————-77. தன்வி – வில் பிடிப்பவன்அடிப்படையில் இதன் பொருள் வில் வீச்சாளர். ‘தனுரஸ்ய அஸ்தி இதி தன்வீ – வில் சாமர்த்தியமாகப் பிரயோகிப்பதால் தன்வீ என்று அழைக்கப்படுகிறார். அவரது வில் பெரிய ‘ சார்ங்க’ என்பதால் இறைவன் ‘ சாரங்கபாணி’ என்றும் அழைக்கப்படுகிறார் .பகவத் கீதையில், ‘ராமஸ் சாஸ்த்ர பிருதம் அஹம் – வில் ஏந்துபவர்களில் நான் ராமன்’ ( 10 – 31) என்று பகவான் கூறுகிறார்—

77-தந்வீ –
சாரங்க வில்லை யுடையவனே -மற்ற திவ்ய ஆயுதங்களுக்கும் உப லஷணம்-

அத ஈத்ரு ஸ நிரதிசய பவ்ருக்ஷ (விக்ரம )அநு ரூபம் திவ்யம் ஸார்ங்கம் தநுர் நித்ய மஸ்யேதி தந்வீ
த்ரீஹ் யாதித் வாத்ய தோக்தார்த-இநி
ஸர்வ திவ்யாயுத ப்ரதர்சனம் சை தத்
யதா

சார்ங்க தந்வா -ஹ்ருஷீகேஸ- புருஷ-புருஷோத்தம-அஜித- கட்க த்ருக்-விஷ்ணு-க்ருஷ்ண ச ஏவ பிருஹத் பல–யுத்த -120-15-
சார்ங்கம் என்னும் வில்லை எப்போதும் உடையவன்
அவனே ஹ்ருஷீ கேசன் -புருஷன் -புருஷோத்தமன்
கையில் கத்தியும் வைத்துள்ளான்
அவனை யாரும் வெல்ல இயலாது
மிகவும் வலிமையான விஷ்ணுவும் கிருஷ்ணனும் அவனே ஆவான்

சர நாநா வித ஆகார தனு ஆயத விக்ரஹம் அநு வ்ரஜந்தி காகுத்ஸ்தம் சர்வே புருஷ விக்ரஹ –யுத்த 107-9–
காகுத்த வம்சத்தில் திரு அவதரித்த ஸ்ரீ ராமன் தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருளும் போது
பல வடிவங்களில் இருந்த அம்புகளும் கோதண்டம்-என்னும் நீளமான வில்லும் மனித உருவம் எடுத்து அவனைத் தொடர்ந்தன

ததோ ராஜன் பகவான் உக்ர தன்வா நாராயண பிரபவ ச அப்யயஸ் ச–
அரசனே இதனால் பயங்கரமான வில்லை ஏந்திய இவனே ஸ்ருஷ்ட்டி சம்ஹார காரணன்

பூதாதிம் இந்திரியாதிம் ச த்விதா அஹங்காரம் ஈஸ்வர பிபார்த்தி
சங்க ரூபேண சார்ங்க ரூபேண ச ஸ்திதம் -இத்யாதி-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-70-அஸ்திர பூஷண அத்யாயம் –என்று
பஞ்ச பூதங்களின் காரணமான தாமஸ அஹங்காரம் –சங்க ரூபேண-இந்திரியங்களின் காரணமான சாத்விக அஹங்காரம்-சார்ங்க ரூபேண-இரண்டையும் சர்வேஸ்வரன் சங்கு மற்றும் சார்ங்க வடிவில் வைத்துள்ளான் –

சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தன்னை –
அன்று நேர்ந்த நிசாசரரை வெந்நரகம் சேரா வகையே சிலை குனித்தான்

ஒரு வில்லால்–ஓங்கு முந்நீர் — அரக்கர் கோனை -தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்

தெய்வீகமான வில்லை எப்போதும் உடையவன் என்பதால் தன்வீ
வரீஹீ போல் உடையவன் என்ற பொருளில் -ஈ காரம் முடிவில் வந்தது

இப்படிப்பட்ட தமக்குத் தகுந்த உயர்ந்த சார்ங்கம் என்னும் வில்லை யுடையவர் –
எல்லா திவ்ய ஆயுதங்களோடும் கூடியவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

வில்லை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

வில்லை யுடையவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

ஓம் தந்வீ நம
சாரங்கம் உடையவன்

—————

ஓம் தன்வினே நம:

தனுரஸ்யாஸ்தீதி (ஶார்ங்கம், அல்லது இராமாவதாரத்தில் கோதண்டம்) என்னும் வில்லை (தனுஸ் என்றால் வில் என்று பொருள், அதை) ஏந்தி இருப்பதால்  தன்வீ பகவான் ‘தன்வீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(ஶார்ங்கம், அல்லது இராமாவதாரத்தில் கோதண்டம்) என்னும் வில்லை (தனுஸ் என்றால் வில் என்று பொருள், அதை) ஏந்தி இருப்பதால் பகவான் ‘தன்வீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வ்ரீஹ்யாதித்வாதினிப்ரத்யய: | (தனுஸ் என்ற இந்த சொல்), ‘வ்ரீஹ்யாதி’ சொற்றொடர்களில் வருவதால் இங்கு தனு என்ற சொல்லுடன் ‘இனி’ என்ற விகுதி சேர்கிறது (வ்ரீஹ்யாதிப்யஸ்ச – பாணினி ஸூத்ரம் 5.2.116).

ராம: ஶஸ்த்ரப்ருதாமஹம் (ஸ்ரீமத் பகவத்கீதை 10.31)

“படைதரித்தோரில் நான் இராமன்”

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

——-

மேதாவி – சிறந்த புத்திசாலித்தனம் கொண்டவள்

மேதாவி சிறந்த நினைவாற்றலையும் சிறந்த புத்திசாலித்தனத்தையும் ஒருங்கிணைத்தவர்.

ஸ்ரீ ஆதி சங்கரர் கூறுகிறார் ‘மேதா பஹுக்ரந்த தாரணா சாமர்த்யம், ச யஸ்ய அஸ்தி ச மேதாவி – மேதா என்பது ஒரே நேரத்தில் வெவ்வேறு விஷயங்களில் பல கருத்துக்களைப் புரிந்துகொள்ளும் திறன்; இந்தத் திறன் உள்ளவன் இயல்பாகவே மேதாவி’.


78-மேதாவீ-
எல்லாம் அறிந்தவன் -ஸ்வதஸ் சர்வஞ்ஞன்
எல்லையில் ஞானத்தன் -3-10-8-முக்காலத்தில் நடந்த நடக்கும் நடக்கப்போகும் அனைத்தையும் ஸதா ப்ரத்யக்ஷமாக அறிபவன்

கால தேச வரையரை யற்ற மகிமைக்கு உதவியாக -ஸ்வா பாவிக சர்வஜ்ஞத்வம் யுடையவர் –

நிஸ் ஸீம நித்ய பூம அநு குண ஸஹஜ ஸார்வஞ்ஞய

அஸ் மாயா மேதா ஸ்ரஜோ விநி –அஷ்டாத்யாயீ –1-2-21-அஸ் என்று முடிகிற சொல்லான யசஸ் மாயா மேதா ஸ்ரக் போன்றவற்றின் இறுதியில்
உடையவன் பொருளில் விநி என்ற பதம் வரும்-இத் யுக்தார்த்தே விநி -மேதா +இநி -மேதாவீ

பேர் அறிஞ்ஞன் -எல்லை அற்றதும் -நித்தியமாக உள்ளதும் ஆகிய தனது மேன்மைகளை ஏற்றபடி
எந்த உதவியும் எதிர்பாராமல் இயல்பாகவே அனைத்தையும் அறிந்துள்ளவன் ஸ்ரீ பராசர பட்டர் —

பல கிரந்தங்களை தரிக்கும் திறமை உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

அறிவுடையவள் ஆதலால் மேதாவீ-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

ஓம் மேதாவீ நம
சர்வஞ்ஞன்–முக்காலத்தில் நடப்பவை அனைத்தையும் கையிலங்கு நெல்லிக்கனியாக ப்ரத்யக்ஷமாக பார்ப்பவன் –
நினைவு மாறாதவன்

———

ஓம் மேதாவினே நம:

மேதா ‘மேதா’ என்றால் பஹுக்ரந்ததாரணஸாமர்த்யம் பல நூல்களைக் கற்று அவற்றின் உண்மைப் பொருளை அறியக்கூடிய வல்லமை ஸா யஸ்யாஸ்தி ஸ பகவானிடம் இத்தகைய வல்லமை உள்ளதால் மேதாவீ பகவான் ‘மேதாவீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘அஸ்மாயாமேதாஸ்ரஜோ வினி:’ (பாணினி சூத்ரம் 5.2.121)

இந்தப் பாணினி ஸுத்ரத்தின்படி மேதா என்ற சொல்லுடன் வினி என்ற விகுதி சேர்ந்து ‘மேதாவீ’ என்றாகிறது.

பல நூல்களைக் கற்று அவற்றின் உண்மைப் பொருளை அறியக்கூடிய வல்லமை வல்லமை உள்ளவராதலால் பகவான் ‘மேதாவீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.


79-விக்ரம-
கருட வாஹனன் –

விநா (பஷியாலே -விபக்தியுடன் )-பதக பதிநா த்ரயீ மயேந க்ரமணம் –தத்ர தத்ர ஸ்வ இச்சா விஹார -கத ஆகத மஸ்யேதி
விக்ரம
யதா

தத் புருஷாய வித்மஹே ஸூவர்ண பஷாய தீமஹீ தந்நோ கருட ப்ரசோதயாத் -தைத்ர்ய நாராயண வல்லீ -1-24-
புருஷோத்தமனான ஸ்ரீ மன் நாராயணனுக்கு ஆள் பட்டவன்
அழகான சிறகுகள் கொண்டவன்
இப்படிப்பட்ட கருடனை உபாசிக்கிறோம் -இப்படிப்பட்ட தியானத்தை கருடன் மேலும் தூண்டட்டும்

தத் சப்தம் மஹா புருஷனைச் சொல்லி புருஷ கருடன் சேஷ பூதன்

தஸ்ய மஹா புருஷஸ்ய புருஷ சேஷ –இத்யர்த்த
ஸுபர்ண ஸூ க்தாதி ஷு சாஸ்ய தத்வம் த்ரஷ்டவ்யம்
ஸுபர்ண ஸூக்தம் போன்ற கிரந்தங்கள் மூலமாக கருடனைப் பற்றி மேலும் அறியலாம்

அஞ்சிறைப் புள் தனிப் பாகன் அமரர் வேந்தன்
வையத் தேவரும் வணங்க அணங்கு எழு மா மலை போல் தெய்வப் புள்ளேறி வருவான் -பெரிய திரு மொழி -3-3-6-

வேத மூர்த்தியான கருடனைக் கொண்டு விரும்பியபடி எழுந்து அருளுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
வி+க்ரமணம் -கருடன் மேல் அமர்ந்த-வி -என்பது பறவைகள் அரசனும் வேத ஸ்வரூபனுமான கருடனைக் குறிக்கும் –

உலகத்தை அளந்தவர் -கருடனை வாகனமாகக் கொண்டவர் -ஸ்ரீ சங்கரர் –

திரிவிக்கிரம அவதாரத்தில் மென்மையான அடிகளை யுடையவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

ஓம் விக்ரமாய நம
புள்ளரையன் -வேத ஸ்வரூபியை வாகனமாககே கொண்டவன்

—————

ஓம் விக்ரமாய நம:

விசக்ரமே தாவி (அளந்தார்) ஜகத் விஶ்வம் இந்தப் ப்ரபஞ்சத்தை (ஏழு உலகங்களையும்) தேன எனவே விக்ரம: பகவான் ‘விக்ரம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஏழு உலகங்களையும் தாவி அளந்ததால் பகவான் ‘விக்ரம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மஹாபலி ப்ரஹ்லாதனின் பேரன். அவன், இந்த்ரனிடமிருந்து ஸுவர்க்கத்தை அபகரிக்க, பகவான் வாமனனாய்த் தோன்றி, மஹாபலியிடம் மூன்றடி மண் யாசித்து அனைத்து உலகங்களையும் தாவி அளந்தார் என்பது பிரசித்தம். வாமனன் என்று அழைக்கப்பட்ட அவரே, தாவி அளந்தபின் த்ரிவிக்ரமன் என்று அழைக்கப்பட்டார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

வினா கருடேன பக்ஷினா வினா என்றால் கருடப் பறவையைக் குறிக்கும் க்ரமாத்வா அதன் மீதேறி வருவதால் விக்ரம: பகவான் ‘விக்ரம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வினா என்னும் கருடன் மீதேறி வருவதால் பகவான் ‘விக்ரம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வி(வினா) + க்ரம(க்ரமாத்வா) = விக்ரம

——–

விக்ரமா – மாபெரும் முன்னேற்றங்களைக் கொண்டவர்

 இந்த பெயரை 4 வெவ்வேறு வழிகளில் விளக்கலாம்.

  1. முந்தைய நாம விக்ரமியில் (76 வது நாமம்) இருந்ததைப் போலவே வீரமும் கொண்டவர் .
  2.  திரிவிக்ரம அவதாரம் உடைய நபர்.
  3. சம்சாரப் பெருங்கடலைக் கடக்க உதவுபவர்.
  4. கருடா என்ற பறவையை தனது கேரியராக பயன்படுத்துபவர். ஸ்ரீ ஆதிசங்கரரின் வார்த்தைகளில் இது ‘வின கருடேன பக்ஷிணா க்ரமாத் – அவர் பறவை கருடன் மீது சுற்றி வருகிறது’ என்று விளக்கப்பட்டுள்ளது. ‘வி’ என்பது பறவைகளின் அரசன் கருடனைக் குறிக்கிறது; மற்றும் ‘க்ரமா’ என்பது அவரது சஞ்சாரம் அல்லது உலகம் முழுவதும் கருடன் மீது பறந்ததைக் குறிக்கிறது.

———–

80-க்ரம-
செழிப்புற்றவன் -திவ்ய தேசம் திவ்ய மகிஷிகள் திவ்ய ஆயுதம் திவ்ய வாகன செழிப்பு-ஒழியா இன்பப் பெருமையன்

ஈத்ருஸ்யா –நித்ய விபூத்யா –அத்யந்தஸ்பீத
க்ரம
க்ரமிர் ஆத்மநே பதித்வாத் (தனது பிரயோஜனத்துக்காக )தாய நார்த
தாயநம் ஸ்பீ ததா

அண்டத்தகத்தான் புறத்துள்ளான் -பரம்பரன் -ஓடியா வின்பப் பெருமையோன்-8-8-2-

இப்படி அளவற்ற நித்ய ஐஸ்வர் யத்தால் எல்லாவற்றையும் வியாபித்து வளர்ந்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
நித்தியமான ஐஸ்வர்யம் உடையவன் -க்ரம வினைச் சொல் -ஆத்ம நேபதி என்னும் பிரிவைச் சார்ந்தது –
அப்போது அதற்குச் செல்வந்தனாக உள்ள நிலை என்னும் பொருள் கொண்ட தாயனம் என்று அர்த்தம்

வ்யாபித்தவர் -உலகம் வியாப்பிப்பதற்கு காரணம் ஆனவர் -ஸ்ரீ சங்கரர் –

வேதங்களில் தேவதையாக இருப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

ஓம் க்ரம நம
உலக நடவடிக்கை கிரமமாக நடக்கச் செய்பவன்
அனைத்திலும் வியாபித்து இருப்பவன்

—————

ஓம் க்ரமாய நம:

க்ரமனாத் (இங்கும், அங்கும்) நடக்கிறார், செல்கிறார் க்ரமஹேதுத்வாத் அனைத்து ஜீவராசிகளும் செல்வதற்கு (இயங்குவதற்கு) உதவி புரிகிறார் வா எனவே க்ரம: பகவான் ‘க்ரம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

க்ராந்தே விஶ்ணும் (மனு ஸ்ம்ரிதி 12.121)

மனு ஸ்ம்ரிதியில் கூறப்பட்டுள்ளது:

விஶ்ணுவை (அவரது) இயக்கத்தினால் (அறியவும்)

அனைத்து இடங்களிலும் செல்வதாலும், அனைவரும் செல்வதற்கு (இயங்குவதற்கு) துணை புரிவதாலும், பகவான் ‘க்ரம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

க்ரமஹ் – அவர் பிரபஞ்சத்தில் ஒழுங்கை பராமரிக்கிறார்

 இந்த நாமத்திற்கு 3 சாத்தியமான அர்த்தங்கள் உள்ளன.

அ) பிரபஞ்சத்தின் ஒழுங்குக்கு அடிப்படையாக இருப்பவர்

ஆ) இயக்கத்தின் சக்தியைக் கட்டுப்படுத்தி வழங்குபவர்

c) மிகவும் செழிப்பானவர்.

க்ரமம் என்றால் ஒழுங்கு என்று பொருள் அதனால் குழப்பமான பிரபஞ்சத்திற்கு ஒழுங்கை தருகிறார். க்ரமம் என்பது இயக்கத்தையும் குறிக்கிறது, எனவே இதன் பொருள் இயக்கத்திற்கு பொருந்தும்.

பாணினி சூத்ரா 1.3.38 படி, “விருத்தி-சர்க-தாயனேஷு க்ரமஹ்“, க்ரமம் தொடர்ச்சி, ஆற்றல் அல்லது நல்ல முன்னேற்றம் அல்லது வளர்ச்சியைக் குறிக்கும்.

ஸ்ரீ பட்டர் இவற்றில் கடைசியாகப் பயன்படுத்துகிறார், மேலும் “பெரும் செழிப்பைக் கொண்டவர்” என்று பொருள் தருகிறார்.

———

81-அநுத்தம –
மேம்பட்டார் இல்லாதவன்–தனக்கு மேல் உத்தமமாக ஏதும் இல்லாதவன்
அனைத்து விதங்களிலும் சிறந்தவன்-மிகு நர் யாரும் இலன்-ஸமாப் யதிக தரித்ரன் -தன் ஒப்பார் இல் அப்பன்

அதஸ் -அநுத்தம
யதா-தஸ்மாத் தாந் யந்ந பரம் கிஞ்சநா ஸ 

ந தத் சமஸ் ச அப்யதிகச்ச த்ருஸ்யதே
ஒத்தாரும் மிக்காரும் இல்லாத மா மாயன் -2-3-2-

மத்த பரதரம் நாந்யத் கிஞ்சி தஸ்தி தனஞ்சய -ஸ்ரீ கீதை–7-7-
அர்ஜுனா என்னை விட உயர்ந்தது என்று ஏதும் இல்லை -நானே உயர்ந்தவன்

அதனால் தமக்கு மேம்பட்டவர் இல்லாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

தஸ்மாத் ஹ அந்யத் ந பரம் கிஞ்சன ஆச-யஜுர் அஷ்டகம் -2-8-9-இவனை விட மேம்பட்டது எதுவும் இல்லை

தேந அர்ஹதி ப்ராஹ்மணா ஸ்பர்த்திதும் க-யஜுர் அஷ்டகம் –2-7- –பரம் பொருளுடன் யார் தான் போட்டி போட முடியும்

தேந க அர்ஹதி ஸ்பர்த்திதும் க-யஜுர் அஷ்டகம் –2-7- -பரம் பொருளுடன் யார் தான் போட்டி இட இயலும்

பரம் ஹி அபரம் ஏதஸ்மாத் விஸ்வ ரூபாத் ந வித்யதே–அனைத்துமாக உள்ள பரமாத்மாவைக் காட்டிலும் மேம்பட்டது ஏதும் இல்லை –

மேம்பட்டார் இல்லாதவர் -ஸ்ரீ சங்கரர் —

மேம்பட்டவர் இல்லாதவர் -தம்மை நியமிப்பவர் இல்லாத மிக உயர்ந்தவர் -நிரந்தரமான செல்வம் ஞானம் யுடையவர் –
துன்பம் அற்ற லஷ்மி தேவியை யுடையவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

ஓம் அநுத்தமாய நம
ஒப்பார் மிக்கார் இலையாய -உவமானம் இல்லாதவன்

————

ஓம் அனுத்தமாய நம:

அவித்யமான அறியப்படவில்லை (காணவில்லை) உத்தமோ சிறந்தவர் யஸ்மாத் எவரைவிட ஸ: அவர் அனுத்தம: (அந்த பகவான்) ‘அனுத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவரை விட மேலானவர் எவரும் இல்லை; எனவே, பகவான் ‘அனுத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அ – இல்லை + உத்தம – மேலானவர் = அனுத்தம

‘யஸ்மாத் பரம் நாபரமஸ்தி கிஞ்சித்’ (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 3.9)

ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

அவரை விட வேறானதோ, மேலானதோ வேறொன்றும் இல்லை.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ந த்வத்ஸமோSஸ்த்யப்யதிக: குதோன்ய: (ஸ்ரீமத் பகவத்கீதை 11.43)

ஸ்ரீமத் பகவத்கீதையில் (அர்ஜுனன் பகவான் ஸ்ரீக்ருஷ்ணரைப் பார்த்து கூறியது): உனக்கு நிகர் யாருமில்லை; எனில் உனக்கு மேல் வேறு யாவர்?

இதி ஸ்ம்ருதேஶ்ச | இவ்வாறு (ஸ்ரீமத் பகவத்கீதை முதலிய) ஸ்ம்ருதிகளிலும் கூறப்பட்டுள்ளது.

———-

அநுத்தமா – அவரை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லாத அவர் இறுதியானவர்

அனுத்தமா என்பது தனக்கு மேல் உயர்ந்த அல்லது உயர்ந்த பொருள் இல்லாத ஒருவர், அதாவது, அவர் மிக உயர்ந்த அல்லது உயர்ந்த பொருள்.

ஸ்ரீ ஆதி சங்கரர் கூறுகிறார் ‘அவித்யாமான உத்தமா யஸ்மாத் ஸஹ் அனுத்தமா – யாருடைய மேன்மையோ இல்லாதவர்’.

நாராயண உபநிடதம் சொல்கிறது ‘யஸ்மாத் பரம் நாபரம் அஸ்தி கிஞ்சித் – அவருக்கு மேலே வேறு சக்தி இல்லை. அவர் உயர்ந்தவர்’.

ந த்வத்-ஸமோ ‘ஸ்தி அப்யாதிகஹ் குதோ ‘நியோ லோக-த்ரே ‘பை அப்ரதிமா-பிரபவ   –11-43-  ‘மூன்று உலகிலும் உங்களுக்கு நிகரானவர்கள் யாரும் இல்லை, அதைவிட மேலானது எப்படி இருக்கும்? நீங்கள். நீங்கள் அளவிட முடியாதவர்!’


82-துராதர்ஷ –
கலக்க முடியாதவன் –தாண்ட முடியாதவன் -கடலைப் போல் காம்பீர ஸ்வ பாவம் –

அதஸ் துரா தர்ஷ
காம்பீர் யாதிஸயே நாம் போதிவத் அநபி பவ நீய
யதா

மநோ மய பிராணா சரீர பூ ரூப ஸத்ய ஸங்கல்ப ஆகாசாத்மா சர்வ கர்மா சர்வ கந்த
சர்வ ரஸ சர்வம் இதம் அப்யாத்த அவர்ஸீ (அவாக்ய )அநாதர–சாந்தோக்யம் -3-14-2-
தூய மனம் மூலம் மட்டுமே அறியத் தக்கவன்
உலகில் உள்ள பிராணங்களை தனது சரீரமாக யுடையவன்
ஜ்யோதி ரூபமாக உள்ளவன்
உறுதியான ஸங்கல்பம் கொண்டவன்
தான் பிரகாசமாக உள்ளது போன்று மற்றவர்களையும் பிரகாசிக்கச் செய்பவன்
அனைத்துமே இவன் செயலாலே உண்டாகின்றன
விரும்பத்தக்க அனைத்தையும் யுடையவன்
உயர்ந்த நறு மணம் கொண்டவன்
உயர்ந்த சுவை யுடையவன்
கீழே சொல்லிய அனைத்தையும் கொண்டு மங்கள கரமாக யுடையவன்
அனைத்தையும் கொண்டுள்ளதால் எதற்காகவும் மற்றவர்களை எதிர்பார்க்காதவன்
உண்டது உருக்காட்டாமல் -மற்றவர்கள் தன்னை ஆதரிக்கும் நிலை இல்லாதவன்

கம்பீர பரமோ தேவா–அனைத்திலும் மேம்பட்ட தேவன் -கம்பீரம் உள்ளவன்

மஹோததீம் இவ அஷோப்யம்–ஆரண்ய -47-32-ஒன்றாலும் கலக்க இயலாத ஸமுத்ரம் போன்றவன்

காம்பீர்யாத் சாகர உபமம்--கம்பீரம் காரணமாக கடல் போன்று ஆழம் காண இயலாதவன்

தத் அநேந ப்ரகட்ட கேந(இவற்றையே வேறு பிரமாணங்கள் -வேறு கோணத்தால் -பெருமைகளை சொல்லி காட்டி அருளுகிறார்  )

தத் விஷ்ணோ பரமம் பதம்–கட உபநிஷத் -3-9- அது விஷ்ணுவின் மேம்பட்ட இடம்

தத் அக்ஷரே பரமே வ்யோமன்–தைத்ரியம் நாராயண வல்லி -1-2- பர ப்ரஹ்மம் அழிவற்றதாகவும்
பரம ஆகாஸம் எனப்படுவதும் ஆகிய பரமபதத்தில் உள்ளது –

தே ஹ நாகம் –புருஷ ஸூக்தம்–18- –அவர்கள் துக்கத்தொடர்பு அற்ற பரம பதத்தை அடைகின்றனர்

தத் தாம பரமம் மம -ஸ்ரீ கீதை -15-6-அந்தப் பரம பதம் எனது உயர்ந்த இடமாகும்

திவ்யம் ஸ்தானம் அஜரம் ச அப்ரமேயம்–மஹா பாரதம் –
அந்த ஸ்ரீ வைகுண்டம் ஒளி உள்ளது -கிழத் தன்மை அற்றது -எல்லை அற்ற மேன்மை யுடையது

ஸ்வ லோகம் ஆகச்ச கதஜ்வர சிரம் –பால -15-33-நீண்ட காலம் உலகில் இருந்து இதன் துன்பங்கள் நீக்கியதால்-தாபம் இல்லாதவனாக உனது லோகமான பரம பதத்துக்கு வருவாயாக

விவேச வைஷ்ணவம் தேஜஸ் –உத்தர -110-13-அதன் பின்னர் ஒளி மயமான பரமபதத்துக்குள் மீண்டும் புகுந்தான்

காலா முஹுர்த்தாதி மய ச கால ந யத் விபூதே பரிணாம ஹேது–ஸ்ரீ விஷ்ணு புராணம் -4-1-84–
முஹூர்த்தம் போன்ற பிரிவுகள் கொண்ட காலம் என்பது பரமாத்மாவின் செல்வம் எனப்படும் லோகத்தில் எந்தவிதமான மாற்றங்களையும் உண்டு பண்ணுவதற்கான காரணமாக இருப்பது இல்லை

தேஷாம் தத் பரமம் ஸ்தானம்–முக்தர்களுக்கான உயர்ந்த இடம் ஸ்ரீ வைகுண்டமே ஆகும் –

பூர்வ உதா ஹ்ருதைஸ் ச குஹ்ய மாணே
கால அதீதத்வ
அஷரத்வ
அபரிணாமித்வ தமோ
அதீ தத்வ -நித்யத்வ -அபுநரா வ்ருத்தி ஸ்நாத் வாதி நா
பகவத் ஸ்வரூப குணாதி வத்

மேல் உள்ள பிரமாணங்கள் மூலம்
ஸ்ரீ வைகுண்டம் காலத்துக்கு உட்பட்டது அல்ல
அழிவு இல்லாதது
மாறுபாடுகள் இல்லாதது
மூல ப்ரக்ருதிக்கு அப்பால் பட்டது
நித்தியமானது
அங்கு செல்பவர் திரும்பி வருவது இல்லை
எம்பெருமானுடைய ஸ்வரூபம் குணங்கள் போலவே இதுவும் நித்தியமானது என்று அறியலாம்

ஏகம் ஏவம் அத்விதீயம்–சாந்தோக்யம் -6-2-1-இது மட்டுமே இருந்தது இரண்டாவது இல்லை

ந அசத் ஆஸீத் நே சத் ஆஸீத் ததா நீம் -யஜுர் அஷ்டகம் -2-8-9-அப்போது சேதனமும் இல்லை அசேதனமும் இல்லை

மேல் உள்ள பிரமாணங்கள் மூலம் ப்ரஹ்மம் மட்டுமே இருந்தான் என்பதால் ஸ்ரீ வைகுண்டம் இல்லையோ என்ற சங்கை எழலாம்
அப்படி இல்லாமல் நித்தியமாக உள்ள ஸ்ரீ வைகுண்டத்தில் எம்பெருமான் ஸ்ரீ பூமி தேவிமார் ஸமேதனாக உள்ளான் என்று அறிய வேண்டும்

இத்யேகத்வா வதாரணாதி நிமித்தாம் அநித்யத்வ சங்காம தீத்ய வர்த்மாநே வைஷ்ணவே பரம பதே
ஸ்ரீ பூமிப்யாம் திவ்ய மஹிஷீப் யாம் ஸஹ கௌஷீதகீ
பர் யங்க வித்யாத் யவகத திவ்ய ஆஸ்தானே ரத்நே
திவ்ய பர் யங்கோ பரி அநந்த வைநதேய விஷ்வக் சேநாதிபி
பூர்வ உப பாதி தைர் நித்ய சித்தை பரி சர்ய மாண சரணார விந்தஸ்ய
பகவத ஸர்வ ஐஸ்வர்ய பர பர்யாயம் ஸார்வ பவ்மம் ஸூ ராஜம் பவம் (இறை ஆண்மை -ஏக சக்ரவர்த்தி )அசேஷ வேத ரஹஸ்யம் ஆவிஷ் க்ருதம்
ததா வாயு ப்ரோக்த ஸைவே ஸ்வஷ்டம் (வாயு பகவானால் சிவ புராணத்தால்) —
இரத்தினமயமான படுக்கையில் எம்பெருமான் வீற்று இருக்க
அவன் திருவடிகளில் அநந்தன் கருடன் விஷ்வக் சேனர் போன்ற நித்ய ஸூரிகள் எல்லை அற்ற கைங்கர்யங்களை செய்தபடியே உள்ளனர்
அவன் ஸமஸ்த லோகங்களுக்கும் ஏக சக்ரவர்த்தியாக வீற்று இருந்து நன்மைகளையே செய்தபடியே உள்ளான்
இவ்வாறு வேதங்களில் உள்ள ரஹஸ்யங்களை நாம் அறியலாம் –

ஒன்றும் -மற்றும் யாதும் இல்லா -அன்று -ததாநீ பிரளய காலத்தில்

வைகுண்ட து பரே லோகே ஸ்ரீ யா சார்த்தம் ஜகத் பதி ஆஸ்தே
விஷ்ணு அசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ–வாயு பகவான் உரைத்த லிங்க புராணம்
ஸ்ரீ வைகுண்டம் என்னும் மிகச் சிறந்த லோகத்தில் மஹா லஷ்மியுடன் சேர்ந்த படியே
உலகின் அதிபதியாக உள்ளவனும்
ஒப்பற்ற ஸ்வரூபம் கொண்டவனுமான ஸ்ரீ மன் நாராயணன் உள்ளான்
அவன் பாகவதர்கள் பக்தர்கள் சூழ வீற்று உள்ளான்

பஞ்ச சக்தி மயோ தேவ பஹிர் லோகேஸ்வர ஆஸ்தே ஸ்வாநந்த பாவேந பரம வ்யோம்நி ஸூஸ்தித –ஸ்ரீ விஷ்ணு தத்வம்
உலகத்தில் ஈஸ்வரராக உள்ளவர்களுக்கு எல்லாம் ஈஸ்வரனாக இவன் உள்ளான்
எல்லை அற்ற பேர் ஆனந்தத்தை அனுபவித்தபடி
பரம ஆகாஸம் எனப்படும் ஸ்ரீ வைகுண்டத்தில் வீற்று உள்ளான் –

பாரளந்த பேரரசு எம் விசும்பரசு -திரு விருத்தம் -80
வானோர் சோதி மணி வண்ணன் விண்ணோர் தலைவன் -1-5-5-
அஷோப்ய -807-கலக்க முடியாதவன் அர்த்தம்
கலக்கமிலா நல தவ முனிவர் -8-4-1-
அஷோப்ய -999-அசைக்க முடியாதவன் -பிரபன்னாய அபயம் சர்வ பூதேப்யோததாமி ஏதத் வ்ரதம் மம –
உறுதியான வ்ரதம் -அசைக்க முடியாத
தேசுடைய தேவனார் திருவரங்க செல்வனார் பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராவே -நாச்சியார் -11-5-

வைகுண்டேது பரே லோகே ச்ரியா ஸார்த்தம் ஜகத்பதி ஆஸ்தே விஷ்ணு அசிந்த்யாத்மா பக்தி பாகவதை சஹ -சூழ விளங்கி
ஏகமேவ அத்விதீயம் -நித்ய ஸ்வாமித்வம் –

கடல் போலே ஆழ்ந்து இருப்பதால் கலக்க முடியாதவர் -கீழ்ச் சொன்னவைகளில் கோஷிக்கப் பட்டதாய் -காலத்துக்கு அப்பாற்பட்டதாய்
அழியாததாய் -மாறுபாடு இல்லாததாய் -தமஸ்ஸூக்கு அப்பால் பட்டதாய் -நித்தியமாய் -மீண்டு வருதல் இல்லாத ஸ்தானமாய்-
பகவத் ஸ்வரூபம் போலே விளங்கும் பரமபதம் ஓன்று மட்டுமே இரண்டாவது இல்லை –

சத் இல்லை அசத் இல்லை -ஸ்ருதி வாக்யங்களால் ஒன்றே -இரண்டாவது இல்லை என்று கூறப் பட்டதாய் –
நித்தியமான பரம பதத்தில் ஸ்ரீ தேவி பூமி தேவி நீளா தேவி போன்ற மகிஷிமார்களுடன் கூடி
பர்யங்க வித்யையின் படி ரத்ன மயமான திவ்ய ஸ்தானத்திலே திவ்யமான மஞ்சத்தின் மீது எழுந்து அருளி
அநந்தன் விஸ்வக்சேனர் முதலிய நித்ய ஸூரிகளால் எப்போதும் கைங்கர்யம் செய்யப் பெற்ற
திருவடிகளை யுடையவனாக விளங்கும் சகல வேத ரஹஸ்யமான சர்வ ஐஸ்வர்யம் விளக்கப்பட்டது-ஸ்ரீ பராசர பட்டர் —

அசுரர் முதலியவர்களால் வெல்ல முடியாதவர் -ஸ்ரீ சங்கரர் —

பிறரால் அவமானப் படுத்த முடியாதவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

ஓம் துராதர்ஷாய நம
அப்ரதிஹதன்–யாராலும் வெல்ல முடியாதவன்

—————

ஓம் துராதர்ஶாய நம:

தைத்யாதிபிர்தர்ஶயிதும் அசுரர்கள் முதலிய தீயோரால் ந ஶக்யத இதி அடக்கமுடியாதவராக இருப்பதால் துராதர்ஶ: பகவான் ‘துராதர்ஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தர்ஶ என்றால் அடக்குதல். துராதர்ஶ என்றால் அடக்கமுடியாதவர் என்று பொருள். பகவானை அசுரர் முதலிய தீயோரால் அடக்க இயலாது. எனவே, அவர் ‘துராதர்ஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

துராதர்சா – அவர் வெல்ல முடியாதவர்

அதர்ஷா என்றால் வெல்லப்படுதல் அல்லது தோற்கடிக்கப்படுதல் என்று பொருள். எனவே துராதர்ஷா என்பது இறைவன் வெல்ல முடியாதவன் என்று பொருள்படும். ‘தைத்யா திபிஹ் தர்ஷ யிதும் ந சக்யத இதி துராதர்ஷா‘ – பேய்களாலும் மற்றவர்களாலும் வெல்ல முடியாதவர்.

முழு சரணாகதி மற்றும் பக்தி மூலம் மட்டுமே அவரை வெல்ல முடியும். இந்த அம்சம் அடுத்த நாமத்தில் விளக்கப்பட்டுள்ளது.


அவன் பெருமைகளை அருளிச் செய்த பின்னர்
அவனது கிருஷீ பரம்பரைகள் மேல் 83 திரு நாமம் தொடர்ந்து அருளிச் செய்கிறார்

83-க்ருதஜ்ஞ-
செயல்களை அறிபவன்

அத விஸ்ம்ருதயத யுக்த நிருபாதிக தாஸ்ய நிர்மமத்வா நாம நாத்ய வித்யாத் யாரோபித
ஸ்வா தந்தர்ய ப்ரவ்ருத்தா நாம் ஸம் ஸாரிணாம்
க்ருதஜ்ஞ
ஆநு கூல்ய லவம் ஜாநா தீதி
ஆதோ அநுப சர்க்கே -க –ப்ரஹ்மஜ்ஞ -ப்ராணத -இத்யாதயோ அப்யேவம் –ய கல்வாஹ

தங்களையும் மறந்து –ஈஸ்வரனையும் மறந்து கைங்கர்யங்களையும் இழந்து –மறந்தோம் இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே இருந்தாலும்
லவ லேசம் அபி முக்யம் இருந்தாலும் கைக்கொள்ளும் ஸ்வ பாவம் உள்ளவன்-

அபி சேத் ஸூ துராசரா —ஸம் யக் வியவஸிதோ ஹி ஸ –கீதை -9-30-
ஒருவன் மிகவும் தீய நடத்தை உள்ளவனாகவே இருக்கக் கூடும்
ஆயினும் வேறே எதையும் விரும்பாமல் என்னையே அடைந்து பூஜிப்பவன் என்றால் அவன் ஸாதுவே ஆவான்-சாது கோட்டியுள் கொள்ளப்படுவான் –
அவன் அனைவராலும் மதிக்கத் தக்கவன்

இப்படி உள்ளவனைக் குறித்து அவனுடைய பாபங்களை எம்பெருமான் காண்பது இல்லை
மாறாக தான் அவனுக்கு என்பதை அளவுக்கு ப்ரதி உதவி செய் தோம் என்று எண்ணிப் பார்த்தபடி இருப்பான்

ந ஸ ப்ரத்யுபகாரம் பஸ்ய தீத்ருஸே
யதா

கோவிந்த இதி யத் ஆக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாசினம் ருணம் ப்ரவ்ருத்தம் இவ மே ஹ்ருதயாத் ந அபசர்ப்பதி–இதி ச -உத்யோக பர்வம் -3-58-22-
மிகவும் தொலைவில் உள்ள துவாரகையில் இருந்த என்னை திரௌபதி கோவிந்தா என்று அழைத்தாள்
அது மேல் மேல் வளரும் வட்டிக்கடன் போன்று எனது இதயத்தில் நீங்காமல் என்றுமே உள்ளது –

உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி

நம சொன்னவனுக்கு ஐஸ்வர்யம் அக்ஷரம் பரம கைதிகளையும் கொடுத்த பின்பும் –
தகுந்த பிரதியுபகாரம் செய்ய முடியாமல் போனதால் வெட்க்கி தலை குனிந்து பெரிய பிராட்டியார் -குணரத்ன கோசம்

திருமாலிருஞ்சோலை என்றேன் என்ன திருமால் வந்து நெஞ்சு நிறையப் புகுந்தான்

தர்மஜ்ஞச்ச க்ருதஜ்ஞச்ச –
எண்ணிலும் வரும் -1-10-2-
உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ-பெரிய திருவந்தாதி -53–

ஆ என்பதை இறுதியில் கொண்ட தாது உடன் -verbal root -உப சர்க்கம் preposition ஏதும் வராமல் இருந்தால்
அந்தத் தாதுவுக்கு க எனும் எச்சம் உண்டாகும்
ப்ரஹ்மஞ்ஞ–674
பிராணத–66-323–409-956-ஆகியவை இந்த விதியில் உள்ளவை

ஆத்மாவிற்கு நிலை நின்ற ஸ்வரூபம் கைங்கர்யம் என்பதையும் தனக்கு என்று ஒன்றும் இல்லை எனபதையும் மறந்து
அவித்யையால் தங்களை ஸ்வதந்த்ரராக நினைத்து பிறப்பு இறப்புகளை யுடைய உலக வாழ்வில் அகப்பட்டு
உழலும் சம்சாரிகள் செய்யும் சிறிய உபசாரங்களையும் மறவாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

இலை பூ போன்ற எளியவற்றை அளிப்பவர்களுக்கும் மோஷம் தருபவர் –
பிரஜைகள் செய்யும் புண்ய பாப கர்மங்களை அறிபவர் -ஸ்ரீ சங்கரர் —

தனக்குச் செய்யப்பட்டு வழி பாட்டை நன்றியுடன் நினைப்பவர் -செய்யும் செயல்களை அறிபவர் –
எல்லா பொருள்களையும் அறிந்தவர் -ஜீவர்களை பிறப்பிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

ஓம் க்ருதஜ்ஞாய நம
சிறிது செய்தாலும் பெரியதாகவே கொள்பவன் -அனைத்தும் செய்தாலும் ஒன்றுமே செய்யயாதவன் போலே இருப்பவன்

—————

ஓம் க்ருதக்ஞாய நம:

ப்ராணினாம் அனைத்து ஜீவராசிகளின் புண்யாபுண்யாத்மகம் கர்ம நல்ல (புண்ய) மற்றும் தீய (பாப, அபுண்ய) வினைகளை க்ருதம் செய்கின்ற ஜானாதீதி (உள்ளதை உள்ளபடி) அறிகின்றபடியால் க்ருதக்ஞய பகவான் ‘க்ருதக்ஞய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்து ஜீவராசிகளின் நல்ல மற்றும் தீவினைகளை அனைத்தையும் உள்ளபடி அறிகிறார். எனவே, பகவான் ‘க்ருதக்ஞய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

க்ருத (செய்த நல், தீவினைகள்) + ஜானாதி = க்ருதக்ஞய

பத்ரபுஶ்பாத்யல்பமபி (துளசி முதலிய) இலை, பூக்கள் போன்ற எளிய பொருட்களை ப்ரயச்சதாம் (அவருக்கு) அர்ப்பணிப்போருக்கு மோக்ஷம் (அதற்கு ப்ரதியாக) முக்தியையே ததாதீதி வா தந்தருள்வதால் க்ருதக்ஞய பகவான் ‘க்ருதக்ஞய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(துளசி முதலிய) இலை, பூக்கள் போன்ற எளிய பொருட்களை தனக்கு பக்தியுடன் அர்ப்பணிப்போருக்கு (அதற்கு ப்ரதியாக) முக்தியையே தந்தருள்வதால் பகவான் ‘க்ருதக்ஞய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு க்ருதக்ஞய என்ற திருநாமத்திற்கு நன்றியுடையவர் என்று ஆதிசங்கரர் பொருள் உரைக்கிறார். எளிய பொருட்களை அவருக்கு அளித்தாலும், மிக்க நன்றியுடன் கிடைத்தற்கரிய முக்தியையே தந்தருள்கிறார் பகவான்.

——–

கிருதஜ்ஞா – அவர் தனது பக்தர்களுக்கு நன்றியுள்ளவர்

கிருதஜ்ஞா மிகுந்த நன்றியுணர்வு உள்ளவர் அல்லது சிறிய பக்திச் செயலைக் கூடப் பாராட்டி அதற்குப் பெரிதும் பதிலளிப்பவர்.

‘பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்தியா ப்ரயச்சதி
ததஹம் பக்த்யுபஹ்ரிதம் அஷ்நாமி ப்ரயதாத்மனா’ –9-26-  யாரேனும் ஒரு இலை, ஒரு பூ, ஒரு பழம் அல்லது தண்ணீரைத் தாழ்மையாகக் கொடுத்தாலும், நான் அதை எடுத்துக்கொள்கிறேன். மகிழ்ச்சியுடன் அது பக்தியுடன் வழங்கப்பட்டது.

ஸ்ரீமத் பாகவதத்தில், குசேலன் கிருஷ்ணருக்கு ஒரு பிடி வேட்டை அரிசியைக் கொடுத்து, பதிலுக்கு ஒரு ராஜ்யத்தைப் பெறுகிறார்.

அவர் தனது பக்தர்களுக்கு எப்போதும் நன்றியுள்ளவர். திரௌபதி “கோவிந்தா” என்று கூறி உதவிக்காக அழுதபோது அவன் விரைந்து வந்து உதவி செய்தான். பிருந்தாவனத்தின் மக்களையும் விலங்குகளையும் இந்திரனின் கோபத்திலிருந்து காப்பாற்ற கோவர்த்தன கிரியை உயர்த்தினார்.

ஸ்ரீ பராசர பட்டர் தனது கருணையை வலியுறுத்த –“அபி செட் சுதுராசாரோ பஜதே மாமானய பாக் |
சாதுரேவ ச மந்தவ்யஹ் ஸம்யக் வ்யவசிதோ ஹி ச ||”–9-30-

மிகவும் பாவியான மனிதனும் என்னைப் பிரியாத பக்தியுடன், வணக்கத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு என்னை வழிபட்டால், அத்தகையவன் மிகவும் நீதியுள்ளவனாகக் கருதப்பட வேண்டும்..

“சர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகஹி சரணாঃ வ்ரஜ அஹஹி
த்வாஹி சர்வ-பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சூசঃ”–18-66-

அனைத்து புண்ணிய செயல்களையும் (தர்மம்) ஒதுக்கி வைத்துவிட்டு, என் விருப்பத்திற்கு (உறுதியான நம்பிக்கையுடனும் அன்பான சிந்தனையுடனும்) முற்றிலும் சரணடைந்து விடுங்கள். நான் உன்னை எல்லா பாவங்களிலிருந்தும் விடுவித்து உனக்கு மோட்சத்தைக் கொடுப்பேன். பயப்படாதே.

பகவான் மிகவும் நன்றியுள்ளவராய் இருக்கிறார், அவரை மனதார வணங்கினால் போதும், வணங்குபவர் செய்த மற்ற எல்லா பாவங்களையும் மன்னிக்கிறார். அவரைச் சரணடைந்து வழிபடுவதன் மூலம் இந்த சம்சாரத்திலிருந்து விடுதலை அல்லது மோட்சத்தை அடையலாம்.

கிருதஜ்ஞா என்பது ஒவ்வொரு நபரின் ஒவ்வொரு செயலையும் கண்காணிக்கும் ஒருவர் என்றும் பொருள்படும். ஸ்ரீ ஆதிசங்கரரின் வார்த்தைகளில், ‘ப்ராணிநாம் புண்யாபுண்யாத்மகம் கர்ம கிருதம் ஜானாதி இதி கிருதஜ்ஞா – எல்லா உயிரினங்களின் நன்மை மற்றும் தீமைகளின் சரியான கணக்கை வைத்திருப்பதால் அவர் கிருதஜ்னா என்று அழைக்கப்படுகிறார்.


84-க்ருதி –
செய்விப்பவன் –

தச்ச தேஷாம் ஸூஹ்ருதம் அஸ்மா தேவ ப்ரஸன்னாதி இதி
க்ருதி 

அகர்த்தி ச காரகே சஞ்சாயாம்–அஷ்டாத்யாயீ வினைப்பகுதி +க்தின் -சேர்ந்து பெயர்ச்சொல் ஆகும் –
இதே போலே பூதி -636- / சித்தி -99-ஆகிய திரு நாமங்களும் உண்டு

இத் யதிகாரே ஸ்த்ரியாம் க்திந் நந்த
ஏவம் பூதி ஸித்தி ப்ரப்ருதயோ அபி
யதா

ஏஷ ஏவ சாது கர்ம காரயதி தம் யம் ஏப்யோ லோகேப்யா உந்நிநீஷதி –கௌஷீதகி -3-9-
இந்த உலகில் இருந்து யாரைத் தன்னிடம் அழைத்துச் செல்ல எம்பெருமான் விரும்புகிறானோ
அவர்களை நற்செயல்களை செய்யும் படி
தூண்டி விட்டு தன்னிடம் அழைத்துச் செல்கிறான்

தன்னை பூஜிக்க ஸூக்ருதத்தையும் தானே அளிப்பவன்-அவனைப் பூஜிக்கத் தக்க நினைவு கைங்கர்யம் அவன் அனுக்ரஹத்தாலே உண்டாகிறது
உம்பர் ஒருவனை என் உணர்வினுள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே -8-8-3-
மயர்வற என்னுள்ளே மன்னினான் தன்னை உயர் வினையே தரும் -1-7-4-
என்னைத் தீ மனம் கெடுத்தாய் –மருவித் தொழும் மனமே தந்தாய் -2-7-7-/8
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும் -5-6-4-

என் ஊரைச் சொன்னாய் -ஒன்றைப் பத்தாக்கிக் கொண்டு நடத்திச் செல்லுபவன்

அதற்குரிய ஸூஹ்ருதத்தையும் தாமே கொடுப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

எல்லாம் தாமாகவே இருப்பதால் எல்லாச் செய்கைகளுக்கும் ஆதாரமானவர் –
புருஷ பிரயத்னமாக -அல்ல செயலாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் —

முயற்சி ரூபம் உள்ளவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

ஓம் க்ருதி நம
என் உணர்வின் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே
நம்மை ஸத் கர்மங்களிலே ஈடுபடுத்துபவன்

———

ஓம் க்ருதயே நம:

புருஶப்ரயத்ன: அனைவராலும் செய்யப்படும் முயற்சிகளுக்கு க்ருதி: ‘க்ருதி’ என்று பொருள் க்ரியா வா: செயல்களுக்கு ஸர்வாத்மகத்வாத் அனைவரின் உள்ளுறை ஆத்மாவாகவும் தத் ஆதாரதயா வா அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆதாரமாகவும் இருப்பதால் லக்ஷ்யதே க்ருத்யேதி வா ‘க்ருதி’ என்றால் பகவானையே குறிக்கும் க்ருதி: பகவான் ‘க்ருதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவராலும் செய்யப்படும் முயற்சிகளுக்கு ‘க்ருதி’ என்று பொருள். அனைவரின் உள்ளுறை ஆத்மாவாகவும் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆதாரமாகவும் இருந்து அனைவரையும் செயல் புரியத் தூண்டுவதால் உண்மையில் ‘க்ருதி’ என்ற இந்த சொல் பகவானையே குறிக்கிறது. எனவே, பகவான் ‘க்ருதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

கிருதி – அவர் அனைத்து செயல்களுக்கும் பின்னால் உள்ள சக்தி

அனைவரின் செயல்களுக்கும் அவரே பொறுப்பு. அவனே காரணங்களுக்கு காரணமானவன்.

நாம் கர்த்தா அல்லது செய்பவர் என்று நாம் நினைக்கலாம் ஆனால் அது அனைத்தும் அவனது கிருதி, செயலின் உள் சக்தியைத் தூண்டுகிறது. ஒளிரும் மின்விளக்கு கர்த்தா ஆனால் அந்த ஒளிர்வு உண்மையில் விளக்கின் வழியாக பாயும் மின்சாரத்தின் கிருதி.  ‘அவன் இன்றி ஒரு அணுவும்  அசையாது!


85-ஆத்மவான் –
ஜீவாத்மாக்களை தனது சொத்தாக உடையவன்-தனம் உடையவன் தனவான் போல் –

தஸ்ய கர்த்தாரோ அபி யாத்மாநஸ் ததா யத்த ஸ்வரூப ப்ரவ்ருத்யாதி கதயா அஸ்ய ஸ்வ பூதா இதி ஆத்மவாந்

எனதாவி ஆவியும் நீ -2-3-4-
எனதாவியுமுனதே-5-7-10–

நற் செயல்களை செய்பவர்களான அனைத்து ஆத்மாக்களின் ஸ்வரூபம் கர்மங்கள் போன்ற அனைத்தும் அவனுக்கு அடங்கியே உள்ளன

அந்த ஆத்மாக்களின் ஸ்வரூபம் செய்கை முதலியவற்றை எல்லாம் தமது அதீனத்தில் யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
ஆத்மாக்களை உடைமையாகக் கொண்டவன்-தனது மஹிமையை தானே பிரதிஷடை பட்டு உள்ளவன் என்றுமாம்

தம்முடைய மகிமையே தமக்கு ஆதாரமாக யுள்ளவர் -ஸ்ரீ சங்கரர் —

பிரமனை யுடையவர் -அழியாத திருமேனி உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

ஓம் ஆத்மவான் நம
ஸத் கர்த்தாக்களை நியமிப்பவன் -அனைத்து ப்ரவ்ருத்திகளும் அவன் அதீனம்

———

ஓம் ஆத்மவதே நம:

ஸ்வ மஹிமப்ரதிஶ்டிதத்வாத் தன்னுடைய மஹிமையிலேயே நிலைப்பெற்றிருப்பதால் ஆத்மவான் பகவான் ‘ஆத்மவான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் எப்பொழுதும் தன்னுடைய மஹிமையிலேயே நிலைப்பெற்றிருப்பதால் அவர் ‘ஆத்மவான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸ பகவ: கஸ்மின்ப்ரதிஶ்டித இதி ஸ்வே மஹிம்னி’ (சாந்தோக்ய உபநிஶத் 7.24.1) சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

அந்த பகவான் எங்கு நிலைக்கொண்டிருக்கிறார்? அவரது மஹிமையிலேயே.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

———-

ஆத்மவான் – அவர் தனது சொந்த மகத்துவத்தில் நிறுவப்பட்டவர்

ஒழுக்கத்துடன் செயல்படுபவர்களின் ஆன்மாக்களின் உண்மையான உரிமையாளர் மற்றும் கட்டுப்பாட்டாளர், எனவே அவர் ஆத்மவான். நமது நேர்மையான பக்தி, நம்பிக்கை மற்றும் அவரிடம் சரணடைவதே நமது முக்திக்கு ஒரே காரணமாக அமையும். அவர் நமது மகத்தான சிறிய நேர்மையான பக்தி முயற்சியால் மகிழ்ந்த கிருதஜ்ஞர், மேலும் அவர் நமக்குச் சொந்தமான நம் ஆன்மாக்களை அவர் விரும்புவார், அதை அவர் விரும்பும் செயல்களுக்குத் திருப்புவார்.

அவர் முற்றிலும் சுதந்திரமானவர் மற்றும் யாருடைய உதவியும் தேவையில்லை. ஸ்ரீ ஆதிசங்கரர் ‘ஸ்வ மஹிமா ப்ரதிஷ்டிதத்வாத் ஆத்மவான் – அவர் தனது சொந்த மகத்துவத்தில் உறுதியாக இருப்பதால் அவர் ஆத்மவான்’ என்கிறார்.

சாந்தோக்ய உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது- ‘ஸ பகவான் கஸ்மின் ப்ரதிஷ்டிதா இதி ஸ்வே மஹிம்னி‘ – அந்த கடவுள் எங்கே வேரூன்றியிருக்கிறார்? அவரது சொந்த மகிமையில்!


75-ஈஸ்வர –
அளவில்லாத நித்ய விபூதியிலும் தடையில்லாத சங்கல்பம் உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

எல்லாம் வல்லவர் ஆதலால் ஈஸ்வரர் -ஸ்ரீ சங்கரர் –

ஈச எனப்படும் பிரம்மா முதலியவர்களைக் காட்டிலும் மேம்பட்டவர் –
லஷ்மீ தேவியையும் வாயுவையும் பிரகாசிக்கச் செய்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

————————————————————————————————-

76-விக்ரமீ-
நினைத்தது தடைபடும் வாய்ப்பே இல்லாமல் நினைத்ததை முடிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

சௌர்யத்தை யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

தனது அவதாரங்களில் ஏற்றத் தாழ்வு இல்லாதவர் -பராக்ரமத்தை யுடையவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

————————————————————————————-

77-தன்வீ-
இப்படிப்பட்ட தமக்குத் தகுந்த உயர்ந்த சார்ங்கம் என்னும் வில்லை யுடையவர் –
எல்லா திவ்ய ஆயுதங்களோடும் கூடியவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

வில்லை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

வில்லை யுடையவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

—————————————————————————————-

78-மேதாவீ-
கால தேச வரையரை யற்ற மகிமைக்கு உதவியாக -ஸ்வா பாவிக சர்வஜ்ஞத்வம் யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

பல கிரந்தங்களை தரிக்கும் திறமை உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

அறிவுடையவள் ஆதலால் மேதாவீ-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

——————————————————————————————–

79-விக்ரம-
வேத மூர்த்தியான கருடனைக் கொண்டு விரும்பியபடி எழுந்து அருளுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

உலகத்தை அளந்தவர் -கருடனை வாகனமாகக் கொண்டவர் -ஸ்ரீ சங்கரர் –

திரிவிக்கிரம அவதாரத்தில் மென்மையான அடிகளை யுடையவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

—————————

80-க்ரம-
இப்படி அளவற்ற நித்ய ஐஸ்வர் யத்தால் எல்லாவற்றையும் வியாபித்து வளர்ந்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

வ்யாபித்தவர் -உலகம் வியாப்பிப்பதற்கு காரணம் ஆனவர் -ஸ்ரீ சங்கரர் –

வேதங்களில் தேவதையாக இருப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

—————————————————————————–

81-அநுத்தம-
அதனால் தமக்கு மேம்பட்டவர் இல்லாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

மேம்பட்டார் இல்லாதவர் -ஸ்ரீ சங்கரர் —

மேம்பட்டவர் இல்லாதவர் -தம்மை நியமிப்பவர் இல்லாத மிக உயர்ந்தவர் -நிரந்தரமான செல்வம் ஞானம் யுடையவர் –
துன்பம் அற்ற லஷ்மி தேவியை யுடையவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

———————————————————————-

82-துராதர்ஷ-
கடல் போலே ஆழ்ந்து இருப்பதால் கலக்க முடியாதவர் -கீழ்ச் சொன்னவைகளில் கோஷிக்கப் பட்டதாய் -காலத்துக்கு அப்பாற்பட்டதாய்
அழியாததாய் -மாறுபாடு இல்லாததாய் -தமஸ்ஸூக்கு அப்பால் பட்டதாய் -நித்தியமாய் -மீண்டு வருதல் இல்லாத ஸ்தானமாய்-
பகவத் ஸ்வரூபம் போலே விளங்கும் பரமபதம் ஓன்று மட்டுமே இரண்டாவது இல்லை –
சத் இல்லை அசத் இல்லை -ஸ்ருதி வாக்யங்களால் ஒன்றே -இரண்டாவது இல்லை என்று கூறப் பட்டதாய் –
நித்தியமான பரம பதத்தில் ஸ்ரீ தேவி பூமி தேவி நீளா தேவி போன்ற மகிஷிமார்களுடன் கூடி
பர்யங்க வித்யையின் படி ரத்ன மயமான திவ்ய ஸ்தானத்திலே திவ்யமான மஞ்சத்தின் மீது எழுந்து அருளி
அநந்தன் விஸ்வக்சேனர் முதலிய நித்ய சூரிகளால் எப்போதும் கைங்கர்யம் செய்யப் பெற்ற
திருவடிகளை யுடையவனாக விளங்கும் சகல வேத ரஹச்யமான சர்வ ஐஸ்வர்யம் விளக்கப்பட்டது-ஸ்ரீ பராசர பட்டர் —

அசுரர் முதலியவர்களால் வெல்ல முடியாதவர் -ஸ்ரீ சங்கரர் —

பிறரால் அவமானப் படுத்த முடியாதவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

———————————————————————

83-க்ருதஜ்ஞ-
ஆத்மாவிற்கு நிலை நின்ற ஸ்வரூபம் கைங்கர்யம் என்பதையும்  தனக்கு என்று ஒன்றும் இல்லை எனபதையும் மறந்து
அவித்யையால்  தங்களை ஸ்வதந்த்ரராக நினைத்து பிறப்பு இறப்பு களை யுடைய  உலக வாழ்வில் அகப்பட்டு
உழலும் சம்சாரிகள் செய்யும் சிறிய உபசாரங்களையும் மறவாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

———————————————————-

இலை பூ போன்ற எளியவற்றை அளிப்பவர்களுக்கும் மோஷம் தருபவர் -பிரஜைகள் செய்யும் புண்ய பாப கர்மங்களை அறிபவர் -ஸ்ரீ சங்கரர் —

தனக்குச் செய்யப்பட்டு வழி பாட்டை நன்றியுடன் நினைப்பவர்  -செய்யும் செயல்களை அறிபவர் –
எல்லா பொருள்களையும் அறிந்தவர் -ஜீவர்களை பிறப்பிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

————————————————————————————————————

84-க்ருதி-
அதற்குரிய ஸூஹ்ருதத்தையும் தாமே கொடுப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

எல்லாம் தாமாகவே இருப்பதால் எல்லாச் செய்கைகளுக்கும் ஆதாரமானவர் -புருஷ பிரயத்னமாக -அல்ல செயலாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் —

முயற்சி ரூபம் உள்ளவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

————————————————————————————————

85-ஆத்மவான் –
அந்த ஆத்மாக்களின் ஸ்வரூபம் செய்கை முதலியவற்றை எல்லாம் தமது அதீனத்தில் யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

தம்முடைய மகிமையே தமக்கு ஆதாரமாக யுள்ளவர் -ஸ்ரீ சங்கரர் —

பிரமனை யுடையவர் -அழியாத திருமேனி உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

——-

லீலாவிபூதியான இவ்வுலகம், நித்திய விபூதியான அவ்வுலகம் அனைத்திலும் வாழும்
உயிர்களின் மேல் ஆளுமை செலுத்த வல்லவனாகத் திருமால் விளங்குவதால் ‘ஈச்வர:’ என்றழைக்கப்படுகிறார்.

இந்த ஆளுமைத் திறனைக் கூறும் ‘ஈச்வர:’ என்ற திருநாமம் ஸஹஸ்ரநாமத்தின் 75வது திருநாமமாக அமைந்துள்ளது.
“ஈச்வராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல ஆளுமைத் திறனைத் திருமால் அருளுவார்.

தடை என்ற பேச்சுக்கே இடமில்லாமல், தன்னுடைய சங்கல்பத்தாலேயே தான் நினைத்ததை நடத்தி முடிப்பவராக
திருமால் விளங்குவதால் ‘விக்ரமீ’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 76-வது திருநாமம்.
“விக்ரமிணே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் நினைத்த காரியங்கள் நடந்தேறும்படி திருமால் அருள்புரிவார்.

பராக்கிரமம் கொண்ட வில் ஏந்திய வீரனாகத் திகழ்வதால் திருமால் ‘தந்வீ’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 77-வது திருநாமம்.
“தந்விநே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் வாழ்வில் வரும் தடைகளை எல்லாம்
சார்ங்கபாணி தவிடுபொடியாக்கி அருளுவார்.

அனைவரின் உள்ளங்களில் இருக்கும் அனைத்தையும் அறியவல்லவராக விளங்குவதால்
திருமால் ‘மேதாவீ’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 78-வது திருநாமமாக அமைந்துள்ளது.
“மேதாவிநே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்லறிவைத் திருமால் அருளுவார்.

வி’ என்றால் வடமொழியில் பறவை என்று பொருள்.
வேதஸ்வரூபியான கருடன் என்னும் பறவையைத் தனக்கு வாகனமாய்க் கொண்டபடியால் திருமால் ‘வி-க்ரம:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 79-வது திருநாமம்.“விக்ரமாய நமஹ” என்று தினமும் சொல்லி
வருபவர்களுடைய அனைத்துப் பயணங்களிலும் திருமால் வழித்துணையாக உடன்வந்துக் காத்தருள்வார்.

திருமால் ‘க்ரமனாக’ விளங்குகிறார். ‘க்ரம:’ என்றால் நீங்காத செல்வத்தை உடையவன் என்று பொருள்.
அவரிடம் உள்ள எதற்கும் அளவுமில்லை, அவை குறைவதுமில்லை.
திரௌபதிக்கு அவர் சுரந்த புடவை பல மைல்களைக் கடந்து நீண்டு கொண்டே போனதல்லவா?
இப்படி குறையாத, எல்லையற்ற செல்வமுடைய திருமாலை ஸஹஸ்ரநாமத்தின் 80-வது திருநாமம் ‘க்ரம:’ எனக் குறிப்பிடுகிறது.
“க்ரமாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நீங்காத செல்வம் நிறையும்.

ஒப்புயர்வற்றவராகத் திருமால் விளங்குவதால், அவரை
வேத வியாசர் ‘அநுத்தமஹ’ என்று விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 81-வது திருநாமத்தில் அழைக்கிறார்.
“அநுத்தமாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் ராமனின் கருணைக்குப் பாத்திரமாவார்கள்.

யாராலும் அசைக்கப்பட முடியாதவராகத் திருமால் விளங்குவதால், ‘துராதர்ஷஹ’ என்று போற்றப்படுகிறார்.
“துராதர்ஷாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள், வாழ்வில் வரும் மன அழுத்தங்களால்
அசைக்கப்படாதவர்களாக ஆனந்தமாக வாழும்படித் திருமால் அருள்புரிவார்.

அடியார்கள் தனக்குச் சிறிய அளவில் ஏதேனும் சமர்ப்பித்தால் கூட, அதை மிகப் பெரிதாகக் கருதி,
அதைப் போலப் பன்மடங்கு அவர்களுக்கு அருள்பவராகத் திருமால் திகழ்வதால் ‘க்ருதஜ்ஞஹ’ என்று போற்றப்படுகிறார்.
க்ருதஜ்ஞஹ என்றால் செய்நன்றி மறவாதவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 83-வது திருநாமமாக அமைந்துள்ளது.
“க்ருதஜ்ஞாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அடியார்களுக்கு ஒன்றுக்குப் பன்மடங்காகத் திருமாலின் அருள் கிட்டும்.

செய்விப்பவராகவும் செயல்வடிவில் இருப்பவருமான திருமால் ‘க்ருதி:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 84-வது திருநாமம்.
“க்ருதயே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் தொடங்கும் அனைத்து
நல்ல செயல்களும் இனிதே நிறைவடையும்படி திருமால் அருள்புரிவார்.

சேதனாசேதனங்களைத் தன் சொத்தாகக் கொண்டு அவற்றின் எஜமானனாகத் திருமால் விளங்குவதால்,
‘ஆத்மவான்’ என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 85-வது திருநாமம்.
“ஆத்மவதே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் தன் சொத்தாகக் கருதி எம்பெருமான் எல்லா நேரங்களிலும் காத்தருள்வார்.

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply