அஜ: ஸர்வேஶ்வர: ஸித்த: ஸித்தி: ஸர்வாதிரச்யுத: |
வ்ருஶாகபிரமேயாத்மா ஸர்வயோகவிநி:ஸ்ருத: ||
இந்த பதினோராவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:
96-அஜ:, 97. ஸர்வேஶ்வர:, 98. ஸித்த:, 99. ஸித்தி:, 100. ஸர்வாதி:, 101. அச்யுத: 102-வ்ருஶாகபி:, 103. அமேயாத்மா, 104. ஸர்வயோகவிநி:ஸ்ருத: ||
இறைவன் நித்தியமானவன், படைப்பிற்கு முன்பே இருந்தான். அவர் உயர்ந்தவர் மற்றும் சிறந்தவர், அவர் தனது பக்தர்களுக்கு செயலின் இறுதி பலன்களை (மோக்ஷத்தை) வழங்குகிறார். அவனே எல்லா உயிர்களுக்கும் இறுதியான காரணமும், எல்லாவற்றின் மூலமும். அவர் ஒருபோதும் தனது பக்தர்களை நழுவ விடுவதில்லை. பல அவதாரங்களை எடுத்து தர்மத்தை மீட்டெடுக்க அவர் எப்போதும் தயாராக இருக்கிறார். அவர் அளவிட முடியாதவர் மற்றும் அவரது லீலாக்கள் புரிந்துகொள்ள முடியாதவை. அவரை யோகத்தின் மூலம் அடையலாம் மற்றும் அவரை அடைவதற்கான எளிதான வழிகளில் ஒன்றான பக்தி (பக்தி) ஆகும்.
அஜ: — கருணையால் அவதரிப்பதன்றிக் கர்மம் காரணமாகப் பிறவாதவர்.
அடியார்களின் பிறவித் துன்பத்தை நீக்குபவர்.
ஸர்வேச்வர: — அனைத்துத் தடைகளையும் அகற்றி அடியார்களுக்கு அருள்பாலிப்பவர்.
ஸித்த: — அடியார்க்கு அருள எப்பொழுதும் சித்தமாக இருப்பவர்
ஸித்தி: — அடைய வேண்டிய லட்சியமாய் இருப்பவர்
ஸர்வாதி: — அனைத்து பலன்களையும் அருளும் மூலமாக இருப்பவர்
அச்யுத: — அடியார்களை என்றும் நழுவ விடாதவர்
வ்ருஷாகபி: — தர்மத்தின் உருவான கோல வராஹர்
அமேயாத்மா — அளக்கலாகா பெருமையும் அருளும் கொண்டவர்
ஸர்வயோக விநிஸ்ருத: — அனைத்து வழிகளையும் அவரே நடத்துவதால் எந்த யோகத்தாலும் அடையப்படக் கூடியவர்
பிறப்பற்றவன் {அஜன்},
அனைத்து உயிரினங்களின் தலைவன் {ஸர்வேஸ்வரன்},
வெற்றி அடைந்தவன் {ஸித்தன்},
வெற்றி {ஸித்தி},
(அனைத்துப் பொருட்களுக்கும் காரணமாக இருப்பதன் விளைவால்) அனைத்துப் பொருட்களின் தொடக்கமாக இருப்பவன் {ஸர்வாதி},
சிதைவைக் கடந்தவன் {அச்யுதன்},
மூழ்கிய பூமியை உயர்த்திய பெரும்பன்றி மற்றும் காளைமாட்டின் வடிவில் அறமாக இருப்பவன் {வ்ருஷாகபி},
அளவற்ற ஆன்மா கொண்டவன் {அமேயாத்மா},
அனைத்து வகைக் கலவிகளில் இருந்தும் தனித்து நிற்பவன்{ஸர்வயோகவிநிஸ்ருதன்};(24)
ஆறும் பேறும் அவனே -மருந்தும் விருந்தும் அவனே –
97-சர்வேஸ்வர -சரணாகதர்களை தகுதி பார்க்காமல் தாமே சடக்கென அடைபவர்
98-சித்த –தன்னை அடைவதற்கு வேறு வழிகள் தேவை இல்லாமல் தானே தயாரான வழியானவர் –
99-சித்தி -அனைத்து தர்மங்களாலும் அனைவராலும் அடைய படும் பயனாக இருப்பவர் –
100-சர்வாதி -உயர்ந்த மற்றும் தாழ்ந்த அனைத்துப் பயன்களுக்கும் மூலமாக இருப்பவர் –
101-அச்யுத -சரண் அடைந்தோர்களை விட்டு நீங்காதவன்
102-வ்ருஷாகபி -தர்மத்தின் உருவமாக ஸ்ரீ வராஹமாக பிறந்தவர்
103-அமேயாத்மா -தன் அடியார்களுக்கு எவ்வளவு செய்தார் என்று அளவிட முடியாதவர்
104-சர்வயோக விநிஸ்ருத -அனைத்து உபாயங்களாலும் அடையப் படுபவர்
1-9-உபாய ஸ்வரூபி -உபேய ஸூக ஸ்வரூபி –89-100 திரு நாமங்கள் –
1-10-ஆஸ்ரித வத்சலன் -101-122-திரு நாமங்கள்
———————-
96-அஜ –
தடைகளை விலக்குபவன்-
தேஷாம் ஸ்வ ப்ராப்தி பரி பந்தி -ஸர்வம் -ஸ்வயமேவ ஷீபதீதி
அஜஸ்
அஜ கதி ஷேபணயோ –அச்
யதா
தேஷா மேவ அநுகம்பார்தம் அஹம் அஞ்ஞாநஜம் தம
நாஸ யாம் யாத்ம பாவஸ்தோ ஞான தீபேந பாஸ்வதா
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -இத்யாதி -96-
அடியார்கள் வினைத் தொடரை அருள் என்னும் ஒள் வாள் உருவி வெட்டிக் களைபவன் –
என் தன் மெய் வினை நோய் களைந்து நல் ஞானம் அளித்தவன்
ஒ இறப்பிலி -அகாரத்தால் சொல்லப்படுபவன் -206-524- மீண்டும் வரும் –
சார்ந்த இரு வல் வினைகள் அறுத்து –வீடு திறுத்துவான் -இத்யாதி
அவர்கள் தம்மை அடைவதற்கு இடையூறுகளை தாமே விலக்குபவர்–ஸ்ரீ பராசர பட்டர் –
பிறப்பற்றவர்-ஸ்ரீ சங்கரர் —
பிறப்பற்றவர் -செல்பவர் – ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்
ஓம் அஜாய நம
தாமே பிரதிபந்தகங்களைப போக்கி தன்னிடம் சேர்த்துக் கொள்பவன்
மீண்டும் -206–524-நாமாவளி வரும்
———
ஓம் அஜாய நம:
ந ஜாயத எவர் பிறப்பதே இல்லையோ
இதி அஜ: அந்த பகவான் ‘அஜ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பரப்ரஹ்மமான பகவான் எப்பொழுதும் இருக்கிறார். எனவே, அவர் பிறப்பதில்லை. இவ்வாறு, பிறப்பே இல்லாத பகவான் ‘அஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘ந ஜாதோ ந ஜனிஶ்யதே’
(பரப்ரஹ்மம்) முன்னர் பிறந்ததுமில்லை; இனி பிறக்கப்போவதுமில்லை.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
ந ஹி ஜாதோ ந ஜாயோSஹ ந ஜனிஶ்யே கதாசன |
க்ஷேத்ரக்ஞய: ஸர்வ பூதானா தஸ்மாதஹமஜ: ஸ்ம்ருத: ||
(ஶாந்தி பர்வம் 342.74)
நான் முன்பு பிறந்தேனுமல்ல; இப்பொழுது பிறக்கவுமில்லை; இனி ஒருகாலத்திலும் பிறக்கப்போவதுமில்லை. நான் அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் உறைகிறேன். அவற்றை (அந்த ஜீவராசிகளை) அறிகிறேன். எனவே, என்னை ‘அஜ:’ (பிறப்பற்றவன்) என்று கூறுகிறார்கள்.
இதி மஹாபாரதே | இவ்வாறு மஹாபாரதத்தில் (ஶாந்தி பர்வத்தில்) கூறப்பட்டுள்ளது.
———
அஜா – பிறப்பு இல்லாதவர்
இந்த நாமம் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 3 முறை வருகிறது. அஜா என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உள்ளன. மிகவும் பொதுவான அர்த்தங்களை கீழே சுருக்கமாகக் கூறலாம்:
- பிறக்காதவர் அல்லது பிறக்காதவர்;
- எல்லா தடைகளையும் நீக்குபவர்;
- தன் பக்தர்களின் இதயங்களில் நடமாடுபவர்;
- தன் பக்தர்களின் இதயங்களிலிருந்து அறியாமையை நீக்குபவர்; மற்றும்
- எல்லா ஒலிகளுக்கும் ஆணிவேராக இருப்பவர் (அக்ஷரம் “அ“)-‘அக்ஷரணாம் அகரோஸ்மி -10-33– எல்லா எழுத்துக்களிலும் நான் அகாரம்’ என்று கூறுகிறார்.
முதல் அர்த்தத்தை ஸ்ரீ ஆதி சங்கரர் ‘ந ஜாயதே இதி அஜஹ் – அவர் பிறக்காததால் (அவர் ஆரம்பம் இல்லாதவர்) அவர் அஜா என்று விளக்குகிறார். ரிக் வேதம் ‘ந ஜாதோ ந ஜநிஷ்யதே – பிறக்கவே இல்லை, பிறக்கப் போவதில்லை’ என்கிறது.
“ந ஹி ஜாதோ ந ஜாயேயம் ந ஜநிஷ்யே கதாச்சன |
க்ஷேத்ரஜ்ஞாஹ் ஸர்வபூதானாம் தஸ்மாத் அஹம் அஜஹ் ஸ்ம்ர்தஹ் ||-மகாபாரத சாந்தி பர்வ
நான் பிறக்கவில்லை, பிறக்கவில்லை, எதிர்காலத்திலும் பிறக்க மாட்டேன். எல்லா உயிர்களிலும் நான் ஆத்மா; அதனால் நான் பிறக்காதவன் என்று அழைக்கப்படுகிறேன்.”
ஸ்ரீ பராசர பட்டர், பகவான் பல அவதாரங்களை எடுத்திருந்தாலும், அவை சாதாரண பிறப்புகளுடன் ஒப்பிடப்படக்கூடாது என்று சுட்டிக்காட்டுகிறார்.
‘அஜ்‘ என்ற வேர் இயக்கம் அல்லது தூக்கி எறிவதைக் குறிக்கிறது. ஸ்ரீ பட்டர் இந்தப் பொருளைப் பயன்படுத்தி, நாமத்தை “எல்லாத் தடைகளையும் நீக்குபவர்” என்று விளக்குகிறார்; தம்முடைய பக்தர்கள் தன்னை அடையும் நோக்கத்தை நிறைவேற்றுவதை அவர் உறுதி செய்கிறார்.
ஸ்ரீ ஆதி சங்கரர் அஜா (இயக்கம், ) என்பதற்கு அதே அர்த்தத்தைப் பயன்படுத்துகிறார், மேலும் ஒரு வித்தியாசமான விளக்கத்துடன் வருகிறார் – அஜாதி கச்சதி க்ஷிபதி இதி வா அஜஹ் – அவர் தனது பக்தர்களின் இதயத்தில் நகர்கிறார்
இயக்கம்–நம்மில் உள்ள அறியாமையை நீக்குபவர், அல்லது பக்தர்களை அணுகுவதற்காக பக்தர்களிடம் செல்பவர், அல்லது தனது பக்தர்களுக்கு இடையூறு விளைவிப்பவர் அல்லது துன்பம் விளைவிப்பவர் மீது தனது ஆயுதங்களைக் கட்டவிழ்த்து விடுபவர்-
97-சர்வேஸ்வர –
தானே அடியார் இடம் சென்று சேருபவன்
ஸமர்தாநாம் அஸமர்தாநாம் ச ஸர்வேஷாம் சரணாகதாநாம் விலம்பநம் வைக் லப்யம்
ச பரிஹர்தும் ஆஸூதாந் அஸ்நுத இதி
ஸர்வேஸ்வர
அஸ்நோதே ஆசு கர்மணி வரட் ச -அஸ் என்னும் தாது செல்லுதல் என்ற பொருள்
இத்துடன் வர என்னும் ப்ரத்யயம் சேரும் போது விரைந்து செல்லுதல் என்ற பொருள் உண்டாகும்
விபீஷணேன ஆசு ஜகாம சங்கமம் –யுத்த -18-39--பெருமாளை சரணம் அடைய விபீஷணன் வந்த போது-பெருமாள் விரைந்து சென்று அவனுடன் சேர்ந்தார்
வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே -உலக்குக்கோர் முந்தை தாய் தந்தையே -5-7-7-
தன்னைச் சரணம் அடைந்தவர்களைத் தாமே விரைவாக அவர்களிடம் செல்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ஈஸ்வரர்களுக்கு எல்லாம் ஈஸ்வரர் -ஸ்ரீ சங்கரர் —
எல்லோருக்கும் ஈஸ்வரர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
ஓம் சர்வேஸ்வராய நம
திருவடி அடைய ஆசை உள்ளோர்க்கு தானே சென்று சேவை சாதிப்பவன்
——————
ஓம் ஸர்வேஶ்வராய நம:
ஸர்வேஶாம் அனைத்து
ஈஶ்வராணாம் ஈஶ்வரர்களுக்கும் (அனைவரையும் ஆள்பவர்களுக்கும்)
ஈஶ்வர: ஈஶ்வரனாக இருப்பதால் (அந்த ஈஶ்வரர்களையும் ஆள்பவராக இருப்பதால்)
ஸர்வேஶ்வர: பகவான் ‘ஸர்வேஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
உலகில் சாதாரணமாக தலைவர்கள், அரசர்கள் முதலியோரைக் காண்கிறோம். இவர்கள் அனைவரும், தத்தம் ஆளுகைக்குட்பட்ட இடங்களுக்கு ஈஶ்வரர்கள் ஆவர். இவ்வாறு, ப்ரபஞ்சம் அனைத்திலும் கூட பல ஈஶ்வரர்கள் இருக்கிறார்கள். இத்தகைய ஈஶ்வரர்கள் அனைவரையும் அடக்கி ஆள்பவராக இருப்பதால், பகவான் ‘ஸர்வேஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்
‘ஏஶ ஸர்வேஶ்வர:’ (மாண்டூக்ய உபநிஶத் 6)
இவர் (பரப்ரஹ்மம்) அனைத்தையும் ஆள்பவர்.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
———–
சர்வேஸ்வரா – அவர் பரமபிதா
சர்வேஸ்வரா என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன:
அ) தன்னைத் தேடும் அனைவரையும் சென்றடைபவர்;
ஆ) அனைத்து ஈஸ்வரர்களுக்கும் ஈஸ்வரனாக இருப்பவர்
ஸ்ரீ ஆதிசங்கரர் ‘ஸர்வேஷாம் ஈஸ்வரனாம் ஈஸ்வரஹ் – அவர் எல்லா இறைவனுக்கும் மேலானவர்’ என்று ஒரு எளிய விளக்கம் தருகிறார்.
அவர் தங்கள் சொந்த குறிப்பிட்ட பகுதிகளில் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் மற்ற எல்லா பிரபுக்கள் மீதும் ஆட்சி செய்கிறார். பிருஹதாரண்யக உபநிஷத் 4.4.22 கூறுகிறது ‘ஏஷா சர்வேஸ்வரா – அவர் ஒருவரே பரம பகவான்’.
ஸ்ரீ பராசர பட்டர், ‘அஷ் + வரத் = ஈஸ்வரஹ்‘ என்பதை “விரைவில் வெற்றியை அளிக்கும் சக்தி கொண்டவர்” என்று கருதுகிறார். இந்த விளக்கத்தில் அவர் சர்வேஸ்வரா ஆவார், ஏனென்றால் அவர் தஞ்சம் அடைந்த அனைவருக்கும் உடனடியாக ஆறுதல் அளிக்கும் வகையில் விரைவாகச் சென்றடைகிறார்.
98-சித்த –
சித்த தர்மம் -எப்போதும் உள்ளவன் –
தேஷாம் ஸ்வரூபேண
ஸித்த
நிஷ்டா -ஏவம் ப்ரதீத ஹித இத்யாதயோ அபி
நோபாயைஸ் ஸாத்ய
யதா
ந்யாஸ இத்யாஹூ மநீஷினோ ப்ராஹ்மணம் -இதி -தைத்ர்யம் நாராயண வல்லி –
புதையல் போன்று ப்ரஹ்மம் உள்ளேயே இருப்பதாக ஞானிகள் கூறுகின்றனர்
பிரதித-321- ஹித -முதலான திரு நாமங்கள் இது போல் இறந்த கால வினை எச்சங்கள் ஆகும்
புதையல் போலே எப்போதும் இருப்பவன்
ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் -10-6-1-
உன் தன்னைப் பிறவி பெரும் தனை புண்யம் யாம் உடையோம்-எங்களைத்தேடி வந்த புண்யம் உண்டே
உபாயாந்தரங்களால் அன்றி தாமே சித்த உபாயமாய் இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
என்றைக்கும் உள்ள தன்மையை யுடைய நித்யர் -ஸ்ரீ சங்கரர் —
அடையப் பெறுபவர் -எப்போதும் ஞான வடிவினர் -அடியவர்களில் காக்க சித்தமாக உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
ஓம் சித்தாயா நம
அடியார்களுக்கு கை வசப்பட்டு இருப்பவன்
————
ஓம் ஸித்தாய நம:
நித்ய எக்காலத்திலும் (என்றென்றும்)
நிஶ்பின்ன ரூபத்வாத் முழுமையானவராகவும், பூரணமானவராகவும், குறைபாடற்றவராகவும் இருப்பதால்
ஸித்த: பகவான் ‘ஸித்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் எக்காலத்திலும், எல்லாவற்றிலும் முழுமையானவராகவும், அனைத்தையும் அடையப்பெற்றவராகவும், குறைபாடுகள் அற்றவராகவும் இருப்பதால் அவர் ‘ஸித்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸித்தி என்றால் அடையப்படக்கூடியவை. ஸித்தன் என்றால் அவை அனைத்தையும் அடைந்தவர் என்று பொருள். பகவான் அனைத்தையும் எல்லா காலங்களிலும், முழுமையாக அடைந்துள்ளதால் அவர் ஸித்த: என்று அழைக்கப்படுகிறார்.
———–
சித்தா – சாதித்தவர்
சித்தா ஒரு முழுமையான சாதனை படைத்தவர். ‘சித்தியாதி இதி சித்தா – சாதிப்பவன் ஒரு சித்தன்’.
ஸ்ரீ ஆதிசங்கரர், ‘நித்ய நிஷ்பன்ன ரூபத்வாத் சித்தாஹ் – எப்போதும் பரிபூரணமாகச் சாதித்தவர்’ என்று விளக்கம் தருகிறார். ‘எப்பொழுதும் எங்கும் இருக்கிறார்’ என்ற பொருளையும் கொடுக்கலாம்.
ஸ்ரீ பராசர பட்டர் இதை ‘ஸ்வரூபேனைவ பக்தானாம் சித்தத்வாத் சித்தா உச்யதே – அவர் தனது பக்தர்களுக்கு தனது உண்மையான வடிவில் இருக்கிறார்’ என்று விளக்குகிறார்.
99- ஸித்தி
பேறாய் இருப்பவன்
உபாயை ரப்யய மேவ சாத்யத இதி
ஸித்தி
யதா
யதிச் சந்தோ ப்ரஹ்ம சர்யம் சரந்தி–கட-2-15-
பயனாக உள்ள என்னை அடையும் பொருட்டு யார் ப்ரஹ்மசர்யம் போன்றவற்றை அனுஷ்டிக்கிறார்களோ
யம் ப்ருதக் தர்ம சரணா ப்ருதக் தர்ம பலைஷிண -ப்ருதக் தர்மை சமர்ச்சந்தி தஸ்மை தர்மாத்மனே நம-இதி –
யார் ஒருவனை விசேஷமான தர்மத்தின் ஸ்வரூபம் என்றே ஞானிகள் உபாஸனம் செய்கிறார்களோ
யாரை அத்தகைய அனுஷ்டானத்தின் பயனாக எண்ணி அடைய விரும்புகிறார்களோ
எவனைப் பயனில் எண்ணம் இல்லாமல் தர்மங்கள் கொண்டு பூஜிக்கிறார்களோ
தர்மமே ஸ்வரூபமான அவனை வணங்குகிறேன் –
அடியை அடைந்து ஈறில் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினேன் -2-6-8-
உபாயாந்தரங்களுக்கும் பலன் அளிப்பவன் –
சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள்
சாத்ய பக்தி சித்தி -சரணாகதி –
உபாயங்களினால் தேடப்படும் பலனுமானவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லாவற்றிலும் சிறந்த பயனாய் ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
ஓம் சித்தியே நம
அனைவருக்கும் அடையப்பட வேண்டியவன்
போக்யம் முகுந்த குண பேதம சேதநேஷூ போக்த்ருத்வ மாத்மநி ஸூ நிவேஸ்ய நிஜேச்சயைவ
பாஞ்சாலிகா சுக விபூஷண போகதாயீ சம்ராடிவாத்ம சமவா ஸஹ மோதசே த்வம் –ஸ்ரீ சரணாகதி தீபிகா–11-
தேவரீரே அசேதன வஸ்துக்களிலே போக்யத்வ ரூப குண விசேஷத்தையும் சேதனர்கள் இடத்திலே போக்த்ருத்வத்தையும் தேவரீரே
ஸ்வ இச்சையால் வைத்து மரப்பாச்சியையையும் –
பாஞ்சாலிகா –பதுமை — சுகம் -கிளி – மரப்பாச்சிக்கு சேலையை உடுத்தி களிப்பது என்றுமாம் –
கிளியையும் கொண்டு விளையாடும் அரசன் போலே தேவரீரும்
உமக்கு ஏற்கும் திரு தேவிமாரோடு கூடி விளையாடிக் களிக்கின்றீர்
ஸ்வா தந்தர்ய கந்த விரஹிதமான பாரதந்தர்ய வேஷம் -நிலா தென்றல் சந்தனம் குஸூமம் போலே
செய்த்தலை எழு நாற்றுப் போலே அவன் செய்வன செய்து கொள்ள -வர்த்திக்க வேண்டுமே
ந்யாஸ சதக ஸ்தோத்ரம் – –ஸ்வாமீ ஸ்வ சேஷம் ஸ்வ வசம் ஸ்வ ஹரத்வேந நிர்ப்பரம் ஸ்வ உத்தேஸ்யயா ஸ்வார்த்தம் ஸ்வஸ்மின் ந்யஸ்யதி மாம் ஸ்வயம் –
ஸ்வ சப்தம் ஒன்பதின்கால் இட்டு அருளி வடி கட்டின சாஸ்த்ரார்த்தம்
போக்த்ருத்வம் எம்பெருமானுக்கே அல்லது நமக்கு அன்றே –
———
ஓம் ஸித்தயே நம:
ஸர்வவஸ்துஶு அனைத்துப் பொருட்களிலும் (அனைவருக்குள்ளும்)
ஸம்வித்ரூபத்வாத் ஞான வடிவாய் இருப்பதாலும்
நிரதிஶயரூபத்வாத் அனைத்திலும் சிறந்தவராய் இருப்பதாலும்
ஃபலரூபத்வாத் வா அனைவருக்கும் அவரவரது வினைப்பயங்களுக்கு ஏற்ப அடையப்படக்கூடிய பலனாயும் இருப்பதால்
ஸித்தி: பகவான் ‘ ஸித்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸ்வர்காதீனாம் சுவர்க்கலோகம் முதலிய பலன்கள்
வினாஶித்வாத் நிரந்தரமானவை அல்ல; அவை (கல்பத்தின் முடிவில்) அழியக்கூடியவை
அஃபலத்வம் எனவே, அவை உண்மையில் பலன்களே அல்ல (பகவானே அடையத் தகுந்த, நிரந்தர பலனாவார். மற்றவை எல்லாம் அழியக்கூடியவை. அவற்றில் பற்றுக் கொள்ளுதல் கூடாது என்பதே இந்த வாக்கியத்தின் தாத்பர்யமாகும்).
பகவானே அனைத்து பொருட்களுக்குள்ளும் (அனைவருக்குள்ளும்) ஞான வடிவானவராய், அனைத்திலும் சிறந்தவராய், அனைவராலும் அவரவரது வினைகளுக்கேற்ப அடையக்கூடிய பலனாயும் இருக்கிறார். எனவே, அவர் ‘ஸித்தி:’ (அடையக்கூடிய இலக்கு) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். நாம் அனைவரும் அழியக்கூடிய சுவர்க்கம் முதலிய பலன்களில் பற்று வைக்காது, அழியாத, சிறந்த பலனாகிய பகவானிடமே பற்றுக் கொள்ள வேண்டும்.
———
சித்தி – இறுதியான பேரின்பத்தை அளிப்பவர்
சித்தி என்பது சாதிப்பவரைக் குறிக்கிறது என்றால் சித்தி என்பது சாதனையைக் குறிக்கிறது. இவ்வாறு பகவான் நடிகர் மற்றும் செயல், செய்பவர் மற்றும் செயல் ஆகிய இரண்டையும் குறிக்கிறார். ஸ்ரீ ஆதி சங்கரரின் கூற்றுப்படி, பகவான் சித்தி என்று அழைக்கப்படுவதால் –
- எல்லாவற்றையும் பற்றிய அவரது நிபுணத்துவ அறிவு அல்லது
- எல்லாவற்றிலும் அவரது மேலாதிக்கம் அல்லது
- ஒவ்வொரு நாட்டத்திற்கும் அதாவது மோட்சத்தின் இறுதிப் பலனாக அவன் இருப்பது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மற்ற எல்லா சாதனைகளும் உலக மகிழ்ச்சிகள் மற்றும் சொர்க்கத்தின் இன்பங்கள் போன்ற குறைந்த நன்மைகளை மட்டுமே கொடுக்க முடியும், ஆனால் மோட்சம், இறுதி பேரின்பம் அவரை தீவிரமாக தேடுவதன் மூலம் மட்டுமே பெற முடியும்.
—————
100-ஸர்வாதி –
எல்லா புருஷார்த்தங்களுக்கும் மூல காரணம்
தேஷாம் பராவர ஸர்வ புருஷார்த்த மூலம் இதி
ஸர்வாதி
யதா
யே த்வாம் தேவம் த்ருவம் பக்தா புராணம் புருஷோத்தமம் ப்ராப்னுவந்தி சதா காமாந் இஹ லோகே பரத்ர ச –யுத்த -120-31-
எல்லையற்ற காலமாக உள்ளவனும் -புருஷோத்தமனும் -உயர்ந்த தெய்வமாக உள்ளவனும் -ஆகிய என்னை
மன உறுதி குலையாமல் உபாஸனை செய்கிறானோ
அவன் இந்த உலகிலும் அந்த உலகிலும் அனைத்துப் புருஷார்த்தங்களும் கிட்டப் பெறுகிறான்
சர்வான் காமான் ப்ராப்னுவந்தே விசாலான் த்ரை லோக்யே அஸ்மின் க்ருஷ்ண நாமாபிதாநாத் இதி –
கிருஷ்ணனின் திரு நாமங்களைக் கீர்த்தனம் செய்வதன் மூலம் மட்டுமே மூன்று உலகங்களிலும் பெரியவகையாக உள்ள
புருஷார்த்தங்கள் அனைத்தையும் அடைகிறான்
சகல பல பிரதோ ஹி விஷ்ணு
அற முதல் நான்கவையாய் -திரு வெழு கூற்று இருக்கை-
உயர்வும் தாழ்வும் ஆகிற எல்லாப் பயங்களுக்கும் தாமே காரணமாய் இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லா பூதங்களுக்கும் காரணம் ஆனவர் -ஸ்ரீ சங்கரர் —(இது 99 திரு நாமம் ஸ்ரீ சங்கரர் படி )
அனைத்திற்கும் காரணம் ஆனவர் -எல்லாராலும் ஏற்கப் பெறுபவர் -எல்லாம் உண்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
ஓம் சர்வாதியே நம
சகலத்துக்கும் சகல -த்ரிவித-காரணம் ஆனவன்
————
ஓம் ஸர்வாதயே நம:
ஸர்வபூதானாம் அனைத்து ஜீவராசிகளின்
ஆதிகாரணத்வாத் மூலகாரணமாய் இருப்பதால்
ஸர்வாதி: பகவான் ‘ஸர்வாதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்து ஜீவராசிகளின் மூலகாரணமாய் இருப்பதால் பகவான் ‘ஸர்வாதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———
சர்வாதிஹ் – அவர் எல்லா காரணங்களுக்கும் இறுதி காரணம்
சர்வ என்றால் எல்லாம், ஆதி என்றால் ஆரம்பம். எல்லாவற்றுக்கும் மூலகாரணம் அவனே. எல்லா காரணங்களுக்கும் அவரே காரணம். எல்லா தொடக்கங்களுக்கும் அவரே ஆரம்பம்.
“ஸர்வேஷாம் புருஷார்த்தானம் ஆதிঃ ஸர்வாதிঃ அல்லது ஸர்வ பூதாநம் ஆதிகாராநத்வத் ஸர்வாதிঃ” அனைத்திற்கும் ஆரம்பமாக இருப்பவர்; ஒன்று, எல்லாவற்றையும் விட முன்னதாகவே இருந்தவர்.
ர “அஹம் ஸர்வஸ்ய ப்ரபவஹ் மத்தஸ் ஸர்வம் ப்ரவர்ததே-10-8- – நான் எல்லாவற்றுக்கும் ஆதாரம்; எல்லாமே என்னிடமிருந்து வருகிறது.”
இப்படியாக ஹாரீத குலத்துக்குத் திலகம் போன்ற ஸ்ரீ வத்சாங்கர் -என்னும் கூரத்தாழ்வானின் திருக்குமாரரும்
ஸ்ரீ பெரிய பெருமாள் திவ்ய ஆஜ்ஜையாலே ஸ்ரீ பராசர பட்டர் என்ற திரு நாமம் சாற்றப் பெற்றவருமான
ஸ்ரீ ரெங்க நாதன் என்னும் இயல் பெயர் கொண்டவர்
அருளிச் செய்த பகவத் குண தர்ப்பணம் என்னும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாஷ்யத்தில்
முதல் நூறு திரு நாமங்கள் வியாக்யானம் ஸம் பூர்ணம்
முதல் சதகம் முடிந்தது-
101-அச்யுத
தன்னைப் பற்றினாரை நழுவ விடாதவன் –
அப்ரஹ்மாத்மகம் -அவன் இல்லாத ஒன்றுமே இல்லையே –
அத்தைச் சொல்ல வில்லை
இங்கு அனுக்ரஹம் அருளுவதில் இருந்து நழுவாமல் பக்தர்களை கை விடாமல் இருப்பவன்
அச்யுதன் அமலன் என்கோ -நழுவு விடும் குற்றம் இல்லாதவன்
தேப்ய ப்ரபன்நேப்ய அநாபகத
அச்யுத
யஸ்மாத் ந ச்யுத பூர்வ அஹம் அச்யுத தேந கர்மணா
நான் எப்போதும் என் பக்தர்களைக் கை விடுவது இல்லை
இதனால் அச்யுதன் எனப்படுகிறேன்
தஸ்ய அஹம் ந ப்ரணஸ்யாமி –ஸ்ரீ கீதை-6-30-
யார் என்னை எங்கும் காண்கிறானோ அவன் பார்வையில் இருந்து நான் மறைவது இல்லை
நத்யஜேயம் கதஞ்சன –யுத்த -18-3-நண்பன் என்று வந்தவனை நான் கை விட மாட்டேன்
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் –தோஷமே இருந்தாலும் மித்ர வேஷம் பூண்டு வந்தாலும் ஏற்றுக் கொள்வேன்
ஆபிமுக்யம் மாத்ரம் இருந்தாலும் அறிந்து -மித்ர பாவேன-சம்ப்ராப்தம்
கார்திகையானும் –முதுகிட்டு -பாணனை நிர்கதியாக விட்டு ஓடிப் போனவர்கள் போலே அன்று
அச்சுதன் -அமலன் -என்கோ -3-4-5-
தம்மை அடைந்தவரை விட்டு நீங்காதவர்-எப்போதும் நழுவ விடாத சரித்திரம் உடையவன்
ஆஸ்ரிதர் இடம் இருந்து விலகாதவன்
-ஸ்ரீ பராசர பட்டர்
தம் ஸ்வரூப மகிமை முக் காலத்திலும் நீங்காதவர் -ஸ்ரீ சங்கரர்
தேச கால குணங்களால் வீழ்ச்சி இல்லாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர்
ஓம் அச்சுதாய நம
அடியார்களை விடாதவன் —மீண்டும் -320–557-நாமாவளி வரும்
———
ஓம் அச்யுதாய நம:
ஸ்வரூபஸாமர்த்யான் தன் இயற்கையான வலிமை (மற்றும் சக்தியிலிருந்து)
ந ச்யுதோ அவர் என்றும் நழுவியதில்லை
ந ச்யவதே அவர் இனி நழுவப்போவதுமில்லை
இதி அச்யுத: எனவே, பகவான் ‘அச்யுதன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் தன் இயற்கையான வலிமை (மற்றும் சக்தியிலிருந்து) முன்பு என்றும் நழுவியதில்லை, இனி நழுவப்போவதுமில்லை. எனவே, அவர் ‘அச்யுதன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘ஶாஶ்வதம் ஶிவமச்யுதம்’ (நாராயண உபநிஶத் 13.1)
நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அவர் (பரப்ரஹ்மம்) என்றும் மங்களமானவராகவும், வழுவாதவராகவும் இருக்கிறார்.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
ததா ச பகவத்வசனம் | மேலும், பகவான் ஸ்ரீக்ருஷ்ணர் கூறுகிறார்:
‘யஸ்மான்னச்யுதபூர்வோSஹமச்யுதஸ்தேன கர்மணா’
நான் என் கடமைகளிலிருந்து முன்பு எப்பொழுதும் நழுவியதில்லை. எனவே, நான் “அச்யுதன்” ஆவேன்.
இதி | இவ்வாறு பகவான் ஸ்ரீக்ருஷ்ணர் கூறியுள்ளார்.
இதி நாம்னாம் ஶதமாத்யம் விவ்ருதம் | இத்துடன் (அச்யுத: என்னும் இந்த திருநாமம் வரையில்) முதல் நூறு திருநாமங்களின் விவரணம் முற்று பெறுகிறது.
—————
அச்யுதா – ஒருபோதும் நழுவாதவர்
அச்யுதாவை 3 வழிகளில் விளக்கலாம்:
- அவர் தனது நிறுவப்பட்ட பதவியில் இருந்து நழுவுவதில்லை. ஸ்ரீ ஆதி சங்கரர் கூறுகிறார் ‘ஸ்வரூப சாமர்த்யாத் ந ச்யுதோ ந ச்யவதே ந ச்யவிஷ்யதே இதி அச்யுதா – அவர் ஒருபோதும் வழுக்கவில்லை, அவர் வழுக்கவில்லை, அவர் தனது உண்மையான பதவியிலிருந்து நழுவ மாட்டார்.’
- அவர் தனது பக்தர்களை நழுவ அனுமதிப்பதில்லை, அதாவது, அவர்களின் தேவையின் போது அவர் அவர்களை ஒருபோதும் வீழ்த்துவதில்லை. அவர் பக்தர்களின் இதயத்தில் என்றும் இருப்பவர்.
- பிறப்பு, வளர்ச்சி, சிதைவு, நோய் போன்ற எந்த மாற்றமும் இல்லாதவர்.
ஸ்ரீ பராசர பட்டர், பிரம்மா அல்லது இந்திரனைப் போல, அவ்வப்போது பதவியை இழக்க நேரிடும், எனவே அவர் அச்யுதா என்று அழைக்கப்படுவதைப் போலல்லாமல், தனது திருவருள் நிலையிலிருந்து ஒருபோதும் நழுவுவதில்லை என்று விளக்குகிறார்.
“யஸ்மாத் ந ச்யுத பூர்வோஹம் அச்யுதஸ்தேன கர்மணா” – மகாபாரத சாந்தி பர்வா 12.330.16.
மேற்கூறிய ஸ்ருதிக்கு ஸ்ரீ பட்டரின் விளக்கம் இரண்டாவது பொருளுக்கு இட்டுச் செல்கிறது: “நான் (என் பக்தர்களை) ஒருபோதும் கைவிடவில்லை, என்னுடைய இந்த செயலின் காரணமாக, நான் அச்யுதா என்று அறியப்படுகிறேன்.” “தேப்யா ப்ரபந்நேப்யா ந அபாகத அச்யுதஹ் – தன்னிடம் அடைக்கலம் தேடியவர்களிடமிருந்து அவர் ஒருபோதும் விலகி இருப்பதில்லை” என்பது அவரது வார்த்தைகள்.
ந சயாவயதி இதி அச்யுதஹ் – தன் பக்தர்களை நழுவ விடாதவன் – அர்ஜுனன் கிருஷ்ணரை அச்யுதா என்று அழைக்கிறான், அவன் தன்னைத் தன் தேரோட்டியாக ஏற்றுக்கொண்டான், அவன் அவனை ஒருபோதும் நழுவ விடமாட்டான்.
பிறப்பு, வாழ்வு, வளர்ச்சி, தோற்றம் மாறுதல், சிதைவு, இறுதியாக உடலை விட்டு மறைதல் போன்ற நிகழ்வுகளின் வரிசையில் நிலையிலிருந்து நிலை நழுவாமல் இருப்பதால், பகவான் அச்யுதாவாக இருக்கிறார்
“பதிம் விஸ்வஸ்யாத்மேஸ்வரம் ஷாஸ்வதம் சிவம் அச்யுதம் – அவர் பிரபஞ்சத்தின் இறைவன், உயிரினங்களின் இறைவன், நித்தியமானவர், மங்களகரமானவர் மற்றும் சறுக்கல் அல்லது மாற்றம் இல்லாதவர்” என்று நாராயண உபநிடதம் கூறுகிறது.
இந்த நாமம் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் மூன்று முறை வருவதைக் கவனிக்கலாம்.
102-வ்ருஷாகபி –
கபி -வராஹம் -வராஹமாக தானே தோன்றி ரஷித்து அருளுபவன் -பரத்வ பரமான திரு நாமம் –
வ்ருஷா -தர்மம் -தர்ம ரூபி -அவதாரம் சொல்லவில்லை -வைகுண்ட நாதனே தர்ம ஸ்வரூபமாய் -ஸ்ரீ வராஹ மூர்த்தி
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த வேத மூர்த்தி-ஞானப் பிரான் அல்லால் அல்ல -நான் கண்ட நல்லதுவே –
அச்யுத மேவ தர்ம வராஹ த்வேந சமர்தயதே
வ்ருஷா கபி
ததா அப நிருக்தம்
கபி வராஹ ஸ்ரேஷ்ட ச –தர்ம ச வ்ருஷ உச்யதே –தஸ்மாத் வ்ருஷாகபிம் பிராஹா -காஸ்யபோ மாம் ப்ரஜபேதி இதி
கபி -பதம் உயர்ந்த வராஹ ரூபம் உணர்த்தும்
தர்மம் என்பது வ்ருஷம் எனப்படும்
தர்மமே வடிவான என்னை வ்ருஷா கபி என்று காஸ்யப பிரஜாபதி கூறுகிறார்-(ரிஷி ப்ரோக்தம் இந்தத் திருநாமம்-தனக்கு கிடைத்த திரு நாமம் பற்றித் தானே பெருமையாகச் சொல்லிக் கொள்கிறான் )
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தை -10-10-7-
தர்மமே வடிவெடுத்த வராஹாவதாரம் செய்தவர் -ஸ்ரீ பராசர பட்டர்
தர்ம ரூபியாகவும் வராஹ ரூபியாகவும் இருப்பவர் -எல்லா விருப்பங்களையும் வர்ஷிப்பதால் தர்மம் வ்ருஷம் எனப்படும் –
தர்மம் பற்றியும் வ்யூஹ விபவ பரமான திருநாமங்கள் வரும் –
தர்மம் வளர்த்து -வ்யூஹம்
தர்மம் ரக்ஷணம் விபவம்
கம் -நீர் -அதில் இருந்த எடுத்தவர் ஆகையால் கபி -வராஹர் -வ்ருஷாகபி -தர்ம ஸ்வரூபரான வராஹர் -ஸ்ரீ சங்கரர்
தர்மத்தால் துன்பங்களைப் போக்குபவர் -அருளை வருஷிப்பவராய் -சுகத்தைப் பருகுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்
ஓம் வ்ருஷாகபி நம
ஸ்ரீ வராஹ நாயனாராக பூமி உத்தாரணம் செய்து அருளினார்
———
.ஓம் வ்ருஶாகபயே நம:
வர்ஶணாத் மழைப் போன்று
ஸர்வகாமானாம் அனைத்து ஆசைகளையும் நமக்கு அள்ளித் தருவதால்
தர்மோ தர்மத்தை
வ்ருஶ: ‘வ்ருஶ’ என்று குறிக்கின்றனர்.
காத் தோயாத் ‘கா’ என்றால் தண்ணீரைக் குறிக்கும்
பூமிமபாதிதி அந்த கடல் நீருக்குள் அகப்பட்டுக் கிடந்த பூமியை இடர்ந்து எடுத்து வந்ததால்
கபிர்வராஹ: வராஹப் பெருமானை ‘கபி’ என்று அழைக்கின்றனர்.
வ்ருஶரூபத்வாத் இவ்வாறு, (அனைத்து ஆசைகளையும் வாரி வழங்கும்) தர்மத்தின் உருவமாகவும்,
கபிரூபத்வாத் பூமியை நீரினின்று இடர்ந்து எடுத்து வந்த வராஹ ரூபமாயும் (இரண்டும் சேர்ந்து இருப்பதால்)
வ்ருஶாகபி: பகவான் ‘வ்ருஶாகபி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் பன்றியின் உருவெடுத்து கடலுக்குள் ஆழ்ந்து கிடந்த பூமியை வெளிக்கொணர்ந்தார். அந்த வராஹப் பெருமானே, தர்மத்தின் உருவமாய் இருந்து நமது ஆசைகளையும் நிறைவேற்றுகிறார். இவ்வாறு, தர்மத்தின் உருவமாயும், வராஹமாயும் இருப்பதால் பகவான் ‘வ்ருஶாகபி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வ்ருஶ – தர்மம்; க – தண்ணீர்; கபி – அந்த தண்ணீரிலிருந்து பூமியை இடர்ந்து எடுத்த வராஹப் பெருமான். வ்ருஶாகபி – தர்மமே உருவாயுள்ள வராஹப் பெருமான்.
கபிர்வராஹ: ஶ்ரேஶ்டஸ்ச தர்மஸ்ச வ்ருஶ உச்யதே |
தஸ்மாத்வ்ருஶாகபி ப்ராஹ காஶ்யபோ மாம் ப்ரஜாபதி: || (மஹாபாரதம் ஶாந்தி பர்வம் 342.89)
‘கபி’ என்றால் பன்றியை (வராஹத்தை) அல்லது உத்தமமான ஒன்றைக் குறிக்கும் (மிகச்சிறந்த உத்தமமான வராஹம் என்றும் கொள்ளலாம்). தர்மத்தை ‘வ்ருஶ’ என்ற சொல் குறிக்கும். எனவே, கஶ்யபப் ப்ரஜாபதி என்னை ‘வ்ருஶாகபி’ என்ற திருநாமத்தால் அழைத்தார்.
இதி மஹாபாரதே | இவ்வாறு மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.
———
விருஷகபிஹ் – தர்மத்தைப் பாதுகாப்பவர்
விருஷா என்ற வார்த்தைக்கு தர்மம் என்று பொருள், மற்றும் கபி என்ற சொல் பன்றியைக் குறிக்கிறது (பா என்றால் காத்தல் மற்றும் கா என்றால் நீர், எனவே கபி என்பது வராஹ அவதாரத்தைக் குறிக்கிறது, அங்கு அவர் கடலின் ஆழத்திலிருந்து பூமியைப் பாதுகாத்தார்).
மஹாபாரதம் கூறுகிறது ‘கபீர் வராஹஸ் ஷ்ரேஷ்டஶ்ச தர்மஶ்ச விருஷ உச்யதே; தஸ்மாத் விருஷாகபிம் ப்ராஹ காஷ்யபோ மாம் பிரஜாபதிஹ் – கபி என்பது வராஹ அவதாரத்தைக் குறிக்கிறது மற்றும் தர்மம் விருஷா எனப்படுகிறது; அதனால் காஷ்யப பிரஜாபதி என்னை விருஷாகபிஹ் என்று அழைத்தார்.
இவற்றை வைத்து ஸ்ரீ ஆதிசங்கரர் ‘விருஷாரூபத்வாத் கபிரூபத்வாச்ச விருஷாகபிஹ் – தர்மம் மற்றும் வராஹ அவதாரம் என்பதால் விருஷாகபிஹ் என்று அழைக்கப்படுகிறார்’ என்கிறார்.
103- அமேயாத்மா –
அறிய முடியாதவன் –அப்ரமேய -46-போலே –அனுக்ரஹ வெள்ளம் அளவிட முடியாதது
அங்கு ஸ்வரூப பரம் இங்கு அநுக்ரஹ வெள்ளம் அளவு காண முடியாதது என்கிறது
அஸ்மின் ஆஸ்ரித அநுக்ரஹ ஸ்ரோதஸி
இதி ந்யாயேந –அ மேயாத்மா –இயா நித்ய அபரிச்சேதய ஸ்வரூப
சேஷ சயம்- லோசனை அம்ருத நதி ஓடி வர–தவிக்கும் நமக்கு ஆலம்பனமாக ஆமோத ஸ்தம்பம் -மணத் தூண்கள்-
தாமோதரன் -ஸுலப்யம் அறிய முடியாத அளவு -பரத்வத்தால் ஏறிட்டுக் கொண்ட ஸுலப்யம்
கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் அன்றோ-ஆகவே தான் இங்கு பரத்வ பரமான திரு நாமம்
அதோ ஜ்யாயாந் ச புருஷ -புருஷ ஸூக்தம்
தனக்கு ஒப்பு யாரும் இல்லாத காரணத்தால் அனைவரையும் விட உயர்ந்தவன் ஆவான்
பூயான் ச அத ஜனார்த்தன-எனவே ஜனார்த்தனன் அனைவரையும் விட உயர்ந்தவன்
பற்றுடை அடியவர்க்கு எளியவன் -1-3-1–எளிவரும் இயல்வினன் பிறர்களுக்கு அறிய வித்தகன் –
அடியவர்களுக்கு அருளும் திறத்தில் இவ்வளவு என்று அளவிட முடியாதவர்-ஸர்வதோ அதிக -ஸ்ரீ பராசர பட்டர்
இவ்வளவு என்று அளவிடமுடியாத ஸ்வரூபத்தை யுடையவர் -ஸ்ரீ சங்கரர்
முழுமையாக அறிய முடியாத ஸ்வரூபத்தை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் அமேயாத்மாய நம
அபரிச்சேத்யன் -யாரும் ஒரு நிலையன் என அறிய அரிய எம்பெருமான்
————
ஓம் அமேயாத்மனே நம:
இயானிதி இப்படிப்பட்டதென்று
மாதும் பரிச்சேதும் ‘மா’ என்றால் தீர்மானித்தல்
ந ஶக்யத இயலாது
ஆத்மா யஸ்யேதி எவருடைய தன்மையை
அமேயாத்மா பகவான் ‘அமேயாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மா என்றால் தீர்மானித்தல், அனுமானித்தல். பகவானுடைய தன்மையை எவராலும் இன்னதென்று அறிந்துகொள்ள இயலாது. எனவே, பகவான் ‘அமேயாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அமேயாத்மா = அ – இயலாது + மா – இன்னதென்று அறிந்துகொள்ள + ஆத்மா – பகவானின் தன்மை.
———
அமேயாத்மா – அவர் அளவிட முடியாதவர்
அமேயா என்பது ‘மா’ என்ற மூல வார்த்தையுடன் இணைக்கப்பட்டுள்ளது, அதாவது ‘அளக்க’. எடுத்துக்காட்டாக, மானதண்டா என்பது குமாரசம்பவத்தில் காளிதாசரால் பயன்படுத்தப்பட்ட ஒரு அளவிடும் கம்பியாகும், இது ‘ஹிமாலயோ நாம நாகாதிராஜா ஸ்திதஹ் பிருதவ்யா இவ மானதண்டாஹ் – இமயமலை முழு பூமிக்கும் ஒரு அளவிடும் கம்பி போல் கம்பீரமாக நிற்கிறது’.
இந்த மூலத்தின் அடிப்படையில் மேய என்றால் அளவிடக்கூடியது என்றும், அமேயா என்றால் அளவிட முடியாதது என்றும் அர்த்தம். ஸ்ரீ ஆதிசங்கரர் கூறுகிறார் ‘ஐயன் இதி மாதும் பரிச்சேத்தும் ந ஷக்யதே இதி அமேயாத்மா – அது என்ன, எவ்வளவு என்று அளவிட முடியாதவர்.
104-ஸர்வ யோக விநிஸ் ஸ்ருத –
எல்லா உபாயங்களாலும் அடையப் படுபவன் -எந்த தசையிலும் ஆத்மாவுக்கு தஞ்சம் -நம்பத் தக்கவன்
கதம்
ஸர்வ யோக விநிஸ் ஸ்ருத
ஸர்வை ரபி ஸாஸ்த்ர லக்ஷணை -ஸ்வ மநீ –விகாபுரி கல்பிதைரபி- யோகை —
உபாயைர் –(ஸாஸ்த்ர விஹித -நம்மால் கல்பிக்கப்பட்ட -இரண்டும் சொல்லி
அஸாஸ்த்ரம் ஸ்ரத்தை உடன் செய்வது ஒன்றும் இல்லையே
முடிந்த அளவில் செய்வதையே இங்கு சொல்கிறது -)
விநிஸ் ஸ்ருத–விஸேஷேண வேத பரம குஹ்யரிவ நிஸ் ஸ்ருத ப்ராப்தும் யோக்ய (நன்கு அடைய யோக்யதை கொண்டவன் ஆகிறான் )ஸூஹ்ரஹ இதி வா —ஸ்வ புத்தி மாத்ர நிர்ஜ்ஞாத பரமாத்மா ஜகத் பிரபு ஸ்வ ஐஸ்வர்ய அனுபவ ப்ரீத ஞாதாரம் அநு சேவதே
யார் ஒருவன் இந்த ஜகத்தின் நாயகனான பரமாத்மாவை தனது ஞானம் மூலம் உள்ளது உள்ளபடி அறிகிறானோ
அப்படியாக அறிந்த பரமாத்மாவின் ஐஸ்வர்யத்தை தனது மனத்தால் அனுபவிக்கிறானோ
அப்படிப்பட்டவன் செய்கை மூலம் எம்பெருமான் மகிழ்ச்சி அடைந்து
இத்தகைய ஞானம் பொருந்திய அவனுடன் எப்பொழுதும் நின்று அவனை வாழ வைத்து அருளுகிறார்
யஸ்மாத் சத் பக்தி யுக்தா நாம் -ப்ரபந்நா நாம் க்ரமம் விநா- (க்ரமமாக செய்யா விட்டாலும் )பிரசாதம் ஏதி மந்திரேச து அசிராத் பாவிதாத்மநாம்(திரு உள்ளத்தில் நினைப்பவனுக்கும் சட்டென பலம் அருளுகிறார் )
கிம் புநர்வை க்ரியா ஞான சம்பூர்ணாநாம் து பவ்ஷ்கர ஸ்ரத்தா பக்தி பரானாம்ச போதிதா நாம் ச தேசிகை–பவ்ஷ்கர சம்ஹிதை
ஒரு சிலர் ஸாஸ்த்ரங்களில் கூறப்பட்ட விதி முறைகளை அறியாமல் தூய பக்தியை மட்டும் கொண்டவர்களாய் இருந்து
அனைத்து உயிர்களுக்கும் ஈஸ்வரனான எம்பெருமானை சரணம் அடையக் கூடும்
அவ்விதம் சரணம் புகுந்து மனதில் அன்புடன் த்யானம் செய்யத படி இருக்கக் கூடும்
இப்படிப்பட்டவர்கள் இடம் எம்பெருமான் விரைவாக ப்ரேமை கொள்கிறான்
இப்படிப்பட்ட இவர்கள் இடமே ப்ரேமையுடன் இருக்கிறான் என்றால்
ஆச்சார்யர் உபதேசம் பெற்று நல்ல அனுஷ்டானங்கள் நிறைந்தவர்கள் த்யானத்தில்
ஆர்வமும் பக்தியும் கொண்டுள்ளார் பக்கலிலே அதிகமான பிரேமை கொள்ளுகிறான் என்பதைச் சொல்லவும் வேணுமோ –
நியுக்த மனசா வாபி (மனத்தால் மட்டுமே நினைப்பவனுக்கும் )-யதி க்ருஷ்ணாதி மாதவ- கிம் னு நோத் மூலிதம் துக்கம் ஏதாவத் இதி நிச்சித இதி–ஸ்ரீ விஷ்ணு தத்வம்
திருமால் இடம் மனசை வைத்த நொடியிலே ஏற்றுக் கொள்ளுபவன் அவன் பெருமைகளை முற்றும் உணர்ந்து
தியானித்தால் பிரதிபந்தகங்கள் வேரோடு நீக்கப்படும் என்று கூறவும் வேண்டுமோ
கேசவா என்ன கெடும் இடராய எல்லாமே கெடுமே –
வாயினால் பாட -மனஸ் ஸஹ காரம் இல்லாமல் இருந்தாலும்
நம்பனை ஞாலம் படைத்தவனை -3-7-8-
இந்திரியங்களுக்கு அப்பால் பட்ட உன்னை -பிரமாணம் ஒன்றாலே அறிய வேண்டும் என்றால்
பெருமையை விட்டுக் கொடுக்காமல் இருந்தே -அர்ச்சாவதார -ஸகல மனுஷ நயன -விஷய தாங்கனாக திருவதரித்து வந்து
கண்களுக்கு விருந்தாக்கி -இந்திரியங்களுக்கு வசப்பட்டு நின்றாய் -கூரத்தாழ்வான்
எல்லா உபாயங்களிளாலும் எளிதில் அடையத் தக்கவர் -வேத ரஹஸ்யங்களை அறிந்து எளிதில் கிரஹிக்கவும் அடையவும் கூடியவர்
ஜகத் பிரபுவான மஹாத்மாவைத் தனது புத்தியைக் கொண்டு அறிந்தாலும்
அவர் தம் மஹிமையை அவன் அறிந்ததனால் அன்பு கூர்ந்து அவனை அநு சரிக்கிறார் -ஸ்ரீ பவ்ஷ்கரம் -ஸ்ரீ பராசர பட்டர்-
சாஸ்திரங்களில் கூறப்பட்ட விதி முறைகளை அறியாமல் தூய பக்தி கொண்டு சரணம் அடைந்து அன்புடன் த்யானிப்பவர்கள்
மேலே ப்ரீதியுடன் எம்பெருமான் அன்பு கொள்கிறான் என்றால்
ஆச்சார்ய உபதேசம் பெற்று சிறந்த ஞானம் அனுஷ்டானத்துடன் த்யானத்தில் ஆர்வமும் பக்தியும் உள்ளோர் இடம்
அதிகமான ப்ரேமம் கொள்கிறான் என்று சொல்லவும் வேண்டுமோ
எல்லாப் பற்றுக்களில் இருந்தும் வெளிப்பட்டவர் -சாஸ்த்ரங்களில் சொல்லும் பல யோகங்களால் அறியப் படுபவர் -பல ஸாஸ்த்ரங்களில் சொல்லப்பட்ட யோகத்தில் நின்றும் விலகினவர் -ஸ்ரீ சங்கரர்-
எல்லா யோகங்களும் வெளிவரக் காரணமாக இருப்பவர் -சாஸ்த்ரங்களில் சொல்லும்-உபாயங்களாலும்-
அவரவர்களுக்கு தோன்றும் உபாயங்களாலும் அறியப் படுபவர் -எளிதில் அடையக் கூடியவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் சர்வ யோக விநிஸ்ருதாய நம
யாரும் ஒரு நிலையன் என அறிய எளிய எம்பெருமான்
—————
ஓம் ஸர்வ யோக விநி:ஸ்ருதாய நம:
ஸர்வஸம்பந்தவினிர்கத: பகவான் எவருடனும் எந்த வித சம்பந்தமும், தொடர்புமின்றி இருப்பதால்
ஸர்வயோகவிநி:ஸ்ருத: அவர் ‘ஸர்வயோகவிநி:ஸ்ருத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பரப்ரஹ்மமான பகவான் அனைத்துமாய் இருந்தாலும் எதனுடனும் தொடர்பின்றி இருக்கிறார். எனவே, அவர் ‘ஸர்வயோகவிநி:ஸ்ருத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘அஸங்கோ ஹ்யயம் புருஶ:’ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.3.15)
ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:-அந்த புருஶன் (பகவான்) எதனுடனும் தொடர்பின்றியே இருக்கிறார்.
(நானா ஶாஸ்த்ரோக்தாத் யோகாதபகதத்வாத் வா)
நானாஶாஸ்த்ரஅல்லது, பல்வேறு சாஸ்திரங்களால்
உக்தாத் விளக்கப்பட்டுள்ள
யோக யோக சாதனங்களால்
அதபகதத்வாத் வா அவர் அறியப்படுவதால், பகவான் ‘ஸர்வ யோக விநி:ஸ்ருத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பல்வேறு சாஸ்திரங்களால் விளக்கப்பட்டுள்ள (பக்தி, கர்ம, ஞானம் போன்ற) யோக சாதனங்களால் அவர் அறியப் படுவதால், பகவான் ‘ஸர்வ யோக விநி:ஸ்ருத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————
ஸர்வ யோக வினிஸ்ருதா – பல வழிகளால் அடையக்கூடியவர்
இதை இரண்டு வழிகளில் விளக்கலாம்:
- அவன் எல்லாப் பற்றுகளிலிருந்தும் விடுபட்டவன்.
- எல்லா வகையான யோகத்தின் மூலமும் அவர் அடையக்கூடியவர்.
முதல் அர்த்தத்தை ஸ்ரீ ஆதி சங்கரர் ‘ஸர்வஸம்பந்த விநிர்கதா ஸர்வயோகவினிஸ்ருதாஹ் – அவர் எல்லாவிதமான பற்றுதல்களிலிருந்தும் முற்றிலும் விடுபட்டவர்; அவர் முற்றிலும் அருவமானவர் மற்றும் எந்தவொரு பொருள் அடிமைத்தனத்திலிருந்தும் விடுபட்டவர். பிருஹதாரண்யக உபநிஷத் ‘அஸங்கோஹ்யஹம் புருஷஹ் – அவர் ஒரு பிரிந்தவர்’ என்கிறது.
இரண்டாவது அர்த்தம், ‘நானா சாஸ்ட்ரோக்தாத் யோகாத் உபகதத்வாத் ஸர்வயோகவினிஸ்ருதா – சாஸ்திரங்களில் விவரிக்கப்பட்டுள்ள பல்வேறு யோகப் பயிற்சிகள் மூலம் அவரை உணர முடியும்.’
யோகா என்ற சொல்லுக்கு ஒன்றியம் என்று பொருள் கொள்ளலாம் அல்லது எதையாவது அடைவதற்கான பொருள் என்றும் பொருள் கொள்ளலாம். இவற்றில் எது தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதைப் பொறுத்து, நாம் வேறுபட்ட விளக்கத்தைப் பெறுகிறோம். வினிஸ்ருதா என்றால் வெளியே சென்றது அல்லது வெளியே சென்றது அல்லது தப்பித்தது.
யோகத்தின் முதல் அர்த்தத்தைப் பயன்படுத்தி, அவர் எல்லா வகையான பந்தங்களிலிருந்தும் விடுபட்டவர், எனவே அவர் சர்வ யோக வினிஸ்ருதா என்று விளக்கம் பெறுகிறோம்.
இரண்டாவது பொருளைப் பயன்படுத்தி, ஸ்ரீ பராசர பட்டரின் விளக்கம், அவர் எல்லா வகையிலும் எளிதில் அடையக்கூடியவர். அவரது விளக்கம் – யோகைஹ் – உபயை; வி – விசேஷேண – வேத பரம குஹ்யரைவ; நிஸ்ரிதஹ் – ப்ராப்தும் யோக்யஹ், ஸுக்ரஹ இதி வா.–எனவே இறைவனை பல வழிகளில் அடையலாம்.
பக்தியின் ஒன்பது வடிவங்களை ஸ்ரீமத் பாகவதம் விரிவாகக் கூறுகிறது , அதைத் தொடர்ந்து பயிரிட்டுப் பயிற்சி செய்தால், இறைவனிடம் நம்மை நெருங்கிச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை. பக்தியின் ஒன்பது வடிவங்கள்:
ஷ்ரவணம், கீர்த்தனம், விஷ்ணோ ஸ்மரணம், பாத-சேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், சக்யம், ஆத்ம-நிவேதனம் (ஸ்ரீமத் பாகவதம் 7.5.23). இறைவனை அடைவதற்கான எளிதான வழிகளில் ஒன்று தளராத பக்தி .
96-அஜ –
அவர்கள் தம்மை அடைவதற்கு இடையூறுகளை தாமே விலக்குபவர்–ஸ்ரீ பராசர பட்டர் –
பிறப்பற்றவர்-ஸ்ரீ சங்கரர் —
பிறப்பற்றவர் -செல்பவர் – ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்
—————
97-சர்வேஸ்வர –
தன்னைச் சரணம் அடைந்தவர்களைத் தாமே விரைவாக அவர்களிடம் செல்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ஈஸ்வரர்களுக்கு எல்லாம் ஈஸ்வரர் -ஸ்ரீ சங்கரர் —
எல்லோருக்கும் ஈஸ்வரர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
—————————————————————————-
98-சித்த –
உபாயாந்தரங்களால் அன்றி தாமே சித்த உபாயமாய் இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
என்றைக்கும் உள்ள தன்மையை யுடைய நித்யர் -ஸ்ரீ சங்கரர் —
அடையப் பெறுபவர் -எப்போதும் ஞான வடிவினர் -அடியவர்களில் காக்க சித்தமாக உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
——————————————————————————-
99- சித்தி –
உபாயங்களினால் தேடப்படும் பலனுமானவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லாவற்றிலும் சிறந்த பயனாய் ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
————————————————————————–
100-சர்வாதி –
உயர்வும் தாழ்வும் ஆகிற எல்லாப் பயங்களுக்கும் தாமே காரணமாய் இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லா பூதங்களுக்கும் காரணம் ஆனவர் -ஸ்ரீ சங்கரர் —
அனைத்திற்கு காரணம் ஆனவர் -எல்லாராலும் ஏற்கப் பெறுபவர் -எல்லாம் உண்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
———————
101-அச்யுத –
தம்மை அடைந்தவரை விட்டு நீங்காதவர் -ஸ்ரீ பராசர பட்டர்
தம் ஸ்வரூப மகிமை முக்காலத்திலும் நீங்காதவர் -ஸ்ரீ சங்கரர்
தேச கால குணங்களால் வீழ்ச்சி இல்லாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர்
——————————————————————————-
102-வ்ருஷாகபி –
தர்மமே வடிவெடுத்த வராஹாவதாரம் செய்தவர் -ஸ்ரீ பராசர பட்டர்
தர்ம ரூபியாகவும் வராஹ ரூபியாகவும் இருப்பவர் -எல்லா விருப்பங்களையும் வர்ஷிப்பதால் தர்மம் வ்ருஷம் எனப்படும் –
கம் -நீர் -அதில் இருந்த எடுத்தவர் ஆகையால் கபி -வராஹர் -வ்ருஷாகபி -தர்ம ஸ்வரூபரான வராஹர் -ஸ்ரீ சங்கரர்
தர்மத்தால் துன்பங்களைப் போக்குபவர் -அருளை வருஷிப்பவராய் -சுகத்தைப் பருகுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்
———————————————————————————————-
103-அமேயாத்மா –
அடியவர்களுக்கு அருளும் திறத்தில் இவ்வளவு என்று அளவிட முடியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர்
இவ்வளவு என்று அளவிடமுடியாத ஸ்வரூபத்தை யுடையவர் -ஸ்ரீ சங்கரர்
முழுமையாக அறிய முடியாத ஸ்வரூபத்தை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்
————————————————————————————————–
104-சர்வ யோக விநிஸ்ருத –
எல்லா உபாயங்களிளாலும் எளிதில் அடையத் தக்கவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
எல்லாப் பற்றுக்களில் இருந்தும் வெளிப்பட்டவர் -சாஸ்த்ரங்களில் சொல்லும் பல யோகங்களால் அறியப் படுபவர் -ஸ்ரீ சங்கரர்-
எல்லா யோகங்களும் வெளிவரக் காரணமாக இருப்பவர் -சாஸ்த்ரங்களில் சொல்லும்-உபாயங்களாலும்-
அவரவர்களுக்கு தோன்றும் உபாயங்களாலும் அறியப் படுபவர் -எளிதில் அடையக் கூடியவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
————————————
தன்னை வழிபடுவதற்கு இடையூறாக வரும் தடைகளைத் தவிடு பொடியாக்கித்
தன் அடியார்கள் தடையின்றி வழிபாடு செய்ய வகைசெய்து தருவதால்
‘அஜ:’ என்று திருமால் போற்றப் படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 96-வது திருநாமம்.
“அஜாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் வாழ்வில் வரும் தடைக்கற்கள் யாவும் படிக்கற்களாக மாறும்.
தன் அடியார்களைக் காக்க வைக்காமல் விரைந்து சென்று அவர்களுக்கு அருள்புரிவதால்
திருமால் ‘ஸர்வேச்வர:’ என்றழைக்கப்படுகிறார். -அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 97-வது திருநாமம்.
“ஸர்வேச்வராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் துன்பங்களை விரைவில் திருமால் போக்கி அருளுவார்.
தன்னை அடைவதற்கான வழியாகவும் தானே இருப்பதால் திருமால் ‘ஸித்த:’ என்றழைக்கப்படுகிறார்.
திருமாலை அடையும் விஷயத்தில் இலக்கும் அவரே, அதை அடைவிக்கும் வழியும் அவரே.
“ஸித்தாய நமஹ” என்று விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 98-வது திருநாமத்தைத் தினமும் சொல்லி வரும் அன்பர்கள்
செல்லும் பாதையில் தடங்கல்கள் ஏற்படாமல் திருமால் காத்தருள்வார்.
வடமொழியில் ‘வ்ருஷம்’ என்றால் தர்மம் என்று பொருள். ‘வ்ருஷாகபி:’ என்றால் தர்மமே வடிவானவர் என்று பொருள்.
கர்ணனுக்கு சூரியன் உபதேசித்தபடி தர்மமே வடிவானவராகத் திருமால் விளங்குவதால் ‘வ்ருஷாகபி:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 102-வது திருநாமம்.
“வ்ருஷாகபயே நமஹ” என்ற திருநாமத்தைத் தினமும் சொல்லி வந்தால், முரண்பாடான சூழ்நிலைகளில் நாம்
சிக்கிக் கொள்ளும் போது சரியான முடிவெடுக்கும் ஆற்றலைத் திருமால் நமக்குத் தந்தருள்வார்.
எல்லையில்லாத கருணையைத் தன் அடியார்கள் மேல் காட்டுவதால் திருமால் ‘அமேயாத்மா’ என்று போற்றப் படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 103-வது திருநாமம்.
“அமேயாத்மநே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் பக்தர்கள் திருமாலின் அளவற்ற கருணைக்குப் பாத்திரமாவார்கள்.
யோகம்’ என்றால் மார்க்கம் என்று பொருள். ‘ஸர்வ யோகம்’ என்றால் சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட, விதிக்கப்படாத
அனைத்து மார்க்கங்களையும் குறிக்கும்.
அந்த அனைத்து மார்க்கங்களாலும் அடையப் படுவதால் திருமால் ‘ஸர்வயோக விநிஸ்ருதஹ’ என்றழைக்கப்படுகிறார்.
“ஸர்வயோக விநிஸ்ருதாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் செய்யும் பூஜைகள்
அனைத்தையும் திருமால் உகந்து ஏற்றுக் கொள்வார்.
———————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply