ஸ்ரீ ஆதி சங்கரரின் விளக்கம்: “ஸ ஏவ ந க்ஷரதி இதி அக்ஷரஹ் – அவர் ஒருவரே இறக்காமல் இருக்கிறார்”. ஜீவாத்மாவைக் குறிக்கும் க்ஷேத்ரக்ஞத்திற்கு எதிரான பரமாத்மாவைக் குறிக்கிறது என்பதே இதன் பொருள். மேலும் அவரது கூற்றுப்படி ‘ஏவ ச‘ என்பது க்ஷேத்ரக்னத்தையும் அக்ஷரத்தையும் இணைக்கும் குறிப்பிடத்தக்க இணைப்புகளாகும். இரண்டும் கொள்கையளவில் ஒரே மாதிரியானவை என்பதை ‘ஏவ‘ குறிக்கிறது. இருப்பினும் க்ஷேத்ரக்னத்திற்கும் (ஜீவாத்மா) அக்ஷரத்திற்கும் (பரமாத்மா) இடையே சில வெளிப்படையான வேறுபாடுகள் இருப்பதை ‘‘ குறிக்கிறது.

அக்ஷர என்பதற்கு மகிழ்வது என்றும் பொருள். தன் எண்ணங்களில் மூழ்கி இருப்பவர்களுக்கு அளவற்ற பேரின்பம் தருகிறார், அத்தகைய மகிழ்ச்சி எல்லை யற்றது. 

————-

10-பூதாத்மா
தாம் ஆத்மாவாக இருந்தாலும் தோஷங்கள் தட்டாதவன் -பரிசுத்த ஸ்வ பாவம் யுடையவன் -ஜீவாத்மா மட்டும்
கர்ம பலன்களை அனுபவிப்பான் -கசை தொடர்பு ஆசிரியருக்கும் மாணவனுக்கும் யுண்டே -ஸ்ரீ பராசர பட்டர் —
உப்பில்லா பண்டமும் ஒப்பில்லாமல் ஆக்குமவன் -மட்டமான வஸ்துவையும் பெருமை படுத்துமவன்
ஆத்மீத்யவ சம்சாரித்வாதி அஸ்ய சரீரவத் -சித் அசித் சுத்த ஸ்வபாவ –

பரிசுத்தமான ஆத்மாவை யுடையவர் -நிர்குணர்-பூதக்ருத் போன்ற திரு நாமங்களால் சொன்ன குணங்கள்
இவன் இச்சையினால் கற்ப்பிக்கப் பட்டன -ஸ்ரீ சங்கரர்-

ஜீவாத்மாக்கள் பரிசுத்த  தன்மை எவன்  இடம் இருந்து பெறுகின்றனவோ அவன் பூதாத்மா –
புனிதமானவர்களின்  ஆத்மா -புனித ஆத்மா-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

——————————————————————————————————

11-பரமாத்மா –
எல்லாவற்றுக்கும் தாம் ஆத்மாவே இருப்பது போலே தமக்கே மேல் ஓர் ஆத்மா இல்லாதவர் –
மேம்பட்டவர் இல்லாதவராய் ஆத்மாவாகவும் இருப்பவர் -தமக்கு மேம்பட்ட ஈஸ்வரர் இல்லாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
பெருமாள் ஆராதனம் செய்த பெரிய பெருமாள் —
யதா சர்வாணி – பூதான் அந்யேன ஆத்மா பந்தி நைவம் அன்யேன கேன சிது அநகா பரமாத்மா –

உயர்ந்தவராகவும் ஆத்மாவாகவும் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

மிகவும் மேம்பட்டவர் -விரோதிகளை அழிப்பவர்-லஷ்மி பதி-அடியவர்களைக் காப்பவர் –
ஞானம் யுடையவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

——————————————————————————————————–

12-முக்தா நாம் பரமாகதி –
எல்லாருக்கும் தலைவரான தாமே – -அவித்யை கர்மம் சம்ஸ்காரம் ஆசை விபாகம் போன்ற தடைகளை முற்றும் துறந்த
முக்தர்கள் முடிவாக அடையும் இடமாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் —
ஏவம் சர்வ சேஷிணமேவ பராமாத்மா பிராப்யத்வம் முக்தாநாம் பரமாத்மா கதி –

முக்தர்களுக்கு உயர்ந்த கதி -அவரைத் தவிர வேறு தேவதைகளை அடைய வேண்டியது இல்லை –
அவரை அடைந்தவர் திரும்புவது இல்லை -ஸ்ரீ சங்கரர்–

மிக உயர்ந்தவர்களான முக்தர்களால் மட்டுமே அடையத் தக்கவர் -ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

——–13-அவ்யய-
தம்மை விட்டு ஒருவரும் அகலாமல் இருப்பவர் -சம்சார பெரும் கடலை கடந்து தன்னை அடைந்தார்
மீளாத படி அருளுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
ந ச புன ஆவர்த்ததே -ஸ்ரீ பாஷ்யம்-தன்னைப் போலே ஆக்கி பிரியாமல் வைத்து கொள்பவன் அன்றோ —
ந வீயதே ந வீயகம்யதே அஸ்மாத் இதி –நாசம் அற்றவர் -விகாரம் அற்றவர் -ஸ்ரீ சங்கரர்–சூர்யன் ஆகாயத்தில் சஞ்சரிக்க நியமனம் தந்தவர்-ஆட்டைப் போலே எதிரிகளை எதிர்க்கச் செல்பவர் -ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

——————————————————————————————————

14-புருஷ –
மிகுதியாகக் கொடுப்பவர் -முக்தர்களுக்கு தம் குண விபவ அனுபவங்களை கொடுப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
தன்னையே தன பக்தர்களுக்கு அர்ப்பநிப்பவன் -தன்னையே எனக்குத் தந்த கற்பகம் -செல்லப்பிள்ளை -வந்தானே –

புரம் என்னும் யுடலில் இருப்பவர் -உயர்ந்த பொருள்களில் இருப்பவர் -முன்பே இருந்தவர் –
பலன்களைக்   கொடுப்பவர் -சர்வ வியாபி -சம்ஹாரம் செய்பவர்  -ஸ்ரீ சங்கரர்–

மோஷ ரூபம் ஆகிய முழுப் பலத்தையும் பூர்ணனான தன்னைத் தருபவன் -முன்பே உள்ளவர் –
பல செயல்களை யுடையவர் -அசுரர்களை அழிப்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

—————————————————————————————————-

15-சாஷீ-
முக்தர்களை மகிழ்வித்து தாமும் மகிழ்ந்து பார்த்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
ஏவம் தாநு ஆனந்தாயன்னு ஸ்வயம் அபி த்ருப்தாயன்னு சாஷாத் கரோதி –

சஹகாரி இல்லாமல் எல்லாவற்றையும் நேரில் பார்ப்பவர் -ஸ்ரீ சங்கரர்—

நேரில் பார்ப்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்–

—————————————————————————————————-

16- ஷேத்ரஜ்ஞ-
தம்மை முக்தர்கள் அனுபவிக்க ஏகாந்தமான இடத்தை அறிந்தவர் –
போக சம்ருத்தி யுண்டாகும் பரம பதம் -அத்தை சரீரமாக யுடையவன் –ஸ்ரீ பராசர பட்டர் —
திருக் கண்ண புரம் வரச் சொல்லி நடந்து காட்டி அருளி பழையவற்றை ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு
நினைவு பட வைத்து அருளி -ஷேத்ரஜ்ஞ்ஞன்
இத்தம் தேப்யாக ஸ்வானுபவம் தாதும் ததேகாந்தம் ஷேத்ரம் ஜாநாதீதி –

ஷேத்ரம் ஆகிய சரீரத்தை அறிந்தவர் -ஸ்ரீ சங்கரர்—

ஷேத்ரம் என்று பரமான பிரசித்தமான அவயகதம் முதலிய சரீரத்தை அறிந்தவர்  –
தம் சரீரத்தையும் அனைவருடைய சரீரத்தையும் அறிந்தவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்–

—————————————————————————————————–

17-அஷர-
முக்தர்களின் அனுபவ ஆனந்தம் முடிவு பெறாமல் மேலும் மேலும் வளரும்  படி
கல்யாண குணங்கள் நிறைந்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் —
அழியாதவர் -அச் -வினை யடியால் அனுபவிப்பவர் – ஏவகாரம் -அஷரன் ஷேத்ரஜ்ஞன் -பேதம் இல்லை –
ஜ்ஞானத்துக்கு அடி -ஆதாரம் -அஷரம்-
ஜ்ஞானாந்த நிர்மல ஸ்படிகாக்ருதம் ஆதாரம் சர்வ வித்யாநாம் -ஹயக்ரீவர் உபாஸ்மகே அஷரமாக இருப்பவர் –
தத்ர முக்தைஸ் –ததானுபூயமான -அபி மது சத்வ நிச்சீம குண உன்மஜ்ஜன உபரி உபரி போக்யதயா உபசீததய நது ஷரதி அஷர –

தத்த்வமஸி-சகாரம் பேதம் வ்யவஹாரத்தில் மட்டும் உள்ளத்தைக் காட்டுகிறது -ஸ்ரீ சங்கரர்—

அழிவற்ற வைகுண்டம் முதலியவற்றை அருளுபவர் -வைகுண்டம் முதலிய உலகங்களில் ரமிப்பவர் –
அளிவில்லாதவர் -இந்த்ரியங்களில் விளையாடுபவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்–


ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் பத்தாவது திருநாமமாகிய ‘பூதாத்மநே நம:’ என்ற திருநாமத்தைத்
தினமும் சொல்லி வந்தால், தூயவனாகிய எம்பெருமான் நம்மையும் தூய்மைப் படுத்துவான்.

ஜீவாத்மாவுக்கு ஆத்மாவாக நாராயணன் விளங்குவதால்,
அவன் ‘பரமாத்மா’ என்று அழைக்கப்படுகிறான்,” என்றார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் பதினொன்றாவது திருநாமமாக விளங்குகின்றது.

அனைவருக்குள்ளும் ஆத்மாவாக இருக்கும் பரமாத்மாவான பத்ரி நாராயணனைத் தியானித்தபடி,
“பரமாத்மநே நம:” என்று சொல்லும் அடியார்களுக்குத் தியானத்தில் விரைவில் சித்தி உண்டாகும்.

லக்ஷ்மணன் கூறியதுபோல் எம்பெருமானுக்குத் தொண்டு செய்வதே முக்தியடைபவர்களின் முடிவான இலக்காக இருப்பதால்
அவன் “முக்தாநாம் பரமா கதி:” என்றழைக்கப்படுகிறான்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் பன்னிரண்டாவது திருநாமமாக அமைந்துள்ளது.
நாமும் “முக்தாநாம் பரமா கதயே நம:” என்று ஜபம் செய்தால், லக்ஷ்மணனைப் போல எம்பெருமானுக்குத்
தொண்டு செய்யும் பாக்கியம் நமக்கும் கிட்டும்.

தன்னை அடைந்த எந்த ஒரு ஜீவனையும் நழுவ விடாமல் காத்தருள்வதால் திருமால் “அவ்யய:” என்றழைக்கப்படுகிறான்.

தன்னை அடைந்த அடியார்களை நழுவாமல் காக்கும் எம்பெருமானின் ஆயிரம் நாமங்களில்
பதின்மூன்றாவது திருநாமமான “அவ்யயாய நம:” என்பதைத் தினமும் சொன்னால் நாமும்
வாழ்வில் வீழாமல் வெற்றி மேல் வெற்றி பெறலாம்.

இன்றும் மேலக்கோட்டை திருநாராயணப் பெருமாள் திருவடிவாரத்தில் ‘துலுக்க நாச்சியார்’ இருப்பதைக் காணலாம்.
அந்தத் துலுக்க நாச்சியார் போன்ற உயர்ந்த அன்பும் பக்தியும் கொண்ட அடியவர்களுக்குத் தன்னையே தந்து விடுவதால்
எம்பெருமான் ‘புருஷ:’ என்று அழைக்கப்படுகிறான்.
‘புருஷ:’ என்றால் பக்தர்களுக்குப் பரிசாகத் தன்னையே வழங்குபவன் என்று பொருள்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் பதினான்காவது திருநாமம். “புருஷாய நம:” என்று ஜபித்து வரும்
அடியார்களுக்கு வாழ்க்கையில் மிகச்சிறந்த பரிசுகள் கிட்டும்.

வாழ்க்கை என்னும் விளையாட்டில் நம்மை ஈடுபடுத்தி, அவன் இட்ட விதிகளின்படி நாம் அதை விளையாடுகிறோமா
என மேலிருந்து சாட்சி போலப் பார்வையிடும் எம்பெருமான் “ஸாக்ஷீ” என்றழைக்கப்படுகிறான்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் பதினைந்தாவது திருநாமம்.
“ஸாக்ஷிநே நம:” எனத் தினமும் சொல்லி வரும் சிறுவர்களும் சிறுமிகளும் எதிர்காலத்தில் சிறந்த
விளையாட்டு வீரர்களாகவும் வீராங்கனைகளாகவும் விளங்கி நம் தேசத்துக்குப் பெருமை சேர்ப்பார்கள்.

இவ்வாறு தன் அடியார்களுக்குத் தரிசனம் தருவதற்குரிய சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்துத் தரிசனம் தந்து,
அடியார்களை மகிழ்விப்பதால், எம்பெருமான் ‘க்ஷேத்ரக்ஞன்’ என்று அழைக்கப்படுகிறான்.
‘க்ஷேத்ரம்’ என்றால் முழுமையான ஆனந்தம் தரும் இடம் என்று பொருள்.
‘க்ஷேத்ரக்ஞன்’ என்றால் அத்தகைய இடங்களைச் சரியாக அறிந்து தேர்ந்தெடுப்பவன் என்று பொருள்.

அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் பதினாறாவது திருநாமமாக அமைந்துள்ளது.

க்ஷரம்’ என்றால் தேய்வது என்று பொருள்.
‘அக்ஷரம்’ என்றால் தேயாதது என்று பொருள். எப்போதும் அமுதைப் பொழியும் தேயாத நிலவைப் போன்ற ஒளியை உடையவனாக
எம்பெருமான் விளங்குவதால் அவன் ‘அக்ஷர:’ என்று அழைக்கப்படுகிறான்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் பதினேழாவது திருநாமமாக விளங்குகின்றது.
“அக்ஷராய நம:” என்று தினமும் ஜபம் செய்து வந்தால், தேயாத கல்வியும், செல்வமும், இன்பமும் நமக்குக் கிட்டும்.

————————————————————————–————————————————————————–