ஸ்ரீ மன் நாத முனிகள் அருளிச் செய்த முக்த ஸ்லோகங்கள் –திவ்யப்ரபந்த பாசுரங்களுக்கு 30 பண்கள்–

ஸ்ரீ மந் நாதமுனிகளுடைய தனியன்:

நம: அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராஸயே
நாதாய முனயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே

ஸ்ரீமந் நாராயணன் ஆதிகுருவாகவும், ஸ்ரீமந் நாதமுனிகளும், அவருடைய  திருப்பேரனார்  ஸ்ரீ ஆளவந்தார் என்ற யமுனாசார்யார் மத்தியிலுமாக  ஸ்ரீவைஷ்ண்வ குரு பரம்பரை அமைந்துள்ளது . இதையே பகவத் இராமானுஜரின் சீடரான ஸ்ரீகூரத்தாழ்வான் நமக்காக அருளியுள்ளார்.

“லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் ,நாத யாமுந மத்யமாம்,
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்.”

தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை யறிவாரார்
அருளிச் செயலை அறிவாரார் அருள் பெற்ற
நாதமுனி முதலாம் நம் தேசிகரை யல்லால்
பேதை மனமே உண்டோ பேசு   –உபதேச ரத்ன மாலை

ஜ்யேஷ்டா மாஸே த்வநூராதே ஜாதம் நாத முநிம் பஜே|

ய: ஸ்ரீஸடாரே: ஸ்ருதவாந் ப்ரபந்த மகிலம் குரோ:

ஆனி அனுஷத்தில் அவதரித்தவராய், ஆசார்யரான நம்மாழ்வாரிடமிருந்து எல்லா திவ்ய ப்ரபந்தங்களையும் கேட்டவரான நாதாமுனிகளிடம் பக்தி செய்கிறேன்

ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச்செய்தவை: நியாய தத்வம், யோக ரஹஸ்யம், புருஷ நிர்ணயம்

—————

ஶ்லோகம் 1 –
முதல் ஶ்லோகத்தில், ஆளவந்தார் ஸ்ரீமந் நாதமுனிகளின் உண்மையான செல்வமான
ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் பெருமையை வணங்குகிறார்.

நமோ’சிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஶயே |
நாதாய முநயே’காத பகவத் பக்தி ஸிந்தவே ||

நினைவுக்கு அப்பாற்பட்ட, உயர்ந்த ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் கூட்டத்தை
எம்பெருமானின் கருணையால் ஸ்ரீமந்நாதமுனிகள் எளிதில் அடைந்தார்.
அவர் எப்பொழுதும் பகவானையே த்யானித்தில் கொண்டிருப்பவர். பகவத் பக்திக் கடலாக இருப்பவர்.
இப்படிப்பட்டவரை வணங்குகிறேன்.

————-

ஶ்லோகம் 2 –
இதில், பகவத் அவதாரங்களில் ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு இருந்த ஞானம் ஆகியவற்றின் மேலான சிறப்பு விளக்கப்படுகிறது.
அல்லது, “(முந்தைய ஶ்லோகத்தில் சொல்லப்பட்ட) ஞானம் முதலியவை அவரிடமே தங்காமல், என்னளவும் பெருகி வருகிறது”
என்று ஆளவந்தார் அருளிச் செய்கிறார்.

தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஸீம்நே |
நாதாய நாத முநயே’த்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||

மது என்னும் அஸுரனைக் கொன்ற எம்பெருமானின் திருவடிகளில் சிறந்த ஞானம் மற்றும் பக்தியின் வடிவமாக
விளங்குபவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவருடைய திருவடிகளே எனக்கு இவ்வுலகிலும் பரமபதத்திலும் புகலாக இருக்கும்.
அவரே என் தலைவர். இப்படிப்பட்டவரை நான் வணங்குகிறேன்.

————

ஶ்லோகம் 3 –
தாகம் உள்ள ஒருவன் நீரை மேலும் மேலும் பருகியும் தாகம் தீராமல் இருப்பதைப் போலே,
ஆளவந்தார் “மீண்டும் மீண்டும் நான் ஸ்ரீமந் நாதமுனிகளின் தொண்டன்” என்று அருளிச் செய்கிறார்.

பூயோ நமோ’பரிமிதாச்யுத பக்தி தத்வ
ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ ஶுபைர் வசோபி: |
லோகே’வதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி
யோகாய நாதமுநயே யமிநாம் வராய ||

பகவானிடத்தில் எல்லை இல்லாத பக்திக் கடலில் இருந்து பெருகிய மங்களகரமான வார்த்தைகள் மற்றும்
உண்மை ஞானம் வந்து பிறந்ததைப் போலே இருப்பவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவரே சிறந்த குறிக்கோள்.
அவர் பூர்த்தியையும் பக்தி யோகத்தையுமுடையவர். யோகிகளில் சிறந்தவர். அவருக்கு மீண்டும் என் வணக்கங்கள்.

ஶ்லோகம் 65 –
ஆளவந்தார் “நீ ஸ்ரீராமாயணம் அயோத்யா காண்டம் 18.30இல் ‘ராமோ த்விர் நாபிபாஷதே’
(ஸ்ரீராமர் இரண்டு விதமாகப் பேச மாட்டார்) என்ற சபதத்தைக் கை விட்டாலும்,
என்னுடைய புண்ய பாபங்களைக் கருதாமல், பெரிய முதலியாரான ஸ்ரீமந் நாதமுனிகளுடன் எனக்கு இருக்கும்
ஞானத்தால் மற்றும் பிறப்பால் இருக்கும் ஸம்பந்தத்தைக் கருத்தில் கொண்டு, என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று கேட்க,
எம்பெருமானும் “இந்த வழியில் எந்தக் குறையும் இல்லை; இதை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று சொல்லி
இந்த வரத்தை ஆளவந்தாருக்கு அளித்தான்.
ஆளவந்தாரும், த்ருப்தி யடைந்தவராய், ஸ்தோத்ரத்தை முடிக்கிறார்.

அக்ருத்ரிம த்வச் சரணாரவிந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதிம் ஆத்ம வந்தம் |
பிதா மஹம் நாத முநிம் விலோக்ய
ப்ரஸீத மத் வ்ருத்தம் அசிந்தயித்வா ||

எம்பெருமானே! என்னுடைய நடத்தையைக் கருதாமல், உன் திருவடிகளில் இயற்கையான அன்பில் சிறந்தவரான,
தன் ஸ்வரூபத்தை உணர்ந்தவரான, என்னுடைய பாட்டனாரான ஸ்ரீமந் நாதமுனிகளைப் பார்த்து என்னை மன்னித்தருள வேண்டும்.

——–

மேலே கண்ட 4 ஶ்லோகங்களிலிருந்து நாதமுனிகளுடைய பெருமையை நாம் அறிகிறோம். அச்சுதன் மீதும் ஆழ்வார் மீதும் ப்ரீதி அபிவ்ருத்தி அடைய நாமும் நாதமுனிகளுடைய திருவடித் தாமரைகளை வணங்குவோம்.

————

நவ்மி நாத முனிம் நாம ஜீமுதம் பக்தி அவக்ரஹே
வைராக்ய பகவத் தத்வ ஞான பக்தி அபி வர்ஷுகம் –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்–பூர்வ சதகம்–5-

நவ்மி நாத முனிம் நாம ஜீமுதம் -ஸ்ரீ நாதமுனிகள் என்ற பிரசித்தமான மேகத்தை ஸ்துதிக்கிறேன்
பக்தி அவக்ரஹே-பக்தியாகிற தீர்த்தம் அருமைப்பட்டு இருந்த துர் பிஷ காலத்தில்
வைராக்ய பகவத் தத்வ ஞான பக்தி அபி வர்ஷுகம் –பகவத் வியதிரிக்த விஷயாந்தரங்களில் விரக்தியில் என்ன –
பகவத் ஞான பக்திகள் என்ன ஆகிய இவற்றை எங்கும் வர்ஷிக்க வல்ல-நவ்மி நாத முனிம் நாம ஜீமுதம்

———-

5–நாதேந முனிநா தேந பவேயம் நாதவா நஹம்
யஸ்ய நைகமிகம் தத்த்வம் ஹஸ்தாமலகதாம் கதாம் –ஸ்ரீ யதிராஜ சப்ததி—ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–

சர்வ வேதங்களின் உட்ப்பொருளான பகவத் தத்வம் எந்த பெரிய முதலியாருக்கு கையிலங்கு நெல்லிக் கனியாக இருக்குமோ –
அந்த ஸ்ரீ மன் நாத முனிகளே எனக்கு ஸ்வாமியாக இருந்து என்னை ஆட் கொள்ள வேண்டும்
என்று ஸ்ரீ மன் நாத முனியை அடி பணிகிறார் –

—————

ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திருவாய்
ஈரத் தமிழ் இன் இசை யுணர்ந்தோர்கட்கு இனியவர் தம்
சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாதமுனியை நெஞ்சால்
வாரிப் பருகும் இராமானுசன் என்தன் மா நிதியே – -20 –

ஸ்ரீ நம் ஆழ்வார் -இசை உணர்ந்தோர் -ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் -இனியவர் -ஸ்ரீ பராங்குச நம்பி -சீரை பயின்று உய்யும் ஸ்ரீ நாதமுனி
நெஞ்சால் வாரிப் பருகும் ஸ்ரீ ராமானுஜன் -ஐந்து பேர் இங்கும் –இது அன்றோ நமது ஸ்ரீ அமுதனாருக்கு பஞ்சாம்ருதம் –

சீலம் கொள் நாத முனியை –
இப்படி உஜ்ஜீவனமே ஸ்வபாவமாக உடையரான ஸ்ரீ மன் நாத முனிகளை-ஸ்ரீ ரங்க நாதருடைய திருநாமத்தை வகித்து –
ஆழ்வார் தமக்கு உபதேசித்த அர்த்தங்களை அடைவே சர்வதா -மனனம் பண்ணிக் கொண்டு எழுந்து அருளி இருக்கிற
ஸ்ரீ மன் நாதமுனிகளை -என்றபடி –

நெஞ்சால் வாரிப் பருகும் –
சமான காலமானால் -காயிகமாகத் தழுவி -முழுசிப் பரிமாறி அனுபவிப்பார் காணும் –
அத்யந்த கால வ்யவதானமாக இருக்கையாலே அந்த ஸ்ரீ மன் நாதமுனிகளை -நெஞ்சாலே அள்ளிக் கொண்டு
பிரி கதிர் படாதபடி விக்ரக குணங்களோடு கூட அனுபவிக்கை –

இனியவர் தம் சீரைப் பயின்று நீராய் உருகினார் -ஸ்ரீ மன் நாதமுனிகள்-
அத்தகைய நீரைப் பருகி விடாய் தீர்த்து இன்புறுகிறார் ஸ்ரீ எம்பெருமானார் –
ஸ்ரீ மன் நாத முனிகளை ஆர்வத்துடன் நெஞ்சால் நினைந்து இனிது அனுபவிக்கிறார் எம்பெருமானார்

என் தன் மாநிதி –
அடியேனுடைய மகா நிதி
நவநிதியான தனங்களும் பிரளயத்திலும் அழிவு உண்டு -அப்படி அன்றிக்கே அவற்றைக் காட்டில் விலஷணமாய்
அப்ராக்ருதமான நிதி -என்றபடி –
அத்ர பரத்ர சாபி நித்யம் யாதிய சரணவ் சரணம் மதீயம் என்று அருளிச் செய்தார் இறே ஸ்ரீ ஆள வந்தாரும்

ஏனைய நிதிகள் போலே அழிவுறாத புதையல் ஸ்ரீ எம்பெருமானார் –
ஸ்ரீ ஆழ்வான் உதவிய ஞானக் கண்ணால் அப் புதையலைக் கண்டு எடுத்து ஆண்டு அனுபவிக்கும் தனது பாக்கியம்
தோற்ற –என் தன் மா நிதி -என்கிறார் –
கொள்ள குறை இலன்…குறையாத நிதி..வாரிப் பருகும் மா நிதி–

———-

மூளும் தவ நெறி மூட்டிய நாத முனி கழலே நாளும் தொழுது எழுவோம்
நமக்கார் நிகர் நானிலத்தே –ஸ்ரீ வேதாந்த தேசிகர்

நாதேந முனி நாதேனே பவேயம் நாதவான் அஹம் -நாதனை உடையவனாக ஆகக்கடவேன் -ஸ்ரீ வேதாந்த தேசிகர்

அநாதன் அவஸ்தை கழிந்து ச நாதன் ஆனேன்

யஸ்ய நைகமிக தத்வம் -ஆகமத்தில் கூறப்பட்ட பர ப்ரஹ்மம் –ஹஸ்த ஆ கமலம் -உள்ளங்ககை நெல்லிக்கனி போல் -கண்டவர் நாதமுனி அன்றோ

———-

முனியே நான்முகனே முக்கண் அப்பா –
சடகோப முனி
ரெங்கநாத முனி -சுருங்கி நாத முனி -93 திருநக்ஷத்ரம் இங்கே எழுந்து அருளி இருந்தார்
ஆளவந்தார் முனி
ராமானுஜ முனி
அனைவரும் உஜ்ஜீவன உபாயம் மனனம் பண்ணிக் கொண்டே இருப்பதால் முனி

கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-

யோகிகள் -ஒரே விஷத்தில் த்யானம் –
அவர்கள் நினைத்த கார்யங்கள் ஸித்தி அடையும் வரையில் இவ்வுலகினில் வாழும்படி அருளுவான்
வேதங்களை தமிழ் செய்ய மாறனையும்
மாறன் பெருமையை விளக்க மதுரகவி ஆழ்வாரையும்-தேவு மற்று அறியேன் -என்று ஆயிற்று இவர் பேச்சு இருப்பது
கண்ணி நுண் சிறுதாம்பின் பெருமையை உணர்த்த பராங்குச தாஸரையும்-மதுரகவியார் எம்மை யாள்வார் யவரே யரண் -என்று இருப்பது
அருளிச் செயல்களை நித்தியமாக ஸ்தாபிக்க கட்டமைக்க நாதமுனிகளையும்
ராமாநுஜரைக் கடாக்ஷித்து ஆ முதல்வன் இவன் என்று ஆக்கப் பிரார்த்திக்க ஆளவந்தாரையும்
நம் போல்வாரையும் உஜ்ஜீவித்து அருள சரணாகதி நமக்காக மிதுன பெரிய பிராட்டியார் நம்பெருமாளை
சரண் அடைய ராமாநுஜரையும்
இங்கே வைத்து அருளினான்

பெருமாள் பிராட்டி அருளால் நான்முகன் வேதம் வெளிப்படுத்த
அவர் அருளால் வசிஷ்டர் போல்வார் பெற்றது போல்
வ்யாசம் வசிஷ்ட நப்தாரம்–இத்யாதி –
வசிஷ்டர் சக்தி பராசரர் -வியாசர் சக்தி வேத பரம்பரை
வசிஷ்டர் போல் நம்மாழ்வார்
சக்தி போல் மதுரகவி யாழ்வார்
பராங்குசர் -பராங்குச நம்பி
வியாசர் போல் நாதமுனி
ஸூகாச்சார்யார் போல் ஆளவந்தார் ராமானுஜர்

திருக்கண்ண மங்கை ஆண்டான் -நாதமுனிகள் சிஷ்யர் ஸூய வியாபாரத்தை விட்டு பிரபத்தி நிஷ்டையின் ஸ்ரேஷ்டம் வெளியிட்டு அருளினார்

——————-

குருமுகம் அநதீத்ய ப்ராஹ வேதான் அசேஷான்
நர பதி பரிக்லிப்தம் சுல்கம் ஆதாதுகாம
ஸ்வசுரம் அமர வந்த்யம் ரங்க நாதஸ்ய ஸாஷாத்
த்விஜகுல திலகம் தம் விஷ்ணு சித்தம் நமாமி –ஸ்ரீ நாத முனிகள் அருளிச் செய்த திருப்பல்லாண்டு தனியன்

அவிதித விஷயாந்தரச் சடாரே ருபநிஷதன் முபகான மாத்ர போக
அபி ச குண வசரத்த தேக சேஷீ மதுரகவிர் ஹ்ருதயே மாமாவி ரஸ்து —ஸ்ரீ நாத முனிகள் அருளிச் செய்த கண்ணி நுண் சிறுத் தாம்பு தனியன்

பக்தாம்ருதம் விஸ்வ ஜன அநு மோதனம் ஸர்வார்த்ததம் ஸ்ரீ சடகோப வாங் மயம்
ஸஹஸ்ர ஸாக உபநிஷத் ஸமாகமம் நமாம் யஹம் திராவிட வேத சாஹரம் –ஸ்ரீ நாதமுனிகள் அருளிச் செய்த-ஸ்ரீ திருவாய் மொழி-தனியன்

————-

நாதம் பங்கஜநேத்ர ராம யமுநாவாஸ் தவ்ய மாலாதரான்
யோகீந்த்ரம் குருகேசசந்திரஜலதிம் கோவிந்த கூராதியௌ
பட்டார்யம் நிகமாந்தயோகி ஜகதார்சார்யௌ சக்ருஷ்ண த்வயௌ
வந்தே மாதவ பத்மநாப ஸூமன கோசல தேவாதிபான் —ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை அருளிச் செய்தது

நாதர் ஆகிறார் -ஸ்ரீ ரெங்க நாதர் -என்னும் நாமதேயத்தை யுடையராய்
ஆத்யாய குலநாதாயா -என்னும்படியான ஆழ்வாரை நாதராக யுடையவராய்
வ்யோம்ன பரஸ்மாத் சவிதம் சமேத்ய லஷ்ம்யா நியோகாத் குருகாதி ராஜ
சமந்தரராஜ த்வயமாஹ யஸ்மை நாதாய தஸ்மை முனயே நமோஸ்து -என்று
திருமாலால் அருளப் பட்ட சடகோபன்
அருள் கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான் -என்கிறபடியே அந்த ஆழ்வாருடைய அருள் பெற்ற நாத முனி என்கை-
ஆழ்வாரை திருப் புளி யடியிலே மயர்வற மதி நலம் அருளி விசேஷ கடாஷம் பண்ணினாப் போலே
அவ்விடம் தன்னிலே ஆழ்வாரும் விசேஷ கடாஷம் -செய்து அருளினார் –
தாம் மயர்வற மதிநலம் பண்ணி யருளி பஜனத்தில் சேர்க்கிறார்–ஆச்சார்ய ஹிருதயம் சூர்ணிகை 213- -என்னக் கடவது இ றே
ஆழ்வார் உடைய பக்தியோடு விகல்பிக்கலாம் படியான -அகாத பகவத் பக்தி – இ றே இவரது

திருவருள் மால் சேனை முதலி சடகோபன் நாத முனி -சீர் உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி சென்றாம் ஆளவந்தார்
குரு மாலாதரர் குருகைப் பிரார்க்கு அன்பாம் எதிராசர் கோவிந்தர் கூரேச பட்டர் வேதாந்த முனி
இரு கண்ணற்கு அன்புடைய நம்பிள்ளை இவர் ஈடளித்தற்கு ஏய்ந்த மாதவர் பற்பநாபர் இவர் அருளாளர்
திருவடி ஊன்றிய தேவப்பெருமாள் கைக்கொண்டு அருளும் திருமலை ஆழ்வார் பதங்கள் முன்பு என்னுள் சேர்ந்தனவே –ஸ்ரீ மா முனிகள் அருளியது

———

வேதாந்த தேசிகர் தத்வ முக்த கலாபத்திலே
உக்தம் கலு நாதமுனிபி வேதாந்த அநு கூலம்
ந்யாய தத்வாபி தேயேந தச்ச பரிக்ருஹீதம் யாமுநா சார்யாதிபி
நியாய தத்வம் என்ற பெயர் வைத்ததாலேயே வேதங்களுக்கு அநு கூலமானதையே அருளிச் செய்தார் என்றவாறு

தேசிகர் நியாய பரிசுத்தியில்
பகவன் நாத முனிபி ந்யாய தத்வ சமாஹ்வயாப்
அவதீர்யாஷா பாதாதீன் ந்யவந்தி நியாய பத்ததி
அக்ஷபாதர் முதலிய நியாய ஸாஸ்த்ர ப்ரவர்த்தகர்களை மீறி நியாய ஸாஸ்த்ர சம்பிரதாயத்தை ஏற்படுத்தி அருளியவர் அன்றோ நம் நாதமுனிகள் ஸ்வாமிகள்

தத்ர தர்ம பூத ஞானஸ்ய த்ரவ்யத்வம்
ந்யாய தத்வாதம் ஸித்தி பாஹ்யாதி
ஸித்தம் அநு சரதாம் தந் நிஷ்ட ஸ்ம்ருத் யாக்ய
விகார உத்பாதக ஸம்ஸ்காரோபி தந் நிஷ்ட
ப்ராப்த அந்தரங்கத் வாத பாதாச் ச

அங்கு ஞானம் தர்மம் என்று ஒத்துக்க கொள்பவர் ஞானம் த்ரவ்யம் என்று கொள்ள வேண்டும்
ஆம் ஒத்துக் கொள்வர் -ஏன் எனில்
அவர்கள்
ந்யாய தத்வம்
ஆத்ம ஸித்தி –
அதன் பாஷ்யம் ஆகியவற்றில் வலியுறுத்தப் பட்டவையை பின் போற்றுபவர் ஆயிற்றே
அப்படியானால் அந்தத் த்ரவ்யத்தின் உள்ளிட்ட நினைவு என்ற விசாரம் இன்றி
அந்நினைவை உண்டாக்கும் ஸம்ஸ்காரமும் -தொடர்ந்த உணர்வும் -அதன் உட்பட்டதாகவே இருக்கும் என்றாகி விடும்
ஏன் எனில் அவை இரண்டும் நெருங்கி இருப்பதால் மட்டும் அல்ல-தடையும் இல்லை என்பதாலும்

யோ வேத்தி யுகபத் ஸர்வம் ப்ரத்யஷேண ஸதா ஸ்வத
தம் ப்ரணம்ய ஹரிம் ஸாஸ்த்ரம் ந்யாய தத்வம் ப்ரசஷ்மஹே –ந்யாய தத்வ மங்கள ஸ்லோகம்

ஜகத் காரணத்வம் ப்ரஹ்ம லக்ஷணம் அன்றோ
உள்ளங்கை நெல்லிக்கனி போல் முக்காலமும் உள்ள
எல்லாவற்றையும்
எல்லாக் காலத்திலும்
ஸ்வதஸ் தம் ப்ரபாவத்தினாலேயே
எவர் ப்ரத்யஷீ கரிக்கிறாரோ -அந்த ஹரியை வணங்கி
நியாய தத்துவத்தை நன்கு விவரிப்போம் –

ப்ரணம்ய ஹரிம்
ப்ரணவ ஜபம் -யோகிகளுக்கு அப்பியாசம் செய்வது
ப்ரகர்ஷேண நூயதே அநேந இதி ப்ரணவ –
சேஷத்வத்தை உணர்ந்து நினைத்துக் கொண்டு ஜபிப்பது யோக அப்யாசம் –

தத்வம் ஜிஞ்ஞாச மாநாநாம் ஹேதுபிர் ஸர்வதோ முகை தத்வம் ஏகோ மஹா யோகீ ஹரிர் நாராயணப் பர–ஸ்ருத ப்ரகாசிகை ஸ்லோகம்

———————

ஸ்ரீ நியாய தத்வம் -ஸ்ரீ நாதமுனிகள்

மங்கள ஸ்லோகம்
யோ வேத்தி யுகபத் -உள்ளூர் உள்ளம் எல்லாம் உடன் இருந்து அறுதி
ஸர்வம் ப்ரத்யஷேண -நேரடியாக
ஸதா -எப்போதும் –
ஸ்வத -இயல்பாகவே
தம் பிராணமய ஹரி ஸாஸ்த்ரம் நியாய தத்வம்
ப்ரத்யக்ஷம் அனுமானம் சப்தம் முக்கிய பிரமாணம் -ஸாஸ்த்ர யோ நித்வாத்
உவமானம் நான்காவதாக நையாயிகர்
லௌகிகம் -ப்ரத்யக்ஷமே பிரதானம்
மோக்ஷம் ஆத்மா பரமாத்மா அறிவது வேதம் ஒன்றாலே
யஸ்ய ஆத்மா சரீரம் -சேஷ பூதன்
அபின்ன நிமித்த காரணம்
நையாயிகன் பரம அணுவே மூலப் பொருள்
வேதம் -சரணாகதி -மஹா விச்வாஸம் -உண்டாக -தனது சரீரங்களை ரக்ஷிப்பானே
எனது உடம்பின் அழுக்கை நானே போக்கிக் கொள்ளேனோ-பர கத அதிசய ஆதேய

அஹம் ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி
ஞான ஆனந்த வடிவம் ஜீவாத்மா
கட்டைப் போல் -நையாயிகன்

தீதும் நன்றும் பிறர் தர வாரா -நமது கர்மா ரூபா அவித்யா நீங்க கர்மா ஞான பக்தி பிரபத்தி ஆச்சார்ய அனுபவம்
அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம்

மூன்று ஸ்லோகங்கள் எம்பெருமானார்-ஸப்த வித அனுபபத்தி பிரகரணத்தில் விளக்கி உள்ளார் ஸ்ரீ பாஷ்யத்தில் காட்டி வியாக்யானமும் பண்ணி அருளுகிறார்
நியாய சித்தாஞ்சனம் தேசிகரும் ஸ்லோகம் மேற்கோள் காட்டி உள்ளார்

ஒரே ப்ரஹ்மம் மாயா வாதிகள் -தொண்டர் இல்லை –
கண்டிக்க ஸ்லோகங்கள்
ஞான ரூபம் பர ப்ரஹ்மம் தன் நிவர்த்யம் ரிஷாத்மகம்

அஞ்ஞானம் சேத் சிரஸ் குர்யாத் கம் பிரபு தந் நிவர்த்ததே  

குழம்பாதே -அறியாமைக்கு வலிமை சாஸ்த்தியாகாதே
பர ப்ரஹ்மத்தை அறியாமையில் இருந்து மீட்க வேறே யார்
இரண்டாவது இல்லையே

அஞ்ஞானம் அநிர் வசனீயம்
ப்ரஹ்மம் ஞானமே அத்தைப் போக்கும்
கயிறு பாம்பு போல்

ப்ரஹ்மம் பற்றிய ஞானம் வந்தால் போக்கும் என்றால்
ப்ரஹ்மமே அறிவு -ப்ரஹ்மம் பற்றிய அறிவு வேறே இல்லையே இவர்களுக்கு

விளக்கு ஏற்றி வைத்து பார்வையும் தெரிந்து பொருள் விளங்குமே
விளக்கு ஏற்றியாச்சு சொன்னால் தான் போகும்
ஸ்வயம் பிரகாசம் -வேறே விளக்கு தேவை இல்லை
தன்னைத்தானே வெளிப்படுத்தும் ப்ரஹ்மம் -அறியாமையைப் போக்கி இருக்குமே
ஞானம் ஸ்வரூபம் ஸ்வயமே ப்ரகாஸம் -தானே உணர்த்திக் கொண்டே இருக்குமே

ப்ரஹ்மம் ஞானமே வடிவு எடுத்தது என்ற அறிவு வந்தால் போகும்
இப்பொழுது இரண்டாகுமே -அறியப்படும் பொருள் ஆனதே -உங்கள் கொள்கைக்கே முரணாகுமே
ப்ரஹ்மம் அனுபவம் அறிவு
அனுபவ ஸ்வரூபஸ்ய ப்ரஹ்மம்
ஞானம் அஞ்ஞான விரோதி

அறியாமை ப்ரஹ்மதுக்கு வராதே
ஆகவே பரமாத்மா ஜீவாத்மா வேறே வேறே என்று நிரூபணம்

————

திவ்ய ப்ரபந்த பாசுரங்களுக்கு நாதமுனிகள் 30 பண்கள்  அமைத்தார்.
அவை யாவன:
1.இந்தளம் 2 கவ்வானம்.3 காந்தாரம்
4.குறண்டி 5 குறிஞ்சி 6 கொல்லி
7 கைசிகம் 8 சீகாமரம் 9 செந்திருத்தி
10 செருத்தி 11 தக்க ராகம் 12 தக்கேசி
13.தோடி 14.நட்ட பாடை 15.நட்டராகம்
16.நாட்டம் 17 நைவளம் 18 பஞ்சமம்
19.பஞ்சுரம் 20 பழஞ்சுரம் 21 பழந்தக்க ராகம் 22 பழம்பஞ்சுரம் 23 பாலையாழ்
24 பியந்தை 25 புற நீர்மை 26 முதிர்ந்த குறிஞ்சி 27 மேகராகக் குறிஞ்சி 28.வியந்தம் 29 வியாழக் குறிஞ்சி
30.அந்தாளிக் குறிஞ்சி
இவற்றை சங்ககாலத் தமிழிசை மரபு அடிப் படையிலேயே அமைத்துள்ளார்.
ஆனால் நாதமுனிகள் அமைத்த பண்கள் பற்றிய விவரங்கள் இன்றுள்ள நாலாயிரத் திவ்யப்பிரபந்த நூல்களில் காணப்படவில்லை.
அவற்றுக்குப் பதிலாக இன்று நடைமுறையில் உள்ள ராகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அவற்றுள் சில திவ்யப்ரபந்தங்களில் சில பதிகங்களுக்கான ராகங்களும்,
அவற்றுக்கான நாதமுனிகள் அமைத்த பண்களும் வருமாறு:
பல்லாண்டு: நாட்டை(ராகம்) நட்டபாடை(பண்)
🔔🎷🎸🔔
பெரியாழ்வார் திருமொழி :
🔔🔔🔔🔔🔔🔔🔔
வெண்ணை விழுங்கி : கேதார கெளளம்(ரா);பாலையாழ்(ப)
மாணிக்கம் கட்டி: நீலாம்பரி(ரா); மேகராகக் குறிஞ்சி(ப)
நாச்சியார் திருமொழி :
🌹🌺🌻🌼🌷🌹🏵🥀
தையொரு திங்களும்: சாவேரி(ரா); கொல்லி(ப)
பெருமாள் திருமொழி:
🙏🙏🙏🙏🙏🙏
ஊனேறு :தன்யாசி(ரா); காந்தாரம்(ப)
திருமாலை(முழுதும்): சஹானா(ரா);அந்தாளி(ப)
திருப்பள்ளி எழுச்சி: பூபாளம்(ரா); புறநீர்மை(ப)
அமலனாதிபிரான்: யமுநா கல்யாணி(ரா); சீகாமரம்(ப)
கண்ணிநுண் சிறுத்தாம்பு: பைரவி(ரா); செந்திருத்தி(ப)
திருப்பாவை:
📢📣📢📣📢📣
திருப்பாவை முப்பது பாசுரங்களும் இன்னிசை அமுதம்.நாதமுனிகள் முப்பது பாசுரங்களை இருபது வேறு வேறு பண்களில் அமைத்துள்ளார்.
மார்கழித் திங்கள்:பிலஹரி(ரா) நட்டராகம்(ப)
மாயனை,மன்னு வடமதுரை மைந்தனை: தோடி(ரா);தோடி(ப)
சிற்றஞ் சிறுகாலே: கல்யாணி(ரா) செருந்தி(ப)
பெரிய திருமொழி:
👌👌👌👌👌👌👌
வாடினேன் வாடி: தேசிய ராகம்(ரா) இந்தளம்(ப)
வாலிமா வலத்து: அடாணா(ரா)முதிர்ந்த குறிஞ்சி(ப)
தூவிரிய மலருழக்கி: மோஹனம்(ரா); பஞ்சமம்(ப)
விற்பெரு விழவும்: பூபாளம்(ரா); புறநீர்மை(ப)
திருவாய் மொழி:
👣👣👣👣👣👣👣
முடிச்சோதியாய் : தேசிய ராகம்(ரா); இந்தளம்(ப)
அஞ்சிறைய : அபரூபம்(ரா)நட்டபாடை(ப)
பொலிக! பொலிக!!: யமுநாகல்யாணி (ரா); சீகாமரம்(ப)
திண்ணன்வீடு : பந்துவராளி(ரா) தக்கராகம்(ப)
தேவகான இசை மேதை நாதமுனிகள் !
🥁🔔🎸🎷🎻🎺📣🔔🥁
நாதமுனிகள் நுணுக்கமான இசை ஞானம் பெற்றவர்.ஏழிசை வல்லவர்.
திவ்ய பிரபந்த பாசுரங்களுக்குப் பண், தாளம்,இசை அமைத்து வைத்தார்.
அவரும் அவர் மருமக்கள் இருவரும் இசையோடு பாடினர்.
சாதாரண மனிதர்களுக்கும் புரியும் மனுஷகானம் தவிர,தேவ கானத்திலும் விற்பன்னர் நாதமுனிகள்.
அக்காலத்தில் ஒரு நாள் கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த
சோழமன்னரின் அரசவையில் மனுஷகானம் பாடும் ஒரு பெண்ணும்,தேவகானம் பாடும்
ஒரு பெண்ணும், ராஜா மற்றும் வித்வான்கள் முன்னிலையில் தங்கள் கானங்களைப் பாடினர்.
அவர்களுக்குத் தேவகானத்தின் மேன்மை தெரியாததால், மனுஷகானம் பாடியவளைக் கொண்டாடி
அவளுக்குப் பொன்னும்,மணியும்,பரிசும் கொடுத்து, தேவகானம் பாடியவளை நிராகரித்தனர்.
அவள் மிக சோகத்துடன், தேவர்கள் அறியும் கானத்தை இவர்கள் புரிந்து கொள்ளவில்லையே என்று,
திவ்ய தேசங்களுக்குச் சென்று தேவகானம் பாடிக்கொண்டு,காட்டுமன்னார் கோயிலுக்கு வந்தாள்.
அங்கு அவள் பாடிய போது,அங்கிருந்த நாதமுனிகள் அதை உகந்து கொண்டாடி
பெருமாளின் தீர்த்தப்பிரசாதமும்,திருப்பரியட்டமும் பிரசாதித்து அருளினார்.
அந்தப்பெண் மீண்டும் அரசவை சென்று,ராஜாவிடம் தேவகானம் அறிந்த நாதமுனிகளை அழைத்து வந்து கேட்குமாறுவேண்டினாள்.
ராஜாவும் நாதமுனிகளை தகுந்த மரியாதையுடன் அவைக்கு அழைத்து வந்து,தேவகானம் பற்றி விளக்குமாறு வேண்டினார்.
நாதமுனிகள் இருவரையும் பாடச் சொல்லி, தேவ கானத்தின் ஏற்றங்களை எடுத்துரைத்து,
தேவகானம் தேவர்களுக்குத் தெரியுமே யொழிய அவர்களுக்குத் தெரியாது என்றார்
.”இதன் மேன்மை உங்களுக்குத் தெரியும் என்று நாங்கள் எப்படி அறிவது” என்று ராஜா கேட்டார்.
நாதமுனிகள் நாலாயிரம் தாளங்களை ஒரு சேர இசைக்கச் சொல்லி,
ஒவ்வொரு தாளமும் இத்தனை எடை,இத்தனை எடை என்று உடனே சொன்னார்.
பின்னர் அந்தத் தாளங்களை எடை போட்டுப் பார்த்தபோது,அவை நாதமுனிகள் சொன்னதிலிருந்து
கொஞ்சம் கூட குறையாமல்/கூடாமல் இருந்ததைக் கண்டு மிக ஆச்சரியமு ப்பட்டனர்.
ராஜா, ஸ்வாமிகளின் திருவடிகளில் தண்டம் சமர்ப்பித்து, அவருக்குப் பல பஹூமானங்களை சமர்ப்பித்தார்.
இதில் எவற்றிலும் பற்றற்ற நாதமுனிகள் அவற்றை ஏற்காமல், ராஜாவை ஆசீர்வதித்து, வீரநாராயணபுரம் திரும்பினார்.
கானமுறத் தாளத்தில் கண்டிசைத்தான் வாழியே !
🔔👏🔔👏🔔👏🔔👏🔔👏
தாளங்களில் வல்லுனரான ஸ்ரீமந் நாதமுனிகள் திவ்யப்ரபந்தப் பாசுரங்களுக்கு தாளத்தை நிர்ணயித்தே இசை வகுத்தார்.
இசையின் கால பிரமாணத்தை நிர்ணயித்து அதனை நிலைப்படுத்துவது தாளமே.இசைக்கு உயிர் போன்றது தாளம் ஆகும்.
தாளம் என்னும் சொல் குமிழ் வடிவான வெண்கலத்தாலான ஒரு கருவியைக் குறிப்பிடும் சொல்லாகவும்,
காலத்தைக் கணக்கிடும் கருவியாகவும் உள்ளது.
ஸ்ரீமந் நாதமுனிகள் திவ்யப்ரபந்த பாசுரங்களுக்கு ஏழு வகையான தாளங்கள் அமைத்தார்.அவையாவன:
1.ஏழொத்து 2.ஒன்பதொத்து,
3.இடையொத்து 4.நடையொத்து.
5. மிடைத்தொத்து 6.முடுகினமிடைந் தொத்து 7.மழுமுடித்தல்
தாளத்தின் உரு,மடிப்புகள்,அமைப்பு,எடை, வீச்சு அளவு போன்றவையின் அடிப்படையில் இந்தப் பெயர்கள் வழங்கப் பட்டுள்ளன.
ஸ்ரீமந் நாதமுனிகளை,”தாளம் வழங்கித் தமிழ்மறை இன்னிசை தந்த வள்ளல்” என்று ஸ்ரீ வேதாந்த தேசிகர் கொண்டாடுகிறார்.
——————
வேத வியாசர் வேதங்களை ரிக்,யஜுர், சாம,அதர்வணம் என்று நான்காகப் பிரித்தது போல,
நாதமுனிகள் திவ்யப் பிரபந்தங்களை முதலாயிரம், இரண்டாம் ஆயிரம்,மூன்றாம் ஆயிரம்,நான்காம் ஆயிரம் என்று பிரித்தார்.
இவ்வாறு பிரித்துத் தொகுக்கும் போது
1) அநுஸந்தான க்ரமம்,2) அவதார க்ரமம் ஆகிய இரண்டு முறைகளைப் பயன்படுத்தி உள்ளார்.
அநுஸந்தான க்ரமம் என்பது,”முமுக்ஷுவுக்கு அறிய வேண்டிய ரஹஸ்யம் மூன்று” என்ற அடிப்படையில்
திருமந்திரம்,த்வயம், சரம ஸ்லோகம் என்னும் மூன்று மந்திரங்களின் விவரணமாக அமைந்துள்ளது.
முதல்,இரண்டு,மூன்றாம் ஆயிரங்கள் அநுஸந்தான க்ரமத்தின் படியும்,
நான்காம் ஆயிரமான இயற்பா அவதார க்ரமத்திலும் அமைத்துள்ளார்.
அநுஸந்தான க்ரமம்: “திருமந்திரம்”
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முதலில் அவதரித்தது பிரதம ரஹஸ்ய மான திருமந்திரம்.இது மூன்று பதங்களை உடையது
“ஓம்,நம:, நாராயணாய”.இதில் முதல் பதம் ஓம் என்னும் ப்ரணவம்.
இந்த ப்ரணவத்தின் விளக்கமாக 1)திருப்பல்லாண்டு,
2) பெரியாழ்வார் திருமொழி,3)திருப்பாவை,4)நாச்சியார் திருமொழி,
5)பெருமாள் திருமொழி,6)திருச்சந்த விருத்தம்,7)திருமாலை,8) திருப்பள்ளி எழுச்சி,9)அமலனாதிபிரான் ஆகியவற்றை அமைத்தார்.
“நம:” –இரண்டாவது பதமான “நம:” என்பது ‘ந’ ‘ம’ என்று இரண்டுபதங்களைக் கொண்டது.
‘ம’ என்பது தனக்கு உரியன் என்பது.’ந’ என்பது அதைத் தவிர்ப்பது.
நம: என்றால் ‘நான் எனக்கு உரியன் அல்லேன்’ என்பதாகும்.
ஸ்வாதந்தர்யத்தை விட்டு இன்னொருவருக்கு–எம்பெருமானுக்குப் பாரதந்தர்யமாக இருப்பது.
‘கண்ணிநுண் சிறுத்தாம்பில்’ மதுரகவியாழ்வார் ஒரு படி மேலே போய் எம்பெருமானை அறியேன்,
ஆனால் அவர் அடியார்களுக்கு எல்லா அடிமைகளும் செய்வேன்–
“மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே ! தேவுமற்றறியேன் !குருகூர் நம்பி, பாவின் இசை பாடித் திரிவனே”
என்று பாரதந்தர்யத்தின் எல்லை நிலமான ஆசார்ய/பாகவத சேஷத்வத்தைப் பாடினார்.
ஆதலால் ‘நம:’ பதத்தின் விளக்கமாக கண்ணிநுண் சிறுத்தாம்பை 10 ஆவது பிரபந்தமாகச் சேர்த்து முதலாயிரம் என்னும் தொகுப்பை அமைத்தார்.
“நாராயண”–நாராயண என்னும் பதம் பரமாத்மாவான ஸ்ரீமந் நாராயணைச் சொல்கிறது.
நாராயண என்றால் நாரங்களுக்கு அயனம்(இருப்பிடம்) என்பது.
நாரங்கள் என்றால் “அனைத்து நித்ய வஸ்துக்கள்–
அவையாவன: ஜ்ஞாநாநந்த அமலத்வாதிகளும்,ஞான சக்தியாதிகளும்,வாத்ஸல்யம்,செளசீல்யம்,திருமேனி காந்தி,செளகுமார்யம்,திவ்ய பூஷணங்கள்,திவ்ய ஆயுதங்கள்,பெரிய பிராட்டியார் தொடக்கமான நாச்சிமார்கள்
நித்ய ஸூரிகள்,குடை,சாமரம் முதலியவை,
திருவாசல் காக்கும் முதலிகள், பரமாகாசம்,ப்ரக்ருதி,காலம்,அண்டம்,
அண்டத்துக்கு உட்பட்ட தேவாதி பதார்த்தங்களும்”.
இதனால் பலித்தது பரத்வம்,செளசீல்யம்,அந்தர்யாமித்வம், உபாயத்வம்,உபேயத்வம் ஆகியவை.
இவற்றின் விளக்கமாகத் திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழி,
திருக்குறுந்தாண்டகம், திருநெடுந் தாண்டகம் ஆகிய மூன்று பிரபந்தங்களை இரணடாம் ஆயிரமாக வைத்தார் நாத முனிகள்.
அநுஸந்தான க்ரமம்: த்வய மந்த்ரம் !
👍👌👍👌👌👍👌👍👌👍👌
த்வய மஹா மந்த்ரம் இரண்டு வாக்கியங்களை உடையது.
பூர்வ(முதல்) வாக்கியம் பெரிய பிராட்டியாரை முன்னிட்டுக் கொண்டு எம்பெருமான் திருவடிகளைப் பற்றுகிறது.
உத்திர (இரண்டாம்) வாக்கியம் பெருமாளும் பாராட்டியுமான அடிமையை–கைங்கர்யத்தைப் பிரார்த்திக்கிறது.
இந்த த்வய மந்த்ர விவரணமாகத் திருவாய்மொழி அமைந்துள்ளதால் அதனை மூன்றாவது ஆயிரமாக நியமித்தார்.
(சேவிக்கும் க்ரமம்) அநுஸந்தான க்ரமத்தில் அவதார க்ரமம்: சரம ஸ்லோகம் !
👣👣👣👣👣👣👣👣👣👣👣
சரம ஸ்லோக விவரமான இயற்பா பிரபந்தங்களை அவதார க்ரமத்திலே நான்காம் ஆயிரமாகத் தொகுத்தார்.
அவதார க்ரமம்– முதல் திருவந்தாதி (100),இரண்டாம் திருவந்தாதி(100),
மூன்றாம் திருவந்தாதி(100),நான்காம் திருவந்தாதி(96),திருவிருத்தம்(100),திருவாசிரியம்(7),பெரிய திருவந்தாதி(87),
திருவெழு கூற்றிருக்கை(1),சிறிய திருமடல்(77. 1/2) பெரிய திருமடல் (148.1/2)–(மொத்தம் 817)
திருப்பல்லாண்டுக்குத் தனி மேன்மை !
🔔🥁🔔🥁🔔🥁🔔🥁🔔🥁
நாதமுனிகள் திருப்பல்லாண்டை முதல் பிரபந்தமாகவும்,தனிப் பிரபந்தமாகவும் வைத்தார்.
திருப்பல்லாண்டுக்குத் தாமே,
“குருமுகமநதீத்ய ப்ராஹ வேதான் அசேஷான்” தனியனை அருளிச் செய்தார்
இந்த அடிப்படையிலேயே சந்நிதிகளில்,
நாலாயிரத் திவ்யப்ரபந்த சேவா காலங்களில்,குறிப்பாக எந்த ஆழ்வார் பிரபந்தங்களையும் சேவிக்கும் போது,
திருப்பல்லாண்டு தொடங்கி,சேவித்த பிறகே,மற்ற பிரபந்தங்களும் சேவிக்கப் படுகின்றன.
மேலும் அத்யயன உற்சவம் நிறைவு பெற்றவுடன் எல்லா திவ்ய தேசங்களிலும் திருப்பல்லாண்டு பிரபந்தமே தொடக்கம் செய்யப் படுகிறது.
இது “திருப்பல்லாண்டு தொடக்கம்” என்றே கொண்டாடப் பட்டு,நாலாயிர ப்ரபந்த சேவா காலம் தொடங்கப் படுகிறது.
இதன் அடிப்படையிலேயே,
திருப்பல்லாண்டைக் கொண்டாடும் மணவாள மாமுனிகள்,
“கோதிலவாம் ஆழ்வார்கள் கூறு கலைக்கெல்லாம்,
ஆதி திருப்பல்லாண்டானதுவும், வேதத்துக்கு,
ஓமென்னுபது போல்,உள்ளதுக்கு எல்லாம் சுருக்காய்த்,
தான் மங்கலமாதல்”(உப.ர.மாலை 16)
“உண்டோ திருப்பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலை தான்,
உண்டோ பெரியாழ்வாருக்கு ஒப்பு ஒருவர்”(20)-என்று பாடுகிறார்
நாதமுனிகள் தொகுத்த பாசுரங்களின் எண்ணிக்கை :
🙏👏👏👏👏👏👏🙏
முதல் ஆயிரம்: 947
இரண்டாம் ஆயிரம்: 1134
மூன்றாம் ஆயிரம் : 1102
நான்காம் ஆயிரம் : 817
மொத்தம் : 4000
நாதமுனிகள் காலத்துக்குப் பின்னர் இயற்றப்பட்ட இராமாநுச நூற்றந்தாதி 108 பாசுரங்களும்,
நம்பெருமாள் நியமனப்படி நாலாயிரத்தோடு சேர்க்கப் பட்டது.
ப்ரணவார்த்தமான முதலாயிரத் தோடு,நம்மாழ்வார் விஷ்யமாக கண்ணிநுண் சிறுத்தாம்பை நாதமுனி கள் சேர்த்தது போல,
சரமபர்வமாய் இருப்பதான இராமாநுச நூற்றந்தாதி இயற்பாவோடு நிறைவாகச் சேர்த்து சேவிக்கப்படுகிறது.
—————-
நாதமுனிகளுடைய வாழி திருநாமம்:

ஆனி தனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே
ஆளவந்தார்க்க் உபதேசமருளிவைத்தான் வாழியே
பானு தெற்கிற்கண்டவன் சொல் பலவுரைத்தான் வாழியே
பராங்குசனார் சொல்பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே
கானமுறத் தாளத்தில் கண்டிசைத்தான் வாழியே
கருணையினால் உபதேசக் கதியளித்தான் வாழியே
நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே
நலம்திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading