ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை -50-
திரு வாய் மொழி ஒன்றுக்கும் அன்றே வேதத்வம் சாதித்தது .
இவருடைய பிரபந்தங்கள் நாலுக்கும் ஒக்கும் இறே –ஆகை இறே
வேத சதுஷ்டய -சூரணை 43–இத்யாதி வாக்யத்தில் இவர் பிரபந்தங்கள் நாலையும்
நாலு வேதத்தினுடைய ஸ்தாநேயாக அருளிச் செய்தது –
அதில் எந்த பிரபந்தம் எந்த வேதத்தின் உடைய ஸ்தானத்திலே என்ன அருளிச் செய்கிறார் .
இயற்பா மூன்றும் வேத த்ரயம் போலே
பண்ணார் பாடல் பண்புரை இசை கொள் வேதம் போலே-
(புண்புரை வேதம் போலே என்றும்
இசைகொள் வேதம் போலே என்றும்
தனித்தனியே ஆக்கவுமாம் -ஒரே வாக்யமாகக் கோடலுமாம்
பண் இராகம் /ஸ்வரங்கள் அமைப்பு -இசை அதன் சுவை கான ஆனந்தம் )
அதாவது
இயற்பாவான திரு விருத்தம் திருவாசிரியம் , பெரிய ,திரு அந்தாதி
என்கிற பிரபந்தங்கள் மூன்றும் -அடைவே ருக், யஜுர், அதர்வணங்கள்
ஆகிற மூன்று வேதத்தின் உடையவும் ஸ்தானத்திலே ..
பண்புரை வேதம் பயந்த பரனுக்கு
மண்புரை வையம் இடந்த வராகற்கு
தெண்புனற் பள்ளி எம் தேவ பிரானுக்கு என்
கண் புனை கோதை இழந்தது கற்பே.–6-6-5-
நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5-
வசையில் நான்மறை கெடுத்த அம்மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய்
இசைகொள் வேதநூல் என்று இவை பயந்தவனே எனக்கு அருள் புரியே
உயர்கொள் மாதவிப் போதொடு உலாவிய மாருதம் வீதியின் வாய்த்
திசை எல்லாம் கமழும் பொழில் சூழ் திரு வெள்ளறை நின்றானே –5-3-2-
பண்ணார் பாடல்-திருவாய்-10-7-5–என்று -பண்ணோடு சேர்ந்து இருந்துள்ள இசையை உடைய திருவாய்மொழி –
பண்புரை வேதம்—திருவாய்-6-6-5-என்றும் –இசை கொள் வேதம்–பெரிய திருமொழி-5-3-2–என்றும்
பண்ணையும் இசையும் உடைத்தான சாம வேதம் போலே என்கை ..
திருவாய் மொழியின் வியாக்யானங்களில் -பண்புடை வேதம் -என்று ஒழிய -பண்புரை வேதம்-என்ற பாடமும் ,
இசை கொள் வேதம் என்கிறதுக்கு -சாம வேத பரத்வம் கண்டது இல்லை ஆகிலும் ,
ஆப்த தமரான இவர் ,இப் பிரபந்தத்திலே இப்படி அருளிச் செய்கையாலே ,இப்படியும் கொள்ள வேணும் ..
அப்போதைக்கு அவ்வவ ஸ்தலங்களில் சாம வேத வைலஷண்யத்தைப் பற்ற இத்தைச் சொன்னதே உள்ளது .
மற்றயவற்றுக்கும் இது உப லஷணம் என்று கொள்ளக் கடவது .
பண்புரை வேதம் என்றது -பண்ணை புரைந்து இருக்கிற வேதம் என்றதாய்
அப் பண்ணுக்கு ஆஸ்ரயமான வேதம் என்ற படி ..
இசை கொள் வேதம்-என்றது இசையை உடைத்தான வேதம் என்ற படி
பண்ணார் பாடல் என்று -திரு வாய் மொழி பண்ணையும் இசையையும் உடைத்தாய் -ஆகையாலே
சாம வேதத்துக்கு பண்ணும் இசையும் உண்டு என்னும் இடம் அறிவிக்கைக்காக வாய்த்து
சாம வேத பரமான சந்தைகள் வேண்டுவது உண்டாய் இருக்க ,இவற்றை இவர் இப்போது எடுத்தது-
சாமவேதம் உள்ள அருளிச் செயல்களை எடுக்காமல் இயல் பாவுக்கு அப்புறம்
இசைப்பா -பண்ணும் இசையும் சேர்ந்த சாம வேதம் போலே திருவாய் மொழி வைலக்ஷண்யம்
அருளிச் செய்கிறார் -இத்தால்
——————————————————————————————————————————
சூரணை-51-
ஆனால் அந்த சதுஷ்டயத்தில் ருக்கு சாம ரூபேண விஸ்த்ருதமாம் ஆகாரம் இங்கும் ஒக்குமோ என்னும்
ஆ காங்ஷையிலே அருளிச் செய்கிறார் மேல் ..
ருக்கு சாமத்தாலே சரசமமாய்
ஸ்தோபத்தாலே பரம்புமா போலே
சொல்லார் தொடையல் இசை கூட்ட
அமர் சுவை ஆயிரம் ஆயிற்று-
(ச ரசம் -ரசத்தோடு கூடியது / ஸ்தோபம் -இசை நிறைச் சொற்கள் /
மந்த்ரம் – ரிக் இசை சேர்க்க சாமம் ஆகும் – / திரு விருத்த பாசுரம் திருவாய்மொழியாக விஸ்திருதம் ஆகும் )
அதாவது-
சாம ஸங்க்ரஹமான ருக்கானது ஸ்வ விவரணமாய்-
ருசஸ் சாம ரச -சாந்தோக்யம் -ருக்குக்கு சாமம் ரசமாகும் —-என்கிற படியே தனக்கு
ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ,
ரச சகிதமாய் ,-ஹாவு ஹாவு-இத்யாதியான ஸ்தோபத்தாலே விச்த்ருதமாமா போலே
ருக் வேத ஸ்தாநேயாய் இருக்கிற சொல்லார் தொடையலான-(தொடையல் -சப்த சந்தர்ப்பம் )திருவிருத்தம்-100-
திரு விருத்தம் நூறு பாட்டும்-
இசை கூட்டி-திருவாய்-2-4-11- என்கிற படியே -இசையிலே கூட்டினவாறே
சாம வேத ஸ்தாநேயாய் –அமர் சுவை ஆயிரம்-திருவாய்-1-3-11–என்கிற படியே
சரசமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாய் பரம்பின என்கை ..
—————–
கொண்டாட்டம் -நம் பெருமாளுக்கு -முதலில் மணவாள மா முனிவரைப் பற்றியே -இன்றும் சேவிப்பார்கள் –
பாவின் இன்னிசைப் பாடித் திரிவனே –
நறையூர் நின்ற நம்பி -நான்கு வேதம் ஐந்து வேள்வி அங்கம் ஆறு இசை எழும் அறிந்த அந்தணர்கள் –
காழிச் சீராம விண்ணகரம் –பதிகத்திலும் இப்படி உண்டே –
திரு நெடும் தாண்டகம் –நெடு வீணை முலை மேல் தாங்கி –திரு மங்கை ஆழ்வார் வீணை வித்வான் –
வர வர முனி சதகம் -எறும்பி அப்பா -பிரதிவாதி பயங்கர அண்ணாவும் அருளி -மா முநிகலையே பர தெய்வம் ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம் -காட்டி அருளினவர்கள் –
40 ஸ்லோகம் -எறும்பி அப்பா அருளிச் செய்த சதகம் -தேவரீர் திரு நாமத்தையே சந்கீர்த்தனமாக படும் படி அனுக்ரஹம் செய்ய மா முநிகலையே பிரார்த்திக்கிறார் -பிரகிருதி தடைகளை நீக்கி அருள வேணும் –
44- ஸ்லோகம் -நித்யம் -திருப்பள்ளி எழுச்சி -அடியவர்கள் சங்கீர்த்தனம் -சுருதி உடன் சேர்த்து பாடும் அடியவர் திருவடி களிலோ திளைத்து இருக்க வேண்டும் –
ஸ்லோகம் -47-கமல நயனம் ஆலோக்யம் -நம்பெருமாளை மங்கள சாசனம் செய்ய எழுந்து அருளும் பொழுது தேவரீர் திரு நாம சங்கீர்த்தனம் செய்து நாட்டியம் ஆட வேண்டும் –
81 ஸ்லோகம் -சக்ரவர்த்தி திருமகன் வார்த்தை -மா முனிகளை பற்றி -தனது கோயில் ஆழ்வாரை திறக்க முடியாமல் இருக்க –
இளைய பெருமாள் -போலேவே நினைத்து இருப்பதாக -அருளிச் செய்து உள்ளார் -மா முனிகள் திரு நாம சங்கீர்த்தனம் எவ்வளவு ஏற்றம் என்பதை காட்ட –
பிரதிவாத பயங்கர அண்ணா அருளிச் செய்கிறார் திரு மூல வைபவம்
மூலம் –அவதார மூலம் சேதனர் முக்திக்கு மூலம் -நம் ஆழ்வார் திருவாய் மொழிக்கு சாம்ராஜ்ய மூலம் –கலி தோஷம் களையும் மூலம் -தாப தரைய சம்சாரிகளுக்கு சகல புருஷார்த்தங்களுக்கும் மூலம் –
தாளம் வழங்கி தமிழ் மறை இன்னிசை தந்த வள்ளல் நாத முனிகளை பற்றி தேசிகன் –
50 சூரணை ஆசார்ய ஹிருதயம் பண்ணார் பாடல் -புண்புரை இசை கொள் வேதம் போலே -சாம வேதம் என்று சொல்லாமல்
வேதம் சாம்யம் திருவாய்மொழிக்கு சாதித்து -மேம்பட்டது -நம் ஆழ்வார் நாயனார் மா முனிகள் ஹிருதயத்தில் உள்ளவற்றை காட்டும் கிரந்தம் –
இசை கொள் வேதம் -இசை பற்றி அறிய செய்து மா முனிகள் காட்டி அருளுகிறார் –
ருக் யஜூர் அதர்வணம் –
பண்புரை புண்புடை வேதம் –அருளிச் செயல் -ஸ்ரீ ஸூ க்திகள்
நீர்மையை உடைய வேதம் -இசையுடன் சேர்ந்த வேதம்
நாயனார் மட்டும் பண்புரை வேதம் காட்டி அருளுகிறார் –
மா முனிகள் வியாக்யானம் கொண்டே இத்தை அறிய முடியும் –
பண்ணை புரைந்து உள்ள வேதம் பண்ணுக்கு ஆஸ்ரயமான வேதம் பண் -ராகம் –
பண்ணியும் இசையும் கொண்டதே திருவாய் மொழி -சாம வேதத்துக்கு இசை ராகம் சுரம் உண்டே –
சாந்தோக்யம் -ராகமும் காட்டி அருளுகிறார்
செம் சொல் கவிகாள் –பண்ணார் பாடல் கவிகள் -பண்ணுடன் சேர்ந்து புஷ்பம் பரிமளம் சேர்ந்து இருக்குமா போலே திருவாய் மொழியும் இசையையும் பிரிக்க முடியாது
பண் என்பதும் இசை என்பதும் தனி தனி -காட்டி அருளுகிறார் –
நாயனார் 6-6-5- பண்புடை வேதம் -என்பதை பண்புரை வேதம் -பொய்யில்லாத மா முனி -ஐந்து வியாக்யானங்களும் பண்புடை சொல்ல நாயனார் மட்டுமே பண்புரை வேதம் –வேதத்திலே ராகம் உண்டு -காட்டி –
இசை கொள் வேதம் -நாதம் -என்று பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்ய -தாள பேதம் -நாயனார்
பண் -இசை ஏழு ஸ்வரங்கள் நரம்பு -குதிரை கால் -பல அர்த்தங்கள் -மின்னிடை மடவார் -பண் -அலங்காரம் பொருளில் –
பெயர்க்காரணம் -சிலப்பதிகாரம் -அடியார்க்கு நல்லார் -பண் -ஒலிகள் கிளம்பி -நெஞ்சு நாக்கு உதடு பல் -8 இடங்களில் ஒலி கிளம்பி -பாடி -பண்ணப்படுவதால் –
673 இதிகாரம் -தாமரைக் கண்ணன் -உடம்பு ஒலிகள் தொண்டை ஒலிகள் 8 பண்ணப் பட்டு
இசை -இசைந்த பாடல் -பொருந்தி சேர்ந்து -லஷணம்
வைகுந்தா -இசையோடும் பண்ணோடும் பாட வல்லார் பண் -கானம் -நம்பிள்ளை இசை குருத்வ லகுத்வாதிகள் -தாளம் 6 அங்கங்கள் -லகு குறு தாளத்தின் அங்கங்கள்
கானம் -பாட்டு -ராகம் -அர்த்தம் – வாய் கானம் புல்லாம் குழல் கானம் இசை -வார்த்தை இல்லை சுரங்கள் –
நாயனார் -69 சூரணை –வியாக்யானம் -பண் இசை தாளம் இதுக்கும் உண்டு
பண் ஆவது -முதிர்த குறிஞ்சி -நட்டபாரை நாட்டை நட்ட ராகம் -பந்துவராளி இந்தளம் -6 ராகம் முதலானவை –
இசை யாவது -காந்தார பங்கஜம் -ஏழு இசைகள்
தாளம் -கஜ கர்ண -பல தாளங்கள் –
யோஜனை வாசி பெண்ணுக்கும் பேதைக்கும் தெரியும்படி -கற்றோர்கள் தாம் உகப்பார் -ஆசை உள்ளோர் –பின் உகப்பார் மற்றோர் ஆசார்யத்தால் இகழந்து வந்தால் என்ன —
சிந்தை தன்னில் நாளும் சிந்திப்பார் -கல்வி மேல் ஆசை தெரியும் –
கானம் என்பதற்கு ராகம் காட்டி -அருளுகிறார்
இசை -சப்த ஸ்வரங்கள் காட்டி அருளுகிறார்
தாளம் அங்கங்கள் பிரித்து காட்டி அருளுகிறார் –
சப்தம் குரல் ரிஷபம் சுத்தம் -மாறி உள்ளது என்பர் தப்பாக –
ஸ்லோகம் -அமர கோசம் -கொண்டு அருளிச் செய்கிறார் மா முனிகள் -சுவரத்துக்கு -குரல் போன்றவற்றையும் எடுத்துக் காட்டி -ச ரி க -போன்ற ஏழு ஸ்வரங்களும் –
விசத வாக் சிகாமணி மா முனிகள் –
தாளம் பற்றியும் ஸ்லோகம் காட்டி அருளுகிறார் -இது எங்கே என்றே இன்றும் அறியவில்லை -பிரசீதம் -10 தாளங்கள் காட்டி
52-சூரணை -சந்தோக்யம் -வேத கீத -உத்கீத –மாற்றி -சாந்தோக்ய சமம் –
காண ச்வரூபியாகி விசேஷிக்கையாலே
-வேதமும் கீதமும் –
யாழ் கருவி -அதோ அந்த பறைவை போலே -முதிர் சுவை –
முதிர் சுவை -அவனே ப்ரஹ்மம்-காண சாமான்யம் இல்லை யாழ் நரம்பின் பாலை என்ற ராகம்
தொல்காப்பியம் சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை -பஞ்ச மரபு -அரிவனார் -சங்க காலத்து புலவர் -யாழ் விஷய சாஸ்திரம் இது -முதல் ஆழ்வார் பாசுரங்கள் இதில் காட்டி உள்ளார் –
பாலை -பஞ்ச மரபு நூலை மா முனிகள் அறிந்து வியாக்யானம் –
அஞ்சு யாழ் -காட்டி பாலை யாழ் ஒரு வகை -சாம வேத கீதனே -சாந்தோக்யம் -முக்கியம் போலே -பாலை யாழ் அனுசரித்து -இதில் அமைக்கப் பட்டு ஹரி காம்போதி -இப்பொழுது பெயர் –
வேதங்களில் ராகம் இருக்கு என்றும் சொல்லி சாந்தோக்யம் ஹரி காம்போதியில் உள்ளது என்றும் இதுவே முக்கியம்
புல்லாம் குழல் இதில் முக்கியம் இயற்க்கை -ஹரி காம்பு ஓதி -அத்தனை பண்களும் இதை அடிப்படையாக கொண்டே –
மங்களகரமான பண் -மா முனிகள் அபிமானிக்கப் பட்ட இயற்கையான மங்களகரமான பண் உருவாக்கப் பட்ட ராகம் இல்லை
கௌசிக புராணம் –பைரவி ராகம் –
இன்னும் பல ராகங்கள் மா முனிகள் காட்டி அருளுகிறார்
ஹரி காம்போதி திருப்பால்லாண்டு –
நாட்டிய குறிப்பு இசைக் கருவிகள் குறிப்பு பல உண்டு மா முனிகள் வியாக்யானங்களில் -இசை ஞானம் நம் போல்வாரால் அறிய முடியாதே -சாஷாத் ஆதிசேஷன் அம்சம் அன்றோ –
அந்தர காந்தாரம் படை போர் முக்கு முழங்கும் -சேராமல் பலர் பாடுவார்கள்
மா முனிகள் -ஏற்படுத்தி உள்ளவை -ஆற்றில் கரைத்த புளி அல்லவோ செந்தமிழ் ஆரணமே
த்யாகராஜர் -ஹரி காம்போதி -கீர்த்தனைகள்
புரந்தர தாசர் மாயா மௌலி மாற்றி -பாடுவதற்கு எளிமை என்று
சங்கீதமும் பகவானே –
———————
தொடரடைவுகள் (முனைவர்.ப.பாண்டியராஜா) எழுதப்பட்ட கணினி நிரல்களின் மூலம் (http://tamilconcordance.in) தளத்தில் இருந்து எடுக்கப் பட்டவை
இசை (60)
கூத்து உவந்து ஆடி குழலால் இசை பாடி – நாலாயி:115/2
கோல செந்தாமரை கண் மிளிர குழல் ஊதி இசை பாடி குனித்து ஆயரோடு – நாலாயி:260/3
யாழின் இசை வண்டு இனங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே – நாலாயி:407/4
கள் அவிழ் செண்பகப்பூ மலர் கோதி களித்து இசை பாடும் குயிலே – நாலாயி:546/3
எங்களுக்கே ஒரு நாள் வந்து ஊத உன் குழலின் இசை போதராதே – நாலாயி:706/4
நல் இசை தமிழ் மாலை வல்லார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே – நாலாயி:718/4
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள் இரிந்தன சுரும்பு இனம் இலங்கையர் குலத்தை – நாலாயி:920/2
ஏதம் இல் தண்ணுமை எக்கம் மத்தளி யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி – நாலாயி:925/1
பிடியினோடு வண்டு இசை சொல துயில்கொளும் பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:960/4
பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டு இசை சொலும் பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:963/4
அரிய இன் இசை பாடும் நல் அடியவர்க்கு அருவினை அடையாவே – நாலாயி:967/4
குறவர் மாதர்களோடு வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும் வேங்கடத்து – நாலாயி:1049/3
வந்தனை செய்து இசை ஏழ் ஆறு அங்கம் ஐந்து வளர் வேள்வி நான்மறைகள் மூன்று தீயும் – நாலாயி:1139/3
கோங்கு அரும்பு சுரபுன்னை குரவு ஆர் சோலை குழாம் வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டு – நாலாயி:1141/3
அருந்தி இன் இசை முரன்று எழும் அளி குலம் பொதுளி அம் பொழிலூடே – நாலாயி:1148/3
தென்ன என்று வண்டு இன் இசை முரல்தரு திருவயிந்திரபுரமே – நாலாயி:1149/4
நல்ல இன் இசை மாலை நாலும் ஓர் ஐந்தும் ஒன்றும் நவின்று தாம் உடன் – நாலாயி:1197/3
கந்தாரம் அம் தேன் இசை பாட மாடே களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து – நாலாயி:1218/3
வண்டு பல இசை பாட மயில் ஆலும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1230/4
தேதென என்று இசை பாடும் திருத்தேவனார்தொகையே – நாலாயி:1248/4
வண்டு தான் இசை பாடிடும் நாங்கூர் வண்புருடோத்தமமே – நாலாயி:1260/4
தேன் இரைத்து உண்டு அங்கு இன் இசை முரலும் திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1339/4
பொறி கொள் சிறை வண்டு இசை பாடும் புள்ளம்பூதங்குடி தானே – நாலாயி:1348/4
மன்னும் முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட – நாலாயி:1353/3
இசை கொள் வேத நூல் என்று இவை பயந்தவனே எனக்கு அருள்புரியே – நாலாயி:1369/2
தேறல் மாந்தி வண்டு இன் இசை முரல் திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1374/4
தென்ன என்ன வண்டு இன் இசை முரல் திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1375/4
நல் இசை மாலைகள் நால் இரண்டும் இரண்டும் உடன் – நாலாயி:1387/3
இருக்கினில் இன் இசை ஆனவனே – நாலாயி:1454/4
நறு நாள்மலர் மேல் வண்டு இசை பாடும் நறையூரே – நாலாயி:1491/4
படையான் வேதம் நான்கு ஐந்து வேள்வி அங்கம் ஆறு இசை ஏழ் – நாலாயி:1514/3
மன்னும் முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட – நாலாயி:1596/3
இரு நீர் இன் தமிழ் இன் இசை மாலைகள் கொண்டு தொண்டீர் – நாலாயி:1737/3
தேன் உலாம் வரி வண்டு இன் இசை முரலும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1754/4
உலவு கால் நல் கழி ஓங்கு தண் பைம் பொழிலூடு இசை
புலவு கானல் களி வண்டு இனம் பாடு புல்லாணியே – நாலாயி:1775/3,4
என்றும் இரவும் பகலும் வரி வண்டு இசை பாட – நாலாயி:1806/3
இன் இசை மாலைகள் ஈரேழும் வல்லவர்க்கு ஏதும் இடர் இல்லையே – நாலாயி:1921/4
இன் இசை வண்டு அமரும் சோலைவாய் மாலை சேர் – நாலாயி:2724/6
இன் இசை யாழ் பாடல் கேட்டு இன்புற்று இரு விசும்பில் – நாலாயி:2725/6
இன் இசை ஓசைக்கு இரங்காதார் மால் விடையின் – நாலாயி:2734/1
இன் இசை ஓசையும் வந்து என் செவி தனக்கே – நாலாயி:2762/2
ஈர தமிழின் இசை உணர்ந்தோர்கட்கு இனியவர் தம் – நாலாயி:2810/2
மணம் தரும் இன் இசை மன்னும் இடம்-தொறும் மா மலராள் – நாலாயி:2850/2
ஆடி ஆடி அகம் கரைந்து இசை
பாடி பாடி கண்ணீர் மல்கி எங்கும் – நாலாயி:3042/1,2
வாட்டம் இல் புகழ் வாமனனை இசை
கூட்டி வண் சடகோபன் சொல் அமை – நாலாயி:3052/1,2
உன்னை சிந்தைசெய்துசெய்து உன் நெடு மா மொழி இசை பாடி ஆடி என் – நாலாயி:3069/1
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3142/3
நூல் என்கோ நுடங்கு கேள்வி இசை என்கோ இவற்றுள் நல்ல – நாலாயி:3159/2
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேன் – நாலாயி:3276/3
வீவு இல் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன் – நாலாயி:3277/3
நா இயலால் இசை மாலைகள் ஏத்தி நண்ண பெற்றேன் – நாலாயி:3278/3
உரிய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேற்கு – நாலாயி:3280/3
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இ பத்தால் – நாலாயி:3318/3
மலிய புகுந்து இசை பாடி ஆடி உழிதர கண்டோம் – நாலாயி:3352/4
இரிய புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே – நாலாயி:3354/4
நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார் – நாலாயி:3357/3
இளையாது உன தாள் ஒருங்க பிடித்து போத இசை நீயே – நாலாயி:3425/4
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்லவாழ் – நாலாயி:3437/3
விரவு ஆர் இசை மறை வேதியர் ஒலி வேலையின் நின்று ஒலிப்ப – நாலாயி:3767/2
மல்லிகை கமழ் தென்றல் ஈரும் ஆலோ வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ – நாலாயி:3869/1
இசை-மின்கள் (1)
இசை-மின்கள் தூது என்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல் – நாலாயி:2508/1
இசை-மின்களே (1)
இன்னம் செல்லீரோ இதுவோ தகவு என்று இசை-மின்களே – நாலாயி:2507/4
இசைக்கிற்றிராகில் (1)
இசைக்கிற்றிராகில் நன்றே இல் பெறும் இது காண்-மினே – நாலாயி:3287/4
இசைக்கும் (1)
இன் இசைக்கும் வில்லிபுத்தூர் இனிது அமர்ந்தாய் உன்னை கண்டார் – நாலாயி:133/2
இசைகள் (2)
அரு மறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும் அங்கங்கள் அவை ஆறும் இசைகள் ஏழும் – நாலாயி:1178/3
தூது செய் கண்கள் கொண்டு ஒன்று பேசி தூ மொழி இசைகள் கொண்டு ஒன்று நோக்கி – நாலாயி:3877/2
இசைகாரர் (1)
பால் ஏய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின் – நாலாயி:2953/3
இசைத்தனர் (2)
எழு-மின் என்று இருமருங்கு இசைத்தனர் முனிவர்கள் – நாலாயி:3981/3
காளங்கள் வலம்புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆள்-மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று – நாலாயி:3984/2,3
இசைத்தால் (1)
இசை-மின்கள் தூது என்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல் – நாலாயி:2508/1
இசைத்து (1)
தொக்கு பல்லாண்டு இசைத்து கவரிசெய்வர் ஏழையரே – நாலாயி:3626/4
இசைந்த (3)
வேறு இசைந்த செக்கர் மேனி நீறு அணிந்த புன் சடை – நாலாயி:793/1
சூதனாய் கள்வனாகி தூர்த்தரோடு இசைந்த காலம் – நாலாயி:887/1
இசைந்த அரவமும் வெற்பும் கடலும் – நாலாயி:2345/1
இசைந்து (4)
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும் இசைந்து உடனே என்று-கொலோ இருக்கும் நாளே – நாலாயி:656/4
ஏறும் ஏறி இலங்கும் ஒண் மழு பற்றும் ஈசற்கு இசைந்து உடம்பில் ஓர் – நாலாயி:1841/1
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து – நாலாயி:2344/4
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் வல்வினையை – நாலாயி:2610/1
இசைப்ப (4)
பண் பல பாடி பல்லாண்டு இசைப்ப பண்டு – நாலாயி:112/3
அவையுள் நாகத்து_அணையான் குழல் ஊத அமரலோகத்து அளவும் சென்று இசைப்ப
அவியுணா மறந்து வானவர் எல்லாம் ஆயர்பாடி நிறைய புகுந்து ஈண்டி – நாலாயி:281/2,3
பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப
ஆண்டார் வையம் எல்லாம் அரசு ஆகி முன் ஆண்டவரே – நாலாயி:1462/1,2
சிலம்பும் செறி கழலும் சென்று இசைப்ப விண் ஆறு – நாலாயி:2371/1
இசைப்பாரே (1)
சால பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே – நாலாயி:499/6,7
இசைப்பு (1)
இசைப்பு இன்றி நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம் அன்று இது – நாலாயி:3287/2
இசைபாடும் (2)
காமரங்கள் இசைபாடும் கணபுரத்து என் கரு மணியே – நாலாயி:722/3
தென்ன என்று அளிகள் முரன்று இசைபாடும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1756/4
இசைய (2)
இரும் குறள் ஆகி இசைய ஓர் மூவடி வேண்டி சென்ற – நாலாயி:2568/3
இயலும் பொருளும் இசைய தொடுத்து ஈன் கவிகள் அன்பால் – நாலாயி:2796/1
இசையகில்லா (1)
எனக்கு உற்ற செல்வம் இராமாநுசன் என்று இசையகில்லா
மன குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னிய சீர் – நாலாயி:2795/1,2
இசையாய் (1)
செல்லா நல் இசையாய் திருவிண்ணகரானே – நாலாயி:1476/4
இசையால் (2)
இன் இசையால் சொன்ன செம் சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே – நாலாயி:1127/4
இன் இசையால் சொன்ன செம் சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார் – நாலாயி:1767/3
இசையிலம் (1)
இசை-மின்கள் தூது என்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல் – நாலாயி:2508/1
இசையின் (2)
இறப்பு எதிர் காலம் கழிவும் ஆனானை ஏழ் இசையின் சுவை-தன்னை – நாலாயி:1269/2
எண்ணில் நுண் பொருள் ஏழ் இசையின் சுவை தானே – நாலாயி:3975/2
இசையினொடு (1)
கலியன் தமிழ் இவை விழுமிய இசையினொடு
ஒலி சொலும் அடியவர் உறு துயர் இலரே – நாலாயி:1717/3,4
இசையும் (5)
எண்_இல் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையும் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர் – நாலாயி:1229/3
என்றும் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையோர் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர் – நாலாயி:1239/3
இலங்கிய நால் மறை அனைத்தும் அங்கம் ஆறும் ஏழ் இசையும் கேள்விகளும் எண் திக்கு எங்கும் – நாலாயி:1285/3
இசையும் கருமங்கள் எல்லாம் அசைவு இல் சீர் – நாலாயி:2088/2
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம் – நாலாயி:2808/3
இசையும்-கொல் (2)
இசையும்-கொல் ஊழி-தோறு ஊழி ஓவாதே – நாலாயி:2580/9
என்று யாம் தொழ இசையும்-கொல்
யாவகை உலகமும் யாவரும் இல்லா – நாலாயி:2581/2,3
இசையே (1)
யாழின் இசையே அமுதே அறிவின் பயனே அரி ஏறே – நாலாயி:3423/4
இசையொடும் (3)
எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும்
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே – நாலாயி:3074/3,4
ஏத்திய தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும்
நா-தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே – நாலாயி:3472/3,4
தீது இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும் வல்லார் – நாலாயி:3692/3
இசையோர் (1)
முறையால் வளர்க்கின்ற முத்தீயர் நால் வேதர் ஐ வேள்வி ஆறு அங்கர் ஏழின் இசையோர்
மறையோர் வணங்க புகழ் எய்தும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1221/3,4
பண் (32)
பண் பல பாடி பல்லாண்டு இசைப்ப பண்டு – நாலாயி:112/3
பண் பகர் வில்லிபுத்தூர் கோன் பட்டர்பிரான் சொன்ன பத்தே – நாலாயி:191/4
பண் நேர் மொழியாரை கூவி முளை அட்டி பல்லாண்டு கூறுவித்தேன் – நாலாயி:252/2
பண் இன்பம் வர பாடும் பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே – நாலாயி:263/4
பண் அறையா பணிகொண்டு பரிசு அற ஆண்டிடும்-கொலோ – நாலாயி:305/4
கோவலர் கோவிந்தனை குறமாதர்கள் பண் குறிஞ்சி – நாலாயி:352/3
பண் பல செய்கின்றாய் பாஞ்சசன்னியமே – நாலாயி:574/4
பண் அழிய பலதேவன் வென்ற பாண்டிவடத்து என்னை உய்த்திடு-மின் – நாலாயி:623/4
பண் பகரும் வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்து – நாலாயி:680/3
பண் பகரும் வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்து – நாலாயி:680/3
தென்ன என வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்துள் – நாலாயி:682/3
பண் கடந்த தேசம் மேவு பாவ நாச நாதனே – நாலாயி:778/2
பண் உலாவு மென் மொழி படை தடம் கணாள் பொருட்டு – நாலாயி:842/1
பண் ஆர் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே – நாலாயி:1037/4
பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்ச பகு வாய் கழுதுக்கு இரங்காது அவள்-தன் – நாலாயி:1223/1
பண் இன் மொழியார் பைய நட-மின் என்னாத முன் – நாலாயி:1478/2
பண் ஆர வண்டு இயம்பும் பைம் பொழில் சூழ் தண் சேறை அம்மான்-தன்னை – நாலாயி:1585/3
கொழுவிய செழு மலர் முழுசிய பறவை பண்
எழுவிய கணபுரம் அடிகள்-தம் இடமே – நாலாயி:1713/3,4
பண் உலாம் மென் மொழி பாவைமார் பணை முலை அணைதும் நாம் என்று – நாலாயி:1811/1
பண் புரிந்த நான்மறையோன் சென்னி பலி ஏற்ற – நாலாயி:2127/1
பண் தரு வேதங்கள் பார் மேல் நிலவிட பார்த்தருளும் – நாலாயி:2845/3
பண் தரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய் – நாலாயி:2854/1
பண் தலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இ பத்தும் வலார் – நாலாயி:3098/3
பண் கொள் சோலை வழுதி நாடன் குருகை_கோன் சடகோபன் சொல் – நாலாயி:3186/3
பண் கொள் ஆயிரத்து இ பத்தால் பத்தர் ஆக கூடும் பயிலு-மினே – நாலாயி:3186/4
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்து – நாலாயி:3202/3
கவிகளே கால பண் தேன் உறைப்ப துற்று – நாலாயி:3203/2
பண் தான் பாடி நின்று ஆடி பரந்து திரிகின்றனவே – நாலாயி:3353/4
பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவண்வண்டூர்க்கு – நாலாயி:3461/3
பண்பு உடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேல்-மின் – நாலாயி:3833/1
பண் ஆர் தமிழ் ஆயிரத்து இ பத்தும் வல்லார் – நாலாயி:3868/3
பண் ஆர் பாடல் இன் கவிகள் யானாய் தன்னை தான் பாடி – நாலாயி:3961/3
பண்கள் (5)
பாண் தகு வண்டு இனங்கள் பண்கள் பாடி மது பருக – நாலாயி:354/3
மது உண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே – நாலாயி:969/4
வெறி கொள் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே – நாலாயி:970/4
பண்கள் அகம் பயின்ற சீர் பாடல் இவை பத்தும் வல்லார் – நாலாயி:1537/3
பண்கள் தலைக்கொள்ள பாடி பறந்தும் குனித்தும் உழலாதார் – நாலாயி:3166/3
—————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply