ஸ்ரீ நம்மாழ்வார் பல பெயர்கள் கொண்டவர்.
- சடகோபன்
- மாறன்
- காரிமாறன்
- பராங்குசன்
- வகுளாபரணன்
- குருகைப்பிரான்
- குருகூர் நம்பி
- திருவாய்மொழி பெருமாள்
- பெருநல்துறைவன்
- குமரி துறைவன்
- பவரோக பண்டிதன்
- முனி வேந்து
- பரப்ரம்ம யோகி
- நாவலன் பெருமாள்
- ஞான தேசிகன்
- ஞான பிரான்
- தொண்டர் பிரான்
- நாவீரர்
- திருநாவீறு உடையபிரான்
- உதய பாஸ்கரர்
- வகுள பூஷண பாஸ்கரர்
- ஞானத் தமிழுக்கு அரசு
- ஞானத் தமிழ் கடல்
- மெய் ஞானக் கவி
- தெய்வ ஞானக் கவி
- தெய்வ ஞான செம்மல்
- நாவலர் பெருமாள்
- பாவலர் தம்பிரான்
- வினவாது உணர்ந்த விரகர்
- குழந்தை முனி
- ஸ்ரீவைணவக் குலபதி
- பிரபன்ன ஜன கூடஸ்தர்
- மணிவல்லி
- பெரியன்
நம்மாழ்வார் என்னும் சடகோபனின் அம்சமே சடாரி என்று அழைக்கப்படுகிறது என்பர் பெரியோர். சடம் + ஹரி ( பாதம் ) சடாரி என்று அழைக்கப்படுவது சாலப் பொருத்தமே.
வியாசாவதாரம் எடுத்துப் பிரம்ம சூத்திரங்களை இயற்றிய இறைவனே நம்மாழ்வாராக அவதரித்துத் அந்தப் பிரம்ம சூத்திரத்தினுடையவும்,
வேத வாக்கியங்களினுடையவும் அர்த்தங்களை விளக்க வேண்டி திருவாய்மொழியை அருளிச் செய்ததாக வைணவர்கள் நம்புகின்றனர்.
‘மன்னும் வழுதி வளநாடன் மாறன் திருக்குருகூர் சடகோபன் தமிழ்’ என்று நாதமுனி குறிப்பிடுவதை வைத்து
இவ்வாழ்வார் பாண்டிய மரபினர் என்று கூற முடியும்.
“குறுமுனிவன் முத்தமிழும் எம் குறளும்
சிறுமுனிவன் வாய் மொழியின் சேய்”-என்று வள்ளுவர், நம்மாழ்வார் பாசுரங்கள் குறித்து, கூறியதாகச் சொல்லப்படுகிறது.
நஞ்சீயர் அருளிச் செயல்கள் அனுபவ ஸ்ரேஷ்டம்
உளன் –
வாயும் -ஐவாய-நைவாயே
கோழி கூவும் என்னுமால் -சந்தோசம் ஆழி வண்ணன் வரும் பொழுதாயிற்று -கோழி கூவும் என்னுமால் தோழி நான் செய்கேன் -சுரம் வைத்து அனுபவம்
அருள் கொண்டாடும் நஞ்சீயர்-மிக்கதே -கீதாச்சார்யன் அருளியவற்றை விட திருவாய் மொழி மிக்கதே
——————-
🌷 பெரியாழ்வார் – விஷ்ணு சித்தன், பட்டர் பிரான், புதுவை மன்னன், வேயர் குலத்து சிற்றரசன்
🌷 நம்மாழ்வார் – சடகோபர், கரிமாறன், பராங்குசன், குறுகைக்காவலன், தமிழ் மாறன், திருகுறுகூர் பெருமான், வேதம் செய்த தமிழ் மாறன்
🌷 ஆண்டாள் – கோதை, சூடி கொடுத்த சுடர்கொடி, வைணவம் தந்த செல்வி
🌷 திருமங்கை ஆழ்வார் – கலி நாடன், மங்கையர் கோன், மங்கை வேந்தன், அருள் மாரி, பரகாலன், கலி கன்றி, திருமங்கை மன்னன், குறையலாளி
🌷 குலசேகர ஆழ்வார் – கொல்லி காவலன், கூடல் நாயகன், கோழிக்கோன், சேரர்கோன்
🌷 திருமழிசை ஆழ்வார் – பக்தி சாரர், சொன்ன வண்ணம் செய்த பெருமான்
🌷 தொண்டர் அடி பொடி ஆழ்வார் – விப்ரநாயனார்
-------- நம்மாழ்வாருடைய அருளிச் செயல்களை ஆழ்ந்து அவகாஹித்துப் பேசும் மதுரகவியாழ்வார் அருள் கொண்டாடும் அடியவர் இன்புற அருளினான் அவ்வருமறையின் பொருள், அருள்கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான், மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்……என் நெஞ்சுள் நிறுத்தினான் (கண்ணினுண் சிறுத்தாம்பு 8-9) என்றருளிச் செய்கிறார்.
“மிக்க வேதியர்” “நன்மையால் மிக்க நான் மறையாளர்கள்” (மதுரகவியாழ்வார்) “ மிக்கார் வேதிவிமலர்” (திருவாய்மொழி 2-9-8)
“வேதநூல் ஓதுகின்றது உண்மை அல்லதில்லை மற்று உரைக்கின்றேன் “ என்று திருமழிசைப்பிரான் (72)
பெரிய ஜீயரும் ஆத்யஸ்யந: குலபதே; என்ற ஸ்ரீஸூக்திக்கு “வைதிக ஸந்தான கூடஸ்தர்” என்று பொருள் சொல்லுகிறார்.
வேதியர் முழு வேதத்தின் அமிர்தமாக அநுபவிப்பது வேதியர் வேதம் இவர்கள் இடத்திலுள்ள ஆதராதிசயத்தை தெரிவிக்கிறது. மறையோர் மறையோர் செஞ்சொல் (பெரிய திருமொழி) லின் கருத்து மறைகளுக்குள்ள பெருமையை வெளியாக்குகிறது.
ஆழ்வார்கள் வேதங்களை செஞ்சொல்லாகக் குறிப்பிடுகிறார்கள்.
யதோ வாசோ நிவர்தந்தே) ஆழ்வார்களும் இந்த வழியில் நின்றே இறைநிலை உணர்வரிது என்று கூறுகிறார்கள்
திருமங்கை ஆழ்வாரும் நான்மறையும் தொடராத பாலகனாய் என்றும் (4-1-8) நான்மறைகளும் தேடிக் காணமாட்டாச் செல்வன் (4-8-7) என்று குறிப்பிடுகிறார்
மறையாய் விரிந்த விளக்கை (8-9-4) வேத நல்விளக்கை (4-3-8) (திருமங்கை மன்னன் )– வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கை (பெரியாழ்வார் 4-3-11) நந்தா விளக்கு என்ற சொற்றொடர் வேதத்தைக் குறிப்பிடுவதாக பெரிய ஜீயர் உள்ளிட ஆசார்யர்கள் திருவுள்ளம் பற்றுவதற்கு எம்பெருமான் வேதவிளக்காக விளங்குவதே காரணம்.
(அன்னமாய் அங்கு அன்று அருமறை பயந்தான் [பெரியதிருமொழி 5-7-3] அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை [112-1-107])
(“பன்னு கலை நால்வேதப் பொருளையெல்லாம் பரிமுகமாய் அருளிய எம்பெருமான் காண்மின்” 7-8-2.)
வேதசப்தேப்ய ஏவாதௌ ப்ருதக்
ஸம்ஸ்தாஞ்ச நிர்மமே-ஆக உலகப் பொருள்களெல்லாம் வேதத்தில் சொல்லப் பட்டவைகள்தான்.(பன்னு நான்மறை பலப் பொருளாகிய 3-1-2, எழில் வேதப் பொருள்களுமாய் 4-1-2) என்று திருமங்கை மன்னன் அருளிச் செய்கிறார். ஒவ்வொரு பொருளிலும் அந்தர்யாமியாக பகவான் இருந்து வருவதால் எல்லாப் பொருள்களும் பகவானாகவே ஆகின்றன.
எம்பெருமான் மறையின் பெரும் பொருள் என்று பேசுகிறார்கள். ஏலுமறைப் பொருளே (பெரியாழ்வார் 1-9 வேதப் பொருளே 2-9) நான் மறையின் பொருளாய் (நாச்சியார் திருமொழி 1-4-10), சாம வேத கீதன் சக்கரபாணி (14) வேதகீதன் (117) (திருமழிசைப்பிரான்), நங்கோது நால்வேதத்திலுள்ளான் (மூன்றாம் திருவந்தாதி11) நால்வேதத்திலுள்ளான்(31) மறைப் பெரும் பொருளை (திருமங்கை ஆழ்வார் 4-3-2) அங்கமாறு வேத நான்குமாகி நின்று அவற்றுளே தங்குகின்ற தன்மையாக (15 திருச்சந்த விருத்தம்) மறையாய நால் வேதத்திலுள்ள மலர் சுடரே (திருவாய்மொழி 3-1-10). இவ்விதம் எம்பெருமானை வேதப் பிரதிபாத்யனாகச் சொல்லி ஆழ்வார்கள் அநுபவிப்பதைப் பார்க்கிறோம்.
எம்பெருமான் ஒரு உருவத்தை எடுத்துக்கொண்டு முதலில் ஸ்ருஷ்டிப்பதால் அவன் படைப்பின் ஆரம்ப காலத்தில் முதல்வனாக நிற்கிறான் என்று வேதமே கூறுகிறது. (ப்ரதமஜா ருதஸ்ய) இதையும் ஆழ்வார்கள் மனதிற்கொண்டு வேத முதல்வன் என்று எம்பெருமானை அநுபவிக்கிறார்கள். வேத முதல்வனை (திருவாய்மொழி 3-5-5) வேத முதல்வர் (நாச்சியார் திருமொழி 1-10-2). வேத சம்பந்தத்தோடு எம்பெருமானை அநுபவிப்பதில் இதுவும் ஒரு வழி.
(ரஸோ வை ஸ:)-(ரஸம் ஹி ஏவ அயம் லப்த்வா ஆனந்தீ பவதி
அருங்கரும்பினை கனியை, அமுதப் பொதியின் சுவையும் (பெரிய திருமொழி 7-10-1), பாலும் தேனும் கன்னலும் அமுதுமாகி (திருவாய்மொழி 4-3-10) என்றும் எம்பெருமானை அனுபவிக்கிறார்கள்.
வேதியர் முழுவேதத் தமிர்தத்தை (நம்மாழ்வார் 2-5-4), அந்தணர்தம் அமிர்தத்தினை (பெரியாழ்வார் 5-4-11), நால்வேதக் கடல் அமுதத்தை (பெரியாழ்வார் 4-3-11) என்று வேத சம்பந்தத்தோடு எம்பெருமானை அமிருதமாக அனுபவிக்கின்றனர்
வேதம் முழுவதும் எம்பெருமானைச் சொல்லுவதுதான் என்பதைக் காண்பிக்க முழு வேதத் தமுதத்தை என்று பேசுகின்றனர். வேதங்களின் மந்திரங்கள் ரிக், யஜுர், ஸாம, அதர்வணாத்மகமாக இருந்தாலும் எல்லா வேதங்களும் முடிவில் எம்பெருமானைத்தான் கூறுகின்றன என்பதைக் காண்பிக்க நால்வேதக் கடல் அமுதத்தை என்று கூறப்படுகின்றது.
(வேதமாகி, வேள்வியாகி, [திருச்சந்தவிருத்தம்]
எல்லா விதமான கஷ்டங்களையும் நிவர்த்தி பண்ணி ஜகத்தை ரக்ஷிக்க விலக்ஷணமான ஒரு அவதாரம் செய்ய திருவுள்ளம் பற்றி எம்பெருமான் வேதரூபமான அவதாரத்தை செய்தருளுகிறான்.
விஷ்ணு புராணத்தில் பகவான் வேதமாகவும் வேள்வியாகவும் அவதாரம் செய்கிறான் என்று பராசர பகவான் ஸ்பஷ்டமாக கூறுகிறார். [வேத யஜ்ஞமயம், ரூபம் அசேஷ ஸ்திதௌ ஜகத:] இதைப் பின்பற்றித்தான் ஆழ்வார்களும் பகவானை வேதமாகி நிற்கிறான் என்று அருளிச் செய்கிறார்கள். “நான்மறையாய் வேள்வியாய்” (பெரியாழ்வார் திருமொழி 4-9-5) “மறையானான்” (பெருமாள் திருமொழி 1-4-8), “ வேத நான்குமாகி” (திருமழிசைப்பிரான் 15), “ வேதமாகி வேள்வியாகி (34), “இருக்கலந்த வேத நீதியாகி நின்ற நிர்மலா” (103), வேதத்தை ( திருமங்கை மன்னன் 2-3-2) “ அருமறையும் அவையுமானாய் (4-6-9), நான்மறையானவனே (6-1-6), “ ஓதல் செய் நான்மறை ஆகியும்” (6-1-9), “ வேதமும் வேள்வியும் ஆனான் “ (9-4-9), “வேத நான்காய்” (திருநெடுந்தாண்டகம்) மன்னு மறையும் நான்குமானானை
வேதம் பூமியிலுள்ள பிரத்யக்ஷமான பிருஹ்மமானது ஒன்றும், பிரத்யக்ஷமான தேவர்கள் என்றும் கூறுகிறது. [பிரும்ம பிராஹ்மண ஆத்மநா ஏதேவை தேவா: ப்ரத்யக்ஷம்” ஆழ்வார்களும் “நிலத்தேவர்” என்று குறிப்பிடுவார்கள்.
சிறுமறையோன் (குலசேகரர் 1-10-9), வேங்கட வேதியனை (திருமங்கை மன்னன் 1-9-10), புலம்புரி நூலவனைப் பொழில் வேங்கடவேதியனை (9-9-9), வெண்புரி நூலனை (திருவிருத்தம் 79), தாமரைக்கண்ணும் வைதிகரே (திருவிருத்தம் 94), வெறிகொண்ட தண்டுழாய்வேதியனை (திருவிருத்தம் 95), மெய்ஞான வேதியனை (திருவாய்மொழி 3-1-11), மறைவாணனை (திருவாய்மொழி 4-6-10), வினயேனுடை வேதியனே (திருவாய்மொழி 7-1-2) என்பது போன்ற இடங்களில் ஆழ்வார்கள் பகவானைவேதியனாகவே அனுபவிக்கிறார்கள். வேதியர்கள் பகவானிடம் பக்தியுள்ளவர்களே . தொண்டரடிப்பொடி ஆழ்வார் தனக்கு பக்தி இல்லை அருள் வேண்டும் என்று யாசிக்கும் காலத்தில் நைச்யாநு ஸந்தானம் பண்ணுகிறார். அப்பொழுது “குளித்து மூன்றனலை யோம்பும் குறிகொளந்தணமை தன்னை ஒளித்திட்டேன் “ (திருமாலை 25) என்று அருளிச் செய்வது மறைமுகமாக ப்ராஹ்மண்யத்தின் பெருமையை விளக்குகிறது.
இதர நிரபேக்ஷமாக பெரிய அளவில் பிரதிபாதனம் பண்ணுவதால் பெரிய அளவில் சுலபமாக வேதங்களைக் கொண்டு பகவதனுபவம் பண்ண முடிகிறது. இந்தக் கருத்தைத் திருவுள்ளத்தில் கொண்டு பெரியாழ்வார் “கண்ணா நான்முகனைப் படைத்தானே” (5-1-6) என்ற பாசுரத்தில் “ஓவாதே நமோ நாரணா என்று எண்ணா நாளும்” “ருக், யஜுர்,சாம வேத நான்மலர் கொண்டு உன்பாதம் நண்ணா நாளும்” என்று தனித்தனியாகப் பிரித்துப் பேசுகிறார்.
கண்ணா! நான்முகனைப் படைத்தானே!
காரணா! கரியாய்! அடியேன் நான்
உண்ணா நாள் பசியாவதொன்றில்லை
ஓவாதே ‘நமோநாரணா!’ என்று
எண்ணாநாளும் இருக்கெசுச்சாம
வேத நான்மலர் கொண்டுன் பாதம்
நண்ணா நாள் அவை தத்துறு மாகில்
அன்றெ னக்கவை பட்டினி நாளே. (5-1-6) -அதுதான் எனக்கு உபவாச தினம் என்று அருளிச் செய்கிறார்இங்கு திருவஷ்டாக்ஷரத்தையும் வேத மந்திரங்களையும் தனித்தனியாகப் பிரித்துப் பேசுவது அவைகள் மூலம் ஏற்படக்கூடிய அனுபவ பிரகாரத்தை பற்றியது. திருவஷ்டாக்ஷரத்தால் சிறிய அளவில் பகவதனுபவம் ஏற்படுகிறது என்று திருவுள்ளம் பற்றுவது கவனிக்கத் தக்கது. இங்கு பெரிய ஜீயர் செய்யும் விவரணம் மிகவும் அழகாக அமைந்துள்ளது. “திருமந்திரம் சங்க்ரஹமும் வேதம் விவரணமாயிறே இருப்பது” என்று அருளிச் செய்கிறார். அதுமட்டுமல்ல, “நமோ நாரண என்றது போராமே பெரும் திருப்பாவாடையிலே மண்டுகிறார்” என்று அருளிச் செய்வதும் கவனிக்கத் தக்கது. அரும்பதக்காரர் திருநாமம் சிறிய திருப்பாவாடை வேதம் பெரிய திருப்பாவாடை என்று வர்ணிக்கிறார். உலகத்தில் பசிக்குத் தகுந்தாற்போல் உணவை உட்கொள்வதைப் பார்க்கிறோம். சிறிய அளவில் பசி உள்ளவன் சிறிய திருப்பாவாடையில் உள்ள உணவை உட்கொண்டு திருப்தியடைகிறான். பெரிய பசி உள்ளவன் பெரிய திருப்பாவாடையில் உள்ள உணவை உட்கொண்டு திருப்தியடைகிறான். பெரிய ஆசை உள்ளவன் பெரிய திருப்பாவாடையில் உள்ளதை அனுபவித்து உத்ஸாஹத்துடன் ஈடுபடுகிறான் என்பதைக் கண்டார்கள் மண்டுகிறார் என்று கூறப் படுகிறது. இதனால் சிறிய அளவில் பகவதனுபவம் பண்ண நினைப்பவர்களுக்கு திருநாமம் போதுமானதென்றும் பெரிய அளவில் பகவதனுபவம் பண்ண வேதங்களையே நாட வேண்டும் என்றும் ஆழ்வார்கள் திருவுள்ளம் பற்றுவது வெளியாகிறது.
திருநாமங்களைக் காட்டிலும் வேத மந்திரங்களுக்குள்ள ஏற்றம் தெளிவாக வெளியாகிறது. ஸ்ரீ நம்மாழ்வார் “இருக்கார் மொழியால்” திருவிருத்தப் பாசுரத்தில் இந்த அபிப்பிராயத்தை நன்கு வெளியிட்டுள்ளார்.
“பூஸுரர்களான ப்ராம்ஹணர்கள் ரிக்குகளால் பூர்ணமான மந்திரங்களால் பகவதாராதன ரூபமான பரம தர்மத்தைச் செய்து உலகளந்த எம்பெருமானின் திருவடிகளை வணங்குகின்றனர். அவ்வித வேத மந்திரங்களாகிற ஸாதனம் இல்லாமலிருக்கும் நானும் பகவானும் சேரவொட்டாமல் செய்கிற பாபத்தோடும், அதை அனுஷ்டித்த என்னோடும் நொந்து பழமில்லாமையாலே பசுங்காயைக் கடிப்பாரைப் போல் திருநாமச் சொல் கற்றனம்.” ( இருக்கார் மொழியால் நெறி இழக்காமை உலகளந்த திருத்தாளிணை நிலத்தேவர் வணங்குவர். யாமும் அவா உருக்கா வினையோடும் எம்மோடும் நொந்து கனியின்மையில் கருக்காய் கடிப்பார் போல் திருநாமச் சொல் கற்றனமே” (திருவிருத்தம் 64) என்றருளிச் செய்கிறார்.
எம்பெருமானுடைய ஸ்வரூபாதிகளுக்கு பிரமாணமான வேதம் அவர்களிடம் இருக்கின்றதன்றோ! அவர்களுள் வேதங்களைக் கொண்டு நாள்தோறும் பகவதநுபவம் செய்ய இடமுண்டு. இதை ஸ்ரீ பேயாழ்வார் “அறிவொன்றும்தாள்” என்ற பாசுரத்தில் நன்கு விளக்குகிறார்.
எப்பொழுதும் வேதத்தை செவ்வையாய் அத்யயனம் செய்து ஞானமாகிற பூட்டை தொடுத்து ஐவகையான இந்திரியங்களைத் தொடுத்து தமக்குள் அடக்குகையாகிற வலிய கதவை அடைத்து நன்றாய் பகவானை அறிய வல்லவர்கள் அழகிய கடல் நிறத்தனான ஸர்வேச்வரன் வகையை பிரதி தினமும் அறிவார்கள்”
அறிவென்றும் தாள் கொளுவியைம்புலனும் தம்மில்
செறிவென்னும் திண்கதவம் செம்மி மறை என்றும்
நன்கோதி நன்குணர்வார்கள் காண்பரே நாடோறும்
பைங்கோதவண்ணன்படி” (மூன்றாம் திருவந்தாதி 12)“எம்பெருமானுடைய வடிவழகையும் ஸ்வரூபாதிகளையும் வெளியிடும் வேதங்களைக் கொண்டு பகவதாராதனம் செய்வதால் அவ்விதப் பெரியோர்களுக்கு எம்பெருமானிடத்தில் எப்பொழுதுமே ஈடுபாடு மிகவும் ஆழ்ந்ததாக நிற்கும். அப்படி உள்ள பெரியோர்களையே நாம் ஆச்ரயிக்கவேண்டும்.
இதை ஸ்ரீநம்மாழ்வார் “மேவித்தொழுது” (திருவாய்மொழி 5-2-9) என்ற பாசுரத்தில் வெளியிடுகிறார்.
“மேவித் தொழுதுய்ம்மினீர்கள் வேதப் புனித விருக்கை
நாவில் கொண்டச்சுதன் தன்னை ஞானவிதி பிழையாமே
பூவில் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழு மடியாரும் பகவரும் மிக்கதுலகே” திருவாய்மொழி 5-2-9)(“வைதிகரே அஞ்சனத்தின் ஸ்வபாவமுடைய உன் திருமேனியையும், உன் செந்தாமரைக் கண்களையும் ஸேவித்து
உன் திருவடியை உள்ளபடியே சூடும் ஸ்வபாவமுள்ளவர்கள். ஊருக்கு வெளியில் மேய்ந்து திரும்பும் காலத்தில்
மாட்டு மந்தையிலுள்ள கண்ணுள்ள பசுக்கள் ஊரைக் கண்டதும் கனைக்க அதைக் கேட்டு குருட்டுப் பசுவும் எப்படி கனைக்குமோ,
அப்படியே யானும் சொன்னேன். அடியேன் மற்று எதைச் சொல்லுவேன்”
(“ மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும்
மைப்படியால் உன் திருவடி சூடும் தகைமையினார் எப்படி
யூராமிலைக்கக் குருட்டா மிலைக்கு மென்றும் அப்படி
யானும் சொன்னேன், அடியேன் மற்று யாதென்பனே 94 “)“நால்வகை வேதம் ஐந்து வேள்வி ஆறு அங்கம் வல்லார்
மேலை வானவர் மிக்க வேதியராதிகாலம்
சேலுகள் வயல் திருப்பேர் செங்கண் மாலோடும் வாழ்வார்
சீல மாதவத்தர் சிந்தையாளி என் சிந்தையானே!—திருமொழி 5-9-9(பண்ணி நின் மொழியாய் நரம்பில் பெற்ற பாலையாகி
இங்கே புகுந்து என் கண்ணும் நெஞ்சும் வாயுமிடங் கொண்டான்
கொண்டபின் மறையோர் மனந் தன்னுள் விண்ணுளார் பெருமானை
எம்மானை வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல் வண்ணன் மாமணி வண்ணன்
எம் அண்ணல் வண்ணமே அன்றி வாயுரையாதே) திருமொழி 7-3-7 -என்றுமருளிச் செய்கிறார்.ஸர்வாதிகனாயும், இந்திரன், பிரமன், ருத்திரன் இவர்கள் அறிவதற்குக்கூட துர்லபனாயும்
திருவழுந்தூர் பிராம்மணர்களால் ஸேவிக்கப் பட்டவனாயும் நீல வர்ணத்தை உடையவனுமான
எம்பெருமானை அடியேன் கண்டு களித்தேன்.(பெரியானை யமரர் தலைவர்க்கும், பிரமனுக்கும்,
உரியானை உகந்தானவனுக்கும் உணர்வதனுக்
கரியானை அழுத்தூர் மறையோர்களடி பணியும்
கரியானை அடியேன் கண்டு கொண்டு களித்தேனே திருமொழி 7-6-6)
இங்கு தான் கண்டு களித்த எம்பெருமானுடைய ஏற்றத்தைப் பலவாறாகப் பேசும் பொழுது
அழுந்தூர் மறையோர்கள் அடிபணிவதையும் குறிப்பிடுவதால்
இதனாலும் எம்பெருமானுக்கு ஏற்றம் ஏற்படுவதைக் குறிப்பிடுகிறார்.வெளுத்த நிறத்தை உடைய ஓர் ஸிம்ஹமாய், வளர நின்றுள்ள ஒளியை உடைய பற்களை உடையவனாய்
ஹிரண்யனுடைய சரீரத்தின் மர்மத்தில் நகங்களுடைய பிரதேசத்தை அழுத்தினவனே!
ஸர்வலோக பிரஸித்தமான பிராம்மண்யத்தை உடைத்தாய், உதாத்தானுதாத்தஸ்வரித ப்ரசய ரூபமான
நாலு வகைப்பட்ட ஸ்வரத்தை உடைய வேதத்தை நாவிலே உடையவர்கள் நல்ல உபாயத்தினால்
ஆஸ்ரயியா நிற்கிற பால் நிறக் கடலில் கிடந்த பத்மநாபனல்லயோவானி றத்தோர் சீயமாய் வளர்ந்த வாளை யிற்றவன்
ஊனிறந்து உகிர்த்தல மழுத்தினாயுலாய சீர்
நால் நிறத்த வேதநாவர் நல்ல யோகினால் வணங்கு
பால் நிறக்கடல் கிடந்த பத்மநாபனல்லயோ –23செல்வம் மல்கு தென் திருக்குடந்தை அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க,
ஆடரவமளியில் அரிதுயில் அமர்ந்த பரம ==திருவெழுகூற்றிருக்கை
இங்கு திருக்குடந்தை எம்பெருமான் ஜகத் ரக்ஷணத்தில் அவஹிதனாய்க் கொண்டு திருக்கண் வளருவதற்கு
அங்குள்ள பிராம்மணர்கள் வேத மந்திர மொழிகளால் அவனை வணங்குவதே காரணம் என்று ஆழ்வார் திருவுள்ளம் பற்றுகிறார்.புருஷார்த்தமென்ற புத்தியால் தேவலோகம் ப்ரவேஸிப்பதற்கு யத்தனிக்கக் கூடாது.
எம்பெருமான் அருளாலே மோக்ஷத்தைக் கொடுப்பான்.
மஹா ப்ராம்மணர்களுக்கு அருளாலே மோக்ஷத்தைக் கொடுத்தவனும் மணிவண்ணனுமான
எம்பெருமான் திருவடிகளை நெஞ்சே நீ மறவேல். அவற்றையே நினைப்பாயாக.
(பொருளால் அமருலகம் புக்கியலாகாது,
அருளாலரமருளுமன்றோ நீ மறவேல் நெஞ்சே நினை — இரண்டாம் திருவந்தாதி 4)
இங்கு எம்பெருமான் திருவடிகளை மறக்காமல் தியானம் பண்ணு என்று நெஞ்சைப் பார்த்து ஆழ்வார் சொல்லுகிறார்.“நீராய் நெருப்பாய் நெடுதிலமாய் நின்றானை அன்று
அரக்கன் (இராவணனுடைய) ஊர் கண்டார் பின் காண முடியாமல்
நெருப்பினால் அதை (இலங்கையை) உண்டானை, பெரிய பாடாக்னியாய்,
பெரு விசும்பாய், பின் பிராம்மணர்களின் மந்திரங்களால் பரிசுத்தமான
அக்னி முகத்தாலே உலகத்தை உண்டானை தென்னரங்கத்தில் கண்டேன்.நீரழலாய் நெடுநிதனாய் நின்னை, அன்று அக்க
னூரழாலுண்டானைக் கண்டார் பின் காணாமே
பேரழலாய்ப் பெருவிசும்பாய்ப் பின் மறையேர் மந்திரத்தின்
ஆரழ லாலுண்டானைக் கண்டது தென்னரங்கத்தே.(திருமொழி 5-6-5) என்றருளிச் செய்கிறார்.இங்கு எம்பெருமான் உலகத்தை உட்கொள்வதைக் குறிப்பிடும் காலத்தில்
பிராம்மணர்களின் மந்திரங்களால் பரிசுத்தமான அக்னியால் உலகத்தை உட்கொள்கிறான்
என்று குறிப்பிடுவது பிராம்மணர்களிடத்தில் திருமங்கை மன்னனுக்கு உள்ள பக்தியை வெளியிடுகிறது.ஸத்வோத்தரமான காலத்தில் எழுந்திருந்து உலகம் கற்பனவும்,
கற்றுணர்ந்தவர்களாய் வர்ணசிரேஷ்டர்களாய் உள்ள பிராம்மணர்கள் ஆசைப்படுவனவும்,
கறையோடு கூடின விசாலமான ஓர் ஆழியானடியே ஓதுவதும்
மனனம் பண்ணுவதும் பேராழிக் கொண்டான் திருநாமங்களே.காலை யெழுந்துலகம் கற்பனவும் கற்றுணர்ந்த
மேலைத் தலை மறையோர் வேட்பனவும்
வேலைக்கண் ஓராழியானடியே யோதுவது
மோற்பனவும் பேராழிக் கொண்டான் பெயர்.–முதல் திருவந்தாதி (66)இங்கு அறிவு தலைகாட்டின. உத்க்ருஷ்ட ஜாதியைச் சேர்ந்த அந்தணர்களும் எம்பெருமானுடைய திருவடிகளையே ஆசைப்பட்டு
அவனுடைய திருநாமங்களையே ஓதி மனனம் செய்து வருகிறார்கள் என்று ஆழ்வார் அருளிச் செய்வதால்
பிராம்மண பரிக்ரஹத்தை தனக்கு பிரமாணமாக ஆழ்வார் எடுக்கிறார் என்பது நன்கு வெளியாகிறது.தேவர்கள் ஸம்பத்தோடு அமருவதற்காக உருக்கப்பட்ட நூதனமான நெய்யைக் கொண்டு அக்நியிலே,
ஸந்தியா காலங்களில் ஹவிஸ்ஸை கொடா நின்றுள்ள வேதாத்யயன பரர்களான பிராம்மணர்களுடைய
வேதத்தின் இன்னிசை யானவனே! என்னையாண்டாய்! திருவிண்ணகரத்தில் பொருந்தி நித்திய வாஸம் பண்ணுபவனே!
உன்னை ஸேவிக்கும்படி ஓர் அருளை எனக்கு அருளினாயானால் யான் மனை வாழ்க்கை வேண்டேன்.உருக்குறு நறுநெய்க் கொண்டாரழலி
லிருக்கறு மந்தணர் சந்தியின் வாய் பெருக்க
மொடு அமரர்களமர நல்கு
மிருக்கினி னின்னிசை ஆனவனே.
(ஆண்டாயுன்னைக் காண்பதோரருளெனக் கருளுதியேல் வேண்டேன் மனை வாழ்க்கை விண்ணகர் மேயவனே 6-1-7).இங்கு எம்பெருமானை அனுபவிக்க புகுந்த ஆழ்வார் பிராம்மணர்களின் வேதத்தின் இன்னிசையாக ஆனவனாக அவனை அனுபவிப்பது கவனிக்கத் தக்கது. இங்கும் பிராம்மணனுடைய வேத ஸம்பந்தத்தால் எம்பெருமானுக்கு வந்துள்ள ஏற்றத்தை ஆழ்வார் குறிப்பிடுகிறார்.
வேதவாய்த் தொழிலாளர்கள் அதாவது எப்பொழுதும் வேதமோதிப் போற்றும் வாயை உடையவர்களும் எப்பொழுதும் வைதிக கர்மாக்களைச் செய்பவர்களுமான பிராம்மணர்கள் வாழ்ந்து வருகிறார்கள் (“வேதவாய்த் தொழிலாளர்கள் வாழ் வில்லிபுத்தூர்” நாச்சியார் திருமொழி 1-2-10)
ஸ்வரப் பிரதானமான நான்கு வேதங்களும் கைவந்திருக்கும் அவர்கள் வர்த்திக்கிறார்கள். (“பண்ணூறு நான்மறையோர் புதுவை” 1-5-11)
எம்பெருமானைத் தான் மணம் செய்துகொண்டதாகக் கண்ட கனவைத் தோழிகளிடம் சொல்லும் காலத்தில் வேதங்களை நன்றாக உச்சரிக்க வல்லவர்களான ப்ராஹ்மணர்கள் பரிசுத்தமாக உள்ள வேதங்களை ஓதி அந்தந்தக் கர்மாக்களுக்கு அனுகுணமான மந்திரங்களைக் கொண்டு கர்மாக்களைச் செய்தார்கள். (“வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால் பாசிலை நாணல் படுத்து”…. 1-6-7) என்று குறிப்பிடுகிறாள்.
ஸ்ரீ குலசேகராழ்வார் திருச்சித்திரகூடத்தில் எம்பெருமானை மங்களாசாஸனம் செய்யும் காலத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். அங்குள்ள எம்பெருமான் தில்லை மூவாயிரவர் அந்தணர்கள் ஏத்த அணிமணி யாசனத்தில் எழுந்தருளி யிருக்கிறார். (“அந்தணர்கள் ஒரு மூவாயிரவரேத்த அணிமணி யாஸனத்தில் இருந்தவம்மான்” 1-10-2)
“இரண்டு பூணூல்களை மார்பில் தரித்த அந்தணர்கள்” “அண்டங்களுக்கெல்லாம் நிர்வாஹகனே எங்களுக்குக் கிருபை செய்தருள வேணும்” என்று சொல்லி ஆச்ரயிக்கிறார்கள் (துணை நூல் மார்வினை அந்தணரும் அண்டா எமக்கு அருளாய் என்று அணையும் 1-5-9) என்று குறிப்பிடுகிறார்.
திருக்கோவலூரில் அனன்யப் பிரயோஜனரான மறையாளர்கள் ஸோமயாகம் செய்ய அத்தாலே வயல்களில் செந்நெல் விளையா நிற்கிறது (“தூய நான் மறையாளர் ஸோமம் செய்ய செஞ்சாலி வினை வயலூர் 2-10-1)
ஸப்த ஸ்வரங்களாலும் ஆறு அங்கங்களாலும் பஞ்சமஹா யக்ஞங்களாலும் திரேதாக்னிகளாலும் எம்பெருமானை வந்தனை செய்து இருபொழுதும் நான்மறைகள் சிந்தனை செய்து ஆச்ரயிக்கிற செல்வம் நிறைந்திருக்கிறது. (வந்தனை செய்திசை ஏழாரங்கம் ஐந்து வளர் வேள்வி நான் மறைகள் மூன்று தீயும் சிந்தனை செய்து இருபொழுதும் ஒன்றும் செல்வ 2-10-2)என்றும், கிருஹங்கள் தோறும் வேத கோஷம் வளர, அவிச்சின்ன வேத கோஷத்தால் கீர்த்தி வளரவும், மண்டபங்களிலும், ஊரைக் கிட்டின சாவடிகளிலும் வாரம் ஓதுகிறார்கள். (மாடம்தோறும் மறை வளர, புகழ் வளர, மண்டபமுண்டு ஒளியனைத்தும் வாரம் ஓத 2-10-5) என்றும், ஸர்வகுண ஸம்பன்னர்களான மறையாளர்கள் நிறைந்திருக்கிறார்கள் (சீரேறு மறையாளர் நிறைந்த செல்வம் 2-10-8) (சீரணங்கு மறையாளர் நிறைந்த செல்வ 2-10-10) என்றும் குறிப்பிடுகிறார்.
திருச்சித்திரகூடத்தில்
வாயால் ஓதப்படும் வேதம் குறைவற்றிருப்பதால் ஸ்வாபாவிகமாக ஸம்பத்தை உடைய மறையாளர்கள் நாள்தோறும் கிரமமாக அனுஷ்டித்த அக்னி ஓங்க ஓங்க அத்தாலே அவ்வூருக்குப் புகழ் ஓங்குகிறது. (வாயால் ஓதும் வேதம் மல்கின்ற தொல்சீர் மறையாளர் நாளும் முறையால் வளர்த்த தீ ஓங்க ஓங்க ஓங்கு புகழ் 3-2-2) என்றும்,
இள மங்கையர்கள் அருமாமறை பேசவும் அதைக்கேட்ட செவ்வாய்க்கிளி அந்தணர் சிந்தை புக நான்மறை பாடுகிறது. (இளமங்கையர் அருமாமறை பேசவும் செவ்வாய்க்கிளி அந்தணர் சிந்தைபுக நான்மறைபாடு 2-3-6) என்றும், மூவாயிரம் நான்மறையாளர்கள் எம்பெருமானை நாள்தோறும் முறையால் வணங்குகிறார்கள் (மூவாயிரம் நான்மறையாளர் நாளும் முறையால் வணங்க 3-2-8) என்றும் குறிப்பிடுகிறார்.
காழிச்சீராம விண்ணகரத்தில்
பிரம்மாவை யொத்த மறையோர் வர்த்திக்கிறார்கள் (அயன் அனைய மறையோர் 3-4-10) என்று குறிப்பிடுகிறார்.
திருவாலியில்
ஸந்தியா காலங்களில் செய்ய வேண்டிய அக்நிஹோத்ராதி கர்மாக்கள், மற்ற யக்ஞங்கள் இவைகளை ஸ்ருஷ்டிமுதல் அனுஷ்டித்துக் கொண்டும், நான்கு வேதங்களையும் ஸ்ருஷ்டி முதல் ஓதியும், ஓதுவித்தும் வரும் பிராம்மணர்கள் ஆராதே வர்த்திக்கிறார்கள் (சந்தி வேள்வி சடங்கு நான்மறையோதி, ஓதுவித்து ஆதியாய் வரும் 3-5-6) என்று கூறுகிறார்.
மணிமாடக்கோயிலில்
வேதோக்த க்ரமத்தில் வளர்கின்ற திரேதாக்னியை உடையவராய் நாலு வேதத்தை உத்தரிப்பாராய் பஞ்ச மஹா யக்ஞானுஷ்டான ரதர்களாய் ஆறு அங்கம் ஸப்தஸ்வரம் இவைகளை அறிந்தவர்களாய் விலக்ஷணராயுள்ள பிராம்மணர்கள் வணங்குவதால் மிகுந்த புகழ் ஏற்பட்டிருக்கிறது.
“முறையால் வளர்க்கின்ற முத்தீயால் நால்வேதர் ஐ வேள்வியர் ஆறு அங்க ஏழிசையோர் மறையோர் வணங்கப் புகழெய்து 3-8-4” என்று குறிப்பிடுகிறார்.
திருநாங்கூர் வைகுந்த விண்ணகரத்தில்
நித்யமான புகழுடைய பிராம்மணர்கள் வீதியெங்கும் நெருங்கி வர்த்திக்கிறார்கள் (“மன்னுபுகழ் வேதியர்கள் மலிவெய்து” 3-9-5) என்றும்,
இதற்கு இவனே கடவன் என்னும்படி சமைந்த பிராம்மணர்கள் நெருங்கி வர்த்திக்கிறார்கள். அங்குள்ள பிராம்மணர்கள் நிர்தோஷத்வாதிகளாலே வந்த நிரவதிக ஸம்பத்தை உடைத்தாய் அவ்வழியாலே அழகு விளங்கா நின்றுள்ள வேதமும் ஸப்தஸ்வரங்களும் கேள்விகளும் நிறைந்தவர்களாயும் ஆத்மகுண பூர்ணர்களாயுமிருக்கிறார்கள் (“எழில் விளங்கு மறையும் ஏழிசையும் கேழ்விகளும் இயன்ற பெரும் குணத்தோர் மண்ணில் மிகு மறையவர்கள் மலிவெய்து “3-9-2) என்றும்
நித்யமான புகழுடைய வேதியர்கள் மிகுந்திருக்கிறார்கள் (“மன்னுபுகழ் வேதியர் மலிவெய்தும்” 3-9-5) என்றும், யதா பூதவாதியான வேதங்களோடே கூட அவற்றினுடைய நன்றான அங்கங்கள் இவற்றிலுண்டான வாஸனையாலே வரக்கடவ ஆத்மகுணங்களையுடைய, அடக்கம் க்ஷமை அர்த்திகள் அர்த்தித்தபொழுதே அபேக்ஷிதங்களைக் கொடுக்கையாகிற ஔதார்யம் என்றாப்போலே சொல்லுகிற இவற்றால் ஒழிவின்றிக்கே இருக்கிற உதாரரான பிராஹ்மணர்கள் மிகவும் வர்த்திக்கிறார்கள் (“உண்மைமிகு மறையோடு நற்கலைகள் நிறை பொறைகள் உதவுகொடை என்றவற்றி னொழிவில்லாப் பெரிய வண்மைமிகு மறையவர்கள் மலிவெய்து” 3-9-6) என்றும் குறிப்பிடுகிறார்.
திரு அரிமேயவிண்ணகரத்தில்
எம்பெருமானை அனுபவிக்கையே யாத்திரையாம்பணி சமைகையாலே மிக்கப் புகழை உடைய பிராம்மணர்கள் வர்த்திக்கிறார்கள் (“பெரும்புகழ் வேதியர் வாழ்” 3-10-1) என்றும், நாள் செல்லச் செல்ல மிக்குவரா நின்றுள்ள நிரவதிக ஸம்பத்தை உடையராய் அத்தாலே அழகு விளங்க நிற்பாராய், வேதத்தைக் கரைகண்டு இருப்பாராய் ஸப்தஸ்வரங்களையும் மற்றுமுண்டான அங்கங்களையும் அதிகரித்து இவர்களில் மேற்பட அதிகரித்தாரில்லை என்னும்படி அதிலுண்டான வாஸனையாலே ஆத்ம குணப்பிரசுரர்களாய் ஜகத் ஸ்ருஷ்டி பண்ணவல்ல பிரும்மாவைப் போலுள்ளவர்களுமான பிராம்மணர்கள் வர்த்திக்கிறார்கள். (“என்றுமிகு பெருஞ்செல்வத்தெழில் விளங்கு மறையோர் ஏழிசையும் கேழ்விகளும் இயன்ற பெருங்குணத்தோர் அன்றுலகம் படைத்தவனே அனையவர்கள்” 3-10-2).
அவ்வூரில் முழங்கும் ஒலிகளை 5ம் பாட்டில் வெளியிடுகிறார். ஆகாசத்தில் சென்று வியாபரிக்கிற வாக்ய கோஷங்களும் வண்டினங்களின் ஒலியும் அருமறையின் ஒலியும் ஆடுகிற ஸ்திரீகளுடைய சிலம்பின் ஒலியும் அண்டமுறும் அலையுள்ள கடலின் ஒலியும் திகழ்வதாகக் கூறுகிறார். (“அண்டமுறும் முழவு ஒலியும் மடவார் சிலம்பின் ஒலியும் அண்ட முறுமலை கடலின் ஒலிதிகழும்” 3-10-5) பல ஒலிகளுக்கிடையில் வேத ஒலியும் குறிப்பிடப்படுகிறது. வேத ஒலியின் தனிச்சிறப்பை வெளியிட அருமறை என்ற சொற்றொடர் பலவழிகளில் வேதத்திற்குள்ள அருமையை வெளியிடுகிறது.
நாவாலும் மனத்தாலும் மந்திரங்கள், நால் வேதம், ஐந்து வேள்வியோடு ஆறங்கம், இவைகளை அப்யஸித்து மற்றக்கலைகளையும் பயின்று பகவத் விஷயத்திற்குத் தகுதியான பரிசுத்தாந்தக் கரணத்தை உடைய பிராம்மணர்கள் பயிலுவதால் அழகு உண்டாகியிருக்கிறது. (“நாமனத்தால் மந்திரங்கள் நால்வேதமைந்து வேள்வி யோடா றங்கம் நவின்றுக் கலை பயின்றங்கா மனத்து மறையவர்கள் பயிலுமணி” 3-10-7) என்றும், யாகசாலைகள் நிறைந்திருக்கின்றன, பரிசுத்தரான மறையோர்கள் கூடித்திரளுகையாலுண்டான ஆரவாரம் மிகுந்திருக்கிறது. (“சாலைகள் தூமறையோர் தொக்கிண்டித் தொழுதியோடு” 3-10-8) என்றும், மஹாப்பிராம்மணர்கள் மாமலர்கள் தூவி அங்கே அஞ்ஜலி பண்ணிக்கொண்டு நின்று ஹரி! உன் திருவடிகளே சரண் என்று ஸ்தோத்திரபூர்வமாக ஆச்ரயிக்கிறார்கள் (“மாமறையோர் மாமலர்கள் தூவி அஞ்சலித் தங்கு அரிசரண் என்றிறைஞ்சும்” 3-10-9) என்றும் குறிப்பிடுகிறார்.
திருத்தேவனார்தொகையில்
அழகுமிக்கிருந்த ஐச்வரியத்தை உடையவராய் அழகிய வேதங்களைப் பரிசீலனம் பண்ணுகின்ற மறையோர் நிறைந்துள்ளார்கள் (“ ஏராரும் பெரும் செல்வத்தெழில் மறையோர்” 4-1-8) என்று குறிப்பிடுகிறார்.
திருவண் புருஷோத்தமத்தில்
திரேதாக்னி, சதுர்வேதம், பஞ்சமஹா யக்ஞங்கள் ஆறு அங்கங்கள் இவைகளைப் பிறருக்குக் கற்பிக்கவல்ல பிராம்மணர்கள் நிறைந்திருக்கிறார்கள் “நல்ல வெந்தழல் மூன்று நால் வேதம் ஐ வேள்வியோடாறங்கம் வல்ல அந்தணர் மல்கிய” 4-2-2) என்று கூறுகிறார்.
திருநாங்கூரில்
பிராஹ்மண்யத்தால் வந்த ஆதிக்யத்தை (“ சிறப்புடை மறையோர் நாங்கை” 4-3-2) என்றும், பிரம்மாவைப் போன்றவர்களாயும், த்ருடமான உக்திகளை (வேதங்களை) உடையவர்களுமான பிராஹ்மணர்கள் வஸிக்கிறார்கள் (“பங்கயத்த அயன் அவனனையத் திடமொழி மறையோர் நாங்கை” 4-3-3) என்றும், வேத ஸம்பத்தை உடைய நான்மறையோர்கள் வஸிக்கிறார்கள் (“செல்வ நான்மறையோர் நாங்கை” 4-3-6) என்றும், கண்டபடியே சொல்லக் கடவரான பிராம்மணர்கள் வஸிக்கிறார்கள் (“செஞ்சொல் நான்மறையோர் நாங்கை” 4-3-7) என்றும், ஸர்வகாலத்திலும் ஸர்வேச்வரனே ரக்ஷகனென்று தெளிவுள்ள பிராஹ்மணர்கள் வஸித்துவருகிறார்கள் “தெளிந்த நான்மறையோர் நாங்கை” 4-3-) என்றும், பிராம்மண்ய பலத்தாலே ஒளிவிடா நின்றுள்ள நாலு வகைப்பட்ட ஸமஸ்த வேதங்களும், ஆறு அங்கங்களும், ஸப்த ஸ்வரங்களும், கேழ்விகளும், எட்டுத்திக்குகளிலும், எங்கும் சப்தியா நிற்கின்றன. அத்தகைய பெரும் செல்வம்அங்கு திகழ்கிறது. (“இலங்கிய நான் மறையனைத்தும் அங்கமாறு மேழிசையும் எண்டிக்கெங்கும்” 4-4-8) என்றும், காலம் செல்லச் செல்லக் குறைந்து காட்டாதே உயர்ந்த செல்வத்தை உடையவராய் ஓங்கி இருந்துள்ள நான்மறையை நாவாலே தாங்கவல்ல பிராம்மணர்கள் வசிக்கிறார்கள் (“ஊழிதோறு மூழிதோறும் உயர்ந்த செல்வத்து ஓங்கிய நான்மறையனைத்துந் தாங்கும்” 4-4-9) என்றும் குறிப்பிடுகிறார்
திருமணிக்கூடத்தில்
நாவினுடையவியாபாரமான வேதாத்யயனமுள்ளவர்கள் தர்மத்தை உத்பாதனம் பண்ண உதாரணமான கை கொண்டு வேதங்களால் விதிக்கப்பட்டுள்ள யாகங்களை அனுஷ்டிக்கிறார்கள். அத்யயனம் பண்ணினதால் ஆந்ருசம்ஸ்ய பிரதானராக விளங்குவதால் ஆர்த்த விஷயங்களில் இரக்கத்தை உடையராய் தர்மங்களை உத்பாதனம் பண்ணுகிற உதாரமான கைகளைக் கொண்டு அக்னித்திரயங்களைக் கொண்டு கர்மாக்களை அனுஷ்டிக்கிறார்கள். பகவானுக்கு ஆச்ரித விரோதி நிரஸனம் ஸ்வதர்மமானாப் போலே அவ்வூரிலுள்ள பிராம்மணர்களுக்கு அத்யயநமும் அனுஷ்டானமும் ஸ்வதர்மமாகி நிற்கிறது. (“நாத்தொழில் மறைவல்லார்கள் நயந்து அறம்பயந்த வண்கை தீத்தொழில் பயிலும்” 4-5-3) என்றும் கூறுகிறார்.
திருக்காவளம்பாடியில்
மன்னுமறையவர்கள் பலர் வாழ்கிறார்கள் (“மன்னுமறையவர் வாழும்” 4-6-1 மற்றும் 4-6-10) என்று கூறுகிறார்
திருவெள்ளக்குளத்தில்
விச்சேதி யாதே ஸாவதி யன்றிக்கே இருந்துள்ள பெரும் புகழுடைய பிராம்மணர்கள் இருந்து வருகிறார்கள் (“ நந்தா பெரும்புகழ் வேதியர் “4-7-2) என்றும், ஸர்வேச்வரனுடைய புகழ் ஹேயபிரத்யனீகமாய் கல்யாணைகதானமாயிருக்கும். அப்படியே அவ்வூரில் பிராம்மணர்கள் புகழும் இருக்கிறது (“நன்றாய் பெரும் புகழ் வேதியர்” 4-7-3) என்றும் குளப்படியிலே கடலை மடுத்தாப் போலே அவ்வூரிலுள்ள பிராம்மணர்களின் புகழுக்கு பூமியில் இடம் போராது (“நாடு ஆறு புகழ் வேதியர் மன்னியர்” 4-7-5) என்றும் பரஸ மிருத்யேகப் பிரயோஜனராய் ஆந்ருசம்ஸ்யபிரதானரான பிராம்மணர்கள் மன்னுகிறார்கள். (“நல்லார் பலர் வேதியர் மன்னிய” 4-7-6) என்றும், நாலுவகைப்பட்ட வேதங்களின் கரை கண்டு இருக்கிற பிராம்மணர்கள் வஸிக்கிறார்கள். (“நாலாகிய வேதியர் மன்னிய” 4-7-7) என்றும், ஆசாரப்பிரதானரான பிராம்மணர்கள் வர்த்திக்கிறார்கள் (“நல்ல வேதியர் “4-7-8) என்றும், கண்டபோது புகழ்ந்து காணாதபோது என்செய்தோ மென்று வேறாதே இவர்கள் குணங்களைப் புகழப்பெற்று நாப்படைத்த பிரயோஜனம் பெற்றோம் என்னும்படியான பிராம்மணர்கள் இருந்து வருகிறார்கள். (“ நாவார் புகழ் வேதியர் மன்னிய” 4-7-9) என்றும், பரம பக்தி யுக்தர்களான பிராம்மணர்கள் வசித்து வருகிறார்கள் (“நல்லன்புடைய வேதியர் மன்னிய” 4-7-10) என்றும் குறிப்பிடுகிறார்.
திருப்பார்த்தன் பள்ளியில்
தெற்குத் திக்கிற்கு திலகம் போலேயுள்ள பிராம்மணர்கள் வஸித்து வருகிறார்கள். (“தென்திசைக்கு திலகமென்ன மறையோர்” 4-8-8) என்றும், பூமியில் விலக்ஷணராயுள்ள பிராம்மணோத்தமர்கள் வாஸம் செய்கிறார்கள் (“பாருள் நல்ல மறையோர் “ 4-8-10) என்றும் குறிப்பிடுகிறார்.
திருப்புள்ளம் பூதங்குடியில்
வேதங்களாலே திரேதாக்னிகளையும் வளர்ப்பவர்களாய் அதனாலும் ஸ்திரமான கீர்த்தியாலும், ஔதார்யத்தாலும், க்ஷமையாலும் அதிசயித்திருக்கிற பிராம்மணர்கள் வஸித்து வருகிறார்கள் (“மறையால் முத்தீயவை வளர்க்கும் மன்னுபுகழால் வண்மையால் புறையால் மிக்க வந்தணர் வாழ்”5-1-8) என்றும், யதா பூத வாதிகளான பிராம்மணர்கள் வர்த்திக்கிறார்கள் (“பொய்யா நாவில் மறையாளர்”5-4-7) என்றும் குறிப்பிடுகிறார்
திருவரங்கத்தில்
பிராம்மணர்களால் அனுஷ்டிக்கப்பட்டதாயும், அழகிய சொல்லான வேதத்தில் பிரதிபாதிக்கப்பட்டதுமான யாகத்திலே உண்டான தூபம் கமழுகிறது (“ மறையோர் செஞ்சொல் வேள்விப்புகையும் கமழும்” 5-5-7) என்று குறிப்பிடுகிறார்.
திருநறையூரில்:—வர்ண பத கிரம நியதமாய் உள்ள வேதங்களை யதாக்ரமமாக அப்யஸித்து இது காதாசித்கமாய் இருக்கை யன்றிக்கே வேதத்திற்கு ஸ்தாபகராய் போருமிதுவே ஸ்வபாவமுடைய பிராம்மணர்கள் வஸிக்கிறார்கள். வேதத்தில் வாசனை போய் ஆசாரத்தில் ஏதேனும் வைகல்யம் உண்டாயிருக்கை அன்றிக்கே அவர்கள் ஆசாரப் பிரதானர்களாக வர்த்திக்கிறார்கள். (“சொல்லா மறை நான்கோதி உலகில் நிலாயவர் நல்லவர் மறையோர்” 6-4-7) என்றும், வைதிகமான யாகங்களும் விழாக்களும் வீதிகளில் எப்பொழுதுமே நடைபெறுகின்றன (“வேள்வும் விழாவும் வீதியிலென்று மாறாதவூர்” 6-5-8) என்றும், நாலு வேதங்களையும் வல்லரான பிராம்மணர்கள் இங்கு வாழ்கிறார்கள் (“செம்மொழிவாய் நால்வேத வாணர் வாழும்”6-6-10) என்றும், புருஷ புத்திக்கு அதீனமாக இல்லாமையாலே நிர்தோஷமாய் இருக்கிற ச்ருதிகளை நியமங்களோடே ஓதி கேவலாத்யயனம் பண்ணுகை அன்றிக்கே அதனுடைய அனுஷ்டானத்தளவும் போருபவர்களாய் அதுதான் கதாசித்தகமாய் இருக்கை அன்றிக்கே அதுதானே யாத்திரையாய் இருக்குமவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்றும் அங்குள்ளவர்கள் ஸோமயாகம் முதலியவற்றை ஒரு பலத்திற்காக அனுஷ்டிக்காமல் அனன்ய ப்ரயோஜனராய் அனுஷ்டிக்கும் வைலக்ஷண்யத்தை உடையவர்களாக இருக்கிறார்கள். (‘சொல்லார் சுருதி, முறையோதி சோமுச் செய்யும் தொழினோர் நல்லார் மறையோர் பலர் வாழும்”6-7-4) என்றும், நான்கு வேதம், ஐந்து வேள்வி, ஆறங்கம், ஸப்தஸ்வரங்கள் இவைகளை எப்பொழுதுமே நடத்த வல்லவர்களான பிராம்மணர்கள் வஸித்து வருகிறார்கள். தங்களை நோக்குகைக்காகத் தங்களுடைய வித்யா விருத்தங்களாலே அவன்தன்னையும் நோக்க வல்லவர்களான பிராம்மணர்கள் வாழ்கிறார்கள். (‘”வேத நான்கு, ஐந்து வேள்வி அங்கமாறிசை ஏழ் நடையா வல்லவந்தணர் வாழ்” 6-7-7) என்றும், பிரம்மாவோடும் ருத்திரனோடும் ஒத்த பெருமையையுடையவராய் அழியாத ஔதார்யத்தோடு கூடிய கைகளை உடையவர்களான பிராம்மணர்கள் வாழ்ந்துவருகிறார்கள் (செந்தாமரை மேலயனோடு சிவனுமனையப் பெருமையோ நந்தா வெண்கை நறையோர் வாழ்” 5-7-8) என்றும் வேதோக்தமான மஹாயக்ஞங்களை அபிஸம்ஹித பலமாக அனுஷ்டியாநின்றுள்ள பிராம்மணர்களுடைய ஹோமத்தில் உண்டான ஸம்ருத்தமான தூமமானது வளர்ந்து போய் எங்கும் நிறைந்து இருந்து ஆகாசத்தை மறைக்கிறது. இதனால் அவ்வூருக்கு நிரவதிக ஸம்பத்து ஏற்பட்டிருக்கிறது. (“மறையாலும் பெரு வேள்வி கொழும் புகை போய் வளர்ந்து எங்கும் நிறையாத வாள் மூடும் நீள் செல்வ” 6-9-8) என்றும் குறிப்பிடுகிறார்.
திருவழுந்தூரில்:- தருணாக்நிஹோத்ரிகளாய் சாஸ்திரோக்தமான கிரமத்திலே பிராப்தமான காலத்திலே யாகாதிகளைப் பண்ணி இருப்பார்களாய் உள்ள பிராம்மணர்கள், த்ரிஸந்தியிலும் அக்நியில் ஹோமங்கள் செய்துகொண்டு வஸிப்பதால் வீதிகள் தர்சநீயமாக இருந்து வருகின்றன. அவ்வூரிலுள்ளோர் ஓர் பலாபிஸந்தியையும் பண்ணி யாகத்தை செய்வதில்லை. யாகானுஷ்டானத்தையே யாத்ரையாக அவர்கள் கொண்டுள்ளார்கள். யக்ஞங்களுக்குப் பலமான மழை அவர்களுடைய தேஜஸ்ஸு காரணமாக யாகத்தை ஆரம்பிப்பதற்கு முந்தியே உண்டாகிவிடுகிறது (“முந்தி வானம் மழை பொழியும் மூவா உருவில் மறையாளர் அந்திமூன்று மனலோம்பு மணியார் வீதி” 7.5.1) என்றும், யதாபூதவாதியான வேதம் கைவந்துள்ள பிராம்மணர்கள் வஸித்து வருகிறார்கள் (“செஞ்சொல் நான்மறையோர்” 7.6.5.) என்றும், வீதிகள்தோறும் அநாதியான நாலு வேதங்களும் திரைக்களப்பத்தை உடைய கடல்போல கோஷியாநிற்கிறது (“முது நான்மறை வீதிதோறும் அலையானும் கடல்போல் முழங்கும்”7.6.8.) என்றும், பிராதேசிக பிரமாண்யமன்றிக்கே மந்திரார்த்தவாதாதி ஸர்வ பாகவியாப்த பிரமாண்யத்தை உடையவைகளாயும் அதனால் நிறைந்த புகழை உடையவைகளாயும் உள்ள நான்கு வேதங்கள் மற்றும் சிரவணத்தாலே அறிய வேண்டிய தத்துவங்கள் இவைகளை அதிகரித்துப் பஞ்ச மஹா யக்ஞங்களை அனுஷ்டித்துத் தனியே பிரம்மாவைப் போலே ஜகத்தை சிருஷ்டிக்கவல்ல பிராம்மணர்கள் நித்ய வாஸம் பண்ணுகையால் நிரவதிக ஸம்பத்து ஏற்பட்டிருக்கிறது (“எங்குமலி நிறைபுகழ் நால் வேதமைந்து வேள்விகளும் இயன்ற தன்மை அங்கு மலத்தயனனை யார் பயிலும் செல்வ” 7.8.1) என்றும், வித்யாவினயங்களால் ஸம்பந்நர்களாயும் பழைய கீர்த்தியை உடையவர்களுமான பிராம்மணர்கள் நெருங்கி வர்த்திப்பதால் நிரவதிக ஸம்பத்து ஏற்பட்டிருக்கிறது (“ஆன தொல்சீர் மறையாளர் பயிலும் செல்வ”7-8-6)என்றும், வடகலையும் விளங்கா நின்றுள்ள பிரம்மாவோடொத்த பிரபாவமுள்ளவர்களாய் அதிசயித வைலக்ஷண்யத்தை உடையவரான பிராம்மணர்களின் யக்ஞத்தின் ஆஹுதியிலுண்டான தூமம் நிறைந்திருப்பதால் நிரவதிக ஸம்பத்து ஏற்பட்டிருக்கிறது (“செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் திசைமுகனே அனையவர்கள் செம்மை மிக்க அந்தணர்தம் ஆஹுதியின் புகையால் செல்வத்து”7-8-7) என்றும் குறிப்பிடுகிறார்.
திருச்சிறுப்புலியூரில்:- ஸம்பத்தினால் ஸமிருத்தரான பிராம்மணர்கள் வாழ்ந்து வருகிறார்கள் (“திருவில் பொலிமறையோர்” 7.9.2) என்றும், திரேதாக்னிகளை ஹோமத்தினால் வளர்க்கையை ஸ்வபாவமாயுடைய பிராம்மணர்கள் இருந்து வருகிறார்கள்(“தீயோம் புகை மறையோர் சிறுபுலியூர் சல சயனத்தாயோ” 7.9.7) என்றும் குறிப்பிடுகிறார்.
---------------------------- தொடரடைவுகள் (முனைவர்.ப.பாண்டியராஜா) எழுதப்பட்ட கணினி நிரல்களின் மூலம் (http://tamilconcordance.in) தளத்தில் இருந்து எடுக்கப் பட்டவைவேத (49)
வேத பயன் கொள்ள வல்ல விட்டுசித்தன் சொன்ன மாலை – நாலாயி:201/3
வேத பொருளே என் வேங்கடவா வித்தகனே இங்கே போதராயே – நாலாயி:207/4
எண்ணா நாளும் இருக்கு எசு சாம வேத நாள்மலர் கொண்டு உன் பாதம் – நாலாயி:438/3
மெய்க்கொண்டு வந்து புகுந்து வேத பிரானார் கிடந்தார் – நாலாயி:443/3
வேத வாய் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன்-தன் – நாலாயி:523/3
மேல் தோன்றும் சோதி வேத முதல்வர் வலம் கையில் – நாலாயி:598/2
பொன் பெற்றார் எழில் வேத புதல்வனையும் தம்பியையும் பூவை போலும் – நாலாயி:737/1
வேத_வாணர் கீத வேள்வி நீதியான கேள்வியார் – நாலாயி:760/3
சாம வேத கீதனாய சக்ரபாணி அல்லையே – நாலாயி:765/4
நால் நிறத்த வேத நாவர் நல்ல யோகினால் வணங்கு – நாலாயி:774/3
விலங்கு நூலர் வேத நாவர் நீதியான கேள்வியார் – நாலாயி:807/3
மாது தங்கு கூறன் ஏறது ஊர்தி என்று வேத நூல் – நாலாயி:823/3
கற்ற பெற்றியால் வணங்கு பாத நாத வேத நின் – நாலாயி:838/3
இரு கலந்த வேத நீதி ஆகி நின்ற நின்மலா – நாலாயி:854/2
நச்சு நாகனை கிடந்த நாதன் வேத கீதனே – நாலாயி:868/4
வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும் – நாலாயி:874/1
நீதி ஆகிய வேத மா முனியாளர் தோற்றம் உரைத்து மற்றவர்க்கு – நாலாயி:1196/3
யாவருமாய் யாவையுமாய் எழில் வேத பொருள்களுமாய் – நாலாயி:1249/1
மின் திகழ் குடுமி வேங்கட மலை மேல் மேவிய வேத நல் விளக்கை – நாலாயி:1275/2
இசை கொள் வேத நூல் என்று இவை பயந்தவனே எனக்கு அருள்புரியே – நாலாயி:1369/2
வேத வாய்மொழி அந்தணன் ஒருவன் எந்தை நின் சரண் என்னுடை மனைவி – நாலாயி:1425/1
செம் மொழி வாய் நால் வேத வாணர் வாழும் திருநறையூர் மணிமாட செங்கண்மாலை – நாலாயி:1507/1
பன்னு கலை நால் வேத பொருளை எல்லாம் பரி முகமாய் அருளிய எம் பரமன் காண்-மின் – நாலாயி:1619/2
வேத முதல்வன் விளங்கு புரி நூலன் – நாலாயி:1679/1
செம் தொழில் வேத நாவின் முனி ஆகி வையம் அடி மூன்று இரந்து பெறினும் – நாலாயி:1986/2
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால் வேத
பண்ணகத்தாய் நீ கிடந்த பால் – நாலாயி:2149/3,4
மெய்ப்பொருள் தான் வேத முதற்பொருள் தான் விண்ணவர்க்கு – நாலாயி:2394/3
ஆவனவும் நால் வேத மா தவமும் நாரணனே – நாலாயி:2453/3
பாட்டு என்னும் வேத பசும் தமிழ்-தன்னை தன் பத்தி என்னும் – நாலாயி:2819/2
பேதையர் வேத பொருள் இது என்று உன்னி பிரமம் நன்று என்று – நாலாயி:2848/1
கொண்ட நல் வேத கொழும் தண்டம் ஏந்தி குவலயத்தே – நாலாயி:2854/3
முது வேத முதலவனுக்கு – நாலாயி:2955/2
வேத நீரனே – நாலாயி:2985/4
நாரணன் முழு ஏழ்_உலகுக்கும் நாதன் வேத மயன் – நாலாயி:3076/1
மிக்கார் வேத விமலர் விழுங்கும் என் – நாலாயி:3106/3
பால் என்கோ நான்கு வேத பயன் என்கோ சமய நீதி – நாலாயி:3159/1
வேத முதல்வனை பாடி வீதிகள்-தோறும் துள்ளாதார் – நாலாயி:3169/3
பா இயல் வேத நல் மாலை பல கொண்டு – நாலாயி:3244/1
மிக்க ஞானமூர்த்தி ஆய வேத விளக்கினை என் – நாலாயி:3306/3
மேவி தொழுது உய்ம்-மின் நீர்கள் வேத புனித இருக்கை – நாலாயி:3360/1
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறா சிரீவரமங்கல நகர் – நாலாயி:3410/3
செந்தொழிலவர் வேத வேள்வி அறா சிரீவரமங்கல நகர் – நாலாயி:3413/3
பாடும் நல் வேத ஒலி பரவை திரை போல் முழங்க – நாலாயி:3431/2
வேத வேள்வி ஒலி முழங்கும் தண் திருவண்வண்டூர் – நாலாயி:3452/2
விடல் இல் வேத ஒலி முழங்கும் தண் திருவண்வண்டூர் – நாலாயி:3454/2
வெள்ள சுகம் அவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழா ஒலியும் – நாலாயி:3583/3
அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள் – நாலாயி:3805/1
வேத நாவர் விரும்பும் திருக்கண்ணபுரத்து – நாலாயி:3888/3
வேத நல் வாயவர் வேள்வி உள்மடுத்தே – நாலாயி:3983/4வேத_வாணர் (1)
வேத_வாணர் கீத வேள்வி நீதியான கேள்வியார் – நாலாயி:760/3வேதங்கள் (2)
பண்டு ஆய வேதங்கள் நான்கும் ஐந்து வேள்விகளும் கேள்வியோடு அங்கம் ஆறும் – நாலாயி:1096/3
பண் தரு வேதங்கள் பார் மேல் நிலவிட பார்த்தருளும் – நாலாயி:2845/3வேதத்தான் (2)
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும் – நாலாயி:2226/3
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும் – நாலாயி:2295/3வேதத்தின் (3)
மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் – நாலாயி:945/1
வேதத்தை வேதத்தின் சுவை பயனை விழுமிய முனிவரர் விழுங்கும் – நாலாயி:1069/1
ஓதிய வேதத்தின் உட்பொருளாய் அதன் உச்சி மிக்க – நாலாயி:2875/1வேதத்து (4)
நன்கு ஓதும் நால் வேதத்து உள்ளான் நறவு இரியும் – நாலாயி:2292/1
நாகத்தான் நால் வேதத்து உள்ளான் நறவு ஏற்றான் – நாலாயி:2312/3
வேதியர் முழு வேதத்து அமுதத்தை – நாலாயி:3147/3
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு தென் திருப்பேரெயில் வீற்றிருந்த – நாலாயி:3586/3வேதத்துள் (1)
மறை ஆய நால் வேதத்துள் நின்ற மலர் சுடரே – நாலாயி:3130/1வேதத்தை (1)
வேதத்தை வேதத்தின் சுவை பயனை விழுமிய முனிவரர் விழுங்கும் – நாலாயி:1069/1வேதம் (26)
தேவகாரியம் செய்து வேதம் பயின்று வாழ் திருக்கோட்டியூர் – நாலாயி:360/2
அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஆகி நின்று அவற்றுளே – நாலாயி:766/1
புள்ளது ஆகி வேதம் நான்கும் ஓதினாய் அது அன்றியும் – நாலாயி:770/1
வேதம் ஆகி வேள்வி ஆகி விண்ணினோடு மண்ணுமாய் – நாலாயி:785/3
அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதி – நாலாயி:914/1
முனிவன் மூர்த்தி மூவர் ஆகி வேதம் விரித்து உரைத்த – நாலாயி:1065/1
வெம் திறல் வீரரில் வீரர் ஒப்பார் வேதம் உரைத்து இமையோர் வணங்கும் – நாலாயி:1119/1
வெம் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி வேதம் முன் ஓதுவர் நீதி வானத்து – நாலாயி:1121/3
மேவி எப்பாலும் விண்ணோர் வணங்க வேதம் உரைப்பர் முந்நீர் மடந்தை – நாலாயி:1125/1
வாய் ஓது வேதம் மலிகின்ற தொல்சீர் மறையாளர் நாளும் முறையால் வளர்த்த – நாலாயி:1159/3
நா மனத்தால் மந்திரங்கள் நால் வேதம் ஐந்து வேள்வியோடு ஆறு அங்கம் நவின்று கலை பயின்று அங்கு – நாலாயி:1244/3
நல்ல வெம் தழல் மூன்று நால் வேதம் ஐ வேள்வியோடு ஆறு அங்கம் – நாலாயி:1259/3
நால் வகை வேதம் ஐந்து வேள்வி ஆறு அங்கம் வல்லார் – நாலாயி:1436/1
படையான் வேதம் நான்கு ஐந்து வேள்வி அங்கம் ஆறு இசை ஏழ் – நாலாயி:1514/3
எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை – நாலாயி:1618/3
தொண்டு ஆனேற்கு என் செய்கின்றாய் சொல்லு நால் வேதம் கண்டானே கண்ணபுரத்து உறை அம்மானே – நாலாயி:1738/3,4
அங்கம் ஆறு ஐந்து வேள்வி நால் வேதம் அரும் கலை பயின்று எரி மூன்றும் – நாலாயி:1748/3
மின் இவர் வாயில் நல் வேதம் ஓதும் வேதியர் வானவர் ஆவர் தோழீ – நாலாயி:1758/2
திருவின் ஆர் வேதம் நான்கு ஐந்து தீ வேள்வியோடு அங்கம் ஆறும் – நாலாயி:1813/3
என் இது வந்தது என்ன இமையோர் திசைப்ப எழில் வேதம் இன்றி மறைய – நாலாயி:1989/2
மின் உருவாய் முன் உருவில் வேதம் நான்காய் விளக்கு ஒளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய் – நாலாயி:2052/1
காட்டிய வேதம் களிப்புற்றது தென் குருகை வள்ளல் – நாலாயி:2844/2
வேதம் முன் விரித்தான் விரும்பிய கோயில் – நாலாயி:3119/2
வணங்கீர்கள் மாய பிரான் தமர் வேதம் வல்லாரையே – நாலாயி:3292/4
வேதம் வல்லார்களை கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் – நாலாயி:3293/1
பண்பு உடை வேதம் பயந்த பரனுக்கு – நாலாயி:3510/1வேதமும் (4)
கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பமும் சொல் பொருள் தானும் மற்றை – நாலாயி:1122/1
விண்ணும் மலையும் வேதமும் வேள்வியும் ஆயினான் – நாலாயி:1478/3
வேதமும் வேள்வியும் விண்ணும் இரு சுடரும் – நாலாயி:1786/1
திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம் மலிந்து – நாலாயி:3502/1
வேதர் (1)
முறையால் வளர்க்கின்ற முத்தீயர் நால் வேதர் ஐ வேள்வி ஆறு அங்கர் ஏழின் இசையோர் – நாலாயி:1221/3வேதனை (4)
விண் கொள் அமரர்கள் வேதனை தீர முன் – நாலாயி:38/1
விட தேள் எறிந்தாலே போல வேதனை ஆற்றவும் பட்டோம் – நாலாயி:529/2
வேதனை வினை அது வெருவுதல் ஆம் – நாலாயி:1455/2
வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற – நாலாயி:2556/1வேதனைக்கு (1)
வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன் வேலை வெண் திரை அலமர கடைந்த – நாலாயி:1000/3வேதனையே (1)
மெலியும் மட நெஞ்சினார் தந்து போயின வேதனையே – நாலாயி:2555/4வேதா (1)
வேதா நின் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே – நாலாயி:1466/4வேதாந்த (1)
மேல் இரும் கற்பகத்தை வேதாந்த விழு பொருளின் – நாலாயி:359/3வேதியர் (18)
துரங்கம் வாய் பிளந்து மண் அளந்த பாத வேதியர்
வரம் கொள குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே – நாலாயி:809/3,4
மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் – நாலாயி:945/1
அருள் நடந்து இ ஏழ்_உலகத்தவர் பணிய வானோர் அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ் – நாலாயி:1238/2
மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர் வண்புருடோத்தமத்துள் – நாலாயி:1267/1
நந்தாத பெரும் புகழ் வேதியர் நாங்கூர் – நாலாயி:1309/2
நன்று ஆய பெரும் புகழ் வேதியர் நாங்கூர் – நாலாயி:1310/2
நாடு ஆர் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர் – நாலாயி:1312/2
நல்லார் பலர் வேதியர் மன்னிய நாங்கூர் – நாலாயி:1313/2
நால் ஆகிய வேதியர் மன்னிய நாங்கூர் – நாலாயி:1314/2
நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர் – நாலாயி:1315/2
நா ஆர் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர் – நாலாயி:1316/2
நல் அன்பு உடை வேதியர் மன்னிய நாங்கூர் – நாலாயி:1317/1
மேலை வானவரின் மிக்க வேதியர் ஆதி காலம் – நாலாயி:1436/2
மின் இவர் வாயில் நல் வேதம் ஓதும் வேதியர் வானவர் ஆவர் தோழீ – நாலாயி:1758/2
வேதியர் முழு வேதத்து அமுதத்தை – நாலாயி:3147/3
நல் புகழ் வேதியர் நான்மறை நின்று அதிர் – நாலாயி:3735/3
விரவு ஆர் இசை மறை வேதியர் ஒலி வேலையின் நின்று ஒலிப்ப – நாலாயி:3767/2
விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர் – நாலாயி:3988/1,2வேதியர்கள் (5)
மன்னு புகழ் வேதியர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1232/4
வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம் – நாலாயி:2118/3
மின் இடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும் – நாலாயி:2785/1
விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நல் ஞானி நல் வேதியர்கள்
தொழும் திருப்பாதன் இராமாநுசனை தொழும் பெரியோர் – நாலாயி:2895/2,3
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி அவனிதேவர் வாழ்வு – நாலாயி:3713/3வேதியனே (2)
சந்தோகா பௌழியா தைத்திரியா சாம வேதியனே நெடுமாலே – நாலாயி:1609/3
மின்னு நேமியினாய் வினையேனுடை வேதியனே – நாலாயி:3562/4வேதியனை (4)
விண்ணோர் தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை
திண் ஆர் மாடங்கள் சூழ் திருமங்கையர்_கோன் கலியன் – நாலாயி:1037/2,3
புலம் புரி நூலவனை பொழில் வேங்கட வேதியனை
சிலம்பு இயல் ஆறு உடைய திருமாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:1836/2,3
வெறி கொண்ட தண் துழாய் வேதியனை நெஞ்சே – நாலாயி:2650/3
வியப்பு ஆய வியப்பு இல்லா மெய்ஞ்ஞான வேதியனை
சய புகழார் பலர் வாழும் தடம் குருகூர் சடகோபன் – நாலாயி:3131/1,2வேதியா (2)
வேதியா அரையா உரையாய் ஒரு மாற்றம் எந்தாய் – நாலாயி:1196/2
வேதியா நிற்கும் ஐவரால் வினையேனை மோதுவித்து உன் திருவடி – நாலாயி:3563/1வேதியில் (1)
உத்தர வேதியில் நின்ற ஒருவனை – நாலாயி:113/2
—————
மறை (51)
அன்னம்-அது ஆனானே அச்சோஅச்சோ அரு மறை தந்தானே அச்சோஅச்சோ – நாலாயி:106/4
மறை பெரும் தீ வளர்த்திருப்பார் வருவிருந்தை அளித்திருப்பார் – நாலாயி:403/3
வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால் – நாலாயி:562/1
துணையில்லா தொல் மறை நூல் தோத்திரத்தால் தொல் மலர்-கண் அயன் வணங்கி ஓவாது ஏத்த – நாலாயி:651/2
முறையாய பெரு வேள்வி குறை முடிப்பான் மறை ஆனான் – நாலாயி:684/2
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்-மின் – நாலாயி:742/2
மறை உடை மால் விடை ஏழ் அடர்த்தாற்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1136/2
மறை வளர புகழ் வளர மாடம்-தோறும் மண்டபம் ஒண் தொளி அனைத்தும் வாரம் ஓத – நாலாயி:1142/3
அம் வாய் இள மங்கையர் பேசவும் தான் அரு மா மறை அந்தணர் சிந்தை புக – நாலாயி:1163/3
தீ விரிய மறை வளர்க்கும் புகழ் ஆளர் திருவாலி – நாலாயி:1198/3
வளை வாய கிள்ளை மறை பாடும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1225/4
மறை பெரும் பொருளை வானவர் கோனை கண்டு நான் வாழ்ந்து ஒழிந்தேனே – நாலாயி:1269/4
மங்கலம் சேர் மறை வேள்வி-அதனுள் புக்கு மண் அகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர் – நாலாயி:1284/2
இலங்கிய நால் மறை அனைத்தும் அங்கம் ஆறும் ஏழ் இசையும் கேள்விகளும் எண் திக்கு எங்கும் – நாலாயி:1285/3
ஊழி-தொறும் ஊழி-தொறும் உயர்ந்த செல்வத்து ஓங்கிய நால் மறை அனைத்தும் தாங்கும் நாவர் – நாலாயி:1286/3
நா தொழில் மறை வல்லார்கள் நயந்து அறம் பயந்த வண் கை – நாலாயி:1290/3
அந்தமாய் ஆதி ஆகி அரு மறை அவையும் ஆனாய் – நாலாயி:1306/2
அன்னம் ஆகி அன்று அரு மறை பயந்தவனே எனக்கு அருள்புரியே – நாலாயி:1375/2
மைம் மான மரகதத்தை மறை உரைத்த திருமாலை – நாலாயி:1398/2
அன்னமாய் அன்று அங்கு அரு மறை பயந்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1410/4
சொல் ஆர் மறை நான்கு ஓதி உலகில் நிலாயவர் – நாலாயி:1484/3
மறை ஆரும் பெரு வேள்வி கொழும் புகை போய் வளர்ந்து எங்கும் – நாலாயி:1536/1
கட்டியை கரும்பு ஈன்ற இன் சாற்றை காதலால் மறை நான்கும் முன் ஓதிய – நாலாயி:1573/3
மாயா எனக்கு உரையாய் இது மறை நான்கின் உளாயோ – நாலாயி:1634/2
தீ எடுத்து மறை வளர்க்கும் திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1672/2
சுருதியொடு அரு மறை முறை சொலும் அடியவர் – நாலாயி:1714/3
அன்னே இவரை அறிவன் மறை நான்கும் – நாலாயி:1974/1
உரை நூல் மறை உறையும் கோயில் வரை நீர் – நாலாயி:2086/2
பகர மறை பயந்த பண்பன் பெயரினையே – நாலாயி:2114/2
சரணா மறை பயந்த தாமரையானோடு – நாலாயி:2141/1
உணர்ந்தாய் மறை நான்கும் ஓதினாய் நீதி – நாலாயி:2229/1
மறை ஆங்கு என உரைத்த மாலை இறையேனும் – நாலாயி:2264/2
மறை ஆவான் மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும் – நாலாயி:2277/3
செறிவு என்னும் திண் கதவம் செம்மி மறை என்றும் – நாலாயி:2293/2
மறை பாடகம் அனந்தன் வண் துழாய் கண்ணி – நாலாயி:2311/3
மறையாய் மறை பொருளாய் வானாய் பிறை வாய்ந்த – நாலாயி:2320/2
மறை பொருளும் அத்தனையேதான் – நாலாயி:2450/4
மனுவும் சுருதி மறை நான்கும் மாயன் – நாலாயி:2457/3
மறை முறையால் வான் நாடர் கூடி முறைமுறையின் – நாலாயி:2645/2
முன்னம் படைத்தனன் நான்மறைகள் அ மறை தான் – நாலாயி:2715/6
மன்னும் மறை நான்கும் ஆனானை புல்லாணி – நாலாயி:2782/1
பெய்யும் மறை தமிழ் மாலையும் பேராத சீர் அரங்கத்து – நாலாயி:2803/2
தாழ்வு ஒன்று இல்லா மறை தாழ்ந்து தலம் முழுதும் கலியே – நாலாயி:2806/1
மாறன் பணித்த மறை உணர்ந்தோனை மதியிலியேன் – நாலாயி:2836/2
வாட்டம் இலா வண் தமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில் – நாலாயி:2844/3
ஈய்ந்தனன் ஈயாத இன் அருள் எண்_இல் மறை குறும்பை – நாலாயி:2867/1
பாய்ந்தனன் அ மறை பல் பொருளால் இப்படி அனைத்தும் – நாலாயி:2867/2
தெரியும் வண் கீர்த்தி இராமாநுசன் மறை தேர்ந்து உலகில் – நாலாயி:2877/3
கட்ட பொருளை மறை பொருள் என்று கயவர் சொல்லும் – நாலாயி:2883/1
மறை ஆய நால் வேதத்துள் நின்ற மலர் சுடரே – நாலாயி:3130/1
விரவு ஆர் இசை மறை வேதியர் ஒலி வேலையின் நின்று ஒலிப்ப – நாலாயி:3767/2மறைக்கும் (5)
ஆடு வான் கொடி அகல் விசும்பு அணவி போய் பகலவன் ஒளி மறைக்கும்
மாட மாளிகை சூழ்தரு நாங்கூர் வண்புருடோத்தமமே – நாலாயி:1262/3,4
ஆலை புகையால் அழல் கதிரை மறைக்கும் வீதி அழுந்தூரே – நாலாயி:1594/4
மை நலம் கொண்டு உயர் விண் மறைக்கும் தண் திருவல்லவாழ் – நாலாயி:3433/2
நல்ல நான்மறையோர் வேள்வியுள் மடுத்த நறும் புகை விசும்பு ஒளி மறைக்கும்
நல்ல நீள் மாட திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு எனக்கு நல் அரணே – நாலாயி:3708/3,4
திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும் தண் திருப்புலியூர் – நாலாயி:3766/3மறைகள் (1)
அன்னம் ஆகி அரு மறைகள் அருளிச்செய்த அமலன் இடம் – நாலாயி:1356/2மறைகளை (1)
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் – நாலாயி:2808/1மறைகொண்ட (1)
மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி கறைகொண்ட – நாலாயி:2390/2மறைநெறி (1)
உய்த்தனன் தூய மறைநெறி தன்னை என்று உன்னி உள்ளம் – நாலாயி:2862/2மறைப்பொருள் (1)
செஞ்சொல் மறைப்பொருள் ஆகிநின்ற தேவர்கள் நாயகனே எம்மானே – நாலாயி:429/1மறைப்பொருளே (1)
ஏலும் மறைப்பொருளே ஆடுக செங்கீரை ஏழ்_உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே – நாலாயி:72/4
மறையவர் (6)
செம் சொல் மறையவர் சேர் புதுவை_பட்டன் சொல் – நாலாயி:53/3
சிறப்பு உடைய மறையவர் வாழ் திருவரங்கம் என்பதுவே – நாலாயி:403/4
வானிடை வாழும் அ வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த அவி – நாலாயி:508/1
வாய் உடை மறையவர் மந்திரத்தால் மன்மதனே உன்னை வணங்குகின்றேன் – நாலாயி:510/2
மா வளம் பெருகி மன்னும் மறையவர் வாழும் நாங்கை – நாலாயி:1298/3
மா வளம் பெருகி மன்னும் மறையவர் வாழும் நாங்கை – நாலாயி:1307/1மறையவர்-தம் (1)
வாழ்வு அற்றது தொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர்-தம்
தாழ்வு அற்றது தவம் தாரணி பெற்றது தத்துவ நூல் – நாலாயி:2855/1,2மறையவர்கள் (3)
மண்ணில் மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1229/4
வண்மை மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1233/4
ஆம் மனத்து மறையவர்கள் பயிலும் அணி நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1244/4மறையவற்கு (1)
மறையவற்கு காட்டிய மாயவனை அல்லால் – நாலாயி:2175/3மறையாய் (2)
மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள் – நாலாயி:1731/1
மறையாய் மறை பொருளாய் வானாய் பிறை வாய்ந்த – நாலாயி:2320/2மறையால் (1)
மறையால் முத்தீ அவை வளர்க்கும் மன்னு புகழால் வண்மையால் – நாலாயி:1355/3மறையாளர் (7)
சீர் ஏறு மறையாளர் நிறைந்த செல்வ திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1145/4
சீர் அணங்கு மறையாளர் நிறைந்த செல்வ திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் என்று – நாலாயி:1147/2
வாய் ஓது வேதம் மலிகின்ற தொல்சீர் மறையாளர் நாளும் முறையால் வளர்த்த – நாலாயி:1159/3
பொய்யா நாவின் மறையாளர் புள்ளம்பூதங்குடி தானே – நாலாயி:1352/4
முந்தி வானம் மழை பொழியும் மூவா உருவின் மறையாளர்
அந்தி மூன்றும் அனல் ஓம்பும் அணி ஆர் வீதி அழுந்தூரே – நாலாயி:1588/3,4
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1623/4
கற்ற நூல் மறையாளர் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1655/4மறையாளன் (2)
ஒரு வாளன் மறையாளன் ஓடாத படையாளன் விழு கையாளன் – நாலாயி:421/2
மாகம் மாநிலம் முழுதும் வந்து இறைஞ்சும் மலர் அடி கண்ட மா மறையாளன்
தோகை மா மயில் அன்னவர் இன்பம் துற்றிலாமையில் அத்த இங்கு ஒழிந்து – நாலாயி:1422/1,2மறையான் (1)
மறையான் நின் உந்தியான் மா மதிள் மூன்று எய்த – நாலாயி:2109/3மறையானை (1)
தூயானை தூய மறையானை தென் ஆலி – நாலாயி:2014/1மறையில் (1)
ஏர் ஆர் குணத்து எம் இராமாநுசன் அ எழில் மறையில்
சேராதவரை சிதைப்பது அப்போது ஒரு சிந்தைசெய்தே – நாலாயி:2864/3,4மறையின் (5)
அருளினான் அ அரு மறையின் பொருள் – நாலாயி:944/2
அரு மறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும் அங்கங்கள் அவை ஆறும் இசைகள் ஏழும் – நாலாயி:1178/3
அண்டம் உறு முழவு ஒலியும் வண்டு இனங்கள் ஒலியும் அரு மறையின் ஒலியும் மடவார் சிலம்பின் ஒலியும் – நாலாயி:1242/3
வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கை பிரான் மறையின்
குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்ற – நாலாயி:2798/1,2
தேரார் மறையின் திறம் என்று மாயவன் தீயவரை – நாலாயி:2864/1மறையினை (1)
மறையினை காத்து இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே – நாலாயி:2799/4மறையீர் (1)
தூ மறையீர் இது தகவோ சுமந்திரனே வசிட்டனே சொல்லீர் நீரே – நாலாயி:736/4மறையும் (1)
எண்_இல் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையும் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர் – நாலாயி:1229/3மறையை (2)
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அரு மறையை வெளிப்படுத்த அம்மான்-தன்னை – நாலாயி:2081/2
அன்னத்தை மீனை அரியை அரு மறையை
முன் இ உலகு உண்ட மூர்த்தியை கோவலூர் – நாலாயி:2775/3,4மறையொடு (1)
உண்மை மிகு மறையொடு நல் கலைகள் நிறை பொறைகள் உதவு கொடை என்று இவற்றின் ஒழிவு இல்லா பெரிய – நாலாயி:1233/3மறையோர் (28)
வாய்த்த மறையோர் வணங்க இமையவர் – நாலாயி:115/3
இருக்கொடு நீர் சங்கில் கொண்டிட்டு எழில் மறையோர் வந்து நின்றார் – நாலாயி:200/1
தோதவத்தி தூய் மறையோர் துறை படிய துளும்பி எங்கும் – நாலாயி:402/3
செங்கமலத்து அயன் அனைய மறையோர் காழி சீராமவிண்ணகர் என் செங்கண்மாலை – நாலாயி:1187/1
மறையோர் வணங்க புகழ் எய்தும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1221/4
என்றும் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையோர் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர் – நாலாயி:1239/3
துன்று மணி மண்டபங்கள் சாலைகள் தூ மறையோர் தொக்கு ஈண்டி தொழுதியொடு மிக பயிலும் சோலை – நாலாயி:1245/3
மஞ்சு உலவு பொழிலூடும் வயலூடும் வந்து வளம் கொடுப்ப மா மறையோர் மா மலர்கள் தூவி – நாலாயி:1246/3
ஆனாத பெரும் செல்வத்து அரு மறையோர் நாங்கை-தன்னுள் – நாலாயி:1250/3
ஏடு ஏறு பெரும் செல்வத்து எழில் மறையோர் நாங்கை-தன்னுள் – நாலாயி:1254/3
ஏர் ஆரும் பெரும் செல்வத்து எழில் மறையோர் நாங்கை-தன்னுள் – நாலாயி:1255/3
சிறப்பு உடை மறையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே – நாலாயி:1269/3
திட மொழி மறையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே – நாலாயி:1270/3
செல்வம் மல்கு மறையோர் நாங்கை தேவதேவன் என்றுஎன்று ஓதி – நாலாயி:1321/3
திலதம் அன்ன மறையோர் நாங்கை தேவதேவன் என்றுஎன்று ஓதி – நாலாயி:1325/3
பாருள் நல்ல மறையோர் நாங்கை பார்த்தன்பள்ளி செங்கண்மாலை – நாலாயி:1327/1
மஞ்சு சேர் மாளிகை நீடு அகில் புகையும் மா மறையோர்
செம் சொல் வேள்வி புகையும் கமழும் தென் அரங்கமே – நாலாயி:1384/3,4
பேர் அழலாய் பெரு விசும்பாய் பின் மறையோர் மந்திரத்தின் – நாலாயி:1402/3
நல்லார் மறையோர் பலர் வாழும் நறையூர் நின்ற நம்பியே – நாலாயி:1512/4
நந்தா வண் கை மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியே – நாலாயி:1515/4
நன்மை உடைய மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியை – நாலாயி:1517/1
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் கொண்ட பின் மறையோர் மனம் தன் உள் – நாலாயி:1574/2
திருவில் பொலி மறையோர் சிறுபுலியூர் சலசயனத்து – நாலாயி:1629/3
தீ ஓம்புகை மறையோர் சிறுபுலியூர் சலசயன – நாலாயி:1634/3
மண்ணினை மலையை அலை நீரினை மாலை மா மதியை மறையோர் தங்கள் – நாலாயி:1646/3
கற்ற மறையோர் கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே – நாலாயி:1725/4
மேலை தலை மறையோர் வேட்பனவும் வேலை-கண் – நாலாயி:2147/2
மன்னும் மறையோர் திருநறையூர் மா மலை போல் – நாலாயி:2753/2மறையோர்க்கு (1)
மா மறையோர்க்கு ஈந்த மணி_வண்ணன் பாதமே – நாலாயி:2222/3மறையோர்கள் (2)
மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும் – நாலாயி:432/1
அரியானை அழுந்தூர் மறையோர்கள் அடிபணியும் – நாலாயி:1603/3மறையோன் (2)
செறி தவ சம்புகன்-தன்னை சென்று கொன்று செழு மறையோன் உயிர் மீட்டு தவத்தோன் ஈந்த – நாலாயி:749/1
ஆய்ந்த அரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில் – நாலாயி:2358/1மறைவலார் (1)
மறைவலார் குறைவு இலார் உறையும் ஊர் வல்லவாழ் அடிகள் தம்மை – நாலாயி:1817/1மறைவாணர் (2)
திருவில் பொலி மறைவாணர் புத்தூர் திகழ் பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும் – நாலாயி:274/3
வடமொழி மறைவாணர் வேள்வியுள் நெய் அழல் வான் புகை போய் – நாலாயி:3766/2மறைவாணர்கள் (1)
கற்றார் மறைவாணர்கள் சூழ் திருப்பேராற்கு – நாலாயி:3977/3மறைவாணன் (1)
திருவில் பொலி மறைவாணன் பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும் – நாலாயி:337/3மறைவாணனை (1)
மன்னப்படும் மறைவாணனை வண் துவராபதி – நாலாயி:3295/3மறைவாதியர் (1)
வலி மிக்க சீயம் இராமாநுசன் மறைவாதியர் ஆம் – நாலாயி:2878/3————————
ஆழ்வார்கள் கண்ட கருட சேவை–பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி
வைணவ மரபிலே கருட சேவைக்கு தனி ஏற்றமுண்டு. வேதத்தின் மூலம், வேதம் காட்டும் பரம் பொருளை தரிசிப்பதே, கருட சேவையின் உட்பொருள்.
கருடன் வேதம்.பகவான் ஸ்ரீமன் நாராயணன் – வேதம் காட்டும் பரம்பொருள்.வேதம் தமிழ் செய்த அத்தனை ஆழ்வார்களும், கருட தரிசனத்தையும், கருடன் மீது ஆரோகணித்து வரும் கருட சேவையையும், பாடாமல் இருந்ததேயில்லை.கருடன் திருமாலின் இரண்டு திருவடிகளையும் தம் இரு கரங்களால் தாங்கி ஊர்வலமாக வரும் காட்சியே கருட சேவை எனப்படும். அப்போது பெருமான், கருடன் ஆகிய இருவரின் அருளும் ஒருங்கே கிடப்பதை பக்தர்கள் புனிதமாகக் கருதுகிறார்கள்.1.பெரியாழ்வார் கண்ட கருட சேவைவேண்டிய வேதங்கள் ஓதி பாண்டியன் அவையில் சந்தேகம் தீர்த்த பெரியாழ்வாருக்கு, பகவான் கருட வாகனனாய்க் காட்சியளித்தான். அந்த கருட சேவை காட்சியின் மாட்சியில்தான், பெரியாழ்வார்,”எம்பெருமானே! கருடனின் மீது ஆரோகணித்து வந்து, எனக்குக் காட்சி தந்த, உன் கருணையே கருணை! என்னை நீ காப்பாற்ற முடிவெடுத்த பிறகு, என்னுடைய பிறவித் துன்பம் நீங்கி விட்டது.”
“பறவை ஏறும் பரம புருடா நீ என்னை கைக்கொண்டபின் பிறவி என்னும் கடலும் வற்றி பெரும் பதம் ஆகின்றது” என்று பாசுரம் இடுகிறார்.தன் பிரேம பாவனையால், கருடனை விழிப்போடு பெருமாள் பள்ளியறையை பார்த்து கொள்ளச் சொல்கிறார்.இன்றளவும் திருக்கோயில்களிலும் திருமாளிகைகளிலும் இரவு நடை சாற்றும் போது இந்தப் பாசுரம் ஓதப்படுகிறது.
உறகல் உறகல் உறகல் ஒண்சுடராழியே! சங்கே!
அறவெறி நாந்தகவாளே! அழகிய சார்ங்கமே! தண்டே!
இறவுபடாமல் இருந்த எண்மர் உலோகபாலீர்காள்!
பறவைஅரையா! உறகல் பள்ளியறைக்குறிக் கொண்மின்.2. ஆண்டாள் கண்ட கருட சேவை
ஆண்டாளின் திருத்தகப்பனார் பெரியாழ்வார், கருடனின் அம்சம். இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெருமாளோடு ஏக ஆசனத்தில் இருப்பவர். ஆண்டாளின் மனத்திரையில் கண்ணன் கருடன் மீது வரும் காட்சி ஓட அந்த காட்சியை அவள் வடநாடு திவ்ய தேசமான
விருந்தாவனத்தில் காண்கிறாள்.மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்களுரைப்பானை இங்கே போதக் கண்டீரே
மேலால் பரந்த வெயில்காப்பான் வினதை சிறுவன் சிறகென்னும்
மேலாப் பின்கீழ் வருவானை விருந்தா வனத்தே கண்டோமேகருடனின் முகத்தில்அருள் ததும்பும். கம்பீரம் சுடர்விடும். தனது இரண்டு இறக்கைகளை விரித்து மண்டலமிட்டு வானத்தில் பறப்பவர். சிறகுகளை விட உடல் பருத்திருக்கும். அழகான குண்டலங்களைக் காதுகளில் அணிந்தவர். வளைந்த புருவங்கள், உருண்டை கண்கள், நீண்ட மூக்கு, வெளுப்பான முகம் உடையவர். மூன்று கிளைகளாகப் பிரிந்திருக்கும் ஸ்ரீகருடனுடைய இறக்கைகள், மூன்று வேதங்களாகக் கருதப்படுகின்றன. ஆண்டாள், இந்தக் கருடன் மீது ஆரோகணித்து வரும் பெருமானை விருந்தவனத்தில் கண்டேன் என்று பாடுகிறாள்.
3. திருமாலும் கருடனும் ஒருவரேதிருமாலும் கருடனும் ஒருவரே என்று மகாபாரதத்திலுள்ள அனுசாசன பர்வத்தில் காணப்படுகிறது.காரணம் வேதம் கருடன். வேதத்தின் பொருள் திருமால். திருவாய்மொழியை படிப்பதும் கருட சேவை காண்பதும் ஒன்றுதான். திருவாய்மொழி வேதம். (அதாவது கருடன்). திருவாய்மொழியின் பொருள். (திருமால்).
கருடனுக்கு கருத்மான், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பகிராஜன், தார்ச்டயன், மோதகாமோதர், மல்லீபுஷ்யபிரியர், மங்களாலயர், சோமகாரீ, பெரிய திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜயகருடன், புள்ளரசு, கலுழன், சுவணன்கிரி என்றும் ஓடும்புள் கொற்றப்புள் என்றும் பெயர்கள் உண்டு.திருமாலைப்போல அணிமா, மகிமா, லகிமா, கரிமா, ஈஸித்வம், வசித்வம், பிராபதி – பிராகாம்யம் ஆகிய எட்டு விதமான சம்பத்துக்களாக இருந்து கொண்டு, பக்தர்களுக்கு அவற்றைத் தருபவராக ஸ்ரீகருடன் விளங்குகிறார்.
ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீர்யம், அதீத சக்தி, தேஜஸ் என்ற ஆறு விதமான குணங்களுடன் கருடன் திகழ்கிறார்.வேத ஸ்வரூபியான கருடன் திருமாலுக்கு வாகனமாக இருப்பதன் மூலம், வேதமே இறைவனை நம்மிடம் அழைத்து வரும் கருவியாக இருக்கிறது என்ற தத்துவத்தை நாம் உணரமுடிகிறது.
4. நம்மாழ்வார் கண்ட கருட சேவை
அடியவர்களின் அப(பா)யக் குரல் கேட்கும் நேரங்களில், அவர்களுக்கு அபயம் அளிக்கத் திருமாலை அழைத்து வந்து சேர்ப்பவர் கருடன்.நம்மாழ்வார் இந்த கருடசேவை குறித்துப் பாசுரமிடுகிறார்.
“ஓடும் புள் ஏறி, சூடும் தண்துழாய்,
நீடு நின்றவை ஆடும்; அம்மானே.”
கருடனை ஓடும் புள் என்று அழைக்கிறார் நம்மாழ்வார்.“கருடன் மீது துளசி மாலை அணிந்து தோன்றும் திருமாலே எனக்கு தலைவன்” என்று போற்றும் நம்மாழ்வார், ஒரு பாசுரத்தில், கஜேந்திரன் என்கிற யானையைக் காப்பாற்ற கருட வாகனத்தின் மேல் ஏறிவந்த வேகத்தை வியக்கிறார்.
மழுங்காத வைந்நுதிய சக்கரநல் வலத்தையாய்த்
தொழுங்காதல் களிறுஅளிப்பான் புள்ஊர்ந்து தோன்றினையே!
மழுங்காத ஞானமே படையாக மலர்உலகில்
தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச்சோதி மறையாதே?
இந்தப் பாசுரத்தில் நம்மாழ்வார் கருட சேவையின் சிறப்பு பற்றிய அற்புதமான ஒரு தகவலைச் சொல்லுகின்றார்.எம்பெருமான் கருடன்மீது ஆரோகணித்து வருவது ஏன் என்றால், தன்னுடைய பரத்துவத்தைக் காட்டுவதற்காக. வெவ்வேறு சிறப்புகளைக் காட்டுவதற்காக பல்வேறு வாகனங்களில் வந்தாலும், தான் பரமாத்மா என்பதை உணர்த்து முகத்தான், எம்பெருமான் கருடன் மீது ஆரோகணித்து வருகின்றான்.
இது முதல் செய்தி. இரண்டாவதாக, ஒரு உயிரை காப்பாற்ற வேண்டும் என்கிற கருணையின் உச்சத்தில், எம்பெருமான் கருடன் மீது விரைவாக வருகின்றான். பறவைகளில் மிகவேகமாகப் பறக்க கூடியது கருடன். அதனால் கருடன்மீது ஆரோகணித்து வருகிறான் என்பது ஒரு தோற்றமாக இருந்தாலும், அந்தக் கருடனை வேகமாகச் செலுத்துபவர் பெருமாள் என்பதும் இந்த கருடசேவை சூட்சுமத்தின் உட்பொருளாகும்.
இதை பராசரபட்டரும் ஓரிடத்தில், “ரங்கநாதனே! நீ, இந்த கஜேந்திரன் என்ற யானையைக் காப்பாற்ற ஓடிவந்தாயே, அதற்காக மட்டுமல்ல, என்னுடைய நமஸ்காரம், நீ காப்பாற்ற ஓடிவந்த விரைவு, வேகம் இருக்கிறதே, அது அடியேனை வியப்படைய வைத்தது. அந்த வேகத்திற்கு என்னுடைய நமஸ்காரத்தை சொல்லுகின்றேன்” என்று பாடுகின்றார்.
நம்மாழ்வார் சக்கரத்தைத் தாங்கி, கருடன் மீது ஆரோகணித்து வந்த கருடசேவையை போற்றிப் பாடும் பாசுரத்தில் சக்கரத்தை இருந்த இடத்திலே இருந்து பிரயோகம் செய்து யானையின் துன்பத்தை தீர்த்து இருக்கலாமே, இதற்கு எம்பெருமான் கருடன் மீது ஏறி நேரில் வர வேண்டுமா என்கிற ஒரு கேள்வியும் எழுகிறது. கஜேந்திரன் என்ற யானையின் உயிரை மட்டுமே காப்பாற்றுவதாக இருந்தால், இருந்த இடத்தில் இருந்து கொண்டே எம்பெருமான் அதை தனது சங்கல்பத்தால் சாதித்திருக்க முடியும்.
ஆனால், இந்த கருடசேவை காட்சியை பார்க்க வேண்டும் என்று அந்த யானை விரும்பி, தினசரி மலர் இட்டு பூஜை செய்தது. அதனால் அந்த தொழும் காதல் களிறு என்ற பதத்தை இட்டு நம்மாழ்வார் இந்தப் பாசுரத்தில் பாடுகிறார்.
தானே நேரில் கருடசேவை காட்சி அளித்தால்தான், கஜேந்திரன் என்ற யானையின் துயரம் தீரும்; உயிர் தப்பித்ததால் மட்டுமே தீர்ந்து விடாது என்பதை குறிப்பிடத்தான், தொழுங் காதல் களிறு அளிப்பான் புள்ஊர்ந்து தோன்றினையே! என்று அந்த செய்தியை இதில் சொல்லுகின்றார்.
ஒவ்வொரு உயிரும் இந்த கருட சேவையைக் காணுகின்றபொழுது ஆன்ம சந்தோஷம் அடைகிறது என்பதாலேயே, எல்லா கோயில்களிலும் பிரம்மோற்சவத்தில் கருடசேவை நடக்கிறது.
5. தொண்டரடிப்பொடியாழ்வார் கண்ட கருட சேவை
தொண்டரடிப்பொடியாழ்வார் தமது திருமாலைப் பாசுரத்தில், “எத்தனையோ தேவர்கள் இந்த கருட சேவையை காணவேண்டும் என்று காத்திருக்க, தன்னை நம்பி, தனக்கு பூஜை செய்ய வேண்டும் என்ற ஆவலோடு ஒரு தாமரை மலரைப் பறித்து வைத்து, பூஜைக்கு எந்தவிதமான குந்தகமும் வந்துவிடக் கூடாது என்று தவித்து தன்னை அழைத்த, கஜேந்திரனைக் காப்பாற்றுவதற்காக ஓடிவந்த எம்பெருமான் அழகாக கருடவாகனத்தில் காட்சி தருகின்றான்.”
“அவன் தருகிற செல்வம் உயர்ந்த செல்வம். மோட்சம் உட்பட நீங்கள் விரும்புகின்ற அவ்வளவு செல்வத்தையும் அவன் தர காத்திருக்கின்ற பொழுது, நீங்கள் வேறு செல்வங்களை – நிலையற்ற செல்வங்களை- ஏன் தேடுகின்றீர்கள் என்று கேட்கிறார்.
இந்த கருடசேவை காணுகின்ற ஒவ்வொருவருக்கும் அவன் நீங்காத செல்வத்தை தரக் காத்திருக்கிறான். கருடசேவை தரிசிப்பது என்பது எவ்வளவு உயர்வானது என்பதை இந்த பாசுரத்தில் தொண்டரடிப்பொடியாழ்வார் உணர்த்துகிறார்.
நாட்டினான் தெய்வ மெங்கும் நல்லதோ ரருள்தன் னாலே
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க் குய்யும் வண்ணம்
கேட்டிரே நம்பி மீர்காள். கெருடவா கனனும் நிற்க
சேட்டைதன் மடிய கத்துச் செல்வம்பார்த் திருக்கின் றீரே.6. குலசேகர ஆழ்வார் கண்ட கருட சேவை
குலசேகர ஆழ்வார் திருவரங்க நாதனைக் காணுகின்ற காட்சிக்காகத் தவித்தவர். அவர் நாம் இன்று சாதாரண கண்களால் காணக்கூடிய அந்தக் கருவறை காட்சியை மட்டும் காண விரும்பவில்லை. “திருவரங்கத்தில் அரவணையில் பள்ளி கொள்ளும் திருமாலே! நீ எனக்கு எப்படி காட்சி தரவேண்டும் தெரியுமா? உன்னுடைய பஞ்சு ஆயுதங்களும் அங்கு இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல உன்னுடைய அருகிலேயே காற்றைக் கிழித்துக் கொண்டு செல்லுகின்ற – வெற்றியைத் தவிர வேறு அறியாத – அந்தக் கருடனும் உன்னை சூழ்ந்திருக்க வேண்டும். அந்த காட்சியை நான் திருவரங்கத்தில் காணவேண்டும்” என்கிறார். அந்தக் காட்சிக்கான பாடல் இது.
கோல் ஆர்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம்
கொலையாழி கொடுந்தண்டு கொற்ற ஒள் வாள்
கால் ஆர்ந்த கதிக் கருடன் என்னும் வென்றிக்
கடும்பறவை இவை அனைத்தும் புறஞ்சூழ் காப்ப
சேல் ஆர்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த
திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்
மாலோனைக் கண்டு இன்பக் கலவி எய்தி
வல்வினையேன் என்றுகொலோ வாழும் நாளே7. திருமங்கையாழ்வார் கண்ட கருட சேவை
ஆழ்வார்களில் இளைய ஆழ்வார் திருமங்கையாழ்வார். பல ஊர்களுக்கும் சென்று அங்கு இருக்கக்கூடிய உற்சவங்களில் கலந்துகொண்டு, கருடசேவையைக் குறித்தும் தன்னுடைய பிரபந்தங்களில் பாடும் வழக்கமுடையவர். புகழ்பெற்ற திருநாங்கூர் 11 கருடசேவை கலியன் ஒலி மாலையின் எதிர்விளைவாகவே அத்தனை எம்பெருமான்களும் தங்க கருடன் மேலேறி, தை அமாவாசைக்கு மறுநாள், திருமங்கை ஆழ்வார் அன்ன வாகனத்தில் முன் செல்ல, அவரோடும் அவர் தமிழோடும் வீதிவலம் வருகின்றார்கள்.
ஆழ்வார் பற்பல தலங்களில் கருட சேவை பற்றி பாடுகிறார். கருடனுக்கு பெரிய திருவடி என்று பெயர். அனுமனுக்கு திருவடி என்று பெயர். (அனுமனை சிறிய திருவடி சிலர் தவறாக குறிப்பிட்டு எழுவது வைணவ மரபின் படி தவறு).அந்த பெரிய திருவடிக்குரிய சிறப்பான தலம் திருநறையூர் என்கிற திருத்தலம்.
(நாச்சியார் கோயில்) திருநறையூர் நம்பி ஆழ்வாருக்கு ஆசார்யன். இத்தலம் கும்பகோணத்திற்கு அருகில் இருக்கிறது. இத்தலத்தில் கல்கருட சேவை மிகவும் சிறப்பானது. அங்கே கஜேந்திரனைக் காக்க கருடன் மீது ஏறி வந்த காட்சியை,
தூவாய புள்ளூர்ந்து, வந்து துறைவேழம்
மூவாமை நல்கி முதலை துணித்தானை
தேவாதி தேவனைச் செங்கமலக் கண்ணானை
நாவாயு ளானை நறையூரில் கண்டேனே
– என்று பாடுகின்றார்.அதைப்போலவே குடந்தையில் இருக்கக்கூடிய ஆராவமுத ஆழ்வாருக்காக திருவெழுகூற்றிருக்கை என்ற பிரபந்தத்தை ரத பந்தமாக இயற்றுகின்றார். அதிலே, கஜேந்திரனைக் காப்பதற்கு பகவான் புறப்பட்டு விட்டார் என்கிற செய்தியானது, கருடனின் வேகத்தினால் திசைகள் நடுங்கியபோது எல்லோரும் அறிந்தார்கள் என்கிறார்.
யானையின் அபயக்குரலை எல்லாரும் கேட்டார்கள். அதை மற்ற தேவர்களால் காப்பாற்ற முடியாது என்ற நிலையையும் கண்டார்கள். அதனை காப்பாற்றுவதற்காக எம்பெருமான் கருடபகவான் மீது புறப்பட்டு வந்த ஒலியையும் கண்டார்கள் என்பதுதான் இந்தப் பாடலின் சிறப்பு. இனி அந்த முதலை பிழைத்தது என்று நிம்மதி கொண்டார்கள் என்கிற புதிய செய்தியைச் சொல்கிறார்.
ஒரு வலிமைமிக்கவனிடம் எளியவன் மாட்டிக் கொண்டான். நம்மால் அவனைக் காப்பாற்ற முடியவில்லை. அப்போது தூரத்தில் காவல்துறை வாகனம் வரும் ஒலி கேட்கிறது. (அதற்காகத்தானே அந்த வாகனத்தில் சைரன் ) இனி நமக்கு நிம்மதி தானே. அதைப்போல கருடன் வரும் வேகத்தை திருமங்கை ஆழ்வார் பதிவு செய்கிறார்.
ஒருமுறை ஈரடி மூவுலகு அளந்தனை
நாற்றிசை நடுங்க – அஞ்சிறைப் பறவை ஏறி
நால் வாய் மும்மதத் திரு செவி
ஒரு தனி வேழத் தரந்தையை-
ஒரு நாள் இருநீர் மடுவில் தீர்த்தனைதிவ்யதேசங்களில் மிகச்சிறந்த தேசமான திருச்சித்ரகூடத்தின் உற்சவ மூர்த்திக்கு சித்திர கூடத்து உள்ளான் என்று பெயர் தருகின்றார் திருமங்கையாழ்வார். அங்கே பிரம்மோற்சவத்தில் கருட சேவை காட்சியை தன்னுடைய பெரிய திருமொழியில் பின்வருமாறு பதிவு செய்கின்றார்.
எய்யச் சிதைந்த திலங்கை மலங்க வருமழை காப்பான்,
உய்யப் பருவரை தாங்கி ஆநிரை காத்தானென் றேத்தி,
வையத் தெவரும் வணங்க அணங்கெழு மாமலை போலே,
தெய்வப்புள் ளேறி வருவான் சித்திர கூடத்துள் ளானே.8.திருமழிசை ஆழ்வார் கண்ட கருட சேவை
திருமழிசை ஆழ்வாரும் தம்முடைய நான்முகன் திருவந்தாதியில் கருடதரிசன பெருமாளின் தரிசன பலனை சொல்கிறார். அந்தப் பெருமானுக்கு கஜேந்திர வரதன் என்று பெயர். இந்த பெயரிலேயே கருட தரிசனம் வந்து விடுகிறதல்லவா. இனி என்ன பலன் என்று பார்ப்போம்.கூற்றமும் சாரா கொடுவினையும் சாரா தீ
மாற்றமும் சாரா வகை அறிந்தேன் ஆற்றங்
கரைக் கிடக்கும் கண்ணன் கடல்கிடக்கும் மாயன்
உரைக்கிடக்கும் உள்ளத்து எனக்கு.கருடன்மீது எம்பெருமானை தரிசித்தால் நமக்கு எமபயம் இல்லை. பாவங்களும் இல்லை என்று உறுதியளிக்கிறார். ஆழ்வார்களும் உணர்ந்து தரிசித்த அந்த கருட சேவையை நாமும் ஆழ்வார்கள் பாசுரம் பாடி சேவிப்போமே.
———————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply